All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உன் மனம் தனில் எந்தன் தொல்லையா?" கதை திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

பிரதிலிபியின் இயல் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல் இது.
காதலர் தின ஸ்பெஷலாக முழு நாவலையும் இங்கே பதிவிடுகிறேன்.


படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று அவர்களுக்கு முதலிரவு...



மனம் நிறைந்த குழப்பத்துடன், தன் மனைவி மீதான கோபத்துடன் அந்த அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தான் சிவா.



மனம் நிறைந்த ஆசையுடன், கணவன் மீதான காதலுடன், நாணம் கொண்டு தலை கவிழ்ந்து மனதில் துளிர்த்த சிறு படபடப்புடன் உள்நுழைந்தாள் கண்மணி.



அறையினுள் நுழைந்தவளை வெறுமை பார்வையால் நோக்கியவன், அவனருகில் அவள் வரவும் மெத்தையிலிருந்து எழுந்து பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான்.



அவன் விருட்டென அவ்விடத்தை விட்டு சென்றதில் இவள் மனம், "என்னாயிற்று இவருக்கு" என எதுவும் புரியாத குழப்பத்திற்குள் செல்ல, "அவரிடமே கேட்டுவிடுவோம்" என்றெண்ணியவள்,



பால்கனியில் அவன் பின்னே சென்று நின்று, "என்னங்க" என்றிவள் அழைக்க,



அவளிடம் பேச விரும்பாதவனாய் திடுமென திரும்பி அறையினுள் நுழைய, அவன் பின்னே இவளும் நுழைய,



பால்கனியின் கதவை அறைந்து சாற்றியவன்,



"எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை. என்னால எங்கம்மா கஷ்டபடுறதை பார்த்துட்டு இருக்க முடியாது. அவங்க பேச்சை மறுக்க முடியாம தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். என்கிட்ட உரிமை எடுத்துகிட்டு பேசுற வேலைலாம் வேண்டாம்" என வார்த்தையை உமிழ்ந்து அவளை ரணமாக்கியவன் கட்டிலில் சாய்ந்து கண்மூடிக் கொண்டான்.



பல மணி நேரமாய் அவன் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த கோபம் அவனையுமறியாது கடுஞ்சொல்லாய் பாய்ந்திருந்தது அவள் மீது.



பல சமயங்களில் தன் கண்ணை மறைக்கும் கோபம் வீச்சருவாளாய் வார்த்தையில் பிறரை வதைப்பதை உணர்வதில்லை கோபமுற்றோர்.



அத்தகைய தவறினையே செய்தான் இவனும்.



அவனின் கூற்றில் மூளை ஸ்தம்பித்து போனது. மனம் கலங்கி அழுதது அவளுக்கு.



இது அவள் சற்று எதிர்பார்த்தது தான் எனினும் காதல் கொண்ட மனம் வலிக்க தான் செய்தது.



இன்றைய திருமணத்தின் நிகழ்வுகளிலேயே தன்னை அவனுக்கு பிடிக்கவில்லையோ என்றிவளின் உள்ளுணர்வு அவளுக்கு உணர்த்திக் கொண்டிருக்க, அதை அவன் வாயால் கேட்கும் போது இதயம் நோக கண் கலங்கியது அவளுக்கு.



தன்னை ஒருவாறாய் சமாதானம் செய்துக் கொண்டு அக்கட்டிலின் மறுஓரம் தலை சாய்த்து படுத்தவளின் உள்ளுணர்வு கூறியது "உன் காதல் அவனை மாற்றும்" என.



தன் தூய்மையான நேசத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் மனம் சற்று சமன்பட, அன்றைய நாளின் சோர்வும் மனதின் அழுத்தமும் சேர்ந்து அவளை ஆழ்ந்த நித்திரைக்கு இழுத்து சென்றது.



இரண்டு மாதத்திற்கு முன்பொரு நாள்...



அன்று சனிக்கிழமை...



அவள் வழமையாய் செல்லும் ஆஞ்சநேயர் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த சமயம் அவளருகில் வந்த வயதான பெண்மணி கால் சற்று தடுமாற, தான் விழாமல் இருக்கும் பொருட்டு அருகிலிருந்த இவளின் கையை அழுத்தமாய் பற்றிக்கொண்டாரவர்.



அவர் தடுமாறும் போதே கவனித்தவள், அவளை அவர் பற்றியதும் சுதாரித்து ஆதரவாய் தாங்கி அங்குள்ள திட்டில் அமர செய்தவள், தன் கைபையிலுள்ள தண்ணீர் பாட்டிலை அவருக்கு குடிக்க கொடுத்தவள், எங்கும் அவருக்கு அடிபட்டுள்ளதா என அவரின் காலை ஆராய்ந்தாள்.



"ரொம்ப நன்றிம்மா... கொஞ்சம் மூட்டுவலிம்மா இன்னிக்கு... அதான் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது கால் வலியெடுக்க கொஞ்சம் தடுமாறிட்டேன்" என்றவர் கூற,



"ஏன் ஆன்டி இவ்ளோ வலியில தனியாவா வந்தீங்க?" என்றிவள் கேட்க,



"ஆமாம்மா... எங்க கார்ல டிரைவர் கூட வந்தேன். எனக்கு இப்படி வர்றது பழக்கம் தான்மா. உனக்கு ஆஞ்சநேயர் இஷ்ட தெய்வமா?? உன்னை வாரவாரம் சனிக்கிழமை இங்க பார்ப்பேன்மா... அதான் கேட்டேன்" என்றவர் ஆதுரமாய் கேட்க,



மெல்லியதாய் சிரித்தவள், "ஆமா ஆன்டி. ரொம்ப பிடிச்ச இஷ்ட தெய்வம் அவர்" என கண்கள் மின்ன கூறினாள்.



"சரிம்மா நீ போய் சாமிய கும்பிடும்மா... நான் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு வரேன்" என்றவர் கூற,



"சரி ஆன்டி. என்ன ஹெல்ப்னாலும் கேளுங்க" என்றுரைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாளவள்.



இவள் மீது ஏற்பட்ட நன்மதிப்பின் எண்ணத்தில் அவளை ரசனையாய் பார்த்திருந்தாரவர்.



"இந்த பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு சீக்கிரம் எனக்கு மருமகளா வரணும் ஆஞ்சநேயா" என வேண்டிக் கொண்டவர், அவரை வணங்க சென்றார்.



"இப்பெண்ணே உனக்கு மருமகளாய் வரக்கடவது" என அவர் ஆசிர்வதித்ததை அப்பெண்மணி உணரவில்லை அப்போது.



மறுவாரம் சனிக்கிழமை கோவிலுக்கு வந்தவரின் கண்கள் தானாய் அவளைத் தேட, கோவிலின் வெளிச்சுற்று பிரகாரத்தில் தன் தாய் தமயந்தியுடன் அமர்ந்திருந்தாளவள்.



அவளைக் கண்டதும் வெகு நாட்களாய் தேடி அலைந்தப் பொருள் கிடைத்த நிம்மதியை அவர் மனமடைய, அவளிடம் பேசவென அவளருகில் சென்றாரவர்.



அப்பொழுது தமயந்தி யாரிடமோ தன் மனக்குமுறலை கைபேசியின் வழியாக கூறிக் கொண்டிருந்தார்.



கண்மணியை நெருங்கி கொண்டிருந்த அப்பெண்மணியின் காதில் சிவகாமியின் மனக்குமுறல்கள் விழ, இவரின் மனம் சந்தோஷத்தில் தத்தளித்தது. என்னுடைய இத்தனை நாள் வேண்டுதலுக்கு செவி சாய்த்து விட்டாயா இறைவா என தானாய் அவரின் கை இறைவனை நோக்கி கும்பிட்டது.



தமயந்தி கைபேசியில் தன் பேச்சை முடித்ததும் அவரருகே சென்ற அந்தப் பெண்மணி, என் பெயர் சிவகாமி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் தமயந்தியிடம்.



சிவகாமியைக் கண்டதும் பூரித்த மனதுடன், "ஹாய் ஆன்டி. இப்ப மூட்டு வலி எப்படி இருக்கு?" என்று கேட்டவாரே, சிவகாமியுடனான அன்றைய அறிமுக நிகழ்வை தன் அன்னையிடம் பகிர்ந்துக் கொண்டாளவள்.



"பொண்ணை ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க" என்றாரவர் கண்மணியின் கன்னத்தை வருடியபடி.



"உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்" என்றார் தமயந்தியை பார்த்து.



"அம்மா நான் பிரகாரத்தை சுத்திட்டு வரேன்" என்றவர்கள் தனியே பேச வழிவகை செய்து அங்கிருந்து அகன்றாள் கண்மணி.



"நீங்க போன்ல பேசினதை கேட்டுட்டு தான் இருந்தேன். உங்க பொண்ணுக்கு ராகு கேது தோஷம்னால திருமணம் தள்ளிக்கிட்டே போகுதுனு சொல்லிட்டு இருந்தீங்கல. என் பையனுக்கும் அதே தோஷம் தான். ஆண்டவனா பார்த்து உங்க பொண்ண எனக்கு அறிமுகப்படுத்தியதா தான் எனக்கு தோணுது. உங்க பொண்ண எங்க வீட்டு மருமகளாக்க எனக்கு ரொம்ப ஆசையா ஆவலா இருக்கு. இது என் பையனோட விசிடிங் கார்டு. நீங்க எங்களை பத்தி நல்லா விசாரிச்சிட்டு பிடிச்சிருந்தா எங்களுக்கு உங்க பொண்ணு ஜாதகத்தை அனுப்புங்க" என்றாரவர்.



அவர் தன் மகளை பெண் கேட்கிறாரென தெரிந்ததும் முகம் சந்தோஷத்தில் மின்னியது தமயந்திக்கு.



பின்னே கிட்டதட்ட மூன்றாண்டு காலமாய் மாப்பிள்ளை வேட்டை நடக்கிறதே அவளுக்கு. கண்மணி இதைப் பற்றி கவலைக்கொள்ளாது இயல்பாய் சுற்றிக் கொண்டிருக்க, அவளின் பெற்றோர் தான் கோயில் கோயிலாய் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.



அதனால் சிவகாமியின் பேச்சு தமயந்தியின் மனதில் பாலை வார்த்தது. அவரின் உள்ளுணர்வு தன் மகளுக்கு சீக்கிரமே திருமண நாள் கூடி வருமென கூறியது.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆண்டவன் சித்தம் எதுவோ அதன்படி நடக்கும்ங்க. கண்டிப்பா கண்மணி அப்பாக்கிட்ட பேசிட்டு எங்க முடிவை அடுத்த வாரம் இங்கேயே வந்து சொல்றேன்ங்க" என்றுரைத்து விட்டு கண்மணியை அழைத்து கொண்டு சென்றாரவர்.



பாஸ்கரன் தமயந்தி தம்பதியரின் ஒரே மகள் கண்மணி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர்களின் ஒரே கவலை கண்மணியின் திருமணம் மட்டுமே.



இருபத்தி ஏழு வயதான கண்மணி இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவள்.

கல்லூரியில் விரிவுரையாளராய் வேலை செய்கிறாள்.



கார்முகில் வண்ணனின் நிறமுடையவள். கலையான முகமுடையவள். ஐந்தடி மூன்று அங்குலமென செதுக்கி வைத்த சிற்பம் போன்று இருப்பாளவள். ஆனால் ராகு கேது அவளின் ஜாதகத்தில் ராட்டினம் ஆடியதில் திருமணம் கானல் நீராய் போய்விடுமோ என பெரும் கவலை சூழ்ந்திருந்தது அவளின் பெற்றோருக்கு. அத்தனை நிராகரிப்பு இந்த மூன்று வருட திருமண தேடலில்.



ஒரு காலத்தில் திருமணம் என்னும் எண்ணமே பூரிப்பாய் கனவை அள்ளித்தெளித்த கண்மணிக்கு, திருமணம் என்னும் பேச்சு வெறுமையையும் வலியையும் ஒருங்கே தரும் சொல்லாய் மாறிப் போயிருந்தது மாப்பிள்ளை வீட்டினரின் நிராகரிப்பில்.



இத்தகைய நிலையில் சிவகாமியின் பேச்சு தமயந்தி மனதை குளிர்விக்க, எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமென கடவுளை மனதார பிரார்திக்க செய்தது.

பின் அனைத்தும் விரைவாய் நடந்தேறியது.



ஜாதகம் இருவருக்கும் அம்சமாய் பொருந்துவதாய் இரு குடும்பத்தினரும் கூற புகைப்படங்கள் பகிரப்பட்டது.



புகைப்படத்தில் அழகாய் சிரித்திருந்தவனைக் கண்ட கண்மணியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.



"இவன் அவன் தானே" என்றவளின் மனம் கூக்குரலிட்டது.



அவனைக் கண்ட நாளுக்கு பயணப்பட்டது அவளின் மனது.



இரண்டு வருடங்களுக்கு முன்பு...



தான் வேலை செய்யும் கல்லூரியின் சார்பாக பெங்களூரிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கத்தில் பங்கேற்பதற்காக சென்றாள் கண்மணி.



பெங்களுரில் தன் தோழி உமாவுடன் தங்கினாளவள். உமாவின் இல்லத்திலிருந்து அந்த கல்லூரி வெகு தொலைவில் இருப்பதால் காலை சீக்கிரமாகவே கிளம்பினாள் கண்மணி.



அந்த இடத்திலிருந்து அக்கல்லூரிக்கு குளிர் சாதனப்பேருந்தில் மட்டுமே செல்ல முடியுமாகையால் காத்திருந்தாள் அப்பேருந்திற்காக.



காலை நேரம் பயணிகளால் நிரம்பி வழிந்தது பேருந்து. அதில் எவ்வாறோ அடித்து பிடித்து ஏறி ஓர் இருக்கையை தேடிப் பிடித்து அமர்ந்துக் கொண்டாளவள்.



நடத்துனர் இருந்த நெரிசலை சமாளித்து பத்து நிமிடம் கழித்து பயணச்சீட்டு வழங்குவதற்காக இவளின் இருக்கை அருகே வந்த நேரம், தன்னுடைய தோள் பையில் துழாவி துழாவி தேடியும் கிடைக்கப்பெறவில்லை அவளுக்கு அவளின் பணப்பை (மணி பர்ஸ்).



தெரியாத ஊரில் இப்படி சிக்கிக் கொண்டோமே என அவளின் கண்ணில் நீர் கோர்த்து மனம் சிறிது அவமானமாய் உணர, "அய்யோ மானம் போகப் போகுதே" என்றவள் மனம் பதட்டமாய் உரைக்க, நடத்துனரிடம் தன் நிலையை கூறினாளவள்.



நடத்துனர் கன்னடத்தில் தன் வாய்க்கு வந்ததை திட்டிக் கொண்டிருக்க, மொத்த மக்களும் இவளை வேடிக்கை பார்க்க முகத்தை நிமிர்த்தி எவரையும் பார்க்க முடியாமல் தவித்துப் போனாள்.



எப்படியேனும் தன்னை இறக்கி விடுமாறு அவள் நடத்துனரிடம் தமிழில் கெஞ்ச, இது வரை பேருந்து கடந்து வந்திருந்த இரண்டு நிறுத்தத்திற்காவது பயணச்சீட்டு எடுத்தே ஆக வேண்டுமென தனக்கு தெரிந்த அரைகுறை தமிழில் அவளிடம் கூறினார் அந்நடத்துனர்.



அந்நேரம் கேட்டது அவனின் குரல்.



அவளை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாய் வந்தானவன். நம் கதையின் நாயகன் சிவா.



அவளின் பின்னிருக்கையில் அமர்ந்து இந்நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன், நடத்துனரை அழைத்து தான் அவளுக்கு பயணச்சீட்டு எடுப்பதாய் உரைத்து அவள் செல்ல வேண்டிய இடம் கேட்டு எடுத்தானவன்.



நன்றியாய் அவள் அவனைப் நோக்க, உதவி செய்த அவனின் முகத்தில் சிறிதும் கனிவு இல்லை. மாறாய் கோபம் கொப்பளித்தது அவனின் முகத்தில்.



அந்த நடத்துனர் தன்னை திட்டியதால் கோபமுற்றிருக்கிறான் என இவள் எண்ணிக்கொண்டிருந்த நேரம் ,



"அறிவிருக்கா உங்களுக்கு. இப்படி தான் புது இடத்துக்கு வரும் போது கேர்லெஸ்ஸா இருப்பாங்களா??" என தன் இருக்கையிலிருந்து முன்னோக்கி நகர்ந்து அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் சீறினானவன்.



நடத்துனரிடம் அவள் பேசியதை வைத்தே இந்த ஊருக்கு அவள் புதிதென அறிந்தவன், எதிலும் ஒழுங்கும் நேர்த்தியும் எதிர்பார்க்கும் சிவாவிற்கு இவளின் இத்தகைய பொறுப்பற்ற தன்மை கோபத்தை விளைவிக்க, அவனை மீறி வெளிவந்த வார்த்தைகளே அது.

அது தான் அவனின் இயல்பும் கூட.



"அடப்பாவி ஹெல்ப்பும் செஞ்சிட்டு திட்டவும் செய்வியா நீ. இது தெரிஞ்சிருந்தா உன் ஹெல்ப்பே வேண்டாம்னு போய்ருப்பேனே" என மனதிற்குள் குமைந்தவள் அவனுக்கு பதிலுரைக்காது அவனை நன்றாக முறைத்து விட்டே திரும்பினாள்.



அந்த ஒரு மணி நேர பயணத்தில் அவனை வகை வகையாய் வசைப்பாடிக் கொண்டே வந்தாள் கண்மணி. அவள் மனம் ஆறவேவில்லை.



"சரியான சிடுமூஞ்சி... முதல் நேரம் பொண்ணுகிட்ட யாராவது இப்படி பேசுவாங்களா?? அதுவும் இவ்ளோ இக்கட்டான சூழ்நிலைல உதவி செஞ்சிட்டு இப்படியா திட்டுவாங்க... சிடுமூஞ்சி சிடுமூஞ்சி... உன் காசும் வேணாம் ஒன்னும் வேணாம்னு அவன் மூஞ்சில தூக்கி எறியனும் போல ஆத்திரம் வருதே கடவுளே" என அவள் மனம் போன போக்கில் புலம்பிக் கொண்டிந்தாளவள்.



அவனோ அவளை திட்டியதுடன் தன் வேலை முடிந்தது என்பதைப் போல் தன் மடிகணிணியில் வேலை செய்திருந்தான்.

மனதோடு புலம்பியவள் ஞாபகம் வந்தவளாய்,



"அய்யோ இதை எப்படி மறந்தேன். இப்ப அங்க போய் செலவு செய்யவும் திரும்பி வரவும் கூட காசு இல்லையே" என தன் தோள் பையை அலசி ஆராயத் தொடங்கினாள்.



அங்கு இங்குமாய் அவள் பையிலிருந்த சில்லறைகளையெல்லாம் சேர்த்து ஒரு முன்னூறு ரூபாய் தேற்றியவள்,



"இதை அப்பவே செஞ்சிருக்கலாம். இவன் கிட்டயிருந்து வாங்கி கட்டிக்காமலாவது இருந்திருப்போம். இவன் கிட்ட டிக்கெட் காசை கொடுத்திட வேண்டி தான். கண்டவன் கிட்டயும் நாம ஏன் ஏச்சுபேச்சு வாங்கனும் என்றெண்ணி திரும்பி பார்க்க, (அப்போது அறிந்திருக்கவில்லை பெண்ணவளும் கண்டவன் அல்ல தன் கொண்டவனிடம் தான் அவள் வசை வாங்கினாளென) அவன் நிறுத்தத்தில் இறங்க தயாராய் நின்று கொண்டிருந்தான் இவளை முறைத்தவாறே.



