All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கதை திரி

Status
Not open for further replies.

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 28


10596 10597



சற்றுரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழரசி… ஒரு பணக்கார பிசாசோட சுயநலத்தால ஒரு குடும்பமே அழிஞ்சு போச்சண்ணி…! அந்த சம்பவத்துக்குப் பிறகு கதிரண்ணா ஆத்திரப்பட்டு அந்த மாயா மேலயும் அவங்க அப்பா மேலயும் போலீஸ்ல புகார் கொடுக்கனும்னு ஆவேசப்பட்டாரு ஆனா… அப்பா தான் தடுத்துட்டாரு…!?



“மாமா ஏன் அப்படி செஞ்சாங்க.. அண்ணி? ஒரு குடும்பத்தையே உருக்குலைச்சி இல்லாம பண்ணவங்களுக்கு தண்டனை வேணாமா…?!” என்று தாமரை மனத்தாங்கலோடு வினவ..



“இதையேத்தான் கதிரண்ணாவும் அப்பாட்ட கேட்டாங்க.. அதுக்கு அப்பா…



புகார் கொடுத்ததும் … போலீஸ் உடனடியா அவங்க மேல நடவடிக்கை எடுப்பாங்கன்னு நினைக்கிறயா கதிர்? அவங்களோட தற்கெலைக்கு நேரடியாகவே மாயாவும்…அவங்க அப்பாவும் தான் காரணம் அது நமக்குத் தெரியும்…! ஆனா போலீஸூம்… கோர்ட்டும் அதை ஏத்துக்கிட்டு அவங்களுக்கு தண்டனை வாங்கித் தரனும்னா… அதுக்கு பலமான ஆதாரம்… சாட்சி.. இதெல்லாம் வேணும்… அப்படி எந்த ஆதாரமோ சாட்சியோ நம்மகிட்ட இல்லாத போது எதை வச்சு அவங்க மேல நீ கொடுத்த புகாரை நிருபிச்சு அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்ப? ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலே மாயாவோட அப்பா மாதிரியான அரசியல்வாதிங்க ஈசியா தப்பிச்சு வெளியே வந்துடுவாங்க… ஒரு ஆதாரமும் இல்லாம நாம கொடுக்குற புகார் அடிப்படை ஆதாரமற்றதுன்னு கோர்டே தள்ளுபடி பண்ணிடும். இறந்து போன ஆனந்தும் சரி அவங்க குடும்பமும் சரி தங்களோட தற்கொலைக்கு மாயாவை காரணம் காட்டலை… ஏன்..? ஆனந்தே தன்னோட தற்கொலைக்கு தன் குற்றவுணர்வு தான் காரணம்னு தெளிவா எழுதிவச்சிட்டு செத்துப் போயிருக்கான்.. அது மிகப் பெரிய வீக் பாயிண்ட் இந்த கேஸூல?! என்றவரை கண்களில் வலியோடு ஏறிட்டவன்…



“ஆமால்ல… ஆனா… ஏம்பா அவன் தன்னோட சாவுக்கு மாயா தான் காரணம்னு இலட்டர்ல எழுதலை ?!” என்று மழலையாய் கதிரவன் வினவ….மகனது மனத்துயரை அறிந்தவராய் அவனைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்ட சொக்கநாதர்… ஆறுதலாய் அவனது தலையை வருடினார். பிறகு பெருமூச்சுடன்...



‘ஏன்..?’ இந்த கேள்வியை ஆனந்த் கிட்ட தான் கேட்கனும்…!! ஆனா ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது…இத்தனை நடந்த பிறகும் ஆனந்த் மாயாவை மனசார வெறுக்கலை… ஏன்னா அவன் அவளை உண்மையா காதலிச்சிருக்கான்…. அதனால்தான் அவளுக்கு தண்டனை கொடுக்கனும்னு நினைக்காம தன்னைத்தானே தண்டிச்சிக்கிட்டான். அவனோட காதலில் பிழையில்லை…ஆனா அதை தகுதியற்றவள் மேல வச்சது தான் அவன் செய்த பெரிய பிழை!!” என்று அப்பா எடுத்துச் சொல்லவும் அதன் பிறகு கதிரண்ணா ஒரளவு சமாதானமாயிட்டாங்க. ஆனா பணக்காரங்க மேல இருந்த வெறுப்பும் கோபமும் அவருக்கு கொஞ்சமும் குறையல. அதை மனசுல வச்சுக்கிட்டு தான் உங்க வீட்டு சம்மந்தத்தை அண்ணா ஆரம்பத்தில் மறுத்தாங்க. ஆனால் பரமேஷ்வரன் பெரியப்பா உங்க குடுமபத்தைப்பற்றியும் உங்க எல்லாரோட குணத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லவும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்பவே பிடிச்சிடுச்சி.



அப்பவும் தயங்கின கதிரண்ணாவை அம்மா ஓரளவு சமாதானம் பண்ணித்தான் பெண்பார்க்கவே கூட்டி வந்தாங்க. வந்த இடத்தில் உங்கள் வீட்டையும் அதன் பிரம்மாண்டத்தையும் பார்த்ததுமே எங்க எல்லாருக்கும் கொஞ்சம் அதிரச்சி தான்…அண்ணாவைப் பற்றி கேட்கவே வேணாம். அவன் இன்னும் டென்ஷனாயிட்டான். அப்புறம் அம்மா தான் அண்ணாவை ஒருவழியா சரிகட்டி உள்ளே கூட்டி வந்தாங்க…!” என்கவும் தாமரைக்கு பெண்பார்க்க வந்த அன்று பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்த போது முகத்தில் கடுமை விரவியிருக்க கோபத்துடன் தன்னை அன்னார்ந்து நோக்கிய கதிரவனின் முகம் சட்டென்று நினைவுக்கு வந்தது.



“ஆனா அத்தையும் மாமாவும் வாசலில் வந்து மரியாதையாக வரவேற்றதிலேயே அவங்களோட குணம் எங்களுக்கு விளங்கிடுச்சு அண்ணி… அதிலும் ஆர்பாட்டமில்லாம… அடக்கமா… அமைதியா… அழகா… நீங்க வந்து நின்ற விதத்திலேயே எங்க எல்லாருக்கும் உங்களை ரொம்பவும் பிடிச்சிடுச்சு!. அதுக்கப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே!. உங்களைப் பார்த்ததுமே உர்ருன்னு இருந்த கதிரண்ணா முகத்தில் திடீர்னு 1000 வாட்ஸ் பல்பு போட்டது மாதிரி ஒரு வெளிச்சம் …. அப்புறமென்ன 'பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…. அப்படின்னு இளையராஜா பேக்கிரவுண்ட் மியூசிக் வாசிக்க…குணா கமலைப் போல…கதிரண்ணா பரவசநிலையை அடைந்து… நிற்க…அப்புறம் அண்ணலும் நோக்க…. இந்த ஆரணங்கும் நோக்க…. அதில் கதிரண்ணா….வாயைப் பொளந்து தன்னோட வாட்டர் பால்ஸைத் திறந்து விட்டு மெய்மறந்து நின்றது தான் அன்றைய நாளின் ஹைலைட்டே! ஆனாலும் அவன் இப்படி தலைகுப்புற கவுருவான்னு நான் நினைச்சே பார்க்கலை! இன்னும் கொஞ்ச நேரம் நீங்க அங்கேயே நின்னிருந்தீங்க.. அண்ணா விட்ட ஜொள்ளுல நாங்கெல்லாம் மிதந்திருப்போம்!. நல்லவேளை எங்களைக் காப்பாத்திட்டீங்க…!” என்று தமிழரசி பொங்கி சிரிக்க.. அவளது கிண்டலில் தாமரைக்கு தன்னவனின் அன்றைய ஆர்வப்பார்வைகள் நினைவில் எழுந்து கன்னம் இரண்டும் அழகாய் சிவந்தது.



“அந்த சம்பவத்துக்கு பிறகு காதல்…பொண்ணுங்கன்னாலே காத தூரம் விலகிப் போன கதிரண்ணாவை ஒரே பார்வையில் அப்படி என்ன தான் சொக்குப்பொடி போட்டு மயக்குனீங்க அண்ணி?! என்று மேலும் குறும்பு பேசியவளை….



“கல்யாணமே வேணாம்னு பிடிவாதமா இருந்த எங்க பாண்டியண்ணாவை பார்த்த ஒரே பார்வையில் மயக்கி…கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வச்ச நீங்க எந்த சொக்குப்பொடி போட்டீங்க!..முதல்ல அதை சொல்லுங்க!” என்று தாமரையும் தமிழரசியை பதிலுக்கு கலாய்க்க இப்போது முகம் சிவப்பது தமிழரசியின் முறையாயிற்று. அதன் பிறகு இருவரும் கலகலப்பாய் சற்று நேரம் உரையாடியவர்கள் உற்சாகத்துடன் விடைபெற்று இணைப்பை துண்டித்தனர்.



அந்த டி.ஐ.ஜி அலுவலகம் அன்று மிகுந்த பரபரப்போடு காணப்பட்டது. காரணம் விடுமுறையில் சென்றிருந்த ரத்னவேல் பாண்டியன் அன்று தான் திரும்பவும் பணிக்குத் திரும்புகிறான். தங்களின் மேலதிகாரியின் வரவை எதிர் நோக்கி.. அங்கே பணியிலிருந்த காவலர்கள் ஒருவித பரபரப்புடனும் இலேசான பதற்றத்துடனும் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சற்று நேரத்தில் சுனில் தன்னுடைய ஹீரோ ஹோண்டாவில் வந்து இறங்கி அவனும் பரபரப்புடன் அலுவலகத்துக்குள் நுழைந்தவன் தன் இருக்கையில் அமரவும் . அவனுக்காகவே காத்திருந்தது போல அவனுக்கு கீழே அடுத்த நிலைக் காவலர்களான தீபக்…பரத்.. ஜமால்.. அம்ரீத் ஆகிய நால்வரும் அவன் முன் வந்து நின்று அவனுக்கு சல்யூட் வைத்துவிட்டு கையில் வைத்திருந்த கோப்புக்களை அவன் முன் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றனர்.




சுனில் அவர்கள் கொண்டு வந்த பைலை பிரித்து…ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே வெளியே ஜீப் வந்து நிற்கும் ' க்ரீச்' ஒலி கேட்கவும்…அந்த ஒலியில் சட்டென்று எழுந்தவன் பைல்களை கையோடு எடுத்துக்கொண்டு வாயிலை நோக்கி விரைய அவனை பின்தொடர்ந்தனர் மற்ற நால்வரும்…



போலீஸ் ஜீப்பிலிருந்து காக்கிச் சட்டையும்… கருப்பு கூலர்ஸூமாய்…தான் வகிக்கும் பதவிக்குரிய மிடுக்கும் கம்பீரமுமாக இறங்கியவனை… பார்த்தவர்கள் விரைப்புடன் அவனுக்கு சல்யூட் வைத்து மரியாதையுடன் ஒதுங்கி நிற்க… சிறு தலையசைவில் அதை ஏற்றவாறு மின்னலாய் அலுவலகத்தில் நுழைந்தவனின் பார்வை அனைவரின் மீதும் ஆராய்ச்சியாய் படிய பணியிலிருந்த மற்ற காவலர்களும் அவனைப் பார்த்ததும் பணிவுடன் எழுந்து நின்றனர். பல்வேறு வழக்குகளுக்காக அங்கே குழுமியிருந்தவர்கள் அனைவரையும் தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தவாறே தன் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவன் தன் லாப்டாப்பை உயிர்பித்தவாறே… சுனிலை அழைத்தான். அவனது அழைப்புக்காகவே காத்திருந்தவனைப் போல உள்ளே வந்த சுனில்.. தன் கையிலிருந்த பைல்களை அவனுக்கு முன்னால் இருந்த மேசையில் வைத்தான். பைல்களில் பார்வை பதித்தவாறே…



“அவன் எங்கே?!” என்று வினவ…?



"லாக்கப்பில்.. சார்!!" ண என்றவன். அறைக்கு வெளியே நின்றிருந்தவர்களிடம் கண்ஜாடை காட்ட… லாக்கப்பில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவனின் சட்டையைப் பிடித்து… இழுத்து வந்து பாண்டியின் முன்பு… நிறுத்தினார்கள். பார்வையை கோப்பிலிருந்து உயர்த்தியவன்… எதிரே இருந்தவனை .. நிமிர்ந்து பார்த்தான். மாநிறத்துடன்.. பான்பீடாவால் காவியேறிய பற்களுடன்… நடுத்தரவயதில் திடகாத்திரமான உடற்கட்டோடு கலைந்த தலைமுடியும்…புதர் போல மண்டியிருந்த தாடியுடனும் தன்னெதிரில் நின்றிருந்தவனை பாண்டி.. துளைக்கும் பார்வை பார்க்க… அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்… தலைகுனிந்து நின்றவனை பாண்டி ஏளனமாய் நோக்கினான்.



பின்னர் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து வந்து மேசையின் மீது சாய்ந்து நின்றவன் … தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைத்துவிட்டு…. இருகைகளையும் கோர்த்து நெட்டி முறிக்க… அதைப் பார்த்தவாறு எதிரே நின்றிருந்தவனின் இதயம் தடதடத்தது. பயத்தில் நாக்கு உலர எச்சிலைக்கூட்டி விழுங்கியவன் பாண்டியை பயப்பார்வைப் பார்த்தான். நேற்று இரவு முழுவதும்... நடைபெற்ற போலீஸ் ட்ரீட்மெண்டின் போதும் அசராது மௌனம் காத்து அத்தனை அடிகளையும் வாங்கியவனின் உறுதி ரத்னவேல் பாண்டியனைப் பார்த்த கணத்திலிருந்தே சற்றே தளர்ந்ததில் அவனுள் குளிர் பரவியது.



அவனையே சிறிது நேரம் தீர்க்கமாய் அளவிட்ட பாண்டி…



“சொல்லு உன் பேரென்ன…? என்று பாண்டி உறுமும் குரலில் வினவ… அந்த குரலிலும் பார்வையிலும் எதிரே நின்றிருந்தவனின் தண்டுவடம் சில்லிட்ட உணர்வில்.... தன்னையும் மீறி..



குல்தீப்..சார்..! என்க



ஓ.…குல்தீப்.! சரி சொல்லு..! ஏர்போர்ட்ல யார் சொல்லி என்னை சுட்ட.. ?! புயலை உள்ளடக்கிய குரலில் அவனை துளைக்கும் பார்வை பார்த்து பாண்டி வினவ…



அதில் உள்ளுக்குள் மிரண்ட போதும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல அவன் மௌனம் சாதிக்க… பொறுமையிழந்து ஆவேசத்துடன் அவனை நெருங்கிய பாண்டி…அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டதில்… அவனது பற்கள் உடைந்து வெளியில் தெறிக்க வாயிலிருந்து இரத்தம் கொட…கொடவென வழிந்தது.. கண்கள் இருட்டிக்கொண்டு வர….காதுகளில் ‘ங்கொய்ய்ய்…’ என்ற பேரிரைச்சல் எழுந்தது. தலையை உதறி தன்னை சமன் செய்ய முயன்று தோற்று மெல்ல மயங்கிச் சரிய முற்பட்டவனின் முகத்தின் மீது குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டது. அடுத்த நொடி அவனது வாய்க்குள் தன் கன்னை(gun) நுழைத்த பாண்டி….



“இன்னும் அஞ்சு நொடிக்குள்ள நீ வாயைத் திறக்கலை…. உன்னை போட்டுத் தள்ளிட்டு பைல க்ளோஸ் பண்ணிட்டு போய்டேயிருப்பேன்…! என்றவன் கர்ஜனையில்… சொன்னதை செய்துவிடும் ஆவேசம் இருக்க….அதில் சகலமும் நடுங்க…! வேரறுந்த மரம் போல் பாண்டியின் கால்களில் விழுந்தவன்… அனைத்து விவரங்களையும் மெல்ல கூறத்தொடங்கினான். அவன் கூறிய தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாய்…. வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
அனைத்தையும் கேட்ட பாண்டியின் மனமோ…எரிமலையாய் கொந்தளிக்க முகம் செந்தணலாய் சிவக்க …. வேட்டைக்கு புறப்பட்ட வேங்கையின் சீற்றத்துடன்….அவனையே உறுத்து விழித்தவனின் உதடுகள்… “உபேந்தர்….கவுண்ட் யுவர் டேஸ்….!” என்று ஆத்திரத்தோடு முணுமுணுத்து பின்பு ஏளனமாய் வளைந்தது. சற்றுப் பொறுத்து…சுனிலை அவன் திரும்பிப் பார்க்க… அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் அவன் பரத்திற்கு சைகை காட்ட… அவன் கீழே விழுந்து கிடந்த குல்தீப்பை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று மறுபடியும் லாக்கப்பில் அடைத்தான்.



அதன் பிறகு அடுத்து அவர்கள் செய்ய வேண்டியவை குறித்து சுனிலுக்கும்…. மற்றவர்களுக்கும் கட்டளைகளை பிறப்பித்ததும்…. அவர்கள் அறையை விட்டு வெளியேற… பிறகு தன் மடிக்கணினியில் பார்வையை பதித்த பாண்டி பணியில் தீவிரமாய் மூழ்கிப் போனான். மதிய நேரம் வரை தன் பணியைத் தொடர்ந்தவனின்… அலைபேசி ஒலிக்க எடுத்துப் பார்க்க… கமிஷ்னரிடமிருந்து அழைப்பு என்றதும் உடனடியாக அழைப்பை ஏற்க… அவருடன் பணி பற்றி சிறிது நேரம் உரையாடியவன்…யோசனையோடு இணைப்பை துண்டித்தான்.



அவனே கமிஷ்னரை சந்தித்து பேச எண்ணியிருக்க… அவரே நாளை தன்னை சந்திக்க அழைத்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் யோசனையிலிருந்து வெளி வந்து மணிக்கட்டைத் திருப்பி கைக்கடிகாரத்தை பார்த்தவனுக்கு மதிய உணவிற்கு தனக்காய் காத்திருக்கும்,..மனைவியின் ஞாபகம் எழுந்தது சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்… அலுவலகத்திலிருந்து வெளியேறி ஜீப்பினுள் ஏறி அமரவும்… அவன் வருகைக்காகவே காத்திருந்த அவனுடைய ஜீப் டிரைவர் ராம் தேவ் சட்டென்று வண்டியை கிளப்பினார்.



