All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செசிலி வியாகப்பனின் "ரகசிய கனவே ராட்சஷ இரவே" கதை திரி

Sesily Viyagappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் வாசக வாசகிகளே

நான் செசிலி வியாகப்பன், இந்த தளத்திற்கு புது முகம் தான். இருந்தாலும் என் கதைக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்புகிறேன்

கிடைக்கிற கேப்புல எல்லாம் எப்பி கொடுத்துடுவேன். இந்த சின்ன புள்ள மனச சந்தோஷ படுத்த நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னு தான்.

என் கதைய படிச்சு பாருங்க. பிடிச்சா லைக் பட்டனை அழுத்திட்டு, அப்படியே பக்கத்துல கமென்ட்ன்னு ஒன்னு இருக்கும், இந்த குழந்த பாப்பாக்கு நேரம் ஒதுக்கி அதுல உங்கள் கருத்த சொல்லிட்டு போகனும்.

எதாவது எசக்குபிசக்க கதை எழுதிட்டேன்னா பாத்து பதமா சொல்லுங்க. அடிக்க கல்லு, கட்டை எதையும் தேட கூடாது.

கடைசியா ஒன்னு சொல்லிட்டு போறேன்...
செசிலி என் பேரு
வியாகப்பன் என் அப்பா பேரு....
இது ரெம்ப முக்கியாமன்னு நீங்க நினைக்கிறது புரியுது. இருந்தாலும் சொல்லனும்னு தோனுச்சி.


முதல் பதிவை நான் நினைச்ச மாதிரி எப்பி காலையில தான் தருவேன்.

 
Last edited:

Sesily Viyagappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசிய கனவே... ராட்சஷ இரவே...
செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 1

உலகினை ஔிர வைக்கும் சூரியன் தன் உஷ்ணத்தை குறைத்துக் கொண்டு ஆழ்கடலுக்குள் ஓய்வெடுக்க செல்ல, வானம் அதற்கு அஞ்சாமல் கதிரவனின் கடைசி நேர கதிர்களை கொண்டு பொன் வண்ண நிறங்களினால் வர்ணஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. அவை அனைத்தும் கடல் நீரிலும் பிரதிபலிக்க அந்த இடமே மாய உலகம் போல காட்சியளித்தது. ஆனால் இது எதுவும் கடல் அலையில் காலை நனைய விட்டபடி நின்று கொண்டிருந்த கன்னியின் மனதில் பதியவில்லை.

கடல் காற்றுக்கு ஏற்ப அவள் நீண்ட பின்னலில் இருந்து தப்பித்த முடிக் கற்றை அசைந்தாட, அதை போலவே அவள் எண்ணமும் ஒரு நிலையில் நில்லாமல் அசைந்தாடிக் கொண்டு இருந்தது. பால் வண்ண நிறம், இடையை தாண்டிய கார் கூந்தல், தெளிவான முகம், மெல்லிய தேகம், சராசரியை விட அதிக உயரம் என முதல் பார்வையிலே பெண்மையின் இலக்கணங்கள் அனைத்தும் கொண்டவள் இவள் என்று கூறிவிடக் கூடிய எல்லாவற்றயைும் உருவத்தில் மட்டும் பெற்றவள். ஆனால் செயலில்...?

இயற்கையின் அழகு, மெதுவாக தன் மேனியை தழுவி செல்லும் காற்று, இசை மீட்டும் அலை ஓசை இப்படி ரசனை மிகுந்த சூழல் எதுவும் அவள் கவனத்தை கொள்ளை கொள்ளவில்லை. இலக்கின்றி பயணமான அவள் எண்ணங்கள் அனைத்திற்கும் காரணமான வார்த்தைகள் மட்டும் மீண்டும் மீண்டும் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டு இருந்தது.

"யூ ஆர் நாட் பிட் ஃபார் மேரேஜ் லைப். உண்மையிலே நீ ஒரு பொண்ணு தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. எதுக்கும் அத கன்பார்ம் பண்ண ஒரு மெடிக்கல் செக்அப் பண்ணிக்க..."என்று எள்ளலாக கூறிச் சென்றவனை கொல்லும் வெறி இருந்தாலும், அந்நேரம் தான் இருந்த இடத்தை கருத்தில் கொண்டு அமைதியாக கடந்துவிட்டாள்.

காலையில் மற்றவர்கள் முன்பு அமைதியாக கடந்த நிமிடம் மாலையில் தனிமையில் நிற்கும் பொழுது ஆழிப் பேரலையாய் சுழன்றடிக்க, அதற்கு காரணமானவனை என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்தவள் அதை தனக்கு நம்பிக்கையானவரிடம் தெரிவித்து விட்டு கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள்.

அலை ஓசையை மீறி கேட்ட தன் செல்போன் ஓசையில் தன் நினைவுகளை மீட்டெடுத்த பாவையவள் திரையின் ஔிர்ந்த பெயரை பார்த்ததும் அதை இயக்கி தன் காதில் வைக்க

"மேம் நீங்க சொன்ன வேலைய முடிச்சிட்டோம்..." என்று தனக்கு சாதகமாக கூறப்பட்ட தகவலில் அப்படி ஒன்றும் மகிழ்ந்து விட வில்லை.

என்ன செய்தாலும் பலர் பார்க்க தனக்கு நடந்த அவமானத்தை தான் இப்போது செய்து முடித்த செயல் துடைத்து விடாது என்று தெரியும். ஆனாலும் தன்னை இனி ஒருவன் கேள்வி கேட்க துணிந்து விடக்கூடாது என்ற எண்ணமே அவளை அவ்வாறு செய்ய வைத்தது.

அவள் தேனிலா....
பெயரில் மட்டுமே இனிமையை கொண்டவள். பெயரில் இருக்கும் இனிமை அவள் செயலில் தேடினால் விடை என்னவோ பூஜ்ஜியம் தான். அவள் செயல் ஓவ்வொன்றும் சுட்டெரிக்கும் சூரியன் தான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பு ஜ்வாலையானவளை நெருக்கும் தைரியம் யாருக்கும் இல்லை என்பதை விட, தேனிலா யாருக்கும் அந்த தைரியத்தை கொடுத்ததில்லை என்பது தான் உண்மை.

பாவையவள் இப்படி இருப்பதற்கு அவள் குடும்பமும், அவள் வளர்ந்த முறையும் தான் காரணம் என அனைவருக்கும் தெரிந்தாலும் அதை வெளிப்படையாக அவள் குடும்பத்தாரிடம் தெரிவிக்கும் துணிவு யாருக்கும் இல்லை. அவள் குடுப்பத்தினரே அதை உணரும் பொழுது அதை சீர் செய்யும் வாய்ப்பை கொடுக்கும் நிலையில் தேனிலா இல்லை. சிறு வயதில் குடும்பத்தினரே 'எதிர்த்து நிற்பவன் யாராகிலும் உனக்கு எதிரியே' என்ற கருத்தை அவளுள் வேறுன்ற செய்ய, அதன் விளைவு ஒருவர் எதிரி என்று முடிவு செய்துவிட்டால் வேட்டையாடாமல் தேனிலா ஓய்வதில்லை.

அவள் குடும்பத்தை பொறுத்த வரையில் தங்கள் வளர்ப்பு சரி தான். அதிலும் பெண் சிங்கமாய் எதிரிகளை வேட்டையாடும் தேனிலா செய்வது அனைத்தும் அவர்களுக்கு பெருமையே... அதிலும் அவள் அண்ணன் அக்னிமித்ராவுக்கு தங்கை சொல்லே வேத வாக்கு....
அது நேற்று வரையிலே...
ஆனால் இன்று?

ஆறு தலைமுறைக்கு பின் குடும்பத்தின் ஒற்றை பெண் வாரிசாக பிறந்த தேனிலாவின் அதிரடி செயலுக்கு அவர்கள் அளித்த ஆதரவே அவளை யாருக்கும் அடி பணியாத அரசியாக உருவாக்கியது. அப்படிப்பட்டவளை ஒருவன் பலர் முன்பு நிற்க வைத்து கேள்வி கேட்க அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தான் எவ்வளவு கூறியும் கேட்கமல் தன் குடும்பத்தினர் செய்த செயலால் ஏற்பட்ட நிகழ்வுகளின் தக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் தேனிலா போராட்டிக் கொண்டிருக்க, அவள் செல்போன் மீண்டும் தொந்தரவு செய்தது. திரையில் தெரிந்த தாய் வெண்ணிலா எண்ணை பார்த்ததும் ஒருவித எரிச்சல் உணர்வு எற்பட அழைப்பை எற்காமல் தவிற்க, அவரோ மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டு இருந்தார்.

