All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்!!" கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புது கதைக்கான டீசர்:

"என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்..."


டீஸர்:


சுற்றியிருந்த சொந்தங்கள் சூழ தான் காதலித்து கரம்பிடித்த காதலியின் கழுத்தில் சந்தோஷமாக மூன்று முடிச்சிட்டு காதலியாக இருந்தவளை மனைவியாக மாற்றிக் கொண்டான் சேஸ்திரன். அதில் கண்கள் கலங்க சந்தோஷமாக தன் கணவனை நிமிர்ந்து காதல் பார்வை பார்த்த பைங்கிளி தன் தலையை தாழ்த்தி கொண்டாள்.

#####################

ஆபிஸில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு களைப்பாக வந்தான் சேஸ்திரன். கணவனின் கார் ஓசை கேட்டதும் அவனை காண ஆவலுடன் ஓடி வந்த பைங்கிளி கணவனின் சோர்வு கண்டு "என்னாச்சு பாவா... ரொம்ப டயர்டாக இருக்கிறீர்களா..."அவன் தலையைப் பிடித்து விட்டவாறு கேட்கவும், அவளை இழுத்து தன் அருகில் அமர வைத்தவன் அவள் மடியில் தலை சாய்த்தான். சிறிது நேரம் அவள் தலை கோத அவ்வளவு நேரம் இருந்த களைப்பு செல்ல கண்களை திறந்து பார்க்க அப்போதுதான் மனைவியின் அலங்காரம் அவன் கண்ணில் பட்டது.
"என்னாச்சுடி மாமி... இன்னைக்கு ரொம்ப மேக்கப் போட்டு பார்க்க அழகாக இருக்கிறியே..."அதில் நாணம் தோன்றினாலும்,"நம்மளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது அல்லவா... எனக்கு என்று ஒரு குழந்தை பிறக்காதா...அதான் அந்த கடவுளிடம் மீண்டும் ஒரு வேண்டுதல் வைத்து இருக்கிறேன்... நீங்களும் என் கூட வர்றீங்களா..."என்றதும் கோபம் வந்தது சேஸ்திரன்க்கு.

"இப்போ என்ன வயதாகிவிட்டது நமக்கு... நீ ஏன் இப்படி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறாய்..."என்றவன் குரலில் எரிச்சல் எட்டி பார்க்க கணவனின் கோபத்தில் மனைவியின் கண்களில் தானாக கண்ணீர் ஊற்றெடுக்க மனைவியின் கண்ணீரில் தன்னை நொந்து கொண்ட சேஸ்திரன் அவளை சமாதானப்படுத்தி அவள் மீதுள்ள காதலில் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.
####################

"ஏன்னா... இதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி புரிஞ்சுக்கோங்க... என்னால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்று டாக்டர் சொல்லிட்டார்... ஆனால், வாடகை தாய் மூலம் நாம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம்... எனக்காக சம் மதியுங்கள்... இதற்கு மட்டும் நீங்கள் சம்மதிக்காவிட்டால் நான் இவ்வுலகை விட்டு சென்று விடுவேன்..."கணவனை மிரட்டினாள் பைங்கிளி.

அதில் சேஸ்திரன்க்கு சர்வமும் பதர மனைவியின் உயிர் மட்டுமே முக்கியம் என்று அவள் விருப்பத்திற்கு "உன் இஷ்டம் அம்மு..."என்றவாறு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.
#####################
தனது 8 மாத கருவை சுமந்துகொண்டு கோவிலுக்கு வந்த செந்தமிழை கோவிலுக்கு அழைத்து கொண்டு வந்திருந்தான். செந்தமிழ் தான் அவர்கள் குழந்தைக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வாடகைத் தாய்.

"நீ கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடு... பைங்கிளி ஏதோ முக்கியமான விஷயத்திற்காக வெளியில் சென்றிருப்பதால் வேறு வழியில்லாமல் உன்னை கூட்டி வந்துள்ளேன்..."வேண்டா வெறுப்பாக மொழிந்து விட்டு அவளுடன் சென்றான் சேஸ்திரன்.

அங்கு நின்ற சில பெண்கள் அவள் காதுபடவே "இப்போ பாருடி கழுத்தில் தாலி இல்லாமல் குழந்தையை சுமந்துகொண்டு இது நிற்குது... இதெல்லாம் ஒரு பிழைப்பு இதுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம்... இந்த காலத்து பெண்களை என்ன சொல்வதோ..."அவளை ஜாடை பேச, அவர்களுக்கு என்ன தெரியும் அவள் வீட்டில் இருக்கும் மூன்று உயிர்கள் இவளை நம்பி தானே இருக்கிறது.

