All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"காதல் ஜ்வாக்ஷா!" - கதை திரி

Status
Not open for further replies.

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதோ நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய கதைகளுள் முதல் கதையின் முதல் அத்தியாயம்......


காதல் 01



ராக்ரிட்ஜ், கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் உள்ள வர்த்தக மாவட்டம்…

பனிக்காலம் ஆரம்பிக்க சிலநாட்களேயிருக்க, குளிரும் ஊசியாய் ஊடுருவிச் செல்லவாரம்பித்திருந்தது…

காலை புலர்ந்து நெடுநேரமான போதும், துயில் களையவும் மனமற்று நீண்ட உடலை விஸ்தாரமான கட்டிலில் பரப்பி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஜ்வா.

பழக்கமான குளிரின் தாக்கம் பாதிக்கவில்லை என்றபோதிலும், அவன் மேனியின் சூட்டையும் அடித்து நொறுக்கிய குளுமை அதன் தாக்கத்தை அப்பட்டமாகவே காட்டியது…

அவன் ரசிக்கும் மற்றும் பழக்கமான குளுமை… மயிர்க்கால்களை கூசிச்சிலிர்க்க வைக்கும் குளிர், என்றும்போலே வேற்று மேனியும் முழங்கால்கள் வரையான ஷார்ட்ஸும் அணிந்திருந்தவனுள் சுகமாய் நெளிந்து செல்ல… கூடவே, அவனுக்குரிமையான குளிரும் வெம்மையும் சேர்ந்து கொண்டது.

அவனுக்கு பழக்கமான உருவத்தின் ஸ்பரிசம், அவனுடல் சூட்டை தனதாக்க முயல.. சிரிப்பில் நெளிந்தது அவன் சிவந்த அதரங்கள்…

இருந்தும் அந்த உருவம் தன் முயற்சி தளர்த்தவில்லை, என்பதை அதன் அசைவின் மூலமே உணர்ந்துகொண்டவன்.. அதன் முயற்சியை தனதாக்கிக் கொண்டான் மோகனச் சிரிப்புடன்…

படபடத்து விளையாடிய கனமான திரைச்சீலைகளின் வழியாக இதமான குளிரோடு போட்டியிட்டு வெம்மையும் அறைக்குள் புகுந்தாட… நுரையமிழும் மெத்தையில் ஈருடல்கள் ஒன்றுடன் ஒன்று கொழுகொம்பு போல் பின்னிப்படர்ந்திருந்தது…

விலகவும் முடியாத நெருக்கத்தினில் விரும்பிய கட்டுண்ட ஜ்வாவின் வலுவான கரங்களுக்குள், போர்வையை ஆடையாகக் கொண்ட மங்கையாளின் செழிப்பான உடல் வளைவுகள் அவஸ்தையுடன் நெளிந்து கொண்டிருந்தது…

ராத்திரியின் எச்சங்கள் மிச்சம்யிருந்தாற்போல்.. சுகமான சுகத்தில் நெகிழ்ந்த பெண்ணவள் உடலை கரங்கள் தம்போக்கில் அலைந்து விளையாட, அவளுமே விரும்பியே தொலைந்தாள்…

பட்டிலும் மென்மையான அவள் கூந்தல்காட்டில் அவன் கரங்கள் மயிர்கற்றைகளை அலைந்து விளையாட, மறுகரம் பெண்ணின் செழுமைமிக்க அங்க லாவண்யங்களை கர்மசிரத்தையாக ஆராயத்துவங்கியது…

இடையிடையே வெம்மையில் தகதகத்த பால் வண்ணச்சருமத்தில் இதழ்கொண்டு அச்சாரம் மீட்டிட… கட்டுப்பாடின்றி பெருக்கெடுத்த தாபயூற்றில் இன்னம் கொஞ்சம் அழுத்தமாய் அவனோடு ஒன்றினாள் நுவா செங்.

