All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உடனானேன் உன்னிடமே" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உடனானேன் உன்னிடமே" கதையின் பதிவுகள் தொடர்ந்து வரும்...
பிறருக்காக தன்னை இழப்பதில் கூட பெரும் சுகம் இருக்கிறது... அப்படி வாழ்ந்து தான் பார்ப்போமே...
கதையை பற்றி எந்த முன்னோட்டமும் இல்லை...
கதை போகிற போக்கில் தெரிந்து கொள்ளுங்கள் தோழமைகளே...
அப்ப தான் இன்னும் கொஞ்சம் ஆர்வம் வரும்...
இது வரை என்னை கரம் பற்றி அழைத்து வந்த வாசகர்கள் உங்கள் அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...
 
Last edited:

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1


“என்ன தான் பண்றீங்க இவ்வளவு நாளா...? ஒருத்தர் கூடவா சரியா பண்ண மாட்டீங்க. இவ்வளவு நாள் உங்களுக்கு தெண்டத்துக்கு சம்பளம் குடுத்துக்கிட்டு இருக்கேன்...” என்று குதி குதி என்று குத்தித்துக்கொண்டு இருந்தான் குரு...
“ஒருத்தருக்கு கூட உடம்பு வளைய மாட்டிக்கிது..” என்று திட்டியவன் தன் அருகில் நின்றிருந்த சதியின் கையை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் சட்டென்று இழுத்து தன் போக்கில் ஆட ஆரம்பித்தான்.
அவ்வளவு நேரம் தலையை தொங்க போட்டுக்கொண்டு இருந்த அத்தனை பெரும் வியந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் குரு சதியின் நடனத்தை...
புழுதி பறக்க வில்லையே தவிர மற்ற படி ஆட்டம் அவ்வளவு வேகமாக இருந்தது... கண் இமைக்கும் நொடியில் கூட ஒரு முத்திரையை பிடித்து பார்ப்பவர்களை வியக்க வைத்தான்...
இமைத்தால் எங்கே நடன அசைவுகள் தொலைந்து விடுமோ என்று எண்ணி, கூடி இருந்த அத்தனை பேரும் விழிகளை சிமிட்ட கூட இல்லாமல் வியந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு வினாடிக்குள் நூறு அசைவுகளை கொடுத்த குரு தன் வேகத்துக்கு சதியையும் ஆட்டி வைத்தான்...
குரு இழுத்த அந்த ஒரு நொடி மட்டுமே தடுமாறினாள் சதி... அதன் பிறகு அவன் எதற்கு தன்னை இழுக்கிறான் என்பதை புரிந்துக்கொண்டவள் அவனுக்கு ஈடு கொடுத்து ஆட தொடங்கினாள்...
கெண்டகாலை தொடும் ஒரு பேண்ட், இடை வரை இருந்த ஒரு டிசர்ட், தூக்கி வாரிப்போட்ட ஒரு கொண்டை இடை தவிர அலங்காரம் என்று எதுவும் இல்லை சதியிடம். அதே போல தான் குருவும்...
தோள்களை தொடும் சிகையை ஒரு பேண்டில் அடக்கி குதிரை வால் போட்டு இருந்தான். நடனம் ஆடுவதற்கு ஏற்றார் போல லூசான ஒரு பேண்ட், ரவுன்ட் நெக் வைத்த, அவனுடைய ஆம்ஸ் வெளியே தெரியும் படி இறுக்கமான ஒரு டிசர்ட்...
எந்த அலங்காரமும் இல்லையென்றாலும் இருவரிடமும் ஒரு லட்சணம் இருந்தது...
ஆணுக்குரிய முறுக்கு குருவிடம் இருந்தது என்றால், சதியிடம் பெண்ணுக்கே உரிய ஒரு மிளிர்வு இருந்தது..
இவர்களை சுற்றி இருந்தவர்களும் இவர்களை போலவே உடை அணிந்து இருந்தார்கள்.
அதில் பத்து பேர் அங்கு நடன இயக்குனராகவும், நடனம் சொல்லி கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள். மீதம் இருந்த நூறு பேரும் நடனம் பயில வந்த மாணவர்களாக இருந்தார்கள்.
இதை தவிர இந்த பெரிய அரங்கத்தை சுற்றி இருந்த வகுப்புகளில் இன்னும் பல நூறு மாணவர்கள் நடனம் பயின்றுக்கொண்டு இருந்தார்கள்...
குருவோடது தான் அந்த கலைக்கூடம்.. அதில் நடனம் சொல்லி கொடுப்பவள் தான் சதி... இருவரது நடனமும் புயல் வேகத்தில் இருந்தது.
உனக்கு நான் சளைக்கமாட்டேன் என்று சதி தன் வேகத்தை குருவின் வேகத்துக்கு இணை கொடுத்து ஆடினாள்.
அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் குரு தன் கோவம் முழுவதையும் அந்த நடனத்தில் காட்டிக்கொண்டு இருந்தான்.
அவனது வேகம் அங்கு சுற்றி இருந்த பயில்விக்கும் ஆசிரியர்களுக்கு பயத்தை கொடுத்தது.. சரியான நேரத்தில் மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க வில்லை எனில் குரு தன்னுடைய மோசமான முகத்தை காட்டுவான் என்று அறிந்ததினாலே இந்த அச்சம் அவர்களுக்குள் முகிழ்த்தது...
அதையும் தாண்டி இருவரது ஆட்டமும் கண்டு மெய் மறந்து போய் நின்றார்கள். குரு ஆட ஆரம்பித்தாலே கண்களை அங்கு இங்கு நகர்த்த முடியாது... இதில் சதியும் உடன் சேர்ந்து ஆடினால் சொல்லவும் வேண்டுமா...? அந்த கண் கொள்ளா காட்சியை...
கண்களோடு கண்கள் வைத்து நேர்கொண்டு அவன் ஆட, சதியும் அவனது குத்தும் பார்வையை தாங்கி கொண்டே அவனது அசைவுக்கு ஏற்றார் போல ஒவ்வொரு அசைவையும் கொடுத்துக்கொண்டு இருந்தாள்...
இது அவளுக்கு முதல் முறை இல்லை... பல முறை அவனுடன் ஆடி இருக்கிறான்... இது தான் அசைவு என்று ஒரு சிறு கோடு கூட காண்பிக்க மாட்டான்... சட்டென்று ஆட தொடங்கி விடுவான்...
கூட நடனம் ஆடுகிறவர்களுக்கு தான் சிரமமாய் போகும்... அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவனது அசைவுகளை உள் வாங்கி ஆடுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்... அதனாலே குருவோடு ஆட எல்லாருமே பயப்படுவார்கள்.
ஆனால் அவனோடு ஒரு முறையாவது ஆடி விட வேண்டும் என்று பலரும் ஆசை படுவார்கள். ஆனால் இயல்பில் அது மிகப்பெரிய சிரமம் என்று எண்ணி ஒதுங்கி போவார்கள்...
