All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "கானல் நீரோ?? காதல் தேரோ??" கதை திரி...

Status
Not open for further replies.

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்,

இதோ அடுத்த கதையின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்.. சாதாரண காதல் கதை, என் எழுத்து நடையில்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்..

அடுத்த செய்வாய் கிழமை அன்று முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்.. வாரத்தில் செவ்வாய், மற்றும் சனி ஆகிய தினங்களில் அத்தியாயம் வந்து சேரும்..

நன்றி,
கிருநிசா:)

கதையிலிருந்து சிறு முன்னோட்டம் -

தன் கண்முன்னே முன்பை விட அதிக அழகுடன் அறிவை காட்டும் முகமும் நேர்கொண்ட பார்வையுமாய் சில்க் காட்டன் புடவை அணிந்து பின் தலையில் உயர்த்தி போட்ட கொண்டையுடன் கையெடுத்து கும்பிடும் தோற்றத்துடன் அமர்ந்திருந்த மனைவியை கண்ட விஷ்வஜித்திற்கு நீண்ட நெடிய தேடல் நிறைவிற்கு வந்திருந்தாலும் அவள் விழிகளில் இருந்த அந்நியத்தன்மையும் தன்னை சாதாரணமாகவும் தீண்டாத அவளின் பார்வையும் அவன் இன்னும் கஷ்டப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தியது..

இருந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் அருந்தத்தானே வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தவனுக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட மனமில்லாததால் விழியெடுக்காது மனைவியவளை பார்வையால் கபளீகரம் செய்தான்..

அவனதுஅந்த பார்வையை உணர்ந்தாலும் அதனை அலட்சியப்படுத்தியவள், அவனுடன் வந்திருந்த அவனது தாய், தந்தை, தமக்கை, தங்கை என பொதுவாக பார்த்து,

"இதில் என் விருப்பம்ன்னு எதுவும் இல்லை.. காதலிச்சவங்களோட எதிர்காலத்தை மட்டுமே பார்க்கணும்.. அதனால் மற்ற விஷயங்களை அம்மா கிட்ட பேசிக்கோங்க" என சொன்னவளின் தோழில் சாய்ந்த அவளின் தம்பி அர்ஜுன்,

"இந்தமாதிரி பிரிச்சு பார்க்காதைக்கா.. என் கல்யாணத்தில் நீ தான் முன்னாடி நிற்கணும்.. இதை நம்ம அம்மாவே மறுக்கமாட்டாங்க"என பாசத்துடன் கண்டித்தவனின் தலையை வாஞ்சையுடன் வருடி சிரித்தவளின் தலையை அவர்களின் தாய் வருடிக்கொடுத்தார்..

அவர்களின் பாசப்பிணைப்பை சில ஜோடி கண்கள் வெறுப்புடன் பார்த்திருந்தன.. அந்த கண்களுக்கு சொந்தக்காரர்கள் எதை எதையோ நினைத்து வந்திருக்க, இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.. எனவே வாய் இருந்தும் ஊமையாகி போயினர்..

"என்னம்மா அப்போ எல்லாம் பேசிடலாமா??" என தாயை பார்த்து கேட்க, அவளின் தோழில் இருந்து நிமிர்ந்த அர்ஜூன்,

"இருக்கா, நம்ம ஜூனியரும் வந்துடட்டும்.. இல்லைன்னா சார் என்னை விட்டிட்டு எல்லாம் பேசிட்டீங்களான்னு மூஞ்சிய தூக்கி வச்சுப்பார்" எனக்கூறி சிரிக்க, தானும் புன்னகைத்த மங்கை,

"ஆமா.. சார் குளிக்க போய் அரைமணிக்கு மேல ஆச்சு.. அவராக லேட் பண்ணினால் ஒண்ணுமில்லை.. ஆனால் நாம அவரை விட்டுட்டு ஏதும் பண்ணினால் பெரும் குற்றம் ஆகிடும்" எனவும்

"என்ன என் பேச்சு அடிபடுது" என்ற கணீர்குரலில் சத்தம் வந்த திசை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியது..

வீட்டினர் அவனை ரசிப்புடன் நோக்க, புதிதாய் அவனை பார்த்தவர்களுக்கு தான் பேரதிர்ச்சியாக இருந்தது..

அந்த பத்து வயதிலும் நல்ல உடற்கட்டுடன் கம்பீரமாக படிகளில் இறங்கி வந்து தன் முன்னால் நின்று அவன் சொன்னவற்றை கேட்டு, ஆணவனின் மனம் முழுவதும் பூகம்பம் வெடிக்க, தான் செய்த செயல் தன்னையே பலமாக தாக்கிய உணர்வில் கல்லாய் சமைந்து போனான்..
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்,

இதோ எனது இரண்டு கதைகள் அமேசானில் ப்ரீ கொடுத்திருக்கிறேன்..

நாளை (09.10.2022) மதியம் 1.30 முதல் அடுத்த நாள் (10.10.2022) மதியம் 1.29 வரை டவுன்லோட் செய்யலாம்..

டவுன்லோட் செய்து படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. மறக்காமல் உங்களால் முடிந்த ரேட்டிங்கை தட்டி விடுங்க😁😁🤭

நன்றி, கிருநிசா🙂

காதலின் அவஸ்தை -

காதலின் அவஸ்தை. (Tamil Edition) eBook : நிசா, கிரு: Amazon.in: Kindle Store

https://www.amazon.com/dp/B092HTQNCR
சொல்ல துடிக்குதடி எந்தன் உள்ளம் -

சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்... (Tamil Edition) eBook : நிசா, கிரு: Amazon.in: Kindle Store

https://www.amazon.com/dp/B086QNXGTS
என் அனைத்து கதைகளுக்குமான அமேசான் லிங்க் -

 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கானல் நீரோ?? காதல் தேரோ??



அத்தியாயம் 1



கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்



எனும் பாடல் பின்னணியில் ஒலிக்க, அந்த பிரம்மாண்டமான பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு தீபாராதனை காட்டி கடவுளை தொழுது முடித்துவிட்டு வெளியில் வந்த சௌந்தரிக்கு வயது நாற்பத்தைந்து..



ஆனால் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக, சாதாரண கைத்தறி புடவையும் தலையில் ஒரு கொண்டையுமாக எளிய தோற்றத்துடன் வலம் வருவார்.. தினமும் காலையில் எழுந்து பூஜை செய்வது அவரின் சிறுவயது முதல் வந்த பழக்கம்.. அந்த வீட்டில் கடவுள் பக்தி உள்ள ஒரே ஜீவன் என்றுகூட சொல்லலாம்..



நேராக சமையலறைக்கு சென்றவரின் வரவில் புன்னகைத்த வேலைக்காரர்களுக்கு புன்னகையுடன் தலையாட்டியவர்,



“சமையல் எல்லாம் தயாரா மாலதி??” என கேட்டார்..



“எல்லாம் ரெடியா இருக்குமா.. சின்ன தம்பி இன்னிக்கு ஸ்னாக்ஸ் மாதிரி கட்டி தர சொன்னார்.. அதுவும் தனியா ரெடி பண்ணிட்டோம்” என சொன்ன மாலதி, அந்த வீட்டில் சமையல் வேலை செய்பவள்.. அவளுக்கு துணையாக அவளின் தங்கை அமுதா.. கிளீனிங்கும் அவர்களே பார்ப்பதனால் வெளி வேலைக்கு ஒரு ஆண் மற்றும் பகல், இரவு காவலுக்கு இரு வாட்ச்மேன்கள் என அங்கு வேலை செய்பவர்கள் மொத்தமாகவே ஐந்து பேர் தான்.. நிறைய வேலைக்காரர்கள் சுற்றிக்கொண்டிருந்தால் சுதந்திரமாக இருக்க முடியாது என்பது அவர்களின் எண்ணம்..



அதுமட்டும் அல்லாமல் கிடைக்கும் நேரங்களில் சௌந்தரியோ மங்கையோ சமையல் செய்வதும் உண்டு.. அதிலும் ஞாயிறுகளில் மினி விருந்தே சமைத்து ஹோம் தியேட்டர் முன்னால் எல்லாவற்றையும் பரப்பி நிலத்தில் அமர்ந்து ஒருவரை ஒருவர் கேலி, கிண்டல் செய்து இடையிடையே டிவியில் ஓடும் படத்தை பார்த்தபடி உண்டு முடிப்பர்.. வாரம் முழுவதும் ஓடும் மங்கைக்கு அந்த நேரம் அவளின் மூளையின் சூட்டை விரட்டி அடிக்கும்.. அதை எண்ணிப்பார்த்தவர்,



“சரி.. அவங்க மூணு பேருக்கும் காபி கொண்டு போயாச்சா??” எனக் கேட்டார்..



“போய்டுச்சுமா”



“ஓகே.. டைம் ஆகுது, டிபனை டைனிங் டேபிளுக்கு எடுத்துட்டு போங்க” என அவர் சொன்னதும் ஹாட் பாக்ஸில் தயாராக வைத்திருந்த உணவுகளை எடுத்துக்கொண்டு அக்காவும் தங்கையும் சமையலறையை விட்டு வெளியேறி சற்று தள்ளி இருந்த டைனிங் டேபிளில் வைக்கவும் அவர்களின் பின்னால் வந்த சௌந்தரி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்..



“இன்னிக்கு உங்க பெரியய்யா முதன்முறையா ஆபீசுக்கு போறான்.. சுவீட் பண்ணினீங்களா??” என கேட்க, அவருக்கு அருகில் நின்றிருந்த அமுதா மேசையில் இருந்த செல்லோவை திறந்து காட்டி,



“அதை சீக்கிரமாவே பண்ணிட்டேன்மா.. அப்போதான் நீங்க சாப்பிடும்போது கரெக்டா இருக்கும்” எனவும் ஜீராவில் முக்குளித்த ரசகுல்லாவை திருப்தியுடன் பார்த்து தலையசைத்தவர், மாடிப்பக்கம் கேட்ட காலடி ஓசைகளில் முகம் மலர திரும்பினார்..



அங்கு பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் முதலில் வர, அவனை தொடர்ந்து இருபத்தொன்பது வயது மிக்க மங்கை ஒருத்தியும் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள்.. அவ்விருவரும் தன் வாழ்வில் வந்தபின்பு கிடைத்த எண்ணிலடங்கா சந்தோசத்தை எண்ணி பார்த்த சௌந்தரி, தன்னருகில் வந்த அவ்விருவரிடம்,



“வழக்கம் போல எந்திரிக்க லேட்டா அந்த சோம்பேறி??” என மகனை பற்றி கேட்க, இடுப்பில் கை வைத்து முறைத்த புவியரசு,



“மாம்ஸை எதுவும் சொல்லலைன்னா உங்களுக்கு பொழுது விடியாதா கிரானி??” என புருவம் உயர்த்தி கேட்டவனது பாவனையில் இதழ்களில் தானாக தோன்றிய புன்னகையுடன் நின்றிருந்த மகளை பார்த்த சௌந்தரி,



“பார்த்தியா மங்கை, அவனோட மாமனை நான் எதுவும் சொல்லக்கூடாதாம்.. அப்படி சொன்னால் துரை என்னை நிற்க வைத்து கேள்வி கேட்பாராம்” என புகார் வாசிக்க,



“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எதுக்கு இப்போ அம்மாகிட்ட குற்றப்பத்திரிகை வாசிக்கிறீங்க??” என புவியரசு கேட்டதற்கு மகளிடம் கண்ணை காட்டிவிட்டு,



“என்ன பண்ண, வயதில் பெரியவளா இருந்தும் பெத்த பிள்ளையை கண்டிக்க முடியாத மனக்குறையை உங்க அம்மாகிட்ட புலம்பி தீர்த்துக்கிறேன்” என பெருமூச்சு விட்டபடி சொன்னவரை ஏகத்திற்கும் முறைத்த புவியரசு,



“உங்க நடிப்பை ஸ்டாப் பண்ணுங்க, மாம்ஸ் இப்போ வந்துடுவார்” என சொல்லிவிட்டு இருக்கையில் அமர,



“என்னாது நடிப்பா??” என நெஞ்சில் கை வைத்து முகத்தினில் அதிர்ச்சியை காட்டி கேட்டவரை புவி அழுத்தமாக ஒரு பார்வை பார்க்கவும் நெஞ்சிலிருந்து கையை எடுத்ததோடு அத்தனை பல்லையும் காட்டி இளித்தவரின் செயலில் தனது தலையில் தட்டி கொண்டவன்,



“டிபன் வையுங்க அமுதாக்கா, அப்படியே மாம்ஸ்க்கும் பரிமாறுங்க” எனவும் அவர்கள் மூவருக்கும் இன்னொரு தட்டும் வைத்து மாலதியும் அமுதாவும் பரிமாற்ற, அவர்களின் பேச்சுக்கு காரணமான அர்ஜூன், ஷூவின் அழுத்தமான காலடி ஓசையுடன் அணிந்திருந்த சர்ட்டின் கைகளை மடித்து விட்டபடி அங்கு வந்து அனைவருக்கும் காலை வணக்கம் சொன்னபடி புவியின் அருகில் அமர்ந்தான்..



“இதோ மாம்ஸ் வந்துட்டார்.. இப்போ பேசுங்க கிரானி” என்ற புவியை கேள்வியாக நோக்கிய அர்ஜூன்,



“என்ன பேசணும், ஏதாவது முக்கிய விஷயமா அம்மா??” என உண்டபடி கேட்க, ‘இப்படி கோர்த்து விட்டுட்டியே பரட்டை’ என மனதுக்குள் முனகினாலும் முகத்தை சாதாரணமாக வைத்தபடி,



“அது ஒண்ணும் இல்லைடா.. ஆபீசுக்கு கிளம்ப டைம் ஆகுதே, இன்னும் உன்னை காணோமேன்னு கேட்டேன்” என சொல்ல,



“முக்கியமான கால்.. பேசிட்டு வரேன்” என சொன்ன அர்ஜூனை சுரண்டிய புவி,



“ஈவ்னிங் பார்ட்டி உண்டு தானே??” என கேட்க,



“ஹா ஹா.. எது எப்படியோ நீ கேட்டது நடக்கணும்.. போகலாம்டா.. ஆபீஸ் முடிஞ்சு வந்ததும் எல்லோரும் போகலாம்” என சொல்ல, அதுவரை அவர்களின் பேச்சை உள்வாங்கியபடி உண்டு கொண்டிருந்த மங்கை எனும் மங்கயற்கரசி,



“பர்ஸ்ட் டே ஆபீஸ் வர, வேலை எப்போ முடியுமோ.. நாளைக்கு போகலாமே??” என கேட்க,



“நம்ம ஆபீஸ் தானேக்கா, எந்த நேரம்னாலும் வந்துடலாமே??” என தமக்கையின் முகத்தை பார்த்து கேட்டவனை கண்டிப்புடன் நோக்கிய மங்கை,



“நம்ம ஆபீசுன்னாலும் அதில் நாமளும் வொர்க்கஸ் தான் அஜ்ஜூ.. அந்த நாளுக்குரிய வேலையை அன்னிக்கே முடிக்கணும்.. அப்போதான் தொழிலில் நாம் உயரத்திற்கு போகமுடியும்” என கண்டிப்பும் கராருமாக சொன்னவளை தொடர்ந்து,



“மம்மி சொல்லுறது கரெக்ட் தான் மாம்ஸ்.. நாம நாளைக்கு போகலாம்” என்ற புவி, கை கழுவ எழுந்து செல்ல,



“சரிக்கா, நீ சொன்ன மாதிரியே பண்ணுறேன்” என மாற்றுக்கருத்து இன்றி உடனேயே ஒத்துக்கொண்டான்..



“இப்போதானே தொழிலுக்குள் காலை வைக்கிற.. ஓரளவுக்கு அதில் உள்ள நெளிவு சுழிவு புரிஞ்சுடிச்சுன்னா எப்போ எதை பண்ணலாம் என்ற முடிவை உன்னாலும் எடுக்க முடியும்” என தம்பிக்கு தட்டி கொடுப்பது போல் சொன்னவளை பாசத்துடன் நோக்கிய அர்ஜூன்,



“உன்கிட்ட நான் நிறைய கத்துக்கணும்க்கா” என சொல்லிவிட்டு எழுந்து சென்றவனை தாயிடம் காட்டி சிரித்த மங்கை,



“மதியம் எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொடுத்து விடுங்கம்மா” என சொல்லிவிட்டு எழுந்த மங்கை, கையை கழுவிவிட்டு கீழ் தளத்தில் உள்ள ஆபீஸ் அறைக்குள் நுழைந்து தேவையான கோப்புகள், லாப்டாப் முதலியவற்றை எடுத்துக்கொண்டு வெளியில் வர, புவி தனது பள்ளி உபகரணங்களோடும் அர்ஜூன் கார் சாவியுடனும் இவளுக்காக காத்திருந்தனர்..



மூவரும் சௌந்தரியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தவர்கள், போர்ட்டிக்கோவில் நின்ற காரின் டிரைவர் சீட்டில் அர்ஜூனும் அவனருகில் மங்கையும் பின் சீட்டில் புவியும் அமர, வண்டியை எடுத்தான் அவன்..



