All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாருக்கும் வணக்கம்,

மி கிருத்திகா, நியூ ரைட்டர் டு SMS Famiy, "போற போக்கில் ஒரு காதல்" என்னோட இரண்டாவது நாவல்.


போற போக்குல இங்கிட்டு நடந்த நிஜம் ஒரு கா டம்ப்ளர் இமஜினேசன் ஒரு முக்கா டம்ப்ளர் போட்டு எல்லாம் கலந்த புல் டம்ப்ளர் தான் இந்த போற போக்கில் ஒரு காதல்...

ஸ்கெட்ச் 2 தான் எழுதனும் நினைச்சுfy, அத விட நம்மல ஹெட் காய வச்ச விசயங்கள் இருக்கே, அதன் பதிப்பாக போற போக்கில் எழுதுவோம்னு எழுதுவது தான் இந்த ஸ்டோரி,.... கதை சாதாரணமான காதல் கதை தான்...

எதார்த்தமான காதல் கதையை சுவாரஸ்யமாக தருவேன் என நம்புகிறேன்..

ஐ நீட் கைன்டா சப்போர்ட் அண்ட் wishes from யூ all friends.. Thanking யூ all...:love::love:

14572
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் எல்லார்க்கும் வணக்கம் , போற போக்கில் ஒரு காதல் கதையோட ஒரு குட்டி டீசர் ,


"நான் எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரிமா ஜெய்........ ப்பபா உன் லவ்வாச்சும் சக்சஸ் ஆச்சே " என தாட்சாயினி கூறுவது சாதாரணமாக தெரிந்தாலும் அதன் பின்னே உள்ள தன் தோழியின் வலி ஜெய்மிக்கு தெரியாத என்ன

சில நொடி அமைதிக்கு பின் "தாக்ஷி .... நீ இன்னும் எதையும் மறக்கலயா " என ஆழ்ந்து வினவியது ஜெய்மியின் குரல்.

அந்த பக்கம் பதில் வராத தாட்சாயினின் மௌனத்திலே அவள் எதையும் மறக்காமல் இன்னும் தன்னுள் குழம்பி கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட ஜெய்மி தனது இந்த பெங்களூர் விஜயத்தில் நிச்சயம் தன் தோழியிடம் மாற்றம் ஏற்படுத்திவிட்டுதான் திரும்ப வேண்டும் என தன்னுள் உறுதி கொண்டாள். தன்னை விட்டு வந்த இந்த மாதங்களில் தன் தோழி மகிழ்ச்சியாக இருப்பாள் என நம்பி கொண்டு இருந்தவளுக்கு அவள் இன்னும் சிறிது கூட மாறாமல் இருப்பதை பார்த்து கோபம்கொண்டு

"அத இன்னும் லவ்னு நினைச்சுகிட்டு தத்து பித்துன்னு உளறாம போய் வேலைய பாருடி, நாளைக்கு வந்து வச்சுகிறேன் " என முடித்தாள்.

---------------------------------------------------------

வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் வீட்டில் இருந்து தள்ளி நின்று கொண்டிருந்த இளைஞர்கள் பட்டாளம் மீதே கன்னம் வைத்து கொண்டிருந்தாள் அவளின் தோழி, அதாவது அங்கு இருந்த பச்சை சட்டைக்காரனின் மீது, அவளின் திடீர் பச்சை டிரஸ் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் அங்கு இருந்தே வந்தது.

ஒட்டு கேக்குறதே தப்பு.. இதுல இந்த டாக்கி ஒட்டு கேட்டுட்டு வந்து லவ் பண்ணறேனு அட்டகாசம் பண்ணிட்டு இருக்கு" என ஜெய்மியை புலம்ப வைத்து கொண்டிருந்த தாட்சாயினியோ அங்கு வெகு தீவிரமாக காதல் செய்வோம் என்ற பெயரில் சைட் அடித்து கொண்டிருந்தாள் அவளின் மாமன் மகன் இளமதியனை..

-------------------------------------------------------------------------------

"நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க ஜெய் என்னால மதி மாமாவா கல்யாணம் செய்துக்க முடியாது"

"நீ தான் புரியாம பேசிட்டு இருக்க தாக்ஷி, நடுல வந்த பிரச்சனை நடுலயே போயிடுச்சு"

"இங்க நடுல வந்தது நான்தான் ஜெய் அத மறந்துட்டு பேசாத, முன்னாடி எனக்கு விருப்பம் இருந்துச்சுதான் ஆனா இப்ப கொஞ்ச கொஞ்சமா எல்லாமே குறைஞ்சுடுச்சு, நீ சொல்ற மாதிரி யாரோ ஒரு பொண்ணுக்கு ஓகேவா இருக்கலாம், ஆனா என்னால மதி மாமாவா கல்யாணம் பண்ணிக்க முடியவே முடியாது".

------------------------------------------------------------------------------
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதை அத்தியாயங்கள் 1 டு 3 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

அத்தியாயம் 1

நமக்கே நமக்கான எந்த வேலைகளும் இல்லாத ரம்மியமான மாலைநேரம்.. ஏழாவது மாடி பால்கனி.. சுற்றிலும் குட்டி குட்டி அழகான செடிகள்.. சில்லுனு குளிர் காத்து.. மெல்லிசையாய் மனதிற்கு இனிய பாட்டு.. கையில் சூடான காஃபி.. ஒய்யாரமான ஏழாவது மாடிபால்கனியில் நின்று ஊரையே பார்த்து லயித்து காஃபியை சிப் பை சிப்பா ரசித்து குடிக்கும் ஒரு அழகான தருணம் !!
எ ஹாட் காபி ஆன் எ சில் ஈவினிங் மேக் எ ஸ்பெஷல் மொமெண்ட் இல்லையா…..!!!!!!!


ஆனால் இந்த இனிமையை ரசித்து அனுபவிக்கிறாளா இல்லையா வென்றே
தனக்கு தெரியாத தெரிந்து கொள்ளவும் முற்படாமல் ஒரு மோன நிலையில் அருந்திக்கொண்டிருந்தாள் பெண்ணவள், அவள் தாட்சாயினி.

காபி கப்பை கீழே வைப்பதற்கும் அலைப்பேசி அழைப்பதற்கும் சரியாக இருந்தது... யாரென்று அழைப்பை பார்த்தவள், மகிழ்ச்சி கொண்டு பேச போகிறாளா இல்லை மகிழ்ச்சியற்றா என்பது அவளுக்கே வெளிச்சம், இல்லை அவளுக்கே புரியவில்லை புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை..
அழைப்பது என்னவோ அவளின் ஆருயிர் சித்தி வேணுவிசாலாட்சி தான்.

"சொல்லு வேணும்மா"

"தாக்ஷி எப்படிடா இருக்க "

"ம்ம், நேத்து மாதிரியே இன்னைக்கும் நல்லா இருக்கேன் வேணும்மா... " தினமும் மகவுடன் பேசினாலும் அவரின் வழமை மாறாது. எப்போதும் போல் வழக்கமான சம்பாசனைகளை தொடரவும் மறக்கவில்லை அவர்.

அங்க வெயில் இருக்கா, குளிருதா, இங்க மழை எவ்வளவு சென்டிமீட்டர் பெய்ந்தது என தொடர்ந்தவருக்கு
இடக்கு மடக்கா பதில் அளித்துவிட்டு அலைபேசியை அணைத்து உள்ளே சென்றாள்.
மொபைலை சோபாவில் தூக்கி போட்டவள் அதிலே அவளும் அமர்ந்து எதிரே சுவரில் பெரிதாய் அலங்காரமாய் இருந்த தனது திருமண புகைப்படத்தை வெறித்தாள். அதில் அவளின் மணாளனின் கண்களில் இருந்த சிரிப்பு அவள் கண்களை எட்டவில்லை, நிலை என்னவோ அதே மோன நிலை தான்.
தனது திருமண புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தவளின் மனநிலையை அவள் புரிந்து கொள்ள விரும்பவில்லை.


***********

அதேயல்ல.. அடுத்த நாள்.. ரம்மியமான மாலைநேரம்..
அதே பால்கனி ஏழாவது மாடி பால்கனி.. சுற்றிலும் குட்டி குட்டி அழகான செடிகள்.. சில்லுனு குளிர் காத்து.. மெல்லிசையாய் மனதிற்கு இனிய பாட்டு.. கையில் சூடான காஃபி.. ஆனால் மோன நிலையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை..
இம்முறையும் காஃ பி கப்பை கீழே வைக்கவும் அலைப்பேசி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது..

ஒரு வித்தியாசம் இன்று அழைத்து அவளின் சித்தியல்ல தாட்சாயினியின் உயிர் தோழி ஜெய்மி, ஜெய்மி ப்ரிஸில்லா...

தன் தோழியின் அழைப்பை பார்த்தவள் தன் மோன நிலையை விட்டு வெளியே வந்து, ஹாப்பினஸ் டெசிபல் அதிகரித்தே அழைப்பை எடுத்தாள்.

"ஜெய், எப்படி இருக்க, காட்….. எத்தனை நாள் ஆச்சு ஜெய் உன்னை பாத்து.... காலும் பண்றதில்ல, அவ்வளவு பிஸியா எரும " என குதிக்காத குறையா அளவளாவினாள்.

"பொறு பொறு, ஓவர் எஃக்ஸைட் ஆகாத டியர்.. மீதி எல்லாத்தையும் நாளைக்கு வச்சுக்கலாம்"

"நாளைக்கா......" குழம்பினாள் தாட்சாயினி.

" ம்ம் நாளைக்கே தான், நாளைக்கு இந்நேரம் டீ குடிக்க உன் பக்கத்துல நான் இருப்பேன் " என ஜெய்மி கூறவும் இம்முறை தாட்சாயினி நிஜமாகவே துள்ளி குதித்தாள்.

"ஹே ஜெய் நிஜமாவா ??"" அவளுக்கோ அவ்வளவு ஆனந்தம்.

"நிஜமே நிஜம் தான் தாக்ஷி, இந்த வீக் எண்ட் உன்கூடத்தான் "

"மேக் இட் அஸ் ஒன் வீக் ஜெய், லீவ் போட்டுட்டு வா. நாம நேர்ல பாத்துக்காத இந்த இரண்டு மாசம் இருக்கு நாம பேசுறதுக்கு"

"அதான் நெஸ்ட் நீ என்னோட ஒன் வீக் இருக்கபோறியே " என தன் தோழியை மேலும் குழப்பினாள் ஜெய்மி பிரிஸில்லா.

தாட்சாயினியோ "ஹே என்ன உளறுற ஜெய், எனக்காக இப்போ லீவ் போட்டுட்டு வரமாட்டியா நீ" என்று ஆதங்கபட்டாள்.

"வெயிட் வெயிட் தாக்ஷி.... முழுசா கேளு குரங்கே, இப்பவே லீவ் எடுத்துட்டா அப்புறம் என் கல்யாணத்துக்கு என்ன பண்றதாம்"

"வாவ், ஜெய் ... நிஜமாவா... " அதிகமான மகிழ்ச்சி இருந்தது அவளின் குரலில்.

"ஆமா என் செல்ல தோழியே ஜெய்மி பிரிஸில்லா மற்றும் எய்டன் ஜோஷுவாவின் திருமணத்திற்கு தாட்சாயினி மற்றும் மிஸ்டர் தாட்சாயினியை அழைப்பதற்கு ஜெய்மி, எய்டன் இருவரும் சரியாக இருபது மணி நேர கால அவகாசத்தில் அங்கு பெங்களூரில் இருப்பார்கள் என்ற தகவல் தெரிவித்து கொள்ளப்படுகிறது "

"செம சர்ஃபரைஸ் ஜெய், நாளைக்கு வர நா எப்படி வெயிட் பண்ண போறேனே தெரில இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்கு.. வீட்ல என்ன சொல்லி கன்வின்ஸ் பண்ணுன "

"பொறும பேபி பொறும.. எல்லாம் நாளைக்கு வந்து கத கதைய பேசுவோம் ஒகே "

"நான் எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரிமா ஜெய், ப்பா உன் லவ்வாச்சும் சக்சஸ் ஆச்சே " என தாட்சாயினி கூறுவது சாதாரணமாக தெரிந்தாலும் அதன் பின்னே உள்ள தன் தோழியின் வலி ஜெய்மிக்கு தெரியாத என்ன.....

சில நொடி அமைதிக்கு பின் "தாக்ஷி.... நீ இன்னும் எதையும் மறக்கலயா " என ஆழ்ந்து வினவியது ஜெய்மியின் குரல்

...............

அந்த பக்கம் பதில் வராத தாட்சாயினி மௌனத்திலே அவள் எதையும் மறக்காமல் இன்னும் தன்னுள் குழப்பிக்கொண்டிருப்பதை இருப்பதை உணர்ந்து கொண்ட ஜெய்மி தனது பெங்களூர் விஜயத்தில் நிச்சயம் தன் தோழியிடம் மாற்றம் ஏற்படுத்திவிட்டு தான் திரும்ப வேண்டும் என தன்னுள் உறுதி கொண்டாள்.
தன்னை விட்டு வந்த இந்த மாதங்களில் தன் தோழி மகிழ்ச்சியாக இருப்பாள் என நம்பி கொண்டு இருந்தவளுக்கு அவள் இன்னும் சிறிது கூட மாறாமல் இருப்பதை பார்த்து கோபம்கொண்டு

"அத இன்னும் லவ்னு நினைச்சுகிட்டு தத்து பித்துன்னு உளறாம போய் வேலைய பாருடி, நாளைக்கு வந்து வச்சுகிறேன் " என முடித்தாள்.


அத்தியாயம் 2


அன்று……

"லவ் பண்ணுறேனு உளறிக்கிட்டு இவ பண்ணுற அட்டகாசம் இருக்கே....... என்னால முடில ஆண்டவா " என ஜெய்மி நொந்து கொண்டிருந்தாள்.

"ஜெய் "

"ம்ம்ம் "

"ஜெய்ய்ய் ... "

"சொல்லித்தொலை பக்கி ", தன் பெயரை வெக்கப்படுகிறேன் என்று ஏலம் விட்டுக்கொண்டிருந்த தாட்சாயினி மேல் காண்டு ஆகிக்கொண்டிருந்தாள் ஜெய்மி.

இதை எதுவும் கவனிக்காத தாட்சாயினியோ "நான் என்ன கலர் டிரஸ் போடட்டும் ஜெய், க்ரீன் கலர் போட்டுக்கவா” என கேள்வியும் கேட்டு பதிலும் சொன்ன தன் தோழியை பார்த்தாள், ஆனால் அவளின் கவனமோ தன் மேல் இல்லாமல் ஓப்பனா அவள் சைட் அடித்து கொண்டிருந்தவினின் மீதே இருந்தது..

வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் வீட்டில் இருந்து தள்ளி நின்று கொண்டிருந்த இளைஞர்கள் பட்டாளம் மீதே கன்னம் வைத்து கொண்டிருந்தாள் அவளின் தோழி, அதாவது அங்கு இருந்த பச்சை சட்டைக்காரனின் மீது, அவளின் திடீர் பச்சை டிரஸ் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் அங்கு இருந்தே வந்தது.

