All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நந்தகியின் "இதுவொரு காதல் பயணம்!!!" - கதைத் திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் அன்புத் தோழமைகளே…

நான் நந்தகி,

நீண்ட இடைவெளியின் பின்னர் எழுத வந்துள்ளேன். தமிழில் இது தான் எனது முதல் கதையூம் தளமும். இவ்வாறு உங்கள் தளத்தில் எழுதலாமா என கேட்டவூடன் தரளமாக எழுதலமே எனக் கூறி எழுதுவதற்கு வாய்ப்பினை வழங்கிய ஸ்ரீகலா அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, எனது கதைகளினையூம் நீங்கள் வரவேற்பிர்கள் என்ற நம்பிக்கையூடன் உங்களுடன் இந்தப் பயணத்தில் இணைந்து கொள்கின்றேன்.

கதை: இது ஒரு காதல் பயணம்

புரியூது புரியூது முதல் கதை அதுக்கே டீ ஆத்துரிங்களா என்று தானே கேட்குறீங்க… ஹிஹிஹிஹி….. எப்படியிருக்குன்னு சொல்லுங்கே சீக்கிரமே அப்டேட் ஒட ஓடி வாரன்.

டீசர்
ஆந்திரா

அந்த இருண்ட அறையினுள் சில பெண்களினை கட்டி போட்டு வைத்திருந்தார்கள். ரவூடிகள் என்றால் இப்படிதான் இருப்பார்கள் என்பது போன்ற அக்மார்க் தோற்றத்துடன் நால்வர். அந்த பெண்களுக்கு 13ல் இருந்து 17 வயதிற்குள் தான் இருக்கும். எப்படி தப்பிப்பது என்று அறியாமல் இங்கும் அங்கும் மிரண்டவாறு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களி தலைவன் போல் இருந்தவன் கேட்டான் “ஏண்டி ஆ அம்மாயி இசாரி கூட ராது காதா"

“ஏ அம்மாயி அன்னையா”

“அதேர அ கணல்விழிஇ ரிவி பிரஸ் ரிப்பேட்டரு”

அடியாள் உமிழ்நீரினை கூட்டி மிடறு விழுங்கினான்.

“இசாரி ஒச்சிந்தது அனுகோ ஆ அம்மாயி காது நின்னே ஜம்பஸ்தானு, வெல்லு வெல்லி பணி சூடு”

அந்த அடியாள் தனக்குள் புலம்பியவாறே சென்றன் “அது எப்படி வருது எப்படி போவூது என்றே தெரியல இதோடு 50 இடம் மாத்தியாச்சு”.

அந்த பெண்களினை அடைத்து வைத்த கதவினை திறந்தவன் அலறினான் “அன்னiயா……….”

அவன் தலைவன் ஓடி வந்தவன் அறையினை பார்பதற்கு முன்பே கேட்டான் “ஏண்டி இசாரி……”

தலையசைத்தவன் அந்;த இடத்தைக் காட்டினான். அதில் கண்னும் கண்னினை சுற்றி நெருப்புமாக வரையப்பட்ட காகிதம்.

கணல்விழி

ஓங்கி ஒரு அறைவிட்டவன் அவனை கன்னா பின்னாவென்று திட்டத் தொடங்கியிருந்தான். அடியாள் எதுவம் பேசாமல் அவனது வாயினையே பார்தவாறு நிலத்தில் குத்துகாலிட்டு அமர்ந்து இருந்தான்.

அவனுக்கு தான் விட்ட அறையில் செவி தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்திருந்ததே.


அந்த நிலையத்தினை விட்டு ரயில் மெதுவே செல்லத் தொடங்கியது. காற்றில் கருத்தடர்ந்த சிகைகள் ஆட, டீ ஷேட்டுடன் கைகளினை பான்ட் பெக்கேட்னுள் விட்டவாறு அந்த ரயிலின் வாசலில் நின்றிருந்தான் அவன். அவனது ஆழ்ந்த சிந்தனையினை இடரியது அந்தக் குரல். திரும்பிப் பார்த்த பொழுது ஒரு பெண் வெள்ளை நிற சுடிதாருடன் அவனை நோக்கி கை நீட்டியவாறு ரயிலுடன் ஒடி வந்து கொண்டிருந்தாள். எதிர் காற்றில் அவளது ஷோல் முகத்தினை மூடியிருந்தது. அவனையூம்மாறியாது அவனது கை நீண்டு அந்த பெண்ணிணை இடையோடு துhக்கி உள்ளே துhக்கியது. அவளது முகத்தைக் காண்பதற்கவே தான் காத்திருந்தது போலேரு எண்ணம் உடலேங்கும் ஓட அவளை தன்னோடு அணைத்தவறௌ முதுகினை ரயில் சாய்த்து தன்னோடு அவளையூம் நிலைப்படுத்தியவன் கை மெதுவே உயர்ந்து அவளது முகத்தினை மூடியிருந்த திரையினை அகற்றுவதற்கு.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13020

வணக்கம் மக்களே
இதோ பயணத்தின் ஆரம்பமான முதலாவது அத்தியாயத்துடன் வந்துட்டன்
அப்படியே உங்கள் கருத்துக்களையும் நிறை குறை இரண்டையும் சொல்லுங்கள்

பயணம் – 01
இருபது வருடங்களுக்கு முன்னர்…

அந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் புகு புகு என புகையினை தள்ளியவாறு டெல்லியிலிருந்து தமிழ்நாட்டினை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. பச்சை பசேலென்ற வயல்வெளிகளினையும்> வெள்ளி நதிகளினையும் தாண்டி மலை குகைகளினுடாக வரும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம். நான் யாருக்கும் அடங்காதவள் என்பதை பறைசாற்றுவதை போல அந்த சிறு ரயில் நிலையத்தில் நிற்காமல் வேகமாக சென்றது.

அதன் முதல் வகுப்புக்கு இருக்கையில் அமைத்திருந்த இரு சிறார்கள் ஆர்வமாக எட்டி பார்த்து அந்த ரயில் நிலையத்தின் பெயரை வாசிக்க முயன்றனர். அவர்கள் அருகே அமர்ந்திருந்த பாட்டி மெலிதாக புன்னகைத்தவாறே கூறினார் "இன்னும் தமிழ்நாடு வரவில்லை நாம் டெல்லியை விட்டு கிளம்பி ஒரு நாள் தான் ஆகியிருக்கு இன்னும் 1/2 நாளில் ஊர் வந்துரும்".

பிள்ளைகள் இருவரும் சோர்ந்த முகத்துடன் இருக்கையில் சாய்ந்தனர். இது எத்தனையாவது தரம் என்ற கணக்கே மறந்துவிட்டது. அவர்களும் எவ்வளவு நேரம் தான் ஒரே இடத்தில் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருப்பது. பாட்டி இருவரையும் நன்றாக பார்த்தார். பிறந்தத்திலிருந்தே பணத்தில் வளந்தவர்கள் என்பது முகத்தை பார்த்தாலே தெரிந்தது. ஆனாலும் அவ் இள முகங்களில் தென்பட்ட சோகத்தை எப்படி மாற்ற போகிறோம் என தெரியமல் நீண்ட பெரு மூச்சு ஒன்றினை வெளியிட்டாவர் கண்களினை மூடி இருக்கையில் தலை சாய்த்து கொண்டார்.

ஒரே ஒரு செல்வ மகன் டெல்லியில் பெரிய தொழிற்சாலை வைத்து நன்றாகவே இருந்தான் குடும்பத்துடன் டூர் போயிருந்த பொழுது விபத்தில் மகன் மருமகள் இருவரும் ஒன்றாக இறைவனிடம் சென்றுவிட்டனர். நல்ல வேலையாக பின் இருக்கையில் பேரனும் பேத்தியும் தப்பித்துவிட்டனர். கடவுள் புண்ணியம். விபத்து என்றால் தெரியாமல் நடந்தது இல்லை திட்டமிட்டு செய்தது. சொத்துக்காக ஆசைப்பட்ட மருமகள் வழி உறவினர்கள் அதை அறிந்ததும் தான் எங்கே தன் பேரப்பிள்ளைகளுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என பயந்து ரயிலில் அழைத்து வந்துவிட்டார். மகளின் கணவரும் சொத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளைகளை அழைத்து வாருங்கள் எனக் கூறியிருந்தார்.

