All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் "பாலைவனனின் பாவை அவள்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 1

28142

"வைதேகி..!! வைதேகி..!! ஏண்டியம்மா வைதேகி..!!" என்று அந்த பழமை வாய்ந்த அக்ரஹார வீட்டினுள் நுழையும் போதே தன் மனையாளான வைதேகியை அழைத்தபடி வந்தார் சுப்ரமணிய சாஸ்திரி.

அவரது குரல் கேட்டு அடுக்களையினுள் இருந்து தன் கைகளை துடைத்தபடி ஒரு சொம்பு தண்ணீரை கையில் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்த வைதேகி அதை தன் கணவன் புறம் நீட்டியபடி "ஏண்ணா இதை சத்த குடிங்கோ பிறகு பேசவந்த விஷயத்தை பேசிக்கலாம்....!!" என்று முகத்தில் வழியும் மலர்ந்த புன்னகையுடன் சொல்ல.

அதில் தன் மனைவியை பார்த்து புன்னகைத்த சுப்ரமணி "ஹா..ஹா நீ இருக்கியே..!!" என்று செல்லமாக அலுத்தபடி தண்ணீர் அடங்கிய சொம்பை வாங்கி வாயில் சரித்தார்.

உண்மையில் அவருக்கு தாகமாக தான் இருந்தது போலும் அந்த சொம்பில் ஒரு சொட்டு தண்ணீர் மிச்சமின்றி மொத்தமாக குடித்து முடித்தவர் காலியான சொம்பை தன் மனையாள் புறம் நீட்டினார்.

அவரை பற்றி அறிந்த அவர் மனையாளும் சிறுபுன்னகையுடன் அந்த சொம்பை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கணவன் புறம் வர, அதற்குள் சுப்ரமணி வீட்டுத்திண்ணையில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

"இப்ப சொல்லுங்கோணா, போன காரியம் என்னாச்சு..??" என்று ஒரு வித ஆர்வத்துடன் வினவ.

அதில் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தன் மனைவி புறம் திரும்பிய சுப்ரமணி "நேக்கு பரம திருப்தியா இருந்துதுடி வைதேகி..!! மாப்பிள்ளை பேரு ராகவன் சென்னையில பெரிய கம்பனில இன்ஜினியரா இருக்காரு. சொத்து பத்துனு அவா தோப்பனார் சேத்துவச்சதே இந்த தலமுறைக்கு காணும் அது பத்தாதுன்னு இவரும் நன்னா சம்பாதிக்குறார். அது மட்டும் இல்லை அவா நம்மளை போலவே ஆச்சாரமான பிராமணன் குடும்பம்..!!" என்று உற்சாகமாக சொன்னவர் தொடர்ந்து

"நம்ம மக ஜாதகமும் அவா ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்கு கூடவே அவாளுக்கு நம்ம பொண்ணை ரொம்பவே புடிச்சுபோச்சு டி..!! அவாளுக்கும் நம்ம பொண்ணை பார்த்து பரம திருப்திதான். ஆனா என்ன மாப்பிளை ஜாதகப்படி அடுத்த வருஷம் தான் கல்யாணம் செய்யணும்னு இருக்கு அதனால கல்யாணத்தை ஒரு வருஷம் தாண்டி வைக்க சொல்லி இருக்காங்க..!!" என்று கடைசியில் குரல் நலிந்து சொல்ல

"அதுக்கென்னணா அது இன்னும் நல்லது..!! நம்ம பொண்ணும் இப்ப தான் படிச்சிண்டு இருக்கா அடுத்த வருஷம் சரியா அவ படிப்பும் முடிஞ்சிடும். முடிஞ்ச கையோட கல்யாணம் செஞ்சு வச்சா இன்னும் வசதியா இருக்குமோனோ..!!" என்று வைதேகி சொல்ல.

அதுவே சரி என்று பட்டது சுப்ரமணிக்கு.

"சரி டி வைதேகி...!! பிரயாணம் செஞ்சதுல நேக்கு நல்லா தலைவலியா இருக்கு டி அந்த தரித்திரத்துக்கிட்ட நேக்கு ஸ்டிராங்கா பில்டர் காப்பி போட சொல்லு..!!" என்று சொல்ல

அதற்கு வைதேகியோ "ப்ச் அவ நம்ம ஆத்து பக்கத்துல இருக்க திருமால் கோயிலுக்கு போயிருக்காணா. இருங்கோ நான் போய் உங்களுக்கு போட்டுண்டு வரேன்..!!"என்று சொல்லி விட்டு அடுக்களைக்குள் நுழைய.

கோவில் என்று சொன்னதில் இவரும் அமைதி ஆகி விட்டார்.

அதே நேரம் அந்த திருமால் கோவிலின் வெளியே ஒரு பெரிய அண்டாவை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள் அவள்.

மஞ்சள் நிற தாவணியும் அதற்கு தோதாய் சற்று வெளுத்துபோன கருநீல நிற பாவாடை அணிந்து தலையை நேர் வகிடு எடுத்து கறுப்பு நிற ரிப்பனால் இருபுறமாய் முடிந்து விட்டிருந்தாள்.

நெற்றி வகிட்டில் சிகப்பு நிற சாந்து பொட்டை கோவி வடிவில் வைத்து அதற்கு மேல் குங்குமம் அதற்கு மேல் திருநீறு வைத்திருந்தாள். காதின் ஓரத்தில் சற்று நேரத்துக்கு முன் கோவிலில் கொடுத்த சிகப்பு ரோஜாவை சொருகியிருக்க.

மேலும் அதில் வட்டவடிவிலான பிளாஸ்டிக் தோடும் வீற்றிருந்தது. கூடவே கழுத்தில் சிகப்புற நிற தாயத்துடன் கூடிய நூலும் போட்டவாறு மாநிறத்திற்கும் சற்றே குறைந்த நிறத்தில் இருந்தாள் அவள். என்ன தான் நிறம் குறைவாய் இருந்தாலும் பளிச்சென்று அனைத்து பல்லும் தெரியும் படி அவள் வெகுளியாய் புன்னகைக்கையில் அத்தனை அழகாய் இருந்தது அவளை பார்ப்பதற்கு.

இருமாதங்களுக்கு முன்பு தான் பத்தொன்பது வயதை அடைந்திருந்தாள்.

தூக்கமுடியாமல் அவள் அந்த அண்டாவை தூக்கிக்கொண்டு வருவதை பார்த்து "அடியே அலமூ..!!" என்றபடி அவள் அருகில் வந்தாள் அவளது தோழி பாவனா.

தன் தோழியின் குரல் கேட்ட அலமூ இவளோ தோழி வந்துவிட்ட நிம்மதியில் "பாவனா..!! சத்த கைகொடு டி இந்த அண்டாவை தூக்கி அதோ அந்த கோவில் வாசல்ல வச்சிடுவோம்..!!"என்று சொல்ல.

உடனே அந்த அண்டாவின் மறுபுறத்தை பிடித்துக்கொண்டாள் பாவனா..!!

இருவருவமாய் சேர்ந்து அந்த அண்டாவை கொண்டு கோவிலின் வாசலில் வைத்துவிட்டு மூச்சு வாங்கியபடி நிமர.

அதில் பாவனாவோ அலமூவை பார்த்து "ஏண்டி அலமூ..!! நோக்கு ஏண்டி இந்த வேண்டாத வேலை..!! அது பாட்டுக்கு கோவில் சன்னிதானத்துக்குள்ள தானே இருந்தது. நீ ஏன் மெனக்கெட்டு போய் இதை இங்க தூக்கிண்டு வந்த..!!" என்று லேசாய் முறைத்தவண்ணம் கேட்க.

அதில் தன் நெற்றியில் வழிந்த வியர்வையை தன் தாவணியால் துடைத்தபடி மூச்சு வாங்கியவாறே "இல்லடி பானு..!! இந்த பொங்கல் சன்னிதானத்துக்குள்ள இருந்தா இதோ இவாள் எல்லாம் அதை புசிக்க முடியாது..!! அதான் வெளிய எடுத்துண்டு வந்தேன்" என்று அந்த கோவிலின் வெளியே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவர்களை சுட்டிக்காட்டி கூற.

அதில் அவளை வியப்புடன் பார்த்தாள் பாவனா கூடவே அவளது நிலையை எண்ணி கவலையும் வர

"இப்படி அடுத்தாளுக்கு பாவம் பாக்குற நோக்கு இந்த பகவான் பாவம் பாக்கலையேடி..!!" என்று எவ்வளவு முயன்றும் வாயை அடக்க முடியாமல் பாவனா சொல்லிவிட.

அதில் அதுவரை இருந்த புன்னகை மறந்து ஒரு நொடி முகம் வாடி விட்டது அலமூவிற்கு.

ஆனால் அடுத்த நொடி தன்னை
மீட்டெடுத்தவள் தன் தோழியை பார்த்து மெல்ல புன்னகைத்தவாறு "டி பாவனா, அந்த பகவான் எந்த ஒரு ஜீவராசிகளையும் சும்மா படைச்சிருக்க மாட்டார், கண்டிப்பா ஏதாவது காரணத்தோடு தான் படைச்சிருப்பார். அதே போல எப்பவும் ஒரு மனுஷாளுக்கு துன்பத்தையே கொடுத்திண்டு இருக்க மாட்டார். என்ன நான் என் வீட்டுல கொஞ்சூண்டு கஷ்ட படுறேன் அதுவும் என் மேல இருக்க அக்கறையில தான் என் தோப்பனார் அப்படி செய்யுறார். நீ வேணும்னா பாரேன் நான் என் ஆத்துக்காரர் வீட்டுக்கு போனா என்னை என் ஆத்துக்காரர் ராணி போல பார்த்துப்பார்...!!" என்று கண்கள் மலர கூறியவள் கன்னத்தில் கைவைத்து ஏதோ யோசித்தவாறு "ம்ம்ம்..!! அது என்னமோ சொல்லுவாங்களே..?? ஆங்..!! தரைல பாதம் படாம, அப்படி என்னை பார்த்துப்பார் எனக்கு வர போற ஆத்துக்காரர்...!!" என்று தன் தோழிக்கு தன் மீது இருக்கும் வருத்தத்தை போக்க எண்ணி இவள் சொல்ல அச்சமயம் சரியாய் கோவில் மணி அடித்தது.

அதில் கண்களை விரித்தவள் தன் தோழியின் புறம் திரும்பி "டி பார்த்தியா..?? மணி அடிச்சு அந்த பகவானே நடக்கபோறதை உறுதி படுத்திட்டார்..??" என்று சொல்லியவாறு கோவில் புறம் திரும்பி தன் கன்னத்தில் போட்டவள் கையை மேலே தூக்கி பகவானே என்று வாய் விட்டு கூறியபடி கும்பிட்டாள்.

தன் தோழியின் நிலை கண்டு வருத்தபடுவதா இல்லை சந்தோஷபடுவதா என்று அறியாமல் நின்றாள் பாவனா.

ஆனால் தன் வருத்தத்தை கூறி தன் தோழின் மனதில் சஞ்சலத்தை விதைக்க வேண்டாம் என்று எண்ணியவள் அவள் புறம் குறும்புடன் திரும்பி..

"எப்படி..?? உன்னை போல அம்மாஞ்சியா தானே நோக்கு மாப்பிள்ளை வேணும்..!!" என்று கேலியாக கேட்க

அதில் தன் தோழியை முறைக்க முயன்று சிரித்தவள் "நான் எப்படியோ அது நேக்கு தெரியலை டி ஆனா நேக்கு வர போறவர் மனது தூய்மையா இருக்கணும் அதிகமா கருணை உள்ளம் கொண்டு இந்த உலகத்துல உள்ள எல்லா வாயில்லா ஜீவராசிகள் கிட்டையும் அன்பா இருக்குறவா தான் என் ஆத்துக்காரர் இருப்பார். இது வரை ஒரு ஈ எறும்பு கிட்ட கூட அவர் பாவமே செஞ்சிருக்க மாட்டார். அதிர்ந்து கூட பேசாதவரா இருப்பார் கூடவே நன்னா வடு மாங்கா ஊறுகாவோடு மணக்க மணக்க எனக்கு தயிர் சாதம் சமைச்சு போடுறவாளா தான் எனக்கு வரபோற ஆத்துக்காரர் இருப்பார்..!!" என்று நாக்கை சப்புக் கொட்டியபடி கூற.

அதில் தன் தோழியை பார்த்து களுக்கென்று சிரித்த பாவனா "ஏண்டி அலமூ நோக்கு குடும்பம் நடத்த மாப்பிள்ளை வேணுமா இல்லை சமைச்சு போடுற துறவியா மாப்பிள்ளை வேணுமா..??" என்று கேலியாக கேட்ட

அதில் "போடி..!!" என்று செல்லமாக சிணுங்கிய அலமூ "தெரியலடி பாவனா, நேக்கு சின்ன வயசுல இருந்து அப்பா பாசம் பெருசா கிடைச்சது இல்லை, மடியில போட்டு தூங்க வைக்கிறதுல இருந்து எனக்கு பிடிச்சதை கையால சமைச்சு ஊட்டிவிடுறது வரை எதுவும் யாரும் நேக்கு பண்ணது இல்லை அதான் இது எல்லாத்தையும் சேர்த்து எனக்கு வரபோறவாகிட்ட எதிர்பார்க்குறேன்..!!" என்று முகம் கறுக்க கண்களில் முட்டிய கண்ணீரோடு சொன்னவள் சட்டென்று தன்னை சுதாரித்தபடி கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு முகத்தில் எப்போதும் உள்ள புன்னகையை பூசியவாறு தன் தோழியை பார்த்தவள் அவள் தன்னை பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து தன்னை முழுவதும்
மீட்டெடுத்தவளாய்

"டி பாவனா நம்ம வெட்டி பேச்சை அப்புறம் வச்சுக்கலாம் இப்போ இவாள் எல்லாருக்கும் பொங்கலை கொடுப்போம் என்று சொல்ல..!!" அதில் தான் வருத்தப்பட்டு தன் தோழியின் ரணத்தை கிளறவேண்டாம் என்று முடிவெடுத்த பாவனா தலையை மட்டும் ஆட்டினாள். பின் இருவரும் சேர்ந்து அங்கிருந்தவர்களுக்கு பொங்கலை வழங்கினர்.

கோவிலுக்குள் சென்று வெளியேறுபவர்களுக்கும் பாவனா பொங்கல் கொடுக்க.. அங்கு பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அலமூ பொங்கல் கொடுத்தாள்.

பொங்கல் எல்லாம் பரிமாறி முடித்துவிட்டு சன்னிதானத்தை ஒருமுறை சுற்றி வந்த தோழிகள் பின் விடைபெற்று அவர் அவர் வீட்டுக்கு செல்ல.

அலமூவும் அவள் வீட்டினுள் நுழைந்தாள். வீட்டினுள் வைக்கப்பட்டு இருந்த துளசி செடியின் ஓரத்தில் கையில் இருந்த கோவில் பிரசாதத்தை தட்டிவிட்டு அவள் நிமிர்கையில் "க்கூம்..!!" என்று தொண்டையை கனைக்கும் குரல் கேட்க பதறி நிமிர்ந்தவளின் முகமோ தன் முன்னே நின்றவரை பார்த்து வெளிறி போனது.

அங்கோ அலமூவை உக்கிரமாக முறைத்துக்கொண்டு நின்றார் சுப்பிரமணி.

"கழிசடை..!! கழிசடை..!! எங்க டி போய் ஊர்மேய்ஞ்சிட்டு வர்ற..??" என்று சிறுபெண் என்றும் பாராமல் வார்த்தையால் அவர் வதைக்க.

அதில் சட்டென்று தேங்கிய கண்ணீருடன் அடுத்து நடக்கபோவதை எண்ணி பயத்துடன் எச்சிலை கூட்டி விழுங்கியவாறே "இல்லை ப்பா நா.. நா.. கோவிலுக்கு தான் ப்பா போயிண்டு வந்தேன்..!!" என்று அழுகையுடன் குரல் அடைக்க பேச

"கோவிலுக்கு போக நோக்கு இவ்வளவு நேரமா..?? ஹான்...!! கழிசடை நாயே உன் அம்மாவை போலவே ஓடுகாலியா வளருறியா நீ..!!" என்றவர் அவளை வெறுப்புடன் பார்க்க.