சதிக்கு இவனுடன் ஆடி ஆடி பழக்கமாகி இருக்க அவனுடன் ஆடுவதில் பெரிதாக சிரமம் இருக்காது.. ஆனால் சதியிடம் மட்டும் குரு தன்னுடைய வேகத்தை இன்னும் இன்னும் கூட்டி கூட்டியே ஆடுவான்...
அவள் ஒரு முறையாவாது திணறி நிற்க வேண்டும் என்று எண்ணியே மிக வேகமாக ஆடுவான்.. அவனது வேகம் அவளுக்கு பெரும் சிரமத்தை தான் கொடுக்கும். ஆனால் அதை ஒரு பொழுதும் அவனிடம் காட்டிக்கொள்ளவே மாட்டாள்.
எவ்வளவு சிரமமாக இருந்தாலும் அதை முயற்சி செய்து அவனுடன் இணையாக ஆடி விடுவாள்.
அவ்வளவு சிரமப்பட்டு ஆடினாலும் குருவிடமிருந்து ஒரு சின்ன பாராட்டு கூட வராது அவளுக்கு... சிறு வயதில் அவனது பாராட்டுக்கு ஏங்கி போய் காத்திருப்பாள்... அது அவளுக்கு கிடைக்கவே கிடைக்காது என்று உணர்ந்த பின் அதை எதிர்பார்க்கவே இல்லை அவனிடமிருந்து...
உன்கிட்ட எதிர் பார்த்தா தானே எனக்கு வலிக்கும். நான் தான் உன்னிடம் எதிர் பார்க்கவே இல்லையே...? என்று தன்னையே மாற்றிக்கொண்டு இறுகி நின்றாள் சதி..
மாணவர்களுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டு இருக்கும் போதே சேர்ந்து ஆடும் ஆடல் பகுதி வந்தால் சதி தான் அவனுடன் ஆடுவாள்...
அவனது தேர்வு சதியாக தன இருக்கும்... இப்பவும் அப்படி தான்... இன்னும் ஒரு மாதத்தில் இந்த மாணவர்களின் பயிற்ச்சி காலம் முடிவதால் அதை பரிசோதிக்கவே இங்கு வந்தான் குரு...
வந்த இடத்தில் மாணவர்கள் சொதப்பிக்கொண்டு இருந்ததை பார்த்து அவ்வளவு கோவம் வந்துவிட்டது.. “இதுல நான் யாரை குற்றம் சொல்வது... சொல்லி தந்தவர்களையா...? இல்லை கற்றுக்கொள்பவர்களையா...? இருவரை சொன்னாலும் தகும் போல... ஏனெனில் இரு பக்கமும் குறைகள் அவ்வளவு இருக்கு... ஒழுங்காக இடுப்பை வளைத்து ஆடனும். அதை விட்டுட்டு சும்மா ஜங்கு ஜங்குன்னு குதிச்சா நடனம் வந்துடாது....”
என்றவன் சட்டென்று சதியை பிடித்து ஆட ஆரம்பித்துவிட்டான்...
“நடனம் இப்படி இருக்கணும்... எந்த நிமிடமும் ஆட தயாரா இருக்கணும்... அவன் தான் நடன கலைஞன்.” என்று கோவமாக கத்தியவன்,
“இன்னும் பதினைந்து நாட்களுக்குள் அனைவரும் ஒழுங்காக நடனம் கற்று இருக்க வேண்டும்... இரவு நேரம் வந்து கூட ஆடலாம்... ஆனா இங்க இருந்து போகும் போது அத்தனை பேரும் நடனம் கற்றுக்கொண்டு தான் வெளியே போகணும்... எனக்கு என்னோட பேர் ரொம்ப முக்கியம்... டைம் பாஸ் பண்ண வந்தா இப்பொழுதே வெளியே போகலாம்... அடுத்த பதினாறாவது நாள் மறுபடியும் எல்லாரும் இங்க வந்து இருக்கணும்.. நான் யாரை கூப்பிடுவேன்னு எனக்கே தெரியாது... கூப்பிடுறவங்க வந்து என்னோட ஆடனும்... சரியா ஆடலன்னா அப்புறம் இருக்கு...” என்று சொல்லியவன் நடனம் பயில்விக்கும் ஆசிரியர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்...
அவன் வெளியே சென்றவுடன் தான் நிறுத்தி வைத்து இருந்த மூச்சுகளை அனைவரும் இழுத்து விட்டார்கள்.
“சதி சூப்பர் டான்சிங்... எப்படி தான் குருவோட சேர்ந்து ஆடுறீங்களோ...? ப்பா அவரோட சேர்ந்து ஆடுறது ஒரு வரம்னா... அவருக்கு ஈக்குவலா ஆடுறது தனி திறமை தான்...” என்று சதியை அனைவரும் பாராட்ட, எல்லாத்தையும் ஒரு சின்ன புன்னகையில் அங்கிகரித்தவள்,
“இன்னும் கொஞ்ச நேரம் நாம இப்படியே பேசிக்கிட்டு இருந்தோம்னா போன குரு மறுபடியும் வந்து கத்த ஆரம்பிச்சுடுவாரு...” சொல்லி முடிக்கும் முன்பே அத்தனை பேரும் காக்கை கூட்டத்தில் கல் வீசியது போல சிதறி ஓடினார்கள் அடுத்த நொடியில்.
அவர்கள் சென்றவுடன் கலைக்கூடத்தின் அலுவலகத்திற்க்கு சென்று அங்கு இன்றைக்கு எத்தனை பேர் புது வரவு என்று பார்த்து, அவர்களுக்கு எந்த எந்த நேரம் என்று பட்டியல் போட்டு, கூடவே எந்த நடன இயக்குனரை போடுவது என்று எல்லாவற்றையும் சரி செய்துக்கொண்டு இருந்த நேரம் அவளின் மீது ஒரு நிழல் படிந்தது...
நிமிர்ந்து பார்த்தாள்... குரு தான் நின்றிருந்தான்.
கண்கள் கோவத்தில் சிவந்து இருந்தது... அவன் நின்றிருந்த தோற்றம் அவளுக்குள் பயத்தை கொடுத்தது என்றாலும் “என்ன ஆச்சு...” தைரியமாகவேக் கேட்டாள்.
“இன்னும் என்ன ஆகணும்... இந்த அக்கடமியே உன்ன நம்பி தான் இருக்குற மாதிரி வெளிய சொல்லிக்கிட்டு திரியிறியாமே... கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப தான் பண்ற... இங்க பாரு என் கிட்ட உன் வாலை ஆட்டாத ஒட்ட நறுக்கிருவேன்... இன்னொரு முறை இது மாதிரி என் காதுல விழுந்தது உன் சீட்ட கிளிச்சுடுவேன்...” முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான்.
அவன் போன பின் மீண்டும் தன் வேலையை பார்க்க தொடங்கினாள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.
‘எனக்கு இங்க வேலை பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு. இதுல நான் போய் வேலை மெனக்கெட்டு இதை சொல்லிக்கிட்டு இருக்கனாக்கும்...’ முனகியவள் மேற்கொண்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
குரு எப்பொழுதுமே இப்படி தான் என்று தெரிந்தவளால் அவனது பேச்சை எப்பொழுதும் பெரிய காரணமாக எடுத்துக்கொள்ள மாட்டாள். அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று சரியாக நடந்துக்கொள்ளுவாள்.
