All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "துளி துளி தூறலாய்...!" கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 8

ஆர்ப்பரிக்கும் அலைக் கடலும் பெண்ணே,
அழகாய் அடங்கிடுதே உன் முன்னே;
ஆதுரமாய் சிரித்தாய் கண்ணே,
அலையில் கிடந்தேன் கரையேறாமல் தன்னே!


போலீசார் போன பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கௌதம் தற்போது தன் அருகில் இருந்த உருவத்தை கண்டான். இருளிர்க்கு பார்வை சற்று மெல்ல பழகியது.

அங்கே தலையில் முக்காடு இட்டிருந்த அந்த உருவத்தை பார்த்த உடன் கண்டு கொண்டான் கௌதம் அது யாரென்று. அங்கே ஆருத்ராவை பார்த்தவுடன் கோபத்தில் பல்லை கடித்தான் கௌதம்.

"நீ எதுக்கு இங்க வந்த. உன்னை தான் எதுலையும் தலையிட வேண்டாம்னு சொன்னேன்ல. அப்படி இருந்தும் அன்டைம்ல வந்திருக்க.

உனக்கு ஏதாவது பிரச்சினை வந்திருந்தா என்ன பண்ணுவ. இல்ல போலீஸ் கிட்ட மாட்டியிருந்தனா" என்றான் கோபத்தில் மரியாதை எல்லாம் விட்டவனாக.

"ஸ்ஸ்ஸ்" என வாயில் கை வைத்து காட்டி "மெல்ல பேசுங்க வெளிய கேக்க போகுது. நம்ம வெளியே போன அப்புறம் எல்லாம் பேசிக்கலாம். இப்ப வாங்க இந்த வீட்ல எதாவது க்ளூ கிடைக்கிதானு பார்க்கலாம்" என்றாள் ஆருத்ரா.

"இவளை" என கோபப்பட்டுவன், 'சரி வெளியே போய் பேசிக்கலாம். இப்ப வந்த வேலையை பார்ப்போம்' என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான்.

படுக்கையறையை சல்லடை போட்டு துலவினார்கள் இருவரும். ஒன்றும் கிடைக்கவில்லை. கீழே சுவற்றில் ஓங்கி உதைத்தான் இயலாமையில் கௌதம்.

அவனிடம் வேகமாக வந்த ஆரு "டென்ஷன் ஆகாதிங்க ப்ளீஸ். கண்டிப்பா எதாவது கிடைக்கும். நல்லா பார்க்கலாம்" என்றாள் சமாதானமாக.

கௌதம் உதைத்ததில் சுவர் பேர்த்துக் கொண்டு வந்திருந்ததை ஆரு அப்போது தான் கவனித்தாள். 'எப்படி ஒரே அடியில் சுவர் உடையும்' என எண்ணிய ஆரு கீழே குனிந்து பார்த்தாள்.

உடைந்தது சுவர் அல்ல அதன் மேல் ஒட்டி இருந்த அட்டை. அதை கண்டு மெதுவாக அந்த அட்டையை நகர்த்தினாள். உள்ளே ஒரு மடிக்கணினி இருந்தது.

அதை கௌதமிடம் காட்ட, அப்போது அவனும் அதை பார்த்தான். அது சத்யாவின் மடிக்கணினி. திடீரென ஒரு துருப்பு சீட்டாக கிடைத்த மடிக்கணினி, அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆருவை அணைத்து "சூப்பர் ருத்ரா. தேங்க்ஸ்" என்றான். மகிழ்ச்சியில் அவன் செய்கையை அவன் உணரக்கூட இல்லை.

ஆனால் அவனின் செய்கையில் ஆருத்ரா தான் உறைந்து போய் நின்றாள். தந்தை அன்றி அவள் உணரும் வேறு ஆண்மகனின் ஸ்பரிசம் அல்லவா.

அமைதியாக அறையை விட்டு வெளியேறி சோஃபாவில் அமர்ந்து தன்னை நிலைப்படுத்தும் முயற்சிக்கு சென்றாள். ஆனால் இதை எதையும் கவனியாத கௌதம், மடிக்கணினியுடன் அமர்ந்தான்.

படுக்கையில் அமர்ந்து மடிக்கணினியை எடுத்து திறந்தான். அது திறக்க கடவுச்சொல் கேட்டது. அவனும் அவனுக்கு தெரிந்த பழைய கடவுச்சொல்லை போட்டு பார்த்தான்.

ஆனால் திறக்கவில்லை. கௌதமிற்கு அவ்வளவு அதிர்ச்சி. சத்யாவின் கணினியின் கடவுச்சொல் அவன் அறிந்ததே. ஆனால் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.

'இது யாரின் வேலையாக இருக்கும். கண்டிப்பாக சத்யா தான் மாற்றி அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இதை பத்திரப்படுத்தி சொல்ல என்ன காரணம்.

நிச்சயம் நமக்கு தேவையான ஏதோ ஒன்று இதில் இருக்க வாய்ப்பு உண்டு' என எண்ணிக் கொண்டான். அதை மூடியவன் சிறிது யோசித்து பின் 'சரி முதலில் இங்கிருந்து இதை எடுத்து செல்வோம். ஹேக்கர் யாரிடமாவது உதவி கேட்போம்' என முடிவு எடுத்தான்.

பின் மீண்டும் அறையை ஒரு முறை பார்த்து விட்டு வெளியே வந்தான். அங்கே சோஃபாவில் ஏதோ போல் சுவற்றைப் பார்த்து அமர்ந்திருந்த ஆருவரிடம் சென்றான்.

"ருத்ரா என்ன சுவரை இப்படி வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்க. வா கிளம்பலாம்" என்றான். அப்போது கொஞ்சம் தெளிந்திருந்த ஆரு நிமிர்ந்து கௌதமை பார்த்தாள்.

அவன் முகத்தில் எதுவும் தெரியவில்லை. அவள் மனதில் 'உண்மையாவே இவன் நம்மல கட்டிப்பிடிச்சானா இல்லை நமக்கு தான் அப்படி தோனுதா' என எண்ணிக் கொண்டு இருந்தாள்.

அவள் எங்கிருந்து அறியப் போகிறாள், அந்த நிமிட மகிழ்ச்சியில் ஆருவை அணைத்திருந்தான். அதை அவன் உணர்ந்திருக்கவே இல்லை எனும் போது எங்கிருந்து அவன் மனது ஆருவின் அமைதியை கணிக்கும்.

எனவே "ப்ச் வா ருத்ரா என்ன சாவகாசமா உக்காந்துட்டு இருக்க. போலீஸ் திரும்ப வந்தர போறாங்க. சீக்கிரம் வா கிளம்பலாம்" என அழைத்தவன் சிதறி இருந்த புத்தகங்களை பார்த்தான்.

அதை எல்லாம் சேகரித்த கௌதம், ஆருவின் கையில் கொடுத்தான். "இந்த புக்ஸ் எல்லாம் நீ வச்சுக்கோ உனக்கு புக்ஸ் பிடிக்கும்ல. சரி வா போகலாம்" என்றபடி அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.

இப்போது நன்கு தெளிந்த ஆருவும் அவன் கையை உதறிவிட்டு அவன் பின் சென்றாள். கௌதமும் இதை பெரிதாக எடுக்காது ஒரு சிறு தோல் குளுக்களோடு அவள் பின்னே சென்றான்.

இருவரும் மெதுவாக அந்த பால்கனியில் இருந்து வெளியேறி ஒருவழியாக கௌதம் வண்டி நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தனர்.

சிறிது தூரம் வண்டியை தள்ளி சென்றனர். அப்போது தான் ஞாபகம் வந்தவனாக "ஆமா நீ எப்படி வந்த. இந்த டைம்ல ஆட்டோலா கிடைச்சதா?" என்றான் நடந்துக் கொண்டே.

"அது ஆட்டோல தான். ஆனா டபுள் மடங்கு காசு வாங்கிட்டான்" என்றாள் சிரிப்புடன். அவளை முறைத்த கௌதம் "இது தேவையா இப்படி அன்டைம்ல, அந்த ஆட்டோக்காரன் உன்னை கடத்திட்டு ஏதும் போயிருந்தா என்ன பண்ணி இருப்ப.

எவ்ளோ நியூஸ் பாக்குற. தயவு செஞ்சு இனிமே இப்படி லூசு தனம் பண்ணாத. நான் பார்த்துப்பேன் புரியுதா" என்றான் சற்று காட்டமான குரலில்.

அவன் கூறுவது அனைத்தும் சரியே என புரிந்தாலும் "என்ன பார்த்துப்பீங்க நீங்க. அதான் பார்த்தேனே. கொஞ்சம் நான் சுதாரிச்ச இருக்கலைனா போலீஸ் உங்கள இழுத்துட்டு போய் இருப்பாங்க" என்றாள் ஆரு கிண்டலாக.

அவள் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தாலும் அவன் ஈகோ அதை ஒத்துக் கொள்ள விடவில்லை. பேச்சை மாற்றும் விதமாக "ஆமா எப்படி நீ மேல வந்த பைப் ஏறியா" என்றான் கௌதம்.

ஆம் என்னும் விதமாக தலை அசைத்த ஆரு "இங்க பாருங்க கௌதம், நான் கண்டிப்பா சத்யாவுக்கு நியாயம் கிடைக்க எதாவது பண்ணுவேன். ஏனா என்னால நிம்மதியா தூங்க கூட முடியல கௌதம்.

ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. நான் எதாவது ஒரு ஸ்டெப் எடுத்துருந்தா இன்னைக்கு ஒரு உயிர் போயிருக்காது இல்லை" என்றால் வேதனை நிறைந்த குரலில்.

அவள் கூறியதை கேட்ட கௌதம் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு "இங்க பாரு ருத்ரா, உன்னால எதுவும் செஞ்சிருக்க முடியாது. ஏனா நானும் அப்ப ரெண்டு நாள் ஊருல இல்லை.

கடைசியா சத்யா எனக்கு தான் போன் செஞ்சான். ஊருக்கு போற அவசரத்தில நான் அவனோட நிலைமைய அப்ப சரியா கவனிக்கல. அப்படி பார்த்தா எனக்கு எவ்ளோ கஷ்டமா‌ இருக்கும்.

அப்புறம் தான் ஒன்னு புரிஞ்சுது, இதுல நம்மால எதுவும் செஞ்சு இருக்க முடியாதுனு. சோ நீ அத பத்தியே யோசிச்சு கில்டியா பீல் பண்ணாத என்ன" என்றான் ஆதூரமாய்.

"சரி ருத்ரா பர்ஸ்ட் உன் நம்பர எனக்கு குடு. ஏனா நீ இப்படி அர்த்த ராத்திரியில தனியாலாம் இனிமே கிளம்பக் கூடாது. துணைக்கு நானும் வருவேன் சரியா" என்றான் கௌதம் என்னென்று புரியாத குரலில்.

அவனின் முகத்தில் தெரிந்த பாவத்தில் அவள் முகத்தை திருப்பாது பார்த்திருந்தாள். இருவரும் எவ்வளவு நேரம் அப்படி பார்த்துக் கொண்டு இருந்தனரோ, அருகில் வண்டி வரும் சத்தம் கேட்கவே தம் நிலையில் இருந்து மீண்டனர்‌.

இதில் அவன் கேட்க வேண்டும் என நினைத்த பல கேள்விகளை மறந்து விட்டான். தன் குரலை செறுமிக் கொண்டு "வண்டில ஏறு ருத்ரா உன்னை வீட்டல விட்டுட்டு நான் போறேன்" என்றான் கௌதம்.

ஆருவும் தனக்கு புத்தகம் பிடிக்கும் என அவன் சரியாக சொன்னது எப்படி எனக் யோசிக்க மறந்தாள். அவன் குரலிலோ முகத்திலோ இருந்த ஏதோ ஒன்றால் அவள் அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அந்த பயணத்தை இருவரும் அமைதியாக ரசித்து வந்தனர். ஆருவின் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள். வண்டியில் இருந்து இறங்கி நின்ற ஆருவிடம் அவள் எண்ணை வாங்கியே சென்றான்.

செல்லும் அவனையே விழி எடுக்காது பார்த்தாள் ஆரு. அவன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டு இருந்த ஆரு பின் தன் அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தாள்.

அங்கே சாலையில் சென்ற கௌதமிற்கு காற்றில் பறப்பது போல் இருந்தது. ஆருவின் நினைவை மனதில் சுமந்தவாறு அவனின் இல்லம் வந்தடைந்தான் கௌதம்.

ஆனால் இருவரும் தங்கள் மனதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் புரிந்து கொள்ள முயலவில்லை.

வீட்டின் உள்ளே நுழைந்த ஆரு, சோஃபாவில் அமர்ந்து தன்னையே குறுகுறுவென பார்த்த மீராவின் பார்வையில் 'ஐயோ' என்றானது.

'இவள எப்படி சமாளிக்க போறோம்னு தெரியலையே' என எண்ணிக் கொண்டு எதுவும் நடவாதது போல் தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.

"மேடம் கொஞ்சம் நில்லுங்க. எங்க போய்ட்டு வரீங்கனு தெரிஞ்சுக்கலாமா" என்றாள் கோபத்தோடு. தன் தோழியை நோக்கிய ஆரு

"அது வந்து... அது ஆ நான் எனக்கு தூக்கம் வரலை. அதான் சும்மா வாக்கிங் போயிருந்தேன்" என திக்கி திணறி ஏதோ சொல்லி சமாளித்தாள். "ஏது நைட் இரண்டு மணிக்கு வாக்கிங். இத நான் நம்பனும்" என்றாள் நக்கலாக.

"நான் வாக்கிங் தான் போனேன். நம்புனா நம்பு நம்பாட்டி போ" என்றுவிட்டு அவசரமாக அறைக்கு வந்து ஆரு இழுத்து பிடித்த‌ மூச்சை வெளிவிட்டாள்.

'எப்போ எழுந்திருப்பா? நம்ம போறப்ப நல்லா தூங்கிட்டு தானே இருந்தா' என‌ எண்ணிய ஆரு 'சரி தப்பிச்சு வந்தாச்சு காலைல பாத்துக்கலாம்' என்று படுத்துவிட்டாள்.

'என்கிட்டையே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா ஆரு. நீ என்ன பண்றனு நான் சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்' என மனதில் சபதம் ஒன்றை எடுத்தாள் மீரா. பின் அவளும் சென்று படுத்துவிட்டாள்.

யாருக்கும் காத்திராமல் அடுத்த நாளும் அழகுற விடிந்தது. ஆனால் கௌதமிற்கும் ஆருத்ராவிற்கும் சற்றே வித்தியாசமாய்.

-தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 9

வீழும் நொடியிலும் எழுவேன் நான்,
அழகே உன் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில்;
விரைந்து வந்திடு பெண்ணே,
சாகும் என் உயிரை மீட்டிட!!


