All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கதை திரி

Status
Not open for further replies.

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 20

89968998

தமிழரசி….பெருந் தயக்கத்துடன் கையில் பார்வதி தந்த பால் செம்போடு…உடல் முழுவதும் நடுக்கம் பரவ… இதயம் இருமடங்காக துடித்து ஒலியெழுப்ப….பாண்டியனின் அறைக்கு முன்பு நின்றவளுக்கு… ஒரு கணம் …இப்படியே ஓடிவிடலாமா என்ற எண்ணம் தோன்றியது.


நினைப்பதெல்லாம் நடத்திவிடத் தான் முடியுமா என்ன? தயக்கத்தை உதறித் தள்ளியவள் மூச்சை இழுத்து பிடித்தவாறு.. தன் பூங்கரத்தால் அறைக்கதவை மெல்லத்திறந்து தலையை மட்டும் உள்ளே நுழைத்து அறையை பார்வையால் துழாவினாள். அறையில் யாரும் இருப்பதற்கான அறிகுறி தென்படாததால்…. நிம்மதி பெரு மூச்சுடன் மெதுவாக வலதுகாலை வைத்து உள்ளே நுழைந்தவளின் முகத்தில் பூக்களின் நறுமணத்தோடு...கூடிய குளிர்காற்று மோத…. மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து தன் நுரையீரலில் நிரப்பிக் கொண்டவளின் மனம் சற்றே ஆசுவாசமடைந்தது.


அந்த பிரம்மாண்டமான படுக்கை அறையின் ஷோபாவில் அமர்ந்து ஏதோ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பாண்டியை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவள் அறையில் நுழைந்ததை அவளது கொலுசொலியில் உணர்ந்த பாண்டி சட்டென்று திரும்பி பார்க்க சிவப்பும் வெள்ளையும் கலந்த மணிகளைக் கொண்டு கணாணை கவரும் வகையிலல் டிசைன் செய்யப்பட்டிருந்த வெண்ணிற புடவையில் அதற்கேற்றவாறு பொருத்தமான நகைகள் அணிந்து கொண்டு தலை நிறைய நெருக்கமாக தொடுக்கப்பட்ட மல்லிகைபூக்கள் சரம்சரமாக இரு பக்க தோள்களைத் தாண்டி வழிய கை கால் முளைத்த வெண்தாமரை மலராய் வந்து நின்றவளைக் கண்டவன் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க…. ஏற்கனவே அவளது அழகில் மயங்கிக்கிடப்பவன் முற்றிலும் தன்னியல்பைத் தொலைத்து தடுமாறித்தான் போனான்….! காலையில் தான் கட்டிய மங்கல நாணில் அவன் பார்வை நிலைக்க அது உணர்த்திய உரிமையில் அவன் இதயம். தித்தித்தது. இவள் தன்னுடமை..!! எனக்கே எனக்கான என்னவள் என்ற உரிமையுணர்வு தோன்ற தலையிலிருந்து பாதம்வரை அவன் பார்வை அவளை உரிமையோடு ரசிக்க ஆரம்பித்தது.


தன்னை கணவன் பார்வையாலே கபளீகரம் செய்வதை உணராதவளாய்… ஒரு உயர்தர நட்சத்திர உணவு விடுதியின் அறையைப் போன்று தோற்றம் காட்டிய அவ்வறையை விழிகள் விரிய அணுவணுவாக ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழரசி.


அவ்வறையின் அழகிலும் கலைநயத்திலும் மனதை பறிகொடுத்தவளாய் ஒவ்வொன்றாக பார்வையிட்டுக் கொண்டிருந்தவளை ஒரு பக்க சுவர் முழுவதையும் நிறைத்திருந்த பாண்டியின் பெரிய புகைப்படம் கவர…அதனருகில் சென்றவள் அழகிய புன்னகையோடு‌…….கரு நீல ஜீன் அணிந்து வெள்ளை நிற முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டவாறு கண்களில் கூலர்ஸூடன் வசீகரமாய் புன்னகைத்தவாறு பாண்டியின் புகைப்படம் வீற்றிருக்க… அதில் கவரப்பட்டவளாக… அருகே சென்று பார்வையிட ஆரம்பித்தாள்.


அவனது வசீகரப் புன்னகையில் தன்னை ஒரு கணம் தொலைத்தவள் மறுகணமே தன் மனதை அடக்கியவளாக…
“ஓ… இவனுக்கு சிரிக்கக்கூட தெரியுமா?! ஆச்சரியம் தான்!! எப்பவும் சட்டைக்கு போடுற கஞ்சியை இவன் குடிச்ச மாதிரியில்ல விறைப்பா திரிவான்?! இதுல மட்டும் எப்படி க்ளோசப் விளம்பரத்துக்கு போஸ் கொடுக்குற மாதிரி இப்படி ஒரு புன்னகை…?! என்று உதட்டை சுழித்தாலும்… கரங்கள் அவளையும் மீறி அவனது கன்னத்தை மென்மையாக வருடத் தொடங்கியது.


அவள் அறைக்குள் வந்ததிலிருந்து அவளின் மீது பார்வையை பதித்திருந்தவன் அவளது பேச்சில் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவன்….அவள் தன் புகைப்படத்தை ஆசையாய் வருடியதில் அவளின் மென்கரங்களின் பரிசத்தை தன் கன்னங்களில் உணர்ந்தவனாக.,. கன்னங்களைத் தொட்டுப் பார்த்தான். அவளின் பரிசத்தை உணரத்துடித்த அவனது மனத்தின் ஆர்ப்பரிப்பை அடக்க இயலாது சத்தமின்றி எழுந்தவன் நிதானமாக தன்னவளை நெருங்கினான்.


நூலளவு இடைவெளியில் தன் பின்னே நின்றிருந்தவனின் வருகையை கூட உணராது மெய்மறந்து தன்னவனின் புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்தவளை…. பின்னிருந்து அணைத்தவன்.. அவளிள் செவிமடலை தன் மீசைமுடிகள் உரச முத்தமிட்டு… “நிஜம் நான் உன் பக்கத்திலேயே இருக்கும் போது நிழல் எதுக்கு பேபி… அங்கே வருடுவதை இங்கே வருடலாமே…..!! நான் என்ன வேணாம்னா சொல்லப்போறேன்…” என்ற கிசுகிசுப்பான கிறக்கமான குரலில் …. கூற திடுக்கிட்டவளாய் சட்டென்று அவனை நோக்கி திரும்ப….அவனது மார்பில் மோதிக்கொண்டாள். ஏற்கனவே. நெருங்கி நின்றிருந்தவன் வாகாக அவளது இடையை வளைத்துக் கொண்டான்.


இருவரின் முகமும் அருகருகே… அதிர்ச்சியில் அவளது கண்கள் மேலும் விரிய….பட்டாம்பூச்சியாய் இமையிரண்டும் படபடக்க…அதன் அழகில் மேலும் மயங்கியவன்… அவளது கண்களில் தன் முதல் முத்திரையை பதித்தான். அடுத்தடுத்து அவளது முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தியவன்…. இறுதியில் அவளது உதட்டில் இளைப்பாறத் தொடங்கினான் கணவனின் திடீர் அணைப்பிலும்…. முத்தப்படையெடுப்பிலும் முற்றிலும் நிலைகுலைந்து போனவள்… உடலெங்கும் நடுக்கம் பரவ… ஆழிப் பேரலையாய் தன்னை தாக்கிய புதுமையான உணர்வுகளால் அவன் கைகளில் செயலற்று துவண்டாள். மனைவியின் நிலையை அறிந்து கொண்டவன் வெற்றிப் புன்னகையுடன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான் ரத்னவேல் பாண்டியன்.


சுற்றிலும் மலர்ச்சரங்களால் திரையிடப்பட்டிருந்த மஞ்சத்தில் அவளை கிடத்தி… தானும் அவளருகில் சரிந்தவன் தன் மனையாளின் முகத்தை காதலாய் நோக்க… தன்னை மறந்து கண்களை இறுக மூடி.. இதழ்கள் துடிக்க மயங்கிக் கிடந்தவளை பார்த்தவனின் உணர்வுகள் அலையலையாய் பொங்கிப் பெருக… இதற்கு மேல் தாளதவனாய் ஆவேசமாய் தன்னவளின் இதழ் நோக்கி குனிந்தவன் அவளது துடிக்கும் இதழ்களை மீண்டும் சிறை செய்தான். ஆரம்பத்தில் மென்மையாய் ஆரம்பித்து பிறகு வன்மையாய் மாறிய அவனது இதழ் முற்றுகை விடாது தொடர சிறிது நேரத்தில் மூச்சுக் காற்றுக்காய் தவித்தவளுக்காய் மனமேயில்லாது அவளது இதழ்களை விலக்கி தன்னவளின் முகம் பார்க்க வெண்தாமரை மலராய் இருந்தவளின் முகம் தன் செயலால் செந்தாமரை நிறங்கொண்டதை ரசித்துப் பார்த்தவன்… அவளை முழுவதுமாக கொள்ளையிட்டு விட துவங்கும் பொருட்டு அவளது இதழ் நோக்கி குனிந்தவனின் கைகள் தன்னவளின் மேனியில் அத்துமீறி பயணிக்க…


அவனின் இதழ் தீண்டலில் ஏற்கனவே தன்னை மறந்த நிலையில் இருந்த தமிழரசியோ….அவனின் கரங்களின் அத்துமீறலில் தன் பெண்மை விழித்துக் கொள்ள அவனது கரங்களை மேலே முன்னேற விடாது தடை செய்ய… தீராத தாபத்திலும் மோகத்திலும் தன்னுள் எழும் உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தவனுக்கோ…அது அதிருப்தியைத் தர….


“ம்ப்ச்… பேபி… ப்ளீஸ்டா…!!” என்றவன் குரல் குழைந்து ஒலிக்க அந்த குரலின் மாயாஜாலத்துக்கு கட்டுப்பட்டவளாய் தன் தடையை அவள் விலக்கிக் கொள்ள… முழு வேகத்துடன் அவளை ஆக்ரமித்துக் கொண்டவன் கன் தேடலை தொடர அவனது தீண்டல்களில் உருகிக் குழையும் தன்னுடலையும் மனதையும் தடை செய்ய இயலாது தானும் அவனுள் புதைந்து போனாள் தமிழரசி. இரவு முழுவதும் தொடர்ந்த அவனது தேடல் விடிகாலை முடிவுக்கு வர திருப்தியுடன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து…. புன்னகைத்தவன் அவளின் முகம் பார்க்க… கலைந்த ஓவியமாய் தன்னருகே இப்போதும் கண்மூடி படுத்திருந்தவளை ஆசையாய் தூக்கி தன் மார்பில் கிடத்திக் கொண்டு அவளது நாடியை நிமிர்த்தி…!
“பேபி கண்ணைத் திறந்து பாருடா…. என்க…அவள் அப்போதும் ஏதும் பேசாமல் இருக்க…அவளது மௌனனத்தில் சஞ்சலமடைந்தவன்..


“என்மேல கோவமா பேபி…. நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா…?!!” என்று தவிப்புடன் வினவியவனை கண்களைத் திறந்து அவனது கலக்கத்தை ஆச்சரியத்துடன் பார்த்தவளின் மனம் எல்லையில்லாத நிறைவுடன்…இல்லை எனும் விதமாக தலையை ஆட்ட…அதில் நிம்மதியடைந்தவனாய் அவளை தன் மார்பில் இரு கைகளாலும் இறுக்கிக் கொண்டு அவளது உச்சந்தலையில் தன் இதழ் பதித்தவன் புன்னகையோடு நிம்மதியாக உறங்கிப் போனான்.


மனதில் பலவகையான குழப்பக்களும் கேள்விகளும்…தொடர்ந்த போதும்... அவனது அணைப்பில் தன் கலக்கங்கள் மறைய தானும் நிம்மதியாக கண்களை மூடிக் கொண்டாள் தமிழரசி. ஆனால் இந்த நிம்மதி நிலைக்குமா…?!



சென்னை…கதிரவனின் படுக்கையறை…
வழக்கம் போல விடியற்காலை 5 மணிக்கு தூக்கம் கலைந்து தாமரை எழ முற்பட அசைய முடியாத தன்னிலையை உணர்ந்தவள் மெதுவாக தலையை மட்டும் திரூம்பிப் பார்க்க…கதிரவன் தான் அவளை பின்னோடு அணைத்தவாறு நெருங்கிப் படுத்திருந்தவன்…வலது கையால் அவளது இடையை இறுக்கிப்பிடித்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனது பிடிக்குள் இருந்து மெல்ல விலகும் பொருட்டு திரும்பியவளின் அசைவை உணர்ந்தவன்….அவளை மேலும் இறுக்கிக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான். அவனின் அடாவடியில் முகம் சிவந்து அவனை நோக்கியவளுக்கு முந்தைய இரவின் இனிமையான நிகழ்வுகள் மனதில் வலம் வர சந்தோஷமும் துக்கமும் ஒருங்கே எழுந்து அவளை வாட்டியது.


உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன அந்த அறைக்குள் நுழைந்தாள் தாமரை…! கட்டிலைச் சுற்றிலும் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் இன்றைய நாளின் முக்கியத்துவத்தை உணர்த்த.. ஒருவித சிலிர்ப்பு உடலெங்கும் பரவத்தான் செய்தது. காலையில் அவன் கட்டிய தாலி மார்போடு உரசி தனக்கும் அவனுக்குமான பந்தத்தை உணர்த்தியது.ஆனால் அதை கட்டியவனின் மனதில் தான் இல்லையே என்ற வேதனையில் கண்களில் நீர் திரள…இது மற்றவர்களுக்காக கட்டாயத்தின் பேரில் கட்டப்பட்டது என்ற நினைவே கசந்தது. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள்..‌ அறையின் பக்கவாட்டில் இருந்தபால்கனி நிலைப்படியில் சாய்ந்து கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு தன்னையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த கதிரவனைக் கண்டு அதிர்ந்தவள். மறுகணமே உணர்வுகளை தொலைத்த பார்வையுடன் திரும்பி நடந்து.. நிலைக்கண்ணாடியின் மேசையில் கொண்டு வந்த பால் ii சொம்பை வைத்து விட்டு தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி வைக்க ஆரம்பித்தாள். கடைசியாக கழுத்தில் அணிந்திருந்த வைர நெக்லஸைக் கழற்ற அது எதிலோ வகையாக மாட்டிக்கொண்டு கழற்ற முடியாமல் சதிசெய்ய அதனோடு போராட ஆரம்பித்தாள்.
அவளின் ஒவ்வொரு செயலையும் ரசனையோடு கண்களில் காதல் வழிய பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நடந்து வந்து அவளுக்கு பின்னால் நின்றவன் அவளின் நீண்ட கூந்தலையும் அதிலிருந்து சரம் கரமாய் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப்பூவை நோக்கி குனிந்து தன் முகம் புதைத்து ஆழ்ந்து நுகர்ந்தவன் அதன் இனிமையான மணம் மனதை மயக்க அப்படியே அதில் தன் முகத்தை புரட்ட நிலைக்கண்ணாடியில் தன்னவனின் வரவை உணர்ந்தவள் அவன் தன்னை நெருங்கி நின்றதிலேயே உறைந்தவள்… அவனது செயலில் முற்றிலும் நிலை குலைந்தாள். அடிவயிற்றில் சில்லென்ற உணர்வு எழுந்து உடலெங்கும் குளிர் பரவ நிற்க இயலாது தடுமாறியவள்…பற்றுதலுக்காக ஒப்பனை மேசையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மனைவியின் நிலையை உணர்ந்து கொண்டவன் நமுட்டுச் சிரிப்புடன்.. தன் இடது கையால் அவளது கூந்தலையும் பூச்சரத்தையும் மெதுவாக விலக்கியவன்… மனையாள் கழற்ற போராடிய நெக்லஸ்ஸின் கொக்கியை லாவகமா கழற்றி மேசை மீது வைத்தவன்… மனைவியை நிலைக்கண்ணாடியில் பார்த்தவாறே….இன்னும் நெருங்கினான்.அவனது உயிரைத் தீண்டும் நேசப்பார்வையை எதிர்கொள்ள இயலாது அவள் தலையை குனிந்து கொள்ள… குனிந்து அவளது முதுகில் தன் இதழை மெல்ல ஒற்றினான். தன்னவனின் முதல் இதழ் தீண்டலில் கூசிச் சிலிர்த்தவளின் படபடப்பு அதிகரிக்க... முதுகில் ஆரம்பித்த இதழோற்றல் படிப்படியாக முன்னேறி அவளது கழுத்து வளைவை நெருங்கி அதில் தன் முகத்தை புதைத்தவனுக்கு தான் அணிவித்த புத்தம் புது தாலியில் பூசப்பட்டிருந்த மஞ்சளின் மணமும் தன்னவளின் ப்ரத்யேக மணமும்… தலையில் சூடியிருந்த பூவின் மணமும் சேர்ந்த கலவையான மணம் மனதைமயக்க ஆழ்ந்து சுவாசித்து அதை நுகர்ந்தவனின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் பேரலையாய் பொங்கிப் பெருக.. இதற்குமேல் தாமதிக்க இயலாது என்று உணர்ந்தவன் தன்னவளின் தோளை தன்னை நோக்கி சுண்டி இழுத்து திருப்ப தன் மார்பில் மலர்க் கொத்தாக விழுந்தவளின் முகத்தை நிமிர்த்தி..கன்னங்களை இரு கைகளாலும் இறுக பற்றி… தன்னவளின் முகம் பார்க்க கண்களை இறுக மூடி இதழ் துடிக்க நின்றிருந்தவளை நோக்கி ஆவேசமாக குனிந்தவன் அவளின் துடிக்கும் இதழ்களை சிறை செய்தான். அடுத்தடுத்த அவன் அதிரடிகளால் முற்றிலும் தன்னிலை மறந்து நின்றிருந்தவள் அவனது திடீர் இதழ் முற்றுகையில் இதுவரை தான் அறியாத புதுவித உணர்வுகள் தாக்க அதை தாங்க இயலாது மெல்ல துவள ஆரம்பித்தவள் பற்றுதலுக்காக அவனது முதுகையே இரு கரங்களால் வளைத்து பிடித்தாள்… மனைவியின் நெகிழ்வில் மனதுக்குள் மகிழ்ந்தவன் தன் உள்ளத்துக் காதலையெல்லாம் தன்னவளுக்கு உணர்த்திவிடும் பொருட்டு அவளது இதழில் மேலும் தன்னை புதைத்துக்கொண்டான் தாமரையின் கதிரவன். தன் காதலை வாய்மொழியாக உணர்த்தாமல் உடல்மொழியில் தன் அன்பை அவள் மீதான தன் நேசத்தை உணர்த்த விரும்பினான். ஆனால் அவனின் மனதை தாமரையாள் புரிந்து கொள்வாளா…?! என்பதை அவன் அந்நேரம் யோசிக்கவில்லை!!.

மனம் முழுவதும் மூச்சுக்காற்றாய் தன்னுள் நிரம்பி இருந்தவனின் தொடுகையில் உடல் தன்னையும் மீறி அவனிடம் குழைய… அந்நேரம் அவனின் நிராகரிப்பு தந்த வலி நினைவில் எழுந்து மூளை அவனை விட்டு விலகி. எழச்சொல்லி … அறிவுறுத்த… காதல் கொண்ட மனமோ…அவனது உயிர்த்தீண்டலில் உருகி கரைய… மனதுக்கும் அறிவுக்கும் இடையே போராடிக் களைத்தவள்…இறுதியில் காதலுக்கு அடிபணிந்தாள். அதை நினைத்துப் பார்த்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க பீறிட்ட அழுகையை வாயைப் பொத்தி அடக்கியவள்…அவனிடமிருந்து மெல்ல விலகி குளியலறைக்குள் புகுந்தவள் தண்ணீரை திறந்து விட்டு கதறி அழத் தொடங்கினாள். அவனது தொடுகையில் உருகி குழைந்த தன்னை நினைத்தவளுக்கு அத்தனை அவமானமாக இருந்தது. காதலாய் ஆரம்பிக்க வேண்டிய உறவு….கடமைக்காய் ஆரம்பித்த விதத்தை நினைத்து உள்ளுக்குள் மருகினாள்..


வேதவல்லி பவனம்.

அடுத்தநாள் காலை இண்டர்காம் ஒலியில் கண்விழித்த பாண்டி… தன்மார்பை மஞ்சமாக்கி துயிலும் மனைவியின் தூக்கம் கலைந்து விடாமல் இண்டர்காமை எடுத்து காதில் வைக்க…. அந்தப்பக்கம் பார்வதி தான் அழைத்தார்.


“சொல்லுங்கம்மா..!” என்ற மகனது குரலிலேயே அவர்கள் இன்னும் துயில் களைந்து எழவில்லை என்பதை உணர்ந்தவராக…. சற்று தயங்கியவர் பிறகு..


“அய்யா பாண்டி மணி 9 ஆயிடுச்சு…. நீயும் மருமகளும் கிளம்பி வந்தீங்கன்னா…டிபன் சாப்பிட்டு ஊருக்கு கிளம்ப சரியாயாயிருக்கும்!...நாங்க எல்லாரும் தயாராகி உங்க ரெண்டு பேருக்காகத் தான் காத்திருக்கோம்” என்க..அப்போது தான் அறையின் கடிகாரத்தை பார்த்தவன்.. சிறு புன்னகையுடன் தன் தலையில் தட்டிக் கொண்டே தன் பதிலுக்காக காத்திருக்கும் அன்னையிடம்…


“இதோ அரைமணி நேரத்தில் கிளம்பி வர்றோம்மா…!!” என்று அழைப்பை துண்டித்தவன் மனையாளை பார்க்க பளிங்குச்சிலையாய் தன் மார்பில் பள்ளி கொண்டிருந்தவளின் எழிலில் தன்னைத் தொலைத்தவன்..அவளது முகத்தை தன் விரல் கொண்டு அளக்க அவனது ஸ்பரிசத்தில் சிலிர்த்தவள் இலேசாக சிணுங்கி உதட்டைச் சுழிக்க… அவனது பார்வை சுழித்த இதழ்களில் விழ..கைகள் கொண்டு அவளின் இதழ்களின் வடிவை அளந்தவன் அதன் மென்மையில் தன்னை தொலைத்தவனாய்…தன் இதழ்கொண்டு வருடும் ஆவலில் அவள் முகம் நோக்கி குனிய அவனது வருடலில் கண்விழித்தவள் அவனது நோக்கம் அறிந்து கொண்டவளாய் சட்டென்று துள்ளி எழுந்தவள் வெட்கத்தோடு குளியலறைக்கு புகுந்து கொண்டாள்.


அவளது திடீர் விலகலை எதிர்பாராதவன்… முகத்தில் மந்தகாச புன்னகை விரிய
“ச்சே…!! ஜஸ்ட் மிஸ்! என்று தன் தலையை கோதிக் கொண்டவன் எழுந்து உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து வோர்க் அவுட் செய்ய ஆரம்பித்தான்.


சற்று நேரத்தில் குளித்துவிட்டு குளியலறையிலிருந்து மெதுவாக தலையை நீட்டி எட்டிப் பார்த்தவள் அறைக்குள் அவன் இல்லை என்பதை உணர்ந்தவளாய்.. மெதுவாக வெளியே வந்தாள். ஓப்பனை மேசையை நெருங்கி தன்னை எளிமையாக அலங்கரித்துக்கொண்டவள் தலையில் சுற்றியிருந்த துவாலையை அகற்றி ஈர கூந்தலை விரித்து விட்டவள். அதை உலர்த்தும் பொருட்டு அறையின் பால்கனிக்குச் சென்றவளின் பார்வை வீட்டுத் தோட்டத்தில் படிய அதன் அழகில் மனதைப் பறிகொடுத்தவளாய்.. விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தவளை இரு வலிய கரங்கள் பின்னிருந்து அவளது இடையை சுற்றி வளைத்துக் கொள்ள.. முதலில் அதிர்ந்தவள் பிறகு தன்னவனை உணர்ந்து…அவனிடமிருந்து விடுபட போராட.. அவனோ அவளின் போராட்டங்களை எளிதாக முறியடித்து அவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டு அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள… அதில் மேனி சிலிர்த்தவள் சுற்றுப்புறம் உணர்ந்து…
“விடுங்க……இது பால்கனி யாராவது பாரக்க போறாங்க…” என்று முகம் சிவக்க.. லேசாக அவன் பிடி தளரவும் அவன் அணைப்பிலிருந்து விலகியவள்…அறைக்குள் செல்ல அவளது பின்னோடு சென்றவன் மனைவியை தேட அவளோ ஒப்பனை மேஜையருகே நின்று இடையைத் தாண்டி நீண்டிருந்த கூந்தலை பின்னி சடையிட்டவள் பின்னே தூக்கி வீச அது அவளுக்கு பின்னால் நின்றிருந்த பாண்டியின் முகத்தில் மோதியது. தன் முகத்தில் வந்து விழுந்த சடையை ஆசையாய் கைகளால் வருடி முகர்ந்து பார்க்க..அதன் நறுமணத்தில் உணர்வுகள் கட்டவிழ்க்க…கண்களில் மயக்கம் பரவ கண்ணாடி வழியே தன்னவளை நோக்கியவன் தாபத்தோடு நெருங்க..கணவனின் முகமாற்றத்தை உணர்ந்து கொண்டவள் அங்கிருந்து நழுவ பார்க்க… மனைவியின் நோக்கம் அறிந்தவனாய் ஒப்பனை மேசையின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி அவளை சிறையிட்டவன் கண்கள் குறும்பில் மின்ன..


காலையில் மிஸ்ஸான கணக்கை இப்ப நேர் செய்யவா பேபி‍… என்று அவளை நெருங்கவும் அறைக்கதவு தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருக்க… அப்போது தான் காலை அன்னையின் அழைப்பு நினைவு வந்தவனாக….


“பேபி.. !! வெளியே அம்மா தான் வந்திருப்பாங்க… நீ போய் கதவை தர நான் குளிச்சிட்டு வந்துடுறேன்… என்றவன் ஒரு அவசர முத்திரையை மனைவியின் இதழ்களில் பதித்து விட்டே குளியலறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.


அவனது அதிரடி முத்தத்தில் திகைத்து நின்றவளை கதவு தட்டும் ஒலி கலைக்க அவசரமாக ஓடிச்சென்று கதவை திறந்தாள். வெளியே பார்வதி கையில் காபிகோப்பைகளுடன் நிற்க…!
தமிழரசி “வா..வாங்க அத்தை!! நீங்க ஏன் அத்தை மாடிப்படி ஏறி எடுத்துட்டு வந்தீங்க நானே வந்திருப்பேனே…?!என்று முகம் மலர வரவேற்றவள்…அவர் கையிலிருந்து காபி டிரேயை வாங்கிக் கொள்ள தன் மருமகளின் முகத்தில் களைப்பையும் மீறிய மலர்ச்சியையும் வெட்கத்தில் சிவந்திருந்த அவளது வதனத்தையும் கண்டு கொண்டவர்… நிறைவுடன் அவளை பார்த்து புன்னகைத்தார்.


பரவாயில்லடா..?! மணி 9 ஆயிடுச்சு இன்னும் நீங்க பலகாரம் சாப்பிட கூட வரலையே அதான் காபியாவது கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ஆமா பாண்டி எங்கடா..?! என்றவரிடம்.


அ…அவங்க இப்ப தான் அத்தை குளிக்கப் போயிருக்காங்க.. என்றாள் நாணத்தோடு..! மருமகளின் முகச்சிவப்பு அவருக்கு பல கதைகளைச் சொல்ல மனதில் எல்லையில்லாத நிம்மதி எழுந்தது.


முகம் கனிய மருமகளை பார்த்தவர் பாசத்தோடு…”சரிடா!! பிளாஸ்க்ல காபி வச்சிருக்கேன் ரெண்டு பேரும் குடிச்சிட்டு சீக்கிரம் கீழே இறங்கி வாங்க! டிபன் சாப்பிட்டு ஊருக்கு கிளம்பனும் மணியாகுது…!!” என்றவர் சந்தோஷத்தோடு அறையை விட்டு வெளியேறினார்.


அதற்குள் குளியலறை கதவை திறந்து கொண்டு பாண்டி வெறும் டவலோடு வெளியே வர… அவனது தோற்றம் கண்டு முகம் சிவந்தவள் திரும்பி நின்று கொண்டாள்.


மனைவியின் மனநிலையை உணர்ந்து கொண்டவன் கள்ளச்சிரிப்புடன் அவளது அருகில் வந்து நின்று தன் தலையை சிலுப்ப பூவாய் சிதறிய நீர்த் துளிகள் அவளது முகத்தில் தெரிக்க அதில் சிலிர்த்து அவனை முறைத்துப் பார்த்தவள்…


“சீக்கிரம் தலையை துவட்டிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க அத்தை காபி குடிச்சிட்டு கீழ வரசொன்னாங்க ஊருக்கு கிளம்பனுமாம்.” என்று தலையை குனிந்தவாறே சொன்ன மனைவியின் வெட்கம் அவனை கிளர்ந்தெழ செய்ய..அருகில் நெருங்கியவனின் நோக்கம் புரிந்தவளாய் தேக்குமரத்தைப் போல உருண்டு திரண்டிருந்த அவனது மார்பை தன் மென் விரல்களால் தடுத்து நிறுத்தியவள் அவனது முகத்தை பாராது..


“ப்ளீஸ் அத்தை ஏதாவது நினைக்க போறாங்க சீக்கிரம் கிளம்புங்க வேலு” என்க அவளது ப்ரத்யேக அழைப்பில் அவனது கண்கள் மின்ன அவளைப் பார்த்தான். இதுவரை யாரும் அவனை இப்படி அழைத்ததில்லை. தன்னவளின் இந்த அழைப்பில் அவன் மனம் உற்சாகத்தில் திளைக்க…மார்பில் பதிந்திருந்த அவளது கையின் மேல் தன் கைகளை வைத்து அழுத்தியவன் அந்த கைகளை எடுத்து சிறு முத்தம் பதித்து விடுவித்துவிட்டு…முகம் விகசிக்க..உடை மாற்றும் அறைகக்கு சென்றவன் ஐந்து நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தான்.


க்ரீம் கலர் பேண்டும் அதற்கு பொருத்தமான அடர்ஊதாவும் நீலமும் கலந்த நிறத்தில் விலையுயர்ந்த சட்டையும் அணிந்து கொண்டு அழகாக வந்தவனை விழியகற்றாது பார்த்துக் கொண்டு நின்றவளை நெருங்கியவன்
“போலாமா பேபி.?!” .என்க தன்னை மறந்து தலையை ஆட்டியவளை தோளோடு அணைத்தவாறு அறையை விட்டு வெளியேறினான். படிகளில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்த அருணாச்சலமும் பார்வதியும்.. மகன் மருகளின் அன்னியோன்யத்திலும் ஜோடிப் பொருத்தத்திலும்.. நிறைவுடன் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். பெரியவர்களை பார்த்ததும் வெட்கத்தோடு விலக முற்பட்டவளை… அவன் விட்டால் தானே..!!
“ஏங்க..! அத்தை , மாமா பார்க்குறாங்க விடுங்க என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாய் புன்னகையுடன் கைகளை விலக்கிக் கொள்ள…நிம்மதி பெருமூச்சுடன்.. பார்வதியிடம் செல்ல அவர்களை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தவர்.


“தமிழ்மா பூஜை அறையில் விளக்கேற்றி கும்பிட்டு வாம்மா!! பாண்டி… நீயும் போய்யா” என்கவும் தலையை ஆட்டிவிட்டு கணவனுடன் பூஜையறைக்குள் நுழைந்தவள் பூஜையை முடித்துவிட்டு… நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ள சிமிழை எடுத்தவளை தடுத்து தானே குங்குமத்தை எடுத்துஅவளது வகிட்டில் வைத்தவன்….பற்றிய அவள் கையிலிருந்த குங்குமத்தை தன் நெற்றியில் இட்டுக் கொண்டான். கணவனது செய்கையை வாயைப் பிளந்து பார்த்தவளுக்கு ஆச்சரியத்துடன் வெட்கமும் வர முகம் சிவந்தது. ரசனையோடு அதை பார்த்தவன் அவளது கையைவிடாது பிடித்தவாறே அறையை விட்டு வெளியே வந்தான்.


சாப்பாட்டு மேசையில் இவர்களுக்காக காத்திருந்த பார்வதி இருவரையும் அமரவைத்து பரிமாற….
“நான் பரிமாறுறேன் நீங்க உட்காருங்க அத்தை.. மாமா சாப்பிட்டாச்சா அத்தை என்று வினவ…மருமகளின் பொறுப்பில் முகம் கனிந்தவர். அவளது கையை பிடித்து பாண்டியின் பக்கத்தில் அமர வைத்தவர்.


“நானும் உங்க மாமாவும் எப்பவோ சாப்பிட்டாச்சு… நீ உட்கார்ந்து சாப்பிடு முதல்ல…என்றவர் புது மணத் தம்பதிகளுக்காக தன் கையால் பரிமாறினார். முதலில் பாதாம் அல்வாவை இருவருக்கும் வைத்தவர் பொங்கல் , இட்லி ,பூரி என்று வரிசையாக பரிமாறியவர் சட்னி கிண்ணங்களை எடுத்து அருகில் வைத்து விட்டு “சாப்பிட்டு வாங்க நான் ஹால்ல இருக்கேன்” என்றுவிட்டு புதுமணத் தம்பதிகளுக்கு தனிமை வழங்கி நாசூக்காக வெளியேறினார்.


அவர் செல்லவே காத்திருந்தவனைப் போல தன் இலையில் இருந்த பாதாம் அல்வாவை எடுத்தவன் தன் மனைவிக்கு ஊட்டிவிட எத்தனிக்க…அவளோ வேண்டாமென மறுத்து ”நீங்க சாப்பிடுங்க நான் சாப்பிட்டுக்கிறேன்!” என்க அவன் பிடிவாதமாக ஊட்ட எத்தனிக்க அவனது பிடிவாதத்தில் மனதுக்குள் சலித்தாலும் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள்.. சட்டென்று இடது கையால் அவளது முகத்தை பற்றி அவளது இதழோடு இதழ் சேர்த்தவன் சிறிதுநேரத்திற்கு பிறகு விலக..இப்போது இனிப்பு அவனது வாய்க்குள்ளே இடமாறியிருக்க….கள்ளச்சிரிப்போடு ரசித்து சாப்பிட்டவன்…
“வாவ்!!.... இதுவரை நான் இப்படியொரு பாதாம் அல்வாவை சாப்பிட்டதேயில்லை செம்ம டேஸ்ட் என்று சப்புக் கொட்ட…கணவனின் செயலில் முதலில் திகைத்தவள் அவனது பேச்சில் முகம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.
சில பல சீண்டல்களூடன் காலை உணவை முடித்துவிட்டு வரவேற்பரையில் தன் தந்தைக்கு அருகில் சென்று அமர்ந்தான் பாண்டியன்.


