All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கதை திரி

Status
Not open for further replies.

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஓஹோ… அப்போ..உங்க யாருக்குமே என்கிட்ட ஒரு வார்த்தை முன்னாடியே கேட்கனும்னு தோணலையில்ல…! நீங்களாவே முடிவு பண்ணிட்டு வெறும் தகவலை மட்டும் எங்கிட்ட சொல்றீங்க”. என்று வேதனையோடு கேட்ட மகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்தவர்.

“தமிழு நானும் உங்க அப்பாவும் அண்ணனும் அப்படி நினைப்போமாடா...! சம்பந்திகாரவங்க ரொம்பவும் நல்ல மாதிரின்னு உனக்கே தெரியுமில்ல..? மாப்பிள்ளை பார்க்க இலட்சணமா…நல்லா படிச்சு பெரிய உத்யோகத்தில் இருக்காரு கை நிறைய சம்பாதிக்கிறாரு…. அதுமட்டுமல்ல மாப்பிள்ளைக்கு அவரு வேலை பார்க்குற இடத்தில் அவ்வளவு நல்ல பேராம்.. முக்கியமா மாப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பிள்ளைன்னு நம்ம மாதவன் தம்பியும் சொல்லுறாரு..! பொண்ணெடுத்து பொண்ணு கொடுக்குறதுல பல நன்மைகள் இருக்குடா..! நாலையும் அலசி ஆராய்ந்து பார்த்து தான் அப்பாவும் இந்த முடிவுக்கு ஒத்துக்கிட்டாரு. என்று மகளுக்கு புரியும்படி சொன்னவர் அவளின் பதிலுக்காக காத்திருக்க…அவள் ஏதும் பேசாது மௌனமாக இருக்கவும். அவளே சிந்தித்து தெளியட்டும் என்று நினைத்தவராக. தன்னறைக்கு சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் காலிங்பெல் சத்தத்தில் வெளியே வந்தவர் ஹாலில் மகள் இல்லை என்பதை கண்டு கொண்டவர் .வாயிற் கதவை திறக்க.. சாரதா வந்திருக்க அவளோடு சேர்ந்து வீட்டு வேலைகளில் மூழ்கி போனார்.

மதியம் மகளை சாப்பிட அழைக்க அவள் எனக்கு பசியில்லை என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க…பலமுறை அழைத்து சலித்தவர்….
“தமிழு …சின்னபுள்ள மாதிரி அடம்பிடிக்காம எழுந்து சாப்பிட வாடா….பெரியவங்க எது செஞ்சாலும் அது உன்னோட நல்லதுக்காகத் தான்னு நம்புமா!

“எனக்கு முதல்ல வேலைக்கு போகனும் குறைஞ்சது ஒரு வருஷமாவது …. அதுக்கு பிறகு தான் மற்றதெல்லாம் அது மட்டுமல்ல..என்று சிறிது நேரம் நிறுத்தியவள்… எனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கலை என்னால அவனையெல்லாம் கட்டிக்க முடியாது… என்று முகம் திருப்பி கொண்டாள்.

மகளின் மரியாதையற்ற விளிப்பில் கடும் கோபம் கொண்டவர்…

”தமிழ்..!”என்று அதட்ட என்னது இது அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற…? இதைத் தான் நான் உனக்கு கற்றுக் கொடுத்தேனா? என்று சீற…

தாயின் கோபத்தில் சற்று மிரண்டாலும் “எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை… பிடிக்கலை … என்னை விட்டுடுங்க..” என்றாள் பிடிவாதமாக.

“என்னடி பிடிக்கலை?” என்று தானும் முறைத்தார் முகத்தில் கடுமையேற!“மாப்பிள்ளைக்கு என்னடி குறைச்சல்? குடும்பம், படிப்பு ,அழகு, அந்தஸ்து , குணம் இப்படி எதிலேயாவது ஒரு குறை சொல்லு பார்ப்போம்”

‘ஆளு அழகா இருந்து என்ன பண்ண பார்க்குற வேலை நல்லாயில்லையே' என்று மனதுக்குள் முணு முணுத்தவள் வெளியே… “அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு பிடிக்கலை அவ்வளவு தான்!” என்றாள் முடிவாக..!

மகளை ஒரு கணம் உற்று பார்த்த மீனாட்சி..விறு விறுவென அறையை விட்டு கோபமாக வெளியேறிவிட்டார்.

இதுவரை தன்னை கடிந்து ஒரு வார்த்தை சொல்லாத அன்னை இன்று தன் மீது கோபம் கொண்டது. அவளுக்கு வருத்தமாக இருக்க… இதற்கெல்லாம் காரணமான அவன் மீது கோபம் கிளர்ந்தெழுந்தது . ஆயினும் கோபமாய் சென்ற தாயை எப்படியாவது சமாதானம் செய்து இந்த ஏற்பாட்டை தவிர்க்க நினைத்தவள்.. கீழே இறங்கி வந்து சாப்பிட அமர்ந்தாள். மீனாட்சி மகளை நிமிர்ந்தும் பாராது… அவளுக்கு பரிமாறியவர். தானும் சாப்பிட அமர்ந்தார். அன்னை ஏதாவது பேசுவார் என்று அவரது முகத்தையே பார்த்தவாறு சாதத்தை அலைந்து கொண்டிருந்தவளை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தவர் தன்னறைக்கு சென்றுவிட்டார். அன்னையின் பாராமுகம் மனதை பிசைய சாப்பிட பிடிக்காமல் எழுந்தவள் கை கழுவி விட்டு… ஒரு முடிவோடு அன்னையின் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே மீனாட்சி அறைக்குள் இருந்த அலமாரியில் தலையை நுழைத்து எதையோ மும்முரமாக தேடிக் கொண்டிருந்தார். கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தவர். மகளைக் கண்டும் காணாதது போல தன் பணியை தொடர….தமிழரசிக்கு சுறு சுறு வென்று கோபம் எழுந்தது…ஆயினும் அடக்கிக் கொண்டவள்..

ம்மா… ‘ என்க… மீனாட்சி கண்டு கொள்ளவில்லை..
“மம்மி….இப்ப என்ன சொல்லிட்டேன்னு எங்கிட்ட பேசமாட்றீங்க.. ?” அதற்கும் அவர் பேசவில்லை..

“மம்மி இப்போதைக்கு இந்த கல்யாணம் வேணாம்னு தான் சொல்றேன்… ஒருவருஷம் வேலைக்கு போய்ட்டு அப்புறமா நீங்க யாரை கை காட்டுறீங்களோ அவரையை கட்டிக்கிறேன்… !”

அலமாரியில் இருந்து புதிய திரைச்சீலைகள்…படுக்கை விரிப்புகள் இவற்றை எடுத்த மீனாட்சி ஏற்கனவே இருந்தவற்றை அகற்றிவிட்டு புதியதை மாட்ட ஆரம்பித்தார்.

அன்னையின் மௌனம் தொடர்வதை… கண்டவள் பொறுமையிழந்தவளாக மீனாட்சியின் முன் வந்து நின்றவள் அவர் கைகளிலிருந்தவற்றை தட்டிவிட…மீனாட்சி கோபமாய் முறைத்தாரே தவிர பேசவில்லை…!

இப்படியே அவரது மௌனம் இரவு வரை தொடர்ந்தது. அவளும் …மீனாட்சியின் பின்னால் விடாது தொடர்ந்து ஏதேதோ சமாதானம் சொல்லி இந்த ஏற்பாட்டை தட்டிக் கழிக்க முயன்றாள். அவள் எத்தனை முயன்றும் ஒரு வார்த்தை பேசாமல் மறுபடியும் தன் பணியை தொடர்ந்தவரை பரிதாபமாய் பார்த்தவளுக்கு அவரின் இந்த மௌனம் புதிது. இதுவரை தன்னிடம் பாசத்தையும் அன்பையும் மட்டுமே காட்டி வந்த அன்னையின் இந்த பரிமாணத்தில் விக்கித்து நின்றாள்.

“ம்மா…பேசு… ம்மா.. நீ இப்படி பேசாமல் இருக்குறது எனக்கு கஷ்டமாயிருக்கு… இப்போ என்ன…?! நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கனும் அவ்வளவு தானே..? சரி உங்க விருப்பம் போல செய்யுங்க… போதுமா எனக்கு சம்மதம்…!” என்றாள் கண்கள்கலங்க… மகளின் கண்களில் கண்ணீரைக் கண்டவருக்கு தாளவில்லை… அதுவரை அமைதியாக இருந்தவர்… “என் செல்லமே…! “ என்று தாவி அணைத்துக்கொண்டவர் தானும் கண்கலங்கினார்.

சிறிது நேரம் மகளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அவளது கண்ணீர் துடைத்து … தலையை வருடி…முதுகை நீவி சமாதானம் செய்தவர். மகளை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்து …

“இப்ப சொல்லு …நிஜமாகவே இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதமா?!” என்று ஆர்வத்தோடு வினவியவரிடம் மனதில் பல குழப்பங்களும் கலக்கங்களும் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அன்னைக்காக சம்மதம் என்று தலையசைத்தாள். மகள் தனக்காகத்தான் சம்மதித்திருக்கிறாள் என்று உணர்ந்த போதும்… மீதியை மகன் வந்து பேசி சரி செய்துவிடுவான் என்று அமைதியடைந்தார் மீனாட்சி.

தமிழரசி முழு மனதோடு திருமணத்திற்கு சம்மதிப்பாளா..? பார்ப்போம்.

(கையணைக்க வருவான்…!)


ஹாய்…பேபீஸ் கதையின் 12 ஆம் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு மறக்காமல் கமெண்டுங்க..😍😍😘😘😘😘
தமிழரசி- -பாண்டியின் பெண் பார்க்கும் படலம் அடுத்த அத்தியாயத்தில்😍

கருத்து திரி :👇👇👇👇

 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபீஸ் உங்களுக்கு கதிர்..தாமரை ரொமாண்டிக் டீ வேணுமா இல்ல பாண்டி தமிழரசியை பெண்பார்க்கப் போன யுடி வேணுமா எது வேணும் சொல்லுங்கய மீ வெய்டிங்😍😜
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 13


82198220


திட்டமிட்டது போல.. அருணாச்சலம் குடும்பத்தினர்.. தங்களின் நெருங்கிய உறவினர்களுடன் முதல் நாள் காலை தங்களின் ஊரான வேட்டைவலத்திலிருந்து புறப்பட்டு தனித்தனி கார்களில் சென்னையின் பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த அவர்களது பங்களாவை வந்தடைந்தனர்.


அந்த வீட்டின் வேலையாட்களான மரகதமும்.. அவளது கணவர் மாணிக்கமும் ஓடி வந்து கார் கதவை திறந்து விட்டு பணிவாய்…வணங்கி நிற்க…!


காரிலிருந்து புன்னகையோடு இறங்கிய அருணாச்சலம் அவர்களை அன்போடு நலம் விசாரிக்க அதில் மகிழ்ந்து போன அவர்கள் இருவரும்


“எங்களுக்கென்னங்கய்யா..!? படியளக்குற சாமி நீங்க இருக்கும் போது எங்களுக்கு ஒரு குறையில்லீங்க நாங்க நல்லாயிருக்கோமுங்க.. !” என்றவர்களை பார்த்து புன்னகைத்தனர் அருணாச்சலம் தம்பதியினர்.


அனைவரும் பிரயாணக் களைப்புடன் வரவேற்பரையில் வந்து அமரவும் அனைவருக்கும் மரகதம் ஏற்கனவே தயாராக செய்து வைத்திருந்த மாலை டிபன் காபியோடு பரிமாறப்பட்டது. உறவினர்கள் அனைவரும் உண்டு முடித்து விட்டு அவரவர்களுக்குரிய அறைகளுக்கு சென்று விட…


அருணாச்சலம் குடும்பத்தினர் மட்டும் வரவேற்பரையில் அமர்ந்திருந்தனர். அந்நேரம் அருணாச்சலத்தின் அலைபேசி ஒலிக்க…. அருணா தான் அழைத்திருந்தாள். அவர்களின் பிரயாணம் பற்றி கேட்டறிந்தவள் அனைவரிடமும் பேசிவிட்டு நாளைக்கு பெண்பார்க்க செல்வதற்குரிய ஏற்பாடுகளை பற்றி தன் அண்ணியுடன் பேச ஆரம்பித்துவிட… அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த பிள்ளைகள் மூவரின் களைப்பை உணர்ந்தவராக அவரவர் அறைக்கு சென்று ஓய்வெடுக்குமாறு அனுப்பி வைத்தார் அருணாச்சலம். அவர்களும் அகன்றுவிட..


பார்வதி பேசிவிட்டு அலைபேசியை அணைத்தவர் மலர்ந்த முகத்துடன் கணவரை பார்க்க… என்னவென்று பார்வையால் வினவியரிடம்…


“அருணா பிள்ளைகளோட கிளம்பி நைட் இங்க வர்றாளாங்க.. காலையில் நாமெல்லாம் ஒண்ணாவே மாப்பிள்ளை வீட்டுக்கு போகலான்னாங்க.. என்றார் முகம் விகசிக்க!.


அருணாச்சலம் தங்கையின் வரவில் தானும் மகிழ்ந்தவர் யோசனையோடு…”மாப்பிள்ளை மாமா..அத்தையெல்லாம் வரலையாமா..பார்வதி?!”


“இல்லையாங்க.. அவங்க மாமனாருக்கும்… வீட்டுக்காரருக்கும் நாளைக்கு முக்கியமான வேலையிருக்காம். அதை முடிச்சிட்டு.. அவங்க மூணு பேரும் நேரா மாப்பிள்ளை வீட்டுக்கே வந்துடறோம்ன்னு சொல்லிட்டாங்களாம். அருணாவோட மாமனாரு உங்களுக்கு அப்புறமா கால் பண்றேன்னு சொல்லச் சொன்னாராம்.” என்க சரி என்று தலையசைத்தார்.


“ சரிங்க நீங்களும் போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க” என்ற மனைவியை கனிவாக பார்த்தவர் “நீயும் தான் களைப்பா இருக்க.. அருணா வரவரைக்கும் நீயும் வந்து ஓய்வெடுக்கலாமே பார்வதி.. இப்ப தான் வேலை ஒண்ணுமில்லையே… ?!


“நைட்டுக்கு என்ன டிபன் சமைக்கறதுன்னு மரகதத்துக்கிட்ட சொல்லிட்டு வர்றேன் நீங்க போங்க. என்று கணவரை அனுப்பி வைத்துவிட்டு சமையலறைக்கு சென்று மரகதத்திடம் சமைக்க வேண்டியதை சொல்லிட்டு ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு சென்றுவிட்டார்.


மாலை 5 மணிக்கெல்லாம் அருணாவும் பிள்ளைகளுடன் வந்துவிட…அதன் பிறகு பெரியவர்களும் ..சிறியவர்களும் கும்பலாக அமர்ந்து நெடு நாளைக்கு பிறகு அரட்டை அடிக்க துவங்கினர்.


குறிப்பாக அருணாவின் மக்களான வர்ஷினியும் வருணும் சேர்ந்து அவர்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்ள அங்கே வெடிச்சிரிப்பு கிளம்பியது. சிறிது நேரத்திற்கு பிறகு கல்யாணப் பேச்சில் பெரியவர்கள் மூழ்கிவிட


சிறியவர்கள் அவர்களிடமிருந்து தனியே கழன்று கொண்டனர்.


பாண்டி ,இளா, வர்ஷினி தாமரை இவர்கள் நால்வரும் தனியே அமர்ந்து அரட்டையை தொடர்ந்தனர்...!.


“பாண்டி…”என்ன வாயாடி..வர்ஷூ உன் படிப்பெல்லாம் எப்படி போகுது..!


“நான் ஒண்ணும் வாயாடியில்ல..என்று சிணுங்கியவள்..“அதெல்லாம் ஒரு மாதிரி நல்லாத்தான் போகுது “என்றவளை ஏளனமாக பார்த்த வருண்…


“ஆமாமாமா ஏகப்பட்ட அரியர்களோட அமர்க்களமா போகுது மாமா..!என்று கிண்டலடிக்க..


“டேய்….! உன் வாயை மூட்றா தடிமாடு..! உன்னை யாராச்சும் கேட்டாங்களா?” என்று வர்ஷூ சீற…


“போடி மக்கு பிளாஸ்திரி…உண்மையைத் தானே சொன்னேன்…! என்று அவர்களுக்குள் வாக்குவாதம் தொடர… பாண்டி தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ய ஒருவழியாக அவர்கள் சமாதானமடைந்தனர்.


“அதுசரி நீ நல்லாத்தானே படிப்ப? அப்புறம் எப்படி அரியர் வச்ச?” என்று பாண்டி ஆச்சரியத்துடன் வினவ..


“அதுவா…எக்சாம் டைம்ல எனக்கு அம்மை போட்டுடுச்சி மாமா அதனால எந்த எக்சாமும் நான் அட்டெண்ட் பண்ணலை.. அப்படி வந்தது தான் இந்த அரியர்ஸ்..இந்த சம்மஸ்டர்ல எல்லாத்தையும் முடிச்சிடுவேன் மாமா!” நம்பிக்கையோடு சொன்னாள் வர்ஷினி.


“அது சரி பொண்ணுங்க எல்லாரும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் ,ஐ.டி …இந்த மாதிரி படிப்பை தானே தேர்ந்தெடுப்பாங்க நீ எப்படி சிவில் இன்ஜினியரிங் எடுத்த? என்று ஆச்சரியத்துடன் பாண்டி வினவ.. மின்னல் வெட்டு பார்வையொன்றை இளமாறனிடம் செலுத்தியவள்.


“அது எனக்கு ரொம்பவே பிடிச்ச பீல்ட் மாமா” என்றாள் அடுத்த கணம் பாண்டியை நோக்கி..!


"ஓ.. " என்று யோசனையாக பார்த்தவன். “அப்படின்னா நீ படிப்பை முடிச்சிட்டு இளாவோட கம்பெனியில் டிரையினிங் எடுத்துக்கலாமே”! என்றவனை கேள்வியாக பார்த்தவளிடம்..


இளா விரைவிலேயே சென்னையில் தனது கட்டுமான நிறுவனத்தின் கிளையை ஆரப்பிக்க போகும் விஷயத்தைக் கூற அதைக் கேட்டு மகிழ்ந்தாலும்… சிறு ஏமாற்றம் மனதில் எழத்தான் செய்ததது. அடுத்த கணமே அதை மறைத்துக் கொண்டவள்.


தன்னருகே அமைதியாக அமர்ந்திருந்த தாமரையிடம் ”என்னாச்சு தம்மு நானும் வந்ததிலிருந்து பார்க்குறேன் நீ ரொம்ப அமைதியாயிருக்க… என்ன விஷயம்?! கல்யாணப் பொண்ணு மூஞ்சியில் களையே காணோமே என்று வினவ… திடீரென்று தன்னை இப்படி கேட்பாள் என்பதை அறியாத தாமரை என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க…


பாண்டி … ஆபத்பாந்தவனாய்… “இல்லடா தாமரை காய்ச்சல் வந்ததிலிருந்தே இப்படித்தான் டல்லாயிருக்கா என்க…!


“என்னாது…! கல்யாணப் பொண்ணுக்கு காய்ச்சலா…?சரியில்லையே…?! ஒரு வேளை கதிரண்ணாவை பார்க்க முடியலையே…பேசமுடியலையேன்னு நினைச்சு ஏக்கத்தில் காய்ச்சல் வந்திருக்குமோ….?” என்று தாடையில் சுட்டு விரலை தட்டி யோசித்தவள்…


“இந்த சங்க இலக்கியத்தில் வருமே… தலைவனைக் காணாது தலைவி பசலை நோயால் பாதிக்கப்பட்டாள்னு அதுமாதிரி தானே தம்மு…?!” என்று தாமரையை பார்த்து கண்சிமிட்டி வினவ…. அவளுக்கு பதில் சொல்ல இயலாது தாமரை தலையை குனிந்து கொள்ள… வர்ஷினி மேலும் கிண்டலடிக்க ஆரம்பித்தாள்.


அதைக்கேட்ட வருண்.. “அப்படின்னா…. நீ என்னை லவ் பண்ணவேயில்லையா… ? தம்மு டார்லிங். என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு .. கேட்க….


அதற்கு வர்ஷூ “உன்னை மாதிரி அரை டிக்கெட் பயலுக்கெல்லாம் தம்மு கேட்குதா….?! உன் ரேன்ஞ்ச்சுக்கு ஏத்த மாதிரி அரைக்காப்படி ஏதாவது கிடைக்குதான்னு பாருடா …!”என்று தம்பியை அவள் கலாய்க்க…தாமரைக்கு சிரிப்பு பீறிட்டது.


சில நாட்களுக்கு பிறகு முகம் மலர வாய்விட்டு சிரிக்கும் தங்கையை சகோதரர்கள் இருவரும் வாத்சல்யத்துடன் பார்த்தனர்.


“ஒரு பொய்யாவது சொல் கண்ணே..! உன் காதலன் நான் தான் என்று…”!
அவன் மேலும் பாட…தாமரை வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

வருண் வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டே…

வர்ஷூவிடமிருந்து துப்பட்டாவை கேட்டு வாங்கி அதை தோளில் போட்டுக்கொண்டு இடது கையை மட்டும் உயர்த்தி தாமரையை நோக்கி ஆசிர்வதிப்பது போல காட்டி..


“எங்கிருந்தாலும் வாழ்க…உன் இதயம் அமைதியில் வாழ்க… !”
என்று சோகமாக பாடி… இறுதியில் லொக்…..லொக் 'என்று இறும்ப…


வர்ஷூ "அதென்னடா…? காதல் தோல்வினா கடைசியில் இறும்பனுமா…என்று அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டு வைக்க…அவளை சோகமாய் ஒரு பார்வை பார்த்தவன்…
“அது ஒண்ணுமில்லடி காதலியை பிரிந்த துக்கம் தொண்டையை அடைக்குமில்ல? அதை வெளியேற்றத்தான் இறும்பறது…என்று புளி போட்டு தமக்கைக்கு விளக்க.. அதைக்கேட்டு கொண்டிருந்த பாண்டி.. இளா… தாமரை வர்ஷூ நால்வரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர். இவர்களின் சிரிப்பு சத்தத்தை கேட்டு பெரியவர் அனைவரும் திரும்பி பார்த்தனர்.


அருணா மட்டும் எழுந்து வந்து இவர்கள் அருகே அமர்ந்து கொண்டு “இங்க என்ன நடக்குது..?! என்று ஆர்வத்தோடு வினவ…!


“மம்மி… உன் பையனுக்கு காதல் தோல்வியாம் அதான் பீலிங்கு வுடறாரு?! வந்து என்னான்னு கேளு…என்று வர்ஷூ போட்டு கொடுக்க …


“என்னாது …?காதல் தோல்வியா…? என்று அருணா மகனை கண்களால் எரிக்க..


“பிசாசு போட்டுக் கொடுத்துடுச்சே…! என்று வர்ஷூவை பார்த்து பல்லைக்கடித்து மெதுவாக மூணுமுணுத்தவனின் பேச்சு அருணாவைத் தவிர அனைவருக்கும் கேட்டுவிட..அவர்கள் நமுட்டு சிரிப்புடன் அவனையே பார்த்திருக்க….


“என்ன கன்றாவிடா இது இன்னும் பள்ளிக்கூடத்தையே தாண்டலை அதுக்குள்ள காதல் கத்திரிக்காய்னு..! எடு அந்த தொடப்ப கட்டையை.."! அருணா முறைக்க…


“அம்மா அப்படியெல்லாம் எதுவுமில்லமா… அவ போய் சொல்றா சரியான புளுகு மூட்டை” என்று அன்னையை சமாதானப்படுத்த முயல..


“மம்மி… அவன் தான் பொய் சொல்றான்… நீங்க வேணும்னா இவங்களையே கேளுங்க? என்று மற்றவர்களை கைகாட்ட.. அவர்கள் சுவாரஸ்யமாய் புன்னகையுடன் அவளையே கவனிக்க..

“அவன் லவ் பண்ற பொண்ணைப் பத்தி கொஞ்ச நேரம் முன்னாடி தான் எங்க எல்லார் கிட்டேயும் சொன்னான். ஆனா … இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா..அவன் லவ் பண்ண பொண்ணு இவனை வேணாம்னு சொல்லிட்டு அவங்க வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஒகே சொல்லிட்டு இவனுக்கு டாட்டா சொல்லிட்டு போயிடுச்சாம்!. சார்.. அந்த கவலையில் தான் வசந்த மாளிகை சிவாஜி கணேசன் மாதிரி தோளில் துப்பட்டாவோட பீலிங்கு விட்டுக்கிட்டு இருந்தாரு!" என்று மேலும் ஏற்றிவிட…அருணா கொதிநிலைக்கே சென்றவர் மகனை அடிக்க ஆயுதத்தை தேட மூலையில் இருந்த விளக்குமாறு கண்ணில் படவும் அதை எடுத்துக்கொண்டு மகனை துரத்த ஆரம்பிக்க..!

