All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "கானல் நீரோ?? காதல் தேரோ??" கதை திரி...

Status
Not open for further replies.

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5



முகத்தில் வந்து மோதிய பைலை எதிர்பார்க்காது சற்று தடுமாறினாலும் அப்படி ஒரு செயலை நம்பமுடியாத அதிர்ச்சியில் விழி விரித்து நோக்கியவனின் பாவனை, எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தவளுக்கு எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போல் இருந்தது போலும்..



“என்ன வேலை பார்த்து வச்சிருக்கீங்க மிஸ்டர் தேவ்?? நீங்க இங்கே வேலைக்கு வந்து இத்தோடு ஏழாவது டென்டர் நம் கையை விட்டு போயிருக்கு.. உங்க கிட்ட மட்டுமே கான்ஃபிடன்ஷியலாக இருந்த கோட் லீக்காகி இருக்கே.. என்ன காரணம் சொல்ல போகிறீங்க??” காட்டமாக கேட்டவளை எப்படி சமாதானப்படுத்துவது என அவனுக்கு புரியவில்லை..



அவள் கோபப்படுவதிலும் நியாயம் உள்ளது என்றே அவனுக்கு தோன்றியது.. அவன் வேலைக்கு சேர்ந்த இந்த நான்கு மாதத்தில் எவ்வளவிற்கு எவ்வளவு ரகசியமாக அமௌன்ட் கோட் பண்ணினாலுமே எப்படியோ அது லீக்காகிவிடுகிறது.. அதுமட்டும் அல்லாது அவர்கள் இழந்த டென்டர்களை குறிப்பிட்ட ஒரு கம்பனி மட்டுமே எடுத்திருந்தது.. அதுவும் தாங்கள் கோட் பண்ணிய அமௌன்டை விட ஒரு ரூபா குறைவாக இருக்கும்படி அவர்கள் கோட் பண்ணி இருப்பது புரியாத புதிராகவே இருந்தது..



இதில் அவன் தப்பு எதுவும் இல்லை என்றாலும் டென்டர் கோட் சம்மந்தப்பட்ட லெட்டர் அந்த நேரம் அவனிடம் இருந்ததால் முழு பொறுப்பும் அவனுடையதே.. எனவே என்ன சொல்வது என தெரியாததோடு அந்த ரூமின் கண்ணாடி தடுப்புகளின் ஊடாக அவன் அங்கு வந்தது முதல் நடந்தவற்றை ஊழியர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தபடி நிற்பதை கண்டவனுக்கு அவமானத்தில் முகம் சுருங்கி போனது..



யார் வேடிக்கை பார்க்கிறார்கள் என ஆராய முடியாதபடிக்கு இருந்தது அன்றைய நிலை.. முதன்முதலில் டென்டர் கிடைக்காது போகவும் பிஸ்னஸில் இதெல்லாம் சகஜம் என எண்ணியவள், அடுத்தடுத்து இதே நடக்கவும் சுதாரித்து கொண்டாள்.. எங்கு எப்படி இது நடக்கிறது என எவ்வளவு உன்னிப்பாக ஆராய்ந்தும் விடை கிடைக்காது போகவும் குறிப்பிட்ட மேனேஜரை வெளியைவிட்டு அனுப்பிவிட்டு புதிதாக இவனை சேர்த்திருந்தாள்..



ஆனாலும் இந்த நூதன திருட்டு தொடர்ந்து நடக்கவும் கறுப்பாடு இன்னும் இங்குதான் இருக்கிறது என புரிந்து போனது.. இருந்தாலும் அது யார் என்பது தான் புரியாத புதிராக இருந்தது.. எந்தளவிற்கு மிக ரகசியமாக அவர்கள் செய்தாலும் சறுக்கி போகும் மாயம் என்ன என்பதோடு குறிப்பிட்ட டென்டர்களை வாங்கிவிடும் போட்டி கம்பெனியின் முதலாளி அவளை போலியாக ஆறுதல் கூறுவதை தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..



“என் கண் முன்னாடி நிற்காமல் இங்கே இருந்து போங்க மிஸ்டர்” அளவில்லாத எரிச்சலோடு சொன்னவளை பாவமாக பார்த்துவிட்டு அந்த ரூமை விட்டு வெளியேறியவனுக்கு தனிமை தேவைப்பட, கேன்டீன் நோக்கி சென்று காபி ஒன்றை ஆடர் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக இருந்த மேசையோடு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவனின் மொபைல் வைபரேட் ஆகவும் பாக்கேட்டினுள் கை விட்டு அதனை எடுத்து அதில் வந்திருந்த மெசேஜை படித்தவனின் இதழ்களில் கனவோ என நினைத்து கொள்ளுமளவிற்கான புன்னகை தோன்றி மறைய, ‘பிளான் சக்சஸ்.. சீக்கிரமே நான் வந்த வேலை முடிஞ்சுடும்’ என டைப் பண்ணி அனுப்பிவிட்டு காபியை அருந்த ஆரம்பித்தவனின் முன்னால் வந்து அமர்ந்தார்கள் பார்கவும் விமலும்..



சில வருடங்களாக இதே ஆபீஸில் வேலையில் இருப்பவர்கள்.. அவன் அங்கு வந்ததில் இருந்து அவனுடன் நல்லுறவை வளர்த்திருந்தவர்கள்.. இன்று எம்டி அவனை எல்லோரும் பார்க்க விளாசி தள்ளியதை பார்த்தவர்கள் மனது கேட்காமல் அவன் பின்னாலேயே வந்திருந்தனர்..



“என்னாச்சு தேவ்?? மேம் ஏன் இந்தளவிற்கு கோபமா இருக்காங்க??” கவலையாக கேட்ட விமலை பாவமாக பார்த்தவன்,



“இந்த முறையும் டென்டர் கைவிட்டு போய்டுச்சு” என சொன்னவனை பார்கவும் விமலும் அதிர்ந்து போய் நோக்கினர்..



“எப்படி இது நடந்திச்சு??” பார்கவின் இந்த கேள்வியை கண்களில் தேக்கி பார்த்திருந்த விமலையும் நோக்கி பெருமூச்சை வெளியேற்றியவன்,



“எப்படின்னு தெரியலை.. எனக்கும் மேம்க்கும் மட்டும் தெரிந்த கோட் பற்றி வேறு யாரோ தெரிஞ்சுக்கிறாங்க.. பட் அது யார்ன்னு தான் இப்போ வரை புரியலை” என ஆதங்கப்பட்டவனை எப்படி தேற்றுவது என்றே அவர்களுக்கு புரியவில்லை.. அவர்களுக்குமே தேவின் வருகைக்கு முன்பும் அதன் பின்பும் நடக்கும் இந்த பிரச்சனை பற்றி தெரியும் தானே.. கூடவே, இந்த ஆபீசில் வாட்ச்மேன் முதற்கொண்டு உயர் பதவியில் உள்ள ஊழியர்கள் வரை இந்த குழப்பங்களுக்கு என்னதான் விடிவு என்பதை பற்றிய பேச்சாகவே இருந்ததே.. அப்படி இருக்க, விடையே தெரியாத கேள்விக்கு அவர்களாலும் எப்படி பதில் சொல்ல முடியும்.. ஆனால் சோர்ந்து போய் இருக்கும் நண்பனை தேற்றுவது அவர்களுக்கு முதன்மையாக பட்டது..



“விடு தேவ்.. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.. நம்ம ஆபீஸ் திருடனும் ஒருநாள் மாட்டுவான்.. அப்போ இருக்கு அவனுக்கு” என பல்லை கடித்து பார்கவ் ஆறுதல் சொல்லவும் தேவ்வின் முகம் சற்று தெளிந்தது..



“ஆமா தேவ்.. இப்போவரை நம்ம மேம் உன்னை சந்தேகப்படலை தானே.. சோ ப்ரீயா விடு” என்ற விமலை ஒரு பார்வை பார்த்தவன்,



“தேங்க்ஸ் ப்ரெண்ட்ஸ்.. இப்போ கொஞ்சம் பெட்டராக பீல் பண்ணுறேன்” புன்னகை முகத்துடன் சொன்னவனை முறைத்துவிட்டு எழுந்து கொண்டவர்கள்,



“உன் தேங்க்ஸை தூக்கி உடப்பில் போட்டுட்டு உள்ளே போகலாம் வா.. இல்லைன்னா, வேலை நேரத்தில் என்ன வெட்டி பேச்சுன்னு அதற்கும் கேள்வி வரும்” என்றதுடன் நடக்க, இதழ்களில் தோன்றிய நமட்டு சிரிப்புடன் அவர்களை தொடர்ந்தான் தேவ்..



**************



தனது பிஏ கொண்டு வந்து தந்த கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்து போட்ட அர்ஜூன்,



“இன்டர்வியூக்கு எத்தனை கேண்டிடேட் வந்திருக்காங்க அசோக்??” மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தபடி கேட்க,



“மொத்தமாக முப்பது பேர் வந்திருக்காங்க சார்” வாய் அர்ஜூனுக்கு உரிய பதிலை உரைத்தாலும் கையானது தன் முதலாளிக்கு ஏதுவாக கோப்புகளை உரிய முறையில் வைத்து கொண்டிருந்தது..



“குட்.. எத்தனை கேர்ள்ஸ், எத்தனை பாய்ஸ்??”



“எட்டு கேர்ள்ஸ்.. மிகுதி பாய்ஸ் சார்”



“ஒஹ்.. எல்லோருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா அசோக்??”



“பெரும்பாலானோருக்கு இருக்கு சார்.. ஆனால் ஒரு பொண்ணு மட்டும் இப்போ தான் பர்ஸ்ட் டைம் வேலைக்காக நம்ம ஆபீசுக்கு வந்திருக்காங்க” என சொல்லவும் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து அசோக்கை நோக்கி,



“இந்த இன்டர்வியூ எதற்காகன்னு மென்சன் பண்ணியும் வந்திருக்காங்களா??” என கேட்க,



“ஆமா சார்.. இத்தனைக்கும் இந்த இன்டர்வியூவிற்காக அவங்க ஊரில் இருந்து இங்கே வந்திருக்காங்க” என்றதும் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்த அர்ஜூன்,



“இதற்காக மட்டும் நாம் வேலை கொடுக்க முடியாது இல்லையா அசோக்??” மனதின் எண்ணத்தை கூறியவனுக்கு அந்த பெண் யாராக இருக்கும் என்ற ஆர்வம் தலை தூக்கினாலும் அதனை முகத்தில் காட்டாது மறைத்தான்..



“நிச்சயமாக சார்.. பட் அவங்க டிசைன்ஸ் அத்தனையும் ரொம்ப நன்றாக இருந்தது.. சின்ன சின்ன விசயங்களை கூட பர்பெக்டாக கொடுத்திருக்காங்க.. அந்த ஒரு காரணத்திற்காக தான் அவங்களை உட்கார வச்சிருக்கேன் சார்.. மற்றது எல்லாம் உங்க முடிவில் தான் இருக்கு”



“ஓகே அசோக்.. காரணம் இல்லாமல் நீங்க எதையும் சொல்லமாட்டீங்க.. நான் பார்த்துக்கிறேன்” பேச்சு பேச்சாக இருந்தாலும் அசோக் வைத்திருந்த கோப்புகளில் கையெழுத்திட்டு முடித்து பேனாவை மூடி உரிய இடத்தில் வைத்தவன்,



“நான் சொன்னதும் ஒவ்வொருவராக அனுப்புங்க.. அப்புறம், கேண்டிடேட்ஸ் லிஸ்ட்டும் எனக்கு கொடுத்துடுங்க” அடுத்த கட்ட வேலையை அர்ஜூன் கூறியதும் கோப்புகளை கையில் எடுத்து கொண்ட அசோக்,



“ஓகே சார்.. டூ மினிட்ஸ்.. அந்த பைலை கொண்டு வந்து தரேன்” என்றவன், சொன்னது போலவே குறிப்பிட்ட பைலை அர்ஜூனிடம் சேர்த்துவிட்டான்..



இதுதான் அசோக்.. எந்த வேலையையும் சிறு தப்பு கூட இல்லாது செய்து முடிப்பவனிடம் வேகமும் இருந்தது.. விவேகமும் இருந்தது.. அதனாலேயே அந்த ஆபீசில் கடந்த ஐந்து வருடங்களாக நிலைத்து நின்றவனின் இடத்திற்கு இப்பொழுது யாரையேனும் தெரிவு செய்யவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது..



அன்று மங்கைக்கு வேறு வேலை இருந்ததால் இந்த இன்டர்வியூவிற்கு சௌந்தரியை கூட இருக்கும்படி கூறியிருக்க, அவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்..



“ஒரு இன்டர்வியூ அதுக்கு ஏன்டா ரெண்டு பேரு??” வந்ததும் குறைபட்ட அன்னையை முறைத்த அர்ஜுன்,



“ரெண்டு பேரோ மூணு பேரோ.. நீங்களும் நம்ம பிஸ்னஸில் ஒன் ஆஃப் தி பார்ட்னர் தானே?? அக்கா இல்லைன்னா நீங்க அவ்வளவு தான்” என அழுத்தமாக சொன்னவனை சலிப்பாக நோக்கி,



“சரி சரி.. இன்னிக்கு வரவங்க லிஸ்ட்டை கொடு” மகனிடம் கேட்டு பைலில் இருந்தவற்றை கூர்மையுடன் ஒவ்வொன்றாக ஆராய்ந்து முடித்தவர்,



“இது வேலைக்கான இன்டர்வியூவா இல்லைன்னா உனக்கு பொண்ணு பார்க்கிற சுயம்வரமா??” அந்த பைலில் இருந்த இளம் பெண்களின் விபரங்களை குறிப்பிட்டு நக்கலாக கேட்ட சௌந்தரியை பல்லை கடித்தபடி முறைத்து பார்த்தவன்,



“இன்னிக்கு ரொம்ப பேசுற மா.. வீட்டுக்கு வா வச்சுக்கிறேன்” என மிரட்டியவன்,



“முதலில் நீ வந்த வேலையை பார்க்கலாமா??” என கேட்டான்..



“பார்க்கலாமே.. முதலில் மிஸ்டர் முருகனை வரச்சொல்!!” அதுவரை இருந்த விளையாட்டுத் தனத்தை கைவிட்டவராக சொல்ல, அவர் ஃபார்முக்கு வந்துவிட்டதை உணர்ந்த சிரிப்புடன் அசோக்கிற்கு அழைத்து குறிப்பிட்ட நபரை உள்ளே அனுப்ப பணித்தான்..



அடுத்த அரைமணி நேரத்தில் முருகனை தொடர்ந்து பத்து பேருக்கு மேல் வந்து சென்றுவிட்டாலும் ஒருவர் கூட அவர்களின் எண்ணத்திற்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை..



