All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் -மிஸ்டர் அண்ட் மிஸ் கதை திரி

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 9

பாகம் 9

" என்ன ஆரவ் சார் அமைதியா இங்க வந்து நிக்குறிங்க "
என்றவளை திரும்பி ஏற இறங்க பார்த்தவன்

" ஏன் இங்க நிக்க கூடாதா என்ன.... நான் நின்னா உனக்கு என்ன வந்துச்சு .. நீ ஏன் இங்க வந்த "

" அது அது ஆங் என் டிரெஸ் எப்படி இருக்கு "
என்றவள் பாவாடையை இருபக்கமும் பிடித்து கொண்டு அழகாக கண்ணடித்து கேட்க

அதில் அவள் புறம் மனம் சாய அவளையே வைத்த கண் வாங்காமல் பாத்து கொண்டு இருக்க

" என்ன ஆரவ் சார் பேச்சையே காணும் "
என்று அவளது கேள்வியில் தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன்
" ரொம்ப கேவலமா இருக்கு "

" கேவலமாவா "

" ஆமா குள்ள கத்தரிக்காக்கு துணி சுத்தி விட்டு மாதிரி இருக்க "

" குள்ள கத்திரிகாவா நானா "
என்றவள் மூச்சு காத்து வேகமாக வீச
" நான் ஒன்னும் குள்ளம் கிடையாது "
என்று கூறி முடிக்கும் முன்பே

அவன் அவளை தன்னை நோக்கி இழுக்க அந்த தீடிர் செய்கையை புரியாதவள் அவனது மார்பு மீதே மோத..

" என் தோள் உயரம் கூட இல்ல அப்ப நீ குள்ள கத்திரிக்கா தானா "
என்று அவளை கேட்க

அவனது கை இரண்டும் அவளது தோளின் இருபுறமும்‌ இருக்க அவனது செய்கையில் அவள் நெளிந்தபடியே

" ஆரவ் என்ன பண்றிங்க விடுங்க "
என அவனது கையை இறக்கி விட

அவனும் அப்போது தான் உணர்ந்தான் அவளது நெருக்கத்தின் அளவை... பட்டென கைகளை விலக்கியவன்

" சாரி "
என்றபடி விலக

தன்னை அறியாமலே மது முகத்தில் புன்னகை பூக்க அதன் காரணத்தை அவள் அறியவில்லை..‌‌

இங்கு ஜெனி மருத்துவர் அறையில் இருந்து வெளியே வர சர்வா அவளை கேள்வியா அவளை பார்க்க அவளது முக மலர்ச்சியே அவனுக்கு விளக்கியது...

" கன்கிராட்ஸ் சர்வா ஃபார்ட்டி ஃபைவ் டேஸ் ஆகிருக்கு.... ரொம்ப அனிமிக்கா இருக்காங்க... நல்லா கேர் பண்ணி பாத்துக்கோங்க... இந்த மெடிசின ரெகுலரா குடுங்க "
என மருத்துவர் பரிதுரைக்க சர்வாவும் ஜெனியும் வெளியே வந்தனர்.....‌

இன்று காலை எழும் போதே ஜெனிக்கு சற்று மயக்கமாகவே இருந்தது... இருப்பினும் வேலை சற்று அதிகம் என்பதால் வேகமாக கிளம்பி வெளியே வந்து காரை நெருக்கும் போதே அவளுக்கு முற்றிலும் நினைவு இழந்து மயக்கமாகி விழ போக சரியாக மலர் வந்து அவளை தாங்கி பிடித்தாள்...

" அக்கா அக்கா என்னாச்சு ஐய்யோ யாராவது வாங்களேன் அத்தான் அத்தான் "
என எதார்த்தமாக வெளியே வந்த சரவணனை அவள் அழைக்க உடனடியாக அவனும் வந்து அவளை தூக்கி கொண்டு திரும்பவும் வீடு வர...

உண்மையில் சர்வா பதறி தான் போனான்.. அவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கூட புரியவில்லை..
" ஜெனி ஜெனி "
என அவளது கண்ணம் தட்டி கொண்டே எழுப்ப

மலர் தான் சுதானமாக தண்ணீர் எடுத்து வந்து அவளது முகத்தில் தெளித்து எழுப்ப
" என்னாச்சு ஜெனி ஆர் யூ ஓகே "
என்று சர்வா அவளது தலையை மென்மையாக தடவியபடி கேட்க

" தெரியல டா காலையில இருந்தே இப்படி தான் இருக்கு "

சட்டென மலரின் முகம் ஜொலிக்க
" அண்ணா ஒருவேல அதுவா இருந்தா "

" அதுவானா "

" அய்யோ அத்தான் உங்களுக்கு புரியாது "

" அக்கா "
என்றவள் அவளது காதில் பேச அதனை கேட்ட ஜெனியின் முகமும் மலர்ந்தது...

உடனடியாக அனைவரும் கிளம்பி மருத்துவமனை செல்ல அங்கு அவர் கூறியதும் அனைவர் முகத்திலும் சந்தோஷம் பொங்கியது...

" மச்சான் கங்கிராட்ஸ் டா "
என்றவன் அவனை அணைத்து கொள்ள
ஜெனியிடமும்‌ தனது வாழ்த்தை தெரிவித்தான்...

அதுபோல மலரும் சர்வாவிடம் வாழ்த்து கூறிவிட்டு ஜெனியிடம் கூற
அவள் ம்ம் என்றதோடு முடித்து கொண்டாள்....

" ஜெனி எதுக்கு இப்படி பிகேவ் பண்ணுற அவ ஆசையா தான விஷ் பண்றா "

" சர்வா நான் இப்படி தான் தேவையில்லாமா என்ன டென்ஷன்‌ பண்ணாத ‌"
என்றவள் விறுவிறுவென கிளம்பி செல்ல

" சாரி மச்சான் இவ இன்னும் பழைய மாதிரி தான் இருக்கா.... அவளுக்காக நான் சாரி கேக்குறேன் மச்சான்.. "
என்றவன் மலரிடமும்

" சாரி மா அவள எப்படி மாத்துறதுனே தெரியல மா... உன் குணம் அவளுக்கு என்னைக்கு தான் புரிய போகுதோ "

" சரி விடுங்க அண்ணா அக்கா தான நீங்க போங்க அவிக தனியா போயிருக்காக "
என்றவள் அப்போதும் அவளுக்காக பேச சர்வா மனம் வருந்தியபடி அவளுடன் போக அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்...

சர்வாவிடம் ஃபோன் செய்து ஜெனியை பார்த்து கொள்ள சொல்லி இன்று ஆஃபிஸ் வர வேண்டாம் எனவும் தான் மட்டுமே பார்த்து கொள்வதாக சரவணன் கூற சர்வா எவ்வளவு எடுத்து சொல்லி அவன் தான் மட்டும் ஆஃபிஸ் செல்வதாக கூறினான்...

ஃபோன் பேசிவிட்டு திரும்பியவன் தன்னவளை தேட அடுப்படியில் நின்று கொண்டு இருந்தவளின் பின்புறம் சென்று அவளை அணைத்தவன்...

" ஏய் குட்டமா நமக்கு எப்படி டி இது மாதிரி பேபி வரும் "
அவன் கேள்வியில் முகம் சிவக்க

" போங்க அத்தான் "
என்றவள் தனது வேலையை தொடர

" எதுக்கு டி இவ்வளவு பண்ற "

" அது அக்கா இப்ப புள்ளதாச்சியா இருக்காங்கள அவங்களா எதுவும் பண்ண முடியாது அதான் அவங்களுக்கும் சேர்த்து சமைக்குறேன் "
என்று அவள் கூற அதனை கேட்டவன் முகம் இறுக

" ஏய் லூசு உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரனை இல்லையா... அவ என் பிரெண்ட் தான் அதுக்காக உன்ன பேசறதுலா நான் கேட்டுட்டு இருக்க முடியாது .. உன்ன ஹாஸ்பிடல அவ்வளவு இன்செல்ட் பண்ற நீ இங்க அவளுக்கு சமைச்சுட்டு இருக்கியா ஏன் டி நீ மட்டும் இப்படி இருக்க "

அவன் கேட்ட கேள்விக்கு அவள் என்ன பதில் கூறுவாள்... அவள் இப்படியே வாழ்ந்து பழக்கப்பட்டவள் நல்லவர் கெட்டவர் என பேதம் பிரிக்க தெரியாதவள்...

அவளின் முகம் கண்டவன் கோபம் குறைய
" குட்டமா சாரி டி தெரியாமா திட்டிடேன் சாரி டி... "

" பரவால அத்தான் நீங்க தான இத அப்படியே அக்கா வீட்டுல கொடுத்துடுரிங்கள "
என்று கேட்டளை முறைக்க முயன்றவர் தோற்று சிரிக்க அவளும் அவனது சிரிப்பில் பங்கு கொண்டாள்....

" சரியான ஆளு டி விட மாட்டியே "
என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு விலக அவளும் தனது வேலையை பார்க்க சென்றாள்....


அடுத்து ஜெனி விஷயம் ஆரவிடமும் இன்பா விடம் கூற அவர்களும் தங்களது வாழ்த்தினை ஃபோன் மூலம் தெரிவித்தனர்...‌

தொடரும்.....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 10

பாகம் 10

ஜெனி விஷயம் ஆரவிற்கும் இன்பா விற்கும் தெரியவர ஆரவ் உடனடியாக கிளம்பி செல்ல எத்தனித்தான்.....