அடுத்த அரைமணி நேரத்தில் பாண்டியின் இந்திரபுரி அபார்ட்மெண்டை அடையவும் அதிலிருந்து இறங்கியவன். அவரை மறுநாள் காலை வருமாறு பணித்துவிட்டு தன் இல்லம் நோக்கி வேக நடையுடன் சென்றுவிட்டான்.




யோசனையோடு வீட்டுக்குள் நுழைந்த பாண்டியின் பார்வை மனைவியைத் தேட... ஹாலில் அவளைக்காணாது தங்கள் படுக்கையறையில் நுழைந்தான். அங்கேயும் மனைவியைக் காணாமல் பால்கனிக்குச் சென்றான். அங்கே.. மூங்கில் ஊஞ்சலில் இவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்தாள் தமிழரசி. அதுவரை இருந்த இறுக்கம் மனைவியை கண்டநொடியே மறைய..அவளை சத்தமின்றி நெருங்கினான். அவள் மென்குரலில் ஏதோ பேசும் சத்தத்தில் சற்றே எட்டிப்பார்க்க.. அவளோ அலைபேசியை கையில் வைத்துக்கெண்டு அதிலிருந்த பாண்டியின் புகைப்படத்திடம் தான் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஆர்வத்துடன் அவளை மேலும் நெருங்கியவன் அவளது பேச்சை கவனிக்கலானான். அலைபேசியில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் அவன் முகம் சட்டென்று மலர்ந்தது. அது அவளை பெண்பார்க்க சென்ற அன்று தான் எடுத்திருக்க வேண்டும் என்பதை தான் அணிந்திருந்த உடையை வைத்தே கணித்தவனின் மனம்… “கள்ளி..எனக்கே தெரியாம.. என்னை திருட்டுத்தனமா போட்டோ எடுத்திருக்கா..!” என்று எண்ணியவனின் மனம் சிறகின்றி விண்ணில் பறக்க…மனைவியின் குரல் அவனை ஈர்த்தது.



“டேய் … வேலு!! உன்னால அண்ணிகிட்ட என் மானமே போச்சுப் போடா..! பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு அப்படியாடா ஆளை முழுங்கறதைப்போல அப்படி பார்த்து வைப்ப..! அதுவும் சுற்றி அத்தனைப் பேரை வச்சிக்கிட்டு.. கண்ணடிக்கறதும்…ப்ளையிங் கிஸ் கொடுக்குறதும்…ஆனாலும் உனக்கு லொள்ளு அதிகம்டா!. இப்ப பார்த்தியா அண்ணி அதையே சொல்லி என்னைக் கலாய்க்குறாங்க எல்லாம் உன்னால தான்!.... செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு எப்படி சிரிக்கிறான் பாரு ராஸ்கல்… பெரிய மன்மதன்னு நினைப்பு! மூஞ்சைப்பாரு!! என்று செல்லக்கோபத்துடன் பொரிந்தவளின் குரலில் மருந்துக்கும் கோபமில்லை..மாறாக குரல் குழைந்து கொஞ்சியது…அவளது விரல்களோ அவனது முகவடிவை ஆசையாய் வருடியது.



இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தவனுக்கு…அதற்குமேல் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.அவள் அமர்ந்திருந்த ஊஞ்சலை தன்னை நோக்கி அவன் திருப்ப… முதலில் யாரோ என்று பயந்தவள் கணவனைக்கண்டதும் சற்றே ஆசுவாசமடைந்தாள்



“ஆமா இவன் எப்ப வந்தான் தெரியலையே..? அச்சச்சோ…! நான் இதுவரை பேசிட்டிருந்ததை எல்லாம் கேட்டிருப்பானோ?!” என்று கணவனின் முகத்தை ஆராய்வதைப்போல உற்று நோக்கியவள் சட்டென்று ஊஞ்சலைவிட்டு துள்ளி எழந்து நின்றாள்.



“நீ…நீங்க எப்….ப வந்தீங்க…? என்று திக்கித் திணற… மனைவியின் திணறலை மனதுக்குள் ரசித்தவன் கள்ளச்சிரிப்போடு…



“ஜஸ்ட் இப்ப தான் பேபி…என்க! அதில் சற்றே நிம்மதியடைந்தாள்…தமிழரசி.



“ஆமா… நான் உள்ள வரும்போது நீ யாருகிட்டயோ பேசிட்டிருந்த மாதிரி இருந்ததே?” என்று ஒன்றும் தெரியாதவனைப்போல அவன் வினவ… அதில் திகைத்தவள்.



“அதெல்லாம் ஒ….ஒண்ணுமில்லையே சும்மா தான் போன்ல கேம் விளையாடிட்டிருந்தேன் அந்த சத்தம் தான்” என்றவளை… என்று அவன் நம்பாத பார்வை பார்க்க…அவனது பார்வையில் தடுமாறியவள்…



“நா…ன் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்க பிரஷ்ஷப் ஆயிட்டு வாங்க சாப்பிடலாம்!” என்ற சட்டென்று நழுவி அவள் உள்ளே ஓட அவள் பின்னால் வந்தவன் அவளை சட்டென்று தாவிப் பிடித்து இழுக்க…அதில் அவன் மார்பில் மோதி நின்றவளை இறுகத் தழுவிக் கொண்டவன்.



“எங்கடி ஓடப் பார்க்குற..?! என்றவன் அவளது இடையை சுற்றிவளைத்து …தன் கைவளைவில் வைத்துக்கொண்டு “அப்ப என்னடி சொன்ன..?! அதை இப்ப சொல்லு…? என்று அவன் வினவ…அதிலேயே அவன் தான் பேசியதனைத்தையும் கேட்டுவிட்டான் என்பதை உணர்ந்துகொண்ட போதும்..



“எ…..தை.சொ…சொல்றீங்க..! எனறு அவள் புரியாதவளைப்போல வினவினாள் அவளது கண்களோடு தன் கண்களைக் கலக்க விட்டவன்..
“ஏண்டி போலீஸ்காரங்கிட்டேயே பொய்சொல்றியா?”என்று அவளை மேலும் தன்னோடு இறுக்கியவனின் கரம் அவளது இடையின வழுவழுப்பை சோதிக்க… அதில் சிலிர்த்து அவன் நெஞ்சில் முகம் புதைத்தவளின் தோள்வளைவில் முகம் புதைத்தவன்..

“ஏண்டி உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா புருஷன்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம என்னை வாடா…. போடான்னு சொல்லுவ…? அதுமட்டுமா அப்புறம் என்ன சொன்ன ஹான்… நான் ராஸ்கலாடி…?!!” என்றுஅவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து வினவியவனின் குரலில் சிறிதும் கோபமில்லை….கணவனின் வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தை அவள் உற்றுப்பார்க்க…மனைவியின் பார்வையை சட்டென்று கவ்விக்கொண்டவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வழக்கம்போல கண்சிமிட்டினான்.



“என்னடி? நல்லாப் பார்த்துக்கிட்டியா…உன் புருஷன் மன்மதன் தானா?!” என்று கள்ளச்சிரிப்போடு அவன் வினவ…அதில் “மக்கும்!” என்று நொடித்து தன் உதட்டை அவள் சுழிக்க அதில் வழக்கம் போல கிளர்ந்தவன் தாபத்தோடு அவள் முகம் நோக்கி ஆசையாய் குனிய… அவளது இதழை நெருங்கிய வேளையில் ஒற்றை விரல் வைத்து தடுத்தவள்...



“ வேலு…போய் பிரஷ்ஷப் ஆகிட்டு வாங்க முதல்ல பசிக்குது சாப்பிடலாம் என்று தடை போட்டவளை… சலிப்போடு பார்த்தவன்… அவளது காதோரம் நெருங்கி எதையோ கிசுகிசுக்க.. அதில் முகம் சிவந்தவள்… செல்லமாய் அவனை முறைத்து அவனது கைப்பிடியிலிருந்து லாவகமாய் விலகி…. கதவருகே சென்றவள் அவனைத் திரும்பிப் பார்த்து வக்கலம் காட்டிவிட்டு ஓடிவிட்டாள். மனைவியின் குழந்தைத்தனமான செயலில் முகம் விகசிக்க…..தலையை ஆட்டி புன்னகைத்தவாறே குளியலறைக்குள் நுழைந்தான் பாண்டி.



முகம் கழுவி. வேறு உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவன் சமையலறையில் எதையோ உருட்டிக்கொண்டிருந்த மனைவியை பின்னோடு அணைத்தான். இதழ்கள் அவளது கழுத்து வளைவில் உரச..”என்ன பண்ற பேபி…! என்ற கணவனின் தொடுகையில் உருகிக் குழைந்த தன்மனதை கட்டுப்படுத்திக் கொண்டவள்..அவனை விட்டுவிலகி…



“வேலு..! நீங்க முதல்ல இங்கிருந்த கிளம்புங்க! சமைக்கும் போது இப்படியெல்லாம் தொந்தரவு பண்ணா அப்புறம் சமையல் சொதப்பிடும்… ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வர்றேன் நீங்க டைனிங் டேபிளுக்கு போங்க…!” என்றவள் அவனது தோளில் கைவைத்து கையோடுஅவனை சமையலறையில் இருந்து வெளியேற்றினாள்.



“வர வர ரொம்பவே பண்றடி நீ!” என்று சலித்தாலும் நல்லபிள்ளையாய் டைனிங் சேரில் சென்று அமர்ந்தவனைப் பார்த்து புன்னகைத்தவள்..அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆம்லெட்டை சுடச்சுட போட்டு எடுத்துவந்தவள் கணவனுக்கு தட்டை வைத்து உணவை பரிமாறிவிட்டு அவன் முகத்தையே ஆவலோடு பார்க்க… ஒரு வாய் உண்டவனின் புருவம் வியப்பாய் உயர்ந்து மனைவியை பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்ட…அதில் முகம் மலர்ந்தவள்… தானும் அவனருகே அமர…வழக்கம் போல சில பல சில்மிஷங்களோடு திருப்தியாய் உண்டு முடித்தவன் வரவேற்பரையில் சென்று அமர்ந்து கொண்டான். சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கணவனைத் தேடி தமிழரசி வரவேற்பறைக்கு செல்ல அங்கே அவனைக்காணாமல் திகைத்து அறைக்குள் சென்று தேடியவளை பின்னிருந்து அணைத்துத் தூக்கிக்கொண்டான் அவளது கணவன்.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 29


தமிழரசியுடன் பேசிவிட்டு அலைபேசியை அணைத்த தாமரையின் நெஞ்சில் ஏதோ இனம் புரியா நிம்மதி சூழ்ந்தது. மனதில் இதுவரை இருந்த இறுக்கம் மறைந்து இலேசாய் தன்னை உணர்ந்தவளுக்கு அதற்கான காரணம் மெல்ல புரிவதாய்… கணவன் அன்று தன்னுடனான திருமணத்தை மறுத்ததற்கான காரணம் இன்று தெள்ளத்தெளிவாக புரிந்தது. ஆயினும் அந்த மாயாவோடு தன்னை இணைத்துப் பார்த்து நிராகரித்ததில் சுணக்கம் ஏற்படத்தான் செய்தது. பெண்பார்க்க வந்த அன்று கதிரவனின் மனநிலையைப்பற்றி தமிழரசி கூறிய வார்த்தைகள் அசரீரி போல அவள் காதுகளில் ஒலித்தது. சட்டென்று முகம் மலர ….



“ அப்படியானால்… பெண் பார்க்க வந்த அன்றே அவனுக்குத் தன்னை பிடித்துவிட்டதா?! அதனால் தான் அன்று எதைப்பற்றியும் யோசிக்காமல் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னானா?!.... ஆனால் அதன்பிறகு தன்னிடம் ஏன் அப்படி பேசினான்?. அதற்கும் வேறு ஏதாவது நியாயமான காரணம் இருக்குமோ? என்று கணவனுக்கு ஆதரவாய் அவள் மனம் சிந்திக்க…அன்று கூட ….முதலிரவில் காதலாக…தன்னை நெருங்கியதாக ஏதோ சொன்னானே….அப்படியானால்…. என்மீது கொண்ட காதலால் தான் மணந்தானா..?! என்றவளின் முகம் பூவாய் மலர்ந்தது. அன்றைய இரவின் கணவனின் அழுத்தமான அணைப்பும்…நொடிக்கொரு முறை மேனியில் அவன் பதித்த ஆழ்ந்த முத்தங்களும்…காதலான வருடல்களும்….அவன் கைகளில் தொய்ந்து சரிந்த தருணங்களிலெல்லாம் அவனது ஆறுதலான அரவணைப்பும் அடுக்கடுக்காய் மனதில் உலாவர…அன்றைய நாளின் நினைவில் முகம் செந்தூர நிறம் கொள்ள… அன்று உணராத கணவனின் காதலை இன்று உணர்ந்து அவளது மேனி சிலிர்த்தது. உடனே உடலில் ஆனந்த பரபரப்பு எழ… உடனடியாக கணவனை பார்க்கவேண்டும் பேச வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க… தனது அலைபேசியை எடுத்து கதிரவனுக்கு அழைக்கப் போனவளுக்கு… தன்னுடைய அழைப்பை கணவன் ஏற்பானா..? என்ற சந்தேகம் எழுந்தது. அதை ஒதுக்கித் தள்ளியவள் கதிரவனின் எண்ணை அலைபேசியில் அழைத்துவிட்டு அவனது குரல் கேட்க ஆவலோடு காத்திருக்க… அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தது. ஏமாற்றம் எழுந்த போதும் மீண்டும் மீண்டும் நம்பிக்கையோடு முயற்சித்தவளுக்கு… கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இத்தனை நாளாக கணவனின் அன்பை… காதலை உணராது அவனை விலக்கி வைத்த குற்றவுணர்வு மனதை சூழ… கண்களில் நீர் திரள முகத்தை மூடிக்கொண்டு கதறினாள். நெடுநேரம் வரை அழுது கரைந்தவள் தன்னையுமறியாமல் அப்படியே உறங்கிப் போனாள்.



அலைபேசி அலரும் ஒலியில் திடுக்கிட்டு விழித்தவள் பதறியடித்து அலைபேசியை எடுத்துப் பார்க்க… மீனாட்சி தான் அழைத்துக் கொண்டிருந்தார். யோசனையோடு.. உடனே அழைப்பை ஏற்றவளிடம் மீனாட்சி..



“ தாமரை என்னடா தூங்கிட்டிருந்தியா…?!என்று பரிவோடு வினவ..
“சாரி… அத்தை என்னையும் அறியாமல்…நல்லா தூங்கிட்டேன்” என்று குற்றவுணர்வோடு வருந்தியவளை..



அதெல்லாம் பரவாயில்லைடா அதனால ஒரு பிரச்சனையும் இல்லை… நான் உனக்கு போன் பண்ணதே உங்கிட்ட ஒருவிஷயம் சொல்லத் தான்!

"என்ன விஷயம் அத்தை ?"


நானும் உங்க மாமாவும் இங்க அஷ்டலஷ்மி கோவிலுக்கு வந்தோம் . புரட்டாசி மாசம் கடைசி சனிக்கிழமைங்கிறதால இங்க கோவில்ல விடிய விடிய இராமாயணம் கதா காலட்சேபத்திற்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க… எனக்கு இது போல கதாகாலட்சேபம்னா ரொம்பவே பிடிக்கும். அதனால நானும் உங்க மாமாவும் இங்கேயே தங்கி அதைக் கேட்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அதனால நைட்டுக்கு நாங்க வீட்டுக்கு வரமாட்டோம். காலையில் தான் வருவோம். அதனால நீ பத்திரமா வீட்டைப் பூட்டிக்கிட்டு படுத்துக்க… அதை சொல்லத்தான் உனக்கு கால் பண்ணினேன். வச்சிரவாடா.. பத்திரம்!! என்று சொல்லிவிட்டு அவளது பதிலைக்கூட எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்துவிட்டார் மீனாட்சி.



அதைக் கேட்டுக்கொண்டிருந்த தாமரைக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை! ஆனால் மனதில் இனம்புரியாத பயம் சூழ்ந்து கொண்டது. இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட தாமரை. இத்தனை பெரிய வீட்டில் தான் மட்டும் எப்படி தனியாக… என்ற நினைவே அவளுடைய பயத்திற்கு காரணம். பிறந்த வீட்டில் இருந்தவரையில் அவள் இதுபோன்றதொரு சூழலை சந்தித்ததில்லை. அருணாச்சலமும் ,பார்வதியும் பெரும்பாலும் மகளைத் தனியாக விட்டுவிட்டு எங்கேயும் சென்றதில்லை… அப்படியே சென்றாலும் துணைக்கு இளாவையோ… அல்லது தனது உறவினர்களையோ மகளுக்கு காவல் வைத்துவிட்டே செல்வார்கள்… அதுமட்டுமல்லாமல் வீட்டில் எப்போதும் நிறைந்திருக்கும் வேலையாட்களின் நடமாட்டம் அவளுக்கு எப்போதும் இப்படியொரு தனிமையான உணர்வையோ பயத்தையோ தந்ததில்லை… முதன்முறையாக இப்படி ஒரு சூழலைச் சந்தித்ததில் அவளது மனதை பயம் கவ்வ... உடலெங்கும் வியர்த்து வழிந்தது. ஆயினும் முயன்று தன்னை சமாளித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள்… கசகசத்த உணர்வு போக குளித்துவிட்டு துவாலையை உடலில் சுற்றிக்கொண்டு வெளியே வந்து.. வாட்ரோப்பை திறந்தவள் புடவையைக் தவிர்த்துவிட்டு பிங்க் நிற இரவு உடையை அணிந்து கொண்டு அறையை விட்டு கீழே சென்றவளுக்கு வெறிச்சோடிய வீடு உள்ளுக்குள் குளிரைப் பரப்பியது. முயன்று பயத்தை ஒதுக்கித் தள்ளியவள். பூஜையறையில் விளக்கேற்றி வைத்து வணங்கிவிட்டு… சமையலறைக்குள் நுழைந்து தனக்காக காபி கலக்கி எடுத்து வந்து வரவேற்பரையின் ஷோபாவில் அமர்ந்தவள் டி.வியை ஆன் செய்துவிட்டு அதைப் பார்த்தவாறு பருகினாள். சற்றுநேரம் அதில் பார்வையை பதித்திருந்தவளுக்கு எதுவுமே ரசிக்கவில்லை. திரும்பவும் தன்னுடைய அலைபேசியை எடுத்து மறுபடியும் கதிரவனுக்கு அழைக்க அது மறுபடியும் சுவிட்ச் ஆப் பல்லவியை பாடியது. கணவனது நினைவும்.. யாருமில்லா தனிமையும் அவளை வாட்ட மீண்டும் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. வேறு வழியின்றி மறுபடியும் டிவி திரையில் பார்வையை பதித்தாள். அதில் ஏதோ பேய் படம் ஓடிக்கொண்டிருந்தது. விலகியிருந்த பயம் மறுபடியும் ஒட்டிக்கொள்ள சட்டென்று டி.வியை அணைத்து ரிமோர்ட்டை தூக்கிப் போட்டுவிட்டு டீப்பாயின் மேலிருந்த மாத நாவல் ஒன்றை எடுத்து அதைப் புரட்டினாள். சுவாரசியமின்றி முதல் பக்கத்தில் பார்வையை பதித்தவளை அந்த நாவல் அப்படியே உள்ளிழுத்துக் கொள்ள..அதில் மூழ்கிப் போனாள். திடீரென அழைப்பு மணி ஒலிக்க…அந்த சத்தத்தில் உடல் தூக்கிப் போட விதிர்த்துப் போனவள் பயத்தோட அறைக் கதவை நோக்கினாள்.



