All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சஹாராவின் "உயிரே உறவாக..." - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

sahara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே ,

இது எனது முதல் முயற்சி.உங்கள் ஆதரவை எதிர் பார்த்து உள்ளேன் .


தலைப்பு : உயிரே உறவாக
-------------------------------------------


ஹீரோ: ஆதிதேவ் வர்மா

ஹீரோயின் : நிலமொழி


உறவே இல்லாமல் வாழும் ஒருவளுக்கு ,முழு உலகமாக ஒருவன் வரப்போகிறான்






கதையின் நிறை மற்றும் குறைகளை பகிர்ந்து கொள்ளவும்
 

sahara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -1
முதல் அத்தியாயத்தை பகிர்ந்து விட்டேன் .

படித்துவிட்டு கருத்துக்களை பகிரவும்


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உயிரே உறவாகி







அத்தியாயம் -1
--------------------------



காலை 5 மணிக்கு எழுந்து வழக்கம் எழுந்து குளித்து விட்டு கோலம் போடசென்றாள் நிலமொழி .காலை வேளையில் அவளை பார்ப்பதற்கு பனியில் பூர்த்து இருக்கும் ரோஜா பூவை போல் இருந்தாள் .





நிலமொழி -- 18 வயது நிரம்பிய பாவை .துரு துரு கண்களும் குண்டு கன்னங்களையும் யாரையும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அழகு. எப்பொழும் வேலை செய்வதால் என்னவோ கொடி போன்ற உடல் வாகு .அவளுடைய தாய் பாட்டியை போல இடையை தாண்டும் கூந்தல் .





சிறு வயதிலேயே தாய் தந்தையை பறி கொடுத்தவள் . வேலாயுதம் , சரஸ்வதின் செல்ல பேத்தி . சிறு வயது முதலே பொறுப்புடன் இருப்பாள் . தாத்தா பாட்டிக்கு எந்த தொந்தரவும் தர மாட்டாள் .ஊரில் அனைவருக்கும் செல்ல பிள்ளை அவள். அவளுடைய குண்டு கன்னத்தை கிள்ளவே அவளை அனைவரும் வருவர் .



அவளுடைய பாட்டிக்கு எப்போதும் உடல் நிலை சரி இல்லாமல் போகும். அவளுக்காகவே அவர் உயிரை பிடித்து வைத்து இருந்தார்.இருப்பினும் அவளுடைய 16 வயதில் அவரும் அவளை விட்டு பிறந்து சென்றார் .



தன் பெற்றோர் பிரிவை விட அவளுடை பாட்டின் இருப்பு அவளை மிகவும் பாதித்தது .அவள் சிறு வயதில் நல்ல சுட்டி பெண்ணாக தான் இருந்தாள் ஆனால் பாட்டியை கவனித்தால் வீடு வேலைகளும் அவளே கவனித்தால் என்னவோ அவள் அப்பொழுதே தன் வயதை மீறிய பொறுப்புடன் இருப்பாள்.



சரஸ்வதின் பிரிவின் பிறகு அவள் முழுவதும் அமைதியாக மாறி விட்டாள்.அவள் தாத்தா மிகுத்த பாசம் உடையவர் தான் ஆனால் ஒரு வயதிற்க்கு மேல் அவரிடம் சிறு ஒதுக்கம் வந்து விட்டது .அதனால் என்னவவோ அவளுக்கு தான் மட்டும் தனியாக இருப்பது போல இருக்கும்.அவளுடைய தோழிகள் வேறு தன் குடும்பக் கதைகளை கூறும் போது அவளுக்கு ஏக்கமாக இருக்கும் .



ஆனால் வயதான தனது தாத்தாவை அவள் கஷடப்படுத்த அவள் விரும்ப வில்லை . அவளுக்கு தெரியும் தன்னை விடவே தாத்தாவே பாட்டியின் பிரிவில் ரொம்ப கஷ்டப்படுகிறார் என்று .



அவளுடைய இறுதி பள்ளி ஆண்டில் அவளுடைய தாத்தாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போகவே அவள் மிகவும் பயந்து விட்டால் எங்கே தனக்கு இருக்கும் ஒரு உறவும் தன்னை விட்டு பிரிந்து போய் விடும் என்று .



அவள் இறுதி தேர்வு முடித்தவுடனே தாத்தாவின் உடம்பு ரொம்ப மோசமாகி விட்டது.

தாத்தாவின் நெருங்கிய நண்பர் சக்கரவர்த்தி .



அவரை அவள் சிறு வயது முதலே பார்த்து இருக்கிறாள் .எப்பொழுதும் தனக்கு பிடித்த சாக்லேட் வாங்கி வரும் அந்த தாத்தாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.அவரின் பொறுப்பில் தனது பேத்தியே சேர்த்து விட்டுவிட்ட நிம்மதில் அவரும் இறைவன் அடி சேர்த்துவிட்டார் .







இவை எல்லாம் நடந்து முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது .முதல் முறை இந்த வீடு பார்க்கும் போது அவளுக்கு எவ்வளவு பிரமிப்பு தோன்றியதோ அது தான் எப்பொழுதும் தோன்றும் .



கோவையில் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் பகுதில் மற்ற அனைத்து வீடுகளை விட 2 மடங்கு பெரிதாக இருந்தது.இதனை வீடு இல்லை மாளிகை என்றே சொல்ல வேண்டும்.

கோலம் போட்டு முடித்த உடனே அங்கு பூங்காவை போல இருக்கும் அந்த வீட்டு தோட்டத்தை சுற்றி வந்தாள் .அவளுக்கு இந்த காலை நேர நடை மிகவும் பிடிக்கும் . அப்டியே நடந்து கொண்டு சூரிய உதயத்தை பார்ப்பது அவளது வழக்கம் .



இன்றும் அதனை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் அவர்களுடைய காலை பானத்தை செய்ய ஆரம்பித்தாள் .



"ஏன் பாப்பா இதை எல்லாம் நன் பார்த்து கொள்ள மாட்டானா " என்றபடி வந்தார் அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் அன்னம்மாள் .



"இல்லை அம்மா நன் சும்மா தான இருக்கிறிறேன். அதான் " என்னும் நிலமொழியை பாசத்துடன் பார்த்தார் அன்னம்மாள்.



அன்னம்மாள் இங்கு 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார் .இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்ற உடனே அவருடைய புகுந்த வீட்டினர் அவளை வீ ட்டை விட்டு துரத்தி விட்டனர் . அதனால் என்னவோ அவர் நிலமொழியை தன் மகளாவே பார்க்கிறார் .



அவருக்கு தெரியும் இவள் எந்த வீட்டின் விருந்தாளி. இந்தவேலை எல்லாம் அவள் செய்ய வேண்டியதே இல்லை .ஆனால் வந்த நாள் முதலால் ‘அம்மா ,அம்மா’ என்று தன் பின்னே சுற்றி இருக்குகிறாள் .



"சரி அதான் நான் வந்து விட்டேன் இல்லை .போ நீ முதலில் தலையை காய வை பாப்பா "என்று அன்புடன் கடிந்து கொண்டார் .



"சரி நானும் கல்லூரிக்கு கெளம்புகிறேன் "



நிலமொழி 12 வகுப்பு தேர்வில் 92% மதிப்பெண் எதுத்து இருந்தாள் .கோவையில் பிரபலமான பொறியல் கல்லுரியில் சிவில் இன்ஜினீரிங் முதலாம் வகுப்பு படிக்கிறாள் .

நாம ஹீரோயின் கிளம்பரத்துக்குள் நாம் வீட்டில் இருப்போரைப் பற்றி பார்ப்போம் .



சக்கரவர்த்தி -

பரம்பரை பணக்காரர் .இந்தியா முழுவதும் பிரபலமான துணி மட்டும் நகை "துளசி குரூப்ஸ் ஆப் கம்பெனி " சொந்தக்காரர் .நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் .அதனால் தான் தன் நண்பன் வாக்கை நிறை வேற்ற நிலமொழின் பொறுப்பை ஏற்றவர் .



தேவகி அமையர் -

சக்கரவர்த்தியின் துணைவி .பிறந்து புகுந்த வீடு அனைத்தும் பரம்பரை பணக்கார வீடு .அதனால் பெருமை அதிகம்.பணம் இல்லை என்றால் அவர் யாரையும் மதிப்பதில்லை .(நிலமொழியை முக்கியமாக ).