" சரி நீ இருந்து பாத்துக்கோ நான் கிளம்புறேன் "

" அண்ணா இருந்துட்டு நாளைக்கு காலையில திருவிழா முடிஞ்சதும் போகலாமே "
என்ற இதயாவிடம்

" இல்ல மா அங்க சரவணன் மட்டும் தனியா இருக்கான் சைட் வேலையும் பாத்துட்டு ஆபிஸ் வொர்க்குனா கொஞ்சம் கஷ்டம் நீங்க இருந்து முடிச்சுட்டு வாங்க "

" இல்ல மச்சான் ஒன்னும் பிரச்சினை இல்ல சரவணன் மேனேஜ் பண்ணிக்குறேனு சொன்னா அண்ட் சர்வாவும் நாளைக்கு ஆபிஸ் கிளம்பிடுவான்.... ஜெனி பிரெண்ட் ஒரு பொண்ணு வந்து பாத்துக்குறாளா சோ நீ இப்ப போக வேண்டாம் டா "

" இல்ல மச்சான் சர்வா ஜெனி கூட இருக்கட்டும் இந்த டைமல....
நான் போறேன் "

" மச்சான் இப்ப நீ கிளம்பினாலும் போக விடியகாத்தால ஆகிடும்..... கார் ஓட்டிட்டு வேற போகனும் நாளைக்கு ரெஸ்ட் எடுப்பியா இல்ல ஆபிஸ் போகுவியா நாளைக்கு மதியமா கிளம்புனா க்ரெக்டா இருக்கும் "
இன்பா கூறியதே ஆரவிற்கு சரியென பட இரவு தங்குவதால ஒத்து கொண்டான்.....

இரவு அனைவரும் உணவு உண்ண அமர மது அந்த இடத்தை விட்டு நகர அவளது பெரியப்பா
" மது மா வா வந்து சாப்பிடு "

" இல்ல பெரிப்பா இருக்கட்டும் அம்மா வையிட் பண்ணுவாங்க நான் அங்க போய் சாப்பிடுறேன் "
என்றவளை அதற்கு மேல் யாரும் வற்புறுத்தவில்லை...

" ஏன்பா அவ தான் வரலனு சொல்றா இல்ல எதுக்கு ஓவரா கெஞ்சிட்டு இருக்கிங்க நீங்க கெஞ்ச கெஞ்ச தான் ஓவரா சீன் போட்டு திரியுற "

" அனிதா தேவயில்லாம பேசாத அவளும் இந்த வீட்டு பொண்ணு தான் அது உனக்கு நியாபகம் இருக்கட்டும்.. அவ வந்ததுலேந்து நீயும் உன் அம்மாவும் ஒரு வார்த்தை பேசுனிங்களா "

" அப்பா "
என ஆரமித்தவளை தடுத்த அவரது அப்பா

" போதும் அனிதா மதுவ பத்தி எதுவும் பேசாத "

அனிதாவை கையமரத்திய தடுத்த இதயாவின் தாய் சுசிலா
" அண்ணா சுகனுக்கும் வயசு ஏறுது அடுத்த அவனுக்கு பொண்ணு பாக்கலாம்னு இருக்கேன்.. "

இதனை கேட்ட சுகன் மனதில் புகைந்தபடியே
" அம்மா இப்ப எதுக்கு இந்த பேச்சு "
என மனதில் மதுவை நினைத்து கூற

" நீ சும்மா இரு டா உனக்கு ஒன்னும் தெரியாது "
என்றவர் தனது பெரிய அண்ணா புறம் திரும்பி
" நீ என்ன ணா சொல்ற "

" அதுக்கு என்ன மா நல்லவே பண்ணிடலாம் நம்ப "
என ஆரம்பிக்கும் போதே

" நம்ப மதுவ கேக்கலானு முடிவு பண்ணிறுக்கேன் நீ என்ன ணா சொல்ற "

சட்டென அவரது முகம் ஒரு நிமிடம் வாடி உடனடியாக சுதாரித்து
" மது நல்ல பொண்ணு மா அவளுக்கும் உனக்கும் எப்பவும் ராசி தான் நான் ராமமூர்த்தி கிட்ட
பேசுறேன் "

கிருஷ்ணமூர்த்திக்கு சுகனை அனிதாவிற்கு மணம் முடிக்க ஆசை ... அவர்களாக பேசும் போது கேட்க நினைத்தவர் மதுவை கேட்க அமைதியாகி போனார்....

இதனை எல்லாம் அங்கு அமர்ந்து அமர்ந்து வேடிக்கை பார்த்த அனைவரும் மனநிலையும் வேறு மாதிரி இருந்தது...

" ஐய் மது எனக்கு அண்ணியா செம ஜாலி "
என்று இதயா மனதிலும்

" மம்மி மது தான் பொண்ணு சொன்னினா இப்பயே தாலி கட்ட ரெடி மா நானு தேங்க் யூ மம்மி "
என சுகன் மனத்திலும்

" ச்ச் இவளுக்கு இந்த வாழ்க்கையா "
என மஞ்சுளா மனத்திலும்

" நல்ல வேல அனிதாவ கேக்கல அவளுக்கு இந்த சுசிலாவுக்கும் ராசியே இல்ல.... நல்ல வேலை மதுவ கேட்டாங்க... இந்த மாப்பிளை கூட வந்த பையன் நல்லா இருக்கான் நல்ல வசதியும் கூட... பிக்கல் பிடுங்கலும் இல்ல மெதுவாக கிருஷ்ணமூர்த்தி கிட்ட பேசி பேச சொல்லனும் "
என ஆரவை மனதில் வைத்து கொண்டு பாட்டியும் நினைக்க

ஆரவ் மனதிற்கு மட்டும் சற்று எரிச்சலாக இருந்தது..
" அவ எவ்வளவு சின்ன பொண்ணு அவளுக்கு இப்ப கல்யாணமா... அதுவும் இந்த சுகன் கூடயா "
என்றவன் சுகனை பார்க்க

அவன் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை அளவான உயரத்துடன் அமசமான அழகுடன் நல்ல வேலையிலும் இருந்தான்...
இது எல்லாம் தெரிந்தும் ஆரவ் மனது அவனை மதுக்கு பொருத்தமாக‌ நினைத்து பார்க்க முடியவில்லை ....

மறுநாள் காலை பொழுது விடிய திருவிழா நேரம் என்பதால் வீட்டில் இருந்தவர்கள் காலையிலே கிளம்பி ஆரம்பித்தனர்...

பட்டு புடவையில் அழகாக ஜொலித்தவளை கண்ட இன்பா அவளை சீண்டியபடியே கிளம்ப அவனின் இன்ப தொல்லைகளை பொறுத்து கொண்ட இதயாவும் ஒரு வழியாக கிளம்பி வந்தாள்....

" இதயா மது வரல "

" அவ நேரா கோவிலுக்கு வந்துடுறேனு சொன்னாங்க "
என இன்பாவின் கேள்விக்கு பதில் கூறும் போதே ஆரவும் கிளம்பி வந்து சேர்ந்தான்...

வெள்ளை நிற வேஷ்டியில் நீல நிற முழுக்கை சட்டை அணிந்து வர அதற்கு தோதாக இதயாவும் நீல நிற பட்டு புடவையில் வந்து சேர்ந்தார்....

அதுபோல ஆரவையும் வேஷ்டி அணிய சொல்லி இன்பா படுத்தி எடுக்க அவனது தொல்லை தாங்காமல் ஆரவும் வெள்ளை வேஷ்டி இளமஞ்சள் நிற சட்டையில் வர அவனது அழகை அந்த உடை இன்னும் அழகாக காட்டியது....

ஒருவழியாக ஒருவர் பின் ஒருவர் வந்து சேர அனைவரும் கிளம்பி கோவில் வந்தடைந்தனர்...

மதுவும் அழகான சிவப்பு நிற பட்டு புடவை உடுத்தி தனது குடும்பத்துடன் வர அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்....

தனது போனில் அழைப்பு வந்ததால் பேசியபடி வெளியே வந்த ஆரவ் தூரத்தில் மது யாரோ ஒரு ஆண் மகனோடு நின்று பேசி கொண்டு இருப்பதை பார்த்தான்...
அதுவும் அவளது முதுகு புறம் மட்டுமே தெரிய கண்களை துடைத்தபடியும் அந்த ஆண் மகன் கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ கோபமாக பேசி கொண்டு இருக்க ஏதோ பிரச்சினை என அறிந்தவன் அவளை நோக்கி சென்றான்....

" இங்க பாருங்க அத்தான் எனக்கு தெரியாது சின்ன வயசுலே கல்யாணம் பண்ணிக்கலானு என் மனசுல ஆசைய விதைச்சது நீங்க இப்ப எப்படி நீ இன்னோரு கல்யாணம் பண்ணலாம்... அதலா முடியாது நீங்க என்ன தான் கல்யாணம் பண்ணணும் இல்ல நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் "

அருகில் செல்ல செல்ல அவனது காதில் இத்தகைய வார்த்தைகள் விழ ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் அப்படியே நின்றான்...

பின்பு அந்த இடத்தை பார்க்க மது வேகமாக கோவில் நோக்கி செல்ல அந்த ஆண்மகனும் கோவில் நோக்கி சென்று கொண்டு இருந்தான்....

ஆரவ் இவர்களின் பின்புறம் வந்ததால் அவர்கள் இவனை கவனிக்கவில்லை...

" மது லவ் பண்றாலா... மதுவா அவள பாத்தா அப்படி தெரியலையே "
என்று யோசனையுடன் திருமாபி கோவிலை நோக்கி செல்ல

அங்கே அவன் கண்ட மது போல் இல்லாமல் எல்லோருடனும் சிரித்து பேசி விளையாடி கொண்டு இருந்தாள்...

அதுபோல அந்த ஆண்மகனும் தனது மனைவி குழந்தை என நின்று சாமி கும்பிட்டு கொண்டு இருக்க
மது அடிக்கடி அவனை பார்த்து ஏதேதோ சைகைளை செய்ய அவன் தனது மனைவியை கைகாட்டி திட்டி கொண்டு இருந்தான்...

ஆரவிற்கு எதுவும்‌ புரியவில்லை
" ஒருவேளை மது அவனை விரும்பி இருக்க வேண்டும் எனவும் அந்த பையன் வீட்டில் அது தெரிந்து வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து இருக்க வேண்டும்... அதனால் மது அவனை மறக்க முடியாமல் இப்போது வரை தவித்து கொண்டு இருக்க வேண்டும்... என அவனாக முடிவு செய்து

" ச்ச் மதுவும் நம்மல மாதிரி தான் லவ் பண்ணவங்க பிரிஞ்சா எவ்வளவு கஷ்டம் பாவம் மது அவள எப்படியாச்சும் ‌அந்த பையன் கூட சேர்த்து வைக்கனும் "
என‌ மனதில் நினைத்தபடி அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தான்....