தான் அழைப்பை ஏற்கும் வரை தாய் தன் முயற்ச்சியை நிறுத்த போவதில்லை என்பதை புரிந்து கொண்ட தேனிலா கோபத்துடன் போனை காதில் வைக்க, மறுமுனையின் மகளிடம் பேசிவிட வேண்டுமே என்று பரிதவிப்புடன் காத்திருத்த வெண்ணிலா, மகள் தன் அழைப்பை ஏற்ற மறுநொடி

"தேனு எங்க ம்மா இருக்க..." என்று எல்லா தாயுக்குமான கவலையுடன் கேட்க, அதை கண்டு கொள்ளாமல் புறம் தள்ளிய தேனிலா,

"ம்மா சும்மா பேசி டென்ஷன் பண்ணாத ம்மா... எதுக்கு போன் பண்ணுனியே அத மட்டும் சொல்லிட்டு வை." என்று கத்தரித்து பேச அதில் பெற்றவர் மனது வலித்தாலும் மகளின் குணத்ததை பற்றி நன்கு அறிந்திருந்தவர் அதை பெரிதுபடுத்தாமல் தான் அழைத்த காரணம் நினைவு வர

"கதிர போலிஸ் கூட்டிட்டு போயிருக்காங்க. கேட்ட சரியா பதில் சொல்லல. விசாரிச்சதுல நீ தான் புகார் கொடுத்தன்னு சொல்றாங்க. வேண்டா தேனு... அந்த பொண்ணும், மங்கையும் பாவம் அவளுக்காகவாவது கொஞ்சம் இரக்கம் காட்ட கூடாதா." என்று கவலையுடன் கூற, தாயின் குரலில் கதிர் என்று அவர் அழைக்கும் கதிரவனுக்கான கவலை கண்டு கொண்ட தேனிலா

"ம்மா நீ பெத்த பொண்ண அவமனப்படுத்தினவன் மேல உனக்கு இவ்வளவு அக்கற இருக்க வேண்டிய அவசியம் இல்ல. அவன் செய்த தப்புக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு இந்த தேனிலா காலையில பத்து இருபதுக்கே முடிவு பண்ணிட்டா, இனி அத நீ என்ன அந்த ஆண்டவனே நினைச்சா கூட மாத்த முடியாது.
தேவையில்லாமா மத்தவங்களுக்காக யோசிச்சு உடம்ப கொடுத்துக்காத நைட் வர லேட் ஆகும் எனக்கு வெய்ட் பண்ணாம சாப்பிட்டு தூங்கு." உச்ச கட்ட கோபத்தில் பேச ஆரம்பித்து சிறு கண்டிப்புடன் முடித்துக் கொண்டாள்.

தாயிடம் பேசி முடித்த பின்னரே நேரத்தை கவனித்த தேனிலா தனக்காக காத்திருக்கும் வேலைகள் நினைவு வர தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த காரை நோக்கி நடக்க தொடங்கினாள்.

தன் பிரச்சனைகள் எதையும் தன் தோற்றத்ததை பாதிக்காத வண்ணம் தனக்குள்ளே அமிழ்த்திக் கொண்டு நேர் கொண்ட பார்வையுடன் நடந்து கொண்டிருந்தவளை நோக்கி ஒருவன் வேகமாக ஓடி வர சற்று தூரத்திலே அவன் யார் என்பதை கண்டு கொண்டவளது இறுகிய முகம் தன் இறுக்கத்தை சற்று தளர்த்தியது.

வேகமாக ஓடி வந்தவனை தொடர்ந்து இன்னும் சிலர் ஆயுதங்களுடன் ஓடி வர, அதை பார்த்த தேனிலா தன் இடையை ஒரு முறை தடவி பார்த்து திருப்தியுடன் தயாராக நின்றாள்.

ஓடி வந்தவனோ தேனிலாவை கவனிக்கும் நிலையில் இல்லாமல் அவளை கடந்து செல்ல முயற்சிக்க, அவனை தன் கையால் தடுத்து தனக்கு பின்னே நிறுத்திக் கொண்டு அவனுக்கு அரணாக நின்று கொண்டாள்.

தனது ஓட்டத்தை நிறுத்தியவளின் செயலில் சற்று தடுமாறி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், விரட்டி கொண்டு வந்தவர்களை பார்த்து பயத்தில் பாவையின் பின் மறைந்து கொள்ள, அவன் செயலில் தேனிலாவிற்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது. அவன் செயலுக்கும் சேர்த்து எதிரில் வந்தவர்களை முறைத்து பார்க்க அவள் தோரணையில் தேங்கி நின்றவர்கள்,

"எய் பொண்ணு மரியாதையா ஒதுங்கி நில்லு... இல்ல சேதாரம் உனக்கு தான்..." என்று மிரட்டலாகவே கூற, அதை அலட்சியமான முக பாவத்துடன் எதிர் கொண்ட தேனிலாவை பார்த்து கோபமடைந்தவர்கள் தன் கையில் இருந்த கத்தியை எடுத்து அவள் முன் நீட்ட, அவளோ மெல்ல தன் இடையில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து தன் நெற்றியின் மீது தட்டி யோசிப்பது போல பாவனை செய்துவிட்டு, தனக்கு பின் நின்றவனை பார்த்து

"விது இத லைசன்சோட ஃபோர் இயர்ஸ்க்கு முன்ன நான் வாங்கி வைச்சிருக்கிறேன். பட் எனக்கு இத சரியா ஒரு ஆள் மேல சுட தெரியுமான்னு டெஸ்ட் பண்ண சன்ஸ் கிடைக்கல, இப்போ சும்மா ஒரு டெஸ்டிங் பண்ணலாமா." என்று கேட்க, அவனோ அதுவரை மிரண்டு விழித்துக் கொண்டிருந்தவன்

"தேனிலா வேண்டாம்.... சட்டத்த கையில எடுக்கிறது தப்பு ." என்று அவள் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டு நியாயம் பேச, அவனை முறைத்து பார்த்த தேனிலா எதிரில் நின்றவர்களில் ஒருவனின் காலுக்கு கீழே கிடந்த சங்கு ஒன்றை சுட அது சில்லு சில்லாக சிதறியது.

அடுத்தாக நடுவில் நின்றவனை நோக்கி தன் துப்பாக்கியை உயர்த்தி குறி பார்க்க, சங்கு சிதறிய போதே பயத்தில் இருந்தவர்கள் தேனிலா தங்களை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியது அடுத்த நிமிடம் அவர்கள் அனைவரும் அங்கிருந்து மாயமாக மறைந்திருந்தனர்.

தேனிலாவின் கையில் துப்பாக்கியை பார்த்திலே பயந்து அவள் தோளில் முகம் புதைத்து நின்றவன், இப்போது அதன் சத்ததில் அவள் இடையோடு சேர்த்து கட்டிக் கொள்ள அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இப்போது தேனிலா போரட வேண்டியதாக இருந்தது.

"டேய் எரும மாடு இப்ப என்ன விடல உன் மண்டையில சுட்டுடுவேன்." என்று மிரட்ட அதில் பதறி அவளிடமிருந்து விலகி நின்றான்.

விலகி நின்றவன் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து தன்னை துரத்தி வந்தவர்கள் இருக்கின்றார்களா என்று பார்த்தவிட்டு, தேனிலாவை பார்க்க அவளோ காளி அவதாரத்தில் கையில் துப்பாக்கியுடன் இருக்க, ஏற்கெனவே பயத்தில் இருந்தவன் அவள் தோற்றத்தில் மீண்டும் பயந்து தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான்.

அவன் சிறுபிள்ளை தனமான செய்கையில் புன்னகைக்கும் வகையில் இதழை வளைத்த தேனிலா துப்பாக்கியை இடையில் வைத்துவிட்டு கைகளை கட்டிக் கொண்டு அவனை பார்த்தபடி நிற்க, ஒரு கையை மட்டும் கீழே இறக்கி அவள் புன்னகை முகத்தை பார்த்த பின்

"அப்பாட நீ கோபமா இல்ல...." என்று பெருமூச்சு விட, அவன் காட்டிய பாவனையில் சிரிக்கவே ஆரம்பித்து விட்டாள். தேனிலாவுடன் இணைந்து சிரித்தவன்

"தேனிலா என்ன காப்பாதுனதுக்கு தேங்ஸ்" என்று நன்றியுரைக்க, அவளோ அதை கண்டு கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாள்.

அவளை பற்றி நன்கு அறிந்திருந்தவனும் அவளின் குணம் இது தான் என்று உணர்ந்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவன் விதுரகவிதன்.... பெயரை போலவே தான் அவனும். கவிதையாய் பழக இனிமையானவன்.

