All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின்"ராட்சசியின் அசுரன்!!"இரண்டாம் பாகம் கதை திரி:

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 24:


அழகிய வெண் பஞ்சு மேகங்கள் ஓரிடத்தில் நில்லாது கார்காலம் என்பதால் ஆங்காங்கு சுற்றிக்கொண்டே இருந்தன. சுற்றியுள்ள மலை முகடுகள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. அதோ அந்த மலை முகட்டில் ஒரு ஆண் முயல் குட்டி தனது பெண் முயல் குட்டியுடன் சண்டை பிடித்தது போலும், அந்தப் பெண் முயல் அழுது கொண்டிருக்க அந்த ஆண் முயலோ ஒன்றும் புரியாமல் தன் கைகளில் வைத்திருந்த கேரட்டையும் முள்ளங்கியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை போலும்.


பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் கைகளில் இருந்த இரண்டையும் சரியாக ஐந்து நிமிடங்களில் மனைவியின் உருவம் போன்று ஒரு அழகிய கேரட் முள்ளங்கி சிலை தயார் செய்திருந்தது. கைகள் இரண்டையும் தன் கண்களில் வைத்து மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தார் அந்தப் பெண் முயல்.


அந்தப் பெண் முயல் அருகில் சென்ற ஆண் முயல் அழுதுகொண்டிருந்த பெண் முயல் தோளைத் தொட அழுது கொண்டிருந்த முயல் தன் கண்களில் மறைத்து வைத்திருந்த கையை எடுக்க தனக்கு முன்னால் நின்ற ஆண்முயலை என்ன என்பது போல் பார்க்க, தன் கைகளில் வைத்திருந்த சிலையை அதன் கரங்களில் கொடுக்க, அந்த சிலை பார்ப்பதற்கு அந்தப் பெண் முயல் குட்டி போன்று இல்லாமல் ஏதோ ஒரு ரூபத்தில் இருந்தாலும், உனக்கு கொடுக்க மாட்டேன் நான் மட்டுமே சாப்பிடுவேன் என்று கேரட்டையும் மூங்கிலும் தனக்கு கொடுக்காமல் அதன் கைகளில் வைத்துக்கொண்டு தனக்கு பழிப்பு காட்ட அதனால் மனம்வாடி அந்தப் பெண் முயல் அழுக...


ஆனால், எனக்கு அவற்றையெல்லாம் விட நீ தான் முக்கியம் என்பது போல் அந்த கேரட் மூங்கில் இரண்டையும் சேர்த்து அதன் கரங்களில் கொடுக்க பெண் முயல் குட்டி மிகவும் சந்தோஷமடைந்து. உடனே, அந்த சிலையின் தலைப்பகுதியை அந்த ஆண் முயலிடம் கொடுத்து உண்ணச் சொல்ல, உன் போன்று இருக்கும் அந்த கேரட்டை என்னால் திங்க முடியாது என்பது போல் இரு கைகளையும் வேண்டாம் என்று ஆட்டி மறுக்க அந்த கேரட்டை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு ஆண் முயல் குட்டியை சந்தோஷமாக அணைத்துக்கொண்டது பெண் முயல் குட்டி.


பதிலுக்கு அந்த ஆண் முயல் குட்டியும் பெண் முயலின் சிரிப்பைக் கண்டு சந்தோஷமாக அணைத்துக் கொண்டது. அவர்களின் சந்தோஷத்தை கண்டு அங்கிருந்த இயற்கையும் சந்தோஷம் அடைந்தது போல தங்கள் சந்தோஷத்தை அங்கிருந்த மரம் செடி கொடிகள் காற்றிலாடி தங்கள் சந்தோஷத்தை தெரிவித்து பூக்களை தூவி சந்தோஷமாக இருந்த அற்புதமான தருணம் அது.