அது போலவே சற்று நேரத்தில் அந்த ஆண்மகன் கோவில் பின்னால் உள்ள மலையின் மேல் ஏற ஆரவும் அவன் பின்னாலே சென்றான்...

" ஒருநிமிஷம் ஹலோ பாஸ் நில்லுங்க "
என்று அவன் பின்னாலே போக

" யார் சார் நீங்க இங்கன வந்து இருக்கிங்க "

" ஹாய் ஐ யம் ஆரவ் நீங்க "

" அறிவுடையநம்பி சார் என்ன எப்படி சார் உங்களுக்கு தெரியும் "

" நான் மது.... மது பிரெண்ட் "

" ஐய்யோ அந்த ராட்ஷசியா எங்க எங்க "
என அவன் பதறிய படி சுற்றும் முற்றும் பார்க்க

" இல்ல இல்ல மது வரல நான் மட்டும் தான் உங்கள பாத்து பேச வந்தேன் "

" சொல்லுங்க சார் என்ன விஷயம் "

" அது நீங்களும் மதுவும் பேசினத நான் கேட்டேன்... உங்கள எப்படியாச்சும் சேர்த்து வைக்கனும் நினைக்குறேன்... நீங்க எதுக்கும் கவலபடாதிங்க உங்க வீட்டுல நான் பேசுறேன் "

அவன் கூறியதை கேட்ட அறிவுடையநம்பி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்....

தொடரும்....

வணக்கம் நட்பூக்களே

சாரி சாரி சாரி நிஜமா சாரி என்ன பண்றது நானும் எழுத தான் ஆசை படுறேன்... என்ன பண்றது நிறைய வேலை ரொம்ப நாள் ஆசை அதபத்தி மட்டுமே அதிகமா யோசித்தால வேற எதையும் யோசிக்க முடியல...
கனவு நினவு ஆகிட்டு தான் சொல்லனும்....
இப்போ தான் கொஞ்சம் ரிலிஃபா இருக்கு இனி தொடர்ந்து கதை எழுதுறேன்.....
கண்டிப்பா வராத்துல இரண்டு நாள் கதை வரும்... நம்புவோம் கதை வரும்னு....

தயவுசெய்து படிக்கிறவங்க உங்களது கருத்துக்களை பதிவு செய்துட்டு போங்க... பிளிஸ்....

சிந்தியன்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 11

பாகம் 11

அவன் அழுததை பார்த்த ஆரவ்
" மிஸ்டர் அறிவுடைநம்பி என்னாச்சு ஏன் அழுகுறிங்க நீ கவலபடாதிங்க எந்த பிராப்ளம் வராம நான் பாத்துக்குறேன் "

அவன் கூறியதை கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தவன்
" சார் நீங்க முதல இங்க வாங்க என் பொண்டாட்டி பாத்தா சங்கு தான் எனக்கு "
என்றவன் அவனை கோவில் பின்புறம் மறைவாக அழைத்து போக

" கவலபடாதிங்க நம்பி நான் உங்க பொண்டாட்டி கிட்ட பேசுறேன் "

" ஏதே பேசுறிங்களா நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா எனக்கும் அந்த மது ராட்சஸிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார் "

" என்ன சொல்றிங்க அப்போ மது உங்ககிட்ட சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்குறேனு சொன்றிங்கனு சொன்னா "

" ஐய்யோ சார் அது தான் அது தான் நான் வாழ்கையில் பண்ண ஒரே தப்பு ஒரு கத சொல்லட்டா சார் "
என்றவனை ஏற இறங்க பார்த்தவன்...

" சொல்லு "
என கூற

" நான் அந்த மது எங்க தூரத்து சொந்தம்.. எனக்கு அக்கா பொண்ணு முறை அது பத்தாவது ஸ்கூல் படிக்கும் போது வழியில் பார்த்து என்ன டி என் அக்கா பொண்ணே மாமன எப்ப கண்ணாலம் கட்டிக்குறேனு தெரியாம இத கேட்டுட்டேன் அதுக்கு அதுக்கு‌ என்ன பழி வாங்க சமயம் பாத்து "

" என்ன பண்ணா "

" என்ன பண்ணாலா இரண்டு வருஷம் சும்மா இருந்துட்டு சரியாக என் கல்யாணம் முடிஞ்ச மறுநாள் நீதான் என்ன கட்டிக்கிறேனு சொன்ன என்ன ஏமாத்திட்டனு ஊர கூட்டிட்ட..... ஒரு வழியா எல்லாரையும் சம்மாளிச்சு சரி கட்டுன அதுகுள்ள என் பொண்டாட்டி கிட்ட வந்து ஆப்பு வைச்சுட்டா...மாமா மாமானு ஆசையா கூட்டிட்டு இருந்த என் பொண்டாட்டி அன்னைலேந்து என்ன வெளுத்து வாங்குற.....
அதுலேந்து என்ன எங்க பாத்தாலும் இப்படி தான் அழுகுற மாதிரி சீன் போட்டு என் பொண்டாட்டிகிட்ட அடி வாங்க வைப்பா "

" ஆனா ஏன் இப்படி பண்ணுற "

" என்ன பழி வாங்குறாலா சார் இது தெரியாம நீங்களும் அவகூட சேர்த்து வைக்கிறேனு சொல்றிங்க போங்க சார் அங்கிட்டு "
என அவனை நகர்த்தி விட்டு உனது வேலையை பார்க்க செல்ல

ஆரவ் முகம்‌ கோபத்தில் புசுபுசுவென பொங்கியது...
" ச்ச் அவளுக்கு போய் பேச வந்தேன் பாரு என்ன சொல்லனும் எல்லாம் என் நேரம்... ஊர் விட்டு ஊரு வந்து இப்படி தெரியாதவன் கிட்டலா பேச்சு வாங்க வேண்டி இருக்கு இப்படி அசிங்கபடுத்திடாலே "
என்றவன் அவளை மனதில் திட்டியபடியே திரும்பவும் கோவில் உள்ளே செல்ல

அவளோ மறுபடியும் அந்த அறிவுடைய நம்பியை பார்த்து சைகை செய்து சிரித்து கொண்டு இருந்தாள்..

இதில் இன்னமும் கடுப்பானவன் அவளை வெளிப்படையாகவே முறைக்க அவளும் அவனை பார்த்துவிட்டு
" ஐய்யோ இவன் ஏன் இப்படி முறைக்குறான் இன்னைக்கு என்ற செய்ய போறானோ "
என்றவள் முனுமுனுக்க அதனை காதில் வாங்கிய இதயா

" என்னடி தனியா பேசுற என்ன விஷயம் "
என அவள் தோளில் தட்டி கேட்க

" ஒன்னும் இல்ல டி இந்த ஆரவ் பயங்கரமா முறைக்குறாறு அதான் அதுக்கு காரணம் என்னனு யோசிக்கிறேன் "

" திரும்பவும் பாட்டிக்கு உடம்பு சரியில்லனு பொய் சொல்லிட்டியா "
கிண்டலாக கேட்க

" அதலா ஒன்னும் இல்ல டி "
என்றவள் சட்டென அவள் புறம் திரும்பி

" ஏய் இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் "

" ஐய்யயோ நம்பளே வாய் கொடுத்து‌ மாட்டிக்கிட்டோமே‌"
என்றவள்
" மது சாரி டி அன்னைக்கு நீ ஊருக்கு போனது அப்புறம் நாங்க திரும்ப வீட்டுக்கு வந்தோமா அப்போ "

பரபரப்பாக இன்பாவை நோக்கி வந்த ஆரவ்
" மச்சான் மது பாட்டிக்கு உடம்பு சரியில்லையா.... மது பாவம் அழுதுகிட்டே போனா நீ போய் என்னனு பாரேன் "

" என்னது பாட்டியா அவளுக்கு ஏது பாட்டி.... எங்களுக்கு இருக்கறது ஓரே பாட்டி தான் அதுவும் அந்த பாட்டிக்கு உடம்பு சரியில்லன முதல சந்தோஷபடுறது மது தான்.... அவளாவது அழுகுறதாவது "
என்று இதயா கூற குழப்படைந்த ஆரவ் நடந்ததை கூற

" ஐய்யோ அண்ணா அவளுக்கு எப்ப பாரு இதான் வேல ஊரல திருவிழா அதுக்கு சாக்கு தான் இந்த பாட்டி "
என கூற மூவருக்கும் உண்மை விளங்கியது....

" ஏய் மச்சான் அவ ஏதோ சின்ன பொண்ணு டா.. தெரியாமா ஊருக்கு போறதுக்கு பொய் சொல்லிட்டா நீ எதுவும் அவ கேக்காத "

" கேக்காம அப்படியே மடியில தூக்கி வைச்சு கொஞ்சுவாங்களா... வரட்டும் அவளுக்கு இருக்கு "
என்றவனை இன்பா தடுத்து மதுவை எதுவும் திட்ட கூடாது என சத்தியமும் வாங்க
அதன்பின்னே சற்று சமாதானம் செய்து ஆரவையும் இந்த இரண்டு நாள் திருவிழாவிற்கு அழைத்து வந்தான்...

" அடிப்பாவி அந்த நல்லவ நீ தான.. ஏன்டி இப்படி உன்ன "
என அவளை நோக்கி கையை தூக்க அவள் சிட்டாக பறந்து சென்று இன்பாவின் பின்புறம் ஒளிந்து கொண்டாள்.....

ஒருவழியாக திருவிழா முடிய அன்றே மதுவும் ஆரவும் ஊருக்கு கிளம்ப மது அப்பா மதுவை ரயில் நிலையத்தில் ஏற்றிவிட ஆரவ் தனது காரில் ஊர் வந்து சேர்ந்தான்....

