All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் அணைவாயோ தீயே🔥(AntiHeroin Novel) - கதை திரி

Status
Not open for further replies.

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே :smiley3:

நான் மீண்டும் வந்துவிட்டேன்.. இங்கே இன்னும் கொஞ்ச நாள் வரமாட்டேனு சொல்லி இருந்தேன்.. ஆனால் வாராமல் இருக்க முடியல..😁😁‌அதுதான் என்னுடைய அடுத்த கதையை எடுத்திட்டு வந்திருக்கேன்..

கதைப்பெயர்: அணைவாயோ தீயே🔥

27582



இது ஒரு AntiHeroin Novel.. கொஞ்சம் வித்தியாசமா கொடுக்க முயற்சித்து இருக்கேன்.. பார்ப்போம் எப்படி வருதுனு.. நாயகியின் உணர்வுகள் தான் கதையின் அடித்தளமே.. படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..

நாளை விநாயகர் சதுர்த்தி‌‌யை முன்னிட்டு கதைக்கான‌ பதிவை கொடுக்கிறேன்

நன்றி டியரிஸ்..😍😍
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அணைவாயோ தீயே🔥

27598


தீ🔥- 01

சிலு சிலுவென்று காற்று வீசிக் கொண்டிருந்தாலும், அதன் குளுமையை ரசித்திட யாருக்கும் மனம் வர இயலாது, அவனையே வெறித்தபடி நின்றிருந்தது அந்த கூட்டம். அவனோ அவர்களை கண்டும் காணாது தன் அருகில் நின்றிருக்கும் முத்துவேலுவை பார்த்தபடி,

"ஏலேய் முத்துவேலு என்னவாம் லே.. எதுக்கு இப்போ அந்த கந்தனும் அவன் ஆளுங்களும் இங்க வந்து நிக்கறானுங்க" என்று கயிற்று கட்டிலில் குறுக்கை சாய்த்தவாரு(படுத்தவாரு), வந்திருந்தவர்களை பார்வையால் அளந்தபடி கேட்டான் அவன்.. அவனே மருதகாளை.

"என்னா மருது.. எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.." என்று அந்த கூட்டத்தில் இருந்து குரல் உயர்த்திய கந்தனை பார்த்தபடியே, கட்டிலில் இருந்து எழுந்தவன் தன் இரண்டு கைகளையும் மேல் தூக்கி சோம்பல் முறித்தவாரு, அவனை மேல் இருந்து கீழ் நிதானமாக பார்த்தபடி,

"ஒரு ஆணியும் பு*** முடியாதுனு தெரியுது" என்றிட, "ஏலேய் யாரை பார்த்து என்னலே சொல்ற" என்றபடி மருதகாளையை அடிக்க பாய்ந்தவனை, வந்திருந்த கூட்டம் தடுத்து பிடித்தனர். அவன் பேச்சை கேட்ட சிவசாமியோ "என்னப்பா மருது இப்படி பேசுற.." என்றிட அவனோ தன் சட்டை பட்டன்களை பூட்டியவாரே, "எப்புடி பேசுறேன்" என்று எகத்தாளமாக கேட்க, மீண்டும் அந்த கூட்டத்தில் ஒரு சலம்பல் ஏற்பட்டது.

"இங்க பாரு‌‌ மருது.. எதோ உதவி கேட்க போறோம்னு பொறுமையா‌ இருக்கிறோம்" என்ற கந்தவேலை கண்டு நக்கலாக சிரித்தவன், "அது தான் உதவி கேட்க வரேனு தெரியுது இல்லை.. அப்போ பொத்திக்கிட்டு கேட்கனும்" என்று தன் முறுக்கு மீசையை நீவியபடி சொல்ல, அதற்கு மேல் அவன் வாயை திறக்கவில்லை. இப்போது காரியம் தான் பெரிது என்று மனதில் நினைத்தவனாக அவனையே வெறுப்புடன் பார்த்திருந்தான் கந்தன்.

"என்னலே எதாச்சும் பேச போறீங்களா.. இல்லை இப்படியே வாயை மூடிட்டு இருக்க போறீங்களா" என்று வந்திருந்த கூட்டத்தின் நோக்கம் அறிந்தே கேட்டான் மருதகாளை. அதை கேட்டதும் சிவசாமியே வாயை திறந்தார்.

"எப்போவும் உன்கிட்ட கொடுக்கிற வேலை தான் மருது.. என் பொன்னை காணோம்.." என்றவரை புருவம் சுருக்கி பார்க்க, அவன் பார்வையை உணர்ந்தவர், "அது வந்து காணோம்னா.. அந்த கீழ்வீதி சரவணன் கூட ஓடிப்போயிட்டா" என்றவரின் குரலில் அவ்வளவு வெறுப்பு மண்டி கிடந்திருந்தது.