“இதற்கு முன்னாடி வேலை பார்த்ததில் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்ன்னு நினைத்தால் ஒவ்வொருதர் ஒவ்வொரு விஷயத்தில் கோட்டை விடுறாங்களே டா.. இது எங்கே போய் முடியப்போகுதோ??” அங்கலாய்ப்புடன் உரைத்துவிட்டு கண்ணாடி கப்பில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்திய சௌந்தரி,



“அடுத்த ஆளை வரச்சொல்லு.. இனிமேல் வருபவர்களில் யாராவது தேறுகிறார்களான்னு பார்ப்போம்” சலிப்புடன் சொல்ல, மைந்தனும் தாய் சொன்னதை சிறப்பாக செய்து முடித்திருக்க, அடுத்த சில நொடிகளில் “மே ஐ கம் இன்” என்ற பெண் குரலோடு கதவும் மெல்ல தட்டுப்பட,



“குயில் கூவுதுடா மகனே” என்ற தாயின் ரசனைக் குரலில் நமட்டு சிரிப்பு தோன்றினாலும் அவனின் மனதும் அக்குரலை மிகவும் ரசிக்கவே செய்தது.. இருந்தாலும் அவன் ஆற்றவேண்டிய கடமை முன் நிற்க, “கம் இன்” என அனுமதி கொடுக்கவும் மெல்ல கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த யுவதியை கண்டு அவனது மனது மயில் போல் உருவம் என ஜொள்ளி வைத்த நேரம், சௌந்தரியும் அதையே முணுமுணுக்கவும் தாயை ஆராய்ச்சியாக பார்த்தவன், அவர் வாயை பிளந்து புதியவளை நோக்குவதை கண்டவனுக்கு சுவாரசியமாக இருக்க, மெல்ல அவரின் காதோரம் குனிந்தவன்,



“அந்த பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டிங்களா மா??” முகத்தை அப்பாவி போல வைத்தபடி சொன்ன மகனை அதிர்ந்து நோக்கிய சௌந்தரிக்கு அப்பொழுது தான் தான் செய்து கொண்டிருந்த விஷயம் புத்திக்கு உறைக்கவும் ஒருநொடி அர்ஜுனை அசடு வழிய நோக்கியவர்,



“இது ஆபீஸ்டா மகனே!! அந்த பொண்ணு வேற பார்த்துட்டு நிக்கிது.. எதுன்னாலும் வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்” பின்வாங்குவது போல் சொன்ன தாயை கேலியாக பார்த்து,



“விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை.. ஹ்ம்..” எனவும் “அதெல்லாம் இல்லை.. அந்த பொண்ணை நிற்க வச்சுட்டு நாமளே பேசிட்டு இருக்கிறதை பார்த்து நம்மளை லூசுன்னு நினைச்சுக்க போகுது” சமாளிப்புடன் சொன்னவரை அவன் கிண்டலாக பார்த்ததை பொருட்படுத்தாது புதியவளை நோக்கி புன்னகைத்த சௌந்தரி, இருக்கையை காட்டி “உட்காரும்மா” எனவும் மெல்ல அதில் அமர்ந்து கொண்டாள் அபர்ணா..



இப்பொழுது தான் கல்லூரி படிப்பை முடித்திருந்த அபர்ணாவிற்கு தன் திறமையை காட்ட ஏதுவா வேலை தேவைப்பட்டது.. அதுவும் சொந்த ஊரில் இல்லாமல் வேறு ஊரில் இருக்கும் கம்பெனியில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது அவளது எண்ணம்..



எனவே, குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன தடுத்தும் தன் முடிவில் உறுதியாக நின்று இந்த இன்டர்வியூவிற்கு வந்தாலும் தன்னால் தனித்து இங்கே இருக்க முடியுமா என்ற பயமும் மனதுக்குள் வியாபித்திருந்தது..



ஆனால், ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் விடாமுயற்சியும் அப்பயத்தை மனதின் ஓரம் ஒதுக்கி ஒருவித தெம்பை கொடுக்கவும் நேர்முகத்தேர்விற்கு வந்திருந்தவர்களையும் அந்த கம்பெனி பற்றிய குறிப்புகளையும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஆராய முடிந்தது அவளால்..



ஒவ்வொருவராக சிலர் உள்ளே சென்று வந்த போதும் தன்னை அழைக்கும் நொடிக்காக காத்திருந்தவள், அடுத்த அழைப்பாக தன் பெயரை கூறி உட்செல்லுமாறு கூறியதும் மனதுக்குள் படபடப்பாக உணர்ந்தாலும் வெளியில் சாதாரணம் போல் முகத்தை வைத்தபடி எம்டியின் அனுமதியுடன் உள்ளே நுழைந்தவள், முதலில் பார்த்தது; தன்னனையே ஆவென பார்த்தபடி இருந்த பெண்மணியை தான்..



‘இதுக்கு முன்னாடி பொண்ணுங்களையே பார்த்ததே இல்லைங்கிற மாதிரி இப்படி பார்க்கிறாங்களே.. பக்கத்தில் இருக்கிறவர் கல்லையும் மண்ணையும் போல் பார்க்கிறார்.. எல்லாமே உல்ட்டாவாக இருக்கே..!!’ என்ற எண்ணம் தோன்றி மறைந்தாலும் வெளியில் அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்பதில் கவனத்தை வைத்தபடி நின்றவளை அப்பெண்மணி அமர சொல்லவும் நொடியில் மாறிப்போன அவரின் செயல்களை எண்ணி வியந்தவாறு அமர்ந்து கொண்டவள், தான் கொண்டு வந்த கோப்பை அவரிடம் சேர்த்தாள்..



சிலநிமிடங்கள் செலவிட்டு அதனை புரட்டிய சௌந்தரியின் புருவங்கள் அவ்வப்போது வியப்புடன் ஏறி இறங்கினாலும் மொத்தமாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மகனிடம் நகர்த்தியவர்,



“சென்னையிலேயே உங்களுக்கு ஏற்ற வேலை கிடைத்திருக்கும்.. அதையெல்லாம் விட்டிட்டு இங்கே வர என காரணம்ன்னு நான் தெரிந்து கொள்ளலாமா??” என அபர்ணாவிடம் கேட்க, இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவள்,



“அங்கு வேலை பார்த்தால் நல்ல சேலரியும் அனுபவமும் கிடைக்கும் தான்.. பட், குடும்பத்தை விட்டு விலகி எனக்கான ஒவ்வொன்றையும் நானே பார்த்து இந்த சமுதாயத்தில் தனித்து வாழ்ந்து பழகுறதே என் உண்மையான ஊதியமாக இருக்கும்.. அதற்கு இந்த வேலை எனக்கு மிகவும் தேவையாக இருக்கிறது” என்றவளின் பேச்சில் தாயும் மகனும் உள்ளூர மெச்சிக்கொண்டனர்..



“குட்.. இந்த வேலை பற்றி எதுவும் தெரியாமல் நீங்க நினைப்பது நடக்கும்ன்னு எதனை வைத்து சொல்றீங்க மிஸ் அபர்ணா??” அவளின் பைலை தானும் பார்த்து முடித்துவிட்டிருந்த அர்ஜூன் கேட்க, அவனை ஏறிட்டு நோக்கியவள்,



“இந்த கம்பெனி பற்றி இணையத்திலும் சிலரிடம் விசாரித்தும் அறிந்து கொண்டதில் எனக்கான தேவைகளை நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்” எனவும் ‘பின்னுறாளே’ என மனதுக்குள் கவுண்டர் கொடுத்தவன், உடைகள் சம்மந்தமான சில கேள்விகளையும் இன்றைய வர்த்தகம் சம்மந்தமான கேள்விகளையும் கேட்க, அவளும் சளைக்காமல் எல்லாவற்றுக்கும் பதில்களை சொல்லிக்கொண்டே வந்தாள்..



அடுத்த சிலநிமிடங்களில் சௌந்தரிக்கும் அர்ஜூனுக்கும் அவளின் பதில்களில் திருப்தி ஏற்பட்டுவிட, அவளின் பைலை அவளிடம் கொடுத்துவிட்டு,



“வெளியில் வெயிட் பண்ணுங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்க முடிவுகளை சொல்கிறோம்” என புன்னகையுடன் அர்ஜூன் கூறவும் “தேங்க்யூ சார், தேங்க்யூ மேம்” என நன்றி உரைத்துவிட்டு அந்த ரூமைவிட்டு வெளியில் வந்த அபர்ணாவிற்கு தான் நல்லமுறையில் இன்டர்வியூவை முடித்ததாகவே தோன்ற, அதுவரை இருந்த பதட்டம் எல்லாம் விலகியவளாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தவளை பெரிதும் காக்க வைக்காது அசோக் வந்து அவளுடன் இன்னும் இருவரை இருக்க பணித்துவிட்டு மற்றவர்களை அனுப்பி வைத்தவன், அபர்ணாவையும் மற்றவர்களையும் உள்ளே அழைத்து சென்றான்..



பெரிதாக இருந்த ஹாலில் பெரிய மேசையும் அதில் துணியை விரித்து அளவாக வெட்டியபடி சிலர் நின்றதோடு வேறு சிலரும் உடை தைப்பது சம்மந்தமான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.. அங்கு நின்றிருந்த முதன்மையானவரிடம் மற்ற இருவரையும் ஒப்படைத்தவன்,



“இந்த கம்பெனியில் டிரெயினிங் மூன்றுமாத காலம் இருக்கும்.. உங்க இரண்டு பேருக்கும் இவர் டிரெயின் பண்ணுவார்” என்றவன், அபர்ணாவின் பக்கம் திரும்பி, “மிஸ் அபர்ணா நீங்க எங்கூட வாங்க” என்றதுடன் நடந்தவனை பின்தொடர்ந்தாள் அவள்..



எம்டி என்ற எழுத்துடன் இருந்த அறைக்கு பக்கத்து அறைக்குள் அழைத்து சென்றவன், அங்கிருந்த இருக்கையை காட்டிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொண்டவன்,



“வெல்கம் டூ அவர் கம்பெனி அபர்ணா.. அடுத்த மூன்று மாதத்தில் இருந்து நீங்கதான் எங்க பாஸின் பிஏ.. அதுவரை உங்களுக்கான டிரெயினிங்கை தரப்போறது நான் தான்” எனக்கூறி புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்து,



“தேங்க்யூ மிஸ்டர் அசோக்.. இந்த கம்பெனிக்கு என்னிக்கும் நான் உண்மையாக இருப்பேன்” என்றாள் அவள்..



“அக்ரிமென்ட் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.. ஒருதடவை படிச்சு பார்த்துட்டு சைன் பண்ணுங்க” எனக்கூறி ஒரு பைலை அவள் முன்னால் வைக்க, அதில் இருந்தவற்றை நிதானமாக வாசித்து முடித்தவள், கடவுளை வேண்டிக்கொண்டு கையெழுத்து இட்டு அவனிடம் கொடுத்தாள்..



“ஓகே.. இன்னிக்கு கம்பெனி பற்றிய சில பைல்ஸ் தரேன்.. படிச்சு பாருங்க” என்றதோடு சில பைல்களை கொடுத்தவன், தனது வேலைகளில் ஆழ்ந்து போனான்..



சிறுவயதில் இருந்தே அறிவும் நுணுக்கமும் அதிகம் அபர்ணாவிற்கு.. தினசரி பத்திரிகையின் சிறிய பிரிவு கையில் கிடைத்தாலுமே அதில் உள்ளவற்றை ஒருவரி விடாமல் படித்துவிடுவாள்.. அப்படி இருக்கும் போது பிடித்த விடயம் சம்மந்தமாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பாளா?? இடையிடையே ஏற்பட்ட சந்தேகங்களை அசோக்கிடம் கேட்டு தெளிவுபடுத்தியும் கொண்டவள், முழுமூச்சாக அனைத்தையும் படித்து முடித்துவிட்டாள்..



“நம்ம மேம் கிரேட்ல??”



“ஆமா.. அவங்க அப்பா சின்னதா ஆரம்பிச்சதை அவங்க இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்காங்க.. பட் என்ன உழைத்தும் இந்த கம்பெனி பாஸூக்குன்னு எழுதி வச்சிட்டாங்க.. அவரும் தன் படிப்பை முடித்து கொண்டு பொறுப்பை கையில் எடுத்துக்கிட்டார்”



“கம்பெனி லாபவீதம் அதிகரித்துக்கொண்டு இருக்கிறதை பார்க்கும்போது அவரும் லேசுபட்ட ஆள் இல்லைன்னு தோணுது” தன் முன்னால் இருந்த பைலை பார்த்தபடி உரைக்க,



“ஆமா.. ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் மேடமின் டிரெயினிங்கில் பாஸ்ட்டாவே முன்னாடி வர ஆரம்பிச்சிட்டார்” என்றவன், நேரத்தை பார்த்துவிட்டு,



“லஞ்ச் டைம் வருது மிஸ் அபர்ணா.. நம்ம கம்பெனி கேன்டீனில் எல்லாமே கிடைக்கும்.. இன்னிக்கு உங்க ஹெல்ப்புக்கு ஸ்டாப் ஒருதங்களை அனுப்புறேன்.. பார்த்துக்கோங்க” என்றவன், பெண் ஊழியரோடு அவளை அனுப்பி வைத்தான்..



*******************



வழமையைவிட அதிகமான பரபரப்புடன் இருந்த ஆபீசை பார்த்தபடி பார்கவின் அருகில் அமர்ந்துகொண்ட விமல்,



“என்ன நடந்துச்சு டா பார்கவ், நம்ம ஆபீசே சந்தைக்கடை மாதிரி இருக்கு??” ஆர்வமாக கேட்க,



“நம்ம ஆபீஸ் திருடன் மாட்டிக்கிட்டானாம் டா.. இதுதான் இன்றைய ஹாட் நியூஸ்” எனக் கூறியவனை ஆச்சரியமாக பார்த்த விமல்,



“எப்போடா இந்த அதிசயம் நடந்திச்சு??” என கேட்டான்..



“எனக்கும் அந்த விபரம் எதுவும் தெரியாதுடா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் மீட்டிங் இருக்கு.. எப்படியும் அங்கே வச்சு எப்படி, யாருங்கிறது தெரிஞ்சுட போகுது”



“ம் பார்க்கலாம்” என்றதோடு தன் வேலையை பார்க்கலானான் அவன்..



அடுத்த அரைமணி நேரத்தில் அந்த மீட்டிங் ஹாலில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்து,



“இன்றைய நாள் இந்த கம்பனியின் வெற்றிநாள்.. இதுவரை இங்கு நடந்த நூதன திருட்டை எதற்காக, யார் செய்ததுன்னு கண்டுபிடிச்சாச்சு.. அதையும் உங்ககூட இருந்த ஒருவர் கண்டுபிடிச்சிருக்கார்.. தப்பு செய்தவரை சட்டம் தண்டிக்கும்.. இப்போ இதை கண்டுபிடித்தவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்றவள், அந்த ஹாலின் வாசலை காட்ட, அனைவரின் பார்வையும் ஆவலுடன் சென்று அங்கு நின்றவனையும் அவனின் தோற்றத்தையும் கண்டு அதிர்ச்சியில் நிலைத்து நின்றுவிட்டது..


தொடரும்..
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த அத்தியாயத்தில் இருந்து குட்டி டீ..

********************************


“இன்னிக்கு இன்டர்வியூ எப்படி போச்சு அஜ்ஜூ??”




“நல்லா போச்சுக்கா.. முப்பதுக்கும் மேல் கேன்டிடேட்ஸ்.. ஒவ்வொருவரையும் இன்டர்வியூ பண்ணுறதில் எந்த பிரச்சினையும் வரவில்லை.. பட், எனக்கு பிஏவா வரவங்களை சூஸ் செய்வதில் தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது”



“ஏன், என்னாச்சு??”



“எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு நினைத்தால் சில விஷயத்தில் கோட்டை விடுறாங்க.. எல்லா விஷயங்களிலும் பர்ஃபெக்ட்டாக இருக்கிற பொண்ணுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லை”



“அப்புறம் என்ன பண்ணின??”



“எக்ஸ்பீரியன்ஸ் என்கிறது அனுபவத்தில் மட்டும் இல்லாமல் கற்றுக்கிறதிலும் கிடைக்கும்.. அதை நாமளே டிரெயினிங்க் மூலம் கொடுக்கலாம் தானே?? சோ, அந்த பொண்ணையே பிஏவாக செலெக்ட் பண்ணி டிரெயினிங்கிற்கு அசோக்கிடமே விட்டிருக்கேன்” என்றவனை மெச்சுதலாக நோக்கிய மங்கை,



“ரொம்ப தேறிட்ட அஜ்ஜூ.. இது, இத்தோடு முடிவதில்லை.. தினந்தினம் நமக்கான சோதனைகள் வந்துக்கிட்டே இருக்கும்.. அதையும் முகம் கொடுத்து அவற்றை முறியடிக்கிறதில் தான் இருக்கு நமக்கான வெற்றி” என அறிவுரை கூறியவள்,



“சரி உன் பிஏ பற்றி சொல்லு” என விபரம் கேட்டாள்..



“அவங்க நேம் அபர்ணா” எனவும் விலுக்கென நிமிர்ந்த மங்கை,



“ஃபுல் நேம் என்ன??” ஆர்வத்தையும் படபடப்பையும் காட்டாதிருக்க முயன்றபடி கேட்டாள்..