குருவுக்கும் அவளது நடவடிக்கை பிடிக்கும் என்றாலும் வெளியே சொல்லாமல் எரிந்து எரிந்து விழுவான்... சதி எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள்...
‘நீ பாட்டுக்கு கத்திக்கிட்டே இரு... நான் பாட்டுக்கு என் வேலையை செய்யிறேன்...’ என்று நடந்துக்கொள்ளுவாள்.
அங்கு எல்லா வேலையும் சதி தான் பார்ப்பாள்... அதனாலே பலரும் அவளை அந்த கலை கூடத்தின் பில்லர் என்று தான் சொல்லுவார்கள்..
அதில் சதிக்கு நெருக்கமானவர்கள் அவளை பில்லர் பில்லர் என்றும், தூண் என்றும் தான் அழைப்பார்கள்.
அவள் ஆரம்பத்தில் அவர்களை முறைத்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் புன்னகைக்க ஆரம்பித்தாள்...
அது கிட்ட தட்ட பல வருடங்களாக அங்கு நடந்துக்கொண்டு தான் இருந்தது... இதென்னவோ புதிதாய் நடந்த நிகழ்வு போல சொல்லிக்கொண்டு சென்றவனை என்ன செய்வது... நொந்ததவள் தன்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்...
காலையிலிருந்து தொடர்ந்து இரண்டு மணி நேரம் அவளுக்கு வகுப்புகள் இருக்கும்... அதன் பின்பு பன்னிரண்டு மணி போல அட்மிசன் செக்சன் போய் அமர்வாள்... அங்கு பீஸ் செக்சன், சம்பளம், ஈபி, டே எக்ச்பென்சிவ், அட்டனென்ஸ், வவுச்சர், டேக்ஸ் என்று எல்லாமே ஒரு பார்வை பார்ப்பாள்.
அதன் பின் அங்கிருந்து கேண்டீன் சென்று அன்றைக்கு தயாராகி இருக்கும் உணவுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் சகாக்களோடு உணவு உண்டுவிட்டு கலைக்கூடம் முழுவதும் ரவுன்ஸ் போவாள்...
அதன் பின்பு தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் அவளுக்கு ப்ரேக் டைம்...
மாலை நான்கு மணி போல ஆரம்பிக்கும் அவளது நாட்டிய பயிற்சி ஏழு மணி வரை தொடரும்...
ஆரம்ப நிலை, மேல் நிலை எல்லாமே மற்றவர்கள் தான் எடுப்பார்கள். இதில் சதி சில ஸ்பெசல் பயிர்ச்சிகளுக்கு மட்டுமே எடுப்பாள்..
குரு பல படங்களுக்கு கொரியாக்ராப் பண்ண, கூடவே சதியும் கூடவே செல்வாள். கதையின் நாயகிகளுக்கு இவள் தான் சொல்லி தர வேண்டும்.
குரு எப்படி நடனம் புரிகிரானோ அதை போலவே அந்த பாடலுக்கு ஏற்ற வாறு சதியம் குரு சொல்லும் சில வகைகளுடன் சொல்லி தர வேண்டும்...
அதை மிக சிறப்பாக சொல்லி தந்து ஆட விடுவாள். அதற்க்கு கூட அவனிடமிருந்து பாராட்டு பத்திரம் எதுவும் கிடைக்காது...
ஒரு சில நாட்களில் சதி வர முடியாத சூழலில் வேறு யாராவது லோக்கேசனுக்கு சென்று ஆடல் சொல்லி தர நேரும் போது குருவுக்கு அவர்களுக்கு புரிய வைத்து, அதன் பின்பு நடிகர்களுக்கு சொல்லி தருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்...
அதனால் சதி எப்பொழுதும் விடுப்பே எடுப்பது கிடையாது... கலைக்கூடம் தான் அவளது பெரும்பானமையான வசிப்பிடம். படங்களுக்கு ஆடல் சொல்லி தருவதற்கு முன் குரு தனியாக ஒரு முறை ரிகசல் பார்ப்பான். அப்பொழுது விளக்கை கையில் பிடித்துக்கொண்டு தேவுடு காப்பது இவளது வேலையாகும்...
அதற்க்கெல்லாம் அலுத்துக்கொள்ளவே மாட்டாள். அதென்னவோ அவளுக்கு நடனத்தின் மீது அவ்வளவு ஈடு பாடு...
அன்றைய தினம் ஓரளவு கழிந்துவிட, வீட்டிற்கு திரும்பினாள் சதி...
கலைத்து போய் வந்த மகளை வாஞ்சையுடன் வரவேற்று அமரவைத்தார் அவளது அன்னை...
“என்னடா ரொம்ப புளிஞ்சிட்டானா...”
“உன் மருமகனாச்சே பின்ன சும்மாவா விடுவான்... வச்சு செஞ்சாச்சு...” என்றவள் அவரின் மடியில் படுத்துக்கொண்டாள்.
“அப்பா வந்துட்டாரா செல்லோ...”
“ம்ம் வந்து உனக்கா ஸ்பெஷலா மசாலா டீ போட்டுக்கிட்டு இருக்காரு...”
“அதான் வாசனையே தூக்குது செல்லோ... இரு நான் போய் பார்த்துட்டு வரேன்...” என்றவள் அடுப்படிக்கு ஓடினாள்.
“வாடா குட்டி, இந்தாங்க உங்க ஸ்பெஷல் டீ...” என்று குடிக்கும் பதத்தோடு நீட்டினார் சேகர்...
“வாவ் ஒன்டர்புல் நானா... செம்ம” என்றவள் அதன் மனத்தை ஆழ்ந்து சுவாசித்து தன் நெஞ்சு பைக்குள் நிரப்பிக்கொண்டாள்..
லேசான தலை வலி கூட ஓடி போனது...
“மாப்பிள்ளை என்ன சொன்னாரு...” என்று எப்பொழுதும் கேட்கும் வசனத்தை இப்பொழுதும் கேட்டார்.
“எப்பொழுதும் போல தான் ப்பா... புளிஞ்சி எடுத்துட்டாரு... என்ன கோவமோ தெரியல... பசங்களுக்கு இன்னும் பதினைந்து நாள் இருக்கு கோச்சிங்.. அதுக்குள்ள இடையில வந்து அவங்களை ஆட சொல்லி சொன்னாரு... பதட்டத்துல ஒருத்தரும் ஒழுங்கா ஆடல... உடனே டான்ஸ் பெர்பாமுக்கு கைய பிடுச்சி ஆட ஆரம்பிச்சுட்டாரு...”
“ஹஹஹா... உனக்கு இடுப்பு வலி வந்துடுச்சு... ரைட்டா...” என்று சேகர் சிரிக்க
“அட போங்க ப்பா... உங்களுக்கு எப்போ பாரு உங்க மருமகனை உயர்த்தி சொல்லாட்டி தூக்கமே வராது...” என்றவள் குளித்துவிட்டு இடுப்பு ஓடிய காலையிலிருந்து ஆடிய ஆட்டத்துக்கு சுகமாய் படுத்துவிட்டாள் மெத்தையில்.
அவளது காலை இதமாய் ஒரு கரம் பிடித்து விட,
“ப்ச் வேணாம் ப்பா... என் காலை நீங்க பிடிக்க கூடாது...” என்றாள் கண்களை மூடியபடியே.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல... நீ கொஞ்ச நேரம் நல்லா ஓய்வு எடு..” என்று பதமாக அவளுக்கு காலை பிடித்து விட்டார் சேகர்.