“கிளம்பலாமா…பாண்டி என்றவரை யோசனையோடு பார்த்தவன்…
“அப்பா அதுக்கு முன்னாடி எனக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்”!


“சொல்லுப்பா என்ன விஷயம்?!” என்றவரிடம்


“நான் இன்னும் ஒரு வாரத்தில் டியூட்டியில் ஜாய்ன் பண்ணனும்பா…அதனால சென்னையில் ரிசப்ஷன் முடிஞ்சு அப்படியே மறுவீட்டு பங்ஷனை முடிச்சிட்டு அங்கிருந்தே ஊருக்கு கிளம்பலாம்னு நினைக்கிறேன்”!. என்க


மகனது வார்த்தைகளை கேட்டவருக்கு முதலில் வருத்தமாக இருந்த போதும் அவனது வேலையை கருத்தில் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டார் அருணாச்சலம்.. ஆனால் பார்வதியோ திரும்பவும் மகனை பிரிய வேண்டுமே என்ற கவலையில் முகம் சுருங்கிப் போனார்.


“ என்னய்யா…. திடீர்னு இப்படி சொல்ற உறவுக்காரவங்க எல்லாம் உங்க ரெண்டு பேரையும் விருந்துக்கு அழைச்சிருக்காங்க போகலைன்னா தவறா எடுத்துக்குவாங்க அதுமட்டுமல்ல அருணாவும் உங்களை விருந்துக்கு அழைக்கனும்னு சொல்லிட்டிருந்தா .. என்று கவலைபட்டவரை சமாதானப் படுத்த எழுந்தவன் அன்னையை நெருங்கி அவரது கைகளை பற்றிக் கொண்டவன்….


“அம்மா… அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை நான் உடனடியா கிளம்பியாகனும் அத்தை வீட்டுக்கு வேணும்னா ரிசப்ஷன் மூடிஞ்சதும் போறோம் மத்தவங்களை அப்பா சமாளிப்பார். என்ற மகனின் அழுத்தமான குரலில் …இதற்குமேல் அவனை வற்புறுத்த விரும்பாதவராய் அமைதியாகிவிட்டார் பார்வதி.




(கையணைக்க ..வருவான்!!)



ஹாய் பேபீஸ் கதையின் 20ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் பேபீஸ்😍😍😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க...!! நாளைக்கு எபி போடுறேன்பா...அப்ப இப்பவும் நீ எபி போட வரலையான்னு நீங்க கடுப்பாவறது எனக்கு புரியுது...அதுக்கு தான் ஒரு சின்ன பிட்டு போட்டு உங்களை கூல் பண்ண வந்தேன் ஹி...ஹி..ஹி😁😁😁 மன்னிச்சு பேபீஸ்நான் ஓடிட்டேன்.🏃🏃🏃🏃🏃


டீசர்...

மனைவியுடனான நேற்றைய இரவின் இனிமையான நினைவுகள் மனதில் எழ மனைவியுடனான இந்த தனிமையான கார் பயணம் அவனுள் உற்சாகத்தை .விதைத்தது. ஜன்னல் வழியே பார்வையை பதித்திருந்தவளின் மீது அவனது பார்வை இரசனையாய் படிந்தது. கார்கால மேகமாய் விரித்து விட்டிருந்த கூந்தலில் மல்லிகை சூடி மேனியை மயில் கழுத்து நிற பட்டுச்சேலை தழுவியிருக்க காதோர கற்றைக்குழல் காற்றில் அசைந்து அவளது மாம்பழக் கன்னத்தில் விளையாட தேவதையின் எழிலோடு தன்னருகே அமர்ந்திருந்தவளை அணைக்க துடித்த தன் கரங்களை தலையைக் கோதி அடக்கியவன்.

“பேபி…”! என்று மென்மையாய் அழைக்க… கணவனது குரலில் தன் யோசனையிலிருந்து மீண்டவள்..அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“தலைவலி இப்ப எப்படி இருக்கு…?! முடியலைன்னா பின்னாடி சீட்ல போய் படுத்துக்கிறியா பேபி ?!”

கணவனின் அருகாமையை இழக்க விரும்பாதவளாய் தலையை அவசரமாக ஆட்டி மறுத்தவள் “இல்ல இப்ப கொஞ்சம் பரவாயில்லை நான் இங்கேயே இருக்கேன்…!!” என்க அவளது தலையாட்டலை ரசித்துச் சிரித்தவன். மனதில் உற்சாகம் பொங்கி வழிய காரில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தான். அதில் அவனது விருப்ப பாடலான....

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே

(உன்னிடம்)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
குழலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது

(உன்னிடம்)
என்ற பாடலை தானும் சேர்ந்து பாடியவன்… உல்லாசமாய் தன்னவளைப் பார்த்து கண்களைசிமிட்ட … கணவனது கம்பீரமான குரலிலும்… பாடலின் வரிகள் உணர்த்திய செய்தியிலும் கண்சிமிட்டலிலும் உணர்வுகள் கிளர்ந்தெழ அவள் முகம் அந்திவானமாய் சிவந்தது. மனைவியின் நாணச் சிவப்பு அவனை வாவென அழைக்க காரை சட்டென்று பாதையின் ஓரமாக நிறுத்தியவன்.. அவள் உணருமுன்பே தன்னவளின் புறம் திரும்பி அவளது இடையில் கையிட்டு தன்னை நோக்கி இழுத்தவன்.. அவளை இறுக்கி அணைத்து அவளது கூந்தலில் முகம் புதைத்து மூச்சை உள்ளிழுத்து நுகர்ந்தவனின் உணர்வுகள் தன்னவளுக்கே உரிய இனிமையான வாசத்தில் அணையுடைக்க.. தாபத்துடன் அவளின் இதழில் முத்த கவிதையெழுத தொடங்கினான்…!!
முடிவற்ற தேடலாய் அவன் கவிதை நீள…. கவிதைக்கான பரிசாய் இதழ்த்தேனை வாரி அவள் வழங்க…. அதில் கள்ளுண்ட வண்டாய் அவன் குதுகலித்தான்.…அவனது இதழ்தீண்டலில் உடலும் உள்ளமும் சிலிர்க்க… தன்னை மறந்தாள் பாவை!!.

சாலையில் சென்ற வாகனத்தின் ஒலியில் கலைந்தவர்கள்.. தங்கள் நிலையுணர்ந்து மனமேமில்லாது பிரிய தமிழரசி வெட்கத்துடன் விலகி அமர.. பாண்டியோ…தன் உணர்வுகளை அடக்கும் பொருட்டு தன் கழுத்தை அழுத்தமாய் வருடிக் கொண்டே மென்னநகையோடு தன்னவளை பார்க்க அவளோ வெட்கத்திலும் அவனது அருகாமையிலும் கிளர்ந்த உணர்வுகளிலும் தடுமாறித் தலையை குனிந்து கொண்டாள். மனைவியின் நிலையை உணர்ந்து கொண்டவன். அவளை கள்ளச் சிரிப்போடு நோக்க… தமிழரசியோ அவனை சிறு கோபத்தோடு முறைத்தவள்..!

“ப்ளீஸ் வேலு…!! காரை எடுங்க…அத்தை மாமா நம்மளை காணோம்னு தேடப் போறாங்க” என்க
அவனோ அவளது அழைப்பில் கண்கள் மின்ன..
“நான் காரை எடுக்கனும்னா அதுக்கு நீ முதல்ல என் பக்கத்தில் நெருங்கி உட்காரனும்… இப்ப எதுக்குடி என்னைவிட்டு இவ்வளவு தூரம் தள்ளிப் போய் உட்கார்ந்து இருக்க?! நமக்குள்ள எதுக்குடி இவ்வளவு கேப்பு..?? என்று தன்னை விட்டு விலகி ஜன்னல் ஓரமாய் ஒட்டி அமர்ந்திருந்தவளை அவன் சுட்டிக்காட்டி எரிச்சலுடன் வினவ..

வார்த்தைக்கு வார்த்தை தன்னை அவன் டி போட்டு அழைப்பதை மனதுக்குள் ரசித்தாலும் வெளியே அவனை முறைத்தவள்..

“ஒண்ணும் வேணாம்… நான் இங்கேயே இருக்கேன் நீங்க சும்மா இருக்க மாட்டீங்க முதல்ல வண்டியை எடுங்க டைமாகுது” என்க…

“சும்மாயில்லாம நான் என்ன பண்ணேன் பேபி ?!” என்று அறியாதவனைப் போல அவன் கேட்டு வைக்க…

“ராஸ்கல்…!! ஒண்ணுமே தெரியாத பச்சபுள்ள மாதிரி கேட்குறான் பாரு கேள்வி!!” என்று மனதுக்குள் அவள் முணுமுணுக்க.. அவளது முகத்திலிருந்து அவளது மனதைப் படித்தவன். சத்தமாக சிரித்து வைத்தான்.
அதற்கும் அவனை முறைத்தவள்
“இப்ப வண்டியை எடுக்க போறீங்களா இல்லையா?! என்று அவள் மிரட்ட…

அவனோ கண்களில் சிரிப்புடன் “அடேங்கப்பா என்ன பண்ணேன்னு சந்தேகம் கேட்டது ஒரு குத்தமாடி?! அதுக்கு பதில் சொல்லாம பச்சைபுள்ளையை இப்படி மிரட்டுற”!? என்று போலியாக சலித்துக் கொண்டாலும் பிடிவாதமாக காது கேளாதவனைப்போல சட்டமாக அமர்ந்திருக்க.. அவனது அடாவடியில்…வேறு வழியின்றி அவள் தான் அவனை நெருங்கி அமர வேண்டியிருந்தது. அவள் அவனை ஒட்டி அமர்ந்ததும் வெற்றி புன்னகையுடன்..

“ம்ம்ம்…. இது நல்ல பொண்ணுக்கு அழகு….வேட்டவலத்திலிருந்து சென்னை வரைக்கும் வண்டியை ஓட்டப்போறவனுக்கு ஒரு எனர்ஜி பூஸ்டர், எண்டர்டெயின்மெண்ட் இதெல்லாம் இல்லைனா எப்படி??!! நீ பாட்டுக்கு அந்த மூலையில ஜன்னலை கட்டிப்பிடிச்சு உட்கார்ந்தா நான் என்ன பண்றது?!! என்று ஒற்றைப்புருவத்தை உயர்த்தி நியாயம் கேட்டவனின் அழகை மனதுக்குள் ரசித்தவள் வெளியே போலியாய் அவனை முறைத்து வைத்தாள். அதன் பிறகு அவன் கரங்களில் கார் சீறிக் கொண்டு சென்னையை நோக்கி பறந்தது. கணவனது அடாவடி பேச்சில் தானாக விரிய ஆரம்பித்த இதழ்களை முகத்தை திருப்பி அவனுக்கு தெரியாது மறைத்துக் கொண்டாள் தமிழரசி. சாலையில் முழு கவனத்துடன் வாகனத்தை செலுத்த ஆரப்பித்தவனின் உறுதியான கரங்களில் அவளது பார்வை படிய அந்த வலிய கரங்களின் பிடியில் தான் சிக்குண்ட தருணங்களை அசைபோட்டவளின் உடலில் சிலிர்ப்பு எழுந்து உடலெங்கும் பரவ சிவக்க ஆரம்பித்த கன்னங்களை உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்து அவன் அறியாமல் மறைத்துக்கொண்டாள்.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 21


9234 9238


கணவன் தன்னுடைய வேலையைப் பற்றி கூறியதும் அவளது முகத்தில் பெருங்கவலையையும் கலக்கமும் குடிகொண்டது இத்தனை நாள் எப்படியோ நேற்று இரவு முதல் தன் ஊனிலும் உயிரிலும் கலந்துவிட்டவனை இனி எந்நிலையிலும் பிரிய அவள் தயாராக இல்லை. அதே சமயம் அவள் எதற்காக அவனது பணியை வெறுத்தாளோ.. இனி தினம் தினம் அதை அவள் எதிர்கொண்டாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்து அவளை அச்சுறுத்தியது. இதற்காகத்தானே அவனை அவள் மறுத்தாள். ஆனால் விதி அவனை தன்னுடன் இணைத்து வேடிக்கை பார்க்கிறதே… !! என்று எதையெதையோ நினைத்து மனதை வருத்திக் கொண்டாள்.அவளது முகவாட்டத்தை கண்டு பதறிய பார்வதி..


“தமிழ் என்னாச்சுடா..?! ஏன் ஒருமாதிரியா இருக்க முகமெல்லாம் வாடிப்போயிருச்சே என்று வினவ… அப்போதுதான் மனைவியை திரும்பிப் பார்த்தான் பாண்டி.


அவளது திடீர் முகவாட்டத்திற்கான காரணத்தை உணர்ந்தவனின் முகம் இறுகியது. ஆயினும் மனைவியின் வாடிய முகத்தை பொறுத்துக் கொள்ள இயலாதவனாய் அவளருகில் சென்று…


“என்னாச்சு பேபி.. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா என்றான் ஆராயும் பார்வை பார்த்தவாறு..


“ஒ……ஒண்ணுமில்லை இலேசா தலை வலிக்குது…என்றவளின் தலையில் கழுத்தில் கை வைத்துப் பார்த்தவன்.


“சரி வா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு அப்புறமா வேணும்னா கிளம்பலாம்” என்க.. அருணாச்சலமும் பார்வதியும் அதையே ஆமோதித்தனர்.


தமிழரசியின் மனதில் பெரும் குழப்ப மேகங்கள் சூழ்ந்திருந்தாலும் தன்னையே கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த மற்ற மூவருக்காக தன்னை சமாளித்துக் கொண்டவளாய்…


“இல்லை… கிளம்பலாம்”! வேணும்னா கார்ல படுத்து ரெஸ்ட் எடுத்துக்கிறேன்” என்ற மனைவியை துளைக்கும் பார்வை பார்த்தான் பாண்டி. சற்று முன்பு வரை வெட்கத்தில் பூரித்திருந்த மனைவியின் முகம் இப்போது வாடி வெளுத்திருப்பதற்கான காரணம் என்ன வென்பதை அவளது முகத்தில் படிக்க முயன்றான்.அதை உணர்ந்தவளாய் அவனது பார்வையை தவிர்த்து தலையை குனிந்து கொண்டாள் தமிழரசி.


அதன் பிறகு டிரைவர் இருவரின் லக்கேஜ்களை கொண்டு வந்த அவர்கள் காரில் வைத்து விட்டு செல்ல.. புதுமணத் தம்பதிகள் அவனது காரிலும் அருணாச்சலமும் பார்வதியும் உறவினர்களோடு தனித்தனி காரிலும் சென்னையை நோக்கி பயணித்தனர்.


இளா வரவேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்னையிலே தங்கிவிட்டதால் அருணாச்சலம் தன் குடும்பத்தாருடனும் உறவுகளுடனும் சென்னையை நோக்கி பயணித்தார்


வேட்டைவலத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் வெண்ணெயாய் வழுக்கிச் சென்று கொண்டிருந்தது பாண்டியின் சொகுசுக்கார்.


கார் கிளம்பியதிலிருந்து தம்பதியினரிடையே பலத்த மௌனமே நிலவியது. பாண்டி காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தாலும்… அவனது மனம் மனைவியின் திடீர் முகவாட்டத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற யோசனையில் உழன்றது. அவளை பெண்பார்க்க சென்ற அன்று அவள் தன்னுடனான திருமணத்தை மறுத்ததும் அதற்காக அவள் கூறிய காரணமூம் நினைவில் எழுந்து அவனது முகம் இறுகிய போதும் அதுபற்றி பேசி தற்போதைய இனிமையான மனநிலையைக் கெடுத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி மனைவியுடனான நேற்றைய இரவின் இனிமையான நினைவுகள் மனதில் எழ இந்த தனிமையான கார் பயணம் அவனுள் உற்சாகத்தை .விதைத்தது. ஜன்னல் வழியே பார்வையை பதித்திருந்தவளின் மீது அவனது பார்வை இரசனையாய் படிந்தது. கார்கால மேகமாய் விரித்து விட்டிருந்த கூந்தலில் மல்லிகை சூடி மேனியை மயில் கழுத்து நிற பட்டுச்சேலை தழுவியிருக்க காதோர கற்றைக்குழல் காற்றில் அசைந்து அவளது மாம்பழக் கன்னத்தில் விளையாட தேவதையின் எழிலோடு தன்னருகே அமர்ந்திருந்தவளை அணைக்க துடித்த தன் கரங்களை தலையைக் கோதி அடக்கியவன்.


“பேபி…”! என்று மென்மையாய் அழைக்க… கணவனது குரலில் தன் யோசனையிலிருந்து மீண்டவள்..அவனைத் திரும்பிப் பார்த்தாள்.


“தலைவலி இப்ப எப்படி இருக்கு…?! முடியலைன்னா பின்னாடி சீட்ல போய் படுத்துக்கிறியா பேபி ?!”


மனதில் ஆயிரம் கலக்கங்கள் இருந்தாலும் கணவனின் அருகாமையில் அவையெல்லாம் மறைய மனதில் ஏதோ ஒரு நிம்மதி குடி கொள்ள அதை இழக்க விரும்பாதவளாய் தலையை அவசரமாக ஆட்டி மறுத்தவள்…


“இல்ல இப்ப கொஞ்சம் பரவாயில்லை நான் இங்கேயே இருக்கேன்…!!” என்க அவளது தலையாட்டலை ரசித்துச் சிரித்தவன். மனதில் உற்சாகம் பொங்கி வழிய காரில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தான். அதில் அவனது விருப்ப பாடலான....


"உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே

(உன்னிடம்)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
குழலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது.."!

(உன்னிடம்)


என்ற பாடலை தானும் உடன் சேர்ந்து பாடியவன்… உல்லாசமாய் தன்னவளைப் பார்த்து கண்களைசிமிட்ட … கணவனது கம்பீரமான குரலிலும்… பாடலின் வரிகள் உணர்த்திய செய்தியிலும் கண்சிமிட்டலிலும் உணர்வுகள் கிளர்ந்தெழ அவள் முகம் அந்திவானமாய் சிவந்தது. மனைவியின் நாணச் சிவப்பு அவனை வாவென அழைக்க காரை சட்டென்று பாதையின் ஓரமாக நிறுத்தியவன்.. அவள் உணருமுன்பே தன்னவளின் புறம் திரும்பி அவளது இடையில் கையிட்டு தன்னை நோக்கி இழுத்தவன்.. அவளை இறுக்கி அணைத்து அவளது கூந்தலில் முகம் புதைத்து மூச்சை உள்ளிழுத்து நுகர்ந்தவனின் உணர்வுகள் தன்னவளுக்கே உரிய இனிமையான வாசத்தில் அணையுடைக்க.. தாபத்துடன் முகத்தை நிமிர்த்தி அவளின் இதழில் முத்த கவிதையெழுத தொடங்கினான்…!. முடிவற்ற தேடலாய் அவன் கவிதை நீள…. கவிதைக்கான பரிசாய் இதழ்த்தேனை வாரி அவள் வழங்க…. அதில் கள்ளுண்ட வண்டாய் அவன் குதுகலித்தான்.…அவனது இதழ்தீண்டலில் உடலும் உள்ளமும் சிலிர்க்க… தன்னை மறந்தாள் பாவை!!.



சாலையில் சென்ற வாகனத்தின் ஒலியில் கலைந்தவர்கள்.. தங்கள் நிலையுணர்ந்து மனமேயில்லாது பிரிய தமிழரசி வெட்கத்துடன் விலகி அமர்ந்தாள். பாண்டியோ…. தன் உணர்வுகளை அடக்கும் பொருட்டு தன் கழுத்தை அழுத்தமாய் வருடிக் கொண்டே மென்னநகையோடு தன்னவளை பார்க்க அவளோ வெட்கத்திலும் அவனது அருகாமையிலும் கிளர்ந்த உணர்வுகளிலும் தடுமாறித் தலையை குனிந்து கொண்டாள். மனைவியின் நிலையை உணர்ந்து கொண்டவன். அவளை கள்ளச் சிரிப்போடு நோக்க… தமிழரசியோ அவனை சிறு கோபத்தோடு முறைத்தவள்..!


“ப்ளீஸ் வேலு…!! காரை எடுங்க…அத்தை மாமா நம்மளை காணோம்னு தேடப் போறாங்க” என்க


அவனோ அவளது அழைப்பில் கண்கள் மின்ன..!


“நான் காரை எடுக்கனும்னா அதுக்கு நீ முதல்ல என் பக்கத்தில் நெருங்கி உட்காரனும்… இப்ப எதுக்குடி இவ்வளவு தூரம் தள்ளிப் போய் உட்கார்ந்து இருக்க?! நமக்குள்ள எதுக்குடி இவ்வளவு கேப்பு..?? என்று தன்னை விட்டு விலகி ஜன்னல் ஓரமாய் ஒட்டி அமர்ந்திருந்தவளை சுட்டிக்காட்டி எரிச்சலுடன் அவன் வினவ.. வார்த்தைக்கு வார்த்தை தன்னை அவன் டி போட்டு அழைப்பதை மனதுக்குள் ரசித்தாலும் வெளியே அவனை முறைத்தவள்..


“அதென்ன கொஞ்சும் போது மட்டும் பேபி… கோபம் வந்தா வாடி …போடியா..??”

ஹா…ஹா…என்று வாய்விட்டு சிரித்தவன்.. மனைவியின் செல்லக்கோபத்தில் கிளர்ந்தான். அவனது பார்வை மாற்றத்தை உணர்ந்தவள்…


“ஒண்ணும் வேணாம்… நான் இங்கேயே இருக்கேன். நீங்க சும்மா இருக்க மாட்டீங்க முதல்ல வண்டியை எடுங்க டைமாகுது” என்க…


“சும்மாயில்லாம நான் அப்படி என்ன பண்ணேன் பேபி ?!” என்று அறியாதவனைப் போல அவன் கேட்டு வைக்க…


“ராஸ்கல்…!! ஒண்ணுமே தெரியாத பச்சபுள்ள மாதிரி கேட்குறான் பாரு கேள்வி!!” என்று மனதுக்குள் அவள் முணுமுணுக்க.. அவளது முகத்திலிருந்து மனதைப் படித்தவன். சத்தமாக சிரித்து வைத்தான்.அதற்கும் அவனை முறைத்தவள்..


“இப்ப நீங்க வண்டியை எடுக்க போறீங்களா இல்லையா?! “ என்று அவள் மிரட்ட…


அவனோ கண்களில் சிரிப்புடன் “அடேங்கப்பா என்ன பண்ணேன்னு சந்தேகம் கேட்டது ஒரு குத்தமாடி?! அதுக்கு பதிலை சொல்லாம இந்த பச்சைபுள்ளையை இப்படி மிரட்டுற”!? என்று போலியாக சலித்துக் கொண்டாலும் பிடிவாதமாக காது கேளாதவனைப்போல வண்டியை எடுக்காமல் சட்டமாக அமர்ந்திருக்க.. அவனது அடாவடியில்… வேறு வழியின்றி அவள் தான் அவனை நெருங்கி அமர வேண்டியிருந்தது. அவள் அவனை ஒட்டி அமர்ந்ததும் வெற்றி புன்னகையுடன்..


“ம்ம்ம்…. இது நல்ல பொண்ணுக்கு அழகு…. சென்னை வரைக்கும் வண்டியை ஓட்டப்போறவனுக்கு ஒரு எனர்ஜி பூஸ்டர், எண்டர்டெயின்மெண்ட் இதெல்லாம் இல்லைனா எப்படி??!! நீ பாட்டுக்கு அந்த மூலையில ஜன்னலை கட்டிப்பிடிச்சு உட்கார்ந்தா நான் என்ன பண்றது?!! என்று ஒற்றைப்புருவத்தை உயர்த்தி நியாயம் கேட்டவனின் அழகை மனதுக்குள் ரசித்தவள் வெளியே போலியாய் அவனை முறைத்து வைத்தாள். அதன் பிறகு அவன் கரங்களில் கார் சீறிக் கொண்டு சென்னையை நோக்கி பறந்தது. கணவனது அடாவடி பேச்சில் தானாக விரிய ஆரம்பித்த இதழ்களை முகத்தை திருப்பி அவனுக்கு தெரியாது மறைத்துக் கொண்டாள் தமிழரசி.


சாலையில் முழு கவனத்துடன் வாகனத்தை செலுத்த ஆரப்பித்தவனின் உறுதியான கரங்களில் அவளது பார்வை படிய அந்த வலிய கரங்களின் பிடியில் தான் சிக்குண்ட தருணங்களை அசைபோட்டவளின் உடலில் சிலிர்ப்பு எழுந்து உடலெங்கும் பரவ சிவக்க ஆரம்பித்த தன் கன்னங்களை உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்து அவன் அறியாமல் மறைத்துக்கொண்டாள்.


மனைவியின் ஓரப்பார்வைகளை உணர்ந்த போதும் அதன் பிறகு அவளை மேலும் சீண்டாமல் சாலையில் தன் கவனத்தை பதித்தான்.



சிறிது நேரத்திற்கு பிறகு தன் தோளில் பாரத்தை உணர்ந்தவன் திரும்பிப் பார்க்க… அவனது மனையாள் அவனது தோள் வளைவில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். இதழ்கள் புன்னகையில் தானாய் விரிய… அவளது தூக்கம் கலையாதவாறு நெருங்கி அமர்ந்து அவளை வாகாக தாங்கிக் கொண்டான். மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலை நிறுத்தியவனின் பார்வை மனைவியின் மீது படிய அழகிய பூவாய் தன் தோளில் உறங்கிக் கொண்டிருந்தவளை தன் இடது கையால் வளைத்துக் கொண்டவன் வலது கையால் வாகனத்தை லாவகமாய் ஓட்டினான்.


தூக்கத்திலும் அவனது அணைப்பை உணர்ந்தவளாய் அவளது இதழில் மென்னகை துலங்க அவனுடன் மேலும் ஒன்றியவளை பார்த்தவனின் உணர்வுகள் மறுபடியும் கட்டவிழ்க்க…. மனைவியின் உறக்கத்தை கலைக்க மனமற்றவனாய் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளது நெற்றியில் மென்மையாய் தன் இதழை ஒற்றிவிட்டு சாலையில் கவனத்தை பதித்தான்.


சென்னையின் அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் பாண்டியன்-தமிழரசி, கதிரவன்-தாமரை இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியால் களைகட்டியிருந்தது. மணமக்கள் இருவரும் தயாராகி தங்கள் இணைகளுடன் முகம் மலர மேடையில் வந்து நிற்க.. இருவீட்டாரின் உறவுகளும்…நண்பர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் அவர்களின் ஜோடிப் பொருத்ததில் பிரம்மித்து தான் போயினர். அதிலும் சொக்கநாதரின் உறவுகள் அருணாச்சலத்தின் அந்தஸ்த்திலும் செல்வாக்கிலும் வாயைப்பிளந்து இலேசான பொறாமை உணர்வோடு வரவேற்பில் அமர்ந்திருந்தனர். ஆண்கள் இருவரும் அழகிய கோட்சூட் அணிந்து மிடுக்காய் நிற்க…பெண்கள் இருவரூம் டிசைனர் லெஹங்கா அணிந்து பொருத்தமான வைர நகைகளோடு வானத்து தாரகைகளாய் மின்னினர். எல்லையில்லாத மகிழ்வோடு வரவேற்பு இனிதாய் முடிந்து நிறைவுடன் இல்லம் திரும்பினர் அனைவரும்.


அடுத்த நாள் கதிரவனையும் தாமரையை யும் மறுவீட்டு விருந்துக்காக அழைத்துக்கொண்டு அருணாச்சலம் குடும்பத்தினர் வேட்டைவலம் கிளம்ப..பாண்டியும் தமிழரசியும் சொக்கநாதர் இல்லத்திலேயே மருவீட்டு விருந்துக்காக தங்கிவிட்டனர்.


அனைத்தும் முடிந்து அருணாவின் வீட்டு விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பாண்டி… தன் மனையாளுடன் ராஞ்சி கிளம்பும் நாளும் வந்தது.



சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான தளத்தில் இரு வீட்டாரும் குழுமியிருந்தனர். அனைவர் முகத்திலும் வருத்தமிருப்பினும் இந்த முறை பாண்டி திரூமணம் முடித்து தன் மனைவியுடன் ஜோடியாக கிளம்புவதில் ஒரு நிறைவு இருக்கத்தான் செய்தது. அனைவரிடமும் தமிழரசி கண்ணீரோடு விடை பெற.. பாண்டி சிறு தலை அசைவுடன் அனைவரிடமும் விடை பெற்றான்.

கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த தன்னவளின் கண்ணீரைத் துடைத்தவன் இடக்கையால் தோளோடு அணைத்து மறுகையால் லக்கேஜ் டிராலியை தள்ளிக்கொண்டு முன்னே நடக்க… அவனது கை வளைவிலிருந்து அனைவரையும் திரும்பி பார்த்துக் கொண்டே விடை பெற்று அவனுடன் சென்றாள் தமிழரசி.



மகளது பிரிவை எண்ணி சொக்கநாதர் குடும்பத்தினர் வருந்தினாலும் மருமகனின் உரிமையான செய்கையில் மனநிறைவுடன் அவர்களுக்கு சந்தோஷமாகவே பிரியாவிடையளித்தனர்.


மகனையும்…மகளையும் நினைத்து கண்கள் கலங்க நின்ற தங்கள் துணைவியரை பார்வையால் ஆறுதல் படுத்தினர் அருணாச்சலமும் சொக்கநாதரும்.


இளாவிற்கும் நண்பனின் பிரிவு வருத்தத்தை அளித்த போதும் இம்முறை தனியாக இல்லாமல் தமிழரசியுடன் இணைந்து சென்றது அவனது மனதுக்கு நிறைவாக இருந்தது. அதே நிறைவுடன் பார்வதியையும் அருணாச்சலத்தையும் பார்த்தவன்…அவர்களின் அருகே சென்று


“எப்படியோ நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்கம்மா…பாண்டி அவன் பொண்டாட்டியோட தான் இங்கிருந்து போகனும்னு நீங்க ஆசைப்பட்டது நிறைவேறிடுச்சு..! என்றவனை வாஞ்சையோடு பார்த்தவர்..


“ஆமாய்யா மனசு நிறைச்சிருக்கு. அதேபோல ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து உனக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டா எங்க கடமையை முழுசா முடிச்ச திருப்தி கிடைக்கும் என்றவரை ஒரு கணம் அதிர்வோடு நோக்கியவன் அடுத்த கணமே தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு அவரைப் பார்த்து அழகாக புன்னகைத்தவன்…


“அம்மா…!! ஆளை விடுங்க எனக்கு இப்போதைக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம். அதுக்கெல்லாம் இப்ப எனக்கு நேரமுமில்லை. முதல்ல என்னோட தொழில்ல நான் நிறைய சாதிக்கனும். அருணாச்சலம் கன்ஸ்ட்ரக்ஷனை பெரிய அளவில் நம்பர் ஒன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியா கொண்டு வரனும். அதுக்கு முதல்படியா சென்னையில் என்னோட முதல் கிளையை .ஆரம்பிக்கனும் அது தான் என்னோட கனவு. அதுவரைக்கும் எனக்கு வேற எந்த நினைப்பும் இல்லை. என்று தீர்க்கமாக உரைத்தவனை அருணாச்சலம் பெருமையாக பார்க்க… சொக்கநாதர் குடும்பத்தினரும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.


தாமரை அவனைப் பார்த்து புன்னகைத்தவள்… “அண்ணா உங்க இலட்சியங்கள் எல்லாம் சீக்கிரமே நிறைவேற என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்னா!!. என்க. மனைவியின் மலர்ந்த முகத்தை பார்வையால் வருடியவனாய் கதிரும் புன்னகையுடன் தன் வாழ்த்தை இளாவிடம் பகிர்ந்துகொண்டான். பின்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரு குடும்பத்தாரும் அவரவர்களின் இல்லத்திற்கு மனநிறைவுடன் கிளம்பினர்.


அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னரும் ஒருவித பதற்றத்துடன் இருந்தாள் தமிழரசி. முதல் விமானப் பயணம், இதுவரை பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு முற்றிலும் புதிதான சூழலில் வாழ வேண்டிய கட்டாயம்… அங்கே தனக்கு என்ன காத்திருக்கிறதோ என்ற கலக்கம் இவை அனைத்தும் அவளை முற்றிலும் நிலை குலைய வைக்க கணவன் கூப்பிட்டதைக்கூட உணராமல் தன்னில் மூழ்கியிருந்தவளை கூர்ந்து நோக்கியவன் அவளது மனதின் தவிப்பை உணர்ந்தவனாய் தானே அவளுக்கு சீட் பெல்டை மாட்டி விட்டான். அவனது ஸ்பரிசத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தவளை தோளைச் சுற்றி கையிட்டு இறுக்கி அணைத்தவன் அவளது கரத்தோடு தன் கரங்களை பிணைத்துக்கொண்டவன். அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு…மென்குரலில்..


“இந்த குட்டி மண்டைக்குள்ள அப்படி என்னத்தை போட்டு குழப்பிக்கிற…?? எதைப்பற்றியும் யோசிக்காம நிம்மதியா கொஞ்ச நேரம் துங்கு பேபி.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றவனின் வார்த்தைகளிலும் அணைப்பிலும் மனதில் இத்தனை நேரம் இருந்த சஞ்சலங்கள் விடைபெற்றுச் செல்ல அவனது மார்பில் வாகாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் தமிழரசி.


மனைவியை சமாதானப்படுத்தி உறங்க வைத்த பாண்டியின் நினைவோ தன்னவளை சுற்றியே வலம் வந்தது. மனைவி எதையோ தன் மனதில் போட்டு குழப்பிக்கொண்டு தவிப்பதை அவன் உணர்ந்தேயிருந்தான். ஆயினும் அதற்கான காரணத்தை அறிய அவனும் முயலவில்லை அவளும் சொல்லவில்லை. அது என்னவாக இருந்த போதும் முதலில் அறிந்து அதை போக்க வேண்டும் என முடிவு எடுத்தவன் தானும் அவளை அணைத்து நிம்மதியாய் உறங்க முற்பட்டான். விமான நிலையத்தில் தங்களுக்காக காத்திருக்கும் ஆபத்தை அறியாமல்.