“அபர்ணா தில்லைநாயகம்” என்றதோடு அவளின் ஊரையும் அர்ஜூன் கூறியதும் உடல் தளர புருவச்சுழிப்புடன் எதையோ யோசித்தவள்,



“ஓகே.. தனியாக வந்திருக்காங்களா??” என கேட்டாள்..
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6



“தேவ்.. தேவ் ஆனந்த்” ஆச்சரியம், அதிர்ச்சி என்ற பற்பல உணர்வுகளின் வெளிப்பாடாக உச்சரிக்கப்பட்ட பெயருக்கு உரியவன், இதுநாள் வரை ஆபீஸ் ஊழியராக இருந்த தோற்றம் இல்லாமல் தாடி அற்ற தாடையும் முறுக்கிவிடப்பட்ட மீசையும் உடலுடன் ஒட்டிய காக்கி உடையும் அதனூடாக வெளிப்பட்ட தசைக்கோளங்களும் என கம்பீரமாக நடந்து வந்தவனை புன்னகை முகமாக வரவேற்ற தங்கள் எம்டியை வியப்பாக பார்த்தவர்களுக்கு இதில் ஏதோ உள்விஷயங்கள் அடங்கி இருக்கின்றது என்பது புரிந்து போனது..



ஆனால் வாய் திறந்து எதனையும் கேட்டுவிட முடியாத நிலையை உணர்ந்து எல்லோரும் அங்கு நடப்பவற்றை அமைதியாக வேடிக்கை பார்க்கலாகினர்..



“திஸ் இஸ் தேவ் ஆனந்த்.. உங்க எல்லோருக்கும் இந்த கம்பெனியின் ஊழியராக அறிமுகமானவர்.. ஆனால் சார் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் கமிஷ்னர், கூடவே என் காலேஜ் ப்ரெண்ட்டும்.. நம்ம ஆபீஸில் நடக்கும் வினோத திருட்டை பற்றி சொல்லி அதனை கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணமுடியுமான்னு கேட்டேன்.. அவரும் ஒத்துக்கிட்டு சீக்கிரமே கல்பிரிட் யாருன்னு கண்டுபிடிச்சுட்டார்.. அது எப்படின்னு அவரே விளக்குவார்” எனக் கூறிவிட்டு அமர, எல்லோரையும் ஆராயும் பார்வை பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தான் தேவ் ஆனந்த்..



“ஹாய் ப்ரெண்டஸ்.. நான் போலீஸ் என்கிறது உங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.. ஆனால் எங்களுக்கு இதைத்தவிர வேறு வழி இல்லையே.. வேலை பார்க்கிற இடத்தில் நீங்க விசுவாசமாக இருந்திருந்தால் நாங்க ஏன் இந்தமாதிரி செய்யப்போகிறோம்” எனக்கூறி தோள்களை குலுக்கியவனின் பாவனை முற்றிலும் மாறிப்போனது..



“கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கூட இருந்தே குழி பறிக்க ரொம்ப தைரியம் தான்.. பட், அதெல்லாம் இனிமேல் இந்த கம்பனியில் நடக்காது” என்றவனின் ஓரப்பார்வை, குறிப்பிட்ட நபரின் நடவடிக்கைகளை ஆராய்ந்து வியர்த்து வழிந்த முகத்தையும் இருக்கையில் நெளிந்தபடி அமர்ந்திருந்ததையும் கண்டு இதழ்கள் நமட்டு புன்னகை புரிந்தது..



“ஓகே.. உங்க பழைய ஜிஎம்மை வேலை விட்டு தூக்கலை.. எங்க பிளானுக்காக வீட்டிலிருந்து வேலை பார்த்தார்.. மிஸ்டர் தேவசகாயம்.. உள்ளே வாங்க” குரலை உயர்த்தி அழைத்த அழைப்பிற்கு கதவை திறந்து உள்ளே வந்தார் அவர்..



“இந்த கம்பெனியில் சில கான்பிடன்ஷியல் டீடெயில்ஸ் தவிர மற்றவை பற்றி எந்தவித ஒளிவு மறைவும் இல்லை.. அதுதான் இப்போ இந்த நிலையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கு” பேச்சு பேச்சாக இருந்தாலும் அந்த ஹாலில் அமர்ந்திருந்த ஒவ்வொருவர் பின்னாலும் மெல்ல நடக்க அங்கிருந்த அனைவரின் இதயமும் தாளம் தப்பி துடித்தது.. இவர்தான் குற்றவாளி என முதலிலேயே சொல்லாது அனைவருக்கும் ஆர்வம் ஏற்பட பேசினாலும் குற்றவாளியின் இரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொண்டிருந்தான்..



“அந்த குற்றவாளிக்கு அவன் செய்கிற வேலைக்கு லட்சக்கணக்கில் ஆதாயம் கிடைக்கவும் சாரும் எதையும் யோசிக்காமல் ருசி கண்ட பூனை போல் மறுபடியும் மறுபடியும் டென்டர் அமௌண்ட் பற்றி சொல்லியிருக்கார்.. இதில் என்ன ஸ்பெஷல்னா இத்தனை வருஷத்தில் சார் பண்ணுற தில்லு முல்லு அவர் ப்ரெண்ட்சுக்கு தெரியாமல் பார்த்துக்கிட்டது தான்” என்றபடி நடந்தவன், தன் முன்னால் அமர்ந்திருந்தவரின் தோளில் கை வைத்து,



“நான் சொன்னதில் அது யாருன்னு கெஸ் பண்ண முடியுதா??” என கேட்க, தேவ் ஆனந்தின் தொடுகையிலும் கேள்வியிலும் பதறியடித்து எழுந்த அந்நபர்,



“என்கிட்ட கேட்டால் எனக்கு எப்படி தெரியும் சார்” முகவாயை துடைத்தபடி திக்கி திணறி உரைத்தவனை கூர்ந்து பார்த்தபடி,



“அப்படியா சார்.. உங்க மொபைலை காட்ட முடியுமா??” என கேட்கவும் கை நடுங்க தனது மொபைலை எடுத்து கொடுக்கவும் அதனை நன்றாக திருப்பி திருப்பி பார்த்த தேவ்,



“மிடில் கிளாஸ் பேமிலியில் இரண்டு தங்கைகளுக்கு அண்ணனா இருக்கிற சாரின் சம்பளம் மட்டும் தான் அந்த குடும்பத்தின் ஒரேயொரு வருவாய்.. அப்படி கஷ்டப்பட்ட குடும்ப பின்னணி உள்ளவர் கையில் லேட்டஸ்ட் ஐஃபோன்” என உதட்டை பிதுக்கியவன்,



“எப்படி சார்??” என கேட்கவும் மென்று விழுங்கியவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை..



“அது வந்து சார்” என இழுக்கவும்,



“வந்தும் இல்லை போயும் இல்லை.. உன்னைப்பற்றிய டீடெயில்ஸ் எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்றவன், அவனின் காலரை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு எம்டியின் அருகில் நிறுத்த, தேவின் செயலில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்துபோய் எழுந்து நிற்க, கையை காட்டி அனைவரையும் அமர பணித்தவன்,



“உங்க அதிர்ச்சி எனக்கு புரியுது, ஆனால் சில விஷயங்களை தள்ளிப்போடக்கூடாது தானே.. இந்த ஆபிஸின் எம்டி முதல் ஸ்டாப்ஸ் வரை தலையால் தண்ணீர் குடிக்க வைத்த ஆள் இவர்.. இன்னும் சொல்லப்போனால் எல்லோரையும் அடிமுட்டாளாக்கிய அதி புத்திசாலி” என நக்கல் குரலில் உரைக்க, அந்த ஹாலில் அமர்ந்திருந்த அனைவராலும் இதை ஜீரணிக்கவே முடியவில்லை..



ப்ரெண்டாக, சகோதரனாக, மகனாக என பலதரப்பட்ட உறவுகளாய் அத்தனை நம்பினர்.. அவனை ஒருநொடி கூட இவன் அதை செய்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை அவர்கள்.. எல்லோருமே திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் அமர்ந்திருக்க, சற்று வயதில் மூத்தவர் ஒருவர் எழுந்து,



“இதை செய்தது நீன்னு என்னால் இன்னும் நம்பமுடியவில்லை விமல்.. உன்னை மகனா நினைத்ததற்கு நல்ல தண்டனை கொடுத்துட்ட” ஆதங்கத்துடன் கூறிவிட்டு அவர் அமர்ந்து கொள்ள, இத்தனை குழப்பங்களுக்கும் காரணமான விமல் தான் மாட்டிக்கொண்ட அவமானத்திலும் அடுத்து என்ன ஆகுமோ என்ற பயத்திலும் தலை குனிந்தபடி நிற்க, வேறு ஒருவர் எழுந்து,



“இவன்தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க சார்??” என கேட்டார்..



“முதலில் எனக்குமே அது யார், எப்படின்ற குழப்பம் இருந்தது.. மூன்றாவது டென்டர் போனபிறகு தான் எப்படி கான்பிடன்ஷியலான கோட் லீக்காகுதுங்கிறதை கண்டுபிடிச்சேன்” என்றவன், அனைவரின் முகத்திலும் அது எப்படி என்பதை அறியும் ஆர்வம் இருக்கவும் நேராக விஷயத்திற்கு வந்தான் தேவ் ஆனந்த்..



“பொதுவாக இங்கே உள்ள ஸ்டாஃப்ஸ் ரூம்ஸ் கண்ணாடியால் உருவானது.. மேனேஜர் ரூமும் அப்படியானது தான்.. அந்த ரூமின் சுவரில் அதாவது மேனேஜர் உட்காரும் சீட்டுக்கு பின்னால் ஒரு முகம் பார்க்கிறமாதிரி கண்ணாடி இருக்கும்.. கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும் அது அந்த கண்ணாடியில் ரிஃப்பிளக்ட்டாகும்.. அதைத்தான் இந்த விஷயத்தில் விமலும் பண்ணியிருக்கிறார்.. எப்படின்னு கண்டுபிடிச்சிட்டாலும் யாருன்னு கண்டுபிடிக்கிறதில் தான் இத்தனை நாள் இழுத்துடிச்சு.. டென்டர் பற்றி ஸ்டாஃபிற்கு சொல்லப்பட்டதில் இருந்து எந்த நேரம் மேனேஜர் கோட் டைப் பண்ணுவாருன்னு கண்டுபிடிச்சு அந்த நேரம் தன்னோட இடத்தில் இருந்தே அந்த கண்ணாடியில் தெரியும் ரிஃப்பிளைக்ட்டை வீடியோ எடுத்துடுவார்.. அந்த வீடியோவில் டென்டர் அமௌன்ட் கிளியராகவே தெரியும்.. அதன்பிறகு என்ன அந்த வீடியோவை எதிரி கம்பனி முதலாளிக்கு அனுப்பிடுவார்.. இதுதான் விமல் நூதனமாக திருடிய முறை” என விமல் எப்படி இந்த திருட்டை செய்தான் என்பதை விளக்கியவன்,



“விமலோட பாங்க் அக்கௌன்ட்டில் குறிப்பிட்ட திகதிகளில் வந்த பணம் பற்றியும் அவரோட கால் ஹிஸ்டரியில் அந்த கம்பனி எம்டியுடன் குறிப்பிட்ட நாட்களில் பல தடவைகள் பேசியதையும் தரோவா செக் பண்ணியதில் இவர்தான் குற்றவாளின்றது உறுதியாச்சு” என விளக்கி முடித்தவன், எம்டியின் பக்கம் திரும்பினான்..



“இவன் மேல் கம்பளைன்ட் கொடுக்கிறீங்களா மேடம்??” எனக் கேட்க, பெருமூச்சு ஒன்றுடன் எழுந்தவள்,



“கண்டிப்பாக கொடுக்கிறேன் சார்.. இவரின் குடும்ப கஷ்டத்திற்காக பார்த்து எதுவும் செய்யாமல் இருக்க நாங்க தர்ம சத்திரம் நடத்தலை” என கடுமையாக சொல்லவும் திருப்தியாக புன்னகைத்தவன்,



“நல்ல முடிவு” என்றவன், தனது மொபைலை எடுத்து வெளியில் நின்றிருந்த கான்ஸ்டபிளை அழைத்து விமலை அனுப்பியவன்,



“ஓகே நான் கிளம்பவா??” என கேட்க,



“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” என அவனிடம் சொன்னவள், தனது ஊழியர்களை பார்த்து,



“நாளையில் இருந்து இந்த ஆபீசில் சில ரூல்ஸ் நடைமுறையில் வருது.. அது என்னவென்ற சர்க்குலர் நாளைக்கு உங்க கையில் கிடைக்கும்.. இப்போ எல்லோரும் போய் வேலையை பாருங்க” எனக்கூறி அனுப்பிவிட்டு தேவின் பக்கம் திரும்பியவள்,



“உட்கார் தேவ்” இருக்கையை காட்டவும் தொப்பியை கழற்றி மேசையில் வைத்துவிட்டு அவள் காட்டிய இருக்கையில் அமர, தானும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..



“இத்தனை மாதம் உன் வேலையை விட்டிட்டு எனக்காக செய்த ஹெல்ப்புக்கு தேங்க்ஸ் தேவ்”



“ஹேய், என்ன மூணாவது மனுஷனுக்கு சொல்வது போல் தேங்க்ஸ் சொல்கிற” என உரிமையாக கோவிக்க, இரு கைகளையும் உயர்த்தி மெல்ல நகைத்தவள்,



“தேங்க்ஸ் வாபஸ்.. ஓகே??” எனக்கேட்க,



“ஓகே ஓகே.. லைஃப் எப்படி போகுது ஃபயர் மேடம்??” என கேட்டான்..



“ஹா ஹா காலேஜ் டைமிற்கு பிறகு இப்போதான் இந்த பெயரை கேட்கிறேன்”



“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை”



“நல்லா இருக்கேன் தேவ்.. நீ எப்படி இருக்க??”



“தனிக்காட்டு ராஜாவா நல்லா இருக்கேன்”



“சரிதான்.. கல்யாண சாப்பாடு எப்போ போடப்போற??”



“பொண்ணு ஓகே சொன்னதும் போட்டுடலாம்” என்றவனை ஆச்சரியத்துடன் நோக்கி,



“என்ன சொல்லுற தேவ்??” என கேட்டாள்..



“ஆமா ஃபயர்.. என் மனசுக்குள் ஒருத்தி புகுந்து ரொம்ப படுத்துறா.. என் நேரம் அதை வெளியிலோ அவள் கிட்டவோ என்னால் சொல்லமுடியல”



“ஏன், என்னாச்சு??”



“காலம் கடந்துடிச்சு.. அதை விடு.. நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற??” தேவ் கேட்ட கேள்வியில் அதுவரை இருந்த இலகுத்தன்மை போய் முகமும் மனதும் இறுகியவள்,



“உண்மை தெரிந்தும் இப்படி கேட்கிற.. அதற்கு இனிமேல் வாய்ப்பில்லை தேவ்” எனவும்



“ஃபயர்” வேதனையுடன் அவன் அழைக்கவும் தன்னை மீட்டுக்கொண்டவள்,



“அதைவிடு தேவ்.. இந்த சன்டே நீ ஃப்ரீயா??” கேட்கவும் அவளைப்போலவே உணர்வுகளை மறைத்தவன்,



“ஃப்ரீதான்.. எதற்கு கேட்கிற??” என கேட்டான்..



“உனக்காக சின்ன பார்ட்டி.. எந்த ஹோட்டல், என்ன டைம் என்றதை அப்புறம் டெக்ஸ் பண்ணுறேன்” எனவும் தன் கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன்,



“ஓகே ஃபயர்.. வந்துடுறேன்.. இப்போ எனக்கு டைம் ஆகிடிச்சு, நான் கிளம்புறேன்” என்றவன், பலத்த யோசனையுடனேயே விடைபெற்று சென்றான்..