அதை கேட்ட மருதுவும், "சரி, இப்போ நான் என்ன செய்யனும்னு சொல்றிங்க.. அவனை‌‌ மட்டும் முடிக்கனுமா இல்லை.. இரண்டு பேரையுமா" என்றிட, "என்ன மருது.. எல்லாம் தெரிஞ்சு நீயே இப்படி கேட்டா எப்புடி.. நம்ம ஜாதியில் பொன்னு வீட்டுபடியை தாண்டுனாலே அவ செத்த மாதிரி தான் கணக்கு.. அப்புறம் எதுக்கு அவளை மட்டும் உயிரோடு விட்டு வைச்சுக்கிட்டு அந்த நாயையும் சேர்த்து முடிச்சிடு.." என்ற சிவசாமி தன் நரைத்த மீசையை நீவியபடி குரலில் அனல் பறக்க பேசினார்.

"சரி முடிச்சிடலாம்.. ஆனா இந்த மருது எப்போவும் எதையும் சும்மா செய்யுற வழக்கம் கிடையாது" என்றிட அவனை அறிந்தவர் அவன் கையில் ஒரு மஞ்ச பையை திணிக்க, அதை வாங்கியவன் முத்துவேலுவிடம் கொடுத்தான். பையை பிரித்து பார்த்தவன், "மாமா ஒன்னு இருக்கு" என்றிட, "ம்ம் சரி கிளம்புங்க.. இனி இந்த பிரச்சினை உங்களுடையது கிடையாது.. இந்த மருதுவோட பிரச்சினை நான் பார்த்துக்கிறேன்" என்றிட வந்திருந்த கூட்டமும் கலைந்து செல்ல, முத்துவேல் கையில் இருந்த ஒரு லட்சத்தையே வெறித்து பார்த்தான் மருதகாளை.


•••••••••••••••

சூரியன் தன் பொன் கதிர்களின் தாக்கத்தை குறைத்தபடி மேகங்களின் மறைவில் தஞ்சமடைய, அந்தி சாயும் மாலை பொழுதினில், வயல் வரப்புகளில் பார்வையை ஓட்டியபடி நடந்துக் கொண்டிருந்தான் மருதகாளை.

திண்ணிய அவன் புஜங்களை இன்னும் அழுத்தமாய் காட்டுவது போன்று உடலை இறுக்கி பிடித்த சட்டை, கருநீல லுங்கியை‌ அணிந்தபடி, பல நாள் மழிக்கபடாது இருந்த தன் தாடியை நீவியவாரு நடந்துக் கொண்டிருந்தவன் அருகில் மூச்சு வாங்கியபடி ஓடி வந்து நின்றாள் பொன்னி.

கறுப்பு நிறத்தழகி.. கருவிழியை உருட்டியபடி, "அண்ணே.." என்றவள் வேக வேகமாக மூச்சை இழுத்து விட்டபடி "நிஜமா ணே.." என்று கேட்க, அவள் எதை கேட்கிறாள் என்று புரிந்தும்,"என்ன நிஜமா.. எதை கேட்குற பொன்னி" என்றவனை கண்டவள், "அது தானே வசந்தி அக்கா ஓடிப் போச்சே.. அதை பெரியப்பா சாவடிக்க சொல்லி உங்கக்கிட்ட சொன்னாங்களாமே.. அப்படியா" என்ற கண்களில் ஒரு இரைஞ்சலுடன் அவ்வாறு இருக்க கூடாது என்று நினைத்தபடி கேட்க,

அவளை பார்த்து முறைத்தவன், "இதெல்லாம் பெரியவங்க விசயம் பொன்னி.. இதுல நீ தலையிடாம இருக்கிறது தான் உனக்கு நல்லது" என்றவன் சட்டையை கழட்டியபடி வரப்பை வெட்டிக் கொண்டிருக்க, அவன் பேச்சிலே உண்மையை புரிந்தவள், "அ..அண்ணே அப்போ அதெல்லாம் உண்மையா.. பாவம் ணே வசந்தி அக்கா.. வுட்டுரு ணே.. நானே பெரியப்பா கிட்ட பேசுறேன் அண்ணே" என்று விழிகளில் கண்ணீர் தேக்கியபடி கேட்டவளை கண்டு, வரப்பு வெட்டி கொண்டிருந்த சம்மட்டியை தூரமாக தூக்கி எறிந்தவன்,

"சின்ன பிள்ளைனு பார்த்தா.. என்ன ரொம்ப பேசிட்டு இருக்க.. வாயை அடக்கிட்டு வூட்டுக்கு போ" என்றவனை கண்டு முறைத்து நின்றவள், தன் கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி, "போ ணே.. நீயும் எல்லாரு மாதிரியும்..‌ சாதி.. சாதினு தான் அழையுற.. அவுங்க என்ன நம்மளை விட அந்தஸ்துல கொஞ்சம் குறைஞ்சவங்க அவ்ளோ தானே.. ஆனா குணத்துல நம்மளை விட பெரியவங்க.. நீ இப்படி இருக்கிறதுனால தான் யாரும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்கிறாங்க" என்றவள் மூக்கை சிந்தியபடி திரும்ப அவளையே கண்கள் சிவக்க முறைத்து பார்த்திருந்தான் முத்துவேல்..

"மச்சான் நீங்க எப்போ வந்தீங்க" என்றிட அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது மருதுவை பேசிய கோபத்தில் கொந்தளித்தவன், "ஏன்டி.. உனக்கு அண்ணன் முறை தானே அவரு.. கொஞ்சம் கூட மட்டு மருவாதை இல்லாம வாய்க்கு‌‌ வந்தது எல்லாம்‌ அவருக்கிட்ட பேசிட்டு இருக்க" என்றவன் அவள் சுதாரிக்கும் முன்னே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட, கதிகலங்கி போய் நின்றாள் பொன்னி.