"ரோஹித் அந்த போனை வச்சிட்டு போய் படி. ரொம்ப நேரமா அதையே பாத்துட்டு இருக்க அப்படி அதுல என்ன தான் இருக்கோ" என ஒரு தாய் தன் மகனைக் கண்டித்து கொண்டு இருந்தார்.

ஆனால் அவனோ மிகப் பதட்டத்துடன் இருந்தான். என்ன செய்யவென புரியாத மனநிலையில் இருந்தான். அவன் அன்னை அவனின் முகத்தை சிறிதும் கவனிக்காது பேசிக் கொண்டே உள்ளே சென்று விட்டார்.

அவர் உள்ளே சென்றவுடன் ‌இவன் தன் கண்ணில் இருந்த நீரை துடைத்துக் கொண்டான். இதை தனக்காக இல்லையெனினும் தன் குடும்பத்துக்காக செய்ய வேண்டும் என தனக்கு பிடிக்காத முடிவாய் இருந்தும் அந்த முடிவை எடுத்தான்.

அன்று இரவு தன் தாய் தந்தை சகோதரன் என அனைவரும் உறங்கிய பின், அவர்களை கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு மொத்தமாக வெளியேறினான்.

அங்கே அவனுக்காக காத்திருந்தது ஒரு கார். அந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டான். பின் அந்த கார் நிதானமாக தன் பயணத்தை ஆரம்பித்தது.

தன் வீடு கண்ணை விட்டு மறையும் வரை அதை பார்த்துக் கொண்டே சென்றான் அச்சிறுவன் கண்ணில் வழியும் நீரோடு. இனி தன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற அச்சத்தோடு.

"டேய் சத்தம் போடாம வாங்க. இல்லனா நல்லா அடி வாங்கிட்டு போவீங்க. என்ன வாங்குனதுலா மறந்து போச்ச" என அமைதி படுத்தி விட்டு "இப்ப நான் சொல்றத கவனமா கேக்கனும்.

நீங்க போகப் போற இடம் புது இடம் மட்டும் இல்லை. அந்த இடத்துல வேற புது ஆளுங்க இருப்பாங்க. இங்க மாதிரிலா அங்க இருக்காது. ஆனா நல்ல சாப்பாடு எல்லாம் குடுப்பாங்க பசங்கலா.

ஆனா அதுக்கு அங்க போய் நீங்களாம் அழாம அவங்க சொல்ற வேலை மட்டும் செஞ்சா போதும் புரியுதா. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.

அங்க இருந்து நீங்க தப்பிக்க கனவுல கூட நினைக்க கூடாது. அப்படி நினைச்சா கொன்னே போட்ருவேன். நேத்து கூட தப்பிக்க நினைச்சவன் எப்படி எங்ககிட்ட மாட்டி

அடி வாங்கி படுத்து கிடக்குரானு பார்த்திங்கல்ல. எங்களுக்கு எல்லா பக்கமும் ஆளுங்க இருக்காங்க. யாராவது தப்பிச்சு போக மட்டும் நினைச்சிங்க அவ்வளவு தான்.

கொன்னு போட்டுட்டு போய்கிட்டே இருப்போம் புரியுதா" என்று மிரட்டினான் அந்த ரௌடிகளின் தலைவன் குமார். அதை கேட்டு பயத்துடன் தலையை ஆட்டினர் அந்த சிறுவர் சிறுமியர்.

பின் தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் அந்த அறையில் இருந்து அழைத்து சென்றனர். தங்கள் உடனிருந்தவர்களை அழைத்து செல்வதை கண்ணீருடன் பார்த்தனர் சித்துவும் அவன் நண்பன் விக்கியும்.

சிறிது நேரம் கழித்து சித்துவிடம் அவன் நண்பன் விக்கி "சித்து இப்ப உனக்கு உடம்பு எப்படி இருக்கு டா" என்றான் வாஞ்சையாக. "இப்ப கொஞ்சம் ஓகே டா" என்றதற்கு

"உன்னால இப்ப வெளிய போக முடியுமா சித்து. அப்படி நீயாவது தப்பிக்க பாரு டா. முதல் தடவை போல நீ போனப்பவே திரும்ப வராம இருந்துருக்கலாம்‌. நீயாவது தப்பிச்சு போயிருப்ப.

எங்களுக்காக பார்த்து இப்ப பாரு நீயும் மாட்டிக்கிட்ட" என்றான் வருத்தம் மேலிட்ட குரலில். " உங்கள விட்டுட்டு நான் எப்படி டா போவேன்.

நான் தப்பிக்க பார்த்ததால காவல்க்கு நிறைய ஆளுங்க வேற இப்ப வந்துட்டாங்க நான் நினைச்சாலும் இனி தப்பிக்க வழியில்லை டா.

ஆனால் எனக்கு அப்படி எதாவது வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா உங்களை எல்லாம் சேர்ந்து கூட்டிட்டு போய்ருவேன். என்னால அது முடியலையே" என்றான் அழுகையுடன்.

"இப்ப வந்த பசங்களை எல்லாம் கூட்டிட்டு போய்ட்டாங்க. ஆனா நம்ம வந்து ரொம்ப நாள் ஆச்சுல. ஆனா ஏன்டா நம்மல இங்கையே வச்சருக்காங்க" என்றான் விக்கி கேள்வியாக.

"தெரியலை டா. ஒரு வேளை கஷ்டமான வேலைக்கு எதுவும் நம்மல அனுப்ப போறாங்க போல். அப்படி போனா கூட போற வழியில தப்பிக்கலாம் இல்ல" என்றான் சித்து இன்னும் அழுகையுடன்.

"நீ அழாத டா. வா நாம சாமிக்கிட்ட போய் வேண்டிக்கலாம். கண்டிப்பா அவர் நமக்கு உதவி பண்ணுவாரு" என எப்போதும் போல் கடவுளிடம் முறையிட அழைத்து சென்றான்.

"கௌதம் கொஞ்சம் என்னோட ரூமுக்கு வந்துட்டுப் போங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என எடிட்டர் நாராயணன் கௌதமை அழைத்தார்.

'என்னவா இருக்கும்" என்ற யோசனையோடே அவரின் அறையை அடைந்தான் கௌதம். "என்ன சார். எதுக்கு கூப்டீங்க" என்றான் அவரின் முன் சென்று.

"வாங்க கௌதம். உக்காருங்க" என்றுவிட்டு அவர் எதையோ யோசித்து கொண்டு இருந்தார். 'என்ன நம்மல வர சொல்லிட்டு இவர் ஒன்னும் பேசாமல் இருக்கார்'

" சார் சார் எடிட்டர் சார். என்ன சார் எதுக்கு என்ன வர சொன்னீங்க. என்ன விஷயம் சார் சொல்லுங்க" என்றான் அவரின் அமைதியை கலைக்கும் விதமாக.

"ம்ம் கௌதம்" என இழுத்து பின் "சத்யா டெத் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க" என்றார். "எனக்கு புரியலை சார்.

அவன் டெத் தான் ஆக்சிடென்ட் அப்டின்னு போலீஸே சொல்லீட்டாங்க. அதுக்கு மேல நான் நினைக்க என்ன இருக்கு" என்றான் பிடிக் கொடுக்காமல்.

"கமான் கௌதம். இத மத்தவங்க வேணா நம்பலாம், பட் நான் நம்ப மாட்டேன். சத்யாவ பத்தியும் எனக்கு தெரியும் உன்னை பத்தியும் எனக்கு தெரியும் பா" என்றார்.

ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான் கௌதம். அவனை பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட நாராயணன்,

"இங்க பாரு கௌதம் சத்யாவோட டெத் ஆக்சிடென்ட் இல்லை அப்டின்னு உனக்கும் தெரியும்னு நினைக்கிறேன். ஏனா அவன் அநாவசியமா எதுக்கு அவ்ளோ தூரம் போகனும்.

அதுவும் அந்த அன்டைம்ல. அப்படி இருந்தாலும் டூ டேஸா யார்க்கிட்டையும் சொல்லாம எங்க போயிருந்தான். அது மட்டும் இல்லாம அவன் ஆபிஸ்க்கு என்ன செய்றானு ஒரு டீட்டெயிலும் சொல்லல.

அந்த விஷயத்தை ரொம்ப சீக்ரெட்டாவே மெயின்டெய்ன் பண்ணுணான். அதுல இருந்தே தெரியிது அவன் எதோ பெரிய விஷயத்தை நம்மட்ட சொல்லாம மறைச்சு இருக்கான்னு.

கண்டிப்பா நீ அந்த விஷயத்தை தான் தேடிட்டு இருப்பனு எனக்கு தெரியுது. அப்படி இருக்கப்ப நீ என்னை கூட நம்பமாட்டனும் எனக்கு புரியுது.

ஆனால் நீ அப்படி ஒரு விஷயத்தை தேடுரனா, இது உனக்கு நிச்சயமாக ஹெல்ப்பா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் ஏதோ தெரிந்தவராக.

கௌதம் அமைதி காக்கவும் அவரே தொடர்ந்தார். "கௌதம் அண்டர்கிரவுன்ட் கேங்கல ஒரு ஆள் ஸ்பையா இருந்து இருக்கான். அவன்கிட்ட சத்யா ஏதோ ஹெல்ப் கேட்டருக்கான்.

அந்த ஆள பார்த்துட்டு வர்ரப்ப தான் அவன் காணாம போய் இருக்கான். அதுமட்டுமில்ல சத்யா பாடி கெடச்சது மண்டே. ஆனால் அவன் மிஸ் ஆனது ஃப்ரை டே.

சோ இடையில ஏதோ நடந்திருக்கு. ஒரு வேளை அந்த ஸ்பைய நீ கண்டுபிடிச்சா, சத்யா வெளியே கொண்டு வர நினைச்ச ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை நம்ம வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம்.

அன்ட் இந்த நியூஸ் எனக்கு வந்தது ரொம்பவே நம்பகமான சோர்ஸ்ல இருந்து. அதனால இதுல டௌட் அநாவசியம்" என்றார். அவர் இவ்வளவு பேசிய பிறகும் கௌதமின் முகம் எந்த வேறுபாடும் காட்டவில்லை.

ஆனால் அவனின் மனது அவர் கூறிய அனைத்தையும் உள்வாங்கி கொண்டது. அவர் கூறுவதில் சத்யா காணமல் சென்ற நாளும் இறந்த நாளும் சரியே.

ஆருவும் அதையே தான் கூறி இருந்தாள். ஆனால் அவன் தன்னை அன்றி வேறு யாரையும் நம்ப தயாராக இல்லை. அதே சமயம் எடிட்டர் கூறியது உண்மை தானா என விசாரிக்க முடிவு செய்தான்.

அதற்கு முன் தானே சென்று எதிலும் சிக்கிக் கொள்ள முயலவில்லை. ஏன் இதுக் கூட அவனுக்காக விரிக்கப்பட்ட வலை என்றால், அதோடு ஆபத்தும் அல்லவா வந்து சேரும்.

இதில் அவன் மட்டும் இல்லையே இந்த ருத்ராவும் அல்லவா வந்து உடன் சேர்ந்து உள்ளாள். ருத்ராவை பற்றிய நினைவு எழும் போதே அவன் முகம் மென்மையுற்றது.

"நீங்க என்னலாமோ சொல்றீங்க சார். ஆனால் என்னால நம்ப தான் முடியல. நீங்க சொன்னத என் மனசு அக்செப்ட் பண்ண கொஞ்சம் டைம் வேணும் சார். சோ ஒரு ஹாஃப் டே லீவ் வேணும் சார்" என்றான் இப்போது எடிட்டரை பார்த்து.

நாராயணன் ஒரு சிரிப்புடன் "ம்ம் நீ என்னையும் நம்ப தயாரா இல்லை சரி விடு. ஆனால் எதாவது பிராப்லம்னா எனக்கு ஒரு கால் பண்ணு. நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்.

ஒருத்தன் தான் யாரையும் நம்பாத இப்படி பாதியிலேயே போய்ட்டான். நீயும் அப்படி பண்ணாத பத்திரமா மூவ் பண்ணு. போ போய் லீவ் சொல்லிட்டு போ" என்றார்.

அந்த அறையை விட்டு வெளியேறிய கௌதமிற்கு சிறு வழி கிடைத்த நம்பிக்கை. ஆனால் இதில் ஒவ்வொரு அடியும் அவன் கவனமாக வைத்ததாக வேண்டும் என்பதை அறிந்தே இருந்தான்.

நாராயணன் தன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி சிரித்து வைத்தான் மனதில். பின் அரை நாள் விடுமுறை அளித்து வெளியேறினான் கௌதம்.

அலுவலகம் விட்டு வெளியேறிய கௌதம் தனக்கு நன்கு தெரிந்த அண்டர்கிரவுன்டில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு கூட உதவும் நம்பகமான உளவாளி ஒருவரை அழைத்தான்.

எடிட்டர் நாராயணன் கூறிய அனைத்தையும் சொல்லி கிடைத்த தகவல் அனைத்தும் உண்மை தானா, அப்படியென்றால் சத்யா பார்க்க சென்ற நபர் யார் என்று

மொத்த விஷயத்தையும் கண்டறிய சொன்னான். நாராயணன் கூறியபடி சத்யா சந்தித்த நபர் இவராக இருந்தால் நிச்சயம் ஏதாவது பயனுள்ள தகவல் கிடைக்கும் என நம்பினான்.

கடைசி முடிவாக 'இதை எதையும் ருத்ரா கிட்ட சொல்லவே கூடாது. அவள எந்த பிரச்சனையிலையும் இழுத்து விடக் கூடாது' என்ற முடிவை எடுத்தான் மனதிற்குள்.

ஆனால் இவன் முடிவுகளுக்கு ஒத்துக் கொள்பவளா ஆருத்ரா, அவனையே தன் வழிக்கு திருப்பி விடுபவள் என அறியாமல் போனான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 10

இருள் அது துவங்கிய நேரம்,
ஒளியென வாந்தாய் பெண்ணே;
நிரந்தர கலங்கரை விளக்காய்,
நீடித்திடுவாய் என்றும் என் வாழ்வில் நீயே!


அன்று காலை பத்து மணி, அந்த கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அங்கே ஒருவர் வெகு நேரமாக யாரையே எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தார்.

அவரிடம் வந்த போலீஸ் ஒருவர் "சார் கமிஷனர் வர கொஞ்சம் நேரம் ஆகும். ஏசி இருக்காரு வேனும்னா நீங்க அவரைப் பாருங்களேன்"என்றார்.

சிறிதும் யோசிக்காமல் "இல்ல சார் வேணாம்.நான் அப்பாயிண்மென்ட் வாங்கிட்டு வந்திருக்கேன் சார். அது இல்லைனாலும் நான் அவரை தான் மீட் பண்ணுவேன்.

எவ்ளோ நேரம் ஆனாலும் பரவாயில்லை நான் வெய்ட் பண்ணி கமிஷனர் சாரையே பார்த்திட்டுப் போறேன் சார்" என்றார் வந்தவர்.