****************************



“இன்னிக்கும் சப்பாத்தியா??” முகத்தை சுழித்தபடி கேட்ட சௌந்தரியை நிமிர்ந்து பார்த்த மங்கை,



“ஏன், சப்பாத்திக்கு என்ன நன்றாக தானே இருக்கு” புரியாதது போல் கேட்டபடி சப்பாத்தியை குருமாவில் தோய்த்து உண்ணவும் அசூசையுடன் மகளை நோக்கியவர்,



“வாரத்தில் நான்கு நாட்கள் இதையே சாப்பிட்டால் நாக்கு செத்து போகாதா??” என பாவமாக முகத்தை வைத்தபடி கேட்டவரை முறைத்த மங்கை,



“ஏன், அதைத்தானே நாங்களும் சாப்பிடுறோம்.. எங்களுக்கு நாக்கு செத்துப்போகலையே” என்றவள்,



“இந்த வயதில் உடலுக்கு எது நல்லதுன்னு பார்த்து சாப்பிடணும்.. கண்டதையும் சாப்பிட்டு செரிமான பிரச்சினை வந்தால் அதை நீங்கதானே அனுபவிப்பீங்க.. அது நடக்கக்கூடாதென்றால் பேசாமல் சாப்பிடுங்க” கண்டிப்புடன் கூறிவிட்டு அவள் உண்பதை தொடர,



“இந்த வரட்டியை சாப்பிடுறதுக்கு பட்டினி இருக்கலாம்” என முணுமுணுத்தவர், “அங்கே என்ன சத்தம்??” என்ற மகளின் கேள்வியில் “ஒன்றுமில்லையே” எனக்கூறிவிட்டு அவசரம் அவசரமாக உண்ண ஆரம்பித்தார்..



“இன்னிக்கு இன்டர்வியூ எப்படி போச்சு அஜ்ஜூ??”



“நல்லா போச்சுக்கா.. முப்பதுக்கும் மேல் கேன்டிடேட்ஸ்.. ஒவ்வொருவரையும் இன்டர்வியூ பண்ணுறதில் எந்த பிரச்சினையும் வரவில்லை.. பட், எனக்கு பிஏவா வரவங்களை சூஸ் செய்வதில் தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது”



“ஏன், என்னாச்சு??”



“எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு நினைத்தால் சில விஷயத்தில் கோட்டை விடுறாங்க.. எல்லா விஷயங்களிலும் பர்ஃபெக்ட்டாக இருக்கிற பொண்ணுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லை”



“அப்புறம் என்ன பண்ணின??”



“எக்ஸ்பீரியன்ஸ் என்கிறது அனுபவத்தில் மட்டும் இல்லாமல் கற்றுக்கிறதிலும் கிடைக்கும்.. அதை நாமளே டிரெயினிங்க் மூலம் கொடுக்கலாம் தானே?? சோ, அந்த பொண்ணையே பிஏவாக செலெக்ட் பண்ணி டிரெயினிங்கிற்கு அசோக்கிடமே விட்டிருக்கேன்” என்றவனை மெச்சுதலாக நோக்கிய மங்கை,



“ரொம்ப தேறிட்ட அஜ்ஜூ.. இது, இத்தோடு முடிவதில்லை.. தினந்தினம் நமக்கான சோதனைகள் வந்துக்கிட்டே இருக்கும்.. அதையும் முகம் கொடுத்து அவற்றை முறியடிக்கிறதில் தான் இருக்கு நமக்கான வெற்றி” என அறிவுரை கூறியவள்,



“சரி உன் பிஏ பற்றி சொல்லு” என விபரம் கேட்டாள்..



“அவங்க நேம் அபர்ணா” எனவும் விலுக்கென நிமிர்ந்த மங்கை,



“ஃபுல் நேம் என்ன??” ஆர்வத்தையும் படபடப்பையும் காட்டாதிருக்க முயன்றபடி கேட்டாள்..



“அபர்ணா தில்லைநாயகம்” என்றதோடு அவளின் ஊரையும் அர்ஜூன் கூறியதும் உடல் தளர புருவச்சுழிப்புடன் எதையோ யோசித்தவள்,



“ஓகே.. தனியாக வந்திருக்காங்களா??” என கேட்டாள்..



“தெரியலைக்கா” தமக்கை கேட்டதும் ஏன் எதற்கு என கேட்காமல் பதில் கூறியபடி இருந்தான் அர்ஜூன்..



“ஒஹ்.. எதற்கும் நாளைக்கு அவங்களை பார்த்து விபரம் கேட்டுக்கோ.. தனியாக ஸ்டே பண்ணப்போறாங்கன்னா நம்ம கம்பனி சார்பாக ஏற்பாடு பண்ணிக்கொடு” எனவும் இதுபோன்று எப்பொழுதும் செய்திராததில் தமக்கையை வியப்பாக நோக்கினாலும் சம்மதமாக தலையசைத்தான் அவன்..



“என்ன விபரம் என்றாலும் அவனாக மங்கையிடம் தூண்டித்துருவி கேட்டதில்லை.. சொல்லக்கூடிய விஷயம் என்றால் அவளே கூறுவாள், இல்லையெனில் அவளே சமாளித்துவிடுவாள் என்பதில் அத்தனை நம்பிக்கை அவனுக்கு இருந்ததில் இப்பொழுதும் அதனையே தொடர்ந்தான்..



“இன்னிக்கு அந்த அபர்ணாவை பார்த்து நம்ம அம்மா விட்ட ஜொள்ளை பார்க்கணுமே” என்ற அர்ஜூனின் கிண்டல் பேச்சினை கேட்டு அதுவரை இருந்த இறுக்கம் தளர, சன்ன சிரிப்புடன் கேலியாக தாயை நோக்கிய மங்கை,



“அந்த பொண்ணு வயசு என்ன?? உங்க வயசு என்ன?? பாவமில்லையாமா??” ஏதோ செய்யக்கூடாத தப்பை செய்தது போல் குற்றம் சாட்டிய மங்கையை ஏகத்துக்கும் முறைத்த சௌந்தரி,



“அந்தப்பொண்ணு அழகா இருக்குன்னு பார்த்தது ஒரு குற்றமா?? என்னென்னமோ பேசுற நீ” என எகிற,



“ம்மா.. பார்த்த சரி.. அந்த பொண்ணு குரலை கேட்டு குயில் கூவுதுன்றியே, அப்போ இதுக்கு என்ன அர்த்தம்” நமட்டு சிரிப்புடன் அர்ஜூன் சொல்லவும் தாடையில் கை வைத்து வியந்த மங்கை,



“இது வேறையா டா அஜ்ஜூ??” என கேட்டாள்..



“ஆமாக்கா நம்ம அம்மா பண்ணியதை நீ பார்த்திருக்கணுமே, வயசு பையன்கள் தோத்தாங்க போ.. இதில் இவங்க பண்ணினதை பார்த்து அந்த பொண்ணு என்ன நினைச்சுச்சோ??”



“டேய் டேய்.. அழகை ஆராதிக்கிறதுக்கு மனசு வேணும்.. அது எங்கிட்ட இருக்கு.. சும்மா சும்மா உன் அக்கா கிட்ட கோக்கு மாக்கா சொல்லி ஏத்தி விடாதை.. நான் அவள் இல்லை, புரியுதா??” என்ற சௌந்தரியை பார்த்த அக்கா, தம்பி இருவரும் வாய்விட்டு நகைக்க, விஷயம் புரிந்த புவியரசுவும் அவர்களோடு இணைந்து கொண்டான்.. அவர்களின் சிரிப்பு அடங்கியதும் தமக்கையை நோக்கிய அர்ஜூன்,



“ஆமா அந்த ஆபீசில் நடந்த பிரச்சனை முடிவுக்கு வந்துடிச்சுன்னு சொன்னியே, அப்புறம் என்ன ஆச்சு??” என கேட்டான்..



“ஆல் கிளியர் அஜ்ஜூ”



“சரிக்கா” பேச்சோடு பேச்சாக உணவுவேளை முடிந்தபின் ஹாலில் ஓய்வாக அமர்ந்து டிவி பார்த்தவர்கள், அடுத்தநாள் ஓடவேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்களாக தத்தமது அறைக்குள் நுழைந்து கொண்டனர்..



தனது ரூமிற்கு வந்ததிலிருந்து பால்கனியில் சிந்தனையுடன் நின்றிருந்த மங்கைக்கு வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் எடுத்த முடிவு, அத்தோடு முடிந்ததாகவே இருக்கட்டும் என்பது அவளின் எண்ணம்..



ஆனால் புதியவளின் வருகை பழைய வாழ்கையில் நடந்த பிரச்சினைகளை பூதாகரமாக மாற்றும் அபாயம் உள்ளதா என்றே தெரியாத தலைவேதனையாக இருந்தது.. இருந்தாலும் இப்படி குழம்பிப்போய் நிற்பதற்கு உறுதியாக விஷயத்தை அறிந்துகொண்டால் நல்லது என்றே தோன்றியது அவளுக்கு.. எனவே, நேரத்தை பார்த்தவள், அது சரியான நேரமாக இருக்கும் என்பதை கணக்கிட்டவளாக தனது மொபைலை எடுத்து சில எண்களை தட்டி காதில் வைத்தாள்..



எதிர்முனையில் அழைப்பை ஏற்கும்வரையில் ஒரு நிலையில் இருக்கமுடியாது நகத்தை கடிக்க விரலை வாயில் வைப்பதும் பின் அது தப்பு என்பது புரிந்து கையை எடுப்பதுமாக இருந்தவள், அழைப்பை ஏற்றதும் எதிர்முனையில் இருப்பவர் என்ன கூற வருகிறார் என்பதை பற்றிய எண்ணத்தை மறந்தவளாக,



“அபர்ணா நம்ம ஆபிசுக்கு வேலைக்கு சேர்ந்தது தெரியுமா??” என்னதென்று உணரமுடியாத உணர்வோடு படபடத்தாள்..



ஒரு சின்ன விஷயம் என்றாலும் நிறுத்தி நிதானமாக ஆராய்ந்து செயற்படுபவளால் இந்த விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிக்க முடியவில்லை.. எதுவோ மீண்டும் தொடரப்போவதை மனசு அறிவுறுத்தியதா, மூளை அறிவுறுத்தியதா என பிரித்தறிய முடியாத உணர்வுகளின் சங்கமத்தில் சிக்கி தவித்தவளுக்கு முழு விபரமும் தெரிந்தே ஆகவேண்டும் என்ற வேகம்..



“என்ன சொல்லுற?? அது உன் ஆபீசா?? இந்த விஷயம் எனக்கு தெரியாதே” என்றது எதிர்ப்பக்க அதிர்ச்சி குரல்..



“ஓ.. உங்களுக்கு தெரியாதா?? எப்படி விசாரிக்காமல் அனுப்பினீங்க??” புருவங்கள் முடிச்சிட கேட்டாள் மங்கை..



“விசாரிச்சோம்.. நீ இருக்கிற ஊர்ன்னு மட்டும் தெரியும்.. மற்றபடி அந்த ஆபீஸின் எம்டி ஒரு ஆண்ணென்று போட்டிருந்ததே??” வெள்ளாந்தியாக கேட்க,



“ஆமா.. அது என் தம்பி கம்பனி.. அவள் வேலை செய்வதில் பிரச்சினை இல்லை.. நாளை பின்ன அவங்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தால் என்ன ஆகும்??” தன் எண்ணக்கிடக்கையை அவள் சொல்ல, எதிர்ப்புறம் சற்று மௌனம் சாதித்தது..



“என்னாச்சு, இதை நீங்க யோசிக்கலையா??”



“இல்லை.. அபி இந்த கம்பனியின் இன்டர்வியூக்கு போயே ஆகணும்னு அடம்பிடிச்சு வந்தாள்.. தனியாக அந்த ஊரில் இருந்துப்பியான்னு கேட்டதற்கு அப்போதான் தனக்கு பொறுப்பு வரும்ன்னு சொல்லிட்டாள்.. அதுக்காக நாங்க அப்படியே விட்டிட முடியுமா?? தனியாக வீடு பார்த்து துணைக்கு ஆளை ஏற்பாடு பண்ணணும்”



“சோ நீங்களும் அவள் இங்கே இருக்கட்டும்ன்னு முடிவு பண்ணிட்டிங்களா??” ஆதங்கத்துடன் கேட்டாள் மங்கை..



“வேறவழி இல்லை மங்கை.. உன் விருப்பப்படி வேலை பாருன்னு சொல்லி அவளும் இன்டர்வியூ அட்டன் பண்ணி வேலையும் கிடைத்துவிட்டது.. இப்போ போய் அங்கே நீ வேலை பார்க்க வேணாம்ன்னு சொன்னால் காரணம் சொல்லவேண்டி வரும்.. பல விஷயங்கள் அவளுக்கு தெரியாமல் இருப்பதே நல்லது அத்தோடு..” என இழுக்க,



“என்ன அத்தோடு??” என பரபரப்புடன் கேட்டாள்..



“நான் இப்போ அபியை தடுத்தால் அவங்களும் காரணம் கேட்பாங்க, நீ அங்கே இருக்கேன்னு வெளிப்படையாக சொல்லிவிட முடியுமா என்ன?? அப்புறம் ஒவ்வொருத்தர் முகத்தில் முழிக்கும்படியாக இருக்கும்.. பிறகு என்ன நடக்கும்ன்னு நான் சொல்லி உனக்கு தெரியத்தேவையில்லை” என்றதும் இயலாமையுடன் உதட்டை கடித்தவள்,



“அப்போ இந்த விஷயத்தில் என்னதான் பண்ணுறது??” விசனத்துடன் கேட்க,



“வேறவழி இல்லை மங்கை.. முடிந்தளவு அபி கண்ணில் படாமல் இருந்துக்கோ.. அதற்கு மேல் கடவுள் விட்டவழி” துயரத்துடன் சொன்ன எதிர்ப்பக்கம்,



“யாரோ வருவதுமாதிரி இருக்கு.. நான் அப்புறம் கூப்பிடுறேன்” பதட்டமும் பரபரப்புமாய் சொன்னதுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் காதிலிருந்து மொபைலை எடுத்தபடி உள்ளே வந்தவள், ஒருபக்க சுவரில் மாட்டப்பட்டிருந்த பிரேமில் இருந்த உருவத்திடம்,



“நீ இல்லாமல் நான் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போயிடும் போலவே.. அவங்க கண்ணிலோ அபி கண்ணிலோ நான் சிக்காதபடிக்கு பார்த்துக்கோ” கண்ணீர் மல்க வேண்டியவளின் மனக்கண்ணில் பல கசப்பான, வலியும் வேதனைகளும் நிறைந்த சம்பவங்கள் வலம் வந்ததில் அதன் பாரம் தாங்காது தலையை இரு கைகளாலும் அழுத்தி பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தவள், ஆற்றுவார் தேற்றுவார் இன்றி மௌனமாக கண்ணீர் சிந்தியவள், எப்பொழுதும் போல் தன்னை தேற்றிக்கொண்டாள்..



அதன்பின்பு வந்த நான்கு நாட்களையும் ஒருவித தளம்பல் மனநிலையுடன் கடந்தாலும் தன் மனவுணர்வுகளை யாருக்கும் தெரியாது பார்த்துக்கொண்டாள்.. ஆனால் அவளின் உள்ளுணர்வு அறிவுறுத்தியது போல் அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை பார்ட்டி ஒன்றை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவள், பிரதான வாயிலின் வழியே வந்த நபரை கண்டு நிலத்தில் வேரோட அதிர்ந்து நின்றுவிட்டாள்..


தொடரும்..
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7



‘கரெக்ட் டைமுக்கு வரச்சொன்ன தேவ்வை இன்னும் காணலையே’ என எண்ணியபடி கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தவள், அவன் வரச்சொன்ன நேரத்தைவிட மேலும் பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்டதை உணர்ந்தவளாக அவனின் மொபைலுக்கு அழைத்து பார்த்தாள்..



அதுவோ அணைத்து வைக்கப்பட்டதாக தகவல் சொன்னதும் ‘இது என்னடா எனக்கு வந்த சோதனை’ கேலியாக நினைத்தபடி கண்ணாடி வழியே தெரிந்த அந்த ஹோட்டலின் பூந்தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தவளுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது..



