All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "துளி துளி தூறலாய்...!" கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai friends:smiley6:,

எல்லாரும் எப்படி இருக்கீங்க. கொஞ்ச நாள் கேப்க்கு அப்புறம் திரும்ப வந்துட்டேன். இந்த கதை என்னோட முதல் கதை மக்காஸ். எழுதி முடிச்சிட்டேன். இங்க மறுபடியும் ஓட்டப் போறேன். 😍😍😍

இது என்னோட முதல் கதைன்றதால நிறைய பல mistakes இருக்கும். சோ அதை எல்லாம் கொஞ்சம் பாத்து பக்குவமா சொல்லிட்டு போங்கபா.
முதல் எப்பி இதோ....
👇👇👇
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல்-1

கதைகள் என்றும் வாழ்வின் புதிய
அத்தியாயங்களை தருபவை அல்ல;
அவை பழைய அத்தியாயங்களையே

புதுப்பித்து தருபவை தான்.

இவ்வரிகள் எவ்வளவு உண்மை வாழ்வின் புதிய அத்தியாயங்களே நமக்கு புத்தகங்கள் புதுப்பித்து தருகின்றன அல்லவா. இந்த வரிகளை படிக்கும் போதே அவள் கண்னோடு சேர்ந்து மனதும் கனிந்தது.

அவள் ஆருத்ரா 25 வயதுப் பெண். புகழ்பெற்ற ஐ‌.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நவநாகரீக மங்கை. வாரம் முழுவதும் கணினியின் முன்னே அமர்ந்து விட்டு கொண்டு வரும் பணி சுமையை வார இறுதியில் குறைய புத்தக வாசிப்பை பழக்கப்படுத்தியவள்.

"ஏய் ஆரு என்னடி புக்க தூக்கிட்டு உக்கார்ந்து இருக்க" என கோபமாய் கேட்ட தன் தோழியின் குரலில் "ஏன்டி என்னாச்சு" என தலையை நிமிர்த்தி புரியாமல் பார்த்தாள்.

"என்ன ஏன்டி! இன்னைக்கு சன்டே" என்றாள் அதே கோபத்தோடு. மீண்டும் புரியாத பார்வையையே பார்த்து வைத்தாள் ஆருத்ரா. அவள் பார்வையை பார்த்த மீராவிற்கு உள்ளுக்குள் எரிமலை வெடிப்பு தருணம்.

"அடியே எருமை உன்னை என்ன பண்றது 'உன்னை பொண்ணு கேட்டு வந்தாங்க அந்த மாப்பிள்ளை பயனும் அந்த ஊர்ல தான் வொர்க் பன்றாங்கலாம். இந்த சன்டே மால்ல வச்சு மீட் பண்ண போ' அப்டின்னு உங்க அம்மா போன் பண்ணி சொன்னாங்கல அதாவது நியாபகம் இருக்கா இல்லையா?" என புசுபுசுவென மூச்சு வாங்கிக் கொண்டே கேட்டாள் தோழி மீரா.
அருகில் இன்னும் இரண்டு தோழிகள் வினிதா மற்றும் அனுவும் அதே நிலையில்.

அவர்கள் அனைவரும் ஒரே கம்பெனியில் தான் வேலை செய்கின்றனர். அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஒன்றாக தங்கி அலுவலகம் சென்று வருகின்றனர். இதில் மீரா மட்டுமே அவள் கல்லூரி தோழி. மற்ற இருவரும் வேலையிடத்தில் கிடைத்த தோழிகளே. எனவே மீராவோடு அதிக ஒட்டுதல் ஆருத்ராவிற்கு.

தன் தோழிகள் கூறிய பின் தான் அவளுக்கு தன் அன்னை கூறியது நினைவு வந்தது. இவள் தான் முதல் நாள் இரவு "நாளைக்கு என்னை யாரோ மால்ல வச்சு பொண்ணு பார்க்க வாங்கலாம் பா. நீங்களும் வாங்க ப்ளீஸ்" என்று கெஞ்சி சம்மதம் வாங்கி இருந்தாள்.

இப்போது மறந்தும் விட்டாள். எனவே தான் தோழிகளும் பொங்கி எழுந்து விட்டனர். அவளும் என்ன தான் செய்வாள் புத்தகத்தை கையில் ஏந்திய பிறகு தான் அவளுக்கு உலகமே மறந்து விடுமே. இதில் எங்கே தன் அன்னையும் அவர் கூறியதும் நியாபகம் இருக்க போகிறது.

"ஐயோ சாரி மீரா குட்டி மறந்ததே போய்டேன் டா. என் செல்லம்ல கோபப்படாத இதோ டென் மினிட்ஸ்டா ஓடி வந்தர்ரேன்" என தனக்கு விருப்பம் இல்லை எனினும் அன்னையின் வார்த்தைக்காக கிளம்ப சென்றாள். தன் தோழியிடம் சொல்லியது போல் பத்தே நிமிடத்தில் கிளம்பியும் வந்தும் விட்டாள். "இவளை கல்யாணம் பண்ண போற அந்த புண்ணியவான் ரொம்ப பாவம்டா சாமி" என மற்ற தோழிகளிடம் மீரா தான் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

அவர்கள் சென்றதும் ஒரு பிரபலமான மால் மற்றும் ஞாயிறு என்பதால் மாலில் கூட்டம் நிறைந்தே இருந்தது.கூட்டத்தில் மெல்ல சுற்றி பார்த்து ஒருவழியாக புட்கோட் வந்தடைந்தனர். "ஹப்பா! ஒரு வழியா உக்கார இடம் கிடைச்சது இல்லனா நம்மலால நின்னுட்டுலா இருக்க முடியாது பா" என்றுவிட்டு தன் தோழிகளை நோக்கி திரும்பி

"ஏய் ஆரு என்ன உக்காந்துட்ட போ போய் சாப்பிட எதாவது வாங்கிட்டு வா அந்த அப்பாவி ஜீவன் வரதுக்குள்ள ஏதாவது உள்ள தள்ளுவோம்" என்றாள் மீரா. அவளை பார்த்து சிரித்துக் கொண்டே சாப்பிட வாங்க சென்றாள் ஆருத்ரா.

சிறிது நேரம் சென்று அந்த மாப்பிள்ளை வருண் தன் நண்பர்களுடன் வந்து விட்டான். "ஏய் ஆரு ஆல் த பெஸ்ட் பா பாத்து பேசு என்ன" என தன் தோழிக்கு தைரியம் தந்து விட்டு வேறு இருக்கைக்கு சென்றனர் தோழிகள்.

"ஹலோ எப்படி இருக்கீங்க" என்று சில சம்பிரதாய அறிமுகம் விசாரிப்புக்கு பின் "உங்கள வீட்ல மீட் பண்ண சொன்னாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வந்துச்சுனா ஓகே சொல்லாம்னு தான் உங்க கிட்ட பேச வந்தேன். ஓகே பர்ஸ்ட் நீங்க சொல்லுங்க. உங்களுக்கு என்னலாம் பிடிக்கும். உங்கள பத்தி நான் தெரிஞ்சுக்கிறேன்" என்றான் வந்தவன்.

இவ்வளவு நேரம் ஏனோதானோ என்று இருந்த நம் நாயகி கண்கள் விரிய "எனக்கு புக்ஸ் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு பிடிக்குமா" என கேட்டு விட்டு பதிலை கேட்காமல் பேசிக் கொண்டு இருந்தாள். "எனக்கு கிளாசிக் ஆத்தர்ஸ்ல இருந்து இப்ப வரைக்கும் எல்லாம் பிடிக்கும்.

அதுவும் பாரதிதாசன், புதுமைப்பித்தன் இவங்க கவிதைகளாம் ரொம்ப பிடிக்கும். அப்புறம்" என தான் காலை படித்த புத்தகத்தை பற்றி வரை பேச ஆரம்பித்து விட்டாள் ஆருத்ரா. வேற ஏதாவது பிடிக்குமா என கேட்டும், போதும் நிறுத்தேன் என் முக பாவம் காட்டியும் நிறுத்தாது பேசிக் கொண்டே சென்றாள் ஆருத்ரா.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவள் ரசனை மிகவும் ஆழமானது. அதை ஒரு ரசிகனாக கேட்டிருந்தால் வருணிற்கு கண்டிப்பாக ஆருவை பிடித்திருக்கும். ஆனால் வேகமாக ஓடும் இந்த உலகில் கலந்த வருண் தன் இணைக்கும் தன்னைப் போல் வேலை, பணம் தான் பிரதானமாக இருக்க வேண்டும் என எண்ணினான்.

எனவே ஆருவின் பிதற்றல்களை, ஆம் அவனை பொறுத்த வரை அவளின் ரசனை பிதகற்றல்களே கேட்ட பின் இது ஒத்து வராது என்ற முடிவுக்கே வந்து விட்டான்.

அங்கே தன் தோழியின் முகத்தை பார்த்து விட்டு எல்லாம் சரியாக தான் போகிறது என நினைத்த தோழிகள் எதிரே இருந்தவன் முகத்தை காண மறந்தனர். இங்கே ஆரு பேச்சைக் கேட்டவனோ மனதில் தான் விதியை நொந்தபடி கிடைத்த இடைவெளியில் "மற்றதை வீட்டில் சொல்லி விடுகிறேன், பாய்" என அறக்க பறக்க தன் நன்பர்களுடன் பறந்து விட்டான்.

அதை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தவளிடம் "ஏய் ஆரு செல்லம் என்ன ஆச்சு டா, என்ன சொன்னாங்க" என தோழி அனு கேட்க, கடைசியாக அவன் ஓட்டத்தை கண்டுவிட்ட மீரா "என்ன பேசுனீங்க" என்றாள் சந்தேகமாய் அவளை அறிந்த தோழியாக.

"அவர் எனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டார் பா நான் பதில் சொன்னேன். வீட்டில உள்ளவங்கட்ட பதிலை சொல்லிடரேன்னு சொன்னாங்க பா. ஆனா அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லாமையே போய்டாங்க" என்றாள் ஆரு தோழிகளின் கேள்விகளுக்கு.

மீரா "ஐயோ" என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உக்கார்ந்து விட்டாள். " ஐயோ போச்சு போச்சு எல்லாம் போச்சு. பாவம் அந்த வருண். அவன் அடிச்சு புடிச்சு ஓடரப்பவே நினைச்சேன் ஏதோ நீ ஏடாகூடமாய் பேசி இருப்பனு" என தன் போக்கில் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

பார்த்த தோழிகளுக்கு குழப்பமே மிஞ்சியது. " ஏய் மீரா என்னடி ஒலரிக்கிட்டு இருக்க கொஞ்சம் புரியிர மாதிரி தான் சொல்லேன்" என்றாள் வினிதா. "ஏன்டி இன்னுமா உங்களுக்கு புரியல? அந்த வருண் தெரியாதனமா உனக்கு பிடிச்சத சொல்லு அப்படினு கேட்ருக்கான் டி.

அப்ப இவ நம்மட்ட அறுக்குர மாதிரி அவன் கிட்டையும் ரம்பத்த போட்டு அறுத்துட்டானு நினைக்கிறேன். அதான் அவன் அப்படி ஓடுனான். ஆமாவா இல்லையான்னு அவக்கிட்டையே கேளு" என நீ இல்லை என்று சொல்லிடுவாயா இல்லை சொல்லி தான் பாரேன் என வடிவேலு ஸ்டைலில் முறைத்து கொண்டு இருந்தாள் மீரா.

மீராவை முறைத்தபடியே "அப்டிலாம் ஒன்னும் இல்லை. எனக்கு புக்ஸ் பிடிக்கும்னு ,எந்த புக்ஸ் அன்ட் ஆத்தர்ஸ்ல பிடிக்கும்னு தான் சொன்னேன்" என்றாள் ரோசமாக. மீரா மற்ற இரு தோழிகளையும் 'நான் சொன்னேன் இல்ல' என்பதை போல் பார்த்து வைத்தாள்.

சிறிது நேர அமைதிக்கு பின் " ஏன்பா அதான் அந்த பையனும் ஓடிட்டான்ல. ஆனால் நம்ம வாங்கி வச்ச புட் ஐட்டம்லா அப்படியே இருக்கு அத ஏன் வேஸ்ட் பண்ணனும் அது நம்மை கூப்புடுற மாதிரியே இருக்கு பா. வாங்க சாப்பிடலாம் பீளீஸ்" என்று அழைத்தாள் அனு.