மூத்தவளுக்கு 15 வயதிலும் குழந்தைத்தனமான நிலா முகம் கண் சிமிட்டி விழித்து புன்னகைத்தல் அனைவரும் மயங்கித்தான் போவார்கள் இப்பொழுது சோகத்திலும் பயத்திலும் களையிழந்து தென்பட்டுக்கொண்டிருந்தது. இளையவனுக்கு அவனது கூர் மூக்கும் சதுர முகவாயும் 8 வயதிலேயே இறுகி அவன் முகத்திலிருக்க வேண்டிய குழந்தைத்தனத்தை விரட்டியடித்து இருந்ததன. இப்பொழுதே தன்னை விட பெரியவளான அக்காவையும் பாட்டியையும் கவனித்து கொள்வதை நினைத்து கவலைப்படுவதா இல்லை பெருமைப்படுவதா என தெரியாமல் அடுத்த பெருமூச்சு ஒன்றினை சொரிந்தார். பயண களைப்போ இல்லை இதற்கு முன் நிகழ்த்தவைகளின் பாதிப்போ தங்களையும் அறியாது மூவரும் கண்ணயர்ந்தனர்.
டொக் டொக் என கதவில் தட்டும் சத்தம் கேட்டு சிறுவன் கண்விழித்தான். எழுந்து சென்று கதவை திறந்தவன் டிக்கெட் பரிசோதகரை பார்த்துவிட்டு பாட்டியின் கைப்பையிலிருந்த டிக்கெட்டினை எடுத்து கொடுத்தவன் "இது எந்த இடம் " கேட்டான். அவரும் டிக்கெட் பரிசோதித்தவரே

"விஜயவாடா ஜங்ஷன்"

"எவ்வளவு நேரம் நிற்கும்"

"எப்படியும் ஒரு இரண்டு மணி நேரம் ஆகும் தம்பி வழியில் ஒரு அக்சிடெண்ட் "

"டேங்க் யூ சார் "

அவர் அடுத்த கதவை நோக்கி நகர்ந்தவர் டொக் டொக் என தன் பணியினை தொடர்ந்தார்.


2020

அந்த நிலையத்தினை விட்டு ரயில் மெதுவே செல்லத் தொடங்கியது. காற்றில் கருத்தடர்ந்த சிகைகள் ஆட டீ ஷேட்டுடன் கைகளினை பான்ட் பெக்கேட்னுள் விட்டவாறு அந்த ரயிலின் வாசலில் நின்றிருந்தான் அவன். அவனது ஆழ்ந்த சிந்தனையினை இடரியது அந்தக் குரல். திரும்பிப் பார்த்த பொழுது ஒரு பெண் வெள்ளை நிற சுடிதாருடன் அவனை நோக்கி கை நீட்டியவாறு ரயிலுடன் ஒடி வந்து கொண்டிருந்தாள். எதிர் காற்றில் அவளது ஷோல் முகத்தினை மூடியிருந்தது. அவனையூம்மாறியாது அவனது கை நீண்டு அந்த பெண்ணிணை இடையோடு துhக்கி உள்ளே துhக்கியது. அவளது முகத்தைக் காண்பதற்கவே தான் காத்திருந்தது போலேரு எண்ணம் உடலேங்கும் ஓட அவளை தன்னோடு அணைத்தவறௌ முதுகினை ரயில் சாய்த்து தன்னோடு அவளையூம் நிலைப்படுத்தியவன் கை மெதுவே உயர்ந்து அவளது முகத்தினை மூடியிருந்த திரையினை அகற்றுவதற்கு.

சட்டென எழுந்தவனுக்கு நிஜம் புரிந்தது மறைப்படியும் அதே கனவு. முகத்தினை உள்ளங்கைகளில் அழுத்தமாக தேய்த்தான் கிட்ட தட்ட இருபது வருடமாக அந்த கனவு இல்லாமல் ஒரு நாள் கூட விழித்ததில்லை. அவனுக்கு சிரிப்பு வேறு வந்ததது கனவில் காணும் அந்த பெண் கனவில் வளரவும் செய்தாள் முதலில் சிறுமியாக இருந்தவள் இப்போது குமரியாகிவிட்டாள்.

எழுந்து காலைக்கடன்களை முடித்தவன் அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வரவும் அவனது அத்தை "நந்தன் சாப்பாடு ரெடி சாப்பிட்டு போ"

சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தவர் கேட்டார் "இந்த முறை ஒரு கிழமையிலேயே திரும்பிவிட்டாய் எதாவது சந்தோஷமான தகவல்" அவன் முகத்தில் சொல்லெனா வேதனை எழ இடம் வலமாக தலையசைத்தவன் "இல்லை அத்தை எந்த தகவலும் இல்லை " கண்கள் கூட லேசாக கலங்கிவிட்டது அவனுக்கு காலம் இப்படியே போய்விடுமோ என நினைத்து.

"ஏய் அது என்னோட சொக்கலேட் "

"இல்லடா அது என்னோடது நந்து அத்தான் எனக்கு வேண்டி தந்தது போடா தர முடியாது "

"நந்து அத்தான் ரெண்டு பேருக்கும் தான் வேண்டி தந்தவர் தாடி... "

"தர முடியாது போடா "

அந்த இரண்டு இளங் குரல்களின் சண்டையில் இவன் வேதனை சற்றே மட்டுப்பட்டது. அந்த இருவரின் அன்பு தானே இவ்வளவு காலம் உயிர் வாழ உதவி புரிந்தது அது இல்லாவிட்டால் இப்போது அவனை எரித்த இடத்தில் புல்லும் முளைத்திருக்கும்.

அவன் அத்தையோ "இவளுக்கு வயதுதான் இருபது ஆகுது இன்னும் பத்து வயது பையனுடன் மல்லுக்கு நிக்கிறாள்" என்றவாறே அவர்களை திட்டுவதற்கு வாயெடுக்கவும் வேண்டாமென அவரை தடுத்தான் நந்தன்.

"நீ பெரிய பிசினஸ் டைக்கூன் என்று பெரிய பேர் ஆன இந்த இரண்டும் உன்னை சுண்டு விரலில் வைத்து ஆட்டுதுகள் நீ தான் இருவருக்கும் பெயர் வைத்தாய் அதற்காக இவ்வளவு செல்லமா கொடுப்பாய்" என சலித்தவரை பார்த்து சிரித்தவாறே அலுவலகம் செல்ல தயாரானவன் மேனேஜெர்க்கு அழைத்து "நான் அலுவலகம் வர 10 மணி ஆகும்".

********

YNY பேஷன் பெயரை தாங்கியபடி அந்த ஐந்து மாடி கட்டிடம் கம்பிரமாக நின்றது.

அலுவலக ஊழியர்கள் அனைவரிடத்திலும் ஒரு பரபரப்பு தொற்று வியாதி போல் பரவியிருந்தது.

அதன் MT ரூ நவீன விக்ரமாதித்தன் அவனுக்கு நாடாருமாதம் காடாறுமாதம் போல் கம்பெனிக்கு ஆறுமாதம் வருவான் மீதி ஆறுமாதம் எங்கிருப்பான் என்பது ஜிம்க்கும் ஆடிட்டர்க்கும் மட்டும் தான் தெரியும். அந்த ஆறு மாதத்தில் அவன் என்ன செய்வான் என யாராவது சொன்னால் அவர்கள் கோடீஸ்வரன் ஆபீசில் எல்லோரும் சேர்ந்து காசு போட்டு கொடுத்துவிடுவார்கள் அப்படி ஒரு மில்லியன் டாலர் கேள்வி அது.


ஆனால் இன்று ஆறுமாதம் முடிவதற்கு முன்னேயே வருகிறான்.