அதை அவள் மட்டுமின்றி மருதுவும் எதிர்பார்க்க வில்லை.. சட்டென்று "முத்து.." என்றவன் கர்ஜனையில் மீண்டும் அவளை அடிக்க ஓங்கிய அவனின் கரம் அந்தரத்திலே நிற்க "என்னலே பொம்பிள பிள்ளை மேல கை வைக்கிற பழக்கம்.. உனக்கு பரிசம் போட்டு முடிச்சிட்டா.. கையை வைச்சிடுவியோ.. இன்னொரு முறை இந்த மாதிரி நடந்துக்கிட்ட பொலந்துருவேன்.. ஜாக்கிரதை" என்று நாக்கை துருத்தி கை நீட்டி, எச்சரித்திட அவன் தோற்றத்தில் நடுங்கி போனான் முத்துவேல்.

மருண்ட பார்வையோடு சிவந்த கன்னத்தோடு கண்ணீர் வழிந்தோடி நின்றவளை கண்டதும் தன் கோபத்தை குறைத்தவன், "போ.. போய் பிள்ளையை விட்டுட்டு வா" என்றிட சரியென்று தலையாட்டியபடி பொன்னியை அழைத்து கொண்டு சென்றான் முத்து. தன் கரத்தை பற்றி இருந்தவனின் கரத்தை உதறியவள், "என் கையை வுடுயா.. என் மேலயே கையை வைச்சுட்டியா.. நான் போய் எங்க அப்பாரு கிட்டு சொல்றேன்" என்று முறுக்கி கொள்ள,

அதைக் கேட்டதும் "ஏன்டி உனக்கு சொல்றதுக்கு வேற ஆளே கிடைக்கலாயா.. போயும் போய் அந்த அருவா மீசை கிட்ட சொல்றேன்னு சொல்ற.. அப்புறம் நம்ம கல்யாணம் நடக்காது.. எனக்கு கருமாதி தான் நடக்கும்" என்றவனின் வாயை பொத்தியவள், "ஏன்ய்யா இப்படி எல்லாம் பேசுற.. எவ்ளோ நாள் கழிச்சு இப்போ தான் நம்ம கல்யாணத்துக்கு ஒத்து இருக்காங்க.. இந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்க" என்று கண்ணீர் வழிய கேட்க,

அதனை துடைத்தபடியே, "நான் என்ன இல்லாததையா சொல்றேன்.. அதுதான் நெஜம் பொன்னி.. இப்போ நானும் உங்க ஆளை இருக்க போய்.. சொத்து இல்லைனாலும் கல்யாணம் செஞ்சு கொடுக்கிறேனு சொல்றாங்க.. இதே வேத்து ஆளா இருந்தா நம்ம கல்யாணம் நடக்குமா என்ன.. அதை தெரிஞ்சுகிட்டு தான் அந்த வசந்தி புள்ள ஓடிப் போயிடுச்சோ என்னவோ.. இனி அது வாழ்க்கை எப்படி முடிய போகுதோ" என்று புலம்பியவனை கண்டவள்,

"ஏன்யா நீ அண்ணாக்கிட்ட சொல்ல கூடாதா.." என்று கண்களில் ஆசையோடு கேட்க, அதை கண்டவனோ, "இங்க பாரு பொன்னி.. நான் மாமா கூட இருக்கிறதுனால எனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்காத.. சொல்லப் போனால் மாமா இந்த மாதிரி விஷயத்தை எதுவும் என்னை வைச்சிக்கிட்டு பண்ணாது.. இந்த மாதிரி வேலைக்கு எல்லாம் டவுன் காரங்க கூட சேர்ந்து தான் மாமா பண்ணும்.. எனக்கிட்ட கேட்கிற போல வேற யாருக்கிட்டேயும் வாயை தொறக்காத" என்று பொன்னியை அதட்டிக் கொண்டிருந்தான் முத்து.

இவர்கள் சம்பாஷனை எதுவும் தெரியாது, அவர்கள் பார்க்கும் தூரத்தில் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்தவன், அதன் மேல் சாய்ந்தவாரு கண்மூடி அமர்ந்துக் கொண்டு தன்னை ஆசுவாச படுத்திக் கொள்ள, ஜல் ஜல்லென்ற கொலுசு ஒலி அவன் செவியை அடைந்திட தானாக அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தது‌ .

விழி திறந்தவன் முன்னே, ஐந்தரை அடி உயரத்தில், மாநிறத்தில் அசர அடிக்கும் அழகோடு, கண்களை சுருக்கியபடி இடுப்பில் கைவைத்து முறைத்தவாரு நின்றிருந்தாள் பவளமல்லி. அவள் முறைப்பை கண்டதும் கோபம் பறந்தோட, இன்னும் சிரிப்பு பொங்க அவளையே விழி அகலாது பார்த்திருந்தான் மருதகாளை.