முதலில் புவியை அவனது ஸ்கூலில் இறக்கி விட்டவர்கள், நேராக தங்கள் ஆபீஸ் வந்து சேர்ந்தனர்..



அந்த பிரம்மாண்டமான ஐந்து அடுக்கு கட்டடத்தின் முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்கிய அர்ஜுனை தொடர்ந்து இறங்கிய மங்கையின் உடல் மொழியில் ஒரு நிமிர்வும் முகத்தில் அழுத்தமும் வந்திருந்தது..



தமக்கையின் அந்த மாற்றத்தை கண்ணுற்ற அர்ஜூனுக்கு வியப்பாக இருந்தது.. வீட்டில் அவள் காட்டும் முகம் அவனுக்கு தெரியும்.. ஆனால் வெளியிடங்களில் முக்கியமாக, தங்கள் தொழிலை மேற்கொள்ளும் இடங்களில் அவள் காட்டும் இந்த முகத்தை பற்றி அவன் எங்கே அறிந்து வைத்திருந்தான்..



இதுநாள்வரை விளையாட்டு பிள்ளையாக, அப்பாவின் சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் இருக்கிறது.. அதனை திறம்பட நடத்த அக்கா இருக்கிறாள் எனும் மிதப்பில் ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக இருந்தவனுக்கு தங்களின் ஆரம்ப நிலை நன்கு தெரியும்..



அதன்பின்பு மங்கை தொழிலை கையில் எடுத்த அடுத்த சில வருடங்களில் சொத்து மதிப்பு அதிகரித்ததும் தெரியும்.. ஆனால் அதற்கான அவளது உழைப்பு, முயற்சி, கஷ்டங்கள் எவ்வளவு என்பதை அவன் உணராமல் இன்னும் சொல்லப்போனால் அதனை புரிந்து கொள்ள முயலாமல் இருந்திருக்கிறான் என்பதை எண்ணியவனுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது..



அதேவேளை தங்களின் நலனுக்காக இரவு, பகல் பாராது கஷ்டங்களை சொல்லிக் காட்டாது உழைத்த தமக்கையின் பாசத்தில் நெகிழ்ந்து போனவனுக்கு இனியாவது அவளுக்கு சற்று ஓய்வு கொடுப்பதோடு அவளின் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரவேண்டும் என்ற உத்வேகம் தோன்றியதில் தன்னாலேயே அவனின் உடலிலும் மனதிலும் ஒரு நிமிர்வு வந்து ஒட்டிக்கொள்ள, ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ச்சியாக பார்த்தபடி மங்கை அழைத்து சென்ற பக்கம் நடந்தவன், வழியில் தென்பட்டு காலை வணக்கம் சொன்ன ஊழியர்களுக்கு தமக்கையை தொடர்ந்து தானும் காலை வணக்கம் சொன்னவன், மங்கையுடன் எம்டி என பெயர் பலகை பொருத்தியிருந்த கதவை திறந்து உள்ளே சென்ற அர்ஜூன், அங்கு கண்ட காட்சியில் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்..



இருக்கைக்கு அருகில் சென்றதும் தான் தன் பின்னே அர்ஜூன் வராததையும் முகம் கலங்க நின்றிருப்பதையும் கண்டு கொண்ட மங்கை, கையில் இருந்தவற்றை அப்படியே மேசையில் போட்டுவிட்டு விரைந்து அவனருகில் சென்று தோளில் கை வைத்தவள்,



“என்னாச்சு அஜ்ஜூ??” என பதறிப்போய் கேட்டதில் தன்னிலைக்கு வந்த அர்ஜூன்,



”என்னக்கா இதெல்லாம்??” என குரல் கரகரக்க கேட்க, முகத்தினில் குழப்ப ரேகைகள் தோன்ற,



“எதை சொல்லுற??” என கேட்டாள் மங்கை.. அதற்கு மேசை பக்கம் கையை காட்டி,



“இத்தனை வருஷம் இந்த கம்பெனியை பார்த்து டாப் லெவலுக்கு கொண்டு வந்தது நீ.. அப்படிப்பட்ட உனக்கு ஆக்டிங் எம்டி பதவி, இந்த கம்பெனிக்காக ஒரு துரும்பைக்கூட எடுத்து போடாத நான் எம்டியா?? இதெல்லாம் அநியாயம்க்கா” என மேசைமேல் இருந்த நேம் போர்ட்டுக்கள் மட்டும் அல்லாமல் எம்டிக்குரிய சீட்டில் அதற்கான ஆள் இல்லை என்பதை அறிவுறுத்தும் வகையில் துண்டு போடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி அழுவாரம் போல சொன்னவன், அவளின் கண்களுக்கு குழந்தையாகவே தெரிந்தான்..



“இதுல பீல் பண்ண என்ன இருக்கு அஜ்ஜூ?? இந்த கம்பெனி உனக்குரியது.. நீ வரும் வரை நான் பார்த்துக்கிட்டேன்; அவ்வளவு தான்” என தன்மையாக சொன்ன மங்கையை அறியாத சிறுவன் போல நோக்கி,



“இருந்தாலும்.......” என இழுக்கவும் நேரமாவதை உணர்ந்த மங்கை,



“நான் எம்டியா இருக்கலைன்னாலும் இத்தனை வருஷம் நான் தானே முடிவுகளை எடுத்தேன்.. அப்புறம் நமக்கு இன்னும் நிறைய தொழில் இருக்குங்கிறதை மறக்காதே..!! அவை எல்லாவற்றுக்கும் நான் தானே எம்டி” என கண்டிப்புடன் எடுத்து சொன்னவள்,



“அதனால உன் பீலிங்கை தூக்கி கிடப்பில் போட்டுட்டு வந்த வேலையை பார்க்குறியா?? இது ஆபீஸ்.. இங்கே நம் சொந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க கூடாது.. அப்படி கொடுத்தோம்னு வச்சுக்கோ அடுத்தவங்க நம்மளை ஏறி மிதிச்சுட்டு போயிடுவாங்க.. அதனால் முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க பழகிக்கோ தம்பி பையா” என கூறி முடிக்க, சற்று தெளிந்த மனதுடன் முகத்தை சாதாரணமாக வைத்தபடி,



“இப்போ என்ன பண்ணணும்க்கா??” என கேட்டான்.. அவன் முகத்தை வைத்தே தான் சொன்னவற்றை சரியான விதத்தில் புரிந்து கொண்டான் என்பதை உணர்ந்தவளாக,



“குட்.. நேற்று உன் மெயிலுக்கு அனுப்பின டீடெயில்ஸ் படிச்சு பார்த்துட்டியா??” என கேட்டவாறே அவனை எம்டி சீட்டில் அமர வைத்தவள், அடுத்த இருக்கையில் தானும் அமர்ந்து கொண்டாள்..



“படிச்சுட்டேன்க்கா”



“அதில் ஏதாவது டவுட் இருக்கா??”



“இல்லக்கா.. ஒவ்வொரு சின்ன விஷயத்தைக்கூட தெளிவா புரியும்படியா கொடுத்திருக்க.. அன்ட் உன் ஒவ்வொரு ஐடியாவும் மார்வலஸ்” என வியந்து கூறியவனின் பாராட்டை சிறு புன்னகையுடனான தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டவள், தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த சில கோப்புக்களை அவன் பக்கம் நகர்த்தி,



“இதையும் கொஞ்சம் பார்த்துடு.. பத்து மணி போல் மீட்டிங் இருக்கு.. அப்போ உன் பக்க கருத்தை சொல்ல ஈசியா இருக்கும்” என சொல்ல, “சரிக்கா” என்றவாறே அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து படிக்க ஆரம்பித்தவனை புன்னகையுடன் பார்த்துவிட்டு மேசையின் ஒரு ஓரமாக இருந்த இன்டர்காமில் சில எண்களை தட்டி அதன் ரிசீவரை காதில் வைத்தாள்.. எதிர்ப்பக்கம் அழைப்பை ஏற்றதும் “என் கபினுக்கு வாங்க அசோக்” என கூறிவிட்டு வைத்தவள், லாப்டாப்பை எடுத்து அன்றைய ஏற்றுமதி விபரங்களை பார்த்து குறிப்பெடுக்க தொடங்கினாள்..



சில நிமிடங்களில் காபின் கதவை தட்டி, “மே ஐ கமின் மேம்” என்ற விழிப்பில் வேலையை நிறுத்தி, “உள்ளே வாங்க அசோக்” என குரல் கொடுத்தாள் மங்கை.. அதில் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த அசோக்,



“குட் மார்னிங் மேம்.. குட் மார்னிங் சார்” என சொன்னவனுக்கு தாங்களும் காலை வணக்கத்தை உரைத்ததும்,



“மீட்டிங் அரேன்ஞ் பண்ணிட்டிங்களா அசோக்??” என கேட்டாள் மங்கை..



“பண்ணிட்டேன் மேம்”



“ஓகே.. இன்னிக்கு அனுப்பவேண்டிய லோடிங் எந்த நிலையில் இருக்கு??” என கேட்டதற்கு அசோக்கிடம் இருந்து பதில் வராமல் போனதில் கூர்மையுடன் அவனை நோக்கிய மங்கை,



“என்ன பதிலை காணலை.. பதில் தெரியலையா??” என அழுத்தமாக கேட்க,



“அது.. வந்து மேம்..” என அவன் தடுமாற,



“இழுக்காமல் பதில் சொல்லுங்க அசோக்.. வொர்க்கர்ஸ் பிரச்சனை பண்ணுறாங்களா??” என சரியாக கேட்ட மங்கையை வியந்து பார்த்தவனுக்கு தன் எஜமானி மீதான மரியாதையும் பிரமிப்பும் அதிகரிக்க,



“ஆமாம் மேம்.. இந்த மாதம் வொர்க் அதிகம் என்றதால சம்பளத்தை கூட்ட சொல்லி நிக்கிறாங்க மேம்.. அதில் சிலர் வேலை பார்க்காமல் உட்கார்ந்து இருக்காங்க” என சொல்லவும் அவளின் முகத்தினில் கடுமை தோன்ற, கையில் இருந்த வாட்ச்சில் நேரத்தை பார்த்தவள்,



“மீட்டிங்குக்கு டைம் ஆகிடிச்சு அசோக்.. ஜூனியன் லீடரையும் அங்கே வர சொல்லுங்க.. அத்தோடு இந்த வருஷத்திற்குரிய ஏற்றுமதி, தொழிலாளர்களுக்குரிய சம்பள பட்டியல் டீடெயிலை பைலா ரெடி பண்ணி கொண்டு வாங்க.. கம் பாஸ்ட்” என உத்தரவிட்டு அனுப்பியவள், சில ஃபைல்களை கையில் எடுத்து கொண்டு இருக்கையை விட்டு எழ, அர்ஜூனும் நேர அவகாசத்தை உணர்ந்தவனாக தமக்கை சொல்லும் முன்பே எழுந்து கொண்டான்..



இருவரும் மீட்டிங் நடக்கும் ஹாலுக்குள் நுழைய, அந்த கம்பெனியின் முக்கிய பதவி வகிப்பவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய, “சிட்” என உரைத்தவாறே தனக்குரிய இருக்கையில் அமர்ந்து தனக்கு அருகில் அர்ஜூனையும் அமர வைத்தவள், கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஜூனியன் லீடரை ஆராய்சி பார்வை பார்த்தவாறு அசோக்கிடமிருந்து பைலை வாங்கி பிரித்து கண்களை ஒட்டியவள், கைகளை மேசை மேல் வைத்துவிட்டு,



“உட்காருங்க மிஸ்டர் அய்யாச்சாமி” என சொல்ல, அவரும் அதனை ஏற்று இருக்கையில் அமர்ந்து கொண்டார்..



“என்ன பிரச்சனை??” என குத்தீட்டியாக வந்த கேள்வியில் இருக்கையில் அசௌகரியமாக நெளிந்தவரால் சட்டென்று பதில் கூற முடியவில்லை.. ஏனெனில் தொழிலாளர்களை தூண்டிவிட்டு தனக்கு ஆதாயம் பார்க்க நினைத்தவரே அவர்தான் என்பதனை அசோக் கொடுத்த பைலில் அவன் வைத்திருந்த துண்டு சீட்டின் மூலம் அறிந்ததில் அவ்வாறு கேட்டிருந்தாள்.. நேரம் சிறிது கடந்தும் வாயை திறக்காமல் அமர்ந்திருந்தவரை வேடிக்கை பார்த்த மங்கை,



“சோ உங்க கிட்ட இதற்கான பதில் இல்லை.. அப்படித்தானே??” என கேட்க,



“இருக்கு மேடம்.. வொர்க்கர்ஸ் சம்பளத்தை அதிகரிக்க சொல்லி கேட்கிறாங்க” எங்கே தன் அமைதியை வைத்து எதனையும் செய்யாமல் விட்டிடுவார்களோ என அவசரமாக பதில் சொன்னவரை உறுத்து விழித்தவள்,



“வொர்க்கர்சா கேட்கிறாங்களா இல்லை உங்க ஆசைக்காக அவங்க கேட்கிறாங்களா??” என அழுத்தமாய் வந்த கேள்வியில் அதிர்ந்து நோக்கியவரை கண்டிப்புடன் நோக்கிய மங்கை,



“தொழிலாளிங்க ஒற்றுமையா இருந்தால் தான் முதலாளிங்க வளரமுடியும்.. அப்போதான் தொழிலாளிங்களுக்கான ஊதியத்தை கை நிறைய கொடுக்க முடியும்.. உங்க ஆசையால் நியாய உள்ளம் கொண்டவங்க கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க.. இது பெரிய பிரச்சனையா மாறினால் யாருக்கு நஷ்டம்??” என காரமாகவே கேட்டவள்,

“அக்டோபர் மாதம் எத்தனை லோட் போனதுன்னு சொல்லுங்க??” என கேட்க, அதற்கான பதிலை அவர் சொன்னதும் தீர்க்கமாக நோக்கியவள்,



“சோ இந்த மாதம் போன லோடில் கால்வாசிகூட இல்லை.. அப்படித்தானே??” என கேட்க, அவரும் ஆமோதிப்பாக தலையசைத்தார்..



“அப்போ அந்த மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினீங்க??” என கேட்கவும் மங்கையின் இத்தனை கேள்விகள் எதற்காக என்பது புரிய தலை குனிந்து கொண்டவருக்கு பேச்சே வரவில்லை..



“நீங்க இந்த ஒரு மாதத்தை வைத்து அதற்கு கூலி கேட்கறீங்க.. ஆனால் எல்லா மாதமும் இப்படி இருக்கும்ன்னு எந்த உத்தரவாதமும் கிடையாது.. அப்படி இருக்கும்போது மாதாமாதம் லோட் கணக்கை வைத்து கூலி கொடுக்கிறதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. உங்களுக்கு தான் அதனால் கஷ்டம்.. யோசிச்சு முடிவு சொல்லுங்க” என அவள் சொல்லி முடிக்க,



“மன்னிச்சுக்கோங்க மேடம்.. இனிமேல் இந்த தப்பு நடக்காது” என குற்றவுணர்வுடன் சொன்னவரை அழுத்தமாக நோக்கி,



“ஜாதி, மதம் பார்க்காமல் வருஷத்தில் வரும் எந்த பண்டிகைன்னாலும் போனஸ் கிடைக்குது.. அப்புறம் ஏன் இந்த வேலை?? தனிப்பட்ட பிரச்சனை ஏதும் இருந்தால் எங்கிட்ட சொன்னால் அதற்கான தீர்வு உங்களுக்கு கிடைக்கும்” என வாக்கு கொடுத்து அனுப்பியவிட்டு எழுந்து நின்று பேச ஆரம்பித்தாள்..



“ஹாய் பிரெண்ட்ஸ், இனிமேல் உங்க எம்டி என் தம்பி மிஸ்டர் அர்ஜூன் தான்.. புதிதாக கம்பனிக்கு வேலைக்கு வரவங்களுக்கு அந்தந்த ஸ்டேஜூக்கு ஏற்றமாதிரி டிரெயினிங் கொடுக்கிற மாதிரி, எம்டியா இவர் பதவி ஏற்பதற்கு முன்னாடி ஒரு ஆறு மாதம் அவருக்கான டிரெயினிங்கில் இருப்பார்.. அதில் உங்களின் பங்கு அதிகமாக தேவைப்படும்.. சோ கால நேரம் பார்க்காமல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும்ன்னு கேட்டுக்கிறேன்” என சொல்லி முடிக்கவும் எல்லோரும் அர்ஜூனுக்கு வாழ்த்து சொல்லி தங்களால் முடிந்ததை செய்கிறோம் என உறுதி கூறவும் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு சில அடுத்த கட்ட வேலைகளுக்கான முடிவுகளை அவர்களுக்கு தெரியப்படுத்தி, அதற்கு அவர்களின் கருத்துக்களை கேட்டு மேலும் சில நிமிடங்கள் நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து அன்றைய நாளில் அர்ஜூனுக்கு தேவையான தகவல்களை கொடுப்பதும் அன்றைய நாளுக்கான வேலைகளை பார்ப்பதுமென நேரம் கடந்தது..



