All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் -மிஸ்டர் அண்ட் மிஸ் கதை திரி

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ்

சின்ன டீசர்

" டேய் மச்சான் நீயும் அப்படி இப்படின்னு குட்டி கரணம் அடிச்சு ஒரு வழியா கல்யாணம் பண்ண போற "
என சர்வா அவனது சட்டையை சரி செய்தவாறே கூற

" பண்ணா லவ் மேரேஜ் தானு சுத்துட்டு இருந்தான் கடைசி வர ஒன்னும் செட் ஆகல அதான் மாப்பிள்ளை அரேஞ்ச் மேரேஜ்கே ஓகே சொல்லிட்டான் "
என சரவணன் கூறியதை கேட்டவன்...

" டேய் டேய் மூடுங்க டா ஓரேடியா ஓட்டாதிங்க டா "
நல்லவனாக இன்பா கூற

" டேய் நல்லவனே அப்போ நீ லவ் பண்ண பொண்ணுங்க நிலைம "

" டேய் வேணாம் டா அழுதுடுவன் நான் தான் லவ் பண்ணேன் ஒருத்தியும் என்ன திரும்பி கூட பாக்கல நானே இப்பதான் கண்ணுக்கு லட்சணமா ஒருத்திய கட்ட போறேன் அதுக்கும் ஆப்பு வச்சுடாதிங்க டா "
இன்பா கூறியதை கேட்டு அனைவரும் சிரிக்க

" ஆனா நான் காத்திருந்தலயும் ஒரு காரணம் இருக்கு பாரேன் எனக்கு கல்யாணம் அதுவும் அழகான பொண்ணு கூட "
பேக்ரவுண்டில் ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே என சாங் ஓட

" அடச்ச உன் பிளாஷ்பேக நிறுத்து உனக்கு ஆப்பு வைக்கவே ஒரு நியூஸ் வந்துருக்கு இந்தா"
என்ற சரவணன் அவனிடம் போனை கொடுக்க அதனை கேட்டவன் பாவமாக அனைவரையும் பார்த்தான்...

-------------
" மச்சி‌ இவனும்‌ உன் ரசிகர் மன்றத்துல ஒருத்தன் போல பாரு அப்படியே மலைச்சு போய் நிக்கறான் "
தோழியின் காதில் கிசுகிசுக்க அடுத்த நொடி‌ ப்ளார்ர்ர்ர் சத்தத்தில் ‌மலைத்து நின்றது இவர்களது முறையானது....

அவன் அறைந்த அறையில் கண்ணத்தில் ஐந்து விரல் தடமும் பதிய கண்ணத்தில் கை வைத்து அவனை முறைத்து பார்த்து நின்றாள்...

" இடியட் அறிவில்ல இப்படி தான் கண்ணு தெரியமா வந்து மோதுவியா இனியாச்சும் பாத்து நட தள்ளு‌ "
என்றவன் அவனது கையை முஷ்டியை பிடித்து தள்ளிவிட்டு செல்ல அவனையே இருவரும் வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தனர்...

-------------

" மச்சான் சொன்னா கேளு இது பெரிய இடம் யார் மேலையும் கை வைச்சுடாத பேசி பாக்கலாம் "

" அப்புறம் என்ன டேஸ்க்கு டா என்ன வர சொன்ன "

" டேய் நான் வர முடியாத நிலைமை மச்சான்‌ அதான் டா உன்ன கூப்பிட்டேன் பிளிஸ் மச்சான் இதுல ஐஞ்சு‌ பேர் வாழ்க்கையும் இருக்கு டா "

" சரி சரி நான் பாத்துக்குறேன் நீ உன் வேலைய பாரு "

" சரி மச்சான் அப்படியே காலையில "
என முடிக்கும் முன்பே போனை வைத்து விட

" அதான கிராதகன் இவனாச்சும் கேக்குறதாச்சும் "
என்றபடி தனது வேலையை பார்க்க சென்றான்...

---------------------

" மச்சான் அடுத்த ஆப்பு‌ டா உனக்கு நாளைக்கு எல்லாரும் கோர்ட்ல ஆஜர் ஆகனுமா "

" அடிச்சுடானா டா "

வாயில் கை வைத்து அனைவரும் சிரிக்க
" சரி போயிட்டு வாங்க நான் வையிட் பன்றேன் "

" நீ பண்ணுவ டி நானு ஐய்யோ இந்த ராசஷன வைச்சுட்டு "

" ம்ஹூம் ம்ஹூம் போகனுமா "

" பின்ன போக வேணாமா "

" டேய்ய்ய்ய்ய்ய் ஆரவ்வ்வ்வ்வ்வ்வ் "

-------------------

" ஹாலோ மிஸ்டர் "

" சொல்லுங்க மிஸ் "
நக்கல்‌ குரலில் கேட்டவன்
உனக்கு சளைத்தவன் இல்லை என்பது போல அவனும் பார்க்க

" இனிமே தான் பாக்க போறிங்க இந்த மதுமித்ராவோட ஆட்டத்த "
கழுத்தை நெடித்து சென்றவளை பார்த்தவன்

" மதுமித்ரா "

------------------

வணக்கம் நட்பூக்களே
அடுத்த கதையான மிஸ்டர் அண்ட் மிஸ் ஆரம்பித்து விட்டேன்... தொடர்ந்து எழுத உங்களது ஆதரவுகளை கருத்துகளுடன் தாருங்கள்...
நன்றி ...

கருத்து திரி தனியா ஆரம்பிக்குறேன்.. அதில் உங்களது கருத்துக்களை பகிருங்கள்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 1
பாகம் 1

" ஏலே இன்னு செத்த நாழில பொண்ணு மாப்பிள்ளை வந்துடுவாங்க நீ என்ன டா மசமசனு நிக்க போ போய் அந்த வாழ மரத கட்டு "
பெரியவர் ஒருவர் கல்யாணத்தில் தன் பங்கு வேலை செய்ய மதிய வேலை வெயில் சுட்டு எரிக்க அநாதை மண்டபத்தில் இருந்தவர்கள் சுறுசுறுப்பாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டு இருந்தனர்...

மணடபத்தின் இரண்டு தெரு தள்ளி இருந்த வீட்டில்
" டி இன்னும் மூன்னு மணி நேரம் தான் இருக்கு இப்ப மேகப்ப போட ஆரம்பிச்சா தான் க்ரெக்டா இருக்கும் இன்னும் கதை அடிச்சுட்டு உட்கார்ந்து இருக்கிங்க "
" ஏன்டி இதயா போடி போய் முகம் கழுவிட்டு தயாராகு போடி "
என இதயாவை கிளப்பி விட்டு
" நாளைக்கு இன்னோரு கல்யாணம் முடிஞ்சு மறுவீடுக்கு போயிறுப்ப "
என்றபடியே வெளியே செல்ல

இதயா எழுந்து முகத்தை அலம்பி கொண்டு தயாராக காத்திருந்தாள்...
இதயா இருபத்துநான்கு வயது பெண் வயதுக்கேற்ற அழகுடன் உடல்வலிப்புடனும் வளர்ந்த பெண் நாளை திருமணம் என்னும் நிலையில் பரபரப்பாக காணப்பட்டாள்‌...

" எங்கடி போனா இந்த மது எனக்கு கையும் ஓடல காலும் ஓடல ரொம்ப பதட்டமா இருக்கு டி "
என மற்ற தோழிகளிடம் புலம்ப‌

" வருவா டி அவதான் எக்ஸாம் முடிச்சுட்டு நேரா மண்டபத்துக்கு வரேன்னு சொன்னா இல்ல நீ கிளம்பு "
என பெண் அழைப்புக்கு கிளம்ப
அமைதியாக இதயா தயாராகி கொண்டு இருந்தாள்...


" டேய் மச்சான் நீயும் அப்படி இப்படின்னு குட்டி கரணம் அடிச்சு ஒரு வழியா கல்யாணம் பண்ண போற "
என சர்வா அவனது சட்டையை சரி செய்தவாறே கூற

" பண்ணா லவ் மேரேஜ் தானு சுத்துட்டு இருந்தான் கடைசி வர ஒன்னும் செட் ஆகல அதான் மாப்பிள்ளை அரேஞ்ச் மேரேஜ்கே ஓகே சொல்லிட்டான் "
என சரவணன் கூறியதை கேட்டவன்...

" டேய் டேய் மூடுங்க டா ஓரேடியா ஓட்டாதிங்க டா "
நல்லவனாக இன்பா கூற

இன்பா முப்பது வயது இளைஞன்.. வயதுக்கெற்ற உடல்வாகும் உயரமும் மாநிறமும் அவனை கொஞ்சம் வசிகரமாவே காட்டும்... அதனை எல்லாம் விட அவனது முகத்தில் ஒட்டி கொண்டு இருக்கேன் சிரிப்பு அவனது பிளஸ்.... காதல் திருமணம் தான் செய்வேன் என அடம்பிடித்து கல்லூரி முதல் திரிய அவனுக்கும் லவ்க்கும் கொஞ்சம் கூட செட் ஆகல... இவ ஒரு பொண்ண பாத்து ப்ரபொஸ் பண்ண போன அந்த பொண்ணு வேற யாருகூடவாது கமிட் ஆகிடும் இல்ல அந்த பொண்ணுக்கு மேரெஜ் ஆகிடும் அப்படி பட்ட ராசி கொண்டவன் நம்ப பையன் இன்பா....


" டேய் நல்லவனே அப்போ நீ லவ் பண்ண பொண்ணுங்க நிலைம "

" டேய் வேணாம் டா அழுதுடுவன் நான் தான் லவ் பண்ணேன் ஒருத்தியும் என்ன திரும்பி கூட பாக்கல நானே இப்பதான் கண்ணுக்கு லட்சணமா ஒருத்திய கட்ட போறேன் அதுக்கும் ஆப்பு வச்சுடாதிங்க டா "
இன்பா கூறியதை கேட்டு அனைவரும் சிரிக்க

" ஆனா நான் காத்திருந்தலயும் ஒரு காரணம் இருக்கு பாரேன் எனக்கு கல்யாணம் அதுவும் அழகான பொண்ணு கூட "
பேக்ரவுண்டில் ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே என சாங் ஓட

" அடச்ச உன் பிளாஷ்பேக நிறுத்து உனக்கு ஆப்பு வைக்கவே ஒரு நியூஸ் வந்துருக்கு இந்தா"
என்ற சரவணன் அவனிடம் போனை கொடுக்க அதனை கேட்டவன் பாவமாக அனைவரையும் பார்த்தான்...

" சரி ஆல் தா பெஸ்ட் நீ போய் இந்த கேஸ பாத்துட்டு நாளைக்கு கல்யாணம் முடிஞ்சத்துக்கு அப்புறம் வா "
சர்வா கூற

" டேய் டேய் ஏன்டா எல்லாரும் பழி வாங்குறிங்க "
இன்பா கூற

" நீ தான்டா மேனேஜ்மென்ட் ஹெட் நீ தான் போகனும் "

" நான்‌ மட்டும் தானா எங்கடா போனா அந்த பையன் "

" அவன் எங்க எந்த உலகத்துல‌ சுத்திட்டு இருக்கானோ "

" ஆரவ் மச்சான் வாடா "
என வாய் விட்டு புலம்பியவன் போனை எடுத்து காதில் வைத்து பேச

மறுபக்கம் கூறியதை கேட்டு முகம் கோபத்தில் புசுபுசுவென எரிந்தது...

" ச்ச அதான எனக்கு ஒரு நல்லது நடந்தா யாருக்குமே பிடிக்காதே போறேன் நான் போறேன் எனக்கு கல்யாணம் வேணாம் ஒன்னும் வேணாம் கடைசி வர சன்யாசியாவே போறேன்.... ஆனா என்ன விடுங்க டா பாவம் டா அந்த பொண்ணு கல்யாண ஆசையில் இருப்பா அவள போய் ஏமாத்துரோமே அதுதான் மனசுக்கு கொஞ்ச வருத்தம்... ஆனா அதபத்திலா அவனுக்கு என்ன கவல எனக்கு தான் எனக்கு தான் அந்த கவல எல்லாம் ஏன் நேரம் "
என புலம்பியபடி கத்த

அப்போது சரவணன் ஃபோன் அடிக்க
எடுத்து பேசியவன்..
" சரி சரி மச்சான் ஆங் சொல்றேன் மச்சான் "
என்று போனை வைத்துவிட்டு

" டேய் போதும் அடங்கு அவன் போறேன்னு சொல்லிட்டான் நீ இவ்வளவு காண்டு ஆக தேவயில்ல அப்புறம் உன்ன வாய மூட சொன்னான் இல்ல வந்து வாயிலே மிதிப்பான "

" அப்பா ஒத்துக்கிட்டானா இந்த சைக்கோவ வைச்சுட்டு எவ்வளவு பேச வேண்டி இருக்கு "
இன்பா நெஞ்சில் கைவைத்து கூற

" எப்படி மச்சான் நீ புலம்புனது அவனுக்கு கேட்டுச்சு "

" அடச்சா அவன் போன கட் பண்ணவே இல்லடா வேணும் தான் அப்படி பேசுனான் "
என சர்வா அவனது திட்டத்தை போட்டு உடைக்க

" பின்ன இவன்கிட்டலா பொறுமையா பேசுனா கேப்பானா அதான் இப்படி "
சட்டை காலரை தூக்கிவிட்டு பெருமையா சரவணன் தோளில் கைவைத்து சொல்ல

" ஏய் மூதேவி நீ இப்பயும் போன கட் பண்ணல அவன் இதையும் கேட்டுட்டு தான் இருக்கேன் "
என கூற

அவசரமா போனை கட் செய்து
" மச்சான் இவன் வரதுக்குள்ள என்ன எப்படியாச்சும் ஹனிமூன் அனுப்பி விடுங்கடா முடியல டா என்னால "

" இரு மச்சி முதல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் அதபத்தி பேசலாம் "
சர்வா கூறியதை கேட்டவன்...