அவரது வார்த்தையில் எப்போதும் போல துடித்து போனாள் அலமூ.
அதற்கு மேல் என்ன சொல்ல வந்தாரோ அதற்குள் அங்கு வந்த வைதேகி அங்கே நடப்பதை கண்டு லேசாய் பதறியவாறு "ஏண்ணா விடுங்கோ அவளை, அவ எங்கிட்ட சொல்லிட்டு தான் போனா..!!" என்று கூறி அவளை காப்பாற்ற அதில் அவரையும் முறைத்தவர் தன் தோளில் இருந்த துண்டை உதறிவிட்டு இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் போனதும் நிம்மதி பெருமூச்சு விட்ட வைதேகி அங்கு கண்களில் கண்ணீருடன் நின்றுக் கொண்டு இருந்த அலமூவை பார்த்து பரிதாபம் எழ அதை அடக்கியவர் "ஏண்டி என்ன அங்கேயே மசமசனு நிக்குற நோக்கு ஒவ்வொரு வேலையா சொல்லணுமா..?? போ..!! மாடில வத்தல் காய போட்டிருக்கேன் அதை ஒரு தடவை கிண்டிவிட்டுட்டு வா..!!" என்று சொல்ல அதில் வேகமாக தன் கண்ணீரை துடைத்தவள் தாவணி பிடித்தபடி வேகமாக மாடி படிகளில் ஏறினாள்.

அதை பார்த்து ஒரு பெருமூச்சோடு அடுக்களையினுள் நுழைந்தார் வைதேகி.

பிராமண குடும்பத்தை சார்ந்தவர் தான் சுப்பரமணி. வெளி இடத்தில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்துக் கொண்டு இருந்தவருக்கு அங்கு உடன் பூஜை செய்யும் பெரியவரின் பெண்ணின் மீது காதல் வர அதை அப்பெண்ணிடம் கூறி சம்மதம் பெற்று ஒரு வருடமாக காதல் கடலில் மூழ்கி கொண்டு இருந்தார்.

அச்சமயம் திடீர் என அவர் தந்தைக்கு சீரியஸ் என்ற செய்தி வர என்னவோ ஏதோ என்று பதறி ஊருக்கு போனவரை பிடித்து கடைசி ஆசை என்று கட்டாயப்படுத்தி தன் தங்கை பெண்ணான சுப்புலஷ்மிக்கு மணமுடித்து வைத்த சுப்பிரமணியின் தந்தை அச்சமயமே தன் உயிரை விட்டிருந்தார்.

தந்தையின் இறப்பு அதற்கு மேல் தன் காதல் கைகூடாமல் போன சோகம் என எல்லாம் சேர்ந்து கோபமாக சுப்புலஷ்மியை தாக்கினார் சுப்பிரமணி.

தினம் தினம் தன் விஷசொற்களால் அவரை தாக்கியவர் ஒரு வருடத்தில் சுப்புலஷ்மி தனக்கு பிள்ளை பெற்று தரவில்லை என்று வேண்டுமென்றே அவர் மீது மலடி என்ற பழிச்சொல்லை இட்டு இரண்டாவதாக வைதேகியை திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணமான ஒரு வருடத்திலேயே வைதேகி "வைஷ்ணவி..!!" என்ற பெண் மகவை ஈன்றெடுக்க.

இதையும் கூறி சுப்புலஷ்மியை வார்த்தைகளால் குதறி தள்ளினார் சுப்பிரமணி.

இதோ இதோ என்று வைஷ்ணவி பிறந்த மூன்று வருடத்தில் சுப்புலஷ்மி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்க. தன் வெள்ளை நிறத்துக்கு கொஞ்சமும் ஒத்துபோகாத கரிய நிறத்தில் இருந்த அந்த பிஞ்சு பிள்ளையை பார்த்து கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் "எவன் கூடயோ படுத்து புள்ள பெத்துண்ட நோக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் குழந்தையினு சொல்லுவ ஓடுகாலி நாயே..!!" என்று வார்த்தைகளால் சுப்புலஷ்மியை குத்தி கிழித்தவர் அந்த பிஞ்சு குழந்தையை கையால் கூட தொடவில்லை

ஊரில் அனைவரிடமும் இதை கூறியவர் சுப்புலஷ்மியின் பெண்மைக்கே இழுக்கை உண்டாக்கினார்.

எவ்வளவு தான் ஒரு பெண்ணும் தாங்குவாள். அதிக துக்கத்தை தாங்கியதால் என்னமோ தூக்கத்திலேயே தன் உயிரை விட்டிருந்தார் சுப்புலஷ்மி.

அவர் அருகில் இன்னும் பெயர் கூட சூட்டப்படாத நிலையில் பசியில் அழுது கொண்டிருந்தது அந்த பச்சிளம் குழந்தை.

சுப்புலஷ்மியை வேண்டா வெறுப்பாய் அடக்கம் செய்து முடித்து வந்த சுப்பிரமணி அங்கு வைதேகி அக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பால் புகட்டிக்கொண்டிருப்பதை பார்த்து கொதித்து எழுந்தேவிட்டார்.

"கருமம் கருமம்..!! ஏய் வைதேகி நோக்கு ஏண்டி இந்த வேண்டாத வேலை, அந்த ஓடுகாலி பெத்துபோட்ட கழிசடைய தூக்கி வெளிய கடாசிட்டு உள்ள வா..!!" என்று சத்தம் போட

"வார்தைய அளந்து பேசுங்கோணா..!! இந்த பச்சபிள்ளைய பார்த்து நோக்கு இரக்கம் வரலியா..??" என்று கண்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தபடியே ஆதங்கமாய் கேட்க

அதில் எரிச்சலுடன் அவரை பார்த்த சுப்பிரமணி "நோக்கு எல்லாம் சொன்னா புரியாது டி பட்டா தான் புரியும்..!! என்னமோ செய்..!!" என்று கூறி தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டு உள்ளே சென்றுவிட கண்களை துடைத்தபடி மீண்டும் அக்குழந்தைக்கு உணவு ஊட்ட ஆரம்பித்தார் வைதேகி.

குழந்தை நடந்து திரியும் வரை சற்று கவனமாக பார்த்துக்கொண்ட வைதேகி பின் படிபடியாய் விலக ஆரம்பித்தார்.

அதில் முக்கிய பங்கு வைஷ்ணவியையே சாரும். சுப்பிரமணியின் செல்லபிள்ளையான வைஷ்ணவிக்கோ அச்சிறுவயதில் தந்தை கூறும் விஷவார்த்தைகள் வேதவாக்காய் போக தாயிடம் சண்டையிட ஆரம்பித்தாள் போதாதென்று அக்குழந்தையையும் அடித்து கிள்ளி என துன்புறுத்தி தாக்க ஆரம்பிக்க துணுக்குற்ற வைதேகி வேறுவழியில்லாமல் அக்குழந்தையிடம் இருந்து விலக ஆரம்பித்தார்.

பெயர் சூட்டப்படாத அக்குழந்தைக்கு அக்கம்பக்கத்தினரில் எவரோ வயதான ஒருவர் செல்லமாய் அழைத்த "அலமூ குட்டி..!!" என்ற வார்த்தையே பெயராய் மாற அதில் இருந்த அவள் "அலமூ..!!" ஆனாள்.

வைதேகி அவளை ஸ்கூலில் சேர்த்து விட்டப்போது "கஸ்தூரி..!!" என்று சேர்த்துவிட ஏனோ அந்த தமிழ் மீடியம் கவர்மென்ட் ஸ்கூலில் அழைப்பவரை தவிர வேறு யாரும் கஸ்தூரி என்று அழைக்காததால் யார் பெயரை கேட்டாலும் "அலமூ..!!" என்றே கூறுவாள் அவள்.

கான்வென்ட் ஸ்கூலில் படித்த வைஷ்ணவிக்கோ காலையில் ஷூ பாலிஷ் போடுவது முதல் துணி அயன் பண்ணுவது வரை அலமூவே செய்ய தடுக்க வந்த வைதேகியிடம் "இது என்ன சத்திரமா எல்லாருக்கும் தண்ட சோறு போட..?? வேலை செஞ்சா தான் இங்க இடம்..!!"என்று சுப்பிரமணி கறாராய் சொல்லிவிட மௌனியாகி போனார் வைதேகி.

இங்கு அலமூவுக்கு ஆரம்பத்தில் எல்லாம் வித்தியாசமாய் இருந்தது. வைஷ்ணவியிடம் கொஞ்சும் தந்தை தன்னிடம் எறிஞ்சு விழுவது ஏன் அதுவும் இல்லாமல் தகாத வார்தைகளால் இறந்த தன் தாயை திட்டுவது ஏன்..?? என்று ஒன்றும் புரியவில்லை.

வளர வளர புரிய தொடங்க தாயை எண்ணி கவலையுடன்அழுதாள். ஆம் ஒன்றும் செய்யாத தன்னையே தந்தை இப்படி திட்டுகிறார் என்றால் தன் தாய் ஒன்றும் செய்து இருக்க மாட்டார் என்றே நம்பினாள்.

இதில் வைதேகியும் அவளை விட்டு ஒதுங்கியே இருக்க எல்லோரும் ஒதுக்க ஒதுக்க இவளே ஒடுங்கி போனாள்.


நல்லவரை தான் கடவுள் மிகவும் சோதிப்பாராம் அது அலமூவின் விஷயத்தில் சரியாய் இருந்தது ஆம் சரியாய் பத்தாவது பொது தேர்வில் டெங்குவால் பாதிக்கப்பட்டு பரிட்சை எழுதமுடியாமல் ஆனாள் அலமூ.

அதில் அது தான் சாக்கு என்று அவளது படிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டு விட்டார் சுப்பிரமணி. அதில் அவரை எதிர்த்து ஒன்றும் பேசமுடியாமல் சோர்ந்து போனார் வைதேகி.

அவ்வீட்டில் வீட்டு வேலை செய்பவள் மறந்தும் புத்தகங்களை தொட மாட்டாள். அப்படி தொட்டால் இல்லை தொட போவதை பார்த்தாலே சுப்பிரமணி ஆடி தீர்த்து விடுவார். அதற்கு பயந்தே அவள் புத்தகம் இருக்கும் பக்கம் கூட போகமாட்டாள்.

**********************************

"இப்போ என்னணா பண்ணுறது..!!" என்று கவலையாக கேட்ட வைதேகியிடம் சோர்ந்து போன முகத்துடன் "ப்ச் நேக்கு தெரியலை டி வைதேகி, நம்ம பொண்ணு படிப்புக்கு வாங்குன கடன் கழுத்தை நெரிக்குது இதுல அவளுக்கு கல்யாண செலவு வேற இருக்கு அதுக்கு இப்பவே சேர்க்கணும் ம்கூம்..!! என்ன பண்ணபோறேன்னே தெரியலை..!!" என்று கூறி பெருமூச்சு விட்டவரை பார்த்து கண் கலங்கியது வைதேகிக்கு என்ன தான் இருந்தாலும் காதல் கணவர் அல்லவா..?


ஆம் இப்போது காசு தான் அங்கு பிரச்சனை வைஷ்ணவியின் படிப்பு செலவுக்கு லட்சக் கணக்கில் கடன் வாங்கி இருக்க இப்போது அது வட்டி போட்டு பெரிய தொகையாய் நிற்கிறது.

கடன் கொடுத்தவர்கள் வேறு கேட்க தொடங்க என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் சுப்பிரமணி.

இதை எல்லாம் அடுக்களையில் இருந்து பார்த்தவளுக்கோ தந்தையின் நிலையை எண்ணி வருத்தமாய் இருக்க அச்சமயம் அவள் மனக்கண்ணில் மின்னி மறைந்தது ஒரு நிகழ்வு அதில் சட்டென்று தன் துணிமணிகள் இருக்கும் பையை திறந்தவள் அதில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்தவள் கண்களில் ஒளிரும் நம்பிக்கையுடன் நிமிர்ந்தாள்.

இது ஒரு முறை இவள் வீட்டருகில் இருந்த ஒரு பெண் மணி இவள் படும் பாட்டை பார்த்து இரக்கப்பட்டு அவர் வேலைசெய்யும் இடத்தில் வேலையிருப்பதாய் சொல்லி கொடுத்த விலாசம். அப்போது தேவைபடாதது இப்போது தேவை சரியாய் பட்டது.

விஷயத்தை இவள் தயங்கி தயங்கி வைதேகியிடம் கூற மொத்தமாக மறுத்துவிட்டார் அவர்.

ஆனால் எங்கிருந்து தான் மூக்கு வேர்த்ததோ அச்சமயம் அங்கு வந்து சுப்பிரமணி இதை கேட்டுவிட.

"இதுவரை தண்டத்துக்கு ஓசில தானே சோறு போட்டேன் இப்போ அதுக்கு பரிகாரமா அவ எனக்கு சப்பாதிச்சு தர்றதுக்கு என்ன..?? நான் ஒன்னும் அவ செலவுல இல்ல நான் செஞ்சதை தான் திரும்பி கேக்குறேன்..!!" என்று இரக்கமே இல்லாமல் சொன்னவரிடம் வைதேகி எவ்வளவோ போராடி பார்த்தும் பயனில்லாமல் போனது .

இதோ உத்தரபிரதேச மாநிலத்தை நோக்கி செல்லும் ட்ரெயினில் ஏறிவிட்டாள் அலமூ..!!

ஏனோ பயத்தைவிட வீட்டை விட்டு முதல் முதலில் வெளியே செல்லும் ஆர்வமே அவளிடம் அதிகமாய் இருக்க ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தாள்.


அப்போது அந்த கம்பார்ட்மென்டில் தோள் பையை மாட்டியபடி வந்த இளைஞன் தன் டிக்கெட்டை குனிந்து பார்த்தபடி நிமிர்ந்து தன் கண்களால் தன் இருக்கை எண்ணை தேட சரியாய் அலமூவின் அருகே தான் இருந்தது அவனது சீட்.

அதில் "ஊப்..!! தேங்க் காட்" என்று கூறி பெருமூச்சு விட்டவன் தன் பேகை கழட்டி சீட்டின் கீழ் வைத்து விட்டு தொப் என்று ரிலாக்சாக அலமூவின் அருகில் அமர்ந்துகொண்டான்.

இதை எதையும் கவனிக்காமல் கருமமே கண்ணாய் உதட்டில் தோன்றிய புன் முறுவலுடன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் அலமூ.

அவளை பார்த்து அந்த இளைஞனுக்கு என்ன தோன்றியதோ..??அவள் கவனத்தை தன் புறம் திருப்ப எண்ணி இவனே அவள் புறம் திரும்பி "ஹே.. ஹாய்..!!" என்று அழைக்க.

அதில் சட்டென்று திரும்பி அவனை பார்த்தவள் அவன் தன்னை பார்த்து
புன்னகைத்ததை பார்த்து என்னசெய்வது என்று தெரியாமல் சிறு பதட்டத்துடன் பதிலுக்கு புன்னகைத்து வைத்தாள்.

"பஸ்ட் டைம் டிராவலா..??" அவளது பதட்டத்தை பார்த்து அவன் கேட்க.

அதில் கண்கள் விரிய ஆச்சரியமாய் அவனை பார்த்தவள் வேகமாய் ஆம் என்பது போல தலையாட்டினாள்.

அதை கண்டு பக்கென்று சிரித்துவிட்டான் அவன்.

"சோ க்யூட்..!!" என்றபடி சிரித்தவன் "இவ்வளவு பயம்னா ஏன் தனியா வர பேரெண்ட்ஸ்ச கூட்டிட்டு வந்திருக்கலாம்ல..!!" என்று ஒருமைக்கு தாவி இவன் கேட்க

"இல்ல வீட்டுல கொஞ்சம் பண கஷ்டம் அதான் வேலைக்கு .." என்று இழுத்தவள் வேகமாக "என் தோப்பனார் வரேன் தான் சொன்னார் நான் தான் அவரை வரவேண்டாம் சொன்னேன்....!!" என்று தந்தையை விட்டுகொடுக்காமல் அவள் பேச.


அதில் இதழ் பிரித்து சிரித்தவன் "தட்ஸ் குட் போல்ட் லேடி..!!" என்றான் அவளை பாராட்டுவது போல.

அதில் அவனது புகழ்ச்சியில் கூச்சத்துடன் சிரித்தாள் அலமூ.

அதற்கடுத்து இருவரும் நன்றாக பேச.

அவனது பேச்சில் அலமூவும் அவனுடன் நன்றாக பேசினாள்.

"பார்க்க படிச்சவர் போல இருக்கார் ஆனா எந்த பகட்டும் இல்லாம எவ்வளவு அழகா பேசுறார்..!!" என்று வியந்து போய் அவனை பார்த்தவள் அவனிடம் சகஜமாய் பேசினாள்.

உணவு உண்ணும் நேரமும் வர கைகழுவ சென்றவளுடன் எழுந்து வந்தவன் அவளிடம் "இந்த கம்பார்ட்மென்ல ஒரு லேடி கூட இல்ல உன்னை தவிர சோ எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லிட்டு போ சரியா..!!" என்று அக்கறையோடு சொல்ல அவள் மனதில் உயர்ந்து போனான் அவன்.