அதுக்கு மேல உங்க இஷ்டம் என்பது போல் தோளைக் குலுக்கி விட்டு போய்விட்டார் அவர். முழுதாக ஒரு மணி நேரம் சென்ற பின் வந்தான் கார்முகிலன்.

கார்முகிலன் ஐ.பி.‌எஸ், 28 வயது ஆண்மகன் சென்னையின் கமிஷனர். தன் பதவிக்கு ஏற்றார் போல் உடல்வாகு கொண்டவன். பார்த்தாலே மரியாதை தரும் தோற்றம் கொண்டவன்.

தான் வாங்கும் சம்பளத்திற்கு எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பவன்‌‌. அதனால் மற்றவர்கள் அனைவருக்கும் அவன் ஒரு ஸ்ரிக்ட் ஆபிசர்.

அவன் அறை சென்று பத்து நிமிடம் கழித்து, முன்பு வந்த அதே போலீஸ் வந்து அவரை அழைத்து சென்றார் முகிலனிடம்‌. வந்தவரை அமர சொல்லிட்டு அந்த போலீஸ் வெளியே கிளம்பி விட்டார்.

"வணக்கம் சார். நான் ராஜேஷ் பஜார்ல நகைக்கடை வச்சிருக்கேன்" என வந்தவரே ஆரம்பித்தார். "சொல்லுங்க என்னை தான் பார்த்துட்டு போவேனு வெய்ட் பண்ணிட்டு இருந்தீங்க போல. என்ன விஷயம்" என்றான் முகிலன்.

"ஆமா சார்" என்றபின் சிறிது நேரம் மெளனம். "எனக்கு யாரையும் நம்ப முடியல சார். நீங்க ரொம்ப நேர்மையான போலீஸ் ஆபிசர்னு கேள்வி பட்டேன் அதான் உங்கள பார்க்க வந்தேன்" என்றுவிட்டு சொல்ல துவங்கினார்.

"ஒரு மூணு நாள் முன்னாடி ஒரு வேலைய முடிச்சிட்டு நான் முட்டுகாடு வழியா வந்துட்டு இருந்தேன். அப்ப ஒரு சின்ன பையன் வந்து என் காரை தேக்கினான் சார்.

அவனை யாரோ கடத்தி அடைச்சு வச்சிருக்கறதா சொன்னான். அவனோட நிறைய சின்ன பசங்களையும் கடத்தி அடச்சு வச்சுருக்காங்கனு சொன்னான்.

அவன் பேசிட்டு இருக்கும் போதே யாரோ ரெண்டு பேர் வந்து அவன் அவங்க வீட்டு பையன் அப்டின்னு சொல்லி கூட்டிட்டு போய்டாங்க.

அதுமட்டுமில்லாம அவன் மனநிலை சரியில்லை அதனால அப்படி அடிக்கடி வீட்ட விட்டு ஓடி வந்துருவானு சொல்லிட்டு போனாங்க.

ஆனால் அந்த பையன பாத்தா மனநிலை சரியில்லாத மாதிரி ஒன்னும் இல்லை. நல்லா தான் இருந்தான். அவன காப்பாத்த ஏதாவது செய்ய சொல்லி ஹெல்ப் கேட்டான்.

அதான் நான் உங்கள பார்க்க வந்தேன் சார்" என்று முடித்தார் வந்த ராஜேஷ் என்பவர். அனைத்தையும் பொருமையாக உள்வாங்கிய கார்முகிலன்

"சரி ஏன் மூனு நாள் கழிச்சு வந்து கம்ப்லைன் பண்றீங்க. அப்பவே பக்கத்துல இருக்க ஸ்டேஷன் போயிருந்தா அப்பவே அந்த பையன காப்பாத்தி இருக்கலாமே" என்றான்.

"நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா ஆரம்பத்தில நான் கொஞ்சம் பயந்துட்டேன். அதான் போகல. ஆனா என் பையன பாத்த அப்புறம் போகனும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஏனா எனக்கும் அதே வயசில ஒரு குழந்தை இருக்கான் சார். நான் டிசைட் பண்ணின அப்புறம் பக்கத்தில இருந்த ஸ்டேஷன் போனேன். அங்க அந்த ஆள மறுபடியும் பாத்தேன் சார்.

இதை என் பிரென்ட் கிட்ட சொல்லி சஜஷன் கேட்டப்பா தான் அவன் உங்கள பத்தி சொன்னான். நீங்க ரொம்ப நேர்மையான ஆபிசர்னு‌. அதான் உங்கள பார்க்க வந்தேன் சார்" என்றார் ராஜேஷ்.

"எந்த ஆள பார்த்தீங்க, கொஞ்சம் டீடெய்லா சொல்லுங்க" என்றான் முகிலன். "அந்த பையன வந்து கூட்டிட்டு போன ரெண்டு பேத்துல ஒருத்தன சார்" என்றார் ராஜேஷ்.

"எந்த ஸ்டேஷன் போனீங்க" என்றதற்கு "முட்டுகாடு ஏரியாவில் சார். அந்த பையன அங்க பார்த்ததால அங்கையே நான் போனேன் சார்.

ஆனால் போலீஸ் அவன் கூட சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க அதை பார்க்கவும் பயந்து திரும்பி வந்துட்டேன் சார்" என்றார் ராஜேஷ்.

"ஓகே இனமே நான் பாத்துக்கிறேன். நீங்க கவலைப் படாம போங்க. அன்ட் தேங்க்ஸ் சார் ரோட்ல நடந்தத பார்த்துட்டு எனகென்னனு போகாம இவ்ளோ தூரம் வந்து சொல்லி இருக்கீங்க"என்றான் பாராட்டாய்.

"அது பரவாயில்லை சார். அந்த குழந்தை முகம் இன்னும் என் கண்ணுக்குளையே இருக்கு சார். அவ்ளோ பாவமா இருந்துச்சு சார்.

அதுக்காக தான் வந்தேன். இப்ப நான் வந்து சொன்னதால எனக்கு பிரச்சினை எதுவும் வராமல் இருந்தாலே போதும் சார்" என்றார் கடைசியாய்.

"கவலை படாதீங்க. உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் நான் பாத்துக்கிறேன்" என்ற கார்முகிலன் அவர் சென்ற உடன் அவர் வந்தது முதல் ஆன் செய்து ரெக்கார்டு செய்திருந்த டேப்பை ஆஃப் செய்தான்.

சிறிது நேர யோசனையின் பின் யாருக்கோ போன் செய்து பேசிவிட்டு வைத்தவன் முகம் யோசனையை விடுத்து ஒரு முடிவுக்கு வந்தது.

"ஆரு ஏய் ஆரு என்ன பண்ணிட்டு இருக்க" என கத்திக் கொண்டே வந்தாள் அனு கூடவே வினிதாவும். இவர்கள் அலப்பறையாய் வர மீரா மட்டும் சற்று அமைதியாய் வந்ததாள்.

அப்போது தான் அவள் அன்று சத்யா வீட்டில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களில் ஒன்றை படிக்க கையில் எடுத்தாள், அதற்குள் வானர படை வந்துவிட்டது.

"சொல்லு அனு" என புத்தகத்தை மூடி வைத்து கொண்டே கேட்டாள். "கிளம்புடி நாம இன்னைக்கு வெளியே போறோம்" என்றாள் வினிதா.

"இன்னைக்கு என்ன டி ஸ்பெஷல். இப்படி திடீர்னு வந்து போலாம்னு சொல்றீங்க" என்றாள் ஆரு. "ஸ்பெஷலாம் ஒன்னும் இல்லை டி. நாமலாம் வெளியே சேர்ந்து போய் ரொம்ப நாள் ஆச்சுல.

அதான் இன்னைக்கு சும்மா ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்னு கிளம்பட்டோம். சும்மா நைநைனு பேசாம கிளம்பு டி" என்றாள் அனு.

"அவளுக்கு ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு வெளிய ஊர் சுத்த நேரம் இருக்கும். நடுராத்திரியில வாக்கிங் போக நேரம் இருக்கும்.

ஆனா நம்ம கூட வரதுக்கு மேடம்க்கு நேரம் இருக்கோ என்னவோ. எதுக்கும் கேளுங்க டி வேற எதாவது இம்பார்டன்ட் வொர்க் இருக்க போகுது" என கடுப்புடன் மொழிந்தாள் மீரா.

ஏனெனில் மீராவும் சில நாட்களாக அவளிடம் கேட்டு கொண்டே தான் இருக்கிறாள் அவளின் வித்யாசமான நடவடிக்கையை. ஆனால் ஆருவோ கழுவும் மீனில் நழுவும் மீனாக பிடிக் கொடுப்பேனா என்று இருக்கிறாள்.

அதில் அதிக கோபம் கொண்ட மீரா கிடைக்கும் நேரம் ஆருவை வசைப்பாட தவறவில்லை. ஆனால் பலன் இல்லாத நிலை தான். இது எதுவும் என்னை பாதிக்கவில்லை என்பதை போல் அமைதியாக எழுந்து கிளம்ப சென்றாள் ஆருத்ரா.

"ஏ மீரா டென்ஷன் ஆகி நம்ம ப்ளான சொதப்பிடாத. அவளை வெளிய தள்ளிட்டு போய் மெதுவா பேச்சு கொடுத்து போட்டு வாங்கலாம்னு தானே முடிவு செஞ்சோம்.

அவ எவ்ளோ நேரம் தான் வாயை திறக்காம இருக்கான்னு பார்ப்போம். நீ சைலன்டா இரு. அவ வர மாதிரி இருக்கு" என மீராவை அமைதி படுத்தினாள் வினிதா.

இவர்கள் பேசி முடிக்கும் தருணம் சிரிப்புடன் வந்த ஆருவை பார்த்த தோழிகள் அவள் தாங்கள் பேசியதை கேட்கவில்லை என நிம்மதி கொண்டனர்.

ஆனால் அவர்கள் அறியவில்லை அவர்கள் பேசிய அனைத்தையும் ஆரு கேட்டு விட்டாள் என்பதை. அவர்கள் திட்டம் தன்னிடம் பலிக்காது என்ற எண்ணத்தில் சிரிப்புடன் வந்தாள்.

அதை அறியாத தோழிகளோ அவளிடம் எப்படியும் விஷயத்தை கறந்து விடலாம் என நம்பி சென்றனர். ஒரு வழியாக ஆருவும் அவள் தோழிகளும் ஆளுக்கொரு எண்ணத்துடன் ஒரு மால் சென்று அடைந்தனர்.

அந்த மாலில் தியேட்டர் ஒன்றில் புகுந்து கொண்டு படத்திற்கு போகலாம் என்றாள் ஆரு. ஒரு மூன்று மணி நேரத்தை இப்படி ஓட்டி விடலாமென‌.

வேண்டாம் என்று நினைத்தாலும் ஆரு சந்தேகிக்க கூடும் என மூன்று பேரும் மூன்று மணி நேரத்தை நெட்டி தள்ள முடிவெடுத்தனர் அவளின் திட்டம் அறியாது.

மற்ற மூவருக்கும் மாறாக ஆரு ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவித்தாள். அல்லது அவளது தோழிகளை வெறுப்பேற்றினாள் என்றால் சரியாக இருக்கும்.

படம் முடிந்த பின் அனைவரும் சாப்பிடும் இடம் வந்து அமர்ந்தனர். அங்கும் ஆருத்ராவே பேசினாள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மற்றவர்களை பேச விடவில்லை.

அவள் தோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக பெருமையை இழந்துக் கொண்டு இருந்தாலும், பொறுமையை இழந்து பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர்.

இல்லையெனில் ஆருவிடம் எப்படி விஷயத்தை கறக்க. தோழிகள் எங்கே அதை பற்றி பேச ஆரம்பித்து விடுவாரோ என அவள் அவர்களை பேசவே விடவில்லை.

கடைசியாக பீச் செல்லலாம் என்ற முடிவை எடுத்தனர் தோழிகள். சரியென கிளம்பி இரவு மங்கிய இருட்ட தொடங்கிய நேரம் பீச்சை சென்று அடைந்தனர் தோழிகள்.

இப்போது ஆரு சற்று அமைதியாக தான் வந்தாள். அந்த அமைதியை பயன்படுத்தி கொள்ள நினைத்த தோழிகள் மெதுவாக பேச்சை ஆரம்பித்தனர்.

"ஆரு உனக்கும் மீராக்கும் என்ன பா பிரச்சினை. ஏன் அவ உன்னை முறைச்சிட்டே இருக்கா" என்று கேட்டு அவள் முகத்தை பார்த்தனர். முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.

"உங்க ரெண்டு பேரோட பிரண்ட்ஷிப் பாத்து நாங்கலாம் எவ்ளோ பெருமை பட்டுருப்போம். இப்ப ஏன்டி இப்படி இருக்கீங்க" என தோழிகள் இருவரும் இன்னும் தம் கட்டி பேசியதை தடை செய்த மீரா,

"நிறுத்துங்க டி கொஞ்சம் திரும்பி அங்க பாருங்க" என்று அங்கு யாரையோ குறுகுறுவென பார்த்திருந்த ஆரு‌வை காட்டினாள்.

இவ்வளவு நேரம் தாங்கள் பேசியது அனைத்தும் வீனா என அதிர்ந்த தோழிகள் கொலை வெறியோடு ஆருவை முறைத்திருந்தனர். அப்படி யாரை இவள் இப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறாளென.

-தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூரல் - 11

வென்பஞ்சு மேகமென மிதந்து வந்த பெண்ணே,
காற்றாய் உன்னில் கலந்திட வந்தேன்;
ஏனோ பாலாய் போன காற்றாய் பிறந்ததால்,
கலக்காது கலைத்து செல்வதே நான் ஆனேனே!!


"ஹலோ... ம்ம் சொல்லுங்க சார்.... இன்னும் ஒரு ஒன் ஹவர்வல கிளம்பி வரேன் சார். நான் நீங்க சொல்ற இடத்துக்கே வரேன்... ம்ம் ஓகே சார்" என கௌதம் போனில் பேசிக் கொண்டு இருந்தான்.

அந்த மாலை நேரம் கௌதம் தன் அலுவலகத்தில் இருந்து நேராக கிளம்பி சென்றான் தனக்கு போன் செய்தவறை காண. மனதின் குழப்பம் பல இருக்க அதற்கான விடை காண சென்றான்.

வண்டியின் அவன் சென்ற வேகத்தில் மாலை நேர காற்று முகத்தில் மோதியது. சில நிமிடத்தில் அவன் மனம் லேசானது‌. எது வந்தாலும் பார்த்து கொள்வோம் என்ற உறுதி அதிகரித்தது.

அவன் செல்வது தான் தகவல் கேட்டிருந்த அந்த ரகசிய உளவாளியை காண தான்‌. இன்று அவர் அழைத்து வர சொல்லவும், கண்டிப்பாக நல்ல தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிளம்பி செல்கிறான்.

அவர் கௌதமை எப்போதும் கூட்டம் அலைமோதும் ஒரு ஹோட்டலில் சந்திக்க வர சொல்லி இருக்கிறார். அங்கே தனக்காக காத்திருக்க சொன்னார்.

