All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜே வின் துரையின் வரு கதை திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துரையின் வரு வருவான் 1

துரை.. டேய் துரை...விடிய காலையில் எழுந்து கிளம்பி வெளியே செல்லும் மகனை பார்த்து முறைத்தவாறே


என்னமா...என்னாத்துக்கு இப்போ என் பேர ஏலம் போடுற..


"இல்ல ..என்னடா...இன்னிக்கும் என்ன ...ஒரு வாரமா இப்படித்தான் சுத்திட்டு இருக்க...பொழுது புலரும்முன்னே கிளம்பி போறதும்...நடு சாமத்துல வீடு வாரதும்...
என்னடா இதெல்லாம்,..?"


"ஏன்.. உனக்கு நான் இப்போ விளக்கனுமாகும்...ஏன்னு உனக்கு தெரியாது..? சரி அந்த பேச்சு இப்போ எதுக்கு என்னை ஏலம் போட்ட அதை சொல்லு முதல.. "


"துரை...நம்ம மீனா ஊட்டுக்கு ஒரு எட்டு போகணும்...உன் அய்யன் எங்கியோ ஒரு வசூல் பாக்க போறாராம்..ரொம்ப முக்கியமாம்...சொன்னாரு உன்ன கூட்டிட்டு போக சொல்லி...."


"அதுக்கு எம்மா இம்புட்டு மென்னு முழுங்குற...நம்ம மீனா குட்டி வீட்டுக்குனு தான...? என்ன.. எனக்கு ஒரு வேலை இருக்கு...ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்...முடுச்சுட்டு வாரேன்...நீ தயாரா இரு..என்ன...எதுனா வாங்கணுமா என்ன...நீ பலகாரம் எல்லாம் பல வகையில சுட்டு சுட்டு பதினாறு வகை வச்சுருப்பியே உன் மக வீட்டுக்குன்னு...மனுஷன் கண்ணுல ஒண்ண காட்டுனாயா..?"


"டேய்.. ஏண்டா சொல்ல மாட்டே...நீ நடுசாமத்துல வார...பொழுது விடுஞ்சதும் கிளம்பியாச்சு...இதுலா.உனக்கு நாங்க பலகாரத்தை வேற கண்ணுல காமிக்கலயா..? நீ மொத கண்ணுல படு...அப்புறம் பலகாரம் பச்சடிய உன் கண்ணுல நா காட்டுறேன்...வீட்டுல ஆக்கி உனக்குன்னு வச்ச கறி மீனு சோறு எல்லாம் போயி அந்த நாய்க்கு தான் கொட்டுறேன்...அதுவும் நல்ல வகை வகையா வக்கணையா உண்டுபுட்டு வாசலிலே விழுந்து கிடக்கு...உண்ட சோத்து மயக்கம் ஒரு ஆள் அம்பு வந்தா கூட அது ஏன்னு கேக்கறதில.. நிமிந்து பார்த்துட்டு கிடந்து உறங்குது..


உன் அப்பத்தா வேற என்னோவோ என்ற பையன் வாங்கி போட்ட மூணு வடம்...என் பையன் வாங்கி கொடுத்த அட்டிகை..என் பையன் வாங்கிக்கொடுத்த கண்கணம்னு நடமாடும் நகைக்கடை கணக்கா சுத்துது.என்னோவோ போடா...உண்டுபுட்டு அந்த நாய் தூங்காம இருக்க வாச்சும் வீடு வந்து ஒரு வாய் சோறு சாப்டுட்டு போலாம்ல.என்னவோ..பெருசா வீராப்பு..அப்பனுக்கும் மவனுக்கும் இதுல ஒன்னும் கொறச்ச இல்ல..."நொடித்தபடி


"அந்த லட்சுமியை பொண்ணு பார்த்து வந்ததுல இருந்து நீ நீயா இல்லடா..வீடு தங்கறது இல்ல...உன் அய்யன் வேற கோபமா இருக்காக...மீனா வேறு எப்போ எப்போ லட்சுமி நம்ம வீட்டுக்கு வருவான்னு இருக்கா...உங்க அய்யன் சொன்னதுல இருந்து தலை கால் புரியாம இருக்கா...நேத்தைக்கு போன பண்ணி என்கிட்டே எப்போ வரட்டும்னு கேட்டுகிட்டே இருக்கா...மாப்பிள்ளைதான் இந்த நேரத்தில உடமாட்டேன்னுஒரே பிடிவாதம்...மீனா கிட்ட கூட நீ பேசல டா.."