கைகழுவி விட்டு இருவரும் வந்து இருக்கையில் உட்கார அந்த இளைஞனோ கையில் இருந்த ஜூசை அவளிடம் நீட்டி "ஜூஸ் குடிக்கிறியா..??" என்று கேட்க அதில் தன் தலையை இடம் வலமாய் ஆட்டியவள் "மன்னிச்சுக்கோங்கோ பிராமண வழக்கப்படி வெளி இடத்துல எதுவும் சாப்பிட கூடாது அதனால.." என்று உணவை குறிப்பிட்டு காட்டி அவள் இழுக்க

கையை மேலே தூக்கியவன் "புரிஞ்சிச்சு புரிஞ்சிச்சு..!! ரிலாக்ஸ் மா..!!" என்று கூறியவன் அந்த பாட்டிலை மீண்டும் தன் பேகினுள் வைத்தான்.

இவளோ தனது கட்டை பையில் இருந்த ஒரு டிபன் பாக்ஸ்சை எடுத்தவள் அதை திறந்து தன் மூக்கை டிபன் பாக்ஸ்சின் மேல வைத்து ஆழமாக சுவாசித்து அந்த புளியோதரையின் மணத்தை தன்னுள்ளே முடியும் அளவு நிரப்ப.

அவள் செய்யும் செயலை வித்தியாசமாய் பார்த்தான் அவன்.

கையில் இருந்த புளியோதரையை எடுத்து அவன் புறம் நீட்டியவள் "எங்காத்துல வைதேகி அம்மா பண்ண புளியோதரை நன்னா நெய் மிதக்க தாளிச்சு கொட்டியது அந்த நெய் மணத்தோடு சேர்த்து சாப்பிடும்போது இந்த புளியோதரை தொண்டைக்குள்ளே இறங்கறச்சே அமிர்தமா இருக்கும்..!! அதுவும் எங்காத்துல செஞ்ச புளியோதரையை சாப்பிட்டா நூறு வயசு வரை ஆரோக்கியமா வாழலாம்" என்று பெருமையாய் சொல்ல.

அதில் ஒரு நிமிடம் அவனுக்கு எச்சில் ஊறி விட்டது அவளோ "ம்ம்..!!" என்றபடி மேலும் அதை நீட்ட அதை எடுக்கலாமா வேண்டாமா என்று இருந்தவன் "அப்போ உனக்கு..!!" என்று கேட்க

"நேக்கு இன்னொரு டப்பா இருக்கு நீங்க கவலை படாதிங்கோ..!!"என்று கூறி பளிச்சென்று புன்னகைக்க

அதில் அவள் கையில் இருந்த டிபன் பாக்சை வாங்கியவன் "அப்போ நான் நூறு வருஷம் வாழ்வேன்னு சொல்லுற..??" என்று சிரிப்புடன் கேட்டு அதை உண்ணத்தொடங்கினான் .

அதை பார்த்து ஆம் என்பது போல புன்னகைத்தவள் தன் பையில் இருந்த மற்றொரு டிபன் பாக்ஸ்சை எடுத்து திறக்க போக அப்போது அவள் கண்ணில் விழுந்தான் அவளுக்கு எதிரே அமர்ந்து இருந்தவன்.

இவள் ஏறியதில் இருந்தே கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு இருந்தவன் இப்போதும் அதே புத்தகத்தை வைத்து தான் படித்துக்கொண்டு இருந்தான்.

இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட இவள் பார்த்து அவன் குடிக்கவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் ட்ரெயினில் தூங்கவேண்டி லைட் அனைத்தையும் அணைத்துவிடுவார்கள் என்று ஒருவர் சிறிது நேரத்துக்கு முன் வந்து சொல்லி இருக்க. அதை கேட்டும் அவன் உண்ணாமல் இருப்பதை பார்த்து ஒருவேளை உணவு கொண்டு வரவில்லையோ என்று எண்ணினாள்.

தன் கையில் இருந்த புளியோதரையையும் தன் எதிரே இருந்தவனையும் மாறி மாறி பார்த்தவள் "சரி ஆபத்துக்கு பாவம் இல்லை..!!" என்று மனதில் எண்ணியபடி அதை அவன் முன் மெதுவாய் நீட்டினாள்.


அவனோ புத்தகத்தில் மூழ்கி இருப்பான் போலும் இவள் நீட்டியதை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.

அதில் அவனை எப்படி அழைப்பது என்று குழம்பியவள் அவன் போட்டிருக்கும் வெள்ளை சட்டையை பார்த்து "ஏங்க..!! வெள்ளை சட்டை போட்டுருக்குறவரே..!!" என்று அழைக்க அதில் சட்டென்று நிமிர்ந்து அவளை கூர்மையாக பார்த்தான் அவன்.

அந்த பார்வை ஏனோ இவளுக்கு பயத்தை கொடுக்க "இ.. இல்லை.. சா.. சாப்பாடு சாப்பிடலையா..??" என்று திக்கித்திணறி கேட்டாள் அவள்.

அதில் அவளை அழுத்தமாக பார்த்தவன் "இல்லை..!!" எனும் விதமாய் தலையாட்ட.

அதை கண்டு தான் நினைத்தது சரிதான் என்று எண்ணியவள்.

கையில் இருந்ததை அவன் புறம் நீட்டி "என்கிட்ட புளியோதரை இருக்கு சாப்பிடுறீங்களா..??" என்று கேட்க அவனோ இவளை விழி எடுக்காமல் அழுத்தமாய் பார்த்தான்.

அதை கவனிக்காத இவளோ "பயப்படாதீங்க வீட்டுல சுத்தமா செஞ்சது தான் அதுவும் என் வைதேகி அம்மா செஞ்சது நன்னா மணக்க மணக்க நெய் விட்டு தாளிச்சு எடுத்..!!" என்று அவள் அந்த இளைஞன் இடம் சொன்னது போலவே மொத்த புளியோதரை ரெசிப்பியும் சொல்ல போக அதற்குள் இவளை இடைமறித்தவன் "நோ நீட்..!! நான் முன்ன பின்ன தெரியாத வெளியாளுங்களை நம்பி சாப்பிட்றது இல்லை..!!" என்று முகத்தில் அடித்தார் போல சொல்ல.

முகம் சூம்பி விட்டது அலமூவுக்கு அவன் புறம் நீட்டியிருந்த புளியோதரையை தன்புறம் மெல்ல இழுத்துக்கொண்டவள் அதை திறந்து மெல்ல உண்ண ஆரம்பித்தாள்.

அதற்குள் அவள் அருகில் இருந்த இளைஞன் அவள் கொடுத்த புளியோதரையை முழுதும் காலி செய்து விட்டு அவளிடம் திரும்பி சப்புகொட்டியவாறே "வேற இருக்கா..??" என்று கேட்க.

அதில் கையில் வைத்து இருந்த டிபன் பாக்ஸ்சை அவன் புறம் நீட்டியவள் புன்னகையுடன் "சாப்பிடுங்கோ..!!" என்றாள்.

அதை வாங்கி அவன் உண்ணத்தொடங்க இவளோ சாப்பிட்ட கையை காய விடக்கூடாது என்று எண்ணியபடி எழுந்து கைகழுவ சென்றாள் மெய் மறந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் அவள் சென்றதை உணரவில்லை.


இங்கு கைகழுவிக்கொண்டு இருந்தவளோ "இந்த லோகத்துல நல்ல மனுஷாள் இருக்குறது போல கெட்ட மனுஷாளும் இருக்காள். இப்படியா ஒருத்தர் கேட்டா மூஞ்சில அடிச்சது போல பேசுறது...!!" என்று சற்று முன் பார்த்தவனை எண்ணி ஆதங்கமாய் அவள் முணுமுணுக்க இரு கையோ அதன் பாட்டிற்கு தண்ணீரில் உரசி கழுவிக்கொண்டு இருந்தது.

கழுவி முடித்தவுடன் கைகளை உதறியவள் தாவணி முந்தாணையில் கையை துடைத்தபடி தன் கம்பார்ட்மென்டினுள் நுழைய அங்கு கண்ட காட்சியில் நா உலர உடல் நடுங்க கண்கள் தெறித்துவிடும் அளவு விரிய நெஞ்சில் கைவைத்தபடி அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள்.

அங்கோ இவளது புளியோதரை உண்டவன் வாயில் புளியோதரை தள்ள ரத்தவெள்ளத்தில் செத்து கிடக்க அவனுக்கு எதிரே இவளது புளியோதரையை வேண்டாம் என்றவன் கையில் இருந்த துப்பாக்கியை ஊதி அவனது முதுகுக்குப்பின் சொருகிக்கொண்டு இருந்தான்.

அந்த நொடியே அங்கு எரிந்து கொண்டு இருந்த லைட் அனைத்தும் ஆப் ஆகி விட என்ன நடக்கிறது என்று தெரியாபல் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள் அலமூ என்ற கஸ்தூரி..!!

தொடரும்..
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2
28635

முகத்தில் சுள்ளென்று வெயில் பட கண்களை சுருக்கியபடி எழுந்தாள் அலமூ..!!

தலை எல்லாம் பாரமாக இருக்க கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தவளுக்கோ ஒருநிமிடம் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை.

நெற்றியை சுருக்கியபடி நேற்று நடந்ததை மனதில் அசைபோட்டவளுக்கு பொட்டில் அடித்தது போல நேற்று நடந்தவை எல்லாம் நினைவு வர விருட்டென்று நிமிர்ந்தவள் சட்டென்று தன் பார்வையை அலைபாயவிட்டு தன் அருகில் எதையோ தேடினாள்.

தேடியது கிடைக்காமல் போக பதட்டத்துடன் தன் முன்னே இருந்த இருக்கையை பார்க்க அங்கோ ஒரு பெண் தன் குழந்தைகளுடன் அமர்ந்து இருந்தாள்.

அதை பார்த்து குழப்பமுற்றவள் பட்டென்று திரும்பி தன் சீட் எண்ணை பார்க்க அது சரியாய் இருந்தது. இப்போது மேலும் குழம்பிபோனவள் அருகே ஆள் அமரும் அரவம் கேட்க அதில் இப்போது மீண்டும் பதற்றத்துடன் அருகில் பார்த்தாள்.

அருகே நடுத்தர வயதுடைய ஒருவர் அமர அதை கண்டவளுக்கோ தலையே வலித்துவிடும் அளவு இருந்தது.

"ஐயோ பகவானே..!! நேக்கு இங்க என்ன நடக்குறதுன்னே புரியலையே..?? நேத்து ராத்திரி தான் என் கண்ணு முன்னாடி கொலை நடத்துச்சு. ஆனா இப்போ அப்படி ஒன்னு நடந்த அடையாளமே இல்லாம இருக்கு..!! அப்போ நான் நேத்து கண்டதெல்லாம் கனவா..??" என்று தலையை பிடித்தபடி யோசித்தவளுக்கோ ஒழுங்காய் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.

அருகில் இருப்பவரிடம் சென்று விசாரிக்கலாம் என்றால் அவர்கள் பேச்சில் முழுக்க முழுக்க ஹிந்தி வாடையே அடிக்க எதுவும் செய்யமுடியாமல் இருந்துவிட்டாள்.

பின் எதை எதையோ யோசித்தவள் ஒரு முடிவு எடுத்தவளாய் "நம்ம கண்டது எல்லாம் கனவா தான் இருக்கும். இல்லாட்டி மனுஷாளை யாராச்சும் இப்படி அரக்கத்தனமா கொல்லுவாளா..??" என்று யோசிக்கையில் அவள் கண்முன்னே அந்த காட்சி வந்து செல்ல அவளது உடலோ ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.

"ப்ச் என்ன அலமூ இது அசட்டுத்தனமா அந்த கனவையே நினைச்சிண்டு இருக்க..??" என்று தன்னை தானே கடிந்தவள் முடிந்த அளவு அந்த நினைவை ஓரம் கட்டினாள்.

அடுத்த நாள் உத்ரபிரதேசத்தை வந்து அந்த டிரைன் அடைய அதில் இருந்து இறங்கியவளுக்கோ அடுத்து எங்கு செல்லவேண்டும் என்றே தெரியவில்லை.

கையில் இருந்த கட்டைபையை இறுக்கி பிடித்தவள் மெல்ல தன் நடையை தொடங்கினாள்.

அப்போது அதே ரயில் நிலையத்தில் "டேய் டேய் பார்த்து டா பார்சல் பத்திரம் அதுல எவ்வளவு காஸ்ட்லியான ஐட்டம் இருக்கு தெரியும் ல..??" என்ற ஒரு பெண்மணியின் கணீர் குரல் தன் தாய் மொழி தமிழில் கேட்க

கண்கள் மின்ன குரல் வந்த இடத்தை நோக்கி நடந்தாள் அலமூ..!!

அவளும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள் இங்கு வந்ததில் இருந்து ஒரு தமிழ் குரல் கூட வந்து அவள் காதில் எட்டவில்லை.

அதிலேயே சோர்ந்து இருந்தவளுக்கோ இப்போது தன் தாய் மொழி பேசும் ஒரு குரல் கேட்கவும் "இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..!!" என்பது போல் தான் இருந்தது.

வேகமாக குரல் வந்த இடத்தை அடைந்தவள் அங்கு இருந்த பெண்மணியை பார்த்து நிம்மதி பெருமூச்சுடன் அவர் அருகே சென்று "இங்க பாருங்க அம்மா..!! இங்க சத்த பாருங்களேன்..!!" என்று தனக்கு முதுகு காட்டி நின்றவரின் பின்னே நின்று இவள் அழைக்க.

அதில் யார் அது என்று புருவம் சுருக்கியபடி திரும்பினார் அந்த பெண்மணி.

இங்கு முகத்தில் வியர்வை துளிகள் பூக்க அப்பாவி சிரிப்புடன் நின்றுக்கொண்டு இருந்த அலமூவை கண்டு யோசனையுடன் "என்ன வேணும்...??" என்று கேட்க

அவர் கேட்டதும் மகிழ்ச்சியுடன் தன் கட்டை பையினுள் குடைந்து ஒரு துண்டை எடுத்தவள் அதை அவர் புறம் நீட்டி "வணக்கம் அம்மா..!! வேலை நேரத்துல தொந்தரவு பண்ணுறேன்னு தப்பா எடுத்துக்காதேள். நேக்கு இந்த ஊர் புதுசு. இங்க நான் ஒருத்தங்க கூட வேலை பார்க்க வந்திருக்கேன் அவா தான் இந்த விலாசத்தை எனக்கு கொடுத்தாங்க. ஆனா பாருங்கோ எனக்கு இந்த இடத்துக்கு எப்படி போறதுன்னு தெரியலை கொஞ்சம் இந்த இடம் எங்க இருக்குன்னு சொல்லி உதவி பண்ண முடியுமா..??" என்று மூணுநாள் பயணத்தில் களைத்து போயும் வாடா சிரிப்புடன் கேட்ட

அதில் அந்த விலாசத்தை பார்வை இட்ட அந்த பெண்மணி "இந்த இடமா இது எனக்கு நல்லா தெரிஞ்ச இடம் தான் ம்மா கொஞ்சம் இரு இந்த வேலையை முடிச்சிட்டு நானே உன்ன கொண்டு அங்க விடுறேன்..!!"என்று சொல்ல

அதற்கு அவளோ "அச்சோ எதுக்கு உங்களை தொந்தரவு படுத்திட்டு நேக்கு வழி மட்டும் சொன்னா போதும் ம்மா நானே போயிடுவேன்..!!"என்று சொல்ல

"இதுல என்ன தொந்தரவு இருக்கு. அதுவும் நீ எங்க ஊரு பொண்ணு வேற உனக்கு ஒரு உதவி ஒழுங்கா பண்ணாட்டி என் மனசே ஆறாது மா..!!" என்று கூறியவர் அங்கிருந்தவர்களிடம் ஏதோ வேலை ஏவி விட்டு.

"நீ வா மா..!!" என்று கூறியபடி அவளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினார்.

ரயில் நிலையத்தின் வாயிலில் ஒரு ஹோண்டா கார் தயாராகி நிற்க "உள்ளே ஏறுமா..!!" என்று அவளிடம் சொன்னவர் அதோட நிற்காமல் அவளை உள்ளே அமர வைத்துவிட்டே விட்டார்.

அலமூவின் மனமோ புது இடத்தில் வந்தது முதல் ஏனோ பாரமாய் இருப்பது போல உணர. மடியில் இருந்த கட்டை பையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

வண்டி செல்ல செல்ல அந்த பெண்மணியோ அலமூவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வர இவளும் அவரது கேள்வி அனைத்திற்கும் பதல் அளித்தபடி வந்தாள்.