“அவன் மம்மி நான் உங்க செல்லப்பிள்ளை…. எதுவாயிருந்தாலும் குணமா வாயால சொல்லனும் அதை விட்டுட்டு….இந்த மாதிரி ஆயுதத்தை எல்லாம் தூக்கப்படாது.. மீ பாவம்…! என்று அலறிக்கொண்டே எகிறி குதித்து வீடு முழுவதும் ஒடினான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த நால்வருக்கும் சிரிப்பு பீறிட்டது.

அங்கும் இங்கும் ஓடியவன் இறுதியாக அருணாச்சலத்தின் முதுகுக்கு பின்னே சென்று நின்று கொண்டு “மாமா உங்க தொங்கச்சி …ச்சே…தங்கச்சி கிட்டயிருந்து என்னை காம்பாத்துங்க ப்ளீச்"! என்று அலற.. துரத்திக் கொண்டு வந்த அருணா மூச்சு வாங்க கையில் துடைப்பத்தோடு…நிற்பதை பார்த்து அருணாச்சலம் திகைத்து நின்றுவிட..


உறவினர்களை இரவு உணவுக்கு சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு திரும்பி வந்த பார்வதி அருணா துடைப்பத்தோடு மருகனை துரத்துவதை பார்த்தவர்… வேகமாக ஓடி வந்து அருணாவின் கையிலிருந்த துடைப்பத்தை பிடுங்கி எறிந்துவிட்டு..

“இதென்ன பழக்கம் அருணா..! தோளுக்கு உசந்த பிள்ளையை விளக்குமாத்தை எடுத்துக்கிட்டு அடிக்க வர்றது ?!” யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று கோவிக்க..

“அண்ணி…அவன் என்ன பண்ணான்னு கேளுங்க முதல்ல..?” என்று மகனை முறைக்க… வருண் அருணாச்சலத்தின் தோள் வளைவிலிருந்து பாவமாய் எட்டி பார்க்க…நிலைமை தீவிரமாவதை உணர்ந்து வர்ஷூ நழுவப் பார்க்க அவளது காதை எட்டிப்பிடித்து திருகிய பாண்டி … “


“ஏய் வாயாடி ஒழுங்கா உண்மையை சொல்லு?” என்று மிரட்ட..


“ஆ….அச்சச்சோ…!
வலிக்குது…வலிக்குது விடுங்க! மாமா என்று அலறியவளை பெரியவர்கள் திரும்பி பார்க்க… அவள் நடந்ததை காதை தேய்த்துக் கொண்டே கூறி முடிக்கவும்… அருணாச்சலம் பெருங்குரலெடுத்து சிரிக்க பார்வதிக்கும் சிரிப்பு பீறிட்டது. தன் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மருமகனை கை பிடித்து முன்னே இழுத்து அவனை தோளோடு அணைத்து சிரித்தவாறு தங்கையை பார்க்க… அருணாவின் முகமும் புன்னகையில் மலர்ந்தது.


நெடுநாளைக்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை திருப்தியுடன் உண்டு முடித்தவர்கள் மனதும் வயிறும் நிறைய சிறிது நேரம் மீண்டும் அரட்டை அடித்துவிட்டு அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.


மறுநாள் நாள் காலை அழகாய் விடிய… அருணாச்சலம் குடும்பத்தினர் தன் உறவினர்களோடு சொக்கநாதர் இல்லத்தை அடைந்தனர்.
வந்தவர்களை இன்முகமாய் வாசலுக்கே வந்து சொக்கநாதரும், மீனாட்சியும் எதிர்கொண்டழைக்க.. கதிரவனும் அவர்களுடன் இணைந்து கொண்டான். அனைவரையும் கைகூப்பி வரவேற்று அழைத்தவன் பார்வை தன்னவளை தேடியது… அவளை அழைத்து வரமாட்டார்கள் என்று ஏற்கனவே தெரிந்தது தான் ஆயினும் காதல் மனம் இலேசாக சுணங்கியது. ஆயினும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ள வில்லை கதிரவன்.


கடைசியாக இளாவும்..பாண்டியும் இறங்க.. பாண்டியை முதல் முறையாக பார்த்தவன் கட்டுக்கோப்பான உடல்வாகுடன் ஆறடிக்கும் அதிகமான உயரத்துடன் போலீஸ் அதிகாரிக்கே உரிய மிடுக்குடன் கம்பீரமாக இறங்கியவனை பார்த்ததுமே அவனுக்கு முழு திருப்தி எழ புன்னகையுடன் கை குவித்து தன் வருங்கால மைத்துனரை மரியாதையோடு வரவேற்றான்.


பாண்டியும் தன்னெதிரே.. நெடுநெடுவென்ற உயரத்தில் அதற்கேற்ற உடற்கட்டோடு… வகிக்கும் பதவிக்குரிய கம்பீரத்துடன் கவர்ச்சியான அழகுடன் நின்றிருந்த கதிரவனை தன் கூர் விழிகளால் ஆராய்ந்து தெளிந்து திருப்தியுடன் தலையசைத்து தன் கையை நீட்ட இருவரும் நட்புடன் கைகளை குலுக்கி விடுவித்தனர். உடன் நின்ற இளாவையும் இன்முகத்தோடு வரவேற்று இருவரையும் உள்ளே அழைத்து சென்றான் கதிரவன்.

அங்கு பரமேஸ்வரன் தன் மகனோடும் மனைவியோடும் இவர்களுக்கு முன்பே அமர்ந்திருக்க.. அனைவரும் நலம் விசாரிப்புளுடன் அமர்ந்தனர்.


பாண்டி, இளா, அருணாச்சலம் மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்திருக்க.. மாதவன் தன் தாய் தந்தையரோடு ஒருபுறம் அமர்ந்திருக்க வந்திருந்த உறவுகளில் சற்று மூத்தவர்கள் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். வந்திருந்த பெண்கள் அனைவரும் கீழே விரிப்புகள் போடப்பட்டிருக்க அதில் அமர்ந்து கொண்டனர்.
அனைவரும் வந்து அமர்ந்தவுடன் மீனாட்சி அனைவருக்கும் அருந்த பழச்சாறு கொண்டு வர சமையலறை நோக்கி செல்ல..அருணாவும் அவரோடு இணைந்து கொண்டாள்.


சமையலறையில் பழச்சாற்றை டம்ளர்களில் நிரப்ப ஆரம்பித்தவருக்கு உதவிக்கொண்டே..

“அத்தை ….தமிழரசியை ரெடி பண்ணியாச்சா? இல்லை நான் போய் ரெடி பண்ணவா..? என்று வினவ..

“நான் ரெடி பண்ணிட்டு தான்மா வந்தேன் நீ ஒருதரம் சரியாயிருக்கான்னு போய் பாரும்மா… சிம்பிளாத்தான் இருப்பேன்னு ஒரே அடம் ஒரு நகையும் போட்டுக்க மாட்டாளாம்...” என்று குறைபட்டவரிடம்…

“இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் அப்படித்தான் அத்தை நான் போய் பார்க்குறேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க என்று விட்டு தமிழரசியின் அறைக்கு சென்றாள்.

அதற்குள்ளாக மீனாட்சி சாரதாவோடு வந்தவர்கள் அனைவருக்கும் பழச்சாற்றை கொடுத்து முடித்தார்.


பாண்டியன் வந்ததிலிருந்தே ஒருவித இறுக்கத்தோடு அமைதியாக அமர்ந்திருந்தான். இளாவும் நண்பனை அறிந்தவனாய் அமைதி காக்க பெரியவர்கள் ஒருபுறமாய் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். கதிரவனும் தன்னவளின் நினைவில் மூழ்கியிருக்க..
பரமேஸ்வரன் அனைவரையும் பார்த்தவர் தம்பியிடம் “சொக்க நாதா..!! எல்லாரும் வந்தாச்சு இல்லையா.. பொண்ணை அழைச்சிட்டு வரச் சொல்லலாமா..?" என்று வினவ…

"எல்லோரும் வந்தாச்சுண்ணா !"
என்றவர் மனைவி மீனாட்சியை பார்க்க… “இதோ அழைச்சிட்டு வர்றேன்” என்றவர் மகளின் அறைக்கு விரைந்தார்.


அறையில் அழகாக தயாராகி அருணாவுடன் பேசிக் கொண்டிருந்த மகளை பார்த்தவருக்கு..முகத்தில் திருப்தி நிலவ…அருணா ரெடியா கீழே தமிழரசியை கூட்டிட்டு போலாமா ? என்க


“நாங்க ரெடி.! அத்தை !போலமா தமிழ்?” என்க… அதுவரை சாதாரணமாக இருந்தவளுக்கு கை கால்கள் நடுங்க மனதை இனம்புரியாத பயம் கவ்வ…! சங்கடத்தோடு ஏறிட்டவளை..புரிந்து கொண்ட அருணா “அத்தை நீங்க போங்க நான் தமிழரசியை கூட்டிட்டு வர்றேன்” என்றதும் சம்மதமாய் தலையசைத்தவர் கீழே சென்றுவிட்டார்.


தமிழரசியை கனிவோடு பார்த்த அருணா..அவளது தாடையைப் பற்றி “என்னடா பயமாயிருக்கா…?” என்றதும் சங்கடத்தோடு ஆமென்று தலையசைத்தவளின் தலையை பரிவாக வருடி…


“ஒருபயமும் தேவையில்லை எல்லாரும் நம்ம குடும்பத்து ஆளுங்க தான் நம்ம குடும்பத்துக்குள்ள நடக்குற கெட் டு கெதர் இதுன்னு நினைச்சுக்கோ… பயப்படாத நான் உன்கூடவே இருக்கேன் சரியா?!” என்று தோளோடு அணைத்து அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தி மெல்ல தட்டிக் கொடுத்து அவளை சகஜநிலைக்கு கொண்டு வர முயல…அவளும் ஓரளவுக்கு தன்னை திடப்படுத்திக் கொண்டு அருணாவின் கையை இறுகப்பற்றிக் கொண்டு அவர் முன்னே செல்ல பின்னே நடந்தாள். மாடியிலிருந்து வரவேற்பரையை நெருங்கவும் அவளுக்கு நடை பின்னியது. சிரமப்பட்டு அடி மேல் அடி வைத்து அவள் வந்து நின்றதும் அங்கே அமர்ந்திருந்தவர்களின் பார்வை அவளிடம் பதிந்தது.


எல்லோருரின் கவனமும் தன் மீது பதிவதை உணர்ந்தவளுக்கு சங்கோஜமாக இருக்க தன் உணர்வுகளை பிறர் அறியாவண்ணம் தலையை குனிந்து மறைத்துகொண்டாள். குனிந்திருந்தவளின் அருகில் நின்றிருந்த அருணா அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் “தமிழ்…. தலையை நிமிர்த்தி எல்லோருக்கும் வணக்கம் சொல்லும்மா! என்க..


ஏற்கனவே தகிக்கும் அனல் மேல் நிற்பவளைப் போல தன்னை உணர்ந்தவளுக்கு …”இது வேறயா என்றிருந்தது… ஆனாலும் அவர் சொன்னதை செய்ய தலையை மெதுவாக நிமிர்த்தியவளின் பார்வை தனக்கு நேரெதிரே கால்மேல் கால் போட்டு கம்பீரமும் நிமிர்வுமாய் ஆணழகனாய்… அவளையே கண்ணில் மின்னலோடு… துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பாண்டியன் தெரிய அவனது உயிரை உறிஞ்சும் பார்வை கன்னி மனதில் சலனத்தை விதைக்க .. சுற்றுப்புறம் மறந்து அவளும் அவனது விழிவீச்சில் தன்னைத் தொலைத்து நின்றாள்.


இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்வி பின்னி பிணைந்தது. எத்தனை நேரம் இப்படியே நின்றார்களோ.. தெரியாது. பரமேஸ்வரன் இலேசாக கணைக்கவும்…அந்த ஒலியில் தன்னிலை அடைந்த தமிழரசி அவசரமாக அவனிடமிருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.


இருவரின் உறைந்த பார்வையில் மற்றவர்கள் கண்டும் காணாது ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.


பக்கத்தில் அமர்ந்திருந்த இளா மற்றவர்கள் அறியா வண்ணம்.. பாண்டியின் கையை சுரண்ட… தன்னவளை அணுவணுவாக கண்களாலேயே கபளீகரம் செய்து கொண்டிருந்தவனுக்கு அவள் பார்வையை விலக்கிக் கொண்டது ஏமாற்றத்தை தர எரிச்சலோடு …பார்வையை அவளிடமிருந்து விலக்காமலேயே ..

'ம்ப்ச்’….என்னடா? என்க…


“என்னவா…?! இங்கே நாங்க எல்லாரும் உங்களைச் சுற்றித் தான் உட்கார்ந்து இருக்கோம் அது நினைவிருக்கா உனக்கு?!


“ஆமா அதுக்கு என்ன இப்ப..?” என்று அசால்டாக கூறிவிட்டு தன் பார்வையிடலைத் தொடர்ந்தவனை… ஆச்சரியத்துடன் விழிவிரித்து பார்த்தவனை உணர்ந்தவன்.


“இப்ப எதுக்குடா இவ்வளவு அதிர்ச்சி…?!


“அது எப்படி மாப்பிள்ளை.. நேத்து வரைக்கும் கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு எல்லாரோட பி.பியையும் அதிகரிக்க வச்சிட்டு இன்னைக்கு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி அவங்களை இப்படி இப்படி சைட்டடிக்குற?!"


“டேய்… டேய்….அடங்குடா.. ! நான் இப்படி பார்வையிடத்தானே இந்த ஏற்பாடே …?!"

“அதுக்கு…!?”


“அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்…!” என்று சொன்னவனை பார்த்து மேலும் திகைத்து இளா தன் வாயை இறுக மூடிக் கொள்ள….


நண்பனின் நிலையை அறிந்து கொண்டவன் நமுட்டுச் சிரிப்புடன்…


“என்ன மச்சி .. திடீர்னு ஆப் ஆயிட்ட..?!”


“இனி நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை மாப்பிள்ளை நீ நடத்து…!” என்றான் கிண்டலாய். அதைக்கேட்ட பாண்டியின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது. பாண்டி இளாவுக்கு உரிய பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை துளியும் தமிழரசியை விட்டு அகலவில்லை.


(கையணைக்க.... வருவான்!!)

ஹாய் பேபீஸ் கதையின் 13 ஆம் அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பேபீஸ்😍😍😍😍😘😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :14

83058308


அவனது பார்வை தன்னைத் துளைப்பதை அறிந்து கொண்ட போதும் தமிழரசி அதன் பிறகு அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனது வசியப் பார்வை தன்னுள் விதைக்கும் சலனங்களை உணர்ந்து கொண்டவளுக்கு இங்கிருந்து எப்போது செல்வோம் என்று தோன்றியது. அதற்கும் வழியில்லாமல் பார்வதி அவளை அழைத்து வந்து தன்னுடன் அமர்த்திக் கொள்ள அது அவனுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது. சுற்றியிருப்பவர்களைப் பற்றிய லஜ்ஜை சிறிதுமின்றி அவனது பார்வை அவளையே மொய்க்க அவள் தான் தவித்துப் போனாள்.

“ சுற்றி இத்தனை பேரை வச்சிக்கிட்டு எப்படி பார்க்குறான் பாரு…! ராஸ்கல்…!” என்று மனதுக்குள் அவனை தாளித்துக் கொண்டிருந்தாள்.

“நீ மட்டும் என்னவாம்..!இத்தனை பேர் இருக்கும் போது தானே காணாததை கண்டவளைப் போல அப்படியே உறைஞ்சு போய்.. அவனையே விழியெடுக்காம பார்த்த..! என்று அவளது மனசாட்சி சம்மன் இல்லாமல் ஆஜராகி கேலி செய்ய அதை காதில் வாங்காதவளாக…


“ஆமாம் பெரிய மன்மதன் பாரு அதான் மயங்கிட்டேன்..!” என்று தன் மனசாட்சியிடம் எகிற…


“பின்ன இல்லைங்குறியா..?!” என்றது அது நக்கலாக


“இதுக்கு மேல எதாவது பேசுன…? கொன்னுடுவேன் உன்னை ஒடிடு” என்று அதன் தலையில் தட்டி துரத்திவிட்டு… அமைதியாக அமர்ந்திருந்தவளை வந்திருந்த உறவுப் பெண்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்க..


“இங்கே என்ன வேலைக்கு இன்ட்ரவியூவா நடக்குது இத்தனை கேள்வி கேட்குறாங்க?!” என்று மனதிற்குள் சலித்த போதும் வெளியே மலர்ந்த முகத்துடனே அவர்களுக்கு உரிய பதிலளித்தவாறே கீழ்க்கண்ணால் தனக்கு எதிராக அமர்ந்திருந்தவனை நோட்டம் விடவும் தவறவில்லை அவள்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் “கள்ளி!! திருட்டுத் தனமா என்னை சைட்டடிக்கிறியா?!என்று மனதுக்குள் முணுமுணுத்தவன் மனது உல்லாசத்தில் திளைத்தது.

அவளைப் போன்ற எந்தவிதமான தயக்கமோ சங்கடமோ இல்லாமல் அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து தன் மனதில் நிரப்பிக் கொண்டான் பாண்டியன்.

மெல்லிய கரையிட்ட ஆகாயவண்ண பட்டு சேலை மேனியை பாந்தமாய் தழுவியிருக்க அதே நிறத்தில் ரவிக்கை அணிந்து..பிறைநிலவாய் மின்னும் நெற்றியில் சிறு பொட்டிட்டு, நீள்விழியில் மையிட்டு அதை பொத்தி பாதுகாக்கும் அரணாய் சின்ன குடைபோல விரியும் அழகிய இமைகள் அடிக்கடி படபடக்க… கேள்விக்குறியாய் வளைந்த செவியும்..அதில் கல்பதித்த அழகிய தோடும், அதனோடு இணைந்த சிறிய கல் ஜிமிக்கியும் அவள் அசையும் போதெல்லாம்… அவள் பட்டுக் கன்னத்தை தொட்டு தொட்டு கொஞ்சி விளையாட.. எடுப்பான நாசியில் ஒற்றை கல் பதித்த மூக்குத்தி அழகாக வீற்றிருக்க சற்றே சதைப்பற்றுடைய கன்னங்கள் இரண்டும் இலேசாக சிவந்திருக்க… ஆரஞ்சுச்சுளை இதழ்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் பளபளக்க சிரிக்கும் போது மின்னலாய் பளிச்சிட்ட வரிசைப் பற்களும், கற்கள் பதித்த நெக்லஸ் பளிங்கு கழுத்தை அலங்கரிக்க, வெண்ணெயில் வார்த்தெடுத்த சிற்பமாய் மின்னியவளின் அழகு மன்னவனை பித்தங்கொள்ள வைத்தது.


அவளின் ஒரு பார்வைக்காக அவன் தவமிருக்க அவளோ.. அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் போக்குக் காட்டிக்கொண்டிருந்தாள். அதை உணர்ந்து கொண்டவனின் இதழ்கள் கள்ளச்சிரிப்பில் வளைய…


“ ஓஹோ… மேடம் என்னை நிமிர்ந்து பார்க்க மாட்டீங்களோ..?! இருடி.. உன்னை பார்க்க வைக்கிறேன் என்று மனதுக்குள் சபதமெடுத்தவனாய் நிமிர்ந்து அமர்ந்தவன்..


“பொண்ணுக்கு பாட தெரியுமா..?!”என்று கேட்க…
திடீரென அவன் கேட்டதும் அங்கே அமர்ந்திருந்த அனைவரும் ஒரு நிமிடம் அவனை பார்த்து திகைக்க… முக்கியமாக அதிகமாக அதிர்ந்தது பார்வதி அருணாச்சலம், இளா, மாதவன், அருணா இவர்கள் ஐவரும் தான். பெண் பார்க்கவே வருவானோ மாட்டானோ என்று கடைசி நிமிடம் வரை பீதியுடன் உலாவந்தவர்களாயிற்றே..! அவர்கள் மயங்கிவிழாத குறையாக நோக்க‌… அவனோ அனைவரையும் ஒரு பார்வை பார்த்து தோளை குலுக்கிவிட்டு தமிழரசியை நோக்க.. அவனது கேள்வியில் விலுக் கென்று நிமிர்ந்து அவனை பார்த்தவளின் பார்வைக்காகவே காத்திருந்தவனின் பார்வை அதை கவ்விக்கொள்ள.. வெற்றிப் புன்னகையோடு ஒற்றை புருவத்தை உயர்த்தினான். அதன் அழகில் மனம் மயங்கியவள் விழியகற்றாது அவனையே பார்த்துக் கொண்டிருக்க… அவனோ ஒற்றைக் கண்ணை சிமிட்டி குறும்பு பார்வை பார்க்க..! அதில் பாவையவள் இதயம் தடுக்கி விழுந்தது அவனிடம்.


அருணா தனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பார்வதியின் புறம் மெதுவாக சரிந்து
“இங்க என்ன அண்ணி நடக்குது..?! நான் காண்பது என்ன கனவா?.. இல்ல நனவா?!‌ இது நம்ம பாண்டி தானா..?! என்று கிசுகிசுக்க…!அதற்கு பார்வதி..


“அதான் எனக்கும் புரியலை.. ஆனா இது வரை நடந்தது எல்லாமே நல்லாத்தான் நடந்திருக்கு இனியும் நல்லதாவே நடக்கனும்னு வேண்டிக்குவோம்!” என்றார் முகம் விகசிக்க!.


“கண்டிப்பா அண்ணி பையன் தமிழரசியை பார்த்ததும் மயங்கிடுவான்னு நினைச்சேன். ஆனா இப்படி ஒரேயடியா ப்ளாட் ஆவான்னு நினைக்கலை என்றாள் குறும்புடன்.
பார்வதி தன் நாத்தனாரை செல்லமாய் முறைக்க முயன்று முடியாமல் தானும் புன்னகைத்தார்.


இதுவரை அமைதியாக நண்பனை நோட்டம் விட்டு கொண்டிருந்த இளா..நண்பனின் இந்த அதிரடியை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை அவன் விழிவிரித்து பாண்டியை நோக்க..


அவன் ஏதும் அறியாதவனைப் போல அமர்ந்திருக்க இவனுக்கு தான் தலைசுற்றிப் போனது அவனது புதிய அவதாரத்தில். திரும்பவும் இளா பாண்டியை சுரண்ட..

“ம்ப்ச்…திரும்பவும் என்னடா..?”

“டேய் மாப்பிள்ளை இது நீதானாடா..?”

“பார்த்தா எப்படி தெரியுது..?”

எனக்கு டவுட்டா இருக்கு மாப்பிள்ளை…!

“எது..?”

“உன்னோட இந்த திடீர் மாற்றம் தான்!”

“மாற்றம் ஒன்று தான் மச்சி மாறாதது!” என்று தத்துவம் பேச

“ஓஹோ..! அப்போ நேத்து வரைக்கும் காதல் .. கல்யாணம் இதெல்லாம் எனக்கு செட்டாவாதுன்னு சொன்னது யாராயிருக்கும் மாப்பிள்ளை?!”என்று கிண்டலாக வினவ..

“எவன்டா அவன் அப்படி சொன்னது?!” என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.


“ம்ம்ம்… ரத்னவேல் பாண்டியன் ஐ.பி.எஸ் அப்படின்னு ஒரு கஞ்சி சட்டைக்காரன் தான்டா நேத்து வரைக்கும் அப்படி சொல்லிக்கிட்டு வெறைப்பா சுத்திட்டிருந்தான்..!” என்றவனை முகம் மலர பார்த்து சிரித்தான் பாண்டியன். தானும் அவனோடு சேர்ந்து சிரித்த இளமாறனின் மனது நிறைந்து விட்டது.

ஏனெனில் பாண்டியின் பிடிவாதம் பற்றி நன்கு அறிந்தவனாதலால் அவன் எப்படியாவது இந்த திருமண ஏற்பாட்டை மறுத்துவிடுவான் என்றே நினைத்தான். அதுமட்டுமின்றி கதிர்- தாமரை இவர்களின் திருமணமும் கேள்விக்குறியாகிவிடுமோ.. என்ற சஞ்சலத்துடன் தான் அவன் இங்கு வந்தது. ஆனால் தமிழரசியை பார்த்தவுடன் நண்பனிடத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றத்தில் முதலில் அவன் திகைத்த போதும்… பின்னர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான் ஆனால் பாண்டி எதையோ தன்னிடமிருந்து மறைக்கிறானோ என்ற சந்தேகமும் அவனுக்கு எழாமலில்லை.


அதற்குள்ளாக மீனாட்சி பூஜையறையில் வைத்திருந்த வீணையை எடுத்து வந்து
தமிழரசியிடம் கொடுக்க..அவள் யாருக்கும் தெரியாமல் அவரை முறைத்தாள் அதை அவர் கண்டு கொண்டால் தானே!

ஆச்சரியமாக விழிவிரித்து பார்த்த அனைவரிடமும் "தமிழரசி சின்ன வயசிலேயே பாட்டு கத்துகிட்டா..அதோட வீணையும் நல்லா வாசிப்பா...!!" என்று பெருமையாக கூற அனைவரும் ஆவலாய் அவள் முகம் பார்க்க…


அவளோ இதற்கெல்லாம் காரணமானவனை வெட்டும் பார்வை பார்த்து பல்லைக் கடிக்க...அவனோ திரும்பவும் உல்லாசமாக ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவ…

“பாட்டா….வேணும் பாட்டு…. இதாலேயே உன் மண்டையில ஒண்ணு போட்டா என்ன?' என்று அவனை …முறைக்க அவனோ அவளின் எண்ணத்தை அறிந்து கொண்டவனாக யாரும் அறியாத வண்ணம் கண்சிமிட்டி கள்ளச்சிரிப்பை உதிர்க்க அதில் மிரண்டவள் அவசரமாக தன் பார்வையை விலக்கி கொண்டாள்.

