All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜே ஜேவின் 'மை டியர் மஹா...என் காதலி' - சிறுகதை

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை செல்லம்ஸ்

இதோ உங்கள் ஜேஜே உங்களுக்காக ஒரு சிறு கதையுடன்.

படித்துவிட்டு மறக்காமல் கருது சொல்லணும் நண்பர்களே.
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகுவிற்கு ஆஃபிஸில் வேலையே ஓட வில்லை. என்ன முயன்றும் மனம் வேலையில் செல்லவில்லை. அவள் வீட்டிற்கு வந்து மூன்றே மாதங்கள் தான் ஆகியிருக்கிறது.அவள் அவனது செல்ல புஜ்ஜிமா..செல்ல குட்டி... கன்னுகுட்டி... அவனது மஹாகுட்டி வீட்டிற்கு வந்து.

அவனது தனிமை தவத்தை கலைக்க வந்த தேவதை அவள்.அவ்வளவு அழகு அவள்....அவளை பார்த்துக்கொண்டே..அவளது லீலைகளை ரசித்துக்கொண்டே அவனுக்கு எப்போதும் திகட்டாது...அவளை கட்டி அணைத்து கொஞ்சாது அவனது நாள் போகாது.எப்போதும் தூங்கும் போது அவளை கட்டிக்கொண்டே தான் தூங்குவான். அம்மாதான் முதல்முதலில் அவளை அறிமுகப்படுத்தியது.


டேய் ரகு...இவளை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டா ...நம்ம வீட்டுக்கு இவதான்னு நான் முடிவு பண்ணிட்டேன்...நீ என்னடா சொல்ற...சாதுவான பொண்ணுடா. நா பார்த்துருக்கேன்...வீட்டை விட்டு வெளிய போகவே மாட்டாளாம் டா.


பேருகூட மஹாலக்ஷ்மியாமா... நம்ம மகா மஹா னு செல்லமா கூப்டுக்கலாம் டா ...


இல்லமா..அப்பா என்ன சொல்லுவாரோ...அதான் எனக்கு பயமா இருக்கு...


நீ என்னடா இதுக்கெல்லாம் பயமாகிட்டு...உனக்கு இவளை பிடிச்சிருக்கா...அத சொல்லு முதல...


டேய் புள்ளய பாருடா.கொள்ளை அழகுடா...நீங்க ரெண்டும் தடிமாடு மாதிரி எனக்கு பொறந்து ஒரு புள்ளய வளக்க என்னால முடியல...


அதை இவளை வீட்டுக்கு கொண்டு வந்து தீத்துக்கறேன் டா ...நீ ம்ம்ம் னு ஒரு வார்த்தை சொல்லு...


உன் அப்பாவை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்...ப்ளீஸ் டா ப்ளீஸ் நீங்களும் எல்லாரும் ஆபீஸ் போயிருவீங்க...இவளை வீட்டுக்கு கொண்டு வந்தா...எனக்கும் போர் அடிக்காது...

எம்மா...எம்மா...ஏமா..உனக்கு போர் அடிக்கறதுக்கு....உன் டைம் பாஸுக்கு என் பேர சொல்லி இவளை வீட்டுக்கு வர வைக்கணுமா..?.


ஆமாடா..என் செல்லம் இல்ல ...நீ இவளை ரொம்ப லவ் பன்றேன்னு சொல்லு...உங்க அப்பா லவ் னு ஒரு வார்த்தைக்கு தான் சாயுவாறு டா...


ஆனா நான் இவளை லவ் பண்ணலியே...


டேய் டேய் ப்ளீஸ் ரகு...அம்மாவை உனக்கு பிடிக்கும் தான..எனக்காக ஓத்துக்கோடா...நிஜமா போக போக இவளை உனக்கும் பிடிக்கும் டா...உன்னோட டேஸ்ட் எனக்கு தெரியும் தான..எதோ ஒண்ணா உன் தலையில கட்டுவேனாடா அம்மா ..நீசொல்லு


..ஒரு மனதாக அம்மாவிற்காக தலை ஆட்டியவன்..நினைவில் வந்தவனாக...

எம்மா எம்மா...இப்ப ஒரு பிரச்சனை..எனக்கு ஆபீஸ்ல இப்போ முக்கியமான ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்குமா.இப்போ போய் இவளை கூட்டிட்டு வந்தா..நா ரொம்ப பிஸி மா..அப்புறம்..நீ புதுசா வந்தவ...இங்க அங்க கூட்டிட்டு போய் டைம் ஸ்பென்ட் பண்ணுனு நீ சொல்ல கூடாது...அவளும் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ண கூடாது...சரியா...