"போன பத்து நாளும் இதே புராணம் தான், அது பத்தாதுன்னு இப்போ பொங்கலுக்கு ஊருக்கும் கையோட கூட்டிட்டு வந்து இன்னும் சோதிக்கிறாளே, ……
ஒட்டு கேக்குறதே தப்பு……
இதுல இந்த டாக்கி ஒட்டு கேட்டுட்டு வந்து லவ் பண்ணறேனு அட்டகாசம் பண்ணிட்டு இருக்கு "
என ஜெய்மியை புலம்ப வைத்து கொண்டிருந்த தாட்சாயினியோ அங்கு வெகு தீவிரமாக காதல் செய்வோம் என்ற பெயரில் சைட் அடித்து கொண்டிருந்தாள் அவளின் மாமன் மகன் இளமதியனை.

ஜெய்மி தலையில் அடித்து கொண்டது போல் தாட்சாயினி தன் இருதந்தைகளின் பேச்சை கேட்ட ( ஒட்டு கேட்ட) பிறகு தன் காதல் அத்தியாயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது தன் தோழி ஜெய்மியை புலம்ப வைத்து கொண்டிருந்தாள்.

தாட்சாயினின் தந்தை ஞானமூர்த்தி, அவரின் தம்பி சிவசேனப்பெருமாள் இருவரும் சேர்ந்து புதுக்கோட்டையில் ப்ரொவிஸன் ஸ்டோரும், மோட்டர் வாகனங்களின் உதிர் பாகங்கள் விற்கும் கடையும் நடத்திக்கொண்டிருந்தனர், இளம்வயதிலே தொழிலுக்காக புதுக்கோட்டை வந்து உழைப்பை போட்டு நல்ல பலனும் பெற்று நன்றாக வளர்த்து இப்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்களின் தாய் வேங்கடலட்சமி நிலபுலன்களை பராமரித்துக்கொண்டு அவர்களின் சொந்த கிராமமான நெய்யூலியில் தங்கிவிட்டார். புதுக்கோட்டையில் இருந்து சுமார் முப்பது நிமிட பயணமே நெய்யூலி, ஆதலால் தாயயை கவனித்து கொள்வதில் சகோதரர்கள் இருவருக்கும் எந்த சிரமும் இருந்ததில்லை.

அநேக எல்லா விஷேசகங்களுக்கும் அவர்களின் சொந்த கிராமத்தில் இருப்பது போல் பார்த்து கொள்வார்கள். மூத்தவர்க்கு ஒரே ஒரு மகள் - தாட்சாயினி, இளையவர்க்கு ஒரே ஒரு மகன் - பிரபாகரன். அக்கா தம்பி இருவருக்குள் இரண்டு வயது வித்தியாசம்.

சீராக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் பெரிதாக இடறியது தாட்சாயினி தாயின் இறப்பின் போது தான். அதில் தளர்ந்த குடும்பத்தை தேர்த்தி கொண்டுவந்தார்கள் ஞானமூர்த்தியின் தம்பி சிவசேனப்பெருமாளும் அவரது மனைவி வேணுவிசாலாட்சியும். அதிலும் தாட்சாயினிக்கு முன்னை விட அதிக நேரம் செலவிட்டாள் அவளின் சித்தி. சிவசேனப்பெருமாள் தன் அண்ணனையும் தொழிலையும் கவனித்து கொள்ள, அவர் துணையாள் வீட்டையும் பிள்ளைகளையும் கவனிக்க குடும்பம் ஓர் அளவுக்கு மீண்டு வந்தது.

அன்னையின் இழப்பில் இருந்து மீண்டு வர அவள் குடும்பம் எவ்வாறு உதவியதோ, அதே போல் அந்த சிறுவயதில் தாட்சாயினிக்கு உறுதுணையாக இருந்தது அவளது தோழி ஜெய்மி ப்ரெஸில்லா. தாட்சாயினி குடும்பம் இருந்த தெருவிலே வீடு கட்டி குடிபெயர்ந்தது முதல் இருவர்களும் இணைப்பிரியா தோழிகளாகி ஒன்றாகவே வளர்ந்தனர். பள்ளி முதற்கொண்டு கல்லூரி வரை இருவரும் ஓரே வகுப்பு .

ஜெய்மியின் தந்தை மருத்துவர், தாய் அரசாங்க அதிகாரி. தன்னை போல் மகளை மருத்துவர் ஆக்க விருப்பம் கொண்டார் ஜெய்மியின் தந்தை, ஜெய்மிக்கோ அதில் விரும்பும் இல்லாததால் முக்கியமா அவளின் தோழி தாட்சாயினிக்கு மருத்துவம் படிக்கும் விருப்பம் இல்லாததால் மறுத்து இருவரும் சென்னையில் ஒன்றாகவே இன்ஜினியரிங் சேர்ந்தனர். பிள்ளைகளின் விருப்பமே முதன்மையாய் கொண்ட ஜெய்மியின் பெற்றோரும் மகளின் விருப்பத்திற்கு இணைந்தனர். ஜெய்மி தந்தையின் விருப்பத்தை பின்பற்றி அவரின் இளைய மகள் அந்த ஆண்டு மருத்துவம் பயில அடி எடுத்து வைத்துள்ளாள்.

தாட்சாயினி, ஜெய்மி இருவரும் ஒருவர் மீது ஒருவர் இன்றியமையாத தோழிகள் ஆவர். அதிலும் தாட்சாயினிக்கு ஜெய்மியை சார்ந்தே மற்ற எல்லாம்.

தொழில், குடும்பம், நெய்யூலி, படிப்பு என அவர்களும் அடுத்த கட்டத்தை நோக்கி வளர ஆரம்பித்தனர்.


*****************

நெய்யூலியில் பொங்கல் திருவிழா என்றும் விசேஷமானது, அநேக வெளியூரில் வசிக்கும் நெய்யூலி வாசிகள் அனைவரும் பொங்கலுக்கு தவறாமல் தங்கள் கிராமத்திற்கு வந்துவிடுவார்கள்.

இந்த தடவை பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பும் முன் நடந்த ஆலோசனையை தான் தாட்சாயினி கேட்டது. இளையவர் சிவசேனப்பெருமாள்க்கு அவர்களின் சொந்த கிராமத்திலே திருமணம் செய்தனர், வேணுவிசாலாட்சி ஒரு வகையில் அவர்களின் சொந்தம் தான். இவருக்கும் பிடித்தே திருமணம் நடந்தது.
வேணுவிசாலாட்சிக்கு ஒரே ஒரு அண்ணன் செல்வகணபதி, பேராசிரியர்.
அவர்க்கு இரண்டு மகன்கள் இளமதியன், அமிழ்திரவியம். இருவரும் இன்ஜினியரிங் முடித்து மேற்படிப்பாக ஒருவன் MBAவும் இளையவன் M.Techம் முடித்து தத்தம் பணிகளில் வளர்ந்து வந்தனர்.

தன் தம்பிக்கு போல் தன் மகளையும் சொந்த கிராமத்தில் தன் நெருங்கிய நண்பனும் சொந்தமான செல்வகணபதியின் மகனுக்கே தாட்சாயினியை திருமணம் நிச்சயித்து விடலாம் என பெரியவர்கள் மூவரும் மகிழ்ந்து பேசி கொண்டிருந்த அவளது கல்யாண பேச்சைதான் கேட்க நேர்ந்தது தாட்சாயினிக்கு.

இங்கு பதிவு பண்ண வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் உள்ளது. தாட்சாயினிக்கு வெளியில் தெரியாத அவள் தோழி ஜெய்மிக்கு மட்டும் தெரிந்த செயலாக்க பட வேண்டிய ஒரு கொள்கை இருந்தது. அது என்னவென்றால் ஜெய்மியின் காதல் அத்தியாங்களை கேட்டு கேட்டு அதிலும் போக்குவரத்தே இல்லாத இருகுடும்பத்தில், வீட்டினர் யாருக்கும் தெரியாமல் நடந்த காதல் அத்தியாயங்களை சுவாரசியமாக ஒரு அட்வென்ச்சரிங் அளவுக்கு ஜெய்மி சொல்லி சொல்லி தானும் காதலித்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பெரிய கொள்கைக்கு முத்திரையோடு கையொப்பமிட்டு தன் தோழி ஜெய்மியின் சாட்சியோடு பதிந்து விட்டாள் தாட்சாயினி.

பிறகு கொள்கை உடன்படிக்கை மறுபரிசலனை செய்து ஒரு சின்ன திருத்தும் கொண்டு வரப்பட்டது, ஒன்று காதலிப்பது இல்லை வீட்டில் நிச்சயிக்கும் மணவானை காதலித்து திருமணம் செய்வது என்று செய்த உடன்படிக்கையில், முதல் அட்டவணைப்படி ஒரு படிகூட தானாக காதலில் வழுக்கி விழும் வாய்ப்பை பெறாததால், அதிலும் ஜெய்மியின் " நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட" என்ற கிண்டலில் முதலில் வீறுகொண்டு எழுந்தாலும் கடைசியில் அடங்கி இரண்டாவதை செயல் படுத்துவது என்ற முடிவுக்கு வந்திருந்தாள் தாட்சாயினி.

இப்போது பெரியவர்களின் பேச்சை கேட்டுவந்த பிறகு வெகு தீவிரமாக தன் அறையின் நீளத்தை அளந்து கொண்டிருந்தாள் தாட்சாயினி

"என் மேரேஜ் பத்தி தான பேசுறாங்க??? இந்த வீட்ல இருக்குற ஒரே பொண்ணு நாந்தான், கல்யாண வயசுலயும் நான் தான் இருக்குறேன், சோ அப்போ எனக்கு தான் கல்யாணம்……. மதி மாமாவ தான் எனக்கு பிஃக்ஸ் பண்ண மாப்பிள்ளையா “!!!!! என வெகுவாக யோசித்து வந்தவள்,

"எனக்கு மதி மாமா ஓகே வா ?? ஓகே தான் , ஹி ஸ் சோ குட்.. நல்ல பையன் தான், சொந்தம் வேற.. வேற என்ன ஆப்ஜெக்ஷன் இருக்கு" என யோசித்தவள் எல்லாவற்றிலும் சரியாக பட இளமதியனுக்கு சரி சொன்னது அவளின் மனம். மேலும் மதி வேலையின் பொருட்டு கனடா சென்றவன் நேரில் பார்த்து சில வருடங்கள் ஆகி விட்டது என்பதால், 'இப்ப எப்படி இருப்பாங்க' என்ற ஆவலில் அவனின் முகப்புத்தகத்திற்கு சென்று பார்த்தவளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

" ஹான், மார்க் ஃபேஸ் புக் ஆரம்பிச்சப்ப அக்கௌன்ட் ஓபன் பண்ணி வச்சதோட சரி போலயே, பல வருசமா பேர் மட்டும் எழுதுன புது நோட் மாதிரி அப்படியே புதுசால வச்சுருக்காங்க, இப்படி இருந்த எப்படி நம்ம கொள்கையை செயல் படுத்துறது " என வெகுவாக யோசித்து கொண்டிருந்தவள் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தாள்.

அங்கே வந்த அவளின் சித்தி மகன் பிரபாகர் சிவசேனப்பெருமாள் விளையாடி விட்டு வந்த தன் பேட்டுடன் 'தொப்' என்று மெத்தையில் உட்கார்ந்த சத்தம் தான் அது.
அதில் கோபம் கொண்டவள் " டே அமுலியா எத்தனை தடவ சொல்லிருக்கேன் விளையாடிட்டு பேட் பால்னு அப்டியே ரூம்குள்ள கொண்டு வராதனு" என சண்டைக்கு தயாரானாள்.

“பர்ஸ்ட் நீ என்ன அப்படி கூப்பிட்றத நிறுத்து”

“எப்படி...... அமுலியானு உன்ன கூப்பிட்றத நிறுத்தணுமா அமுலியா” என வம்பிழுத்தாள்.

பிரபு பள்ளி வயதில் கொலு கொலுவென இருந்ததால் அமுல் பேபி என கூப்பிட ஆரம்பித்து அமுலியா என்ற பெயரிலே அவனை கூப்பிட ஆரம்பித்தாள். அது இன்று வரை தொடரவும் இருவருக்குள்ளும் அப்ப அப்ப சண்டைகள் வந்தன.
பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் இருந்தே ஜிம் சென்று உடலை பேணுபவனை அதிலும் அவனின் கல்லூரி நண்பர்கள் குறிப்பாக தோழிகள் வரை அவனின் அக்காவின் அமுலியா என்று அழைக்கும் பெயர் சென்றதால் இருவற்குள்ளும் தகறாரு தான்.

ஆனால் இன்றோ பிரபு மேலும் சண்டையை வளர்க்காமல் " நானே சோகத்தில் இருக்கேன் நீ வேற…….. ,
உன்னை எங்கயாச்சும் தூரமா வெளியூர்க்கு பேக் பண்ணுவாங்கனு பார்த்த கடைசில இங்க நெய்யூலில பிஃக்ஸ் பண்றாங்க, உன் மேரேஜ் அப்புறம் நிம்மதியா இந்த பால்கனி ரூம்ல செட்டில் ஆகும்னுற என்னோட கொள்கை என்னவாகுறது" என வருத்தத்தில் இருந்தான். ஆக மொத்தம் அக்கா தம்பி இருவருக்கும் ஒரு ஒரு கொள்கை!!!

அதன் பின்னே யோசித்தான், அவசரப்பட்டு கொள்கையை வெளியே சொல்லி மாட்டிகிட்டாமே என நொந்தவனை எதிர்பார விதமாக கொஞ்சினாள் அவனின் தமக்கை.

தம்பிதான் தன்னுடைய கொள்கை செயலாக்க பட உதவ முடியும் என சற்றென்று முடிவுக்கு வந்தவள் ,
"மை ஸ்வீட் அமுலியா பேபி ரூம் தான வேணும்……. எடுத்துகோடா தம்பி, உனக்கு இல்லாததா, என் செல்லக்குட்டில நீ " என என்றும் இல்லாமல் கொஞ்சிய தமக்கையை வித்தியாசமாக பார்த்தவனிடம் சரண்டராகி

தன் கொள்கையின் விரிவுரையை தெளிவுரையாய் விவரித்தாள்..
அதிசயத்த பிரபுவோ "வாவ் வளர்க உன் கொள்கை….. சோ செல்வா மாமா வீட்டுக்கே மருமகளா போக ஓகே பண்ணிட்டா, நடத்து, நடத்து ... இனி சந்தானம் அத்தை தான் பாவம் போ ," என கூறிக்கொண்டே சென்றான். அவன் வந்ததே அவனின் அக்காக்கு இந்த சம்மந்தத்தில் விருப்பம் இருக்காவென்று தெரிந்து கொள்ள தானே, அது தான் செவ்வனே அறிந்து கொண்டானே.

"டே வளர்க்க சொல்லிட்டு சும்மா போற, மாமா நம்பர் கொடுத்துட்டு போடா"
என பின்னால் இருந்து கத்தினாள் தாட்சாயினி.

"இவ்வளவு யோசிக்கிற நீ, நம்பர் வாங்க தெரில பாத்தியா, " என கேலி செய்துவிட்டு
"அதான் நம்ம ஊர் குரூப்ல இருக்குமே பாக்கல,” என்று விட்டு சென்றான்.

"அட ஆமால, எங்கடா குரூப் ஆக்ட்டிவ் இருந்து அந்த பக்கம் போன தான தெரியும் " என குரூப்பில் தேடி இளமதியன் நம்பர் பதிவு செய்து கொண்டாள்.


