All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

'குட்டி ஸ்டோரி' - கதை திரி

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே 🙏🙏

இது என்னோட புது முயற்சி... தலைப்புலயே இதோட கரு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இது என்னோட குட்டி குட்டி ஸ்டோரிஸ் அண்ட் தத்துவங்கள சொல்லப் போகிற பக்கம்....

என்னடா முதல் கதையையே முடிக்காம வேற என்னமோ பண்ணீட்டு இருக்க அப்படினு நீங்க திட்டரதுலாம் எனக்கு புரியுது... அது கொஞ்சம் அழுத்தமான கதை உணர்வுகளை சரியா கொடுக்கலனா கதைக்கு வேல்யூ இருக்காது சோ அந்த கதைக்கு ஃப்லோ வரும்போது அப்பிடியே எழுதிட்டு இருக்கேன்....

இதுல வர்ற ஸ்டோரிஸ் க்கு தலைப்பு நான் வேறு ஒரு பக்கத்துல காப்பி அடிச்சது(போட்டுக் கொடுத்துறாதீங்க மக்காஸ்... அதுலயும் நான் எழுதுறேன்.)😝😝 காப்பி சொல்ல முடியாது ஒரு உதாரணம் மாதிரி னு வச்சுக்கோங்களேன்... தலைப்பு மட்டும் தான் உள் வர்ற கரு ,கருத்து எல்லாம் என்னோடது தான் மக்களே...

இதுல கொஞ்சம் கருத்து ...‌கொஞ்சம் அனுபவம்... கொஞ்சம் எமோஷனல் நகைச்சுவை னு எல்லாமே இருக்கும்....(அப்டின்னு நம்புறேன் 😐😓😓)

எப்போதும் போல் நிறை குறைகளை கூறி உங்கள் ஆதாரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நட்புக்களே🙏🙏
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26966

பிரிவோம்!! சந்திப்போம்!!!

அது ஒரு இளையுதிர் காலத்தின் காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்ததாக எனக்கு தோன்றியது...

என்றும் இல்லாத ஒரு குறுகுறுப்பு அன்று நான் எழுத்தில் இருந்தே என்னுள் ஓடிக் கொண்டிருந்தது....

கண்விழித்த தருணம்‌ என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்த ஒரு சிட்டுக்குருவி அதன் இசையில் என்னை மூழ்கடித்து என் காலைப் பொழுதை இனிமையாய் துவக்கியது.

மெல்ல எழுந்து கால பரிகாரங்களை முடித்து குளித்து வந்து எப்போதும் அணியும் சேலை தான் ஆனால் இன்று சற்று கூடுதல் அழகாய் எனக்கு காட்சியளித்தது....

உதட்டில் பூத்த புன்னகையுடன் தயாராகி புறப்பட என்ன ஆச்சரியம் என்றும் அரக்கப் பறக்க பணிக்கு செல்லும் நான் இன்று பத்து நிமிடங்கள் முன்னரே தயாராகி வீட்டிலிருந்து கிளம்பியிருந்தேன்...

அதே மந்தகாச நிலையில் பேருந்துநிலையம் வர அங்கோ எனக்காக பூக்கள் நிறைந்த பாதை இன்னும் என்னை ராணியாய் உணர வைத்தது...

அமைதியாய் அந்த இளங்காலைப் பொழுதில் எனக்கான பேருந்து வரும் திசையை ஆவலுடன் பார்த்துக் கொண்டே இருந்தேன்...

நான் நிற்கும் இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் ஒரு வெள்ளை நிறக் கார் அனாயசமாக ரோட்டில் வழுக்கி கொண்டு வந்து நிற்க அதிலிருந்து ஆறடி உயரத்தில் காக்கி நிற உடையில் கம்பீரமாக இறங்கியவனைக் கண்டதும் என் இதயம் ஒரு நொடி தாளம் தப்பித்தான் போனது....

இத்தனை வருடங்களாக யாருடைய சந்திப்பிற்காக காத்திருந்தேனோ !!!! அதுவும் இந்த நிலையில் ....