கௌதமும் சென்று சிறிது நேரம் காத்திருந்தான். அப்போது உணவு ஆர்டர் எடுக்க வந்த சர்வர் கௌதமிடம் எதையோ கையில் தினித்து சென்றார். அதை என்னவென்று பார்த்தான் கௌதம்.

அது ஒரு துண்டு காகிதம். அதில் அந்த ஹோட்டலின் ஒரு அறை எண் குறிப்பிட்டு இருந்தது. அதில் தன்னை வந்து காணவும் என்ற செய்தியோடு.

கௌதம் இதை அந்த உளவாளி ஜார்ஜ் தான் அனுப்பி இருக்க கூடும் என எண்ணி அந்த அறையை சென்று அடைந்தான். அவன் நினைத்தது சரியே அங்கே இருந்தது அவர் தான்.

"வாங்க கௌதம். எப்படி இருக்கீங்க" என வரவேற்றார் அங்கிருந்த ரகசிய உளவாளி ஜார்ஜ். "பைன் ஜார்ஜ் சார். நீங்க எப்படி இருக்கீங்க" என்றான் சம்பிரதாயமாக.

பின் "சொல்லுங்க ஜார்ஜ் உங்களுக்கு எதாவது யூஸ்புல் நியூஸ் கிடைச்சிதா. வர சொன்னீங்க" என்றான் கௌதம் பதட்டத்துடன்.

"ரிலாக்ஸ் கௌதம். எனக்கு கொஞ்சம் இன்பர்மேஷன் கிடைச்சிருக்கு. அன்ட் அது உங்களுக்கு எந்த அளவுக்கு யூஸ்புல்னு நீங்க கேட்டா தான் தெரியும்" என்றார் அந்த ஜார்ஜ்.

மூச்சை இழுத்து வெளியே விட்ட கௌதம் "யாஹ் ஜார்ஜ் நீங்க சொல்லுங்க . நான் பாத்துக்கிறேன். அப்புறம் நான் சொன்ன விஷயத்தை பத்தி விசாரிச்சு பாத்தீங்களா.

அது எந்த அளவு உண்மைனு எதாவது ஹிண்ட் கிடைச்சுதா சொல்லுங்க" என்றான் கௌதம். "நீங்க சொன்னத பத்தி நான் முடிஞ்ச அளவு விசாரிச்சு பாத்தேன்.

அன்ட் நீங்க சொன்ன எல்லாமே டுரூ. நான் கேள்விப்பட்ட வரைக்கும் உங்க ஃபிரண்ட் சத்யா யாரையோ ஹெல்ப்க்கு கடைசியா மீட் பண்ணி இருக்கார்.

அன்ட் அவர் மீட் பண்ண ஆள் யார்னு கண்பார்மா எனக்கு தெரியல. பிகாஸ் எங்க ஆளுங்கனா எங்களுக்கு தெரிஞ்சுருக்கும். பட் எங்களுக்கு தெரியாத ஆளுனா,

அவர் அன்டர்கவர்ல இருக்க ஆபிஸரா கூட இருக்கலாம். ஏனா அவங்களாம் யாருனு கூட எங்களால கெஸ் பண்ண முடியாது. அந்த அளவு சீக்ரெசி மெய்டெய்ன் பண்ணுவாங்க. ஒரு வேளை அப்படி யாராவது கூட இருக்கலாம்" என்றார் ஜார்ஜ்.

மீண்டும் அவரே தொடர்ந்தார் "உங்க ஃபிரண்ட்க்கு தெரிஞ்ச யாராவது ஐ.பி.எஸ் ஆபிசரா இல்லை இன்டலிஜன்ஸ்ல இருக்காங்களா. உங்களுக்கு தெரியுமா" என்ற ஜார்ஜின் கேள்விக்கு

"எனக்கு தெரியலை ஜார்ஜ். கொஞ்சம் யோசிக்கனும் ஏனா நான் அவனோட காலேஜ் மேட். ஸ்கூல்ல கூட படிச்ச யாராவது இருக்கலாம்.

ஏன் ஜார்ஜ் அவன் மீட் பண்ணினது அவன் ஃபிரண்ட் தான்னு கண்பார்மா சொல்றீங்களா" என்றான் கௌதம். "தெரியலை கௌதம். பட் அஸ் ஆஃப் மீ மோர் சான்சஸ் ஆர் தேர்" என்றார் ஜார்ஜ்.

பின் "அவன் எதை பத்தி டீல் செஞ்சான்னு எதாவது சின்ன ஹின்டாவது கிடைச்சிதா ஜார்ஜ்" என்றான் கௌதம் எதிர்ப்பார்ப்புடன்.

"அதை நான் பல விதத்தில மறைமுகமா விசாரிச்சு பார்த்துட்டேன் கௌதம். பட் நோ யூஸ். எந்த விதத்துலையும் என்னால நெருங்க முடியல" என்றார் பெருமூச்சுடன் ஜார்ஜ். "ம்ம் புரியுது ஜார்ஜ்.

நானும் என் சைட் அப்படி அவன் கான்டாக்டுல இருக்க யாராவது டிபார்ட்மெண்ட்ல இருக்காங்கலான்ற டீடெயில் கிடைக்குமானு பாக்குறேன் ஜார்ஜ்" என்ற கௌதம் எழுந்தான்.

"ஓகே ஜார்ஜ் தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப். வேற டீடெயில்ஸ் கிடைச்சாலும் எந்த டைம்லையும் தயங்காம எனக்கு கால் பண்ணுங்க. ஓகே நௌவ் ஐ டேக் லீவ்" என்று கிளம்பி விட்டான் கௌதம்.

வெளியே வந்த கௌதமிற்கோ ஒன்றும் முன்னேற்றம் இல்லாத நிலையில் மனம் வெகுவாய் சோர்ந்தது. யாரை பார்த்தான் என தெரியாமல் எங்கிருந்து ஆரம்பிப்பது என மண்டை காய்ந்தது.

அந்த ஹோட்டலிலே ஒரு காஃபியை வாங்கி அமர்ந்து விட்டான். அதை குடித்து விட்டு வெளியே வந்தும் மனம் ஏதோ செய்தது.

என்ன செய்தால் மனம் ஒருநிலைப்படும் என யோசித்து நிமிர்ந்து பார்த்தான். தன் மனது சமன்பட இதுவே சரியென எண்ணி நடையை வைத்தான் கௌதம்.

"எப்படி இது நடந்துச்சு. இது முதல் தடவையா இருந்தா கூட தற்செயலா நடந்ததாக நினைக்கலாம். இது மூனாவது தடவை குமார். எதுக்குடா உங்கள எல்லாம் வேலைக்கு வச்சிருக்கேன்.

தெண்டமா இப்படி தலைய கவுந்து உக்காந்துட்டு இருக்கவா.‌ ஒருவேளை இதுல உன் வேலை ஏதும் இருக்கா" என சரமாரியாக திட்டிக் கொண்டே தன் சந்தேகத்தை முன் வைத்தான் அவன்.

"இல்லை பாஸ் நான் எதுவும் பண்ணலை. என்னை நம்புங்க பாஸ். என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா. நம்ம வண்டி டயர் பஞ்சர் ஆயிருச்சு. அதனால வேற டயர் மாத்தலாம்னு வண்டிய நிறுத்துனேன் பாஸ்.

அது இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவில்லை பாஸ். நம்ம எப்பவும் யூஸ் பண்ற சிட்டி அவுட்டர் ரூட்ல போனதால அங்க கேமராவும் இல்லை. நானும் நல்லா தேடி பார்த்துட்டேன் பாஸ்.

பட் நோ யூஸ். நாங்க டயர் மாத்தர நேரம், இப்படி ஆகிருச்சு பாஸ்" என்றான் குமார் மெல்ல. பின் "நல்லா சாக்கு போக்கு சொல்ல கத்து வச்சிருக்க. வண்டில இருந்த கேமரா என்ன ஆச்சு" என்றான்.

"பாஸ் அந்த கேமரால எதுவும் தெரியலை பாஸ். யாரோ லூப் செட் பண்ணிருக்காங்க" என்றான் குமார். "ஆமா மணி எங்க அவன ஏன் கூட்டிட்டு போகலை" என்றதற்கு

"இங்க ஒரு பைய தப்பிக்க பார்த்தான்ல பாஸ். அதுனால அவன் இங்கையும் நான் அங்கையும்னு பிரிச்சிட்டு வேலை பாத்தோம் பாஸ்" என்றான் குமார். அவன் கூறியதை கேட்டவன் "ச்சே" என சுவற்றில் குத்துக் கொண்டான்.

அவன் பிரசாத் அந்த குழந்தை கடத்தல் கும்பலின் தலைவன். பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்‌. அவனின் தாத்தா அந்த குடும்பத்தை நன்கு கட்டுக்கோப்பாய் வழிநடத்தினார்.

பிரசாத் பள்ளி படிக்கும் போது அவனின் தாத்தா இறந்த போக, முழு நேரமும் தொழிலில் கவனம் செலுத்தினார் அவன் தந்தை ராஜசேகர்‌ உடன் அவரின் மனைவி ஷீலாவும்.

அதில் மகனை கவனிக்க மறந்து விட்டனர் அந்த தம்பதியர். சிறு வயதில் இருந்து பணத்தின் செழுமையில் வளர்ந்த பிரசாத், பணத்தை தண்ணீராக செலவு செய்து ஊதாரியாக சுற்றி கொண்டிருந்தான் அவன் தாத்தாவின் மறைவிற்குப் பின்.

சில வருடங்கள் ஆனது பெற்றோர்க்கு அவனை கண்டறிய. அவனின் குணம் அறிந்த உடன் அவன் தந்தை தான் முதலில் கண்டித்து பார்த்தார்.

அவரின் உபதேசம் காலம் கடந்தது என பாவம் அவர் அறியவில்லை. அவன் தன் தீய சகவாசத்தை அப்போதும் விடவில்லை. அதிகரிக்க தான் செய்தது. எனவே அவன் செலவிற்கு பணம் கொடுப்பதை முழுவதும் நிறுத்தி விட்டார்.

பணத்திலே புரண்டவன் ஒரு நாள் கூட பணம் இல்லாது தவித்து விட்டான். அப்போது ஒரு நாள் அவன் ஃபிரண்ட் உடன் பாரில் அமர்ந்திருந்த நேரம்,

வெளிநாட்டு தம்பதி இருவர்க்கு ஒரு குழந்தை வேலைக்கு வேண்டும் என சொல்லி இருப்பதை பேசிக் கொண்டு இருந்தனர் இருவர். முதலில் கவனிக்காத பிரசாத் சிறிது நேரத்தில் அனைத்தையும் கேட்டான்.

அதற்கு அவர்கள் தரும் பணத்தின் மதிப்பைக் கேட்டவன் மூலை அசுர வேகத்தில் வேலை செய்தது. இதை செய்து கொடுத்தால் பணம் நிச்சயம் என்பதால்,

இதை செய்து கொடுத்தால் என்ன என்ற எண்ணம் மனதில் வேர் விட்டது. அதை செயல்படுத்தவும் நினைத்து அவர்களை அணுகி விலை பேசி தன்னை இத்தொழிலில் இணைத்து கொண்டான்.

அப்படி முதல் குழந்தை கடத்தலின் போது அறிமுகம் ஆனவனே குமார். அவனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். இன்று வரை அவனுக்கு வலது கை போல் இருந்து கொண்டு இருப்பவன்.

இவர்கள் தொழில் அவர்களை பொறுத்த வரை நன்கு தான் போய் கொண்டு இருந்தது. இதில் இப்போது சில குளறுபடிகள் நடக்கிறது. அதில் ஒன்றே இன்று நடந்ததும்.

"என்னாச்சு குமாரு. பாஸ் ஏன் கோபமா போராரு" என்றபடி வந்தான் மணி. "இன்னைக்கு கூட்டிட்டு போன புள்ளைங்க எல்லாம் தப்பிச்சு போயிருச்சுங்க மணி அண்ணே.

அதான் பாஸ் குமார் அண்ணன நல்லா புடிச்சு திட்டிட்டு போரார்" என்றான் உடன் இருந்த இன்னொருவன். "எப்படி ஆச்சு குமாரு. உனக்கு எப்பவும் பக்காவ பிளான் பண்ணி முடிச்சு தானே பழக்கம்.

எப்படி மிஸ் பண்ணுன" என்றான் மணி‌. "எப்படின்னு தெரியலை மணி. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் டா. நம்ம கூட இருக்க எவனோ இதை செஞ்சிருப்பானோ அப்டின்னு தோனிட்டே இருக்குடா" என்றான் குமார் குரலை தாழ்த்தி கொண்டு.

"எப்படி உனக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துச்சு டா" என்றான் மணி. "இல்லை எனக்கு தோனுது டா. இல்லைனா நாம போற ரூட்டு எவனுக்கு தெரியும்.

அது மட்டும் இல்லாம ஒரு சின்ன எவிடன்ஸ் கூட விடாம எப்படி அந்த பிள்ளைகளை கூட்டிட்டு போயிருக்க முடியும்" என்றான் தங்கள் அருகில் இருந்த மற்றவர்கள் மீது பார்வை வைத்து.

"அப்படி ஒருத்தன் நம்ம கூட்டத்தில இல்லை குமாரு. அப்படி இருந்தா அவன் இருக்கவே கூடாது டா" என்றான் மணி மற்றவர்களை பார்த்துக் கொண்டே.

இவர்களை இங்கே புலம்ப விட்ட அந்த குழந்தைகள் அரசு காப்பகம் ஒன்றில் பத்திரமாக சுதந்திரமாய் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அதை அலைபேசி வாயிலாக கேட்ட அவன்,

அங்கிருந்த குமார் மற்ற அனைவரையும் பார்த்து இகழ்ச்சியான சிரிப்புடன் 'இனிமே பாருங்க டா என் ஆட்டத்தை. வச்சு செய்றேன் டா உங்க எல்லாரையும்' என்று எண்ணியபடி அவர்களை குரோதத்துடன் பார்த்து நகர்ந்தான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 12

விண்ணவரும் வீழ்ந்து போவர் அவள் முன்னே ,
வீழாது செல்லவே வீணாய் என் மனம் முயல,
அடியோடு என்னை சாய்த்து சென்றாளே,
அவள் ஓர விழி பார்வை வீச்சிலே!!


தன் முன்னே நீண்டிருந்த கடலை கண்ட கௌதம், தன் மனம் சமன்பட கடற்கரை மணலில் சிறிது தூரம் நடப்பது சிறந்த வழி என எண்ணி சென்றான்.

கடற்கரையை அடைய சாலையை கடந்து கடல் மணலில் கால் புதைய நடந்து கடலின் அருகே சென்றான். பரந்து விரிந்த கடல் அவனின் மனதை சாந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

கால் தொடும் அலைகள் அவன் மனதையும் இதமாய் வருடி சென்றது. இவ்வளவு நேரம் அலை பாய்ந்த மனம் சற்று திசை மாறியதை உணர்ந்தே இருந்தான் கௌதம்.