அவன் பார்வையை கண்டவளோ, "யோவ்.. உனக்கு கொஞ்சமாச்சு அறிவுனு ஒன்னு இருக்காயா.. சோறு கூட திங்காமா அப்படி என்ன வெட்டி முறிக்குற" என்றபடி தான் அணிந்திருந்த பாவடை தாவணியை தூக்கி சொருக, அவள் கென்டை கால்களை பார்த்தவனோ,

"ஏன்டி.. எத்தனை முறை சொல்லி இருக்கேன் இப்படி தாவணியை‌‌ தூக்கி சொருகாதேனு" என்றவன்‌ அவள் இடுப்பில் சொருகியிருந்ததை எடுத்துவிட்டவன் அவள் தலையில் கொட்ட, "யோவ் இப்போ பார்த்தா என்னாயா.. நீ தானே என்னை கட்டிக்க போற.. என் மச்சானுக்கு இல்லாத உரிமையா" என்று அவன் கொட்டிய தலையை தேய்த்தபடி‌ உதட்டை சுளித்து ‌பேசினாள் பவளமல்லி.

தான் முன்பே மரத்தில் மாட்டி வைந்திருந்த தூக்கு சட்டியை எடுத்தவன் உணவை எடுத்து உண்ண ஆரம்பிக்க, அவனையே பார்த்திருந்தவள், "ஏன்யா.. அந்த பொன்னி புள்ள வந்து திட்டிட்டு போச்சே உனக்கு எந்த வருத்தமும் இல்லையா" என்று அவன் மனமறிய கேட்க, ஓர் நொடி அவன் கரம் தயங்கினாலும் மீண்டும் உணவை எடுத்து வாயில் திணித்துக் கொண்டவன்,

"அது வெள்ளந்தி புள்ள மல்லி.. அக்கா மேல வைச்சிருக்கிற பாசத்துல, மனசுல பட்டதை சொல்லிபுடுச்சு.. அதுக்கெல்லாம் சுணங்க முடியாது.‌. அதை விட எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றவன் பொன்னி பேசியதை அலட்சியமாக எடுத்து கொண்டு, உணவில் கவனம் செலுத்தினான்.

அதை கேட்டவளோ, "அதுதானே பார்த்தேன்.. மலையை‌‌ முழுங்குன மகாதேவன் கணக்கா இருக்கிற உனக்கு எங்கிருந்து வெசனம் வரப்போகுது.. போயா.. போ.. ஒரு நாள் இல்லை ஒரு நாள்.. எல்லாத்துக்கும் அனுபவிக்க போற" என்றதும் அவன் முகம் இறுகி விட,

அதை கண்டதும் தன் மடத்தனத்தை உணர்ந்தவள், "அய்ய.. இப்போ எதுக்கு மூஞ்சை இப்படி வைச்சிட்டு இருக்க.. நான் கூட இருக்கிற வரைக்கும் உனக்கு எந்த கவலையும் வரவுடமாட்டன்யா.. கவலைப்படாம சாப்பிடு அதை விட்டுப் போட்டு.. தேவாங்கு மாதிரி மூஞ்சை வைச்சிக்கிட்டு" என்றவள் பேச்சை கேட்டு முறைத்தவன், "என்னடி இது தான் சாக்குனு என்னை தேவாங்குனு சொல்றயா" என்று கையை கழுவி கொண்டு தனது லுங்கியில் துடைத்தபடி அவளை காண,

அவளோ தாடையில் ஒற்றை கையில் தாங்கியபடி அமர்ந்திருந்தவள், "ஏன் மச்சான் பூனையை பூனைனு சொல்றோம்.. குரங்கை குரங்குனு சொல்றோம்.. அப்போ தேவாங்கை தேவாங்குனு தானே சொல்லனும்" என்று அவனிடமே அப்பிராயம் கேட்க, அதை கேட்டதும், அடிங் என்று அடிப்பது போன்று பாவனை செய்ய, அதில் மிரண்டவள் தனது பாவாடையை தூக்கியபடி, அவன் கைகளில் அகப்படாது இருக்க வயல் வரப்பின் மேல் ஓடினாள் பவளமல்லி.

புள்ளி மானாய் துள்ளி ஓடுபவளின் கொலுசு அணிவிக்காத வெற்று கால்களை பார்த்தவன், தனது மேல் சட்டை பாக்கெட்டில் இருந்து அவள் கொலுசை கையில் எடுத்து அதனை வெறித்தபடியே, இறுகி போய் நின்றான் மருதுகாளை.

தூரத்தில் இருந்து முத்துவிடம் பேசிக் கொண்டு இருந்த பொன்னியோ, மருது சிரித்து பேசுவதையும் பின் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வதையும் கண்டு, குழம்பி போனவள்

"இங்க பாரு மச்சான்.. நீ என்னவோ செஞ்சு தொல.. ஆனா இப்படி அண்ணன் கூடயே நீ சுத்திட்டு கிடந்த கண்டிப்பா பைத்தியம் தான் ஆகப்போற.." என்று முத்துவை திட்டியவள், அவன் உணரும் முன்னே தன் கரத்தை அவனிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு விறுவிறுவென்று வேக நடை போட்டாள் பொன்னி.

