All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா!" - கதை திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்பூக்களே...!

"தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா!" கதையின் பதிவுகள் இங்கே பதிவிடப்படும்.


நட்புடன்,

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீ 1:


சிதம்பர ரகசியம்

கோவில் என்றாலே ஆனந்த கூத்தாடும் தில்லையம்பதியமும், ஸ்ரீரங்கநாதபெருமான் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரெங்கமுமே ஆகும்... சைவமும், வைணவமும் தழைத்த தமிழகத்தில் கோயிற்கலைகள் பல்வேறு வடிவில் புகழ்பெற்று திகழ்ந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. வைணவ மக்களுக்கு சிறப்புப் பெற்ற கோயில் பெருமாள் பள்ளிகொண்ட திருவரங்கம் ஆகும். அதேபோன்று சைவ மக்களுக்கு தில்லையில் திருநடம் புரியும் தில்லைக்கூத்தன் அமைந்த சிற்றம்பலம் எனும் சிதம்பரமே நடராசப்பெருமானாக எழுந்தருளியிருக்கும் திருத்தலம் சிதம்பரம் ஆகும். உலகமக்கள் அனைவரும் எந்தவொரு ரகசியத்தை சொல்வதற்கு முன்பு சொல்லப்படும் சொல்லே “சிதம்பர ரகசியம்” எனப்படுவது இத்தலத்திலிருந்தே நிலவி வருகிறது.



*****************************



“வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள்... சென்னை நேப்பியர் பாலம் அமைந்துள்ள கூவத்தில் மர்மநபர் பத்து வயது சிறுமியின் உடல் பாகங்களை கூறுபோட்டு மூட்டை கட்டி வீசிச்சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...” என்று தொலைக்காட்சி பெட்டியில் ஒளிபரப்பி கொண்டிருந்த மின்னணு சாதன விற்பனை மையத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் செய்தியை கேட்டு ஸ்தம்பித்தனர்... மேலும் அதில் கூறும் விஷயத்தை கவனமாக உள்வாங்க இமைசிமிட்டாது பார்த்தபடி காதுகளை தீட்டிக்கொண்டு நின்றனர்....





“விரிவான செய்தி... இறந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்ததில் பெண்ணுக்கு பத்து வயதே என்றும் அவள் சிதம்பரம் ‘அறம்’ ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த பெண் குழந்தை பெயர் பார்கவி என்பதும் தெரிய வந்துள்ளது மேற்கொண்டு கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறையினர் துரிதமாக ஈடுபட்டு உள்ளனர்” என்று முடிக்க கடை ஊழியர்கள் அனைவரும் கடையின் உரிமையாளர் வருகையை எண்ணி வேலை செய்ய ஆரம்பித்தனர்...





“என்னடா அந்த ஹோம் யாரோடது... அது தெரியாம அங்கிருக்கிற ஒரு பெண்ணையே இப்படி செய்திருக்காங்க அவனுக்கு செம தில்லு தான்டா”



“அது தில் இல்லைடா மச்சி அவனுக்கு அவனே வச்சுக்கிட்ட ஆப்பு” என்று இரு ஊழியர் பேசிக்கொண்டனர்.



இரண்டு நாட்கள் கழித்து...



அந்த காலை நேரத்தில் தூவானம் மழைச்சாரலை ரம்மியமாய் பொழிந்துக் கொண்டிருக்கும் கார்கால வேளை... இரவில் பெய்த கனமழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் குட்டையாய் தேங்கி நிற்க சாலையிலும் வெகுகுறைவான ஆட்களின் நடமாட்டமே காணப்பட்ட வேளை அங்கே இரவு முழுவதும் பெய்த மழையில் நனைந்தவன் பற்கள் வெடவெடுத்தப்படி மூச்சிரைக்க ஓடி வந்த ஒருவன் தில்லை நடராஜர் ஆலயத்தின் வடக்குபுற சுவற்றில் முட்டி நின்றதும் விலையுயர்ந்த ரேஞ்ரோவர் கருநிற வாகனம் அசுர வேகத்தில் வந்து புழுதி பறக்க சீறியபடி நின்றது.



சுற்றியிருந்த ஜனங்கள் வீடுகளிலும் கடைகளிலும் மறைவாக நின்றுக் கொண்டிருந்தனர்... கோவிலிலிருந்து வெளியேறி கொண்டிருந்த மக்கள் கூட்டம் கூட கோவிலில் பதுங்கி கொண்டனர்.



“டேய் தப்பிச்சு போகவா பார்க்கிற உன்னை....” என்றபடி இருவர் அவனை முள் கம்பியால் தாக்க... அவனோ “அய்யோஓஒ.... வேண்டாம்ம்ம்ம்ம்” என்று வலி தாங்காமல் உச்சஸ்தாயில் அலறினான்...



“என்னடா வேண்டாம்...” என்றபடி மறுமுறை ஓங்கிய சமயம் வாகனத்தில் இருந்து கண்களில் செவ்வரி ஓடியபடி இறங்கினான் அவன்!



அபராஜிதவர்மன் ஆறடி உயரம், மாநிறம், செதுக்கிய கற்சிலையென முரட்டு தேகம் கொண்டவன் என்றாலும் திடகாத்திரமான ஆண்மகன். அவன் முகத்தின் இறுக்கமும் அவனின் கடினப்பார்வையுமே பார்க்கின்றவர்களின் அடிமனதையும் கலங்க வைக்கும்... மது, மாது இரண்டும் அவனுக்கு கைவந்த கலை தான் என்றாலும் அவனை அத்தனை எளிதில் விரல் நீட்டி குற்றம் சாட்டி விட முடியாது அப்படிப்பட்ட துணிச்சலும், தைரியமும் யாருக்கும் கிடையாது... அவன் ரௌத்திரம் கொண்டு தாக்கியதை கண்முன் கண்டாலும் ஒருவரும் அதை கண்டது போல் காட்டிக் கொள்ளமாட்டார்கள்... அதற்கு காரணம் அவன் நியாயதிற்கு மட்டுமே கட்டுப்படுபவன் அநியாயத்திற்கு புறம்பானவன் தவறை கண்டு ரௌத்திரம் அடைபவன். அவனை எதிர்த்து நின்ற சட்ட காவலர்கள் கூட இறுதியில் அவனிடமே சரணடைவார்கள்... சாதாரண மக்களுக்கோ அவன் சிம்மசொப்பனம்!!

“நிறுத்து...!” என்று அவன் உயர்ந்த காந்த குரலில் கூறியதும் அவனின் கரங்கள் அந்தரத்தில் அப்படியே நின்றது... மக்கள் அனைவரும் அவனையே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.



“எங்க வந்து யார்கிட்ட மோதிட்டு தப்பிக்க பார்க்கிற...?” என்றவனின் உறுமலில் அவனுக்கு அனைத்தும் ஆட்டம் கண்டுவிட்டது... அவனின் அந்த வார்த்தைக்கு பிறகு மறைவாக நின்றபடி சுற்றியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனி அங்கே என்ன நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தவர்களாக குழந்தைங்களின் கண்களை கரங்களால் மூடிக் கொண்டனர்.



அவன் கையில் இருந்த அரிவாளை அவனை நோக்கி வீசப்போக அந்நேரம் கேட்ட கோவில் மணியோசையின் சப்தத்தில் கரங்கள் தானாக இறங்கியது...



“இது கோவில் இங்கிருக்க புனிதத்தை கெடுக்க வேண்டாம்” என்றவன் ஓரப்பார்வையால் சைகை கொடுக்க அதை புரிந்த அவனுடைய ஆட்கள் மின்னலென அவனை தூக்கி வந்து காரில் ஏற்ற தானும் அமர்ந்ததும் வந்த வேகத்தை விட மின்னல் வேகத்தில் புறப்பட்டனர்.



அங்கிருந்து அவன் புறப்பட்டதும் தான் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சே வந்தது.



அந்த வாகனம் வந்து நின்றது ஊரின் எல்லையில் ஆள் நடமாட்டம் இல்லா பகுதியில்... “சார் என்னை மன்னிச்சிருங்க சார்... என்னை விட்டிருங்க நான் ஊரை விட்டு கண்காணாத இடத்துக்கே போயிடுறேன்” என்ற மன்றாடுதலை கேட்டவனுக்கு கண்களில் தீஜுவாலை பறந்தது...



“நீ கண்காணாம ஓடிருவ... செத்துப்போன என் ஆஸ்ரமத்துல வளந்த அந்த பத்து வயசு பெண்ணுக்கு என்னடா பதில்?” என்று கண்கள் சிவக்க கடிந்த பற்களுக்கிடையே ரௌத்திரத்துடன் கேட்டான்.





“நான் தெரியாம பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க” என்றவனின் பேச்சில் மேலும் கொதிப்படைந்தவன் கண்ணிமைக்கும் நொடியில் கையில் இருந்த துப்பாக்கி அவன் வாயை குறிபார்த்து சுட்டிருக்க அவன் பேச வழியில்லாமல் போனது...





“நானும் தெரியாம ஒருமுறை சுட்டுட்டேன்” என்று நக்கலாக உரைத்தவன் முகம் மறுகணமே அதுக்கு பொய்யோ என்பது போல் ரௌத்திரத்தில் சிவந்தது... “இந்த அபராஜிதவர்மனை பார்க்கவே ஒருத்தன் பயப்படுவான் ஆனா வெளியூரிலிருந்து வந்த நாய் நீ என் பாதுகாப்பில் இருக்கிற என் ஆஸ்ரமத்தில் இருக்கிற குழந்தையே கொன்றிருக்க உன்னை மன்னிக்க நான் பொட்டபையன் இல்லை” என்று உறுமியவன் அருகில் நின்று கொண்டிருந்த அவனின் ஆட்களிடம்... “ஹ்ம்ம்...” என்ற ஒற்றை பரிபாஷையில் கண்ணசைத்து விடை பெற்றவனுக்கு மனம் கொதி நிலையில் இருந்து வெளிவராமல் கொதித்துக் கொண்டிருந்தது...



“ராம்...” என்றதும்... “சார்...!” என்று வேகமாக கேட்டபடி பவ்யமாக நின்றான் அவனின் செயலாளர்...





“காரை ஆஸ்ரமத்துக்கு விடுங்க” என்றதும் வாகனம் புயல் வேகத்தில் புறப்பட்டது.



அபராஜிதன் வாகனம் ஆசிரமத்திற்குள் நுழைய புயல் வேகத்தில் காரிலிருந்து இறங்கி ஆசிரம அலுவலகத்திற்குள் சென்றவன் அங்கிருக்கும் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரையும் ஒன்று கூட வைத்தான்... அனைவரும் ஒருவித பதட்டத்துடன் இருந்தனர்.



“ரெண்டு நாளைக்கு முன்னாடி சென்னை மயிலாப்பூர் நாட்டிய அரங்கேற்றத்துக்கு பொறுப்பாளரா போன அத்தனை பேரும் முன்னாடி வாங்க” என்றவனின் குரலே அனைவரையும் கலங்கடித்தது... ஆனால் அவனிடம் பயந்து ஒதுங்கி தப்பித்து செல்ல முடியாத காரணத்தினால் நால்வரும் அவன் முன்பு வரிசையாக நின்றனர்...

“மிசஸ்.லலிதாராஜசேகரன் நீங்க தானே குழந்தைங்களுக்கு பொறுப்பு”



“சா..ர் ஆ..மா..ம்... ஆ..னா.. நான்.. நாட்டிய.. அரங்.கே.ற்ற.த்துக்கு. தான் முழு பொறுப்பு... வெளியில் இன்சார்ஜ் எடுத்துக்கிட்டது தாமஸ் தான்”



“தாமஸ் சொல்லுங்க பார்கவி எப்படி மிஸ் ஆனாங்க?”



“சார் நான் குழந்தைகளை பத்திரமா தான் கூட்டிட்டு போனேன் அவங்க சாப்பிட்டுட்டு திரும்பும் போது ராஜேஸ்வரி தான் இருந்தாங்க” அவன் வார்த்தைகள் லலிதா போல் பிசிர் தட்டவில்லை... லலிதாவை முறைத்து பார்த்தவன் மற்றொரு பொறுப்பாளரிடம் திரும்பினான்... லலிதாவிற்கு அப்போதே அடிவயிறு கலங்கியது அவளின் உடல் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது...



“சொல்லுங்க மிஸ்.ராஜேஸ்வரி மேடம் என்ன ஆச்சுன்னு”



“சார் நாட்டியம் முடிச்சுட்டு குழந்தைங்க பத்து பேரையும் நானும் மிசஸ்.லலிதாவும் தான் கவனமா பார்த்துக்கிட்டோம் இடையில் நானும் குமாரும் நாட்டியத்தில் பங்கேற்றவங்களுக்கு அடுத்த கலை நிகழ்ச்சி பற்றி விசாரிக்க போனோம்...” என்றவள் லலிதாவை பார்க்க அவளின் பார்வையில் இறைஞ்சுதலை அபராஜிதன் கவனிக்க தவறவில்லை...





“அப்போ தான் தாமஸண்ணா, லலிதா ரெண்டு பேரும் கண்காணிப்பில் இருந்தாங்க... அதுக்கப்புறம் தான் பார்கவி மிஸ் ஆகியிருக்கா... அதுவும் அவங்களை நான் வேனில் ஏற்றும் போது தான் கண்டு பிடிச்சேன் கூட இருக்கிற பசங்ககிட்டே கேட்டதுக்கு நான் கூப்பிட்டதா சொல்லி யாரோ ரெண்டு பேர் கூப்பிட்டதா சொன்னாங்க” என்று நிறுத்தியவளை தொடர்ந்து அவன் பார்வை தாமஸ் மேல் மேவியது...



“சார் நிஜமா சொல்றேன் நான் பசங்கள விட்டு அவ்ளோ சீக்கிரம் நகரமாட்டேன் எனக்கு இயற்கை உபாதை காரணமா லலிதா மேடம் கிட்டே சொல்லிட்டு தான் போனேன்” என்றவனை தொடர்ந்து அவன் பார்வை அனல் பார்க்க தீண்டியது லலிதாவை...



“என்கிட்டே இதுக்கு மேலயும் உண்மையை மறைக்க பார்த்தீங்க... அப்புறம் நடக்கிறதே வேற” என்று கர்ஜித்தவனை கண்டு அவளுக்கு உடல் வெடவெடுத்தது...



“சார் நான்...” என்று ஆரம்பித்த வாகன ஓட்டி முருகனை ஒற்றை கரம் அசைத்து தடுத்தவன்...



“காரணமானவங்க பதில் பேசட்டும் நீங்க அமைதியா இருங்க” என்றவனின் கடுமை அவரை அதற்கு மேல் பேச முடியாமல் வாய் மூட வைத்தது.



லலிதாவிற்கு இனி தான் தப்பிக்க முடியாது என்று உணர்ந்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியவள் பேச ஆரம்பித்தாள்... “சா..ர்.. அது... அது.. அது வந்து வீட்டிலிருந்து அவசரமா போன் பண்ணினாங்க...” என்றவளை தீப்பார்வை பார்த்தவன் தாமஸை பளீரென்று அறைந்திருந்தான்...



“ஒரு பொறுப்பில்லாதவங்களை நம்பியா நீங்க பசங்களை விட்டு போனது” என்று சூடாக கூறியவன்...



“ராம் ஹரியை கூப்பிடு” என்றதும்...



“சார்... சார்... இந்த ஒருதடவை மன்னி...” என்று இறைஞ்சியவளை கனல் வீச பார்த்தவன்...



“செத்து போன குழந்தைக்கு அம்மப்பா இல்லைங்கிற தைரியமா உங்களுக்கு... மிசஸ்.லலிதா ராஜசேகரன் இங்க வேலைக்கு வரும்போது சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தான் வந்தீங்க அதில் ஒன்று இங்கிருக்கிற குழந்தைங்க பொறுப்பில் நீங்க இருக்கும் போது சொந்த வாழ்க்கை பிரச்சனையை பற்றி யோசிக்கக்கூடாதுன்னு அது எதுக்காக சொன்னேன்னு இப்போ புரியுதா?”



“இங்கிருக்கிற எல்லாருக்கும் அதே விதிமுறை தான் உங்கள்ள சிலருக்கு குடும்பம் குழந்தைங்கள் இருக்கலாம் ஆனா இங்கே வந்தப்புறம் இங்கிருக்க குழந்தைகளுக்கும் அதை நீங்க கொடுத்து தான் ஆகணும்... இதில் பிசகினா உங்க குடும்பத்திற்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இருக்காது” என்றவனின் வார்த்தையை கேட்டு அனைவருக்கும் அடிமனம் ஆட்டம் கண்டது... அந்த சிதம்பரம் மாநகரில் பெண்களும், குழந்தைகளும் பயமின்று சென்று பாதுகாப்புடன் வீடு திரும்புகிறார்கள் என்றால் அது சாத்தியாயமானது அபராஜிதவர்மனால் மட்டுமே அப்படி இருக்க அவனின் கட்டுக்குள் இருந்து விடுபட யாரும் விரும்புவதில்லை.



“ஹரி நீங்க லலிதாவுக்கு செட்டில்மென்ட் கொடுத்து அனுப்பிருங்க” என்று கூறிவிட்டு நகர்ந்தவனை லலிதா...



“சார்... சார்... ப்ளீஸ்... ப்ளீஸ்... என் குடும்பம் கஷ்டப்படும் சார் இனி கவனமா இருக்கேன் சார்” என்று தடுத்தவனை பார்வையால் கடுமையாக முறைத்ததும் அவள் உடல் அதிர உறைந்து நின்றுவிட்டாள்...



“ராம்...” என்று உரக்க அழைத்தவன்... “எனக்கு மன்னிச்சு பழக்கம் இல்லை என் டைம் வேஸ்ட் ஆகக்கூடாது” என்று கடுமையாக உரைத்தவன் வேகமாக நகர்ந்திருந்தான்.



தவறு செய்பவர்களை மன்னிக்கவேக்கூடாது என்ற கொள்கையுடையவனிடம் ஒரு பெண்ணை பலி கொடுத்த பிறகு மன்னிப்பானா?! லலிதா அடுத்த வேலை எப்படி வாங்குவது என்ற நிலை அறியாது தடுமாறிக் கொண்டிருந்தாள்... அபராஜிதவர்மனிடம் வேலை செய்தவர்கள் அவர்களாக பணியை இடைநீக்கம் செய்துவிட்டு வரமாட்டார்கள்... அப்படி வருபவர்கள் என்றால் நிச்சயம் அது அபராஜிதனால் வேலையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டிருப்பார்கள் அப்படி வந்தவர்களுக்கு மற்ற யாரும் பணிக்கு ஒப்புதல் அளிக்கமாட்டார்கள் ஒருவனை தவிர...!



அபராஜிதன் கோபாவேசத்துடன் தன் இடத்திற்கு வந்தமர்ந்தவன் முகத்தில் கோபம் கொப்பளித்து கொண்டிருந்தது அதையும் தாண்டி அந்த சின்னஞ்சிறு சிறுமியை நினைத்து அவன் முகத்தில் வருத்தம் தோய்ந்தது...! அந்நேரம் அவன் அலைபேசி மணியொலிக்க அதை உயிர்பித்தவன்...





“ஹ்ம்ம்...; சரி...; முடிச்சிருங்க...; எதுவும் மிஞ்சக்கூடாது” என்றவனுக்கு மனதின் கொதிப்பு அடங்க மறுக்க தவித்துப்போனான். அவன் கொதிப்பை அடக்க வேண்டி அந்த இல்லத்தை தேடி சென்றான்.



அடர் சிகப்பு நிற புடவையில் தலைமுடியை கொத்தாக உருட்டி கொண்டையிட்டு அதில் மல்லிகை சரம் சூட்டியிருந்த நாற்பது வயதை கடந்த பெண் ஒருத்தி அபராஜிதவர்மனை கண்டு பரவசமாக வந்தாள்... “அடடே நீங்களா... ஏய் மாலா, ஷீலா எல்லாரும் வாங்க...” என்றவரை கரம் நீட்டி தடுத்தவன்...



“ஹ்ம்ம்... இழுக்க வேண்டாம் எனக்கு பிடிக்காதுன்னு தெரியாது... இன்னைக்கு யார் புதுசோ அவளை மட்டும் அனுப்புங்க”



“உங்களை பற்றி தெரியாதா நீங்க போங்க இதோ ரெண்டே நிமிஷத்துல அனுப்பி வைக்கிறேன்” என்றவரின் சிரிப்பை காண அவன் அங்கே நிற்கவில்லை ஒரு லிட்டர் பழுக்க காய்ச்சிய இரும்பு கஞ்சியை குடித்தவன் போல் விரைத்துக் கொண்டு விருட்டென்று அறைக்குள் புகுந்து கொண்டான்.



“இங்க பாரு நீ புதுசு அவரு ரொம்ப பெரிய ஆள்... அப்படி இப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”



“ஆமாம்டி மதினா எங்களுக்கெல்லாம் இன்னொரு வாய்ப்பு தரமாட்டாரான்னு ஏங்கிகிட்டு இருக்கோம் ஹ்ம்ம் எங்கே மனசு தான் வைக்கமாட்டேங்குறார்” என்று பெருமூச்சு விடுத்தாள் ஷீலா. இவர்களின் வார்த்தையை கேட்டுவிட்டு அவளும் ஒருவித எதிர்பார்ப்புடன் சென்றாள்.

இருபத்திஐந்து வயது நிரம்பிய யுவதி அவனை நாடி அறைக்குள் புகவே அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவனின் விழிப்பார்வை அவளை துளைத்து ஆராய்ந்தது... அவளோ வெகுசகஜமாக அவனருகில் அமர்ந்தவள் மோகனப் புன்னகையில் அவன் பார்வையின் அர்த்தம் மாறிப்போகவே அவளை கட்டிலில் இழுத்து சரித்து அவளை அணைத்தவன் அறையின் விளக்கையும் அணைத்துவிட்டிருந்தான்!!




****************************



அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி

பூரிகுடும்பினி பூரிக்ருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

மகிஷாசுரமர்த்தினி பாடலை பூஜை அறையில் பாடியபடி கடவுளை பிரார்த்தித்து கொண்டிருந்தாள் மதிராதவி...! வெண்ணிற தேகத்தில் எழுமிச்சை மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்து மஹாலக்ஷ்மியின் திருவுருமாய் அமர்ந்திருந்தவளின் முகத்தில் சாந்திகடாட்சமும், சர்வலட்சணமும் நிரம்பி இருந்தது.



தண்ணீர் குடத்தை சுமந்தபடி வீட்டிற்குள் நுழைந்த துர்கா மகளின் அழகிலும், வனப்பிலும் பெருமை பொங்க பார்த்தபடி நின்றுவிட்டார். அந்த சிறிய வீட்டில் இருந்ததே மூன்றே அறை சமையலறை, படுக்கை அறை, ஹால் என மூன்று அறைகள்... அதில் சமயலறையில் ஒரு அலமாரியின் அடுக்கு முழுவதையும் அழகுபடுத்தி சிறிய கோவிலை போல் வைத்திருந்தாள்... மதிராதவி கைவைத்தாள் எப்படிபட்ட இடமும் கோபுரம் ஆகிவிடும் என்பதற்கேற்ப செய்து வைத்திருந்தாள்.



கண்மூடி இறைவனை பிரார்த்தித்து கொண்டிருந்தவள் மெல்ல விழி திறந்து கற்பூர ஜுவாலையை காற்றில் தொட்டு கண்களில் ஒற்றிவிட்டு திரும்ப அன்னை அவளையே ரசிப்பதை கண்டு புன்முறுவலுடன் அவர் புறம் நகர்ந்தாள்...



“என்னம்மா என்னையே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கீங்க?”



“மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கே என் பொண்ணுக்கு இப்போவே கல்யாணக்களை வந்திருச்சு” என்று கூறியபடி அவள் முகத்தை வருடி நெட்டி முறிக்க வெட்கம் ததும்ப உதட்டை கடித்தபடி தலைதாழ்ந்தாள்.

“இன்னைக்கு சாயந்தரம் நீ வந்ததும் உடனே உனக்கு சுத்தி போடுறேன் மதிமா”



“ம்ச்... என்னம்மா நீங்க... ம்ஹ்ம் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று வெட்க சிணுங்கலுடன் கூறியவள் அப்போதுதான் அவள் அன்னை தண்ணீர் குடத்தை சுமந்தபடியே நின்றிருந்ததை கவனத்தில் உணர்ந்தவள்...



“ம்மா நீங்க போய் குடத்தை தூக்கிகிட்டு என்கிட்டே சொன்னா நான் எடுத்துட்டு வரமாட்டேனா?”



“சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு போற பொண்ணு நீ கஷ்டப்படணுமா?”



“ம்ச்... இதுல என்னம்மா கஷ்டம் இருக்கப்போகுது? நான் கல்யாணம் செய்து போற இடத்தில் நான்தான் வேலை பார்க்கணும்னு எதுவும் இல்லையே அப்புறம் என்ன?”



“ம்ஹும்... அப்படி சொல்ல முடியாதும்மா என்னதான் யுகேந்திரன் நல்ல பையனா இருந்தாலும் நாளைக்கு தாயா? தாரமான்னு? கேள்வி வந்தா அந்த புள்ள அவன் அம்மாவுக்கு தான் ஆதரவா பேசுவான்... நீ உனக்கான கடமையை விட்டு கொடுக்க முடியாதும்மா” என்ற தாயின் பேச்சிற்கு மௌனமாக சிரித்துக்கொண்டாள்.



“அம்மா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் கண்டிப்பா உங்க பொண்ணு எல்லாத்தையும் சமாளிச்சுக்குவா” என்று அன்னைக்கு தேறுதல் கூறினாள் மதிராதவி.



“சரிம்மா இரு இதோ வரேன்” என்று சென்றவர் கையில் மல்லிகை சரத்தை எடுத்து வந்து அவள் தலையில் சூடி முடிக்க அவளை அழைத்துப் போக வருங்கால கணவனும் தற்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் முதலாளியுமான யுகேந்திரன் வந்துவிட்டிருந்தான்.



“அவர் வந்துட்டாரு போல சீக்கிரம் கிளம்புமா” துர்கா மகளை துரிதப்படுத்தி அனுப்பினார்.



சொகுசு வாகனமான வெள்ளை நிற பென்ஸ் காரில் நீலநிற கோட்சூட் அணிந்து ரேபான் கருநிற கண்ணாடி அணிந்து பாந்தமான கட்டுகளையுடன் இருந்தான் யுகேந்திரன்... தன்னவளின் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருக்கும் சுகமும் அவளின் வரவை ஆர்வத்துடன் நோக்கி கொண்டிருக்கும் அவன் விழிகளும் என அமர்ந்திருந்தவன் முன்னால் வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போன்று அவன் முன்பு பிரசன்னமானாள் மதிராதவி!



“குட்மார்னிங் சார்!” என்று அழகிய வரிசையான முத்து பற்கள் தெரிய புன்னகைத்தவளை இமைக்க மறந்து பார்த்தவன் கரங்கள் அவன் கருநிற கண்ணாடியை கீழிறக்கினான்.



“யூ லுக்கிங் சோ கார்ஜியஸ்!” என்றவனின் விழிகள் ரசனையுடன் அவள் மேல் படிந்தது... அவன் பார்வை அவளை சிறிதுசிறிதாய் விழுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு அவள் முகம் வெட்கத்தில் செவ்வானமாய் சிவந்தது.



