All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தந்தனத்தோம் என்று சொல்லியே.... கதைத் திரி

Status
Not open for further replies.

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனிச்சிறப்புடன் திகழும் தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, வில்லுக்குடம், தாளம், வீசுகோல், கட்டை என்பனவாகும்.


அத்தியாயம் 1


இன்னும் முழுமையாக புலரவில்லை. உறக்கம் கலைந்து எழுந்த தவமணி "அம்மா தாயே கோமதியம்மா இன்னிக்கு பொழுது நல்லபடியாக இருக்கனும் மா."

என்றவாறே எழுந்து கொண்டவள் பின் முற்றம் சென்றவர் கையில் ஒரு வாளி தண்ணீருடன் திரும்பி வந்தார். முழுமையாக சாற்றாமல் இருந்த மகளின் அறையை பார்த்தவர் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவர். அதைத் தாண்டி வாசலுக்கு வந்தவர் லேசாக வாயிலை எட்டிப் பார்த்து விட்டு யாரும் இல்லை என்று நிச்சயம் செய்து கொண்டு நீர் தெளிக்க துவங்கினார். தென்னை விளக்குமாரை எடுத்து பெருக்கியவர் கோலப் பொடியை கையில் எடுத்தவர் என்ன செய்ய போட வா வேண்டாமா என்று ஒரு நிமிடம் தயங்கி நின்றவளை

"ஏ கோலம் போடாம வெறும் வாசலா விடக் கூடாது இன்னிக்கு வெள்ளிகிழமை வேற போடு."

என்ற பக்கத்து வீட்டு பெரிசின் வார்த்தைகளில் கைகள் மீண்டும் உறுதி கொள்ள வரைந்து முடித்தவள் உள்ளே செல்ல முயல…


"ஏத்தா தவமணி இன்னிக்கு நேரத்துக்கே எழுந்துட்ட போல உம் மவள எங்க அவதான தினம் தெளிப்பா எந்திரிக்கலையா ?"


" ஆமாக்கா நேத்து வெள்ளையடிப்பு வேலை கொஞ்சம் அதிகம் அதான் அசந்துட்டா "


என்றவளுக்கு நன்கு தொியும் மகள் விழித்துவிட்டாள் வேண்டும் என்றே படுத்துக் கொண்டு இருக்கிறாள் என்பது


"ஆம்மா பாபநாசத்துக்கு போனும்ன்னு சொன்னீயல்ல. "


"அமாவாசை அதான் கோலம் போட யோசனை."


"ஆம்மா ஆடி அம்மாசில்ல இன்னிக்கு. நினைவுக்கு வரல்ல சரி வுடு நல்ல காரியம் நடக்கும்."

என்றவருக்கு

"நீங்களும் வாங்களேன் இங்குட்டு பக்கம் தான வேன்ல தான் போறோம் "


"எங்கத்தா மாடு கண்னு எல்லாம் இருக்குல்ல.உடம்பு வேற கெதியா இல்ல இப்ப என்ன நம்ம மதி கல்யாணத்துக்கு வந்துட்டா போச்சு."


"நீங்கயில்லாமயா நீங்க தான முன்ன நின்னு செய்யனும்"

என்றவள் அலைபேசியின் ஒலியில்

" அத்தை நான் சித்த கழிச்சி வாரேன். இப்ப உள்ள சோலி கிடக்கு எட்டு மணிக்குள்ள கிளம்பனும்
போன் சத்தம் வேற கேட்குது என்னன்னு பார்த்துட்டு வாரேன்."

என்றவர் வீட்டின் உள்ளே வந்து அலைபேசியை எடுத்தார்.


"இன்னும் அரைமணியிலயா சரி சரி வாங்க மயினி நான் அடுப்புல ஏத்திட்டேன். சின்ன மயினி வரேன்னாக ஆங் சரி வைக்கேன் வாங்க நேர்ல பேசிக்லாம்."

என்று போனை வைத்தவள்.


ஒரு அடுப்பில் இட்டிலி பாத்திரம் மற்றொன்றில் புளிசாதம் செய்ய உலையையும் வைத்தவள்.


"ஏட்டி மதி எந்திரி போய் குளிச்சு கிழம்பு."


என்றவர் அவ்விடம் நிற்கவில்லை. பதிலுக்கு எதுவும் சொல்லாமல் படுத்து இருந்தாள். ஆனால் மீண்டும் துயில் எழுப்பும் படலம் தொடராததில் எழுந்து அமர்ந்தவள் மனது "முடியாது" என்று எப்படியாவது இன்றாவது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து. பல்துலக்கிவிட்டு வந்தவள். தவமணியை தேட அவரோ அடுப்ங்கரையில் சாம்பாருக்கான சின்ன வெங்காயங்களை அரிந்து கொண்டு இருந்தார்.


"ஈராங்கியத்த கொடுங்க நான் அரியுறேன் நீங்க இட்லிய தட்டுங்க."



என்று அருவாமனைக்கு அருகில் வர


"வேண்டாம் எல்லாம் முடிஞ்சிச்சி இது தாளிக்க தான் நல்ல நாளும் அதுவுமா கையில கால்ல கோர எதும் பட்டுறாம. அந்தா அந்த சட்டில காபி இருக்கு போய் ஊத்தி குடிச்சிட்டு கிளம்பு. உங்க அப்பா இப்ப வந்துருவாரு."


" முடியாது." என்று சொல்ல மனம் முனுமுனுத்து. ஆனால் வாய் மிடறு மிடறாக இறங்கிய காபியுடன் அதையும் சேர்த்து இறக்கியிருந்தது. அவள் பேசும் நேரமும் கழிந்து கொண்டு இருந்தது. வேறு வழியின்றி தனது அறைக்கு வந்தாள் ஆயத்தமாவதற்க்காக.

அந்த வீட்டின் முன் பகுதியின் விரிந்த முல்லை பந்தலின் கீழ் வந்து நின்றாள் பூவரசி .


"என்னா வெக்க தாங்கவே முடியல. என்றவாறு முன்றையின் கம்பிக்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழையவும்."


தவமணி " வாங்க மயினி வாங்க "

என்று வரவேற்க

"ஆமாத்தா விடிய முன்னமே என்னமா புழுங்குது."


"வேனக்(வேனிற்காலம்) ல அப்படித்தேன் இருக்கும் . அண்ணன் எப்படி இருக்கு. நம்ம மகிழன் தம்பி தான கொண்டாந்து விட்டது . ஒரு எட்டு உள்ள வந்துட்டு போயிருக்கலாம்ல."


"வண்டி சத்தம் கேட்டு அடுக்களைலலர்ந்து வருததுக்குள்ள பாஞ்சிட்டாக, "


"என்னமோ அவசரமாம் அதான்.அவன் வேலை விவரமெல்லாம் நமக்கு எங்க தெரியுது. "


"சரி தான் அண்ணேன் நம்ம வேனுல வராகளா."


"ஆமா போயி அந்த சோலிய முடிச்சிட்டு கிளம்பி அவர்கள் கூட்டிட்டு வந்துருவான்."


"முத்தரசியக்கா என்ன சொன்னா.?"



" அவுகள நேத்தே இங்கனயே படுத்து எந்திங்க ஏன் வீட்டுக்கு அலைஞ்சிகிட்டுன்னேன் அவுக கேட்டாத்தான."


"எனக்கு என் வீட்டுல படுத்தாத்தேன் உறக்கம் வரும்ன்னுட்டு போயிட்டாளா. அவளுக்கு உறக்கமெல்லாம் வரும் விடியக்காலை எந்திச்சி வேலை செய்யத்தான் கறி வலிக்கும் "


என்ற பூவரசிக்கு சிரித்தபடியே காபியை கொடுத்தவர்


"சரி அதுவும் உள்ளது தான வயசாவுதுல்ல."


"இப்படியே சப்பை கட்டு கட்டு ."


" வுடுங்க மதினி இப்ப வேன் வந்துரும் அதுக்குள்ள இந்த சாமான எல்லாம் சரி பாத்துருவோம்."

என்றபடி எழுந்து கொண்டவர்கள் சரிபார்த்து முடிக்கவும் மேலிருந்து இறங்கினாள் கோமதிநாச்சியார்.


"வாத்தா மதி."

என்ற பூவரசியின் குரலில்

"ஆமாத்தை வாங்க இப்பத்தான் வாரீகளா. நான் உங்கள நேத்திக்கே வரச்சொல்லி சொன்னேன்ல."

"மணியவாது கொண்டு வந்து விட்டுறுக்கலாம்ல"


"எங்க அது இது மாடு கண்ணு மனுசன்னு ஒன்னு மாத்தி ஒன்னு இன்னிக்கே கொஞ்சம் நேர சென்டாலும் சோறு தண்ணின்னு பொழுது கழிஞ்சிரும்னுதான் விடிஞ்சிம் விடியாம கிளம்பி வந்துட்டேன்.அவளுக்கு ஏதோ பரிட்சையாம் இப்ப வந்துருவா"



"சரிதான் சிக்கினா புடிச்சி ஏர்ல பூட்டிருவாகன்னு நீங்க மட்டும் ஓடியாந்துட்டீக. இருங்க மாமா வரட்டும் சொல்லுதேன்."


"ஆமா நேத்துதேன் ஒன் மாமன் என்னிய கட்டியிருக்காறு பாரு நீ சொல்லித் தெரிய போட்டி போ முத தலை ஒழுங்கா துவத்தினியா அப்படியே ஈரம் சொட்ட போட்டு வைச்சிருக்க."


என்று துண்டை எடுத்து தலையை துவட்டிவிட கையில் பூவுடன் வந்த தவமணி


"அப்பதான தலைய பிடிச்சிட்டு நிப்பா அம்மா வலிக்கி ஆத்தா வலிக்கின்னு வரலாம் ."

என்றபடி பூவை அருகில் இருந்த மேசையில் வைத்தவர்

"இந்தாங்க சினுக்கோரி சீப்பும் லேசா சிக்கு எடுத்து எடுத்துக் கட்டி இந்த பூவ வைச்சி வுடுங்க நான் சொன்னா ஆயிரத்தி எட்டு சொல்லுவா "


"வேற எதுவும் சோலி கிடக்கா சொல்லுங்க?"

இல்லை இரண்டு காப்பி போட்ட ஏனம்தான் கிடக்கும் அது நான் பார்த்துகிடுதேன் நீங்க உங்க மருவள கிளப்புனீயன்னா காணும். உங்க அண்ணன் அங்குட்டு சேலை கட்ட சொன்னா இங்குட்ட என்ட்ட வந்து சுடிதார போடுவேன்னு நிக்கா நான் என்னய்ய (என்ன செய்ய) அவுக கிட்ட மறுத்து பேச முடியுமா?


"ஏன் மதி அண்ணன் சொன்னா கேக்கத்தான தினைக்குமா (தினமும்) சொல்லுதான் கோயிலுக்கு

போறோம்னு சொல்லியிருப்பான்."


"போங்க அத்தை நீங்க என்னிக்கி எம் பக்கம் பேசியிருக்கீய இப்ப பேச. " என்றபடி அவர் முன் கீழே அமர்ந்து கொண்டாள்.


" ஏ அந்த முக்காலிய போட்டு உட்காரு."


"இந்த முடிய கொஞ்சம் வெட்ட வான்னா அதுக்கு ஒரு பேச்சு சேலை கட்டிலன்னா ஒரு பேச்சு"


"அதப்போய் ஏன் வெட்டனும் அவவ என்னத்தை எல்லாமோ தேய்க்கா வளருவேனாங்கு உனக்கு தானா தோகையா வளர்ந்து கிடக்கு வெட்டனுமாம்ல. கையத் தரிச்சு புடுவேன் பாத்துக்க."


"ம்க்கும் உங்களுக்கு என்ன சொல்லிட்டு போயிறுவீக தேய்த்து குளிக்கறதுக்குள்ள நான் படுதபாடு"


"அடேங்கப்பா என்னம்மோ எண்ணெய்யும் சீயக்காயும் தேய்ச்சு களைச்சி போற மாதிரிதேன் சலிச்சிகிடுத ஷாம்பூ போட்டு தான கழுவுத அதுக்கே இந்த பாடு . உங்கம்மாவ கூப்படத்தான வந்து தேய்ச்சுட்டு போறா "


என்று சிடுக்கு வாரியை போட்டு எடுக்க



"வலிக்குதுத்தை சினுக்கோரி வேண்டாம் லேசா கையிட்டு சிக்கெடுத்து கட்டிவிடுங்க ."



"சரி வா இரு."


எனவும் கோமதி மீண்டும் உட்கார்ந்து கொள்ள அந்த நீளக் கூந்தலை கைகளில் சிக்கை எடுத்து காதோரத்தின் இருபுறம் இருந்தும் முடிக்கற்றை எடுத்து லேசாக பின்னலிட்டு. பூவை வைத்து முடிப்பதற்குள் வேறு உடையை மாற்றி சாமான்களையும் சரிபார்த்து முடித்து வைத்திருந்தார் தவமணி.


"அப்பா இன்னும் வரலியே மா."


"உங்கப்பா மாலைய வாங்கிட்டு வேனோடயே வந்திட்டு இருக்காகளாம்."


"உங்க பெரியத்தைக்கு போனப் போடு."

"எதுக்கு இந்தா நானே வந்துட்டேனே."

என்றபடி முத்தரசியும் அவரது கணவரும் உள்ளே வர

" வாங்க மதினி வாங்கண்ணே உட்காருங்க. "

எனும் போதே பூவரசியின் கணவர் அருணாச்சலம் மகன் மகிழன் மகள் மனோன்மணி வந்து விட அவர்களையும் வரவேற்று கரம் குவிக்க அவர்களும் கரம் குவித்துவிட்டு அமர்ந்து கொள்ள

பெண்கள் உள்கட்டுக்கு நகர்ந்து கொண்டனர்.பூவரசி

"ஏன் முத்து உள்ளூர்ல இருக்கவ கொஞ்சம் விரசா வந்து என்ன ஏதுன்னு கேட்டாதான் என்ன?"


"வாட்டி வா உன்னத்தான் தேடினேன். வந்த உடனே எம்மேல தான் பாயனுமா. என்னய சொல்லுதீயே நீ வரவேண்டியதான முதநாளே."


"மாடு இருக்கு புள்ளைக காலேசுக்கு போவனும் இம்புட்டும் முடிச்சி நானும் வயலுக்கு போய் கூட நிக்கனும் அப்பதான் அவுக ஒரு பத்து நிமிஷம் குறுக்க சாய்க்க ஏலும் ."


"ஆமா நீ மட்டும் தான் வேலை பார்க்க என்னய ஊஞ்சல் உட்கார வைச்சு ஆட்டிவிடுதாக."

"உம் மருமவளுக தான் இருக்கால்ல "

" இருந்தா. என் வேலைய நான் தான பார்க்கனும். ஏன் நீ செய்யல ஒரு பாடு ஆளு இருந்தாலும் நாமளும் இருக்கனும்னு தான இருக்கீய"


அதற்கு பூவரசி ஏதும் கூறும் முன்


"சரி விடுங்க மதினி இப்ப என்ன எல்லாந்தான் செஞ்சாச்சே. கிளம்பத்தான வேணும் ."

என்றவர்

"இந்தாங்க மதினி காபி. நம்ம அருணாவும், செல்வியும் கிளம்பிட்டாகளா இன்னும் காணும். தம்பிக கூட வாராகளா."


"ஆமா குமரனும், பாண்டியும் வரயில கூட்டிட்டு வருவானுவ கதவை அடைச்சிட்டு வரேன்னாளுவ. இந்த சின்னவன் பெத்தது ஒரே அழுவை நை நைன்னு அத அமத்திட்டு இருந்தா. பெரியவன் மக ரம்யா ஏதோ பாவாடைய கேட்டுட்டு இருந்தா அதான் இப்ப வந்துருவாக "


என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவர்களும் வர மறுபுறம் வேன் வந்து விட அதிலிருந்து இறங்கிய தவமணியின் கணவர் சொல்விளங்கு வந்துவிட அந்த இடம் அமைதியானது. முன்றையில் இருந்த ஆண்கள் எழுந்து நின்று மரியாதை தர பதிலுக்கு கரம் குவித்து மாரியாதை செய்தவர் சில வார்த்தைகள் பேச .

கோமதி தேனீர் டம்ளர்களுடன் வர

உள்ளறைக்கு வந்தார். சகோதரனைக் கண்டதும் எழுந்து நின்று கொண்டவர்களை பார்த்தபடி வந்தவர்.


"என்ன எல்லாரும் வந்தாச்சா. . எல்லாத்தையும் எடுத்து வைங்க சட்டைய மாத்திட்டு வாரேன் கிளம்பலாம்."


என்று விட்டு உள்ளே செல்ல முத்தரசி


"ஏ தவமணி நீ போய் அவனுக்கு காபிய கொடு. நாங்க அதுக்குள்ளாற உன் அத்தானுக்கு போன போட்டுட்டு சாமான் செட்ட ஏத்திட்டு இருக்கோம்."


"மாமா மதனி எல்லாரும் வந்தாச்சு அத்தை."


