All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கதை திரி

Status
Not open for further replies.

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7
கூடிச்சிரித்து மகிழ்வது
மட்டுமல்ல
நன்னெறிக் கூறி
நல்வழிப்படுத்துதலும்
நன்நட்பின் செயலாகும்.


"அழனும்னா அழுதுடு கேபி. ஏன் இவ்ளோ சைலன்டா இருக்க. எனக்கு உன்னை பத்தி தெரியும்... ரொம்ப சென்சிடிவ் நீ... இந்நேரத்திற்கு அழுது கூப்பாடு போட்டிருக்கனும்" என அவன் எவ்வளவு கூறியும் அமைதியாகவே அவனுடன் பயணம் செய்து பிஜி வந்திருந்தாளவள்.



பிஜி வாசலில் அவளை விட்டதும்,"இதுக்கப்புறம் உன்னை எப்ப மீட் செய்வேனு தெரியல கேபி. சோ ஆல் த பெஸ்ட். தைரியமா இரு. கண்டிப்பா உனக்கொரு நல்ல பிராஜக்ட் கிடைக்கும்"



"அப்ப நீ என்கிட்ட பேசமாட்டியா??" அந்த பிராஜக்ட் ரிசல்ட் கூறியப்பின் இதுவே அவள் பேசும் முதல் வார்த்தை.



அவள் திடுமெனக் கேட்டக் கேள்வியில்,"ஓய் கேபி,இவ்ளோ நேரம் நான் தான் உன்கிட்ட பேசிட்டே வரேன். நீ தான் என்கிட்ட பேசாம வர" என்றே ஆஷிக் கூற,



"நான் அதைக் கேட்கல.. இதுக்கப்புறம் பார்க்க முடியுமா தெரியலைனு சொல்லி ஏதோ செண்ட் ஆஃப் பண்ற மாதிரி பேசிட்டு இருக்க... ஏன் போன்ல பேச மாட்டியா???மெசேஜ் பண்ணா ரிப்ளை பண்ண மாட்டியா??" என முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு வாணிக் கேட்க,



"என்னை பத்தி தான் உனக்கு தெரியும்ல... நான் ஒரு சோம்பேறி... மெசேஜ் லாம் பண்ண மாட்டேன்... சாட்ல பேசுறதுலாம் சுத்தமா பிடிக்காது... யாரு ஒவ்வொரு வார்த்தையா டைப் பண்ணி எனர்ஜிய வேஸ்ட் பண்றது... டைம் கூட வேஸ்ட்... இதுக்கு கால் செஞ்சி பேசிட்டு போய்டலாம்... சரி டைம் ஆச்சு... நான் கிளம்புறேன்... உனக்கு எந்த டைம்ல என்ன ஹெல்ப் வேணும்னாலும் கால் பண்ணு... பை" என்றவாறு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.



பிஜியில் வேணியும் மஹாவும் அமர்ந்திருக்க,ஏற்கனவே ஆஷிக் மஹாவிடம் அங்கு நடந்தவற்றைக் கூறியதால் ஏதும் அவளிடம் கேட்காமல் அவளைச் சிரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டனர்.



"என்னடி வாணி,இனி உன் ஆள் கூட இப்படி டிராவல் செய்ய முடியாதுனு கவலையா??" என மஹா அவளை வம்பிழுக்க,



அவள் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் வெளி வந்தது.



"ஹே வாணி விளையாட்டா தான்டி கேட்டேன்... அதுக்கு ஏன்டி அழுற" என வாணியின் தோளில் கைப்போட்டு அவளருகில் அமர்ந்து மஹா அவளைத் தேற்ற,



வாணி அழுதுக்கொண்டே "ஆமா நிஜமாடி ஐம் கோயிங் டு மிஸ் ஹிம்" எனத் தேம்பி அழுதாள்.



"அச்சோ... இப்ப என்ன??? ஆஷிக் மிஸ் பண்ணுவேனு தான ஃபீல் செய்ற... அவனை மிஸ் பண்ணும் போதெல்லாம் கால் பண்ணி பேசு... சிம்பிள்.. இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா??" என மஹா அவளைத் தேற்ற,



"பாருங்கடி இந்த பொண்ண!!! இன்டர்வியூ க்ளியர் பண்ணலைனு பீல் பண்ணாம... ஆஷிக்கை மிஸ் செய்வேனு ஃபீல் செய்யுது.. எப்படி இருந்த பொண்ணை எப்படி மாத்தி வச்சிருக்கான் இந்த ஆஷிக் பையன்" என தாடையில் கை வைத்து கண்ணை உருட்டிக் கொண்டு வேணிப் பேச,



கொள்ளென சிரித்து விட்டனர் இருவரும்.



"ஏய் விடுடி... அவளே இப்ப தான் நார்மல் ஆயிருக்கா... அவளைப் போய் வம்பிழுத்துக்கிட்டு" என வாணிக்கு வரிஞ்சிக்கட்டுக் கொண்டு மஹா சப்போர்ட் செய்ய,



வாணியினருகினில் வந்த வேணி,"நீ சொல்லலைனாலும் அந்த இன்டர்வ்யூ ரிசல்ட் உன்னை பாதிச்சிருக்கும்னு தெரியும் வாணி... நீ அதை நினைச்சு கவலைப்படாத... நான் இன்னும் பென்ச்ல தானே இருக்கேன்.. உனக்காவது எதாவது ப்ராஜக்ட்ல மேப் பண்ணி இன்டர்வியூ அடண்ட் செய்ய வைக்கிறாங்க... என்னை இது வரைக்கும் ஒரு ப்ராஜக்ட்லயும் அஸைன் செய்யலை... பாத்துக்கலாம் விடு" என ஆறுதல் வார்த்தைக் கூறினாளவள்.



"ஆமா நான் சொல்லாமலே எப்படிடி உங்களுக்கு இன்டர்வியூ பத்தி தெரிஞ்சுது" கொஞ்சம் தெளிந்தப்பின் வாணி இருவரிடமும் கேள்வி எழுப்ப,



"ஹ்ம்ம்ம் உன் ஆளு தான் சொன்னான்... முடிஞ்சா அவளை பேச வைங்க... இல்லனா சிரிக்க வையுங்க... அதுவும் முடியலைனா அவளை அழவாவது வைங்க... மேடம் மூட் அவுட்ல எதும் எக்ஸ்ப்ரஸ் செய்யாம இறுக்கமா இருக்காங்கனு சொன்னான்... ரொம்ப தான் படுத்திட்டப் போல அவனை.. பயந்துட்டான் அவன்" என்றுரைத்தாள் மஹா.



இதழில் இளநகை ஒட்டிக்கொள்ள, "Thanks for everything you did for me till now"குறுஞ்செய்தி அனுப்பினாள் வாணி அவனுக்கு.



அச்சிரிப்புடனேயே உறங்கியும் போனாளவள்..



மறுநாள் வாணி, வேணி மற்றும் மஹாவுடன் தன் பழைய அலுவலகத்திற்கேச் சென்றாள்.



இப்பொழுது வாணி,வேணி,ராஜேஷ் மூவரும் பென்ச்சில் இருந்தனர்.



வெகுநாள் கழித்து ராஜேஷை அன்று தான் அவள் சந்திக்க, ஏற்கனவே வாணியின் கவலை பற்றி ஆஷிக் ராஜேஷிடம் கூறியிருந்ததால் ராஜேஷ் அன்று முழுவதுமே அவளிடம் கிண்டல் கேலியாகப் பேசி அவளை சிரித்த முகத்துடனேயே இருக்க வைத்தானவன்.



ராஜேஷ் மீதான நன்மதிப்பு அதிகரித்தது வாணிக்கு அன்று.



தன் தேவை எனும் வரும் போது சுயநலமாய் மாறும் உலகில் எவரையும் வெளிப்பேச்சை வைத்து நம்பக்கூடாதென அறியாத வாணிக்கு ஓர் பெரும் பாடம் கற்றுக்கொடுக்க காத்திருந்தது அவளின் விதி.



அன்றைய வாரயிறுதி நாளில் சென்னைக்கு பயணமாக வாணி மற்றும் மஹா சாந்தி நகர் பேருந்து நிலையம் செல்ல, அவர்களுடன் பயணம் செல்ல அந்நிலையம் வந்து சேர்ந்தான் ஆஷிக்.



அவனைக் கண்டதும் வாணியின் முகம் சந்தோஷத்தில் பூரிக்க, "பார்ரா ஆளைப் பார்த்ததும் மூஞ்சுல பல்ப் எறியுதே" என மஹா அவளைக் கிண்டலடிக்க,



இவ்வாறாக வழக்கம்போல் கிண்டலும்கேலியுமாய் இனிமையாய் பயணத்தை மேற்கொண்டனர்.



சென்னை வந்தடைந்ததும் சனி ஞாயிறு இன்பமாய் கழிய,ஞாயிறு மாலை மீண்டும் பெங்களுர் பயணமாக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த வேளை பேசவென அழைத்தார் வாணியை அவளின் தந்தை செல்வம்.



வீட்டின் வெளித் தோட்டத்தில் வீசும் தென்றல் காற்றில் தன்னருகே அவளை அமரச் சொன்னவர் வாஞ்சையாய் அவளின் தலைக் கோதி,"ஆஷிக் எப்படி இருக்கான்மா?? எப்படி இருந்துச்சு அவன் கூட இரண்டு வாரம் முழுக்க ஆபிஸ் போய்ட்டு வந்ததது மதும்மா??"என்றுக் கேட்டாரவர்.



"ஹ்ம்ம் சூப்பரா போச்சுப்பா.. என்னைய ரொம்ப நல்லா கவனிச்சிக்கிட்டான் அவன்... நானும் அவன் ப்ராஜக்ட்லயே செலக்ட் ஆகியிருந்தா அவன் கூடவே இப்டி டெய்லி ட்ராவல் பண்ணிட்டு இருந்திருக்கலாம்... இல்லனாலும் என்ன அதான் வீக்கெண்ட் ஒன்னா ட்ராவல் பண்றோம்ல" என அவள் விழிகள் மின்ன பதிலுரைக்க,



அவளின் முகப்பாவமே சொல்லிற்று அவளுக்கு ஆஷிக்கை எந்தளவு பிடித்திருக்கிறதென்றும் அவனுடனான பயணத்தை எவ்வளவு ரசிக்கிறாளென்றும்.



"அப்பா உன்கிட்ட சொன்னது நியாபகம் இருக்குல்லமா... ஆம்பளை பசங்க நட்பு என்னிக்கும் நமக்கு வேண்டாம்மா... அவன் உனக்கு ஹெல்ப் செஞ்சான்னா தேங்க்ஸ் சொல்லிட்டு வந்துடு. அவன் உன்கிட்ட ஹெல்ப் கேட்டான்னா நீயும் அவனுக்கு வேண்டியதை செய். ஆனா மனசுல எடுத்து வச்சிக்காதமா. போனவாரம் நீ அவன் கூட பஸ் ஸ்டாண்ட்ல பேசினதே அப்பா மனசுக்கு ரொம்பக் கஷ்டமா போச்சு. அப்பா சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன். பசங்களை எப்பவுமே தூர வச்சித் தான் பழகனும். பார்த்து இருந்துக்கோடா மதும்மா" என்றுக் கூறி அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டாரவர்.



இதைக் கேட்டுக் கொண்டிருந்த வாணியின் மனதில் குழப்ப ரேகைகள்.

தந்தை தன்னை குற்றம் சொல்லிவிட்டதாய் எண்ணி அவளின் கண்ணில் நீர் துளிர்த்தது. தன்னால் தந்தை மனம் கலங்கி விட்டாரென அவளின் மனம் வருந்தியது.



தான் அவனுடன் தேவைக்கு மட்டும் தானே பேசிக்கொள்கிறோம். பின் ஏன்தந்தை அவ்வாறுக் கூறினார்??



வேணி மற்றும் மஹா, இளா மற்றும் மதியிடம் உரிமையாய் பேசிப் பழகுவதைப்போல், தான் அவனிடம் உரிமையுடன் கூட பேசியதில்லையே. அப்படியென்றால் வேணி மற்றும் மஹா செய்வது தவறா???

இவ்வாறாக பெரும் குழப்பத்தில் குழம்பித் தவித்தாள் வாணி.



அக்குழப்பத்துடனேயே பெங்களுர் பயணம் மேற்கொண்டாள் மஹா மற்றும் ஆஷிக்குடன்.



வாணியின் அமைதிக்கண்டு மஹாவும் ஆஷிக்குமே அமைதியாய் பயணித்தனர்.



திங்கட்கிழமை காலை ஹெச் ஆர் தேவ்... வாணி,வேணி,ராஜேஷை அழைத்தவர்... அவர்களை எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகம் அன்றே செல்ல வேண்டுமெனவும் ப்ராஜக்டிற்காக நேர்முகத் தேர்வு நடைபெறும் எனவும் கூறினாரவர்.



அவர்கள் மூவரும் கிளம்பி எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகம் சென்று அங்கே நேர்முகத் தேர்வை அடெண்ட் செய்துவிட்டு ரிசல்ட்டிற்காக காத்திருக்க, அவர்களை உண்டு விட்டு வருமாறு கூறி விட்டார் அப்பராஜக்டின் மேனேஜர் வினித்.



மதிய உணவு உண்பதற்காய் கேண்டினிற்கு சென்று உணவு ஆர்டர் செய்துவிட்டு அனைவரும் அங்குள்ள மேஜையில் அமர்ந்திருக்க, தீடீரென கண்ணீர் வழிய தேம்பித் தேம்பி அழவாரம்பித்தாள் வாணி. இதைக் கண்டு ராஜேஷ் மற்றும் வேணி பதற, வேணி அவளருகில் சென்று,

"எதுக்குடி அழுற?? இன்டர்வியூ நினைச்சு அழுறிய?? நீ கண்டிப்பா செலக்ட் ஆகிடுவடீ... கவலைப்படாதே" என அவளைத் தேற்ற,



அதற்காக அழவில்லையென தன்தலையை ஆட்டி கூறியவள் தன் கட்டுக்குள் வர சிறிது நேரம் ஆகியது.



அவளின் தந்தை பேசியப்பின், தான் செய்வது தவறோ என்றொரு குற்றயுணர்ச்சி, ஆஷிக்கிடம் இனி மனம் விட்டு பேசக்கூடாது என முடிவெடுத்ததினால் வந்த கவலை... இத்துடன் இந்த நேர்முகத்தேர்வும் இணைந்துக்கொள்ள இதிலும் தான் தோற்றுவிட்டாள் என்னாவது என்கின்ற அவமான உணர்வு இவையெல்லாம் சேர்த்து அவளின் மன அழுத்தத்தைக் கூட்ட அது பெரும் அழுகையாய் வெடித்தது இப்பொழுது.



ஒருவழியாய் அவளின் அழுகையைத் தேற்றி உண்ணவைத்து ரிசல்ட் அறிந்துக்கொள்ளவென வினித்தைப் பார்க்கச் சென்றுவிட்டனர் அவர்கள்.



மூவருமே அப்ப்ராஜக்ட்டிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாய் இன்ப அதிர்ச்சி அளித்தாரவர்.



இதற்கும் கூட முழுமையாய் மகிழ முடியாமல் வாணி அமைதிக் காக்க, அவள் இந்நேரம் துள்ளிக் குதிக்காமல் அமைதியாய் இருப்பதைக் கண்ட வேணி, பிஜி சென்றதும் அவளின் கவலை என்னவென அறிந்துக் கொள்ளலாமென மனதில் நினைத்துக்கொண்டாளவள்.



ஆஷிக்கும் அந்த எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகத்தில் தானே வேலை செய்கிறான். எனவே ஆஷிக்,ராஜேஷ்,வாணி,வேணி ஆகிய நால்வரும் மாலை ஒன்றாய் கிளம்பினர் அலுவலகத்திலிருந்து.



இனி இந்த நால்வரும் இந்த எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகத்தில் தான் வேலை செய்யப் போகிறார்கள். ஆஷிக் ஒரு ப்ராஜக்ட், வாணி வேணி ராஜேஷ் ஒரு ப்ராஜக்ட்... மஹா மட்டும் பழைய அலுவலகத்தில் தோழமைகள் இல்லாது தனியாளாய் இருக்கும் நிலையானது.