அன்று அந்த YNY பேஷனின் ஒரு பகுதி நிறுவனமான Textile மில் ஒரு வெளிநாட்டு கம்பெனியுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய தினம் அவன் வருவானா

அவனது செயலாளர் சங்கீதா அலைஸ் கீதா இப்பொழுதுதான் இருபது நிரம்பிய துடிப்பான சிறுபிள்ளைத்தனமான குமாரி பேஷன் டிசைனிங் படித்து கொண்டிருக்கிறாள் அத்துடன் செயலாளர் கோர்ஸ் முடித்தவள் பயிற்சிக்காக இங்கே பணிபுரிகிறள் ஆனால் வேலையில் கெட்டிக்காரி

கோப்புகளினை சரிபார்த்து மேஜையில் அடுக்கியவள் "பைல் எடுத்து வைச்சுட்டான், மில்லுக்கு ஆள் அனுப்பிட்டன் போன் போட்டும் சொல்லிட்டேன் அப்புறம் டிரைவர்க்கும் சொல்லியாச்சு தண்ணி எடுத்து வைச்சாச்சு " தனக்குள் பேசியவாறே கையிலிருந்த டப் பில் லிஸ்டை சரிபார்த்துக்கொண்டாள்.

அவள் பிரச்சனை அவளுக்கு எதாவது தவறு நடந்தால் முதல் களப்பலி அவள்தானே...

கேபினை திறந்து கொண்டு வெளியே வந்தபோது எதிரில் வந்தான் வழிசல் வருண் கம்பெனியே சேர்ந்து வைத்த பெயர் அவனுக்காகவே செயலாளரின் சீருடையான கோட் அன்ட் ஸ்கிர்ட் இல்லாமல் சாரியுடன் வருவாள். எரிச்சலுடன் புடவையை இழுத்து இடையை மறுத்தவள் ஐயோ என தலையில் கைவைத்தாள்

நேரே ஜிம் சாரியிடம் ஓடியவள் "சார் சார் " என கெஞ்சவே

அவர் உதட்டை பிதுக்கி "வழியில்லம்மா அவன் வந்துண்டான்"

அவள் கண்ணாடி வழியே எட்டிப்பார்க்க சாலையிலிருந்து யூ டர்ன் அடித்தது அந்த சாம்பல் வர்ண ஆடி கார்.

அந்த சாம்பல் வர்ண ஆடி காரிலிருந்து இறங்கியவன் வேக நடையுடன் லிஃப்டை நீக்கி வந்தான்.

அவன் லிஃப்டில் ஏறுவதற்குள் அவன் பற்றி பார்த்துடுவோம்.

ஆறரை அடிக்கு குறையாத உயரம், பரந்த நெற்றி, நீண்ட கூர்மையான கண்கள், நீண்ட நாசி, சதுர முகவாய், விரிந்த தோள்கள், அணிந்திருந்த ப்ளாஸறினை மீறித் தெரிந்த தேகம் உள்ளே ஆறு பையை (six pack) ஒளித்து வைத்தது வெளிப்படையாக புரிந்தது. பளபளத்த காலனையும் நகமும் தலைமுடியும் அவன் ஆரோக்கியமானவனும் சுத்தத்தை விரும்புவானும் என்பதை பறை சாற்றின.

ஒரு கையினை பாக்கெட்டினுள் விட்டு நின்ற தோரணையில் அலட்சியம் தன்நம்பிக்கை இரண்டும் சம விகிதத்தில்.

லிஃப்டுக்கு வெளியே காத்திருந்தாள் கீதா. ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களுக்கும் பொங்கல் தான் நேர்த்தி தனித்தனியாக வைத்து கஷ்டப்படுவானேன்.

லிஃப்டை வெட்டு வெளியேறியவன் அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஏதோ சொல்வதற்கு வாயெடுக்கவும் எதிரேயிருந்த லிஃப்ட் வழியாக ஜெர்மனியை சேர்ந்தவர்கள் வரவும் சரியாக இருக்கவே ஒரு கோபமான பார்வையை அவள் புறம் செலுத்தியவன் அவர்களை நோக்கி வேக நடையுடன் சென்றவனின் பின்னால் கிட்ட தட்ட ஓடினாள்.

அவர்களிடம் கைகுலுக்கியவாறே தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான் "நந்தன் யதுநந்தன் "

"ஹேய் நந்தன் அவன் சார்லஸ் ஹென்றி நான் பவுல் ஜோனஸ் " தமிழ் அவர்கள் வாயில் கொஞ்சி விளையாடியது. "உங்க செக்ரெட்டரி... ரொம்ம்..ப அளக்க இருக்காங்க... "

"க்கும்.. இதுக்கு இவன்ட டொச்சே தேவல " மிக சன்னமாய் வாய்க்குள் முணுமுணுத்தாள் "இருடா முதல்ல உன்ன அளக்கிறான்"

நந்தனுக்கு தெளிவாகவே கேட்டது, கன்னத்தை கடித்து சிரிப்பை அடக்கியவாறே "உங்களுக்கு தமிழ் தெரியமா "

"நான்.. இப்ப கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்கிறான்" என்றான் பவுல் ஜோனஸ் அவன் பார்வை கீதாவிடம் இருந்தது. "இந்தியன் கேர்ள்ஸ் ரொம்ப அளக்கு " என்ன செய்தலும் தமிழின் உயிர் 'ழ 'அவனிடம் வருவேனா என்று மல்லுக்கு நின்றது.

"அப்புடியே நெல்லை போட்டு அளக்குறது "

இதற்கு மேல் விட்டால் சரிவராது என எண்ணியவன் "மிஸ் கீதா... "

"சார் மீட்டிங் ஹால் ரெடி சார் அதோட மில்லுக்கு சொல்லிட்டன் மீட்டிங் முடிய மில்லுக்கு போகலாம் textile என்ஜினீயர் வருணும் இங்க தான் இருக்கார் அதோட மொழிபெயர்ப்பாளரும், சுவேதா " படபடவென தேவையான தகவல்களை வழங்கியவள் சிறு கையசைவில் சற்று தூரத்தே நின்ற டோச் மொழிபெயர்ப்பாளரை அழைத்தாள்.

ஏற்கனவே பேசி முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற நிலையில் இருந்ததால் மீட்டிங் வேகமாக முடிந்துவிட்டது. இரு தரப்பினரும் கையெழுத்து இட்டதும் மில்லுக்கு போவதற்கு கிளம்பினார்கள்.

நந்தன் "மிஸ் கீதா நீங்க இங்கே உள்ள வேலைகளை கவனித்து கொள்ளுங்கள்" என்றவன் இரு ஜெர்மனியர்களினையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

தன் கேபினுள் வந்து தலையில் கைவைத்தவாறு தொப் என அமர்ந்தாள் கீதா.

பின்னாலேயே வந்த வருண் "என்ன கீது பேபி தலை வலிக்கிறதா " என்றவாறே வழிய தொடங்கவும் எரிச்சலுடன் நிமிர்ந்தவள் கண்கள் ஆச்சரியத்திலும் பயத்திலும் விரிந்திருந்தன.

"என்ன பேபி சொல்லு " அவன் தோளில் யாரோ தட்டினார்கள்.

ஒரு கையால் தள்ளிவிட்டு மீண்டும் கேட்டான் "காமன் பேபி சொல்லு "

இந்த தடவை தோளை நன்றாக அமர்த்தி வலிக்க பிடித்தான் "யாரு மேன் அது" என்றவாறே திரும்பியவன் திறந்த வாய் மூட மறந்து நின்றான்.

"போய் டிரைவரிடம் காரை ரெடி பண்ண சொல்லு போ " வருணிடம் உத்தரவிட்ட நந்தன் திரும்பி கீதாவினை பார்த்து கைநீட்டினான்.

கீதா திறந்த வை மூடாமல் கண் தட்டி விழித்தாள்.