என்றபடி வந்தாள் கோமதி


"அப்பாடி. இவுகள கட்டியிழுத்து ஒரு இடத்துக்கு போயிட்டு வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது."


என்றபடி பூவரசி வேனை நோக்கி போக சற்று நேரத்தில் அவரைத் தொடர்ந்து அனைவரும் ஏறிக்கொள்ள.

கடைசியாக வந்த சொல் விளங்கிடம் "ஏப்பா ஆச்சி என்ன சொன்னிச்சி போற வழில சின்னாச்சி வீட்டுல நிக்காகளாம் அவுகள கூட்டிகிடனுமாம்."


"சரிதாம்த்தா ஏத்திக்கிவோம்."


எனவும் வேன் புறப்பட்டது.


அந்த வீட்டின் முத்தரசி மூத்தவர் அவருக்கு அடுத்து இலங்கா மணி அதற்கும் பிறகுதான் பூவரசி.முத்தரசி உள்ளுரில் இலங்கா மணிக்கு வாழ்கைப்பட்டு அவருக்கு இரு ஆண்பிள்ளைகள் திருக்குமரன், சரவணப் பாண்டி அவர்களின் மனைவிமார்கள் அருணா மற்றும் செல்வி இளைய சகோதரி பூவரசியை பக்கத்து ஊரில் ராசய்யாவிற்கு கொடுத்திருக்க அவருக்கு மகிழன், மனோன்மணி என இரண்டு பிள்ளைகள் இருவரும் படித்துக் கொண்டிருந்தனர் .

அக்காள் தங்கை இருவருக்கும் சகோதரன் மீது பயம் கலந்த பாசம். தந்தை சிறு வயதில் தவறிவிட தாய் ராசாத்திக்கும் சகோதரிகளுக்கும் சொல்விளங்கு தான் எல்லாம் அந்த பொறுப்பு மற்றும் உண்மையை சட்டென்று பேசும் குணம் அது ஒரு மரியாதையை தந்திருக்க சகோதரிகள் எதையும் நேராக கேட்டது இல்லை. தாய் ராசாத்தி அல்லது தவமணி மூலம் தான் அனைத்தும்

மக்களே நெல்லை வட்டார வழக்கில் வரும் கதை இது கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .
சொற்கள் ஏதும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் கேளுங்கள். இது வரையிலான உங்கள் ஆதரவிற்கு நன்றி
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2


ராசாத்தியின் தங்கை வெள்ளத்தாயின் வீட்டின் முன் வேன் நிற்கவும் உள்ளிருந்து வெளியே வந்த வெள்ளத்தாயின் மகன் கருப்பசாமி.

"வாங்க எல்லாரும் வாங்க." அழைக்க அவரைத் தொடர்ந்து வந்த அவர் மனைவி ஞானமும் இவர்கள் யாரும் வேனில் இருந்து இறங்கவில்லை எனவும் நேராக வேனிற்கே வந்தவர் "என்ன மதனி ஒருத்தரம் இறங்கக் காணும்"

என்றதில் தவமணி "இல்ல ஞானம் உங்கண்ணன் நேரமாவுதும்பாகளேன்னு தான்."

"ஆமா மதனி மேலும் ஏறி ஏறி இறங்கவும் முடியல காலு கை எல்லாம் வலி"

"என்னக்கா இப்படி சொல்லுதீய வாச வரைக்கும் வந்துட்டு உள்ளாற வராம போன நல்லாருக்குமா சொல்லுங்க. உள்ள வந்து ஒரு மடக்கு தண்ணியக் குடிக்கதுக்குள்ளயா நேரமாவ போவுது."

என்றதில் மேலும் மறுக்க இயலாத நிலையில் தவமணி பூவரசி முத்தரசி மூவரும் இறங்கி உள்ளே வர அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் இறங்கினர்.

இறங்காமல் அமர்ந்து இருந்தவளை மனோண்மணி கையைப் பிடித்து இழுக்க

|"நான் வரல உள்ளயே இருக்கேன் ."

"அடியே நீ வரல உங்க அண்ணன் அந்த மவராசன் என்னய கோவிப்பாரு."

"நீயும் பதிலுக்கு கோவிச்சிக்க திரும்பி கூட பார்க்காத."

என்ற வளை முறைத்து விட்டு

"நல்லா வருவடி மகராசி. நீ காதலிக்காது காணததுக்கு என் பொழப்புலயும் மண்ணள்ளி போட ப்ளான் போடாத மரியாதையா இறங்கி வந்துரு இல்ல."

"இல்ல ?"

என கோமதி கேட்க

"இல்ல கை கால்ல விழுந்தச்சி கூட்டு போகவேண்டியதான். "

"அப்ப கூட எங்கண்ணன் மேல கோவப் பட மாட்ட."

"அவக மேல என்ன தப்பு கோபப்பட தங்கச்சிக்குன்னா வரத்தான செய்யும்."

என்றவளின் புரிதலும் காதலும் சிறு வருத்தமும் அவளுக்கு வியப்பை தர.

"இந்த கோராமைக்குத்தான் நான் காதலிக்கவும் இல்லை கல்யாணமும் வேண்டாம்ங்கேன்."


" அதைக் உள்ள வந்து சொல்லுதாயி."

எங்கே முடியாது என்று கூறினால் ஏன் கேள்வி வருமே அதற்கு இதுவரை பதில் இல்லையே. மேலும் அவள் மனதில் உள்ளதை எப்படி கூறுவது என்று தயக்கம் அதன் காரணத்தினாலேயே வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என குருட்டு தைரியத்தில் இருக்க இப்போது சிறுபயம் அதை மறைத்து


"நேத்து வரை இந்த ஆடி அமாவாசைக்கு எப்படி போனாகளாம். இன்னிக்கு புதுசா.யோசிக்கிறாகளாம் அதுலயும் இந்த இரண்டும்" என கடுத்தவள்

" முதநாளே இங்க வந்துட்டா தெரியாதுன்னு நினைப்பு. இதுக்குத்தான் முதவே நான் வரமாட்டேன்னேன்."


"அப்பல்லாம் சத்தம் போடாம இருந்துட்டு இப்ப ஏன் காராடிடுத(போராடுதல்) உன் வழக்க உள்ள வந்து வைச்சிக்க. அவுக கோயிலுக்கு தாம் வந்துருக்காவ அவ்வளவு தான் ஏதோ பரிசம் போட வந்த மாதிரியில்ல வரத்து வார நீ. மாமாட்ட பொறவு பேசேன். மெல்ல விசயத்தை சொல்லு இப்ப நீ உள்ள வரல அவுகளுக்கு இறக்கமா போவும்"


"எங்கண்ணன் உன் கைக்குள்ளாற இருக்க ஏத்தம்." என அடுத்தவர் முன் பொம்மையாய் நிற்க வேண்டி இருக்கிறதே என்ற கோபம் ஒருபுறம் அதை அவளிடம் காட்டினாள்.

அண்ணன் தம்பி இரண்டு குடும்பத்திற்கும் கோமதி நாச்சியார் மட்டும் தான் பெண் ஆண் செந்தூரன்

"ஆமா உங்க நொண்ணன் நாள் நேரம் தவறாம என்னய பார்த்து பேசுதாக .ஏன் என்யை கேட்டுதான் மூச்சு விடுதாகன்னு சொல்லேன்."


"இல்லைன்னு சொல்லுவியா. "


என்று வழக்கடித்துக் கொண்டு இருந்தவர்கள்.


"நாச்சி உள்ள வராம இங்க என்ன ?"

என்ற செந்தூரன் குரலில்

"இதோ வந்தாச்சு மாமா " என்று மனோன்மணி அவன் பின் செல்லப் போக அவள் கையை பிடித்து நிறுத்திய நாச்சியார்.

"போன எடுத்துட்டு வாரோம்ண்ணே."

என்றதில்


" சரி சீக்கிரம் வரப் பாருங்க. ஆச்சி கூப்பிடுதாகல்ல" என்று அவன் இறங்கி சென்றுவிட."


"ஏ மதி இவங்க இங்குட்டு காப்பிய குடிச்சி பேசி முடிக்ககுள்ள அமாவாசை முடிஞ்சி பெளர்ணமியே வந்துரும். "


" அதுக்கு இப்ப என்ன." என கீழே இறங்கப் போனவளுக்கு தனது கைப்பேசியின் நினைவு வர மனோன்மணியிடம்

"எம் போன எடுத்துட்டு வாரேன் நில்லு"


என்று விட்டு உள்ளே சென்றவள் தேட

"எங்க வைசேன்னு தெரியலையே என்று புலம்பியவள் கண்களில் கவரில் இருந்த பூச்சரம் விழ விழுந்துவிட அதை எடுத்தவள் "அய் முல்லைப்பூ ஏட்டி மணி இத வைச்சி விடு. அப்பவே சின்னத்த வைக்க வந்துச்சி நேரமாவிட்டுன்னு வேறுபல வந்து வைச்சு க்கிறேன்னு சொன்னேன் ." என பின்னலை தூக்கி பின்னால் வீசியவள்

"இந்தா ஹேர்பின் உன் பாசைல கூந்தல் ஊக்கு. நீ வை அதுக்குள்ள இந்த போன தேடி எடுக்கேன் "

என பின்பக்கம் திரும்பாமலே பூவையும் கொடுத்தவள் தனது போனை அந்த கைப்பைக்குள் தேடியவள்

"எத்தன போனு ….". அம்மா அத்தை என அனைவரின் செல்போன்களையும் எடுத்து விட்டு தனது போனை தேடி எடுத்தவள்.

"ஏட்டி சீக்கிரம் வைய்யி இறங்கட்டும். இல்ல அடுத்து இரண்டு ஆச்சியும் வந்துரும்." என்றபடி நின்றவள் கூந்தலில் சற்று அழுத்தி பூ வைக்கப்பட்டதும் அதில் ஏதோ உணர்ந்தவள் சடாரென்று திரும்ப அங்கே அவன் நின்று கொண்டு இருந்தான்.அவள் அதிர்ந்து போனவளாக பட்டென்று பின்பக்கமாக ஒரடி வைக்க தடுமாறி இருக்கையில் அமர்ந்தாள். அவளில் இருந்த அதிர்வை தன்னுள் வாங்கிக் கொண்டான்.ஆனால் அவள் அவனுள் முளைத்தது வேண்டும் என்பது எண்ணம் விதி நடத்தியதோ பூ சூடி நீ எனக்கு நான் உனக்கு எண்ணும் உறுதி .

முதலில் அதிர்ந்தவள் பிறகு கோபம் வர முறைத்தாள்.


"திஸ் இஸ் நாட் மை பால்ட் நீ வைக்க சொன்ன வைச்சேன். நான் சும்மா பேசலாம்னு தான் வந்தேன்"


அவனுக்கு அந்த முறைக்கும் கண்கள் துடிக்கும் இதழ்களை பார்க்க ரசனையாக இருந்தது. அதில் ஆசையும் பிறந்தது. அவளுக்கோ மனதில் நினைத்ததை பேச முடியாது ஒருபுறம் அதற்குள் இவன் கண்டதும் மனதில் நுழைந்து கொள்ள அதில் வெருண்டு போனவள் அந்த பூவை எடுத்துவிட்டால் வாசனையென புகுந்த அவன் போய்விடுவான் என்று எடுக்கப் போனாள். அவள் கைகளை பற்றியவன்


"இத எடுத்த அங்க உள்ள வந்து வைச்சி விடுவேன். "


"வைச்சிப் பாருங்க தெரியும் சேதி. நானே பிடிக்கலைன்னுட்டு இருக்கேன் பூவைக்கேன் காய் விக்கேன்னு."


எனக் கையை வெடுக்கென உதற

"ஏன் யாரையாவது லவ் பண்றியா."

என்றவனுக்கு குரல் இடறி இறுகியது..

"ச்சீ …. அதெல்லாம் ஒன்னும் இல்லை "

என்ற அவள் முகச்சுளித்த வார்த்தைகளில் மீண்டும் புன்னகை வர


"அப்ப வைக்கலாம்."


"என்னது "


"பூவும் வைக்கலாம் பிடிக்கவும் வைச்சிடலாம்."


என்றவனை முறைத்தவளுக்குள்ளும் பிடித்தம் இல்லை என்று இல்லையே அந்த ஒரு விஷயம் தான் அதை கூறிவிடவா வேண்டாமா என ஆலோசித்து வாய் திறப்பதற்குள் மனோன்மணி தேடி வந்து விட்டாள்.


"அண்ணே எப்ப இருந்து அங்க என்னமோ என் மகன் யோக்கிய சிகாமணி அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு. புகழ்ந்துட்டு இருக்காக இங்க என்னடான்னா பூவைக்க முன்னமே பூவைச்சாவுது."


என்ற குரலில் திரும்பியவன்

"இனிமே தினம் வைக்கனும்ல அதான் இப்பருந்தே"…" என்றவன்

"அந்த ஆஹா ஓஹோல்லாம் உண்மைதான். உங்கண்ணன் யோக்கியனும் தான் அதான் உன் மதனிக்கு மட்டும் பூ. ""


"சரி சரி நடத்துங்க உங்கள கேட்க யாரு இருக்கா மச்சான் கூட வேற கூட்டணி இப்ப நான் கூட்டிட்டு போறேன் நீங்க நாலுபேருக்கு முன்ன பூவைக்க வழியப் பாருங்க.இப்ப நவருங்க "


என்றதில் அவன் சிரித்தபடி நகர்ந்து கொண்டான். அதுவரை தவித்து நின்ற அவள் கடந்து செல்லும் போது அவள் வாசம் அவனுள் படிந்தது.

ஆண்கள் முதலில் செல்ல பின்னே வந்த பெண்களையும் பார்த்ததும் உள்ளே கூடத்தில் அமர்ந்து இருந்த ஞானத்தின் அண்ணன் கந்தய்யாவும் மனைவி விசாலாட்சியும் இவர்களைக் கண்டதும் எழுந்து " வாங்க அண்ணே " கரம் குவிக்க. பதிலுக்கு இவர்களும் கரம் குவித்தனர்.

"ஆமா தங்கச்சி நல்லா இருக்கியாம்மா. அத்தான் எப்படி இருக்கீக. வீட்டுல எல்லாரும் சொவமா (சுகமா) "

என விசாலத்திடம் தொடங்கி கந்தய்யாவிடம் முடித்தார்.

"எல்லாரும் நல்லா இருக்காக. இருங்க"

என்று உட்கார சொல்லியவரிடம் தலையை ஆட்டிவிட்டு அமர்ந்து கொண்டனர் சொல்விளங்கும் மற்றவர்களும்.


"ஆமா தம்பிவந்துருக்காகளா"


"ஆமா."


" இப்ப என்ன செய்தாக "

என்ற திருக்குமரனுக்கு

"நம்ம மில்லு இப்ப அவுகட்ட தான் இருக்கு அதுக்குன்னு தான் வெளிநாட்டுல போய் படிச்சிட்டு வந்தாக."


உள்ளே வந்து கொண்டு இருந்த மனோண்மணியிடம் கோமதி நாச்சியார்

"ஆமா இவன் பாரின்ல படிச்ச பெருமை இப்ப ரொம்ப அவசியம் அப்ப அங்குட்டே அதுக்கு எசவா ( இசைவாக) பாக்க வேண்டியதான எதுக்கு என் உசுர வாங்குதுக."


"ஆஹான்." என்ற மனோன்மணி

அவள் கூந்தலில் இருந்த முல்லைச் சரத்தை எடுத்து முன்னால் போட்டவள்

" எனக்கென்னவோ நடந்தது நடப்பது எல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே."

"எங்கண்ணன காணவும் சொல்லாம கொள்ளாம பின்னாடி போயிட்டு பேச்சு வேற."

"பின்னாடி போய் என்னத்துக்கு இப்படி பூ வைச்சி விடுத பாக்கியமா இருக்கு கொரானாவுக்கு கிளாஸ் போன யாவகம் உங்கண்ணனுக்கு இன்னும் போவல ஆறடி தூரத்தில நிப்பாட்டி வைக்கிறாக. எங்கண்ணன பாரு வந்தமா பூவ வைச்சமா… "

என மேலும் எதோ சொல்ல போக அவள் இடையில் கிள்ள "ஆ அம்மா " என துள்ளி விலகியவளை பிடித்து

நிறுத்த. அதில் அவர்களை அனைவரும் கவனித்து விட



"கூடத்தினுள் வந்துவிட்ட கோமதி ."


பெரியவர்களைக் கண்டதும் வேறு வழியின்றி கரம் குவிக்க. அவளிடம் எழுந்து வந்த விசாலாட்சி.

அவள் தலைமீது கைவைத்து கன்னம் தாங்கியவர்

"அழகு பெத்த புள்ள. பேருக்கு ஏத்தால இருக்கா"

என்றதில் ஒருவித கூச்சம் வர நின்றிருந்தவளை

"விழுந்து கும்புட்டுக்கத்தா."

என்ற ராசாத்தி ஆச்சியை மீறமுடியாமல்

"மகராசியா நல்லா இருக்கனும் த்தா"


என்ற கந்தய்யாவின் கண்கள் மகனைத் தேட


"இப்பந்தேன் என்னய இறக்கி விட்டுட்டு கார ஓரமா நிறுத்திட்டு வாறேன்னு போறான்."