உடனாகும்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3

ஆலிங்கன நிலையில் நின்று இருந்த இருவரும் ஒரு நிமிடத்தை முழுமையாக அதே முத்திரையில் நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
அதன் பின் சக்தி வேறு சிவன் வேறு என்று சதி அபிநயம் பிடிக்க ஆரம்பிக்க சிவனது கோவத்தை அப்படியே குரு தன் நடனத்தில் கொண்டு வந்து ஆங்கார மூர்த்தியாய் நின்றான்... அவனுக்கு ஏற்றவாறு அந்த அரங்கம் முழுவதும் இருவரது குருதியும் சிந்தி சிதறி கிடந்தது... ஆனாலும் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை...
மனமே ரணப்பட்டு, புண் பட்டு இருக்கும் போது காலில் இருக்கும் இந்த சின்ன வலியா தெரிய போகிறது அவனுக்கு...
ஓரளவு அந்த நடனம் முடிந்தவுடன் தான் சதியை விட்டான் குரு... அவன் விட்ட நொடியில் வேகமாய் சுவரின் உள்ளே பதித்து இருந்த அலமாரியில் சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவனுக்கு மருந்து போட வர,
அவளை பார்த்து ஏளனமாக சிரித்தவன்,
“வலிக்க வலிக்க காயத்தை குடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி மருந்து போட வர்ற பத்தியா அங்க நிக்கிரடி நீ...” கூறியவன் அவள் சொல்ல வருவதை எதையும் கண்டுக்கொள்ளாமல் விலகி சென்றான்.
கண்கள் கலங்கினாளே தவிர கண்ணீரை சிந்தவில்லை... அவளுக்குள் இருக்கும் வைராக்கியம் அதை செய்ய விடவில்லை.
அவள் கால்களுக்கு மருந்து போட்டு முடித்த சமயம் மீண்டும் குரு வந்தான்...
“இடத்தை சுத்தம் பண்ணிட்டு தயாரா இரு.. அடுத்த ரிகசல் இருக்கு..” என்று சென்றுவிட்டான்.
‘இன்னைக்கு இவன் விட மாட்டான் போலேயே...’ புலம்பியவள் அவ்விடத்தை சுத்தம் செய்ய தொடங்கினாள்.
தரையில் இருந்த குருதி கரையை முழுவதும் நன்கு துடைத்துவிட்டு பலபலப்பாகிவிட்டவள், அப்படியே தரையில் சரிந்து படுத்துக்கொண்டாள் சிறிது நேரம்...
அவள் படுத்த சிறிது நேரத்திலே அவளை வலிய கரம் ஒன்று அணைத்து, மூச்சுக்காற்றால் அவளது கழுத்தில் கோலம் போட்டுவிட்டு, இடை தழுவி, அவளின் உதடுகளை சிறை செய்ய ஆரம்பிக்க திடுக்கிட்டு எழுந்தாள்...
அப்பொழுது தான் கவனித்தாள் குரு அவளையே முறைத்துக்கொண்டு அவளின் எதிரில் நின்றிருப்பதை... பதைபதைத்து போய் எழுந்து அமர்ந்தவள் குளிரூட்டப்பட்ட அந்த கூடத்திலும் அவளுக்கு வேர்த்தது...
“சோம்பேறி சோம்பேறி... கொஞ்ச நேரம் குடுத்தா போதுமே உடனே தூங்கி வழிய வேண்டியது...” திட்டினான்...
ஒன்றும் சொல்லாமல் அந்த கூடத்தின் உள்ளே இருந்த கழிவறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள்.
வந்தவளிடம் கேரளா நடிகருக்கான இருண்டு விதமான தீமை பத்தி ஆலோசித்து இந்த இந்த மூவ் வைக்கணும் என்று பேசி முடிவெடுத்து அதன் படி இருவரும் ஒரு முறை ரிகசல் பார்க்க தொடங்கினார்கள்.
இரவு நேர ரிசெப்சன் என்பதால் கொஞ்சம் ரொமன்டிக்ககவே கேட்டு இருந்தார்கள். காலையில் கேரளா சண்டை மேளத்துக்கு ஏற்றவாறு கேட்டு இருந்தார்கள்.
அதனால் மீண்டும் சதியோடு இணைந்து நெருக்கமாக ஆட ஆரம்பித்தான்... இதில் அதிக மூவ் இல்லையென்றாலும் இருவரது நெருக்கமும் இருவருக்குள்ளும் தீப்பிடித்தது...
அந்த உணர்வுகளை பெரிது படுத்தாமல் குரு இயல்பாக இருப்பது போல அவன் ஆட, சதியால் தான் முடியாமல் அவ்வப்பொழுது சரிய தொடங்க, அவளை ஆழ்ந்து பார்த்தான் குரு..
அதில் பாதி குற்றம் சொல்வது போல குத்தும் பார்வையாகவே இருக்க...
மனதில் தைரியத்தை வர வைத்துக்கொண்டு “எனக்கு ஒரு மணி நேரம் ஓய்வு வேணும்...” தயக்கத்துடனே கேட்டாள்.
“உன் விருப்பப்படி இங்க ஆட முடியாது... என் விருப்ப படி தான் இங்க எல்லாமே நடக்கணும்... இப்போ நீ ஆடி தான் ஆகணும்...” என்றவன் மென்மையாய் பிடித்திருந்த அவளது இடையை வலிக்க பற்றி ஆட தொடங்கினான்...
அதில் பெண்ணவளின் உணர்வுகள் எல்லாம் மேலெழும்பி குதியாட்டம் போட.. மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவனிடம் மயங்க தொடங்கினாள்.
அவள் கண்கள் சொருகி மோனோ நிலையில் அவன் வளைத்த படி ஆடிக்கொண்டு இருந்தவளை கண்டவனுக்கு என்னவோ போல் ஆகிவிட, இடையில் இருந்த கரத்தை இன்னும் அதிக இறுக்கமாக வைத்து அவளின் இடையை பற்றிக்கொண்டான்...
அதில் இன்னும் அதிக மோகம் கொண்டவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவனின் வெற்று தோளின் மீது சாய தொடங்கிவிட்டாள்.
அது ஆணவனின் உடலில் பல மாயங்களை செய்ய வைத்தது... இயல்பாய் நடனமாடிக்கொண்டு இருந்தவனை உணர்வுகளின் பிடியில் சிக்க வைத்து தன்னிலை மறந்து அவளிடம் ஒன்றினான்...
இது நாள் வரை நடனமாடும் போது அவன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததே கிடையாது... முதல் முறை அவளுடன் எல்லாவற்றையும் மறந்து நெருக்கமானான்...
அவனது நெருக்கம் பெண்ணவளை இன்னும் உணர்வு குவியலாய் மாற்ற இன்னும் அவனிடம் நெருக்கம் காட்டினாள்...
அதுவரை மிதமாய் ஒலித்துக்கொண்டு இருந்த இசை சட்டென்று வேகம் எடுக்க, அந்த இசையில் இருவரும் தங்களை உணர்ந்து சட்டென்று பிரிந்துக்கொண்டார்கள்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதில் இருந்த சங்கடத்தை உணர்ந்து சதியே சட்டென்று கழிவறைக்குள் புகுந்துக்கொண்டாள்.
பத்து நிமிடத்துக்கு பின் வெளியே வந்தவளை கண்கள் சிவக்க எதிர் நோக்கினான் குரு...
அவனது கண் சிவப்புக்கு ஒப்பாக அவளது கண்களும் சிவந்து போய் தான் இருந்தது...
என்ன ஒண்ணு அவனது கண்கள் சினத்தில் சிவந்து இருந்தது... இவளுடைய கண்கள் அழுகையில் சிவந்து இருந்தது... அது மட்டும் தான் வித்யாசம்..
சினத்துடன் அவளை எதிர் நோக்கியவன் எந்த வித உரையாடலும் இல்லாமல் நேரடியாக ஆட்டத்தில் இறங்கிவிட, அவளும் உடன் பட்டு ஆட தொடங்கினாள்.