‘கடன்காரன், பார்ட்டின்னு சொல்லி வரச்சொல்லிட்டு இப்படி லேட் பண்ணுறானே’ தேவ் ஆனந்தை திட்டியபடி தண்ணீரை எடுத்து பருகியவள், மேலும் அரைமணி நேரம் பொறுத்து பார்த்தவள், சாப்பிட்டு கிளம்பிவிடலாம் என முடிவெடுத்தவள், எதற்கும் ஒருமுறை அழைத்து பார்க்கலாம் என மொபைலை எடுத்து மீண்டும் அவனுக்கு அழைப்பு விடவும் இந்தமுறை கால் போனதில் காதோடு மொபைலை வைத்தவள், அவன் அழைப்பை ஏற்றதும்



“எங்கே இருக்க தேவ்??” இத்தனை நேரம் காக்க வைத்துவிட்டானே என்று சற்று காட்டமாகவே கேட்டாள்..



“டூ மினிட்ஸ் ஃபயர்.. ஹோட்டல் என்ட்ரியில் நிற்கிறேன்.. உன் கேள்விக்கான பதிலை வந்தே சொல்கிறேன்” என்றதோடு மட்டும் அல்லாது சொன்ன அந்த இரண்டு நிமிடத்திற்குள் அவளின் முன்னால் அமர்ந்திருந்தான்..



“டைம் என்ன சார்??” சாதாரணம் போல் கேட்டவளின் குரலில் இருந்த கடுப்பு எதற்கு என்பதை உணராதவன் போல் சாதாரணமாக முகத்தை வைத்தவன்,



“ஏன், உன் வாட்ச் வொர்க் பண்ணலையா??” என கேட்ட தேவ்வை முறைத்தவள்,



“வேலை இருக்குன்னா அதை முடிச்சுட்டு பார்ட்டிக்கு வான்னு கூப்பிட்டிருக்கணும்.. அதைவிட்டுட்டு முக்கால் மணிநேரமா என்னை காக்க வச்சதும் இல்லாமல் வந்த இவ்வளவு நேரத்தில் ஒரு சாரி கூட சொல்லலை” எகிறியவளை பார்த்து புன்னகைத்தவன்,



“பசிக்குதா??” வாஞ்சையுடன் அவன் கேட்கவும் ஜெர்க்கானவள்,



“நான் பங்சுவாலிட்டி பற்றி பேசினால் நீ சாப்பாட்டை பற்றி பேசுற” அதற்கும் அவனையை குற்றம் சாட்ட,



“ஃபயர் மேடம் செம ஃபார்மில் இருக்கீங்க போல” குறும்புடன் உரைக்க,



“எந்திரிச்சு போயிடுவேன் தேவ்” எச்சரிக்கை குரலில் சொன்னவளின் மூக்கு நுனி சிவந்ததில் தெரிந்தது அவளது கோபம்..



“கூல் ஃபயர்.. ஒரு சின்ன என்கொயரி, அதுதான் ஏர்போர்ட் போயிட்டு வரேன்” என்றான்; அவளை சமாதானப்படுத்தும் விதமாக..



“அதை முன்னாடியே சொல்லியிருந்தால் பிளானை மாத்தியிருக்கலாமே தேவ்”



“இல்லைமா.. இங்கே வர கிளம்பிட்டு இருந்தப்போ சடனா கால் வந்திச்சு.. ஆள் தப்பித்து போக பிளான் பண்ணி ஏர்போர்ட் போயிட்டான்.. அவனை பிடிக்க போய் லேட் ஆகிட்டு” என்ற அவனது விளக்கத்தில் கோபம் தணிய,



“ஆளை பிடிச்சாச்சா??” என கேட்டாள்..



“அவனை கஸ்டடியில் எடுத்துட்டு தான் இங்கே வரேன்.. சாரி, இப்படி ஒரு சிட்டுவேஷன் வரும்னு நினைக்கலை”



“இட்ஸ் ஓகே தேவ்.. போலீஸ் வேலைன்னாலும் டாக்டர் வேலைன்னாலும் நேரம், காலம் பார்க்காமல் எப்போதுமே ஓடவேண்டி இருக்கும்.. நான்தான் அவசரப்பட்டு கொஞ்சம் டென்சனாகிட்டேன்” மன்னிப்பு கோரும் குரலில் சொன்னவளை நோக்கி புன்னகைத்த தேவ்,



“அதை விடுமா.. இப்போ சாப்பிடலாமா??” என கேட்டான்..



“சாப்பிடலாமே.. என்னென்ன ஆடர் கொடுக்கணும்னு செலெக்ட் பண்ணி வச்சுட்டேன்” என்றபடி மெனுக்கார்ட்டை காட்ட,



“அப்போ நான் எதுவும் செலெக்ட் பண்ண வேண்டாமா??” என கேட்டவனை பார்த்தவள்,



“பார்ட்டி எனக்குத்தானே, சோ என் விருப்பப்படிதான் ஆடர் பண்ணணும்” என்றவளின் பேச்சில் வாய்விட்டு நகைத்தவன்,



“சாப்பாட்டு விஷயத்தில் அப்போதும் சரி இப்போதும் சரி நீ மாறவேயில்லை” என்றான்; கேலியாக..



“சோறு முக்கியம் அமைச்சரே”



“அதுசரி எனக்காக நீ வைத்த பார்ட்டியிலும் இதே ரூலை செயற்படுத்தியிருக்கலாம்”



“அது உன் தப்பு.. நீயாக கேட்டிருந்தால் ரூல் நடைமுறைக்கு வந்திருக்கும்” குறும்புடன் கூறி சிரித்தவளை விளையாட்டாக விரல் உயர்த்தி மிரட்டியவன்,



“ஏற்கனவே லேட்.. ஆடர் பண்ணிடலாம் ஃபயர்” என்றவன், வெயிட்டரை அழைத்து அவள் சொன்னது போல அவளையே ஆடர் பண்ண வைத்தான்..



முதலில் அவள் ஆடர் பண்ணிய சூப் வரவும் அதை அருந்தியபடி காலேஜ் டைமில் நடந்த நிகழ்வுகளை மீட்டிக்கொண்டிருந்தனர்..



“நம்ம பேட்ஜில் ஒரு சுழட்டல் ராணி இருந்தாளே, உனக்கு ஞாபகம் இருக்கா தேவ்”



“ஹூம் நினைவிருக்கு.. காலேஜ் டேய்சில் எல்லா பசங்களுக்கும் ரூட் விட்டவளாச்சே”



“அதேதான்.. அம்மணி தன்னோட அழகுக்கு பெரிய பிஸ்னஸ் மேக்னெட்டை கட்டிக்க போறேன்னு பீத்திக்கிட்டு திரிவாள்”



“ஹா ஹா பாவம்”



“பாவமேதான் தேவ்.. அவள் நினைத்தது ஒன்று நடந்ததோ அவள் எதிர்பார்க்காத ஒன்று”



“அப்படி என்ன நடந்திச்சு??”



“அவங்க ஃபேமிலி ஏதோ கடனில் மாட்டி இருந்த சொத்தும் போய் மிடில்கிளாஸை விட கீழே போய்ட்டாங்க போல.. சோ அவளுக்கு கல்யாணமும் மிடில்கிளாஸ் மாப்பிள்ளையோட நடந்திருக்கு”



“வாழ்க்கைக்கு அளவிற்கு அதிகமான பணம் தேவையில்லை, நல்ல குணம் இருந்தாலே காணும்.. ஆமா இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்??”



“அவளே சொன்னாள்”



“எங்கே பார்த்தாய் அவளை??”



“போன மாதம் பிஸ்னஸ் விஷயமாக கோவை போயிருந்தப்போ மீட் பண்ணினேன்.. அப்போதான் எல்லாம் சொன்னா.. நிறைய மாற்றம் அவள்கிட்ட, சாதாரண வாழ்க்கை நிறைய கற்று கொடுத்திருக்கிறது அவள் பேச்சில் தெரிஞ்சுது”



“எது சந்தோஷத்தை கொடுக்கும்னு புரிஞ்சுக்கிட்டாள் போல” என்றதோடு வேறு பேச்சிற்கு தாவினான் தேவ்..



என்னதான் காலேஜ் நாட்களைப்பற்றி பேசினாலும் முடிந்தளவு அங்கு நடந்த கசப்பான விஷயங்களை பற்றி பேசி இருக்கும் மனநிலையை கெடுத்துக்கொள்ள அவர்கள் இருவருமே விரும்பவில்லை.. ஆனாலும் மனக்கண்ணில் அவை வலம் வந்ததை முடிந்தமட்டும் விரட்டிக்கொண்டிருந்தனர்..



பேச்சு பேச்சாக இருந்தாலும் அடுத்து வந்த உணவு வகைகளை பகிர்ந்து தத்தமது தட்டில் போட்டு கொண்டு உண்டனர்..



“ஆமா நீ படிச்சது வேறு.. இப்போ போலீஸ் கமிஷனர், எப்படி??” கேட்டவளை அதுவரை இருந்த சந்தோஷ மனநிலை போய் வேதனை தோய்ந்த முகத்துடன் நோக்கியவனை கண்டு பதறிப்போய்,



“என்னாச்சு தேவ்??” அவனின் முகத்தில் தோன்றிய உணர்வுகளின் வெளிப்பாட்டில் இதற்கு பின்னால் ஏதோ விபரீதம் உள்ளது என்பதை புத்தி அறிவுறுத்தவும் குரல் நடுங்க காரணம் கேட்கவும் ஜன்னல் வழியே வெளியில் வெறித்தவனின் அந்த ஓய்ந்த தோற்றம் அவளை என்னவோ செய்தது..



காலேஜ் முடிந்து சிலவற்றை மறக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நட்புவட்டங்களை தொடர்பு கொள்ளாமல் இருந்ததில் இத்தனை வருஷங்கள் சென்று அவனை சந்தித்தவளுக்கு அவனைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.. எனவே அவனைப்பற்றி அறியவேண்டி கேட்டவள், அவன் அமர்ந்திருந்த நிலையை பார்த்ததுமே அப்படி கேட்டிருக்கக்கூடாதோ என்று தோன்றிவிட்டது..



“ஹேய் தேவ் இங்கே பாரேன்” என அவள் அழைக்கவும் திரும்பி பார்த்தவனின் முகம் எந்த உணர்ச்சிகளும் இல்லாது துடைத்து வைத்தது போல் இருந்தாலும் கண்களின் வலி எட்டப்பனாக அவனை காட்டிக்கொடுத்தது..



“சாரி தேவ், எதையோ கேட்கப்போய் உன் மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்” என மெல்லிய குரலில் சொன்னவளின் முகத்தில் என்ன கண்டானோ ஆழ்ந்த மூச்செடுத்து தன் துக்கத்தை விழுங்கியவன்,



“ரொம்பநாள் சென்று பார்த்துக்கிட்ட ப்ரெண்ட் கிட்ட அவனை பற்றி கேட்கிறது இயல்பு தானே.. நீ அதை கேட்டதில் தப்பில்லை விடு” என்றவனின் குரல், உணர்வுகளின் தாக்கத்தில் கரகரத்து ஒலிக்க, அவனை இந்தமாதிரி பார்த்திராதவளுக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது..



“இப்படி இருக்காதே தேவ்.. என்னால் தான் இப்படி ஆகிட்டியோன்னு ஒரே கில்ட்டியாக இருக்கு” கவலையாக அவள் சொல்லவும் அவளையே சிலநொடிகள் பார்த்தவன், முயன்று தன்னை தேற்றிக்கொண்டான்..



“இந்த விஷயம் பற்றி இதுவரை யாரும் கேட்கலை ஃபயர்.. என் தனிப்பட்ட விஷயங்களோ சுகமோ துக்கமோ அது என்னோடவே போய்விடும்.. அம்மா இல்லாமல் போன பின்னாடி என்னைப்பற்றி முதன்முதல் கேட்டது நீதான்.. அதுதான் சட்டென்று எமோஷனல் ஆகிட்டேன்” என்றவனை பரிவாக பார்த்தவள்,



“ஒருத்தரோட கவலையை இன்னொருத்தர் கிட்ட பகிர்ந்துக்கிட்டால் அவரோட துக்கம் பாதியாகிடும்னு சொல்வாங்க.. இதுநாள்வரை இப்படி யாரும் கேட்கலைங்கிற, இப்போ நான் கேட்கிறேன்.. சொல்லு தேவ், உன் வலி வேதனை பாதியாகிடும்” மென்குரலில் அவள் உரைக்கவும் அவன் விழிகளில் எதுவோ வந்து போனாலும் அவளிடம் அது தெரியாமல் பார்த்துக் கொண்டான்..



“காலேஜ் முடிந்தபின் ஒரு கம்பனியில் வேலைக்கும் சேர்ந்தேன்.. அம்மாவும் நானும் ரொம்பநாள் எதிர்பார்த்த நிம்மதியான வாழ்க்கை.. எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்திச்சு அம்மா ஆக்சிடென்டில் இறக்கிறவரை” எங்கோ பார்த்தபடி குரல் கம்ம அவன் உரைக்க, அவனின் நிலையை பார்க்க பாவமாக இருந்தது அவளுக்கு..



“என்னோட ஒரேயொரு உறவான அவங்க என்னைவிட்டு போனதில் எல்லாமே ஸ்தம்பித்து போச்சு.. அப்பா அம்மா காதல் கல்யாணத்தால் இரண்டு பக்க சொந்தமும் ஏற்றுக்காததில் யாரும் இல்லாமல் நின்றப்போ என்னோட ஆபீஸ் ப்ரெண்டஸ் ஹெல்ப் பண்ணினாங்க.. அதற்குப்பிறகு தனிமைதான் எனக்கு துணைன்னு வாழ ஆரம்பிச்சப்போ எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்திச்சு”



“யார் அனுப்பினாங்க??” அவன் வாய்மொழி வந்தவற்றை மௌனமாக அமர்ந்திருந்தவள் கேட்க,



“என் பெரியப்பாவாம்” என்றான் தேவ்..



“எதுக்கு மிரட்டல்??”



“வேற எதற்கு, சொத்துக்காக”



“ஓஹ்.. உங்க அப்பாவழி சொத்துக்காகவா??” இதுதான் என அனுமானித்தவளாக அவள் கேட்டாள்..



“ஆமா.. அப்பாவழி தாத்தா கடைசி நேரத்தில் அப்பா பேரிலும் சில சொத்துக்களை எழுதி வச்சிருந்திருக்கார்.. அதை தன்பேரில் மாற்றி எழுதலைன்னா என்னை கொன்றுடுவேன்னு தான் அந்த லெட்டரில் இருந்தது.. இப்படி ஒரு சொத்து விபரம் பற்றி அம்மா ஒருபோதும் சொன்னதே கிடையாது”



“உறவு வேணாம்னு தள்ளி வச்சவங்க சொத்து எதுக்குன்னு நினைச்சிருக்கலாம்”



“அதேதான் நானும் நினைச்சேன்.. ஆனால் அந்த மிரட்டலை சும்மா விட முடியலை.. என்னையே இந்தளவிற்கு மிரட்டுறாங்கன்னா அம்மா கிட்ட எப்படி நடந்துக்கிட்டாங்களோன்னு தோணிச்சு.. கூடவே அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்தது ஆக்சிடென்டில் தானே.. சோ என் சந்தேகம் அங்கே ஆரம்பிச்சுது.. அம்மா ஆக்சிடென் பற்றி விசாரிக்க ஆரம்பிச்சேன்.. கிணறு வெட்ட பூதம் வந்த கணக்காக அம்மாவை இடித்த கார் பற்றி சம்பவம் நடந்த இடத்தில் விசாரிச்சப்போ ஒருத்தர் சொன்னார்.. மேலதிக தகவலாக அம்மா எவ்வளவு தான் ரோட்டின் கரையோரமாக போனாலும் அந்த கார் வேணும்னே வந்து முட்டிட்டு நிற்காமல் போயிடுன்னு சொன்னார்.. நல்லவேளையாக பக்கத்து கடையில் சிசிடிவி இருந்தது.. அதில் அந்த சம்பவம் தெளிவாக இருந்தது.. கூடவே கார் நம்பரும் தெரிஞ்சுது, அதை ஆர்டியோ ஆபீஸில் கேட்டு அட்ரஸ் வாங்கினேன்”



“அது உங்க பெரியப்பா அட்ரஸ்சா”



“ஆமா சொந்த ஊர் இதுன்னு அம்மா ஏற்கனவே சொல்லியிருந்ததால் உடனேயே கண்டுபிடிக்க முடிஞ்சுது.. அப்புறம் அந்த ஊருக்கு போய் அந்தாளைப்பற்றி விசாரிச்சா அந்த ஊரிலேயே பெரியமனுசன் எல்லோரையும் அடக்கி ஆளுற அகங்காரம் பிடித்த முதலைன்னு தெரிஞ்சுது.. அந்தாளை நெருங்கணும்னா பவருள்ள ஆளாக இருக்கணும்.. அதற்காக நான் தேர்ந்தெடுத்ததுதான் இந்த போலீஸ் வேலை.. கஷ்டப்பட்டு படிச்சு எக்சாம் எழுதி டாப் லெவலில் பாஸ் பண்ணி ட்ரெயினிங்க் போய் வந்ததும் நானே அந்த ஊருக்கு போஸ்டிங் வாங்கினேன்”



“அதெப்படி பர்ஸ்ட் போஸ்டிங்க நீ கேட்ட ஊருக்கு கொடுத்தாங்க??”