"அய்யோ இறங்க போறான் போலயே. நாமலும் அவனோட இறங்கியாவது இந்த காசை கொடுத்துட்டு அடுத்த பஸ்ல ஏறுவோம்" என்றெண்ணிய நேரம் பேருந்து நிற்க அவசர அவசரமாய் அவனுடன் அந்நிறுத்தத்தில் இறங்கினாளவள்.



"எக்ஸ்க்யூஸ் மீ சார்" என அவன் பின்னோடு சென்றவள்,



"இந்தாங்க சார் உங்க காசு. நீங்க ஹெல்ப் செஞ்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றிவள் கூற,



திரும்பி நின்று அவள் முகத்தை முறைத்திருந்தான் அவன்.



"எதுக்கு சார் இப்ப முறைக்கிறீங்க. உங்க காசை வாங்கிட்டு போய்ட்டே இருங்க. நான் அடுத்த பஸ்ஸ பிடிச்சி என் இடத்துக்கு வேற போகனும். நேரம் ஆகுது" என்றிவள் சொல்லிக் கொண்டே போக,



தன் கையை தூக்கி நிறுத்து என்பதைப் போல் காண்பித்து, "டோண்ட் யூ ஹேவ் சென்ஸ்" என்றவன் கேட்க,



தான் அவன் அழகில் மயங்கி அவன் பின்னே வந்து விட்டோமென எண்ணிக் கொண்டானோ என்றிவள் கோபம் கொண்டு பேச வாயெடுக்க,



மீண்டும், "போதும் நீங்க பேசி கிழிச்சது. முதல்ல நான் பேசுறத கேளுங்க" என்றவளின் வாயை அடைத்தவன்,



"ஒரு புது இடத்துக்கு வரும்போது இப்படி தான் எந்த இடத்துக்கு போறோம் எங்க இறங்க போறோம்னு முன்னெச்சரிக்கையா எதையும் தெரிஞ்சிக்காம வருவீங்களா??" என்றவன் கேட்டதும் தான் அவன் திட்டுவதற்கான பொருள் விளங்கியது கண்மணிக்கு.



ஆம் இவள் அவனுடன் தற்போது இறங்கி நின்றுக் கொண்டிருக்கும் இடம் தான் இவள் இறங்க வேண்டிய இடம். பேருந்தில் அவள் இறங்க தயாராகாமல் இருப்பதை பார்த்து தான் அவளை முறைத்து கொண்டிருந்தானவன்.



ஒரு வழியாய் அவள் இறங்கியதும் தெரிந்து தான் இறங்கிருக்கிறாளென இவன் எண்ணி கொண்டிருக்க அவனிடம் பணம் கொடுப்பதற்காக இறங்கியதை அறிந்ததும் அவனின் மனம் கொதிநிலை அடைந்தது.

அவனின் கூற்றில் தன் தவறை உணர்ந்து பேந்த பேந்த விழித்தவள்,



" இப்படி இவன் கிட்டயே வந்து மாட்றோமே" என தன் தலையில் அடித்துக் கொண்டாள்.



"சாரி" என ஒற்றை வார்த்தை கூறியவள் அவன் கையில் பணத்தை திணித்து விட்டு அங்கிருந்து நகர முற்பட,



"ஹலோ இப்ப மட்டும் எப்படி காசு வந்துச்சு??" என்றிவன் கேட்க,



தன் பையை துழாவிய கதையை அவள் கூற, "இதை அப்பவே செஞ்சிருக்கலாம் என்கிட்ட வாங்கி கட்டாமலாவது இருந்திருப்பீங்க" என்று அவ்விடத்தை விட்டு அகன்றானவன்.



ஒருவாறாய் முகவரியை ஆராய்ந்து அந்த கல்லூரியில் நுழைவாயிலில் தன் பெயரை பதிவுச் செய்துவிட்டு உள்சென்று அவள் தன் இருக்கையில் அமர, மேடையில் பேசவென நின்றிருந்தவனை கண்டு திகைப்பின் விளம்பிற்கே சென்றாளவள்.



சிவா அந்த கருத்தரங்கில் தான் புதிதாய் தொடங்கியிருந்த தன்னுடைய கட்டுமான வடிவமைப்பு நிறுவனத்தினைப் பற்றி ஆங்கிலத்தில் தெளிவாய் விளக்கி கொண்டிருக்க, "ஆஹா இந்த சிடுமூஞ்சி செம்ம படிப்ஸா இருப்பான் போலயே. இஞ்சினியரிங் படிச்சிட்டு ஒரு தனி பிஸ்னஸே ஸ்டார்ட் செஞ்சிருக்கானே... பெரிய விஷயம் தான்" என அவனின் படிப்பு வேலை இவற்றை எண்ணி மனதில் அவனை மெச்சிக் கொண்டாளவள்.



சிவகாமியின் ஒரே புதல்வன் சிவா. அவனின் பதினைந்தாம் வயதில் அவனின் தந்தை இறந்துவிட, அவர் சேர்த்து வைத்த பணத்தை கொண்டு இவனை படிக்க வைத்தார் சிவகாமி.



கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதி நேர வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் சிவா. படித்து முடித்ததும் பன்னாட்டு நிறுவனத்தில் கட்டுமான வடிவமைப்பாளராய் வேலை பார்த்த சிவா, தன் சொந்த முயற்சியில் நிறுவனத்தை தொடங்கி அதன் முன்னேற்றம் மட்டுமே தன் வாழ்வின் லட்சியமென எண்ணி வேறெதிலும் கவனம் செலுத்தாது இருந்தானவன்.



அன்று ஒரு வழியாய் கருத்தரங்கம் நிறைவடைந்ததும் தன் தோழியின் இல்லத்திற்கு சென்றாள் கண்மணி.

அங்கு தான் தங்கியிருந்த அறையில் தன் பணப்பையை கண்டவள் அன்றைய கதையை தன் தோழியிடம் உரைக்கலானாள்.



அடுத்து இரண்டு நாட்கள் சனி ஞாயிறு என்பதால் தன் தோழியுடன் பெங்களுரை சுற்றிப்பார்த்து விட்டு செல்லலாமென முடிவெடுத்து ஞாயிறு இரவு ரயிலில் பயணச்சீட்டு எடுத்திருந்தாள் கண்மணி.



மறுநாள் சனிகிழமை பெங்களுரில் தன் இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரின் பிரசித்திபெற்ற தலமான ராக்கிகுட்டா கோயிலுக்கு தன் தோழி உமாவுடன் சென்றாளவள்.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று ஏதோ திருவிழா நிகழ்ந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது.



மிகுந்த நெரிசலுக்கிடையே முட்டி மோதிக்கொண்டு சந்நிதியை அடைந்து தாம்பூலத்தை அர்ச்சகரிடம் வழங்கி தன் பெயரை அவள் கூறிய நேரம், கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் இவளின் கையை இடித்தவாறு அவன் வந்து நிற்க, அர்ச்சகர் அவளுக்கு வேண்டியவனென நினைத்து இவனிடம் பெயரைக் கேட்க, எதற்கோ கேட்கிறாரென எண்ணி சிவா என்றிவன் கூறிய நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி.



அர்ச்சகர் இருவருக்குமாய் சேர்த்து அர்ச்சனை செய்து இவர்களிடம் பிராசாதம் அளிக்கையில் தான் உரைத்தது இருவருக்கும், அவர் இருவரையும் கணவன் மனைவியாய் எண்ணி இருக்கிறாரென.



அவ்வாறு தெரிந்தும் சிறு பார்வை கூட அவள் மீது செலுத்தாது அவ்விடத்தை விட்டு சென்றானவன்.



அவளுக்கு தான் மனதில் சிறு சஞ்சலம். எனினும் மனதை குழப்ப மனமில்லாது, "உன்னை பிடிக்குற யாரையும் எனக்கும் பிடிக்கும் ஆஞ்சநேயா. அது தான் நேத்து அவர் என்னை அவ்ளோ திட்டியும் பொங்காம இருந்திருக்கேன் போல. நீங்களும் உங்க ஆளை அனுப்பி எனக்கு உதவி செய்ய வச்சிருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ்" என்று மனதோடு ஆஞ்சநேயரிடம் பேசியவள் தன் வேலையை கவனிக்க சென்றாள்.



"அவன் என் ஆள் இல்லம்மா... உன் ஆள் ஆகப்போறவன்" என்றவர் பேசியது அவளுக்கு தான் கேட்காமல் போய்விட்டது.



ஞாயிறு இரவு ரயிலில் தன் கைபேசியில் ஏதோ படித்துக் கொண்டு வந்திருந்த சிவாவின் காதில் TTR யாரையோ திட்டிக்கொண்டிருந்தது கேட்டது.



ரயிலில் பாத்ரூமின் அருகிலிருந்த கதவினருகில் தாயை கூட்டத்தில் காணாமல் தவிக்கும் குழந்தையின் பாவனையில் கண்ணில் நீருடன் நின்றிருந்தாள் கண்மணி.



அவளை பார்த்ததும் இவன் முகத்தில் இளநகை படர்ந்தது. "இவ எப்பவுமே இப்படி தானா?? பொறுப்புனா என்ன விலைனு கேட்பா போலயே" என்றெண்ணியவன் அவளருகில் செல்ல,



அவனை கண்டதும் தாயை கண்டுபிடித்த குழந்தையின் பாவனையில் சந்தோஷத்தை பிரதிபலித்தது அவளின் முகம்.



அவனருகில் சென்று அவன் முகத்தை நோக்கியவள் கண்களில் மீண்டும் நீர் துளிர்க்க,



" 11.30 டிரைன் பதிலா 10.30 டிரைன் மாறி ஏறிட்டேன். இப்ப ஃபைன் கட்டியே ஆகனும்னு இவர் சொல்றாரு. ஆனா கைல கார்டு தான் இருக்கு அவ்ளோ காசு இல்ல" என நா தழுதழுக்க அவனை பார்த்து இவள் கூற,



இத்தனை நேரம் அவளை திட்ட வேண்டுமென பொங்கி வந்த அவனின் கோபம் அவளின் இந்த வேதனை குரலில் சற்று மட்டுப்பட, டிடிஆரிடம் பணம் செலுத்தி அவளுக்கோர் இருக்கையை ஏற்பாடு செய்துவிட்டே சென்றானவன்.



அது தான் அவள் அவனிடம் கடைசியாய் பேசியது. நன்றி கூட உரைக்கவில்லை அவனிடம்.

-----

அந்த புகைப்படத்தை தான் இன்னுமே பார்த்துக் கொண்டிருந்தாளவள்.



"பையனை ரொம்ப பிடிச்சிருக்கா மணிம்மா??" அவளின் பார்வை அந்த புகைபடத்திலேயே நிலைத்து விட்டதை கண்ட அவளின் தந்தை பாஸ்கரன் அவளை கேட்க,



சட்டென நிகழ்விற்கு வந்தவள், ஆம் இல்லையென இரு பக்கமும் தலையசைக்க, ஹாஹாஹா வென சிரித்த பாஸ்கர்,

" உன் மனசுல எது இருந்தாலும் சொல்லுடா அப்பாகிட்ட" என்றவர் கேட்டதும்,

அவர் மடியில் தலை வைத்தவர், "இவருக்கு என்னை பிடிக்குமாப்பா??" என்றவள் கேட்டதும்,



அவள் கூற வருவதன் பொருள் உணர்ந்து அதிர்ந்தவர், "ஏன்டா இப்படி யோசிக்கிற?? உன்னை யாருக்காவது பிடிக்காம போகுமாடா??" என்றவள் தலையை கோதி இவர் கூறியதும்,



"அதான் சொன்னானேப்பா. ஒருத்தன் சொன்னானே" என்றவளின் மனம் அன்றைய நாளுக்கு பயணப்பட்டது.



கண்மணியின் தாய் தமயந்தியின் தூரத்து உறவு மூலம் வந்திருந்த சம்பந்தமது. கண்மணியின் குணநலங்கள் அறிந்திருந்த மாப்பிள்ளை வீட்டு பெரியவர்கள் அனைவரும் அவள் தங்கள் வீட்டு மருமகளாய் வர வேண்டுமென பேராவல் கொண்டிருக்க, மாப்பிள்ளை கண்மணியை நேரில் காணவென ஓர் சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு அனுப்பி வைக்க, அவளை கண்டதும் அவள் தாயிடமும் அவளிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு உடனே கிளம்பி விட்டான்.



"எப்படி அந்த பொண்ணை நான் கல்யாணம் செய்வேனு நினைச்சீங்க. அந்த பொண்ணு கலர் என்ன?? என் கலர் என்ன?? " என வீட்டில் பெரும் ரகளையே செய்துவிட்டானவன்.



அந்த மாப்பிள்ளை துப்பு கொடுத்த அந்த உறவினர் பெண் கூறியதை கேட்ட கண்மணிக்கு தன் மீது தாழ்வு மனப்பான்மை உருவாகியது. அதிலிருந்து வெளிவர பெரும்பாடுபட்டாளவள்.



அவளின் தந்தையும், தற்போது வேலை செய்யும் கல்லூரியின் மாணவ மாணவிகளும் தான் இவளை அம்மனப்பான்மையிலிருந்து வெளி கொணர்ந்தனர்.



"அப்பா இவனும் அப்படி சொல்லிட்டா..." என்றிவள் தந்தையின் முகம் பார்க்க,



"சொன்னா என்னடா?? இந்த உலகத்துல ஒருத்தருக்கு பிடிச்சது எல்லாருக்கும் பிடிக்கனும்னு எந்த அவசியமும் இல்ல.

அவனுக்கு பிடிக்கலைனா என்னை கல்யாணம் செய்ய உனக்கு தான் அதிர்ஷ்டமில்லனு தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருக்கனும். உன்னை உனக்காக உன் இயல்போடே ஏத்துகிறவர் கூட வாழ்ந்தா தான் வாழ்க்கை நல்லாயிருக்கும்"



"இவ்ளோ யோசிக்கிற அப்பா... அந்த பையனுக்கு உன்னை பிடிக்காம இருந்தும் கட்டி வைப்பேனாடா. அதனால நீ எதுவும் நினைச்சு குழம்பாம நிம்மதியா இரும்மா" என்றவளை உறங்க வைத்துவிட்டு சென்றாரவர்.



அதே நேரம் டெல்லியில் சிவகாமி வாட்ஸ்சப்பில் அனுப்பிய புகைப்படத்தை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான் சிவா.



"இது அந்தப் பொண்ணு தானே" என்றெண்ணிக் கொண்டே பார்த்திருந்தவனை அழைத்த சிவகாமி, கண்மணியை கோயிலில் பார்த்தது முதல் நடந்த நிகழ்வுகளை கூறினார்.



தன்னை அன்னைக்கு பிடித்தமானவள், அவருக்கு உதவியவள் என்பதிலேயே அவனின் மனமும் சந்தோஷிக்க சம்மதம் தெரிவித்தான் திருமணத்திற்கு.

சிவா சம்மதித்ததில் குதூகலமான சிவகாமி, கண்மணியின் வீட்டினரிடம் பேசி மகனின் சம்மதத்தை கூறினார்.



இரண்டு வருடம் முன்பு அவளை பார்த்த போது தொடங்கிருந்த அவன் தொழிலை, தற்போது பெங்களுரிலும் டெல்லியிலும் கிளைகள் அமைத்து வேலை செய்யும் அளவிற்கு வளர்த்திருந்தானவன்.



அவனின் கடின உழைப்பும் புத்தி கூர்மையும் எதிலும் அவன் எதிர்பார்க்கும் நேர்த்தியும் ஒழுங்குமே அவனுக்கு இவ்வெற்றியை ஈட்டு தந்திருந்தது.

தற்போது டெல்லியில் கிளையை தொடங்கும் வேலைக்காக ஒரு மாதமாய் அங்கேயே தங்கியிருந்தான்.



அவன் தொழில் தொடங்கிய நாளிலிருந்து அதை தவிற வேறெதிலும் நாட்டமில்லை அவனுக்கு. தொழிலின் வெற்றி மட்டுமே முக்கியமாய் எண்ணினான். ஆகையால் திருமணத்தை பற்றிய பெரும் எதிர்ப்பார்ப்போ கனவுகளோ இருக்கவில்லை அவனுக்கு. அவனின் தாயின் வற்புறுத்தலுக்காகவே திருமணம் செய்ய ஒப்புக்கொண்டான்.



எங்கே தன் மகன் டில்லி வேலை முடித்ததும் வேறொரு கிளை வேலையில் மூழ்கி திருமணத்தை தள்ளி வைத்திடுவானோ என்றஞ்சிய சிவகாமி, இரண்டு மாதத்திலேயே திருமணம். திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயமும் வரவேற்பும் வைத்துக் கொள்ளலாமெனக் கூறினார்.



பாஸ்கரன் அலைபேசியில் சிவாவுடன் பேசி அவனின் சம்மதத்தை தன் காதில் நேரடியாய் கேட்டதும் தான் இத்திருமணத்திற்கு முழுமனதாய் சம்மதம் தெரிவித்தார்.



டில்லியில் கிளை அலுவலகம் திறப்பு விழாவிற்கு இரண்டு நாட்கள் கழித்து நிச்சயம் மற்றும் திருமணம் என முடிவு செய்திருந்தபடியால் வேலை அவனின் கழுத்தை நெறிக்க, அவனால் கண்மணியிடம் திருமணத்திற்கு முன் அளவளாவ இயலவில்லை.



அவனின் கோப முகத்தை மட்டுமே கண்டிருந்த கண்மணிக்கு அவனிடம் இயல்பாய் பேச பயம் தடுத்திருந்தது. ஆகையால் அவளும் அவனிடம் பேச முயலவில்லை. அனைத்தையும் திருமணத்திற்கு பின் பார்த்துக் கொள்ளலாமென எண்ணி விட்டனர் இருவரும்.



ஆக இருவரும் மற்றவரைப் பற்றிய புரிந்துணர்வு துளியுமில்லாது திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்தனர்.

ஆயினும் திருமணம் என்னும் பேச்சே யாரோ ஒருவனை தன்னவனாய் எண்ண வைத்திடும் நிலையில், அத்தனை கோப முகம் காட்டிய போதும் அவளுக்கு உதவி செய்தவனாகையால் அவன் மீது அவளுக்கிருந்த பெரும் நன்மதிப்பு, அவளின் ஆஞ்சநேயர் அன்றைக்கே அவனுடன் அவள் பெயரை இணைத்து அர்ச்சனை செய்ய வைத்ததினால் தன்னவன் இவன் தான் என்கின்ற திண்ணமான எண்ணம்.... இவை எல்லாவற்றையும் தாண்டி அவன் தன் நிறத்தை பழிக்கவில்லை என்கின்ற எண்ணமும் சேர்ந்து அவள் அறியாமலே அவளின் மனதினுள் அவனின் மீதான காதலை விருட்சமாய் வளர்த்திருந்தது.



தன் தாயிற்காக இத்திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாய் சிவா கூறியிருந்த போதும், கண்மணியின் புகைப்படம் கண்ட பிறகு இவள் தன்னவள் என்கின்ற எண்ணம் அவன் மனதில் பச்சை குத்தியது போல் பதிந்து போனது அவனறியாமலே. தினமும் அவன் வேலை பளுவினால் எந்நேரம் உறங்கச் சென்றாலும் அவளின் புகைப்படத்தை காணாது அவனது கண்கள் உறக்கத்தை தழுவியது இல்லை.