" சாதி தான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும் "

- சட்ட மாமேதை அம்பேத்கர்


அணையுமா?🔥
 
Last edited:

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீ🔥..02


இறுகி போய் நின்றிருந்த மருது அழுத்தமாக விழிகளை மூடி மீண்டும் திறக்க, அந்த வயல்வரப்பின் மேல் அவள் இல்லை. ஆனால் அவளின்‌ கொலுசொலி சத்தம் மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க, தனது கைகளில் இருக்கும் கொலுசை அழுந்த பற்றிக் கொண்டவன், அப்போது தான் அவள் வந்து பேசியது அனைத்தும் மனபிரம்மை என்று உணர்ந்தான்.

அவளை நினைத்த தன்னையே அருவருத்து போனவன், இயலாமையில் அங்கிருக்கும் மரத்தினை ஓங்கி குத்த, அவன் கைகளில் சீராய்ப்பு ஏற்பட்டு சொட சொடவென்று ரத்தம் அந்த கொலுசின் மீதே ஒழுக.. மல்லிஇஇஇஇ என்றவனின் குரல் அந்த வயல்வரப்பு எங்கும் ஒலித்து‌ அடங்கியது.

யாரை நினைத்து கதறுகிறானோ அவளோ அந்த அரண்மனையில் கூண்டு கிளியாய் இருந்தாள். கீழ்வீதி தெருவின் பெரிய வீட்டார் என்று அழைக்கப்படும் அந்த வீட்டின் சமையல் அறையில் ஒடுங்கி இருந்தாள் பவளமல்லி‌.

"ஏய் இந்தாடி, என்னத்த செஞ்சிட்டு கிடக்க, போ.. போய் உன் வீட்டுகாரனுக்கு நல்லி எலும்பை எடுத்து வை.. அதை விட்டுட்டு அடைக்காக்கிற பொட்டை கோழி மாதிரி அடுப்பங்கரைக்குள்ளே கிடக்கிற" என்று முனங்கிய தன் மாமியார் குணலட்சுமியின் பேச்சை கேட்டபடி தன் கணவனுக்கு உணவு பரிமாற சென்றாள் பவளமல்லி.

அங்கே உணவு மேஜையில் கால் மீது கால் போட்டபடி இவளையே பார்வையால் துளைத்தபடி இருந்தான் வஜ்ரசிம்மன். பெரிய வீட்டின் குலவாரிசு.. பவளமல்லியின் கணவன்‌‌..

27596

அவன் பார்வையை உணர்ந்தாலும் சாதாரணமாக அவனுக்கு உணவை எடுத்த வைக்க, அதை காண காண அவனுள் கோபம் பெருகியது. ஆட்டுக்கால் சூப்பை பரிமாறுபவளின் முகத்தை கண்டவனோ, "என்னடி இதை பார்த்ததும் உன் கள்ள காதலன் நியபகம் வந்திடுச்சோ.." என்று நக்கலாக கேட்டவனை தலை நிமிர்த்தி கண்டவள்,

"இப்போ ஆமானு சொன்னா என்ன செய்ய போறீங்க.. " என்று எதிர் கேள்வி கேட்டவளின் கன்னத்திலே ஓங்கி அரைய, அவன் உண்ட சோற்று பருக்கைகள் அவள் கன்னத்தை அலங்கரித்தது.

இதனை எல்லாம் நடுக்கூடத்தில் இருந்து பார்த்த கண்ணாயிரம்.. "தம்பி, உன் ருமுக்குள்ள வைச்சு அடி உதை என்ன வேணும்னாலும் செய்.. ஆனா இப்படி நடுக்கூடத்தில் வேணாம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம சாதி ஆளுங்க எல்லாம் வரப்போறங்க.. அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டு வா" என்றவர்

"ஏய் குணலட்சுமி.. எங்கடி போய் தொலைஞ்ச.. வெத்தலை பொட்டியை எடுத்துனு வா" என்ற கத்தலில் நடுநடுங்கியபடி அதை எடுத்து வந்து கொடுத்தார் குணலட்சுமி.

அதை எல்லாம் கண்ட பவளமல்லிக்கோ, இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை ஆணாதிக்கமும்.. சாதியும் எங்கிருந்து ஒழிய போகுது என்று அருவருத்தபடி அவர்களை பார்த்தவள், உதட்டில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி மாடிபடியேறி தங்கள் அறைக்குள் அடைந்து கொண்டாள் பவளமல்லி.

அவள் செல்வதையே மனதில் வெறுப்புடன் பார்த்தவன் நைட்டு இருக்குடி உனக்கு என்று மனதிலே கருவிக் கொண்டு தந்தை அருகில் அமர்ந்து கொண்டான் வஜ்ரா.

சில மணி நேரத்திலேயே அவர்களின் அங்காளி பங்காளிகள் எல்லாம் கூட, நடுநாயகமாக அமர்ந்திருந்த கண்ணப்பன் அருகே தோரணையோடு அமர்ந்திருந்தான் வஜ்ரா.