அது கார் காலம் என்பதால் இன்னும் பொழுது விடாமலிருக்க வழக்கம்போல் காலை 5 மணிக்கு எழுந்துகொண்டாள் வெண்மதி. ஐந்து வருடங்கள் முன் வரை 8 மணிக்கு மேல் உறக்கம் கலைந்து அதுவும் அவள் கணவன் "வெண்மதி எழுந்து கொள் நேரமாகிவிட்டது பிறகு நான் பணிக்குச் சென்ற பிறகு என்னை பார்க்கவில்லை என்று கூறக்கூடாது ஒழுங்காக எழுந்து கொள்"கணவனின் விழிப்பில் தானிருந்து கொள்பவள் அவனை இழுத்து தன் எச்சில் வாயால் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்த பிறகே அவள் நாளன்று தொடங்கும். அதன்பிறகு அந்த நாள் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியே எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது அந்த ஒரு சம்பவம் நடக்கும் முன்பு வரை,


காலையில் எழுந்த வெண்மதி எப்போதும் போல் மனதிற்குள் கணவனின் முகத்தை நினைத்தவள்"குட் மார்னிங் மாமா... இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமைய வேண்டும் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை ஆனால் மகிழ்ச்சியாக இருங்கள்"கணவனுக்கு காலை வணக்கம் சொன்ன பிறகு அருகில் உறங்கும் தனது குழந்தைகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து உறங்கும் குழந்தைகளின் நெற்றியில் மென்முத்தம் பதித்தாள். அதில் ஒரு நொடி எல்லா குழந்தைகளும் தங்கள் கன்னத்தை தேய்த்துவிட்டு மீண்டும் தங்கள் பக்கத்தில் படுத்திருந்த தங்கள் மற்றொரு உடன்பிறப்பை அணைத்தவாறு தூங்க ஆரம்பித்திருந்தனர்.


அந்த ஒரு செயல் கணவனை ஞாபகப்படுத்தியது. அவனும் இப்படித்தான் காலையில் எழுந்தவுடன் முத்தம் வைத்தால் "பல்லு விளக்காமல் முத்தம் கொடுக்காதே"அவள் முத்தம் கொடுத்த பகுதியை தேய்தவாறு எழுந்து கொள்வான். அதே செயலை தற்போது அவள் குழந்தைகளும் கடைபிடிக்கின்றன ஆயிரம் தான் இருந்தாலும் கணவனின் ரத்தம் அல்லவா...?


இது எப்போதும் நடக்கும் ஒரு செயல்தான் காலையில் எழுந்ததும் கணவனுக்கு வணக்கம் சொல்லி மனதிற்குள் அவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது வாழ்த்துவதும், உறங்கும் குழந்தைகளுக்கு முத்தம் வைப்பதும் அன்றாடம் நடக்கும் செயல்களே...


பெருமூச்சு விட்டவள் நடந்து முடிந்ததை பற்றி யோசித்து பயனில்லை. இனிமேல் நடக்கப்போவது பற்றி மட்டுமே சிந்திப்போம் என்ற எண்ணம் கொண்டவளாக தன் அன்றாட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.


காலையில் எழுந்ததும் அருகில் இருக்கும் குளத்தடிக்கு சென்று விடியற்காலையிலேயே குளித்துமுடித்து கொண்டுவந்திருக்கும் உடைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு அருகில் இருக்கும் அரசமரத்து பிள்ளையாரிடம் சென்று "உங்களுக்கும் என் வணக்கங்கள் பிள்ளையாரப்பா... இன்று யாருக்கும் எந்தவித பிரச்சனையும் வராமல் நீங்கள்தான் தடுக்க வேண்டும். எந்த ஒரு உயிர் ஆபத்தில் இருந்தாலும் அதை நல்லபடியாக காப்பாற்றிக் கொடுத்து விடுங்கள், அனைவரின் வாழ்விலும் இன்று இன்பம் பொங்கட்டும். என் கணவர், பாட்டி, அத்தை, வசந்த் மாமா, ரோஸி அவர்கள் குழந்தை அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும்.அவர்கள் வாழ்வில் எந்தவித பிரச்சினையும் வராமல் நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்"கடவுளிடம் எப்போதும்போல் வேண்டிக்கொண்டு அந்த அரசமரத்தை மூன்று முறை வலம் வந்தவள் இதற்கு மேல் தாமதமானால் குழந்தைகள் எழுந்து விடுவார்கள் அதன் பிறகு அவர்கள் செய்யும் சேட்டையை அவளன்றி வேறு யாராலும் தடுக்க இயலாது... அவள் குழந்தைகள் சேட்டை செய்வதில் அப்படியே தாயை உரித்து வைத்து பிறந்திருந்தது.