அவ்வாறு தன் குடும்ப வரலாறு முதற்கொண்டு இப்போது தான் எதற்கு இந்த மாநிலத்திற்கு வந்துள்ளேன் என்பது வரை ஒரு நெளிவு சுழிவு இல்லாமல் அப்படியே சொன்னவள் அவர் அதற்கடுத்து எந்த கேள்வியும் கேட்காமல் இருந்ததால் அமைதியாகி விட்டாள்.

அரை மணி நேரம் ஆகியும் வண்டி எங்கேயும் நிற்காமல் இருக்க லேசாய் பதட்டம் தொற்றிக்கொண்டது அவளை.

ஜன்னல் வழியாய் பதற்றத்துடன் வெளியே நோட்டம் இட்டவள் "ரொம்ப நேரம் ஆனது போல இருக்கே ம்மா இன்னும் சேரவேண்டிய இடம் வரலையா..??" என்று கேட்டவள் தொடர்ந்து "ரொம்ப தூரம்னா விடுங்கோ மா நேக்கு எந்த இடம் எப்படி போகணும்னு சொன்னா மட்டும் போதும் நானே போயிப்பேன்..!!" என்று சொல்ல

"ப்ச் இங்க பாரு பாப்பா நான் போற இடம் தாண்டி தான் அந்த இடம் இருக்கு அதனால கவலை படாத சரியா..??" என்று கேட்க அதில் அரை மனதுடன் தலையாட்டி வைத்தாள் அலமூ.

கிரீச்...!! என்ற சத்தத்துடன் வண்டி எங்கேயோ நிற்க.

அதில் இடம் வந்துவிட்டதா என்ற நிம்மதியுடன் அந்த பெண்மணியை பார்த்தாள் அலமூ.

ஆனால் அந்த பெண்மணியோ "இது என் வீடு தான்மா காலைல இருந்து ஒன்னும் சாப்பிடல எனக்கு அல்சர் வேற இருக்குறதால ரொம்ப நேரம் பசிய அடக்க முடியல..!! அதான் சாப்பிட்டுட்டு போகலாம்னு இங்க நிறுத்த சொன்னேன்" என்று பாவம் போல சொல்ல.

"அச்சோ அப்போ நீங்க போய் சாப்பிடுங்கோ அம்மா..!! நான் இங்கையே உங்களுக்காக காத்துண்டு இருக்கேன்..!!" என்று இவள் சொல்ல

அதில் பதறியவர் "இந்த ஊரை பத்தி என்ன நினைச்ச நீ தைரியமா இங்க தனியா ஒரு பொண்ணு வெளிய போக முடியாது. அதான் தனியா போறேன்னு சொன்ன உன்னையே நான் கொண்டு பொய் விடுறேன்னு சொன்னேன் இதுல நீ என்னடான்னா இங்க தனியா இருக்கேன்னு சொல்லுற..??" என்று கேட்க

அதை கேட்டவளுக்கோ அதுவரை இருந்த தைரியம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலக கண்களில் சிறு பயத்துடன் அவரை ஏறிட்டவள் அதற்கு மேல் மறுக்காமல் அவருடனே சென்றாள்.

அந்த இடம் ஏதோ காலனி போல இருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் ஈக்களை போல குவிந்து கிடக்க சிறு சிறு கடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்தது.

சுற்றி முற்றி ஒரு வித பதட்டத்துடன் தன் பார்வையை செலுத்தியவாறு வந்தவளை பார்த்த அப்பெண்மணியோ "இன்னும் கொஞ்சம் தூரம் தான் பாப்பா வீடு இருக்கு. இந்த இடத்துக்குள்ள கார் வர்றது கஷ்டம் அதான் அங்கையே நிப்பாட்டிட்டேன்..!!" என்று சொல்லியபடி வேக எட்டுக்களை வைத்து முன்னே நடக்க அவருக்கு இணையாய் ஓட்டமும் நடையுமாய் அவரை தொடர்ந்தாள் அலமூ.

உள்ளே செல்ல செல்ல ஏதோ இனம் புரியா பயம் அவள் நெஞ்சை கவ்விக்கொள்ள அது ஏன் என்று அறியமுடியாமல் அவருடனே சென்றாள்.

சற்று நேரத்தில் அந்த இடம் மெல்ல மெல்ல ஆட்கள் நடமாட்டத்தை குறைக்க உள்ளே செல்ல செல்ல ஒரு சில பெண்கள் அரைகுறை ஆடையுடன் அங்கும் இங்கும் நடமாடுவது தான் அவள் கண்களுக்கு தெரிந்தது.

அதிலும் ஒரு பெண் விரித்து விட்ட தலையை உச்சி மண்டையில் தூக்கி முடிந்த வண்ணம் அபாயகரமான நிலையில் இருந்த முந்தானையை தூக்கி தோளில் போட்டபடி அங்கு நிற்க கூட முடியாத அளவு தள்ளாட்டத்துடன் ஆடிக்கொண்டிருந்த ஒரு ஆணிடம் கத்திக்கொண்டு இருக்க.

அவள் ஹிந்தியில் அவனிடம் கத்திக்கொண்டு இருந்ததால் அவள் என்ன கூறுகிறாள் என்று புரியவில்லை அலமூவிற்கு ஆனாலும் அவளது கோபமான முகமும் ஆக்ரோஷமான பேச்சும் அவள் அவனிடம் சண்டையிட்டு கொண்டு இருக்கிறாள் என்று உணர்த்த கண்கள் விரிய பதட்டத்துடன் அதை பார்க்கலானாள்.

அவ்வாறு அவள் பார்த்துக்கொண்டு இருந்த சமயம் சட்டென்று அந்த ஆண் அப்பெண்ணை அணைத்து முத்தமிட்டு இருக்க அதில் திமிறிய அப்பெண்ணிடம் தனது பாக்கெட்டில் இருந்து சில ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினான். என்ன ஒரு அதிசயம் அதுவரை திமிறிக்கொண்டு இருந்த அப்பெண்ணின் திமிறல் ஒரு நொடியில் அடங்கி விட்டது அல்லவா..??.

இதெல்லாம் நொடிபொழுதில் நடந்திருக்க இந்த காட்சியை பார்த்துக்கொண்டு வந்த அலமூவிற்கோ தன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

முகம் எல்லாம் சற்று நேரத்திற்கு முன் கண்ட காட்சியின் பயனாய் வியர்வையால் நனைந்திருக்க கைகால் எல்லாம் நரம்பு தளர்ச்சி இருப்பது போல ஆட தொடங்கி விட்டது. கண்கள் இரண்டும் சிவந்து அதில் கண்ணீர் இப்போ விழவா என்ற ரீதியில் முட்டிக்கொண்டு நிற்க. பயம் அவள் நெஞ்சை நன்றாக கவ்விக்கொண்டது.

"இந்த இடம் சரியில்லை, உடனே இங்கிருந்து போ..!!" என்று அவளது மனமும் மூளையும் அவளை வலியுறுத்திக்கொண்டே இருக்க அந்தோ பரிதாபம் இவள் நடக்காமல் ஸ்தம்பித்து நின்றதை பார்த்தே இவள் மன எண்ணத்தை புரிந்துக் கொண்ட அப்பெண்மணியோ முந்தாணையில் முடிந்து வைத்திருந்த பீடாவை எடுத்து வாயில் போட்டு மென்றபடி.

"என்ன பாப்பா அப்படியே நின்னுட்ட..!! நட..!!" என்று அவளை நோக்கி அதட்டிக்கொண்டே முன்னேற.

கண்களில் தேங்கிய கண்ணீரோடு அவரை ஏறிட்டு பார்த்த அலமூ "நேக்கு இந்த இடத்தை பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு மா..!! நா.. நா.. நானே தனியா கூட போயிப்பேன். தயவு செஞ்சு என்னை போக அனுமதியுங்கோ..!!" என்று அவரை நோக்கி பயத்தில் கை எடுத்து கும்பிட.

அதில் கோணலாய் அவளை பார்த்து சிரித்த அப்பெண்மணியோ "தோ பார்டா.!! உன்னை இவ்வளவு தூரம் பெட்ரோல் செலவு பண்ணி கூட்டிட்டு வந்தது இப்படி பாதில திருப்பி விடுறதுக்கா..??" என்று கேட்டவர் அவளை அழுத்தமாக பார்த்து வாயில் இருந்த பீடாவை மென்று கீழே துப்பிவிட்டு" ம்கூம்..!!" என்று இடம் வலமாக தலையாட்டியவர் "உன்னை வச்சு நான் நல்லா சம்பாதிக்க தான்...!!" என்றார் கண்கள் மின்ன

அலமூவிற்கோ தொண்டை அடைத்த உணர்வு "தேவையில்லாம இவருடன் வந்து இப்படி மாட்டிக்கொண்டு விட்டோமே..??" என்று மனதுள் வருந்தியவள் கண்களில் வழியும் நீருடன் அவரை நோக்கி கை எடுத்து கும்பிட்ட படி " உங்க பொண்ணா நினைச்சு தயவுசெஞ்சு என்ன விட்டிடுங்கோ..!! நா.. நான் சம்பாதிச்சு தான் எங்கவீட்டு கடனை அடைக்கணும்..!!" என்று தேம்பியபடி கூறியவள் "உங்களை கெஞ்சி கேட்குறேன் என்னை விட்டிடுங்கோ நேக்கு ரொம்ப பயமா இருக்கு..!!"என்று அழுதபடி சொல்ல.

அதில் ஒரு ஒரு கேலி சிரிப்புடன் அவளை பார்த்த அந்த பெண்மணியோ "நீ வேற பாப்பா என் பொண்ணே இந்த தொழில்ல தான் இருக்கா..!! அவ பொழைக்க தெரிஞ்ச பொண்ணு அதே போல நீயும் இருந்தா உனக்கு சேதாராம் இருக்காது இல்லைனா..??" என்று கூறியவர் வாயில் இருந்த பீடாவை தூ.. என்று வெளியே துப்ப கிலி பிடித்துக்கொண்டது அலமூவிற்கு.

"இங்க நிற்காதே ஓடு..!!" என்று மனம் சொல்ல அதில் தனது கட்டை பேகை இறுக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள் சட்டென்று அங்கிருந்த ஓட முயல அந்தோ பரிதாபம் இவளது தாவணி அந்த அரக்கியின் கையில் சிக்கிக்கொண்டது.

கையில் சிக்கிய தாவணியை ஒரே இழுப்பில் அப்பெண்மணி இழுக்க அது அவளது கையோட அப்படியே வந்தது என்றால் இவள் இழுத்த வேகத்தில் நிலை தடுமாறி அப்படியே பொத்தென்று தரையில் விழுந்தாள் அலமூ.

"தூத்தெரிக்கே...!! என் கிட்ட இருந்தே தப்பி ஓட பார்க்குறீயா..??" என்று ஆக்ரோஷமான அப்பெண்மணி அவள் சுதாரித்து எழுவதற்கு முன் அவளது இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்திருக்க அதில் மேலும் நிலை குலைந்து போனவளின் கன்னத்தில் அந்த தரையில் இருந்த கல்லில் சென்று மோத உதட்டின் ஓரம் கிழித்து ரத்தம் வர தொடங்கிவிட்டது அவளுக்கு.

வலியில் முகத்தை சுருக்கியவளின் தலைமுடியை ஆக்ரோஷமாக பற்றி ஆட்டிய அப்பெண்மணியோ "ஏண்டி எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா என் இடத்துல இருந்தே தப்பி ஓட நினைப்ப..!! ஹான்..!! என்ன இங்க இருந்து தப்பிக்குறது ரொம்ப சுலபம்னு நினைச்சியா..?? ம்ம் சொல்லு..!!" என்று மிரட்டியவரது கைகளோ அவளது முடியை இறுக்கி வலிக்கும்படி பிடிக்க.

அதில் உண்டான வலியில் கண்களில் வழிந்த கண்ணீருடன் அவரை ஏறிட்டு பார்த்தாள் அலமூ.

அவளை அழுத்தமாக பார்த்தவர் "இது என் கோட்டை டி..!! இதுல இருந்து நானா உன்னை விட்டா தான் உண்டு..!!" என்றார் சீற்றத்துடன்.

"அப்படி இருக்கும்போது உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இங்க இருந்து தப்பிப்ப..??" என்று கேட்டவருக்கோ அப்போதும் மனம் ஆறாமல் "ம்கூம் உன்னை இப்படியே விட்டா சரிவராது..!!" என்று கூறியபடி வாயை குவித்து விசில் அடிக்க அடுத்த நிமிடம் அந்த இடத்தில் நாலு ஐந்து ஆண்கள் வந்து நின்றனர்.

பார்க்கவே அடியாட்கள் போல பயங்கரமாய் இருந்தவர்களின் பார்வை தன் மேனியை கூறுபோடுவதை பார்த்து துடி துடித்து போன பெண் அவளோ தாவணி இல்லா தன் அங்கங்களை மறைக்க பார்க்க அதை கண்ட அப்பெண்மணியோ அதுவரை அவள் முடியை இறுக்கி பிடித்திருந்த தன் கையை எடுத்தவர் இப்போது அவள் இரு கைகளையும் கெட்டியாக பிடித்துக்கொள்ள அங்கையே செத்து விடமாட்டோமா என்று இருந்தது அலமூவிற்கு.

அங்கு இருந்தவர்களோ அவளை ஹிந்தியில் கொச்சையாய் வர்ணித்து அப்பெண்மணியிடம் பேச அப்பெண்மணியும் அவர்களிடம் ஏதோ ஹிந்தியில் பேசினாள்.

புரியாமல் அழுதுக் கொண்டு இருந்த அலமூவை பார்த்து எரிச்சலுற்ற அப்பெண்மணியோ "ஏய்..!! சீ அழுகுறத நிறுத்து..!!" என்று சீறியவள் அவள் அருகில் சென்று "இங்க பாரு டி உனக்கு ரொம்ப அதிர்ஷ்டம் இருக்கு போல நீ கலர் கம்மியா இருக்குறதை பார்த்து உன்னை தேடி பார்ட்டி வருமோ வராதோனு யோசிச்சிட்டு இருந்தேன் நல்ல வேளை நான் நினைச்சது போல ஒன்னும் நடக்கல.!!" என்று பெருமூச்சு விட்டவர் முன்னே நின்றிருந்த ஆட்களை குறிப்பிட்டு காட்டி "இவனுங்க எல்லாத்துக்கும் இன்னைக்கு நீ வேணுமாம்..!! பேமென்டு எவ்வளவு தெரியுமா..?? ஆளுக்கு பத்தாயிரம் ..!!" என்று கண்களை விரித்து கூற

அவரை வெறுப்புடன் பார்த்தாள் அலமூ அவளது மனமோ அழுகையுடன் "பகவானே நேக்கு ரொம்ப பயமா இருக்கு எப்படியாவது இந்த மனுஷாள்கிட்ட இருந்து என்னை காப்பாத்து..!!" என்று இறைவனிடம் வேண்டினாள்.

அதே சமயம் எங்கிருந்தோ வந்த ஒருவன் அந்த பெண்மணியின் காதில் எதையோ சொல்ல.

அதில் புருவம் சுருக்கி அப்பெண்மணியோ ஹிந்தியில் அவனிடம் எதையோ கூற என்று இருவரும் எதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்க அலமூவை பிடித்திருந்த கையை விட்டார்.

அவர் விட்டதும் தான் தாமதம் தன் கைகொண்டு தன் உடலை மறைத்தபடி தன்னை முழுவதுமாய் மறைத்தபடி கண்களில் கண்ணீருடன் குனிந்து அவள் உட்கார.

அதை கவனிக்காத அப்பெண்மணியோ அந்த பையனிடம் சத்தம் போட்டு ஏதோ வாக்குவாதம் செய்துக் கொண்டு இருந்தார்.

அச்சமயம் அங்கு பரபரப்பான சூழல் ஒன்று உருவாக கடகடவென பத்து பேர் வந்து அங்கு குவிந்தனர் கையில் கன்னோடு.

இப்போதே அப்பெண்மணிக்கு வியர்த்து கொட்ட ஆரம்பிக்க வாயில் இருந்த பீடாவை கூட மெல்ல மறந்து அப்படியே நின்றார்.

தட்..!! தட்..!! என்ற அழுத்தமான காலடி ஓசையை தொடர்ந்து வந்தான் அவன்.

வெள்ளை நிற சட்டையும் கறுப்பு நிற பேண்ட்டையும் அணிந்திருந்திருந்தவனது கையிலோ கறுப்பு நிற துப்பாக்கி வீற்றிருக்க அதே கையால் தன் முறுக்கு மீசையை முறுக்கி விட்டவன் அழுத்தமான கால் அடியை வைத்து அங்கு வந்து சேர்ந்தான்.