ஏழை தாய் தந்தைக்கு தலை மகனாக பிறந்து வறுமையிலே வளந்தவனுக்கு நல்ல உள்ளம் படைத்த ஒருவர் செய்த உதவியால் தேனிலாவின் சகோதரன் அக்னி மித்ரன் படித்த அதே பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

உயர் ரக கார்களில் பள்ளிக்கு வந்து செல்பவர்களுக்கு மத்தியில் பழைய மிதிவண்டி வரும் கவிதன் மட்டும் சற்று வித்தியாசமாகவே தெரிந்தான். அவன் தோற்றமே அவன் நிலையை எடுத்துரைக்க, மற்ற மாணவர்கள் அவனை விட்டு விலகியே நின்றார்கள்.

அதிலும் சிலர் அவனை நேரடியாக அவன் எழ்மையை சீண்டி பார்க்க பதினோரு வயது பாலகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

முன்பு கவிதன் படித்த பள்ளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவனே செல்ல பிள்ளை. படிப்பில் புத்திசாலியாகவும் அதே நேரம் சேட்டை செய்யாமல் அமைதியாக சொல்வதை கேட்டு நடக்கும் கவிதனை அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், கடை நிலை ஊழியர்கள் என அனைவருக்கும் பிடிக்கும்.

பார்க்கும் இடம் எல்லாம் பணக்கார தோன்றத்தை பிரதிபலிக்கும் அந்த பள்ளியில் தன்னை பொறுத்திக் கொள்ள முடியவில்லை என்றாலும், தன் நிலை உணர்ந்து அங்கே தனக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் பொறுத்து கொள்ள பழகிக் கொண்டான்.

அவன் தன்னை படிப்பிலும் விளையாட்டிலும் முதல் மாணவனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஆரம்பித்த பின் சிலர் அவர்களாக வந்து பேசினாலும் கவிதனால் யாருடனும் ஒட்டிக் கொள்ள முடியாவில்லை.

கவிதன் பத்தாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தபோது தேனிலாவும் ஆறாம் வகுப்பு மாணவியாக தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டாள். தேனிலாவின் பார்வை மற்றவர்களை விட எப்பொழுதும் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். அவளை பொறுத்தவரை ஒருவரை பணத்தை கொண்டு அல்லாமல் அவர்களது திறமையை கொண்டே மதிப்பிடுவாள்.

தொழிலில் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள திறமையானவர்களை தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும் அவர்களை எப்பொழுதும் பகைத்துக் கொள்ள கூடாது. அவர்களை வளர வைத்து அதில் நாமும் வளர வேண்டும் என்பது அவள் தாத்தா கற்பித்த பாடம்.

தாத்தாவின் பாடத்தை மித்ரனை விட தேனிலா சரியாக புரிந்து கொண்டு தேவைபடும் இடங்களில் பயண்படுத்தவும் செய்வாள். சிறு வயதிலேயே கை தேர்ந்த வியாபாரியாக வளர்ந்தவளுக்கு விதுரகவிதனை விலக்கி வைக்கும் எண்ணம் எதுவும் தோன்றவில்லை.

பள்ளியில் சேர்ந்த சில நாட்களிலே அனைத்து திறமைகளையும் முழுமையாக கொண்ட விதுரகவிதனிடம் தானே சென்று நட்பை வளர்த்துக் கொண்டாள். நான்கு வருடங்களாக தனித்து இருந்த கவிதனும் தேனிலாவின் நட்பு கரத்தை எவ்வித யோசனையும் இன்றி பற்றிக்கொண்டான்.

கவிதன் படிப்பிற்கு உதவி செய்த பெரியவர் மறைவிற்கு பிறகு அவனுக்கு கிடைத்த உதவி தொகை நின்று விட, அவனுக்கோ பல ஆயிரங்களை கடந்து நிற்கும் அரையாண்டு தேர்வுக்கான தொகையை கட்டமுடியாத நிலை.

"விது நீ எதுக்காக இத்தனை நாளா ஸ்கூல்க்கு வரல." என்று டீசி வாங்க நீண்ட நாளுக்கு பின் பள்ளிக்கு வந்தவன் வழியை மறித்து கேள்வி கேட்ட தேனிலாவின் வருகையை கவிதன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

வேறு வழியின்றி கவிதன் தன் நிலையை கூற, தேனிலா தன் தந்தையின் மூலம் அவனக்கான அனைத்து கல்வி செலவையும் ஏற்க செய்தாள்.

எதற்கும் பயந்து ஒதுங்கிக்கொள்ளும் கவிதன், எதையும் எதிர்த்து நிற்கும் தேனிலாவின் நட்பில் இன்னும் மெருகேறினான் என்றே சொல்ல வேண்டும். அதுவரை அவனை வம்பிழுப்பவர்களும், கேலி செய்பவர்களும் தேனிலாவின் பின்புலத்தை கண்டு கவிதனிடம் நெருங்க அஞ்சி விலகி நிற்க, அடுத்து வந்த நாட்கள் பள்ளி காலம் அனைத்தும் கவிதனின் வண்ணமயமான நாட்களானது.

"பாப்பா நீ அந்த லோ க்ளஸ் பையன் கூட பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல." என்று மித்ரன் எதிர்ப்பை தெரிவிக்க, தன் தமையனை அழுத்தமாக பார்த்த தேனிலா

"மித்து எனக்கு ஆதாயம் இல்லாத எதையும் நான் செய்ய மாட்டேன்னு உனக்கு தெரியாதா?" என்று கேட்க, அழுத்தமாக வெளிவந்த தங்கையின் பதிலில் சற்று யோசிக்க ஆரம்பித்த மித்ரன்

"அவனால உனக்கு என்ன ஆதாயம் இருக்க போகுது." என்று யோசனையுடன் கேட்க,

"நிறைய இருக்கு.... என்னோட பாலிசியே 'Be the first or with the first' நான் எதுலயும் முதல் இடத்தில தான் இருக்கனும் அதே சமயம் முதல் இடத்துல இருக்கிற எல்லாரும் என் கூட இருக்கனும்.
நான் என் படிப்பு விளையாட்டு எல்லாத்திலயும் டாப்ல இருந்தாலும் அதுவுல ஏதோ ஒரு சின்ன குறை இருக்கும். அதே திறமையானவங்க மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும்; விது மாதிரி பசங்க தான் அதுக்கு சரி.
அவன மாதிரி பசங்களுக்கு கொஞ்சம் பாசமா பேசினா போதும் எந்த எக்ஸ்பெக்டேஷன்சும் இல்லாம எல்லாம் செய்வாங்க. அப்புறம் அவனுக்கு நாம இந்த த்ரி இயர்ஸ் பண்ண போற செலவு ஒன்னு பெரிய அமௌண்ட் இல்ல. ஜெஸ்ட் ப்யூ லேக்ஸ்." என்று தேனிலா சிறு வயதிலே தேர்ந்த வியாபாரியாக பேச, மித்ரனும் அதன் பிறகு கவிதன் விசயத்தில் தலையிடவில்லை. ஆனால் அதே சமயம் கவிதனை தன் கண்காணிப்பு வட்டத்தை விட்டு அகற்றவும் இல்லை.

கவிதனும் தேனிலாவின் உதவியுடன் தனது பள்ளி படிப்பை மாநில அளவில் முதல் மதிப்பெண்ணுடன் நிறைவு செய்ய, அதுவரை அவனை கண்டு கொள்ளாத பலரும் அவன் தேர்தெடுத்த இஞ்சினியர் படிப்பிற்கு உதவி செய்ய முன் வந்தனர். கல்லூரியில் கவிதன் சேர்ந்த பிறகு இருவரும் சந்திக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் முழுவது இல்லாமலும் போனது.

தேனிலா நினைத்திருந்தால் (?) கவிதனுடன் தன் நட்பை தொடர்ந்திருக்க முடியும். ஆனால் தான் என்ற தன் நிலையில் உறுதியாக இருந்தவள் அவனை தேடியிருக்கவில்லை என்பதே உண்மை.

தேனிலாவின் உயரம் புரிந்த கவிதனும் தன் குடும்பத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கிடையே அவளை சந்திக்கு முயலாதது மற்றாெரு காரணம். கிட்டதட்ட ஆறு வருடங்களுக்கு பின் இன்று தான் இருவரும் சந்திக்கின்றன.