அவளை கொலை வெறியோடு திரும்பி பார்த்தனர் மற்ற மூவரும். பின் "சரி அவன தான் துரத்தி விட்டுடாளே சாப்பாடு என்ன பாவம் பண்ணுச்சு. நமக்கு சோறு தான் முதல்ல முக்கியம். வாங்க போய் சாப்பிடுவோம்" என ஒருமித்த கருத்தை எடுத்து உணவை உண்ண சென்றனர்.

இதுவரைக்கும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை தோழிகளின் கடைசி கூற்றை கேட்டவுடன் வெளியேற்றி விட்டான் அவன். அவன் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான் தோழிகளின் அட்டகாசத்தை.

அதுவும் ஆருத்ரா பேச பேச அந்த வருண் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவர்களின் கடைசி பேச்சு அவன் சிரிக்க காரணம் தந்தே சென்றது.

அப்போதும் ‌அந்த வருண் அவளின் பெயரை ஆருத்ரா என் கூறிய போது ருத்ராவாய் பதிந்து போனதையும், என்னதான் சிரித்தாலும் ஆருத்ரா மீது அவன் பார்வை ரசனையோடே பதிந்து மீண்டதையும் யோசிக்க மறந்தான்.

ஒருவனின் மனதில் சத்தமின்றி தூரல் துளியாய் இறங்கியதை அறியாமல் தன் தோழிகளின் கிண்டல்களோடு வெளியே சுற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தாள் அனைவரின் ஆருவாகிய அவனின் ருத்ரா.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் இதோ அடுத்த அத்தியாயம். அப்புறம் இப்பவே சொல்லிடறேன் இது ஒரு டிடெக்டிவ் நாவல். ஆரம்பத்துல இரண்டு அத்தியாயத்தை படிச்சிட்டு லவ் அண்ட் ரொமான்ஸ் கதைனு நினைச்சிடாதீங்க மக்காஸ்:love::love::love:

தூறல்-2

காற்று மீட்டும் குழலாய்
அவள் கார்மேக கூந்தலை
மீட்டிட மனம் ஏங்கிடுதே....


'என்ன ஆச்சு இவனுக்கு ரொம்ப நேரமா தானா சிரிச்சுக்கிட்டு இருக்கான். என்னவா இருக்கும்' என யோசனையோடு தன் மகனை ஒரு பார்வை பார்த்து சமையலறை சென்றார் ரேவதி.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து தன் மகனை கண்டு 'ஒரு வேளை எந்த பொண்ணு கிட்டையாவது லவ்ல சிக்கிட்டானோ. இருக்காதே நம்ம புள்ளைக்கு அவ்வளவு திறமை பத்தாதே. என்னவாக இருக்கும்' என எண்ணினாலும் என்னவென்று தெரிந்து கொள்ள மனது பரபரத்தது. எனவே நேரே தன் மகனின் முன் சென்று நின்றார்.

"கண்ணா, என்னடா ஆச்சு தனியா விட்டத்தப் பாத்து சிரிக்கிற.ஒருவேளை பையித்தியம் கியிதியம் ஏதும் பிடிச்சுக்கிச்சா டா. ஏதாச்சும் சொல்லுடா. ஐயோ எனக்கு இருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு நீ ஒத்தப் புள்ள.

உனக்கு இப்படியா ஆகனும் நான் என்ன பண்ணனுவேன்" என மகனை பேச விடாது இவரே புலம்பிக் கொண்டு இருந்தார். இவரது அலம்பல்களை பார்த்து " எதே! எம்மா நிறுத்துரியா நீ. விட்டா கையோட என்னை மென்டல் ஆசுபத்திரிக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்துர போல" எனறான் அவரின் புலம்பல்களில் தெளிந்த கௌதம்.

"பின்ன என்ன டா. என் புள்ள நீ இப்படி இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது. பக்குனு ஆகுதுல்ல. நான் உன் முன்னாடி இப்படிக்கா அப்படிக்கானு நாலு தடவை நடந்துட்டேன். நீ கணவுல இருக்க மாதிரி சிரிக்கிற நெளியிற.

நானும் என்னதான் பண்ணுவேன் எனக்குனு இருக்கிறது வேற நீ ஒரே ஒரு பிள்ளையாச்சே ம்ம். இவ்வளவு பேசுறேன் இப்பக் கூட பாரு நீ எதாவது பேசுறியா கம்முனு இருக்க ஐயோ நான் என்ன பண்ணனுவேன்" என அவன் பேச இடமே தராது நீண்ட வசனம் பேசி மூக்கில் வராத சளியை வேறு புடவையில் சிந்தினார் ரேவதி.

தன் அம்மா ரேவதி பேசிய வசனத்திற்கு அவர் மகனுக்கு தான் தலைச் சுற்றியது "எம்மா என்னலாம் பேசுர. இவ்வளவு நேரம் மூச்சு விடாம பேசுரியே எங்கையாவது என்ன பதில் பேச விட்டியா நீ.

இதுல ஒரே ஒரு பிள்ளை ஒரே ஒரு பிள்ளைனு டயலாக் வேற. எம்மா என்ன பெத்த ஆத்தா மறுபடியும் ஆரம்பிக்காத என்ன ஆச்சுன்னு சொல்றேன்" என தன் அன்னை வாயை திறக்க போகவும் தன் அன்னையை பேச விடாமல் இவன் பேசினான்.

"இருடா ஒரு இடத்தில உக்கார்ந்துகரேன். உன் கிட்ட நின்னுட்டே சண்டை போட்டதுல காலுலாம் வலிக்குது" என கதை கேட்கும் பாவனையில் அமர்ந்து கொண்டார். தன் அன்னையை முறைத்துக் கொண்டே " காலையில் மால்ல ஒரு பொண்ணை பாத்தேன் மா" என தொடங்கும் போதே

"கண்ணா ராஜா நான் கும்புடுர சாமி இப்போ தான் உனக்கு நல்ல புத்திய கொடுத்து இருக்காருடா. ஒரு வழியா ஒரு பொண்ணை பாத்து லவ் பண்ணிட்ட. இப்ப தான் நிம்மதியா இருக்கு. நீ பொண்ணு யார்னு மட்டும் சொல்லு நான் நாளைக்கே அவங்க வீட்டுக்கு போய் ‌பொண்ண கேட்டுப்புட்டு வந்தர்ரேன்.

அப்படியே நம்ம ஜோசியரையும் பார்த்து நல்ல நாளா குறிச்சு வாங்கிட்டு வந்தர்ரேன். சட்டு புட்டுன்னு கல்யாண வேலையை ஆரம்பிச்சுடலாம்‌ல. இரு போய் உன் ஜாதகத்தை இப்பவே எடுத்து வைக்கிறேன். காலைல சுலபமா இருக்கும்ல" என வழமை போல் தன்னை பேச விடாது பேசும் தாயை வெட்டவா குத்தவா என முறைத்துக் கொண்டு இருந்தான் கௌதம்.

" எம்மா ஒரு நிமிஷம் நில்லு. ஆமாம் நீ நாளைக்கு யார் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்க போற" என்றான் முறைப்போடு. தன் மகனின் முகத்தை சரியாக கவனியாத ரேவதி "இதென்னடா நீ லூசு மாதிரி கேள்வி கேக்குற. இப்ப தானே நீ ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொன்ன. அந்த பொண்ணு வீட்டுக்கு தான்" என்றார் ரேவதி.

"ஓஓ, ஆமா நீ எங்கனு போய் பொண்ணு கேட்ப?" என்ற மகனின் கேள்விக்கு "அட ஆமால அதை மறந்துட்டேன் பாரேன். சொல்லுடா அந்த பொண்ணுனோட பேரு அட்ரஸ்லா போய்ட்டு வந்தர்லாம்" என்றார் அப்பாவியாய்.

"நீ போனா நல்லா நாலு அடி வேனா கிடைக்கும். என்ன இழுத்துட்டு போனா உன் கூட வந்த பாவத்துக்கு எனக்கு நல்லா நாலு கிடைக்கும். ஆனால் பொண்ணுலா கிடைக்காது" என்று முழு விவரம் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் ரேவதி ஆரம்பித்து விட்டார்.

" என்னடா அந்த பொண்ணு வீட்ல பிரச்சினை பண்ணுறாங்கலா. கவலைய விடு என் மருமகள தூக்கிட்டு வந்துடலாம் மவனே. நீ கவலைப்படாதே உன் காதலை சேர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடது" என்று கடத்தல் வரை முடிவு எடுத்தார் ரேவதி.

" எம்மா எம்மா ஒரு நிமிஷம். நீ உன் ஃப்ளிங்ச கட்டுபடுத்திட்டு நான் சொல்றத கொஞ்சம் கேளு. அதுலாம் நடக்குனும்னா மொதல்ல அந்த பொண்ண நான் லவ் பண்ணனும் அட்லீஸ்ட் அந்த பொண்ணு யாரு அப்படிங்கறதாவது தெரியனும் புரியுதா" என்றான் கடுப்பாக. " என்னடா சொல்ற" என அமர்ந்து விட்டார் ரேவதி.

"நீ இவ்வளவு நேரம் பேசுனியே நான் பேசுனத ஒழுங்கா கவனிச்சியா. நான் ஒரு பொண்ணை பாத்தேன் அப்படினு தான் சொன்னேன் லவ் பண்ணுறேன் அப்படினு எங்கையாவது நான் சொன்னேனா?" என்று இன்னும் நீங்காத கடுப்புடன் கேட்டான் கௌதம்.

"என்னாதுஉஉஉ" என அதிர்ச்சியாகி பின் "இத நீ முன்னாடியே சொல்றதுக்கு என்னடா. எவ்வளவு ஆசையா பிளான் போட்டேன் எல்லாத்தையும் இப்படி நிமிஷத்தில காலி பண்ணிட்டியே டா" என்றார் சோகமாக.

" எதே, என்னை பார்த்தா உனக்கு எப்படிமா தெரியுது எப்ப நீ என்னை பேச விட்ட இப்ப பேச விட. கொஞ்சம் கூட பொறுமையே இல்லை உனக்கு. நான் தூங்க போறேன் போ. நீ என்னமோ பண்ணு" என வேகமாக தன் அறை நோக்கி சென்றான்.

" என் ராஜா வாடா நான் இடைல பேசவே மாட்டேன். முழுசா செல்லிட்டு போடா இல்லை என் மண்டை வெடிச்சுரும்னு தெரியாதா உனக்கு. பாவமில்லையா நான் வாடா கண்ணா பிளீஸ்" என்றார் இன்னும் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

"வரேன் முகத்தை இப்படி வைக்காத பார்க்க சகிக்கவில்லை" என தன் அன்னையை பற்றி தெரிந்தவனாக வந்தான். ஏனெனில் அவன் தாய்க்கு தான் ஒரு விஷயம் சொல்லி பாதியில் விட்டால் மண்டை உடைந்து விடுமே.

கௌதம் மாலில் நடந்த நிகழ்வுகளை சிரிப்புடன் சொல்ல ஆரம்பித்தான். ஆருத்ரா பேசியதை சொன்னவுடன் " ஏன்டா அந்த பொண்ணு அதுக்கு புடிச்சத சொன்னதுக்கா அப்படி சிரிச்சிட்டு இருந்த" என்றார் ரேவதி.

"இல்லை மா அந்த பொண்ணு பத்தி நான் ஒன்னும் சொல்லல. இன்பேக்ட் அந்த பொண்ணோட ரசனை ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்சும் கூட இருந்தது.

நான் சொன்னது அந்த பையன பத்தி. ருத்ரா பேச பேச அந்த பையன் மூஞ்ச பாக்கனுமே, எப்படி விழுந்தடிச்சு ஓடுனா தெரியுமா. அங்க வச்சே அவளோட ப்ரண்ட் ஒரு பொண்ணு செமயா ஓட்ட ஆரம்பிச்சிடுச்சு.

அப்புறம் அதோட கடைசியா அந்த பொண்ணுங்கலாம் சாப்பாடு தான் முக்கியம்னு சொன்னத நீ கேட்டு இருக்கனும் பாரு செம காமெடி மா. இன்னும் வீட்ல வச்சு எப்படிலா கிண்டல் பண்ண போறாங்களோ" என்றான் சிரித்தபடி.

"என்னடா காமெடி சாப்பாடு இல்லாம நீ இருந்துருவியா‌ என்ன. அது இருக்கட்டும், அது யாருடா ருத்ரா" என்றார் ரேவதி பாயின்டாக. " ஐயோ போச்சுடா அம்மா ஓட்டியே கொல்ல போறாங்க" என நாக்கை கடித்து கொண்டான். தன் அன்னையை பற்றி தெரிந்தும் வாய் விட்ட தன்னை நொந்து கொண்டு சமாளிக்க முயன்றான்.