எனும் போதே செந்தூரனும் அவனும் உள்ளே வர


"இந்தா வந்துட்டான்."


"சரிதான்."

என உட்கார்ந்து கொள்ள. இவர்கள் உள்ளறைக்கு நகர்ந்து கொண்டனர்.



"ஏ வந்துட்டியளா வாங்க வாங்க"

என்ற சின்னஆச்சி. தனது கொள்ளு பேரனையும் கொஞ்சிக் கொண்டிருந்தார்.


கோமதி ராசாத்திக்கும் அவரது தங்கை வெள்ளத்தாய்க்கும் முன் சென்றுஅமர்ந்து கொண்டவள் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்த வெள்ளத்தாய் ஆச்சியிடம் இருந்து அதனை வாங்கியவள். தான் இடிக்க மனோன்மணி


"நீ ஏம்ட்டி இடிக்க அவுகளே இடிப்பாக வா "

" ஏன் என் பேத்தி எனக்கு இடிச்சி தாரா உனக்கு எங்குட்டு நோவுது."

"எங்குட்டு நோவுதுன்னு சொன்னா மட்டும் என்னய்ய (என்ன செய்ய ) போற? "

" செந்தட்டிய எடுத்தாந்து தேய் சரியாப் போவும்."

என்றார் வெள்ளதாய்.

"எல்லாம் அக்காளும் தங்கச்சியும் அண்ணன் தம்பியக் கட்டி ஒரே ஊருக்குள்ள வாக்கப்பட்டு இருக்க பவுசு ம்."

"ஆமா அதுக்கு என்ன இப்ப?"

"இரு உன் பேரன் என் கழுத்துல தாலிய கட்டட்டும் பொறவு இருக்கு உனக்கு "


"போடி நா செவ்வலூர்காரிடி இந்த பூச்சி காட்டுத சோலிய தூர வை."


"ஊர் பெருமை. ம் எம்மதினி கை உனக்கு வெத்தல இடிக்க வா இருக்கு."


"எனக்கு வெத்தல இடிக்க இல்லாம உனக்கு ஊழியம் பாக்கவா இருக்கு ."


"ஆமா உன் பேத்தி பாத்துட்டாலும். "


"அவ ஏம்ட்டி உனக்கு பாக்கப் போறா எங்க வீட்டு நாச்சியா."

காப்பியுடன் வந்த பூவரசி

"உங்க இரண்டு பேத்துக்கும்."

"என்ன ஏம்த்தா சொல்லுத உம் மவட்ட சொல்லு. "


"எப்பபாரு அவுகட்ட எசலி (சீண்டுவது) கிட்டே இரு. பெரியவுக சின்னவுகன்னு மரியாதை இல்லாம."

ராசாத்தி உடனே

"சும்மா விளையாட்டுக்கு தான விடு"

" எந்நேரமும் ஒன்னு போல இருக்காதுல்ல."


"ஏம்த்தா நாச்சியா . "

"சொல்லுங்க ஆச்சி."

"நீ இதவிட கூட பேசுவியே இன்னிக்கு என்ன."


என்றவருக்கு "ஒன்னும் இல்லை ஆச்சி இந்த மணிக்கு ஏதோ சந்தேகமாம் அதத்தேன் ரோசிச்சிட்டு இருந்தேன்."

ஏதோ வில்லங்கம் என்று புரிந்தவள்

"நான் எப்பட்டி சந்தேகம் கேட்டேன்."

என்று அவள் காதில் கேட்க

"ஆறடி தூரத்தில் இருந்து எங்கண்ணன் எப்படி தாலி கட்டி குடும்பம் நடத்தும்முன்னு கேட்டல்ல."

"ஆத்தாடி பாதகத்தி. இப்ப நான் என்ன செய்யனும் சொல்லு அது வுட்டுட்டு இது கட்ட கோர்த்து விடாத"


"ம் வேன் விவகாரம் வெளிய வந்துது."

"அதுக்குத்தான் இதா. வராதுத்தா வராது இப்ப பைலர்ந்து எனக்கு செலக்ட்டிவ் அம்னீசியா, "


"என்னட்டி அங்க குசு குசுன்னு பேச்சு."

என்ற வெள்ளத்தாயிடம்

"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அது ஏன் உனக்கு."

என்ற வெட்ட

"ஆமா பெரிய இரவசியம் (இரகிசியம்) எம் பேரய்ங்கற (பேரன்கள்) பத்திதான."



"இந்த பாம்படத்த முத கழட்டனும் அப்பதான் இந்த பாம்புச் செவி கொஞ்சம் மந்தமாவும்."


"எடு விளக்கு மாத்த "

"அதெல்லாம் விடிய தூத்து அள்ளியாச்சு ஆச்சி."

என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே

"நேரமாயிட்டுல்ல வாங்க ஆச்சி போவம் நாம வேன்ல போய் பேசிக்கலாம்."

என்றவள் கோமதி நாச்சியார் எழ


" இருத்தா நாங்க கிழடு கட்டைக அங்குட்டு கூட்டத்துக்குள்ள ஏன்."


"நீங்க வரல நானும் போல இங்க உங்களுக்கு துணைக்கு இருக்கேன்."


"என்னத்தா நீ போயிட்டு வா ." என கன்னம் தடவி கொஞ்சி அனுப்பி வைத்தார்.

அதன்பின் உள்ளே வந்த கருப்பசாமி

"ஆத்தா நீங்க இரண்டு பேரும் வாங்க போயிட்டு வந்துருவோம்."


"பாலு கறக்க ஆளுவரும். தண்ணி யாரு காட்டுவா."


"நம்ம மகேசு பாத்துக்கிடுவான்.அண்ணே வேற உங்க இரண்டு பேரையும் கூட்டிவரச் சொல்லுது"


என்றதில்

"சரிய்யா ஐய்யனாரு கூப்பிடயில மறுக்க வா முடியும்.மத்தவுக"


"எல்லாரும் ஏறியாச்சி நீங்க ஏறவும் கிளம்ப வேண்டியது தான்."



என்றதும் வேன் ஆச்சி இரண்டுபேரும் ஏற்றிக் கொண்டு ஆண்கள் ஒரு கார் பெண்கள் குழந்தைகள் வேன் என்று பயணம் பாபநாசம் நோக்கி நகர்ந்தது.
வெள்ளத்தாய் ராசாத்தி சகோதரிகள்

அண்ணன் தம்பியை திருமணம் செய்தவர்கள்


வெள்ளத்தாய்

மகன்

கருப்பசாமி மனைவி ஞானம்

பேரன்

செந்தூரன்


ராசாத்தி

மகன்

சொல்விளங்கு மனைவி தவமணி

பேத்தி கோமதி நாச்சியார் (நாயகி)

ராசாத்தி மகள்கள் மூத்தவர்

பூவரசி அவரது கணவர் இலங்காமணி

மகன்கள் திருக்குமரன் சரவணப் பாண்டி. மருமகள்கள் அருணா, செல்வி

இளையவர் முத்தரசி கணவர் அருணாசலம்

அவரது மகள் மனோண்மணி

மகன் புகழேந்தி


ஞானத்தின் அண்ணன்

கந்தையா மனைவி விசாலாட்சி

மகன் (நாயகன்)

கருத்து திரி
 
Last edited:

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


அத்தியாயம் 3


பாபநாசம் பொதிகை மலைக்கு மேல் அய்யப்பனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது என்று கருதப்படும் காரையாரில் சொரிமுத்து அய்யனார் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அவர் முன் நின்றவள் கண்ணாரக் கண்டு கரம் குவித்தவள் மனம் நிறைந்தது. வெளியே வந்தவள் உடன் மனோன்மணியும் வந்தாள்.

"என்னா கூட்டம் .ஆனா நல்லாத்தான் இருக்கு. கூட்டம் இல்லாம ஒரு நா வரனும்."

"ம்…" என்றவள் பார்வை ஆற்றில் அதில் இருந்த மக்களில் இருந்தது. மனமோ அவனில் இருந்தது.

"ஏய் என்னட்டி இம்புட்டு அமைதியா இருக்க.?"
என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் அமைதியின்மையை விழிகள் காட்டிக் கொடுத்து விட்டது. அதைக் கண்டு கொண்டவள்
"பூவைச்சவுக பொறத்தயே வரனுமே காங்கலயே ஒருவேளை நம்மள பிடிக்கலையா? இல்ல நம்ம சொன்னத உண்மைன்னு நம்பி போயிட்டாகளோன்னு
யோசிக்கிற யோ."
என்றதில் தன் மனதை அவள் தெளிவாக கணித்துவிட்டதில், உவகை பொங்க அதில் அவனுக்காக சிறு வெட்கம் வர கோபம் போல்
"போடி இப்ப யாரு அவன தேடுனா ஏன் பாட்டுக்கு உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன். அவன போய் ஏன் தேடுதேன்."
"அண்ணே கேட்டீயல்ல உங்கள தேடலயாம்."
என்றதில் பதறி போய் எழுந்து நின்று சுற்றிலும் முற்றிலும் திரும்ப அவன் அங்கு இல்லை என்று ஆசுவாசப்பட்டவள் மணோண்மணியை முறைத்தவள். ஒன்று முதுகில் வைத்து
"நானே கிலி புடிச்சி இருக்கேன்."
"ஏம்ட்டி"
"என்ன ஏன் "
"பிடிக்கலியா."
"அதில்லட்டி."
"பொறவு"
"இல்ல வசதியானவுகளா தெரியுதுன்னு பாக்கியோ (பார்க்கிறாயா)?"
"ஏன் இங்க என்ன ஒன்னுமத்தா இருக்கு ."
"அவுகள நோக்கயில கம்மி தான."
"அவுகட்ட இருக்கு காட்டு தாவ , எங்கப்பன்ட்ட ஒன்னுமில்லாம இருக்கு அவுகளுக்கு எடுத்து ஆள ஆசையில்ல அம்புட்டுதேன்.ஏன் உனக்கு தெரியாதாங்கும் இன்னைய வரைக்கும் பொறந்த வீட்டு சீர் தாய்மாமன் சீர்ன்னு எதுல குறை வச்சாரு எங்கய்யா"
"இவ்வளவு விஞ்ஞானம் பேசத்தெரியுதவளு பட்டுன்னு தேங்காய உடைச்சா மாறி புடிச்சிருக்கு இல்ல வேற பாருன்னு மனசை சொல்ல தெரியலயோ?"
"நீ வேற ஒருத்தி என்ன சொல்ல வாரன்னு கேளாமலே படுத்துவா."
என்றதிலேயே அவளுக்கு அவனின் மீதான எண்ணம் புரிந்துவிட அதையும் தாண்டி எது என்று தெரிந்து கொள்ள வேண்டி
"சொல்லு மதி அந்த விஷயமா."
என கணித்து கேட்க அதில்
"ம் அதேதான்டி …" என்று அவள் மனச் சூழலலை தூற துவங்கும் முன்
"ஹாய் மதி."
என்று அவன் வந்து நின்றான். வென் மதியாய் அவளே வாவியின் நீரென தன் மனம் இருக்க அதில் காய்ந்த நிலவாய் அவன் தெரிந்தால் தன் மனம் அறிந்து ஏற்ப்பாள் அவள் எண்ணமோ தன் முதிர்ந்த கனவுக்கும் புதிதாய் அவன் முகிழ்வித்த காதலுக்கும் இடையே மறுப்பு விருப்பு என அல்லாடிக் கொண்டு இருக்க அவன் ஆடும் நீரிலும் தெரியும் நிலவாய் அவள் முன் வந்து நின்று சோதித்தான்.


கோமதி நாச்சியார் அந்நேரத்தில் அங்கே அவனை எதிர்பார்க்கவில்லை. வீட்டில் வைத்து பார்த்தவன் இப்படி அதற்குள்ளாக அடுத்தடுத்த சந்திப்புகற்களுடன் அவளுள் அவனை எழுப்ப வந்து நிற்பான் என்று. அவனின் தொடர்தலில் அரண்டு போனவள்

"என்ன இங்குட்டு வந்திருக்கீக. வேலை எதும் இல்லையா?"

"சாமி கும்பிட வந்தேன்னு பொய் சொல்லாம் பட் சாமி கண்ண குத்திட்டா சோ உண்மைய சொல்லிடறேன். உன்ன பார்க்கனும் போல இருந்தது அதான்…"

என்றவனிடம் என்ன பேச என அவளுக்கு தெரியவில்லை.

அவளுக்கு சற்று அவகாசம் தேவையிருந்தது. தனது கனவை ஆசையை பற்றி பேச வேண்டும் அதைப் பற்றி வீட்டில் பேசி பிறகே இவனிடம் பேச முடியும் தற்போதைக்கு அல்லது இன்னும் இவன் தான் என்று முடிவாகாத நிலையில் எப்படி என்பது அவள் நிலை. அவனுக்கு இது போல எதுவும் இல்லை பார்த்ததும் இவள் தான் என்று முடிவு செய்து விட்டவன் தன் உரிமைப்பட்டவள் என்றே நடந்து கொண்டான்.

"வா கொஞ்சம் அப்படி போய் பேசலாம்."
என்று கை நீட்ட அவள் இரண்டு அடி பின்னால் போனாள் . அதற்கே அவனுக்கு கோபம் வந்தது. கோமதி நாச்சியாரோ என்ன செய்வது என்று முழித்தாள்
'ஆளப்பாரு ஊருசனம் எம்புட்டு பேரு இருக்காக கொஞ்சம் கூட யோசிக்காம கைய நீட்டுதாரு ஏதோ பொண்டாட்டி கூட சோடி போட்டு போற மாதிரி. இதுல கோபம் வேற '
என்று அவளும் முறைத்தாள்.
'ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள இப்படி மாறி மாறி முறைச்சா விளங்கிரும். '
என்று முனுமுனுத்தவள்
"அண்ணே இன்னும் பரிசம் கூட போடல அதுக்குள்ள கைநீட்டுனா எப்படி. நீங்க கொஞ்சம் அப்படி போய் பேசுங்க நான் இங்க நிக்கேன். போ மதி."
என்றதும் தான் சற்று தணிந்து தன்னிலைக்கு வந்தவன் முன் போக. அவள் தயங்கினாள் . அவளுக்கு உறுதியாகமல் ஒருவனிடம் தன் ஆசையை சொல்வது நாளைக்கு இவன் தன் ஆசையை கேட்டுவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டால் தன்நிலை என்ற பயம் மனதில் இவனை பதிய ஆரம்பித்து விட்டதை உணர்ந்த அவளிடம் அச்சம் என்ன செய்ய என நின்ற மதியிடம் மணோன்மணிதான்

"போய் இரண்டு நிமிசம் பேசிட்டு வா ஒன்னும் இல்ல கூடவே உன் ஆசையை சொல்லிரு அப்புறமேட்டு வாரது வரட்டும் "

சரி என்பதாய் தலையாட்டியவள் அவன் இருக்கும் நோக்கி அடி எடுத்து வைத்தாள்.அதற்குள் அவன் வேதாளமாகியிருந்தான். அவனுக்கு ஏதோ அவளுக்கு தன்னிடம் சொல்ல வேண்டும் என்பதை முதலிலேயே புரிந்து கொண்டவன் அதை தானாக கேட்கவில்லை ஆனால் அவளாக சொல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். அதனால் தான் இன்றைய கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு இங்கு வந்தது. இங்கு கோமதி நாச்சியாரின் தயக்கம் அவனுக்கு அவள் தன்னை நம்பவில்லையோ என்று கோபத்தை வரவழைத்தது.

"நான் அங்க எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்தா நீ என்கூட வந்து இரண்டு வார்த்தை பேச அவ்வளவு யோசிக்கிற அப்படி என்ன உன்ன கடிச்சா முழுங்க போறாங்க."
என்ற சினத்தில் அவளுக்கு தான் கேட்க வந்தது பின்னுக்கு போக.
"ஆமா நீங்க வருவீக வந்த உடனே சுத்தி முத்தி ஒன்னும் பார்க்காம வான்னு கை நீட்டுவாரு .நானும் பிடிச்சிட்டு பின்னவர?
ஐயா! எனக்கு இன்னும் தாலி கட்டல நினைப்பு இருக்கா?
இன்னக்கு காலைல பார்த்த மாதிரிய நடந்துக்குறீய என்னமோ பத்து வருஷமா குடும்பம் நடத்துற மாதிரி அதிகாரம் தூள் பறக்குது."

என்ற அவளின் வெடுவெடுப்பில் தான் அவனுக்கும் அவள் இன்னும் தன் சொந்தமாகவில்லை என்னும் நினைவே வந்ததில் சிரித்தான்.
அதில் கோபம் கொண்டவள்

"என்ன சிரிப்பு?"

"இல்ல நீ மட்டும் பத்து வருஷம் ஆன பொண்டாட்டி மாதிரி வெடுவெடுன்னு விழலாமா."