அன்று இறுதியாக பார்த்த 17 வயதில் கொழுகொழு குமரியின் தோற்றம் தேனிலாவிடம் மிச்சம் இருந்தாலும் உடல் எடை மட்டும் குறைந்திருந்தது. அவளுக்கு நேர்மாறாக கவிதனோ தனது ஒல்லியான தேகத்திலிருந்து சிக்ஸ் பேக்ஸ் முன்னேறியிருந்தான். என்னதான் காலங்கள் இருவரின் புற தோற்றத்தை மாற்றியிருந்தாலும் அவர்களின் குண இயல்பு மாறவில்லை என்பதை இந்த சந்திப்பின் சில நிமிடத்திலே உணர்ந்தனர்.

கவிதனை பார்த்ததில் தேங்கி நின்ற தேனிலா தனக்காக அணிவகுத்து நிற்கும் வேலைகளின் நினைவில் தன் முன் நின்றவனை கடந்து செல்ல முற்பட, அவள் எண்ணம் புரிந்தவனாக அவளுடன் இணைந்து நடந்த கவிதன் பேச ஆரம்பித்தான்.

"தேனிலா எப்படி இருக்கீங்க? பாத்து ரெம்ப நாள் ஆகிட்டு? உங்கள பத்தி நீயூஸ் சோசியல் மீடியால பாத்திருக்கேன்.." என்று அவள் கல்யாண பேச்சு வா்த்தை நிச்சயதன்றே முடிவுக்கு வந்ததையும் செய்தியாக தெரிந்து கொண்டதின் வெளிப்பாடாய் தயக்கத்துடன் நிறுத்த, அத்தகைய தயக்கம் எதுவும் இல்லாதவளாக

"ம்ம் பைன்... வாட் எபௌட் யூ" என்று அனுதாப வார்தைகளை விரும்பாத தேனிலா, கேள்வியை கவிதன் புறம் திருப்ப, அவனும் மடை திறந்த வெள்ளமென தனது வேலை, அதன் மூலம் நடந்த சகோதரிகள் இருவரின் திருமணம், புதிதாக கட்டி முடித்த வீடு, தம்பியின் மகன் என்று அனைத்தையும் பற்றி மகிழ்சியாக பேசிக் கொண்டிருக்க,

"ஆனா இனி என்ன செய்யன்னு தெரியல..." என்று சோகமாக முடித்தான். அவன் சோகத்திற்கான காரணம் புரியாத தேனிலா

"இனி என்ன அதான் உன்ன தவிர உன் வீட்டுல எல்லாரும் செட்டில் ஆகிட்டாங்களே. அப்புறம் என்ன பிரச்சனை." என்று அவன் உழைப்பை உறிஞ்சி வாழும் அவன் குடும்பத்தாரின் நினைவில் கடுகடுக்க பேச, அதை சரியாக புரிந்து கொள்ளாதவனாக

"நான் வேல பாத்த கம்பெனி பாஸ் இல்லீகல் பிஸ்னஸ் பண்ணிருக்காரு. இன்னைக்கு அவர போலீஸ் அரஸ்ட் பண்ணதும் எனக்கு கிடைச்ச எவிடன்ஸ அவங்க கிட்ட சீக்கிரட்ட கொடுத்துட்டேன். அது எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட அவர் ஆளுங்க என்ன துரத்த ஆரம்பிச்சிடாங்க. அந்த ஆளுங்க கிட்ட இருந்து தான் என்ன நீ காப்பாத்திருக்க."

தன்னை கொல்ல துடிக்கும் நபரை பற்றி கவலை கொள்ளாமல், தன் வேலை இல்லாம் வீட்டின் பாரத்தை எவ்வாறு சமாளிப்பது என்று கவலைப்படுபவனை பார்த்த தேனிலாவிற்கு 'இவன் சரியான இளிச்ச வாயன்' என்று எண்ண தோன்றியது.
 
Last edited:

Sesily Viyagappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

கவிதனை அவன் கூறிய இடத்தில் விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல் தன்னுடைய விருந்தினர் மாளிகைக்கு வந்த தேனிலாவிற்கு மனது ஒரு நிலையில் இல்லாமல் மீண்டும் மீண்டும் அவனை பற்றியே சிந்திக்க ஆரம்பித்தது. கவிதனது இன்றைய நிலைமைக்கு காரணம் யார் என்று அவனுக்கு தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவளுக்கு தெரியுமே.

யாரை பற்றியும் கவலை கொள்ளாத தேனிலா வீட்டில் அத்தை மகனுடன் தன் திருமண பேச்சு ஆரம்பமானதும் கதிரவனை பற்றி தகவல்கள் அனைத்தையும் திரட்டி வைத்திருந்தாள்.

கதிரவனை பற்றி முழுதாக தெரிந்து கொள்வதற்கு முன்பே அவனை திருமணம் செய்து கொள்ளும் விரும்பம் இல்லாது இருந்தவளுக்கு, அவனால் இன்று தனக்கு நடந்த அவமரியாதைக்கு பழி வாங்கும் விதமாக கதிரவன் உண்மை முகத்தை பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததுடன் ஆதாரங்கள் அனைத்தையும் நேர்மையான ஊழியர் ஒருவர் கையில் கிடைக்க செய்ய கூறியிருந்தாள்.

அனைத்தும் அவள் விருப்பப்படி நடந்து. கதிரவன் கைது செய்யப்பட்ட பின்னே ஆதாரங்கள் கிடைத்தது கவிதன் கைகளில் என்று தெரிந்தது.

தன்னால் அவன் பாதிக்கப்பட்டதை ஏனோ அவள் மனம் ஏற்க மறுத்தது. நீண்ட நேரம் யோசித்த தேனிலா தன் உதவியாளரை அழைத்து கவிதன் பற்றி விசாரிக்க, கிடைத்த தகவல் திருப்தி அளிக்க கூடியதாக இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்த பின்னே அவளால் நிம்மதி அடைய முடிந்தது.

அடுத்த நாள் வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக அலுவலகம் சென்ற தேனிலா இரவு பதினென்றை நெருங்கும் சமயம் வீடு வந்து சேர்தாள். அந்நேரத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உறங்காமல் அவள் வரவிற்காக காத்திருந்ததை பார்த்து புருவம் உயர்த்திய தேனிலா அவர்களை கடந்து செல்ல முயற்சிக்க

"தேனிலா...." என்று தன் பெயரை அழுத்தமாக உச்சரித்ததிலே தந்தையின் மனநிலையை உணர்ந்து அதே இடத்தில் நின்றபடி திரும்பி பார்க்க, கதிரவனின் தந்தை ஆதிகேசவன் கட்டுபடுத்தப்பட்ட கோபத்தில் இருப்பது தெரிந்தது.

உங்கள் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்பது போல தேனிலா தன் வழக்கமான பார்வையை அவரை நோக்கி செலுத்த, அதில் இருந்த தீட்சண்யம் ஆதி கேசவனை தான் நினைத்ததை நேரடியாக கேட்க முடியாமல் செய்தது. தன் கனவனின் நிலையை புரிந்து கொண்ட மங்கை

"தேனும்மா கதிர் உன்ன பத்தி பேசுனது தப்பு தான் அதுக்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டணை வேண்டம் ம்மா... அவன் கிட்ட பேசி மன்னிப்பு கேட்க சொல்றேன். நீ கதிரு மேல கொடுத்த புகார திரும்ப வாங்கிடு ம்மா..." என்று கெஞ்ச, அது எதுவும் தேனிலாவை சற்றும் அசைக்கவில்லை.

மகள் முடிவெடுத்துவிட்ட பின் மாற்ற முடியாது என்று சந்திரசேகரனுக்கு தெரிந்த பின்பு பெருமூச்சு விடுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

தந்தையின் வழியை பின் பற்றி தொழிலில் துறை உயரத்தில் வெற்றி கொடி நாட்டியவருக்கு, தங்களை தாண்டி விண்ணை தொட துடிக்கும் மகளை கட்டுபடுத்த முடியவில்லை.

முன்பு பெருமையாக தெரிந்த மகளின் செய்கள் அனைத்ததும் இன்று பயமுறுத்த அந்த பாச மிகு தந்தைக்கு அடுத்து மகளை எவ்வாறு அனுகுவது என்று தெரியவில்லை.