“போதும் சார் ஆபிஸுக்கு டைம் ஆகிருச்சு கிளம்பலாம்” என்றவளின் வார்த்தையில் அவன் முகம் சுணங்கிப் போக அவளை முறைத்தான்...



“உன்கிட்டே எத்தனை தடவை சொல்றது மதி என்னை சார்ன்னு கூப்பிடாதா கால் மீ யுகன்...” என்று சிடுசிடுக்க அவளோ அவனை நிதானமாக பார்த்தாள்...



“அந்த செல்ல பெயரெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தான் இப்போ நீங்க எனக்கு எம்டி” என்றதில் அவன் வெடுக்கென்று நகர்ந்து வாகனத்தில் அமர்ந்துக்கொள்ள மந்தகாச புன்னகை உதட்டில் தவழ்ந்தபடி ஏறிக்கொள்ள அவனோ அவள் பெயர் சொல்லி அழைக்கும் வரை நகரக்கூடாது என்ற முறுக்கோடு அமர்ந்துவிட்டான்.



சிலநிமிடங்கள் கடந்தும் அவன் வாகனத்தை உயிர்பிக்கும் உத்தேசம் இல்லாதவன் போல் அமர்ந்திருந்ததை கண்டவள்...



“சார் டைம் ஆச்சு... இன்னைக்கு பதினோரு மணிக்கு ஃபாரின் டெலிகேட்ஸ் மீட் இருக்கு” என்றவளின் வார்த்தைகள் செவியில் ஏறாதது போல் விறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனின் அந்த பிடிவாதம் கூட அவளை கவர்ந்திழுத்தது... ‘ஹ்ம்ம்... எதுகெடுத்தாலும் முசுட்டு பிடிவாதம் தான்’ என்று மானசீகமாக பேசிக்கொண்டவள்...



“மிஸ்டர்.யுகன் வேலைக்கு டைம் ஆகிருச்சு வண்டி எடுக்கறீங்களா?” என்று கூறியதும் தான் அவன் மலையிறங்கினான்.



“இதை சொல்ல இவ்ளோ நேரமா போராட வேண்டி இருக்கு இருக்கட்டும் உன்னை கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கிறேன்” என்றவன் குரலில் விஷமம் வழிந்தோடியது... அதை கண்டு கொண்டவள்...



“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ காரை எடுங்க” என்று கூறி முகம் சிவந்தபடி வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்துவிட்டாள்.



யுகேந்திரன் உமாபாரதி-சந்திரகாந்தன் தம்பதியரின் மகன்... “ஆரா இண்டஸ்ட்ரி” எனும் பெயரில் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனத்தை அவனும், அவன் தந்தையும் என இருவரும் நிர்வகித்து கொண்டிருந்தார்கள்.



இவர்களுக்கு போட்டியானவன் என்று நினைக்கும் ஒருவன் அபராஜிதவர்மன் தான்... எக்காரணம் கொண்டும் தன் தொழிலை அவர்களின் நிறுவனத்தை காட்டிலும் மேன்மை என்பது போல் காட்டிக் கொள்ளவிட்டதில்லை... அவர்கள் இங்கு விரலாசைத்தால் செய்யகூட காரியத்தை அவன் கண்ணசைவில் முடித்து முடித்துவிடுவான்... அதை பற்றிய பொறாமை கூட யுகேந்திரனுக்கு உண்டு... அவனை விட ஒருபடி மேலே சென்று மிடுக்காக வலம் வரவேண்டும் என்ற கர்வம் எப்போதும் உண்டு... ஆனால் அது அவனால் சாத்தியப்படுத்த முனைந்ததில்லை... அதை அவனும் தன் தந்தையிடம் கூறி குறைப்பட்டு கொண்டதுண்டு...



“என்ன டாட் இது நாம என்ன செய்தாலும் அவன் அதுக்கு போட்டியா செய்றான் எப்படித்தான் கண்டுபிடிக்கறானோ?”



“யுகேன் நீ ஏன் எப்போதும் அவனை வீழ்த்தனும்னு எதுவும் செய்யுற... நீ உன் போக்குல பிசினஸ் பண்ணு அவனை டார்கெட் பண்ணாத அவன் லெவல் வேற”



“என்ன வேற...? பெரிய ரௌடின்னு பேர் வாங்கியிருக்கான் அதுதான் அவன் லெவல்... அந்த ஒரு பட்டத்தை அவன்கிட்டே இருந்து பிடுங்கிட்டா அவன் பூஜ்யம்”



“ம்ஹும்... அப்படி நினைக்காதே... நீ பூஜ்யம்ன்னு நினைக்கிற ஒரு விஷயத்துக்கு முன்னாடி ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள்ள என்ன நம்பர் வேணாலும் இருக்கலாம்... இத்தனைக்கும் அவன் தனியாளா சாதித்திருக்கிறான் எத்தனையோ கோடிக்கு அவன் அதிபதியும் கூட... அவன்கிட்டே இருக்கிற ஒரே ஒரு கருப்புபுள்ளின்னா அவனுக்கு ரௌடிங்கிற பெயர் மட்டும் தான்”

“என்னமோ போங்க அவனை கேட்க ஆள் இல்லைன்னு தானே இப்படி ஆடிகிட்டு இருக்கிறான் காவல்துறையில இருக்கிற பாதிபேர் இவன்மேல காண்டுல தான் இருக்காங்க எப்படியாச்சும் யார்கிட்டயும் சிக்கவைக்கலாம்னா முடிய மாட்டேங்குதுப்பா என்னதான் நல்லதே செய்தாலும் அவன் அராஜககாரன் அவன் எல்லாம் துணிச்சலா சுத்திட்டு இருக்கிறான்” என்று மனம் கொதிக்க கோபாவேசத்துடன் கூறுவான் யுகேந்திரன். மகனின் இந்த கொதிப்பு அவருக்கு வீண் என்று நன்றாக புரிந்ததும்...



“இங்க பாரு யுகேன் நீ நினைக்கிற மாதிரி அவன் எல்லா விஷயத்திலேயும் ஜெயிக்க முடியாது அவன் அடிமட்டமா தோற்று போகிற ஒரு விசயமும் இருக்கு...”



“அப்படி என்னப்பா விஷயம்...?”



“அவன் கல்யாணம்... குடும்பம்... இது ரெண்டுமே அவனுக்கு பெரிய அடிதான் அவனுக்கு அது கிடைக்கவும் கிடைக்காது” என்றதும் அவன் முகத்தில் தோன்றிய ஒளிர்வு அவன் தெளிந்துவிட்டதை உணர்த்த சற்றே ஆசுவாசமானார்... ஆனால் அவர் மகனை தேற்ற கூறிய ஒருவிஷயத்தை கொண்டே அவன் வாழ்வில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்த போவதை அறியவில்லை!



ஆரா இண்டஸ்ட்ரீஸ் பித்தளை நியான் பலகை வரவேற்க யுகேந்திரன், மதிராதவி இருவரும் அழுவலகத்திற்குள் நுழைந்ததும் இருவருமே கண்ணேகருத்தாக வெளியில் ஆழ்ந்துப்போனார்கள்!!




**********************

அந்த பிரம்மாண்டமான வீட்டின் ஹாலில் இருந்த சோபாவில் கால்மேல்கால் வைத்து ஒற்றை கையை மடித்துக் கொண்டு மற்றொரு கரத்தின் விரலை உதட்டில் வைத்துக் கொண்டு பாறையின் கடினத்துடன் இறுக்கமாக அமர்ந்திருந்தான் அபராஜிதவர்மன்.



அவனின் ஆட்களோ அவனின் இறுக்கத்தை கருத்தில் கொண்டவர்களாக அங்காங்கே சிலையென சுற்றி நின்று கொண்டிருந்தனர்... அனைவரின் பார்வையும் அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியின் திரையிலேயே பதிந்தபடி இருந்தது... அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்திகள் தொடர்ந்தன...



“வணக்கம் இன்றைய முக்கியச் செய்திகள்...” என்றதும் அனைவரும் காதை தீட்டி வைத்து காத்திருக்கும் சமயம் அவர்கள் எதிர்பார்த்த செய்தியும் ஒளிபரப்பாகியது...


“சென்னை நேப்பியர் பாலம் அமைந்துள்ள கூவத்தில் ஆணின் சடலம் கைகால்கள் துண்டாக்கப்பட்ட நிலையில் போலீசாரால் கண்டெடுக்கபட்டனர்... இச்சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன் பத்து வயது சிறுமியை பிணமாக எடுக்கப்பட்ட இடத்திலேயே அதேபோன்று இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்”



“மேலும் இது இரண்டிற்கும் சம்மந்தம் இருக்கலாம் என்ற காவல்துறையினர் சந்தேகத்தின்படி இந்த வழக்கின் விசாரணையை கையாள குற்றபிரிவு விசாரணை அதிகாரியான திரு.வெற்றிமாறன் ஐபிஎஸ் அவர்களிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது” என்று கூறிமுடித்திருக்க அபராஜிதவர்மனின் முகம் வெற்றி களிப்பை பூசிக்கொண்டு கர்வத்துடன் இளமுறுவலை உதிர்த்த சமயம் அவன் அலைபேசியில் அழைப்பை கண்டு யாரென பார்த்தவன் கண்கள் மின்னியது குதூகலத்தில்!!



தென்றல் வீசும்...!


***********************************


ஹாய் நட்பூக்களே...



வந்துட்டேன்... வந்துட்டேன்... நீ யார் அப்படின்னு கேட்கிறது புரியுது... பட் உடல்நிலையை பார்த்துக்கொண்டு வர தாமதம் ஆகி விட்டது... இந்த பச்சமண்ணை பெரிய மனசு பண்ணி எல்லாரும் மன்னிச்சிருங்க செல்லங்களா ஹிஹிஹி...!



நான் முன்னாடி ஒரு வோடிங் வைத்தேன் அதில் எல்லாரும் “தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா” இந்த அபராஜிதவர்மனை தான் கேட்டிருந்தீர்கள்... இப்போவே சொல்லிடறேன் நான் இல்லை நீங்க தான் கேட்டிங்க ஹிஹிஹி... (நான் கிரேட் எஸ்கேப்) நான் யூடி போட்டுட்டு ஓடியே போறேன்...



எல்லாரும் படிச்சுட்டு கம்முனு திரும்பி போகக்கூடாது அப்படி போனா பூச்சாண்டி கொரோனா அட்டாக் பண்ணிரும் அதனால சமத்தா கமெண்ட் பண்ணிட்டு போங்க (ரொம்ப ஓவரா போறோமோ .. சும்மா போவோம்)



கமெண்ட்ஸ் ப்ளீஸ் தோழிகளே...!





நட்புடன்,

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீ :2

சிதம்பர ரகசியம்

இந்துசமய வேத நிலைப்படி தைமாசம் குருபூசம் பகல் நேரம் சிவபெருமான் மூவாயிரம் பூத கணங்களோட பூமிக்கு வந்து பதஞ்சலி வியாக்கிரபாதா வேண்டுகோளுக்கு இணங்க தில்லையை தேர்ந்தேடுக்கிறார் ஆனந்த தாண்டவம் ஆகா காட்சியளிக்க... கோவிலின் கட்டமைக்கு பிறகு மூவாயிரத்தில் ஒருவர் மட்டும் காணமல் போனதாம் இரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணுற்று ஒன்பது பூத கணங்கள் தான் இருந்தனவாம் அந்த தொலைந்தவர் யார் என்று தேடிக் கொண்டிருந்தார்களாம் அப்போது அசிரீரி மூலம் வேறு யாருமல்ல யானே நடராசன் அப்படி என்று மொழி கேட்டதாக வரலாறு கூறப்படுகிறது.



*****************************



வெற்றிமாறன் ஐபிஎஸ் கணகம்பீரமான குற்றபிரிவு விசாரணையை சேர்ந்த முப்பது வயது நிரம்பிய அதிகாரி... வெற்றியின் வெற்றியே அவன் ஒரு வழக்கை கையாண்டான் என்றால் அது நிச்சயம் வெற்றியில் தான் முடியும் காவல்துறையினர் சிலருக்கு அவன் மேல் பெருமை கூட உண்டு... அதேசமயம் அவனுக்கு எதிர்ப்பாளர்களும் உண்டு அவனை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் கண்களுக்குள் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருப்பவன். நேப்பியர் பாலம் அமைந்துள்ள கூவத்தில் நடந்த இரண்டாவது கொலை சம்பவத்திற்கு பிறகு வழக்கை கையாள இவரை நியமிக்கவே அவனை பேட்டியெடுக்க பத்திரிக்கையாளர்களும், ஊடகச் செய்தியாளர்களும் கையில் மைக்குடனும், பேனா பேப்பருமாக சூழ்ந்து கொண்டு கேள்விக்கணைகளை வரிசையாக தொடுக்க ஆரம்பித்தனர்...



“சார் ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த குழந்தை பார்கவி இன்சிடெண்டும் இப்போ நடந்திருக்கிற கொலைக்கும் எதுவும் சம்மந்தம் இருக்கா?”



“குழந்தை டெட்பாடி கிடைச்சு விசாரணைக்கு போகிற அடுத்த ரெண்டாவது நாள் இந்த கொலை நடந்திருக்கு அப்போ இந்த கொலை செய்தது யாரா இருக்கும்ன்னு நினைக்கறீங்க?”



“குழந்தை பார்கவி அறம் ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்தவங்க சொல்றீங்க? அப்போ இந்த கொலைக்கும் அபராஜிதவர்மனுக்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமா?” என்று சரமாரியாக கேள்வியை தாக்கிக் கொண்டிருந்தனர்... அவர்களின் கேள்வி எதற்கும் எந்தவொரு உணர்ச்சியும் பிரதிபலிக்காது நின்றிருந்தவன் மௌனத்தை உடைத்து பேச ஆரம்பித்தான்...



“நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே விடை தான்... செத்துப் போனவன் நாட்டுக்காக உயிரை கொடுத்தவனும் இல்லை; அப்பாவியும் இல்லை...; ஆனா அந்த பத்து வயசு அப்பாவி குழந்தை என்ன பண்ணினா? இன்னும் அவளுக்கு வெளியுலகம் கூட முழுதா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை... இதே அந்த குழந்தைக்கு பெத்தவங்க உறவுகாரங்கன்னு இருந்திருந்தா தன் சொத்தை வித்தாவது அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்து தானே இருப்பாங்க?” என்றவன் அனைவரின் முகங்களையும் ஆராய அதுவரை சரமாரியாக கேள்விக்கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் உதடுகளை இறுக மூடியபடி நின்று கொண்டிருந்தனர்... குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு நிலவிய நிசப்தத்தை விலக்கியது அவனின் கம்பீர குரல்....



“எல்லாரும் வாயடைச்சு போய் நின்னுட்டதே சொல்லுது உண்மைன்னு... அதனால நான் என்ன சொல்ல வரேன்னா... பார்கவி கொலை வழக்கிற்கும் இப்போ நடந்திருக்கிற கொலைக்கும் சம்மந்தப்படுத்தி ரூமர்ஸ் எழுதுறதை விட்டுட்டு வேற எதுவும் நாட்டுக்கு நல்ல விஷயமா இருந்தா அதுக்கு நீங்க பக்கம்பக்கமா எழுதி மக்கள்கிட்டே கொண்டு சேருங்க தட்ஸ் ஆல்” என்று விட்டு நகர போனவனை தடுத்தியது கூட்டத்தில் இருந்த ஒரு குரல்...



“அப்போ இந்த கொலைக்கு சம்மந்தப்பட்டவங்களை என்ன செய்யப்போறீங்க...? சப்போஸ் இப்போ நீங்க சொன்ன மாதிரி இறந்த ஆள் சட்டத்தின் பிடியில் சிக்கியிருந்தா நிச்சயம் தண்டனை கொடுத்திருப்பீங்களா?” என்றவனை உறுத்து பார்த்தவன் விழிகளில் தீட்சண்யம் தெரிந்தது...



“சட்டத்துக்கு முன்னாடி எல்லா குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கணும், கிடைக்க வைப்பேன்...! ஆனா இப்போ இந்த கொலை வழக்குல இந்த கொலையை செய்தவருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் ஏன்னா...” என்றவன் அனைவரையும் தீனமாக பார்த்தபடி...



“அவனை அரெஸ்ட் பண்ணி பத்து வருஷம் உள்ளே தள்ளி ஜெயிலில் வச்சு சோறு போட்டு பாதுகாத்து மெடிக்கல் செக்கபில் இருந்து சகலமும் கொடுத்து கவர்மெண்ட் செலவையெல்லாம் குறைச்சிருக்கிறான்... இவனை மாதிரி ஆளுக்கெல்லாம் ஸ்பாட் தண்டனை தான் முடிவு இதை மேற்கொண்டு கையாள போகிறது அந்த குழந்தைக்கு என்ன நடந்ததுன்னு தான்... மேலும் அவனுக்கான பத்து வருஷ கவர்மெண்ட் செலவை ஆதரவற்ற இல்லத்துக்கே சேர்ப்பிக்கப்படும்” என்றவன் தன் தொப்பியை கழற்றியபடி வேகமாக அழுவலக அறைக்குள் புகுந்தவன் தன் அலைபேசியை எடுத்து தன் நெருங்கிய நண்பனான அபராஜிதவர்மனுக்கு அழைத்தான்... அவனும் செய்தியில் ஒலித்ததை கேட்டு உற்சாகத்தில் இருந்தவன் நண்பனின் அழைப்பை புன்னகை முகத்துடன் உயிர்ப்பித்திருந்தான்... அவன் மகிழ்ச்சி, துக்கம் என அனைத்தும் பகிரும் ஒரே ஒரு நபர்.



“சொல்லுடா வெற்றி...” என்று உற்சாக குரலில் வினவியிருந்தான்... நண்பனின் குதூகலம் அவனையும் தொற்றிக்கொண்டிருக்க...



“என்னடா வர்மன் ஆச்சு பார்கவிக்கு? எப்படி இந்த சம்பவம் நடந்தது” தீவிரமாக விசாரித்தான் வெற்றி. தன் நண்பனின் கேள்வியில் அவன் முகம் கற்பாறையின் கடினத்துடன் இறுகியது.



“குழந்தையை கடத்தி மும்பையில் ரெட்லைட் ஏரியாக்கு விற்க பார்த்திருக்கான் அந்த பொறுக்கி நாய்” என்றபடி பற்களை நறநறத்தான்... அவனின் அந்த ஒற்றை செய்கையே அவன் கோபத்தின் அளவை காட்டியது.



“ஹ்ம்ம்ம்... இவனுங்க மாதிரி ஆளுக்கு நீ கொடுத்தது தான் சரியான தண்டனை”



“அது இருக்கட்டும் அங்கே உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே”



“என் டிபார்ட்மெண்ட் சும்மா விட்டிருவாங்களா என்ன? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்டா வர்மன்...” என்றவன் சிறிதுநேரம் வழக்கமான பேச்சை பேசிவிட்டு வைத்துவிட்டிருந்தான். இதுபோன்ற விசயங்களில் நண்பனுக்குநண்பன் ஆதரவு கரம் நீட்டுவதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தார்கள்.



அபராஜிதன் முகம் தான் இறுக்கம் தளராது கடினத்துடன் இருந்தது... அவன் இல்லத்தில் வளர்ந்த ஒரு பெண்மகவுக்கு ஏற்பட்ட அநீதிக்கு தக்க தண்டனை வழங்கிவிட்டிருந்த போதிலும் அந்த சிறுமியின் இழப்பை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை... இது போன்ற இழப்புகளை எங்கோ ஓர் மூலையில் கேட்டாலே மனம் கொதித்து போகிறவனுக்கு தன் பாதுகாப்பில் வளர்ந்த குழந்தைக்கு கிடைக்காது போனதை எண்ணி அவன் மனம் சாந்தமடைய மறுத்தது... அந்த கொதிப்பின் தணல் குறையாத வேகத்துடனே எழுந்தவன்...



“ராம் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு என்னை யாரும் தொந்தரவு பண்ணக்கூடாது” என்று கட்டளையிட்டவனை தயக்கத்துடன் பார்க்க அதைக் கண்டு கொண்ட அபராஜிதன்...



“என்ன தயங்குறீங்க சொல்லுங்க” என்று உந்தினான்...



“சார் இன்னைக்கு நம்ம ஆட்டோபார்ட்ஸ் கம்பனி ஜெர்மன் இன்வெஸ்டர்ஸ் டெண்டர்ல பார்டிசிபேட் பண்ணனும்... முக்கியமான ப்ராஜெக்ட் இதில் ஆரா இண்டஸ்ட்ரீஸும்...” என்றவனின் பேச்சு புரிந்து கொண்டவனாக காற்றில் கையசைத்தபடி பேச்சை நிறுத்தியவன்...

“புரிஞ்சுது நான் பார்த்துக்கிறேன்” என்றவன் விருட்டென்று அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டான்.



அறையில் இருந்த மதுபான ரகங்களை எடுத்து உடைத்தவன் தன் மனதின் ரணம் ஆற வேண்டி புட்டியுடன் சரித்துக் கொண்டிருந்தான்... மூன்று புட்டிகள் முழுதாக சரித்துவிட்டு கண்கள் கொவ்வைபழமென சிவந்திருக்க, புஜங்கள் இறுக அமர்ந்திருந்தான்!




*******************



யுகேந்திரன் தீவிரமாக வேலையில் ஆழ்ந்திருந்தான்... ஜெர்மன் பங்கீட்டாளர்களின் ஏலத்தில் அவன் நிறுவனத்துடன் அபாரஜிதனின் நிறுவனமும் போட்டியிடுகிறதே இந்த சமயம் எப்படியேனும் அவனை வீழ்த்திவிட்டு இந்த இருபது கோடி ரூபாய் ஏலத்தை கைவிடாது பற்றிக்கொள்ள வேண்டும் என்ற வெறி அவனுள் கொழுந்துவிட்டிருந்தது.



மதிராதவி அன்றைய டெண்டருக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு அதை கோப்பில் இட்டவள் யுகேந்திரனின் பார்வைக்காக வேண்டி அவன் அறை நோக்கி வந்திருந்தாள்... அவன் பார்வை கணினியில் தீவிரத்துடன் நிலை குத்தியிருப்பதை கண்டு புருவம் சுருக்கி யோசித்தவள்...



“யுகன்...” என்று மெல்லிய குரலில் அழைத்ததும் அவன் உள்மனதில் அபராஜிதபவர்மனை வெல்லும் மூர்க்கத்தனமான ஆவேசம் மறைந்தவனாக அவளை காதலுடன் நோக்கினான்.



“என்னாச்சு யுகன் ரொம்ப சீரியஸ்ஸா இருக்கிற மாதிரி இருக்கு?”



“எல்லாம் இந்த டெண்டர் நல்லபடியா முடிஞ்சு நம்ம கைக்கு வரணும்னு தான்” என்றவனின் முகம் அதே தீவிரத்துடன் மாறியது...



“யுகன் இந்த தடவை கண்டிப்பா நமக்கு தான் வெற்றி கிடைக்கும்... கவலைப்படாதீங்க... இதோ அதுக்கான டாக்குமெண்டஸ் அண்ட் கொட்டேஷன் இதை சரி பார்த்துட்டீங்கன்னா சீக்கிரமே நாம டெண்டர் ஓப்பனிங் டைம்க்கு போயிறலாம்” என்றவள் அவனிடம் அந்த கோப்பை நீட்ட அதை சரிபார்த்தவன் அவளை பார்த்து திருப்தியான புன்னகையை சிந்திவிட்டு அதில் கையெழுத்திட்டு கொடுத்தான். அவளும் பதிலுக்கு புன்னகைத்தபடியே அதை பெற்றுக்கொள்ள முனைந்தவளை அவனின் இரும்பு கரத்தால் அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை பிடித்துக் கொண்டவன் அவளையே ஒரு மார்க்கமாக பார்க்கலானான்... அவனின் பார்வை பரிபாஷையில் இருந்த காதலின் தாபத்தை கண்டு கொண்டவள் வெட்கத்துடன் தலைதாழ்ந்து....





“இது ஆபீஸ் யுகன் ப்ளீஸ் கையை விடுங்க யார் வேணாலும் எப்போ வேணாலும் வருவாங்க” என்று அவளுக்கே கேட்காத ஒரு குரலில் கூறியவளை கண்டு கிறங்கிப் போனான்...



“இது என்னுடைய ரூம் என் அனுமதி இல்லாம யாரும் வரமாட்டாங்க” என்றவன் அவள் கரத்தினை பற்றிக் கொண்டபடியே...



“ப்ளீஸ் மதிமா... ஒரே ஒரு தடவை இப்போ இருக்கிற டென்ஷன்க்கு ஒரேஒரு சிங்கள் ஹக் போதும்” என்று சரசமாய் பேசி பார்வையால் அவளின் அனுமதி வேண்டி நின்றான்...



அவன் பார்வையில் தெரிந்த யாசிப்பில் பெண்ணவளின் நாணம் கட்டுண்டு கிறங்கியது... இருவரின் விழிகளும் மோதிக் கொண்டு அவனின் காந்த இதழ்கள் மெல்ல அவள் கன்னக்கதுப்பினை நோக்கி நெருங்க... “மே ஐ கம் இன் சார்” என்ற அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவர்கள் அவசரமாக விலகி சுதாரித்தார்கள்...



“என்ன சொல்லுங்க” என்றவனின் வார்த்தையில் வந்த சிடுசிடுப்பில் தன்னவளிடம் பகிர முடியாத காதல் விரகத்தின் கடுப்பு வெளிப்பட்டது...



“இதுல உங்க சைன் வேணும் சார்” என்றதும் வேகமாக அதை படித்து கையெழுத்திட்டு கொடுத்தவன் தன்னவளின் புறம் திரும்பினான்... மதி அவனின் அந்த கோபத்தை கண்டு உதட்டுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தாள்.



“என்ன சிரிப்பு” என்றவனின் வார்த்தையில் போலி முறைப்பு இருந்தது...



“ஒண்ணுமில்லை...” என்றவளுக்கு சிரிப்பை அடக்குவது அதற்குமேலும் கடினமாக போயிருக்க “களுக்கென்று” சிரித்துவிட்டிருந்தாள்... நாணயங்களை தரையில் சிதறடித்தது போன்ற சிரிப்பின் ஓசையிலும், பால்வண்ண நிறத்தில் வரிசையாய் தெரிந்த அரிசிப்பல் அழகும், ரோஜா அதரங்களும் என அவளின் மதி முகத்தை கண்டு பித்தாகி நின்றான் யுகேந்திரன். அவனின் ஆளை விழுங்கிவிடும் பார்வையில் அவள் சிரிப்பு மின்சார பொத்தானை அழுத்தியது போன்று பட்டென்று நின்றது...!



“போதும்.. இது.. ஆபிஸ்.. அடுத்து.. வேலை.. பார்க்கணும்.. நாம ரெண்டு மணிக்கு பார்க்கின் ரெசிடென்ஷியல் போகணும்” அவன் பார்வையில் தடுமாறி திக்கியபடி ஆரம்பித்தவள் வேலை என்றதும் நிதானத்திற்கு வந்துவிட்டாள்... அவளின் அந்த பேச்சிற்கு பிறகுதான் தானும் நிதானத்திற்கு வந்தவன் வேலையை பற்றிய பேச்சை தொடங்கினான்... மிகவும் தீவிரமாக அவளிடம் அலுவலை பற்றி பேசிக் கொண்டிருந்தவன் அவனின் செயலாளர் லிஷாந்தை அழைத்தான்...