"பைல்" கடினமுற்ற குரலில் கேட்டான். பிரமை மாறாமலே அவன் கேட்ட பைலை கொடுத்தவளினை ஊன்றி பார்த்தவன் ஒரு முறை அவளது சேலையினையும் சென்று கொண்டிருந்த வருணின் முதுகினையும் யோசனையுடன் நோக்கினான் "HR மேனேஜறினை பத்து நிமிடம் கழித்து என்னை தொடர்புகொள்ள சொல்லுங்கள் மிஸ் கீதா". அத்துடன் வேகமாக வெளியேறிவிட்டான்.

அவசர அவசரமாக HR மானேஜர்க்கு தகவலை கூறியவள் அப்படியே இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

********
நந்தனின் சாம்பல் வர்ண ஆடி அரைவட்டமடித்து நின்றது பாதி நிற்காதது பாதியாக ஓடிவந்த மில் மேனேஜர் ஒரு பைலை நந்தனிடம் கொடுத்தவர். "HR மேனேஜர் உங்களிடம் தர சொன்னார் " அத்துடன் இரண்டு அடி விலகி நின்றார்.

அதே நேரம் போலீஸ் ஜீப் ஒன்றும் மில் வாசல் வழியாக உள்ளே நுழைந்தது. அதில் இருந்து எஸ் ஐ உடன் இறங்கியவர்களில் YNY கம்பெனியின் HR மனஜரும்.

அந்த இரு ஜெர்மனியர்களும் சுவேதாவை கேட்டார்கள் என்ன நடக்கிறது என்று சுவேதாவுக்கு நடப்பது புரிந்தாலும் என்ன சொல்வது என்று புரியாமல் நந்தனின் முகத்தை பார்த்தள்.

நந்தன் ஒரு வினாடி அவளை பார்த்தவன் சொல்லு என்பது போல் சைகை செய்துவிட்டு படபடவென கோப்பில் இருந்த கடிதங்களில் கையெழுத்திட்டவன் "மிஸ்டர் வருண், இதில் உங்களது கையெழுத்தை போடுங்கள் "

அப்போதும் அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஒரு சின்ன பெண்ணை பார்த்து கொண்டிருந்தவன் விழுந்தேழும்பி வந்து கையெழுத்திட்டவன்

"என்ன சார் இது "

"அது உங்களது ராஜினாமா கடிதம் இது அதனை நான் ஏற்றுக்கொண்ட கடிதம் "

"சார் !!! சார்... ஏன் சார் "

"கெட் அவுட் " கால்களை அகட்டி மார்புக்கு குறுக்காக கைகளினை கட்டி கொண்டு நின்றவனிடம் அப்படி ஒரு இறுக்கம் கண்களில் அணிந்தியிருந்த கருப்பு கண்ணாடி அவனது கடினமான முகத்தின் உணர்ச்சிகளை அதிகப்படுத்தி காட்டியது.

"நா.. நான் கோட்டுக்கு போ...."

அவன் முடிப்பதற்குள் நந்தன் ஒரு எட்டு எடுத்து வைத்தவன் "ஏய்..."

வருண் பயந்து போய் நாலைந்து அடிகள் பின்னே சென்றிருந்தான்.

வருண் அருகே வந்தவன் ஒரு கோபமான சிரிப்புடன் "நீயாக போனால் சேதாரம் குறைவு இல்லை" போலிஸினை கண்களால் காட்டியவன் " அவர்களிடம் உன்னை ஒப்படைத்து விடுவேன் எது வசதி " அவன் தோளில் இல்லாத தூசியை தட்டினான் நந்தன்.

"நா நான் என்ன தப்.... " நந்தனின் பார்வையில் அவன் குரல் தேய்ந்து மறைந்தது

"நீ என்ன செய்ய எதுக்கு இங்கே வந்தாய் எல்லாத்துக்கும் ஆதாரம் என்னிடம் உண்டு "

வருண் எதுவும் பேசாமல் தலைகுனிந்தவாறு வெளியே செல்வதற்கு திரும்பினான்.

"ஒரு நிமிடம்" விரலை சொடுக்கி அழைத்தவன் "கம்பளைண்ட் கொடுத்த பெண்களை மிரட்டியதாகவோ இல்லை என்னை அழிக்க எதாவது செய்ய நினைத்தால் உன் உடம்பில் உயிர் இருக்கும் ஆனா அதனால் உனக்கு பிரயோசனம் இருக்காது"

ஜோனஸ் சுவேதாவை பார்த்த பார்வைக்கு விடையாக "எங்கள் பாஸ் ஒழுக்கத்தில் நெருப்பு மாதிரி அது ஆணா இருந்தாலும் சரி பெண் ஆனலும் சரி இந்த விஷயமாக யாரு தப்பு பண்ணாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார் இவனை இந்த அளவோடு விட்டதே ஆச்சரியத்திலும் ஆச்சரியம் "

"அப்ப லேடீஷை கூட இப்படி நடத்தியிருக்கறா "

சுவேதா சிரித்தவாறே கேட்டாள் "நடத்தியிருக்கறா, அறையே விழுந்து இருக்கு"


13021
 
Last edited:

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இந்திரா சௌந்தராஜனின் ரசிகை கிட்டத்தட்ட 9 வயது முதல் அவரது புத்தகங்களுக்கும் நாடகங்களுக்கும் தீவிர ரசிகை. அவரது புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதிய பாலகுமாரன் ஐயா அவர்கள் கூறியது "இப்படி ஒரு இரண்டு கால கதையை எழுத நான் எப்படி தவறினேன்" ஆம் நான் இவ்வாறு ரெண்டு காலத்தில் எழுதுவது அவரது பாதிப்புதான், என்ன செய்ய இளமையில் கல்வி சிலையில் எழுத்து சிறு வயதில் பார்த்த ருத்ரவீணை இன்றளவும் என் மனதை நீங்கவில்லை

எப்படி உள்ளது என்று கீழே உள்ள லிங்கில் நீங்கள் சொல்லி போங்கள்


 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பயணம் -02

இருபது வருடங்களுக்கு முன்னர்…

“அக்கா அக்கா" அக்காவை எழுப்பினான்.

"கண்ணா.. இறங்குற இடம் வந்தூட்டுதடா " எனக் கேட்டவாறு எழுந்தாள்.

"இல்லக்கா ரயில் புறப்பட சிறிது நேரமாகுமாம் வா”

“சற்று வெளியில் இருந்துட்டு பாட்டிக்கு சாப்பிட எதாவது வேண்டி வரலாம்".

"பாட்டி தேடினால்...."

“ரெண்டு பேரும் எங்கே போறத்துக்கு பிளான் " பாட்டி இருவரையும் அதட்டினாள்

"இல்ல பாட்டி அக்கா பாவம் காலை அசைக்க முடியாமல் கஷ்டப்படுறாள் " விபத்து அவளது உயிரை பாதிக்கவிட்டாலும் காலில் தனது வேலையை காட்டியிருந்தது

அவளும் பாவமாய் பாட்டியை பார்த்தள்.

"இதோ உங்களுக்கு முன்னால இருக்கிற இந்த இருக்கையில் இருக்கிறோம் பாட்டிமா ப்ளீஸ் அதுக்கு பின்னால் தான் கேன்டீனும் இருக்கு ரயில் போக 2 மணி நேரம் எடுக்குமாம் டிக்கெட் செக்கரிடம் கேட்டுட்டேன் " பட பட என தகவல்களினை வழங்கினான்.

"பிடிவாதக்காரன் நினைத்தை சாதிக்கணும் " பாட்டி செல்லமாக வைத்தவாறே

"சரி சரி தூரமாக செல்ல வேண்டாம்" என்று கூறியவாறே உள்ளே இருந்து ஒரு கண்ணின்னை அவர்களிடம் வைத்தவாறே இருந்தார்.