“அவுட் ஆஃப் சிட்டின்னா யாரும் அதிகம் போக நினைக்கமாட்டாங்கல்ல.. அதுதான் நான் கேட்டதும் ஓகே பண்ணிட்டாங்க.. எல்லாம் நம் நாட்டோட சாபக்கேடு, கிராமம்னா ஏதோ ஒதுக்கப்பட்ட இடம்ன்ற நினைப்பு” என்றான் வெறுப்புடன்..



“உன்னை பார்த்த அவருக்கு அடையாளம் தெரிஞ்சுதா??”



“இல்லை”



“என்ன சொல்லுற தேவ்??”



“என்னை அந்தாள் அதற்கு முன்னால் பார்த்ததில்லை போல.. அந்த ஊருக்கு போனதும் புதிதாக வந்த ஆபீஸர்ன்னு என்னை பார்க்க வந்துட்டு அவருக்கு ஏற்றமாதிரி நடந்துக்கிட்டா நல்லா கவனிப்பாராம்னு சொல்லிட்டு போனார்” என்றான் நக்கலாக..



“கொடுமையே”



“ஆமா எதற்காக அங்கே வந்திருக்கேன்னு தெரியாமல் ஆள் பெரிய அப்பாட்டக்கர் மாதிரி பிலிம் காட்டிட்டு போய்ட்டார்” கேலியாக சொன்னான் அவன்..



“அப்புறம் என்னதான் ஆச்சு??”



“மறைமுகமாக அந்தாளை பற்றிய டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணினதில் நிறைய சமூகவிரோத செயல்கள் செய்திருந்திருக்கார்.. அத்தோடு நான் சந்தேகப்பட்டது போல என் அப்பா சாவுக்கும் அவர்தான் காரணம்னு தெரிஞ்சுது.. என்னோட சொந்த காரணத்திற்குன்னு வந்தாலுமே நம் நாட்டை கெடுக்க நினைக்கிறவனை உள்ளே தள்ள கிடைச்ச சான்சை தவறவிடுவேனா என்ன.. ஆதாரம் எல்லாம் சேர்த்ததும் அவரோட குடோனிற்கே போய் கைது பண்ணினேன்.. அந்த குடோன் அவர் கடத்துற பொருட்களை பதுக்கி வைக்கிற இடம் சோ அதையிதை சொல்லி அவரால் தப்பிக்க முடியலை”



“உன்கிட்ட தன்னை விட்டுவிட சொல்லி பேரம் பேசாமலா இருந்தார்??” என்ற அவளின் கேள்விக்கு வாய்விட்டு நகைத்தவன்,



“அதெல்லாம் பேசவே செய்தார்.. நான் என் வழியில் போய் அடக்கிட்டேன்” என்றவனை ஆர்வமாக நோக்கி,



“எப்படி??” என கேட்டாள்..



“பத்து லட்சம் கொடுக்கிறேன் ரிலீஸ் பண்ணி தன்னைப்பற்றிய ஆதாரங்களை கொடுக்க சொல்லி கேட்டார்”



“அதற்கு நீ என்ன சொன்ன??”



“வேற என்ன சொல்லுவேன்.. உன்னை பிளான் பண்ணி தூக்கத்தான் நானே இந்த ஊருக்கு வந்திருக்கேன்.. அப்புறம் எப்படி நானே உன்னை விடுவேன்னு நீ எதிர்பார்க்கிறேன்னு கேட்டேன்.. அப்போ அந்தாள் முகத்தை பார்க்கணுமே.. ஹா.. ஹா.. அவன் பொண்டாட்டி எப்படி அந்த மூஞ்சியை தினமும் பார்த்துச்சோ” எனக்கூறியவன், அன்றைய சம்பவத்தை நினைத்து மீண்டும் மீண்டும் நினைத்து சிரித்தவனை வாஞ்சையுடன் பார்த்தவளுக்கும் சிரிப்பு தான் வந்தது..



“அப்புறம் என்னதான் பண்ணின??” சிரிப்புடனேயே அவள் கேட்க, அவன் புன்னகையுடனேயே நடந்தவற்றை சொன்னான்..



“நான் யார் எதற்காக அங்கே வந்தேன்னு சொல்லி அந்தாளை அடுத்து என்னான்னு யோசிக்கக்கூட விடாமல் கேஸ் போட்டு உள்ளே தள்ளிட்டேன்.. அதுமட்டும் அல்லாது அடுத்த ரெண்டாவது நாளே கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைச்சாச்சு” எனவும் மெல்ல கை தட்டியவள்,



“சூப்பர் தேவ்.. எத்தனை வருஷ தண்டனை??” என கேட்டாள்..



“அம்மா, அப்பாவை கொன்றது.. சட்டவிரோத செயல்ன்னு இரட்டை ஆயுள் தண்டனை கிடைச்சுது.. கூடவே அவரின் குடும்பம் மொத்தமும் அவரை மொத்தமாக ஒதுக்கினதுதான் அவருக்கு கிடைத்த பெரிய தண்டனையே” என சொல்லி முடித்தவனின் முகம் மிகவும் தெளிந்திருந்தது.. அதை பார்த்தவளுக்கு மனது நிறைவாக இருக்க தன்னாலேயே பூத்த புன்னகையுடன்,



“சாப்பிடு தேவ்” எனவும் மீண்டும் உண்ண ஆரம்பித்தவன், “தேங்க்யூ ஃபயர்.. நீ சொன்னது போல் இப்போ நான் பெட்டரா ஃபீல் பண்ணுறேன்” நெகிழ்ந்து போய் சொன்னவனை செல்லமாக முறைத்து பார்த்து,



“சாப்பிடுடா” என்றதும் தலையை ஆட்டி சிரித்தபடி சாப்பிட ஆரம்பித்தான்..



“ஆமா உங்க அம்மா, அப்பா சாவிற்கு காரணமான சொத்தை என்ன பண்ணின?? யாருக்காவது எழுதி கொடுத்துட்டியா??” என்றவளின் புரிதலான பேச்சில் ஆச்சரியமாக நோக்கியவன்,



“நான் அப்படித்தான் பண்ணுவேன்னு உனக்கு எப்படி தெரியும்??” என கேட்டான்..



“உன்னை பற்றி காலேஜில் இருந்து தெரியும் தேவ்.. நீ அன்புக்கு மட்டும் தான் அடிமை, பணம் பற்றி நினைக்காத ஆள்” என்றவளின் பேச்சில் மனம் நெகிழ,



“நீ சொன்னது கரெக்ட் தான் ஃபயர்.. அந்த சொத்தை அனாதை ஆச்சிரமத்துக்கு எழுதிவச்சுட்டேன்” என்றவனை ‘இவன் என் நண்பன்’ என்பது போல் பெருமை பொங்க பார்த்துவிட்டு சாப்பிடுமாறு கையை காட்ட, அடுத்த சிலநிமிடங்களில் வயிறு நிறைய உண்டு முடித்துவிட்டு வெயிட்டரை அழைத்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போக சொல்ல, அவனும் மேசையில் இருந்த காலி பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டு பில்லுடன் வர, பணம் செலுத்த தேவ் தனது பர்ஸ்ஸை பேன்ட் பாக்கேட்டிலிருந்து எடுத்த நேரம்,



“என் வாழ்க்கையை இப்படி நாசமாக்கிட்டியேடா ராஸ்கல்.. உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பார்” என்ற அங்கு சூழ்ந்திருந்த மிதமான பேச்சுக்குரலுக்கு பொருந்தாத கத்தலில் குரல் வந்த திசையை பார்த்த தேவ், கலைந்து போன தோற்றத்தோடு இருந்த ஒருவன் டிப்டாப்பாக இருந்த ஒருவனின் கழுத்தை நெரிப்பது தெரியவும் பதறிப்போனவனாக,



“பில் செட்டில் பண்ணு ஃபயர்.. இதோ வந்துடுறேன்” என அவசரமாக உரைத்துவிட்டு விரைந்து கலவரம் நடக்கும் இடத்திற்கு சென்றவன், கழுத்தை நெரித்தவனிடத்தில் இருந்து மற்றவனை விடுவித்தவன், கொலைவெறியோடு தப்பிவிட்டானே என பார்த்தபடி நின்றவனின் கன்னத்தில் பளார் என அறைந்தான்..



“ராஸ்கல் இத்தனை பேர் நடுவில் இதென்ன காரியம் பண்ணுற.. தொலைச்சுடுவேன்” சிங்கமாய் கர்ஜித்தவனை பார்த்து மற்றவனுக்கு தைரியம் வந்தது போலும்..



“பாருங்க சார்.. யாருன்னே தெரியாத என் கழுத்தை பிடிச்சு கொலைபண்ண பார்க்கிறான்” என்றவனை எரித்துவிடுவது போல் பார்த்து,



“என்னை உனக்கு தெரியாது?? வாய் இருந்தால் என்னவேணும்னாலும் பேசுவியா??” அவனை அடிக்க எகிறிக்கொண்டு வந்தவனை பற்றி நிறுத்திய தேவ்,



“சொல்லிட்டே இருக்கேன், மறுபடியும் அடிக்க போற” என மிரட்டவும் சற்று அடங்கியவன்,



“சார் சார் இவனுக்கு என்னை நல்லாவே தெரியும்.. என்னை இப்படி பரதேசி மாதிரி ஆக்கினதே இவன்தான்” என்றவனின் கண்களில் இருந்த நியாயமான கோபத்தை கண்டுகொண்ட தேவ் யோசனையுடன் மற்றவனை பார்க்க, அவனோ அலட்சியம் கலந்த கள்ளத்தனத்தோடு பார்ப்பது தெரியவும் எதையோ யோசித்தவனாக தன்னை பர்ஸை எடுக்க கை விட்டவன், அங்கு அது இல்லாது போகவும் தான் அவளிடம் கொடுத்தது நினைவில் வர,



“நீ என்னோடு வா” என்றவன் அந்த ஹோட்டல் ஊழியர்கள், உணவு உண்ணவுண்ண வந்தவர்களையும் பார்த்து,



“நான் பார்த்துக்கிறேன், நீங்க உங்க வேலைகளை பாருங்க” என்றதும் பிரச்சினைக்கு முகம் கொடுக்க விரும்பாத கூட்டம் அங்கிருந்து நகர, முதலாமவனின் தோளில் கைபோட்டு அழைத்து அவள் இருக்குமிடம் சென்றவன்,



“பர்ஸ் கொடு” எனவும் மௌனமாக அதை எடுத்து நீட்டியவளிடம் வாங்கி தன் விசிட்டிங் கார்ட்டை எடுத்து கொடுத்து,



“நாளைக்கு எனக்கு கால் பண்ணு.. உனக்கு நியாயம் கிடைக்க என்னால் ஆனதை செய்கிறேன்” என கூற, விசிட்டிங் கார்ட்டில் பார்வையை ஓடவிட்டவனுக்கு தனக்கு எதிரில் இருப்பது யார் என்பது புரிய,



“சார்” என வியப்பாக அழைக்க,



“உன் கண்ணில் உண்மை இருக்கு.. சோ உனக்கான நியாயம் கண்டிப்பாக கிடைக்கும்.. நீ நாளைக்கு எட்டுமணி போல கால் பண்ணு.. உன் பெயர் என்ன??” என கேட்டதற்கு தன் பெயர் சந்துரு என உரைத்து தேவ்விடம் விடைபெற்று அவன் செல்ல, பர்ஸை பேன்ட் பாக்கேட்டினுள் திணித்தபடி,



“போகலாமா ஃபயர்??” என கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்தவளை அவன் கவனிக்காமல் நடக்க, அவளும் கனத்த யோசனையுடன் அவனை பின்தொடர்ந்தான்..



தனித்தனி வாகனங்களில் வந்திருந்ததால் அவளிடம் விடைபெற்று கிளம்பியவன், நேராக வீட்டிற்கு சென்றான்.. துவைக்க இருந்த உடைகளை துவைத்து வீடு கிளீனிங் என நேரம் வினாடியாக கரைய, இரவு மூன்று சப்பாத்திகளோடு தன் இரவு உணவை முடித்துக்கொண்டான்..



அடுத்த நாள் தேவ் சொன்னதன் பேரில் சந்துரு அழைக்க, அவனின் பிரச்சினையை கேட்டறிந்தவன், தன் ரெகுலர் வேலையோடு சந்துருவின் தனிப்பட்ட பிரச்சினையும் கவனித்தவனுக்கு அவளிடம் பேச டைம் இல்லாது போனது.. அடுத்த இரண்டு நாளின் பின் சந்துருவின் பிரச்சினை முடிவிற்கு வந்தபிறகே அவளிடம் பேசாசதும் அவளுமே தன்னை அழைக்காததும் நினைவிற்கு வந்ததில் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்த அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் சொன்னது..



‘என்னாச்சு இந்த ஃபயருக்கு?? தினமும் கூப்பிட்டு பேசுறவளுக்கு இப்போ என்ன ஆச்சு?? ஃபோனும் ஆஃப் பண்ணி வச்சிருக்காள்.. என்ன நடந்திருக்கும்??’ என எண்ணியவனுக்கு அன்று ஹோட்டலில் இருந்து கிளம்பும்போதே ஒரு மாதிரி இருந்ததோடு தன்னிடத்தில் ஒதுக்கத்தோடு நடந்ததும் புத்திக்கு உறைக்க, அவளின் திடீர் மௌனத்திற்கு என்ன காரணம் என கேட்டே ஆகவேண்டும் என்ற வேகம் தோன்றவும் அவளின் ஆபீசுக்கு சென்று அவளின் முன்னால் அமர்ந்து காரணம் கேட்டதற்கு அவள் கொடுத்த பதிலில் அதிர்ச்சியாகிப்போய் அமர்ந்துவிட்டான் தேவ் ஆனந்த்..

தொடரும்...


உங்கள் கருத்துக்களை பகிர,

 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8



தடாலடியாக கேபின் கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் அதுவரை கணனியில் எதையோ கூர்ந்து கவனித்த பார்வையை நிமிர்த்தியவளின் முகம், அதுவரை இருந்த இலகுத்தன்மையை தொலைத்து உணர்வுகள் அற்று இறுகி போக, காக்கி உடையில் கம்பீரமாக இருந்தவனின் தோற்றத்தில் பாதிக்கப்படாதவளாக அமர்ந்திருந்தவளின் முன்னால் இருந்த இருக்கையை தூக்கிப்போட்டு அமர்ந்த தேவ்,



“ஃபோன் நம்பர் மாத்துற அளவிற்கு என்ன நடந்திச்சு மேடம்??” அழுத்தமாக கேட்டபடி கூர்மையாக நோக்கியவனின் அந்த பார்வையை தளராது எதிர்கொண்டாள் அவள்..



“என்ன இது பார்வை?? கேட்டதுக்கு பதில் சொல்லு ஃபயர்” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டவனை நிதானமாக நோக்கி,



“பிடிக்கலை” வெறுப்புடன் சொன்னாள் ஒற்றை வார்த்தையாக..



“என்ன பிடிக்கலை” என்றான் காட்டமாக..



“உன்கூட பேச பிடிக்கலை.. உன்னை பார்க்க பிடிக்கலை.. உன்னை பற்றிய எந்த விஷயமும் என்னை அடையிறது பிடிக்கலை” என்றவளை எரித்துவிடுவது போல் நோக்கி,



“ஏன்??” திடீரென அவள் விலக நினைப்பது எதற்காக என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தவனுக்கு அவளின் இந்த பதில் அவனை கொதிகலனாக மாற்றியதில் கர்ஜனையாக கேட்டான்..