“லிஷாந்த் பார்க்கின் போய் டெண்டர் ஹாலில் இருக்கிற பாக்ஸ்ல கொட்டேஷன் காபியை ட்ராப் பண்ணிருங்க... முக்கியமான விஷயம் எங்கேயும் சேஸ் ஆகிரவே கூடாது பீ கேர்புல்”



“சூர் சார்...” என்று பவ்யமாகவும், கடமை உணர்ச்சியுடனும் கூறிய லிஷாந்த் அவன் தந்த அந்த வெள்ளை உரையிட்ட காகிதத்தை பெற்று கொண்டு விடைபெற்றிருந்தான்.



“ஏன் யுகன் நாமளும் இப்போ அங்கே தானே போகப்போகிறோம் நாமளே கொட்டேஷன் ட்ராப் பண்ணினா என்ன?”



“ம்ஹும்... இல்லை மதி... இது சரிவராது...”





“அதுதான் ஏன்?” என்றவளை ஏதோ மனதில் அசைபோட்டு கொண்டிருந்தவனாக தீவிரமாக பார்த்தவன்...



“அபராஜிதவர்மன்” என்ற பெயரை உச்சரித்தவன் முகம் கல்லை போன்று கடினத்துடன் இருந்தது... அவனின் எண்ணவோட்டத்தினை அறிந்தவாளாக அவன் உள்ளங்கையை தன் கரங்களுக்குள் அடக்கிக்கொண்டவள்...



“யுகன் நீங்க இப்படி உர்ருன்னு இருக்கிறது ஏன்னு புரியுது... ஆனா இப்படி உங்க முன்கோபத்தால எதுவும் பயன் உண்டா யோசியுங்க...?”



“....ம்ச்....” என்று சலித்தபடி அவளை பார்த்தான்...





“பீ கூல்... எப்படியும் இந்த டெண்டர் நமக்கு தான் அந்த நம்பிக்கையோட இருங்க” என்றவளின் முகம் சிந்திய அந்த புன்னகையில் அவன் மனம் தெளிந்தது.



“ஹ்ம்ம்... மேடம் சொன்னா சரிதான்... சக்தியில்லையேல் சிவம் இல்லை” என்று உதட்டை மடக்கி கித்தாய்ப்பு கூறியவனை போலியாக முறைத்தாள்...



“போதும்... கிளம்பலாம் வாங்க டைம் ஆச்சு”



“ஆமாம் லஞ்ச் வேற எடுக்கணும் அப்படியே ஹோட்டல் போயிட்டு போகலாம்”

“யுகன் எனக்கு லஞ்ச் இருக்கு...”



“அந்த லஞ்ச் என் மாமியார் பண்ணினது தானே? அது எனக்கு...! நான் வாங்கி தருவது உனக்கு”



“இந்த டீல் ஒகே” என்றவள் மேஜையில் இருந்த கைப்பையும், கோப்பும் எடுத்துக்கொண்டு முன்னே நடந்தவளின் பூங்கரங்களை பற்றி நிறுத்தினான்... அவனின் செயலில் புருவம் உயர்த்தியபடி என்னவென்பது போல் வினவியதும்...



“இந்த டெண்டர் சக்சஸ் ஆனா எனக்கு என்ன தருவ?”



“நீங்க என்ன கேட்டாலும் தருவேன்”

“ப்ராமிஸ்” என்று கரம் நீட்டியவனை அவன் கரம் மேல் வைத்து “ப்ராமிஸ்” என்றவளின் சத்தியம் ஒரு சதவீதம் சாத்தியமாக போவதில்லை என்று இருவருமே உணர்ந்திருக்கவில்லை!!



மதி, யுகேன் இருவரும் டெண்டர் நடக்கும் இடமான பார்க்கின் நட்சத்திர ஹோட்டலிலேயே சாப்பிட அமர்ந்தார்கள்... யுகேன் அவளின் அருகாமையை ரசித்தவனாக அவளிடம்...



“மதி எனக்கு ஊட்டிவிடு” சட்டென்று கூறியதில் மதி திடுக்கிட்டாள்...



“யுகேன் என்ன விளையாட்டிது? இது ஹோட்டல்” என்று தயங்கியபடி மறுத்தாள்.



“ம்ம்ம்... ஹோட்டல் தான்... நான் இல்லைன்னா சொன்னேன்” அவன் விடாகொண்டனாக கூறினான்.



“அப்புறம் என்ன விளையாட்டிது? நான் மாட்டேன்” என்று மறுத்ததும்... அவளை அமைதியாக பார்த்தபடியே அவனின் உணவு தட்டை மேஜையின் ஓரத்தில் நகர்த்திவிட்டிருந்தான்... அவனின் இந்த செயல் அவன் பிடிவாதத்தை காட்டவே மதி செய்வதறியாது திணறியவள் பின்பு வேறு வழியின்றி அவன் தட்டை தன் புறம் நகர்த்தி அதில் ஒரு கவளம் உணவை அள்ளி அவன் வாயில் திணித்தாள்... அவள் உணவை அவன் வாயிற்கு கொண்டு செல்ல மனதில் தோன்றிய உல்லாச பரபரப்புடன் உண்ண ஆரம்பித்தான்...



“வரவர உங்க பிடிவாதம் அதிகமாகிருச்சு யுகன்” என்று வெட்கத்துடன் சிணுங்கியவளை கண்டு குறும்பாக புன்னகைத்தவன்...

“அதுக்கு தான் மதி சொல்றேன் சீக்கிரமே என்னை கல்யாணம் பண்ணிக்கோ... இதை எல்லாம் நம்ம வீட்டிலேயே செய்யலாம் நீயும் கூச்சப்பட தேவையில்லை” என்றவனை கண்டு அவளுக்கு பகீர் என்றது...!



“ஏன்...? ஏன்... பிராணநாதா ஏன்..? இங்கேயாச்சும் பரவாயில்லை யாரோ தெரியாதவங்க அங்கே உங்க அம்மாஅப்பா முன்னடியா நான் மாட்டேன்ப்பா” என்று இடம்வலம் தலையசைத்தவளை கண்டு அவன் கொல்லென்று சிரித்துவிட்டிருந்தான்.



“சிரிக்கறீங்களா உங்களை” என்றவள் பொய்யாய் அவனை அடிக்க இருவரும் சிரித்து பேசியபடியே உண்டு முடித்தபடி எழுந்து வெளியேறினார்கள்.



இருவரும் நேரம் ஆவதை உணர்ந்து அந்த உணவகத்திலேயே இருந்த டெண்டர் நடக்கும் அரங்கிற்கு செல்ல அந்நேரம் அபராஜிதவர்மனும் நுழைந்தான்.



நீலமும், கிரீம்கலரும் கலந்த கோட்சூட் கருநிற கண்ணாடி என அவனின் திராவிட நிறத்திற்கு அழகில் மங்கி தெரிந்தாலும்... அவனின் ஆண்மையின் வனப்பும், மிடுக்கான பார்வையும் கம்பீரமாக இருந்தது. ஆண்மைக்கு அழகு என்பது யாதெனில் என்ற கோடிட்ட இடத்தில் அபராஜிதவர்மன் மிகவும் கணகச்சிதமாக பொருந்தினான்.



யுகேந்திரன் அவனை குரோதத்துடன் முறைத்தான்... இதற்கெல்லாம் அசாரூபவனா அபராஜிதவர்மன்... நீயெல்லாம் எனக்கு எதிரியா என்பது போல் எள்ளலாய் பார்த்தபடி அரங்கிற்குள் சென்றமர்ந்தான்.





அவனை தொடர்ந்து இருவரும் நுழைந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் ஏலம் ஆரம்பிக்கப்பட்டது. ஜெர்மனி பங்கீட்டாளர்கள் நிபந்தனைகளை வாசிக்க முதலாம் கட்டத்தில் ஆரா இண்டஸ்ட்ரீஸ் இடம் பெற்றது... யுகேந்திரன் முகம் வெற்றி களிப்பை பூசிக்கொள்ள அபராஜிதனை கர்வத்துடன் பார்த்தான்.



அபராஜிதவர்மன் உணர்ச்சித் துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தான்... அவனின் தோரணையில் யுகேந்திரனால் எதுவும் அவதானிக்க முடியவில்லை... அபராஜிதனை பற்றிய அவனுக்குள் உண்டான சிந்தனையை கலைத்தது தொடர்ந்து நடந்த ஒப்பந்த கூட்ட பேச்சு... அடுத்தடுத்த கட்டத்திலும் யுகேந்திரனுக்கு உரிமையான நிறுவனமே தகுதிக்கு ஒப்பிட்டு வந்து கொண்டிருக்க அப்போதே சாதித்துவிட்டவனை போல் மிதப்பில் அமர்ந்திருந்தான்.



இறுதிகட்ட ஒப்பந்த தேர்வை வந்திருந்த வெளிநாட்டு பிரஜைகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் வேளையில் அபராஜிதன் யுகேந்திரன் இருவரும் ஒருவரைஒருவர் மிதிப்பாய் பார்த்துக் கொண்டனர்...!



“வர்மன் ஆட்டோபர்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ்... எலிஜிபிள் டு சைன் இன் அவர் பிராஜக்ட் கங்கிராஜுலேஷன்ஸ் வர்மன்” என்றதும் யுகேந்திரனுக்கு திகைப்பாகி போக... அபராஜிதன் தன் கருநிற கண்ணாடியை ஒயிலாய் கீழிறக்கி மிதிப்பாய் பார்த்தபடி கண்ணிமைக்க யுகேந்திரனுக்கு வெறியாகிப் போனது...! முதலில் இருந்து அவன் நிறுவனம் வந்து கொண்டிருக்க இறுதியில் எப்படி மாறிப்போகும் என்ற கேள்வி அவனுள் எழுந்ததும் அதை வெளிப்படுத்தினான்...



“வாட் ஹேப்பன்... வை மை கம்பெனி நாட் எலிஜிபிள்” ஆவேசத்துடன் வினவினான்.



“சார் ப்ளீஸ் காம்டவுன்... நீங்க கோட் பண்ணின எல்லாமே இவங்க கேட்ட ரெகுயர்மென்ட்க்கு மேட்ச் ஆகுது தான்... ஆனா அவங்க எதிர்பார்க்கிற செக்யூரிட்டி இல்லை” என்று நிதானமாக விளக்கினான் அவர்களுடன் வந்திருந்த இந்திய உதவியாளர்.



“என்னாச்சு மதி இது உண்மையா...? எல்லாம் சரியாத்தானே கொடுத்தேன்” தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரத்தில் கடுகடுத்த முகத்துடன் அவளிடம் வினவினான்.



“ஆ... ஆமாம்... யுகன்” அவனின் எதிர்பாராத இந்த திடீர் கோபத்தில் வெடவெடத்தபடி தட்டுதடுமாறி கூறினாள்.



“அப்புறம் எப்படி இப்படி ஆச்சு? ஷிட்...! இதெல்லாம் முன்னாடியே கவனமா பார்த்திருக்க வேண்டாம்” என்று அவளை கடிந்தான்... அவனின் சீற்றத்தில் மதியின் மனம் மரவட்டையாய் சுருண்டு போனது.



அபராஜிதவர்மன் வெளிநாட்டவர்களுடன் கலந்துரையாட சென்றிருக்க யுகேந்திரன் நெற்றியில் கரத்தை தாங்கியபடி தளர்ந்து அமர்ந்துவிட்டான்... மதியின் முகத்தில் வருத்தம் தோய்ந்திருக்க நின்றிருந்தவள் தன்னவனின் இந்த தளர்ந்த நிலை அவள் வருத்தத்தை காட்டிலும் இருமடங்கு அதிகமாக பாதிக்க செய்யவே தன் வருத்தத்தை மறைத்து அவனை தேற்ற எண்ணி அருகில் சென்றவள்...



“யுகன் என்கூட வாங்க” என்றழைத்தவளை என்னஏதென்று கூட வினவாமல் சாவி கொடுத்த பொம்மை போன்று அவள் பின்னே சென்றான்.. அவனை அழைத்துக் கொண்டு அங்கிருக்கும் உணவகத்திற்க்கே வந்தவள் பிரெஷ் ஜூஸ் வரவழைத்து குடிக்க செய்தாள்... சிலநிமிடங்கள் கடக்கவே தன்னை சுதாரித்துக் கொண்டவன் எதிரில் முகம் வாடி அமர்ந்திருந்த மதியை கண்டான். இருள் அப்பியிருந்த அவள் முகத்தை கண்டு என்னவென்று யோசித்தவனுக்கு புரிந்தது சற்றுமுன்பு அவளிடம் கோபத்தில் தாளித்தது. தன் தவறை உணர்ந்தவனாக புறந்தலையில் தட்டிக்கொண்டவன்...



“சாரி மதி அப்போ ஏதோ கோபத்தில் பேசிட்டேன்” என்றவனை கண்டு அவளின் வருத்தம் துணிகொண்டு துடைத்தார் போன்று ஓடி மறைந்து கொண்டிருக்க சன்னமாக முறுவலித்தாள்...



“ஹ்ம்ம்ம்... எனக்கு தெரியும் ஆனா எதுக்காக அப்படி கோபப்படணும் யுகன்?” என்று வினவினாள்...



“அதில்லை மதி அவனை எப்படியாவது ஜெயிக்கணும் என்கிற வெறிதான்... எப்படி கவனமா பார்த்துபார்த்து வேலை செய்தாலும் அத்தனையும் தாண்டி அல்வா மாதிரி அவன் தட்டிட்டு போயிடுறான்... அதை நினைச்சா தான் கடுப்பா இருக்கு” பல்லைக் கடித்தபடி கூறியவன் கைமுஷ்டியை மடக்கி மேஜையில் குத்தினான்.



“முதலில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க யுகன்... நீங்க அவர்கூட போட்டி போடுங்க வேண்டாம்ன்னு சொல்லலை அதுக்காக உங்களை நீங்களே வருத்திக்காதீங்க... எல்லாருக்குமே ஒரு நெகடிவ்ன்னு ஒண்ணு இருக்கும் அதேபோல அவருக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கும்... அது எதுன்னு தேடுங்க அதில் நீங்க தான் பெஸ்டா இருப்பீங்க...” என்று அவனை தேற்ற வேண்டி கூறிய வார்த்தைகள் மூலையில் ஏறிய அதேசமயம் அன்று அவன் தந்தை கூறிய வார்த்தைகளும் நினைவில் எழுந்து அவனை திருப்தியுற செய்திருக்க அவன் மனதில் வன்மம் கொழுந்துவிட்டது.



“நீ சொன்னது சரிதான் மதிமா... அவனால தொழிலில் தானே என்னை ஜெயிக்க முடியும் வாழ்க்கையில் (?)” என்று காற்றில் கேள்விக்குறியிட்டு காட்டியவன் மனதில் தோன்றிய திட்டத்துடன் எழுந்து சென்றான்.



“மதி நீ போய் கார் எடுத்துட்டு வா நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன்” என்றதும் அவள் நகர்ந்திருந்தாள்.

அபராஜிதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு அவன் செயலாளர் ராம், மற்றும் அவனின் மேலாளர் கணேஷ் உடன் பேசியபடி வந்துகொண்டிருந்தவனை யுகேந்திரன் தடுத்திருந்தான்...



அவனின் இந்த செயலில் புருவம் இடுங்க பார்த்தவன் பார்வையாலேயே அவர்களை செல்ல வைத்தான் ஆனால் அப்போதுதான் அது நியாபகம் வர...



“கணேஷ் நான் சொன்னதை டைப் பண்ணி கொடுங்க... ஆடிட்டரையும் வர சொல்லுங்க” என்றுவிட்டு திரும்பிய அபராஜிதனை கண்டு யுகேந்திரன் நக்கலாக சிரித்தான்.



“படிப்பறிவு இல்லாத உனக்கு மேனேஜர், ஆடிட்டர், ஹ்ம்ம்... பாவம் என்ன செய்ய அவங்க இல்லாம உன்னால் துரும்பையும் அசைக்க முடியாதே” என்று அவனை எள்ளிநகையாடினான்.



“அப்படியா...? அப்போ உள்ளே நீ எதை புடுங்கிட்டு வந்த?” வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்த அழுத்தமான கேள்வியில் அவன் தன்மானத்தை சரியாக குறிபார்த்து தாக்க அவமானத்தில் கன்றி சிவந்தது யுகேந்திரன் முகம்.



“பத்து வார்த்தை பேசின உன்னால என் தன்மானத்தை சீண்ட முடிஞ்சதா... நான் ஒரே வார்த்தைதானே சொன்னேன் அதுக்கே இப்படி தெறிச்சு போய் நிற்கிற... இதுலையே தெரியல யாருக்கு என்ன தகுதி இருக்குன்னு?” என்றதும் மௌனத்தை உடைத்துவிட்டவன்...



“என்ன தொழில்ல என்னை ஜெய்ச்சுகிட்டே இருக்கிறோங்கிற மிதப்பா? நீ என்னை தொழிலில் மட்டும்தான் ஜெயிக்க முடியும்... ஆனா சொந்த வாழ்க்கையில் முடியாது அதில் நீ ஒரு பூஜ்யம்” என்று முட்டை வடிவத்தை காற்றில் வரைந்து காட்ட அவனுக்கு சுள்ளென்று கோபம் ஜிவுஜிவுத்தது...



“என்னால முடியாததுன்னு எதுவும் இல்லைன்னு உனக்கே தெரியும்”



“உன்னால முடியுமா உன்னை நம்பி எவடா குடும்பம் நடத்த வருவா? அப்படி வந்தாலும் அவ ஒரு வேசியா தான் இருப்பா” என்றதும்...



“ஏய்ய்ய்...” என்று கர்ஜித்தவன் ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கும் போதே...

“யுகன் இங்க என்ன பண்றீங்க சீக்கிரம் போகலாம் வாங்க” மதி அதுவரை அவர்களின் பேச்சை கண்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவள் அவனின் சுட்டுவிரல் நீட்டி எச்சரிப்பதை கண்ட பிறகே விஷயம் விபரீதம் ஆகும் முன் அழைத்து செல்லலாம் என்று யுகேந்திரனை அழைத்திருந்தாள்... அப்போதும் கண்களில் கனல் பறக்க ஆத்திரத்துடன் நிற்கும் அபராஜிதனை கண்டும் காணாமல் யுகேந்திரனை மட்டும் அழைத்து சென்றுவிட்டிருந்தாள்.



அபராஜிதனுக்கு மட்டும் சிவனை போன்று நெற்றி கண் இருந்திருந்தால் அவனை பார்வையால் எரித்திருப்பான் நல்லகாலம் அந்நேரம் அவன் தப்பித்துக்கொண்டான். அவன் அறிவானா அவனே அறியாமல் அவன் மனதில் குரோதம் என்னும் கொடிய நெருப்பை பற்ற வைத்துவிட்டான் என்று!!



அபராஜிதன் பொது இடம் கருதி தன்னை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு புயல் வேகத்தில் காருக்கு சென்றவன் வாகனத்தை சீறவிட்டிருந்தான்.



அபராஜிதவர்மனுக்கு யுகேந்திரனின் பேச்சில் சினம் சீறிக் கொண்டெழுந்தது ஆனால் அவன் அமைதியாக இருந்தான் அவனுடன் மோதுவதற்கு கூட அவனை போன்று பலமானவனாய் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் அவனிடமா மோதுவது என்று கட்டுப்படுத்திக் கொண்டாலும் அவன் வார்த்தைகள் கூரியவாளாய் அவன் நெஞ்சிலே நுழைந்துவிட்டிருந்தது... அவனின் கொதிப்பை அடக்க மது, மாது என தேட முயன்றவனுக்கு எதிலும் அவனால் முழுதாக ஈடுபட முடியாமல் அவனின் வார்த்தைகள் அவ்வப்போது செல்லரிப்பது போல் மூளையையும், மனதையும் குடைந்து கொண்டே இருந்தது.... அவனை எப்படி பலி வாங்குவது என்ற எண்ணம் கூட அப்போது தட்டுப்படாமல் போகவே அதனால் பீறிட்டு வந்த கோபத்தை கூட அவனின் வேலையாட்களிடம் காட்டிக்கொண்டிருந்தான்.




***********************



“என்ன யுகன் இன்னைக்கு பிராஜக்ட் என்னாச்சு” என்று மகனிடம் வினவினார் சந்திரகாந்தன்.



“ம்ம்ம்... மண்ணா போச்சு எப்பவும் போல அவன் லவுட்டிட்டு போயிட்டான்” என்று எரிச்சலில் சிடுசிடுத்தான்.



சந்திரகாந்தன் மகனின் கோபத்திற்கான காரணம் புரிந்து கொண்டவர் அவனை தனிமையில் இருக்க வைத்துவிட்டு மதிராதவியை பார்வையால் அழைத்திருந்தார்...



“என்னம்மா ஆச்சு போன இடத்துல?”



“அங்கிள் அதுவந்து....” என்று ஆரம்பித்தவள் அங்கு நடந்த அனைத்தையும் அட்சரம் பிசகாமல் ஒப்பித்தாள்... அந்தோ பரிதாபம்! அவனும் அபராஜிதனும் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததும் அவன் விரல் நீட்டி எச்சரித்ததையும் பெரிதாக எண்ணாமல் பெரியவரின் நிம்மதிக்காக மறைத்துவிட்டாள் பேதை! அவள் மட்டும் அதை கூறியிருந்தாள் என்றால் பின்னால் நடக்க போகவிருக்கும் பல அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாமோ?!





“நான் அப்போவே நினைச்சேன்மா இப்படிதான் எதுவும் நடக்கும்ன்னு... அவன் கூட மோதி ஜெயிக்க பார்க்காதே உன் வழில நீ போன்னு சொல்லியிருக்கேன் இருந்தும் ஏன் இப்படி அடித்துக்கறானோ... சரி விடுமா அந்த விஷயத்தை நானே இனி பார்த்துக்கிறேன்”



“என்ன விஷயம் அங்கிள்?”



“ஒரு சைட் விஷயமா அபராஜிதன்கிட்ட பேசியிருந்தேன் அது முடிஞ்சு டாக்குமெண்ட் ரெடி ஆகிருச்சு சைன் வாங்கணும் இவனை அனுப்பலாம்னு பார்த்தேன் இனி அது சரிவராது அதுதான் நானே பார்த்துக்கிறேன்” என்றதும் மதிக்கு யோசனையாக இருந்தது...



“ஏன் அங்கிள் அவரை பார்த்து சைன் வாங்கணும் இதை நம்மால் முடியாதா?” என்றவளை கண்டு உதடு பிரியாமல் முறுவலித்தவர்...



“சில விசயத்துக்கு யாரை பிடிச்சா வேலை நடக்குமோ அவங்களை பிடிக்கலாம் தப்பே இல்லை... பார்ட்டி கறாரான ஆள் நாம பேசின வேலைக்காகாது அதான் அவரை பார்த்து உதவி கேட்டேன்” என்று முடிக்க அவளுக்கு முழுதாக இல்லை என்றாலும் ஏதோ அவரின் வார்த்தைக்காக அமைதியாகிப் போனாள்.



ஒருவாரம் அமைதியாக கழிந்துவிட்டிருந்தது... சந்திரகாந்தன் மகனிடம் கூட கூறாமல் அபராஜிதவர்மனை பார்க்க புறப்பட ஆயத்தமானார்...



“குட்மார்னிங் அங்கிள்...” என்று உற்சாகமாக காலைவணக்கம் கூறினாள் மதிராதவி. அன்றலர்ந்த மலராக நின்றவளை கண்டு அவருக்கும் புத்துணர்வு பிறக்க...



“மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கேம்மா... ஆமாம் யுகேன் எங்க அவன் கூட தானே வருவ?”



“ஆமாம் அங்கிள் இன்னைக்கு வரவழியில் அவருடைய நண்பரை பார்த்துட்டு பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு அவர்கூட போயிட்டார் “



“ஹப்பா அதுவும் நல்லதுதான்”



“ஏன் அங்கிள் என்னாச்சு”

“இன்னைக்கு அபராஜிதனை பார்க்க போறேன் அவனை எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சேன் நல்லவேளை தப்பித்தேன்” என்றவர் அந்த கோப்பை எடுத்துக்கொண்டு நகரும் வேளை அலைபேசியில் வந்த செய்தியை கேட்டு செய்வதறியாது நின்றிருக்க மதி அவரை அணுகியவள்..



“அங்கிள் என்னாச்சு?” என்று வினவினாள்...



“என் ஃப்ரண்டுக்கு ஆக்சிடென்ட்மா... உடனே போகணும்... இப்போ என்ன செய்யுறதுனு தெரியல... அபராஜிதன் வேற இன்னைக்கே வர பாருங்கன்னு சொல்லிட்டாரு” என்று தன் போக்கில் புலம்ப மதிராதவி சிலவினாடிகள் யோசித்தவள் அவருக்கு உதவ தானே முன்வந்தாள்...



“அங்கிள் நீங்க கவலைப்படாம உங்க நண்பரை பார்க்கப் போங்க நான் வேணா அந்த டாக்குமெண்டை சைன் பண்ணி வாங்கி தரேன்” என்றவளின் வார்த்தை உசிதமாகப்பட்டாலும் அவளை அங்கே தனியே அனுப்ப தயங்கி நின்றார்... எனினும் அபராஜிதன் அப்படி ஒன்றும் கெட்டவனும் அல்லவே... அப்படி இருந்திருந்தால் அவரே அவனை தேடி சென்று உதவி என்று நாடியிருக்கமாட்டாரே.



“அங்கிள் ப்ளீஸ் டைம் ஆகிட்டே இருக்கு நீங்க கிளம்புங்க” என்று துரிதப்படுத்தியதும் தன் மனதை தேற்றிக் கொண்டவர்...



“சரிம்மா பார்த்து போயிட்டு சீக்கிரம் வந்திரு” என்று கூறிவிட்டு கிளம்பியிருந்தார்.



மதிராதவி, யுகேந்திரன் வருவதற்குள் விரைவாக திரும்பிவிடலாம் என்றெண்ணி அபராஜிதன் அலுவலகம் நோக்கி சென்றிருந்தாள். அவனின் அலுவலகத்தில் விபரத்தை கூற அவளை அபராஜிதன் வீட்டு முகவரிக்கு தான் வரச்சொல்லி இருக்கிறார் என்ற தகவலில் அங்கே விரைந்தாள்.



“சார் உங்களை பார்க்க மதிராதவின்னு ஒருத்தங்க வந்திருக்காங்க” என்று உதவியாளன் ராம் கூறவே அவன் கண்கள் இடுங்க யோசித்தபடியே வரவேற்பறையில் இருந்த கண்காணிப்பு கேமரா கணினியை அலசி யாரென்று பார்த்தவனுக்கு சட்டென்று அவள் யாரென்று பிடிபட்டிருந்தாள்.



