All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சனாவின் “உயிர்(ரை) சுகிக்கும் சீதையிவள்!!!” - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Chana

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைகளே😍,

நான் உங்க சனா... "உயி(ர்)ரைச் சுகிக்கும் சீதையிவள்...!!!" கதையின் வாயிலாக மிக்க மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்புடன் உங்களை சந்திக்க வந்துள்ள உங்களில் ஒருவர்:smiley5:🤗🤗.

முதலில் கேட்டதும் எழுதுவதற்கு வாய்ப்பளித்து திரி அமைத்து கொடுத்த ஶ்ரீகலா மேம் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்...:smile1:

இந்த எழுத்து உலகில் இப்பொழுது தான் ஜனித்திருக்கும் சிறு மழலை நான்...🙈👶🙈 எனவே கதையின் நிறை குறைகளைக் கருத்து திரியில் தவறாது எடுத்து கூறி... தங்களது பேராதரவை தாறுமாறாக நல்கி என்னை வழி நடத்தும் படி அன்புடன் படு பண்பாக கேட்டுக் கொள்கிறேன் பட்டூஸ்... ❤❤🤗

இப்படிக்கு,
நேசத்துடன் சனா❤
 

Chana

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயி(ர்)ரைச் சுகிக்கும் சீதையிவள் கதையின் நாயகன் நாயகியின் அறிமுகம்:
தலைவன்:

தமிழ்நாட்டின் தலை மைந்தனாய் அவதாரம் பூண்டு சில காலமாக அரியணையில் அழுத்தமாக கோலோச்சி வீற்றியிருக்கும் வெற்றி வேந்தன். வாழ்வோட்டத்தில் பெரிதாக அனுபவ பாடங்களை அவன் பெறவில்லை எனினும் பொது வாழ்வின் நெளிவு சுளிவுகளை நிதானத்துடன் திறம்பட பக்குவமாக கையாளும் தந்திரக்காரன். நன்மைக்கும் தீமைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டில் ஊசலாடிக் கொண்டிருக்கும் தனது உணர்வுகளை கட்டுக்குள் வைக்கும் சூட்சமத்தை பயன்றியிருக்கும் அரையன் இவன்.

26068

தலைவி:

பூவிதழின் மோகன வசீகரத்தால் எட்டுப் பருவ ஆடவர்களை மட்டுமின்றி ஏழு பருவ பெண்களையும் கவர்ந்து தன்பால் வைத்திருக்கும் மாயமோகினி. நங்கையின் இதய நாளங்கள் உருக்கி உருக்குலைத்து கொண்டிருக்கும் வஞ்சத்தை வெல்ல தனது மொத்த ஆகத்தையும் நஞ்சாக்க துணிந்து இருக்கும் சர்ப்பத்தின் குணம் மிக்க நயவஞ்சககாரி. அல்லும் பகலும் தான் அடைந்த அவலத்தின் நினைவால் அனுக்கணமும் சிதையில் (ஈமநெருப்பு) முக்குளித்து சிலிர்த்து உயிர்த்தெழும் சீதை அரிவை(பெண்) இவள்.

26069

இவ்விருவர் வாழ்வில் அரங்கேறிய, அரங்கேறவிருக்கும் ரணகன(ள)த்தை பதிவு செய்யப் போகும் களமே உயி(ர்)ரைச் சுகிக்கும் சீதையிவள்...!!!


களத்தில் சந்திப்போம்!!!

*********************

ஹாய் நட்புகளே❤

நான் தான் உங்க சனா... நேத்து கதை பத்தி நான் ஒன்னுமே சொல்லல தான... அது தான் இன்னைக்கி கதையின் நாயகன் நாயகி பத்தி ஒரு குட்டி அறிமுகத்துடன் வந்திருக்கிறேன்😊😊 படிச்சி பார்த்துட்டு கருத்து திரியல எப்படி இருக்குன்னு சொல்லுங்க. 23ஆம் தேதியில இருந்து ஞாயிறுதோறும் தவறாம களத்தில சந்திப்போம்... Be happy and be safe நேசங்களேே😊🤗❤.

கருத்து திரி:



நேசத்துடன்,
சனா
❤
 
Status
Not open for further replies.
Top