கண்ணை மூடி ஒரு கணம் வீணையில் ஸ்ருதி மீட்டியவள் மனதை ஒரு நிலைப்படுத்தி பாட ஆரம்பித்தாள்.



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே

நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ

காலம் மாறினால் காதலும் மாறுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ

மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன்
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆ ஆ ஆ ஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....


என்று தன்னை மறந்து அவள் பாடி முடிக்க…அனைவரும் தங்களை மறந்து அவளின் குரலினிமையில் மூழ்கியிருக்க…கண்களை திறந்து தன்னவனை ஏறிட்டு பார்த்தவளைக் அதற்காகவே காத்திருந்தவன் போல கண்களில் கரைகாணாக் காதலுடனும்…சொல்லமுடியாத உணர்வோடும் தன்னவளை பார்த்தவனுக்கு அவளை அப்படியே அள்ளி அணைத்து முகம் முழுவதும் முத்தமிடத் தோன்றியது. தன் உள்ளக்கிடக்கையை சூழ்நிலை கருதி அடக்கிக் கொண்டவன். மென்னகையுடன்
அவளை பார்த்து தலையை கோதியவாறு தன் உதடு குவித்து பறக்கும் முத்தமொன்றை பிறர் அறியாமல் அனுப்பி வைத்தான். மனம் இத்தனை நாள் தேடித் தவித்த ஏதோ ஒன்றை அடைந்துவிட்ட ஆத்ம திருப்தியில் நிம்மதியடைந்தது.


அவனது செயலில் அவளது முகம் செம்மையை பூசிக் கொள்ள அதையும் ரசித்து பார்த்தவனை… முறைத்தவள் பொறுக்கி…! பொறுக்கி..! என்ன வேலை பார்க்குறான் பாரு..!! என தாளித்துக் கொட்ட அதை உணர்ந்து கொண்டவனின் இதழ்கள் மேலும் விரிந்தது.
இவர்கள் இருவரின் சம்பாஷனையை யாரும் கவனிக்கவில்லை என்றாலும் இளாவின் கண்களுக்கு அது தப்பவில்லை..!


“ டேய்!.. இதெல்லாம் அநியாயம்டா மாப்பிள்ளை உன்னோட அளப்பறைக்கு அளவேயில்லையா…ரொம்ப தான் ஓவரா போறடா… என்று மறுபடியும் கிசுகிசுக்க..!
அவனை திரும்பி பார்த்து பாண்டி குறும்பாய் கண்ணடிக்க..!


"டேய் கல்யாண மாகாத கன்னிப்பையனுங்க ரெண்டு பேரு உன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கோம்னு கொஞ்ச மாச்சும் நினைப்பிருக்காடா உனக்கு?! இதையெல்லாம் தாங்குற சக்தி என் பிஞ்சு மனசுக்கில்லடா மாப்பிள்ளை! நீ.. இன்னிக்கு ஒரு மார்க்கமாயில்ல… பலமார்க்கமா தான்டா அலையிற..!” என்று புலம்ப..அது கதிரவனின் காதுகளை சரியாக சென்றடைய பீறிட்ட சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன். அவர்கள் அறியாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.


தமிழரசியின் பாடலில், குரலின் இனிமையில் தன்னை மறந்து அமர்ந்திருந்த பார்வதிக்கு மனது நிறைந்துவிட்டது. கனிவாக தமிழரசியை பார்த்து… கைகளால் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர்… “நீ ரொம்ப நல்லா பாடுனடா அதுவும் இந்த பாட்டு உன்னோட குரலில் கேட்கும் போது அவ்வளவு நல்லாயிருந்தது… நான்கூட பாட சொன்னதும் நீ இந்த காலத்து பாட்டை தான் பாடுவேன்னு நினைச்சேன். ஆனா இப்படியொரு அருமையான பழைய பாட்டை பாடுவேன்னு நான் நினைக்கவேயில்லடா. எனக்கு மனசு நிறைஞ்சு போச்சுடா” என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் பேசியவரை புன்னகையுடன் பார்த்த தமிழரசி..


“எனக்கும் பழைய பாடல்கள் தான் ஆண்ட்டி ரொம்ப பிடிக்கும். பாட்டுக் கத்துக்கும் போது பழைய பாடல்கள் பாடி தான் வீட்ல பிராக்டீஸ் பண்ணுவேன் என்றவளை பாசத்தோடு அணைத்து அவள் கன்னத்தில் அன்பாய் முத்தமிட்டார்.


அன்னையின் இந்த செயலை சிறு பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.

(என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..!)


அங்கே கூடியிருந்த உறவுகள் அனைவருக்கும் தமிழரசியை பிடித்துவிட இரு வீட்டாரும் திருப்தியுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர்.
பரமேஷ்வரன் அனைவரின் சார்பாகவும் தனது கணீர் குரலில்..


“என்னப்பா பாண்டி உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா…?” என்று நேரடியாகவே அவனைப் பார்த்து கேட்க… அவரை திரும்பி பார்த்தவன் மறுநிமிடம் தமிழரசியை பார்க்க..அவளோ தவிப்புடன் அவனையே பார்த்தாள். இதுவரையில் ஏதோ மாயவலையில் சிக்கியிருந்தவளுக்கு பரமேஷ்வரனின் குரல் நிகழ்காலம் உணர்த்த பாண்டியனை மணக்க தான் மறுத்த காரணம் உறைக்க இதை எப்படி மறந்தேன் என்று எண்ணியவளது முகம் இருண்டது.
தன்னவளின் முகமாறுதலைக் கண்டு கொண்டவன்.


“நான் பொண்ணு கூட கொஞ்சம் தனியா பேசனும்.. பேசிட்டு என் முடிவை சொல்றேன்” என்று குரலில் ஒருவித அழுத்தத்துடன் சொல்ல…அருணாச்சலம் தவிப்போடு பரமேஷ்வனை பார்க்க..


அவரோ… “நீ என்ன சொல்ற சொக்க நாதா…? மாப்பிள்ளை பேசனும்னு சொல்றாரு..! வாழப் போறது அவங்க தானே அதனால அவங்க இரண்டு பேரும் தங்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டுமே?என்க.


சொக்கநாதருக்கு இதில் துளியும் விருப்பமில்லாத போதும்.. அண்ணனுக்காக அரை மனதுடன் சம்மதித்தார்.


தாயின் கண்ணசைவில் அமைதியாக எழுந்து மாடி பால்கனியை நோக்கி நடந்தவளை தானும் தொடர்ந்தான் பாண்டியன். முன்னே சென்றுகொண்டிருந்தவளின் நீண்ட பின்னல் அவளது அன்னநடையில் அழகாய் அசைய அதை எட்டி பிடித்து இழுக்க ஆவல் கொண்ட மனதை அடக்கிக் கொண்டவன் தன் கைகளை பாண்ட் பாக்கெட்டில் நுழைத்து கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்.


மாடியில் இருந்த இருக்கையை கை காட்டி அவனை அமர சொன்னவள் பால்கனி கம்பியில் சாய்ந்தவாறு அமைதியாக நின்றாள் அழகே உருவாக. அவன் அவளை பார்த்தவாறே கால் மேல்கால் போட்டபடி அமர...அவனது அந்த தோரணையில் மயங்கிய மனதை கடிவாளமிட்டு அடக்கியவள் தலையை குனிந்து கொண்டாள்.


“சொல்லு…என்கிட்ட என்ன பேசனும் என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தவனை ஆச்சரியமாக விழிவிரித்து பார்த்தாள் தமிழரசி.


“நீங்க….தான் பேசனும்னு..” என்றவளை இடை மறித்தவன்.


“நான் உனக்காகத்தான் அவங்ககிட்ட அப்படி சொன்னேன்..! உனக்கு எங்கிட்ட பேசனும் தானே?!”


ஆமாம் என்று வேகமாக தலையை ஆட்டியவளை கூர்ந்து நோக்கியவன் முகம் இறுக…“சொல்லு” என்க..


அவளுக்குத் தான் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டு பேசவிடாமல் சதி செய்தது.. ஓரளவு தன்னை சமாளித்துக் கொண்டு மெல்லிய குரலில்…


“எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை..என்னோட பேச்சை வீட்டில் யாரும் கேட்கலை..அதனாலநீ…ங்களே என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்களேன்.. என்றவளை கோபத்தோடு உறுத்துப் பார்த்தவன் “ஏன்..?” என்று உறும..


அவனது உறுமலான குரல் உள்ளுக்குள் குளிரை பரப்பினாலும் அலட்சியமான ஒற்றை கேள்வியில் எரிச்சல் அடைந்தவள்…

“என்ன… ஏன்.. எனக்கு பிடிக்கலை..அவ்வளவு தான்!”

“என்ன பிடிக்கலை?என்னையா…? இல்ல கல்யாணத்தையேவா..?”

அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது.. என்று அவளுக்கு புரியவில்லை.. ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க' என்பதற்கேற்ப அவனை அவளுக்கு பிடித்துத் தான் இருக்கிறது ஆனால்…அவனது உத்யோகம் அதை முற்றிலும் வெறுப்பவளாயிற்றே…! அதற்காகத்தானே அவள் இந்த திருமண ஏற்பாட்டையே தவிர்க்க நினைத்தாள். தன் குடும்பத்தாருக்காக அவள் இந்த ஏற்பாட்டுக்கு சம்மதித்த போதும் அவனிடமே நேரடியாக தனது பிடித்தமின்மையை சொல்லி அவன் மூலமாகவே இந்த திருமண ஏற்பாட்டை தவிர்க்க திட்டமிட்டிருந்தாள். ஆனால் அவனை பார்த்ததுமே தெளிந்த நீரோடை யாய் இருந்தவளின் மனதில் தனது ஆர்வப் பார்வைகளால் சலனத்தை உண்டாக்கியவனை பிடிக்கவில்லை என்று எப்படி சொல்வாள்…!? அதற்காக அவனை திருமணம் செய்யவும் அவள் தயாராக இல்லை. தனக்குள்ளேயே போராடியவள்.. தன் கேள்விக்கு பதிலை
எதிர்பார்த்து தன்னையே துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்து பதில் சொல்ல திராணியற்றவளாய் உதடு கடித்து நின்றவள்.. பின் அவன் முகம் பார்க்காமல் அவனது முதல் கேள்வியை தவிர்த்துவிட்டு..


“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செஞ்சுக்க விருப்பமில்லை நான் வேலைக்கு போகனும்.. குறைஞ்சது ஒரு வருஷமாவது பிறகு தான் கல்யாணமெல்லாம்” அவளின் பதிலில் முகம் மலர்ந்தவன் இருக்கையை விட்டு எழுந்து அவளை நோக்கி நடந்து வந்தான். நூலளவு இடைவெளியில்அவளை நெருங்கி நின்றவன்.


“அப்படின்னா என்னை உனக்கு பிடிச்சிருக்கா…பேபி என்று குரல் குழைய ஆர்வத்தோடு கிசுகிசுப்பாக கேட்க.. தனக்கு வெகு அருகில் கேட்ட அவனது குரலில் அதிர்ந்து.. இவன் எப்போ எழுந்து வந்தான்…அதுவும் இவ்வளவு கிட்ட எதுக்காக நிற்கிறான்? என்று பதற்றத்தில் பின்னோக்கி வேகமாக நகர முற்பட்டவளை பால்கனி கம்பி தடுக்க நிலை தடுமாறி மல்லாந்து மேலிருந்து கீழே விழப் போனவளை தனது வலிய கரம் நீட்டி விழுந்திடாதவாறு அவளது இடையை சுற்றி இறுக்கி அணைத்து தன்னை நோக்கி இழுக்க… அவனது மார்பில் பூமாலையாக மோதி நின்றவள்.. எங்கே விழுந்து விடுவோமோ என்று அஞ்சியவளாக பிடிமானத்திற்காக அவனது கழுத்தை இரு கரங்களால் வளைத்துக் கொண்டாள்.


பயத்தில் உடல் நடுங்க தன் மார்பில் முகம் புதைத்து நின்றிருந்தவளை ஆறுதலாய் அணைத்துக் கொண்டவன்… மனமோ சிறகில்லாமல் விண்ணில் பறக்க மேலும் இறுக்கி அணைத்தவன் அவளது உச்சந்தலையில் தன் இதழ் பதிக்க…அதில் உடலும் மனமும் சிலிர்க்க மெய்மறந்து நின்றிருந்தவளுக்கு அனைத்தும் மறந்து போனது. அவளது காதல் மனது அவனது அருகாமையில் உருகி குழைய அவனது மார்பில் மேலும் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.


முதன்முறையாக தன் மனம் கவர்ந்தவளின் அருகாமையிலும் பெண்ணவளின் மென்மையிலும் முற்றிலும் தன்னை இழந்தவன் அலையலையாய் தன்னுள் எழுந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாது அவளைத் தன் மார்பிலிருந்து மெல்ல விலக்கி உள்ளங்கைகளில் கன்னம் தாங்கி அவளது முகம் பார்க்க.. அவளோ அவன் முகம் பார்க்க மறுத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள் இதழ்கள் துடிக்க..


அவளின் இணக்கமான செய்கையில் காதலாய் மென்னகை புரிந்தவன்…அவளது முகம் நோக்கி குனிந்து அவளது இதழில் தன் முத்திரையை அழுத்தமாய் பதித்தான்.



(கையணைக்க வருவான்..!!)



ஹாய் பேபீஸ்..!!

கதையின் 14 ஆம் அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.படித்து விட்டு கமெண்டுங்க பேபீஸ்😍😍😘😘😘😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்... கதிரவன்..தாமரை ரொமாண்டிக் பிட் கேட்ட செல்லங்களுக்காக..படித்துவிட்டு கமெண்ட் செப்பவும்...இல்லை🔪🔪🔪🔪🔪🏃🏃🏃🏃🏃
டீசர் : 2
உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன அந்த அறைக்குள் நுழைந்தாள் தாமரை…! கட்டிலைச் சுற்றிலும் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் இன்றைய நாளின் முக்கியத்துவத்தை உணர்த்த.. ஒருவித சிலிர்ப்பு உடலெங்கும் பரவத்தான் செய்தது. காலையில் அவன் கட்டிய தாலி மார்போடு உரசி தனக்கும் அவனுக்குமான பந்தத்தை உணர்த்தியது.ஆனால் அதை கட்டியவனின் மனதில் தான் இல்லையே என்ற வேதனையில் கண்களில் நீர் திரள…இது மற்றவர்களுக்காக கட்டாயத்தின் பேரில் கட்டப்பட்டது என்ற நினைவே கசந்தது. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள்..‌ அறையின் பக்கவாட்டில் இருந்தபால்கனி நிலைப்படியில் சாய்ந்து கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு தன்னையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த கதிரவனைக் கண்டு அதிர்ந்தவள். மறுகணமே உணர்வுகளை தொலைத்த பார்வையுடன் திரும்பி நடந்து.. நிலைக்கண்ணாடியின் மேசையில் கொண்டு வந்த பால் சொம்பை வைத்து விட்டு தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி வைக்க ஆரம்பித்தாள். கடைசியாக கழுத்தில் அணிந்திருந்த வைர நெக்லஸைக் கழற்ற அது எதிலோ வகையாக மாட்டிக்கொண்டு கழற்ற முடியாமல் சதிசெய்ய அதனோடு போராட ஆரம்பித்தாள்.
அவளின் ஒவ்வொரு செயலையும் ரசனையோடு கண்களில் காதல் வழிய பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நடந்து வந்து அவளுக்கு பின்னால் நின்றவன் அவளின் நீண்ட கூந்தலையும் அதிலிருந்து சரம் கரமாய் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப்பூவை நோக்கி குனிந்து தன் முகம் புதைத்து ஆழ்ந்து நுகர்ந்தவன் அதன் இனிமையான மணம் மனதை மயக்க அப்படியே அதில் தன் முகத்தை புரட்ட நிலைக்கண்ணாடியில் தன்னவனின் வரவை உணர்ந்தவள் அவன் தன்னை நெருங்கி நின்றதிலேயே உறைந்தவள்… அவனது செயலில் முற்றிலும் நிலை குலைந்தாள். அடிவயிற்றில் சில்லென்ற உணர்வு எழுந்து உடலெங்கும் குளிர் பரவ நிற்க இயலாது தடுமாறியவள்…பற்றுதலுக்காக ஒப்பனை மேசையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மனைவியின் நிலையை உணர்ந்து கொண்டவன் நமுட்டுச் சிரிப்புடன்.. தன் இடது கையால் அவளது கூந்தலையும் பூச்சரத்தையும் மெதுவாக விலக்கியவன்… மனையாள் கழற்ற போராடிய நெக்லஸ்ஸின் கொக்கியை லாவகமா கழற்றி மேசை மீது வைத்தவன்… மனைவியை நிலைக்கண்ணாடியில் பார்த்தவாறே….இன்னும் நெருங்கினான்.அவனது உயிரைத் தீண்டும் நேசப்பார்வையை எதிர்கொள்ள இயலாது அவள் தலையை குனிந்து கொள்ள… குனிந்து அவளது முதுகில் தன் இதழை மெல்ல ஒற்றினான். தன்னவனின் முதல் இதழ் தீண்டலில் கூசிச் சிலிர்த்தவளின் படபடப்பு அதிகரிக்க... முதுகில் ஆரம்பித்த இதழொற்றல் படிப்படியாக முன்னேறி அவளது கழுத்து வளைவை நெருங்கி அதில் தன் முகத்தை புதைத்தவனுக்கு தான் அணிவித்த புத்தம் புது தாலியில் பூசப்பட்டிருந்த மஞ்சளின் மணமும் தன்னவளின் ப்ரத்யேக மணமும்… தலையில் சூடியிருந்த பூவின் மணமும் சேர்ந்த கலவையான மணம் மனதைமயக்க ஆழ்ந்து சுவாசித்து அதை நுகர்ந்தவனின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் பேரலையாய் பொங்கிப் பெருக.. இதற்குமேல் தாமதிக்க இயலாது என்று உணர்ந்தவன் தன்னவளின் தோளை தன்னை நோக்கி சுண்டி இழுத்து திருப்ப தன் மார்பில் மலர்க் கொத்தாக விழுந்தவளின் முகத்தை நிமிர்த்தி..கன்னங்களை இரு கைகளாலும் இறுக பற்றி… தன்னவளின் முகம் பார்க்க கண்களை இறுக மூடி இதழ் துடிக்க நின்றிருந்தவளை நோக்கி ஆவேசமாக குனிந்தவன் அவளின் துடிக்கும் இதழ்களை சிறைசெய்ய…. அடுத்தடுத்த அவன் அதிரடிகளால் முற்றிலும் தன்னிலை மறந்து நின்றிருந்தவள் அவனது திடீர் இதழ் முற்றுகையில் இதுவரை தான் அறியாத உணர்வுகள் தாக்க மெல்ல துவள ஆரம்பித்தவள் பற்றுதலுக்காக அவனது முதுகையே இரு கரங்களால் வளைத்து பிடித்தாள்… மனைவியின் நெகிழ்வில் மனதுக்குள் மகிழ்ந்தவன் தன் உள்ளத்துக் காதலையெல்லாம் தன்னவளுக்கு உணர்த்திவிடும் பொருட்டு அவளது இதழில் மேலும் தன்னை புதைத்துக்கொண்டான் தாமரையின் கதிரவன்.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 15

84088409


அவளது இதழில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தவனுக்கு அவளை விட்டு விலகும் எண்ணம் இல்லை போலும் மேலும்..மேலும்…. அவளது இதழில் புதைந்து போனான் .


அவனது இந்த அதிரடி இதழ் முற்றுகையில் அவளது பெண்மை விழித்துக் கொள்ள முதலில் எதிர்க்க ஆரம்பித்தவள்.. பிறகு தன்னையும் அறியாமல் அவனுக்கு உடன்பட்டாள்.

சிறிது நேரம் கழித்து சூழ்நிலை கருதி அவன் அவளது இதழை மனமேயில்லாது பிரிய அவனது இதழ் முற்றுகையில் தன்னையே மறந்து நெகிழ்ந்து நின்றிருந்தவளின் நிலையை அறிந்து கொண்டவன் காதல் பெருகிட தன்னவளை நோக்கினான்.

கண்களை இறுக மூடி தன்னை மறந்து தன் கையணைப்பில் அழகோவியமாய் நின்றிருந்தவளின் கூந்தலை ஒதுக்கி சரி செய்து விட்டவன்.. அவளது நெற்றியில் இதழ்பதித்து..

“பேபி..! நமக்காக கீழே எல்லாரும் காத்திருக்காங்க போலாமா..!” என்று அவளது காதோரம் மெல்ல கிசுகிசுக்க…


அதில் சட்டென்று தன்னிலை மீண்டவளுக்கு தான் செய்த காரியம் நினைவு வர முகத்தில் யாரோ சுடுநீரைக்கொட்டியது போல துடித்துப் போனாள். என்ன காரியம் செய்துவிட்டாள்! என்னதான் அவன் மீது மயக்கம் இருந்தாலும் இப்படியா நடந்து கொள்வது? அன்னை போதித்து வளர்த்த ஒழுக்கம் மறந்து.. தந்தையின் கட்டுப்பாடு மறந்து சிறிதும் வெட்கமில்லாது அந்நிய ஆடவனின் பிடியில் தன்னையே மறந்து மயங்கி நின்றிருந்த தன்னையே அவள் வெறுத்தாள். அதுவும் அவனாக உணர்த்தும் வரை தன்னிலை கெட்டு நின்ற தன் நிலையை எண்ணி நெஞ்சம் வேதனையில் துடிக்க கண்களில் கண்ணீர் ஆறாக பெருக முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது திடீர் அழுகையில் திகைத்தவன்… கீழே இருப்பவர்களுக்கு கேட்டுவிடாதவாறு சட்டென்று அவளை அணைத்து பிடித்தவாறு மாடியில் இருந்த அறைக்குள் இழுத்துச் சென்றவன் அறையின் கதவை அடைத்துவிட்டு…கோபம் கிளர்ந்தெழ….

“இப்ப எதுக்குடி இப்படி அழது ஊரை கூட்டுற? நீ இப்படி அழுது கரையிற அளவுக்கு இங்க அப்படி என்னடி நடந்துடுச்சு...” என்றான் எரிச்சல் மேலிட!.

அதுவரை அழுது கொண்டிருந்தவளுக்கு அவனது கேள்வி கோபத்தை கிளறிவிடவும்..!

“முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட இப்படித்தான் கேவலமா நடந்துப்பீங்களா..? செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு இப்ப என்ன நடந்துடுச்சுன்னு கேள்வி வேற கேட்குறீங்களா..?

அவளது வார்த்தைகளில் மேலும் சினம் துளிர்க்க..”எதுடி கேவலம்..? மனசுக்கு பிடிச்சவகிட்ட உரிமையா நடந்துகிட்டது கேவலமா…? உன்னை முதன்முதலா நான் எப்போ பார்த்தேனோ அந்த நிமிடத்திலிருந்து நீ தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணிட்டேன்! அதனால தான் உங்கிட்ட அப்படி நடந்துகிட்டேன். என்னைப் பொறுத்தவரை அது தவறில்லை…!” என்று தோள்களைக் குலுக்கியவனை கனல் பார்வை பார்த்தவள்…

“அதை நீங்கள் மட்டும் முடிவு பண்ணா போதுமா...?! நானும் முடிவு பண்ணனும். என்றவளை துளைக்கும் பார்வை பார்த்தவன்…கேள்வியாக புருவத்தை உயர்த்தி…
“என்ன உன் முடிவு..?! என்று கோபத்தை உள்ளடக்கிய நிதானமான குரலில் அவன் கேட்க..

சிறிது நேரம் மௌனம் காத்தவள் தன் மனதிலிருப்பதை உரைத்து விட எண்ணி மனதை திடப் படுத்தி கொண்டவள்.

“எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை… ஏ…ன்..னா எ….னக்கு போலீஸ் வேலையும் பிடிக்காது அந்த வேலை பார்க்குறவங்களையும் சுத்தமா பிடிக்காது அதனால உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது நீங்களே இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க!” என்றவளின் வார்த்தைகளை நம்ப இயலாது முதலில் திகைத்தவன் ..
மறு நொடியே அவள் தன்னை நிராகரித்ததும் அதற்கு அவள் கூறிய காரணத்தையும் உணர்ந்தவன்..முகம் இறுக…கண்கள் இரண்டும் கோபத்தில் அக்னித்துண்டுகளாய் சிவக்க..அவளை உறுத்து விழித்தவன்.

“ஏய் “… என்று கையை ஓங்க…அவனது ருத்ர அவதாரத்தில் மிரண்டவள் கண்களில் மிரட்சியோடு அவனை நோக்கினாள். அவளது பார்வையில் கண்களை இறுக முடி தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் ஓங்கிய தன் கையை சுவற்றில் அடிக்க அப்படியும் ஆத்திரம் தணியாது...