அவனை அங்கு கண்டதும் அங்கு ஏற்கனவே நின்றுக் கொண்டு இருந்த அந்த ஐந்து பேரும் பீதியுடன் அவனை ஏறிட.

அதே போல வந்தவனை பார்த்து எச்சிலை கூட்டி விழுங்கிய அப்பெண்மணிக்கோ அவனை கண்டு சிறு பயம் எழுந்தாலும் தன்னை மீறி தன் இடத்தில் என்ன செய்துவிடுவான் இவன் என்ற அசட்டு தைரியத்துடன் "என்ன சார் அதிசயமா என் இடத்திற்கு வந்திருக்க...?? நாங்க தொழில் பண்ணுற இடத்திற்கு எல்லாம் நீ வர மாட்டியே..??" என்று ஹிந்தியில் வேண்டுமென்றே அவனை பார்த்து யோசனையுடன் கூறியவர் பின் ஏதோ புரிந்துக் கொண்டவரை போல அவனை ஏறிட்டு "ஸ்ஸ் நான் ஒரு லூசு இந்த மாதிரி இடத்திற்கு எதுக்கு வருவாங்க சாமி கும்பிடவா..??" என்று கேலியாக கேட்டவர் அவனை பார்த்து

"சரி சொல்லு சார் எந்த வயசுல என்ன ரேட்ல எதிர்பாக்குற..??" என்று பீடா கறை படிந்த தன் பற்களை ஈ என்று காட்டி கேட்க.

அதில் அவரை ஒரு பார்வை பார்த்தவன் எழுந்த கோபத்தை கண்களை இறுக்க மூடி அடக்கியவன் "சனா கிதர்(எங்க) ..??" என்றான் ஒற்றை சொல்லாய்.

அதில் புரியாமல் முழித்த அப்பெண்மணி "சனாவா..?? ஓ.. அந்த சனாவா..??" என்று ஹிந்தியில் கூறி உதட்டை மடித்து அவனை பார்த்து கேலியாக சிரித்தவள் "பலே பலே..!! நல்லா கம்பெனி கொடுக்குற பொண்ணா பார்த்து தான் பிடிச்சிருக்க..!! உனக்கு அவ சரியாஆஆ... இருப்பா..!!" என்று ஒரு மார்க்கமாக சொன்னவர் அவனை சற்று குழைந்த வண்ணம் நெருங்கி "என்ன ரேட்டு தான் கொஞ்சம் அதிகம்..!! ஆனா ஒன்னு கொடுக்குற காசுக்கு டபுள் மடங்கு வொர்த் பீசு"

"என்ன சொல்லுற பையா..?" என்று கண்களில் மயக்கத்துடன் கேட்டபடி அவனது நெஞ்சில் கைவைக்க போக அதில் கண் இமைக்கும் நொடியில் தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்மணியின் நெஞ்சில் வைத்தவன்

அவளை பார்த்து "ப்ச்..!!" என்ற சலிப்புடன் தன் தலையை மறுப்பாக அசைத்து "பையா நஹி, யாத்ரா..!! யாத்ரா பாய்..!! சம்ஜே..!!" என்று அழுத்தமாய் கேட்க அப்பெண்மணிக்கோ அவனது இச்செயலும் அழுத்தமான குரலும் பயத்தை கொடுத்திருக்கும் போல அதனால் பதற்றத்துடன் அவனை ஏறிட்டவர் அதே பதற்றத்துடன் "சம்ஜா..!! சம்ஜா..!! யாத்ரா பாய்..!! சம்ஜா..!!" என்று அவசர அவசரமாய் கூற

அந்நொடி அவனது கையில் இருந்த துப்பாக்கியின் தோட்டா அப்பெண்மணியின் நெஞ்சை துளைத்து வெளியேறியிருந்தது.

அதில் நெஞ்சில் வழிந்த குருதியுடன் பின்னே சரிந்த அப்பெண்மணியோ சமநிலை இன்றி பொத்தென்று தரையில் விழுந்து தனது கடைசி மூச்சை விட்டிருந்தாள்.

அதை கண்டு துப்பாக்கியை பிடித்திருந்த தன் இடக்கரத்தால் வலது மீசையை மேல் நோக்கி முறிக்கிவிட்ட அவனோ அவனுக்கே உரிய அக்மார்க் நக்கலான கடையோரச் சிரிப்பை லேசாய் தன் உதட்டில் படர விட்டான்.

அவன் உத்ர பிரதேசமே நடுங்கும் "யாத்ரா..!! யாத்ரா பாய்...!!"
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 3

28812


அவன் சுட்டதும் அங்கு நின்றுக்கொண்டு இருந்த அந்த ஐவரும் அங்கேயும் இங்கேயுமாய் ஓட அவர்களையும் விடாமல் சுட்டு வீழ்த்தியவன், அருகில் நின்றிருந்த தன் அடியாட்களை பார்க்க புரிந்தது என்பது போல அவனிடம் தலையாட்டிய அவர்கள் அந்த வீதியில் புகுந்து அந்த சனா என்ற பெண்ணை தேடத்தொடங்கினர்.

சனா வேறு யாரும் அல்ல ஒரு வாரத்திற்கு முன் திடீர் என்று கல்லூரிக்கு சென்ற ஒரு பெண்ணை காணவில்லை என்று அனைத்து ஊடகங்களிலும் புகை படத்தோடு செய்தியாக வந்தவள் தான் இந்த சனா.

சனாவின் பெற்றோர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கல்லூரிக்கு சென்ற பெண்ணை காணவில்லை என்றவுடன் போலீஸில் புகார் கொடுக்க அவர்களோ அதை ஒரு பொருட்டாய் கூட மதிக்காமல் "போய்யா உன் பொண்ணு எவன் கூடயாச்சும் கூத்தடிக்க போயிருப்பா..!! சும்மா வந்து எங்க நேரத்தை வீணாக்காத..!!" என்று சொல்ல.

விக்கித்து போன அவள் பொற்றோர் அழுகையுடன் அந்த போலீஸ் ஸ்டேஷன் விட்டு வெளியேவர சரியாய் அச்சமயம் அங்கு வந்த ஒரு செய்தியாளன் கண்ணில் இந்த காட்சி பட்டு தனது சேனலின் டீ.ஆர்.பி.க்கு வேண்டி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அப்பெண்ணின் எதிர்காலத்தை பற்றி சற்றும் சிந்திக்காமல் அவளது புகை படத்தோடு அவளை பற்றி அவதூறான செய்தியை பரப்பி விட கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது அவளது செய்தி.

இதில் மேலும் துவண்டு போன அவளது பெற்றோர்கள் கடைசியில் யாத்ராவை வந்து சந்தித்தனர்.

நடந்தவற்றை எல்லாமல் கூர்மையாக கேட்ட யாத்ராவோ அடுத்த அரை மணி நேரத்தில் அவளை பற்றி அவதூறாக பரவும் அனைத்து செய்தியையும் நிறுத்தச்செய்தான்.

அடுத்து சற்று ஆழமாக விசாரிக்கத்தொடங்க சனாவின் உடன் பயிலும் மாணவன் ஒருவன் சனாவை கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு விடுவதாய் கூறி அவனோடு கூட்டிக்கொண்டு சென்று இருப்பது தெரிய வர அதில் அவனை பின்தொடர்ந்தவனுக்கு தற்போது தமிழ்நாட்டில் அவன் இருப்பது தெரிய வர.

பெண் விஷயம் என்பதால் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டிற்கு தன் ஆட்களோடு சென்றான் யாத்ரா.

அவ்வாறு தான் அன்று டிரையினில் வைத்து அவனை பிடித்தான்.

ஆம் அன்று அலமூவின் அருகில் சிரித்து பேசினானே அவன் தான் அந்த பையன்.

பெண்களிடம் நட்பு பாராட்டி அவர்கள் அறியாமல் மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்து அவர்கள் மயங்கியதும் அவர்களை விபாச்சார விடுதியில் விற்பது தான் இவனது தொழிலே.

அன்றும் அவ்வாறு தான் அலமூவிடம் மயக்க மருந்து கலந்து ஜூஸை நீட்டினான் ஆனால் நல்ல வேளை அவள் அதை பருகாமல் தவிர்த்தாள்.

இதை எல்லாம் அவர்களுக்கு எதிரே இருந்த சீட்டில் அமர்ந்தபடி புத்தகம் படிப்பது போல கவனித்துக்கொண்டு தான் வந்தான் யாத்ரா..!!

அவனுக்கோ அலமூவை நினைத்து ஆத்திரம் தான் வந்தது "ஏன் இந்த பெண்கள் எல்லாம் இவ்வளவு ஏமாளிகளாக இருக்கிறார்கள்..?? யாராவது இப்படி தன்னை குறித்த விஷயத்தை ஒன்று விடாமல் யார் என்று தெரியாத அந்நியனிடம் உளறுவாளா..?? ச்ச ஒரு சுய அறிவு வேண்டாம்..!!" என்று அவளை மனதில் வசைபாடியவன் தாடை இறுக அமர்ந்திருந்தான் அப்போது சரியாய் அலமூ அவனிடம் புளியோதரையை நீட்ட அதில் அழுத்தமாக அவளை குத்திக்காட்டி பேசினான் ஆனால் பாவம் அதை அவள் சரியாய் புரிந்துக் கொள்ளாமல் அவனை கெட்டவன் என்று எண்ணினாள்.

உணவு உண்டு முடித்ததும் அவள் கைகழுவ எழுந்து செல்ல.

அதற்காகவே காத்திருந்தது போல மெல்ல தன் முகத்தை மறைத்திருந்த புத்தகத்தை விலக்கியவன் தனக்கு எதிரே சப்புக்கொட்டி அலமூ கொடுத்த புளியோதரையை ருசித்துக்கொண்டிருந்தவனை வெறுப்புடன் பார்த்து.

"என்ன சார் புளியோதரை ரொம்ப நல்லா இருக்கோ..??" என்று குரலில் நக்கலை தேக்கி கேட்டான்.

அதில் அதுவரை புளியோதரையை உண்டு கொண்டு இருந்தவன் இவனது குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்க எதிரில் இருந்தவனை பார்த்து நடுங்கித்தான் போனான்.

பின்ன உத்தரபிரதேசத்தில் படிப்பவன் அவனுக்கு தெரியாதா யாத்ரா பாய்யை பற்றி.

நெஞ்சில் பயம் கவ்வ பீதியுடன் அவனை நோக்கியவன் "பா.. பாய்.. யாத்ரா பாய்..!!" என்று பயத்தில் உளற

அதில் அவனை அமைதியாய் பார்த்தவன் "சனா (எங்க)கிதர்..?? " என்று கேட்டான் அழுத்தமாய்.

சனா என்ற பெயரை கேட்டதும் புரிந்து போனது தான் நன்றாக மாட்டி விட்டோம் என்பது ஆனாலும் சற்று சமாளிக்க எண்ணி "சனாவா..?? எனக்கு தெரியாது பாய் யார் சனா நான் இதுக்கு முன்ன அந்த பெயரை கேள்விப்பட்டது இல்லை..!! என்ன நம்புங்க யாத்ரா பாய்..!!" என்று பயமும் பதட்டமுமாய் அவன் யாத்ராவின் காலுக்கு அடியில் முட்டிப்போட்டு கெஞ்ச.

அதில் "ஆஹான்..!!" என்று தன் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி நக்கலாக கேட்டவன் தன் வெள்ளை நிற சட்டைக்கு பின்னே அடியில் சொருகி இருந்த துப்பாக்கியை கையில் எடுத்து அதை ஆசையாய் தடவியபடி தன் காலுக்கு அடியில் இருந்தவனை பார்த்து "ச்சு.. ச்சு..!!"என்று உச்சுக்கொட்டியவாறு "சரி உன் கூட படிச்ச சனாவை உனக்கு தெரியாட்டி விடு ஷர்மானு ஒரு சின்ன பொண்ணு உன் பக்கத்து வீட்டுல இருந்தாளே அவளையாச்சும் தெரியுமா. இல்ல அதுவும் இப்ப தெரியாம போச்சா.??" என்று நக்கலான குரலில் ஒருமாதிரி கேட்க.

நா வறண்டு தான் போனது அவனுக்கு ஷர்மா வேறு யாரும் அல்ல இவனது பக்கத்து வீட்டில் இருக்கும் பதிமூணு வயது சிறு பெண் தான். அண்ணா அண்ணா என்று சுற்றி வந்த அப்பெண்ணை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி வெளியே அழைத்துச்சென்று நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ய பாவம் அச்சிறு மொட்டு மலரும் முன்னே இந்த அரக்கனின் செயலால் வலி தாங்க முடியாமல் தன் உயிரை விட்டிருந்தது.

அதை அன்று சாட்சியே இல்லாமல் அவன் புதைத்து விட்டு வந்திருக்க அதை இப்போது இவன் தோண்டி எடுத்திருப்பது அதிர்ச்சியையும் பயத்தையும் கொடுத்தது.

இனி மறைத்து பயன் இல்லை உண்மையை கூறி மன்னிப்பு கேட்டுட வேண்டியது தான் என்று எண்ணியவன் சனா எங்கு இருக்கிறாள் என்பதை சொன்னான்.

சனாவை உத்ரபிரதேசத்தில் இருக்கும் புகழ்பெற்ற விபாச்சார விடுதியில் தான் விற்றிருந்தான் அதுவும் அவள் கன்னியாக இருந்ததால் அதிக விலையில் விற்றிருந்தான்.

இதையெல்லாம் சொல்லி அவன் காலில் விழுந்தவன் "பாய்.. பாய்.. என்னை மன்னிச்சிருங்க பாய் ஏதோ புத்தி கெட்டு போய் பண்ணிட்டேன் இனி இப்படி பண்ண மாட்டேன்...!!" என்று கெஞ்ச.

அதில் அவனை பார்த்து குரூரமாய் சிரித்த யாத்ரா "நான் தெரியாம பண்ண தப்பையே மன்னிக்கமாட்டேன் இதுல தெரிஞ்சே பண்ணியிருக்க உன்னை மன்னிப்பேன்னு எப்படி நீ நினைக்கலாம் ..??" என்று கேட்டவன் தனக்கு எதிரியே இருந்த புளியோதரை டப்பாவை சுட்டிக்காட்டி "அந்த புளியோதரை ரசிச்சு சாப்பிட்ட இல்ல..??" என்று கேட்க இவனும் பயத்துடனே ஆம் என்று தலையாட்டினான்.

அதில் மௌனமாய் சிரித்தவன் "சரி அந்த பாக்ஸ்சுல இருக்குற மொத்த புளியோதரையையும் ஓரே வாயில சாப்பிட்டு காட்டு..!!" என்று நிர்மலான முகத்துடன் சொல்ல

அதில் அவன் சொன்ன படி செய்தால் தன்னை விட்டுவிடுவானோ என்ற நப்பாசையில் வேக வேகமாய் சீட்டில் இருந்த புளியோதரையை எடுத்து ஒரே வாயில் அடைக்க பார்க்க அதுவோ நாசியில் ஏறி இருமலை வரவைத்தது அதில் கண்கள் சிவக்க நன்றாக இருமியவன் உணவுகளை கீழே சிந்த

அதை குரூரமாய் பார்த்த யாத்ரா தனது துப்பாக்கியை லோட் செய்து உணவு இறங்கும் அவனது தொண்டையிலேயே தனது புல்லட்டை இறக்கி இருந்தான்.

அதில் "ஹக்..!!" என்ற சத்தத்தோடு அவன் துடிக்க அதை ரசித்தபடி இரண்டாவது புல்லட்டை அவனது ஆண்மையில் இறக்கி இருந்தான் தலையை வெட்டிய ஆடு போல அவன் துடிக்க அதை பார்த்து ஒரு வித வெறியுடன் தனது காலில் எப்போதும் சொருகி வைத்திருக்கும் கத்தியை எடுத்து அவனது ஆண்மையை அறுத்து எறிந்தான்.

வலி தாங்க முடியாத அவனோ அதிலேயே தன் உயிரை விட்டிருக்க ஆத்திரம் தீராத யாத்ரா அவனது நெஞ்சில் கடைசியாய் புல்லட்டை இறக்கினான்.

அப்போது தான் அலமூ அங்கு வந்ததும் இந்த காட்சியை பார்த்து மயங்கி விழுந்ததும் விளக்குகள் அணையப்பட்டதும்.