என்ற கேள்வியில் தலைகுனிய அதைப் பார்த்தவனுக்கு அள்ளிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவளிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதும் அவனுக்கும் .அவனுக்கு சொல்ல இருப்பது அவளுக்கும் மறந்து போனது

"அது அது… நான் ஒன்னும் வெடுவெடுக்கல சாதாரணமாகத்தான் சொன்னேன்"
என்றுவளுக்கு
"ம்ஹூம்."
என நிமர்ந்து பார்த்தவள் அவன் கண்களில் நிறைந்தாள். தணிந்தவன்

"ஸாரி."
"ம்"
" மறந்து போச்சு இன்னும் கல்யாணம் ஆகலங்கறது "
"ம்"
"என்ன… ம்"
" ம் ன்னா ம் தான்"
"அதான் இப்ப என்னத்துக்கு ம் "
"அது. நாம் ம் நீங்க கேட்டதுக்கு ஆம் ம் "
"ம் "
"ம்"
என்றவளிடம் "அப்புறம் ஏதாவது சொல்லனுமா….?"
என்றவன் அவள்
"ம்"
என்பதை கேட்பதற்குள் அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வர.அதை ஏற்றவன்
"ஆபீஸ் கால் நான் உனக்கு அப்புறம் பேசறேன்."
என்றவன் பேசியபடி விலகி சென்று விட அதில் அவள் சுணங்கினாள். மறுபுறம் மணோண்மணி

"ஏ மதி வா உங்க அண்ணன் மாமா எல்லாரும் வாராக."
என்றதில் அவளும் மணோண் மணியிடம் வந்து நின்று கொண்டாள்.

"என்ன சொல்லிட்டியா?"

"ம்ஹூம் போன் வந்துட்டு."

"சரி வுடு அவுகளுக்கு உன்னைய பிடிச்சிருக்கு அதனால தடை ஒன்னும் வராது. வா."

என்றவளிடம் வந்த செந்தூரன்
"மதி அப்பா கூப்புடுதாக என்னனு கேளு போ?"
என்றவன் மனோண்மணியை
"அங்குட்டு அத்தை கூப்புடுது போ பொங்க வைக்க சாமான் எடுத்து கொடு."
"அதான நான் கூட எங்க எனக்கு வளவி ஏதும் வாங்கித் தரப் கூட்டிட்டு போறீயோன்னு பார்த்தேன்."
" இப்ப கோயிலுக்கு வந்தேனா இல்ல உன் கூட சோடி போட்டு சுத்த வந்தேனா."
"ஒத்த பஞ்சுமிட்டாய்க்கு கூட வாங்கித்தர வழியில்ல இதுல இவரு கூட வந்து சுத்திட்டாலும் கழுதையில"
என்றவள் நகர
"ஏ என்ன சொன்ன?"
"ஆங் சொன்னாக போய்யா ஒருபக்கம் கூட்டு போக முடியாது பேச்சு மட்டும் ."

"ஆமா கூட்டிட்டு வராம தான் இப்ப வந்தருக்க பேசிட்டு இருக்க இதுலயே அம்புடலாயம் இதுல இவள ஒருபக்கமும் போவலயாம் கூமுட்டைய கட்டி மாரடிக்கனும்ன்னு எழுதியிருக்கு."
"ரொம்பத்தான் என்னைய மட்டுமா கூட்டி வந்துருக்கீய குடுபத்ததையே குலசாமி கும்புட கூட்டிட்டு வந்துட்டு காணாக்குறைக்கு இவரு தங்கச்சிக்கு பாரா வேலை வேற பாக்கவிட்டுறுக்காறு. இதுல எனக்கு அம்புடலயாம் என்னையக் கணக்க கூமுட்டையா இருக்க கண்டு தப்பிச்சீய வேற ஒருத்தின்னா இந்நேரம் கிழிச்சி தோரணம் கட்டியிருப்பா."

" அதான் நீ இருக்கல்ல போதும் .அந்த தங்கச்சாமி கடைல சொல்லியிருக்கேன் தங்கச்சிய கூட கூட்டிட்டு போய் வாங்கிக்க போ."
என்று விட்டு அவளை முத்தரசியிடம் சேர்த்தவன் மற்றவர்களை பார்க்க போனான்.

பட்டவராயன் சன்னதி முன் தனது தந்தனத்தோம் என்று சொல்லி வாழ்த்துப் பாடலுடன் தன் வில்லுப்பாட்டை துவங்கியிருந்தாள் கோமதி நாச்சியார். அவள் குரல் அவனை எட்டும் தூரத்தை தாண்டி பயணித்து கொண்டிருந்தான் அவன் வான நாயகன்.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி மக்களே ஒருத்தன் கூட பார்ட்டி பங்கஷன் சுத்தினதுல எபி எழுதல.
அவரு மகா கோபக்காரரு கூப்பிட்டா உடனே போகனும் ஒன்னும் மறுத்து பேச முடியாது. அவரு முன்ன போன் எடுக்கப்படாது மீறி எடுத்தா உடைச்சிருவார் அந்த அளவுக்கு கோபம். ஒரு வயசு ஆகுற பெரியமனுசன் அவரு மருமகன் வேற அதான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கலாம்ன்னு வாட் ட்டு டூ மீ பாவம் .
படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4


கோமதி நாச்சியார் அவளுக்கு வில்லுப்பாட்டு என்பது பொழுதுபோக்கு அல்ல கனவு. அதற்காகவே நாட்டுப்புற இலக்கியம் படித்தவள் அதை முறையாகக் கற்றுக் கொண்டவள். பாடியும் வருபவள். தனக்கென்று ஒரு வாழ்கை வந்தால் வருபவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்றே திருமணத்தை தள்ளிக் கொண்டுவந்தாள்.


வில்லிசைக் கச்சேரி முடிந்து மரியாதை செய்த விழா கமிட்டியை சார்ந்தவர்கள்

"ரொம்ப அற்புதமா பாடினீங்ம்மா. இன்னிக்கு பாடவேண்டியவன் இப்படி பண்ணுவான்னு நாங்க நினைக்கலத்தா .அந்த அய்யனார் தான் உங்கள கூட்டியாந்து (கூட்டிகொண்டுவந்து) நிப்பாட்டி பாட வைச்சது. ரொம்ப நன்றி மா இது எங்க சன்மானம் வாங்கிக்கங்க."

என்றதும் அவர்களை கும்பிட்டவள்

"இதுல என் கைல என்ன இருக்கு எல்லாம் அய்யனார் விருப்பம் என்றவள். "

பணத்தை நீட்டயவர்களிடம்

"இந்த விஷயம் ஐயா,அண்ணன்கிட்ட பேசிக்குங்க என்று விட்டு ஒதுங்கிக் கொண்டாள்."

என்ற

"ஐயா நாங்க கொடுத்து அத வாங்குத இடத்தில உள்ளவுக இல்ல தம்பி ஏதோ எங்களால ஏன்டது (இயன்றது) தாரோம்."

"வேண்டாம் என்று மறுக்க போனவனை"


"அய்யனாரு பணம் வேணாம்ன்னு மறுக்காம வாங்கிக்கங்க. அடுத்த முறையும் நீங்களே தான் வந்து கச்சேரி நடத்தனும்"


"அது நம்ம கைல என்ன இருக்கு அய்யனார் கையில இருக்கு. சரி நாங்க புறப்படுதோம் "

என கைகுவிக்க பதிலுக்கு விழா குழுவினரும் கரம் குவித்தனர். செந்தூரன் திரும்பும் முன்


"தம்பி தம்பி.. .என்று ஓட்டமும் நடையுமாக வந்தார் ஒருவர்.

"என்ன பெரிய்யா ஏன் இப்படி ஓடியாரிய (ஓடி வரீங்க) " என்ற குழு உறுப்பினரிடம்

"ஏம் யா வில்லுபாடுச்சில்ல அந்த புள்ள ஊருக்கு போயிருச்சா இல்லின்னா இந்த மட்டம் அவுகளையே நம்ம ஊருக்கு சொல்லிறலாம்ன்னு சுத்தமா நம்ம ஆளுவளுக்கு ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிறலாம்ன்னா அவனுவுவ ஒரு போல எம்படல (அகப்படவில்லை) வாரதுக்கு தேரம் (நேரம்) ஆயிட்டுல்ல அதான் ஓடியாரேன். போயிட்டாவளோ? ."

என்றதும் செந்தூரனை காட்டியவர்

"இல்ல சரியாத்தேன் வந்துருக்கிரு செத்த பொறுத்து வந்திருந்தாலும் போயிருப்பாவ இந்தா இந்த தம்பி தங்கச்சி தான் பாடுனது. மத்த விஷயம் எல்லாம் இவுக புறந்தேன்."

"அப்பாடி ரொம்ப நல்லதா போச்சு. வணக்கம் தம்பி எங்க ஊருஅம்மன் முப்பந்தல் கோயில் பிடிமண்ணெடுத்து கட்டுனது வார வெள்ளி கொடை வைச்சிருக்கோம் முளப்பாரிக்கே வரனும். எம்புட்டு கேட்ப்பீய என்னன்னு சொல்லுங்க"

என்று மூச்சுவிடாமல் கேட்ட கோமதி முகத்தில் ஒரு பிரகாசம் தனக்கு என்று ஒரு அடையாளம் அவளுக்கு விருப்ப துறையில் .


பெண்களில் வெகு சிலரே தன் மனவிருப்பதை அறிந்து அதற்கேற்ப்ப வாழ்வடைந்து பலர் தங்களை தகவமைத்து கொள்கின்றனர்.ஒரு சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து அதில் வெற்றிகரமாக பரிணமித்து வாழ்வது எளிதல்ல எந்த உயிரினத்திற்கும். அத்தியாவசியங்கள் தடையறக் கிடைப்பதே பெரும்பேறு எனுமான ஒரு பெண் உலகம் இன்னமும் கூட இருக்கிறது. நாச்சியாருக்கு ஒரு பெண் நல்ல செல்வவளம் இருந்தாலும் கல்வி தரப்பட்டது ஆனால் விருப்பங்கள் இதில் தனிப்பட்ட சிந்தனை செயல்பாடு எனும் தளம் இன்னும் சுதந்திரமாக்கப்படவில்லை


நாச்சியாருக்கும் அவள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறாது என்பது தெரியும். ஆயினும் போராவதற்கு சளைப்பதில்லை ஏனெனில் அவள் இந்த மானுடத்தில் போரடுபவர்கள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை புத்தகங்கள் அல்ல முந்தையதலைமுறை கற்றுக்கொடுத்திருந்தது. ஆகவே இதைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட போதே பல எதிர்ப்புகளை தாண்டித்தான் கற்றுக் கொண்டது.

ஏற்கனவே அவள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டதற்க்கே


"நம்ம ஆரு தகுதி என்ன எல்லாம் தெரிஞ்சவதான நீ மரியாதை வாங்குத இடத்துல பொறந்துட்டு பாடுதேன் ஆடுதேன்னுட்டு அலையுத ஏதோ தொழிலபாரு இல்ல இந்த கம்பிணியூட்டர தட்டு அதுவும் இல்லையா இருக்க தோப்பு தெரவ பண்ணயம் பண்ணு அதுவாது போற இடத்துல உதவும் இது என்ன என தவமணி மறுத்துவிட்டார்."


"சொல்விளங்கு எனக்கும் ஆத்தா சொல்லுதது சரியாத்தாம் படுது. " என்றவர். மகள் கண்கலங்குவதை பார்த்துவிட்டு குழைந்துபோய்விட்டார். என்ன செய்ய என்று யோசித்து நின்றவரிடம் செந்தூரன் தான்


"அது என்ன வெளியூருக்கு போறேன் அது இதுன்னா சொல்லுது.இல்ல வேறு ஏதும் தப்பா கேட்க்கா.? சாமிக்கு பாடுதேன்ன்னு தான சொல்லுது.நம்ம முத்துசாமி அய்யா வீட்டுல தான போய் படிச்சிகிடட்டும். எப்படியும் நாம நாளைக்கே வா கல்யாணம் செஞ்சி வைக்க போறம் பாத்து (பார்த்து) பெறக்கி தான(பொறுக்கி - ஆராய்தல்) செய்யனும். அதுமட்டும் (அதுவரைக்கும்) போட்டும்."

என்றதில் தான் அவள் படித்தது. இன்று பாடியதும் அவனது தலையீட்டில் தான் இதில் அடுத்த வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கவோ மறுக்கவோ அவளுக்கு உரிமை இல்லை.


"இங்க பாருங்க இது எங்களுக்கு பொழப்பு இல்ல ஏதோ ஆசப் பாட்டுக்கு பாடுது அம்புட்டுத்தேன்."


என சற்று காட்டமாகவே பேசியவன். வெளியே வந்து விட்டான்.என்ன சொல்வானோ என அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்ற நாச்சியார் வாடிப்போனாள். அவள் முகத்தை பார்த்தவனுக்கும் மனம் இல்லை மறுக்க. தங்கை மேல் பாசம் கொண்டவன் தான் ஜமீன் பரம்பரை என்ற தகுதியைவிட்டு தரவும் இயலாது இப்படி பணத்திற்கு பாடுவது வழக்கம் ஆகிவிட்டால் அது அவளது கலைக்கான தரத்தை மட்டும் அல்ல அவர்களுக்கான மரியாதையையும் குறைத்துவிடக் கூடும் என்ற எண்ணம் அவனுக்கு. அதற்குள் அவரை சற்று தள்ளி இழுத்துக் கொண்டு போன ஒருவன்


"யோவ் கூறுகெட்ட தனமா பேசாத அவுக யாரு என்ன வகையறா தெரியுமா? நெற்கட்டான் செவ்வல் ஆளுக இந்த புள்ள பாடும்னே எங்களுக்கு தெரியாது. நேத்து இப்படி ஆவும்ன்னு நினைக்கல எங்களுக்கு ஒன்னும் ஓடல. பொறவு முத்துசாமி இவுகள கேட்க சொன்னாவ நம்ம குலசாமிக்குன்னதும் தான் ஒத்துகிட்டாவ நீ என்னமோ உன் துட்டுக்கு நாக்க தொங்கவிட்டு அலையுத மாதிரி கூப்புடுத என்ன ஆளுய்யா நீ ஒரு சோலிக்கு வாரவட்ட கொஞ்சம்பதவிசா பேசுனும் . இல்ல வேற யாரையாவது விட்டு பேசச் சொல்லும்."


அவர் தலையை தொங்கப் போட்டு கொண்டு போக

"இப்ப என்ன செய்ய? நான் வேணும்னு பேசல ஏதோ பாடுதவுகதானன்னு நினைச்சிட்டேன்."

"அந்த நினைப்ப தான் தூர வைய்யும்ங்கேன் யாரு எப்ப எங்க இருப்பாவன்னு தெரியாது அதனால எல்லாருட்டயும் ஒரே சமதையா (சமமா) பேசிப் பழகும்."

"சரி டே பொறவு எனக்கு அறவுரை சொல்லு அந்தா போறாறு பாரு பேசி முடி வா."


என இருவரும் மீண்டுமாய் செந்தூரனிடம் வர "ஐயா சித்த பொறுங்க இவருக்கு உங்க பத்தி தெரியாது அதான்."

"ஆமா தம்பி மன்னிச்சிகிடுங்க."


"நான்னு இல்லீங்க எந்த கலைஞனுக்கும் மரியாதை முக்கியம். துட்டு இரண்டாம் பட்சம் அதான் அதன் சன்மானம்ன்னு சொல்வாங்க வேலைக்குகூலின்னு சொல்ல மாட்டாக . இவரு என்னமோ வயலுக்கு ஆள் கூப்புடுத மாதிரியில்ல கூப்புடு தாரு."


"சரிய்யா தெரியா சொல்லிட்டேன்ங்கா வல்லா மாறி மாறி பேசி என்ன பிரயோசனம். சாமி காரியம் தம்பி வந்து முடிச்சி கொடுங்க."


"இது என் போன் நம்பர் ஊருக்கு போய் அவங்ககிட்டயும் இன்னோருக்க பேசிட்டு போன் பண்ணுங்க பார்த்துக்கலாம். இப்ப கொஞ்சம் முக்கியமான சோலி ஒன்னு இருக்கு வரட்டுமா"

என்றவன் கைகுவித்து ஜீப்பில் ஏற இவர்கள் விலகி அவனுக்கு கரம் குவித்தனர்.


கோமதி நாச்சியாரோ மனவருத்தத்துடன் உட்கார்ந்து இருந்தாள். அடுத்த வாய்ப்பு என்று மட்டும் தான் தெரிந்தது. அவளுக்கு பணம் முக்கியம் இல்லை. செந்தூரன் பேசும் போது தள்ளி நின்று கவனித்தபோது தான். தனக்காகத்தான் பேசியிருக்கிறான். இருந்தாலும் நம்மகிட்ட சொன்னா என்ன வாம் என்று சுணக்கம் வர போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.