சாந்தி -

பெயரை போன்று அமைதி ஆனவர் .சக்கரவர்த்தியின் மருமகள் . 40 வயதில் கணவரை பறி கொடுத்தவர் .ஆதிகேசவன் -சாந்தி திருமணம் ,காதல் திருமணம் .சாந்தி வசதி குறைந்த மருமகள் .

அத்தை பேச்சை எதிர்த்து பேசாதவர் . மொத்தத்தில் வாயில்லா புள்ளப்பூச்சி .



நிவேதா -

சாந்தியின் புதல்வி .வீட்டின் கடை குட்டி .மருத்துவம் இறுதி ஆண்டு படிக்கிறாள் .



ரோகிணி -

சக்கரவர்த்தி , தேவகியின் செல்ல மகள் . அம்மா வீட்டில் குடும்பத்தோடு ராஜியம் பண்ணுகிறவள் .



குணசேககரன் -

ரோகிணி கணவர் .குள்ள நரியின் மரு உருவம் .எப்பொழுது யாரு யாமாறுவர் என்று காத்து கொண்டு இருப்பவர் .



ஷிவானி -

ரோகிணி ,குணசேகரன் புதல்வி .ரோகினின் திமிரும் சேகரின் நரி தனமும் கொண்டவள். இந்த வீட்டின் மருமகள் ஆகி அனைத்து சொத்துக்களுக்கும் உரிமை உள்ளவள் ஆக வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டவள் .



ஸ்ரீதர் -

ஷிவானின் தமையன் .அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரே நல்லவன் . தானாக முன்னேற வேண்டும் என்ற கொள்கை கொண்டவன் .





ஆதிதேவ் வர்மா -

ஆதிகேசவன் , சாந்தியின் மூத்த மகன் .

கோவமும் அழுத்தவும் கொண்டவன்.அதனால் என்னவோ 27 வயதில் இந்தியாவின் முக்கிய நபர்களில் ஒருவன் .

தான் நினைத்தை நடத்தி காட்டுபவன் .6 அடிக்கு மேல் உயரமும் அழுத்தமான கண்களும் உடையவன் .

இந்தியா முழுவதுவும் உள்ள ஹோட்டல் மற்றும் கட்டுமான தொழில் கொண்ட "தேவ் குரூப்ஸ் ஆப் கம்பெனி " ஓனர் .

தற்பொழுது தொழில் வேலையாக வெளி நாடு சென்று இருக்கிறான் .







"என்னமா சமையலில் உதவி தேவையா ?" என்ற படி வந்த நிலமொழியை பார்த்த அன்னம்மாள்அவளுக்கு சுத்தி போட்டாள் .

பின்ன அரைத்த சந்தானத்தின் நிறத்தில் வட முகமும் குண்டு விழிகளும் குண்டு கன்னங்களுடன் வந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவருக்கு.



"ஒன்னும் வேணாம் பாப்பா .நீ சாப்பிட்டு கிளம்பு பஸ்க்கு மணி ஆகுது "என்றார் .

"இருங்க சாப்பாடு எல்லாருக்கும் எடுத்து வைத்து விட்டு வரேன் " என்றாள் .



"நீ சாப்டேயமா ?" என்ற சக்கரவர்த்திக்கு

" நீங்க சாப்பிடுங்க .நான் சாப்பிடுகிறேன் " என்று பரிமாறினாள்.



"அதுலாம் கரெக்ட் நடக்கும் .ஆன காலையில் காபி குடுக்க கூட ஆளு இருக்க மாட்ட .வேலை இல்லாம வெட்டியா தான இருக்க கொஞ்சம் வேலை பார்த்த என்ன ??" என்ற தேவகி பாட்டிக்கு



"சரி இனி பண்றேன் " என்னும் பதிலை சொன்னாள் .

"ஆமா ஆன ஊன இதை சொல்லு " என்ற ரோகினிகு ஒன்றும் சொல்லமால் தண்ணி எடுத்திவர சென்றாள் .



பின்ன இப்படி குத்துவிளக்கு மாறி அழகா இருக்கும் நிலமொழியை பார்த்தாலே அவளுக்கு பிடிக்கவில்லை .

இதில் இங்கவே இருந்து நல்ல கல்லூரியில் படிக்கிறாள் என்றால் அது வேறு அவளுக்கு எரிச்சல் வந்தது .



அவளும் எவ்வளோவோ போராடி பார்த்து விட்டால் அவளை வீட்டிலேயே வைக்க வேண்டும் என்று .சக்கரவர்த்தி தான் நட்பு, சத்தியம் என்று ஓரளறினார் .சரி எதோ ஒரு ஓட்ட கால்லேஜ் என்றால் கூட அவளுக்கு மனம் ஒத்து கொள்ளும் .

இங்கு இருப்பதில் உயர்வான காலேஜ். ஏன் என்று கேட்டல் நல்லமார்க் ,பிரீ சீட் னு இவள் வாயை அடைத்து விட்டார் .



அந்த காலேஜ்யில் ஷிவானிக்கு சீட் வாங்குவதற்க்கு அந்த ஆதியிடம் இவள் எவ்ளவு கஷ்ட பட்டு இருப்பாள் .அந்த கடுப்பு எல்லாம் சேர்த்து கொண்டு இவளை எப்படி நான் படிக்க விடுகிறேன் என்று மனதுக்குள் பொருமிக் கொண்டாள் .




ஷிவானிக்கு முதலில் எல்லாம் நிலமொழி மீது எந்த எண்ணமும் இல்லை .நீ ஒரு அவ்ளோ தான் வேலைக்காரி என்று இருந்தாள் .ஆனால் எப்பொழுது தனக்கு சரியாக அதே வகுப்பில் வந்தாலோ அப்போதே அவளை பிடிக்கவில்லை .

அதுவும் அவள் எல்லாம் தனுக்கு ஈடா என்று .



தான் மட்டுமே அழகி என்று பெருமை கொண்டு இருந்தாள் .ஆனால் அவள் வகுப்பில் இருக்கும் பக்கிகளோ நிலமொழியை எதோ காணாது கண்டது மாறி பார்க்கவே அவளுக்கு மொழி மீது பொறாமை வந்தது .

அதுவே இப்பொழுது அவளை பழி வாங்க காத்து கொண்டு இறுக்கிறாள் .



" மொழி சாப்பிட்டு கிளம்பு நேரம் ஆகுது பாரு " என்ற சாந்திக்கு

"இதோ அத்தை " என்று பதில் கூறினாள் .



எல்லாம் தனியாக இருக்கும் போது தான் இந்த அத்தை எல்லாம் .ஒருநாள் பாட்டியின் முன்னாள் அவள் அத்தை என்று சாந்தியை கூப்பிட்டதற்கு அவள் வாங்கிய திட்டை மறக்கவே மாட்டாள் .இருந்தாலும் அத்தையின் மனது வறுத்த பட கூடாது என்று அவர் தனியாக இருக்கும் போது மட்டும் இப்படி கூப்பிடுவாள் .



அவசரமாக அவசரமாக 2 வாய் சாப்பிட்டு விட்டு மணி ஆகுதுன்னு ஓடி விட்டாள் .



"எத்தனை கார் இருக்கு அதில் போனால் என்ன ?" என்று கேட்ட தாத்தாவுக்கு '



"பிரீஎண்ட்ஸ் ஓட போக தான் நல்லா இருக்குனு " பதில் சொல்லிவிட்டு



அன்னம்மாள் மற்றும் சாந்திடம் " பாய் " சொல்லிவிட்டு கிளம்பினாள் .



அன்னம்மாளுக்கும் தெரியும் சாந்திக்கும் தெரியும் அதுவல்ல உண்மை என்று .கடவுளே அந்த சின்ன பெண் இன்னும் எவ்வளவு துன்பம் அனுபவிப்பாள் .அவளுக்கு ஒரு நல்லவழி கட்டு என்று வேண்டி கொண்டனர் .



ஆனால் அவருக்கு தெரியாது அந்த நல்லவழி அன்று இரவே வர போகுது என்று







-------------------------------------------------------------------------------------------------------
 
Last edited:

sahara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த அத்தியாயத்தை பகிர்ந்து விட்டேன் .:smiley5:

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் .:FlyingKiss:

----------------------------------------------------------------------------------------------------------------





உயிரே உறவாகி






அத்தியாயம் -2

அன்றும் வழக்கம் போல் இரவு அனைவரும் உறங்க சென்ற பின், மொழி கல்லூரி அசைன்மென்ட் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் .