“யாராயிருக்கும் அதுவும் இந்த நேரத்தில்..? ஒருவேளை அத்தையும் மாமாவும் வந்துவிட்டார்களோ… இல்லையே காலையில் வருவதாகத்தானே சொன்னாங்க..! இல்லைன்னா ஏதாவது திருடனா இருக்குமோ?.. வீட்டில் யாருமில்லை என்று தெரிந்து நோட்டம் பார்த்து வந்திருப்பானோ?...அந்த நினைவே அவளுக்கு உள்ளுக்குள் கிலியைப் பரப்ப… பயத்தில் நாக்கு வறண்டு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. திரும்பத் திரும்ப ஒலித்த அழைப்பு மணியின் ஓசை அவளது இதயத்துடிப்பை அதிகரித்தது. பயத்தில் உடல் நடுங்க என்னசெய்வது என்று தெரியாது கைகளைப் பிசைந்தவளுக்கு கண்களில் நீர் திரண்டது. ஒரு நொடி கண்களை இறுக மூடித்திறந்து நிதானத்துக்கு வந்தவள்… கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு... ஒருமுடிவோடு டைனிங் டேபிளின் மேலிருந்த கத்தியை கைகள் நடுங்க எடுத்துக்கொண்டு வாயிற் கதவருகே சென்றவள்…



“யாரது?” என்று வினவ…அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை.. முயன்று குரலை சரிசெய்து கொண்டு சற்று சத்தமாக அதே கேள்வியை மீண்டும் கேட்கவும்…இப்போது அந்தபக்கம் அமைதி நிலவியது. அதில் அவள் இதயத்துடிப்பு இன்னும் அதிகரித்தது. அதன்பிறகு சற்றுப் பொறுத்து…”தாமரை நான் தான் கதவைத் திற… !” என்ற குரலில் மனதில் நிம்மதி பரவ… பட்டென்று கதவைத் திறந்தாள். வாயிலில் அவளது கணவன் கதிரவன் தான் நின்று கொண்டிருந்தான்.



அவனைக் கண்டதும் சூரியனைக்கண்ட தாமரையாய் முகம் மலர்ந்தவள்..அடுத்தநொடி கைகளிலிருந்த கத்தியை கீழே போட்டுவிட்டு… தாயைக் கண்ட சேயாய் …. “கதிர்ரரரரர் வந்துட்டீங்களா….?!!!” என்று கதறியவாறே…தாவி சென்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள் அவனது மார்பில் முகம் புதைத்து…இதுவரை தான் அனுபவித்த துயரங்களை கண்ணீரால் கரைக்க முயன்றாள்.



மனைவியின் திடீர் அணைப்பையும்… கண்ணீரையும் சற்றும் எதிர்பாராத கதிரவன் சற்றுநேரம் திகைத்து பிறகு மெதுவே சுற்றுப்புறம் உரைக்க… தாங்கள் இருவரும் வீட்டு வாயிலில் நின்றிருப்பது விளங்க…சட்டென்று தன் மார்பில் சாய்ந்து கதறிக்கொண்டிருந்த மனைவியை இடக்கையால் அணைத்து பிடித்தவாறே அவளுடனே வீட்டிற்குள்ளே நுழைந்தவன்.. மறுகையால் வாயிற்கதவை மூடித் தாளிட்டான். சற்றுநேரம் தானும் அவளை அணைத்துக் கொண்டு மௌனமாக நின்றான். நீண்டநாட்களுக்குப் பிறகான மனைவியின் இந்த இறுகியஅணைப்பும் கண்ணீரும் புண்பட்ட அவனது மனதை மயிலிறகாய் வருடியது.ஆயினும் மனைவியின் கண்ணீர் காதல் கொண்ட அவனது மனதை பிசைய… விடாது தன் மார்பில் முகம் புதைத்து கரைந்து கொண்டிருந்தவளை…



“தாமரை இங்க பாரு…. ! ஏன்டா அழற..? அதான் நான் வந்துட்டேனில்ல…இனி அழக்கூடாது..! என்று அவளது கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கி… முதுகை ஆறுதலாய் வருடி விதவிதமாய் அவளை சமாதானப்படுத்த முயன்றவனுக்கு தோல்வியே கிட்டியது. தாமரை அழுகையை நிறுத்தவுமில்லை… அவனது மார்பில் புதைந்திருந்த தன் முகத்தை நிமிர்த்தவுமில்லை…! கைவளைவிலேயே அவளை அணைத்துச் சென்று அவளுடன் ஷோபாவில் அமர்ந்தவன்… வலுக்கட்டாயமாக தன் மார்பிலிருந்து அவளை விலக்கி அவளது முகத்தை தன் உள்ளங்கைகளில் தாங்கி…அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலக்கவிட்டவன்.. நிற்காது வழிந்து கொண்டிருந்த மனைவியின் கண்ணீரைத் துடைத்துவிட்டவன்.



“இப்ப சொல்லு என்னாச்சு…! என்க.. மீனாட்சி கோவிலிருந்து தனக்கு அழைத்து பேசியதிலிருந்து ஒன்றுவிடாது அனைத்தும் கூறியவள் திரும்பவும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.



அனைத்தையும் கேட்டவன்…ஹா…..ஹா…. என்று வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்… அவனது சிரிப்பு சத்தத்தில் விலுக்கென்று அவன் மார்பிலிருந்து விலகிய தாமரை அவனது முகத்தைத் திகைப்போடு நோக்கினாள். மனைவியின் முகபாவனை அவனுக்கு மேலும் சிரிப்பை மூட்ட…. சிலநாட்களாக இருந்த இறுக்கம் மறைந்து மனம்விட்டு சிரித்தான். கணவனின் சிரிப்பில் முதலில் திகைத்தவள் பிறகு கோபத்தோடு அவனை முறைத்துப் பார்த்தாள். மனைவியின் முறைப்பில் தன்னுடைய சிரிப்பை அரும்பாடுபட்டு அடக்கியவனின் இதழ்கடையோரம் மின்னலாய் அரும்பிய துடிப்பு அதைக்காட்டி காட்டிக் கொடுக்க அதற்கும் முறைத்தவளை…



“பின்ன என்னடி…? எந்தத் திருடனாவது… காலிங் பெல் அடிச்சிட்டு திருட வருவானாடி… ??!” என்று மறுபடியும் அவன் குலுங்கிச்சிரிக்க…



ஆ….ஆமாயில்ல..என்று.. குழந்தையாய் வினவிய மனைவியை அள்ளி அணைக்கத் துடித்த கைகளை அரும்பாடுபட்டு அடக்கியவன்… அப்போது தான் மனைவியை உற்று நோக்கினான்… அணிந்திருந்த இளஞ்சிவப்பு வண்ண இரவு உடையில் அழகிய பன்னீர் பூவைப்போல தன்னெதிரே அமர்ந்திருந்த மனைவியின் அழகை தலை முதல் பாதம் வரை அவனது கண்கள் ஆர்வமும் தாபமுமாய் அளவிட்டது. அழுததில் கண்கள் சற்றே சிவந்து கன்னங்களில் கண்ணீரின் தடம் பதிந்திருக்க அவனது பார்வையின் தீவிரத்தில் முகம் சிவக்க.. அமர்ந்திருந்தவளின் உடல்மெலிவு அவனது கவனத்தை ஈர்த்தது.



“ஏன் இப்படி மெலிஞ்சு போயிருக்கா…? என்ற யோசனை எழ.. தாமரையோ…. கண்களில் நீரோடு கணவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். எப்போதும்… கீளீன் ஷேவ் செய்து பளிச்சென்ற முகமும்…வகிக்கும் பதவிக்கேற்ப கம்பீரமாய் வலம்வரும் கணவனின் முகம் இன்று பொலிவிழந்து பலநாள் மழிக்கப்படாத தாடியுடனும் களைத்து சோர்ந்த தோற்றமுமாய் பார்க்கவும் அவளுக்குத் தாங்கவில்லை…எல்லாவற்றிற்கும் காரணம் தான்தான் என்ற குற்றவுணர்வு அவளைக் கொல்லாமல் கொல்ல…. சிறு கேவலுடன் பாய்ந்து அவனைக்கட்டிக்கொண்டவள்….அவனது மார்பில் தஞ்சம் புகுந்தாள்.



“எ….என்னை மன்னிச்சிடுங்க கதிர்….நான் அன்…..னைக்கு…பண்ணது ரொம்ப..ரொம்ப தப்பு. உங்க மனசைப் புரிஞ்சிக்காம… பெரிய தப்புப் பண்ணிட்டேன். அது உங்களை எந்தளவு காயப்படுத்தியிருக்கும்னு இப்ப உணர்ந்துட்டேன். அதுக்காக… என்னை தயவு செய்து மன்னிச்சிடுங்க …. என்றுஅவனது மார்பில் முகம்புதைத்துக் கண்ணீர் வடித்த... மனைவியின் வார்த்தைகள் அவனுள் ஆனந்த அதிர்வை ஏற்படுத்திய போதும். அன்றைய நாளின் நினைவில் அவன் உடல் விறைத்தது அதை உணர்ந்து கொண்ட தாமரை…அவனை நிமிர்ந்து பார்த்து தவிப்புடன் கண்களால் மன்னிப்பை யாசிக்க… மனைவியின் கண்ணீர் முகம் காதல் கொண்ட அவன் இதயத்தை அசைக்க தானும் அவளை ஆரத் தழுவிக் கொண்டான்.



ஆறுதலாய் ஆரம்பித்த அணைப்பு தாமரைக்கொடியாய் தன்மீது படர்ந்திருந்தவளின் மென்மையில் சற்றே இறுக ஆரம்பித்து அடுத்த நிலைக்கு செல்ல… நீண்டநாள் பிரிவும்…தவிப்பும் சேர்ந்துகொள்ள.அணைப்பை மேலும் இறுக்கினான் கதிரவன். அவனது அணைப்பில் உடலின் சுக நரம்புகள் தாமாய் விழித்துக்கொண்ட போதும் தாங்கள் இருவரும் இருக்கும் இடம் நினைவுக்கு வர… அவனது அணைப்பிலிருந்து மெல்ல விலக முயற்சித்தவாறே…



“கதிர்… இ..து ஹால்… இங்க வே…ணாமே? என்று அவள் மெல்ல கிசுகிசுக்க.. அதை உணர்ந்த போதும் அவளை விட மறுத்து மேலும் முன்னேறியவனின் பிடிவாதத்தை உள்ளுக்குள் ரசித்த போதும்.. தானும் பிடிவாதமாய் அவனிடமிருந்து விலக முயற்சித்தவாறே…
“சொன்னா கேளுங்க கதிர்.. திடீர்னு அத்தையும் மாமாவும் வந்துட்டாங்கன்னா..?” என்க.. அதில் சட்டென்று அவளைவிட்டு விலகியவன்..



“எப்பப்பாரு.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி என்னைவிட்டு விலகிப் போறதுலேயே குறியா இருக்கடி..!!” என்றவன் அடுத்த நொடி அறையை நோக்கி சென்றுவிட்டான். கணவன் சட்டென்று விலகியதில் விக்கித்து நின்றவள்.. பின்பு சுயம்பெற்று பதற்றத்துடன் அவனை தானும் பின்தொடர்ந்து அறைக்குள் நுழைந்தவளின் பார்வை கணவனைக் காணாது தேட.. பின்னர் குளியலறையில் நீர்விழும் சத்தத்தில் அவனது இருப்பை உணர்ந்தவளுக்குள் பெருங்கலக்கம் சூழ்ந்தது. ‘மறுபடியும் தன்னை தவறாக நினைத்துக் கொண்டு தனியே விட்டுவிட்டு கிளம்பி சென்றுவிடுவானோ? ஹால்ல வேணாம்னு தானே சொன்னேன்…?!’ என்று மனதுக்குள் அரற்றியவளின் கன்னங்கள் நீரில் நனைய செய்வதறியாது கலங்கி நின்றாள் தாமரை.



(ஷப்பா இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கறதுக்குள்ள….மிடில😓😓😓)



(கையணைக்க.. வருவான்!!)

ஹாய் பேபீஸ் நான் வந்துட்டேன்...எங்க வந்த அப்படின்னு நீங்க கொலை வெறியோட பார்க்குறது எனக்குப் புரியுது..அதான் உங்களை கொஞ்சமா கூல் பண்ணலாம்னு... இரண்டு எபியோட வந்துட்டேன். கதையோட 28..29வது அத்தியாயத்தை பதிந்து விட்டேன்! படித்துவிட்டு உங்கள் பொன்னான கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பேபீஸ் 😍😘😘😘 அடுத்த அத்தியாயத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன் பை.. பை😁😁🏃🏃🏃🏃
🏃
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 30

10774 10776




மறுநாள் பரபரப்பாக கமிஷ்னர் அறையில் அவர் அனுமதியோடு நுழைந்த பாண்டி அவருக்கு விறைப்பாய் சல்யூட் அடிக்க மலர்ந்த முகத்துடன் அதை ஏற்ற கமிஷ்னர் ராம்கோபால் வர்மா… எழுந்து நின்று… அவனது கைகளை பிடித்து குலுக்கியவாறே…



“ஹாய்… யங் மேன்!! கம்…கம்..! ஹவ் ஆர் யூ மேன்… அண்ட் ஹவ் இஸ் யுவர் மேரீட் லைப்!!?” என்றவர் அவனது திருமணத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தவர்.. தமிழரசியை பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டார்.



கமிஷ்னர் ராம்கோபால் வர்மா வகிக்கும் பதவிக்குரிய கம்பீரத்தோடும் நிமிர்வோடும் வட இந்தியருக்கேயுரிய…சிவந்த நிறத்தில் இருந்தார். தன் பணியில் மிகவும் நேர்மையான அதிகாரியான.. ராம்கோபால் வர்மா நான்கு வருடங்களுக்கு முன்பு பாண்டி போஸ்டிங்கில் ராஞ்சி வந்தபோது இவரது கட்டுப்பாட்டில் இயங்கிய ஸ்டேஷனில் தான் முதன்முதலில் தன் பணியைத் துவக்கினான். அப்போதிலிருந்தே அவனது திறமையும் பணியில் அவனுக்கிருந்த ஆர்வத்தையும், அர்பணிப்பு உணர்வையும் வெகுவாக கண்டு கொண்டவருக்கு… அவனை மிகவும் பிடித்துவிட…. சவாலான பல வழக்குகளை அவன் வசம் ஒப்படைத்தார். அவனும் முழு ஈடுபாட்டுடன் தன் திறமையால் அந்த வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் வசம் ஒப்படைத்து அவர்களுக்கு தண்டனையும் வாங்கித் தந்து அவரது பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றான். அதனால் அவருக்கு மேலதிகாரி என்பதயும் தாண்டி பாண்டியின் மீது தனி பிரியம் உண்டு.… அவனை தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு… பணிபற்றிய நெளிவு சுழிவுகளையும் தன் அனுபவ அறிவையும் குருவாக அவனுக்கு போதித்து … அவனை மேலும் மெருகேற்றினார். அதனால் பாண்டிக்கும் இவர் மீது மரியாதை கலந்த அபிமானம் உண்டு.



“சோ….! இந்த ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் பாண்டியன் ஏற்கனவே லாக் ஆனது சென்னையில் பிறந்து வளர்ந்த தேவதைப் பெண்ணிடம் தானா…?! ஆனாலும் நீங்க இப்படி திடீர்னு சத்தமேயில்லாம கல்யாணத்தை முடிச்சிட்டு ஜோடியோட வந்து நின்னு உங்களோட இளம் ரசிகைகளுக்கு இவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்க வேணாம்… மிஸ்டர் பாண்டியன்!!” என்று அவர் வாய்விட்டு சிரிக்க… அதில் அவன் இதழ்களும் புன்னகையில் மெல்ல விரிந்தது. என் மனைவி மதுரிமாவும்… மகள் ஸ்வப்னாவும் கூட உங்க மனைவியை பார்க்க ஆவலா இருக்குறதா சொல்லச் சொன்னாங்க… பாண்டியன் என்றவரை மலர்ந்த முகத்துடன் நோக்கியவன்…



“நானே என் கல்யாணத்திற்காக… இங்க உள்ள பிரண்ட்ஸ்காகவும் .. நம்ம டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்காகவும் சின்னதா ஒரு பார்ட்டி அரேன்ஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன் சார்… டேட் கன்பார்ம் பண்ணிட்டு உங்ககிட்ட சொல்றேன் நீங்க உங்க பேமிலியோட கண்டிப்பா கலந்துக்கனும் சார்!!”.