அந்த கம்பார்ட்மென்ட் மொத்தமும் அவனது ஆட்களே இருந்ததால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அங்கு ஒரு கொலை நடந்த அடையாளமே இல்லாமல் அவர்களை வைத்து அதை சுத்தம் செய்தவன் தனது ஆட்களை வைத்தே அலமூவின் கையையும் காலையும் பிடித்து தூக்கிக்கொண்டு வந்து சீட்டில் போட்டான்.

எல்லாம் முடிந்ததும் ஷரப் என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க அடுத்த நிமிடத்தில் ட்ரெயின் நின்றது. இவனும் தனது படையோடு அதில் இருந்து இறங்கினான்.

******************************

தனது ஆட்களை விட்டு சனாவை அந்த விபச்சார விடுதியில் கண்டு பிடித்தவன் அவளை பத்திரமாக அங்கிருந்து அப்புறபடுத்தும் படி தன் ஆட்களிடம் கட்டளை பிறப்பித்தான்.

எல்லாம் முடிந்ததும் அங்கிருந்து திருப்பி நடக்கபோனவன் நொடியில் தன் நடையை நிறுந்தி வலப்புறம் திரும்பி பார்க்க அங்கு கலைந்த கோலமாய் அழுது அழுது அதிர்ச்சியில் மயக்க நிலையில் இருந்தாள் அலமூ.

அவளும் அவள் இருந்த கோலத்தையும் பார்த்து நொடியில் அவளை கண்டு கொண்டவன் கீழே கிடந்த தாவணியை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டுவிட்டு திரும்பியவன் அங்கு நின்றிருந்த ஷரப்பை பார்த்து சிலவற்றை கூறி விட்டு அவளை திரும்பி கூட பாராமல் அங்கிருந்து வெளியேறினான்.

தொடரும்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4

"வேண்டாம் ம்மா என்ன விட்டிடுங்கோ..!! நேக்கு பயமா இருக்கு என்னை விட்டிடுங்கோ...!! ஆ...!!" என்று அலறியபடியே அந்த கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தாள் அலமூ.

முகமெல்லாம் பயத்தின் காரணமாய் முத்து முத்தாய் வேர்த்து இருக்க கண்கள் இரண்டும் அங்கும் இங்கும் பயத்துடன் அலைபாய்ந்தது அச்சமயம் இவளது குரல் கேட்டு வேகமாக அங்கு வந்து சேர்ந்தார் ஒரு செவிலி.

"கியா ஹுவா மேம்..?? (என்னாச்சு மேம்..??" என்று பதட்டமாக அவள் ஹிந்தியில் கேட்டபடி அவளை நெருங்க.

அலமுவோ இன்னும் பதட்டம் தெளியாமல் "அவங்க. அவங்க.. என்னை பிடிச்சிண்டு.. என் தலைய பிடிச்சிண்டு.. என் தாவணிய..!!" என்று பதட்டத்துடன் சொல்லிகொண்டே வந்தவள் கடைசி வரியில் பதறி குனிந்து தன்னை பார்க்க அங்கோ அவள் தாவணிக்கு பதிலாய் மருத்துவமனையின் கவுன் இருந்தது.

அதில் மேலும் பதறியவள் "என் உடுப்பு எங்க..?? நேக்கு என்ன ஆச்சு..?? ஐயோ பகவானே நோக்கு என் மேல இரக்கம் காட்ட எண்ணமே இல்லையா..??" என்று கதறியவளின் கண்ணீரையும் சத்தத்தையும் கண்ட அந்த செவிலியர் அவள் தமிழ் பேசியதால் மேற்கொண்டு அவளிடம் பேசவும் முடியாமல் உடனே அங்கிருந்து பதற்றத்தோடு வெளியேறினார்.

அடுத்த அரைமணியில் அவள் இருந்த அறை கதவை திறந்துக் கொண்டு அந்த செவிலியருடன் வந்து சேர்ந்தான் ஒருவன்.

அதில் அவனை பார்த்து மிரண்ட இவள் கட்டிலில் அமர்ந்தபடி வேக வேகமாய் பின்னே செல்ல அதை பார்த்து "இங்க பாரு மா பயப்படாத. என்னை உன் அண்ணன் போல நினைச்சுக்கோ.!!" என்னு பொறுமையாய் கூறியபடி மெதுவாய் அவளை நெருங்கினான்.

அவனது அண்ணன் என்ற சொல்லில் நிதானித்த இவள் பயத்துடனே அவனை ஏறிட்டு பார்க்க அதில் அவளை பார்த்து புன்னகைத்த இவன் "ஒண்ணும் இல்ல மா பயப்படாத உனக்கு ஒண்ணும் ஆகல நீ நல்லா இருக்க..!! பயத்துல மயங்கிட்ட அதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம் இப்ப நீ முழிச்சிட்ட இனி நீ இங்க இருக்க வேண்டியது இல்லை...!!" என்று புன்னகையுடன் சொன்னவன் அந்த நர்ஸ்சை பார்த்து ஏதோ பேசினான்.

அவளும் அவன் கேள்விக்கு பயத்துடன் பதில் சொல்லிவிட்டு தலையாட்டியபடி வெளியே சென்று அலமூவின் துணி அடங்கிய பொதியை கொண்டு வந்து அலமூவிடம் கொடுக்க அதை வேகமாக வாங்கி கொண்டாள் அலமூ.

"நீ போய் துணி மாத்திட்டு வா மா அதோ அங்க தான் இருக்கு பாத்ரூம்..!!" என்று ஒரு இடத்தை குறிப்பிட்டு காட்டி சொல்ல.

அமைதியாய் அவன் குறிப்பிட்டு காட்டிய இடத்தில் சென்று துணி மாற்றி வந்தாள்‌.

வந்தவளிடம் " நீ எப்படி அந்த பொம்பளைட்ட மாட்டுனேன்னு எனக்கு தெரியல ஆனா ஒண்ணு இந்த உத்தரபிரதேஷ் நீ நினைக்குறது போல இல்லை ரொம்ப ஆபத்தானது அது இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்..!! அதனால நீ இப்ப வந்த வழியா உன் ஊருக்கே திரும்பி போறது தான் நல்லது..!!" என்று அவன் அழுத்தமாக சொல்ல.

அதில் அதுவரை அமைதியாக இருந்தவள் இவனது இந்த கூற்றை கேட்டு கண்கலங்க அவனை ஏறிட்டு பார்த்து "நான் உங்களை எதிர்த்து பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதேள் அண்ணா..!! ஊருல என் தோப்பனார் பயங்கர கடன் தொல்லையில இருக்கார் அதனால தான் நான் இங்க வந்தேன். இப்போ இந்த நிலமைல நான் திரும்பி போனா என் வீட்டு ஆட்கள் எல்லாம் கடன் தொல்லைல விஷத்தை குடிச்சிண்டு சாகவேண்டியது தான்...!!" என்று தாவணி முந்தானையை வாயில் பொத்தியபடி அழுகையுடன் கூறியவள் தொடர்ந்து "எனக்கு தெரிஞ்சவா இங்க தான் எங்கையோ வேலை செய்யுறா அவா தான் ஒருமுறை என் கிட்ட இங்க வேலை இருக்குறதா சொன்னா. இதோ அவா கொடுத்த விலாசம் கூட என் கிட்ட தான் இருக்கு...!!" என்றபடி தனது பையில் அதை தேட அந்தோ பரிதாபம் அது அதில் இல்லை.

அதில் பதற்றமடைந்தவள் நன்றாக அதை தேட ம்கூம்..!! அது கிட்டவே இல்லை.

"ஐயோ பெருமாளே..!! நேக்கு மட்டு ஏன் இந்த சோதனை..!!" என்று தலையில் கை வைத்தளை பார்த்து விஷயத்தை யூகித்த அவன் "இங்க பாரு மா அட்ரெஸ் கூட இல்லாம இந்த இடத்துல நீ சுத்துறது சரியில்ல, முதல்ல ஒழுங்கா ஊரு போய் சேருற வழிய பாரு..!!" என்றவன்

அவளை அழைத்துக்கொண்டு வெளியே வர அச்சமயம் அவன் போன் இசைத்தது மறுபுறம் என்ன கூறப்பட்டதோ சட்டென்று இறுகிய முகத்துடன் போனை கட்செய்தவன் அலமூ புறம் திரும்பி "இங்க பாரு மா எனக்கு இப்ப ஒரு முக்கியமான வேலை வந்திடிச்சு இல்லாட்டி நானே உன்னை கொண்டு போய் விட்டிருப்பேன். இதோ பக்கத்துல தான் ரெயில்வே ஸ்டேஷன் இருக்கு உன்னை நான் ஆட்டோல அனுப்புறேன் பயப்படாத...!!" என்று கூறி ஒரு ஆட்டோவை அழைத்தவன் அவனிடம் ஹிந்தியில் ஏதோ சொல்ல மிரண்ட அந்த ஆட்டோ டிரைவர் சரி என்று தலையாட்டினான்.

பின் இவள் புறம் திரும்பியவன் தன் பாக்கெட்டில் இருந்து சில பணத்தை எடுத்து அவள் கையில் கொடுத்து "பத்திரமா போ மா..!!" என்று கூற அவளும் சோர்ந்த தலையசைப்புடன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

அவள் அமர்ந்த அடுத்த நொடி ஆட்டோ எடுக்கபட அவள் கண்ணை விட்டு மறையும் வரை அங்கு நின்ற அவன் அடுத்த நொடி தாடை இறுக அங்கு நிறுத்தப்பட்டிருந்த தன் பைக்கை எடுத்துக்கொண்டு புயல் வேகத்தில் எங்கோ பறந்தான்.

இங்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த அலமூவுக்கோ துக்கம் தொண்டையை அடைத்தது.

தன் குடும்பத்தின் நிலை இனி என்ன என்று நினைக்கையிலேயே அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.


விதியின் முன் எல்லோரும் சூழ்நிலை கைதி ஆவார்களாம் அது இவளது விஷயத்தில் தற்போது அழகாய் நடந்துகொண்டு இருந்தது.

தனக்கு இவ்வாறு நடந்து விட்டதே இனி இங்கு இருக்க வேண்டாம் என்று அவளால் தன்னை பற்றி மட்டும் சுயநலமாய் எண்ணமுடியவில்லை.

இவள் இங்கு வேலைக்கு சேர்ந்தால் தந்தைக்கு சிறிதேனும் தோள்கொடுத்தது போல இருக்கும்.

இதை எல்லாம் எண்ணியபடி அழுகையுடனே சென்றுக் கொண்டிருந்தவளின் கண்ணில் விழுந்தார் அவர்.

எவர் ஒருவரை தேடி அவள் இவ்வளவு தூரம் பயணித்து வந்தாளோ அவரே தான் அவர் யமுனா..!!

"இவா யமுனா அக்கா தானே..?? ம்ம் ஆமா அவாளே தான்..!! அண்ணா கொஞ்சம் வண்டியை நிறுத்துங்கோ..!! நிறுத்துங்கோ அண்ணா..!" என்று அவள் சத்தமாக கூற.

பாஷை புரியாவிட்டாலும் அவளது கத்தலை கண்டு பதற்றமடைந்த ஆட்டோ ஓட்டுனர் வண்டியை சடார் என்று நிறுத்த.

அதில் வேகமாக அதில் இருந்த இறங்கியவள் சற்று முன் அவன் கொடுத்த காசில் சிறிதை எடுத்து அவருக்கு கொடுத்துவிட்டு பதற்றத்துடன் அந்த யமுனா என்பவரை தேடி நாலா பக்கமும் கண்களை சுழல விட்டபடி நடக்க.

அவரோ சற்று தொலைவில் நின்று காய்கறி காரனிடம் பேரம் பேசி காய் வாங்கிக் கொண்டு இருந்தார்.

அவரை பார்த்ததும் அதுவரை இருந்த பதற்றம் எல்லாம் தணிந்து போக தாய் பசு தேடும் கன்றாய் வேகமாக ஓடி சென்று அவரை அணைத்து கதறி அழுதாள்.

யமுனாவுக்கோ ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை அவள் அழுகை குரலை வைத்தே கண்டு கொண்டார் அது அலமூ தான் என்று ஆனால் அவள் எங்கு இங்கே..??

என்று எண்ணியபடி நிமிர்ந்தவருக்கு அப்போது தான் அங்கு இருந்த எல்லாருக்கும் தாங்கள் காட்சி பொருளாய் இருப்பது தெரிய.

"அலமூ என்னாச்சு மா..?? அழாத டா இங்க பாரு எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க..!!" என்று அவளை தேற்றியபடி அங்கிருந்து அகன்று தனியே அழைத்து சென்றவர்‌ அவள் அழுகை குறைந்ததும் என்னாச்சு என்று விசாரிக்க நடந்ததை எல்லாம் அழுதுகொண்டே ஒன்று விடாமல் சொன்னாள் அலமூ.

அவள் சொல்லி முடித்ததும் கோபமாக அவளை முறைத்த அவர்.

"டி அலமூ உனக்கு என்ன புத்தி பேதலித்து போச்சா..?? தெரியாத ஊருல இப்படி தனியா தைரியமா வந்திருக்க...?? உன் வீட்டாள் என்ன பண்ணுறா..?? வேண்டாத பொண்ணுதானேனு கைகழுவி விட்டுட்டாளா‌.??" என்று சீற்றுத்துடன் கேட்க.

"அக்கா நான் தான் வந்தேன் அவா போகவேண்டாமுன்னு தான் சொன்னா..!!" என்று அந்த நேரத்திலும் வீட்டை விட்டு கொடுக்காமல் அவள் பேச.

தலையில் அடித்துக்கொண்ட அவர் "உன் வீட்டாள் லட்சணம் தான் நேக்கு தெரியுமே..??" என்றார் கடுப்புடன்.

பின் "ஒரு வருஷத்துக்கு முன்ன கொடுத்த விசாலத்துக்கு இப்போ வேலை தேடி வந்திருக்க சரி ஆனா எனக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருக்கலாமே...??" என்று அவர் காட்டமாக கேட்க.

"நேக்கு உங்க ஃபோன் நம்பர் தெரியாதே அக்கா..!!" என்று பாவமாக சொன்னாள் அலமூ.

அதில் அவளை முறைத்த அவர் "நோக்கு தெரியாட்டி என்ன டி உன் தோப்பனார் தான் என் நம்பர் வச்சிருக்காரே..? அவர் ஃபோன் பண்ணி சொல்லியிருக்கலாமோனோ..??" என்று கேட்டவர் பின் அவரே "அது சரி வேண்டாத பிள்ளைக்கு அவர் ஏன் பண்ணனும் நல்ல ஆள் டி உன் தோப்பனார் புள்ளைய பெத்து போட தெரியும் பிறந்த குழந்தை நிறம் குறைவா பொறந்தா என் குழந்தையே அது இல்லைனு சொல்லி தன்னோட சாக்கடை எண்ணத்தை அதை சாக்கா வச்சு நிறைவேத்திக்க வேண்டியது..!! நல்ல மனுஷன், இவாள எல்லாம் ஊரு முன்ன நிக்க வச்சு சாணி கரைச்சு மூஞ்சில ஊத்தணும்...!!" என்றார் ஒரு வித வெறுப்போடு.

அதில் பதறிய அலமூ "ஐயோ அக்கா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதேள்‌..!! அவர் என்னதான் இருந்தாலும் என் தோப்பனார் அப்படி நினைக்குறது தப்பு. அவர் மனசறிஞ்சு தப்பு செஞ்சா அந்த பகவான் அவரை தண்டிப்பார் நேக்கோ நோக்கோ அந்த உரிமையில்ல அந்த உரிமை அந்த பகவானுக்கு மட்டும் தான் இருக்கு..!!" என்றாள் திடமாய்.

இப்படி பேசும் பெண்ணை எண்ணி வருத்தமும் கோபமும் ஒருங்கே எழுந்தது யமுனாவுக்கு ஆனாலும் அதை அவளிடம் இப்போது காட்ட விரும்பாதவர்.

"சரி வா ஒரு வருஷம் கழிச்சு வந்திருக்க இப்போ நான் வேலை செய்யுற இடத்துல உன்னை சேத்துப்பாளோ என்னமோ..??" என்று யோசனையுடன் சொல்ல

அதில் பயந்தவள் "சேத்துக்க மாட்டாளா அக்கா..??" என்று கேட்டாள் பதற்றத்துடன்.

அதில் அவளிடம் எதுவும் கூறி பயமுறுத்த விரும்பாதவர் "இல்லடி பாத்துக்கலாம் விடு..!!" என்று அவளிடம் ஆறுதல் கூறி விட்டு "ஆனா ஒன்னு அங்க வந்தா உன் வேலை சமைக்குறது மட்டும் தான்..!! வேற அங்க என்ன நடந்தாலும் கண்ணமூடிட்டு கப்புச்சிப்புன்னு உனக்கு கொடுத்த வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும்..!! இல்லாட்டி உனக்கு அங்க வேலை இருக்காது...!!" என்று அழுத்தமாய் சொல்ல.