அடுத்த ஐந்து மணி நேரத்தில் விமானம் ராஞ்சியின் பிர்ஷா முண்டா விமானநிலையத்தில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் இருந்து தன் மனைவியுடன் வெளியே வந்தவனை வரவேற்க பெரிய போலீஸ் படையே காத்திருந்தது. அவனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல்நிலையங்களில் பணிபுரியும் அத்தனை பேரும் சீருடை உடையணிந்து தங்கள் அபிமான மேலதிகாரியை வரவேற்க கையில் பூங்கொத்தோடு காத்திருந்தனர்.


மற்ற விமானப்பயணிகள் இத்தனை போலீஸார் எதற்காக இங்கே குவிந்திருக்கிறார்கள் என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க… மனைவியோடு ஜூன்ஸ் பேண்ட் டீ-சர்ட்டும் கண்களில் கூலர்ஸூமாய் மிடுக்காக நடந்து வந்தவனை அங்கிருந்த அத்தனை இளம்பெண்களும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதுபோன்ற ஆர்வப்பார்வைகளை வழக்கம் போல கண்டு கொள்ளாதவனாக மனைவியுடன் வேகமாய் கடந்தாலும் சுற்றுப்புறத்தை கூர்ந்து ஆராய்ந்தது அவனது லேசர் பார்வை!. தன்னை வரவேற்கும் பொருட்டு அங்கே நின்றிரூந்தவர்களை பார்த்தவன் மனதில் அதிருப்தியுடன் அவர்களை நோக்கி நடந்தான்.


திக்கு தெரியாத காட்டில் தனியே மாட்டிக்கொண்ட மழலையாய் ராஞ்சி விமான நிலையத்தை ஒருவித கலக்கத்தோடும், பயத்தோடும் பார்த்தவாறே பாண்டியுடன் நடந்த தமிழரசி தன் இடது கையை அவன் வலக்கையோடு இறுக்கமாய் பிணைத்துக்கொண்டு அவனை ஒட்டி நடந்து வந்தவளை பார்த்தவனின் மனம் ஆணாய் கர்வம் கொண்டது. அவனும் மனைவியின் கரத்தை அழுத்தமாய் பற்றிக்கொண்டான். அதில் அவளது மனது சற்றே நிம்மதி அடைந்தது..


அங்கே முதலாவதாக நின்றிருந்த அவனது நண்பனும் இன்ஸ்பெக்டருமான சுனில் கையில் வைத்திருந்த பூங்கொத்தை இருவருக்கும் கொடுத்துவிட்டு…


“ஹாய் சார்….!! வெல்கம் பேக் டூ ராஞ்சி!. என்று விறைப்பாய் சல்யூட் அடித்து வரவேற்றவன். தமிழரசியை இரு கரங்கள் குவித்து மரியாதையாக “வெல்கம் மேம்” என்று ஆங்கிலத்தில் வரவேற்று ஒதுங்கி நிற்க… மற்றவர்களும் இதே போன்று மலர்க்கொத்துடன் அவர்களை வரவேற்றனர். அனைவரின் வரவேற்பையும் தலை அசைவில் ஏற்றவன் சுனிலிடம் மற்றவர்கள் அறியாது மெல்லிய குரலில்..


“வாட் இஸ் திஸ் சுனில்..!?? வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்..??”


“யஹா க்யா சல் ரஹாஹே சுனில்?
துஜே பதா ஹேனா…? இஸ் தரஹ் கா வ்யவஹார் மூஜே பசந்த் நஹீ”!


(“இங்கே என்ன நடக்குது சுனில்…. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியாது!?” )


என்று இந்தியில் வினவ அவனைப்பற்றி தெரிந்தவனாதலால் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றவனை அவனது தக்க சமயத்தில் அலறி காப்பாற்ற… பாண்டியை பார்த்து “ஒன் மினிட் சார்..!!” என்றவன் சற்று விலகிச் சென்று பேச ஆரம்பித்தான்.


அவனது அனுமதிக்காக எதிர்பார்த்து காத்திருந்த மற்ற காவலர்களை பார்த்து..


“ஆப் அப்னே காம் கர்னே கோ சலியே”


“நீங்க எல்லாரும் உங்க வேலையை பாருங்க கிளம்புங்க!” என்று உத்தரவிட அவனுக்கு சல்யூட் வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கிளம்பி சென்றனர். அதற்குள் கையில் அலைபேசியுடன் அவனை நெருங்கிய சுனில்..


“சார் கமிஷ்னர் சார் ..! லைன்ல இருக்காரு… உங்களோட பேசனுமாம்.” அலைபேசியை அவனிடம் நீட்டியவனை முறைத்து பார்த்தவன் அதை வாங்கி கவனமாக செவிமடுத்தான். அந்த பக்கம் அவர் என்ன சொன்னாரோ அதுவரை இறுக்கமான முகத்தோடு இருந்தவனின் முகம் சற்றே தெளிய “தேங்க் யூ சார்!” என்றுவிட்டு அலைபேசியை அவனிடம் தந்துவிட்டு அவனை திரும்பவும் முறைத்தவன்.


(இனி வரும் வசனங்கள் அனைத்தும் அவர்கள் இந்தியில் பேசுவதாக எடுத்துக் கொள்ளுங்கள். பேபீஸ்…ஏன்னா இதுக்கு மேல ஹிந்தி நமக்கு மாலும் நஹிஹே😁😁😁😂😂😂)


“ ட்யூட்டி நேரத்தில் வேலையை பார்க்காம… இதெல்லாம் உன்னோட ஏற்பாடா..?? என்றவனை அசட்டு புன்னகையோடு பார்த்த சுனில் நண்பனை திசைதிருப்பும் விதமாக…!!


“பின்ன ராஞ்சி நகரத்தோட டி.ஐ.ஜி வர்றாருனா சும்மாவா… அதுவும் சிங்கிளா லீவ்ல போனவரு டபுளா திரும்பி வந்திருக்காரு இதை கொண்டாட வேண்டாமா…?!” என்றவனை முறைக்க முயன்று தோற்றவன். மெல்லிய புன்னகையோடு அவனை அணைத்து விடுவித்தான்.


“சுனில்! தப்பிச்சடா..! நல்லவேளை பத்திரிகை காரங்களை முன்னாடியே சமாளிச்சு அனுப்பிட்டோம் அவங்களையும் பார்த்திருந்தா இவரு இன்னேரம் கதகளி ஆடியிருப்பாரு!!” என்று மனதுக்குள் முணுமுணுத்தவன்


“கிளம்பலாமா சார்!!” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் முன்னே நடக்க..


மனைவியின் புறம் திருப்பியவன் அவனை விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்தவளின் தோளைச்சுற்றி கையிட்டு அழுத்தமாய் அணைத்து கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற… அதற்குள் சுனில் வண்டியோடு அவர்கள் அருகில் வரவும் காரின் பின்பக்க கதவை திறந்து மனைவியை அமர வைத்து நிமிர்ந்தவனின்… வலது தோளை உரசிச் சென்றது எங்கிருந்தோ சீறிப் பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு. பாண்டி சட்டென்று குண்டு வந்த திசையை கூர்மையாய் அலச சற்று தொலைவில் இருந்த மரத்துக்கு பின்னர் துப்பாக்கியோடு நின்றிருந்தவனை கண்டு கொண்டவன்.


அவனை நோக்கி ஓடினான். அதற்குள் அங்கே பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலையக்காவலர்களும் அவனை துரத்த ஆரம்பித்தனர். அதற்குள் விபரீதம் உணர்ந்து பாண்டியை பின் தொடர்ந்து ஓடி வந்த சுனில் …


பாண்டியனின் தோள்பட்டையில் கசிந்த இரத்தத்தை பார்த்து பதறியவனாய்…


“சார் என்னாச்சு சார்… உங்க தோள்ல குண்டு பாய்ஞ்சிடுச்சா..?? என்றவனுக்கு பதில் உரைக்காமல் மனைவியின் நினைவு வந்தவனாக காரை நோக்கி ஓடினான் பாண்டி..! அங்கே காருக்கு பக்கத்தில் கண்களில் நீர் வழிய செய்வதறியாது நின்று கொண்டிருந்த மனைவியை பார்த்தவன் தவிப்புடன் பாய்ந்து சென்று அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.


அப்போது தான் கணவனது வெள்ளை நிற டீ-சர்ட்டின் தோள்பட்டையில் இருந்து வழிந்த இரத்தத்தை பார்த்து அதிர்ந்தவள் அவனது அணைப்பிலேயே மயங்கிச் சரிய ஆரம்பித்தாள்.



(கையணைக்க வருவான்..!)

ஹாய் பேபீஸ் கதையின் 21 ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து விட்டு கமெண்டுங்க பீளீச்...😍😍😘😘😘😘😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 22
9590


காஞ்சிநகரமே திருவிழாக்கோலம் பூண்டது. 40 வருடங்கள் கழித்து திருக்குளத்திலிருந்து எழுந்தருளப்போகும் அத்திவரதரின் தரிசனத்துக்காக ஆவலோடு காத்திருந்தது. அது சம்பந்தமான ஏற்பாடுகளில் மாவட்ட கலெக்டர் எனற முறையில் கதிரவன் நிற்க நேரமின்றி ஈடுபட்டிருந்தான்.


காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெறுவதால் கோவிலின் வடக்கே உள்ள நூறுகால் மண்டபத்தில் உள்ள அனந்தசரஸ் நீராழி மண்டபத்தில் நீரில் மூழ்கியபடி கருங்கற்கலால் ஆன பாறைக்குள் அத்திமரத்தால் ஆன அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் இருபபார் இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அத்துடன் மீண்டும் அத்தவரதப்பெருமாளை தரிசிக்க 40 வருடங்கள் ஆகும் என்பதாலும் இத்தகைய அபூர்வமான நிகழ்வை கண்டுகளிக்கவும் அத்திவரதரை தம் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்கும் பேற்றினை அடையும் பொருட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சியில் குவிந்தனர்.



இவ்வாறு அத்திவரதரின் தரிசனத்துக்காக குவியும் பக்தர்களின்கூட்ட நெரிசலை சமாளிக்கவும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும், சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும், மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் கதிரவன் அறநிலையத்துறை அதிகாரிகளோடும் காவல்துறையினரோடும் கலந்தாலோசிப்பதிலும்..அதை நடைமுறைப்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். விடிகாலையில் கிளம்பிச் செல்பவன்…நள்ளிரவுக்கு மேலே தான் வீடு திரும்புவான். சில நாட்களில் அங்கேயே தங்கிவிடுவதும் உண்டு..



அன்றும் பணிச்சுமை காரணமாக வழக்கம் போல தாமதமாக களைத்து போய் வீட்டிற்கு வந்தவன் தன்னிடமிருந்த சாவியிட்டு வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வர… வரவற்பரையின் சோபாவில் அமர்ந்தவாரே உறங்கிக் கொண்டிருந்த தாமரை அந்த சத்தத்தில் கண்விழித்தவள் கணவனைப் பார்த்தும் எழுந்து நின்றாள். கதிரவனின் களைத்த தோற்றம் கண்டவள்… அவனது பணிச்சுமையை இத்தனை நாள் அறிந்து கொள்ளாமல் விலகி இருந்த குற்றவுணர்வோடு அவனை நோக்கினாள். மனைவியை இந்த நேரத்தில் இங்கே அவன் எதிர்பார்க்கவில்லை… எப்போதும் இரவில் அவன் வருவதற்குள் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவள்… காலையில் அவன் விழிக்கும் முன்பாகவே எழந்து சென்றுவிடுவாள்.. அதன்பிறகு அவன் அலுவலகம் கிளம்பிச்செல்லும் வரை அவனது கண்களிலேயே பட மாட்டாள். தன் பணிச்சுமை காரணமாக கடந்த ஒருவாரமாக அவனும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத போதும் மனைவியின் ஒதுக்கத்தை அறிந்தே இருந்தான். தினமும் மீனாட்சி தான் நள்ளிரவு வரை மகனுக்காக விழத்திருப்பார்…அவன் எத்தனை தான் கடிந்தாலும்… கேட்காமல் அவனுக்கு உணவை பரிமாறிவிட்டே உறங்கச்செல்வார். கல்யாணத்திற்கு பிறகு மனைவி தனக்காக காத்திருக்க வேண்டும் என்று அவன் மனம் ஆசையாய் எதிர்பார்க்க தாமரையோ…அவன் வருவதற்கு முன்பாகவே ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள். இது அவனுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்த போதும் இலகுவாக தன்னை தேற்றிக்கொண்டான். அப்படிப்பட்டவள் இன்று தனக்காக காத்திருப்பதில் ஆச்சரியமும் உற்சாகமும் ஒருங்கே எழுந்தது. முகம் மலர மனைவியை நெருங்கியவன்…



“ஹனி…..!! நீ இன்னுமா தூங்கலை…எனக்காகவா முழிச்சிட்டிருக்க?! என்ற அவன் பெரும் எதிர்பார்ப்போடு கேட்க..



அவளோ.. அவனது எதிர்பார்ப்பை கண்டுகொள்ளாது “அத்தைக்கு மதியத்திலிருந்து தலைவலி அதான் சீக்கிரமா படுக்க போய்டாங்க….! நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நீங்க பிரஷ்ஷப் ஆகிட்டு வாங்க” என்று அவன் முகம் பார்க்காமல் உரைத்துவிட்டு சமையலறை செல்ல திரும்பி நடந்தவளை பார்த்தவனுக்கு உற்சாகம் வடிந்து உள்ளுக்குள் கோபம் சுறுசுறுவென அதிகரித்தது. அலுவலகப் பணிச்சுமை…அதனால் ஏற்பட்ட களைப்பு அத்துடன் மனைவியின் பாராமுகம் அத்தனையும் ஒன்றாய் சேர்ந்து அவனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல கண்கள் சிவக்க அவளை உறுத்து விழித்தவன்



“ஓஹோ…!! அப்ப நீங்க எனக்காக காத்திருக்கலை… உங்க அத்தை சொன்னதுக்காக வேறவழியில்லாம கடமையாற்ற உட்கார்ந்திருக்கீங்க…?! அப்பவே நினைச்சேன்டி… என்னடா! இத்தனை நாளா புருஷன் ஆபீஸிலிருந்து வந்தானா? சாப்பிட்டானா? இல்லையான்னு கூட கவலைபடாதவ… நம்மளை பார்த்தால வில்லனை பார்க்குறதைப்போல கண்ணுலயே படாம பதுங்குறவ இன்னனைக்கு நமக்காக காத்திருக்காளேன்னு ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டுட்டேன்டி..!. இப்பதானே தெரியுது மாமியார் மெச்சின மருமகளா அவதாரம் எடுத்திருக்கன்னு.. எனக்காக நீங்க இனி காத்திருக்க வேண்டாம் மேடம்.. நீங்கபோய் உங்க வேலையை பாருங்க…! எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்” என்றவன் விறுவிறுவென மாடிப்படியேறி சென்றுவிட்டான்.



கணவனது கோபத்தில் திகைத்தவள் அடுத்து அவனது வார்த்தைகளில் விழிகளில் நிரம்பிய நீரை உதடு கடித்து அடக்க முயன்றாள். கணவனது கோபத்திற்கான காரணத்தை உணர்ந்து கொண்டவளுக்கு ஆற்றாமை எழுந்தது அவளுக்கு மட்டும் அவன் மீது ஆசையில்லையா..?! அவனுடனான வாழ்க்கையைப் பற்றிய ஆயிரம் கனவுகளோடும் கற்பனைகளோடு இருந்தவளின் மனதை காயப்படுத்திவிட்டு இப்ப தன் மீதே கோபப்படுறானே…! என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள் கோபம் கணன்றது.. ஆயினும் காதல் கொண்ட மனதில் கணவனது களைத்த தோற்றமும் பசியும் எழ அவனை சமாதானப் படுத்தவென்று அவன் பின்னே தானும் அறைக்குள் நுழைந்தவள் கணவனைத்தேட… அவன் அறையில் இல்லை. குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது அதில் நிம்மதி அடைந்தவள் அறைக்குள் அங்காங்கே சிதறியிருந்த கணவனின் உடைகளில் அவனது கோபத்தை உணர்ந்தவளாய்… கண்களில் திரண்ட நீரை அடக்கிக்கொண்டு எல்லாவற்றையும் சேகரித்து அழுக்குகூடையில் போட்டவள் கணவனுக்காக காத்திருந்தாள்.



சோக சித்திரமாய் கணவனின் வருகைக்காய் அமர்ந்திருந்தவளின் நினைவை கணவனே ஆக்ரமித்திருந்தான்.. எல்லா மனைவிகளையும் போல கணவனுக்காக ஒவ்வொன்றையும் தானே பார்த்து பார்த்து தன்கரங்களால் செய்யத்தான் அவளுக்கும் ஆசை… ஆனால் பானகத் துரும்பாக அவன் தன்னை நிரகரித்த தருணங்கள் மனதில உறுத்திக் கொண்டிருக்கும் போது அவளால் முழு மனதுடன்… அவனுடன் ஒன்ற முடியவில்லையே! விருப்பமில்லாத போதும் வேறுவழியின்றி அவன் கட்டிய தாலியை ஏற்றுக்கொண்டவளுக்கு அவனுடனான தாம்பத்தியத்தை அப்படி ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதுவும் கல்யாணம் முடிந்த அன்று இரவில் அவனது அருகாமையில் நிலையிழந்து தன்னை மறந்து அவன் கைகளில் குழைந்த தன் உடலையும் மனதையும் இப்போது நினைத்தாலும் கசந்தது. அவனது நிராகரிப்புக்கு பிறகும் வலுக்கட்டாயமாக அவனை மணந்தது துயரமென்றால்… அவனது தொடுகையில் வெட்கமின்றி தான் உருகிக் கரைந்த நினைவு எழுந்து காதல் கொண்ட அவளது இதயம் அடிபட்ட பறவையாய் கதறியது. அதனாலேயே அடுத்து வந்த நாட்களில் அவனை அவள் தவிர்த்தாள். தன்நினைவில் மூழ்கியருந்தவளை குளியலறைக்கதவு திறக்கும் சத்தம் கலைக்க… கட்டிலில் அமர்ந்திருந்தவள் திடுக்கிட்டு எழுந்து நினறாள்.



முகத்தை துவாலையால் துடைத்துக் கொண்டே வெளியே வந்தவன் மனைவியை கண்டுகொள்ளாது அறையிலிருந்த நிலைக்கண்ணாடியில் தலையை வாரியவன்..நேராக பால்கனியை நோக்கி சென்றுவிட்டான். தாமரை தயக்கத்துடன் அவன் அருகில் சென்றவள் அவனை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் கைகளை பிசைய..! தன்னவளின் வரவை அவளின் கொலுசொலியில் உணர்ந்தாலும் இறுக்கமாய் நின்றிருந்தவனின் தோளில் தன் மென் கரத்தை பதித்தவள்.



“ஏங்க சாப்பிட வாங்க ப்ளீஸ்… ஏற்கனவே ரொம்ப லேட்டாயிடுச்சு இதுக்கு மேலயும் சாப்பிடாம இருக்குறது உடம்புக்கு நல்லதில்லை. ப்ளீஸ் வாங்களேன்” என்று கெஞ்சிய மனைவியின் குரலுக்கு இளகாமல் நின்றிருந்தவனை பார்த்தவளுக்கு ஆயாசமாக வந்த போதும்… தன்னை சமாளித்துக்கொண்டு அவனுக்கு முன்னே சென்று நின்றவள் அவனது கண்களை நேருக்கு நேராக தன் கண்களுடன் கலக்கவிட்டவள்..



“கதிர்… என்னை பாருங்க….என்ன கோபம் இருந்தாலும் அதை அப்புறமா பேசிக்கலாம் இப்ப முதல்ல சாப்பிட வாங்க…! எனக்கு ரொம்ப பசிக்குது!” என்று கண்களை சுருக்கி கெஞ்சலாய் அவள் கேட்க… அதுவரை கோபத்தில் கொந்தளித்தவனின் மனம் மனையாள் தன்னை நெருங்கி நின்றதிலிலேயே பாதி மட்டுப்பட அவள் தனக்காக உண்ணாமல் காத்திருப்பதையறிந்து முற்றிலும் வடிய…உருகித்தான் போனான்.



“என்னது நீ இன்னும் சாப்பிடலையா…‌‌.ஹனி? ஏன் இப்படி பண்ற?! இதை மொதல்லயே சொல்றதுக்கென்ன என்றவன் தன் கோபம் மறந்தவனாக அவளை கையோடு அழைத்துக் கொண்டு கீழே டைனிங் ஹாலை அடைந்தவன் அவளை அமர வைத்து முதலில் அவளுக்கு சப்பாத்தியை வைத்து வெஜிடபிள் குருமாவை ஊற்ற… அவள் மறுத்து அவனுக்கு பரிமாற எழமுயற்சிக்க அவளை அதட்டி அமரவைத்தவன். தானும் பரிமாறிக்கொண்டு அமர்ந்தான். கணவனது கரிசனையில் முகமும் அகமும் மலர அவனையே விழியகற்றாது பார்த்தவளை பார்த்து கண்களை சிமிட்டியவன்…மாமாவை அப்புறமா சைட்டடிக்கலாம் இப்ப சாப்பிடு என்க… அவனது வார்த்தைகளில் கன்னங்கள் சிவக்க சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். மனைவியின் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவளைப்பார்த்தவாறே உண்ண ஆரம்பித்தான். இருவரும் மனமூம் வயிறும் நிறைய உண்டு முடித்ததும் பாத்திரங்களை ஒதுக்க தானும் உதவ முன்வந்தவனை வலுக்கட்டாயமாக அவள் தடுத்துவிட… கதிரவனோ



“ஹனி…! நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..! வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா நம்ம ரூமுக்கு வந்துடு..! என்றவன் மனைவியை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடிவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டான்.



கணவன் வார்த்தைகளில் தாமரைக்குத் தான் தவிப்பாக இருந்தது. இத்தனை நாள் அவன் வருவதற்குள் உறங்கி….அவனை தவிர்த்தவள். இன்று கணவனை எப்படி எதிர்கொள்வது என்று கைகளைப்பிசைந்து கொண்டு நின்றாள். நெடுநேரமாக மனைவிக்காக காத்திருந்தவனின் பொறுமை காற்றில் பறக்க அவளைத் தேடி கீழே வந்தவன் முதலில் அவளை சமையலறையில் தேட அங்கு விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க.. வரவேற்பறையில் போடப்பட்டிருந்த ஷோபாவில் அவன் மனைவி சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தவனுக்கு சற்று நேரத்திற்கு முன்பு விலகி இருந்த கோபம் மறுபடியும் உச்சத்தை அடைய அவளது அருகில் சென்றவன்….குனிந்து அவளது முகத்தை சற்று நேரம் உற்றுப் பார்க்க….. அவன் மனைவியோ ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தாள்.



ஒரு கணம் அவளை வெறித்துப் பார்த்தவன். உள்ளங்கைகளை அழுந்த மூடி தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான். மனைவியின் வெளிப்படையான உதாசீனத்தில் அவனது தன்மானம் பலத்த அடிவாங்கியதில் முற்றிலும் தன்னிலை இழந்தவனுக்கு இப்போதே எழுப்பி அவளை கொன்று போடும் அளவுக்கு ஆவேசம் எழுந்தது. இருப்பினும் சூழல் கருதி தன்னை அடக்கிக்கொண்டு விடுவிடுவென தன்னறைக்கு விரைந்து சென்றவன் தன் சீற்றத்தை அறைக்கதவை அடித்து சாத்தி வெளிப்படுத்தினான்.



அந்த சத்தத்தில் உடல் தூக்கிப் போட கண்களை மெதுவாகத் திறந்து பார்த்த தாமரையின் கண்களில் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அணையுடைத்த வெள்ளமாய் வெளியேற…. மெதுவாக எழுந்து அமர்ந்தவள் தன் இருகால்களையும் சோபாவின் மேலே மடக்கி வைத்து இருகைகளாலும் வளைத்துக் கொண்டு தன் கால்களில் முகத்தை புதைத்துக் கொண்டு சத்தமின்றி அழுது கரைந்தாள்.

********************************************************************


ராஞ்சி விமான நிலையத்தில் தன் கைகளில் துவண்டு சரிந்த மனைவியை தன் மார்பில் கிடத்திக் கொண்டு… பதற்றத்துடன் அவளது கன்னத்தில் இலேசாகத் தட்டி…



“பேபி ….உனக்கு என்னாச்சுடி..? கண்ணை திறந்து பாருடி என்னை..! எனக்கு ஒண்ணுமில்லை நான் நல்லாத்தான் இருக்கேன்! உன் வேலுவுக்கு ஒண்ணும் ஆகாது பேபி” என்று தவிப்புடன் அவளது முகம் பார்க்க தமிழரசியோ எதிர்பாராத அதிர்வில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்ததால் கண்களைத் திறக்கவேயில்லை. ஒரு நிமிடம் செயலற்று நின்றவன் அடுத்த நிமிடமே தன்னவளை பூப்போலத் தன் கைகளில் அள்ளிக் கொண்டவன் சுனிலைப் பார்த்து….


“சுனில் வண்டியை சீக்கிரமா எடு..!! இமிடியட்டா ஆஸ்பிட்டல் போ !!”என்று உத்தரவிட்டுவிட்டு மனைவியை பின்னிருக்கையில் படுக்க வைத்தவன் தானும் அவள் பக்கத்தில் அமர்ந்து அவளை அள்ளி தன் மார்போடு அணைத்துக் கொண்டவனின் கண்கள் கலங்கியிருந்ததோ….?!


மின்னல் வேகத்தில் காரை ராஞ்சியின் மிகப்பெரிய மருத்துவமனையை நோக்கி கிளப்பிய சுனில் முதன்முறையாக கலக்கத்துடன் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த தன் நண்பனைத் தான் முன்பக்க கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இந்த பாண்டி மிகவும் புதியவன். இதுவரை இத்தனை கலக்கத்துடன் தன் மேலதிகாரியை அவன் பார்த்தில்லை! எந்த அசாதாரண சூழ்நிலையிலும் தன் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தாதவன். குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குபவன்.. தன்னுடன் பணிபுரிவோரை தன் ஒரு வார்த்தைக்கு பணியவைப்பவன். கடமையின் போது குறுக்கே வரும் அரசியல்வாதிகளையும் மேலதிகாரிகளையும் ஒரே பார்வையில் ஒடுங்கச் செய்பவன் தன் பணியில் இது போன்ற எத்தனையோ நிகழ்வுகளை அலட்சியமாக கடந்துவந்தவன். சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் மாஸ் ஹீரோவாக.. தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன். தன் அதிரடியான நடவடிக்கைகளாலும் கம்பீரத்தாலும் இளம்பெண்களின் மனம் கவர்ந்த ரியல் லைப் ஹீரோவாக வலம் வருபவன். இன்று மனைவியின் சாதாரண மயக்கத்திற்கு இப்படி பதறுவது அவனுக்கு முற்றிலும் புதிதாகவும் அதே சமயம் வியப்பாகவும் இருந்தது. நினைவுகள் நண்பனின் நினைவில் உழன்ற போதும் அவன் மின்னல் விரைவுடன் வண்டியை செலுத்த அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்தனர்.



அவன் ஏற்கனவே தகவல் அளித்திருந்ததால் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மிஸ்டர் தினேஷ் சர்மா அவர்களுக்காக காத்திருந்தார். உடனடியாக தமிழரசிக்கு சிகிச்சை அளித்தவர் வெளியே வர பதற்றத்துடன் அவரை நெருங்கிய பாண்டியை சிநேகத்துடன் பார்த்தவர்.


“பயப்பட ஒண்ணுமில்லை மிஸ்டர் பாண்டியன்! உங்க மனைவிக்கு சாதாரண மயக்கம் தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்க கண்விழிச்சிடுவாங்க நீங்க போய் பார்த்துவிட்டு வாங்க உங்க காயத்திற்கு சிகிச்சை செய்யனும்!” என்றவரின் வார்த்தைகளில் நிம்மதியடைந்தவன் மறு நொடி மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து விட்டான். அவனை புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரின் அருகில் வந்த சுனிலைப் பார்த்தவர்.. அவனிடம் விவரங்களை கேட்டறிந்தார். அவருக்கு பாண்டியை ஒரு போலீஸ் அதிகாரியாய் நன்கு தெரியும் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணைக்காகவும் குற்றவாளிகளுக்கான சிகிச்சைக்காகவும் அவன் இந்த மருத்துவ மனைக்கு பலமுறை வந்திருக்கிறான் நேர்மையான போலீஸ் அதிகாரியான பாண்டியின் மீது அவருக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. அதனாலேயே அவனைப் பற்றி அறிய விரும்பியவராய்…



“சுனில்... உன் பிரண்டுக்கு அவரோட மனைவி மேல ரொம்பவே காதல் போல…. அவங்களோடது காதல் கல்யாணமா…?!


“ஆமா டாக்டர் சார்… லவ் கம் அரேன்ஜ் மேரேஜ்…!!”



“வாவ் ரியலி..?! அதானே சாதாரண மயக்கத்திற்கே மனுஷன் இப்படி கலங்கிட்டாரேன்னு நினைச்சேன்!!” என்றவர். பாண்டியை சிகிச்சைக்கு அழைத்து வருமாறு கூறிவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டார்.



மனைவியின் அருகில் சென்ற பாண்டி துவண்ட கொடியாய் கண்களை மூடி படுத்திருந்த மனைவியின்வலது கரத்தைப் பற்றியவன் தவிப்புடன் தன் இதழ்களை அவளின் புறங்கையின் மேல் பதித்து தன் நெஞ்சோடு அழுத்தி சிறிது நேரம் கண்மூடி நின்றிருந்தவன் மனம் முதன்முதலாய் தன்னவளை தான் சந்தித்த தருணத்தை சுகமாய் அசை போட்டது. நான்கு வருடத்திற்கு முன்பு போலீஸ் அகாடமியில் ட்ரைனிங் முடித்து போஸ்டிங்குக்காக காத்திருந்த சமயம்.. சென்னையில் நடைபெற்ற தன் சம்பந்தி பரமேஷ்வரனின் தம்பியான சிவநாதனின் மகன் திருமணத்தில் அருணாச்சலம் கலந்து கொள்ள இயலாத சூழலில் இருந்ததால் அப்போது சென்னையில் தங்கியிருந்த பாண்டியை தன்சார்பாகக் அந்த திருமணத்திற்கு செல்ல அறிவுறுத்த அவனும் வேறுவழியின்றி கலந்து கொண்ட போது தான் அவளை முதன்முதலாய் பார்த்தான். பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதை அவன் விரும்புவதில்லை தந்தைக்காக சம்மதித்தவன் வேண்டா வெறுப்பாக அந்த திருமணத்திற்கு செல்ல அங்கே வரவேற்பில் நின்றிருந்த தமிழரசி அவன் மீது பன்னீர் தெளித்து வரவேற்க…. ஏதோ யோசனையில் வந்தவன் தண்ணீர் தன் மீது பட்டதில் கோபமாய் நிமிர்ந்தான்…! அடர்ந்த கருநீலநிறத்தில் இளஞ்சிவப்பு கரையிட்ட பட்டுப் பாவாடையும்…இளஞ்சிவப்ப நிற தாவணியும் அணிந்து… மிதமான அலங்காரத்திலும் இந்திரலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவ கன்னிகையாய் அந்த இடத்தையே பிரகாசமாக்கிக் கொண்டிருந்தவனின் அழகில் இமைக்க மறந்தவன் போல சிலையாகி உறைந்து நின்றவனை… அவளின் ‘களுக்’ என்ற சிரிப்பொலி மீட்க… சட்டென்று சூழ்நிலை உரைக்க அவசரமாக தன் பார்வையை விலக்கிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து மண்டபத்தினுள் சென்றான்.


ஆயினும் அவளிடமிருந்து தன் பார்வையை விலக்க இயலாதவனாய் அவளை பார்வையிட வசதியாக கடைசி வரிசையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவளோ இவனை முற்றிலும் மறந்தவளாய் தன்னுடன் நின்றிருந்த மற்ற பெண்களுடன் எதையோ பேசி சிரித்துக்கொண்டிருந்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் ஆசையாய் தன் விழிகளால் படம்பிடித்து தன் மனப்பெட்டகத்துள் ரகசியமாய் பதுக்கிக்கொண்டான். சற்று நேரத்தில் பக்கத்தில் யாரோ அமரும் அரவத்தில் தன் பார்வையை விலக்கிக் கொண்டவன். தலையை ஒருமுறை உதறி அவளது நினைவை ஒதுக்கியவன்.


“ச்சே.? என்னயிது நானா இப்படி…?! கல்லூரி நாட்களில் கூட எத்தனையோ அழகான பெண்களை கடந்து வந்திருக்கிறான். எந்த பெண்ணும் அவனை பாதித்ததில்லை. அவ்வளவு ஏன் ஆர்வத்துடன் தானாக நெருங்கும் பெண்களைக் கூட அழுத்தமான ஒரே பார்வையில் விலக்கி நிறுத்திய தானா இவளை பார்த்ததும் உறைந்து நின்றது?!. என்று தன்னை நினைத்தே அவனுக்கு ஆச்சரியமும் கோபமும் ஒருங்கே எழுந்தது. உடனே தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்தவன் மணவறையை நோக்கி நடக்க… அதற்குள் மணமகனின் தந்தை சிவநாதனும் பரமேஷ்வரனும் அவனை எதிர்கொண்டு அழைக்க…. தன் நினைவை தற்காலிகமாக உதறித் தள்ளியவன் அவர்களை பார்த்ததும் சம்பிரதாயமாக புன்னகைத்தான்.


அருணாவின் மாமனாரான பரமேஸ்வரனின் தம்பி சிவநாதனின் மகன் திருமணத்திற்கு தான் அவன் தற்போது வந்திருக்கிறான்.


“வாங்க… வாங்க…பாண்டியன் தம்பி நீங்க வந்ததில் ரொம்பவும் சந்தோஷம்…!! அம்மா அப்பா வரலையா?!” என்று சிவநாதன் வினவ..