அந்த சிறுவன் தனது அக்கா நடக்க உதவி செய்தவன் சொன்னது போல் பாட்டியின் கண் முன் இருந்த இருக்கையில் இருக்க விட்டு உணவும் நீரும் வாங்குவதற்காக அருகேயிருந்த உணவு கடைக்கு சென்றான். சிறிது நேரம் அமர்ந்திருந்த அந்த சிறுமி பக்கத்தில் இருந்த தண்ணீர் குழாயினை பார்த்ததும் எழுந்து நன்றாக நீர் அடித்து முகத்தை கழுவினாள். தனது ஷோலில் முகத்தை துடைத்தவாறே திரும்பியவளுக்கு திடீரென கால் நிலத்தில் ஊன்ற முடியாத அளவுக்கு வலிக்கவே தடுமாறி விழப்போனாள். விபத்து நடந்து பத்து இருபது நாட்களே ஆனா நிலையில் நீண்ட தூர பயணத்தினை தவிர்க்க சொல்லி மருத்துவர் அறிவுறுத்தியிருந்தும் கூட பயத்தின் காரணமாக பாட்டி அவர்கைளினை அழைத்து வந்ததால் சரியாக ஆறியிருக்காத கால் காயம் தன் வேலையை காட்டியது.

சட்டென இரு கரங்கள் சிறுமியின் தோளினை பற்றி தாங்கி கொண்டன. திரும்பி பார்த்த சிறுமி பயத்துடன் கண்களினை மூடி திறந்தவாறே அவனிடமிருந்து விடுபட முயன்றாள். அவன் சிரித்தவாறே "பயப்பட வேண்டாம், கீதா இந்த அக்கா அமர்வதற்கு கொஞ்சம் உதவி செய்யம்மா" அருகேயிருந்த பெண்ணினை பார்த்து கூறினான்.

அப்பெண்ணினை திரும்பி பார்த்த சிறுமி சிரித்துவிட்டாள். அவளை விட குறைந்தது பத்து வயதாவது குறைவாக இருக்கும். வாயில் ஒரு லாலிபாப்பை வைத்தபடி அவளை பார்த்து சிரித்த சிறுமிக்கு மிஞ்சி மிஞ்சி போனால் ஆறு அல்லது ஏழு வயது தாண்டாது. மிக சாதாரணமான ஓர் சாயாம் போன சட்டை அணிந்திருந்தாளும் பார்ப்பதற்கு சுத்தமாக இருந்தாள், சற்று பரட்டையான கூந்தலினை ஒன்றாக உச்சியில் உயர்த்தி ஒரு ரிப்பனினால் கட்டியிருந்தாள். பெரிய குண்டு கண்களும் வறுமையின் காரணமாக சற்றே ஒட்டிய கன்னங்களுமாக இருந்தாலும் அவள் ஒரு எதிர்கால அழகியென்பது சொல்லாமலே புரிந்தது. அவளைப் பார்த்து முத்து பற்கள் பளீரிட புன்னகைத்தவள், அருகே வந்த அவளது கையினை தந்து தோளைசுற்றி போட்டுக்கொண்டாள்.

"இல்லை வேண்டாம் நீ சின்னப்பெண், நானே..... "

தனது கைகளினை முறுக்கி தான் பலசாலி என சைகை செய்தாவள் "நீங்கள் வாருங்கள்" என அழைத்தாள் கீதா.
தன்னை தங்கியவனை திரும்பி பார்த்த சிறுமி ஆச்சர்யத்துடன் கண் மலர்த்தினாள். அவன் தன்னை கைகளினால் தோளினை மட்டுமே பற்றியிருந்தோடு கையெட்டும் தூரத்தில் தள்ளி நின்றதனையும் கவனித்தாள்.

கீதாவின் உதவியுடன் அமர்ந்தவள் நிமிர்ந்து தனக்கு உதவியவனைப் பார்த்தாள்.

பதின்ம வயதின் எல்லையில் இருந்தவன் ஒல்லியாய் உயரமாக இருந்தான், நின்றாலும் கழுத்தை பின்னே வளைத்து பார்க்கும் உயரம், மாநிறமும் என்று ஏற்கவும் முடியாது கருப்பு என்று ஒதுக்கவும் முடியாது அப்படி ஒரு நிறம் கண்களில் கண்ணியம் சுடர்விட்டது இந்த இள வயதில் அவ்வளவு கண்ணியம் சாதாரண ஆண் மகனிடம் வந்துவிடாது. கண்களினை ஒரு கணம் மூடி நெற்றியில் இரு விரல் வைத்து யோசித்த பொழுது அழகியா நீண்ட விழிகளாய் தெரிந்தது கண்கள்.
சட்டென கண்களினை திறந்தவன் கேட்டான் "நீங்கள் தனியாகவா வந்தீர்கள் வேறு யாரும் வரவில்லையா"
இப்போது சற்றே பயந்தெளிந்த சிறுமி புன்னகையுடன் பதிலளித்தாள் "இல்லை பாட்டியுடனும் தம்பியுடனும் வந்தேன்"
திரும்பி கீதாவினை பார்த்தான், அவள் கண்கள் என்ன செய்தி கூறியதோ "கீதாம்மா இந்த அக்காவுடன் இரு நான் ஒரு போன் செய்துட்டு வரேன் "

ரயில் நிலையத்தின் அலுவலகத்தை நோக்கி நடந்தவன் காதுகளில் விழுந்தது "அன்னையா சூப்பர் அம்மாயி அன்னையா, அம்மிஸ்துந்தே லச்சலோ சம்பாதிஸ்தூந்தி அன்னையா "


இன்று

மயானம்...
ஹைட்ரபாத் நகரை விட்டு தொலைவில் இருந்தது அந்த மயானம். அந்த சாலை மயானத்தின் ஒரு பக்கம் மட்டும் தொங்கிக் கொண்டிருந்த இரும்பு கேட் உடன் நின்று விட்டது. அந்த இடத்திலிருந்து பார்த்தல் வெகு தொலைவுக்கு அப்பால் மயானத்தின் மறு பக்கத்தில் பாதி திறந்திருந்த இரும்பு கேட் காற்றில் மெதுவே அசைந்து கொண்டிருந்தது, கூப்பிடு தொலைவில் இருந்த குடிசையில் இருந்து வந்த புகை வெட்டியானின் சமைத்து கொண்டிருந்தான் என்பதினை சொல்லியது. அந்த மயானத்தின் காற்றில் கூட ஒரு வித அமானுஷ்யமும் அழுத்தமும் நிறைந்து இருந்தது. காற்றே இல்லாமல் சலசலத்த மரங்களின் இலைகளும் யாருமற்ற அந்த மயானத்தில் கேட்ட சருகுகளின் சத்தமும் அந்த நால்வரின் வயிற்றை ஒரு கிள்ளு கிள்ளியது. சற்று தூரத்தில் இருந்த பிண மேடையில் இரண்டு உடல்கள் எரிந்து கொண்டிருந்தது.

நால்வரும் கொலை கொள்ளை என செய்யாத குற்றம் இல்லை இருந்தாலும் இந்த மயான அனுபவம் எல்லாம் அவர்களுக்கு இல்லை சொந்தங்களின் மரண வீட்டுக்கு கூட சென்றதில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தவர்களில் ஒருவன் தைரியமாகா முன் வந்து கேட் மீது கையை வைக்கவும் அதில் எரிந்து கொண்டிருந்த ஒரு உடல் எரிந்தவரே எழுந்து அமரவும் சரியாக இருந்தது.

ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்த வெட்டியான் வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினான், அவன் கண்ட கட்சி அப்படி இருந்தது.

கேட்டை பிடித்தவன் பிடித்தபடி மின்சாரம் பாய்ந்தது போல் உடல் வெட்டி இழுக்க ஒருவன் கீழே விழுந்து எழும்புவதாக நினைத்துக்குக் கொண்டு காற்றில் கையை ஊன்ற முயன்று கொண்டிருந்தான் அடுத்தவன் பயத்தில் பக்கத்தில் இருந்தவன் முதுகு புற சட்டையினை கொத்தாக கையில் பிடித்து கொண்டிருக்க அவனோ நின்ற இடத்தில் ஓடிக்கொண்டிருந்தன் கண்ணை இறுக மூடியபடி.