அத்தனையாய் பிடித்திருந்தது அவளை அவனுக்கும் அவன் மனதிற்கும்.

மனதில் பூத்த நேசப் பூக்களுடன் இருவரும் தங்களின் மணநாளுக்காக வெகு ஆர்வமாய் காத்திருந்தனர்.



புரிதுணர்வற்ற தன்மை இருவருக்குள்ளும் ஊடலை விளைவிக்குமா???

-----

திருமண நாளிற்கு முந்தைய நாள் நிச்சயத்தென்று தான் அவனை நேரில் கண்டாளவள்.



அவனின் வெளுப்பான ஆஜானுபாகுவான தோற்றத்தினருகில் தான் நிற்க தகுதியானவளா என மனதின் ஓரத்தில் எங்கோ ஒளிந்திருந்த தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்க,



"இவர் கூட நிக்கவே நான் இரண்டு கோட்டிங் முகத்துல அடிக்கனும் போலயே" என மனத்திற்குள் நினைத்துக் கொண்டே அவனருகில் சென்று நின்றாளவள்.



அவளை பார்த்ததும் மென்மையாய் சிரித்தானவன்.



"அட நம்ம சிடுமூஞ்சி மச்சானுக்கு சிரிக்க கூட தெரியுதே" என மனதில் எண்ணிக் கொண்டவள் அவனை நோக்கி இதழ் விரிய சிரிக்க, அவளுக்கு அச்சிரிப்பு ஏற்படுத்திய கன்னக்குழியை ஆசையாய் ரசனையாய் பார்த்திருந்தான் சிவா.



"சும்மா சொல்லக்கூடாது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்ததை விட இப்ப ரொம்பவும் அழகா தான் இருக்கா... கருப்பட்டி அழகிடி நீ" என மனதிற்குள் கொஞ்சிக் கொண்டானவளை.



இவ்வாறு இருவரும் மற்றவரின் அண்மையை வெகுவாய் ரசித்து மிகுந்த களிப்புடனேயே நிச்சயத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.



நிச்சயம் முடிந்ததும் வரவேற்பிற்கென இருவரும் தயாராகி வர, மேடையில் நிற்க வைக்கப்பட்டனர்.



ஏனோ மனம் படபடப்பாய் இன்ப அவஸ்தையாய் உணர்ந்தாள் கண்மணி அவனின் அருகில்.



அவனை நேர்க்கொண்டு காண முடியாது நாணம் தடுக்க, மறந்தும் அவன் பக்கம் திரும்பாது வாழ்த்த வந்தவர்களிடம் மட்டுமே பார்வையை பதித்து பேசினாளவள்.



"நான் பார்க்க பூதம் மாறி இருக்கேனா என்ன??" அன்றைய நாளில் இது தான் அவன் அவளிடம் பேசிய முதல் வார்த்தை.

புரியாது அவனை நோக்கி அவள் விழிக்க,



" இல்ல வந்ததுல இருந்து என் பக்கமே திரும்பாம இருக்கியே!! அதான் நான் பார்க்க பூதம் மாறி இருக்கேனானு கேட்டேன்" என்றவன் இதழில் பூத்த முறுவலுடன் கூறியதும்,



"அச்சோ இல்ல இல்ல" என்றவள் பதறி தலையையாட்ட,



அதற்கு மேல் அவர்களை பேசவிடாமல் வாழ்த்த வந்த கூட்டம் வரிசைகட்டி நிற்க ஒருவாறாய் வரவேற்பு நிறைவடைந்த நேரம் இருவரையும் ஒன்றாய் உண்ண அழைத்து சென்றனர்.



வரவேற்பு ஆரம்பித்த நேரம் உண்டான படபடப்பு இன்னும் நின்றபாடில்லை அவளுக்கு. அவனுடன் இயல்பாய் பேசியிருந்தால் இந்த பயம் படபடப்பு காணாமல் போயிருக்கும். தனக்காக அவனிருக்கிறான் என்ற எண்ணமே பெரும் தெம்பை அளித்திருக்கும். ஆனால் இவை ஏதும் நடந்திடாத நிலையில் உண்ணும் நேரம் அவனுக்கு அவளை ஊட்ட சொல்ல விதிர் விதிர்த்து போனாளவள்.



அவளின் தடுமாற்றம் படபடப்பு அனைத்தையும் கண்டவன் சற்றாய் சிரித்துக் கொண்டான் மனதிற்குள்.



"அன்னிக்கு நான் யாரோவா இருக்கும் போதே அந்த பேச்சு பேசினா... இன்னிக்கு ஒரு வார்த்தை பேசவும் நடுங்குறாளே" என்றெண்ணி வியந்தானவன்.



அன்றைய நாள் முடிய தனதறைக்கு சென்றவனை, இத்தனை நாள் உழைப்பும் அன்றைய நாளின் சோர்வும் சேர்த்து ஆழ்ந்த நித்திரைக்கு இழுத்து சென்றது.

மறுநாள் திருமணத்திற்கு விடியற்காலையே எழுந்தவன் காதில் கேட்டது கண்மணியின் குரல் தான்.



மணமகன் அறையும் மணமகள் அறையும் அருகருகே இருக்க, மணமகள் அறையிலிருக்கும் பால்கனியில் நின்று தன் திருமணத்திற்கு வந்திருந்த தோழி உமாவிடம் பேசிக் கொண்டிருந்தாளவள்.



"என்னடி ரிசப்ஷன்ல நீயும் உன் வுட்பீயும் இரு துருவங்கள் மாதிரி பேசிக்காமலே இருந்தீங்க... நான் பார்த்தவரை ரிசப்ஷன்ல நிக்கிற கப்புள்ஸ் அப்பப்ப பேசிப்பாங்க சிரிச்சிப்பாங்க... அப்டிலாம் உங்களுக்குள்ள எதும் நடந்தா மாதிரி தெரியலையே... உனக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் தானே?? " என்றவளின் தோழி உமா கேட்க,



"ஏன்டி இப்படி கேட்குற?? அதெல்லாம் விருப்பம் தான்" என்றாள் கண்மணி.



"ஹ்ம்ம் சிவா அண்ணாவ உனக்கு பிடிச்சிருக்கு தானே??" என்றவள் தோழியாய் அவளை ஆதுரமாய் கேட்க,



இந்த பேச்சு வார்த்தை தானாய் மணமகன் அறையிலிருந்த சிவாவின் காதில் விழ, அவள் என்ன கூறப் போகிறாளென அறிய ஆர்வமாய் காத்திருந்தான்.



"அவரோட அம்மாவ ரொம்ப பிடிச்சிருக்குடி" என்றாளவள் குறும்பாய் கண் சிமிட்டி.



" மாமியாரை பிடிச்சிருக்குனு சொன்ன ஒரே ஆள் நீயா தான்டி இருப்ப" என்றவள் அங்கலாய்க்க,



"பின்ன கல்யாணத்தன்னைக்கு வந்து கட்டிக்கப் போற பையனை பிடிக்குமானு கேட்ட ஒரே ப்ரண்ட் நீயா தான்டி இருப்ப" என கண்மணி அவளை கேலி செய்ய,



"நேரடியா பதில் சொல்லு. உனக்கு சிவா அண்ணாவ பிடிக்குமா? பிடிக்காதா?" என மீண்டும் அவள் அக்கேள்வியே கேட்க,



தன் மனதை தானே இன்னும் அறிந்திடாத நிலையில் இதற்கு எப்படி பதில் கூறுவது என யோசித்த கண்மணி,



"அப்படினு சொல்ல முடியாது. ஆனா பிடிக்கும்னும் சொல்ல முடியாது. அவரோட அம்மாக்காக தான்டி இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன்.

எல்லாரும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதும் பையன் கிட்ட தானே கடலை போடுவாங்க. நான் என் அத்தைகிட்ட தான் தினமும் பேசினேன். ஷீ இஸ் சோ ஸ்வீட் யூ நோ" என்றவள் கூறிக் கொண்டிருந்த நேரம்,



தமயந்தி திருமணத்திற்கு தயாராக சொல்லி அவளை அழைக்க, "இதோ வந்துட்டேன்மா" என்றுரைத்து உள்ளே சென்றாளவள்.



அவள் அவனின் அம்மாவை பிடிக்கும் எனக் கூறியதைக் கேட்டவனின் மனதில் சிறு பெருமையும் பெரும் பொறாமையும் சூழ்ந்தது.



"வாடி என் கருப்பட்டி கள்ளி!! என் அம்மாவ தான் பிடிக்குமா உனக்கு. உனக்கு கொடுக்கிறேன்டி ஷாக் ட்ரீட்மெண்ட் நான்" என மனதில் சபதமெடுத்துக் கொண்டானவன்.



திருமண சடங்கின் போதும் தாலி கட்டும் சமயத்திலும் அவனின் முகம் இறுக்கத்தையே காண்பிக்க, சிறிதளவுக் கூட அவனின் இதழ் விரியாமல் இருப்பதை கண்டவள்,



"இவர் நம்மளை பிடிக்காம மேரேஜ் செய்றாரோ??" இவ்வெண்ணமே அவளின் மனதில் பாரமாய் ஏறி வலியைக் கொடுக்க,



"சே சே அப்டிலாம் இருக்காது. பிடிக்காம தான் நேத்து சிரிச்சாரா?? இவர் தான் அடிக்கடி கோபப்பட்டு முருக்கை மரம் ஏறுவார்னு அத்தை சொன்னாங்களே... நம்மளும் தான் அதை பார்த்திருக்கோமே. அப்படி தான் ஏதாவது இருக்கும்" என தன் மனதை தேற்றிக் கொண்டு சடங்கில் கவனம் செலுத்தினாளவள்.



அவன் அவளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கிறேனென இவள் முன் உம் என்றும் மற்றவர்கள் முன் அழகாய் சிரித்து ஜம் என்றும் இருந்தான்.



அதையறியாத பெண்ணவளோ மனம் கலங்கி கொண்டிருந்தாள்.



திருமணம் முடிந்து நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்த நிலையில் இவர்களின் திருமணம் சடங்குகள் முடிந்திருந்த சமயம், இருவரும் உணவருந்தி விட்டு வந்துக்கொண்டிருக்க அப்பொழுது சிவகாமியின் வயதையொத்த இரு பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.



"ஏன்மா இந்த சிவகாமிக்கு வேற பொண்ணே கிடைக்கலைனா இந்த பொண்ண தேடிப் பிடிச்சிருக்கா?? அதுவும் நம்ம சிவா கலரென்ன?? இந்த பொண்ணு கலரென்ன??" என்று அப்பெரியவர் அருகிலிருந்தவரிடம் பேசி கொண்டிருக்க,
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது கண்மணியின் காதில் விழ, இதற்கு தன் கணவனின் எதிர்வினை எவ்வாறாய் இருக்குமென அறிந்துக் கொள்ள அவள் அருகிலிருந்த அவனை நோக்க, அவனோ கைபேசியில் எவருடனோ பேசிக் கொண்டிருந்தான்.



அந்த பாட்டி பேசியதை விட இவன் தனக்காக பேசவில்லையே... உனக்கு நானிருக்கிறேன் என்று சொல்லவில்லையே என்பது தான் இவளின் மனக் குமுறலாய் இருந்தது.

தொலைபேசியில் பேசியிருப்பவன் இப்பேச்சை கவனித்திருக்க மாட்டான் என்ற எண்ணம் எல்லாம் இவளுக்கு இல்லை. இவனுக்கு தன் நிறம் ஒரு குறையாய் தோன்றியிருக்கும் அதனால் தான் தனக்காய் பேச வரவில்லை என்றெண்ணினாளவள்.



தூரத்திலிருந்து இவர்களின் பேச்சை கேட்டிருந்த சிவகாமி, அந்த பாட்டியிடம் வந்து,



"என் மருமகளுக்கு என்னமா குறைச்சல்?? அவ கோயில் சிலை போல தெய்வீக அழகு. வாழ்க்கைக்கு அழகும் கலரும் முக்கியமில்லைமா... நல்ல குணமும், குடும்பத்தை அனுசரணையா நடத்துற பண்பும் தான் முக்கியம்... அது என் மருமகக்கிட்ட நிறையவே இருக்கு" என்றவர் பேச, வாயை மூடிக்கொண்டாரவர்.



கண்மணி மனம் ஆசுவாசமாக, மென்மையாய் சிரித்துக் கொண்டாள்.



தற்போது தன்னை அவள் தேற்றிக் கொண்டாலும் பிற்காலத்தில் இந்த நிறத்தை பற்றிய தாழ்மை மனப்பான்மை அவர்களுக்குள் ஏற்படுத்தப் பழகும் ஊடலையும் கூடலையும் அறிந்திருக்கவில்லை அவள்.



அவளின் தோழி உமா கிளம்புவதற்கு தயாராகி விடைபெற வந்தவள், கண்மணியிடம் தனியாக பேச வேண்டுமெனக் கூறி தனியறைக்கு அழைத்துச் சென்றாள்.



"அவங்க பேசுறதை கேட்டுட்டு தான்டி இருந்தேன். நீ இதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத. உங்க இரண்டு பேருக்கும் விருப்பம் தானே இந்த கல்யாணத்துல. இரண்டு பேரும் சிரிச்சி பேசிக் கூட பார்க்கல. அதனால கேட்டேன். சிவா அண்ணா முகமே இறுக்கமா இருந்தா மாதிரி இருந்தது. நீ சொன்ன மாதிரி பெரும் கோபக்காரர் தான் போல. எப்படி சமாளிக்க போறியோ??" என்றிவள் கூறியதும்,



"அவரை பிடிக்கலை தான். அவரோட கோபமான நேச்சர் நினைச்சு பயந்தேன் தான். ஆனா"



இவ்வார்த்தை கண்மணி கூறியிருந்த சமயம் கைபேசியில் தன் தொழில் விஷயமாய் பேசிக்கொண்டிருந்த சிவாவின் காதில் விழ... ஆனால் முழுதாய் கேட்கமுடியாமல் அலைபேசி மறுமுனையில் அவன் கவனத்தை திசை திருப்ப, மீண்டும் அலைப்பேசியில் கவனம் வைத்தவனின் மனதில் அவளின் பிடிக்கலை என்கின்ற வார்த்தை ஆழமாய் பதிந்தது.



அவளின் பேச்சை அரைகுறையாய் கேட்டு அவள் மீதான கோபத்தை மலை போல் மனதில் தேக்கி அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தானவன்.



"ஆனா எல்லாம் இந்த மேரேஜ்க்கு ஒத்துகிறதுக்கு முன்னாடி. இப்ப அவர் என் ஹஸ்பண்ட்டி. ப்ளீஸ் அவரை பத்தி எதுவும் குறைவா பேசாதடி" என்று கண்மணி தன் கணவனுக்காய் பரிந்துப் பேச,



அவள் பேசியதில் ஆச்சரியத்தில் வாய் பிளந்தவள், "உனக்காக பேசினேன்ல என்னைய சொல்லனும். எப்படியோ நல்லா இருந்தா சரி தான்" என விளையாட்டாய் கூறியவள்,



" தாலி கட்டிட்டா புருஷனை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்கிறாங்கப்பா இந்த பொண்ணுங்க" என மனதிற்குள் நினைத்து வாய்க்குள் சிரித்துக் கொண்டே உமா விடைபெற்று செல்ல,



அடியேய் கோச்சிக்கிட்டியாடி என்று கண்மணி கேட்டது உமாவின் செவியை தீண்டானது காற்றோடு கலந்தது.



ஒரு வாரம் முன்பு ஆன்சைட்டிலிருந்து பெங்களூர் பணியிடத்திற்கு வந்த உமாவிற்கு தன் உற்ற தோழி தன் கணவனாக போகிறவரிடம் போனில் கடலை வறுக்கவில்லை என்பதே இருவருக்கும் இத்திருமணத்தில் விருப்பமில்லையோ என்கின்ற சந்தேகத்தை விளைவிக்க, தன் தோழியின் வாயிலிருந்து தன் கணவனை தனக்கு பிடிக்கும் என்கின்ற வார்த்தையை வர வைக்கும் எண்ணத்தின் பொருட்டே அவள் காலையிலும் தற்பொழுதும் தன் தோழியின் வாயை கிளறியது.



ஆனால் அதுவே இருவருக்கும் மனதில் சங்கடத்தை விளைவிக்கும் என அறிந்திருக்கவில்லை அவள்.



அச்சங்கடத்தை தீர்க்கவும் கடவுள் அவளை கருவியாய் உபயோகிப்ப போவதையும் அறிந்திருக்கவில்லை அவள்.



பேசி முடித்து தன் அலைபேசியின் அழைப்பை துண்டித்து அமர்ந்திருந்த சிவாவின் மனம் கொதிநிலையில் இருந்தது.



"அப்படி எதுக்கு பிடிக்காம என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டாளாமா?? என் கூட தானே வாழப்போறா?? என் அம்மா கூடவா வாழப்போறா... அவங்களுக்காக ஒத்துகிட்டது போலவே பேசுறா" என மனதுக்குள் குமைந்துக் கொண்டிருந்தானவன்.



அவள் மீது தனக்கு ஏற்பட்டிருக்கும் நேசம் அவளுக்கு தன் மீது இல்லையே என்ற வருத்தம் விளைவித்த கோபமது.



அக்கோபத்தை அன்றைய முதலிரவு வரை பிடித்து வைத்துக் கொண்டிருந்தானவன்.



தான் அவளுக்காக இது வரை ஒரு வார்த்தையும் கூட பேசவில்லை, அவளை இயல்பாய் தன்னுடன் பேச வைக்கவும் தான் முயற்சி செய்யவில்லை என வசதியாய் மறந்து போயிற்று அவனுக்கு.



கோபத்தை அடக்கி நிதானமாய் சிந்திந்திருந்தால் அவனின் தவறும், அவளுடைய தவறு இதில் எதுமில்லை எனவும் உரைத்திருக்கும் அவனுக்கு.



கோபம் கொண்டவனை மட்டுமல்ல தன்னை சார்ந்தவரையும் வதைக்கும் என நிரூப்பித்தது அன்று இரவு அவனின் செயல்.



அவளிடம் கடுமையாய் பேசும் போதே அவன் ஏதோ பெரும் குற்றம் புரிவதாய் அவன் மனம் அவனுக்கு உணர்த்திட்டிருக்க, அதையும் பொருட்படுத்தாது தான் அவளை வார்த்தையால் வறுத்தெடுத்தான் அவன்.



அவளிடம் கடுமையாக பேசி படுத்திருந்தவன் மனம் தற்போது குற்றயுணர்ச்சியில் தவித்தது.



ஆம் அவளிடம் கொட்டி தீர்த்தப்பின் அவன் மனம் சமன்பட்டிருந்தது.



அவனின் செயலை எண்ணி குற்றம் புரிந்தவன் போல் வெகுவாய் குறுகுறுத்தது அவனின் மனம்.



எவர் மேல் தவறு?? எதற்காக இந்த கோபம் என அறிவதற்காக மண்டபத்தில் அவள் கூறிய வார்த்தைகளை நிதானமாய் அசைப்போடிருந்தான் அவன்.



"ஆனானு ஏதோ சொல்ல வந்தாளே. அது தெரியாம, அவ பேசினதை முழுசா கேட்காம திட்டிட்டோமே... பிடிக்காமலா இப்ப கூட என்னை தேடி பால்கனிக்கு பேச வந்தா??" என்றவன் மூளை இடித்துரைக்க,



இப்பொழுது இவனின் மனம் அவளை திட்டியதின் குற்றயுணர்வில் தவித்தது.