" நீ ஏன்மா இதலா செஞ்சிட்டு இருக்க உனக்கு ஏன் சிரமம் "
என எப்போதும் போல மலர் ஜெனிக்கு உணவு எடுத்து வந்ததை பார்த்து சர்வா அவளிடம் கேட்க

" பரவால அண்ணா இந்த மாதிரி நேரத்துல கண்டதையும் சாப்பிட்டு உடம்பு கெட்டு போச்சுன்னா இதலா ஒரு வேலையா இந்தாங்க அக்காவுக்கு முதல சாப்பாடு கொடுங்க "
என அவனது கையில் உணவை தர
இதனை எல்லாம் கதவின் மறைவில் நின்று பார்த்த ஜெனிக்கு சற்று குற்ற உண்ர்ச்சியாகவே இருந்தது...

" ஒரு நாள் உனக்கு புரியும் ஜெனி அவ பாசம் அவ குழந்தை டி இப்படி பிகேவ் பண்ணற "
என அன்று இசை பேச்சிய பேச்சு காதில் கேட்க அமைதியாகி போனாள் ஜெனி...

மறுநாள் காலை ஜெனியை தேடி மது உள்ளே வர அதே சமயம் ஆரவும் உள்ளே வந்தான்...
இருவரும் ஜெனியை நலம் விசாரித்துவிட்டு வெளியே வர மது தனியாக சென்றதை கண்ட ஆரவ்

" ஆபிஸ் தான போற வா "

" இல்ல நானே "

" ஏன் இதுக்கும் ஏதாவது பொய் சொல்ல போறியா "
என கேட்க அவள் எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தாள்....

அவளது நேரம் சரியாக காரில் ஏறி எப்எம் ஐ ஆரவ் ஆன் செய்ய

பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி

பாட்டு ஓட மது சட்டென எப்எம்ஐ அணைத்தாள்...

" ஏன்மா பாட்ட நிறுத்திட உனக்கு தான் பிடிக்குமே "

" எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்னு நான் எப்ப சொன்னேன் "

" பாட்டு இல்ல பொய் பேச‌ "

" இங்க பாருங்க ஆரவ் நான் ஆஃபிஸ் லீவ் கேட்க பொய் சொன்னது தப்பு தான் அதுக்குன்னு நான் ஒன்னும் பொய் பேசிட்டு இல்ல "
மதுவும் சற்று சத்தமாக‌ பேச

" ஆமாம் ஆமாம் நீ பொய்யே பேசமாட்ட பாரு... அதான் அறிவுடைநம்பி சொன்னானே "

அறிவுடைநம்பி பெயரை கேட்டதும் அவள் சத்தமாக சிரிக்க
" அட அந்த லூசு மாமா எல்லாத்தையும் சொல்லிடுச்சா அது சும்மா ஃபன்னுக்கு "
என சொல்லி சிரிக்க

ஆரவ் வெளிபடையாக முறைத்து
" காதல்னா உனக்கு ஃபன்னா போச்சா... அதுல ஒரு அற்புதமான உணர்வு எப்ப பாரு பொய் சொல்லிட்டு திரியுர உனக்கு காதல பத்தி என்ன தெரியும் விளையாட்டுக்கு கூட அடுத்தவன் கிட்ட காதல சொல்ல கூடாது அது ஒரு தடவ தான் உண்மையா வரும் "

" அவருகிட்ட பேசுனது ஒரு விளையாட்டு...அதுக்கும் காதலுக்கு என்ன சம்பந்தம் எதுக்கு தேவயில்லாம பேசுறிங்க அண்ட் எனக்கும் லவ்னு என்னனு தெரியும் நீங்க ஒன்னும் எனக்கு கிளாஸ் எடுக்க வேணாம் "
அதற்குள் ஆபிஸ் வர அவளும் வேகமாக கதவை திறந்து ஆபிஸினுள் செல்ல ஆரவும் கோபமாக காரை பார்க் செய்து ஆபிஸில் நுழைந்தான்....

அதன்பிறகு இருவரும் பெரியதாக பேசி கொள்ளவில்லை.. மூன்று நாட்கள் கழித்து இன்பாவும் இதயாவும் நாட்கள் அதன் போக்கில் கழிந்தது...

" மச்சான் செய் ஆஃபர் டா இது...நாம மட்டும் இது பண்ணோம் செய் ரீச் "
என சரவணன் பேசி கொண்டே இருக்க

" ஆனா இதுக்கான அப்ரூவல் வாங்க ஆஸ்திரேலியா போனுமே "

" அதுக்கு தான் நான் இருக்கனே எப்படியாவது அந்த கம்பெனி சிஓ கிட்ட பேசி இந்த ஆர்டர கன்பார்ம் பண்றோம் "
என இன்பா கூறியதை கேட்டு அனைவரும் அவனை பார்க்க

" இவன் இப்படி எல்லாம் பேச மாட்டேனே "
என அனைவரும் மனதில் நினைக்க

" என்ன டா அப்படி பாக்குறிங்க நானும் என் பொண்டாட்டியும் ஹனிமூன் எங்கேயும் போகல அட்லீஸ்ட் ஆஸ்திரேலியா கூட நான் போக கூடாதா டா "

" அதான பாத்தேன் என்ன டா எலி டிஸ்கோ ஆடுதுனு "
சர்வா கேலி பண்ண

" யாருடா எலி "

" ஆங் நீ தான் ஏன் டா ஹனிமூன் போகனுனா சொந்த காசுல போடா இதுல போறனு சொல்ற "
சரவணன் கேட்க

" நானா டா போக மாட்டேன்னு சொல்றேன் விட்டா தான டா "

" இப்ப என்ன உனக்கு ஆஸ்திரேலியா போகனும் அதான போய் தொல "
ஆரவ் கூற

" ஆஸ்திரேலியா போகனும் இல்ல இதயா கூட போகனும் "

" சரி டா இவனே போகட்டும் "
ஆரவ் முடித்து கொள்ள

" ஐய்யா ஜாலி "
இன்பா துள்ளி குதிக்க

நண்பர்கள் அனைவரும் அவனை அடி வெளுத்து அவனை ஒரு வழியாக்கினர்....

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்பூக்களே உங்களது கருத்துக்களை மிஸ்டர் அண்ட் மிஸ் கருத்து திரியில் பகிருங்கள்... கதையின் போக்கினை எனக்கு தெரியபடுத்துங்கள்....
அப்போது தான் எழுதுபவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்... நிறை குறை விமர்சனங்களை பதிவிட்டால் தான் கதையின் போக்கு தெரியும்...

நன்றி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
, மிஸ்டர் அண்ட் மிஸ் 12

பாகம் 12

" உன்கூட போய் என்ன அனுப்பினாங்க பாரு அவனுங்கள சொல்லனும் "
என ஆரவ் தலையில் கை வைத்து ஏர்போர்ட்டில் அமர்ந்து இருக்க

" அத நான் சொல்லனும் இந்த இன்பா அண்ணா ஏன் தான் இப்படி பண்ணாங்களோ ச்சச "
என அவளும் அவனுக்கும் அருகிலே தலையில் கை வைத்து அமர

அடுத்து பயணிகள் உள்ளே வர அவர்களும் தங்களது உடைமைகளை எடுத்து கொண்டு விமானத்தின் உள்ளே நுழைய ஆரவிற்கும் மதுவிற்கும் அருகருகே சீட் இருக்க

" இன்பா "
என மனதில் திட்டியபடியே அமர்ந்தனர்....

" எல்லா இந்த இதயாவ சொல்லனும் போகற நேரத்துல தான் கீழ் விழுந்து வாருவால லூசு லூசு "
என இதயாவை திட்டிய படியே இருக்க
நேற்று நடந்ததை நினைத்து பார்த்தாள்....

இன்பா இதயாவிடம் இருவரும் ஆஸ்திரேலியா செல்லும் விஷயத்தை கூற இதயாவும் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள்...
வந்த சில நாட்களிலும் இன்பாவின் வேலை பளு அதிகமாக அவனால் பெரிதாக எங்கேயும் அவளை அழைத்து செல்ல முடியவில்லை... அதனால் இருவரும் உற்சாகத்துடன் கிளம்ப ஆயத்தமாயினர்...

மதுவுடன் சேர்ந்து இதயா ஷாப்பிங் செய்து விட்டு வீடு வர
" இதயா அம்மா தான் கால் பண்றாங்க பேசிட்டு வரேன் "
என்றபடி அவள் நகர இதயா வீட்டிற்கு செல்ல

" ம்ம் சொல்லு மா "

" ஏண்டி எங்க போன எத்தன தடவ போன் பண்றது "

" மா இதயாவும் நானும் ஷாப்பிங் போயிருந்தோம் அவ நாளைக்கு ஊருக்கு போறால "

" சரி டி நீ கிளம்பி ஊருக்கு வரியா உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் "

" என்ன மா விஷயம் ஏற்கெனவே கோவில் பங்ஷனுக்கு லீவ் போட்டு இருக்கேன் இப்படி நீ நினைச்ச மாதிரில லீவ் போட முடியாது "

" டி இப்ப இல்ல ஞாயிறு சும்மா தான இருப்ப அன்னைக்கு வா "

" அப்படி என்னமா முக்கியமான விஷயம் ஃபோன்ல சொல்லேன் மா "

" இல்ல நேர்ல தான் சொல்வேன் சரி நான் வைக்கட்டா "

" ம்ம் "

" அப்புறம் டி அம்மா எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான் பண்வேன் சரியா "

" உன் பத்தி எனக்கு தெரியாத சரி மா "
என்று இவள் போனை வைத்து விட்டு வீட்டிற்கு உள்ளே செல்ல பாத்ரூமில் அலறல் சத்தம் கேட்க வேகமாக உள்ளே சென்று பார்த்தாள்...

இன்பா காரினை வேகமாக ஒட்டியபடி வர உள்ளே இருந்து வந்த டாக்டர்
" பயப்பட ஒன்னும் இல்ல ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் "
என்றபடி செல்ல இவனும் அறையினுள் வேகமாக நுழைந்தான்...