**************



முதலில் எடுத்த முடிவின்படி அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாதலால் மதியமளவில் புகழ்பெற்ற ஹோட்டலுக்கு சென்று செலிபிரேட் செய்தவர்கள், பின் சில பொருட்கள் வாங்கவேண்டும் என மங்கை சொன்னதன்பேரில் அருகில் இருந்த மாலுக்கு சென்றனர்..



அங்கு ஒரு பக்கமாக இருந்த பெண்களுக்குரிய பொருட்களை பார்வையிட்டு கொண்டிருந்த மங்கை, “நீயா??” என்ற கேள்வியில் அக்குரலை இனங்கண்டு கொண்டவளின் உடல் நாணென நிமிர்ந்து இறுக, முகத்திலும் எந்த உணர்வையும் காட்டாது மெல்ல திரும்பினாள்..


தொடரும்...


 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்,

இதோ கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி,
கிருநிசா.

உங்கள் கருத்துக்களை பகிர,

 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த அத்தியாயத்தில் இருந்து சிறு முன்னோட்டம்..


“என் கடந்தகால குப்பைங்க” என வெறுத்த குரலில் சொல்லவும் அவனுக்கு அது யார் என்பது தெரிந்து போனது.. ஆனால் கேட்டிருந்த பெண்களுக்கு அது அவ்வளவு உவப்பானதாக இல்லை போலும்..



“யாரை பார்த்து குப்பைன்ன??” என கிரீச்சிட்டபடி மங்கையை அடிக்க கையை ஓங்கி கொண்டுவந்த அந்த இளம்பெண்ணின் கையை சட்டென்று தடுத்து பிடித்தவள்,



“நான் அங்கே இருந்து வந்ததும் முதலில் கற்றுக்கிட்டது கராத்தே தான்.. அதில் உள்ள நெளிவு சுழிவுகளை காட்டினால் உன் உடம்பு தாங்காது.. பாவம் கல்யாணம் ஆகவேண்டிய பொண்ணு” என வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து இதழ்களில் நக்கல் புன்னகை தவழ, கையை முறுக்கியதில் அந்த பெண் வலி பொறுக்க முடியாமல் கையை இழுத்தபடி, “ஆ.. ஆ.. விடு என்னை” என அலற, மனம் பொறுக்காமல் அவர்கள் அருகில் வந்து மகளின் கையை விடுவிக்க ஆனமட்டும் முயன்றவரால் மங்கையின் வலுவான பிடியில் இருந்து ஒரு இன்ச் கூட அசைக்க முடியவில்லை.. வலியில் முகமெல்லாம் சிவந்து கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிய நின்றிருந்த மகளின் தோற்றத்தை தாங்க முடியாது,



“இனி உன் வழிக்கே நாங்க வரமாட்டோம்.. என் பொண்ணை விட்டுடு” என கெஞ்ச, அப்பொழுது அவர்கள் செய்தவற்றை எண்ணி அவளின் கோபம் மட்டுப்பட மறுத்தது.. ஆனால் இருக்கும் இடமும் சூழலும் இப்படி ஒரு காட்சியை பகிரங்க படுத்தினால் இதுவரை சேர்த்த பெயர் கெட்டுவிடும் எனும் நோக்கத்தில் தன் பிடியை தளர்த்தியவள்,



“உங்க கெஞ்சலுக்கோ இல்லை பயந்தோ நான் இப்போ விட்டுட்டு போகலை.. உங்களை மாதிரி சாக்கடைங்களை தொட்டு என் கையை மென்மேலும் கறையாக்க விரும்பல.. இனி என் வாழ்க்கையில் எங்கேயாவது உங்களை பார்த்தேன்.. அவ்வளவுதான்” என விரல் நீட்டி எச்சரித்தவள், மீண்டும் டிராக் பக்கம் திரும்பி தனக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு அர்ஜூன், புவியை பார்த்து போகலாம் என்பது போல் கண்காட்டி அங்கிருந்து அழைத்து செல்ல, ஒன்றும் செய்யமுடியாத நிலையை வெறுத்ததோடு மங்கையை நிம்மதி இழக்க செய்யவேண்டும் என்ற வெஞ்சினத்தோடு நோக்கினர் அந்த தாயும் மகளும்..
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2



சௌந்தரி தன்னால் அவ்வளவு தூரம் நடந்து வரமுடியாது எனக்கூறி காரில் அமர்ந்து கொள்ள, மற்ற மூவரும் உள்ளே சென்றனர்.. மங்கை அவள் உபயோகிக்கும் பேஸ் கிரீம் முடிவடையும் நிலைக்கு வருவதனால் முன்னேற்பாடாக யோசித்து வாங்க வந்திருந்தாள்.. அவை இருந்த டிராக்கில் இருந்ததை எடுத்து கொண்டிருந்தவள், திடீரென வந்த கேள்வியில் அது கடந்த காலத்தின் சுவடு என்பதை உணர்ந்தவளாக திரும்பினாள்..



“என்ன மினுக்கு, என்ன தலுக்கு?? அதற்கிடையில் வேறு ஆம்பளைய பிடிச்சுட்டியா?? ஹான்.. நான் ஒரு பைத்தியம்.. நீ முன்னாடி இருந்த நிலையை மறந்துட்டு பேசுறேன் பாரு” என முகவாயில் கை வைத்து எகத்தாளமாக கேட்ட அந்த பருத்த உடல் கொண்ட பெண்மணியையும் அவர் அருகில் தன்னை திமிராக பார்த்தபடி நின்ற மகளையும் அழுத்தமாக நோக்கியபடி அவள் நிற்க, அவளின் தோற்றத்திலேயே வயிறு எரிந்தவருக்கு தான் இவ்வளவு பேசியும் அவள் அமைதியாக நின்றது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் இருக்க, வார்த்தைகள் நிதானமின்றி தாறுமாறாக வரத்தொடங்கியது..



“பெண் இனத்துக்கே நீ கேவலம்.. உடம்பை விற்று பிழைப்பு நடத்துகிற நீ எல்லாம் ஒரு குடும்பஸ்திரியா?? அந்த ஒருநாளில் உன்னை வெளியில் விடாமல் ஒரு ஆறு மாசமாவது லாக்கப்பில் வைத்திருந்திருக்கணும்” என நீட்டி முழங்கியவரின் முன்னால் நிதானமாக சென்று நின்றவளின் கை, அடுத்த நொடி இதுவரை இழிவாக பேசியவரின் கன்னத்தை நன்கு பதம் பார்த்தது..



அதில் உதடு வெடித்து இரத்தம் வழிய, சில கணங்கள் தலை சுற்றி போனது அந்த பெண்மணிக்கு.. தின்று தின்று உடலை வளர்த்திருந்தவர், வேலை என்று ஒரு துரும்பைக்கூட எடுத்து போட்டதில்லை.. எனவே வலுவுடன் இருந்த மங்கை கொடுத்த அடியை தாங்க முடியாது கண்களில் பூச்சி பறக்க, சற்று சமாளித்து நிமிர,



“கொன்னு புதைச்சிடுவேன் ராஸ்கல்.. யாரை பார்த்து பொண்ணான்னு கேட்ட?? அன்னிக்கு என்ன நடந்ததுன்னு தெரிய வேண்டியவங்களுக்கு நல்லாவே தெரியும்.. உன் சாக்கடை வாயால் என் நடத்தையை பற்றி சொன்னால் அது உண்மை ஆகிடுமா??” என அளவில்லா ஆத்திரத்தில் உடல் நடுங்க, விழிகளில் ரௌத்திரம் மின்ன விரல் நீட்டி எச்சரித்தவளை அடிபட்ட கன்னத்தை பற்றியபடி குரோதத்துடன் பார்த்தவரை அலட்சியப்படுத்தியவள்,



“கல்யாணமான ஆணின் பின்னால் அவனை கவர அரைகுறை உடையோடு அலையிறது மட்டும் உத்தம செயலோ??” என ஆச்சரியம் காட்டி கேட்க, தாய், மகள் இருவரின் முகமும் கறுத்து சிறுத்து போனது.. அதை வெகு சுவாரசியமாக அவள் பார்த்திருந்த வேளை, எதனையோ பேசி கலகலத்து சிரித்தபடி வந்த அர்ஜூனையும் புவியையும் கண்டு தானாக முகம் மலர்ந்தவளின் அருகில் வந்து,



“உனக்கு வேண்டியதை எடுத்துட்டியா??” என கேட்க,



“இன்னும் இல்லை” என சொன்னவளை ஆச்சரியமாக நோக்கி,



“என்ன, ஒண்ணும் எடுக்கலையா?? அப்போ இவ்வளவு நேரமும் என்ன பண்ணின??” என கேட்டதற்கு பதில் சொல்லாமல் தன் முன்பு நின்றிருந்தவர்களை திரும்பி நோக்கியவளின் பார்வை சென்ற திக்கில் தானும் திரும்பியவன், அங்கு நின்றிருந்தவர்களை புருவம் நெரிய நோக்கியவன்,



“யார் இவங்க??” என கேட்க, அவள் முகத்தினில் ஒவ்வாத தன்மையும் ஒருவித இறுக்கமும் வந்திருந்தது..



அதுவரை அவர்களின் உரையாடலை வெஞ்சினத்துடன் நோக்கியபடி நின்றிருந்த தாய்க்கும் மகளுக்கும் மங்கையை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில் ஒருவரை ஒருவர் நோக்கிவிட்டு அர்ஜூன் யார் என்பதையோ, புவி யார் என்பதையோ அவர்களுக்கான உறவு என்ன என்பதையோ அறியாததோடு அவள் வாய் திறந்து தங்களை பற்றி சொல்லாமல் நின்றதில் கடந்தகாலத்தை பற்றி மறைக்க நினைக்கிறாள் என நினைத்து ‘செத்தடி நீ’ என கறுவியபடி,



“நான் சொல்லவா தம்பி??” என கேட்டவரை கூர்ந்து நோக்கியவனுக்கு அவரின் கன்னத்தில் இருந்த விரல் தடமும் மங்கையின் முகத்தில் இருந்த கோபமும் தாங்கள் வருவதற்கு முன்பு எதுவோ நடந்திருக்கிறது என்பதை அறிவுறுத்த,



“எங்க சொல்லுங்க பார்ப்போம்” என இடக்காக கேட்க, அவன் குரலின் வேறுபாட்டை உணராமால் அவளை பற்றி சொல்லிவிடவேண்டும் என்ற வேகத்தோடு,



“பத்து வருஷத்துக்கு முன்னாடி உன் பொண்டாட்டி போலிஸ் ஸ்டேசனில் இருந்தாள், அதற்கான காரணத்தை சொன்னாளா?? அப்படி சொல்லியிருந்தால் நாங்க யாருன்னு உனக்கு தெரிந்திருக்கும்” என பல்லை காட்டி சொன்னவரின் கண்கள் குரூரத்தோடு பளபளத்ததை கண்ணுற்றவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வர,



“யாருக்கா இதுங்க?? கண்டபடி பேசுற இந்த வாய்க்கு நீ கொடுத்த ஒரு அறை போதாது.. இப்படி பேசுற நாக்கை அறுத்து கையில் கொடுக்கணும்” என பல்லை கடித்து கேட்க, தாய் மகளின் ‘அக்காவா??’ விழிகள் தெறித்து விடுவதுபோல் முகத்தை வைத்து அதிர்ந்த குரலை அலட்சியப்படுத்தி தமக்கையின் பதிலுக்காக அவளின் முகத்தை பார்த்தான்..



“என் கடந்தகால குப்பைங்க” என வெறுத்த குரலில் சொல்லவும் அவனுக்கு அது யார் என்பது தெரிந்து போனது.. ஆனால் கேட்டிருந்த பெண்களுக்கு அது அவ்வளவு உவப்பானதாக இல்லை போலும்..



“யாரை பார்த்து குப்பைன்ன??” என கிரீச்சிட்டபடி மங்கையை அடிக்க கையை ஓங்கி கொண்டுவந்த அந்த இளம்பெண்ணின் கையை சட்டென்று தடுத்து பிடித்தவள்,



“நான் அங்கே இருந்து வந்ததும் முதலில் கற்றுக்கிட்டது கராத்தே தான்.. அதில் உள்ள நெளிவு சுழிவுகளை காட்டினால் உன் உடம்பு தாங்காது.. பாவம் கல்யாணம் ஆகவேண்டிய பொண்ணு” என வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து இதழ்களில் நக்கல் புன்னகை தவழ, கையை முறுக்கியதில் அந்த பெண் வலி பொறுக்க முடியாமல் கையை இழுத்தபடி, “ஆ.. ஆ.. விடு என்னை” என அலற, மனம் பொறுக்காமல் அவர்கள் அருகில் வந்து மகளின் கையை விடுவிக்க ஆனமட்டும் முயன்றவரால் மங்கையின் வலுவான பிடியில் இருந்து ஒரு இன்ச் கூட அசைக்க முடியவில்லை.. வலியில் முகமெல்லாம் சிவந்து கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிய நின்றிருந்த மகளின் தோற்றத்தை தாங்க முடியாது,



“இனி உன் வழிக்கே நாங்க வரமாட்டோம்.. என் பொண்ணை விட்டுடு” என கெஞ்ச, அப்பொழுது அவர்கள் செய்தவற்றை எண்ணி அவளின் கோபம் மட்டுப்பட மறுத்தது.. ஆனால் இருக்கும் இடமும் சூழலும் இப்படி ஒரு காட்சியை பகிரங்க படுத்தினால் இதுவரை சேர்த்த பெயர் கெட்டுவிடும் எனும் நோக்கத்தில் தன் பிடியை தளர்த்தியவள்,



“உங்க கெஞ்சலுக்கோ இல்லை பயந்தோ நான் இப்போ விட்டுட்டு போகலை.. உங்களை மாதிரி சாக்கடைங்களை தொட்டு என் கையை மென்மேலும் கறையாக்க விரும்பல.. இனி என் வாழ்க்கையில் எங்கேயாவது உங்களை பார்த்தேன்.. அவ்வளவுதான்” என விரல் நீட்டி எச்சரித்தவள், மீண்டும் டிராக் பக்கம் திரும்பி தனக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு அர்ஜூன், புவியை பார்த்து போகலாம் என்பது போல் கண்காட்டி அங்கிருந்து அழைத்து செல்ல, ஒன்றும் செய்யமுடியாத நிலையை வெறுத்ததோடு மங்கையை நிம்மதி இழக்க செய்யவேண்டும் என்ற வெஞ்சினத்தோடு நோக்கினர் அந்த தாயும் மகளும்..



***************************



வீட்டிற்கு வந்த பின்பும் தமக்கையின் வாழ்வு பற்றி யோசித்த அர்ஜூனுக்கு அவளின் இந்த சந்நியாசி வாழ்வு மிகவும் நியாயம் அற்றதாகவே தோன்றியது.. ஆனால் மங்கை அதுபற்றி கவலை கொண்டதாகவே தெரியவில்லை.. அதிலும் தன் கடந்த காலம் முன்ஜென்மத்தில் நடந்தவை போல் இருந்தது அவளின் இப்போதைய செய்கைகள்..



ஆனால் அந்த பாசம் மிக்க தம்பிக்கு அது போதாதே.. பத்து வருடங்களின் முன்பு அவன் சிறு பையன், அதனால் அப்போது அவனை எதுவும் கேட்கக்கூடாது என சௌந்தரி அவனின் வாயை அடைத்திருந்தார்.. இருப்பினும் மங்கையின் வாழ்வில் நடந்தவையும் புவியின் பிறப்பும் அவனின் மனதை நெருஞ்சி முள்ளாக தைத்து கொண்டிருந்தன.. அதற்காக அவளின் நடத்தை மேல் சந்தேகம் கொண்டானில்லை.. தனக்கு தெரியாமல் அவளுக்கு துரோகம் நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு நிச்சயம்..



அதன்பின்பு நாட்கள் நகர்ந்தாலும் மங்கையின் முகத்தினில் வேதனையின் சாயல் தென்படுகிறதா என அப்பப்போ அவதானிப்பான்.. ஆனால் அது அவசியம் அற்றது என அவளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் காட்டினாள்..



தன் வாழ்வில் ஏற்பட்ட குளறுபடியால் துவண்டு போகாமல் தாயையும் தம்பியையும் பாதுகாத்து புவியை நல்ல முறையில் பெற்றெடுத்து தன்னுள் பல திறமைகளை வளர்த்துக்கொண்டு, தொழிலையும் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைத்து இந்த பத்து வருஷத்தில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கட்டி காக்கும் இரும்பு மனுஷியாக மாறியிருந்தாள்..



அவளின் சிரிப்பு, பாசம், அன்பு எல்லாவற்றின் வெளிப்பாடு அவர்களின் வீட்டுக்குள் தான், அதுவும் தன் குடும்ப அங்கத்தவர்களான அம்மூவரின் மேலும் தான் வெளிப்படும்.. அந்த வீட்டு வாசல் தாண்டிவிட்டால் அவளின் பாவனையில் அழுத்தமும் விலகி நில் என்ற எச்சரிக்கை உணர்வும் மட்டுமே இருக்கும்..