நால்வரும் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை பேசிக் கொண்ட நடந்துக் கொண்டிருக்க,

வாணி எவரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாய் வந்தாள். ஆஷிக் ஜாடையில் வேணியிடம் வாணிக்கு என்னவாயிற்றென்றுக் கேட்க, இரவு குறுஞ்செய்தியில் கூறுவதாய் உரைத்துவிட்டாளவள். வேணி அவளுடன் இருப்பதால், வேணி வாணியைக் கவனித்துக் கொள்வாள் என்றெண்ணிய ஆஷிக் தன் நண்பன் ராஜேஷுடன் மட்டுமே பேசிக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.



இரு பெண்கள் ஒன்றாய் செல்வதால் அவர்களின் பிஜி வரை செல்லவில்லை ஆஷிக். பேருந்து நிறுத்தத்திலேயே விடைப்பெற்றுக் கொண்டு தன் பிஜிக்குச் செல்லவென அடுத்தப் பேருந்தில் ஏறிக்கொண்டான் ராஜேஷுடன்.



அவனின் இச்செயல் வாணிக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.



"தான் கவலையாய் இருந்தும் அவன் தன்னிடம் என்ன பிரச்சனையென வினவவில்லை... அப்போ என் மீது பாசமில்லை அவனுக்கு... தான் பாதுகாப்பாய் பயணிக்கிறேனாயென கவனியாமல் அவன் பாட்டிற்கு பேருந்தில் பின் இருக்கையில் ராஜேஷுடன் அமர்ந்துக் கொண்டான். அப்போ தன் மீது அக்கறையில்லை அவனுக்கு."



இவ்வாறாக தான் முன்பு அவனுடன் தனியாகப் பயணித்ததையும் இன்னறைய நாள் பயணத்தையும் ஒப்பிட்டு அவனுக்கு தன் மீது பாசமில்லை... அவன் தன்னை நெருக்கமான நட்பாய் ஏற்கவில்லையென அழுதது அவன் மீது பெரும் பாசம் வைத்த வாணியின் மனது.



ஏற்கனவே இருந்த மனதின் இறுக்கத்தில் இவளின் இவ்வெண்ணம் பெரும் பாரமாய்யேறிக் கொள்ள,மீண்டும் கண்ணில் நீர் துளிர்க்க, பிஜி சென்றதும் தன் மெத்தையில் படுத்துக் கொண்டு அழவாரம்பித்தாள் வாணி.



அலுவலகத்திலிருந்து ஏற்கனவே வந்திருந்த மஹா, வாணியின் அழுகையைக் கண்டதும் வேணியிடம் விசாரிக்க,அவளும் தனக்கு ஏதும் தெரியாதென உரைத்துவிட்டாள்.



பெரும்பாடுபட்டு வாணியை எழவைத்து,முகம் கழுவ வைத்து,உண்ண வைத்து அவளை சிறிது ஆசுவாசப்படுத்தியப்பின் அவளிடன் பேசவாரம்பித்தனர் மஹாவும் வேணியும்.



மஹா வாணியிடம் அவளுக்கு என்னப் பிரச்சனையென்றுக் கேட்க,முன் தினம் தன் தந்தையுடன் நிகழ்ந்த பேச்சு வார்த்தையை உரைத்தாளவள்.



"இதுக்காடி நீ இப்படி அழுதுட்டு இருக்க?? சரி நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு" - மஹா



"ஆஷிக்கை பிடிக்குமா உனக்கு??" - மஹா



"ஹ்ம்ம் ரொம்பப் பிடிக்கும்" - வாணி



"ஆஷிக் உன்னை அவாய்டு செஞ்சா கவலைப்படுவியா??" - மஹா



"அதான் இன்னிக்கு செஞ்சானே... ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு மஹா" - வாணி



"ஓ இதுவேற நடந்துச்சா??" என மஹா வியப்பாய் வேணியைப் பார்க்க,



"ஹே அவன் எங்கடி உன்னை அவாய்டு செஞ்சான். நான் உன் கூட இருக்கேனு கேர் பண்ணிக்கலை அவ்ளோதான். அதானே அவன் நேச்சரும் கூட. அதை அவனே சொல்லிருக்கான் தானே. அப்டியிருந்தும் நீ ஏன் கவலையா இருக்கனு என்கிட்ட கேட்டான். நான்மெ சேஜ் செய்றேனு சொல்லிருக்கேன்" என மூச்சுவிடாமல் வேணி பேச,



வாணி திரு திருவென முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.



"அப்ப அவன் சின்னதாய் உன்னை அவாய்டு பண்ற மாதிரி தெரிஞ்சாலும் உனக்கு கவலையாயிருக்கு... ஓகே" என வாணிக்கு சொல்வதைப் போல் தனக்குள் கூறிக்கொண்டே அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் மஹா.



"அவன்கிட்ட பேசினாலே மனசு சந்தோஷம் ஆயிடுதா வாணி" - மஹா



"ஆமா ரொம்ப ரொம்ப... அவ்ளோ பாசம் வச்சிட்டேன் அவன் மேல" - வாணி



"இதெல்லாம் ஏன் இப்படி தோணுது.. அதுவும் ஒரு பையன் கிட்ட நம்ம மனசு ஏன் இப்படி யோசிக்கிது..

பையன் கிட்ட இப்டி மனசு உணர்வது தப்பில்லையா... இப்டிலாம் நினைச்சு குழம்பி ஃபீல் செய்றியாடா வாணிமா" - மஹா



மஹா கேட்ட இக்கேள்வியில் வாணி தாவிச் சென்று மஹாவை அணைத்து கதற ஆரம்பித்து விட்டாள்.



"ஆமாடி இது... இது தான்டி என் பிரச்சனை... இதை எப்படி சொல்லனு தெரியாமத் தான் முழிச்சிட்டு இருந்தேன்.. எனக்கே இது பிடிக்கலடி... அப்பா கசின் அண்ணா தாண்டி மனசுல ஒரு பையன் மேல அன்பு வரனும்னா அது ஹஸ்பண்ட்டா தான் இருக்கனும்னு வளர்க்கப்பட்டவள் நான்... நானும் அதை தான் விரும்புறேன்.. ஆனா அந்த இடத்துல தோழனாக் கூட இப்டி ஒரு பையனை மனசுல ஏத்துக்கிறது எனக்கே பிடிக்கலை... ஆனாலும் ஆஷிக் மேல உள்ள பாசத்தை அந்த உணர்வை என்னால கண்ட்ரோல் செய்யவும் முடியலை... நான் செய்றது தப்பா சரியா எதுவும் தெரியாம குழம்பிப் போய் இருக்கேன்டி" என தேம்பிக் கொண்டே உரைத்தாள் வாணி.



"நீ ஆஷிக்கை லவ் பண்றோமோனு நினைக்கிறியா வாணி??" - மஹா



"கண்டிப்பா இல்ல மஹா.. அவன் என்னோட க்ளோஸ் ப்ரண்ட்.. அது மட்டும் தான்.. என்னோட காதல் முழுக்க என்னைக் கட்டிக்கப் போகும் என் கணவருக்கு மட்டும் தான்.. அதுவுமே அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனுக்கு தான்" - என தன் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாணி உரைக்க,



"அவ்ளோ தான்.. சோ சிம்பிள்.. நீயே இவ்ளோ தெளிவா இருக்கும் போது என்னடா பிரச்சனை" எனக் மஹா பேசிக்கொண்டிருக்க,



"ஆஷிக் யாரயாவது பொண்ணை லவ் பண்றேனு உன் கிட்ட சொன்னா.. நீ என்னடி ரியாக்ட் செய்வ??" - வேணி



"நல்ல பொண்ணா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்... வீட்டுல அப்பா அம்மா மனசு கஷ்டப்படாம பேசி மேரேஜ் செஞ்சிக்கோனு சொல்வேன்... அவனுக்காக அந்த பொண்ணுக்கிட்ட போய் பேச சொன்னாலும் பேசுவேன் அம்மு" - வாணி



"இது தான் வாணி ப்ரண்ட்ஷிப்... பொண்ணுங்கனாலே நம்ம அன்பு வச்சிருக்கிறங்க கிட்ட கொஞ்சமா எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவோம்.. அந்த எதிரிபார்ப்பு தான் அவன் உன்னை கேர் பண்ணலை தெரிஞ்சதும் கோவமா அழுகையா வெளிபட்டுறுக்கு... எதுவும் எதிர்பார்க்காம அவன் உன்னை பாதுகாப்பாய் ஃபீல் பண்ண வச்சது உனக்கு அவன் மேல் பெரிய நல்ல ஃபீல் கொண்டு வந்திருக்கு.. அதான் அவனை பார்த்ததும் உன் கண்ணுல வர்ற ஒளி மின்னல் எல்லாம்.. அவன் உன்னை அப்படியே அக்சப்ட் பண்ணிக்கிட்டு பேசுறான்... அதனால அவனைப் பார்த்ததும் மனசுல உள்ளதெல்லாம் கொட்டுற... அவ்ளோ தான்" - வேணி



வாணிக்கு தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தி அவள் தோளில் கைப்போட்டு அமர்ந்து அவளை தேற்றிக்கொண்டிருந்தாள் வேணி.



தொடர்ந்தாள் மஹா...



"பொதுவாகவே ஒருத்தரை நம்ம மனசுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுனா அவங்க மேல நமக்கு இப்டி கேரிங் ஏற்படுறது,நம்மளை மீறி அவங்க மேல நாம அன்பு செலுத்துறது,

அவங்க நம்மளை முக்கியமா நினைக்கும்னு நினைக்கிறது... இதெல்லாம் நம்ம மனசு செய்யும்.

இது மனதின் இயல்பான செயல்பாடு.

என்ன நம்ம மனசுல அவங்களுக்கு ஒரு இடத்தைக் கொடுத்து வைக்கும் போது நம் மனசு இப்படி செயல்படும்.



உன் வாழ்நாள் பயணத்துல இந்த வயசுனு இல்ல எந்த வயசுலனாலும் ஆணோ பெண்ணோ இப்படி யாருக்காவது உன் மனசுல நீ இடம் கொடுத்தீனா மனசு அவங்க கிட்ட தன்னுடைய இந்த இயல்புல செயல்பட ஆரம்பிச்சிடும்.



பதினைந்து வயதிலிருந்து திருமணமாகிற வயது வரை இந்த மாதிரி மனதின் இயல்பு ஆப்போசிட் ஜெண்டர் கிட்ட வேலை செய்யும் போது அதை ப்ரெண்ட்ஷிப் நினைக்காம லவ்னு நினைச்சு காதலில் விழுந்திடுறவங்க தான் அதிகம் இப்ப..." - மஹா



"ஆனா அந்த ஏஜ்ல லவ்வும் வரும் தானே... எல்லாத்தையுமே ப்ரண்ட்ஷிப்னு நினைச்சிக்கிட்டுப் போக முடியாதுல" - வாணி



"ஹ்ம்ம் கண்டிப்பா லவ்வும் வரும்..

நம்ம மனசுல ஒருத்தருக்கு இடம் கொடுக்குறனால பாசம் வைக்கிறனால அது காதல் ஆகிடாது.. அது தோழனா அண்ணனா தம்பியா இப்படி எந்த மாதிரி ரிலேஷன்ஷிப்பா வேணாலும் இருக்கலாம்.



அது எப்ப லவ்னு தோணும்னா அவங்களை யாருக்காகவும் நம்மளால விட்டுக்கொடுக்க முடியாது... அவங்க இல்லாம நம்மளால வாழ முடியாதுனு எப்ப தோணுதோ அப்ப அது காதல்ங்கிற இடத்துல வந்திடும்...



இதுல நீ தெளிவா இருக்க வாணி... அப்பா அம்மா நம்ம மேல உள்ள அக்கறைல சொல்றாங்க... அப்பாக்கு புரியவை உன் வாழ்க்கைல மேரேஜ் அவங்க விருப்பப்படி தான் நடக்கும்.. ஆஷிக் என்னிக்குமே உனக்கு நண்பனா மட்டும் தான் இருப்பானு புரியவை.. அதுக்கப்புறம் உங்கப்பாவே நீ ஆஷிக்கிட்ட பழகவேண்டாம்னு சொல்ல மாட்டாரு.



அண்ட் ஆல்சோ யாருமே லைப் லாங் கூட வரப்போறதில்லை வாணி... எல்லாருமே பாஸிங் க்ளௌவ்ட்ஸ்(clouds) தான்... காலம் நம் மனசையும் பழசையும் மறக்க வைக்க வல்லமைக் கொண்டது... இந்த நாட்கள்லாம் ஸ்வீட் மெமரீஸா மட்டுமே மனசுல இருக்கும்.. அந்த சுவடு நம்ம மனசுல இனிமையை தரும்.. அவ்ளோ தான்"



ரொம்ப மொக்கை போட்டுடேனோ என நீர் அருந்திக் கொண்டே மஹா கேட்க,



"கண்டிப்பா இல்லடி... தெளிவா புரிய வச்சிட்டீங்க இரண்டு பேரும்... என் கில்டி ஃபீல்லாம் போய்டுச்சு.. நான் என்ன செய்யனும்ங்கிறதையும் புரிய வச்சிட்டீங்க.. உங்களை மாதிரி ப்ரண்ட்ஸ் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்" என சிறு சிரிப்புடன் கண்கள் மின்ன உரைத்தாள் வாணி.



"நடுராத்திரி பண்ணிரெண்டு மணி ஆகுதுடி.. நீங்க ஆத்து ஆத்துனு உரையாத்துனது போதும்.. லைட் ஆஃப் பண்ணுங்கடி தூங்கலாம்" என தூக்கக் கலகத்தில் கூறினாள் வேணி.



வாணியை தெளிவுப்படுத்திய மஹாவின் மனது தனக்கும் மதிக்குமான நட்பைப் பற்றிய ஆராய்ச்சியிலிறங்க, அதற்கு கிடைத்த பதிலில் தன் கட்டிலிலிருந்து பதறியெழுந்து அமர்ந்தாள் மஹா.



---



பத்து மாதங்களான நிலையில், வாணி வேணி ஆஷிக் ராஜேஷ் நால்வரும் ஒரே அலுவலகம் என்பதால் உண்ணும் நேரமும் மாலை பயணிக்கும் நேரமும் ஒன்றாய் செல்வர் அனைவரும். ஆஷிக்கிற்கு வேலை பளு அதிகமாயிருக்கும் சமயத்தில் இவர்களுடன் செல்லாமல் தனியாய் உண்ணவும் இரவு நேரம் தாமதமாய் கிளம்பவும் செய்வானவன். வாணி தன் குழப்பங்கள் குற்றயுணர்வுகளெல்லாம் களைந்து இயல்பான நட்புணர்வுடன் ஆஷிக்கிடம் பழகினாள். ப்ராஜக்ட்டில் தங்களின் பணியை கற்றுணர்ந்து சிறப்பாய் இயங்கினர் அனைவரும்.



தன் தந்தையிடம் ஆஷிக்கும் தனக்குமான நட்பை பற்றிக் கூறி அவரையும் தெளிய வைத்திருந்தாள் வாணி. அவருமே தற்பொழுது வாணி ஆஷிக்குடன் தோழமையாய் பழக அனுமதித்திருந்தார். அவர்களின் நட்பை புரிந்திருந்தாரவர்.



வாணி மற்றும் மஹா சென்னைக்கு இரயிலில் பயணம் செய்வது தங்களுக்கு வசதியாக இருப்பதாய் எண்ணியதால்,வாரயிறுதி நாட்களில் ஆஷிக்குடனான அவர்களின் பேருந்து பயணம் வெகுவாய் குறைந்திருந்தது. ஆம் அவர்கள் வாரயிறுதி நாட்களில் இரயிலில் பயணம் மேற்கொள்ள பேருந்தில் பயணித்தானிவன் அதுவே தனக்கு பிடித்திருப்பதாய் உரைத்து.





இவ்வாறாக நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்த வேளையில் ஓர்நாள் மாலை இளாவின் கைபேசிக்கு அழைத்திருந்தாள் வேணி. இரவு எட்டு மணி அளவில் அவள் அழைத்திருக்க,அவன் இன்னும் அலுவலகத்தை விட்டுக் கிளம்பாது ஆர்வமாய் வேலைப் பார்த்திருந்தான். அலைப்பேசியில் வேணியின் அழைப்பு என்றதும் அதை ஏற்று காதில் வைக்க,இளாவிற்கு கேட்டது வேணியின் அழுகைக்குரல்.