கட்டிலின் மேல் இதயா காலில் கட்டுடன் உட்கார்ந்து இருக்க சுற்றி சர்வா ஜெனி சரவணன் மலர் ஆரவ் மது என அனைவரும் சோகமாக முகத்தை வைத்து கொண்டு இருக்க

அனைவர் முகத்தையும் பார்த்த பின் இதயாவை பார்க்க அவள் வாயில் அதுவரை கட்டுபடுத்தி வைத்து இருந்த சிரிப்பு வெளியே வர சத்தமாக சிரித்தாள்.. அதனை பார்த்து அனைவரும் சிரிக்க மது வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தாள்...

" மச்சான் உனக்கும் லவ்வுக்கும் தான் செட் ஆகலனு பாத்த ஹனிமூன்க்கும் உனக்கும் கூட செட் ஆகல டா "
என சர்வா அவனை கிண்டலடிக்க

" வாய மூடு டா குரங்கு "

" போதும் போதும் வாங்க நாம வெளிய போகலாம் அவன் தனியா அழட்டும் "
ஆரவும் அவன் பங்கிற்கு கலாய்க்க

" ஆரவ்வ்வ் "
என கத்த

" சாரி மச்சான் தனியா இருக்கட்டும் சொல்ல வந்தேன் "
என்றபடி அனைவரும் வெளியே செல்ல

" டாலு இப்ப எப்படி டா இருக்கு "
என்று இதயாவின் தலை தடவி ஆதரவாக கேட்க

" பரவாலங்க "
என சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு பேச

" அடியே அவனுங்க தான் கலாய்க்குறாங்கனா நீயும் மா உன்ன "
என்றபடி கை ஓங்க
அவள் பின்னே சாய இழுத்து அணைத்து கொண்டான்...

" சாரிங்க நீங்க ரொம்ப ஆசைய இருந்திங்கல எல்லாம் என்னால தான் "

" லூசு அதலா ஒன்னும் இல்ல நமக்கு என்ன அறுபது வயசா ஆகிடுச்சு அடுத்த மாசம் கூட ஹனிமூன் போயிக்கலாம் எனக்கு உன்கூட இருக்கனும் அவ்வளவு தான் "
என்றவன் அவளுக்கு இரவு உணவு தயாரித்து ஊட்டி விட்டு முடிக்க

நண்பர்கள் அனைவரும் அவளை காண மாடிக்கு வந்தனர்...

" வாங்கடா நல்லனுங்களா என் பொண்டாட்டி கீழ விழுந்து கால உடைச்சுட்டு இருக்கா உங்களுக்கு சிரிப்பா இருக்கா "
இன்பா கேட்க

" ச்சு சும்மா இருங்க நான் கீழ் விழுந்ததும் மது எல்லாருகிட்டையும் சொல்ல உடனே எல்லாரும் வந்துட்டாங்க... டாக்டர் கூட்டிட்டு வந்து டீரிட்மெண்ட் பண்ணி ஒன்னும் இல்லனு சொல்ற வரைக்கும் யாருக்கும் இந்த இடத்த விட்டு போகல உங்கள பாத்ததும் தான் எல்லாரும் சிரிச்சாங்க "
இதயா நடந்ததை கூற

" மச்சான்‌ நாங்களா சீரியஸா தான் டா இருந்தோம் உன்ன பாத்ததும் சிரிப்பு தானா வந்துடுச்சு டா "
சரவணன் கூறி சிரிக்க

" இருக்கும் டா இருக்கும் "
என்றவன் அனைவரையும் முறைத்து பார்க்க

" எவ்வளவுதான் நேரம் தான் இப்படியே உட்கார்ந்து இருக்கறது போர் அடிக்குது "
ரொம்ப நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததால் இதயா கேட்க

" வேணா ஓடி பிடிச்சு விளையாடலாமா "
இன்பா அவளை வம்பு இழுக்க

" ஐடியா எல்லாரும் மொட்டை மாடிக்கு போகலாம் "
ஜெனி கூற அனைவரும் ஏற்று கொண்டு மொட்டை மாடிக்கும் சென்றனர்...

" சரி இப்போ ஆஸ்திரேலியா யார் போறது "
என்ற கேள்வி

" ஆரவ் தான் இவனுக்கு அடுத்து அவன் தான போகனும் "

" நான்லா போகல இதயா வரலனா என்ன நீ மட்டும் போயிட்டு வா "
ஆரவ் சிடுசிடுக்க

" டேய் அவளுக்கு அடிபட்டு இருக்கு ஜெனியும் பிரக்னென்ட் சர்வாவும் சரவணனும் செட் பாக்கனும் நீ தான்டா போகனும் "

" டேய் எனக்கு ஆஸ்திரேலியா போகலா விருப்பம் இல்ல "

" ஐய்யோ ஆஸ்திரேலியா எவ்வளவு சூப்பரான இடம்... புதுசு புதுசா மனுஷன்ங்க புது புது இடம்.. போனா என்ன "
மது வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் கேட்டு வைக்க

" அப்படியா அப்ப நீயே போ "
ஆரவ் கூற

" ஐய் இது நல்லாருக்கே மதுவும் நீயும் ஆரவ் கூட போ "
இன்பா கூறியதை கேட்டு சர்வாவும் சரவணன் சம்மதம் தெரிவிக்க

" நானா நான் மாட்டேன் மா அதுவும் இவரு கூட "

" ஆமா இப்ப நான் உன் கூட தான் வரேன்னு அடம்புடிச்சு நிக்குறன் பாரு "

" போதும் போதும் இரண்டு பேரும் ஆரம்பிக்காதிங்க இரண்டூ பேரும் போறிங்க சர்வா டிக்கெட் புக் பண்ணு "

மதுவிற்கு இதுபோல‌ வெளிநாடு செல்ல ஆசை தான் ஆனால் அன்று ஆரவ் திட்டியதில் இருந்து அவனுடன் இருக்கவே அவளுக்கு‌ பயம்...
இறுதியில் இருவரும் சம்மதிக்க டிக்கெட் புக் செய்தனர்...

மது வீட்டில் அழைத்து ஆஸ்திரேலியாவிற்கு கம்பெனி விஷயமாக செல்வதாக கூற‌சிலபல அறிவுரைக்களுக்கு பின்பு சம்மதித்தனர்... அதுவும் இன்பா கூறியதால் மட்டுமே....

தனியே நின்று இருந்த இன்பாவை நோக்கி சென்ற ஜெனி
" இன்பா "

" சொல்லு ஜெனி "

" நீ எதுக்கு தேவையில்லாம ஆரவையும் மதுவையும் கோத்து விடுற "

" ஏய் அப்படிலா எதுவும் இல்லை இது கேசூவலா "

" போதும் எனக்கு தெரியும் நீ என்ன பண்றேனு "

" ஆமா ஆரவுக்கு மது சரியான ஜோடியா இருப்பானு என மனசுக்கு தோனுச்சு எப்பவும் சண்டையே போடுற இவங்களுக்குள்ள இந்த டிரிப் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறேன்... அது தப்பா "

" ஆனா ஆரவ் பத்தி உனக்கு முழுசா தெரியும் இல்ல அவன் எப்படி இசைய மறப்பான் "

" அவன மறக்க சொல்லல மாற சொல்றேன்... யோசிச்சு பாரு மது கூட இருக்கும் போதும் பழைய ஆரவ் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வரான்... அவளோட சட்ட போடும் போது வம்பு பேசும் போது அவள் கிண்டல் பண்ணும் போது உனக்கு அவனோட மாற்றம் தெரியுதா "

சில நாட்களாகவே ஜெனியும் கவனித்து கொண்டு வருவதால்
" இருக்கலாம் ஆனா ஆரவ் மாறுவானு எனக்கு நம்பிக்கை இல்லை... நீயா ஏதாவது பேசி மது மனசுல ஆசைய விதைக்காத "

" மதுக்கிட்ட இத பத்திலா நான் எதுவும் பேசலா பாப்போம் என்ன நடக்குது "
இன்பா முடித்து கொள்ள

மறுநாள் இரவு ஆரவ் மற்றும் மது அவர்களின் பயணம் நோக்கி கிளம்பினர்...

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 13

பாகம் 13


பிளைட்டில் ஏறி இருவரும் அருகருகே அமர வெளியே தைரியமாக பேசிய மதுவிற்கு இப்போது மனதிற்குள் திக் திக் என்று இருந்தது..

அவளது முகமே அவளது பயத்தை காட்ட
" பர்ஸ்ட் டைம் பிளைட்டா "

" ம்ம் "

" பயப்படாத ஒன்னும் இல்ல "

அப்போதும் பயத்தோடே சரி என தலை ஆட்டி வைக்க
அங்கு வந்த பணிப்பெண்
" மேம் சீட் பெல்ட் போட்டுக்கோங்க "
என ஆங்கிலத்தில் அழகாக கூற

மதுவிற்கு அது எல்லாம் போட தெரியும் தான் ஆனால் இன்று சிறு தடுமாற்றம் கைகள் நடுங்க அவளால் சரியாக போட கூட முடியவில்லை...

" வாய் மட்டும் தான் இருக்கு சீட் பெல்ட் போட தெரியல "
என்றபடி ஆரவ் அவளது பெல்ட்டை போட்டு விட அவனது கை அவளது வயிற்று பகுதியில் பட மது மூச்சடைத்து நின்றாள்..