வேலை என்று வந்துவிட்டால் தான் முழு மனதுடன் செய்வதோடு மற்றவர்களும் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பாள்.. அப்படி செய்யாத சிலரை தனக்கு திருப்தி கிடைக்கும் வரை ஓடவைப்பாள்.. அதனாலேயே ராட்சசி, சிடுமூஞ்சி, பச்சை மிளகாய் என பலதரப்பட்ட செல்ல பெயர்களை பெற்றிருந்தாள்.. அதற்கு மனதிற்குள் சிரித்து கொள்வாளே தவிர, அதற்கான எதிர்வினை என்பதே அவளிடம் இருக்காது..



அதன்பின்பு காலேஜ் கடைசி வருட பரீட்சை முடிந்ததும் அவன் செய்த வேலை மங்கையின் முன்பு சென்று நின்றது தான்.. அதுவும் அவளின் வாழ்வில் நடந்த பிரச்சனைகளை பற்றி கூறவேண்டும் என்ற உறுதியுடனும் பிடிவாதத்துடனும்..



ஆனால் முன்னரே அவனின் காலேஜ் படிப்பு முடிந்ததும் தன்னை பற்றி கூற நினைத்திருந்த மங்கையும் அவன் கேட்டதும் ஒன்றையும் மறக்காது கூற, கேட்டிருந்தவன் என்னமாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை..

அவளை இந்தமாதிரி துரத்தி விட்டவர்களை எண்ணி கோபம் வந்தாலும் அவர்கள் மேல் இன்னும் வஞ்சம் கொள்ளாத தமக்கையை எண்ணி பிரமித்து போன அர்ஜூனுக்கு அடுத்து என்ன செய்வது என புரியவில்லை என்றாலும் இப்பொழுது வந்த அந்த தாய், மகளின் பேச்சுக்கு ஏதாவது பதிலடி கொடுக்க வேண்டும் என தோன்றியது.. ஆனால் எப்படி என யோசித்தவனுக்கு இது பற்றி தாயிடம் கேட்டால் சரியான தீர்வு கிடைக்கும் என எண்ணியவன், சௌந்தரியை தேடி சென்றான்..



“இந்த விஷயத்தில் நான் பேசி பார்த்து தோற்றுவிட்டேன் அஜ்ஜூ” மகளிடம் போராடி தோற்றதன் விளைவாய் முகம் சற்று வாடிப்போக சொன்ன சௌந்தரியை பார்த்து,



“அதுக்காக அக்காவோட வாழ்க்கையை அசட்டையாக விட்டுட முடியுமா?? நாம் தான் சொல்லி புரிய வைக்கணும்” என சொன்னவன்,



“யாருக்கு?? எதை சொல்லி புரிய வைக்கணும் அஜ்ஜூ??” என கேட்டபடி வந்த மங்கையைக் கண்டு திகைத்து நிற்க, அவ்விருவரையும் ஆராய்ச்சியாக பார்த்தபடி சௌந்தரியின் அறையிலிருந்த மேசையில் சில பைல்களை வைத்துவிட்டு அர்ஜூனின் முன்னால் கை கட்டி நின்றவள்,



“இங்கே யார் தலை உருளுது, அதுவும் எனக்கு தெரியாமல்” என அழுத்தமாக கேட்டதற்கு பதில் சொல்ல மிகவும் திணறித்தான் போனான்.. தமக்கைக்கு தெரியாமல் அவளின் வாழ்வை சிறக்க செய்ய ஏதாவது வழி இருக்குமா என கலந்தாலோசிக்க வந்தவன், அந்த பேச்சுக்கு உரியவளே அங்கு வருவாள் என எதிர்பார்த்தானா என்ன??



“என் தலை தான் உருளுதா??” என கூர்மையுடன் பார்த்த மங்கையின் விழிவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தலையாட்டி வைத்த அர்ஜூனை ஒருநொடி அமைதியாக நோக்கியவள்,



“என் அஜ்ஜூ எப்போ பெரிய விஷயங்களை பேசுமளவிற்கு வளர்ந்தான்” என கேட்டு மந்தகாசமாக புன்னகைக்க,



“நான் வளர்ந்ததனால் தான் நீயாகவே என்னை ஒரு கம்பெனிக்கு எம்டி ஆக்கியிருக்க” என முகத்தை தூக்கி வைத்தபடி சொல்ல,



“சரிடா தம்பி பையா.. நீ பெரிய மனுஷன் தான்.. பட், இப்போ நீ பேசுகிற விஷயம் அவசியம் இல்லாததே” என சொன்னவளை முறைத்து,



“ஏன் அவசியம் இல்லை??” என கேட்ட தம்பியை உணர்வில்லாமல் நோக்கியவள்,

“சில உறவுகளை மறுபடியும் ஏற்றுக்கொள்ளுகிற மனநிலை சுத்தமா இல்லைடா” என சொன்னவளை நேர்கொண்டு நோக்கியவன்,



“ஏன்?? பேசவேண்டியவங்க கிட்ட பேசினால் எல்லாம் சரியாகிவிடுமே.. ஒருமுறை அதை முயற்சித்து பார்த்தால் என்னக்கா??” என கேட்க,



“உளறாதே அஜ்ஜூ.. இது பேசி தீர்க்கிற விஷயம் இல்லை, உணரும் விஷயம்.. ஆனால் அதற்கான காலம் எப்பொழுதோ கடந்து போய்டிச்சு.. இன்னும் சொல்லப்போனால் நம்பிக்கை என்ற ஒற்றை புள்ளியில் என் வாழ்க்கை திசை மாறிடிச்சு.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே நீ இப்படி பேசுறது கஷ்டமா இருக்குடா” என வருத்தமாக சொன்னவளை பாய்ந்து அணைத்து கொண்டவன்,



“சாரிக்கா.. அந்த பொம்பளை உன்னை அந்தமாதிரி பேசினதை என்னால் பொறுத்துக்க முடியலை.. உண்மை தெரியாமல் அவங்க பண்ணினதை உணர வைக்கணும்ன்னு தான் நான் இந்த பேச்சை எடுத்தது” என குரல் கரகரக்க சொன்னவனின் முதுகை வருடியவள்,



“இப்போ புரிஞ்சுடிச்சு தானே.. ப்ரீயா விடு” என பரிவுடன் சொல்ல, தன்னை தேற்றியவனாக தன் பிடியை சற்று அழுத்தி தமக்கையை விடுவித்தவன்,



“ஆனாலும் அந்த பொம்பளைக்கு வாய் ஜாஸ்தி” என கடுப்புடன் சொன்னவனை சிறு சிரிப்புடன் நோக்கிய மங்கை,



“முன்பெல்லாம் அதுங்க ரெண்டும் நான் டென்ஷனாவேன்னு நினைச்சு ஏதாவது லூசுத்தனமா பண்ணிட்டு இருக்குங்க.. ஆனால் நான் அதை மைன்டில் ஏற்றிக்கிட்டதே கிடையாது.. அதுதான் இப்போவும் வந்து என்னை வெறுப்பேற்ற நினைச்சு அடி வாங்கிட்டு போகுதுங்க” என கூறிவிட்டு சிரிக்க, அர்ஜூனும் அதில் இணைந்து கொண்டான்.. சில நிமிடங்களில் சற்றே சிரிப்பு அடங்கியதும் அவர்கள் இருவரையும் கண்கள் பனிக்க பார்த்திருந்த தாயின் பக்கம் திரும்பிய மங்கை,



“உங்க கையெழுத்து வேணும்மா” என்றவாறே மேசையில் தான் வைத்த பைல்களை பிரிக்கவும் அவளருகில் கிடந்த இருக்கையில் அமர்ந்து மகள் காட்டிய இடங்களில் ஒப்பம் இட்டுவிட்டு எழுந்தவர்,





“நான் கீழே போகிறேன், ரெண்டு பேரும் வந்து சேருங்க” என கூறிவிட்டு அங்கிருந்து செல்லவும் தம்பியின் பக்கம் திரும்பியவள்,



“நாம் வீட்டுக்கு வந்ததில் இருந்து இதை பற்றித்தான் யோசிச்சுட்டு இருந்தியா?? நல்ல ஆளுதான் போ” என கேலியாக கூறி நகைக்க, அதில் அசடு வழிந்து “அக்கா” என காலை உதைத்து சிணுங்கியவனின் தோளில் தட்டி,



“போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா” என கூறி அனுப்பி வைத்துவிட்டு, தாய் கையெழுத்திட்ட பைல்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்..



**************



அடுத்தநாள் அர்ஜூன் உடன் வர, நிமிர்ந்த நடையுடன் ஆபீசுக்குள் நுழைந்த மங்கைக்கு அன்றைய தினம் எதுவோ முரண்பாடாக பட்டது.. தன்னையே எல்லோரும் பார்ப்பது போல் இருந்ததில் பார்வையை சுழற்றியவள், எப்பொழுதும் தான் ஆபீசுக்குள் நுழையும் போது வேலை பார்த்தபடி இருக்கும் ஸ்டாஃபில் சிலர், அருகில் இருந்தவர்களோடு சிரித்து ரகசியம் பேச, ஒரு சிலர் தன்னையே பார்த்திருப்பது புரிய, நெற்றியில் சிந்தனை ரேகைகள் தோன்றினாலும் அப்பொழுது எதனையும் கேட்காது கேபினுக்குள் நுழைந்தவள், முதல் வேலையாக செய்தது அசோக்கை அழைத்தது தான்.. சில நிமிடங்களில் கதவை தட்டிவிட்டு வந்தவனின் முகத்தினில் இருந்த குழப்பத்தை கவனித்தவள்,



“எனி இன்ஃபர்மேஷன் அசோக்??” என கேட்க, அவளின் கத்தி பார்வையில் சிறிது தயங்கினாலும் தன் எஜமானி கேட்டதை கூறலானான்..



“யெஸ் மேம்.. இன்னிக்கு காலையில் நான் ஆபீஸ் வந்ததும் என் காதில் விழுந்த விஷயம், நீங்க பொலிஸ் ஸ்டேசனில் இருந்ததாவும் உங்க நடத்தை சரியில்லை என்றும் தான்.. சிலர் நான் உங்க பிஏ என்றதால் அது உண்மையான்னு என்கிட்டவே கேட்டாங்க” என சொல்ல, கேட்டிருந்த அர்ஜூனுக்கு அப்படியே பற்றிக்கொண்டு வந்தது..



“யார் அது மிஸ்டர் அசோக்.. வேலை செய்ய வந்தா அதை மட்டும் பார்க்க சொல்லுங்க.. அதைவிட்டிட்டு தேவையில்லாத விஷயங்களுக்குள்ள மூக்கை நுழைத்தால் சும்மா விடமாட்டேன்னு சொல்லுங்க” என எகிற, அதுவரை எதனையோ யோசித்தபடி இருந்த மங்கை, அவனின் கையை பற்றி தட்டி கொடுத்தபடி,



“ஸ்ஸ்.. கோபத்தை குறை அஜ்ஜூ” என கூற, வெடுக்கென தமக்கையை திரும்பி பார்த்தவன்,



“என்னக்கா நீ.. இதை சும்மா விட சொல்லுறியா??” என பல்லை கடித்தவனை கண்டிப்புடன் நோக்கி,



“உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை அஜ்ஜூ.. அதுக்காக இதை நான் சும்மா விடணும்னு நான் சொல்லப்போறதில்லை.. ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்யக்கூடாது” என அழுத்தமாக உரைத்ததில் தன் அவசர புத்தியை எண்ணி வெட்கியவனாக தன் கோபத்தை கைவிட்டு அமைதியானவனிடம் இருந்து பார்வையை அசோக்கிடம் திருப்பியவள்,



“உங்களால் எனக்கு ஒரு காரியம் ஆகணும் அசோக்” என சொல்ல,



“சொல்லுங்க மேம்” என்றவனிடம் அது என்ன காரியம் என்பதை உரைக்க,



“அரைமணி நேரத்தில் நீங்க கேட்ட டீடெயில்ஸ் கிடைக்கும் மேம்” எனக் கூறிவிட்டு விடைபெற்றதும் அர்ஜூனை திரும்பி பார்த்தவள், அவன் முகத்தில் இருந்த வியப்போடு எதனையோ கண்டுகொண்ட பாவனையையும் கண்டு குறுஞ்சிரிப்புடன்,



“புரிஞ்சுடிச்சா??” என கேட்க,



“கில்லாடிக்கா நீ.. நான்கூட எப்படி இந்த விஷயம் காட்டு தீ மாதிரி பரவிச்சுன்னு யோசிச்சேனே தவிர, நேற்றைய பிரச்சனையோடு சம்மந்தப்படுத்தி யோசிக்கலை” என சொல்ல,



“இத்தனை வருஷத்தில் என் சொந்த வாழ்க்கை பற்றிய எந்த பேச்சும் நம்ம தொழில் செய்யும் இடங்களில் பேசப்படலை.. ஆனால் இன்னிக்கு அப்படி ஒரு சூழ்நிலை வந்திருக்குன்னா நேற்றைய சம்பவத்தால் மட்டும்மே இருக்கணும்.. என் கெஸ்ஸிங் சரின்னா அந்த நேரம் மாலில் இங்கே வேலை செய்கிற யாராவது இருந்திருக்கணும், அதுவும் என்னில் வெறுப்பை வளர்த்தவங்களா” என சன்னச்சிரிப்புடன் சொன்னவளை பார்த்து,



“ஆனாலும் கொஞ்சமாவதும் கோபப்பட்டிருக்கலாம்” என குறையாக சொன்னான் அர்ஜூன்..



“கோபம் இல்லைன்னு யார் சொன்னது.. இருக்கு, ஆனால் அதனை ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு வெளிப்படுத்தக்கூடாது.. சரி சரி அசோக் வரும்வரை வேலையை பார்க்கலாம்” எனக் கூறியவள், சொன்னதுபோல் அசோக் வரும்பவரை தானும் வேலையை பார்த்து அவனையும் பார்க்க வைத்தாள்..



சொன்னதுபோல் அரைமணி நேரத்திற்குள் வந்த அசோக், அவளிடம் ஒரு பென்டிரைவை கொடுக்க, அதனை தன் லாப்டாப்பில் கனெக்ட் பண்ணியவள், அதில் இருந்த வீடியோவை ஓடவிட்டாள்.. சிலநிமிடங்கள் சாதாரணமாக அதனை பார்த்திருந்தவளின் விழிகளில் போகப்போக செவ்வரி தோன்றியதோடு முகத்தினில் அவ்வளவு இறுக்கம் வந்திருந்தது..



அவளுடன் வீடியோவை பார்த்த அர்ஜூனுக்கும் அதில் இருந்த ஆளை அடையாளம் தெரியவில்லை என்றாலும் வீடியோவில் வந்த காட்சிகள் இன்னார்தான் என உறுதிப்படுத்தியதில் கோபம் வந்தாலும் சற்றுமுன்பு அவள் சொன்ன பாடத்தின்படி அமைதி காத்தவன்,



“நம்ம ஆபீசா??” என கேட்டதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள்,



“டிசைனிங் செக்ஷனில் வேலை பார்க்கிற தீப்தியை என்னை வந்து பார்க்க சொல்லுங்க அசோக்” என உத்தரவிட்டு அவனை அனுப்பிவிட்டு முகத்தை அழுந்த தேய்த்து தன் கோபத்தை கட்டுப்படுத்தியவள், அடுத்த சிலநிமிடங்களில் அவளின் அனுமதியுடன் வந்த தீப்தியை கூர்மையுடன் நோக்கி,



“ஆபீஸ் வேலையைத்தவிர சோஷியல் வொர்க் எல்லாம் பார்க்கிறீங்க போல” என குத்தலாக கேட்க,



“மேம்” என திருதிருவென விழித்தவளை தீர்க்கமாக பார்த்து,



“உங்க தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எப்போதாவது தலையிட்டேனா மிஸ் தீப்தி??” என கேட்க,



“இல்லை மேம்” என்றாள் அவள்..



“ஆனால் உங்களுக்கு என் சொந்த வாழ்வுபற்றி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம் போலவே??” என நக்கலாக கேட்டதில் திக்கென அதிர்ந்தாலும் அதனை வெளியில் காட்டாது,



“நான் எதுவும் பண்ணலை மேம்” என அப்பொழுதும் மழுப்பியவளின் பக்கம் தன் லாப்டாப்பை திருப்பி வைத்தவள்,



“இதை கொஞ்சம் பாருங்க” என அந்த வீடியோவை ஓடவிட்டாள் மங்கை.. அதனை பார்த்த தீப்தியின் முகத்தினில் வந்த பிடிபட்ட உணர்வுடன் பயமும் வியாபிக்க வியர்த்து வழிந்த முகத்தை துடைத்தபடி,



“மேம்” என திக்கி திணறி அழைத்தவளை அமைதியாக நோக்கி,



“எதற்காக என்மேல் இந்த வெஞ்சினம்??” என நிதானமாக கேட்டவளிடம் என்ன பதிலை சொல்லமுடியும் தீப்தியால்.. எனவே குற்றக்குறுகுறுப்புடன் நின்றவளை பார்த்து,



“சுளையா சம்பளம் வாங்குற உங்களுக்கு அதற்கேற்ற வேலை பார்க்கணும்னு தோணலை.. அதனை தட்டி கேட்டு வேலை வாங்கிற என்மேல் உங்களுக்கு வெறுப்பு.. அதுதான் நேற்று மாலில் மறைந்திருந்து கேட்ட விஷயத்தை இன்னிக்கு வந்து கடை பரப்பியிருக்கீங்க” என அவள் மனதில் உள்ளதை அப்படியே சொன்ன மங்கையை பார்த்து,



“சாரி மேம்” என மன்னிப்பு கோரியவளிடம்,



“இந்த சாரியில் எல்லாம் மாறிடுமா தீப்தி??” என கேட்டதற்கு தீப்தியின் பதில் மௌனம் மட்டுமே..