அபராஜிதன் எப்போதும் போல் வேலைகளில் ஆழ்ந்திருந்தாலும்... யுகேந்திரனால் சீண்டப்பட்ட மனதின் கொதிப்பு மட்டும் நீங்காமல் தான் வளைய வந்து கொண்டிருந்தான்... அலுவலகம் சென்றாலும் அவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால் தேவைகளுக்கு மட்டுமே அலுவலகம் சென்றான். சந்திரகாந்தனின் விஷயமும் அழுவலகத்திற்கு அப்பாற்பட்டது என்பதால் வீட்டிற்கே அழைத்திருந்தான் ஆனால் அங்கே வந்திருந்தவளோ மதிராதவி ஆயிற்றே!!



விரல்களை கண்களின் இடுக்கில் வைத்து கண்மூடி யோசித்தவன் ஒரு முடிவுடன் கூறலானான்...



“கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்லுங்க... அவங்களை ஸ்பெஷல்லா ட்ரீட் பண்ணுங்க சாப்பிட ஆரஞ்சு ஜூஸ் கொடுக்க சொல்லுங்க” என்றவனின் கண்கள் விகாரத்தில் மின்னியது!!



அந்நேரம் அவன் பார்வை யோசனையுடனே தொலைக்காட்சிக்கு தாவியிருக்க அதில் சிங்கம் ஒன்று புள்ளிமானை வேட்டை ஆடும் காட்சி கண்ணில் பட அவன் கண்களும் அதே வேட்டையாடும் கோபத்தில் ஜொலித்தது!!!



தான் அபராஜிதவர்மன் எனும் சிங்கத்தின் வேட்டைக்கு ஆளாக போக இருப்பதை அறியாத அழகான இளமானான மதிராதவி விகல்பமில்லாது அங்கே நடக்கும் உபசரிப்புகளை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டிருந்தாள்!!!




தென்றல் வீசும்...

**********************************************

ஹாய் தோழிகளே...



“தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா” கதையின் அத்தியாயம்-2 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும்... அடுத்த அத்தியாயம் செவ்வாய் அன்று தருகிறேன் டியர்ஸ்.



நட்புடன்


காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீ - 3

சிதம்பர ரகசியம்
இந்த கோவில் தெற்கு கோபுரம் பாண்டியர்கழலும் கிழக்கு கோபுரம் சோழர்களாலும் கட்டபட்டிருக்கிறது. இந்த கோவிலின் ஆண்டு மூவாயிரம் வருடம் தான் பழமை என்று நாம் அறிந்திருந்தாலும் தொல்லியியல் தடயங்கள் ஆராய்ச்சி மூலம் மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னாடி வரையிலும் இந்த கோவிலின் சான்றுகள் உள்ளனவாம்.

**********************

கரிய காரிருள் சூழ்ந்த இரவு நேரம்... அந்த இரவின் நிசப்தத்தில் கமழ்ந்திருந்த அறையில் விஸ்தாரமான இலவம்பஞ்சு மெத்தையில் மயங்கி கிடந்தாள் பெண்ணவள் ராதவி... அவளையே உறுத்து விழித்தபடி அமர்ந்திருந்தவன் மனம் நடந்ததை அசைபோட்டுக் கொண்டிருந்தது.

யுகேந்திரனின் வார்த்தைகள் பசுமரத்தாணிபோல் பதிந்திருந்ததில் அவனை பலி தீர்க்கும் கொலைவெறியுடன் இருக்க அவனை நோக்கிய தன் இலக்கை மாற்றாது காத்திருந்தான் அபராஜிதன்... அவன் பலி தீர்க்க நினைத்தபோதும் அவனின் அருகிலிருந்த பெண்ணவளை வருடி அவன் பார்வை செல்லவில்லை ஆணிடம் கொண்ட வெறியை பெண்ணிடம் காட்டி தீர்க்க நினைத்தும் பார்த்தானில்லை... ஆனால் விதியின் சதியோ செய்து அவன் எண்ணப்போக்கை முற்றிலும் மாற்ற வைக்க மதிராதவியை அவன் இடத்திற்கு கொண்டு இழுத்துவிட்டிருந்தது... சந்திரகாந்தனை எதிர்பார்த்தவனுக்கு மதிராதவியை கண்டு யோசனையில் புருவம் சுருங்க நொடிநேரம் கூட தாமதியாது அவளை பற்றிய பின்னணியை சேகரித்தவனின் விழிகள் மின்னியது!

அவன் தன் உதவியாளனிடம் கண்ணசைக்க அவளுக்காக தயாரித்த ஆரஞ்சு பழச்சாறை அபராஜிதன் முன் வைத்திருந்தான்... அவன் எதையோ தீவிரமாக சிந்தித்தபடி அதில் ஒரு மாத்திரை வில்லையை கலந்தவனின் கண்கள் குரோதத்தில் பளபளத்தது.

ராதவி அவனின் சூழ்ச்சி வலையில் வகையாக சிக்கிக்கொண்டதை அறியாது பழச்சாறை அருந்த ஆரம்பித்தாள் பேதை... சிலமிடறுகள் விழுங்கியவளின் உடலும் மூளையும் செயலாற்ற மறுத்த வேளை அங்கிருந்த வேலையாட்கள் அனைவரும் சத்தமில்லாமல் நகர்ந்திருக்க அபராஜிதன் தன் கூரிய விழிவீச்சால் ஊடுருவியபடி அவளை நெருங்கினான்... தன்னை நோக்கி வருபவனை மங்கிய பார்வை ஒளியால் பார்த்திருந்தாள் பேதை... மருந்தின் வீரியத்தில் அவள் கண்கள் மயக்கத்தில் சொருகியது... அவன் அவளின் அருகாமையில் நெருங்கநெருங்க பாவை பெண்ணின் மனமும், மூளையும் வெவ்வேறு திசையில் பறந்து உணர்ச்சி பிழம்பிற்கு ஆளானது... அதன் எதிரொலியாக அவள் பார்வை பெண்மையின் தூண்டுதலாய் கனன்று எரியும் ஆசையை எடுத்துரைத்தது... அவளின் மயக்கும் ஒளி பார்வையும், உதட்டோரம் கசிந்த மோகன புன்னகையிலும் சிக்குண்ட அபராஜிதன் கிறங்கும் விழி பார்வையால் ஊடுருவியபடி நெருங்கினான்.

அவனின் மூச்சு காற்று மேனியில் உரசும் அருகாமையை உணர்ந்த போதுதான் ராதாவிக்கு அவள் பெண்மை எச்சரிக்கை விடுக்க மனம் துணுக்குற்றது... அவளின் அடிமனம் உந்தியதை செயலாற்ற முடியாதபடி உடல் பலவீனம் தடுக்க தன்னையும் மறந்தவளாக இமை மூடி சரிய அபராஜிதன் அவளின் நிலையை உணர்ந்தவனாக தாங்கி பிடித்தபடி அமர்ந்து கன்னத்தை வருடினான்... அவனின் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில் நிலைகொள்ளாமல் அரைமயக்க நிலையில் கண்கள் சொருகியபடியே அவன் தோள் சாய்ந்தவளை கைத்தாங்களாகவே பிடித்தபடி தன்னறைக்கு அழைத்து சென்றிருந்தான்.

மஞ்சத்தில் வீழ்த்திய மங்கையவளின் அழகில் ஆணவனின் மனம் சிக்குண்டது... கொடியிடை மேனியை கொண்ட பெண்ணவளை தீண்டும் தாபம் அதிகரிக்க அவள் தேகத்தை தீண்ட ஆரம்பித்தவன் கரங்கள் அவளின் பெண்மை ஸ்பரிசத்தில் திணறடித்து தாபத்தினால் விளைந்த மோகம் எனும் ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றிருந்தது. அவன் பெண்களை அறியாதவன் அல்ல தான் ஆனால் அவளுக்கே உண்டான தனிப்பட்ட பெண்மையின் நளினத்தில் தன்னை தொலைத்துவிட்டிருந்தவன் அவளை தொடர்ந்து நாடிக்கொண்டிருந்தான்.

இரவு விடுதி பெண்களை விருப்புவெறுப்பின்றி அணுகும் போது அறுபடும் மோகவலை இவளிடம் மட்டும் கரைகாணாது எல்லை இல்லாது கடந்து கொண்டிருந்தது. இறுதியில் கண்களில் திருப்தியுடன் அவளை பார்த்தபடி நெற்றியில் முத்தமிட்டு அவளிடமிருந்து விலகினான். எத்தனையோ பெண்களிடம் உறவாடும் போது உணராத திருப்தியும், நிம்மதியும் இவள் ஒருவளிடம் மட்டும் ஏன் என்று யோசித்தவனின் கண்கள் காரணத்தை கண்டு கொண்டதில் சொல்லொண்ணா குதூகலத்தில் மிளிர்ந்தது! அதன்பிறகு அவன் மனம் குற்றவுணர்ச்சி துடைத்த இன்முகத்துடன் பார்த்தவன் அவள் விழி மலர்த்த ஆவலுடன் நோக்கியபடி காத்திருந்தான்.

தன் நினைவுகளில் மூழ்கி அசைபோட்டு கொண்டிருந்தவன் அவளிடமிருந்து அசைவு தென்படவே அதை கண்டு அவளருகே நெருங்கி அமர்ந்துவிட்டிருந்தான்... ராதவியின் இமைகள் பாறாங்கல்லாய் கணக்க விழி மலர்த்த முடியாமல்
போராடியது... இமைகள் ஒன்றுடன் ஒன்று பசை போட்டு ஒட்டி வைத்தது போன்று கனமாக இருக்கவே இமைத்திறக்க சிரமம் கொண்டிருப்பதை உணர்ந்தவனாக அவளின் இமைகளின் மேல் நீரை சொட்டி மென்மையாக வருடிவிட மெல்ல விழித்திறந்தாள் பாவை!

அவள் விழிமலர்தலில் வெகு நிம்மதியடைந்தவன் அவளின் தள்ளாட்டத்தை கண்டு மஞ்சத்தில் விட்டு அருகிலிருக்கும் குளிர்பான பெட்டியை நோக்கி சென்றிருந்தான்.

ராதவிக்கு தலை சுற்றியதில் விரல்களை நெற்றியில் பதித்து தேய்த்துவிட்டபடி நிதானமடைந்தவளுக்கு முதலில் புலப்பட்டது கலைந்த சிகையும், ஆடையும் தான்... தன்னுள் முக்கியமான ஒன்றை தொலைத்துவிட்டதை தெளிவாக உணர்ந்தவளுக்கு மனம் நம்ப மறுக்க இது கனவாக இருக்குமோ என்ற நப்பாசையில் அவள் கையை கிள்ளிப்பார்த்தாள்... அந்தோ பரிதாபம்... அவள் கிள்ளிய இடத்தில் சுள்ளென்ற வழி தெரிந்ததில் தான் நிதர்சனம் நடுமண்டையில் நச்சென்று உரைக்க அவளை மேலும் அதிர செய்து அவள் முன்பு பூமி சுழல்வது போன்று பிரம்மை எழுந்தது... மெல்ல தன் மனதையும், மூளையும் சமநிலைப்படுத்தி யோசித்து பார்த்தவளுக்கு அவள் அபராஜிதனை தேடி வந்ததும் அவள் பழச்சாறு அருந்தியது வரை மட்டுமே தெளிவாக புரிந்தது அதன்பிறகு நடந்ததெல்லாம் மங்கலாக நினைவில் நிழலாட புரியாமல் பரிதவித்து கொண்டிருந்தாள்... அவளின் தவிப்பை உணர்ந்தானோ அவன் நடையை நிறுத்தியிருந்தான்... அவன் வரவை உணர்ந்த நொடியில் ராதவியின் மனம் உலைக்கலனாக கொதிக்கவே தன் பார்வையை சட்டென்று உயர்த்தி எதிரில் இருந்தவனை தீயென சுட்டெரித்தாள்!!

தன்னை பார்வையால் எரிக்கும் அவள் விழிவீச்சை கண்டு சிறிதும் அயராது சலனமற்று நோக்கினான்... அவனின் செயல் அவள் மனதை கொய்துவிட 'அட கிராதகா!' என்று அவள் பார்வை வினவியது... அவன் மேல் அவளுக்கு வெடித்துச்சிதற காத்திருக்கும் எரிமலை போன்று கோபம் வியாபித்திருந்த போதிலும் நடந்து முடிந்து விட்ட செயலில் மாற்றியமைக்க முடியாத நிஜம் நெற்றி பொட்டில் ஆணி அடித்தது போன்று உரைத்ததில் மௌனியாக அமர்ந்திருந்தாள்!

அவனுக்கு அவளின் நிலை பெரிதாக இல்லை போல்... அவளை அசாதாரணமாக பார்த்தவாறு நின்றிருந்தவன் அதுவரை மௌனமாய் கடந்த நிமிடங்களை உடைத்தெறிய எண்ணி தன் கையில் இருந்த குளிர்பானத்தை அவளிடம் நீட்டினான்...

“இந்தா இதை குடி கொஞ்சம் தெம்பாக இருக்கும்” என்று இயல்பாக கூறியவனை கண்டு அத்தனை நேர பொறுமையை கைவிட்டவள் சினத்தில் விழிகள் சிவந்து விரிய ஆத்திரத்தில் வெடிக்க ஆரம்பித்தாள்...

“அப்பப்பா! என்ன ஒரு கரிசனம்... இதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷம் கொடுங்க குடிச்சுட்டு செத்து போறேன்... இனி நான் வாழ என்ன தகுதி இருக்கு?” அவனை வார்த்தை அம்புகளால் தாக்கிவிடும் துணிச்சலில் ஆரம்பித்தவளின் குரல் இறுதியில் நலிவடைய மனம் உடைந்து அழுகையில் கேவ ஆரம்பித்திருந்தாள்... அவளின் அந்த கோபத்திலும், அழுகையிலும் எரிச்சல் மூண்டது...

“வாயை மூடுடி..!! சும்மா வாய் இருக்குன்னு என்ன வேணா பேசிக்கிட்டே போவியா? நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன்... ஜாக்கிரதை!” என்று சுட்டுவிரலை நீட்டி கடுமையாக எச்சரித்தான்... அவனின் கடுமை தோய்ந்த வார்த்தைகள் பூமனம் கொண்டவளை நடுநடுங்க செய்தது...

“ப்ளீஸ்! என்னை விட்ருங்க நான் போகணும்” என்று மன்றாடியவளை கண்டு உதட்டை வளைத்து கேலி புன்னகை உதிர்த்தான்... அவனை புரியாது அப்பாவியாக பார்த்து கொண்டிருந்தவளை நோக்கி...

“இதுக்கு மேல நான் உன்னை வெளிய அனுப்புவேன்னு நினைக்கறியா என்ன? அப்படி ஒரு நினைப்பிருந்தா இனி மாற்றிக்க... இனி இதுதான் உன் இடம், இதுதான் உன் வீடு” என்றவன்...

“.......” சற்றே இடைவெளி விட்டு... “நான் தான் உன் புருஷன்” என்று நிதானமாக கூறினான்... இப்போது கேலி புன்னகை உதிர்ப்பது அவளின் முறை ஆனது.

“என் உடம்பை தொட்டுட்டா நீங்க புருஷனா ஆகிற முடியுமா?” என்றவள் ஆக்ரோஷமாக எழுந்து நின்றவளை நிதானமாக பார்த்துக்கொண்டே ...

“உண்மை தான்! ஆனா தாலி கட்டிட்டா புருசன் தானே? புருஷன் பொண்டாட்டி உடம்பை உரிமை கொண்டாடலாமே...” என்றவனை புரியாத பார்வையால் ஊடுருவ அதை கிஞ்சித்தும் லட்சியம் செய்யாது தொடர்ந்தவன்...

“உன் கழுத்தில் பாரு” என்றான்... அவன் கூறிய வேகத்தை விட அவள் பார்வை வேகமாக பாய அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்!

'இது எப்படி சாத்தியம்?' என்று கேள்விகேட்ட மனசாட்சியோ... 'அடிப்போடி உன் பெண்மையே அவன் சொந்தமாக்கி கொண்டிருக்கும் போது இது எம்மாத்திரம்' என்று எள்ளிநகையாடியது... தன் நிலை புரியாமல் திண்டாடும் நேரத்தில் அவள் மனதில் தோன்றிய எள்ளல் இத்தனை எளிதாக ஏமாற்றப்பட்டோமா நாம் அத்தனை பலவீனமாகவா இருக்கிறோம் என்று நினைத்தபடியே அவளின் மஞ்சள் கயிற்றை தன் உள்ளங்கையில் தேக்கி கொள்ள கண்களில் கண்ணீர் குளம் கட்ட உதடுகள் அழுகையில் பிதுங்கியது... அவளின் உணர்வலைகளை அளவெடுத்து கொண்டிருந்தவனின் மனம் வெற்றி வாகை சூடிய மன்னனை போன்று குத்தாட்டம் போட்டதில் அவள் கழுத்தில் மாங்கல்யம் சூடிய நொடிகளை நினைவுறுத்தினான்.

அபராஜிதன் யுகேந்திரனை பழிதீர்க்கும் நோக்கில் தான் அவளை அணுகியிருந்தான்... அவளின் பெண்மை ஸ்பரிசம் ஆணவனை தாபம் கொள்ள செய்ய அவளை மஞ்சத்தில் வீழ்த்தி அவள்மேல் பரவி படர்ந்த நேரம் யுகேந்திரனின் அந்த கொடிய வார்த்தைகள் சாட்டையென உரைக்க சுடுநீர் மேலே கொட்டியது போல் துடித்து எழுந்தவனுக்கு கண்கள் சிவந்தது...

“என்கூடவும் வாழ ஒருத்தி வரமாட்டாளா” என்று பற்களை நறநறத்தவன் அவளையே ஒருநிமிடம் உறுத்து விழித்து விட்டு நெற்றியை தன் கரங்களால் தாங்கியபடி சாளரத்தின் ஜன்னல் கம்பியை இறுக பிடித்துக்கொண்டான்... அவன் மனதின் கொதிப்பு அடங்க என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு மூலையில் சரேலென்று மின்னலடிக்க உன்மத்தம் பிடித்தவன் போல் அறையிலிருந்து வெளியேறியவன் பூஜையறையில் நுழைந்து அம்மன் படத்தில் இருந்த மஞ்சள் கயிறு மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டவன் மனதில் ஆங்காரம் ஆக்கிரமிக்க படவஞ்சனம் அவன் மதியை செயலிழக்க வைத்து சாத்வீகத்தை துறந்தவன் வந்த வேகத்தை காட்டிலும் இருமடங்கு ஆவேசத்துடன் அறையினுள் நுழைந்து அவளை ஒரு முறை ஆழ்ந்து பார்த்துவிட்டது கையில் வைத்திருந்த மஞ்சள் மாங்கல்யத்தை அவளின் சங்கு கழுத்தில் கட்டி முடிச்சிட்டவன் மனம் வெற்றி களிப்புடன் கண்களில் மின்னல் தோன்ற அவளை உரிமையுடன் அணுகி ஆள ஆரம்பித்தான்... அவனுக்கு தேவை அவள் உடல் மட்டும் அல்லவே அவன் மனைவி என்னும் நிரந்தர இல்லற ஸ்தானம் அதை நிறைவேற்றி கொள்ளவே சரிதவறு என்பதை கடந்து அவன் எதுவும் செய்ய துணிந்திருந்தான்.

அவன் கட்டிய பொன்மாங்கல்ய மஞ்சள் சரடு அவள் மார்பில் உரசிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து நோக்கியவளை வெற்றி பார்வை பார்த்திருந்தபடி நின்றிருந்தான் அபராஜிதன்.

***********************************

ஆதவன் மேற்கு திசையில் தன் செந்நிற கதிர்களை சுருக்கியபடி நகர்ந்து கொண்டிருக்கும் மாலை வேளை... யுகேந்திரன் அன்று ஒரு முக்கிய வேலையாக கடலூர் வரை சென்றிருந்தவன் அவன் திரும்பும் போது மாலை ஆகிவிட்டிருந்தது... மதிராதவியை அழைக்க அவளுக்கு பதில் அவன் செயலாளர் அவன் முன்பு நின்றவன்...

“சார் மதி மேடம்க்கு உடம்பு முடியலையாம் அதனால் சீக்கிரம் வீடு திரும்பிட்டாங்க” என்றவனின் வார்த்தையில் அவன் கண்கள் இடுங்க புருவமத்தியில் முடிச்சு விழுந்தது.

'மதிக்கு முடியலைன்னா என்கிட்டே நேரடியாவே சொல்லிட்டு போவாளே' என்று மானசீகமாக எண்ணியவன் அவளின் கைபேசிக்கு முயல அணைக்கபட்டிருக்கும் செய்தி கிடைத்ததில் அவன் பலத்த சிந்தனைக்கு உள்ளானான்.

“சரி இன்னைக்கு பெண்டிங் ஒர்க் எல்லாத்தையும் நாளைக்கு பார்த்துக்கலாம் நானும் கிளம்பறேன்” என்று எழுந்தவனை தயக்கத்துடன் பார்த்தான் லிஷாந்த். அவனின் பார்வையை உணர்ந்தவன்...

“என்ன லிஷாந்த் என்ன தயக்கம் சொல்லுங்க” என்று உந்தியதும்...

“சார் இன்னைக்கு எந்த ஒர்க்கும் ஸ்டார்ட் ஆகவேயில்லை சார்... பெண்டிங்கில் வச்சா ரொம்ப கஷ்டம் சார்” என்றதும் அவன் திடுக்கிட்டு பார்த்தான்...

“என்ன சொல்றீங்க லிஷாந்த் ஏன் தொடங்கவேயில்லை மதி கண்டிப்பா வேலையை அல்லாட் பண்ணிட்டு தானே போயிருப்பாங்க ஏன் செய்யலை”

“இல்லை சார் அவங்க இன்னைக்கு மார்னிங் போனவங்க” என்றபடி நிறுத்த அவனுக்கு இந்த செய்தி புதிதாக இருக்கவே மனதில் ஏதோ இடறியது... முதலில் மதி என்ன ஆனால் என்று பார்க்கலாமா... இல்லை; வேலையை பார்க்கலாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவன் இறுதியில் பணியின் சுமை தன்னவளை பற்றி விசாரிப்பதை தள்ளிப்போட சொல்லி பணியை தொடர சிரத்தையாக ஆழ்ந்தான்.

அலுவலில் மூழ்கியவனுக்கு நேரம் சென்றதே நினைவில்லை ஒருவழியாக அத்தனை பணியும் முடித்துவிட்டு விரல்களையும், கரங்களையும் நெட்டி முறுத்திவிட்டு நேரம் பார்த்தவன் லேசாக அதிர்ந்தான்... நேரம் இரவு ஒன்பது என்று காட்டியது!! அடித்துபிடித்து கொண்டு எழுந்தவனுக்கு அவன் மதியின் முகமே கண்முன் வர அவளை தேடி நேரே அவள் வீடு சென்றிருந்தான். அங்கோ பூட்டப்பட்ட வீடே அவன் முன் காட்சியளிக்க என்ன ஏதென்று புரியாமல் மலங்கமலங்க விழித்தவன் அருகில் இருக்கும் அக்கம்பக்கம் வீட்டினரிடம் விசாரித்தான். ஆனால் பலன் என்னமோ பூஜ்யம் தான் யாரும் அவன் கேட்ட தகவலை கொடுக்கவில்லை அனைவரும் ஒன்றுபோல் “தெரியாது” என்ற வார்த்தையை கூறி கைவிரித்தனர். அவனுக்கு எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது என்று புலப்பட வேகமாக செயல்பட எண்ணி முதலில் தன் தந்தைக்கு அழைத்து கூற அவர் கூறிய செய்தியில் மனதில் திகில் பிடித்துக்கொண்டது...

“ப்பா என்ன சொல்றீங்க? யாரை கேட்டு மதியை அந்த கேடுகெட்டவன் இருக்கிற இடத்திற்கு அனுப்பி வைத்தீங்க?” என்று வசைமாரி பொரிந்தான்... அவன் வார்த்தையில் சந்திரகாந்தனுக்கு ஆட்சேபத்தில் முகம் சுருங்கியது...

“யுகேன் அறிவு கெட்டதனமா இப்படி நடந்துக்காத நீ இப்போ வீட்டில் இல்லை வெளியே இருக்க யாரை பற்றி எங்கே இருந்துகிட்டு இப்படி பேசிகிட்டு இருக்கிற முட்டாள்... முதலில் வீட்டுக்கு வா என்ன ஆச்சுன்னு சொல்லு” என்றவர் பட்டென்று தொடர்பை துண்டிக்க கனல் வீசும் மனதுடன் வீட்டை நோக்கி சென்றான் யுகேந்திரன். புயல் வேகத்தில் வீட்டில் நுழைந்தவனை உமாதேவி, சந்திரகாந்தன் இருவரும் யோசனையுடன் பார்த்தபடி இருந்தனர்.

“நீங்க என்னை கேட்காம மதியை எப்படி அங்கே அனுப்பலாம்?” என்று ஆத்திரத்துடன் கேட்டவனை கண்டு இருவரும் குழப்பத்துடன் பார்த்திருந்தனர்...

“யுகேன் எதுக்கு இப்போ இவ்ளோ கோபம்? கொஞ்சம் அமைதியா கேளு அப்படி என்ன தலை போகிற விஷயம்?” என்று மகனை கண்டித்தார் உமாதேவி.

“ஆமாம் தலை போகிற விஷயம் தான் என்னை கேட்காம அப்பா மதியை அபராஜிதன் இடத்துக்கு அனுப்பி வச்சிருக்கார்”

“இங்க பாரு யுகேன் கொஞ்சம் பொறுமையா கேளு நடந்ததை சொல்றேன் அதை விட்டுட்டு இப்படி குதிக்காதே... எதிர்பாராம என் ப்ரண்டுக்கு விபத்து நான் பார்க்க போகும் போது இந்த வேலையை மதி முடிச்சுதரதா சொன்னா நானும் முதலில் யோசிச்சு பார்த்துட்டு வேண்டாம்னு தான் நினைச்சேன் அபராஜிதன் பொறுத்தவரைக்கும் அவன் அப்படி ஒன்னும் பெண்கள் மேல வக்கிரம் பிடிச்சவன் இல்லையே அதான் அனுப்பி வைத்தேன் போன வேலையை முடிச்சுட்டு வீடு திரும்பியிருப்பா எங்காவது பக்கத்துல போயிருப்பாங்களா இருக்கும் நீ தான் அனாவிசயமா பதட்டப்படுற”

“இல்லை ப்பா... நிச்சயம் இல்லை... அவளுக்கு ஏதோ நடந்திருக்கு மதி போனும் சுவிட்ச்ஆப் வருது அவங்க அம்மா போன் நாட் ரீச்சபிள் வருது... இதில் ஏதோ சதி நடந்திருக்கு எனக்கு என்னமோ இதெல்லாம் அந்த அபராஜிதன் வேலையா இருக்குமோன்னு தோணுது” என்ற கூற்றில் சந்திரகாந்தனுக்கு சற்றும் உடன்பாடில்லாது போக...

“நீ முதலில் இப்படி எல்லாம் நினைக்கிறதை நிறுத்து யுகேன்... அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அபராஜிதன் ரௌடியா இருக்கலாம் ஆனா நியாயஸ்தன்... நாம லேட் பண்ணாம போலீஸ்ல கம்பளைண்ட் கொடுப்போம்” என்று வெளியேற சென்றவரை தடுத்தார் உமாதேவி...