இவ்வாறு அவளின் கொள்கை செயலாக்கப்பட துவங்கி இளமதியன் பொங்கலுக்கு இங்கு வருவதை நெய்யூலியின் இளைஞர் பட்டாளம் உள்ள வாட்ஸ் ஆஃப் குருப்பான "நெய்யூலி பட்டர்ஸில் ( நெய்யூலி வெண்ணெய்ஸ் ), பொங்கலுக்கு ஊருக்கு யார் யார் வருகிறார்கள் என்ற அட்டெண்டன்ஸில் இளமதியின் ஒப்புதலை பார்த்தவள் பத்து நாளாக ஜெய்மியை பினாத்தி பினாத்தி அவளையும் தள்ளி கொண்டு எப்பையும் விட உற்சாகமா ஊருக்கு வந்து தன் கடமையை என சைட் அடித்து கொண்டிருந்தாள் இளமதியனை.

http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3

இத்தனை வருடங்களாக நெய்யூலிக்கு இவ்வளவு உற்சாகமா சென்றாளா என்றால்?, அது இல்லை... காரணம் அவளின் பாட்டி வேங்கடலட்சுமி.

பழமையில் ஊறிய அவர் தன் பேரனுக்கு கொடுக்கும் சுதந்திரம் பேத்திக்கு தருவதில்லை. ஆகவே நெய்யூலியில் தாக்ஷிக்கு எதற்கெடுத்தாலும் தடை.. குளத்தில் குளிக்க தடை, ஆற்றில் மீன் பிடிக்க தடை, கிட்டி விளையாட தடை, அவள் வயது ஒத்த தோழிகளுடன் அளவலாக தடை, தனியாக வெளியே செல்லவும் தடை என நிறைய கட்டுப்பாடுகள் நெய்யூலியில்.
அவளது பழக்கவழக்கங்களில் கூட நிறைய கட்டுப்பாடுகள். ஏன் அவளின் பதின் வயதில் அவள் மூக்குத்தியே ஆக வேண்டும் என கட்டளை விதித்த அவளின் பாட்டிக்கு முடியாது எனக்கூறி அவள் பண்ணிய ஆர்ப்பாட்டம் வேங்கடலட்சுமி முன் எடுபடவில்லை. ஆனால் இவளோ தான் குத்திக்கொண்டது இல்லாமல் அவள் தோழி ஜெய்மியையும் மூக்குத்த வைத்துவிட்டாள் என்பது வேற விஷயம்.

புதுக்கோட்டையில் இருவரும் பாகுபாடுயின்றி இருப்பார்கள், சொல்ல போனாள் அதிக சலுகைகள் பெறுவது அவளே, ஆனால் நெய்யூலியில் அவளுக்கு அனைத்திலும் கட்டுப்பாடுகள்.

நெய்யூலியில் வேங்கடலட்சுமி ராஜ்ஜியமே, அவரின் மகன்களே மீறமாட்டார்கள் எனும் போது வேணுவிசாலாட்சிக்கும் ஒன்றும் செய்ய முடியாது, அதிலும் தன் மாமியாரின் வழமையான வார்த்தைகளான "பொம்பள புள்ளைய வளர்க்க கொடுத்த இது தான் வளர்க்கும் லட்சணமா, அவ வயித்தில பிறந்த புள்ளையா இருந்தா பொத்தி பொத்தி வளர்த்துருப்பா, இதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன் என் பேத்திய நானே வளர்க்கறேன்னு இந்த சின்னவன் கேட்டா தான " என ஆரம்பித்து நிறுத்தாமல் சொல் அம்புகளால் தாக்கி விடுவார்.

தாட்சாயினின் அன்னை இறந்து காரியங்கள் ஆறிய பிறகு பேத்தியை தன்னுடனே வைத்து வளர்க்க போவதாகவும் புதுக்கோட்டைக்கு அனுப்பப்போவதில்லை என்றவரை கண்டு அதிர்ந்து விழித்த மகன்கள் மௌனமாக இருந்தபோது, தாட்சாயினிக்கு தன்னால் மட்டுமே அவள் இழந்த அன்னையின் அன்பை அளிக்க முடியம் என நம்பியவர் மாமியாரின் பேச்சை மீறி தன்னோடு வைத்துக்கொண்டார் வேணுவிசாலாட்சி.
வேணுவிசாலாட்சியின் மீது வேங்கடலெட்சுமிக்கு மிகுந்த நம்பிக்கை இருந்த போதும் அவ்வவ்போது சில சமயம் வார்தைகளால் தாக்கி விடுவார். அதில் எப்போதுமே பயம் வேணுவிசாலாட்சிக்கு.
அதனால் நெய்யூலியில் அவரது தாய் வீட்டுக்கு செல்வதை விட தாட்சாயினின் அருகில் மாமியார் விதிக்கும் கட்டுப்பாடுகளால் மகளை தளர்ந்து போக விடாமல் காத்து வீட்டிலே பெரும்பாலும் இருந்து விடுவார்.

வேணுவிசாலாட்சிக்கும் ஒரு பயம் உண்டு தான் வளர்த்த மகளை யாராவது ஒரு சொல் சொல்லிவிடுவார்களோ என்று .. இப்போது தன் அண்ணண் வீட்டிற்க்கே தாட்சாயினியை திருமணம் செய்து வைப்பதில் அவருக்கு மிகவும் பெருத்த நிம்மதி, அவரின் அம்மாவிற்கு தான் தன் மாமியாரை போல் வாய் அதிகமே தவிர அவரின் அண்ணியோ மிகவும் அமைதி, அன்பானவர். தன் அண்ணன் அண்ணியே தன் மகளின் மாமியார் மாமனாராகவும், ஊர் பேர் தெரியாது விசாரித்து கண்காணாத இடத்தில பெண்ணை கொடுப்பதற்கு, கண்முன் தான் தூக்கி வளர்த்த தன் அருமையான அண்ணன் மகனே அவரின் மகளுக்கு துணைவனாக அமையப்பெறுவதில் வேணுவிசாலாட்சிக்கு அளவில்லா நிம்மதி . அந்த நிம்மதி கொடுத்த பெருமகிழ்வில் அவரும் என்றையும் விட இம்முறை உற்சாகமாகவும் ஆவலோடனும் அவரின் மகளை போல் நெய்யூலிக்கு வந்தார்.

**********

இந்த பொங்கல் திருவிழாவில் பெரிய வித்தியாசமாக வேங்கடலெட்சுமி தனது பேத்தியை சீராட்டி பாராட்டி தள்ளிவிட்டார். அதிசயமா பார்த்த பிரபுவை இடித்து
"கண்ணு வைக்காதடா புள்ளைய, அக்காக்கு கல்யாணம் ஆக போகுது... பொறுப்பான தம்பியா நடந்துகோ" என கண்ணை துடைத்து கொண்டார்.
தன் அப்பத்தாவின் அழும்பலில் வெகுண்ட பிரபு "இப்ப இங்க என்ன நடந்துச்சுன்னு இம்புட்டு சீன் அப்பத்தா "

"வாயில் ரெண்டு போடுவேன் அக்காவ கட்டிக்கொடுக்க போறோமே, கொஞ்சமாச்சும் கவல இருக்காடா உனக்கு" என திரும்பவும் அங்கலாய்த்த அப்பத்தாவிடம்

"உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல, இங்க இருக்குற ரெண்டு தெரு தள்ளி அக்காவ கட்டிக்கொடுக்குறதுக்கு இம்புட்டு சீன்னு இதுல கவல பட என்ன இருக்காம்"

"ஏன் இல்லாம உன் அம்மத்தா ஒருத்தி போதாது, அவ வாய்க்கு முன்னாடி என் தங்கம் எப்படி தாக்குபிடிப்பாளோ "

"ஆமா உனக்கு ரொம்ப கம்மியா இருக்கு பாரு, நீ மத்தவங்கள சொல்றது தான் அதிசியம் … என்னமோ அக்கா இங்கயேவா இருக்க போறா, அவபாட்டுக்கு இப்பபோல விசேஷத்துக்கு நெய்யூலிக்கு வந்துட்டு இருக்க போற" என்று முடித்தவனிடம்

"அதான்டா என் பேத்திய பக்கத்துல கூட இருக்க விடாம வெளிநாட்டுக்கு அனுப்புறீங்களே" என அதற்கும் அடுத்த ஒப்பாரி ஆரம்பித்தவரை கண்டு தலையில் அடித்து கொண்டான்.
இவர்களின் சம்பாஷணை ஆர்ம்பிக்கும் போதே இந்தப்பக்கம் ஜெய்மியுடன் நழுவிட்டாள் தாட்சாயினி,

"ஏய் தாக்ஷி எங்கடி இழுத்துட்டு போற "

"மதி மாமாவ பாக்க "

"அடிப்பாவி பயங்கர ஸ்பீட் தான் "

"இங்க நான் ஆரம்பிச்சதான் உண்டு ஜெய், அந்த சைடு எந்த சிக்னல்னும் வராது, வரும்னு வெயிட் பண்ணுன கல்யாண வர வெயிட் பண்ண வேண்டியதுதான்"

"விவரம் தாண்டி நீ, உன்ன போய் பச்ச மண்ணு சொல்றாங்க உன் அப்பத்தா, உன் வாழ்நாள் கொள்கை உடன்படிக்கை பத்திரத்தை காட்டியிருக்கனும் அப்புறம் தெரியும் நீ என்ன கலர் பேபினு"

"நோ ப்ரோப்லம், மேரேஜ் வரைக்கும் தான் அப்பத்தாலாம், அப்புறம் எல்லாம் மதி மாமா தான்,…. மச மச பேசாம சீக்கிரம் வாடி"
என அவசரமாக இழுத்து கொண்டு சென்ற தன் தோழியின் விஸ்வரூப மாற்றத்தில் அதிசியத்த ஜெய்மி
"அடிப்பாவி நடத்து நடத்து…
சரி என்னனு பேச்சை ஆரம்பிப்ப இந்த மூவிஸ்ல வர மாதிரி துப்பட்டாவ கையால திருகிகிட்டே, கால்ல தூர்வாரி ஒரு கையால வெக்கப்பட்டுக்கிட்டு முகத்தை மூடி "மாமா ஐ லவ் யூ”னா... ப்ப்பா கற்பனையே பயங்கரமா இருக்குடி, எனக்கு படிக்காதவன் ஆர்த்தி தான் ஞாபகத்துக்கு வருது, நாம வேணும்னா வேற நல்ல சீன் சுடலாமா??!!, இரு கூகிள் பண்ணி பாப்போம் " என்ற ஜெய்மியிடம்

"இப்ப அதுக்குலாம் நேரம் இல்ல பக்கி, யோசிக்காமயா வருவாங்க நாம செலக்ட் ஆகிருக்ற கம்பெனிலயே பைனல் செம் ப்ராஜெக்ட் பண்ண சொல்லிருக்காங்களா, அதுல சேரலாமா இல்ல வேணாமானு ஐடியா கேக்க போறோம் மதி மாமாட்ட " என பதில் அளித்து தன்னை இழுத்து கொண்டு சென்ற தாட்சாயினியை குழப்பத்துடன் பார்த்தாள் ஜெய்மி

"ஹே தாக்ஷி நில்லு நில்லு, ஜாயின் பண்ணுறோம்னு சொல்லி நாம தான் சைன் பண்ணிட்டோம்ல இப்ப போய் என்ன கேக்க போற"

சற்று யோசித்து புரிந்த ஜெய்மியோ " ஹோ ஹோ பேச யூஸ் பண்ணிக்க போற, அப்படித்தானா "

"அதே தான், இந்த படிப்ஸ் மாமாகிட்ட படிப்ப விட்டு வேற என்ன பேசுறது சொல்லு"

"இதுல மட்டும் உன் மூளை எப்படி இப்படி பயங்கரமா வேல செய்யுது " என அதிசியத்த ஜெய்மியை கையை பிடித்து நிறுத்தினாள்.

"இப்ப என்னடி"

"அதர் தேக்கோ மாமா ஸ் கமிங்"

"பாருரா என்கிட்ட பேசிட்டே வந்தாலும் கண்ணு பூரா மாமா மேலயே இருக்கோ, சரி இங்கயே வெயிட் பண்ணுவோம் மாமா நம்மள கிராஸ் பண்ணித்தான போவாங்க அப்போ ஜாயின் பண்ணிப்போம்" என அவர்கள் இருக்கும் திசையில் வந்துக்கொண்டிருந்த இளமதியனை காட்டி கூறினாள் ஜெய்மி பிரிஸில்லா.

கோபத்துடன் ஜெய்மியை முறைத்த தாட்சாயினி " என்ன மாமாவா ??? " என ஆட்சோபித்தாள்.

தன் தோழியை சீண்டும் எண்ணத்துடன்
"ஆமா மாமா தான், மதி மா...மா, நம்ம மதி மா..மா தக்ஷு குட்டி" என மாமாவிற்கு அழுத்தம் கொடுத்து தாட்சாயினியின் ரத்த அழுத்தத்தை எற வைத்தாள் ஜெய்மி.

"ஹோ மேடம் அப்படி வறீங்களா, உனக்கும் மதி மாமானா அப்ப எய்டன் எனக்கு அண்ணா வராதே தப்பா இருக்கு பாரு, இனி எனக்கு எய்டன் மச்சான் , இனிமே அப்படித்தான் கூப்பிடனும் முதல்ல என் போன்ல எய்டன் அண்ணன ஈரேஸ் பண்ணிட்டு எய்டன் மச்சான்னு சேவ் பண்ணுறேன் " என தன் கையில் உள்ள போனை எடுத்து குடைய ஆரம்பித்தாள் தாட்சாயினி.

அசராமல் நின்ற ஜெய்மி “என்னானாலும் பண்ணிக்கோ, நானா உங்கள பாச பயிர் வளர்க்க சொன்னேன், நீங்க ரெண்டு பேரும் தண்ணி ஊத்தி வளர்த்ததுக்கு நான் என்ன பண்றது தக்ஷு பேபி…… நான் மாம்ஸ்னு தான்ப்பா கூப்பிடுவேன்”

“ஜெய்ய்ய்ய்ய்… “ என முறைத்த தாக்ஷியிடம் " இப்ப இது ரொம்ப முக்கியம், அங்க பாரு மதி மாம்ஸ் பக்கத்துல வந்துட்டாங்க" என கூறி திசை திருப்பினாள் ஜெய்மி.

தற்காலிகமாக மாமா பிரச்சனையை ஒத்தி போட்ட தாக்ஷி
“ சரி வா போலாம்"
“இரு தாக்ஷி இங்க தான வராங்க இங்கயே இருப்போம்”
"அதாகப்பட்டது மாமாவே வந்து பேசுவார்னு நினைச்சு நாம வெயிட் பண்ணுனா”, என தாட்சாயினி ஆரம்பிக்கவும் “புரியுது புரியுது உன் கல்யாணம் வர வெயிட் பண்ணுனாலும் அது நடக்காது" என முடித்தாள் ஜெய்மி.

"அதே தான், சரி சரி வா, மாமா பக்கத்துல வந்தாச்சு, நம்மள கிராஸ் பண்ணி போய்ட போறாங்க" என இழுத்து சென்றாள்.

மதியின் அருகே வந்தவர்கள் மாமா என அவனை கூப்பிட்டு நிறுத்திய பிறகே யோசித்தாள் 'என்னய ஸ்கூல் படிக்கும் போது பாத்தது, இப்போ ஞாபகம் இருக்குமா இல்ல மறந்திருப்பாராவென்று' என பயந்தவளின் பயத்தை போக்கினான் இளமதியன். அவளை அதிகம் சோதிக்காமல்

"ஹே தாக்ஷி எப்படி இருக்க, பி.இ தான படிக்கிற, பாக்ளாக்ஸ் இருக்கா இல்ல ஆல் க்ளியரா கேம்பஸ் செலெக்ஷன் பிராசஸ்லாம் ஓவரா" என அடுக்கி கொண்டே போனான்.

