All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சக்தியின் "வரங்களே ஸ்வரங்களாய்...!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

Priyam

Well-known member
அத்தியாயம் 4

மருத்துவமனையில் இந்திராவின் நிலைமை சீராகிவிட்டது என்றாலும், மறுநாள் மதியவேளை கடந்தும் மனஉளைச்சல் காரணமாக கண் விழிக்காமல் இருந்தவரை பார்த்து கவலையில் இருந்த அனைவரின் கருத்தை ஈர்க்கும் வகையில் இந்திராவின் நிலையறிந்து அவரைக் காண்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தனர் பவானியும் நந்தினியும்.

அவர்களைக் கண்டதும் அவர்களிடம் எழுந்து சென்ற தன் தந்தையை விடவும் விரைவான எட்டுகளுடன் அவர்களை அணுகியவன் அவர்களின் வழியை மரித்தார்போல் நின்று அடக்கப்பட்ட கோபத்துடன்,

“இங்கே எதற்காக வந்திருக்கீங்க ? எங்களுக்கும் உங்களுக்கும் தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டீங்க இல்ல, அப்புறம் எந்த உரிமையில் இங்க வந்திருக்கீங்க உங்களாலும் உங்க மகளாலயும் தான் எங்க அம்மாவுக்கு இந்த நிலைமை. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க, உங்க பொண்ணு கேட்ட விவாகரத்து உங்க வீடு தேடி வரும். இதுக்கு மேல இங்க நின்னு என் பொறுமையை சோதிக்காமல் இங்கிருந்து கிளம்பிருங்க. இல்ல நான் மனுசனா இருக்க மாட்டேன் ” என்று யார் கவனத்தையும் கவராமல் அவர்களுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கர்ஜித்தவனை கண்டு இதை சற்றும் எதிர்பார்க்காததால் அங்கேயே அதிர்ந்து நின்றவர்களுக்கு ஆதரவாக தன் மகன் அருகில் வந்திருந்த காரணத்தினால் அவன் கூறுவது அனைத்தையும் கேட்டிருந்த இராஜேந்திரன்,

தன் மகன் பேசியதை கண்டிக்கும் வகையில் “ராணா இது என்ன பேச்சு..., அதுவும் அத்தைகிட்ட மரியாதை இல்லாம இப்படித்தான் பேசுவாங்களா? முதல்ல அவங்களுக்கு வழியை விடு, வேற எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் ”என்றவரை

“உங்களுக்கு பெத்த மகன் மனைவியை விட உங்க தங்கையும் தங்கை பொண்ணும் தான் ரொம்ப முக்கியமா இருக்கலாம்..., ஆனா எனக்கு எங்க அம்மா தான் முக்கியம், என்னை மீறி அவங்கள உள்ள போக அனுமதிசிங்கனா இன்னையோட உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவையும் நான் முறித்துடுவேன் ” என்றவனை அதிர்ந்து நோக்கியவர் வேறுவழியின்றி அவர்களிடம் திரும்பி இப்போ இங்கே எதுவும் பேச வேண்டாம் என்ற அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு மகனின் முகம் காண பிடிக்காமல் வேறுபுறம் சென்று அமர்ந்தார்.

தன் தந்தைக்கு தான் பேசியது பிடித்தம் இல்லை என்பதை அறிந்தாலும் தன் முடிவிலிருந்து சற்றும் விலகாமல் சென்றவனுக்கு தன் தாயின் அறையிலிருந்து வந்த டாக்டர் அழைக்கும் குரல் கேட்டு அவரிடம் விரைவாக சென்றவன் “என் அம்மா கண் முழிச்சுட்டாங்களா" என்று ஆவலுடன் கேட்டவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல்

“ஆமாம் சார் அவங்க கண்ணு முழிச்சுட்டாங்க, அவங்களை பதட்டப்படுத்தாமல் ரொம்ப நேரம் பேசாமல் ஒவ்வொருத்தரா போய் பார்த்துட்டு வாங்க. ரொம்ப நேரம் அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அந்த மருத்துவர் கூறி முடிப்பதற்குள் தன் அன்னையைக் காண அவரின் அறைக்குள் விரைந்து இருந்தான்.

அறையில் கண்விழித்து படுத்திருந்த தன் தாயைப் பார்த்து வேதனை கொண்டவன் “ அம்மா ” என்றழைக்க

ராணாவை பார்த்து சோர்வான புன்னகை ஒன்றை சிந்தியவர் “அம்மா உன்னை பயமுறுத்திவிட்டனா? எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன், நீ பாரு எப்படி இருக்க" என்று தன் உடல் சோர்வையும் மறைத்து தனக்காக பேசும் அன்னையை

“கொஞ்சம் இல்லை ரொம்பவே பயமுறுத்தி விட்டீர்கள் ,நாங்கள் எவ்வளவு பயந்திட்டோம் தெரியுமா?”

“இல்லை" என்று பேச ஆரம்பித்த அன்னையை

“ஊகும்..... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக்கூடாது, டாக்டர் உங்களை ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காரு அதனால மனசுல எதையும் போட்டு யோசிக்காமல், சீக்கிரமா சரியாகுற வழியப்பாருங்க என்னோட பலமா என்கூட நீங்க இருக்கணும் சரியா” என்றவனை.

“கண்டிப்பா அம்மா எப்பவுமே உன்கூட தான் இருப்பேன்" என்று சொல்லியவரிடம்

“சரிமா நான் வெளியே இருக்கேன், எது வேணும்னாலும் கூப்பிடுங்க இங்கேதான் இருப்பேன்”அன்னையிடம் கூறி அவரை விட்டு அவன் வெளியேறியதும் ஒவ்வொருவராக சென்று இந்திராவை பார்த்து பேசிவிட்டு வந்து அமர்ந்திருந்தவர்களை பார்த்து

“ சரி எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க. நான் இங்க இருக்கேன் நேற்றிலிருந்து நீங்களும் பாட்டியும் இங்கேயே தான் இருக்கீங்க. உங்க ரெண்டு பேருக்கும் கண்டிப்பா கொஞ்சம் ஓய்வு தேவை, அதனால நீங்க கிளம்புங்க நான் டாக்டர்கிட்ட பேசிவிட்டு அப்பா அம்மாவை வீட்டுக்கு அனுப்புறாங்க கேட்டுட்டு கூட்டிட்டு வரேன் அதுவரைக்கும் பாட்டி வீட்டிலேயே இருக்கட்டும் இன்னைக்கே வீட்டுக்கு அம்மாவை அனுப்பிவிடுவார்கள் என்றாள் நீங்களும் திரும்பி வர வேண்டாம்பா” என்று கூறியவனிடம்

“இல்லப்பா நீ மட்டும் எப்படி இங்க தனியா அதுவுமில்லாமல் உங்கம்மாவை இங்க விட்டுட்டு என்னால் அங்கு நிம்மதியா இருக்க முடியாது அதனால பாட்டீய மட்டும் வீட்டுக்கு அனுப்பி விடலாம் நம்ம டிரைவர் வேலூர் வெளியே தான் இருக்கான் அவன் கூட பாட்டியை அனுப்பிட்டு வா நான் இங்க இருக்கேன் ”என்ற தந்தையிடம்

“ சரிங்க பா நீங்க இங்க இருங்க நான் போய் வேலு கிட்ட சொல்லி பாட்டியை விட்டுட்டு அங்கயே இருக்க சொல்லிடுறேன் ,அப்புறம் இங்க நடக்கிற பிரச்சினையை பத்தியும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பது பற்றியும் யாரும் விமல் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம், அவனாவது அங்க நிம்மதியா இருக்கட்டும் ,அதுமில்லாமல் அவனுக்கு இது செமஸ்டர் டைம் அதனால யாரும் எதுவும் சொல்ல வேண்டாம் ” என்றவனின் பேச்சிர்க்கு அவன் கூறியது சரியாக பட அனைவரும் அவன் கருத்தை ஒத்துக் கொண்டனர்

இன்றுடன் மருத்துவமனையிலிருந்து இந்திராவை வீட்டிற்கு அழைத்து வந்து பதினைந்து நாட்கள் ஆகியிருந்தது......

எப்பொழுதும்போல் தன் வளமையாக தன் தாயைப் பார்த்துவிட்டு அவரின் உடல்நிலையை பற்றி அறிந்துகொள்ள அன்னையை நாடி சென்றவனுக்கு அவர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை கண்டு “அம்மா” என்றழைத்து சிந்தனையை கலைக்க முயன்றவன் முயற்சி பயனளிக்காமல் போக

என் அன்னையின் தோளின் மேல் கைவைத்து அசைத்து அம்மா என்று மறுபடி அழைத்தவனின் முயற்சி இம்முறை பயனளித்தது......

தன்னையே பார்த்திருக்கும் தன் மகனை பார்த்தவருக்கு மனதில் துயரம் எழுந்தாலும் அதை மறைத்துக்கொண்டு புன்னகையுடன் தன்னருகில் அமர்த்திக்கொண்டு

“சொல்லுப்பா இன்னைக்கு என்ன ரொம்ப சீக்கிரமா வந்துட்ட! ஏதாவது சாப்டியா இரு உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர சொல்கிறேன் ” என்று எழ முயன்ற அன்னையை தடுத்தவன்.
“இப்ப எனக்கு எதுவும் வேண்டாம்மா எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஆனா அதுக்கு முன்னாடி நான் பேசறது கேட்டு நீங்க டென்ஷன் ஆக கூடாது சரியா" என்ற ராணாவை பார்த்தவருக்கு

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று புரிவது போல் இருந்தாலும் அதை ஏற்க மனதைரியம் அற்றவராக வேறு வழி இன்றி அவன் கூறுவதை கேட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலையில்
“பேசுப்பா...." என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டு அன்னையின் பேச்சில் இருந்தே அவரின் மனத்தாங்கல் புரிந்தாலும் வேறுவழியின்றி தான் கூற வந்த செய்தியை கூறியிருந்தான்.

அவன் கூறிய செய்தி சில நொடிகள் அதிர்ந்த அமர்ந்திருந்த இந்திரா இதுதான் நடக்கப் போகிறது என்று அறிந்திருந்தாலும் அது ஏற்க மனமின்றி

“நந்தினி தான் விவாகரத்து வேணும்னு புரியாமல் கேட்டுக்கொண்டே இருந்தானா இப்ப நீயும் அவளுக்கு விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொல்றது நல்லாவா இருக்கு. அவளுக்கு நிதானமா சொல்லி புரிய வைக்கணும் அதை விட்டுவிட்டு அவளுக்கு நீயும் விவாகரத்து கொடுக்க போகிறேன் என்று சொல்றது கொஞ்சம் கூட சரி இல்லை. இது உன்கிட்ட இருந்துநான் எதிர்பார்க்கவே இல்லை” என்று ஆதங்கத்துடன் பேசிய வரைபார்த்து

“வேற என்னம்மா பண்றது நானா விவாகரத்து வேணும்னு கேட்டேன் அவளா தான் அடம்பிடித்து விவாகரத்து கேட்கிறாள்"

“அவதான் புரியாமல் கேட்டாள், அதற்கு நீயும் சரின்னு சொல்லிடுவியா. அவளுக்கு நீதான் சொல்லி புரிய வைக்கணும்" என்பவரை ஒரு சில நிமிடம் மௌனமாக பார்த்து இருந்தவன் வேறு வழியில்லை முழுவதுமாக பேசி தீர்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன்.

“என்னத்த புரிய வைக்கணும் சொல்றீங்க..., ஆனா இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். நாமா சொல்லி விளக்குவதை விட அவளா விலகுறா, இதுல நாம புரியவைக்க என்ன இருக்கு" என்ற மகனின் பேச்சு புரியாமல்

“ராணா நீ என்ன சொல்ல வர எனக்கு சுத்தமா புரியல, நாம எதுக்கு நந்தினியை விளக்கணும். இதுல அவளா விலகுவது நல்லதுன்னு வேற சொல்ற” என்று இன்னும் புரியாமல் மகனைப் பார்த்து கேட்டவரை

"சரியோ.... தப்போ... எனக்கு அப்போ புரியலை...., ஆனா எனக்கு நல்லா யோசிச்சுதுக்கப்புறம்தான் நந்தினி சொன்னது கரெக்ட்னு புரிஞ்சது" என்ற ராணாவிடம்

சிறு அழுத்தத்துடன் “என்ன புரிஞ்சது.......” என்று அன்னையிடம்

“அதுதான் நந்தினி கூறுவதுபோல் எனக்கு என் குழந்தை வேண்டும்..... அதேபோல் இந்த வீட்டிற்கு என் மூலமாக வந்த வாரிசு வேண்டும், அதை தான் சொன்னேன்..., என்னதான் இப்ப பேசினாலும் இன்னும் கொஞ்ச நாள் போனா நந்தினி சொன்னதுதான் நானும் சொல்லி இருப்பேன். அதுக்கு முன்னாடியே அவளா புரிஞ்சுகிட்டு விலகி போறா, இது எனக்கும் நம்ம குடும்பத்துக்கும் நல்லதுதானே ” என்று பேசிக்கொண்டே சென்றவன் பேச்சை சகிக்க முடியாமல் அவன் பேச்சை தடை செய்யும் விதமாக அவன் கண்ணத்தில் தன் பலம் கொண்டமட்டும் அறைந்திருந்தார் ராணாவின் தாய்......

ராணாவை அரைந்த பிறகும் கோபம் தணியாமல்
“என் மகனா நீ.....! ச்சீசீ உன்னை எவ்வளவு உயர்வானன்னு நினைச்சேன்.., ஆனா நீயும் ஒரு சராசரி ஆண் தான் என்று நிரூபித்து விட்டாய். உன்னை பெற்று வளர்த்ததற்கு என்னை நினைத்து எனக்கே கேவலமாக இருக்கிறது" என்று அவன் சட்டையை கொத்தாக பற்றியவர்

“உனக்கு ஒன்னு தெரியுமா! உங்களுக்கெல்லாம் நந்தினி எப்படியோ, ஆனா எனக்கு அவ நான் பெறாத மகள்.... உங்க ரெண்டு பேரையும் விட எனக்கு அவள ரொம்ப பிடிக்கும், உங்க ரெண்டு பேருக்கு அப்புறம் ஒரு மகள் இல்லையே என்ற ஆசையை நிறைவேற்ற வந்தவளாக தான் நான் நந்தினியை பார்த்தேன். அதனால்தான் இவர்களெல்லாம் உனக்கு நந்தினியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறும்வரை எனக்கு அந்த நினைப்பே எழுந்ததில்லை...., என் மகளாக மட்டுமே பார்த்ததினால் தான் எனக்கு அவ்வெண்ணம் தோன்றவில்லை” என்று கூறிக்கொண்டே வந்தவர் கோபத்தினாலும் தன்மகன் பொய்த்துப்போன காரணத்தினாலும் தழுதழுத்த தன் குரலை கட்டுப்படுத்திக்கொண்டு மறுபடியும் தன் மகனை ஏறிட்டுப் பார்த்து பேசத் தொடங்கியவர்

“அதே மாதிரி அத்தனை பேரும் உனக்கு நந்தினியை திருமணம் முடிப்பது பற்றி பேச்சு எடுத்தவுடன் முதன்முறையாக இந்தத் திருமணம் வேண்டாம் இது சரிப்பட்டு வராது என்று அவர்களின் முடிவுக்கு எதிராக உன் அப்பாவிடமும் பாட்டி இடமும் பேசினேன். அதற்குக்காரணம் சொந்தத்தில் நடைபெறும் திருமணங்களால் என்னுடைய பெற்ற பிள்ளையும் நான் பெறாத என் மகளுக்கும் பின்னாளில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்றுதான் அவ்வளவு போராடினேன். ஆனாலும் என் பேச்சை இவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறிக்கொண்டே வந்தவர் தான் கூறியதை அவர்கள் கேட்டிருந்தால் இன்று நந்தினிக்கு இந்த பிரச்சனை வந்திருக்காதே என்று வருத்தப்பட்டவர் மறுபடியும் தன் மகனை நோக்கி பேச்ச தொடங்கியவர்

“உன் அப்பாவும் பாட்டியும் ஒத்துக்கவில்லை என்றதும் உன் அத்தையிடமும் எவ்வளவோ எடுத்துச்சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணினேன். ஆனாலும் அதுவும் பயனளிக்கவில்லை கடைசியாக என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நந்தினியிடம் பேசினேன், ஆனால் அப்பொழுது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது . நந்தினி உன்னை பல வருடமாக விரும்புகிறாள் என்றும் இத்திருமணத்தை நடத்தி வைக்குமாறு கேட்டது நந்தினி தான் என்று எனக்கு அப்பொழுது தான் தெரியும். அப்பொழுதும் மனதில் சிறு கலக்கம் இருந்தாலும் நந்தினியின் ஆசைக்காகவும் அதேசமயம் எனக்கு உன்மேல் அளவில்லா நம்பிக்கையும் இருந்த ஒரே காரணத்திற்காக இத்திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன். இல்லையென்றால் எப்பாடுபட்டாவது இத்திருமணத்தை நடக்க விட்டிருக்க மாட்டேன்” என்று ஆவேசத்துடன் கூறியவர்

தன் கண்களில் வழியும் தன் கண்ணீரை கூட உணராதவராக தன் வெறுப்பை மொத்தமாக தன் பார்வையில் தேக்கி இந்திரா
தன் மகனைப் பார்த்து “உன்னை பெற்றதில் இருந்து இன்றுவரை உன்னை பெற்றதற்கு ரொம்ப பெருமையாக உணர்ந்திருந்தேன். ஆனால் இந்த நொடி உன்னை ஏன்தான் பெற்றேன் என்று வெட்கப்படுகிறேன். ஒரு பெண்ணாய் உங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கன்னா அவ்ளோ எளக்காரமா போச்சா? பொண்டாட்டி என்கிறவள் உங்களையெல்லாம் பொருத்தவரை வீட்டை பாத்துக்கணும், உங்களுக்கு தேவையான வேலை எல்லாம் செஞ்சு உங்களுக்கு குழந்தையை பெற்று போடுபவள் மட்டும்தான் பொண்டாட்டி.., அதுவே அந்த பொண்ணுக்கு குழந்தை பெத்துக்க தகுதி இல்லைன்னு சொன்னா, உடனே வேற ஒரு பெண்ணைப்பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையை பெத்துபிங்க கேட்டாஅப்பா அம்மாவுக்காக சொத்துக்காக என்று சொல்வீங்க”

“ இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன் இதுவே உங்ககிட்ட குறை இருந்தா உன் பொண்டாட்டிக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணிவைப்பாயா? இல்ல என்கிட்ட தான் குறையென்று வெளியில சொல்லுவீங்களா? அப்பவும் நாலு பேருக்கு நடுவுல உங்கள் கௌரவம் போயிடக் கூடாதுன்னு தன்னிடம் குறையே இல்லை என்றாலும் தன் கணவனின் கௌரவத்திற்காக தன் கணவனிடம் தான் குறை என்று வெளியில் கூறாமல் பல்லை கடிச்சுக்கிட்டு மலடி என்று ஒரு பட்டத்தை சுமந்துகிட்டு இருக்கணும் அப்படித்தான ஆனா அதுவே ஒரு பொண்ணுக்குனா நீங்க புது மாப்பிள்ளை ஆயிடுவீங்க அப்படித்தானே எவ்வளவு சுயநலம் புடிச்சவங்க நீங்க எல்லாம் உனக்கு ஒன்னு தெரியுமா ஒரு பொண்ணுக்கு எந்த சொந்தம் சரியில்லை என்றாலும் அவளால தாங்கிக்க முடியும் அதுவே தன் கணவன் சரி இல்லை என்றால் தான் அந்தப் பெண்ணால் தாங்கிக்கவே முடியாது அதே மாதிரி நீங்க தன் மனைவியை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் அவளுடைய மரியாதையை காப்பாத்துனீங்கனா ஊரில் இருக்கிறவன் என்ன அவளுடைய பெத்தவங்கள இருந்து அவளுடைய புகுந்த வீட்டார் முதற்கொண்டு யாரும் அவளை ஒரு வார்த்தை இலக்கமாகவோ இல்ல மரியாதை இல்லாமயோ நடத்துவார்களா ஒரு மனைவியா திருமணமானவுடன் எந்த இடத்திலும் கணவனை விட்டுக்கொடுக்காமல் அவன் தவறே செய்திருந்தாலும் அவனை யாரும் ஒரு வார்த்தை கூறி விடக்கூடாது என்று உங்கள் கவுரவத்தை காப்பாத்துரா ஆனா நீங்கெல்லாம் தப்பே செய்யவில்லை என்றாலும் நான்கு பேர் இருக்கிற இடத்தில் உங்களை சார்ந்தவர்கள் உங்க முன்னாடியே பேசினாலும் ஏன் என்று நீங்களும் கேட்க மாட்டீங்க அந்த பொண்ணும் கேட்கக்கூடாது மீறி கேட்டா உங்களை பெற்றவர்கள் கௌவுரவமும் உங்கள் கௌரவமும் போய்விடும் இது எல்லாம் நான் பார்க்கும் போது அவங்க வளர்ப்புதான் சரியில்ல என்று நினைச்சேன் ஆனா வளர்ப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு நீ நிரூபித்துவிட்டாய் இல்லை எனக்குத்தான் உன்ன நல்லவனா வழக்க தெரியாம போச்சேன்னு எனக்கு தெரியல” இன்று விரக்தியுடன் பேசியவர்
ஆனா நான் உங்களுக்கு ஒரு பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பத்தியும் கௌரவத்தை பத்தியும் தானே முதல்ல சொல்லி கொடுத்து வளர்த்தேன் அப்படியிருந்தும் நீ எப்படி இப்படி என்று இருக்கமாக கல்லாய் சமைந்து இருந்த தன் மகனைப் பார்த்து வெறுப்பாய் கேட்டவர்

“என்னதான் எல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தாலும் குழந்தை என்று வரும்போதும் எல்லா சராசரி ஆண்களைப்போல் தான் நீயும் இல்லையா? என் மகன் ஒரு சராசரி ஆண் கிடையாது என் வளர்ப்பு பொய்த்துப் போகாது என்ற என் நம்பிக்கையை இப்படி உடச்சுட்டியே? தப்பு செஞ்சா தன் மகன் என்ற ஒரே காரணத்துக்காக உனக்கு நான் சப்போர்ட் பண்ணமாட்டேன்" என்று ஆக்ரோஷமாக கூறிய தன் அன்னையை பார்த்து பெருமிதமும் வேதனையும் கலந்த குரலில்

“இதையேன் அம்மா நந்தினிகிட்ட அத்தை கேட்கல!எவ்வளவுதான் வளர்ந்து பெரியவர்கள் என்றாலும் பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது அதைக் கண்டித்து திருத்தும் பொறுப்பு அந்தப் பெற்றோர்களுக்கு தான் இருக்கிறது! அதைவிட்டு அவர்களின் தவறுக்கு துணைபோவது எந்த விதத்தில் நியாயம்.... ஒரு தாயா நான் தப்பு செய்றப்போ தோளுக்கு மேல் வளர்ந்த மகன் என்றாலும் என்ன அடிச்சு திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வரணும்னு தான நினைச்சீங்க? அப்படி இருக்கும்போது அவளை அடிக்க கூட வேண்டாம்.... ஆனா அவ செய்ற தப்புக்கு அவ கூட துணைக்கு போகாமல் இவங்க எல்லாம் தள்ளி இருந்து இருந்தாலே இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது. இதுல அப்பாவும் பாட்டியும் வேற அவங்களுக்கு சப்போர்ட் எல்லாரும் வாழவைக்க போராடி பாத்திருக்கேன்..., முதல் முறையா பிரித்து வைக்க இவ்வளவு போராடுகிறார்கள். மனசு ரொம்ப வலிக்குது மா... வாழ்க்கையில முதல்முறையா என்ன சேர்ந்தவங்கலாளையே தோத்துட்டேன்னு தோணுது” என்று கண்களில் தேங்கியிருந்த கண்ணீருடன் கேட்ட மகனை

அவ்வேதனையிலும் தன் வளர்ப்பு பொய்த்துப் போகவில்லை என்ற நம்பிக்கையிலும் ஆனந்தத்திலும் தன் மகனை மடி சாய்த்திருந்தாள் அந்த அன்பு தாய்.

ஸ்வரமாகும்...........
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரம் 5

தன் மடி சாய்ந்திருந்த மகனிடம் “அப்ப நீ நந்தினியை விவாகரத்து பண்ணப்போகிறேன் என்று சொன்னது சும்மாவா?....."