மறுப்பக்கத்தில் கேட்ட அவளின் அழுகைக்குரலில் பதட்டமடைந்த இளா,"என்னாச்சு அம்ஸ்... எதுக்கு அழுற??" எனக் கேட்க,



"நீ உடனே மடிவாலா போலீஸ் ஸ்டேஷன் வா" என அவள் அழுதுக்கொண்டே உரைக்க,



தன் இருக்கையை விட்டே எழுந்து விட்டானவன்,"போலீஸ் ஸ்டேஷன்கா??இந்த நேரத்துல அங்க எதுக்கு போன நீ??அங்கே என்ன பிரச்சனை??தனியாவா போய்ருகே நீ??லூசா நீ??" எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போக,



அங்கே இன்ஸ்பெக்டர் அவளை அழைத்ததாய் கான்ஸ்டபிள் கூற,



"நேர்ல வா...நான் எல்லாத்தையும் சொல்றேன்" என கைபேசியை வைத்து விட்டாளவள்.

--நெகிழ்தல் தொடரும்..
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8

துயரத்தில்
தோள் கொடுத்தாய்
தோழனாய்


துன்பத்தில் இன்பம்
உணரச்செய்தாய்
காதலனாய்

கான்ஸ்டபிளின் வார்த்தை இளாவிற்கும் அவளின் கைபேசி வழியாய் கேட்க,மீண்டும் மீண்டும் அவளின் எண்ணிற்கு அவன் முயற்சி செய்ய,அவனின் அழைப்பை ஏற்கவில்லை அவள்.



இளா வேலை செய்வது வைட்ஃபீல்டில் உள்ள அலுவலகத்தில்.மஹா வேணி வாணி தங்களின் பிஜியை இந்திரா நகரிலிருந்து மடிவாலாவிற்கு மாற்றி இரு மாதங்கள் தான் ஆகிறது.தற்போது அவர்கள் செல்லும் எலக்ட்ரானிச் சிட்டி அலுவலகத்திற்கு

மஹா செல்லும் பொம்மனஹல்லி அலுவலகத்திற்கும் இந்த இடம் மத்தியமாய் தோன்றியதால் அங்கேயே பிஜி பார்த்து தங்கினர் இவர்கள்.



இளா வைட்பீல்டிலிருந்து மடிவாலா வந்து சேர ஒரு மணி நேரமாகும் என்பதால்,ஆஷிகின் எண்ணிற்கு அழைத்து அவனிடம் விபரத்தைக் கூறிச் சென்று பார்க்கும்படி உரைத்தானவன்.



இளா தன் நண்பனின் பைக் வாங்கி அரை மணி நேரத்தில் அந்த காவல் நிலையம் வந்தடைந்தான்.



காவல் நிலையம் உள்ளே வாணி,வேணி,மஹா ஒரு மேஜையில் அமர்ந்திருக்க,ஆஷிக் அங்கிருந்த காவலரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான் இளா உள் நுழையும் போது.



இளாவைப் பார்த்ததும் அவனருகே சென்ற வேணி,"என்னோடது மஹாவோட லேப்டாப்லாம் காணோம்டா இளா" என வேதனைக் குரலில் அவள் கூற,



அவளின் கையைப் பற்றி வெளியேயுள்ள தோட்டத்தினருகே இழுத்துச் சென்றவன்,



"அறிவிருக்கா உனக்கு??படிச்சிருக்க தானே... புத்தி இல்ல??லேப்டாப் காணும்னு இந்த நேரத்திற்கு போலீஸ் ஸ்டேஷன் வந்திருக்க...இதுல உன்னோட லூசு ப்ரண்ட்ஸ வேற கூட கூட்டிட்டு வந்திருக்க... போன் பண்ணவ முழு விஷயத்தையும் சொல்லாம வேற போனை வச்சிட்ட... திரும்ப பண்ணாலும் எடுக்கலை... நான் என்னனு நினைக்கிறது... நான் என்னமோ ஏதோனு பதறிப் போய் செஞ்ச வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்... எனக்கு ஒரு போன் பண்ணிட்டு நான் வந்ததும் இங்கே வந்திருக்க வேண்டி தானே... உனக்கு ஏதாவது ஆச்சுனா... உன் அப்பா அம்மாக்கு நான் தானே பதில் சொல்லனும்.... இடியட்" என முகம் கோபத்தில் சிவக்க காரமான வார்த்தைகளால் வேணியை வசை மாரி பொழிந்துக் கொண்டிருந்தானவன்.



அவனின் கோபத்தின் மேல் இவள் கோபம் கொள்ள,"நீ போ.. எனக்கு ஒன்னும் ஹெல்ப் செய்ய வேண்டாம். நானே பார்த்துப்பேன்." என கண்ணில் விழத் தொடங்கிய நீரை கட்டுக்குள் கொண்டு வந்து வெறுமையான குரலில் அவளுரைக்க,



எவர் முன்னும் அழும் சுபாவம் இல்லாத வேணி,தன் அழுகையை கட்டுக்குள் கொண்டுவர பெரும்பாடுபடுவதைப் பார்த்தவன்,"நான் தானே இருக்கேன் கன்ட்ரோல் செய்யாம அழுதிடு அம்ஸ். நெஞ்சடைக்கப் போகுது" என இளாக் கூற,



"நீ எனக்கு யாரோ தான் போடா" என நா தழுதழுக்கச் சொன்னவள் அந்த இடத்தைவிட்டு நகரப் போக, இவன் அவளைத் தடுத்து நிறுத்த விழைந்த நேரம்,வாணி மஹா மற்றும் ஆஷிக் அவ்விடத்திற்கு வந்தனர்.



வேணி தன் விழியில் தேங்கி நின்ற நீரை துடைத்து விட்டு சோகமாய் நிற்க, மஹாவும் தன் லேப்டாப் தொலைந்த கவலையில் அதை மதியிடம் குறுஞ்செய்தியில் கூறிக்கொண்டிருக்க, அழைத்துவிட்டான் மதி உடனே மஹாவின் கைபேசிக்கு விஷயத்தை அறிந்துக்கொள்ள...



மதியிடம் பேசவென தள்ளிச்சென்று நின்றாள் மஹா..



இங்கே இளா,"தேங்க்ஸ்டா மச்சி!!! சொன்னதும் உடனே வந்ததுக்கு" என ஆஷிக்கிடம் கைகுலுக்கிக் கொண்டிருக்க,



"என்னது மச்சியா?? இது எப்போ?? நீங்க இரண்டு பேரும் எப்போ இன்ட்ரோ ஆனீங்க??" என வாணி கேட்க,



"அதெல்லாம் எப்பவோ ஆகிட்டோம்" எனச் சிரித்துக் கொண்டனர் இருவரும்.



"ஒரு நாள் வைட்ஃபீல்ட் ஆபிஸ்க்கு என் ப்ராஜக்ட் விஷயமா போக வேண்டியிருந்துச்சு கேபி. அப்ப அம்மு தான் இளா கான்டேக்ட் கொடுத்து அட்ரஸ் விசாரிச்சிக்க சொன்னா. அப்படி தான் பழக்கம்" - ஆஷிக்



"ஓ ஓகே. பசங்க தான் இன்ட்ரோ ஆன அடுத்த செகண்ட் மச்சினு பேசிப்பீங்களே. சோ நீங்க இப்டி கூப்டுகிறது அதிசயம் இல்லை தான்" - வாணி



இவர்களின் இந்த உரையாடல்களை வெற்றுப் பார்வையுடன் கேட்டிருந்த வேணி தன் தந்தையிடம் அலைபேசியில் பேசவென நகர்ந்துச் செல்ல,



"போலீஸ் என்ன சொன்னாங்க மச்சி?? லேப்டாப் எப்படி காணாம போனது வாணி??" என வினவினான் இளா.



"ரூம் கிளீனிங்காக ரூம் சாவியை வெளியே வச்சிட்டு போவோம்... இந்த பொண்ணுங்க லேப்டாப் பேகை அவங்க கட்டில்கிட்ட அப்படியே வச்சிருந்திருக்காங்க...ஆனா அப்படி தினமும் வச்சிட்டு போவோம். இன்னிக்கு புது ஆளை க்ளீன் பண்ண சொல்லிருங்காங்க போல...அவங்க தான் எடுத்திருக்கனும்னு எங்க யூகம்... அந்த பிஜி ஓனர் கிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சோம். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது உங்க உடைமைகள் நீங்க தான் சேஃபா வச்சிகணும்னு சொல்லிட்டு போய்டாரு. அதான் போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்க வந்தோம்" எனக் கவலையாய் வாணி உரைக்க,



"மச்சி போலீஸ்லாம் வேலைக்கு ஆகாதுடா. அவங்க இதெல்லாம் ஒரு விஷயமாவே மதிக்கமாட்டேங்கிறாங்க. இந்நேரம் அந்த லேப்டாப்பை பார்ட் பார்ட்டா பிரிச்சி வித்திருப்பாங்க... தேடுறதும் வேஸ்ட் தானு சொல்றாங்கடா. நாளைக்கு பிஜில லேடி போலீஸ் வச்சி எல்லா ரூமையும் செக் பண்ண சொல்றோம்னு சொல்லிருங்காங்க... பார்ப்போம் நாளைக்கு பிஜில கிடைச்சா உண்டு... இல்லைனா லேப்டாப் கிடைக்க வாய்ப்பே கிடையாது" ஆஷிக் தான் போலீசிடம் பேசியவற்றைக் கூறினான்.



இதைக் கேட்டு பெருமூச்சுவிட்ட இளா,"அம்ஸ் ரொம்ப கவலையா தெரியுறா. நான் வேற கொஞ்சம் கோவத்துல திட்டிட்டேன். நான் அவகிட்ட ஒரு டென் மினிட்ஸ் பேசி சமாதானம் பண்ணிட்டு பிஜிக்கு கூட்டிட்டு வரேன். நீங்க வேணா கிளம்புங்க" என இளா கூறினான்.



அங்கு போனில் மஹா மதியிடம் தன் லேப்டாப் தொலைந்ததைக் கூறிக்கண்ணீர் வடிக்க, அவன் அவளுக்கேற்றவாறு பேசி சிறிது சிரிக்க வைத்து சமன்படுத்தியிருந்தான் அவளை.



காவல் நிலையத்திலிருந்து இவர்களின் பிஜி நடந்து செல்லும் தூரமேயிருக்க,மஹா,வாணி,ஆஷிக் தாங்கள் பிஜிக்கு செல்வதாய் வேணியிடம் உரைத்து நடக்கவாரம்பிக்க,



"ஹே என்னைய விட்டு போறீங்க??நானும் வரேன்" என அவள் நடக்கவாரம்பிக்க,



இளா அவளை தடுத்து நிறுத்தி,"நீங்க போங்க ப்ரண்ட்ஸ். நான் அவளை கூட்டிட்டு வரேன்" என அவர்களை போகச் சொல்லிவிட்டு வேணியை தன் பைக்கில் ஏறுமாறு கூறினானவன்.



அவர்கள் வழமையாய் செல்லும் தமிழ்நாடு ஹோட்டலில் நிறுத்தியவன்,அங்கே ஒரு மேஜையில் இருவரும் அமர, அவளுக்கு ஓர் பன்னீர் மசாலா தோசையும் தனக்கு இட்லியும் கூறிவிட்டு அவளிடம் திரும்பினான்.



"என்னைக் கேட்காம நீ எப்படி ஆர்டர் செய்யலாம். எனக்கு ஒன்னும் பசிக்கலை. நான் சாப்பிட மாட்டேன்" என கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாளவள்.



"அம்ஸ்,நீ பசி தாங்க மாட்டனு எனக்கு தெரியும். அதுவும் இந்த தோசை உனக்கு ரொம்ப பிடிக்கும்னும் எனக்கு தெரியும். வீம்பு பண்ணாம சாப்பிடு" என இளாக் கூற,



"நீ ஆர்டர் பண்ணதை நான் ஏன்டா சாப்பிடனும். நான் சாப்பிட மாட்டேன். போ" மேஜை மீதிருந்த தோசையை தொட்டுக்கூடப் பார்காமல் அவனிடம் அவள் சண்டையிட,



அவளை முறைத்துக் கொண்டே தன் கைபேசியை எடுத்தவன்,யாரோக்கோ

அழைத்துவிட்டு தன் கைபேசியை காதில் வைக்க,



"யாருக்கு இவன் போன் பண்றான்" என மனதில் எண்ணிக்கொண்டே அவனை இவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க,



மறுமுனையில் அழைப்பை ஏற்றதும்,

"அங்கிள் நான் அம்ஸ் கூட தான் இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க" என ஏதேதோ பேசிக்கொண்டிருக்க



அவனின் அங்கிள் என்ற விளிப்பிலேயே தன் தந்தைக்கு தான் அழைத்திருக்கிறான் என்பதை உணர்ந்தவள்,திடுக்கிட்டு "அப்பாகிட்ட எதுவும் சொல்லாதே" என சைகை செய்தாளவள்.



அவளின் சைகை பாஷயை கண்டுகொள்ளாதவன் போல் அவளின் தந்தையிடம்,"அங்கிள்,வேணி ரொம்ப கவலைப்பட்டு சாப்பிட மாட்டேனு அடம் பிடிக்கிறா... நீங்க சொல்லுங்க அங்கிள். நான் எவ்ளவோ சொல்லிட்டேன் கேட்க மாட்டேங்கிறா" என இளா பேசிக்கொண்டிருக்க,



அவனின் இந்த செயலில் தன் தலையில் அடித்துக் கொண்டாள் வேணி.



"இந்தா அங்கிள் உங்க கிட்ட பேசனுமாம்" என இளா உதட்டில் மறைத்த சிரிப்புடன் கைபேசியை வேணியிடம் கொடுக்க,



"இருடா உன்னை கவனிச்சிக்கிறேன்" என மனதில் அவனை கருவிக்கொண்டே கைபேசியைப் பெற்றவள்,"சரிப்பா ஓகேப்பா" என தன் தந்தைக் கூறியனைத்துக்கும் மறுமொழி பேசாது சரி சரியெனக் கூறி போனை வைத்தாளவள்.



"அறிவிருக்காடா உனக்கு??" - வேணி



"எனக்கு அறிவு இருக்கா இல்லையானு அப்புறம் செக் பண்ணலாம். தோசை ஆறுது பார் சாப்பிடு" - இளா



"நீயும் சாப்பிட்டு தொல" என இளாவிடம் கடுப்பாய் உரைத்தவள் தோசையை பிய்த்து சாப்பிடவாரம்பித்தாள்.



"எங்கப்பாக்கு லேப்டாப் காணாம போச்சிங்கிறது கூட பெரிய விஷயமா தெரியாது. அவங்க மனசு கஷ்டபடாது. நான் ஃபீல் பண்ணி சாப்பிடாம இருக்கேன்ங்கிறது தான் பெரிசா தெரியும்... மனசு கஷ்ட்ப்படுவாங்க" என சாப்பிட்டுக் கொண்டே இளாவை பார்த்து அவள் கூற,



"அதான் தெரியுமே" - இளா



"அப்புறம் ஏன் போன் பண்ணி அப்பாவ கஷ்டபடுத்துற" - வேணி



"இதோ இப்படி உன்னை சாப்பிட வைக்க தான் அம்ஸ். எனக்கும் என்ன அங்கிளை கஷ்டப்படுத்தனும்னு வேண்டுதலா... நீ தான் புரிஞ்சிக்காம நடந்துக்குற" - இளா



"யார்டா புரிஞ்சிக்காம நடந்துக்குறது. நீ வந்ததும் மனசு எவ்ளோ நிம்மதியாச்சு தெரியுமா... நான் தான் யார் முன்னாடியும் அழ மாட்டேனு உனக்கு தெரியும்ல... அவ்ளோ நேரம் அடக்கி வச்சிருந்த அழுகையை உன் கிட்ட சொல்லி கொட்டலாமனு வந்தா... அப்படி திட்டுற... எவ்ளோ கஷ்டமா போச்சு தெரியுமா" மீண்டும் கண்ணில் துளிர்த்த நீரை விழிகளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு வேணி பேச,



"சாரிப்பா...ரியலி சாரி அம்ஸ்... கோபத்துல அவ்ட் ஆஃப் மை மைண்ட் அப்படி வந்துடுச்சுப்பா... உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு நான் எவ்ளோ பயந்துப் போய் துடிச்சுப் போய் வந்தேன் தெரியுமா... எல்லாம் உன் மேல உள்ள அக்கறை தான்பா... ஃபிளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மீ அம்ஸ்" என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு இளா உரைக்க,



"சரி சரி அதை விடு. நாலு இட்லி எப்படிடா உனக்கு போதும். வேற ஆர்டர் பண்ணு" - வேணி



இருவரும் உண்டு முடிக்கும் போது சமாதானமாகி தங்களின் வழமையான கிண்டல் கேலிப் பேச்சில் இறங்கியிருந்தனர்.