"என்ன அப்பு முடிவெடுத்து இருக்கிங்க.. வேற எவனாது அந்த மேல் வீதி புள்ளயை இழுத்திட்டு ஓடியிருந்தா அவன் குடும்பத்தையே சாச்சிருப்போம்.. இப்போ உங்க வீட்டு பையனே அப்படி செஞ்சு இருக்கான் என்ன செய்ய போறீங்க" என்றதும் அங்கிருக்கும் மேஜையை உதைத்து தள்ளியவன்,

"எவனுக்கும் நாங்க பதில் சொல்லனும்னு அவசியம் கிடையாது.." என்ற வஜ்ரனின் கோபத்தில் அனைவரும் நடுநடுங்கி போக, பின் அதனை சமாளிக்க எண்ணியவர்களாக

"என்ன தம்பி எதுக்கு இப்படி கோவம் வருது.. காரணம் இல்லாமல் நாங்க கேட்போமா, அந்த மேல்வீதிகாரங்க நம்ம புள்ளையை முடிக்க சொல்லி அந்த மருதுக்கிட்ட கொடுத்திருக்காங்க.. உங்களுக்கே தெரியும் அந்த மருதுக்கிட்ட ஒரு விஷயம் போச்சு அவனை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது.. அவன் என்ன செய்வானும் நம்மளுக்கு தெரியாது‌.." என்று மூட்டி விட சரியாக அதன் தாக்கம் இவனிடம் எதிரொளித்தது.

முன்பே பவளமல்லியின் பேச்சில் எரிச்சலில் இருந்தவன், " மருது.. மருது.. அந்த மருது என்ன பெரிய கொம்பனா.. ஓடிப் போனவனை எப்படி புதைக்கிறதனு வழியை மட்டும் பாருங்க.. மற்றது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்றவன் தன் தந்தையின் புறம் திரும்பி,

"இனி உங்களுக்கு ஒரு மகன் தான்.. அது இந்த வஜ்ரன் மட்டும் தான்.. ஓடிப் போன சரவணன் செத்துட்டானு நினைச்சுக்கோங்க" என்று வண்டியை கிளப்பி கொண்டு வெளியே போக, மேலிருந்து சாளரத்தின் வழியே செல்லும் அவன் முதுகையே வெறித்து பார்த்திருந்தாள் பவளமல்லி.

"நீ ஒரு முட்டாள் டா.. எதையுமே யோசிக்க தெரியாத முட்டாள். உனக்கு நல்லா கொம்பு சீவி விடுறானுங்க நீயும் அதுக்கேற்ற மாதிரி ஆடுற.. ஆடு.. ஆடு.. நல்லா ஆடு.. இதுக்கெல்லாம் நீ ஒருநாள் அனுபவிக்க தானே போற.‌." என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோட.. இந்த சாதியை காரணமாய் வைத்து பாழப்போன தன் வாழ்க்கையை நினைத்து அவளால் மறுக மட்டுமே முடிந்தது.



•••••••••••••••••••


முத்துவேல் கையை உதறிவிட்டு வந்துக் கொண்டிருந்த பொன்னியின் மனதிலோ
பல குழப்பங்கள் சூழ்ந்துக் கொண்டிருந்தது.

"இந்த மருது அண்ணேன் எதுக்கு தனியா சிரிச்சு பேசிக்கிட்டு இருந்துச்சு.. அப்புறம் கோவப்படுற மாதிரி மூஞ்சை மாத்துச்சே.. ஒருவேளை ஊருல சொல்ற மாதிரி அவரு பைத்தியம் ஆகிட்டாரோ.‌. இல்லையே நம்மக்கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்தாங்க" என்று பலவற்றை யோசித்தபடி வீட்டினுள் நுழைய அவனையே உறுத்து‌ விழித்திருந்தான் கந்தன்.

அவன் பார்வையை கவனியாது அறைக்குள் நுழைய போனவளை தடுத்து நிறுத்தியது அவனின் நாராசமான பேச்சு. "என்னடி பரிசம் போட்டாச்சுனு ஊரை மேஞ்சிட்டு வரியோ.. ஏற்கனவே ஒருத்தி வீட்டையே சந்தி சிரிக்க வைச்சிட்டு போயிட்டா.. அடுத்து நீயா.." என்றவனை கண்டு கோபம் தலைக்கேற,

"நான் ஒன்னும் வசந்தி அக்கா மாதிரி கிடையாது" என்றதும், ஏதோ பேச வந்தன் கந்தனின் வாய் தன்னால் பூட்டிக் கொண்டது அவனின் அப்பா சிவலிங்கம் பேச்சை கேட்டதும்..

"இந்தா பொன்னி அண்ணனை எதிர்த்து எதுக்கு பேசுற.. போய் வீட்டு வேலையை எதாச்சும் பாரு.. அதை விட்டுப் போட்டு சும்மா வாய் அளக்குறதே வேலையா போச்சு" என்ற வார்த்தைகளை கேட்டதும் முனுக்கென அவள் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது. எப்போதும் வாய் நிறைய என் வூட்டு மகாலட்சுமி.. என்பவர் இப்போது இப்படி பேச, அழுகையோடு அறைக்கு ஓடிவிட்டாள் பொன்னி.