அவனுக்கானவள்… அவனுக்கென்றே பிறப்பெடுத்த அவனவள்… காதலை முதன்முதலில் அவனுக்கு உணர்த்தியவள்… அவளுமே அவனில் உணர்ந்து கொண்டவள்…

உதட்டுச்சாயமின்றி முத்தத் தாக்குதல்களால் சிவந்து வீங்கிகிடந்த அவள் அதரங்கள், மோகத்தோடு அவன் முகத்தில் ஊர்ந்துதிரிந்து விளையாட… ஆடவன் தாபமும் கட்டுப்பாடற்று கூடித்தான் போனது…

தன்னில் படர்ந்தவளை விலக்கி அவள் மீதே விழுந்தவன், போதையூட்டிய மங்கையவளுள் மொத்தமாய் மூழ்கி முத்துக் குளிக்கவாரம்பித்தான்…

மீண்டும்மீண்டும் நாடத்தூண்டிய சுகம்… விலக முயன்றும் முடியாமல் மீண்டுமாக பெண்ணவள் மீதே, பாரமேற்றாது கவிழ்ந்து.. கலந்தவன்.. களைத்துப் போனவளை கைவளைவுக்குள் எடுத்துக்கொண்டான்.

வதனம் மறைக்க முயன்ற சிகையினை, மென்மையாக காதினோரம் சொருகியவன்.. பிறைநிலவை ஒத்த அவள் நுதலில் வலிக்குமோவென அஞ்சி அதரங்களால் ஒற்றியெடுத்தான்…

மன்னவன் செயலில்.. கொண்டவள் மயங்கி.. சிலிர்ப்புடன் போர்வைக்குள் புதைய.. கூடவே தானும் நுழைந்து, மென்மை துறந்து வன்மையாக அணைத்துக் கொண்டு முகமெங்கிலும் சிறு சிறு அச்சாரங்கள் பதித்து… முகத்தில் நிலவிய திருப்தியுடன் அகன்றெழுந்தான்.

கூடிக்கலந்த அசதியில் மென்னகையுடன் துயிலாழ்ந்த காதலியை, தலைகாணியில் வாகாய் உறக்கங்கொள்ள வைத்தவன்.. குளியறையுள் நுழைந்து ஓசைபடாமல் கதவை தாளிட்டான்…

தன் தூக்கம் கலைத்து அவள் துயிலாழ்ந்த நினைவில் சிறிதாக எட்டிப்பார்த்தது, அவளுக்கேயான அவனில் தோன்றும் பிரத்தியேக சிரிப்பொன்று.

பனித்துவளாய் மேனியில் பட்டுத்தெறித்த நீரில் நனைந்துகொண்டே, வாட்டர்ப்ரூப் டிஜிட்டல் மணிக்கூட்டில் நேரம் பார்த்தவன், தேவையற்ற சதைபப்பிடிப்பற்று சிக்கென்று இருந்த இடை தழுவிய டவலுடன் படுக்கையுள் நுழைய… இவனுக்காகவே வாரிசுருட்டிய போர்வையுடன் காத்திருந்தாள் நுவா.

துயிலாழ்ந்ததில் விழிகள் மூடிக்கொண்டனவே தவிர, ஆழ்மனம் விழித்திருந்ததில்… அவன் அருகாமையை மீண்டும் சுகித்திட பெண்மனம் விளைய, போர்வையோடே எழுந்தவள் மெல்லிய துணியொன்றால் உடலை போர்த்தி அதன்மீது போர்வையுமாக, அவன் முகம் பார்த்தாள்.

ஒற்றைக்காம்புகளாய் நெற்றியில் புரண்ட நீர்சொட்டும் முடியிலிருந்து… திவலைகள் சொட்டு சொட்டாக வடிந்திறங்க, அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்திருந்தவளுள்… சற்றும் குறையாத இரசாயனவியல் மாற்றங்கள் செவ்வனே நிகழ்ந்தன.

ஐந்து வருடப்பழக்கம்… வார்த்தைகளால் காதல் பரிமாறப்படவில்லை என்றாலும் அவர்களின் மனம் அறிந்த காதல்… உடலின் சங்கமத்தில் மறுகட்டத்தை எப்போதோ எய்திருக்க… இன்றளவும் சிற்றளவும் குறையவில்லை.

வற்றாத ஜீவநதியாக பாய்ந்தோடிக்கொண்டே இருக்கிறது அவர்களின் காதல்நதி…

தன்மேல் ஊர்ந்த பார்வையினை கண்டும் காணாமலும் கடந்து, உடைமாற்றும் அறைக்குள் புகுந்தவன்… ஒற்றை கையால் கண்ணாடி முன் நின்று சிகை கோத, அப்போதுதான் அவனருகில் வந்திருந்தவளின் முகத்திலும் அமிர்தமாய் பட்டுத்தெறித்தது.