அவளுக்கு அது எப்பொழும் பழக்கம் ,அன்னம்மாளுடன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு படிப்பாள் .

அதற்கு முந்தி அவள் புத்தகத்தை கையில் எடுத்தால் என்றால்,


" வேலையும் செய்யாமல் யாமற்றுகிரயா ?? "என்று ரோகினி இது தான் சாக்கு என்று திட்டி விடுவார் .
அவர் தான் எப்பொழுது சமயம் கிடைக்கும் அவளை திட்டலாம் என்று இருப்பாரே .

அன்று சிறிது கடினமான வேலை ,அதனால் 11 மணி ஆகியும் அவள் எழுதி கொண்டிருந்தாள் . அன்று பார்த்து அவளை ஷிவானி வேறு என் டிரஸ் ஐயன் பண்ணி குடு என்று ,கிட்டத்தட்ட அவளிடம் இருந்த மொத்த டிரெஸ்ஸும் கொடுத்து விட்டாள் .

பின்ன இன்று காலேஜ்யில் டெஸ்டில் அவள் முதல் மதிப்பெண் ,அதற்குண்டான பழிவாங்கும் வேலை இது .


அவளுக்கு எப்பொழுதும் அன்றய வேலையை அப்பொழுதே முடித்து விடணும் .நாளையென்று தள்ளி போடா அவளுக்கு பிடிக்காது


அப்பொழுது எதோ சத்தம் கேட்க நிமிர்த்து பாத்த மொழி ,இமைக்க கூட மறந்து விட்டால் .என்ன ஒரு கம்பரீமான அழகு .அவளும் இது வரை எத்தனயோ ஆண்களை தினந்தோறும் சந்திக்கிறாள் ,ஆனால் யாரையும் பார்த்த உடனே அவளுக்கு இப்பொழுது தோன்றிய உணர்வு தோன்றவில்லை .

சிறிது நேரம் கழித்து பின்பு தான் ,தான் என்ன யோசிக்கிறோம் என்பதை கண்டு அதிரிச்சி அடைத்தாள் .சே சே என்ன இப்படி மனதை தடுமாற வைப்பது என்று தனையே திட்டிக்கொண்டாள் .

இத்தனிக்கும் அவள் முன்பே ஆதியின் புகைப்படத்தை பார்த்து உள்ளாள் .

"இவர் யார்?" என்று கேட்டதற்கு

"இவர் என் அத்தான் .நன் கல்யாணம் செய்து கொள்ள போகிறவர் ." என்று ஷிவானியும் ,

"அது எதற்கு உனக்கு ??? கண்ணுக்கு அழகா கம்பீரமாக ஒருத்தனை பார்த்த போதுமே ,உடனே வந்துடுவேயே ????" என்று ரோகிணியும் திட்டினார் .

அவர் பேச்சில் உடல் கூச ,அதற்கு பின் அந்த புகைப்படத்தை அவள் திரும்பி கூட பார்ப்பதில்லை .பின்பு சாந்தி தான் ஆதி பற்றி அவளிடம் கூறினார் .

ஆனால் அவனை நேரில் பார்க்கும் போது அந்த புகைப்படம் எதுவும் அவனுக்கு நியாயம் செய்யவில்லை என்றே அவளுக்கு தோன்றியது .அதனால் தான் ஷிவானி இவ்வளவு கர்வமாக இருக்கிறாள் .

ஏனோ அவர்கள் திருமணத்தை நினைத்தாள் தன் மனம் வாடுவதை அவளால் தடுக்க முடியவில்லை .

இது எது வும் அறியாத ஆதி தனது நீண்ட 5 மாதம் வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமா முடித்து விட்டு ,மகிழிச்சியாக வீட்டுக்கு வந்தான் .இரவு 11 ஆனதால் அவன் அம்மாவை எதற்க்கு தொந்தரவு செய்வது என்று வெளியவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டான் .

அது எப்பொழுதும் அவனுக்கு பழக்கம் தான் ,யாரையும் பார்க்காமல் தன் வேலைகளை அவனே செய்து கொள்ளுவது .

அது போல அன்றும் வந்த ஆதி ,ஹால் நடுவில் நின்று கொண்டு இருந்த நிலமொழியை பார்த்த உடன் திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன குழந்தையை போல இருந்தது .

அதுவே அவனுக்கு அவள் மேல் ஆர்வம் வந்தது .பின்னே அவனை பார்க்கும் பார்க்கும் பெண்கள் பார்வை எல்லாம் தூண்டில் பார்வைகள் ஆச்சே.

அவளை பார்க்கும் போது ,மாலை நேரத்து தாமரை தன ஞாபகம் வந்தது .அவளும் அதனை போல சோர்ந்து இருந்தாள் .அப்பொழுது கூட அவள் எதோ, அவன் இது வர கண்ட பெண்களிடம் இல்லாத அழகு அவளிடம் இருப்பதை போல உணர்ந்தான் .

ஆனால் அவள் யார் என்பது தான் அவனுக்கு தெரிய வில்லை .

"சாப்பிடறீங்களா?" என்று கேட்டாள் .


அந்த குரலில் தன் நினைவிற்கு வந்தவன் ,சே என்று தன்னை தானே கடிந்து கொண்டான் .

"ஹ்ம்ம் ???." என்று பதில் கேட்டவனிடம் ,

திரும்ப "சப்படறீங்களா " என்று கேட்டாள் ,

இதுக்கு என்னடா இப்படி ஒரு லூக்கு என்று நினைத்து கொண்டாள் .பின்ன அவளுக்கு என்ன தெரியும் அவன் அன்னையை தவிர இது வர யாரும் இப்படி கேட்டது இல்லை என்று .

"வேண்டாம் சாப்பிட்டேன் " என்றவனிடம்

"சரி பால் மட்டுமாவது எடுத்து வரவா " என்றாள் .

அதனை அவனால் மறுக்க முடிய வில்லை .அது ஏன் என்றும் அவனுக்கு தெரியவில்லை .

ஆனால் அவன் பதிலை கேட்ட பின் அவள் முகத்தில் தோன்றிய சிரிப்பு அவனுக்கும் தோன்றியது .

மீதமான சூட்டில் இருந்த பாலை ,ஒரே வாயில் குடித்து முடித்தான் .அவன் குடித்த வேகத்தை பார்த்து அவளுக்கு அவன் உண்மையில் சாப்ட்டானா என்றே தோன்றியது .

"நன்றி "என்று கூறியவனுக்கு

"சரி" என்று தன் விழியிலே பதில் கூறினாள் நிலமொழி .அந்த விழி அசைவை பார்த்த ஆதிக்கு
அவன் என்ன பேசினான் என்பது கூட மறந்து விட்டது .'ப்பா என்ன கண்ணு டா சாமி ,அப்டியே ஆள முழிகிடுவா போல'.

அவன் சென்ற பிறகு படிக்கச் சென்ற மொழிக்கு ,படிப்பில் மனம் செலவில்லை .'இது சரி பட்டு வராது என்று' தூங்க சென்று விட்டாள் .இதுவரை யாரையும் கண்டு சலனப்படாத இரண்டு பேரும் ,மற்றவர் நினைவில் தூங்கினர் .
 
Last edited:

sahara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley5:
அடுத்த அத்தியாயத்தை பகிர்ந்து விட்டேன் .::smiley7:

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் .::smiley15::smiley15::smiley15:

----------------------------------------------------------------------------------------------------------------












உயிரே உறவாகி







அத்தியாயம் -3

வழக்கம் போல அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர் .ஆனால் மொழிக்கு மட்டும் மனம் நிமிடத்திற்கு ஒரு முறை ஆதியிடம் சென்றது .


'நேற்று இரவே சாப்ட்டாரான்னு தெரியல ,இன்னும் ஏன் சாப்பிட வராம இருக்காரு ????' என்று அவள் மனம் அவனுக்காக கவலைப்பட்டது .

அது ஏன் என்று எல்லாம் அவள் யோசிக்கவில்லை

"ஏய் , இடியாப்பம் எனக்கு பிடிக்காது என்று தெரியாது ??? போய் தோசை கொண்டு வா " என்றாள் ஷிவாங்கி .

அவளுக்கு எப்பொழுதும் மொழி வேலை செய்துக் கொண்டிருக்கவேண்டும் .அப்பொழுது தான் அவள் தன் நிலைமையை உணருவாள் (அதாவது வேலைக்காரி !!!)