“பிடிக்கலைன்னா பிடிக்கலை.. அதற்கு காரணம் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்றாள் அலட்சியமாக..



“நீ சொல்லித்தான் ஆகணும்” காரணம் அறிந்தே ஆகவேண்டும் என விடாப்பிடியாக நின்றான் அவன்..



“மனதுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசி பழகும் நட்பு எனக்கு தேவையில்லை” இரும்பின் தன்மையை ஒத்த குரலில் சொன்னவளை கூர்ந்து நோக்கிய தேவ்விற்கு அவள் பார்வையில் இருந்த அந்நியத்தன்மை ஏதோ கதை சொன்னது..



“அப்படி எதை மறைத்தேன்??” உண்மையிலேயே காரணம் புரியாமல்தான் கேட்டான்..



“உன் ஃபர்சில் என் போட்டோ இருக்கிறதை மறைத்தவன் இன்னும் என்னென்னவெல்லாம் மறைத்தாயோ??” என்றதும் உள்ளுக்குள் திடுக்கிட்டவனுக்கு எப்போது அதை பார்த்தாள் என்ற கேள்வி எழுந்தாலும் அன்றைய பார்ட்டியின் பின்னரான அவளது ஒதுக்கம் இதனால் தான் என்பதை புரிய வைத்தது..



“போட்டோ வைத்திருந்தது ஒரு குற்றமா??” சாதாரணம் போல் கேட்டவனை விழிகளால் சுட்டவள்,



“காலேஜ் டைம் கடைசியாக பார்த்த பிறகு இப்போதான் நாம மீட் பண்ணியிருக்கோம்.. அப்படி இருக்கும் போது என் போட்டோ உன்கிட்ட எப்படி?? அதுவும் காலேஜ் டேய்சில் எடுத்த போட்டோ” என வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கேட்டவளை நிதானமாக நோக்கி,



“என் ப்ரெண்ட் போட்டோ என் ஃபர்சில் இருக்கிறது தப்பில்லையே” என்றவனை கூர்ந்து நோக்கியவள்,



“ப்ரெண்ட் மட்டும் தானா??” எரிமலையை அடக்கிய குரலில் அவள் கேட்டதிலேயே அந்த போட்டோவை எடுத்து பார்த்திருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்துபோனதில் அவளையே சிலநொடிகள் விழியெடுக்காமல் நோக்கியவனுக்கு அத்தனை ஆசுவாசம்..



கல்லூரி காலத்திலிருந்து அவளை அளவில்லாது நேசிப்பவனின் காதல், உரியவளிடம் சொல்லுவதற்கான சந்தர்ப்பம் அமையாமலேயே போயிருந்தது.. முதலில் சிறுவயது என்ற தயக்கம்.. பின்னர் பெண்ணவளின் வேறொருவன் மீதான காதல்..



அதற்கு பிறகு தன் காதலை மனதோடு மட்டுமே வைத்து கொண்டவனுக்கு இத்தனை வருடங்களின் பின் உரியவளுக்கு அதுவாக தெரியவந்ததில் ஒருவித நிம்மதி பரவ,



“அதற்கும் மேல், என் உயிர் நீ” என்றான் அழுத்தத்தமும் அளவில்லாத காதலுமாக..



“இதை சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்??” அளவில்லாத ஆத்திரத்தில் சீறியவளை ரசனையுடன் நோக்கியவன்,



“முழுவதும் நனைந்தபின் முக்காடு எதற்கு?? அத்தோடு இத்தனை வருஷம் சொல்லமுடியாமல் மறைத்து மூச்சு முட்டிப்போன விஷயம் தெரிந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்” இலகு குரலில் சொன்னவனை உணர்வில்லாது வெறித்தவள்,



“நீ நினைக்கிறது நடப்பதற்கான சாத்தியக்கூறு கண்டிப்பாக கிடைக்காது” அடிக்குரலில் உறுமியவளை ஆழ்ந்து நோக்கிய தேவ்,



“என் காதல் அந்தளவு பலவீனமானது இல்லை” அவனது வார்த்தைகளில் வெளிப்பட்ட உறுதியைக் கண்டு இகழ்ச்சியாக புன்னகைத்தவள்,



“இன்னொருவனை நினைச்சவளை காதலிக்கிறேன்னு சொல்றதுதான் உங்கூரில் காதலோ??” ஏளனமாக கேட்க,



“அது கடந்தகாலம் ஃபயர்” என்ற தேவ்வின் கண்டிப்பான குரலில் கோபம் ஏற்பட,



“கடந்தகாலமோ?? நிகழ்காலமோ?? என் வாழ்வில் நடந்தது நடந்தது தான்.. அதுக்காக இன்னொருத்தன் நினைக்கிறதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது” அலட்சியமாக சொன்னவளை குறுஞ்சிரிப்புடன் நோக்கி,



“உன்னை பொறுப்பெடுத்துக்க சொல்லி யார் சொன்னது மேடம்??” பாவனையாக புருவம் உயர்த்தி அவன் கேட்டலில் திகைத்த பெண்ணவள், பின் அவனை விழிகளால் பொசுக்கி,



“என்ன பெரிய தியாகின்னு நினைப்பா??” அதட்டலா கேட்டவளை நிதானமாக ஏறிட்ட தேவ்,



“காதல் சொல்லி வைத்து வருவதில்லை.. அதுபோல் எல்லா காதலும் வெற்றியடையுமான்னு கேட்டால் நிச்சயம் இல்லைன்னு தான் சொல்லுவேன்.. அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு நான் தான்.. உன்னை வற்புறுத்தமாட்டேன்.. அதேவேளை எப்பொழுதும் உன்னை மறக்கவும் மாட்டேன்” உறுதியாக சொன்னவனை என்ன செய்வது என்று தெரியாது சிலநொடி அமைதி காத்தவள்,



“ஒரு ப்ரெண்டா சொல்றேன், உன் நினைப்பை மாத்திக்கிட்டு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” நண்பனின் வாழ்வு வீணாகிறதே என மனதின் ஓரம் நட்புக்காக எழுந்த கவலையோடு அவள் உரைக்க, மறுப்பாக தலையாட்டினான் தேவ்..



“என் முடிவில் மாற்றம் இல்லை ஃபயர்”



“இது உனக்கு வேணாம் தேவ்”



“வேறு எதுன்னாலும் சொல்லு கேட்டுக்கிறேன்.. இதில் ம்ஹூம்..!!” என்றவனை வெறித்தவளில் மனக்கண்ணில் பல நினைவலைகள் வலம் வந்ததில் அதுவரை இருந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு நீங்கி ஒருவித முசுட்டுத்தனம் தோன்ற,



“ஓகே.. உன் முடிவில் நீ மாறப்போவதில்லைன்னா என் முடிவையும் கேட்டுக்கோ..!! ஒரு ப்ரெண்டா கூட இனிமேல் என் வாழ்வில் நீ தேவையில்லை” அழுத்தம் நிறைந்த அந்த முடிவான பேச்சில் தேவ் ஆனந்தனின் உள்ளம் அளவில்லாத வேதனையில் தவித்தாலும் அவளுக்கு அதனைக் காட்டாது அசராமல் நோக்கி,



“இந்த பதினொரு வருஷமா உன்னை நினைச்சுக்கிட்டு கனவில் உன்கூட எப்படி வாழ்ந்தேனோ இனிமேல் உயிரோடு இருக்கும் காலம் வரை அப்படியே வாழ்ந்து முடிச்சுடுவேன்” என்றவனின் பேச்சில், “தேவ்!!” என அவள் பல்லைக் கடிக்க, கையை நீட்டி அவளைத் தடுத்தவன்,



“உன்னை லவ் டார்ச்சர் செய்தால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.. அதற்காக மனதில் நினைப்பதற்கு எல்லாம் நான் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.. புரியுதா??” கறாராக உரைத்துவிட்டு இருக்கையை விட்டு எழுந்தவன், மேசையில் இரு கைகளையும் ஊன்றி சற்றே அவளை நெருங்குவது போல் முன்னால் வந்து அவளது கண்களை ஆழ்ந்து பார்த்த தேவ்,



“உன் கண்ணில் நான் படவே கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கோ!!” அழுத்தமாக உரைத்துவிட்டு நிமிர்ந்து நின்று ஒற்றைக் கையை வைத்து சல்யூட் வைத்தவன், வந்தது போலவே புயல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பியவனை எதுவும் செய்யமுடியாது மேசையில் பலமாக தட்டியவளின் மனது கலங்கி தவிக்க, தலையை இரு கைகளாலும் அழுந்த பற்றியபடி அமர்ந்துவிட்டாள்..



**********************



அபர்ணா அங்கு வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது.. இன்டர்வியூவில் எப்படி மெச்ச வைத்தாளோ, அது போலவே வேலையிலும் தன் திறமையை காட்டி அர்ஜூனை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினாள்..



அவன் கொடுக்கும் வேலைகளில் சிறு பிழைகூட இல்லாமல் பார்த்து கொண்டாலும் அவன் ஆபீசில் இல்லாத நேரம் எதை எப்படி செய்யவேண்டும் என்னும் சூழல்களை மனேஜரின் உதவியுடன் திறமையாக கையாளவும் செய்வாள்.. அதனாலேயே வெளியில் செல்லும் அர்ஜூனும் ஆபீஸ் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாது இருந்து கொள்வான்..



அவளைப் பார்த்த அன்று சிறு பொறியாக ஆரம்பித்த ஈர்ப்பு, அபர்ணாவின் அடக்கமும் தன்னம்பிக்கையுமான குணத்தில் காதலாக மாறியிருந்தது..



ஒருவர் மீது காதல் வர வருடங்கள் தேவையில்லை, ஒருநொடியே போதும்.. அதுபோல் தான் அர்ஜூனின் அபர்ணா மீதான நேசம்..



இன்டர்வியூ அன்று தன் சொந்த விஷயம் பற்றி அவள் பேசியது.. அதன்பின் வேலை பற்றி மட்டும் அவளது பேச்சுக்களாக இருந்தது அவனின் மனதை சுணங்க வைத்திருந்தது.. அதனாலேயே அவளை எந்தளவிற்கு காதலித்தானோ அதனை சொல்ல அத்தனை தயங்கினான்..



பேச தயக்கம் கொண்டவனின் காதல் கண்களின் மூலம் அவளிடம் சென்றடைய முயன்றது தான் விந்தையிலும் விந்தை.. தினமும் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் அவளுக்கே தெரியாது விழிகளால் பெண்ணவளை காதலோடும் ஏக்கத்தோடும் வருடுவான்..



அதுபோல் தான் அன்றும் தன் வேலையை முடித்துவிட்டு கையில் இருந்த பேனாவின் நுனியை இதழ்களினூடே பற்களால் மெல்ல கடித்தபடி வேலையில் ஆழ்ந்திருந்த அபர்ணாவையே விழியெடுக்காது பார்த்திருந்தவனுக்கு உடலில் புதுவிதமான பரவசம் பரவியதில் தன்னையே மறந்துபோய் இருந்தவனிடம் எதனையோ கேட்க, “சார்..!!” என அழைத்தபடி நிமிர்ந்த அபர்ணா, அவனின் அந்தப் பார்வையைக் கண்டு முதலில் அதிர்ந்துதான் போனாள்..



கண்ணியத்துடன் நடக்கும் அர்ஜூனின் இந்தப் பரிமாணம் அவளுக்கு அவனின் மனதை வெட்டவெளிச்சமாக காட்டியதிலும் அவனின் அச்சடித்த பார்வையிலும் வெட்கம் சூழ, வாயிலிருந்த பேனாவை அவசரமாக எடுத்து மேசையில் வைத்துவிட்டு தலையை சற்றே சாய்த்து அவனை நோக்க, பெண்ணவளின் அழைப்பில் சுதாரித்து நிமிர்ந்த ஆணவன், தன்னவளின் தென்பட்ட நாணத்தில் ஆச்சரியம் கொண்டவனாக,



“வர்ணா..!!” நம்பமுடியாது அழைக்க,



“ஹ்ம்ம்” கிள்ளையாய் மிழற்றியவளிடம் தென்பட்ட நளினத்தை நிறுத்தி நிதானமாக ஆராய்ந்தவனுக்கு கிடைத்த விடையில் அந்த உலகையே வென்ற நிம்மதி..



இது எப்படி சாத்தியமானது என்பதை அவனால் முதலில் நம்பவே முடியவில்லை.. காதலை சொல்லாது இருந்தவனுக்கு பெண்ணவளிடமிருந்து கிடைத்த பிரதிபலிப்பு தன் தயக்கம் அவசியம் அற்றது என புரிந்து போனது..

சட்டென்று எழுந்த ஆசுவாசத்துடன் முகத்தை அழுந்த தேய்த்து கொண்டவன், மனமெல்லாம் உவகை பொங்க இருக்கையை விட்டு எழுந்து உல்லாச நடையுடன் அவளருகில் வந்து மேசை விளிம்பில் சாய்ந்து நிற்க, அவனின் அந்த திடீர் நெருக்கத்தில் அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வில் அவஸ்தையாய் நெளிந்தபடி விழி விரித்து அவனை நோக்க,



“உன் நினைப்பு எப்படின்னு தான் இத்தனை நாள் வாயை மூடிட்டு இருந்தேன்.. முன்னாடியே வெளிப்படையா பேசியிருக்கணுமோ??” மந்தகாசப் புன்னகையுடன் அர்ஜூன் கேட்க, அவன் பேச்சிலும் செயலிலும் கிறுகிறுத்து போய் இருந்த அபர்ணாவிற்கு அர்ஜூனின் கேள்வி புத்தியை சென்றடையவில்லைபோலும்.. எனவே, அவனை மெல்ல ஏறெடுத்து நோக்கி,



“எதை??” எனக் கேட்க,



“ஹேய்.. லவ்வை பற்றி தான்” பதறியடித்து சொன்னவன், “லவ் இருக்குல்ல??” என சற்றே பயத்துடன் கேட்கவேறு செய்ய, அவனின் அந்தப் பதட்டம் அவளுக்கு அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை..



“அதெல்லாம் இருக்கு” என வேகமாக அவளிடமிருந்து வந்த பதிலில் முகம் எங்கும் மத்தாப்பூக்கள் சிதற, மந்தகாச புன்னகையுடன் மனம் நிறைய அவளை நோக்கி,



“ஒரு நிமிஷத்தில் மனுசனை டென்ஷன் பண்ணிட்ட போ” படபடத்த இதயத்தின் மேல் கையால் தட்டியபடி சொல்ல, அப்போதைய நிலையை எப்படி சொல்வது என வெட்கம் தடுத்ததில் பாவமாக அவனை நோக்கியவளை அப்படியே அள்ளிக் கொஞ்சலாம் போல் உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்து இம்சையை கொடுத்தது..



“ம்ஹூம்.. இப்படியே பேசிட்டு உன் பக்கத்தில் நின்றால் எதையாவது செய்து வெச்சுடுவேன்” என்றவனின் விழிகள் பேசிய பரிபாசைகள், அவளின் மனதை சுழல் போல் இழுத்துக் கொண்டதில் தன்னாலேயே வெட்கத்தில் செந்தூரமாக மாறிய கன்னத்தோடு மயக்கத்தில் சொக்கிய நயனங்களை தாழ்த்திக் கொண்டவளை ரசனையுடன் நோக்கிவிட்டு,



“ஆபீஸ் டைம் முடிய பேசலாம் வர்ணா” என்றவனை கேள்வியும் தயக்கமுமாக அவள் நோக்க,



“ஆபீஸ் டைமில் பர்ஸ்னல் ரொம்ப பேசமுடியாது.. அதிலும் நம்மைப்பற்றி நிறைய பேசணும்.. அதற்கான நேரம் நமக்கு இங்கே கிடைக்காது” என்றவனின் எண்ணம் புரிய சம்மதமாக தலையசைத்தவள், தெளிந்த மனதுடன் வேலையில் எழுந்த சந்தேகத்தைக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள, அர்ஜூனும் தனது இருக்கைக்கு சென்று வேலையில் மனதை செலுத்த ஆரம்பித்தான்..