படுக்கையில் அவன் திரும்பி பார்க்க, கண்ணில் நீர்கோடுடன் தூங்கி கொண்டிருந்தவளை பார்க்கவும் அவள் மீது நேசம் கொண்ட அவனின் மனம் துடித்து தான் போனது.



தான் அன்பு செலுத்தும் எவரிடமும் திரும்பவும் அவ்வன்பை எதிர்பார்க்க மாட்டாள் கண்மணி. தன் அன்பை மட்டும் பொழிந்து விட்டு சென்றிடுவாள்.



இக்குணமே அவளை சிவாவின் சினத்தை தாண்டியும் அவன் மீது அன்பு செலுத்த வைத்தது. அந்த அளவிற்கு சிவாவின் மீது பெரும் நேசம் வைத்திருந்தாளவள். நீ என்னை விரும்பாவிடினும் நான் நேசிக்கிறேன் உன்னை. எப்பொழுதும் நேசித்துக் கொண்டே இருப்பேன் உன்னை என்று வாழும் மனது அவளுடையது.

ஆகையால் தான் தன் அன்பு அவனை மாற்றும் என்ற நம்பிக்கையுடன் உறங்கிப் போனாளவள்.



அமைதியான நிர்மல முகத்துடன் உறங்கியிருந்தவளை இமை சிமிட்டாது பார்த்தான் சிவா.



"வெரி சாரிடா கண்மணி" மனதிற்குள் அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.



"சின்ன நெத்தி, முகத்துக்கு ஏத்த அளவு கண் தான், மூக்கு கொஞ்சம் லைட்டா சப்பை தான், சிவந்த உதடு அது ஓரத்துல அழகான மச்சம், சாஃப்ட் கன்னம் செம்ம கலையான அழகான முகம்" என அவளை பார்த்து தனக்குள் வர்ணித்து கொண்டிருந்தான்.



"ஆனா உன்கிட்ட எனக்கு பிடித்த ஒன்னு இருக்குடி கருப்பட்டி அழகி... என்னனு தெரியுமா??" என வாய்விட்டே பேசினான் தூங்கி கொண்டிருந்த அவளிடம்.



"அம்மா கொடுத்த உன் போட்டோல அது தான் என்னை ரொம்ப கவர்ந்தது கண்மணி. அது இப்ப சொல்ல மாட்டேன். பார்ப்போம் நீயே கண்டுபிடிக்கிறியானு" என மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருந்தவன்,



"ஆமா... ஆனானு என்னடா சொல்ல வந்த?? அதை கவனிக்காம போய்ட்டேனே" என்று மீண்டும் அப்பேச்சிலேயே அவன் மனம் வந்து நிற்க, அப்படியே யோசித்திருந்தவன் தூக்கத்திற்குள் சென்றான்.



காலை கண்மணியின் தாய் தந்தையர் அவர்களை மறுவீடுவென தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல, தன் அத்தையும் உடன் வர வேண்டும் என அடம் பிடித்து அழைத்துச் சென்றாள் கண்மணி.



சிவா, தன் தொழில் வேலையில் படு பிசியாகி விட கணினியில் மட்டுமே பாதி நேரத்தை கடத்தினானவன். எவருடனும் அமர்ந்து பேசவும் நேரமில்லை அவனுக்கு.

மதியம் உண்ட மயக்கத்தில் உறங்கியவன், மாலை விழித்த நேரம் வந்தாள் கண்மணி.



"இங்க பக்கத்துல இருக்க ஆஞ்சநேயர் கோவிலுக்கு நம்ம கல்யாணம் முடிஞ்சதும் தம்பதியரா வரதா வேண்டியிருந்தேன். இன்னிக்கு போய்ட்டு வந்துடலாமாங்க" தயங்கி தயங்கி தான் கூறினாளவள்.



தன்னிடம் எதையும் மனம் விட்டு இயல்பாய் பேசவும் முடியாத அளவிற்கு, தான் அவளை காயப்படுத்தியிருக்கிறோம் என எண்ணி வெட்கியது அவனின் மனம்.



"இன்னிக்கு இவகிட்ட கண்டிப்பா மனசு விட்டு பேசனும்" என எண்ணிக் கொண்டானவன்.



"கண்டிப்பா போகலாம் கண்மணி. இதோ குளிச்சிட்டு ஃப்ரஷ் ஆயிட்டு வரேன்" என்றுரைத்து கிளம்பினானவன்.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஞ்சநேயரின் சந்நிதியில் தம்பதியராய் அர்ச்சனை செய்து பிரகாரத்தை சுற்றி வந்து ஒரு ஓரமாய் அமர்ந்தனர் இருவரும்.

கண்ணை மூடி கடவுளிடம் பேசிக் கொண்டிருந்தாள் கண்மணி.



"என்னை பிடிக்காத ஒருதருக்கு ஏன் என்னை கட்டி வச்சீங்க. ஏன் எனக்கு அவர் மேல காதல் வர வச்சீங்க. அவருக்கு என் மேல கடைசி வரைக்கும் காதல் வராம போய்ட்டா நான் என்ன செய்றது??" இவற்றை மனதினுள் எண்ணும் போதே மூடியிருந்த விழிகளில் நீர் நிறைக்க, உதடு துடிக்க.... அவளின் முகத்தினையே, மூடியிருந்த முகம் காட்டிய உணர்வுகளையே பார்த்திருந்த சிவா, அவளின் கண்ணீர் மூடிய விழிகளை தாண்டி விழவும் வேதனையுற்றான்.



தன் சொல் தான் அவளை வதைக்கிறது. தான் மட்டுமே அவளின் வேதனைக்கு காரணமென எண்ணி வருந்தினான்.



அவள் இவ்வாறு தன்னவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை கண் மூடி கடவுளிடம் கூறியிருந்த நேரம் சட்டென மனதில் விரிந்தது அந்த காட்சி,



நிச்சயத்தில் சிவா அவளை பார்த்து அழகாய் சிரித்த அந்த காட்சி. அதன் பின் வரவேற்பிலும் அவளுக்கு தாகம் எடுக்கும் போது பழச்சாறு வர வைத்து குடிக்கச் செய்தது, கால் வலிக்கிறதா எனக் கேட்டு அவளை சிறிது நேரம் அமர செய்தது என இவை அனைத்தும் அவளின் கண் முன் படமாய் விரிய,



"உன்னை பிடிக்காம தான் அன்னிக்கு அப்படி உன்னை பார்த்துக்கிட்டாரா? துளி வெறுப்பு கூட அப்ப அவர் முகத்துல இல்லையே... அதன் பிறகு அவர் கோபம் கொள்ளும் அளவுக்கு என்னமோ நடந்திருக்கு" என அவளின் மனம் இடித்துரைக்க,



சற்று தெளிந்தது அவளின் மனது. இன்று அவருடன் எவ்வாறேனும் மனம் விட்டு பேச வேண்டுமென முடிவு செய்துக் கொண்டாளவள்.



தனக்கு தெளிவளித்த ஆஞ்சநேயருக்கு மனமார நன்றியுரைத்து தன் வேண்டுதலை முடித்து எழுந்ததும் இவனும் உடன் எழுந்தவன் அவளுடன் நடக்க, அங்கே உமாவை கண்டவளின் மனம் மகிழ்ச்சி கொள்ள, உமா என்றெழைத்துக் கொண்டே அவளருகில் சென்று அவள் கைப்பற்ற, அவளின் கையை உதறிவிட்டாள் உமா.



இவர்களுடன் சற்று விளையாடி பார்க்க எண்ணிய உமா கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.



ஏனோ இவளின் உதறலில் கோபமுற்றது சிவாவின் மனது.



"இவ யாரு என் பொண்டாட்டிய உதாசீனப்படுத்துறதுக்கு" என அவனறியாது அவனின் கண்மணிக்காக வறிஞ்சிக் கட்டிக்கொண்டு வந்தது அவனின் மனது.



"நேத்து என்னமோ உன் புருஷனை ஒரு வார்த்தை சொல்லிட்டேனு அப்படி இன்செல்ட் பண்ற மாதிரி பேசின... இன்னிக்கு எதுக்கு வந்து என் கைய பிடிக்கிற... புருஷன் வந்ததும் ஃப்ரண்ட கழட்டிவிடுறதுலாம் கேள்வி தான்மா பட்டிருக்கேன். ஆனா நேத்து கண்கூடா பார்த்துட்டேன். போதும்டி உன்னோட சகவாசம்" என உமா மனத்திற்குள் சிரித்துக் கொண்டே வெளியில் கோப முகமாய் பேச,



"ப்ளீஸ் உமா. ஃப்ரண்ட்ஸ்குள்ள ஆயிரம் இருக்கும் அதுக்காக பப்ளிக்ல எல்லாரும் பார்க்கும் போது கண்மணிய இப்படி பேசாதீங்க. எல்லாரும் அவ தான் என்னமோ தப்பு பண்ணிட்ட மாதிரி பார்க்குறாங்க பாருங்க" என்று சிவா கண்மணிக்காக பரிந்து வந்து உமாவிடம் பேச,



ஆச்சரியத்தில் வாய் பிளந்தாள் உமா என்றால் இனம் புரியா சந்தோஷத்தில் நீந்திக் கொண்டிருந்தாள் கண்மணி.



உமா வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டவள், "பிடிக்காம கட்டிக்கிட்டவங்க தான் என் புருஷன் என் பொண்டாட்டினு வறிஞ்சுக் கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கனு எனக்கு தெரியாம போச்சே" என தாடையில் கை வைத்து வியப்பது போல் உமா பேச, கணவன் மனைவி இருவருமே அசட்டு சிரிப்பு சிரித்தனர்.



"சும்மா இரண்டு பேரையும் கேலி செய்யலாமேனு தான் அப்படி பேசினேன். மத்தபடி உன் மேல எந்த கோபமுமில்ல கண்மணி. இரண்டு பேரும் மேரேஜ் முன்னாடி போன்ல பேசிக்கலைனு தெரிஞ்சதும் பிடிக்காம தான் இந்த மேரேஜ் நடக்குதோனு நினைச்சிட்டேன். நேத்து உன் புருஷனை ஒரு வார்த்தை கூட மத்தவங்க குறையா பேசிட கூடாதுனு என் கிட்ட நீ பேசினதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம். எவ்ளோ பிடிச்சிருந்தா நேத்து அப்படி பேசிருப்ப" என்று உமா சிரித்துக் கொண்டே கூற,



"அய்யோ மானத்தை வாக்குறாளே" என்றெண்ணிய கண்மணி, அவன் முகம் காணயியலாது வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள்.



அந்த ஆனாவிற்கான விடை இப்போது தெரிந்துக் கொண்டான் சிவா.



"மேடம் எனக்காக பெரிசா சப்போர்ட் பண்ணிருப்பாங்க போலயே. இது தெரியாம அவளை பிடிக்கலைனு சொல்லி ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டோமே" என மனம் வருந்தினானவன்.



"என்னங்க இவ என் ஃப்ரண்ட் உமா. பெங்களுரில ஐடி ல வர்க் பண்றா. என்னோட பால்ய சிநேகிதினு சொல்லலாம்" என்று கண்மணி உமாவை அறிமுகப்படுத்தவும்,



"உங்களுக்கு இன்னும் கல்யாணமாகலைல... அதான் பிடிக்காத கணவன் மனைவி என்னலாம் செய்வாங்கனு உங்களுக்கு தெரிய மாட்டேங்குது" என உமா கூறியதை அவளுக்கே திருப்பி போட்டானவன்.



"வெரி சாரி அண்ணா. சும்மா தான் அப்படி பேசினேன். கண்மணிய நல்லா பார்த்துக்கோங்க அண்ணா. இந்த காலத்துல கண்மணி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் அண்ணா" என்றவள் கூறியதும்,



"ஆமா ஆமா இவ்ளோ பொறுப்பா எல்லாத்தையும் செய்ற பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் தான்" என பொறுப்பில் சற்றாய் அழுத்தம் கூட்டி கிண்டலாய் அவனுரைக்க,



"அடடா இவர் இன்னும் அந்த பெங்களுர் விஷயத்தை மறக்கலை போலயே" என மனதில் எண்ணிக் கொண்டு கண்மணி நிற்க,



அவனின் கூற்றில் சிரித்த உமா, "ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் அண்ணா. உங்க இரண்டு பேரையும் அடுத்த தடவை பார்க்கும் போது எப்படி அட்ராக்ட் ஆகி ஒட்டிக்கிட்டு சுத்துறீங்கனு நான் பார்க்கனும்" என்றாளவள்.



"ஆமா நீ பெங்களுர் போகாம இங்க எங்க சுத்திட்டு இருக்க?? " என்று கண்மணி வினவ,



"நீ பழக்கிவிட்ட பழக்கம்டி. இவரை பார்க்காம போட முடியலை" என ஆஞ்சநேயரை அவள் கைகாட்ட,



"கண்மணிக்கு ஆஞ்சநேயரை அவ்ளோ பிடிக்குமா??" என்று கேட்டான் சிவா.



"பிடிக்குமாஆஆஆவாவாஆஆஆ... உங்க பொண்டாட்டி பத்தி நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்" என்றுரைத்தவள்,



"இன்னிக்கு நைட் டிரைன்ல கிளம்புறேன்டி பெங்களூருக்கு. அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா உன் வீட்டுக்கு வரேன். சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லனும்னு லாம் சொல்ல மாட்டேன். அது உங்க பர்சனல். ஆனா காதலால் கசிந்துருகி வாழுங்க... அடுத்த தடவை நான் பார்க்கும் போது உன்னோட இந்த கண்ணுலயும் காதல் பளபளனு மின்னனும். அப்படி மின்ன வைக்கிறது உங்க பொறுப்பு அண்ணா" என்றுரைத்து விடைப்பெற்று சென்றாளவள்.



காரில் பக்கவாட்டில் அவளை பார்ப்பதும் முன்னே சாலையை பார்ப்பதும் என தீவிரமாய் அவளை ரசித்துக் கொண்டே தான் ஓட்டினானவன்.



அவளுக்கு தான் மனம் ஒரு நிலைக்கொள்ளாமல் அவனின் ஓரவிழிப் பார்வையின் ரசனையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.



வீட்டிற்குள் நுழைந்து அவர்களின் அறைக்குள் சென்ற நொடி அவளின் கைப்பற்றியவன், "சாரி கண்மணி" என்றான் முகத்தில் வலியை தேக்கி.



கோபக்காரன் தான் ஆயினும் தவறில்லாது தன் கோபத்தால் பிறரை காயப்படுத்திட்டோம் எனத் தெரிந்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டான் சிவா.



அதுவும் கண்மணியின் வேதனை முகம் அவனை வெகுவாய் வலிக்க செய்தது. தன் மனைவி தன் பொறுப்பல்லவா அந்த எண்ணம் இல்லாமல் தானே அவளை காயப்படுத்திட்டோமே என வருந்தினானவன்.



"நம்ம சிடுமூஞ்சு மச்சானுக்கு சாரிலாம் கேட்க தெரியுமா?" என கண்களில் வியப்பை தேக்கி மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டு அவன் முகத்தை அவள் பார்க்க,

மெத்தையில் தன்னருகே அவளை அமர்த்தியவன், அவளின் கையை தன் கைக்குள் பொதிந்து வைத்து வருடியவன்,



"ஏன் இந்த ஷாக் லுக்? சாரி கூட கேட்காதவன்ற அளவுக்கு என்னை கெட்டவனா நினைச்சு வச்சிருக்கல நீ" என்றவன் கேட்க,



ஆம் இல்லையென இரு பக்கமும் அவள் தலையாட்ட, வாய்விட்டு சிரித்து அவளின் தாடையை பிடித்தவன் "ஆமான்னா இப்டி ஆட்டனும். இல்லைனா இப்டி ஆட்டனும் என் கருப்பட்டி அழகி" என அவனே தன் கை கொண்டு அவளின் தலையை ஆட்ட,



"உங்களுக்கு இப்டிலாம் கூட பேச தெரியுமா?" அடுத்த மைண்ட் வாய்ஸ் அவளுடையது.



"இவன் இப்டிலாம் கூட பேசுவானானு தானே யோசிக்கிறே?" என அவன் கேட்டதும்,



"என் மைண்ட் வாய்ஸ் லவுட் ஸ்பீக்கர் போட்டு வெளில வரைக்கும் கேட்குதா??" என மைண்ட் வாய்ஸில் பேசுகிறோமென நினைத்து வாய் திறந்து அவள் பேச,



"ஹா ஹா ஹா. உன் கண்ணு தான் அத்தனை மொழி பேசுதே. அது போதும் நீ நினைக்கிறதை நான் கண்டுபிடிக்க" என கண்சிமிட்டி அவன் கூற,



"நேத்து பிடிக்கலைனு சொன்னீங்களே... அம்மாக்காக தான் மேரேஜ் செய்துக்கிட்டதா சொன்னீங்களே... இப்ப மட்டும் எப்படி பிடிச்சிதாம்??... நான் நேத்து எவ்ளோ ஃபீல் செஞ்சேன் தெரியுமா??" என தன் மன வேதனையை கண்ணில் தேக்கி அவள் கூற,



அவள் முகத்தை தன் மார்பில் தாங்கி அணைத்துக் கொண்டான் சிவா.



"வெரி சாரிடா கண்மணி. நேத்து ஒரு மிஸ் அண்டஸ்டாண்டிங். நான் அப்படி பேசி உன்னை ஹர்ட் செய்திருக்க கூடாது. என் மேல தான் தப்பு. நியாயமில்லாம கோபப்பட்டா கண்டிப்பா நானே போய் சாரி கேட்டுடுவேன். அது யாரு எவருனுலாம் பார்க்க மாட்டேன். அதே போல என் மேல தப்பில்லை என்னோடது நியாயமான கோபம்னா கண்டிப்பா என்கிட்ட மன்னிப்பை எதிர்பார்க்க கூடாது" என்றவன் அவளின் தலையை கோதி கூறிக்கொண்டிருக்க,



அவன் இடையை கட்டிக்கொண்டு, அவன் மேல் சாய்ந்து அவன் மார்பினில் முகத்தை புதைத்து கொண்டவள், "அதனால தான் பெங்களுர்ல என்னை திட்டினதுக்கு சாரி கேட்கலையா நீங்க" என்று கேட்டாள்.



"அங்க கொஞ்சம் கூட பாதுகாப்பு உணர்வு இல்லமா நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை நான் கட்டிக்க சம்மதிச்சதே அதிசயம் தான்" என்றானவன்.



"அப்புறம் ஏன் ஒத்துக்கிட்டீங்களாம்" என அவனை விட்டு தள்ளி அமர்ந்து முகத்தை உர்ரென வைத்து அவள் கேட்க,



"ஓ மேடம் கோவமா கேட்கிறீங்களா. எனக்கு குட்டி பாப்பா முகத்தை தூக்கி வச்சிக்கிட்ட ஃபீல் தானே வருது" என சிரித்துக் கொண்டே கூறியவன்,



அவள் கன்னம் கிள்ளி, "மேடம் ஏன் அன்னிக்கு அவ்ளோ கோபப்பட்டு திட்டிவனை மேரேஜ் செய்ய ஒத்துக்கிட்டாங்களாம்" என்று ஆர்வமாய் கேட்க,



"என்ன தான் கோபப்பட்டாலும், அந்த கோபம் என்னோட நலனுக்காக, நான் என்னை சேஃபா பாதுக்கலைனு வந்த கோபம் தானே. அதோட உதவி செஞ்சிட்டு அட்வாண்டேஜ் எடுத்துக்காம என் பெயர் கூட கேட்டுகாம இருந்த உங்க சுபாவம், நீங்க ரொம்ப நல்லவர்னு என் மனசுக்கு தெரிஞ்சு போச்சு... அதனால பிடிச்சும் போச்சு. நீங்க இப்படி என்கிட்ட எந்த ஈகோ இல்லாம சாரி கேட்கிறது அதுவும் ரொம்ப பிடிக்குது" என விழிகள் மின்ன, கன்னத்தில் குழி விழ சிரித்தவள் கூற,



அக்குழியில் தன்னை மறந்து வைத்திருந்தான் தன் முதல் முத்தத்தை.