கௌதம் ஹோட்டலை விட்டு தலையை பிடித்து கொண்டு வெளியே வந்தது முதல் கடல் அலையில் மனதை அமைதிபடுத்தியது வரை அவன் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

"ஏய் ஆருத்ரா அங்க என்ன வெறிச்சு பார்த்துட்டு இருக்க" என தன் தோழி அனுவின் கேள்விக்கு "நீங்க வீட்டுக்கு போங்க டி. எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு.

நான் ஒருத்தரை பார்க்கனும். ரொம்ப இம்பார்டன்ட் மேட்டர். இப்ப தான் ஞாபகம் வந்துச்சு. நான் பாத்துட்டு வந்தர்ரேன். பாய்" என்று அனைவரிடமும் பொதுவாக சொல்லியவள்,

"ஏய் ஆரு... ஏய் ஆரு எங்க டி போற... அடியே ஆருத்ரா நில்லு" என தோழிகள் கூப்பிட கூப்பிட கிளம்பி விட்டாள் அவள் கௌதம் இருக்கும் இடம் நோக்கி.

தோழிகள் 'இவளை என்ன செய்தால் தகும். இப்படி எங்கே என்று சொல்லாமல் கூட ஓடுகிறாள். எப்படியும் வீட்டிற்கு தானே வந்தாகனும். அங்க வச்சு அவளை பாத்துக்கலாம்' என

தங்கள் பார்வையில் இருந்து நொடியில் கூட்டத்தில் மறைந்த ஆருவை திட்டி விட்டு, தங்கள் தோழியை நினைத்து தலையில் அடித்து கொண்டு கிளம்பி சென்றனர்.

அங்கே ஆருவோ தோழிகள் பார்வை வட்டத்தில் இருந்து தப்பித்த பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். ஏனெனில் கௌதம் பக்கத்தில் தான் இவர்கள் இருந்தனர்.

எனவே அவள் தன் தோழிகளுக்கு போக்கு காட்டி விட்டு எதிர் திசையில் சென்று மறைந்தாள். பின் அவர்கள் தன்னை திட்டிக்கொண்டே செல்வதை அவர்கள் வாய் அசைவை வைத்தே அறிந்த ஆரு‌,

அவள் தோழிகளை நினைத்து சிரித்துக் கொண்டே கௌதமை நோக்கி சென்றாள். கௌதம் இன்னும் கடல் அலையில் காலை நனைத்த வண்ணமே நின்றிருந்தான்.

அவன் அருகில் சென்ற ஆரு தொண்டையை செறுமினாள் அவன் கவனத்தை ஈர்க்க. உடலை இங்கு வைத்து விட்டு கனவு உலகில் மனதை பறக்க விட்டிருந்த கௌதம் ஆருத்ரா வந்ததை கவனிக்கவில்லை.

மீண்டும் தொண்டையை செறுமி பார்த்தாள் ஆரு‌. கௌதமிடம் மீண்டும் மௌனமே மிஞ்ச, கடுப்பான ஆரு "ஹலோ கௌதம்... கௌதம்ம்ம்" என கைகளை அவன் முன் ஆட்டினாள்.

இப்போது தான் கௌதம் ஆருத்ராவை பார்த்தான். "ஹே ருத்ரா நீ எங்க இங்க. என்ன ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து லீவ்ல ஊர் சுத்த கிளம்பியாச்சா" என்றான் கௌதம்.

"ம்ம் ஆமாம் கௌதம். மூவி போய்ட்டு அப்படியே பீச் வந்தோம்" என்றாள் ஆரு. "ஃபிரண்ட்ஸ் கூட தானே வந்த ருத்ரா ஆனா நீ மட்டும் தனியா இருக்க மத்தவங்க எங்க" என்று கௌதம் கேட்டான்.

"என் ஃபிரண்ட்ஸ்க்கு நான் உங்க கூட பார்த்த சி.ஐ.டி வேலைலாம் தெரியாது கௌதம். அதான் ஒரு முக்கியமான வேலை வந்திருச்சுனு சொல்லி தப்பிச்சு வந்துட்டேன்" என்றாள் சிரிப்புடன்.

"அதுசரி அப்ப யாருக்கும் தெரியாம தான் என்னை பார்க்க வந்தது, நடுராத்திரியில் சுவர்லாம் ஏறி குதிச்சதா" என்றான் கௌதம் நக்கலாக.

"ஆமா" என்று சிரித்தாள் ஆரு. "சரி நீங்க ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க" என்றாள் கேள்வியாக. "என்ன நான் டல்லா இருக்கனா. என்னாச்சு ருத்ரா உனக்கு. காமெடி பண்ணாத. நான் நார்மல் தான்" என்று விட்டு சிரித்தான்.

"ரொம்ப நடிக்க டிரைப் பண்ணாதீங்க. நீங்க ஹோட்டல்ல இருந்து வரும் போதே நான் உங்களை பார்த்துட்டேன். நீங்க என்னை கிராஸ் பண்ணி தான் போனீங்க.

ஆனால் நீங்க என்னை பாக்குல. ஏன் எதிர்ல என்ன இரன்னு கூட பாக்குல. ரொம்ப ஒரு மாதிரி ரெஸ்ட் லெஸா இருந்தீங்க. என்ன ஆச்சு. விருப்பம் இருந்தா சொல்லுங்க.

சொல்ல இஷ்டம் இல்லைனாலும் ஒன்னும் இல்லை. நோ இஸ்யூஸ்" என்றாள் ஆருத்ரா. ஒரு நிமிடம் அமைதியில் கழிந்தது. கௌதம் ஒன்றும் சொல்லவில்லை.

"ஒரு வேளை உங்க ஃபிரண்ட் சத்யா பத்தின எதாவது இம்பார்டன்ட் டீடெயில்ஸ் கிடைச்சு இருக்கா என்ன" என்றாள் ஆர்வமாக. அவளை திரும்பி பார்த்த கௌதம் அப்போதும் எதுவும் சொல்லவில்லை.

சிறிது நேரம் மெளனத்திகு பின் "ருத்ரா என்னோட வீட்டுக்கு நீ என் கூட வரியா" என்றான் கௌதம் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல். அதை கேட்ட ஆருவிற்கு‌ தான் ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது.

ஆரு‌ அடைந்த அதிர்ச்சியில் "என்னாது..." என்று வாயை பிளந்து விட்டாள். ஆனால் கௌதமோ தான் கேட்டது போல் 'நீ வருவாயா மாட்டாயா' என்ற கேள்வியோடு நிதானமாக ஆருவை பார்த்திருந்தான்.

கமிஷனர் முகிலன் அலைப்பேசியில் யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான். "என்ன ஆச்சு மாறன். இன்னும் ஏன் டிலே பண்றீங்க.

நமக்கு தேவையான அளவுக்கு நீங்க எவிடென்ஸ கலெக்ட் பண்ணி எனக்கு அனுப்பி இருக்கீங்க. அன்ட் நிறேய குழந்தைகளையும் நாம ரெஸ்கூ செஞ்சிருக்கோம்.

இதுக்கு மேல நீங்க ரிஸ்க் எடுத்து அங்க இருக்க வேண்டாம். கிடைச்ச எவிடென்ஸ் வச்சு புரசீட் பண்ணலாமே. இன்னும் நாம‌ எதுக்காக வெயிட் பண்ணனும்" என்றான்.

"நீங்க சொல்றது எனக்கு புரியுது முகிலன். ஆனால் நாம கைவைக்க போறது பிரசாத் மேல‌. அவன் தப்பிக்க என்ன வேணாலும் செய்வான். அவன கையும் களவுமா பிடிக்கனும்‌.

அதுக்காக தான் நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் முகிலன். அதுமட்டுமல்ல இங்க சித்து விக்கினு ரெண்டு பசங்க. அவங்கள மட்டும் எங்கையும் அனுப்பாம வச்சிருக்கான் அந்த பிரசாத்.

இவங்கள வச்சு என்ன பிளான் போட்டு இருக்கானு தெரியல. எங்க யார்க்கிட்டையும் சொல்லாம சீக்ரெடா வச்சிருக்கான் முகில். மத்த வேலைக்கு அனுப்பின பசங்களைளாம் எப்படியும் நாம ரெஸ்கூ பண்ணிடலாம்.

ஏனா அந்த பசங்க எங்க அனுப்பராங்கனு புல் டீடெயில்ஸ் எனக்கு தெரியும். ஆனால் இந்த ரெண்டு பசங்க விஷயம் தான் எங்கையோ இடிக்குது முகில்.

அந்த பிரசாத் சரியான கிருக்கன் ஏடாகூடமா எதாவது யோசிச்சு செஞ்சுருவான். சோ அந்த விஷயத்தை நாம கொஞ்சம் பாத்து தான் டீல் பண்ணனும் முகில்" என்று முடித்தான் மாறன்.

"ம்ம் புரியுது மாறா நீங்க எப்பவும் அலார்டாவே இருங்க என்ன. அங்க இருந்து டீடெயில்ஸ் மட்டும் எடுத்து நீங்க மெயில் பண்ணுங்க. ஓகே வா" என்றான் கார்முகிலன்.

"சரி முகில் நான் இங்க பாத்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க. அந்த பிரசாத் எந்த எக்ஸ்டிரீம்க்கு போனாலும் அவனை நான் ஒரு வழி பண்ணி தான் ஆவேன்.

எனக்கும் அவனுக்கும் தீர்க்கப்படாத கணக்கும் ஒன்னு பாக்கி இருக்கு. எல்லாத்துக்கும் அவன் பதில் சொல்லி தான் ஆகனும் முகில். நான் சொல்ல வைப்பேன்" என்றான் சுவற்றை குத்தி பற்களை கடித்தவனாய்.

"உங்க பீளிங்க்ஸ் எனக்கு புரியுது மாறா‌. பொறுத்து அடிப்போம். ஆனா அது அவனுக்கு மரண அடியா தான் இருக்கனும்" என்ற முகிலன்

"ம்ம் ஓகே மாறா டேக் கேர் எதாவதுனா உடனே என்னை கூப்பிடுங்க என்ன எந்த நேரமா இருந்தாலும் என் டீமோட நான் அங்க இருப்பேன்" என்று முடித்தான்.

"புரியுது முகில். நான் இப்ப ஒரு வேலையா தான் வெளியே வந்தேன். சீக்கிரம் போகலைனா அங்க இருக்கவங்களுக்கு டவுட் வந்துரும். ஏற்கனவே அந்த குமார் எல்லாரையும் சந்தேகப்பட ஆரம்பிச்சுடான்.

அவன் பார்வை என் மேல திரும்பறதுக்கு முன்னாடி நாம‌ எல்லாரையும் முடிக்கனும்" என்றுவிட்டு "ஓகே அடுத்த டைம் நான் கால் பண்ணும் போது எல்லாத்தையும் முடிச்சிட்டேன்ற நியூஸோட கால் பண்றேன்" என்று வைத்து விட்டான்.

முகிலனிடம் கூறியதை தன் மனதிலும் உருவேற்றிய மாறன் தான் பிரசாத்திற்கு திருப்பி கொடுக்கும் நாள் வெகு தொலைவு இல்லை என எண்ணி கொண்டு கிளம்பினான்.

"சித்து அந்த பையன பாக்க பாவமா இருக்கு டா. வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கான். நாம‌ போய் அவன்கிட்ட பேசலாமா" என்றான் விக்கி.

"எனக்கும் பார்க்க பாவமா தான் இருக்கு. வா போய் பேசலாம்' என்ற சித்து விக்கியுடன் அழுதுக் கொண்டிருந்த சிறுவனிடம் சென்றான்.

"தம்பி உன் பேர் என்ன" என்றான் சித்து. "என் பேர் ரோஹித்" என்றான் தேம்பி தேம்பி அழுதுகொண்டே. "நீ எந்த ஊரு ரோஹித். என்ன கிளாஸ் படிச்ச. நீ எப்படி இவங்க கிட்ட மாட்டுன" என்றான் சித்து கேள்வியாக.

"எங்க ஊரு சேலம். அங்க தான் எங்க ஸ்கூலும் இருக்கு. நான் போர்த் ஸ்டான்டர்டு படிக்கிறேன். எனக்கு ஒரு தம்பியும் இருக்கான். அப்பா அம்மா தம்பியலாம் விட்டுட்டு வந்துட்டேன்.

அவங்க என்னை தேடுவாங்கல பாவம்" என இன்னும் அழுதவன் பின் "நான் அந்த கேம் விளையாடாம இருந்துருக்கலாம். எங்க அம்மா அப்பவே சொன்னாங்க கேம் விளையாட வேண்டாம்னு.

நான் தான் கேக்கல. இப்ப இங்க வந்து மாட்டிக்கிட்டேன்" என்று அழுதான். "உண்மை தான் நாங்களும் அந்த கேம் விளையான்டு தான் இங்க வந்து மாட்டிக்கிட்டோம்.

நீ அழாத ரோஹித் நாம இங்க இருந்து எப்படியாவது தப்பிச்சு போயிடலாம். கவலைப் படாதே" என்றான் சித்து தனக்கு தெரிந்த ஆறுதல் மொழியில்.

"ம்ம்" என்றான் ரோஹித். "சரி வா ரோஹித் நாங்க எப்பவும் கடவுள் கிட்ட காப்பாத்த யாரையாவது அனுப்பி வைங்கனு வேண்டுவோம்.

கடவுள் நமக்கு ஹெல்ப் பண்ணுவார். நீயும் வா நாம வேண்டிக்கலாம். சீக்கிரம் இங்க இருந்து தப்பிக்க வழி செய்வார் கடவுள்" என விக்கி எப்போதும் போல் கடவுளிடம் முறையிட அழைத்து சென்றான்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 13

வாழ்வே என்னிடம் எதை சொல்ல விழைகிறாய்,
என் ஆழ்மனதின் ஆசைகள் நிறைவேறாது என்றா?
அல்லது அந்த எண்ணங்களை என்னுள்,
விளைவித்து வேடிக்கை பார்ப்பதே நீயென்றா?


"ருத்ரா.. ஹேய் ருத்ரா" என அதிர்வுடன் நின்றிருந்த ருத்ராவின் முன் தன் கையை ஆட்டினான் கௌதம். "என்னாச்சு ஏன் இப்படி பாக்குற" என்றான்.

"ஆன்... அது நீ நீங்க என்கிட்ட என்ன கேட்டீங்க" என்றாள் ஆருத்ரா தடுமாற்றத்துடன். அவளிடம் அப்படி என்ன தப்பா சொன்னோம் என்று யோசித்தான் கௌதம்.

பின் அவள் தான் கூறியதை தவறாக புரிந்து கொண்டு இருப்பாள் போல் என்பதை புரிந்து கொண்டான். அவளின் தயக்கம் எதனால் என்று புரிந்த கௌதம்

"உன்னை என்னோட வீட்டுக்கு இன்வைட் பண்ணுறேன். டோன்ட் வொர்ரி வீட்ல எங்க அம்மா இருக்காங்க. சோ நீ பயப்பட வேண்டாம்" என்றான் சிரிப்புடன்.