“இல்லை அங்கிள்!! அப்பா பிஸினஸ் விஷயமா மும்பை வரைக்கும் போயிருக்காங்க…. அதான் நான் வந்தேன் எனவும்…


"ஓ… சரி பரவாயில்லை நீங்க வாங்க தம்பி!" என்று அவனை அழைத்துச் சென்றவர்கள் முன்னிருக்கையில் அமர வைத்துவிட்டு செல்ல… தன் அண்ணன் மகனைப் பார்த்ததும் முகம் மலர மேடையில் நின்றிருந்த அருணாவும் ஆவலோடு கீழே இறங்கி வந்து அவன் பக்கத்தில் அமர்ந்து நலம் விசாரிக்க அவருக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தவனை…. பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு எங்கிருந்தோ ஓடி வந்த வர்ஷினியும் வருணும் அவனருகே அமர்ந்து கதையளக்க ஆரம்பித்தனர். சற்று நேரத்தில் மாதவனும் வர அவருடனும் உரையாடியவன். மேடையேறி தான் வாங்கி வந்திருந்த பரிசை மணமக்களிடம் வழங்கியவன் கீழேஇறங்கி வர அவனை மணமகனின் பெற்றோர் வற்புறுத்தி சாப்பிட அழைத்துச்சென்று பந்தியில் அமரவைத்து உபசரித்தனர் வேறுவழியின்றி சாப்பிட அமர்ந்தவனின் அருகில் வர்ஷினியும்…வருணும் வந்து அமர்ந்தனர்.



“ஏய் நீங்க ரெண்டு பேரும்… எங்கே திடீர்னு காணாம போயிட்டீங்க!?”



“அது ஒண்ணுமில்ல மாமா…என் பிரண்டுகிட்டயிருந்து கால் வந்ததா அதான் வெளியே பேசப் போனேன்…”!! என்று வருண் சொல்ல…



“பொய் சொல்றான் நம்பாதீங்க மாமா….இங்கே வந்திருக்குற பொண்ணுங்களை சைட்டடிக்க தான் போயிருப்பான் பிராடு‌!” என்று போட்டுக்கொடுத்த தமக்கையை கொலைவெறியோடு பார்த்தவன்..!



“போடி பிசாசு…!! ரொம்ப தெரஞ்சா மாதிரி பேசாதடி குரங்கு… நான் என் பிரண்டு கூட பேசத்தான் போனேன்…!!” என்று எகிற


“யாரைப் பார்த்துடா குரங்குன்னு சொன்ன??... நீ தான்டா கொரில்லா…! வாலில்லாத வானரம்…! என்று சிலிர்த்துக் கொண்டு நின்றாள் வர்ஷினி இருவரையும் சமாதானப் படுத்தி ஒருவழியாக அமரவைத்து சாப்பிட்டு முடித்தவனை…இருவரும் விடாது கையைப் பிடித்துக் கொண்டு இசைக்கச்சேரி நடக்கும் இடத்திற்கு அழைத்துவர… வேறுவழியின்றி அவர்களுடன் சென்று அமர்ந்தவன் அசுவாரசியமாய் கண்களை மேடையில் பதிக்க அங்கே அழகே உருவாக அவன் வரவேற்பில் பார்த்த தேவதை கையில் மைக்கோடு பாடத் தயாராகிக் கொண்டிருந்தாள். மறுகணம் விழிகளில் மின்னல் தெறிக்க சுவாரசியமாக மேடையில் தன் கவனத்தை பதித்தான் பாண்டியன். தன்நினைவில் ஆழ்ந்திருந்தவனை அறைக்கதவு தட்டும் ஒலி கலைக்க… மனைவியை ஒருகணம் பார்த்தவன்…



“உள்ளே வா சுனில்” என்றதும் அறைக்கதவை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே வந்த சுனில்..
“மேம் இன்னும் கண்ணு முழிக்கலையா சார்”? என்று தமிழரசியை பார்க்க…

"இன்னும் இல்லை சுனில்…என்று கவலையாய் உரைத்தவனின் தோளில் ஆறுதலாய் தட்டிக்கொடுத்தவன்..

"கவலைப்படாதீங்க சார் நீங்க வாங்க முதல்ல மேம் கண்ணு முழிக்கறதுக்குள்ள உங்க காயத்துக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கங்க..! ப்ளீடிங் ஆகுது பாருங்க..!”



“இவளைவிட்டுட்டு நான் எப்படி…? என்று தயங்கியவனை…



“அறைக்கு வெளியே தான் நான் இருக்கிறேன் நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க சார்..” ஆயினும் தயங்கியவனை..கையோடு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு அறைக்கு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.



தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்த பாண்டியனை இன்முகத்தோடு வரவேற்ற ஷர்மாவை பார்த்தவன்.
"டாக்டர் ஏன் என் மனைவி இன்னும் கண்ணுவிழக்க மாட்டேங்குறா..? வேற ஏதாவது… என்று கவலையோடு கேட்டவனை புன்னகையோடு இடைமறித்தவர் அதெல்லாம் ஒண்ணுமில்லை “மிஸ்டர் பாண்டியன்… ஷி வில் பி ஆல்ரைட் நத்திங் டு வொர்ரி…! இன்னும் 10 நிமிடத்துக்குள்ள அவங்க மயக்கம் தெளிஞ்சு எழுந்திடுவாங்க… கொஞ்சம் அனீமிக்கா இருக்காங்க… மற்றபடி நோ ப்ராப்ளம்!” என்றவர் அவனது காயத்தை கவனமாக ஆராய்ந்து சிகிச்சையளித்தார்.


அவன் சிகிச்சை முடிந்து மனைவியின் அறைக்கு திரும்பவும் அவள் கண்விழிக்கவும் சரியாக இருக்க… விரைந்து வந்து அவளது வலது கையை தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டவனை … தமிழரசி ஏறிட்டு பார்க்க…


பேபி… உ…னக்கு ஒண்ணுமில்லையே என்று தவிப்போடு கேட்டவனை பார்த்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை தான் எங்கே இருக்கிறோம்…என்றே புரியாது விழித்தவள் சிறிது நேரம் கழித்து கணவனின் முகத்தை பார்த்ததும் நடந்தவையெல்லாம் நினைவுக்கு வர சட்டென்று பயத்துடன் எழுந்து அமர்ந்தவளின் பார்வை பரிதவிப்புடன் கணவனை உச்சியிலிருந்து பாதம் வரை வேகமாய் ஆராய்ந்தது தோள்பட்டையில் இருந்த இரத்தக்கறையைப் பார்த்து பதறியவள்….


“உ…உங்களுக்கு ஒண்ணுமில்லையே என்றவள் அவனது டீ சர்ட்டை சற்றே விலக்கி காயத்தை ஆராய்ந்தாள். அங்கே கட்டுப் போட்டிருக்க அந்த கட்டின் மீது தன் தளிர்க்கரங்களை நடுக்கத்துடன் வைத்தவளின் கண்களில் கண்ணீர் திரள அதை மென்மையாக வருடியவாறே அவனை தவிப்போடு நோக்க…மனைவியின் தவிப்பை உணர்ந்து கொண்டவனாய்…அவளை தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டவன்… அவளது உச்சந்தலையில் தன்னிதழ்பதித்து சற்றுநேரம் கண்மூடி நிற்க…பின் மெதுவாக அவளை தன் மார்பிலிருந்து விலக்கியவன் அவள் கண்களோடு தன் கண்களை கலக்கவிட முயல….அவளோ மூடிய கண்களை திறவாமலே அவனது மார்புக்கூட்டுக்குள் பாதுகாப்பாய் மேலும் தன்னை புதைத்து கொண்டாள். அவளது மேனி நடந்த சம்பவத்தை ஜுரணிக்க இயலாது நடுங்கியது அவளது மேனியின் நடுக்கத்தை உணர்ந்தவன் தானும் அவளை இறுக்கிக்கொண்டான். அவளது நடுக்கம் குறையும் வரை சற்று நேரம் அப்படியே நின்றவன்.
பேபி… !! என்று மென்மையாக அழைக்க…


தன்மார்பை விட்டு சற்றும் அகலாது…ம்ம்ம்…என்று மட்டும் சொன்னவளின் செய்கையில் முகத்தில் இதுவரை இருந்த இறுக்கம் மறைய மனதில் உற்சாகம் எழ..


“பேபிமா….!! இங்க பாருடி நாம ரொம்பநேரம் இப்படியே இங்க இருக்க முடியாது… இது ஆஸ்பிட்டல் வேணும்னா நாம நம்ம வீட்டுக்கு போய் கண்டினியூ பண்ணலாமா…என்றவனின் குறும்பு கொப்பளிக்கும் குரலில் அதுவரை சுகமாய் அவன் மார்புக்கூட்டில் பொதிந்திருந்தவள் சட்டென்று விலகி அமர்ந்தாள் முகம் சிவக்க.. புன்னகை விரிய போகலாமா பேபி என்றவனுக்கு மனைவியின் தலையாட்டலே பதிலாய் கிடைக்க… மனைவியுடன் புன்னகையுடன் வெளியே வந்தவனை பார்த்து எழுந்து நின்ற சுனிலைப் பார்த்து மகிழ்வுடன் தலையசைக்க…அவனும் புரிந்து கொண்டவனாய் தலையசைத்தவன்… தமிழரசியை பார்த்து தயக்கத்துடன்..


“மேம் இப்ப உடம்புக்கு பரவாயில்லையா?” என்று வாஞ்சையோடு கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு தன் அண்ணன் கதிரவனை சுனில் நினைவூட்ட “இப்ப பரவாயில்லை அண்ணா!” என்று இந்தியில் உரைத்தவளை முகம் மலர ஏறிட்டவனுக்கு அவளது அண்ணா என்ற விளிப்பில் எல்லையில்லாத மகிழ்ச்சி எழுந்தது. ஒற்றைப்பிள்ளையாய் பிறந்து தன் 3 ஆம் வயதிலேயே தாயை இழந்தவனுக்கு தந்தைதான் எல்லாம் முதன் முதலாக தன்னை அண்ணா என்று அழைத்த தமிழரசியின் மீது அவனுக்கு தனி பிரியம் ஏற்பட அவளை தன் உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக்கொண்டான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த பாண்டிக்கு மகிழ்வாக இருந்தபோதும் கேலியாக இருவரையும் பார்த்தவன்…



“சுனில்… போதும்! உங்க அண்ணன் தங்கை பாசப்பயிரை அப்புறமா வளர்த்துக்கலாம் இப்ப கிளம்பலாமா! என்றவனை சுனில் புன்னகையோடு பார்க்க… தமிழரசி முறைத்துப் பார்த்தாள். அவளைப்பார்த்து வழக்கம் போல புருவம் உயர்த்தி கண்சிமிட்டியவன் பறக்கும் முத்தம் ஒன்றையும் அனுப்பி வைக்க… அதைப் பார்த்து அவள் அவசரமாக தலையை குனிந்து கொள்ள இவர்களின் காதல் பரிபாஷைகளை கண்டும்காணாமல் நின்றிருந்த சுனில் …


“சார் நான் பில் பே பண்ணிட்டு வர்றேன்”! என்று நாசூக்காக நழுவிவிட்டான்.


அப்போது தான் சுனிலின் நினைவு வந்தவளாய் உதட்டைக் கடித்தவள் ‘அச்சச்சோ அண்ணா பார்த்துட்டாரோ?!” என்று மனதுக்குள் புலம்பியவளின் மனதை படித்தவனாய்…



“உங்க அண்ணன் அவசரமா இஙகேயிருந்து நழுவும் போதே தெரியலையா…??” என்று மறுபடியும் கண்ணைச்சிமிட்ட…. ‘இவனுக்கு இதே வேலையாப் போச்சு' என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாலும்… கன்னங்கள் வெட்கத்தில் மேலும் சிவந்தது.


(கையணைக்க... வருவான்!!)

ஹாய் பேபீஸ்.... கதையின் 22 ஆம் அத்தியத்துடன் வந்துவிட்டேன்.முதலில் நீண்ட தாமதத்திற்கு என்னை மன்னியுங்கள் பேபீஸ்...! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அடுத்தமுறையிலிருந்து சீக்கிரமா கொடுக்க முயற்சிக்கிறேன்...போஸ்ட் போட்டு பாண்டியை கதிரவனை தேடிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என்மனமார்ந்த நன்றி.அதைத்தவிர வேறு என்ன சொல்ல தெரியவில்லை...கூடிய விரைவில் அடுத்டுத்த யுடிகளை இனி தர முயற்சிக்கிறேன்.பேபீஸ் கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன்.
😍😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 23


9749


மருத்துவ மனையிலிருந்து அவர்களின் கார் பாண்டியின் அபார்ட்மெண்ட் உள்ள ராஞ்சியின் இந்திரபுரி காலனியை நோக்கி விரைந்தது. சுனில் காரை ஓட்ட பாண்டியும் தமிழரசியும் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். பாண்டி காலையில் பிர்ஷா முண்டா விமான நிலையத்தில் தன்னை துப்பாக்கியால் சுட்டவனைப் பற்றிய சிந்தனையில் இருந்தான் அவன் யார்? எதற்காக தன்னை சுட்டான்?...இதற்கு முன்பு அவனை பார்த்திருக்கிறோமா? என்று தன் ஞாபக அடுக்குகளில் தேடியவனாக தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான். தமிழரசியோ…ஜன்னலுக்கு அந்தப்பக்கம் தெரிந்த ராஞ்சி நகரத்தின் இயற்கை அழகை விழிகள் விரிய பார்த்துக்கொண்டிருந்தாள். தூரத்தில் அடுக்கடுக்காய் தொடரும் மலைத்தொடர்களையும் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் பசுமை போர்த்திய காடுகளையும் தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தாள். காலையில் விமான நிலையத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் கூட அவள் நினைவை விட்டு தற்காலிகமாக அகன்று விட இயற்கையன்னையின் பேரெழிலில் உடலும் மனமும் சிலிர்க்க இதமான குளிர்ந்த சீதோஷ்ணம் உடலையும் மனதையும் இதமாய் வருட தன்னை மறந்து லயித்திருந்தாள் தமிழரசி.


பீகாரின் ஒரு பகுதியை பிரித்தெடுத்து கடந்த 2000 ஆம் ஆண்டில் உதயமானது தான் ஜார்கண்ட் மாநிலம். இதன் தலை நகரம் தான் ராஞ்சி. ‘ஜார்கண்ட்’ என்ற சொல்லுக்கு “காடுகளின் நிலம்” என்று பொருள். பெயருக்கேற்றார்போல காடுகளும் மலைகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமாக விளங்குகிறது ஜார்கண்ட் மாநிலம். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நகரங்களான ஜாம்ஷெட்பூர், பொகாரோ இங்கு தான் உள்ளது. ஏராளமான மலைத்தொடர்களையும் காடுகளையும் கொண்டுள்ளதால் ஜார்கண்ட் இந்தியாவின் கனிம வள உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் மிதமான காலநிலையே நிலவுகிறது.


கோயல், பிராம்மணி, தாமோதர், சுபர்னரேகா, கார்கய் போன்ற ஆறுகள் பாய்ந்து இம்மாநிலத்தை வளப்படுத்துகின்றன. இம்மாநிலத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதால் இயற்கை அவர்களின் பண்பாடு மற்றும் உயிர்நிலையின் ஒரு பகுதியாகவே திகழ்கிறது. மாநிலத்தின் பிரதான மொழி இந்தி என்றாலும் பழங்குடியினரால் அதிகம் பேசப்படுவது சந்தாலி மொழியாகும்.


ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சி “நீர்வீழ்ச்சி நகரம்” என்று அழைக்கப்படுகிறது. சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியில் அமைந்துள்ள ராஞ்சி கடல்மட்டத்திலிருந்து சுமார் 2140 அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், குன்றுகளும், பாறை வடிவங்களும் உள்ளன. இங்கு வருடம் முழுவதும் மிதமான வானிலையே நிலவுகிறது. பெயருக்கேற்ப தசாம், ஹூன்ட்ரு, சீதா.. என ஏராளமான நீர்வீழ்ச்சிகளையும் கொண்டுள்ளதால் ராஞ்சி மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.


காரின் ஹாரன் ஒலியில் தன் யோசனையிலிருந்து மீண்ட பாண்டி… தன்னருகே அமர்ந்திருந்த மனைவியை திரும்பிப் பார்த்தான். ஜன்னலில் முகத்தை பதித்து அமர்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு மனதில் இதுவரை இருந்த இறுக்கம் மறைய மனைவியின் தோளைச்சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டு நெருங்கி அமர்ந்தான். அதுவரை வெளியே தெரிந்த இயற்கை காட்சிகளில் தன்னைத் தொலைத்திருந்தவள் கணவனது நெருக்கத்தில் தன்னிலை மீண்டாள். அவனைத்திரும்பிப் பார்த்தவளின் பார்வை தவிப்புடன் முன்பக்கத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்த சுனிலின் மீது படிய…. மனைவியின் எண்ணவோட்டத்தை உணர்ந்தவன் அதை கண்டுகொள்ளாமல்….


“வெளியே அப்படி என்ன சுவாரசியமா பார்த்துட்டிருக்க பேபி?!” என்று கிசுகிசுக்க…அவனது நெருக்கத்தில் நெளிந்தவள்..!

“ஏங்க அண்ணன் இருக்காரு…கொஞ்சம் தள்ளி உட்காருங்க..!”

"ஏண்டி உங்க நொண்ணன் எதிரில் நான் என்ன முத்தங்கொடுத்தேனா….?! இல்ல கட்டிப்புடிச்சேனா…?! சும்மா தானேடி உட்கார்ந்து இருக்கேன்…?! என்றவனின் பார்வையில் சொன்னதை செய்யும் ஆவல் இருக்க.. தமிழரசி தவிப்புடன் திரும்பவும் சுனிலை பார்க்க…


“பேபி…. டேக் இட் ஈஸி!! சுனிலுக்கு தமிழ் தெரியாது!” என்கவும் அதில் மனதுக்குள் சற்று நிம்மதி அடைந்தவள். கணவனை முறைத்தாள்.மனைவியின் முறைப்புக்கு அவன் பாணியில் பதிலளித்தவன்…

”ஆமா வெளியே அப்படி என்ன பார்த்துட்டிருந்த பேபி?” என்று வினவ

“இந்த ஊரு மாநிலத்தோட தலை நகரம் மாதிரியே இல்லையே…. இங்கே கட்டிடங்களை விட எந்தபக்கம் பார்த்தாலும் மலைகளும் காடுகளும் நிறைஞ்சிருக்கா அதைத்தான் பார்த்துட்டிருந்தேன். என்று கண்கள் மின்ன சொன்னவளை ரசித்து பார்த்தவன்.


“ராஞ்சி மட்டுமில்லை இந்த மாநிலம் முழுக்கவே இப்படித்தான் காடுகளும் மலைகளும் நிறைஞ்சிருக்கும்”. என்று அந்த மாநிலத்தைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மனைவியிடம் விரிவாக எடுத்தரைத்தான். விழி விரிய அவன் சொன்ன தகவல்களை கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஆச்சரியமும் பிரம்மிப்பும் ஒருங்கே எழுந்தது. இயற்கையை தெய்வமாய் நேசித்து வணங்கும் அம்மக்களையும் அவ்வூரையும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவ்வூரை சொந்தத்துடன் நோக்கினாள்.


“ஆமா..! உனக்கு இந்த ஊரை பிடிச்சிருக்கா பேபி!” எங்கெங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இயற்கையின் அபரிமிதமான அழகோடு விளங்கும் இப்படி ஒரு ஊரை யாருக்குத்தான் பிடிக்காது…?


சென்னையில் கான்க்ரீட் காடுகளுக்கு மத்தியில் வாழ்ந்தவளுக்கு கண்களுக்கு விருந்தாய் பசுமையை வாரியிறைத்து மனதுக்குள் புத்துணர்வை அள்ளித்தரும் இந்த இடம் பூலோக சொர்க்கமாகவே திகழ… மலர்ந்த முகத்துடன் கணவனை நோக்கியவள் “ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். மனைவியின் பதிலில்.. அகமும் முகமும் மலர தன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன் அவளது காது மடல்களில் தன் மீசை உரச…


“அப்போ நம்ம ஹனிமூனை இங்கேயே வச்சிக்கலாமா பேபி..!!” என்று குறும்புடன் வினவ.. அதில் முகம் சிவந்தவள்..அவனது மார்பில் மேலும் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் முன்பக்கம் அமர்ந்திருந்த சுனிலுக்கு அவர்கள் பேசியது புரியவில்லை என்றாலும் அவர்களது உடல் மொழியில் அவர்களுக்கிடையேயான காதலை உணர்ந்தவனாய் புன்னகையுடன் பாதையில் கவனத்தை செலுத்தியவனுக்கு தன் காதல் மனைவி சோனுவின் நினைவு எழுந்தது. அவனுடையதும் காதல் திருமணம் தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் சோனுவை கரம்பிடித்தான். அவர்களின் காதலுக்கு பரிசாய் வந்தவன் தான் அவனது மகன் அபிமன்யு.

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களது கார் உயர்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இந்திரபுரி காலனியை அடைந்தது. காரிலிருந்து முதலில் இறங்கிய சுனில் அங்கே அவர்களை வரவேற்க காத்திருந்த மற்ற காலனி வாசிகளோடு இணைந்து கொள்ள… காரிலிருந்து அடுத்து இறங்கிய பாண்டி காரின் கதவை ஒருகையால் பிடித்தவாறு மறுகையை மனைவிக்காக நீட்ட அவனை காதலாய் நோக்கியவள் மலர்ந்த முகத்துடன் அவனது கரத்தைப் பற்றிக் கொண்டு இறங்கினாள்.


அவர்கள் இறங்கியதும் கேட்ட கரவொலியில் இருவரும் திரும்பி பார்க்க…அங்கே குடியிருக்கும் அனைவரும் புதுமணத் தம்பதியரை வரவேற்கும் பொருட்டு மகிழ்ச்சியோடு ஆரவாரமாய் கரவொலி எழுப்ப… அதில் லேசாக பதற்றம் அடைந்த தமிழரசி கணவனின் கைகளை மேலும் இறுக்கிக் கொண்டாள். மனைவியை உணர்ந்தவனாய்..!


“பயப்படாதே பேபி இவங்க எல்லாம் இந்த காலனியில் குடியிருக்கிறவங்க… தான்!. நமக்கு கல்யாணம் ஆனதை கேள்விப்பட்டு விஷ் பண்ண வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்… இதெல்லாம் உங்க நொண்ணன் அந்த சுனில் வேலையாத்தான் இருக்கும். நம்ம வருகையை ஒருத்தர் பாக்கியில்லாம எல்லோர்கிட்டையும் தண்டோரா போட்டிருக்கான் ராஸ்கல்... அவனை…! என்று சுனிலைப் பார்த்து பல்லைக் கடிக்க.. அவனோ…. தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் மற்ற குடியிருப்பு வாசிகளுடன் கதையளந்து கொண்டிருந்தான்.

கணவனது வார்த்தைகளில் புன்முறுவலுடன் சுனிலை நோக்கினாள் தமிழரசி. தங்களை வரவேற்பதற்காக மலர்ந்த முகத்துடன் அங்கே குழுமியிருந்தவர்களை நோக்கியவளுக்கு இத்தனை பேரின் அன்பையும், பெருமதிப்பையும், மரியாதையையும் தன்னவன் பெற்றிருப்பதை எண்ணி அவளின் மனம் பெருமையில் திளைத்தது. அதுவும் வேற்று மாநிலத்தவனான கணவனை அவர்கள் கொண்டாடும் விதத்தில் தன்னவனை நினைத்து மனைவியாய் கர்வம் கொண்டாள். ஏற்கனவே அவனின் சாதனைகளை கதிரவன் மூலமாக கேள்விப்பட்டவளுக்கு அவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவையாகவே அப்போது தெரிந்தது…ஆனால் அவை அனைத்தும் சத்தியமான உண்மைகள் என்பதை இங்கே வந்ததில் இருந்தே கண்கூடாக உணரத்தொடங்கிவிட்டாள். அங்கே நின்றிருந்தவர்களில் வட இந்தியரைப்போல புடவை அணிந்து கைகளில் ஆரத்தி தட்டை ஏந்திக் கொண்டு மலர்ந்த முகத்துடன் முன்னே வந்த இளம்பெண் இருவரையும் பார்த்து புன்னகைத்தவள்…பாண்டியை பார்த்து..

“அண்ணா வாழ்த்துக்கள்…!! எப்படி இருக்கீங்க…! உங்களை இப்படி ஜோடியா பார்க்குறதுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்குண்ணா…..! அதிலும் அண்ணி ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க.. உங்க ரெண்டு பேரோடு ஜோடிப் பொருத்தம் சூப்பர்!! என்றவள் தமிழரசியை ஸ்நேகத்துடன் பார்த்து புன்னகைத்தாள்.


பாண்டி அவளைப் பார்த்து முகம் மலர புன்னகைத்தவன்… “தேங்கஸ்டா” என்றவன் இவங்க தான் என்னோட செல்லத்தங்கை!! மிஸஸ்.சோனாக்ஷி சுனில் அந்த ஓட்டைவாய் சுனிலோட மனைவி. என்றவன் மனைவியை தோளோடு அணைத்து… சோனு இவங்க தான் என்னோட பெட்டர்ஹாப் மிஸஸ் தழிழரசி ரத்னவேல் பாண்டியன். என்று மனைவியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். தமிழரசியின் கைகளை நட்போடு பற்றிக்கொண்ட சோனாக்ஷி….! “ஹாய் பாபி!!!.... வெல்கம் டூ அவர் ராஞ்சி”!! என்று முகம் மலர அன்போடு வரவேற்ற சோனாக்க்ஷியை தமிழரசிக்கு பிடித்துவிட தானும் அவளைப் பார்த்து நட்பாய் புன்னகைத்தாள்.


மலர்ந்த முகத்துடன் சோனாக்ஷி இருவருக்கும் அவர்கள் முறைப்படி திருஷ்டி சுற்றி முடிக்கவும்… அதற்குள் சுனிலின் சாயலில் ஒரு முதியவரும்…. சிறு குழந்தையை தன் கைகளில் ஏந்தியவாறு சுனிலும் அவர்கள் அருகில் வந்தனர். அந்த முதியவரைப் பார்த்ததும் பாண்டி தன் மனைவியிடம் இவர் சுனிலோட அப்பா…. மிஸ்டர். சஞ்சய் மேத்தா ரிடையர்டு போலீஸ் கமிஷனர். எனக்கும் அப்பா மாதிரி…! என்று அறிமுகப்படுத்தியதும் சட்டென்று அவரது காலில் விழுந்து வணங்கினாள் தமிழரசி. பாண்டி மனைவியோடு தானும் அவர் பாதம் பணிய அதை சற்றும் எதிர்பாராத அவர்... நெகிழ்ந்து பாண்டியையும் தமிழரசியையும் உள்ளார்ந்த அன்போடு அவர்கள் தலையின் மீது கை வைத்து ஆசீர்வதிக்க… இதை சுற்றி நின்ற மற்ற குடியிருப்பு வாசிகளும் சுனிலும் சோனாக்க்ஷியும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்க… எழுந்து நின்ற தம்பதியரை பாசத்தோடு நோக்கிய சஞ்சய் மேத்தா… தமிழரசியை கனிவாக நோக்கியவர்..பாண்டியை பார்த்து


“உனக்கேத்த நல்ல பொண்ணைத்தான் தேடி கண்டுபிடிச்சிருக்க யங் மேன்…! அருமையான மனைவி உனக்கு அமைஞ்சிருக்கா அவளை எப்பவும் சந்தோஷமா வச்சிக்க..!! என்றவர் தமிழரசியிடம் உனக்கு இங்கே யாருமில்லைன்னு நினைக்காதே மகளே அப்பா நானிருக்கேன் உனக்கு! பய ஏதாவது பிரச்சினை பண்ணா எங்கிட்ட சொல்லு… அவனை நான் பார்த்துக்கிறேன் என்றவரை பாசத்தோடு ஏறிட்ட தமிழரசிக்கு அவரையும் அவர் குடும்பத்தினரையும் மிகவும் பிடித்துவிட அவர்களை சொந்தத்தோடு ஏறிட்டாள். முன்பின் அறிமுகமில்லாத தன்னை அவர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டவர்களை அவள் வியப்புடன் பார்த்திருக்க….. பாண்டி மலர்ந்த முகமாய் மனைவியை ஏறிட்டவன்.


“பேபி உனக்கு இன்னொரு முக்கியமான வி.ஐ.பியை அறிமுகப்படுத்த மறந்துட்டேன்…. இவரு தான்… அபிமன்யு மேத்தா!! இவங்களோட லிட்டில் பிரின்ஸ் என்று சுனில் கைகளிலில் ஏந்தி இருந்த ஆறுமாதமேயான அவர்கள் குழந்தையைக் காட்ட… குண்டு குண்டு கண்களோடு… வட நாட்டவருக்கே உரிய மைதாமாவு நிறத்தில் குட்டி கைகால்களை அசைத்து சிரித்துக்கொண்டிருந்த அந்த அபிமன்யுவை விழிகள் விரிய பார்த்தவள் ஆவலோடு அவன் அருகில் நெருங்கி… அவனின் பஞ்சுக் கன்னத்தை வருடியவளை பார்த்து குழந்தை தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்து அவளிடம் தாவ…அவளும் ஆசையுடன் தன் கைகளில் ஏந்திக்கொண்டாள். அவன் கன்னத்தில் ஆசையாய் முத்தம் வைத்தவள் கணவனைப் பார்த்து…. “இந்தகுட்டிப்பையனை பாருங்களேன்… என்னைப்பார்த்தவுடன் எப்படி தாவிக்கிட்டு ஓடி வர்றான்… ச்சோ…சூவிட் இல்லைங்க….?!” முகம் விகசிக்க சொன்ன மனைவியை குழந்தையோடு பார்த்த பாண்டியின் கண்களில் கனவுகள் மின்ன தன்னவளை ஆசையோடு ஏறிட்டவன் பார்வையால் தன்னவளை வருடி “ஆமா…ச்சோ சூவீட் தான்!!” என்றான் கண்களில் காதல் வழிய.


ஒருவழியாக அனைவரின் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டு தங்கள் ப்ளாட்டை அடைந்த தம்பதியினருக்கு தனிமை வழங்கி சுனில் குடும்பத்தினர் விடைபெற்று எதிரேயிருந்த தங்கள் அபார்ட்மெண்ட் நோக்கி சென்றுவிட்டனர். தங்கள் ப்ளாடிற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்த தமிழரசி அறையை பார்வையால் அளக்க… அவளுக்கு பின்னே கதவை அடைத்துவிட்டு வந்து நின்ற பாண்டி மனைவியின் இடையை பின்னோடு அணைத்து அவளது தோள்மீது தன் நாடியைப்பதித்து… “இது தான் நம்மோட அரண்மனை உனக்கு பிடிச்சிருக்கா பேபி?!” என்று அவளது காதோரம் இதழுரச கேட்க ….அதிநவீனமாக இருந்த அந்த அறையை விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்தவள் கணவனின் தொடுகையில் தன்னை மறந்து அவன் பின்னோடு சாய்ந்தவள் “ம்ம்ம…. ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவளை தோளோடு அணைத்தவன் முகம் மலர “வா வீட்டை சுத்திக்காட்டுறேன் என்று அழைத்துச்சென்றான். அந்த வீடு மிகப்பெரிய வரவேற்பறையுடன், நான்கு படுக்கையறைகளையும். ஓரளவு பெரிய சமையலறை.. சிறிய பூஜையறையோடு அனைத்து வசதிகளுடனும் இருந்தது. வரவேற்பறை உட்பட அனைத்து படுக்கை அறைகளிலும் பால்கனியோடு நல்ல வெளிச்சத்துடனும் காற்றோட்டத்துடனும் நவீன முறையில் அனைத்து வசதிகளுடன் மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது அந்த உயர்தர குடியிருப்பு. நான்கு அறைகளில் முதல் அறையை அலுவலக அறையாக பயன்படுத்தியிருந்தான் பாண்டி அறை முழுவதும் ஏராளமான புத்தகங்கள் அலமாரிகளில் அழகாக அடுக்கி வைக்கட்டிருக்க அதற்கடுத்து ஒரு மேசையில் கணினியும் அமர்வதற்கு நாற்காலியுடன் இருந்தது அவ்வறை. அடுத்து இரண்டாவதாக சற்று பெரிதாக இருந்த அறைக்குள் மனைவியுடன் நுழைந்தவன்.


“வாருங்கள் மகாராணி… இது தான் இந்த பாண்டியனின் பள்ளியறை…. நெடுங்காலமாய் தங்களின் வரவுக்காக காத்திருக்கிறது” என்று தலைவணங்கி வரவேற்றவனின் குறும்பில் முகம் சிவந்தவள்... அந்த அறையை தன் பார்வையால் அளந்தாள். பெரிய மரக்கட்டிலும் அறையின் ஒருபக்க சுவர் முழுவதும் நிறைத்திருந்த வார்ட்ரோப்பும் அதை ஒட்டிய நவீன வசதிகளுடன் கூடிய குளியலறையும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அறையின் வலதுபக்கத்தில் மூடியிருந்த பால்கனி கதவை அவன் திறந்ததும் சில்லென்ற காற்று முகத்தில் மோத அதில் உடல் சிலிர்க்க நின்ற மனைவியின் கையை பிடித்துக்கொண்டு அழைத்துச்சென்றவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தது. அங்கே தூரத்தில் தெரிந்த நீல வானமும் பச்சை போர்வையை விரித்து ஆடையாக உடுத்தியிருந்த மலைகளையும் அதைத் தொடர்ந்த ராஞ்சி நகரின் அழகையும் விழிகள் வெளியே தெரித்துவிடும் அளவுக்கு விரித்து பார்த்து தன் கைகள் இரண்டையும் கன்னத்தில் வைத்து “வாவ்….!! ப்யூட்டிபுல்!! என்று வாயைப் பிளந்து தன்னை மறந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்த மனைவியை அள்ளிப்பருகுவதைப்போல பாண்டி பார்த்து ரசித்துக் கொண்டிருக்க... சிறிது நேரம் கழித்து கணவனை அவள் திரும்பி பார்க்க பால்கனியின் கம்பியில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு ஒற்றைக் காலை ஸ்டைலாக மடக்கி வைத்து கொண்டு தன்னையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனை கண்டதும் வெட்கத்தில் தேகம் முழுவதும் சிவக்க அவனை ஏறிட்டவள்…. “இப்ப எதுக்கு இப்படி பார்த்து வைக்கிறான்…!? என்ன பார்வைடா.. இது அப்படியே பார்வையாலே தன்னை கபளீகரம் செய்வதைப்போல என்று மனதுக்குள் புலம்பியவளின் மனதைப் படித்தவனாய் கண்களில் மின்னலுடன் தன்னவளை நெருங்கியவனின் மார்பில் கை வைத்து தடுத்தவள் “நான் குளிக்கப்போறேன்” என்றுவிட்டு திடீரென்று அவனை தள்ளிவிட்டு குளியலறைக்குள் ஒடி மறைந்தாள். அவளின் செய்கையில் அவனது இதழ்கள் தாமாக விரிய தன் தலையைக் கோதியவன்... சிரித்துக்கொண்டே அறையை விட்டு வெளியே வரவும்... அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருக்க… கதவை திருந்தவன் வாசலில் நின்றிருந்த சோனாக்க்ஷியைப் பார்த்து "என்னமா…??!" என்க தன் கையிலிருந்த பாத்திரங்ககளை அவனிடம் தந்தவளை கேள்வியாக அவன் நோக்க…


“அண்ணா சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்…. இதுல நீங்க ரெண்டு பேரும் குடிக்க சாயாவும் , டிபனும் வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க மதியம் சாப்பாட்டோட வர்றேன்….!” என்று படபடத்தவள் அவன் பதிலைத் கூட எதிர்பாராமல் சென்றுவிட்டாள். புன்னகையோடு தலையை இருபுறம் ஆட்டியவன் அவள் கொடுத்தவற்றை ஹால் டீப்பாயின் மேல் வைத்துவிட்டு குளிப்பதற்காக தானும் பக்கத்து அறைக்குள் நுழைந்தான்.