" உன் வாயில வசம்ப வச்சு தேய்க்க அதலாம் கல்யாணம் நல்லபடியா நடக்கும் "
என்றவன் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை பார்த்தான்....

தொடரும்.....

கதையின் முதல் அத்தியாயம் பதிப்பித்து விட்டேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிருங்கள்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 2

பாகம் 2

மாலை நேரம் ஆக இன்பாவின் தாய் சுமதியும் சில உறவினர்களும் இதமா வீட்டிற்கு வந்து அவளை மண்டபத்திற்கு அழைத்து செல்ல தயாராகின..

இதயா இத்தனை நாள் வாழ்ந்த வீடு வளர்ந்த சொந்தம் தாய் தந்தை விட்டு வெளியே வர அவளது கண்ணில் தானாக கண்ணீர் வழிந்தது...

உறவுகளும் நட்புகளும் அவளை ஆறுதல் படுத்தி அழைத்து வர சீக்கிரமாகவே மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்..

இன்பா இதயாவின் திருமணம் ஒரு மாதத்தில் குறிக்கப்பட்டதால் நிச்சியதார்த்தம் நடக்கவில்லை அதனால் திருமணத்திற்கு முதல்நாள் இருவருக்கும் நலங்கு வைத்து பூச்சூடி பொட்டு வைக்க முடிக்க இரவு எட்டு‌ மணி ஆகியது...

" அத்த எங்க போனா உங்க
பொண்ணு "
என மதுவின் தாய் கோமதியிடம் கேட்க

" வந்துட்டு இருக்கேன்னு சொன்னா டி வந்துடுவா "

" இருங்க இருங்க அவ கல்யாணத்துக்கும் நான் லேட்டா வரேன் பாருங்க "
என சற்று கோபத்துடன் கூற

" அத நடக்கும் போது பாக்கலாம் இப்ப இங்க பாரு டி "
என இரு கண்ணத்திலும் சந்தனம் பூசி குங்குமம் வைத்துவிட்டு நகர்ந்தார் கோமதி...

அடுத்து நலங்கு வைக்க வந்த இன்பா தாய் சுமதி

" என் மருமக எம்புட்டு அழகா இருக்கா என் கண்ணே பட்டும் போல "
என நெற்றி முறித்து கண்ணம் வழித்து
" இருந்தாலும் என் பையனுக்கு நீ கொஞ்சம் அதிகம் தான் "
என கூற

" மா போதும் போதும் இந்த பாசத்த கல்யாணத்துக்கு அப்புறமும் காட்டு... அப்ப என்ன காட்டு காட்டுனு
காட்டாத "

" நான் ஏன்டா என் மருமக கூட சண்ட பிடிக்க போறேன் அதலா ஒன்னாதான் இருப்போம் "

" கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியே இருந்தா ரொம்ப சந்தோஷம் ... தாயா தாராமானு என்ன தத்தளிக்க விட்டுடாதிங்க "

" இவன் கிடக்குறான் மா நீ எதை பத்தியும் கவலபடாத தைரியமா இரு "
என்றவர் நலங்கு வைத்து நகர

" இதலா பாத்து மயங்கிடாத எங்க அம்மா பல நேரத்துல பலவிதமா மாறுவாங்க "
என்று இதயா காதில் கிசுகிசுக்க

" ச்சு என்ன பேச்சு இதலாம் அத்தைய பாத்தா அப்படி ஒன்னும் தெரியல "

" இப்ப தெரியாது டி கல்யாணத்துக்கு பிறகு ஏங்க உங்க அம்மா இப்படி பண்றாங்க அப்படி பண்றாங்கனு சொல்வல அப்ப பாக்குறேன் உங்க மாமியார் மருமக சண்டய "

" விட்டா நீங்களே சண்ட முடிச்சு விட்டுவிங்க போலயே "

" வாய்ப்பு இருக்கு "
என்றவன் சிரிக்க அந்த சிரிப்பில் பெண்வள் மனது சற்று நிம்மதி அடைந்தது...

திருமணம் முடிவாகிய அன்று மட்டுமே அவன் அவளிடம் ஃபோன் செய்து பேசி அவளது சம்மதத்தை கேட்டு அறிந்து பின்பு தான் மற்ற ஏற்பாடுகளை செய்தான்... அதன்பிறகு அவனது வேலை ஆட்கொள்ள அவனால் இதயாவிடம் சரியாக பேச முடியவில்லை...
அவனது கலகலப்பு பேச்சு மனதுக்கு இதம் அளிக்க அடுத்த வந்த நிகழ்வுகளிலும் சந்தோஷமாக உடன்பட்டாள்...

இரவு நேரம் ஆக அனைவரும் செல்ல நெருங்கிய சொந்தம் மட்டுமே மண்டபத்தை ஆட்கொண்டது...

" ஏன் மச்சான் நலங்கு எப்படி போச்சு "
என நண்பர் பட்டாளம் அவனை சுழல

" தோ இபாபடி வந்து அப்படி போச்சு மச்சான்‌ "
என கைகளை நீட்டி சொல்ல

" சச்சபாஆஆஆ இந்த மொக்கைய எப்ப தான் விட போறானோ "
என்றவன் இதயாவிடம்

" சிஸ்டர் ரொம்ப பாவம் நீங்க "
என பரிதாபப்பட சிரித்தவளை கண்டவன்..

" இதயா இதான் எங்க கேங்க நாங்க எல்லாரும் ஒன்னா தான் காலேஜ் படிச்சோம்..‌ இப்ப ஒன்னா கம்பெனி லீட் பண்றோம் "
என்றவன்

" இவன் சர்வா நம்ப கம்பெனியோட எல்லா ஆர்கிடெக் டீசைன் பண்றது இவன் தான் ..
இவ ஜெனி சர்வா ஒய்ஃப் இவளும் ஆர்கிடெக் டீசைனர் "

" நெக்ஸ்ட் சரவணன் சைட் வொர்க் எல்லாமே அவன் தான் பாத்துக்குவான் "

இப்படி நாங்க எல்லாரும் சேர்ந்து உருவாக்கின கம்பெனி தான் பிரெண்ட்ஸ் கன்ஸ்ட்ரஷன் நம்ப கம்பெனி.... "

" நீங்க நாலு பேர் தான் பிரெண்ட்ஸ் சூப்பரா இருக்கு உங்க கேங்க் "

" நாலு பேர் இன்னோரத்தன் இருக்கான் நானும் அவனும் தான் மேனேஜ்மென்ட் பாத்துக்குறோம் "

" அவர் யாருங்க "

" ம்ம் சைக்கோ சரியான திமிரு பிடிச்சவன் ஆரவ் நாளைக்கு ஏதேவது ஏழரைய கூட்டிட்டு வருவான் பாரு "

அவன் கூறியதை கேட்டு சிரிக்க

" முக்கியமான ஒருத்தங்க இருக்காங்க என் உடன்பிறா‌வ தங்கச்சி "

" தங்கச்சியா "

" ஆமாம் மலர் மலர்"

" டேய் மலரு எங்கடா "
என சரவணன்யிடம் கேட்க

" அவளா எங்க ஒரு இடத்துல சும்மா இருக்க மலரு மலரு "
அவன் கூப்பிட்ட வேகத்தில்‌ புடவை தலைப்பை கொண்டு முகத்தை துடைத்தபடி

" இதோ வந்துட்டேன் மாமா "
என்றபடி வந்து நின்றாள் மலர்..

மலர் அழகிய கிராமத்து பைங்கிளி.. சரவணனின் அத்தை மகள்.. இவர்களது திருமணம் சரவணனி இருபத்தியோரு வயதிலே நடக்க கொஞ்சம் சம்பாதித்த பின்னர் தங்களது வாழ்வை துவங்க காத்து இருக்கின்றனர்...

" எங்க போன நீ எதுக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ற... நீ மாப்பிள்ளை தங்கச்சி அந்த கெத்தோட இரு "
என இன்பா அவளிடம் கூற

" நான் தங்கச்சி தான அப்ப நான் தான் எல்லா வேலையும் செய்யனும் வேற யாரு செய்வா "

" அது சரி "
என்றவன் இதயாவிடம்
" மலர் சரவணன் ஒய்ஃப் எங்க எல்லாருக்கும் செல்ல தங்கச்சி "

" அண்ணி "
என்றவள் இதயாவிடம் உடனே ஒட்டி கொள்ள கள்ளபடமில்லாத அன்பு அவளையும் ஈர்த்தது....

பொதுவான நிகழ்வுகளை அனைவரும் பேசி கொண்டு இருக்க சீக்கிரமாகவே இதயா அனைவரிடமும் ஒட்டி கொண்டாள்...

" ஏய் உன் பிரெண்ட்ஸ் யாரும் வரலயா "

" என் பிரெண்ட் தங்கச்சி பெஸ்டி அத்த பொண்ணு எல்லாம் ஒருத்தி தான் மது "
என கூறும் போதே பின்னால் இருந்து
இதயா என கட்டி கொண்டாள் மது...

மது ஐந்தடி அழகிய சிலை.. அவளது சிவந்த நிறமும் கூர் நாசியும் அழகிய கண்ணும் பார்ப்போரை இறங்கிடிக்கும்....
அதுவும் அவளது உதட்டின் மேல் உள்ள சிறு மச்சம் இன்னும் அவளுக்கு அழகு சேர்க்க செதுக்கிய வைத்த சிலையன இருந்தாள் மதுமித்ரா...

" அடியே ஏன்டி லேட்டு "

" சாரி டி லாஸ்ட் எக்ஸாம் முடிச்சுட்டு வர லேட்டு ஆகிட்டு "

" என்னங்க இதான் மது என்
பிரெண்ட் "
என மதுவை இன்பாவிடம் அறிமுகப்படுத்தி வைக்க

அடுத்த சில நொடிகளிலே இருவரும் ஒன்றாக இணைந்து விட்டனர்...

இப்படியே இரவு கழிய மறுநாள் காலை மூகூர்த்தம் ஆரம்பம் ஆகியது...

இன்பா வாயிலேயே பார்வை பதிக்க அதனை கண்ட ஜெனி
" இன்பா பீரியா விடு அவன் கண்டிப்பா வரமாட்டான்... மேரேஜ் முடிஞ்சதும் பாத்துகலாம்‌ "

ஏனோ அவன் திருமணத்திற்கு வரமாட்டான் என தெரிந்தும் அவனது மனது ஆரவை எதிர்ப்பாத்து காத்து கொண்டு இருந்தது..

ஆரவ் இதுபோல் எந்தவித சந்தோஷ் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டான்.. எவ்வளவோ வற்புறுத்தியும் சர்வா ஜெனி திருமணத்திற்கு அவன் வரவில்லை...

ஆனால் இன்பா வரும் ஆரவும் பள்ளி காலம் தொட்டு நண்பர்கள்.. மற்றவர்கள் கல்லூரி தோழர்கள்.. அதனாலே இன்பா ஆரவ் நட்பு இன்னும் பலமாக இருந்தது...

" என்னச்சுங்க ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க "
தான் மணமேடையில் அருகில் வந்து உட்கார்ந்தும் அதனை கவனிக்காமல் இருந்ததை கண்டு இதயா கேட்க

" சாரி சாரி டா வேற ஏதோ யோசனையில் சாரி "
என்றவன் அடுத்துநடந்த நிகழ்வுகளை கவனத்தை செலுத்தினான்...

சரியாக தாலி கட்டபோகும் சமயம் வாசலில் பார்க்க...