வேணியை பிஜியில் விட்டு தன்னறைக்கு சென்றான் இளா.



இளாவுடன் இருந்தவரை லேசான மனநிலையில் இருந்தவளின் மனதில் பாரமேறிக் கொண்டதது தங்களின் பிஜி அறைக்கு வந்ததும்.



மஹாவும் வாணியும் அவரவர் கட்டிலில் படுத்திருக்க,"இரண்டு பேரும் சாப்பிட்டீங்களாடி" எனக் கேட்டுக்கொண்டே தன்னை ரிப்பெரஷஸ் செய்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.



சாப்பிட்டோம் என இருவரும் கூற,"லேப்டாப் போனதை விட அதுல இருக்க ஃபோட்டோஸ் எல்லாம் போனது தான்டி ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம பெங்களுர் வந்ததிலருந்து இந்த எட்டு மாசம் நம்ம போன இடம் வந்த இடம்னு போட்டோஸ் எடுத்த எல்லாத்தையுமே சேவ் பண்ணி வச்சிருந்தேன். லாஸ்ட் வீக்கி தான் டேட் வைஸ் தனி தனி போல்ட்ர் போட்டு சேவ் பண்ணி வச்சேன். பேக் அப் கூட இல்லைடி அந்த போடோஸ்க்குலாம். இனி இந்த மாதிரி ரொம்ப முக்கியமான போட்டோஸ் மெமரிஸ் நிறஞ்ச போட்டோஸ் பேக் அப் எடுத்து வச்சிகனும்டி" என கவலையாய் வேணி உரைக்க,



ஆமாம் என ஆமோதித்தனர் இருவரும்.



"ஆமா மதி என்ன சொன்னாங்கடி??" வேணிக் கேட்க,



"மதி முதல்ல செம்ம திட்டு... ஏன் தனியா போலீஸ் ஸ்டேஷன் போனீங்க... அதுவும் நைட் டைம்ல போனீங்கனு... அப்புறம் நான் ரொம்ப ஃபல் பண்ணவும் சமாதானப்படுத்தினான்... அவனும் லேப்டாப் தொலைஞ்சதுக்குலாம் சீரியஸா ஸ்டெப் எடுக்க மாட்டாங்க. கிடைக்குறது கஷ்டம் தான்னு சொன்னான்" - மஹா



"ஹ்ம்ம்ம் இளாக்கு செம்ம கோவம் நான் தனியா போலீஸ் ஸ்டேஷன் வந்ததுல. நான் வேற கம்ப்ளைண்ட் கொடுக்குற அவசரத்துல விஷயத்தை சொல்லாம போலீஸ் ஸ்டேஷன் வானு மட்டும் சொல்லிட்டேன். பாவம் ரொம்ப பதறி பயந்துட்டான்."



"அததான்டி நானும் சொன்னேன். போலீஸ் ஸ்டேஷன் தனியா போக வேண்டாம். காலைலல பாத்துக்கலாம்னு சொன்னேன். எங்கே கேட்டீங்க?? உன்னோட லேப்டாப்பா இருந்தா இப்படி தான் சொல்லுவியானு என்னைய கேட்டுட்டீங்கனா நான் என்ன செய்ய?? அதான் ரொம்ப அழுத்தம் கொடுக்கலை... உங்களை தனியா அனுப்பவும் மனசில்லை... அதான் நானும் கூட வந்தேன். என் கிட்ட லேப்டாப் இல்லங்கிறனால நான் தப்பிச்சேன். இல்லனா என் நிலைமையும் உங்களைப் போல தானே ஆகிருக்கும்" - வாணி



"சே சே அப்டிலாம் சொல்லிருக்க மாட்டோம் வாணி. அந்த ஓனர் அப்டி விட்டேத்தியா பதில் சொல்லவும்,ஏதோ அந்த ஓனர் மேல உள்ள கோபத்துல கம்ப்ளைண்ட் கொடுத்தே ஆகனும்னு தோணுச்சு. அதான் எதையும் யோசிக்காம போய்ட்டோம்" என மஹா உரைத்தாள்.



"சரிடி நாளைக்கு எல்லாரும் ஆபிஸ்க்கு லீவ் போடுவோம். அதான் போலீஸ் செக்கிங்கு வரேனு சொல்லிருக்காங்கல. நாம அப்ப இங்க இருந்தா தானே கண்டுபிடிக்க முடியும்" என வாணிக் கூற,



"நீ போ வாணி. நாங்க இரண்டு பேரும் பார்த்துக்கிறோம்" என மஹாக் கூற,



"என்னடி உங்களுக்கு ஒரு பிரச்சனைனா அது எனக்கில்லையா... நானும் இருக்கேன்... நாளைக்கு அந்த போலீஸ் என்ன தான் சொல்றாங்கனு பார்ப்போம்" என வாணி உரைத்தாள்.



"நம்ம வாடகைக்கு வீடு பார்த்து மாத்தி போய்டலாமாப்பா?? எனக்கு முதல்ல இருந்தே பிஜி பிடிக்கலை... இந்த இன்சிடண்ட் அப்புறம் இதே பிஜில இருக்கவோ இல்ல வேற பிஜி மாறவோ மனசில்லை... வேற வீடு பார்த்து போய்டலாம்ப்பா.... நம்மலே சமைச்சு சாப்பிடலாம்... நம்ம அப்பா அம்மா வந்தா நம்ம கூடவே தங்க வச்சிக்கலாம். என்ன சொல்றீங்க இரண்டு பேரும்??" என வேணிக் கேட்க,



"எனக்கு எதுனாலும் ஓகேடி. உங்க கூட இருந்தாப் போதும்" என வாணி உரைக்க,



"எனக்கும் நோ ப்ராப்ளம்டி. வேலைகள் மட்டும் நமக்குள்ள சண்டைப் போட்டுக்காம கரெக்ட்டா பிரிச்சி வச்சி செஞ்சிக்கிடனும்" என மஹாக் கூற



"அதெல்லாம் நம்ம மூனு பேருக்குள்ள என்ன ப்ரச்சனை வந்துடப்போகுது... புதுசா யாராவது நம்மக் கூட சேர்ந்தா தான் ப்ரச்சனை... அது பார்த்துக்கலாம்... சரிடி எல்லாரும் தூங்குவோம்" என பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் வாணி.



மறுநாள் அனைவரின் அறையையும் பரிசோதித்து விட்டு எங்கும் இவர்களின் லேப்டாப் இல்லையென கூறிவிட்டார்கள்.



அந்த காவலர்கள் மேம்போக்காய் பெயருக்காக சோதனை செய்ததுப் போல் தோன்றியது இந்த மூன்று பெண்களுக்கும்.



பின் மாலை தான் தெரிந்தது பிஜியின் பெயர் கெட்டுவிடக் கூடாதென அந்த பிஜி ஓனர் போலீஸ்க்கு லஞ்சம் கொடுத்துள்ளாரென்றும் இந்த பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாமென போலீஸிடம் அந்த ஏரியாவின் எம்எல்ஏ மூலம் பேச வைத்துள்ளாரென்றும் தெரிந்தது.



பின் அங்கிருக்க மனமில்லாமல் தேடி அலைந்து ஒரு வாரத்தில் மடிவாலா ஏரியாவிலேயே ஒரு வீடு வாடகைக்கு தேடிப் பிடித்து குடிபுகுந்தனர் அம்மூன்று பெண்களும்.



சமையல் செய்யும் பாத்திரங்கள் அவரவர் வீட்டில் உபயோகித்த பொருட்களாய் என்னென்ன பாத்திரங்கள் வேண்டுமென மூவருக்குமாக பிரித்தெடுத்து அவர்கள் வீட்டிலிருந்தேக் கொண்டு வந்தனர்.



எரிவாயு இணைப்பு,குட்டி கலைஞர் தொலைக்காட்சி,அடுப்பு,கேபிள் இணைப்பு என அனைத்தையும் அங்கேயே வீட்டு உரிமையாளரிடம் பேசி அரேஞ்ச் செய்துக் கொண்டனர்.



தரை மெத்தை மூவருக்குமாக வாங்கிக்கொண்டனர்.



குடும்பம் நடத்தும் அளவு அவ்வீட்டை தயார் செய்தனர் அம்மூன்று பெண்களும்.



மூவருமாக தங்களுக்குத் தெரிந்த சமையலை செய்து உண்டு வீட்டை சுத்தம் செய்து பாதுக்காத்து என பொறுப்பாகவும் அதே சமயம்



வாரயிறுதி நாட்களில் தங்களின் ஊர் செல்லாமல் இருக்கும் வேளைகளில் இரவு வெகு நேரம் அரட்டை,அந்தாக்ஷரி,படம் பார்ப்பது என மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் தோழிகளுடன் சேர்ந்து வாழும் வாழ்வை மூவருமே இன்பமாய் ரசித்து வாழ்ந்தனர்.



அவர்களின் இன்ப நினைவுகள் பலவும் சுமந்ததாய், அவர்களின் நட்புக்கோர் ஓர் நினைவுச் சின்னமாய் அமைந்தது அவ்வீடு அவர்களின் வாழ்வில்.
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ்வாறாக அலுவலகத்தில் வேலை ஒருப்பக்கம் வீட்டில் வேலை ஒருப்பக்கம் என இவர்களின் நாட்கள் பறந்துச் செல்ல,ஒரு நாள் மதிய வேளை வாணியும் வேணியும் தங்களின் அலுவலக கேண்டீனில் அமர்ந்துக் கொண்டு மறுநாள் வரவிருக்கும் மஹாவின் பிறந்தநாளுக்கான இன்ப அதிர்ச்சி திட்டம்தீட்டிக் கொண்டிருந்தனர்.



இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தச் சமயம் வேணியின் தந்தை நெஞ்சு வலியால் மருத்துவமனை சென்றிருப்பதாக வேணிக்கு ஊரிலிருந்து அவளின் அன்னை தொலைப்பேசியில் உரைக்க,உடனே தான் ஊருக்கு கிளம்புவதாய் உரைத்தாளவள்.



இதையறிந்த இளங்கோ,அவளை தனியே அனுப்ப மனமில்லாதவன் தானும் அவளுடன் வருவதாய் உரைத்து இருவருமாய் பயணப்பட்டனர் வேணியின் ஊருக்கு.



மாலைப்பொழுது தங்களின் வீட்டிற்கு வந்ததும் வாணியின் மூலம் இதனை அறிந்த மஹா,வேணியின் கைப்பேசிக்கு அழைத்து அவளின் தந்தை பற்றி நலம் விசாரித்தாளவள்.



பேருந்தில் ஊருக்கு சென்றிருந்த வேணி,மஹாவின் அழைப்பினை ஏற்றவள்,"சாதாரண வலி தானாம்டி... நான் தான் ரொம்ப பயந்துட்டேன்... இரண்டு நாளா மைல்ட்டா நெஞ்சுல வலி இருந்துட்டே இருந்திருக்கு அப்பாக்கு... இன்னிக்கு எதுக்கும் டாக்டர்கிட்ட காமிக்கலாம்னு அம்மாகிட்ட சொல்லிருக்காங்க... அம்மா நெஞ்சு வலினு சொன்னதும் பயந்து போன் பண்ணி எனக்குச் சொல்ல... நான் நெஞ்சு வலிங்கிற ஒரு வார்த்தைய பிடிச்சிக்கிட்டு கிளம்பிட்டேன்... டாக்டரைப் பார்த்தாங்கலாம்.... ஈசிஜி எக்கோ டெஸ்ட்லாம் எடுத்து பார்த்தாங்கலாம். இந்த வலி ஹார்ட் அட்டாக் லாம் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்கலாம். செரிமானப் பிரச்சனையாக் கூட இருக்கலாம்னு மாத்திரைக் குடுத்திருக்காங்கலாம்... மாத்திரைப் போட்டும் வலி இருந்தா திரும்ப வர சொல்லிருக்காங்க... இருந்தாலும் அப்பாவை ஒரு தடவை நேர்ல பார்த்தா தான் எனக்கு மனசுக்கு நிம்மதியாகும்டி" என அனைத்தையும் சொல்லி முடித்தவள், மஹாவின் பிறந்தநாளிற்கு அட்வான்ஸ் வாழ்த்தையும் கூறினாள் வேணி.



வேணிக்கு நன்றியுரைத்து தந்தையை நலம் விசாரித்ததாய் கூறும்படி உரைத்து போனை வைத்துவிட்டாள் மஹா.



இங்கே வேணியினருகில் அமர்ந்திருந்த இளா,"அப்பாக்கு தான் ஒன்னும் இல்லைல. அப்புறம் ஏன் சோகமா முகத்தை வச்சிருக்க??" என இளாக் கேட்க,



"உனக்கு நியாபகம் இருக்காடா?? நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும் போது,அப்பாவுடைய ஃப்ரண்ட் ஒருத்தர் அவருடைய பையனுக்கு என்னை பொண்ணு கேட்டாருனு சொன்னேனே" - வேணி



"ஆமா... அதுக்கென்ன இப்போ??" - இளா



"அப்பவே அப்பா அவங்களுக்கு உடம்புக்கு எதுவும் வரதுக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் செஞ்சி வச்சிடனும்னு நினைச்சாங்க... அக்காவுக்கு வேற அப்ப தான் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியிருந்தது... அதனால வரன் வரும் போதே எனக்கும் செஞ்சிடலாம்னு நினைச்சாங்க... அதே சமயம் எனக்கு வேலைக் கிடைக்கவும்,நான் வேலைப் பார்க்கனும்னு ஆசைப்படுறதை அப்பாகிட்ட சொல்லவும்... அப்பா இப்போதைக்கு அவளுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்ல அந்த வரன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என இவள் கவலையாய் கூறிக்கொண்டிருந்த வேளையில் குறட்டை சத்தம் கேட்க, இவள் திரும்பி இளாவை நோக்க, ஆழ்ந்த நித்திரையில் இருந்தானவன்.



"டேய் நான் இங்க என்ன தாலாட்டா பாடிக்கிட்டு இருக்கேன்" என அவன் மண்டையில் ஒரு குட்டு வைத்து அவனின் தூக்கத்தைக் களைக்க,



ஆஆஆஆ வென அலறிக்கொண்டு அவன் எழ,



"டேய் கத்தாதடா... மொத்த பஸ்ல உள்ள ஆளுங்க எல்லாரும் நம்மளைத் தான் பார்க்குறாங்க" என வேணிக்கூற,



"ம்ப்ச் இப்ப எதுக்கு என்னை எழுப்பின??" என எரிச்சலாய் இளாக் கேட்க,



"எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க" என கோபத்தில் வேணி உரைக்க,



"இப்ப என்ன இதை காரணம் காட்டி உங்கப்பா உனக்கு கல்யாணம் செய்றது பத்தி பேசுவாருனு தானே ஃபீல் பண்ற?? கல்யாணம் பண்ணுக்கோ... இதுல என்ன கஷ்டம் உனக்கு. அவ அவன் வீட்டுல நம்மளாக் கேட்டாக் கூட மேரஜ் செய்து வைக்க மாட்டேங்கிறாங்களேனு புலம்புறான். உங்க வீட்டில் தானா மேரேஜ் செஞ்சி வைக்கிறேனு சொல்றாங்க.... பண்ணுவியா... அதைவிட்டுட்டு... என் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு" எனக்கூறி மீண்டும் உறக்கத்திற்கு போனானவன்.



"போடா கோவக்காய்" என அவனை வசைப்பாடியவள் திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.



அன்றிரவு வேணியின் வீட்டிற்கு அவளுடன் சென்றவன்,வேணியின் தந்தையிடம் நலம் விசாரித்து விட்டு கிளம்ப எத்தனிக்க,இரவு வெகு நேரமாகியதால் அன்றிரவு அங்கேயே தங்கி விட்டு காலை அவனின் வீட்டிற்கு செல்லுமாறு வேணியின் தந்தை இளாவை வற்புறுத்த அங்கேயே தங்கி விட்டானவன்.