அவன் வருவதற்குள் குளித்து முடித்து புடவை உடுத்திக்கொண்டு வெளியே வந்தவள் நேராக பூஜை அறைக்குள் செல்ல தூசு படிந்திருந்த பூஜையறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்துவிட்டு அங்கேயிருந்த அண்ணாமலையானையும் உண்ணாமுலை அம்மனையும் கண்களை மூடி பிரார்த்தனை செய்தவள். சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கேயிருத்த பிரிட்ஜை திறந்து பார்த்தாள் அதில் ஒன்றுமில்லாமல்… காலியாக கிடக்க ... அடுத்து சமையலறையில் இருந்த மாடுலர்கிச்சனின் கதவுகள் ஒவ்வொன்றையும் திறந்து பார்க்க அனைத்தும் வெறுமையாக காட்சியளித்தது… யோசனையோடு நின்றிருந்தவளை இரு முரட்டு கரங்கள் பின்னிருந்து அணைக்க அந்த ஸ்பரிசத்தில் தன்னவனை உணர்ந்தவள்.


“ம்ம்ம்…..பசிக்குது ஏதாவது சமைக்கலாம்னு பார்த்தா வீட்டுல ஒரு பொருளும் இல்லை இப்ப என்னங்க செய்யிறது?!" என்று கணவனின் பிடியிலிருந்தவாறே கேட்க.. அவளது கணவனோ அவளின் தோள்வளைவில் முகத்தை பதித்து மூச்சை உள்ளிழுத்து ஆழ்ந்து முகர்ந்தவன்…. "ம்ம்ஹ்ஹா...! வாசமா இருக்கடி… ஆமா…என்ன சோப் யூஸ் பண்ற என்ற அதிமுக்கியமான கேள்வியை கேட்டு வைத்தான்….!!” அதில் கடுப்புடன் அவனிடமிருந்து விடுபட முயன்றவளை எளிதாக அடக்கியவனின் இதழ்கள் சற்றே நகர்ந்து மனைவியின் கன்னத்தில் பயணிக்க.. அதில் அவளின் உணர்வுகள் கட்டவிழ்த்த போதும்… அவனை விலக்கித் தள்ளியவள்… கோபத்தோடு இரு கைகளையும் தன் இடையில் வைத்துக்கொண்டு… அவனை முறைத்துப் பார்த்தவள்.


“நான் என்ன கேட்டுக்கிட்டு இருக்கேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”


மனைவியின் கோபத்தை ரசித்தவன்… “ஆமா என்ன சொன்ன பேபி?!” என்று மறுபடியும் அவள் அருகில் வர எத்தனிக்க… அவனைவிட்டு பின்னாடி இரண்டு அடி நகர்ந்தவள் கனல் பார்வையை அவனை நோக்கி வீசி…


“ம்ம்ம்….சொன்னாங்க சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு…”


“அப்படியா சொன்ன…? சுரைக்காய் பத்தியெல்லாம் என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும் பேபி!!” என்றான் கள்ளச்சிரிப்போடு… அதில் இன்னும் கோபத்துடன் அவனை முறைத்தவளைப் பார்த்து கைககளை உயர்த்தியவன் “ஐயம் சரண்டர் பேபி” நான் பயந்துட்டேன்” என்றவன். அவளது கைகளை சுண்டி இழுக்க…அதில் அவனது மார்பில் மோதி நின்றவளை தோளோடு இறுக அணைத்தவாறு வரவேற்பரைக்கு கூட்டிச் சென்றவன். சோனாக்ஷி கொடுத்துவிட்டு சென்றவற்றை காட்ட ...


“இது …நீங்க ஓட்டல்ல இருந்து வாங்கிட்டு வந்தீங்களா?! ஆனால் பாத்திரங்களைப்பார்த்தா அப்படி தெரியலையே?” என்று குழந்தையாய் வினவியவளின் கையை பிடித்து தன்னருகே அமர்த்திக்கொண்டவன்.



“ரிலாக்ஸ் பேபி என்றவன் சோனாக்ஷி வந்து இதைக்கொடுத்துவிட்டு மதிய விருந்துக்கு அழைத்ததையும் கூற… சமதானமாகியவள் அதை எடுத்து சென்று டைனிங் டேபிள் மீது வைத்தவள் திறந்து பார்க்க... இட்லி, தோசை சாம்பார் சட்னி…யுடன் பைனாப்பிள் புட்டிங்கும் வைத்திருக்க ஆச்சரியத்தில் விழி விரித்தவளை மென்னகையுடன் ஏறிட்டவன். சோனாக்ஷியோட அம்மா நம்ம ஊரு தான் மதுரை தான் அவங்க சொந்த ஊரு. அப்பா தான் இந்த ஊரை சேர்ந்தவர். அவங்களோடது காதல் கல்யாணமாம். அதன்பிறகு இருவரும் திருப்தியுடன் உண்டு முடிக்க.. பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வந்தவளை கைகளை நீட்டி பார்வையால் அழைத்தவனின் அருகே சென்றவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டவன்.


“உனக்கு சமைக்க தெரியுமா பேபி…?!”


“ம்ம்ம் தெரியும்….!” என்றவளை புருவம் உயர பார்த்தவன்.

“ரியலி…. ?!”


"இதிலென்ன இவ்ளோ ஆச்சரியம் உங்களுக்கு…?! சிறு கோபத்துடன் வினவியவளை குறும்பு சிரிப்புடன் ஏறிட்டவன்.


“பின்ன இல்லையா… ஐ.டி படிப்பு படிச்சு…. மார்டன் மங்காத்தாவா மெட்ரோ சிட்டியில் நுனி நாக்கு ஆங்கிலமும்…. பீட்சா கார்னருமாய் வலம் வந்த பொண்ணுக்கு வீட்டுல கிச்சன் இருக்கிறது தெரியுமாங்கிறதே சந்தேகம் தான்… இதுல உனக்கு சமைக்கவும் தெரியும்னு சொன்னா எனக்கு அதிர்ச்சி ஆகுமா ஆகாதா?!” என்று நியாயம் கேட்டவனை முறைத்து பார்த்தவள் அவனிடமிருந்து விலகமுயற்சிக்க…. அவன் விட்டால் தானே…!


“இப்ப எதுக்குடி விலகி ஓடுறதுலேயே குறியா இருக்க?”…எது பேசுறதாயிருந்தாலும் இங்கேயிருந்தே பேசு என்று அவளது இடையில் கையிட்டு இறுக்கிக் கொண்டவனின் அடாவடியில் முகம் சிவந்தவள் ரோஷமாக…..


“நான் ஒண்ணும் அப்படியெல்லாம் கிடையாது…. நான் காலேஜ் போக ஆரம்பிச்ச போதே மீனுகிட்ட சமைக்க கத்துக்கிட்டேன். இல்லைன்னா பொம்பளை பிள்ளைக்கு கட்டாயம் சமைக்கத் தெரிஞ்சிருக்கனும்னு மணிக்கணக்கா லெக்சர் அடிக்க ஆரம்பிச்சிடும். அந்த கொடுமைக்கு இதுவே பெஸ்ட்டுன்னு தான் கத்துக்கிட்டேன். அதுமட்டுமில்ல… வாத்திகிட்டயும் போட்டு கொடுத்துடும். அவரும் தன் பங்குக்கு காதுல இரத்தம் வர்ற வரைக்கும் அட்வைஸ் பண்ணுவாரு…. இதெல்லாம் தேவையா…? என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டே சென்றவள்…. அமைதியாகிவிட்ட கணவனை திரும்பி பார்க்க… அவன் இவளைத்தான் ரசனையோடு கண்கள் மின்ன பார்த்துக்கொண்டிருந்தான்.



அவனது பார்வையில் வெட்கி உதடு கடித்தவளை… பார்த்தவன்… “ஏண்டி நீ இவ்வளவு பேசுவியா… அதுவும் என் மாமனாரு மாமியாரையே நக்கல் பண்ற இந்த வாய்க்கு என்ன தண்டனை கொடுக்கலாம்…?” என்று யோசிப்பது போல பாவனை செய்தவனை முறைத்துப் பார்த்தவள்….


“ஹலோ மிஸ்டர்… அவங்க என்னோட அப்பா அம்மா நான் எப்படி வேணும்னாலும் நக்கல் அடிப்பேன் உங்களுக்கென்ன?” என்று தன்னிடம் வரிந்துகட்டிக் கொண்டு வார்த்தையாடியவளை சுவாரஸ்யமாக பார்த்தவனுக்கு அவளுடனான இந்த வார்த்தையாடல் பிடித்துவிட…

“ஹலோ மேடம் அது அப்போ….!”


“அட… இப்ப மட்டும் என்ன புதுசா வந்துடுச்சாம்…?”


“இப்ப அவங்க இந்த ரத்னவேல் பாண்டியனோட மரியாதைக்குரிய மாமனார்… மாமியார் அதை நினைவிலே வச்சுக்க… என் எதிரில் அவங்களை நக்கல் பண்ற வேலையெல்லாம் வேணாம்!”


“ஆஹான்….இருக்கட்டுமே?! அதனால அவங்களுக்கு என்ன ரெட்டை கொம்பா முளைச்சிடுச்சி… ? நான் அப்படித்தான் பேசுவேன் என்ன பண்ணுவீங்க?!” என்று சிலிர்த்துக் கொண்டவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன் மின்னல் வேகத்தில் அவளது இதழ்களை கவ்விக்கொண்டான். கணவனது திடீர் இதழ் முற்றுகையில் முதலில் திகைத்தவள். பின்னர் மயக்கத்துடன் தன் விழிகளை மூடிக்கொண்டாள். அவளது கைகள் தானாவே மேலே உயர்ந்து கணவனது கழுத்தை வளைத்துக் கொண்டது.


(கையணைக்க...வருவான்!)


ஹாய் பேபீஸ் கதையின் 23 ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்துவிட்டு கமெண்டுங்க பேபீஸ்😍😍😘😘😘😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
99079906


அத்தியாயம் : 24

சென்னையில் தான் துவங்க இருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு நகரத்தின் மையத்தில் இடம் தேடிக்கெண்டிருந்தான் இளா. தரகர்மூலமாக பல இடங்களுக்கு சென்று பார்த்தவனுக்கு ஏனோ அவை எதுவும் பிடிக்கவில்லை. அதுபற்றி கேள்விப்பட்ட அவனுடன் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன் இளாவை தொடர்பு கொண்டு ஒரு இடத்தை சிபாரிசு செய்ய அந்த இடத்தை சென்று பார்த்தவனுக்கு பிடித்துவிட அந்த இடம் பற்றிய தகவல்களை நண்பனிடம் கேட்டு தெளிய விரும்பியவன் அவனை நேரில் சந்திப்பதற்காக வடபழனியிலுள்ள விஜயா பாரம் மாலுக்கு சென்றிருந்தான். நண்பன் சொன்னபடி அங்கிருந்த புட் கோர்ட்டுக்குள் சென்றவன் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து நண்பனின் வரவுக்காக காத்திருந்தான். சுற்றிலும் கண்களை சுழற்றியவனின் பார்வை தரைதளத்தில் இருந்து மேலே ஏறிக்கொண்டிருந்த எஸ்கலேட்டரில் பதிய….அவனது விழிகளில் சட்டென்று ஒர் மின்னல் வெட்டு…. அங்கே வர்ஷூ அவளது தோழிகளுடன் கலகலத்தவாறு வந்து கொண்டிருந்தாள்.



“இந்த நேரத்தில் இவ இங்கே என்ன பண்றா?!” என்ற தன் கைக்கடிகாரத்தை நோக்கியவன் “ஓஹோ காலேஜ் கட்டடிச்சிட்டு பிரண்ட்ஸூங்களோட ஊரை சுத்துறாங்களா மேடம்?! என்று யோசனையாய் அவளில் பார்வை பதித்திருந்தவன்…. அவளது புன்னகையின் வசீகரத்தில் தன்னைத் தொலைத்தவனாய்….அணுவணுவாய் அவளை பார்வையால் அளந்தான்.



கறுப்பு நிறத்தில் வெள்ளைப்பூக்களை வாரியிறைத்த நீண்ட ஸ்கர்ட்டும் ….வெண்மை நிறத்தில் கறுப்பு மணிகளை கொண்டு அழகாக டிசைன் செய்யப்பட்டிருந்த டாப்ஸூம்… உடைக்கு பொருத்தமான அணிகலன்கள் அணிந்து கொண்டு…. அடர்த்தியான நீண்ட கூந்தல் முதுகில் படர்ந்திருக்க… ஸ்டைலாக வெட்டி விடப்பட்டிருந்த கற்றை குழல் முன்பக்க நெற்றியில் சரிந்து நிலவுமுகத்தை மேகமாய் மறைக்க…அதை இலாவகமாய் கோதி பின்னுக்கு தள்ளிவிட்டவாறு… அரைத்த சந்தன நிறமாய் பளிச்சிட்ட நெற்றிக்கு மத்தியில் கடுகளவேயான சிறு பொட்டும்… கண்களில் கறுப்பு நிற கூலர்ஸூமாய்.. மார்ப்புக் குறுக்கே அழகான ஹாண்ட் பேக் அணிந்து கொண்டு.. நவநாகரீக பதுமையாய்….அழகிய பார்பி பொம்மையைப்போல நடந்து வந்தவளை இமைகளை சிமிட்ட மறந்து பார்த்திருந்தவனின் இதயம் ஒரு நொடி நின்று துடிக்க.... உதடுகளோ… அவளது வசீகரத்தில் மயங்கி “மோகினிப்பிசாசு!” என்று செல்லமாய் முணுமுணுத்தது. இது எதையும் அறியாது தோழிகளுடன் சலசலத்தவாறு வந்தவள் நேராக அவனிருந்த புட் கோர்ட்டுக்குள் நுழைந்தாள். அவளது வரவை அறிந்தவன் அங்கிருந்த மெனு கார்டை எடுத்து தன் முகத்தை மறைத்துக் கொண்டான். அவர்கள் தன்னைக்கடந்து சற்றுத் தள்ளியிருந்த இருக்கையில் அமர்ந்ததும். மெதுவாக மெனுவட்டையை விலக்கியவன் பார்வைத் தன்னவளைத் தேட அவள் அவனுக்கு முதுகை காட்டியவாறு அமர்ந்திருந்தாள் . அதில் இலேசாக நிம்மதிபெரு மூச்சுவிட்டவன் .. தடைகளின்றி தன் பார்வையிடலைத் தொடர்ந்தான்.



கல்லூரிப் பெண்களுக்கே உரிய கலகலப்பும் ஆரவாரமும் வெடிச்சிரிப்பும் அவ்விடத்தில் அடிக்கடி எழந்து அடங்க … அங்கே சாப்பிடவந்திருந்த மற்றவர்களின் பார்வை அவர்கள் மீது சற்றே சுவாரஸ்யமாய் பதிந்தது. பருவப் பட்டாம்பூச்சிகளின் மகிழ்ச்சியும் ஆர்பரிப்பும் தங்கள் கல்லூரிக்காலத்தை அவர்களுக்கு நினைவூட்ட அவர்களின் மகிழ்ச்சி அலை இவர்களையும் தொற்றிக்கொள்ள புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தனர். இளாவும் புன்னகை முகமாக அவர்களின் குறும்பு பேச்சை கண்டும் காணாதது போல அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னிருக்கையில் வந்து அமர்ந்த இளைஞர் கூட்டததின் பார்வையும் இவர்களின் மீது ஆர்வத்தோடு படர…அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.



“அடேய்…. மாப்ளே அங்க பாரேன் எத்தனை பிகர்ஸ்… அத்தனையும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு பாரேன்! என்று ஒருவன் ஜொள்ள… அவனுடன் வந்த மற்றவர்கள் அனைவரும் ஏற்கனவே அங்கே தான் தங்கள் பார்வைகளை பதித்திருந்தார்கள்.. அதை உணர்ந்து கொண்டவன்…



“அதானே..!பார்த்தேன்! நாம தான் வழக்கம்போல லேட்டு பிக்கப்பு போல பயபுள்ளைங்க எப்பவோ ஆரம்பிச்சிட்டானுங்க!” என்று தன்னையே நொந்து கொண்டவனாய் தானும் தன் பார்வையிடலைத் தொடர்ந்தான்.



“மச்சி..!! இவங்கல்லாம் எந்த காலேஜ்டா?” என்று அதில் ஒருவன் கேட்க…. இன்னொருவன் அதற்கு பதில் தர …அது இவனுக்கு எப்படி தெரியும் என்று அவனை ஆச்சரியத்தோடு மற்றவர்கள் திரும்பி பார்க்க… “இப்ப எதுக்குடா இப்படி என்னை சந்தேகமா பார்க்குறீங்க…?!அந்த காலேஜ்ல தான்டா என் சித்திபொண்ணு படிக்கிறா…. அவளை டிராப்பண்ண போகும் போது அதோ அந்த ஒயிட் கலர் டாப்ஸ் போட்டிருக்க பொண்ணை அங்கே பலமுறை நான் பார்த்திருக்கேன். பொண்ணு அழகா இருக்காளேன்னு என் சித்திப் பொண்ணு கிட்ட இலேசா விசாரிச்சேன். அப்ப தான் இந்த பொண்ணு பத்தி தெரிஞ்சுகிட்டேன். இவ பேரு வர்ஷினி… இவ தான் அந்த காலேஜோட ப்யூட்டி க்யீனாம்!!”
அவர்களின் பேச்சை தானும் செவிமடுத்த இளாவுக்கு வர்ஷினியைப் பற்றிய அவர்களின் பேச்சு ரசிக்கவில்லை முகம் கடுகடுக்க அவர்களை உறுத்து விழித்தான்.


“வாவ்….உண்மையிலையே இவ ப்யூட்டி க்யீன் தான்டா….!. என்னா கலரு …! என்னா லுக்கு! சூப்பரா இருக்காடா… ! லவ் பண்ணா இப்படி ஒருத்தியை பண்ணணும்டா…என்று அவன் வாட்டர் பால்சை திறந்துவிட மற்றவர்களும் அதையே ஆமோதித்தனர்.



இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்த இளாவுக்கு ஆத்திரம் எல்லையைக் கடந்தது! கை முஷ்டி இறுக அவர்களை தூக்கிப்போட்டு பந்தாடும் வெறி கிளம்பியது. சூழல் கருதி தன்னை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தவன்.... யாரை யாரு லவ் பண்றது என்ற கோபம் கொந்தளித்தது. அவர்கள் குறிப்பிட்டது அவன் வர்ஷூவை அல்லவா…! அவர்களின் உரையாடல் மேலும் தொடர்ந்தது.



“மச்சி….அப்படி ஒரு ஆசை இருந்தா அதை இப்பவே அழி ரப்பரை வச்சி அழிச்சிடு! அவளெல்லாம் நமக்கு கிடைக்க மாட்டா …!மச்சி”.



“ஏண்டா… பண்ணாடை ..உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா?? என்று மற்றவன் எகிற



அதை இலகுவாக தூக்கி போட்டவன் … “உண்மையைத்தான்டா சொல்றேன்….! அவ ரொம்ப பெரிய இடம் மச்சி ! P.K group of Companies கேள்விபட்டிருக்கீங்களா… அதோட அதிபர் கோடீஸ்வரர் பரமேஸ்வரனோட பேத்தி தான் இந்த வர்ஷினி…!



“ஓ…. அதனால என்னடா அவ எவ்வளவு பெரிய பணக்காரியா இருந்தாத்தான் எனக்கு என்ன ?! எனக்குத்தேவை அவளோட பணம் இல்லை அவளோட காதல் தான் மச்சி!” என்று டையலாக் பேசியவனை பார்த்து வாய்விட்டு அவன் சிரிக்க…பின்பு ஏளனத்துடன்…



பார்க்குற பிகரையெல்லாம் மடக்க நினைக்குற நீயெல்லாம் காதலைப்பத்தி பேசுறது தான்டா கொடுமை! அதையும் நாள் பூரா உன்கூடவே சுத்துற என்கிட்டியே சொல்ற பார்த்தியா அங்க நிக்கிறடா… நீ என்றவன் கிண்டலில் மற்றவர்களுக்கும் சிரிப்பு பீறட்டது. கட்டுப்படுத்த முடியாமல் அவர்களும் வாய்விட்டு சிரிக்க… அவர்களைப் பார்த்து முறைத்தவன்.



“டேய்…டேய்..! அடங்குங்கடா…. நேற்று வரைக்கும் நன் அப்படி இருந்திருக்கலாம் ஆனா இன்னைக்கு…!”


“இன்னைக்கு…… திருந்திட்டியா மச்சி?! என்று சிரிப்பை அடக்க முயன்றவாறு கேட்டவனை முறைத்தவன் “போங்கடா பக்கிங்களா நீங்க நம்புனாலும் நம்பலனாலும் நான் அவளை காதலிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்…. என்றவனை எகத்தாளமாக பார்த்தவன்….



“சரி ஒகே மச்சி விதி வலியது ஆனா கடைசியா உன்னை ஒருவாட்டி முழுசா பார்த்துக்கிறேன்…” என்றவனை மற்றவர்கள் கேள்வியாக பார்க்க… அவர்களை ஒருமுறை.. பார்த்தவன் …



“அவங்க தாத்தாவைப்பற்றி மட்டும் தானே சொன்னேன் அவங்க அப்பாவை பற்றியும் சொல்றேன் கேட்டுக்கங்க…. அவங்க அப்பா வேற யாருமில்லை நம்ம சென்னை சிட்டியோட டி.ஜி.பி மிஸ்டர் P.மாதவன் ஐ.பி எஸ்…. என்றவனை…நண்பர்கள் குழு திகைப்புடன் பார்க்க..!அந்த தெய்வீகக் காதலனுக்கோ குடித்துக்கொண்டிருந்த பழச்சாறு புரையேறியது. பெருங்குரலெடுத்து அவன் இறும ….அந்த சத்தத்தில் வர்ஷூ அவர்களைத் திரும்பிப் பார்க்க… அவர்களுக்கு பின்னிறுக்கையில் அமர்ந்திருந்த இளாவைக் கண்டு இன்பமாய் அதிர்ந்தாள். திடீரென அவள் திரும்புவாள் என்பதை எதிர்பாராதவனாய் இளா ஒரு கணம் அதிர்ந்தாலும் மறுகணமே அவளை கோபத்தோடு முறைத்துப் பார்த்தான். தன்னவனைக் கண்ட எதிர்பாராத இன்ப அதிர்வில் அவளது முகம் பூவாய் மலர… தன் தோழிகளிடம் திரும்பி எதையோ சொல்ல… அவர்கள் அனைவரின் பார்வையும் ஆவலோடு இளாவை நோக்கித் திரும்பியது. ஒட்டுமொத்த பெண்களின் பார்வையும் தன்னை நோக்கி திரும்பியதில் சங்கடம் அடைந்தவன்… “அய்யோ இந்த மோகினிப்பிசாசு அதுங்க கிட்ட என்னத்தை உளறிக்கொட்டுச்சோ தெரியலையே?! அதுங்க எல்லாம் ஒரு மார்க்கமா நம்மளையே பார்க்குதுங்களே?! இப்ப என்னடா பண்றது இளா…. ?! பேசாம கிளம்பிடுவோமா? என்று தனக்குள் முணுமுணுத்தவாறு அலைபேசியை கையில் எடுத்து அதில் பார்வையை பதிக்க… அங்கிருந்து எழுந்து அவனை நோக்கி வந்த வர்ஷினி அவனது பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள்….



“ஹாய் மாமா !! ஐ யாம் சர்ப்பரைஸ்டு!! என்ன இந்தபக்கம்? உங்களை நிச்சயமா இங்கே எதிர்பார்க்கலை.. எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு! ஆமா நீங்க எப்படியிருக்கீங்க? சென்னையில் தான் இருக்கீங்களா..? என்று கேள்விகளை அவள் அடுக்க… இளாவோ அவனுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த நண்பர்கள் கூட்டத்தை சீற்றத்துடன்… உறுத்து விழித்தவன் தன் முழுக்கை சட்டையை மடித்து விட்டவாறு அவர்களை நோக்க… அவளின் தந்தை போலீஸ் அதிகாரி என்றதிலேயே அதிர்ந்தவர்கள்…. தங்களுக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவனின் பக்கத்தில் சென்று உரிமையாய் அமர்ந்து… அவனை மாமா என்று அழைத்ததில் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அதுவும் இளா அவர்களை பார்த்த பாசப் பார்வையில் அவன் இதுவரை தாங்கள் பேசியதையெல்லாம் கேட்டுவிட்டான் என்பதை உணர்ந்து வெலவெலத்து போனவர்களாய்.... பயத்தில் உலர்ந்த தொண்டையை எச்சிலைக்கூட்டி விழுங்கியவர்கள் அடுத்த நொடி அவ்விடத்தைவிட்டு நழுவி ஓடி விட்டனர்.



இது எதையும் அறியாது…தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவனை பார்த்தவள். என்னாச்சு..மாமா..!என்கிட்ட பேச மாட்டீங்களா மாமா ?! என்றாள் குரல் கம்ம.... ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அவளைப்பார்த்ததும் ஆத்திரம் பன்மடங்காய் பெருகிய போதும்… தங்களையே கண்டும் காணாமல் பார்த்தபடி அமர்ந்திருந்த அவளின் தோழிகளை ஒரு கணம் திரும்பி பார்க்க…. அவர்கள் சட்டென்று தங்கள் பார்வையை தற்காலிக விலக்கிக்கொள்ள… சூழல் கருதி தன்னை அடக்கிக் கொண்டவன். “ நீ எதுல வந்த..?” என்று அவளைப்பார்த்து இறுகிய முகத்தோடு வினவ.. பசங்களோட கேப் புக் பண்ணி வந்தேன் மாமா என்றவளை கோபத்தோடு உறுத்து விழித்தவன்…! “கிளம்பு நான் டிராப் பண்றேன் என்றவன்…அவளது பதிலை எதிர்பாராமல் வெளியேற … முதலில் அவனது கோபத்தில் திகைத்து… அவன் வார்த்தைகளில் முகம் மலர்ந்தவள் தன் தோழிகளிடம் சைகையால் விடைபெற்று அவனைப் தொடர்ந்து பின் தொடர்ந்து ஓடினாள்.

அவனது வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாது அவனுடன் ஏறக்குறைய ஓடியவள் அவனை அடைந்ததும் அவனுடன் இணைந்து நடக்க… அவளை திரும்பியும் பாராமல் கார் பார்க்கிங்கை அடைந்தவன் காரில் ஏறி அமர அவனுடன் முன்பக்க இருக்கையில் வர்ஷூவும் அமர காரை கிளப்பியவன் மாலை விட்டு வெளியேறி சென்னை டிராபிக்கில் கலந்தான். அவன் ஏதாவது பேசுவான் என்று அவனது முகத்தையே திரும்பி திரும்பி ஆவலோடு அவள் பார்க்க…அதை உணர்ந்த போதும் கண்டுகெள்ளாமல் இறுக்கமான முகத்தோடு பார்வையை சாலையில் பதித்திருந்தான் இளா.



“ம்க்கும் …இந்த ரிஷ்ய சிங்கர் அப்படியே வாயைத் திறந்து பேசிட்டாலும்!.... உலகம் அழிஞ்சிடாது ! என்று மனதுக்குள் நொடித்துக்கொண்டாலும்…முதன்முறையாக தன்னவனுடனான இந்த தனிமையான கார் பயணத்தை வெகுவாக ரசித்தாள் வர்ஷினி… இந்தபயணம் முடிவில்லாது தொடராதா என்று ஏக்கத்துடன் தன்னவனின் முகம் பார்த்தவளுக்கு பெருமூச்சு எழுந்தது. ஏதோ யோசனையில் இருந்தவன் அவளது பெருமூச்சில் மீண்டு அவளைத் திருப்பிப் பார்க்க… நிலவைக் கண்டதும் மலரும் அல்லியாய் அவளது விழிகள் ஏக்கத்தோடு அவனது விழிகளைக்கவ்விக் கொள்ள…. அவளது விழிகள் என்னும் மாயச்சுழலில் ஒர் கணம் கட்டுண்டவனாய் அவளை நோக்கியவன் சட்டென்று தன் பார்வையை விலக்கிக்கொண்டான். “ யப்பா என்னா கண்ணுடா இது! அப்படியே ஆளை சுருட்டி விழுங்குறதைப்போல…. உன் ஏக்கப் பார்வையாலே கொல்லாதடி என்னை! உன்னை விட்டு விலகிப் போகனும்னு நான் நினைக்கிறேன்…. புரிஞ்சிக்கடி எனக்கும் உனக்கும் செட்டாகாது. நான் எட்டிப்பிடிக்க முடியாத தொலைதூர தொடுவானமாய் நீ இருக்க உன்னைத் தொட்டுத் தழுவ என் மனது துடிக்கும் துடிப்பை உன்னால் உணர முடியாது. உணரவும் வேண்டாம். உனக்கென உன் குடும்பம் தேடித் தரும் அனைத்து தகுதிகளுடனும் கூடிய ஒருவனை நீ மணப்பது தான் உனக்கு நல்லது. என்னைவிட்டு விடு என்று மனதுக்குள் அரற்றியவன் உணர்வுகளை துடைத்த முகத்துடன் சாலையை வெறித்தான். பொருத்துப் பார்த்தவள் அவனது மௌனத்தை தாங்க இயலாதவளாய் அவனை நோக்கியவள்… இதுபோன்றதொரு சந்தர்ப்பம் இன்னொரு முறை வாய்க்குமோ வாய்க்காதோ கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தவளாய்… அவன் புறம் திரும்பி அமர்ந்தவள்.

“மாமா… என்றழைக்க திரும்பிப் பார்த்தவனிடம் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் காரை கொஞ்சம் நிறுத்துங்க!



என்ன விஷயம்னு அப்படியே சொல்லு காரையெல்லாம் நிறுத்தமுடியாது எனக்கு வேலையிருக்கு… என்றவனை கோபத்துடன் ஏறிட்டவள்.


"அப்போ காரை நிறுத்தமாட்டீங்க!"


"முடியாது"


"இப்ப மட்டும் நீங்க காரை நிறுத்தல நான் கார் கதவை திறந்துகிட்டு வெளியே குதிச்சிடுவேன்..என்றவளின் வார்த்தைகளில் திடுக்கிட்டவன் சட்டென்று காரின் வேகத்தைக்குறைத்தவன் அவளை முறைத்துப்பார்த்தவாறு ஆளரவமற்ற சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்தினான்.
'அப்படி வாடா மாமா வழிக்கு உன்கிட்டேயெல்லாம் மயிலே…மயிலேன்னா இறகு கிடைக்காது…ஒரே அமுக்கா அமுக்கி வெடுக்குன்னு புடுங்கனும்!' என்று மனதுக்குள் குதூகலித்தவள் வெளியே தானும் அவனது பார்வையை அசராது எதிர் கொள்ள… அவளது செய்கையில் இதழ் கடையோரம் அரும்பிய புன்னகையை அடக்கிக்கொண்டவன்..


“ஏதோ பேசனும்னு சொன்னியே சீக்கிரமா என்னன்னு சொன்னா நான் பாட்டுக்கு கிளம்புவேன் எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கு உன்னைப்போல வெட்டி‌ அரட்டை அடிக்க நான் ஆளில்லை” என்று அவளது முகம் பார்ப்பதை தவிர்த்து சாலையை பார்த்தவாறு சொன்னவனை.பார்த்து அவளுக்கு கோபம் சுறு சுறுவென ஏறியது.



ஹலோ மிஸ்டர்…! யாரைப் பார்த்து வெட்டி அரட்டைன்னு சொல்றீங்க..? தெரியாமத்தான் கேட்குறேன்…எத்தனை தடவை என்னை கூட்டிட்டு நீங்க நகர்வலம் வந்தீங்க உங்க கூட கடலைப்போட்டு உங்க பொன்னான நேரத்தையெல்லாம் நான் வீணாக்குனேன்? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லை? நானும் வந்ததிலிருந்து பார்க்குறேன் நான் உங்களை பார்த்து பேசுனா நீங்க ரோட்டைப்பார்த்து பேசுறீங்க? என்னைப் பார்த்தா எப்படி இருக்கு..உங்களுக்கு? என் மூஞ்சி என்ன அவ்வளவு கொடூரமாவா இருக்கு? என்று அவனைப்பார்த்து படபடத்தவளை…ஆச்சரியத்துடன் அவன் திரும்பி பார்க்க… கோபத்தில் மூக்கு நுனி சிவக்க மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்க தன்னை முறைத்துப் பார்த்தவளை மனதுக்குள் ரசித்தவனுக்கு அவளை அள்ளி அணைத்து கோவைப் பழமாய் சிவந்த அந்த நுனி மூக்கின் மீது சிறு முத்தமிட்டு அதை செல்லமாய் கடித்தால் என்ன ?! என்ற ஆவல் எழ… தன் மனம் போகும் போக்கை கண்டு உள்ளுக்குள் அதிர்ந்தவன் சட்டென்று சுதாரித்து அவளை உணர்வுகள் துடைத்த பார்வை பார்த்தவன்..



“அதுக்கு இப்ப என்னாங்குற ?”



“எதுவும் இங்களை எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்!”



“சொல்லித்தொலை!”