இருவரும் அப்படி இனைந்து ஆடிய போது, விரித்து விட்டிருந்த சதியின் முடி குருவின் கைகளில் சிக்கிக்கொண்டது...
அதில் எரிச்சலுற்றவன் “முடிய கட்டணும்னு கூட தெரியாதா...? இப்படி தான் விரிச்சி போட்டுட்டு இருப்பியா...?” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்...
அவன் தான் அவளது முடிந்த கூந்தலை அவிழ்த்துவிட்டான் என்பதை எண்ணிக்கொண்டே அவளிடம் சிடுசிடுத்தான்...
அவனது குணம் தெரியும் ஆகையால், சட்டென்று அவனது கைகளில் சிக்கி இருந்த முடியை எடுத்து விட்டு, நொடியில் கொண்டடை போட்டு தன் குழலை முடிந்துக்கொண்டு ஆட தயாராக நின்றாள்.
அவளது இந்த வேகம் குருவுக்கு எப்பொழுதும் பிடிக்கும்... ஆனால் அதை காண்பித்துக்கொள்ளவே மாட்டான்... இன்றும் அது போலவே பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளுடன் இயைந்து ஆடி, இந்த இந்தெந்த ஸ்டேப் என்று நோட் பண்ணி வைத்துக்கொண்டு அதன் படி இருவரும் ஆடி முழுவதுமாக ரிக்சல் பார்த்தார்கள்...
இது மண மக்களுக்காக மட்டும் ஏற்பாடு செய்த ஒத்திகை.. மத்தியத்துக்கு மேல் குழுவுடன் சேர்ந்து எப்படி செய்வது என்று அதற்க்கும் சேர்த்து ஆலோசனை செய்து வைத்துவிட்டு அவளை அனுப்பினான்...
அதன் படியே மத்தியம் தேர்ந்தெடுத்த குழு நடன கலைஞகர்களுடன் சேர்ந்து ஆடி முழுதாக ஒத்திகை பார்த்தார்கள் பொதுவாக பயன் படுத்தும் அரங்கில்...
அடுத்த நாள் அந்த நடிகர் வந்து அந்த நடனத்தை பார்த்து விட்டு மகிழ்ந்து போய் அன்றே தான் மணக்க இருக்கும் பெண்ணை வர செய்து இருவரும் ரிகசல் பார்க்க தொடங்கினார்கள்...
ஓரளவு அவர்களுக்கு கற்று கொடுத்துவிட... சக நடன ஆசிரியரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சதியும் குருவும் அவரவர் வேலைகளை செய்ய தொடங்கினார்கள்.
அன்று ஒரு படத்துக்கான அனைத்து பாடல்களையும் கொரியோ பண்ண சொல்லி தமிழகத்தின் முன்னணி பட இயக்குனர் ஒருவர் ஆலோசனை செய்ய அவனை அழைக்க, குருவும் இரவு வருவதாக சொல்லி நேரம் வாங்கி இருந்தவன், இடைப்பட்ட நேரத்தில் இன்னொரு படத்தின் கொரியோக்ராபர் கமிட் ஆனதில் அந்த பாட்டு ஷூட்டிங்க்காக செட்டுக்கு சென்றான்...
அந்த நேரம் சதியின் அலைபேசிக்கு கால் வந்தது...
எடுத்து பார்த்தாள். குருவின் அம்மா தான் அழைத்து இருந்தார்கள்.
“சொல்லுங்க அத்தை என்ன பண்றீங்க... தம்பி பய என்ன பண்றான்... என்னை தேடுனானா...?” தாயின் பரிதவிப்போடு கேட்டவளுக்கு,
“அதெல்லாம் நிமிசத்துக்கு ஒரு முறை உன்னை தேடிட்டு தான் இருக்கான்... இப்போ எங்க இருக்க...”
“கலைக்கூடத்தில் தான் இருக்கேன் அத்தை...”
“சீக்கிரமா கிளம்பி எப்பொழுதும் போற கோயிலுக்கு வா... இன்னைக்கு குரு அங்க இல்ல தானே...”
“ஆமாம் அத்தை... பிள்ளைய தூக்கிட்டு வருவீங்களா...?” ஏக்கத்துடன் கேட்டாள்.
“அதுக்கு தான் உன்னை வர சொல்றேன்... சீக்கிரமா வா...” என்று வைத்துவிட்டார்...
அவர் சொன்னவுடன் அவளின் உடலில் புது உதிரம் பாய்வது போல இருக்க, வேகமாய் குருவின் தனிப்பட்ட அறைக்கு சென்று ஒரு குளியலை போட்டவள் விரைந்து போனாள் அந்த கோயிலுக்கு...
போனவுடனே குருவின் அம்மா ராதிகாவிடமிருந்து சதியிடம் தாவினான் ஆறு மாத குட்டி குமரன்..
தாவி வந்தவனை இறுக தன் நெஞ்சோடு தழுவியவள், தன்னிடம் முட்டி மோதிக்கொண்டு இருப்பவனை அடக்கி பிடித்து மறைவிடம் சென்று அவனுக்கு அமுது ஊட்டியவள் தன் மகனின் தலையை வருடி கொடுத்தாள் ஆதுரத்துடன்...
எப்பொழுதும் குரு அவளுடன் இருப்பது கிடையாது... ஒத்திகையின் போது மட்டுமே அதும் இருவர் சேர்ந்து ஆடும் நடந் என்றால் மட்டுமே அவள் அவனுடன் இருப்பாள்.. மற்ற படி எப்பொழுதும் அவனுடன் இருப்பது கிடையாது...
அதனால் குருவின் பார்வை படமால் தன் மகனுக்கு அமுது ஊட்டி அவனது பசியை போக்குவாள். அதற்க்கு பெரும் ஒத்துழைப்பு கொடுப்பது குருவின் அம்மா ராதிகா தான்.
குரு ஆரம்பத்திலே இதெல்லாம் வேணாம் என்று உறுதியாக சொல்லிவிட்டான்...
ஆனால் ராதிகா தான் அவனை எதிர்க்க முடியாமல் அவனது கண் பார்வைக்கு தெரியாமல் பெரும்பாலும் அவரே தன் பேரனை கொண்டு வந்து சதியிடம் கொடுப்பார்.. எப்பொழுதாவது முடியாத பட்சத்தில் தான் யார் மூலமாகவோ குழந்தையை கொடுத்து அனுப்புவார் பசியாற...
இன்றும் அதுபோல வர... முதலில் தன் மகனின் பசியை ஆற்றிய சதி அசதியாய் வந்து தன் அத்தையின் அருகில் அமர்ந்தாள்.
“காலையில் இருந்து குடுக்கததுனால ரொம்ப கடினமா போயிடுச்சா டா...” ஆதரவாக அவளது தலையை வருடி விட,
“ஆமா அத்தை. எப்படியும் அவனுக்கு மூணு நேரம் குடுத்துடுவேன்... இன்னைக்கு அவரு கூடவே இருந்ததுனால...” என்றால் தயக்கமாய்..
“சரி அதை விடு... முதல்ல இந்த சூசை குடி...” என்று தன் மருமகளை கவனித்தார்..
அவரின் தோளில் சாய்ந்துக்கொண்டவள் மெல்ல கண்களை மூடிக்கொண்டாள்... அதே நேரம் அவளுடைய பெற்றவர்களும் அந்த கோயிலுக்குள் நுழைந்து கற்பக்கிரகம் கூட செல்லாமல் தன் மகளின் மடியில் இருக்கும் தங்களது பேரனை தூக்கி கொண்டாடி தீர்த்தார்கள்..
“அண்ணா இன்னும் ஆபிஸ் விட்டு வரைலயா அண்ணி..” என்று ஆனந்தி ராதிகாவிடம் பேச ஆரம்பிக்க, சேகர் தன் பேரனோடு அந்த கோயிலை வளம் வந்தார் மகிழ்வுடன்..
சதி கண்களை மூடி நன்றாக தன் அத்தையின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள் அசதியில். குருவுக்கு தெரியாமல் இவர்கள் அனைவரும் கூடி குலாவிக்கொண்டு இருக்கிறார்கள்.
என்றைக்கு அவனுக்கு தெரியவருமோ அன்றைக்கு இருக்கிறது இவர்களுக்கு.. அப்பொழுது தான் அவனுடைய உண்மையான ருத்திர தாண்டவத்தை காண்பார்கள்.
அதே நேரம் குருவிடமிருந்து போன் வந்தது ராதிகாவிற்கு...
அடுத்து என்ன நடக்க போகிறதோ...