"அம்மா அது" என்று இழுத்து விட்டு "ஆமா நீ சாப்டல்ல மாத்திரை போட்டுடியா உனக்கு சுகர் இருக்கு நியாபகம் இருக்குல்ல" என தன் தாயை திசை திருப்ப முயன்றான். "இந்த டகால்டி வேணாம் மகனே! ஒழுங்கா சொல்லு" என்றார்.

"அந்த பொண்ணோட போரு தான் மா" என்றான் பிடிபட்ட பாவத்தில். " ஆனா ஆருத்ரானு தானே சொன்ன" என சிறிது யோசித்து "ஓஓ, செல்ல பேரா. டேய் மகனே என்னடா இது அப்ப உனக்கு அந்த பொண்ணு பிடிச்சிருக்கா? சொல்லுடா" என்றார் ஆசையாக.

தன் அன்னையின் முகத்தை கண்டு சிரித்து விட்டு " அதுலாம் ஒன்னும் இல்லை. ஜஸ்ட் அந்த பேரு மைன்ட்ல பிக்ஸ் ஆகிருச்சு. நல்லா இருக்குல அதான் விடே" என்று தன் மனம் அறியாமல் பேசிக் கொண்டு சென்றான்.

தன் மகன் தன் மனதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அது நடக்க இன்னும் சிறிது நாள் காத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார் ரேவதி நல்ல அன்னையாக. பின் தன் அன்னை மாத்திரை எடுத்துக் கொண்டாரா என பார்த்து விட்டே தன் அறை சென்றான் கௌதம்.

கௌதம் சொன்னது போல் அங்கே தோழிகள் மூவரும் ஆருவை வளைத்து வளைத்து கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். "ஏன்டி அது எப்படி டி பேசியே அவன துரத்தி விட்ட. ஆனா அவன் முகத்தை அப்ப நீங்க பார்த்து இருக்கனும்.

சும்மா பத்து பேய் படம் பார்த்த எபக்ட். சும்மா தெரிச்சு ஓடுனான் பா" என சொல்லி சொல்லி சிரித்து அவளை ஓட்டி தள்ளி விட்டனர் தோழிகள். " ஏ விடுங்கப்பா எனக்கே அங்க போக பிடிக்காம தான் போனேன். அவனே வேணாம்னு போய்ட்டான்" என்றாள் ஒரு வித நிம்மதியுடன்.

"ஒரு சின்ன திருத்தம் வேணாம்னு போகல ஓடிட்டான்" என்றனர் தோழிகள் கிண்டலுடன். "சரி ஓடிட்டான் இப்ப என்ன. நாளைக்கு ஆபிஸ் இருக்குல வாங்க போய் தூங்கலாம்" என தன் தோழிகளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

ஒரு வழியாக கிண்டலுடன் உணவை முடித்துக் உறங்க சென்றனர். கௌதமை ஆருத்ரா காண வைக்க அடுத்து என்ன செய்யலாம் என விதி தன் விளையாட்டை துவங்க தூங்காது யோசித்து கொண்டு இருந்தது.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 3

அற்ப மானுடம் ஆட்டூம் பொம்மை அல்ல வாழ்க்கை,
அடுத்த பக்கம் காண காத்திருக்க வேண்டுமே தவிர,
அப்பக்கத்தை கதையால் நாம் நிரப்ப இயலாது!



"டேய் சின்சியர் சிகாமணி என்னடா சீக்கிரம் வந்துட்ட போல, என்ன செய்ற" என தன் கணினியில் தட்டச்சு செய்து கொண்டு இருந்த நண்பன் சத்யாவிடம் கேட்டுக் கொண்டு வந்து தன் இடத்தில் அமர்ந்தான் கௌதம்.

"வாடா நீதான் லேட். என்னாச்சு டா" ‌ என்று விட்டு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான்.
"அந்த பிராஜக்ட் தான் டா. உனக்கு தான் தெரியும்ல அந்த ஸலம்ல இருக்க பசங்க பத்தின ஆர்டிகல்.

அதை செய்ய ஆரம்பித்ததுல இருந்து உன் கிட்ட சரியாக் கூட பேச முடியல. ஒரு வழியாக இப்பதான் எல்லாத்தையும் பின்னிஷ் பண்ணிட்டு எடிட்டர்ட ரிப்போர்ட்ட குடுத்துட்டு வரேன் அதான் லேட்" என தன் நண்பனின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டே அமர்ந்தான் கௌதம்.

அது ஒரு பத்திரிகை அலுவலகம் "தினஒளி" அங்கு தான் கௌதமும் அவன் நண்பன் சத்யாவும் பத்திரிகையாளர்களாய் வேலையில் உள்ளனர். சத்யாவும் கௌதமும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள். முதல் வருடத்தில் ஆரம்பித்த நட்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது.

இது நாள் வரை அவர்கள் இருவரும் அன்றாடம் செய்தி சேகரிக்கும் வேலையை மட்டுமே செய்தனர். இப்போது தான் சமூகத்தில் மக்களிடையே இருக்கும் குறைகளை உலகுக்கு எடுத்துச் செல்லும் கட்டுரைகளையும் எழுதுகின்றனர்.

அப்படி ஒரு சமூகப் பொருட்டு தான் அந்த ஸலம் மாணவர்கள் கல்வி பாதியில் நிறுத்தப்பட்டு அவர்கள் தவறான பாதையில் செல்வதை ஆராய்ந்து மற்றும் அவர்களிடம் சென்று பேசி சில நிகழ்வுகளை திரட்டி என கட்டுரையை முடித்திருந்தான் கௌதம். அதையே தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

"ஆமாம் சத்யா நீ என்ன பிராஜக்ட் செய்ற நானும் கேக்க மறந்துட்டேன். எடிட்டர் கேட்டாரு நீ இன்னும் டாபிக் கூட அவர்ட்ட ரிவீல் பண்ணலையாம்" என்ற கௌதமின் கேள்விக்கு,

"சொல்லக்கூடாது அப்டின்னு ஒன்னும் இல்லைடா. இனிமே தான் சொல்லனும். பர்ஸ்ட் கொஞ்சம் டீடெயில்ஸ் நல்லா ஸ்ட்ராங்கா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் சொல்லலாம்னு தான் டா. வேற ஒன்னும் இல்லை" என்றான்.

"வந்தப்போல இருந்து நானும் பாக்குறேன் டென்சனாவே வேற இருக்க மாதிரி தெரியிர, ரொம்ப சீரியஸ் இஸ்யூ எதுவும் எடுத்துட்டியா டா. எதுவும் பிரச்சினை ஆகிருச்சா சொல்லுடா பாத்துக்கலாம் நான் இருக்கேன்" என தன் நண்பனின் முகம் கண்டு வினவினான் கௌதம்.

கௌதம் கேட்டது போல் தான் சத்யாவும் சற்று பதட்டமாக இருந்தான். தன் முகம் கண்டே தன்னை அறியும் நண்பனை எண்ணி மனம் மகிழ்ந்த சத்யா, தன் முகத்தை முதலில் சீராக்கிக் கொண்டான். பின் "அதுலாம் ஒன்னும் இல்லைடா.

எதுவும் பிரச்சினைனா உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன் நான் ம்ம். ஆனால் கொஞ்சம்" என ஆரம்பித்து விட்டு "எதாவது பிராப்லம் ஆச்சுன்னா நான் கண்டிப்பா உங்கிட்ட செல்வேன்.

மத்தபடி பெருசா எதுவும் இல்லை நானே சமாளிச்சுப்பேன். ஓகே வா" என்றான் சத்யா சமாளிப்பாய். தன் நண்பனின் கூற்றை சிறு சிரிப்புடன் ஏற்றுக் கொண்டான் கௌதம்.

தன் நண்பன் தன்னிடம் எதையும் மறைக்க மாட்டான் என அறிந்த கௌதம் தகுந்த நேரத்தில் கூறுவான் என விட்டு விட்டான். ஆனால் அவன் அதை தன்னிடம் எப்போதும் கூறப்போவது இல்லை என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சத்யாவின் மனதிலோ தனக்கு தெரிந்த இந்த நிகழ்வுகள் கண்டிப்பாக தன் நண்பன் கௌதமிற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம். ஆனால் அதை பேசக் கூடிய இடம் இதுவல்ல என்று நினைத்தே அமைதி காத்தான்.

ஏனெனில் அவனுக்கு தெரிந்ததை கூறும்போது யாரேனும் வந்தால் ரகசியமாக அவன் செய்ய நினைத்தது எல்லாம், அறியக் கூடாதவர்கள் யார் காதிற்காவது சென்று விடக் கூட வாய்ப்புகள் அதிகம் உண்டு.

எனவே அதற்கே யாரிடமும் சொல்லாமல் அமைதி காத்தான். எந்த ஒரு சிறு விஷயம் என்றாலும் கௌதமிடம் பகிர்ந்து விடுவது சத்யாவின் பழக்கம். ஆனால் இதுநாள் வரை கௌதமிடம் விரிவாக பேச முடியாமல் இருந்ததிற்கு காரணம் இருவரின் வேலை அவர்களை தன்னுள்ளே இழுத்துக் கொண்டது தான்.

நேரிலே விரிவாக பேச வேண்டும் என எண்ணியே கைபேசியில் பேசவில்லை என்றும் சொல்லலாம். எனவே இன்று கௌதமிடம் எப்படியாவது சொல்லி விடவேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டான்.

அதன் பொருட்டு பேச்சை ஆரம்பித்தான் சத்யா. "கௌதம் இன்னைக்கு லன்ச்க்கு வெளிய போலாமா? எதாவது மால்க்கு போலாம் எனக்கு கொஞ்சம் டிரஸ்சும் எடுக்கனும் டா. எடுத்துட்டு அங்கையே சாப்பிட்டு வந்தர்லாம்" என்றான் ஒரு முடிவு எடுத்தவனாய்.

"ம்ம் சரி டா. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு போலாம். இல்ல அந்த எடிட்டர் கத்த ஆரம்பிச்சு நிறுத்தாம போவார் " என்றான் கௌதம் சிரிப்புடன். "சரி" என்று விட்டு இருவரும் தத்தம் வேலையை முடிக்க மும்முரம் காட்டினர்.

மதிய உணவு வேளையும் வந்தது, கௌதமிற்கு தன் அன்னையிடம் இருந்து அழைப்பும் வந்தது. "டேய் மகனே வேலையா இருக்கியா டா" என்றார் ரேவதி எடுத்தவுடன் சத்தமாக.

போனை காதிலிருந்து எடுத்து காதை தேய்த்துக் கொண்ட கௌதம் மீண்டும் காதில் வைத்து "எம்மா மெதுவா பேசறதுனா என்னான்னே தெரியாதா உனக்கு" என்றான் கடுப்பாக. ஏனெனில் அவர் கத்தியது பக்கத்தில் இருந்த சத்யாவிற்கே கேட்டு விட்டது.

"கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லி பழகு. எப்பப் பாத்தாலும் எதிர்த்து பேசிக்கிட்டு. இப்படி இருந்தா நாளைக்கு வரப் போறவ 'என்ன புள்ளைய வளர்த்து வச்சிருக்கனு' என்னை தானே கேட்பா. இப்ப என்ன பண்ற அதச் சொல்லு எனக்கு சோலி நிறைய கெடக்கு. உன்னை மாதிரி வேலை வெட்டி இல்லாதவளா நானு" என்றார் ரேவதி.

போன் போட்டு தன் அன்னை தன்னையே கலாய்க்கவும் நொந்தே விட்டான் கௌதம். அருகில் இருந்த சத்யாவோ சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு இருந்தான்.

"ஆமா நீ வந்து பார்த்த நான் வெட்டியா உக்கார்ந்து இருக்கறத. எதுக்கு மா போன் பண்ணுன அதை பர்ஸ்ட் சொல்லு" என்றான். "டாக்டர் செக்கப்கு போகனும்னு சொன்னேன்ல" என்றதற்கு

"ஆமாம் அதான் சன்டே அப்பாயின்மெண்ட் வாங்கறேன் போலாம்னு சொன்னியே மா" என்றான் கௌதம். "சன்டே ஊர்ல ஒரு பங்சன். போன வாரம் உங்க மாமா வந்து இன்வைட் பண்ணிட்டு போனாரே மறந்திட்டியா. அங்க போவனும் டா" என்றார் ரேவதி.