“ஐ லவ் யூ மாமா!” என்று பட்டென்று தன் மனதை அவள் அவனிடம் உரைக்க… அதில் ஒரு கணம் உள்ளுக்குள் இன்பமாய் அதிர மறுகணமே தன்னை சமாளித்துக் கொண்டான்.



“வாட்…உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… காதலிக்குற வயசா உனக்கு? இன்னும் படிப்பைக்கூட ஒழுங்கா முடிக்கலை அதுக்குள்ள லவ் பண்றாளாம் லவ்வு இப்படியெல்லாம் உளறுறதை நிறுத்திட்டு போய் ஒழுங்கா படிச்சு முடிக்கிற வழியைப் பாரு!



"அதெல்லாம் இப்ப எனக்கு காதலிக்குற வயசு தான்!! படிப்பையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். பேச்சை மாத்தாம நீங்க முதல்ல எனக்கு உங்க பதிலை சொல்லுங்க…" என்று அவள் ஒரே பிடியாக நிற்க.. மனதுக்குள் சலித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சற்றுநேரம் மௌனம் காத்தான். பின் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவளைப் பார்த்தவன்.



“இங்கே பாரு வர்ஷூ… நான் யாரையும் காதலிக்கிற மனநிலையில் இப்ப இல்ல. இப்ப என் சிந்தனையெல்லாம் என்னோட கன்ஸ்டரக்ஷன் கம்பெனியை எப்படி முதல் இடத்துக்கு கொண்டு வரணுங்கறதைப் பத்தி மட்டும் தான் இருக்கு. மற்ற எதைப்பற்றியும் இப்போதைக்கு யோசிக்கக் கூட நான் விரும்பலை.. அதனால இந்த தேவையில்லாத நினைப்பையெல்லாம் தூக்கிப்போட்டுட்டு உருப்படற வழியிருந்தா அதைப் பாரு”!



“பரவாயில்லை மாமா…. உங்களுக்காக நான் எவ்வளவு வருஷம் வேணும்னாலும் காத்திருக்க தயாராயிருக்கேன். நீங்க உங்க தொழில்ல சாதிச்ச பிறகே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…அதுவரைக்கும் நாம காதலிக்கலாமே மாமா! என் படிப்பை முடிச்சிட்டு நானும் உங்க கம்பெனியிலேயே ஜாய்ன் பண்ணிக்கிறேன். அதுக்கப்புறம் நாம ரெண்டு பேருமா சேர்ந்து நம்ம பிஸினஸ்ஸை டெவலப் பண்ணுவோம் …ஓகே தானே மாமா.." என்று தன்போக்கில்பேசிக் கொண்டே போனவளை… இடைமறித்தவன்.


"கொஞ்சம் உன் வாயை மூடுறியா?! உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா…? படிச்சவ தானே நீ அறிவில்லை! இங்கே பாரு…. எனக்கு இப்ப மட்டும் இல்லை எப்போதுமே யாரையும் காதலிக்கிற ஐடியா இல்ல… அதுவும் முக்கியமா உன்னைக் காதலிக்கிற ஐடியா சுத்தமாயில்ல… உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர உன்னைப் பெத்தவங்க இருக்காங்க… கண்டிப்பா என்னைவிட எல்லாவிதத்திலும் பெட்டரானவனா உனக்கு ஒருத்தன் கிடைப்பான். அதுவரைக்கும் பொறுமையா இரு. இல்ல உனக்கு காதலிச்சே ஆகனும்னா…. அதுக்கு வேற ஆளைப்பாரு என்னை விட்டுடு… இதுக்கப்பறம் இதைப்பற்றி இனி எப்பவும் எங்கிட்ட பேசாதே…. என்று மேலும் எதையோ சொல்லப் போனவன் அவளின் அடிபட்ட பார்வையில் பாதியிலேயே நிறுத்திவிட்டு அவளின் முகம் பார்க்க பிடிக்காதவனாய் முகத்தைத் திருப்பிக் கெண்டான்.



அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளின் மென்மையான இதயத்தைக் குத்திக் கிழக்க… அது உண்டாக்கிய வலியில் துடித்தவளின் கண்கள் கலங்க… இமை சிமிட்டி தன்னை நிராகரித்தவனின் எதிரில் அழ விருப்பம் இல்லாதவளாய் அதை அடக்கிக் கொண்டவள். ஒரு முடிவோடு நிமிர்ந்து அமர்ந்து ஒத்துழைக்க மறுத்த குரலை கணைத்து சரி செய்தவள்… அவனைத் திரும்பிப் பார்க்க… சாலையில் பார்வை பதித்து அமர்ந்திருந்தவனின் பக்கவாட்டுத் தோற்றம் செதுக்கி வைத்த சிற்பமாய் மனதைக் கவர அதை ரசித்துப்பார்த்தவளுக்கு அவனில்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை.



மாமா..! என்று காதலைக் குழைத்த குரலில் அவள் அழைக்க... அவளை தன் வார்த்தைகளால் காயப்படுத்திவிட்டதை அவளது அடிபட்ட பார்வையில் உணர்ந்து அவளைவிட பலமடங்கு துடித்துப்போய் அமர்ந்திருந்தவனுக்கு அவளது அழைப்பு உயிர் வரை தித்திக்க சட்டென்று திரும்பிப்பார்த்தான்.



அவனது கண்களில் ஒரு கணம் தோன்றி மறைந்த வலியை உணர்ந்தவளாய்… அவனை தீர்க்கமான பார்வை பார்த்தவள் அவனது கண்களை நேருக்கு நேராய் ஊடுறுவிப் பார்த்தவாறு….



“நீங்க என்னைக் காதலிக்கலைன்னா என்ன மாமா… நான் உங்களை காதலிச்சிட்டேயிருப்பேன். இப்ப மட்டும் இல்ல… எப்பவுமே…! அதை உங்களால மட்டுமில்ல யாராலும் தடுக்க முடியாது!. இந்த ஜென்மத்தில் காதலோ கல்யாணமோ அது உங்க கூட மட்டும் தான். வேற யாரும் அந்த இடத்துக்கு வரமுடியாது! இதை எப்படி அவ்வளவு உறுதியா சொல்றேன்னு பார்க்குறீங்களா? உங்க கண்ணுல எனக்கான காதலை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன் மாமா!. என்னோட உள்ளுணர்வு பொய்க்காது. கண்டிப்பா உங்க மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்! இடையில் ஏதோ பேச வந்தவனை….. ஒற்றைக் கை காட்டி நிறுத்தியவள்….. நீங்க என்னதான் சமாளிக்கப்பார்த்தாலும் இது தான் உண்மை! ஏதோ ஒரு காரணத்துக்காக இப்ப அதை நீங்க மறைக்கிறீங்க! அந்த காரணம் எதுவாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. அதைப் பற்றி தெரிஞ்சிக்கவும் நான் விரும்பலை! ஆனா அது எதுவும் என்காதலை தடுக்காது அதை மட்டும் எப்பவும் நினைவுல வச்சிக்கங்க! என்று தீர்க்கமாய் உரைத்தவள்… இப்ப நாம கிளம்பலாம்!!” என்று தன் மனதில் இருப்பதையெல்லாம் அவனிடம் கொட்டியவளுக்கு உடலும் மனமும் இலேசானது போல தோன்ற… நிம்மதியாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து தன் கண்களை மூடிக் கொண்டாள். மூடிய இமைகளின் ஓரம் ஒரு துளி கண்ணீர் கோடாக வழிந்து கன்னத்தை நனைத்தது.

அவளுக்கு எதிராக எதையோ சொல்ல வந்தவன்… அவளது கண்ணீர் மனதைப் பிசைய சொல்ல வந்த வார்த்தைகளை மறந்து போனவனாக அவளையே சற்று நேரம் பார்த்தவன் மேற்கொண்டு எதையும் பேசி அவளை நோகடிக்க விரும்பாதவனாய் அமைதி காத்தான். தன் பொருட்டு அவள் சிந்தும் கண்ணீரைத் துடைத்து …இறுக்கி அணைத்து அவள் தவிப்பை போக்கி முகமெங்கும் முத்தம் பதித்து தனக்குள் இறுக்கிக் கொள்ளும் ஆவல் எழுந்த போதும் தன்னை அடக்கிக்கொண்டு.. அவளைத் தழுவத்துடித்த தன் கரங்களை வண்டியின் ஸ்டேரிங்கில் அழுத்திப் பிடித்தவன் அடுத்த நொடி அந்த நினைவை உதறித் தள்ளியவனாக காரை கிளப்பினான்.


அடுத்த அரைமணி நேரத்தில் வர்ஷூவின் வீட்டிற்கு சற்று முன்பாகவே வண்டியை நிறுத்தியவன் அவளைத் திரும்பிப் பார்க்க… அவள் இன்னும் கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“வ…..வரு என்று மென்மையாக அவன் அழைக்க…அந்த அழைப்பில் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தவள் அமைதியாக அவன் புறம் திரும்பி பார்த்தாள். பிறகு எதுவும் பேசாது பின்சீட்டில் இருந்த தன் கைப்பையை எக்கி எடுக்க முயல அதில் அவன் தோள் மீது அவளின் மேனி உரச அதில் மின்சாரம் பாய்ந்தது இருவருக்குள்ளும் . எதிர்பாராத தீண்டலில் இருவர் விழிகளும் ஒன்றுக்கொன்று மௌனமாய் பேசிக்கொள்ள… அதில் வர்ஷூவுக்கு உள்ளுக்குள் உற்சாகம் கரைபுரள அவனைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை அவள் கேலியாய் உயர்த்த அந்த அழகில் சொக்கிப் போய் பார்த்திருந்தவனை மின்னல் வேகத்தில் நெருங்கியவள். அவனது முகத்தோடு முகம் இணைத்து அவனது இதழோடு தன் இதழை அழுத்தமாய் பதித்தாள். சிறிது நேரம் கழித்து விலகியவள்… அவனது முகத்தை காதலாய் நோக்கி…. இது என்னோட முதல் காதல் பரிசு!! பத்திரமா வச்சுக்கோங்க மாமா! கல்யாணத்திற்கு பிறகு திருப்பி வாங்கிக்கிறேன்!! என்றவள் கலகலவென்று சிரித்தவாறே கார் கதவை திறந்து இறங்கியவள் அவனைப்பார்த்து கண்களை சிமிட்டிவிட்டு தன் வீட்டை நோக்கி ஓடினாள். அவளது செயலை முற்றிலும் எதிர்பாராதவனாய் திகைத்து அமர்ந்திருந்தவன் . பிறகு மென்னகையோடு தலையைக்கோதிக்கொண்டே காரின் ஸ்ட்யரிங்கில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான். அவளது மென்னிதழ்களின் ஸ்பரிசத்தை இப்போதும் தன் உதடுகளில் உணர்ந்தவனாய் நாவால் தன் இதழ்களை ஒருமுறை வருடியவனுக்கு அவளது இதழின் இனிப்பு இதயம் வரை தித்தித்தது. கண்களை மூடி அந்த நொடிகளில் திளைத்தவன். பின்பு உற்சாகத்துடன் தன் காரைக் கிளப்பினான் இளமாறன்.



(கையணைக்க ...வருவான்!)

ஹாய் பேபீஸ் !!
கதையின் 24ஆம் அத்தியாயத்தை பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கமெண்டுங்க பேபீஸ் அடுத்த எபி ஞாயிறன்று 😍😘😘😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 25

10010. 10011



தாமரை மறுநாள் அதிகாலை தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தவள் அறையின் கடிகாரத்தை பார்க்க.. அது அதிகாலை 5 மணியை காட்டியது. சற்று நேரத்திற்கு பிறகு சுற்றுப்புறம் உரைக்க.. நேற்றைய இரவின் நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க… மனது பாரமாக… கண்களில் மறுபடியும் நீர் திரண்டது…சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு மாமியார் விழித்து எழும் நேரமாகிவிட்டதை உணர்ந்து…அவர் அறையை விட்டு வெளியே வருவதற்குள் தங்கள் அறையை நோக்கி விரைந்தாள். அறைக்கு முன்வந்து நின்றவளுக்கு கணவனை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கம் எழ … நேரமாவதை உணர்ந்து தயக்கத்தை உதறியவள் அறைக்கதவை மெல்ல திறந்து உள்ளே நுழைந்தாள். அறைக்குள் பார்வையை சுழலவிட்டவள் அறையில் கணவன் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள். யோசனையுடன் பால்கனிக்கு சென்று பார்க்க அங்கும் கணவன் இல்லாது போகவே…. இவ்வளவு காலையில் எங்கே போயிருப்பான்? என்று யோசித்தவள். தன் யோசனையை ஒத்தி வைத்துவிட்டு தன் உடைகளுடன் குளியலறைக்குள் நுழைந்தாள். அடுத்த பதினைந்து நிமிடங்களில் குளித்துவிட்டு வெளியே வந்தவள் திரும்பவும் கணவனைத் தேட அவனை காணாது யோசனையுடன் அவனது அலுவலகப் பையை தேட அதுவும் இல்லாது போகவே… ' நைட்டு லேட்டாத்தானே வந்தாரு..? இவ்வளவு சீக்கிரம் ஆபீஸ் கிளம்பி போய்ட்டாரா? ஒருவேளை என் மேல கோபிச்சுக்கிட்டு நைட்டே கிளம்பி போயிருப்பாரோ.. ? இரவு களைத்துப் போய் வீட்டினுள் நுழைந்த கணவனின் முகம் நினைவில் வந்து போக…. குற்றவுணர்வோடு தன் உதடுகளை கடித்துக் கொண்டாள். காதல் கொண்ட மனம் கணவனுக்காக துடிக்க தன்னையே நொந்தவளாய் கண்ணீரைத்துடைத்துக் கொண்டவள்… விரைந்து தயாராகி அறையை விட்டு வெளியே வந்தாள். சிந்தனையோடு படிகளில் இறங்கியவள்… 'கணவனைப்பற்றி யாரிடம் விசாரிப்பது? நேற்று இரவு இவள் தான் அவனுக்கு காத்திருந்து உணவை பரிமாறினாள். காலையில் கணவன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை என்பதை மாமியாரிடம் எப்படி சொல்வது?' என்று குழம்பியவள்….சமையலறையில் அரவம் உணர்ந்து அங்கே செல்ல…. அதற்குள் மீனாட்சி குளித்து முடித்து விட்டு சமையலறையில் தன் பணியைத் தொடங்கியிருந்தார்.


மருமகளைப் பார்த்ததும் புன்னகையோடு “வாம்மா தாமரை குளிச்சிட்டியா?!” என்று முகம் மலர வினவியவரின் அருகே சென்றவள்…


“நீங்க ஏன் அத்தை இவ்வளவு சீக்கிரம் எழுந்தீங்க…? இன்னும் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்திருக்கலாம் இல்லை .. ஆமா தலைவலி இப்ப பரவாயில்லையா?!" என்று கரிசனையாய் வினவிய மருமகளை பாசத்தோடு பார்த்தவர்.


" இப்ப கொஞ்சம் பரவாயில்லடா…. தினமும் இந்த நேரத்துக்கு எழுந்திரிச்சு வேலை பார்த்து பழகிடுச்சிமா… நானே தூங்கி ஓய்வெடுக்க நினைச்சாலும் விடிகாலை ஐந்து மணிக்கு மேல ஒரு பொட்டு தூக்கம் வராது . அதான் சும்மா படுத்துக்கிடக்கிறதுக்கு வேலையை பார்க்கலாமேன்னு எழுந்திரிச்சு வந்துட்டேன்!.


"சரிடா நீ வா உனக்கு காபி போட்டுத் தரேன் !” என்று அழைத்தவரிடம்...


“இல்லத்தை நீங்க சாப்பிடுங்க… நான் சாமிக்கு விளக்கேத்திட்டு வந்து குடிக்கிறேன் என்றவள் பூஜையறையை நோக்கி நடந்தாள். செல்லும் மருமகளையே கனிவாய் பார்த்துக்கொண்டு நின்றவரை..


அதிகாலையில் தன் நடைபயிற்சியை முடித்துவிட்டு வந்த சொக்கநாதர் விநோதமாய் பார்த்தவர்...


“என்ன மீனாட்சி காலங்காத்தால அப்படியே உறைஞ்சு போய் நின்னுட்டிருக்க? என்ன விஷயம்?!” என்ற கணவரின் குரலில் திரும்பிப்பார்த்து புன்னகைத்தவர்.


“அது ஒண்ணுமில்லைங்க நம்ம மருமகளைப் பத்தித்தான் நினைச்சுட்டிருந்தேன்!”


“யாரு… தாமரையா ?!”


“பின்ன நமக்கென்ன ஒன்பது மருமகளா இருக்கா? தாமரையே தான்! வசதியான வீட்டுப் பொண்ணை கட்டுறியே…அவ உங்க வீட்டுக்கு பொருந்தி வருவாளான்னு கல்யாணத்தப்ப நம்ம சொந்தக்காரவங்க எல்லாரும் சொன்னாங்க.. எனக்குமே அந்த பயம் இருந்துச்சு.. ஆனர நம்ம மருமக தாமரை குணத்துல பத்திரை மாத்துத் தங்கம்னு அவ இந்த வீட்டுக்குவந்த சில நாளிலேயே உணர்த்திட்டா!. பணம் இருக்குற இடத்தில் குணம் இருக்காதுன்னு சொன்னவங்க கிட்ட என் மருமக ஒண்ணும் அப்படிபட்டவ இல்லை அவ பணம்,அழகு, அறிவு,அடக்கம் எல்லாம் ஒண்ணு சேர்ந்த குணவதின்னு பெருமையா சொல்லிக்குவேன்!" என்று பெருமை பொங்க உரைத்த…மனைவியின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை உணர்ந்தவராக சொக்கநாதர் தானும் ஆமோதிப்பாய் தலையசைத்தார். அவரும் மருமகளின் அடக்கமான….அன்பான குணத்தை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்?!. இருந்த போதும் மனைவியை கிண்டலாக ஏறிட்டவர்...


“அப்படின்னா நம்ம வீட்டில் மாமியார் மருமக சண்டைக்கெல்லாம் இனிமே வாய்ப்பில்லைன்னு சொல்றியா மீனாட்சி?! ரிடையர்ட் மெண்ட்டுக்கு அப்புறம் லைப் போறடிக்குமே அப்ப உங்க மாமியார் மருமக சண்டைக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ணலாம்னு நினைச்சேனே … ? போற போக்கைப் பார்த்தா அதெல்லாம் நடக்காது போலயே? என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன கணவரை முறைத்தவர்...


"ஆத்தி..! இந்த மனுஷனுக்கு லொள்ளைப் பாரேன்!" என்று மனதுக்குள் முணுமுணுத்தவர்..அவரை கனல் பார்வை பார்க்க...!


மனைவியின் கோபத்தை ரசித்துச் சிரித்தவர்…!! சரி.. சரி.. காலையில் மச..மசன்னு நிக்காம சீக்கிரம் காபி கொண்டு வா... குடிச்சிட்டு காலேஜ் கிளம்பனும் என்று ஒன்றுமே நடவாதது போல சொல்ல அதில் இன்னும் கடுப்பானவர்…!


"ம்க்கும்...!" என்று முகவாயைத் தோள்பட்டையில் இடித்து நொடித்தவர்…. ”காபியா வேணும் …காபி ! இருங்க சக்கரைக்கு பதில் உப்பை அள்ளிப் போட்டு கொண்டு வர்றேன் .. என்று நொடித்தவாறே சமையலறையை நோக்கி நடந்த மனைவியை புன்னகையோடு பார்த்தவர் செய்தித்தாளை எடுத்து அதில் தன் கவனத்தை பதித்தார்.


பூஜையை முடித்து விட்டு வெளியே வந்த தாமரை. வரவேற்பறையில் செய்தித்தாளுடன் அமர்ந்திருந்த மாமனாரை பார்த்து முகம் மலர “குட்மார்னிங் மாமா!” என்க படித்துக் கொண்டிருந்த பேப்பரை விலக்கியவர் தானும் புன்னகையோடு காலை வணக்கம் சொல்ல…. “காபி சப்பிட்டீங்களா மாமா!?” என்று அன்பாய் வினவிய மருமகளிடம்…


“ உன் அத்தை எடுத்துட்டு வரேன்னு போனவ தான் அரைமணி நேரமாச்சு இன்னும் ஆளைக்காணோம்!”என்றவரிடம்… “இதோ நான் எடுத்துட்டு வரேன் மாமா !” என்றுவிட்டு சமையலறை செல்ல திரும்பவும் மீனாட்சி காபி கோப்பைகளோடு வெளியே வரவும் சரியாக இருக்க.. அவரது கைகளிலிருந்து காபி ட்ரேயை தான் வாங்கியவள் மாமனாருக்கும் மாமியாருக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒரு தம்ளரை எடுத்துக்கொண்டு மாமியாரின் அருகில் அமர்ந்து பருக ஆரம்பித்தாள்.


காபியை ஒருவாய் பருகிய சொக்கநாதர் .. “கதிர் இன்னும் எழுந்திருக்கலையாமா?! நேற்று நைட்டு ரொம்ப லேட்டா வந்தானோ?” என்று வினவ… கணவனின் பேச்சில் குடித்துக்கொண்டிருந்த காபி புரையேறியது தாமரைக்கு…அவள் இறும ஆரம்பிக்கவும் பதறிய மீனாட்சி…


“பார்த்து… பார்த்து…! குடிடாம்மா! என்று அவளது முதுகில் லேசாக தட்டி கொடுக்க…சற்றுநேரத்தில் சகஜநிலைக்கு வந்தவள்.


அ…அவங்க நைட் ரொம்ப லேட்டாத்தான் வந்தாங்க மாமா…! வரும் போதே ரொம்ப களைப்பாத்தான் வந்தாங்க… சாப்பாடு.. சாப்பிட்டதும் தூங்கப் போய்டாங்க… அதுக்குப்பிறகு நான் காலையில் எழுந்து பார்த்தா அவங்களையும் காணோம்….அவரோடு ஆபீஸ் பேக்கையும் காணோம் மாமா… ஒருவேளை சீக்கிரமே ஆபீஸூக்கு கிளம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்”என்று அவர்களின் முகம் பார்க்க இயலாது தலையை குனிந்தவாறு சொன்ன மருமகளை யோசனையோடு பார்த்தனர் சொக்க நாதரும் மீனாட்சியும்.


உடனே மீனாட்சி…”என்னம்மா சொல்ற? நைட் லேட்டா வந்தவன் அதுக்குள்ளேயே கிளம்பி ஆபீஸ் போயிட்டானா…?! நேற்று உன் கிட்ட அதைப்பற்றி ஒண்ணுமே சொல்லலையா?! கதிர் அப்படியெல்லாம் பண்ணமாட்டானே? ! என்னதான் அவசரவேலையா போனாலும் யாராவது ஒருத்தர் கிட்ட தகவல் சொல்லிட்டுத்தான் போவான்! என்று மகனை நன்கு அறிந்தவராய்…குழம்பிய மீனாட்சியை குற்றவுணர்வோடு தாமரை நோக்க… மருமகளின் கலங்கிய முகத்தை பார்த்த சொக்க நாதர்…


“மீனாட்சி… இப்ப எதுக்கு தேவையில்லாம இப்படி பதறுர?! அவன் என்ன சின்ன புள்ளையா…?! மாவட்டத்தையே கட்டி ஆளுற கலெக்டர் அவன்… கோவில் திருவிழா சம்மந்தமா ஏதாவது முக்கியமான வேலை வந்திருக்கும் கிளம்பி போயிருப்பான்.. தூங்குறவங்களை எழுப்பவேணாமேன்னு சொல்லாம போயிருப்பான். அதுக்கு எதுக்கு நீயும் குழம்பி மருமகளையும் டென்ஷனாக்குறே.. பொறு…! நானே போன் போட்டு கேட்குறேன். என்றவர் தன் அலைபேசியை எடுத்து மகனுக்கு அழைத்தார். அந்தப்பக்கம் கதிரவன் அழைப்பை ஏற்கவில்லை… அதில் மேலும் பதற்றமடைந்தாள் தாமரை.


மறுபடியும் மகனுக்கு அவர் முயல.. இந்தமுறை அழைப்பை எடுத்தவன்… “சொல்லுங்கப்பா…!” என்க மகனின் சோர்ந்த குரலில் அவனது களைப்பை உணர்ந்த சொக்கநாதர்.


“என்னாச்சு கதிர்.. ரொம்ப களைப்பா இருக்க போல தெரியுதே… நைட்டே லேட்டாத்தான் வந்தியாம் ரெஸ்ட் எடுக்காம திரும்பவும் ஆபீஸ் கிளம்பி போயிருக்க… ஏதாவது பிரச்சனையாப்பா..! என்று கவலையாய் வினவியவரிடம்....


“ம்ம்ம் ஆமாம்பா நைட் ஒரு அர்ஜண்ட் வொர்க் வந்துடுச்சி அதான் உடனே கிளம்ப வேண்டியதாயிடுச்சு..! தூங்கிட்டிருந்தவங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்னு தான் சொல்லாம வந்துட்டேன் நானே கால் பண்ணலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்களே பண்ணிட்டீங்க!”


ஓ.. அப்படியா? சரி… சரி…! இப்ப எல்லாம் ஒகே தானே… ?! கிடைக்கிற நேரத்தில் கொஞ்சமாவது ஓய்வெடுத்துக்க கதிர் ரொம்ப களைப்பா இருக்குற மாதிரி தெரியுது என்ற தந்தையின் கரிசனையில் நெகிழ்ந்தவனாய்..



“ஐ யாம் ஓகே பா.. ஜஸ்ட் கொஞ்சம் டயர்ட் அவ்வளவு தான் நீங்க கவலைப்படாதீங்க..நான் பார்த்துக்கிறேன்! என்றவன் அன்னையைப்பற்றி விசாரிக்க… “ உன்னை காணலைன்னதும் உங்கம்மா கவலைப்பட ஆரம்பிச்சிட்டா… இந்தா அவகிட்ட நீயே பேசு.. என்றவர் மனைவியிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு குளிப்பதற்காக எழுந்து சென்று விட்டார்.


அலைபேசியை வாங்கிய மீனாட்சி..”கதிர் என்னப்பா இப்படி சொல்லாம கொல்லாமல் நீ பாட்டுக்கு ஆபீஸ் கிளம்பி போயிட்ட? இங்க காலையில் எழுந்ததும் உன்னை காணாலைன்னு நாங்க எப்படி தவிச்சுப்போயிட்டோம் தெரியுமா ?! அதுவும் தாமரை ரொம்பவே பதறிட்டா… பாவம் புள்ள முகமே வாடிப்போயிடுச்சு…இப்படி தான் பொறுப்பில்லாம நடந்துக்குவியா ? கதிர்…என்று மகனைக் கடிந்தவர் அந்த பக்கம் நிலவிய மௌனத்தில் சற்று நிறத்தியவர்…


“ஹலோ.. கதிர் லைன்ல இருக்க தானே?” என்க… மனைவியின் பேச்சில் சற்று நேரம் மௌனமாக இருந்தவன்.. அன்னையின் குரலில் மீண்டான்.


”ஹான் சொல்லுங்கம்மா.. லைன்ல தான் இருக்கேன்” என்றவன் தந்தையிடம் சொன்ன அதே காரணத்தை தாயிடமும் சொன்னான்….பிறகு சற்றுப் பொறுத்து...


“அம்மா.. இன்னொரு விஷயம்… உங்ககிட்ட சொல்லணும்…இந்த அத்திவரதர் வைபவம் முடியிற வரைக்கும் நான் இங்கேயே தஙகிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். தினமும் வீட்டுக்கு வந்து போக கஷ்டமாயிருக்கு… அதனால என்னோட டிரைவரை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் அவர் கிட்ட என் டிரெஸ்ஸையெல்லாய் பேக் பண்ணி கொடுத்துவிட்றுங்க…” என்க


மகனது வார்த்தைகளில் திகைத்து “என்ன கதிர் திடீர்னு இப்படி சொல்ற…?! என்றவர் மருமகளை நிமிர்ந்து பார்க்க… அவளோ கலக்கத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


“கதிர்…! நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சிதான் பேசுறியா… ? உனக்கு இப்ப தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு அது உனக்கு ஞாபகம் இருக்கா…? இல்லையா? உனக்காக ஒருத்தி இங்கே காத்திட்டிருக்கா அவளைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் அவகிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம உன் பாட்டுக்கு மாசக்கணக்கா வெளியே தங்க முடிவெடுக்கறதெல்லாம் கொஞ்சமும் சரியில்லைடா!. புதுசா கல்யாணமானவங்க இப்படி பிரிஞ்சிருந்தா அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பேசுவாங்க கதிர்!.


அன்னையின் வார்த்தைகளில் சற்று நேரம் உதடு கடித்து அமைதி காத்தவன். பின்னர் முகம் இறுக… “அம்மா… அடுத்தவங்களுக்காக நாம வாழலை நாம நமக்காகத் தான் வாழுறோம்.. ! அதனால அந்த பேச்சை விடுங்க..! தினமும் இங்கேயிருந்து கிளம்பி நான் அங்க வரவே லேட் நைட்டாயிடுது.. காலையிலும் அங்கேயிருந்து சீக்கிரமா கிளம்பி வர வேண்டியிருக்கு… இதனால ரொம்பவே டயர்ட்டா பீல் பண்றேன்மா….! எனக்கு மட்டும் உங்களை எல்லாம் விட்டுட்டு இங்கேயே தங்கனும்னு வேண்டுதலா என்ன?! புரிஞ்சிக்கங்க ப்ளீஸ்!”


“நீ சொல்றதெல்லாமே எனக்கு புரியுது கதிர்…! இருந்தாலும் தாமரை எப்படி உன்னைப் பிரிஞ்சி...? அதுவும் மாசக்கணக்கா…? அதெல்லாம் சரியா வராதுப்பா!. என்றவர்… சிறிது இடைவெளி விட்டு … ஒண்ணு நீ சிரமம் பார்க்காம தினமும் வீட்டுக்கு வந்துட்டுப் போ…! அப்படியில்லைன்னா தாமரையை உன்னோடவே கூட்டிட்டுப் போய் அங்க வச்சிக்க… உன் வேலையையெல்லாம் மொத்தமா முடிச்சிட்டு ரெண்டு பேருமா சேர்ந்து கிளம்பி வாங்க" என்று அவர் தீர்மானமாய் கூற…


அதில் அந்தப்பக்கம் விரக்தியாய் புன்னகைத்த கதிரவன்…. மனதுக்குள்... "இந்த முடிவை என்னை எடுக்க வச்சதே உங்க மருமக தான் அது தெரியாம அவளுக்கு பரிஞ்சிக்கிட்டு பேசுறீங்களேம்மா! நான் இல்லைன்னா அவ சந்தோஷமா… சுதந்திரமா இருப்பா!’ என்று வலியோடு எண்ணியவன் கண்களை இறுக மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு….


“அம்மா!! என்னோட சூழ்நிலையை நீங்களாவது புரிஞ்சிக்கங்க… !! நாளுக்கு நாள் இங்கே சுவாமி தரிசனத்துக்காக வர கூட்டம் அதிகமாயிட்டே போகுது!! நிற்கக்கூட நேரமில்லாம நான் ஓடிட்டிருக்கேன். கோவிலுக்கு வரவங்க தரிசனம் நல்லபடியாக முடிஞ்சி திரும்ப போற வரைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை தினம் தினம் பேஸ் பண்ணவேண்டியிருக்கு…! எனக்கு அதுக்கே இங்கே நேரம் பத்தலை!. இதுல தாமரையையும் என்னோட தங்க வச்சிக்கிறதெல்லாம் இம்பாஸிபிள்! அப்படியே நான் தங்க வச்சிக்கிட்டாலும்… அவ இங்க நாள் பூரா தனியாத்தான் இருக்கனும். அதுக்கு அவ நம்ம வீட்டுல உங்களோட இருக்கறது தான் பெட்டர். எல்லாத்தையும் யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இடையில ஏதாவது ப்ரீ டைம் கிடைச்சா வரப் பார்க்கிறேன். என்று அன்னை ஏற்றுக்கொள்ளும்விதமாய் காரணங்களை அவன் தேடிப் பிடித்து அடுக்க…. மீனாட்சி அதில் சமாதானமடைய மறுத்து மருமகளை நோக்க...


போனை ஸ்பீக்கர் மோடில் போட்டிருந்ததால் கணவன் மாமியார் இருவரின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்தவள் கணவனின் இந்த திடீர் முடிவில் பலமாக அதிர்ந்தாள். கூடவே இது எதனால் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்து போயிற்று. இதயத்தில் ஏதோ பாரத்தை ஏற்றி வைத்ததைப் போல உணர்ந்தவளுக்கு கண்களில் நீர் திரண்டது. நிச்சயமாக தன்னை தவிர்க்கும் பொருட்டே கணவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்ந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாது கைகளைப் பிசைந்தாள். கண்களில் நீர்வழிய கலக்கத்தோடு நின்றிருந்த மருமகளை பார்த்தவருக்கு மனதை பிசைய..


இன்னும் இணைப்பில் இருந்த மகனிடம் “கதிர் நீ என்ன சொன்னாலும் எனக்கு அது சரியாப்படலை…. காலையில் நீ சொல்லாம போனதிலேயே உன் பொண்டாட்டி தவிச்சு போய்டா…. இப்ப என்னடான்னா இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுற?! இதோ தாமரை என் பக்கத்தில் தான் நிற்கிறா… அவகிட்ட நீயே பேசிக்க … என்றவர் அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு… அவர்களுக்கு தனிமை வழங்கி சமையலறைக்கு விரைந்துவிட்டார்.

அலைபேசியை தன் கைகளில் வாங்கியவளுக்கு உடல் பயத்தில் தானாக நடுங்க… எங்கே அலைபேசியை கீழே போட்டுவிடுவோமோ என்ற பயம் எழ அதை இறுகப் பற்றியவளுக்கு பேச இயலாது தொண்டை வறண்டு போனது. ஒருவழியாக தன்னை சமன்படுத்திக்கொண்டவள்..


“ஹ….லோ…!!” என்க… அந்தப்பக்கம் பலத்த மௌனம் நிலவ.. ஒருவேளை இணைப்பை துண்டித்துவிட்டானோ என்ற சந்தேகத்துடன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவள் கணவன் இன்னும் இணைப்பில் இருப்பதைப் பார்த்து… நிம்மதியடைந்தவளாய் ..