தந்தையின் முகத்தை வைத்தே அவர் எண்ணங்களை படித்த தேனிலா,

"டேட் என் எதிரிங்களுக்காக நீங்க பேச நினைச்சிங்கன்னா கூட நான் அவங்கள பத்தி யோசிப்பேன். பட் துரோகிகளுக்கு.... நே வே..." என்று கூறி விட்டு யாரையும் திரும்பி பாரது தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். தேனிலாவின் செயலில் கோபமடைத்த ஆதிகேசவன் வெண்ணிலா விடம்

"உன் பொண்ணுக்கு இவ்வளவு திமிர் ஆகாது வெண்ணிலா. குடும்பத்தில இருக்கிற யாரவது ஒருத்தரயாவது மதிக்கிறாளா? இப்படியே போனா எதிர்காலத்துல தனியா கிடந்த அனுபவிப்பா..." என்று கூறி முடிக்கும் முன்

"மாமா..." என்று அக்னி மித்திரனின் வார்தைகள் கடும் கோபத்துடன் வந்து விழுந்தது. அந்த நேரத்தில் மித்ரனை அங்கு எதிர்பாராத ஆதி கேசவன் மௌனமாக, அவரை எறித்து விடுவது போல பார்த்தவன் தன் தாயிடம்,

"அம்மா உன் அண்ணன் கிட்ட சொல்லி வை, குடும்பத்துல யாரையும் மதிக்காம நடந்துகிறது தேனிலா இல்ல; அவர் மகன் கதிரவன் தான். இன்னைக்கு இவர் மகன் சொன்ன அதே வார்த்தைய நான் அவரோட பொண்ணு கிட்ட சொன்னாலும் அப்பவும் இதோ மாதிரி தான் பேசுவாரா.
காதலிச்சா அதை வீட்டில் சொல்ற தைரியம் வேண்டும். அதை விட்டுட்டு என் தங்கச்சி மேல இருந்த முன் பகையை கோழ மாதிரி எல்லாரும் முன்னாடி வச்சு தீத்துக்க நெனச்சா அவளும் இப்படித்தான் செய்யவா. ஒரு அண்ணனா நான் அவளுடைய செய்யல தப்புன்னு சொல்ல மாட்டேன்.
அவ ஒன்னும் பொய்யா கதிர் செய்யாததுக்கு மாட்டி விடலையே. அவன் இல்லீகல யாருக்கும் தெரியாம செய்த வேலைய மாத்தவக்க பார்வைக்கு கொண்டு வந்துருக்கா.
இதுக்கு மேல யாராவது என் தங்கச்சி பத்தி ஒரு வார்த்தை பேசினாலும் சும்மா இருக்க மாட்டேன்." என்று தன் தங்கைக்கு அண்ணனாக மற்றவர்களை எச்சரித்துவிட்டு அக்னி மித்திரன் அவனது அறைக்கு சென்றுவிட அந்த இடமே புயலுக்குப் பின் நிலவும் அமைதியை தத்து எடுத்தது. மகன் சென்றதும் தன் மனைவியின் அண்ணணை பார்த்த சந்திரசேகரன்

"இது வரைக்கும் கூட நான் என் மனைவியோட அண்ணன் பையன் என்கிற ஒரே காரணத்துக்காக கதிர் பத்தி கொஞ்சம் யோசிச்சேன். ஆனால் எப்போ நீங்க என்னுடைய மகள பத்தி பேசினீங்களா இதுக்கு அப்புறம் என்னால எதுவும் செய்ய முடியாது.
நீங்க வந்து பொண்ணு கேட்டதால மட்டும் தான் என் பொண்ண எதிர்த்து இந்த நிச்சயத்துக்கு ஒத்துக்கிட்டோம். அதுக்கு உங்க பையன் என் பொண்ண எல்லார் முன்னடி வைச்சு மெரேஜ் லைப்க்கு அன்ஃபிட் ன்னு பெயர் வாங்கி கொடுத்துட்டான். அத எல்லாம் மறந்துட்டு நீங்க பேசும் போது இனி என்னால உதவி பண்ண முடியாது." என்று தன் மகளின் தந்தையாக முடிவெடுத்தார்.

அதே நேரம் தன் வேலையை இழந்த கவிதன் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடனே திருநெல்வேலியில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்து சேர, அவனை வரைவேற்றது இருளில் மூழ்கிருந்த அவனது இல்லமே. இத்தணைக்கும் கவிதன் தான் இன்று வர போவதை பற்றி முன்வே அன்னைக்கு அழைத்து தெரிவித்திருப்பதால் குறைந்த பட்சம் அவர் மட்டுமாவது தனக்காக காத்திருப்பார் என்று நினைத்து வந்தவனுக்கு ஒருவித ஏமாற்ற உணர்வு தன்னுள் பரவுவதை தடுக்க முடியவில்லை.

தாய்க்கு எப்போதும் தலைமகன் என்பதை எல்லாம் கவிதன் வீட்டில் உள்ளவர்களால் குறிப்பாக அவன் உடன் பிறந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவே செலவு என்று வரும்பொழுதும் வீட்டில் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் போதும் மட்டும் யாரும் கூறாமலே கவிதனுக்கே எப்பொழுதும் முன்னுரிமை கிடைக்கும்.

வெளியிலிருந்து இதையெல்லாம் பார்ப்பவர்கள் வீட்டின் முதல் மகன் செய்ய வேண்டியது தானே என்னும் வாக்கியத்துடன் கடந்து சென்று விடுவார்கள். ஆனால் கவிதன் மீது உண்மையான பாசம் வைத்திருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அவன் தனது வாழ்வில் எவற்றையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறான் என்பது புரியும்.

இரவின் இருளில் வீடு மூழ்கிருந்த போதும், பௌர்ணமி நிலவின் ஔி பல மாதங்களில் அடைந்திருக்கும் அதன் மாற்றத்தை நன்றாக படம் பிடித்து காட்டியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ஓட்டு வீடாக இருந்து இப்போது புது பொழிவுடன் மாடி வீடாக எழுந்து நிற்கின்றது. அதன் எழுச்சி எல்லாம் கவிதன் உழைப்பில் மட்டும் தான் என்ற உண்மை உயிரில்லாத அந்த வீட்டிற்கு வேண்டுமென்றால் புரியாமல் போகலாம், ஆனால் புரிந்து கொள்ள வேண்டிய உறவுகளாே அவனை பொதி சுமக்கும் ஐந்தறிவு விலங்காக நடத்துவதுதான் கொடுமை.

மற்றவர்களையாவது புறந்தள்ளி விடலாம் ஆனால் பெற்ற தாய் தன் மகனிடம் வேற்றுமை பாராட்டுவது தான் அவ்வப்போது கவிதன் மனதை சோர்வடையும் செய்கின்றது. வீட்டிற்குள் எப்படி செல்வது என்று தெரியாமல், அதே சமயம் யாரையும் அழைத்து தெந்தரவு செய்ய மனமில்லாது வாயிலிலேயே கவிதன் நின்று கொண்டிருக்க எதிர்த்த வீட்டில் கதவு திறந்தது. எதிர் வீட்டில் இருந்து வந்த வெளிச்சத்தில் அங்கு திரும்பி பார்க்க, கவிதனின் தாய் மாமன் கதிர்வேல் வந்தது கொண்டு இருந்தார்.

அவருக்கு பின்னே கவிதனின் பார்வை செல்ல அவன் நினைப்பை மெய்பிக்கும் வகையில் மாமன் மகள் தேன்மொழி கதவுக்கு பின் நின்று எட்டி பார்த்துக் கொண்டிருக்க, கவிதனின் கண்கள் தேன்மொழியை பார்த்ததும் ஒரு வித ஆர்வம் எட்டிப் பார்த்தது.

கவிதனின் கண்களில் தன் மகளுக்காக தெரிந்த ஆர்வத்தையும், அதற்கு மகளின் வெட்க புன்னகையையும் தன் ஓர கண்களால் பார்த்த கதிர்வேல் விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மனதுக்குள் தீர்மனம் எடுத்துக் கொண்டார்.

தற்சமயம் இருவரின் கவனத்திலும் தான் பதிய வாய்பில்லை என்றுணர்ந்து கவிதனின் தோளில் கையை போட்டு,

"என்ன மாப்ள வெளியே நின்னுக்கிட்டு இருங்கீங்க? கதவ தட்டுனாதான திறக்கும்?" என்று கூறிக் கொண்டே வீட்டு அழைப்பு மணியை விடாமல் அடிக்க ஆரம்பித்தார்.