வெட்டியான் பலமாக சத்தம் எழுப்பினான் "எவரது எமி காவாலி " கேட்டவாறே சென்று இருந்தபடி எறிந்த பிணத்துக்கு ஒரு நெஞ்சாங்கட்டையினை வைத்தவன் திரும்பி அவர்களிடம் வந்தான்.

ஒரு மனிதனை பார்த்ததில் பயம் ஒரு ஓரமாய் ஒதுங்கிக்கொண்டது போலிருக்க அவர்களில் ஒருவன் அண்ணாக்கில் ஒட்டியிருந்த நாக்கை கஷ்டப்பட்டு பிரித்தவாறே கேட்டான் "ஓக்க அம்மாயி... இ வைப்பு .... சூஸ் " அவனுக்கு வாய் மின்சாரமின்றியே தந்தியடித்தது.

வெட்டியான் நால்வரையும் மேலிருந்து கீழ் பார்த்தவன் "இ மாசனம், இக்கட அம்மாயி ஏண்டி, நாக்கு பாரிய கூட லேது "

தொடர்ந்து அவர்கள் தெலுங்கிலேயே பேசத்தொடங்கினார்கள்.

"மயானத்தில் வந்து பொண்ணு வந்திச்சா ஆவி வந்திச்சின்னுட்டு " வெட்டியான் திரும்பவும்

"இல்... இல்லை நாங்... அவ துர தோம் ளுக்கு முன் தான் டிவ.. ந்தாள் " என்றான் அடுத்தவன்

"இதோ பாருப்ப எனக்கு தெலுங்கு மட்டும் தான் தெரியும் வேற மொழியெல்லாம் தெரியாது "

மூன்றாமவன் கோபத்துடன் சொன்னான் "தெலுங்கில் தானே பேசுகின்றோம் " கோபத்தில் அவனது நாக்குக்கு ரோசம் வந்து வேலை செய்ய தொடங்கியது.

"நாங்கள் தான் அவளை துரத்தி வந்தோம் எங்களுக்கு முன்னாள் தான் அவள் ஓடி வந்தாள்"

"ஓ இதைத்தான் சொல்கின்றீர்களா நானும் வேறு மொழியோ என்று நினைத்தேன்"

எரிந்து கொண்டிருந்த பிணம் மீண்டும் நெஞ்சங்கடடையை மீறி கொண்டு எழுந்து அமர்ந்தது.

"அண்ணே அது மறுபடியும் எந்திரிக்குது அண்ணே.... " அழு குரலில் கூறினான் விட்டால் அங்கேயே ஒன்றுக்கு போய்விடுவான் போல் இருந்தது.

"இது வேற" என்று வாய்க்குள் முணுமுணுத்தவாறே அதை திரும்பி பார்த்த வெட்டியான் மீண்டும் நால்ரிடமும் திரும்பி "என்ன செய்யுறது தம்பி அல்ப ஆயுளில் போன பொண்ணு அதன் இப்படி இன்று இரவு இங்கே தங்க முடியாது போல் தான் இருக்கு, சரி நீங்க போய் உள்ள பாருங்க அந்த பொண்ணு இருக்கன்னு..... " அந்த பொண்ணு என்ற வார்த்தையில் அப்படி ஒரு அழுத்தம்.

நால்வருக்கும் யாரோ வயிற்றினுள் கிள்ளிய உணர்வு உள்ளே செல்ல தயங்குவது முகத்தில் பட்டை போல் அப்பியிருந்தது.

போக திரும்பிய வெட்டியான் "என்ன இருந்தாலும் இளந்தாரி ஆண் பிள்ளைகள் சொல்லாமல் விட மனசு வரவில்லை, கொஞ்சம் பார்த்து சூதனமா போங்கோ இப்போ எல்லாம் விடியவே தொல்லை தங்க முடியல நான் கிழவன் அதனால் பிரச்சனை இல்லை நீங்கள்....."

அந்த அரைகுறை வார்த்தையில் தொண்டைக்குள் எதோ சிக்கி கொண்ட உணர்வு.

அப்போது பார்த்து காற்றும் பலமாக வீசத் தொடங்க சடசடவென புதருக்குள் ஏதேதோ வெடிக்கும் ஓசைகள். வெட்டியானின் குடிசைக்கு பின்புறமிருந்த மரத்தின் ஒரு கிளை மட்டும் ஊஞ்சல் போல் ஆடதொடங்கியது. அத்துடன் ஒரு மெல்லிய சலங்கை ஒலி.

நால்வரின் ஷிர்ட்டும் தொப்பலாக வியர்வையில் நனைய வெட்டியான் வாயை பொத்தியவாறே கைகளினை உயர்த்தினான். அவ்வளவு தான் நால்வரும் அப்படியே மயங்கி கீழே விழுந்தனர்.

கீழே மண்டியிட்டு அமர்ந்து அவர்கள் நால்வரும் மயங்கிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்திய வெட்டியான். உதட்டை குவித்து விசில் அடித்தான்.

உள்ளேயிருந்து இன்னொரு வெட்டியானும் ஒரு பெண்ணும் வெளியே வந்தனர்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்.......
இது ஒரு காதல் பயணம் - 03 பதிப்பித்துள்ளேன்,
அப்டேட் கொடுக்க நிறைய நேரம் எடுத்திட்டான், some personnel problems and studies are the reasons, really sorry, என்ன சொல்லுறது எண்டு தெரியல...... தெரியுது sorry எல்லாம் பத்தாது நீங்கள் கோபமா தான் இருப்பீங்க அந்த கோபத்தை இல்லாம செய்ய தொடர்ந்து அப்டேட் கொடுத்து இல்லாம பண்ண ட்ரை பண்ணுறன் ப்ளீஸ்


பயணம் - 03

இருபது வருடங்களுக்கு முன்

திரும்பி கீதாவினை பார்த்தான், அச் சிறு பெண் கண்களால் ஒரு திசையினை நோக்கி சைகை செய்தாள். அவள் கண்கள் என்ன செய்தி கூறியதோ "கீதாம்மா இந்த அக்காவுடன் இரு நான் ஒரு போன் செய்துட்டு வரேன் "



ரயில் நிலையத்தின் அலுவலகத்தை நோக்கி நடந்தவன் காதுகளில் விழுந்தது "அன்னையா சூப்பர் அம்மாயி அன்னையா, அம்மிஸ்துந்தே லச்சலோ சம்பாதிஸ்தூந்தி அன்னையா"



அவர்களுக்கு அவனை விட ஓர் பத்து பனிரெண்டு வயது அதிகமிருக்கலாம், நாங்கள் நல்லவர்களில்லை என்பதை அவர்களது உடையும் பரட்டை தலையும் வஞ்சகமும் சூதும் நிறைந்த கண்களும் அடித்து கூறியது. சற்று தள்ளி நின்று ரயிலை வேடிக்கை பார்ப்பதை போல் அவர்களினை கவனிக்கத் தொடங்கினான் அவன்.



இங்கிருந்த ஐவரில் ஒருவன் சற்று தள்ளி நின்றிருந்த அடுத்த நால்வருக்கு சங்கோத முறையில் சைகை செய்தான். அவர்களில் ஒருவன் எட்டி கீதாவும் அந்த பெண்ணையும் பார்த்தவன் கண்களில் மின்னிய மின்னல் கீதாவை பார்த்ததும் மறைந்தது. அவனை தாண்டி சென்று மற்ற ஐவருடன் இணைந்தவர்களில் ஒருவன் தெலுங்கில் சொன்னான்



"அன்னையா..., ஆ சின்ன தெய்யம் கூட உன்தன்னைய "



"அவுனு அன்னையை, முதடிசாரி கூட இ தெய்யனே அன்னைய அந்தம் பகிலி கொட்டிந்து "



கேட்டுக்கொண்டிருந்தவன் உதட்டுக்குள் சிரித்தான். கீதா ஆள்தான் குட்டி காரியம் எல்லாம் படுசுட்டி, பள்ளி விட்டு வந்து ரயில் நிலையத்திலும் திரையரங்கு முன்னிலுமாக எதாவது தின்பண்டங்கள் தண்ணீர் என எதையாவது விற்பாள். படிப்புக்கு நான் பணம் தாரேன் தானே வேலை செய்வதை விடு என சொன்னாலும் கேட்க மாட்டாள். அவனறிய கிட்டத்தட்ட மூன்று நான்கு பெண்களை இவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டாள். அவன் சற்று நேரமாகவே கீதாவை கவனித்து கொண்டுதான் இருந்தான் அந்த கும்பலினை பார்ப்பதும் பின் அந்த பெண்ணினை பார்ப்பதுமாக நின்று எதையோ யோசித்து கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்று பேசுவதற்குள் அந்த பெண் விழப்போகவே பிடித்திருந்தான்.