“இல்லம்மா உண்மையத்தான் சொன்னேன் ”

“ அதுதான் ஏன் ? ”


“ ஏன்னா? என்னத்த சொல்லுறது ”


“ நீ பேசறது எதுவும் எனக்கு சுத்தமா புரியல, ஏம்பா இப்படி பேசுற அவதான் புரிஞ்சுக்கலைன்னா இப்ப நீயும் விவாகரத்துக்கு சரி என்கிறாய் ”என்று ஆதங்கப்பட்டவரிடம்


“இப்ப கோர்ட்ல போய் விவாகரத்து பண்றதுனால புதுசா என்ன மாறப்போகுது அதுதான் எல்லாம் முடிஞ்சிருசசே ” என்று விரக்தியாக பேசியவனிடம்


“ கொஞ்சம் பொறுமையா இருப்பா.., எதுவும் முடியல சரி பண்ணிடலாம் ” என்றவரிடம்


பெருமூச்செடுத்து தன்னை சமன்செய்து கொண்டு "இல்லம்மா இதுக்கு மேல எதுவும் சரியாகாது..., ஏன்னா ஆல்ரெடி உங்க பையன் வாழ்க்கையில தோத்துட்டான்”


நடுவில் பேச விழைந்த அன்னையிடம் “ ப்ளீஸ் மா! எப்போ இல்லாத குழந்தைக்காக உயிரும் உணர்வுமான இந்த ஆத்மார்த்தமான உறவை வேணாம்னு கொஞ்சம் கூட யோசிக்காமல் தூக்கி போட்டாலோ அப்பவே இந்த உறவு தோத்துப்போச்சு...., இதுல நான் விவாகரத்து கொடுக்கலைன்னா செத்துருவேன் சொன்னாலோ அப்பவே இந்த உறவும் செத்துப் போச்சு. அதுக்கப்புறமும் கடைசி வாய்ப்பா உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கப்புறம் உங்கள பாக்கணும் கேட்டவகிட்ட, என் மனைவியை வரதா இருந்தா வீட்டுக்கு வா இல்லாட்டி வராதே என்று சொன்னவுடனேயே..., நான் வரலைனு கொஞ்சம்கூட யோசிக்காம சொல்லிட்டு ஃபோன வச்சுட்டா. அப்பவே புரிஞ்சிடுச்சு என் கூட வாழ்ந்த வாழ்க்கை அவளுக்கு ஒண்ணுமே இல்லைன்னு இதுக்கும் மேல புரிஞ்சிக்கனும்னா அதை நான்தான் புரிஞ்சுக்கணும், நல்லாபுரிஞ்சுகிட்டேன் ” என்றவனிடம்


“ இருந்தாலும் ” என்று இழுத்தவரிடம்


“ மா போதும்மா..... இதுக்கும் மேல இதப்பத்தி பேசவேண்டாம். ஆனா எனக்காக ஒன்னே ஒன்னு பண்ணுவீங்களா ” என்ற மகனிடம்

“ சொல்லுப்பா... கண்டிப்பா அம்மா உனக்காக எதையும் பண்ணுவேன் ”


“ தேங்க்ஸ் மா! தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் தாரம் தான் என்ன பாதியிலே புரிஞ்சுக்காம விட்டுட்டு போயிட்டா, இப்ப அவளை விவாகரத்து பண்ணபோறதால நீங்களும் என்னை விட்டுவிட மாட்டீங்க தானே..., நீங்களும் என்னை விட்டுட்டா உங்க பையன் மொத்தமா தோற்றுவிடுவேன். இந்த விவாகரத்து பத்திரம் அவகிட்ட குடுக்குறதுக்கு முன்னாடி உங்க கிட்ட தான் முதல்ல சொல்றேன், ஆனாலும் உங்களுக்கு அவதான் என் மனைவியா இருக்கணும்னு தோன்றினாலும் சொல்லுங்க உங்களுக்காக இதை இப்பவே கிழிச்சு போட்டுர்றேன் ” என்றவனை பார்த்து


“ நான் சொன்னேன்னா அதுக்கு பேரு வேற, என் வயித்துல பெறாத மகளுக்கே யோசிக்கும்போது பத்து மாதம் சுமந்து பெற்ற உனக்காக யோசிக்க மாட்டேனா! இப்பவும் சொல்றேன் இந்த முடிவு நீ எடுத்திருந்தா அதனால் ஒத்துட்டிருந்திருக்க மாட்டேன். ஆனா இது அவளா தேடிக்கொண்டது, இதுல அவ வாழ்க்கையும் பாழாக்கி என் மகன் வாழ்க்கையும் பழகிட்டா.

அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் பிடிவாதம் பிடிச்சி பிடிச்சி எல்லாத்தையும் அவசரத்தில் முடிச்சிட்டா! இதுக்கும் மேல நான் பேசி மட்டும் என்ன ஆகப்போகுது. நீ உன் இஷ்டம் போலவே செஞ்சிரு, நான் எப்பவும் உனக்கு ஒரு துணையா இருப்பேன் ” என்றவரிடம்


“ தேங்க்ஸ்மா.... நீங்களாவது என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு, நான் இத அப்பாட்ட கொடுத்துட்டு வர்றேன் நீங்க இங்கேயே இருங்க ” எனக்கூறி தன் தந்தையிடம் சென்றவன்


“ இந்தாங்க பா நீங்களும் உங்கள் மருமகளும் பிரியறதுக்கு ரொம்ப போராடி கேட்ட விவாகரத்து பத்திரம். இதில் நான் சைன் பண்ணிட்டேன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்க தங்கச்சி பொண்ணுக்கு அவகேட்டத வாங்கி கொடுத்து விடுவீங்க என தெரியும்.., இருந்தாலும் ஏதாவது சேர்க்கணும்னா சொல்லுங்க அதையும் சீக்கிரமா பண்ணி கொடுத்துடறேன்” என்று எல்லலாக கூறியவனிடம்


“ என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா ராணா.., அவன் உன் அப்பா, ஆனா நீ பேசுறது பார்த்தா ஏதோ எதிரி கிட்ட பேசுற மாதிரி இருக்கு. எதுவா இருந்தாலும் அது உன் நல்லதுக்கு மட்டும்தான் நாங்க செய்வோம் ” என்ற தன் பாட்டியைப் பார்த்து


“ எது...? என் நல்லதுக்கா! பையன் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று போராடிய பெற்றோரை பார்த்திருக்கிறேன், ஆனா அவன் வாழ்க்கை பாழாவதற்கு போராடியவரை இப்பதான் பாக்குறேன். போதும் இதுவரைக்கும் நீங்க எல்லாம் பேசி நான் கேட்டது, இதுக்கும் மேல நீங்க பேசுறதெல்லாம் கேட்டு நடக்குறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை. நீங்க கேட்ட விவாகரத்து பத்திரம் கொடுத்துட்டேன், இதுக்கும் மேல நமக்குள்ள பேசுவதற்கு ஒன்றுமில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவளை சீக்கிரம் முடிச்சுருங்க ” என்று கூறிவிட்டு விருட்டென்று அவ்விடம் விட்டு சென்றுவிட்டான்.


“ என்னமா இவன் இப்படி சொல்லிட்டு போறான் ” என்று கூறியவரிடம்


“ விடு, விட்டுப்பிடிப்போம். எங்க போய்டபோறான் கொஞ்சநாள் போனதும் சமாதானமாகி பழையபடி மாறிடுவான் ” என்ற அன்னையின் பேச்சைகேட்டு


“ நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். நான் எவ்ளோ சீக்கிரம் முடியாதோ அவ்வளவு சீக்கிரம் இந்த விவாகரத்து வழக்கு முடிக்க ஏற்பாடு பண்ணிட்டு வரேன்” என்று கூறி சென்ற கணவரை தங்களின் அறையின் வாயிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த இந்திராவிற்குத்தான் தன் மகன் வாழ்வு பாழானது குறித்து ஏதும் செய்ய இயலாத தன் நிலையை எண்ணி வெறுத்து நின்றிருந்தார்..


இன்று

தன் நண்பன் கூறிய அனைத்தையும் கேட்ட திவாகருக்கு இப்படியும் முட்டாள்தனமாக முடிவு எடுப்பார்களா..? அதுலேயும் தன் நண்பனின் வாழ்க்கை பாழானதற்கு அவனின் மனைவியும் தந்தையும் தான் காரணம் என்று புரிந்தாலும்..., அவர்களின் இழுப்பிற்கு விட்டுவிட்டு இப்பொழுது புலம்பும் தன் நண்பனின் மேல்தான் கோபம் வந்தது.


“ இப்போ ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம் உனக்கு நான் படிச்சு படிச்சு ஆரம்பத்திலேயே சொன்னேன், என்ன படிச்சு என்ன பிரயோஜனம்..., இதுல பெரிய பிசினஸ்மேன் பேரு வேற. சொந்தத்தில் கல்யாணம் பண்ணாத என்று அவ்ளோ சொன்னேன், குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட..., இப்போ அதே குடும்பத்தும் விவாகரத்து பண்ண சொன்னாங்கன்னு அதையும் பண்ணிட்ட..., நீ எல்லாம் எப்படி பிசினஸ் நடத்துற” என்ற திவாகரனை பாவமாக பார்த்த ராணா


“ நான் என்னடா செஞ்சேன். இதுல என் தப்பு என்ன இருக்குனு நீ என்னைய திட்டுற ” என்றவனை கொலைவெறியுடன் பார்த்துது


“ ஆமா இவரு அப்படியே பச்ச மண்ணு..... அவங்க எல்லாம் சொன்னாங்களாம், இவரும் கேட்டுக்கிட்டாராம் விவாகரத்து கேட்கும் போதே அப்படி எல்லாம் கொடுக்க முடியாது உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்கனு சொல்றதை விட்டுட்டு இப்படி பண்ணி வச்சிருக்க ”


“ டேய் திவா, புரிஞ்சுதான் பேசுறியா! என்னமோ நான் விருப்பப்பட்டு வாங்கின மாதிரி சொல்லிட்டு இருக்க, உன்னோட வாழறதுக்காக சாவேன்னு சொன்னா பரவால்ல..., ஆனா வாழ்க்கை நாசமா போறதுக்கு கும்பலா சேர்ந்து நான் சாகிறேன் நான் சாகிறேன் என்று போட்டி போட்டா ஒரு மனுஷன் என்னதான்டா செய்வேன். இதுல கண்டிப்பா என் பொண்டாட்டி செத்து போயிருக்க மாட்டா.., ஆனா கண்டிப்பா அதை என் அத்தை செஞ்சுருப்பாங்க. உண்மைய சொல்லனும்னா இவங்க யாரும் நந்தினிக்கு சப்போர்ட் பண்ணாம இருந்திருந்தா அவளால ஒன்னும் பண்ணியிருக்க முடியாது..., அதை விட்டுட்டு அவளுக்கு நல்லது பண்ணுகிறேன் என்ற பெயரில் எங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாங்க. இதுல நான் தப்பு பண்ணேனு என்னை ஏன்டா திட்டுற ” என்று ஆதங்கப்பட்டு கேட்பவனை


“ பின்ன உன்ன திட்டாம கொஞ்சுவாங்களாக்கும் .., ஏண்டா பெரியவங்க தான் புரிஞ்சுக்காம பேசுறாங்கனா, ஒன்னு நீ எடுத்து சொல்லி புரிய வச்சிருக்கணும், அப்படியும் அவங்க புரிஞ்சிக்கலைன்னா நீங்க என்னமோ பண்ணிக்கோங்க, எனக்கு என் வாழ்க்கையும் என் பொண்டாட்டியும் தான் முக்கியம்னு..., இப்ப தனியா வந்து உக்காந்திருக்கியே அதுபோல உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போய் இந்த பிரச்னையை முடிச்சிருக்கணும். நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போறதை யாரால தடுத்திருக்க முடியும்? இது எல்லாத்தையும் விட்டுட்டு ஆரம்பத்திலிருந்தே அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி தலையாட்டி எந்த கட்டத்தில் எல்லாம் உன் வாழ்க்கையைத் தீர்மானிச்சு சரியான முடிவு எடுக்கணுமோ அப்பல்லாம் அதை விட்டுட்டு உன் வாழ்க்கையை நீயே கெடுத்துகிட்ட. என்னதான் பெற்றவர்களாக இருந்தாலும் ஒரு இடத்துல அவங்க தப்பு பண்றாங்களா அந்த தப்பை கண்மூடித்தனமா அப்படியே ஏற்றுக் கொள்ளனும்னு எந்த அவசியமுமில்லை. அதுக்கு பதிலா அவங்க பண்ற தப்பை ஒரு மகனா எடுத்துச் சொல்லி புரிய வச்சிருந்தா உன் வாழ்க்கை இன்னைக்கு இந்த அளவுக்கு வந்து இருக்காது இது எல்லாத்துக்கும் காரணம் நீ ஒருத்தன் மட்டும் தான். தொழில்ல சுயமாக முடிவெடுத்து இன்னைக்கு இந்த அளவுக்கு நீ வளர்ந்து இருக்கனா அப்போ உன் சொந்த வாழ்க்கையில மட்டும் ஏன் மத்தவங்கள முடிவெடுக்கவிட்ட? இப்படி எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு இது எல்லாத்துக்கும் அவங்க மட்டும்தான் காரணம்னு நீ எப்படி சொல்லுர எல்லாத்தையும் விட்டுட்டு அவங்கள மட்டும் குறை சொல்லி என்ன ஆகப்போகுது. சரி போனதெல்லாம் போகட்டும் இப்போ எதுக்கு நீ வீட்டை விட்டு வந்து ஓட்டல்ல தங்கியிருக்க" என்று கேட்கவும்

“ ப்ச்..., பின்ன வேற என்னடா பண்றது..... இதுவரைக்கும் என் வாழ்க்கையில விளையாடினது எல்லாம் பத்தாதுன்னு, இப்போ வரிசையா பொண்ணுங்கள பார்த்து கட்டிக்கோ கட்டிக்கோ என்று டார்ச்சர் பண்றாங்க. அதான் உங்க சங்காத்தமே வேண்டாம்னு ஹோட்டல் வந்து நிம்மதியா உக்காந்துட்டேன் ” என்றவனை


“ சரி நீ நிம்மதியா இங்க வந்து உட்கார்ந்துட்ட. மத்தவங்கள விடு அங்க உன் அம்மாவை நினைத்துப் பார்த்தாயா! ஏற்கனவே உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என்று மனக்கஷ்டத்தில் இருக்காங்க, இதுல வீட்டை விட்டு வெளில வந்து அவங்களை ஏன் இன்னும் கஷ்டப்படுத்துற.."

“என் ராணாவாடா நீ! எல்லாத்துலேயும் எவ்வளவு தெளிவான முடிவு எடுப்ப, அந்தத் தெளிவு எங்கடா போச்சு? யோசி எங்க தப்பு பண்ணன்னு யோசி...., அதைவிட்டு பிரச்சனையிலிருந்து ஓடுறது புத்திசாலித்தனம் இல்லை. என் நண்பன் எதுலயும் ஜெயிக்கப் பிறந்தவன், வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு தோல்வியில் மொத்தமா வாழ்க்கையையே இழந்து விட்ட மாதிரி இதுக்கு மேல ஒன்னுமே இல்லாத மாதிரி இருக்கிறத விட்டுட்டு...., எப்பவும் எது நடந்தாலும் அந்த ஒரு சிறு வட்டத்தில் இருந்துகிட்டு ஐயையோ பிரச்சனை! என்ன பண்றதுன்னு யோசிக்காம அந்தத் தோல்வியை எப்படி வெற்றியா மாத்தணும்னு மட்டும் யோசிக்காம, அது வெற்றியா மாத்தி காமிச்சுட்டு அதுக்கப்புறம் பேசுற அந்த என் நண்பன் ராணா பிரதாப் தான் எனக்கு வேணும். அத விட்டுட்டு சின்ன பசங்க மாதிரி காரணம் சொல்லாமல் ஒழுங்கா வா வீட்டுக்கு கிளம்பலாம்” என்ற திவாகரனை பார்த்து


“ கண்டிப்பாடா இதுக்கு மேல உன் பழைய ராணாவை தான் பார்ப்ப வா கிளம்பலாம்” என்று வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கடினமான சவாலையும் இலகுவாக எதிர்கொண்டு ஜெயிக்கும் அதே உறுதியை மனதில் நிலைநிறுத்தி தன் நண்பன் கூறியது அனைத்தும் உண்மை என்று புரிந்து தன் வாழ்க்கையில் தோல்வி என்பது இருக்கக் கூடாது என்ற முடிவுடன் தன் நண்பனை அழைத்துக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான் ராணா பிரதாப்.


ராணாவின் இல்லத்தில் தடபுடலாக ராணாவிற்கும், திவாகருக்கும் பிடித்த உணவு வகைகளை பார்த்து பார்த்து தானே சமைத்து டைனிங் அறையையே நிரப்பிக் கொண்டிருந்தார் இந்திரா. எப்படியும் திவாகர் தன் மகனை பழைய மாதிரி மாற்றி அவனை திடப்படுத்தி கண்டிப்பாக வீட்டிற்கு அழைத்து வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அன்று காலையிலிருந்தே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த தன் அன்னையை பார்த்த விமல்க்கு பல மாதங்களுக்கு பின் தன் அன்னையின் முகத்தில் மலர்ச்சியைகண்டு அவரை சீண்டி விளையாட எண்ணம் கொண்டு

“ மா என்னமா! வீட்ல ஒரே நல்ல நல்ல வாசனையா இருக்கு.., நான் ஹாஸ்டலில் இருந்து வந்ததிலிருந்து இப்படி எல்லாம் ஒரு வாசனை இந்த வீட்ல வரலையே, அது என்னமோ ஓரவஞ்சனையா இருக்கு. எல்லாம் பெரிய பசங்களுக்கு தான் கிடைக்கும் போல அப்புறமா பிறந்த பசங்களை யாரும் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க, என்னடா விமல் உனக்கு வந்த சோதனை சோ சேட் ” என்று புலம்பி தன்னிடம் வம்பு வளர்த்து குறும்புத்தனம் செய்து கொண்டிருக்கும் சின்ன மகனை பார்த்து


“ பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காதாம் மகனே ” என்று எப்பொழுதும் சிறிய மகனிடம் அவனுக்கு சரிசமமாக பேசி பதிலளிப்பவர் சில மாதங்களுக்குப் பின் இயல்புக்கு திரும்பியவரை பார்த்து மனதிற்குள் சந்தோஷம் கொண்டாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்


“ பொய்யே சொல்லாட்டியும் போஜனம் கிடைக்காது என்று தான் தெரியுதே! நமக்கு ரெண்டு பசங்களாச்சே அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சத செஞ்சி தருவோம்னு இல்லாம, ஒன்னும் தெரியாத பச்ச மண்ண ஏமாத்தறீங்க. அய்யகோ இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா ” என்று நாடக பாணியில் பேசிக் கொண்டிருந்தவனிடம்


முதுகில் தட்டி "ஏன் இல்ல.., அதான் நான் இருக்கேனே! சொல்லு என்னன்னு கேட்கிறேன்” என்ற திவாகரை பார்த்து

“ வாவ் அண்ணா எப்படி இருக்கீங்க? உங்கள பாத்து எத்தனை வருஷமாச்சு ” என்று பேசிக்கொண்டிருந்தவன் தன் அண்ணனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர் அண்ணனின் வரவை காணாமல் வாடுவதை கண்டு அதுகுறித்து வினவ விழைந்தவன்


“ அண்ணா வர ஒத்துக்கலையா? நீங்க மட்டும் வந்திருக்கீங்க ” என்று கேள்வி கேட்டவனின் பதிலாக அவர்களின் முன் பழைய கம்பீரத்துடனும் தன் தாய் தம்பியை பார்த்து இளம் முறுவலுடன்


“ இனிமே எங்கேயும் போகமாட்டேன் இங்கதான் இருப்பேன் ” என்ற அண்ணனை பார்த்து

“ ஐ ரியலி மிஸ் யூ அண்ணா எங்களையெல்லாம் விட்டு தனியா போகாதீங்கணா ” என்று தன் அண்ணனை அனைத்து கொண்டவனிடம்


“ கண்டிப்பா உங்க எல்லாரையும் விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்” என்று விமலுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு கண்களில் கண்ணீர் வழிவது கூடத்தெரியாமல் தன்னையே பார்த்திருக்கும் அன்னையைப் நோக்கி தன் மறுகரத்தை அவரை நோக்கி நீட்டியவனின் கரத்தைப் பற்றிக்கொண்டார் இந்திரா.

ஸ்வரமாகும்...........
 
Last edited by a moderator:

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
received_486378492052631.jpeg
வரம் 6

"க்கும்...." என்று தொண்டையை கனைத்த திவாகரை என்ன என்பதுபோல் பார்த்த மூவரையும் முறைத்துப் பார்த்தவன்
“ உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா! ஒருத்தனை மட்டும் தனியா விட்டுட்டு மூணு பேரும் சேர்ந்து பாச பயிரா வளர்க்கிறீர்கள்..., இங்கேயே சுத்திட்டு இருந்தவனை பார்த்து இவ்வளவு பீலிங்ஸ், ஒருத்தன வருஷக்கணக்கா பாக்காம இப்பதான் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கானே அவனையும் கொஞ்சம் பார்க்கலாம் அப்படின்னு எல்லாம் இல்லாம என்ன கழட்டி விட்டுட்டு இங்க ஒருத்தன் இருக்கிறத மறந்துட்டு மூணுபேரும் எவ்வளவு நேரம்தான் கட்டிப் புடிச்சுட்டு இருப்பீங்க. உங்களையெல்லாம் நம்பி வந்ததுக்கு” என்று புலம்பி,

அவனை பார்த்து சிரித்த மூவரையும் பார்த்து கடுப்பானவன்
“ ம்ஹும்.., இது வேலைக்காகாது அடுத்த ஃப்ளைட் பிடிச்சு நான் கிளம்புறேன்" எனவும்

"சரிடா, சீக்கிரம் கிளம்பு பிளைட்க்கு நேரம் ஆயிரபோது" என்று நக்கல் அடித்த நண்பனை


“ நீ எல்லாம் ஒரு நண்பனாடா.., துரோகி. ஒருத்தன் வேலை வேலைன்னு அலைஞ்சு திரிஞ்சு வீட்டுக்கு வந்து அங்கிருந்த அவசரஅவசரமாக உன்ன பாக்க வந்தா வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு கூட போடாம துரத்தப் பாக்குற” என்று கடுப்புடன் கூறிய திவாகரை பார்த்த விமல்


“ திவாணா.... இதுக்கு பசிக்குது சாப்பாடு போடுங்கன்னு நேரடியாவே கேட்டிருக்கலாம் ” என்று தன்னைப் பார்த்து சிரித்த விமலை (என்ன பாத்தா டா சிரிக்கிற இங்கிருந்து போறதுக்குள்ள உனக்கு நான் ஆப்பு அடிக்கல நான் திவாகர் இல்லடா) என்று மனதிற்குள் கூறிக் கொண்டவன் வெளியில் அவனைப் பார்த்து சிரித்து "கரெக்டா சொல்லிட்ட டா தம்பி" என்றவனை பார்த்து அலர்ட் ஆன விமல்


“அண்ணா..... எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம், அதை விட்டுட்டு ஒரு சின்ன பையனை வெச்சு செஞ்சீராதிங்க ப்ளீஸ் ” என்றவனை


“சேச்சே உன்ன போய் நான் அப்படி பண்ணுவேனா" என்ற திவாகரை
தோளில் தட்டி “போதும்டா அவனைக் கலாய்த்தது” என்று நண்பனிடம் கூறியவன்


“ அம்மா .... முதல்ல அவனுக்கு சாப்பாடு போடுங்க, இல்லன்னா பசி கடுப்புல நம்மளை எல்லாம் பேசிய கொன்றுவான்” என்று சிரித்த மகனை பார்த்து ஆனந்தம் கொண்ட இந்திரா மனதிற்குள் உடனடியாக ஆண்டவனிடம் ( கடவுளே என் மகனின் இந்த சிரிப்பும் நிம்மதியும் மறையாமல் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அவசர அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு ) தன் வளர்ந்த முரட்டு மகனின் சிரிப்பைப் பார்த்து தன் கண்ணே பட்டு விடக்கூடாது என்று சிறு குழந்தைக்கு செய்வதுபோல் திருஷ்டி வழித்த இந்திராவை பார்த்த அந்த மூன்று ஆண் மகன்களுக்குள்ளும் நிம்மதி உண்டானது.


பேச்சும் சிரிப்புமாக ஒருவரை ஒருவர் காலை வாரிக்கொண்டு வயிறார மனதார தங்களுடன் வற்புறுத்தி அன்னையும் அமர்த்திக்கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள்
“ எங்கம்மா .... வந்ததும் கேட்கணும்னு நினைச்சேன், அப்பாவும் பாட்டியும் காணோம் ” என்று கேட்ட ராணாவிடம்


“நம்ம குலதெய்வ கோவிலில் பூசாரி கூப்பிட்டு விட்டாராம்.., அதுக்காக போயிருக்காங்க இப்போ வர்ற நேரம்தான் ” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்குவந்து சேர்ந்தனர் ராஜேந்திர பிரதாபும் ராணியம்மாளும்.


தன் கணவரையும் மாமியாரையும் பார்த்து எழ முயன்றவரை கைப்பிடித்து மகனும், தோளில் கை வைத்து கணவனும் எழவிடாமல் செய்தவர்கள் ஒருவரையொருவர் ஆழ்ந்து நோக்கிவிட்டு எந்தவித சலனமும் இல்லாமல் தன்னைப் பார்த்தும் அமைதியாக அமர்ந்திருந்த மகனை பார்த்து சற்று கவலையாக இருந்தாலும் மகன் திரும்பவும் வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியில் அதை ஒதுக்கியவர் தன்னிடம் தன் மனைவி ஏதோ கூற வரும்முன் அவரின் முயற்சி தடைசெய்து


“ நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். இவங்க எல்லாம் வற்புறுத்தி தான் சாப்பிட உட்கார்ந்தேன்னு சொல்லப்போற அதுதானே” என்ற கணவருக்கு பதிலாய் ஆமென்ற தலையசைத்தவரைப் பார்த்து


“ இதை நீ சொல்லனுமா எங்களுக்கு தெரியாதா என்ன! நாங்க எல்லாரும் சாப்பிடாமல் என்னைக்கு நீ சாப்பிட்டு இருக்க. இன்னைக்கு ஒரு நாள் இப்படி சாப்பிட உட்கார்ந்ததும் எதுக்கு ஏதோ தப்பு பண்ண மாதிரி தவிக்கிற விடு இந்திரா. நாங்களும் உன்னை இப்படி இருக்க சொல்லிதான் சொல்றோம் நீ எங்க கேக்குற இன்னிக்கு ஒரு நாளாவது எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம் ” என்று கூறி இப்பொழுது இருக்கும் சூழ்நிலை மாற்ற பிடிக்காமல் அமைதியாக சாப்பிட்டுவிட்டு அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.


யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்கவே, இதுதான் சரியான சமயம் என்று திவாகர் தன் நண்பனை எப்படியாவது மறுமணத்திற்கு சம்மதிக்க வைத்து விடுவான் என்று மனதில் கணக்கு போட்ட ராணியம்மாள் திவாவை பார்த்து


“நல்லவேளை பண்ணப்பா! நீ இப்போ இங்க வந்து. நாங்க இப்போ அவன் நல்லதுக்கு எது சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறான், கடைசிவரைக்கும் இப்படியேவா இருந்திட முடியும். நடந்தது நடந்து போச்சு அடுத்தது என்னன்னு பார்க்க வேண்டாமா! அதை விட்டுட்டு நடந்ததையே நினைச்சுக்கிட்டு எங்ககிட்ட கோவப்பட்டுகிட்டு தனியா போய் இருந்தா எல்லாம் சரி ஆயிடுமா? நாங்க சொன்னா தான் எல்லாம் தப்பா போகுது நீயாவது எடுத்து சொல்லி புரியவை” என்ற பாட்டியை கடுப்புடன் பார்த்த ராணாவை,

திவாவும்
ராணாவை பார்வையிலேயே அமைதியாக இருக்கச் சொல்லி தான் பார்த்துக் கொள்வதாக கண் காட்டியவன் “அவனுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைச்சதாள தான் அவன் இப்போ இங்க வந்து பொறுமையா உட்கார்ந்து இருக்கான். இல்லன்னா நீங்க எல்லாம் பண்ணுன காரியத்துக்கு அவன் திரும்ப வந்து இருக்கவே மாட்டான்” என்று அசால்ட்டாக அவரைப்பார்த்து கூறியவன் குரல் உயரவில்லை என்றாலும் அதிலிருந்த கோவத்தை புரிந்துகொண்ட ராணியம்மாள்,


பேச்சுப் போகும் திசையை புரிந்துகொண்டு, பேரனாவது தங்களுக்காக பார்ப்பான்.., ஆனால் இவனோ யாருக்கும் எதற்கும் தலை வணங்காமல் எதிரில் இருப்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான் என்று தெரிந்து இருந்ததனால், அவனிடம் எந்த வார்த்தையும் விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது என்று மனதிற்குள் கணக்குப் போட்டவர்


“ சரிப்பா தப்பு நாங்க பண்ணாதாவே இருக்கட்டும்”


“ பண்ணதாவே இல்ல! தப்பு மொத்தம் பெரியவங்க நீங்க எல்லாம் தான் சேர்ந்து பண்ணி இருக்கீங்க. ஒரு சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்கி கடைசில ரெண்டு பேரோட வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிட்டீங்க” என்றவனை பார்த்து ராணியம்மாலும் ராஜேந்திரனும் மனதிற்குள் பல்லைக் கடித்தவர்கள், இவனிடம் எப்படி பேசினாலும் நடுவில் நம்மிடையே பாய்ந்து நம்மை பதில் பேச முடியாமல் ஆகிவிடுவான் என்று சுதாரித்த ராஜேந்திரன் தன் மனைவியை வைத்து காரியம் சாதிக்க நினைத்தவர்,

தன் தாயுடன் திவாகர் வாதித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் அறியா வகையில் தன் அருகில் இருந்த மனைவியிடம்
“இந்திரா ..... இங்கபாரு இப்போது பழசெல்லாம் பேசி என்ன ஆகப்போகுது. ராணாவ சமாதானப்படுத்தி அவன் இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துகொள்ள வைக்க முடியும்னா அது திவாகரனால மட்டும் தான் முடியும், ஆனா அவன் எங்க மேல இருக்க கோவத்துல நாங்க சொல்ல வர்றது புரிஞ்சுக்க மாட்டேங்குறான். அதுவுமில்லாமல் நாங்க எல்லாம் சேர்ந்து பண்ணது தப்புதான்..., ஆனா அந்த தப்ப சரி பண்ண இப்ப விட்டா முடியாதுன்னு உனக்கு நல்லா தெரியும். அதனால நீ பேசு நீ பேசினால் தான் திவாவும் ராணாவும் பொறுமையா கேட்பாங்க, நம்ம ராணாவுக்கு நல்ல வாழ்க்கை அமையும்னா அது உன் கையில தான் இருக்கு” என்றவரை பார்த்து அவர் சொல்வதில் இருந்த உண்மையை புரிந்து தன் மகன் வாழ்வு இப்படியே இருந்துவிடக் கூடாது என்ற பயத்தில்


“ சரிங்க நான் பேசுறேன்.....” என்று உத்திரவாதம் அளித்தவர்


“திவா ஒரு நிமிஷம் பா ....” என்று அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர்


“ போனதெல்லாம் போகட்டும்! ஆனா இதுக்கு மேல என்ன நடக்கணுமே அதை பத்தி மட்டும் பேசுவோம். எதுக்கு பழச பத்தி பேசி பேசி நம்மளை நாமளே காயப்படுத்தி கொள்ளனும்?? அதுவுமில்லாமல் இவங்க யாருக்கும் தெரியாமல் ராணாவோட ஜாதகத்தை எடுத்துப் போய் பார்த்தேன் ” என்னது என்பதுபோல் அனைவரும் அவரை பார்த்திருக்க


“என்ன பண்றது பெத்த மனசு பித்தா இருக்கே.., சின்ன பசங்க உங்களுக்கெல்லாம் ஜாதகத்தின் மேல பெருசா அபிப்ராயம் இருக்காது, என்னடா இவங்க இன்னும் பத்தாம்பசலிதனமா இருக்காங்கன்னு தான் உங்களுக்கு தோணும்...., ஆனா அது எங்களுக்கு உண்மையான விஷயம் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றவர் தன் மகனிடம் சென்று


“ ராணா .... நான் சொல்றதை கேட்டு என்ன தப்பா எடுத்துக்க மாட்டதான” கலக்கத்துடன் கேட்டவரிடம்


“ மா ...... என்னை நானே எப்படிமா தப்பா நினைக்க முடியும்? எல்லாத்துக்கும் மேல எப்பவும் எதுலயும் கண்ண மூடி நான் நம்பும் ஒரே ஆள் நீங்கள்தான், நீங்க எதை யோசித்தாலும் அதுல என் நல்லது மட்டுமே தான் இருக்கும்னு எனக்கு தெரியாதா” என்று கூறியவனை


“அதனாலதான் பா நான் யாருக்கும் சொல்லாமல் ஜாதகத்தை எடுத்துட்டு அவரை பார்த்துட்டு வந்தேன்....... நான் சொல்றத கேட்டு கோபப்படாம கேட்டுட்டு யோசிச்சு உன் முடிவ சொல்லு” என்ற நிறுத்தியவர்


“ உனக்கு கல்யாண பேச்சு எடுத்தபோது ஒருத்தர் தெளிவா சொல்லுவார் என்று சொல்லி உங்க ஜாதகத்தை எடுத்துட்டு போய் காட்டுறேன்னு கூட சொன்னேனே! அதுக்கு நீங்க எல்லாரும் இல்ல இங்க நம்ம ஜோசியர்கிட்ட பாத்ததே போதும்னு சொல்லி வேணாம்னு சொல்லிட்டீங்க. அதனாலதான் உங்க யாருக்கும் சொல்லாம கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு நான் மட்டும் போய் பார்த்தேன்” என்றவர் அனைவரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து மனதை திடப்படுத்திக்கொண்டு

“ உன்னோட ஜாதகத்தை காட்டுனா உடனேயே நான் எதுவும் சொல்லாமல் அவரே எல்லாத்தையும் சொல்லிட்டார். அதேபோல உனக்கு தாரம் இரண்டுன்னும் சொன்னார்! ஆனா அதுவும் இந்த நாலு மாசத்துக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணிடவேண்டுமெனும் இல்லனா உனக்கு மூணு வருஷத்துக்கு கல்யாணம் யோகமும் இல்லையாம்..., அதுவுமில்லாமல் பல கஷ்டமும் வரும்ன்னு சொன்னாரு ” என்று கூறியவர்


“ நான் உன்னை எதையும் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கணும்னு விரும்பல.., ஆனால் உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு மனசு தவியாய் தவிக்குது. எப்ப இருந்தாலும் உன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நீ போய் தான் ஆகணும் அப்படிங்கிறப்போ எனக்காக இரண்டாவது கல்யாணத்தைப் பத்தி கொஞ்சம் யோசிகரியா” என்று தன் மனதில் இருந்ததை கூறியவர் எங்கே தன் மகன் தன்னையும் தவறாக எடுத்துக் கொள்வானோ என்று மனம் பதைபதைக்க மகனை ஏறெடுத்தும் பார்க்க தைரியம் இல்லாது அமர்ந்து இருந்தவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவர்முன் மண்டியிட்டு அமர்ந்தவன்


“எதுக்குமா என் முகம் பார்க்காமல் இப்படி தலை குனிஞ்சு பேசுறீங்க? என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நெனச்சு பேசுற நீங்க எதுக்கு தலைகுனியனும்..., என் வாழ்க்கை கெட்டு போயிடும்னு தெரிஞ்சே அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் எல்லாரும் எனக்கு நேருக்கு நேர் பார்த்து தான் பேசினார்கள், அப்படி இருக்கும்போது எனக்கு நல்லதை மட்டுமே நினைக்கிற நீங்க எப்போவும் எங்கேயும் தலைகுனியவே கூடாது. நீங்க சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன் ஆனால்?" என்று மற்றவர்களைப் பார்த்து "அது நான் சொல்ற பொண்ண தான் இருக்கும்....., இருக்கணும்” என்று தந்தையும் பாட்டியையும் பார்த்து முடிவாக கூறியிருந்தான்.


ஸ்வரமாகும்.........
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
12388

வரம் 7


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திவாகருக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது, தன் நண்பனை பாசம் என்னும் ஆயுதம் கொண்டு அவரவர் விருப்பத்திற்கேற்ப அவனை சிந்திக்க விடாமல் இவர்கள் காய் நகர்த்தி தாங்கள் நினைத்த காரியத்தை நடத்திக் கொள்கின்றனர் என்று.


அதிலேயும் ராணி அம்மாளிடம் பேசிக் கொண்டிருந்த சமயம் தன் கவனம் ராஜேந்திர பிரதாப் மேல் இல்லை என்று நினைத்துக்கொண்டு தன் தாயிடம் தன்னை சமாளிக்கும் மாறு சைகை காட்டிவிட்டு, மனைவியிடம் யாரும் அறியா வண்ணம் அவர் பேசியதை பார்த்தும் பார்க்காததுபோல் அங்கு நடப்பதையெல்லாம் ஒவ்வொன்றாக கூர்ந்து கவனித்தவனுக்கு இங்கே ஏதோ பெரிய தவறு இருப்பது போல் அவன் மனது அடித்துக் கூறியது.


இதில் தன் நண்பனின் தாய்க்கும் தம்பிக்கும் சம்பந்தம் இருப்பதுபோல் தெரியவில்லை, எனினும் மேலும் இரு தினங்கள் இங்கிருந்து இவர்களின் நடவடிக்கையில் என்னவென்று கண்டுபிடித்து அதை சரி செய்தால்தான் தன் நண்பனின் வாழ்க்கை இனிவரும் காலங்களில் சீராக அமையும் என்று புரிந்து கொண்டவன்...,


இவர்களிடம்
அமைதியாக இருப்பது போல் காட்டிக் கொண்டு இவர்கள் எந்த அளவுக்கு செல்கிறார்கள் என்று அலசி ஆராய வேண்டும் என்ற முடிவுடனும், நண்பனின் மறுமணத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் அவனுக்கு ஏற்ற மனைவி அமைவதில் யாருடைய சூழ்ச்சியும் எடுபடாத வகையில் தான் முன் நிற்க வேண்டும் என்ற முடிவுடன் அதை இப்பொழுது இருந்தே செயல்படுத்தும் நோக்கத்துடன் அவர்களின் பாசமெனும் களத்தில் அதே ஆயுதத்துடன் அவர்களைப்போல் அவர்களே யூகிக்காதவகையில் அவர்களுடன் சமரசம் ஆவதுபோல் காட்டிக்கொண்டு அவர்களின் விளையாட்டில் அவர்களையே உபயோகித்து தன் ஆட்டத்தைத் தொடங்கினான்.


தன் தாயிடம் வாக்களித்துவிட்டு தன் தந்தையையும் பாட்டியையும் முறைத்துக் கொண்டிருந்தவனை இலகுவாக்கும் பொருட்டு “வாழ்த்துக்கள் டா நண்பா..., இந்த முடிவு அம்மாக்காக நீ யோசிச்சு எடுத்திருந்தாலும் இதுதான் ரியாலிட்டி. அவங்க சொல்ற மாதிரி உன் வாழ்க்கையில் நெக்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்கவேண்டிய கட்டத்தில் தான் நீ இருக்க” என்று தன் பார்வை வட்டத்தில் அவர்கள் கவனிக்காத வகையில் அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவன்,


சட்டென்று அவர்கள் எதிர்பாராத வண்ணம் “என்ன நான் சொல்றது சரிதானே பாட்டி அப்பா ” என்று கேட்டவனை பார்த்து முதலில் என்ன சொல்வதென்று திணறியவர்கள்
சில வினாடிகளில் தங்களை சுதாரித்துக்கொண்டு “நீ சொன்னா கண்டிப்பா அது சரியாதான் இருக்கும்” என்றவர்களை விஷமமாக பார்த்து சிரித்தவன்
“அப்போ என் மேல உங்களுக்கு முழு நம்பிக்கைனு சொல்றீங்க அப்படி தானே” என்று கேள்வி கேட்டவனை
எதற்கு என்று புரியாமல் வேறுவழியின்றி இருவரும் ஒருமித்த குரலில் “ஆமாம் ஆமாம்” என்றவர்களிடம்


“அப்போ என் நண்பனுக்கு பொண்ணு பார்க்கும் களத்தில் நான் இறங்குகிறேன்..., நீங்கள் எல்லாம் என்ன சொல்றீங்க ” என்று கேட்டுவிட்டு தன் நண்பனின் புறம் திரும்பி


“அம்மா சொன்னமாதிரி உனக்கு பிடிக்காத எதையும் உன் மேல நான் திணிக்க மாட்டேன். ஆனா அதே சமயம் நீ முட்டாள்தனமா முடிவெடுத்தா அதை எதிர்த்து நிற்கிற முதல் ஆளாக நான்தான் இருப்பேன்...., ஏனென்றால் என் நண்பனுடைய வாழ்க்கை எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்" என்றவனை பார்த்து


“பெற்ற தாயை ஒருத்தன் கண்மூடித்தனமாக நம்புகிறான் என்றால் அது தன்னுடைய சுக துக்கம்னு தான் பெற்ற பிள்ளைகளுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து அவர்களுக்காகவே கடைசி வரைக்கும் வாழறாங்க அதனால அந்தப் பெற்றவர்களை பிள்ளைகள் எந்த சூழ்நிலைலயும் நம்புவார்கள். ஆனா உயிர் கொண்ட நட்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் நண்பனுக்காக உயிரையும் கொடுத்து காப்பாற்றுவான்.., நிறைய பிரண்ட்ஸ் இருப்பாங்க ஆனா தன்னலமில்லா உயிர் நண்பன் எல்லாருக்கும் அமையாது, அதுலயும் நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்டா.., என் தாயை எந்த அளவுக்கு மதிக்கிறேனோ அதே அளவு உயிர் கொண்ட நட்பையும் மதிப்பவன்டா இந்த ராணா...
நான் அப்படிப்பட்டவன் தான்னு உனக்கு நல்லாவே தெரியும், இருந்தாலும் உனக்காக மட்டும் இல்ல இங்க இருக்கிற எல்லாருக்காகவும் சொல்றேன்..., எனக்கு எது நல்லதுன்னு என்ன விட உனக்கு நல்லா தெரியும், அதனால இந்தா வச்சுக்கோ என் வாழ்க்கையை உன் கையில் கொடுக்கிறேன், இனிமேல் அது உன் பொறுப்பு” என்ற நண்பனை ஆரத்தழுவிக்கொண்டான் திவாகரன்


“ இன்னைலருந்து உனக்கு பொண்ணு தேடுவதுதான் என் முதல் வேலை, ஆனா அதுக்கு முன்னாடி ஒரு உண்மையை சொல்றன்..., ஏன்னா ஒரு சில விஷயத்தில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் இருந்தால்தான் பிற்காலத்தில் பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும்னு நான் நம்புகிறேன். அதனாலதான் இப்போ இந்த விஷயத்தை சொல்றேன், இதே உனக்கு இப்ப இந்த கல்யாண பேச்சை எடுக்காமல் இருந்திருந்தால் இந்த விஷயத்தை இப்ப இல்லை எப்பவுமே நான் சொல்லியிருக்க மாட்டேன்..., உனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே உனக்காக எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணை உன் லைஃப் பார்ட்னர் வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன், உனக்கு கல்யாண பேச்சு எடுக்கும்போது சொல்லலாம்னு இருந்தேன். பட் ம்ம்ச் முடிஞ்சத பத்தி பேச வேணாம், இம்ம்ம்ம் இப்பவும் அவ தான் உனக்கு பாக்குறதா இருக்கேன்..., அப்படி நூத்துல ஒரு சதவீதம் அவ இல்லன்னா அவளைவிட என் நண்பனுக்கு தகுந்த மாதிரிதான் நான் பார்ப்பேன்..., இட்ஸ் எ ப்ராமிஸ் டா நண்பா" என்றவன்


அனைவரையும் பார்த்து "என்ன நாங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கோம்.., ஆனா நீங்க யாரும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க" என்ற திவாகரை பார்த்த இந்திரா அவன் அருகில் வந்து

“ உன்னையும் ராணாவையும் என்னைக்கும் நான் வேற வேறயா பார்த்ததே இல்லை எனும்போது, என் ஒரு மகன் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை இன்னொரு மகனான உன் மேல இல்லாமல் எப்படி போகும். அதே மாதிரி நாங்க எல்லாம் பண்ண தப்புல மனசு உடைஞ்சு எங்ககிட்ட மறுபடியும் வராமல் விலகியே இருந்து விடுவானோ என்று பயத்துல இருந்தேன்..., கிட்டத்தட்ட அதே மாதிரி எண்ணத்தோடு இருந்தவனை அவன் மனசை மாத்தி அவனுக்கு மனதில் ஓர் தெளிவை கொண்டுவந்து, மறுபடியும் பழைய மனிதனா எங்ககிட்ட அதே என் பழைய ராணா பிரதாப்பா பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துருக்க. அப்படிப்பட்ட உன்ன நம்பாம நாங்க வேற யாரு நம்ப போறோம் ” என்றவர் அவனை ஆசீர்வதிப்பது போல் அவன் சிரத்தில் தன் கையை வைத்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர்


“ நீ எப்பவும் உன் மனசுக்கேத்த மாதிரி சந்தோஷமா நல்லா இருக்கணும் பா ” என்று மனதார வாழ்த்தியவர்
தன் மாமியார் கணவரின்புறம் திரும்பியவர் “நான் சரியாத்தானேங்க சொன்னேன் ” என்று தங்களிடம் வினவியவரை


இப்போது இருக்கும் நிலைமையில் தாங்கள் வரிசையாகப் பார்த்து வைத்திருக்கும் மணப்பெண்களை விட்டுவிட்டு உங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறாமல் கூறிய தன் மகனின் பேச்சிலும் செயலிலும் பார்வையிலும் புரிந்து கொண்டவர்கள் இப்போதைக்கு எதையும் கூற இயலாது என்றும் வேறுவழியின்றி மனதில் தன் மனைவி திட்டிக்கொண்டு வெளியில் சிரித்த முகத்துடன்
“ கண்டிப்பா திவாகரை தவிர வேற யாரால நம்ம மகனுக்கு பொருத்தமா பொண்ணு பாக்க முடியும் சொல்லு ” என்று நிறுத்தியவர் திவாகர் இடம்


“ நீ சொன்ன பொண்ணையும் பாருப்பா அதேபோல நாங்களும் நாலஞ்சு பொண்ணுங்களை பாத்து வச்சிருக்கோம், அதுல எது சரி வருதுன்னு பார்த்தா தானே சரியா வரும். அதனால நாமெல்லாம் சேர்ந்து பார்த்து முடிவு பண்ணிடலாம் என்ன நான் சொல்றதும் சரிதானே ” என்று நாசுக்காக தங்களையும் அதில் சேர்த்துக்கொண்டவரை பார்த்து அவர்கள் விரித்த வலையில் அவர்களையே தள்ளிவிடும் நோக்கத்துடன்


“ நீங்க சொன்னா சரியாதான் பா இருக்கும். யார்கிட்டயாவது நீங்களும் பொண்ணுங்களுக்கு சொல்லி வச்சிருக்கீங்களா ” என்று அவர்களுக்கு சாதகமாக கேட்டவனை ஆனந்தமாக நோக்கியவர்


“ என்னத்துக்கு மத்தவங்க கிட்ட சொல்லி வைக்கணும், நானே என் மகனுக்கு பொருத்தமா அஞ்சு பொண்ணுங்கள பார்த்து வச்சிருக்கேன். ஆனா எங்கே ராணா தான் பிடி கொடுக்க மாட்டேங்கிறானே ” என்றவரை கடுப்புடன் பார்த்த ராணா


“ இது வரைக்கும் நீங்க எனக்கு செஞ்ச நல்லதே போதும், இதுக்கு மேல என் விஷயத்தில் தலையிடாதீர்கள் ” என்றவனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்த திவாகர்


“அதுதான் நான் இருக்கேன்ல....
நீ டென்ஷன் இல்லாமல் இரு, இப்ப என்ன அந்த பொண்ணுங்களையவா உன்னை கட்டிக்க சொல்றாங்க? சும்மா பார்க்கிறதுல ஒன்னும் தப்பில்லையே...., அவன் கிடக்கிறான் பா நீங்க அந்த அஞ்சு பொண்ணுங்களோட போட்டோவும் டீடெயில்ஸ்சும் குடுங்க ” என்ற திவாகரை பார்த்த ராணாவிற்கு


இவன் இந்த மாதிரி சேம் சைட் கோல் அடித்து எல்லாம் பேச மாட்டானே அப்படி மீறி இந்த மாதிரி எல்லாம் பேசுறானா அது அடுத்தவனுக்கு ஆப்பா இல்லை இருக்கும்..., அப்போ அது அப்பாக்கு தான் என்கிற மாதிரி இருக்கு, ஆனா ஏன்னு தான் புரியலையே...., பரவால்ல நம்மள தான் ஒரு வழி ஆக்குவாங்க, ஆனா இவன்கிட்ட வேலைக்காகாது..., நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்..., இவன் சொன்ன மாதிரி என்னதான் நடக்குதுன்னு என்று ஆசுவாசமாக அமர்ந்து கொண்டான்.


தாங்கள் பார்த்திருக்கும் பெண்ணின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வந்து தந்தவர் அவனிடம் பெருமையாக எல்லாரும் அழகான அடக்கமான அமைதியான பொண்ணுங்க இந்த குடும்பத்துக்கும் ஏத்த பொண்ணுங்க எனவும், அப்படியா என்பதுபோல் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சந்தேகம் நீங்கி இவர்களிடம்தான் தப்பென்று தெளிவாகிவிட்டது.


இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர் கூறியதற்கு எந்தக் கருத்தையும் கூறாமல் தன் காரியத்தில் கண்ணாக

"ஆமாப்பா இந்த பொண்ணுங்க கிட்ட ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாது.., ஆனா போட்டோ வெச்சு எல்லாத்தையும் முடிவு எடுக்க முடியுமா..., இந்த பொண்ணுங்கள பத்தி மத்த டீடெயில்ஸ் குடுங்க" என்றவனிடம் சங்கடமாக

"எந்த பொண்ணு ராணாவுக்கு ஏத்தவலா இருப்பான்னு சொல்லு, அந்த பெண்ணோட டீடெய்ல்ஸ் தரேன்" என்றவரை


"வெறும் ஃபோட்டோ பார்த்து எல்லாம் டிசைட் பண்ணமுடியாது, அவங்களோட குணம், குடும்பம், படிப்பு எல்லாத்தையும் பாத்துட்டு தான் முடிவு பண்ணமுடியும்" என்று தன் காரியத்தில் விடாக்கண்டனாக கேட்டவனை பார்த்து மனதில் பல்லைக் கடித்துக் கொண்டு, மனதில் தோன்றிய எரிச்சலை அவர் குரலிலும் எதிரொலிக்கும் விதமாக

"அதெல்லாம் பாக்காமலா இந்த பொண்ணுங்களை செலக்ட் பண்ணி இருப்போம்..., நிறைய பேரை பார்த்து அதுல எது சரிவரும் என்று பார்த்து பார்த்து செலக்ட் பண்ண பொண்ணுங்க தான் இந்த அஞ்சு பேரும், அதனால நம்பி நீ தாராளமா செலக்ட் பண்ணலாம்" என்றவரிடம்


"நானும் பண்ண மாட்டேன்னு சொல்லலியே, நீங்க எதை பார்த்து ஓகேன்னு சொன்னீங்க.., அந்த குவாலிடீஸ் எல்லாத்தையும் சொல்லுங்க, நாங்களும் தெரிஞ்சுக்கிட்டு ஓகேன்னு சொல்றோம்ன்னு தானே சொல்றேன்"


இப்பொழுது வெளிப்படையாகவே பல்லைக் கடித்தவர் அவனை முறைத்துக் கொண்டு, இவன் சொல்லாமல் விட மாட்டான் என்று வேறு வழியில்லாமல் அனைத்து பெண்களின் டீடெயில்ஸையும் அவன் துருவித்துருவி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தினறலாக கூறி ஒருவழியாக பதில் அளித்து முடித்தவருக்கு அப்பாடா என்று இருந்தது.