“இன்னும் ஒரு வார்த்தை பேசுன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!’ என்றவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் பெருக… ஆத்திரத்தில் கை முஷ்டிகள் இறுக விறைப்பாக நின்றவனின் தோற்றம் கண்டு தமிழரசி உள்ளுக்குள் நடுங்கித் தான் போனாள் அதே சீற்றத்தோடு அவளை நோக்கியவன்…

“இங்கே பாருடி இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்க ….! உனக்கு பிடிக்குதோ இல்லையோ… அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.. பேசினபடி இந்த இரண்டு கல்யாணமும் எந்த பிரச்சனையும் இல்லாம நல்ல படியா நடக்கும்…! நடந்தாகனும்…!!. இதில் உன்னால இனி எந்த பிரச்சனையாவது வந்தது அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியதிருக்கும். எப்ப நான் உயிரா நினைக்கிற என்னோட போலீஸ் வேலையை பிடிக்கலைன்னு சொன்னியோ அப்பவே உன்னை என் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன்டி. நடக்கப் போற இந்த கல்யாணம் என்னைப் பெத்தவங்களுக்காகவும்…என் தங்கைக்காகவும் தான். ஏன்னா அவள் கதிரவனோட வாழப்போற வாழ்க்கையை நினைச்சு கனவு கண்டுக்கிட்டிருக்கா.... ஒரு அண்ணனா அவளுக்கு இதுவரை நான் பெருசா எதுவும் செஞ்சதில்லை. ஆனால் அவளோட இந்த ஆசையை நிச்சயம் நிறைவேற்றியே தீருவேன். அதுக்காக.. நான் எந்த எல்லைக்கும் போகத் தயாராயிருக்கேன். எனக்கும் உனக்குமான கல்யாணமும் அதுக்காகத்தான். இல்லைனா… என்னை… என் தொழிலை வெறுக்குற ஒருத்தியை தூக்கி எரிஞ்சிட்டு போய்டேயிருந்திருப்பேன். பிடிக்காதவளை கல்யாணம் பண்ணிக்கப் போற எனக்கும்.. உனக்கும் இந்த கல்யாணம் ஒரு தண்டனை தான். வேற வழியில்லை இந்த ஜென்மத்தில் இந்த போலீஸ்காரன் கூட தான் உன்னோட வாழ்க்கை. தயாராயிரு…!! என்று கர்ஜித்தவன் மறுகணம் அவ்வறையைவிட்டு வெளியேறிவிட்டான்.


அவன் சென்ற பிறகும் அவனது வார்த்தைகள் அவளது காதில் ஒலிக்க ஏனோ அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. எதையோ இழந்துவிட்ட வெறுமையான உணர்வு எழ அப்படியானால் அவனது தங்கைக்காகத் தானா இத்தனையும்?! என்ற வேதனையில் கண்களை கரித்துக் கொண்டு வந்தது....அவளுக்கு. அடுத்து செய்வதறியாது நின்றிருந்தவளின் மனம் தன் எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொண்டது. கலக்கத்துடன் அவளும் அவனை பின் தொடர்ந்தாள்.


மாடிப்படியில் வேகமாக இறங்கும் அரவம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க … உணர்வுகளை துடைத்த முகத்துடன் வந்தமர்ந்தவனை அனைவரும் எதிர்பார்ப்புடன் பார்த்தனர். ஏதும் பேசாது அமைதி காத்தவனை...

பரமேஷ்வரன் “என்னப்பா பாண்டி பேசி முடிச்சிட்டியா உனக்கு சம்மதம் தானே?!” என்றவரை நிமிர்ந்து பார்த்தவன் மாடிப்படியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த தமிழரசியை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன்

“எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்…”! என்க..அவளும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பு காதல் கணைகளை வீசிய அவன் பார்வைகள் இப்போது கோபக்கணலை வீசி அவளை திணறடித்தது. அதைத் தாங்க இயலாது அவள் தலை குனிந்து அமர்ந்து கொண்டாள்.


அடுத்ததாக பரமேஸ்வரன் தமிழரசியை பார்த்து “நீ என்னம்மா சொல்ற பாண்டியை கட்டிக்க உனக்கும் சம்மதம் தானே?!” என்று வினவ.. அவள் தலைநிமிர்ந்து அவனை நோக்கியவாறே தன் சம்மதத்தை உரைக்க…


அவனோ.. தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவனை போல உணர்வுகளைத் துடைத்த பார்வை பார்த்து வைத்தான்.


‘அறையில் அந்த மிரட்டல் மிரட்டிட்டு… இங்க வந்து சம்பந்தமில்லாத மாதிரியே எப்படி பார்க்குறான் பாரு! உனக்கு மட்டும் தான் உன் தங்கச்சி மேல பாசம் இருக்குமா…?நானும் என் அண்ணனுக்காகத்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்… உனக்கு பயந்துலாம் இல்ல போடா…! என்று தானும் முறுக்கிக் கொண்டாள். அதான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேனே… இப்பவும் மூஞ்சியை ஏன் இஞ்சி தின்ன மங்கி மாதிரி வச்சிருக்கானாம்? என்று மனதுக்குள் அவனை கரித்துக் கொட்டினாள். அவனது இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தன்னுடைய பேச்சு தான் என்பதை வசதியாக மறந்துவிட்டு..அதற்கும் அவன் மீதே கோபம் கொண்டவள் அவனைப் பார்த்து பல்லைக் கடித்தாள்.


இருவரின் சம்மதித்ததில் மகிழ்ந்த பெரியவர்கள் மனநிறைவுடன் சந்தோஷமாக கல்யாணப் பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டனர்.
நிச்சயம்…கல்யாண தேதிகள் குறிப்பது, முகூர்த்த புடவைகள் எடுப்பது, திருமண மண்டபம், வரவேற்பு குறித்த முக்கிய ஆலோசனைகளில் அவர்கள் சந்தோஷமாக மூழ்கிவிட்டனர்.

பாண்டியோ..அதன் பிறகு அவள் அங்கு இருப்பதையே மறந்தவனாக கதிருடனும் இளாவுடனும் தீவிரமாக பேச ஆரம்பித்து விட்டான்.

அவன் தன்னை அதன்பிறகு திரும்பியும் பாராதது அவளுக்கு வேதனையைத் தர அவனையே ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தாள். சொல்லுக்கும்…செயலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் அமர்ந்திருந்தவளை அவன் உணர்ந்த போதும் அவள் தன்னை நிராகரித்த காரணம் அவனை இறுகச் செய்ய அவளை முற்றிலும் தவிர்த்தான்.

தமிழரசி...கண்களில் நிறைய ஆரம்பித்த கண்ணீரை மற்றவர்கள் அறிந்துவிடாமல் இமையை சிமிட்டி நிறுத்தி வைக்க முயல அப்படியும் முடியாமல் கன்னங்களில் ஓரு துளி வழிந்துவிட… தலையை குனிவது போல துடைத்துக் கொண்டாள். பேசிக் கொண்டிருந்தாலும் அவளது முக பாவங்களை அவள் பார்க்காத நேரம் பார்த்தவனுக்கு மனது வலித்தது…!

‘ஏண்டி அப்படி பேசுன..? உன்கிட்ட யிருந்து இதை எதிர்பார்க்கலைடி.. தேவையில்லாம பேசி என்னையும் நோகடிச்சு.. நீயும் வருத்தப்பட்டு இதெல்லாம் தேவையா…? எல்லாம் நீயே தேடிக்கிட்டது அனுபவி..’என்று மனதுக்குள் புலம்பியவனின் முகம் எதையோ நினைத்து மேலும் இறுகிப் போனது.


இதற்கு மேலும் அங்கே அமர்ந்திருக்க தன்னால் இயலாது என்றுணர்ந்தவள் பக்கத்தில் அமர்ந்திருந்த மீனாட்சியிடம் தலைவலிப்பதாக உரைத்து விட்டு பார்வதியிடமும்..அருணாவிடமும் அனுமதி பெற்று…ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ இவளை திரும்பியும் பார்க்க வில்லை. அவனது உதாசீனத்தில் கண்கள் கலங்க தன்னறைக்கு விரைந்து விட்டாள்.

அறைக்கு வந்தவள் அறைக்கதவை தாளிட்டு விட்டு இத்தனை நேரமாக கட்டுப்படுத்திவைத்திருந்த மனக்குமுறலை கண்ணீர் விட்டு கரைக்கலானாள். சிறிது நேரம் கழித்து தானே தன்னை தேற்றிக் கொண்டவள் குளியலறைக்குள் புகுந்து அழுது சிவந்திருந்த விழிகளை பிறர் அறிந்து விடாதிருக்க முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்து நிலைக்கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு ஓரளவு திருப்தி எழ இலேசாக ஒப்பனை செய்து கொண்டவள் மறுபடியும் தன்னறையை விட்டு வெளியே வந்து.. பால்கனியில் ஒரு ஓரமாக நின்று வரவேற்பரையை கவனிக்க… அங்கே பாண்டியன் இளாவிடம் எதையோ பேசி சிரித்து பேசிக்கொண்டிருந்தான். என்னை மட்டும் அழ வச்சிட்டு இவன் மட்டும் சிரிச்சு பேசிட்டிருக்கான்….! முகமெல்லாம் புன்னகை மலர அழகாக சிரித்துக் கொண்டிருந்தவனின் அழகை தன்னை மறந்து ரசித்தாள்.


அடர்நீல நிறத்தில் பேண்டும்…அதற்கு வெகு பொருத்தமாக இளநீலநிறத்திறத்தில் முழுக்கைச் சட்டையணிந்து அழகாய் இன் செய்து கையில் விளையுயர்ந்த வாட்ச்சும் …ஷூவும் நேர்த்தியாக அணிந்து கொண்டு மாநிறத்திற்கும் கூடுதலான நிறத்தில் முறுக்கு மீசையுடன் … கம்பீரமாக அமர்ந்திருந்தவனை பார்வையால் படம்பிடித்து தன் இதயத்தில் நிரப்பிக்கொண்டாள்.

எதைச்சையாக மேலே பார்த்தவன் கண்களில் அவள் விழ..தன்னையே கண்ணெடுக்காமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தவளை பார்த்தவன் உள்ளூர மகிழ்ந்தாலும்…வெளியே முகம் இறுக அவளை பார்த்து முறைத்தான்.


அவன் திடீரென மேலே பார்வையை உயர்த்துவான் என்று அறியாதவள் முதலில் திகைத்து சட்டென்று நாக்கை கடித்து தலையில் அடித்துக் கொண்டு மறைந்து கொள்ள.. அவளின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் அவனது இறுக்கம் சற்றே தளர்ந்தது.


அதற்குள்ளாக இரு திருமணங்களையும் நடத்துவது குறித்து இருவீட்டாரும் திட்டமிட்டு முடித்துவிட… இருவீட்டாருக்கும் பொதுவானவரான பரமேஸ்வரன் ..


“எப்படியோ கடவுள் அனுகிரகத்தினால ஒரு கல்யாணம் பேச போய் இரண்டு கல்யாணமும் நல்ல படியா முடிவாயிடுச்சி இதுல உங்க எல்லாரையும் விட எனக்குத் தான் ரொம்பவே மகிழ்ச்சி…!!”என்றவர்
ஏற்கெனவே ஆலோசித்தபடி அடுத்த இரு தினங்களில் வரும் முகூர்த்தத்தில் சென்னையில் அருணாச்சலத்தின் பங்களாவிலேயே நிச்சயதார்த்தத்தை வைப்பது என்றும்… திருமணங்களை திருவண்ணாமலையிலும்… வரவேற்பை சென்னையிலும் வைப்பது என்றும் முடிவானது. அதன் படி அடுத்து வரும் நிச்சயதார்த்தத்திற்கு தேவையான உடைகளை இரு வீட்டாரும் நாளை சென்னையிலேயே வாங்கவும் முடிவெடுத்தனர்.

அதன் பிறகு வந்தவர்களுக்கு இனிப்பும் காரமும் பரிமாறப்பட உண்டு முடித்துவிட்டு உறவினர்கள் கிளம்பிச்செல்ல… மாதவன் கதிர் … பாண்டி இருவரையும் கட்டி அணைத்து தன் வாழ்த்தை கூறியவர் மகிழ்வுடன் தன் குடும்பத்தாருடன் விடை பெற்று சென்றுவிட்டார்.


எஞ்சியிருந்தவர்கள்அருணாச்சலம் குடும்பத்தினர மட்டுமே. அருணாவும் பிள்ளைகளை தாமரைக்கு துணையாக விட்டு விட்டு வந்ததால் அவர்களை அழைத்து செல்ல வேண்டி அவளும் அவர்களுடனே தங்கிவிட்டாள்.
அருணாச்சலம் புறப்படும் முன்னர் சொக்கநாதரிடம்..

“ரொம்ப .. ரொம்ப சந்தோஷம் சம்பந்தி அப்ப நாங்களும் கிளம்பறோம். நாளை கடையில் பார்க்கலாம்!” என்று கைகுவித்து விடை பெற…சொக்கநாதரும் நெகிழ்வுடன் விடை கொடுத்தார்.


பாண்டியின் விழிகள் தன்னவளை தேடி பால்கனியில் பதிய அங்கே அவளில்லை என்றதும்…மனம் சுணங்கிய போதும் அவன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கதிர் தன் அன்னைக்கு ஜாடை செய்ய அவர் உணர்ந்து கொண்டவராக மகளின் அறைக்கு சென்று அவளை அழைத்து வந்தார். பார்வதி மருமகளின் தலைவலி குறித்து வாஞ்சையாய் விசாரிக்க…அவர்களுக்கு உரிய பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் தன்னவனை யாரும் அறியாது பார்வையிடவும் தவறவில்லை அவள்.


அவள் படிகளில் இறங்கும் போதே கண்களில் மின்னலுடன் நோட்டம் விட்டவன் அவள் பார்க்கும் முன்னர் தன் பார்வையை விலக்கிக் கொண்டான்.
பார்வதி மீனாட்சியிடம் “அண்ணி நாங்க போனபிறகு என் மருமகளுக்கு சுத்தி போடுங்க…வந்திருந்தவங்க எல்லாரோட கண்ணும் புள்ள மேல தான் இருந்தது. அதான் புள்ளைக்கு திடீர்னு தலைவலி போல.. என்று அவளது முகம் பற்றி பரிவோடு சொன்னவரை முகம் மலர பார்த்த மீனாட்சிக்கு சம்மந்தியம்மாளின் குணத்தை நினைத்து மனது நிறைந்து விட்டது.


புறப்படும் நேரம் அனைவரிடமும் விடை பெற்றவன்..அவளை கண்டு கொள்ளாமல் தன் குடும்பத்தாருடன் கிளம்பி வெளியே சென்று விட்டான். அவனது அலட்சியத்தில் அவளுக்குத் திரும்பவும் கண்களில் நீர் துளிர்க்க... கட்டுப்படுத்திக்கொண்டவள் தானும் வாயிலை நோக்கி செல்ல …அதற்குள் அனைவரும் காரில் ஏறி அமர்ந்திருக்க கார் கிளம்பி சென்றுவிட்டது.

கடைசியாக ஒருமுறை தன்னை பார்க்க மாட்டானா என்று ஏங்கியவளின் ஏமாற்றம் கண்களில் நீராக பெருகி வழிய குடும்பத்தினர் பார்த்துவிடாதவாறு விரைந்து சென்று தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.


(கையணைக்க ... வருவான்!!)



ஹாய் பேபீஸ் ... சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் எபி கொடுக்க தாமதமாகிவிட்டது...அதற்காக மன்னிக்கவும் கதையின் 15 ஆம் அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு கமெண்டுங்க பேபீஸ்😍😘😘😘😘 அடுத்த எபி
 
Last edited by a moderator:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :16


85578558

இரு திருமணங்களும் முடிவானதில் அருணாச்சலம் குடும்பத்தினர் மனநிறைவுடன் தங்கள் இல்லத்தை அடைந்தனர்.
காரிலிருந்து முகம் கொள்ளாப் புன்னகையுடன் இறங்கியவர்கள்..
பிள்ளைகள் மூவரும் வீட்டு தோட்டத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து நேரே அங்கே சென்று தாங்களும் அவர்களுடன் அமர்ந்து கொள்ள காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்த இளாவும் பாண்டியும் கூட அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
வர்ஷினி… பாண்டியை பார்த்ததும் குறும்புடன் “என்ன ஐ.பி.எஸ் ஆபிஸர் அரசியக்காவை பார்த்தீங்களா? பேசுனீங்களா? உங்களுக்கு பிடிச்சிருக்கா? எப்ப கல்யாணம்?” என்று கேள்விகளை அடுக்க..அவளை பார்த்து அனைவரும் புன்னகைத்தனர்.


பார்வதி… “எல்லாம் நல்லபடியாக முடிஞ்சிதுடா.. தமிழும் பாண்டியும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க…! நாளைக்கு முகூர்த்த புடவை எடுக்க போறோம்..! நாளை மறுநாள் நிச்சயதார்த்தம்..! இங்கே நம்ம வீட்டுலேயே வச்சிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்!” என்று சந்தோஷமாக கூறவும். அதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவள்…!


"வாவ்..! வாழ்த்துக்கள் மாமா…! என்று அவனது கையை பற்றி குலுக்க… அவளுடைய மகிழ்ச்சி மற்றவர்களையும் தொற்றிக் கொள்ள நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதன் படி சென்னையில் உள்ள மிகப்பெரிய event organizer களிடம் நிச்சயதார்த்த பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.


இளா அந்த நிறுனத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை கூற.. அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்நிறுனத்திலிருந்து ஆட்கள் வரவும் அனைவரும் வீட்டு அலங்காரம் முதற்கொண்டு உணவு வரை அனைத்திலும் தங்கள் எதிர்ப்பார்பை கூறி அவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்து அவர்களை அனுப்பி வைத்துவிட்டு ஆசுவாசமாக அமர்ந்தனர்.


அருணாவையும் பிள்ளைகளையும் ஒரே வழியாக நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு அனுப்புவதாக அருணாச்சலம் மாதவனிடம் கேட்டுக் கொள்ள அவரும் சம்மதிக்க வருணுக்கும் வர்ஷினிக்கும் ஏக குஷி.


அதற்குள் மதிய உணவு நேரம் நெருங்கிவிட சாப்பாடு தயாராகிவிட்டதாக மரகதம் வந்து சொல்லவும் அனைவரும் மதிய உணவை கலகலப்புடன் உண்டு முடித்துவிட்டு…. வரவேற்பரையில் வந்து அமர்ந்து கொண்டு பெரியவர்கள் நிச்சயத்திற்கு அழைக்க வேண்டியவர்களை குறித்து ஆலோசித்து அழைக்க வேண்டியவர்களை அலைபேசியில் அழைக்க ஆரம்பித்தனர்.


சிறியவர்கள் ஒருபுறம் கலகலக்க ஆரம்பித்தனர். இதற்காகவே காத்திருந்தது போல இளா பெண்வீட்டில் பாண்டியின் அளப்பறைகளை ஒன்று விடாமல் கூறி முடிக்கவும்.. அதை வைத்துக் கொண்டு மேலும் வருணும் வர்ஷினியும் பாண்டியை கேலி.. கிண்டல் என்று ஓட்டித் தள்ள…! அவன் சிரித்துக் கொண்டே தன் தலையைக் முடியை அழகாய் கோதிக் கொண்டே அழகாய் வெட்கப்பட… அதை வியப்பாய் பார்த்த வர்ஷூ...


“என்னாது..! ரத்னவேல் பாண்டியன் வெட்கப் படுறாரா….?! என்று விழிவிரிக்க போலியாக அவளை முறைத்தவனை பார்த்து.. அதற்கும் அவனை ஓட்டித் தள்ளினாள். அவர்களோடு இளாவும் இணைந்து பாண்டியை கலாய்க்க ஆரம்பிக்க மனதில் சஞ்சலம் எழுந்த போதும் அவன் எதையும் காட்டிக்கொள்ளாது புன்னகையோடு அமர்ந்திருந்தான்.


தாமரைக்கும் அண்ணனின் மாற்றம் மிகுந்த மனநிறைவையும் சந்தோஷத்தையும் தந்தது. அதுமட்டுமல்லாது தனக்கு மிகவும் பிடித்த தமிழரசியே தனக்கு அண்ணியாக வரப்போவதில் அவளுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாக மனம் இலேசானது போன்ற உணர்வுடன் கவலைகள் மறந்து தானும் சேர்ந்து தன் அண்ணனை கிண்டலடித்தாள். அன்றைய பொழுது உற்சாகத்துடன் கழிந்தது.


அனைவரும் உறங்கச் சென்றுவிட பாண்டிதன் வீட்டு மொட்டைமாடியில் நின்று கைகளை கட்டிக்கொண்டு வானத்தில் இருக்கும் பிறைநிலவை வெறித்துக் கொண்டிருந்தான். வீட்டை சுற்றி நின்றிருந்த தென்னை மரங்களின் கீற்றுகள் குளிர்ந்த காற்றில் மெல்ல சிலிர்த்து அழகாய் அசைய… சுற்றியிருந்த அந்தகாரம் ஒருவித ஏகாந்தத்தை தோற்றுவிக்க… இரவுப் பூச்சிகள் விடாது ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க அதையெல்லாம் உணராது தீவிர யோசனையில் அவன் நின்றிருந்த தோற்றம் ஒரு அழகான கோட்டோவியமாய் தோன்றியது. அவன் மனமோ…கோபத்திலும் ஆற்றாமையிலும்..வெறுமையிலும் சிக்கி சுழன்றது.


காலை நடந்த நிகழ்வுகள் அவன் மனதில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வந்தது. மறுக்க முடியாத சூழலில் தான் அவன் தமிழரசியை பெண்பார்க்க சென்றான். அங்கே செல்லும் வரை இந்த திருமணத்தை எப்படியாவது யாருக்கும் சங்கடமில்லாமல் தவிர்த்து விடும் யோசனையோடு தான் சென்றான். ஆனால் எதிர் பாராத விதமாய் தமிழரசியை பார்த்தும் அவன் அனுமதியின்றி அவன் மனதுக்குள் நுழைந்துவிட்டவளை அவனால் விலக்கித் தள்ள இயலாது அவளை தன்னவளாக ஏற்றுக்கொள்ள அவன் முடிவெடுக்க… ஆனால் அவளோ திருமணத்தை மறுத்ததும் அதற்கு அவள் கூறிய காரணமும் கேட்டவனுக்கு… கோபம் கனன்றது.


எத்தனையோ பெண்கள் அவனது கடைக்கண் பார்வைக்காக காத்துகிடக்க அவர்களையெல்லாம் திரும்பியும் பார்க்காத அவனது இதயம் தன்னை நிராகரித்தவளின் காலடியில் மண்டியிட்டதை நினைத்து அவனுக்கு தன் மீதே அவமானமும்,ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது. அது எப்படி அவள் தன்னை நிராகரிக்கலாம்…? அதுவும் தான் உயிராய் நினைக்கும் தன் காவல்பணியை காரணமாய் சொன்னவளை…கொன்று விடும் அளவுக்கு அவனுக்கு ஆவேசம் எழுந்தது.


“விடமாட்டேன்டி..! என்னை நிராகரித்த உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேனா…! இனி வாழ்நாள் பூராவும் உனக்கு பிடிக்காத இந்த போலீஸ்காரன் கூட தான்டி நீ வாழ்ந்தாகனும். உனக்கு வேற வழியில்ல..!” என்று மனதுக்குள் வன்மமாக முணுமுணுத்துக்கொண்டவனின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது.


மற்றவர்களுக்காக மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டாலும்..தனிமையில் பாண்டியும் தாமரையும் தங்கள் திருமண வாழ்க்கை நினைத்து குழப்பத்துடனும்… தவிப்புடனுமே அந்த இரவைக் கழித்தனர்.


மறுநாள் காலை இரு குடும்பத்தாரும் திட்டமிட்டது போல சென்னையின் மிக பிரம்மாண்டமான பட்டு சேலைகளுக்கென்றே பிரத்யேகமாய் இருக்கும் ஜவுளிமாளிகையில் கூடினர்.

சொக்கநாதரின் குடும்பம் ஏற்கனவே வந்து அவர்களுக்காக காத்திருக்க. சிறிது நேரம் கழித்து இரண்டு கார்களில் வந்திறங்கிய அரூணாச்சலம் குடும்பத்தினரை ஆவலாய் எதிர் கொண்டழைத்தார் சொக்கநாதர். வந்தவர்களில் அனைவரிலும் தங்கள் இணையைத் தான் ஆவலோடு தேடினர் கதிரவனும், தமிழரசியும்… அவர்களை ஏமாற்றாமல் இருவருக்கும் தரிசனம் கொடுத்த போதும் தாமரையும்… பாண்டியும் அவர்களை மட்டும் கண்டுகொள்ளாமல் மற்ற அனைவரிடமும் அளவளாவிக் கொண்டிருந்தனர். அதில் அண்ணனும்…தங்கையும் சற்றே எரிச்சலடைந்தனர்.