“போய் வேலையை பாருங்க” என சொன்னவளிடம் எல்லா பக்கமும் தலையாட்டிவிட்டு தீப்தி செல்லவும் தமக்கையை முறைத்த அர்ஜூன்,



“வேலையை விட்டு தூக்காமல் இன்னும் இங்கேயே வேலை பார்க்க சொல்லுற” என எகிறியவனை நிதானமாக நோக்கி,



“மன்னிப்பில்லாத நிலை பெரிய தண்டனை தான் அஜ்ஜூ.. நமக்கு உண்மை தெரியும் என்றதிலேயே இனி தப்பு பண்ண நினைக்கமாட்டாங்க” என கூறிவிட்டு வேலையில் ஆழ்ந்தவளை பெருமையுடன் நோக்கினான் அர்ஜூன்..


தொடரும்..


உங்கள் கருத்துக்களை பகிர,

https://www.srikalatamilnovel.com/community/threads/கிருநிசாவின்-கானல்-நீரோ-காதல்-தேரோ-கருத்து-திரி.2967/
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த அத்தியாயத்தில் இருந்து ஒரு டீ..


“பொண்ணோட மற்ற விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டும் போதாது.. வாழ்க்கை முழுதும் யாருடன் வாழவேண்டும் என்ற விருப்பத்தினை நீங்க சரியான விதத்தில் ஏற்றுக்க முயற்சி பண்ணலாம் மிஸ்டர் கருணாகரன்” அவரின் சுருங்கிய முகத்தை கண்டும் காணாதது போல் தன் கருத்தை சொன்ன விஷ்வா,




“இந்த கல்யாண பேச்சை இத்தோடு நிறுத்துறது நல்லது” என அழுத்தத்துடன் சொல்ல, கருணாகரன், அனுபமா தவிர மற்றவர்களின் முகம் சந்தோஷத்தில் தெளிந்தாலும் வாய் திறந்து அதனை வெளிப்படுத்தவில்லை..



“விஷ்வா??” என கிரீச்சிட்ட அனுபமாவை அழுத்தத்துடன் நோக்கிய விஷ்வா,



“இன்னொருவனை விரும்பும் ஒரு பொண்ணை எப்படிக்கா எனக்கு கட்டி வைக்க நினைச்ச, இதை உன்கிட்ட எதிர்பார்க்கலைக்கா” என ஆதங்கத்துடன் கேட்டவனின் பேச்சில் வாயடைத்து போய் நிற்கத்தான் முடிந்தது அனுபமாவால்.. சும்மாவே கல்யாணம் வேண்டாம் என சொல்பவனிடம் இதனை மறைத்த தன் மடத்தனத்தை நொந்தவளாக, கருணாகரனை நோக்கி,



“சாரி சார்.. இந்த பேச்சை நிறுத்திடலாம்” என மன்னிப்பு கோரும் பாவனையுடன் சொன்னவளின் மேல் அவரால் கோபப்படவா முடியும்.. எந்த உண்மையையும் கூறக்கூடாது என எத்தனை மிரட்டி அழைத்துக்கொண்டு வந்த தன் மகளே உண்மையை கூறி வைப்பாள் என்பதனை எதிர்பார்க்காதவருக்கு சந்தியாவின் மேல் கோபம் வந்தாலும் அதனை காட்டும் இடம் இது அல்ல என்பதனால் பல்லை கடித்தவர்,



“கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு.. ஆனால் இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாதே” என வருத்தமாக உரைத்தவர், தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று சென்றவர்களை அனுப்பிவிட்டு வந்ததும் தன் தம்பியிடம் எகிறிவிட்டாள் அனுபமா..



“என்ன விஷ்வா இதெல்லாம்?? எத்தனை வரன் பார்த்தும் ஒவ்வொரு காரணம் சொல்லி பாதியிலேயே நிறுத்தும்படியா எதையோ பண்ணி வைக்கிற.. கொஞ்சமாச்சும் உன் வாழ்க்கையை சரிபண்ணணுங்கிற நினைப்பு இருக்கா?? நீயா எதுவும் பண்ணுறதில்லை.. நானாக ஏற்பாடு பண்ணினாலும் கெடுத்து விடுற.. இது எங்கதான் போய் முடியும்??” என எரிச்சலுடன் கேட்கவும் தமக்கையின் பாசத்தை எண்ணி உள்ளுக்குள் உருகினாலும் தன் முடிவை தெளிவாக கூறவேண்டும் என்ற முடிவை எடுத்தவனாக,



“என் கல்யாணம் சம்மந்தமான எந்த பேச்சும் இனிமேல் இருக்கக்கூடாது” என இறுகிய குரலில் கூறியவனை அதிர்ந்து நோக்கிய அனுபமா,



“இது என்ன உளறல் விஷ்வா?? விருப்பம் இல்லைன்னா எதற்கு நான் பொண்ணு பார்க்கவான்னு கேட்டப்போ ஓகே சொன்ன??” என கேட்டவளின் தோளில் கை வைத்து அணைத்து,



“அது உன் விருப்பத்திற்காக” என்றான் விஷ்வா..
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3



கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சிலிருந்து வெளிவந்த மெல்லிய இசையில் தன் மடி கணினியில் அந்த மாதத்திற்குரிய சில கணக்கு வழக்குகளை சரியாக வரிசைப்படுத்தி கொண்டிருந்த விஷ்வஜித், தான் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவனாக அதுவரை பார்த்திருந்த பைலை சேமித்தவன், கணினியை நிறுத்திவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்..



கல்லூரி படிப்பை ஆரம்பித்த போதே சிறு குழந்தைகளுக்கான ஊட்டம் மிக்க பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்பது அவனின் விருப்பம்.. என்னதான் அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் தன் வழி தனிவழியாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவன், அதற்கான வேலைகளை அப்பொழுதே ஆரம்பித்துவிட்டான்..



சிறுகச்சிறுக ஒவ்வொரு விடயங்களாக திரட்டி பக்க விளைவுகள் இல்லாத, இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டு தானே ஒரு பார்முலாவை கண்டு பிடித்தவனின் அந்த வெற்றிக்கு பின்னால் அவனின் உழைப்புக்களும் தியாகங்களும் அதிகம் இருந்தன..



அதன்பின்பு படிப்பு முடிந்ததும் தன் எண்ணங்களுக்கு வண்ணம் சேர்த்து தொழிற்சாலை ஆரம்பித்தவனுக்கு முதலில் சற்று சறுக்கல்கள் வந்தாலும் அவனின் தயாரிப்பின் தரம், அடுத்தவரை திரும்பி பார்க்க வைத்தது.. அதன் விளைவு, ஒவ்வொரு படியாக முன்னேறி இப்பொழுது இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தொழிற்சாலை என்னும் பெயரை பெற்றிருந்தவனின் அடுத்த இலக்காக, வெளிநாடுகளிலும் சில கிளைகளை அடுத்தடுத்த வருடங்களில் நிறுவியிருந்தான்..



என்னதான் தொழிலில் முன்னேற்ற பாதை நோக்கி சென்றாலும் சொந்த வாழ்க்கையில் அதளபாதாளத்தை நோக்கி அல்லவா சென்றுகொண்டு இருக்கிறான்.. விதி நடத்திய நாடகமா, இல்லை நம்பிக்கை துரோகத்தால் நடந்த விபரீதமா என புரியாது தினம் தினம் பெற்றவர்களின் முகத்தினில் தவழும் சோகத்தையும் மனதை வாட்டும் ஆறாத ரணங்களையும் நீக்க சரியான வழி கிடைக்காமல் திண்டாடுபவனின் வாழ்வில் வசந்தம் வரவேண்டும் என முயற்சிக்கும் அவனின் தமக்கையான அனுபமாவின் செயல்களை தடுக்கும் சக்தி இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறான்..



இன்றும் மதியவேளையில் வீட்டில் இருக்கவேண்டும் என்ற தமக்கையின் கட்டளையை, அது எதற்காக என்பதை அனுமானித்திருந்தாலும் தவிர்க்கும் எண்ணம் சிறிதும் இல்லாமல் பிஏவை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்..



அனுபமா செய்யும் இந்த செயல்களில் துளியும் விருப்பம் இல்லை அவனுக்கு.. ஆனால் ஏற்கனவே வாழ்வில் அடிபட்டு தேறி வந்திருக்கும் அவளின் மனதை தானும் துன்புறுத்தக்கூடாது என்பதற்காக அமைதியாக அவற்றை ஏற்பது போல் நடந்தாலும் அதன் தாக்கம் தன் வாழ்வில் இருக்கும்படி செய்யமாட்டான்..



இன்றும் என்ன நடக்குமோ என எண்ணியபடி காரை செலுத்தி கொண்டிருந்தவனின் மனதில் கடந்த கால சுவடுகள் ஒவ்வொன்றாக வலம் வந்ததோடு அது கொடுத்த தாக்கத்தில் அவனின் உடலை இறுக செய்ததில் காரின் வேகத்தை அதிகரித்து அந்த பங்களாவின் வாட்ச்மேன் திறந்துவிட்ட கேட்டின் மூலம் உள்ளே செலுத்தி போர்ட்டிக்கோவில் நிறுத்திவிட்டு இறங்கியவனின் கண்கள், புதிதாக வந்திருந்த காரினை ஆராய்ச்சியாக நோக்கவும் மறக்கவில்லை..



தன் கம்பீர நடையுடன் உள்ளே நுழைந்தவனின் கூரிய பார்வை, ஹாலில் வரிசையாக போடப்பட்டிருந்த சோஃபாக்களில் அமர்ந்திருந்தோரை அலசி ஆராய, அவனை கண்டதும் வரவேற்பாய் புன்னகைத்தவர்களை நோக்கி, தானும் புன்னகை புரிந்தவாறே அனுபமாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்..



“விஷ்வா, இவர் விகே மசாலா ஓனர் மிஸ்டர் கருணாகரன், அப்புறம் அவர் வொய்ஃப் சாருமதி, டாட்டர் சந்தியா” என அறிமுகப்படுத்திய அனுபமாவின் பேச்சை ஏற்று,



“ஹலோ சார், வெல்கம் ஹோம்” என சொன்னவன், தமக்கையை பார்த்து,



“இவரை எனக்கு நல்லாவே தெரியும்.. இவங்க மசாலாக்களின் சுத்தத்தையும் தரத்தையும் அடிச்சுக்க ஆட்களே இல்லையே.. முக்கியமாக இன்றைய சமையல் செய்யும் பெண்களின் வாயில் இடம்பெறும் பெயருக்கு சொந்தமானவங்க” என சொன்னவனின் பேச்சில் அனுபமாவும் கருணாகரனும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்..



விஷ்வஜித்தின் மனநிலை பற்றி கருணாகரனிடம் ஏற்கனவே அனுபமா சொல்லியிருந்தாலும் அவனின் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் உள்ளூர சிறிது பதட்டத்துடன் இருந்தவர்களுக்கு அவனின் இந்த அனுசரணையான பேச்சு மனதுக்குள் பால் வார்த்தது போல் இருந்தது.. இருந்தாலும் அதனை வெளியில் காட்டாது,



“என்ன சந்தியா, வந்ததில் இருந்து அமைதியா உட்கார்ந்திருக்க.. போரடிக்குதா??” என கருணாகரனின் மகளிடம் அனுபமா கேட்க, நெருப்பின் மீது அமர்ந்திருப்பவளை போல் முகத்தினில் சஞ்சலத்துடன் கைகள் இரண்டையும் கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தவள், இந்த கேள்வியில் பதறிப்போய்,



“அச்சோ.. அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை.. என்ன பேசுறதுன்னு தயக்கமா இருந்திச்சு.. அதுதான் அமைதியா உட்கார்ந்துட்டேன்” என விளக்கமளித்தவளை வாஞ்சையுடன் நோக்கிவிட்டு,



“பெரியவங்க நாங்க பேசவேண்டியதை பேசிக்கிறோம்.. எங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கும்.. அதை போய் சுற்றி பார்த்துட்டு வா” என அவளிடம் உரைத்தவள், விஸ்வஜித்தை பார்த்து,



“எது எங்கே இருக்குன்னு அவளுக்கு தெரியாது.. சோ, நீயும் கூட போ விஷ்வா” என சொல்ல, அனுபமாவின் இந்த துரத்திவிடல் எதற்காகவென புரிந்தாலும் தமக்கையை மற்றவர் முன்பு விட்டுக்கொடுக்க முடியாது மெல்ல எழுந்து கொண்டவனின் முகம், இனி நடக்கப்போகும் பேச்சுக்களை எப்படி நிறுத்துவது என்ற யோசனைக்கு தாவியவனின் மூளை, இதுவும் அதற்கான வாய்ப்பு தான் என அடித்து கூறியதில் மர்ம முறுவலை இதழுக்குள் அடக்கியவன்,



“வாங்க சந்தியா” என அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றவனை மகிழ்வாக நோக்கியவர்களுக்கு தெரியவில்லை.. இப்பொழுது மட்டும் அல்ல, எப்பொழுதும் இது சம்மந்தமான எந்த பேச்சுக்களுமே அவனிடம் பலிக்காது என்பதை..



சந்தியா பின்தொடர தோட்டத்திற்குள் நுழைந்த விஸ்வஜித்திற்கு அவளின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது ஒருபக்க யோசனையாக இருந்தாலும் தனது முடிவை தெளிவாக உரைத்திட வேண்டும் என்பதை உறுதியாக எண்ணியவன், பெரிய குடைபோல் விரிந்த கிளைகளை கொண்ட நிழல் மரம் ஒன்றின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றை அவளுக்கு காட்டிவிட்டு மற்றொன்றில் தானும் அமர்ந்து கொண்டவனின் மனதில் இருந்த வெம்மையை அந்த மதிய வேளையிலும் ஜில்லென்று வீசிய காற்றினால் கூட தணிக்க முடியவில்லை..



அத்தோடு நெஞ்சம் முழுவதும் வியாபித்த ஒருவித இறுக்கி பிடித்த தன்மையை போக்கும் வகை அறியாது தலையை அழுந்த கோதியவனுக்கு இந்த பிணைப்புக்களை விட்டு எங்கேயாவது ஓடிவிடலாம் போல் இருந்தது.. ஆனால் குடும்பம் என்று வரும்போது அவனின் தனிப்பட்ட முடிவுகள் சிலது செல்லாக்காசாக மாறிவிடும் விந்தையை எண்ணியவனை கலைத்தது, சந்தியாவின் தயக்கமான “சார்...!!” என்ற அழைப்பு.. அதில் திரும்பி நோக்கியவன், அவளின் முகத்தினில் சூழ்ந்திருந்த பரிதவிப்பில் புருவம் சற்று நெளிந்து நேராக,



“தயங்காமல் சொல்ல வந்ததை சொல்லுங்க” என அவன் ஊக்கப்படுத்தியதில் சற்று தெளிந்தவளாக,



“இந்த கல்யாணத்தில் எனக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை.. சோ எப்படியாவது இந்த பேச்சை நிறுத்திடுங்களேன்.. பிளீஸ்” என அழுகையை அடக்கிய குரலில் கேட்டவளின் பேச்சில் அவனது மனதை அழுத்திய இரும்புக்குண்டு இல்லாமல் போனது போன்ற உணர்வை கொடுக்க, ஆசுவாச பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன்,



“இரண்டாம் தாரம் என்றதால் வேண்டாங்கிறீங்களா??” என கூர்மையாக அவன் கேட்டதில் மிகவும் பதறிப்போனவளாக,



“அச்சோ, இல்லை சார்.. உங்க நல்ல குணத்துக்காக இர.. இரண்டாம் தாரம்னாலும் பரவாயில்லைன்னு எங்க அப்பா இந்த சம்மந்தத்திற்கு ஓகே சொன்னார்” அவனின் வெட்டு பார்வையில் திக்கி திக்கி பேசியவளுக்கு தன்னிலையை எப்படியாவது வெளிப்படுத்தி விடவேண்டுமென்ற வேகம்..



“ஹேய் கூல்.. எதுக்கு இந்த பதட்டம்?? என்னை கட்டிக்க மறுப்பு வருதுன்னா முதல் கேள்வி இதுவாகத்தானே இருக்கும்”



“மறுக்கமுடியாத உண்மை சார்.. ஆனால் என் மறுப்புக்கு காரணம் வேற சார்” என்றவளின் முகத்திலும் குரலிலும் அவ்வளவு துயரம் மண்டி கிடந்தது..



“அப்படி என்ன காரணம், லவ் மேட்டரா??” என அவனாக ஊகித்து கேட்டான் விஸ்வஜித்..