உடனாகும்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11



குரு சதியை சுண்டக்காய் என்று சொல்ல சதிக்கு அவ்வளவு கோவம் வந்தது...

“இங்க பாருங்க இடையில கொஞ்ச நாள் சொல்லாம இருந்தததால மறந்துட்டீங்கன்னு நினைச்சேன்... ஆனா இப்போ மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன்..” ஆத்திரமாக சொல்ல, அவளது முகத்தை நக்கலுடன் பார்த்தவன்,

“எனக்கு உன்னை சுண்டக்காய்னு கூப்பிட தான் பிடுச்சி இருக்கு. நான் என்னடி பண்ணட்டும்... நீ பொறந்ததுல இருந்தே நான் இப்படி தான் கூப்பிடுறேன்...” என்றார்.

“அதெல்லாம் சரி தான்.. இப்போ நானே ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிட்டேன்ல... இப்பவும் சுண்டக்காய்னு கூப்பிட்டா என் இமேஜ் என்னத்துக்கு ஆகுறது... இனி அப்படி கூப்பிட கூடாது... வேணா வேற பேரு ஏதாவது சொல்லி கூப்பிடுங்க...”

“அப்போ ஒக்கே டின் பியர்... உனக்கு சுண்டக்காயை விட இந்த டின் பியரு தான் செம்மையா பொருந்துது.. அதுவும் உன்னை லிப் கிஸ் பண்ணா அதுக்குரிய அர்த்தம் முழுமையாகிடும்...” என்றவனது பேச்சில் தன்னை போதை தரும் வஸ்த்து என்று சொல்லாமல் சொல்ல, கண்களை விரித்து தன் கோவத்தை காட்ட முயன்றாள்...

“திசிஸ் டூ மச் குரு... நான் என்ன அப்படி....” முடிக்கும் முன்பே அவளது இதழ்களை கவ்விக்கொண்டு அவளது உமிழ் நீரை பருகியவன், கண்களை மூடிக்கொண்டு,

“நிஜமாவே நீ டின் பியரு தாண்டி... இப்போ பாரு என் கண்ணு ரெண்டும் மேல சொருகுது... மதி மயங்கி போய் அடுத்ததா சிந்திக்க கூட முடியாம இருக்கேன்... அப்போ நான் சரியா தானே பேர் வச்சு இருக்கேன்...” என்றவன் டான் அவளிடம் எந்த அளவு மதி மயங்கி போய் இருக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்த, அவள் தான் சித்தம் தடுமாறி போனாள்.

ஒருவழியாய் அவனிடமிருந்து விலகியவள் தன் இதழ்களை துடைத்துக்கொண்டவள், வெட்க சிரிப்புடன் அவனை விடுத்து விலகி சென்றாள்.

அவள் சென்றவுடன் தன் தலையை அழுத்தமாக கோதிக்கொண்டவனின் முகம் வசிகரமாய் இருந்தது...

“உன் மேல கோவம் இருக்குடி.. ஆனா அதை விட உன் மேல காதல் இருக்கு... என்னை ரொம்பவும் ஆட்டி வைக்கிறடி நீ...” என்று முனகியவன் வெளியே வந்தான்.

அவன் வந்தவுடன் எல்லோரும் அவனையே ஒரு நொடி பார்த்தவர்கள், பின் சட்டென்று கீழே குனிந்துக்கொண்டு தங்களது வேலையை கவனிக்க தொடங்கினார்கள். அவனும் அவர்களோடு கலந்துக்கொண்டான்.

சிறிது நேரத்திலே சதி அவனுக்கு அருகில் வந்து காதோரம்,

“தலை கலைஞ்சி இருக்கு. அப்படியேவா வருவீங்க...” முனகியவள்,

“போங்க முதல்ல தலையை சீவிட்டு வாங்க...” என்று சொல்லிவிட்டு அடுத்து நிமிடம் அவ்விடம் விட்டு அகன்றாள்.

அவள் அப்படி சொல்லிவிட்டு சென்ற போதும் அவன் அசையாமல் மேற்கொண்டு தன் வேளைகளிலே மூழ்கி இருக்க, சதி யோசனையாய் அவனை பார்த்தாள்.

அவள் அவனையே பார்ப்பது புரிய, குரு நிமிர்ந்து அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு மீண்டும் தன் வேளைகளில் மூழ்கி போக, இவளுக்கு தான் முகம் செவ்வானமாய் சிவந்து போனது...

“என்ன இது இப்படியெல்லாம் பண்றாரு... அடிச்சா மொட்டை, இல்லன்னா குடுமின்னா எப்படி...” என்று புலம்பியவள் தன் வேளைகளில் கலந்துக்கொண்டாள்.

பிமேல் மேல் அக்டர்ஸ் என்று பலரும் வர, அந்த கலைக்கூடமே கலைக்கட்டியது. அதோடு சில ஜோடி ஆக்டர்ஸ் மட்டுமே பேராய் வர, மற்றவர்கள் எல்லாரும் அவரவருக்கு சொல்லி கொடுக்கும் மாஸ்டரோடு பேராகிக்கொண்டார்கள்.

குருவும் சதியும் சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்திக்கொண்டார்கள். மேடை ஏறி ஆட மறுத்துவிட்டார்கள்.

அதோடு தனியாக பிலிம் பேர் அவர்ட் ஆர்கனைசர் வேறு தனியாக வற்புறுத்தி இருந்தார்கள். ஆனால் குரு அந்த வாய்ப்பை வளர்ந்து வரும் ஒரு நடன பயிர்ச்சியாளருக்கு வழங்க சொல்லிவிட்டான்.

அதனால் இருவரும் கோரியோ வேலையை மட்டும் செய்தார்கள். ராக்கி பேமஸ் அக்ட்டர் ஜெலினா வுடன் ஆட வாய்ப்பு கிட்ட, ஜொள்ளு வடிய வடிய ப்ராக்டீஸ் எடுத்துக்கொண்டு இருந்தான்.