“ஹ…..லோ….லை…. லைன்ல இருக்கீங்களா?!” என்று தயக்கத்துடன் வினவ…அந்தப்பக்கம் கதிரவனுக்கோ உள்ளுக்குள் கோபம் கனன்ற போதும் தன்னை அடக்கிக் கொண்டு…


“ம்ம்ம்… இருக்கேன் சொல்லு….” என்ற கணவனின் குரலில் அவனது இறுக்கத்தை உணர்ந்தவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று புரியவில்லை. உதடு கடித்து அவள் மௌனம் சாதிக்க…. அதில் பொறுமை இழந்த கதிரவன்…



“ஏதாவது பேசறதாயிருந்தா பேசு இல்லைனா .. நான் போனை கட் பண்றேன்” என்க எங்கே கணவன் இணைப்பை துண்டித்துவிடுவானோ என்ற பதற்றத்துடன்…


“இ…இல்லை உங்க கூட கொஞ்சம் பே..சனும் “ என்க அதற்கு அவனிடமிருந்து மௌனமே பதிலாக..


“சா…சாரி” என்று இரைஞ்சும் குரலில் அவள் கேட்ட மன்னிப்பு அவனது கொந்தளித்த மனத்தின் வெம்மையை சற்றே தணித்த போதும்.. உறுமலாய்..


“எதுக்கு… ? “என்க அந்த ஒற்றை வார்த்தையில் பொதிந்திருக்கும் சீற்றத்தை உணர்ந்தவளாய்…!


நா…நான் ..நீ…ங்க நே…த்து… அ… என்ற அவளின் திக்கலை இடைமறித்தவன் சொல்லவந்ததை சீக்கிரம் சொன்னா நல்லாயிருக்கும் எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கு என்று உணர்வுகளைத்தொலைத்த குரலில் அவன் உரைக்க…! இப்படி பட்டும் படாமல் பேசுபவனிடம் என்னத்தை பேசுவது என்று அவள் மனதுக்குள் சலித்த போதும்.. முயன்று தன்னை சமாளித்துக்கொண்டு..


“ எ…என்னை மன்னிச்சுடுங்க.. நா…நான் நேத்து செய்தது தப்பு தான்… அதுக்காக கோவிச்சிக்கிட்டு வீ..ட்டுக்கு வராம இருக்காதீங்க… ப்ளீஸ் எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு வாங்க.. நாம பேசிக்கலாம்..என்றவளை இடைமறித்தவன்…


“வீட்டுக்கு வந்து….??! நான் அறையிலும் நீ வெளியே ஹால்லையும் படுக்கவா?! நேற்று மாதிரி?!” என்று ஏளனமாய் அவன் வினவ.. அதில் தான் செய்த தவறு விளங்க உதட்டை கடித்தவளுக்கு கண்களில் நீர் திரண்டது.


“ஏன் கதிர் இப்படியெல்லாம் பேசுறீங்க…?” இ…னி என்று எதையோ பேசவந்தவளை இடைமறித்து…


“பின்னே எப்படிடி பேச சொல்ற !? நான் ஒண்ணும் இல்லாததை சொல்லலையே நேத்து நீ செஞ்சதைத்தானே சொல்றேன்.!! உன்னை அப்பவே எழுப்பி கொன்று போடுற அளவுக்கு எனக்கு வெறி வந்துச்சுடி… அங்கேயே இருந்திருந்தா என்னையும் அறியாமல் உன்னை காயப்படுத்திடுவேனோன்னு பயந்து தான் கிளம்பி வந்தேன்.. கொலைக்குற்றவாளிக்குக் கூட அவன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்ல ஒரு வாய்ப்பு கொடுப்பாங்க… ஆனா அதை கூட எனக்குத் தர உனக்கு மனசில்லையேடி…! நீயாவே தீர்ப்பு எழுதி என்னை தள்ளி வச்சி தண்டிச்சிட்ட இல்லை…?!. தப்பு பண்ணிட்டேன்டி... உன்னோட மனசை அதில் என்மேல நீ வச்ச காதலை முழுசா அறிந்தவங்குற ஆணவத்துல பெரிய தப்புப் ண்ணிட்டேன்..! முதலிரவு அன்னைக்கு உன்னை என்னோட அறையில் என் மனைவியா பார்த்தப்ப… உன்மேல இருக்க ஆசையை… காதலை.. கட்டுப்படுத்திக்க முடியாம… கணவன் என்கிற உரிமையோடு உன்னைத் தொட்டது தான்டி நான் செஞ்ச தப்பு!... அதை மனசுல வச்சுக்கிட்டு தானே.. நேத்து என்னை தவிர்க்க ஹால்ல படுத்த?! ஏண்டி..என்னைப்பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…?! உடம்புக்காக அலையிற மூன்றாம் தர பொம்பள பொறுக்கியாவா…?! வெல்… என்னைப்பற்றிய உங்க உயர்வான கணிப்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி மேடம்… ! எனக்குத் தேவை உன் உடம்பு மட்டும் தான்னா.. ஆபீஸிலிருந்து தாமதமா வந்தாலும் இதே அறையில் தூங்கிட்டிருந்த உன்கிட்ட கணவங்கிற உரிமையை எடுத்திருக்க என்னால முடியாதுன்னாடி நினைச்ச? தெரியாமத்தான் கேட்குறேன் … உன்னை உரிமையோடு நெருங்கின அந்த இரவில் ஒருமுறை கூட என்னோட அணைப்பிலும் ஸ்பரிசத்திலும் என் காதலை நீ உணரவேயில்லையாடி..? ஹூம் ...! காதலை வீம்புங்குற முகமூடி போட்டு மறைச்சிட்டிருக்க உன்கிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்கிறதும் என் தப்பு தான்..!” இந்த வார்த்தைகளை சொல்லும் போது அவனது மனதில் அப்படியொரு வலி எழுந்தது… அதை அடுத்த நொடியே மறைத்துக்கொண்டவன்…!


“இனியும் உனக்கு அந்த கஷ்டத்தை கொடுக்கவேணாம்னு தான் இங்கேயே தங்கிக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன் எப்ப நான் அவ்வளவு தூரம் கூப்பிட்டும்…என்னை நம்பாம அலட்சியப்படுத்திட்டு ஹால்ல படுத்தியோ .. அப்பவே நமக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சி. இனி என்னைக்கண்டு பயந்து ஒளியவோ…. என்னை ஒரே அறையில் சகிச்சிக்கவோ…. கடமைக்காக காத்திருக்கவோ.. தேவையில்லை… இனி நீ உன் விருப்பம் போல சுதந்திரமா இருக்கலாம். . ஆனா ஒண்ணு..நமக்குள்ள நடக்குற இந்த பிரச்சனை வேற யாருக்கும் தெரியக் கூடாது… தெரியறதை நான் விரும்பவும் இல்லை..அண்டர்ஸ்டாண்ட் குட் பை பார் எவ்ரிதிங்!!” என்றவன் இணைப்பை துண்டித்துவிட்டான்.


அவனது கடைசியாக சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும்…குறி தவறாமல் அவளது இதயத்தை தைத்தது. அதுவும் அவன் சொன்ன கடைசி வார்த்தையான..’ நமக்குள்ளே எல்லாம் முடிஞ்சது ‘ என்ற வார்த்தையில் உறைந்தாள். அவன் பேசிய வார்த்தைகளை நன்கு கவனித்திருந்தால் கணவனது காதலை உணர்ந்திருப்பாள்… அதை எதையும் உணரும் நிலையில் தான் அவளில்லையே! அவளது மனமோ…அவனது கடைசி வார்த்தைகளிலேயே உழன்றது. அலைபேசியை அங்கேயிருந்த டீப்பாயின் மேல் வைத்துவிட்டு பெருகிய கண்ணீரை புறங்கையால் துடைத்தவாறே.. ஓடிச் சென்று தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள். அறையைத் தாளிட்டவளுக்கு எதையோ இழந்துவிட்ட உணர்வில்… துக்கம் தொண்டையடைக்க கட்டிலில் விழுந்தவளுக்கு கணவனது வார்த்தைகள் மறுபடியும் காதுகளில் ஒலிக்க துயரத்துடன் தலையணையில் முகம் புதைத்து கதறினாள். அன்றைய தினமே சொன்னதைப்போல அவன் டிரைவரை அனுப்பி வைக்க… மாமியாரின் துணையோடு அவனுக்குத் தேவையானவற்றை கனத்த இதயத்தோடு எடுத்து வைத்து பாக்கிங்கை முடித்தவள்… அவர் சென்றதும் மனது கேளாது தன் அலைபேசியில் கணவனின் எண்ணுக்கு பலமுறை முயன்றாள்…ஆனால் அவள் அழைப்பை ஒருமுறை கூட கதிரவன் ஏற்கவில்லை. திரும்ப திரும்ப முயன்று சலித்தவளுக்கு வருத்தம் மறைந்து…கணவனின் இந்த உதாசீனத்தில் கோபம் கனன்றது.


"ஓஹோ…! என்கூட பேசவும் பிடிக்கலையா? போங்களேன்…. ! உங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா…?! என்னவோ தப்பெல்லாம் நான் மட்டும் தான் பண்ணது மாதிரி ரொம்ப ஓவராத்தான் போறான்!. நமக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சாமே…!! என்ன தைரியமிருந்தா இந்த வார்த்தையை சொல்லுவான்..?! அதை நீங்க மட்டும் முடிவு பண்ணிட்டா ஆச்சா…! எத்தனை நாளைக்கு இப்படி இருக்கீங்கன்னு நானும் பார்க்கிறேன்!. எப்பயிருந்தாலும் இங்க வந்துத்தானே ஆகனும்… அப்ப கவனிச்சிக்கிறேன் உங்களை..என்று தனிமையில் தன் மனதோடு புலம்பியவள் தானும் முறுக்கிக்கொண்டாள்.


நாட்கள் செல்ல செல்ல கணவனது பிரிவில் அவளது கோபமும்… வீம்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து…கணவனது அருகாமைக்கும் அணைப்புக்கும் ஏங்க ஆரம்பித்தாள். இந்த தற்காலிக பிரிவு எங்கே நிரந்தர பிரிவுக்கு வழிவகுத்துவிடுமோ…! என்ற பயம் மனதைக் கவ்வியது. அவனில்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கவும் அவள் விரும்பவில்லை. அதே சமயம் தன் மீது கோபத்தில் இருக்கும் கணவனை எப்படி அணுகுவது என்றும் அவளுக்கு தெரியவில்லை. இது பற்றி சொல்லியழவும் ஒருவரின்றி தனக்குள்ளேயே வைத்து இரவும்…. பகலும் மருகினாள் அந்த பேதை!.

கதிரவன் திரும்ப வருவானா....? வாடி நிற்கும் தன் தாமரையாளின்
வாட்டத்தை... போக்க...?! பார்ப்போம்!



(கையணைக்க... வருவான்!!)

ஹாய் பேபீஸ் !!


கதையின் 25 ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்துவிட்டு கமெண்டுங்க பேபீஸ். அடுத்த அத்தியாயத்தில் பாண்டியுடன் ஞாயிறன்று வருகிறேன். போன அத்தியாயத்தை படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி & லவ் யூ பேப்ஸ்😍😘😘😘😘😘 சைலண்ட் ரீடர்ஸூம் படித்துவிட்டு கதை பற்றிய உங்கள் கருத்துக்களை ஒரு வார்த்தை என்னோடு பகிர்ந்து கொண்டால் சந்தோஷப்படுவேன் பேபீஸ்...😍😘😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 26

10147 10148


அறையில் காலிங் பெல் ஒலிக்கும் சத்தத்தில் கண்விழித்த பாண்டி.. கண்களைத் துடைத்துக் கொண்டு கடிகாரத்தை நோக்க… மதிய உணவு நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்து தலையை இலேசாக உயர்த்தி தன் மனைவியை பார்க்க… தமிழிரசியோ அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். கலைந்த ஓவியமாய் தன்னை நெருங்கிப் படுத்திருந்த மனைவியை காதலோடு நோக்கியவனுக்கு… சற்று நேரத்திற்கு முன்பான மனைவியுடனான கூடல்.. நினைவில் எழந்து அவனை இன்பமாய் இம்சிக்க.. முகத்தில் மந்தகாசப் புன்னகை விரிய… அவளை மேலும் நெருங்கியவன் மனைவியின் முகத்தோடு தன் முகம் இணைத்து இழைந்தான். அவளின் முக மலரின் மென்மையில் தன்னைத் தொலைத்தவனாய்.. அவளது பட்டுக்கன்னத்தில் மென்மையாய் தன் இதழையொற்ற… அவனது மீசை முடிகளின் குறுகுறுப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் கரம் அனிச்சையாக உயர்ந்து கணவனது கழுத்தை சுற்றி வளைத்தது. அதில் மேலும் கிறங்கிப் போனவனாய் தாபத்துடன் அவளது இதழ் நோக்கி குனிந்தவனை காலிங் பெல் மறுபடியும் அலறி கரடியாய் தடை செய்ய… எரிச்சலுடன்..


“ம்ப்ச்” என்று சலித்தவன் மனைவியின் உறக்கம் கலையாதவாறு அவளை விட்டு மனமேயில்லாது விலகி எழுந்தான்.


யாராயிருக்கும் என்ற யோசனையோடு கதவை திறக்க… வெளியே…சுனில் தன் மனைவியோடு நின்றிருக்க…! கதவை விரிய திறந்தவன் மலர்ந்த முகத்துடன் தலையசைத்து அவர்களை வரவேற்க… அவர்களும் புன்னகையுடன் உள்ளே வந்தார்கள்.


சோனாக்ஷியின் பார்வை தமிழரசியை தேடுவதை உணர்ந்தவனாய்… “அது… தமிழ் தூங்கிட்டிருக்காமா” என்க.


“ஓஹ்..… ! ஓகேண்ணா..!! பரவாயில்லை நாங்க உங்களையும் பாபியையும் லன்ச் சாப்பிடக் கூப்பிடலாம்னு தான் வந்தோம்! எல்லாமே தயாராயிருக்கு நீங்க ரெண்டு பேரும் வந்தீங்கண்ணா சாப்பிடலாம்..” என்றவளை அன்போடு நோக்கியவன்…


“உனக்கு ஏன்மா வீண் சிரமம்? நாங்க வெளியே சாப்பிட்டுக்கிறோமே…! என்றவனை முறைத்துப் பார்த்தவள் “அண்ணா …! எனக்கு ஒரு சிரமமும் இல்லை நீங்க பாபியோட கண்டிப்பா கிளம்பி வர்றீங்க… அவ்வளவு தான்!. நீங்க வர வரைக்கும் நாங்க யாரும் சாப்பிட மாட்டோம் சொல்லிட்டேன்!!” என்று அன்பு கட்டளையிட்டவள் கணவனுடன் கிளம்ப…. போகும் போது சுனில் பாண்டியை பார்த்து..


“தயவு செய்து வந்துடுங்க சார்!... இல்லைனா எங்களுக்கும் உங்க தங்கச்சி சோறு போடமாட்டா…!” என்று கவலையோடு சொன்னவனை பார்த்து பாண்டி பக்கென்று சிரிக்க… சோனாக்க்ஷியோ கணவனை தன் நெற்றிக்கண்ணால் எரித்தவள்..முறைத்தவாறே…அவனது கையைப்பிடித்து இழுத்துச் செல்ல.. பலியாடு போல தொடர்ந்தவனைப் பார்த்து பாண்டியின் புன்னகை மேலும் விரிந்தது.


புன்னகையோடு கதவை அடைத்துவிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தவனின் பார்வை கட்டிலில் தலையணையை இறுக்கிக்கொண்டு படுத்திருந்த மனைவியின் மீது விழ புன்னகையோடு தலையணையை விலக்கிவிட்டு அவளது அருகே சரிந்தான். முகத்தை மறைத்திருந்த முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கியவன் மனைவியின் முகவடிவை கைகளால் அளந்தவன் அவளது செவியோரம் இதழ் பதித்து… “பேபி…! என்று மென்மையாய் அழைக்க… அவனது வருடலில் இலேசாக உறக்கம் கலைந்தவள் ….”ம்ம்ம் ….. உடம்பெல்லாம் ஒரே வலி கொஞ்ச தூங்க விடுங்க வேலு ப்ளீஸ்!! என்று செல்லமாய் அவள் சிணுங்க.. அந்த சிணுங்கலில் சிதறியவனின் உணர்வுகள் காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க…தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது... அவளின்முகம் நோக்கி குனிந்தவன் அவளது இதழ்களை மொத்தமாய் சிறையெடுக்க…அதில் முற்றிலும் தூக்கம் கலைந்தாள் தமிழரசி. எதையோ பேச வந்தவள் கணவனது ஆக்ரமிப்பில் தன்னையே மறந்து அவன் கைகளில் உருகிக் குழைந்தாள். மனைவியின் இணக்கத்தில் மகிழ்ந்தவன் கரங்கள் அவளது மேனியில் தங்கு தடையின்றி தன் ஆராய்ச்சியை தொடர... அவனது கரங்களை வழக்கம் போல அவள் தடை செய்ய கட்டுக்களை உடைத்து முன்னேறியவனின் சாகசத்தில் அவள் மூச்சு திணறிய தருணம் அவனது அலைபேசி கரடியாய் ஒலியெழுப்ப... அதை அலட்சியப்படுத்தி அவன் முன்னேற… அது விடாது அலறியது.


“ வேலு… உங்க போன் அடிக்குது..!” என்று அவள் மெதுவாய் கிசுகிசுக்க…


“அடிச்சா அடிக்கட்டும் சும்மா இருடி” என்று முணுமுணுத்துவிட்டு அவன் தன் பணியைத் தொடர…அது தானாக அடித்து ஓய்ந்தது. சிறிது நேரத்தில் மறுபடியும் அது ஒலியெழுப்ப… அதில் இம்முறை அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக விலக முயற்சித்தவளை …


“ மப்ச் ஏண்டி?!”என்று சலித்தவனை ..செல்லக் கோபத்தோடு முறைத்தவள்..



“என்ன ஏண்டி?!..யாரோ திரும்ப திரும்ப கால் பண்றாங்க உங்களுக்கு கேட்கலையா? ஏதாவது அவசரமா இருக்கப்போகுது யாருன்னு பாருங்க முதல்ல” என்றவளை முறைத்துப் பார்த்தவன் “ வர வர போலீஸ்காரனையே ரொம்பத்தான் மிரட்டுறடி” என்றவன் மனமேயில்லாது அவளை விட்டு விலகி… அலைபேசியை எடுத்துப்பார்க்க… சுனில் தான் அழைத்துக் கொண்டிருந்தான். டேய் …!! சுனில் கரடிக்கு பொறந்தவனே நீயாடா..? உன்னை… என்று அவன் பல்லைக் கடிக்க … அதில் “க்ளுக்” என்று சிரித்தவளை கடுப்புடன் அவன் முறைக்க…அதில் மேலும் வாய்விட்டு சிரித்தாள் தமிழரசி.


அப்போது தான் மதிய உணவுக்கு அவர்கள் அழைத்தது அவனுக்கு நினைவுக்கு வர தன் நெற்றிப்பொட்டில் இலேசாக தட்டிக்கொண்டவன்…. அவசரமாக அழைப்பை ஆன் செய்து பேச… அந்தப்பக்கம் என்ன சொன்னார்களோ…



“அதெல்லாம் வேணான்டா… இன்னும் 5 நிமிஷத்தில் நாங்க அங்கே இருப்போம்." என்றவன் இணைப்பை துண்டித்துவிட்டு மனைவியிடம் விஷயத்தைக்கூறி அவளைக் கிளம்பச்சொன்னவன் தானும் உடை மாற்றிக்கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் சுனலின் அபார்ட்மெண்ட்டில் இருந்தான்.



வீட்டிற்குள் நுழைந்த தம்பதியினரை இன்முகமாய் வரவேற்றனர் சுனில்.. குடும்பத்தினர். அங்கே சோனுவின் தாய் தந்தையும் வந்திருக்க …அவர்களை தமிழரசிக்குஅறிமுகப்படுத்தி வைத்தாள் சோனு. மலர்ந்த முகத்தோடு பாசமாய் புன்னகைத்த சோனுவின் தாய் அபிராமியை பார்த்ததும் அவரது கால்களில் விழுந்து வணங்கிய தமிழரசியை தீர்க்க சுமங்கலியா.. எப்போதும் உன் கணவரோட சந்தோஷமாயிரும்மா !! என்று தன் கணவருடன் இணைந்து மனமாற வாழ்த்தியவருக்கு தமிழரசியை மிகவும் பிடித்துவிட கலகலப்பாய் அவர்கள் குடும்பம் விசாரித்தவர்…. தங்கள் குடும்பத்தினர் பற்றிய விவரங்களையும் அவளோடு பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்காகவே ஸ்பெஷலாய் தயார் செய்திருந்த தமிழ்நாட்டு உணவு வகைகளோடு வட இந்திய உணவுவகைகளையும் சோனுவும் அபிராமியும் அனைவருக்கும் பரிமாற திருப்தியாக உண்டு முடித்துவிட்டு சற்றுநேரம் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பேசிக் கொண்டிருந்தனர் . பிறகு தம்பதியர் இருவரும் அவர்களிடமிருந்து விடை பெற்று கிளம்ப … ஒரு தட்டில் பூ, பழங்கள் மற்றும் இனிப்பு இவற்றுடன் தம்பதியருக்கான உடைகளையும் வைத்து சோனாக்ஷி சுனிலுடன் இணைந்து வழங்க….அதை வாங்கத் தயங்கியவளை..



“ புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு விருந்து வைக்கும் போது நம்ம ஊருபக்கம் இப்படி சீரும் வைத்துக் கொடுக்குறது பழக்கம்தானே?! தயங்காம வாங்கிக்கம்மா!!” என்றார் அபிராமி. அப்படியும் தயங்கியவள் கணவனின் முகம் பார்க்க… அவன் கண்களை மூடித்திறந்து தன் சம்மதத்தைக் கூறவும்… மனநிறைவுடன் பெற்றுக்கொண்டவள் சுனிலின் பாதம் பணிய அதை சற்றும் எதிர்பாராத சுனில் திகைத்து விழிக்க…தமிழரசியோ…



“ என்ன பார்க்குறீங்க சுனில் அண்ணா என்ன ப்ளஸ் பண்ணுங்க!” அவளது செயலில் பதறியவன்…



“அச்சச்சோ..!” என்னம்மா இது என் காலில் எல்லாம் விழுந்துகிட்டு தயவு செய்து எழுந்திரும்மா என்க தமிழரசியோ பிடிவாதமாக குனிந்திருக்க சுனிலோ பாண்டியை தவிப்போடு பார்க்க...



“நீ அவளோட அண்ணன் தானேடா?! என்று அவன் வினவ அதில் அவசரமாக ஆமாம் என்று தலையசைத்தவனை



“அப்ப ஆசீர்வாதம் பண்ணாம என்னை ஏண்டா பார்க்குற !?” என்று பாண்டி கிண்டலாக வினவ…அதை அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து பார்த்திருக்க…
சுனிலோ…உணர்ச்சி வசத்தில் கண்கள் கசிய ..தமிழரசியை வாத்லயத்துடன் பார்த்தவன் உணர்ச்சி வசத்தில் குரல் கரகரக்க…



“எப்பவும் சந்தோஷமா இரும்மா!” என்று ஆசிர்வதித்தவன் பாண்டியை ஆரத் தழுவிக்கொண்டான். சோனாக்ஷிக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை… இதெல்லாம் அவளுக்கு புதிதாகத் தெரிந்தது.முன்பின் அறிமுகமில்லாத தன் கணவனை அண்ணனாக ஏற்றுக்கொண்டதுமில்லாமல் அவனிடம் தமிழரசி ஆசி வாங்கியதை பிரம்மிப்புடன் பார்த்திருந்தவளை நெருங்கிய அபிராமி…



“பார்த்தியா சோனு எங்க ஊரு பொண்ணை..! இது அந்த மண்ணுக்கே உரிய பண்பாடு…வெறும் வாய் வார்த்தையாக இல்லாம உணர்வு பூர்வமா உறவுகளை அப்படியே ஏத்துக்குவோம்…அவங்க மேல உண்மையானஅன்பை செலுத்துவோம்!”. என்று தன் பிறந்த மண்ணை பற்றி பெருமை பேசியவர் தமழரசியை வாஞ்சையோடு நோக்கினார்.பாண்டி கணவனாய் தன் மனைவியை நினைத்து கர்வம் கொண்டான்.



பிறகு அனைவரிடமும் விடை பெற்று தங்கள் வீட்டை அடைந்தவர்கள். உண்ட களைப்பில் சற்று நேரம் படுத்து ஓய்வெடுத்தனர். மாலையில் அவளை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினான் பாண்டி….! எங்கே என்று வினவியவளிடம் “அது சஸ்பென்ஸ்!” என்று சொல்லி கவர்ச்சியாய் அவன் புன்னகைக்க…அந்த புன்னகையின் வசீகரத்தில் அவள் தடுமாறி நிற்க... அதை கண்டு கொண்டவனோ கள்ளச்சிரிப்புடன் ஒற்றைப்புருவத்தை உயர்த்த…. அதில் மேலும் தடுமாறியவள்… “கள்ளன்” என்று மனதுக்குள் செல்லமாய் கடிய.. ஆசையோடு நெருங்கி அவளது தோளில் கையிட்டு அவளை தன்னருகே இழுத்தவன்..



“பேபி வேணும்னா இன்னைக்கு வெளியே போற புரோகிராமை கான்சல் பண்ணிட்டு வீட்டுலேயே இருந்திடலாமா ?!” என்று ரகசிய குரலில் அவளை இறுக்கி அணைத்தவாறே அவன் வினவ…. கணவனின் கள்ளத்தனத்தை கண்டு கொண்டவளாய் அவனிடமிருந்து மெல்ல விலகியவள்… அவனை விட்டு இரண்டடி விலகி…



“ம்ஹூம்…. அதெல்லாம் முடியாது நாம கண்டிப்பா வெளியே போயே ஆகனும்….! என்று பிடிவாதமாக உரைக்க….



“அவசியம் போயே தான் ஆகனுமா பேபி..!?” என்று அவளை நோக்கி மேலும் இரண்டடி எடுத்து வைத்தவனை முறைத்து பார்த்தவள் மேலும் இரண்டு அடி பின்னால் நகர்ந்து…



“ ஆமா… கண்டிப்பா போயே ஆகனும்..!” என்று உறுதியாக அவள் நிற்க !!



“ஓகே… ஓகே போலாம்!!” என்றவன் அவளை நெருங்கி… மறுபடியும் அவள் தோளில் கையிட்டு தன்னோடு இறுக்கிக்கொண்டவன்…



“இதோ பார் பேபி… எது சொல்றதாயிருந்தாலும்…. இதோ இப்படி என் கைவளைவில் நின்னுகிட்டே தான் சொல்லனும்…! அதைவிட்டு இது மாதிரி விலகிப் போனேன்னு வைய்யேன்…” என்றவன் அவளை இழுத்து அணைத்து அவளது உதடுகளை வன்மையாய் சிறை செய்து சிறிது நேரத்தில் விடுவித்தவன்…இது தான் தண்டனை என்று குறும்பாய் கண்சிமிட்டியவனை.. கோபமாய் முறைக்க முயன்று தோற்றவள்… ‘ஆன்னா ஊன்னா முத்தம் கொடுக்க இவனுக்கு இது ஒரு சாக்கு என்று மனதுக்குள் செல்லமாய் முணுமுணுத்தவள்… ' ம்க்கும் ‘ என்று உதட்டை சுழிக்க…அதன் அழகில் மேலும் மயங்கிப் போனவன் “அய்யோ கொல்றாளே ராட்சசி!” என்று மனதுக்குள் புலம்பியவன்.. மனமேயில்லாது அவளோடு வீட்டைவிட்டு கிளம்பினான்.



இருவரும் கார் பார்க்கிங் ஏரியாவை அடைய அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனது அலுவலக ஜீப்பை விடுத்து அவனது…ராயல் என்பீல்டில் ஏறி அமரவும் கேள்வியாய் தன்னை நோக்கிய மனைவியின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டவனாய்….



“அது ஒன்லி ஆபீஸ் யூஸ்க்கு மட்டும் தான் நாட் பர்சனல்!” என்றவனை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவள்… புல்லர்ட்டில் ஏறி இருபுறமும் கால் போட்டு கணவனின் தோளில் கையிட்டு அவனை நெருங்கி அமர… அதில் மகிழ்ந்தவன் மனைவியின் புறம் திரும்பிப் “போலாமா பேபி “ என்க முதன்முறையாக தன்னவனுடனான புல்லர்ட் பயணத்தை வெகுவாக விரும்பியவள் புன்னகையுடன் தலையசைக்க…. அதில் தானும் முகம் மலர வண்டியைக் கிளப்பினான் பாண்டி.



அவளை முதன்முதலாக அவன் கூட்டிச்சென்றது… நகரின் மிகப் பிரபலமான கார் விற்பனை நிறுவனத்துக்குத் தான். இங்கே எதற்காக என்று விழிவிரித்தவளை தோளோடு அணைத்து உள்ளே அழைத்துச் சென்றான். அவனைப்பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்ட வேலையாட்கள் இருவரையும் மரியாதையாக வரவேற்றனர். அதை ஒரு தலையசைவில் ஏற்றுக்கொண்டவன் . லேட்டஸ்ட் மாடல் கார்களைப்பற்றி வினவ ஊழியர்கள் புதியரக கார்களை அவனிடம் காட்டி அதன் உயர்வுகளைப்பட்டியலிட அதை கவனமாகக் கேட்டுக்கொண்டவன் மனைவியுடன் ஆலோசித்து… அவள் விருப்பப்பட்ட காரை… அவளுக்கு பிடித்த வண்ணத்தில் புக் செய்தான். பார்மாலிட்டிகளை முடித்துவிட்டு வந்தவன்... கேள்வியாக நோக்கிய மனைவியை..



“இந்த கார் நம்ம சொந்த உபயோகத்துக்காகத் தான் வாங்குனேன் பேபி!!! அதுவும் உனக்காகத்தான்!. இதுவரை நான் தனியா இருந்ததால எங்கே போனாலும் என்னோட புல்லர்ட்லயே போய்டுவேன்! ஆனால் இப்ப என்னோட மகாராணி நீ வந்துட்டதால… இனி உன்கூட வெளியே போகனும்னா… அதுக்கு கார் தான் வசதி அதுக்குத் தான் வாங்கினேன்”. என்று அவன் விளக்க தனக்கான கணவனின் அக்கறையில் மனம் குளிர்ந்தவள்… அவனை காதலோடு நோக்க… மனைவியின் கண்கள் உணர்த்திய காதலில் கண்கள் மின்ன அவளை நெருங்கியவன்…!



“ என்னடி பார்வையெல்லாம் பலமா இருக்கு…?! இது போல பார்வையெல்லாம் வீட்டில் இருக்கும் போது எங்கடி ஒளிச்சு வைக்கிற..! இப்படி பப்ளிக்ல இருக்கும் போது …பார்த்து வச்சு மனுஷனை கொல்றியேடி!?” என்று ஷோரூமில் இருப்பவர்களை ஒருமுறை நோட்டமிட்டுக்கொண்டே அவன் மனைவியிடம் ரகசிய குரலில் கிசுகிசுக்க…. அதில் அவள் முகம் செந்தூர நிறம் கொண்டது. அதை அவன் ரசித்து பார்த்துக் கொண்டிருக்க…. அவனை நெருங்கிய அலுவலக ஊழியர்கள் காரை நாளை மறுநாள் டெலிவரி செய்வதாக கூறவும்… அங்கிருந்து திருப்தியுடன் இருவரும் கிளம்பினார்கள். இப்போது அவனது இடுப்பை இரு கைகளாலும் வளைத்துப்பிடித்து அவனை நெருங்கி அமர்ந்த மனைவியின் நெருக்கத்தில்… வானை வசப்படுத்திய ஜிவ்வென்ற உணர்வுடன் வண்டியை முகம் மலர கிளப்பியவன்



“அடுத்து எங்கே போகலாம் பேபி ?” என்று வினவ…

“ஏதாவது டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தா அங்கே போங்க…என்க..! கேள்வியாக நோக்கியவனை..



“வீட்டுக்குத்தேவையான சில பொருட்கள் .. மளிகை சாமான்கள்… காய்கறி இதெல்லாம் வாங்கணும் நாளையிலிருந்து நானே சமைக்கலாம்னு இருக்கேன்”. என்றவளை மெச்சுதலாய்ப் பார்த்தவன்…! மறுகணமே கண்களில் குறும்பு மின்ன…



“ என்னாது !! சமைக்கப்போறியா?! சொன்னா கேளு பேபி அதெல்லாம் விஷப்பரிட்சை…! என்னை சோதனை எலியாக்கி பழி வாங்கிடாதே பேபி…! உன்கூட இன்னும் நூறு வருஷம் சந்தோஷமா வாழனும்னு உன் வேலு ஆசைப்படறேன்டி ப்ளீஸ் பேபி!” என்றவனை கொலைவெறியோடு முறைத்தவளிடம்….சட்டென்று சரண்டர் ஆனவன்…



“இல்ல பேபி உனக்கெதுக்கு வீண் சிரமம்.. அதுக்கு வேணும்னா வேற ஆள் வச்சிக்கலாமேன்னு தான் சொன்னேன் அதுமட்டுமில்லாமல் நான் வீட்டில் இருக்கும் போது உனக்கு என்னை கவனிச்சிக்கவே நேரம் பத்தாது இதுல இந்த சமையல் வேலையும் நீ பார்க்கனுமான்னு…” என்று போலியாக வருத்தப்பட்டு கடைசியில் கண்சிமிட்டிச் சிரித்தவனை…. முறைத்துப்பார்த்தவள் அவனது தோள் பட்டையை பலமாய் கிள்ளி வைக்க..! அதில் மேலும் வாய்விட்டு சிரித்தான் அவன்.
********************************************************************


தங்களது அறையின் பால்கனியில் அமர்ந்திருந்த தாமரையின் பார்வை வெளியே வானத்தின் மையிருட்டில் நிலைத்திருந்தது. சில்லென்று வீசிய குளிர்காற்றோ தூரத்தில் அலையாடிக் கொண்டிருந்த கடலோ… வானத்தில் அழகாய் உலா வந்துகொண்டிருந்த நிலவோ… எதுவுமே அவள் கருத்தில் பதியவில்லை. அவளது நினைவெல்லாம் கணவனே நிறைந்திருந்தான். அன்று இரவு வீட்டை விட்டு சென்றவன் தான் இன்றோடு பதினைந்து நாட்கள் கடந்த நிலையில் இன்னும் வீடு திரும்பவில்லை.