'இப்பொழுது தானே இரண்டு இடியாப்பம் சாப்பிட்டு கொண்டிருக்கிறாள் .அப்புறம் ஏன் பிடிக்காது என்கிறாள்' என்ற கேள்வியை மனத்துக்குள் கேட்டுக்கொண்டு தோசை எடுத்து வர சென்றாள் .

அவள் திரும்பி வருவதற்கும் ஆதி சாப்பிட வருவதற்கும் சரியாக இருந்தது .

"ஆதி கண்ணா எப்படிபா இருக்க??? எப்பொழுது வந்தாய் ???" என்ற தாத்தாவிடம்

"நன்றாக இருக்கிறேன் ,நேற்று இரவு தாத்தா " என்றான் .

"ஹேய் அத்தான் " என்ற ஷிவானிடம் பதிலுக்கு ஒரு மெல்லிய சிரிப்பை அளித்தான் .

அவன் சாப்பிடுவதற்கு பரிமாற வந்த சாந்தியிடம்

"நீங்க சாப்டாச்சா ??"

"நீ சாப்பிடு பா ,நான் அப்புறம் மொழிவுடன் சாப்பிடுகிறேன் "

"மொழி ???" என்றவனுக்கு

"என் நண்பர் வேலாயுதத்தின் பேத்தி .நான் அவள் இங்கு வருவதை முன்பே உன்னிடம் கூறினேன் " பதில் கூறினார் தாத்தா .


அவன் வேலாயுதத்தின் வீட்டிற்க்கு சிறு வயதில் சென்று உள்ளான் .அங்கு சென்றாள் தன் பின்னே சுற்றிவரும் நிலாவையும் ,அந்த ஊரின் இயற்கை சூழலையும் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் .

"நிலா ???" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் .பின்ன அவன் அவளை பார்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது .

எப்பொழுதும் தன் பின்னால் "அத்தான் ,அத்தான் " துரு துரு என்று ஓடிவரும் 4 வயது நிலா தான் அவனுக்கு ஞாபகம் இருக்கு ,இப்பொழுது பார்த்தால் அவள் அந்த நிலவிடமே போட்டி போடும் அளவிற்க்கு அழகாக இருக்கிறாள்.

ஏனோ அவளுடைய அத்தான் அழைப்பிருக்கு அவன் ஏங்கினான் .

அவனுக்கு பதிலாக நிலா ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தாள் .

"ஏன் அம்மா ,நம் வீட்டில் இருப்பவரை இப்டியா வேலையை வாங்குவது ??? அவளை தானே முதலில் சாப்பிட சொல்ல வேண்டும் ???"

"இல்லை பா " என்ற சாந்திக்கு வேறு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை .

நிலா வந்த முதல் நாள் இப்படி அவளை சாப்பிட சொன்னதுக்கு அவள் தான் தன் மாமியாரிடமும் , நாத்தனாரிடம் வாங்கிய திட்டை அவள் மறக்க வில்லையே .

அது மட்டும் இல்லமால் 'திங்கறதுக்கு எப்படி பறக்குது பாரு .முன்ன பின்ன இப்டிலாம் வகை வகையாய் பார்த்து இருந்தா தான ' என்று ரோகிணியின் திட்டில் இருந்து நிலா எப்பொழுதும் அனைவரும் சாப்பிட பின்பு தான் சாப்பிடுவாள் .

அவள் தனியே சாப்பிடுவதை பார்த்த சாந்தி அவளுடன் சாப்பிட ஆரம்பித்தார் .

"சரி நீங்களும் வாங்க ,நிலா நீயும் வந்து சாப்பிடு " என்றான் .

"அவள் யார் ,அவள் எப்படி நமக்கு சமமாக சாப்பிட முடியும்?" என்று ஆரம்பித்தார் ரோகினி .

"அவள் என் வீட்டின் விருந்தாளி . என் வீட்டு விருந்தாளியை ,என் வீட்டில் நான் சாப்பிட சொல்லுகிறேன் "

"அவளோ யாரும் இல்லாத அனாதை . ஓசி சோறு சாப்பிட்டு இருக்கும் வேலைக்காரி .அவளெல்லாம் நம்முடன் சமமாக சாப்பிட முடியாது "

"அத்தை , என்ன பேச்சு இது " என்று கடினமாக வந்தது அவன் குரல் .அதிலேயே ரோகினி வாயை மூடிக்கொண்டார் .

"அவளுக்கு உறவு நாம் எல்லாரும் தான் . அவள் ஒன்றும் இங்கு சும்மா தங்கி இருக்கவில்லை.
அவளுடைய தாத்தா அவள் இங்கு இருப்பதற்க்கான அத்தனை செலவுக்கும் முன்கூட்டியே பணம் கொடுத்து உள்ளார் .
இங்கு இருந்தால் பாதுகாப்பக இருக்கும் என்று தானே உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் .
நீங்களே இப்படி அவர்களை பேச விடலாமா ????" என்று தன் தாத்தாவிடம் கேள்வி கேட்டான் .


அவரும் வந்த நாளில் இருந்து கவனித்து கொண்டு தானே இருக்கிறார் தன் மகளும் மனைவியும் நிலாவிடம் நடந்து கொள்ளும் முறையை ,ஆனால் அவரால் தான் ஒன்றும் பேச முடியாமல் போய் விட்டது .
'ஏன் ' என்று கேட்டால்

'யாரோ அனாதை பெண் உங்களுக்கு முக்கியமாக போய் விட்டால் சொந்த பொன்னை விட ,என் வீட்டில் இருந்து இருந்தால் என்னக்கு மரியாதை இருந்து இருக்கும் .அம்மா வீட்டில் இருந்தால் இப்படி தான் அப்பா கூட மதிக்க மாட்டார் " என்று பெரிய சண்டையை உருவாக்கி விட்டார் அவருடைய ஆசைபுதல்வி .

அதனோடு விடாமல் அவருடைய மனைவியும் அவரிடம் ஒரு காட்டு கட்டிவிட்டார்

.நிலமொழிடம் மட்டும் தனியே கேட்ட போது
'திட்டினால் என் அம்மா ,பாட்டி என்று நினைத்து கொள்ளுகிறேன் தாத்தா ,நீங்க அதை நினைத்தலாம் கஷ்டப்படாதீங்கன்னு ' சொல்லிட்டாள் .

'ஏனோ இந்த சின்ன பெண்ணிடம் இருக்கும் பொறுமை , பெரிய மனம் இந்த வீட்டில் இருப்பவருக்கு இல்லையே ' என்று நினைத்து கொண்டார் .

"அம்மா வாங்க ,நிலா நீயும் வா "

"இல்லை நான் அப்புறம் சாப்பட்றன் " என்றவளுக்கு

பதிலாக அவன் ஒரு பார்வை பாத்தான் ,அதிலயே அவள் சாப்பிட அமர்ந்து விட்டாள் .

ஆனால் அவளுக்கு சாப்பிட தான் முடியவில்லை .எதிரே அமர்ந்து கொண்டு ரோகிணியும் ஷிவாங்கியும் அவளை முறைத்து கொண்டிருந்தால் அவள் எப்படி சாப்பிடுவது .

"அம்மா ,நிலாவிற்கு இன்னும் 2 இடியாப்பம் வையுங்கள் "

என்றவனை முறைத்தாள் நிலா .'ஹிட்லர், ஹிட்லர் எப்படி எல்லாரையும் அரட்டுகிறான் பாரு

அவளுக்கு ஒரு கள்ளச்சிரிப்பை உதிர்த்து விட்டு ,தன் தாத்தாவிடம் தொழில் சம்மந்தமாக பேச தொடங்கிவிட்டான் .





வழக்கம்போல் இரவு படித்து கொண்டிருந்த மொழி ,இன்று ஆதி அவளிடம் நடந்த முறையை நினைத்து கொண்டிருந்தாள் .

சிறு வயதில் இருந்து அவள் மிகவும் பொறுப்பான பெண் அதனால் இதுவரை அவளை யாரும் கண்டித்தது இல்லை .ஆனால் அவளுக்கு அவனின் சிறு கண் பார்வையிலே உதறல் எடுக்கிறது .


' ஹிட்லர் ஹிட்லர் எப்படி அரட்டறான் பாரு' என்று திட்டி கொண்டிருந்தாள் .

அப்பொழுது அந்த ஹிட்லரே விட்டிருக்குள் வந்தான் .

"இன்னும் தூங்காம என்ன செய்கிறாய் ?"