ஆறடி ஆண்மகன் அவளவான உடலுடன் வசிகரிக்கும் நிறத்துடனும் நீல நிற சட்டையும் வெள்ளை ஃபேன்டும் கண்ணில் கூலர் அணிந்தபடி வர உண்மையில் இன்பா மட்டுமில்லா அவனது நண்பர் பட்டாளமும் அதிசயித்து போயினர்...

அவர்களை கண்டவன் உதட்டில் சிறு புன்னகையை உதறவிட்டவன். அடுத்த நொடி உணர்வுகள் அற்ற முகத்துடன் மேடை நோக்கி வந்தான் ஆரவ்...

இனிமையான நேரத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் ஆசியுடன் இன்பா இதயா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆக்கி கொண்டான்....

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 3

பாகம் 3

" மச்சான் நீ வருவனு எதிர்பார்க்கவே இல்லை டா "

" தூ மூடு ஓவர் சென்டிமென்ட் போடாத அந்த பில்டீங் டாக்மெண்டல நீ சைன் போடனும் அதான் வந்தேன் சீக்கிரமா போட்டு கொண்டு நான் கிளம்புறேன் "
என்றவன் அவனை அவசரபடுத்த

" அச்சசோ மச்சான் என்னலா இப்ப சைன் போட முடியாதே "

" ஏன் கையில என்ற குஷ்டமா "

" இல்ல மச்சான் என் பேனாவ வீட்டுல வைச்சுட்டு வந்துட்டேன் அதுல தான் நான் கையெழுத்து போடுவேன் "
அவனது பதிலில்‌ கடுப்பானவன்

" சாவடிச்சுடுவேன் உன்ன ஒழுங்கு மரியாதையா கையெழுத்து போடு "
என்னும் போதே அங்கு இதயா வர

" இவங்க "

" ஆரவ் என் நண்பன் "

" நல்லாருக்கியா மா "

" நல்லாருக்கேன் அண்ணா நீங்க "

" ம்ம் பையன் ஏதாவது வம்பு பண்ண சொல்லு மா தூக்கிடலாம் "

" ஏன்டா ஏன் இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு அதுக்குள்ள தூக்குறத பத்தி பேசுற "

அவனது உரையாடலில் சிறிய புன்னகையை சிந்தியவன் அடுத்த நொடி

" சரி சரி கையெழுத்து "
என்னும் ஆரம்பிக்கும்போதே
" இதயா நம்மள போட்டோ எடுக்க கூப்பிடுறாங்க வா வா "
என்றவன் அவளை இழுத்து கொண்டு ஓட

" மவனே எஸ்கேப் ஆகுற உனக்கு இருக்கு டா கச்சேரி "
என்று மனதில் எண்ணியவன் மற்ற நண்பர்களை தேடி சென்றான்...

" அடியே கல்யாணமே முடிச்சுட்டு இப்ப எதுக்கு டி இவ்வளவு மேக்கப் "
என்ற இதயாவிடம்

" அடியே சாப்பிடோம்ல லிப்ஸ்டிக் கலைஞ்சுடுச்சு அதான் கொஞ்சமா "
மது கூற அவளது உதட்டினை தடவி காட்டியவள்

" இது கொஞ்சமா "
ஈஈஈஈஈஈ என அசடு வழிந்து மது சிரிக்க
இவர்களுடன் சேர்ந்து‌ மற்றொரு தோழி குணாவும் சிரிக்க

" சரி டி‌ கூப்பிடுறாங்க நான் கிளம்புறேன் குரூப் போட்டோ எடுக்குறாங்க சீக்கிரம் வா அது சொல்ல தான் மேலே வந்தேன் பை "
என இதயா கிளம்ப

அவள் சென்ற பின் மது சற்று முன் செய்த அனைத்து மேக்கப்களையும் கலைக்க

" அடியே இதுக்கு எதுக்கு டி நாலு கோட்டிங் போட்ட "

" அது சும்மா ஆசைக்கு டி அதுக்குனு அப்படியே வெளியே போக நான் என்ன ஷோகேஸ் பொம்மையா "

" உனக்கு என்னடி நீ ஒரு செதுக்கி வச்ச சிலை‌ உனக்கு தான் ஊருல ரசிகர் மன்றமே இருக்கே "

" சரி சரி புகழ்ச்சி பிடிக்காது வா போகலாம் "

இருவரும் வெளியே வேகமாக வர எதிரில் வந்தவன் மீது பலமாக மோத அதில் மது இரண்டி‌ தள்ளி விழ போக அவளை விழாமல் தாங்கியது அவனது கரம்.....

சுதாரித்து எழுந்தவள் அவனது முகம் பார்க்க‌ அவன் கண்களை மூடியபடியே நிற்க

" சாரிங்க தெரியமா இடிச்சுடேன் மன்னிச்சிடுங்க‌"

அவன் அப்போதும் அப்படியே நிற்க

" காது கேக்காதோ "
என்றவள் குணாவிடம்

" என்னடி இப்படி நிக்குறாரு "
என்றவளிடம்

" மச்சி‌ இவனும்‌ உன் ரசிகர் மன்றத்துல ஒருத்தன் போல பாரு அப்படியே மலைச்சு போய் நிக்கறான் "
தோழியின் காதில் கிசுகிசுக்க அடுத்த நொடி‌ ப்ளார்ர்ர்ர் சத்தத்தில் ‌மலைத்து நின்றது இவர்களது முறையானது....

அவன் அறைந்த அறையில் கண்ணத்தில் ஐந்து விரல் தடமும் பதிய கண்ணத்தில் கை வைத்து அவனை முறைத்து பார்த்து நின்றாள்...

" இடியட் அறிவில்ல இப்படி தான் கண்ணு தெரியமா வந்து மோதுவியா இனியாச்சும் பாத்து நட தள்ளு‌ "
என்றவன் அவனது கையை முஷ்டியை பிடித்து தள்ளிவிட்டு செல்ல அவனையே இருவரும் வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தனர்...


" என்னடி‌ இப்படி அடிச்சுட்டான் இந்தவாட்டி தலைக்கு அடி கொஞ்சம் பலமோ "
என நக்கல் அடிக்க
அவளை முறைத்து பார்த்து மது அடுத்த நொடி

ஓஓஓஓ வென அழ ‌ஆரம்பித்து விட்டாள்...

" தடிமாட்டு பையன் இவன் மனுஷனா மிருகமா எப்படி அடிச்சுடான் பாரு டி ரொம்ப வலிக்குது "
என அழுதபடியே கூற

" சரி சரி விடு டி அழுகாத ‌வா எல்லாருகிட்டயும் சொல்லாம் "

" எதுக்கு நான் அடி வாங்குன விஷயம் ஊரு பூரா தெரியவா ஒழுங்கா வா வாய மூடிட்டு யாராச்சும் பாத்து இருப்பாங்கலோ "

" கீழ விழுந்தாலும் மண்ணு ஒட்ட கூடாது அதான யாரும் பாக்கல வா "
என்று கூற மது கண்களை அழுந்த துடைத்து விட்டு கண்ணத்தை மெதுவா தேய்த்தபடி

" ரொம்ப வலிக்குது டி அவன பழி வாங்கமா விட மாட்டேன் டி இது இந்த மதுமித்ரா சபதம் "

" பழி வாங்கிடலாம் டி "
என்றவள் கண்ணடித்து கூற
இவளும் சரி என கீழே இறிங்கி‌ சென்றவன்...

இன்பா கையெழுத்து இடாததால் ‌காரில் உட்கார்ந்து தனது வேலைகளை முடித்தவன் திரும்பவும் மண்டத்திற்கு உள்ளே சென்றான் ஆரவ்....

அதற்குள் இன்பாவின் நண்பர்களுடன் ஐக்கியமாகி இருந்த மது இவனை கண்டதும் அதிர்ச்சியில் வாயை பிளக்க.. ஆனால் அவனோ அங்கு ஒருத்தி இல்லாதது போலவே தனது நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தான்‌...

அனைவரும் பேசி கொண்டே இருக்க அவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டுமே ஆரவ் பதில் கூறினானே தவிர வேற எதுவுமே பேசவில்லை... அவள் செய்த லூட்டிக்கு கூட அவன் உதட்டில் சிரிப்பு இல்லை.. இதனை கண்ட மது
" இவன் என்ன ஜடமா இப்படி இருக்கான் கொஞ்சம் சிரிச்சு பேசி சந்தோஷமா இருந்தா என்னவா ஐய்யோ சாமி நம்மலாள அப்படிலா இருக்க முடியாது பா "
என்று எண்ணியவள் மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை...

" பரவாலயே நம்ப செட்ல மிச்ச மீது இருந்தவனும் கல்யாணம் பண்ணிட்டான் சோலி முடிஞ்சது "
சரவணன் கூறியதை கேட்ட மலர்

" ஏன் ஆரவ் அண்ணா இருக்காரு அவருக்கு தான் அடுத்த கல்யாணம் "
இதனை கேட்ட அனைவர் முகமும் மாற ஆரவ் இறுகி போய் அமர்ந்து இருந்தான்...

" ஏய் மலரு சும்மா இருடி "
சரவணன் அதட்ட

" நீங்க எல்லாரும் வேணா சும்மா இருங்க... ஏன் ஆரவ் அண்ணா கிட்ட நான் கேள்வி கேட்க கூடாதா .... எனக்கு அவரு மேல் எந்த பயமும் இல்ல நம்பள மாதிரி அவரும் சந்தோஷமா இருக்கனும்... "

சட்டென எழுந்து ஆரவ்
" நீ நாளைக்கு சென்னை வந்து கையெழுத்து போடு நான் கிளம்புறேன் "
என்றவன் புறப்பட

" மச்சான் அவ ஏதோ லூசு மாதிரி பேசுறா டா நீ காண்டாவத உட்காரு "

" என் மேல கோபமா அண்ணா "
கண்கள் கலங்கி கேட்ட மலரை கண்டவன் புன்னகையுடன் அவளது கண்ணத்தை தட்டி
" உன் மேல எனக்கு என்னைக்கும் கோபம் வராது டா "
என்றவன் யாரிடமும் எதுவும் பேசாமல் இடத்தை காலி செய்தான்....

மதுவும் இதயாவும் தனியே செல்ஃபி எடுத்து கொண்டு இருந்ததாள் இவர்கள் பேசியது எதுவும் கேட்கவில்லை....

" ஆரா மலர பாரேன் எவ்வளவு க்யூட்னு இந்த வயசுல எவ்வளவு பொறுப்பா இருக்க... அவ ஒரு குழந்த டா அவளுக்கும் நீயும் நானும் எப்பவும் கூடவே இருப்போம்... அவள வாய் தவறி கூட ஒரு வார்த்தை தப்பா பேச கூடாது.. யாரையும் பேச விடவும் கூடாது "
அன்று அவள் கூறி வார்த்தை இன்று மனதில் நிழலாக ஓட...

அதன் வேகத்தில் காரை எடுத்தவன் அதிவேகமாக காரை பறக்கவிட்டான்....

" இசை இசை இசை இசை இசை "
அவன் மனது முழுவதும் அவளது வார்த்தை அவளது முகம் அவளது கோபம் அவளது சிரிப்பு எல்லாமும் மாறி மாறி வர தனது மற்றொரு கையில் இருந்த மது கோப்பையை முழுவதும் சரித்தபடியே சென்னை வந்து சேர்ந்தான்....

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 4

பாகம் 4

கல்யாணம் முடிந்த பிறகு வீட்டிற்கு சென்ற இன்பா இதயா இருவரும் களைப்பாக இருந்ததால் ஆளுக்கொரு அறையில் ஓய்வு எடுக்க சொல்ல....
இரவு அவர்களுக்கான அறை தயார் செய்யபட்டு இருந்தது...

சர்வா சரவணன் இருவரும் இன்பம் கலாய்த்து தள்ள
இதுபோல் மலரும் மதுவும் இதயாவை அலங்காரம் செய்கிறேன் என்கிற கலாய்த்து தள்ளினர்....

இரவு இன்பா அறையில் தன்னவளுக்கு காத்திருக்க இதயா பால் சொம்புடன் உள்ளே வந்தாள்...