" ம்ம் போட்டாச்சு "
என்றபடி அவன் இயல்பாக இருக்க
" ச்ச் தெரியமா பட்டு இருக்கும் அதுக்கு ஏன் ஏதேதோ யோசிக்கிற டி மது "
என்று எண்ணி கொண்டவள்
அவன் கூறியதை நினைவு படுத்தி

" போட தெரியாமலா இல்ல சின்ன பயம் அவ்வளவு தான் "
என பதிலுக்கு வாய் கொடுக்க
அதற்குள் விமானம் தரைதளத்தில் ஓடி மெதுவாக மேலே ஏற
கண்களை இரண்டும் இறுக்கி‌ மூடி கொண்டவள் ஆரவின் கை மீது தனது கையையும் வைத்து அழுத்தி கொண்டாள்...‌

ஒரு சமநிலையில் சென்ற பின்னே மெதுவாக கண்களை திறந்து பார்க்க
" அப்பா பயம் போயிட்டா ராட்சஸி கை விடு "
என கூற அவளும் அப்போது தான் கவனித்தாள் அவனது கைகளை அழுத்தி கொண்டு இருப்பதை

" கொஞ்சம் விட்டு இருந்த என் கைய நசுக்கி எடுத்து இருப்ப போல "

" சாரி கொஞ்சம் பயந்துட்டேன் அதான் "

எப்போதும் அவனுடன் ஏட்டிக்கு போட்டியாக பேசி‌ மது இப்போது உண்மையாக‌ விருந்தி சாரி கேட்க ஆரவிற்கு என்னவோ போல ஆனது..
அவளது பயந்த முகத்தை கண்டு

" ஏய் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் டோண்ட் டேக் சீரியஸ் "
என்றவன் தானாக அவனது கையை எடுத்து அவளது கை மீது வைத்து
" பயபடாத நான் இருக்கேன் "
என்று கூற

அவளும் சிரித்து கொண்டே அவனது கையை தனது கையில் கோர்த்து கொண்டாள்...

" ஆமா இதுங்க இரண்டும் அடிச்சுக்காமா ஊரு போய் சேருமா "
என சரவணன் கேட்க

" யாருக்கு தெரியும் எங்க முடிய பிடிச்சு அடிச்சுட்டு கிடங்களோ "
இன்பா கூற

" ஏதோ ஒன்னு மச்சான் எல்லாம் நல்லபடியாக முடிஞ்சா சரி தான் "
சர்வா முடிக்க

" நல்லபடியா முடியும் டா ஆஸ்திரேலியால இருக்க டிரெஸ்ட் நம்ப ஊருல கட்ட போற ஸ்கூல் நல்லபடியா முடியும் பாவம் ஏழைகளுக்குனு பண்றாங்க எதுவும் சிக்கல் வராது நம்புவோம் "
இன்பா கூற

" நாங்க அத சொல்லல அத ஆரவ் எப்படியும் வாங்கிட்டுவான்.. நாங்க சொன்னது நீ ஆரவ் மதுவ சேர்த்து வைக்க போடுற திட்டம் "
சர்வா அவனது எண்ணத்தை கூற

" டேய் ஏதாவது கிளப்பி விட்டு என்ன ஆரவ்கிட்ட அடி வாங்க விட்டுடாதிங்க டா "

" அதுயில்ல மச்சி ஆரவுக்கு ஒரு நல்லதுனா அதுக்கு நாங்களும் தான பொறுப்பு... அதுக்காக தான நீ இரண்டு பேரையும் சேத்து ஆஸ்திரேலியா அனுப்பி வைச்ச "

" அடேய் சரவணா நீ சொல்றத பாத்த நான் என்னவோ என் பொண்டாடியே வேணும்னே தள்ளி விட்டு அவங்க இரண்டு‌ பேரையும் ஊருக்கு அனுப்புன போல இருக்கு டா உன் பேச்சு "

" அதான மச்சி உண்மை " சிரிப்புடன் கூற

" டேய் வேணா டா நானே இப்ப தான் முதல்முறைய கல்யாணம் பண்ணி இருக்கேன். நீ வேற ஏதாவது சொல்லி இதயா வீட்டிலேந்து வந்து என் பொண்ணையே தள்ளி விட்டியானு அவள கூட்டிட்டு போய் என்ன திரும்பவும் பிரம்மச்சாரி ஆக்கிடாதிங்க டா இதுலா பொதுவா நடந்தது சரியா "

நண்பர்கள் இருவரும் சிரிக்க இன்பா அவர்களை முறைத்து வைத்தான்....

சிறிது நேரத்திலே மதுவிற்கு போர் அடிக்க
தூங்கி கொண்டு இருந்தவனை
" ஆரவ் ஆரவ் "
என எழுப்ப

எழுந்தவன்
" என்னாச்சு மது ஏதாவது வேணுமா "
என அவன் பதறியபடி கேட்க

" தூங்கிட்டு இருந்தியா"

அவன் முறைத்து முறைப்பில்
" சாரி சாரி சாரி ரெஸ்ட் ரூம் போகனும் அதான் "

" போ இதுக்கெல்லாமா பர்மிஷன் கேட்பாங்க "

" இல்ல ஒரு மாதிரி தனியா போக "
அவனது பதட்டத்தை புரிந்து கொண்டவன்
" சரி வா "
என்றபடி அவளை அழுத்து கொண்டு போக அவள் உள்ளே சென்று விட்டு வரும் வரை அவளுக்காக காத்திருந்து அழைத்து கொண்டு வந்தான்....

திரும்பவும்
" ஆரவ் ஆரவ் "

" இப்ப என்னமா வேணும் "

" இல்ல போர் அடிக்குது "

" இந்த சாங் கேளு இல்ல ஏதாவது மூவி பாரு "
என்று எதிரில் மாட்டி இருந்த சின்ன ஐபேடின் ஹெட்‌போனை எடுத்து கொடுக்க

" அதுவும் சுத்த‌ போர் "

" வேற என்ன பண்ணணும் "

" ஏதாவது பேசிட்டு இருப்போமா "

" எது நீயும் நானுமா பேச ஆரம்பிச்சாலே சண்ட தான் நமக்குள்ள "

" அட இது ரொம்பபபபப லாங் டிராவல் சண்ட போட்டுடே இருந்த எப்படி அதுவும் இல்லாம அங்க போய் ஃபைவ் டேஸ் இருக்க போறோம் சோ சண்ட நோ ஒன்லி பிரண்ட்ஸ் "
என கையை நீட்ட சற்று யோசித்தவன்

" ஓகே‌ பிரண்ட்ஸ் "
என அவனும் கை கொடுக்க

" அதுக்கு எதுக்கு இவ்வளவு யோசனை ரொம்ப தான் "
என மது சலித்து கொள்ள

" ஓய் இப்ப தான நோ சண்டைனு சொன்னா "

அவளும் நியாபகம் வந்தவளாய்
" ஓகே ஓகே கூல் "

அதன்பின் இருவரும் தங்களது சிறு வயது குறும்பு முதல் பெரியவன் ஆன கதை வரை பேசி கொண்டே இருக்க‌ இதில் அதிக நேரம் மது தான் பேசினாள்.. அவனும் சிரித்த முகத்துடனே அவளது பேச்சை கேட்டு கொண்டே வர ஒரு கட்டத்தில் பேசி கொண்டே இருந்தவள் தூங்கியும் போனாள்...

அவளை பார்த்து சிரித்து கொண்டே
" சரியான வாலு "
என்றவன் அவளை நேராக்கி கழுத்துக்கு கீழே நெக் பிள்ளோவை வைத்துவிட்டு முகத்தில் சரிந்த முடியை காதின் ஓரம் ஒதுக்கி வைக்க
அவனை அறியாமலே அவளை பார்த்தபடியே அமர்ந்து இருந்தவன் தூங்கியும் போனான்....

விழிப்பு தட்டிய மது எழுந்து பார்க்க கழுத்தின் கீழே இருந்த பிள்ளோவை சிரிப்புடன் எடுத்து ஆரவிடம் திரும்ப அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்...

அவனை பார்த்தபடி தலையை சாய்த்து படுத்தவள் சற்று நேரம் அவனை பார்க்க
" யாரு டா நீ ஏன் என் லைஃப்ல வந்த உன்ன முத தடவ பார்க்கும் போதே எனக்குள் ஒரு மின்னல் வந்து போச்சு தெரியுமா ஆனா நீ அடிச்சதும் அப்படி ஒரு கோபம்.. அதுக்கப்புறம் உன்ன ஆபிஸ்ல பாத்ததும் சந்தோஷமா உன்கிட்ட பேச வந்தா அங்கயும் சண்ட.... உன்கிட்ட சண்ட போட போட நீ என்குள்ள ஆழமா போயிட்டே இருந்த அதுவும் நேத்து இன்பா அண்ணா இசைய பத்தி சொன்னதும்... நீ மொத்தமா எனக்குள்ள வந்துட்ட ஆரவ்.. இசைக்கு நீ கொடுக்க நினைச்ச காதல நான் உனக்கு தருவேன்... எஸ் ஐ லவ் யூ ஆரு ஐ லவ் சோ மச் ரொம்ப நேரம் எடுத்துக்காம சீக்கிரமா என்கிட்ட வந்துடு பிளிஸ் "
என்றவள் அவனது கண்ணத்தை கிள்ளி முத்தம் வைக்க அவனது சிணுங்களில் அவள் தனது கண்களை மூடி கொண்டாள்....

கண்களை மூடியபடி நேற்று நடந்த நிகழ்வுகளை நினைத்தபடியே படுத்து இருந்தாள்...

எல்லாரும் மொட்டை மாடி ஒன்று கூடி அரட்டை அடித்து கொண்டு இருக்க ஜெனி அழகாக சர்வா கையில் பாந்தமாக சாய்ந்த படி பேச மலரும் சரவணனி‌ கை கோர்த்து கொண்டே பேச இன்பா இதயாவின் காலினை மென்மையாக அழுத்தி விட்டபடியே இருக்க இவர்களின் காதலினை கண்ட மது மனதிற்குள் சந்தோஷம் பொங்கியது...