அவள் புகைபடத்தில் அவனை ஈர்த்தது அவளின் கன்னத்து குழி தான்.



அவள் அதிர்ந்து இவனை நோக்குவாளென இவன் எண்ணி அவளை பார்க்க, கண் மூடி அம்முத்தத்தை ரசித்தவள், "ஐ லவ் யூ சிவா" உரைத்திருந்தாள் தன் காதலை.



இப்போது அதிர்வது அவன் முறையாயிற்று. இன்பமாய் அதிர்ந்து போனானவன்.



திருமணம் நிச்சயித்த நாளிலிருந்து ராம ஜெயம் போல் இவனை எண்ணியே சிவா ஜெயம் செய்துக் கொண்டிருந்தவளாயிற்றே!!! ஆகையால் சிவா யாரோ ஒருவனாய் அந்நியமாய் தோன்றவில்லை அவளுக்கு. அதனாலேயே தன்னையும் அறியாமல் தன் காதலை கூறியிருந்தாள் அவனிடம்.



கண் திறந்து அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்தவள், "நான் லவ் சொன்னேன்ங்கிறதுக்காக நீங்களும் இப்பவே லவ் சொல்லனும்னுலாம் நான் நினைக்க மாட்டேன்ங்க. என்னால எதையும் மனசுல வச்சிக்கிட்டு இருக்க முடியாது. அதுவும் என் மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட என்னால எதையும் மறைக்க முடியாது. அதான் சொல்லிட்டேன். நீங்க ஹஸ்பண்ட்னு மைண்ட்ல ஃபிக்ஸ் ஆனதால வந்த லவ்வானு கூட தெரியாது. ஆனா உங்களை பிடிக்கும். உங்களை மட்டும் தான் இப்படி இறுக்கி அணைச்சிக்கனும், நெஞ்சுல சாஞ்சி படுத்துக்கனும்ன்ற அளவுக்கு பிடிக்கும். உங்களுக்கு எப்ப என் மேல அவ்ளோ காதல் வருதோ அப்ப சொன்னா போதும்" என்றிவள் அவனின் விழி நோக்கி பேசிக் கொண்டிருக்க,



"கண்மணிம்மா... சாப்பிட வாங்க இரண்டு பேரும்" என்றழைத்தார் அவளின் அத்தை சிவகாமி.



"அச்சோ அத்தை கூப்பிடுறாங்க. நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நீங்க டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க" என மனதில் ஏற்பட்ட நிம்மதியுடன் கூடிய பரவசத்தில் துள்ளிக் குதித்து சென்றாளவள்.



அவள் சென்றதும் தன் தலையை உலுக்கி கொண்டு நிகழ் உலகிற்கு வந்தானவன்.



"தன்னை இப்படி காதலிக்கும் ஒரு பொண்ணா" என்னமோ ஒரு வித மிதப்பாய், அவனின் தொழிலில் அவன் சாதித்ததை விட பெருமைக்குரிய தருணமாய், கர்வமாய், பூரிப்பாய், கலவையான உணர்வாய் உணர்ந்தானவன்.



அவள் காதல் உரைத்த இந்நாள் நினைவடுக்கில் சேமிக்க தோன்றியது அவனுக்கு.



"அவகிட்ட நான் பேச வந்தது என்ன?? இப்ப நாங்க பேசிக்கிட்டிருந்தது என்ன?? அய்யோ கடவுளே அவ என் கிட்ட வந்தாலே எல்லாத்தையும் மறக்கடிச்சிருவா போலயே" என புலம்பிக் கொண்டே எழுந்தவன், ஆடை மாற்றிக் கொண்டு உண்ணச் சென்றான்.



உணவு உண்டு முடித்து உறங்கவென இருவரும் தங்களறைக்கு வர, ஆசையாய் அவளை பார்த்திருந்தானவன்.



அவன் பார்வையின் பொருளை உணர்ந்தவள், "நான் தான் உங்களை லவ் பண்றேன். நீங்க இன்னும் என்னை லவ் பண்ணல. அதனால உங்களுக்கும் லவ் வந்த பிறகு தான் மத்ததெல்லாம்" என்றவனின் பார்வையை ஊடுருவி அவள் கூற,



வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டவன், "நான் உன்னை லவ் பண்ணலைனு உனக்கு எப்டி தெரியும்??" என்றவன் கேட்க,



"உங்களுக்கு என்னை பிடிக்கும். அது கண்டிப்பாக இன்னும் காதலா மாறலை உங்க மனசுல. அப்படி காதலாய் மாறியிருந்த கண்டிப்பா என்னை திட்டின பிறகு உங்களால தூங்கியிருக்க முடியாது. அது நியாயமான கோபமாவே இருந்தாலும் என் வலியை பார்த்து உங்க மனசு வலிச்சிருக்கும். அய்யோ திட்டிட்டோமே உங்க மேலேயே உங்களுக்கு கோபம் வரும். இப்டிலாம் தோணும் போது தெரிஞ்சிக்கோங்க நீங்க என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கனு. ஆனா நீங்க சொல்லாமலே உங்க காதலை நான் ஃபீல் செய்வேன்... அப்ப நம்ம வாழ்க்கைய ஸ்டார்ட் செய்யலாம்" என்றுரைத்து படுத்தவள், இன்றைய இலகுவான மனநிலையில் படுத்ததும் உறங்கியும் விட்டாள்.



"அடியே என் கருப்பட்டி பொண்ணே உன்னை திட்டிட்டு நான் நிம்மதியா தூங்கினேனு நினைக்கிறியா?? உன்னுடைய கவலை என்னை பாதிக்கலைனு நினைக்கிறியா?? மஞ்சள் கயிறு மேஜிக் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல பசங்களுக்கும் உண்டு தங்கம். நீ என் மனைவி ஆனதுல இருந்து உன்னை நான் ஹர்ட் செய்ற ஒவ்வொரு நேரமும் நானும் தான் அதே வலியை சுமக்கிறேன்டி. நீ சொன்னது போல, நான் சொல்லாமலே என் காதலை நீ ஃபீல் பண்ண வைக்கிறேன். கணவனா இது தான் என் முதல் வேலை கருப்பட்டி பொண்ணு" என்றவன் மனதிற்குள் அவளிடம் பேசி கொண்டே தன்னை மறந்து நித்திரைக்கு சென்றான்.



மறுநாள் இன்றைய இலகுநிலைக்கு நேரெதிராய் இருந்தது இவர்களின் மனநிலை.



மறுநாள் எழுந்தது முதல் கண்மணி என்று அவளின் பெயரையே விளித்துக் கொண்டிருந்தான் சிவா.



அவனறையில் பொருட்களை அடுக்கி வைக்கிறேனென இவள் செய்த வேலையில், எந்த பொருள் எங்கிருக்கிறதென தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தானவன்.



"கண்மணி" அழைத்தான் அவளை. எரிச்சல் நிரம்பியிருந்தது அவன் குரலில்.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இதோ வந்துட்டேன்ங்க" தன் அத்தையின் மூட்டு வலி குறைய அவரின் காலில் எண்ணெயை தேய்த்துக் கொண்டிருந்தவள் அவனழைப்புக்கு மறுபதில் கூறி அந்த எண்ணெய் கையுடனே அவன் முன் போய் நின்றாள்.



"என் லேப்டாப் சார்ஜர் எங்க?? உன்ன யாரு எல்லாத்தையும் இடம் மாத்தி வைக்க சொன்னது. காலைலருந்து எல்லாத்தையும் என்னை தேட வச்சிட்டிருக்க நீ" எனக் கோபமாய் அவளை பார்த்து உரைத்தான்.



"இதோ இங்க தான்ங்க எடுத்து வச்சேன்" என்றவள் தன் கை எண்ணெயாய் இருப்பதை மறந்து அவனின் வெள்ளை சட்டைக்கு அடியில் கிடந்த அந்த சார்ஜரை தன் கையால் எடுத்து கொடுக்க, அவனின் வெள்ளை சட்டையில் எண்ணெய் சற்றாய் ஒட்டிக்கொண்டது.



இதை கண்டவனின் கோபம் சிகரத்தை தொட, "அறிவிருக்காடி உனக்கு?" என்றவன் திட்ட தொடங்க,



"ஆமா எப்ப பார்த்தாலும் அறிவு இருக்கானே கேட்கிறது... இவர்கிட்ட நிறைய இருந்தா எனக்கு ஷேர் செய்ய வேண்டி தானே" என மனதிற்குள் அவனுக்கு கௌண்டர் கொடுத்துக் கொண்டு திட்டு வாங்கும் பிள்ளையின் முக பாவனையில் அமைதியாய் நின்றிருந்தாள்.



"அய்யோ என் ஃபேவரட் ஷர்ட்டி. இப்படி பண்ணிட்டியே... என் கண்ணு முன்னாடி நிக்காத... போ இங்கிருந்து... இல்லனா உன்ன என்ன செய்வேனே தெரியாது" என கர்ஜித்தான்.



உயிரற்ற பொருளுக்காக உயிருள்ள ஜீவனை கடுஞ்சொற்களால் காயப்படுத்தும் கோபம். அந்நொடி கோபத்தை அடக்கி நிதானம் வரும் வரை அமைதிக் காத்தால் பிறரை காயப்படுத்தும் நம் செயலை தவிற்கலாமே.



ஏதும் கூறாது அமைதியாய் சென்றுவிட்டாள் கண்மணி. தன் அத்தையிடம் விட்ட வேலையை தொடர்ந்தவள் , அவருக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து அவரின் வலியை வெகுவாய் குறைக்கச் செய்து உறங்க வைத்தவள், ஏனோ மீண்டும் அந்த அறைக்கு போக மனம் வராமல் தன் மனதை திசை திருப்பும் பொருட்டு சமயலறை சென்றாள்.



வீட்டில் அனைத்து வேலைக்கும் வேலையாள் வைத்திருந்தான் சிவா. சிவகாமி வீட்டின் பராமரிப்பை கவனித்துக் கொண்டிருந்தார்.



கண்மணி வந்ததும் அவளிடம் ஒப்படைத்து விட்டார் அவ்வேலையை.



தனதறையில் தன் தொழில் வேலையில் மூழ்கியிருந்தவன் மனமோ கண்மணியையே சுற்றி வந்தது.



தொழில் வேலை என்று வந்து விட்டால் தன்னை சுற்றி எது நடந்தாலும் அவனின் கவனம் அவ்வேலையில் மட்டுமே இருக்கும். அவன் வேலை நிமித்தமாய் கோபம் கொண்டு பலரையும் பல நேரம் கடிந்துக் கொண்டிருக்கிறான். திட்டிவிட்டு மீண்டும் தன் வேலையில் மூழ்கி போவான். இதுவரை எவரையும் திட்டியதற்காக வருந்தியதில்லை அவன்.



ஆனால் அந்த முதலிரவிலிருந்து கண்மணியை கோபத்தில் திட்டும் போதெல்லாம் இவன் மனமும் காயப்பட்டு தான் போனது.



இன்று அவ்வலியை வெகுவாகவே உணர்ந்தானவன். மனம் பாரமாய் உணர்ந்தான்.



ஆயினும் டில்லியின் புது அலுவலக வேலை அவனின் கழுத்தை நெறிக்க, அவ்வேலைகள் அவனை உள்ளிழுத்துக் கொள்ள, அதில் மூழ்கிப் போனான்.



பசி என்ற உணர்வு அவன் வயிற்றில் தோன்றிய நேரம் தன் வேலையை விட்டு நிகழ் உலகத்திற்கு வந்தவன் கடிகாரம் பார்க்க, மணி மதியம் ஒன்று என காண்பிக்கவும் முகப்பறைக்கு வந்தான்.



சிவகாமி அப்பொழுது தான் உறக்கம் கலைந்து வந்தார்.



"அம்மா பசிக்குதுமா" என்றுரைத்து உணவு மேஜையில் அமர்ந்து கண்மணி எங்கே என சுற்றும் முற்றும் பார்த்தான்.



உணவு பாத்திரங்களை சமையலறையிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தாள் கண்மணி.



மேஜையில் அடுக்கத் தொடங்கிய கண்மணி, "அத்தை சாப்பாடு ரெடி. நீங்க பரிமாறுங்க. நான் எடுத்து வந்து வைக்கிறேன்" எனக் கூறி அவள் செல்ல பார்க்க,



பாத்திரம் அடுக்கி வைக்கும் அவளையே இமை சிமிட்டாது பார்த்திருந்த சிவாவை கண்ட சிவகாமி, "கண்மணி நீ பரிமாறும்மா... வசந்தாவ எடுத்துட்டு வர சொல்லு. நீ ஏன் இங்கயும் அங்கயும் அலஞ்சிட்டிருக்க" எனக் கூறி அவளை பரிமாற வைத்தாரவர்.



வசந்தா அவர்களின் வீட்டில் சமையல் வேலை செய்பவர்.



அவளின் வாடிய முகம் அவன் மனதை வாட்ட, அவளை சமாதானம் செய்ய எண்ணியவன் அவள் முகத்தையே பார்த்திருக்க, அவளோ அவன் முகத்தை சற்றும் காணாது பரிமாறிக் கொண்டிருந்தாள்.



"நீயும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடும்மா" என்றவர் கூற,



"இல்லத்தை எனக்கு பசிக்கலை. நான் அப்புறமா சாப்பிடுறேன்" எனக் கூறி அவர்களை உண்ண வைத்தாள்.



அவளை சாப்பிட கூறவென அவன் வாயெடுத்த வேளை அவன் கைபேசி அழைக்க, அவளிடம் கவனம் செலுத்த இயலாது அவன் வேலை தடுத்திழுக்க, கைபேசியில் பேசிக் கொண்டே உணவு உண்டவன் தன் வேலையில் மூழ்கிப்போனான்.



அவன் நெட்டி முறித்து தன் வேலையை முடித்திருந்த சமயம், மணி நான்கை தொட்டிருக்க, மெத்தையின் மறு ஓரத்தில் படுத்து உறங்கியிருந்த கண்மணியை கண்டானவன்.



"இவ எப்ப உள்ள வந்தா?? இதை கூட கவனிக்காமலா வேலை பார்த்துட்டு இருந்திருக்கோம்" என்றெண்ணிக் கொண்டவன் அவளருகே சென்று பார்க்க, அழுகையின் விசும்பலுடன் உறங்கியிருந்தாளவள்.



அவளின் விசும்பலில் இவனின் தொண்டை துக்கத்தில் அடைத்தது.



"ம்ப்ச் கண்டிப்பா சாப்டிருக்க மாட்ட... அப்படி என்ன தான் எனக்கு கோபம் வருதோ" என எண்ணிக் கொண்டவன்,



சில நிமிடங்களில் சமையலறை சென்று கையில் உணவு தட்டுடன் வந்தவன் கண்மணியை எழுப்பினான்.



அவள் தூக்க கலக்கத்தில் பேந்த பேந்த விழிக்க, அவளை முகம் கழுவி வர செய்தவன், அவளுக்கு ஊட்டிவிட தொடங்கினான்.



இமைக்க மறந்து அவனளித்த உணவை வாயில் வாங்கி கொண்டிருந்தாளவள்.

அவளை மீறி அவள் கண்களில் வழிந்த நீரில் இவனின் மனம் வலிக்க,



கையிலிருந்த தட்டை அருகிலிருந்த மேஜையில் வைத்தவன், தன் இடக்கையால் அவளின் கண்ணீரை துடைத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன், "வெரி சாரிடா கண்மணி" என்றதும் விசும்பல் அதிகமாக உதடு துடிக்க அழுதாளவள்.



அவள் முகத்தை தன் தோளில் சாய்த்து தலையை வருடியவன், "உன் மேல தப்பே இருந்தாலும் நான் அப்படி திட்டிருக்க கூடாது. சத்தியமா இனி உன்கிட்ட என் கோபத்தை குறைச்சிக்கிறேன். நீ அழுதா என் மனசு தாங்க மாட்டேங்குது கருப்பட்டி பொண்ணு. ப்ளீஸ் அழாதேடா... உன் புருஷனை இந்த ஒரு தடவை மன்னிக்க கூடாதா??" என கண்ணை சுருக்கி கெஞ்சும் பாவனையில் அவன் கேட்கவும்,



அவளின் இதழ் மெலிதாய் விரிய, "ஹ்ம்ம் தட்ஸ் மை கேர்ள்" என்றவன் உணவு ஊட்ட தொடங்கினான்.



"உன்கிட்ட கொஞ்சம் பேசனும் கண்மணி. நேத்து வேற பேச வந்து எங்கேயோ டைவர்ட் ஆகி எப்படியோ போய்டுச்சு. நீ சாப்பிட்டு முடிச்சதும் பேசலாம்" என்று கூறிக் கொண்டே ஊட்டினான் அவளுக்கு.



அவளுக்கு ஊட்டி முடித்ததும் அவளிடம் தண்ணீர் கோப்பை நீட்டி அவள் முகம் பார்த்தவன், அவள் கோப்பையை கையில் வாங்க நீட்டிய நேரம் ஒரு நிமிடம் என கூறியவன், அவளின் இதழோரத்திலிருந்த இரு பருக்கையை தன் இதழால் எடுத்திருந்தான். அவனின் எதிர்பாரா இச்செயலில் சற்றாய் அதிர்ந்து அடங்கியது அவளின் மனமும் உடலும்.



அவனோ இயல்பாய் கோப்பையை கொடுத்து, "இப்ப குடி" என கண்ணில் சிரிப்பு மின்ன குறும்பு சிரிப்புடன் கூறி கை கழுவ சென்றான்.



கை கழுவி வந்தவன், கட்டிலில் முதுகு சாய்த்து கால் நீட்டி அமர்ந்தவன் தன் வலக்கையை நீட்டி அவளை அருகே அழைக்க, அவள் கை பிடித்ததும் தனக்கு முன் அவளை அமர வைத்து தன் கையை அவளின் இடையோடு கோர்த்து தன்னுடன் இணைத்தவன், "இப்ப பேசலாமா என் கருப்பட்டி அழகி" என அவள் தோளில் முகம் வைத்து அவன் கேட்க,



அவளுக்கு தான் உள்ளும் புறமும் அனைத்தும் வெலவெலத்த உணர்வு. ஆயினும் வெகுவாய் ரசித்தாள் அவனின் அண்மையை இந்நொடியை.



"ஹ்ம்ம்" காத்து தான் வருது என்ற நிலையில் அவள் ம்ம்ம் சொல்லி வைக்க, அவளின் இந்த ஹஸ்கி வாய்ஸில் மதி மயங்கியவன் அவளின் காதோரம் தன் மீசையை உராய்ந்து குறுகுறுக்க செய்து, அவள் கன்னத்தில் இதழை இறக்க,



அதிர்ந்த குழைந்த தன் உடலை ஒரு நிலைக்குள் கொண்டு வந்து பிரயத்தனப்பட்டு தன் குரலை சரி செய்தவள், "ஏதோ பேசனும்னு சொன்னீங்க?" அவனை கலைத்தாள்.