“ஆமா சார்.. மூன்று வருஷ காதல்”



“யார் அது?? என்ன பண்ணுறார்”



“அவர் பேர் முகிலன்.. ஆட்டோ டிரைவர்” எனவும் சற்று வியப்பை காட்டி,



“இதெல்லாம் எப்படி??” என கேட்டான்..



“எங்க காலேஜ் முன்னாடி தான் அவரோட ஆட்டோ ஸ்டேன்ட்.. காலேஜ் கட்டடிச்சுட்டு அவர் ஆட்டோவில் சினிமா, ஷாப்பிங் போனப்போ பழக்கமாகி லவ்வாகிடிச்சு”



“அப்புறம் என்னாச்சு??”



“காலேஜ் படிப்பு முடிந்ததும் வீட்டில் சொல்லலாம்னு முடிவு பண்ணியிருந்தோம்.. ஆனால் என் படிப்பு முடியுறதுக்குள்ள இந்த சம்மந்த பேச்சு வந்துட்டு”



“அப்போ இப்போவரை உங்க வீட்டில் உங்க லவ் பற்றி தெரியாதா??”



“தெரியும் சார்.. இந்த பேச்சு வந்ததுமே அப்பாகிட்ட சொல்லிட்டேன்.. ஆனால் உங்க குடும்பத்து மேல் இருக்கிற அபிமானத்தில் என் விருப்பத்தை நிராகரிச்சுட்டார்.. அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணின்னு என் எதிர்ப்பை காட்டியும் அவர் முடிவில் உறுதியா நின்னுட்டார்” என துக்க பெருமூச்சை வெளியிட்டபடி சொன்னவளை பார்க்க பரிதாபமாக இருந்தது..



“அதோடு உன் எதிர்ப்பை நிறுத்திட்டியா??”



“இல்லை சார்.. இங்கே வரமாட்டேன்னு சொன்னப்போ மிரட்டி கூட்டிட்டு வந்துட்டார்.. சரி, கடைசி முயற்சியா உங்ககிட்ட பேசி இந்த கல்யாணப்பேச்சை எப்படியாவது நிறுத்த சொல்லலாம்னு அமைதியா வந்தேன்”



“அதெல்லாம் ஓகே.. நான் இந்த கல்யாணம் நடந்தே தீரணும்னு சொன்னால் என்ன பண்ணுவ??” என அமைதியாக கேட்கவும் கடைசி முயற்சியாக அவனிடம் பேசி பார்க்கலாம் என வந்திருந்த சந்தியா இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை..



“சார்..!!” என அதிர்ந்து நோக்கியவளின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட, தனது இரு கைகளையும் கூப்பி ஒருவித வேண்டுதலோடு அவனை நோக்க, அது எதற்காக என்பதை உணர்ந்த விஷ்வாவிற்கு அவளின் காதலை எண்ணி வியப்பாக இருந்தது..



“ஹேய், நான் சும்மா சொன்னேன்.. உன் காதல் நிறைவேறணும்ன்னா இந்தமாதிரியான சில சோதனைகளுக்கு முகம் கொடுக்கத்தான் வேண்டும்.. அழுது கரைந்தால் எதுவும் நடந்திட போறதில்லை” என அவன் கூறியதில் இருந்த செய்தி, அவளின் மனதில் இருந்த கலக்கங்கள், பயம் என்பவற்றை போக்கவும் முகம் மலர்ந்து விகசிக்க, கண்ணீரை துடைத்தவள்,



“தேங்க்யூ சார்” என கன்னம் குழிய நன்றி சொன்னவளை பார்த்து புன்னகைத்தவன்,



“இனிமேல் வேறு சம்மந்தம் பார்க்காதவாறு உங்க அப்பாக்கிட்ட நான் பேசிக்கிறேன்.. ஆனால் உன் காதலின் ஆழத்தையும் உன்னவர் மீதான நம்பகத்தன்மையையும் உங்க அப்பாவிற்கு எடுத்து சொல்லி மனப்பூர்வமாக சம்மதிக்க வை” என சொன்னான் விஷ்வஜித்..

“நிச்சயமா சார்.. அப்பா மனதார சம்மதிக்கும்வரை என் முயற்சி தொடர்ந்துக்கிட்டே இருக்கும்”



“தட்ஸ் குட்.. உன் போராட்டம் சீக்கிரம் வெற்றி பெறணும்ன்னு வாழ்த்துறேன்.. இப்போ உள்ளே போகலாமா??”



“உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா சார்??” விஷ்வாவின் பக்கமிருந்து அவளுக்கு ஏற்ற பதில் கிடைத்ததில் தைரியம் வரப்பெற்றவளாக மனதை அரித்த கேள்வியை கேட்கவேண்டி ஆரம்பித்தாள் சந்தியா..



“கேள்..!!”



“இல்லை.. நான் கல்யாணத்தை நிறுத்த சொன்னதும் உங்க முகத்தில் வந்த நிம்மதியை பார்த்தேன்.. அப்படின்னா, இன்னொரு கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு தானே அர்த்தம்..?? அப்புறம் எதுக்கு சார் இந்தமாதிரி பேச்சுக்கள்..?? எனக்கு புரியலை சார்.. ஒருவேளை, இந்த மறுப்பு உங்க கடந்தகால வாழ்க்கை சம்மந்தப்பட்டதா??” தனக்கு சாதகமான முடிவு கிடைத்த நிம்மதியோடு விஷ்வஜித்தின் நடவடிக்கைகளின் மூலம் ஏற்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்ற ஆர்வத்தில் பேசிவிட்டாலும் என்ன சொல்வானோ என பதட்டத்தோடு அவனை பார்த்திருந்தாள் சந்தியா..



ஆனால் அவனோ பதில் சொல்லும் நிலையை கடந்திருந்தான்.. சந்தியாவின் கேள்வி அவனது கடந்தகால நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்திருந்ததில் கோபம், ஏமாற்றம், வலி, வேதனை போன்ற பற்பல உணர்வுகளை வெளிப்படுத்திய அவனது முகத்தை கேள்வியாக நோக்கிய சந்தியாவிற்கு தன் கேள்விக்கு உண்டான பதில் கிடைத்தது போல் இருந்தது..



அதாவது அவனின் கடந்த காலத்தின் நினைவுகளுடன் வாழ நினைக்கிறான் என்பதையும் இனிமேல் வேறு ஒரு வாழ்க்கையை அவனாக அமைத்துக்கொள்ள மாட்டான் எனபதோடு அடுத்தவர்களையும் செய்யவிடமாட்டான் என்பதையும் உணர்ந்து கொண்டவளும் ஒருவனை காதலிக்கிறாள் தானே?? தன் காதல் நிறைவேறவேண்டும் என்பதற்கான போராட்டத்தில் விஷ்வஜித்திடம் பேச வந்திருந்தாள்..



ஆனால் அவளாக இந்த கல்யாணப் பேச்சை நிறுத்த சொல்லி கேட்காமல் இருந்தாலும் அவன் அந்த வேலையை தனதாக எடுத்திருப்பான் என்பது அவனது உணர்ச்சிக்குவியலோடு மிகவும் அதிகமாக வியாபித்திருந்த உறுதியும் அறிவுறுத்தியதில் அதற்கு பிறகு எதைனையும் கேட்காது,



“போகலாமா சார்??” என்றவளை தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவனாக வியப்புடன் பார்த்து,



“உன் கேள்விக்கு பதில் வேணாமா??” என கேட்டான்..



“எனக்கு நீங்க சொல்லாமலே பதில் கிடைச்சுட்டுது சார்” என உண்மையாக உரைத்தவளின் பேச்சை ஆச்சரியத்துடன் கிரகித்தவன்,



“உன்னைமாதிரி என் விஷயத்தில் எல்லோரும் புரிந்துணர்வுடன் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்” என துக்க பெருமூச்சை வெளிவிட்டவனின் கை அவனது தலையை கோதிவிட, மனதின் வெம்மை மட்டும் ஆறுவேனா என்றிருந்தது..



முகத்தினில் கருமேகம் சூழ சற்று நேரம் அதன் போக்கில் அமைதியாக இருந்தவன், நேரமாவதை உணர்ந்து,



“போகலாமா??” என கேட்டபடி இருக்கையை விட்டு எழுந்து கொள்ள, அதனை ஏற்பது போல சந்தியாவும் எழுந்து கொண்டாள்..



அதற்குள் கருணாகரனும் அனுபமாவும் ஏதோ இந்த கல்யாணம் நடந்துவிடும் என்பது போல் அது சம்மந்தமான விஷயங்கள் பற்றி பேசியபடி இருக்க, சாருலதா மகளின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமலும் கணவனை எதிர்த்து பேசமுடியாமலும் தவிப்புடன் அமர்ந்திருக்க, விஷ்வஜித்தின் பெற்றோர் இதற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் வந்தவர்களை இன்முகமாக உபசரித்துவிட்டு அமைதியாக அமர்ந்துவிட்டனர்..



அவர்களின் அந்த அமைதி எதனையாவது பேசி இந்த கல்யாண பேச்சை கலைத்து விடுவார்களோ என உள்ளூர பதட்டத்துடன் இருந்த அனுபமாவின் நெஞ்சில் பாலை வார்த்தது போல் இருந்தது.. எனவே, அது கொடுத்த நிம்மதியுடன் சந்தோஷமாக பேசியபடி இருந்தவர்கள், விஷ்வாவும் சந்தியாவும் உள்ளே வரவும் தங்களின் பேச்சை நிறுத்திவிட்டு அவ்விருவரின் முகத்தினையும் ஆராய்ச்சியுடன் நோக்கினர்..



ஆனால் அவர்களின் சந்தோஷத்திற்கும் அந்த கல்யாண பேச்சுக்குமான ஆயுள் குறைவு என்பது போல் முன்பு கலக்கத்துடன் இருந்த சந்தியாவின் முகத்தினில் நிம்மதியும் சந்தோஷமும் இருந்தது எனில் விஷ்வாவின் முகமோ மிகவும் சாதரணமாக இருந்ததை கண்டதும் அவ்விருவரின் முகமும் ஒளியிழந்து போனது..



“பொண்ணோட மற்ற விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டும் போதாது.. வாழ்க்கை முழுதும் யாருடன் வாழவேண்டும் என்ற விருப்பத்தினை நீங்க சரியான விதத்தில் ஏற்றுக்க முயற்சி பண்ணலாம் மிஸ்டர் கருணாகரன்” அவரின் சுருங்கிய முகத்தை கண்டும் காணாதது போல் தன் கருத்தை சொன்ன விஷ்வா,



“இந்த கல்யாண பேச்சை இத்தோடு நிறுத்துறது நல்லது” என அழுத்தத்துடன் சொல்ல, கருணாகரன், அனுபமா தவிர மற்றவர்களின் முகம் சந்தோஷத்தில் தெளிந்தாலும் வாய் திறந்து அதனை வெளிப்படுத்தவில்லை..



“விஷ்வா??” என கிரீச்சிட்ட அனுபமாவை அழுத்தத்துடன் நோக்கிய விஷ்வா,



“இன்னொருவனை விரும்பும் ஒரு பொண்ணை எப்படிக்கா எனக்கு கட்டி வைக்க நினைச்ச, இதை உன்கிட்ட எதிர்பார்க்கலைக்கா” என ஆதங்கத்துடன் கேட்டவனின் பேச்சில் வாயடைத்து போய் நிற்கத்தான் முடிந்தது அனுபமாவால்.. சும்மாவே கல்யாணம் வேண்டாம் என சொல்பவனிடம் இதனை மறைத்த தன் மடத்தனத்தை நொந்தவளாக, கருணாகரனை நோக்கி,



“சாரி சார்.. இந்த பேச்சை நிறுத்திடலாம்” என மன்னிப்பு கோரும் பாவனையுடன் சொன்னவளின் மேல் அவரால் கோபப்படவா முடியும்.. எந்த உண்மையையும் கூறக்கூடாது என எத்தனை மிரட்டி அழைத்துக்கொண்டு வந்த தன் மகளே உண்மையை கூறி வைப்பாள் என்பதனை எதிர்பார்க்காதவருக்கு சந்தியாவின் மேல் கோபம் வந்தாலும் அதனை காட்டும் இடம் இது அல்ல என்பதனால் பல்லை கடித்தவர்,



“கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு.. ஆனால் இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாதே” என வருத்தமாக உரைத்தவர், தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று சென்றவர்களை அனுப்பிவிட்டு வந்ததும் தன் தம்பியிடம் எகிறிவிட்டாள் அனுபமா..



“என்ன விஷ்வா இதெல்லாம்?? எத்தனை வரன் பார்த்தும் ஒவ்வொரு காரணம் சொல்லி பாதியிலேயே நிறுத்தும்படியா எதையோ பண்ணி வைக்கிற.. கொஞ்சமாச்சும் உன் வாழ்க்கையை சரிபண்ணணுங்கிற நினைப்பு இருக்கா?? நீயா எதுவும் பண்ணுறதில்லை.. நானாக ஏற்பாடு பண்ணினாலும் கெடுத்து விடுற.. இது எங்கதான் போய் முடியும்??” என எரிச்சலுடன் கேட்கவும் தமக்கையின் பாசத்தை எண்ணி உள்ளுக்குள் உருகினாலும் தன் முடிவை தெளிவாக கூறவேண்டும் என்ற முடிவை எடுத்தவனாக,



“என் கல்யாணம் சம்மந்தமான எந்த பேச்சும் இனிமேல் இருக்கக்கூடாது” என இறுகிய குரலில் கூறியவனை அதிர்ந்து நோக்கிய அனுபமா,



“இது என்ன உளறல் விஷ்வா?? விருப்பம் இல்லைன்னா எதற்கு நான் பொண்ணு பார்க்கவான்னு கேட்டப்போ ஓகே சொன்ன??” என கேட்டவளின் தோளில் கை வைத்து அணைத்து,



“அது உன் விருப்பத்திற்காக” என்றான் விஷ்வா..



“புரியலை விஷ்வா”



“நீ என்னோட ரெண்டாவது கல்யாணம் நடக்கணும்னு துடிப்பா இருந்ததால் அமைதியாக இருந்தேன்.. ஆனால் எனக்கு துளியும் சம்மதம் இல்லாத விஷயத்தை நிறுத்த சில தில்லாலங்கடி பண்ணி நிறுத்தினேன் தான்.. அப்போவாச்சும் என் விருப்பம் இதுதான்னு உணர்ந்து இந்த பேச்சை எடுக்கமாட்டேன்னு நினைச்சா, வேற ஒருத்தனை லவ் பண்ணுற பொண்ணை எனக்காக பார்த்திருக்க”



“விஷ்வா??”



“உன் கல்யாண விஷயத்தில் நாங்க எதுவும் பண்ணாமல் இருக்கோமே, எங்களால் முடியாது என்றா?? ம்ஹூம்.. உன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அமைதியாக இருக்கிறோம்.. என் விஷயத்தில் மட்டும் என் விருப்பத்திற்கு நேர்மாறாக செய்ய நினைக்கிறியே, இது நியாயமா??” என்றவனை கவலையுடன் நோக்கிய அனுபமா, தங்களையே பார்த்திருந்த பெற்றோரிடம் திரும்பினாள்..



“நீங்க ரெண்டு பேரும் ஏன் அமைதியாக நிக்கிறீங்க?? அவனை வேறு கல்யாணம் பண்ண சொல்லுங்களேன்” என ஆற்றாமையுடன் உரைக்க, அவர்களை பெற்றவர்களான தில்லைநாயகமும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்து விழிகளால் எதனையோ சங்கேத மொழியில் பேசிவிட்டு திரும்பினர்..



“உன் விஷயத்தில் நாங்க எப்படி அமைதியாக இருக்கிறோமோ அதேபோல் தான் விஷ்வா விஷயத்திலும் இருக்கிறோம்.. இதில் நீதான் அவசரப்பட்டு என்னென்னவோ செய்கிற.. இதில் எங்களுக்குமே விருப்பம் இல்லைன்னாலும் நாங்க எதுவும் காட்டிக்கலை” என சொன்ன சிவகாமியின் முகத்தினில் இருந்த நிம்மதியில் அனுவின் மூளையோ கண்டபடி சிந்திக்க தொடங்கியது..



“என்ன, விஷ்வாவின் பழைய வாழ்க்கையை புதுப்பிக்க நினைக்குறீங்களா?? அதுக்கு தான் இந்த மறுப்பும் அமைதியுமா?? அது நான் இருக்கும்வரை நடக்காது.. நம்பிக்கை துரோகிகளுக்கு கண்டிப்பா இந்த குடும்பத்தில் இடம் கிடையாது” என கண்களில் ரௌத்திரம் மின்ன கர்ஜித்தவளை இப்படி புரிந்துகொள்ளாமல் பேசுகிறாளே என்ற இயலாமையுடன் ஆண்கள் நோக்க,



“உன் அறிவை எங்கேயாவது கொண்டுபோய் வித்துட்டியா?? அப்படி அவளை இந்த குடும்பத்திற்குள் கொண்டு வரணும்னா இத்தனை வருஷத்தில் அதை பண்ணியிருக்க மாட்டோமா??” என கடுமையாக பேசிய சிவகாமியின் பேச்சில் உண்மை புரிய, தன் மடத்தனத்தை நொந்தவளாக, விஷ்வாவின் முகத்தை தயக்கத்துடன் ஏறிட, அதுவோ உணர்ச்சிகளை தொலைத்து இறுகியிருந்தது..