இமையிரண்டும் மூட மறந்து பார்த்த விழி பார்த்ததாக நிமிடங்கள் சில கடந்தன... அதே சமயம் நீயும் உயர்ந்த புருவங்களுடன் என் விழியைக் காண.... நான்கு விழிகளும் இடம் பொருள் மறந்து மோதிக் கொள்ள....

என் மனமோ சில வருடங்கள் பின்னோக்கி நகர்ந்தது...‌

அது ஒரு கல்லூரிக் காலம் ....

மொழிகள் அற்று மௌனமாய் உன் விழிகள் என்னைப் பின்தொடர .....

உன் கால்களும் என் பாதையில் பயணித்தது....

மறைமுகமாய் எனக்கு பாதுகாப்பு தந்த உன் அருகாமையை உனக்கு தெரியாமல் கள்ளத்தனமாய் ரசித்தேன்....

உணர்வுகளுக்கு புதிதாய் எந்த பெயரும் இடாமல் அந்த மோனநிலை கலைக்காமல் வாழ்ந்த அந்த ஏகாந்த நாட்களுக்கும் தான் முடிவு வந்தது.‌‌...

ஏனோ கல்லுாரி காலம் முடிய அத்துடன் உன் விழியில் என் மீதான தேடலும் முடிந்ததோ என எண்ணி உன் பிரிவுக்கான காரணங்களை நினைத்துக் கொண்டேன்....

அதன்பின் வந்த நாட்கள் உன் மறைமுக பாதுகாப்பின்றி ஒவ்வொரு இடத்திலும் உன்னைத் தேடி ...

ஒருவேளை என்னைப் பிடிக்கவில்லை போலும் என எனக்கே சமாதானம் கூறிக் கொண்டேன்...

தினமும் இல்லையென்றாலும்...
காதல் பாடல் கேட்கும் போதும்...
உன் பெயர் கொண்ட மனிதர்களைக் கடந்து செல்லும் போதும்...

பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த போதும்...

உன் நினைவுகள் பசுமை மாறாமல் என் நெஞ்சில்..

பெயர் சூட்டா இந்த உணர்வுகளுக்கு பெயரிடும் நாளும் வந்தது என் பெற்றோர் எனக்கு வரன் பார்க்கும் படலத்தை துவங்கிய போது ..

அந்நொடி உந்தன் முகம் என் மனதில் தோன்றி கண் சிமிட்ட ...

என் மரணப்படுக்கையிலும் மறவாது உந்தன் முகமே என்பதை உணர்ந்தேன் என் கண்ணாலனே.......

இருந்தும் பெற்றோரை மீறி தன்னிச்சையாய் எந்த முடிவும் எடுக்க இயலாமல் வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில் அதனோடு பயணித்தேன்...

இந்த ஆறு வருடங்களில் கணக்கிலடங்கா முறை உன்னை கனவில் சந்திக்கவே இதுவரை உயிர்பித்துக் கொள்கிறேன்....

இன்று இந்நொடி உன் முகம் கண்ட இந்த பொன் வினாடிகளில் என் மரணம் நிகழ்வினும் மகிழ்ச்சியாய் உன் கரங்களில் உயிர் விடுவேன் என் ஆருயிரே...

மொத்த உணர்வுகளும் என் கண்களில் பிரதிபலிக்க அதே அளவு நேசத்தை உன் விழிகளில் உணர்ந்தேன் பேரன்பே....

மீண்டும் நீ காரினுள் ஏற என் இத்தனை நேர புன்னைகை ஒரு நொடி மறைய என் அழைப்பேசி அழைப்பில் கலைந்து ஒரு பெருமூச்சுடன் அழைப்பை ஏற்றேன்..

என் அன்னைதான் " பாப்பா இந்த ஒரு வரன் மட்டும் பாருடாம்மா ... பையன் உன்னைப் பிடிச்சு வந்துருக்கான்டா... நல்ல குடும்பம்... " என இன்னும் என் காதுகளில் இரத்தம் வரும் வரை ஏதோ ஒரு புண்ணியவானின் புகழாரம் பாட எனக்கு இதுவரை இருந்த மொத்த உற்சாகமும் வடிந்தது போல் உணர்ந்தேன்...