அன்று நள்ளிரவு வாணி வேணியுடன் தான் செய்த திட்டத்தின்படி ஏற்பாடுகள் செய்து மஹாவை இன்ப அதிர்ச்சிக்குள்ளாகக் காத்திருந்தாள்.

ஆனால் இவளின் திட்டத்தினைத் தாண்டிய ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தானவன்.


நெகிழ்தல் தொடரும்....
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9:

தோழமையின் உன்னதம்
அறிந்தேன் உன் நட்பில்..

காதலுற்றோரின்
அவஸ்தை உணர்ந்தேன்
உன் காதலில்...


அன்றிரவு 11.50 மணிக்கு


மஹாவும் வாணியும் அரட்டை அடித்துக் கொண்டு தொலைக்காட்சியைக் கண்டு களித்துக் கொண்டிருக்க, மஹாவின் மனம் மதியின் முதல் வாழ்த்துக்காகக் காத்திருந்தது.



சரியாய் பன்னிரெண்டு மணிக்கு மஹாவின் கைபேசி ஒலிர,அந்த அழைப்பெடுத்து அவள் ஹெலோ என்றுரைக்கும் முன்னமே அவளை கீழே வருமாறு பணித்திருந்தான் மதி.



மதியின் பேச்சில் அதிர்ந்தவள்,"என்ன மதி ஆன்லைன்ல கேக் ஆர்டர் பண்ணிருக்கிய??" என்றிவள் கேட்க,



மறுப்பக்கத்திலிருந்து "கேள்வி கேட்காம கீழ கேட்டுக்கு வெளில வா" என்றுரைத்தான் மதி.



வாணியிடம் கூறிவிட்டு மஹா கீழே சென்றுப் பார்க்க, அங்கே அவளுக்காக கையில் ஓர் கேக்குடனும் பூங்கொத்துடனும் முகம் நிறைத்த புன்னகையுடன் காத்திருத்தான் மதி.



"ஹேய் மதிஈஈஈஈஈஈ" அவளின் குதூகலமான இந்த அழைப்பிலேயே அவளின் அதிரச்சியில் ஒளிந்திருந்த சந்தோஷம் பூரிப்பு அனைத்தையும் அறிந்துக் கொண்டானவன்.



"டேய் ஹைதராபாத்ல இருந்து வந்தியாடா இதுக்காக??" அதே அதிர்ச்சியின் விளிம்பில் அவள் கேட்க,



"ம்ப்ச் அதெல்லாம் அப்புறம் பேசலாம். வா கேக் கட் பண்ணு முதல்ல... ஆமா வாணி எங்கே?? அவங்களையும் கூப்பிடு" என்றிவன் கூற,



அவள் சென்று வாணியை அழைத்து வர, நடுத்தெருவில் ரோட்டில் ஒரு சிறு பென்ச் வைத்து அதில் கேக்கை வைத்து வாணியும் மதியும் பிறந்தநாள் வாழ்த்து பாட கேக் வெட்டினாள் மஹா.



அவள் வெட்டிய மறுநொடி கேக் சிறிது எடுத்து அவள் வாயில் ஊட்டச் சென்றவன் அவள் முகம் முழுவதும் அப்பியிருந்தான்.



மஹா முதலில் திகைத்து விழித்து நடந்ததை கணித்த நொடி அவன் மீது கேக் பூசவென அக்கேக்கை நோக்கி அவள் கை நீட்ட,மீதமிருந்த கேக்கை வாணியிடம் கொடுத்து அவர்களின் அறைக்கு எடுத்துச் செல்லமாறு வாணியை விரட்டினானவன்.



வாணி அக்கேக்குடன் தங்களின் அறைக்குச் செல்ல,"அந்த கேக் இல்லனா என்னடா?? அதான் என் முகம் முழுக்க கேக் இருக்கே... இன்னிக்கு உன் ஃபேஸ்ல கேக் பூசாம விடுறதா இல்லையென சவால் விட்டவளாக அவனை துரத்த தங்களின் தெருவிலேயே குறுக்கும் நெடுக்குமாய் ஓடினர் இருவரும்.



சரியாய் மஹா மதியின் கையை பற்றவிருந்த சமயம் மழை பெரும் தளியாய் முகத்தில் விழ,ஏற்கனவே அவள் முகத்திலிருந்த கேக் மழைத்துளிப்பட்டு கரைந்து அவளின் கவனத்தை திசை திருப்ப முகத்தை துடைத்துக் கொண்டு அவ்விடத்திலேயே அவள் நிற்க,



"என்ன உன் தோல்வியை ஒத்துக்கிறியா மஹா??" என மதி அவளை சீண்ட, அவளும் சீறிக்கொண்டு அவனைத் துரத்துவதற்கு ஓட,



அதற்குள் தெருவில் தேங்கி நின்ற தண்ணீர் அவளின் கால்களை சற்று சறுக்கிவிட, அதில் விழப் பார்த்தவளை,



"ஹே பார்த்து மஹா" என அவளின் அருகில் ஓடி வந்து அவள் கையை இவன் பற்றிக்கொள்ள, அவனின் இரு தோள்களையும் அழுத்தமாய் பற்றி கால்களை அழுத்தி நின்றாள் மஹா.



மறு நிமிடம் எதையும் யோசியாது,"மாட்டுனியா??" என்ற குதூகலமாய் துள்ளிக் குதித்து சிரித்தவாறு தன் முகத்தில் மழை நீரால் கரைத்ததுப் போக மீதமிருந்த கேக்கை அவனின் முகத்தில் தடவினாள் மஹா.



தன் தோள்களை பற்றி அவள் குதித்ததில் மீண்டும் அவள் தரையில் வழுக்கிடுவாளோ என்று பயந்தவன்,

"கேர்புல் மஹா... விழுந்துட போற" என்று கூறியவாறு அவளின் இருகைகளையும் தன் கைகளுக்குள் பொதிந்து அழுத்தமாய் பற்றிக்கொண்டான்.



அவனின் இச்செயலில் தன் மீதுள்ள அவனின் அக்கறையில் அவன் முகத்தை நேசமாய் பார்த்தவள்,"நீயே என் கணவனாய் வந்துடேன் மதி... உன்னைத் தவிர வேற யாராலயும் என்னைய இவ்ளோ கேரிங்கா பார்த்துக்க முடியாதுடா" அவளையறியாமல் அவளின் மனதிற்குள்ளேயே இவ்வெண்ணம் தோன்ற,



தன் முகத்தை நோக்கிய அவளின் முகத்தில் தோன்றிய பாசம்,ஏக்கம் என்ற பல விதமான உணர்வுகளில்,"இந்த நிமிஷம் உன் மனசுல நீ என்ன நினைக்கிறியோ அடுத்த வருட உன் பிறந்தநாளுக்குள்ள அது நிறைவேற மனசார வாழ்த்துறேன் குட்டிம்மா" என மதி வாழ்த்துரை வழங்க,



அவனின் வாழ்த்தில் வியந்தவளின் மனம் அவனின் குட்டிம்மா என்ற அழைப்பையும் கண்டு கொள்ளாது விழி விரிய அவனை நோக்க,

இன்னுமே இருவரும் மற்றவர் கரங்களை கோர்த்தப்படி நேருக்கு நேராய் நின்றிருக்க,



மலர் தூரலாய் வானம் மழை பொழிந்து கொண்டிருக்க,

"உன்னோடு வாழாத வாழ்வென்ன
வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது"

மஹாவின் மைண்ட்வாய்ஸில் இப்பாடல் உலாவர,

"என்ன மஹா... அப்படி பார்க்கிற?? கண்டிப்பா அடுத்த வருஷம் உன்னோட விஷ் நடந்துச்சானு சொல்லனும். நடந்துச்சுனா கண்டிப்பா எனக்கு டிரீட் தரணும்... என்ன ஓகே வா" என மதி அவளை வம்பிழுத்து நடப்புக்கு கொண்டு வர,



"இவன் நம்ம என்ன நினைச்சோம்னு தெரிஞ்சே வாழ்த்தினானா?? இல்ல தெரியாம பேசுறானா?? குழப்புறானே" என்றெண்ணியவாறே,



"பார்ப்போம் பார்ப்போம் அதெல்லாம் நடக்கும் போது பார்ப்போம்" என முகத்தை மழைத்துளி விழும் விதமாய் தூக்கிக் காண்பித்துக் கூறினாள் மஹா.



"இவ்ளோ நேரம் என்ன செய்றாங்க இவங்க" என்றெண்ணியவாறே பால்கனி வந்து வாணி வெளியேப் பார்க்க,



தங்களின் வீட்டிலிருந்து சற்று தள்ளி நின்று கைகளை கோர்த்துக் கொண்டு பேசி நின்றவர்களைக் கண்டவள்,



"இவங்களை பார்த்து ப்ரண்ட்ஸ்னு சொன்னா எவனாவது நம்புவான்??? நானே இப்ப தான் ப்ரண்ட்ஸ் ங்கிற விஷயத்துலயே கொஞ்சம் தெளிஞ்சிருக்கேன். இதுல இவங்களை நான் என்னனு நினைக்கிறது?? என் ப்ரண்ட நானே சந்தேகப்படுற மாதிரி ஆகாதா??" எனத் தனக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வந்தவளாய்," வாணி, அவங்க ப்ரண்ட்ஸ் தான்... நீ தான் தப்பு தப்பா நினைக்குற" எனக் கூறிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.



"போதும் மஹா. ரொம்ப நேரம் மழைல நிக்கற ஏதும் உடும்புக்கு வந்துடப் போகுது... நீ நாளைக்கு ஆபீஸ்க்கு லீவ் போடுற... காலைல ரெடியா இரு... நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்... நாளை முழு நாள் என் கூட தான் ஸ்பெண்ட் பண்ற சரியா" எனக் கூறிக் கொண்டே அவளின் வீட்டினருகே அழைத்து வந்தவன் மீண்டுமொரு முறை வாழ்த்துக் கூறி அவளை உள்ளே செல்லுமாறு சைகை செய்து விடைப்பெற்றானவன்.



மறுநாள் காலை எட்டு மணியளவில் வேணியின் வீட்டில் அவளெழுந்து அவளறையை விட்டு வெளியே வர, டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான் இளா. அவனுக்கு பரிமாறியவாறு அவனிடம் பேசிக் கொண்டிருந்தார் அவளின் அக்கா கயல்விழி. அவரும் முந்தைய நாள் இரவு தன் கணவருடன் சென்னையிலிருந்து வந்திருந்தார் தந்தையை நலம் விசாரிப்பதற்காக.



"மணி என்ன ஆகுது?? இப்ப தான் எழறியா?? அக்கா கூட நேத்து நைட் தானே வந்தாங்க... லேட்டா தானே தூங்கினாங்க... காலைலேயே எழும்பி சட்னிலாம் செஞ்சி பொறுப்பா இருங்காங்க பாரு... நீயும் இருக்கியே... தூங்கு மூஞ்சு" என இளா வேணியை வம்பிழுக்க,



அவனின் கிண்டலில் கயல் சிரிக்க

வேணி அவனை முறைத்துக் கொண்டு பேசத் தொடங்குவதற்குள்,



சமையலறையிலிருந்த வேணியின் அம்மா," இன்னும் ஒரு தோசை கொண்டாரேன் இளங்கோ... அதுக்குள்ள எழுந்திரிச்சுடாதே" எனக் குரல் கொடுத்தார்.



"அம்மா அவன் இங்க என்னை அசிங்கப்படுத்திட்டு இருக்கான்... நீங்க எக்ஸ்ட்ரா தோசை சுட்டுக் கொடுக்குறீங்க... உங்களுக்கு நான் முக்கியமா அவன் முக்கியமா... இந்த தோசைய என் தட்டுல போட்டா நான் முக்கியம்... அவன் தட்டுல போட்டா அவன் முக்கியம்னு அர்த்தம்... இரண்டுல ஒன்னு எனக்கு இப்ப தெரிஞ்சேயாகனும்" என வேணிக் கோபமாய் வசனம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் தாயின் கையிலருந்த தோசையை இளா பறிக்க,



"டேய் இதெல்லாம் டூ மச்... பேசிட்டு இருக்கும் போதே புடுங்குற நீ" எனக் கத்திக் கொண்டே அவன் கையிலிருந்த தோசையை அவள் பறிக்க,



பாதி தோசை அவன் தட்டிலும் பாதி இவள் தட்டிலும் வந்து விழுந்தது.



இதைக் கண்டு வேணியின் அன்னை , அக்கா, அக்கா கணவர் என அனைவரும் சிரிக்க,



மாடியிலிருந்து என்ன சத்தம் இங்க எனக் கேட்டுக் கொண்டே வேணியின் தந்தை கீழே இறங்க, அனைவரும் கப்சிப் என அமைதியை தங்களின் வேலையை கவனிக்கலாயினர்.



"ஒன்னுமில்லைப்பா சும்மா இளாக் கிட்ட பேசிக்கிட்டே சாப்டுட்டு இருந்தேன்" எனத் தந்தையை நோக்கா கூறினாள் வேணி.



"என்ன இளங்கோ ஊருக்கு கிளம்பிட்டியாப்பா" - வேணியின் தந்தை கேட்க



"ஆமா அங்கிள்... திடீர்னு கிளம்பினதால ஊர்ல யாருக்கும் தெரியாது... என்னை பார்த்ததும் அதிர்ச்சியாடுவாங்க தான் எல்லாரும்" எனச் சிரித்துக் கொண்டே கூறினான் இளங்கோ.



"வேலை செஞ்சிட்டிருந்த பிள்ளைய பயமுறுத்தி நீ கூட்டியாந்திருக்க" என வேணியின் தந்தை கேட்க,



"நான் ஒன்னும் அவனை கூப்பிடல... அவனா கூட வரேனு வந்துட்டான்"



"அதான் அம்முமா நல்ல பிள்ளைக்கு அழகு. பொம்பிள பிள்ளைய தனியா விடாம கூட துணை வந்திருக்கு பாரு. அதுக்கூடப் போய் வம்பிழுத்திட்டு இருக்க நீ. இந்த காலத்துல எங்கென தேடினாலும் இளங்கோ போல நல்ல பிள்ளை கிடைக்கிறது கஷ்டம்மா" என எதையோ கூற வந்தவர் இளாவிடம் திரும்பி பேச்சுக்கொடுக்க,



"யாரு இவன் நல்லவனாமா?? இவன் சைட் அடிக்கிற பொண்ணுங்கலாம் எனக்கு தானே தெரியும். சரியான கோவக்காய் புடலங்காய் பாவக்காய்" என வசைபாடிக் கொண்டே இவள் கழுத்தை நொடிக்க,



இதை கண்டு கொண்ட இளா வேணியின் தந்தையிடம் பேசிக் கொண்டே அவரறியாது இவளை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.



"இளங்கோ நானும் உங்க ஊரு பக்கமா தான்யா போறேன். உன்னை அங்கென இறங்கிவிடுறேன்" எனக் கூறிக் கொண்டு தன்னுடன் காரில் இளங்கோவை அழைத்துச் செல்வதாய் உரைத்தாரவர்.



"சரிங்க அங்கிள்...வேணி எப்பவும் போல் ஞாயிறு இரவு பயணம்... ரெடியா இருங்க மேடம்... என்னைய திட்டினதுக்குலாம் சேர்த்து வச்சு செய்றேன் உன்னை" - இளா அவளுக்கு கேட்கும்படி மட்டும் உரைக்க,



"வெவ்வெவ்வே" என அவனுக்கு ஒழுங்கு காட்டியவள் சிரித்துக் கொண்டே தன் அறையினுள் நுழைந்தாள்.



பெங்களூரில் காலை எட்டு மணியளவில்



"ஆஷிக் எனக்காக பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் செஞ்சிட்டு இருப்பான்டி... அம்மு இல்லாதனால அவன் கூட ஆபிஸ் போகலாம்னு வரச் சொல்லி இருந்தேன்... நீ நல்லா என்ஜாய் பண்ணிடி" என மஹாவிடம் கூறிக்கொண்டே பறந்தோடினாள் வாணி.



ஒன்பது மணியளவில் மதி தன் நண்பனின் இருச் சக்கர வாகனத்தில் வந்து மஹாவை அழைத்துச் சென்றானவன்.