“”ஓ… ஷ்யூர்.. ஷ்யூர்..! டெபனெட்லி …!! நாங்க இல்லாமையா.? நிச்சயம் வர்றோம்!” என்றவர். சற்றுநேரத்திற்கு பிறகு தீவிர முகபாவத்துடன்…



“ பாண்டியன்… இப்ப நான் உங்களை கூப்பிட்டது.. ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசத்தான்...!. இந்த மாநிலத்தோட முக்கியமான பிரச்சினை என்னன்னு உங்களுக்கேத் தெரியும்… ஒண்ணு தங்கள் உரிமைக்காக போராடும் பழங்குடியினப் போராளிகள். இரண்டாவது நக்சலைட்டுகள். இவங்க இரண்டு தரப்பும் தான் சிட்டியின் சட்டம் ஒழுங்குக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலா இருக்காங்க. போராளிங்க அப்படிங்கிற பேர்ல சிட்டியில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு இவங்க தான் முக்கியமான காரணங்கள்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நம்மால முடிந்தவரை அவங்களோட நடவடிக்கைகளை இதுவரை ஓரளவுக்கு கட்டுப்படுத்தித் தான் வச்சிருக்கோம். அதுவும் கடந்த நான்கு வருடங்களாக ராஞ்சியை பொறுத்தவரை அதற்காக நீங்க பெரிய அளவில் முயற்சி எடுத்து வெற்றியும் அடைஞ்சிருக்கீங்க.. அதனால சமீப காலமா… நக்சல்கள் மற்றும் பழங்குடியினப் போராளிகளின் நடவடிக்கைகள் சிட்டியில் பெருமளவில் குறைந்திருக்கு…! என்றவரை யோசனையுடன் பாண்டி பார்க்க… அவனது பார்வையின் பொருள் உணர்ந்தவராக..



“இதெல்லாம் தெரிஞ்ச விஷயங்கள் தானே..? அப்படின்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. ஆனா நான் உங்களை கூப்பிட்டது இதைப்பற்றி பேசத்தான்..!” என்றவர் தன்னருகே வைத்திருந்த பைலை எடுத்து அவனிடம் கொடுத்தார்.



“இது உளவுத்துறையினரிடமிருந்து நமக்கு வந்திருக்கிற ரகசியத் தகவல்கள் அடங்கிய பைல். அதை முதல்ல படிச்சு பாருங்க…!" என்றதும் தன்னிடம் கொடுக்கப்பட்ட கோப்பிலிருந்த தகவல்களை கவனமாகப் படித்து முடித்தவனின் முகம் இறுக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டது. கோப்பை யோசனையுடன் மூடி வைத்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தான் பாண்டி.


“இப்ப நம்ம முன்னாடி இருக்க மிகப் பெரிய பிரச்சனை இது தான். இதுவரை ஒவ்வொரு முறையும் நக்சல்களின் தேடுதல் வேட்டையின் போதும்… அவர்களது முகாம்களை தாக்கி அழிக்க நடவடிக்கை எடுத்த போதும் நம்ம காவல்துறையைச் சேர்ந்த ஏராளமான வீரர்களை நாம இழந்திருக்கிறோம். அதற்குக் காரணம் நக்ஸல் வசம் இருக்கும் அதி நவீன ஆயுதங்கள். இந்த ஆயுதங்கள் அவர்களுக்கு எப்படி..? யார்..மூலமா கிடைக்குதுங்கிறது இதுவரை நமக்கு புரியாத புதிரா இருந்தது. ஆனா இப்ப உளவுத்துறையின் தகவலின் படி போராளிகளுக்கும் நக்சல்களுக்கும் தேவையான ஆயுதங்களை தயாரிக்கிற தொழிற்சாலையும் ஆயுதக்கிடங்கும் கார்வா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தான் எங்கேயோ இருக்குன்னு தெரிய வந்திருக்கு. அந்த தொழிற்சாலையை நடத்துறவங்க யாரு…?! அந்த ஆயுதத்தொழிற்சாலைக்குத் தேவையான மூலப்பொருட்கள் எங்கிருந்து …. யார் மூலமா கொண்டு வரப்படுது… இதில் யார்யாரெல்லாம் சம்பந்தபட்டிருக்காங்க…? அயல் நாட்டினருக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்கா..? இதையெல்லாம் நீங்க தான் கண்டுபிடிக்கனும். நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலா இருக்க இந்த விஷயம் பற்றிய விசாரணைகளும் நடவடிக்கைகளும் ரொம்பவே ரகசியமா நடக்கனும் இது பற்றிய சிறு தகவல் மீடியோவுக்கோ … மற்றவங்களுக்கோ… தெரியாம பார்த்துகறது ரொம்ப முக்கியம். இப்படியொரு மிகப் பெரிய பொறுப்பை உங்களைத் தவிர வேற யாராலும் திறமையா கையாள முடியாது. அதனால இந்த பொறுப்பை உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். என்னோட நம்பிக்கையை காப்பாற்றுவீங்கன்னு நம்புறேன்! இந்த ஆபரேஷன் மட்டும் சக்ஸஸாயிட்டா நம்ம டிபார்ட்மெண்ட்க்கும் உங்களுக்கும் மிகப் பெரிய பேரு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் ராஞ்சியை நக்சல் ஆதிக்கம் இல்லாத பகுதியா மாற்றனும்னு நினைக்கிற உங்க இலட்சியமும் நிஜமாகும். நீங்க என்ன சொல்றீங்க மிஸ்டர். பாண்டியன்!” என்று பதிலுக்காக அவனை நோக்கினார் கமிஷ்னர் ராம் கோபால் வர்மா.



"நிச்சயமா இந்த ஆப்ரேஷனை சக்சஸ் புல்லா முடிச்சிடலாம் சார்..! ஆனா அதுக்கு முன்னாடி… இந்த மாநிலத்தோட முதல்வர்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்… அதுக்கு நீங்க தான் ஏற்பாடு பண்ணனும் !"

ஓ..எஸ்!! அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்…!” என்றவரின் முகத்தில் கேள்வியைப் படித்தவன்…



“ நாம நடத்தப்போற இந்த ஆபரேஷன் சக்ஸஸ் புல்லா அமையனும்னா அதுக்கு அவரிடமிருந்து சில வாக்குறுதியும்… ஸ்பெஷல் பர்மிஷனும் தேவைப்படும்… என்றவனை உற்று நோக்கியவரின் இதழ்கள் புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் விரிந்தது.



“எஸ்.. மிஸ்டர் பாண்டியன் ஐ அண்டர்ஸ்டுட்! முதலமைச்சரோட பி.ஏ கிட்ட பேசி அப்பாய்ண்ட்மெண்ட் கன்பார்ம் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்”.



“ஓகே சார்…. என்றவன் எழுந்து அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு கிளம்ப எத்தனிக்க…நினைவு வந்தவராக…



“ ஹான் ஒன் மினிட் மிஸ்டர் பாண்டி…! ஏர்போர்ட்ல உங்களை யார் சுட்டது? அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா மிஸ்டர் பாண்டி?!



“எஸ் சார்..! அவனை அரெஸ்ட் பண்ணியாச்சு..!” என்றவன் அது குறித்த தகவல்கள் அடங்கிய கோப்பையும் வீடியோ ஆதாரத்தையும் அவருக்கு முன் வைத்தான். கோப்பை திறந்து அதை கவனமாகப் படித்துவிட்டு … வீடியோ பதிவை பார்த்தவர்…” சோ… இது உபேந்தரோட வேலை தானா?!“



“ எஸ் சார்!!”



“ம்ம்ம்… அடுத்து என்ன? அவனை உடனே அரெஸ்ட் பண்ண வேண்டியது தானே?”



“நோ… சார் அவனை இப்போதைக்கு அரஸ்ட் பண்ற ஐடியா இல்ல…!”



“தென்…?!”



“உங்களுக்கே தெரியும்… அவனைப் போல அரசியல் திமிங்கலங்களை பிடிக்க … இந்த ஆதாரமெல்லாம் பத்தாது…. அவனை தனியா கன்னி வச்சுத் தான் பிடிக்கனும்.. !” என்றவனை பார்த்து ஆமோதிப்பாய் தலையசைத்தவர்…!



“ஓகே மிஸ்டர் பாண்டியன்… நான் சொல்லனும்னு அவசியமில்லை உங்களுக்கே எல்லாம் தெரியும்…. ஹி இஸ் ஏ பார்ன் கிரிமினல் பீ கேர்புல்..!!!” என்று அவனை எச்சரிக்கை செய்தவர் இது சம்பந்தமா எந்த உதவி எப்ப வேணும்னாலும் நீங்க என்கூட பேசலாம்!”



“ஷ்யூர் சார்..!” என்றவன் சிறு தலையசைவுடன் அவரது அறையை விட்டு வெளியேறினான். அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவனது ஜீப் தன் அலுவலகத்தை அடைய… மின்னலாய் அலுவலகத்தில் நுழைந்தவன் இணடர்காமில் சில எண்களை அழுத்தி சுனிலை அழைக்க அடுத்த நிமிடம் சுனில் அவனுக்கு முன்பாக வந்து நின்றான். ஒரு காகிதத்தை அவனிடம் கொடுத்தவன்… இந்த லிஸ்ட் இருக்குற எல்லாரையும் நான் இம்மிடியட்டா மீட் பண்ணனும்.. அரேன்ஜ் பண்ணு அதோட இந்த சந்திப்பு ரகசியமா இருக்கனும். ரொம்பவே கான்பிடன்ஷியல்!! பீ…குயீக்..!! என்றவன் தனது லாப்டாப்பை ஆன் செய்து தன் பணியில் மூழ்கினான்.



“எஸ் சார்…என்றுவிட்டு அவனது அறையை விட்டு வெளியே வந்த சுனிலுக்கு எதற்காக இந்த திடீர் சந்திப்பு..!? என்ற யோசனை எழுந்த போதும்… ஏதோ பெரிய பிரச்சனை என்று மட்டும் விளங்க… பாண்டி சொன்னதை செய்ய விழையும் பொருட்டு தன் பணியில் ஈடுபட்டான்.


******************************************************************


சற்று நேரத்தில் குளியலறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்க அதில் கட்டிலில் நகம் கடித்தவாறு பதற்றத்துடன் அமர்ந்திருந்த தாமரை சட்டென்று எழுந்து நின்றாள். கதிரவன் முகத்தை ஷேவ் செய்து குளித்துவிட்டு… பளிச்சென்று..இடையில் ஒரு துவாலையை மட்டும் அணிந்து கொண்டு அகன்ற மார்பிலும் தலையிலும் தண்ணீர் வழிய வெளியே வர… கணவனை இதுவரை அந்தத் தோற்றத்தில் பார்த்தறியாதவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் தான் அவன் வீட்டில் இருக்கும் வரை அவர்கள் அறைபக்கமே வரமாட்டாளே…! முதன்முறையாக இப்படி ஒரு கோலத்தில் கணவனை பார்க்க… குளியலறையில் இருந்து வெளியே வந்த கதிரவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். மனைவியின் வெட்கச்சிவப்பு கண்டு அவனுக்கு உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்த போதும்… தன்னை இத்தனை நாள் தவிக்கவிட்ட மனைவியை தானும் சற்று தவிக்கவிட எண்ணியவனாய்… அவளை உணர்வுகளைத் தொலைத்த பார்வை பார்த்தவன்.. அவளை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று தன்னுடைய துணிகள் இருந்த அலமாரியில் இருந்து ஷார்ட்ஸீம் டீ சர்ட்டும் எடுத்தவன் அதை உடுத்தத்தொடங்கினான். கணவனது பாராமுகம் தாமரையின் மனதில் பெரும் சஞ்சலத்தை விதைக்க… கணவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் கைகளைப் பிசைந்தபடி பரிதாபமாய் கணவனை ஏறிட…. மனைவியின் முகபாவங்களை நிலைக்கண்ணாடியில் பார்த்தவாறே தலை சீவிக் கொண்டிருந்தவன் பொங்கிய சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.



தாமரை முயன்று வரவழைத்துக் கொண்ட தைரியத்தோடு அவனை நெருங்கியவள்.. க…….கதிர்…என்று காதலோடு அவனைஅழைக்க..! மனைவியின் அழைப்பில் அவன் மனதில் தென்றல் வீசிய போதும்..



“ஆமா... பேரு வச்சிக் கூப்பிடுறதுல ஒண்ணும் குறைச்சலில்லை போடி.! அவள் தன்னை பெயரிட்டு அழைக்கும் தருணங்களில் எல்லாம் மனதுக்குள் வெகுவாக ரசிப்பவன் … இன்று மனதுக்குள் செல்லமாய் முணுமுணுத்தான். அவனது தந்தையும் தாயும் அவனை பெயர் சொல்லி அழைப்பார்கள் தான் ஆனால் தாமரையின் அழைப்பே தனி தான்… காதலைக் குரலில் குழைத்து வீணையின் நாதமாய் அவள் குரல் வழி வரும் அழைப்பு அவனது செவியில் புகுந்து நாடி நரம்பெல்லாம் ஓடி அவனது உடலை சிலிர்க்க வைக்கும்… இதுவரை அவள் சில தருணங்களில் மட்டுமே அப்படி அழைத்திருக்கிறாள். அன்றைய கூடலின் போது தன்கரங்களில் பாகாய் குழைந்தவளின் உதடுகள் தன்னை மறந்த நிலையில் இதே போல சிலமுறை உச்சரித்தது… அதன் பிறகு இன்று தான் இப்படி அழைக்கிறாள். அதில் அன்றைய நாளின் சுக நினைவுகள் நெஞ்சில் எழ… தேகத்தின் நரம்புகள் முறுக்கேறி தன்னவளை அணைக்கத் துடித்த கரங்களை அணிந்திருந்த ஷார்ட்ஸின் பாக்கெட்டினுள் நுழைத்து கட்டுப்படுத்திக் கொண்டவனின் நினைவுகளை மனைவியின் குரல் கலைத்தது.



“ கதிர்…. என் மேல கோபமா…?” என்றவளை திரும்பியும் பார்க்காமல் முறுக்கிக் கொண்டு பால்கனிக்கு சென்றவன். அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்தான். பூனைக்குட்டியாய் அவன் பின்னே தொடர்ந்தவள்… அவன் இருக்கைக்கு முன் சென்று நின்று…. அவனது முகத்தை நேருக்கு நேராய் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் திரள.. அப்படியே அவன் முன் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள்.. சட்டென்று அவன் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்… மனைவியின் செய்கையில் முதலில் திகைத்தவன் பின்னர் அவளது முதுகு அழுகையில் குலுங்குவதை கண்டதும்… தனது விளையாட்டைக் கைவிட்டவனாய்…பதறியவன் அவளது முகத்தை தன் மடியில் இருந்து நிமிர்த்தியவாறே…



“ஏய் தாமரை… என்னடி செய்யிற…?! இங்க பாருடி…நான் சும்மா விளையாண்டேன்.. உன்மேல எனக்கு கோபமெல்லாம் இல்லடா.. ப்ளீஸ் அழாதடி என்று ஆறுதல் படுத்த முயற்சிக்க… அவளோ அவன் மடியை விட்டு நிமிர மறுத்து மேலும் அவனது மடியில் புதைந்து…



“இல்லை நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன்…. ! அன்னைக்கும் உங்க மனசைப் புரிஞ்சிக்காம நோகடிச்சிட்டேன். இதோ இன்னைக்கும் ஆசையோட நெருங்குன உங்க மனசைத் திரும்பவும் காயப்படுத்திட்டேன்… ஆனா எதையுமே நான் வேணும்னு செய்யலை ‌.. கதிர் அதுக்காக என்னைத் திரும்பவும் தனியா விட்டுட்டு போயிடாதீங்க கதிர்… எ…என்னால அதை தாங்கிக்க முடியாது…. இனி எப்பவும் அது போல நடந்துக்க மாட்டேன்.. ப்ளீஸ் என்னை… மன்னிச்சிடுங்க கதிர்…!” என்று விடாது அரற்றியவளின் கதறலும் கண்ணீரும் அவனது காதல் கொண்ட இதயத்தை பிசைய… தன்னுடைய பிரிவு மனைவியின் மனதை வெகுவாக பாதித்திருப்பதை அறிந்தவனின் உள்ளம் பாகாய் உருகியது. உடனே மனைவியின் அழுகையை நிறுத்த எண்ணியவன்…எவ்வளவோ சமாதானப்படுத்திய போதும் அவளது அழுகையை நிறுத்த முடியாது போக… இது வேலைக்காகாது என்பதை உணர்ந்து கொண்டவன்… குரலில் சற்று கடுமையை வரவழைத்துக்கொண்டு..



“ஹனி முதல்ல அழுகையை நிறுத்து….! இப்ப நீ அழறதை நிறுத்தல நான் பாட்டுக்கு கிளம்பி போய்டுவேன்!” என்று அவன் அதட்ட அது நன்றாகவே வேலை செய்தது. உடனே அவளது அழுகை சுவிட்ச் போட்டதைப்போல நிற்க… சட்டென்று தன் முகத்தை அவன் மடியிலிருந்து நிமிர்த்தி அவனை பாவமாய் பார்த்தாள் தாமரை. மனைவியின் கண்ணீர் முகத்தை அதற்கு மேலும் காண சகியாதவனாய்…. அமர்ந்தவாக்கிலேயே இரு கரங்களை விரித்து பார்வையால் மனைவியை அழைக்க... அடுத்த நொடி சட்டென்று எழுந்தவள் தாயைக் கண்ட சேயாய்… முகம் மலர சிறு கேவலுடன் தாவி வந்தவளை இழுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டவன்.. மனைவியை தன் மார்புக்கூட்டுக்குள் இறுக்கமாய் புதைத்துக் கொண்டான். கோழிக்குஞ்சாக அவன் மார்பில் ஒடுங்கியவளை தாய்ப் பறவையாய் தனக்குள் இறுக்கிக் கொண்டவன்.. அவளது உச்சந்தலையில் தன் இதழை அழுத்தமாய் பதித்து அப்படியே கண்களை முடிக் கொண்டான். காமத்தைக்கடந்த அவர்களது இந்த ஆலிங்கனம் எவ்வளவு நேரம் நீடித்தததோ..! எங்கோ சாலையில் விரைந்த வாகனத்தின் பலத்த ஹாரன் ஒலியில் கலைந்தவர்களுக்கு அப்போது தான் சுற்றுப்புறம் உரைக்க…. தாமரை..முகம் சிவக்க சட்டென்று அவனை விட்டு விலகி எழுந்தவள்… அவனை நேருக்கு நேர் எதிர்கொள்ள இயலாது தலையை குனிந்தவாறே….