இந்த ஒருவார காலமும் இதே கதைதான் என் வீட்டில்... பொறுமையாய் மறுக்க ... மீண்டும் அதே பேச்சு .. இதுவரை என்னிடம் இல்லாத கடுமையை காட்ட இந்த இரண்டு நாட்களும் வீட்டில் பேரமைதி...

இதோ இன்றும் இதே பேச்சு மனம் நொந்து கொண்டும் கொண்டிருக்க அடுத்து என் தாய் கூறியதில் எனக்கு தலை சுற்றியது... " பாப்பா இன்னைக்கு உன்னை பார்க்கணும்னு அந்த பையன் சொன்னான்டா அதான் உன் நம்பர் கொடுத்துருக்கேன்... பையன் நாளைக்கு வெளியூர் போறதால உன்ன இப்போ பார்க்க வராங்க ... கோபமா பேசாதடா.வெள்ளைக் கலர் கார்ல் வருவாங்க உன்ன பிக்கப் பண்ண ... ." என்க...

என் முகம் கோபத்தில் சிவந்தது .. பொது இடம் கருதி அமைதி காத்து என் அன்னையின் வார்த்தைகளைப் கேட்டுக் கொண்டே திரும்ப என்னவனின் கார் அவ்விடத்தில் இல்லை ... அழுகை வரும் போல் இருந்தது....

அந்நேரம் 'சர்ரென .... ' வேகமாக வந்த ஒரு கார் என்னை இடிப்பது போல் வந்து இடிக்காமல் நின்றது அதே என்னவனின் வெள்ளை நிறக் கார்...

ஏதோ ஒரு நெருடலில் அம்மாவிடம் அந்த மாப்பிள்ளையின் விவரம் கேட்க என்னவனின் பெயர் சொல்லி" பையன் போலீஸ்டா ...அவங்க கூட நீ படிச்ச காலேஜில் தான் படிச்சாங்க " என்றுதும் இன்பமாய் அதிர்ந்து அழைப்பைத் துண்டித்து விட்டு பார்க்க செய்தி வந்திருப்பதற்கான ஒலி...

செய்தியை திறக்க

"பிரிவது மீண்டும் சந்திக்கவே என் கண்மணியே"

உதட்டில் புன்னகையுடன் நிமிர என் பக்க கார் கதவு திறந்தது....

அந்த நான்கு சக்கர வாகனத்தோடு எங்கள் வாழ்க்கை பயணமும் இனிதே தொடங்கியது....

❤❤❤❤

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏🙏

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26988

தொடாதீர்🚫

பசுமை சூழ்ந்த இரு மலைகள் அதன் நடுவில் இருந்து தன் பொன் மஞ்சள் நிறக் கதிர்கள் மெல்ல வெளிவரத் துவங்கியிருக்க அதன் கீழ் கட்டம் கட்டமாய் சிறு வீடுகளும், தெருக்களின் ஒரு பக்கம் நீலநிறமும், மற்றொரு பக்கம் சிவப்பு நிற வண்ணம் தற்போதுதான் கொடுத்துக் கொண்டிருந்தேன்...

என் தந்தை எனக்கு வாங்கி கொடுத்த கலர் கிரையான்ஸ் கொண்டு பெருமையுடன் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தேன்...

என் பெயர் ஆருத்ரா... இரண்டாம் வகுப்பு ஆ பிரிவு....

என்னுடைய கமலா மிஸ் வீட்டுப் பாடமாக இயற்கை அழகை படம் வரைந்து வர சொல்ல என் தந்தை கூறியதை வைத்து என் கற்பனையில் வரைந்து கொண்டிருந்தேன்...

என் பெற்றோர்கள் பணிநிமித்தம் வெளியில் சென்றிருக்க என் மாமாவும் அத்தையும் என்னுடன் இருந்தனர் ...

அத்தை வெளியில் துணி துவைத்து கொண்டிருந்தார்... அவருடைய பையன் என் மாமவிற்கு சற்று உடல் நிலை சரியில்லாததால் அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தான்.. நான் வரவேற்பு அறையில் படம் வரைந்து கொண்டிருந்தேன்...