அவனது எண்ணங்களினை கலைத்தது அந்தக் கும்பலின் தலைவனின் குரல் "இந்த வாட்டி இந்த குட்டி பிசாசையும் சேர்த்து தூக்கிருவோம், நானும் கொஞ்சம் வளர்ந்த பிறகு தூக்குவோம் என்று தான் பார்த்தான் ஆனா சரி வராது "



அவர்களில் ஒருவன் கேட்டான் "என்ன ராக்கி உண்மையவோ சொல்கிறாய்"



மற்றவன் பதிலளித்தான் "ஆமாண்டா பிளான் எல்லாம் ரெடி, அந்த பொண்ணு இல்லாட்டியும் இந்த குட்டி சத்தான இன்று தூக்கியிருப்போம்..."



கேட்டுட்டுக் கொண்டிந்தவனின் நரம்பினை யாரோ சுண்டியது போல் உணர்வுடன் அங்கிருந்து அகன்றான். ரயில் நிலையத்தின் வெளியே மோட்டார் பைக்கில் நின்றவனின் அருகே செல்ல அங்கிருந்த சிலர் சிறியவர் பெரியவர் பேதம் இல்லாமல் வணக்கம் வைத்தார்கள். எதனையும் கண்டு கொள்ளாமல் பைக்காரன் காதில் எதையோ சொன்னவன் கலங்கிய முகத்துடன் உள்ளே வந்து கீதாவை விட்டு சென்ற இடத்தை பார்த்தான்.



வெறுமையாக இருந்த இடம் அவனைப் பார்த்து சிரித்தது.



இன்று

கீழே மண்டியிட்டு அமர்ந்து அவர்கள் நால்வரும் மயங்கிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்திய வெட்டியான். உதட்டை குவித்து விசில் அடித்தான்.



உள்ளேயிருந்து இன்னொரு வெட்டியானும் ஒரு பெண்ணும் வெளிய வந்தனர்.



வெளியே நின்ற போலி வெட்டியான் மயங்கியிருந்தவர்களை பரிசோதித்தவாறே நிமிர்ந்து கூட பார்க்காமல் கையிலிருந்த சிறிய மயக்க மருந்து ஸ்பிரையினை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி தனது bag உள்ளே வைத்தவள் துப்பாக்கி போன்ற ஒன்றினை அவனிடம் கொடுத்தவாறே அந்த நால்வரினையும் ஊன்றி பார்த்தாள்.



அந்த துப்பாக்கியினை சரி பார்த்தவன், ஒருகாலினை குத்திட்டு கீழே இருந்தவன் கால்முட்டியில் கையினை ஊன்றி தலை சாய்த்து அவளை நோக்கி கேட்டான் "இவர்கள் தானே.... மாப்பிள்ளைகள் "



அவள் கண்களில் மில்லிமீட்டர் அளவில் மலர்ந்த குறுநகையுடன் ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.



"அந்த மரத்தை ஆட விட்டு சமய சஞ்சீவியாக நல்ல வேலை செய்தாய், நான் மயக்க மருந்தினை அடிக்கவிட்டால் இங்கேயே மாரடைப்பில் இறந்திருப்பார்கள்" லேசாக சிரித்தான்.



அவன் சிரிப்பதை பார்த்த வெட்டியானுக்கு தலை சுற்றுவது போல இருந்தது என்றால் அவன் கூறியதைக் கேட்டு மயக்கமே வரும் போல் இருந்தது. ஒரிஜினல் வெட்டியான் நிமிர்ந்து அந்த பெண்ணினைப் பார்த்தன். உள்ளே அவர்கள் இருவரும் அந்த மரத்தை ஆட்ட முயற்சி மட்டும் தான் செய்தார்கள் அந்த மரத்தின் உறுதியான கிளை அசைவென என்று சண்டித்தனம் செய்தது. அதை அப்படியே விட்டுவிட்டு அவன் குடிசையின் உள்ளே செல்ல அந்த பெண் சுண்ணாம்பில் நனைத்த சில கொட்டாங்குச்சிகளை அங்கங்கே எறிந்துவிட்டு பின் வாசலில் நின்று மரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். இதை தான் ஒரிஜினல் வெட்டியான் உள்ளே இருந்து பார்த்தன். மரம் ஆடியதை அவன் பார்க்கவில்லை. வெட்டியான் குழப்பத்துடன் அந்த பெண்ணைப் பார்க்க அவள் பயப்படாதே நான் பார்த்துக் கொள்கின்றேன் என்பது போல் கண்முடி திறந்தவள் குனிந்து கீழே இருந்தவன் தோளில் தட்டி துரிதப்படுத்தினாள்.



கீழே இருந்தவன் கையிலிருந்த துப்பாக்கி பிடித்த கையை தூக்க தன்னையும் மறந்து கேட்ட வெட்டியானின் வார்த்தை திக்கியது "இவர்களை கொல்ல போ..... போ ......."



அவன் நிமிர்ந்து ஒரு பார்வை தான் பார்த்தன், பார்வையா அது போட்ட வேடத்துக்கு தக்க சட்டை இல்லாத வெற்று மார்பும் புஜங்களும் திண்ணென்று இருக்க சட்டென குறுகிய இடையும் இரும்புச் சலாகைகளை பொருத்தி வைத்தது போன்ற கைகளும் ஒரு அடி விட்டால், அடி வாங்கியவன் எட்டு இல்லை பதினாறு குட்டி காரணமே போடுவான் போல் இருந்தது. அனைத்திற்கும் மேலாக அந்த கண்கள் எதிரில் இருப்பவன் உள்ளத்தின் அடி ஆழம் வரை சென்று அனைத்தையும் எடைபோடும் அந்தக் கண்கள் குற்றவாளிகளுக்கு மட்டுமில்லை அவனது மேலதிகாரிகளுக்கு கூட நெஞ்சில் கூட ஒரு கிள்ளு கிள்ளும். வெட்டியான் கண்களுக்கு மூன்றாவது கண்ணினை திறந்த அந்த முக்கண் சிவன் போலவே தெரிந்தான் ஹைட்ரபாத் சார்மினாரின் SP தீனதயாளன்.



வெட்டியான் அந்த மயானத்தின் பிணங்களுக்கு மத்தியில் கூட இவ்வளவு பயத்தினை உணர்ந்ததில்லை. அவனுடன் இருந்த அந்தப் பெண்ணிற்கு அப்படியல்லாம் பயம் இருந்ததை போல் தெரியவில்லை அவள் சுற்றிலும் பார்வையை சுழற்றியவாறே, 'சீக்கிரம் முடி' என்பது போல் அவனது தலையில் தட்டினாள்.



ஒரு கணம் கண்முடி திறந்தவன் "என் இமேஜை டேமேஜ் பன்னுறதே இவளின் வேலைய போய்விட்டது" உதட்டுக்குள் முனுமுனுத்தவாறே தன் வேலையில் முனைந்தான்.