"இப்போ அதுக்கு என்னங்கற?"


"இல்லடா..உன் அய்யன் சொன்னா சரியாதான் இருக்கும்...நீ இப்படி மூஞ்சிய தூக்கி வச்சு வெசன பட்டின உள்ள கருக்குன்னு இருக்கில்ல..."அவனை பேசவேவிடாமல் மயிலம்மா பேசிக்கொண்டே இருக்க...


"அம்மா உனக்கு கருக்குன்னுதான் இருக்கும்...பெட்டில கெடந்து உறங்குற உன் நகை எல்லாம் நாய் காவல் இல்லாம திருடன் வந்து களவாண்டுட்டு போவானோனு உனக்கு உன்கவலை...வெசன படுற மூஞ்ச பாரு...அதுக்கு போட்ட பாரு ஒரு பிட்ட ..அங்கதான் உன் புருசனுக்கு பொண்டாட்டின்னு நீ நிக்குற.. இதோ பாரு மயிலு..இந்த கருமாந்திர பேச்சை கேக்க வேண்டாமேன்னு தான் நான் நடு சாமம் வாரேன்...அதான் நான் சொல்லிட்டேனே...அந்த வறட்டு லட்சுமியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு..இப்போ எதுக்கு இந்த வெட்டி நாயம் எல்லாம்...போ போயி உண்றமவளுக்கு கட்ட வேண்டியதெல்லாம் கட்டி வை...பார்த்து..வீட்டுக்கு திரும்பி வரும் போது..சாப்பிட சோறு வேணும்..அதையும் உன் மவளுக்கு பார்சல் பண்ணிடாத...நான் பிறகு வாரேன்..." சலித்துக்கொண்டே சென்றவனை பார்த்த மயிலம்மா ..


"டேய் துரை எல்லாம் என்ற புருஷன் சம்பாதிச்ச சொத்து..குந்தி தின்னாலும் பத்து தலை முறைக்கு தாங்கும்..இதுல என் மவளுக்கு கட்டுறதுல உனக்கு கொறஞ்சு போச்சோ.." என்று சத்தமாக அவனுக்கு கேட்குமாறு சொன்னவர்

"இது எங்க போயி முடியுமோ...அப்பன் ஒரு பக்கம் புடிவாதம்..மகன் அதுக்கு மேல .. சும்மாவா சொன்னாக..விதை ஒன்னு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்னு... எல்லாம் என் நேரம்..இதுக கிட்ட மாட்டிட்டு முழிக்க வேண்டி இருக்கு..வாயும் வயிறுமா புள்ள ஒரு சேதி சொல்றப்போ..அதை நினைச்சு சந்தோசப்படவா...இல்லை இவனை நினைச்சு வெசன படவா..


புள்ள நல்ல கருத்தா இருக்கு...பார்வைக்கு கலையாவும் இருக்கு..பிடிச்சுருக்கு.. சொத்தும் கூட வருது..ஏன்தான் இந்த பையனுக்கு பிடித்தம் இல்லையோ... ?இப்போ சரினு போயிருக்கான்... பிறகு என்ன சொல்லுவானோ...? புலம்பிக்கொண்டே அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்க..


அதை கண்ணெடுத்த குஞ்சம்மா .." ஏண்டி இப்படி தனியா கெடந்து புலம்பிகிட்டு கிடக்கே...? எல்லாம் சரியாய் போகும்...கல்யாணம் பண்ணி கிணத்துல தள்ளிவிட்டு நீஞ்சி வாங்கடானு வுட்டா அதுகளா நீஞ்சி கரை ஏறும்கா..நீந்தான் கிடந்து சும்மா பொலம்பற...போயி என் பேத்திக்கு புடுச்ச பலகாரம் எல்லாம் சரியாய் எடுத்து பதனமா வச்சியானு பாரு... என்ற பேரன் போன முறை வந்தப்போ செஞ்ச சுழியம் நல்ல சாப்டாக...அது கொஞ்சம் நிறைக்க எடுத்து வைய்யி...மடில கட்டிட்டே தின்னு தீக்கலாம்னு எடுத்து ஒழிய வச்சுடாத..போ போ..வேலைய பாரு " என...