"என்ன ப்ளான் மதி... எங்கே போறோம்" - மஹா



"அது சப்ரைஸ் மஹா... போனப்பிறகு நீயே தெரிஞ்சிப்ப" - மதி



வண்டியில் அமர்ந்துக் கொண்டவளை அவன் முதலில் அழைத்துச் சென்றது ஹோசூரில் புதிதாய் கட்டப்பட்டிருந்த சாய் பாபா கோவிலிற்கு.



கோவிலைக் கண்டவளின் விழி வியப்பில் விரிய,

"ஹே மதி... வாட் எ மிராக்கில்... எதை நினைச்சுடா என்னை இங்க கூட்டிட்டு வந்த??" என கேட்டுக்கொண்டே மஹா வண்டியிலிருந்து இறங்க,



"நீ என்ன நினைச்ச? அதை சொல்லு" - மதி



"சென்னை பஸ் இந்த வழியா தாண்டா போகும். எவ்ரி வீக்கெண்ட் இந்த வழயா போகும்போதெல்லாம இந்த கோயிலுக்கு ஒரு நேரம் வரணும்னு நினைச்சிருக்கேன்... இப்ப அங்கேயே என்னை கொண்டு வந்து நிறுத்திருக்கியே.. எப்படிடா உனக்கு தெரிஞ்சுது??" - மஹா



"ஜஸ்ட் தோணுச்சு... அவ்ளோ தான்ப்பா"



பேசிக்கொண்டே கோயிலின் உள்ளே நுழைந்திருந்தனர் இருவரும்.



"சரி நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்ததுக்கு நான் சொல்றதை இப்ப நீ செய்யனும்" என்றவனை கேள்வியாய் அவள் நோக்க,



"இன்னிக்கு வியாழக்கிழமை. சாய் பாபாக்கு நீ பாஸ்டிங்க் இருப்பனு தெரியும். இன்னிக்கு நீ பாஸ்டிங்க் இருக்க வேண்டாம்... இன்னிக்கு விரதம் இருக்கலைனு பாபாக்கிட்ட சொல்லிட்டு வா போதும்" என்றவனை வியப்பாய் அவள் பார்க்க,



"போ போ சீக்கிரம் கும்பிட்டு வா.. நமக்கு நிறைய ப்ளான் இருக்கு" என அவளை அனுப்பி வைத்தவன், சற்று தள்ளி அமரந்துக்கொண்டான்.



அவன் கூறியதைச் சொல்லி பாபாவிடம் பேசிக் கொண்டவளின் மனம், "இதேப் போல நானும் மதியும் ஒன்னா சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே லைபை என்ஜாய் செஞ்சி வாழனும்" என அவளையறியாமல் அவளின் மனம் சாய் பாபாவிடம் பேசிக்கொண்டிருக்க, தன் எண்ணம் போக்கும் போக்கை எண்ணி திடுக்கிட்டு விழித்தவள், திரும்பி மதி அமர்ந்திருந்த இடத்தைப் பார்க்க, அவன் கண் மூடி பெரும் வேண்டுதலை வைத்துக் கொண்டிருந்தான் கடவுளிடம்.





அவனருகில் அமைதியாய் வந்து அமர்ந்துக் கொண்டாளவள். கண் மூடிய அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தாளவள்.

"எப்பல இருந்து எனக்கு உன்னை இப்படி பிடிக்க ஆரம்பிச்சிது மதிப்பா" மதிப்பா என்ற விளிப்பே மஹாவின் மனதில் ஓர் இன்ப அலையாய் ஆர்ப்பரிக்க, மதி தன் விழி திறக்க சட்டென்று தன் தலையை உலுக்கி நிகழுலகிற்கு வந்தாள் மஹா.



"இப்ப நாம சாப்பிட போகலாம்... பாஸ்டிங்க்னு காலைல சாப்பிட்டிருக்க மாட்டல" எனக் கூறியவன் ஹோசூரிலேயே ஒரு உணவகத்திற்குச் சென்று உண்ண வைத்தானவன்.



மதிய வேலை ஹோசூரிலேயே சந்து சந்தாய் அவளை அழைத்துச் செல்ல,

"எங்கடா போறோம்?? சந்து சந்தா போற... ரோடு வேற ரொம்ப மோசமா இருக்கு" என அவனின் தோள்களை அழுத்தமாய் பற்றிக் கொண்டு அவள் வினவ,



"பார்க்கத்தான போற... கொஞ்சம் நேரம் பொறுமையா இரு" எனக் கூறியவன், திடீரென்று பைக்கை ஓரமாய் நிறுத்தி, தன் கைக்குட்டையால் அவளின் கண்களை கட்டினான்.



"ஒன்னும் பயமில்லைடா... நான் கூடவே இருக்கேன்... என் கைய பிடிச்சிக்கிட்டு பொறுமையா வா" எனக் கூறி அவளின் கைகளைப் பற்றி அந்த பெரிய நுழைவாயிலிற்குள் அவளை அழைத்து வந்தவன் மத்தியமாய் அவளை நிற்க வைத்து கண் கட்டை அவிழ்த்த நேரம்,



"ஹேப்பி பர்த்டே மஹாக்கா" என கோரஸாய் சிறுவர் சிறுமியர் குரல் அவள் காதில் கேட்க, அவளின் முன் கிட்டதட்ட ஐம்பது சிறுவர் சிறுமியர் கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தனர்.





அவர்களைக் கண்டதும் அறிந்துக்கொண்டாளவள் தான் எங்கிருக்கிரோமென.



ஆம் அவளை அவன் அழைத்து வந்தது குழந்தைகள் காப்பகத்திற்கு. இவளின் பிறந்தநாளை முன்னிட்டு அன்று மதிய உணவை அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தானவன்.



ஒவ்வொரு சிறுவராய் வந்து அவளின் கையில் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவிக்க அவளின் கண்களில் நீர் தேங்கி நின்றது.



அவர்கள் அனைவரையும் உணவுக் கூடத்துக்கு அழைத்துச் செல்ல,

அதற்குமேல் தாங்க மாட்டாதவளாய் சற்று தள்ளி வந்தவள், குலுங்கி குலுங்கி அழவாரம்பித்தாள்.



"ஹேய் மஹா" என மதி அவள் தோளைப் பற்ற,



"இந்த பிள்ளைகளாம் என்ன பாவம் பண்ணுச்சுங்க மதி" என அவள் கேட்கும் போதே அவளின் கண்ணில் நீர் நிற்காமல் வழிய,



"சியர் அப் டா... நம்மள மாதிரி ஆளுங்க வந்துப் போன தான் அந்த பசங்களுக்கு ஹேப்பியா இருக்கும்... அவங்க பார்த்தாங்கனா என்ன நினைப்பாங்க... வா... நீ தான் அவங்களுக்கு பரிமாறனும் மஹா... அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க வாடா குட்டிம்மா" என அவளைத் தேற்றி அழைத்துச் சென்றான்.



அக்குழந்தைகளின் நினைவில் இப்பொழுதும் குட்டிம்மா என்ற அவனின் அழைப்பை கவனிக்கவில்லை அவள்.



அனைவருக்கும் பரிசுப்பொருள் வாங்கி வைத்திருந்தான் மதி. அதை அவள் அனைவருக்கும் வழங்கினாள்.



அங்கிருந்து மாலை வேளையில் கிளம்பி பெங்களுர் நோக்கி அவன் வண்டியை செலுத்த, "நான் ரொம்ப சென்சிட்டிவ் இப்படி பார்க்க கூட மனசு வலிக்கும்னு தெரியும்ல மதி... அப்புறம் ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்த மதி" என அவனின் எண்ணத்தை அறியும் பொருட்டு அவள் கேள்விக் கேட்க,



"அதையும் தாண்டி உனக்கு உதவி செய்றதுமே ரொம்ப பிடிக்குமே மஹா. நீ மாசாமாசம் ஆர்பனேஜ்க்கு பணம் கொடுக்குறது எனக்கு தெரியும். அதை நேர்ல செய்யும் போது, அந்த பிள்ளைகளோட சந்தோஷத்தை நீ நேர்ல பார்க்கணும்னு தான் இந்த ஏற்பாடு பண்ணேன்" என்றவன் உரைக்க,



"தேங்க்ஸ் அ லாட் மதி.... மனசு நிறைவா இருக்குடா" என வண்டியின் கண்ணாடியில் அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு உரைத்தாளவள்.



இவனும் சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான்.



"அடுத்து எங்கடா போறோம்?? காலைலருந்து சுத்திட்டு இருக்கோம். ரூம்கு போய்ட்டு ரிப்ரெஷ் ஆகிட்டு போகலாம்டா" என மஹாக் கூற,



சரியென்றுரைத்தவன் அவளின் வீட்டினருகே அவளை இறக்கிவிட்டு அவளின் கையில் ஓர் கவரை வழங்கினான்.



"ரூம்க்கு போய் பாரு. இததான் நீ போட்டுட்டு வரணும்" என்றுரைத்தவன்



பைக்கை ஸ்டார்ட் செய்து," ஒன் ஹவர் தான் டைம். பிக் அப் பண்ண வந்திடுவேன். சீக்கிரம் ரெடியாகு" என கூறிக் கொண்டே சென்றானவன்.



தன் அறைக்கு வந்தவள் அக்கவரை பிரித்துப் பார்க்க, அதிலிருந்தது பிங்க் நிறத்தில் அழகிய பூ வேலைப்பாடுகள் நிறைந்த குர்தி.



ஜீன்ஸ் அந்த குர்தி அணிந்து அவள் தயாராகி வர, இவன் அவளை அழைக்க வர சரியாக இருந்தது.



அடுத்து அவளை அவன் அழைத்துச் சென்றது, கோரமங்களா ஃபோரம் மாலிற்கு.



இருவரும் மாலின் உள்ளே செல்ல,

ஏதும் பேசாது மஹா அமைதியா வரவும்,



"என்ன சைலண்ட் ஆகிட்ட?? இந்நேரத்துக்குள்ள என்ன சப்ரைஸ்?? எதுக்காக இங்க வந்திருக்கோம்னு கேள்வி மேல கேள்வி கேட்டிருப்பியே... என்னாச்சு திடீர்னு??" என புருவம் உயர்த்தி அவன் கேட்க,



அவனை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் "அழகன்டா நீ" என மனதிற்குள் அவனைக் கொஞ்ச,



தன்னையே நோக்கும் அவளின் கண்களின் பாஷையில் அவளின் முகம் கூறிய செய்தியில் மெலிதாய் புன்னகைத்தவன்,



"இன்னிக்கு நான் அவ்ளோ அழகாவா இருக்கேன் மஹா" என மதி கேட்க,



சட்டென தன்னிலை அடைந்தவள்,"நான் உன் மேல கோபமா இருக்கேன்" என்றாள்



"கோபமா??எதுக்கு??" என்றவன் கேட்க,



"அதெல்லாம் சொல்ல முடியாது. நீ தான் பெஸ்ட் ப்ரண்ட் ஆச்சே... நீயே கண்டுபிடி" என அவள் கூற,



அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன்,

"அழகு இருக்கு இந்த குர்தி உனக்கு மஹா... இதை நான் சொல்லலைனு தானே கோபம்??" என மதி கேட்க,



"நான் கேட்டு ஒன்னும் நீ சொல்ல வேண்டாம்" மஹா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,



"நான அங்கேயே நீ ரூம்ல இருந்து வண்டில ஏறும் போதே சொல்லலாம்னு நினைச்சேன்.... ஆனா..." என்று கூறியவன் சிறிது தள்ளி நின்று,



"இன்னிக்கு ஷெர்லேக் பாலிஷிங் ரொம்ப அதிகமாயிடுச்சு... அதான் சொல்லலை" என அவளின் மேக்ப்பை அவன் கிண்டல் செய்ய,



"உனக்காக கொஞ்சம் லைட்டா மேக் அப் போட்டேன் பாரு என்னைய சொல்லனும்" என்று அவன் முதுகில் மொத்த ஆரம்பித்தாளவள்.



அந்நேரம் மதியின் கைப்பேசி அலற,

"சரி வா வா... கீழே போவோம்" என்றவளை அழைத்துக் கொண்டு அந்த ஃபோரம் மாலின் நுழைவாயிலிற்கு அவளை அழைத்து வர அங்கிருந்தவர்களை கண்டதும் அவளின் கண்கள் விரிந்தது வியப்பினால்.



அவள் பேட்ஜ் மேட்ஸ் இருபது பேர் நின்றிருந்தனர் அங்கே. அவர்களின் மத்தியமாய் கையில் கேக்குடன் நின்றிருந்தாள் வாணி. அவளருகில் ஆஷிக் இருந்தான்.



"ஹே இட் சீம்ஸ் லைக் அ பார்ட்டி மதி" என அவள் கூற



"இந்த ஏற்பாடு நான் செய்யல... வாணி அண்ட் வேணியின் சப்ரைஸ்" என்றவன் கூற,



வாணியினருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டாள் மஹா.



அனைவரும் சேர்ந்து கோரஸாய் பிறந்தநாள் வாழ்த்துப் பாட கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்தாள் மஹா.



மதியை ஆஷிக்கிற்கு அறிமுகப் படுத்தி வைத்தாள் வாணி.



"ரொம்ப தேங்க்ஸ் எல்லாருக்கும். என் பர்த்டே செலிபரேஷன்ல கலந்துக்கிட்டதுக்கு" என மஹா நன்றி நவிழ,



"ஆமா ப்ரண்ட்ஸ் நானும் வேணியும் ஜஸ்ட் அனுப்பின ஒரு மெயிலை மதிச்சு வந்ததற்கு பெரிய தேங்க்ஸ்... வேணியால தான் வர முடியாம போச்சு... அவளுக்கும் சேர்த்து நான் நன்றி சொல்லிக்கிறேன்" என வாணிக் கூற,



"ஹே வாணி நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்லாம்.... டிரீட் கொடுங்க போதும்" என சிரித்துக்கொண்டே அவர்களின் பேட்ஜ் நண்பன் கேட்க,



அவனை ஆதரித்து அனைவரும் டிரீட் வேணுமென கத்தவாரம்பித்தனர்.



மதி மஹாவிடம்,"டின்னர் எல்லாரும் ஒன்னா போகலாம் மஹா. நானே ஸ்பாண்சர் செய்றேன்"



"ஹே ஏற்கனவே நீ எனக்காக செஞ்ச செலவுலாம் போதாதா... நிறைய காசு இருக்கா என்ன?? அப்படி இருந்தா அப்பா அம்மாக்கு இப்படி நிறைய செய்... இல்லை சேர்த்து வைய்... ரொம்ப செலவு பண்ணாத மதி... என்னோட சந்தோஷத்துக்காகனாலும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசு தேவைக்கு கரக்ட்டா தான் செலவு செய்யனும்" என மஹா மதிக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்க,



"நாங்க இங்க கத்திக்கிட்டு இருக்கோம். அங்கென்ன பேசிட்டு இருக்கீங்க??" என ஆஷிக் மஹாவைப் பார்த்து கேட்க,



"ஓ கே ப்ரண்ட்ஸ் இன்னிக்கு நைட் டின்னர் என்னோட ட்ரீட். எங்க ரூம் பக்கத்துல இருக்க தமிழ்நாடு ஹோட்டலுக்குப் போகலாம்" என மஹா உரைக்க,



"சரி நடந்தே போய்டலாமா?? ஒன் கிலோமீட்டருக்குள்ள தான் வரும்" என ஆஷிக் கேட்க,



அனைவரும் ஒத்துக் கொண்டு சம்மதிக்க,



"சரி நானும் மதியும் முன்னாடி போய் ஹோட்டல்ல சொல்லி வைக்கிறோம்... சீக்கிரம் வந்து சேருங்க" எனக்கூறி மஹா மதியுடன் பைக்கில் முன்பு செல்ல,



வாணி,ஆஷிக் மற்றும் பிற பேட்ஜ்மேட்ஸ் அனைவரும் தங்களது நடைப்பயணத்தை தொடங்கினர்.



வாணிக்கு இவ்வாறு பின் மாலைப் பொழுது தோழமைகளுடன் அரட்டை அடித்துக்கொண்டே நடந்துச் செல்வது மிகவும் பிடித்தமான விஷயம்.



அதற்காக தான் ஆஷிக் இவ்வாறொரு ஏற்பாட்டை செய்தான்.



வாணி ஆஷிக்கிடம் பேசிக்கொண்டே நடக்க,"கேபி, மஹா மதி லவ் பண்றாங்களா??" என திடீரென்று ஆஷிக் வினவ,



ஙே என விழித்தாள் வாணி.