அது உள்ளுக்குள் பயத்தை கொடுத்தாலும் தனக்கு வேறு வழியில்லை என்று நிதர்சனம் புரிய பயத்துடனே எச்சிலை கூட்டி விழுங்கியபடி தலையாட்டி வைத்தாள்.

பாவம் அவளுக்கு தெரியவில்லை அவளது கருத்துக்கும் எண்ணங்களுக்கும் சற்றும் பொருந்தாத முரண்பாடான விஷயங்கள் அங்கே நடக்க போகிறது என்றும் அதை கண்டு அதை தடுக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் இவள் உள்ளுக்குளே துடிக்கபோகிறாள் என்றும்.

தொடரும்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5

"டி அலமூ..!! வேடிக்கை பார்க்காம வேகமா வாடி..!!" என்று சுற்றும் முற்றும் ஆச்சரியமாய் பார்த்தபடி மெதுவாய் வந்துக்கொண்டு இருந்த அலமூவை அவசரபடுத்தினார் யமுனா.

அந்த இடத்தை தன் முட்டை கண் விரிய பார்த்தபடியே வந்துக்கொண்டிருந்த அலமூ இவரது குரல் கேட்டு "அக்கா நேக்கு இந்த இடம் ரொம்ப புடிச்சிருக்கு..!! எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு பாரக்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாய் நன்னா இருக்கு க்கா..!!" என்று அங்கு ஓங்கி உயர்ந்து அடர்த்தியாய் நிற்கும் மரங்களை பார்த்து உற்சாகமாய் அவள் சொல்ல.

"ம்ம்.!! ம்ம்..!! இதெல்லாம் பிறகு பொறுமையா பார்த்துக்கலாம் டி..!! இப்போ வா..!!" என்றவர் அவளது கையை பற்றி கூட்டிக்கொண்டு போனார்.

அவர் இழுக்கும் இடத்திற்கு அலமூவின் கால்கள் சென்றாலும் கண்கள் என்னமோ பெரிய பெரிய மரங்கள் சூழ அடர்ந்த காடு போல் காட்சி அளித்த அந்த இடத்திற்கு நடுவில் கம்பீரமாய் வீற்றிருந்த அந்த பாழடைந்த கோட்டையை தான் பார்த்துக்கொண்டு இருந்தது.

"இதென்ன காட்டுக்குள் கொண்டு வந்து இப்படி ஒரு பயங்கரமான வீட்டை கட்டியிருக்கிறார்கள்‌..??" என்று எண்ணியவளுக்கு அதுவரை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த இயற்கை சூழல் கூட அந்த பாழடைந்த பராமரிப்பற்ற கோட்டையை பார்த்ததும் பயங்கரமாய் தோன்றியது.

அவளுக்கு எங்கு தெரியபோகுது இந்த கோட்டையும் இந்த கோட்டையை சுற்றி நடப்பது எதுவும் வெளியிருந்து பார்த்தால் தப்பித்தவறி கூட யாருக்கும் தெரியக்கூடாது என்றே ஒருவன் இந்த அடர்ந்த காடு போன்ற அமைப்பை உருவாக்கினான் என்று..!!

யமுனாவின் இழுப்பிற்கு சென்றவள் அந்த கோட்டையை பார்த்து எச்சிலை கூட்டி விழுங்கியவாறே "ஏன் யமுனா அக்கா இவா இந்த வீட்டை இப்படி பராமரிக்காம போட்டுண்டு இருக்கா..?? இதை பாக்குறச்சே நேக்கு ஒருமாதிரி படபடப்பா பயமா இருக்கு..!!" என்று தன் மனதை மறைக்காமல் கூற

அதில் தன் நடையை நிறுத்தி அவளை பார்த்த யமுனா அவளது தலையை பரிவுடன் தடவி விட்டவாறு "இங்க பாரு அலமூ இங்க நடக்குறதை எல்லாம் பார்த்தா நீ எப்படி எடுத்துப்பேன்னு நேக்கு தெரியாது ஆனா ஒன்னு இந்த இடத்தை விட உனக்கு பாதுகாப்பான இடம் வேற இந்த ஊர்ல எங்கையும் இல்ல..!!" என்று சொன்னவர் அவளை அழுத்தமாக பார்த்து "இங்க நடக்குறதை கண்டும் காணாம போறதா இருந்தா இங்க உனக்கு வேலை ஏற்பாடு பண்ணி தரேன் அலமூ இல்லைனா இப்பவே சொல்லு நம்ம வந்த வழியே கிளம்பிடலாம்..!!" என்று சொல்ல

இதை விட்டால் தனக்கு வேறு எங்கு எப்போது வேலை கிடைக்கும்..?? என்று எண்ணி பதறியவள் "ஐயோ இல்ல அக்கா நேக்கு இந்த வேலையே போதும் நா.. நா.. என் வேலையை மட்டும் பார்த்திண்டு ஒரு ஓரமா அமைதியா இருக்கேன்...!!" என்று சொல்ல.

அதை கண்டு சமாதானம் ஆனவர் "சரி வா..!!" என்று கூறியபடி அவளை உள்ளே அழைத்துச்சென்றார்.

அந்த வீட்டினுள் நுழையும்போதே வாசலில் வாட்டசாட்டமான ஒரு ஆள் நின்றிருக்க அவனை பார்த்து மருண்டபடியே வந்த அலமூவை கண்டு யோசனையாய் யமுனாவை பார்த்தவன் "என்ன யமுனா அக்கா யார் இது...??" என்று தமிழில் கேட்க.

அவன் தமிழ் பேசியதில் சற்று ஆசவாசமான அலமூ யமுனாவை பார்க்க.

அவரோ அவனை பார்த்து லேசாய் சிரித்தபடி "என் ஊர் பொண்ணு தான் பாவம் ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் அதான் எதாச்சும் வேலை கேட்டு நம்ம யாத்ரா பாய்யை பாத்து பேச கூட்டிட்டு வந்தேன் தம்பி..!!" என்று சொல்ல

"என்ன க்கா நீங்க நம்ம தொழில் பத்தி தெரிஞ்சும் வேலைக்குன்னு ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கீங்க..?? பாய் இதுக்கு ஒத்துப்பாரானு தெரியலையே..??" என்று அவன் நிதர்சனத்தை கூற

"பேசி பார்க்குறேன் தம்பி விதி இருந்தா நடக்கும்‌‌..!!"என்று இவர் சொல்ல தலையாட்டிய அவன் அவர்கள் உள்ளே செல்ல அனுமதித்தான்.

அவன் பேசியதை கேட்ட அலமூ தனக்கு இங்கு வேலை கிடைக்காதோ என்று பயத்துடன் யமுனாவை தொடர்ந்தாள்.

வீடு வெளியில் இருந்ததற்கு நேர் எதிர் உள்ளே இருந்தது.

நல்ல விசாலமான அந்த இடத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு நிறைத்து பார்க்கவே சுத்தமாகவும் நீட்டாகவும் இருந்தது.

அங்கு இருந்த எல்லாமே மரத்தால் ஆன ஃபர்னிச்சர்கள் சோபா முதற்கொண்டு டேபிள் வரை எல்லாம் மரத்திலேயே இருக்க அதுவே தனி கம்பீரத்தையும் அழகையும் அவ்வீட்டுக்கு கொடுத்தது.

அதை எல்லாம் பார்த்தபடி அலமூ வந்தாலும் அவளது எண்ணம் முழுக்க இங்கு தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது.

"பெருமாளே..!! தயவுசெய்து நேக்கு இந்த வேலையை எப்படியாச்சும் ஏற்பாடு பண்ணித்தாங்கோ..!" என்று மனதுள் அவள் வேண்ட அதை கேட்ட கடவுள் அவளை பார்த்து மென்மையாய் சிரித்ததை அவள் அறியவில்லை.

ஹாலை அடைந்ததும் அங்கிருந்த இன்னொருவன் அலமூவை பார்த்துவிட்டு யமுனாவை கேள்வியுடன் பார்க்க

அதை கண்ட யமுனா "யாத்ரா பாய்யை பார்த்து கொஞ்சம் பேசணும்..!! சோமு தம்பி..!!" என்றார் அவனது பார்வைக்கு பதிலாய்.

அதில் தலையாட்டிய அவன் அவரிடம் "இருங்க அக்கா, பையா வர நேரம் தானே இது..!!" என்று சொல்ல.

ஆம் என்பது போல தலையாட்டிய யமுனா அலமூவோடு அந்த ஹாலில் நின்றுக்கொண்டார்.

சற்று நேரத்தில் அங்கு ஒரு பரபரப்பான சூழல் உருவாக அந்த மர படிக்கட்டுகளில் தன் அழுத்தமான காலடிகளை வைத்து வலக்கையில் இருந்த தங்க காப்பை இடக்கை கொண்டு தூக்கி மெலே விட்டுவிட்டு அதே கைக்கொண்டு தன் மீசையை முறுக்கி விட்டவாறு இறங்கி வந்தான் யாத்ரா.. யாத்ரா பாய்..!!

அந்த மரப்படிக்கட்டுகளில் அவன் இறங்கயிலேயே அவனது கண்கள் கூர்மையாய் அலமூவை துளைத்து சுருங்கியது.

கீழே வந்தவன் தனக்குரிய மர சாய்ந்து நாற்காலியில் வசதியாய் அமர்ந்தவாறு யமுனாவை ஏறிட்டு "என்ன யமுனா அக்கா என்ன விஷயம்..?? வீட்டுக்கு புது ஆளை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கீங்க..??" என்று தன் இருபுருவத்தையும் உயர்த்தியபடி வினவ.

அவன் கேட்டதில் தயக்கத்துடன் அவனை ஏறிட்டு பார்த்த யமுனா "அது வந்து தம்பி.. இவ பெயர் அலமூ என் ஊர் பொண்ணு தான்..!! இவ வீட்டுல கொஞ்சம் கஷ்டம் அதுல ஒரு வருஷத்துக்கு முன்ன நான் கொடுத்த கார்டை வச்சிட்டு வேலை தேடி இந்த ஊருக்கு வந்திருக்கா...!! உங்களுக்கே தெரியும் இந்த ஊரை பத்தி இதுல இவ சின்ன பொண்ணு வேற அதனால இவளை வெளிய வேலைக்கு விடுறதுக்கு எனக்கு பயமா இருக்கு அதான் தம்பி இங்க கூட்டிட்டு வந்தேன்..!!" என்று சொன்னவர் தொடர்ந்து "அதுவும் இல்லாம நானும் இன்னும் கொஞ்ச நாள் தானே இங்க இருப்பேன் அதுக்கடுத்து நம்ம எப்படியும் சமையலுக்கு வெளியே ஆளை தேடத்தான் போறோம் அதுக்கு பதில் இவளே சமையலை பார்த்துப்பா இல்ல..!!" என்று அவன் மறுக்கக்கூடாதே என்று அவசரமாய் சொல்லி முடிக்க.

எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டவன் கட்டை விரலால் நெற்றியை நீவியபடி "இது சரிவராது அக்கா..!! நம்ம இடத்துக்கு இவ பொருந்த மாட்டா அதனால நீங்க பேசாம அவளை உங்க ஊருக்கே அனுப்பிடுங்க அது தான் அவளுக்கு நல்லது..!!" என்று உறுதியாய் சொல்லிவிட இங்கு அலமூவோ அவன் முதலில் பேசியதை கேட்டே அதுவரை குனிந்த தலையுடன் நின்றிருந்தவள் இவனது குரல் கேட்டு ஸ்தம்பித்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பார்த்தவள் அவனது முகத்தை கண்டு மேலும் அதிர அதே அதிர்ச்சியுடன் " இவன் இந்த குரல் நான் எங்கோ கேட்டிருக்கிறேனே..?? என்று எண்ணியவளுக்கு சட்டென்று புரிந்தது அன்று டிரையினில் கண்ட கனவில் வந்த அரக்கன் இவன் தான் என்று.

அதில் ஏனோ உள்ளம் பதற "கனவில் கண்ட இந்த அரக்கனிடமா தான் வேலை செய்ய வேண்டும்..??" என்று எண்ணினாள் பயத்துடன். பாவம் அவள் அறியவில்லை அது கனவல்ல நிஜம் என்று.

அடுத்து அடுத்து பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவள் கடைசியில் அவன் தனக்கு வேலை இல்லை என்று சொன்னதும் கலங்கி தான் போனாள் குடும்ப நிலை எண்ணி.

உடனே அவனை கலங்கிய கண்களுடன் ஏறிட்டவள் யமுனாவை திரும்பி பார்க்க அவரோ இவளது கலங்கிய கண்ணை பார்க்க முடியாமல் மீண்டும் யாத்ராவிடம் "தம்பி திரும்ப திரும்ப கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..!! இந்த பொண்ணு என் பொண்ணு போல சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்த பொண்ணு அவளை வெளிய விட மனசு இல்லாம தான் உங்களை நம்பி இங்க கூட்டிட்டு வந்தேன். தயவு செஞ்சு மறுக்காம எனக்காக அவளுக்கு வேலை போட்டுக்கொடுங்க..!!" என்று கூறியவர் அவனை நோக்கி கை எடுத்து கும்பிட அதை கண்டு சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவன் அவர் கையை பற்றி "ப்ச் என்ன அக்கா இது..??" என்று அதிருப்தியுடன் கீழே இறக்கிவிட்டவன் அவரது கெஞ்சும் பார்வையில் தன் தலை முடியை இறுக கோதியவன் சிறிது நேரம் எதையோ யோசித்துவிட்டு

"சரி க்கா அவ இங்க வேலை செய்யட்டும் ஆனா ஒரு தப்பு..!! ஒரே ஒரு தப்பு..!! அவளால இங்க நடந்துச்சுன்னா என்ன மன்னிச்சிருங்க யமுனா க்கா மேற் கொண்டு நடக்குறதுக்கு நான் பொறுப்பும் இல்ல..!! மேற்கொண்டு நீங்க வருத்தப்படுறதுலையும் எந்த பிரயோஜனமும் இல்ல..!!" என்று இறுகிய குரலில் கூறி அவரை அழுத்தமாய் பார்த்து "யோச்சிச்சுக்கோங்க...!!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

இவன் சொல்லிவிட்டு சென்றதில் மிரண்டு போன அலமூ யமுனாவை பயத்துடன் பார்த்தாள் அவரோ யாத்ராவின் இந்த பதிலை கேட்டு நிம்மதியுடன் இவளை பார்க்க இவளது மிரண்ட தோற்றத்தை கண்டு தலையில் அடித்துக்கொண்டவர் அவளது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்த கிச்சனை நோக்கிச் சென்றார்.

அங்க அவர் விட்டது தான் தாமதம் "அக்கா நேக்கு ரொம்ப பயமா இருக்கு இவா.. இவா.. பேசுறதை பார்த்தாலே நாக்கு வரண்டு போகுது அக்கா..!! பார்க்க வேறு ரொம்ப கெட்டவங்க போல இருக்காங்க அக்கா.!!" என்று சொல்லி விட்டு ஏங்கி ஏங்கி அழுக ஆரம்பிக்க.

"இங்க பாரு அலமூ..!! இங்க பாரு.. என்ன பாரு..!!" என்று கூறியபடி அழுதுக்கொண்டிருந்தவளின் கன்னத்தை பற்றி தன்னை காண வைத்தவர் அவளது கண்களை பார்த்தவாறே "நீ என்னை நம்புறீயா..??" என்று கேட்டார் அழுத்தமாய்.

அதில் அழுதபடியே "ஆம்‌.!!" என்று மேலும் கீழும் தன் தலையை அவள் அசைக்க.

அதைக் கண்டு புன்னகைத்தவர் "இங்க பாரு அலமூ இவா எல்லாம் நல்லவங்க தான் எந்த காலத்திலையும் இவங்களுக்கு பாதகமா எதுவும் பண்ணக்கூடாது உன் வேலை சமைக்கிறது அதை மட்டும் பார்த்தா எந்த பிரச்சனையும் இல்லை உன் வீட்டுக்கும் நீ மாசம் மாசம் பணம் அனுப்பலாம் இல்லாட்டி நீ சொல்லு நம்ம வேற இடம் பார்க்கலாம் ஆனா இதை விட நல்ல நம்பிக்கையான இடம் இங்க இனி தான் தேடணும்..!!" என்று சொல்ல

அவர் சொன்னதை கேட்டுக்கொண்டவள் அவருக்கு தான் வீண் அலைச்சல் கொடுக்கக்கூடாது என்று எண்ணி வேறு வழியின்றி இங்கே வேலை செய்வதாய் ஒத்துக்கொணடாள்.