அவனை தான் தவறாக புரிந்து கொண்டோம் என்று உணர்ந்த ஆரு "சாரி என்ன விஷயம்னு நீங்க சொல்லாம திடீர்னு வீட்டுக்கு கூப்பிடவும்" என்று இழுத்தாள் ஒரு அசட்டு புன்னகையுடன்.

"என்ன என்னைய தப்பா நினைச்சிடியா. பரவாயில்லை இதுல என்ன இருக்கு. இப்ப உலகம் இருக்க நிலைமைல யாரையும் எடுத்த உடனே நம்பினா தான் தப்பு.

சந்தேகப்பட்டு கேள்வி கேக்குறது கரெக்ட். அதனால நீ இதுல அன் ஈசியா பீல் பண்ண ஒன்னும் இல்லை" என்றான் கௌதம் அவளை புரிந்தவனாய்‌.

"அன்ட் நீங்க இன்னும் என்னை இன்வைட் பண்ணுறதுக்கான ரீசன் சொல்லல கௌதம்" என்றாள் கேள்வியாக. "அது.." என்று இழுத்து விட்டு "வீட்ல போய் பேசிக்கலாமே. இங்க வேண்டாமே புரிஞ்சுக்க ருத்ரா பிளீஸ்" என்றான் தயக்கமாக.

"அவன் ஏதோ முக்கியமான விஷயத்தை தன்னிடம் பகிரவே எண்ணுகிறான் போல. அது இங்கே வைத்து பகிரும் விஷயம் இல்லை போல" என்று அவனின் எண்ணத்தை சரியாக புரிந்த ஆரு‌ "ஓகே" என்றாள் புன்னகையுடன்.

"வா ருத்ரா என் பைக்கிலே போகலாம். உனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே" என்றான் கௌதம் ஆருவிடம்‌. "அதுலாம் ஒன்னும் இல்லை கௌதம்.

அப்புறம் அன்னைக்கு கூட நீங்க தானே பத்திரமா என்னை வீட்டில‌ விட்டீங்க. உங்கள நான் நம்புறேன் கௌதம். பைக்லையே போகலாம்" என்றாள் ஆரு கௌதமை அறிந்தவளாக.

தன்னை பற்றிய ருத்ராவின் எண்ணத்தை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் கௌதம். பின் ஆருத்ராவை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான் அவன்.

அவன் வரும் போது இருந்த மனநிலை தற்போது அப்படியே மாறியது போல் இருந்தது. ருத்ராவின் அருகாமை அவனின் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அவளிடம் ஏன் தன் மனம் பெரிதும் ஆறுதல் தேடுகிறது என அவன் உணரவில்லை. ஆனால் உணரும் நாள் வெகு அருகில் வரப் போவதையும் அவன் அறியவும் வாய்ப்பில்லை.

அதே குதூகலமான மனநிலையுடன் அவளுடன் தன் வீட்டின் முன் சென்று நின்றான் கௌதம். அப்போது தான் அவனுக்கு தன் அன்னையின் நினைவே வந்தது.

'ஐயையோ இதை எப்படி நான் மறந்தேன். இந்த அம்மா ஒரு பொண்ணை பார்த்தேனு நான் சொன்னதுக்கே கடத்தல் வரைக்கும் போச்சு.

இப்ப இவளை வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்கேன். என்ன செய்ய போறாங்களோ' என மனதிற்குள் புலம்பியவன் ஆருவிடம்‌ எச்சரிக்கை செய்யலாம் என எண்ணி திரும்புவதற்குள்,

ஆரு யோசனையாக நின்ற கௌதமை கண்டு 'சரி நாமலே காலிங் பெல்லை அழுத்துவோம்' என்று மணியை அழுத்திவிட்டாள்.

ரேவதியும் உடனே கதவை திறந்து விட்டார். மற்ற தாயாக இருந்தால் வெளியே தன் மகன் ஒரு பெண்ணுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சண்டை இடுவர் குறைந்தது யாரென கேட்டிருப்பர்.

இங்கு ரேவதியும் அதிர்ச்சி அடைந்தார் தான்‌. ஆனால் ஆனந்த அதிர்ச்சி. தன் மகன் ஒரு பெண்ணுடன் நிற்கவும் அவள் தன் மகன் விரும்பும் பெண்ணாக தான்‌ இருப்பாள் என்று வழக்கம் போல் ஒரு முடிவுக்கே வந்து விட்டார் ரேவதி.

கௌதம் அவள் யாரென அறிமுகப்படுத்தும் முன் "கௌதம் கண்ணா பரவாயில்லை டா நீ தேரிட்ட" என கௌதமை நோக்கி சொல்லி விட்டு "நீ வலது கால் எடுத்து வச்சு உள்ள வாமா" என்றார் ஆருவிடம்‌.

ஆனால் அதற்கும் அவளுக்கு அந்த வாய்ப்பலிக்காது அவளை தானே கையே பிடித்து அழைத்து வந்தார். "ஆமா உன் பேர் என்னம்மா தங்கம்" என்றார் கன்னத்தில் கை வைத்து திருஷ்டி கழித்தவாறு.

"என் பேரு ஆருத்ரா ஆன்டி" என்று ஆருவின்‌ பதிலிற்கு ரேவதி திரும்பி கௌதமை 'என்கிட்ட பொய் சொல்லிட்டல டா மகனே' என்று ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

‌ "அம்மா" என்று ஆரம்பித்த கௌதமை கை நீட்டி தடுத்து விட்டு ஆருவை‌ நோக்கி திரும்பி "அழகா லட்சணமா இருக்க டா. அப்புறம் ஆன்டிலாம் வேணாம் தங்கம், சும்மா அத்தைனே கூப்பிடு என்ன" என்றார் வாஞ்சையுடன்.

அவரை புரியாத பார்வை பார்த்த ஆரு‌ எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள். இதற்கு மேலே தன் அன்னையை பேச விட்டாள் அவ்வளவு தான் என்று உணர்ந்த கௌதம்,

"அம்மா எங்களுக்கு குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வரியா. ரொம்ப டயர்டா இருக்கு" என்று தன் அன்னையை ஆருவிடம்‌ இருந்து அப்புறப்படுத்த நினைத்து சொன்னான்.

"அட இருடா மகனே. கொஞ்ச நேரம் நான் என் மருமகள்ட் பேசக் கூடாதா. நீ மட்டும் தான் பேசுவியா என்ன. உனக்கு ஏன்டா இவ்ளோ பொறாமை" என கௌதமை முறைத்தார் ரேவதி.

தன் அன்னையை நினைத்து தலையில் அடித்துக் கொண்ட கௌதம் "மா தயவு செஞ்சு போய் எங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வரியா" என்றான் பல்லை கடித்து கொண்டு.

தன் மகனை முடிந்த அளவு முறைத்து விட்டு ஆருவை‌ பார்த்து "இருடா தங்கம் நான் போய் காபி எடுத்துட்டு வர்றேன். நான் யார்கிட்டேயும் பேசுனா அவனுக்கு பொறுக்காது" என்று திட்டி விட்டு சென்றார்.

தன் அன்னை சென்றவுடன் ஆருவிடம்‌ "சாரி ருத்ரா என் அம்மா கொஞ்சம் ஆர்வ கோளாறு. நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரவும் நாம லவ் பண்றோம்னு நினைச்சு இப்படி பேசிட்டு போறாங்க.

ரியலி சாரி ருத்ரா" என்றான் சங்கடத்துடன். அப்போது தான் ஆருவிற்கு புரிந்தது ஏன் கௌதமின் அன்னை தன்னிடம் அப்படி நடந்து கொண்டார் என.

"ஏன் நீங்க இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததே இல்லையா" என்றாள் கேள்வியாக. "இல்லை ருத்ரா எனக்கும் பொண்ணுங்களுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான்.

என்னமோ எனக்கு இந்த வேலை பிடிச்ச அளவு வேற எது மேலையும் இன்ட்ரஸ்ட் வரலை. என் அம்மா மேரேஜ் பண்ணிக்க சொல்லியும் நான் அவங்கல கண்டுக்கல.

அதனால நான் எந்த பொண்ணை பத்தியாவது பேசுனாலே போதும் சம்மந்தம் பேசட்டானு கேட்பாங்க. இதுல உன்ன நான் வீட்டுக்கே கூட்டிட்டு வரவும் இப்படி நினைச்சிட்டாங்க‌. அகைன் ரியலி சாரி ருத்ரா" என்றான் கௌதம்.

இவர்கள் இங்கு பேசிக் கொண்டு இருக்கும் போதே ரேவதி காஃபியோடு வந்துவிட்டார். "எடுத்துக்கடா தங்கம்" என்று கொடுத்து விட்டு

"சரி மா நீயும் என் பையனும் எப்பைல இருந்து லவ் பண்றீங்க. நான் எப்ப உங்க வீட்டுக்கு வந்து பேசட்டும்" என்றார்.

அவள் கௌதமை திரும்பி பார்த்தாள். அங்கே அவன் அவஸ்தையுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அதை சிரிப்புடன் பார்த்து விட்டு "ஆன்டி ஆன்டி ஒரு நிமிஷம்.

நான் உங்க பையனோட ஃபிரண்ட் மட்டும் தான். நாங்க லவ்லாம் பண்ணலை.‌ அன்ட் உங்க மனசு புரியுது நான் உங்க பையன்கிட்ட கண்டிப்பா இத பத்தி பேசறேன். ஓகேவா" என்றாள் ஆதூரமாய்.

"ஓஓஓ ஃபிரண்ட் மட்டும் தானா" என்றார் ஏமாற்றத்துடன். பார்த்த இருவருக்கும் ஏதோ போல் ஆகி விட்டது சட்டென அவர் முகம் மாறிய விதத்தில். "அம்மா பிளீஸ் எப்பவும் நீங்களே இப்படி ஒரு முடிவுக்கு வந்து அப்செட் ஆகுறீங்க.

பர்ஸ்ட் நான் என்ன சொல்ல வரேன்னு கேட்டுட்டு அப்புறம் பேசுங்க. அம்மா பிளீஸ் முகத்தை இப்படி வச்சிக்காதீங்க" என்றான் கௌதம் தன் அன்னையை அனைத்தவாறு.

ஒரு வழியாக சமாதானம் அடைந்த ரேவதி "போடா போக்கத்தவனே நான் எங்க பீல் பண்ணுனேன். ரேவதி சோகமா இருந்தா வரலாறு தப்பா பேசாதா டா. அதுலாம் ஒன்னும் இல்லை.

தங்கம் நீ போறப்ப அவனுக்கு நல்லா புத்தி சொல்லிட்டு போமா. அவன் ஒரு கல்யாணத்த செஞ்சானா நான் நிம்மதியா இருப்பேன்ல" என்று ஆருவிடம் தன் மனக் குமறலை சொல்லி கௌதமை முறைத்து விட்டு சென்றார்.

"சாரி ருத்ரா" என்றான் மீண்டும் கௌதம்.‌ "பரவாயில்லை கௌதம். ஆனா அம்மா சொல்றதையும் கேட்கலாம்ல. பாவம் அவங்க எப்படி அப்செட் ஆனாங்க பாத்திங்கல" என்றாள் ஆரு‌.

"நீயுமா‌. ம்ம் எனக்கும் புரியுது தான் ருத்ரா. அம்மாட்ட நான் பேசிக்கிறேன். அதை விடு நான் எதுக்கு உன்னை கூட்டிட்டு வந்தேனு கேக்க மாட்டியா" என்றான் கௌதம்.

"ஆமா சொல்லுங்க கௌதம். நானும் பீச்ல இருந்து கேட்டுட்டு தான் இருக்கேன். நீங்க தான் இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க" என்று விட்டு "சத்யா பத்தின நியூஸ் எதுவுமா" என முடித்தாள் ஆரு‌.

"எஸ் ருத்ரா இது சத்யா பத்தின நியூஸ் தான். அதான் என்னால ஜஸ்ட் லைக் தட்னு எங்கையும் பேச முடியலை. அந்த அளவுக்கு கொஞ்சம் சீரியஸ் கூட. என்னால யார்கிட்டேயும் இதை ஷேர் கூட பண்ண முடியாது.

யாரையும் நம்பவும் முடியல ருத்ரா. இதே இது நீனா எனக்கு பிரச்சினை இல்லை. உன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. சோ அதான் வீட்டுக்கு போலாம்னு சொன்னேன்" என்றான் கௌதம்.

'தன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து உள்ளானுனா' என்று எண்ணிய ஆருவிற்கு சொல்ல முடியாத இதம் மனதினுள் சாரலாய் பரவுவியது.

"என்ன நடந்துச்சு கௌதம்" என்றாள் ஆரு தன்னை மீட்டு கொண்டு. "சத்யா யாரையோ பார்க்க போய்ட்டு வரப்ப தான் மிஸ் ஆகி இருக்கான்"

என அவன் தனக்கு கிடைத்த அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவும் அவள் முகம் ஏதோ யோசனையை தத்தெடுத்தது.

அவளின் அமைதியை கண்ட கௌதம் யோசனையின் போது அவள் முகம் காட்டும் வர்ணஜாலத்தை தன்னை மறந்து பார்த்திருந்தான். இதில் தூரத்தில் இருந்து தன்னையே குறுகுறுவென பார்த்தா அன்னையை அவன் கவனிக்கவில்லை.

'உன்னை எனக்கு தெரியாதா மகனே. சீக்கிரம் நீயே என்கிட்ட வந்து சொல்லுவ பாரு' என அவனை கண்ட ரேவதி மகிழ்வுடன் எண்ணி கொண்டு தன் அறைக்கு சென்றார்.

-தொடரும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 14

எம் கானகத்து கம்பெல்லாம்
மூடர்கூட முகலினமாய் முடங்கி,
முற்போக்கென முள் புதர்தனில் புழுங்கிடுதே,
மீட்டிடுவாய் என மடல் தருவித்துள்ளேன்;
மீளும் மாட்சிமை கிட்டுமோ இறைவா?


தமிழகத்தில் ஒரு ஊரில் உள்ள சிறுவன் ஒருவன் அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். "தம்பி சாப்பிடாம கூட அப்படி என்ன பா விளையாட்டு உனக்கு" என்ற தாயின் வார்த்தைகள் காதில் ஏறவில்லை.

ஏன் தன் தாய் மீது பெரும் கோபமே எழுந்தது. அவனை பொருத்த வரை அது தான் அவனுக்கு எல்லாம். அவன் பெற்றோர்கள் வாங்கி தர மறுக்கும் பல பொருட்களை அவனிற்கு தந்த விளையாட்டு அல்லவா.