"ஹி ஹி மாமா, அதுலாம் ஆல் கிளியர் தான், ஆன் கேம்பஸ்ல கூட செலெக்ட் ஆகிட்டேன், அதுல தான் ஒரு டவுட் கேக்கனும் மாமா உங்ககிட்ட " என அவளது மாமாவுடன் பேசுவதற்கான முதல் படியை எடுத்து வைத்தாள்.

"டவுட்டா… என்னது தாக்ஷி? " என வினவிய மதியிடம் பேச ஆரம்பிக்கும் முன் அருகில் உள்ள தன் தோழியை பார்த்தவள் ஜெய்மி அங்கு இல்லாமல் தேடியவள், தூரத்தில் பிரபுவிடம் சேர்ந்து நின்று வம்பிழுத்து கொண்டிருந்த தோழியை இனம் கண்டு முறைத்தாள். தன் நண்பி உடன் இருக்கும் தைரியத்தில் பேச போனவள் அவளை காணாது விழித்து பின் தானாக சமாளிப்போம் என பேச ஆரம்பித்தாள். 'இதை விட்டால் இந்த படிப்ஸ் மாமாகிட்ட பேசுறதுக்கும் வேறு சான்ஸ் கிடைக்காதுவென்று'.

"அது வந்து மாமா, நாங்க செலக்ட் ஆகிருக்கிற கம்பெனிலயே பைனல் இயர் ப்ராஜெக்ட் பண்ண சொல்றாங்க, அப்படியே ட்ரைனிங் கண்டினியூ பண்ணுவாங்கலாம்"

"அப்படியா என்ன…., எந்த கம்பெனி" என்று கேட்டவனிடம் பதில் கூறினாள் தாட்சாயினி

கம்பெனி பேர் கூறிக்கொண்டே சரியாக அவன் கண்ணை பார்த்தவள் இன்பமாய் அதிர்ந்தாள். இவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்த அவனது கண்கள், சில நொடிகள் அவளை நோக்கி ரசனையோடு விரிந்து இயல்பாகின, அவனையே நிறைத்து கொண்டு பார்த்தவளின் கண்கள் அது சில நொடிகள் என்றாலும் தவறவிடாமல் படம் பிடித்து கொண்டன.. அந்நொடி புதிதாக உணர்ந்தவள், கலவையான உணர்வலைகளால் அடித்து செல்லப்பட்டாள்.

"ரொம்ப நல்ல கம்பெனி தாக்ஷி, தைரியமா எந்த குழப்பமும் இல்லாம ஜாயின் பண்ணிடு நம்மள அவங்களுக்கு ஏத்த மாதிரி பெஸ்ட்டா ட்ரெயின் பண்ணுவாங்க. அவங்க சொல்ற ப்ரொஜெக்டே பண்ணிடு இல்ல தனியா எதாவது ஓன் ப்ராஜெக்ட் ஐடியா வச்சுருக்கீயா???? " என்று கேட்டவனிடம்
'நல்லா கேட்டிங்க, சொந்தமா ... நானு ..ப்ராஜெக்ட்டு....' என மனதினுள் கூறிக்கொண்டவள்.
"ஹி .. ஹி .. அப்படிலாம் இல்ல மாமா " என தாட்சாயினி கூறவும்

" அப்புறம் ஏன் தயங்குற அவங்க ஆஃபர் ஏத்துக்கோ, மாமா வேணாம்னு சொல்றங்களா சொல்லு நான் வேணும்னா ரெண்டு பேர்கிட்டயும் பேசுறேன்" என வேகமாக தன் தந்தைகளிடம் நிறுத்திய மதியை இடைமறித்தாள் தாட்சாயினி.

"ஹையோ அதுலாம் இல்ல மாமா, அப்பா சித்தப்பாலாம் ஒன்னும் சொல்லல, லேசா கொஞ்ச குழப்பம் இப்ப நீங்க க்ளியர் பண்ணிடீங்க, ஊருக்கு போயிட்டு முதல்வேளையா ஜாயின் பண்ணிறேன் மாமா"

"தட்ஸ் குட் டெஸிசன், உனக்கு என்ன டவுட்னாலும் என்கிட்ட கேளு சரியா " என்றவனிடம்
" மாமா உங்க காண்டாக்ட் நம்பர்??????" என வைத்து கொண்டே கேட்டாள் .

"உன்கிட்ட இல்லையா என்ன " என்று நம்பர் மாற்றி கொண்டு சென்றனர் இருவரும்..

இவளோ மனதுக்குள் 'என்கிட்ட உங்க நம்பர் இருக்கு, என் நம்பர் உங்ககிட்ட சேருறதுக்கு தான் இந்த பிட்' என்று எண்ணிவிட்டு தன் தம்பியுடன் அளவளாவிக்கொண்டிருந்த ஜெய்மியின் முதுகில் மொத்தி
"ஏன் எருமை எஸ் ஆனா " என தனியாக இழுத்து கொண்டு வந்தாள்.

"குரங்கே….. இப்படியா அடிப்ப லவ்வர்ஸ் குள்ள தெளவ்ஸண்ட் இருக்கும், நீங்க என்ன என்னமோ பேசுவீங்க, நா இருந்த உங்களுக்கு சங்கோஜமா இருக்குமே பரவாயில்லையா??"

"என்ன விட்டுட்டு வந்தனால கொலை விழுமே பரவைல்லையா ???"

"ஹே கூல் கூல்.... தாக்ஷி பேபி... இப்ப என்ன தனியா ஜோடி புறாக்களுக்கு நேரம் கிடைச்சுச்சா இல்லையா” என்றவள் தோழியை கூர்ந்து கவனித்து “ ஹே இங்க பாருடா பயங்கரமா பல்பு எரியுதே எனி பாசிட்டிவ் சிக்னல் அந்த பக்கம் இருந்து ம்ம்ம்....?? ” எனவும் வெட்க பட்டாள் தாக்ஷி .

வெட்கப்பட்டவளை கலாய்த்தவள் "வெட்கமாக்கும் இன்னும் என்ன என்ன பாக்க வேண்டிருக்கோ ??!!!!" என ஜெனி கூறவும் "சும்மா இரு ஜெய்மி " என்று அதற்கும் அநியாயத்திற்கு வெட்கப்பட்டாள்.

“ ஜெய் “

“ ம்ம்ம்.. “

“ ஜெய் “

“ம்ம்.. சொல்லி தொலை பக்கி “

“ ஜெய் “

“ வேணாம் கடுப்பாகிடுவேன் “

"ஹே இல்ல ஜெய் அவ்வளவு பிரைட்டாவா தெரியுது "

"பார்ரா அப்ப பாசிட்டிவ் சிக்னல் கிடைச்சருக்கு, என்ன சொன்னாங்க... ப்ரொபோஸ் பண்ணிட்டாங்களா இல்ல அதுக்கும் மேலயா " என கற்பனை குதிரைகளை பறக்க விட்ட தன் தோழியை நிறுத்தினாள் தாக்ஷி .

"ஏய் ஜெய் நிறுத்து நிறுத்து , அந்த அளவுக்குளாம் இல்ல.. மதி மாமா கண்ணுல எனக்கான ரசனையை பார்த்தேன், சில நொடினாலும் அந்த பார்வை என் உள்ள வர போய்டுச்சு ஜெய், ஒரு பறக்குற மாதிரி பீல் கொடுக்குது" என கூறிய தன் தோழியை ரசித்தாள் ஜெய்மி.

"வாரே வாவ்.. வாங்க மேடம் வெல்கம் டு தி காதலர்கள் உலகம் "

"ஜெய் சும்மா இரு, வெட்கப்பட வைக்காத " என கூறினாலும் இனிமையாக மனம் நிறைந்து புன்னகைத்து கொண்டனர் தோழிகள் இருவரும்.

எந்த வருடமும் அல்லாத புது வருடமாக இந்த வருட பொங்கல் திருவிழா தாட்சாயினிக்கு இனிமையாக அமைந்ததில் ஆச்சிரியம் இல்லை.

நெய்யூலியில் இருந்த ஒவ்வொரு நாளும் இனிமையாக கழிந்தது, அந்த வருட கோவில் பொங்கலை இளமதியனின் அம்மாவான சந்தானலட்சுமி தாட்சாயினியை அழைத்து அவர்கள் வீட்டு சார்பாக வைக்க வைத்ததாகட்டும், அதை இன்முகத்தோடு ஆமோதித்த அவளின் வீட்டாராகட்டும், அதிலும் அவளின் அப்பத்தா வேங்கடலட்சுமி அவர் வீட்டு பொங்கலை அவளின் சித்தியிடம் விட்டுவிட்டு இங்கே அவரின் சம்பந்தி வீட்டின் வாய் சண்டையை மறந்து அவரின் வீட்டுக்காக தன் பேத்திக்கு பொங்கல் வைக்க உதவ வந்துவிட்டார் வேண்டுதலோடு, தன் பேத்தியின் பானையே முதலில் பொங்க வேண்டுமென்று, அவரின் வேண்டுதலை செவ்வனே என நிறைவேற்றிவிட்டாள் அன்னையவள்..

அதில் கண்கள் ரெண்டும் நிறைந்து விட்டது அவளின் வேணும்மாவிற்கு.
எல்லையில்லா ஆனந்தில் மூழ்கினார்....
தங்கள் பேசிய சம்பந்தம் சரியென தான் தினம் வணங்கும் அன்னையே நேரில் அருள் பலித்தது போன்று உவகை அந்த பெறாத அன்னைக்கு. அந்த ஊரின் முதல் பொங்கல் பொங்க வைத்து தன் புகுந்த (புக போற) வீட்டினையும், பிறந்த வீட்டினையும் சந்தோஷக்கடலில் ஆழ்த்தினாள் தாட்சாயினி. மேலும் இளமதியனின் பாட்டி சுந்தராம்பாள், மாமா செல்வகணபதி, அத்தை சந்தானலட்சுமியின் புது உரிமை கலந்த பாசம் அவளை இன்பக்கடலில் மூழ்கவைத்து.


தான் பிறந்த ஊரும் புகுந்த ஊராக மாற போகும் நெய்யூலியை விட்டு மணம் நிறைந்த நினைவுகளோடு இனிமையோடு விடைபெற்றாள் தாக்ஷி.


....................................


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி :love:

http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 4 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.


அத்தியாயம் 4


தாக்ஷி ஜெய்மியை சேர்த்து மொத்தமாக பதினோரு பேர் தேர்வாகிருந்தனர். அதில் ஜெய்மி, தாக்ஷி மற்றும் அவர்களின் நண்பர்களான வருண், நித்யாவிற்கும் கைய்ட் மற்றும் ட்ரைனராக வந்தவள் மேகனா ராவ்.

மேகனா ராவ் - நல்ல அறிவாளி, எழிலகி, திறனான நவீன யுவதி, மிகவும் அமைதியானவள். அவளின் தெளிவான அணுகுமுறையிலும், பொறுமையாக புரியவைப்பதிலும், அமைதியான பேச்சிலும் அவளுக்கு நிரந்தர தீவிர ரசிகர்களாகவே மாறிவிட்டனர் தாக்ஷி அண்ட் கோ..

பெண்கள் மூவர்க்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது, மேகனாவிற்கு முதல் நாளிலே “பார்பிமேக்” என பெயரும் வைத்துவிட்டனர் அந்த நல்லவர் பட்டாளம், அது விரிந்து மீதம் உள்ள ஏழு பேருக்கும் சென்றடைந்தது.

இதில் தாட்சாயினி மோகனாவிடம் விரைவாகவே ஒட்டிக்கொண்டாள், மேகனாவிற்கும் இயல்பாகவே கூடுதல் ஓட்டுதல் வந்துவிட்டது தாட்சாயினிடம்.

'சாரீ டே' வில் அசத்தாலாக வந்த தன்னையே பார்த்து கொண்டிருந்த தாக்ஷியை
"மானிட்டர பாக்க சொன்னா என் பேஸ்ல என்ன இருக்கு " என அவளின் தலையை மானிட்டர் பக்கம் திருப்பினாள், தாக்ஷி குவித்து வைத்த எரர்களை குறைத்து கொண்டிருந்த மேகனா.


"யோசிச்சுட்டுருக்கேன் மேக், யோசிச்சுட்டு வருத்தப்பட்டுட்டு இருக்கேன்"
என பெருமூச்சு விட்டாள் கையை கண்ணத்திற்கு கொடுத்து டேபிளில் சாய்ந்து திரும்பி மேகனாவை பார்த்துக்கொண்டிருந்த தாக்ஷி.


"என்ன அவ்வளவு பெரியயய வருத்தம் இந்த சின்ன மூளைக்குள்ள"

"வேற என்ன எனக்கு ஒரு அண்ணண் இல்லையேன்னு தான் ஓவர் கவலை மேக் "

"என்னது.... அண்ணண் வேணுமா, என்ன திடிர்னு, எதுக்காம் ? " என வியந்தாள் மேகனா

"எதுக்கா….., எனக்கு மட்டும் ஒரு அண்ணண் இருந்தா, உங்கள அண்ணியாக்கி என் கூடவே என் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன்ல" என தாட்சாயினி கூறவும் அவளின் யோசனையில் அசந்தே விட்டாள் மேகனா.

" ஹே...... இது ஓவரா இல்ல"

"இதுல எங்க ஓவர் வருது மேக், ஜெய்மிக்கு அடுத்து எனக்கு உங்கள தான் பிடிச்சுருக்கு,
ஜெய்மி ஸ் மை டியர் தோழின்னா யு ஆர் மை டியர் பார்பி டால், பட் இதுல பாருங்க ஜெய்மியை கூட நான் அண்ணியா யோசிக்கல " என தாக்ஷி கூறவும்


"ரொம்ப பயங்கரமான யோசனை தான் போ " என பக்கேன சிரித்துவிட்டாள் மேகனா.

அதிகமாக யாரிடமும் ஒட்டாத மோகனவும் தாக்ஷியிடம் ஓட்டிக்கொண்டாள். லைக்கிங் அண்ட் லவ்விங் வித் இன் ஷார்ட் பீரியட் என்பது போல் இவருக்கும் மற்றவிடம் குறுகிய காலத்திலே அதிக பற்றுதல் வந்துவிட்டது.

மேகனாவிற்கு ஆரம்பம் முதலே தாக்ஷியிடம் ஒரு தனி பிரியம்.

மேகனாவை பொருத்த வரை தங்கையை இல்லாத அவளுக்கு தாக்ஷி ஒரு தங்கையே, ப்ராஜெக்ட்டில் தாக்ஷி சின்ன சின்ன(??) தப்புகள் செய்துவிட்டு பாவமாக தன் முன் நிற்பதாகட்டும், தன்னிடம் கள்ளமில்லா அன்பு காட்டுவதாகட்டும், பட படவென அவளின் நண்பர்கள் வட்டாரத்தை இலகுவாக வைப்பதாகட்டும், அதையும் விட ஏதோவொன்று தாக்ஷியின் மேல் பெரிதாக ஈர்த்துவிட்டது மேகனாவிற்கு. தாக்ஷிக்கோ சொல்ல தேவையில்லை மோகனா அவளுக்கு எப்போதும் ஸ்பெஷல் பார்பிமேக் தான்.