“சாரிடா விஷ்வா” என குரல் கரகரக்க மன்னிப்பு கேட்ட அனுபமாவை கூர்மையுடன் நோக்கி,



“உனக்கு உன் தம்பி பெரிய அப்பாட்டக்கரா இருக்கலாம்.. அதற்காக எல்லோரும் அப்படி நினைப்பாங்கன்னு சொல்லமுடியாதே.. என் இந்த இரண்டாம் தாரம் என்ற பட்டத்தை குறையாக நினைக்காமல் ஏற்றுக்கொள்ள யாரும் இருக்கிறார்களா என்ன??” என புருவம் உயர்த்தி கேட்க,



“ஏன் இல்லை.. என் பொண்ணு இருக்காளே” என வாசல் பக்கமிருந்து வந்த கனத்த குரலில் ஹாலில் நின்றிருந்த அனைவரும் அதிர்ந்துபோய் திரும்பினார்கள்..


தொடரும்..


உங்கள் கருத்துக்களை பகிர,






 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மங்கை டீ..


******************************

“இப்போதாவது விஷ்வாவிற்கு என் பொண்ணை கட்டி வையுங்க” என்ற லலிதாவை முறைத்த அனு,

“என் தம்பிக்கு உங்க பொண்ணா?? அவனின் தகுதி என்ன ரேஷ்மாவின் தகுதி என்ன??” என எகத்தாளமாக கேட்க,

“என் பொண்ணுக்கு என்ன குறை?? உன் தம்பி மாதிரி ரெண்டாம் தாரம் இல்லையே??” என நக்கலாக சொன்னவரின் குரல்வளையை பிடித்தால் என்னவென தோன்றியது அனைவருக்கும்..

ஆனால் அதனை செய்தால் லலிதா தன் வார்த்தை ஜாலத்தால் கதையை மாற்றியும்விட வாய்ப்பு இருக்கிறது என்பதில் பல்லை கடித்தபடி அமைதியாக நிற்க, அனுவால் அப்படி நிற்கமுடியவில்லை..

“அது அவன் பண்ணிய தப்பு இல்லை.. அதற்காக பெண்மைக்கான எந்த இலக்கணமும் இல்லாதவளை என் தம்பிக்கு கட்டி கொடுக்க நாங்க என்ன முட்டாளா??” என கேலியாக கேட்டவளை குரோதத்துடன் நோக்கியபடி ரேஷ்மா நிற்க,

“ஒஹ்.. கல்யாணம் ஆகிறதுக்கு முதலே ஒருத்தன்கூட படுக்கையை பகிர்ந்து கொள்ளுறது மட்டும் பொண்ணுக்கான இலக்கணமோ??” என உதட்டை சுழித்து கேவலமாக கேட்டிருந்த லலிதாவின் பேச்சில் பெற்றவர்கள் வேதனை அடைந்தனர் எனில் விஷ்வாவோ பெண்களின் மேல், அதுவும் வயதிற்கு மூத்தவரின் மேல் கை வைக்கக்கூடாது என்பதனால் அதிகளவு ஆத்திரத்தை அடக்கும் வகை அறியாது தன் தலையை அழுந்த கோத, அனுவோ லலிதாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்..
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்,

கொஞ்சம் மனம் திறந்து பேசலாமா??

இனிமேல் என் கதைகள் இந்த தளத்திலும் அமேசானிலும் மட்டுமே இடம்பெறும்.. சில காரணங்களால் இப்போதைக்கு புத்தகமாக வெளிவராது..

அதனால் கதையை முடித்து அடுத்த மூன்றாவது நாள் தளத்தில் இருந்து எடுத்துவிடுவேன்..

மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் இந்த கதையை கொடுத்து கொண்டிருக்கிறேன்.. நீங்கள் படிக்கிறீர்களா?? கதையின் போக்கு பிடித்திருக்கிறதா என்பதுகூட எனக்கு தெரியவில்லை.. உங்கள் கருத்துக்களை சொன்னால் தான் எனக்கு புரியும்.. அதுபோக அடுத்து எழுதவும் உந்துசக்தியாகவும் இருக்கும்..

யாரின் மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.. எனது நிலையை தெரியப்படுத்தவே இந்த விளக்கம்..

இதோ கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றிகள்🙏🏻🙏🏻😍😍

நன்றி,
கிருநிசா🙂


அத்தியாயம் 4



“என் பொண்ணு இல்லையா??” என்ற குரலில் அது யார் என்பதை உணர்ந்த வீட்டினர் அனைவரின் முகத்திலும் வெறுப்பும் எரிச்சலும் வியாபிக்க, அதே இடத்தில் இறுகிப்போய் நின்றிருந்தவர்களின் முன்னால் தன் மகளுடன் வந்து நின்றார் தில்லைநாயகத்தின் உடன் பிறந்த சகோதரியான லலிதா..



ஒரே இரத்தமாக இருந்தாலும் தில்லையின் குணத்தில் சிறிதளவுகூட லலிதாவிடம் இருந்ததில்லை.. சூழ்ச்சி, வஞ்சகம், பொறாமை எனும் எதிர்மறை உணர்வுகளை கொண்ட இவரின் பேச்சு, செயல்களின் மூலம் எதிரில் இருப்பவரின் இரத்த அழுத்தமானது அதிகரித்து போகுமளவிற்கு யாரை எப்படி சாய்க்கலாம் எனும் சூட்சுமம் அறிந்தவர்..



கணவனை இழந்து வயதுக்கு வந்த ஒற்றை மகளுடன் புகுந்த வீட்டினரால் நிர்கதியாக்கப்பட்ட லலிதாவையும் அவர் மகளான ரேஷ்மாவையும் தங்கள் வீட்டிற்குள் சேர்த்தது தான் தாங்கள் செய்த மிகப்பெரிய தப்பு என தில்லையும் சிவகாமியும் எண்ணுமளவிற்கு இருந்தது அவர்களின் செய்கை..



தில்லைக்கு கூடப்பிறந்த பாசம் சிறிது இருந்தாலும் மற்றவர்களுக்கு அவ்விருவரிடமும் பரிதாபம் மட்டுமே இருந்தது.. ஏனெனில் அத்தை என அழைத்து பாசம் வைக்கும் அளவிற்கு லலிதா நடந்து கொள்ளாததோடு அவரின் தேள் கொடுக்கு நாக்கினால் அதிகளவு வெறுப்பு வந்ததில் முடிந்தளவு ஒதுங்கி இருக்க பழகிக்கொண்டனர்..



ஆனால் தாயிற்கும் மகளுக்கும் எப்படியாவது தங்களின் உரிமையை அங்கு வலுவாக்கி விடவேண்டும் என்ற எண்ணம் அதிகளவு இருந்தது.. அதற்கான துருப்புச்சீட்டாக இருந்தது, அந்த குடும்பத்தின் ஆண் வாரிசான விஷ்வஜித் மட்டும் தான்..



அவனை வளைத்து மகள் கல்யாணம் செய்து கொண்டால் சொத்திற்கு சொத்துமாச்சு, அந்த குடும்பத்தை நன்றாக படுத்தியும் வைக்கலாம் என்ற எண்ணத்தில் பெற்ற மகளுக்கு ஒரு தாய் போதிக்க கூடாதது எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்த லலிதாவின் பேச்சிற்கு தப்பாத மகளாக ரேஷ்மாவும் உருவாகி வந்தாள்..



முதலில் சாதரணமாக விஷ்வாவுடன் பேச ஆரம்பித்தவள், நாட்கள் செல்ல செல்ல நடை, உடை, பாவனையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தாள்.. சும்மாவே அவளை கண்டாலே ஒதுங்கி போகும் விஷ்வா, கண்கொண்டு பார்க்கமுடியாத உடைகளுடன் ஒட்டி உரசி, முகத்தை சுழிக்கும் படியான பேச்சில், கடுமையாக திட்டிய விஷ்வாவிற்கு இது லலிதாவின் வேலைதான் என்பது புரிய, ரேஷ்மாவை அடக்கி வைக்குமாறு அவரை கூப்பிட்டு கண்டித்தான்..

ஆனால் நான் எத்தனுக்கு எத்தன் என்பது போல் விஷ்வாவின் பேச்சை அலட்சியம் செய்த லலிதா மற்றும் ரேஷ்மாவின் ஆட்டம் இன்னும் அதிகரித்தது.. அதிலும் விஷ்வாவிற்கு ரேஷ்மாவை கட்டி வைக்க சொல்லி வீட்டினரிடம் தங்கள் அநாதரவான நிலையை காட்டி லலிதா நிர்பந்தப்படுத்த, வீட்டில் இருந்த பெரியவர் முதல் கடைக்குட்டி வரை அதனை எதிர்த்தனர்..



அதில் ஆத்திரம் வந்தாலும் தங்களின் முடிவில் மாற்றம் இல்லை என்பது போல் இருந்த தாயும் மகளும் சரியான தருணம் வர காத்திருந்தவர்கள், அனுபமாவின் வாழ்வில் ஏற்பட்ட சூறாவளியின் தாக்கத்தால் தங்கள் முயற்சியில் சற்று அமைதி காத்தவர்களுக்கு துருப்புச்சீட்டாக ஒரு விஷயம் சிக்கியது.. அதனை வைத்து காய் நகர்த்த அவர்கள் திட்டம் போட, விதி வேறொன்றை நினைத்தது போலும்..



தன்னிடம் வேலை செய்யும் பெண்ணை காதலிப்பதாகவும் அவளையே கல்யாணம் செய்ய போவதாக விஷ்வஜித் அறிவித்ததில் தங்களின் திட்டம் தவிடுபொடியானது போல் அதிர்ந்து போனாலும் குறுக்கு புத்தி உள்ளவர்கள் அவ்வளவு சீக்கிரம் திருந்துவார்களா என்ன??



விஷ்வாவின் திருமணம் முடிந்து வீட்டு மருமகளாக வந்த பெண்ணிடம் தனக்கும் விஷ்வாவிற்கும் தான் கல்யாணம் செய்ய இருந்ததாகவும் புதியவள் காதல் என்ற பெயரில் இடையில் புகுந்து விட்டதாகவும் ரேஷ்மா நீலிக்கண்ணீர் விட்டு நாடகமாட, புதியவளோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது கடந்து போனதில் அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அனுமானிக்க முடியாது தாயும் மகளும் தான் குழம்பி போவர்..



ஆனால் விஷ்வஜித் ஜோடியை அடிக்கடி கண்காணித்ததில் அவர்களின் அன்னியோன்னிய வாழ்வில் வயிறெரிந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது.. அதிலிருந்து வீட்டினரிடம் நச்சரிக்க ஆரம்பித்தவர்களுக்கு ஏற்ற பதில் சிலவருடங்கள் சென்றும் கிடைக்கவில்லை..



அதிலும் அவனுக்கு மறுமணம் செய்வதில் அனுபமா முனைப்பாக இருப்பது அறிந்து தங்கள் துருப்புச்சீட்டை பயன்படுத்த நினைக்க, அவளோ தன் முடிவில் மாறாது இருந்தாள்.. இன்றைய கல்யாண பேச்சு நடக்கும் போது அவர்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பிடித்த ஷாப்பிங் செய்வதற்கு கை நிறைய பணம் கொடுத்து அனுப்பியிருந்தாள் அனுபமா..



இருந்தும் குறுகிய நேரத்திற்குள் வந்து தங்களின் பிடியில் நின்ற இருவரையும் கண்ட வீட்டினருக்கு அப்படி ஒரு வெறுப்பு..



“இப்போதாவது விஷ்வாவிற்கு என் பொண்ணை கட்டி வையுங்க” என்ற லலிதாவை முறைத்த அனு,



“என் தம்பிக்கு உங்க பொண்ணா?? அவனின் தகுதி என்ன ரேஷ்மாவின் தகுதி என்ன??” என எகத்தாளமாக கேட்க,



“என் பொண்ணுக்கு என்ன குறை?? உன் தம்பி மாதிரி ரெண்டாம் தாரம் இல்லையே??” என நக்கலாக சொன்னவரின் குரல்வளையை பிடித்தால் என்னவென தோன்றியது அனைவருக்கும்.. ஆனால் அதனை செய்தால் லலிதா தன் வார்த்தை ஜாலத்தால் கதையை மாற்றியும்விட வாய்ப்பு இருக்கிறது என்பதில் பல்லை கடித்தபடி அமைதியாக நிற்க, அனுவால் அப்படி நிற்கமுடியவில்லை..



“அது அவன் பண்ணிய தப்பு இல்லை.. அதற்காக பெண்மைக்கான எந்த இலக்கணமும் இல்லாதவளை என் தம்பிக்கு கட்டி கொடுக்க நாங்க என்ன முட்டாளா??” என கேலியாக கேட்டவளை குரோதத்துடன் நோக்கியபடி ரேஷ்மா நிற்க,



“ஒஹ்.. கல்யாணம் ஆகிறதுக்கு முதலே ஒருத்தன்கூட படுக்கையை பகிர்ந்து கொள்ளுறது மட்டும் பொண்ணுக்கான இலக்கணமோ??” என உதட்டை சுழித்து கேவலமாக கேட்டிருந்த லலிதாவின் பேச்சில் பெற்றவர்கள் வேதனை அடைந்தனர் எனில் விஷ்வாவோ பெண்களின் மேல், அதுவும் வயதிற்கு மூத்தவரின் மேல் கை வைக்கக்கூடாது என்பதனால் அதிகளவு ஆத்திரத்தை அடக்கும் வகை அறியாது தன் தலையை அழுந்த கோத, அனுவோ லலிதாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்..



இத்தனை வருடங்களில் லலிதாவின் தேள் கொடுக்கு நாக்கில் விழுந்துவிடக்கூடாதே என அவரிடம் பெருமளவு ஒதுங்கி போக நினைத்தாலும் எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் எனும் சூட்சுமத்தை அறிந்தவர் போல் பல இடங்களில் அனுவின் வாழ்வில் நடந்த அந்தரங்க நிகழ்வை சொல்லி காட்டி பல ஆதாயங்களை பெற்றிருந்த லலிதாவிற்கு அதன் ருசி அதிகளவில் பிடித்துவிடவும் இதன்மூலம் அந்த குடும்பத்தை தங்கள் காலடியில் விழ வைக்கலாம் என எண்ணி வாயை விட்டவர், அனுபமாவின் இந்த புதிய அவதாரத்தை எதிர்பார்க்காமல் கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ந்து போய் நிற்க, பெற்றவர்களும் கூட பிறந்தவர்களும் அவளின் செயலில் சந்தோசமே கொண்டனர்..



இத்தனை நாள் அவளின் வாழ்வில் நடந்த ரகசியத்தை அறிந்து கொண்டதில் இருந்து தாயும் மகளும் அக்குடும்பத்தை உணர்வு ரீதியாக மிகவும் படுத்தியிருந்தனர்.. அதில் மற்றவர்கள் கலங்கி நிற்க, அனுவோ வாய் திறந்து பதில் பேச முடியாது அவமான கன்றலோடு நின்று கொண்டாலும் அவர்களை ஏதாவது செய்யவேண்டும் என இரத்தம் கொதிக்கும்..

ஆனால் தனது இந்த நிகழ்வால் உடன் பிறந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாதே என மனதை கல்லாக்கிக்கொண்டு நிற்பாள்.. ஏனெனில் சுயநலவாதியான லலிதா, வெளியிடங்களில் இது சம்மந்தமாக எந்த வார்த்தையையும் உதிர்க்காது காரியம் ஆகவேண்டி வீட்டினரிடமே அதனை சொல்லி காட்டுவார்..



தண்ணீர்கூட மூன்று முறை தான் பொறுத்து கொள்ளுமாம் என்பது போல் இத்தனை நாள் அமைதியாக இருந்த அனுபமா, தனது தம்பியின் வாழ்க்கை என்பதில் பொங்கி எழுந்துவிட்டாள்..



“தொலைச்சிடுவேன்.. என்ன தைரியம் இருந்தால் என் விஷயத்தை வைத்து விஷ்வாவை உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைப்பீங்க.. இத்தனை நாள் விஷ்வா, அபிக்காக நீங்க பேசுறதை கேட்டு அமைதியா நின்னது தப்புன்னு நல்லாவே புரிய வச்சிட்டீங்க.. அந்தளவிற்கு தைரியம் வந்துடிச்சு போல.. ஆனால் நீங்க நினைக்கிறது எதுவும் நடக்க நான் விடமாட்டேன்.. மீறி ஏதாவது செய்தால் இந்த அனுவை பொல்லாதவளா தான் பார்ப்பீங்க, ஜாக்கிரதை” அளப்பரிய ஆத்திரத்தில் உடல் நடுங்க, விரல் நீட்டி எச்சரித்த அனுபமாவை ஒருநொடி குரோதத்துடன் நோக்கிய லலிதா, மறுநொடியே உணர்ச்சி பிழம்பாக மாறிப்போனார்..