அழைப்பு மணி ஓசையில் அடுத்த சில நிமிடங்களிளே வந்து சேர்ந்த அவன் அன்னை வீட்டின் வாசலில் தன் அண்ணனுடன் நின்று கொண்டிருந்தவனை அழுத்தமான பார்த்த தாமரைச்செல்வி தன் தூக்கத்தை கெடுத்த மகனிடம் கடிந்து பேச முடியாமல் முறைத்து பார்த்து விட்டு அண்ணனை மட்டும்

"என்ன அண்ணே இந்த நேரத்துல வந்திருக்கிற....." என்று கேட்டு வைக்க, பல நாள் கழித்து வந்த மகனுக்கு தங்கையிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை எண்ணி எரிச்சலடைந்து கதிர்வேல்

"செல்வி பக்கத்துல மருமக புள்ள இருக்கிறது உன் கண்ணுக்கு தெரியலையா? வந்த பையன் வான்னு கேட்க மாட்டேங்கிற. இவ்வளவு நேரம் கழிச்சு வந்துருக்காங்க, வழியில சாப்பிட்டாங்களா என்னன்னு தெரியல. மொத நீ மருமகனே கவனி, என்ன அப்புறமா நீ வரவேற்க்களாம்." என்று கூற, அண்ணன் தன்னை அதட்டிப் பேசுவது பிடிக்காத தாமரைச்செல்வி

"நான் என்ன வேணும்னா கவனிக்காம இருக்கிற மாதிரி பேசுற, வீட்டுல வயசானவங்க குழந்தை இருக்கிறது தெரியும்தானே. நேர காலத்தோடு வீட்டுக்கு வர வேண்டாமா. அதை விட்டுவிட்டு அர்த்த ஜாமத்துல வந்து நின்னா கோபம் வருமா? வராதா?" இன்று நியாயம் பேச தங்கையை அழுத்தமாக பார்த்த கதிர்வேல்

"கவிதன் ஒன்னு தினமும் அர்த்த ஜாம நேரத்துக்கு வந்து நிக்கிறாங்களா என்ன? எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட பல மாசத்துக்கு அப்புறம் இப்பதான் வீட்டுக்கே வருது. அதனால இந்த நேரத்துல வந்தது ஒன்னும் தப்பு இல்ல." என்று கூறிவிட்டு தனது வீட்டை நோக்கி சென்றுவிட்டார். அண்ணன் சென்றதும் மகனிடம் திரும்பிய செல்வி

"என்னமோ எனக்கு உன் மேல பாசமே இல்லாத மாதிரி அண்ணன் பேசிட்டு போகுது. நீயும் பதிலுக்கு எதுவும் பேசாமல் இருக்கிற. பார்த்தியா எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம். எனக்கு என்ன பாக்க இந்த வீட்ல யாரு இருக்கா?" என்று கவலை நிறைந்த குரலில் பேச தாயில் வருத்தத்தை தாங்க முடியாத தனையனாக

"அம்மா நான் நம்ம மாமாவை எப்படி மா எதுத்து பேச முடியும். இனி நான் மாமா உன்ன பேசிற அளவுக்கு இப்படி இருக்க மாட்டோன் ம்மா." என்று இறங்கி பேச மகனின் தலையை பாசமாக(?) தடவிக் கொடுத்த செல்வி

"சரி உள்ள போய் தூங்கு காலைல பேசிக்கலாம்." என்று அத்துடன் தன் கடமை முடிந்துவிட்டது என்று உரையாடலை அத்துடன் முடித்துக் கொண்டார்.

ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் காலை உணவை கூட சரியாக எடுத்துக்கொள்ள மறந்த கவிதனுக்கு நன்றாகவே வயிறு பசித்தது. ஆனாலும் வயதான அம்மாவை தொந்தரவு செய்யக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு வந்து தனது கட்டிலில் விழுந்தான்.

பசியையும் மீறி உடலில் களைப்பு அவனை உறக்கத்திற்கு இழுத்துச் செல்ல, கண்களும் கவலைகளை மீறி கனவு உலகத்திற்கு அவனை அழைத்துச் சென்றது.

வேலை விஷசயம் வீட்டாருக்கு தெரிந்த பின் நாளைய நாள் விடியல் அவனுக்கு நன்றாக விடிய போவதில்லை என்று தெரிந்தாலும் அந்த நொடி அவனுக்கு அவனது கற்பனைக்கும் மட்டும் ஆனதாக இருந்தது.

ரகசிய கனவுகள் ஜல்.. ஜல்..
என் இமைகளை கழுவுது சொல்.. சொல்..
இளமையில் இளமையில் ஜில்.. ஜில்..
என் இருதயம் நழுவுது செல்.. செல்..

அவன் இரவுகள் மட்டும் தோன்றும் அந்த ரகசிய கனவுகளின் நாயகி இன்றும் அவன் அனுமதி இல்லாமலேயே வந்து மனதில் ஜல் ஜல் என்று ஒலி எழுப்பி விட்டு செல்ல, அதன் இனிமை அவன் முகத்திலும் பிரதிபலித்தது.

அதுவரை அவன் முகத்தில் இருந்த கவலைகள் அனைத்தும் மாயமாய் மறைந்து செல்ல, அவன் உதடுகள்

"எப்போ நீ என்கிட்ட வரப்போற ஹனி.... நான் பாவம். என்ன ரொம்ப நேரம் காக்க வைக்காமல் சீக்கிரமா வந்துரு." என்று அவனை அறியாமலேயே முணுமுணுக்க ஆரம்பித்தது.
 

Sesily Viyagappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்
நானும் தினமும் எப்பி கொடுக்க நினைக்கிறேன் பட் பாப்பா வைச்சிக்கிட்டு டைப் பண்ண முடியல. குட்டி மேடம் நைட் டியூட்டி பாத்துட்டு பகல்ல தான் தூங்குறாங்க. எனக்கும் நைட் முழிச்சிருக்கிறதால பகல்ல தூக்கம் தூக்கமா வருது. முடிஞ்ச வரை கிடைக்கிற நேரத்தில எப்பி கொடுக்கிறேன். ரெகுலற எப்பி வரலன்னு கோவப்பட கூடாது. அடுத்த எப்பி கொடுத்துட்டேன் படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க.
 

Sesily Viyagappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3

இரவில் தாமதமாக உறங்கினாலும் காலியான வயிறு கவிதனை அதிகாலையிலேயே எழுப்பி இருந்தது. மெதுவாக தன் அறையை விட்டு வெளியே வந்து சமையலறையை எட்டிப் பார்க்க அங்கே அவனது வீட்டில் வேலை செய்யும் ராதா என்ற இருபதுகளின் முடிவில் இருக்கும் பெண் மட்டும் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.

தன் பின்னே ஆரவாரத்தை உணர்ந்து திரும்பி பார்த்த ராதா சமையலறை வாயிலில் நின்று கொண்டிருந்த கவிதனை பார்த்ததும் சம்பிரதாய நல விசாரிப்புகளுக்கு பின்,

"காபி சாப்பிட்டீங்களா தம்பி..." என்று கேட்டு வைக்க, அவனும் தனக்கு இருந்த பசியில் தலையை ஆட்டி விட்டு வந்து வரவேற்பு அறையில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

அவன் முகத்திலிருந்து ராதா என்ன உணர்ந்தாரோ காபியுடன் ராவை உப்புமாவும் செய்து கொண்டு வந்து அவன் முன் வைத்துவிட்டு சென்றார். சமயலறையில் இருந்து ராதா திரும்பி பார்த்த போது கவிதன் தட்டில் இருந்த அனைத்தையும் காலி செய்துவிட்டு காபியை அருந்தி கொண்டிருந்தான்.

கவிதனை அதிகம் பார்த்ததில்லை என்றாலும் வீட்டினர் பேசுவதை வைத்தே அவனை தெரிந்து வைத்திருந்த ராதைக்கு அவன் மீது காரணம் அறியாது சகோதர பாசம் மேலெழும்பியது.

தனக்கு அணிவகுத்து நிற்கும் பணிகளை ராதாவின் கைகள் செய்து கொண்டிருக்க, மனமோ கவிதனை தன் சகோதரர்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.

"உப்புமாவுக்கு தேங்ஸ் அக்கா.." என்று கூறி விட்டு தட்டையும் காபி டம்ளரையும் கழுவி வைத்துவிட்டு செல்லும் கவிதனை அதிசய பிறவி போல பார்த்து வைத்தார்.

அவர் இங்கு வேலைக்கு சேர்ந்த இந்த மூன்று வருடங்களில் தனது பணிக்கு கிடைத்த முதல் பாராட்டல்லவா. அதுவும் தாமரை செல்வி பெற்ற புதல்வனிடமிருந்து. இந்த வீட்டை பொருத்த வரை ராதை ஒரு வேலைக்காரி மட்டுமே.

கொடுக்கும் சம்பளத்திற்கு அதிகாலை முதல் இரவு உறக்கத்திற்கு முன்பு வர அவர்கள் ஏவும் வேலையை செய்து முடிப்பதே அவள் கடமை.