தாமரை கதிரவனைக் கண்டுகொள்ளாமல் அவனது பக்கத்தில் நின்றிருந்த தமிழரசியை முகம் மலர கட்டியணைத்து தன் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்க... அதை ஏக்கத்துடன் கதிரவன் பார்த்திருக்க.. அதைக் கண்டு கொண்ட தமிழரசி தன் அண்ணனை பார்த்து குறும்புடன் கண்ணடித்துச் சிரிக்க… கதிரவன் தங்கையை முறைத்துப் பார்க்க.. பாண்டி கண்களில் மின்னலோடு தன்னவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


“நேத்து பெரிய இவன் மாதிரி கண்டுக்காம முறுக்கிக்கிட்டு போய் என்னை அழ வச்சயில்ல .. இப்ப மட்டும் என்ன லுக்கு...?? போடா..!” என்று மனதுக்குள் வறுத்தெடுத்தவள் அவனை பார்த்து ஓரு வெட்டும் பார்வையை வீச அவளின் முக பாவனையில் அவளது மனதைப் படித்தவன் ஏனோ உல்லாசமாக உணர்ந்தான். ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து வைத்தான். அதில் அவள் தான் மேலும் கடுப்பானாள்.


அங்கு வந்த வர்ஷூ “ஹாய் பியூட்டீஸ் நீங்க ரெண்டு பேரும் இப்புடி கட்டிப் பிடிச்சு கொஞ்சுறதைப் பார்த்து உங்க ஆளுங்க காதுகளில் புகை வருது பாருங்க..என்று கைகாட்டிய திசையில் திரும்பிப் பார்க்க… அங்கே கதிரவனும் பாண்டியும் அருகருகே நின்று இவர்களைத்தான் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் வெட்கத்தோடு இருவரும் தலைகுனிந்து கொண்டனர்.

“அண்ணியும் நாத்தனாரும் கொஞ்சி கட்டிப்பிடித்து அவங்களை டெம்ப்ட் பண்ணது போதும் வாங்க போய் புடவையை எடுப்போம்!” என்று இருவரின் கைகளைப் பற்றி வர்ஷூ இழுத்துச் செல்ல… தங்கள் இணைகளைத் தொடர்ந்தது இருவரின் பார்வையும்.

பெரியவர்கள் ஏற்கனவே புடவை செலக்ஷனில் ஈடுபட்டிருக்க… மூவரும் அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.
கதிரவன் பாண்டி, இளா, வருண் என இளையவர்கள் அனைவரூம் தனியாக சற்றுத் தள்ளி அங்கே போடப்பட்டிருந்த சேர்களில் அமர்ந்து கொண்டு தங்களுக்குள் கலகலத்துக் கொண்டிருந்தாலும் கதிர், பாண்டி இவர்கள் இருவரின் பார்வையும் தன்னவர்களை விட்டு அகலவில்லை.
தாமரையும்…தமிழரசியும் வர்ஷினியும் மற்றவர்களும் எடுத்துக் காண்பித்த எல்லா புடவைகளையும் நிராகரிக்க அதில் சலித்த வர்ஷூ அருணாவிடம் சொல்லிட்டு அங்கிருந்து நழுவி பட்டு சுடிதார் செக்ஷனில் நுழைந்து விட்டாள்.


சொக்கநாதரும் அருணாச்சலமும் தனியே அமர்ந்து கொண்டு தங்களுக்குள் எதைப்பற்றியோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.


தீவிரமாக அலசி ஆராய்ந்து புடவையை தேடிக் கொண்டிருந்த பெண்களை ஒரு முறை திரூம்பிப் பார்த்த வருண்.

உதட்டை பிதுக்கி தலையை ஆட்டிக்கொண்டே..


“இது ஆவறதில்லை….! இவங்க அவ்வளவு சீக்கிரம் புடவையை செலக்ட் பண்ணி வாங்க மாட்டாங்க..! எப்படியும் கடையை இழுத்து மூடி அவனா வெளியே தள்ளுற வரைக்கும் இவங்க இந்த இடத்தை விட்டு நகர போறதில்லை… நாம இங்கே வெட்டியா உட்கார்ந்திருக்கறதுக்கு பதிலா தி.நகரை ஏரியாவை சுற்றி நகர்வலம் போய் வரலாமா?! என்று அழைத்தவனை கதிர் புன்னகையுடன் பார்க்க…



“நீ சொல்றது உண்மையாடா மாப்ள.. அவ்ளோ நேரமா ஆகும்?” என்று பாண்டி வினவ..


“சரியாப்போச்சு நீங்க முன்ன பின்ன பெண்களோட டிரஸ் எடுக்க கூட போயிருக்கீங்களா..! இல்லை என்று உதடு பிதுக்கியவனை…”


"அதானே… பார்த்தேன்! இருக்குற கடையை காலி பண்ணி தலைகீழா புரட்டி போட்டு அதிலேயும் திருப்தியடையாம….கடைகாரனை தலையை பிச்சிக்க வச்சி அரை மெண்ட்டலாக்கி…. கடைசியா இவங்களா ஒரு கலர் காம்பினேஷன் மனசுல நினைச்சு சொல்லுவாங்க பாருங்க…. அதுல கடைகாரன் நொந்து நூடுல்ஸாகி இதை மொதல்லயே சொல்லியிருக்கக் கூடாதான்னு ஒரு பரிதாபப் பார்வை பார்த்துவிட்டு இவங்க சொன்ன கலர்ல புடவையை எடுத்து போட்டதும் அதையும் திருப்பி….. திருப்பி….! பார்த்துட்டு கலர் ஓ.கே பட் பார்டர்ல சரிகை டிசைன் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்தா நல்லாருக்கும்னு.. கேட்க கடைக்காரன் கொலைவெறியோடு பார்த்து விட்டு அவங்க கேட்ட மாதிரி எடுத்து போட்டாலும் மனசேயில்லாம… போனா போகுதுன்னு கடைசியா ஒத்த புடவை எடுப்பாங்க… அப்பவும் கடையில் இவங்களைப் போலவே புடவை எடுக்க வந்தவங்களோட கையிலிருக்க புடவை நாம எடுத்ததைவிட ரொம்பவே நல்லாயிருக்கோன்னு சந்தேகம் வரும்...!" என்று விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தவனின் முதுகில் அடி விழ… அலறி யாரென்று திரும்பிப் பார்த்தவனின் பின்னே கொலைவெறியோடு அருணா நின்றிருக்க… அருணாவை திடீரென எதிர்பார்க்காதவன் அதிர்ச்சியில் எச்சிலை கூட்டி விழுங்க… அவர் நின்ற தோரணையில் தான் பேசியதை முழுவதும் கேட்டு விட்டார் என்பதை அறிந்து கொண்டவன். சமாளிக்கும் விதமாக….ஹி…ஹி



"என்னம்மா !இதுக்குள்ளேயேவா புடவை எடுத்துட்ட…? என்று அசடு வழிய…! மற்றவர்களோ சிரிப்பை அடக்க இயலாது பார்த்துக் கொண்டிருக்க…..

அவனை பார்வையால் எரித்தவர்.


“வீட்டுக்கு போய் வச்சிக்கிறேன் உனக்கு கச்சேரி..! என்று பல்லைக் கடித்தவர்…!

கதிர் பாண்டி இருவரையும் நோக்கி


“என்ன மாப்பிள்ளைங்களா…! இங்க உட்கார்ந்து இந்த வெட்டிப்பயலோட என்ன பேச்சு...?! போய்.. உங்க ஆளுங்களுக்கு புடவை தேர்ந்தெடுக்க உதவி பண்ணுங்க… அந்த ரெண்டு பேரும் எந்த புடவையை காட்டினாலும் சொல்லி வச்சதைப் போல பிடிக்கலைங்குறாங்க..? ஒருவேளை நீங்க வந்து செலக்ட் பண்ணனும்னு நினைக்கிறாங்க போல…" என்றவரின் வார்த்தைகளுக்காகவே காத்திருந்தவர்களை போல இருவரும் எழுந்து தன்னவர்களை நோக்கி செல்ல… இளாவும் வருணும் வாயைப்பிளந்து அதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


வருணின் தலையில் கொட்டிய அருணா “அங்க என்னடா பார்வை போய் எல்லாருக்கும் ஜூஸூ வாங்கிட்டு வா.. போ!” என்று அவனை விரட்டிவிட்டு அவரும் அவர்களின் பின்னே சென்று விட… அவன் தலையை தேய்த்துக் கொண்டே… இளாவை பரிதாபமாய் பார்க்க… இளா அவன் தோளில் கைபோட்டு அணைத்தவன்..


“விட்றா ....விட்றா...மாப்ள இனி நமக்கு இங்க வேலையில்லை… பேச்சுலர் லைப்ல இதெல்லாம் சகஜம்! நீ வா மாப்ளை நாம போலாம் !” என்றவன் அவனை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.


தமிழரசியும், தாமரையும் புடவைகளை சுவாரசியமில்லாமல் பார்த்து கொண்டிருக்க அவர்களின் அருகில் இருந்த சேர்களில் இருவரும் சென்று அமரவும் திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க பாண்டியோ , கதிரவனோ…அவர்களை கண்டு கொள்ளாமல் புடவைகளை பார்வையிட ஆரம்பிக்க… தமிழரசி ஆச்சரியமாக அவனை பார்க்க அவன் அவள் அங்கு இருப்பதையே மறந்தவனாக தீவிர புடவை ஆராய்ச்சியில் ஈடுபட்டவனாக அடர் இளஞ்சிவப்பு நிறத்தில் உடலெங்கும் அழகிய பூ வேலைப்பாடுகளுடன் கையகல தங்கசரிகை பார்டருடன் அழகாக இருந்த சேலையை கையில் எடுத்தவன் அதில் திருப்தி அடைந்தவனாக அமர்ந்திருந்தவளின் கையில் திணித்து விட்டு சற்று தள்ளி சென்றுவிட்டான்.



கையிலிருந்த சேலையின் அழகில் அவளது கண்கள் பளிச்சிட “பரவாயில்லையே..! இந்த ஹீ - மேனுக்கு இதெல்லாம் கூட தெரியுமா…? நல்லாத்தான் செலக்ட் பண்றான்! அவன் தேர்ந்தெடுத்த புடவையை மென்மையாக வருடி மார்போடு அணைத்துக் கொண்டாள். அவனது ரசனையை உள்ளுக்குள் மெச்சியவள் அவனை திரும்பி பார்க்க..அவனோ இன்னும் புடவைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். மேலும் 4 பட்டுபுடவைகளை தேர்ந்தெடுத்தவன் அங்கே அழகாக தொங்கவிடப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிற டிசைனர் புடவை அவனை வெகுவாக கவர அதனருகில் சென்று அதை வருடியவன் தன்னவளை ஒருகணம் திரும்பி பார்க்க அவள் தான் தேர்ந்தெடுத்து கொடுத்த சேலையை ஆசையாய் வருடிக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அந்த சேலையும்… கூடவே தான் தேர்ந்தெடுத்த 4 பட்டுப்புடவைகளையும் தனித் தனியாக பேக் செய்யச்சொல்லி கொடுத்துவிட்டு தான் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான். இது எதையும் அறியாத தமிழரசி…


“இவ்வளவு நேரம் இங்க தானே உட்கார்ந்து இருக்கேன் என் கண்ணுல இந்த புடவை படலையே?! என்று யோசிக்க…


“ஆமா நீ எங்க புடவையை பார்த்த… அவனைத்தானே ஓரக்கண்ணால் லுக்கு விட்டுக்கிட்டு இருந்த…” என்று அவளது மனசாட்சி அவளை நக்கலடிக்க..! அதனை முறைத்து அடக்கியவள்…


தாமரை திரும்பி பார்க்க அவளது கையிலும் ஆழ்ந்த ஊதாநிறத்தில் தன் புடவையை போலவே டிசைன் செய்யப்பட்டிருந்த புடவையை பார்த்து…


“வாவ்…! வெரி ப்யூட்டிபுல் சாரி..!! யார்? செலக்ட் பண்ணது கதிரா…?!” என்று வினவ… கதிரவன் வந்தது தன் பக்கத்தில் அமர்ந்தது.. அவளுக்காக புடவையை தேர்ந்தேடுத்து அவளிடம் கொடுத்து “பிடிச்சிருக்கா பேபி?!” என்று மெல்லிய குரலில் காதல் வழிய கேட்க தன்னையறியாமல் தலையை ஆட்டியவளை முகம் மலர பார்த்தவன் யாரும் அறியாத வண்ணம் அவளை பார்த்து கண்சிமிட்டிவிட்டு சென்றுவிட தன்னவனின் செயலில் நம்ப இயலாது உறைந்துபோய் அமர்ந்திருந்தவள்… தமிழரசியின் குரலில் தன்னிலை உணர்ந்து வேகமாக தலையாட்டினாள்.
அப்போது தான் அவளும் தமிழரசியின் கையிலிருந்த புடவையை பார்த்து ஆச்சரியத்துடன் இது பாண்டியண்ணா செலக்ஷனா….?!! நம்பவே முடியலை அண்ணனுக்கு புடவையெல்லாம் எடுக்கத் தெரியுமா…?” என்று விழிவிரித்தவள் தன் அன்னையிடமும்…அருணாவிடமும் காட்டி அதிசயிக்க பெரியவர்கள் அனைவரும் அதுவரை இங்கே நடந்தவற்றை கண்டும் காணாமல் சற்று தள்ளி நின்றிருந்தவர்கள். தங்களுடைய மகன்களின் தேர்வு கண்டு பிரம்மித்து தான் போனார்கள் அத்தனை அழகாக இருந்தது அந்த இரு புடவைகளும்.
வர்ஷினி ஓடிச்சென்று…கதிர்…பாண்டி இருவரின் கைகளையும் பிடித்து குலுக்கியவள்…


“உங்க ரெண்டு பேரோட புடவை செலக்ஷன் பிரமாதம் போங்க மாப்பிள்ளைகளா….! ஒரு நல்ல குடும்பஸ்தனுக்கு வச்ச முதல் டெஸ்ட்டில் நீங்க ரெண்டு பேரும் அமோகமா….டிஸ்டிங்ஷனில் பாஸாயிட்டீங்க…!” என்று கலகலவென்று சிரித்து கண்ணடித்தவளை பார்த்து அனைவரும் பக்கென்று சிரிக்க…. பாண்டி..கதிர் இருவரும் முறைக்க முயன்று தோற்றவர்கள் தாங்களும்…சிரித்துவிட அப்போது தான் அனைவருக்கும் ஜூஸ் வாங்கிக் கொண்டு உள்ளே வந்த வருணும் இளாவும் விஷயமறிந்து தாங்களும் இருவரையும் கலாய்த்தனர்.


பின்னர் வாங்கி வந்த பிரஷ் ஜூஸை அனைவரும் குடித்துவிட்டு பெண்கள் இன்னும் சில உடைகளை தேர்வு செய்ய…சென்றுவிட..
ஆண்கள் தங்கள் உடைகளை தேர்ந்தெடுக்க ஆண்களுக்கான…உடைப்பிரிவுக்கு செல்ல…அங்கே தன்னவர்களின் புடவைக்கு மேட்சாக இருக்கும் படி தங்கள் உடையை தேர்ந்து எடுத்தவர்கள் வாங்கிய அனைத்து உடைகளுக்கும் பில் போட்டு எடுத்துக்கொண்டு கிளம்ப பாண்டி மட்டும் பின் தங்கியவன் தான் தனியே எடுத்த உடைகளுக்கு பில்போட்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன். அதையும் கார் டிக்கியில் வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்ய மற்றவர்கள் அனைவருக்கும் அதில் அப்படி என்ன வாங்கியிருப்பான் என்ற ஆவல் எழுந்த போதும் யாரும் கேட்கவில்லை.


அடுத்ததாக அவர்கள் சென்றது நகைக்கடைக்கு இருவீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்த மோதிரம் தேர்ந்தெடுத்து அதையும் வாங்கிக் கொண்டவர்கள்…
மதிய உணவுக்காக நகரின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர்தர உணவு விடுதிக்கு சென்றவர்கள்… தத்தம் இணைகளுடன் ஒன்றாக அமர்ந்து தங்களுக்கு வேண்டிய உணவினை ஆர்டர் செய்தவர்கள். சந்தோஷமாக சில…பல ரகசிய சீண்டல்களுடன் உணவை முடித்துவிட்டு… கடைசியாக ஐஸ்கிரீம் ஆர்டர் செய்ய..பாண்டி தன்னவள் ஆர்டர் செய்த அதே சாக்லேட் ரோல் ஐஸ்கிரீமையும் கதிர் தாமரையின் ஸ்ட்ராபெரி ஐஸ்கீரிமும் ஆர்டர் செய்ய சிறியவர்கள் அவர்களைப்பார்த்த கிண்டல் பார்வையை கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தவர்கள். தங்கள் இணைகள் ஒருவாய் சாப்பிட்டு வைத்த ஐஸ்கிரீமை அவர்களுக்கே தெரியாமல் மாற்றி வைத்து சுவைக்க ஆரம்பிக்க… பெண்கள் இருவரும் அதை கண்டும் காணாமல்… மனதுக்குள் ரசித்து ருசித்து தன்னவர்கள் சுவைத்த ஐஸ்கிரீமை தாங்களும் உண்டு முடித்தனர்.


இவர்களின் நடவடிக்கைகளை கண்டு கொண்ட மற்றவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.


திருப்தியாக உண்டு முடித்தவர்கள் நாளைய நிச்சயதார்த்தத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து சிறிது நேரம் பெரியவர்கள் பேச ஆரம்பிக்கவும்… சிறியவர்கள் இந்த இரு ஜோடிகளையும் கிண்டல் செய்து கலாய்த்தனர். அதன் பிறகு அனைவரும் விடை பெற்று அவரவர் இல்லம் புறப்பட்டு செல்ல... இம்முறை கிளம்பு முன்னர் தங்கள் இணைகளைப் பார்த்து விடைபெறவும் தவறவில்லை.
அன்றைய நாளின் மகிழ்வான தருணங்களை அசைபோட்டவாறு அருணாச்சலம் குடும்பத்தினர் தங்கள் இல்லம் அடைய..அனைவரும் காரிலிருந்து இறங்கி வீட்டினுள் செல்ல… மாணிக்கம் டிக்கியை திறந்து அவர்கள் வாங்கிய உடைகள் அடங்கிய பைகளை எடுக்கவும். அதிலிருந்து த தன்னவளுக்காக தான் எடுத்த புடவை அடங்கிய பையையும் தன் உடைகள் அடங்கிய பையையும் தனியே எடுத்தவன் அதை மட்டும் தன்னறையில் கொண்டு வைக்குமாறு சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டான்.


அனைவரும் களைப்பாக வரவேற்பரையில் அமரவும். அவர்கள் வாங்கி வந்த உடைகளை டீபாயின் மீது வைத்துவிட்டு..... அவன் குறிப்பிட்ட பையை மட்டும் எடுத்துக்கொண்டு அவனது அறையில் வைத்து விட்டு சென்று விட்டார்.


வெயிலில் களைத்து வந்தவர்களுக்கு மரகதம் சில்லென்று மோர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிப் பருகியவர்கள் சற்றே புத்துணர்வு அடைய தாங்கள் வாங்கிய உடைகளை பிரித்து பார்க்க ஆரம்பிக்க.


பாண்டி தான் எடுத்த புடவைகள் அடங்கிய பையை எடுத்தவன்.
தான் வாங்கிய நான்கு புடவைகளில் ஒன்றை தன் அன்னைக்கும்.. இரண்டாவதை அத்தைக்கும் மூன்றாவதை தன் தங்கைக்கும்.. நான்காவதாக வர்ஷூவிடமும் கொடுக்க… அதை அவர்கள் நால்வரும் ஆச்சரியமும்…மகிழ்ச்சியுமாய் பெற்றுக்கொண்டனர். பின்னே இருக்காதா..? இது அவர்களது பாசத்துக்குரியவனின் முதல் பரிசாயிற்றே… இதுவரை பாண்டி வீட்டு பெண்கள் யாருக்கும் தன் கையால் எதையும் வாங்கி தந்ததில்லை… அதற்குரிய சந்தர்ப்பம் அவனுக்கு அமையவில்லை என்பது தான் உண்மை… படித்து முடித்தவுடன் போஸ்டிங்கில் ராஞ்சிக்கு சென்று விட்டவனுக்கு அதற்கான சந்தர்ப்பம் இப்போது தான் அமைந்தது.
சொந்த நகைக்கடையும் ஜவுளிக்கடையும் வைத்திருப்பவர்களுக்கு இப்படி வாங்கிக் கொடுக்கவும் தோன்றியதில்லை. ஆனால் இன்று துணிக்கடையை பார்த்ததும் தன்னுடைய பணத்தில் ஏனோ அவர்களுக்கு வாங்கித் தரவேண்டும் என்று தோன்ற வாங்கிவிட்டான்.


வர்ஷூவுக்கு கொடுத்த புடவையை அவளுக்கு ரொம்பவும் பிடித்துவிட.. “மாமா என்னோட புடவை சூப்பர் அதுவும் எனக்கு பிடிச்ச நீலகலர்!” என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.


தாமரைக்கும் தன் அண்ணனின் பரிசு பிடித்துவிட “அண்ணா என்னோட புடவையும் சூப்பர்னா..! எப்படின்னா இவ்வளவு அழகா செலக்ட் பண்ணீங்க?! நாலு புடவையும் அவ்வளவு அழகா இருக்கு….!! தேங்க்ஸ்னா!..!” என்க.


பார்வதியும் அருணாவும் பேச வார்த்தைகள் இல்லாமல் அமர்ந்திருக்க… அவர்களை திரும்பி பார்த்தவன்


“என்னாச்சும்மா..? ரெண்டு பேருக்கும் உங்க புடவை பிடிக்கலையா….?!” என்றான் கவலையோடு.
கண்களில் ஆனந்த கண்ணீரோடு நிமிர்ந்த பார்வதி புடவையை ஆசையாக வருடியவாறே..


“அப்படியெல்லாம் இல்லய்யா.. என் மகன் முதன்முதலா வாங்கி கொடுத்தது எனக்கு பிடிக்காம போகுமாய்யா..? இதுவரைக்கும் என்கிட்ட இருக்க புடவையிலையே இதுதான்யா எனக்கு ரொம்பவே பிடிச்ச புடவை!” என்றவரை கனிவாக பார்த்தவன் தன் அத்தையை பார்க்க அவரும் அதே மகிழ்வோடு தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.


“என்னத்தை நீங்க ஒண்ணுமே சொல்லலையே.!?என்றவனை பாசத்தோடு பார்த்தவர் "என் ரத்னம் எடுத்துக் கொடுத்த இந்த புடவை தான் எங்கிட்ட இருக்க எல்லாத்தையும் விட பெஸ்ட் கண்ணா!". என்றவரை முகம் மலர பார்த்திருக்க…இவர்களின் நெகிழ்வை பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அருணாச்சலத்திற்கு மகனை நினைத்து அத்தனை பெருமையாக இருந்தது. இளாவும் வரூணும் கூட நெகிழ்ந்து அமர்ந்திருந்தனர்.


சிறிது நேரத்திற்கு பிறகு தன் வழக்கமான குறும்புத்தனம் தலை தூக்க எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவன்.
“பாண்டி மாமா ஆளுக்கொரு பட்டு புடவையை எடுத்துக் கொடுத்து மொத்த பெண்களையும் எப்படி மாமா இப்படி கவுத்தீங்க?” என்று விழிவிரிக்க… சிரித்துக் கொண்டே… அவனது முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான்.


“ஆ…யப்பா..! என்னா அடி..!! உங்கள் குடும்பத்தில் எல்லாரும் கராத்தே பழகியிருக்கீங்களோ…?அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது.”. என்றான் போலியாக அலறிக்கொண்டே..!


“என்ன மச்சான் இதுக்கே இப்படி அலறுர?! போலீஸ் அடின்னு ஒண்ணு இருக்கு அதைச் சொல்லித் தரவா?என்று பாண்டி நமட்டுச் சிரிப்புடன் வினவ..