ஆனால் அவரின் நிம்மதியை குலைக்கவென்றே அவன் செய்த செயலில் கடுப்பின் உச்சத்துக்கு சென்றவர், தான் இழுத்துப் பிடித்திருந்த பொறுமையை விடுத்து சற்று காட்டமாகவே


"இவ்வளவு கேள்விகளை தோண்டித் துருவி கேட்டுட்டு பொண்ணுங்களும் நல்லா தான் இருக்காங்கனு சொல்லிட்டு, கடைசில ஒரே வார்த்தையில் ரிஜக்ட் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இங்க என்ன வேலைக்கா ஆள் எடுக்குற" என்று கோபத்துடன் கேட்டவரிடம்


அசால்டாக "நான் வேலைக்கு ஆள் எடுக்குறதுக்கே எல்லாக் குவாலிட்டியும் இருக்கான்னு பார்த்து எடுக்கிறவன்..., அப்படியிருக்கும்போது என் நண்பனுக்கு பொண்ணு தேடுறேன்னா அப்போ எவ்வளவு பார்ப்பேன்! ஆமா தெரியாமத்தான் கேக்கறேன் உங்க பையனுக்கு வேற யாரும் பொண்ணு தர மாட்டேன்னு சொல்றாங்களா..., இல்ல அவனுக்கு என்ன வயசா ஆயிடுச்சு....? இப்போ இந்த நிமிஷம் ஒரு பொண்ண பாத்து சும்மா கட்டி வச்சா போதும் என்கிற மாதிரி இருக்கு நீங்க பார்த்து வச்சிருக்க பொண்ணுங்க" என்றவனை


"நாங்க பார்த்து வெச்சிருக்க பொண்ணுங்களுக்கு என்ன குறை" என்று கேட்டவரிடம்


"எல்லாமே குறைச்சலா தான் இருக்கு..., நீங்க சொன்ன அழக தவிர. ராணா குடும்பம் நடத்துவதற்கு அந்த பொண்ணுக்கு அழகு மட்டும் இருந்தால் போதுமா...? ஒன்னு அந்த பொண்ணுங்களோட படிப்பு..., அது எப்படி எந்த பெண்ணுமே டிகிரி முடிக்கல? அடுத்து இரண்டாவது, ஒன்னு அப்பா அம்மா ரெண்டு பேருமே இல்லை..., இல்லைனா அப்பா இல்ல. மூணாவது இது அவங்களுக்கு இல்ல உங்களுக்கு, தன் மகனுக்கு பாக்குற நீங்க அவனுக்கு எல்லா விதத்திலும் சரியா இருக்குமான்னு பாக்காம வெறும் நீங்க எல்லாம் சொல்றதுக்கு தலையாட்டிவிட்டு இந்த வீட்டில ஒரு மூலையில் இந்த வீட்டு வாரிச பெத்து கொடுத்துட்டு எங்க வீட்டு வேலை எல்லாம் செஞ்சிட்டு இருக்கிற மாதிரி பொண்ணு பார்த்து வச்சிருக்கீங்க.., ஏன்?" என்று கேள்வியாக நிறுத்தியவன், "அதனால தான் ரிஜெக்ட் பண்ணிணேன்....." என்றான்.


ஸ்வரமாகும்.......
 
Last edited by a moderator:

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
received_1448991148614224.jpeg

வரம் 8


திவாகரன் கேள்வி கேட்டதற்குக் கடுப்பாகி இருந்த ராஜேந்திரன்!

“நீ நினைக்கிற மாதிரி நாங்கள் யோசிக்கவே இல்லை அப்புறம் பொண்ணுங்களோட பேக்ரவுண்ட் பத்தி சொன்ன, ஆனால் நாங்க எதுவும் யோசிக்கல. பெண் நல்ல பெண்ணா குடும்பத்துக்கு ஒத்து வருவாளா? என்று யோசிச்சோமே தவிர சொத்துபத்து சொந்தங்கள் பத்தியெல்லாம் நாங்கள் கவலைப்படவே இல்லை, எங்ககிட்ட அது ஏராளமா இருக்கு. எங்க பையன நல்லா பார்த்துக்கிட்டு, அவனை அனுசரித்து போற மாதிரி தான் பார்த்தேனே தவிர, நீ சொன்ன காரணங்கள் எல்லாம் கிடையாது.

அதே மாதிரி நீங்க எல்லாம் இந்த காலத்து பசங்க காசு பணத்தைப் பற்றி எல்லாம் யோசிக்க மாட்டீங்கன்னு நினைச்சேன் ஆனா ஸ்டேட்டஸ் படிப்பு இப்படி யோசிப்பிங்கனு நினைக்கல”.
என்று வருத்தமாகக் கூறியவரை,



“விடுங்க அவங்க சின்ன பசங்க, ஏதோ தெரியாமல் பேசிட்டாங்க” என்று தன் கணவரை சமாதானப்படுத்த முயன்ற இந்திராவை,

“கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறோம், எல்லா நாட்டுக்காரன் கண்களிலும் விரல் விட்டு ஆட்டி எங்க கட்டுப்பாட்டில் வச்சிருக்கோம். எங்களை பார்த்து சின்ன பசங்கன்னு சொல்லிட்டீங்களே மா.. பரவால்ல விடுங்க எல்லா அம்மாக்களுக்கும், தன் பசங்க எல்லாரும் குழந்தை மாதிரி தானே!! ஆனால், அப்பாக்களுக்கு அப்படி இல்லை ஆம்பள பசங்களுடைய வளர்ச்சியை ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க அப்படி தானப்பா?.” என்ற திவா



“அனேகமா இப்படி நான் கேள்வி கேட்டதால் என் மேல உங்களுக்கு வருத்தமா கூட இருக்கலாம் ஆம் ஐ ரைட் மா?” என்று இந்திராவை பார்த்து கேட்டவனை,



“சேச்சே அப்படி எல்லாம் இல்ல திவா, நீயும் அவரை சரியா புரிஞ்சுக்கலனு தான் நினைச்சேன், என்ன இருந்தாலும் அவர் ராணாவோட அப்பா, அப்படி இருக்கும் போது அவரே அவர் பையனுடைய வாழ்க்கையை கெடுக்கப் பார்ப்பாரா? நந்தினி பண்ண தப்புக்கு அவர் எப்படி பொறுப்பாவார் ” என்று அனைவரும் தன் கணவனைத் தவறாக நினைக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் பேசியவரை,



“தப்பா எடுத்துக்காதீங்க அப்போ அவர் மேல எந்த தப்புமே இல்லன்னு சொல்றீங்களா?”

“நந்தினி எந்த அளவுக்கு தப்பு பண்ணினாலோ அதைவிட அதிகமான தப்பை உங்க கணவர், நாத்தனார், மாமியார் தான் பண்ணி இருக்காங்க அது உங்களுக்கு கொஞ்சம் கூட புரியலையா? ஒரு பேச்சுக்குக் கூட உங்க ஹஸ்பண்ட்ட உங்களால் விட்டுக் கொடுக்க முடியல..
அப்படியிருக்கும் போது அவன் பொண்டாட்டி விவாகரத்து கேட்டப்போ இவங்களெல்லாம் எதுக்கு நந்தினிக்கு சப்போர்ட் பண்ணாங்க அது தன் பையன் வாழ்க்கைக்கு பண்ற துரோகமா தெரியலையா?” என்று கேட்டுக் கொண்டே சென்றவனிடம்,

“விவாகரத்து வாங்கித்தரலைனா செத்துருவேன்னு சொல்றவளிடம் வேற என்ன தான் பா பண்ண முடியும்? அவ உயிர் போறதுக்கு முன்னாடியே என் உயிர் போய்விடும், என்று என் தங்கச்சி சொல்லும் போது என் பையன் வாழ்க்கையைவிட ரெண்டு உசுரு தான்பா எனக்கு முக்கியமா பட்டுச்சு ” என்று கூறிய ராஜேந்திரனை
பார்த்து
“நீங்க சொல்றது உங்களுக்கு காமெடியா இல்லை?” என்று காட்டமாகக் கேட்டான்.

“திவா போதும் நிறுத்து! எனக்கு புரியுது உன்னுடைய ஆதங்கம். உன் நண்பனுடைய வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு நீ பேசுற. ஆனால் அவருடைய இடத்தில் நீ இருந்திருந்தால் தான் உனக்கு அது புரியும்”

என்றார் இந்திரா.



“ நீங்க சொன்னீங்க பாருங்க அவருடைய இடத்தில் இருந்து யோசிக்கனும்னு, அவருடைய இடத்தில் நான் இருந்திருந்தால், அந்த பெண்ணுக்கு எடுத்து சொல்லி புரிய வச்சிருப்பேன். அதேமாதிரி நீங்க எல்லாம் தள்ளி இருங்க, அவளை என் வழிக்கு நான் கொண்டு வரேன், நீங்க எல்லாம் சப்போர்ட் பண்றனாலதான் அவ இப்படி எல்லாம் பண்றான்னு அவன் சொன்னப்பவே நீங்க எல்லாம் இதில் தலையிடாமல் ஒதுங்கி இருந்துருந்தீங்கன்னா, இந்த விவாகரத்து ஆகவே ராணா விட்டிருக்க மாட்டான்.

ஆனா நீங்க எல்லாம் என்ன பண்ணிங்க? அவங்க இரண்டு பேரும் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை, நீங்களும் ஆளாளுக்கு பிளாக்மெயில் பண்ணி கடைசியில், அவங்க வாழ்க்கை போனது தான் மிச்சம் இது உங்களுக்கும் தெரியும்” என்றான் திவா சற்றும் கோபம் குறையாமல்.



ராஜேந்திர பிரசாத்தை பார்த்து “ நீங்க என்ன சொன்னீங்க? எந்த பேக்ரவுண்டும் படிப்பும் இல்லாத பொண்ணா இருந்தாலும் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருந்தா போதும்னு பாத்தேன்னு சொன்னீங்களே! அதையேன் முதலிலேயே பார்க்கல? அதுகூட பரவால்ல நீங்களே கல்யாணம் பண்ணி வைத்து நீங்களே டைவர்ஸ் வாங்கி கொடுத்துட்டு, அடுத்த பொண்ணையும் அவன ஒரு வார்த்தை கேட்காமல் நீங்களே முடிவு பண்ணி கட்டிவைத்துவிட்டு, அந்த பொண்ணுக்கும் என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என்று ஒவ்வொரு கேள்வியையும் நிதானமாகக் கேட்ட திவாகரனை பார்த்து



“அப்போ எல்லாத்தையும் நான் தான் பண்ணினேன் என்று நினைக்கிறாயா திவா” என்று மனவருத்தத்துடன் கேட்டார் அவர்.



“கண்டிப்பா இல்லை! நீங்க எல்லாம் தப்பு பண்ணிங்க தான் அதை இல்லன்னு நான் சொல்லவே மாட்டேன். ஆனா உங்க எல்லாரையும் விட பெரிய தப்பு பண்ணது ராணா தான் ” என்ற திவாகரை புரியாமல் பார்த்த இந்திரா



“ என்ன திவா பேசுற நீ..?. விவாகரத்து வேணும்னு கேட்டது நந்தினி அவங்களுக்கு கூட இருந்து வாங்கி கொடுத்தது இவரு! இவங்க எல்லாம் மாறிமாறி தப்பு பண்ணிட்டாங்க ஒத்துக்குறேன். ஆனால் இதுல எதுலயுமே ராணா எதுவுமே பண்ணலையே அப்படி இருக்கும்போது அவன் தான் எல்லாம் தப்பும் பண்ணினானென்று நீ எப்படி சொல்ற ......?.” என்றார் குழப்பமாக இந்திரா.

“இப்ப நீங்களே சொன்னீங்க பாருங்க அந்தத் தப்பை தான் அவன் பண்ணினான் என்ன புரியலையா?” என்று அனைவரையும் பார்த்து கேட்டான்.

அங்கிருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ராணாவை பார்த்துவிட்டு, “புரியலை” என்றதும்
“அவன்தான் எதுவுமே பண்ணலன்னு சொன்னீங்களே! அதைத்தான் நானும் சொல்கிறேன் அவன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளனும்னா.. அவன் தான் போராடி இருக்கனும். அதை விட்டுட்டு நீங்க சொன்னீங்கன்னு, கல்யாணமும் பண்ணிப்பானாம், அதேபோல நீங்க எல்லாம் சொன்னீங்க என்று விவாகரத்தும் பண்ணிட்டான் மடையன்” என்று கூறியவனை
இவ்வளவு நேரம் அமைதியாக மற்றவர்கள் திட்டுவாங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், அனைவரின் முன்பும் தன்னை மடையன் என்று கூறிய திவாகர் மேல் கடுப்பான ராணா
“வேற என்னடா என்னை பண்ணியிருக்க சொல்ற? நான்தான் படிச்சு படிச்சு இவங்க எல்லார்கிட்டயும் சொன்னேனே! அவள் எல்லாம் சாக மாட்டாள்.. சும்மானாச்சுக்கும் மிரட்டுறானு.. ஆனா அதை நம்பாமல் இவங்கெல்லாம் தான், நான் முதலில் சாகுறேன், நான் முதலில் சாகுறேன்னு.. என்னமோ காம்படிஷன்ல பேரு கொடுக்குற மாதிரி அவளுக்கு சப்போர்ட் பண்ணி இவ்வளவும் பண்ணது ”
என்று கூறிக்கொண்டே வந்தவன் தன் நண்பனின் பாசப் பார்வையில் கப்பென்று தன் வாயை மூடிக்கொண்டு மனதிற்குள்,
‘அய்யோ தெரியாத்தனமா மறுபடியும் இவன்கிட்ட வாய் விட்டுட்டேனே ஏற்கனவே பிளாஷ்பேக் சொல்றேன்னு சொல்லி வாங்கிக் கட்டியும் எனக்கு புத்தி வரலையே..’ என்று புலம்பிக்கொண்டு எதேச்சையாக விமலை பார்த்த ராணாவிற்கு தன்னைப் பார்த்து அவன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பதை பார்த்து நொந்துபோய்.. மறுபடியும் மனதிற்குள் ‘ஒரு கல்யாணத்தினால் என் மரியாதை போச்சே இவன் கிட்ட இன்னும் மாட்டுனா தன் மொத்த கெத்தையும் ஒரே நாளில் குழிதோண்டிப் புதைத்து விடுவான்’
தந்தையைப் போல் இவனிடம் இருந்து தப்பிக்க அவர் வழியை பின்பற்ற வேண்டியது தான் என்று தன் முகத்தில் மொத்த சோகத்தையும் நிலைநிறுத்தி.. தன் தாயை ஏறிட்டு பாவமாக பார்த்தவனை பார்த்த,, இந்திராவிற்கு, அவன் எதற்கு பார்க்கிறான் என்று புரிந்தது. அவனை காப்பாற்றும் பொருட்டு மறுபடியும் நண்பனை திட்டுவதற்கு வாய் திறந்தவனிடம்

“விடு திவா அவனே பாவம் இவங்க எல்லாம் பண்ணி வச்ச காரியத்துக்கு அவன் என்ன பண்ணுவான்? ” என்று சமரச உடன்படிக்கைக்கு கொண்டுவர முயன்றவரை பார்த்து
“ சரி உங்ககிட்ட நான் கேள்வி ஒரு கேட்கிறேன் அதுக்கு பதில் சொல்றீங்களா? ” என்றவனை பார்த்து ‘ஐயோ அடுத்தது நானா என்று மனதில் அலரியவர்’
திவாகரை பாவமாக பார்த்து “ கேளுப்பா....” என்றார்.

“ இவங்க எல்லாம் பண்ணதுக்கு அவன் என்ன பண்ண முடியும் கேட்டீங்க இல்ல? ” என்று பொறுமையாக கேட்டு நிறுத்தியவனை பார்த்து அய்யய்யோ இவன் நம்ம கிட்ட இப்படி பொறுமையா கேக்குறதுக்கு அவங்களையெல்லாம் திட்டின மாதிரியே நம்மளையும் கடகடன்னு திட்டிட்டு போயிருக்கலாம் இவனை காப்பாற்ற நான் வந்து மாட்டிக்கிட்டேன் என்று மனதில் நொந்து கொண்டே
“ம்ம்ம்ம்ம்ம்” என்றார்.

“ அப்போ உங்க மாமியார் சொன்னாங்கன்னு உங்க வீட்டுக்காரர் உங்கள விவாகரத்து பண்றேன்னு சொன்னா ஒத்துபிங்களா? ”
என்றவனை அதிர்வுடன் இவன் என்ன சொல்றான் என்று புரியாமல் ஒரு நிமிடம் பார்த்தவர்கள், மறுநிமிடமே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பதிலாக,

ராணியம்மா “நான் ஏன் என் மருமகளை விவாகரத்து பண்ண சொல்ல போறேன்? ”
இந்திரா “நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் அதுபோல அவரும் எனக்கு கொடுக்க மாட்டார் ” என்று சிறு மன சுனக்கத்துடன் கூறியவரைப் பார்த்து ராஜேந்திர பிரசாத் உணர்ச்சிவசப்பட்டு,
“யார் என்ன சொன்னாலும் எந்த காரணத்துக்காகவும் என் பொண்டாட்டிய நான் விவாகரத்து பண்ண மாட்டேன்” என்று கோவமாக தன் மீசைய முறுக்கியவரை பார்த்துக் கடுப்பான ராணா
“வாவ் சூப்பர் உங்க பொண்டாட்டியை மட்டும் யாருக்காகவும் விவாகரத்து பண்ண மாட்டீங்க.. ஆனா என்னை மட்டும் ஏன் பண்ண சொன்னீங்க? ” என்று எகிறியவனை பார்த்து மனதில் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவர், வெளியில் என்ன கூறுவதென்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டு இருந்தார்.

இவர்களை கண்டுகொள்ளாமல்
“அவர் பண்ண சொன்னா உனக்கு எங்கடா போச்சு புத்தி? ” என்று திரும்பவும் தன்னை நோக்கி கேள்வி எழும் என்பதை மறந்து மாட்டிக்கொண்ட தன் முட்டாள்தனத்தை எண்ணி மறுபடியும் தன் தாயை நோக்கி பார்வையை திருப்பியவனை கண்டுகொள்ளாமல் அவசரமாக தன் பார்வையை இறந்து போன தன் மாமனாரின் படத்தின் புறம் திருப்பிக் கொண்டார் இந்திரா.


வேறு வழியின்றி தன் நண்பனின் புறம் திரும்பி
“ப்ளீஸ்டா சத்தியமா என்னால முடியல இதுக்கு மேல நான் வாய திறந்தா, அப்போ என்ன பார்த்து என்ன கேள்வி வேணா கேளு ஆல்ரெடி ஒரு யூடி புள்ளா என்ன திட்டி முடிச்சுட்ட திரும்பவும் திட்டுனா நானும் தாங்க மாட்டேன் இந்தக் கொடுமையை படிக்கிறவங்களும் தாங்க மாட்டாங்க.

அப்பப்போ டைம் கிடைக்கும் போது என்னை திட்டிக்கோ, ஆனால் இன்னிக்கு இது போதும்டா ” என்றவனை பார்த்து “பொழச்சுபோ” என்றவன்
ராஜேந்திர பிரசாத் புறம் தன் பார்வையைத் திருப்பியவன் “சொல்லுங்கப்பா நீங்க மட்டும் யாருக்காகவும் எதுக்காகவும் உங்க மனைவியை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் ஆனா, அவனை மட்டும் அவன் பொண்டாட்டிய விவாகரத்து பண்ண சொன்னது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி கேட்டான்.

ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா என்று நொந்துகொண்டு, தன் தாயின் புறம் திரும்பியவரை ராணி அம்மாள் ரகசியமாக
“இவனிடம் மனுசன் பேசுவானா? சாமி நீயாச்சு உன் புள்ளையோட பிரெண்டாச்சு ” என்று நொடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டார். அவரால் உதவிக்கு வர முடியாது என்று புரிந்து கொண்டவர், தானும் தன் மகனைப் போலவே பின்வாங்கி விடுவது தான் புத்திசாலித்தனம்! மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு

“தப்பு தான் பா எல்லாம் தப்புதான், அப்போ இருந்த சூழ்நிலையில் அப்படி ஒரு தப்பான முடிவுவை எடுத்துட்டேன் இப்போ புரியுது ஆனா இப்போ தான் எல்லாம் முடிஞ்சிருச்சே! அத பத்தி பேசி என்ன ஆகப் போகுது? நீ ஆகவேண்டியதை பாரு.. இதுக்கு மேல நான் என்ன பண்ணனும்னு சொல்லு பண்றேன் ” என்று தன்மையாக கேட்டார்.

“சரி விடுங்கப்பா. அதுதான் நான் சொன்னேனே.. மொத்த தப்பும் உங்க மேல இல்லன்னு! நீங்க விவாகரத்து பண்ண சொன்னா, நான் எதுக்கு என் பொண்டாட்டியை பண்ணனும்னு சொல்லி அப்போ உங்க கிட்ட சண்டைக்கு வந்திருக்கணும் இல்லையா? பொண்டாட்டிய கூட்டிட்டு தனிகுடித்தனம்மாவது போயிருக்கணும் அதெல்லாம் விட்டுட்டு இப்போ உங்களை மட்டும் சொல்லி என்ன ஆகப்போகுது? இதுக்குமேல அவனுக்கு பாக்குற பொண்ணு ஏற்றவளா? அதுதான் இப்ப முக்கியம்” என்று முடித்தான்..

“அதுதான் நாங்க சொல்லிட்டோம்ல திவா இனிமே பொண்ணு பாக்குறது உன்னோட வேலை. அதுல நாங்க யாரும் தலையிட மாட்டோம்” என்று முடித்த இந்திராவை ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்த ராஜேந்திரன், இதற்கு மேல் ஒன்னும் பண்ண முடியாது என்று புரிந்துகொண்டார்..

“ஆமா திவா இந்திரா சொல்ற மாதிரி இனி எல்லாம் உன் பொறுப்பு” என்று வேண்டா வெறுப்பாக கூறி முடித்தவரை முறைத்த ராணியம்மா
“அது எப்படி குலம் கோத்திரம் எல்லாம் பார்க்காமல் கட்டமுடியும் ” என்று கேட்டவரிடம் திவாகர்
“இந்த குடும்பத்தை பத்தி எனக்கு தெரியாததா பாட்டி? நீங்க சொல்ற உங்க குலம் கோத்திரத்தில் தான் பெண் தேர்ந்தெடுத்து கொடுப்பேன். அதே சமயத்தில் அந்தப் பொண்ணு ராணாவுக்கு பொருத்தமாக பார்ப்பேன். போதுமா இதுக்குமேல எந்த ஆட்சேபனையும் இல்லையே? உங்களுக்கு உங்க ஜாதியில், குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா ராணாவுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகுற மாதிரி, அதே சமயத்தில் அழகாகவும் இந்த குடும்பத்தை அனுசரிச்சு போற மாதிரியும் ஒரு பொண்ணு வேணும் அவ்வளவுதானே” என்றவனை

“ ஆமாப்பா, என் பேரன் வாழ்க்கை நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும். நான் வேற என்ன கேக்க போறேன்? இந்தக் கட்டை வேகறதுக்குள்ள,, என் கொள்ளு பேரனை பார்த்துட்டாப் போதும், இதுக்கு மேல எல்லாம் உன் பொறுப்பு தான் ” என்று கூறிவிட்டு தன் மகனை வருமாறு கண் ஜாடை காட்டி விட்டு அங்கிருந்து அகன்று விட்டார்.

தாய் சென்றதும் தனக்கும் வேலை இருப்பதாக கூறிக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று கிளம்பினார் ராஜேந்திரன்.

அவர்களிருவரும் சென்றவுடன் இவர்கள் அருகில் வந்து அமர்ந்த விமல் விழுந்து விழுந்து சிரிக்கவும் அவன் முதுகிலே ஒன்று போட்டு “எதுக்குடா இப்போ இப்படி சிரிக்கிற” என்று கேட்டவரைப் பார்த்து மீண்டும் மீண்டும் சிரித்தவனை அவன் எதற்கு அப்படி சிரிக்கிறான் என்று புரிந்து கொண்ட ராணாவுக்கும் திவாகர்கும், அந்த புன்னகை தொற்றிக்கொண்டது....

ஸ்வரமாகும் ....
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
12466
வரம் 9

திவாகரன் வந்து இன்றுடன் இரண்டு தினங்கள் முடிவடைந்த நிலையில் சென்னை கிளம்ப தயாராகிக் கீழே வந்தவன், தான் கிளம்புவதை முன்னிட்டு மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தவர்கள் பார்த்து அவர்களுக்கு ஆப்பு அடித்து விட்டு செல்வதற்கு விரும்பியவன், நான் இல்லன்னாலும் நீங்க நடத்த விரும்பியது நடக்காது என்று எண்ணிக்கொண்டே

“ ராணா போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரே ஒரு சத்தியம் பண்ணி கொடு ” என்ற திவாவை

“ சத்தியமா? எதுக்குடா?” என்று கேட்க

“ ம்ம்ம்ம் சொன்னாதான் செய்வீர்களோ! நான் கேள்விப்பட்டேன், சார் எது கேட்டாலும் கொடுத்திடுவார்னு. அதுக்குதான் எதுக்கும் ஒரு முன்னெச்சரிக்கையா இருக்கட்டுமேன்னு தான் கேட்டேன் ” என்றவனை

“ வேணாம் தயவு செஞ்சு நீ விளக்கமே கொடுக்காத, உனக்கு என்ன சத்தியம் தானே வேணும் என்னத்துக்கு சத்தியம்னு சொல்றா பண்ணிடுறேன்” என்று புலம்பியவனைப் பார்த்து சிரித்து

“ நான் சொல்லுறேன்.., ஆனா அதுக்கு முன்னாடி யாரும் என் மேல கோபப்படாதீங்க, ஏன்னா இது உங்க பையனோட நல்லதுக்காக தான் கேட்கிறேன். வேற யாரும் தப்பா அவனை யூஸ் பண்ணிக்க கூடாது இல்ல அந்த நல்ல எண்ணம்தான், மத்தபடி வேற எதுவுமே கிடையாது. முக்கியமா இங்க இருக்க யாரையும் சந்தேகப்பட்டு இல்ல, சில நேரத்தில் சந்தர்ப்பம் அப்படி அமைஞ்சுரும் அதுக்கு தான் முன் யோசனையாக இருக்கறது நல்லதுல்ல ” என்று கூறியவன் ராணாவின் தந்தையையும் பாட்டியையும் பார்க்க, அவர்களோ மனதிற்குள் போற நேரத்துலயும் நமக்கு ஏதோ வில்லங்கத்தை உண்டு பண்ணிட்டு தான் போக போறான் போலயே என்று ஒரு சேரப் புலம்பினார்கள்.