" ச்ச் எவ்வளவு அழகா எல்லாரும் காதலிக்குறாங்க... ஒரு வேலை காதல் அழகா தான் இருக்குமோ "
என்றவள் எண்ணியபடியே இருக்க

" என்ன மா மது பலத்த யோசனை "
என்றபடி அருகில் வந்து அமர்ந்த இன்பா கேட்க

" இல்லணா உங்களுக்குளா எவ்வளவு அழகான காதல் இருக்கு அதை தான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா "
என்று பேசியபடியே இருக்க

" சரி மச்சான் நாங்க கிளப்புறோம் டைம் ஆகிட்டு "
என ஒருவர் பின் ஒருவராக செல்ல

" என்னங்க நானும் கீழ போறேன் "
இதயா கூற

" இருமா நானுமா வரேன் மது வா போகலாம் "

" இல்லணா நீங்க போங்க நான் கொஞ்சம் நேரம் இருந்துட்டு வரேன் "
என்று கூற இதயாவை இன்பா தூக்கி கொண்டு கீழே இறங்க அதனை பார்த்து சிரித்து கொண்டே இருந்தவள்... பின்னால் கைபேசியை பார்த்தபடியே வந்த ஆரவை கண்டு

" இவரு மட்டும் ஏன் தான் இப்படி இருக்காரோ "
என எண்ணியபடியே நிற்க

" ஏன்மா ஆனானு இழுத்த என்ன "
என இன்பா கேட்க

" அதுக்குள்ள விட்டுட்டு வந்துடிங்களா "

" லிஃப்ட் தானா நீ தனியே நிக்குறனு வந்தேன் "

" உங்க கேங் செய் சூப்பர் அண்ணா நல்ல நட்பு அழகான காதல் நல்ல புரிதல் "
சிரித்தபடியே கேட்க

" ஏன் இந்த ஆரவ் மட்டும் சிடுசிடுனு ‌இருக்காரு "

" யாரு ஆரவா அவன் ஒரு காலத்துல எப்படி இருந்தவன் தெரியமா "

" என்னணா ஃபிளாஷ் பேக்கா "

" ம்ம் அப்படியே வச்சுக்கோ சரியா ஒரு எட்டு வருஷம் பின்னாடி போ நாங்களா அப்படியே இருபத்து இரண்டு வயசு பசங்க தலைய கலைச்சு விட்டு சேர்ட் இன் பண்ணா பைக்குல சத்தமா கத்திக்கிட்டே ஜாலியா போற மாதிரி நினைச்சுக்கோ "

அவளும் கண்களை மூடி அவன் சொன்னபடியே அனைவரின் வயதையும் குறைத்து கொண்டு எட்டு வருடங்களுக்கு பின்னால் சென்றாள்....

தொடரும்.....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிஸ்டர் அண்ட் மிஸ் 14

பாகம் 14

நட்பூக்களே இனி இதை ஆரவ் மற்றும் அவனது நட்புகளுடன் எட்டு வருடங்களுக்கு முன்பு இருந்த கல்லூரி காலத்தில் சந்திக்கலாம்...
ஆரவ் இசை மட்டுமில்லாமல் மலர் சரவணன் சர்வா ஜெனி காதலும் கல்லூரி காலத்தில் ஆரபம்பித்தது தான்...
முழுக்க இசையை பற்றி தான் இருக்கும்.. அவளை சார்ந்தே கதை நகரம்.. இசை கதாபாத்திரதம் சற்று அழுத்தமாக இருப்பதால் இந்த ஃபிளாஷ் பேக் கதை எத்தனை பாகம் செல்லும் என தெரியவில்லை.....
தொடர்ந்து படியுங்கள்...

பாகம் 14

அந்த பிரபலமான யுனிவர்சிட்டி பலதரப்பு டிபார்ட்மெண்ட் மாணவர்களை கொண்டது.. பல பிரிவுகளின் கீழ் மாணவர்கள் படிக்க
ஆரவும் இன்பாவும் எம் பி ஏ எடுத்து படிக்க..
சர்வா ஜெனி ஆர்கிடெக் படிக்க
சரவணனும் எம் டெக் சிவில் பிரிவில் படித்து கொண்டு இருந்தான்....

இவர்களை அனைவரும் நண்பர்கள் ஆக்கியது அவர்களது கிரிக்கெட் டீம் தான்...

" ஆரவ் ஆரவ் ஆரவ் "
மொத்த ஆரங்கமும் கூச்சலிட தனது கையில் இருந்த கிரிக்கெட் மட்டையை பிடித்தபடி எதிரில் வரும் பந்தை குறிவைத்து கொண்டு இருந்தான்..‌

ஆறு ரன் எடுத்தால் வெற்றி என்று இருக்க மறுபுறம் இருந்த இன்பா அவனும் தயாராக இருக்க சரியாக வந்த பந்தை சிக்ஸர் அடித்த அந்த மேட்சை வெற்றி பெற செய்தான்....

" ஏஏஏஏஏஏஏஏஏ "
" ஆரவ் ஆரவ் ஆரவ் "
என மொத்த ஆரங்கமும் அவனை தூக்கி வைத்து கொண்டாடினர்....

" மச்சான் சூப்பர் டா செம மேட்ச் எதிர் பார்க்கவே இல்லை ஜெயிப்போனு சர்வா அவுட் ஆனதும் முடிஞ்சுடுச்சுனு நினைச்சேன் கலக்கிட்ட டா "
சரவணன் கூற

" சரி சரி‌ விடு டா நம்ப கையில என்ன இருக்க‌ ஏதோ நடந்துட்டு"
ஆரவ் கூற

" பின்ன இல்லையா மச்சான் இதுவரை எந்த மேட்சிலையும் நீ பத்து ரன் மேல தாண்டுனது இல்ல இப்ப உன்னால் தானா டா மேட்ச் ஜெயிச்சு இருக்கோம் "
இன்பா அவனை வாற

" டேய் அடங்கு டா எனக்கும் ஆட தெரியும் "

" ஏதே ஆட தெரியுமா நீ ஆடறத தான் நாங்க பாத்து இருக்கோமே சரியா ஆப்போஸிட் டீம்ல இருக்கரவங்க‌ சிக்ஸ் அடிக்கவே பால் போடுவ "
இன்பா புலம்ப

" டேய் விடு டா இன்னைக்கு‌அவனால தானா மேட்ச் ஜெயிச்சு இருக்கோம் சோ அவன் தான்‌ ஹீரோ "
சர்வா கூற

" டேய் எப்பவும் இந்த ஆரவ் தான்டா ஹீரோ "
ஹேய் ஹேய்‌ஹேய் ஹேய் நண்பர்கள் பட்டாளம் சந்தோஷமாக வெளியே வந்தது...

இதில் இன்பாவும் ஆரவ்வும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆக.. சர்வா‌ தன்னுடன் படிக்கும் ஜெனியை காதலித்ததால் அவளும் இந்த கேங்கில் இணைய சரவணன் கிராமத்தில் இருந்து படிக்க வந்தவன் எப்போதாவது கிரிக்கெட் விளையாட.. அது இவனை அந்த கேங்கில் நுழைத்தது...

பெரிதாக ஆட்டம் ஆடுபவர்களா இல்லை ஏதோ பொழுதுபோக்கிற்காக ஆட அது நண்பர் கூட்டத்தை உருவாக்கியது...

" டேய் சரவணா ஊருக்கு போறேனு சொன்ன வா நான் உன்ன பஸ் ஸ்டாப்ல விடுறேன் "
ஆரவ் அவனை அழைக்க

" மச்சான் நானும் வரேன் ஒரு சின்ன வேலை இருக்கு "
இன்பாவும் அவனுடன் தொற்றி கொள்ள

" டேய் பாத்து போங்கடா எங்கயாவது போலிஸ் கிட்ட மாட்டி அடி வாங்காதிங்க "
ஜெனி கூற

" நாங்க பாத்து போறோம் நீ உங்க ஆள வண்டி ஒட்ட விடுமா பின்னால் உட்கார்ந்து அவன சீண்டாத "

" டேய் இன்பா அடங்குடா "
என்று இன்பா வை அடக்கிய ஆரவ்

" சரி சர்வா நீ போய் அவள ஹாஸ்டல விட்டுட்டு வந்துடு நாங்க டீக்கடையில் வெயிட் பண்றோம் "

" சரி "
என கூறி அனைவரும் கலைந்து சென்றனர்...

" டேய் மச்சான் இவன் மட்டும் மாச கடைசி வாரம் க்ரெக்டா ஊருக்கு போறான் என்னவா இருக்கும் "
இன்பா நடுவில் உட்கார்ந்து இருந்த சரவணனை பற்றி கேட்க

" டேய் அவன் அந்த பொண்ணு அங்க தான இருக்கா அதான் "
ஆரவ் விளக்க

" அதான் மச்சான் இவன் மட்டும் போறானே நாமல எப்ப கூட்டிட்டு போகுவானா "

" டேய் இருங்க டா கூட்டிட்டு போறேன்.. சும்மா இரண்டு நாளா போய் பாத்துட்டு வரது செமஸ்டர் லீவ் வரட்டும் ‌ எல்லாரும் போகலாம் "
சரவணன் விளக்க

" ஆமாடா இத்தன செமஸ்டர்ல சும்மா இருந்துட்டு இன்னும் இரண்டு செமஸ்டர் தான் இருக்கு அப்ப தான் உனக்கு ஊருக்கு கூட்டிட்டு போக நேரம் வருமா "

" டேய் போன தடவ பிளான் பண்ணோம் நீ தானடா பாட்டி பாக்க ஊருக்கு போறேனு சொன்னா உன்னால தான டா நாங்க யாரும் போகல "
ஆரவ் கூற

" ஓஓஓஓ நான் தான் காரணமா ‌ரைட்டு விடு இந்த செம் லீவ்ல சரவணன் ஊருக்கு தான் பிளான் ‌என்ன மச்சான் ஓகே தான "

" டபூள் ஓகே "
என மூவரும் கத்தியபடியே பஸ் ஸ்டாண்டு வந்து சேர்ந்தனர்...

" சரி மச்சான் பாத்து போயிட்டு வா மலர ‌புள்ளைய கேட்டோனு சொல்லு "
ஆரவ் அவனை பஸ் ஏற்றி விட்டு‌ வெளியே நின்று பேச

" யாரு இவனா ஊருக்கு போய் மலர பாத்ததும் நம்பள அப்படியே மறந்துடுவான் மச்சான் "

" டேய் ஏன்டா நான் போயிட்டு ஃபோன் பண்றேன் நீங்க முதல கிளம்புங்கடா "
என இருவரையும் அனுப்பி வைக்க...