***********************

சென்னையில் கல்லூரியின் இரண்டாம் வருடம் படிக்கும் போதே லஞ்ச் சரியில்லை, ப்ரேக்ஃபாஸ்ட் சரியில்லை, மொத்தத்தில் சாப்பாடே சரியில்லை ஏன் சாப்பாடே போடமாற்றாங்க என ஆள் ஆளுக்கு ஒரு காரணங்கள் அவர்கள் வீட்டில் சொல்லி கண்களை கசக்கி தோழிகள் அனைவரும் சேர்ந்து வீடு எடுத்து தங்குவதாக ஏக மனதாக அவர்களின் பெற்றோர்களால் பல பல மறுபரிசலனைகள் பிறகே செயலாக்கப்பட்டது.

வீடு, நண்பர்கள், எப்பவாச்சும் காலேஜ், அப்போ அப்போ ப்ராஜெக்ட், ஆஃபிஸ்ல பஃன் என இனிமையாக நகர்ந்தது தாக்ஷியின் நாட்கள். ஒன்றை தவிர அவளின் கொள்கை தான் வெறும் ஆரம்ப கட்ட நிலையிலே இருந்தது, இளமதியனிடம் அவளாக பேச முயற்சித்தாலும் அவளின் படிப்பு மற்றும் ப்ராஜெக்ட் பத்தியே வந்து நிற்கும், அதிலும் ப்ராஜெக்ட் ப்ரோக்ராம்மிங் பற்றிய கேள்விகள் நிறையாகவே இருந்ததில் பயந்தே விட்டாள். நம்ம லைஃப் பூரா ப்ரோக்ராம் சுத்தியே இருக்குமோ என நொந்து கொள்ள தான் முடிந்தது ஜெய்மியிடம்.

இந்நிலையில் அவள் காதலில் இல்லை காதலாக நம்பிக்கொண்டிருந்த எண்ணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியோ இல்லை ஆரம்பபுள்ளியயோ நோக்கி நகர்ந்து அவளுக்கு அதிர்ச்சியையோ ஆச்சிரியாத்தையோ தர காத்திருந்தது.

*************************
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஃப்னிக்ஸ் மாலின் அருகில் பார்பிஃகியூவில் தட்டு சேவைக்காக ( பஃபட் ) குழுமியிருந்தது அந்த நண்பர்கள் பட்டாளம், வேறு என்ன அந்த வராம் செவ்வாயன்று வந்த வருணின் பிறந்த நாளுக்காகத்தான். வாரநாட்களில் யாருக்கு பிறந்த நாள் வந்தாலும் வார கடைசியில் நண்பர்களின் “போஸ்ட் பிறந்த நாளான” தனி கொண்டாட்டத்தை வைத்து கொள்வார்கள். இதோ வெள்ளி மாலையன்று வருணின் ட்ரீட் முடிவாகி அளப்பறித்துகொண்டிருந்தனர்.

ஹோட்டலில் ஸ்பான்ஸர் செய்த அந்த சின்ன கேக்கயும் வருணை சாப்பிட விடாமல் செய்து இனிதே ஆரம்பித்தது அந்த “போஸ்ட் பிறந்த நாள்” கொண்டாட்டம்.

கொண்டாட்டத்திற்கு நடுவில் தாக்ஷிக்கு இரண்டு அழைப்புகள் வந்தது, முதல் அழைப்பு அவளின் வேணும்மாவிடம் இருந்து.
இந்நேரம் வெளியில் இருப்பதை அவளின் சித்தி மட்டும் அறிந்தால் அவ்வளவு தான், முதல் வேலையாக சென்னை வந்து அவளை புதுக்கோட்டைக்கு பேக் செய்து அவரே டெலிவரியும் வாங்கிக்கொள்வார்.

தன் நண்பர்களின் பட்டாளத்தின் சத்தத்தை குறைக்க செய்து அலைபேசியை காதிற்கு கொடுத்தாள்.

“சொல்லு வேணும்மா”

"என்ன தங்கம் செய்ற"

"நா ... நான் ஆஃபீஸ்ல இருக்கேன் வேணும்மா"

"மணி எட்டாக்கப்போகுதே இவ்வளவு நேரமாகவா"

"ஹான், ப்ராஜெக்ட் முடிச்சு கொடுக்கனுமா அதான்.. நான் மட்டும் இல்ல எல்லாரும் இங்க தான் இருக்கோம்"

"நேரங்கழிச்சு எப்படி வீட்டுக்கு போவீங்க, ஏன் அத நாளைக்கு சிக்கீரமே வந்து பாத்து கொடுக்கக்கூடாதா"

"அது வந்து வேணும்மா நாளைக்கே ப்ராஜெக்ட் முடிச்சு கொடுக்கணுமா, அதான்.. ஆஃபீஸ் கேப்ல அனுப்பிச்சு விடுவாங்க, இங்க ஜெய்மியும் கூட இருக்கா, ஒன்னும் பிரச்சனையில்ல, இதோ இப்ப கிளம்பிடுவோம்"

" அப்ப சாப்பாடுலாம்" அவர்க்கு அவர் கவலை.

"அது நாங்க இங்க ஆஃபீஸ்க்கே ஆர்டர் பண்ணிட்டோம், இப்ப சாப்பிட்டு தான் இருக்கோம் வேணும்மா"

"சாப்பிட்டா இருக்க, முதல அத சொல்லக்கூடாது, போன வச்சிட்டு போய் சாப்பிடு போ " என்று மகள் சாப்பாடு தடை பட்டுவிட்டதே என கூறிக்கொண்டிருந்தவரிடம் இருந்து அலைபேசியை வாங்கிய பிரபு தம்கையிடம் அளவளாவி கொண்டே வெளியே வந்தான்.

"எனக்கு வொய்ட் மஸ்க் மிஸ்ட் (பெர்ஃப்யூம் ) வாங்கி, அத அப்படியே என் பிரெண்ட்ட கொடுத்து விட்டுடு மை டியர் சிஸ்டர்"

"ஹேய் அமுலியா என்ன விளையாடுறியா நான் ஆஃபீஸ்ல இருந்து கிளம்பவே லேட் ஆகிடும், இப்ப போய் எங்க வாங்க முடியும்"

"ஹலோ சிஸ்டர் உங்க வேணும்மாட்ட விட்ட ரீல என்கிட்டயும் விடாத, நீங்க எல்லாரும் அந்த வளந்த வருண் பர்த்டே ட்ரீட்ல தான இருக்கீங்க?!, ஆல் டீடெயில்ஸ் ஐ க்நோ, அதான் எஃ.பி’ல போஸ்ட்டா போட்டு தள்ளுறாங்களே உன் பிரெண்ட்ஸ்,

அத விடு ஐயாம் ஆல்சோ குட் பாய்க்கா உன்ன என்ன இப்பவேவா போக சொல்றேன், நல்லா கொட்டிக்கிட்டு அப்புறம் ஃப்னிக்ஸ் போய் வாங்கி கொடுத்திரு, என் பிரெண்ட் அங்க தான் இருக்கான், டீல் ஓகேவா இல்ல எஃ.பி போஸ்ட்டா அம்மாட்ட காட்டவா ???"

'இப்ப தம்பிகலாம் ஓவர் விஷமா இருக்குதுங்களே' என தனக்குளே நொந்து கொண்டிருந்தாள். அந்த பக்கம் பதிலே இல்லாதால்,

"ஹலோ சிஸ்டர் என்ன சத்தத்தையே காணோம்"

"ஹி ஹி ஒண்ணுமில்ல பிரதர் ஒண்ணு வாங்கலாமா இல்ல இரண்டா வாங்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்"

" பாசம் ஓவரா டபுளா இருக்கே, வேணாம் ஒண்ணாவே குறைச்சுக்கோ, அப்புறம் ஒரு நியூஸ் சொல்றேன் வேணும்னா கேட்டுக்கோ என் பிரெண்ட்னு சொன்னது மாமாவ தான்.. மதி மாமா, அமிழ் மாமா ரெண்டு பேரும் சென்னை வந்திருக்காங்க இப்போ ஃப்னிக்ஸ்ல தான் இருக்காங்க, உன் கொள்கைக்கு இந்த நியூஸ் நல்லா யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்"

அதில் மகிழ்ந்தவள் "ஹே அமுலியா நிஜமாவா..." என சந்தோஷத்தில் குதித்தாள் "இதைதானா பர்ஸ்ட் சொல்லிருக்கணும் நீ, ஆனாலும் சோ ஸ்வீட்டா அமுலியா, லவ் யூ "

"சரி சரி என்ன லவ் பண்ணுனது போதும் போய் மாமாவ லவ் பண்ணிக்கோ போ " என வைத்து விட்டு அலைபேசியை தன் அன்னையிடம் கொடுக்க சென்றான்.

அங்கு அவரோ மகள் சாப்பிடாமல் தூங்காமல் வேலை செய்வதாகவும் ஏற்கனவே துரும்பாக (??) இருக்கும் மகள் மிகவும் இளைத்து விட போகிறாள் என்றும், அது எல்லாம் இந்த கம்ப்யூட்டர் படிப்பினால் வந்தது என்றும், அத படிக்க ஊக்குவித்த தன் கணவரே இந்நிலைக்கு காரணம் என்றும், என்று வருத்தத்தில் ஆர்மபித்த வேணுவிசாலாட்சி கோபத்தில் முடித்தார்.

தந்தை ஒண்ணும் புரியா நிலையில் அன்னையிடம் விழித்து கொண்டிருந்ததை கண்டு " அங்க அது ட்ரீட்ங்கற பேர்ல நாலு நாளைக்கும் சேத்து சாப்பிட்டுட்டு இருக்கு இங்க அப்பா சாப்பிட நாலு இட்டிலியும் சேமிக்க வச்சுட்டாங்களே அம்மா" என தனக்குள் வருத்தப்பட்டவன்,

அன்னையை திசை திருப்பும் பொருட்டு " அம்மா.... பாவம் அப்பாவ விடுங்க அதான் தாக்ஷிக்கும் சேத்து வெளியே போகாம நான் புதுக்கோட்டையிலே படிக்கிறேன்ல. "

ஆனால் அங்கு சம்மந்தம் இல்லாமல் இடையிட்ட அவனின் தந்தையோ " அடேய் நீ வாங்குன மார்க்கு இங்க இன்ஜினியரிங் சீட் கிடைச்சதே பெருசு, தாக்ஷி வாங்குன மார்க் அப்ப்டிடா!! பாரு புள்ள படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே வேலைக்கு போகுது" என மகளின் பால் பெருமைப்பட்டுக்கொண்டார்.

அதில் காண்டான பிரபு உள்ளே சென்று விட்ட தன் அம்மாவை உறுதி படுத்தி கொண்டு "மிஸ்டர் சிவசு உங்க அரும மக அதோட ப்ரொஜெக்ட்க்காக தான் ஆஃபீஸ் போகுது, அத என்னமோ ஆஃபீஸ் ப்ராஜெக்ட் மாதிரியும் கிளைன்ட்கிட்ட நாளைக்கே சப்மிட் பண்ண போறது மாதிரி அம்மாட்ட சொல்லிக்கிட்டு வெளியே ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்கு, அத நம்பி உங்கள கரிச்சு கொட்டிட்டுன அம்மாட்ட இருந்து உங்கள காப்பாத்த ட்ரை பண்ணுனா நீங்க எனக்கே ரிவீட் அடிக்கிறீங்க "

அவனின் தந்தையோ " டே என்னடா சொல்ற அக்கா வெளியவா இருக்கா " அதயே அங்கு வந்த அவனின் பெரியதந்தையும் கேக்க.. "ஹையோ பெரியப்பா வந்தத கவனிக்கலையே," என நொந்து கொண்டான்.
சிவசேனபெருமாள் மட்டுமே பிள்ளைகளுக்கு அதிக சலுகைகள் அளிப்பது, தாட்சாயினியும் அவளின் சிறுதந்தை மூலம் காரியம் சாதித்து கொள்வாள்..ஞானமூர்த்தியோ மனைவியின் இறப்புக்கு பின் மகளின் வளர்ப்பை முழுவவதுமாக வேணுவிசாலாட்சியிடம் ஒப்படைத்துவிட்டார், தாட்சாயினி சம்பந்தமாக எதுனாலும் வேணுவிசாலாட்சியின் மூலம் தான்.

இப்போது தாக்ஷி விஷயம் தெரிந்தால் முதல் வேலையாக வேணுவிசாலாட்சிக்கு விஷயம் போய் விடும். அதை விட அன்னையிடம் மறைக்கும் படி என்ன இருக்கிறது என்றே தன் பெரியப்பா தன்னை நோக்குவது புரிந்து " ஹி ஹி... அது ஒண்ணுமில்ல பெரியப்பா அக்கா ஆஃபீஸ் முடிச்சு மாமாவ பாக்க போயிருக்கா"

"டே இது என்னடா புது பழக்கம், இந்நேரத்துக்கு எதுக்கு தனியா வெளியே போய் பாக்கணும், அதுவும் கல்யாண முடிவாகுற சமயத்துல, அம்மா அப்பத்தாக்குலாம் தெரிஞ்சா என்னவாகிறது" என நடுவில் வந்த தந்தையிடம்

"அதான் அம்மாட்ட சொல்லல, கல்யாணம் முடிவாகிருச்சுல பேசி புரிஞ்சுக்க வேணாமா, எதுவும் தெரிஞ்சுக்காமா அக்கா எப்படி கல்யாணம் பண்ணிக்கும், நான் தான் மாமா அங்க வந்திருக்காங்கனு சொல்லி, போய் பாருனு அக்காட்ட சொன்னேன், அக்கா தனியாலாம் போகல ஜெய்மி அக்கா கூடதான் போயிருக்கா, மாமாவும் தனியாயில்லை மதி மாமா அமிழ் மாமா ரெண்டு பேரும் அவங்க பிரண்ட்ஸ் கூட தான் அங்க இருக்காங்க, அப்புறம் அது நம்ம புதுக்கோட்டையா அங்க இந்நேரத்துக்கு தான் மக்கள் நடமாட்டமே அதிகம் இருக்கும், சும்மா ஜஸ்ட் ஒரு டாக் அவ்வளவு தான்.. என் அக்கா கல்யாணத்துல கடைசி முடிவு அக்காவோடத்தான் இருக்கும், மாமா அக்காக்கு பெஸ்ட் சாய்ஸ் தான், ஆனா அக்காக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம்," என தன் தமக்கைக்காக பேசியவனை வியந்து பார்த்தனர் அவன் தந்தையினர் இருவரும்.. அவனது பொறுப்பில் மனதிற்குள் மகிழ்ந்து அப்போதைக்கு பேச்சை முற்றுப்புள்ளி வைத்து சென்றனர்.

*************

இங்கு தாக்ஷிக்கு அடுத்ததாக வந்த அழைப்போ மேகனாவிடம் இருந்து

"தாக்ஷி எங்க இருக்க "

"ஹாய் மேக்... வருண் பர்த்டே ட்ரீட் இன்னைக்கு, எல்லாரும் 'கோல்-பார்பிஃகியூல' இருக்கோம்"

"யெஸ் யெஸ் தெரியும்...... அங்க தான இருக்க, இன்னும் கிளம்பலேல "

"ஆமாம் மேக், இன்னும் ட்ரீட் போயிட்டுத்தான் இருக்கு"

"சரி அப்போ முடிச்சுட்டு ஃப்னிக்ஸ் வரியா, நான் அங்க தான் இருக்கேன், லெட் மீ ஹாவ் டைம் வித் யு"

வேகமாக தலையாட்டி 'இன்னைக்கு என்ன டபுள் டமாக்கவா, மதி மாமவ மேக்க்கு இன்ட்ரோ பண்ணிடுவோம்' என சாப்பிட்டு முடிக்காத ஜெய்மியை இழுத்துக்கொண்டு சென்றாள்.. அங்கயோ வேறு அறிமுகம் நடந்தது முற்றிலும் எதிர்பாராத விதமாக….