ஆம் அவன் இந்த விளையாட்டை விளையாடி ஜெயிக்கும் ஒவ்வொரு அளவிலும் அவனிடம் கேட்கப்படும் கேள்வி இதுவே-

"கங்கிராஜுலேசன்ஸ்!! நீங்கள் இந்த லெவலை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். உங்களுக்கு பிடித்த பொருளை தேர்ந்தெடுக்கவும். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்து பரிசை வெல்லுங்கள்"

இதை கண்டு மகிழும் சிறுவர்களும் தங்களுக்கு பிடித்த பொருளை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். இதுவே இந்த சிறுவன் முதல் பல சிறுவர்களின் எண்ணம்.

இந்த சிறுவனும் தான் வெற்றி பெற்றவுடன் தனக்கான பொருளை தேர்வு செய்துவிட்டான். அதற்கு பின் வந்த கேள்விகளுக்கும் பதில் தந்து முடித்தான்.

அப்போது "வாழ்த்துக்கள்!! நீங்கள் இந்த விளையாட்டின் இறுதி லெவலிற்கு வந்து விட்டீர்கள். இதை விளையாடி முடித்தால் உங்களுக்கு பெரிய பரிசு ஒன்று காத்திருக்கிறது"

என்று வந்தது‌. அதை கண்டு மகிழ்ந்த சிறுவன் அதை நாளை விளையாடி பரிசை எப்படியும் பெற வேண்டும் என்று கண்ணில் கனவோடு சென்றான்.

பாவம் இந்த சிறுவன் அறியவில்லை தான் ஒரு மீளாத புதை குழி நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம், பரிசாய் தனக்கு என்ன காத்திருக்கிறது என.

இந்த விளையாட்டின் பெயர் "மேட் மேச்சோ(MAD MACHO)". இதை விளையாடும் சிறுவர்களின் வயது 9லிருந்து அதிகபட்சம் 14 வரை இருக்கலாம்.

அதற்கு மேல் இருந்தால் இந்த செயலி எடுத்து கொள்ளாது. ஏனெனில் இந்த செயலி திறந்ததும் முதலில் கேட்பது சிறுவர்களின் வயதை தான்.

ஏதாவது ஒரு சிறுவன் விளையாடினான் என்றால் அவனை வைத்து அவன் நண்பர்கள் உறவினர்கள் என அவன் வயது ஒத்த சிறுவர்களையும் சேர்த்து விட சொல்லி கட்டளையும் வரும்.

அப்படி தான் பல சிறுவர் சிறுமிகளை சென்று சேர்ந்துள்ளது இந்த விளையாட்டு. இதிலே இந்த செயலியை மறைந்து வைக்கும் ஹைடு ஆப்ஸனும் சொல்லி கொடுக்கப்படும்.

எனவே பெற்றோர்கள் கண்ணில் இருந்து மறைத்து விளையாட எளிதாக போனது சிறார்களுக்கு. பெற்றோரும் கவனிக்காமல் விடுகின்றனர்.

இந்த விளையாட்டு முப்பது லெவல் மட்டுமே கொண்டது. ஒரு நாள் ஒரு லெவல் மட்டுமே விளையாட முடியும். ஆனால் அந்த லெவலிலும் எளிதான விளையாட்டுகள் தான் இருக்கும்.

அதை விளையாடும் போது இடையிடையே சில கேள்விகள் கேட்கப்படும் மற்றும் ஜெயித்த பின் கேட்கப்படும்.

அந்த கேள்விகள் பொதுவாக அந்த சிறுவனின் ஊர், பெற்றோர் முதல் ஆரம்பித்து அவனுக்கு பிடித்த பொருட்களில் வந்து நிற்கும்.

மேலும் அவன் அன்றாடம் செய்யும் வேலைகளையும் சொல்ல வேண்டும். ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் அவனிடம் சிறிது சிறிதாக வாங்கப்படும்.

ஏன் அவன் விளையாட்டில் மூழ்கும் போது அவன் கூறியது எதுவும் அவன் நினைவில் கூட இருக்காது. அந்த அளவு சுவாரஸ்யமான விளையாட்டுகள் தந்து அதிலே மூழ்கடித்து விடுவர்.

இப்படி ஒவ்வொரு தகவல்களாக திரட்டி கடைசியில் முப்பதாவது லெவல் வரும் போது அவன் தங்களோடு வந்து விட வேண்டும் என்பது கட்டளையாக வரும்.

மறுத்து பேசும் சிறுவர்களிடம், வீட்டில் இருப்பவர்களிடம் அவன் செய்த தவறுகளை சொல்லி விடுவோம் என்று முதலில் மிரட்டுவர்.

சிறுவர்கள் பயம் கொள்வர். ஆனால் வரமாட்டேன் என்று தான் சொல்லுபவர்கள் அதிகம். அந்த சிறுவர்களிடம் வீட்டில் உள்ள ஆட்களின் அவன் கூறிய விவரங்களை கூறி,

பெற்றோர் உடன் பிறந்தவர்கள் என அனைவரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டுவார்கள். அப்படி சிறிது சிறிதாக மிரட்டி பணியவும் செய்து விடுவர்.

இதுவே மேட் மேச்சோ விளையாட்டு. இந்த விளையாட்டை கண்டு பிடித்தது பிரசாத் மற்றும் அவனின் நண்பனும் தான்.

இந்த தொழிலை ஆரம்பித்த புதிதில் பிரசாத்தும் வெளியே வந்த சிறுவர் சிறுமியர், ரோட்டில் விளையாடும் சிறுவர்களையே கடத்தி வந்தான் குமார் உதவியுடன்.

ஆனால் இப்படி நேரடியாக சென்று கடத்துவதால் தாங்கள் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்த பிரசாத், புது வகையான இந்த செயலியை உருவாக்கினான்.

இந்த செயலி மூலம் தாங்கள் சிறுவர்களை தேடி செல்லாது அவர்களே தங்களை தேடி வருமாறு செய்தான். சிறு சிறு பரிசுகளை தந்து மொத்தமாக அந்த சிறுவர்களை தனக்கு அடிமை ஆக்கினான்.

பின் அவர்களை வைத்து பணம் பார்த்தான். அப்படி வந்து சேர்ந்தவர்களே அங்கிருந்த பல சிறுவர்கள்.

முதலில் தன் தேவைக்கென செய்ய ஆரம்பித்தவன் தற்போது அதை தன் தொழில் என மாற்றிக் கொண்டான்.

ஒரு விளையாட்டு செயலியை உருவாக்கும் அளவு திறமை கொண்டவன் அந்த அறிவை நல்ல முறையில் பயன்படுத்தாமல் தீய வழியில் பயண்படுத்தினான்.

தான் இந்த கடத்தல் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறக்க வேண்டும் என வெறிக் கொண்டான். இதை அவன் தன் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது பார்த்து கொண்டான் சாமர்த்தியமாக.

தன்னை யாரும் நெருங்க முடியாது என மமதையில் இருப்பவன் விரைவில் மாட்டப் போவான் என்று நினைத்திருக்க மாட்டான்.

அங்கே குமாரின் முன் வந்து நின்றான் வெற்றி அந்த கடத்தல் கும்பலில் இருக்கும் ஒருவன். "குமார் அண்ணா என்ன பண்றீங்க" என்றவாறு.

"வாடா சும்மா தான்" என்றான் மழுப்பலாக குமார். "சரிணே. ஆமா அந்த ரெண்டு பயலுகல மட்டும் ஏன் அனுப்பாம வச்சிருக்கோம். இந்த டிரிப் ஏத்தி விட்டர்லாம்ல" என்றான் வெற்றி.

"அதுலாம் உனக்கு எதுக்கு. உனக்கு என்ன வேலை குடுத்தமோ அதை மட்டும் பாரு. சும்மா தேவை இல்லாத கேள்விலா கேட்க கூடாது‌. புரியுதா" என்றான் குமார் மிரட்டலாக.

"சரிணே" என்று முனகி கொண்டே சென்றான் வெற்றி. அப்போது அங்கே வந்த மணி "என்ன குமார் யாரை முறைஞ்சு பாத்துட்டு இருக்க" என்றான்.

"நேத்து பாஸ் நம்மல கூப்பிட்டு ஒரு விஷயம் சொன்னாருல்ல, அதான்டா அந்த மாறன் மேட்டரு. ஒரு வேளை அந்த பய இவனா இருக்குமானு யோசிக்கிறேன்" என்றான் யோசனையோடு.

அப்போது மணிக்கு நேற்று நடந்தது எல்லாம் நினைவு வந்தது. நேற்று திடீரென வந்த பிரசாத் குமாரரையும் மணியையும் தனியாக அழைத்து பேசினான்.

பிரசாத்தின் நம்பிக்கைக்கு உரிய இரண்டு நபர்கள் என்றால் அது குமாரும் மணியும். மணி என்னதான் குமாரிற்கு பிறகு வந்து சேர்ந்தாலும் அவனை போன்றே விசுவாசமானவன்.

அவனின் ஒவ்வொரு செயலும் இவர்கள் இருவரை வைத்தே நடத்தப்பட்டு வருகிறது. அப்படி நேற்று வந்த பிரசாத் சொன்ன செய்தி இதுதான்.

முதல் நாள் இரவு வந்த பிரசாத் இருவரையும் வரவழைத்து அமைதியாக யோசித்து கொண்டு நின்றான். பின் "இன்னைக்கு கமிஷனர் ஆஃபிஸ்ல இருக்க நம்ம ஆள் போன் பண்ணுனான்.

மாறன் அப்படினு ஒரு ஆபிசர் நம்ம கூட்டத்தில இருந்துக்கிட்டு அங்க தகவல் சொல்றதா சொன்னான். நம்ம கூட்டி போன பசங்க வேற மூனு தடவை மிஸ் ஆகிட்டாங்க

இங்கையும் அடிக்கடி கன்புயூசன் வருது. ஒரு பையன் தப்பிக்க பாத்திருக்கான். இங்க என்ன தான் நடக்குது" என்றான் இருவரையும் முறைத்து கொண்டே.

"எனக்கும் நீங்க சொன்ன மாதிரி யாரோ உள்ள இருந்துகிட்டு இங்க நடக்கற குழப்பத்துக்கும் அவனே காரணமா இருப்பான்னு தோனுது பாஸ்" என்றான் மணி‌ அமைதியாக.

"ம்ம். இப்ப வந்து சொல்லுங்க.சந்தேகமா இருக்குனு. இங்க பாரு மணி நீங்க என்ன பண்ணுவீங்க ஏது பண்ணுவீங்கனு எனக்கு தெரியாது. ஆனா வந்தவன் யார்னு கண்டுப்பிடிச்சு சொல்லனும்.

அவன் எந்த கொம்பனா இருந்தாலும் சரி அவனை கொன்னு இந்த மண்ணுல புதைக்காம விட மாட்டேன்" என்று ஆவேசமாக சொல்லி சென்றான்.

இவன் கோபத்தில் இரைந்ததை இரு விழிகள் 'அவ்வளவு சீக்கிரம் என்னை கண்டுபிடிக்க முடியாது டா. நீ என்ன கொல்ல போறியா.

என் நிழலை கூட உன்னால நெருங்க முடியாது டா. யாருன்னு நினைச்ச மாறன் டா' என மனத்திற்குள் அவனை நக்கலுடன் நினைத்து பார்த்தது.

நேற்று நடந்ததை நினைவு கூர்ந்த மணி "ஆமா டா. ஆனா நீ எப்படி இவன் தான் அவனா இருப்பான்னு சொல்ற" என்றான் யோசனையுடன்.

அதற்கு குமார் கூறிய பதிலில் மணியே சிரித்து விட்டான். "எப்படி சொல்றேன்னா முதல் காரணம் அவன் பேரு வெற்றினு வருது பாரு. ஒரு வேளை முழு பேரு வெற்றிமாறனா இருக்கலாம்ல" என்றான்.

"என்ன குமாரு இது. படம் நிறைய பாப்பியோ. இப்படிலாம் யோசிக்கிற. இங்க வேவு பாக்க வரவன் அவன் பேரை சுலபமா கண்டுபிடிக்கிற மாதிரியா வைப்பான்" என்றான் சிரிப்புடன்.

"இந்த காரணம் வேனா நீ சொன்ன மாதிரி ஒத்து வராம போகலாம். ஆனா அவன் தான் மாறனா இருப்பான்னு சொல்ல இன்னொரு முக்கியமான காரணம் என்னன்னா,

அந்த குழந்தைங்க மிஸ் ஆனப்பலா அவனும் என் கூட வந்திருக்கான். அப்புறம் அடிக்கடி அவனுக்கு தேவை இல்லாத விஷயத்தில மூக்க நுழைக்கிறான்.

நீ வந்தப்போ கூட அவன் அந்த பசங்கல ஏன் இங்க வச்சிருக்கோம் இன்னும் அனுப்பாம அப்படி இப்படி கேட்டான். அதான் என் சந்தேகம் அவன்‌ மேலன்னு சொல்றேன்" என்று முடித்தான் குமார்.

அவன் கூறியதை கேட்ட மணி யோசனையுடன் "நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் குமாரு. எதுக்கும் நாம அவன் மேல ஒரு கண்ணு வச்சுப்போம்.

அப்பதான் அவன் எதாவது பண்றானா அப்டின்னு கண்டுபிடிக்க முடியும். அவன் தான் அந்த மாறன்னு மட்டும் கன்பார்ம் ஆகட்டும் அப்ப காட்டலாம் நாம யாருன்னு" என்று முடித்தான் கோபமாக.

இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த அந்த இரு விழிகளுக்கு சொந்தகாரனான மாறன் 'கண்டுபிடிக்க போறியா குமார்.

உன் பாஸ்ஸாலேயை என்னை ஒன்னும் பண்ண முடியாது. நீ என்னை என்ன பண்ண போறனு நானும் பாக்குறேன்டா" என நினைத்து கொண்டே சென்றான்.

-தொடரும்
 

vijirsn1965

Bronze Winner
Kuzhanthaikal avarkalaakave veettai vittu veliyil varuvathu romba kodumai oru app yai uruvaakkum alavu thiramai udaiyavan athai thavaraana vazhikku payan paduththuvathu athai vida vedhanai tharukirathu ud very nice mam arumai viji
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kuzhanthaikal avarkalaakave veettai vittu veliyil varuvathu romba kodumai oru app yai uruvaakkum alavu thiramai udaiyavan athai thavaraana vazhikku payan paduththuvathu athai vida vedhanai tharukirathu ud very nice mam arumai viji
True viji mam
Thank you so much:love::love:
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூறல் - 15

கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கட,
காற்றும் ஆசை கொள்ளுதடி;
ஏனோ அதனால் தான் காற்றும்,
உன் சிகை கோதி சிருங்காரம் மீட்டி செல்லுதோ?


ஆருத்ரா கௌதம் தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து பார்த்தாள். ஒரு முடிவில் தன் யோசனையை கைவிட்ட ஆரு கௌதமை நோக்கினாள்‌

"கௌதம்" என்று அழைத்தும் தன்னை பார்த்து கொண்டே ஏதோ யோசனையில் இருந்த கௌதமை வித்தியாசமாக பார்த்தாள் ஆரு‌.

