All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "காலிசையின் ஏகனே...!" கதை திரி.

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!

"காலிசையின் ஏகனே...!" புதிய கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இது தான் கதை தலைப்பு.

கதையை பற்றி எந்த முன்னோட்டமும் இல்லை. போகிற போக்கில் நீங்களே இது எந்த மாதிரியான கதை களம் என்று அனுமாநியுங்கள். முன்னரே கூறி விட்டால் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லாமல் போய் விடும் அல்லவா? அதனால் தான் கூறவில்லை.

கதையின் பதிவுகள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் தோழமைகளே...! எப்பொழுதும் போல இதற்கும் உங்களது ஆதரவு வேண்டும். உங்களின் ஆதரவும் ஊக்கத்தால் மட்டுமே தொடர்ந்து இந்த எழுத்து பணியில் நீடித்து இருக்கிறேன். உங்களது இந்த அன்புகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமைகளே.

உங்களுக்கு தோன்றும் கருத்துக்களையும் நிறை குறைகளையும் என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூக்களே.
உங்களின் கருத்துகள் மட்டுமே என்னை செதுக்கும் உளிகள். நன்றி...!

என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்..
 
Last edited:

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

பாப்பா முதல்முறையாக பள்ளிக்கூடம் செல்கிறாள். சோ டைம் மேனேஜ்மென்ட் பண்ண இந்த ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன். அடுத்த வாரம் சரியாக பதிவுகள் வந்து விடும்❤❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

பென் டு பப்ளிஸ் க்காக ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அடுத்த வாரத்தில் கண்டிப்பாக "காலிசையின் ஏகனே" கதையின் அத்தியாயத்துடன் வந்து விடுவேன்.
அதோடு நான் முதல் முதலில் எழுதிய "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்..." கதையை ரீரன் செய்கிறேன் நட்பூக்களே. படித்து மகிழுங்கள்...😍😍😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

டீசருடன் வந்துவிட்டேன். இனி தொடர்ந்து பதிவுகள் வரும். காக்க வைத்ததற்கு சாரி நட்பூக்களே❤❤❤


உச்சி இராவு பொழுதில் சதங்கமாலையை எடுத்து காலில் முடிந்தவள் அவளையும் மீறி வெகு உணர்ச்சி பூர்வமாக வேங்கையின் வேகத்தில் ஆடிக்கொண்டு இருந்தாள்.

அதே நேரம் அந்நாட்டின் ராஜ மாளிகையில் உப்பரிக்கையில் விரித்திருந்த ராஜ மெத்தையில் அமர்ந்து கைகளில் சோமபானத்தை அருந்தியபடி கண்களில் ஏறிய சிவப்போது பழிவெறி மின்ன பணியாள் பிடித்திருந்த நிலமலர் ஓவியத்தை வெறித்து பார்த்தான் மாறன் சந்திரகாரத்து பூந்துறையோன்.

பெயரில் மட்டும் தான் சந்திரனும் பூவும் இருந்தது. அதனின் குணங்களுக்கு நேர்மாறாக அரக்க குணம் நிறைந்து இருந்தான்.

அவனின் கண்களில் அவ்வளவு வஞ்சகம் கசிந்து இருந்தது. அதோடு கொலை வெறியும் காம இச்சையும் சரிவிகிதத்தில் கலந்து இருந்தது.

“நிலமலர்... இந்த மாறன் சந்திரகாரத்து பூந்துறையோனின் மார்பை அலங்கரிக்கும் நறுமணம் மிகுந்த மலர்களில் நீயும் ஒருத்தி.. உன்னை அடையாமல் விட மாட்டேன்.. உன் கண்களில் இருக்கும் திமிர், உன் தேகத்தில் இருக்கும் நிமிர்வு இதை இரண்டையும் குழைத்து உன்னை என் அந்தப்புரத்தின் அழகியாக வீற்றிருக்க செய்வேன்...” என்று சபதமெடுத்தான்.

அவள் மீது கொண்ட ஆசை நாளாக நாளாக அதிகமாகிக்கொண்டே போனது அவனுக்கு. அவளது பித்தம் சிந்தை எங்கும் நிரம்பி போய் இருக்க விழிகளை மூடி அவளது இன்றைய அலங்காரத்தில் பார்த்ததை நினைவுக்கு கொண்டு வந்து அவளின் யாக்கையை இரசித்து பார்த்தான்.

விழிகள் வருடும் உன் யாக்கையை இந்த மாறனின் கரங்கள் தொடும் காலம் வரும் நிலமலர். “நின் யாக்கையை இந்த மண்மகள் தீண்டும் முன் யான் ஆசை தீர உன் மெய்யை புசித்து, ஆண்டே தீருவேன். அதன் பின்பே உனக்கு இப்பூலோகத்தில் இருந்து விடுதலை.” என்று அந்த மாளிகையே கிடுகிடுக்கும் அளவுக்கு கர்ஜித்தான் காம வெறியில்.

அவனது மனைவி அவனது அடாத செயல்களை கண்டு எதுவும் செய்ய முடியாமல் வேதனையின் உச்சத்தோடு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

சிந்தை மயங்கி ஆட்கொள்ளும் பக்தி ஒரு புறம்... ஆளைக்கொள்ளும் காம நோய் மறுபக்கம் இரண்டில் நிலமலரின் நிலை யாதோ..?
 
Last edited:
Status
Not open for further replies.
Top