என்ன சமையல்...
முடிச்சிட்டேன்...
அடுத்து வேலை இருக்கா...
சரி... இது போன்ற வார்த்தைகளுக்கு மட்டுமே ராதா வாயிலிருந்து வர அனுமதி உண்டு.

அதற்கு மேல் பேசும் சுதந்திரம் அவருக்கு கிடையாது. தன் நிலை அறிந்து தனக்கு அதுவும் நல்லது தான் என்ற எண்ணதில் ராதையும் அதை பெரிது படுத்தவில்லை.

எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி வேலை செய்பவளுக்கு கவிதனின் சிறு பாராட்டு கூட மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் அது சில நிமிடங்கள் மட்டுமே, தன் நிலை உணர்ந்து பறக்க துடித்த மனதை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

ராதா காலை உணவை மேசையின் மீது வைத்து விட்டு சமையல் அறைக்குள் முடங்கிய சற்று நேரத்திலேயே வீட்டிலுள்ள ஒவ்வொருவராக வந்து சேர அரம்பித்தன.

வந்தவர்கள் யாரும் கவிதனின் வருகையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சம்ப்ரதாயமாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவரவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துக்கொண்டு இருந்தனர். உணவு நேரத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அப்பொழுது வீட்டிற்குள் அதிரடியாக வந்த கவிதனின் இளைய தம்பி கார்த்திக்

"அம்மா உனக்கு விஷயம் தெரியுமா உன்னுடைய பெரிய பையனுக்கு வேலை போயிட்டு?" என்று கவிதன் நேற்றிலிருந்து தன் தாயிடம் கூற தயங்கிய விஷயத்தை அவனது தம்பி கார்த்திக் வீட்டில் அனைவரின் முன்பும் போட்டு உடைத்தான்.

கவிதனின் குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்று அதிகமானது. தாமரைச்செல்வி குருபாதம் தம்பதியருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் மூத்தவன் விதுர கவிதன். அவனை அடுத்து 2 சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் இருந்தனர்.

பிள்ளைச் செல்வங்களை அதிகமாக சேர்த்த தெரிந்த தம்பதியருக்கு அவர்களின் வாழ்க்கை பொருளாதாரத்தை உயர்த்த தேவையான பொருட்செல்வத்தை சேர்க்க தெரியவில்லை. அதனால் அவர்களின் குடும்பம் மத்திய தரத்திற்கும் கீழே கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்த நேரம் விதுர கவிதனின் திறமை குடும்பத்தை அவர் எடுத்துச் செல்ல உதவியது.

அவன் தன் திறமை மூலமாகவே உயர்ந்த கல்வி, நல்ல வேலை என முன்னேற அவனை பற்றிக்கொண்டு அவனது குடும்பமும் முன்னேறியது. அவன் வேலைக்கு செல்ல ஆரம்பித்து இரு வருடங்களிலேயே தகுதிக்கு மீறி கடன் வாங்கி சகோதரிகள் இருவரின் திருமணத்தை பெற்றவர்கள் சிறப்பாக முடித்து இருந்தன.

அந்த கடனை அடைப்பதற்காக ஆன்சைட் பணிகளையும் ஏற்று அதையும் திறம்பட நடத்தி வேலையில் நல்ல பெயரையும் சம்பாதிக்க ஆரம்பித்தான்.

கவிதன் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பும் நாள் அன்று அவளது மூத்த தம்பி கேசவன் தன்னுடன் படித்த பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான். முதலில் அதை ஏற்க முடியாத குடும்பத்தார் பின்பு மகன் பாசம் வெற்றி கொள்ள பவித்ராவையும் தங்கள் குடும்பத்தில் சேர்த்து கொண்டனர்.

திருமணம் முடித்த சகோதரிகள் இருவருக்கும் வருடம் தவறாமல் சீர் செய்வது, வீட்டு லோன், வீட்டில் செலவு, இளைய தம்பியின் படிப்பு செலவு என்று அனைத்தையும் அவன் ஒருவனே தாங்கிக் கொண்டிருக்க இதில் எந்த வேலை கிடைத்தாலும் செய்யாமல் சோம்பேறியாக சுற்றித்திரிந்த தம்பியின் மனைவியின் செலவும் அவனுடையதில் சேர்ந்து கொண்டது.

இப்படி அவளின் வருமானத்தை நம்பி மட்டுமே அவன் குடும்ப உறுப்பினர்கள் இருக்க அவனுக்கு வேலை போனது அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தையே தந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித உணர்வில் இருந்தனர். அதில் பெரும்பாலும் இனி தங்களின் தேவையை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது என்ற பய உணர்விலேயே இருந்தனர்.

இதில் யாரும் அவன் எவ்வளவு கஷ்டத்துடன் வீடு திரும்பி இருக்கிறான் என்று நினைத்து பார்க்கவில்லை. அனைவரும் தங்களைப் பற்றியே சுயமாக சுயநலமாக சிந்தித்து கொண்டிருக்க ஐந்து வருடங்களாக அந்த வீட்டிற்கு உழைத்து சேர்த்த உள்ளத்தை பற்றி சிந்திக்க கூட அவர்களுக்குத் தோன்றவில்லை.

"ஐயோ சீர் இல்லாம இனி என் மாமனார் மாமியார் நான் எப்படி சமாளிப்பேன்...." என்று மூத்த அக்கா மலர்விழி தன் கவலையை ஆரம்பிக்க, அவளை தொடர்ந்து அடுத்த தங்கை கயல்விழி

"நான் வேற அண்ணன் நம்பி தான என் மக பெயருல புதுசா சீட்டு ஆரம்பிச்சேன். இனி என்ன செய்வேன்." என்று கூற, கேசவன் மனதுக்குள்ளேயே

"இன்னும் கொஞ்ச நாள் போன நான் யாருக்கும் தெரியாம வாங்குன வீட்டு கடனையும் அடைச்சு முடிச்சிருப்பேன். அதுக்குள்ளேய இவனுக்கு வேலை போகணும். இனி எங்கிட்ட வீட்டு செலவுக்கு பணம் கேட்டா என்ன பண்ண?" என்று நினைத்துக்கொள்ள, கவிதையைப் பெற்ற அவர் தாயோ அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த பின்

"என்னடா கவிதா கார்த்திக் சொல்றது உண்மையா? உன்னைத்தானே நாங்க மலைபோல நம்பி இருந்தோம். இப்படி எங்க நம்பிக்கையில மண்ண அள்ளி போட்டுட்டியே." என்று சத்தமாக கத்தி அழ ஆரம்பித்தார்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல அவரது தாய் மாமாவின் மனைவி சுந்தரவள்ளி

"நல்ல வேலை அவசரப்பட்டு என் பொண்ணு தேன்மொழிய இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கல. கொடுத்திருந்தா என் பொண்ணு நடுத்தெருவில் தான் நிக்கனும்." என்று தன் மகள் ஏதோ பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தது போல பேசி வைக்க, கவிதனுக்கு இப்பொழுது சுவரில் முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அதே நேரம் தாயின் பேச்சில் அதிர்ந்து நின்ற தேன்மொழியின் முகத்தை பார்க்கும் பொழுது கவிதன் அவள் மீது இரக்கமே மேலோங்கியது.

கதிர்வேல் எவ்வளவோ தடுத்தும் சுந்தரவள்ளி தன் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே செல்ல மற்றவர்களும் அவரது பேச்சை தடுக்க முயற்சி செய்யவில்லை. இறுதியில்

"என் பொண்ணு என் தங்கச்சி வீட்டுக்குத்தான் மருமகளா வரணும்னு என்னோட ஆசை அதனால் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்." என்று கதிர்வேல் உறுதியாக கூற, சுந்தரவள்ளி நொடியும் யோசிக்காமல்

"அப்படின்னா உங்க தங்கச்சி சின்ன பையன் கார்த்திக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்." என்று அவருக்கு நல்லது என்று தோன்றிய வழியை கூறினார்.

முன்பு இருந்தே சுந்தரவள்ளிக்கு தனது மகளை கவிதனுக்கு திருமணம் செய்து கொடுப்பதில் விருப்பம் பெரிதாக இருந்தது இல்லை. என்ன தான் கவிதை நல்லவனாகவும் நல்ல வேலையில் இருந்தாலும் அவனது வருமானங்கள் எதுவும் அவனது கையில் இல்லை என்பதும், அவன் வீட்டார் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருப்பதுவும் அவரது அதிர்ப்திக்கு பெரிய காரணமாக இருந்தது.