அன்றைய நாளின் நினைவில் கன்னங்கள் கண்ணீரில் நனைய பால்கனியில் வெறுந்தரையில் படுத்திருந்தவளுக்கு … கணவனை பாராது அவனது குரல் கேளாது.. ஒவ்வொரு நாளும் நரகமாய் கழிந்தது. கணவனது அருகாமைக்கும் அணைப்புக்கும் அவளது உடலும் மனமும் ஏங்க ஒவ்வொரு நாளும் அவன் வரவுக்காக ஆவலாய் காத்திருந்து… அவன் வராமலே அந்த நாள் கழிய இரவெல்லாம் கணவனது நினைவுகளில் மூழ்கி கண்ணீரில் கரைந்தாள்.



நாள் தவறாமல் அவனது அன்னைக்கு மட்டும் அலைபேசியில் அழைத்து பேசுபவன்…. இதுவரை ஒருமுறை கூட அவளுக்கு அழைக்கவுமில்லை… அவள் அழைப்பையும் புறக்கணித்தான். அதில் அவள் மனதில் சொல்லொனா வலி எழுந்தது. என்னை மொத்தமாக வெறுத்துவிட்டானா? நான் அவனுக்கு தேவையேயில்லையா?! அவனுடைய பிரிவில் நான் தவிப்பது போல என்னுடைய பிரிவு அவனுள் தகிக்கவில்லையா? எப்படியிருக்கும் காதல் கொண்டு என்னை மணந்திருந்தால் என்னுடைய பிரிவு அவனைத் தாக்கியிருக்கும்… அவன் தான் கடமைக்கு மணந்தவனாயிற்றே…. அதான் விட்டது தொல்லை என்று நிம்மதியாக இருக்கிறான் போல என்று எதையெதையோ நினைத்து தன்னைத்தானே வருத்திக்கொண்டாள். அவனது பிரிவுத் துயர் தந்த வேதனையில் சரியாக உண்ணாமல்.. உறங்காமல்.. நாளுக்கு நாள் உடல் மெலிந்தாள்.



அங்கே கதிரவனும் மனைவியைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தான். அப்போது தான் பணியிலிருந்துஅறைக்குத் திரும்பியவனின் நினைவு மொத்தத்தையும் தாமரையே ஆக்ரமித்திருந்தாள். பகலெல்லாம் பணிச்சுமையில் தன்னை மூழ்கடித்துக் கொள்பவன் இரவில் மனைவியின் நினைவில் அவளது அருகாமைக்கு ஏங்கித் தவித்தான். மனைவியின் முகத்தை காணாமல் அவளுடன் பேசாமல் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய் கழிந்தது அவனுக்கு. பல நேரங்களில் இந்த கோபத்தையும் வீம்பையும் தூக்கிப் போட்டுவிட்டு மனைவியின் கைவளைவில் தஞ்சமடைய அவனது காதல் மனம் ஏங்கும். ஆனால் அன்றைய அவளின் புறக்கணிப்பு மனதில் எழுந்து அவனை இறுகச்செய்துவிடும். ஒவ்வொரு நாளும் தன் அன்னைக்கு அழைக்கும் போது… மனைவியின் குரலையாவது கேட்டுவிட அவன் மனம் தவியாய் தவிக்கும். ஆனால் தானாக அவளுக்கு அழைக்கவோ….அல்லது அவளது அழைப்பை ஏற்கவோ அவனது தன்மானம் இடம் தரவில்லை. அன்றைய இரவில் மனைவியின் புறக்கணிப்பு காதல் கொண்ட அவன் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. மனைவியிடமிருந்து இப்படியொருஎதிர்வினையை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. எப்படி அவள் தன்னை நிராகரிக்கலாம் என்ற ஆத்திரமே அவன் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. ஆனால் இதே போன்றதொரு வலியை தானும் அவளுக்கு கொடுத்திருக்கிறோம் என்பதை ஏனோ வசதியாக மறந்துவிட்டான். இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் இணையை உயிராய் நேசித்த போதும் …அதை உணர விடாமல் வீம்பு , பிடிவாதம் என்னும் முகமூடியை அணிந்து கொண்டு தங்களையே வருத்திக் கொண்டனர்.


(கையணைக்க.. வருவான்!)


ஹாய் பேபீஸ் கதையின் 26ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன்... (ரொம்ப சீக்கிரம் வந்துட்ட என்று நீங்கள் பல்லைக்கடிக்கறது நேக்கு கேட்டுடுத்து... தயவு செய்து உங்க வீட்டுப் புள்ளையா நினைச்சு மன்னிச்சுடுங்க பேபீஸ்😘😘) படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் செல்லங்களே😍😘😘😘😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 27



கதிரவன்… தாமரை உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாது அப்படியே தொடர்ந்த நிலையில் தங்கள் அறையின் கட்டிலில் அமர்ந்திருந்த தாமரையின் மடியில் கதிரவனின் புகைப்படம் வீற்றிருக்க…அவளது கைகள் புகைப்படத்தில் கரு நிற டிராக் சூட்... டீ- சர்ட் அணிந்து கொண்டு வசீகரமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தவனின் முகவடிவை மென்மையாக வருடிக் கொண்டிருக்க…. பார்வையோ இலக்கின்றி எதிரேயிருந்த சுவற்றை வெறித்தது.


அறைக்கதவு தட்டப்படும் ஒலியில் சற்றே கலைந்தவள்…. புகைப்படத்தை கட்டிலில் வைத்துவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு அவசரமாக எழுந்து கதவைத் திறக்க… வெளியே மீனாட்சி தான் நின்றிருந்தார். அவரைப்பார்த்ததும் வலுக்கட்டாயமாக புன்னகைத்தவள்…


“உ…உள்ளே வா… வாங்கத்தை”! என்றவள் அவர் உள்ளை வர ஏதுவாக சற்றே விலகி நிற்க… மருமகளின் கலங்கச் சிவந்திருந்த விழிகளையும்…. அழுததன் அடையாளமாய் வீங்கியிருந்த இமைகளையும் உற்றுப் பார்த்தவாறு உள்ளே நுழைந்தவரின் பார்வை கட்டிலில் இருந்த மகனின் புகைப்படத்தின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது. யோசனையாய் மருமகளைத் திரும்பிப் பார்த்தவருக்கு மருமகளின் மனநிலை நன்றாகவே புரிந்தது... அவரும் கடந்த சில நாட்களாகவே மருமகளை கவனித்துக்கொண்டு தானே இருக்கிறார். சரிவர உண்ணாமல்… உறங்காமல் எந்நேரமும் சோக சித்திரமாய் உலாவரும் மருமகளின் மனதை மகனின் பிரிவுத்துயர் வாட்டுவதை உணர்ந்து கொண்டவராய் மருமகளை நெருங்கியவர்… அவளது தலையை பரிவோடு வருடி..



“தாமரை… என்னாச்சுடா உனக்கு ?! கண்ணெல்லாம் கலங்கி சிவந்திருக்கு…! முகமே வாடிப்போய் என்னவோ போல இருக்கே…அழுதியா? என்று வினவ அதில் ஓரளவுக்கு தன்னை சமாளித்துக் கொண்டவளாய்…



“அ..தெல்லாம் ஒண்ணு….மில்லை அத்தை…. அவரோட ஞாபகம் …அ.. தான் சும்மா… என்று உதடு துடிக்க அழுகையை அடக்கிய குரலில் கூறியவளை… ஆதுரத்தோடு பார்த்தவர். அருகே நெருங்கி அவளை ஆறுதலாய் அரவணைத்துக் கொள்ள… அதில் முற்றிலும் உடைந்தவள் அதற்கு மேல் தாங்க இயலாதவளாய்… தாயைக்கண்ட சேயாய் தன் மனக்குமுறல்களையெல்லாம்…. அவரது தோள் சாய்ந்து கண்ணீர் விட்டு கதறி தீர்த்தாள். ஒரு பெண்ணாய் மருமகளின் கண்ணீருக்கான காரணத்தை உணர்ந்து கொண்டவர்… சற்றுநேரம் அவளை அழ விட்டார். மருமகளின் கண்ணீர் மனதை வருத்திய அதேநேரம் மகன் மீது அளவில்லா ஆதங்கமும் கோபமும் ஒருங்கே எழுந்தது.



‘இவனுக்கு கொஞ்சமாவது பொறுப்பிருக்கா….! வீட்டுல நமக்காக இப்படி ஒருத்தி காத்திட்டிருப்பாளேங்குற நினைப்பு வேண்டாம். அப்படியென்ன தான் வேலையோ கட்டுனவளையே மறக்கற அளவுக்கு…! வாரத்துக்கு ஒரு முறையாவது வந்து முகத்தை காட்டிட்டு போனால்தான் என்னவாம்?.என்று மனதுக்குள் புலம்பியவர்.. இவனை இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது இதுக்கு நாம தான் ஒரு வழி பண்ணனும் என்று மனதுக்குள் ஏதோ முடிவெடுத்தவர்.



“தாமரை…! இங்கே பாருடா.. நீ அழாத உன் மனசு எனக்கு நல்லாப்புரியுதுடா…. இதுக்கு என்ன பண்ணனும்னு எனக்குத் நல்லாத் தெரியும். இனி அதை நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாம நிம்மதியா இரு!” என்றவர் அவளை நிமிர்த்தி கண்ணீரைத்துடைத்து… முதுகை நீவி… கலைந்திருந்த கூந்தலை கோதி சரிசெய்தார். அதில் சற்று நேரத்திற்கு பிறகு இயல்புக்கு வந்தவள்… கூச்சத்தோடு மாமியாரை விட்டு விலகி நின்றவள்.

“ சா….சாரி அத்தை..நீ…ங்க அப்ப எதுவோ சொல்ல வந்தீங்க….! அதுக்குள்ள நான் உங்களை….. என்று தயங்கி நிறுத்தியவளை கனிவோடு நோக்கியவர்… “அதனால என்னம்மா… நீயும் எனக்கு மகள் தானே!. தமிழரசியும் நீயும் என்னைப்பொருத்தவரை ஒண்ணு தான்… அதனால இனி இது போல எதையும் மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு மறுகாதே ?! உனக்கு நானும் மாமாவும் இருக்கோம் சரியா?!” என்றவரை பாசத்தோடு தாமரை பார்த்துக் கொண்டிருக்க..



பின்பு எதையோ யோசித்தவராக… “ஆமா கதிர் உங்கிட்ட தினமும் கால் பண்ணி பேசுறாந்தானே? என்று திடீரென அவர் வினவ… அதில் சுதாரித்துக் கொண்டவளாய்… அவரது முகம் பார்த்து பொய்யுரைக்க இயலாது தலையை குனிந்தவாறே…



“ அதெல்லாம் பே… பேசுறாங்கத்தை!” என்று கூற அதை வெட்கம் என்று நினைத்து நிம்மதி அடைந்தவர்… நினைவு வந்தவராக…



“ஹான் தமிழரசி கால் பண்ணியிருந்தாடா.. உன்னைப்பற்றி விசாரிச்சா அதை சொல்லத்தான் நான் வந்தேன்..! உனக்கு பலதடவை கால் பண்ணாளாம் சுவிட்ச் ஆப்னு வருதாம். ஆமா… உன் போனுக்கு என்னாச்சு தாமரை?!” என்கவும் அவசரமாக தன் அலைபேசியை அவள் எடுத்துப் பார்க்க அது சார்ஜ் இல்லாமல் தன் உயிரை விட்டிருந்தது. அதை உடனே சார்ஜரில் இணைத்து போனை ஆன் செய்து வைத்தவள். போன் சார்ஜில்லாம ஆப் ஆயிடுச்சு போல நான் கவனிக்கலை அத்தை …! என்றவள்… முகம் மலர தன் நாத்தனாரைப்பற்றி விசாரிக்க…!



அவரோ..!“அவளே உனக்குத் திரும்ப கூப்பிடறேன்னு சொல்லியிருக்கா… நீ அவகிட்டையே கேட்டுக்க…!” என்றவர்..



“எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு அதை முடிச்சிட்டு வர்றேன்.. தமிழ் கால் பண்ணா நீ பேசு!” என்றவர் அவசரமாகக் அறையை விட்டு வெளியேறினார். செல்லும் மாமியாரையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏனோ மனதில் இதுவரை அழுத்திக் கொண்டிருந்த பாரம் சற்றே விலகியதைப்போல தோன்ற… இலேசான மனதுடன் கட்டிலில் கண்மூடி சாய்ந்தாள்.



சற்று நேரத்தில் கண்மூடிப் படுத்திருந்தவளின் மோனநிலையைக் கலைப்பதைப் போல அவளின் அலை பேசி ஒலி எழுப்ப அதில் சட்டென்று எழுந்தவள் ஆவலோடு அலைபேசியை எடுத்துப் பார்க்க அவள் எதிர்பார்த்ததைப் போலவே தமிழரசி தான் அவளைஅழைத்துக் கொண்டிருந்தாள்.


முகம் மலர அழைப்பை ஆன் செய்ததும் அந்தப்பக்கம்…




“ஹலோ! தாமரையண்ணி எப்படியிருக்கீங்க…?! அண்ணாவோட நினைப்புல எங்களை எல்லாம் சுத்தமா மறந்துட்டீங்களா?!” என்று கலகலப்பாய் தமிழரசியின் குரல் ஒலிக்க.. அதில் தானும் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள் தாமரை. பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு…



தமிழரசி… “அம்மா சொன்னாங்க அண்ணி கதிரண்ணா… வேலை விஷயமா காஞ்புரத்திலேயே தங்கிட்டாருன்னு… நீங்க ஏன் அதுக்கு சம்மதிச்சீங்க…? நீங்களும் அவரோடவே போயிருக்கலாமே! கதிரண்ணாவாவது அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒருமுறையாவது வந்து போகலம்ல?ஆக்சுவலா கதிரண்ணா அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஒருதடவை கூட இப்படி தங்கினதேயில்லை இது தான் முதல் தடவை..!”என்று படபடத்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குற்றவுணர்வோடு தாமரை மௌனம் காக்க… அதில் சற்றுத் திகைத்தவள்…



“அண்ணி!..லைன்ல இருக்கீங்க தானே..?! என்று வினவ..அதில் சுதாரித்து..



“ ஹான்… இருக்கேன் அண்ணி சொல்லுங்க..! என்றவளின் குரல் சோர்ந்து ஒலிக்க..அதில் தன் தவறை உணர்ந்தவளாய் தன் நெற்றியில் தானே அறைந்து கொண்டவள்…சற்றுத் தாமதித்து…



“ஐயாம் வெரி சாரி அண்ணி… நீங்களே அண்ணாவை பிரிஞ்சு வருத்தத்தில் இருந்திருப்பீங்க.. இதுல நான் வேற தேவையில்லாம பேசி அண்ணாவை ஞாபகப்படுத்திட்டேனா? என்னை மன்னிச்சிடுங்க அண்ணி என்று வருந்த… அதைக் கேட்டுக் கொண்டிருந்த தாமரையோ…. “ பரவாயில்லை அண்ணி நான் அவரை மறந்தாத்தானே..! நீங்க ஞாபகப்படுத்த…!!” என்று தன்னையுமறியாமல் கூறிவிட்டு பின்பு தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.



இந்தப்பக்கம் அதைக் கேட்டுக்கொண்டிருந்த தமிழரசியோ வாய்விட்டு சிரித்தவள்.. "அதானே…. ! நீங்களும் கதிரண்ணாவும் ஒருத்தர் மேல ஓருத்தர் வச்சிருக்கிற அபாரமான லவ்வை பற்றி தெரிஞ்சும் நான் இப்படி கேட்டிருக்கக்கூடாது தான். உங்க போட்டோவை முதன்முதலா பார்த்தப்பவே உங்க ஆளு பிளாட் ஆன கதை தான் எனக்குத் தெரியுமே!! ஆனா… அதுக்கு அப்புறம் உங்க அந்தஸ்து, பணம், வசதி இதெல்லாம் கேள்விப்பட்டதுமே அண்ணா ரொம்பவே தயங்குனாங்க…” என்று சற்றுநிறுத்த…..



“ ஏன் அண்ணி பணக்காரங்கன்னா உங்க அண்ணாவுக்கு பிடிக்காதா..?!” என்று நெடுநாளாய் தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை தாமரை கேட்க.. அதற்கு பதில் சொல்லாமல் சற்று நேரம் தமிழரசி மௌனம் காக்க…



“அண்ணி..! ஏன் திடீர்னு அமைதியாயிட்டீங்க..? நான் தெரிஞ்சிக்க கூடாத விஷயமா?!”.. ஒருவேளை தன்னைக் காணும் முன்பே கதிரவன் ஏதாவது காதல் விவகாரத்தில் சிக்கி இருப்பானோ?! என்ற பயம் தோன்ற சட்டென்று உடலில் குளிர் பரவ… வியர்வை ஆறாகப் பெருகி வழிய…அதிகரித்த தன் இதயத்துடிப்பை ஒரு கையால் அழுத்திப் பிடித்தவாறு தாமரை பயத்துடன் வினவ…



“ச்சே… ச்சே!! அப்படியெல்லாம் பெரிய ரகசியம் எதுவும் இல்லை அண்ணி…!. கதிரண்ணா அதைப்பற்றி உங்ககிட்ட இன்னும் சொல்லலையா?! என்று வினவ.. அதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தாமரை மீண்டும் அமைதி காக்க… அந்தப்பக்கம் தமிழரசி என்ன நினைத்தாளோ.. ! அவளே தொடர்ந்தாள்.



“அது ஒரு பெரிய கதை அண்ணி!. கதிரண்ணாவோட சின்ன வயசு பிரண்ட் தான் ஆனந்தண்ணா. அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே திக் பிரண்ட்ஸ். ஆனந்தண்ணாவுக்கு அம்மாவும் ஒரு தங்கையும் மட்டும் தான். அவங்க குடும்பம் ரொம்பவே ஏழ்மையான குடும்பம் தான். அவங்கப்பா அவருக்கு 3 வயசாயிருக்கும் போதே ஏதோ விபத்துல இறந்துப்போயிட்டாராம். அதன் பிறகு அவங்கம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு அவரையும் அவரது தங்கையையும் படிக்க வைச்சாங்க. அவங்க சொந்தமா சிறிய அளவுல மெஸ் மாதிரி வச்சி நடத்திட்டிருந்தாங்க. அவங்க அம்மாவோட கை மணம் நல்லாயிருந்ததால ஓரளவுக்கு வியாபாரம் நல்லா நடந்தது. அவங்க அம்மாவோட கஷ்டம் புரிஞ்சதால அவங்களும் நல்லா படிச்சாங்க. எப்பவும் ஆனந்தண்ணாவும் கதிரண்ணாவும் தான் கிளாஸ்ல முதல் இரண்டு இடத்தில் வருவாங்க. எப்படியாவது படிச்சு முன்னுக்கு வந்து தன் குடும்பத்தை தலை நிமிர வைக்கனும்னு ஆனந்தண்ணா அடிக்கடி சொல்லுவாங்க. அவருக்கு அவங்க அம்மாவும்…தங்கச்சியும் தான் உயிரு. சின்னவயசுலேயே ரொம்ப பொறுப்பா இருந்த ஆனந்தண்ணாவை எங்க வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதனால அப்பா அவரது படிப்புக்கு தானும் நிறைய உதவி செய்வாங்க. அதுமட்டுமில்லாமல் ஏழை மாணவர்களுக்கு அரசாங்கத்தின் மூலமா கிடைக்கும் எல்லா உதவிகளையும் ஆனந்தண்ணாவுக்கு கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணித் தந்தாங்க. அதனால அவர் தன்னோட பள்ளிப்படிப்பை அதிக சிரமமில்லாம முடிச்சாரு. ஆனந்தண்ணாவுக்கு கதிரண்ணா போல ஐ.ஏ.எஸ் படிக்கனும்னு ரொம்ப ஆசை… அதனால ஒரு பக்கம் அதற்கு தங்களைத் தயார் படுத்திக்கிட்டே… தங்களோடு பட்டப்படிப்புக்காக ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல சேர்ந்தாங்க…!



எல்லாம் நல்லா போய்டிருந்தப்ப தான். அவங்களோடு கல்லூரி இறுதியாண்டின் போது… மாயான்னு ஒரு பொண்ணு அவங்க காலேஜ்ல முதலாம் ஆண்டு மாணவியா சேர்ந்தா! அவளோட அப்பா…ஒரு அரசியல்வாதி. தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்புல இருந்தாரு. அடி தடி, கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி இதுக்கெல்லாம் பேர் போனவரு அவரு . ஊரையடிச்சு உலையில் போட்டு அவர் சேர்த்து வச்சிருக்கிற ஏராளமான சொத்துக்கு அந்த மாயா தான் ஒரே வாரிசு. அப்படிப்பட்ட பின்புலத்தோட இருந்த மாயாவின் பார்வை ஆனந்தண்ணா மேல பட்டது தான் அவரோட துரதிருஷ்டம். ஆனந்தண்ணாவோட அழகு, அறிவு, திறமை, இதெல்லாம் பார்த்து மயங்கினவ… அவரை காதலிக்கிறதா சொல்லி அவர் பின்னாடி சுற்ற ஆரம்பிச்சா. ஆரம்பத்தில் தன்னோட நிலையை நினைச்சு ஒதுங்கிப் போன ஆனந்தண்ணாவை… விடாம துரத்தி.. என்னென்னவோ சாகசம் எல்லாம் பண்ணி தன் காதலை ஏத்துக்க வச்சிட்டா அந்த மாயா. அவரும் காதல் மயக்கத்தில் அவளோட அடிமையாவே மாறிட்டாரு.



கதிரண்ணாவுக்கு ஆரம்பத்திலிருந்தே அந்த மாயாவைக் கண்டாலே பிடிக்காது. ஆரம்பத்திலிருந்தே அவளைப்பற்றி கதிரண்ணா எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் ஆனந்தண்ணா பெருசா எடுத்துக்கலை. கதிரண்ணாவும் ஓரளவுக்கு மேல அவருக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டாங்க.



ஆனால் மனசு கேட்காம வீட்டில் அம்மாகிட்ட… “அம்மா அந்த பொண்ணு மாயாவைப் பார்த்தாலே எனக்கு என்னவோ நல்லப்பொண்ணா தோணவேயில்லை. அவ கண்ணுல ஆனந்துக்கான காதலை விட…ஆணவமும் திமிரும் தான் அதிகமாத் தெரியுது. ஆனந்த் ஏதோ பெரிய தப்பு பண்ற மாதிரியே எனக்குத் தோணுது. இது எங்க போய் முடியும்னு… தெரியலே. என்னாலையும் ஓரளவுக்கு மேல அவங்கிட்ட இதைப்பற்றி பேச முடியலே!” அப்படின்னு சொல்லி புலம்புவான்.



அதற்கு அம்மா… “கதிர் இது அவனோட வாழ்க்கை… இதில் ஓரளவுக்கு மேல நாம தலையிட முடியாது. நீ ஏன் அந்த மாயாவை தவறா நினைக்கிற…? அவ நிஜமாவே நல்ல பொண்ணா இருக்கலாம் இல்லையா?! நாம நல்லதையே நினைப்போமே!. அவள் மூலமா ஆனந்தோட வாழ்க்கை செம்மையான நமக்கெல்லாம் சந்தோஷம் தானே..!?” நல்லதே நடக்கனும்னு வேண்டிக்குவோம்!” அப்படின்னு சொன்னதும் அண்ணாவும் ஓரளவுக்கு சமாதானமாயிட்டான். அதன் பிறகு அவங்க பட்டப்படிப்பை முடிச்சு… ஐ.ஏ.எஸ் பிரிலிமினரி எக்சாம்க்காக தீவிரமா தங்களைத் தயார் படுத்திக்கிட்டு இருக்கும் போது தான். ஒருநாள் தன்னோட கல்யாணப் பத்திரிக்கையோடு வந்து நின்னாரு ஆனந்தண்ணா..! எங்களுக்கெல்லாம் பயங்கர அதிர்ச்சி… ஆனாலும் சமாளிச்சிக்கிட்டோம். அப்பா தான் மனசு தாங்காம…. அவரோட ஐ.ஏ. எஸ் படிப்பைப் பற்றி விசாரிச்சாங்க… அதுக்கு அவரு மாயாவோட அப்பா நடத்துற பிஸ்னஸை பார்த்துக்க போறதா சந்தோஷமா சொல்லவும்…. அதுக்குப் பிறகு அப்பாவும் எதுவும் கேட்டுக்கலை. அண்ணாவுக்கு இதில் வருத்தம் இருந்த போதும் மேற்கொண்டு எதையும் பேசி அவரோட சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம்னு அமைதியாயிட்டாங்க. அதன் பிறகு அவங்க கல்யாணம் அமோகமா நடந்து முடிந்தது. ஆனந்தண்ணாவுக்காக நாங்களும் குடும்பத்தோட அவர் கல்யாணத்திற்கு போனோம். அதன் பிறகு கதிரண்ணா தன்னோட படிப்புல தீவிரமா மூழ்கிட்டதால..அவங்களுக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு விட்டுப் போச்சு.



கல்யாணம் முடிஞ்சு ஒரு மூணு மாதம் கடந்த நிலையில் ஒருநாள் பத்திரிக்கையில் வந்த செய்தியைப் பார்த்து நாங்க அதிர்ந்துட்டோம். அந்த பத்திரிக்கையில் ஆணந்தண்ணாவும் அவங்க அம்மா…தங்கச்சி மூன்று பேரையும் வரதட்சணை கொடுமை கேஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு போட்டிருந்தது. அதைப் பார்த்ததும் பதறியடித்து அப்பாவும் ,அண்ணாவும் அவங்களை அரெஸ்ட் பண்ணி வச்சிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுனாங்க.



கல்யாணம் முடிஞ்ச ஒரு மாதத்திலேயே தன் உண்மையான முகத்தை அந்த மாயா காட்ட ஆரம்பிச்சிருக்கா.. அவங்க அம்மாவையும், தங்கையையும் வேலைக்காரிகளைவிட கேவலமா நடத்தியிருக்கா… வீட்டுக்கு தன்னோட பிரண்ட்ஸூங்களைக் கூட்டி வந்து அவங்களுக்கு சமைச்சு தர சொல்றது! அவங்க எதிர்லேயே இரண்டு பேரையும் அவமானப்படுத்துறது…சில நேரம் ஆண் நண்பர்களை வீட்டுக்கே அழைத்து வந்து அவர்களுக்கு டிரிங்ஸ் பார்ட்டி கொடுக்குறது…! இது போல இன்னும் எத்தனையோ பாடு அவங்களை படுத்தியிருக்கா… இதெல்லாம் ஆனந்தண்ணாவுக்கு தெரிஞ்சா அவரு வருத்தப்படுவாருன்னு அவர்கிட்ட சொல்லாமையே அவங்க ரெண்டு பேரும் மறைச்சிருக்காங்க. அது அவளுக்கு இன்னும் வசதியா போச்சு. ஒரு நாள் எதேச்சையா வீட்டுக் வந்தவருக்கு அப்பதான் எல்லா விஷயமும் தெரிய வந்திருக்கு… உடனே கோபப்பட்டு அவகிட்ட சண்டை போட… அவங்க அம்மாவையும் தங்கையையும் அவருகிட்டயே அவ கேவலமா பேச.. ஒரு கட்டத்துல வாய்ச்சண்டை முற்றி கைகலப்பில் முடிய… ஆத்திரம் தாங்காம அவளை அறைஞ்சு தள்ளிட்டாரு ஆனந்தண்ணா. உடனே ஆவேசப்பட்ட மாயா அவரையும் வாய்க்கு வந்த மாதிரி பேசிட்டு கோபமா வீட்டை விட்டு கிளம்பி அவங்க அப்பா வீட்டுக்கு போனவ… புருஷன் தன்னை அறைஞ்ச விஷயத்தை அவர்கிட்ட சொல்லி அழ…



அதைக்கேட்ட அந்தாளு “அந்த பிச்சைக்காரப் பயலுக்கு அவ்வளவு திமிரா? எவ்வளவு தைரியமிருந்தா… என் பொண்ணையே அறைஞ்சிருப்பான்?! அவனை உருத்தெரியாம அழிச்சிடுறேன் என்று வன்மத்தோடு கறுவியவர்… மாயாவை மேலும் தூண்டிவிட்டு வரதட்சணை கொடுமைன்னு பொய்யா போலீஸ் ஸ்டேஷனில் அவங்க மூணு பேர் மேலயும் புகார் கொடுக்க வச்சவரு.. அத்தோட நிற்காம… அவங்க மூணு பேரும் மாயாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துனதா செட்டப் பண்ணி பத்திரிக்கைகளுக்கும் பேட்டி கொடுக்க வச்சிட்டாரு அவங்க அப்பா!. அவ்வளவுதான் உடனே போலீஸ் அவங்க மூணுபேரையும் இம்மீடியட்டா அரெஸ்ட் பண்ணி உள்ளே வச்சிட்டாங்க… இது எல்லாத்தையும் அண்ணாகிட்டேயும் அப்பாக்கிட்டேயும் சொல்லிக் கதறியிருக்காரு ஆனந்தண்ணா.



அதன்பிறகு எவ்வளவோ கஷ்டப்பட்டு அந்த அரசியல்வாதியோட இடையூறுகளையும் மீறி அவங்களை எப்படியோ ஜாமீனில் வெளியே கொண்டுவந்தாங்க அப்பாவும், அண்ணனும்!. வெளியே வந்த அவங்களை உறவுக்காரங்களும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களும் கேவலமா பேச… பத்திரிக்கைகாரங்க ஒருபக்கம் அவங்களை விடாம கேள்வி கேட்டு துரத்த… ஏழ்மை நிலையிலும் மானம் மரியாதையோடு கௌரவமாக வாழ்ந்தவர்களால் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போக…அன்று இரவே தாயும் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஏற்கனவே மாயாவினால் நிலை குலைந்து போயிருந்த ஆனந்தண்ணாவுக்கு இது மற்றொரு பேரிடியா அமைய… மொத்தமா உடைஞ்சு போயிட்டாரு…!



அவங்க அம்மா… தங்கையோட உடல்களைப்பார்த்து அவரு கதறுன கதறலை இன்னும் என்னால மறக்க முடியல அண்ணி!. என்ற தமிழரசியின் குரல் அன்றைய நாளின் நினைவில் தழுதழுக்க..! அதைக் கேட்டுக்கொண்டிருந்த தாமரைக்கும் கண்கள் கலங்கியது. அதன்பிறகு ஆனந்தண்ணா தன்னோட உயிர்ப்பையிழந்து ஒரு நடைபிணமாத்தான் இருந்தாரு. தாந்தான் தன் தாய் தங்கை இருவரின் இறப்புக்கும் காரணங்குற குற்றவுணர்வுல தவிச்சாரு… கதிரண்ணாவும் அப்பாவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்த குற்றவுணர்விலிருந்து ஆனந்தண்ணாவைக் கடைசிவரை அவங்களால மீட்கவே முடியலை.கடைசியா.. தன்னோட சாவுக்கு யாரும் காரணமில்லைன்னு இலட்டர் எழுதி வச்சிட்டு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தானும் தற்கொலை பண்ணிக்கிட்டாரு ஆனந்தண்ணா. நாங்க பதறியடிச்சு போய் பார்த்தப்ப எல்லாமே முடிஞ்சு போயிருந்தது. அங்கே விசாரணைக்கு வந்திருந்த போலீஸ் ஆபீஸர் சாகுறதுக்கு முன்ன ஆனந்தண்ணா கடைசியா கதிரண்ணாவுக்காக எழுதுனதா இன்னொரு இலட்டரை அவர்கிட்ட கொடுக்க…



அதில்…. “கதிர் என்னை மன்னிச்சிடுடா..! என்னையே உலகமா நினைச்சு வாழ்ந்த என் அம்மாவையும் தங்கையையும் அநியாயமா நானே கொன்னுட்டேன்டா.. இந்த குற்றவுணர்வோட நான் வாழுற ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம் தான்டா…! அவங்களே என்னைவிட்டு போனபிறகு இனி யாருக்காக நான் வாழனும்? நானும் அங்களோடவே போறேன்டா..! அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா உனக்கே நான் மகனா வந்து பிறக்கனும்டா…! இந்த ஜென்மத்தில் நீ எங்கிட்ட காட்டுன அப்பழுக்கில்லாத பாசத்தையும், அன்பையும், அக்கறையையும்… திகட்டத் திகட்ட உனக்குத் திருப்பிக் கொடுத்து என் நன்றிக் கடனைத் தீர்த்துக்கனும். அது தான்டா என் கடைசி ஆசை! இப்படிக்கு…. உன் ஆனந்த்.” என்று கடிதம் முடிந்திருக்க… அதை வாங்கிப் படித்து பார்த்த கதிரண்ணா அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டாரு.



அந்த சம்பவம் கதிரண்ணாவோட மனசுல ஆறாத வடுவா தங்கிடுச்சு. அதிலிருந்து வெளியே வர முடியாம ரொம்பவே சிரமப்பட்டாரு. அம்மாவும் அப்பாவும் தான் கஷ்டப்பட்டு அவரை அதிலிருந்து மீட்டு கொண்டு வந்து அவரோட இலட்சியப் படிப்பை ஞாபகப் படுத்தி அவரோட கவனத்தை அதுல திசைதிருப்பினாங்க… அவரும் கொஞ்ச கொஞ்சமா அதிலிருந்து விடுபட்டு தன்னோட படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சாரு!.



“அப்போ அந்த மாயா என்னவானா…? அண்ணி!"என்று தாமரை வினவ..


“அவளுக்கென்ன… ஆனந்தண்ணா இறந்த கொஞ்ச நாள்லயே … எந்த குற்றவுணர்வும் இல்லாம… வேறொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்பவும் சந்தோஷமா வாழுறா..! மனசாட்சி…குற்றவுணர்வு இதெல்லாம் மனசுல ஈரம் இருக்கிறவங்களுக்கு தான் அவளைப் போன்ற பிறவிகளுக்கு அதுக்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாது! என்று கசப்போடு தமிழரசி உரைக்க…தாமரையும் அதை ஆமோதிப்பதைப் போல அமைதி காத்தாள். அன்றைய நாளின் நினைவில் தமிழரசி மூழ்கியிருக்க.. அதைக்கேட்டுக்கொண்டிருந்த தாமரையின் இதயமும் கனத்தது.




(கையணைக்க... வருவான்!)


ஹாய் பேபீஸ் கதையின் 27ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பேபீஸ். போன அத்தியாத்திற்கு லைக் & கமெண்ட் பண்ண எல்லாருக்கும் நன்றி &😘😘😘😘😘😍😍😍
 

Attachments

Status
Not open for further replies.
Top