"ஏன் அப்படி கேட்குற ஆஷிக்" - வாணி



"அவங்களைப் பழகுற விதத்தைப் பார்த்தா ப்ரண்ட்ஸ் மாதிரி தெரியலையே" - ஆஷிக்



"அப்படி என்ன அவங்க பழகுறதுல குத்தமா தெரியுது உனக்கு" என கோபமாய் வாணிக் கேட்க,



"அட கேபி, ப்ரண்ட்ஸ் தான் இப்படி நாள் பூரா சப்ரைஸ் தரேனு கூடேவே கூட்டிக்கிட்டு சுத்துவாங்களா?? நீ மதிய பர்ஸ்ட் டைம் பார்த்தை சொன்னியே, இப்படி ப்ரண்ட்ஸ்க்கு தான் சுற்றம் லாம் மறந்து செஞ்ச வேலைய விட்டுட்டு போய் கையப்பிடிச்சி மிஸ் யூ னு சொல்லுவாங்களா??" என ஆஷிக் கேள்வியாய் கேட்க,



"நீ என்ன சொன்னாலும் நான் அப்படி நினைச்சாலே அது நான் மஹா ப்ரண்ஷிப்பை சந்தேகப்படுற மாதிரி அர்த்தம்... அவங்களுக்குள்ள லவ் இல்லனா அது ப்ரண்ட்ஷிப்பை கொச்சை படுத்துறதுக்கு சமம். சோ நான் அப்படிலாம் நினைக்க மாட்டேன்." - வாணி



"நீ என்னவேன சொல்லு கேபி. மதி மஹாவோட ஆளு தான்" - ஆஷிக்



"இந்தப் பேச்சை நிறுத்திரியா??" என ஆஷிக்கை முறைத்துக் கொண்டு வாணி உரைக்க,



"ரைட் விடு... இளா வேணி ப்ரண்ட் தானா?? எனக்கென்னமோ இளாவோட ஆளு தான் வேணினு தோணுது" என சீரியஸாய் ஆஷிக் கூற,



"டேய் அடி வாங்க போற நீ... உன் கண்ல தான் கோளாறு... எல்லாரையும் தப்பு தப்பா பேசிக்கிட்டு... சரி லவ் பண்றாங்கனு டீசண்ட்டாவாவது சொல்லலாம்ல... அதென்ன ஆளு கீளுன்னுட்டு" என கோபமாய் கேபி கேட்க,



"யம்மா தாயே நீ ஒரு அம்பிங்கிறதை மறந்துட்டு சொல்லிட்டேன்... உன் ப்ரண்ட்ஸ் தங்க கட்டிகள் வைர ரொட்டிகள் தான்... நான எதுவும் சொல்லலை... நீ மலையிறங்கி வாம்மா" என பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கூற,



முறைப்பாய் சிரிப்பாய் மாற்றினாளவள்.



"இது தான்டா எனக்கு உன்கிட்ட பிடிச்சது. எந்த மூட்ல இருந்தாலும் சிரிக்க வச்சிடுவ"



இவ்வாறாக இவர்களின் உரையாடல் தொடர்ந்து நடக்க அந்த ஹோட்டலை வந்தடைந்தனர் அனைவரும்.



அனைவரும் தமிழக உணவை ஆசைஆசையாய் சாப்பிட்டு முடிக்க, பில் வந்ததும் அனைவரும் பங்கிட்டு கொடுக்க,



"ஹே இது என்னோட ட்ரீட். நீங்க யாரும் காசு தர வேண்டாமென"

மஹா கூற,



"இருபது பேருக்கு காசு கொடுக்குறது சின்ன விஷயம் இல்ல மஹா... நாங்க சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னோம். எல்லாரும் கஷ்டப்பட்டு தானே சம்பாதிக்கிறோம்" என்று கூறிய பேட்ஜ் மக்கள்,



வந்த பில் தொகையைப் பங்கிட்டு பகிர்ந்தளித்தனர் அனைவரும்.



பின் அனைவரும் விடைப்பெற்று கிளம்ப,தான் மஹாவுடன் தங்கள் அறைக்கு சென்று விடுவதாய் ஆஷிக்கிடம் உரைத்தவள் அவனை வழியனுப்பி வைத்தாளவள்.
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த ஹோட்டலின் அருகிலேயே இவர்களின் வீடு இருக்க, மஹா மற்றும் வாணியுடன் தன் பைக்கை தள்ளிக்கொண்டே நடந்து வந்தான் மதி.



வீடு வந்ததும் தங்களின் அறைக்கு வாணி செல்ல, பேசிக்கொள்ளவென ஒதுங்கி நின்றனர் மதியும் மஹாவும்.



அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வாணி கிப்ட் ராப் செய்யப்பட்ட பெரிய பெட்டியை எடுத்து வந்து மதியிடம் வழங்க,



"ஹே வாணி என்னதிது??" என ஆச்சரியமாய் மஹா கேட்க,



வாணியின் மனது அக்கேள்விக்கு,"அதை உன் ஆளுக்கிட்டேயே கேட்டுக்கோ" என பதிலளிக்க,



"இந்த மூளையும் ஆஷிக்கோட ப்ர்ண்ட் ஆகி அவனை மாதிரியே பேசுது" என மனதில் எண்ணிக்கொண்டே தன் மண்டையிலேயே தட்டிக்கொண்டவள்,



"மதி கிட்டயே கேளுடி. நேத்து நைட் என்கிட்ட கொடுத்துட்டு போனாங்க. உனக்கு தெரியாம வச்சிக்க சொன்னாங்க." வாணி உரைக்க,



"ஹோ அதான் என்னை நீ அந்த ஸ்டோர் ரூம்குள்ள போக விடலையா??" என மஹா கேட்க,



ஆமென கூறிவிட்டு சென்றாள் வாணி.



மதி அப்பரிசுப் பொருளை மஹாவிடம் வழங்க, ஆர்வமாய் பிரித்துப் பார்த்தாளவள்.



அதனுள் அவளின் பாதி உயரமுள்ள பிங்க் நிற அழகிய டெட்டி பேர் இருந்தது.



அதைக் கண்டதும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாளவள்.



"இனி இந்த டெட்டி பியர் பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் நியாபகம் தான் வரணும்" என கண் சிமிட்டி

அவனுரைக்க,



"வாவ் செம்மடா... எவ்ளோ அழகாயிருக்கு... போடா இனி நீ எனக்கு பெஸ்ட் பிரண்ட் இல்ல... என் பட்டுக்குட்டி தான் பெஸ்ட் ப்ரண்ட்" என அவள் அந்த டெட்டி பியரை கொஞ்ச,



"அடிப்பாவி, டெட்டி பியரை பார்த்ததும் பிரண்டை கழட்டி விட்டுட்ட நீ" என பாவமாய் முகத்தை வைத்து கேட்க,



அவள் வாய்விட்டு சிரித்தாள்.



"என் லைப்ல மறக்க முடியாத பர்த்டே இது. பெஸ்ட் பர்த்டே இன் மை லைப். இன்னிக்கு உன் கூட செலவழிச்ச ஒவ்வொரு நிமிஷமும் மறக்க முடியாது மதி" எனக் கண்கள் மின்ன முகம் நிறைந்த சந்தோஷத்தில் மஹாக் கூற,



அமைதியாய் புன்னகைத்தானவன்.



"சரி நீ எப்ப ஹைத்ராபாத் போற... நாளைக்கு ப்ரைடேவும் சேர்த்து லீவ் எடுத்திட்டியா??" என மஹாக் கேட்க,



"அண்ட் தட்ஸ் தி ஃபைனல் சப்ரைஸ்" என்றான் மதி.



"என்னது சப்ரைஸா??" - மஹா



"ஆமா இனி இந்த மதி மஹாக் கூட தான் இருப்பான்" என்றானவன்



"டேய் புரியுற மாதிரி சொல்லுடா... டென்ஷன் படுத்திக்கிட்டு" என மஹாக் கேட்க,



"ஐ காட் டிரான்ஸ்பர்ட் டூ பெங்களூர் டியர்... நீ பெங்களுர் வந்ததும் நான் கேட்க ஆரம்பிச்ச டிரான்ஸ்பர் நியர்லி ஒன் இயர் ஆகப்போகுது இப்ப தான் கொடுத்தாங்க" என மதி உரைக்க,



அவனின் பணியிடமாற்ற சந்தோஷத்தில் அந்த டியரை இப்பொழுதும் கவனிக்கவில்லை அவள்.



"வாவ் சூப்பர்டா மதி... நாளைக்கு ரிப்போட் செய்றியா இந்த ஆபிஸ்ல" - மஹா



ஆமென தலையை அவனசைக்க,



"உன்னை பிரியனுமேனு கொஞ்ச கஷ்டமா இருந்துச்சுடா. இப்ப ஐம் வெரி மச் ஹேப்பி. சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு... நீ கிளம்பு... நம்ம வீக்கெண்ட் மீட் செய்வோம்" என்றவனை அனுப்பி வைத்தாளவள்.



அவளின் அறைக்கு சென்று ரிபெரெஷ் ஆனவள்,அந்த டெட்டி பியரை அணைத்துக் கொண்டு

அன்றைய நாளின் இனிமையான தருணங்களை எண்ணிக் கொண்டே உறங்கிப்போனாள்.



---

ஞாயிறு இரவு சேலத்திலிருந்து பெங்களுர் செல்லும் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர் வேணியும் இளாவும்.



பேருந்து ஏறியதிலிருந்து இளா அமைதியாகவே அமர்ந்திருக்க,



"என்னடா இளா, அன்னிக்கு என்னமோ என்னைய வச்சி செய்றேன் பெரிசா கதை விட்டே... இப்ப என்னடானா சிட்டிங்ல சோக கீதம் வாசிச்சுட்டு இருக்க" என வேணி அவனை வம்பிழுக்க,



"என்ன ப்ரச்ச்னை உனக்கு இப்ப?? நான் பேசினாலும் சண்டை போடுற... அமைதியா வந்தாலும் வம்பிழுத்து கடுப்பேத்துற... என்ன தான் வேணும் உனக்கு... கொஞ்சம் நேரம் அமைதியா வர முடியாதா?? இனி தனியா ட்ராவல் செய்யுனு உன்னை விட்டுறனும்... கூட வந்தா.. மனுஷனை பாடாய் படுத்துறது" என இளா கடுமையாய் பேசி அவளை பொறித்தெடுக்க,



"என்னாச்சுடா இளா?? ஏன் இவ்ளோ கோபம்?? நீ இப்படி என் கிட்ட பேச மாட்டியே?? இது நம்ம எப்பவுமே வம்பிழுத்து விளையாட்டுக்கு பேசுறது தானடா... உனக்கு எதுவும் உடம்புக்கு முடியலையா??" என அவன் திட்டியதையும் பொருட்படுத்தாது அவனின் நலனை எண்ணி வருந்தி அவள் கேட்க,



"நான் தூங்க போறான் அம்ஸ்... என்னை டிஸ்டர்ப் செய்யாதே" என்றுரைத்து சீட்டை பின் சாய்த்து கண் மூடி தலை சாய்த்துக்கொண்டானவன்.



அதன் பிறகு திங்கள் காலை வேணியின் ரூமினில் அவளை விட்டு

தன் ரூமிற்கு செல்லவென திரும்ப,



"என் மேல எதும் கோபமா கோவக்கா?? நீ என் கிட்ட பேசவே இல்ல இளா?? இத்தனை வருஷத்துல நீ இப்படி என் கிட்ட நடந்துக்கிட்டதே இல்லையே?? சரி உனக்கு மூட் அவுட்னு தெரியுது... சரியானதும் என் கிட்ட கண்டிப்பா பேசனும் சரியா" என மஹா கூற



அவளிடம் ஏதும் பேசாது தலையசைத்து விடைபெற்றானவன்.

--நெகிழ்தல் தொடரும்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10

நட்பு காதலானால்
நட்பு நிலைக்குமா??
காதல் வளருமா??


அடுத்து வந்த இரண்டு நாட்கள் அவர்களின் மணித்துளிகளை அவர்களின் வேலை இழுத்துக் கொள்ள வாரயிறுதி நாட்களில் அவனிடம் பேசிக்கொள்ளலாமென மஹா முடிவெடுத்த நேரம் வந்தது அந்த மின்னஞ்சல்.

வாணியும் வேணியும் உறைந்து போய் பார்த்தனர் அந்த மின்னஞ்சலை.

வாணி அந்த மின்னஞ்சலை பார்த்த நொடி தன்னிடத்திலிருந்து எழுந்து வேணியின் இடத்தற்கு செல்ல, அங்கு வேணியும் அந்த மின்னஞ்சலை நோக்கிக் கொண்டிருப்பதை பார்த்தவள்,

"அம்மு உனக்கும் இந்த மெயில் வந்திருக்கா? ஏன்டி திடீர்னு இப்படி ஒரு மெயில் அனுப்பிருக்காங்க? நம்ம நல்லாதானே வேலை பார்த்தோமென" வாணி வேணியை கேட்க,

"இருடி நம்ம மேனேஜரை போய் என்னனு கேட்போம்" என்றாள் வேணி.

அன்று அவர்களின் மேனேஜர் விடுப்பெடுத்திருக்க, அந்த மெயில் தங்கள் இருவரைத் தவிர எவருக்கும் வரவில்லை என்பதை அறிந்தவர்கள் ராஜேஷிடம் சென்று அம்மெயிலை பற்றி உரைக்க,

அந்த மெயிலைக் கண்ட ராஜேஷ், "என்னது உங்களை இந்த ப்ராஜக்ட்லருந்து தூக்கிட்டாங்களா?? ஏதோ புது ப்ராஜக்ட்ல அசைன் செஞ்சிருக்குறதா மெயில்ல போட்டிருக்காங்கலே... அப்பறம் ஏன் கவலை படுறீங்க" எனக் கேட்க,

"அது சப்போட் ப்ராஜக்ட் ராஜேஷ்... ஷிப்ட்ல வர்க் பண்ணனும்... அதுவுமில்லாம அதுல என்ன கரியர் டெவலப்மெண்ட் இருக்கு" என அழும் பாவனையில் கேபி சொல்ல,

"அட கேபி இதுக்கு போய் ஃபீல் பண்ணிக்கிட்டு... நம்ம டீம் லீட் கிட்ட விசாரிங்க... ஏன் திடீர்னு ப்ராஜக்ட்டை விட்டு தூக்கிட்டாங்கனு" என ராஜேஷ் கூற,

அவர்களின் டீம் லீடை பார்க்கச் சென்றனர் இருவரும்.

மீட்டிங் ரூமில் அவர்கள் இருவரையும் பேச அழைத்தவர், "இது எனக்குமே ஷாங்கிங் நியூஸ் தான் வாணி அண்ட் வேணி. இதுக்கு காரணம் ராஜேஷ்" என்றவர் கூறியதும்,

பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் வாணியும் வேணியும்.

"என்னது ராஜேஷா??" எனத் தன் அதிர்ச்சியை கேட்டே விட்டாள் வாணி.

ஆமென உரைத்தவர்,

"உங்கள் வேலை க்ளைண்ட்க்கு திருப்தியா இல்லைனு புகார் வந்திருக்குறதா மேனேஜர் என்னை கூப்பிட்டு கேட்டார் போன வாரம்... நீங்க நல்லா வர்க் பண்றதா தான் நான் சொன்னேன். க்ளைண்ட் எதை வச்சி அப்டி சொன்னார்னு கேட்டேன். தெரியலைனு சொல்லிட்டார்... ராஜேஷ் நல்லா செய்ரதா பாராட்டு கிடைக்கிறதாகவும் சொன்னார்"

"நீங்க நியூ ஜாய்னீஸ்ங்கிறனால உங்க மூணு பேரையும் சேர்ந்து தான் நான் வேலை செய்ய சொல்லிருக்கேன்... அண்ட் ஐ நோ நீங்க இரண்டு பேரும் தான் ராஜேஷை கைட் செஞ்சி வேலை செய்றீங்கனு... ஆனா நீங்க செஞ்ச தப்பு உங்க வர்க்கை வெளில காமிக்காம இருந்தது... செய்ற வேலைக்கும் கூட ராஜேஷ் கிட்ட இருந்து மெயில் போயிருக்கு... நீங்க மூணு பேருக்கு ஏன் தனி தனியா போடனும்னு நீங்க அவன் மெயிலருந்து போட ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம்... ஆனால் எங்கேயுமே உங்க பெயர் மெயில் கண்டன்ட்ல கூட போடல... அதான் நீங்க வேலை செய்யாம உங்களூக்கு எதுக்கு நாங்க பே பண்ணனும்ங்கிற தாட்ட க்ளைண்ட்க்கு கொண்டு வந்திருக்கு" என்று விளக்கமாய் உரைத்தாரவர்.