தலகாணியை நனைத்த கொண்டு இருந்தவளின் தலையை ஓர் கரம் வருட, வெடுக்கென்று நிமிர்ந்து பார்க்க, வழியும் அவளின் கண்ணீரை துடைத்து விட்டார் கோதை.. சிவலிங்கத்தின் மனைவி. அவரை கண்டதும் மீண்டும் அழுகை பொங்க, "மா ஏன் மா.. அப்பாரு இப்படி செய்றாங்க" என்றிட என்ன சொல்ல இயலும் அவரால்..

இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கண்ணீரை துடைத்தபடி உள் நுழைந்தார் பேச்சுகனி. சரவணனோடு காதல் செய்து வீட்டை விட்டு சென்ற வசந்தியின் அன்னை. சிவசாமியின் மனைவி. இப்போது தான் தன் கணவர் சிவசாமியின் பேச்சுகளை வாங்கியபடி வந்தார், பொன்னியின் அழுகையை கண்டு கோபம் கிளர்த்தெழ,

"இந்தா கோதை இப்போ எதுக்கு அவளை மடியில் போட்டு சீராட்டிட்டு இருக்க.. பரிசம் போட்டாச்சு.. இன்னம் கொஞ்ச நாளுல கண்ணாலமே நடக்க போகுது.. இன்னும் சின்ன குழந்தை மாதிரி அழுந்திட்டு கிடக்கா.. ஏற்கனவே ஒருத்தி நம்ம தலையில் மொளகா அரைச்சிட்டு போயிட்டா..

இப்போ இவ மூக்கை சந்திட்டு இருக்க.. இதை பார்த்தா இதுக்கும் சேர்த்து இவ பெரியப்பா என்னை தான் பிடிச்சு ஏசுவாரு" என்று அதட்டியபடி கோதையை இழுத்துக் கொண்டு சமையல் அறை செல்ல, இவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

"அக்கா ஓடிப் போனதுக்கு நான் என்ன செய்வேன்.. எல்லாரும் என்னையே திட்டுறாங்க.." என்று வாய் விட்டே புலம்பியபடி மீண்டும் தலைகாணியில் முகம் புதைத்து அழுதாள் பொன்னி‌. செல்லமாக வளர்த்த அவளுக்கு தீடிரென்று மாறிய வீட்டு சூழல் புரியவில்லை‌. வீட்டு பெண் தவறு செய்தால் அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் நிம்மதியையே குலைக்கும் என்று அந்த பருவ மங்கை அறிந்து இருக்கவில்லை..


•••••••••••••••••


ஆற்றையே‌ பார்த்திருந்த மருதுவின் மனமோ ஆற்றில் ஒடும் தண்ணீரை போன்றே ஒரு நிலை இல்லாது தவித்துக் கொண்டிருந்தது. ஆற்றில் மீண்டும் தெரியும் அவள் பிம்பம் கண்டு எரிச்சல் அடைந்தவன் கற்களை தூக்கி போட்டுக் கொண்டே இருக்க, ஆனால் அவள் பிம்பம் மறைந்‌த பாடில்லை.

"நீ எவ்வளவு தான் கல்லை தூக்கி போட்டாலும் என் முகம் மறைஞ்சு போகாது.. அப்படியே தான் இருக்கும்.. ஏன்னா நான் நிஜம்" என்றவளின் குரல் அவன் பின்பக்கம் ஒலிக்க அதிர்ந்து திரும்பியவன் கண்டது இவனையே பார்த்தபடி இருக்கும் சாம்பல் நிற விழிகளை தான். அவளின் கண்களை ஊடுறுவி பார்த்ததும் அவன் முகத்தில் அலட்சியம் வந்துக் குடிக்கொள்ள, அவளோடு பேச பிடிக்காது அங்கிருந்து நழுவ முயன்றான் மருது.

அதை கண்டவளோ, "இப்போ எதுக்கு என்னை கண்டதும் இப்படி பாம்பை பார்த்த மாதிரி ஓடுற என்றவளின் மரியாதை இல்லாது பேச்சை கேட்டும் கேட்காதபடி செல்ல, அவளின் கோபம் பலமடங்கானது..

"அது தானே அடுத்தவன் பொண்டாட்டியை இன்னும் மனசுல நினைச்சிட்டு இருக்கிறவனுக்கு நான் எல்லாம் எப்படி கண்ணுக்கு தெரிவேன்" என்றிட அவள் பேச்சை கேட்டு தன் நடையை நிறுத்தியவன், திரும்பி அவளை எரித்து விடுவது போன்று முறைத்து பார்த்தான் மருது.

அதை கண்டவளோ, "என்னத்துக்கு இப்படி முறைச்சு பார்க்குற.. நான் என்ன இல்லாததையா சொல்றேன்.. உண்மையை தானே சொன்னேன்..‌ அது தான் உன் கையில் இருக்கிற காயமே பதில் சொல்லுதே" என்றபடி அந்த காயத்தை அலட்சியமாக பார்த்தாள். அதை கண்டு வருந்த வேண்டிய உள்ளம் மாறாக சந்தோஷம் தான் அடைந்தது.