பணியிடத்தில் சந்திப்புகளில் இருந்தவனுக்குள் ஒரு ஒரமாய் நாச்சியார் நினைவு எழுவதும் அமிழ்வதுமாய் இருந்தது. என்னவாம்? இவளுக்கு? உள்ளும் புறமுமாய் நின்று நெய்கிறாள் என்னை . இனி அவள்ளில்லாமல் முடியாது என்று தோன்றிவிட சிறு புன்னகை அவள் அவன் வாழ்வினுள் ? எப்படி இருக்கும்? இனி? என்பதான சிந்தனைகள் சித்தம் முழுவதும் மறைக்க அவனது பித்தம் அவள் மீது என்பதை வெளியே பெற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது.அவன் செயல்


காலை உணவுக்கு தட்டில் உட்கார்ந்து இருந்தவனுக்கு

'அன்னிக்கு என்னவோ சொல்ல வந்தா என்னவா இருக்கும் கேட்கனும்.அவ போன் நம்பர் யாருகிட்ட கேட்கலாம் ' என்று உள்ளே ஓடிக்கொண்டிருக்க


விசாலாட்சி


"என்னப்பா இட்லி வைக்கவா?"


"இல்லமா மோர் போதும். என்னனு கேட்கனும்"

"தம்பி நான் என்ன கேட்கறேன் நீ என்ன சொல்ற?"

என்றாவறு தட்டை வைக்க சட்டென நினைவுக்கு வந்தவன்

"ஸாரி மாம் ஏதோ நினைப்புல ?"

"ம் ம் தெரியுது உங்க நினைப்பு? அவுகிட்ட தேதி குறிக்க கேட்டுறலாமா."

என்றதும் அவனின் புன்னகை அவன் மனதை கூறிவிட .முருகா… என்று விசாலாட்சி மகிழ்வுடன் பூஜையறைக்கு ஓடியவர் இறைவனை வணங்கிவிட்டு திருநீற்றுடன் வந்தவர் அதை அவனுக்கும் பூசிவிட்டார்.


கந்தைய்யா "எப்பா அந்த ராகவன் என்ன சொல்லறான் பேசினானா?"

"அவன் பேசறது இருக்கட்டும் முத நீங்க தங்கச்சிக்கு போனப் போட்டு பேசுங்க ?"

"யாரு ஞானத்துக்கா ஏன் என்ன ஆச்சு ?"

"எதவாது ஆனாத்தான் பேசனுமா? ஆகனும்னாலும் பேசலாம்?"

"அவளால நமக்கு என்ன ஆகனும்?"

"பாத்துக்கப்பா உங்கப்பாவோட அறிவுத் திறமைய?"

மகனுக்கு பொண்ணு பார்க்க போனமே மேற்கொண்டு என்ன ஏதுன்னு கேட்கனும் தெரியாது ஒரு மனுசனுக்கு."

"அதுக்கு உன் பையனுக்கு பிடிச்சிருக்கானு கேட்கனும்?"

"கேட்டு அவனுக்கு நினைப்பு இங்க இல்லை அங்க இருக்குன்னு தெரியப்போய்த்தான் பேசச் சொல்றேன்னு சொல்லுடா."

"நான் வரல உங்க பஞ்சாயத்துக்கு…" என்று சிரித்தபடியே எழுந்து சென்றுவிட்டான்.

"நிஜமாவா விசாலம். ஒகே சொல்லிட்டானா ?"

"ம் அப்ப நாம ரெண்டு பேரும் நேர்ல போய் பேசி முடிச்சிட்டு தேதி குறிச்சிட்டு வந்துடுவோம் ஞானம் அங்க தான இருக்கு."

"சரிதான் அப்ப போன்ல சொல்லுங்க வார வெள்ளி நல்ல நாளா இருக்கு.அவுகளுக்கு தோதுப்படுமான்னு கேளுங்க"


" இதோ …" என்றபடி எழும்ப

"ஏங்க சாப்பிட்டு போங்க."

"அதுவும் சரிதான். நீயும் உட்காரு இரண்டுபேருமா சாப்பிடுவோம்"

எனவும் விசாலாட்சியும் அமர்ந்து கொண்டார்.


வாகனத்தில் சென்று கொண்டு இருந்தவனுக்கு அம்மா பார்த்து கரட்டா கேட்டுட்டாங்க அவ்வளவு

தூரத்துக்கா அவ நினைப்புல சுத்துறேன். என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவனுக்கு அப்படித்தான் என்பதில் சற்று விரிய வா என்ற நகைப்பை கண்களுக்கும் தாடைக்குமாய் கடத்தியதில்

முகம் பளபளத்தது.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



அத்தியாயம் 5


தனது இறுதி தேர்வை முடித்து விட்டு வெளியே வந்த மணோண்மணிக்கு தேர்வு துரத்தல்கள் முடிந்துவிட்ட நிம்மதியில் மூச்சை இழுத்து ஒருமுறை வெளியே விட்டவள் இனி இந்தக் கல்லூரிக்கும் தனக்கும் இடையே தொடர்பு தீனமாகி தேய்ந்து போய் விடும். அதன் மூலமாக கிடைத்த பாடங்களும் நன்பர்களும் மாற்றுகருத்துடையோர்களும் இந்த பரந்த உலகின் சிறிய மாதிரிதான் இனி வெளி உலகை சந்தித்தாக வேண்டும். என்று தன் போக்கில் யோசித்து கொண்டுவந்தவள் முதுகில் விழுந்த தோழியின் கையில் திடுக்கிட்டு திரும்ப அவள் தோழி

"ஏய் நான்தான் பதறாத இன்னிக்கு லாஸ்ட் டே ல்ல அதான் படம் பார்த்துட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு போகலாம்ன்னு நீயும் வரியா"

"கிளாஸ்ல எல்லாரும் வர்ராங்களா?"

"ம் ஆமா "

"எப்ப பேசினீங்க நேத்து ராத்திரிகூட ஒன்னும் சொல்லலையே.?"

"இங்க வந்த அப்புறம் தான் முடிவு பண்ணிணோம் நீ நேர ஹாலுக்கு வந்தியா அதான் இப்ப கேட்கறேன்.?"

"நான் வீட்டுல கேட்கனுமே? என்றவள் தனது அலைபேசியில் இருந்து பூவரசிக்கு அழைக்க.

"அதெல்லாம் தனியா ஒரு பக்கமும் போகக் கூடாது பரிட்சைய எழுதிட்டில்ல வீட்டப் பார்த்து வா என்று சொல்லி வைத்துவிட."

அவளுக்கு மனம் கணத்து போனது மீண்டும் முயற்சித்தவள் அழைப்பு ஏற்க்கப்பட்ட உடன் "இப்ப என்ன கேட்டுட்டேன் ஒரு படம் ஒரு ஹோட்டல் அதுக்கு கூட சுதந்ததிரமில்லயா நீங்க நினைக்க மாறி வளர்ந்து நீங்க சொன்னதயே படிச்சி நீங்க சொன்னவனை கட்டி இப்படி உங்க ஆசப் பாட்டுக்கு நடக்க நாங்க என்ன பொம்மையா இப்படி வாழறதுக்கு பேசமா சாவலாம்." என்று ஆத்திரத்தில் பொங்கிவிட்டாள்.

"ஏய்"

என்ற செந்தூரனின் உறுமலில் அவளுக்கு இவ்வளவு நேரமும் தான் பேசிய அனைத்தும் அவனிடம் தான் என்பது புரிய பதட்டமாகிப் போனவள் அருகில் இருந்த மரத்தடியில் அமர்ந்து விட்டாள்.

"ஏய் என்ன ஆச்சு அம்மா என்ன சொன்னாங்க.?"

"ம் சொன்னாங்க போடி ."

"நான் வேணா பேச வா ."

"ஒன்னும் தேவையில்ல நா வீட்ட பார்த்து போறேன் எனக்கு தலை வலிக்குது இன்னோரு நாள் நாம பேசி வைச்சிட்டு போவோம்."

"ஏய் என்னட்டி எல்லாரும் சேர்ந்து போற மாதிரி வருமா?"

"அதான் சொல்றேன்ல இன்னிக்கி நான் வரல நீங்க மட்டும் போங்கன்னு சும்மா நைநைன்னு அதையே புடிச்சி தொங்கிட்டு."

என்று சுள்ளென்று விழுபவளிடம் மேற்கொண்டு என்ன பேச முடியும். என்று தோழியும் விலகி சென்றுவிட இதற்குள் நான்கைந்து முறைகள் அழைத்து இருக்க அவளோ எடுக்கவும் இல்லை. அவள் மனதின் முனுமுனுப்பு குறையவும் இல்லை. நேரத்தை பார்த்தவள் பேருந்தை தவற விட்டு இருந்தாள்.

"இந்த பஸ் வேற போய் தொலைஞ்சிருக்கும் ச்சை அங்க போய் காத்துகிடக்கனும்".

என்று புலம்பியவள் சற்று நேரம் கழித்து செல்வதற்க்காக அங்கேயே அமர்ந்துவிட்டாள். காலையில் சாப்பிடாமல் வந்தவளுக்கு பசி வேறு வயற்றை கிள்ள கையில் இருந்த உணவு பெட்டகத்தை திறந்தாள் . இட்லிகளும் எள்ளுப் பொடியும் அவளை வா வா என்றதில் உண்டு முடித்தவள் கைகழுவிவிட்டு வந்து கொண்டு இருந்தாள்.

"ஏட்டி மனோ உங்க வீட்டுலர்ந்து உன்னைய கூட்டிட்டு போக உங்க வீட்டுலர்ந்து வந்துருக்காங்க."

என்று மதியம் தேர்வுக்கு வந்தவள் கூற

"வீட்டலர்ந்து யாரு?"

" வெளிய நிக்கறாங்க போ போய் பாரு ." என்றவள் தனது தேர்வு அறைக்குள் நுழைந்து விட . மணோண்மணி தனது பையுடன் வாசலை நோக்கி விரைந்தாள்.


செந்தூரன் தனது வாகனத்துடன் காத்து நின்றான். அதில் முகப் பொலிவு பெற்றாலும் அவன் அலைபேசியில் அவன் உறுமியதும் மனதில் வந்தது. கூடவே கோபமும். பேசாமல் வந்து வாகனத்தில் ஏறியவளிடம் அவனும் எதுவும் பேசாமல் வாகனத்தை ஓட்டியவன். சாலையில் இருந்து பிரிந்து சற்று ஓரமாக நிழலில் வாகனத்தை நிறுத்தியவன். திரும்பி அவளை முறைக்க பதிலுக்கு மனோண்மணியும் முறைத்தாள்.

"வார ஆத்திரத்துக்கு காத்து வாக்கல ஒன்னு வுடனும் பொம்பள புள்ளையா போய்ட்ட . என்ன பேச்சு பேசுத."


"பொறவு என்ன கேட்டேன் பெரிசா நான் என்ன நிதமும் அங்க போறேன் இங்க போறேன்னா சொல்லுதேன் இல்ல ஒவ்வொரு வீட்டுல போற மாறி சொல்லாம கொள்ளாம போறனா எதோ ஆசைபட்டு கேட்டாங்களேன்னு கேட்டா."


"அதுக்கு பொசுக்ன்னு என்ன வார்த்தை சொல்லுத அறிவு இருக்கா உனக்கு அத்தை முகமே செத்து போச்சு. மறுபடி மறுபடி போன் போட்டா எடுக்கியா நீ"


" இப்படி ஒன்னுன்னுக்கும் கையெழுத்து போட்டுட்டு தான் போகனும்னா அந்த அளவுக்கு கூட நம்பிக்கையில்ல அப்படித்தான ?"

"நம்பிகையில்லாமத்தேன் ஒன்னய படிக்க வைக்க தினம் பஸ்ஸேத்தி அனுப்பி வைக்கிறாகளா."


"எதுக்குங்கறேன் படிக்க வைக்கனும் அப்படி மானங்கெட்ட வாழ்கை வாழறதுக்கு போய்சேரலாம்."


"ஏய் என்று ஒரு அறை விட,, அதில் அவள் கண்களில் பூச்சி பறக்க அலங்க மலங்க நின்றாள்.


"நானே அங்க மதிக்கு வெள்ளிக் கிழமை பூவைக்க வாராக அவ முகமே சரியில்ல என்ன ஏதுன்னு புரியாம அல்லல்படுறேன் இது இவ வேற சாகறேன் சாகறேன்னு போ போய் சாவு கூடவே என்னையும் கொன்னுறு. "

"மாமா என்று வாயை மூடியவள். நான் தெரியாம கோபத்தில பேசிட்டேன் அதுக்கு தான் அடிச்சிட்டீகல்ல அப்புறம் எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம்."

"நீ பேசயில தெரியலயோ."

"நாங்க பொம்பளைக ஏதோ பட படன்னு இரண்ட பேசிட்டு மறந்துருவோம் அதுக்குன்னு நீங்க இப்படி பேசுவியளா."

என்றவள் அவன் நீட்டிய தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு அதை இரண்டு மடக்கு பருகியவள்

"இனிமே இந்த மாதிரி ஆ ஊன்னா மேல கைய வைக்க சோலிய பார்க்காதீரும். எந்நேரமும் நான் ஒரே போல் இருக்க மாட்டேன்."

"திருப்பி அடிச்சிருவியாக்கும். "

"பின்ன வாங்கிட்டு நிப்பேன்னு பார்த்தியளோ ஏதோ நான் சொன்ன வார்த்த குத்தமா இருக்க கண்டு பேசமா இருக்கேன்."

என்றவள்

"மன்னிச்சிக்க மனோ இனிமேற்கொண்டு இப்படி நினைவில்லாம கூட பேசாத உள்ள பதறுது."

என்றவன் கைகள் அவள் கன்னங்களை ஆராய மேலே எழ அதை கட்டுப்படுத்தியவன் கண்களால் அதைச் செய்ய அதைக் கண்டு கொண்டவள்

"லேசா தடுத்துருக்கு (வீக்கம்) அத அப்புறம் போவும். இப்ப என்னவாம் உம்ம தங்க தங்கச்சிக்கு."


"அதுக்கு மாப்பிளைய புடிச்சிருக்குல்ல."


"ஆமா ஏன் என்னாச்சி?"


"இல்ல வார வெள்ளிக்கிழமை நாள் நல்லாருக்கு பூ வைச்சி நிச்சயம் பண்ணிட்டு முகூர்த்த பட்டோலை எழுதிறலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். இவ என்னடான்னா என்னவோ மாதிரியே இருக்கா. இரண்டு நாளா காய்ச்சல் வேற"


"தெரியலையே நீங்க எதும் சொன்னீகளா.?"

.

"அது சரி எங்கிட்டத்தின் வீரத்த காட்ட இயலும் அங்க முடியுமா?"

என்றதும் அவளை முறைக்க

"என்ன பார்வை உண்மையத்தான சொன்னேன்.?"

"ஆமா பெரிய உண்மை விளம்பி ? நானே குழப்பி போய் இருக்கேன். இவ வேற.?"

"எனக்கு தெரிஞ்சி அவளுக்கு அண்ணன புடிச்சிருக்கு என்றவள். ஒரு வேளை பயமா இருக்கும்."

"என்ன பயம் ?"

"அது புது இடம் என்ன செய்ய ஏதுன்னு?"

என்றவளுக்கு அவள் தனது கனவை குறித்து தான் பயம் கொண்டு இருக்கிறாள் என்பது தோன்றவில்லை.

அதில் சற்று தெளிந்தவன் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு.

"சரி வா ஏறு உன்னைய வீட்டுல இறக்கி விட்டுட்டு அத்தைய கூட்டிட்டு போகனும். என்றதில் வாகனத்தில் ஏறிக் கொண்டாள்.



வெளியில் இருந்து உள்ளே வந்த சொல்விளங்கு

"கொஞ்சம் தண்ணி கொண்டாத்தா." என்றவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.


கோமதி நீரை எடுத்து வந்து தந்தவள் உள்ளே சென்று விட. "ஏதோ பத்திரிக்கைக்கு போட்டோ வேணு|மாம் சேர்ந்தால நின்னு எடுக்கனும்ன்னு கேட்டாக ."

"அது எப்படி நிச்சயம் கூட முடியாம ?"

"அதத்தேன் நானும் சொன்னேன் ஆனா அவுக பூவைக் கறதையே நிச்சயமா மாத்திறலாம்ன்னு சொல்லுதாக. கல்யாணம் வேற மாப்பிளை வீட்டுலன்னு ஆகிப்போச்சு அதான் சரின்னேன். நம்ம மதி போட்டோ எதும் இருந்தா குடுவேன்."

"ஒன்னும் தேவையில்லை. சாதாரணமா செய்ங்க போதும்."

என்று விட்டு மேலே சென்றுவிட

"ஏட்டி என்ன வாய் ரொம்ப நீளுது."

"விடு விடு அது மனசுக்குள்ள என்ன வருத்தமோ நமக்கு இருக்காக்கல தான அதுக்கும். போ போய் வேலையப் பாரு. "

என்றதில் தவமணி உள்ளே சென்று விட்டார்.

கோமதியோ கோபத்தில் இருந்தால் "ஒரு மனுசி ஏதோ சொல்ல வந்தாளே என்ன ஏதுன்னு கேட்போம்…ம்ஹூம் ஒரு மண்ணும் கிடையாது. இந்த அழகுல இவருக்கு போட்டோ ஒன்னுதான் கேடு என்றவள் அவன் அவளைக் கேட்டு அனுப்பியிருந்த குறுஞ்செய்திக்கு பதிலளிக்கவில்லை. அலைபேசியை தூக்கி ஒரமாக போட்டவள் அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள்.