“ஏங்க என்னங்க நீங்க அவன் தான் அவசரப்படுறான்னா நீங்களுமா? மதிராதவி வயது பெண் நம்ம பையனுக்கு வருங்கால மனைவியும் கூட அப்படி இருக்கும் போது போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகிறது சரியில்லை ஒண்ணுமே இல்லைன்னா கூட நாளைக்கு கண்ணு காது மூக்கு வச்சு பேசுவாங்க கொஞ்சம் நிதானமா யோசிச்சு வேற வழி தேடுங்க”

“அம்மா என்ன பேசுறீங்க இதுவே ரொம்ப லேட் ஊருக்காக பயந்தா மதியை காப்பாற்ற முடியாது” என்று படபடத்தான் யுகேந்திரன்... மனைவியின் வார்த்தையில் இருந்த நிதர்சனம் உரைக்கப்பட்டதில் மகனை தடுத்தார் காந்தன்...

“யுகேன் உன் அம்மா சொல்வதும் சரிதான் இது ரொம்ப சென்சிடிவான விஷயம் கொஞ்சம் பொறுமையா கையாள்வோம்... நான் உன் மோகன் சித்தப்பாகிட்டே விசாரிக்க சொல்கிறேன்” என்றதில் அவனுக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் தந்தையின் வார்த்தைக்காக மௌனமானான்.


காந்தன் தன் ஒன்றுவிட்ட தம்பிக்கு தொலைபேசியில் அழைத்தவர் விபரத்தை கூறி உடனடியாக விசாரித்து கூற சொல்லி கட்டளையிட்டார். அன்று இரவு முழுவதும் காத்திருந்து பார்க்க தகவல் எட்டவில்லை என்ற பதிலே கிடைத்தது.


“அப்பா எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு மார்னிங் சீக்கிரமே கமிஷனர் ஆபீஸ் போயிரலாம்”


“சரி யுகேன்” என்றவரின் குரலில் சுரத்தே இல்லை மதியை காணாத வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாக தென்பட்டிருந்தது... உமாவிற்கும் அதே வேதனை தான் என்றாலும் கூட மதி ஓர் இரவு முழுவதும் காணாது இருப்பது அவரை மனசஞ்சலப்பட வைத்தது... ஆனால் வாய்விட்டு கூறவில்லை... அப்படி கூறினார் என்றால் மகன் உடைந்துவிடுவான் என்பதாலும்... அவருக்கே தனிப்பட்ட முறையில் மதியின் குணம் அறிந்த்ததாலும் அமைதியடைந்திருந்தார்.


அவர் மனதின் சஞ்சலமும், யுகேனின் அச்சமும் மெய் என்பது போல் தான் விசாரணையில் கிடைத்த செய்தியும் அறிவித்தது.



**********************************

ராதவிக்கு தன் பெண்மையை இழந்துவிட்ட நிலையிலும் கண்ணீரை வெளியப்படுத்தி தன்னை பலகீனம் ஆக்கிகாட்டுவதை விரும்பாது தன்னை அடக்கி கொண்டிருந்தாள்... அவள் கழுத்தில் ஆடிய மஞ்சள்கயிற்றை நடுங்கும் விரல்களால் வருடி கண்முன்னே கொண்டு பார்த்தவளின் நேரெதிரே அதற்கு உரிமையானவனை காண மனதுக்குள் கொதித்து கொண்டு வந்தது... ஆனால் அதை வெளிப்படுத்த முடியாமல் அவளுள் ஏதோ ஒன்று தடுத்து நிறுத்த தன் நிலையை எண்ணி பச்சாதாபம் எழ அதுவரை கட்டுப்படுத்தியிருந்த கேவல் வெடித்து சிதறி ஓவென்று கதறினாள்... அவளின் அழுகையை காண சகிக்காதவன்....

“போதும் நிறுத்து எதுக்கு இப்போ கண்ணீர் விடுற?” என்று எரிச்சலுடன் கடிந்துகொண்டான்.

“எதுக்கா நீங்க என்ன செய்திருக்கீங்கன்னு தெரியுமா என் வாழ்க்கையை அழிச்சிருக்கீங்க அது மட்டுமா என் கனவையும் கலைச்சிருக்கீங்க”

“எனக்கு பொண்டாட்டி ஆனதில் நீ பெருமை தான் படனும் அந்த யுகேந்திரனை காட்டிலும் நான் குறைந்தவனில்லை தெரிஞ்சுக்கோ” அவனின் பார்வையிலும் வார்த்தையிலும் கர்வம் தொனித்தது.



அதில் அவள் மனம் ஆக்ரோஷம் கொள்ள அவனை வாளின் வலிமையான கூர் பார்வையால் வெட்டினாள்... “இல்லை என் யுகேந்திரனை விட நீங்க உயர்ந்தவர் இல்லை... இது நிச்சயம்! என் கழுத்தில் தாலி கட்டியிருக்கலாம் என் உடலை உறவாடியிருக்கலாம் ஆனா எப்பவும் என் மனசுல நீங்க இடம் பிடிக்க முடியாது”

“அதை பற்றி எனக்கு கவலையில்லை இனி நீ என் மனைவி 'மதிராதவிஅபராஜிதவர்மன்' இதை மட்டும் மனதில் வைத்துக்கோ அதையும் மீறி.....” என்று ஆரம்பித்தவனின் வார்த்தை சுவிட்ச் தட்டினார் போல் நின்றது அவள் கையசைவில்...

“எனக்கும் மனசாட்சி உண்டு உங்களுக்கு மனைவியா இருக்க முடியுமோ முடியாதோ ஆனால் நிச்சயம் இன்னொருவனுக்கு மனைவி ஆக முடியாது அதுக்கான தகுதியும் என்னிடம் இல்லையே” என்றவளின் தொண்டை துயரத்தில் கமறியது.

“குட் தமிழ் பெண்ன்னு நிரூபிச்சுட்டே”

“ஹ்ம்ம்ம்...” என்று உதட்டை வளைத்து எள்ளாடியவள்... “அதே தமிழ் பெண் ஒரு ஆணை வீழ்த்தவும் தயங்கமாட்டா...”

“உன் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்” என்று விட்டு நகர்ந்தவனை நிறுத்தியது அவளின் அடுத்த வார்த்தை...

“ஒரு நாளும் நீங்க என்னை ஜெயிக்க முடியாது உங்க வெற்றிக்கு இதுவே இறுதிநாள்” என்று கண்களில் கனலுடன் இறுதியாக சவாலிட்டவளை கண்டு நகைத்தவன்...

“அதை நான் பார்த்துக்கிறேன் உன் உதவி எனக்கும் தேவையில்லை” என்றவன் அவள் சுதாரிக்கும் முன் நெருங்கி அவள் இதழை முற்றுகையிட்டுவிட்டு கண்சிமிட்டிவிட்டு நகரந்திருந்தான்... அவன் செயலில் பெண்ணவள் பேஸ்தடித்து நின்றிருந்தாள்!!


தென்றல் வீசும்.....
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே...

முதலில் எல்லாரும் பெரிய மனது பண்ணி மன்னிக்கவும்... வீடு மாற்றம் காரணமாக தாமதம் ஆகியது... நெருங்கிய உறவினரின் இழப்பு மனநிலையும் சரியில்லை ஆகவே தான் தாமதம் ஆகிறது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்... இதோ அத்தியாயம் மூன்று பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துகளை பகிருங்கள்.



நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீ: 4

“ராம் தேசிங்கன், விதார்த், மௌலிதரன் மூன்று பேரையும் இன்னும் அரைமணி நேரத்தில் இங்கே உடனடியா வர சொல்லுங்க?” என்றான் அபராஜிதன்.



“ஒகே பாஸ்”



“இன்னும் நாலு மணி நேரத்துக்கு யாரும் உள்ளே வரக்கூடாது” என்று கட்டளையிட்டவன் அங்கே அவன் பிரத்யேகமாக மூவரின் கூட்டத்திற்காக என்றே ஒதுக்கியிருந்த அறைக்குள் புகுந்திருந்தான்... இங்கே அவனின் அனுமதி இன்றி யாரும் அத்தனை சீக்கிரம் வந்துவிட முடியாது. அறையின் நடுமத்தியில் வீற்றிருந்த தேக்கு மர சோபாவில் கால்மேல்கால் வைத்து ஒய்யாரமாய் அமர்ந்தவன் சாளரத்தின் வெளியே அமைந்திருக்கும் இயற்கையை வெறித்தபடி அமர்ந்துவிட்டான்.



பிச்சாவரம் படகுசவாரிக்கான பிரபல சுற்றுலாதலம்... சதுப்புநில காட்டு பகுதியில் அடர்ந்த மரங்களுக்கிடையே படகில் சவாரி செய்யும் பயணம் அனைவரையும் வியக்கதக்கும் வகையில் அமைந்திருக்கும். நீண்ட நெடிய பாதையில் இடமும்வலமும் பச்சைபசேல் என்று காட்சியளிக்க வட்ட வடிவில் வெள்ளை மாளிகை போல் அமைந்திருந்தது அந்த கட்டிடம். அபராஜிதன் விருந்தினர் இல்லமாக பயன்படுத்துவது அவனின் அந்தரங்க லீலைகள் அரங்கேற்றம் கூட இங்கே நடைபெறும்... இருந்தபோதும் அவனிற்கு மூன்றாம் கரமாய் இருந்து ஆலோசனை பெற தனிமை வாய்ந்த இடமாய் அதை அமைத்து வைத்திருந்தான்... தற்போதும் ஒரு முக்கிய ஆலோசனைக்காக தான் அவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்திருந்தான்.



தேசிங்கன் அவனின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து சொத்து கணக்கையும் நுனிவிரலில் தெரிந்து வைத்து அவனுக்கு விபரம் தரும் ஆடிட்டர் பதவியில் இருப்பவன், விதார்த் பொறியியல் முடித்து மேலும் எம்பிஏ முடித்து அவனுக்கு தொழில் வளர்ச்சியில் முழு காரணமாகியிருப்பவன், மௌலிதரன் அபராஜிதன் காலால் ஏவிய பணியை தலையால் தாங்கி செய்பவன். இது இங்கிருக்கும் ஐவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இவர்களில் ஒருவரின் தான் அபாரஜிதனின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஒருவன் என்று தங்களை காட்டிக் கொண்டதேயில்லை. ராமிடம் அபராஜிதன் ரகசியம் பற்றி தெரிந்துக்கொள்ள முனைந்து மூக்குடைபட்டு திரும்பியவர்கள் தான் அதிகம். இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சம்பளமும், சலுகைகளும் ஏராளம் அதனாலேயே நால்வரும் அபராஜிதனுக்கு விசுவாசிகளாகி போயினர்.



அபராஜிதன் சொன்னது போல் மூவரும் அரைமணி நேரத்தில் அங்கே பிரசன்னமாகினர்... மூவருமே ஒருவித சிந்தனையுடனே அவன் முன்பு அமர்ந்தனர்... அபராஜிதன் அவர்களின் வரவை உணர்ந்தாலும் சாளரத்தையே வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனின் முக இறுக்கமும் கண்களின் சிவப்பு நிறமும் ஏதோ தீவிரமான யோசனையில் இருப்பதை காட்டவும் அவனாகவே பேச காத்திருந்தார்கள்.



அபராஜிதன் பத்து நிமிடங்கள் கழித்தே அவர்கள் புறம் திரும்பியவன்... “மூணு பேரும் நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா போதும்” என்றவன் அவர்களிடம் வரிசையாக கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தான்.



அபராஜிதன் அவர்களிடம் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினான்... “மௌலிதரன் நீங்க தேசிங்கன், விதார்த் ரெண்டு பெரும் சொல்ற மாதிரி செய்து முடிச்சிருங்க தாமதம் பண்ண வேண்டாம்” என்றதும் மூவரும் அங்கிருந்து நகர்ந்தனர். அவர்கள் சென்றதும் அபாரஜிதன் முகம் தீவிரமாய் மாறியது... ‘நானா படிப்பறிவு இல்லாத முட்டாள் இருக்குடா உனக்கு’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தான்.



யுகேந்திரன் அபராஜிதனை படிப்பறிவு இல்லாதவன் என்று சாடி அவன் தன்மானத்தை சீண்டிய அடுத்த வார்த்தைகள்... ‘என்கிட்டேயா மோதுற உன்னை எப்படி வீழ்த்துறேன்னு பாரு’ என்று நெஞ்சம் கொதிப்பு அடங்காமல் கருவிக்கொண்டிருந்தான்.



யுகேந்திரன் பொறுத்த வரையில் அபராஜிதன் ஒரு படிக்காத பாமரம் அவன் ஒழுக்கம் தவறியவன் அவன் என்ன செய்துவிட முடியும் அவன் எனக்கு இணையா என்ற எண்ணம்... ஆனால் அவன் தந்தைக்கு தான் தெரியும் அபராஜிதன் யார் என்று அவனுக்கு புரிய வைக்கவும் முயன்று அதில் தோற்று தான் போனார்... அவனின் பலம் தெரியாமலே அவனிடம் மோத காத்துக் கொண்டிருந்தவனுக்கு அவனிடம் தோல்வி அடைந்த கோபத்தில் வார்த்தைகளை வாளாய் வீச பேசிய வார்த்தைகள் அவனுக்கு எஜமானாக ஆகிப்போயிருக்க அபாரஜிதனின் கோபத்திற்கு ஆளாகினான். சிந்தனை வயப்பட்டு நின்றிருந்த அபராஜிதனை உலுக்கியது அலைபேசியின் இசை.



அழைப்பை உயிர்பித்து செவிமடுத்தவன்... “ஹலோ...!” என்றதும் எதிர்புறம் கூறிய செய்தியை கேட்டு ரௌத்திரமானான்.



“ராம் சீக்கிரம் கார் எடுங்க” என்று கட்டளையிட்டவன் அங்கிருந்து வேகமாக நகர்ந்திருந்தான்.







***********************



யுகேந்திரன் இரவு முழுவதும் தூங்காமல் அலைப்புறுதலுடன் இருந்தான்... மதியை காணாது அவன் தவிக்கும் தவிப்பை பார்த்த பெற்றவர்கள் மனம் இரங்கினார்கள்... இரவு ஒரு மணி வரையிலும் அவனின் தவிப்பை பொறுத்துக் கொண்ட அவன் தந்தையால் அதற்குமேல் தாமதியாது அவனை அழைத்துக் கொண்டு அவரின் நெருங்கிய உறவினர் மோகனை சந்திக்க அழைத்துச் சென்றிருந்தார்.



யுகேந்திரன் தந்தைக்கு முன்பாக சென்று காரை எடுத்தவன் வேகமாக சென்றிருந்தான்... சந்திரகாந்தன் முன்பே அவருக்கு தகவல் அளித்திருந்ததால் அவரும் இவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்... உள்ளே நுழைந்து சில உபசார வார்த்தைகளுக்கு பிறகு நடந்ததை கூற மோகன் யோசனையில் ஆழ்ந்தார். அபராஜிதன் விஷயத்தில் தலையிடுவது அத்தனை உசிதம் அல்ல என்று எண்ணி தயக்கம் காட்டினார்.



“என்ன சித்தப்பா அமைதியா இருக்கீங்க உங்களால் எதுவும் செய்ய முடியாதா?” என்று மனதில் எழும்பிய எரிச்சலுடன் வினவியிருந்தான் யுகேந்திரன்... அண்ணன் மகனின் கோபம் புரிந்தாலும் தான் என்ன செய்ய முடியும் என்றே யோசித்தவர்...



“கொஞ்சம் நிதானமா இரு யுகேன்... நான் அபராஜிதன் மேல கேஸ் தான் பைல் பண்ண முடியாதுன்னு சொன்னேன்... ஆனால் மதியை கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்லையே” என்றவரின் வார்த்தையில் கண்களில் ஒளி வரப்பெற்றவனாக அவரை பார்த்தான்.



“எப்படி சித்தப்பா?”



“என் பிரெண்ட் துப்பறியும் நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறான் அவன் கிட்டே சொன்னால் நிச்சயம் நமக்கு உதவுவான்”



“ஆனால் அவனை எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்றீங்களே சித்தப்பா அப்படி என்ன அவன் பெரிய அப்பாடக்கர்” என்று கைமுஷ்டிகளை இறுக்கியபடி சினத்துடன் மொழிந்தான். அவனின் கோபத்தை கண்டு அவனின் சிறிய தந்தை பேச முனைந்த நேரம் சந்திரகாந்தன் கண்ணசைவால் அவரை தடுத்துவிட்டு மகன் புறம் திரும்பியவர்...



“யுகேன் உன் சித்தப்பா சொல்வது தான் சரி... அபியுக்தன்கிட்டே மோதுவதுக்கு நம்ம வீட்டு பொண்ணு மதியை தேடுறது தான் புத்திசாலித்தனம்” என்னதான் அவர் மிகமிக பொறுமையாக கூறியிருந்தாலும் அதை உணரவேண்டியவனுக்கு புரியவில்லையே...



“அப்போ என் மதியை கடத்தினவனை சும்மா விட்டு வைக்க சொல்றீங்களா?” என்று ஆத்திரத்தில் வார்த்தையால் எகிற மற்ற இருவருக்கும் தான் தலைவேதனையாகிப் போனது இப்போது மோகன் இடைபுகுந்தவர்...



“யுகேன் நீ இவ்ளோ ஆத்திரப்படுறது அத்தனை நல்லதில்லை; நம்ம தராதரம் தெரிந்து நடந்துக்கணும்... அபி மாதிரி ஆளுங்க கூட மோதுற பலம் நம்மகிட்டே கிடையாது நாம தான் விலகிப் போக கத்துக்கணும்...”



“................” அங்கே சில வினாடிகள் மௌனத்திலேயே கரைய அவரே மௌனத்தை உடைத்து பேச்சை தொடர்ந்தார்...



“கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவுன்னு சொல்வாங்க... அவன் கத்தியை தூக்கினவன் அவனுக்கான முடிவும் அதுவே தேடித்தரும்... ஆனால் இப்போ நமக்கு இது முக்கியம் இல்லை நமக்கு இப்போ முக்கியம் மதிராதவி தான்...” என்று அவனுக்கு இலவச அறிவுரை கூறிக்கொண்டே சென்று கொண்டிருந்தவரின் வார்த்தைகள் செவியில் ஏறியதா என்று தான் சந்தேகம்... அவனோ அவர் கூறிய கடைசி வாக்கியத்தில் நிலைபெற்றிருந்தவனுக்கு சிந்தனை தறிகெட்டு ஓடியது அவரின் பேச்சிற்கு அவனிடமிருந்து எந்தவொரு எதிரொலியும் இல்லாது போகவே இருவருமாக அவனை உலுக்கினார்கள்...



“யுகேன்... யுகேன்...” என்று இருவரும் மாறிமாறி அவள் தோளை குலுக்கியதும் தான் தன்னினைவு பெற்றவன் நிலைக்கு வந்திருந்தான்.



“என்னாச்சு யுகேன் எதை யோசிக்கிற?” என்று தந்தை வினவியதும்..



“ஒண்ணு... ஒண்ணுமில்லைப்பா...” என்று தடுமாறி கூறியதில் காந்தனுக்கு மனம் துணுக்குற்றது மகன் மனதில் அபராஜிதன் மேல் என்ன மாதிரி பழியுணர்வு இருக்கிறதோ என்று ஐயம் கொண்டார்.



“யுகேன் அபி மேலே இருக்கிற பழியுணர்வை விலக்குறது தான் உனக்கு நல்லது” என்று மகனின் மனதை உணர்ந்து கூற... தந்தை தன்னை இனம் கண்டு கொண்டாரே என்று எண்ணி யுகேந்திரன் சுதாரிக்கலானான்.



“நீங்க இவ்ளோ தூரம் சொன்னதுக்கு பிறகும் நான் ஏன்ப்பா அதை பற்றி யோசிக்கப் போறேன்... நம்ம இப்போ எப்படியாவது மதியை காப்பாற்றி ஆகணும் ப்பா” என்றவனின் வார்த்தைகளை நிஜம் என்று நம்பியவர் அடுத்த செயலில் இறங்க ஆயத்தமானார். ஆனால் மோகன் கூறிய ஒற்றை வார்த்தை அவன் மனதில் பசுமரத்தாணியை போல் பதிந்து வெஞ்சினம் கொண்டதை அறியவில்லை.



மோகன் யுகேந்திரனிடமிருந்து மதியை பற்றிய சில விபரங்களை பெற்றுக்கொண்டு விட்டு தன் நண்பனை அணுகி விபரத்தை தெரிவித்தார் விரைவில் பதில் கூறும்படியும் கூறிவிட்டிருந்தார்.



“காந்தா நான் என் நண்பன் கிட்டே சொல்லியிருக்கேன் அவன் விடியறதுக்குள்ள மதி இருக்கிற இடத்தை சொல்லிருவான் நீங்க கவலைப்படாமல் வீட்டுக்கு போங்க” என்றவரின் பதிலில் இருவரும் வீடு திரும்பினர் சரியாக ஆறு மணி அளவில் மதி அபராஜிதனின் வீட்டில் இருப்பதை கூறினார்கள்.



“சார் அப்புறம் அவங்க அம்மா துர்கா அவங்களை பத்தின டீடைல்ஸ் எதுவும் கிடைச்சுதா?”



“ம்ஹும்... இல்லை மிஸ்டர்.யுகேந்திரன் மிஸ்.மதிராதவி இருக்கிற இடத்தையே எங்களால் ட்ரேஸ் பண்ண முடியல ரொம்ப சிரமப்பட்டுதான் கண்டுபிடிச்சோம்” என்றதில் அவனுக்கு அதிருப்தி தோன்றியது... அதேசமயம் அவனின் மதி எந்த சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறாளோ என்ற எண்ணம் எழுந்ததும்...



“ஒகே தேங்க் யூ சார்...” என்றவன் அழைப்பை துண்டிக்கும் வேளை... “அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் மிஸ்டர்.யுகேந்திரன்” என்றவர் தொடர்ந்து அவர் கூறிய விசயத்தில் இடிந்து போனான்.



“மதிராதவி இப்போ மிசஸ்.அபராஜிதவர்மன் ஆகிட்டாங்கன்னு கேள்விப்பட்டோம் பீ கேர்புல் யுகேந்திரன்” என்றதில் தான் அவன் தலையில் இடி இறங்கியது போல் நின்றதை கண்டு காந்தன் அருகில் வர அவரிடமும் திக்கித்திணறி விஷயத்தை கூறினான்... காந்தன் விசயத்தை அறிந்து அவரும் தன் பங்கிற்கு மேலும் அதிர்ந்தார்...!



இவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் வேளையே உமா தன் கணவர் மற்றும் மகனை நெருங்கியவர்... “என்னங்க என்னாச்சு மதி கிடைச்சுட்டாளா?” என்று வினவியபடி வந்த மனைவியை கண்டு சுதாரித்தவராக...



“மதி கிடைச்சுட்டா உமா நானும் யுகேந்திரனும் போயிட்டு வரோம்” என்று வேகமாக உரைத்தவர் மகனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்தார்... அவருக்கு தெரியும் தன் மனைவியிடம் இந்த விஷயம் சென்றதானால் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் அங்கே யுகேந்திரனுக்கும் அவருக்கும் வார்த்தை சாடல் நடக்கலாம் என்றுணர்ந்தே மகனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார்.



“யுகேன்...” என்றதும் உயிரற்ற பார்வையுடன் தந்தை புறம் திரும்பியவனைக் கண்டு பெற்றவராக வேதனையில் மனம் பொங்கியது.



“யுகேன் நாம மதியை பார்த்து முதலில் விசாரிப்போம் அதுவரைக்கும் நீயா கற்பனை பண்ணி இப்படி வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றதும் தான் தன்னை தேற்றி கொண்டான்.



**************************



யுகேந்திரன் அவன் தந்தையுடன் அபராஜிதன் வீட்டிற்குள் நுழைய அதை கண்ட மதிராதவிக்கு மனதில் எழுந்த நிம்மதிக்கு அளவே இல்லை தான் அவள் இருந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறியவள்...



“யுகேன், அங்கிள்” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தவளை யுகேந்திரனின் விழிகள் அவள் அடி முதல் பாதம் வரை அளவிட்டது... அதில் தன்னவளின் நலனே முன் நின்றதை கண்டு அவளுக்கு மனதை சுட்டது இனி இந்த அக்கறைக்கு தான் தகுதியானவளா என்றெண்ணி நின்றாள். சில வினாடிகள் கடந்த மௌனத்தை உடைத்து யுகேந்திரனின் குரல்...



“எப்படி இருக்க மதி? உன்னை அவன் எப்படி இங்கே கொண்டு வந்தான்” என்றதும் அவள் கண்களில் கண்ணீர் ஊற்றாய் பெருகியது துக்கம் தொண்டை அடைக்க தாளாமல் கண்ணீர் வடித்தாள்... அவளின் இந்த வருத்தம் இருவரையுமே அசைத்துப் பார்க்க...



“மதிமா முதலில் அழுகையை நிறுத்து... என்ன நடந்ததுன்னு சொல்லு... நீ அபராஜிதனை பார்க்க ஆபீஸ் தானே போயிருப்ப இங்கே வீட்டுக்கு எப்படி வந்த?” என்று காந்தன் விசாரிக்க அவள் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற இருவருமே அளவில்லாமல் அதிர்ந்தனர்.



யுகேந்திரனுக்கு சினம் பொங்கியது... “கவலைப்படாதே மதி இனி நான் உன்னை காப்பாற்றுகிறேன்” என்றதில் சந்திரகாந்தன் மேலும் அதிர்ந்தார்...! மதியின் விஷயம் உண்மை என்ற வரையில் அறிந்தவர் மகனுக்கு நிலைமையை புரிய வைக்க எண்ணியே அவனை அழைத்து வந்திருந்தார்... ஆனால் இங்கு யுகேந்திரனோ அபராஜிதனின் மனைவி ஆகிவிட்டவளை காப்பாற்ற எண்ணி வேறு ஒரு போர்முனைக்கு தயராகிறானே என்ற எண்ணம் மனதிற்குள் திக்கென்றது! அவரின் கலக்கத்தை அதிகரிப்பது போல் மதியும்...



“யுகேன் என்னை கூட்டிட்டு போயிருங்க... ப்ளீஸ் அங்கிள் எனக்கு அம்மா மட்டும் போதும்” என்று இருவரிடமும் குழந்தையாக கூறியவளை கண்டு மனம் கசிந்தது.



“உன்னை இப்படியே விட்டுட்டு போகவா வந்திருக்கோம் மதி... முதலில் இங்கிருந்து கிளம்பு இனி ஒருநிமிஷம் கூட நீ இங்கே இருக்க வேண்டாம்” என்று கூறியதில் காந்தன் எதிர்த்தார்...



“யுகேந்திரன் அவசரப்படாதே அபராஜிதன் வரட்டும் என்னன்னு கேட்போம்” என்றதெல்லாம் அவன் காதில் வாங்கும் நிலையிலேயே இல்லை...



“உங்களுக்கு பைத்தியமா ப்பா ஏற்கனவே அவனை பற்றி தெரியாம நீங்க மதியை இங்கே அனுப்பினதே தப்பு இனியும் நாம தாமதப்படுத்தினோம்னா அது மதிக்கு தான் ஆபத்து...” என்று ஆத்திரத்தில் படபடத்தவன் அவள் புறம் திரும்பி...



“நீ வா மதி” என்று அழைக்க மதியும் அவனுடன் இணைந்து நடந்தாள். அபராஜிதனின் மனைவியாக அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறுவது மிகப்பெருந்தவறு என்பது காலம் கடந்தே உணர்வாளோ பேதை!!