அதில் அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க சேஸ்திரன்க்கு இந்தப் பேச்சு கண்களில் ரௌத்திரம் உண்டாக சுற்றியிருந்த சூழ்நிலை அனைத்தையும் மறந்தவன் தன் குழந்தையை தாங்கிக்கொண்டு நிற்கும் பெண்ணின் முகமும் கண்ணீரும் கண்களில் பட நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்த மஞ்சள் கயிறை எடுத்து அவள் கழுத்தில் கட்டி இருந்தான். அதில் உடலும் மனமும் பதற அவனை நிமிர்ந்து பார்த்தாள் செந்தமிழ்.

அதேநேரம், மருத்துவமனையில் இருந்த பைங்கிளியின் வயிற்றில் அவை இத்தனை வருடங்களாக யாசித்த கரு ஒன்று உருவாகி இருக்க கண்களில் கண்ணீருடன் தன் இல்லத்தில் கணவனுக்காக இந்த நற்செய்தியை சொல்வதற்காக காத்திருந்தாள்.

இனி இந்த மூவரின் வாழ்க்கை என்ன ஆகும். விதி தொடங்கியது அவர்கள் வாழ்வில் சதிராட்டத்தை.
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்..."

டீஸர் 2:


"அக்கா... இங்கே பாருங்கள்... அவர் மீது எந்த தப்பும் இல்லை... அங்கிருந்த சில பெண்கள் என்னை தவறாக பேசவும் அவர் வேறு வழியில்லாமல் என் கழுத்தில் இருந்த தாலி கட்டி விட்டார்... ஆனா அக்கா, நான் சத்தியமா சொல்றேன்... கஷ்டத்தில் வாடிக் கொண்டிருந்த என் குடும்பத்திற்கு உணவு போட்ட சாமி நீங்கள் உங்களுக்குத் துரோகம் நினைத்தால் நான் அழிந்து போய்விடுவேன்... என் வயிற்றில் வளரும் இந்த பாப்பாவை பிறந்ததும் உங்களிடம் கொடுத்து விட்டு என் குடும்பத்தை அழைத்துக்கொண்டு கண்காணாத இடத்திற்கு சென்று விடுகிறேன்..."கண்களில் கண்ணீர் வழிய வார்த்தைகளை திக்கித் திணறி கூறி முடித்தாள் செந்தமிழ்.

#################
வாழ்க்கையில் தன் குடும்பத்திற்காக மட்டுமே வாழவேண்டும் என்றும் முடிவு செய்தவள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பணம் தேவைப்படுவதால் தன் கிட்னியை விற்பதற்காக மருத்துவமனைக்கு வந்தாள்.


அந்த மருத்துவர் நல்லவராக இருக்க, அவளைக் கடிந்து கொள்ள "என்னால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை... என் வீட்டில் எல்லோரும் சாப்பிட வேண்டியது அவசியம் அதற்கு இப்படி செய்வதில் தவறில்லை..."தன் தரப்பு நியாயத்தை செந்தமிழ் கூற அந்த டாக்டருக்கு பைங்கிளியின் முகமும் கண்ணில் வந்து போக "மருத்துவ முறையில் உன்னை கர்ப்பமடைய வைத்து உன் வயிற்றில் வளரும் குழந்தையை அதற்கு உரிமையானவர் இடம் கொடுத்தால் உனக்கு வேண்டிய பணம் கிடைக்கும்..."மருத்துவர் ஆலோசனை கூற, தன்னால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. தன் வயிற்றில் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி என்று சந்தோஷமாக சம்மதித்தாள்.
####################
கருவுற்ற விஷயத்தை பைங்கிளி முழுவதாக மறைத்தவள் செந்தமிழ் கூறிய நியாயத்தை ஏற்றுக் கொண்டு அதேசமயம் குற்றவுணர்வில் தலைகுனிந்து நிற்கும் கணவனையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். அதற்கு ஒரே காரணம் கணவன் மீது வைத்துள்ள காதலும் தங்கள் குழந்தையை தாங்கிக்கொண்டு நிற்கும் பெண்ணின் மீது உள்ள நம்பிக்கையும். அவள் இந்த நம்பிக்கை கடைசி வரை நீடிக்குமா...??
#################
செந்தமிழ் வயிற்றில் வளர்ந்த குழந்தை 9 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தன் இரண்டாவது மனைவியின் வயிற்றில் கை வைத்து தன் குழந்தையின் அசைவை அனுபவித்துக் கொண்டிருக்க செந்தமில் அவன் தலையை கோதி கொடுத்தாள். இதைக் கண்ட பைங்கிளி தன் கணவன் தன்னை விட்டுப் போய் விடுவான் என்ற பயம் தோன்ற "என் புருஷன் எனக்கு மட்டும் தான்..."உன்னை என்ன செய்கிறேன் பார் செந்தமிழ் என்று மனதிற்குள் கருவி கொண்டு அப்பாவி பெண்ணை வஞ்சகம் தீர்க்க நினைத்தாள்.


அவள் வஞ்சகம் நீடிக்குமா? செந்தமிழ் அவள் வாழ்க்கையை முழுவதுமாக தான் எடுத்துக் கொள்வாளா? இவர்களின் கணவன் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பார்? விதி காலத்தின் கைகளில்.