காலில் விழ போன இதயாவை தடுத்து நிறுத்தியவன்..
" இதலா என்ன பார்மாலிடிஸ் நீயும் நானும் எப்பவும் சமம்.... "

" இல்லங்க வீட்டுல சொன்னாங்க அதான் "

" சரி நீ என் கால விழுந்தா நானும் விழுவேன் ஓகேனா எனக்கும் ஓகே "

" என்னங்க நீங்க இப்படிலா பேசுறிங்க "

" ஸீ ஆணும் பெண்ணும் எப்பவும் சமம்.. என்னோட பாதி நீ அதுபோல உன்னோட பாதி நான்... நான் எப்படி உன்கிட்ட உரிமையாக இருக்கனோ அதுபோல நீயும் இருக்கலாம்... உன்னோட கருத்துகள் சொலலறதுக்கோ ஆசைய சொல்றதுக்கோ எந்த தடையும் இல்லை நீ நீயாக இரு... கல்யாணத்துக்கு முன்ன எப்படியோ அப்படி... யாருக்கும் யாரும் அடங்கி போகனும் அவசியமில்லை... அப்படியே அடங்கினாலும் அது அன்பால ஆசையால மட்டும் தான்... "

திருமணம் முடிந்தால் கணவன் தான் கண் கண்ட தெய்வம் அவன் விருப்பப்படி தான் தன் வாழ்க்கை.. அவன் சொல்வதை தான் கேட்க வேண்டும் என பல்வேறு நம்பி கொண்டு இருந்த இதயாவிற்கு அவனது பேச்சு நம்பிக்கை அளித்தது...

பயம் தெளிந்தவள் அவனுடன் சகஜமாக பேச ஆரம்பித்தாள்..
சிறு வயது கதையிலுருந்து இப்போது வரை தனது வாழ்க்கை பயணத்தை அடுக்கி கொண்டே போக இன்பாவும் தனது நகைச்சுவை பேச்சால் அவளை சிரிப்பில் திக்குமுக்காட செய்தான்....

ஒருகட்டத்தில் பேச்சு முடிந்து போக அவளின் கண்ணத்தை பற்றியவன் மெதுவாக வெற்றித் இதழ் பதித்து
" ஐ லவ் யூ பொண்டாட்டி "
" ஐ லவ் யூ டாலு "
" விளையாட்டா நிறைய லவ் யூ சொல்லிருக்கேன்... இப்படி மனசு நிறைய காதலோட யாருகிட்டயும் சொல்லல ப்ர்ஸட் டைம் சொல்றேன் ஐ லவ் யூ டாலு "

" அது என்ன டாலு "

" டார்லிங் சுருக்கி டாலு "
கண்ணடித்து கூறியவனை கண்டவள் மனம் மயங்க
" நீ சொல்ல மாட்டியா "

" ம்ஹீம் "
என தலை ஆட்டி மறுத்தவளை வெட்கம் ஆட்கொள்ள

" ஏய் சொல்லு டி "

" போங்க நான் சொல்ல மாட்டேன் இதுவரை நான் யாருகிட்டயும் சொன்னது இல்ல "

" அப்ப நான் மட்டும் டெய்லி சொல்லிட்டு இருக்கனா "

" ஆமா நான் விளையாட்டா நிறைய பேர் கிட்ட சொல்லி இருக்கேனு சொன்னிங்க "

" ஆங் அது அது "
என இழுத்தவன்
" சரி அதலா விடு நீ சொல்லு "
என்றவன் கை அவளது இடையை அழுத்த அவளது முகம் முற்றிலும் மாறி போனது.. விளையாட்டு தனம் குறைய மனது அவன் பக்கம் சாய
அவனது நெஞ்சிலே சாய்ந்தூ கொண்டவள் இதயா...

அவனும் கணவன் உரிமையை கையில் எடுத்து மெதுவாக இதழ் நோக்கி குனிய அவனது ஃபோன் அவனை அழைக்க சட்டென இதயா அவனது நெஞ்சில் கை வைத்து தடுத்தாள்...

" என்ன டி "

" ஃபோன் அடிக்குதுங்க "

" ஃபோன் தான காலையில பாத்துக்கலாம் "
என்று மீண்டும் இதழ் நோக்கி குனிய...

திரும்ப திரும்ப விடாமல் ஃபோன் அடித்தது..

" எவன்டா‌ அவன் நேரம் காலம் தெரியமா "
நொத்தவன் போனை எடுத்து பேச மறுபுறம் என்ன கூறினானோ இங்கே இவனது முகம் மாறியது.....

" என்னாச்சுங்க ஏதாச்சும் பிரச்சினையா "

" வாழ்க்கையில பிரச்சினை வரலாம் ஆனா எனக்கு வாழ்க்கையே பிரச்சினை தான் "
அவள் புரிய்மல் விழிக்க
" புரியலல வெளிய வா புரியும் "
என்றவன் அவளை அழைத்து கொண்டு ஹாலிற்கு வந்தான்...

வெளியே வந்தவனை கண்ட நண்பர்கள் அனைவரும் சிரிக்க உறவினர்கள் அனைவரும் சற்று சங்கடமாகவே பார்த்தனர்..

" சரவணன் அண்ணா எப்படி க்ரெட்ஆ சொன்னிங்க வெளிய வருவாருனு "
என மது தனது கேள்வியை கேட்க

" சூனியம் அப்படி ‌அப்பவே ஒரு கையெழுத்து போட்டு கொடுத்து இருந்தா இந்த நிலைமை வருவாமா "
என்ற சரவணன்...

ஆரவிடம் கையெழுத்து போடாமல் இழுத்தடித்தை கூற அதன்பிறகு வேலையை முடிக்க சென்ற ஆரவ் அங்கிருந்த போலிஸ் வக்கீல் கூடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட அதில் சற்று கோபமான ஆரவ் வக்கீலை அடிக்க அது பிரச்சினை ஆகி நாளை கண்டிப்பாக இன்பாவை கோர்ட் வர சொல்லி உத்தரவு இட்டது....

" மச்சான் அடுத்த ஆப்பு‌ டா உனக்கு நாளைக்கு எல்லாரும் கோர்ட்ல ஆஜர் ஆகனுமா "

" அடிச்சுடானா டா "

வாயில் கை வைத்து அனைவரும் சிரிக்க
" ஐய்யோ உங்கள வச்சுகிட்டு "
என்று புலம்பியபடியே அறைக்கு செல்ல பின்னாலே வந்த இதயா

" சரி போயிட்டு வாங்க நான் வையிட் பன்றேன் "

" நீ பண்ணுவ டி நானு ஐய்யோ இந்த ராசஷன வைச்சுட்டு "
" ம்ஹூம் ம்ஹூம் போகனுமா "

" பின்ன போக வேணாமா "

" டேய்ய்ய்ய்ய்ய் ஆரவ்வ்வ்வ்வ்வ்வ் "
என கத்தியவன் தனது பொருட்களை பையில் எடுத்து வைத்து உடை மாற்றி வந்து

" சாரி டாலு கல்யாணம் அன்னைக்கே உன்ன தனியா விட்டு போறேன் "

" ச்சூ இது என்ன பேச்சு இதோ இருக்கு சென்னை மூன்று நாள் தான போயிட்டு வாங்க "
என்றவளின் கண்ணத்தை பற்றி அழுந்த முத்தமிட்டேன்
" சீக்கிரமா வந்துடுறேன் பத்திரமா இரு "
என்று கூறி வெளியே வந்தான்...

நண்பர்கள் பட்டாளம் இரவே சென்னை நோக்கி பயணமாகினர்...

இருப்பினும் இதயா வீட்டில் அவனது மேல் சற்று வருத்தம் இருந்தது. திருமணம் ஆன அன்றே இப்படி பெண்ணை விட்டு செல்லவது..
இதயா தான் அனைவரையும் சமதானபடுத்தி தூங்க சொல்ல அவளுடன் துணைக்கு மது வந்து படுத்தாள்....

" அடியே உனக்கு வருத்தமா இல்லையா "
என்ற மதுவிடம்

" வருத்தம் தான் ஆனா அவருக்கும் வேலை இருக்குல ஆரவ் அண்ணா வக்கீல அடிச்சுடாராம் இல்லனா இன்னும் இரண்டு நாள் கழித்து தான் போயிருப்பாரு "
என்று கூறியவள் கீழே படுக்க தலகாணி போர்வை எடுக்க

ஆரவை நினைத்து மதுவிற்கு‌ சற்று கோபம் வந்தது..
" ஏன்டி கீழ படுக்குற "

" ஐய்யோ சாமி உன் கூட படுத்து யாரு பலி ஆகுறது.. நீ கை கால போட்டு கூட பரவால மொத்தமா ஏறி வந்து படுத்துகுவியே "

" சரிதான் போடி "
என்றவள் கட்டிலில் படுக்க அன்றைய பொழுதுபோக்கு கழிந்தது...

இங்கே சென்னை அடுத்த ஊரில் இவர்கள் புதிதாக ஒரு பிராஜெக்ட் ஆரம்பித்து அடுக்கு மாடி கூடியிருப்ப கட்ட ஆரம்பித்து இருந்தனர்.. கிட்டதட்ட பாதிவேலை முடிந்த பின் அந்த ஊரின் தலைவர் என சிறு கும்பல் வந்து இது விவசாய நிலம் எனவும் இங்கே கட்டிடம் கட்ட கூடாது என போலிஸ் கம்பிளெண்ட் கொடுத்து வேலையை தடுத்தனர்...

இன்பா திருமண வேலையில் இருந்ததால் ஆரவை பேச்சு வார்த்தைக்கு அனுப்ப தனது பாஷையில் பேசினான்...

ஆரவை கண்டவன் முறைத்தபடி திருமணத்திற்கு முதல் நாள் நடந்த நினைத்து பார்த்தான்....

" மச்சான் சொன்னா கேளு இது பெரிய இடம் யார் மேலையும் கை வைச்சுடாத பேசி பாக்கலாம் "

" அப்புறம் என்ன டேஸ்க்கு டா என்ன வர சொன்ன "

" டேய் நான் வர முடியாத நிலைமை மச்சான்‌ அதான் டா உன்ன கூப்பிட்டேன் பிளிஸ் மச்சான் இதுல ஐஞ்சு‌ பேர் வாழ்க்கையும் இருக்கு டா "

" சரி சரி நான் பாத்துக்குறேன் நீ உன் வேலைய பாரு "

" சரி மச்சான் அப்படியே காலையில "
என முடிக்கும் முன்பே போனை வைத்து விட

" அதான கிராதகன் இவனாச்சும் கேக்குறதாச்சும் "
என்றபடி தனது வேலையை பார்க்க சென்றான்...

" அடே படிச்சு படிச்சு சொன்னேன் டா ஊர்காரங்க எதுவும் கை வைச்சுடாதனு இப்ப வக்கீல் மேலையே கை வைச்சு இருக்கியே உன்ன என்ன பண்ணலாம் "
இன்பா கூற

" ஏய் இவனுங்க சும்மா பிரச்சினை பண்றாங்க நம்ம இந்த பிராஜெக்ட் பண்றது ஏகே கம்பெனிக்குபிடிக்கல...
அதான் ஆளுங்கள ஏவி விட்டு பிரச்சினை பண்றான் "
ஆரவ் தனது நியாயத்தை பேச

" இதுலா விளக்கமா பேசு "
என்றவனை தடுத்த சர்வா

" சரி விடுங்க டா அடுத்து என்ற பண்ணலாம் "

சற்று யோசித்த ஆரவ்
" நான் பாத்துக்குறேன் எல்லாரும் கோர்ட்க்கு கிளம்புங்க "
என்று கூற அனைவரும் கிளம்பி தங்களது வீட்டிற்கு சென்று கிளம்பி நேராக கோர்ட் வந்து சேர்ந்தனர்...

தொடரும் ‌....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 5

பாகம் 5

" ஹேய் ஹேய் "
என நண்பர் பட்டாளம் துள்ளி குதிக்க அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து தங்களது சந்தோஷத்தை கொண்டாடினர்...

" எப்படி மச்சான் இதுலா "
என்ற சரவணனிடம் சிறு புன்னகையை சிந்தியவன்...

" ஏன்டா இது எப்படின்னு உனக்கு தெரியாத எல்லாம் மகாலட்சுமியின் அருள் "
இன்பா கூறியதை கேட்டவன் அவனை முறைக்க

" சரி சரி ரிலாக்ஸ் உடனே முருங்கை மரம் ஏறாத "

இந்த நேரம் அங்கு கோர்ட்‌ சூட் உடன் வந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர்
" என்ன நண்பர்களே ரொம்ப சந்தோஷமாக இருக்கிங்க போல "

" ஏன் சார் நாங்க சந்தோஷமா இருந்தா உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா "
என்ற இன்பா விடம்

" எப்பவும் இப்படியே இருக்க முடியுமா என்ன நண்பர்களுக்குள எப்ப வேணா விரிசல் வரலாம் இல்ல "

" சார் நாங்க எல்லாரும் கண்ஸ்டிரக்ஷன் தான் ரன் பண்றோம் விரிசல் வந்தா சிமெண்ட் வச்சி பூசிப்போம் .. நீ இப்ப கிளம்பலாம் "

அவர் ஏகே கண்ஸ்டிரக்ஷன் ஓனர் நவின் சக்கரவர்த்தி.. தான் மட்டுமே தமிழகத்தில் நம்பர் ஒன் கம்பெனியா இருக்க வேண்டும் என்கிற வெறியுடன் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருக்கிறார்...
அவரது அனுபவ ‌அறிவு சொல்லியது இந்த ஐவர் கொண்ட குழு கூடிய சீக்கிரமே அவரை வீழ்த்தி அவரது இடத்திற்கு வருவார்கள் என்று...
அதனால் தான் இதுபோல் சிறுசிறு பிரச்சினைகளை அவர் இவர்களுக்கு கொடுக்கிறார்...