"அம்மா... அம்மா.. என்ன பண்ற ... கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுமா" என மாமா சத்தமிட

என் அத்தை வெளியில் இருந்து என்னிடம் "ஆருமா மாமாக்கு தண்ணீர் எடுத்துக் கொடுடா... அத்தை கொஞ்சம் வேலையா இருக்கேன்"... என்றதும்

நானும் "சரிங்க அத்தை " என்று தண்ணீர் கொண்டு சென்றேன்... அங்கு கட்டிலில் தலைமுதல் கால் வரை போர்வை போர்த்தி சுருண்டு படுத்திருந்தார்...
கல்லூரி படிப்பதாக அத்தை அப்பாவிடம் சொல்லிக் கேள்வி பட்டிருக்கிறேன்...

விடுமுறை விட்டால் இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள்... வரும் போதெல்லாம் கட்டாயம் மாமா எனக்கு திண்பண்டம் வாங்கி வருவார்... எனக்கு ரொம்ப பிடிக்கும்...

நான் போர்வையில் கை வைத்து "மாமா மாமா தண்ணீ கேட்டிங்கலே... இந்தாங்க" என்றேன்.. அவரும் போர்வையை விலக்கி எழுந்து

"உங்க அத்தை எங்க.. அவங்களதான கேட்டேன்"
"அத்த வெளில துணி துவைக்கறாங்க அதான் என்ன கொடுக்க சொன்னாங்க மாமா" என்றேன்... என்னிடம் வாங்கி குடித்து கொண்டே என்னை அமர சொன்னார்...
மேல் சட்டையின்றி வெறும் கைலி மட்டும் அணிந்து இருந்தார்.. நீர் அருந்தி விட்டு டம்ளரை அருகில் உள்ள டேபிளில் வைத்து விட்டு வாசல் கதவை பார்த்தார் பின் என்னிடம் " குட்டிமா மாமா க்கு காய்ச்சல் குறைஞ்சுருச்சானு பாருடாமா" நானும் சரி மாமா என்று கட்டிலில் அவரின் முகம் பார்ப்பது போல் திரும்பினேன் அவரின் வெற்று மார்பில் பாதி வரை போர்வை போர்த்தி இருந்தார்...

என் தந்தைக்கு காய்ச்சல் வந்தால் பார்ப்பது போல் என் புறங்கையால் நெற்றியில் வைக்க மிதமான சூட்டையே உணர்ந்தேன்.. அதை அவரிடமும் கூறினேன்...

மாமாவோ "இப்பிடிப் பார்க்க கூடாது செல்லம்" என்றவர் என் கைமீது கையை வைத்து என் உள்ளங்கை அவரின் கன்னத்தில் பதிவது போல் வைத்து பார்த்து "இப்போ" என்க நானும் கொஞ்சம் சூடாக இருப்பதாய் கூறினேன்...

அவரோ என் பிஞ்சு கைகளை விடாமல் அவரின் கழுத்தில் வைத்து "இப்போ" என்க... எனக்கு அவரின் பிடியில் கைகள் வலிக்க துவங்க " மாமா கை வலிக்குது " என்ற என் வார்த்தைகள் அவரின் செவியை அடைந்ததாகவே தெரியவில்லை ...

கண்கள் மூடியிருக்க என் கையை இறுக பற்றி மெல்ல கீழிறக்கி அவரின் நெஞ்சில் வைத்து "இப்போ" என்க ... நான் ஏதோ அசூசையாய் உணர்ந்தேன்....

என் பிஞ்சு கைகளை வைத்து மெல்ல மெல்ல அவரின் உடல் முழுதும் தடவ செய்தார்.... கட்டிலிலிருந்து கீழிறங்க முயல அந்தோ பரிதாபம் கட்டில் சற்று உயரமாக இருந்தது அமரும் போது குதித்து ஏறினேன்....

எப்போதும் அப்படி தான் என் தந்தையுடன் உறங்கும் போது குதித்து ஏறுவேன் கீழே வர என் தந்தை தான் இறக்கிவிடுவார் ....இறங்குவதில் எப்போதும் எனக்கு சிறுபயம்...