அவனுடைய மாணவர்கள் அனைவரும் “அண்ணா ம்ம்ம்ம்... கலக்குங்க...” கோரஸ் பாடி உற்ச்சாகப்படுத்த ஜாலியானான் ராக்கி..

ஒரு மாத காலமும் இந்த பயிற்சி போனதால் பைனல் இயற் மாணவர்களின் பயிற்சி தடைபட்டு போனது.

ஆனால் அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இந்த பிலிம் பேரை அமைத்து கொடுத்தான். இது முடிந்தவுடன் பைனல் வைத்துக்கொள்ளலாம் என்று குரு சொல்லிவிட, அனைத்து மாணவர்களுக்கும் ஏக போக மகிழ்ச்சி...

அதோடு குருவின் தம்பி நவீனுக்கும் கேகேவின் தங்கை லேக்காவிற்க்கும் திருமணம் செய்ய ஏற்பாடு ஒரு புறம் நடந்துக்கொண்டு இருந்தது...

அதன் படி லேக்காவை பொண்ணு பார்ப்பதற்காக அன்று வீட்டிலிருந்த அனைவரும் கிளம்பி சென்றார்கள்.

குரு காரின் முன் பக்கம் அமராமல் பின் இருக்கைக்கு செல்ல, அனைவரும் திகைத்து தான் பார்த்தார்கள்...

“அண்ணா நீ வண்டி ஓட்டலையா...?” வியந்து போய் கேட்டான்.

“டையர்டா இருக்கு டா.. நீயே ஓட்டு...” என்றவன் பின் இருக்கையில் கூட அமராமல் மூன்றாவது வரிசையில் அமர்ந்து இருந்த சதியின் அருகில் சென்று அமர, அனைவரும் விழிவிரித்து பார்த்தார்கள் அதிசயமாக...

ஏனெனில் இன்று வரை சதி அவனது அறைக்கு சென்று உறங்குவதோ, இல்லை அவனோடு பேசுவதோ அவர்களுக்கு தெரியாது...

காலையில் எழுந்து சீக்கிரமாகவே கலைக்கூடத்திற்கு சதி சென்றுவிடுவாள். அங்கே சென்றாள் பிள்ளையோடு வரும் ராதிகாவிற்கு கூட குரு அவளுடன் பேசுவதோ, தனி அறையில் ஒட்டி உரசிக்கொண்டு இருப்பதோ அறியாமல் போனார்.

அதே போல சீக்கிரமாக வீடு தெரியும் சதி எப்பொழுதும் போல அனைவரோடும் உண்டுவிட்டு குழந்தையை அனைத்து தூங்கி விடுவாள். குரு தமாதமாக வீடு திரும்பும் போது வீடே ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்.

அதனால் இரவு பொழுது மனைவி மற்றும் பிள்ளையை அலேக்காக தூக்கிக்கொண்டு தன் அறைக்கு செல்லும் குருவின் சேட்டையை பற்றி தெரியாமலே போனது அந்த குடும்பத்திற்கு...

அதனாலே இன்று சதியின் அருகில் சென்று அமர்ந்தவனை எல்லோரும் வியந்து போய் பார்த்தார்கள். அவர்களது அனைவரின் பார்வையையும் ஒரு பொருட்டாக கூட கருதாமல் அவன் பாட்டுக்கு பின் புறம் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு தூங்க தொடங்கினான்.

சதிக்கு தான் அவர்களது பார்வையை கண்டு சிரிப்பு வந்துவிட்டது... அவளது இதழ்களில் தோன்றிய புன்னகையை கண் திறவாமலே அறிந்தவனாய், தன் காலை எடுத்து அவளின் காலின் மீது வைத்து லேசாய் அழுத்தினான்.

அதில் சட்டென்று அவளது முகம் சிவந்துவிட்டது. அதை அடக்க பெரும்பாடு பட்டவள் குழந்தையை சாக்காக வைத்துக்கொண்டு கீழே குனிந்துக்கொண்டாள்.





காரின் முன் இருக்கையில் நவீனும் குமாரும் அமர்ந்துக்கொள்ள, பின் இருக்கையில் ராதிகா, ஆனந்தி, சேகர் என்று அமர்ந்துக்கொள்ள, அதற்க்கு பின் இருக்கையில் ரொம்பவும் வசதியாக குருவும் சதியும் தங்களுடைய குழந்தையோடு அமர்ந்துக்கொண்டார்கள்.

“டேய் என்னடா நீ போய் சதியோட...”

“ப்ச் தூக்கம் வருது... தூங்க விடு...” என்றவன் இன்னும் நன்றாக சாய்ந்துக்கொண்டு தூங்கி போக, ராதிகாவிற்கு தான் சந்தேகமாக போனது...

“நிஜமாவே இவனுக்கு தூக்கம் வருதா...? இல்ல சதிக்கூட இருக்கணும்னு பின்னாடி போனானா...?” என்று புலம்ப,

“அண்ணி விடுங்க. அவன் தூங்கட்டும்.” என்று ஆனந்தி சொல்லியதோடு,

“பழம், பூ, ஸ்வீட் வாங்கணும்.. மறந்துடாதீங்க... சரியான நேரத்துக்கு தானே கிளம்பி இருக்கோம்.” என்று அவர் வேறு பேச ராதிகா திசை திருப்பினார் குருவிடமிருந்து.

எல்லோரும் ஓரளவு செட்டாகி பேச்சில் கலந்துக்கொள்ள, குரு மெல்ல மெல்ல சதியின் அருகில் நெருங்கி அமர்ந்தான்.

அவனது நெருக்கம் கண்டு திகைத்து அவனை பார்க்க,

“ஷ்.. சாக் ஆகாதடி..” என்றவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் சட்டென்று அவளை கீழே இழுத்து தானும் கீழே குனிந்து இதழ்களில் முத்தமிட்டு நிமிர்ந்த நேரம் நவீன் கைபிடியிலிருந்து கார் நழுவியது...

காரின் தடுமாற்றத்தில் சட்டென்று குரு தன்னை மீட்டுக்கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்தான்.

நவீனுக்கு தான் தன் கண்களை நம்பமுடியவில்லை. எதிரில் இருந்த பேக் கேமராவில் இருவரது தலையும் தெரியவில்லை ஒரு நொடி... என்ன இது என்று முன் புறம் ஒரு கணம் பார்வை பதித்து விலகிய நேரம் கார் சட்டென்று ஸ்லிப் ஆனது.

அதனாலே இது ‘நிஜமா நடந்ததா...? இல்ல நாம ஏதும் கனவு கண்டமா...?’ குழம்பி போனான். ஏனெனில் குரு தன் கண்களை மூடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

சதிக்கு தான் புன்னகையை அடக்க முடியவில்லை.

“அப்பா என்ன சேட்டை பண்றாரு... மொத்த பிராடு தனத்தையும் குத்தகைக்கு எடுத்து இருப்பாரு போல...” மனதுக்குள் செல்லமாய் வைதுக்கொண்டாள்.

ஒரு வழியாய் கேகேவின் வீட்டிற்கு வந்தவர்கள் பெண் பார்க்கும் சடங்கை அழகாக ஆரம்பித்து வைத்தார்கள். லேக்கா அனைவருக்கும் காபி கொண்டு வந்து தர, ஏற்க்கனவே கேகேவின் வழியில் அவளை தெரியும் என்பதால் யாரும் அவளுக்கு பெரிதாக சங்கடத்தை கொடுக்கவில்லை.