" இவனுங்கள ஏதாச்சும் பண்ணணும் டா "
என தனது அடியாளிடம் கூற

" முடிக்கனுமா ஐயா "

" அவ்வளவு பெரிசால இல்ல ஆனா இவனுங்க பெரிய பிரச்சினையா வருவானுங்க அது மட்டும் உண்மை "

" தம்பிய வர சொல்லட்டுமா ஐயா "

" வேணாம் டா அவன் வந்த இன்னும் கொஞ்சம் பாவ கணக்க சேர்த்துவிட்டு போயிடுவான் கொஞ்ச நாள் பொறு பாப்போம் "
என்றபடி காரில் ஏறி செல்ல

நண்பர்கள் ஐவரும் சிரித்து கொண்டு இருப்பதை வன்மத்துடன் பார்த்த படியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்....

வீட்டிற்கு வந்த இன்பா தனது வீட்டு கதவினை திறக்க முயல அது ஏற்கனவே திறந்து இருந்தது...

" அட அது யாரு டா நமக்கு தெரியமா நம்ப வீட்டுல உள்ள புகுந்தது "

உள்ளே சென்று பார்க்க இதயாவின் மொத்த குடும்பமும் வீட்டினுள் இருந்தது...

அனைவரையும் வரவேற்றவனை பேச விடாமல் மாப்பிளைக்கு உரிய மரியாதையுடன் கவனித்தனர்...

இதயாவை பார்த்தவன் அவளிடம் பேச முற்பட அவனுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை...
தாயிடம் சென்றவன்
" நீங்களா எப்படி மா வந்திங்க நான் எதுவும் சொல்லலயே "

" ஆரவ் தான் டா கால் பண்ணி எல்லா பிரச்சினையும் சரி ஆகிட்டு இதயாவை கூட்டிட்டு வர சொன்னான் ஆனா பொண்ண தனியா அனுப்ப மாட்டோம்னு எல்லாரும் சொன்னதால எல்லாரையும் கூட்டிட்டு வந்தேன் டா "

ஆரவை பெயரை கேட்டவன்
" ஐய்யோ கெட்டதும் பண்றான் நல்லதும் பண்றான் இவன் ஹீரோவா வில்லனா தெரியலையே "
என்று புலம்பியவனை உறவினர்கள் சூழ அவன் எதையை பற்றியும் யோசிக்க முடியாமல் போனது...

இதயா வீட்டினர் அனைவரும் கிளம்ப நல்ல நேரம் பார்த்து இதயாவை அறையினுள் அனுப்பி வைத்து மற்றொரு அறையில் அவனது தாய் தங்கினார்...

அறையினுள் ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி நின்றவனின் முதுகை இரு கைகள் அணைக்க அதிர்ச்சியில் நின்றவன் அது யாரென அறிந்து அவனது முகம் புன்னகையில் விரிந்தது...

" பார்ரா மேடம் என்ன திரும்ப விடுங்க இப்படி பிடிச்சு இருந்தா எப்படி "

அப்போதும் அவள் அப்படியே நிற்க அவனின் முதுகில் இப்போது கண்ணீர் கோடுகள் விழ பதறியபடி திரும்பியவன் அவளது முகத்தை நிமிர்த்தி பார்க்க

" ஏய் என்னாச்சு டா ஏன் அழுகுற "

" இல்லங்க உங்கள போயிட்டு வாங்கனு சொல்லிட்டேன் ஆனா நீங்க போனதுக்கு அப்புறம் நான் ரொம்ப தனியா ஆன மாதிரி இருந்துச்சு... உங்கள விட்ட என்னால பிரிஞ்சு இருக்க முடியலங்க "

" ஏய் லூசு இனி நீ இங்க தான் இருக்க போற.. நாம் இரண்டு பேரும் சேர்ந்து தான் இருப்போம் சரியா... "
என்று அவளது கண்ணை துடைத்துவிட்டவன் மென்மையாக நெற்றியில் இதழ் பதித்தான்...

" சரி நான் இல்லாத அப்போ உன் கூடவே இருக்க துணை ரெடி பண்ணட்டா "

" அது யாருங்க "

" ம்ம் நம்ப பாப்பா தான் "
அவனது பதிலின் உண்மை விளங்க வெட்கம் படர அவன் மேலேயா சாய அங்கே ஒரு அழகிய உறவு உருவானது.....

கிளாசில் இருந்த அனைத்தையும் ஒரேடியாக குடித்த முடிக்க அடுத்த பாட்டிலை திறந்து ஊற்ற அதுவும் காலி ஆகியது...
அதனை தூக்கி போட்டு உடைத்தவன் கைகளை துழவியபடி அங்கிருந்த அலமாரியை திறந்து அதில் இருந்த தாலியை கையில் எடுத்தவன்...

" இசை இன்னைக்கு என்ன நாள் தெரியமா என் வாழ்கையில வரவே கூடாதுனு நினைச்ச நாள்... உன்னையும் என்னையும் பிரிச்சு நாள் "
என்றவன் மனது அவன் பேச்சை கேக்காமல் புலம்ப அவனது நிலை அறிந்ததாலோ என்னவோ பொழுது சீக்கிரமாகவே விடிய அவன் விழித்து இருந்த போதும் எழாமல் கட்டிலில் அப்படியே படுத்து இருந்தான்....

அன்றைய தினம் அனைவரும் மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் கொடுத்தது... யாரும் எதுவும் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளவில்லை..

இப்படியே ஒரு மாதம் செல்ல மது முதன்முறையாக சென்னை வந்து சேர்ந்தாள்... படிப்பு முடித்து வேலை தேடி சென்னை வர இதயா தான் அவளது வீட்டிற்கு வர சொன்னாள்...

அவளை இன்பா அவனது கம்பெனியிலே வேலைக்கு எடுக்க அவளும் அங்கே பக்கத்தில் இருந்த ஹாஸ்டலில் சேர வேலை எந்த வித பிரச்சினையும் இல்லாமல் சென்றது...

ஆரவ் எப்போதும் ஆபிஸ் வர மாட்டான்.. ஏதேனும் வேலைகள் இருந்தால் மட்டுமே வருவான்... அன்றும் வேலை காரணமாக வர இவன் கதவை திறக்கவும் மதுவும் கதவை திறக்க சரியாக இருந்தது...

இந்த சமயமும் இருவர் நெற்றியும் எதிர்பாரமல் மோதி கொள்ள அவனை கண்டவள் அதிர்ச்சியில் கண்களை மூடி கைகள் தானாக கண்ணத்தை பற்றி கொள்ள அப்படியே நின்றாள்...

சிறிது நேரம் எந்தவித சத்தமும் இல்லாமல் போக மெதுவாக கண்களை திறந்து பார்க்க அங்கே யாரும் இல்லை...

" என்னது இது யாரையும் காணும் ஒரு வேலை கனவா‌ ச்ச இருக்காது அப்புறம் ஏன் அவரு வந்த மாதிரி தோனுச்சு மது என்னடி ஆச்சு உனக்கு "
என்றவள் தலையை குலுக்கியபடி தனது இடத்திற்கு சென்று அமர அவளது மனம் முழுவதும் அவன் வந்தானா வரவில்லையா என்பதை பற்றியே சிந்தித்து இருந்தது...

" மச்சான் ஏகே ஏதோ பிளான் பண்றான் டா அதான் நான் வர வேண்டியதா போச்சு "
என்று இன்பாவிடம் தான் வந்ததன் காரணம் கூற

" ஐய் ஜாலி மச்சான் அப்போ நீ எல்லாத்தையும் பாத்துகிறாயா நான் ஹானிமூன் போயிட்டு வரட்டா "
என்றவனை முறைத்தவன்

" மவனே இந்த பிராஜெக்ட் முடியாம எங்கையாச்சும் கிளம்புன அவ்வளவு தான் கொஞ்சம் நாள் பொறு நானே அனுப்பி வைக்குறேன் அப்புறம் ஏகே விஷயம் எதுவும் பசங்களுக்கு தெரிய வேணாம் இத நானே பாத்துக்குறேன் சரியா "

" சரி மச்சான் "
என்றவன் அமைதியாகி போக

" என்ன மச்சான் அமைதியாகிட்ட சிஸ்டர் நியாபகமா "

" ச்ச அதலா இல்ல நீ இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே சுத்திட்டு இருக்க போற‌ நாங்களும் உன் மனசு மாற வரை வையிட் ‌பண்ணணும் தான் எதுவும் கேக்கல இன்னும் எத்தனை நாள் டா "

" என் இசை என்கிட்ட திரும்ப வரவரைக்கும் போதுமா "

" லூசு மாதிரி பேசாத மச்சான் டென்ஷன் ஆகுது உனக்கு ஒரு குடும்பம் இருக்கு அழகான உறவுகள் இருக்கு நாங்க இருக்கோம்... இதலா விட்டுட்டு உன்ன விட்டு போனவள பத்தி மட்டும் நினைச்சுட்டு இருக்க "

" லன்ச் டைம் ஆகிட்டு வீட்டுக்கு போகல "
அவன் பேச்சையினை மாற்றுவதை புரிந்தவன்

" ஆமா எல்லா வேலையும் என் தலையில கட்டிட்டு நான் எங்க வீட்டுக்கு போறது லன்ச் பேக் பண்ணி கொடுத்துட்டா "
பேசி கொண்டு இருக்கும் போதே

" ஹாய் அண்ணா "
என்றபடி மது உள்ளே வர எப்போதும் இந்த நேரத்திற்கு அவள் வருவாள் என்பதால் கதவை தட்டாமல் வந்துவிட்டாள்...

உள்ளே வந்தவள் ஆரவை கண்டு அப்படியே நிற்க
" வா மது "
என்றவன்...

அவள் ஆரவ் பார்த்தபடி நிற்பதைக் கண்டவன்
" மது என் பிரெண்ட் ஆரவ் மேரேஜ்ல பாத்து இருப்பியே "

" ம்ம் ம்ம் "
என அவள் தலையை இப்படி அப்படி என ஆட்ட

" மச்சான் இது மது டா இதயாவோட அத்த பெண்ணு டா "

" ஓஹோ "
என்றவன் இப்போது தான் அவளை முதன்முறையாக பார்த்தை போன்று முகத்தை வைத்து கொள்ள மது அவனை மனதில் திட்டியபடியே அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்...

" இதயா மதுக்கும் லன்ச் பேக் பண்ணி கொடுத்துடுவா டா அதான் இரண்டு பேரும் ஒன்னா சாப்பிடுறோம் "
என்றபடியே லன்ச் பேக் கை தூக்கி மேலே வைத்து பிரிக்க

" தோடா நீங்க இரண்டு பேரும் சாப்பிடுவிங்க நான் உங்க வாய வேடிக்கை பார்க்கனுமா "
என்றவன் மது பக்கம் இருந்த டப்பாவை சட்டென அவன் பக்கம் இழுக்க

அவ்வளவு தான் மது கொதித்து போனாள் ஏனா அவன் கை வைத்தது அவளது உணவு டப்பாவில்...

" அது என்னுது என் பிரெண்ட் எனக்கு கொடுத்தது "
என்றபடி அவளும் இழுக்க இந்த பக்கம் அவன் அந்த பக்கம் அவள் என மாறி மாறி இழுக்க விடாமல் ஆரவ் வலுவிற்கு அவளால் இழுக்க முடியவில்லை...

டப்பா ஆரவ் பக்கம் செல்ல அவன் அமைதியாக பிரித்து உண்ண ஆரம்பித்தான்... இதனை கண்ட இன்பா சிரிக்க சட்டென அவனது டப்பாவை பறித்தவள் அதனை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்....

" அட பாவிங்களா கடைசியில நான் தான் அவுட்டா "

" நீ போய் வீட்டுல சாப்பிட்டு பொறுமையா வா உனக்கு இங்க எந்த வேலையும் இல்ல "
என்றவனை கண்டவன் சிரித்தபடி எழுந்து செல்ல மதுவும் ஆரவும் அமைதியாக உணவை முடித்தனர்...

எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டு இருக்க
" நீங்க சரியான ஆளு தான் அது எப்படி என்ன முதல் தடவ பாக்குற போலவே முகத்தை வைச்சு இருக்கிங்க "

" ஆமா நான் உன்ன முதல் தடவ இப்ப தான் பாக்குறேன் "

புசுபுசுவென மூக்கில் புகைவர அவனை பார்த்தவள்
" எப்படி எப்படி என்ன இப்ப தான் முதல் தடவ பாக்குறிங்களா அப்ப அன்னைக்கு மண்டபத்துல என்ன அறைச்சிங்களே அது என்ன உங்க ஆவியா "

" ஏதாச்சும் கனவு கண்டு உளறாதா "
என்றவன் அவளது கையை பற்றி இந்த பக்கம் தள்ளி விட்டு செல்ல

" ஹாலோ மிஸ்டர் "

" சொல்லுங்க மிஸ் "
நக்கல்‌ குரலில் கேட்டவன்
உனக்கு சளைத்தவன் இல்லை என்பது போல அவனும் பார்க்க

" இனிமே தான் பாக்க போறிங்க இந்த மதுமித்ராவோட ஆட்டத்த "
கழுத்தை நெடித்து சென்றவளை பார்த்தவன்

" மதுமித்ரா "
என்றவன்
" பைத்தியமா இவ ரொம்ப நேரம் நல்ல பேசிட்டு இருந்தாலே "
நினைத்தவன் தனது வேலையை பார்க்க சென்றான்....

தொடரும்...

வணக்கம் நட்பூக்களே
கதையின் போக்கை எனக்கு தெரியப்படுத்துங்கள்... கதைக்கு சரியான கருத்துக்கள் வரவில்லை...
கதை பிடிக்கவில்லை என்றால் தெரியபடுத்தவும் நான் தொடர மாட்டேன்.....

நன்றி....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 6

பாகம் 6


பல நேரங்களில் ஆரவிற்கும் மதுவிற்கு ஏதாவது ஒரு வகையில் சண்டை வர இருவரும் முட்டி கொண்டு போதும் அது அடுத்தவர்கள் பார்வைக்கு செல்லாமல் பார்த்து கொண்டனர்...

இப்படி இருக்கும் நிலையில் மதுவின் ஹாஸ்டல் அருகே ஒரு பையன் தினமும் வந்து அவளிடம் வம்பு செய்வதாக இதயா விடம் கூற

" எனக்கு என்னமோ பயமா இருக்கு டி நீ வேற அங்க தனியா இருக்க அவன் ஏதாவது பிரச்சினை பண்ண "
என இதயா தனது பயத்தை கூற

" அடியே அவனா நானானு ஒரு கை பாத்துடுறேன் அவனலா ஒரு ஆளா விடு டி "

" இல்லடி எனக்கு என்னவோ பயமா இருக்கு பேசாம நீ இங்கேயே வந்துடு "

" கடவுளே உன்கிட்ட சொன்னதே தப்பா போச்சு அதலா எதுவும் பிரச்சினை இல்ல அப்படியே பிரச்சினை வந்தாலும் நான் பாத்துக்குறேன் . இதே எதையும் நீ இன்பா அண்ணா கிட்ட சொல்லாத "

" சரி "
என்று கூறானாளே தவிர அன்று இரவே இன்பா விடம் மதுவின் பிரச்சினையை கூறினாள்...

" என்ன மது ஏதாச்சும் பிரச்சினை வந்தா என்கிட்ட சொல்ல மாட்டியா அவ்வளவு வேண்டாதவனா போயிட்டனா நானு "

இதயாவை மனதில் அர்சித்து கொண்டவள்
" இல்லண்ணா இது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்ல நானே சமாளிச்சுபேன்.. நான் அவகிட்ட சும்மா தான் சொல்லிட்டு இருந்தேன் அத அப்படியே உங்கிட்ட ஒப்பிச்சுடாளா "

" இல்ல மது இதலா சரிவராது நீ ஹாஸ்டல் காலி பண்ணிட்டு நம்ப வீட்டுக்கு வா "

" அண்ணா பிரச்சினை பாத்து ஓடிடே இருந்தா ஓடிடே இருக்க வேண்டியது தான் திரும்ப நின்று முறைச்ச எதிர ஒருத்தன் இருக்க மாட்டேன் "

அமைதியாக தனது வேலையை பார்த்து கொண்டு இருந்த ஆரவ் அவள் கடைசியாக கூறியதை கேட்டு அப்படியே கைகள் நிற்க மனது அடுத்த சிந்தினையில் மாறியது...

இன்பாவும் ஆரவை பார்த்தபடியே
" இந்த மாதிரி சில அலட்சியம் தான் நாளைக்கு நடக்க போற பெரிய பிரச்சினைக்கு காரணமா இருக்கு.... நான் அந்த பிரச்சினை பத்தி விசாரிக்க சொல்றேன் நீ நாளைக்கு கிளம்பி நம்ப வீட்டுக்கு வா "

" இல்லணா அது சரி வராது நான் வேணா வேற ஏதாவது ஹாஸ்டல் பாத்துக்குறேன் "

" இப்ப என்ன என்கூட இருக்கறது தான் உனக்கு பிரச்சினை.. ஓகே நீ ஆரவ் வீட்டுல இரு... டபுள் பெட்ரூம் தான் பெரிசா அவன் வீட்டுல இருக்க மாட்டான்... நாங்களும் பக்கத்துல தானே இருப்போம் பாத்துக்கலாம் "

மது யோசனையுடன் இருக்க இன்பா ஆரவை பார்க்க அவன் சரி என தலையசைத்தான்...

" ஆரவ் பத்தி பயப்படாத நாங்க பக்கத்துலே தான இருக்கோம் ஈவினிங் எல்லாத்தையும் பேக் பண்ற நான் வந்து பிக்அப் பண்ணிக்குறேன் "
என்றபடி அவன் வெளியே செல்ல

" இப்ப எதுக்கு நீ ஓவரா சீன் போடுற அவன் கூட்ட போய் தங்க வேண்டியது தான் அதுக்கு ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் "
சிடுசிடுத்தபடி ஆரவ் கேட்க

" ஹலோ மிஸ்டர் என்ன பேசுறிங்க அவங்களுக்கு இப்ப தான் மேரேஜ் ஆகி இருக்க கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்க இங்க போய் தொந்தரவா இருக்க முடியுமா.... "

" அப்படி இப்படினா "

" அப்படி இப்படினா அப்படி அப்படி தான் "
என்றவள்
" இவருக்கு எல்லாத்தையும் விளக்கனும் பாரு "
என்று முணுமுணுத்தபடியே சென்றாள்....

அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தவன் சரித்தபடியே தலையில் தட்டி கொண்டு தனது வேலைகளை கவனித்தான்...
மது திரும்பி அவன் செய்கையை பார்த்தவள் தானும் சிரித்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்...

மது தனது பொருட்களை எடுத்து கொண்டு இன்பா இருந்த வீட்டிற்கு வந்தாள்...
நண்பர்கள் அனைவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டிய அப்பார்ட்மெண்ட்யில் தங்களுக்கென இரு மாடிகளை வைத்து கொண்டனர்..‌
அந்த பத்து மாடி கட்டிடத்தில் ஏழாவது பிளொரில் உள்ள இரு வீட்டில் ஒன்று சர்வா ஜெனிக்கும் மற்றொன்று சரவணன் மலருக்கு எனவும் அடுத்து எட்டாவது மாடியில் உள்ள வீடு இன்பாவிற்கும் எதிரில் உள்ள வீடு ஆரவிற்கு என தங்களது பெயருக்கு மாற்றி கொண்டனர்....

மது இதுவரை இதயா வீட்டிற்கு வந்ததுயில்லை.. இது புது இடம் என்பதால் லிஃப்ட் எங்கே என தெரியாமல் முழித்தபடி நிற்க...
அப்போது வந்த ஆரவ்

" எதுக்கு இங்க நிக்குற "

" ஆங் வேண்டுதல் ‌"

" உன் வேண்டுதல் பலிக்கட்டும் நான் வரேன் "
என்றபடி கிளம்ப

" ஹலோ மிஸ்டர் கொஞ்சம் நில்லுங்க "

" சொல்லுங்க மிஸ் "

" லிஃப்ட் எங்க இருக்குனு தெரியல "

" கேக்கல சத்தமா "

" அப்பா சாமி உங்க வீட்டுக்கு‌ வரனும் போதுமா கூட்டிட்டு போங்க "

" வா "
என்றவன் முன்னே நடக்க

" அப்படியே இந்த பேக் கொஞ்சம் "
என கேட்கவளை அவன் முறைக்க

" ஓகே ஓகே கூல் நானே எடுத்துட்டு வரேன் "
என்றபடி அவனை தொடர்ந்து செல்ல இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்....

" மது "
என்று ஒடி சென்று கட்டி கொண்டவளை மது முறைத்து கொண்டு நின்றாள்...

" ஏன் டி முறைக்கற "

" உன்கிட்ட போய் ஒரு விஷயம் சொன்னேன் பாரு என்ன சொல்லனும் அது எப்படி டி சொல்லாத சொன்ன விஷயத்தை க்ரெக்டா சொல்லிட்ட "

" இல்லடி நான் அவருகிட்ட எதுவும் மறச்சது இல்ல அதான் டி "
என முழித்தவளை கண்டு தலையில் அடித்து கொண்டு

" அது எப்படி டி கல்யாணம் ஆனவுடனே அப்படியே மாறிடுறிங்க "

" அது அப்படி தான் நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகும் போது தெரியும் "
என பேசி கொண்டே ஆரவ் வீட்டிற்கு செல்ல

" இதயா நான் வெளிய போறேன் நைட்டு வர லேட் ஆகும் என்கிட்ட இன்னோரு கீ இருக்கு உன் பிரெண்ட் கிட்ட சொல்லிடு வரேன் மா "
என்றவன் அங்கு ஒருத்தி இல்லாதது போல் சொல்லி கொண்டு போக இவளுக்கு தான் உள்ளே புதைந்தது...

ஆரவ் வீட்டிற்கு சென்றவள் வீட்டை சுற்றி பார்க்க அழகாகவே இருந்தது கிச்சன் அதனை ஒட்டி பூஜை அறை அடுத்து இரு அறைகளும் எதிர் எதிரே இருக்க..ஒரு அறை வெளியே பூட்டி இருந்தது அடுத்த அறைக்குள் சென்றவள் தனது பொருட்களை வைத்து விட்டு பால்கனி வழியாக வேடிக்கை பார்த்தபடி நின்றாள்...

அடுத்து வேலைகளை முடித்து இன்பா வர மூவரும் பேசியபடி உணவு உண்டுவிட்டு படுக்க செல்ல மது ஆரவ் வீட்டிற்கு வந்து தனது அறையில் நுழைந்து கொண்டாள்...

புது இடம் என்பதால் அவள் தூங்க சற்று நேரம் எடுக்க வாசலில் சத்தம் கேட்டு வெளியே பார்க்க ஆரவ் சற்று தள்ளாடியபடி வந்தான்...

" என்ன இவன் இப்படி வரான் ஒரு வேல குடிச்சு இருப்போனு அய்யோ கடவுளே ஒரு குடிகாரன் கூடயா என்ன தங்க வச்ச .... நமக்கு ஏன் வம்பு பேசாம கதவ பூட்டிட்டு வந்து படுத்துத்துக்வோம் "
என்றபடி அறை கதவை தாழிட்டு வந்து கட்டில் சாய்த்தாள்...

உள்ளே வந்த ஆரவ் மது இருந்த அறையை பார்க்க அது பூட்டி இருக்க அவள் தூங்கியதாக எண்ணியவன் தனது அறைக்கு சென்றான்....

" இசை இசை இசை "
என திரும்பும் அவன் மனது அவளை நினைத்து புலம்ப சட்டென அவன் மனதில் மதுவின் முகம் தோன்றி மறைந்தது....

அந்த நொடி போதை அனைத்தும் இறங்க கண்களை கசக்கியபடி எழுந்தவன்...
" ச்ச இவ முகம் ஏன் நியாபகத்துக்கு வரது... ச்ச "
என்றவன் தனது கப்போர்டை திறந்து அதில் இருந்த புகைபடத்தை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்...

" இந்த உலகத்துல காதல் ஒன்னுனா அது உன் மேல மட்டும் தான்.. நீ எங்க இருந்தாலும் நான் உன்ன தேடி வருவேன்... இந்த ஜென்மம் மட்டும் இல்ல எத்தன ஜென்மம் எடுத்தாலும் இந்த ஆரவ் காதல் இசைக்கு மட்டும் தான் "
என்றவன் அவளது கண்ணம் தட்டி செல்ல விழி விரித்து நின்றாள் அவள்...