ஏதோ தவறாய் உணர்ந்து என் கைகளை உறுவ முயல " மாமா விடுங்க... கை வலிக்குது " என்க அவரோ என் கையை அவரை நோக்கி இழுத்து சட்டென்று அவரின் போர்வையால் மூட கத்த வாயெடுக்க அவரின் மற்றொரு கையால் என் வாயினை பொத்தியிருந்து...

மூச்சு முட்டுவது போல் உணர "நோ ........" என்று கத்தியபடி எழுந்தேன்.. என் உடல் முழுவதும் வேர்வையால் குளித்திருக்க....
உடல் நடுங்க ஆரம்பித்தது....
கைகள் நடுங்க அறை விளக்கை போட்டு அருகில் மேசையில் இருந்த நீரை எடுத்து வேக வேகமாக குடிக்க அருகில்
"குட்டிமா... மாமாக்கு காய்ச்சல் அடிக்குது .. கை வச்சு பாருடா " என்ற குரல் ஒலிக்க தானாய் பயத்துடன் அறை முழுக்க பார்க்க வெற்று அறையே காட்சியளித்தது.... " இப்போ" " இங்க தொடுடா " " நல்லா ... கிட்ட வாமா" என குரல்கள் மட்டும் அசிரிரீயாய் ஒலிக்க என் இருகாதுகளையும் கையால் அடைத்துக் கொண்டு நோ... நோ.... என் கத்தியிருந்தேன்..

நான் வீட்டைப் பகிர்ந்து கொள்ளும் என் தோழி அந்த நள்ளிரவில்‌ வந்து என்னை உலுக்கவே சமநிலை அடைந்தேன்... அவள் என்னை தேற்றினாள்....

"என்னடி இன்னும் இந்த பயம் உன்னை விட்டு போகலையா.... ஆறு வயசுல நடந்தத நெனச்சு இன்னும் தூக்கம் இல்லாம இருக்க ... உனக்கு இப்படி ஒரு நிலமை உருவாக்குனவன் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட சந்தோசமா இருக்கான் ... எந்த குற்றவுணர்வும் இல்லாம... ஆனா நீ 27 வயசாகுது... இன்னும் அத நினைச்சுட்டு வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்கு போகாம இருக்க" என ஆதங்கத்தை வெளிப்படுத்த...

"கல்யாணமா ....அது எல்லாம் சரிபட்டு வராதுடி.எங்க ஏதாவது ஒருநொடில என்னவன் என்னை தொடும் அந்த சந்தர்ப்பத்தில நான் அந்த அயோக்கியனோட தொடுகை என் ஞாபகத்துல வந்துட்டாலும் அந்த செகண்ட் நாங்க வாழ்க்கைல தோத்துருவோம் டி .....அது என்ன மட்டும் இல்லாமல் அவரையும் பாதிக்கும்....

தெரியலடி ... நான் ஏன் இப்படி இருக்கேன்னு.... நான் ஒரு பொண்ணுங்கறத அவன் ஆறு வயசுலயே எனக்கு உணர்த்திட்டான்...." என்க... " அதான் இப்போ ஒரு டாம்பாய் (ஆண் போல் உடை உடுத்தி காட்சியளிப்பது) போல மாறி இருக்கியா" என என் புது கழுத்து வர வெட்டிய ஹேர் ஸ்டெயிலைப் பார்த்துக் கொண்டே என்னை இலகுவாக்க கூற நானும் சிரத்துக கொண்டே தொடர்ந்தேன் "இருக்கலாம்.. அந்த பலவீனமான பெண்மையை நான் வெறுக்கிறேன்....

அவன்கிட்ட இருந்து சில உடற் கீறல்களுடன் நான் தப்புச்சுட்டாலும் ... அவனோட ஒவ்வொரு தொடுகையும் இன்னும் என்னோட உடம்புல கம்பிளிபூச்சி ஊறுற போல இருந்துட்டே இருக்கே... அதுமட்டுமல்ல அந்த இன்சிடன்ட் அப்புறம் விவரம் தெரியற வரை யாரையும் என்னை டச் பண்ண விடாம ஒரு கோபக்காறியா திமிர் பிடிச்சவங்கற முகமூடிய மாட்டுனேன் அதுல நான் என் அப்பாவ கூட என்னை தொட விடாம அவரோட அரவணைப்பு இல்லாம வளர்ந்தேன்...