தலையை உலுக்கி தன்னிலை வந்தவன்,



"அய்யோ நீ என் கிட்ட வந்தாலே எல்லாத்தையும் மறந்திடுறேனே" என புலம்பியவன், அவளை தன்னருகில் சற்று தள்ளி அமர செய்தவன், "இப்படியே இருந்து கேளு. நான் ஃபுல்லா சொல்லி முடிச்சிடுறேன்" என கூறி பேச ஆரம்பித்தான்.



"சின்ன வயசுலருந்தே என்னோட லட்சியம் பிசினஸ் செய்றது. இந்த லட்சியம் உருவானது அப்பா இறந்த பிறகு. எங்களுக்காக நிறைய சேவிங்க்ஸ்லாம் அப்பா வச்சிட்டு போயிருந்தாலும், வீட்டுல சம்பாத்தியம் ஒன்னு இருக்கனும்னு அக்கவுண்டண்ட்டா அம்மா வேலைக்கு போய்டு இருந்தாங்க. நான் காலேஜ் போய் பார்ட் டைம் வேலை பார்க்க ஆரம்பிக்கவும் அடம் பிடிச்சி அம்மாவ வேலைக்கு போகவிடாம செஞ்சேன். காலை காலேஜ் ஈவ்னிங் வர்க்னு சுத்தினதால எனக்கு ஃப்ரண்ட்ஸ் னு சுத்தமா கிடையாது. அம்மா அப்பா லவ் மேரேஜ்ங்கிறனால சொந்தம்னும் யாரும் எங்க கூட ஒட்டல. சோ என் லைஃப் நான் என் அம்மா என் பிசினஸ் இதுக்குள்ள மட்டும் தான் உழண்டுட்டு இருந்துச்சு. என் லைஃப்ல மேரேஜ்னு ஒன்னு நான் நினைச்சிக் கூட பார்த்தது இல்ல. எனக்கு என் பிசினஸ் விரிவாக்கனும் உழைக்கனும் அம்மாவ ஹேப்பியா வச்சிக்கிடனும் அது மட்டும் தான் முக்கியம்னு இருந்துட்டேன்.

பிசினஸ் மேனேஜ்மெண்ட்ல கண்டிப்பு ரொம்ப முக்கியம். அதுவுமில்லாமல் நான் ஓவர் பர்ஃபெக்ஷனிஸ்ட் (perfectionist)... அதுல தான் இந்த கோபம் வர ஆரம்பிச்சிது... உனக்கு தெரியும்ல நம்ம மேரேஜ் ஃபிக்ஸ் ஆனப்ப நான் டெல்லில இருந்தேனு. நம்ம மேரேஜ்க்கு முந்தின வாரம் தான் அங்க ஆபிஸ் ஓபனிங் செரிமனி நடந்துச்சு. அந்த ஆபிஸ் ஃபர்ஸ்ட் ப்ராஜக்ட் இப்ப போய்ட்டு இருக்கு. அதை சக்ஸஸ்புல்லா முடிச்சிட்டா டெல்லில நம்ம கம்பெனிக்கு நல்ல பேர் வரும். அந்த வர்க்னால தான் என்னால வேற எதுலயும் கான்சன்டிரேட் பண்ண முடியலை" என தன்னை பற்றி தன்னிலை விளக்கம் அவன் கூற,



"உங்க அப்பா அம்மா லவ் மேரேஜ்னு சொன்னீங்களே... நீங்க ஏன் லவ் மேரேஜ் பண்ணிக்கலை" என்றவள் அவன் கூறிய மற்றதையெல்லாம் விட்டுவிட்டு முக்கியமாய் இக்கேள்வியை கேட்க,



"அடியேய் நான் எவ்ளோ விஷயம் சொன்னேன். இதெல்லாம் விட்டுட்டு இது தான் உனக்கு பெரிய சந்தேகமா??" என்றவன் சிரித்துக் கொண்டே கேட்க,

"ஆமா... சொல்லுங்க... நீங்க யாரையும் லவ் பண்ணலயா??" என தீவிரமாய் அக்கேள்வியே அவள் மீண்டும் கேட்க,

"நான் லவ் பண்ணேன்னு சொன்னா என்ன செய்வ?? பண்ணலனு சொன்னா என்ன செய்வ??" எனக் குறும்பாய் சிவா அவளைக் கேட்க,



"லவ் செஞ்சிருந்தீங்கனா உங்களோட லாஸ்ட் லவ் நானா தான் இருக்கனும்னு கடவுள்ட்ட வேண்டிக்குவேன். அப்படி நீங்க என் லவ்வை மட்டுமே வாழ்நாள் முழுமைக்கும் உங்க மனசுல நிக்குறமாறி நடந்துக்குவேன். லவ் செய்யலைனா உங்களுடைய ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ் நானா தான் இருக்கனும்னு வேண்டிக்குவேன். என்னோட லவ் எவ்ளோ ப்ரிசியஸ்னு உங்களுக்கு புரிய வைப்பேன்" என்றவள் கண்கள் மின்ன பேசிக்கொண்டிருக்க,



அவளின் கூற்றில் அதிசய ஆச்சரியம் அடைத்தவன் அவளை அள்ளி தன் மடியில் அமர்த்தியிருந்தான். அவள் கன்னத்தில் இதழ் பதித்திருந்தான்.



அவளுக்கு தான் இன்ப அவஸ்தையாகி போனது அவனின் இந்த அதிரடிச் செயலில்.

மடியில் அமர்ந்திருந்தவளின் இடையை பற்றி அவளை தன் முகம் நோக்கி திருப்பியவன், "உனக்கு கோபமே வராதா என் கருப்பட்டி பொண்ணு?" என்று கேட்டான்.



"ஹ்ம்ம் வருமே!!! அது நான் எக்ஸ்ட்ரீமா ஹர்ட் ஆனா வரும். அப்போவும் மோஸ்ட்லி திரும்ப எனக்கு ஹர்ட் செய்ய மனசு வராது. சண்டை போட பிடிக்காது. சோ சைலண்ட் ஆயிடுவேன். நான் ரொம்ப ஹர்ட் ஆயிட்டேங்கிறதை என்னோட சைலண்ட் வச்சி தெரிஞ்சிக்கலாம். என் கோபத்தை நான் காமிக்கிற விதம் அது தான்" என்றாளவள்.



"ஹோ எப்படி இன்னிக்கு மேடம் ரூமிற்கே வராம என்கிட்ட மூஞ்சு கொடுத்து கூட பேசாம போனீங்க. அப்படி" என்றவன்,

"என்னோட எக்ஸ்ட்ரீம் ஆப்போசிட் கேரக்டர்டா நீ" அவளின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டினான்.



"பாரு பேசிட்டே டாபிக் டைவர்ட் ஆயிடுச்சு. உன் கூட இருந்தாலே நான் எல்லாத்தையும் மறந்துடுறேன்" என்றவன் உரைத்ததும்,



அவன் மடியை விட்டு அவள் இறங்க முற்பட, அவள் இடையை பற்றி மீண்டும் மடியில் அமர்த்தியவன், அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு, தன் முகம் காணுமாறு திருப்பி அமர்த்திக் கொண்டு,



"அதெல்லாம் ஒன்னும் நீ இறங்க வேண்டாம். இப்படி உட்கார்ந்துட்டே பேசுவோம்" என்றவன்,



"நான் சொல்ல வந்தது என்னன்னா என்னைய நீ நிறைய அட்ஜஸ்ட் செஞ்சிக்க வேண்டி இருக்கும். இந்த மூனு நாளைக்குள்ளயே உன்னைய நான் ரொம்ப படுத்திட்ட ஃபீல். நாளைக்கு வேற நான் கண்டிப்பா டெல்லி போயாகனும். அங்கு அந்த ப்ராஜக்ட் முடியற வரை என்னால இங்க வர முடியாது" என்றதும்,



"நாளைக்கேவா" என்று சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க,



அவளின் சோக முகத்தைப் பார்த்தவன், "என்னைய அவ்ளோ பிடிக்குமா கண்மணி உனக்கு? நான் உன்கிட்ட முதல் சந்திப்புல சண்டை தான் போட்டிருக்கேன். உன்கிட்ட நேத்து வரை சரியாக் கூட பேசலை.

அப்புறம் எப்படி இப்படி ஒரு காதல் என் மேல" என அவன் ஆச்சரியமாய் கேட்க,



அவன் கழுத்தில் மாலையாய் தன் கைகளை கோர்த்து தோளில் சாய்ந்தவள்,

"எனக்கு ஆஞ்சநேயரை ரொம்ப பிடிக்கும்" என்றாள் தீவிரமாய்,



"சோ" என கேள்வியாய் அவளை அவன் நோக்க,



"அவருக்கு யாரை பிடிக்குதோ அவங்களை எனக்கும் பிடிக்கும். அவருக்கு உங்களை பிடிக்கும். அதனால எனக்கும் உங்களை பிடிச்சிடுச்சு" என்றவள் பூரிப்பாய் கூற,



"லூசா இவ? " என்பது போல் ஒரு பார்வை பார்த்தவன்,



"அவருக்கு என்னைய பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?" என்றவன் குழப்பமாய் கேட்க,



"அது வந்து.... அது வந்து" என ராகம் இழுத்தவள், "சொல்ல முடியாது... கன்ஃபூசன்லயே சுத்துங்க" எனச் சொல்லி சிரித்தாள்.



அவள் கன்னக்குழியில் இவன் மனம் தடுமாற பதித்திருந்தான் தன் இதழை அவளின் கன்னத்தில்.



மீண்டும் அவள் முகம் சோகமாய் மாற, "நானும் உங்க கூட டெல்லிக்கு வரவா??"

என்று கேட்டாளவள்.



"நான் அங்க ஒரு இடத்துல இருக்க மாட்டேன்டா. எப்ப நைட் ரூம்க்கு வருவேன் தூங்குவேன்னே தெரியாது? நீ வந்தா கஷ்டம் தான். அதுவுமில்லாமல் ஐ ஹேவ் டு மேனேஜ் சென்னை அண்ட் பெங்களுர் பிராண்ச் ஆபிஸ் ஆல்சோ"



"இது எல்லாம் சேர்ந்து ஸ்டெரஸ் ஆகி கோபத்தை உன் கிட்ட காமிச்சிடுவேனோங்கிற பயமும் கூட இருக்கு. ஒன்லி டூ வீக்ஸ் அதுக்குள்ள ப்ராஜக்ட் முடிச்சிடுவோம். உடனே நான் வந்திடுவேன்" என்றானவன்.



"ஹ்ம்ம்" என வெறுமையாய் தலை அசைத்தவள், அவன் மடியிலிருந்து இறங்க போக,



அவளை இறங்க விடாமல் இடையை பற்றிக் கொண்டவள், "என்ன மேடமுக்கு என் மேல கோபம்?" என அவள் காதோரம் உரசி அவன் கேட்கவும்,



"இல்லை" என வாடிய முகத்துடன் கூறி அவள் இறங்க முற்பட, அவளை சிரிக்க வைக்க எண்ணியவன் அவளுக்கு கிச்சி கிச்சி மூட்ட துள்ளிக் குதித்து அவன் மேலேயே விழுந்தாள்.



"அய்யோ விடுங்க" அவஸ்தையாய் நெளிந்து அவனிடமிருந்து அவள் விலக போராட,



"கண்மணிம்மா " அவள் அத்தை அழைக்க,



"இதோ வரேன் அத்தை" விட்டால் போதுமென அவ்விடத்தை விட்டு ஓடினாளவள்.



சிவாவின் சிரிப்பு சத்தம் அவளை தொடர்ந்து கரைந்தது.



சிவாவிற்கு அவளின் மீதான நேசம் எல்லையை கடந்து காட்டாறாய் ஓடிக் கொண்டிருந்தது இப்பொழுது.



அவளின் சிந்தனை மட்டுமே அவனை சூழ்ந்திருந்தது.



தன்னை தன் மனைவி காதலிக்கும் அளவை எண்ணி வியந்து பூரித்து என இன்ப உலகில் பயணித்து கொண்டிருந்தானவன்.



கண்மணி இரவுணவு உண்ண அழைக்க வரும் வரை ஒரு வித மோனநிலையில் இருந்தானவன்.



உண்டு முடித்து இருவரும் அவர்களின் அறைக்கு வந்து சேர, " இன்னிக்கு ஃபுல்லா உன்கிட்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு கண்மணி. நீ என் பக்கத்துலயே இருக்கனும்னு ஆசையா இருக்கு கருப்பட்டி பொண்ணு" என்றானவன்.



"என் சிடுமூஞ்சு மச்சான் ரொமேன்ஸ் மச்சானா மாறிட்டீங்க போலயே!! " என கண் சிமிட்டி அவள் கூற,



"என்னது சிடுமூஞ்சா... அடிப்பாவி... இப்படியா எனக்கு பேரு வச்சிருக்க" என சிரித்தானவன்.



ஏனோ அன்றைய நாளின் பலவித உணர்வுகளில் அவளுக்கு தூக்கம் கண்ணை இழுக்க, "எனக்கு ரொம்ப தூக்கமா வருதுங்க. நீங்க என்கிட்ட பேசிட்டே இருங்க நான் அப்படியே தூங்கிடுறேன்" என படுத்தவள், அவன் பேசுவதை கேட்டுக் கொண்டே உறங்கியும் விட்டாள்.



அவன் தூங்காது அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இடையில் விழிப்பு வந்து அவள் கண்ணை திறந்துப் பார்க்க, தன்னையே இமைக்காது பார்த்திருக்கும் கணவனை தான் கண்டாளவள்.



தன் இரு கைகளையும் விரித்து அவனை நோக்கி நீட்ட, அழகாய் சிரித்தான், அவளின் கைகளுக்குள் பாந்தமாய் நுழைந்தவன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.



"என் லவ் புரிஞ்சிடுச்சா கருப்பட்டி பொண்ணு" என ஆர்வமாய் அவள் காதுக்குள் அவன் கேட்க,



"இல்லை" என வேகமாய் தலை ஆட்டியவள்,



"ஆனா உங்களை ஏங்க வைக்க மனசு வரல" என்றவள் கூறியதும்,



அவளை விட்டு விலகியவன், நீ ஒன்னும் பரிதாபப்பட்டு கரிசனம் காட்டி என் கூட சேர வேண்டாம் என கோபத்தில் கத்தினானவன்.



அவனின் கோபத்தில் அவளின் தூக்கம் முழுவதுமாய் கரைய, பயமாய் அவனை பார்த்திருந்தாளவள்.



அவளின் பயத்தை கண்டவன், தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர போராடி தன்னை சமன் செய்தவன்,



"இன்னும் டூ வீக்ஸ் டில்லி பிராஜக்ட் முடிஞ்சு என் மைண்ட் ரிலாக்ஸ் ஆனதும் எல்லாத்தையும் பார்த்துக்கலாம். இப்ப தூங்குடா கண்மணி" என்றவளை தன் கைவளைக்குள் கொண்டு வந்து தலை வருடிவிட்டானவன்.



அவன் கை வளைக்குள் இருந்து மார்பில் முகம் புதைத்து படுத்திருந்தவள், தன் முகம் நிமிர்த்தி அவன் முகம் பார்க்க, என்ன என்பது போல் பார்த்தான் சிவா.



"உங்கட்ட ஒன்னு கேட்கனும்" என தயங்கி தயங்கி அவள் கூற,



"எதுனாலும் நீ என்கிட்ட பேசலாம். பயப்படாம கேளு" என ஊக்கினானவன்.



"அன்னிக்கு உங்க கிட்ட லவ் சொன்னேன்ல அதுலருந்து மனசு உறுத்திட்டே இருக்கு" என்றவள் கூறியதும்,



"ஏன் அவன் கிட்ட லவ் சொன்னோம்னு மனசு உறுத்துதா" என சிரித்துக் கொண்டே சிவா கேட்க,



"ம்ப்ச் விளையாடாதீங்க. நான் சீரியஸா பேசுறேன்" என்றவள் சிணுங்க,



"சொல்லுங்க மேடம் என்னது உங்க மனசை உறுத்திட்டு இருக்கு?" என்றவன் கேட்க,



"அன்னிக்கு நான் லவ் சொன்னது உங்களுக்கு என்னை..." என நிறுத்தி எவ்வாறு கூறுவதென தெரியாது அவள் தடுமாறி நிற்க,



"ஹ்ம்ம சொல்லுடா... எதுக்கு இவ்ளோ தயக்கம்?" என்றவன் கூற,



"இல்ல நான் அப்படி லவ் சொன்னதுல நீங்க என்னை எதுவும் தப்பா நினைக்கலையா?? இப்ப கூட ஏதோ உங்களை ஏங்க வைக்கிற ஃபீல் வரவும் கையை விரிச்சிட்டேன்.

என்னடா நம்மகிட்ட பேசி பழகுறதே இந்த மூனு நாளா தான் அதுக்குள்ள இப்படி பேசுறாளேனு என்னை" என அவள் கூற வருவதற்குள், அவளை விலக்கியவன் கோபம் தலைக்கேற படுக்கையை விட்டு எழுந்திருந்தான்.



"அறிவிருக்காடி உனக்கு. நான் உன்னை தப்பா நினைப்பேனு எப்படிடி நினைச்ச... புருஷன் பெண்டாட்டிக்கு இரண்டு பேருக்கும் முதல்ல இருக்க வேண்டியது பரஸ்பர நம்பிக்கை தான். ஏன் ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே நமக்குள்ள எல்லாமும் நடந்திருந்தா என்னை நீ தப்பா நினைச்சிருப்பியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வுகள் ஒன்னு தான் கண்மணி. திருமணம் ஆனதும் பசங்க உடனே கிஸ் பண்ணலாம் ஹக் செய்யலாம். ஆனா பொண்ணு செய்யக் கூடாதோ?? இதென்ன அநியாயம். என்னிக்கும் நான் உன்னை தப்பா நினைப்பேனு மட்டும் கனவுல கூட நினைக்காத கண்மணி. அது என் கேரக்டர தப்பா சொல்றது போல இருக்குது" என மன வலியுடன் அவன் கூற,



"வெரி சாரிப்பா. ப்ளீஸ் ஃபீல் செய்யாதீங்கப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றவள் அவனை அணைத்துக் கொள்ள,



இரண்டு நாளில், தான் வெகுவாய் மாறி விட்டது புரிந்தது சிவாவிற்கு. துளியளவும் அவளிடம் கோபம் காண்பிக்க மனம் வரவில்லை அவனுக்கு. மாறாய் அக்கோபத்தை கட்டுப்படுத்தவே முயற்சி செய்தான். அதையும் மீறி கோபம் கொண்டாலும் அவளின் சோக முகத்தை காண சகிக்காது உடனேயே அவளை சமாதானம் செய்ய விழையும் அவனின் மனம்.



அவளின் அணைப்பில் நீர் பட்ட தீயாய் மட்டுபட்ட கோபத்தை எண்ணி சிரித்துக் கொண்டவன், "சரி வா கண்மணி தூங்கலாம்" என்று கூறி அவளை தன் தோள் வளைக்குள் வைத்து உறங்க வைத்தவன் தானும் உறங்கிப் போனான்.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை விறுவிறுப்பாய் ஏர்ப்போர்ட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான் சிவா.

உணவருந்தும் மேஜையில் கண்மணி பரிமாறிக் கொண்டிருக்க, சிவாவும் சிவகாமியும் உணவருந்தினர்.



அவன் தாய் சிவகாமி, "ஏன்டா ஹனிமூன்க்கு தான் போகலை. நீ போற ஊருக்காவது கண்மணிய கூட்டிட்டு போகலாம்லடா" என அவனை வசைபாடிக் கொண்டிருந்தார்.