"சரி மா, அதுக்கு இப்போ நான் என்ன பண்ணனும். அதை மட்டும் சொல்லு‌. எல்லாம் நீ இன்னேரம் பிளான் செஞ்சுருப்பியே சொல்லு பண்றேன்" என சரண்டர் ஆகினான் கௌதம். இல்லையெனில் தன் அன்னை தன் இமேஜை இன்னும் தாறுமாறாக டேமேஜ் செய்து விடுவாரே.

"பொழச்சு போ. நான் இன்னைக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன். நீ கெளம்பி வா கண்ணா போய்ட்டு வந்தர்லாம் என்ன சொல்ற" என்றார் ரேவதி முடிவாக.

சிறிது யோசித்தவன் "ஏமா இன்னைக்கே போகனுமா சன்டே தானே பங்சன் நாளைக்கு போகலாமே. எனக்கு வெளியே கொஞ்சம் வேளை இருக்கு" என்றான் சத்யாவை மனதில் வைத்து.

"என்ன விளையாடுரியா. நான் இன்னைக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன். மறுபடியும் மாத்த முடியாது. அந்த பொம்பள என்னை திட்டும் டா. நீ வந்தா வா இல்லனா நானே போறேன். உன்கிட்ட கேட்டேன் பாரு என்னை சொல்லனும்" என்றார் ரேவதி கோபமாய்.

"ஐயோ அம்மா உன்னோட இம்சை மா. ஹாப் டே லீவ் சொல்லிட்டு வரேன். நீ ரெடியா இரு மா. நீயே தனியா கிளம்பிராத" என்றான் கௌதம் அவசரமாய். ஏனெனில் ரேவதி ஒருமுறை வெயில் நேரம் தனியாக வெளியே சென்று மயங்கி விட்டார்.

அதற்கே கௌதம் பயம் கொண்டு அவரை தனியே விடுவதில்லை. எனவே விடுப்பு எடுக்க எண்ணிய கௌதம் சத்யாவிடம் "சாரி மச்சான் நாம நாளைக்கு வெளியே போகலாம் டா. என் அம்மா இப்படி நம்ம பிளான சொதப்புவாங்கனு நினைக்கில டா" என்றான் வருத்தம் மேலிட்ட குரலில்.

ஏனெனில் சத்யா இது போல் யாரையும் ஏன் கௌதமைக் கூட அநாவசியமாக எங்கும் அழைப்பவனும் இல்லையே. அதுவும் அவன் வேலையை பற்றி கேட்டதும் சற்று தடுமாறி ஏதோ சொல்ல முயன்றான்.

பின் தன்னை சுற்றி பார்த்து விட்டு சுதாரித்தவனாக பதில் கூறினான். இதை கௌதம் கவனிக்கவில்லை என எண்ணிய சத்யா கௌதமும் தன்னை போலவே ஒரு பத்திரிகையாளன் என்பதை நினைக்க மறந்தான்.

அதுவும் அவன் தன்னை விட அனைத்தையும் கூர்ந்து கவனிக்க கூடியவன் என்பதையும் தன் பதட்டத்தில் மறந்தான். சத்யா சாப்பிட வெளியே செல்ல அழைக்கவுமே தன்னிடம் அனைத்தும் பகிர தான் எண்ணுகிறான் என்பதை புரிந்துக் கொண்டான்.

அதனால் தான் தன் அன்னை அழைத்து கூப்பிடவும் மிகவும் கஷ்டமாகி விட்டது. "பரவாயில்லை டா நாம நாளைக்கு கண்டிப்பா போறோம் ஓகே. நீ இப்ப கிளம்பி அம்மாவ பர்ஸ்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா" என்றான் சத்யா நண்பனை அறிந்தவனாக.

"ஆமாண்டா இல்லைனா என் அம்மா மறுபடியும் போன் செஞ்சு என் இமேஜை டேமேஜ் பண்ணுவாங்க. அப்புறம் நைட் சாப்பாடும் கட்" என்றான் சிரிப்புடன் சத்யாவின் மனதை திசை திருப்பும் முயற்சியில்.

"ஆமாம்டா ஆனாலும் அம்மா உன்னை இப்படிலாம் டேமேஜ் செஞ்சுருக்க கூடாது" என்றான் கிண்டலாக. "எல்லாம் என் விதி என்ன செய்ய, நீயும் சேர்ந்து கிண்டல் பண்ணாத" என்றுவிட்டு "சரி டா நான் கிளம்புறேன்" என அவன் சிரித்த முகம் கண்டே கிளம்பினான்.

"சரிடா" என அவனை ஒரு சிரிப்புடன் அனுப்பிய சத்யா "நாளைக்கு கண்டிப்பா கௌதம் கிட்ட சொல்லிறனும்" என மனதில் முடிவை எடுத்துக் கொண்டான். ஆனால் அதை கடைசி வரை கூற முடியாது என அறிந்திருந்தால் இப்பவே கூறி இருப்பானோ என்னவோ.

ஏன் இருவரும் அறியாதது சத்யா கௌதமை பார்க்கும் கடைசி நாள் இதுவென்றும், மற்றும் கௌதம் இன்று கண்டதே தான் காணும் சத்யாவின் கடைசி சிரிப்பு என்பதையும். வாழ்க்கை முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் முடியும். விதிவசம் நாம் இருக்கையில் யாரை குற்றம் சொல்ல.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 4

வாழ்வில் பல வண்ணம் உண்டு,
அதை நிரப்புவதும் நம் எண்ணங்களே;
இருளோ‌ ஒளியோ வாழ்வு மலர்வதும்,

அவரவரின் மனதின் உபயத்தாலே!

"என்னம்மா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. இங்க வேலை பார்க்க வந்தியா, இல்லை ஓபி அடிக்க வந்தியா. சொல்ற வேலை ஒன்னு கூட சரியா செய்ய முடியாதா. நீ நேத்து பார்த்த வொர்க்ல அவ்ளோ மிஸ்டேக்.

ஒழுங்கா இதுல இருக்க எல்லா தப்பையும் சரி செஞ்சு எனக்கு மெயில் பண்ணிட்டு, எவ்ளோ நேரம் ஆனாலும் இன்னைக்கு வொர்க்கும் கம்பிளிட் பண்ணிட்டு தான் போற புரியுதா" என சகட்டுமேனிக்கு வாங்கிய திட்டுகள் எல்லாம் மீண்டும் மீண்டும் மீராவின் காதிலே கேட்டது.

இன்று வெள்ளிக்கிழமை. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அவள் டீம் லீடரும் வேலை முடிக்க வேண்டுமே என்ற கடுப்பில் கத்திவிட்டார். அவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தது முதல் ஆரம்பித்து விட்டாள் அவளது புலம்பல்களை.

"இன்னைக்கு காலைல யார் மூஞ்சில முழிச்சனோ தெரியல. அந்த சொட்ட மண்ட என்னை பார்த்து என்னா திட்டு திட்டுரான், என்னா பேச்சு பேசுறான் ச்ச. சொட்ட மண்ட பரங்கிதலை" என இன்னும் தன் டீம் லீடரை வாய்க்குள் முணுமுணுப்பாக திட்டிக் கொண்டே தாம் எங்கே தவறு செய்தோம் என வேலைக்குள் சென்றாள்.

அவள் நேற்று வேலை செய்யும் நேரம் யாரோ அவளை கூப்பிட திரும்பி பார்த்திருந்தாள். அந்த இடத்தில் தான் தவறு என்று காட்டியது. "தலையை திருப்பினது ஒரு குத்தமாடா. பாவி பய அந்த ராஜேஷ் குரங்கு பண்ணுன வேலை" என

தன்னை கூப்பிட்ட தன் உடன் பணிபுரியும் நண்பனையும் உடன் திட்டினாள்‌. இதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தனர் தோழிகள். அவர்களை நோக்கி ஒரு முறைப்பை வீசி "பார்த்து சிரிச்சு சிரிச்சு வாய் சுளுக்கிக்க போகுது" என தலையை சிலிப்பி விட்டு தன் வேலையை தொடர்ந்தாள் மீரா.

மாலை நேரம் நெருங்கவே "என்னடி இன்னுமா உன் வேலை முடியல, நேத்து வொர்க் இன்னைக்கு வொர்க்கும் சேர்ந்தே நான் முடிச்சிட்டேன். நீ இன்னும் என்ன பண்ற. அவளுக ரெண்டு பேரும் போயாச்சு. நம்ம தான் லேட் தெரியும்ல" என ஆருத்ராவை கேட்டுக் கொண்டு இருந்தாள் மீரா.

இன்று அவர்கள் தோழி ஒருத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உள்ளது. அனுவும் வனிதாவும் அவர்கள் வேலை முடியவும் கிளம்பி முன்பே சென்று விட்டனர். இவர்கள் இருவரும் தான் செல்ல வேண்டியது பாக்கி‌.

"ஏன்டி பேச மாட்ட, நீ புலம்பின புலம்புல உனக்கு ஹெல்ப் பண்ண போய் தான் இப்ப என் வொர்க் பென்டிங்ல இருக்கு. ஓடிப்போயிரு ஒழுங்கா" என மீராவால் தான் தன் வேலை இழுத்துக் கொண்டதில் திட்டினாள் ஆரு.

"இப்ப என்ன என்னால தான் எல்லாம் என்னால தான் போதுமா. சும்மா வெட்டி கதை பேசாம சீக்கிரம் வொர்க்க கம்பீளிட் பண்ணு" என மிதப்பாய் பேசினாள் மீரா.

"எல்லாம் என் நேரம்" என முணுமுணுத்து விட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் "ஏய் மீரா நான் சொல்றத கேளுடி ப்ளீஸ். வொர்க் முடிய டைம் இழுக்கும் போல தெரியுது. நான் சொன்ன மாதிரி நீ மட்டும் போடா.

நம்ம ரெண்டு பேருமே போகலனா சொல்லி வச்சிட்டு தான் வராம இருக்கோம்னு திட்ட ஆரம்பிச்சுருவாளுக டி. அதனால நீ போய் சாமாளிச்சுட்டு இருப்பியாம், நான் பின்னாடியே ஓடி வந்தருவனாம்" என தன் தோழியை அனுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தாள் ஆரு.

"போனா ரெண்டு பேரும் போகலாம் இல்ல போகவே வேணாம். உன்னை தனியாலா விட்டு போக முடியாது. நீ பேசுற நேரம் வேலையை பாரு" என பதில் வாதம் செய்துக் கொண்டு இருந்தாள் மீரா.

"சொன்னா புரிஞ்சுக்கடி. இப்போ நீ போனா நானும் வொர்க் முடிச்சுட்டு வரேனு தானே சொல்லுறேன். என்னமோ வர மாட்டேன்னு சொன்ன மாதிரி செய்ற" என மேலும் பத்து நிமிடம் பேசியே சம்மதிக்க வைத்தாள் ஆருத்ரா.

ஒரு வழியாக அரை மனதுடன் "சரி நான் கிளம்பறேன். நீ பத்திரமா வந்துருவ தானே" என்ற மீராவிடம் "என்ன பார்த்தா எப்படி இருக்கு, சின்ன பிள்ளையா நான். அதுலாம் பத்திரமா வந்துருவேன். இப்ப நீ போ" என்றாள் ஆரு முறைப்பாக. இல்லையேல் மீரா மீண்டும் அமர்ந்து விடுவாளே.

"எனக்கு என்னமோ பயமா இருக்கு டி. நீ தனியா வரேன்னு சொன்னத நெனச்சா. ரெண்டு பேரும் சேர்ந்தே போலாமே" என மீண்டும் மீரா ஆரம்பிக்க, ஆருத்ரா மேலும் முறைத்ததில்

"சரி சரி முறைக்காத என் முறை மாமன் மாதிரி. இதோ கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன்" என தன் தோழியைப் பார்த்து "பார்த்து வா ஆரு என்ன" என ஒருவாறு மனமில்லாதே கிளம்பினாள்.

மீரா என்றுமே அப்படி தான் ஆருத்ராவிடம். ஆருத்ராவை யாரும் நெருங்காமல் காவல் இருப்பாள் என்றால் அது தவறு, ஆருத்ரா யாரையும் நெருங்காமல் பார்த்துக் கொள்வாள் என்றால் சரியாக இருக்கும்.

ஆரு சாதாரணமாக சாலையில் செல்லும் போது பக்கத்தில் உள்ளவர்களிடம் யாரேனும் வம்பு செய்தால் கூட தட்டிக் கேட்கிறேன் என சண்டையில் தான் முடிப்பாள், தானே வலிய சென்று வம்பை வாங்கியும் வந்து விடுவாள்.