வெட்டியான் விழி தெறித்துவிடும் போல் விழித்தான். சில தினங்களுக்கு முன் SP தீனதயாளன் ஒரு கொலை கேஸில் பிணத்தினை உறவினர் கொண்டுவந்து எரித்துவிட அது சம்பந்தபட்டவர்களினை அடையாளம் காட்ட வெட்டியனை ஒரு மாலுக்கு வருமாறு கூறியிருந்தான். அங்கு ரவுடிகளுக்கு பயத்து ஒரு பிரபல தொழில் அதிபரின் மகள் அவனது கையை பிடித்ததற்கு உதறிய உதறில் கீழே விழுந்ததில் அப் பெண்ணுக்கு இடுப்பு எலும்பே உடைந்துவிட்டது. இத்தனைக்கும் அவள் லேசாக தான் பிடித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண் SP தீனதயாளனின் தலையில் இவ்வளவு இலகுவாக தட்டியது சற்று முன் நடந்த அமானுஷ்யங்களினை பின்னே தள்ளி பயத்தினை ஆச்சரியம் அக்கிரமித்திருந்தது.



சற்று நிமிர்ந்து அந்த பெண்ணினை பார்த்தான். தலையில் குளிர் காலத்தில் போடுவது போல் காதினை மறைத்து புருவம்வரை ஒரு குல்லா, அதனூடே வெளி வந்த கேசம் நான் சுருள் என்று சுருண்டு இருந்தது. முகத்தினை முக்கோண துணியினால் மூடி கட்டியிருந்தாள். ஈட்டி போல் ஜொலித்த கண்கள் மட்டும் மயானத்தின் காற்றினையும் துளைத்து விடும் போல் எதையோ தேடி நாலாபுறமும் சுழன்று கொண்டிருந்தது. அந்த நாலு குண்டர்களிடம் தப்பி வந்தாளா இல்லை பொறிக்குள் இழுத்து வந்தாளா என்பது சரியாக தெரியாத போதும் ஓடியதில் சற்றே தலை கலைந்திருந்த வெள்ளை ஷிர்ட்டினை இடுப்பில் முடிந்து இருந்தாள். குண்டு என்று ஏற்கவும் முடியாத மெலிவு என்று ஒதுக்கவும் முடியாத உடல்வாகுடன், நீல டெனிம் ஜீன்ஸ் பிளஸ் ஆங்கில் பூட்ஸ் அணிந்த கால்களினை அகட்டி உறுதியாக நிலத்தில் பதித்து நின்ற விதம் பயத்துக்கும் அவளுக்கும் வெகுதூரம் என்பதையும் பறைசாற்றியது. இடுப்பில் ஊன்றியிருந்த கைகளில் ஏதோ ஒரு வடிவத்தினை பச்சை குத்தியிருந்தாள்.



தீனதயாளன் வேலை முடித்து நிமிர்ந்தவன் அவள் பார்வையை கவனித்துக் கேட்டான் "எதாவது பிரச்சனையா, வேறு யாரும்....." அவன் முடிப்பதற்குள் இல்லை என வேகமாக தலையசைத்தவள் கீழே மயங்கியிருந்தவர்களினை பார்க்க, "இந்த வேலை முடிந்துவிட்டது நாம் போகலாம்" என்றவன் தனது கண்களை மயானத்தை சுற்றி ஓடவிட்டான்.



ஹைதராபாத் நகரினை விட்டு வெகு தொலைவில் இருந்த அந்த மயானம் அவன் கண்களுக்கு சாதாரணமாகவே தெரிந்தது. அங்கங்கே சில புது சமாதிகளும் நடுநடுவே இடிந்து பழுதடைந்து சமாதிகள் மேல் சிறு பூண்டு தாவரங்கள் வளர்த்திருக்க பழமையும் புதுமையுமாக கலந்து காட்சியளித்தது. வேறு நபர்களின் நடமாட்டம் எதுவுமில்லை என்பதை உறுதிசெய்து கொண்டவன் கண்களினை மட்டும் திருப்பி அவளை பார்த்தன்.



ஓர் இடத்தினையே உற்று பாத்துக்கொண்டிருந்தவளின் புருவத்தின் அருகே உதித்த வியர்வை முத்துக்கள் காதேரமாக வாய்க்கால் கட்டி கழுத்தை நோக்கி இறங்கிவே, அவன் புருவத்தினை சுருக்கி தனக்குள் யோசித்தான் 'இதற்கு முதலும் நான்கைந்து தடவைகள் இப்படித்தான் வியர்த்து வடித்தாள் கேட்டால் பதிலில்லை' . ஏதோ வெடித்த சத்தம் அவனது சிந்தனையை இடற திரும்பி பார்த்தன் அது எரிமேடையில் இருந்து வந்த சத்தம். இதைப்பற்றி மேற் கொண்டு பேச இது இடமில்லை என உணர்ந்தவன் வெட்டியானிடம் திரும்பினான்.



"இவர்கள் எழுந்ததும் பயத்தில் மயக்கம் போட்டதாக சொல்லி திருப்பி அனுப்பிவிடு வேறு எதுவும் பேசியதாக தெரிந்தது.... " அந்த அழுத்தமான பார்வையே மீதியை கூற வெட்டியான் சூரன் போல் எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தான்.



ஏதாவது தடயங்கள் விடுபட்டுள்ளதா என்று அந்த அந்த இடத்தினை நன்றாக சுற்றி பார்த்தவன் அவளது பூட்ஸ் காலடிகளை தன் கால் தடத்தினை பதித்து அழித்தவன் மீண்டும் ஒரு எச்சரிக்கை பார்வையை வெட்டியான் பக்கம் வீசியவாறே அந்த மர்ம பெண்ணையும் அழைத்துக்கொண்டு பாதையின் ஓரமாக இருந்த புல்வெளி வழியே அந்த மயானத்திலிருந்து வெளியே போகும் பாதையில் நடந்தான்.



அவர்கள் செல்வதை பார்த்த வெட்டியான் அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சினை நிம்மதியாக வெளியேற்றியவாறே "இவர்களுக்கு மயக்கம் தெளிய எப்படியும் ஒரு பத்து நிமிடமாவது எடுக்கும்" தனக்குள் முணுமுனுத்தவாறே எரிமேடையினை நோக்கி சென்றான். தன் வேலையினை செய்துகொண்டே அவர்கள் மேல் ஒரு கண்வைத்தவாறு இருந்தவனுக்கு இதயம் எகிறி தொண்டைக்குழி வழியே வெளி வந்துவிடும் போல் இருந்தது அந்த காட்சி.



வெள்ளை நிற புகை வடிவத்தில் அந்த குண்டர்களின் அருகே ஒரு உருவம் இவர்கள் அருகே நிற்பதா அல்லது வெளியே செல்பவர்களை பின் தொடர்வதா என்பது போல் தயங்கி நின்று கொண்டிருந்தது. வெட்டியானுக்கு பயத்தில் மூச்சு திணறத் தொடங்கியது.



அந்த வெள்ளை புகை குண்டர்களின் மேலாக பறப்பது போல் வேகமாக கடக்கவே அந்த இடத்தில் மட்டும் வீசிய காற்று சுற்றியிருந்த சருகுகள், அரிசி சோளப்பொரி மண் என மூன்று மீட்டர் வட்டத்தினுள் இருந்த அனைத்தினையும் எழுப்பி ஒரு கணம் அந்தரத்தில் நிற்கவிட்டு கீழே விழவிட்டது. அதன் பின் மெதுவே வெளியே செல்பவர்களை பின்தொடர்ந்து காற்றில் கலந்து மறைந்தது.

******

மில்லில் மீட்டிங் முடித்து வந்திருந்த ஜெர்மனியர்களுக்கு ஊரை சுத்தி பார்க்க ஏற்பாடு செய்திருந்தான். மொழிபெயர்ப்பாளர் சுவேதாவும் அவர்களோடு காரில் ஏறுவதை பார்த்து கையசைத்தவாறே அவர்களுக்கு விடை கொடுக்கவும் யது நந்தனின் செல் சத்தமின்றி அதிரவும் சரியாக இருந்தது.



ப்ளூடூத்தில் "யது ஹியர்...." என்று பதிலளித்தவாறே காரினுள் அமர்ந்து சீட் பெல்டை அணிந்தவன் கைகள் மறுமுனையில் கேட்ட செய்தியில் அந்தரத்தில் நின்றது.



பயணம் தொடரும்...​
 
Last edited:
Top