தன் அத்தை தன் கணவனை திட்டுவதைக் கூட பொறுக்க முடியாதவள், "அதெல்லாம் வேண்டாம் அத்தை. அவருக்கே அங்க தூங்க கூட நேரமில்லாமல் வேலை இருக்கும். நானும் கூட போனா கஷ்டம் தான்" என்றவள் புருஷனை விட்டுக் கொடுக்காது பேச,



அவளின் பேச்சில் சிவகாமி மனம் நிறைந்து மென்னகை புரிய, புருவம் உயர்த்தி அவளை மெச்சுதல் பார்வை பார்த்தானவன்.



சிவகாமி சமையலறைக்கு தன் கையை கழுவ செல்ல, கண்மணியை தன்னருகில் இழுத்தவன் அவளுக்கு ஒரு வாய் கொடுக்க ஆசையாய் வாங்கிக் கொண்டாளவள்.



"வேலைலாம் முடிஞ்சதும் ஹனிமூன் டிரிப் ப்ளான் பண்றேன்டி என் கருப்பட்டி அழகி" என்றவன் அனைவரிடமும் விடைப்பெற்று டில்லிக்கு கிளம்பினான்.



திருமணத்திற்கு முன் போனில் பேச வேண்டிய ஸ்வீட் நர்த்திங்ஸ்ஸை இப்போது பேசினர் இருவரும்.



ஆம் தினமும் எந்நேரம் அவன் தூங்க சென்றாலும் அவளுக்கு அழைப்பு விடுத்து பேசாது உறங்க மாட்டான்.



இரவு வீட்டிற்குள் நுழைந்ததும் அவளை அழைப்பவன், தன் வேலையை செய்துக் கொண்டே அவளிடம் பேசுவான். கண்மணி தான் அதிகம் பேசுவாள். அவளுக்கு தன் காதை கொடுத்து உம் கொட்டிக் கொண்டிருப்பானவன்.



ஏனோ அவளிடம் பேசுவதே, அவள் குரல் கேட்பதே, சிறகில்லாமல் வானத்தில் பறப்பது போன்றதொரு அலாதியான இன்பமளிப்பதாய் உணர்ந்தானவன்.



கண்மணி தன் கண்ணான சிவாவை தன் அன்பால் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்தாள் அவளறியாது.



அவள் அவன் மீது பொழிந்தது எதிர்ப்பார்பற்ற தன் காதலை மட்டுமே.



ஆனால் அதன் பலனோ இரு மடங்கு இரட்டிப்பாய் தனக்கு கிடைக்கப் போவதை அறியாத பெண்ணவளோ இது போதும் எனக்கு என அவனின் கரிசனமான நேசத்திலேயே இன்பமாய் உழன்றுக் கொண்டிருந்தாள்.

----

நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஒரு வாரம் கடந்திருந்த வேளையில் காலை கண்மணி கண் முழிக்கும் நேரம் அவள் முன் நின்றிருந்தான் சிவா.



முதலில் கனவென எண்ணியவள், தன் கண்களை தேய்த்துப் பார்த்து உறுதி செய்தவள் ஓடிச் சென்று அவனை ஆற தழுவிக் கொண்டாள்.



"ஹேப்பி பர்த்டே என் கருப்பட்டி அழகி" அவளை தூக்கி தட்டாமாலை சுற்றியிருந்தான்.



சிறு விசும்பல் வந்தது அவளின் அழுகையால்.



"நேத்துல இருந்து வர முடியாதுனு சொல்லி என்னை அழ வச்சிட்டு இப்ப வந்து நிக்கிறீங்க. போங்க நான் கோபமா இருக்கேன்" அவனை விட்டு அவள் விலக,



"ஹோ மேடம் கோபமா இருக்கீங்களா அப்ப நான் டெல்லிக்கே போறேன்" என அவன் கதவருகே செல்ல, பின்னோடு சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.



"உன்னால என்னைய விட்டு இருக்க முடியாதுனு எனக்கு தெரியும்டி செல்லம்" என அவள் கன்னம் கிள்ளி செல்லம் கொஞ்சியவன்,



"சரி சரி குளிச்சிட்டு கிளம்பு. இன்னிக்கு ஹோல் டே உன் கூட தான். நைட் திரும்பவும் நான் டெல்லிக்கு போயாகனும். டூ டேஸ்ல வேலை முடிக்கனும் சோ டே அண்ட் நைட் வேலை போய்ட்டு இருக்குது அங்க" என்றவளை கிளப்பினானவன்.



"அச்சோ அவ்ளோ வேலைல எனக்காக வந்தீங்களாப்பா" என்றவள் கேட்க,



"நேத்தே படபடனு பேசுற என் கருப்பட்டி பொண்ணு நான் வரலைனு சொன்னதும் சைலண்ட் ஆயிட்டே. மேடம் ஹ்ம்ம் ஆஆஆ தவிர வேற வேறேதுவும் பேசலையே. அதான் உன் அத்தான் ஓடோடி வந்துட்டேன்" என சிரிப்பாய் உரைத்தானவன்.



அவன் அவளுக்காக பிறந்த நாள் பரிசாய் வாங்கியிருந்த சேலையை அணிந்திருந்தாளவள்.



இருவரும் காலை உணவை வீட்டில் உண்டுவிட்டு கிளம்ப, முதலில் சென்றது அவளுக்கு மிகவும் விருப்பமான ஆஞ்சநேயர் கோவிலுக்கு தான்.



அங்கு அர்ச்சனை செய்து கும்பிட்டு முடித்ததும் அங்கு வைத்திருந்த செந்தூரத்தை அவள் நெற்றியிலிட்டு மென்மையாய் முத்தமிட்டானவன்.



திடீரென ஏதோ நியாபகம் வந்தவனாய், "உன் ஆஞ்சநேயருக்கு என்னை பிடிக்கும்னு எப்படி கண்டுபிடிச்ச?" என அக்கேள்வியின் விடையறியும் பொருட்டு அவன் கேட்க,



"ஹா ஹா ஹா" என சிரித்தவள், இன்னும் கண்டுபிடிக்கலையா நீங்க அதை?? என்றவள் சஸ்பென்ஸ்லயே சுத்துங்க என நாக்கை துறுத்தினாள்.



இருவரும் வெளியில் வந்து தங்களின் காலணிகளை அணிந்திருந்த நேரம், அருகிலிருக்கும் பூக்கடையிலுள்ளோர் இவர்களை பற்றி பேசியது காதில் விழுந்தது.



"என்ன இருந்தாலும் சிவகாமி அம்மா சிவா தம்பிக்கு கொஞ்சம் கலரா இருக்க பெண்ணா பார்த்திருக்கலாம்" என்று பூக்காரம்மா கூறியது இருவருக்கும் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாதது போல் அவ்விடத்தை கடந்து சென்றனர்.



கண்மணியின் மனம் இப்பேச்சை கேட்ட நொடி, "இதை எப்படி இத்தனை நாளா மறந்தோம்" என்றெண்ணிக் கொண்டே சிவாவை பார்க்க, அவன் இது காதில் விழுந்தது போலவே காண்பித்துக் கொள்ளாது தன் காரருகில் செல்வதில் முனைப்பாய் இருந்தான்.



இருவரும் காரில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர்.



அவளின் மனதினடியில் புதைந்திருந்த தாழ்வு மான்பான்மை தலை தூக்கியது இப்போது.



இத்தனை நாட்கள் இருவரின் உள்ளம் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நிலையில் உருவெளி தோற்றத்தைப் பற்றி ஒரு துளி வார்த்தையும் பேசியிருக்கவில்லை இருவரும்.



அவன் அந்த பூக்காரம்மாவிடம் போய் பேசியிருக்க வேண்டும். என் மனைவி எனக்கு இணையானவள் என்று அவர் பேசியதற்கு அவன் மறுப்பு கூறியிருக்க வேண்டும் என எண்ணியது அவளின் மனது. அவன் அவ்வாறு செய்யாத நிலையில் தன்னை அவனுக்கு பிடிக்கவில்லையோ அவன் தாய்க்காக தான் தன்னிடம் அன்பாய் நடந்துக் கொள்கிறானோ என சந்தேகிக்க ஆரம்பித்தது அவளின் மனது.



"என்ன ஆச்சு கருப்பட்டி பொண்ணு?? ஒரு மாதிரி இருக்க?? காரை ஓட்டிக் கொண்டே அவன் கேட்க,



"ஹ்ம்ம் ஒன்னும் இல்லைங்க. அம்மா அப்பாவை நினைச்சிட்டு இருந்தேன்" என்று கூறியவள் இயல்பாய் இருக்க முற்பட்டாள்.



"ஆமா அத்தை மாமாவ பார்க்காம இருந்திருக்க மாட்டால உன் பிறந்தாநாள்ல. நான் ஊருக்கு கிளம்பினதும் நீ போய் பாரு. உன்னைய விட்டு இன்னிக்கு நான் தனியா இருக்குற ஐடியா இல்லடா கருப்பட்டி பொண்ணு" என்றான் சிவா.



இத்தனை தூரம் தனக்காய் பயணித்து வந்திருக்கும் அவனிடம் இந்நேரம் இத்தகைய பேச்சினை தொடங்கி அவனது மனதினை நோக வைக்க மனமில்லை அவளுக்கு.



ஆகவே இந்நாளை அவனுடன் சேர்ந்து இன்பமாய் கழிக்க எண்ணினாள்.

ஆனால் விதி அவளை அவ்வாறு சந்தோஷமாய் வைக்க எண்ணவில்லை போலும்.



அடுத்து அவன் காரை நிறுத்தியது பெசன்ட் நகர் கடற்கரையில்.



அங்கு அலையாடும் கடலோடு தன் இணையுடன் இன்பமாய் பொழுதை கழித்தனர் இருவரும்.



மதியம் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் வரை கடல் நீரில் விளையாடியவர்கள், இறுதியாய் செல்பி எடுத்து விட்டு செல்லலாமென அவன் கூற, அவன் செல்பிக்காக போனை உயர்த்த,

அதில் தெரிந்த இருவரின் முகங்களை பார்த்த நொடி, கண்மணியின் மனம் மீண்டும் இருவரையும் ஒப்பிட ஆரம்பித்தது.

ஒப்பிட்டு சோர்ந்த மனதை மறைத்து சிரித்து செல்பி எடுத்துக் கொண்டாளவள்.



அவ்விடத்தை விட்டு அவர்கள் நகர்ந்த நேரம் அவ்வழியாய் வந்த ஓர் பெரியவர், "நீ சிவா தானே" என்று கூறி அவர்களை நிறுத்தி வைத்துப் பேசினார்.



சிவாவின் தந்தையுடன் அவர் பணிபுரிந்தவர் என்றும், அவனின் திருமணத்திற்கு சிவகாமி அவரை அழைத்திருந்தார் என்றும், ஆனால் அவரால் வர முடியாமல் போய் விட்டதாகவும் உரைத்தாரவர்.



"இவங்க யாரு?? உங்க கூட வேலை பார்க்கிறவங்களா?" என அப்பெரியவர் கேட்க,



"என் வொய்ப் சார். பேர் கண்மணி" என அறிமுகம் செய்தான் சிவா.

அவன் கூறியதும் அவர் முகம் போன போக்கை கண்ட சிவா அதற்கு மேல் அங்கே நிற்க வேண்டாமென எண்ணியவன் வேலையிருப்பதாய் கூறி அவரிடம் விடைபெற்று அகன்றான்.



கண்மணி மனதில், "இந்த பெரியவரிடமும் தனக்காக அவர் பேசவில்லை. அவருக்கு என்னை பிடித்திருந்தால் என்னை மற்றவரிடம் விட்டு கொடுக்காமல் இருந்திருப்பார். இப்படி கண்டு கொள்ளாமல் போக மாட்டார்.



ஆக அவர் முதலிரவன்று கூறியது போல் அவரின் அன்னைக்காக தான் தன்னிடம் பாசமாய் நடந்துக் கொள்கிறார். தான் அவரின் தோற்றத்திற்கு இணையில்லை என்று தான் அவரும் நினைக்கிறார்" என முடிவே செய்து விட்டாள்.



காரில் ஏறியதும் அவள் முகம் சரியில்லை என்றெண்ணியவன், "என்னாச்சு கண்மணி??" என்றான்.



"லேசா தலைவலிங்க. இதுக்கு மேல எங்கயும் போக வேண்டாம். வீட்டிற்கு போய்டலாமா?? " எனறாள் கண்மணி.



"சரிடா. எனக்கும் டிராவல் டயர்ட்னஸ் இருக்கு. போய் இரண்டு பேரும் சேர்ந்து தூங்குவோம்" என்றவன் கண் சிமிட்டி குறும்பு சிரிப்புடன் கூறி காரை ஓட்ட ஆரம்பித்தான்.



வீட்டிற்கு சென்று உணவுண்டு இருவரும் தங்களின் அறைக்குள் நுழைந்து நொடி, அவளை இறுக அணைத்திருந்தான்.



"நான் வந்ததிலிருந்து என் கருப்பட்டி பொண்ணுக்கிட்ட ஒன்னு ரொம்ப மிஸ் செய்றேன்" என்றவன் ஏக்கமாய் கூற,

என்ன என்பது போல் அவள் அவனை பார்த்து வைக்க,



"எனக்கு உன்கிட்ட என்ன பிடிக்கும்னு தெரியாதா கருப்பட்டி பொண்ணு" என்று அவள் நெற்றியில் அவன் முட்ட,

இல்லை என அவள் தலையையாட்ட,



"சீக்கிரம் தெரிய வச்சிடுவோம்" என சிரித்தானவன்.



இருவரும் படுக்கையில் விழ, அவன் படுத்ததும் உறங்கிவிட்டான் அசதியில்.

அவளுக்கு தான் மனதில் எண்ண அலைகள் ஓயாமல் சுழன்றிருந்தது.



அவன் திருமணதன்று அவளிற்காக அந்த பாட்டிகளிடம் பேசாது போனதிலிருந்து, முதலிரவு அன்று பேசிய வார்த்தைகள், இன்று பூக்காரம்மாவிடமும் அந்த பெரியவரிடமும் இவளுக்காக பேசாமல் போனது என அனைத்து நிகழ்வுகளையும் தனக்கு ஏற்றது போல் தவறாய் எண்ணி சிந்தித்து அதற்கு ஓர் அர்த்தம் கற்பித்து இறுதியாய் அவனுக்கு தன்னை பிடிக்கவே இல்லை, தன் அன்னைக்காக தான் தன்னிடம் அன்பாய் பழகுகிறான் என முடிவு செய்து மனம் நொந்தாளவள்.



பெண்ணின் மனம் அன்பிற்காக ஏங்கி சோர்வுறும் நேரம் தன்னை சுற்றி நிகழும் அனைத்தையும் தவறாக கண்ணோட்டத்திலேயே கணக்கிடும் போலும்.



அவ்வாறான தவறான முடிவையே இப்பொழுதும் எடுத்தாள் இவள்.



முதலிரவன்று அவன் தனக்கு பிடித்தமில்லை என்று கூறியது வலித்ததை விட இன்று அவனின் அன்பில் நனைந்து குளித்திருக்கும் போது அவனின் அன்பு தனக்காய் இல்லை என்ற இந்த எண்ணமே அவளை நடுங்க வைத்தது. ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் வெகுவாய் வலிக்கச் செய்தது.



ஏதேதோ சிந்தனையில் உழன்றவளின் மனம் சோர்வுற ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.



அவள் விழித்த நேரம் அவன் விமான நிலையத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.



"என்னடா ரொம்ப சோர்வா தெரியுற?? நல்லா ரெஸ்ட் எடு. நான் கிளம்பிட்டேன். உனக்கு இரண்டு நாள் போன் பண்ணக் கூட என்னால முடியுமானு எனக்கு தெரியலை. வேலைய முடிச்ச அடுத்த நிமிஷம் உன்னை பார்க்க இங்க வந்திடுவேன் கருப்பட்டி பொண்ணு. இது சிடுமூஞ்சு மச்சானை நினைச்சிட்டே இருப்பியாம்" எனக் கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் தாயிடமும் கூறி விடைப்பெற்றான்.



அவனிடம் பேசி தெளிவு காணலாம் என முடிவு செய்தே பின்பே உறங்கினாளவள்.



அது இப்போது இரண்டு நாட்களுக்கு சாத்தியப்படாது என்றவன் உரைத்த நிலையில் அவளின் மனம் பாரமாகி போனது.



இரண்டு நாட்கள் அவன் அவளுக்கு போன் செய்யவே இல்லை. அவருக்கு தன் மீது நேசம் இருந்தால் இவ்வாறு இரண்டு நாட்கள் அவரால் தன்னுடன் பேசாமல் இருக்க முடியுமா?? அவருக்கு நிஜமாகவே தன்னை பிடிக்கவில்லை என ஒரு நேரம் யோசிப்பவள், மற்றொரு நேரம் தன்னிடமே அவருக்கு தன்னை பிடிக்கவில்லை அவரின் தாய்காக தான் எல்லாம் என கூறிவிட்டால், அதை ஏற்கும் சக்தி தனக்குள்ளதா என விம்மினாள் மனதிற்குள்.



இரு நாட்கள் கழித்து மிகுந்த சோர்வுடேனேயே வந்தடைந்தான் வீட்டிற்கு.



மறுநாள் காலை அவர்கள் ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடியுற்றதற்கான சக்ஸஸ் பார்ட்டி டெல்லியில் நடைபெற இருப்பதாகவும், அவன் பணியாளர்கள் அனைவரும் அப்பார்ட்டிக்கு குடும்பத்துடன் வருவார்கள் என்றும் இவளும் அவனுடன் நாளை அப்பார்ட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமென கூறி உறங்கச் சென்றவன், அந்நாளை உறங்கியே கழித்தான்.



இவனிடம் எவ்வாறேனும் பேசி தன் மனக்குழப்பத்தை பற்றி பேசி தெளிவுற வேண்டுமென எண்ணியிருந்தவளுக்கு அத்தகைய சூழ்நிலை தான் அமையப் பெறவேயில்லை.



டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கி அந்த ஹோட்டல் ரூமை இவர்கள் அடைந்தது வரை அவளுக்கான தேவைகள் அனைத்தையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான் சிவா.



மாலை வேளையில் அறையை அடைந்ததும், அவளை உடனே கிளம்புமாறு கூறி அவளுக்காக அப்பார்ட்டிக்காக அவன் வாங்கியிருந்த அனார்கலி மாடல் சல்வாரை அவளுக்கு அளித்து அணிவிக்கச் செய்தான்.



அவனின் சொற்படி அனைத்தையும் ஓர் குழப்ப மனநிலையில் செய்துக் கொண்டிருந்தாள் கண்மணி.



சிவா அவளுக்கு நேரெதிராய் உற்சாக மனநிலையில் இருந்தான்.



"நான் உன்னை இப்ப ஒரு சப்ரைஸ் இடத்திற்கு உனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்கு அழைச்சிட்டு போகப் போறேன்" என்று உற்சாகமாய் கூறினான் சிவா.



"அப்ப நம்ம பார்ட்டிக்கு போகலையா??" என்றவள் கேட்க,



"ஹ்ம்ம் அங்க போய்ட்டு பார்ட்டிக்கு போவோம்" என கூறி அங்கு அவனுக்காக உபயோகிக்கும் அந்த காரில் பயணித்தானவன்.



அவன் அவளை அழைத்துச் சென்று நிறுத்தியது ஓர் ஹனுமான் கோவிலில்.