நண்பன் என்ன கூற வருகிறான் என்று புரியாமல் “ நீ சொல்லு நான் சத்தியம் பண்றேன் ” என்றான் ராணா,


“ அது ஒன்னும் பெருசா இல்ல திடீர்னு யாருக்காவது ஏதாவது ஆகி எல்லாரும் முறைக்காதீங்க சும்மா பொதுவா சொன்னேன்...., என்னையும் சேர்த்துதான் அப்படி ஏதாவது ஆகி என் கடைசி ஆசை இப்பவே கல்யாணம் பண்ணிக்கோன்னு யாராவது சொன்னாங்கனா எக்காரணத்தை கொண்டும் யாருக்காகவும் தாலிகட்ட மாட்டேன்னு சத்தியம் பண்ணு ” என்றவனை அனைவரும் வெட்டவா குத்தவா என்பதுபோல் பார்த்தார்கள் என்றால், ராணா மட்டும் “ ஏண்டா என் மேல கொஞ்சம் கூட உனக்கு நம்பிக்கை இல்லையா ” என்ற ஆதங்கப்பட்ட நண்பனிடம்


“ சத்தியமா இல்ல நீ பண்ணு ” என்ற தீவாவை


“ ஆனால் இவ்வளவு சந்தேகம் ஆகாதுபா உனக்கு ” என்று அங்கலாய்த்த இந்திரா

தன் மகனிடம் “ ராணா நீ சத்தியம் பண்ணி கொடுத்துவிடு, இல்லன்னா இவன் ஊருக்கு போகாமல் ஒரு நாள் முழுக்கப் பேசுவான். எங்களுக்கு என்ன அதுதான் எல்லாத்தையும் உன் பொறுப்புல விட்டுட்டோம்ல இந்தா அவனோட சேர்த்து நானும் உனக்கு சத்தியம் பண்றேன், நீ பார்த்து ஓகே பண்ற பொண்ண தவிர வேற எந்த பொண்ணையும் ராணா கட்டமாட்டான்..., இது சத்தியம் சத்தியம் சத்தியம் போதுமா இப்ப சந்தோஷமா நிம்மதியா கிளம்புவியா ” என்ற இந்திராவிடம் வந்து ஆசி பெற்றவன் அனைவரிடமும் கூறிக்கொண்டு கிளம்பியவனைப் பார்த்து அடப்பாவி போகும்போதும் நிம்மதியா இருக்க விடாமல் பண்ணிட்டு போயிட்டானே என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டனர் இருவரும்.


ஏர்போர்ட்டை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்த ராணா திவாகரிடம் “ நீ என் வீட்டு ஆளுங்க மேல சந்தேகப்படுரியா ” என்று அமைதியாக வந்து கொண்டிருந்த தன் நண்பனை பார்த்து கேட்டவன் அவன் அமைதியாகவே இருக்கவும்


“ ஏன் அவங்க மேல உனக்கு நம்பிக்க இல்லன்னு எனக்கு தெரியல? ஆனா அவங்க எல்லாம் கெட்டவங்க இல்ல, எனக்காக எதுவும் செய்வாங்க ” என்று கூறிவிட்டு இப்பொழுதாவது ஏதாவது கூறுவானா என்று திவாகரனை பார்த்தவன் தன்னை ஒரே ஒரு பார்வை அழுத்தமாக பார்த்துவிட்டு திரும்பி கொண்ட நண்பனிடம் இதற்குமேல் பேசினாலும் பதில் வரப்போவதில்லை என்றறிந்து மௌனமாகவே ஏர்போர்ட் வந்து அடைந்திருந்தனர்.


செல்லும் தருவாயில் தன் நண்பனிடம் திரும்பிய திவா “ நீ கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் ஒரு நாள் நான் சொல்லாமயே தெரியவரும், ஆனா இப்ப நான் எது செஞ்சாலும் அது உன் நல்லதுக்கு மட்டும் தான்னு என்ன நம்பு அது போதும். எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்ச்சியிலும் மாட்டிக்காத டேக் கேர் ” என்று விடைபெற்ற நண்பனிடம்


“ உன்ன நம்பினதாலதான் என் குடும்பத்தில் இருக்குறவங்கள சந்தேகப்பட்டு நீ பேசியும் அமைதியா இருக்கேன். இதுவே உன்னை தவிர வேற யாராவது பேசி இருந்தா இந்நேரம் நடந்து இருக்கிறதே வேற ” என்ற நண்பனை


“ போடா போடா உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் ” என்று இன்முகத்துடனே தன் நண்பனிடம் விடைபெற்று கிளம்பிவிட்டான்.


சென்னையில் படு மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்த அந்த அலுவலகத்திற்குள் தன் வழக்கமான வேக நடையுடன் அனைவரின் வணக்கத்தையும் ஏற்றுக்கொண்டு தன் கேபினில் வந்து அமர்ந்தவனுக்கு நண்பனைப் பார்க்க சென்றதனால் நிலுவையில் இருந்த அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, தான் வெளிநாடு சென்று வந்த ப்ராஜெக்ட் விஷயமாக மீட்டிங் ஹாலில் அனைவரையும் அசம்பிள் ஆக சொல்லி அங்குசென்று அதுகுறித்து பேசி டீம் மேனேஜர்களிடம் அவரவர்களுக்கான டீம் மெம்பர்கள் பிரித்துக் கொடுத்துவிட்டு டீம் லீடர்களிடம் மீட்டிங்கை முடித்தவன் "ஓகே காய்ஸ் திஸ் மீட்டிங் இஸ் ஓவர் "என்று அவர்களை அனுப்பிவிட்டு தன் கழுத்துக்கு அடியில் இரு கைகளையும் கோர்த்து தன் இருக்கையில் கண்மூடி சாய்ந்திருந்தவனிடம்


பேருக்கு அனுமதி என்ற பெயரில் மீட்டிங்கை முடித்து வெளியே சென்றவள் மீண்டும் கதவைத் தட்டிக் கொண்டே “ஹாய் அண்ணா.., என்ன ஊர்ல இருந்து வந்ததும் வராததுமா வீட்டுக்கு கூட போகாமல் டைரக்டா இங்க வந்தாச்சா ” என்று தன்னிடம் எந்த பயமும் இல்லாமல் இந்த கம்பெனியில் எந்த ரூல்சைய்யும் மதிக்காமல் குறும்புத்தனம் செய்பவள். வேலை என்று வந்துவிட்டால் அதற்கு நேர்மாறாக அனைவரையும் ஒரு வழியாக்கி தான் எடுத்ததை வெற்றியுடன் முடித்து விடுபவள் நயனிகா ( அப்பாடா ஒரு வழியா ஹீரோயினை கூட்டிட்டு வந்துட்டேன் ) தான் எங்கு சென்று வந்தாலும் தன்னை வந்து பார்த்து விடும் தன் உடன் பிறவா தங்கை, இன்று தான் வந்ததிலிருந்து அமைதியாக தன்னை கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தவள், இதற்கு மேல் தாக்குப் பிடிக்காமல் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில்தான் அதே அறையில் அமைந்திருந்தவன் நம்பிக்கையை பொய்யாக்காமல் தன்னை நாடி வந்தவளை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தவன்


தான் சிரித்ததினால் கடுப்பாகி தன் கையில் வைத்திருந்த பைலை கொண்டு அடிக்க முற்பட்டவளை

“ ஸ்டாப் இட் ! இது என்ன ஆபீஸா இல்ல வீடா ? ” என்று தான் மறந்து வைத்த பைலை எடுக்க உள்ளே நுழைந்த மலரை பார்த்து ஐயோ இவளா என்ற நயனிகா


திவாகரிடம் திரும்பி “எல்லாம் உன்ன சொல்லணும்! தங்கச்சியை பார்க்க வந்தோமா, தங்கச்சி பிரெண்ட தங்கச்சியா பார்த்தோமான்னு இல்லாம இவள லவ் பண்ணிட்டு என் உசுர வாங்குற. படிக்கிற காலத்துலதான் என் கூடவே இருந்து உசுர எடுத்தான்னு நெனச்சா அவளுக்கு என்கூடவே வேலையும் கொடுத்து இங்க கொடுமை அனுபவிக்கிறது மட்டும் இல்லாம கடைசிவரை அவ எனக்கு அண்ணியா இருந்து கொடுமைப்படுத்த பிளான் பண்ணிட்டல்ல நீ ...... ” என்று மலரையும் திவாகரையும் பார்த்து முறைத்தாள்.


“ மிஸ் நயனிகா நீங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சுனா வறீங்களா ” என்ற மலரைப்பார்த்து

“ மிஸ் மலர் வேந்தன் அவங்களுக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு, அதை அவங்க முடிச்சுட்டு கெளம்புனதுக்கப்புறம் நீங்க வாங்க உங்ககிட்ட ஒரு பிளானை பத்தி பேசணும் சோ யூ கேன் கோ நவ் ” என்ற திவாகரை

“ ஓகே சார் .... ” என்று திவாகரிடம் கூறிவிட்டு நயனிகாவை முறைத்தவளைப் பார்த்து சிரித்தவள்


திவாகரனிடம் “ ஏன்ணா உனக்கு இந்த பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா? இவதான் உன் பொண்டாட்டினா நான் நாத்தனார் முடிச்சு போடமாட்டேன் ” என்று மிரட்டியவளை


“ பரவால்ல மூன்று முடிச்சயும் நானே போட்டுப்பேன்.., இல்லனா செயினை வாங்கி கழுத்தில் மாட்டிவிட்டுவிடுவேன் ” என்று சொல்விட்டு சிரித்துக் கொண்டிருந்தவனை பார்த்து


“ சரி சரி ஏதோ சின்ன பையன் ஏமாந்துவிட கூடாது என்பதற்காக ஒத்துக்கிறேன் பொழச்சு போ! ஆமா நான் போனதுக்கப்புறம் அவளை எதுக்கு நீங்க தனியாக கூப்பிட்டு இருக்கீங்க. இதெல்லாம் சரியில்லை இருங்க அத்தை கிட்ட வந்து போட்டு கொடுக்கிறேன், ஆபீஸ்னா வேலை பாக்கணும் லவ் பண்ணக்கூடாது புரிஞ்சுதா” என்றவளின் காதை பிடித்து திருகியவன்


“ வாலு வாலு போய் வேலையை பாரு இல்ல உனக்கு டின்னு கட்டிட்டுவா... அப்புறம் ஈவினிங் வீட்டுக்கு போகாம வெயிட் பண்ணு நான் ட்ராப் பண்ணிடுறேன் ” என்றான்.


தலையை சிலுப்பிக் கொண்டு “ நோ தேங்க்ஸ் தன் ஸ்கூட்டியே தனக்குதவி. சரி சரி அங்கு ஒரு பாய்லர் ரொம்ப சூடாகி வெடிக்கிறதுகுள்ள நான் கிளம்புறேன் பாய் பாய் ப்ரோ ” என்று சிட்டாக பறந்த தன் தங்கையை பார்த்து புன்னகைத்துக் கொண்டவன்


தன்னவளின் வருகைக்காக காத்திருந்தாவனுக்கு அவள் எப்பொழுதும்போல் அனுமதிபெற்று உள்நுழையவும் அவளின் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு நினைத்து சந்தோசப்படுவதா இல்லை துக்கப்படுவதா என்று தெரியாமல் ஒரு சில வினாடிகள் குழம்பியவன் அவளின் முகத்தை கண்டவனுக்கு ஏகத்திற்கும் கடுப்பாகியது ....


தன்னை பல மாதங்களாக காணாமல் இருந்தவள் தன்னை கண்டவுடன் இந்தப் பிரிவின் வேதனையையோ இல்லை தன்னை கண்ட சந்தோஷத்தையோ அட்லீஸ்ட் கண்களில் காதலையாவது வெளிப்படுத்துவாள் என்று பார்த்தவனுக்கு அவளின் முகத்தில் கடமை உணர்ச்சி தவிர வேற எதுவும் பிரதிபலிகாததை பார்த்து நொந்து போனவன் தன் மனசாட்சியும் தன் தங்கை கேட்ட அதே கேள்வியான, இந்த பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? என்று கேட்ட மனசாட்சியை அவசரமாக உதரி தள்ளியவன்


தற்போது அவள் தலைமையில் நடந்து கொண்டிருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் டீடெயில்ஸ் பத்தி பேசி முடித்தவுடன் தன்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப எத்தனித்தவளை “ ஒரு நிமிடம் ” என்று தடுத்தவன்


அவள் தன்னைக் கேள்வியாக நோக்கி கொண்டிருப்பதைக் கண்டு தன் காதல் மொத்தத்தையும் தன் கண்கள் வழியாக அவளுக்கு செலுத்த முற்பட்டவனை கண்டு சுதாரித்தவள்


“ சார் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஒன்னும் இல்லன்னா நான் கிளம்புறேன் ” என்று சொல்லிக்கொண்டு கிளம்ப முற்பட்டவளை


“ எம்டி நான் சொல்றத கேட்கிறத விட உங்களுக்கு அப்படி என்ன வேலை ” என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கியவனை பார்த்து மனதிற்குள் ஒரு படபடப்பு ஏற்பட்டாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவனிடமிருந்து விலகி நிற்க முற்பட்டவள்

“ சார் இது சரியில்லை ” என்று தான் நெருங்க நெருங்க இருவருக்குமிடையில் அவளின் கரம் கொண்டு தடுத்தவலை

அவள் கரம்பற்றி தன்னிடம் மிக நெருக்கமாக இழுத்து நிறுத்தியவன் ஏன்டா உனக்கு என்மேல இருக்கிற காதலை புரிஞ்சும் புரியாத மாதிரி நடந்துக்குற என்னோட பிடிவாதம் புடிக்கலைன்னு சொன்ன ஆனா என்னோட பிடிவாதத்தை உன் ஒருத்தியால் மட்டும் தான் சமாளிக்க முடியும் , அப்புறம் என்னோட ஸ்டேட்டஸ் பத்தி சொன்ன ஸ்டேட்டஸை பார்த்து வரதுக்கு பேரு காதலே இல்லை அதுபோல எப்போ உன் கண்ணிலே எனக்கான காதலை பார்த்தேனோ அப்பவே உன்னை என் மனைவிய நினைக்க ஆரம்பிச்சுட்டேன் என்று நிதானமாக கூறியவன்

அப்பொழுதும் தன்னிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடியவலை பார்த்து தன் இத்தனை வருட பொறுமையையும் கைவிட்டவன் இவளின் பிடிவாதத்தை போக்க அதிரடி தான் சரிப்பட்டு வரும் என்று அவளை இறுக அணைத்தவன்

தன் இத்தனை நாள் காதலையும் அவளைப் பிரிந்து இருந்த இத்தனை ஏக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர விரும்பாதவன், அவள் சுதாரித்து தன்னிடம் இருந்து விலகும் முன்னரே அவள் இதழ்களை தன்வசம்மாக்கிக் கொண்டவனுக்கு அவளின் இதழ்களை விடுவிக்கும் எண்ணமே இன்றி அதில் மேலும் மேலும் மூழ்கியவனுக்கு தன்னவள் தன்னிடம் இருந்து விடுபட போராடிக்கொண்டு இருந்தாலும் அவளின் எதிர்ப்புகளை எளிதில் முறியடித்து தன்னவள் தன்னையும் மீறி தன்வசம் ஆகும்வரை விடாமல் அவள் இதழ்களில் கவி எழுதியவன், அவளும் தன் முத்தத்திற்கு ஏற்ப இசைந்து கொடுக்கவும் அவ்விதழ்களுக்கு விடுதலை அளித்து அவள் முகம் நோக்கியவனுக்கு


தான் அளித்த முத்த மயக்கத்திலிருந்து விடுபடாமல் கண்ணிமைகளை இறுக மூடி துடிக்கும் இதழ்களுடன் இருகைகளாலும் தன்னை வளைத்துக்கொண்டு இருந்தவளைப் பார்த்து தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மீண்டும் அவள் அதரங்களில் ஆழ்ந்த முத்தம் ஒன்று இட்டவன் அவளை தன்னிடமிருந்து விலக்கி அங்கிருந்த தன் சேரில் அமர வைக்கவும் அதுவரை இருந்த மயக்கம் முற்றிலும் விடுபட்டு எழ முயன்றவளை தடுத்து


“ ப்ளீஸ் பேபி இதுக்கும் மேல என்னால காத்திருக்க முடியும்னு தோணல! உன்ன பாக்காம இருந்த இத்தனை மாசத்துல ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுகிட்டேன்..., நீ இல்லாமல் என்னால இருக்கவே முடியாதுன்னு ஐ மிஸ் யூ ஐ மிஸ் யூ லாட் ” என்று அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு


“ நீ எவ்வளவுதான் மூடிமறைக்க ட்ரை பண்ணாலும் இந்த ஒரு முத்தத்திலேயே உனக்கு மொத்தமா புரிஞ்சிருக்கும் நம்ப ரெண்டு பேருக்குள்ளேயும் காதல் இருக்கு. அதேசமயம் எந்த எதிர்ப்பும் இல்லாதபோதும் வீணா எதுக்கு அடம் பிடிக்கிற பேபி! புரிஞ்சுக்கடா இதுக்கு மேல இந்த ஸ்டேட்டஸ் நினைச்சு நீ விலக நினைச்சாலும் நான் விலக அனுமதிக்கமாட்டேன். ஆனா அதே சமயம் உனக்குள்ள என்மேல் இருக்கும் காதலை நீ என்கிட்ட வெளிப்படுத்தனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.., ப்ளீஸ் பேபி ஒரே ஒரு வாட்டி ஐ லவ் யூ சொல்லு ” என்று தன் முன் மண்டியிட்டு காதல் யாசகம் கேட்பவனை வெட்கம் வந்து தடுத்தாலும் அனைவரையும் தன் பார்வையால் ஆட்டுவிப்பவன் தன்னிடம் இரஞ்சுவது பிடிக்காமல் “ ஐ லவ் யூ ” என்று கூறி தன் காதலை முதல்முறையாக வெளிப்படுத்தியவள் என்னதான் தைரியமாக அவன் இல்லாத சமயங்களில் கம்பெனியை வழி நடத்தி சவாலாக பலபேரை எதிர்கொண்டவளுக்கு தன்னவனின் ஒற்றைப் பார்வை எதிர்கொள்ள இயலாமல் தன்னவனை விலக்கி செல்ல முற்பட்டவளை, தன் கை வளையத்திற்குள் நிறுத்தி குனிந்திருந்த அவள் மதி முகத்தை தன் ஒற்றை விரல் கொண்டு தன் முகம் பார்க்க செய்தவன் தன் நெற்றியால் அவன் நெற்றியை முட்டி மிஸ் மலர் வேந்தன் , மிஸஸ் மலர் திவாகரன் ஆக சம்மதமா என்று தன் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் தன் குரலில் வழியே விட்டு கேட்டவனிடம்


அவன் கண்களை பார்த்து “ சம்மதம் ” எனக்கூறி தன்னைமறந்து அவன் நெற்றியில் முத்தமிட்டவள் தான் செய்த செயல் செய்து முடித்த பின்னரே உரைக்க அவன் முகம் காண சங்கடப்பட்டு தலைகுனிந்தவளை அதற்கு அனுமதிக்காமல்


அவளின் கன்னங்கள் இரண்டையும் பற்றி கொண்டவன் “ என் பேபி வெட்கத்தில் கூட என்னிடம் தலைகுனிய கூடாது ” என்று கர்வமாக கூறியவன் தான் கூறியதைக் கேட்டு கண்கள் மின்ன தன்னையே பார்த்திருக்கும் அவள் கண்களில் முத்தமிட்டு அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் அவளை செல்ல அனுமதித்தவன்


அவள் சென்று வெளியேறும் தருவாயில் தன்னை நோக்கித்திரும்பி பார்த்தவளை மனதில் குடிகொண்ட மகிழ்ச்சியுடன் “உன்னை சீக்கிரமா சிறை எடுக்கிறேன்” என்று கூறி தன்னவளுக்கு தலை அசைவுடன் விடை கொடுத்தவன் தன் நண்பன் பிரச்சனையை முடித்துவிட்டே தன் திருமணத்தை பற்றி பேச வேண்டுமென்ற முடிவுடன் நண்பனின் திருமணத்தை பற்றிப் பேச தன் தந்தையை காண சென்றான் .........



ஸ்வரமாகும் ....
 
Last edited by a moderator:

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ் எல்லாரும் எப்படி இருக்கிறீங்க😍😘 , இரண்டு வாரங்களாக எனக்காக பொறுமையாக காத்திருந்திருந்தமைக்கு நன்றி🙏🙏. புதன் அன்று வழக்கம் போல எபியோட வருகிறேன், இன்று உங்களுக்காக இந்த டீசர் படித்து பார்த்து கருத்துக்களை பகிரவும் 😍😘.

“ண்ணா உனக்கு இந்த பொண்ணு வேணாம்ணா இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு” என்று திக்கித்திணறி தான் கூற வந்ததை ஒருவழியாக கூறிவிட்டான். தன் தம்பி கூறியதைக் கேட்டு ஆச்சரியமாக நோக்கியவன் ஏனென்று கேட்க வருமுன்.... மிகவும் கடுப்பான குரலில் ஏன் என்று கேட்டான் திவா.... திவாகரை சற்றும் எதிர்பார்க்காத விமலுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது, தன்னையே பார்த்திருக்கும் இருவருக்கும் என்ன பதில் கூறுவது என்று புரியாமல் தவித்தவன், பயத்தில் என்ன செய்கிறோம் என்ன சொல்கிறோம் என்று உணராமல் சிறுவனைப் போல் சுண்டு விரலை நீட்டி “பாத்ரூம் போகணும் அதுக்கு எப்படி போகணும்னு கேட்க வந்தேன் அண்ணா! அதத்தான் மாத்தி விளையாட்டுக்கு அண்ணாகிட்ட அப்படி கேட்டேன் ஈஈஈஈஈ” என்று அனைத்து பல்லையும் காட்டி இழித்தான்.
**************************

வீட்டை சுற்றி பார்க்கும் பாவனையில் கையில் மொபைலை வைத்து நோண்டிக்கொண்டே மாடியில் இருக்கும் அறைகளில் ஓர் அறையை கடக்க முற்படும் வேளையில், அவனின் கைகளை ஒரு வளைக்கரம் பற்றி அறைக்குள் இழுத்து விட்டது, ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் அதிர்ந்து நிமிர்ந்தவன் அடுத்த அதிர்ச்சியாக தன்னைப் பார்த்து படு நக்கலாக சிரித்துக் கொண்டிருந்த நயனிகாவைப் பார்த்து அதிர்ந்து நின்று விட்டான் விமல்.
அவனின் அதிர்ச்சியை போக்க, அவன் மண்டையில் ஒரு தட்டுத் தட்டியவளை பார்த்து கோவமானவன் “ஏய் என்ன கொழுப்பா நான் யாருன்னு தெரியாம என்கிட்ட விளையாடுற நீ ” என்று கூறிய விமலிடம்
************************


நினைச்சேன் “அப்போ உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே ஒருத்தர ஒருத்தர் நல்லா தெரியும் அப்படித்தானே” என்று கைகட்டி நின்றிருந்த திவாகரனை பார்த்து பேய் முழி முழித்து இருவரும் திவாகரின் சப்போர்ட்டை பெறுவதற்கு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கூறுகிறேன் பேர்வழி என்று இருவரும் ஒரே நேரத்தில்

“இவன்தான்ணா குடிச்சிட்டு என் வண்டிய இடிச்சதும் இல்லாம என்கிட்ட சண்டைக்கு வந்தான்” என்று இவளும்

“இல்லணா இவங்கதான் சரக்கு அடிச்சுருந்த அவங்க பிரெண்ட்ஸ்ங்களோட சேர்ந்துகிட்டு என் வண்டியை இடிச்சுட்டு சண்டைக்கு வந்தாங்க” என்று விமலும் ஒரே நேரத்தில் கூறி ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் இருவரும் கூறியதை கேட்டு கடுப்பான திவா “அப்போ நீங்க ரெண்டு பேரும் குடிச்சுட்டு நடுரோட்டில் சண்டை போட்டு இருக்கீங்க. வெக்கமா இல்ல உங்க ரெண்டு பேருக்கும்? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல! இது எப்ப நடந்துச்சுனு என்கிட்ட இப்ப சொல்லல உங்க ரெண்டுபேரையும் உண்டு இல்லனு ஆக்கிடுவேன் ” என்றான் திவாகர்.
அவன் கூறியதை கேட்ட இருவரும் சண்டை போடுற ஆர்வத்துல மண்டைக்கு மேல இருக்குற கொண்டையை மறந்திட்டமே என்று புலம்பியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மனதை திடப்படுத்திக் கொண்டு யார் ஆரம்பிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தவர்களை பார்த்த திவாகரன்

“ பேபி ஃபர்ஸ்ட் நீ சொல்லு ” என்று கூறியவனை பாவமாக பார்த்தவளை உன் பார்வைக்கெல்லாம் நான் அசரமாட்டேன் நீ யார்னு எனக்கா தெரியாது சொல்லு என்பது போல் அசையாமல் நின்றவனிடம்

எப்படி மாட்டாமல் தப்பிக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்ச நயனிகாவை பார்த்து மனதிற்குள் குதூகலம் கொண்ட விமல் அவளை மாட்டிவிடும் அவசரத்தில் அடுத்த ஆடு தான் தான் என்று மறந்து ஆர்வக்கோளாறில்

“ ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி பப் பார்க்வேல பார்க்கிங்கில் தான் எங்களுக்கு சண்டை வந்துச்சுணா நைட் ஒரு ஒரு மணி இருக்கும் நான் வண்டி ரிவர்ஸ் எடுக்கும்போது இவங்க வண்டிய தப்பா கொண்டு வந்து இடிச்சுட்டு எங்கிட்ட சண்டைக்கு வந்தாங்கணா ” என்று சொல்லி எப்படி மாட்னியா என்று இவளைப் பார்த்து

உன்னைப்போய் பேபியாம் பேபி நீ பேபி இல்ல பேய் என்று கூறி அவளைப் பார்த்து சிரித்த விமலை முறைத்த நயனிகா

“ பரதேசி பரதேசி ” என்று திட்டியவலை

“ ஏய் மரியாத மரியாத ” என்றவனிடம்

“ஆமா அதுதான் இப்போ ரொம்ப முக்கியம் மூஞ்சபாரு நீ மாட்டுவதும் இல்லாம என்ன எதுக்குடா மாட்டி விட்ட ” என்று அவள் கூறிய பிறகுதான் அட ஆமால்ல என்று புலம்பியவனுடன் சேர்ந்து திவாகரை பார்த்த இருவருக்கும் குலை நடுங்கியது....
12676
 
Last edited by a moderator:

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
12699வரம் 10

தன் தந்தையிடம் பேச வீட்டுக்கு வந்திருந்தான் திவாகரன், அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் துளசிராம் (நயனிகாவின் தந்தை )


அவரை தந்தையுடன் பார்த்ததும் ஒரு நொடி தன் தந்தையிடம் தனித்து பேசலாமா என்று யோசித்தவன், மறுகணமே அதை ஒதுக்கி எப்படியும் இவங்க கிட்ட பேசித்தான் ஆகணும், பரவால்ல தனித்தனியா பேசுறதுக்கு ரெண்டு பேர் கிட்டேயும் ஒன்னாவே பேசிடலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டான்.