அதன் படி அவளை அங்கு வெளியே உள்ள தனக்கென ஒதுக்கி இருக்கும் அறைக்கு அனுப்பிய யமுனா "நீ இன்னைக்கு ரெஸ்ட் எடு நாளைல இருந்து உன் வேலைய தொடங்கலாம்..!!" என்று சொல்ல தலையாட்டிய அலமூவுக்கு பயம் இருந்தாலும் வேலை கிடைத்ததே என்ற நிம்மதியே அதிகம் இருந்தது. ஆனால் ஒன்றை அவள் யோசிக்க மறந்தாள் அது கனவில் கண்ட ஒருவன் எவ்வாறு நிஜத்தில் வருவான் என்று இதை அவள் இன்று யோசித்து சுதாரித்து இருந்தால் அவள் வாழ்க்கை பயணம் மாறி இருக்குமோ...??

இப்போது வேலை கிடைத்துவிட்டதே என்று நிம்மதியாய் இருக்கும் இதே இவள் அடுத்த நாள் சிக்கனை கொடுத்து சமைக்க சொன்னபோது "பெருமாளே‌‌...!!" என்று அலறியபடி கிச்சனை விட்டு ஓடினாள் என்பதை இப்போது சொல்லியிருந்தால் இப்போதே இந்த இடத்தை காலி செய்து இருப்பாளோ..?? ஹா ஹா..!! விதி யாரை விட்டது‌‌..?

தொடரும்..
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 6

பறவைகளின் ஓசை ரம்மியமாய் அக்காலையை வருட புலர்ந்தும் புலராத அக்காலை வேளையில் எப்போதும் போல எழுந்துக் கொண்டாள் அலமூ..!!

கண்களை மூடியபடியே படுக்கையை விட்டு எழுந்தவள் தன் இருகைகளையும் பரபரவென தேய்த்தபடி அதை தன் கண்களில் ஒற்றிவிட்டபின்னே கண்களை திறந்திறந்தாள்.

பின் படுக்கையை விட்டு எழுந்தவள் அக்காலை வேளையிலேயே தலை குளித்துவிட்டு தன்னிடம் இருந்த ஒரு தாவணியை எடுத்து அணிந்துக்கொண்டாள்.

அந்த அறையில் பெரிதாய் எந்த வசதியும் இல்லாவிட்டாலும் கண்ணாடியுடன் கூடிய ஒரு கபோர்ட்டும் அதற்கு அருகில் ஒரு மேசையும் இருந்தது‌.

அதில் நேற்றே தன் பொருட்களை அடுக்கி விட்டாள் அலமூ.

இப்போது அதில் இருந்து ஒரு உடை எடுத்து அணிந்தவள் தலையை விரித்து விட்டு இருபுறம் இருந்த சிறு முடியை மட்டும் எடுத்து பின்னே சேர்த்து முடிந்தவள். அந்த மேசை மீது இருந்த சிகப்பு நிற சாந்துப் பொட்டை எடுத்து அதை தன் நெற்றியில் கோவி வடிவத்தில் பொட்டாய் இட்டுக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

வெளியில் உள்ள தரையில் நடந்து அக்கோட்டையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தவளுக்கு என்றும் இல்லாமல் இன்று ஏனோ புதுவிதமாய் மனம் படபடக்க

அதில் தன் நடையை நிறுத்தி நெஞ்சில் கைவைத்தவள் "என்ன இது ஒருமாதிரி நெஞ்சு எல்லாம் படபடக்குது‌‌..?? எப்பவும் வழக்கமா காலையில எழுந்து இந்த நேரம் பகவான காண கோவிலுக்கு போகுறச்சே வர நிம்மதி இன்னைக்கு அங்க போகாததால தான் இப்படி ஒரு மாதிரி படபடப்பா இருக்கு போல முதல்ல யமுனா அக்கா கிட்ட பக்கத்துல எங்கையாச்சும் கோவில் இருக்கான்னு கேட்டுண்டு நாளையில் இருந்து போயிடணும்‌...!!" என்று மனதில் உறுதி எடுத்தவள் தன் நடையை தொடர்ந்து அவ்வீட்டினுள் நுழைந்தாள்‌.

அந்த காலை வேளையிலும் அங்குள்ள ஆட்கள் சுறுசுறுப்பாகவே சுற்றித்திரிந்தனர்.

அதைக் கண்டு ஆச்சரியமாய் தன் கண்களை விரித்தவள் அவர்களை கடந்து உள்ளே செல்ல போக..

அச்சமயம் அங்கு இருந்த ஒருவன் இவள் போவதை பார்த்து புருவமுடிச்சுடன் அவள் முன் வந்து "கோன் ஹே தும்‌..??" என்று ஹிந்தியில் மிரட்டுவது போல கேட்க.

மொழி புரியாத அலமூவோ இவனது உருவத்தையும் மிரட்டும் தோணியையும் பார்த்து பயத்துடன் அவனை ஏறிட்டாள்.

அவளது பயந்த தோற்றத்தை பார்த்து மேலும் தன்னில் கடுமையை கூட்டிய அவன் இப்போது அவளிடம் ஹிந்தியில் சத்தமாய் மிக கடுமையுடன் அதையே கேட்க.

அதில் ஒருமுறை உடல் அதிர கண்களில் அருவியாய் கண்ணீர் வழிய நடுங்கியபடியே அவனை பார்த்துக்கொண்டு நின்றாள் அலமூ‌.

அச்சமயம் "ராஜேஷ்..!!" என்ற அழுத்தமான குரல் இவர்கள் முதுகுக்கு பின் ஒலிக்க அதுவரை அலமூவிடம் கடுமை முகம் காட்டிக்கொண்டு இருந்த அந்த ராஜேஷ் என்பவனோ இக்குரல் கேட்டு சட்டென்று திரும்பி பார்த்தான்.


"பையா..!!" என்று அங்கு நின்றிருந்தவனை பார்த்த இவன் அழைக்க .

அவர்களை நோக்கி வேகமாக வந்த அவன் "கியா பாட் ஹை ராஜேஷ்..?? (என்ன விஷயம்)" என்று அமைதியாய் கேட்டவனது பார்வையோ அலமூவை குழப்பமும் யோசனையுமாய் பார்த்து வைத்தது‌.

அதற்கு அந்த ராஜேஷ் என்பவனோ "பையா‌..!!" என்று ஆரம்பித்து அலமூவை பற்றி கூறத் தொடங்கினான்.

அதாவது தான் இன்று இரவு நேர பணியாய் இவ்வீட்டை காவல் காத்துக்கொண்டு இருந்த பொழுது இப்பெண் வீட்டினுள் வந்தாள் என்றும் கூடவே தான் அவள் மேல் சந்தேகம் கொண்டு விசாரித்த போது பயந்து நின்றாள் என்றும் அதனால் மேலும் அவள் மீது சந்தேகப்பட்டு அவளிடம் தான் இப்போது விசாரித்து கொண்டு இருந்தேன் என்பதை விளக்கினான்.

அவன் கூறியதை எல்லாம் பொறுமையுடன் கேட்ட இவன் அவனிடம் "நான் பார்த்துக்குறேன் ராஜேஷ் நீ போ..!!" என்று கூறி அனுப்பி விட்டுவிட்டு அலமூவை ஏறிட்டு பார்த்தவன் "நீ என்னமா இங்க பண்ணுற..??" என்று கேட்டான் தமிழில்

தன் தாய் மொழி கேட்டதில் நிமிர்ந்து பார்த்த அலமூ அங்கு நின்றிருந்தவனை பார்த்து "இது நம்மள ஆஸ்பத்திரியில சேர்த்தவளாச்சே..?? இவா என்ன இங்க செய்யுறா..??" என்று எண்ண

அவனோ மீண்டும் "இங்க நீ என்னமா பண்ணுற..??" என்றான் இம்முறை சற்று அழுத்தமாய்.

அதில் சுயம்பெற்றவள் வேக வேகமாய் தன் கண்களில் உள்ள கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி "நா.. நான் இங்க வேலை செய்ய வந்திருக்கேன் அண்ணா...!! ய.. ய.. யமுனா அக்கா தான் இங்க இருக்க முதலாளி கிட்ட கேட்டு வேலை ஏற்பாடு பண்ணி கொடுத்தாங்க..!!" என்று பதில் அளிக்க.

அவள் கூற்றை கேட்டு புருவம் சுருங்க அவளை ஏறிட்டு பார்த்தவனோ மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் "சரி மா நீ போ ஆனா கொஞ்சம் தைரியமா இரு இப்படி எதுக்கெடுத்தாலும் பயந்திட்டு இருந்தா நீ ஏதோ தப்பு பண்ணுறேன்னு நினைச்சுப்பாங்க..!! அதே சமயம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஹிந்தி கத்துக்கோ இல்லாட்டி ரொம்ப கஷ்டம்..!!" என்று அழுத்தி சொல்ல

"சரி அண்ணா..!!" என்று வேக வேகமாய் தலையாட்டிய அலமூ குடு குடுவென அங்கிருந்த சமையலறையினுள் நுழைந்தாள்.

ஆனால் போகும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஷரப்பிற்கோ "நம்ம இடத்துல ஒரு வயசு பொண்ணா..?? பையா எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டார்..??" என்ற கேள்வியே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

அடுத்து முதல் வேலையாய் அலமூவை பற்றி அங்கிருந்தவர்களிடம் சொன்னவன் கூடவே அவர்களிடம் "அந்த பொண்ணு தமிழ்நாட்டில இருந்து வந்திருக்கா ரொம்ப பயந்த சுபாவமா வேற இருக்கா‌. நம்ம கிட்ட வேலை பார்க்க வந்த பொண்ணை நம்ம தான் பார்த்துக்கணும் முடிஞ்ச அளவு அவ கிட்ட தமிழ்லையே பேசுங்க..!!" என்று சொன்னவனே தமிழ் நாட்டவன் இல்லை. ஏன் அங்கிருந்த சில பேரை தவிர வேறு யாரும் தமிழ் இல்லை.

ஆனால் தங்கள் பணிக்காக இந்திய மொழி அனைத்தையும் கற்று வைத்துள்ளனர்.

ஷரப்பின் கூற்றை கேட்டு புரிந்தது என்னும் விதமாய் தலையாட்டினர் அனைவரும்.

*******************************

இங்கு கிச்சனுள் நுழைந்த அலமூ அங்கு யமுனா இல்லாததை பார்த்து குழப்பத்துடன் அவரை தேடினாள்.

அச்சமயம் அங்கு வந்த ஒருத்தன் "கியா..??" என்று அவள் தேடுவதை குறித்து கேட்க.

இவளோ அதில் மலங்க மலங்க முழித்தாள்.

அதில் தன் தலையை சொறிந்த அவன் "தூ... " என்று கூறி அவளை நோக்கி கைநீட்டியவன் அதை மேல் நோக்கி காட்டி ஆட்டியபடி "யாரை தேடுற..?" என்று தமிழில் கேட்க.

அவன் தமிழ் மொழி பேசியதில் நிம்மதியாய் உணர்ந்தவள் "அதுவந்து அண்ணா இந்த ஆத்துல வேலை செய்யுற யமுனா அக்காவை பார்த்தேளா..??" என்று தயக்கத்துடன் வினவ.

" அவங்க மார்னிங்கே மார்கெட் போயிட்டாங்க..!! உன்கிட்ட சொல்லலியா" என்று வினவ

அதில் இல்லை என்னும் விதமாய் அவள் தலையாட்ட.

"மார்னிங்கே போயிட்டாங்க நீ தூங்கிட்டு இருந்திருப்பேன்னு சொல்லாம போயிருப்பாங்க..!!" என்று அவன் கூறிகொண்டு இருக்கையில் அங்கு வந்த இன்னொருவன் அலமூவை பார்த்து "ச்சலோ ச்சலோ ராத்திரி வேலை பார்த்தவங்க இன்னும் அரை மணி நேரத்துல சாப்பிட வருவாங்க அதனால எதாவது சாப்பிட பண்ணு..!!" என்று அறிவிப்பாய் சொல்ல.

யமுனா அக்கா இல்லாத காரணத்தால் தற்போது தான் தான் செய்ய வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட அலமூ‌.

"இதோ அண்ணா..!!" என்று அவனிடம் கூறிவிட்டு சமையலறை நோக்கி சிட்டாக பறந்தாள்‌.

போகும் அவளை பார்த்த முதலாமானவன் இரண்டாவது வந்தவனிடம் "அந்த பொண்ணு ரொம்ப வெகுளியா தெரியுறா நம்ம இடத்துக்கு செட்டாவானு தோணல...!!"‌என்று யோசனையாக சொல்ல அதை கேட்ட மற்றொருவனோ

"ம்ம்..!! ஆனா அந்த பொண்ணு இனி நினைச்சா கூட வெளிய போக வேற வழியில்லையே..??" என்றான் நிதர்சனமாய்‌.

********************************

"கப்பல்ல இருக்க சரக்கு என்னாச்சு ஷரப்..!! நேத்து நைட் நம்ம ஆட்கள் ஹார்பர்க்கு போனாங்களா இல்லையா...??" என்று கேட்டுக்கொண்டே வேகமாய் அந்த மர படிக்கட்டுகளில் இறங்கிக்கொண்டிருந்த யாத்ராவின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்தபடியே "எப்பவும் போல சரக்கை நம்ம இடத்துக்கு கொண்டு வந்தாச்சு பையா எந்த ப்ராப்ளமும் இல்லை..!!" சொல்லியபடி வந்தான் ஷரப்.

"குட் ஷரப்..!! மார்னிங் எதாச்சும் மீட்டிங் இருக்கா...??" என்று கேட்டபடி அங்கிருந்த டைனிங் டேபிளில் வந்து அவன் அமர

"எஸ் பையா கன் டீலர்ஸ் கூட இன்னைக்கு காலைல 10 மணிக்கு ஒரு சின்ன மீட்டிங் இருக்கு நம்ம பிளேஸ்க்கே வர சொல்லியிருக்கேன் பையா..!!" என்று கூறி அவனுக்கு தட்டை எடுத்து வைக்க.

அத்துடன் அவர்கள் பேச்சுக்கு ஒரு முற்றுபுள்ளி வந்தது.

அவன் முன் தட்டை வைத்த ஷரப் அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர இன்னும் சிலரும் அந்த மேசையில் அமர்ந்து இருந்தனர் உண்ணாமல்‌.

இங்கு யாத்ராவோ மேசைமீது இருந்த தன் இரு கைகளையும் கோர்த்தவன் சிறிது நேரம் குனிந்து அமைதியாய் இருக்க.

அவனையே பின் தொடர்ந்தனர் அனைவரும்.

அப்போது அப்பளம் பொரித்து அதை எடுத்து வந்த அலமூ எல்லோரும் அமைதியாய் குனிந்து இருப்பதை பார்த்து "இவாளுக்கு எல்லாம் என்னாச்சு..??" என்று குழப்பமாக எண்ணியபடி அந்த அப்பளத்தோடு அப்படியே அங்கு நின்றாள்...

முழுதாய் ஒரு நிமிடம் கண்மூடி அமர்ந்தவர்கள் பின் தம் தம் கண்களை திறந்து தங்கள் முன்னே வைக்கப்பட்டு இருந்த உணவை உண்ணத்தொடங்க.

அதே போல யாத்ராவும் உண்ணப்போக அப்போது தான் கவனித்தான் அங்கு நின்றிருந்த அலமூவை.

அதில் நெற்றிச்சுருக்கி அவளை பார்த்தவன் தன் உணவை உண்ணாமல் அந்த இருக்கையில் மேலும் சாய்ந்து வசதியாய் அமர்ந்தவாறு "ஹே.. இங்க வா..!!" என்று தன் ஆள்காட்டி விரலை அவள் புறம் ஆட்டியவாறு அவளை அழைக்க.

அதுவரை அங்கு நடப்பதை எல்லாம் தன்னை மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கோ அந்த அமைதியான சூழலில் அவனது குரல் ஓங்கி ஒலிக்கவும் பயந்து போய் தன் கையில் இருந்த அப்பளத்தட்டை கீழே சிதறவிட்டிருந்தாள்.

அதில் எல்லோரும் திரும்பி அவளை பார்க்க அங்கு இருந்த ஷரப்போ "சுத்தம் போச்சு..!!" என்று மனதுள் முனங்கியபடி தன் பையாவான யாத்ராவை பார்த்தான்.

இங்கு அலமூவும் தவறி விழுந்த அப்பளத்தட்டை பார்த்து அதிர்ச்சியுடன் வாயில் கைவைத்தபடி யாத்ராவை தான் ஏறிட்டு பார்த்தாள்.

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top