"கொஞ்சம் படிக்கற வேலை இருந்தது அதான் "

"காலையில இருந்து என்ன பண்ணிட்டு இருந்த , இவ்ளோ நேரம் தூங்காம இருந்தா உடம்புக்கு என்ன ஆகறது? "

காலையில் இவன் பண்ண அழிச்சாட்டியத்துக்கு ரோகினியும் ,ஷிவானியும் இவளை அல்லவே வேலை வாங்கினார் .

அதை கூட அவள் பொருத்து கொல்லுவாள் ,ஆனால் அவர்கள் பேசிய பேச்சு தான் அவளால் பொறுத்து கொள்ளமுடியவில்லை.

நிமிடத்திற்கு ஒரு முறை அவள் இந்த வீட்டின் வேலைக்காரி மட்டுமே என்பதை அவளுக்கு ஞாபகம் படுத்திக்கொண்டிருந்தார் .

"கொஞ்சம் வேலை அதான் "

" ஃப்ச்ச் என்ன நிலா , வேலை செய்ய தனியா அதற்கு ஆளுங்க இருக்காங்க .அப்புறம் ஏன் மா ?"

"நம்ம வீட்டு வேலை தான , ப்ளீஸ்.நீங்க சாப்பிட்ங்களா ?? "

"சாப்பிட்டான் டா . நீ சாப்பிட்டேயா ??"

அவனது விசாரிப்பில் ஏனோ அவளுக்கு தன் தாத்தாவின் நினைவு வந்தது .

'சே என்னது இது .அவர் பாட்டியிடம் நிம்மதியாக இருப்பார் ' என்று மனதை சமாதப்படுத்திக் கொண்டாள் .

அவனுக்கு ஒரு மெல்லிய தலை ஆட்டுதலுடன் சிறிய சிரிப்பை பதிலாக கொடுத்தாள் .

"பால் எடுத்து வரவா ?" என்றாள் .

"சரி டா .கொண்டு வா "

நேற்று போல் மிதமான சூட்டில் இருந்த பாலை கட கடவென்று குடித்தான் .

"மெல்ல மெல்ல பாத்து " அவன் குடிப்பதை பார்த்த மொழிக்கு பயமாக இருந்தது .

அவளுக்கு ஒரு சிரிப்பை அளித்து விட்டு மெல்ல குடிக்க தொடங்கினான் .

"தேங்க்ஸ் .படித்தது போதும் நாளை பார்த்துக்கலாம் ,போய் தூங்கு "


"ஹ்ம்ம் " என்றவளிடம்

"இப்பொழுதே போ "

"கிளாஸ் கொண்டுபோய் வச்சிட்டு போறான் "

"நான் பாத்துக்கறேன் .போய் தூங்குடா நேரம் ஆகுது " என்று மொழியை அனுப்பி விட்டு தூங்க சென்ற ஆதிக்கு மனம் முழுவதும் அவள் நினைவே .















 
Last edited:

sahara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley5:
அடுத்த அத்தியாயத்தை பகிர்ந்து விட்டேன் .::smiley7:

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் .::smiley15::smiley5::smiley5:

----------------------------------------------------------------------------------------------------------------

உயிரே உறவாகி










அத்தியாயம் -4




காலையில் வழக்கம் போல் அனைவருக்கும் காபி எடுத்து கொண்டு சமையல் அறையை விட்டு வெளிய வந்த மொழி ,காலை நடை பயிற்சி முடித்து விட்டு வந்த ஆதியின் கண்ணில் பட்டாள் .


'போச்சு ,ஹிட்லர் ஆல்ரெடி மொறைச்சிட்டு வாறானே ,ஏண்டி மொழி கொஞ்சம் லேட்டா வெளிய வந்து இருக்க கூடாது .' அவள் தன்னை தானே திட்டி முடிப்பதற்குள் அவள் முன் வந்து அவளை முறைத்து கொண்டிருந்தான் ஆதி .


'இப்போ என்னனு நான் கேட்கறது .அவனை நிமிருந்து பார்த்தால் தானே வம்பு என்று குனிந்த தலை நிமிரால் இருந்தால் நிலா .


"இன்னும் என்ன என்ன வேலை மிச்சம் இருக்குனு யோசிக்கறியா "என்ற கேலியா அவள் குரலில் புரியாமல் அவனை பார்த்தாள் .


சிறிதுநேரம் கழித்து தான் அவன் என்ன கூறினான் என்று அவளுக்கு புரிந்தது .சமாளிப்பாக ஒரு சிரிப்பு சிரித்து வைத்தாள் .


"இரவு நேரம் கழித்து தான தூங்க போன , இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறதத்துக்கு என்ன?"


"காலையில் எழுந்து பழக்கம் ஆயிடுச்சி அதான் " என்று அவனுக்கு பதில் அளித்து விட்டு கடவுளே இவனிடம் இருந்து திட்டு வாங்காம போகணும் என்று அவருக்கு ஒரு வேண்டுதலை போட்டாள் .




"நீ குடிக்கவா இவ்வளவு காபி ?""


எனக்கு மட்டும் இல்லனு தெறிச்சிகிட்டே கேட்கறேன் .திட்டமா போக மாட்டான் போல .'இன்னிக்கு காலையில நீ முழிச்ச முகம் சரி இல்ல டி மொழி '


"இல்லை எல்லாருக்கும் கொடுக்கத்தான் "


அவள் பதில்லில் அவளை முறைத்தான் ஆதி .


"நேற்று இரவு என்ன சொன்னேன். அவர்களுடைய வேலையை அவர்கள் பார்பாங்க.சொல்லற பேச்ச கேக்கறதா இல்லையா நீ ?"


"அப்டிலாம் இல்லை .அன்னம்மாள் அம்மாவிற்கு படி ஏற கஷ்டமாக இருக்கும்னு தான் "


"ஏன் அவங்கள தவிர வேற யாரும் இல்லை ?"


அவன் சொல்லுவதும் உண்மை தான் .கங்கா ,கற்பகம் என்று இரண்டு பேறும் ரோகினியால் வேலைக்கு சேர்க்க பட்டவர்கள் .


சமையல் வேலையை தவிர இதர வேலைகளை செய்ய அவர்கள் சேர்க்க பட்டனர் .ஆனால் அவர்கள் வேலை எல்லாம் மொழிதான் செய்கிறாள் .இது எல்லாம் ரோஹணியின் ஏற்ப்பாடு தான் .


" அவர்களிடம் கொடுத்து விட்டு நீ உன் அறைக்கு சென்று நேற்று விட்ட அசைன்மென்ட் ஆஹ் முடி "


அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று அவளுக்கு பதெரியவில்லை .'எது சொன்னாலும் திட்ட போறான் ஹிட்லர் '

"போனு சொல்லறான இல்லையா " என்று சற்று குரல் உயர்த்தி கூறினான் .


அவ்வளவு தான் அதற்கு பிறகு நிலாவிற்கு அங்கே நிற்க பைத்தியமா என்ன, கிச்செனின் உள்ளே ஓடிவிட்டாள் .


அங்கே அன்னம்மாள் ஆதி சொன்னதை எல்லாம் கேட்டு மகிழிச்சி அடைந்தார் .அவரும் எவ்வளவு முறை அவளிடம் அதனை சொன்னாலும் கேட்ட மாட்டுகிறாள் .



இப்பொழுது ஆதியின் சிறிய மிரட்டலுக்கு இப்படி பயப்படு கண்டு அவருக்கு சிரிப்பு தன வந்தது .


"நான் கற்பகத்திடம் சொல்லுகிறேன் .நீ போ பாப்பா " என்று மொழியை அனுப்பி வைத்தார் அன்னம்மாள் .

வெளியே வந்த மொழியை அதே இடத்தில் நின்று இருந்த ஆதியை கண்டு மனதுக்குள் திட்டினாள் .'ஹிட்லர் '.



"காலை சாப்பிடும் போது தான் வர வேண்டும் .அதற்கு முன்னால் உன்னை எங்காவது வேலை செய்வதை பார்த்தேன் அவ்வளவு தான் " என்று சிறு கண்டிப்புடன் கூறினான் ஆதி .


அவனுக்கு சரி என்று நன்றாக தலையை ஆட்டிவிட்டு ஓடி விட்டாள் மொழி .



அவள் சென்ற திசையை பார்த்துக்கொண்டு இருந்த ஆதிக்கு அவன் அறியாமலே சிரிப்பு தோன்றியது .