“ஹாய் பா! ஹலோ மாமா! எப்படி இருக்கீங்க ” என்று கேட்டுக்கொண்டே அவர்கள் அருகில் சென்று அமர்ந்தான்.

திவாகரை அந்நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத இருவரும் அவனை ஆச்சரியமாக நோக்கி தத்தம் தங்களின் நலனைப் பரிமாறிக் கொண்டவர்களை பார்த்து

“ஆக்சுவலி உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன் ” என்று கூறிய அவனிடம்

“ஓ! ஓகே ஓகே திவா, அப்போ நான் கிளம்புறேன்டா குரு, நீங்க ரெண்டுபேரும் பேசுங்க நான் அப்புறமா வரேன்” என்று கூறி எழுந்து கொள்ள முற்பட்டவரிடம்

“ இல்ல இல்ல நீங்க உட்காருங்க மாமா நான் அப்பாகிட்ட பேச தான் வந்தேன், ஆனா அதுக்கப்புறம் உங்ககிட்டயும் பேசுறதுக்கு வந்திருப்பேன்” என்று கூறியவன்

அவர்கள் இருவரிடமும் ராணாவை பற்றியும் அவன் வாழ்க்கையில் தற்போது வரை நடந்தது அனைத்தும் கூறியவன், அவனின் முதல் திருமணத்திற்கு முன் அவனுக்கு நயனிகா பொருத்தமாக இருப்பாள் என்று தான் யோசித்ததையும், இப்பொழுது அதைப்பற்றியே பேச வந்ததையும் கூறி நிறுத்தினான்.
அவன் கூறியதைக் கேட்டு சற்றும் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்காத இருவரும் அமைதியாக இருந்தனர், ஆனால் அவர்களை பேசவிட்டு உள்ளே தனியாக பேசிக்கொண்டிருந்த அவர்களின் மனைவிமார்களும் அவன் வரவை உணர்ந்து அங்கு வந்தவர்கள், அவன் பேசியது அனைத்தையும் கேட்டு தங்கள் கணவர்களை போல் அதிர்ச்சியானார்கள்.

அதில் முதலில் சுதாரித்த திவாகரின் தாய் “யாரைக் கேட்டு நீ முடிவு, பண்ண அதுவும் இரண்டாம் தாரமா பாப்பாவ கொடுக்க நாங்க எப்படி ஒத்துக்கொள்வோம் நினைச்ச”

“ மா நீங்களே இப்படி பேசினா எப்படி! அவனைப்பற்றி உங்களுக்கு தெரியாதா? இதுல அவன் தப்பு எதுவுமே இல்லைனு தெரியும்தானே ” என்றவனை மற்ற மூவரும் இது ஒத்து வராது எனும் வகையில் அவனிடம் வாதிட்டவர்களை எப்படி சொல்லி இவர்களுக்கு புரிய வைப்பது என்று திணறியவன்,

அங்கு தான் செல்வதை அமைதியாக கேட்டு கொண்டு நின்றிருந்த கௌரியை பார்த்து ( நயனிகாவின் தாய் )

“அத்தை நீங்களே சொல்லுங்க நான் என் பேபிமாக்கு ஏனோதானோன்னு மாப்பிள்ளை பார்ப்பேனா! அவன் என் ஃப்ரெண்ட்னா பேபி என் சிஸ்டர் இல்லையா? நாங்க ரெண்டு பேரும் வேற வேற வயித்துல பொறந்திருந்தாலும் அவ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியாதா, அவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தா பேபிமாவ நாம எப்படி பார்த்துக்கொள்வோமோ அதுமாதிரி பார்த்துப்பான். அவன மாதிரி ஒரு நல்லவன் கிடைக்கிறது கஷ்டம், ப்ளீஸ் அத்தை நீங்களாவது நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்” என்றான் திவாகரன்.

“அப்ப நான் யோசிக்க வேணாமா?” என்ற குரல் வந்த திசையில் திரும்பிய அனைவரும் அங்கு நயனிகாவை சற்றும் எதிர்பார்க்காததால் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றார்கள்.

அனைவரும் எதுவும் கூறாமல் அமைதி காக்க திவாகரன் அருகில் வந்தவள், அவனை அழைத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் சென்று “ப்பா” என்றழைத்து தன் அண்ணனின் கையை பற்றிக்கொண்டு தந்தையின் மடியில் அமர்ந்துகொண்டு

“ம்ம்ச் ப்பாபாபா இப்போ எதுக்கு இவ்வளவு உம்முனு முகத்தைத் தூக்கி வச்சு இருக்கீங்க, நீங்க எல்லாரும் தானே திவாண்ணா மேல நம்பிக்கை வச்சு எனக்கு அவர்தான் மாப்பிள்ளை பார்க்கணும்னு சொன்னீங்க”

“நம்பிக்கை வச்சனாலதான் மாப்பிள பாக்க சொன்னோம்! ஆனா அதுக்காக உன்ன ரெண்டாம் தாரமா கட்டிக்கொடுக்க கேட்பான்னு நினைக்கல” என்று ஆதங்கப்பட்டவரிடம்

“அப்பா மத்த எல்லாரையும் விடுங்க, நான் கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க.., அண்ணா எனக்கு ஒரு தப்பானவரை வாழ்க்கை துணையா பார்ப்பாரா....?”

தன் மடியில் அமர்ந்து இருந்த மகளின் தலையில் செல்லமாக முட்டியவர் “உன் அண்ணனை குத்தம் சொல்லல, அதே மாதிரி திவா சொன்ன பையனையும் தப்புன்னு நான் சொல்லவே இல்லடா..., ஆனா ஒரு தகப்பனா என் வீட்டு இளவரசியை எப்படிமா ரெண்டாம் தாரமா.., வேணாம்டா இந்த பேச்சு சரிப்பட்டு வராது ” என்ற முடித்தவரிடம்

“ பாபா நான் ஒன்னு சொல்லட்டா ” என்று அனுமதி கேட்டவளை

“ ம்ம்ம்ம் சொல்லுடா ” என்றவருக்கு மகள் தனக்கு பிடிக்காததை கூறபோகிறாள் என்பதை உணர்ந்து அவளின் முகத்தையே பார்த்திருந்தவரை பார்த்த நயனிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

“ ப்பாபா ப்ளீஸ் இப்படி சேடா இருக்காதீங்க இதுல யாரு ஒருத்தரு விருப்பமில்லாமலும் என் கல்யாணம் நடக்காது. அப்படி இருக்கும்போது எதுக்கு எல்லாரும் இப்படி உம்முன்னு இருக்கீங்க இப்படி இருந்தா எல்லாம் சரி ஆயிடுமா? அவங்க அவங்க ஒப்பினியன்ன சொல்லி பேசுவோம், சரிப்பட்டு வந்துச்சுன்னா ஓகே. இல்லன்னா கேன்சல் அவ்வளவுதானே என்ன எல்லாருக்கும் ஓகே தானே இந்த டீல்” என்று சிரித்துக்கொண்டு இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி கேட்டு ஒவ்வொருத்தரா ஆரம்பிங்க என்றாள்.

அனைவரும் என்ன சொல்லப்போகிறார்கள் என்று சிறு எதிர்பார்ப்புடன் பார்த்திருந்த திவாகரின் காதருகில் சரிந்து சிரித்துக்கொண்டே

“திவாணா... எத்தன பேரு உன் பதிலுக்காக டென்ஷனோடு உன் மூஞ்சிய பார்த்துட்டு இருப்பாங்க, ஆனா இன்னிக்கு பாரு உன் நிலைமையை நீ மத்தவங்க முகத்தைப் பார்க்கிற மாதிரி ஆயிப்போச்சேசேசே சோ சேட் சோ சேட் ” என்று வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு சிரித்தவளை பார்த்து

தன் நிலைமையை நொந்துகொண்டு (டேய்...... என்று பல்லைக் கடித்தவன் இப்ப மட்டும் நீ என் கையில மாட்டின செத்தடா, பண்ணாத லூசுத்தனம் எல்லாம் பண்ணி வச்சு கடைசில உன்னால இந்த சில்வண்டு எல்லாம் என்னைய கலாய்க்கிறது) என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.

அதற்குள் கௌரியை தவிர மற்ற மூவரும் என்னதான் பையன் தங்கமான குணம் இருந்தாலும் இரண்டாம் தாரமா கொடுக்க எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று ஒருமித்த குரலில் கூறினர்.

அனைவரும் கூறியதைக் கேட்டு இதற்குமேல் வாய்ப்பில்லை என்று தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தவனை பார்த்த அனைவருக்கும் கஷ்டமாக இருந்தாலும், தங்களின் பெண்ணின் வாழ்க்கையே முக்கியமென்று அமைதியாக இருந்தனர்.

சிறுவயதிலிருந்தே தனக்காக மற்ற அனைவரையும் விட பார்த்து பார்த்து செய்யும் தனக்கு மிகவும் பிடித்த சகோதரனை அப்படிப் பார்க்க பிடிக்காமல் தன் தந்தையின் மடியில் இருந்து இறங்கி அவர்கள் இருவருக்கும் இடையில் அமர்ந்து அவனின் முகத்தை நிமிர்த்தியவள்

“அண்ணா அவங்க எல்லாம் சொல்லிட்டாங்க இன்னும் நானும் அம்மாவும் சொல்லல என்னுடைய ஒப்பினியன் என்னன்னா எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்......” என்று அவள் கூறியதைக் கேட்டு

"உனக்கு இதெல்லாம் தெரியாது நீ சின்ன பொண்ணு" என்று அவள் தந்தையும்

"உனக்கு என்ன தலையெழுத்தா, நீ எதுல குறைஞ்சு போய்ட்டா இரண்டாம் தாரமா போக" என்று குருபரனும்

"இதுக்கு ஒருக்காலும் நான் சம்மதிக்க மாட்டேன்" என்று திவாகரன் தாயும் முடித்திருந்தார்கள்.

தன்மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்களை பார்த்து பூரித்துப் போனவள், இருந்தும் தன் மேல் உள்ள பாசத்தில் முடிவெடுத்தவர்களுக்கு தன் எண்ணத்தை விளக்கி கூறும் விதமாக....

“ஏன் எல்லாரும் மறுமணம் பண்றது ஒரு கருப்பு புள்ளியா பாக்குறீங்க, ஆணோ பெண்ணோ அவங்க வாழ்க்கையில ஏதோ ஒரு கட்டத்துல அவங்க மேல தப்பே இல்லாம இருந்தாலும் இரண்டாவதுனு ஒரே காரணத்துக்காக மத்த எதையுமே ஆராயாமல் அவங்கள தூக்கி போட்டுடரோம்.

இது அவரோட இடத்தில நாங்க ரெண்டு பேருல யாராவது இருந்திருந்தா நீங்க இப்படிதான் யோசிப்பீங்களா? அவரோட குணம் நம்ம எல்லாருக்கும் தெரியும், ஏன் அவருக்கு முதல் திருமணம் ஆகாமல் திவாணா இதை கேட்டிருந்தா இந்நேரம் சரின்னு சொல்லி இருப்பீங்க, யாரோ பண்ண தப்புக்கு இவர் வாழ்க்கை ஏன் பாதிக்கப்படனும்” என்று தெளிவாக பேசியவள் இன்னும் மற்றவர்கள் முகத்தில் ஆட்சேபனை தெரியவும் அவர்களின் மனதை மாற்றும் பொருட்டு

“ நீங்க எல்லாம் அவருக்கு இரண்டாவது திருமணம் அப்படின்னு மட்டும்தான் பாக்குறீங்க, ஆனா நான் இந்த காலத்துல தன்மேல் குறையிருந்தாலும் பொண்டாட்டி மேல தூக்கி போட்டுட்டு சுத்துறவங்களுக்கு மத்தியில் அவ கிட்ட இருந்த குறைய குறையா பாக்காம அவள விட்டுக்கொடுக்க மாட்டேன்னு போராடின அந்த நல்ல மனசு தான் எனக்கு புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியை எப்படி எப்படியோ நடத்துறவங்களுக்கு மத்தியில் இப்பேர்பட்ட நல்ல மனுஷனோட மனசு மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியுது, நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் இதுக்கு மேல உங்க முடிவு” என்று முடித்த மகளை பெருமையாக பார்த்த கௌரி முதல் முறையாக தன் வாயை திறந்து

“ நான் என்ன சொல்லனும்னு நினைச்சனோ அததான் நயனியும் சொல்லியிருக்கா, தப்பே பண்ணாத அந்த தம்பியை ஒதுக்குவதில் எனக்கு சுத்தமா உடன்பாடில்லை. அதுவும் அவரைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மனசுல வெச்சுட்டு முடிவெடுக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்ற தன் மனைவியை முறைத்து

“ இவ்வளவு சொல்ற நீ இரண்டாம் தாரமாக கல்யாணம் பண்றதுக்கு ஒத்துகிட்ட இருந்து இருப்பியா ” என்று கடுப்புடன் கேட்டார் துளசிராமன்.

தன் கணவரின் கேள்விக்கு சற்றும் சளைக்காமல் நேர்கொண்ட பார்வையுடன் “அந்த தம்பி இருக்கிற இடத்துல நீங்க இருந்தீங்கன்னா கண்டிப்பா அப்பயும் உங்கள தான் கட்டி இருப்பேன், நான் நல்ல மனசோட நல்லவரானு பார்ப்பேனே தவிர நீங்க வேணவே வேணாம் யோசித்து அந்த ஒரே ஒரு விஷயத்தை நான் யோசிச்சு இருக்கவே மாட்டேன்” என்று திடமாக கூடியவரை ஒன்றும் கூற இயலாது அமைதியாகிவிட்டார் ராம்.

அதேபோல மற்றவர்களுக்கும் அவரின் குணத்தை பற்றி நன்கு தெரியும் என்பதினால், எப்பொழுதும் யாருக்காகவும் நேர்மையும் நியாயத்தையும் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார் என்பதினாலும் அதேபோல் எல்லாரும் சொல்லும் முடிவை ஏற்பவர் ஒரு சிலதில் மட்டும் அது நியாயம் இருக்கு என்று தெரிந்தால் தான் எடுத்த முடிவிலிருந்து யாருக்காகவும் பின்வாங்க மாட்டார்.

தன் தங்கையின் பேச்சைக் கேட்ட திவாகருக்கு தன் தங்கையை நினைத்து பெருமிதமாக இருந்தது என்றால், தன் அத்தையின் பேச்சால் இனி இது அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஆசுவாசம் கொண்டான்.

இந்த மூவர் கூட்டணி சேர்ந்தால் மட்டும் மற்ற மூவருக்கும் தோல்வி என்பதை அறிந்து கடுப்புடன் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்து சிரித்துவிட்டு

“ மேலிடத்திலிருந்து அப்பிள் வந்திருச்சு இது போதும் எனக்கு, நீங்க சொல்லுங்க அத்தை மேற்கொண்டு என்னென்ன செய்யணும்னு” என்ற திவாகரனிடம்

“நீ சொன்னதுல இருந்து மத்ததெல்லாம் ஒத்துபோது, ஆனாலும் ஜாதகம் பாத்துட்டு அவங்கள வர சொல்லி பேசிப் பார்க்கலாம். எல்லாம் ஒத்து போச்சுன்னா மேற்கொண்டு பேசி முடிவு எடுக்கலாம்” என்று முடிவுடன் கூறிய மனைவியை இதற்குமேல் தடுக்கமுடியாது என்றும் ஆனாலும் என்ன செய்யலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருக்க

“அந்த ஜாதகத்தை குடு, நான் நம்ம குடும்ப ஜோசியர் கிட்ட காமிச்சி பொருத்தம் எப்படி இருக்குன்னு கேட்டுட்டு வரேன்” என்ற அன்னையைப் பார்த்து
“அதுக்கு அவசியமே இல்லம்மா சப்போஸ் இவ்வளவு பேசி கடைசில ஜாதகம் செட் ஆகலனா வேஸ்ட் தானேனு மொதல்ல ஜாதகம் பார்த்து 10 பொருத்தத்தில் ஒன்பது பொருத்தம் இருக்கிறதை பார்த்துட்டு தான் இந்த பேச்சை எடுத்தேன்” என்றான்.

அப்பொழுதும் விடாமல் “ எதுக்கும் இன்னொருவாட்டி நம்ப ஜோசியர் கிட்ட ஒருவாட்டி காட்டி கேட்டுட்டா நிம்மதியா இருக்கும் நீங்க என்ன சொல்றீங்க ” என்று வெட்டியாக உட்கார்ந்து தன் வாயை பார்த்துக்கொண்டிருந்த கணவரைப் பார்த்து கடுப்பில் யாருமறியாமல் ஒரு இடி இடித்து சிரித்துக்கொண்டே கேட்டவருக்கு ஆமாம் என்று சொல்லு என்று அந்த இடீயிலேயே புரிந்து கொண்டவர்

“ ஆமா ஆமா அம்மா சொல்ற மாதிரி ஒரு வார்த்தை கேட்டுட்டா நிம்மதியா இருக்கும் டா மகனே ” என்று இடிபட்ட இடத்தை பாவமாக தேய்த்துக்கொண்டே கூறினார் குருபரன்.

தன் தாயின் சாமர்த்தியத்தை அறிந்துகொண்டு உங்களுக்கு நான் சளைத்தவன் இல்லை என்பதுபோல் அவரிடம் “ அதுக்கு அவசியமே இல்லை, ஏன்னா நீங்க இததான் சொல்லுவீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும் அதனாலதான் வேற யார்கிட்டயும் காமிக்காம உங்க எல்லார் நிம்மதியாகவும் நம்ம ஜோசியர் கிட்ட தான் காட்டுனேன்” என்ற மகனைப் பார்த்து ஒன்றும் கூற முடியாமல்,

பக்கத்தில் அமர்ந்திருந்த தன் கணவனிடம் “எங்க ரெண்டு பேர் வாயை தான் உங்க தங்கச்சியும் உங்க அருமை புள்ளையும் அடிச்சிட்டாங்க, நீங்களாவது ஏதாவது பண்ணுங்க அத விட்டுட்டு நல்லா கல்லு பிள்ளையார் கணக்கா எதுக்கு வெட்டியா உட்கார்ந்து இருக்கீங்க ஏதாவது பண்ணுங்க ” என்ற மனைவியை பாவமாக பார்த்து

தன் மனதில் நொந்துகொண்டு 'உங்க ரெண்டு பேர் பேச்சே எடுபடலனா என்னையெல்லாம் எல்லாம் ஒரு ஆளாவே எடுத்துக்க மாட்டான் உன் பையன், நான் என்ன கருத்தா பேசினாலும் காமெடி பண்ணாதீங்க மாமான்னு சொல்லிட்டு போயிடுவா பாப்பு, என் தங்கச்சியை சொல்லவே வேணாம் புருசனுக்கே ரெட் சிக்னல்னா அண்ணன் எனக்கு' என்று மனதிற்குள் மட்டும் புலம்பிக் கொண்டிருந்த தன் கணவரை பார்த்து கடுப்பானவர்,

“ ரூமுக்கு வாங்க உங்கள வச்சிக்கிறேன் ” என்று மனைவியை நினைத்தவருக்கு ஐயோ என்றிருந்தது
தான்விட்ட புலம்பலை தொடங்கியவர் 'சாதாரணமாக இவ வச்சிக்கிறேன்னு சொன்னாலே நமக்கு ஆபத்து தான், இதில் இவ சந்திரமுகி ஸ்டைல்ல சொல்றாளே ஐயோ ஆண்டவா என்ன மட்டும் காப்பாத்து' என்று அவர் வேண்டுதல் ஆண்டவனை சென்று அடையும் முன் இன்னொரு பக்கம் இடைப்பட்ட தன் கையை தேய்த்துகொண்டே திரும்பியவருக்கு தன் நண்பனின் பாசப் பார்வையைக் கண்டு அரண்டவர் ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா.....

“ ஏண்டா இங்க பொண்ணு பார்க்க வர எந்த நாள் செட் ஆகும்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, ஆனா நீ எனக்கு என்ன வந்ததுன்னு ஏதோ வாயில் கோந்து போட்டு ஒட்ட வச்ச மாதிரி எதுவும் பேசாம இப்படி உட்கார்ந்து இருக்க. தங்கச்சி தங்கச்சின்னு அப்படியே பாசத்துல உருகுவ அவகிட்ட பேசி எப்படியாவது நிப்பாட்டுடா” என்ற தன் நண்பனை

“ ஏன்டா! இவ்வளவு பேசுற உன் பொண்டாட்டி தானே நீ பேசு, நானாவது பாசமா தான் என் தங்கச்சி கிட்ட பேசுறேன் ஆனா நீ பெரிய காதல்மன்னன் ரேஞ்சுக்கு இந்த வயசுலயும் பொண்டாட்டி முந்தானை புடிச்சி தானே திரியுற" என்று கிண்டலடித்தவரை பார்த்த ராம்,

“எந்த பொண்டாட்டி டா புருஷன் சொல்றத கேட்டு இருக்காங்க என் பொண்டாட்டி கேக்குறதுக்கு, அதுலயும் பெத்த அப்பன் என்ன ஒரு மனுஷனாவே மதிக்காம என்னமோ இவன் தான் பெரிய மனுஷன் மாதிரி நான் பார்த்து பொறந்தவனை வச்சிகிட்டு பேசறது தான் டா என்னால தாங்க முடியல ”

“ அப்போ பாப்புமாக்கு கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கு நீ கவலைப் படலை, ஆனா உன்ன விட்டுட்டு நான் பெத்தமகன் கிட்ட என் தங்கச்சி பேசுறது தான் உனக்கு தாங்கலையா ” என்றவரை

“ பின்ன இது எல்லாத்துக்கும் உன் பையன் தான காரணம் ” என்று சண்டை பிடித்தவரை

“ ஏண்டா சொல்ல மாட்டே இவன நம்பி மாப்பிள்ளை பாக்குற பொறுப்ப ஒப்படைக்காத அந்தப் பொறுப்பை என்கிட்ட கொடுன்னு தளபாட அடிச்சுகிட்டேன் கேட்டியா நீ .....?