“க…கதிர்…நா…நான் போய்… டிபன் எடுத்து வை….க்கவா?! …சா…ப்பிட…. வர்றீங்களா..?” என்று திக்கித் திணற… தான் கேட்டதற்கு எந்த பதிலும் அவ்விடம் இல்லாது போகவே… மெதுவாக தலையை உயர்த்தி தன்னவனைப் பார்க்க….. அவனோ… மனைவியின் சிவந்த முகத்தையும் அவளது தவிப்பையும்… குறுகுறுவென..ரசித்துப் பார்க்க… அவனது பார்வையின் வீச்சை எதிர்கொள்ள முடியாது மீண்டும் தலைகுனிந்தவள்… “ நான் போறேன்.. நீங்க வாங்க..!”என்றவள் அங்கிருந்து நழுவி ஓட… அவனது சிரிப்புச்சத்தம் அவளைத் தொடர்ந்தது. அதில் மனதில் எழுந்த இனிய படபடப்புடன் முகம் மலர சமையலறை நோக்கி விரைந்தாள் தாமரை.



சிறிது நேரத்திற்கு பிறகு தானும் கீழே இறங்கி வந்த கதிரின் பார்வை மனைவியைத் தேட.. சமையலறையில் அள்ளி முடிந்த கொண்டையுடனும் வேலைசெய்யும் பொருட்டு இழுத்துச் சொருகிய நைட்டியுடனும் அவனுக்கு முதுகு காட்டியபடி சமையலறைக்குள் எதையோ செய்து கொண்டிருந்தாள் தாமரை. சமையலறையின் நிலைப்படியில் சாய்ந்து மனைவியின் இந்தத் தோற்றத்தை சற்று நேரம் ரசித்தவன்.. பிறகு அங்கிருந்து நகர்ந்து ஹால் ஷோபாவில் மனைவியை பார்வையிட ஏதுவாக அமர்ந்தவாறு ரிமோர்ட்டை எடுத்து டிவியை ஆன் செய்ய… அந்த சத்தத்தில் திரும்பிய தாமரை கணவனைக் கண்டதும் முகம் மலர பரபரப்போடு தன் பணியைத் தொடர்ந்தாள். சற்றுநேரத்தில் சுடச்சுட இட்லியும் தொட்டுக்கொள்ள இரண்டு வகை சட்னியும் செய்து எடுத்து வந்து உணவு மேசையில் வைத்துவிட்டு கணவனை நோக்க.... பிறந்தவீட்டில் விரல் நுனி கூட அழுக்கு படியாமல் இளவரசியாய் வலம் வந்த மனைவி… தன் அடையாளங்களை மறந்து… இன்று தன் வீட்டு சமையலறையில் வியர்த்து விறுவிறுக்க …தனக்காக ஒடியாடி பாந்தமாய் சமைக்கும் அழகை விழியகற்றாது பார்த்து கொண்டிருந்தவனின் மனம் சிறகில்லாமல் விண்ணில் பறக்க.. கண்களில் காதல் வழிய மனைவியை நோக்கியவனின் உள்ளமோ தன்மீதான அவளின் இந்த அளப்பரிய காதலை நினைத்து கணவனாய் கர்வம் கொண்டது. எத்தனை பெரிய சொர்க்கத்தை அவன் இழக்க நினைத்தான்.



தன்னவனின காதல் பார்வையில் மீண்டும் முகம் சிவந்தவள்… “க…திர்… வாங்க சாப்பிடலாம்” என்றதும் முகம் மலர எழுந்தவன்… உணவுமேசையின் இருக்கையில் அமர.. மலர்ந்த முகத்தோடு அவனுக்கு பரிமாறியவளை பார்த்துக் கொண்டிருந்தவன்…. பரிமாறிவிட்டு தன்னருகே நின்று கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்… தன் தட்டிலிருந்த இட்லியை பிட்டு சட்னியில் தோய்த்து அவளுக்கு ஊட்ட எத்தனிக்க… கணவனின் காதலான செய்கையில் முகம் மலர கண்களில் நீரோடு மறுக்காமல் அதை வாங்கிக் கொண்டவள்… இட்லியை பிட்டு தானும் அவனுக்கு ஊட்டினாள். இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள திருப்தியாய் உணவை உண்டு முடிக்க… பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவனுக்கு பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தவள் அவனிடம் அதை நீட்ட அதை வாங்கி டீபாயின் மீது வைத்தவன் அவளது கையைப் பிடித்து சுண்டியிழுக்க…அவனது மடிமேல் வந்து விழுந்தவளை அவளது இடையோடு கையிட்டு இறுக்கி அணைத்தவன் அவளது கழுத்து வளைவில் தன் இதழை அழுத்தமாய் பதிக்க…அதில் இன்பமாய் உடல் சிலிர்த்தவள்…அவனது மார்ப்பில் தன் முகம் புதைத்துக் கொண்டாள். ஒருகையால் அவளை அணைத்துப் பிடித்தவாறு மறுகையால் பாலை எடுத்து மனைவியின் இதழருகே அவன் கொண்டு செல்ல…



“எனக்கு வேணாம்.. நீங்க குடிங்க..! என்றவளை மறுத்துப் பிடிவாதமாய் அவளை குடிக்க வைத்தவன்…மீதியிருந்ததை கண்களில் காதல் வழிய அவளைப் பார்த்துக் கொண்டே தான் அருந்தி முடிக்க அதில் மேலும் முகம் சிவந்தவளை பூப்போல தன் கைகளில் அள்ளிக் கொண்டு தங்கள் அறையை நோக்கி நடந்தான் கதிரவன்.


கணவன் திடீரென்று தன்னைத் தூக்கியதில் அதிர்ந்தவள் பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டு தன் கரங்களை மாலையாக்கி அவனது கழுத்தை இறுக்கி வளைத்துக் கொண்டாள். அதில் மேலும் மகிழ்ந்தவன் ..குனிந்து அவள் கன்னத்தில் தன் இதழை ஒற்றினான்.



தங்கள் அறையை அடைந்ததும் …பின்னங்காலால் உதைத்து அறைக்கதவை மூடியவன் மனைவியை பூப்போல கட்டிலின் மீது கிடத்தி தானும் அவளருகில் சரிந்தான். முகமெங்கும் சிவந்திருக்க கண்களை இறுகமுடி எதிர்பார்ப்போடு இதழ்கள் துடிக்க தன்னருகே செந்தாமரை மலராய் மலர்ந்திருந்த மனைவியின் அழகை பார்வையால் வருடிக்கொண்டிருந்தவனுக்கு அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது போக…அவளது முகம் நோக்கி ஆவேசமாய் குனிந்தவன் அவளது துடிக்கும் இதழ்களை மொத்தமாய் கவ்விக் கொள்ள… அவன் கரங்களோ மனைவியின் மேனியில் தடையின்றித் தன் தேடலைத் துவக்கியது.



அதில் உடலெங்கும் சிலிர்க்க இன்பமாய் அதிர்ந்தவளின் உடல் மெல்ல நடுங்க அவள் மீது படர்ந்திருந்தவன் மனைவியின் நடுக்கத்தை போக்கும் விதமாய் மென்மையாய் தன் வருடலைத் தொடர்ந்தவன்..



“எத்தனை நாள் தவிப்பு தெரியுமாடி….?!” என்று ஆதங்கத்துடன் அவன் முணுமுணுக்க… அதைக் கேட்ட தாமரையின் நெஞ்சமோ குற்றவுணர்வில் மேலும் குறுகுறுக்க…அவனது ஏக்கத்தை போக்கும் விதமாய் வாகாய் அவனுக்கு வளைந்து கொடுத்தாள். அதில் கள்ளுண்ட வண்டாய் குதூகலித்தவன்…தன் தேடலை மேலும் தீவிரப்படுத்த… முடிவற்ற தேடலாய் அவளுள் மூழ்கிப் போனவன்…இத்தனை நாள் பிரிவை சமன் செய்ய எண்ணியவனாய் மனைவியை மீண்டும் மீண்டும் நாடியவன்.. இறுதியில் மனைவியின் சோர்ந்த தோற்றம் கண்டு மனமேயில்லாது அவளது நெற்றியில் அழுத்தமாய் தன் இதழ் பதித்து விலகியவன்… களைத்து சரிந்திருந்த மனைவியை அள்ளித் தன் மார்பில் போட்டுக்கொண்டு… சங்கமத்தால் கலைந்திருந்த மனைவியின் கூந்தலை காதலாய் ஒதுக்கிவிட்டு…அவளை மேலும் தன்னுடன் இறுக்கிக் கொண்டு அவள் தலையில் முகம் பதித்து திருப்தியுடன் தன் கண்களை மூடிக் கொண்டான்.




(கையணைக்க ...வருவான்!)



ஹாய் பேபீஸ்..!

கதையின் 30 வது அத்தியாயத்தை பதிந்து விட்டேன்.. படித்துவிட்டு கமெண்டுங்க பேபீஸ்..!! 😍😘😘😘😘

வழக்கம் போல தாமதமான யுடிக்கு மன்னித்து விடுங்கள் பேபீஸ்🏃🏃🏃🏃🏃🏃🙏🙏🙏🙏🙏🙏
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 31


received_2333486513342498.png 11051



மனைவியை அணைத்துக் கொண்டு கண் மூடி படுத்திருந்த கதிரவனின் மனம் சற்றுமுன் நிகழ்ந்த மனைவியுடனான கூடலை எண்ணி திளைத்திருந்த போதிலும் மனைவியின் இந்த திடீர் மனமாற்றத்திற்கான காரணம் என்னவாகயிருக்கும் என்ற யோசனை எழுந்தது. அதுமட்டுமில்லாமல் மனைவியின் காதாலான குழைவும்… தழுவல்களும் அவனுக்கு மிகவும் புதிது. முதலிரவில் கூட தன்கரங்களின் தீண்டலில் மெழுகாய் உருகியவள் தான். ஆயினும் இன்றைய கூடலில் அவளது நெருக்கமும்… அணைப்பும் முற்றிலும் புதிது அதில் அவன் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்தது. தன்னில் மூழ்கியிருந்தவனை மார்பில் பரவிய ஈர உணர்வு மீட்க… திடுக்கிட்டவனாய் மனைவியின் முகத்தை…தன் மார்பிலிருந்து அவசரமாக நிமிர்த்திப் பார்த்தவன்.. மனைவியின் கண்ணீர் முகத்தைக் கண்டு பதறித்தான் போனான்.


“தாமரை … என்னாச்சுடா.. ஏன் அழற..?!... ஒருவேளை தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் ஏதாவது… என்ற எண்ணம் தோன்ற மனைவியின் முகத்தை அவளது பதிலுக்காய் தவிப்பாய் நோக்கினான்.


அவளோ.. அவனது எண்ணத்தை உணர்ந்தவளாய்… “அ…தெல்லாம் ஒண்…..ணுமில்லை... நா….ன் தான் இத்தனை நாளா உங்களை விலக்கி வச்சி ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்! என்னை மன்னிச்சிடுங்க… கதிர்! ஆனா.. நான் வேணும்னு எதையும் செய்யலை... அன்….னைக்கு வந்து… நான்…. வந்து.. “ என்று திக்கியவளை இடைமறித்தவன்..!


“அதெல்லாம் விடுடா… அன்னைக்கு நீ அப்படிநடந்துக்கிட்டது… எனக்கு வருத்தம் தான் ஆனால் அதுக்கு உன்னை மட்டும் குற்றம் சொல்லமுடியாது நானும் தானே காரணம்? நான் உன்னை முதலில் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு…. அதுக்கப்புறமா உன் அந்தஸ்த்தை காரணம் காட்டி நம்ம கல்யாணத்தை நிறுத்தச்சொன்னதும் நான் தானே..? அதனால தவறு பூராவுமே என் மேல தான்…! ஆனா…கல்யாணத்திற்கு பிறகாவது நான் அதற்கான காரணத்தை உங்கிட்ட சொல்லியிருக்கனும். நம்ம முதலிரவின் போது எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிடனும்னு தான் உனக்காகக் காத்திருந்தேன். ஆனா அன்னைக்குக் காலையில் நான் கட்டுன புத்தம்புது தாலியோட எனக்கே எனக்கான… என் தேவதையா… உன்னை என்னோட அறையில் முதன்முதலா பார்த்தப்ப… சத்தியமா சொல்றேன்டி…! என்னால என்னையேக் கட்டுப்படுத்திக்க முடியலடி…! உன்னை உரிமையா தொட்டுத் தழுவுன அந்த நிமிடத்தில் தான்டி உன் மேல நான் வச்சிருந்த காதலை முழுமையா உணர்ந்தேன். என்றவன் மனைவியை கண்களில் காதல் வழிய நோக்க… அன்றையநாளின் நினைவில் அழகாக முகம் சிவந்தவளை.. ரசித்துப் பார்த்தவன்.. அவளது சிவந்த கன்னங்களில் தன் இதழை ஆசையாய் பதித்தான். அதில் மேலும் சிவந்தவளை அள்ளிப்பருகிவிட ஆசை பிறக்க அரும்பாடு பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவனுக்கு…

அன்றைய நாளின் ஆனந்தனைப் பற்றிய நினைவுகள் மனதில் அலையலையாய் எழும்ப அதன் கணம் தாளாமல்…உடல் விறைக்க… உள்ளம் பதற.. கண்களை இறுக மூடிக் கொண்டு தன்னை சமன்படுத்திக் கொள்ள முயன்றவனை அவனது உடல் மொழியில் உணர்ந்த தாமரை கணவனை நிமிர்ந்து பார்க்க …அலைப்புறுதலுடன் விழி மூடி அமர்ந்திருந்தவனின் தவிப்பை காண சகியாதவளாய்..


“ கதிர் நீங்க எதையும் சொல்ல வேண்டாம் விட்டுடுங்க..!” என்று தன் கரங்களை அவனது இதழ்களின் மீது வைத்து வேண்டாம் என்று தலையசைத்தவளை விழி திறந்து கனிவோடு பாரத்தவன் அவளை மீண்டும் தன் மார்போடு அணைத்துக்கொண்டு…அவளது தளிர் விரல்களோடு தன் கரங்களை இறுக பிணைத்து அவளது புறங்கையில் தன்னிதழ் பதித்தவன்..


“இல்லடி… இதைப் பற்றி முதலும் கடைசியுமா நாம பேசி முடிச்சிடலாம்… திரும்பவும் ஒருமுறை இது சம்பந்தமா எந்த நெருடலும் நமக்கிடையே வரக்கூடாது. என்றவன் ஆனந்தனின் கதையை மனைவியிடம் கூறத் தொடங்கினான். ஏற்கனவே தமிழரசியின் மூலமாக அவனைப்பற்றி அறிந்த போதும் கணவனின் வாய்மொழி மூலமாக அறிய விருப்பியவளாய்… அவனது மார்போடு ஒன்றினாள் தாமரை.


ஆனந்தனுடனான தன்னுடைய நட்பிலிருந்து.. அவனது இறப்பு வரை அனைத்தையும் கூறி முடித்தவன்..சிறிது நேரம் அன்றைய நாளின் நினைவில் உழன்றவனாய் மௌனம் காத்தான்… பிறகு..கரகரத்த குரலை சரி செய்தவாறே..



“ஆனந்தோட மரணத்துக்குப் பிறகு… பெண்கள் …காதல் அப்படின்னாலே எனக்கு அப்படியொரு வெறுப்பு … அதுவும் மாயா மாதிரியான பணக்கார வீட்டுப் பெண்கள்னாலே ஒருவிதமான அருவருப்பு… அதனால எந்த பெண்ணையும் என்னை நெருங்கவிடாம ஒதுங்கிப் போனேன். காதல் கல்யாணம் இதெல்லாம் எட்டிக்காயா கசந்தது. இந்த பாழாப்போன காதல் தானே என்னையும் என் நண்பனையும் பிரிச்சது? என் வாழ்க்கையில் இனி அதுக்கெல்லாம் இடமேயில்லைன்னு நினைச்சேன்டி.! எந்த ஒரு பெண்ணை நம்பியும் என் வாழ்க்கையை பணயம் வைக்க நான் தயாராயில்ல…! அதனால கல்யாணமே பண்ணிக்க வேண்டாங்குற முடிவுல இருந்தேன்.


ஆனா அம்மாவும் அப்பாவும் என்னோட டிரையினிங் முடிந்து தூத்துக்குடி சப் - கலெக்டரா நான் பதவி ஏத்துக்கிட்டதுமே என்னை கல்யாணத்துக்கு வற்புறுத்த ஆரம்பிச்சாங்க. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம்னு மறுத்துட்டு நான் தூத்துக்குடி கிளம்பி போய்டேன். வேலைக்காக நான் மட்டும் தூத்துக்குடியில் தங்க வேண்டிவந்தது எனக்கு இன்னும் வசதியாப் போச்சு. ஆனாலும் சென்னைக்கு வரும் போதெல்லாம் அம்மா என்னை கல்யாணத்திற்கு வற்புறுத்திட்டேதான் இருந்தாங்க… நான் அவங்களுக்கு பிடிகொடுக்காம எதையெதையோ காரணம் சொல்லி சமாளிச்சேன். அதுக்குப்பிறகு போன வருடம் தான் எனக்கு காஞ்சிபுரமாவட்ட கலெக்டரா ப்ரமொஷனோடு போஸ்டிங் கிடைச்சது. அதன்பிறகு நான் சென்னையிலேயே தங்க வேண்டிய சூழல் வந்ததால திரும்பவும் கல்யாணத்துக்கு வற்புறுத்த ஆரம்பிச்சாங்க..! நானும் என்னால முடிஞ்சவரை வந்த சம்பந்தங்களையெல்லாம் தட்டிக் கழிச்சேன். அப்பதான் பெரியப்பா மூலமா உங்க வீட்டு சம்பந்தம் வந்தது. உங்க வசதி அந்தஸ்து இதெல்லாம் கேள்விப்பட்டதும் நான் முடியாதுன்னு பிடிவாதமா மறுத்தேன். ஆனா அப்பா ஓத்துக்கலை…இது அவரோடு அண்ணன் கொண்டு வந்த சம்பந்தம் இதை தட்டிக்கழிக்க முடியாதுன்னு மறுத்துட்டாங்க. அப்பாவோட வற்புறுத்தலுக்காக வேற வழியில்லாம உன்னை பொண்ணு பார்க்க உங்க வீட்டுக்கு வந்தேன். எப்படியாவது இந்த ஏற்பாட்டை இதோடதட்டிக்கழிச்சிடனும்னு நினைச்சுத்தான் வந்தேன். அதுக்கேற்றார் போல காரை விட்டு இறங்கியதுமே உங்க வீட்டோட அழகும் பிரம்மாண்டமும் பார்த்ததும் என்னோட முடிவு இன்னும் தீவிரமாயிடுச்சு. ஆனால் என்னோட வைராக்கியம்… வீம்பு இதெல்லாமே உன்னை பால்கனியில் முதன்முதலா பார்த்தப்பவே… பொடிப்பொடியா நொறுங்கிப் போகும்னு அந்த நிமிஷம் வரைக்கும் நான் நினைச்சுக்கூட… பார்க்கலடி!! பார்த்த அந்த நொடியே என் மனசுல பசை போட்டதைப் போல ஒட்டிக்கிட்டடி…நீ!. எவ்வளவு கட்டுப்படுத்தியும் உன் மீதான என் பார்வையை என்னால விலக்கவே முடியலடி…அதுவரைக்கும் இருந்த இறுக்கமும் கோபமும் மாயமா மறைந்து போய்…என் உலகமே வண்ணமயமா ரொம்பவே அழகா மாறிட்டதா ஒரு உணர்வு. என் மனசெல்லாம் இலேசாகி ஏதோ வானத்தில் பறக்குற மாதிரி தோணுச்சு…. ஏனோ நீ எனக்காகவே படைக்கப்பட்ட தேவதைன்னு எனக்கு தோணுச்சுடி.. உன்னை எப்போதும் என் பக்கத்திலேயே வச்சிக்கனும். இந்த காதல் தேவதையின் உயிரை உருக்கும் நேசப்பார்வை எப்பவும் என்மீதே இருக்கனுங்குற பேராவல் எனக்குள்ள…. ஆனால் அது எப்படின்னு தான் இதுவரைக்கும் எனக்கே புரியாத புதிர். அதனால தான் உன்னை பிடிச்சிருக்கான்னு கேட்டபோது எதைப்பற்றியும் யோசிக்காமல்.. சம்மதம்னு தலையாட்டினேன் போல!!” என்றவனை கண்களில் காதல் வழிய அன்னார்ந்து பார்த்தவளின் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்தவன் அவளை மேலும் தன்னோடு இறுக்கிக்கொண்டான்.