“பாருண்ணே!! உன் பொண்ணை.. கொஞ்சமாச்சும் அத்தைன்னு பாசம் இருக்கா?? சரி அவளுக்கு தான் என்மேல் பாசம் இல்லை.. உனக்காவது கூடப்பிறந்த பாசம் இருக்கா?? எங்களுக்கு வேற யாரும் இல்லைன்னு தானே உன் பொண்ணை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிற” என புடவை தலைப்பால் வாயை பொத்தி நீலிக்கண்ணீர் வடித்த லலிதாவை வெறுப்புடன் நோக்கிவிட்டு எதனையோ சொல்ல வாயெடுத்த தில்லையை “நான் பேசிக்கிறேன் பா” என புன்சிரிப்புடன் தடுத்தாள் அனு..



“பாசத்தை பற்றி நீங்க பேசக்கூடாது.. புகுந்தவீடு துரத்திவிட்ட உங்களை தன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார் பாருங்க அது பாசம்.. யாரும் இல்லாத உங்களுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது வேதனை படக்கூடாதுன்னு எல்லாம் பண்ணினாரே, அது பாசம்.. தன்னோட குடும்பம் போல எந்த பிரிவினையும் காட்டாமல் எங்களுக்கு என்ன செய்தாலும் உங்க பொண்ணுக்கும் செய்தாரே, அது பாசம்.. ஆனால் அந்த பாசத்துக்கு கொஞ்சமும் அருகதை இல்லாதவங்க நீங்க” என கேலியாக சொன்ன அனுவை முறைத்த லலிதா,



“என்ன அனு, வாய் நீளுது.. உன்னை பற்றிய உண்மையை வெளியில் போய் சொன்னால் என்ன ஆகும்ன்னு தெரியுமா??” தன் பாச நடிப்பு பொய்த்து போனதில் அனுவை எப்படியாவது வாயடைத்து நிற்க வைக்கவேண்டும் என ஆரம்பித்தவரை கூர்ந்து நோக்கிய அனு,



“தாராளமா போய் சொல்லுங்க.. அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனால் பாருங்க, அதற்கிடையில் அம்மாவும் பொண்ணும் போலீஸ் லாக்கபிற்குள் போகாமல் இருக்க பாருங்க” என நக்கலாக சொன்ன அனுவை அதிர்ந்து நோக்கியவரை பார்த்து அனுவிற்கு சிரிப்புத்தான் வந்தது..



“என்ன நான் சொன்னது புரியலை போல.. உங்களை திருட்டு பட்டம் கட்டி உள்ளே தள்ளிடுவேன்னு சொல்கிறேன்” கைகளை கட்டியபடி அழுத்தமாக சொன்னவளை எப்படியாவது கஷ்டப்படுத்திவிடும் எண்ணம் இருந்தாலும் இப்பொழுது அதனை செய்ய நினைத்தால் பாதிப்பு தங்களுக்கே என்பதை உணர்ந்த தாயும் மகளும் மனதுக்குள் கறுவியபடி அவர்களையே வெறித்தனர்..



“இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கிறதுங்கிற பழமொழிக்கான அர்த்தம் உங்களை வச்சுத்தான் போல.. இருக்க இடம் இல்லைன்னு இந்த வீட்டுக்குள் விட்டால் என்னென்ன வேலை பார்க்குறீங்க.. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்.. இனிமேல் இருக்கிற இடம் தெரியாமல் இருந்துக்கோங்க.. இதற்கு பிறகும் இதேமாதிரி பண்ணினீங்க, நான் சொன்னதை செய்திடுவேன்” என மிரட்டலாக சொன்னவளின் கூற்றை ஏற்பது போல் அமைதியாக நின்றவர்களின் விழிகளில் பழிவாங்கும் எண்ணமும் குரோதமும் அதிகளவில் இருந்ததை கண்ணுற்ற சிவகாமிக்கு மனது துணுக்குற்றாலும் பிள்ளைகள் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அமைதியாக நின்று கொள்ள, தங்கை விஷயத்தில் முதன்முறையாக வாயை திறந்தார் தில்லை..



“இதுதான் நீ லலிதா.. இத்தனை வருஷத்தில் எங்களை எவ்வளவு படுத்தியிருப்ப.. எனக்கு சகோதர பாசம்ன்னு அமைதியா இருந்தேன்.. அதுக்காக என் பிள்ளைகளை உன்னிடம் மண்டியிட சொல்லி நான் நினைச்சதில்லை.. அவங்களே இதுபோன்ற சூழ்நிலைகளில் உன்னை எதிர்ப்பார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.. ஆனால் எனக்காக என் பிள்ளைகள் அமைதியா இருந்தால் நீ உன் இஷ்டப்படி நடந்துப்பியா?? அந்த உரிமையை யார் உனக்கு கொடுத்தது?? நீ அனுபவிக்க நினைத்த சொத்துக்களை எதுவென்றாலும் செய்யும் உரிமை என் குடும்பத்துக்கு மட்டும் தான் இருக்கு.. ஏனென்றால் இது அத்தனையும் நான் சுயமாக சம்பாதித்தவை.. நம்ம பிறந்த வீட்டு சொத்துக்கு மட்டுமே நீ உரிமை கொண்டாட முடியும்.. ஆனால் அப்படி ஒரு சொத்தும் இப்போ இல்லையே.. எல்லாவற்றையும் உன் வாழ்க்கைக்காக கொடுத்தது.. கடைசியில் சொத்தும் போய், உன் வாழ்க்கையும் போனதுதான் மிச்சம்” என முகத்தை சுழித்து கண்களில் கோபம் மின்ன குரலை சற்று உயர்த்திய பேச்சில் ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அந்த இடத்தை அமைதி சூழ்ந்து கொள்ள, வீட்டினருக்கு அவரின் பேச்சு அவ்வளவு ஆசுவாசத்தை கொடுத்தது..



இத்தனை வருஷ மனக்குமுறலை சேர்த்து வைத்து தில்லை பேசியதில் ஒன்று மட்டும் புரிந்து போனது லலிதாவிற்கு.. இனிமேல் விஷ்வா, அனு விஷயங்களின் மூலம் தங்கள் எண்ணம் பலிக்காது என.. ஆனால் அத்தனை எளிதில் தங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை என்றாலும் அதனை வெளியில் சொல்லி தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஆடம்பர வாழ்வினை கெடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை..



“சரி, விஷ்வாவிற்கு தான் என் பொண்ணை கட்டி வைக்க மாட்டீங்க.. அதுக்கு பதிலா அவளுக்கு நீங்களே மாப்பிளை பார்த்து உங்க செலவில் கட்டி வைக்கலாமே” என அவர்களின் பேச்சை ஏற்பது போல் தன் ஆசைக்கும் வழி கண்டு பிடித்தவராக நைச்சியமாக பேசிய லலிதாவின் எண்ணம் புரிந்தவர்களுக்கு சீ என்றாகியது..



“மாப்பிள்ளைக்கு என்ன தகுதி இருக்கணும் அத்தை??” மனதில் லலிதா எதற்கு அடி போடுகிறார் என்பது புரிந்தாலும் அதை அவர் வாயாலேயே கூறவேண்டும் என்பதற்காக அந்த கேள்வியை கேட்டான் விஷ்வா..



“பணக்காரரா இருக்கணும்.. பேங்க் பேலன்ஸ் கோடிகளில் இருக்கணும்.. தனியாக அவர் பெயரில் பங்களா இருக்கணும்” என இரு கன்னங்களிலும் கை வைத்து, கண்களில் கனவு பின்ன ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போன லலிதாவை நமட்டு சிரிப்புடன் நோக்கிய விஷ்வா,



“எல்லாம் சரி அத்தை.. அவங்களும் பொண்ணு வீடுன்னு நிறைய எதிர்பார்ப்பாங்களே!!” என்றவனை பார்த்து,



“அதற்கு ஏற்றமாதிரி ரேஷ்மாவிற்கு பண்ண நீங்கள் எல்லோரும் இருக்கிறீங்களே” என தன் வாயாலேயே சொன்னவரை மற்றவர்கள் வெறுப்புடன் நோக்க, விஷ்வாவோ,



“இதெல்லாம் செய்வோமுன்னு நாங்க எப்பொழுதும் சொன்னதில்லையே அத்தை” இரு கைகளையும் இல்லை என்பதுபோல் விரித்து ஒருவித அமைதியுடன் சொன்ன விஷ்வாவை அதிர்ந்து நோக்கிய லலிதாவை நக்கலாக பார்த்து,



“இத்தனை வருஷத்தில் ஒரு ரூபாவாவது நீங்களும் உங்க மகளும் உழைச்சிருப்பீங்களா?? அதுசரி, உழைப்பை பற்றி உங்ககிட்ட கேட்கிறேன் பாருங்க.. அடுத்தவங்க உழைப்பை எப்படி சுரண்டலாம்ன்னு ஐடியா கொடுக்கிறதுக்கு தான் நீங்க ரெண்டு பேரும் லாயக்கு” என கண்களால் எரித்தபடி சொன்னவன்,



“இத்தனை வருஷம் உங்க ஆடம்பர வாழ்க்கைக்கு நாங்க உழைத்து சம்பாதித்ததே தண்ட செலவு, இதில் இவளோட கல்யாணத்துக்கு வேற நாங்க அழணுமா?? அந்தளவிற்கு எல்லாம் நீங்க வொர்த் கிடையாது” என சீறியவன்,



“ஒரு சாதாரண குடும்பம் எந்தளவு சொத்து வச்சிருப்பார்களோ, அந்தளவு தான் எங்களால் கொடுக்க முடியும்.. அதேமாதிரி நடுத்தர வர்க்கத்தில் தான் மாப்பிள்ளையும் பார்ப்போம்.. இந்த கண்டிஷனுக்கு சம்மதிச்சா நீங்க இந்த வீட்டில் இருக்கலாம்.. இல்லைன்னா இப்பொழுதே இந்த வீட்டைவிட்டு வெளியில் கிளம்பலாம்” என முடிவாக சொன்னவனின் பேச்சில் அதிர்ந்தாலும் தில்லையிடம் பேசி தங்கள் வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்ற நினைப்புடன் அவரின் முகத்தை நோக்கியவர், அங்கு தென்பட்ட இளக்கமின்மையில் இனிமேல் எல்லாம் அவ்வளவுதான் என்பது புரிந்துபோனது..



அத்தோடு இவர்களை தவிர வேறு ஆதரவில்லாத தங்களுக்கு அவர்களின் பேச்சை கேட்காவிட்டால் நடு ரோட்டில் தான் நிற்கவேண்டும் என்பது புரிபட, தங்கள் கனவுக்கோட்டை சுக்குநூறாகி போனதை எண்ணி மனதுக்குள் புகைந்தபடி,



“நீங்க சொன்னபடியே செய்யுங்க.. இனிமேல் இது சம்மந்தமாக நான் வாய் திறக்கலை” என மெல்லிய குரலில் சொன்னவரை ‘அது’ என்பது போல் பார்த்த விஷ்வாவிற்கும் மற்றவர்களுக்கும் அப்படி ஒரு நிம்மதி..



“சரிப்பா, தரகரை கூப்பிட்டு நான் சொன்னமாதிரி மாப்பிள்ளை பார்க்க சொல்லுங்க” என கூறிய விஷ்வா, கைகடிகாரத்தை திருப்பி நேரம் பார்த்துவிட்டு, “ஓகே.. எனக்கு நேரம் ஆகிடிச்சு, நான் ஆபீசுக்கு கிளம்புறேன்” என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப, லலிதா, ரேஷ்மாவை அங்கேயே விட்டுவிட்டு தங்கள் வேலையை பார்க்க அங்கிருந்து செல்ல, அவசரப்பட்டு வாய் விட்ட தங்கள் மடத்தனத்தை நொந்தபடி அங்கேயே நின்றுவிட்டார்கள், அந்த தாயும் மகளும்..



***********************************



இரவாக நீ

நிலவாக நான்



உறவாடும் நேரம்

சுகம் தானடா



தொலையும் நொடி

கிடைத்தேனடி



இதுதானோ காதல்

அறிந்தேனடி



என்ற பாடல் டேப் ரெக்காடரின் வழியே காற்றில் மிதந்து படுக்கை அறையில் இருந்த டிரெஸ்ஸிங்க் டேபிளின் முன்னால் நின்று தலை வாரிக்கொண்டிருந்தவனின் காதில் வந்து மோத, கை ஒருநொடி தயங்கி பின் தன் வேலையை தொடந்தது..



இந்த பாடலை ஆயிரம் முறை என்ன லட்சம் முறை கேட்டுவிட்டான்.. ஆனால் அதன் வரிகள் ஒவ்வொன்றும் அவனின் வாலிப மனதை ஒரு சுழல் போல் தனக்குள் சுருட்டி வைக்கும் ரகசியம் என்ன என்பது அவன் மட்டும் அறிந்த ரகசியமாகவே இருந்தது..



நீ நான் மட்டும்

வாழ்கின்ற உலகம் போதும்



உன் தோள் சாயும்

இடம் போதுமே



உன் பேர் சொல்லி

சிலிர்க்கின்ற இன்பம் போதும்



இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க

என் உயிரே

காதோரம் காதல் உரைக்க



இந்த வரிகளை கேட்டவனது இதயம் ஸ்தம்பித்து தான் போனது அந்தநொடி.. அதன் தாக்கம் எப்பொழுதும் போல் கடந்தகால நினைவுகளையும் அது கொடுத்த வேதனைகளையும் ஒவ்வொன்றாக நினைவு படுத்தியது மட்டும் அல்லாது மனதில் பச்சை குத்தியது போல் பதிந்த ஒரு உருவத்தையும் எடுத்து காட்டியதில் அளவில்லா ஏக்கம் கண்களில் மின்னி மறைய உறைந்து நின்றவன், அந்த பாடல் முடிவுற்றதுமே இது வழமையான நிகழ்வு தான் என்பது போல் தன் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்..



இது தினப்படி வழக்கம் என்றாலும் ஒவ்வொரு நாளையும் புதியது போல் மாற்றி அமைப்பதோடு பழைய நிகழ்வுகளில் தளர்ந்து போவதை உணர்ந்தாலும் அந்த பாடலை அவன் கேட்காமல் இருந்ததில்லை.. இன்னும் சொல்லப்போனால் அதுதான் அவனை இத்தனை வயதிலும் உயிர்ப்புடன் வாழ வைத்து கொண்டிருக்கிறது..



அது அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது ஃப்ளோரில் உள்ள இரண்டு பெட்ரூம், கிட்சன், ஹால் கொண்ட பிளாட்.. அவன் தனிமை விரும்பி என்பதனால் தன் வேலைகளை தானே பார்ப்பான்.. வார நாட்களில் காலை மற்றும் இரவு உணவை வீட்டில் தயாரித்து கொள்பவன், மதிய உணவை மட்டும் தான் வேலை செய்யும் கட்டுமான கம்பெனியில் உள்ள கேன்டீனில் பார்த்து கொள்வான்..



சனி ஞாயிறு அன்றைய மனநிலையை பொறுத்து அவனின் சாப்பாட்டு வேளை நகரும்.. அத்தோடு அடுத்த வாரத்திற்கு தேவையான உடைகளை துவைத்து, அயன் பண்ணுதல், வீடு கிளீனிங், வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கவென அந்த இரு நாட்களும் ஜெட் வேகத்தில் நகர்ந்துவிடும்..



இந்தவார ஆரம்ப நாளான இன்றும் காலை நான்கு மணிக்கு எழுந்து அந்த குடியிருப்பின் அருகில் உள்ள பார்க்கில் ஜாக்கிங்க் சென்றவன், ஐந்து முப்பது போல் வீட்டிற்கு திரும்பினான்.. வியர்வை அடங்க சற்று நேரம் அமர்ந்திருந்தவன், பின் கிட்சனுக்குள் நுழைந்து டிஃபன் வேலையில் இறங்கிவிட்டான்..



பிரிட்ஜில் இருந்த மாவு எடுத்து இட்லி ஊற்றி ஒரு அடுப்பில் வைத்தவன், சாம்பாருக்கான பருப்பை குக்கரில் அளவான தண்ணீருடன் இட்டு அடுத்த அடுப்பில் வைத்துவிட்டு காய்களை கழுவி கட் பண்ணியவன், வெந்திருந்த இட்லியை இறக்கிவிட்டு சாம்பாருக்கான அடுத்த வேலைகளை செய்தவன், அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு குளித்து தாயாராகி ரூமை விட்டு வெளியில் வந்து கிட்சனுக்குள் சென்றவன், தனக்கு தேவையான உணவை தட்டில் பரிமாறி கொண்டு வந்து ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து உண்ண தொடங்கினான்..



அடுத்த கால்மணி நேரத்தில் ஆபீஸ் பேக்குடன் வீட்டை பூட்டிவிட்டு லிஃப்டின் மூலம் கீழே வந்து, பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்..



அடுத்த இருபது நிமிடங்களில் ஆபீசுக்குள் நுழைந்தவனை எம்டி வர சொன்னதாக அழைப்பு வர, என்னவாக இருக்கு என்ற யோசனையுடன் எம்டியின் ரூம் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றவன், அடுத்து நடந்த நிகழ்வுகளை நம்பமுடியாது நிலத்தினில் வேரோட நின்றுவிட்டான்..


தொடரும்..


உங்கள் கருத்துக்களை பகிர,

 
Status
Not open for further replies.
Top