கண்மூடி ரசித்து சிலிர்த்தவள்… பின்புறமாக அவனிடையோடு கட்டிக்கொண்டு, முதுகோடு ஒண்டி, பின்னங்கழுத்தில் அழுந்த முத்தமிட, கண்மூடி ரசித்து நின்றான்.

இருவருக்கும் அந்த சில நொடிகளில் மீண்டு செல்ல தோன்றவில்லை… தினமும் நடக்கும் நிகழ்வுகள், இருந்தும் சலிக்கவில்லை…

அவள் அருகாமையை அவனும்.. அவனின் அருகாமையை அவளுள்.. மெளனமாக ரசித்து ருசிக்கும் சொற்ப நிமிடங்கள் அவை… அதை இழக்க இருவருக்கும் மனமில்லை.

ஒருகையால் சிகை கோதியவன், இடது கரத்தால் அவள் முன்னங்கை பற்றி முன்புறமாக இழுக்க.. திண்ணிய மாரில் பெண்மை பொக்கிஷங்கள் அழுந்தப்பதிய தடுமாறி நின்றாள்.

(கொரியன் பாஷைகள் தமிழ் மொழிகளில்)

“பேபி இன்னிக்கு செம்ம குஷில இருக்கீங்க போல. என்னாச்சு மை யான் இன்”. (sweet heart)

குளிரிலும் வேர்வை துளியில் கன்னத்தோடு ஒட்டிச்சிலுப்பிய முடியை நூதனமாக அகற்றி.. இதழ்களால் உவர்நீரை அமிர்தமாக சுவைத்தவன் கொஞ்சிக்கொண்டு கேட்க, காரணம் புரியவில்லை என்ற போதிலும் கன்னத்தோடு கன்னமிழைய நெருங்கி நின்றாள்.

என்றைக்கும் இல்லா திருநாளாக மார்புக்கூடு படபடப்பில் அடித்துக்கொள்ள பெண்ணவளால் அதை சாதரணமாக கடந்திட முடியவில்லை… அதை அவனிடம் காட்டி இருக்கும் நிலையை தலைகீழாக மாற்றவும் மனமில்லை… ஆதலால் தன்னுள்ளே மறைத்து, “நத்திங்.” எனும் விதமாக தலையசைப்பை பதிலாகக்கொடுத்து புன்னகை பூசிக்கொண்டாள்.

அவனுக்குள்ளும் சிறு தடுமாற்றம்… உளமதில் பல்வேறுபட்ட யோசனைகளை ஓடி அலைகழிக்க, இருகைகளும் கொண்டு அவள் முகம் தாங்கியவன் சந்தேகத்துடன் கேட்டான்,

“உண்மையிலே ஒன்னுமில்லையே நே சலங்”. (my love)

அவளுக்கே உரித்தான சுகந்தத்தை நாசி நுகர்ந்து இதயத்துக்குள் பத்திரப்படுத்த… இதழ்கள் கன்னத்தில் முத்தக்கோலமிட்டு உரசிக்கொண்டே முனு முனுத்தது.

இம்முறையும் தலையசைத்து மறுதலித்தாள். சிரித்துக்கொண்டவன், தன் வலிய புஜங்களுடனான அகன்ற மார்புக்குள் கோழிக்குஞ்சாய் அவளை புதைத்துக்கொண்டு நுதலில் தலைசாய்த்தான்.

வழமைக்கு மாறான இளக்கம்.. இத்தனை நாளும் காட்டிடாத மொத்தத்தையும் இன்றே காண்பிப்பவர்கள் போன்ற குழைவும் தாபமும்… அத்தனையும் விசித்திரமாகப்பட்டாலும் இருவருமே மற்றவர் மனமறிந்து எதையும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை.

காரணகாரியம் இன்றி உலகில் அணுவும் அசையாத போது இதுவும் நிகழ்ந்திடுமா?. இதற்குப் பின்னாலும் ஜீரணிக்கவே முடியாத காரணமொன்றும் இருந்தது…

பெண்ணவள் உடலை இழுத்துப் போர்த்திய போர்வை சற்றும் எதிர்பாராமல் நழுவி கீழே சரிய, மறைத்தும் மறைக்காததுமாக அரைகுறையில் தெரிந்த எல்லாமும்.. காதலன் தாபத்தை தீயிட்டுக் கொழுத்த.. நாடிநரம்பு முழுதிலும் அவளை நுகரவேண்டி, காதலோடு போட்டியிட்டு தாபமும் பெருக்கெடுத்து ஓடவாரம்பிக்க, கைகள் சுதந்திரமாக உடலெங்கிலும் பரவிப்படர.. அழுத்தம் கூட்டி இன்னமும் இறுக்கித் தழுவிட முயன்றவன், அங்கனம் தன்னிலே உணர்ந்தான்.