--------------------


மணி 8:30 ஆனவுடன் மொழி கீழே சென்றாள்.அவள் இதற்கு முன்னே 2 முறை சென்றாள் .ஆதி அவளை முறைத்த முறைப்பில் திரும்பி ஓடி வந்து விட்டாள் .


"சாரி அம்மா ,நீங்களே முழு வேலையும் செய்ய வேண்டியதா போயிடுச்சி "


நிலாவிற்கு அன்னம்மாளை மட்டும் வேலை செய்ய விட்டு விட்டோமே என்று மனதுக்கு கவலையாக இருந்தது .


"அப்படிலாம் இல்லை பாப்பா ,நீ இல்லைன்னு தான் கங்காவும் ,கற்பகமும் ஒழுங்கா வேலை செய்யறாங்க "


"சரி கொடுங்க ,நான் கொண்டு போய் எல்லாருக்கும் பரிமாறன் "






"என்னமா மகாராணி மாரி எத்தனை மணிக்கு எழுத்து வர , உன் நிலைமை என்னனு மறந்து போய்டுச்சா ?"

என்று ஆரம்பித்தார் ரோகினி .


"ஆமா அம்மா ,காலையில் காபி கூட எடுத்து வந்து தரலை மா " என்று போட்டு குடுத்தாள் ஷிவானி .




" அப்படி அவள் நிலைமை என்ன அத்தை சொல்லுங்க ??" என்ற ஆதியின் குரலில் ஏனோ அவள் மனதுக்குள் ஒரு நிம்மதி தோன்றியது .


"யாரும் இல்லாத அனாதை தான அவள் .நீ நேற்று நம்ம கூட சாப்பிட சொன்னதும் அவளுக்கு திமிரு வந்துடுச்சு .பாரு எப்போ எழுந்து வரா .இதுக்கு தான் சொல்லறது யார் யாரை எங்கே வைக்கணுமோ அங்க வைக்கணும் "


"எங்க வைக்கணும்னு நினைக்கறீங்க ?"


"வேலைக்காரி ஓட இடம் எதுவோ அங்க தான் .இவளுக்கு தண்டத்துக்கு காலேஜ் பீஸ் வேற இதுல .

யாரு சொன்ன கேக்கறீங்க "



"போதும் அத்தை .இவ்வளவு நேரம் உங்க வயதுக்கு மரியாதையை கொடுத்துக்கு தான் அமைதியா இருக்கேன் ,நீங்களே அதை கெடுத்துக்காதீங்க .

அவளுக்கு யாரும் இல்லைன்னு யாரு சொன்ன ,எப்போ எங்க பொறுப்பில் வந்துட்டாலோ அப்போவே அவ எங்க வீட்டு பொண்ணு அதை முதலில் ஞாபகம் வச்சிக்கோங்க .


அவளோட படிப்புக்கு யாரும் இல்ல பணம் செலவு பண்றது இல்லை .அவள் எடுத்த மார்க்கு அப்படி .

உங்கள் பொண்ணு மாறி நன்கொடை கொடுத்து அவள் ஒன்றும் படிக்கவில்லை .


உங்கள் பொண்ணு படிப்பது தான் அடுத்தவங்க பணத்தில் ,அதாவது என் பணத்தில் ஞாபகம் இருக்கட்டும் "


என்ற ஆதியின் பதிலில் பொங்கிவிட்டாள் ரோகினி .பின்ன யாரும் இல்லாத அந்த அனாதையின் முன் அவளை அவன் எப்படி இப்படி பேசலாம்



"அம்மா உங்கள் பேரன் சொல்லுவதை கேளுங்க அம்மா .யாருக்கோ பணம் செலவு பண்ற மாறி சொல்லறாங்க . நானும் உங்கள் பெண் தானமா ?"


"என்ன ஆதி இது யாரோ ஒருத்திக்காக உன் அத்தையை இப்படி சொல்லலாமா ?"

.

"நான் உண்மையை தான சொல்லுகிறேன் பாட்டி . அவர்களுடைய சொத்து பங்கும் அவர்களுக்கு பிரித்து கொடுத்து ,அதையும் அவர்கள் அழித்துவிட்டு அடுத்து என்னிடம் வந்தால் நான் என்ன பண்ணுவது சொல்லுங்கள் ???

என் தங்கை ,அம்மா என்று என்னக்கு ஒரு குடும்பம் இருக்கு அல்லவா ?"



"நல்லா கேட்டுங்கோ அப்பா அவன் அம்மா ,அவன் தங்கை அது தான் அவன் குடும்பமாம் .என் அண்ணன் பையன் ஆச்சே நம் குடும்பம் ஆச்சேனு தானே ,யாரும் உதவாத நேரத்தில் என் கணவர் தொழிலில் உதவ வந்தார் ."





"ரோகினி எதற்கு பழைய பேச்சில்லாம் விடு " சக்கரவர்த்திக்கு எப்டியாச்சு இந்த பேச்சை முடிக்க பார்த்தார் .அவருக்கு ஆதியை பத்தி நன்றாக தெரியும் ,அவன் யாரு என்னவென்ருலாம் பார்க்க மாட்டான் .பேச ஆரம்பித்தால் அவ்வளவு தான் .



இதனாலேயே தொழில் வட்டாரத்தில் அவனை நெருங்கவே அஞ்சுவர் . எந்தளவுக்கு கோவம் கொண்டவனோ அந்த அளவுக்கு அவன் நேர்மை ஆனவன் கூட .அதுவே அவனை தொழிலில் இந்த அளவுக்கு வளர வைத்தது .


"இருக்கட்டும் தாத்தா .அண்ணன் குடும்பத்திற்கு உதவ வந்தாரா ,நன்றாக யோசித்து சொல்லுங்கள் .உங்கள் புகுந்த வீட்டினர் நீங்கள் வாங்கின கடனுக்காக அனைத்து சொத்துகளையும் எடுத்து கொண்டனர் .. வேறு வழி இல்லாமல் அண்ணன் வீட்டிற்கு வந்திர்கள் .


அப்பொழுது கூட தொழில் எந்த உதவியும் செய்ய வில்லை .பணம் என்றால் மட்டும் நம் பணம் ,வேலை தொழில் என்றால் எங்க;வேலை "




"கண்ணா வேண்டாம் பா .அவள் தான் தெரியாம பேசுகிறாள் என்றால் ,நீயாவது விடுப்பா "


"உங்களுக்காக தான் தாத்தா நான் பொறுத்துக்கொள்ளுவது .அடுத்தவர்கள் வீட்டில் வந்து அதிகாரம் பண்ணுகிறோம்னு யோசிக்க வேண்டாம் "



"இது ஒன்றும் அடுத்தவர் வீடு இல்லை .என் அண்ணன் வீடு .இங்கே எனக்கு இல்லாத உரிமை யார்க்கும் இல்லை "



"இது என் சொந்த உழைப்பில் உருவான வீடு .இதில் என் குடும்பத்தினை தவிர யாருக்கும் உரிமை இல்லை . உங்களுக்கு உரிமை வேண்டும் என்றால் தனியாக சென்று விடுங்கள் " என்ற ஆதியின் பதிலில் அனைவரும் அதிரிச்சி அடைத்தனர் .




"என்ன கண்ணா இது ?""


"எவ்வளவு நாள் தான் நானும் பொறுத்து கொள்ளுவது சொல்லுங்கள் தாத்தா . இப்பொழுது என் வீட்டில் என் பொறுப்பில் இருப்பர்வகளை கூட இவர்கள் மதிக்க வில்லை என்றால், அது என்னையே மதிக்காதது போல ஆகாது .இதுலாம் சரி பட்டு வராது இவர்களை தனியே சென்று விட சொல்லுங்கள் ."




பதில் கூற வந்த ரோஹிணியை கண்ணாலே கண்டித்தார் சக்கரவர்த்தி .




"விடு கண்ணா .இனி அவள் அப்படிலாம் பண்ண மாட்டாள் .நான் பார்த்து கொள்ளுகிறேன் . நீ சாப்பிட வா "


"வா நிலா ,ஆதிக்கு பரிமாறு "


என்ற குரலில் நிகழிவிற்கு வந்தாள் நிலா . 'என்ன டா இப்படிலாம் கூட மனிதர்கள் இருப்பார்களா' என்று அவளுக்கு தோன்றியது .


அவனுக்கு இட்லி வைத்து சாம்பார் ,சட்னி பறி மாறினால் .


"போதும் .நீ சாப்பிடல ,அம்மா எங்கே ?"