அப்படி எதாவது பிரச்சினையை கொண்டு வந்து விட்டால் என்ன செய்வது, அவள் பெற்றோர் அவளை கூட எதுவும் சொல்லாது உடன் இருக்கும் மீராவிடம் தான் "ஏன் மீரா கண்ணு அவளை பத்தி தெரிஞ்சும் எதுக்கு நீ அவளை தனியா விட்ட" என்பார்கள்.

அதுவே மீரா இவ்வளவு தூரம் தயங்கி தயங்கி சென்றதற்கு காரணம். தன் தோழி எதற்காக இப்படி செய்தாள் என அறிந்த ஆரு அவளை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டே வேலையை தொடர்ந்தாள்.

"அம்மா சன்டே தானே மேரேஜ். இவ்ளோ சீக்கரமா ஏன் மா இன்னைக்கே கிளம்பனும். நாளைக்கு போனா பத்தாதா" என இரு நாட்கள் முன்னதாக கிளம்ப சொல்லும் தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டு இருந்தான் கௌதம்.

"ஏன்டா ஆபிஸ்க்கு நீ லீவ் சொல்லிட்ட தானே. அப்புறம் என்ன சும்மா நைநையின்னு பேசாம கிளம்புடா. இன்னைக்கு போனா நாம ஊருல சொந்தக்காரங்க எல்லார் வீட்டுக்கும் ஓரெட்டு போய் பாத்துட்டு வரலாம்.

இப்படி எதாவது நல்ல நாள்னா தான் எல்லாத்தையும் பார்க்க முடியுது.‌
அதுக்கும் எதாவது சொல்லிக்கிட்டு. உன் துணியெல்லாம் எடுத்து வச்சுட்டல்ல. அப்புறம் அத மறந்துட்டேன் இத மறந்துட்டேனு அங்க வந்து புலம்பக் கூடாது பார்த்துக்க" என கௌதமை கிளப்பினார் ரேவதி.

அந்த நேரம் அவன் கைப்பேசி ஒளி எழுப்பியது. சத்யா தான் அழைத்ததிருந்தான். "ஹலோ சொல்லு சத்யா. ஹலோ ஒன்னும் கேக்கல டா. சவுண்டா இருக்கு ஹலோ ஹலோ" என பேசிக் கொண்டு இருக்கும் போதே அவனின் கைப்பேசி கட் ஆகி விட்டது.

கௌதம் மறுபடியும் முயற்சி செய்து பார்த்தான். ஆனால் அழைப்பு போகவில்லை. தன் அன்னை அழைக்கவும் "சரி அப்புறம் ட்ரைப் பண்ணுவோம்" என தன் சட்டையில் போனை வைத்து விட்டு அன்னையுடன் கிளம்பினான் கௌதம்.

நேற்று அன்னையை மருத்துவமனை அழைத்து செல்லும் போது தான் சத்யாவை கௌதம் பார்த்தது. இன்று காணலாம் என்று எண்ணி இருந்தான். ஆனால் அவர் அன்னை இன்று அவனை ஊருக்கு கிளப்பி விட்டார். ஊருக்கு போய் வந்து பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டான்.

ஆனால் அவன் ஊரிலிருந்து வரும் போது அவன் நண்பனை காண முடியாது என அறிந்திருந்தால் இப்பவே சென்றிருப்பானோ. ஒரு வழியாக அன்னையை அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து புறப்பட்டான் சொந்த ஊரை நோக்கி கௌதம்.

அதே நேரம் அங்கு சத்யாவோ தன் உயிரைக் கையில் பிடித்து ஓடிக் கொண்டு இருந்தான். வெகு தூரம் ஓடி வந்ததில் அவன் முழுவதும் வியர்வையில் குளித்திருந்தான். கௌதமிடம் பேசும் பொழுதே அவன் கைப்பேசி உயிரை விட்டிருந்தது.

ஓடி வந்தவன் இப்போது யார் கண்ணிலும் படாமல் ஒரு இடத்தல் மறைந்து நின்றுக் கொண்டான். அப்போதும் அவன் உயிரை பற்றி கவலைப் படவில்லை. தனக்கு தெரிந்த உண்மை உலகிற்கு தெரிய வேண்டும் என எண்ணினான். அவர்கள் எப்படியும் தன்னைப் பிடித்துவிடுவார்கள் என தெரியும்.

ஆனால் அதற்குள் தான் எப்படியாவது கௌதமை தொடர்பு கொண்டு உண்மையை கூற வேண்டும் என எண்ணினான். அல்லது யாரிடமாவது தான் சொல்லும் செய்தியை அவனிடன் சேர்ப்பிக்க வழி செய்ய நினைத்தான்.

அதுவரை அவர்கள் கையில் சிக்கிவிடக் கூடாது என உறுதி கொண்டான். ஏனெனில் கௌதம் நிச்சயமாக அந்த அநியாயக்காரர்களுக்கு தண்டனை கிடைக்க செய்வான்.

தன்னை போல் அவசரப்பட்டு மாட்டிக் கொள்ள மாட்டான். அவனிடம் முன்பே எப்படியேனும் கூறி இருக்க வேண்டும் என காலம் கடந்து எண்ணினான். அப்போது அந்த வழியாக யாரோ வரும் அறவம் கேட்க திரும்பினான்.

வந்த நபரிடம் கௌதமிடம் செல்ல சொல்லி உதவி கேட்டான். முதலில் தயங்கிய அந்த நபர் பின் ஒருவாறு ஒத்துக் கொண்டார். தன் ஐடி கார்டை கொடுத்து தன் நண்பனிடம் உதவி கேட்க சொன்னான்.

"எல்லா டீடெல்ஸ்ம் சேபா வச்சிருக்கேன் அதை எடுக்க சொல்லுங்க. அற்புதம் அது எங்கன்னா" என ஆரம்பிக்கையில் ஆட்கள் அருகில் வரும் சத்தம் கேட்கவே அந்த நபரை அனுப்பி விட்டு எதிர் திசையில் ஓட்டினான் கண்டிப்பாக தன் நண்பன் கண்டுபிடித்து விடுவான் என்ற நம்பிக்கையோடு.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற மீராவிற்கோ கடுப்பாக இருந்தது. ஏனெனில் ஆருத்ரா இன்னும் வரவில்லை. இப்போது தான் வேலை முடிந்து அலுவலகம் விட்டு வீட்டிற்கு கிளம்புவதாய் செய்தி அனுப்பினாள்.

எனவே தான் வரவில்லை என்றும் கூறிவிட்டாள். அதனால் அவளால் அங்கே முழுமனதுடன் இருக்க முடியவில்லை. ஏனோதானோ என்று உணவை கொரித்து விட்டு தோழிகளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அடித்து பிடித்து ஒருவழியாக ஒரு மணி நேரத்தில் வீட்டை வந்து அடைந்தாள் மீரா. தன்னிடம் உள்ள சாவியை கொண்டு உள்ளே வந்த மீரா கண்டது நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த ஆருவை தான்.

"அப்பாடா இவள முழுசா பார்க்கவும் தான் நிம்மதியா இருக்கு. ஆபிஸ்ல வொர்க் அதிகம்ல அதான் டயர்ட்ல தூங்கரா போல" என எண்ணிய மீரா தானும் படுத்து உறங்கி விட்டாள். தூங்கிய மீராவை பார்த்துக் கொண்டே எழுந்த ஆரு தன் கையில் இருந்த ஐடி கார்டை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

-தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 5

வழியில் பெண்ணே விழியை வைத்தேன்,
வழிப்போக்கன் நான் உன் விழியில் விழ;
வீழ்ந்ததென்னவோ என் விழிகளே,

வியப்பூட்டும் உன் பேதை மொழியிலே!

இரு நாட்கள் உறவினர்களின் வீடுகள் கோயில் பங்சன் என கௌதமை சுற்ற வைத்து விட்டார் ரேவதி. ஊர் முழுவதும் சொந்தங்கலாய் போய் விட தெரு தெருவாய் சுற்றினார் ரேவதி.

ஏனெனில் இனி வேறு விஷேசம் என்றால் மட்டுமே ஊர் பக்கம் வர முடியும். அதனால் கிடைத்த நேரத்தை மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டார். இதில் கௌதம் தான் "எம்மா இதுக்கு மேல தாங்காதுடா சாமி" என அலறியே விட்டான்.

இதில் அவன் நண்பன் சத்யாவை பற்றி நினைக்க நேரம் கிட்டவில்லை என்றே சொல்லலாம். ஒருவழியாக ஞாயிறு இரவு தன் தாயை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டான் கௌதம்.

திங்கள் அன்று விடியற்காலை நான்கு மணி போல் வீடு வந்து சேர்ந்தான் தன் அன்னையுடன். நிம்மதியாக அப்போது தான் படுத்து உறங்கினான். சிறிது நேரத்தில் போன் அடித்து விட்டது.

தன் தூக்கம் கலைந்த கடுப்புடன் போனை எடுத்து காதில் வைத்து "ஹலோ" என்றான் கௌதம். அந்த பக்கம் சொல்லப்பட செய்தியில் அவனின் தூக்கம் மொத்தமாய் பறிப்போனது.

"என்ன சார் சொல்றீங்க. எப்போ ஆச்சு" என்று பதறி எழுந்தான். "உடனே கிளம்பி வரேன் சார். எங்க வரணும்" என கேட்டு விட்டு பதட்டத்துடன் கிளம்பி தன் வண்டியின் சாவியை எடுத்து கொண்டான்.

போகும் முன் தங்கள் பத்திரிகையின் எடிட்டருக்கு தொடர்பு கொண்டு தனக்கு வந்த செய்தியை பகிர்ந்து உண்மையானதா என கேட்டான்.

அவர் கூறிய பதிலும் ஒத்து போகவே மனம் முழுவதும் வருத்தத்துடன் கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

தானும் வருவேன் என கூறிய அன்னையிடம் வந்து அழைத்து செல்வதாக சொல்லி விட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான் கௌதம்.

"வணக்கம். நேற்று இரவு போலீசாரின் ரோந்து பணியின் போது சடலம் ஒன்றை கண்டு பிடித்து உள்ளனர். இறந்தவர் ஆண் என தெரிகிறது"

"மேலும் இறந்த நபர் 'தின ஒளி' பத்திரிகையின் நிருபர் சத்யா என தெரிய வந்துள்ளது. ஆள் அரவம் அற்ற பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது."

"அதே நேரம் அவரின் இல்லத்திலும் திருட்டு போய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் சடலம் கிடந்த இடத்தில் அவர் வண்டியும் சிதைந்து கண்டுபிடிக்க பட்டுள்ளது.

இதனால் இது விபத்து என போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது."

காலையில் எழுந்த உடன் வழக்கம் போல் தன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்த ஆருவின் காதில் இந்த செய்தி விழுந்த நிமிடம் முதல் ஒரு வித பயம் சூழ்ந்துக் கொண்டது.

அதற்கு மேல் கேட்க முடியாமல் டீவியை அனைத்து விட்டாள் ஆருத்ரா. அவளுக்கு இனி தான் அலுவலகம் செல்ல முடியும் என்று தோன்றவில்லை. வீட்டிலேயே இருந்து விட்டாள்.

ஏன் என்று கேட்ட தோழிகளிடம் உடல் நலம் சரியில்லை என ஏதே வாய்க்கு வந்த காரணத்தை கூறி அனுப்பி விட்டாள்.

அவளை புரியாத பார்வை பார்த்து சென்ற மீராவையும் அவள் கவனிக்கவில்லை கூடவே சென்ற அனு வினிதாவையும் கண்டுக் கொள்ளவில்லை.

அந்த நாள் இரவு நடந்ததை மனதிற்குள் மீண்டும் நினைத்துப் பார்த்தால் ஆரு. வெள்ளி இரவு வேலை முடியவே நேரம் ஏழை தான்டி விட்டது. அதனால் அலுவலக காரிலே வந்தவள் பக்கத்தில் தான் அபார்ட்மெண்ட் என்று மெய்ன் ரோட்டிலே இறங்கி கொண்டாள்.

ஆருவிற்கு இது போல் இரவின் காற்றில் தனியாக நடப்பது என்றால் மிகவும் இஷ்டம். அதுவும் இந்த தெரு மிகவும் பாதுகாப்பான ஒரு இடம் தான். பத்து நிமிடத்தில் அப்பார்ட்மெண்ட்டும் வந்து விடும்.

இரவு நேரம் அலுவலகம் முடிந்து வந்தால் தோழிகள் நால்வரும் சேர்ந்து நடந்து வருவதும் அவர்கள் வழக்கம். இன்று தோழிகளும் இல்லாததால் இரவின் குளுமையை அனுபவித்தபடி நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் ஆரு.