அவள் பேச்சை கேட்டு ஆயாசமாக உணர்ந்தவன், "இப்போ உனக்கு என்ன தான் வேனும் ரத்னம்" என்றிட.. "ரத்னம்.. இல்லை‌ ரத்னமல்லி" என்றவள் கண்கள் சிவப்பை‌ பூசிக் கொண்டு இருக்க, அதனோடே "என்ன வேனும்னு தானே கேட்ட.. நீ தான் வேனும் மச்சான்" என்றிட சட்டென்று அவன் பொறுமை பறந்து சென்றுவிட "ஏய் மச்சான் கிச்சானு கூப்பிட்ட பல்லு தெரிச்சிரும் பார்த்துக்க" என்றவனை கண்டு அவளுக்கு சிறிதும் பயமில்லை. மாறாக சந்தோஷம் உற்றெடுக்க,

"ஏன் அப்படி தான் கூப்பிடுவேன்.. அவ கூப்பிடும் போது இனிச்சது.. அவளை மாதிரியே இருக்கிற நான் கூப்பிட்டா கசக்குதோ" என்றிட அவளின் உருவத்தையே தான் இமைக்காமல் பார்த்திருந்தான் மருதுகாளை. ஆம் இவள் சொல்வது போன்று பவளமல்லி.. ரத்னமல்லி இருவரும் ஒத்த உருவம் கொண்ட‌ இரட்டையர் தானே!! உருவம் ஒரே மாதிரி இருந்து என்ன பயன்.. குணம் வேறு‌ வேறு அல்லவே!!

அவனது யோசனையை கண்டவள், "எங்க இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்னு யோசிக்கிறயா.." என்றவளின் சாம்பல் நிறக் கண்கள் ஒரு நொடி அவனை கூர்மையாக தழுவி பின் வெறுமையாக அவனை பார்த்தபடி,

"இந்த ரத்னமல்லி எப்போவும் ரத்னமல்லியா தான் இருப்பா.. யாருக்காகவும் தான்னை மாற்றிக்க மாட்டா" என்றவளின் குரலில் இருந்தது கம்பீரம் மட்டுமே.. இல்லையெனில் வீட்டை எதிர்த்து உறவினரை எதிர்த்து இன்று புகழ்பெற்ற மருத்துவராக இருக்க இயலுமா என்ன!!

அவளின் வார்த்தை அவனுள் ஓர் கனலை மூட்ட, அவனுள் தோன்றிய எரிச்சலை அப்படியே பார்வையில் காட்டியவன், "இது தான்டி நீ.. என் மல்லிக்கு எப்போவும் சுயநலமா யோசிக்கவே தெரியாது.." என்றதும் அவள் முகத்தில் ஒரு நக்கல் தோன்ற,

"என்னது உன் மல்லியா.. அவ எப்போவோ மாற்றான் தோட்டத்து மல்லி ஆகிட்டா" என்றவளின் அகங்கார சிரிப்பின் பின்னிருந்த உண்மை அவனை கூறு போட, "ப்ச் உனக்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா.." என்றவன் அங்கிருந்து நகர பார்க்க, அவன் வழியை வந்து மறைத்து நின்றவளோ,

"இங்க பாரு மருது.. எதுக்கு என்னை வேண்டாம்னு மறுக்கிற.. அவ நினைப்புல முழு பைத்தியம் ஆகாம இருக்கனும்னா என்னை கட்டிக்கோ.. இல்லைனா இந்த ஊரில் இருக்கிற பாதி பேரை உன்னை பைத்தியம்னு நம்ப வைச்ச மாதிரி உன் வீட்டுல இருக்கிறவங்களை நம்ப வைக்க எனக்கு ரொம்ப நாள் ஆகாது" என்றதும் அவளை திரும்பி பார்த்தவன் பார்வையே சொன்னது,"உன்னால் முடிந்ததை செய்து கொள்" என்று..

தன்னுடைய சட்டையின் கைபகுதியை மடித்து விட்டவாரே, தன்னை கடந்து செல்பவனை பார்த்துக் கொண்டு இருந்தவள் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேதனை சாயல் படிய, மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டவள், "இந்த ரத்னமல்லி எப்போவும் யாருக்காகவும் கவலைபடமாட்டா.." என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் முகத்தில் மீண்டும் கம்பீரம் வந்து குடிக்கொண்டது.


" உயிர் காதல்

மறித்ததை
உணர்ந்தவனால்
மற்றோரு ஜீவனின்
காதலை மறி(று)க்க
செய்கிறோம்
என்பதை
உணர முடியாது

போனது யாதோ!! "

27597


அணையுமா🔥
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,

இதோ என் அடுத்த கதையின் முதல் இரண்டு அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.. எப்படி இருக்குதுனு சொல்லுங்க..

கதையை பற்றி தங்களின் கருத்துகளை சொல்லுங்க டியரிஸ்..😍😍😍😍

லவ் யூ ஆல்..♥♥♥:WritingSmiley:


நன்றி
நட்புடன்

சரண்யாகீதா♥
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே இந்த கதை தற்போதைக்கு on hold இல் இருக்கு.. பின்னாட்களில் இந்த கதையை பார்ப்போம். தற்போது கதை எழுத முடியா சூழல்.. சில நாட்கள் கழித்து மீண்டும் சந்திப்போம்..😍😍😍🤩🤩

நன்றி
நட்புடன்
சரண்யாகீதா♥
 
Status
Not open for further replies.
Top