மாலையில் வேலை முடிந்து மற்றவர்கள் கிளம்பிய பின்னரும் இருந்த வேலை பற்றி விவாதித்து விட்டு அபர்ணாவையும் அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பிய அர்ஜூனின் கைகளில் கார் பறந்ததை விட, அவனின் மனது அளவில்லாத ஆனந்தத்தின் விளைவாக ஜெட் வேகத்தில் பறந்தது..



“அச்சோ இது என்ன இத்தனை வேகம்??” அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த அபர்ணா கேட்கவும் அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன்,



“லவ் ஓகே ஆகிடிச்சில்ல?? அதுதான் கார் வேகமா போகுது” குதூகலத்துடன் சொன்னவனை முறைத்து நோக்கியவள்,



“அதுசரி, இப்படியே போனால் ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போறது நிச்சயம்” கேலியாக சொன்னவள், அர்ஜூனின் முகம் போன போக்கை கண்டு வாய்விட்டு நகைத்தவளின் லாவண்யத்தில் கொள்ளை போனவனாக அவளை ஒரு நொடி ஆழ்ந்து நோக்கிவிட்டு பார்வையை சாலைக்கு திருப்பியவனின் விழிகள் சொன்ன செய்தியில் உள்ளம் ஜில்லிட, பார்வையை தாழ்த்தியவளின் கைகள் இரண்டும் பதட்டத்துடன் கோர்த்து கொண்டது..



“நீ ரொம்ப தைரியமான ஆளாச்சே..!! இப்போ பேசேன்” அவளது திடீர் அமைதியை சுட்டிக்காட்டி பரிகாசம் செய்தவனின் பேச்சில் தன்னை மீட்டவளாக, “நான் பேசினால் நீங்க தாங்கமாட்டீங்க” செல்ல முறைப்புடன் சவால் விட,



“ஹ்ம்ம்.. தைரியம் தான்..” உதடுகளை பிதுக்கி அவன் மெச்சுதலாக சொல்ல,



“ஆமா தைரியம் தான்” என்றாள் விறைப்பாக..



“அந்த தைரியம் காணாமல் போய் என் முன்னால் நீ வியர்த்து விறுவிறுத்து நிற்பாய்.. அப்போ பேசிக்கிறேன் உன்னை”



“அப்படி ஒரு சூழ்நிலை வராது”



“வரும்.. ஆனால் அதுக்கான கால நேரம் எப்போன்னு தான் தெரியலை” சூடான மூச்சை வெளியேற்றியபடி சொன்னவனை கேள்வியாக நோக்க,

“நாம் நிறைய பேசணும் வர்ணா” என அர்ஜூன் கூறியது புரிந்தவளாக தலையசைத்தவள்,



“இப்போ நாம் எங்கே போறோம்” வெளியில் பார்வையை சுழற்றியபடி அபர்ணா கேட்க,



“ஏன் எங்கேயாவது கடத்திட்டு போயிடுவேனோன்னு பயமா இருக்கா??” வளைவில் காரை திருப்பியபடி அவன் கேட்க,



“நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க.. அதுபோக நீங்க அந்தமாதிரி செய்கிற ஆள் இல்லை” முன் பாதியை கேலியாகவும் பின் பாதியை நம்பிக்கையுமாக உரைத்தவளை அளவில்லாத நேசத்துடன் நோக்கிவிட்டு அந்த பார்க்கின் வாசலில் காரை நிறுத்தினான் அர்ஜூன்..



“ஏதாவது சாப்பிடுறியா வர்ணா??” காரை விட்டு இறங்கிய பின் அர்ஜூன் கேட்க,



“ஹ்ம்ம் லைட்டா பசிக்குது தான்.. ஆனால் இங்கே ஹோட்டல் எதுவும் இல்லையே!!” சுற்றிலும் ஆராய்ந்தபடி அபர்ணா சொல்ல,



“கையேந்திபவன்னா ஓகே தானே??” அங்கு சாப்பிடுவாளா என்ற யோசனையாக கேட்க,



“நிஜமா அங்க சாப்பிட போகலாமா??” குதூகலாமக அவள் கேட்டதில் தன்னாலேயே தோன்றிய புன்னகையுடன், “ஹ்ம்ம் சாப்பிடலாமே!!” பாவனையுடன் சொன்னவன், அருகே இருந்த கையேந்திபவனிற்கு அழைத்து சென்றான்..



“அது என்ன கையேந்திபவன்னதும் அவ்வளவு எக்சைட்மன்ட்??” உணவுக்கு ஆடர் கொடுத்துவிட்டு அர்ஜூன் கேட்க,



“எனக்கு கையேந்திபவன்ல சாப்பிடுறது அவ்வளவு புடிக்கும்.. ஆனால் என் அக்கா தான் அங்கே சுத்தமா இருக்காதுன்னு போகவே விடமாட்டாங்க” முகத்தை சுருக்கி சொன்னவளை வாஞ்சையுடன் நோக்கி,



“இனிமேல் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து சாப்பிடலாம்” என சமாதானம் போல் சொல்ல,



“தேங்க்ஸ் அஜூ” தங்கள் காதலைப்பற்றி இன்னும் சரியாக பேசப்படாத போதும் தனக்காக அவன் சொன்னது அவளுக்கு அத்தனை நெகிழ்வையும் உவகையையும் கொடுக்க, கண்களில் மெல்லிய நீர்ப்படலத்துடன் புன்னகைத்தாள்..



“ஹேய்!! உனக்காக வந்தால் எனக்கும் இதுபோல் டிஷ் கிடைக்கும்ன்னு சொன்னேன்.. ஓவரா ஃபீல் பண்ணாதே!!” குறும்பாக கண் சிமிட்டி சொன்னவனை செல்லமாக முறைத்தவளுக்கு அவன் தன்னை சகஜநிலைக்கு கொண்டுவர அப்படி சொன்னான் என்பது புரிந்து போனது..



அவளுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?? தனது சின்ன ஆசையை கூட அலாட்சியப்படுத்தாது நிறைவேற்ற நினைக்கும் அவன் செய்கை, மொத்தமாக அவளை வாரி சுருட்டி கொண்டது..



காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் எவ்வளவு முக்கியமோ இரு சாராரும் மற்றவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை அத்தனை சிறப்புடன் இருக்கும்..



“நம்பிட்டேன் நம்பிட்டேன்” தலையை சாய்த்து அபர்ணா சொன்னதில் வாய்விட்டு நகைத்த அர்ஜூன், சிற்றுண்டிக்கான பணத்தை கொடுத்துவிட்டு அதனை பெற்றுக்கொண்டு இவளிடம் திரும்பி, “போகலாம்” எனவும் இருவரும் பார்க்கினுள் சென்று சரியான இடம் தேடி அமரவும் செய்தனர்..



சுற்றிலும் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்தபடி சிற்றுண்டியை உண்டு முடித்து தண்ணீரும் அருந்தி முடித்தனர்..



“இன்டர்வியூவில் உன்னைப் பார்த்தபோதே உன்மேல் சின்னதா ஒரு ஈர்ப்பு.. அது உன் அழகை மட்டும் பார்த்து வரலை.. உன் ஆட்டிட்டியூட் பார்த்தும் வந்திச்சு.. நாளாக நாளாக அது காதலாவும் மாறிச்சு” விழிகளால் நேசத்துடன் வருடியபடி சொன்னவன், அவளின் ஒரு கரத்தை முதன்முதலாக தொட்டு தூக்க, அவனின் தொடுகையில் உடல் சிலிர்க்க, வெட்கத்தால் குழைந்த கன்னங்கள், படபடத்த நயனங்களோடு நோக்க,



“இன்னிக்கு சொல்லியிருப்பேனான்னு கேட்டால் எனக்கு தெரியலை வர்ணா.. உன் பார்வை கொடுத்த தைரியத்தினால் மட்டுமே இது சாத்தியமாச்சு” என்றவன்,



“இப்போ உன் முறை.. எப்போதிருந்து என் மேல் லவ்??” என ஆவலுடன் கேட்டான்..



“உங்க அகங்காரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாத குணம் முதலே பிடிக்கும்.. ஆனால் காதல்ன்னு உணர்ந்தது, அன்னிக்கு உங்களை ஒரு பொண்ணு கட்டிப்புடிச்சு நின்றப்போ தான்” மடியில் கோர்த்திருத்த கைகளை பார்த்தபடி நாணம் மீதுரிய குரலில் சொன்னவளின் கன்னங்களில் பூத்திருந்த ரோஜாப்பூக்களை ரசனையுடன் நோக்கியவன்,



“அடிப்பாவி..!! அது என் தங்கை முறையில் இருக்கிற பொண்ணு” பயந்தவன் போன்று சொல்ல, வெட்கம் துறந்து அவனை முறைத்தவளைப் பார்த்து அட்டகாசமாக சிரித்தவன்,



“பின்ன என்ன?? பொறாமையில் லவ் புரியுமா??” என்ன எனக் கேட்டான்..



“எனக்கு மட்டும் இதெல்லாம் தெரியுமா?? அந்த சிட்டுவேஷனில் தான் என்னையே நான் அனலைஸ் பண்ணினேன்” வீண்புடன் சொல்ல,



“நல்லவேளை அன்னிக்கே உனக்கு புரிஞ்சுது.. இல்லைன்னா என் நிலை என்னாகிறது??” போலி ஆசுவாசத்துடன் சொன்னதில் அவனது கிண்டலைப் புரிந்து, “அஜூ” எனச் சிணுங்கியவளை மயக்கத்துடன் நோக்கியவன்,



“இந்தமாதிரி சிணுங்காதே!! நான் நல்ல பிள்ளையா இருக்கணும்னு நினைக்கிறேன்” என்றவனை கேள்வியாக நோக்கியவள், அவன் கண்கள் சொன்ன செய்தியில் பார்வையை திருப்பியவள், வெட்கத்தில் இதழை கடிக்க, அர்ஜூனோ உல்லாசத்துடன் தலை கோத, அந்த ஏகாந்த சூழலையை இருவரும் ஆழ்ந்து அனுபவித்தனர்..



“நீங்க இந்தளவு குறும்பு செய்வீங்களா??”



“ஹ்ம்.. இதுதான் என் ஒரிஜினாலிட்டி.. என்னவர்களிடம் மட்டும் வெளிப்படும்” நீ எனக்கு எத்தனை முக்கியமானவள் என்பதை மறைமுகமாக கூறியவனை பெருமை பொங்க பார்த்தவளின் முகம் சற்றே தீவிர பாவனைக்கு மாறியது..



“நான் சிலது பேசணும் அஜூ” என்றவளின் குரலில் இலகுத்தன்மை இல்லாது போகவும் அபர்ணாவின் முகத்தில் கூர்மையாக பார்வையைப் பதித்தவன்,



“என்னாச்சு திடீர்ன்னு?? ஹ்ம்ம்.. சொல்லு வர்ணா” என ஊக்க,



“இங்கே நான் வேலைக்கு வந்த நோக்கம் உங்களுக்கு தெரியும் தானே??” எனக் கேட்க,



“ஹ்ம்ம் ஆமா” என யோசனையுடன் சொன்னான் அர்ஜூன்..



“இடையில் இந்த லவ் வரும்ன்னு நான் சுத்தமா எதிர்பார்க்கலை.. அதுக்காக இதை தப்புன்னு நிச்சயம் சொல்லமாட்டேன்.. அதேசமயம் என்னை நம்பி இங்கே விட்டிருக்கும் என் குடும்பத்திற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது”



“புரியுது வர்ணா”



“அதனால் அவங்க கிட்ட பேசி சம்மதம் வாங்குற வரை நாம தனியாக மீட் பண்ணவோ அடிக்கடி பேசிக்கவோ வேணாமே!!” தன் முடிவை அவனிடம் திணிக்கும் தன் நிலையை வெறுத்தவாறே தயக்கமாக உரைக்க, இலகுவான புரிந்துணர்வுடன் கூடிய புன்னகையுடன் அவளை நோக்கி,



“இதைத்தான் நானுமே சொல்ல வந்தேன்.. நம்மளை நம்பும் பெரியவங்க கிட்ட மறைச்சு எதுவும் செய்ய எனக்குமே இஷ்டம் இல்லை.. இன்னிக்கே என் அம்மா, அக்கா கிட்ட பேசணுங்கிற முடிவை ஆபிசிலிருந்து கிளம்பும் போதே நான் எடுத்துட்டேன்.. அப்படி இருக்கும் போது உன் கோரிக்கையை நான் மறுப்பேனா??” என்றவனின் ஆதரவான பேச்சில் முகம் மலர்ந்தவள்,



“தேங்க்யூ அஜூ!!” எனக் கூறியவளை செல்லமாக முறைத்து, “உனக்கு நீயே தேங்க்ஸ் சொல்வாயா??” செல்லமாகக் கடிய,



“அப்போ லவ் யூ சொல்லலாம் தானே??” சிட்டுக்குருவியாய் தலையசைத்து கேட்டவளின் செயலில் மனம் ஜிவ்வென்று பறந்தாலும் அதனை மறைத்து,



“ம்ஹூம்.. இனிமேல் இங்கே இருந்தால் நம்ம கதை கந்தல் தான்.. கிளம்புவோமா??” என்றபடி எழுந்தவனோடு சிறு சிரிப்புடன் அபர்ணாவும் எழுந்து கொள்ள, நிறைவான மனநிலையுடன் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்..



*******************



“என்கிட்ட பேசணும்னு சொன்னாங்களா??” மீண்டும் கேட்ட அபர்ணாவை முறைத்து,



“அதைத்தானே அப்போ பிடித்து சொல்லிட்டிருக்கேன்” எனக் கூற,



“அப்படி என்ன பேசுவாங்க??” எதற்கு என்று தெரியாத படபடப்புடன் கேட்க,



“எனக்கும் தெரியலை வர்ணா.. நைட் நம்ம விஷயத்தை சொன்னதும் அக்கா முதலில் சொன்னது உன்னை மீட் பண்ணனுங்கிறது தான்” விஷயத்தை சொன்னதும் தம்பிக்காக மலர்ச்சியைக் காட்டினாலும் அவளின் முகத்தினில் தென்பட்ட இறுக்கம் அவனுக்குமே குழப்பத்தை கொடுத்திருந்தது.. இருந்தாலும் அபர்ணாவுடன் அவள் பேசினால் தெளிவு கிடைக்கும் என அவன் நினைத்திருக்க, சிறிது நேரத்தில் அவர்களை நோக்கி வந்த மங்கையைக் கண்டு அபர்ணா அதிர்ந்ததோடு அல்லாமல் அவள் வாயிலிருந்து வந்த சொல்லில் அவனுமே அதிர்ந்து எழுந்தேவிட்டான்..


தொடரும்..


உங்கள் கருத்துக்களை பகிர,

 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்🎊🎉✨🧨🎇🎆32800
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்,

பிரதிலிபியில் இது எனது பக்கம்.. என் கதைகளை படிக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடரலாம்..

நிறைய பேர் "மனதை தாக்கும் மின்னலே!!" கதை படிக்கவில்லை என சொல்லியிருந்தீர்கள். இந்த பக்கத்தில் இக்கதையின் அனைத்து அத்தியாயங்களும் பதிவிட்டிருக்கிறேன். படித்து மகிழுங்கள்😍

கதை 31.01.2023 வரை இருக்கும்.

நன்றி,
கிருநிசா🙂

 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க?? ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து. என் சூழ்நிலை கதையை எழுத இன்னும் சரியான மனநிலை இல்லை. இருந்தாலும் முடிந்தபோது நாலு வரியவது எழுதுவிடுகிறேன்.

உங்களை காக்க வைக்கிறதுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இது எனது முதல் கதை. படிக்க நினைப்பவர்கள் இங்கு சென்று படிக்கலாம்.


நன்றி,
கிருநிசா🙂

"உயிரே உன்னில் சரண் புகுந்தேன்..", - பிரதிலிபியில் படிக்க :, Uyire unnil saran Pugunthen - An online Tamil story written by Kiru Nisa | Pratilipi.com இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
 
Status
Not open for further replies.
Top