நீ ரொம்ப பன்னறேடா மகனே...நா உன் தம்பி இப்போ வர முடியாது..அவன் பொண்டாட்டி குழந்தை உண்டாயிருக்கும் போது நாங்க போகலானா நல்ல இருக்காது..அவனுக்காக நாங்க அமெரிக்கா போகணும்...அந்த நேரம் நீ தனியா இருப்ப..அவன் வேற உனக்கு முன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டான்.இவளை கொண்டு வந்துட்டா...நீயும் தனியா இல்லாம இருப்பதா ... உனக்கு தொல்லையா இருக்கும் னு நீ நெனச்சா..சரி அவளை வேண்டாம் னு நீ சொல்லிட்டேன்னு அவ வீட்ல சொல்லிடுறேன் டா..


ஐயோ ஐயோ அப்படிகிப்படி சொல்லிடாதம்மா... எனக்கு இவளை தான் ரொம்ப பிடிச்சிருக்கு...எதனை பேர பார்த்திருப்போம்...ப்ரோகருக்கு எத்தனை அழுதிருப்போம் ...இவளை உனக்கும் பிடிச்சிருக்கு...நீ ஊருக்கு போறதுக்குள்ள..நீ நம்ம வீடு பழக்கம் எல்லாம் சொல்லி குடுத்துடு... எனக்கு கொஞ்சம் கஷ்டம் இல்லாம இருக்கும்...என்ன... தம்பி இல்லாம நான்...என இழுக்க..


என்னடா... சொன்னா அவன் புரிஞ்சுக்குவான் டா.உனக்கு முன்ன அவன் கல்யாணம் பண்ணினான்...நம்ம அவனை புரிஞ்சுக்கல..


சரிம்மா...அப்பாகிட்ட சொல்லி ஒரு நல்ல நாள் பார்த்து எல்லாம் இங்கே பண்ணிடு.சிம்பிள் ஆஹ் இருந்தா போதும்...இப்போ எதுவும் ஆடம்பரம் எல்லாம் வேண்டாம். நமக்குள்ளேயே எல்லாம் முடிச்சுடுவோம் என...

நீசொல்றது சரிதாண்டா.சிம்பிளா முடிப்போம்...

என பேசி அவர்கள் வீட்டிலிங்கே வந்து... நாங்கள் அங்கே போய்...என எல்லாம் முடிந்து..அவர்களுக்கும் பிடித்துப்போய் ...செல்லமாக வளந்தவ...நீங்க கண்ணு கலங்காம இவளை பார்த்துக்கணும் என இவள் வீட்டில் பேச...


இதோ இவள் இங்கே வந்து மூன்று மாதம் ஆயிற்று...


அம்மா எல்லாம் பழக்கிக்கொடுத்தார்கள் தான் அவளுக்கு.


அவளும் வீட்டில் எல்லாம் பழகிக்கொண்டாள்.


அம்மா அப்பா இருவரும் அமெரிக்கா போனபிறகு எங்கள் ஆட்டம் இன்னும் அதிகம் தான்.


எதிர்த்த வீடு பாட்டிகூட...என்ன ரகு அப்பா இல்லனதும் நீயும் மஹாவும் அப்படி கொஞ்சல் குலாவல்ல... நடத்துங்க நடத்துங்க என...இவனுக்குதான் வெட்கமாக வந்தது.


அப்பா இருந்தால் கொஞ்சம் அடக்கி வசிப்பார்கள் இவனும் மஹாவும்.


அப்பாவுக்கு அவளை கொஞ்சமே கொஞ்சம் பிடிக்காததால் தான் அதுவும்.மஹாவும் அவரது பிடித்தமின்மையை உணர்த்திருந்தாள்.அதனால் அவர் இருக்கும் போது அப்படி அமைதியாக நடந்து கொள்வாள்.எவனை நிமிர்ந்து பார்ப்பது கூட கிடையாது.இவர்களது ஆட்டம் பாட்டம் கொஞ்சல் குலாவல் எல்லாம் அவனது அறைக்குள் மட்டும் தான்.


ஆனால் அப்பா அமெரிக்கா போன பிறகு வீட்டில் யாருமில்லா தனிமை..இருவரும் ஒரே ஆட்டம் தான்.சோபாவில்..கட்டிலில்..குளியலறையில் என அவர்களது ஆட்டம் இப்போது கொஞ்சமென்ன...ரொம்பவே அதிகம் தான்.இப்போது பாட்டி கேட்டபோது கூட வீட்டு விஷயம்.... அவர்களின் கொட்டம் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே... என்று ஒரே வெட்கம் தான் அவனுக்கு.