ஆனால்.. அதன்பிறகு…உங்களுடைய அந்தஸ்தும் பணமும் ஒருபுறம் நெருஞ்சி முள்ளாய் என் மனசை உறுத்திக்கிட்டே தான் இருந்தது…உன்னை மணக்க சம்மதம் சொன்னது தவறோன்னு பலதடவை யோசிச்சு எனக்குள்ளேயே குழம்பினேன். நீ தான் வேணும்னு என் மனசும் உடலும் அடம்பிடிக்க…. அந்த மாயாவோட ஒப்பிட்டுப் பார்த்து இது பொருந்தாத திருமணம்னு என் புத்தி எச்சரிக்க…. மனசுக்கும் புத்திக்கும் இடையே நடந்த போராட்டத்தில் நான் களைச்சுப்போயிட்டேன்டி… அதனால தான் மனசுமுழுக்க உன்னோட பேசனும் ஆசையிருந்தும் உனக்கு ஒருதடவை கூட கால் பண்ணல.


அந்த நேரத்தில் தான் மாவட்ட அளவிலான சிறந்த தொழிலதிபரை தேர்ந்தெடுத்து ..அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டி பரிசு வழங்கி அவர்களை கௌரவிக்கும் விழா சென்னையின் பெரிய நட்சத்திர உணவு விடுதியில் ஏற்பாடு செய்திருந்தாங்க. அதில் தலைமை தாங்கி பரிசு வழங்கி கௌரவிக்க என்னை இன்வைட் பண்ணியிருந்தாங்க. அங்கே போனப்ப தான் அந்த மாயாவை யதேச்சையா வேறொருத்தனோட நெருக்கமா பார்த்தேன்…! ராட்சசி…! ஒரு குடும்பத்தையே உருத்தெரியாமல் அழிச்ச குற்றவுணர்வோ வருத்தமோ கொஞ்சமும் இல்லாம … அரைகுறையா உடுத்திக்கிட்ட…அவனோட கை கோர்த்து சிரிச்சுப் பேசிக்கிட்டு போனா… அதைப் பார்த்ததும் என்னால கோபத்தைக் கண்ட்ரோல் பண்ணவே முடியலை… அவளை அப்படியே என் கையால கண்டந்துண்டமா வெட்டிப் போடனும்னு வெறியே வந்தது தான் ஆனா என்னோட படிப்பும் பதவியும் அது தந்த கௌரவமும் தடுக்க..என்னை நானே கட்டுப்படுத்திக்கிட்டு…. விழாவை முடிச்சிட்டு உடனே அங்கேயிருந்து கிளம்பிட்டேன்.


அன்னைக்கு பூராவும் அடுத்து வந்த நாட்களிலும் நான் ரொம்பவும் டிஸ்டர்ப்டா இருந்தேன். இப்படிப்பட்ட கேடுகெட்டவளுக்காக உயிரை விட்டானேன்னு ஆனந்தன் மேல கோபம். எல்லா உண்மையும் தெரிஞ்சிருந்தும் அவங்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியாத என்னோட கையாலாகாதனத்தில் வந்த எரிச்சல்.. இதெல்லாம் சேர்ந்து அந்த நேரம் உன்னைப்பற்றி ஏதோ பேச்சு எழவும் எனக்கு குழப்பம் இன்னும் அதிகமாயிடுச்சி… ஒரு பணக்காரியால இவ்வளவு அனுபவப்பட்டும் உன்னை மணக்க சம்மதம் சொன்ன என்னை நினைத்தே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. அப்ப தான் என் நண்பனைப் போல ஒரு பணக்காரிகிட்ட என் வாழ்வை அடமானம் வைக்கிறதா?!… நெவர்… அப்படின்னு இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடனும்னு முடிவுக்கு வந்தேன். முடிவு எடுத்துட்டேனே தவிர அது எனக்கு அவ்வளவு சுலபமானதா இல்லை… முதன்முதலா என் இதயத்தை தொட்டு உயிரில் கலந்துவிட்ட உன்னை இழப்பது அத்தனை உயிர்வலியைக் கொடுக்கும்னு நானே எதிர்பார்க்கலைடி...! என்னதான் என்னோட புத்தி... இது ஒத்துவராது விலகிப் போறதுதான் எல்லோருக்குமே நல்லதுன்னு அறிவுறுத்தினாலும்…. காதல்வயப்பட்ட மனசு நீதான் வேணும்னு தவிச்ச தவிப்பிருக்கே… சொல்லிமாளாது. இப்படி அறிவுக்கும் மனசுக்குமிடையே எனக்குள்ளேயே போராடி..சோர்ந்து போன சமயத்தில் தான்.. என்னையும் அறியாம உனக்கு கால் பண்ணினேன். நீயும் ஆசைஆசையாய் என்கிட்ட பேச ஆரம்பிச்ச... பொண்ணுபார்க்க வந்தப்பவே உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும்… ஆனா அதை உன்வாயால அன்னைக்கு சொன்னப்ப நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்னு உனக்குத் தெரியுமாடி?. ஆனா மறுகணமே அந்த மாயாவோட முகம் என் நினைவுக்கு வந்தது..! அவ்வளவு தான் அதுவரைக்கும் இருந்த இனிமை துணிகொண்டு துடைச்சதைப் போல காணாமப்போச்சுடி…! காயம்பட்ட மனசு எதையும் முழுமையா ஏற்க மறுத்தது. இனியும் உன் மனசுல ஆசையை வளரவிடக்கூடாதுன்னு முடிவு பண்ணி மனசைக் கல்லாக்கிக்கிட்டு உன்கிட்ட அப்படி பேசுனேன். ஆனா அதுக்குப்பிறகு உன்னோட பதிலுக்காக தவிப்போடு காத்திருந்தேன்… ஆனா அந்தபக்கம் நீ பேசலன்னதும்… எனக்குள்ள இனம்புரியாத தவிப்பு… பிறகு தான் போனை காதிலிருந்து எடுத்துப்பார்த்தேன். அது கட்டாகியிருக்க….எனக்குள்ளயிருந்த ஏதோ ஒண்ணு என்னைவிட்டு பிரிந்து சென்றதைப்போல உடல் முழுவதும் பரவிய உணர்வில் செய்வதறியாம ஸ்தம்பிச்சிப் போயிட்டேன். அதுக்குப்பிறகு சுதாரித்து பலமுறை உன்னோட செல்லுக்கு கால் பண்ணிப்பார்த்தேன். அது சுவிட்ச் ஆப்னே வந்தது. பிறகு எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. நிதானமா யோசிக்கக் கூட நேரமில்லாமல் எனக்காக அலுவலக வேலைகள் காத்திருக்க… உடனே ஆபீஸ் கிளம்பி போனேன்.ஆனா ஆபீஸ் போயும் எந்த வேலையுமே ஓடல…. அதுக்கு மேலயும் சமாளிக்க முடியாமல் மதியத்துக்கு மேல லீவ் போட்டுட்டு பீச்ல போய் உட்கார்ந்துட்டேன். என்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு வெட்கத்தோட சொன்ன உன்னோட அந்தககுரல் திரும்பத்திரும்ப என்காதுல ஒலிச்சி என்னை சித்திரவதை பண்ணுச்சிடி…! ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டதா மனசு உறுத்த தலையைப்பிடிச்சுக்கிட்டு அப்படியே உட்கார்ந்துட்டேன். உனக்கு என்னாச்சு ஏன் நீ எதுவுமே பேசாம போனை வச்சிட்ட அப்படின்னு குழப்பமா இருந்துச்சு… உன்னோட குரலையாவது உடனே கேட்டேயாகனும்னு ஒரு வேகம்!. உடனே இளாவுக்கு போன் பண்ணேன். அவர்தான் சொன்னாரு உனக்கு காய்ச்சல்னு…. நான் பதறிட்டேன். எனக்கு என்ன செய்றதுன்னு ஒண்ணுமே புரியல!. காலையில் என்னோட பேசும் போது நல்லாத் தானே இருந்தா… திடீர்னு காய்ச்சல் வந்திருக்குன்னா என்னோட நிராகரிப்பு உன்னை இந்தளவு பாதிக்கும்னு நிச்சயமா நான் எதிர்பார்க்கலைடி! அந்தக் கணமே உன்னைப் பார்க்கணும் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு தவிப்பா இருந்தது. அப்பதான் இந்த தவிப்பு எனக்கு ஏன்…? வேணாம்னு சொன்னவன் ஒதுங்கித்தானே போகனும்…? அவளுக்கு என்னவானா உனக்கென்ன…? அப்படின்னு என்னோட மனசாட்சியோட கேள்விகளுக்கு என்கிட்ட பதிலில்லை. திரும்பவும் உங்க அப்பாவுக்கு கால் பண்ணேன். அவரும் காலையில் நல்லாத்தான் இருந்தா … திடீர்னு காய்ச்சல்ல படுத்துட்டான்னு வருத்தப்பட்டாரு… அது எனக்கு இன்னும் குற்றவுணர்வை அதிகமாக்கிடுச்சு…! அதுக்குப்பிறகு தான் என்மனசை நானே உணர்ந்தேன். சத்தியமாசொல்றேன்டி… அந்த நிமிஷமே முடிவு பண்ணிட்டேன் இனி எதுக்காகவும் உன்னை இழக்க என்னால முடியாது! என்னவானாலும் இந்த ஜென்மத்தில் எனக்கு பொண்டாட்டின்னா அது நீ மட்டும்தான்னு…! அதுக்குப்பிறகு தான் என் மனசு சமாதானமாச்சு.


அதன்பிறகு பலமுறை உன்னோட செல்லுக்கு போன்பண்ணி என்னோட மனசைத்திறந்து எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்கனும்னு பலமுறை முயற்சி பண்ணேன். ஒவ்வொரு முறையும் தோல்வியிலே முடியவும் கடைசியாக இளாவுக்கு போன் போட்டு உன்கூட பேசனும்னு சொன்னேன்.


அன்னைக்கு உனக்கு இரண்டாவது முறையா கால் பண்ணப்போ …உனக்கு எப்படியாவது எல்லாத்தையும் புரியவச்சிடனும்னு தான் நினைச்சேன்…. ஆனா அம்மணி என்ன பேச விட்டாத்தானே…?! நான் என் சொல்ல வந்தேன்னு முழுசாக்கூட கேட்காம. படபடபட்டாசு மாதிரி வெடிச்சதுமில்லாம போனையும் கட் பண்ணிட்டீங்க..! எனக்கு ஒரே அதிர்ச்சி! நீ இப்படி கோபப்படுவேன்னு நான் நினைக்கவேயில்லடி..! ஆனா நீ செஞ்ச வேலைக்கு உன்னை கொஞ்சுவாங்களான்னு என் மனசாட்சி என்னைக் காரித் துப்புனதுமில்லாம… சாதுவா இருந்தவளை இப்படி சந்திரமுகியா மாத்திட்டியேடா.. அவளை எப்படி மலையிறக்கப்போறேன்னு கேள்வி கேட்டுச்சு…! ஆனாலும் உன்னோட அந்த கோபம் ஏதோவொரு வகையில் மனசுக்கு நிறைவாயிருந்தது தான் உண்மை”. என்றவன் மனைவியின் முகத்தை உள்ளங்கைகளில் தாங்கி ஆசையாய் ஏறிட… இதுவரை கணவனின் பேச்சை கவனமாக செவிமடுத்தவளின் உள்ளம் தன் மீதான கணவனின் காதலை அறிந்த நொடி சந்தோத்தில் துள்ளியது. முகம் விகசிக்க..


“அப்படின்னா… !! அப்பவே என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவே பண்ணிட்டீங்களா… அதை சொல்லத்தான் அன்னைக்கு எனக்கு கால்பண்ணிங்களா..! ச்சே…! நான் ஒரு முட்டாள் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு கூடகேட்காம… அவசரப்பட்டு ஏதேதோ பேசிட்டேன்!!. என்னை மன்னிடுங்க கதிர்.. அன்னைக்கு மட்டும் நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா நமக்குள்ள இத்தனை பிரச்சனை வந்திருக்காதில்ல…?”என்று உற்சாகத்தில் ஆரம்பித்து… வருத்தத்துடன் முடித்த மனைவியின் முகச்சுணக்கத்தை மாற்ற எண்ணியவனாய்…


“ஆமாண்டி …அன்னைக்கு உன்னோட கோபத்தைப் பார்த்தபிறகு தான் எனக்கே தெரிஞ்சது நீ நான் நினைச்ச மாதிரி சாதுவான மொசக்குட்டியில்ல…உனக்குள்ள ஒரு சந்திரமுகி இருக்கான்னு…!!”என்று கண்கள் குறும்பில்மின்ன புன்னகையோடு மனைவியை சீண்ட அது நன்றாகவே வேலை செய்தது. விலுக்கென்று அவன் மார்பிலிருந்து விலகியவள்.. கணவனை முறைத்துப் பார்த்து….


“என்னாது…! நான் … நான்…! சந்திரமுகியா… ?!” என்று கோபமாய் கேட்டவள் அவனை தன் தளிர்க்கரங்களால் செல்லமாய் அடிக்கத் துவங்கினாள்.

உடல் குலுங்க நகைத்தவாறு…“நான் சொன்னது சரியாப் போச்சுப் பார்த்தியா!! உனக்குள்ள இருக்க சந்திரமுகி இதோ வெளியே வந்துட்டா பாரு..!” என்று மேலும் சீண்டியவனை மேலும் விளாசிய மனைவியின் அடிகளை மசாஜ் செய்வதைப்போல ரசித்து வாங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து மேலும் கடுப்பான மனைவியின் கைகளை சுண்டியிழுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன். அவளது முகத்தை தன்னை நோக்கி இழுத்து அவளது இதழ்களை தன் இதழ்களால் மொத்தமாய் கவ்விக்கொண்டான் கதிரவன். மனைவியின் இதழ்களை விட்டு பிரிய மனமின்றி நெடுநேரம் மூழ்கியவன்… மூச்சுக்காற்றுக்காய் தவித்தவளை வேறுவழியின்றி விடுவித்தவன் சிவந்திருந்த மனைவியின் கன்னத்தை ஆவலாய் வருடினான். கணவனது பார்வையில் நாணத்துடன் அவனுடைய மார்பில் மீண்டும் முகம் புதைத்துக் கொண்ட தாமரை நினைவு வந்தவளாக


“கதிர்.. என்றழைக்க… மனைவியின் அணைப்பிலும் முத்ததத்திலும் ஏற்கனவே மயங்கிப் போயிருந்தவனை …அவளின் காதலான அழைப்பு மேலும் போதையில் ஆழ்த்த…

“சொல்லுடி பொண்டாட்டி..! உன்னோட கதிருக்கு என்னடி வச்சிருக்க..?” என்று குழைந்தவனை…



“ஆமா இந்த கொஞ்சலுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…!”

“வேற எதுலடி குறை சொல்லு இப்பவே சரிபண்ணிடலாம்” என்று விஷமமாய் கண்சிமிட்டியவனின் வசீகரத்தில் தன்னைத் தொலைத்தவள் செல்லமாய் அவனை முறைத்துப் பார்த்தாள்.



“ம்க்கும்…!” என்று உதட்டை நளினமாய் சுழித்தவள்..



“உங்களுக்கு எத்தனை முறை போன் பண்ணேன் ஒரு தடவையாவது என் போனை அட்டெண்ட் பண்ணீங்களா..? இல்ல விட்டுட்டுப் போன பொண்டாட்டி என்ன ஆனாளோ ஏது ஆனாளோன்னு கவலைத் தான் பட்டீங்களா.. ?”என்று மனத்தாங்கலோடு வினவ.. மனைவியின் சுழித்த உதடுகளை ஆவலாய் பார்வையால் வருடியவாறே… பெரு மூச்சுடன்..