“அச்சச்சோ…?! மாமா ஒய் திஸ் கொலவெறி?! உங்க அத்தை அடிக்குற அடியையே என்னால தாங்க முடியலை இதுல போலீஸ் அடி வேறயா..என் பிஞ்சு உடம்பு தாங்காது ஆளைவிடுங்க தெய்வங்களே!!” என்று இருகைகளையும் இணைத்து தலைக்கு மேல் தூக்கி பெரிய கும்பிடாக போட…


“அது”!! என்று பாண்டி அவனை மிதப்பாய் ஒரு பார்வை பார்க்க அங்கே வெடிச்சிரிப்பு கிளம்பியது.
அதன்பிறகு மாலையே இவெண்ட் மேனேஜ்மெண்ட ஆட்கள் வந்துவிட அவர்களுடன் சேர்ந்து விழாவுக்கான ஏற்பாடுகளை இளா முன்னிருந்து கவனித்துக் கொள்ள மலர்கள் அலங்கார விளக்குகளைக் கொண்டு அவர்கள் செய்த அலங்காரத்தில் அருணாச்சலத்தின் பங்களா தேவலோகம் போல மின்னியது. பரந்து விரிந்த புல்வெளியில் ஒருபுறம் அழகான பெரிய மேடை அமைக்கப்பட்டு அதில் பல வண்ண மலர்களையும் விலையுயர்ந்த சாட்டின் துணிகளையும் கொண்டு அலங்கரித்து அதில் அலங்கார விளக்குகள் ஆங்காங்கே இடையிடையே ஒளிர மேடை கண்கவரும் வகையில் இருக்க… மேடையைச்சுற்றி அமர்ந்து நிச்சயதார்த்த விழாவை உறவினர்கள் பார்க்க வசதியாக இருக்கைகள் நேர்த்தியாக போடப்பட்டிருந்தன.
தோட்டத்தின் மறுபுறம் வந்தவர்களுக்கு விருந்து பரிமாற அவர்கள் அமர்ந்து உண்ண வட்ட வடிவ மேசைகளும் அதைச்சுற்றி அமர்ந்து சாப்பிட இருக்கைகளும் சுத்தமான வெள்ளைத் துணியால் அலங்கரிக்கபட்டு ஆங்காங்கே போடப்பட்டிருந்தது தாங்களே வேண்டியதை எடுத்து போட்டு சாப்பிடும் Buffet முறையில் வைக்க இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் நிச்சயதார்த்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளுடன் விடிய விடிய தயாரானது அருணாச்சலத்தின் மாளிகை.



நிச்சயதார்த்தம் அடுத்த பதிவில் எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



(கையணைக்க வருவான்..!!)


ஹாய் பேபீஸ்!!
கதையின் 16 ஆம் அத்தியாயம் பதிந்து விட்டேன்.. படித்துவிட்டு கமெண்டுங்க ப்ளீச்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.😍😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 17



8711 8712

நிச்சயதார்த்த நாள் அழகாக விடிய தாமரை துயில் களைந்து கண்விழித்தாள். தனக்கு பக்கத்தில் படுத்து கைகளை இரு கால்களுக்கு இடையில் இறுக்கிக் கொண்டு… இலேசாக வாயைப் பிளந்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வர்ஷூவை பார்த்து புன்னகைத்தாள். படுக்கையில் இருந்து எழூந்து அமர்ந்தவள் அறையிலிருந்த ஜன்னல் அருகே சென்று வெளியே தோட்டத்தை பார்த்தாள். விழாவுக்காக மேடை அழகுற அமைக்கப்பட்டிருக்க… கடைசி நேர ஆயத்தப்பணிகளில் இவெண்ட் நிறுவன ஆட்கள் ஈடுபட்டிருந்தனர். அதைப்பார்த்தவளின் மனதில் ஒருபுறம் சந்தோஷம் எழுந்த போதும் அவனின் நிராகரிப்பு தந்த வலி மனதில் நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டேயிருக்க இன்றைய நாளின் இனிமையை முழுமையாக அனுபவிக்க இயலாது தவித்தாள்.



தங்கையின் வாழ்வுக்காகவே அவன் வேறுவழியின்றி தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்றே அவள் உறுதியாக எண்ணினாள். இல்லையென்றால் … தன் அந்தஸ்தை காரணம் காட்டி ஒத்துவராது என்று தன்னை முதலில் நிராகரித்தவன். இன்று இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?! அடுத்தவருக்காக கட்டாயத்தின் பேரில் நடக்கும் இந்த திருமணம் தேவைதானா….என்ற கேள்வி எழுந்து அவளை இம்சித்தது. காதலாய் தொடர வேண்டிய உறவு கட்டாயத்தின் பேரில் தனக்கு அமைந்ததில் அவளது தன்மானம் பலத்த அடிவாங்கியது. எப்படியோ தன் தமையனுக்காகவாவது அவள் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


திருமணத்தை தவிர்த்து வந்த பாண்டி தமிழரசியை பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. குறிப்பாக பார்வதியும் அருணாச்சலமும் இந்த திருமணத்திற்காக எத்தனை ஆவலுடன் காத்திருந்தார்கள் என்பதை அவளும் அறிவாளே…! இத்தனை பேரின் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் தன்னால் கெடுவதை அவள் விரும்பவில்லை. தவிரவும் கதிரவனை தவிர்த்து வேறொருவரை மணக்க அவளால் இயலாது. பார்த்த கணமே தன்னுள் நீக்கமற நிறைந்து விட்டவனை அவளால் மறக்கவும் முடியாது…அதே சமயம் தன்மானம் விட்டு அவன் காதலை யாசிக்கவோ…. அவனது நிராகரிப்பை மன்னிக்கவோ மறக்கவோ அவள் தயாராகவும் இல்லை. தனக்குள் மூழ்கியிருந்தவளின் தோளில் கை விழ திடுக்கிட்டு திரும்பி பார்க்க வர்ஷூ தான் அவள் பின்னால் நின்றிருந்தாள்.


கலங்கி சிவந்திருந்த விழிகளோடு சோகமாய் நின்றிருந்தவளை பார்த்ததவள்….”தாமரை….! உனக்கு என்னாச்சு…?! .நானும் இங்க வந்ததிலிருந்தே உன்னை கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன் உன் முகமே சரியில்லை எதையோ நினைச்சு மனசை போட்டுக் குழப்பிக்கிற…எதாவது பிரச்சனையா இந்த கல்யாணத்தில் உனக்கு முழு சம்மதம் தானே! இல்ல கதிரண்ணாவுக்கும் உனக்கும் ஏதாவது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா? எதுவாயிருந்தாலும் சொல்லு….எப்பவும் கலகலப்பாக இருக்க உன்னை இப்படி பார்க்க கஷ்டமாயிருக்கு என்று வருத்தத்துடன் கேட்டாள்.


அவளது கேள்வியில் ஒரு கணம் திகைத்தவள் மறுநொடியே தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு கலகலவென சிரிக்க… கேள்வியாக பார்த்த வர்ஷூவை தோளோடு அணைத்தவாறு இருக்கையில் அவளை அமர்த்தி தானும் அமர்ந்தவள்.


"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல டா…"! என்க


அவளை கூர்ந்து பார்த்த வர்ஷூ “நிஜமாவா?! என்று வினவ


"நிஜமாகவே தான் ஆமா உனக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது??! இந்த கல்யாணம் என் விருப்பப்படி என் சம்மதத்தோடு தான் நடக்குது! அதுமட்டுமில்ல அ….அவரை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு! என்று சொல்லும் போதே அவளது கன்னங்கள் சிவக்க அதில் நிம்மதி அடைந்தாள் வர்ஷூ.


"அதானே பார்த்தேன் கதிரண்ணாவை பார்த்ததும் நீ ஃப்ளாட் ஆன கதையை தான் நான் கேள்விபட்டேனே…!அதுமட்டுமா கடையில் உன்னை பார்த்ததும் அவர் கண்களில் தெறித்த மின்னல்…. கண்களில் வழிந்த ஏக்கம் நீ எங்கு சென்றாலும் உன்னை தொடரும் அவரின் ஆர்வ பார்வைகள்…. உனக்காக ஆசையாய் அவர் தேர்ந்தெடுத்த புடவை…. அப்புறம் ஐஸ்கிரீம் கடையில் நடந்தது இதையெல்லாம் பார்த்த பிறகும் நான் இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கக்கூடாது தான் என்று கிண்டலடித்தவளின் வார்த்தைகள் அவளுக்குமே மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் …. என்று எதையோ நினைத்தவளின் முகம் மீண்டும் இருள…. அதைக் கண்டு கொண்ட வர்ஷூ…


"சரி .....அது காரணமில்லை… ஆனா வேறெதுவோ நிச்சயமா இருக்கு என்ன அது எங்கிட்ட சொல்லக் கூடாதா தம்மு..??" என்று கேட்டவளிடம் என்ன சொல்லி சமளிப்பது. என்று யோசித்தவள்….
அவளை நிமிர்ந்து பார்த்து


"வர்ஷூ உனக்கே தெரியும் நான் இதுவரை அம்மா, அப்பாவை பிரிந்து எங்கேயும் தனியா இருந்ததில்லை. படிப்புக்காக கூட அவங்களை பிரிந்து தனியா வர எனக்கு இஷ்டமில்லை அதனால் தான் அண்ணன்கள் எவ்வளவோ கூப்பிட்டும் நான் சென்னைக்கு வர மறுத்துட்டேன். ஆனா இப்ப கல்யாணம் ஆச்சுன்னா அவங்களை பிரிஞ்சு நான் சென்னைக்கு வந்து தானே ஆகனும் அதை நினைச்சா தான் எனக்கு ரொம்பவே வருத்தமாயிருக்கு! என்று அவளுக்காக ஒரு காரணத்தை கண்டுபிடித்துச் சொன்னாலும் அதுவும் உண்மை தானே! தானும் ஒரு பெண்ணாய் அவளது உணர்வுகளை புரிந்துகொண்டவளாய் அவளை தன் தோளோடு சாய்த்து அணைத்து கொண்டு அவளது முதுகை ஆறுதலாய் நீவிவிட்டாள் வர்ஷூ. தன் எதிர்காலத்தை பற்றிய குழப்பங்களோடும் தவிப்போடும் இருந்தவளுக்கு அந்நேரம் அந்த அணைப்பு தேவைப்பட தானும் அவளது தோளில் சாய்ந்து கொண்டு கண்ணீர் வடித்தாள் தாமரை. சிறிது நேரம் ஆறுதலாய் வருடிக் கொண்டிருந்த வர்ஷூ அவள் விடாது கண்ணீர்விட்டு அழவும்…. அவளை திசைதிருப்பும் பொருட்டு..


“தம்மு டார்லிங்…!! நாம் ரெண்டு பேரும் இப்படி கட்டிப்பிடிச்சு உட்கார்ந்து இருக்கிறதை யாராவது பார்த்தாங்க நம்மளை வேறு மாதிரி நினைச்சுக்குவாங்க… நீ என்ன நினைக்குற என்று சீரியஸாய் அவள் வினவ?”
அவளது கேள்வியில் முதலில் புரியாது விழித்த தாமரை பின்னர் புரிந்து கொண்டவளாய் அவளை விட்டு சட்டென்று விலகி நின்று அவளை முறைத்து பார்த்தவள்… கோபத்தோடு அவள் மண்டையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்து…


“ச்சீச்சீ..! கருமம் பிடிச்சவளே!! என்னடி..?! பேச்சு பேசுற கொரங்கே!! வர வர ரொம்பவே ஓவராத்தாண்டி பேசுற இருடி அத்தைட்ட சொல்லி உன் வாயைத் தைச்சு வைக்க சொல்றேன்…!" என்று மிரட்ட அவள் கொட்டியதில்..வலித்த தன் தலையை தடவிக்கொண்டே

"ஸ்ஸாஆஆஆஆ…. !!" என்று கத்தி கூப்பாடு போட்ட வர்ஷூ….


"என்னா கொட்டு கொட்டுற தம்மு டார்லிங்!! என் மண்டையிலே பெரிய பள்ளமே விழுந்துடுச்சி…தெய்வமே! ஆனா நீ பார்க்க தான் ஸாப்ட் பூனைக்குட்டி…. ஓங்கிக் கொட்டுனா ஒன்றை டன் வெய்ட்டுமா… என்னக்கே இந்த நிலைமன்னா உங்கிட்ட காலம் பூரா மாட்டப்போற அந்த மாவாட்ட ச்சே….மாவட்ட கலெக்டரோட நிலை….என்று போலியாக தன் கண்ணீரை சுண்டிவிட்டவள்… ஆண்டவன் தான் காப்பாத்தனும்..!! எதுக்கும் உன்னோட வீர தீர பராக்கிரமங்களை முன்னாடியே சொல்லி அவரை அலர்ட் பண்ணனும்… ஏன்னா மண்டை முக்கியம் அமைச்சரே…!!” என்று வடிவேல் பாணியில் சொன்னவளை பார்த்து தாமரை வாய்விட்டு சிரித்தாள்.கண்களில் கண்ணீர் வரும் வரை சிரித்தவளை கனிவோடு பார்த்த வர்ஷூ.


“ம்ம்ம்… இது இதைத்தான் எதிர்பார்த்தேன்.! நீ இப்படி வாய்விட்டு சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்க தெரியுமா…தம்மு!! இந்த சிரிப்பு ஒண்ணு போதும் கலெக்டர் சார் டோட்டல் ஃப்ளாட் தான் என்று கண்ணடித்து சிரித்தவளை செல்லமாய் முறைத்த தாமரை… “போடி அரட்டை!!” என்று சிணுங்கி கொண்டே தன் வெட்கத்தை மறைக்க குளியலறைக்குள் புகுந்து கொள்ள வர்ஷூவோ நிம்மதியுடன் சென்று கட்டிலில் விழுந்து தன் பணியைத் தொடர்ந்தாள்.! ( அதாங்க தூங்குறது!!!)


நிச்சயதார்த்தம் இன்று மாலை ஆறுமணிக்கு தான் என்ற போதும் உறவினர்கள் அன்று காலையே வரத் தொடங்க அவர்களுக்கான உணவு…. தங்குமிடம் ஆகிய பொறுப்புகளை அருணாச்சலம் மரகதம் மாணிக்கம் இருவரிடமும் ஒப்படைத்திருக்க அவர்களும் உறவினர்களின் தேவையை ஒடி ஓடி கவனித்துக் கொள்ள மற்ற வெளி வேலைகளை இளா கவனித்துக் கொண்டான். தன்னறையிலிருந்து வெளியே வந்த அரூணாச்சலம் அங்கிருந்த உறவினர்களை நலம் விசாரித்து உபசரித்தவர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து மேடை அமைப்பையும் மற்ற ஏற்பாடுகளையும் பார்வையிட ஆரம்பித்தார். ஏற்பாடுகள் அணைத்தும் ஒரு குறைவுமின்றி அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யயப்பட்டிருக்க அதில் திருப்தி அடைந்தவராய் இளாவை அழைக்க அவரருகே வந்தவனை..


"இளா எல்லா அலங்காரமும் முடிஞ்சுதா எதுவும் பேலன்ஸ் இருக்கா ?!"

“அல்மோஸ்ட் எல்லா வொர்க்கும் ஓவர்பா” என்றவன்

"அலங்காரம் நல்லாயிருக்காப்பா?!" என்று வினவ


“அட்டகாசமா இருக்குப்பா நானும் கூட இவங்க கிட்ட இந்த பொறுப்பை ஒப்படைக்குப் போது யோசிச்சேன் ஒரே நாள்ல இதெல்லாம் சாத்தியமான்னு ஆனா இவங்க உண்மையிலேயே அசத்திட்டாங்க! கல்யாணத்துக்கும் இவங்களையே பிக்ஸ் பண்ணிட்டா என்ன?! என்றவரை பார்த்து புன்னகைத்தவன் .


“நான் அல்ரெடி பிக்ஸ் பண்ணிட்டேன் பா” என்க.

“வெல்டன் இளா என்றவர் பாசத்தோடு அவனை தோளோடு தழுவிக் கொண்டார்.


அதை இரு கண்கள் ஏக்கமாக பார்த்து பெருமூச்சுவிட்டது.
வீட்டு வாசலின் இருபுறமும் வாழைமரங்கள் இறுக்கி கட்டப்பட்டு வீட்டின் மங்கள நிகழ்வை கட்டியம் கூற… வாசலை அடைத்து பெரிய படிக்கோலமிட்டு அதில் இடையிடையே காவி கரைகட்டி அழகிய கோலம் வரையப்பட்டிருக்க… அதை ஓட்டி நல்வரவு என்னும் பெயர்பலகை அலங்காரமாய் அமைக்கப்பட்டிருக்க.. வீட்டைச் சுற்றியும்.... சுற்றுசுவருக்கு வெளியேயும் சரம்சரமாய் அலங்கார விளக்குகள் தொங்கவிடப்பட்டிருக்க...


விழாவுக்கு வருபவர்களை வரவேற்கும் பொருட்டு ஒரு மேசையிடப்பட்டு…அதில் குங்குமம்,சந்தனம் பன்னீர் ஒரு தட்டிலும் பலவண்ண மலர்கள் கற்கண்டு ஒரு தட்டிலும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.இவ்வாறாக அருணாச்சலத்தின் வீடு விழாவுக்குரிய சகல ஏற்பாடுகளுடன் இந்திரலோகமாய் காட்சியளித்தது.


மாலை 4 மணிக்கே பரமேஸ்வரன் தன் மனைவி மகனுடன் வந்து இறங்க பார்வதியும் அருணாச்சலமும் வாசலில் நின்று அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை பார்த்து திருப்தியடைந்தவர்கள் அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். நாவல்பழ நிறத்தில் தங்க சரிகை வைத்த புடவையில் உலாவந்த தன் மனைவியை பார்த்து மாதவன் கண்சிமிட்ட அவள் வெட்கத்துடன் அவரை கண்களால் மிரட்ட அதைப் பார்த்து புன்னகை விரிய மீசையை முறுக்கி விட்டுக்கொண்டவரை பார்த்து சிரித்த அருணாவை பார்வதி அழைக்கவும் அவரிடம் விடைபெற்று சென்றுவிட்டார்.


அதற்குள் அழகு நிலையப் பெண்களும் வந்துவிட வர்ஷூவும் தாமரையும் விழாவுக்காக தயாரானார்கள்.


மாலை 5.00 மணிக்கு சொக்கநாதர் தன் குடும்பத்தவர்களுடனும் உறவுகளுடனும் வந்திறங்க அவர்களை அருணாச்சலம் குடும்பத்தினர் புன்னகையுடன் கரம்குவித்து வரவேற்றனர். அவருடன் வந்த உறவினர்கள் விழா ஏற்பாட்டை விழி விரிய பார்த்து பிரம்மித்து உள்ளே செல்ல…. காரிலிருந்து கதிரவன் பட்டு வேட்டி அழகாக உடுத்தி தன்னவளின் புடவை நிறத்துக்கு பொருத்தமான ஊதா நிறத்தில் சட்டை அணிந்து கொண்டு ஆறடியில் அட்டகாசமாய் இறங்கிவர அருணாச்சலம் குடும்பத்தினர் திருப்திகரமான புன்னகையோடு அவனை வரவேற்க… அதற்குள் பாண்டியன் தன்னறையிலிருந்து கதிரவனை வரவேற்கும் பொருட்டு அவனும் பட்டு வேட்டி உடுத்தி தன்னவளின் புடவைக்கு பொருத்தமான நிறத்தில் சட்டையணிந்து கொண்டு கம்பீரமாக நடத்து வர அவனது ஆளுமையாக தோற்றத்தில் வரவேற்பில் பட்டுத் தாவணியுடுத்தி நின்றிருந்த கிராமத்து பைங்கிளிகளிலிருந்து விழாவுக்கு வந்திருந்த நவநாகரீக மங்கைகள் வரை அனைவரும் விழிவிரித்து கண்களில் ஒருவித மயக்கத்தோடு ஆவலாக அவனை பார்த்து நிற்க…. இது எதையும் கண்டுகொள்ளாமல் கதிரவனைப் பார்த்து தன் வசீகரப் புன்னகையை சிந்தியவனாய் வரவேற்கும் பொருட்டு கைகளைக்குவித்தவனை நோக்கி தானும் பாண்டியை புன்னகையோடு அணைத்து விடுவித்தான் கதிரவன்.

அதற்குள் இளா அலங்கார மாலையை எடுத்து வந்து பாண்டியின் கைகளில் கொடுக்கவும்… இளாவுடன் இணைந்தே கதிரவனுக்கு அதை அணிவித்தான் பாண்டியன். அதைப்பார்த்த அருணாச்சலத்திற்கு அத்தனை மகிழ்வாக இருந்தது. இருமகன்களையும் நினைத்து தந்தையாய் பெருமை கொண்டார் அருணாச்சலம். அதற்குள் அருணா ஆரத்தித் தட்டுடன் வந்து ஆர்த்தி எடுத்து திருஷ்டி கழிக்க…அவனை இளாவும் வருணும் உள்ளே அழைத்துச் சென்றனர். பாண்டி அவர்களுடன் செல்லாமல் தேங்கி நிற்க….அவன் பார்வை தன்னவளைத் தான் தேடியது.


இத்தனையும் வேறோரு காரில் ஏற்றிவிடப்பட்ட ஜன்னலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழரசி…. பாண்டியை விட்டு அவள் பார்வையும் நொடியும் அகலவில்லை. அதுவும் அவன் பட்டு வேட்டி சட்டையில் உள்ளேயிருந்து ராஜநடையிட்டு அழகாக நடந்து வந்து வசீகரமாய் புன்னகை சிந்தி….தன் தமையனை வரவேற்று மாலை அணிவித்தது வரை அணுவணுவாய் தன்னவனை ரசித்து தன் இதயம் பெட்டகத்தினுள் நிரப்பிக் கொண்டாள்.


காரில் அவளது பக்கத்தில் அமர்ந்திருந்த அவளது மாமன் மகள் நந்தினியோ…..தமிழரசியை மெதுவாக சுரண்ட… தன்னவனை விடாது பார்வையிட்டுக் கொண்டிருந்தவளுக்கு அது எரிச்சலைக் கிளப்ப..

அவள் புறம் திரும்பாமலே… “ம்ப்ச்…..இப்ப எதுக்குடி என்ன சுரண்டிக்கிட்டிருக்க…?”


“வாவ்…!!! யாருடி இந்த ஹாண்ட்சம் மேன்!! என்னவொரு அழகு... மேன்லி லுக் செம்மையான இருக்காருடி என்று தன் வாட்டர் பால்சை திறந்து விட…


“யாரைடி சொல்லுற??” என்றாள் புரியாமல் தமிழரசி.


“அதான்டி உன் நிச்சயப்புடவை கலர்ல சட்டைப் போட்டிருக்காரே அவரு தான்டி என்றவளை தீப்பார்வை பார்த்தவள்..!


“ஏய் பூசணிக்கா!! யாரைப்பார்த்துடி ஜொள்ளு விடற… கண்ணை நோண்டி காக்காவுக்கு போட்றுவேன் ஜாக்கிரதை…!”என்று மிரட்டியவளை புரியாமல் பார்த்தவள்..


“உனக்கேன்டி இம்புட்டு கோவம் வருது ஆமா. யாரு அவரு? என்று விளங்காமல் கேட்கவும்… அவளை முறைத்து பார்த்தவள்.


“கண்டவளெல்லாம் அவரைப் பார்த்து ஜொள்ளு ஊத்த அவரென்ன பப்ளிக் ப்ராபர்டியா??? ஹி வாஸ் மை ஓன் ப்ராபர்டி மைண்ட் இட்!” என்று சீறியவளை பார்த்து நந்தினி வாயை பிளக்க…! அவளது வாயை மூடியவள்… தன் பார்வையிடலை தொடர…


நந்தினியோ கலகலவென சிரித்தாள்… “இப்ப எதுக்கு இந்த லூசு சிரிக்குது?" என்று அவள் புறம் மீண்டும் தலையை திருப்பி முறைத்தவளின் மோவாயில் கையை வைத்து திருப்பி “அக்கட கொஞ்சம் சூடு!!” என்று நக்கலாக கூற…அவள் சொன்ன திசையில் திரும்பிப் பார்த்தவளின் இரத்தக்கொதிப்பு இன்னும் அதிகரித்தது.



அங்கே சுற்றி நின்றிருந்த அனைத்து இளம்பெண்களின் பார்வையும் தன்னவனையே மொய்த்ததில் அவள் இன்னும் கடுப்பானாள்.
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :18


“ச்சே…! முன்னே பின்னே ஆம்பளைங்களையே பார்க்காததை போல எப்படி பார்க்குறாளுங்க பாரு… என்று கரித்துக் கொட்டியவள்….அவனும் தான் இங்கேயே நின்னுகிட்டு என்னைப்பாரு என் அழகைப்பாருன்னு போஸ் கொடுக்கனுமா…?! உள்ளே போனால்தான் என்னவாம் என்று அவனை கோபமாய் பார்த்து பல்லைக் கடித்தாள்.


நந்தினியோ….”பார்த்தியாடி! நான் மட்டுமே அவரை பார்க்கலை எல்லாரும் தான் பார்க்குறாங்க. அழகா இருந்தா ரசிக்கத்தான் செய்வோமாக்கும்”. என்றவளை உறுத்து விழித்தவள்.


“அடியேய்..! மரியாதையா வாயை …முடிட்டு சும்மா இரு அவரு உனக்கு அண்ணன் முறையாகுதுடி கூறுகெட்டவளே! அமைதியா இருக்கறதுன்னா இரு இல்ல.. இறங்கி ஓடிடு கொலை காண்டுல இருக்கேன் ஏதாவது செஞ்சிடப் போறேன்” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவளை மேற்கொண்டு சீண்டினால் ஆபத்து என்பதை உணர்ந்தவளாக அமைதியாகிவிட்டாள் நந்தினி. இத்தனையும் மூடிய காருக்குள் நடந்து கொண்டிருக்க…இதை அறியாதவனாய் நெடு நாளைக்கு பிறகு சந்தித்த தன் கல்லூரி நண்பனான முரளியுடன் பேசிக் கொண்டிருந்தான் பாண்டியன்.
அதற்குள் அருணா வந்து கார் கதவை திறந்து அழைக்க தமிழரசி மெதுவாக காரிலிருந்து கீழே இறங்கினாள். கிளிப்பச்சை நிறப்பட்டுடுத்தி நிச்சயத்திற்கான பிரத்யேகமான அலங்காரங்களோடு இறங்கியவளை பாண்டியன் திரும்பிப் பார்க்க இவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னவளை பார்த்ததுமே அவனுக்கு உலகமே மறைந்து தானும் அவளும் மட்டுமே தோன்ற அவளது அழகில் சொக்கித் தான் போனான். அவனை முறைத்து பார்த்தபடி இறங்கியவள். சூழல் கருதி தலையை குனிந்து நின்றாள்.