"இதோ சாப்பிட போறான் பா ." என்று சாந்தி சாப்பிட வந்தார் .அவருக்கே ஆதியை கண்டால் அப்பொழுது பயமாக இருந்தது .


'ஆத்தி சாமி நம்மகிட்ட மலை இருக்கறதுக்குள்ள ஓடிடு நிலா ' என்று மொழி சாந்திக்கு பக்கத்தில்

சாப்பிட அமர்ந்தாள் .



அவளை பார்க்க பார்க்க ரோஹிணிக்கு பத்தி கொண்டு வந்தது .இதுவரை ஆதி அவர்களை பேசி உள்ளான் தான் .ஆனால் இன்று போல இல்லை .அவர்கள் வீடு இது இல்லை என்று அவன் எப்பொழுதும் சொல்லுவான் ஆனால் இன்று போல் வெளிய எல்லாம் போக சொன்னது இல்லை .




'பண்றது எல்லாம் பண்ணிவிட்டு எப்படி ஒன்னும் தெரியாத பிள்ளை மாறி உட்காந்து இறுகிறாள் பாரு 'என்று மனதுள் நிலா வை கருவிக்கொண்டார் .



இது எதுவும் தெரியாத நிலவோ ,எப்படி தன் தட்டில் இருக்கும் உணவை சாப்பிட்டு முடிப்பது என்று யோசித்து கொண்டிருந்தாள் .


'ஹிட்லர் என் உருவத்திற்கு சாப்பிடாம அவன் உருவத்துக்கு சாப்பிட சொல்லறான் " என்று வழக்கம் போல ஆதியை திட்டிக்கொண்டு இருந்தாள் .





…………………………………………………………………....................................................................................................................................................


நிலா மீண்டும் வருவாள் ..........................................!!!!





























































 
Last edited:

sahara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley5:
அடுத்த அத்தியாயத்தை பகிர்ந்து விட்டேன் .::smiley2::smiley7:

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் .::smiley15::smiley15::smiley15:

----------------------------------------------------------------------------------------------------------------











உயிரே உறவாகி


அத்தியாயம் -5

காலையில் ஆதியின் பேச்சின் தாக்கத்திலயோ இல்லை தன் அன்னை நடத்திய சொற்பொழிவாலோ அதற்க்கு பிறகு ரோகினி நிலாவிடம் எதுவும் வேலை வாங்க வில்லை .ஆனால் அவளை முறைத்து பார்க்க அவர் மறக்கவில்லை .


'இந்த அம்மா கண்ணாலே நம்மால பொசிக்கிடும் போலவே ' நிலா அவர் பார்வைக்கு பயந்து சமயல்கட்டினை விட்டு வெளிய வரவில்லை .

"இங்கு என்ன பண்ற ??" என்று வந்த ஆதிக்கு

'ஹிட்லர் கு வேற வேலையே இல்லையா ?கடவுளே காப்பாத்து ' பதிலே கூறாமல் அன்னம்மாளின் பின்னால் மறைந்து கொண்டாள் .

அதை பார்த்து ஆதிக்கும் அன்னம்மாளுக்கும் சிரிப்பு வந்தது .

அவர்கள் சிரிப்பதை கண்ட மொழிக்கு கோவமாக வந்தது .அன்னம்மாளையும் ஆதியையும் முறைத்தாள் .

"அய்யோ அம்மா பயமாக இருக்கிறது " என்று போலியாக ஆதி நடிக்க வேறு செய்தான் .

அதை கண்டு அவள் இன்னும் நன்றாக முறைத்தாள் .

"சும்மா என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள் தம்பி " என்றார் அன்னம்மாள் .

"சரி .அவள் எதாவது வேலை செய்தாள் என்றால் என்னிடம் சொல்லுங்கள் நன் பிறகு பார்த்து கொள்ளுகிறேன் " என்றவன் நிலாவை பார்த்து எச்சரிகையான பார்வை ஒன்றை செலுத்தினான்.

..................................................................................................................

மதியம் 3 மணிக்கு மேலும் மாலை சிற்றுண்டிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த அன்னம்மாளை மொழி சண்டை போட்டு அனுப்பி வைத்தால் சிறிது நேரம் ஓய்வு எடுக்க , மற்ற வேலையாட்கள் அனைவரும் எப்பொழுதோ சென்றுவிட்டனர் .

பகோடா போடுவதற்காக வெங்காயம் வெட்டி கொண்டு இருந்தாள் . அப்பொழுது ஷிவானி மற்றும் சிலர் பேச்சு சத்தம் கேட்டது . வேறு யாரும் இல்லாத்தால் இவளே அனைவருக்கும் மாதுளைப்பழச்சாறு எடுத்து கொண்டுபோய் கொடுத்தாள் .

"ஏய் என்ன போய் ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வா ,அதை வேற தனியா சொல்லனுமா என்ன ??? ஒழுங்கா ஒரு வேலை செய்யறது இல்லை"

ஷிவானிக்கு எப்படியாவது மொழியை பழிவாங்க வேண்டும், பின்ன அவளால் தானே காலையில் ரோகினி அவ்ளோ திட்டு வாங்கினார் .

அதனால் தான் தனது கல்லூரி பிரியண்ட்ஸ் வீட்டிற்கு அழைத்து வந்தாள் . அவர்கள் முன்னாள் அதுவும் முக்கியமாக ஆண் நண்பர்களின் முன்னாள் 'பாருங்கள் நீங்கள் விழுந்து விழுந்து ரசிக்கும் பெண் என் வீட்டு வேலைக்காரி ' என்று காட்டவேண்டும் .

ஆனால் அந்த பக்கிகளோ முதல் முறையாக தாவணி பாவாடையில் இருந்த மொழியை விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருதனர் . 'இரு டி உன்னை இன்று எப்படி அசிங்கப்படுத்துகிறேன் பாரு' என்று மனதிற்குள் கருவிக்கொண்டாள் .

இது தெரியாத மொழியோ அன்னம்மாளை தொந்தரவு செய்ய விருப்பமின்றி அவளே அனைவர்க்கும் காபி மற்றும் பக்கோடா எடுத்து சென்றாள் .

"எதுக்கு இவ்ளோ நேரம் ??? என்ன தான் வேலை செய்யறீயா ??" என்ற ஷிவானிக்கு பதில் சொல்லாமல் அனைவர்க்கும் காபி கொடுத்தாள் .

"என்ன ஷிவா , எல்லாருக்கும் எடுத்துட்டு வர கொஞ்சம் நேரம் ஆகும் தான் .அதற்கு என்ன இப்போ "
என்று மொழிக்கு பரிவாக பேசினான் சந்தோஷ் .

சந்தோஷ் மொழி மற்றும் ஷிவானின் வகுப்பு மாணவன் .அவனுடைய அப்பா தமிழ்நாட்டில் பிரபலமான தொழில் அதிபர் .அவனுக்கு பெரிதாக ஷிவானிடம் நட்பு எதுவும் இல்லை .

அவனது நண்பர்கள் அனைவரும் அழைத்ததால் தான் அங்கு வந்தான் .ஆனால் இங்கு ஷிவானி மொழியிடம் நடந்துகொள்ளும் முறை அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை .

எப்பொழுதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கும் மொழியை அவனுக்கு பிடிக்கும் .
அவன் வளர்த்த சூழலில் மேக்கப் போடாத பெண்களை அவன் பார்த்ததே இல்லை . எப்பொழும் காலையில் பூத்த பூவை போல் அமைதியான அழகோடு இருக்கும் மொழியை யாருக்கு தான் பிடிக்காது .


இன்னும் எரிச்சல் வந்தது ஷிவானிக்கு ,'என்ன டா ,யாரை பார்த்தாலும் இவளுக்கு பரிந்து கொண்டு வருகிறார்கள் .அப்படி என்னதான் இருக்கிறது இவளிடம் '.

அவளால் சந்தோஷிடம் எதுவும் சொல்ல முடியாது .அவன் தான் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்குறானே ,அத்தோடு பணக்காரன் வேறு து போதாது ஷிவானிக்கு .

"இல்லை சந்தோஷ் , நீங்கள் வந்து நேரம் ஆச்சே அதான் " என்று சமாளித்தாள் .

அதற்கு அவன் பதில் கூறும் முன்னே அவனது செல்போன் ஒலித்தது . அவனுடைய அப்பா அவனை உடனே வர சொன்னார் .அவன் எல்லாரிடமும் மொழிடம், தனியாக சமயல்அறையில் சென்று சொல்லி விட்டு சென்றான் .