வீட்டிற்கு வேகமாக வந்தவள் அறையைப் பார்க்க அங்கு அவள் குழந்தைகள் இன்னும் துயில் கலையாது ஆழ்ந்த உறக்கத்தின் பிடியிலேயே இருப்பதை பார்த்து நிம்மதியாக, துவைத்த துணிகளை சென்று கொடியில் காயப் போட்டாள்.



பூஜை அறைக்கு சென்றவள் காலையில் பிள்ளையாரிடம் என்ன வேண்டுதல் வைத்தாளோ அதே வேண்டுதலை அங்கிருந்த மற்ற இறைவனிடம் வைத்துவிட்டு, பூஜை செய்து முடித்தாள்.அதன்பிறகு சமையலறைக்குச் சென்று குழந்தைகளுக்கு தேவையான பாலும், தங்களுக்கு டீ போட்டுக் கொண்டு அதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு காலை உணவான இட்லியும் அதற்கு தோதாக சாம்பாரும் குழந்தைகளுக்குத் தேவையான கஞ்சியும் வைத்து ஒரு சில இனிப்புகளையும் செய்து முடித்தாள்.


பம்பரமாக அனைத்து வேலைகளையும் சுழன்று முடித்தவள், காலையில் சமைத்த பாத்திரங்கள் அனைத்தையும் விலக்கிவிட்டு மணியைப் பார்க்க காலை 7 மணியை அது காட்டியது.


டீ அடங்கிய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வரவும், அங்கிருந்து குளித்து முடித்துவிட்டு தனது 8 மாத கருவை வயிற்றில் சுமந்தபடி மெதுவாக நடந்து வந்தாள் பத்மினி.


"சாரி மாதி இன்னைக்கும் லேட்டாக எழுந்து விட்டேன் போல, நீங்கள் ஏன் அனைத்து வேலைகளையும் செய்கிறிர்கள், உங்களுக்கும் குழந்தைக்கும் மட்டும் தேவையானவற்றை செய்து கொள்ளுங்கள் என்று எத்தனை தடவை சொல்கிறது.."என்று சலித்துக்கொண்டாள் பத்மினி.


ஒரு புன்னகையை தவழ விட்டாவாறு "இதில் என்ன இருக்கிறது அக்கா... இப்போது நீங்கள் எட்டு மாதத்தை நெருங்கி கொண்டிருக்கிறீர்கள்... இப்போது நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... அதிலும், 7 வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாக உங்களுக்கு ஒரு குழந்தை வந்துள்ளார்கள்... அவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடைய இது மட்டுமன்றி என்னுடைய கடமையாகும்... அதனால், நீங்கள் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வயிற்றில் வளரும் குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்..."கூறி முடித்ததும்,


"சரியாக சொன்ன மதி... எவ்வளவு சொன்னாலும் இவள் கேட்க மாட்டாள்... நீ வீட்டில் இருப்பதால் தான் நான் நிம்மதியாக வேலைக்கு சென்று வருகிறேன்... இல்லையென்றால் இவளைப் பற்றி 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டு வேலையில் கோட்டை விட்டிருப்பேன்..."சலித்துக் கொண்ட குரலில் விக்கி கூற,


"என்ன காலையிலேயே சப்தம் அதிகமாக இருக்கிறது... வர வர இந்த வீட்டில் எலி தொல்லை தாங்க முடியவில்லை மதி..."கணவனை ஓரப் பார்வை பார்த்தபடி பத்மினி கிண்டல் செய்ய,


"போடி..."என்னை பார்த்த எலி மாதிரி இருக்கிறதா? என்று கோபத்துடன் கேட்க,


"இதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா..."காலை வாரினாள் பத்மினி.