அவளுக்கும் மாலை அணிவித்த அருணா அடுத்து ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து உள்ளே அழைத்துச் செல்ல …போகும் போது மறுபடியும் அவனை நோக்கி வெட்டும் பார்வையை வீசிவிட்டு செல்ல.. அதற்காகவே காத்திருந்தவனின் கண்கள் மின்னின.


அதற்குள்ளாக மேடையில் அய்யர் வந்தமரவும் இருவீட்டாரின் பெண்கள் அவரவர்களின் வரிசைத் தட்டுக்களை அழகாக கொண்டு வந்து வரிசையாக அடுக்கினர். இரு வீட்டினரும் மேடையில் கூட நிச்சயதார்த்த விழா இனிதே தொடங்கியது.


“பொண்ணு மாப்பிள்ளை இரண்டு பேரோட பெத்தவாளும் இப்படி வந்து எதிர் எதிரே உட்காருங்கோ...!” என்கவும் அருணாச்சலமும் பார்வதியும் ஒருபுறமும் சொக்கநாதரும் - மீனாட்சியும் மறுபுறமும் ஜோடியாக அமர்ந்தனர்..


“மாப்பிள்ளைகளையும் பொண்ணுங்களையும் அழைச்சிண்டு வந்து உட்கார வைய்யுங்கோ என்று அய்யர் குரல் கொடுக்க..! கதிரவனை வருணும்…பாண்டியை இளாவும் அழைத்துக்கொண்டு வந்து மேடையில் மணமக்களுக்கான இருக்கையில் அமர வைக்கவும். அடுத்து
தாமரையை வர்ஷூவும்… தமிழரசியை அருணாவும் அழைத்து வந்து அவரவர்களின் மாப்பிள்ளைகளின் பக்கத்தில் அமர வைத்தனர். கதிரவன் ஆவலோடு தன்னருகே அமர்ந்தவளை ஏறிட்டு பார்க்க தாமரை குனிந்த தலையை நிமிரவுமில்லை அவனை பார்க்கவுமில்லை. ஏற்கெனவே அவள் அழகு பதுமை தான் அதில் விசேஷ நாளுக்கான அலங்காரத்தில் தங்கப்பதுமையாக தன்னருகில் அமர்ந்திருந்தவளை எப்படி தன்னை நிமிர்ந்து பார்க்க வைப்பது என்று அவன் யோசனையில் இருக்க…மனம் முழுவதும்… தன்னவனை நிறைத்து வைத்திருந்தாலும் இத்தனை பேருக்கு மத்தியில் அவனை நிமிர்ந்து பார்க்க இயலாது வெட்கம் வந்து அவளை ஆட்கொள்ள தலையை பூமியில் புதைத்துக் கொள்பவளை போல குனிந்து அமர்ந்திருந்தாள் தாமரை.


அந்தப்பக்கம் தன்னருகே எழிலோவியமாய் அமர்ந்திருந்த தமிழரசியை மனதுக்குள் அணுவணுவாய் ரசித்து மனதில் படம்பிடித்துக் கொண்டாலும். வெளியே அவன் சிறிதும் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருக்க….அவனை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டு அவனது கம்பீர அழகில் தன்னைத் தொலைத்தவளின் பார்வை தன்னருகே அமர்ந்திருந்தவனின் கைகளில் விழ ரோமங்கள் அடர்ந்து சிவந்த கைகளில் நரம்புககள் முறுக்கேறி அவன் வலிமையை பறைசாற்ற அகன்ற அவன் உள்ளங்கையை தன் கைகளோடு ஒப்பிட்டவளுக்கு தன்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்து வைத்தாலும் அதை முழுமையாக பற்றிவிட முடியும் என்று தோன்றவில்லை. பார்வையை சற்றே உயர்த்தியவளுக்கு தீவிர உடற்பயிற்சி யின் விளைவாக உருண்டு திரண்டிருந்த அவனது தோளும் அதை இறுக்கி பிடித்த அரைக்கை சட்டையும் முழு வனப்பையும் வலிமையையும் கட்டியம் கூற அந்த கைகளுக்குள் தான் சிக்குண்டால்……?! என்ற நினைவு வந்து அவளை விதிர்க்கச் செய்தது.


‘ச்சே நான் தானா இப்படியெல்லாம் யோசிப்பது…?! தனக்கு என்னவானது?! சுற்றி இத்தனை பேர் அமர்ந்திருக்க தன் நினைவு போகும் போக்கை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள் தமிழரசி. அவன் அருகாமையில் தன்னிலை இழப்பதை உணர்ந்தவளாய் இனி இவனை பார்க்கவே கூடாது என்று ஒரு அவசர தீர்மானம் எடுத்தாள்..
அதன் பிறகு மணமகள்களுக்கு நிச்சயதார்த்த புடவைகள் தட்டில் வைத்து பெரியவர்களால் ஆசீர்வதித்து வழங்கப்பட அதை வாங்கிக் கொண்டு உடுத்திக் கொண்டு வர பெண்கள் இருவரும் கிளம்பிச் சென்றனர்.


அதன் பிறகு ஐய்யர் இரு வீட்டாரிடமும் விவரங்கள் கேட்டு நிச்சயதார்த்த பத்திரிக்கையும் அதைத்தொடர்ந்து லக்ன பத்திரிக்கையும் எழுதி முடித்தார்..


சிறிது நேரத்திற்கு பிறகு தாங்கள் தேர்ந்தெடுத்த நிச்சயதார்த்த புடவைகளை அணிந்து கொண்டு தங்கள் மனங்கவர்ந்தவர்கள் எழிலாக நடந்துவர கதிரவனும் பாண்டியும் தங்கள் கண்களை இமைக்கவும் மறந்து தன்னவர்களை விழிவிரித்து பார்த்துக் கொண்டிருக்க…அவர்களின் அருகில் அமர்ந்த அவர்களின் இணைகள் அவர்களின் பார்வையை உணர்ந்த போதும் அவர்கள் புறம் திரும்பாது அமர்ந்திருக்க….கதிரவன்..தான் அணிந்திருந்த மாலையை சரிசெய்யும் விதமாக அவளை நெருங்கி அமர இருவரின் தோள்களும் உரசிக் கொள்ள அதில் புது இரத்தம் உடல் முழுவதும் பாய்வது போல உணர்ந்தனர் இருவரும். அவனது அண்மை தாமரையினுள் புது விதமான சிலிர்ப்பை ஏற்படுத்த அதன் விளைவாக கன்னங்கள் இரண்டும் சிவக்க வெட்கத்தோடு தலையை குனிந்து கொண்டாள். தன் சிறு தீண்டலில் வெட்கிச்சிவக்கும் தன்னவளை கண்டு ஆணாய் கர்வமாய் உணர்ந்தான் கதிரவன்.


பாண்டியோ….தான் தேர்ந்தெடுத்த புடவையில் தேவகன்னிகையாய் தன்னருகில் அமர்ந்தவளின் அழகு பன்மடங்காய் பெருகிவிட்டதாய் தோன்றியது அந்த காவலனான காதலனுக்கு. பார்த்ததுமே பித்தங்கொள்ள வைக்கும் அழகுடையவளின் முகம் இன்று பூரணசந்திரனாய் ஒளிவீச அவளின் குளிர்கிரணங்களின் ஜில்லிப்பில் தன்னை முழுவதும் தொலைத்து நின்றான் ரத்னவேல் பாண்டியன்.
மணமக்கள் இருவரும் இவ்வாறாக கற்பனை உலகில் சஞ்சாரத்தை தொடங்கியவர்களை… ஐயரின் கணீர் குரலில் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.


இருவீட்டாருக்கும் பொதுவான நிச்சயதார்த்த பத்திரிக்கையை அவர் வாசிக்க தொடங்கி முடிக்கும் வரை அனைவரும் அமைதியாக செவிமடுத்தனர். வாசித்து முடித்தவர் இரு வீட்டாரும் கையொப்பம் மிடவும். திருமண நாளுக்குரிய லக்ன பத்திரிக்கையையும் வாசித்தார். பிறகு இருவீட்டாரும் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொண்டனர்.


அதன்பிறகு மணமக்கள் இருவரும் வந்திருந்த உறவுகளையும் பெற்றோரையும் ஒன்று சேர மேடையிலேயே விழுந்து நமஸ்கரிக்கவும். வந்திருந்தவர்கள் எழுந்து நின்று முன்பே அளிக்கப்பட்டிருந்த அட்சதையைத் தூவி மணமக்களை ஆசிர்வதிக்க நிச்சயதார்த்தம் இனிதே நிறைவுற்றது. இந்த அழகிய நிகழ்வை அங்கங்கே படம் வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் அழகாக படம் பிடித்தது.


மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்க மீனாட்சியும், பார்வதியும் நிச்சயதார்த்த மோதிரங்களை மணமக்களின் கையில் கொடுத்து போட சொல்லவும். வைரக்கற்களால் அழகாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த மோதிரத்தை முதலில் கதிரவன் தாமரையின் முகம் பார்த்து கண்களில் எல்லையில்லா காதல் வழிய அவளின் தளிர்கரத்தை மென்மையாக பற்றி அவளுக்கு போட்டுவிட.. அவளோ அவனை நிமிர்ந்தும் பாராமல் அதை ஏற்றுக்கொண்டாள். அவளது பார்வைக்காக காத்திருந்தவனுக்கு அது சற்றே ஏமாற்றமாக இருந்த போதும் பெரிதுபடுத்தாமல் தன் விரலை அவள் புறம் நீட்ட அவளோ… இப்போதும் தலை நிமிராது அவனுக்கு மோதிரத்தை போட முயல… அவன் தன் மோதிர விரலை யாருக்கும் தெரியாமல் மடக்கிக் கொள்ள… தாமரை திகைத்து அவனை நிமிர்ந்து பார்க்க அதற்காகவே காத்திருந்தவனாய் கள்ளச் சிரிப்பொன்றை அவளை நோக்கி வீசி கண்களை சிமிட்ட… அதில் தாமரையாள் தன்னிலை மறந்து விழிவிரித்து நின்றாள்.


பாண்டி தன் கையிலிருந்த அந்த அழகிய மோதிரத்தை ஒரு கணம் ரசித்துப் பார்த்தவன். தன்னவளைத் திரும்பிப் பார்க்க தமிழரசியும் மோதிரத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவளது வெண்டை பிஞ்சு போன்ற மென்விரல்களைப் அவன் பற்ற அந்த ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் வழிந்த தனக்கான நேசத்தை உணர்ந்து கொண்டவன் அடுத்த கணம் அவளது தளிர் விரலில் மோதிரத்தை அணிவித்து அந்த விரலில் சிறு முத்தமும் வைக்க…. அதைப் பார்த்து பெரியவர் கண்டும் காணாது மகிழ்வுடன் முகம் திருப்பிக் கொள்ள… சிறியவர்கள்…...ஓஹோ என்று உற்சாகக் குரலெழுப்பி ஆர்பரித்தார்கள்… அவனது முத்தத்தில் சித்தம் சிலிர்த்தவளின் முகம் குங்குமநிறம் கொள்ள தவிப்போடு தலையைக்குனிந்து கொண்டாள்.. தமிழரசி. மற்றவர்களின் கேலிச் சிரிப்பை கண்டு கொள்ளாமல் தன் கரத்தை அவள் மோதிரம் அணிவிக்க வாகாய் அவளுக்கு காட்ட அவனது செயலில் அவளுக்குத் தான் வெட்கம் பிடுங்கித் தின்றது. தலையை குனிந்தவாறே அவனது கரம் பற்றி தானும் மோதிரத்தை அணிவிக்க இனிதாக நிச்சயதார்த்த விழா நிறைவடைந்தது.


அடுத்ததாக விழாவுக்கு வந்திருந்த அனைவரும் விருந்துண்ண மகிழ்ச்சியோடு கலைந்து சென்றனர். அவரவர்களுக்கு வேண்டியதை எடுத்து சாப்பிடும்படியான (buffet) முறையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அவரவர் விருப்பப்பட்டதை எடுத்துக் கொண்டு இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.


சைவம் அசைவம் இருவகையான உணவுகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தது. சைவத்தில் நான்கு வகையான இனிப்புடன் விதவிதமான வெரைட்டிகள் அடுக்கி வைக்கப்ட்டிருக்க….அசைவத்திலும் அதே போன்று நீந்துவது.. பறப்பன …ஓடுவன என்று அத்தனை அயிட்டங்களும் அறுசுவையுடன் அடுக்கப்பட்டிருந்தது.


வந்திருந்தவர்கள் வயிறார சாப்பிட்டு மனமாற மணமக்களை வாழ்த்தி விடை பெற்றனர். மணமக்கள் இருவரும் போட்டோ செஷனில் பிஸியாக இருக்க இளவட்டங்கள் சுற்றி நின்று இருவரையும் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக அனைத்தும் முடிந்து உறவுகள் அனைவரும் சென்றிருக்க… குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக அமர்ந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு தனியே அமர்ந்து சாப்பிட… மணமக்களும் தங்களுக்கான உணவை எடுக்க வர… . பாகுபாடின்றி அனைத்து இனிப்புகளையும் எடுத்து தன் தட்டில் வைத்துக்கொண்டவளை ஒற்றை புருவம் உயர்த்தி பாண்டியன் பார்க்க..! தங்கையை பார்த்து புன்னகைத்த கதிரவன்…! “பாப்புவுக்கு இனிப்புனா ரொம்ப பிடிக்கும் அதான் என்று சொல்லிவிட்டு செல்ல… அசடு வழிய தன்னவனை பார்த்து சிரித்தவளை நெருங்கியவன் அவளது தட்டிலிருந்து இனிப்புகளில் பாதியை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொள்ள… அவனது செயலில் அவனை முறைத்துப் பார்த்தவளிடம்.


“நைட் நேரத்தில் இனிப்பு அதிகமா சாப்பிடக்கூடாது… இப்போதைக்கு இதுவே போதும்!” என்று சொன்னவன் தனக்கு வேண்டிய உணவுகளை எடுத்துக் கொண்டு அவளை பார்க்க… அவளோ அவன் தனது தட்டிலிருந்து இனிப்புகளை எடுத்ததில் முகத்தைத் தூக்கிக்கொண்டு நின்றிருந்தாள். அவளது குழந்தைத்தனத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்த போதும் அவளுக்கு காட்டாமல் அடக்கிக் கொண்டவன்.


“ஓ நைட்டுக்கு உனக்கு இதுவே போதுமா…? அப்ப சரி வா போகலாம்!” என்று அவளின் கையை பிடித்து அவன் இழுக்க அதில் மிரண்டவள்….!


அவசர அவசரமாக தனக்கு வேண்டியதை தட்டில் எடுத்து போட்டுக் கொள்ள பீறிட்ட சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவன். அவளது கையை விடாது தன்னுடன் அழைத்துச் சென்று சற்று தள்ளி போடப்பட்டிருந்த இருக்கையில் அவளை அமர வைத்து தானும் அவளுடன் நெருக்கமாக அமர்ந்து கொண்டவன் சாப்பிட துவங்க… அவனது நெருக்கத்தில் அவளுக்குத் தான் உணவு தொண்டைக்குழியை விட்டு இறங்க மறுத்தது.


“அடேய்…! அடேய்! ஆசையா சாப்பிடலாம்னு எடுத்த இனிப்பையும் முழுசா சாப்பிட விடாம பாதி பிடுங்கிக்கிட்ட சரி இருக்கிறதையாவது சாப்பிடலாம்னு பார்த்தா அதுக்கும் விடாம இப்படி இடிச்சுக்கிட்டு! உட்கார்ந்து இம்சையைக் கூட்டினா… நான் எப்படிடா சாப்பிடறது…!என்று மனதுக்குள் அவனை வசைபாடியவள் தட்டையே பரிதாபமாய் பார்க்க..அவளது முகபாவங்களிலிருந்து அவளின் மனவோட்டத்தை அறிந்து கொண்டவன் ஒன்றுமே அறியாதவனை போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.


“என்னாச்சு பேபி சாப்பிடலையா…!!” என்று கண்களில் குறும்போடு விசாரித்தவனை முறைத்துப் பார்த்தவள்.


‘ஏதோ இடப் பற்றாக்குறை போல இப்படி நெருங்கி உட்கார்ந்து கிட்டு கேட்குறான் பாரு கேள்வி விட்டா என் மடியிலேயே ஏறி உட்கார்ந்துக்குவான் போல இருக்கு! இவனை என்னதான் பண்றது?!’ என்று மனதுக்குள் பல்லைக்கடித்தவள்…


“கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன் ப்ளீஸ்! என்க அது அவளுக்கே கேட்காத போது அவனுக்கு எப்படி கேட்குமாம்…காற்றாகி போன குரலை கணைத்து சரி செய்தவள் மீண்டும் சொல்ல எத்தனிக்க அதை உணர்ந்து கொண்டவனோ…


“நான் வேணும்னா உனக்கு ஊட்டவா பேபி?!” என்று அடுத்த வெடிகுண்டை வீச அதில் மொழியறியா பிள்ளைபோல அவள் விழிக்க… அவனோ சொன்னதோடு நிற்காமல் புன்னகையோடு தன் தட்டிலிருந்த ரசகுல்லாவை எடுத்து அவளது உதட்டருகே நீட்ட …. ஏற்கனவே அவனது அருகாமையிலும், மயக்கும் மாயப் புன்னகையிலும் மயங்கி அமர்ந்திருநதவள் தன்னையும் அறியாமல் வாய் திறந்து அதை வாங்கிக் கொள்ள… அவனோ பாதியை ஊட்டிவிட்டு மீதியை தன் வாய்க்குள் போட்டுக் கொண்டான்.. அடுத்தடுத்த அவன் செய்கையில் முற்றிலும் தன்னிலை மறந்து அமர்ந்திருந்தவளை கைதட்டல் ஒலி நினைவுக்கு கொண்டு வர இளவட்டங்கள் தான் இவர்களின் காதல் நாடகத்தை பார்த்து கைதட்டி ஆர்பரித்துக் கேலி செய்து கொண்டிருந்தனர். பாண்டி அவர்களைத் திரும்பப் பார்த்து புன்னகைத்து தலையை கோதிக் கொள்ள… தமிழரசிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றதில் முகம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.


“போச்சு…. போச்சு இவனால் என் மானமே போச்சு…அய்யய்யோ…! இதை இன்னும் யாரெல்லாம் பார்த்தாங்களோ!” என்ற தவிப்புடன் தலையை மெதுவாக நிமிர்த்தி பெரியவர்கள் பக்கம் பார்க்க… நல்லவேளை இவர்களின் இருக்கை சற்று மறைவாக இருந்ததால் அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.


“எல்லாம் இவனால் வந்தது……!” அவனது அருகாமை தன்னை நிலையிழக்க செய்வதை உணர்ந்து தன்னையே நொந்து கொண்டாள். அவளது முகமாற்றத்தில் அவள் மனதைப் படித்தவன்.


“பேபி..! இங்க பாரு.. நமக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தாச்சு.. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நடக்கபோகுது… நீயும் நானும் இப்படி நடந்துக்கலைன்னாதான் மத்தவங்களுக்கு வேறுபாடா தெரியும். என்னைத் தவிர யாரும் இனி உன்னை இப்படி நெருங்கவும் முடியாது. அதனால மனசைப் போட்டுக் குழப்பிக்காம சாப்பிடு!! என்றவன் தட்டை அவள் புறம் நகர்த்தி வைத்தவன். தானும் சற்று தள்ளி அமர்ந்து உண்ண ஆரம்பித்தான். அவன் சட்டென்று விலகி அமர்ந்ததில் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட.. இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி தள்ளி உட்கார்ந்துகிட்டானாம்! என்று முணுமுணுத்தவள். தன் தட்டை கோபமாய் இழுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க… அவளை நிமிர்ந்து பார்த்தவனின் உதடுகள் புன்னகையில் விரிந்தது.


இவர்களின் காதல் நாடகத்தை பார்த்து கதிரவனுக்கும் தாமரைக்கும் மனம் நிறைந்து விட்டது. பெண்பார்க்க வந்த அன்று முதலில் இறுக்கமாக அமர்ந்திருந்த பாண்டி… தங்கையை பார்த்த கணமே அவன் கண்களில் தெறித்த காதலை…. கண்கூடாக கண்டு கொண்டான் கதிரவன். தமிழரசிக்காக அவனைப்பற்றியும் அவனது குணநலன்கள் பற்றியும் தன் நண்பன் மூலமாகவும்… வலைத்தளங்களிலும் ஆராய்ந்து நன்கு அறிந்து கொண்டவனுக்கு… பாண்டியின் மீது மிகுந்த மரியாதையும், திருப்தியும் எழுந்தது. தங்கைக்கு மிகவும் பொருத்தமானவன் என்று முடிவெடுத்தே அவன் இந்த திருமணத்திற்கு சம்மதித்தான். திருமணத்திற்கு மறுத்த தமிழரசியிடமும் அவனைப்பற்றி தான் அறிந்து கொண்டதை எடுத்து கூறி அவளைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான். அப்பொழுதும் அரைமனதாகவே இத்திருணத்திற்கு சம்மதம் சொன்ன தன் தங்கையை நினைத்து கவலை கொண்டவனுக்கு இன்றைய இவர்களின் இணக்கத்தில் மிகுந்த மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அதை நினைவு கூர்ந்தவன் தன்னவளை திரும்பிப் பார்க்க அவள் தலையை குனிந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க…. அவளை சீண்டிப் பார்க்க நினைத்தவன்…!


“ம்ம்ம்ஹூம் என் மச்சான் கொடுத்து வச்சவரு…. அவருக்கு அமையுது…!
என்று மெல்லிய குரலில் தன்னவளுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுக்க…. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கோ.. ஆத்திரமும் இயலாமையும் சேர்ந்து எழ அவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள்…


“அவங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் மனமாற நேசிக்கிறாங்க…! அது அவங்க நடவடிக்கைகளில் இயல்பா வெளிப்படுது! கட்டாயத்திற்காக நடக்கும் திருமணங்களில் இது சாத்தியமில்லையே?!” என்று ஆதங்கத்தில் ஆரம்பித்து ஆற்றாமையில் முடித்தவள்…சாப்பாட்டை பாதியிலேயே ஒதுக்கிவிட்டு எழுந்து கை கழுவ சென்றுவிட்டாள். அவளது திடீர் கோபத்தில் கதிரவன் தான் திகைத்து அமர்ந்திருந்தான்.


(கையணைக்க...வருவான்)

ஹாய் பேபீஸ் ...!! கதையின் 17, 18 அத்தியாயங்களை பதிந்து விட்டேன் படித்துவிட்டு கமெண்டுங்கப்பா..அதுக்கு முன்ன உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்...அது என்னன்னா..
எல்லாரும் எப்படி இருக்கீங்க... எல்லோரும் என்மேல் கொலை காட்டில் இருப்பீங்கன்னு எனக்கு தெரியுது இருந்ததாலும் தாமததத்திற்கான காரணம் ஒண்ணு தான்ப்பா என்னோட பர்சனல் ப்ராப்ளம் தான் காரணம்பா மூச்சு முட்ற அளவுக்கு வேலைகள், பிரச்சினைகள்... என்னத்தை சொல்லன்னே தெரியல...கதை எழுத ஆரம்பித்ததிலிருந்து இப்படித்தான் ஏகப்பட்ட தடைகள் ... இரூந்தாலும் வாரத்தில் இரண்டு எபியாவது கொடுக்க நினைத்து முட்டி மோதினாலும் ஒண்ணு தான் கொடுக்க முடியுது அதுக்காக பெரிய மனசு பண்ணி தயவுசெய்து என்னை மன்னிச்சுக்கோங்க பேபீஸ்!! என்னால் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன் ப்ளீஸ் மன்னிச்சுககோங்க டியர்ஸ்.
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 19

8857 8858


திருவண்ணாமலையின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த மிக பிரம்மாண்டமான திருமண மாளிகையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நகரின் மிக முக்கிய பிரமுகரும் தொழிலதிபருமான கோடீஸ்வரர் அருணாச்சலத்தின் இல்லத் திருமணமாயிற்றே.!!. அதுவும் ஒரே மேடையில் இரு திருமணங்கள். மண்டபத்தின் ஒவ்வொரு அடியிலும் தெறித்த அழகும் பிரம்மாண்டமும் அருணாச்சலத்தின் பணச்செழுமையை பறைசாற்றியது‌. ஒருபுறம் இருவீட்டாரின் உறவுகளும் நண்பர்களும் குழுமியிருக்க…மறுபுறம் நகரத்தின் வி.ஐ.பிக்களும், தொழிலதிபர்களும், முக்கிய பொறுப்புகளை வகிக்கும் அரசாங்கத்தின் உயரதிகாரிகளும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் குவிந்திருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்கென காவல் துறையினரும் அங்கே காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். மொத்தத்தில் அவ்விடம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.