'சரி அவரும் இந்த கொலை எப்படி நடந்ததுனு யோசிக்கிறார் போல' என எண்ணிய ஆரு "கௌதம்" என்றாள் சத்தமாக. ஆரு அழைத்ததில் அவனை சுற்றிய மாயவலையை அறுத்தது.

"ஆங்... ஆ என்ன ருத்ரா. என்ன சொன்ன" என்றான் கௌதம். "என்னாச்சு கௌதம் உங்களுக்கு என்ன யோசிச்சீங்க. நான் கூப்டத கூட கவனிக்காமா" என்றாள் ஆரு.

"அது ஒன்னும் இல்லை ருத்ரா சும்மா தான். நீ சொல்லு இவ்ளோ நேரம் என்ன யோசிச்ச" என்றான் தன் தடுமாற்றத்தை மறைத்தவாறு.

"நீங்க சொன்னத தான் ஒன்னோடு ஒன்னு கனெக்ட் பண்ணி பாத்தேன் கௌதம். இதுல நீங்க கொஞ்சம் முயற்சி செஞ்சு ஸ்டெப் எடுத்தா,

நமக்கு இந்த கேஸ்ல கிளாரிபிக்கேசன் கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு" என்றாள் ஆரு. அவளை குழப்பமாக ஏறிட்ட கௌதம்

"நீ என்ன சொல்ல வர ருத்ரா எனக்கு புரியல. இதுல நான் என்னால முடிஞ்ச ஸ்டெப் எடுத்துட்டு தான் இருக்கேன். உனக்கே தெரியும்ல" என்றான் இயலாமையுடன்.

"கௌதம் நீங்க தான் சத்யாவோட பெஸ்ட் ஃபிரண்ட். இன்னும் சொல்ல போனா ஆல்மோஸ்ட் டென் இயர்ஸ் நீங்க உங்க ஃபிரண்ட் கூட ஸ்பென்ட் பண்ணி இருக்கீங்க.

சோ சத்யா உங்கிட்ட மோஸ்ட்லி எல்லாத்தையும் சொல்லி இருப்பார். அப்ப அவர் ஸ்கூல் மேட் ஆர் இடையில இண்டர்டுயூஸ் ஆன ஃபிரண்ட் இந்த மாதிரி யாராவது ஐ.பி.எஸ் ஆபிசரா இருக்கறத உங்கிட்ட சொல்லி இருக்கலாம்.

ஜஸ்ட் நீங்க நல்லா உங்க மெமரிய நல்லா ரீவைண்ட் பண்ணி பாருங்க. உங்களுக்கு தெரியாம போக சான்ஸே இல்ல" என்றாள் ஆருத்ரா.

"நீ சொல்றது சரிதான் ருத்ரா. அவன் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிருவான் எதையும் மறைச்சது இல்லை.

ஆனா அதுமாதிரி அவன் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் பத்தி நான் அவ்வளவா அவன்கிட்ட கேட்டதும் இல்லை அவன் சொன்னதும் இல்லை மா" என்றான் கௌதம் தலையை பிடித்து கொண்டு.

"கௌதம் ஒரு நிமிஷம் என்னை பாருங்க" என அவன் தாடையை பிடித்து நிமிர்த்தினாள் ஆரு. அவனின் இந்த வருத்தம் சுமந்த முகம் ஏதோ செய்தது அவளை.

"கௌதம் ரிலாக்ஸ். நான் சொல்ற மாதிரி யோசிச்சு பாருங்க. சத்யா உங்ககிட்ட அவர் ஃபிரண்ட் யாராவது இந்த காம்படீடிவ் எக்சாம்க்கு படிக்கிறாங்க அந்த மாதிரி சொல்லிருக்காரா‌.

இப்படி யோசிங்க. நான் என்ன சொல்றேன்னு புரியுதா" என்றாள் ஆரு கௌதமின் முகம் கண்டு கெஞ்சலாக. அதை கேட்ட கௌதமும் சத்யா தன்னிடம் எப்போதாவது அப்படி சொல்லி இருக்கானா என யோசிக்க ஆரம்பித்தான்.

அவன் நினைவுகள் கடந்த பத்து ஆண்டுகளாக சத்யாவோடு கழித்த நாட்களை எண்ணி பார்த்தது. அவன் தன்னிடம் அது போல் ஏதும் கூறி இருக்கிறானா என பலவாறு யோசித்து பார்த்தான் கௌதம்.

அவன் சிந்தனை ஓட்டத்தை தடை செய்வது போல் வந்து சேர்ந்தார் ரேவதி. "என்னடா கண்ணா ரொம்ப யோசிக்கிற‌. எந்த கோட்டைய பிடிக்க போற" என்றார் கிண்டலாக.

"அம்மா கொஞ்சம் சும்மா இரேன். நாங்க முக்கியமான ஒரு விஷயத்தை பேசிட்டு இருக்கோம். நீ இடையில பூந்து‌ கலைச்சு விட்ராத" என்றான்‌ முன்னெச்சரிக்கையாக.

இல்லையெனில் ரேவதி கதை பேச அமர்ந்து விட்டால் அனைத்தையும் குழப்பி விட்டு சென்று விடுவாரே. "சரி சொல்லு நானும் எனக்கு தெரிஞ்ச எதாவது யோசனை சொல்றேன்" என்றார் ரேவதி.

"ஐயோ அம்மா நீ முதல்ல கிளம்பு இருக்கறதையும் குழப்பி விடாம" என்றான் கௌதம். இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆரு

"ஆன்டி கௌதம் சும்மா சத்யாவோட ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் எடுத்துட்டு இருக்காரு" என்றாள். "உனக்கும் அவனை தெரியுமா தங்கம். அவன் நல்ல பிள்ளை டா.

திடீர்னு இப்படி ஆக்சிடென்ட்ல போவானு எதிர்பாக்குல" என்றுவிட்டு "ஆமா எதுக்கு அவன் பிரண்டலாம் எதுக்கு மா லிஸ்ட் எடுக்குறீங்க" என்றார்.

"அது ஒன்னும் இல்லை ஆன்டி சத்யாவோட காரியத்துக்கு சிலர கூப்படலானு கௌதம் நினைக்கிறாரு அதான்" என்றாள் ஆரு விளக்கமாக.

"கூப்பிட வேண்டியது தானே அதுக்கு ஏன் இவன் தலைல கைய வச்சிட்டு உக்காந்துட்டு இருக்கான்" என்றார் ரேவதி கேள்வியாக.

"அது ஆன்டி சத்யாவோட பெஸ்ட் பிரண்ட் ஒருத்தர் போலீஸா இருக்கார். அவரை கண்டிப்பா இன்வைட் பண்ணி ஆகனும். ஆனா அவர் பேரு மறந்து போச்சு. அதான் யோசிக்கிறார்"

என்று விளக்கிக் கொண்டிருத்த ஆருவையும்‌ கேள்வி கேட்ட அன்னையையும் முறைத்து கொண்டு இருந்தான் கௌதம். தன் மகனை கண்ட ரேவதி இதற்கு மேல் ஏதேனும் கேட்டாள் அவ்வளவு தான் என் எண்ணினார்.

ஆனால் அவரின் வாய் அப்போதும் சும்மா இராமல் "என்ன பேரு பொல்லாத பேரு. இப்ப வைக்கிறதுலா பேரானே.

எனக்கு போலீஸ் பேருனா சும்மா விஜய் குமார், வெற்றி மாறன் இப்படி இருக்கனும். அப்பதான் நல்லா கெத்தா இருக்கும்" என்று கூறி விட்டு ஓடிவிட்டார்.

இருந்தால் தன் மகனிடம் யார் வாங்கி கட்டி கொள்வது. தன் அன்னையை அதுவரை முறைத்து கொண்டிருந்த கௌதமின் முகம் அப்போது பளிச்சிட்டது.

"எஸ் ஐ காட் இட் ருத்ரா. ஐ காட் இட். அம்மா தேங்க்ஸ் மா. லவ் யூ மா" என்றான் சென்ற தன் அன்னையிடமும் அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆருவிடம்‌.

"என்ன என்ன கண்டுபிடிச்சீங்க" என்றாள் ஆருத்ராவும் ஆர்வமாக. "சத்யா நாங்க வேலைக்கு சேர்ந்த புதுசுல ஒரு டைம் சொன்னான். அவன் ஃபிரண்ட் ஒருத்தன் சிவில் சர்வீஸ் எக்சாம் எழுத போறான்னு.

ஒரு வேளை அவனா கூட இருக்கலாம்" என்றான் கௌதம் மகிழ்வுடன். "எப்படி ஞாபகம் வந்துச்சு" என்ற ஆருவின் கேள்விக்கு "எல்லாம் என் அம்மாவால தான்" என்றான் கௌதம் சிரிப்புடன்.

புரியாது பார்த்த ஆருவிடம்‌ "அந்த ஃபிரண்ட் நேம் மாறன்" என்றான். இப்போது ஆருவிற்கு புரிந்தது ஏன் தன் அன்னையை காரணம் சொல்கிறான் என.

"ஹலோ முகில் நான் தான் மாறன்" என்று ஆரம்பித்தான் மாறன். "சொல்லுங்க மாறன் என்ன விஷயமா கால் பண்ணி இருக்கீங்க" என்ற முகிலனின்‌ கேள்விக்கு,

"முக்கியமான விஷயம் தான் முகில். அந்த பிரசாத் நேத்து வந்திருந்தான். அவனுக்கு நான் இந்த கும்பல்ல இருக்கிறது தெரிஞ்சு போச்சு" என்றான் மாறன்.

"என்ன சொல்றீங்க மாறன். எப்படி அவனுக்கு தெரிய வந்துச்சு" என்று கேட்டான் முகிலன். "உங்க கமிஷனர் ஆஃபிஸ்ல இருந்து தான் விஷயம் வெளிய வந்திருக்கு முகில்.

பிரசாத்தும் அததான் சொன்னான். அவனுக்கு வேண்டிய ஆள் உங்க ஆபிஸ்ல இருக்கிறதா. அங்க என்ன நடக்குது முகில்" என்றான் கோபமாய் மாறன்.

"கூல் மாறா. அது யார்னு நான் கண்டு பிடிக்கிறேன். நீங்க கொஞ்சம் கேர்புல்லா இருங்க. மாட்டிக்காதீங்க ஓகே" என்று முடித்தான் முகிலன்.

"உங்களுக்கு இதை பண்ண தான் இப்ப காண்டேக்ட் செஞ்சேன்‌. அதை யார்னு பாருங்க முகில். இப்படியாபட்ட ஆட்கள் டிபார்ட்மெண்ட் உள்ள இருக்க தேவையில்லை" என்றான் கோபம் குறையாதவனாய்.

"கண்டிப்பா மாறா நீங்க டென்சன் ஆகாதீங்க. நான் பாத்துக்கிறேன். அப்புறம் பிரசாத் அந்த பசங்கல ஏன் இன்னும் அடைச்சு வச்சிருக்கான்னு எதாவது தெரிஞ்சுதா" என்றான் கேள்வியாக.

"அதுதான் என்னன்னு ஒன்னும் புரியல முகில். நான் அந்த குமார் கிட்ட கூட அப்படி இப்படின்னு கேட்டு பாத்தேன். ஆனா அவனுக்கே ஒன்னும் தெரியலை.

பிரசாத் அதை மட்டும் யார்கிட்டேயும் சொல்லாம இருக்கான். பசங்கல கூட்டிட்டு போறப்ப நம்ம தப்பிக்க வச்சது வேற அவனுக்கு ரொம்ப சந்தேகத்தை குடுத்துருச்சு.

அதனால அவன் யாரையும் நம்ப மாட்டேங்குறான். எல்லாத்தையும் சந்தேகப்படுறான். சோ அந்த டீடெயில் மட்டும் கலெக்ட் பண்ண முடியலை முகில்.

அப்புறம் அந்த ஆப் பத்தி சொன்னனே. அதை ஹேக் பண்ண முடிஞ்சுதா. அவன் பசங்க லிஸ்ட் ஏத்திட்டே போறான். அது என்ன ஆச்சு முகில் " என்றான் மாறன்.

"நம்ம டிபார்ட்மெண்ட் சாப்ட்வேர் டீம் அதை தான் பாத்துட்டு இருக்காங்க மாறா. அவன் ரொம்ப ஸ்டார்ங்க ஆப்ப பில்ட் பண்ணிருக்கான். சோ டைம் எடுக்குது. முடிஞ்ச அளவு சீக்கிரம் முடிக்க சொல்றேன்" என்ற முகில்

"அன்ட் நீங்க எப்பவும் அலார்டா இருங்க மாறன். சின்ன சந்தேகம் கூட உங்க மேல வராம பாத்துக்கங்க. ஏனா நீங்க என்னோட ஃபிரண்டும் தான். உங்க சேஃப்டியும் எனக்கு ரொம்ப முக்கியம்.

அந்த பசங்க விஷயம் தெரிஞ்ச உடனே நாம ஆக்சன்ல இறங்கிறலாம். அப்பதான் பசங்களையும் நாம சேவ் பண்ண முடியும். ஓகே" என்று தன் முடிவை சொன்னான் முகிலன்.

"ஓகே முகில். இங்க நான் பாத்துக்கிறேன். நான் ரொம்ப நேரம் வெளிய இருந்தா சந்தேகம் வந்துரும் நான் உள்ள போறேன். இப்ப வச்சிடுறேன் முகில்" என தன் அலைபேசியை அனைத்தான் மாறன்.

பின் தன்னை சுற்றி யாரேனும் இருக்கிறார்களா என பார்த்து விட்டு யாரும் இல்லையென உறுதி செய்து கொண்டு சென்றான் மாறன்.

அங்கே கமிஷனர் அலுவலகத்திலோ முகிலன் 'யாரா இருக்கும். நம்ம கூடவே இருந்துகிட்டு நமக்கே துரோகம் செய்றது.

எப்படி கவனிக்காம விட்டோம். யார் இந்த வேலையை பாக்குறதுனு முதல்ல கண்டு பிடிக்கனும்' என எண்ணி கொண்டான்.

இனி அனைவரையும் சந்தேக கண்ணோடு தான் பார்க்க வேண்டும் என்ற முடிவும் எடுத்துக் கொண்டான். இவர்கள் இங்கே இப்படி முடிவு செய்ய,

அங்கே ஆரு தான் கண்டுபிடித்ததை கூற கௌதமிற்கு அழைப்பு விடுத்து காத்திருந்தாள். 'என்ன ருத்ரா கால் பண்றா என்ன விஷயமா இருக்கும்' என்ற யோசனையோடு அலைபேசியை காதிற்கு கொடுத்தான்.

அந்த புறம் ஆரு சொல்லிய செய்தியில் தன் நண்பனை கொன்றவர்களை நோக்கி தாங்கள் முதல் அடி எடுத்து வைத்ததில் மகிழ்ச்சி அடைந்தான் கௌதம். அதில் இருக்கும் ஆபத்தை அறியாது.

-தொடரும்
 
Top