மதிராதவி அபராஜிதனிடம் வெறுப்பு கொண்டவள் அவன் வீட்டில் இருந்து சென்ற மாலையே அருகில் இருந்த வேறொரு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்... அபராஜிதனும் அவளை மேற்கொண்டு தொந்தரவு செய்யாமல் தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான்.



அன்று காலை வேளையில் கண்விழித்த அபராஜிதன் வெகு விரைவாகவே கிளம்பி பிச்சாவரம் விருந்தினர் இல்லம் சென்றிருந்ததால் மதிராதவி அவனை எதிர்கொள்ளும் வேலை இல்லாமல் போய்விட்டது... ஆனால் அதுவே அவளுக்கு பெரிய நன்மையாகிப் போக தான் துணிந்து அங்கிருந்து சென்றாளோ பேதை?!



யுகேந்திரன் வாகனத்தை உயிர்பித்து தந்தைக்காக காத்திருந்தான்... இனி நடப்பது நடக்கட்டும் என்ற முடிவில் சந்திரகாந்தனும் அவன் பின்னோடு சென்றிருந்தார்.



இவை அனைத்தும் அபராஜிதன் ஆலோசனை கூட்டத்தின் இடைவெளியில் நடந்திருக்க அவனின் அலைபேசி அணைத்து வைக்கபட்டிருந்ததால் தக்க சமயத்தில் அவனுக்கு தகவல் அளிக்க முடியாமல் போய்விட்டது... அபராஜிதன் அனைவரையும் அனுப்பிவிட்டு யுகேந்திரன் மேல் படாவஞ்சம் கொண்டு அவனை பற்றி சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அவன் மனைவி மதிராதவி யுகேந்திரனிடம் சென்ற செய்தி வந்தடைய அந்த கொதிப்பில் வாகனத்தை சீறவிட்டிருந்தான்.



தன் கணவனின் கடுங்கோபத்தில் சிக்கியிருப்பதை அறியாத மதிராதவியோ யுகேந்திரனுடன் அவன் வீட்டிற்கு சென்றிருந்தான். உமாபாரதி தன் கணவனும், மகனும் வரக் காத்திருந்தவருக்கு அவர்களுடன் மதிராதவியும் வந்ததும் நிம்மதி தான் என்றாலும் அவரின் அடிவயிற்றில் கலக்கம் உருண்டோடியது... அவரின் கலக்கம் மெய்பிப்பது போல் மதிராதிவியின் புறம் சென்றவர்...



“மதிமா என்னாச்சு நேத்து ஒரு நாள் முழுக்க உன்னை காணாம யுகேனும் நாங்களும் தவிச்சு போயிட்டோம்” என்று கூறியபடியே அவளை ஆராய்ச்சி செய்யும் பார்வை பார்த்தவரின் விழிகளில் தட்டுபட்டது அவள் கழுத்தில் மின்னிய மஞ்சள் கயிறு அவரின் அடிமனதின் கலக்கம் மெய்யாக்கியிருந்தது.



“ம..தி.. கழு...த்...தில்.. தாலி.. எப்படி?” என்றவருக்கு மென்மேலும் கலக்கம் அதிகரித்தது... தன் அன்னையின் தவிப்பை உணர்ந்த யுகேந்திரன் அவரை நெருங்கியவர்...



“அம்மா முதலில் மதி சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறம் நிதானமா நடந்ததை என்னன்னு விசாரிப்போம்” என்றவனை இடையிட்டு மதி பேச ஆரம்பித்தாள்...



“இல்லை யுகேன் ஆண்டி பதட்டப்படுறது நியாயம் தானே முதலில் நடந்ததை சொல்லிடறேன்” என்றவள் நடந்ததை கூற அவரின் முகம் பாறையென இறுகிப் போனது. அவரின் தவிப்பு அவளுக்காக என்றிருந்தால் நடந்த விசயத்திற்கு அதிர்ச்சியும், வருத்தமும் தான் எழுந்திருக்க வேண்டும்... ஆனால் அவரோ மதியை காப்பாற்ற நினைத்தது அவர் மகனின் மனைவியாக வரப்போகும் பெண்ணிற்கு தான் எனும் பொழுது அவரின் இந்த உணர்ச்சியில் தவறில்லையே.



“இத்தனை நடந்த பிறகும் இங்கே ஏன் திரும்ப வந்தே மதி?” என்று பிசிறில்லாமல் தீர்க்கமாக அவர் கேட்ட கேள்வியில் மதி நிலைகுலைந்து நின்றுவிட்டாள்...!!



யுகேந்திரன் தன் அன்னையின் கேள்வியில் முதலில் அதிர்ந்தவன் பின்பு நிர்தாட்சன்யமாக எதிர்த்தான்... “அம்மா என்ன கேள்வி கேட்கறீங்க? அவ என் மதி... அவளுக்கு என்ன நடந்....” மேலும் அவனின் வார்த்தைகள் முன்னேறாமல் சுவிட்ச் தட்டினார் போல் நின்றது அவன் அன்னையின் கண்டிப்பில்...



“போதும் நிறுத்து யுகேன்... நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது... ரெண்டா தாரமா கல்யாணம் பண்ணுற அளவுக்கு என் மகன் தரம் தாழ்ந்து போகலை” என்று கடுமையாக கூறியிருந்தார்... யுகேந்திரன் அன்னையின் பேச்சை நம்ப முடியாது பார்த்திருந்தவன் தன் தந்தையை உதவிக்கு அழைக்க எண்ணி அவரை பார்க்க அவரோ மனைவியின் செயலை ஆமோதிப்பது போல் அமைதியாக நின்றிருந்தார். அவரின் அமைதியே இனி தன் தந்தையின் உதவி தனக்கு கிடைக்காது என்பதை உணர்த்த யுகேந்திரன் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த மதியை நெருங்கி அவள் கரத்தை பிடிக்கும் சமயம் இருவருக்கும் இடையில் புயலெனப் புகுந்திருந்தான் அபராஜிதவர்மன்...!!


தென்றல் வீசும்...


******************************************************


வணக்கம் நட்பூக்களே...



“தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா” அத்தியாயம் - 4 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிரவும் தோழமைகளே.



நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

21461 21462

தன் கணவனின் வருகையில் முகம் வெளுத்து நின்றிருந்தாள் மதிராதவி... அவனின் விழிச்சிகப்பு கோபத்தின் அளவை எடுத்துரைத்ததில் அவள் உடலும் உள்ளமும் ஒருசேர நடுங்கி கொண்டிருந்தது... யுகேந்திரன் அவனை துணிவுடன் எதிர்கொள்ள தயாரானான்... காந்தன், உமா இருவருமே மனதில் எழுந்த நிம்மதியுடன் அமைதியாக நின்றுவிட்டனர்.

அபராஜிதன் யுகேந்திரனை பார்வையால் தீயென சுட்டெரித்தபடி யுகேந்திரன் முன்பு நின்றவன்...

“என்ன தைரியம் இருந்தா என் இடத்துக்கு வந்து என் பொண்டாட்டியே கடத்துவே” என்று அடிக்குரலில் சீறினான்... அவனின் வார்த்தையில் உதடுகளை ஏளனமாய் வளைத்தவன்...

“என்னமோ நீ யோக்கியன் மாதிரி பேசுற?... ஒரு பெண்ணை மயக்க மருந்து கொடுத்து அவளை ஏமாற்றி பலாத்காரம் பண்ணினவன் நீ...” என்று விரல் நீட்டி குற்றம் சாட்ட அபராஜிதனுக்கு சினத்தில் நெற்றி நரம்புகள் புடைத்தது... தன் கோபத்தை கண்மூடி கட்டுக்குள் கொண்டு வந்தவன் முகம் மறுநிமிடமே சலனமற்று இருந்தது கண்டு யுகேந்திரன் யோசனையில் ஆள புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது...

“மதியுடைய சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டின்னு உரிமை கொண்டாடுற? அவதான் உன் பொண்டாட்டின்னு சொல்ல நீ கட்டின தாலியை தவிர வேற என்ன ஆதாரம் இருக்கு?” அவன் இதுவரை சட்டபடி திருமணத்தை பதிவு செய்யவில்லை என்ற எண்ணத்தில் யுகேந்திரன் மிதப்பாக கேட்க இப்போது அதே மிதப்பான பார்வையை அவன்மேல் வீசியபடி வாசலை நோக்க காவலர்கள் இருவர் கையில் ஒருகாகித உரையுடன் உள்ளே நுழைந்தனர்...

“மிஸ்டர்.யுகேந்திரன் நீங்களா?” என்றபடி காவல்துறை அதிகாரி ஒருவர் யுகேந்திரனை பார்த்தவாறு வினவியவரை நோக்கி... ‘ஆமாம்’ என்றபடி தலையசைக்க...

“மிஸ்டர்.அபராஜிதவர்மன் அவருடைய மனைவி மதிராதவியை நீங்க கடத்திட்டு வந்துட்டதா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு” என்ற காவலரை கண்டு திகைப்படைந்தான்... இருந்தும் சூழ்நிலை கருதி வரவழைத்துக் கொண்ட துணிச்சலுடன் பேசலானான்...

“மதிராதவி அவர் மனைவி தான் என்கிறதுக்கு என்ன சாட்சி?” என்று அலட்சியத்துடன் வினவியதும்... அதிகாரி அவர் கையில் இருந்த காகிதத்தாளை அவனிடம் நீட்ட அதை படித்தவன் முகம் இருண்டு போனது... அது அபராஜிதன், மதிராதவி திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட பதிவு திருமண சான்றிதழை கண்டவன் தான் வாயடைத்துப் போனான். அவனை தொடர்ந்து பார்த்த மதியும் மருண்டு நின்றிருந்தாள். அதில் முக்கியமானதாக சாட்சி கையெப்பமாக இருந்தது அவள் அன்னையின் கையெழுத்து அவனிடமிருந்து தப்பித்து வந்தால் போதுமென்று நினைத்திருந்தவளுக்கு அவள் அன்னையை பற்றிய நினைவு எழுந்ததும் மனதில் திகில் பரவியது!

“................” வெகு சிலகணங்கள் மௌனமே ஆட்சி செய்ய அதிகாரிக்கு வந்த அவசர அழைப்பில் விரைவில் செல்ல வேண்டிய அவசியம் நேரவே விரைவாக பேசலானார்...

“சார் இன்னொரு முக்கியமான கேஸ் அட்டெண்ட் பண்ணனும்...” என்று கூறிக் கொண்டு வந்தவரின் பேச்சில் அபராஜிதன் குறுக்கிட்டான்...

“இனி நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றதும் அதிகாரி இருவரும் கிளம்ப... அபராஜிதன் மதியின் புறம் நெருங்கி அவளையே உறுத்து பார்த்தவன்...

“கிளம்பு போகலாம்” என்று உணர்ச்சி துடைக்கப்பட்ட வார்த்தையில் கூறியிருந்தான்... அவனின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தில் பாவையவள் தேகம் உதறியது...

“இல்.. இல்.. இல்லை நான் உங்ககூட வரமாட்டேன்...” என்று அவனிடமிருந்து விலகி பின்னால் நகர்ந்தவளை கண்டு அதுவரை அடக்கப்பட்ட ஆத்திரம் கட்டுடைக்க ஆரம்பித்தது... காந்தன் இருவர் மேலேயே பார்வையை பதித்தபடி இருந்தவர் அபராஜிதனின் நிலைமையை உணர்ந்து...

“மதி தப்போ சரியோ இனி உன் வாழ்க்கை அபராஜிதன் கூடதான் புரிஞ்சு நடந்துக்கோம்மா” என்று அறிவுறுத்த அதுவரை மௌனம் காத்த யுகேந்திரனுக்கு கோபம் பீறிட்டது...

“ப்பாஆ... என்ன பேசுறீங்க நீங்க? அவளே விருப்பம் இல்லைன்னு சொல்லுறா நீங்களே அவளை புரிஞ்சுக்காம பேசுறீங்க”

“நீ சும்மா இரு யுகேன் உங்க அப்பா சொல்லுறது சரிதான்... மதி அவளுடைய புருஷன் கூடதான் போகணும்”

“ம்மா...” என்று ஏதோ கூற வர அபராஜிதன் மதியை வெடுகென்று தன்புறம் இழுத்து நிறுத்தியதில் யுகேந்திரன் பேச்சு தடைப்பட்டது...

“எனக்கு அவ்வளவா பொறுமை இல்லை... என் பொறுமையை சோதிக்கிறது அவ்ளோ நல்லதில்லை... ஒழுங்கா போய் காரில் ஏறு” என்று கடிந்த பற்களுக்கிடையில் அடிக்குரலில் சீறினான்.

“நிச்சயம் உங்களுடன் வர முடியாது...” என்று பிடிவாதமாக அவனிடம் மறுத்தவள் காந்தனை நோக்கி...

“அங்கிள் ப்ளீஸ்... நான் அம்மா இருக்கிற இடத்துக்கு போய்க்கிறேன்...” என்றவள் சரேலென்று உமாவை நோக்கி...

“ப்ளீஸ் ஆண்டி... நான் அம்மாகிட்டே போனா போதும் ஆண்டி என்னை நம்புங்க ஆண்டி” என்று அன்னையை காணாத மழலையாக மன்றாட இருவருக்கும் பெற்றோராக வேதனையில் மனம் கசிந்தனர்... யுகேந்திரனோ தன் மனதிற்கு இனியவளின் கோரிக்கை காதலின் வலியை காட்டிக் கொடுக்க அவன் பேச முனைந்த நேரம் அபராஜிதன் தன் ஒட்டுமொத்த பொறுமையையும் இழந்திருந்தான்...

“ஏய் சொல்லிகிட்டே இருக்கேன் அம்மா வேணும் ஆட்டுக்குட்டி வேணும்ன்னு அடமா பிடிக்கிற?” என்றவன் அவள் சுதாரிப்பதற்குள் இடுப்பில் கை வைத்து அவளை கையிலேந்தியபடி அங்கிருந்து வெளியேற மதிராதவி அவனிடமிருந்து துள்ளி திமிறினாள்...

“டேய் அவளை விடுடா” என்று யுகேந்திரன் பின்னே செல்ல பார்க்க உமாபாரதி தன் மகனின் கரத்தை இறுக பிடித்துக் கொண்டார்...

அபராஜிதன் தன் வாகனத்தை நெருங்க மதி அவனின் கரத்தை தன் பற்களால் பதம் பார்த்தாள்... எதிர்பாராத அவளின் இந்த தாக்குதலில் அவன் கரத்தை உதறியபடி அவளை நழுவவிட அவனிடமிருந்து தப்பிக்க எண்ணியவளின் கரத்தை அழுந்தபிடித்து அவள் முகத்தை பிடித்து தாடையை இறுகப் பற்றியவன்...

“உங்க அம்மா இந்த உலகத்தில் இருக்க வேணும்ன்னு நினைச்சா என்கூட வா அவங்க உயிரோடவாச்சும் இருப்பாங்க இல்லை...” என்று வாக்கியத்தை முடிவு பெறாமல் வைத்து குரோதமாய் பார்த்தவன் அவளுக்கு விளங்கிவிட்டதை உணர்ந்து வேகமாக நகர்ந்து வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.

அவனின் வார்த்தையில் அவள் அரண்டு போய்விட்டாள்... அதன்பிறகு அவனிடமிருந்து தப்பித்து செல்லும் எண்ணத்தை கைவிட்டவள் பதுமையென அவனுடன் சென்றிருந்தாள்.

************************

சென்னை விமானநிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது... விமான பயணிகளுக்கான அறிவிப்பு ஒலிபானில் ஒலித்துக் கொண்டிருக்க பயணிகள் ஆங்காங்கே நகர்ந்தபடி இருந்தனர்... பயணிகளுக்கான வருகை நுழைவு பாதையில் வெள்ளை வேட்டியில் முழுக்கை வெள்ளை சட்டை துண்டணிந்த அவர் தன் கண்களில் இருந்த கருநிற கண்ணாடியை கழற்றி கண்களால் துழாவியபடியே உடமைகளை எடுக்கும் இடம் சென்ற சமயம் தூரத்தில் “ஐயா” என்றழைத்தபடி வந்தவனை கடினமான முகத்தை வைத்துக் கொண்டு கண்டிக்கும் தொனியில் முறைத்தார்...

“என்ன இதெல்லாம் நான் வரதுக்கு முன்னாடி வந்து நிற்காம ஆடிஅசஞ்சு வர்ற” என்று சீறினார்.

“ஐயா... அது... வந்து...” என்று இழுத்தவனின் வார்த்தையை கேட்க பொறுமையில்லாதவர்...

“போதும்யா சும்மா வந்து போயின்னு கதை சொல்லிட்டு போ போய் சீக்கிரம் வண்டியை எடு” என்று அவர் குரலை உயர்த்தி கூறியதில் அவர்களுக்கு வெகுஅருகில் சென்ற சிலர் அவர்களின் மேல் சிலகணங்கள் பார்வையை நிலவவிட்டபடி கடந்து சென்றனர்... அப்போதே அருகில் வந்த ஒரு பெரிய மனிதர் அவரை கடந்து செல்லும் முன் அவர் முன் நின்று அவரை நோக்கியபடி...

“ஏனய்யா கேட்கிறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்... இப்படி எல்லாரும் பார்க்க அவரை திட்டினா சங்கடமா இருக்காதா?” என்றதும் அவரை மேலும்கீழும் ஏளனமாய் பார்த்தபடி...

“என்னையா சங்கடம் டிரைவர் வேலை பார்க்கிறவனுக்கு இடம் பொருள் ஏவல் பார்த்து பேசணுமோ... வேலைகாரனுக்கு மரியாதையும் சங்கடமும் என்ன வேண்டி கிடக்கு... வேலைக்காரனை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் தான் வைக்கணும்” என்று எடுத்தெறிந்து கூறியவர் விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்திருந்தார்... பெரியவரோ ஆட்சேபத்தில் பெருமூச்செடுத்துவிட்டு நகர்ந்திருந்தார்.

விமானநிலையத்திலிருந்து கிளம்பிய அந்த பென்ஸ் வாகனம் அரண்மனை போன்ற அவரின் வீட்டின் முன் நின்றதும் அதிலிருந்து வேகமாக இறங்கினார் மருதுபாண்டியன்... தன் கணவன் வந்திறங்கியதை அறிந்த அவர் மனைவி அன்னக்கிளி அப்போதும் வயதில் சிறியவராய் பட்டாம்பூச்சி போல் துள்ளி குதிக்காத குறையாக அவர் முன் நின்றவர்...

“என்னங்க எப்போ வந்தீங்க? வாங்க...” என்று புன்முறுவலுடன் அவரை வரவேற்றிருந்தார்... அவரோ அதை எல்லாம் பொருட்படுத்தாது கடுகடுவென்ற முகத்துடன் நோக்கியவர்...

“என்னடி இப்போதான் உனக்கு இளமை திரும்புறதா எண்ணமோ பதினாறு வயசு பருவ பிள்ளை மாதிரி துள்ளி ஓடி வர... காலாகாலத்துல பிள்ளையை பெத்திருந்தா இப்படி ஓடி வந்திருக்க மாட்ட” என்று வார்த்தைகளை ஊசி முனைகளாய் குத்த அன்னகிளியின் அடிமனதில் சுருக்கென்ற வலி மூண்டு வேதனையில் சுருண்டது... அருகில் இருக்கும் பணியாட்களை கருத்தில் கொண்டு தன்னை தேற்றி இயல்பாக்கி கொண்டவர்...

“மன்னிச்சிருங்க பார்த்து ஒருமாசம் ஆகிருச்சேன்னு ஆர்வத்துல ஓடி வந்துட்டேன்” கம்மிய குரலில் கூறினார்...

“சரி.. சரி... மசமசன்னு நிற்காம போய் சாப்பிட எடுத்து வை நான் குளிச்சுட்டு வரேன்... என் தங்கச்சி பையன் யுகேந்திரன் வரேன்னு சொல்லியிருக்கான்” என்று கூடுதல் தகவலையும் தெரிவித்துவிட்டு தன்னறைக்கு செல்ல எட்டு வைத்தவரை தடுத்து...

“இருங்க உங்களுக்கு உதவி செய்ய வரேன்” என்றதும் அவர் முகம் பாறையின் கடினத்தில் இறுகியது சடாரென அவரை பார்த்தவரின் பார்வையில் ஜுவாலை மின்ன...

“என்னை கையாலாகாதவன்னு சொல்லிகட்டுறியா?” என்று உறுமியவர் மறுகணமே.... “நானே பார்த்துக்குவேன் நீ போய் வேற வேலையை பாரு” என்று எரிந்து விழுந்துவிட்டு தன்னறைக்கு சென்றிருந்தார்... தன்னறைக்குள் புகுந்ததும் முதல் வேலையாக அவரின் இடது தோளில் இருந்த வெள்ளை துண்டை நீக்கியவர் முழங்கை வரை பொருத்தபட்டிருக்கும் செயற்கை கையை முழங்கையிலிருந்து நீக்கினார். அதை அகற்றும் போது அவரின் விழிகள் உணர்ச்சி துடைக்கப்பட்டிருக்கும்.

மருதபாண்டியன் செல்வாக்கும், பணபலமும் கொண்ட அரசியல்வாதி... தான் நினைப்பது எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும் பணத்தாலும், சூழ்ச்சியாலும் செய்துமுடித்து விடுபவர்... அப்படிப்பட்டவருக்கு ஒற்றை கை இழந்தவர் என்று சொல்லிக் கொள்வதில் மனத்தாங்கல் இருந்தது... அவ்வபோது அதனால் ஏற்படும் கோபத்தினை அவர் மனைவி அன்னகிளியிடம் வெளிப்படுத்துவார்... அன்னகிளியும் தன் கணவரின் மனம் புரிந்தவராக அவரின் கோபத்தினை கூட சகித்து தாங்கிக் கொண்டு புன்முறுவலுடன் சென்றுவிடுவார்... அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவருக்கு தாய்மை ஆகும் பாக்கியம் இல்லாமல் போனது தான் அந்தோ பரிதாபம்!

***************************

அபராஜிதனின் விழிகளில் தெரிந்த ஜுவாலை மதிராதவியை துஷ்ப்ரயோகம் செய்து கொண்டிருந்தது... தன் கணவனின் விழி நெருப்பின் சூடு தாங்காது அச்சத்தில் பொசுங்கிக் கொண்டிருந்தாள் ராதவி! மெல்ல எட்டி வைத்தவன் அவளை நெருங்க அவளின் கால்களும் அவளை அறியாது பின்னடைந்து கொண்டே இருந்தது... ஒரு சமயத்தில் உட்புற சுவரில் மோதிவிட அவளை சிறைசெய்தது அவன் கரங்கள்... அவனின் வெப்ப மூச்சுகாற்று அவள் மேனியில் உரசியதில் பாவையின் தேகம் தடுமாறிக் கொண்டிருந்தது... அவளின் தவிப்பையும் தடுமாற்றத்தையும் சிறிதும் அறியாதவன் அவள் தாடையை இறுக பற்றி விழியோடுவிழி கலக்கவிட்டான்...

“நேத்து இந்நேரம் என்கூட குடும்பம் நடத்திட்டு இன்னைக்கு முன்னால் காதலன் கூட ஓடுற?” என்று வார்த்தைகளை கடித்து துப்ப அவள் உடல் கூசி உள்ளம் நைந்ததில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“ஹ்ம்ம்... நேற்றைய ஒருநாள் சுகம் போதலையோ உனக்கு?” என்று வார்த்தை என்னும் வாளை சொருக அவள் விழிகள் பட்டென்று திறந்து அவனை எரித்தது...

“என்னடி கண்ணகி பார்வையால் எரிக்கிற மாதிரி பார்க்கிற... ஆனா இதுக்கெல்லாம் நான் பொசுங்கிறமாட்டேன்” என்றவனை அவளின் கரங்கள் அவன் கன்னங்களை பதம் பார்க்க ஓங்க எளிதாக அவன் கரங்கள் அதை பிடித்து அவளின் செயலை முறியடித்தது...

“ஹான்... என்னை தொடணும்னு ஆசையா? ஆனா பாரு அது முடியாதே நானே விரும்பினா தவிர... கவலைப்படாதே மாமன் உன் ஆசையை நிறைவேத்துறேன்” என்றவனின் வார்த்தையில் இருந்த ஆத்திரம் ஆவேசமாக மாறி அவள் பூவிழ்களை சிறைச் செய்தது அவனின் முரட்டு இதழ்கள். அவனின் இந்த திடீர் செயலில் ஸ்தம்பித்து நின்றவள் அவனின் விரல்கள் சற்றே தளர்ந்ததில் தன்னை சுதாரித்தவளாக அவனிடமிருந்து சிறைப்பட்டிருந்த தன் கரங்களை வெடுக்கென்று உருவிக் கொண்டவள் அவனை தன் பலம் கொண்டமட்டும் தள்ளினாள்... அதில் நிலை தடுமாறி கீழ விழ இருந்தவன் அருகில் இருந்த மேஜையின் நுனியை பிடித்தவாறு தன்னை சுதாரித்து நின்றான்.

“என்னடி என்னை தள்ளி விடுற அந்தளவுக்கு உனக்கு துணிச்சல் ஆகிருச்சா?” என்றவனின் சீற்றத்தில் அச்சத்தில் நடுங்கிய உடலை அவனுக்கு காட்டாது மறைக்க சிலையென நின்றிருந்தாள்... வேகமாக அவளை நெருங்கியவன் பற்கள் நாரணரத்து கொண்டிருக்க...

“இதே இந்நேரம் அவனா இருந்தா இப்படி தள்ளியா விட்டிருப்ப? அவன்கூட முதல் ராத்திரி கொண்டாட தானே போன?” என்று கூறியதில் அவள் உடல் கூசி அருவெறுத்தது...

“ச்சீ., வாயை மூடுங்க உங்களை போல உடம்புக்கு அலைகிற புத்தி இல்லை என் யுகேன்னுக்கு” என்றதில் அவன் கோபம் எரிமலையாய் வெடிக்க...

“ஒஹ் அப்படியா... ஆமாம்டி நான் உடம்புக்கு அலையுறவன் நீ கண்ட...?” என்று கொத்திதவன் அவள் பிடரி மயிற்றை கொத்தாக பற்றினான்... அதில் சுள்ளென்று எழுந்த வலியில் பாவையின் விழிகள் கண்ணீரை கசிந்தது.

“ஹாஆ... வலிக்குது விடுடா... தப்புமேல தப்பு செய்யறீங்க மிஸ்டர்.அபராஜிதன்” என்று வாயில் வந்ததை பேசியவளை கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் அலேக்காக தூக்கி மஞ்சத்தில் புரட்டியவன் அவள் மேல் மோகத்தின் வேட்கையுடன் பரவி படர்ந்தான்... அவனை எதிர்த்து போராடிய முயற்சிகள் தோற்று போயின... நேற்றைய பொழுது அவள் சுயநினைவின்றி நடந்த செயல் இன்று அவள் சுயநினைவோடு நடந்ததை நினைத்து அவள் மனம் வெறுத்துப் போனாள். வெகுநேரம் அவளை ஆண்டு அனுபவித்தவன் அவளிடமிருந்து விலகி கலைத்து கலைந்து தோய்ந்து படுத்திருந்தவளை நோக்கினான்.