இங்கே தவமணி திருமணத்திற்க்கு சம்மதிக்கவில்லை என்றால் கச்சேரிக்கும் போக வேண்டாம் என்று கூறிவிட வேறு வழியின்றி சம்மதித்து இருந்தாள். அது வேறு அவள் ஆத்திரத்தை கிளறியிருந்தது. அதை அதிகரிக்கவென்றே வந்தான் அவன் வான நாயகன்.




"வான நாயகன் நல்லா வைச்சிருக்காய்ங்க பெயரு. ஆளும் மண்டையும் ."

என்று அவள் சலித்து கொள்ளும் அளவுக்கு அந்த ராயல் என்ஃபீல்டு வண்டியில் இருந்து இறங்கிய அவன் இல்லை. அவளும் எல்லாரையும் இப்படி சினந்து கொள்வதும் இல்லை.


"வாங்க ய்யா வாங்க"

என்று தவமணி எழுந்து கொள்ளவும்


"இருக்கட்டும் அத்தை"

என்றவன் கண்கள் அமர இடம் தேடி அலைந்தது. அதைக் கண்டும் நாற்காலி உள் அறையில் இருப்பது தெரிந்ததும் அதை எடுத்து தேடி வருபவர்களுக்கு போட வேண்டும் எனும் நயத்தகு நாகரீகம் அறிந்தும்

'உன் முகரைக்கெல்லாம் நாற்காலியெல்லாம் எடுத்து போட முடியாது வேணும்னா நின்னுபேசு இல்ல போ'

என்றரீதியில் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபக்கம் செல்ல போனவளை

"ஏ மதி அந்த நாற்காலிய எடுத்தா."

என்றவர். மகளை பார்த்த பார்வையில் என்ன பழக்கம் இது ? என்ற கண்டனம் தெரிய

இன்னும் பல பிரச்சனைகளுக்கு இது முன்னுரையாக வேண்டாம் என்று அவள் நகர அதற்குள் தவமணி தானே நாற்காலியை எடுத்து போட்டிருந்தவர்

"போய் விரசா காபி தண்ணிய போட்டு எடுத்துட்டு வா"

என்றவர் அவள் பதிலுக்கு காத்திருக்காமல் அவன் புறம் திரும்பி

"அப்புறம் சொல்லுங்க தம்பி என்ன விஷயமா வந்தீங்க? வீட்டில் அண்ணன் மதனி எல்லாரும் எப்படி இருக்காக."

என பேசத் துவங்கி விட . அவனும் ஏதோ மெல்லொலியில் பதிலுறுத்த படி கண்களால் மின் விசிறியையும் அவளையும் பார்க்க அவளோ

"ஆமா இவரு பெரிய மகாராசா துரை கண்ணுல ஏவுனத நாங்க கைல செய்ய னும் போடா"

என முனுமுனுத்தவள் அவனைக் காணாதவாறு உள்ளே செல்ல போனாள்.


"ஏ மதி அந்த ஃபேன சித்த போட்டு விட்டுட்டு போ"

என்றதில் அவன் கண்களின் சிரிப்பு இவளை சீண்டியிருந்தது.அதில்


"இன்னிக்கு முச்சூடும் கரண்டு வராதாம் மா"

என்றவள் கண்களில் பதிலுக்கு சவால் ஏறியிருந்தது


"ஏம்ட்டி என்ன கேடாம் அவனுகளுக்கு?"


"என்னு கேடுன்னு விசாரிச்சுட்டு காபி தண்ணி போட்டா போதுமா?"

என்றவள் பாவனையில் இப்போது கேலி

"அப்ப அந்த இன்வெர்ட்டர்ல இது ஓடாதாட்டி"


" ம் ஓடாது"


"என்ன இன்வெர்ட்டரோ என்ன கரண்டோ அம்புட்டும் தண்டம். மேல சொருகியிருக்க விசிறி எடுத்து தந்துட்டு போ. வேவுது "


என்றதில் ஓட்டுக்கும் அதை தாங்கவென இருந்த மரக்கழிகளுக்கும் இடையே சொருகியிருந்த விசிறியை அவள் உருவ போனவளை

"ஏ பூச்சி …"

என்று இழுத்து தன்னோடு நிறுத்தியதில் திகைத்து நின்று விட்டாள். பிறகு பாம்பு என்றால் பயம்வராமல் எப்படி

"எங்க தம்பி " என்ற தவமணிக்கு


"அந்த சன்னல் ஓரமா அத்தை போச்சுது "


எனவும் அவர் அங்கு சென்று பார்க்க. அந்த களேபரத்தில் சத்தம் வராமல் அவள் மீது போட்ட கையை அகற்றாமல் தனது அலைபேசியை எடுத்து அவர்கள் இருவரையும் சேர்த்து படம் எடுத்தவன் அவளைப் பார்த்து ஒற்றை கண்சிமிட்டியதில்.

அவள் இன்னும் முறைக்க அவள் காதில்


"கேட்ட உடனே போட்டோ கொடுத்து இருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்கு மா?"

என்று கிசு கிசுத்து அவளை தனலாக்கி விட்டு அதை தேடிக் கொண்டிருந்த தவமணியிடம் சென்றவன்

" அது போயிருக்கும் அத்தை நீங்க வாங்க."

"இருக்கும் இந்த செடி செத்தைக்குள்ள எங்க போச்சோ?"

என்றவரின் கண்கள் இன்னும் அந்த பாம்பை தேடியபடி இருந்தன.

"எப்படி இருந்திச்சு நல்ல பாம்பா இல்லை சாரையாக?"

"தெரியலை நான் நல்லா கவனிக்கலயே . சரி நான் கிளம்பறேன் வேலையிருக்கு."


"இருங்க ஒரு மடக்கு காப்பிய குடிச்சிட்டு போகலாம் ல"


"இல்ல பரவால்ல இங்குட்டு பக்கத்தில் ஒரு வேலை அதான் உங்கள ஒரு எட்டு பார்த்து போகலாம்ன்னு வந்தேன் வரேன். மாமாகிட்டயும் செந்தூரன் கிட்டயும்.எதும் வேணும்னா போன் பண்ணுங்க நானும் உங்களுக்கு செந்தூரன் மாதிரிதான்"

என்றவன் திரும்ப கண்கள் அவளிடம் சொல்லிகொண்டு சென்றன. அவளோ இதழ் சுளித்து அழகு காட்டினாள்.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 6


மணோன் மணி வீட்டினுள் " வாட்டி பூவரசி பெத்த மவளே "

"வந்தோம் வந்தோம்."

என்றவாறு உள்ளே வந்தவள் தனது தாய்மாமனை காணவும் கையில் சுத்திக்கொண்டிருந்த துப்பட்டாவின் நுனியை விட்டவள் முன் பின்னும் ஆட்டிக் கொண்டு வந்த தூக்கு வாளியை கீழே வைத்தவள் பதவிசாக நின்றாள்.

" சீமைத் துரைச்சி என்ன அலம்பாம நிக்க தாய்மாமன பார்த்ததுல வார்த்த வரல போல."

"ராசாத்தி உன்னைய …" என்று பல்லைக் கடித்தவள்

முறைக்க .

சொல்விளங்கு அதற்குள்" வாத்தா பரிட்சை எல்லாம் நல்லா எழுதியிருக்கியா? அது என்ன தூக்குவானில"

"ஆமா மாமா நல்லா எழுதியிருக்கேன் அம்மா முந்திரி கொத்து செஞ்சா அதான் கொண்டாந்தேன்."

" சரி சரி உள்ள உங்க அத்தை இருக்கா கொண்டு போய் கொடு."

என்றதில் விட்டால் போதும் என்று ஓட போக

"ஏத்தா மணி."

"சொல்லுங்க மாமா" என்று அங்கேயே நின்றுவிட

" இன்னும் இரண்டு நா(நாள்) தான இருக்கு அதுவரைக்கும் இங்கயே தங்கிக்க மதிக்கு கொஞ்சம் துணையா இருக்கும்."

"அம்மாகிட்ட. அப்பாகிட்ட…"

" நான் நேர்ல போறம்ல சொல்லிகிடுதேன்."

"சரிங்க மாமா " என்று விட்டு உள்ளே போகப் போனவளிடம் "அப்புறம் இன்னிக்கு நீயும் மதி கூட கச்சேரிக்கு போய்ட்டு வாத்தா."

"ம் சரி போய்ட்டு வாரேன்."

என்றவள் உள்ளே செல்ல அவர் ராசாத்தியிடம் திரும்பியவராக "இந்த பத்திரிக்கை எல்லாம் வந்துட்டு யாரு யாருக்கு தாரது (கொடுப்பது)"

"ரொம்ப சுருக்கமா கொடுத்தா போதும் யா கல்யாணத்துக்கு வெத்த பாக்கு சுருள் வைச்சு அழைக்கிற முறை ல இருக்கவுளுக்கு பொறவு கல்யாணம் எட்டி போச்சுல்ல அதான் அம்புட்டு பேரையும் கூப்புட வேண்டியதா இருக்கு இல்ல சுருக்கிறலாம்."

"எப்படியும் சுருள் வைச்சு கல்யாணத்துக்கும் தான் வரணும் மேலும் நல்லது நடக்க வீட்டில வந்து நின்னுகிட்டு எனக்கு தரல உனக்கு தரலன்னு (தரவில்லை) பேச்சு வரும் அது ஏன்?"

"சரிதான் யா அப்ப என்ன செய்யலாங்க?"

"நம்ம செந்தூரன் என்ன சொல்லுதாம்ன்னா மாப்பிளை வீட்டு ஆளுக நம்ப சொந்தம் அது போவ உள்ளூர் ஆட்களுக்கு மட்டும் சொல்லுவோம் மத்தவுகள கல்யாணத்துக்கு சொல்லிகிடலாம்ங்கான்."

"ம் சரியாத்தான் படுது."

" ஆமாஅதே அந்தா இந்தான்னு ஐநூறு ஆளுக வருது."

"இருக்கட்டுமேய்யா."

"ம் ஆமாத்தா அவளுக்கு செய்யாம வேற ஆருக்கு செய்யப் போறோம்.அப்ப நானும் செந்தூரனும் போய் பத்திரிக்கை வைச்சிட்டு வாரம்"

"ஏய் யா முத கோயில்ல சாமிக்கு வைச்சிட்டு விளக்கு முன்ன வைச்சி ஒரு பாயசம் வைச்சி கும்பிட்டு ஒரு பத்திரிக்கைய எடுத்து வைச்சிட்டு. உம் பொண்ட்டிய கூட்டிட்டு போய் அவ அண்ணன் தம்பிக்கு கொடுத்துட்டு பொறவு உன் தம்பி தங்கச்சி வைச்சிட்டு வா மத்தவுகளுக்கு வேணும்னா நீயும் உம் மகனுமோ கொண்டேய் (கொண்டு போய்) கொடுங்க ஆமா நம்ம சனத்துக்கு ஆம்பளையும் பொம்பளையுமா போய்த்தேன் அழைக்கனும் இல்ல பேச்சு வரும் ஆம்பளய மட்டும் தான அனுப்பி வைச்சிருக்காக அப்ப நீங்க மட்டும் போங்கம்பாளுக இல்ல இளந்தாரிய அனுப்பி விட்டுருக்காகம்பாளுக கல்யாணம் ஆகி இருந்தா வேற மாறி ஆளுக இல்லைன்னாலும் பரவால்ல நமக்கு வாய்ப்பும் இருக்கு எப்படி செய்யனும்னு தெரியவும் செய்யும்…"

" அது படி செஞ்சிறலாம். ரொம்ப முடியலன்னா நம்ம முத்தரசி மகனையும் மருமகளையும் அனுப்பலாம்."

"எங்கள எங்க அனுப்ப ப்ளான் போடுதீய மாமோய் என திருக்குமரனும் அவன் மனைவியும் உள்ளே வர."


"எல்லாம் நல்ல விஷயமாத்தான் நம்ம பாப்பா நிச்சய பத்திரிகை வைக்கத்தான்."

"இம்புட்டு தான முக்கிய ஆளுகளுக்கு நீங்களும் அத்தையும் கொடுங்க நம்ம வளவுல நாங்க பாத்துகிடுதோம். "

" சரிய்யா வா நாம போய் பத்திரிக்கைய வாங்கிட்டு கோயிலுக்கு போய் சாமிக்கு வைச்சிட்டு வாரேன். யாத்தா செந்தூரன் வந்தா அவுக வீட்டுலர்ந்து வருவாக மாப்பிளை கூட போய் மாப்பிள்ளைக்கு துணியெடுத்துட்டு வரனும்ன்னு சொல்லு ."


என்று பேசியபடியே சென்றுவிட ராசாத்தி


"ஏ தவமணி பத்திரிக்கை வாங்க போறான் கொஞ்சம் சக்கர பொங்கல் வைய்யித்தா விளக்கு முன்ன வைச்சி கும்பிட."


அவனைப் பற்றிய குறிப்புகள் கூர்மையாயிருந்த அவள் புலன்கள் சொல்விளங்கின் கடைசி வார்த்தைகளை உட்கிரகித்துக் கொண்டன. ஆனாலும்

வருவானா மாட்டானா என்று உறுதி செய்து கொள்ள மனம் ஆசைப்பட்டதை அறிவு ஒத்துக் கொள்ளவில்லை.எனவே தனக்கான காபியுடன் மெல்ல மேலே வந்தாள்.


அவன் வருவானா வந்தால் தன் மனதை கேட்பானா இன்னும் உரிமையாக பழகிடாத நிலையில் தன் கனவை எப்படி சொல்வது எப்படி புரிந்து கொள்வான்.

இல்லை வரமாட்டானா அப்ப ஏன் வரமாட்டான் நம்மள நிச்சய சேலை எடுக்க கூட்டிட்டு போவாகளா.

அச்சோ இன்னிக்கு கச்சேரி வேற இருக்கே அதச் சொல்லி எஸ்கேப் ஆகிட வேண்டியதான்


தனது அறையில் அந்த சிறிய பெட்டியினுள் தனது உடைகள் அலங்கார பொருட்கள் என அனைத்தையும் வைத்தவளுக்கு அவள் நினைவு மட்டும் அவளுடையதாக இல்லை. தன்னுள் உழன்று கொண்டிருக்கும் கேள்விகளுள் உள்ளே வந்த மணோண்மணியை கவனிக்கவும் இல்லை.

"ஏ கல்யாணப் பொண்ணு எப்படியிருக்க?"

என வந்தவள் கோமதி நாச்சியாரிடம் பதில் இல்லை. என்றதும் எழுந்து வந்து அவள் தோள் தொடவும்

"ஆத்தி யம்மா."

என அதிர்ந்து போனவள்

"நீதானா நான் என்னவோன்னு பயந்து போனேன்."

"அது சரி சும்மாவே உனக்கு கண்ணு தெரியாது என நினைப்பு வராது இதுல இப்பம் வந்தாதான அதிசயம்."


" ஏன்ட்டி நீ வேற போட்டு இம்சைபடுத்துத"


"ஏன் என்னாச்சிட்டி இரண்டு நாளா காய்ச்சல்னாக ?"


"என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு பயமா இருக்கு?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா அத்தை அண்ணன் எல்லாம் நல்ல மாதிரிதான் எதுவும் தப்பா நடக்காது பயப்படாத."

"அதுக்கில்லைட்டி எனக்கு பாடனும் அதப்பத்தி இன்னும் இவுக கிட்ட சொல்லல. இத ஒரு பெரிய விஷயமான்னு சின்னத்தை பெரியத்தை அப்பத்தா அம்மா எல்லாம் கனவு கட்ட மண்ணுன்னு நல்ல மனுசுங்கள தொலைச்சிடாத பாடி என்னத்த கிழிக்கப் போற தூக்கி போட்டுட்டு போற இடத்தில உனக்கு ஏத்த வேலைய பாத்து புத்தியோட பொழைங்காக.அருணா மதினியும் செல்வி மதனியும் இதை கல்யாணத்துக்கு பொறவு பக்குவமா உன் புருஷனுக்கு சொல்லு அதவிட்டுட்டு இப்பந்தான் சொல்லுவேன்னு நின்னு வாழ்கைய வம்பாக்காதாங்காக."


"ஓ சரி இப்ப என்ன செய்ய?"

"தெரியல"

"அதற்குள் "

"ஏட்டி மதி கொஞ்சம் கீழ வாரியா…"

என்ற தவமணியின் அழைப்பில் கலைந்தவர்களில் மணோன்மணி "வாட்டி போவம் வந்து பேசிக்கலாம் .உனக்காண்டி முந்திரி கொத்து கொண்டு வந்தேன்."

என்று அவளையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி மக்களே மன்னிச்சு காய்ச்சல் பல்வலி
கருத்து திரியில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 6



மணோன்மணி வீட்டினுள் நுழையவும் " வாட்டி பூவரசி பெத்த மவளே என்ற ராசாத்திக்கு

"வந்தோம் வந்தோம்."