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி :love:

http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 4 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

அத்தியாயம் 5



ஷம்பக்கின் முன்னாடி நின்று கொண்டிருந்த மேகனாவிடம் சென்ற தாக்ஷி
"வாவ் மேக் எப்பவும் விட இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷல்லா இருக்கீங்களே,
அப்படியே பார்பி மேட் தான் நீங்க ……
ஷாப்பிங் வந்தீங்களா….. "
என்ற தனது கேள்விக்கு பதில் வராததால் மேகனாவின் தோலை ஆட்டினாள்.

"ம்ம் என்ன கேட்ட .. ஆமா ,, இல்ல " என பதற்றத்தில் இருந்தது அவளின் குரல்
"மேக் என்னாச்சு.. கூல் கூல்,.. எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் போலாமா"
………………………….
இப்பவும் பதில் வராததால்

‘ என்னடா இது இன்னைக்கு மேக் ப்ஃரோஸன் பார்பி மோட்க்கு அடிக்கடி போய்டுறாங்க ’ என நினைத்து திரும்ப உலுக்கினாள் " மேக்…. "

"ஹான் என்ன தாக்ஷி ... என்ன சொன்ன "

"சரியா போச்சு போங்க… வாங்க போகலாம்” என மேகனாவின் கையை பிடித்து கொண்டு செல்ல திரும்பியவள் அங்கேயே நின்றாள் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த இளமதியனை பார்த்தும்.

முதலில் அவளுக்கு தோன்றியது 'ஹையோ ப்ராஜெக்ட் பத்தி கேள்வியா கேப்பாங்களே ' என்ற பயம் தான்.
அதற்கு ஏற்றார் போல் இளமதியன் பார்வையும் ஒரு ஆசிரியரின் கூரோடு அவள் மீது படிந்ததில்
'போச்சு இன்னைக்கு வச்சு செய்ய போறாங்க' என்று நொந்துகொண்டவள்
பக்கத்தில் மேகனா இருப்பதால் அவளை வைத்து சமாளித்து கொள்வோம் என்று வேகமாக முடிவு எடுத்து கொஞ்சம் தெளிவாகவே நிமிர்ந்தாள்..

இன்னைக்கு என்ன என்ன கேள்விகள் வருமோ என்று படப்படப்புடன் இருந்த தாக்ஷி
அங்கே மேகனாவும் படபடப்புடன் இருப்பதை அவளின் கையை பிடித்து கொண்டிருந்தது மூலம் அறிந்து தன்னை மறைத்து கொண்டு அவளை பார்த்தாள்.
‘ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்காங்க’ என அவளை நோக்கியவள் அப்போது தான் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தாள், மேகனாவின் பார்வை எதிரில் வந்த மதியன் மீதெ இருந்தது என்றும், இப்போது இளமதியன் பார்வையும் தன் அருகில் உள்ள மேகனாவின் மீதென்றும்.

இருவரின் பார்வைகளும் அவளுக்கு உணர்த்திய பதில் ஒன்றே.

தான் அறிந்து கொண்ட பதிலால் என்ன மாதிரி உணர்ந்தாள் என்பது அவளுக்கே புரியவில்லை, திடிரென மனதில் ஒரு வெற்றிடம் வருமே அது போல் முற்றிலும் எந்த உணர்வு பிழம்புகளும் இல்லாமல் வெறுமையாக உணர்ந்தாள்.
அருகில் நின்ற ஜெய்மிக்கும் புரிந்தும் புரியாத நிலை தான்..

அங்கே வந்த மதியன் " ஹாய் தாக்ஷி……. என்ன இங்க.. ஷாப்பிங்கா" என வினவவும்
‘என்னடா இது நமக்கு மட்டும் தான் ஷாக்கா’ என்று எதிர் விளைவுறு செய்யவும் மறந்து போய் நின்றவளை மீண்டும் அழைத்தான்.

"தாக்ஷி ....."

"ஹான் ... என்ன.. என்ன மாமா "

இம்முறை வியப்பது மேகனாவின் முறையானது..!!!!!!!!

ஜெய்மிக்கு தான் மண்டை காய்ந்தது
‘என்னடா நடக்குது இங்க, இவுக ரெண்டு பேரும் பாத்துகிறத பார்த்த மேகனாவ முன்னாடியே தெரியும் போல இந்த மதி மாமாக்கு…
இங்க தாக்ஷி மேகனா ரெண்டு பேரும் கைய பிடிச்சுட்டு இருக்காங்களே அதுல கொஞ்சம் கூட ஷாக் ரியாக்ஷன் கொடுக்காம எப்படி இவ்வளவு நார்மல்லா நிக்கிறாரு’ என தனக்குள் மொழிந்து கொண்டிருந்தாள்..

அதற்குள் மேகனாவின் அருகே இருந்த தோழியும் மதியனின் உடனிருந்த நண்பனும் சமிக்கை கொடுத்து கொண்டனர்..

" ஒன் மினிட் கைய்ஸ் கால் வருது அட்டெண்ட் பண்ணிட்டு வரேன் " என வராத போனை எடுத்துக் கொண்டு சென்றான்..

இங்கு மேகனாவின் தோழியோ " ஹே கேர்ள்ஸ் பாண்டலூன்ஸ் போகணும்னு சொல்லிட்டு இருந்திங்கள, வாங்க நாம போய்ட்டு வந்தராலாம், கம் " என ஜெய்மியையும் தாக்ஷியையும் இழுத்து கொண்டு சென்றாள்...
ஏதோ ஹட்ச் டாகி போல் அவளின் பின்னே சென்று கொண்டிருந்த தாக்ஷியை ஜெய்மி தான் தடுத்து நிறுத்தியது..

"அக்கா நாங்க பாண்டலூன்ஸ் போகணும்னு இல்லக்கா"

" ஹே சாரி சாரி கேர்ள்ஸ் ,ஒரு சின்ன பழைய லவ் ஸ்டோரி, இப்பவாச்சும் ஏதாவது ஸ்பார்க் வருதானு பாக்க தான் அவங்க ரெண்டு பேரயும் தனியே விட்டுட்டு உங்கள கூட்டிட்டு வர வேண்டியதாபோயிடுச்சு, சாரியா .... ” மேகனாவோடுயிருந்த தோழி கூறவும்

‘நல்லா பத்த வச்சீங்க போங்க’ என தனக்குள் சொல்லி கொண்டாள் ஜெய்மி,
" இட்ஸ் ஓகே கா நாங்க கிளம்பனும், பிரெண்ட்ஸ் வெய்ட் பண்றாங்க” என தன் தோழியின் மன நிலையில் கவலை கொண்டு அவளை முதலில் இவ்விடம் விட்டு இழுத்து செல்லும் பொருட்டு அவளை கூட்டி கொண்டு வெளியேறும் வாயிலை நோக்கி விறைந்தாள்..

நுழைவாயிலை நோக்கி நடக்கும் போது சுயஉணர்வு பெற்ற தாக்ஷி " பிரபுக்கு பெர்ஃப்யூம் வாங்கனும் ஜெய் " என நிறுத்தினாள்..

இப்போது என்ன எதிர் விளைவு கொடுக்க வேண்டும் என தெரியாமல் விழிப்பது ஜெய்மியின் முறை ஆகிற்று..
‘இங்கே நடக்கும் விஷயம் என்ன, இவள் பேசுவது என்ன .....‘

தாக்ஷியின் இந்த அமைதி வேறு அவளுக்கு பயத்தை கொடுத்தது..

"இப்ப ஒன்னும் அவசரமில்ல, அப்புறம் வங்கிங்கலாம்… வா போகலாம்.. "

"ம்ஹிம்... பிரபு எதிர்பாப்பான்ல, இரு இப்பவே வாங்கிடுவோம்"

பெர்ஃப்யூம் எதிர்பார்த்து ஏமாற கூடாது என பினாத்தும் தன் தோழி அவளுக்கு புதியவளே, இது இப்பொழுது நிகழ்ந்த அவளின் ஏமாற்றத்திற்கான தாக்கமா என குழம்பி கொண்டிருந்தாள் ஜெய்மி..

தாக்ஷியோ இப்போது பிரபுவிற்கு பெர்ஃப்யூம் வாங்குவது தான் தன் தலையான கடமை என்று வாங்கி கொண்டு வந்தவள், விழித்தாள்..

அது ஏன் என்று ஜெய்மிக்கும் புரிந்தது.. இதை அவளின் மதி மாமாவிடம் அல்லவா கொடுத்து விட வேண்டும், அதன் பொருட்டே அல்லவா இங்கு சந்தோசகமாக வந்தாள், இப்போது இருக்கும் நிலையில் இன்னொரு முறை மதி மாமாவை பார்த்து எவ்வாறு கொடுப்பாள்..

தாக்ஷியின் அருகே வந்தவள் அவளின் தோலை தொட்டு தன் புறம் திருப்பி "இன்னைக்கே கொடுத்து விடனும்னு ஒன்னுமில்லைடி, நாம ஊருக்கு போகும் போது கொடுத்துக்கலாம்" என்றாள் அமைதியாக.

" இல்ல ஜெய்.. பிரபு எதிர்பார்ப்பான்ல, ஏமாந்துடுவான்"

ஜெய்மிக்கோ அவளின் இயல்ப்புக்கு மாறாக பேசி கொண்டிருக்கும் தோழியை பார்த்து வருத்தமாக இருந்தது.

தனக்குள் யோசித்த தாக்ஷி " ஹிம்.. அமிழ் மாமா... அவங்களும் இங்க வந்திருக்கதா பிரபு சொன்னானே.... அவங்கட்ட கொடுத்திடலாம் ஜெய்,.. இரு அவங்களுக்கு கால் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேப்போம் " என தனக்குள் பேசி கொண்டே தனது கைபேசியை எடுத்து அழைத்தாள்..

இவள் அழைப்பு விடுக்கவும், அமிழனே அவள் முன் வரவும் சரியாக இருந்தது..

"தாக்ஷி….. இங்க என்ன பண்ற…., கால் பண்ணிருக்க??,"

" இது பிரபு கேட்டான் மாமா, அவன்கிட்ட கொடுத்துறிங்களா " என்று அவனிடம் கொடுத்தாள்.
இதோட முடிஞ்சதே என நினைத்த ஜெய்மியும் " ஆமாண்ணா கொடுத்துடுங்க, நாங்க கிளம்புறோம்" என செல்ல எத்தனித்தாள்.

"ஏன் அதுக்குள்ள கிளம்புறிங்க, மதி கூட வந்திருக்கான், வெய்ட் பண்ணுங்க, மதியையும் மீட் பண்ணிட்டு டின்னர் முடிச்சுட்டு போலாம், நாங்களே உங்கள ட்ராப் பண்ணிட்டு போறோம்.."

ஜெய்மிக்கோ ‘ கெடுத்தார்டா காரியத்தை, இவர் திருவாளர் அண்ணன்ன மீட் பண்றத அவாய்ட் பண்ணறதுக்குதான் இந்த பாலா போன பெர்ஃப்யூம் இவர்ட்ட தள்ளிட்டு கிளம்புறோம், அது தெரியாம இவர் வேற’ என தனக்குள் நொந்தாள், அவளுக்கு அல்லவா தெரியும் இன்று இன்னொரு முறை தாக்ஷியால் மதியனை சந்திக்க முடியாது என்பதும் உடைந்துவிடுவாள் என்பதும்,.. ‘ஆள விடுங்கடா சாமிகளா’ என தன் தோழிக்காக அவளே பேசினாள்..

"இல்லண்ணா நாங்க டின்னர் முடிச்சுட்டோம், எங்க பிரண்ட் பிரத்டே ட்ரீட்க்கு தான் வந்தோம், வெளிய அவங்கலாம் எங்களுக்காக வெய்ட் பண்றாங்க நாங்க கிளம்புறோம் " என அவன் அடுத்து பேசவே இடம் அளிக்காமல் தன் தோழியை இழுத்து கொண்டு சென்றுவிட்டாள்..


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி:love:


http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 4 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

அத்தியாயம் 6

சனிக்கிழமை - பகல் 11.40

நேற்று இரவு வந்து படுக்கையில் விழுந்தவள் தான், இன்னும் எழவில்லை தாக்ஷி.

அது ஒரு 3 பி.ஹச் குடியிருப்பு, ஜெய்மி தாக்ஷி ஒரு அறையை பகிர்ந்துகொள்ள மீதி நால்வரும் முறையே இரண்டு பேராக மற்ற இரண்டு அறையை எடுத்துக் கொண்டனர்.. சமைப்பதற்கு என்று அவர்களின் பெற்றோர்கள் ஜோதி அக்காவை உதவிக்கு அமர்த்தியிருந்தனர், சாப்பாட்டை பெரிதாக காரணம் காட்டியே கல்லூரி விடுதியை விட்டு வெளியே வந்ததால், தோழிகள் யாராலும் மறுக்க முடியவில்லை, இதில் ஜோதி அக்கா சமையல் வெகு அருமையாக இருந்ததே மிக முக்கிய பிரதானமான காரணம்..
அவரும் காலையில் சீக்கிரமே வருபவர் காலை, மதியம் என இருவேளைக்கும் சமைத்துவிட்டு மாலை வந்து இரவு உணவை செய்துவிடுவார். இவ்வாறே தோழிகள் அறுவரின் நலம்பாகம் தடையில்லாமல் நடைபெற்றன.

மற்ற நால்வரும் வார இறுதிநாளான இன்று தத்தம் வேலைகளுக்காக வெளியே சென்றிருக்க, தாக்ஷிக்கு உடம்பு சரியில்லை என இன்னும் ஏழாதவளை காரணம் காட்டி தங்கிவிட்டாள் ஜெய்மி.. தாக்ஷி திருமண பேச்சு தொடர்பான விசயமும் ஜெய்மி தவிர மற்ற தோழிகள் யாருக்கும் தெரியாததால் நேற்று நடந்ததும் அவர்கள் அறியவில்லை.. தாக்ஷிக்காக வெளியே செல்லாமல் இருந்துவிடலாம் என நினைத்த மற்ற தோழிகளிடமும்

“ ஜஸ்ட் ரெஸ்ட் எடுத்தா போதும் சரியாகிடுவா ” என்றும் தான் பார்த்து கொள்வதாகவும் கூறி அனுப்பிவைத்தாள், இருந்தும் இவ்வளவு நேரம் தூங்கும் தாக்ஷியை பார்த்துவிட்டே சென்றனர் மற்ற நால்வரும்.

ஜெய்மிக்கோ தூங்கி எழுந்து வரும் தோழி என்ன மாதிரி நடந்து கொள்வாளோ என்று எண்ணம் மிகுந்திருந்தது.. தாக்ஷி எழும் போது யாரும் இல்லாமல் இருப்பதே நல்லது என்று பட்டது ஜெய்மிக்கு..

வீட்டில் பார்த்த மணாளனையே காதல் கொள்ளலாம் என இனிதாக எண்ணம் கொண்டு, காதலை தொடங்கலாம் என்று அழகாக மலர காத்து கொண்டிருந்த தருணத்தில், ஒரே நொடியில் மலராமலே மொட்டிலே உதிர்ந்து போல் ஆகிவிட்டதே என தோழிக்காக அவளுக்குள் உழன்று கொண்டிருந்தாள் ஜெய்மி.