நுவா… அவனின் காதல் தேவதை… அவனுக்கென பிறந்தவள்… உலகம் சுற்றும் அவனையும் தன்னடியில் சரணடையச் செய்தவள்… அவனும் கட்டுண்டு விரும்பியே தொலைய முற்பட்ட அவள்… அவனின் பேரழகி… காதலெனும் வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்தவள்… இக்கணமோ வேரறுந்த மரமாய் அவன் உருண்டு திரண்ட புஜங்களில்…

ஜீரணித்திடவும் முடியுமா அவனால்?...

அதிவேக எக்ஸ்பிரஸ் போல அவன் நெஞ்சம், தடதடத்து தவித்துத் துடித்தது…

தாங்கவும் முடியாத வலியொன்று அவன் செல்கள் யாவிலும், சுருக்கென்ற வலியை உணர்த்திச்செல்ல… நிலையாக நிற்கவும் திராணியற்றுப் போனான், அந்த வலிய ஆண்மகன்.

வாழ்நாள் முழுமைக்கும் காட்டிட வேண்டிய காதலை, ஒரு இரவினில் அவனுள் உணர்த்தியவள், காணவே முடியாத தூரத்திற்கு பயணப்பட்டு விட்டாள்.. என்ற உண்மையை முழுமூச்சாக உணர்ந்திடவும் முடியாமல் கல்லாய் சமைந்து நின்றான்.

சற்று முன்னர் தன்னோடு இரண்டறக்கலந்து, மறுக்கமறுக்க தன்னை என்னுள் முழுவீச்சில் இறக்கியவள், அவள் இல்லை என்பதை அவனால் நம்பவும் முடியவில்லை… கண்ணில் பட்டதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை…

உடல்கள் இரண்டும் நெகிழ்ந்து கலக்கத் துடித்ததில், தன்னை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல்.. மங்கையின் வனப்பின் வசீகரம் கட்டியிழுக்க, கண்ணாடிக் கதவில் தலைசாய்த்து மயக்கத்துடன் கிறங்கியவளின் நெற்றியில், வலதுபுறத்து கன்னத்தில், செவி மடலில், என காதலும் தாபமும் போட்டியிட முத்தமிட்டு கொண்டே சென்றவன், கழுத்தில் இதழ் குவித்து முகம் புதைத்தான்.

ஜிவ்வென்று உடலில் தாக்கிய உணர்வில், அவன் சிகைக்குள் விரல் நுழைத்து நெருக்கம் கூட்ட… விஷமம் படர்ந்த சிரிப்புடன் முன்கழுத்து வழியாக பயணித்த இதழ்கள் பிடரியில் ஓய்வெடுத்துக் கொண்டன.

நச்சென்ற அச்சாரங்கள் பல்லாயிரம் அங்கு அரங்கேற.. உடலும் நெகிழ, தவித்து துடித்தவளின் இடையை கரங்கள் ஆராய்ந்து அறிய, புறமுதுகிலும் கழுத்திலும் அவனிதழ் காட்டிய மாயாஜாலத்தில் தன்னை தொலைத்து, சொர்க்கத்து வாசலை எட்டியவள், அவன் புறமாக திரும்பி கெட்டியாக கட்டிகொண்டாள்.

வலிமை கொண்ட அவன் கரங்களும் அவளை தன்னுள் புதைக்க, உடலெங்கிலும் ஓடிய உணர்ச்சிக்கலவையை தாங்கவியலாமல் மேனி நடுங்க புதைத்திருந்தவளின், வலதுபக்கவாட்டு நெற்றியை… அலுங்காமல் குலுங்காமல் நூதனமாய் தாக்கிச் சென்றது, சைலன்சர் பொருத்தப்பட்ட ட்ரக்கிங்பாயிண்ட் துப்பாக்கியின் (TrackingPoint gun) புல்லெட்.


அவன் வெற்றுமேனியில் ஒட்டிக்கிடந்த செவ்வரளி இதழ்கள் மெலிதாக முனகிக்கொள்ள, அவன் காதல்பாவையின் உயிர் அவனை விட்டு வெகுதூரமாய் பறந்து விட்டது…

தொடரும்....
 
Status
Not open for further replies.
Top