அந்த நேரம் யாரோ ஓடி வந்து ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவற்றின் ஓரம் மறைந்ததை தூரத்தில் வரும் போதே கண்டு விட்டாள் ஆருத்ரா. திருடனாக இருக்கும் என எண்ணி முதலில் பயம் கொண்டே நெருங்கினாள்.

ஆனால் அவன் பத்திரிகைகாரன் என தன்னை அறிமுகப்படுத்தி தன் ஐடி கார்டை காட்டவும் தான் நம்பினாள். அவன் உதவியென கேட்கவும் மிகவும் தயங்கிய படியே தான் உதவுவதாகவும் வாக்கு கொடுத்தாள்.

இப்போது நினைத்தாலும் அன்று கண்ட அவனின் பதட்டம் சுமந்த முகம் இன்னும் மனதிலே நின்றது. 'நீயாவது எனக்கு உதவுவாயா' என கெஞ்சியது சத்யாவின் பார்வை.

அவள் கொஞ்சமும் எதிர்பாராதது இன்றைய சத்யாவின் இறப்பு செய்தி. அதுவும் விபத்து என்பதை அவளால் ஏற்கவே முடியவில்லை. அவனை அப்போதே பலர் துரத்தி சென்றதை பார்த்து பயந்து வீடு வந்தது அவளுக்கு தெரியும் தானே.

இப்போது அவளுக்கு முன்பு இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கங்களும் சத்யாவின் இறப்பு செய்தியை கேட்ட பின் துணிக் கொண்டு துடைத்து சென்று விட்டது எனலாம்.

இரண்டு நாட்களும் எப்படி தோழிகளுக்கு தெரியாது அந்த கௌதமை போய் காண்பது என தயங்கியபடி தான் இருந்தாள். இப்போது நேரே போய் பார்க்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டாள் ஆருத்ரா.

"என்ன சார் ஆச்சு. என் சத்யா எங்க சார்" என பதட்டத்துடன் அங்கே இருந்த போலீசாரிடம் கேட்டான் சத்யா.

"நீங்க யாரு. பர்ஸ்ட் அத சொல்லுங்க" என்றார் அந்த காவல் அதிகாரி அதிகாரமாய். "சார் நான் கௌதம் சத்யாவோட ஃபிரண்ட்" என்றான்.

"ஓ நீங்க தானா அது. இறந்தது உங்க ஃபிரண்ட் தானா அப்படினு நீங்க பர்ஸ்ட் கன்பார்ம் பண்ணுங்க சார். அவர்தானு தெரியும் இருந்தாலும் பார்மாலிட்டினு ஒன்னு இருக்கு அதுக்காக தான்.

அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் இங்க இல்லை. அதனால நீங்க ஐடென்டிபை பண்ணுங்க. சீக்கிரம் சார். டிவி காரங்க வேற வந்துட்டாங்க" என்றுவிட்டு

"ஏட்டு அவரை கூட்டிட்டு போய் பாடிய காட்டுங்க சீக்கிரம்" என அவர் வேலையை முடிக்கும் எண்ணத்தில் அவசரப்படுத்தினார் அந்த காவல் அதிகாரி.

அந்த மார்ச்சுவரியை அடையும் போதே அவனின் நெஞ்சம் எல்லாம் அடித்துக் கொண்டது. அது தன் நண்பனாக இருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டே சென்றான்.

ஆனால் அந்த கடவுள் அவனின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை போல். அங்கு இருந்த உடல் அவன் நண்பன் சத்யாவுடையது தான்.

இத்தனை ஆண்டுகள் தன் உடன் சிரித்து சண்டையிட்டு கிண்டல் பேசிய நண்பன் தன்முன் உயிரற்ற உடலாக கிடப்பதை கண்டு நின்ற கண்ணீர் ஆறாக பெருகியது.

அடையாளம் காட்டிய பிறகு இடிந்து போய் அமர்ந்து விட்டான் கௌதம். அவன் மனதில் ஒன்றும் ஓடவில்லை. மீண்டும் மீண்டும் நண்பனின் நினைவே அவனை வருந்த செய்தது.

அப்படியே அமர்ந்து இருந்தவனின் சிந்தையை கலைக்கவென அழைத்தான் வார்டு பாய். ஆக்சிடென்ட் ஆனதாலே இறந்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னது.

அவன் வந்ததிலிருந்து இப்போது வரை அவனின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்த அந்த காவல் அதிகாரி அதை அப்படியே யாரிடமோ பகிர்ந்து கொண்டிருந்தார்.

கௌதம் இருந்த மன நிலையில் இங்கு நடந்த எதையும் அவன் சிறிதும் கவனிக்கவில்லை. தன் நண்பனின் நினைவிலே மூழ்கி இருந்து விட்டான்.

கொஞ்சம் கவனித்து இருந்தால் அவன் தெரிந்துக் கொண்டு இருப்பான் இது விபத்து இல்லையென. ஏதோ சதி வலை தன் நண்பனை சூழ்ந்து அழித்தது என கண்டு இருப்பான்.

பின் எல்லா நடைமுறைகளையும் முடித்த உடன் சத்யாவின் உடல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அவனின் பெற்றோர் உடன் பணிபுரிவோர் என அனைவரும் வந்து விட்டனர்.

சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து சத்யாவின் உடலுக்கும் நெருப்பு மூட்டப்பட்டது. தன் முன்னே சாம்பலாகும் நண்பனை வேதனையோடு பார்த்தான் கௌதம்.

தன் மகனின் சடலத்தை கண்டு துடிதுடித்து நெஞ்சில் அடித்து கதறி அழுத அவனின் அன்னை தந்தை, இனிமேல் என்ன இருக்கு என வாழ்க்கையை வெறுத்தது போல் சென்றது கௌதமின் மனதில் வந்து வந்து சென்றது.

"நீ கூட இருந்தும் இப்படி சாக விட்டுடியே பா" என்று அவன் அன்னை தன்னிடம் கேட்டது என மாற்றி மாற்றி நண்பனின் எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து இருந்தது.

"கௌதம் கண்ணா வந்து ஒரு வாய் சாப்டுயா" என தன் அறையின் சுவற்றை வெறித்து பார்த்திருந்த கௌதமை அழைத்தார் ரேவதி.

அமைதியாக இருந்த கௌதமை "எனக்கும் கஷ்டமா தான் கண்ணா இருக்கு. உன்னை மாதிரியே அவனையும் என் புள்ளையா தான்டா பார்த்தேன்"

"அவனும் அம்மா அம்மானு தான் சுத்திட்டு இருப்பான். அதுக்காக இப்படி சாப்பிடாம கொள்ளாம இருக்கலாமாபா. வாப்பா ராஜா" என கண்ணீரோடு அழைத்தார்.

"முடியலமா நான் இருந்தும் அவனை சாக விட்டுட்டேன் மா. கடைசியா அவன் என்னை தான் தேடி இருப்பான் மா. அவனை விட்டுட்டேன் மா. போய்ட்டான் மொத்தமா போய்ட்டான் மா" என குழந்தையாக அன்னையின் மடியில் படுத்து ஆறுதல் தேடினான்.

தன் மகனின் வேதனை அறிந்து மடி தாங்கினார் ரேவதி. அவன் தலையை கோதிக் கொண்டே ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தூங்க ஆரம்பித்த மகனின் தலையை கட்டிலில் கிடத்தினார்.

இப்போது ஆறுதலுடன் நல்ல தூக்கம் அவசியம் என்பதை உணர்ந்த ரேவதி கௌதமை தூங்க விட்டு போர்வை போர்த்தி அறையை மூடி சென்று விட்டார்.

மூன்று நாட்கள் கழித்தும் வீட்டில் சோகமே உருவாய் இருந்த மகனை ரேவதி கட்டாயப்படுத்தி இன்று அலுவலகம் கிளப்பினார். அங்கேனும் மகன் வேறு சிந்தனைக்கு மனதை செலுத்துவான் என.

ஆனால் அலுவலகம் செல்லும் மகனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருப்பதை அறியாமல் விட்டார். அதை கொண்டே அவன் தன் நண்பனிற்கு நியாயம் செய்யப் போவதையும் அறிய மாட்டார்.

அந்த அதிர்ச்சி அவனுக்கு ஒருவிதத்தில் இனிய அதிர்ச்சியாக அமைய போவதே அங்கு ஆச்சரியம்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் -6

வெற்றிடமாய் இருந்த என்னை,
விரும்பியே நிரப்பினாய் நீ;
விரல்கள் உன் கரம் சேர துடித்திடுதே,

விடிவு என்று கிடைத்திடுமோ?

"என்னம்மா இப்படி பண்ற. உனக்கு நான் சொன்னது புரியுது தானே. மூனு நாளா நீயும் வந்து வந்து போற. ஆனால் கௌதம் சார் வரலையே.

இங்க இருக்கவங்களுக்கு அவங்க வேலை பார்க்கவே நேரம் இல்லை. இதுல நீ வேற போமா. உனக்கு தான் கௌதம் சாரை தெரியும்னு சொல்ற.

அப்புறம் என்ன. போய் போன் பண்ணி கேட்டுட்டு வாமா. சும்மா இங்கையே நின்னா உனக்கு தான் கால் வலிக்கும். ஆனால் ஒருத்தனும் ஏன்னு கூட கேக்க மாட்டான்" என தின ஒளி பத்திரிகையின் கேட் காவலாளி கூறிக் கொண்டு இருந்தார்.

ஏனெனில் ஆரு மூன்று நாட்களாக கௌதமை காண பத்திரிகை அலுவலகம் வந்து செல்கிறாள். அவளின் நேரம் கௌதம் மூன்று நாட்களும் வரவில்லை.

எப்படியாவது அவனை கண்டு தனக்கு தெரிந்தவற்றை தெரியப்படுத்த எண்ணி அவளும் முயற்சி செய்கிறாள். விடை என்னவோ பூஜ்யம் தான்.

"சார் பிளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு போறேன். உங்கள நான் எதுவும் தொந்தரவு செய்யாம, ஒரு ஓரமாக தானே நிக்கிறேன்.

நீங்க கௌதம் சார் வந்தா மட்டும் சொல்லுங்க" என்று விட்டு மரத்தடியில் போய் அமர்ந்து கொண்டாள்.

மூன்று நாட்களாக அலைந்தது ஒரு சலிப்பை கொடுத்தது தான். அதுவும் அவள் தன் தோழிகளை சமாளித்து இங்கே வருவதற்கு பட்டபாடு அவளுக்கு தானே தெரியும்.

அப்படி கஷ்டப்பட்டு வந்தால் இங்கே அந்த கௌதம் வரவில்லை என்ற செய்தி அவளை களைப்பு அடைய செய்தது. அவனை மனதில் நன்கு திட்டிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

ஆனாலும் கடைசியாக அவள் கண்ட சத்யாவின் முகமே அவளை பொருத்துப் போக சொன்னது. அதுவே அவள் இப்படி திரும்பி திரும்பி வர செய்தது.

அவள் பொருமை பறக்கும் நேரம் வந்து சேர்ந்தான் கௌதம். "கௌதம் சார் வந்துட்டார் மா. போ போய் சீக்கிரம் பேசு. உள்ள போய்ர போறாரு" என்ற காவலாளியின் குரலில் கௌதமை அடையாளம் கண்டு கொண்டாள் ஆருத்ரா.

அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் அவனின் அந்த சோர்ந்த தோற்றம் கண்டு வெகுவாக குறைத்து விட்டது. அவன் உள்ளே போவதற்குள் பிடித்து விட வேகமாய் ஓடினாள் ஆரு.

"ஹலோ மிஸ்டர் கௌதம் கௌதம்" என அழைத்து வேகமாக நெருங்கினாள் ஆரு‌. தன்னை யாரோ அழைப்பதை கேட்டு அசூகையாய் திரும்பினான் கௌதம்.

அங்கே ஆருத்ராவை சிறிதும் எதிர்பாரத கௌதம், அதுவும் அவள் தன்னை அழைத்ததை கண்டு "ருத்ரா" என்றான் ஆச்சரியம் நிரம்பிய குரலில்.

இவ்வளவு நேரம் இவர்களையே பார்த்திருந்த கேட் காவலர் கௌதம் ஆருவை தெரிந்தது போல் அவளின் பேரை சொல்லவும் தான் அவர் தன் தலையை திருப்பினார்.