அவர்களின் வாழ்வில் விதி தொடங்கியது தனது சதிராட்டத்திதை
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை உங்கள் மனதில் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது என்பதை நினைக்கும்பொழுது கஷ்டமாக இருக்கிறது. இந்த கதை வேண்டாம் என்று சொல்கிறீர்கள்,


நொடி நேர உணர்ச்சியுடன் நாம் எடுக்கும் முடிவுகள் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குழந்தை இல்லாத ஒரு பெண்ணின் பிரச்சனைகள், அவன் முடிவால் மற்றொரு பெண்ணின் நிலைமை,


இந்த கதையை இப்படித்தான சுற்றி இப்படித்தான் இருக்கிறது. படிக்கும் போதே நமக்கு இப்படி வருத்தமாக இருந்தாள் அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும். அவர்களுக்காகத்தான் இந்த கருவை எடுத்தேன். இந்தக் கதையை இதே போல இருக்கும் ஒருவர் யாராவது படித்தார் அவர்களுக்கு ஒரு நல்ல வழியை இதில் சொல்ல வேண்டும் என்பது எ முடிவு. உங்கள் கருத்துக்கள் மூலம் நீங்கள் இது போன்றவர்களுக்கு உங்கள் கருத்தைச் சொல்லுவதன் மூலம் அவர்களுக்கு நாம் உதவ முடியும். பொதுவாக இந்த மாதிரி ஆட்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். ஆனால் இதுவே ஒரு கலையாக இருந்த படித்தால் அவர்களுக்கு என்று மனதில் ஒரு தெளிவு கிடைக்கும் அல்லவா. நீங்களே சொல்லுங்கள் அவர்களுக்கு நாம் உதவி செய்வதாக வேண்டாமா இதற்குப்பின் முழுதான முடிவு உங்களுடையது மட்டுமேஇதற்குப் பின் முழுதான முடிவு உங்களுடையது மட்டுமே
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்!!"

டீசர் 3:

"எவ்வளவு தைரியம் இருந்தால் என் கணவன் மீது உரிமை கொண்டாடுவாய்..."பைங்கிளி கோபத்தில் செந்தமிழ் உண்ணும் உணவில் அளவுக்கு அதிகமான காரம் கலந்தாள்.

கணவன் ஆபிசுக்கு கிளம்பி விட்டான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளுக்கு காரமான உணவை கொடுக்க அதை வாங்கி உண்டு முடித்தாள் செந்தமிழ்.

அவர் எந்தவிதமான உணர்வையும் பிரதிபலிக்காது பைங்கிளி ஆச்சரியமாக பார்த்தவள் அதே உணவை ஒருவாய் உணவைத் தன் வாயில் வைக்க உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை காரம் ஏறியது. 3 டம்ளர் தண்ணீர் கொடுத்த பிறகே காரம் சிறிது மட்டுப்பட்டது.

கண்களில் கண்ணீருடன் செந்தமிழை பார்க்க "என்னாச்சு அக்கா ஏன் அழுகிறீர்கள்..."நீ சாப்பிட்ட சாப்பாடு எவ்வளவு காரமாக இருந்தது... எனக்கு ஒன்றும் தோன்றவில்லையா என்றவளின் கேள்விக்கு "என் உணர்வுகள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது அக்கா..."தன் கடந்த காலம் பற்றி கூற பைங்கிளி கண்ணீர் தாங்க முடியாது அவளை தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

"என்னை மன்னித்துவிடுமா... கர்ப்பமான பெண் என்று பார்க்கமல் காரமான உணவை தந்து விட்டேன்..."கண்ணீர் வடிய அவளிடம் மன்னிப்பு வேண்ட அவள் செய்கையில் பதறிப்போன செந்தமிழ் அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவளை அணைத்துக் கொண்டாள்.

"இங்கே பாரு தமிழ்... இதற்கு பிறகும் கவலைபடாதே... என்னோட புருஷன் உன்னோட அத்தான் இதை சமாளிப்பார்... என்னால் என் கணவனை உனக்கு விட்டுக் கொடுத்தாலும் ஏற்கும் நிலையில் நீ இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டேன்... ஆனால் நீ எப்பொழுதும் செந்தமிழ் சேஸ்திரன்... இந்த பெயர் நிச்சயம் உன்னைக் காப்பாற்றும்..."அவளுக்கு ஆறுதல் அளித்து விட்டு செந்தமிழின் 2 வயது குழந்தையை தூக்கிக் கொண்டாள்.(அவள் தற்பொழுது 9 மாத கர்ப்பிணி தான்)

இது தான்பா கடைசி டீசர். நிறைய பேர் மன வருத்தத்தில் இருந்ததால் உங்களுக்காகவே இது. இதில் ஓரளவுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

அவர்கள் மூவரும் கணவன் மனைவி என்ற உறவு அன்று உணர்வில் தான் வாழ்கிறார்கள்.

இப்பொழுது உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Status
Not open for further replies.
Top