“என்னை வேற என்னடி பண்ணசொல்ற…?! அவ்வளவு பணிச்சுமையிலும் உனக்காக ஆசை ஆசையாய் வீட்டுக்கு வந்தா… அம்மணி நான் வர்றதுக்கு முன்னாடியே குறட்டை விட்டு தூங்குறீங்க…சரி காலையிலாவது பேசலாம்னு பார்த்தா என் கண்ணுல படாம பதுங்குற….! அத்திப்பூத்தாப்பபோல அன்னைக்கு எனக்காக நீ காத்திருக்கறதைப் பார்த்தப்ப எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா..?! இன்னைக்கு எப்படியாவது என் மனசைத்திறந்து உன்கிட்ட பேசிடனும்னு உனக்காக காத்திருந்தா… நீ ஹால்ல படுத்திருக்க… எனக்கு வந்த கோபத்துக்கு… எங்க உன்னை நோகடிச்சிடுவேனோன்னு பயந்து தான் என்னை கட்டுப்படுத்திக்கிட்டு உடனே கிளம்பிட்டேன். உன்னோட அலட்சியம் என் தன்மானத்துக்கு விழுந்த பலத்த அடியா நினைச்சேன் என்னைப்புரிஞ்சிக்கலையேன்ற வருத்தமும் கோபமும் இருந்தாலும் என்னோட பிரிவு உனக்கு என்னை உணர்த்தும் அப்படின்னு நினைச்சேன். ஒரு வேகத்தில் கிளம்பிப்போயிட்டேனே தவிர… உன்னை பார்க்காம உன்கூட பேசாம எவ்வளவு தவிச்சேன்னு எனக்குத்தான் தெரியும். இருந்தாலும் என்னோட ஈகோவைவிட்டு இறங்கி வந்து உன்னோட பேச மனசு வரலடி…அதனால தான் உன்னை தவிர்த்தேன். ஆனா ஒவ்வொரு நாளும் அம்மாவுக்கு கால் பண்ணி அவங்களுக்கே தெரியாம உன்னைப்பற்றி மறைமுகமா விசாரிச்சு தெரிஞ்சுப்பேன். அதுமட்டுமில்லாமல் அம்மாவே உன்னைப்பற்றி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுவாங்க.. உன்னைப்பார்க்காம அந்தப்புள்ள சரியா சாப்பிடறதில்லை.. தூங்குறதில்லை ஒரு எட்டு வந்துட்டாவது போயேண்டான்னு புலம்புவாங்க…அவங்க அப்படி சொல்லும் போது அப்பவே எனக்கு கிளம்பி வந்துடனும்னு தான் தோணும் ஆனா அடுத்த நொடியே உன்னோட அலட்சியம் ஞாபகத்துக்கு வந்து என்னை முடக்கிப் போட்டுடும்.



கணவனின் வார்த்தைகளில் குற்றவுணர்வுடன் அவனை பார்த்தவள்… “அ….அப்படின்னா நீங்க எப்படி இன்னைக்கு….? என்றவளை… புன்னகையோடு ஏறிட்டவன். “அம்மா தான் எனக்கு போன்போட்டு…இன்னைக்கு நானும் அப்பாவும் கோயிலுக்கு போறோம். காலையில் தான் வருவோம். தாமரை வீட்டில் தனியா இருக்க பயப்படுவா அதனால நீ இன்னைக்கு கிளம்பிவான்னு சொல்லிட்டு போனை கட்பண்ணிட்டாங்க… நான் திரும்பவும் கால் பண்ணி மறுக்கலாம்னு பார்த்தா அவங்க ரெண்டு பேரோட போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கு. இப்ப என்ன பண்றது… போகாம விட்டுடலாம்னு வீம்பா நினைச்சாலும்… நீ தனியா என்ன கஷ்டப்படறீயோன்னு மனசு கேட்கலைடி… அதான் கிளம்பி வந்தேன். என்றவனை எல்லையில்லா காதலோடு கண்ணீர் வழிய ஏறிட்டவளுக்கு மாமியாரின் செயலுக்கான காரணம் நன்கு விளங்கியது. தனக்காக யோசித்த செயல்பட்ட அவரின் அன்பில் உருகித்தான் போனாள் தாமரை. ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்ட மனைவியை தன்மார்பிலிருந்து புரட்டி படுக்கையில் சரித்தவன்…



“இனி நோ மோர் கொஸ்டியன்ஸ்…ஒன்லி ஆக்ஷன்ஸ்!” என்றவன் புயல் வேகத்தில் மனைவியின் இதழ்களை மீண்டும் ஆக்ரமித்துக்கொண்டான்.



கணவனது எதிர்பாராத முத்தப்படையெடுப்பில் முதலில் திகைத்து அவனிடமிருந்து விடுபட போராடியவளின் கரங்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அனிச்சையாய் உயர்ந்து அவனது பிடறிமுடிகளுக்குள் கையிட்டு தன்னை நோக்கி மேலும் இழுத்துக் கொள்ள… அதில் மேலும் குதூகலித்தவனின் கரங்கள் மனைவியின் மேனியில் ஆவலாய்…தடையின்றி தன் தேடலை மறுபடியும் துவக்கியது.



எல்லையில்லாத காதலில் எவ்விதமான மனத்தடைகளுமின்றி முழுமனதோடு தங்களுக்கேயுரிய உலகத்தில் உல்லாசமாய் சஞ்சரிக்கத் தொடங்கினர் தம்பதியர். கணவனது நேசத்தை அவன் வாய்மொழியிலும் உடல்மொழியிலும் உணர்ந்தவளின் மனதை அதுவரை அழுத்திக் கொண்டிருந்த சஞ்சலங்கள் விடைபெற முழுமனதுடன் தன்னவனின் கரங்களில் அடைக்கலமானாள் தாமரை. காதலோடு கூடிய காமத்தில் திளைத்து… களித்து..களைத்தவர்களை நிம்மதியான உறக்கம் வந்து ஆட்கொண்டது.



(கையணைக்க.. வருவான்!)


ஹாய் பேபீஸ்... உங்க பாண்டியும் கதிரும் வந்தாச்சு கதையின் 31ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்துவிட்டு கமெண்டுங்க பேபீஸ்😍😍😍 என்னை கொலை காண்டோடு தேடிய செல்வங்கள் அனைவருக்கும் சாரி அண்ட் பொறுத்தருள்க பேப்ஸ்😭😒இனிமே இப்படி நடக்காது சீக்கிரம் வர்றேன் 🏃🏃🏃🏃🏃
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 32

ஹூன்ட்ரு பால்ஸ் (ராஞ்சி)

11525



11527

ஜோன்ஹா பால்ஸ் (ராஞ்சி)


இரண்டு மாதம் கடந்த நிலையில் கணவனுடனான ராஞ்சி வாழ்க்கைக்கு தன்னை ஓரளவு பழக்கிக்கொண்டாள் தமிழரசி. ஆரம்பத்தில் அந்த புதிய சூழலில் கொஞ்சம் திணறிய போதும் பாண்டியின் துணையும் சோனுவின் நெருங்கிய நட்பும் அவளுக்கு கை கொடுத்ததால் அச்சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக் கொண்டாள். இந்த ஒரு மாதகாலத்தில் கணவனை அவனது விருப்பு வெறுப்புகளை ஓரளவு நன்கு அறிந்து வைத்திருந்தாள் தமிழரசி.. பல நேரங்களில்அவனுக்கு அவன் பணியின் மீதுள்ள ஆர்வம் அர்பணிப்பு உணர்வு கண்டு மலைத்துத் தான் போனாள் தமிழரசி. காவல்பணி அவனது நேசம் மட்டுமல்ல அவனது சுவாசம் என்பதை உணர்ந்துகொண்டவளுக்கு ஒருபுறம் அதை நினைத்து பெருமையாக இருந்தாலும் அப்பணியின் மீதான கலக்கமும் பயமும் நெஞ்சின் ஒரு மூலையில் பானகத்துரும்பாக அவளை உறுத்தத்தான் செய்தது.



சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடுமையான நடவடிக்கைகளை அவன் ஒருபுறம் எடுத்த போதும்….பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பின்தங்கிய கிராமங்களுக்கு தன்னால் இயன்ற அளவு தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுக்கு நேர் முகமாகவும் மறைமுகமாகவும் நிறைய உதவிகளை செய்தான் பாண்டி. அவர்கள் விளைவித்த பொருட்களை இடைத்தரகர்களின் உதவியின்றி சந்தைப்படுத்த வசதியாக நேரடியாக அரசாங்கம் அமைத்துள்ள சந்தைகளில் விற்பனை செய்வதற்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடுகளையும் செய்திருந்தான். இதன் மூலம் பழங்குடியின மக்கள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக சந்தையில் விற்று இலாபம் பார்த்தனர். அடுத்து கல்வியறிவில்லாத மிகவும் பின்தங்கிய பழங்குடி கிராமங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த... இதன் மூலம் பழங்குடியினப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்தது. வேலைவாய்ப்பின்றி தடம்மாறி நக்சல்களோடும்… மாவோயிஸ்டுகளோடும் கூட்டு சேரும் பழங்குடியின இளைஞர்களை தடுக்கும் நோக்கோடு அவரவர் ஆர்வம் தகுதிக்கு ஏற்ப.. கைத்தொழில்களைக் கற்றுக்கொடுக்கவும்… சொந்த தொழில் செய்ய விழைவோருக்கு அரசு வழங்கும் சலுகைகள்… மானியம் கடன்வசதி ஆகியவை பற்றி அறிய வசதியாக வேலைவாய்ப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கவும் ஏற்பாடு செய்தான். தன் சொந்த செலவில்… பழங்குடியின பள்ளிகளுக்கு கணினிகளை வாங்கிக்கொடுத்தவன் அதை பயிற்றுவிக்கும் ஆசிரியரையும் தன் சொந்தசெலவில் அமர்த்தினான்.



அதுதவிர உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் … உடற்பயிற்சி கூடங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடனும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் அமைத்தது மட்டுமின்றி… கால்பந்து , கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுள்ள பழங்குடி இளைஞர்களுக்கு முறையாக பயிற்றுவிக்கவும்.... ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்ததோடு….அவ்வாறு பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட… மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வைக்கவும் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தான். இதன்மூலம் பயிற்சி பெற்ற வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்தனர். ஓய்வு நேரங்களில் தானே அப்பயிற்சி பள்ளிகளுக்கு சென்று ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுடன் விளையாட அது அவ்விளைஞர்களுக்கு மகிழ்வை அளித்ததோடு அவனைப்போல சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் அவர்களுக்கு அளித்தது என்றால் அது மிகையில்லை…இதன்மூலம் சாதிக்கத் துடிக்கும் பழங்குடியின இளைஞர்களுக்கு தானே ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தான் பாண்டி. நக்சல்கள் இல்லாத நகரமாக ராஞ்சியை உருவாக்குவது அவன் கனவாகும். அது சாத்தியப்பட வேண்டுமாயின் பிரச்சனையின் ஆணிவேரைக்கண்டறிந்து அதை வேரோடு களைந்தெறிய வேண்டும் என்பதை உணர்ந்தே… அவன் இத்தகைய சீர்திருத்தங்களை தன் அதிகாரத்தையும் பதவியையம் பயன்படுத்தி மேற்கொண்டான். பெரும்பாலும் நக்சலைட்டுகள் பழங்குடியின மக்களின் ஏழ்மை நிலையையும்… அறியாமையையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுஅரசாங்கத்திற்கு எதிராக மூளைச்சலவை செய்து அவர்களை தங்களோடு இணைத்துக்கொண்டு மாநிலத்தின் அமைதிக்கும் பொது மக்களின் பாதுகாப்புக்கும் பெருத்த அச்சுறுத்தலாக விளங்கினர். அவனுடைய இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு முதலில் பலதடைகள் அரசியல்வாதிகள்… போராளிகள் மூலமாக கிளம்பிய போதும்… அவற்றை தன் விவேகத்தாலும் தீரத்தாலும் உடைத்து நொறுக்கிவிட்டு அவன் வேகமாக முன்னேறத் துவங்க… பழங்குடியின மக்களின் ஆதரவும் அவனுக்கு பக்கபலமாக…எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தன்வழியில் வீறுநடைபோட்டு முன்னேறிச் சென்றவனின்…. சத்தமில்லா சாதனைகளை அறிந்து.... உள்ளூர் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டி அவனது சாதனைகளை பணியில் அவனது சாகசங்களை போட்டிபோட்டுக்கொண்டு ஆர்டிகிளாக வெளியிட்டதில்… மாநிலத்தின் பலரது கவனமும் அவன் மீது திருப்பியது. இதன்மூலமாக அவனது சாதனைகளைப் பாராட்டிபல விருதுகளும் பதங்கங்களும் கொடுத்து மாநில அரசு அவனை கௌரவித்தது. அதுமட்டுமில்லாமல் அவனது சீர்திருத்த நடவடிக்கைகளை சாதனைகளையறிந்த அம்மாநில முதல்வரும் பழங்குடியினத்தலைவருமான குரு சரண் தாஸ் குப்தா அவனை தன் இல்லத்திற்கே அழைத்து கட்டியணைத்து அவனை வெகுவாகப் பாராட்டியவர்…. தன் முழு ஆதரவும் அவனுக்கு எப்போதும் உண்டு என்ற உறுதியையும் அளித்தார். அது அவனுக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது.
அதே சமயம் மறுபுறம் நக்சல்களின் தேடுதல் வேட்டையிலும் அவர்களின் முகாம்களை அடியோடு அழிக்கும் நடவடிக்கைகளிலும் முழுமூச்சாய் ஈடுபட்டான் பாண்டி. பணியில் அவன் செய்த சாகசங்களும் வெற்றியும் குறுகிய காலத்திலேயே உயர்பதவியை அவன் அடைவதற்கு வழிவகுத்தது. இவற்றையெல்லாம் கண்கூடாக கண்டும் கேட்டும் அறிந்த தமிழரசிக்கு காவல் பணியின் மீது மரியாதையும் தன்னவனின் மீது காதலும் பெருகியது. பொது இடங்களுக்கு செல்லும் போது கணவனுக்கு கிடைக்கும் மரியாதையும் கௌரவமும் அவன் ஆற்றிய சாதனைகளுக்கானது என்பதை…உணர்ந்தவளுக்கு தன்னவனை நினைத்து உள்ளம் பெருமையில் திளைக்கும்.


அதே சமயம் செல்லுமிடமெல்லாம் அவனைக் கண்டதும் ஆர்வத்துடன் நெருங்கி ஆட்டோகிராப் வேண்டும் இளம்பெண்களின் ஆர்வப்பார்வைகள் அவளுக்கு மிகுந்த எரிச்சலையும் கோபத்தையும் கிளப்பிய போதும்… அத்தகைய ஆர்வப்பார்வைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியமாய் கடந்து செல்லும் கணவனின் இயல்பில் இவன் எனக்கே எனக்கானவன்… என்னைத்தவிர வேறொருத்தியை ஏறெடுத்தும் பாராத எனக்கு மட்டுமே உரிமையான என்னவன் என்ற நினைவு அவளை கர்வம் கொள்ளச்செய்யும். அத்தகைய தருணங்களில் கணவனது கைகளை தன்கைகளோடு உரிமையோடு பிணைத்து அவனோடு மேலும் நெருங்கி நின்றவாறு அவர்களை நோக்கி மிதப்பாய் ஒரு பார்வை பார்ப்பாள் தமிழரசி. அதை உணர்ந்தவனாய் பாண்டியின் முகத்தில் ரகசிய புன்னகை மலரும்.



பாண்டி….. தமிழரசியுடனான தனது மணவாழ்வை ஒவ்வொரு நாளும் ரசித்து வாழத்தொடங்கியிருந்தான். மனைவியை தன் உயிராய் நேசித்தான். தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் அவள் மீதான தன் காதலை அவளுக்கு உணர்த்தினான். தனக்காய் பார்த்து பார்த்து சமைத்து வைத்துவிட்டு ஆவலோடு காத்திருக்கும் மனைவிக்காகவே அத்தனை பணிச்சுமையிலும் மதிய உணவுண்ண வீட்டிற்கு சென்று வந்தான். அவனைப்பொறுத்தவரை தமிழரசி அவனுடைய நான்கு வருட தவத்திற்கு வரமாய் வந்த அவன் காதல்தேவதை. கிடைக்கவே கிடைக்காதோ எனறு தேடித் தவித்த தன் சொர்க்கம் இன்று கையணைவில் கிடைத்துவிட்ட நிறைவில் அவனது வாழ்வே வண்ணமயமாய் மாறிவிட்டதாய் உணர்ந்தான் பாண்டியன். இடையறாத பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரத்திலும் மனைவியின் ஆசையை உணர்ந்தவனாக அவளை ராஞ்சியின் முக்கியமான சுற்றுலாத் தளங்களுக்கு சர்ப்ரைஸாக அழைத்துச்சென்று அசத்துவான்.


அன்றும் அதுபோல சர்ப்பரைஸாக … செல்லுமிடம் கூறாமல் அவளை அவன் அழைத்துச்சென்றது.. இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தளமான ஹூண்டுரு அருவிக்குத்தான். இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இது சுபர்ணரேகா ஆற்றின் ஊடாக சுமார் 322 அடி உயரத்திலிருந்து விழுகிறது. கோடைகாலங்களில் மிதமான அளவில் குளு குளுவென கொட்டும் அருவியை பார்ப்பதும் அதில் குளித்து மகிழ்வதும் அலாதியான இன்பத்தை தரவல்லது. ஆச்சரியத்தில் விழிகள் மேலும் விரிய கன்னங்களில் தன் கைகளை தாங்கி முகம் விகசிக்க… மலையன்னை தருகின்ற தாய்ப்பாலைப்போல வெள்ளை நுரைப்பூவை வாரியிறைத்து பொங்கி வழிந்த அருவியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கழுத்து வளைவில் தன் நாடியைப் பதித்து அதனூடக அருவியைப் பார்த்த பாண்டி..



“பேபி உனக்கு இந்த சர்ப்ரைஸ் பிடிச்சிருக்கா..?!என்று மெதுவாய் அவள் காதுகளில் அவன் கிசுகிசுக்க… இயற்கையன்னையின் பேரெழிலில் தன்னைத் தொலைத்து நின்றிருந்த தமிழரசி.. பொங்கிப்பெருகிய உற்சாகத்துடனும் காதலுடனும் தன்னவனைப் பார்த்தவள்..

“ரொம்ப…ரொம்ப பிடிச்சிருக்கு வேலு! .. ஆமா இந்த அருவி பேரு என்ன..?



இது தான் ஹூன்ட்ரு பால்ஸ்..! என்று உற்சாகத்துடன் உரைத்தவன்… அடுத்த நொடி மனைவியின் தோளில் கையிட்டு அவளோடு கொட்டும் அருவிக்குள் நுழைய.. எதிர்பாராமல் அவனால் இழுபட்டு அருவிக்குள் நுழைந்தவள் அருவியின் வேகத்தில் நிலை தடுமாற… அதை உணர்ந்தவனாய் பாதுகாப்பாய் அவளை தன் கையணைவில் கொண்டு வந்து தன் மார்போடு அவளை இறுக்கிக்கொண்டான். அதில் மேலும் உற்சாகமடைந்தவளாக அவனது கைகளோடு கைகள் பிணைத்து சிறுகுழந்தையாய் அருவியில் அவள் ஆட்டம் போட… அதைக் கண்டவனின் உள்ளம் எல்லையில்லா உவகை கொண்டது.