திருவிழா னா என்னை தோளில் தூக்கிக்கிறது,அதீத சந்தோசமான சமயத்துல என்னைத் தூக்கி சுத்துறது, தூக்கம் வரலனா என் அப்பாவோட கையணைவுல நெஞ்சில தூங்குறதுலாம் சொர்க்கம் டி .. ஒரு குறிப்பிட்ட வயசு வரை தான் பெண் குழந்தைகளுக்கு அந்த சொர்க்கம் கிடைக்கும் அதையே நான் இழந்தேன்..என்னோட குணத்தால எங்க வீட்டுலயும் மொதல்ல வருத்தப்பட்டாங்க அப்புறம் விட்டுட்டாங்க.."என என் குழந்தை பருவத்தை எண்ணி பாழும் பெருமூச்சு ஒன்று என்னிடம் வெளிப்பட்டது...

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த என் தோழி "சரி எப்போ ஊருக்கு போக போற... காலேஜ் படிக்க இங்க வந்தது ‌‌... அப்போ கூட லீவ்க்கு ஊருக்கு போவ .. ஆனா வேலைக்கு போன இந்த ஐந்து வருசத்தில அவங்க வந்துதான் பார்க்குறாங்க... உன் அத்தை பையன் பண்ண தப்புக்கு அவங்க என்னடி பண்ணுவாங்க...."என்றாள்...

என் இதழில் விரக்தியான சிரிப்பு " அவனோட நகக்கீறல் என் உடம்புல இருந்தும் நான் விளையாடி கீழ் விழுந்ததா என் அத்தையும் அந்தாளும் சொன்னத நம்புனவங்க நான் சொன்னத கேக்குற நிலமையை அவங்க இல்லை.. என்னோட ஒதுக்கத்த வச்சு இரண்டு மாசம் கழிச்சு கேக்குறாங்க ... அதான் நா எதுவும் சொல்லாம ... ஒதுங்கியே வளர்ந்தேன்... " என்று கூறிவிட்டு குளிக்க சென்றேன்....

குளித்து வந்ததும் அந்த ஆறு வயது ஆருத்ரா என்னில் காணாமல் போயிருக்க... குழந்தைகளுக்கான என்ஜிஓ ஆரம்பிக்கும் என் கனவை நிறைவேற்றும் படிக்கல்லாக...
இதோ...
பயணப் பொதிகளை எடுத்து வைக்க.... என் அருகில் வந்து என் தோளைத் தொட்டு " இந்த முறை எத்தனை நாள் டி" என்றாள் புன்னகையுடன்..

முன்பிருந்த சோகம் ரௌத்திரம் என்னைவிட்டு நீங்கியிருக்க சிறுபுன்னகையுடன் " தெரியல டி ...எப்பவும் போல என் மனசு ஆறுற வரை....‌ ஆனா இந்த முறை என்னையே நான் மறக்குற வரை... ஆபிஸ்ல மெடிக்கல் லீவ் சொல்லிருடி..."‌ என்று என் முதுகில் பயண பொதி மூட்டையும் கையில் தலைகவசமும் என வெளியில் வர செட்டில் நான் விரும்பி வாங்கிய ராயல் என்ஃபில்டு எனக்காக காத்துக் கொண்டிருந்தது....

இன்னும் புலராத அந்த இளங்காலைப் பொழுதில் என் தோழி பல பத்திரங்கள் கூறி என்னை வழியனுப்ப .....

புது வைராக்கியத்துடனான விடியலைத் தேடிய என் பயணம் இனிதுடன்...



"குழந்தை பருவம் என்பது வாழ்க்கையில் அற்புதமான பக்கங்கள்.... தயவு செய்து உங்கள் இச்சைக்காக அதனை கருப்பு பக்கங்களாக மாற்றி விடாதீர்கள்"

"குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள்"

❤❤❤❤
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏🙏

 
Top