" அப்படி பாக்காத டி சத்தியமா தாங்க முடியல பேசாம இப்படியே உன்ன கடத்தி கொண்டு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா "

" ஆங் அது சரி அப்ப என் லட்சியம் கனவு என்னாகுறது "
என்றவளின் கண்ணம் பற்றி இதழ் நோக்கி குனிந்தபடி

" கல்யாணம் பண்ணிட்டு கனவ தொடரலாம் "
தனது இதழை அவளது இதழில் பொருத்த சட்டென படுக்கையில் இருந்து எழுந்தான் ஆரவ்...

" ஏன் இசை என்ன ஏமாத்துன நான் உனக்கு என்ன பாவம் பண்ணுனேன் இப்படி என்ற அணுஅணுவா கொல்ல தான் அன்னைக்கு அப்படி பேசுனியா .. ஏன் டி ஏன் ஏன் இப்படி "
வெளியே யாருக்கும் கேட்காமல் மனதுக்குள்ளே புலம்பியபடி இரவை கழித்தான்...

அவனுக்கு தெரியவில்லை இதே போல அணுஅணுவாக அவனை காதலிக்க ஒருத்தி வந்துவிட்டாள் என .. ஆனால் அவன் அவளை ஏற்பானா....


தொடரும்.....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 7


பாகம் 7

இப்போது எல்லாம் ஆரவ் நிறைய மாறி போனான்.... மதுவுக்கும் அவனுக்கு எப்போதும் சண்டை எழ அவன் தனது கூட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டு இருந்தான்...

" அடியே ஒரு பொருள் கூட சிந்தாமா உனக்கு எடுக்கவே தெரியாத "
என திட்டியபடியே கிச்சனில் இருந்த பொருட்களை எடுத்து வைக்க

" சிடுமூஞ்சி ஆரம்பிச்சுடான் கிளாஸ் எடுக்க "
என அவனை மனதில் திட்ட
அதனை கண்டு கொண்ட ஆரவும்

" என்ன மனசுக்குள்ள திட்டுற தான "

" ஏன் மனசுகுள்ள நேராவே திட்டுவன் போடா சிடுமூஞ்சி "

" அடிங்க "
என அவன் எழ இவள் அந்த இடத்தை விட்டு சிட்டாக மறைந்து போனாள்...

மறுநாள் ஆபிஸில் முக்கியமான மீட்டிங் நடந்து கொண்டு இருக்க ஐவர் மட்டுமே அங்கு இருந்தனர்...
யாரையும் எந்த வித தொந்தரவும் செய்யாமல் இருக்க சொல்ல

மீட்டிங் நடந்து கொண்டு இருந்த அறைக்கு மது வேகமாக வந்தாள்...

" ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் "
என வேகமாக அறை கதவை திறந்து வந்தவளை ஐவரும் முறைக்க

" ஏய் அறிவில்ல லூசு முக்கியமான மீட்டிங் சொன்னேன்ல "
ஜெனி அவளை கடிந்து கொள்ள

" ஜெனி நீ சும்மா இரு "
கூறிய ஆரவ் அவளிடம்

" என்ன "

" அந்த ஏகே கம்பெனி மேனேஜர் வந்துருக்காரு உன்ன "
என்று உதட்டை கடித்தவள்
" உங்கள பாக்கனுமா "

" சரி வையிட் பண்ண சொல்லு "

" ஆங் "
என்று முழித்தவளிடம்

" வையிட் பண்ண சொல்லு முழிக்காத போ "

கைகளை பிசைந்து கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தவள்.. மெதுவாக அவர்யிடம் வந்து

" ஆரவ் சார் வையிட் பண்ண சொன்னாங்க "
என்று மெதுவாக கூறியவளை முறைத்தவர்
அமைதியாக உட்கார்ந்து இருந்தார்...

மதுவிற்கு ஏகே கம்பெனி பற்றி விரிவாக தெரியாது‌‌.. ஆனால் இது தான் இந்த துறையில் பெரும் புள்ளியின் கம்பெனி என்பது மட்டும் தெரியும். அந்த கம்பெனியில் இருந்து நேரில் வந்து ஆரவை சந்திப்பாதாக கூற அவனோ அலட்சியமா பதில் சொல்ல இவள் புரியாமல் நின்றாள்...

மெதுவாக மீட்டிங் முடித்த வந்த ஆரவ் மதுவிற்கு அவரை வர சொல்ல இவளும் அதன்படியே கூற அவர் ஆரவ் இருந்த அறைக்கு சென்றார்...

" ஹாய் சார் நான் கிருஷ்ணன் ஓகே கம்பெனி நவின் சக்கரவர்த்தி சாரோட பிஏ "

" ஓஓஓஓ ஹலோ "
என்றவன் உட்காருங்க என்பது போல இருக்கையை காட்ட

ஆரவ் இன்பா இருவரும் அவருக்கு எதிரே அமர்ந்து இருந்தனர்...

" சொல்லுங்க என்ன விஷயம் "

" சுத்தி வளைச்சு பேச விரும்பல இந்த வருஷம் கவர்மென்ட் பண்ணபோற கூலி தொழிளார்களுக்கான கட்டிடம் கட்டுற பிராஜெக்ட நீங்க எடுக்க கூடாது "

" வாட் "

" ஆம் சார் இந்த வருஷம் டென்டர் உங்களுக்கு தானு உங்க கொட்டேஷனா பாத்து முடிவு பண்ணி இருக்காங்க... நாங்க தான் இதுபோல் கவர்மெண்ட பிராஜெக்ட பண்ணிட்டு வரோம் இப்ப உங்க கைக்கு அது போன மக்கள் மத்தில எங்க ஸ்டேட்ஸ் குறையும் சோ அந்த பிராஜெக்டல வர மொத்த லாபமும் நவின் சார் செட்டில் பண்ணிடுவாறு "

" அதுமட்டுமல்ல இதுலா ஒரு விளம்பரத்துக்காக தான் பண்றோம் சோ நீங்க விலக்கிகனும் "
என்றவனை கண்டு ஆரவ் கைகளை முறுக்க இன்பா அவனை தடுத்து

" சார் இது எங்க கம்பெனிக்கு கிடைச்ச ஒரு வரம்னே சொல்லாம் இது பண்ணலனா உங்க கம்பெனி பேர் குறையும்.. ஆனா பண்ணா எங்க கம்பெனி பேர் உயரும்... எங்க வளர்ச்சிக்கு பின்னாடி நிறைய பேரோட உழைப்பு இருக்கு அது நாங்க இழக்க விரும்பல சோ இந்த பிராஜெக்ட் கிடைச்சா நாங்க கண்டிப்பா பண்வோம்னு போய் உங்க சார்கிட்ட சொல்லுங்க "

இதனை கேட்டு சிரித்த கிருஷ்ணன்
" நீங்க இப்படி தான் பேசுவிங்கனு எங்க பாஸ் சொன்னாரு ஆனா தான் தான் பேசி பாக்குரேனு சொன்னேன்.. வெல் உங்க நேரம் நான் கிளம்புறேன் "
என்றவன் எழுந்து கிளம்ப

" என்ன டா மச்சான் நடக்குது டென்டர் விஷயம் இன்னும் வெளியவே வரல அதுக்குள்ள இவனுங்களுக்கு எப்படி டா விஷயம் தெரிஞ்சு‌ வந்து ரேட் பேசுறானுங்க "
என்ற இன்பாவிடம்

" பணம் பத்தும் செய்யும் இவனுங்க இத்தன வருஷ அனுபவத்துல எத்தன பேர சமாளிச்சு இருப்பானுங்க அதுல எவனாச்சும் சொல்லி இருப்பான்... எல்லா காசு தான் "
" ஆங் மச்சான் டென்டர்‌ விஷயம் கன்பார்ம் ஆனதும் எல்லாருகிட்டையும் சொல்லிக்கலாம் "
என்றபடி‌ ஆரவ் வெளியேற மது எதிரில் வந்தாள்...

" இவ வேற எப்ப பாரு எதிருல வந்துட்டு "
என்றவன் அவளை மனதிற்குள் திட்டிய படியே வெளியே செல்ல அவளோ ஏதோ ஒரு சிந்தனையில் உள்ளே சென்றாள்....

அன்று மது தனது தோழி குணாவிடம் போனில் பேச
" இந்த வருஷம் கண்டிப்பா திருவிழாக்கு வரனும் அம்மா சொல்லிட்டாங்க டி இந்த ஆரவ் கிட்ட லீவ் கேக்கவே பயமா இருக்கு... எந்த நேரம் எப்படி பேசுவாறோ "

" அடியே இதுக்கு எதுக்கு டி பயம் "

" இல்லடி அன்னைக்கு ஆஃபிஸ்ல ஒரு பொண்ணு லீவ் கேட்டுச்சா அதுக்கே அந்த திட்டு அதான் "

" உண்மைய சொன்னா தானா லீவ் தரமாட்டாங்க பொய் சொல்லி லீவ் வாங்கு "

" அப்படிங்குற ஆமா என்ற பொய் சொல்ல "

" ஐய்யோ இது உலக மகா நடிப்பு டா சாமி உனக்கு பொய்யே வராது பாரு என்ன கேக்குற போடி போ "
என்றவள் கடுப்பாகி போனை வைக்க

இவள் என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள்.. இன்பா இருந்து இருந்தால் அவனிடம் சொல்லிவிட்டு ஊருக்கு சென்று இருப்பாள்.. ஆனால் இன்பாவும் இதயாவும் இன்பா வின் தாய் வீட்டிற்கு செல்ல அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாதவள் தான் மட்டும் ஆரவிடம் பேச சென்றாள்...

அவனது அறையில் நுழைவதற்கு முன் கண்ணாடியில் முகத்தை பார்த்தவள்
" இப்படி நம்மள பாத்தா சத்தியமா லீவ் தரமாட்டான் "
என்றவள் கொஞ்சமாக கண்மையை அழித்து உதட்டு சாயத்தையும் அழித்து விட்டு வாட்டர்கேனில் உள்ள தண்ணீரை சிறிது கண்களில் விட்டு கொண்டு
" மே ஐ கம் இன் "
என கேட்க

திரும்பி பார்க்காமலே
" எஸ் "
என்றவன் குனிந்து வேலையை பார்க்க

உள்ளே சென்றவள் அவனை பார்க்க அவன் இவளை பார்க்காமலே
" என்ன விஷயம் "
என கேட்க

" ஏன் நிமிர்ந்து பார்த்த குறைஞ்சுடுவாறா "
என்று மனதில் நினைத்து கொண்டு

" இரண்டு நாள் லீவ் வேணும் "
என்று கேவலுடன் கூற

" வாட் "
என்றவன் அவளது முகத்தை பார்க்க‌ அழுதழுது போல இருக்க

" என்னாச்சு ஏன் லீவ் "

" பாட்டிக்கு பாட்டிக்கு "

" இழுக்காம சொல்லு "

" பாட்டிக்கு உடம்பு சரியில்லை பாக்க போகனும் "

" இப்பயா இங்க முக்கியமான பிராஜெட் போயிட்டு இருக்கு "

அவன் கூறியதை கேட்டவள் திரும்பவும் சத்தமாக அழதபடியே
" ரொம்ப உடம்பு சரியில்லையா அம்மா வர சொன்னாங்க "
என்று கூற

" சரி சரி அழாத போயிட்டு வா இப்பவே போறியா வீட்டுக்கு போயிட்டு போறியா "
தீடிரென கேட்ட அவனது அக்கறை கலந்த குரலில் அவள் தன்னிலை மறந்தாள்...

" இல்ல நேராவே போயிடுவேன் "
என்றவளிடம்

" சரி வா நான் அந்த பக்கம் தான் போறேன் வா உன்ன ட்ரெயின் ஏத்தி விடுறேன் "

" இல்ல பரவால நானே போயிக்குறேன் "

" பரவால வா மா நீ ரொம்ப வருத்தமா இருப்ப தனியா போனா சரி வராது நான் ட்ராப் பண்றேன் "
என்றவன் அவளை அழைத்து கொண்டு ரயில்வே ஸ்டேஷன் வர

அவளது முகம் அவனிடம் பொய் கூறியதை நினைத்து வருந்த அவனோ உண்மையில் பாட்டிக்கு உடம்பு சரியில்லாததால் அப்படி இருக்கிறாள் என எண்ணினான்...

உண்மையில் இருவருமே வேற ஏதேதோ யோசிக்க தாங்களுக்குள் இப்படி ஏன் துடிக்குறோம் என யோசிக்கவில்லை...

ட்ரெயின் ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்த ஆரவ் அவளை பற்றி நினைக்க ஊருக்கு செல்லும் வழி முழுவதும் மதுவும் அவனை பற்றியே நினைத்தபடி வந்து சேர்ந்தாள்....

தொடரும்....