எப்போதும் சந்திக்கும் டீக்கடைக்கு ஆரவ் இன்பா இருவரும் வந்து சேர
" மச்சி தம் இரண்டு சொல்லு"
என இருவரும் வாங்கி புகைவிட்ட படியே

" என்ன டா இந்த சர்வா இன்னும் காணும் "

" இரு மச்சான் அவன் ஆளு கூட டூயட் பாடிட்டு வர வேணாம் "
இன்பா கூற

" மச்சான் நீ ஏதோ காண்டுல பேசுறாப்புல இருக்கு "

" பின்ன என்னடா நாமளும் நாலு வருஷமா காலேஜ் படிக்குறோம் நமக்கு ஒன்னும் செட் ஆக மாட்டுதே "
இன்பா புலம்ப

" உனக்கென மச்சான் குறைச்சல் நீ அழகன் டா உனக்கா பொண்ணுங்க வரிசைல நிக்குவாங்க டா பாரேன் "

" டேய் டேய் அடங்கு டா என் நேரம் எந்த பொண்ணு கிட்ட லவ் சொன்னாலும் ஒன்று அண்ணா சொல்லுறாங்க இல்ல கல்யாணம் ஆகிட்டு சொல்றாங்க "

" அப்ப நீ லவ்வ சொல்றது பொண்ணுகிட்ட இல்ல மச்சான் ஆன்டிகிட்ட "

" நான் என்ன மச்சான் பண்றது நமக்கு வரது பூரா அப்படி தான் இருக்கு எது பொண்ணு எது ஆன்டினே தெரியல "

" ஏன்டா லவ பண்ணிட்டு இந்த சர்வா சரவணன் இரண்டு பேரும் பண்ற அலும்பல நீ பாக்கலாயா பாத்துட்டுமா இப்படி பேசுற "

" ஐய்யோ ஆமா மச்சான் ஆமா பேசுவானோ பேசுவானோ என்ன தான் பேசுவானுவலோ மூன்னு மணி நேரம் எப்ப நம்பால முடியாது... அது போக எங்க‌ போறோம் எப்ப வருவோம் என்ன டிரஸ் போடுவோம் என்ன சாப்பிடறோம் எல்லா அவுங்களுக்கு சொல்லிட்டே இருக்கனும்....
நமக்கு வேணாம் மா இதலாம் ....
ஆனா ஒன்னு மச்சான் நாம இரண்டு பேரும் கடைசி வர இப்படியே சிங்களா தான் சுத்தனும் சரியா மச்சான் சத்தியம் பண்ணு "

" ஓகே மச்சான் பாராமிஸ் நாம சிங்கிளாவே "
என கூறி முடிக்கும் முன்னரே அவன் கையில் இருந்த சிக்ரெட் பறிக்கபட யாரது என திரும்பி பார்த்தவன் பெண் ஒருத்தி நிற்பதை கண்டு
" ஏய் "
என ஆரம்பிக்கும் முன்னே

" ஏய் இடியட் அறிவில்ல சின்ன பசங்க முன்னாடி நின்னு சிக்ரெட் பிடிக்குற உன்ன பாத்து அவங்க கெட்டு போயிட மாட்டாங்க ச்ச "
என்றபடி அவளது காலில் போட்டு அதனை நசுக்க

ஆரவ் அமைதியாக அவளையே பார்த்து கொண்டு இருந்தான்...

அவள் பேச பேச அவளது காதில் உள்ள ஜிமிக்கி ஆட ஆட அவன் அதனையே கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்...

" இசை இசை "
என தூரத்தில் பெண் ஒருத்தி கத்த

" வரேன் டி "
என்றவள் அவனை திட்டிய படியே நகர போக பக்கத்தில் நின்று இருந்த இன்பாவையும் முறைத்து அப்படியே அவனது கையை பார்க்க அவனும் சட்டென தனது கையில் இருந்த சிக்ரெட்டை கீழே போட்டு நசுக்கினான்...

இசை இருபத்துயோரு வயது பருவ மங்கை.. மாநிறம் தான் சற்று பூசினால் போல் இருக்கும் உடல் வாகு முழு கை வைத்து சுடிதார் போட்டு இருபக்கமும் பின் குத்தி இருந்தாள்.. காதில் ஜிமிக்கி கழுத்தில் சிறு செயின் இரு கைகளிலும் கண்ணாடி வளையல் இரண்டு முகத்தில் சிறு பொட்டு மேலே திருநீறு அவ்வளவு தான் வேற எந்தவித ஒப்பனையும் இல்லை...

" என்ன மச்சான் உன்ன இப்படி திட்டிட்டு போறா நீ அப்படியே நிக்குற "

" விடுறா நாம் பண்ணது தப்பு அதான் திட்டுனா "

" அது எப்படி டா அவள " என திரும்ப

" டேய் அடங்கு அவ பாத்ததும் கையில இருந்த சிக்ரெட உடனே தூக்கி போட்டுட்டு அவ போனதும் சீன் போடுறியா விடு மச்சான் பாத்துக்கலாம் ...
ஆமா அவ பேரு என்ன சொன்ன "

" அவ எங்கடா சொன்னா தூரத்துல ஒரு பொண்ணு இசை இசைனு கத்துச்சு "

" இசை பேரு அழகா இருக்குல மச்சான் "

" டேய் என்னடா ஆச்சு உனக்கு இப்ப தான்டா சத்தியம் பண்ண சிங்கிளாவே இருப்போனு இப்ப என்னாடா சிரிக்கற ..
மச்சான் டேய் டேய் வேணாடா வேணா "

" வா மச்சான் வா மச்சான் பாத்துக்கலாம் "
இருவரும் ஹாஸ்டல் வந்து சேர

" ஆமா அந்த பொண்ணு பேரு என்ன "
ஆரவ் கேட்க

" டேய் இதோட நாற்பத்து இரண்டு தடவ சொல்லிட்டேன் இசை இசைனு புதுசா கேக்குற மாதிரியே கேக்குற "
இன்பா கத்த

" இல்ல மச்சான் அந்த பேர கேட்க கேட்க ஒரு மாதிரி மனசுக்குள்ள ஆகுது டா "

" ஆகும் ஆகும் இருடி உனக்கு இருக்கு "
என பேசும் போதே சர்வா வர

" வாடா நல்லவனே எங்கடா போயிருந்த வரேன்னு சொல்லிட்டு "
இன்பா கேட்க

" மச்சான் ஜெனி வீட்டுல நாங்க லவ் பண்ற விஷயம் தெரிஞ்சுடுச்சு டா "

" எப்படி டா "

" ஒன்னா வண்டில போனோம்லா பாத்துட்டாங்க "

" டேய் ஜெனி வீட்டூல ஜாலி டைப் தான் பிரெண்ட்னு சொன்னா பிராப்ளம் ஸ்லாவ்டு.. நாம் தானா ஏற்கனவே ஜெனி வீட்டுல நாம பிரெண்ட்ஸ்னு தெரியுமே டா "

" இல்ல மச்சான் இறங்கி நானும் ஜெனியும் "

" நீயும் ஜெனியும் "

" ஒரு ஹக் ஒரு கிஸ் "

" அடப்பாவிங்களா டேய் இதலா வேறாயா டா "

" லவ் பண்ணா இதலாம் சாதாரணம் தான் அதலா உன்ன மாதிரி மொட்ட பயலுக்கு எங்க தெரிய போகுது "

" எதே மொட்ட பயலா ஆரவ் பாரு டா இவன "
என திரும்பி ஆரவை பார்க்க

எங்கே அவன் இங்கே இருந்தால் தான் வேறு ஏதோ உலகத்தில் இருப்பதை போல தானாக பேசி சிரித்து கொண்டு பார்த்து அவனது தோளினை பிடித்து உலுக்க

" ஆங் ஆங் என்னாச்சு எங்க என் பொண்டாட்டி என் இரண்டு குழந்தைங்க எங்க எங்க "
என தூக்கத்தில் எழுந்தவனை போல‌ பேச

" பொண்டாட்டியா‌ குழந்தையா என்னாடா ஆச்சு இவனுக்கு "
சர்வா கேட்க

" ஆங் எல்லாம் உன்னால் தான் அது தான் அப்புறம் சொல்றேன் உன் கதைய முதல சொல்லு "
இன்பா கூற

திரும்பவும் அனைத்தையும் ஆரவிடம் கூறினான் சர்வா..

" ஃப்ராயா விடு மச்சான் ஜெனி ரொம்ப போல்ட்... அவ பேசிப்பா ஏதாவது பிரச்சினைனா பாத்துக்கலாம் அண்ணா வைச்சு பேசிக்கலாம் "

" எது உங்க அண்ணா வச்சியா இந்த வயசுல லவ்னு உன்ன தான் பொலப்பாறு "
இன்பா கூறியதை கேட்டவுடன்
ஆரவ்
" அய்யயோ வீட்டுல ஃபோன் பேசனும் "
என்றபடி எழுந்து ஓட

எங்கிருந்தாலும் இரவு ஒன்பது மணிக்கு தினமும் ஃபோன் செய்ய வேண்டும் என்பது அவனது வீட்டில் உள்ளவர்களது ஆர்டர்.....

அடுத்து சர்வா ஃபோன் அடிக்க
" யாரு டா "

" ஜெனி தான் டா "

" போ போய் பேசு ...
அவன் பொண்டாட்டிங்குறா புள்ளங்குறா நீ ஹக் கிஸ்னு சொல்ற நான் மட்டும் கடைசி வர இப்படியே இருக்க வேண்டியது தான் டா... ஹா ஹா ஹா இருக்கறவனுக்கு ஒரு லவர் இல்லாதவனுக்கு நிறைய லவர்.... இன்னைக்கு என்னோட லவரா நீ தான் "
என்று சினிமா நடிகை படத்தை கைகாட்டி
" தூங்கத்துலே டூயட் பாடலாம் " என்றபடி தலையணை கட்டி பிடித்து தூங்க தொடங்கினான்......

தொடரும்.....
 
Top