“சும்மா சொல்லக்கூடாது உன் உடம்பு பயங்கர ஸ்பெஷல் தான்” என்று குரூரமாய் கூறியவன் விலகி சென்றுவிட்டிருந்தான். அவனின் மோகத்திற்கு இரையாகி அதில் தோற்று இருந்தவளுக்கு அவனின் வார்த்தைகள் மேலும் அவள் மனதை கீறி வலியை தோற்று வித்ததில் அப்போதே உயிர் பிரிந்துவிடாதா என்று எண்ணிக் வருந்தி கொண்டிருந்தவளுக்கு யோசனை பொறி தட்டியது... தன் ஆடையை சரி செய்துக்கொண்டு எழுந்தவள் அவள் மூலையில் மின்னிய யோசனையை செயலாக்கம் செய்ய வேண்டி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.


****************************


யுகேந்திரன் தன் மாமா மருதுபாண்டியனை காண விரைந்து கொண்டிருந்தான் அதேசமயம் அவனை நினைத்து கவலையுடன் தன் கணவனிடம் ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருந்தார் உமாதேவி.

“என்னங்க இவன் இப்படி செய்துகிட்டு இருக்கிறான் நீங்களும் அவனை தட்டி கேட்காம அவன் போக்கில் விட்டு வைக்கிறீங்க” என்று கோபத்தில் குமுறினார்.

“ம்ச்... இப்போ என்ன செய்ய சொல்ற உமா?? உன் மகனுக்கு சின்ன வயசுல இருந்தே பிடிவாத குணம் ஜாஸ்தி அதுக்கு நீயும் ஒரு காரணம் தான்”


“எந்த நேரத்தில எதை குத்தி காட்டி பேசிகிட்டு இருக்கீங்க என் மகன் அந்த மதிராதவிக்காக பார்த்து வாழ்க்கையை அழிச்சுக்குவானோனு கவலைப்பட்டுட்டு இருக்கேன்”

“இப்போ கவலைப்பட்டு என்ன புரியோஜனம் உமா... இதை உன் பையன் ஒவ்வொரு முறையும் அவன் சாதிக்க முடியதப்போ உன் அண்ணனை தேடி போய் அவனுக்கு தேவையானது கிடைக்கனும்னு கேட்டு வாங்கி கொடுக்கறப்போ இருந்திருக்கனும்... இப்போ பாரு அதே பழக்கத்தில் தான் அவன் மாமாவை பார்த்து காரியம் சாதிக்க கிளம்பிட்டான்... இந்த மாதிரி தேவை இல்லாத எண்ணம் எல்லாம் வரக்கூடாதுன்னு தான் நான் அன்னைக்கே தலைபாடா அடுச்சுக்கிட்டேன்... கேட்டியா நீ” என்று அவரை கடிய தன் கணவனின் கூற்றில் இருந்த உண்மையில் வாயடைத்து போனார்.

மருதுபாண்டியன் உமாதேவி தந்தையின் அண்ணன் மகன்... உமாதேவிக்கு உடன்பிறப்பு என்றால் மகேஸ்வரி என்ற ஒரே ஒரு சகோதரி தான்... ஆண்பிள்ளை இல்லாத வீட்டிற்கு மருதுபாண்டியன் ஒருவரே... அவரும் தங்கைகள் என்று மிகுந்த உரிமையுடன் உறவு கொண்டாடினார்... தன் தமக்கை மகேஸ்வரிக்கும் இரண்டு பெண்பிள்ளைகளாக போக உமாதேவிக்கு பிறந்த யுகேந்திரன் ஒருவன் செல்லப்பிள்ளையாகி போனான்... மருதுபாண்டியன் மது, மாது, சூது அனைத்தும் கற்று தெரிந்த கலையாளன்... அரசியல் செல்வாக்கு பணபலம் என எதையும் சாதிக்கும் அவரை கொண்டு தன் மகனுக்கு வேண்டியதையும் சாதித்துக் கொள்வார் உமாதேவி... ஆனால் அதேசமயம் மகனின் ஒழுக்க நெறிமுறைகளிலும் கட்டுபாடாக இருந்தார் அதனால் தேவையற்ற கேட்ட வழிகளில் அவன் சென்றதும் இல்லை என்பதே ஒரு நிம்மதி... எதுவாகினும் பாண்டியனிடம் முறையிட்டு சாதிக்கும் அவன் குணவிளைவு தான் இன்று தான் காதலித்த பெண்ணை இன்னொருவன் மனைவி ஆக்கி வாழ்ந்த பிறகும் மதியின் மேல் உள்ள காதல் அவளை விட்டுகொடுக்க முடியாமல் தவிக்க அவளை அடைய எத்தனை பெரிய வலிகள் இருந்தாலும் பரவாயில்லை என்று அவன் மாமா மருதுபாண்டியனை நாடி சென்றிருந்தான்.

உமாதேவிக்கு மகனை நினைத்து கலக்கம் ஏற்பட காரணம் மதிராதவி இன்னொருவனின் மனைவி... மற்றொன்று, அவன் கணவன் அபராஜிதன் அந்த ஊரில் ரவுடி என்ற பெயர் பெற்றிருப்பவன் அப்படிப்பட்டவனிடம் மகன் மோதிக் கொள்கிறான் என்றால் அதன் பாதகம் தன் மகனுக்கே ஆபத்தாய் முடியும் என்ற கவலையில் மனம் பரிதவிக்க அவனிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி பார்த்தார்... ஆனால் அவன் கேட்டால் அல்லவே? காதல் கண்ணை மறைக்க தாயின் மன்றாடுதல் தந்தையின் அறிவுரை அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு சென்றிருந்தான்.
மனைவியின் கலங்கிய முகம் காந்தனை பாதிக்க அவரை நெருங்கி தேற்ற ஆரம்பித்தார்...

“இங்க பாரு உமா நம்ம யுகேனுக்கு எதுவும் ஆகாது கவலைப்படாதே அதுக்காக அவனை தடுத்து நிறுத்தவும் முடியாது அவன் போக்கில் போய் தான் விட்டு பிடிக்கணும்”

“நிஜமாவா சொல்றீங்க... அவன் மேல கோபப்பட்டு கண்டுக்காம விட்டுறமாடீங்களே” என்று அப்போதும் தன் கணவனை சந்தேகிக்க அவரை தீர்க்கமாக பார்த்தவர்...

“உன் மகன் எனக்கும் மகன் தான் அவன் வாழ்க்கையை பற்றிய கவலை எனக்கும் இருக்கு” என்று சுள்ளென்று கூறியதில் தான் உமாவிற்கு தான் பேசிய வார்த்தைகள் தவறென்று உரைக்க உதட்டை கடித்து மௌனம் காத்தார்.

அன்னக்கிளி வருகின்ற தன் நாத்தனார் மகனுக்காக பார்த்துப்பார்த்து பதார்த்தங்களை செய்து கொண்டிருந்தார்... யுகேந்திரன் அதை ஏறிடுதும் பாராதவனாக தன் மாமாவை தேடி சென்றான்.

“வாப்பா யுகேந்திரா எப்படியிருக்க” என்று நலம் விசாரித்தார்... அவரின் விசாரிப்பில் விரக்தி புன்னகை பூத்தவன்...

“நான் நல்லா இல்லை மாமா” என்றவனின் பதிலில் அவர் யோசனையில் ஆழ்ந்தார்... சிறுவயதிலிருந்து பார்த்தவன் எதற்கும் துவளாதவன் அவனிடமிருந்து விரக்தியா என்றே ஆச்சரியமடைந்தார்.
“என்னப்பா சொல்றா என்ன ஆச்சு... முதலில் சாப்பிட்டயா?” என்று வினவியவருக்கு இல்லை என்று தலையசைப்பது மூலம் விடையளித்தான்.

“முதல்ல சாப்பிடு அப்புறமா பேசலாம்” என்றவர் அவனை அழைத்துக் கொண்டு உணவு மேஜைக்கு அழைத்து வந்தார்...

“ஏண்டி அன்னம் என் தங்கச்சி மகன் வந்திருக்கான் உடனே சாப்பிட வைக்காம என்னத்த வெட்டி முறிச்சுக்கிட்டு நின்ன?” என்று அதட்ட அவரோ பதறிப் போனார்...

“என்னங்க இப்படி சொல்றீங்க நானா யுகேந்திரனை கவனிக்காம இருப்பேன் அவன் தான் வேண்டாம் சொல்லிட்டு உங்களை பார்க்க வந்துட்டான்” என்றவரை நம்பாமல் அவர் சரமாரியாக திட்ட ஆரம்பிக்க அப்போதுதான் அங்கு நடக்கும் வாக்குவாதம் தனக்காக என்றுணர்ந்த யுகேந்திரன் சட்டென்று சுதாரித்து கொண்டு அதில் தலையிட்டான்...

“ம்ச்.. மாமா அத்தை சொன்னது உண்மையா தான். நான்தான் சாப்பாடு வேண்டாம் சொல்லிட்டு நேரே உங்களை பார்க்கணும்னு சொல்லிட்டு வந்தேன் உங்களுக்கு பசியா இருந்தா சாப்பிட்டு வாங்க நான் வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு செல்ல விஷயம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டவர் அவரும் உணவை மறுத்துவிட்டு அவனுடன் பேச தனிமையில் வந்த்திருந்தார்.

“சொல்லு யுகேந்திரா என்ன விஷயம்...” என்றதும் அவரை சிலவினாடிகள் அமைதியாக பார்த்தவன்...


“நான் நம்ம வீட்ல வேலை செய்த துர்கா அம்மாவோட மகள் மதிராதவியை காதலிச்சேன்” என்று கூற அவரோ ஆட்சேபத்தில் முகம் சுருக்கினார்.

“உங்களுக்கும் தெரியும் நீங்களும் பார்த்திருப்பீங்க” என்றவன் அப்போது அவரின் முகத்தில் தொனித்த இகழ்ச்சியை கண்டான்...

“மாமா என்னாச்சு” என்று வினவியதும் தான் தன்னிலை உணர்ந்தவர்...

“ஒண்ணுமில்லை போயும்போயும் ஒரு வேலைக்காரியோட மகளையா காதலிச்ச?” என்று நிறுத்தி நிதானமாக வினவ யுகேந்திரன் அவரை நேரடியாய் நோக்கினான்.

“ஏன் மாமா நான் காதலிக்கக்கூடாதா?”

“காதலிச்சது தப்பில்லை யுகேந்திரா... ஆனா காதலிச்ச பெண்தான் தப்பு... போயும்போயும் ஒரு வேலைக்காரி பெண்ணையா காதலிச்ச? அப்படியே அந்த பொண்ணு மேல ஆசைப்பட்டாலும் வேணா ஒரு ரசத்திரியோ ரெண்டு ராத்திரியே....” மேலும் என்ன கூறியிருப்பாரோ யுகேந்திரனின்...

“மாமாஆஆ.....” என்ற குரலை உயர்த்தி அலறியதில் பட்டென்று தன் பேச்சை நிறுத்திக்கொண்டார். பணியாட்கள் கூட அவனின் குரலில் ஒருநொடி நின்று பார்த்தவர்கள் பாண்டியனின் கண்டிக்கும் பார்வையை எதிர்கொள்ளும் முன் அவரவர்கள் வேலைகளில் மூழ்கிவிட்டிருந்தனர். வேலையாட்களை அடிமைபோல் பார்க்கும் அவருக்கு தங்கை மகனின் காதல் பைத்தியக்காரத்தனமாக தோன்றிவிடவே தான் அந்த வார்த்தைகளை கூறினார்.

யுகேந்திரன் பெரியபெரிய மூச்சுக்களை விடுத்து தன்னை சமாளித்துக் கொண்டிருக்கும் போதே அன்னக்கிளி அவனுக்கு குவளையில் குடிக்க தண்ணீர் கொடுத்திருந்தார். ஏதோ யுகேந்திரன் எதிரில் அமர்ந்திருப்பவர் அவனின் மரியாதைக்குரிய மாமா என்பதால் தப்பித்தார்... இல்லையெனில் அந்த வார்த்தைக்கு நிச்சயம் அவன் துவாம்சம் செய்துவிட்டிருப்பான்.

“என் எதிரில் இன்னொருமுறை அப்படி சொல்ல வேண்டாம் மாமா” என்று கண்டிப்புடன் கூறியிருந்தான்... அவன் கண்களில் தெரிந்த தீவிரத்தை உணர்ந்த பாண்டியன் தன் கௌரவத்தை அப்போதைக்கு ஓரம் கட்ட முடிவெடுத்துக் கொண்டார்.

“சரிப்பா கோபப்படாதே... நம்ம ஸ்டேடஸ்ல எத்தனையோ பேர் நான் நீன்னு போட்டி போட்டுட்டு பொண்ணு கொடுக்க இருக்கும் போது நம்ம தகுதிக்கு கால்தூசி சம்மமில்லாத இடத்தில கல்யாணம் பண்ணனுமான்னு பார்த்தேன் யுகேந்திரா” என்று அப்போதைய அவனின் கண்டிப்பு பேச்சிற்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியபடி நறுக்கென்று கூறியிருந்தார்... அவர் கண்களில் தராதரதிற்கு கீழ் போகாதே என்ற கண்டிப்பு இருந்தது... யுகேந்திரன் அவரை பார்த்தால் தானே அதை எல்லாம் கவனத்தில் கொள்ள அவனோ தன் உயிரானவள் கிடைக்க வாய்ப்பு தேடுவதிலேயே குறியாய் இருந்தான்.

“எனக்கு என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது மாமா எனக்கு மதி வேணும் மதி தான் என் மனைவி அவளுக்கு என்ன நடந்திருந்தாலும் அதை பற்றிய கவலை எனக்கில்லை” என்று ஆணித்தரமாக கூற... பாண்டியன் யோசனையில் ஆழ்ந்தார். யுகேந்திரனையே பார்த்தவாறு அவன் அருகில் நின்று தலைகோதி கொடுத்து கொண்டிருந்த அன்னகிளியின் புறம் ஜாடை காண்பிக்க அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தார்.

“சரி இப்போ மதி எங்கிருக்கிறான்னு தெரியுமா?”

“ம்ம்ம்... அபராஜிதன் இடத்தில்” என்றதும் ஒருநிமிடம் அதிர்ந்த பார்வை பார்த்தார்.

“அந்த ரவுடியா கடத்தி இருக்கான்?” என்று சந்தேகமாக கேட்க...

“கடத்தல் இல்லை மாமா” என்றவன் அப்போது நடந்ததை கூறியிருந்தான். “அதுமட்டும் இல்லாம கல்யாணம் பண்ணினதுக்கு சாட்சியா ரெஜிஸ்டர் பண்ணிட்டான்” என்றவனின் அடுத்த தகவலில் அவருக்கு அடுத்த நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்தது... அரசியலில் சூதுவாது பலதையும் பார்த்தவர்... அவ்வபோது அவன் மூலமாக சில செயல்கள் முறியடிக்கவும் பட்டிருக்கிறது எனும்போது அவனை பற்றி தெரியாமல் போக வாய்ப்பில்லையே... அவன் இடத்தில் இருக்கும் பெண்ணையா தன் தங்கை மகன் அடைய பார்க்கிறான் என்பதே அவருக்கு தலைவேதனையாக இருந்தது... சற்றுநேரம் சிந்தித்தவர் யுகேந்திரனிடம் பேசலானார்...

“சரி யுகேந்திரா நீ சொல்ற மாதிரியே மதியை கூப்பிடுவோம் வைத்துக்குவோம் ஆனால் அவளுக்கு வர விருப்பமில்லைன்னா என்ன செய்ய முடியும்”

“நிச்சயம் மதி அந்த அபராஜிதன் கூட வாழ விருப்பபடமாட்டா... அப்படியே அவ உங்ககிட்டே மறுத்தாலும் என்கிட்டே மறுப்பு சொல்லமாட்டா” என்று உறுதியாக கூறியதில் அவனின் தீவிரம் புரிந்து கொண்டவர் அவனுக்கு உதவுவதை விட வேறுவழியில்லை என்றுணர்ந்து கொண்டார்.

“சரி யுகேந்திரா மாமாகிட்டே சொல்லிட்டேல அந்த அபராஜிதன் எல்லாம் ஒரு ஆளா இனி நான் பார்த்துக்கிறேன்... இப்போவாச்சும் வா சாப்பிடலாம்” என்றவரின் வார்த்தையை ஏற்றுக் கொண்டவனாக அவருடன் சென்றிருந்தான்.

************************

மதிராதவி சிலநிமிடங்கள் யோசித்தவளுக்கு பார்வை அறையின் மேற்புறத்தில் இருந்த காத்தாடி மேல் பதிந்தது... நொடியும் தாமதியாது தன்னிடம் இருந்த புடவையில் ஒன்றை உருவியவள் கட்டில் மேல் ஏறி நின்று தீர்க்கமாக யோசித்தபடி இரண்டு வினாடிகள் நின்றவள் பின்பு துரிதமாக செயல்பட ஆரம்பித்தாள்... புடவையின் ஒரு பக்க தலைப்பை சுருக்கியவள் காற்றாடியில் முடிச்சிட்டுவிட்டு தன் கழுத்திலும் மாட்டிக்கொண்டவள் தன் மரணத்தை தேடிக்கொள்ள முனைய வேண்டி கால்களை விந்தினாள்...!!!

தென்றல் வீசும்...


*************************************


வணக்கம் நட்பூக்களே...

“தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா” அத்தியாயம் - 5 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிரவும் தோழமைகளே.


நட்புடன்
காருராம்


 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2172821729



ராதவி தனக்கு நடந்த அவலத்தை நினைத்துநினைத்து மருகி விரக்தி அடைந்தவள் இறுதியில் மரணத்தை நாட எண்ணி தூக்கிட்டு கொள்ள திட்டமிட்டு புடவையின் சுருக்கை தன் கழுத்தை சுற்றியபடி கால்களை விந்திய சமயம்... “மதி...” என்ற காற்றில் தோய்ந்த வந்த குரலை கேட்டு கண்களில் வெளிச்சம் பரவ உடல் சிலிர்த்து நின்றாள்...!

ஆனால் மறுகணமே தான் கேட்டது பொய்யோ என்பது போல் குண்டூசி விழுந்தால் கேட்குமளவிற்கு நிசப்தம் நிலவியது... அதுவரை அவளுள் விரக்தியில் முடங்கியிருந்த செல்கள் ஒவ்வொன்றும் தூக்கத்தில் இருந்து எழுவது போன்று மெதுவே உயிர்ப்புற அவளின் விரக்தி நிலை முன்னிலும் சற்று குறைந்தது... இருந்தபோதும் அவள் இருந்த இடம் முழுமையாக வெளிக்கொணராமல் தற்கொலையின் நிலைபாட்டிலேயே நிற்க தன் கழுத்தில் இருந்த சுருக்கை அவிழ்க்காமல் அமைதியே உருவாக நின்றவள் சிலகணங்கள் கழித்து மறுமுறையும் கால்களை விந்த இப்போதும்... “மதி..!” என்ற அழைப்பு உரக்க அழைத்ததில் அவள் கழுத்தில் இருந்த சுருக்கை வேகமாக அவிழ்த்தவள் அறையில் சுற்றும்முற்றும் கண்களால் துழாவினாள்.

“அம்மா...” என்ற அவளின் உதடுகள் விரிந்து வார்த்தைகள் புத்துயிர் பெற்று வெளியே வர கட்டிலை விட்டு வேகமாக இறங்கி காற்றில் கைகளால் அளந்தபடி அறையை வலம் வந்தாள்.

“அம்மா நீங்க எங்க இருக்கீங்க ப்ளீஸ் சொல்லுங்கம்மா... என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்கம்மா ப்ளீஸ் ம்மா” என்று தன் போக்கில் புலம்பியபடி அறையில் இருந்த பொருட்களை கீழே தள்ளிக்கொண்டு பித்துப்பிடித்த நிலையில் உளறிக் கொண்டிருந்தாள். அப்போது கதவு படாரென்ற சத்தத்துடன் திறக்க அங்கே இறுகிய தோற்றத்துடன் அபராஜிதன் நின்றான்.

ராதவி அதுவரை இருந்த மனநிலை மாறி அவனை வெப்ப பார்வையால் உடுருவ மறுநிமிடமே அருகிலிருந்த பொருட்களால் அவனை சரமாரியாக தாக்க ஆரம்பித்தாள்... தலைவிரித்து கண்கள் சிவக்க உடல் நடுங்க புத்தி பேதலித்தது போல் நடந்து கொண்டிருந்தவளின் தோற்றத்தை கண்டு அதுவரை இல்லாத உணர்ச்சியலைகள் அவன் மனதில் பொங்கி எழுந்தது.

அவளின் அடிகளை பொருட்படுத்தாமல் மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து அவளை நெருங்க ஆரம்பித்தான்... அவன் அருகில் வருவதை உணர்ந்து மேலும் உணர்ச்சி வசப்பட்டவள்...

“டேய் கிட்டே வராதடா கிராதகா...” என்று வசைக்க...

“...............” அவளின் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் அவளை நெருங்கி கொண்டேயிருந்தான்... கைகளில் அகப்பட்டதை வீசி எறிந்து விட்டிருந்தவள் பொருட்கள் அனைத்தும் சிதறி போகவே கால்கள் நடுங்கியபடி நகர்ந்தாள்... “வேண்டாம் கிட்டே வராதே...” என்று உதடுகள் நடுங்கியபடி எச்சரித்தபடியே சென்றவள் அவனின் நெருக்கம் அதிகரிப்பதை உணர்ந்து அருகில் பழங்களுடன் ஒன்றாக வைக்கபட்டிருந்த கத்தியை கையிலெடுத்ததும் அவன் துணுக்குற்றான்...

“கத்தியை கீழே போடுடி...” என்று கடினமான குரலில் அதட்டினான். அவனின் அதட்டல் மேலும் அவளை வெறியேற்ற...

“கிட்டே வந்த உன்னை கொன்னுடுவேன்” என்ற மிரட்டலும் அவனை அசைக்காது போக, நொடியில் கத்தியை அவள் புறமாக திருப்பிக் கொண்டு... “கிட்டே வந்தே என்னை நானே குத்திக்குவேன் பின்னாடி போ” என்றதில் அவன் சற்றே ஆடித்தான் போனான்...

“என்ன பைத்தியகாரத்தனம் எதுவும் செய்யாத முதலில் கத்தியை கீழே போடு” என்று அழுத்தமாக கூறியவனை கண்டு பித்து பிடித்தது போல்... “ஹஹஹா” என்ற சாகசசிரிப்பை உதிர்த்தவள் விழிகள் தீவிரமடைந்தது...

“இதுதான் உனக்கு நான் கொடுக்கிற கடைசி வாய்ப்பு ஒன்னு நீ என்னை விடுதலை செய்... இல்லை; எனக்கு நானே விடுதலை கொடுத்துப்பேன்” என்று மிரட்டியதில் அவன் திகைத்து நின்றான்...! அவள் உள்ளம் உல்லாசத்தில் குதூகலித்தது... ‘மாட்டினியாடா மகனே’ என்று மனக்குரல் எழும்ப அவனையே உற்று பார்த்தபடி நின்றவளை கண்டு அவன் சற்றே மிரண்டு தான் போனான்...! ஆனால் இதெல்லாம் சிலகணங்கள் கூட நீடிக்காது அவனுள் இருந்த அழுத்தக்காரன் கொதித்து கொண்டு எழவே அவளை உக்கிரமாக மாறினான்... நொடியில் அவன் திகைப்பு மறைந்து உக்கிரத்தை பார்வையில் கண்டு கொண்டவள் முன்னிலும் அதிகமாக கவனமானாள்...

“ஒழுங்கா நான் சொன்ன மாதிரி செய்திரு இல்லை இப்போவே என்னை நான் அழிச்சுக்குவேன்” என்றவளை கண்டு சினத்தில் அவன் பற்கள் ஒன்றுடன்ஒன்று மோதி நரணரத்தது...

“..............” சிலகணங்கள் அங்கே நிசப்தம் நிலவ... அபராஜிதன் சரேலென்று பார்வையை அவள் பக்கவாட்டில் திருப்பியவன்... “ஏய் ஜாக்கிரதை நகரு!” என்று பதட்டத்துடன் கூறியதில் சடாரென்று அவளும் பார்வையை திருப்ப கண்சிமிட்டும் நொடியில் அவள் கைகளில் இருந்த கத்தியை முனையை பிடித்தவாறு வேகமாக இழுத்திருந்தான்... அவன் இழுத்த வேகத்தில் கையை பதம் பார்த்த கத்தி பின்னே சென்று விழுந்திருந்தது... அவளோ எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலைத்தடுமாறி கீழே விழ சென்றவளை ரத்தம் கசியும் கரங்களாலேயே வளைத்து பிடரி முடியை கொத்தாக பற்றி அவள் கன்னத்தில் பளீரென்று அறைந்திருந்தான்.

“என்கிட்டேயே ஆட்டம் காண்பிக்கிறயாடி...? கொன்னுருவேன்...!” என்று விரல் நீட்டி எச்சரித்தவனுக்கு சற்றுமுன்பு அவளும் அதை நாடிதான் அவனிடம் மிரட்டிக் கொண்டிருந்தாள் என்ற நினைவு அவன் மனதை உலுக்கவே செய்தது.

“இங்கே பாரு எப்போ உன்னை தொட்டு தாலிகட்டி என் மனைவியா ஆக்கிட்டனோ அப்போவே நீ என்னுடைய உடைமை ஆகிப்போயிட்ட இந்த இடத்தை விட்டு போகிறதென்ன சாவை கூட நான் தான் நிர்ணயம் பண்ணுவேன்” என்று அழுத்தமாக கூறியவனின் வார்த்தைகள் மனதில் ஆணியாய் இறங்க அவள் விழிகள் மெல்லமெல்ல சொருகி மயக்கமடைந்தாள்... மயங்கி விழுந்தவளை அவன் கைகளில் தாங்கியவன் மஞ்சத்தில் படுக்க வைத்துவிட்டு மருத்துவருக்கு அழைத்திருந்தான்.

******************

மருதுபாண்டியன் யுகேந்திரனை ஒருவாறு சமாளித்து அனுப்பி வைத்தவர் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது... மதிராதவி என்ற பெயரில் திகைத்து தான் போனார்... இது எப்படி??!! என்ற கேள்வி அவர் மூளையை குடைந்தது... தன் தங்கைக்கு பாரபட்சமின்றி பழகும் குணம் தான் என்றாலும் கூட தனக்கு கீழ் பணிபுரியும் ஒருவரின் மகளை தன் மகனுக்கு மனைவியாக தேர்ந்தெடுக்கும் வரை சென்றிருகிறாள் என்றால் யுகேந்திரனின் பிடிவாதம் தான் காரணமாக இருக்கும் என்றுணர்ந்தாலும் அவரால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை... இல்லை, இது நடக்கக்கூடாது என்று மனதிற்குள் உறுதியாக உருப்பேற்றுக் கொண்டவர் தங்கை உமாதேவிக்கு அலைபேசியில் அழைத்தார்.

“சொல்லுங்கண்ணா எப்படி இருக்கீங்க? எப்போ வெளிநாட்டில் இருந்து வந்தீங்க பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா?” அவரின் பேச்சிற்கே இடமளிக்காமல் அடுத்தடுத்து அவர் விசாரித்ததில் தங்கையின் சமாளிக்கும் சாதுர்யத்தை கண்டுகொண்ட பாண்டியன்...