அவனைவிட பாப்புக்கு யாராலயும் நல்ல மாப்பிள்ளையை செலக்ட் பண்ண முடியாதுன்னு சொல்லி இந்தா வச்சுக்கோனு தூக்கி கொடுத்துட்டு இப்போ என்ன வந்து குத்தம் சொல்ற எந்திரிச்சு போடா அந்த பக்கம் ” என்றவர்

“ ஒரு மனுஷன் எவ்ளோ அடிச்சாலும் அமைதியா இருக்கன்றதுக்காக இப்படியாடா ஆளாளுக்கு ரெண்டு பக்கமும் குத்துவீங்க, பொண்டாட்டி தான் சரியில்லன்னு பார்த்தா நண்பனும் சரியில்லை சரி இவங்க தான் இப்படின்னா நான் பெத்தது அவன் பிரண்டுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்திடுவான் போல ” என்று புலம்பிய வரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த நயனிகா

“ ஐயோ மாமா ...... மனசுக்குள்ள பொலம்புறதா நினைச்சு வாயவிட்டு வெளியில புலம்பிட்டிங்க ” என்றதும் ஐயையோ என்று ஜெர்கானவர் அனைவரையும் பார்க்க

தன்னைக் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த தன் தங்கையும் சிரித்துக் கொண்டிருந்த தன் மருமகளை தவிர மற்ற மூவரும் தன்னை மிகவும் பாசமாக பார்ப்பதை உணர்ந்து அவர்களைப் பார்த்து சிரிக்க, அதைப்பார்த்து இன்னும் கொலைவெறியுடன் பார்த்தவர்களை கண்டு இது வேலைக்காகாது என்ற முடிவுடன்

“ தங்கச்சி இவங்க ரெண்டு பேரும் கிடக்கிறார்கள், இந்த அண்ணன் எப்போவும் உனக்கு ஆதரவா தான் நிற்பான். ஏனா நீ எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாதான் இருக்கும் ” என்று அந்தர் பல்டி அடித்து எதிர்க் கட்சியில் சேர்ந்து கொண்டவரை பார்த்து அடப்பாவி என்று வாயைப் பிளந்தனர் மற்ற இருவரும்.......

ஸ்வரமாகும் ....
 
Last edited by a moderator:

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரம் 11

இன்றுடன் திவாகர் சென்னை வந்து இரண்டு வாரங்கள் முடிவடைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட நாட்களில் தானே வெளிநாடு சென்று பார்க்க வேண்டிய வேலைகளை தனக்கு நம்பிக்கையானவர்களிடம் விட்டுவிட்டு மலரின் மேற்பார்வையில் நடத்திக்கொண்டிருந்தான்.


கொஞ்சம் பிசகினாலும் அனைத்தும் கெட்டுவிடும் என்பதால் ராணாவின் திருமண வேலையில் முழுமூச்சாக இறங்கி விட்டான்.

அனைவரையும் சரிக்கட்டி இருவீட்டார் ஒப்புதலையும் பெற்று, ராணாவையும் நயனிகாவையும் முதலில் தொலைபேசியில் அவர்களை உரையாடவிட்டு, இருவரையும் மனம்விட்டு தங்களின் மனநிலையை மற்றவர் தெளிவாக புரிந்துகொள்ள அமைத்துக் கொடுத்து, அவர்களும் தங்களுக்கு ஓகே என்று கூறியவுடன் சற்றும் தாமதிக்காமல் அனைத்தையும் மின்னல் வேகத்தில் யாரும் தடைபோட முடியாத வகையில் தானே முன்னின்று நடத்தி இன்று நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் திருமணம் என அனைத்தையும் முடித்துவிட்டு தான் அமைதியானான்.


ஆனால் இதுவரை இரு வீட்டுப் பெரியவர்கள் மட்டுமே பார்த்து பேசி இருந்தனர், இவர்கள் இருவரும் தொலைபேசியில் பேசி இருந்தாலும் புகைப்படத்தை பார்க்க மறுத்து நேரடியாக பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியதால், இன்றுதான் முதன் முதலில் சந்தித்துக்கொள்ள போகிறார்கள்.

தங்கள் வீடு இருக்கும் பொழுது வேறு எங்கும் தங்கக்கூடாது என்ற திவாகரின் அன்பு கட்டளையால் அனைவரும் அவனது இல்லத்தில் தான் தங்கியிருந்தனர்.


பெரியவர்கள் அனைவரும் நிச்சயத்திற்கு கிளம்ப காத்திருந்த நிலையில் இன்னும் மூன்று இளவட்டங்கள் மட்டும் தயாராகி கீழே வந்து சேர்ந்திருக்கவில்லை.

தன் நண்பனையும் அவன் குடும்பத்தினரையும் வரவேற்று அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்துவிட்டு அவர்களுக்கு ஒரு குறையும் வராத வகையில் தன் பெற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தன் பிரியமான தங்கையின் நிச்சயத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வேறு எதுவும் தேவை என்றால் தன்னை தொடர்பு கொள்ள கூறிவிட்டு, தான் சென்று ரெடியாகி அவர்களுடன் வருகிறேன் என்று இவர்களை அங்கு அழைத்து செல்வதற்கு வந்தான்.

பெரியவர்கள் அனைவரும் தயாராக இருப்பதை கண்டு ஐந்து நிமிடத்தில் தானும் தயாராகி ராணாவுடனும் விமலுடனும் வருவதாக கூறி சென்றவன் சொன்னதுபோலவே தயாராகி நண்பனின் அறைக்கு சென்று அவனை அழைத்துக்கொண்டு விமலின் அறைக்கு சென்ற இருவருக்கும் அவன் தயாராகாமல் யாருடனோ கடலை வறுத்துக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பான திவாகர்

“ டேய்..... விமல் எல்லாரும் ரெடியாயச்சு நீ இன்னும் கிளம்பாமல் யார்கிட்ட கடலை போட்டுட்டு இருக்கு ” என்றவனின் குரலைக் கேட்டு அப்பொழுதுதான் அவர்கள் இருவரும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருப்பதை உணர்ந்தவன்

ஹீஹீஹீ ஹீஹீஹீஹீ என்று அசடு வழிய சிரித்துக்கொண்டு “அது ஒண்ணும் இல்ல ப்ரோ, அது ஒரு முக்கியமான கால் ப்ரெண்டு பேசுனான். அதான் இதோ ஒரு 2 மினிட்ஸ்ல ரெடியாயிடறேன்” என்று சொன்னதுபோலவே தயாராகி அனைவரும் நயனிகா இல்லம் வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரையும் ராமும் அவர்கள் உறவினர்களும் அழைத்துச் சென்று அமரவைத்து பேசிக் கொண்டிருந்த சமயம் எதேர்ச்சையாக தன் பார்வையை அழகான பெண்களின் மேல் படரவிட்டு ரசித்துக் கொண்டிருந்தவன் கண்ணில் நயனிகாவின் புகைப்படம் பார்த்ததும் அதிர்ச்சியில் தன்னையும் அறியாமல் எழுந்து நின்றவனிடம் என்ன என்பது போல் அனைவரும் பார்க்க, தன் அதிர்ச்சியை வெளியில் காட்டாத இருக்க பெரும்பாடுபட்டு கொண்டு தன் அருகில் இருந்த அண்ணனிடம்


“அண்ணா அந்த போட்டோல இருக்குறது யாரு” என்ற விமலை ஒரு மார்க்கமாக பார்த்தவன்

“எனக்கு எப்படி தெரியும்.., உன்ன மாதிரி நானும் இப்ப தானே வந்திருக்கேன் ஏன்” என்ற அண்ணனைப் பார்த்து

மனதில் 'க்கும்ம் இல்லாட்டி மட்டும் எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுகிட்டு தான் நீ மறுவேலை பார்ப்ப' என்று நினைத்துக்கொண்டு வெளியில் “ஒன்னும் இல்லையே, சும்மா தான் யாருன்னு தெரிஞ்சுக்கலாமோனு ஒரு பொது அறிவுக்கு கேட்டேன்” என்றனை நம்பாமல் பார்த்தான் ராணா.

அதற்குள் அங்கிருந்தவர்கள் சிலர் ராணாவுடன் பேச்சு கொடுக்க அவர்களின் புறம் கவனத்தைத் திருப்பிய ராணாவை பார்த்து

'ஆத்தாடி ஜஸ்ட் மிஸ்சு, முதல்ல எடத்த காலி பண்ணி வேற யார்கிட்டயாவது கேட்டு அது யாருன்னு தெரிஞ்சுக்கணும்' என்று சுற்றுமுற்றும் பார்த்தவன் அங்கு தன் அன்னை வருவதை கண்டு அவரிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று சென்றான்.

“ம்ம்மா ஒரு நிமிஷம் இப்படி வாங்களேன்” என்ற மகனிடம்

“எதுக்குடா இப்ப கூப்பிடுற, எவ்வளவு வேலை இருக்கு என்னென்ன சீக்கிரம் சொல்லு”

“ ம்மா அந்த போட்டோல இருக்குறது யாரு” என்ற விமலை பார்த்து

“அடடா நீயும் பாக்கல இல்ல அதுதாண்டா நயனிகா, உன் அண்ணாக்கு பாத்துருக்க பொண்ணு” என்று கூறிக்கொண்டே சென்றவரை பார்த்து

“என்னது இது பொண்ணா” என்ற அதிர்ச்சியான சின்ன மகனின் வாயிலேயே ஒன்று போட்டு

“ படவா வருங்கால அண்ணியை அது இதுன்னு தான் மரியாதை இல்லாம பேசுவியா” என்று அவனை முறைத்துவிட்டு சென்றவரை அதிர்ச்சியுடன் நோக்கியவன்,

'இது அண்ணியாயாயா ஐயோ...., இது நினைக்கும்போதே கொடுமையா இருக்கே, எப்படியாவது இந்த நிச்சயத்தை நிறுத்தியே தீரனும் என்ன ஆனாலும் பரவாயில்ல' என்று நினைத்துக்கொண்டே ராணாவிடம் வந்தவன்

மறுபடியும் அண்ணா என்று அழைத்தவனை பார்த்து என்னடா என்று ஏற்கனவே ஆளாளுக்கு கேள்வி கேட்டுக்கொண்டிருந்ததில் வெறுத்துப்போய் இருந்தவனை இவன் அழைக்கவும் கடுப்புடன் கேட்டவனை பார்த்து மனதிற்குள் அரண்டாலும் வேறு வழியில்லை என்று

“ண்ணா உனக்கு இந்த பொண்ணு வேணாம்ணா இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு” என்று திக்கிதிணறி தான் கூற வந்ததை ஒருவழியாக கூறிவிட்டான்.

தன் தம்பி கூறியதைக் கேட்டு ஆச்சரியமாக நோக்கியவன் ஏனென்று கேட்க வருமுன்....

மிகவும் கடுப்பான குரலில் ஏன் என்று கேட்டான் திவா .....

திவாகரை சற்றும் எதிர்பார்க்காத விமலுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது, தன்னையே பார்த்திருக்கும் இருவருக்கும் என்ன பதில் கூறுவது என்று புரியாமல் தவித்தவன்

பயத்தில் என்ன செய்கிறோம் என்ன சொல்கிறோம் என்று உணராமல் சிறுவனைப் போல் சுண்டு விரலை நீட்டி “பாத்ரூம் போகணும் அதுக்கு எப்படி போகணும்னு கேட்க வந்தேன் அதத்தான் மாத்தி விளையாட்டுக்கு அண்ணாகிட்ட அப்படி கேட்டேன் ஈஈஈஈஈ” என்று அனைத்து பல்லையும் காட்டி இளித்தான்.

இருக்கிற இம்சைகள்ள இவன் வேற என்று ராணாவுக்கு கடுப்பாக இருக்க,

திவாகருக்கோ இவன் ஏன் திடீர்னு சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறுகிறான் என்று அவனை சந்தேகமாக பார்க்க

'அய்யய்யோ எனக்கு இன்னிக்கு நேரமே சரியில்லை போலயே.., முதல்ல இவங்க ரெண்டு பேருகிட்ட இருந்து தப்பிக்கனும்' என்ற முடிவுடன்

“ரொம்ப ரொம்ப அவசரம் நான் போறேன்” என்று அவ்விடத்தைவிட்டு அவசர அவசரமாக விலகி சென்றவன்,

வெளியில் சொல்ல வேண்டுமென்றால் ராணாவின் திவாகரின் பார்வையில் பட்டு விடுவோம் என்று அவ்வெண்ணத்தை கைவிட்டவன், மற்றவர் அறியாமல் உள்வழியாக செல்லும் படிகளில் ஏறி மாடிக்கு செல்ல முடிவெடுத்தான்

வீட்டை சுற்றி பார்க்கும் பாவனையில் கையில் மொபைலை வைத்து நோண்டிக்கொண்டே மாடியில் இருக்கும் அறைகளில் ஓர் அறையை கடக்க முற்படும் வேளையில் அவனின் கைகளை ஒரு வளைக்கரம் பற்றி அறைக்குள் இழுத்துவிட்டது.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் அதிர்ந்து நிமிர்ந்தவன் அடுத்த உச்சக்கட்ட அதிர்ச்சியாக தன்னை நக்கலாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்த நயனிகாவைப் பார்த்து அதிர்ந்து நின்று விடடான் விமல்.

அவனின் அதிர்ச்சியை போக்க அவன் மண்டையில் ஒரு தட்டுத் தட்டியவளை பார்த்து கோவமானவன்

“ஏய் என்ன கொழுப்பா நான் யாருன்னு தெரியாம என்கிட்ட விளையாடுற நீ ” என்று கூறிய விமலிடம்

“ என்னது ஏயா! கூப்பிட்டு விடட்டுமா உங்க அம்மாவ, மறுபடியும் உன் வாயில போடுறதுக்கு. ஆமா என்கிட்ட என்னமோ கேட்டியே ஆஆங் ஞாபகம் வந்திருச்சு நீ யாருன்னு தானே கேட்ட தம்பி.......” என்று ஆச்சரியம் காட்டிப் பேசுவது போல் நக்கலாக பேசியவள் சிரித்துக்கொண்டே

“நீ விமல் பிரதாப், பிரதாப் குடும்ப வாரிசுனு சொல்லிக்கிட்டு தண்டமா சுத்திக்கிட்டு இருக்கற குடிகாரன் கரெக்டா” என்றவளை

அவளைப்போலவே “நான் குடிகாரன்னா அப்போ உன் கூட இருந்தவங்க எல்லாம் குடும்ப குத்துவிளக்காக” என்ற நக்கல் அடித்தவனை

“தேவை இல்லாம என் பிரெண்ட்ஸ் பத்தி பேசினா அவ்வளவுதான்டா” என்ற நயனிகாவை

“ஏய் வாடா போடானா பல்லை தட்டி கையில் கொடுத்துவிடுவேன்” என்று கடுப்பான விமலிடம்

“தட்டுவ தட்டுவ.., அதுவரைக்கும் என் கை என்ன பூ பரிச்சுகிட்டு இருக்குமா” என்று இவர்கள் மும்முரமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது

நினைச்சேன் “அப்போ உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே ஒருத்தர ஒருத்தர் நல்லா தெரியும் அப்படித்தானே” என்று கைகட்டி நின்றிருந்த திவாகரனை பார்த்து பேய் முழி முழித்து இருவரும் திவாகரின் சப்போர்ட்டை பெறுவதற்கு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கூறுகிறேன் பேர்வழி என்று இருவரும் ஒரே நேரத்தில்

“இவன்தான்ணா குடிச்சிட்டு என் வண்டிய இடிச்சதும் இல்லாம என்கிட்ட சண்டைக்கு வந்தான்” என்று இவளும்

“இல்லணா இவங்கதான் சரக்கு அடிச்சுருந்த அவங்க பிரெண்ட்ஸ்ங்களோட சேர்ந்துகிட்டு என் வண்டியை இடிச்சுட்டு சண்டைக்கு வந்தாங்க” என்று விமலும் ஒரே நேரத்தில் கூறி ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் இருவரும் கூறியதை கேட்டு கடுப்பான திவா “அப்போ நீங்க ரெண்டு பேரும் குடிச்சுட்டு நடுரோட்டில் சண்டை போட்டு இருக்கீங்க வெக்கமா இல்ல உங்க ரெண்டு பேருக்கும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல, இது எப்ப நடந்துச்சுனு என்கிட்ட இப்ப சொல்லல உங்க ரெண்டுபேரையும் உண்டு இல்லனு ஆக்கிடுவேன்” என்றான் திவாகர்

அவன் கூறியதை கேட்ட இருவரும் சண்டை போடுற ஆர்வத்துல மண்டைக்கு மேல இருக்குற கொண்டையை மறந்திட்டோமே என்று புளம்பியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மனதை திடப்படுத்திக் கொண்டு யார் ஆரம்பிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தவர்களை பார்த்த திவாகரன்

“பேபி ஃபர்ஸ்ட் நீ சொல்லு” என்று கூறியவனை பாவமாக பார்த்தவளை உன் பார்வைக்கெல்லாம் நான் அசரமாட்டேன் நீ யார்னு எனக்கா தெரியாது சொல்லு என்பது போல் அசையாமல் நின்றவனிடம்,

எப்படி மாட்டாமல் தப்பிக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்ச நயனிகாவை பார்த்து மனதிற்குள் குதூகலம் கொண்ட விமல் அவளை மாட்டிவிடும் அவசரத்தில் அடுத்த ஆடு தான் தான் என்று மறந்து ஆர்வக்கோளாறில்

“ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி பப் பார்க்வேல பார்க்கிங்கில் தான் எங்களுக்கு சண்டை வந்துச்சுண்ணா நைட் ஒரு ஒரு மணி இருக்கும் நான் வண்டி ரிவர்ஸ் எடுக்கும்போது இவங்க வண்டிய தப்பா கொண்டு வந்து இடிச்சுட்டு எங்கிட்ட சண்டைக்கு வந்தாங்கணா” என்று சொல்லி எப்படி மாட்னியா என்று இவளைப் பார்த்து

"உன்னைப்போய் பேபியாம் பேபி நீ பேபி இல்ல பேய்" என்று கூறி அவளைப் பார்த்து சிரித்த விமலை முறைத்த நயனிகா

“ பரதேசி பரதேசி ” என்று திட்டியவலை

“ ஏய் மரியாத மரியாத ” என்றவனிடம்

“ஆமா அதுதான் இப்போ ரொம்ப முக்கியம், மூஞ்சபாரு நீ மாட்டுவதும் இல்லாம என்ன எதுக்குடா மாட்டி விட்ட” என்று அவள் கூறிய பிறகுதான் அட ஆமால்ல என்று புலம்பியவனுடன் சேர்ந்து திவாகரை பார்த்த இருவருக்கும் குலை நடுங்கியது....

தான் இதற்கு மேல் எதையும் மறைக்க முடியாது என்று என்ன ஆனாலும் ஒருசில விஷயத்தில் கெடுபிடி போடும் அண்ணனை கண்டு அஞ்சுபவள் எவ்வளவுக்கு எவ்வளவு செல்லம் கொடுத்தாலும் சில தவறுகளுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்பதினால் எதையும் மறைக்காமல் கூறத் தொடங்கினாள்

“ண்ணா சாரி அண்ணா என் பிரண்டு ரேவதி இருக்கால்ல நான் எவ்வளவோ சொன்னே அவதான் கேட்கவே இல்லை, அன்னைக்கு அவளுக்கு பர்த்டே அதுமட்டுமில்லாம அவளுக்கு கல்யாணம் வேற அதான் அவ ரொம்ப கெஞ்சினாள்னு” என்று ராகம் இழுத்தவள் திவாகரை பார்க்க மொத்தமா சொல்லி முடி உனக்கு இருக்கு என்பது போல் நின்று இருந்தவனை பார்க்க பயந்துகொண்டு

“ பசங்க மட்டும் பேச்சுலர் பார்ட்டி கொண்டறாங்களே நாமளும் சிங்கிளா இருந்து டபுள்சாகப்போற துக்கமான நாளாக கொண்டாடலாம் சொல்லிட்டு உன்கிட்ட lசொல்லாம வரமாட்டேன் வரமாட்டேன்னு சொன்னேன், ஆனா அவ தான் கேட்காம சீக்கிரமா வந்துருவோம்னு சொல்லி எங்க எல்லாரையும் கூட்டிட்டு போயிட்டா ஆனா நான் சத்தியமா எதையும் குடிக்கவே இல்லண்ணா” என்று கூறியவளை முறைத்துவிட்டு விமலை பார்க்கவும்

அய்யோ அடுத்தது நானா என்று பயந்துகொண்டு “ நானும் அன்னைக்கு தான் பர்ஸ்ட் டைம் போனேன் அதான் எக்ஸாம், எல்லாம் முடிஞ்சிடுச்சே இன்னிக்கு ஒரு நாளாவது எங்களோட வாடா லாஸ்ட் டே அப்புறம் எல்லாரும் அவங்க அவங்க ஊருக்கு போக போறோம்னு பிரெண்ட்ஸ் ரொம்ப கம்பெல் பண்ணதுனால தான் நானும் போனேன், அவனுங்க தான் குடிச்சாங்க நான் குடிக்கவே இல்லை ” அவன் முடிப்பதற்குள்

என்னையா டா மாட்டிவிட்ட என்று கருவி கொண்டு “ பொய்ணா பொய் எல்லாம் பொய் பொய்யா சொல்றான், இவன் நல்லா தண்ணி அடிச்சுட்டு டான்ஸ் ஆடிட்டு இருந்தத நான் பார்த்தேன், அதேமாதிரி சண்டையில விலக்கிவிட வந்த அந்த ஹோட்டல் ஸ்டாஃப் இவன் ரெகுலர் கஸ்டமர்னு இவனுக்கு தான் சப்போர்ட் பண்ணாங்க” என்னை மட்டும் மாட்டி விட்ட இல்ல என்ஜாய் என்ஜாய் என்ற நயனிகாவைப் பார்த்து

“ரொம்ப சந்தோஷப்படாதீங்க மேடம் ஆப்பு ரெண்டு பேருக்கும் தான்” என்று கூறிய விமலை பாவமாக பார்த்தவளை தானும் பாவமாக பார்த்தான் விமல்.

தங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என்ற அபயக்குரல் கடவுளை எட்டியதோ இல்லையோ ராணாவின் தாயை எட்டியது போல, தன் வருங்கால மருமகளிடம் ஆசையாக பேச வந்தவர் முன் தற்சமயம் எதுவும் கூறமுடியாமல் உங்க ரெண்டு பேருக்கும் அப்புறம் இருக்கு என்று முறைத்துவிட்டு சென்றுவிட்டான்.

அங்கு அனைவரின் நடுவில் ராணாவிற்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்துகொண்டிருந்தது, இதை அறியாமல் அவர்கள் இருவரின் மேலிருந்த கடுப்பில் தன் நண்பனின் அருகில் அமர்ந்த திவாகரனிடம்

“ஹாய் ஐ அம் ராணா பிரதாப், வயசு 29 சொந்தமா பிசினஸ் பண்றேன்" என்று கூறிய நண்பனைப் பார்த்த திவாகருக்கு இவனுக்கு என்ன ஆச்சு என்ற யோசனையுடன்

“என்னடா ஆச்சு உனக்கு என்கிட்ட எதுக்குடா உன்னபத்தி சொல்லிட்டு இருக்க”

“மம்ம்ம் எனக்கு வேண்டுதல், உன்னை எல்லாம் ஃப்ரெண்ட்டுனு வச்சிருக்கேன் பாரு அதனாலதான்” என்றான்.

ஆமா இவன் எதுக்கு இவ்வளவு காண்டா இருக்கான்னு தெரியலையே என்று யோசித்தவனை பார்த்து

“ உன்னை எல்லாம் நம்பி பிரெண்டுனு ஒருத்தன் வந்தானே அவன் என்ன ஆனான் ஏது ஆனான்னு கொஞ்சமாவது பார்த்தியாடா” என்றான்.

“ஏன்டா... என்ன ஆச்சு எதுக்குடா இப்ப புலம்புற சொன்னாதானே தெரியும்” என்று திவாகரை

"ஏண்டா சொல்ல மாட்ட, வீட்டுக்கு வந்தவன அம்போன்னு விட்டுட்டு நீ பாட்டுக்கு கிளம்பிட்ட, கிளம்பும்போது வந்து இங்கேயும் விட்டுட்டு நீ பாட்டுக்கு போயிட்ட இங்க என் பாடு எவ்வளவு திண்டாட்டமா இருக்கு தெரியுமா....... ஐ அம் ராணா ” என்று ஆரம்பித்தவனை

“போதும் நிறுத்து இப்ப எதுக்கு தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி ஓயாம இத சொல்ற” என்று கடுப்பான திவாகரனிடம்

“நான் ஒரு வாட்டி சொன்னதுகே உனக்கு கடுப்பாகுதே! வந்ததிலிருந்து வர்றவன் போறவன் கிட்ட எல்லாம் ஓயாமல் இதுவே சொல்லிட்டு இருக்கற எனக்கு எவ்வளவு கடுப்பாகும் ” என்றவன்


“அதுகூட பரவால்ல, ஆனா இங்க ஒரு கிழவி சுத்துது பாரு அது தொல்லை தாண்டா தாங்க முடியல” என்று புளம்பிய ராணாவிடம்

“ஏன்டா அவங்க என்ன பண்ணாங்க” என்று கேட்டுவிட்டு மனதில் இவளை கூட அடக்கிட முடியுது, ஆனா இந்த கெழவி தொல்ல தாங்கல..., படிச்சுப்படிச்சு எத்தனை வாட்டி சொன்னேன் கையகால வச்சுகிட்டு சும்மா இருக்க சொல்லி கெழவி உனக்கு இருக்கு........

“என்ன பண்ணாங்களா ....என்ன பண்ணலன்னு கேளு, என்ன பார்த்து தலைவலிக்குதான்னு கேட்டாங்க. நான் கூட பாசத்தில் தான் கேட்கிறார்களோனு நினைச்சு ஆமா லைட்டா வலிக்குதுனு சொன்னேன் அதுக்கு அந்த கெழவி என்ன சொல்லுச்சு தெரியுமா.....”