நட்பூக்களே

கதையின் போக்கினை எனக்கு தெரியப்படுத்துங்கள்... கதைக்கு சரியான ஆதரவு இதுவரை வரவில்லை,..... உங்களது கருத்துக்களை கமெண்ட் மூலம் பகிருங்கள்..

நன்றி....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 8

பாகம் 8


" இதமா நீ வருவேன்னு நினைக்கவே இல்ல டி "
என இதயாவை கட்டி கொண்டு பேச

" ஏன் டி என் மாமா ஊரு திருவிழா டி இது நான் வராம இருப்பேனா டி "

" அண்ணா வந்துருக்காறா "

" ம்ம் "
என வாசலை நோக்கி கைகாட்ட இன்பா உள்ளே வந்து கொண்டு இருந்தான்....

அவனை நோக்கி சந்தோஷமான முகத்துடன்
" வாங்க அண்ணா "
என வரவேற்று முடிப்பதற்குள்ளே பின்னால் வந்தவனை கண்டுவள் முகம் காற்று போன பலூன் போல ஆகியது...

அவளை முறைத்து கொண்டே ஆரவ் வர அதற்குள் மதுவின் தாய் கோமதி வந்து

" வாங்க வாங்க உட்காருங்க "
என்று ஆரவையும் இன்பாவையும் வரவேற்றவர்

" ஏன்டி வந்தவங்கள உட்கார கூட சொல்லாம பே னு வேடிக்கை பாத்துட்டு இருக்க "
என்று மதுவை சிடுசிடுத்தவர்

" இவ எப்பயும் இப்படி தான் தம்பி இன்னும் ஏன்டி நிக்கற காபி போட்டு கொண்டா போடி "
என மதுவை பிடித்து தள்ள
அவளும் உள்ளே சென்று மூவருக்கும் காப்பி போட்டு எடுத்து வர

" அப்புறம் ஆண்டி பாட்டிம்மா எப்படி இருக்காங்க "
என்று ஆரவ் மதுவை பார்த்து கொண்டே கூற
அதில் திகைத்தவள் அவனை பாவமாக பார்க்க

" பாட்டிம்மா வா மதுக்கு பாட்டியே கிடையாது தம்பி இவ ஏதாச்சும் சொன்னாளா "

" அதலா எதுவும் இல்லை ஆண்டி சும்மா தான் கேட்டேன் "
என்று கூறியபடியே காப்பியை குடிக்க

அதற்குள் மதுவின் தந்தை ராமமூர்த்தி வர பேச்சு பொதுவான விஷயங்களை நோக்கி இருந்தது....

" அத்த நாங்க பாட்டி வீட்டிக்கு போறோம் அம்மா அப்பா எல்லாரும் அங்க தான் இருக்காங்க "

" சரி டி போயிட்டு வா நாளைக்கு திருவிழால பாக்கலாம் ஆனா மதிய சாப்பாடு சாப்பிட்டு தான் போகனும் "

" அத்த "

" என்ன டி மதுவையும் பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டா "

" அதலா நான் எங்கேயும் வரல "
என அவரது தாய் கூறுவதற்கு முன்பே அங்கு வந்த மது கூற

" ரொம்ப சீன் போடாத அங்க எனக்கு தனியா போர் அடிக்கும் டி அதுவும் அந்த அனிதா இல்லாத சீன்ல போடுவா வாடி "

" அதுக்கு தான் நானும் சொல்றேன் அங்க அந்த கிழவியும் அனிதாவும் அவ ஆத்தா அந்த மஞ்சுளாவும் ஒரேயடியா ஆட்டம் போடுவாங்க நமக்குள அங்க சரி வராது பா "

" அதான் அங்க பெரியப்பா இருக்காங்கல சுகன் அண்ணா இருப்பான் பாத்துபாங்க டி "

இதயாவும் அவளை சமாதான படுத்த மது பிடிவாதமாக மறுத்தாள்...
ஒருவழியாக கோமதியும் ஒத்து கொள்ள மது காலை வந்து இரவு சென்றுவிடுவதாக வாக்கு கொடுத்த பின்னரே இதயா ஓய்ந்தாள்...

அதவாது இதயா மதுவின் பாட்டி விசாலாட்சி கோவிந்தன் தம்பதிக்கு மூன்று பிள்ளை.. முதலாவது கிருஷ்ணமூர்த்தி அடுத்து சுசிலா ( இதயாவின் தாய் ) ராமமூர்த்தி ( மதுவின் தந்தை )... இவர்களின் சிறு வயதிலே கோவிந்தன் இறைவனடி சேர...
ராமமூர்த்தி கோமதியை காதலித்து திருமணம் செய்ய... கிருஷ்ணமூர்த்தி மஞ்சுளாவை திருமணம் செய்தார்...

மஞ்சுளா வசதியான வீட்டு பெண்.. கோமதி நடுத்தர வர்க்கம்.. இருவருக்கும் எப்போதும் ஏதாவது வாய் தகராறு தான்.. இதில் பெரும்பாலும் மஞ்சுளா கோமதியை வசதி காரணம் காட்டி திட்ட ஒருநாள் பெரும் சண்டை ஆகி போனது.. இதில் விசாலாட்சி முழுக்க பெரிய மருமகள் பக்கமே பேசினார்...

கோபம் கொண்ட ராமமூர்த்தி கோமதியையும் மதுவையும் அழைத்து கொண்டு வெளியே செல்ல .. அதன்பின் அந்த உறவு துண்டிக்கப்பட்டது... ஆனால் கிருஷ்ணமூர்த்தியும் சுசிலாவும் அவ்வபோது வந்து தம்பி தம்பி மனைவி குழந்தையை பார்த்து செல்வார்...
சிலநேரம் மதுவை அந்த வீட்டிற்கு அழைத்து செல்ல இதயாவும் சுகனும் அவளுடன் சகஜமாக பழகுவார்கள்.. ஆனால் அனிதா தாயை உரித்து வைத்து இருந்ததால் மதுவை அவ்வபோது மட்டம் தட்டி பேச மது அங்கு செல்வதையே நிறுத்தி கொண்டாள்....

அதன்பிறகு மதிய உணவு தடபுடலாக ஏற்பாடு ஆக இதயாவும் இன்பாவும் உணவு உண்ண அமர்ந்தனர்...

" ஆரவ் அண்ணா எங்க "
இதயா கேட்க

" பின்னால போயிருக்கு தம்பி நீங்க இருங்க ஏய் மது நீ போய் அந்த தம்பிய அழைச்சிட்டு வா போ "
என கூற

" நானா "
என்று திணறி நிற்க

" பின்ன வெரசா போடி சாப்பிடமா உட்கார்ந்து இருக்காங்க பாரு போ "
என அவளை துறத்த

மது வீடு கிராமத்தில் இருப்பதால் கொல்லை புறத்தில் இருந்து பார்த்தாள் வெகு தூரத்தில் தெரிந்த மலையையும் நடுவில் தெரிந்த வயல் வெளிகளையும் பார்த்த படியே நின்று கொண்டு இருக்க..

அவன் முதுகு புறம் வந்து நின்ற மது
" ஆரவ் "

அவன் திரும்பாமலே இருக்க சற்று சத்தமாக
" ஆரவ் "
என அழைக்க

" காது கேக்குது சொல்லு "

" உள்ள சாப்பிட ‌வாங்க "
என ஒருவாறு திக்கி திக்கி கூற

" எனக்கு வர தெரியும் நீ போ "
என்றவன் அப்போதும் திரும்பாமலே நிற்க

" சாரி ஆரவ் தெரியாமா அப்படி சொல்லிட்டேன் "

" எப்படி "

" இல்ல பாட்டிக்கு உடம்பு "
என திக்கி திக்கி கூற

" சரி போ "

" இல்ல ஆரவ் அம்மா கண்டிப்பா ஊருக்கு வர சொல்லிட்டாங்க இல்லனா திட்டுவாங்க நீ வேற அன்னைக்கு அந்த பொண்ணு லீவ் கேட்டப்ப பயங்கரமா திட்டுனியா அதுக்கு பயந்து தான் பாட்டிக்கு உடம்பு சரியில்லைனு "
அவள் இழுக்க

" உன்ன திட்ட மாட்டேனு உங்க அண்ணனுக்கு சத்தியம் பண்ணி இருக்கேன் அந்த ஒரு காரணத்துக்காக நீ தப்பிச்ச ஓடி போ "
அவன் கூறியதை கேட்டு சற்று நிம்மதி அடைந்தவள்...

" இன்பா‌ அண்ணா தேங்க் யூ "
என்று மனதுக்குள் சொல்லி கொண்டவள்

" ஆனா ஒன்னு நீ பொய் சொன்ன பாரு அது கூட மன்னிச்சுடுவேன் ... அதுக்கு ஒரு மூஞ்சிய வைச்ச பாரு பாவமா அழுது வடிஞ்சு அப்பப்பா என்ன நடிப்பு... இதுல நானே உன் கொண்டு வந்து டீரெயின் ஏத்தி விட்டு இருக்கேன் அத நினைச்சா தான் கடுப்பாகுது "

அவன் கூறியதை கேட்டு சட்டென சிரித்தவள் அவனது முறைப்பில் அடங்கி போனாள்...

" நான் சும்மா தான் அடிச்சு விட்டு கண்ணுள ரெண்டு சொட்டு தண்ணி விட்டேன் நீங்க நம்பிடிங்க "

அதற்குள் கோமதியின் குரல் கேட்க
" சீக்கிரம் வாங்க "
என்றவள் வீட்டிற்குள் ஓட
அவனும் பின்னாலே வந்தான்...

" இவ்வளவு நேரமா டி "
என்று மதுவை திட்டியவள் ஆரவையும் இன்பாவையும் நன்கு கவனித்து அனுப்பி வைத்தனர்...‌

மூவரும் கிளம்பி இதயா பாட்டி வீட்டிற்கு செல்ல அனைவரும் இன்முகமாகவே நடந்து கொண்டனர்...

இதில் விசாலாட்சி பாட்டி ஆரவை பற்றி கேட்க இதயாவும் இன்பா மூலம் தெரிந்து கொண்ட ஆரவின் செல்வாக்கு புகழ் பற்றி இயல்பாக‌ கூற பாட்டி மனதில் வேறு திட்டம் உருவாக்கியது...

மறுநாள் பொழுது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் விடிய பாட்டி வீட்டிற்கு சென்று அங்கிருந்து திருவிழாவிற்கு செல்வதால் மது பாவாடை தாவணி அணிந்து செல்ல

" என்ன டி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன் காத்து இந்த பக்கம் "
என வாசலிலே விசாலாட்சி பாட்டி ஆரம்பிக்க

" சும்மா தான் பாட்டி இதயா தான் வர சொன்னா "

அங்கு வந்த அவளது பெரியப்பா
" அடடா மது குட்டி வாடா எவ்வளவு நாள் ஆச்சு வந்து உள்ள வா "
என அன்புடன் அழைக்க இதயாவின் தாய் சுசிலாவும் வந்து அழைக்க மது உள்ளே சென்றாள்...

இளநீல வண்ணத்தில் பாவாடையும் அதற்கு தோதாக தாவணியுடன் காதில் ஜிமிக்கி கழுத்தில் நீண்ட ஆரம் கையில் கண்ணாடி வளையல் என அட்டகாசமான அழகுடன் வந்த மதுவை இரு வேறு கண்கள் கண்களாலே பருகி கொண்டு இருந்தது...

ஒன்று நமது நாயகன் ஆரவ் மற்றொன்று சுகன் இதயாவின் அண்ணன்... அவனுக்கு சிறுவயது முதலே மதுவின் மீது பிரியம் அங்கு வரும் போது எல்லாம் பெரிய மாமாவிடம் சொல்லி மதுவை அழைத்து வர சொல்லுவான்.... வளர வளர அது அவனது மனதில் அழுத்தமாக பதிய மனதிற்குள்ளே ஆசையை வளர்த்து வந்தான்....

வரவேற்று அறையில் அமர்ந்து காப்பி குடித்து கொண்டு இருந்த இன்பாவும் ஆரவாவும் அவளை பார்க்க இன்பா அவளிடம்
" ஏய் மது சூப்பரா இருக்க டா "

" நானா என்‌ டிரெஸா "
என்றவள் அழகாக சிரிக்க

" இதுல என்ன சந்தேகம் மது தான் அழகு "
என பின்னால் இருந்து குரல் கேட்க திரும்பி பார்த்தவள்

" சுகன் அத்தான் எப்படி இருக்கிங்க "

" பைன் மது நீ எப்படி இருக்க "

" ம்ம் "
என்றவள் அவனுடன் ஒன்றி போக ஆரவ் மனதுதுக்குளே புகைந்தபடியே வெளியே செல்ல அவனை பின்தொடர்ந்து மதுவும் சென்றாள்......

தொடரும்....
 
Top