ஆர்பரித்துக்கொட்டும் அருவியில் தன்னை மறந்து நெடுநேரம் திளைத்தவளை.. வலுக்கட்டாயமாக அவன் வெளியே கொண்டு வர… அவளோ அருவியை விட்டு விலக மனமின்றி…



“இன்னும் கொஞ்ச நேரம் வேலு…!” எனறவளை புன்னகையோடு பார்த்தவன்.



“பேபி இன்னும் கொஞ்ச தூரம் போனா.. இன்னொரு அருவி இருக்கு அதை நீ பார்க்க வேணாமா..? வேணாம்னா சொல்லு இங்கேயே இருக்கலாம்..” என்றவனை விழிகள் மின்ன..



“இன்னொரு அருவியா…?!!”



"ஆமா பேபி ! அது மட்டுமில்லை இந்த அருவியைச்சுற்றி.. இன்னும் பார்க்க நிறைய அழகான இடங்கள் இருக்கு அதையும் பார்த்துட்டு மதியம் லன்ச் சாப்பிட்டு முடிச்சிட்டு அந்த அருவிக்கு கிளம்புவோம்”. என்க.. அருவியை விட்டு அகல மனமில்லாத போதும்.. கணவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவளாய் சரியென சம்மதித்த... மனைவியின் எழில்வடிவை அப்போது தான் கவனித்தான் பாண்டி…அருவியில் குளித்ததால் கட்டியிருந்த ஈர சேலை அவளது உடலோடு ஒட்டி… அவளது மேனியின் செழுமையை கண்களுக்கு விருந்தாக்க தண்ணீரில் வெகு நேரம் விளையாடியதில் அவளது குழல் கலைந்து முன்பக்க முகத்தை மறைக்க… அதை விலக்கி விட்டவாறே இளவெயிலில் தங்கச்சிலையாய் சுடர்விட்ட மனைவியை தாபத்தோடு அளவிட்டவன் அவளை நெருங்கி தன்தோளோடு இறுக்கி அணைத்தவாறு..



“ இப்ப பார்க்க நீ எப்படியிருக்க தெரியுமா பேபி…?அப்படியே பனியில் நனைந்த ரோஜாப்பூ மாதிரி மின்னுறடி… நாம வேணும்னா கெஸ்ட் அவுஸ் போய் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு அப்புறமா வரலாமா பேபி?!" என்ற…கணவனது பார்வையிலும் குழைந்த அவனது குரலிலும் அவனது நோக்கத்தை அறிந்தவளாய்..சட்டென்று நெகிழ்ந்திருந்த ஆடையை சரிசெய்தவாறே முகம் சிவந்தவள்...



“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. அடிக்குற காத்துல நாம இந்த இடத்தை சுற்றிப் பார்க்கறதுக்குள்ள நம்ம துணி தானே உலர்ந்துடும் என்றவளை…கேலிப் புன்னகையோடு ஏறிட்டவன்.


"ஓகே.. ஓகே..பேபி ஆஸ் யுவர் விஷ்! "என்றவன். மறுபடியும் தோளில்கையிட்டு அணைத்தவாறு தன்னவளோடு இணைந்து நடந்தான். அருவியை சுற்றிலும்இருந்த அடர்ந்த வனப்பகுதியையும் பலவகையான நிறமுள்ள வண்ண மலர்களையும், மிருகங்களையும், பெயர் தெரியா பறவைகளின் கீச்கீச் ஒலியும் கேட்டும்.. பார்த்து ரசித்தவாறு சுற்றிப்பார்த்தவர்கள் இறுதியில் அங்கேயிருந்த உயர்தர உணவு விடுதி ஒன்றிற்கு சென்றனர். தங்களுக்கு விருப்பமான உணவுவகைகளை ஆர்டர் செய்துவிட்டு. உணவை திருப்தியுடன் உண்டு முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றவர்கள்.. சற்று நேர ஓய்வுக்கு பின்னர் உடை மாற்றிக்கொண்டு தங்கள் காரில் மறுபடியும் புறப்பட்டனர்.



அடுத்ததாக பாண்டி மனைவியை அழைத்துச் சென்றது ஹூன்ட்ரு அருவிக்கு சற்று அருகிலேயே அமைந்திருக்கும் மற்றொரு பேரழகு நிரம்பிய அருவி. அது தான் ராஞ்சியின் “தொங்கும் அருவி “ என்ற புனைப்பெயருடைய “ஜோன்ஹா பால்ஸ்”. 722 படிகள் ஏறிச் சென்று தான் இந்த அருவியை அடைய வேண்டும். அருவியைக்காண அமைக்கப்பட்டிருந்த படிகளையும் அதனை சுற்றியிருந்த வனப்பகுதியின் வனப்பிலும் மனம் மயங்கியவளாக கணவனோடு கரம் கோர்த்து நடந்தவளுக்கு கணவனின் நெருக்கமும், அருவியை நெருங்க நெருங்க ஆர்பரித்து ஓஹ்…..என்ற பேரிரைச்சலுடன் அருவி விழும் சத்தமும் அவளை புதுவிதமான உலகிற்கே இட்டுச்சென்றது. என்றால் அது மிகையில்லை. அதுதவிர மலைக்குமேல் புத்த விஹாரத்தை உடைய சுற்றுலா விடுதியொன்றும் சிறு கோவிலும் உள்ளது. அதையும் சுற்றிப்பார்த்துவிட்டு… ஜோன்ஹா அருவியை நெருங்க… இயற்கையின் அபரிமிதமான அழகோடும் எழிலோடும் விளங்கிய அவ்விடத்தையும் அருவியையும் பிரம்மித்து பார்த்தவளுக்கு மறுபடியும் உற்சாகம் ஊற்றெடுக்க கணவனை எதிர்பார்ப்புடன் நோக்கியவளின் மனதைப் படித்தவனாய் அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் ஒரு அருவிக் குளியல் போட்டுவிட்டு…. அதைச்சுற்றியுள்ள நீர்த்தேக்கத்தில் மனைவியுடன் படகு சவாரி செய்து விட்டு.. திருப்தியுடனும் மனநிறைவுடனும் அங்கிருந்து கிளம்பினர் தம்பதியர். வரும் வழியில் காரில் பார்த்த இடங்களைப் பற்றி உற்சாகத்துடன் விடாது சலசலத்துக் கொண்டிருந்த தமிழரசி சற்று நேரத்தில் அசதியில் பாண்டியின் தோளிலேயே தூங்கி வழிய அதுவரை மனைவியின் பேச்சை புன்னகையோடு செவிமடுத்தவாறே காரை கவனமாக செலுத்திக்கொண்டிருந்த பாண்டி மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து அவள் கீழே விழுந்து விடாதவாறு வாகாக அணைத்துக்கொண்டான்.

****************************************************************************************************************



சென்னையில் அருணாச்சலம் கன்ஸ்ட்ரக்ஷன் தொடக்க விழா அமோகமாக நடைபெற்றது. விழாவில் பரமேஷ்வரன் தன் மகன் மருமகள் சகிதம் குடும்பத்தோடு கலந்து கொண்டார். தாமரையும் கதிரவனோடு கலந்து கொள்ள… வழக்கம்போல அருணாச்சலம் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைக்க பார்வதி, அருணா, தாமரை, வர்ஷினி ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றிவைக்க இனிதே ஆரம்பமானது விழா. திறப்பு விழாவுக்கு தாய் தந்தையோடு வந்திருந்த வர்ஷூவின் பார்வை.. சற்று தள்ளி விழாவுக்கு வந்திருந்த பெரிய மனிதர்களுடன் முகம் மலர பேசிக்கொண்டிருந்த இளாவையே வட்டமிட்டது. அதை உணர்ந்த போதும் கண்டும் காணாது நின்றிருந்தவனின் பிடிவாதத் தோற்றத்தை வெகுவாய் ரசித்தாள் வர்ஷினி.



மனம்நிறைந்தவனின் ஒவ்வொரு அசைவையும் ரகசியமாய் ரசிப்பது தானே பெண்மை. அதைத்தான் அவளும் செய்து கொண்டிருந்தாள். அன்று காரில் அவனை கட்டியணைத்து முத்தமிட்டதருணத்தில் அவனது குழைவைக் கண்டுகொண்டதிலிருந்தே அவளது மனதை இனம்புரியாத அமைதியும் நிம்மதியும் ஆட்கொண்டது.



“ விழாவுக்கு வந்ததிலிருந்தே அவளை ஏறெடுத்தும் பாராமல் தவிர்ப்பவனை… பார்த்து பல்லைக்கடித்தவள்..



“டேய்!… மாமா.. என்னை நிமிர்ந்து தான் பாரேண்டா…?! ரொம்ப ஓவராத்தாண்டா பண்ற.. இருடா உன்னை வச்சிக்கிறேன்… இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இப்படி அவாய்ட் பண்ணுவன்னு நானும் பார்க்குறேன். தொலைவில் இருந்து நீ ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்துக்கெல்லாம் இனி தான்டா எண்டு கார்டு போடப்போறேன். மயிலே மயிலேன்னா…நீ இறகு போட மாட்ட.. உன்னையெல்லாம் குனியவச்சுத் தான் வெடுக்குன்னு புடுங்கனும்!. டேய் மாமா நீ இந்த வர்ஷூவுக்குத் தான் அதை நீ மட்டுமில்ல.. எந்த கொம்பனாலயும் மாத்த முடியாது. விடவும் மாட்டேன்..!” என்று அவசர சபதம் ஒன்றை எடுத்தவளின் இதழ்கள் மந்தகாசப் புன்னகையில் விரிய…. அதை உணர்ந்தவனாய் சட்டென்று அவளை திரும்பிப் பார்த்தான் இளா. அதற்காகவே காத்திருந்தவள் அவனது பார்வையோடு தன்பார்வையை கலக்க விட… அதில் அவன் உடலெங்கும் மின்சாரம் பாய உயிரை ஊடுறுவி நெஞ்சைத்துளைத்த அவளது நேசப்பார்வையில் கட்டுண்டு தன்னைமறந்து நின்றிருந்தவனை பார்த்து ஒற்றைப்புருவத்தை உயர்த்தி பறக்கும் முத்தம் ஒன்றை அவள் அனுப்பி வைக்க… அவளது செய்கையில் சட்டென்று தெளிந்தவனின் பார்வை சுற்றியிருந்தவர்களை பதற்றத்துடன் நோக்க… நல்லவேளையாக இவர்களின் காதல் பரிபாஷைகளை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை… அதில் நிம்மதிப்பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன்… அவளை திரும்பி கனல் பார்வை பார்க்க… அதற்கெல்லாம் அசருபவளா?! அவள். அவள் மறுபடியும் அதையேத் தொடர… சட்டென்று அவளிடமிருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டவன் அவளுக்கு முதுகு காட்டியபடி திரும்பி நின்றுக்கொண்டான். அதைப்பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் மேலும் விரிந்தது.



“சுத்தி இத்தனை பேரை வச்சிக்கிட்டு என்ன வேலை பார்க்குது பாரு குட்டி பிசாசு…” என்று மனதுக்குள் பல்லைக்கடித்தவனின் மனசாட்சியோ…



“ அப்போ யாருமில்லாத இடம்னா உனக்கு ஓகேவா?!” என்று நக்கலடிக்க…



“ ஒழுங்கா ஒடிடு நானே கொல காண்டுல இருக்கேன்…” என்று அவன் எரிந்து விழ…



“ டேய்…. டேய் நடிக்காதடா.. நான் உன் மனசாட்சி என்கிட்டேயேவா… அன்னைக்கு கார்ல வச்சி உனக்கு கிஸ் பண்ணாளே அப்ப எங்க போச்சாம் இந்த கோபமெல்லாம் … அப்ப என்ஜாய் பண்ணிட்டு இப்ப எப்படி நடிக்கிறான் பாரேன்..போடா டேய்!… உன்னைப்பத்தி எனக்குத் தெரியாது…!” என்று அது மேலும் சீண்டியது.



அந்த நேரம் அருணாச்சலத்தின் உரத்த குரலில் கலைந்தவன்.. அவரை நிமிர்ந்து பார்க்க… கையில் மைக்கோடு அவனை தலையசைத்து அழைத்தவரிடம் விரைந்த இளாவைத் தன் தோளோடு தோளாக சேர்த்தணைத்த அருணாச்சலம் வந்திருந்த பெரிய மனிதர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தவர். அவனது திறமையை கட்டுமானத்துறையில் அவன் அடைந்து வெற்றிகளை பெருமிதத்தோடு சொன்னவர். சென்னையில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்றைக் கட்டும் பணியை அவனிடம் ஒப்படைத்து முதல் செக்கை வழக்கம்போல அவனிடம் வழங்க… அதில் கண்கள் கலங்க உள்ளம் நெகிழ நின்றிருந்தவனை ஆரத் தழுவி விலகிய அருணாச்சலம். அவனது கைகளைப்பற்றி அவனது கையில் தன் காசோலையை வைக்கவும் சுற்றி இருந்தவர்களின் கரவொலி சத்தம் அவ்விடத்தை நிறைத்தது.



அதைப்பார்த்துக்கொண்டிருந்த பரமேஷ்வரனும் தன் நிறுவனத்திற்கான புதிய அலுவலகக் கட்டிடம் கட்டும் பணியை அவனுக்கே வழங்கினார் அதையடுத்த வந்திருந்த பெரிய மனிதர்கள் சிலரும் புதிய கட்டிடம் கட்டும் பணியை வழங்க அதில் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றவனை அருணாச்சலமும் பார்வதியும் புன்னகை முகமாய் பெருமையாய் பார்த்திருக்க…கதிரவன் இளாவை கட்டியணைத்து தன் வாழ்த்துக்களை தெரிவிக்க.. கூடவே தாமரையும் இணைந்து கொண்டாள். அதே போல வந்திருந்த ஒவ்வொருவரும் அவனை கைக்குலுக்கி வாழ்த்த இறுதியாக.. முகம் மலர அவனை வாழ்த்தும் பொருட்டு கையைநீட்டிய வர்ஷூவின் கரத்தையும் அவளையும் மாறி மாறிப்பார்த்தவன் ஒரு நொடி தயங்கிப்பின்… மற்றவர்கள் அவர்களையே பார்ப்பதையறிந்தவனாய் பட்டும் படாமல் அவளது கைகளைப்பற்றிக் குலுக்கி விடுவித்தான்.



அதன்பிறகு வந்திருந்த பெரிய மனிதர்களையும் உறவினர்களையும் வழியனுப்பி வைத்துவிட்டு வந்து அருணாச்சலத்தின் அருகே அமர்ந்தவனை திரும்பிப்பார்த்து புன்னகைத்த அருணாச்சலம்… பரமேஷ்வரனிடம்



“இதோ..நம்ம இளாவே வந்துட்டானே… அவனையே நேரடியாவே கேட்டுடலாமே!” என்றவரை… புரியாமல் அவன் நோக்க…



“அது ஒண்ணுமில்ல இளா நம்ம வர்ஷூவும் இப்ப தான் படிப்பை முடிச்சிருக்கா அவளும் இதே படிப்பை படிச்சிருக்குறதால… அவளும் உன் கம்பெனியிலேயே வந்து வேலைப்பார்த்து தொழிலைக் கத்துக்கிடட்டும்னு மாமா பிரியப்படறாரு… அதுமட்டுமில்லாமல் வெளியே முன்னபின்ன தெரியாதவங்க கிட்ட அவளை வேலைக்கு அனுப்ப அவருக்கு விருப்பமில்லை… எனக்கும் அது தான் சரின்னு படுது.. அவளுக்கும் படிச்சபடிப்பு வீணாகக்கூடாது அதே சமயம் நம்ம கம்பெனினா பாதுகாப்பாவும் இருக்கும் .. நீ என்ன சொல்ற இளா?! என்று அவனை நோக்கியவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவன் விழிக்க… அவனை புருவம் சுருங்க யோசனையோடு ஏறிட்ட பரமேஷ்வரன்



“என்னப்பா.. இளா என் பேத்தியை வேலைக்கு சேர்த்துக்க தயங்குற மாதிரி தெரியுதே…?” என்க..



“ச்சே.. ச்சே! அப்படியெல்லாம் இல்ல சார்.. என்கிட்ட வேலை பார்க்குறதுல அவங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னா எனக்கு ஓகே தான் ” என்றவன் தனக்கெதிராய் நின்றிருந்தவளைப் பார்த்து முறைக்க… அவனது பார்வையை சளைக்காது எதிர்கொண்டவள்



“எனக்கு சம்மதம் தாத்தா..!” என்று அவனைப்பார்த்தவாறே உரைக்க..



“அப்புறமென்ன…? நீ நாளைக்கே நம்ம கம்பெனியில ஜாய்ன் பண்ணிக்க சரியா?” என்ற அருணாச்சலத்தை முகம் விகசிக்க ஏறிட்ட வர்ஷூவுக்கு பெரியவர்கள் அனைவரும் வாழ்த்துக்கூற… அவர்களுக்கு நன்றியுரைத்தவாரே… தன்னவனை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தாள் வர்ஷூ.


(கையணைக்க... வருவான்!!)



ஹாய் பேப்ஸ்..!!
எல்லாரும் எப்படி இருக்கீங்க.... அப்புறம் உங்க எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பேபீஸ்.💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹❤❤❤❤


கதையின் 32 ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள்கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் பேபீஸ்... 😍😘😘😘

உண்மையாகவே இந்த முறை மிகமிகத் தாமதமான பதிவுக்கு வழக்கம் போல என்னை மன்னித்து விடுங்கள் தோழமைகளே நான் என்ன காரணங்களை சொன்னாலும் அதெல்லாம் சமாதானமாகாது .தான் இருந்தாலும் என் சொந்தப்பிரச்சனைகளால் தான் இந்த தாமதம் என்பதை பெரிய மனதோடு புரிந்து கொண்டு என்னை மன்னித்து விடுங்கள் பேபீஸ் இனியாவது இத்தகைய தவறு நேரா வண்ணம் அடுத்த வாரத்திற்குள் அடுத்த யுடியை கொடுக்க முயற்சிக்கிறேன் தோழமைகளே தயவு செய்து பொறுத்தருள்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Last edited:
Status
Not open for further replies.
Top