இந்த இரண்டு விஷயங்களும் கார்த்திக்கிடம் கிடையாது எனவே அவரை பொருத்தவரையில் நல்லவன் கவிதனை விட வல்லவன் கார்த்திக் சிறந்த தேர்வு.

பேச்சு வேறு பாதையில் பயணிக்க கவிதனுக்கும் தான் நினைத்த எதையும் சட்டென்று அனைவரின் முன்பும் பேசி விட முடியவில்லை.

கார்த்திக் சிறுவயதிலிருந்து கவிதனிடம் போட்டி போடும் மனப்பான்மையை எதனாலோ தன்னுள் வளர்த்துக்கொண்டான். இந்த போட்டி குணம் சில நேரம் அவனுக்கு வெற்றியாகவும், பல நேரம் அவனுக்கு தோல்வியாகும் அமைந்தது.

அண்ணன் வழியை பின்பற்றி அவன் படித்து சில மாதங்களுக்கு முன்பு நல்ல வேலையில் அமர்ந்துவிட்டான். ஆனால் உறவு பெண்களில் அழகியான தனது மாமன் மகள் அண்ணணுக்கு மனைவியாகும் விஷயத்தில் அவனுக்கு பெரிதும் மனத்தாங்கல் இருந்தது. அதில் தோல்வியடைய அவன் விரும்பவில்லை.

தேன்மொழி மீது தனக்கு இருந்த ஈர்ப்பை யாரிடமும் கூற முடியாமல், அதே சமயம் எப்படியாவது இந்த திருமணத்தை பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வளரவிடாமல் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அவன் எதிர்பாராத விதமாக சுந்தரவள்ளியே அதை ஆரம்பித்து வைத்தார்.

தன் வேலை போன விஷயம் தெரிந்தால் வீட்டினர் கவலை கொள்வார்கள் அதனை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று பலவித சிந்தனையோடு நேற்றிலிருந்து போராடிக்கொண்டிருந்த கவிதனுக்கு இளைய தம்பியின் மூலம் உருவான இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.

தனது திறமைக்கு எப்படியும் இன்னும் சிறிது நாட்களிலேயே தற்போது பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட சிறப்பான ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு, குறிப்பாக அன்னைக்கும் அத்தைக்கும் புரிய வைக்கத்தான் முடியவில்லை.

மீண்டும் மீண்டும் அனைவரும் கவிதன் வேண்டும் என்று வேலையை விட்டு வந்ததாகவும், தங்களின் மீது அவனுக்கு அக்கறை இல்லை என்பது போலவும் பேச, அவனுக்கு தன்னை நினைத்தே கழிவிரக்கம் தோன்ற ஆரம்பித்தது.

நிலைமை மோசமாகும் நேரம் வீட்டில் அழைப்பு மணி ஒலிக்க அனைவரின் கவனமும் தற்காலிகமாக வாசலை நோக்கி திரும்பியது.

"ஹலோ மிஸ்டர் விதுர கவிதன் நான் ஆனந்த். இத எங்க பாஸ் உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க." என்று பார்மலாக உடையணிந்த ஒருவர் கவிதன் முன்பு ஒரு பழுப்பு நிற உறையை நீட்ட, கவிதன் அவர் யார் என்று அறியாமல் தயக்கத்துடனே பெற்றுக் கொண்டான்.

தனது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வான உறையில் இருந்த கடிதத்தை படித்ததுமே அவன் முகம் பல வண்ணஜாலம் காட்ட ,அதை வீட்டார் அனைவரும் ஆராய்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தன.

"இது என்க பாஸ் காட். உங்க பதில நீங்களே சொல்லிட்டா ஓகே." என்று கூறிவிட்டு சென்றுவிட, அடுத்த நொடி அவன் கையில் இருந்த கடிதத்தை பறித்து படித்த அவன் மூத்த சகோதரி

"ஐய்ய்ய் ஆம்மா அண்ணணுக்கு பெரிய கம்பெனியில வேலை கிடைத்திருக்கு ம்மா. அது மட்டுமில்லாமல் முன்ன வேலை பார்த்த இடத்தை விட இரண்டு மடங்கு சம்பளம்." என்று தான் கடிதத்தில் வாசித்ததில் புரிந்த விஷயத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்த, அடுத்த நொடி மந்திரக்கோலை சுழற்றியது போல அனைவரும் அனைவரும் முக பாவனையும் பேச்சும் மாறியது.

அதுவரை அவனை திட்டிக் கொண்டு இருந்தவர்கள் மீண்டும் தங்கள் பழைய முகமூடியை அணிந்து கொண்டு பேச ஆரம்பிக்க அது எதுவும் கவிதையில் கருத்தில் படவில்லை.

அவன் எண்ணம் முழுவதும் தனக்கு புதிதாகக் கிடைத்திருக்கும் வேலையிலேயே இருந்தது. தன்னுடைய திறமைக்கு இந்த வேலை சரியானதாக இருந்தாலும் அதை தன்னிடம் ஒப்படைக்க நினைத்த தேனிலாவை பற்றி ஆராய்ச்சியாக நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஆம் கபிலனுக்கு புதிதாக வேலை கிடைத்திருப்பது தேனிலவின் ஒரு நிறுவனத்தின் தான். அதுவும் அந்த நிறுவனம் முழுவதும் அவனது கட்டுப்பாட்டில் இயங்கும் அளவிற்கான அதிகாரமுள்ள பதவியுடன் கூடிய வேலை.


சில மணி துளிகளுக்கு பிறகு சுற்றம் உரைக்க சுற்றத்தாரின் நடவடிக்கையும் உரைக்க ஒன்றும் கூறாமல் தனது அறைக்கு வந்து, மீண்டும் சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.

கவிதன் சென்றது எதோ சொல்ல வந்த சுந்தரவள்ளியை தனது கோப பார்வையால் தடுத்து நிறுத்திய கதிர்வேல்,

"எல்லாரும் அதிகமா பேசியாச்சு, இப்போதைக்கு யாரும் எதுவும் பேச வேண்டாம்." என்று அனைவருக்கும் பொதுவாக கூறி விட்டு தனது மகள் மனைவியுடன் வீடு திரும்பினார்.

கணினியில் வேகமாக தட்டச்சு செய்து கொண்டிருந்த தங்கையை சில நொடிகள் கவனித்த அக்னி மித்ரன்

"ஐ காண்ட் பிலிவ் திஸ் எதுக்காக நீ அந்த கவிதனுக்கு இவ்வளவு பெரிய பதவியில் கொடுத்திருக்கிற. வீ ஆர் ஆல்ரெடி ஹேவ் well-trained அண்ட் எக்ஸ்பீரியன்ஸ்டு ஸ்டாப்ஸ். தென் வெய் கவிதன்?" என்று தனது சந்தேகத்தை கேட்க, தனது சகோதரனை நிமிர்ந்து பார்த்த தேன்னிலா

"ஐ ஆல்ரெடி ஆன்சர்டு பார் திஸ் கொஸ்டின்." என்று சலனமில்லாமல் கூற, தனது கேள்விக்கான பதில் எப்பொழுது தங்கையிடமிருந்து கிடைத்தது என்று புரியாமல் சில நொடி குழம்பிய அக்னி மித்ரன் அன்று கவிதன் படிப்பிற்கு தங்கை உதவும் போது கூறிய பதில் நினைவு வந்தது.

"வாட் எவர் தேனு. எனக்கு நீ உன்னுடைய ஸ்டேட்டஸ் விட்டு இறங்கி வருவது சுத்தமா புடிக்கல." என்று கவிதனுக்கு தனது தங்கை உதவுவதில் தனக்கு விருப்பமில்லை என்பதை நேரடியாக உணர்த்த, பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட தேன்னிலா

"நான் என்னுடைய ஸ்டேட்டஸ விட்டு இறங்கி வரப்போவது இல்லை. பட் கவிதன என்னுடைய ஸ்டேட்டஸ் இக்வல்லா கொண்டு வரப் போறேன்." என்று கூற

"பார் வாட்?" எதற்காக தங்கையின் இந்த முடிவு என்று தெரிந்து கொள்ள மித்ரன் கேட்க

"ஐ வாண்ட் டு மேரி ஹிம்." என்று அசராமல் வந்த தேனிலாவில் பதிலில், பல நிறுவனங்களை திறம்பட கட்டிக்காக்கும் மித்ரன் அதிர்ந்து போனான்.


முதல் பிழை போல் மனதினிலே....
விழுந்தது உன துருவம்... ஓ....
உதடுகளால் உனை படிப்பேன்....
எரிந்திடு அரை நிமிடம்...
தொலைவதுபோல் தொலைவதுதான்..
உலகில் உலகில் புனிதம்
 
Top