இக்கும் அது வில்லங்கமா தான் சொல்லி இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் “அப்படி என்னதான்டா சொல்லுச்சு” என்ற நண்பனை பாவமாக பார்த்த ராணா

“இதுக்குத்தான் தேவையில்லாம இவ்ளோ ஆயிட்டா வளரக்கூடாதுனு சொல்றது, எங்க போனாலும் கொஞ்சம் குனிஞ்சே போப்பா பாரு மண்டையில மண்டையில இடி வாங்கி உனக்கு தலைவலியே வந்துருச்சுனு சொல்லிட்டு இந்த தைலத்தை குடுத்துட்டு போகுதுடா” என்று கையிலிருந்த தைலத்தை காட்டிய நண்பனின் நிலை புரிந்து

கெழவி...... இரு வரேன் என்று பல்லைக் கடித்துக்கொண்டு “ஒரு நிமிஷம் இரு டா இதோ வரேன்” என்று நயனியின் பாட்டியிம் சண்டை போட கிளம்பிய திவாகரனை தடுத்த ராணா

“இப்ப மட்டும் எந்திரிச்சு நீ அந்த பக்கமா போனா நான் இந்தப் பக்கமா போயிட்டே இருப்பேன், என்ன விட்டுட்டு இங்க அங்கனு அசஞ்ச மகனே கல்யாணமும் வேணாம் ஒரு கண்றாவியும் வேணாம்னு நான் பாட்டுக்கு கிளம்பிப் போயிருவேன் எப்படி வசதி” என்றான்.

இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாமல் ஒரு வில்லங்கம் இருந்தாலே முடியாது, இதில் வீடு lபூரா இருக்கிறது மொத்தமும் வில்லங்கமாவே இருந்தா நான் என்னதான் பண்றது என்று தன்னைத்தானே நொந்து கொண்டவன்

“சரிடா நான் எங்கேயும் போகல இங்கேயே இருக்கேன்” என்ற நண்பனின் உத்திரவாததிற்கு பிறகு தான் நிம்மதியாக உணர்ந்தான் ராணா.

ஸ்வரமாகும் ........
 
Last edited by a moderator:

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
received_1344447902610286.jpeg

வரம் 12

சென்னையிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த ராணாவிற்கு அனைவரும் எதிர்பார்த்ததைவிட விரைவாக எல்லாருடைய சம்மதத்துடன் பெண் பார்த்து அடுத்த மாதம் திருமண தேதி என்ற வரை அனைத்தையும் விரைவாக முடித்து விட்டிருந்தான் திவா.

சலசல என்று பேசிக்கொண்டு பயணித்த தன் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளாமல் கண்மூடி தூங்குவதுபோல் தன் சீட்டில் தலைசாய்த்து இருந்தவன் எண்ணம் முழுவதும் பெண் பார்க்க சென்ற நாளில் தனக்கும் நயனிகா விற்கும் நடந்த உரையாடலை அசைபோட்டுக் கொண்டிருந்தது மனம்.

இன்னும் சற்று நேரத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கும் நிலையில் தான் நயனியின் தந்தையிடமும் நயனியிடமும் தனித்து பேசிய பிறகு வைத்துக் கொள்ளலாம் என்றான் ராணா.

ஏன் என்று கேள்வி எழுப்பிய நண்பனிடம் என்னதான் தொலைபேசியில் பேசியிருந்தாலும் எனக்கு என்னமோ நேரில் பேசி விடுவது மேல் என்று தோன்றுகிறது என்றான்.

திவா அதற்கு “ அதுக்கு ஏன் இப்பவே பேசணும் நிச்சயம் முடிந்ததும் பேசலாமே ” என்றான் ஏனென்றால் தேவையில்லாத சலசலப்பு ஏற்படுமே என்று ராணாவிடம் கூறிபார்த்தும் அவன் முடிவில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி துளசிராமனிடம் கூறி இவர்கள் பேசுவதற்கு அனுமதி வாங்கி யாருக்கும் சந்தேகம் ஏதும் வராத வண்ணம் சாதாரணமாக பேசிக் கொண்டு செல்வது போல் நயனியை சந்திக்க சென்றார்கள்.

துளசி ராமனுக்கு இவர்களைப்போல் முழு ஒப்புதல் இல்லாமல் சிறு சஞ்சலத்துடன் இருந்த நேரத்தில் இப்பொழுது வந்து பேச வேண்டும் என்றதில் கோபம் எழுந்தாலும் திவாகர் வற்புறுத்தி கேட்கவும் அவர்களின் கோரிக்கையை ஒப்புக் கொண்டாலும் தனிமை கிடைத்ததும் பொறுக்கமுடியாமல் ராணாவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.

திவாகரும் என்ன இருந்தாலும் ஒரு தந்தையாக அவர் பேசும் சமயத்தில் தான் தலையிடுவது தவறு என்று அவன் அமைதியாகிவிட்டான்.

ராணாவிற்கு அவரின் ஆதங்கமும் கோபமும் புரிந்துதான் இருந்தது அதனாலேயோ என்னவோ அவர் இடக்காக கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தான் அதில் திருப்தி ஏற்பட்ட பின்னரே நயனியை பார்க்க அனுமதித்தார்.

என்னதான் திருப்தி ஏற்பட்டு அனுமதி அளித்தாலும் சிறு நெருடலின் காரணமாக ராணா அவள் அறைக்குள் நுழையும் சமயம் அது என்ன இவ்ளோ நாள் இல்லாமல் நிச்சயத்திற்கு முன்னாடி பேசுறது இதுக்கு முடிஞ்சதுக்கு அப்புறமாவே பொறுமையா பேசியிருக்கலாம் என்றார்.

“ பேசியிருக்கலாம் தான்? ஆனா இது உங்க பொண்ணுக்கு கடைசியா வாய்ப்பா புரிஞ்சு விலகிக்கனும்னு நினைச்சா அதுக்கு இது உதவட்டும்னுதான் ” என்று எடுத்துக் கூறினான்.

ராணா கூறியதைக் கேட்ட துளசிராம்க்கு எவ்வளவு நல்ல மனசு இருந்தா கடைசி நிமிஷத்துல பொண்ணு வேணாம்னு சொல்லி அந்த அவமானம் தனக்கு வந்தாலும் பரவாயில்லைன்னு யோசிக்கிற அவனை அவருக்கு மிகவும் பிடித்தது தனக்கு பதில் அளித்துவிட்டு நயனின் அறைக்குள் செல்லப் போனவனிடம்,

“ ஒரு நிமிஷம் ” என்று நிறுத்தி அவனின் அருகில் சென்றவர்,

“உங்க கிட்ட பேசாத வரைக்கும் எனக்கும் இதில் விருப்பமில்லை ஆனா உங்க கிட்ட பேசினதுக்கு அப்புறம் என்னோட முடிவு மாறிடுச்சு அப்படியிருக்கும் போது அவ மாத்திக்க வாய்ப்பில்லை நாங்க போய் கீழ ஆக வேண்டியதை பார்க்கறோம் நீங்க பேசிட்டு வாங்க ” என்று கூறியவர் அவர்கள் பேசுவதற்கு தனிமை கொடுத்து அனைவரையும் அழைத்து கொண்டு சென்றார்.

அங்கிருந்த இருவருக்கும் பேச்சை முதலில் யார் ஆரம்பிப்பது என்ற தயக்கம் இருந்தது

இருப்பினும் நான் தயங்கிக் கொண்டு இருந்தால் வேலைக்காகாது என்று முதலில் ராணாவே பேச்சை ஆரம்பித்தான்.

“நீங்க எப்படி எதனால ஒத்துக்கிட்டீங்கனு எனக்கு தெரியல? ஆனா என்ன பத்தி தெளிவா நானே சொல்றேன் அதுக்கு அப்புறம் நீங்க உங்க முடிவ நல்லா யோசிச்சு சொல்லுங்க ” என்று கூறி

“ என்னடா இவன் நிச்சயம் நடக்க போற நேரத்துல வந்து இப்படி பேசுறானேனு நீங்க நினைக்கலாம் ஆனா என்னதான் நம்ம போன்ல பேசி இருந்தாலும் ஒரு சில விஷயம் நேர்ல பேசுறது போல இருக்காது அதனாலதான் இப்போ உங்ககிட்ட பேச வந்தேன் ”

“ யாருக்காகவும் எதுக்காகவும் யோசிக்காம உங்களுக்காகவும் உங்கள் வாழ்க்கைக்காக மட்டும் நான் சொல்றதை கேட்டுட்டு முடிவு பண்ணுங்க ” என்ற ராணா

“ இதை நான் இப்ப சொல்றதுனால இதை நீங்க எப்படி எடுத்துபிங்கன்னு எனக்கு தெரியல ஆனாலும் இப்போதைக்கு என் மனநிலை எப்படி இருக்குன்னு உங்களுக்கு புரிய வைக்கிறது என்னோட கடமை ” என்று நிறுத்தி.....

“ ஃபர்ஸ்ட் எனக்கு இப்போ இந்த கல்யாணம் தேவையா என்று தான் தோணுது? அடுத்து என்னால இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உடனே உங்ககூட முழுமனசா திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாது.......”

“சப்போஸ் உங்களுக்கும் ஓகேனா! திருமணத்திற்குப் பிறகு என் பாஸ்ட் லைஃப் பத்தியோ இல்ல என் ஃபர்ஸ்ட் வைஃப்பை நினைச்சுக்கிட்டு உங்க கூட குடும்பம் நடத்த மாட்டேன் ஆனா..... ? ”

“அதுக்கு எனக்கு கண்டிப்பாக கொஞ்சம் கால அவகாசம் தேவை ” என்று தான் நினைத்ததை கூறிக் கொண்டு இருந்தவன் அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள ஒரு சில வினாடிகள் அவள் முகத்தில் தன் பார்வையை நிலைக்கவிட்டு மறுபடியும் தன் பேச்சை தொடர்ந்தான்.

“ நான் ஒரு சாதாரண மனுஷன் தான் எனக்கும் ஒரு மனசு இருக்கு என்ன இருந்தாலும் என் முதல் மனைவியோட மனசார உண்மையாத்தான் நான் வாழ்ந்தேன் அதனால எனக்கு கண்டிப்பா புது வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் ...”

“அதே மாதிரி நான் உங்களுக்கு சொல்றது நல்லா யோசிச்சு உங்க முடிவ சொல்லுங்க ஆனால் யாருக்காகவும் எதுக்காகவும் திருமணம் என்ற பந்தத்தில் அடுத்தவர்களுக்காக என்று பார்த்து பின்னாடி ஃபீல் பண்ணி பிரயோஜனம் இருக்காது அதற்கு ஒரு சிறந்த உதாரணம் நான்தான் ”என்று பெருமூச்சு விட்டு ......

“சோ அவசரப்படாம உங்க முடிவை சொல்லுங்க ” என்றவனை பார்த்து நயனிகா

“ அப்பவும் சரி இப்பவும் சரி என் வாழ்க்கையை நான் எடுத்த முடிவுகள் எல்லாம் என்னுடையதுதான் ஆனா அதுல என் குடும்பத்தார் விருப்பமும் இருக்கிற மாதிரிதான் பாத்து பாத்து முடிவெடுப்பேன் சோ என்னை யாரும் உங்கள கல்யாணம் பண்ணிக்க போர்ஸ் பண்ணல ”

“ இரண்டாவது நீங்க பிஸினஸ் பண்ற அதே பீல்ட்லதான் நானும் வொர்க் பண்றேன் அதனால உங்கள பத்தி திவா அண்ணா சொன்னதை விட அதிகமாகவே தெரிஞ்சுக்கிட்டேன் ”

“ மூணாவது நீங்க சொன்ன அந்த ஸ்பேஸ் நீங்கனுல்ல வேற யாரா இருந்தாலும் அவங்ககிட்ட நானும் நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னுதான் கேட்டிருப்பேன் ” என்ற நயனிகாவை

“ எல்லாம் சரிதான் ஆனா என்ன கல்யாணம் பண்ணிகிட்டிங்கன்னா உங்களையெல்லாரும் இரண்டாம்தாரம்னு தான் சொல்வாங்க இப்போ அத பத்தி உங்களுக்கு ஒன்னும் இல்லனாலும் போகப்போக அந்த வார்த்தை உங்களுக்கு எரிச்சல் கொடுக்கும் ஏண்டா இரண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு அப்போ ஃபீல் பண்ணி பிரயோஜனம் இருக்காது ” என்று கூறி இப்படி அவசரபடுகிறாளே என்று எப்படியாவது அவளுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் பேசியவனை கண்டு

அவ்வளவு நேரமும் பொறுப்பாக பேசிக் கொண்டிருந்தவள் எப்பவும் போல அவளின் துருதுரு குணம் தலைதூக்க “கேப்பானுங்க கேப்பானுங்க அப்படியே மீறி கேட்டாலும் பாவம் பையன் போனா போகுதுன்னு வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்லுவேன் யாருகிட்ட ” தனை மறந்து அவள் கூறியதைக் கேட்டு

“ என்னது........” என்று நெஞ்சில் கைவைத்து அதிர்ச்சியான ராணாவை பார்த்து

ஐயையோ மனசுல பேசுறதா நெனச்சு உளரிட்டமே சமாளி நயனி என்று அலர்ட் ஆகி

“ நீங்க ஒன்னும் என்னை தப்பா எடுத்துக்காதீங்க சும்மா டென்ஷனா பேசிட்டு இருக்கீங்களே அதுதான் உங்களுக்கும் கொஞ்சம் ரிலீப்பா, அப்புறம் சும்மா நானும் டென்சன்லாம் ஆக மாட்டேன் ” அதான் என்று பூசிமொழுகியவள் ஈஈஈஈஈஈ என்று சிரிக்க

அவளின் செய்கைகளை பார்த்து என்ன கூறுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த ராணாவை பார்த்து ஐயோ பாவம் அவரே கன்பீயூஸ் ஆயிட்டாரு போல என்று நினைத்து

“ நீங்க வேற எதாவது பேசனுமா ... ” என்று பவ்யமாக கேட்டவளை பார்த்து

குழம்பிப்போய் இதுக்கு மேல் என்ன கூறுவதென்று புரியாமல் இல்லையென்று கூறி அவளின் சம்மதம் கேட்டு அவளிடம் விடைபெற்று கீழே வந்தவனிடம்

“ என்னடா ஓகே தானே தெளிவா எல்லாம் பேசிடிங்களா ” என்று ஆவலாக கேட்ட திவாகரனிடம்

ம்ம்ம்ம்ம் என்று கூறி “ பொண்ணு கொஞ்சம் அங்க பாட்டி போலயோ ” என்றவனை பார்த்து

( என்னது கொஞ்சமா... இவ செல்லத்தாய்யோட மறுஉருவம் ஆச்சே) என்று நினைத்து கொண்டு குத்துமதிப்பா எல்லாப்பக்கமும் தலையாட்டிய தன் நண்பனை நினைத்து சிரித்துக்கொண்ட ராணாவை பார்த்து

“ என்னன்னா தனியா சிரிச்சிட்டு வரீங்க என்ற ” விமலை

“ ஒன்னும் இல்லடா சும்மாதான் ” என்று கூறிவிட்டு கண்மூடி அமர்ந்திருந்த தன் அண்ணனைப் பார்த்து சந்தோஷமாக பாட்டை ஹம் செய்துகொண்டு ஓட்ட ஆரம்பித்து விட்டான் விமல்

தன் தம்பியின் இந்த சந்தோசம் தான் சிரித்ததினால் என்று புரிந்துகொண்ட ராணா தன் நண்பனுடன் நடந்த உரையாடலை அசைபோட ஆரம்பித்தான்.

நிச்சயம் முடிந்து தன் நண்பனிடம் வீட்டில் கிடைத்த தனிமையில் உரையாடியவனிடம்

“ என்னடா ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்குற மாதிரியே இருக்க இட்ஸ் எவரிதிங் ஓகே ” என்று திவாகரன் கேட்டதற்கு

“ இல்ல எதுவுமே ஓகே இல்ல ரொம்ப அவசர படுகிறோமோனு தோனுது என்னால ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியல அதுதான் உண்மை அதுமட்டுமில்லாமல் இதனால ஒரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோனு ரொம்ப பயமா இருக்கு ” என்றான்

“ உன்ன கல்யாணம் பண்ணிக்கிறது நால எந்த பொண்ணா இருந்தாலும் அந்த பொண்ணோட வாழ்க்கை சத்தியமா கெட்டுப்போகாதுடா வீணா மனசை போட்டு குழப்பிக்காத ”

“ நான் உனக்கு நயனிகாவை தேர்ந்தெடுத்ததே அவளை நீ நல்லா பாத்துப்பேன்னு மட்டுமில்லை அவளும் அதைவிட உன்ன நல்லா பாத்துப்பானு தான் நாங்க ஒரு தாய்க்கு பிறக்கலைனாலும் உனக்கு விமல் எப்படியோ அது எல்லாத்துக்கும் மேல தான் என் பேபி ” என்ற சிறு முறுவலுடன் கூறியவன்

“ அவ ஒரு குழந்தை மாதிரிடா அவ இருக்கும் இடத்தில சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்கனும்னு நினைப்பா யாரையும் எதற்காகவும் கஷ்டப்படுத்த மாட்டா கொஞ்சம் வால் ரொம்ப குறும்புன்னு அவ ஒரு தேவதைடா என் தங்கச்சி என்றதுக்காக சொல்லல ” என்று பாசமாக தன் தங்கையை நினைத்து பெருமையுடன் கூறினான்.

திவாகரனை பார்த்து “ என்னால உன் தங்கச்சி வாழ்க்கை கெட்டு போயிடும்னு உனக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா” என்று கேட்ட தன் நண்பனிடம்

“ நான் எதுக்கு பயப்படனும் எனக்கு உன்ன பத்தியும் தெரியும் என் தங்கச்சி பற்றியும் தெரியும் எவ்வளவுக்கு எவ்வளவு பாசமா இருக்கிறாளோ அவ்வளவுக்கவ்வளவு கோபமும் வரும் தப்பை யாருக்காகவும் எதுக்காகவும் பொறுத்துகவே மாட்டா அவ”என்று கூறி சிரித்துக் கொண்டு இருந்தவனை பார்த்து

“ ஏன்டா சிரிக்கிற நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன் நீ ஏன்டா லூசு மாதிரி சிரிச்சிட்டு இருக்க ” என்று கடுப்புடன் கேட்ட நண்பனை

“ இல்ல சோலோவாக சுத்திட்டு இருக்குற என்ன விட்டுட்டு வேணாம் வேணாம்னு சொல்ற உனக்கு ரெண்டாவது கல்யாணம் வரைக்கும் வந்துட்ட பாரு அது நினைச்சேன் சிரிச்சேன் ” என்ற நண்பனை நாலு மொத்து மொத்தி “ பொறாமை ” என்ற ராணாவை

“ லைட்டா .......” என்று கூறிக் கொண்டு பேசி சிரித்து கொண்டிருந்தவர்களை கண்டு அங்கு வந்த இந்திராவிற்கு மிகவும் நிறைவாக இருந்தது

என்ன நீங்க ரெண்டு பேரும் மட்டுமே பேசி சிரிச்சிகிட்டு இருக்கீங்க என்னன்னு சொன்னா நாங்களும் உங்க சிரிப்பில் கலந்து கொள்வோம்ல என்று கேட்ட இரு அம்மாக்களையும் பார்த்து

தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து கொண்டே தன் நண்பனை விட்டு உஷாராக நான்கடி தள்ளி நின்று அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு

“ அவனுக்கு இந்த கல்யாணத்துல பூரண சம்மதமாம் ஆனா அத உங்க கிட்ட சொல்றதுக்கு தயக்கமா இருக்குன்னு வெட்கப்பட்டு சொல்லிட்டு இருந்தான் ” என்ற திவாகரிடம்

“ உண்மையாகவா ” என்று கேட்டுக்கொண்டே தன் நண்பன் கூறியதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவன் டேய் என்று மனதில் பல்லை கடித்து அவனை அடிக்க போனவனை தடுப்பது போல் இருவருக்கும் நடுவில் வந்த இந்திரா

தன் மகனின் கரத்தைப் பற்றிக்கொண்டு “இப்பதான்பா என் மனசுக்கு நிம்மதியா இருக்கு அங்கு நீ கடைசியா பேசணும்னு போய் பேசிட்டு வந்ததுக்கு அப்புறமும் நிச்சயம் முடிஞ்சு அதுக்கப்புறமும் கூட நீ யோசிச்சுக்கிட்டே இருக்கிறது வச்சு பயந்துட்டு எங்கே இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன் நான் கும்பிட்ட கடவுள் எல்லாம் என்னை கைவிடல ” என்று ஆனந்தமாக கூறியவர்

திவாகரிடம் “ ரொம்ப ரொம்ப நன்றிப்பா ” என்று நன்றி கூறியவரை முறைத்து

“ இப்படிதான் உங்க பையனுக்கு நன்றி சொல்வீர்களா, அப்போ என்னை உங்க பையனா நெனச்சதுனு சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னீங்களா ” என்று கோபம் கொண்டவனிடம்,

“ இனிமேல் சொல்ல மாட்டேன் ” என்று இந்திராவிடம்,

“ குட் இனிமே சொன்னிங்க உங்க கூட பேசவே மாட்டேன் ” என்றான் திவா

“ சரி நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க நான் இந்த நல்ல விஷயத்தை போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வரேன் ” என்று கிளம்பியவர்களை பார்த்து அய்யய்யோ என்று மனதில் அலறியவன்,

“ நானும் வரேன் எல்லாரும் ஒண்ணா போய் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லலாம் ” என்று ராணாவிடமிருந்து நழுவப் பார்த்தான் திவா.

திவாகரனின் எண்ணம் புரிந்து “ நீங்க ரெண்டு பேரும் போக நாங்க பின்னாடி வரோம் அதுக்கு முன்னாடி இவன்கிட்ட ஒரு சின்ன கணக்கு இருக்குது அதை முடிச்சிட்டு வரேன் ” என்று தப்பிக்க பார்த்த தன் நண்பனின் கையைப்பற்றி அவனை ஓடவிடாமல் தடுத்து பிடித்து இருந்தவன் அவர்கள் இருவரும் கண்ணை விட்டு மறைந்ததும்,

“ எதுக்குடா தேவையில்லாம இப்படி ஒரு பொய் சொன்ன ” என்று கேட்டுக்கொண்டே அவனிடமிருந்து தப்பிக்க முயன்றவனைக் கீழே தள்ளி அவன் மேல் ஏறியமர்ந்து அவனை “ சொல்லுடா ” என்றான்

“ சொல்லித் தொலைக்கிறேன் இறங்கி தொலைடா பன்னி எவனாவது பாத்தா தப்பா நினைக்க போறான் என் கேர்ள் ஃப்ரெண்ட் கூட கனவுல இப்படி உட்கார்ந்தது இல்ல அடச்சீ எந்திரிடா சொல்றேன் ” என்றான்

“ அதுதான் நீ சொன்ன மாதிரி எழுந்திருச்சுட்டேன்ல சொல்லுடா ” என்றான் கடுப்புடன் ராணா

“ பின்ன வேற என்ன பண்ண சொல்ற என்ன உன் மனசாட்சியை தொட்டு சொல்லு நீ இப்ப இந்த கல்யாணத்துக்கு யோசிக்கிறது காரணம் ”

“திவா..... அதுவந்து.....”என்று இழுத்தவனை

“ என்ன வந்து போயினுட்டு இழுக்குற நான் சொல்லவா நீ எதுக்கு இப்போ டைம் கேட்டனு ” முறைத்தவனை பார்த்து ஒன்றும் கூற இயலாது வேறுபுறம் திரும்பி நின்றான் ராணா.

தன் நண்பனின் தோளில் கை வைத்தவன் “எனக்கு தெரியும்டா உன்ன பத்தி இப்படி நீ தப்பு பண்ண மாதிரி யோசிச்சி யோசிச்சி உன் வாழ்க்கையை ஏண்டா நீயே பாலாக்கிக்கிற எங்கே வாழ்ந்த வாழ்க்கைக்கு உண்மையா இல்லாம இப்ப வாழப்போற வாழ்க்கைக்கும் உண்மையா இல்லாம போயிடுவேனோன்னு நீ ரெண்டுத்துக்கும் நடுவுல அல்லாடுவது தெரியுதுடா ம்ப்ச் என்ன பாரு ” என்றவன் அவன் தன் புறம் திரும்பியதும்

“ இத நினைச்சு நினைச்சு நீ இப்படியே இருக்கிறதா பாக்க சொல்றியா நான் என் தங்கச்சி என்றதுக்காக இப்படி சொன்னேன் நெனச்சேன்னா இப்பவே இத நிறுத்திடுறேன்” என்றான்.

“ உன்ன பத்தி எனக்கு தெரியாதாடா ஆனா எனக்கு ஒரு கில்ட்டி ஃபீல் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்குடா அங்கு ஒருத்தியோட வாழ்க்கை நாசமா போயிருச்சு இதுல இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கனுமா” என்ற ஆற்றாமையால் கோபத்தில் வெடித்தான்.

“ சும்மா சும்மா அதையே சொல்லிட்டு இருந்தா வர்ற கோவத்துக்கு என்ன பண்ணுவேனு தெரியாது இது தவிர வேற எந்த காரணம் இருந்தாலும் சொல்லு இப்பவே இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் இல்ல என் மேல நம்பிக்கை இருந்துச்சுன்னா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ ” என்று கடுப்புடன் கூறி எழுந்து செல்ல முயன்றவனை தடுத்து

“ சாரிடா மச்சி ” என்ற நண்பனை

சிரிக்காமல் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு “ மச்சி இல்ல மச்சான் ” என்றான்

அவன் கூறியதை கேட்டு சிரித்துக்கொண்டே “ ஓகே மச்சான் வாங்க உள்ள போலாம் ” என்றதும் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தனர் இரு நண்பர்களும்

தன் சம்மதம் கிடைத்த உடனே இப்படி எல்லாரையும் பேசி பேசியே சம்மதத்தை வாங்கி ஒரே மாதத்தில்லேயே திருமண தேதியையும் குறித்து இவர்கள் திரும்பி மதுரைக்கு செல்வதற்குள் அனைத்தையும் முடித்து விட்டான் திவா......

ஸ்வரமாகும் ........
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Top