“நல்லா சமாளிக்கிற உமா...” என்று குத்தலாக கூறியதில் குற்றவுணர்வில் பற்களை உதட்டை கடித்தபடி மௌனம் சாதித்தார்...

“நீ கேட்ட எல்லாத்துக்கும் நான் அப்புறமா பதில் சொல்றேன்... அதுக்கு முன்னே உன் மகன் என்னை பார்த்துட்டு போனா அது பத்தின விஷயம் கேட்கதான் கூப்பிட்டேன்” என்று முடிக்க சற்றுநேரம் ஏதும் பேச முடியாதவராக மௌனம் சாதித்தார்...

“............” சிலகணங்கள் நீடித்த அந்த மௌனத்தை அவரே உடைத்திருந்தார்...

“என்னை மன்னிச்சிருங்க அண்ணா... யுகேந்திரன் ஆசைபட்டுட்டான்... அதுவுமில்லாம நீங்களும் அந்த நேரத்தில் இல்லை அதுதான் அவசரமா எல்லாத்தையும் முடிக்க வேண்டியதா போச்சு” அவர் எதிர்பார்த்தது தான் என்றாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

“முடிக்க வேண்டியதா போச்சா அப்போ....???” என்றவரின் யோசனை வேறோதோ பெரியதாக விஷயம் நடந்திருப்பதை எண்ணி யோசிக்க... உமாவிற்கோ பெரும் சங்கடமாகிப் போனது...

“அண்ணா அதுவந்து...”

“வந்து...”

“...............” எதுவாகினும் நீயே சொல் என்பது போல் அவர் அமைதி காத்திட உமாவே தொடர்ந்தார்...


“நம்ம வீட்ல வேலை செய்ற துர்கா பொண்ணு மதிராதவி நல்ல பொண்ணு... யுகேந்திரன் கல்யாணம் பண்ணினா அவளை தான் பண்ணுவேன்னு பிடிவாதமா நின்னுட்டான்... அதுதான் அவசரகத்தில சிம்பிளா நிச்சயம் முடிக்க வேண்டியதா போச்சு” என்று தயங்கியபடி நிறுத்தியவர் மௌனம் சாத்திதார்...


“...............”


“உமா...” என்று அழைக்க தன்னுணர்வு பெற்றவர் நடந்த விஷயத்தையும் அதற்கான காரணத்தையும் விளக்கமாக கூறினார்.
“ஓஹ்! அப்போ என்னை கூட கேட்காம நிச்சயம் வரைக்கும் கொண்டு போயிருக்கீங்க...” என்று ஆட்சேபம் தெரிவிக்க உமா பதறி போனார்...


“அச்சோ அண்ணா! அப்படி எல்லாம் இல்லைண்ணா.... முதல்ல நம்ம ஸ்டேட்டஸ்க்கு சரி வராதுன்னு யோசிச்சு வேண்டாம்னு தான் இருந்தேன் ஆனா யுகேன் விடலை அவனை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே அண்ணா... அதுவுமில்லாம நீங்களும் அந்த நேரம் ஊரில் இல்லை” என்று தட்டுத்தடுமாறி விளக்கம் கூறியதில் அவரின் தயக்கம் புரிந்தாலும் அவர் செய்த காரியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது போகவே...


“அப்போ இப்போவும் நான் ஊரில் இருந்து வரலைன்னா எனக்கு விஷயமே வந்திருக்காதே... இப்போ வந்ததும் என் உதவி தேவைப்பட்டதும் உன் மகன் வந்துட்டான் அப்படித்தானே” என்று அவர் செய்த தவறை வார்த்தை ஊசியில் கீறி காண்பிக்க தலைகுனிந்து நின்றார்.


“மன்னிச்சிருங்க அண்ணா... உங்க கோபம் நியாயம் தான்... யுகேன் ஆசைக்காக இப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு” என்று மனதார மன்னிப்பு வேண்ட முழுமனதாக ஏற்றுக் கொள்ளாவிடினும் ஏதோ போனால் போகிறது என்பது போல் சற்று மலை இறங்கினார்... மேலும் சில தகவல்களை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவர் அழைப்பை துண்டித்தவரின் முகம் பலத்த சிந்தனைக்கு தாவியது... அடுத்து அவர் நேரிடையாக சந்தித்தது சந்திரகாந்தனை தான்...

“என்ன சந்திரா நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா” என்று அழுத்தமாக வினவியவரைக் கண்டு பதில் கூற முடியாமல் கையை பிசைய ஆரம்பித்தார்...

“அமைதியா இருந்தா எல்லாமே சரின்னு ஆகிறாது... வீட்ல பொம்பளைங்க முடிவெடுத்தா எல்லாத்துக்கும் சரின்னு தலையாட்டிர்றதா? அப்புறம் ஆம்பிளைங்கன்னு நாம எதுக்கு இருக்கிறது” என்று சுள்ளென்று வினவியதில் காந்தனின் நாடிநரம்புகள் கோபத்தில் புடைத்து தெறித்தது...

“ம்ச்... நான் என்ன செய்கிறது மச்சான்? இதை தடுக்கலாம்னு பார்க்கும்போது தான் எல்லாம் கை மீறி போயிருச்சு... ஆமாம், இதை பத்தி அதிகம் கவலைப்பட வேண்டியது நான் ஆனா நீங்க கவலைப்படுறதை பார்த்தா இதில் ஏதோ உள்குத்து இருக்கும் போலவே” என்று புருவம் உயர்த்தி ஆராய்ச்சியுடன் வினவியதில் அவர் நொடியில் சுதாரித்து கொண்டவர் பார்வையில் தீர்க்கம் இருந்தது...

‘ம்ம் என்கிட்டேயே எதிர் கேள்வியா?’ என்று மானசீகமாக எண்ணியவர் பார்வையில் ஏளனத்தை தெறிக்க விட்டவர்...

“சரிசரி அதை விடு இனி என்ன செய்யலாம்? எப்படி அந்த மதிராதவியை அவன் புருஷன்கிட்ட இருந்து பிரிச்சு கொண்டு வந்து உன் மகனோட சேர்த்துடலாமா?” என்றதில் அவரை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தார்...

“அவ என்ன என் மகனுக்கு மாமன் மகளா மறுவாழ்வு கொடுக்க” என்றவரின் இதழ்கள் இகழ்ச்சியில் வளைய மருதுபாண்டியனை பார்த்த பார்வையில் ஏளனம் வெட்டி தெறித்தது...

அவரின் ஏளனத்தில் அவரின் மனம் வெகுண்டு எழ நினைத்தாலும் சிலகாரணங்கள் அவரின் கரங்களை கட்டிப்போட அதை அடக்கிக் கொண்டு சாதரணமாக வினவ முயற்சித்து அதில் வெற்றியும் கண்டார்... “அப்புறம் என்னதான் செய்யுறது?”

“அந்த மதிராதவி சீக்கிரமே அபராஜிதன் குழந்தைக்கு தாயாகனும் அப்போ தான் என்மகன் தெளிந்து அந்த வேலைக்காரி மகளையும் விட்டொழியுவான்” என்று கூறிவிட்டு விருட்டென்று எழுந்து சென்றிருந்தார்.

********************

மதிராதவியின் கருமணிகள் உருளும் அசைவை உணர்ந்த மருத்துவர் அவள் மயக்கத்திலிருந்து வெளிவர துடித்துக் கொண்டிருப்பதை உணர்த்தியது. அவள் கனத்த இமைகள் பிரிக்க போராடுவதை உணர்ந்த மருத்துவர்...

“மிசஸ்.மதிராதவி ஸ்லோலி ஓபன் யுவர் ஐஸ்” என்று கட்டளை கொடுக்க மிகவும் சிரமப்பட்டே என்றாலும் மெல்ல தன் விழிமலர்களை மலர்த்தினாள்... அவளின் நேரெதிரில் வெள்ளை ஆடை அணிந்த செவிலியர் மங்கிய பார்வை ஒளியில் தெரிய கண்களை அழுந்த மூடி திறந்தாள்.

“மிசஸ்.மதிராதவி இப்போ எப்படி இருக்கீங்க?” என்று மருத்துவர் விசாரித்ததில் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தவள் என்ன நடந்தது என்பதை உணரவே சில நிமிடங்கள் பிடித்தது... நினைவில் அவளுக்கு முதலில் தோன்றிய வார்த்தை “மதி...” என்றழைத்த அவள் அன்னையின் குரல் தான் அவள் செவியின் ஆழத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது... அதை மனதில் கொண்டு நிறுத்தியவளாக... “அம்மா..! அம்மா..!” என்றழைத்தபடி கேவலுடன் பிதற்ற ஆரம்பித்தவளை கண்டு அனைவரும் குழம்பி நின்றனர்... அப்போது “மதி...!” என்ற அழைப்பு கேட்க விழிகளில் மின்னல் வெட்ட சடாரென்று நிமிர்ந்து நோக்கினாள்...

அங்கே கையில் பேசியுடன் நின்றிருந்தான் அபராஜிதன்... “இந்தா பேசு..” என்று அலைபேசியை அவளிடம் நீட்ட கைகள் நடுங்க பெற்றுக்கொள்ள முயற்சித்தவளின் உடல்நிலையை உணர்ந்தவனாக ஒலிப்பானை உயிர்பித்தான்...

“மதி எப்படி இருக்கமா? நான் இங்கே நல்லா இருக்கேன்... என்னை பற்றி கவலைப்படாதேம்மா...” மேலும் அவர் கூறும்முன் அவள் குரல் இடையிட்டது...

“அம்மா நிஜமா நான் நல்லா இல்லைம்மா தயவுசெய்து என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிருங்க... இல்லை; நீங்க இருக்கிற இடத்தை மட்டுமாவது சொல்லுங்க நான் அங்கே வரேன்” என்று கண்ணீருடன் மன்றாடியவளை கண்டு எதிர்முனையில் என்ன கூற இருந்தாரோ அதற்குள் பேசியை வெடுக்கென்று பிடுங்கியவன் அழைப்பை துண்டித்தும் இருந்தான்.

அவனின் செயலில் முதலில் திகைத்து பின்பு கோபம் வரப் பெற்றவள்... “ஏன்... ஏன்... எங்க அம்மா கூட பேசக்கூட விட மாட்டேங்குற? அன்னைக்கும் என் அம்மா கூப்பிட்டாங்களே அதுவும் உன்வேலை தானா?” என்று அவனின் சூழ்ச்சியை அறிந்து கொண்டது போல் கூறியிருக்க அவன் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தி...

“பரவாயில்லையே என் பொண்டாட்டியும் புத்திசாலி தான் போல... ம்ம்ம்” என்று மெச்சுதலாக கூறியவன் முகம் கணத்தில் தீவிரமாக மாற முன்பு நடந்ததை நினைவுபடுத்தலானான்...

அபராஜிதன் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியவன் தன் அறைக்குள் நுழையப் போகும் வேளையில் தான் ராதவி தன் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டிருந்தாள் அதை கண்டவன் மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்து நின்றான்!

அவளிடமிருந்து அவன் இப்படி ஒரு செயலை எதிர்பாராததே அவனின் அதிர்ச்சிக்கு காரணமாகிப் போயின... சிலகணங்கள் உறைந்து நின்றவன் நொடியில் சுதாரித்து கொண்டு அவளின் செயலை நிறுத்த வேண்டி துரிதமாக யோசித்தவன் துர்காவிற்கு அழைத்து மதியை திசை திருப்பினான்.

மதிராதவி அறியாமல் கதவை ஒருங்களித்தவாறு மூடிவிட்டு பின்புறம் நின்று கொண்டவன் அலைபேசியின் ஒலிப்பானை மட்டும் ஒழிக்க செய்துவிட்டு காத்திருந்தான்... அவன் நினைத்தது போலவே ராதவி கழுத்தில் இருந்த புடவை சுருக்கை அவிழ்த்துவிட்டு அன்னையின் குரல் வந்த திசை நோக்கி தேடுதலை தொடர்ந்திருந்தாள்... அதன்பிறகு அவர்களின் போராட்டத்திற்கு பிறகு மயங்கியவளை மருத்துவரை கொண்டு மட்டும் பார்க்க நினைத்தவன் ஏதோ தோன்றியவனாக வெற்றிக்கும் அழைத்து விஷயத்தை கூறி வரவழைத்திருந்தான்... அவனின் ஆலோசனையில் தான் மதிராதவியை மருத்துவமனை வாசத்தில் இருக்க வைத்தது.

அவன் நினைவுப்படுத்தியதை கூறியும் முடித்துவிட்டு அவளையே துளைக்கும் பார்வை பார்த்தபடி நின்றிருந்தவனை எரிக்கும் பார்வையுடன் நோக்கியவள்...

“இந்த தடவை என்னை காப்பாற்றிவிட்ட சரி... ஆனா இன்னொரு முறை இதே மாதிரி முயற்சிக்கமாட்டேன்னா என்ன...?” வார்த்தையை அழுத்தி கூறியதில் அவன் ஆவேசமானான்... தான் இருக்கும் இடம் மருத்துவமனை என்றும் பாராது ஆத்திரத்தில் தன் வலது கையை அறைவதற்காக ஓங்கியிருக்க...

“வர்மன்...!” என்ற அதட்டலான குரலில் அவன் கரம் அந்தரத்தில் நின்றது. அவனின் செயலில் மிரண்டு பார்த்தவளுக்கு யாருடைய குரல் இது இவனை அடக்கும் வலிமை கூட ஒருவருக்கு இருக்கிறதா என்று வியப்புடன் முகத்தை திருப்பினாள். காக்கி உடையில் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகவான தோற்றத்தில் நின்றிருந்தவன் வெற்றிமாறன். அபராஜிதனை கண்டிக்கும் பார்வை பார்த்தவன் அவனருகில் நெருங்கி...

“எங்க வச்சு என்ன காரியம் பண்ணுற வர்மன்...? உனக்கு ஆத்திரம் வந்தா கண்மண் தெரியாதா?” என்று கோபத்தில் கடிய அதை விழிகளில் தோன்றிய பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதவி... அவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கரத்தை கீழிறக்கியவனின் சினத்தை கட்டுபடுத்திக் கொண்டிருக்க சிரமப்படுவதை உணர்ந்து மனம் குத்தாட்டம் போட்டது... அவள் மனதின் உணர்ச்சிகளை விழிகளும் அட்சரம் பிசகாமல் பிரதிபலித்து விட அபராஜிதன் அவளை முறைக்க ஆரம்பித்தான்... அதை கவனித்த வெற்றிமாறன்...

“டேய் நீ முதலில் இங்கிருந்து வெளியே போ” என்றதில் அவன் கோபத்துடன் சிலிர்த்துக் கொண்டு வெளியேறியிருந்தான்.

வெற்றிமாறன் மருத்துவருக்கும், செவிலியருக்கும் கண்ணசைக்க அவர்கள் வெளியேறினார்கள் மருத்துவர் அமர்ந்திருந்த இடத்தில் வெற்றிமாறன் அமர்ந்து கொண்டவன் அவளை பரிவுடன் நோக்கி புன்னகைத்தான்... அந்த ஒற்றை புன்னகை அவளின் மனதில் கலக்கத்திலிருந்து விடுத்து நிம்மதியை பிறப்பித்திருந்தது.

“நான் வெற்றிமாறன்...” என்று தனக்குதானே அறிமுகம் செய்துவிட்டு புன்னகைக்க புரியாத பார்வையை அவள் மேல் வீசினாள்...

அதை புரிந்துக் கொண்ட வெற்றி இயல்பாக புன்னகைத்தபடி... “நான் யாரா இருக்கும்ன்னு யோசிக்கறியா... நான் அபராஜிதன் நண்பன் வெற்றிமாறன் நீ எனக்கு தங்கச்சி முறை வேணும் உனக்கு என்ன தேவைனாலும் என்கிட்டே கேட்கலாம்... என்னம்மா சரியா” என்றவனை கண்டு மனதில் சந்தோசம் பரவ தானும் புன்னகைத்தபடி பார்த்திருந்தாள்...

“அப்போ.. அப்போ.. என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயி எங்க அம்மாகிட்டே விட்டிருங்க அண்ணா ப்ளீஸ்” என்றவளை தொடர்ந்து...

“ஆமாம்டா சீக்கிரம் கொண்டு போய் விடு அவங்க அம்மா வுட்வார்ட்ஸ் கரைப் வாட்டர் கொடுத்து குழந்தையை தூங்க வைக்கட்டும்” என்று நக்கலடித்தபடி உள்ளே நுழைந்துவிட்டிருந்தான் அபராஜிதன்... அவனின் நையாண்டியில் அவளுக்கு வெட்கமும், கோபமும் என மாறிமாறி தோன்றி முகம் சிவக்க வைத்தது.

“ம்ச்... நீ ஏன்டா உள்ளே வந்த நான்தான் சொன்னேன்ல என் தங்கச்சிகிட்டே பேசி முடிக்கிற வரைக்கும் நீ உள்ளே வரக் கூடாதுன்னு”

“ஆமாம்டா இப்போதான் ஸ்கூல்க்கு போற எல்கேஜி குழந்தை மாதிரி நான் அம்மாகிட்டே போகணும்னு அடம் பிடிப்பா நான் அதை கேட்டுட்டு மகராசியா போம்மான்னு வழி அனுப்பி வைக்கணும்” என்றவன் அவளை கனலாக முறைத்தான். வெற்றி அதை எதிர்த்து வாதாட முடியாமல் மௌனமாகிப் போனான்.

“.............” சிலகணங்கள் நீடித்த அமைதியை முறியடித்தது வெற்றியின் குரல்...

“இங்கே பாரு மதிம்மா வர்மன் பத்தி உன் மனசுல என்ன மாதிரி அபிப்ராயம் வேணாலும் இருக்கட்டும்... அதுக்காக நீ தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு துணியலாமா? அப்போ உனக்காக காத்துகிட்டு இருக்கிற உன் அம்மாவுக்கு அது சந்தோசத்தை கொடுக்குமா?” என்று வினவியதும் தான் அவளுக்கு தன் அன்னையை பற்றி அறியாமல் இப்படி ஒரு அவசர கதியில் முடிவெடுத்தது தவறோ என்று தோன்றியது.

“எனக்கு நீ தங்கை முறைன்னு சொன்னேன் அது வெறும் வாய் வார்த்தையால் அல்ல மனசிலிருந்து தான் சொன்னேன் உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்ய தயாரா இருக்கேன்... ஆனா, உங்க ரெண்டு பேருடைய பிரிவை மட்டும் அனுமதிக்கமாட்டேன்” என்று தீர்மானமாக கூறியவனின் வார்த்தையை கேட்டவள்...

“அப்போ நான் எடுத்தது முட்டாள் தனமான முடிவா இருந்தாலும் பரவாயில்லை. நான் இவன் கூட வாழ மட்டும் மாட்டேன்” என்று அவளும் கூறியதில் அபாரஜிதனின் உடல் சினத்தில் முறுக்கேறி அவன் நரம்புகள் புடைத்து தெறித்தது... சூழ்நிலை மோசமாகி சென்றுவிடும் என்பதை உணர்ந்தவன் அவன் அபராஜிதன் அருகில் வந்தமர்ந்து கரத்தை தட்டி கொடுத்தான்.

“மதிராதவி நீ என்ன படிச்சிருக்க?”

“இன்ஜினியரிங்”

“பெரிய படிப்பு தான்... ஆனா அந்த படிப்புல நீ தோற்று போயிருந்தா இப்படிதான் தற்கொலை முடிவுக்கு போயிருப்பியா?” என்றவனை கண்டு ஆட்சேபமாக பார்வை எழுப்பினாள்...

“நான் எதுக்கு அதுக்காக தற்கொலை பண்ணிக்கனும் நான் அவ்ளோ ஒன்னும் மக்கு இல்லை... அதுவுமில்லாம நான் அந்த மாதிரி தோற்றும் போகமாட்டேன் அதற்கு வாய்ப்பும் இல்லை” என்று திடமாக கூறியதில் அவளை வளைத்து பிடிக்க நூல்முனை பிடித்துக் கொண்டான் வெற்றிமாறன்...

“அப்போ வாழ்க்கையில் மட்டும் இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா? நீ படிச்ச படிப்பு என்ன, உன்னுடைய திறமை என்ன வாழ்க்கையை போராடி ஒருகை பார்க்க வேணாமா? இதில் மட்டும் எங்கிருந்து வந்தது தற்கொலை” என்றதில் அவளுக்கு அப்போதுதான் அவளின் தன்னிலையே உரைக்க ஆரம்பித்தது... அவள் உதடுகள் இயலாமையில் துடிக்க கை விரல்கள் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது... வெற்றிமாறன் கண்ணசைக்க அபராஜிதன் மனநல மருத்துவரை அழைத்து மதிராதவியை ஒப்படைத்துவிட்டு இருவரும் வெளியேறினர்.

வெற்றிமாறன் அறிந்திருந்தான் மதிராதவியின் மனநிலையை ஆகவே தான் அவளை மருத்துவமனையில் வைத்து மயக்கத்திற்கு சிகிச்சை அளித்துவிட்டு மனநல மருத்துவரை அணுகி அவளுக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தான்.

“ஏன்டா இதெல்லாம் தேவைதானா?” என்று அபராஜிதன் வெற்றியை பார்த்து கேட்க அவனையே ஆழ்ந்து பார்த்தான்...

“தேவையில்லாம நான் சொல்லமாட்டேன்னு நானா சொல்லிதான் உனக்கு தெரியனுமா வர்மா”

“டேய் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற உன்மேல சந்தேகப்படுறேன்னு நான் சொன்னேனாடா?” என்று பல்லை கடித்தபடி கேட்டவன் அவன் முகத்தில் இருந்த குறிப்பில் என்ன கண்டானோ சட்டென்று தன்னை அடக்கிக் கொண்டான்...

“இங்கே பாரு வர்மன்... நீ மதிராதவியை கல்யாணம் பண்ணினது ரொம்ப சந்தோசம் எங்க நீ இப்படியே வாழ்க்கை பூரா தனியா நின்றுவிடுவியோன்னு பலநாள் கவலைப்பட்டிருக்கிறேன்... ஆனா இப்போ அந்த கவலை போனாலும் புதுசா ஒரு கவலை தொற்றிக்கிச்சு... அது என்னன்னு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லைன்னு தான் நினைக்கிறேன்” என்றவனை சடாரென்று பார்வையை உயர்த்தி பார்த்தான் அதில் தெரிந்த தீட்சண்யம் அவனை சுட்டது... ஆனால் அவன் அதை எல்லாம் பொருட்படுத்தும் நிலையில் தான் இல்லை...

“போதும்டா இது பொது இடம் உன் பார்வையை அடக்கி வை” என்று கட்டளையிட்டவன் மேலும் அவனே தொடரலானான்...

“மதிராதவி அவ உன்கிட்டே இருந்து விடுதலை வாங்க தற்கொலை ஒண்ணுதான் முடிவுன்னு தேர்ந்தெடுத்திருக்கானா அவ எந்தளவுக்கு மனஅழுத்தத்துக்கு ஆளாகி இருப்பான்னு யோசி... இப்போவே பார்த்த தானே அவளுடைய பேச்சில் தெரிந்த வித்தியாசத்தை” என்றவனுக்கு பதில் கூற முடியமல் அமைதி காத்தான்...

“......................”

“இப்போ முதலில் மதியை அவளுடைய மனஅழுத்ததில் இருந்து வெளிக்கொண்டு வரணும் அதுக்காக தான் கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு பண்ண சொன்னேன் அவ நல்லா தெளிவா இருந்தா தான் இன்னொரு முறை இப்படி ஒரு முடிவெடுக்க முயற்சி செய்யமாட்டா”

“ஏன் அதையே நான் செய்யமாட்டேனா?” என்று வில்லங்கமாக கேட்டவனை கண்டு தலைவேதனையாகிப் போனது...

“போதும் நிறுத்து... ஏன் இவ்ளோ பேசுறவன் சாகட்டும்ன்னு விட்டு தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே” என்றதும் அவனை பார்வையால் சுட்டெரித்தான் அவன் கண்கள் ரத்தமென சிவந்தது சீற்றத்தில்...

“அவ்ளோ சுலபமா சாகவிட நான் என்ன கையாலாகதவனா? ‘அபராஜிதவர்மன்...!’ என்னை மீறி அவ சாவைக் கூட தேடிக்கக்கூடாது சாவையும் கிட்டே நெருங்க விடமாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறியதில் அவனுக்கு சலிப்பு உண்டானது...

“டேய் வர்மன் எனக்காக உன் மனைவியா வந்திருக்கிறவ கிட்டே மட்டும் கொஞ்சம் மென்மையா நடந்துக்கக்கூடாதா எனக்கே உன்னை பார்த்தா பயமா இருக்கு” என்றவனின் வார்த்தையில் அவன் கண்களில் நொடி நேரத்திற்கும் குறைவாக என்றாலும் வலியின் மின்னல் கீற்று வந்து போனது...

“நான் நானாதான் இருப்பேன் என்னை அப்படியே ஏற்றுக்கிட்டுதான் ஆகணும்... அதில் என் மனைவியே ஆனாலும் அவளுக்கு தேர்ந்தெடுக்கிற உரிமை இல்லை... என்னைக்கும் நான் அதை கொடுக்கவும்மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறியதில் அவனுக்கே அதற்குமேல் பேச இயலாது வாயடைத்து போனது.

மருத்துவர் மதிராதவிக்கு தேவையான ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கியதில் அவளின் மனஅழுத்தத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் தெளிவடைந்துவிட்டிருந்தாள்.

“இப்போ எப்படி பீல் பண்றீங்க மிஸ்.மதிராதவி...”

“அம் ஒகே டாக்டர்” என்று புன்னகையுடன் கூறியதில் அவளிடமிருந்து விடைபெற்று வெளியேறியிருந்தார்... மருத்துவர் செல்வதையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் புன்னகை முகம் மெல்லமெல்ல அதிதீவிரமாக மாறியது ‘அபராஜிதன் இனி உன்கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறேன்னு பாரு’ என்றவளுக்கு சற்றுமுன்பு அபராஜிதன் வெற்றிமாறனிடம் கூறி கொண்டிருந்ததை அறிந்திருந்தாள் இந்த யோசனைக்கே சென்றிருக்கமாட்டாளே அந்தோ பரிதாபம் அடுத்தகட்ட சிக்கலில் மாட்டிக்கொள்ள திட்டம் உருவரைத்து கொண்டிருந்தாள் பேதை??!!

தென்றல் வீசும்...

****************************************


வணக்கம் நட்பூக்களே...

“தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா” அத்தியாயம் - 6 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிரவும் தோழமைகளே.


நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...

அனைவருக்கும் தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... மன்னிக்கவும் சூழ்நிலை காரணமாக "தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா" கதையை தொடர்ந்து எழுத முடியவில்லை... சற்று மாதம் கழித்து நிச்சயம் பதிவிட முயற்சிக்கிறேன் கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.

"சரணடைந்தேன் சர்வமும் நீயென" அத்தியாயம் -1 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


இக்கதையின் பதிவுகள் தவறாமல் வெள்ளி மற்றும் புதன் கிழமைகளில் பதிவிடப்படும்.

நட்புடன்,
காருராம்.
 
Status
Not open for further replies.
Top