எல்லாம் சரியாத்தான் போய் கொண்டு இருந்தது. இவனும் நிஜமாக அவள் மேல்
அன்பு பாசம்...பரிவு என்று அவள் மேல் பித்தாகி போனான். அவளும் அப்படிதான் இருந்தாள்.இவன் வரும்போதே தாவி அணைத்து முகம் எல்லாம் ஈரம் செய்து கொஞ்சி குழைந்து என..

எல்லாம் அந்த எதிர் வீட்டில் ரோஷன் வரும் வரை தான்.மிக அழகன் அவன்.நல்ல வாட்டசாட்டமானவன் . இவனால் அதை மறுக்க முடியாது...எப்போது அவர்கள் இங்கே வந்தார்களோ மஹாவின் செயல்பாடுகள் மிகவும் மாறிப்போனது.எப்போதும் போய் அவர்கள் வீட்டில் இருப்பது..இவன் வந்தாலும் கண்டுகொள்வதில்லை...ரோஷனை இவள் பார்க்கும் பார்வை..அவள் நினைத்த்துக்கொண்டிருக்கிறாள் இவனுக்கு தெரியாது என்று.


இவன் அவளை பற்றி நன்கு அறிவான்...சரி காலையில் இருந்து தனிமையில் இருக்கிறாள் சரி...இவன் வந்த பிறகும் போய் போய் அங்கே உட்கார்ந்து கொள்வதும்...அவனுடன் கடலை வறுப்பதும்...சொல்லி சொல்லி பார்த்து வெறுத்து போனான் ரகு.


இவனை மீறி இவள் போக மாட்டாள் தான்.இவன் மீது மிகுந்த பாசம். இருந்தாலும் இன்று முதல் சண்டை...அவர்களுக்கு வந்த பெரிய சண்டை...எல்லாம் அந்த ரோஷனால் வந்தது...காலையில் வீட்டை திறந்ததும் இவள் வெளியே போக ..வீட்டு வாயிலில் சாய்ந்து நின்று இவளை காதல் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ரோஷன். .. மேலும் அருகில் வந்து அவளை உரசியவாறு கடந்து சென்றான்.

அவன்தான் அப்படி என்றால், இவளுக்கு எங்கே போனது அறிவு...எல்லாம் அம்மாவை சொல்ல வேண்டும்..வீட்டை விட்டு வெளியேபோகவேமாட்டாள் என்று...என் தலையில் கட்டி வைத்து விட்டார்கள்..


கோபம் கொதிக்க உள்ளே வந்தவளை கை நீட்டி அடித்து விட்டான்.


இப்போது அதை நினைத்து தான் ஆஃபிஸில் வேலையில் கவனம் செல்லாமல்...இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கிறான்.


மனம் சாரி செல்லக்குட்டி..இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேன்...என்றது.எப்போதடா அவளை பார்ப்போம் என்று இருந்தது அவனது மனது.


காலையில் அவனிடம் எதுவும் சொல்லாமல் பெட்டில் ஒரு மூலையில் போய் அமர்ந்தவள் தான்.இவனை வழி அனுப்ப வரவேயில்லை.


இனியாவது கை நீட்டாமல் பொறுமையாக சொல்ல வேண்டும்...சின்னவள் தானே..என்ன பொறுப்பேற்கும் அவளுக்கு...நினைத்தபடி...ஆஃபிஸில் பெர்மிஷன் சொல்லி விட்டு அவளுக்கு பிடித்த முட்டையும் டிராகன் சிக்கனும் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தான்.


கதவை திறந்ததும் இவனது வரவை தெரிந்து கொண்டு காலையில் அடித்ததை மறந்தவளாக அவன் மீது தாவி அவன் முகம் முழுவதும் தன் நாக்கால் நக்கி அவள் அன்பை வெளிப்படுத்தினால் மகா..அவனது செல்லபொமரேனியன் நாய் குட்டி.அவள் சைட் அடித்த எதிர் வீட்டு ரோஷன் வாட்டசாட்டமான அல்சேஷன்.:p:p:p
 

vasaninadarajan

Bronze Winner
நல்ல இருந்தது.நான் கூட ரகுவின் மனைவி என்று நினைந்தேன் பாவி ரைட்டர்ஜீ இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!!!!
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல இருந்தது.நான் கூட ரகுவின் மனைவி என்று நினைந்தேன் பாவி ரைட்டர்ஜீ இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!!!!
ஆனா சித்ரா சிஸ் முன்னாடியே கெஸ் செஞ்சுடாங்க....நீங்க கண்டு பிடிக்கல....மீ ஹேப்பி சிஸ்:LOL::LOL::LOL::LOL::p:p:p:p
 
Top