என்றவாறு உள்ளே வந்தவள் தனது தாய்மாமனை காணவும் கையில் சுத்திக்கொண்டிருந்த துப்பட்டாவின் நுனியை விட்டவள் முன் பின்னும் ஆட்டிக் கொண்டு வந்த தூக்கு வாளியை கீழே வைத்தவள் பதவிசாக நின்றாள்.

" சீமைத் துரைச்சி என்ன அலம்பாம நிக்க தாய்மாமன பார்த்ததுல வார்த்த வரல போல."

"ராசாத்தி உன்னைய …எப்ப பதில் பேசமாட்டேன் தெரிஞ்சு பேசுது பாரு " என்று பல்லைக் கடித்தவள் அவரை முறைக்க அவரோ "சரிதான் போடி" என தன் போக்கில் இடித்த வெற்றிலையை வாயில் அதக்கினார்.அடுத்து அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளும் முன்


சொல்விளங்கு " வாத்தா பரிட்சை எல்லாம் நல்லா எழுதியிருக்கியா? அது என்ன தூக்குவாளில"

"ஆமா மாமா நல்லா எழுதியிருக்கேன் அம்மா முந்திரி கொத்து செஞ்சா அதான் கொண்டாந்தேன்."

" சரி சரி உள்ள உங்க அத்தை இருக்கா கொண்டு போய் கொடு."

என்றதில் விட்டால் போதும் என்று ஓட போக

"ஏத்தா மணி."

"சொல்லுங்க மாமா" என்றவள் கால்கள் அங்கேயே நின்றுவிட

" நிச்சயத்துக்கு இன்னும் இரண்டு மூனு நா(நாள்) தான இருக்கு அதுவரைக்கும் இங்கயே தங்கிக்க மதிக்கு கொஞ்சம் துணையா இருக்கும்."

"அம்மாகிட்ட. அப்பாகிட்ட…"

" நான் நேர்ல போறம்ல சொல்லிகிடுதேன்."

"சரிங்க மாமா " என்று விட்டு உள்ளே போகப் போனவளிடம்

"அப்புறம் இன்னிக்கு நீயும் மதி கூடபோய்ட்டு வாத்தா."

"ம் சரி போய்ட்டு வாரேன்."


என்று உள்ளே வந்தவள் தூக்கு வாளியை அடுப்படி மேடையில் வைத்தவள்

தவமணி அங்க இல்லை எனவும்

"யத்தே எங்கிட்டு இருக்கீய?"

"ஏம்ட்டி ஏலம் போடுத இங்கன விளக்கு பொறுத்திட்டு இருக்கேம் வா"

எனவும் தானும் அங்கு சென்று வணங்கியவளிடம்

"அந்த தார்சா (முன் அறை) லைட்ட சித்த போடு. "

என்று சொல்லி விட்டு வெளியே வந்தவர்.


காப்பி ஏதும் போட வா . வேண்டாம் அத்தை நான் மதிய பார்த்துட்டு வாரேன் வேணும்னா நானே போட்டுகிடுதேன் நீங்க சித்த உட்காருங்க.


என்றவள் மேல செல்ல அவர் வெளியே ராசாத்தியுடன் சென்று அமர்ந்து கொண்டார்.மேலே தனது அறையில் அந்த சிறிய பெட்டியினுள் தனது உடைகள் அலங்கார பொருட்கள் என அனைத்தையும் வைத்தவளுக்கு அவள் நினைவு மட்டும் அவளுடையதாக இல்லை. தன்னுள் உழன்று கொண்டிருக்கும் கேள்விகளுள் உள்ளே வந்த மணோண்மணியை கவனிக்கவும் இல்லை.

"ஏ கல்யாணப் பொண்ணு எப்படியிருக்க?"

என வந்தவள் கோமதி நாச்சியாரிடம் பதில் இல்லை. என்றதும் எழுந்து வந்து அவள் தோள் தொடவும்

"ஆத்தி யம்மா."

என அதிர்ந்து போனவள்

"நீதானா நான் என்னவோன்னு பயந்து போனேன்."

"அது சரி சும்மாவே உனக்கு கண்ணு தெரியாது என நினைப்பு வராது இதுல இப்பம் வந்தாதான அதிசயம்."


" ஏன்ட்டி நீ வேற போட்டு இம்சைபடுத்துத"


"ஏன் என்னாச்சிட்டி இரண்டு நாளா காய்ச்சல்னாக ?"

என்றவளில் செந்தூரன் கேள்விகள் அவள் அதை விடுக்கும் முன்னமே கோமதி நாச்சியார்


"என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு பயமா இருக்கு?"

என்று தன் தவிப்பை கூற மனங்கனிந்தவள்


"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா அத்தை அண்ணன் எல்லாம் நல்ல மாதிரிதான் எதுவும் தப்பா நடக்காது பயப்படாத."

என்று அவள் தோளை அனைத்து ஆறுதல் கூற

"அதுக்கில்லைட்டி எனக்கு பாடனும் அதப்பத்தி இன்னும் இவுக கிட்ட சொல்லல. அது தப்பு தான மறைக்கிறது இதுல நீ சொல்த நல்லவுகளா வேற தெரியுது அது இன்னும் கஷ்டமா இருக்கு. உறக்கம் வரமாட்டிக்கு "


"சரி சொல்லிட வேண்டிய தான"

"வேண்டாம்ன்னு சொல்லிட்டா ."

என்றவளின் அச்சம் அவளின் அங்கீகரிப்படாத காதல் என்ற உண்மையை உணராதவளால் இன்னும் அந்தக் காதலில் ஒன்ற முடியாமல் அவளை உறுத்தியது. ஆனால் தான் அவனை வரித்துவிட்டதால் தான் தனது கனவை அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு வேட்கை அதை நிறைவேற்ற அவன் தோள் கொடுக்க வேண்டும் என்ற ஆசை அதை அவனே கண்டு கொள்ள வேண்டும் என்ற ஆவல் .


தனது எண்ணத்தை கனவை எவனோ ஒருவனுக்கு தெரியவில்லை என்றோ அல்லது தெரிவிக்க வேண்டும் என்றோ ஏன் தான் அச்சமும் வேட்கையும் கொள்கிறேன் என்று ஆலோசித்து இருந்தாலே தான் அவனை வாழ்கையாக வரித்து விட்டதை உணர்ந்து இருப்பாள்.


"சரி அத்தை அம்மா மதனி என்ன சொல்லுதாவ?"


"ம்ப்ச் இத ஒரு பெரிய விஷயமான்னு சின்னத்தை பெரியத்தை. "

"அப்பத்தா, அம்மா எல்லாம் கனவு கட்ட மண்ணுன்னு நல்ல மனுசுங்கள தொலைச்சிடாத பாடி என்னத்த கிழிக்கப் போற தூக்கி போட்டுட்டு போற இடத்தில உனக்கு ஏத்த வேலைய பாத்து புத்தியோட பொழைங்காக."

".அருணா மதினியும் செல்வி மதனியும் இதை கல்யாணத்துக்கு பொறவு பக்குவமா உன் புருஷனுக்கு சொல்லு அதவிட்டுட்டு இப்பந்தான் சொல்லுவேன்னு நின்னு வாழ்கைய வம்பாக்காதாங்காக."


"ஓ சரி இப்ப என்ன செய்ய?"

என்றவளுக்கும் என்ன செய்வது தெரியவில்லை.

"தெரியல"

மற்றவளுக்கும் புரியவில்லை.

"அதற்குள் "

"ஏட்டி மதி கொஞ்சம் கீழ வாரியா கார் வந்துட்டு…"

என்ற தவமணியின் அழைப்பில் கலைந்தவர்களில் மணோன்மணி "வாட்டி போவம் வந்து பேசிக்கலாம் ." .

என்று அவளையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.


வாகனத்தின் ஓட்டம் போல் சீராக ஒரு புறமாக இல்லை அவளது மனதின் ஓட்டம் அது கனவுவிற்கும் கல்யாணத்திற்க்கும்மாக அலைக்கழித்தக் கொண்டிருந்தது. அவளது அந்த குழம்பிய மனநிலையை வாகனத்தில் இருந்து இறங்கவும் ஒதுக்கி வைத்தவள் கோவில் வளாகத்தின் உள் நுழைந்தாள்.

அவர்ளை

"வாங்கம்மா வாங்க எல்லாரும் வாங்க." என ஊர் தலைவர் வரவேற்கவும்.

"ஆமாங்க வணக்கம்."

என பதில் வணக்கம்

"இருங்க . " என்று அமர சொன்னவர் திரும்பி வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம்

"ஏலேய் முருகா கச்சேரிக்கு ஆளுக வந்துருக்காக காபி டீ ஏதாச்சும் வாங்கியா."

எனவும்.

"பரவாயில்ல இருக்கட்டும்ங்கய்யா. அம்மன பார்த்துடலாம் அப்புறம் தான் எல்லாம்."

என்றார் அதில் இருந்த வயதான பெரியவர் ஒருவர்

"சரி வாங்க "

என்று உள்ளே அழைத்து சென்றனர். அதன் பிறகு அவள் மனம் எதுவும் சிந்திக்க நேரம் இல்லை.


தானே சொந்தக்காரனகவும் ஓட்டுநராகவும் இருக்கும் ஒருவனது வாகனமும் அதைச் செலுத்தும் முறையும் எவ்விதம் அவன் வசமோ அவ்விதமே வான நாயகன் அவன் அகம் புறம் எல்லாம் அவள் புறமாக அதை அறிந்தே வாகனத்தை செலுத்திக் கொண்டு இருந்தவனுக்குள் அன்றைய நிகழ்வுகள் அவளது கோபம் அது இப்போது கூட அவனுக்குள் சிறு புண்ணகையை கொண்டு வந்தது. தொடந்து வந்த அவளது கன்னத்தின் மென்மை அவன் இதழ்களில் இன்னும் இனிமையாய் என்ன கோபம் வருது?

ம் ஆமா ஏதோ சொல்ல வந்தாளோ?

ம் அவளே சொல்லட்டும் ? என்னவா இருக்கும் என்றவனின் கவனத்தை செந்தூரனின் அழைப்பு கலைத்தது.


"சொல்லுங்க மச்சான். எப்படி இருக்கீங்க"

"நல்லா இருக்கேன். நீங்க வீட்ல அத்தை மாமா எல்லாரும் எப்படி இருக்காங்க. வீட்லயா இருக்க இல்ல ஏதாவது வேலையா இருக்கியா"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன் என்ன விஷயம் திடீர்ன்னு இந்நேரத்துக்கு கால் பண்ணியிருக்க?"

" நாளைக்கு பட்டு உனக்கு ட்ரெஸ் எல்லாம் எடுக்கனும் நீ அத்தை மாமா எல்லாம் வந்தா இங்கன திருநெல்வேலில எடுத்துறலாம்."

"அது என்ன ட்ரெஸ் .ஏன் அவங்க அவங்க எடுத்தா என்ன.?"

"இல்ல பொண்னுக்கு பையன் வீட்லயும் பையனுக்கு பொண்ணு வீட்லயும் எடுக்கனும் அதான் முறை இரண்டு வீட்டாளுகளும் சேர்ந்து ஒரே இடத்தில் எடுத்தா அவங்களுக்கு புடிச்ச மாதிரி போகும் ல ."

"ஓ " என்று தனது வேலைகளை யோசித்தவன்

"ஒகே நான் வரேன் அம்மா அப்பாக்கு "

" நான் அத்தை மாமாக்கு ஏற்கனவே சொல்லிட்டேன். அப்புறம்"

"என்ன சொல்லுங்க ? "

"இல்ல உங்களுக்கு… உனக்கு…?"

"டேய் என்னடா நீ நான் எப்பவும் உன் ப்ரண்ட் தான்டா."

"இல்லடா உனக்கு மதிய பிடிச்சி தான"

"இல்லைன்னா என்ன யாரவது கம்பல் பண்ண முடியுமா?"

"முடியாது இல்ல வந்து அவ அவளுக்கு "

"நோ டா சொல்லாத அவள பத்தி எதுனாலும் அவ சொல்லனும் இல்ல நானா தெரிஞ்சிக்கனும்."

என்றதில் அவள் மீதான அவனுடைய உரிமை உணர்வும் பிடித்தத்தையும் தெரிந்து கொண்ட செந்தூரனின் மனம் தங்கையின் வாழ்கை பற்றிய சஞ்சலம் நீங்கியவனாக சற்று சத்தமாகவே புன்கைத்தவன்.

"சரி டா நாளைக்கு நேரில பாக்கலாம்."

என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்


கோமதி நாச்சியாரோ


" தானானை தானானை தானானை தானானை


வேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சு

வட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறு

ஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்து

மாட்டாந்தொழு தெறந்து மாட்டெருவு அள்ளிவந்து


கடுகுலயுஞ் சிறுபயறு காராமணிப் பயறு

மிளகுளயுஞ் சிறுபயறு முத்தான மணிப்பயறு

மொளபோட்ட ஒண்ணா நாளு ஓரெலையாம் முளைப்பாரி

ஓரெலைக்குங் காப்புக் கட்டி ஒருபானை பொங்கலிட்டு

முளைப்பாரி போடுங்கம்மா முத்தாலம்மனைப் பாடுங்கம்மா

தானானை போடுங்கம்மா தையலரே ஒருகுலவை"


எனப் முளைப்பாரி கும்மி பாடும் அவளும் தன் மன் மண்ணில் காதல் விதைகள் ஊன்றி ஆசை நீர் ஊற்றி வெட்க இருளின் மறைத்து வளர்க்கிறாள் . வான நாயகன் அவன் தன் வெளிச்சம் இட்டு எண்ணங்களின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் சேர்ப்பானோ.



ராசாத்தி காலையில் குளித்து விட்டு திருநீறு அணிந்து முன் அறையில் இருக்க அவரிடம் வந்த

சொல் விளங்கை கண்டவர்

"என்னய்யா இங்க கிட்டு இரு"

என ஆசனத்தைக் காட்ட


"ஒன்னு மில்லத்தா இந்த பத்திரிக்கை எல்லாம் வந்துட்டுன்னா யாரு யாருக்கு தாரதுன்னு(கொடுப்பது) தான் ஆலோசனை"


"ரொம்ப சுருக்கமா கொடுத்தா போதும் யா கல்யாணத்துக்கு வெத்த பாக்கு சுருள் வைச்சு அழைக்கிற முறை ல இருக்கவுளுக்கு பொறவு கல்யாணம் எட்டி போச்சுல்ல அதான் அம்புட்டு பேரையும் கூப்புட வேண்டியதா இருக்கு இல்ல சுருக்கிறலாம்."

"எப்படியும் சுருள் வைச்சு கல்யாணத்துக்கும் தான் வரணும் மேலும் நல்லது நடக்க வீட்டில வந்து நின்னுகிட்டு எனக்கு தரல உனக்கு தரலன்னு (தரவில்லை) பேச்சு வரும் அது ஏன்?"

"சரிதான் யா அப்ப என்ன செய்யலாங்க?"

"நம்ம செந்தூரன் என்ன சொல்லுதாம்ன்னா மாப்பிளை வீட்டு ஆளுக நம்ப சொந்தம் அது போவ உள்ளூர் ஆட்களுக்கு மட்டும் சொல்லுவோம் மத்தவுகள கல்யாணத்துக்கு சொல்லிகிடலாம்ங்கான்."

"ம் சரியாத்தான் படுது."

" ஆமாஅதே அந்தா இந்தான்னு ஐநூறு ஆளுக வருது."

"இருக்கட்டுமேய்யா."

"ம் ஆமாத்தா அவளுக்கு செய்யாம வேற ஆருக்கு செய்யப் போறோம்.அப்ப நானும் செந்தூரனும் போய் பத்திரிக்கை வைச்சிட்டு வாரம்"

"ஏய் யா முத கோயில்ல சாமிக்கு வைச்சிட்டு விளக்கு முன்ன வைச்சி ஒரு பாயசம் வைச்சி கும்பிட்டு ஒரு பத்திரிக்கைய எடுத்து வைச்சிட்டு. உம் பொண்ட்டிய கூட்டிட்டு போய் அவ அண்ணன் தம்பிக்கு கொடுத்துட்டு பொறவு உன் தம்பி தங்கச்சி வைச்சிட்டு வா மத்தவுகளுக்கு வேணும்னா நீயும் உம் மகனுமோ கொண்டேய் (கொண்டு போய்) கொடுங்க ஆமா நம்ம சனத்துக்கு ஆம்பளையும் பொம்பளையுமா போய்த்தேன் அழைக்கனும் இல்ல பேச்சு வரும் ஆம்பளய மட்டும் தான அனுப்பி வைச்சிருக்காக அப்ப நீங்க மட்டும் போங்கம்பாளுக இல்ல இளந்தாரிய அனுப்பி விட்டுருக்காகம்பாளுக கல்யாணம் ஆகி இருந்தா வேற மாறி ஆளுக இல்லைன்னாலும் பரவால்ல நமக்கு வாய்ப்பும் இருக்கு எப்படி செய்யனும்னு தெரியவும் செய்யும்…"


" அது படி செஞ்சிறலாம். ரொம்ப முடியலன்னா நம்ம முத்தரசி மகனையும் மருமகளையும் அனுப்பலாம்."