இவர்கள் சண்டையை பார்த்து மென்நகை புரிந்த வெண்மதி தானும் தன்னுடைய கணவனுடன் இப்படித்தானே மகிழ்ச்சியாக இருந்தோம்... என்றவள் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது. அதில், இன்ஸ்டன்டாய் ஒரு கண்ணீர் பூ பூக்க சுற்றி இருந்தவர்களை கருத்தில்கொண்டு அதை நாசுக்காக துடைத்தெறிந்து விட்டு "அண்ணா சொல்வதில் தவறில்லைகா... நீங்கள் சற்று ஜாக்கிரதையாகவே இருங்கள்..."சற்று பதட்டமான குரலில் கூற, அவள் பயத்தை புரிந்துகொண்டு "சரி வெண்மதி..."என்று சொல்லவும் தான் பெருமூச்சுவிட்டாள் வெண்மதி.


அது சரிமதி இன்றைக்கு இரண்டில் ஒன்று தெரிந்து ஆக வேண்டும். நான் உனக்கு அக்கா என் கணவர் உனக்கு அண்ணனா... ஒழுங்கு மரியாதையாக என்னை இனிமேல் "அண்ணி..."என்றே கூப்பிடு என்று கட்டளையிட, சிறு குறு நகையுடன் "சரி அண்ணி.."என்று கர்ப்பமான பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைத்தாள் வெண்மதி.


"என்னமா வெண்மதி இன்னமும் குழந்தைகள் எழுந்து கொள்ளவில்லையா..."என்று குழந்தைகளை சுற்றுமுற்றும் தேடிவிட்டு இந்நேரத்திற்கு எல்லாம் இந்த வீட்டையே ஒரு போர்க்களமாக மாற்றி இருப்பார்கள்.


"இல்லேன்னா... எல்லாம் இரவு தாமதமாகத்தான் தூங்கினார்கள்... அதனால் இன்னும் எழுந்து கொள்ளவில்லை..."என்று கூறி அவள் வாயை மூடுவதற்கு முன்பாகவே அங்கு ஓடி வந்து இருந்தனர் வெண்மதி ஈரைந்து மாதம் சுமந்து அவளை பாடாய் படுத்தி விட்டு இவ்வுலகத்திற்கு வந்து சேர்ந்த குழந்தைகள்.


"அம்மா..."என்னை எழுப்பாமல் இன்னும் இங்கே என்ன பண்ணி கொண்டு இருந்தீர்கள்... உங்களால் நான் எவ்வளவு நேரம் உறங்கி விட்டேன்.


பாவம் அம்மா இன்று நீங்கள் தனியாக வேலை பார்த்திருப்பீர்கள்... நான் எத்தனை முறை நான் உங்களிடம் சொல்லுவது, என்னை எழுப்புங்க நானும் உங்களுக்கு உதவி செய்றேன் என்று அன்னைக்காக பரிதாபப்பட்டு அன்னையுடன் சண்டை பிடித்தது மதியின் முதல் குழந்தை ஹரித்ரா.


"ஓய் செல்லகுட்டி... அம்மாவுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.. பாவம் என் குட்டி நீங்க சமத்தா தூங்கி கொண்டு இருந்தீர்கள்.. உங்களை எழுப்புவதற்கு அம்மாவிற்கு மனம் வரவில்லை... நீங்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நிம்மதியாகத் தூங்கி ஜாலியாக உன் தங்கைகளுடன் விளையாடு... அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்..."என்று கூற,


"ம்மா.."இருந்தாலும் நீங்கள் கஷ்டப்படுவீர்கள் தானே... நான் உங்கள் மீது கோபமாக இருக்கிறேன் என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவர்களின் செல்லச் சண்டையை ரசித்துப் பார்த்த விக்கி பத்மினி தம்பதியினர் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.