அதை பார்த்த ஷிவானிக்கு எது என்னடா கொடுமை னு என்று ஆனது .வேண்டும் என்றே காபி,ஜூஸ் கீழே கொட்டினாள் .புரியாமல் பார்த்த பிரியண்ட்ஸ்களிடம் கர்வமான ஒரு பார்வையை செலுத்தி விட்டு ,

"மொழி இங்க வா ,ஜூஸ் கொட்டிடுத்து பாரு கிளீன் பண்ணு " என்று அலட்சியமாக கூறினாள் .

மொழிக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை .சரி இப்போ நாம் துடைத்தால் என்ன ஆக போகிறோம்.நம் வீடு என்றால் நாம் தானே பாப்போம் என்று நினைத்து கொண்டாள் .



ஆதி நண்பர்களை பார்க்க சென்று இருந்தான் .அவன் வீட்டிற்கு வந்த உடன் பார்த்த காட்சியில் அவனுக்கு உடனே அடித்து நொறுக்கும் எண்ணம் வந்தது .

நிலா கீழே எத்தனையோ துடைத்து கொண்டிருக்க , அங்கு இருந்த பொறுக்கி ஒருவன் அவள் தாவணி சிறிது விலகி வெளியே தெரியும் இடையை முறைத்து பார்த்து கொண்டிருந்தான் .


சந்தோஷ் வீட்டிற்கு செல்வதாக சொன்னதும் அவனுடைய நண்பர்கள் அனைவரும் சென்று விட்டனர் .அங்கு இருந்தது 2 ஆண்கள் மட்டுமே .அவர்கள் பணம் மிகுதியால் சிறுவயதிலேயே அனைத்து கெட்டபழக்க வழக்க கொண்டவர்கள் .

"நிலா " என்று ஆதியின் குரல் கேட்டு அனைவரும் எழுந்து நின்றனர் .

கடகடவென உள்ளே வந்தவன் நிலாவை இழுத்து தன் பின்னே நிற்க வைத்து ,அவளை முழுவதுமாக மறைத்து நின்றான் .கண்ணனை ஒரு முறை இருக்க மூடி கோவத்தை கட்டுப்படுத்த முயற்சித்தான் .அவன் இருக்கும் கோவத்தில் அடித்தாலும் அடித்து விடுவான் .

"என்ன நடக்கிறது ஷிவானி ? " என்று அமைதியான குரலில் கேட்டான் .

அவன் குரலில் இருந்தே நிலாவிற்கு புரிந்து போனது இங்கு புயல் அடிக்க போகிறது என்று ,அவளோ அதில் தனக்கு எவ்வளவு சேதாரம் ஏற்பட போகிறது என்று பயந்து கொண்டிருந்தாள் .

"இல்லை அத்தான் .காபி கூட ஒழுங்காக கொடுக்க தெரியாமல் கொட்டிவிட்டாள் அத்தான் ,அதான் கிளீன் பண்ண சொன்னேன் " என்று சொல்லிவிட்டு தன் தோழிகளை பெருமையாக பார்த்தாள் .
பாருங்கள் இவர் தான் என் அத்தான் .நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறவர் என்று .

"இவர்கள் யாருடைய நண்பர்கள் ??" என்று அதே குரலில் வினவினான் .

"என் நண்பர்கள் தான் அத்தான் . அனைவரும் நம்மை போலவே வசதி படைத்தவர்கள் " என்று பெருமையுடன் கூறினாள் .

"மனிதர்களுக்கு பணத்தை விட குணம் முக்கியம் என்று நினைப்பவன் நான் . இனி உன் நண்பர்களுக்கு யாருக்கும் என் வீட்டில் இடம் இல்லை "

"என்ன அத்தான் ??? எனக்கு என் நண்பர்களை வீட்டிற்கு அழைக்க கூட உரிமை இல்லையா ?"

"அது உன் நண்பர்களின் குணத்தை பொறுத்தது . இந்த மாறி குணம்கெட்டவர்களை எல்லாம் நான் என் வீட்டில் அனுமதிப்பது இல்லை .அவர்களை நீயே வெளிய போக சொன்னால் உன்னக்கு மரியாதை "

ஆதி சொன்னதை கேட்ட அவளின் நண்பர்களின் பார்வை ஏற்க கூட ஷிவானி அவமானமாக இருந்தது .இனி எப்படி அனைவரும் அவளை மதிப்பார்கள் .மொழியை அசிங்க படுத்த நினைத்தால் அது தனக்கு எதிராகவே வந்து நிற்கிறதே .

ஷிவானி எதுவும் சொல்லாததால் அவள் நண்பர்கள் அனைவரும் வெளியே சென்றனர் .

ஆதி மட்டும் கடைசியாக அந்த 2 பசங்களிடம் எதோ கூறினான் .
'என்ன டா சொல்லறான் அதுக்கு ஏன் அவனுங்க இப்படி பயப்படறாங்க ?' என்று நினைத்த நிலா ,பின்பு
'ஆமா ஹிட்லர் ஆஹ் பார்த்த பயப்படாம என்ன பண்ணுவாங்க ,எப்படி ஆச்சு நாம தப்பித்தால் போதும் என்று வேண்டிக்கொண்டாள் '.

"இனி அவர்கள் இங்கு வந்தார்கள் என்றால் நீ இங்கு இருப்பதை பற்றி யோசிக்க வேண்டி இருக்கும் " என்று ஷிவானியிடம் கூறினான் .

அவனை எதிர்த்து பேச அவள் என்ன முட்டாளா ? இந்த மொழியை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு
"சரி அத்தான் " சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள் .

அவள் சென்ற பிறகு நிலாவை முறைத்து கொண்டிருந்தான் .

'ஆத்தி ஆத்தா அடுத்து நம்மகிட்ட மலையேற வருதே !!! அம்மா மாரியாத்தா என்ன காப்பதுமா '

"உங்களுக்கு காபி கொண்டு வரவா ?" என்று கேட்டு தன் தலையிலே மண்ணை வாரி போட்டு கொண்டாள் .

அவள் கேட்டது தான் தாமதம் ஆதி ருத்தரத்தாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டான் .

"ஏன் நீ சொல்லற பேச்சே கேக்கறதா இல்லையா ?? உன்ன வேலை செய்ய கூடாதுனு சொல்லி இருக்கானா இல்லையா ?"

" யாரும் இல்லை அதான் "

"அதுக்கு அவங்களை போய் கூப்பிட வேண்டியது தான ?"

என்றவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நின்றதில் அவனுக்கு இன்னும் கோவம் அதிகரித்தது .

"என் டி உனக்கு அறிவு இருக்க இல்லையா ? இனி இந்த மாறி டிரஸ் வெளியாளுங்க இருக்கற அப்போ போட்ட என்கிட்ட அடிதான் வாங்குவ . அப்படி போட்டாலும் ஒழுங்கா பார்த்து இருக்க வேண்டாம் . அவனுங்களும் அவனுங்க பார்வையும் , நாலு அடிபோட்டு அனுப்பி வச்சி இருக்கனும் . போ முதலில் டிரஸ் ஆஹ் மாத்து ஜூஸ் ஆஹ் இருக்கு பாரு . வேலை னு எதாவது கிழ உன்ன பார்த்த கண்டிப்பா என்கிட்ட அடிதான் டி வாங்குவ .போ "

"உங்களுக்கு காபி " என்று தயங்கிய நிலாவை பார்த்து

"போடி " என்று மாடிப்படியை காட்டினான் .

அவ்வளவு தான் நிலா ஓடிவிட்டாள் . 'அட ஒரு ஜூஸ் ஆல் உன் மரியாதை போச்சி டி நிலா "

தன்னை யாரும் டி போட்டு அழைக்க விடமாட்டாள் .ஏனோ அவன் கூப்பிட்டதற்கு கோவம் வருவதற்கு பதில் உரிமையானா உணர்வே தோன்றியது .


ஆதியும் அதே தான் யோசித்து கொண்டிருந்தான் . தன்னவளை பார்ப்பது போல் எதற்கு இவ்வளவு கோவம் , உரிமை என்று !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

................................................................

நிலா மீண்டும் வறுவல் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

































































 

sahara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே ,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் .




இதுவரை ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி . இனியும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் .


நன்றி ........................!!!!!!!
 
Last edited:
Status
Not open for further replies.
Top