தன் பேரை சரியாக சொன்ன கௌதமை அதிர்ந்து பார்த்த ஆரு தனியாக சென்று பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள். ஏனெனில் சுத்தி இருந்த அனைவரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

"கௌதம்?" என மெதுவாக இழுத்தாள் சந்தேகமாக. அதற்குள் சுதாரித்து கொண்ட கௌதம் "ம்ம் சொல்லுங்க நான்தான். என்ன வேனும்" என்றான்.

இது வரை வந்த ஆருவிற்கு கௌதமிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்கவென தெரியவில்லை. அதற்கு சுற்றி இருந்தவர்களும் ஒரு காரணம்.

அனைவரும் தங்களை தான் பார்க்கிறார்களா இல்லை தனக்கு தான் அப்படி தோன்றுகிறதா என புரியவில்லை ஆருவிற்கு. எனவே "வெளியே போய் பேசலாமா.

இங்க பக்கத்தில ஏதாவது காஃபி ஷாப் இருந்தா பிளீஸ்" என்றாள் தயக்கமாக. திடீரென வந்து வெளியே கூப்பிட்டால் தவறாக எண்ணிவிடுவானோ என்று வேறு பயமாக இருந்தது.

அதுவும் இந்த கௌதம் எப்படிப்பட்டவன் என இதுவரை தெரியவும் இல்லை. உள்ளே பயத்தை கொண்டே தான் பேசினாள்.

அவளின் சங்கடம் புரிந்தார் போல் கௌதம் அவளை பக்கத்தில் உள்ள காஃபி ஷாப்பிற்கு அழைத்து சென்றான்.

அவனுக்கு ஆச்சர்யம் ஒருபுறம் என்றால் எதற்கு தன்னை காண இவ்வளவு தூரம் வந்துள்ளாள் என்ற கேள்வியே மிகுந்து இருந்தது.

இருவரும் அமைதியாக இருந்தனர். "சொல்லுங்க என்னை என்ன‌ விஷயமா பார்க்க வந்திருக்கீங்க" என்றான் கௌதம் அமைதியை கிழிக்கும் விதமாய்.

"நான் ஆருத்ரா" என்று விட்டு "வந்து அது.." என இழுத்து "இதப் பாருங்க" என தன்னிடம் இருந்த சத்யாவின் ஐடி கார்டை நீட்டினாள் ஆரு‌. ஆரு கொடுத்ததை என்னவென்று வாங்கி பார்த்தான்.

அது தன் நண்பனின் ஐடி கார்டு என்பதை அறிந்த கௌதமின் முகம் பல உணர்வுகளை காட்டியது. ஆருவை பார்த்ததில் திசை திருப்பிய அவனின் நினைவுகள்,

தன் நண்பனின் ஐடி கார்டை பார்த்ததும் வேதனை அடைந்தது. சிறிது நேரம் அவனின் அமைதியை பார்த்திருந்தவள் மெல்ல கௌதமை அழைத்தாள்.

"கௌதம் சார்" என்றவுடன் ஆருவை ஏறிட்ட கௌதமின் மனதில் அப்போது தான் பல சந்தேகங்கள் முளைத்தது. அதன் பயனாக ஆருவை நோக்கி கேள்வி கணைகளை வீசினான்.

"இது எப்படி உங்ககிட்ட வந்துச்சு ரு" என ஆரம்பித்து "ஆருத்ரா" என முடித்தான். அவன் தடுமாறியதை கவனியாத ஆரு முதலில் சுற்றி உள்ளவர்களை பார்த்து மெல்ல சொல்ல ஆரம்பித்தாள்.

"உங்க ஃபிரண்ட் தான் இத என்கிட்ட தந்து உங்கள வந்து மீட் பண்ண சொன்னார். அவர் ஏதோ பிராப்ளம்ல இருந்த மாதிரி தான் இருந்தாரு. அவரை கொஞ்ச பேர் துரத்திட்டு வேற வந்தாங்க" என்று அவள் அன்று நடந்தவற்றை கூற தொடங்கினான்.

அனைத்தையும் கேட்ட கௌதமிற்கு இரண்டு நாட்களாக அவனுள் எழுந்த சந்தேகம் அப்போது ஊர்ஜிதம் ஆனது. சத்யா இறந்த சோகத்தில் முதல் நாள் அவன் சரியாக எதையும் யோசிக்கவில்லை.

ஆனால் அடுத்த நாளே அவன் சிந்திக்க தொடங்கி விட்டான். எதற்கு தன் நண்பன் வீட்டை விட்டு அவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்று.

அதுவும் இல்லாமல் அவன் சிறிது நாட்களாகவே சரியில்லாது தானே இருந்தான். தான் அப்போதே கேட்டிருக்க வேண்டுமோ என பலவாறு யோசனை செய்து கொண்டு தான் இருந்தான்.

இப்போது ஆருத்ரா கூறிய அனைத்தையும் கேட்ட பின் தன் நண்பனின் இறப்பு ஒரு விபத்து இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டான்.

அவன் புருவம் நெறித்து யோசிப்பதை பார்த்த ஆரு "கௌதம் அன்னைக்கு உங்க ஃபிரண்ட் திரும்ப திரும்ப சொன்னது என்னன்னா. அது உங்கள பார்க்க சொன்னது தான்.

நீங்க எல்லாத்தையும் நிச்சயம் சால்வ் பண்ணுவீங்க அப்டின்னு நம்பிக்கையா சொன்னாரு‌.

கடைசியாக அவர் முகம் அந்த பதட்டத்திலையும் நான் உங்களை பார்க்கறேன் அப்படினு சொன்னதுல அப்படியொரு நிம்மதி அடைஞ்சுது" என்றாள்.

"ஆனால் டூ டேஸ்க்கு அப்புறம் அவர் டெத் நியூஸ் எனக்கு ரொம்ப ஷாக். அதுக்கு அடுத்த நாள்ள இருந்து மூனு நாளா உங்கள பார்க்க தினமும் காலைல வரேன். பட் நீங்க‌ இன்னைக்கு தான் வந்தீங்க" என்று முடித்தாள்.

அனைத்தையும் கேட்ட கௌதமிற்கு தான் எப்படி உணர்கிறோம் என்று தெரியவில்லை. தன் நண்பன் தன் மீது இந்த அளவு நம்பிக்கை வைத்ததற்கு தான் எதுவும் செய்யலாம் என்று தோணியது.

"ரெம்ப தேங்க்ஸ் ஆருத்ரா. நீங்க செஞ்சது யாரும் செய்ய யோசிப்பாங்க. இங்க வந்து சொல்லனும்னு உங்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

அந்த ஐடி ய அங்கையே தூக்கி எறிந்திட்டு போய் இருக்கலாம். ஆனா நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு என்கிட்ட வந்து இத சொல்லி இருக்கீங்க" என்றான் நெகிழ்ச்சியாக.

"அதை விடுங்க. முதல்ல என்ன செய்ய போறீங்க அதை சொல்லுங்க. ஏனா உங்க ஃபிரண்ட் சத்யா யாருக்கோ தண்டனை வாங்கித் தரனும் அப்டின்னு சொன்னாரு‌" என்றாள் கேள்வியாக.

"அதை இனிமேல் தான் யோசிக்கனும் ருத்ரா. ஆ உங்களை அப்படி கூப்பிடலாம்ல" என்றான் கேள்வியாக.

"அது பிராப்ளம் இல்லை கௌதம். நீங்க அப்படியே கூப்டுங்க" என்றுவிட்டு "முதல்ல உங்க ஃபிரண்ட் வீட்டுக்கு போய் பாருங்க. ஏனா அங்க திருட்டு நடந்ததா சொன்னாங்க. எதாவது க்ளூ கிடைக்கலாம்" என்ற ஆருவை பார்த்து கௌதம்,

"நீங்க சொல்றதுலாம் சரிதான். இனிமே நான் பாத்துக்கிறேன். நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி" என்றான். "இல்லை நானும் உங்களுக்கு ஹெல்ப் செய்யலாம்னு பாத்தேன் அதான்" என்று இழுத்தாள் ஆரு.

அவளை பார்த்த கௌதம் "இதை நான் பார்த்துப்பேன். நீங்க உங்க வேலையை பாருங்க. வீனா பிரச்சினைல வந்து விழாதீங்க" என்றான்.

"உங்ககிட்ட சொல்ல முடியலைனா நானே எப்படியாவது கண்டு பிடிக்க டிரை பண்ணனும்னு இருந்தேன். உங்க ஃபிரண்ட் சொன்னதுக்காக தான் வந்தேன்.

உங்களுக்கு நானும் கூட வந்து ஹெல்ப் பண்றேன். சத்யாவ கடைசியா வெள்ளிக்கிழமை பார்த்தேன். ஆனால் அவரோட டெத் மண்டே.

ஒரு வேளை முன்னாடியே உங்கள கான்டாக்ட் செஞ்சிருந்தா அவரை காப்பாற்றி இருக்கலாம்னு எனக்கு கில்டியா இருக்கு. அட்லீஸ்ட் அவர் டெத்கு காரணம் யார் அப்டின்னு கண்டுபிடிக்கயாவது நான் ஹெல்ப் செய்றேனே" என்றாள்.

இவ்வளவு நேரம் அவள் மேல் தோன்றிய நன்றி உணர்ச்சி இப்போது மதிப்பாக மாறியது. "உங்களோட பீளிங்ஸ் எனக்கு புரியுது.ஆனா இது எவ்ளோ பெரிய பிரச்சினை அப்டின்னு நமக்கு தெரியாது.

ஒரு உயிரே போயிருச்சு. யாராலயாவது உங்களுக்கு பிரச்சினை வந்தாலும் வரலாம். சோ இங்க வந்து நீங்க சொன்னதே பெரிய ஹெல்ப். அதுவே போதும்.

நீங்க தேவையில்லாத பிராப்ளம்லாம் இதுல பேஸ் பண்ணனும். அதனால விட்ருங்க நான் பாத்துக்கிறேன்" என்றான் கௌதம். ஆருவும் எல்லாவற்றையும் கேட்ட பின் அமைதியாக கிளம்பி விட்டாள்.

அவள் சென்ற பின் அவளுக்கு இதுதான் நல்லது என எண்ணினான் கௌதம். அவள் எந்த பிரச்சனையிலும் சிக்கக் கூடாது என எண்ணினான். ஆனால் அது ஏன் என யோசிக்க தவறினான்.

யோசித்து இருந்தால் அவன் தன் மனதை அறிந்து இருப்பான். அதற்கு முன் அவன் நண்பனே அவனின் சிந்தையை நிறைத்தான்.

அதன் பின் அன்று இரவு போலீஸ் பாதுகாப்பை மீறி எப்படி சத்யாவின் வீட்டிற்கு செல்வது என திட்டமிட ஆரம்பித்தான். ஆனால் அங்கேயும் வந்து நின்ற ஆருவை கண்ட கௌதமின் நிலை தான் நிலை தவறி சென்றது.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் -7

வண்ணமயிலாக நீ வந்தாய் பெண்னே,
நான் நிலை இழந்த தோகை ஆனேன்;
வசந்தம் வீச நீ வந்தாய் முன்னே,

நான் வானில் சிறகாய் விரிந்தேன்‌ பின்னே!

ஆருத்ரா சென்ற பின்னர் அங்கேயே அமர்ந்து விட்டான் கௌதம். அடுத்து என்ன செய்வது என அவன் மூளை நிதானமாக கணக்கைப் போட்டுக் கொண்டு இருந்தது.

கௌதமின் பெரிய பலம் அவனின் நிதானம் என்று சொல்லலாம். ஆனால் சத்யாவோ வேகத்தை தத்தெடுத்தான். அதுவே அவனை இந்த நிலைக்கு தள்ளியது.

இரண்டு மணி நேரம் யோசனையின் பிறகே அலுவலகம் வந்து சேர்ந்தான் கௌதம். பக்கத்து இருக்கையை பார்த்த கௌதமின் விழிகள் கலங்கி விட்டது.

அதை காண காண அவனின் மனதில் உறுதி அதிகமாக ஏறியது. தன் நண்பனின் இறப்பின் ரகசியத்தை கண்டு பிடித்து, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அவனின் மனது சித்தம் கொண்டது.

இப்போது தன் இருக்கையின் புறம் திரும்பி அமர்ந்து தன் பணியை காண முயன்றான். ஆம் முயற்சி மட்டுமே செய்தான்.

ஆனால் அவனின் மனதின் உள்ளே பல்வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டு இருந்தது. அதை முழுவதும் ஆக்கிரமித்தது சத்யா அன்றி வேறு இலர்.

மாலை அலுவலகம் முடிந்து ஒரு வித தெளிவுடன் வந்த மகனை கண்ட அன்னை ரேவதியின் மனதிற்குள் சற்று நிம்மதி.