அவளும் இயல்பாய் நடந்துக்கொள்ள, அழகான குடும்ப நட்பாய் மாறி போனது பெண் பார்க்கும் சடங்கு. நவீனையும் லேக்காவையும் மனம் விட்டு பேச சொல்லி சொல்ல, இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போனது.

“என்னை பிடுச்சி இருக்கா...” நவீன் ஆண்மையுடன் அன்பாக கேட்க, அவனது அன்பில் நெகிழ்ந்தவள், மெல்ல அவனுக்கு ஒப்புதலாய் தலை அசைத்துவிட்டு,

“உங்களுக்கு என்னை பிடிச்சி இருக்கா...?” கேட்டாள்.

“ம்ம்ம்... கேகேவுடன் உன்னை அடிக்கடி பார்ப்பேன்... அப்பவே உன் மேல ஒரு விருப்பு... ஆனா முறைப்படி வரணும் இல்லையா...? அதான் அம்மா கிட்ட சொல்லி இந்த ஏற்பாடு பண்ணேன்...” என்றான்.

அவனது பதிலில் ஆசையுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவனை.

“நிஜமாவா...?”

“ம்ம்ம்... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னோட பூ முகம் அதை விட ரொம்ப பிடிக்கும்... ஒரு டைம் நீ எனக்கு ஹெல்ப் பண்ண” என்றான்.

அதில் வியந்து “எப்போ...”

“உன் காலேஜ் டைம்ல... சம் ஆக்சிடென்ட். அப்போ ஓடி வந்து தண்ணி குடுத்து, பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போன..” என்றான் புன்னகையுடன்.

அந்த சம்பவம் அவளுக்கு நினைவே இல்லை. அதை அவள் சொல்லவும் செய்தாள்.

“பரவால.. நோ ப்ராப்ளம்... பட் என்னை பிடிச்சி இருக்கு தானே...” எதிர்பார்ப்புடன் கேட்டவனை மறுக்க எந்த காரணமும் இல்லாமல் போக,

“ம்ம்... ரொம்ப பிடிச்சி இருக்கு...” என்றவள் உள்ளே ஓடி போய்விட்டாள்.

அதில் லேசாய் ஏமாற்றமனாலும் அவளது வெட்கம் அவனை நிறைவு செய்தது..

குருவிற்கும் சதிக்கும் இந்த நினைவுகள் வந்து போக சதியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

அவள் எதற்க்காக கண்ணீர் விடுகிறாள் என்று அறியாதவனா அவன்..

யாவரும் அறியாமல் சதியின் கரத்தை இறுக்கி பிடித்து ஆறுதல் படுத்த முனைந்தான். ஆனால் அவ்வளவு எளிதாக அடங்கி விடுமா அவளது தவிப்பு.

சாதியின் முகம் இயல்புக்கு வர மறுக்கவே ஒரு கட்டத்துக்கு மேல் போருக்க முடியாமல் தன் கார் ஓட்டுனருக்கு பேசி காரை எடுத்து வர சொன்னவன்,

“சாரி... அவசரமான வேலைகள் இருக்கு... கேகேவும் இங்க வந்துட்டதால அங்க எல்லாமே அப்படி அப்படியே இருக்கும்.. அதனால நானும் சதியும் கிளம்புறோம்... மச்சான் நீ இருந்து முடிச்சி குடுத்துட்டு அப்புறமா வாடா... நான் அங்க எல்லாத்தையும் பார்த்துக்குறேன்...” என்று அனைவரிடமும் சொல்லி, கேக்கேவிடம் முடித்தவன் விடைபெற்றுக்கொண்டு சதியுடன் சென்றுவிட்டான்.

சதியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டார் ராதிகா..

“நானே வச்சுக்குறேன் அத்தை..” என்று சொல்ல,

“நீ அங்க போய் வேலையை பாரு. இங்க தான் உன் அம்மாவும் இருக்கால்ல... ஒண்ணும் பிரச்சனையை இல்ல... நாங்க பார்த்துக்குறோம்...” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

வேகமாய் காரை ஓட்டியவன் தன் நடன அரங்கிற்குள் வந்து ஒரு பார்வை பார்த்தவன் அனைவரும் ரிகசலில் இருப்பதை பார்த்து எல்லாமே சரியாக நடக்கவும், சதியை யாரும் காணமல் தன் தனிப்பட்ட அரங்கிற்குள் அழைத்து சென்றான்.

அடுத்த நொடி அவனது நெஞ்சில் புதைந்து அழுதாள் சதி...

அவளது அழுகை அவனுக்கு பெரும் பாரத்தை கொடுக்க,

“சதி ப்ளீஸ் டி... அழாத... நீ அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...” மெல்ல அவளை ஆறுதல் படுத்த பார்த்தன்.

“ஏன் மாமா எனக்கு மட்டும் எதுவுமே நடக்கல...” வேதனையுடன் கேட்டவளை அதே குறையாத வேதனையுடன் பார்த்தான் குரு...

“எனக்கும் இதெல்லம் நடக்கணும்னு ஆசை இருக்கும் தானே... ஏன் ஆசையை யாரும் புரிஞ்சிக்கல...” கண்ணீருடன் கேட்டவளின் மன குமுறல்கள் அவனை இன்னும் வேதனை படுத்தியது...

“நீங்க கூட என்னை ஒரு பொருட்டா எடுத்துக்கல தானே... ஐ ஹேட் யூ... போடா... நீயும் என்னை புருஞ்சிக்க வேணாம்... எனக்கு யாருமே வேணாம்... போ... போடா..” என்று அவனை தள்ளிவிட்டாள்.

ஆனால் அவளிடமிருந்து விலகாமல் இன்னும் இறுக்கி அணைத்தவன் அவளது புலம்பலை கேட்டு மனம் நொந்தவன் அவளை சீர் படுத்துவதற்காக அவளது இதழ்களை சிறை செய்தான்.

அதை கூட உணர முடியாமல் அவளது ஏமாற்றம் அவளை வெகுவாக தாக்கி இருந்தது...

இது வரை யாரிடமும் அதை காட்டிக்கொண்டது இல்லை.. ஏனோ குருவிடம் மட்டும் அதை மறைத்து வைக்க அவளால் முடியவில்லை.

உரிமை உள்ள இடத்தில் தானே எதுவுமே செல்லுபடியாகும்... அதெல் போல் தன் கோவம், ஆத்திரம், ஏமாற்றம் அனைத்தையும் அவனிடம் கொட்டி கவிழ்த்தாள் சதி...



உடனாகும்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே....

இந்த கதையை முமழுமையாக என் உணர்வுகளை கொட்டி எழுதினேன். அதுக்கு காரணம் உங்கள் ஊக்கம் தான்...
இது என்னோட 13வது கதை.. அழகா நிறைவு செஞ்சுட்டேன்...

இதுவரைக்கும் என்னை கை பற்றி என்னோட எழத்துக்களை வாசித்து நிறை குறைகளை சொல்லி உற்சாகம் குடுத்த உங்க அத்தனை பேருக்கும் எனது அன்பு கலந்த நன்றி😍😍😍😘😘😘 தோழமைகளே...
நான் அடுத்து எழுத போற கதைகளுக்கும் உங்களது ஆதரவு வேண்டும்...

வாய்ப்பு குடுத்த
ஶ்ரீமாவுக்கும் என் நன்றி...

என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்😍😍😍
 
Status
Not open for further replies.
Top