மகளை சமாளிக்க முடியாது விழிபிதுங்கி நின்ற வெண்மதி கண்களால் பத்மினிடம் திரும்பி இவளை சமாளி என்று வேண்ட அதை கண்ட பத்மினி குழந்தையை சமாதானப்படுத்த போவதற்கு முன்பாகவே,


"மை டியர் லிட்டில் பிரின்சஸ் ஏன் காலையிலேயே இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்..."ஒருவேளை என் கோபம் கோபம் வந்துவிட்டதோ...?? குழந்தையை பார்த்து கேள்வி கேட்க,


"பாருங்கள் மாமா அம்மா தனியாக வேலை செய்யறாங்க... நாமளும் உதவி செய்வோம் என்று அவர்களை எழுப்பி விடச் சொன்னா.. அவர்கள் என்னை எழுப்பி விடவே இல்லை..."அழு குரலில் கூற, மதியின் கண்களில் ஒரு சொட்டு நீர் கீழே விழுந்தது.

மதி அழுவதை பார்த்த பத்மினி "மதி என்ன இது சிறு குழந்தை போல் அழுது கொண்டிருக்கிற... நீ அழுவதைப் பார்த்தால் குழந்தை இன்னும் அழுவாள்... உன்னை கட்டுப் படுத்திக் கொள்"என்று கூறவும் தன்னை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் வெண்மதி.


"என் பேபி உங்களுக்கு வேலை வேண்டும் அவ்வளவு தானே... இதோ உங்கள் பத்மினி அத்தை அவங்க வைத்துக்கொள்ள இருக்கிற உங்க குட்டி பாப்பாவை ஒழுங்காவே பாத்துக்க மாட்டேங்குறாங்க... ஒழுங்கா மாத்திரையும் சாப்பிடாமல் உணவும் சாப்பிடாம இருக்காங்க... நீங்க இனிமே பத்மினி அத்தையை நல்லா பார்த்துக் கொள்வீர்களா..."என்று சிறு சிரிப்புடன் கேட்க,


குழந்தையோ "நான் பார்த்துக்குறேன் மாமா..." அவனிடம் கூறியது அப்படியே பத்மினி பக்கம் திரும்பி "அத்தை இனி மேல் நான் சொல்றதை தான் நீங்கள் கேட்கவேண்டும்... இல்லாட்டி நான் உங்கள ஊசி போடும் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் விடுவேன்..."என்று சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததை மறந்த குழந்தை அத்தையை செல்லமாக மிரட்டியது.


கணவனை முறைத்து பார்த்த பத்மினி குழந்தையை பார்த்து "சரிங்க பாட்டியம்மா... நீங்கள் சொல்வதைக் கேட்டு நான் நடந்து கொள்கிறேன்... நீங்க எனக்கு ஊசி எல்லாம் போட வேண்டாம்..." என்று குழந்தையிடம் சரணடைந்தாள்.


இதுதான் மூத்தவள் ஹரித்ரா. தன்னைப் பெற்ற அன்னையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவள். மதியின் மூத்த குழந்தை. அதேசமயம் கண்டிப்பாக குழந்தை, அனைத்து விஷயங்களிலும் நேர்த்தியாக இருக்க வேண்டும், அன்னை எந்த வேலையும் செய்யாமல் ராணி போன்று இருக்க வேண்டும் என்று அம்மாவின் மீது அளவுக்கதிகமான அன்பு கொண்ட அருமையான மூத்த குழந்தை.


"அம்மா..."நீ ஏன் என்னை எழுப்பி விடவில்லை...? உன்னால் பார் சின்சான் பார்ப்பதற்கு நேரமாகிவிட்டது... உன்னை உன்னை என்ன பண்றேன் பாரு... என்றவாறு அதே அறைக்குள் இருந்து ஓடி வந்தது மற்றொரு வாண்டு.


அன்னையை அடிப்பதற்காக ஓடி வர, குழந்தையை அந்தக் குழந்தை தனமான செயலை கண்டு பத்மினி சிரிக்க அவள் சிரிப்பில் குழந்தை மொத்தமாக அவரிடம் திரும்பியது.