தாக்ஷி ஒரு நாளும் இவ்வளவு நேரம் தூங்கவும், வெளியே வராமலும் இருந்ததில்லை. அவள் தனியே கொஞ்சம் தெளிவு பெறட்டும் என்று விட்டது தனது தவறோ என பயந்தவள், இனியும் அவளை இப்படியே விடக்கூடாது என முடுவு செய்து உள்ளே செல்லும் முன் தாக்ஷியே வெளியே வந்தாள்..

தானாக அமைதியாய் வெளியே வந்த தாக்ஷியை அடுத்த என்ன என்று பார்த்துக்கொண்டிருந்தாள் ஜெய்மி கொஞ்சம் பயத்தோடு. சமையலறைக்குள் சென்ற தாக்ஷியோ வெளியே நின்ற ஜெய்மியிடம் திரும்ப வந்து

"ஜெய், எல்லாம் ஓவர் எதுவும் இல்லை… ஒன்னு கூட இல்லை,
லவ் பெஃய்லியர் ஆகிருக்கே அத கூட நினைச்சு பக்கமா
இப்படி மொத்தமா எல்லா பொங்கலையும் வடையும் மிச்சம் வைக்காம காலி பண்ணிருக்கற???? ..
அது என்ன ஒரே ஒரு வடை மட்டும் வச்சுருக்க அதுவும் முழுசா இல்லாம கோண மாணலா,
இது நியாமா ஜெய் சொல்லு நியாமா???!! "

அதை கேட்ட ஜெய்மியோ சம்மித்து விட்டாள்,
‘ஓவர் ஷாக்கில் ப்ரைன் எதுவும் டேமேஜ் ஆகிடுச்சோ ‘ என யோசித்தவள்,… அதன் பிறகு நடந்ததில் கொஞ்ச கொஞ்சமாக கோபத்தின் உச்சிக்கு சென்றாள் ஜெய்மி..

“எனக்கே லவ் பெஃய்லியர் காஃபி போட்டு கொடு ஜெய்”

“எனக்கே லவ் பெஃய்லியர் காஃபிக்கு பிஸ்கட் எடுத்துதா ஜெய்”,

“எனக்கே லவ் பெஃய்லியர் கொஞ்சம் பசிக்குது, வேற எதாவது சாப்பிட செய்ஞ்சு தாயேன் ஜெய்”,

“எனக்கே லவ் பெஃய்லியர் சாப்பாடு கொடுத்தியே தண்ணி கொடுத்தியா”,

“எனக்கே லவ் பெஃய்லியர் அந்த பஃன போடு ஜெய்,

“எனக்கே லவ் பெஃய்லியர் கொஞ்சம் இந்த ட்ரெஸ்ச மடிச்சு கொடேன் ஜெய்”, என இன்னும் தொடர்ந்து படுத்தி எடுத்து விட்டாள்.. ஒரு கட்டத்தில் அயர்ந்து நின்ற ஜெய்மிடம்

"என்ன ஜெய் பண்ண சொல்ற எனக்கே லவ் பெஃய்லியர்…..” என திரும்ப ஆரம்பித்தவிளிடம்

"செத்துடு……!!!!"

"ஹான்….. ஜெய்?? ”

“செ-த்-து-டு…”

“பாத்திய… எனக்கே லவ் பெஃய்லியர் அதான இப்படி சொல்ற," என திரும்பவும் ஆரம்பித்தவளை

"அட கொக்கமக்கா, செத்தடி நீ…. மவளே நேத்துல இருந்து நான் பயந்து பயந்து இருக்கேன்…. உன்ன என்ன பண்றேனு பாரு” என அவசரத்திற்கு உருட்டு கட்டை கிடைக்கதலால் பூரி கட்டையை தூக்கி கொண்டு துரத்தினாள்.

“அடிப்பாவி ஒரு லவ் பெஃய்லியர் பொண்ணுனு கூட பாவம் பாக்காம இப்படி கொல்ல துறத்துராலே” என ஓடியவள்

“ஜெய் நோ... நோ வயலன்ஸ்...”

“நீ ஒழுங்கா அங்கேயே நில்லு"

"மாட்டேன்….… நின்னு உன்கிட்ட அடிவாங்கவா போ,"

"சேதாரம் கம்மியா இருக்கணும்னா... நின்னுடு.."

"ம்ஹிம் மாட்டேன்.. நீ அந்த கட்டைய கீழ போடு"

"சான்ஸே இல்ல.. நேத்துல இருந்து சாப்பிடாம தூங்காம இருக்கேன், மவளே மாட்டுனடி "

"தூங்காம இருந்தேனு சொல்லு ஒதுக்கலாம்.. நீ சாப்பிடாம இருந்தனு சொன்ன இந்த உலகமே நின்றும் ஜெய்"

"அடங்குறாளா பாரு, இன்னைக்கு நைட்க்கு நீ தான்டி சட்னி” என அடுத்து அங்கு சில பல ரணகளங்கள் நடைபெற்றன .

சில நிமிடங்கள் பிறகு, ஓடி அடித்து பிடித்து அயர்ந்து அமர்ந்தனர் இருவரும்..

தன் அருகில் அமர்ந்து சிரித்து கொண்டிருந்த தாக்ஷியை அமைதியாக பார்த்த ஜெய்மி , தன் தோழியின் தோலை தொட்டு தன்புறம் திருப்பியவள்

"தாக்ஷி ஆர் யூ ஒகே?....”

தோலை லேசாக குலுக்கிய தாக்ஷியோ "ஐயாம் பெர்ஃபக்ட்லி ஆல் ரைட் மை லார்ட் "

"நான் ரொம்ப பயந்துட்டேன் தாக்ஷி"

"அடிப்பாவி உன் பிரண்ட் என்ன அவ்வளவு வீக்கா…,
நீ பெருசா பயந்தத பார்த்த சுசைட் அளவுக்கு யோசிச்சுட்டியோ "

"போடி குரங்கே அந்த அளவுக்குலாம் நீ போக மாட்டேன்னு தெரியும்,
இருந்தாலும் மனசு உடஞ்சு போய் கல்யாணமே வேணாம்,
நன்'னா போறேன்னு சொல்லிடுவியோனு தான்"

"அட மங்கி, எங்க குடும்ப ஜெனீரேஷன்ன என்னோடையே முடிக்க பாத்துருக்க"

"சேச் சே, அதான் அமுலியா இருக்கானே,
பயபுள்ள டஜன் கணக்கா சின்ன அமுலியாஸ்ச ரெடி பண்ணிடுவான்.."

"அடிங்க, உனக்கு நக்கலா போச்சு, சிக்குன மவளே நீ கைமா தான்" என இம்முறை மாறி துரத்த தொடங்கினர்...

“வேணாம் தாக்ஷி இன்னைக்கு நைட்டுக்கு சட்னி மட்டும் போதும்”
என கூறி தாக்ஷியின் துரத்தும் வேகத்தை மேலும் அதிகப் படுத்தினாள் .

திரும்ப மாற்றி மாற்றி ஓடி அடித்து கொண்டு ஒரு வழியாக ஓய்ந்து அமர்ந்தனர்..

ஒரு பெரிய பாரமே இறங்கியது போல் இருந்தது ஜெய்மிக்கு, எங்கே தன் தோழியை தொலைத்து விடுவோமோ என்று பயந்து அல்லவா இருந்தாள். இதோ இந்த நொடி தன் தோழியை அவளாகவே பார்க்கும் நொடி எவ்வளவு சுமைத்தணிவு என்பது ஜெய்மி மட்டுமே அறிந்தொன்று....
இன்னும் அவள் தெளிவு படுத்தி அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயம் இருந்தது.

ஜெய்மி அதிசயத்தே பார்த்துக்கொண்டிருந்தாள் அவளின் தாக்ஷியை..

"ஓய் என்ன அப்படி குரு குருனு பாக்குற " என புருவம் தூக்கி கேட்டவளிடம்

“மஹிம்.. “ ஒண்ணுமில்லை என்பதாக இடவலபுரமாக தலையாட்டினால் ஜெய்மி.

“ஒண்ணுமில்லன்னா… ஒகே...” என தலையாட்டி எழுந்தவளை கைபிடித்து திரும்ப உட்கார வைத்தாள் .

"தாக்ஷி…… ஸ்பீக் அவுட், வெளிய கொட்டிடு.. உனக்குளே வச்சுக்காதடி,
நா இல்லையா உனக்கு.., நேத்துல இருந்து நீ என்ன தள்ளி நிறுத்தற மாதிரி இருக்குடி,
நீ எந்த எந்த விஷயங்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு உன்ன விட எனக்கு தான் தெரியும் தாக்ஷி, உன்னக்குளே வச்சு மறுகாத தாக்ஷி "

அதை கேட்டு அமைதியாக சிரித்து கொண்டவள்
"இப்ப வேற என்ன ஜெய் பண்ணனும்ற, சோகமா…. ஒரு ஓரமா வானத்தையே இல்ல சீலிங்கயோ வெறிச்சு பார்த்து உட்காரவா முடியும்....
வருத்தம் இல்லைனு சொல்லமாட்டேன் பட் என்னால இத விட்டு வெளியே வரமுடியும், கண்டிப்பா வந்தடுவேன்”
என ஆசுவாசப்பட்டவள் தொடர்ந்தாள்

“யோசிச்சு பாரேன் ஜெய், இங்க நடுவில் போனது நான் தான்..
நல்ல வேல நா வந்தேன்னு கூட அவங்க தெரியாம இருக்கிறது தான் நல்லது..
இதுல நான் ஏமாந்தேனு சொல்லவும் முடியாது ஜெய்,
மதி மாமா என்ன என்னய ஏமாத்தவா செஞ்சாங்க, இல்லவே இல்ல …..

இப்ப யோசிச்சு பாக்கும் போது தான் புரியுது, பொங்கல் அப்போ ஊர்ல மாமாட்ட பேசிட்டு வந்து மின்னல் வந்துச்சு இடி வந்துச்சுன்னு உன்கிட்ட உளறிக்கிட்டு இருந்தேன் பாரு...
அவ்வளவு நேரம் ரோபோட்டிக் மோட்ல இருந்த மாமா நாம பிளேஸ் ஆன கம்பெனி பேர் மத்த டீடெயில்ஸ் சொல்லவும் தான் அப்படி ஒரு ரியாக்ஷன்க்கு மாறி நார்மல் ஆனாங்க,
அத என்னமோ நான் எனக்கானது எடுத்துகிட்டது என் தப்பு..”

ஜெய்மியும் நடுவில் குறுக்கிடாமல் அமைதியாக தன் தோழியையே கவனித்து கொண்டிருந்தாள்.

“ஹா ஹா….. ஜெய்…. அதே பார்வையை நேத்து ரெண்டு பேர் கிட்டயும் பார்த்தோமே..., ஹா ஹா “ என சிரித்தவள் தன்னுடன் சேர்ந்து சிரிக்காமல் அமைதியாக தன்னையே பார்த்த ஜெய்மியிடம்

"உள்ள சோகத்தை வச்சுக்கிட்டு வெளியே சிரிக்கிறியானு கேக்குற மாதிரி இருக்கே" என வினவினாள்.

மேலும் கீழும் இடது வலமுமாக எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள் ஜெய்மி.

தனக்காக ஜெய்மி மிகவும் வருந்தி குழம்பியுள்ளாள் என உணர்ந்த தாக்ஷி

"ஹே ஜெய், நிஜமாவே ஐம் ஆல் ரைட், அதுக்காக எனக்கு வருத்தமே இல்லனு இல்ல…. இருக்கு….,
தி சேம் டைம் அதுக்குள்ளயே மூழ்கவும் மாட்டேன்
தெரியாம நடுல போன நான் தெரியமையே வந்துட்டேன்,
எனக்கு யார் மேலயும் கோவமோ வருத்தமோ இல்ல “ என கூறி ஜெய்மியிடம் அருகே வந்தவள்.

“அண்ட் மை பெட்டர் சோல் நீ இருக்க,
நீ என் கூட இருக்கும்போது இதையும் தாண்டி நான் வந்திடுவேன் ஜெய்,
இல்லைனாலும் நீ என்ன அப்படியேவா விட்றுவ,
ஐ ஹவ் ஹோப் ஆன் யூ தென் மைசெல்ஃப்..” எனக் கூறி தன் ஜெய்மியை அணைத்து கொண்டாள்.

ஜெய்மிக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது, பல நேரங்களில் வார்த்தைகள் தர முடியாத ஆறுதலை மெண்மையான அணைப்பு அளித்துவிடும்..

நேற்று முதல் தன்னுளே கொண்டு குழப்பமுற்று, தாக்ஷியின் நேற்றைய திடீர் மாற்றம் கொண்ட நடவடிக்கைகளால் வருந்தி இதில் இருந்து தாக்ஷி எவ்வாறு மீண்டு வரப்போகிறாள் என தனக்குளே போட்டு உழன்று கொண்ட அழுத்தத்தில் இருந்த ஜெய்மிக்கு தன் தோழியின் அணைப்பு ஆறுதல் அளித்தது என்பது மிகையே.

இருவருக்குமே அந்த அணைப்பு அப்போது மிகவும் தேவையானதாக இருந்தது…….


இரவு பொழுது நெருங்குகையில் அவளின் அலைபேசியை தேடியவள்,
அது அணைத்து இருந்ததால் மின்விசை சேர்வி சேர்த்து உயிர்பித்தாள்..
வெள்ளி இரவு முதலே அலைபேசி அணைத்து இருந்தது, இப்போது தான் எடுத்து மின்விசை சேர்த்து உயிர்பித்தாள்..

அதில் முறையே 1, 6, 2 என அவளின் சித்தி, மேகனா, பிரபு அழைத்துருந்தார்கள்..
இதில் அவளின் வேணும்மாவிடம் பேசி விட்டாள், அவர் ஒரு முறை ஆகினும் மகள் எடுக்கவில்லையென்றால் அடுத்து ஜெய்மிக்கு அழைத்து மகளுடன் பேசி விடுவார்,
இப்போது கூட அவளது அலைபேசி அணைத்து இருப்பதாக அவர் சொன்ன பிறகே தேடி எடுத்து பார்த்து உயிர்ப்பித்தாள்..

மேகனா இவ்வளவு முறை அழைப்பது புதுமையை, ஆகவே முதலில் மேகனாவிற்கு அழைத்தாள்.

"ஹலோ... தாக்ஷி, ஆர் யூ ஓகே "

"ஹாய் மேக், போன் சுவிட்ச்டு ஆஃப், இப்ப தான் பார்த்தேன், நானும் ஓகே இப்ப போனும் ஓகே "

"ஹோ அப்படியாடா சரி சரி,,” என சிறிது இடைவெளி விட்டு
“தாக்ஷி ஒன் திங்…… உன்னால முடிஞ்சா இங்க வீட்டுக்கு வரியா?" என சிறிது தயக்கத்தோடு வினவினாள்.

"கண்டிப்பா மேக், வானு சொன்ன வரப்போறேன், அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை… எப்பனாலும் வர ஐயாம் ரெடி, எப்ப வரட்டும்?? " என்றாள், மோகனாவின் தயக்கத்தை உணர்ந்து கொண்டவள்.