ஆனால் அது எதனால் வந்த தெளிவு என்று தெரிந்திருந்தால், தன் மகன் தன்னோடு சேர்த்து ஒரு பெண்ணுடன் சென்று விழப் போகும் ஆபத்தை தடுக்க முயன்றிருப்பாரோ?

ஆனால் கௌதமின் தற்போதைய நிலையில் யாரின் சொல்லும் அவனின் காதை சென்று அடைய வாய்ப்பில்லை என்பது வேறு விஷயம்.

"கௌதம் கண்ணா சாப்பிடலாமா பா" என்றார் ரேவதி பரிவோடு. ஏனெனில் மூன்று நாட்களாக அவனை சாப்பிட வைக்க திணறி விட்டார் ரேவதி. எனவே அவன் மனநிலை அறிய வேண்டியே கேட்டார்.

தன் அன்னை சொன்னவுடன் அமைதியாக வந்து அமர்ந்த கௌதமை கண்டு, தன் மகன் ஓரளவு தெளிந்து விட்டதாக எண்ணினார் ரேவதி.

தான் உண்டு பின் தன்னுடைய அன்னை உண்டபின் அவர் படுக்கையில் படுத்து உறங்கிய பின் தன் திட்டத்தின் முதல் காயை நகர்த்த முடிவு செய்தான்.

ரேவதி மாத்திரை எடுத்து உறங்கி விட்டார் என்றால் விடிந்த பின்னே தான் எழுவார். எனவே அவர் உறங்கிய உடன் தன் வேலையில் இறங்க முடிவு செய்தான்.

நள்ளிரவு நேரம் அந்த கட்டிடம் முழுக்க ஒரு சிறுவனின் வலிமிகுந்த அழுகுரல் வெகு அதிகமாக ஒலித்தது. அதை சிறிதும் பொருட்படுத்தாது அந்த சிறுவனை போட்டு அடித்துக் கொண்டு இருந்தான் ஒருவன்.

"எவ்ளோ தைரியம் இருந்தா அந்த காரு காரன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி உன்னை காப்பாத்த சொல்லிருப்ப. இனிமே செய்வியா செய்வியா" என அந்த சிறுவனை இன்னும் அடித்தான் அவன்.

"டேய் குமாரு விடுடா‌. நீ அடிக்கிறதுல அவன் செத்துரப் கித்தரப் போறான். அப்புறம் பாஸ் உன்னையே கொன்னு பொதச்சிட்டு போய்ருவாறு. பாத்துக்க" என்றான் உடன் இருந்த மணி.

"அதுக்குன்னு இப்பிடியே விட்டா இவன் மறுபடியும் வேற யார்கிட்டயாவது சொல்லிடானா என்ன பண்ணுறது. அப்பவும் பாஸ் நம்மல தான் கொன்னு போடுவாறு. ஞாபகம் இருக்குல்ல" என்றான் அந்த குமார்.

"நீ சொல்றதும் சரி தான்டா. இந்த குட்டி சாத்தான அடிச்சது போதும். போய் அடச்சுப் போடு. இவ்ளோ அடி வாங்கி இருக்கான். இதுக்கு மேல எங்கையும் தப்பிக்க மாட்டானு நினைக்கிறேன்" என்று விட்டு அந்த சிறுவனிடம் திரும்பி

"இங்க பாரு தம்பி இப்ப மாதிரி மறுபடியும் தப்பிக்க பாத்த இந்த மாதிரி அடிச்சிட்டு விடமாட்டோம். தலையை திருகிப் போட்டு போய்க்கிட்டே இருப்போம். நியாபகம் வச்சுக்க"

என சிறு குழந்தை என்றும் பாராமல் இழுத்து சென்று பக்கத்து அறையில் இருந்த மற்றவர்களோடு தள்ளி விட்டு தங்கள் வேலையை பார்க்க சென்றனர்.

அவன் உள்ளே வந்தவுடன் "சித்து நீ தப்பிச்சு வெளிய போனியே யாரையாவது பாத்தியா? ஹெல்ப் பண்றேனு சொன்னாங்களா" என்றான் உடன் இருந்த நண்பன்.

உடன் இருந்த சிறுவர்கள் எல்லோரும் சுற்றி நின்று அவனையே ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். அனைவரையும் பார்த்தவன் தன் நண்பனிடம்

"இல்லை டா. ஒரு கார் வந்துச்சு ஹெல்ப் கேக்கலாம்னு போனேன். நான் எல்லாம் சொல்லி நம்மல காப்பாத்த சொன்னேன்.

அப்ப அந்த ஆளு வந்து நான் ஒரு லூசு. வீட்ல இருந்து தப்பிச்சு வந்துட்டேனு சொல்லி என்னை தூக்கிட்டு வந்துட்டான் டா.

இங்க வந்து என்னை போட்டு அடி வெளுத்துட்டாங்க. உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்குது டா" என்றான் வலி தாங்க முடியாத அழும் குரலில்.

"நீ அன்னைக்கு யாருக்கும் தெரியாம போய் ஒரு அண்ணன் கிட்ட ஹெல்ப் கேட்டியே. அந்த அண்ணன இன்னைக்கு எங்கையாவது பாத்தியா டா" என்றான் ஆதங்கமாய்.

"இல்லை டா நானும் போறப்ப நல்லா சுத்தி பாத்தேன். ஆனா அவர காணோம். ஆனா அவர் நமக்கு கண்டிப்பா எதாவது உதவி செய்வேனு சொன்னாரு டா" என்றான் முகத்தில் ஓடிய கவலையுடன்.

பின் அவனே "கவலைப் படாதீங்க. நான் எப்படியாவது மறுபடியும் தப்பிச்சு வேற யாரையாவது ஹெல்ப் பண்ண கூப்பிடுறேன்" என்ற‌ சித்து தன் காயம் சரியானதும் மீண்டும் வெளியேற முடிவு செய்தான்.

உலகம் அறியா சிறு பாலகர்கள் வெளி உலகை இன்னும் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்றும் முழுவதும் தெரியவும் இல்லை.

தங்களுக்கு என்றாவது விடியல் வந்து விடாதா என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக, ஏக்கம் சுமந்த விழிகளுடன் உள்ளே இருந்த அனைவரும் தங்களுக்குள் ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.

கண்டிப்பாக தங்களுக்கு யாரேனும் உதவ அனுப்பி வை கடவுளே என என்றும் போல் இன்றும் கடவுளிடம் வேண்டுதல் வைத்து விட்டு படுத்தனர்.

தன் அன்னையின் அறையை பார்த்து அவர் உறங்கியதை உறுதிப் படுத்தி அந்த நள்ளிரவு நேரம் வீட்டை விட்டு கிளம்பினான் கௌதம் சத்யாவின் இல்லம் நோக்கி.

அது ஒரு தனி வீடு. மாடியும் மற்றும் கீழேயும் என இரண்டு மாடி வீடுகளை கொண்டது. அதில் சத்யாவின் வீடு மாடியில். கீழே யாரும் குடியிருக்கவில்லை.

அந்த வீட்டிற்கு காவலுக்கு இரண்டு காண்ஸ்டபுகள் கேட்டின் உள்ளேயே பேசிக் கொண்டு அமர்ந்து இருந்தனர். அந்த நேரம் வந்த கௌதம் தன் வண்டியை யார்‌ கண்ணிலும் படாதவாறு நிறுத்தினான்.

சிறிது நேரம் அவர்களை பார்த்த கௌதம், பக்கத்து வீடுகளில் சிசிடிவி கேமரா எதுவும் இருக்கிறதா என முதலில் பார்த்துக் கொண்டான்.

முன் எச்சரிக்கையாக அவன் முகத்தில் ஸ்கார்ப்பை காட்டியே வந்திருந்தான். வீட்டை சுற்றி வந்த கௌதம் வீட்டின் பின்புறம் உள்ள சுவற்றில் ஏறி தான்டி குதித்து உள்ளே வந்தான் யாரும் அறியாமல்.

மாடியிலே வீடு என்பதால் பின்புறம் உள்ள பைப்புகளை பிடித்து, தாவி தாவி மேலே வந்து ஒரு வழியாக பால்கனியில் குதித்தான்.

பால்கனியில் உள்ள கதவில் தான் கொண்டு வந்த ஸ்பேர் சாவிகளை வைத்து கதவை திறந்து உள்ளே சென்றான். தன் கொண்டு வந்திருந்த லைட்டை ஆன் செய்தான்.

அந்த வீடு தன் நண்பனுடன் தான் கழித்த இனிய நினைவுகளை சுமந்து கொண்டு அலங்கோலமாக காட்சி அளித்தது. ஆம் போலீஸ் திருட்டு நடந்ததாக கூறப்பட்டது போல் வீடே கலைந்து கிடந்தது.

தன் நண்பன் இருந்தால் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்து இருப்பான். ஒவ்வொன்றிலும் அவ்வளவு நேர்த்தி இருக்கும். தான் தரையில் குப்பை போட்டாலும் எடுத்து குப்பை கூடையில் போட்டு விடுவான்.

இப்போது வீடு இருக்கும் நிலையை காண்கையில் மனது வலித்தது. சிறிது நேரத்திற்கு பிறகு தன் எண்ணங்களுக்கு தடை விதித்து ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என தேட துவங்கினான் கௌதம்.

அது ஒரு சிறிய வீடு. ஒரு வரவேற்பறை கடைசியில் சிறு பால்கனி, சமயலறை மற்றும் படுக்கையறை. முதலில் வரவேற்பறையில் சோதனை செய்தான்.

கையில் கிளவுஸை மாட்டிக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து நிதானமாக பார்த்தான். தினசரி நாளிதழ்கள், அவன் படித்திருந்த புத்தகங்கள் என அனைத்தும் சிதறி கிடந்தது.

சத்யா புத்தகப் புழு என்றே கூறலாம் அவ்வளவு புத்தகங்கள் படிப்பவன். ஆருத்ராவை முதல் நாள் கண்ட போது அவளின் ரசனைகளின் மூலம் தன் நண்பனையே நினைவு கூர்ந்தாள்.

அதுவே அவளை அவன் நெஞ்சில் நன்கு பதிய வைத்தது. தன் நண்பனை பற்றி எண்ணிக் கொண்டே அனைத்தையும் பார்த்து முடித்தான்.

அங்கு சந்தேகிக்கும் படி வேறு வித்தியாசமாக எதுவும் இல்லை. கீழே அமர்ந்த போலீஸிர்க்கு மேலே ஆள் நடமாட்டம் தெரிந்தது. உடனே மேலே சென்று பார்க்க எழுந்தனர்.

மேலேயோ வரவேற்பறை சமையலறை என தொடர்ந்து படுக்கையறையை அடைந்தான் கௌதம். இங்கு வந்ததில் இருந்தே அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.

இதில் உள்ளே இருந்த இன்னொரு நபரை அவன் கவணிக்க தவறினான். அந்த நபர் வந்ததில் இருந்து இவனின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அவனை கண்டது முதல் அவனின் மனநிலையை ஊகித்து இருந்தார் வந்தவர். அப்போது இவன் படுக்கையறை உள்ளே நுழைந்த சமயம் போலீஸார் வீட்டை திறந்தனர். இதை கௌதம் கவனிக்கவில்லை.

ஆனால் கவனித்த மற்ற நபரோ வேகமாக கௌதமின் அருகே சென்று அவனின் கையில் ஏந்திய டார்ச்சை பிடிங்கி அனைத்து விட்டு, அவனை இழுத்து சென்று கட்டிலின் அடியில் தள்ளி தானும் ஒளிந்து கொண்டார்.

உள்ளே வந்த போலீசாரோ வீடு முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு யாரும் இல்லையென உறுதி செய்து பின்னரே சென்றனர். அவர்கள் சென்றதும் தான் பிடித்திருந்த கௌதமின் கையை எடுத்தார் புதியவர்.

அவர்கள் சென்ற பின்னர் தான் இருவரும் வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் நடந்த நிகழ்வுகளை இவ்வளவு நேரம் உணராத கௌதம் இப்போது தான் உணர்ந்தான்.

கொஞ்சம் தாமதம் ஆகி இருந்தாலும் போலீஸ் அவனை கண்டிருப்பார்கள். தன்னுடைய அஜாக்கிரதையை எண்ணி நொந்த கௌதம்,

தக்க சமயத்தில் தனக்கு உதவி புரிந்த நபரிடம் நன்றி கூற எண்ணி நிமிர்ந்து பார்த்தான். அப்போது தன் முன்னே இருந்த நபரை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் கௌதம்.

-தொடரும்
 
Top