"இந்த குஞ்சம்மாக்கு இருக்க கொழுப்பை பாரேன்..நான் என்ற மவளுக்கு கொண்டு போறதுல எடுத்து ஒழிய வெப்பேனா..இது குசும்புக்கு.. ஒரு அளவு செலவில்லாம போச்சு .. மடில ஒளிச்சு கட்டிட்டே வயல் வேலைக்கு போன ஆளு...இப்போ வந்துடுச்சு இதுக்கு புதுசா வாழ்வு... " என சொல்லியவர் அவரின் ரைமிங்கை நினைத்து அவரே அவரை பாராட்டிக்கொண்டே எல்லாமெடுத்து வைக்க சென்றார்.
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு டீயை குடிங்கப்பா ...எப்போ குடிச்சா என்ன..சுட சுட டி நல்லாத்தான் இருக்கும்


லட்சுமி கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா, கூடத்தில் உக்கார்ந்தபடியே வெளியே சென்று வந்த மச்சக்காளை லட்சுமியை கூப்பிட,


இதோ வரேன் மாமா, என்றபடி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் வரலட்சுமி.


உன் அத்தை எல்லாம் வர நேரம் ஆகுமா மா...ஆமா மாமா, மீனாவுக்கு இன்னிக்கு ஸ்கேன் பார்க்க போறாங்களாம், அத்தை போன் பண்ணுனாங்க, அம்மத்தா பக்கத்து தெருவுல யாரையோ பார்க்க போயிருக்கு...என


நல்ல இருக்கியாமா?


ஏன் இவர் இதை கேட்கிறார் என்று கேள்வியாக இவள் பார்க்க, "இல்ல துரை உன்கூட நல்லா பேசி நான் பார்க்கல, அதுதான்.." என இழுக்க..


"ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா, அவர் நல்லாத்தான் இருக்கார் என்றபடியே செம்பை வாங்கி கொண்டு உள்ளே சென்றவள் அவருக்கு ஒரு கிண்ணத்தில் அவித்து தாளித்த பாசிப்பயறும், ஒரு டம்ளரில் காபி என கொண்டு வர, வெளியே சுற்றி களைத்து பசியில் வந்தவருக்கு,

"இத்தனை இதமான புள்ள இது, இந்த துரை நல்லா வைக்கணும் இவளை" என நினைத்தவாறு அவள் கொண்டு வைத்ததை உண்ண, நான் போயி சமையலை பார்க்கிறேன் மாமா என்றபடி சமையலறையில் புகுந்துகொண்டாள் அவள். அங்கே கொதித்துக்கொண்டிருந்த குருமா போலவே இவள் மனமும் நினைவுகளின் கணத்தில் கொதித்துக்கொண்டிருந்தது.


ஒரு மாதம் கழிந்திருந்தது இவர்கள் கல்யாணம் முடிந்து...ஆனால் துரைக்கும் இவளுக்கும் பெரிதாக எந்த பேச்சு வார்த்தையும் இல்லை...தேவைக்கு பேச்சு...கல்யாணம் முடிந்த அன்று இரவே சொல்லிவிட்டான்...


உன் வீட்ல உன் அப்பா வாங்கி கட்ட முடியாத காசுக்கு விலையா இங்க எங்க வீட்ல உன்னை தள்ளி விட்டு இருக்காங்க, அதுனால ரொம்ப பேசாத...அடங்கி ஒடுங்கி ஒரு மூலையில கிட...


இல்ல உன் வீட்ல வாங்கின காசை எடுத்து வச்சுட்டு நீ வெளிய போ... உனக்கும் எனக்கும் வேற எதுவும் இல்ல...புரிஞ்சுதா...என அழுத்தமாக கேட்க அந்த அழுத்தமும் நிதானமும் இவளுக்கு பயத்தை விதைத்தது. கண்ணில் நீர் வழிய அவனை பார்த்து மெல்ல தலை அசைத்தாள் லட்சுமி.
 
Status
Not open for further replies.
Top