"நீ எப்பனாலும் வா, யு ஆர் அல்மோஸ்ட் வெல்கம்"

"இப்படிலாம் சொல்லாதீங்க, அப்புறம் லஃன்ச்க்கு வந்துடுவேன்"

பக்கென சிரித்துவிட்டவள் " நோ பிராப்ளம் நீ வா "

"அதுல பாருங்க மேக் நமக்கு இந்த சண்டேலாம் நார்மல் சாப்பாடு ஒத்துக்காது, பிஃவர் வந்துடும்"

"ஹையோ போதும்டி, அடிக்கிட்டே போகாம நாளைக்கு வந்து சேறு உனக்காக லஃன்ச் ரெடியா இருக்கும்"

"ஆர். ஐ. பி மேக் வினையை லஞ்சக்கு குப்பிடுறீங்க…… அந்த கர்த்தர் உங்களை ரட்சிப்பராக, ஏசுவே காப்பாற்றுமைய்யா இந்த குழந்தையை"


என மேகனாவை இலகுவாக்கி அலைபேசியை அனைத்து வைத்தாள் தாக்ஷி நாளை என்ன வர போகிறதவென்று அறியாமல்……


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி:love:

http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 7 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.


அத்தியாயம் 7

வேளச்சேரியில் உள்ள மேகனாவின் வீட்டின் அழைப்பு மணி அடிக்கப்பட்ட விதத்திலே அது யார் என்று புரிந்தது மேகனாவிற்கு.

“ வரேன் வரேன் ” என குரல் கொடுத்தும் அழைப்பு மணி இன்னும் வித விதமான பண்பேற்றத்தில் பாடிக் கொண்டிருந்தது.


“ஹாய் மேக் “ என கதவை திறந்ததும் உள்ளே வந்தவள் மூச்சை உள்ளேயிலுத்து வாசம் பிடித்தாள் .

"வாவ் என்ன ஒரு வாசனை, அட.. அட... மேக் அதுக்குள்ள ஆர்டர் பண்ணி வாங்கி வச்சாச்சா, ஏதோ நான் கரெக்டா வந்துட்டேன்.. அதுனால ஓகே.. சூடு ஆறுறதுக்குள்ள சாப்பிற்றலாம், லேட்டா வந்தருந்தேனா என்ன ஆகுறது???, எதுக்கும் நான் வந்ததும் ஆர்டர் பண்ணிருக்கலாம் நீங்க"

"ஹலோ மேடம் செல்ஃப் குக்கிங்"

" ஓ காட், அப்போ ஆர்.ஐ.பி எனக்கா !!!!"

மேகனா இடுப்பில் கை வைத்து முறைக்கவும் " ஓகேய்…. சரண்டர் " என கையை தூக்கிய தாக்ஷி

“ஹே பிரியாணி நா வந்துட்டேன்” என உள்ளே செல்ல முயன்றவளை குளியலறை பக்கம் திருப்பிய மேகனா

"போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா, போ "

"மேக், நான் ஃப்ரஷ் ஆகி தான வந்திருக்கேன்"

"சரி அப்போ ரெஃப்ரஷ் ஆகிட்டு வா…போ”

“இதுலாம் கொடுமை மேக் " என்றவளுக்கு முறைப்பே பரிசாக கிடைத்தது..

“சரி சரி போறேன் போறேன்” என உள்ளே சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்தவள் பிரியாணியோடு ஐக்கியமாகிவிட்டாள் .

சாப்பாடு முடிந்ததும் நீள் சாய்விருக்கையில் நறுக்கப்பட்ட பழம் கலவைகளோடு அமர்ந்து வீட்டை சுற்றி பார்த்த தாக்ஷி

" வாவ்… மேக் ஒயிட் தீம்ல இன்டீரியர்… எப்படி மைய்டைன் பண்றீங்க இவ்வளவு பளிச்'னு… சூப்பர்…” என அவளின் வீட்டின் அழகை வியந்து கொண்டிருந்தாள்.. தனது வியப்புக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாததால் திரும்பி மேகனாவை பார்த்தாள்.

மேகனாவோ மிக தீவிரமாக தனது கிண்ணத்திலிருந்த பழவகைகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

" ஒய் மேக்…. என்ன அப்படி தேடுறீங்க, மே ஐ ஹெல்ப் யு…"

பெருமூச்சு விட்டு தலை ஆட்டி மென்மையாக புன்னகைத்து கொண்ட மேகனா
"நீ அன்னைக்கு என் பக்கத்தில இருக்கனும்னு நினைச்சேன் தாக்ஷி…. ஏன் சொல்லாம போயிட்ட"

இதற்கு தன்னால் இப்போது என்ன பதில் சொல்ல முடியும் என முழித்து கொண்டிருந்தாள் தாக்ஷி. அவளுக்கு சிரமம் கொடுக்காமல் மேகனாவே தொடர்ந்தாள்.

"தீப்தி சொன்ன, அவ தான் உன்னையும் ஜெய்மியையும் கூட்டிட்டு போனதா, அவளும் அவளோட ஸ்டுபிட் ஐடியாவும்……… ச்ச…………
அவ கூட்டிட்டு போனாலும் நீ என்ன விட்டு போகாம இருந்திருக்கலாம்……” என்றுவிட்டு தொடரந்தாள்

"இளமதியன் உன் ரிலேஷனா தாக்ஷி "

‘ஹான் என்னடா இது இதுக்கு மேல என்ன என்ன வருமோ’ என நினைத்து
"ஆ… ஆமா மேக் "

"ம்ம், அன்னைக்கு ஈவினிங் நீ என் பக்கத்துல இருக்கனும்னு தோனுச்சு,
யு ஆர் சம்திங் வெரி ஸ்பெஷல் டு மீ ,
நீ என் பக்கத்துல இருந்தா நா எனெர்ஜிடிக்கா ஃபீல் பண்றேன் தாக்ஷி."

“மேக் ரொம்ப ஓவரா இல்ல….. உங்க லவ்வரரரரர மீட் பண்ண என்னை துணைக்கு கூப்பிட்ற உங்கள என்ன சொல்றது, ….
நல்ல வேல உங்க பிரெண்ட் கரெக்ட்டா ரியாக்ட் செய்ஞ்சு எங்கள கிளீயர் பண்ணிருக்காங்க" என பேச்சை மாற்ற தாக்ஷி முயற்சிக்கவும்

"லவ்வர்சா... உலறாத தாக்ஷி " என பதில் கூறி தாக்ஷியை குழப்பினாள் மேகனா.

என்னடா இந்த மேக் இப்படி குழப்புறாங்க என நொந்த தாக்ஷி, ‘இப்படி பிட் பிட்டா சொன்ன சரியா வராது’ என முடிவுக்கு வந்தவள் மேகனாவை சாலட்டில் இருந்து தன் பக்கம் திருப்பியவள்.

"அன்னைக்கு இந்த ரெண்டு ஐஸ்லயும் பார்த்தேன் மேக் எவ்வளவு லவ் இருந்ததுனு, ப்ப்பா படத்துல கூட இந்த மாதிரி சீன் பாத்ததுல நானு, "

அதில் சிரித்து மீண்டவள் " சும்மா ஓட்டாத தாக்ஷி, வி ஆர் நாட் லவ்வர்ஸ்…… எனக்கும் ஷேர் பண்னனும் தாக்ஷி, யூ நோ… யூ ஆர் மை பெட்டர் சாய்ஸ் உன்னை விட்டா எனக்கு யாரும் இல்லை” என கிண்ணத்தை கீழே வைத்து விட்டு எழுந்து பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.

" இளமதியன், என்னோட காலேஜ் சீனியர்…
எனக்கு அவங்கள பிடிச்சது தாக்ஷி, தெளிவா சொல்லனும்னா எனக்கு மட்டும் தான் பிடிச்சது"

"மேக்… என்ன உனக்கு மட்டும்மா ?... ஆனா ..."

" ம்ம் எனக்கு மட்டும் தான்… காலேஜ்ல எல்லார்க்கும் இளமதியன் தான் ஐடியல் ஹீரோ அண்ட் என்னோட கைய்டரும் அவங்க தான்.
இளமதியன் இம்ப்ரெஸ்ட் மீ அலாட் தாக்ஷி, அவர் கண்ணுல எனக்கான பார்வையை உணர்ந்து தான் நான் ப்ரொபோஸ் பண்ணுனேன்”.

தாக்ஷியோ ,'எவ்வளவு நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே இருக்குறது, எனக்கும் எங்கோ லைட்டா வலிக்குதே, மேக் வேற வானத்தை வெறிச்சு வெறிச்சு பாத்திட்டு சொல்றதுக்குள்ள நான் ஒரு வலி ஆகிடுவேன் போல, இந்த லவ் பண்ணறவங்கலாம் அது ஏன் வானத்தையே வெறிச்சு பாக்குறாங்க,??’ என தனக்குளே கேள்விகள் கேட்டு தன்னில் உண்டான வலியில் இருந்து தன்னை தானே திசை திருப்பினாள். மெல்லிய வலி ஒன்று இடையேற முயற்சித்தாலும், ஒரு நொடியில் அதனை ஒதுக்கி மொத்தமாக மீண்டு வந்துவிட்டாள்.

“பதில் என்னவாயிருக்கும் தெரிஞ்சே தான் லவ் சொன்னேன்.. இளமதியன் ஒரு பக்கா பேமிலி ஓரியன்டட் பெர்ஸன்,,
என்னோட வீட்ல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லா தெரியும், அது இளமதியனுக்கும் தெரியும். அத சொல்லி தான் மறுத்தாங்க, அவர பொருத்த வரைக்கும் மேரெஜ்ன்னா அது இரண்டு குடும்பங்களோட பாண்டிங்… என் பேமிலி ஒத்துக்கமாட்டாங்கனும், இளமதியன் வீட்ல ஒத்துக்கிட்டாலும் இரண்டு குடும்பத்துக்கும் செட் ஆகாதுங்கிறது அவரோட ஒப்பீனியன் “

"ஆனா மேக், இந்த ரீசன்க்காகலாம் பிரேக் அப் ?????"

"நீ கேக்க வரனு புரியுது, அப்போ எனக்கும் கூட என் வீட்டை விட மதியன் தான் பெருசா தெரிஞ்சாங்க, ஆனா அதுக்கு இளமதியன் ஒரு அரை மணிநேரம் ஃபேமிலி வால்வியூ பத்தி பிரீ லெக்ச்சர் கொடுத்தது தான் மிச்சம், எனக்கான ஸ்பெஷல் அஃபக்ஷன் இருக்காம் ஆனா அது லவ் இல்லையாம்" என அன்று நடந்ததை நினைத்து இன்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

தாக்ஷிக்கு கடுப்பாக இருந்தது ‘சரியான லூசு மேக்… நீ வேல பாக்குற ஆஃபீஸ் பெயரை கேட்டதுக்கே ஐயா அப்டியே பறந்தாரு, அவர் லவ் இல்லனு சொன்னாங்களாம், அத நம்பிகிட்டு இத்தனை வருஷமா இருக்காங்கலாம்’ என நினைத்து கொண்டவள் அதை மேக்னாவிடம் கேட்டும் விட்டாள்.

" நானும் அதை ஃபீல் பண்ணினேன் தாக்ஷி, ஆனா அத லவ்னு ஒத்துக்கவோ சொல்லவோ மாட்டாங்க,..
ஆனாலும் ஏதோ ஒன்னு இத்தனை நாளா என்னை வெயிட் பண்ண வச்சது, அன்னைக்கு கூட அவர பாக்க போறேன்னு எனக்கு தெரியாது, திடிர்னு தீப்தி சொல்ற அங்க சீனியர்ஸ் கெட் டு கெதர் நடக்குது
அதுக்கு இளமதியனும் வந்துருக்காங்கனு,
அப்போ எனக்கு ரொம்ப படபடப்பா இருந்தது இளமதியன என்னால தைரியமா ஃபேஸ் பண்ண முடியுமானே தெரியல,
எனக்கு பிடிச்சுக்க கை தேவ பட்டது தாக்ஷி, அது உன்னோட கைனு மனசு சொன்னது.,"

இன்னும் ஏதோ மீதம் இருப்பதாகவே பட்டது தாக்ஷி.

" உப்ப்ப் எப்படியோ என்னோட வெயிட்டும் ஒரு முடிவுக்கு வந்துடுச்சு"

என்னவென்று கேள்வியாக பார்த்தவளிடம்

"யெஸ், இளமதியனுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்காம்… இப்போ இந்தியா வந்ததே அவரோட மேரேஜ்க்கு தான், மேரேஜ் முடிஞ்சது திரும்ப கனடா போற பிளானாம், பொண்ணு கூட அவங்க ரிலேடிவ்னு மதியே சொன்னாங்க,"

"என்ன ......" என மொத்தமாக அதிர்ந்து எழுந்து விட்டாள் தாக்ஷி..

*********************

வீட்டுக்கு திரும்ப வந்ததிலிருந்தே கோபத்தின் உச்சத்தில் இருந்தவள், அதை ஜெய்மியிடம் காட்டிக்கொண்டிருந்தாள்.

பொருத்து பார்த்த ஜெய்மியோ "மவளே என்னனு சொல்லிட்டு கத்து இல்ல மொத்தமா கிளோஸ் பண்ணிடுவேன்" என தாக்ஷியின் கழுத்தில் கைவைத்து நெறிப்பது போல் செய்தாள்.

ஜெய்மியின் கையை தட்டிவிட்டு "என்ன ஜெய் நினைச்சுகிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்.… இவங்க தியாகி பட்டம் வாங்க நான் தான் கிடைச்சேனா"

"இன்னும் நீ புரியுற மாதிரி சொல்லல, யார் அந்த இரண்டு பேரு "

"எல்லாம் மதி மாமாவும், மக்கு மேக்'கும் தான் "

"என்னடி சொல்ற?... .."

"ஆமா சொல்றாங்க இத விட தெளிவா.." என சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்.

"இந்த மதி மாமா என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க லவ் பண்ணுன சொல்லணும்…
ஆனா இவரு சொல்லவும் மாட்டாராம், லவ் சொன்ன பெண்ணையும் அட்வைஸ் பண்ணி ஓட விடுவாராம்……
ஆனா லுக் மட்டும் நல்லா விடுவாராம்,
அவருக்காக இவ்வளவு வருஷம் வெயிட் பண்ண பொண்ணகிட்ட போய் எனக்கு மேரேஜ் வந்துருனு இன்வைட்டும் பண்ணுவாராம்…..
ஜெய் அன்னைக்கு நம்மள வச்சுக்கிட்டே எப்படி பாத்தாரு மேக்'க, இதுல என்னய மேரேஜ் பண்ண போறேன்னு சொல்லிருக்காரு"

"ஹேய் உன்ன தான் மேரேஜ் பண்ண போறேன்னு மேகனாட்ட சொல்லிட்டாங்களா"

திரும்பி ஜெய்மியை பார்த்து முறைத்த தாக்ஷியிடம் " ஹி .. ஹி .. நீ தான் அவங்களுக்கு பாத்துருக்கிற பொண்ணுனு சொல்லிட்டாங்களானு கேக்கவந்தேன்"

"இல்ல ... ரிலேட்டிவ் பொண்னுனு தெரியும் மேக்'க்கு "

"என்ன தாண்டி நடந்துச்சு முழுசா சொல்லித்தொலை,….
இங்கயே இவ்வளவு பொங்குற, அங்க எவ்வளவு பொங்கிட்டு வந்தியோ "

***************

அங்கே மேகனா வீட்டில் அதிர்ச்சியில் எழுந்து விட்டவள்..
"மேக் நீ என்ன லூசா,
அவர் மேரேஜ்னு சொல்வாராம், இவங்க சரி சரினு மண்டை ஆட்டிட்டு வருவாங்கலாம், இன்விட்டேஷன் அனுப்ப சொல்லிட்டியா,
வந்ததும் போய் மொய் வச்சிட்டு நல்லா சாப்பிட்டுட்டு வா என்ன "
என பொரிந்தாள் .
 
Last edited:
Status
Not open for further replies.
Top