"உங்களுக்கு வேற வேலை இல்லையா... எப்ப பார்த்தாலும் என்னை பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கீங்க..அழகா பிறந்தாலும் பிறந்தேன் இப்படி எல்லாம் என்னைய பார்த்து சிரித்து ரசித்து கொண்டே இருக்கிறார்கள்..."தன் அழகை தானே புகழ்ந்தது அந்த மற்றொரு வாண்டு குட்டி.


"சமுத்ரா..."பெரியவங்கள பார்த்து என்ன பேசுற? அத்தை கிட்ட மன்னிப்பு கேளு... குழந்தையின் தரமற்ற பேச்சில் கோபம் கொண்ட மதி குழந்தையை திட்ட அந்தக் குழந்தையோ அன்னை திட்ட முகத்தை சுருக்கிக் கொண்டது. அதை அதை கண்ட பத்மினி,"ஏன் குழந்தையை திட்டுகிற மதி... என் செல்ல குழந்தை என்னிடம் தானே சண்டை போடுகிறாள்... இன்னும் சொல்லப்போனால் என் செல்லக்குட்டி என்னிடம் வந்து காலையில் அது அழகாக இல்லை என்றாலும் தன்னை அழகு என்று நினைத்துக்கொண்டு பெருமை பேசிக் கொள்வதைப் பார்த்தால் தான் எனக்கு நிம்மதி ஆகவே இருக்கும்"என்று குழந்தையை வாரினாள்.


பத்மினி வாயை திறந்ததும், தன் அத்தை தனக்கு சப்போர்ட் பண்ண போறாங்க... என்று தன் அரிசி பற்கள் வெளியே தெரியுமாறு புன்னகைக்க, இறுதியில் அத்தை தான் அழகில்லை என்று சொல்லவும், பக்கத்தில் நின்ற விக்கியிடம் சென்ற குழந்தை "மாமா... நான் பார்க்கிறதுக்கு அழகா இல்லையா... இந்த அத்தை ஏன் இப்படி பொய் சொல்கிறார்கள்..."மாமாவிடம் புகார் வாசிக்க,


அவனோ"நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று உங்கள் அத்தைக்கு பொறாமை.."என்று வாயை விட, பத்மினி கணவனை மீண்டும் ஒருமுறை முறைக்க குழந்தையோ கிளுக்கி நகைத்தது.


அதில், தன் நாக்கை கடித்துக் கொண்டான் விக்கி மனைவியை கொஞ்சல் பார்வை பார்க்க அவளோ உக்கிரமாக முறைத்தாள் கணவனை.


அடுத்தபடியாக "அம்மா..."எங்க இருக்க...? என்று அழுதபடியே வந்தது மற்றொரு குழந்தை கணித்ரா.


"அச்சோ..."இவளை எப்படி மறந்தேன்? நான் பக்கத்தில் இல்லையென்றால் பயந்து போய் விடுவாள்... என்று தன் மடத்தனத்தை நொந்து கொண்டவாறு அந்தக் குழந்தையை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் வெண்மதி.


குழந்தை இன்னும் சமாதானமாகமல் அழுது கொண்டே இருக்க "செல்ல குட்டி அழக்கூடாது... அம்மா இங்கே தான் இருக்கிறேன்... அழக்கூடாது நீங்கள் சமத்து குட்டி தானே..."என்று குழந்தையை சமாதானப்படுத்த அது நன்றாகவே வேலை செய்தது.


ஆம். ஒரே பிரசவத்தில் மூன்று முத்துக்களை பிரசவித்த இருந்தாள் வெண்மதி.


எனக்கென ஒரு உறவுமில்லை
நான் ஒரு அனாதை என்றேன்
நீ தேவதை என்றது கடவுள்
ஒரே பிரசவத்தில் தந்தாய் மூன்று முத்துக்கள்...







Comment please
 
Status
Not open for further replies.
Top