கண்மணி கண்ணில் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.



"உனக்கு ரொம்ப பிடிச்ச ஆஞ்சநேயர். இந்த ஊருல எப்படி இருக்காருனு பார்த்தா நீ ஹேப்பி ஆயிடுவனு தோணுச்சு. அதான் உன்னை கூட்டிட்டு வந்தேன்" என்றான் சிவா.



எப்பொழுது அவள் மனம் சுணங்கினாலும் குழப்பத்தில் ஆழ்ந்தாலும் அடுத்த நொடி அவள் நினைப்பது அவளின் ஆஞ்சநேயரை தான். உடனே அவரின் கோவிலுக்கு சென்று தன் குழப்பங்களை அவரிடம் கூறிவிட்டு சிறிது மனம் தெளிந்த பிறகே அங்கிருந்து நகர்வாள்.



இந்த இரண்டு நாட்களாய் அவரையும் மறந்து சிவாவின் நினைப்பிலேயே இருந்து விட்டாள்.



துன்பம் வரும் வேளையில் தான் மனம் தானாய் கடவுளை நினைக்கும். தன் இன்பம் துன்பம் அனைத்திலும் ஆஞ்சநேயரையே எண்ணி வாழ்பவள் இவள். அத்தகையவள் இரு நாட்களாய் தன் குழப்பத்திற்கு ஆறுதல் மொழியை தன் கணவனிடம் மட்டுமே எதிர்பார்த்திருந்தாள். கடவுளை மறந்திருந்தாள்.



ஆக இப்போது சிவா இவளை இங்கு அழைத்து வரவும் தன் கடவுளை மறக்கும் அளவிற்கா சிவாவின் செயல் என்னை பாதிக்கிறது என வியந்து ஸ்தம்பித்து போனாள்.



கோவிலில் சாமியின் முன் நின்று கண் மூடியிருந்த கண்மணி, "எனக்கு அவர் மட்டுமே உலகம்னு மனசு அவர்கிட்ட சரணடைஞ்சிருச்சு கடவுளே... அவருக்கும் நான் அப்படி இருக்கனும் மனசு ஏங்குது ஆஞ்சநேயா " என்று அவள் மனமருக ஆஞ்சநேயரிடம் பேசியிருந்த சமயம், அர்ச்சகர் வழங்கிய குங்குமத்தை அவள் நெற்றியின் உச்சியில் வைத்திருந்தான் சிவா. அதிர்ந்து கண் திறந்தவளின் சந்தோஷ பரவசத்தில் விழியிலிருந்து ஒரு துளி நீர் அவன் கைமேல் விழுந்தது.



அவளின் பரவச நிலையை உணர்ந்தவன் தன் தோளோடு அணைத்திருந்தான் அவளை.



அன்றைய நாளில் தான் சந்திக்கவிருக்கும் இன்ப அதிர்ச்சிகளை பற்றி அறியாது பார்ட்டி இடத்திற்கு பயணித்திருந்தாள் கண்மணி தன் கணவனுடன்.



அந்த அலுவலகம் தரை தளத்தில் அழகிய கண்ணாடிக் கட்டிடமாய் இருந்தது.



பார்க்கிங்கில் காரை நிறுத்தி அலுவலக வாசலிற்கு தன் கணவனுடன் வந்த கண்மணிக்கு வரவேற்பிலிருந்த பெயர் பலகை முதல் அதிர்ச்சியை அளித்தது.



ஆம் அந்த டிஜிட்டல் பெயர் பலகை பல வண்ண விளக்கொளி சுடர்விட "கண்மணி ஆர்க்கிடெச்சுரல் டிசைன்" என்று ஒளிர்ந்து மின்னியது.



ஆச்சரியத்தில் மின்னியது கண்மணியின் விழிகள். என் பெயரா?? என் பெயரையா இவரோட கம்பெனிக்கு வைத்திருக்கிறார். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு இதன் திறப்பு விழா நிகழ்ந்ததாய் கூறினாரே!! அப்பொழுதே என் பெயரை வைத்திருந்தாரே!! அதன் பொருள் என்ன?? அவர் என்னை திருமணத்திற்கு முன்பே நேசித்திருக்கிறாரா??



சடசடவென பெய்யும் மழை துளிப்போல் எண்ணத்துளிகள் அவள் மூளையில் துளி துளியாய் இறங்க அது கூறிய விடையில் திகைத்தவள் தன்னவன் முகத்தை பார்த்தாள்.



இதழில் குறுநகையுடன் புருவம் உயர்த்தி அவளை பார்த்திருந்தான் சிவா.



அவள் ஏதோ கேட்க வர, "எல்லாம் அப்புறம் பேசலாம், வா உள்ள போலாம்" என்றழைத்து சென்றாள் அவளை.



அவர்களின் திருமணத்திற்கு பின் சேர்ந்து பங்கு பெறும் முதல் அலுவக நிகழ்ச்சி என்பதால், இருவரின் மீதும் பூ தூவி வரவேற்றனர் அவனின் பணியாளர்கள்.



பத்து முக்கிய பணியாளர்கள் இப்பிராஜக்டில் இவனுக்கு உறுதுணையாய் இருந்தவர்களென அவர்களை கண்மணிக்கு அறிமுகம் செய்து வைத்தவன் மற்றவர்களை வரவேற்கவென அங்கிருந்து அகன்றான்.



அதிலிருந்த இரு பெண்கள் கண்மணியிடம் பேசினர்.



"நிறையவே சாரை மாத்தி வச்சிருக்கீங்க கண்மணி மேடம்" என்றே பேச்சை துவங்கினார்கள் அப்பெண்கள்.



"என்னது சொல்றீங்க?? புரியலை" என்றவள் கேள்வி விழியால் அவர்களை கேட்க,



"சார் கிட்ட சிக்ஸ் மன்த்ஸ்ஸா வேலை பார்க்கிறோம். காலேஜ் முடிச்சிட்டு ஸ்ட்ரைட்டா சார்கிட்ட வேலைக்கு சேர்ந்த ஆட்கள் நாங்க. எல்லா வேலையும் ஒழுங்கா நடக்கனும் சாருக்கு. இல்லைனா செம்ம கோபம் வரும். நிறையவே திட்டு வாங்கியிருக்கோம் அவர்கிட்ட. ஆனா கல்யாணத்துக்கு பிறகு அவர் ஆபிஸ்ல கோபப்பட்டோ இல்ல திட்டியோ பார்த்ததே இல்லை. வர்ற கோபத்தை அப்படி கண்ட்ரோல் பண்ணுவார். கண்டிப்பா அதற்குக் காரணம் நீங்களா தான் இருக்கனும். அதுக்கு நாங்க உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்" என கண்மணியின் கைகளை பற்றிக் கொண்டு அப்பெண்கள் உரைக்க, வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள் கண்மணி.



சரியாய் அந்நேரம் மேடையேறி பேசவாரம்பித்திருந்தான் சிவா.



வந்த அனைவரையும் வரவேற்று அவர்களின் உழைப்பினாலே இத்தகைய வெற்றி சாத்தியமானது எனக் கூறி அனைவருக்கும் நன்றியுரைத்தான் சிவா.



"எனக்கு மேரேஜ் ஆன பிறகு கிடைச்ச முதல் வெற்றி இது. கண்டிப்பா என்னுடைய வொய்ப் எனக்கு லக்கி டால் தான். மேரேஜ்க்கு முன்னாடியே அவப் பெயரில் தான் இந்த கம்பெனி இருக்கனும்னு முடிவு செய்துட்டேன். இந்த கம்பெனியில் கிடைக்கும் அனைத்து வெற்றியும் லாபமும் அவளுக்காகவே இருக்கனும்னு முடிவு செஞ்சு தான் இந்த பெயரை வச்சேன். அது இன்னிக்கு நிறைவேறி அதை நான் அவளுக்கு சமர்பிப்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன். லவ் யூ கண்மணி. என் வாழ்வின் சந்தோஷம் நீ கண்ணம்மா" என்று மனம் நெகிழ பேசியவன் தன் காதலை உரைத்திருந்தான்.



அவனின் பேச்சில் அவனுரைத்த காதலில் மெய் மறந்து இவ்வுலகம் மறந்து நின்றாள் கண்மணி.



அவள் உலகில் அவன் மட்டுமே இருந்தான் அப்போது.



சுற்றியிருந்தவர்கள் அவளை பார்த்து கை தட்டிய ஓசை கூட அவள் செவியை தீண்டவில்லை. இமை சிமிட்டாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.



பேசி முடித்து அவளருகில் வந்தவன், "புருஷனை சைட் அடிச்சது போதும். சாப்பிட போலாமா??" எனக் குறும்புச் சிரிப்புடன் கேட்க, நிகழ் உலகிற்கு வந்தவள் அவன் கைப்பற்றி எல்லாம் எனக்காகவாங்க?? என நா தழுதழுக்க கேட்க,



"விவரமா நைட் ரூம்க்கு போய் பேசுவோம். வா சாப்பிடலாம்" என அழைத்து சென்றவன்,



அவளை உண்ண வைத்து இரவு அவர்களின் அறைக்கு அழைத்து சென்றான்.



உள் நுழைந்து அவன் தாழ் போட்ட மறு நொடி அவனை இறுக அணைத்திருந்தாள் கண்மணி.



"என்ன மேடமுக்கு என் மேல உள்ள சந்தேகமெல்லாம் போச்சு?? எந்தளவுக்கு எனக்கு உன்னை பிடிக்கும்னு தெரிஞ்சிடுச்சா??" என அவளை அணைத்துக் கொண்டே அவன் கேட்க,



அவள் அதிர்ச்சியாய் அவனை நிமிர்ந்துப் பார்க்க, எனக்கு உன்னை பிடிக்கலைனு நினைச்சுட்டல என்ற குற்றப் பார்வை பார்த்து வைத்தானவன்.



அவன் பார்வையில் அவள் கண்ணில் நீர் வழிந்தது.



ஆதரவாய் அவள் தலையை வருடி அங்கிருந்த கட்டிலில் அவளை அமர வைத்தவன் பேசவாரம்பித்தான்.



"என் கல்யாணம் உன்னோடு தான்னு முடிவான நாளைலயிருந்து உன்ன மனசுல சுமந்துட்டு இருக்கேன்டி நான். இரண்டு மணம் தான் திருமணத்துக்கு முக்கியம்.

நிறமும் அப்பியரன்ஸும் முக்கியமில்லைனு நினைக்கிறவன்டி நான். என்னோட நேசம் உனக்கு அதை உணர்த்தும்னு நினைச்சேன். என் நேசம் தாண்டி என் கோபம் உன்னை காயப்படுத்தவும் தான் கண்டிப்பா என் கோபத்தை குறைச்சே ஆகனும்னு முடிவு செஞ்சேன்.

அன்னிக்கு ஆஞ்சநேயர் கோவில்ல கண் மூடி வேண்டிக்கிட்டு அழுதியே!! என் கோவம் உன்னை எந்தளவுக்கு காயப்படுத்துதுனு அப்ப உணர்ந்தேன்.

அதுகப்புறம் உன் கிட்ட என் அன்பை காதலை உணர்த்த தான் நான் நினைச்சேன்.



நான் உன்கிட்ட ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு எதுக்காக கோபப்பட்டேனு நீ தெரிஞ்சிக்க விரும்பல. நான் உன்னை காதலிக்கிறேனானு கூட நீ தெரிஞ்சிக்க விரும்பல. நான் ஏன் லவ் மேரேஜ் செஞ்சிக்கலனு நீ கேட்டப்போது கூட நான் நேரடியா பதில் சொல்லல. "எனக்கு எதுவும் வேண்டாம். உங்களை பத்தி எதுவும் தெரிஞ்சிக்க வேண்டாம். உங்களை நான் காதலிச்சிட்டு இருந்தா மட்டும் போதும்ன்ற உன் குணம்". எதிர்பார்ப்பில்லாத அந்த அன்பு. நிஜமாவே பூரிச்சு போனேன்.

ஆனா இந்த அளவுக்கு பைத்தியமா என்னை காதலிக்க தெரிஞ்ச உனக்கு, என்னை என் காதலை உணர தெரியலையே.



ஆனா நான் உணர்ந்து வச்சிருக்கேன். உன்னை அணு அணுவா தெரிஞ்சு வச்சிருக்கேன்டி. உன்னோட ஒவ்வொரு அசைவிலும் என்ன நினைக்கிறனு எனக்கு தெரியும்டி. அப்படிபட்டவனுக்கு அந்த பூக்காரம்மா பேசினது உன்னை காயப்படுத்தும் தெரியாதா?? அந்த பெரியவர் பேசினதுனால வந்த தலைவலி தான் அதுனு தெரியாதா??

நீயா என்னை பத்தி என்ன முடிவுக்கு வரனு தெரிஞ்சிக்க தான் இரண்டு நாளா உன்கிட்ட பேசாம இருந்தேன்.



குழம்பினா தானே தெளிவடைய முடியும். ஆனா நான் உன்னை விரும்பவே இல்லை. உன்னை எனக்கு பிடிக்கவேயில்லைனு நினைச்சிட்டல"



என முகத்தில் வேதனை படற அவள் காலருகே மண்டியிட்டு அவள் முகம் நோக்கி அவன் கூற,



"இல்லபா. " என்றவள் ஏதோ பேச வர,



இரு நான் பேசி முடிச்சிடுறேன் என்றவன் மீண்டும் எழுந்து நின்று,



"ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு அந்த வார்த்தை நான் பேசினது கூட உன் மேல உள்ள பொஸஸிவ்னஸ்னால தான்.



நம்ம மனசார விரும்பி கட்டிக்கிற பொண்ணு எனக்காக இல்லாம அம்மாவுக்காக கட்டிக்கிறேனு சொன்னா கோவம் வரும் தானே. அந்த கோவம் தான். அதே வார்த்தை நான் சொன்னா உனக்கு எப்படி இருக்கும்னு தெரியனும்னு தான் அப்படி பேசினேன். ஆனா மறுநாளே அது என்னோட மிஸ் அண்டஸ்டாண்டிங்னு புரிஞ்சிக்கிட்டேன். உன் காதலை புரிஞ்சிக்கிட்டேன்.



ஊருல நம்மல ஜோடியா பார்த்தா பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்கடா கண்மணி. அவங்க அப்படி பேசும் போது என் புருஷனுக்கு என்னை பிடிக்கும். அவருக்கு பிடிச்சா போதும். நீங்க என்னனாலும் பேசிக்கோங்கன்ற மனப்பான்மை உனக்கு வரனும். அப்படி நீ நினைக்கிற அளவுக்கு நான் உன்கிட்ட நடந்துக்கனும். இது என் மேல தான் தப்பு.



உன் மேல அந்த அளவுக்கு என் காதலை பொழிஞ்சி நம்பிக்கைய வளர்க்காம விட்டது என் தப்பு தானே" என்றான் சிவா.



சிவாவின் அருகே சென்று அவன் கைகளை தன்னுள் கோர்த்தவள்,



"அப்படி இல்லைங்க. எதிர்பார்ப்பில்லாம என் காதலை உங்களுக்கு உணர்த்திக்கிட்டே வாழ்ந்தா போதும்னு தான்ங்க இருந்தேன். ஆனா எப்ப உங்க அன்பை பொழிய ஆரம்பிச்சீங்களோ அப்பவே உங்க காதலுக்கு என் மனசு ஏங்க ஆரம்பிச்சிடுச்சு போல. அதனால தான் என்னை பிடிக்கலைனு நீங்க முதலிரவு அன்னிக்கு சொன்னதை ஏத்துக்க முடிஞ்ச என்னால இப்ப அதை நினைச்சிக் கூட பார்க்க முடியலை. அதனால தான் எனக்கு இந்த குழப்பம். நீங்க அப்படி பிடிக்காம அம்மாக்காக பழகுறேனு சொல்லிட்டான்ற பயம் எல்லாம் சேர்ந்து தான் உங்களுக்கு என்னை பிடிக்கலைனு யோசிக்க வச்சிடுச்சு"



"ப்ளீஸ்ப்பா ஃபீல் செய்யாதீங்க. நீங்க கவலை பட்ட எனக்கு மனசு வலிக்குது" என கண்ணை சுருக்கி வலியை முகத்தில் தேக்கி அவள் கூற,



தன்னோடு அவளை சேர்தணைத்தவன், "இப்ப என் பொண்டாட்டிக்கு எல்லா சந்தேகமும் தெளிஞ்சிடுஞ்சா?" என அவள் முகத்தை கையில் ஏந்திக் கொண்டு கேட்க,



"எப்பலருந்து என் மேல இந்த காதல்? மேரேஜ் முன்னாடியே உங்களுக்கு என்னை பிடிக்குமா? உங்க கம்பெனிக்கு என் பேர் வைக்கிற அளவுக்கு என்னை பிடிக்குமா?" என வரிசையாய் கேள்வி கேட்டு கொண்டே போக,



அவளை கையிலேந்தி மையலாய் சிரித்தவன், "எனக்கு எந்தளவுக்கு உன்னை பிடிக்கும்னு செயல்ல காட்ட போறேன்டி உன் சிடுமூஞ்சி மச்சான்" என அவள் நெற்றியில் முட்ட,



அவள் நாணத்தில் முகத்தை அவன் மார்பில் புதைக்க, படுக்கையில் அவளை இறக்கி விட்டவன் கணவனாய் அவள் மீது படர்ந்தான்.



இருவரும் ஒருவராய் மாறிய சங்கமத்தின் முடிவில், "லவ் யூடி கருப்பட்டி அழகி. கருப்பட்டி போலவே செம்ம தித்திப்புடி நீ" என தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் கன்னம் கிள்ள, அவன் கூற்றில் அவள் வாய்விட்டு சிரிக்க, சிரிப்பினால் விழுந்த கன்னக்குழியில் தன் மனம் நழுவதை கண்டவன் அழுந்த இதழ் பதித்தான் அக்கன்னக்குழியில்.



"என்னங்க??" என திடீரென அவள் பதறி எழுந்தமற,



"நான் கண்டுபிடிச்சிட்டேன்" என்றாள் அவன் கழுத்தில் கைகளை மாலையாய் கோர்த்து.



"என்னது கண்டுபிடிச்சிதாம் என் கருப்பட்டி பொண்ணு?" என அவள் மூக்கை அவன் பிடித்து ஆட்ட,



"அன்னிக்கு சொன்னீங்களே... என் பர்த்டே அன்னிக்கு... உன்கிட்ட எனக்கு பிடிச்ச ஒன்னு... அதை நான் வந்ததிலிருந்து மிஸ் செய்றேனு சொன்னீங்களே... அது என் கன்னக்குழி தானே" என ஏதோ பெரிய விசயத்தை கண்டுபிடித்த பூரிப்பில் அவள் கூற,



"ஹா ஹா ஹா. அப்ப நான் எந்த அளவிற்கு உன்னை லவ் பண்றேனு இன்னும் கண்டுபிடிக்கலையா??" என மீண்டும் மையலாய் சிரித்தவன் தன் காதலை அவளுக்கு உணர்த்த முனைந்தான்.



திருமண வாழ்வில் வரும் பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் பேசி புரிதலை வளர்த்து காதலுடன் கடந்தால் இன்பமாய் வாழலாம் என அறிந்துக் கொண்ட இருவரும் இன்னும் நூறு ஆண்டு இணைப்பிரியாது வாழட்டுமென வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.



---நர்மதா சுப்ரமணியம்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே,

இதற்கு மேல் இந்த திரியில் எதுவும் பதிவிட மாட்டேன் என்பதால் கீழேயே கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்

 
Top