திருமண விழாவிற்கு வருகை தந்திருந்த பெரிய மனிதர்களை மரியாதையோடு வரவேற்று உபசரிக்கும் பொறுப்பை இளா ஏற்றுக்கொண்டதால் அவன் நிற்க நேரமின்றி வரவேற்புக்கும் மண்டபத்திற்குமாக நடந்து கொண்டிருந்தான். பட்டு வேட்டி சட்டையில் கட்டுக்கோப்பான உடற்கட்டோடு கம்பீரமான தோற்றத்தில் ஆணழகனாய் அவன் நடமாட்டத்தை… இளம்பெண்கள் ஆர்வத்தோடு நோக்க… இது எதையும் கண்டுகொள்ளாமல் வரவேற்பில் நின்று வருணோடு அவன் முகம் மலர சிரித்து பேசிக் கொண்டிருக்க. அவனது தோற்றப்பொலிவை இரு விழிகள் கண்களில் காதல் பெருக ரசித்து தனது இதயத்தில் ரகசியமாய் சிறைவைத்துக் கொண்டது.

ஒருபுறம் கல்யாண விருந்து தடபுடலாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விதவிதமான உணவுகள் அழகிய பாத்திரங்களில் நிரப்பி வைக்கப்பட்டடிருக்க… விழாவிற்கு வந்திருந்தவர்களை மரியாதையோடு விருந்துண்ண அழைத்துச் செல்ல… அவர்களின் தேவைகளை அறிந்து பரிமாற… சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கான நினைவுப்பரிசுடன் பலகாரங்கள் அடங்கிய தாம்பூலப்பைகளை வழங்குவது என்று அனைத்துப் பணிகளுக்கும் ஒரே மாதிரியான நிறத்தில் பட்டுப்புடவை உடுத்திய பெண்கள் இவெண்ட் அமைப்பாளர்கள் மூலம் தனித்தனியாக நியமிக்கப்பட்டிருந்தனர்.


குழந்தைகளுக்காக பஞ்சு மிட்டாய், ஐஸ்க்ரீம், பாப்கார்ன் போன்றவற்றிற்கென தனித்தனியே கடைகள் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டு வந்திருந்த குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.


முற்றிலும் குளிரூட்டப்பட்ட கல்யாண மண்டபத்தின் நடுவே இருந்த விசாலமான பரந்த மேடையில் அருகருகே இரண்டு மணவரைகள் மலர்களைக்கொண்டு அழகாகவும் நவீன முறையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்க… மேடையின் எதிர்புறம் ஒரே நேரத்தில் 2000 பேர் அமர்ந்து திருமணத்தை காணும் வகையில் இருக்கைகள் வரிசையாகப் போடப்பட்டிருக்க….நவீன தானியங்கி புகைப்படக்கருவிகளோடு சுமார் பத்துக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் திருமண நிகழ்வை படம்பிடித்துக் கொண்டிருக்க …அது மண்டபத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திரைகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. ஒருபுறம் இசைக்கச்சேரி களைகட்டிக் கொண்டிருக்க.. மறுபுறம் கல்யாணத்திற்குரிய மங்கள வாத்தியங்களை அதற்குரிய கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருக்க… திருமண மண்டபத்திற்கேயுரிய மகிழ்ச்சியும் ஆரவாரமும் துலங்க இந்திரலோகம் போல காட்சியளித்தது அவ்விடம்.


அருணாச்சலம் குடும்பத்தினரும் சொக்கநாதர் குடும்பத்தினரும் மணவரையில் குழுமியிருக்க… பாண்டியனும் கதிரவனும் பட்டு வேட்டி சட்டையுடுத்தி கம்பீரமாய் அழகே உருவாக மணமேடையில் அமர்ந்து ஐயர்கள் சொன்ன மந்திரங்களை சிரத்தையுடன் சொல்லி திருமண சடங்குகளில் ஈடுபட்டிருந்தனர்.


“பொண்ணுங்களைக் கூட்டிண்டு வாங்கோ….!! முஹூர்த்தத்துக்கு நாழியாறது!!”என்ற ஐயரின் குரலில் தங்களின் இணைகளின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி இருவரும் காத்திருக்க….!


முதலில் அருணாவால்
அழைத்து வரப்பட்ட தமிழரசி….அழகிய அரக்குநிற பட்டுப்புடவை உடுத்தி மணமகளுக்கான பிரத்யேக அலங்காரங்களுடன் அவள் அணிந்திருந்த வைர நகைகளுக்கு போட்டியாய் அவளது முகமலர் ஓளிவீச வானுலக தேவதையாய்.. அன்னநடையிட்டு வந்த பாண்டியின் பக்கத்தில் அமர…


அவளுக்கு அடுத்ததாய் வர்ஷூவால் அழைத்து வரப்பட்ட தாமரையோ இளஞ்சிவப்பு நிற பட்டுடுத்தி அதற்கேற்ற அணிகலன்களுடன் அழகே உருவாக பொன்னில் வார்த்தெடுத்த சிற்பமாய் அற்புத அழகோடு வந்து கதிரவனின் பக்கத்தில் அமரவும்...!

மணமகன்கள் இருவரூம் தத்தம் இணைகளின் பேரெழிலில் தலை சுற்றி மயங்கித் தான் போயினர். திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் மணமக்களின் ஜோடிப் பொருத்ததை வியந்து விழி விரித்து அதிசயித்து பார்க்க… பெற்றவர்களோ…கண்களில்ஆனந்தக் கண்ணீரோடு தங்கள் வாரிசுகளின் ஜோடிப்பொருத்தத்தை மனநிறைவோடு பார்த்து நெகிழ்ந்து நின்றிருந்தனர்.

மணமக்கள் இருவரும் இணைந்து அடுத்தடுத்த திருமணச்சடங்குகளில் முழுமனதோடு ஈடுபட்டிருக்க
ஐயரோ ….இரண்டு வெள்ளித்தட்டில் தனித் தனியே மஞ்சள் நிற அட்சதை அரிசியையும் பூக்களையும் பரப்பி அதன் மீது மூஹூர்த்த தேங்காயை வைத்து அதில் மஞ்சள் கயிற்றில் ஏற்கனவே கோர்த்து வைத்திருந்த மாங்கல்யத்தட்டை எடுத்து வர்ஷூவிடமும் அருணாவிடமும் கொடுத்து வந்திருந்தவர்கள் ஆசிக்காக அனுப்பவும் அவர்களும் அதை வாங்கிக் கொண்டு வரிசையாக அனைவரிடமும் ஆசிவாங்கிக் கொண்டிருக்க… கடைசியாக வர்ஷூ வரவேற்பில் நின்றிருந்த இளாவை நெருங்கி அவனிடம் தட்டை நீட்ட அவனும் அதை தொட்டு கும்பிட்டு விட்டு அட்சதையை எடுத்துக்கொள்ள… அவனை ஒரு கணம் வெட்டும் பார்வை பார்த்த வர்ஷூவின் பார்வையை சந்தித்தவன் அப்பொழுதுதான் அவளை முழுவதுமாக உற்றுப் பார்த்தான்…இளஞ்சிவப்பு நிற லெஹங்கா அணிந்து கொண்டு… பொருத்தமான வைர அணிகலன்கள் மின்ன… உச்சியில் சிறு நெத்திச் சுட்டி அணிந்து கொண்டு கால் முளைத்த பூவாய் தன்முன் நின்றிருந்தவளை பார்வையால் அவன் வருட.. முதன் முதலாக.. தன்னவனின் ஆர்வப்பார்வையில் முகம் சிவந்தவள்... அருணாவின் அழைப்பில் நினைவு கலைய வெட்கப் சிரிப்புடன் அவனை விட்டு விலகிச் செல்ல… அவளை ஆர்வத்தோடு தொடர்ந்தது இளாவின் பார்வை..!
மாங்கல்ய தட்டை ஐய்ரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்தே வரவேற்பை வர்ஷூ நோக்க இளாவும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். புதிதாக தன் மனதில் தோன்றிய சலனத்தை உணர்ந்து கொண்டவனின் முகம் எதையோ நினைத்து இறுகிப் போனது அதன் பிறகு அவன் மறந்தும் அவள் புறம் திரும்பிப் பார்க்கவில்லை. அந்த நினைவை ஒதுக்கி தள்ளியவன் அடுத்தடுத்த வேலைகளில் அவளை முழுவதுமாக மறந்தே போனான்.


மணவரையில் ஆசிர்வதித்த மாங்கல நாணை ஐயர் எடுத்து பாண்டியின் கையில் கொடுத்து விட்டு “கெட்டிமேளம்…கெட்டிமேளம்..!!என்று உரக்க குரல் கொடுக்க…!!
“மாங்கல்யம் தந்துனானேன..மம
ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம்
ஜீவ சரத சதம்”


என்ற மந்திரத்தை அவர் உச்சரிக்க… முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக… அக்னி சாட்சியாக…! பெற்றோர்கள்….உறவுகள் நண்பர்கள் அட்சதை தூவி ஆசிர்வதிக்க பாண்டியன்-தமிழரசியையும்….. கதிரவன்-தாமரையையும் மங்கல நாண் பூட்டி தங்கள் சரிபாதியாக ஏற்றுக்கொண்டனர். மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் மணமக்களை மனமாற வாழ்த்த…பெற்றவர்களோ கடமையை முடித்த திருப்தியில் ஆனந்தக் கண்ணீரோடு தங்கள் மக்களை பார்த்து நெகிழ்ந்து நிற்க…அவ்விடத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பரவியது.


அடுத்து மணமக்கள் இருவரும் பெற்றவர்களிடமும் மற்ற பெரியவர்களிடம் தனித்தனியே காலில் விழுந்து வணங்கிஆசி பெற்றுக்கொண்டனர்.


அதன்பிறகு மற்ற திருமண சடங்குகளான அம்மி மிதித்து….. அருந்ததி பார்த்து…. தங்கள் இணைகளுக்கு மெட்டி அணிவிக்க…என்று ஒவ்வொன்றாக மணமக்கள் ஈடுபட்டிருக்க.. வந்திருந்த உறவினர் விருந்துண்ண கலைந்து செல்ல…ஆரம்பித்தனர்.


பெரும்பாலானவர் கிளம்பி சென்றிருக்க நெருங்கிய உறவினர்களும் மணமக்களின் நட்பு வட்டம் மட்டுமே மீதமிருக்க அவர்கள் மணமக்களை சூழ்ந்து நின்று கொண்டு மணமக்களுக்கான சுவாரசியமான விளையாட்டுகளில் ஈடுபடுத்தி அவர்களை கேலி கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர்.
பாண்டியும் கதிரவனும் அனைத்து விளையாட்டுகளிலும் தங்கள் இணைகளை வேண்டுமென்றே ஜெயிக்க வைக்க விட்டுக் கொடுக்க…ஒவ்வொரு முறையும் பெண்கள் ஜெயிக்கவும் அதற்கும் அவர்களை கலாய்த்து மகிழ்ந்தனர் இளவட்டங்கள். அதில் தாமரையும் தமிழரசியும் முகம் சிவந்து தலை குனிந்தனர். ஒருவழியாக மணமக்கள் அவர்களின் கேலி மழையில் நனைந்து தப்பித்து உணவு உண்ண தங்கள் துணைவிகளுடன் கிளம்பிச் செல்ல…அங்கும் நண்பர்கள் பட்டாளம் அவர்களை தொடர்ந்தது.


வாழை இலையில் பரிமாறப்பட்டிருந்த உணவுவகைகளைப் பார்த்ததும்…மணமக்கள் ஆவலுடன் உண்ண கை வைக்க அங்கு நின்றிருந்த… இளவட்டங்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விடச் சொல்லி சொல்லவும் பாண்டியும் கதிரும் சந்தோஷமாக இனிப்பை தங்கள் இணைகளுக்கு வழக்கம் போல பாதியை ஊட்டிவிட்டு மீதியை அவர்கள் ருசிக்க… அதைப் பார்த்து இளவட்டங்கள் கைதட்டி ஆர்பரித்தனர். ஒருவழியாக நண்பர்கள் அங்கிருந்து விடை பெற்றுச் செல்ல அதன் பிறகே பெண்கள் இருவரும் ஆசுவாசமாக உண்ண ஆரம்பித்தனர்.


சாப்பிட்டு முடித்ததும் மணமக்கள் இருவரும் கடைசி நேர போட்டோ செஷனுக்கு அழைக்கப்பட அங்கே விதவிதமான போஸ்களில் புகைபடக்கருவி மணமக்களை அழகாக உள்வாங்கி நிறைத்துக் கொண்டது. ஒருவழியாக அனைத்தும் முடிந்து களைப்புடன் வந்து அமர்ந்தவர்களுக்கு இளா பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க மணமக்கள் ஆவலுடன் அதை வாங்கி பருகினர்.


அதன் பிறகு மணமக்கள் இருவரும் தனித்தனி கார்களிலும்… மற்றவர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்தினரோடு தனித்தனியாக திருமண மண்டபத்தை விட்டு கிளம்பி அருணாச்சலத்தின் வீடான வேதவல்லி பவனத்திற்கு சென்று இறங்கினர்.


திருமணத்திற்காக வேதவல்லி பவனம் புதுப் பொலிவோடு அலங்கரிக்கப்பட்டிருக்க… மணமக்கள் இருவரையும் தனித்தனியாக ஆரத்தி சுற்றி பெண்கள் உள்ளே அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்து அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்.

பாண்டியின் கையில் கொடுக்கப்பட்ட வாழைப்பழத்தில் பாதியை வேண்டுமேன்றே தமிழரசியை பார்த்தவாறு கண்களில் குறும்பு மின்ன அவன் கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தமிழரசியிடம் நீட்ட.. அவளோ மனதுக்குள்
“அடக் கடவுளே இவன் சாப்பிட்ட எச்சியை நான் சாப்பிடனுமா..என்னக் கொடுமைடா இது?!" என்று முகத்தை இலேசாக சுழிக்க… சுற்றியிருந்த உறவுப் பெண்கள் அவளை சாப்பிட சொல்லி வற்புறுத்த வேறு வழியின்றி அவனை முறைத்துக் கொண்டே அவள் சாப்பிட அவனோ யாருமறியா வண்ணம் அவளைப் பார்த்து கண்சிமிட்டி மோகனப் புன்னகையை உதிர்க்க அதில் அரண்டு போனவள் தன் பார்வையை அவசரமாக விலக்கிக் கொண்டாள். புன்னகையுடன் பாலையும் அவ்வாறே அருந்திவிட்டு அவளிடம் தர அவள் வேறுவழியின்றி அதையும் குடித்து முடித்தாள்.


ஆனால் கதிரவன் சமத்துபையனாக தன்னிடம் கொடுக்கப்பட்ட பழத்தை பிட்டு சாப்பிட்டுவிட்டு தாமரையிடம் மீதியை கொடுத்தான். அதே போல பாலையும் தூக்கிக் குடித்துவிட்டு கொடுக்க அவனது செயலில் தாமரை மனதுக்குள் பெரிதும் ஏமாற்றமடைந்தாள். கணவனது இந்த செயல் காதல் கொண்ட அவளது மனதை மேலும் காயப்படுத்த…. கண்களில் திரள ஆரம்பித்த நீரை இமை சிமிட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்தாள். ( டேய்... கதிரு நீ சொதப்புறதை எப்பத்தான் நிறுத்த போற?! உன்னையெல்லாம்....!!😡😡😡)


அதற்குள் மணமக்களை பூஜையறையில் விளக்கேற்ற அருணா அழைக்கவும். அவளை பின்தொடர்ந்தனர் மணமக்கள்.


விசாலமான பூஜையறையில் சாமிப்படங்கள் அழகாக .வீற்றிருக்க ஆளுயர இரு வெள்ளி குத்துவிளக்கு எண்ணைய் ஊற்றப்பட்டு திரியிட்டு தயாராக வைக்கப்பட்டிருக்க…


பார்வதி.. முதன் முதலில் புகுந்தவீட்டுக்கு வந்திருக்கும் தன் மருமகளை கனிவோடு பார்த்து…. விளக்கேற்ற அழைக்க தமிழரசியும் புன்னகையோடு அவர் சொன்னதைப் போல விளக்கேற்றி வழிபட அதன் பிறகு தாமரையும் விளக்கேற்றினாள். பூஜை முடிந்ததும் பூஜையறையைவிட்டு வெளியே வந்த மணமக்கள் சற்று நேரம் அமர்ந்து ஆசுவாசமாக அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தனர்.


சற்று நேரம் கழித்து சொக்கநாதர் அருணாச்சலத்திடம் விடை பெறும் விதமாக… எழுந்து நின்று கைகளை குவித்தவர்..


“அப்ப நாங்களும் கிளம்பறோம் சம்மந்தி..!! இந்த இரண்டு கல்யாணங்களும் நினைத்ததைவிட அமோகமா முடிஞ்சதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் சம்மந்தி… இதேபோல நாளை மறுநாள் சென்னையில் நடக்கப்போற வரவேற்பு விழாவையும் நீங்க எல்லாரும் வந்து நல்லபடியாக நடத்திக் கொடுக்கனும் என்று முகம் மலர வேண்டுகோள் வைத்தவரின் கையைப் பிடித்துக் கொண்ட அருணாச்சலம்…


“நல்லது சம்பந்தி நல்லபடியா கிளம்பி போய்ட்டு வாங்க.. நீங்க கவலைப் படாதீங்க வரவேற்ப்பையும் பிரமாதமா ஜமாய்ச்சுடுவோம். நாங்க எல்லோரும் நாளைக்கு ஈவ்னிங் சென்னையில் இருப்போம். நான் சென்னைக்கு வந்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்!” என்க


அதற்குள் பார்வதி தாமரையின் உடைகள் அடங்கிய பெட்டியை வேலையாட்கள் மூலமாக கதிரவனின் காரில் வைக்க.. தங்கள் பெற்றோர்களிடம் கண்ணீருடன் விடைபெற்றனர் தமிழரசியும் தாமரையும்..!!.


கதிரவன் ஏற்கனவே அனைவரிடமும் விடை பெற்று காரில் ஏறி அமர்ந்திருக்க தாமரை பெற்றோர்களிடமும் தன் அண்ணன்களிடமும் பிரியா விடைபெற்று கண்கள் கலங்க தானும் ஏறி அமர…கார் சென்னையை நோக்கி புறப்பட்டது.
புதுமணத் தம்பதிகள் இருவரும் ஒரு காரிலும் , சொக்கநாதர் தம்பதியினர் மற்றொன்றிலுமாக பின் தொடர்ந்து சென்றனர்.


கார்கள் இரண்டும் கண்களைவிட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அருணாச்சலம் குடும்பத்தினரின் மனதில் மகளை பிரியும் வருத்தம் இருந்த போதும் மனநிறைவுடன் வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றனர். அடுத்ததாக வந்திருந்த உறவினர்களும் கிளம்பவும். பரமேஷ்வரன் தானும் தன் மனைவியுடனும் மகன்,மருமகள் பேரப்பிள்ளைகள் சகிதம் விடை பெறவும் அதன் பிறகு வீடே வெறிச்சிட்டது.
பார்வதிக்கு வருத்தமாக இருந்தாலும்.. தன்னை தேற்றிக் கொண்டவர் வரவேற்பறையில் தனியே அமர்ந்திருந்த மருமகளின் அருகில் சென்று அமர்ந்தார்.


“தமிழ் என்னடா நீ மட்டும் தனியா உட்கார்ந்திருக்க..?! உன்னை தனியா விட்டுட்டு தம்பி எங்கே போனான் ?! என்று மகனை பார்வையால் தேடியவாறு மருமகளிடம் வினவ..

“அவருக்கு ஏதோ முக்கியமான போன் கால் வந்தது….ஆண்ட்டி அதான் பேசிட்டு வர்றேன்னு தோட்டத்து பக்கமா இப்ப தான் போனாரு “!


“ஓ…அப்படியா.. !! சரி சரி..ஆமா அதென்ன என்னை ஆண்ட்டின்னு கூப்பிடுற…?? அழகா தமிழ்ல வாய் நிறைய அத்தைன்னு கூப்பிடுடா அது தான் எனக்கு பிடிச்சிருக்கு!” என்க

“சரிங்கத்தை இனிமேல் அப்படியே கூப்பிடறேன்” சமத்தாய் கேட்டுக்கொண்ட மருமகளை வாஞ்சையோடு பார்த்தவர்…


“சரிடா வா உன்னோட ரூமை காட்டுறேன்!!” என்று அவளை அழைத்துச் சென்றார்.


மேலே பாண்டியின் அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கு அழைத்து சென்றவர். “இப்போதைக்கு இந்த அறையில் தங்கிக்கடா அப்புறமா பாண்டியோட அறைக்கு கூட்டிப் போறேன்!!” என்க…


"அய்யோ…அவன் ரூமுக்கா எதுக்கு?! நான் இங்கேயே தங்கிக்கிறேனே ப்ளீஸ்!! அத்தை என்று மனதுக்குள் அலறியவள் வெளியே சம்மதமாய் தலையை ஆட்ட…அதில் புன்னகைத்த பார்வதி..! அவளின் அலங்காரங்களை அகற்ற உதவி விட்டு… சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்… மருமகளின் களைப்பை உணர்ந்தவராக…


“இப்ப குளிக்குறதுன்னா குளிச்சிட்டு கொஞ்ச படுத்து ரெஸ்ட் எடுடா சாயந்திரம் கோவிலுக்கு போகனும்” என்றவர் பீரோ சாவியை அவளிடம் கொடுத்து கழட்டின நகைகளை எல்லாம் பத்திரமா எடுத்து பீரோவில் வச்சிட்டு தூங்கு சரியாடா”! என்றவர் புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறினார்.


அந்த அறையை சிறிது நேரம் பார்வையிட்டவள்… பின்னர் தன் பெட்டியிலிருந்து என்ன உடை அணியலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கியவள். தூங்க தானே போறோம் என்று தான் நைட் பாண்ட் டீ சர்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.அசதி தீர குளித்து முடித்தவள் அதை ஒட்டியிருந்த உடைமாற்றும் அறையில் உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவள். அந்த அறையில் இருந்த கட்டிலில் படுத்ததும் சிறிது நேரத்தில் கல்யாண அசதியில் தன்னை மறந்து உறங்கிப் போனாள்.


சற்று நேரத்தில் போன் பேசிவிட்டு உள்ளே வந்த பாண்டியின் கண்கள் தன்னவளைத் காணாமல் தேட… எங்கே போனாள் என்று யோசசித்தவன் சமையலறைக்கு செல்ல அங்கே வேலையாட்களுடன் பேசிக் கொண்டிருந்த பார்வதி மகனை பார்த்ததும் முகம் . மலர..

“ என்னய்யா ஏதாவது வேணுமா??!” என்க…

அவன் தயக்கத்துடன் “தமிழரசி…..!!. என்று இழுக்கவும்…. முகம் மலர்ந்தவர்..


“இப்ப தான் அவளை மேல உன் அறைக்கு பக்கத்து அறையில் விட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க சொல்லிட்டு வந்தேன் .நீயும் போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கய்யா களைப்பா தெரியுற..! சாயந்திரமா கோவிலுக்கு போகனும்!!" என்றவரை கேள்வியாக பார்தவனை புரிந்துகொண்டவராக…. கூச்சத்துடன்..


“ராத்திரி தமிழரசி உன் அறைக்கு வருவா இப்ப நீ மட்டும் போய்யா…!” என்கவும் தன்னை கண்டுகொண்ட அன்னையை பார்த்து இலேசாக அசடு வழிந்தவன் தலையை கோதியவாறு தன்னறைக்கு விரைந்து விட்டான். செல்லும் மகனை முகம் விகசிக்க பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி…!


படிகளில் வேகமாக ஏறிச் சென்றவன் தன்னறைக்குள் செல்லாமல் தமிழரசி இருந்த அறைக்கதவை இலேசாக தட்ட .. ஒரு சத்தமும் இல்லாது போகவும் தானே கதவை திறந்து கொண்டு அறைக்குள் சென்றவனின் விழிகள் மனையாளைதேட அவளோ அலங்காரங்களின்றி சாதாரண இரவு உடையில் தலையணையை இறுக்கிக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.


அவளின் கோலம் கண்டு புன்னகைத்தவன்…அவளது அருகில் சென்று தூங்கும் மனையாளை அணுவணுவாக ரசித்தவன். தூக்கத்தில் புரண்டு படுத்தவளின் மேலாடை சற்றே நெகிழ்ந்திருக்க அதை பார்த்தவனின் உணர்வுகள் எல்லை கடக்க... கண்களை ஓருகணம் இறுக மூடித் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் …தலையை அழுந்தக் கோதியவாறு அவளது நெற்றியில் பட்டும் படாமல் மென்மையாய் தன் இதழை ஒற்றியவன் …அடுத்த நொடி அறையை விட்டு வெளியேறி தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.


(கையணைக்க ..வருவான்!!)

ஹாய் பேபீஸ்....!! கதையின் 19வது அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து விட்டு ஒரு வார்த்தை உங்கள் கருத்தை சொல்லுங்க பேபீஸ்😍😍😘😘😘😘
 
Status
Not open for further replies.
Top