"எங்கள எங்க அனுப்ப ப்ளான் போடுதீய மாமோய் என திருக்குமரனும் உள்ளே வர."


"எல்லாம் நல்ல விஷயமாத்தான் நம்ம பாப்பா நிச்சய பத்திரிகை வைக்கத்தான்."


"இம்புட்டு தான முக்கிய ஆளுகளுக்கு நீங்களும் அத்தையும் கொடுங்க நம்ம வளவுல நாங்க பாத்துகிடுதோம். "




" சரிய்யா வா நாம போய் பத்திரிக்கைய வாங்கிட்டு கோயிலுக்கு போய் சாமிக்கு வைச்சிட்டு வாரேன். நாளு குறைவாத்தேன் இருக்கு."



"யாத்தா செந்தூரன் வந்தா அவுக வீட்டுலர்ந்து வருவாக மாப்பிளை கூட போய் மாப்பிள்ளைக்கு துணியெடுத்துட்டு வரனும்ன்னு சொல்லு ."

"காப்பி தண்ணி சாப்பாடு"

"வெளிய பார்த்துக்கிடுதோம்."

என்று பேசியபடியே சென்றுவிட ராசாத்தி உள்ளே

திரும்பி


"ஏத்தா தவமணி."


" என்ன அத்தை."


"உன் புருஷன் சொன்னத கேட்டீயா "


"இல்லீங்களே அத்தை நம்ம முத்தரசியக்காவுக்கு தான் பேசிட்டு இருந்தேன் மாப்பிளை வீட்டுலர்ந்து கிளம்பிட்டாகலாம் . நேரத்தில வந்துருவாகளாம் . அதான் அவுகள வரச்சொல்லுவோம்ன்னு…"

"சரி சரி அப்ப மாப்பிளை வீட்டுலர்ந்து வேற கிளம்பிட்டாகளா இவனும் பத்திரிக்கை வாங்க போறான் கொஞ்சம் சக்கர பொங்கல் வைய்யித்தா விளக்கு முன்ன வைச்சி கும்பிட."


அவனைப் பற்றிக் கொள்வதற்கு கூர்மையாயிருந்த அவள் புலன்கள் சொல்விளங்கின் கடைசி வார்த்தைகளை உட்கிரகித்துக் கொண்டன. ஆனாலும்

வருவானா மாட்டானா என்று உறுதி செய்து கொள்ள மனம் ஆசைப்பட்டதை அறிவு ஒத்துக் கொள்ளவில்லை.

அவன் வருவானா வந்தால் தன் மனதை கேட்பானா இன்னும் உரிமையாக பழகிடாத நிலையில் தன் கனவை எப்படி சொல்வது எப்படி புரிந்து கொள்வான்.

இல்லை வரமாட்டானா அப்ப ஏன் வரமாட்டான் நம்மள நிச்சய சேலை எடுக்க கூட்டிட்டு போவாகளா என்பதான எண்ணங்கள் நொடியில் ஆக்கிரமிக்க

என்னவும் செய் என்பதை போல ஒரு பாவனையை தனக்குள் கொண்டு வர முயன்று தோற்று அவனில் மலர்ந்த முகத்தை முழுதாக மறைக்க முடியாது மென் மேகம் மூடிய பெளர்ணமியாய் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.


"அம்மா காபி." என்றவளின் குரலில் திரும்பிய தவமணி மகளின் தலை கோதியவர் " இரண்டு நாகாய்ச்சல் இதுல நேத்து வேற கச்சேரிக்கு போயே தீருவேன்னு ஒத்த கால்ல நின்னு போன இப்ப பாரு."


என்றவர் அவளுக்கான காபியை ஆற்ற "ஒன்னும் இல்லம்மா வெறும் அலுப்புதான்."

" சரி நீ சொல்லுத நான் கேட்டுகிடுதேன் நீங்கதான் ரொம்ப தெரிஞ்சவுகல்ல. "

"அம்மா …"

"போட்டி போய் குளிச்சிட்டு நல்லதா ஏதாவது கட்டு. சீலை எடுக்க மாப்பிளை வீட்டுலர்ந்து வாராக."

என்றவர் மகளின் முகத்தில் இருந்த கேள்வியை கோடுகளை புரிந்து கொண்டவராக,

" என்ன வேணும் மதி?"

" இல்ல நிச்சய பட்டு எடுக்க என்னய கூட்டிட்டு போவீங்களா?"

"நமக்கு அந்த வழக்கம் இல்லை. அவுக வீட்டுல எப்படின்னு தெரியல வந்து கூப்ட்டா வா. "


"நான் வரல நீங்களே போய் வாங்கிட்டு வாங்க நான் பார்க்கறது உங்களுக்கு பிடிக்காது. நீங்க எடுக்கறது எனக்கு பிடிக்காது பொறவு அங்குட்டு போய் எதாவது நான் அவங்க மத்தில பேசி வருத்தமாயிரும் அதனால நீங்களும் அவுகளுமா போய் எடுத்துட்டு வந்து சேருங்க .எனக்கு மேலுக்கு சரியில்லன்னு சொல்லியிருங்க என்று விட்டு அவர் பதில் கூறும் முன் மேலே ஏறியிருந்தாள்."


"எனக்குன்னு வந்து சேருது பாரு. உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்துக்கு இருபக்கம் இடி இதுகளுக்கு மத்தில மாட்டிக்கிட்டு இந்த கல்யாணம் முடியறதுக்குள்ள இன்னும் என்ன என்ன அக்கப் போரோ ஆண்டவா "

புலம்பிக் கொண்டிருக்க கோமதி தனக்கான காபியுடன் மெல்ல மேலே வந்திருந்தாள்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



அத்தியாயம் 7


முன் தினம் முளைப்பாரி அதைத் தொடர்ந்த வில்லு பாட்டு முடிந்து வீடு வரும் போது அதிகாலையாகிவிட்டிருந்தது.மணோன்மணியும் வந்தவுடன் தூக்கம் கண்களை சுழற்ற தூங்கிவிட்டாள்.

அருகில் படுத்த கோமதிக்கு முதலில் உறக்கம் வரவில்லை என்றாலும் அலுப்பு உறக்கத்தை தர சற்று நேரத்தில் உறங்கிவிட்டவளுக்கு வழக்கம் போல விழிப்பு வந்துவிட்டது. எழுந்து முகம் கழுவிவயளுக்கு காபி வேண்டும் போல் இருந்தது. கீழே இறங்கி வந்தால் அவன் வருவதை பற்றி செய்தி


சிறு வயதில் இருந்தே உடை விஷயத்தில் அவள் தன் விருப்பப்படி ஒன்று என்றால் அவர்கள் விருப்படி ஒன்று என ஒன்று வாங்கிக் கொள்வாள். யாருடைய தேர்வும் பிடிக்கவில்லை என்றால் முகத்திற்கு நேராக கூற மாட்டாள் வாங்கி வைத்துக் கொள்வாள் ஆனால் இறுதி வரை கட்ட மாட்டாள். அதில் தெரிந்து போகும் அவளது பிடித்தம்.


மேலே வந்த கோமதி தனது அறையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் சில மிடறுகள் காப்பியை விழுங்கியவள் கண்கள் எதிரில் இருந்த அலைபேசியில் தான் இருந்தது. அதை எடுத்தவள் அவனின் குறுஞ்செய்தியை எடுத்துப் பார்த்தாள் அன்றைக்கு அனுப்பியது தான் "Call me" அதற்கு இவளும் பதில் அனுப்பவில்லை அவனும் அழைக்கவில்லை. நொடி கூட ஆகாது இப்போது கூட அழைக்கலாம்தான் ஆனால் விஷயம் அழைப்பதிலோ கூறுவதிலோ இல்லை.



அவன் மறுத்துவிட்டால் இவளால் மீற முடியாதே 'அப்படின்னா பிடிக்லைன்னு சொல்லிடுவமா ?' இல்லையே பிடிக்கிறதே மிகப்பிடிக்கறதே இதுவரை பிடித்தம் என இருந்த எல்லாம் வேண்டாம் என்றாகி அவன் அவன் பிடித்தம் மட்டும் வேண்டும் என எனும்ளவிற்கு பிடித்தம் தான் ஆதலால்தான் இல்லாத ஒன்றை உருவாக்கி அதில் தொங்கிக் கொண்டிருந்தது அவள் மனக்குரங்கு. இதற்கு பதிலாக ஆதரிப்பான் என நேர்மறையாக கிளையை பிடிக்கலாம் என்றால் மறுக்கிறாள்.

எப்போதுமே ஒன்றை பிடித்துவிட்டால் அந்த பொருளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் மனம் தானாகவே யோசித்துவிடும்அதனால் கையாளப்படும் வழிகள் அதனை தரம் குறைத்து அதன் மீதான ஒவ்வாமையை உருவாக்கிவிடுகிறது. உறவுகளும் உணர்வுகளும் கூட பாதுகாப்பு உரிமை என்று மூடிய சிறையில் இருந்து சாரளங்கள் திறவாமல் வெளிச்சம் படாமல் பூஞ்சை புருக்கம் வெறுப்பு பொறாமை என அரித்து போகிறது.


மெல்ல கை தொட்டு பார்த்தாள் அவன் இதழ் பட்ட கன்னங்களை அதற்கே கூசி சிலிர்த்து போனாள். இந்த தளர்வில் கையில் இருந்த காபி டம்பளர் கீழே விழுந்ததில்.அவள் தன் நிலைக்கு வந்து தன்னை நினைத்தே புண்ணகையுடன் நாற்காலியில் இருந்து எழுந்தாள்.

கண் விழித்துவிட்ட மனோன்மணி இதைப்பார்த்து விட்டு" என்ன போன பார்த்துட்டே உட்கார்ந்து இருக்க "ஏது அண்ணன்ட்ட பேசலாம் முடிவெதும் எடுத்துருக்கியா ? இல்ல பேசிட்டியா?"

என்றவளை மதி முறைக்க

" அதான அப்பிடி எதாச்சும் செஞ்சிறாததாயி உலகம் அழிஞ்சிரும்."

என்ற மணியிடம்

"போ போய் பல்விளக்கிட்டு குளி. உங்க நொண்ணன் எப்ப வராரோ என்னவோ இப்ப எங்க அண்ணன் வந்துரும் இப்படியே போய் பயமுறுத்தி விட்டுறாத."

"எது நான் உங்க அண்ணனை பயங்காட்ட."

"ஆமா எங்கண்ணன் இதுலெல்லாம் பயந்தவுக தான்."

"ஆமாமா ஊரான் வீட்டு புள்ளைய கை நீட்டயில மட்டும் இதெல்லாம் நினைப்பு வராது.கோட்டி கெனக்க பேசியே வாங்கிகட்டுதேன்."

என்ற முனுமுனுத்தவள் மெல்ல கன்னத்தை தடவிக் கொண்டாள். செந்தூரனிடம் வாங்கி கட்டியதும் அதில் சிவந்த தடத்தை தேனீ கொட்டியதாக மறைத்ததும் நினைவில் வர எழுந்து சென்று கண்ணாடியில் பார்க்க வீக்கம் நன்றாக வற்றியிருந்தது மிக லேசாக கன்றியிருந்தது.

"பரவாயில்லைட்டி நல்லா வத்தியிருக்கு நல்ல மாத்திரைதான் கொடுத்துருக்காரு" என்றாள் அருகில் வந்து அவளைப் பார்த்த கோமதியும்

"ஆமா அடிச்சுப்புட்டு மாத்திரை வாங்கி கொடுத்து கூடவே காரணத்தை சொல்லித்தார புத்திமானுல்ல உங்க அண்ணன்."

"உன் வாயிக்கு இன்னும் இரண்டு போடனும்."

என்ற மதிக்கு பதில் மணோண்மணி கூறும் முன்

"ஏட்டிகளா இரண்டு குமரியளும் குளிச்சியளா இல்லை கதை பேசுதீயளா."

அதை கேட்ட மனோன்மணி "சந்தைக்கு போனும் எங்கத்தை வையும் …. நான் போறேன் "

குளியல் அறைக்குள் நுழைந்தாள். அலைபேசியை எடுத்து செந்தூரனுக்கு அழைத்தபடி கீழே இறங்கினாள் கோமதி நாச்சியார்.

"என்ன மதி?"

"இல்லை நேத்து கச்சேரிக்கு வந்தவகளுக்கு."

"நல்லவேளை யாவகபடுத்துன (ஞாபகம்) . இந்தா கொடுத்துட்டு விட்டுறுதேன்."

"அட என்ன அண்ணே பொறுத்து குடுத்தா கூட வாங்கிக்கிடுவாக ஆனா நம்ம சங்கரன் தாத்தா வீட்டம்மாவ ஏதோ ஆஸ்பத்திரிக்கு கூட்டு போனும்ன்னு சொன்னாக கொஞ்சம் வேணும்ன்னு கேட்டாக அத சொல்லதான் போன் போட்டேன்."

"வாங்க மாமா வாங்க அத்தை "

"சரி நான் வைக்னேன் பொறவு பேசுதேன்."

என்று போனை வைத்துவிட இவளுக்கு இங்கு படபடப்பு கூடிற்று. வேகமாக மீண்டும் மேலே ஏறியிருந்தாள்.


இரு வீட்டுப் பெண்கள் செந்தூரன் என அனைவரும் அங்கே இருக்க வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவனை செந்தூரன் தான் எதிர் கொண்டு அழைத்தான்.


"வாங்க மாப்பிளை " என்ற செந்தூரனுக்கு

" பெயர் சொல்லி கூப்பிடு போதும்."

"சரி செஞ்சிறாலாம் எல்லாரும் பட்டு செக்ஷன்ல."

"ஓ" என்றபடி அவர்களும் பட்டு செக்ஷனுக்குள் நுழைய

அங்கே தவமணி முத்தரசி பூவரசி ஞானம் கருப்பசாமி கந்தையா விசாலாட்சி அருணா செல்வி என ஒரு பெரிய குழுவே இருந்தது ஆனால், அவளைத் தவிர

அவன் கண்கள் அவளைத் தான் தேடியது. அதற்காகத் தான் அவன் அத்தனையும் ஒத்தி வைத்துவிட்டு வந்தது.


"அவளுக்கு இரண்டு நாளா காய்ச்சல் நிச்சயம் வேற இரண்டு நாள்தான இருக்க அதான் அலைய வைக்க வேண்டாம்ன்னு."

"ஓ ' என்றதிலேயே அவனின் கோபம் செந்தூனுக்கு புரிந்தது. ஏற்கனேவே பெரியவர்கள் இப்படி கூட்டிட்டு போறது வழக்கம் இல்லை என்று வழக்கு வைக்க அதில் இவளும் கூட்டு சேர்ந்து வரவில்லை அவன் என்ன செய்வான்? மதி வரத்தயாராக இருந்தாலாவது வரட்டும் நான் பார்த்துக்கறேன் என்று பேசி அழைத்து வந்து இருப்பான்.


"சாரி எடுத்தாச்சா "

"எங்க வாங்க நாம உங்களுக்கு எடுப்போம்.'

"இருங்க வாங்க என கடகடவென பட்டு சேலைகளின் வரிசையில் ஆராய்ந்தவன்."

"சந்திரனின் வண்ணத்தில் தங்க இழைகள் உடலெங்கும் நெளிய இரவு நேர வானாக கருநீல வண்ணத்தில் ஜரிகை வைத்த பட்டை தேர்வு செய்தவன்.

"மாம் இட்ஸ் பார் மதி யு கேன் ப்ரொசீட் வித் அதர்ஸ்."

என்று விசாலாட்சியிடம் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

விசாலாட்சி மட்டுமல்ல மற்றவர்களும் அவனது இந்த ஒரு நிமிடத் தேர்வில் அதன் விலை மற்றும் அழகில் மயங்கி போய் இருந்தனர்.


"கட்டிக்க போறவருக்கு புடிச்சி போச்சு பொறவு என்ன?"

"அழகா அம்சமா இருக்கு நாமளும் இம்புட்டு நேரம் தலைகீழா திருப்பி தேடுனோம் இப்படி அம்புடல"

"அப்ப நல்ல நேரத்துல இதுக்கு பில்ல போட்டு வாங்கிறுவோம். பொறவு மத்தவுகளுக்கு பார்த்துகிடலாம்."

"சரிங்க கூடவே சட்ட துணியும் எடுத்து குடுத்துருவோம். அவுக தைக்கனும்ல"

"அளவுச் சட்டை கொண்டாந்துட்டேன் மதனி இங்கன பக்கத்தில டிசைனா தைச்சி வாங்கிறலாம்ன்னு செல்வி சொன்னா."


என்று அவர்களுக்குள் பேசியபடி புடவைக்கு பணம் செலுத்தி வாங்க அதற்குள் வான நாயகன் அவன் அவனுக்கான பட்டு வேட்டி சட்டையை எடுத்து கொடுத்து விட்டு வெளியேறி இருந்தான்
 
Status
Not open for further replies.
Top