"இது ராஜேஷ் தனக்கு பேர் வரனும்னு தெரிஞ்சு செஞ்சானா தெரியாம செஞ்சானானு நீங்க தான் சொல்லனும்... நீங்க தான அவனோட ப்ரண்ட்ஸ் உங்களுக்கு தான் அவனை தெரியும்" என்றவர் கேட்க,

தங்களுக்கு தெரியாதென இருவரும் தலையசைக்க,

"ஆஸ் எ வெல்விஷ்ஷரா ஒரு அட்வைஸ் செய்றேன். இது கார்ப்பரேட் வெர்ல்ட். இங்க நீங்க ஹார்ட் வர்க்கரா இருக்கிறதை விட ஸ்மார்ட் வர்க்கரா இருக்கிறது ரொம்ப அவசியம். நீங்க செஞ்ச வேலைய நீங்களே உலகுக்கு சொன்னா தான் தெரியும். வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் ங்கிறதும் இங்க உண்மை. ராஜேஷ் பாருங்க இங்க எல்லார் கிட்டயும் எவ்ளோ நல்லா பேசி பழகிட்டான். அவன் வேலையே செய்யலைனாலும் நான் தான் செஞ்சேன்னு அவன் மத்தவங்க கிட்ட சொன்னதை நானே கேட்டுருக்கேன். நீங்க இப்படி அமைதியா வேலை செஞ்சிட்டு இருந்தா அவன் தான் எல்லா வேலையும் செய்றானு நினைச்சுட்டு போய்டுவாங்க... இதுவே நீங்களும் அவங்க கிட்ட பேசி பழகி இருந்தா என்னப்பா நீ அந்த பொண்ணுங்க செஞ்ச வேலையை நீ செஞ்சேனு சொல்றனு நேரா கேட்டிருப்பாங்க... சோ ஷோ ஆஃப் வாட்எவர் யூ ஆர் டூயிங். ஓகே பெஸ்ட் ஆஃப் லக் ஃபார் யுவர் நியூ ப்ராஜக்ட்" என்றவர் மீட்டிங்கை முடித்து விட்டு செல்ல,

மனம் கொள்ளா துக்கமுடன் இருக்கையை விட்டு நகராது சிலையென சமைந்திருந்தனர் இருவரும்.

"நா வாஷ் ரூம் போய்டு வரேன் அம்மு" என வாணி எழுந்துச் செல்ல,

அவளின் பின்னோடேயே வேணியும் சென்றாள அவளுடன்.

வாஷ் ரூம் சென்றவள் அடக்க முடியாது குலுங்கி குலுங்கி அழ, அவளை அணைத்திருந்த வேணியின் கண்களிலும் நீர் நிறைந்தது.

"ராஜேஷ் அப்படி செஞ்சிருப்பானா அம்மு... நம்ம கரியர் இனி என்ன ஆகும்... சப்போர்ட் ப்ராஜக்ட்ல என்னடி கத்துக்க முடியும்... ஷிப்ட்ல எப்படி வேலை செய்யப் போறோமென" அழுதுக் கொண்டே வாணி உரைக்க,

அதெல்லாம் பார்த்துக்கலாம்டி தனியா இல்லாம இரண்டு பேரா இருக்கோம்ல சமாளிக்கலாம் என தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக்கொண்டாள் வேணி.

"ராஜேஷ் கிட்ட எதுவும் கேட்க வேணாம்.. இனி எப்படியும் நாம வைட்பீல்ட் ஆபீஸ்க்கு தான போகனும்னு மெயில்ல போட்டிருந்தாங்க... அவனை இனி எப்படியும் நாம சந்திக்கப் போறதில்ல... அதனால எதுவும் கேட்காம ஸ்மூத் ரிலேஷன்ஷிப்பாவே விட்டு போய்டுவோம்.... நாளைக்கு வேற அந்த ஆபிஸ்க்கு போய் ரிப்போர்ட் செய்யனும்... அதுக்கான ஏற்பாடு செய்யனும் வா ப்ளேஸ்க்கு போய்ட்டு சீக்கிரம் கிளம்புவோம்.." என வேணி உரைக்க,

"ஆமா இளா அந்த ஆபிஸ் தானே... நீ இளா கிட்ட பேசி எப்படி ஆபிஸ்க்கு ரூட்னுலாம் விசாரி... கிளம்புறதுக்கு முன்னாடி ஆஷிக்கிட்ட சொல்லிட்டு போய்டலாம்" என வாணி கூறிக்கொண்டிருந்த நேரம் அவளின் மொபைல் அலறியது ஆஷிக்கின் அழைப்பினால்.

"அவன் தான்டி போன் பண்றான்… நான் அவனை கேபிடேரியா வர சொல்றேன்... நாம அவனை பார்த்து பேசிட்டே ப்ளேஸுக்கு போவோம்" எனக் வேணியிடம் கூறிக்கொண்டே கால் அடெண்ட் செய்தவள் ஆஷிக்கை கேபிட்டேரியா வரம்படி பணித்தாள்.

ஆஷிக்கை பார்த்ததும் நடந்தது அனைத்தையும் கண் கலங்க வாணிக் கூற, " ஷிப்ட் தான் ப்ராப்ளம் கேபி... கொஞ்சம் ப்ரிபேர் பண்ணி வேற கம்பெனி அடெம்ப்ட் பண்ணி போய்டுங்க இரண்டு பேரும்" என அறிவுரை வழங்கியவன் மறந்தும் ராஜேஷை பற்றி ஏதும் கூறவில்லை.

"ராஜேஷ் இப்படி செஞ்சிருப்பானா ஆஷிக்?" என வாணி கேட்க,

"தெரியலையே கேபி. நீங்க தான அவன் கூட ஒரே ப்ராஜக்ட்ல இருக்கீங்க உங்களுக்கு தான் தெரியனும்" என்றவன் கூற,

"டேய் நீ அவன் கூட ஒரே பிஜில இருக்க... உனக்கு தான் எங்களை விட அவனைப்பத்தி அதிகமாக தெரியும்... கூட பழகுறவனை பத்தி நீ என்னிக்கும் தப்பா பேச மாட்டனு எனக்குத் தெரியும்... ஆனா தப்பு இருந்தா தப்புனு சொல்லலாம்... தப்பில்லை" என்று வாணி கூற,

"தப்பு இருந்தா சொல்லிருப்பேனே... அண்ட் ஆல்சோ ஒருதங்க அபீஷியலா ஆபிஸ்ல ப்ரண்டா நடந்துகுறதுக்கும் ப்ரண்டா பர்சனலா பழகுறதுக்கும் வித்தியாசம் இருக்கு கேபி" என்றவன் கூற,

"இனி உன்னை தினமும் பார்க்க முடியாது ஆஷிக்" என வாணி வருத்தமாய் கூற

"ஏண்டி எவ்ளோ ப்ரச்சனை இருக்கு நமக்கு. அவனை பார்க்க முடியாதது தான் உனக்கு இப்ப ப்ரசனையா??" என கடுப்பாகி வேணி கேட்க,

"ஹே அவ என் மேல உள்ளபாசத்துல கேட்குற... எதுக்கு அவளை திட்டுற அம்மு" என்றுரைத்தவன்

"நாம வீக்கெண்ட்ஸ் ஊருக்கு போகாம ப்ரீயா இருக்கும் போது மீட் செய்யலாம் கேபி... கவலைப்படாத... நாளைக்கு போய் ரிப்போர்ட் பண்ணிட்டு என்ன சொல்றாங்கனு எனக்கு கால் செஞ்சு சொல்லு" என்றுரைத்து விடைபெற்றானவன்.

இளாவின் கைபேசிக்கு வேணி அழைக்க, அவன் அழைப்பெடுக்காமல் போக அன்றிரவு பேசலாமென முடிவெடுத்தாள் வேணி.

மஹாவிற்கும் விஷயத்தை உரைத்திருந்தனர் அலுவலகத்திலிருக்கும் போதே.

அன்று சீக்கிரமே தங்களின் வீட்டிற்கு வந்த வாணியும் வேணியும் நாளை எவ்வழியாக அந்த அலுவலகத்திலிருந்து செல்லலாமென திட்டமிடலானர்.

அன்றிரவு வேணி இளாவிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றவன் "எதுக்கு கால் பண்ண" என்று தான் கேட்டான்.

என்னாச்சு இவனுக்கு இதுக்கு இப்படி நடந்துக்குறான் என மனதில் எண்ணிக்கொண்டவள் அன்றைய நாளின் நிகழ்வை அவனிடம் உரைத்தவள், "அழுகையா வந்துச்சு இளா... உன்னை தான்டா மனசு தேடுச்சு.... நீ இப்படி சரியா பேசாம இருக்குறதும் மனசை ஹர்ட் பண்ணுது இளா... ஆனாலும் என்னால உன்கிட்ட கோபப்பட முடியாது... உன்கிட்ட பேசாம இருக்க முடியாது இளா... ஐம் ரெடி டு ஹியர் யுவர் ப்ராப்ளம் அட் எனி டைம் இளா... சொல்லனும் தோணும் போது சொல்லு.. நான் உன்னை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்... சரி நாளைக்கு மீட் செய்யலாம்" என்றுரைத்து விட்டு கைபேசியை வைத்தாளவள்.

மறுநாள் புதிய ப்ராஜக்ட் மேனேஜரிடம் ரிப்போர்ட் செய்து விட்டு அந்த ஷிப்ட் ப்ராஜ்க்டில் சேர்ந்தனர் இருவரும்.

மூன்று மாதம் வேலை கற்றுக்கொள்ளும் வரை ஷிப்ட் இல்லை என்றும் அதன் பிறகு வாரம் ஒரு ஷிப்ட் என சுழற்சி முறையில் ஷிப்ட் ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தனர்.

இளா இறுகிய முகத்துடன் தான் இருவரையும் சந்தித்தான்.

அதன் பின் வந்த அந்த வார நாட்களில் ஒரே அலுவலகத்தில் இருந்தும் இவர்களை சந்திக்க வரவில்லை அவன்.

உறவுகளுக்குள் எத்தகைய பிரச்சனை சண்டை வந்தாலும், அதை வளர்க்காமல் உடனே பேசி அப்பிரச்சனையை சரி செய்து விட வேண்டும். அதுவே அன்பாய் உறவுமுறையை நீடிப்பதற்கான அடித்தளம் என எண்ணுபவள் வேணி.

ஆக இளாவிடம் பேசி அவனின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவுகட்ட எண்ணினாளவள்.

வெள்ளி இரவு அனைவரும் தங்களின் ஊருக்கு செல்லாமல் பெங்களுரிலேயே இருக்க, வாரயிறுதி நாட்களில் எங்கே செல்லலாமென திட்டம் தீட்டத்தொடங்கினர் மூன்று பெண்களும்.

"நான் நாளைக்கு மதி பார்க்க போறேன்டி. சோ உங்களோட ஜாயின் பண்ண முடியாது" என மஹாக் கூற,

"நான் இளாவைப் பார்க்க போறேன்டி" என வேணிக் கூற,

"ஆஷிக்கும் என்னை மீட் செய்யனும்னு சொன்னான். உங்ககிட்ட கேட்டு சொல்றேனு சொன்னேன்... சரி எங்க மீட் பண்ண போறீங்க நீங்க ரெண்டு பேரும்" என வாணிக் கேட்க,

"ஃபோரம் மால்" என ஒரே நேரத்தில் கூறினர் வேணியும் மஹாவும்.

"சூப்பர்.... ரெண்டு பேரும் ஒரே இடத்துக்கு தான் போறீங்களா?? அப்ப நானும் ஆஷிக்கை அங்கேயே வரச் சொல்றேன்" என வாணி உரைக்க,

"நான் கொஞ்சம் தனியா பேசனும்டி இளாகிட்ட" எனத் தயங்கி தயங்கி வேணி கூற,

"இதுக்கு ஏன்டி இவ்ளோ தயங்குற.... ஒன்னா போவோம்... அங்கப் போய் அவங்க அவங்க ப்ரண்டஸை தனியா மீட் செய்வோம்.... ஆஷிக் கூட என்கிட்ட ஏதோ தனியா பேசனும்னு தான் சொன்னான்" என்றுரைத்து உறங்கப் போனாள் வாணி.

இளாவை நினைத்து கவலைத் தோய்ந்த முகத்துடன் வேணி உறங்கச்செல்ல,

பிறந்த நாளிற்குப்பின் நாளைத்தான் மதியை பார்க்கபோவதால் ஏற்ப்ட்ட பூரிப்பில் சந்தோஷத்துடனேயே டெடி பியரைக் கட்டிக்கண்டு உறங்கினாள் மஹா.

ஜீன் 2012

அழகுக் கண்ணாடி கட்டிடமாய் பல வணிகக் கடைகள் நிரம்பிய குளுகுளு மாலான ஃபோரம் மாலுக்குள் நுழைந்தனர் அந்த மூன்று பெண்கள்.

அங்கே இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தவனிடம் இப்பெண்கள் கை அசைத்து
"ஹாய் ஆஷிக்" என உரைத்து அவனருகில் சென்றனர்.


"ஹாய் கே.பி"

"ஹலோ மஹா"

"ஹாய் அம்மு"

என மூவரையும் வரவேற்றானவன்.

"வாங்க கேர்ள்ஸ். நானும் இந்த கேபி தனியா தான் வருது போலனு நம்பிட்டேன்" என ஆஷிக் உரைக்க
"அவ என்னிக்கி தனியா வெளிய போயிருக்கா?? சும்மா வாய் பேச்சு தான் அவளுக்கு...மேடம் சரியான பயந்தாங்கொள்ளி..." என அம்சவேணி கேபியை வார


"அவன் இப்ப உன்ன கேட்டானா??" என அடிக்குரலில் சீறினாள் கேபி.

"சரிடி வாணி, யூ கேரி ஆன்.. நாங்க எங்க ப்ரண்ட பார்க்க போறோம்"
என மஹா கேபி யிடம் உரைக்க ஆஷிகிடம் தலையசைத்து நகர்ந்தனர் மஹாலட்சுமியும் அம்சவேணியும்.


"எந்த ப்ரண்ட பார்க்க போறாங்க அவங்க" -ஆஷிக்

"மஹா மதியை பார்க்க போறா... அம்மு இளாவ பார்க்க போறா"

"ஹோ அவங்க ஆளுங்களை பார்க்க போறாங்கனு சொல்லு"

"டேய் ப்ரண்ட்ஷிப்பை கொச்சைபடுத்தாத...அவங்க ப்ரண்ட்ஸ் தான்" - வாணி

"இப்படி தான் அவங்க உன்னை ஏமாத்திட்டு இருக்காங்க..நீயும் நம்பிட்டு இருக்க" - ஆஷிக்

"ம்ப்ச்... அதை விடு...நீ என்னமோ முக்கியமான விஷயம்...நேர்ல தான் சொல்வேனு சொன்ன..என்னதது" _ வாணி

"ஹம்ம்ம் கல்யாணத்தை பத்தி பேச தான் வர சொன்னேன்"

"வாவ் உன் கல்யாணமா ஆஷிக்... சொல்லவே இல்லை... கங்கிராட்ஸ் டா"
"ம்ப்ச் கடுப்பேத்தாத வாணி" கடுப்பாய் அவளை பார்த்து உரைத்தான் ஆஷிக்.


அவனின் கோபத்திலும் கடுப்பிலும் தான் வாணி என்றழைப்பானென தெரியுமாதலால்,அவன் மேற்கொண்டு பேச அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் வாணி.

ஃபோரம் மாலின் பின் வாசலிலுள்ள காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர் மதியும் மஹாவும்...

"ஐ லவ் யு மஹா" கடும் மன போராட்டத்திற்கு பிறகு இன்று கூறிவிட்டான் மதி தன் காதலை.
"பர்த்டே அன்னிக்கே சொல்லனும் நினைச்சேன்... ஆனா அவ்ளோ ஹேப்பியா இருந்த உன் மூடை ஸ்பாயில் செய்ய மனசில்லாம தான் சொல்லலை மஹா"


"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மஹா. ஆயுசுக்கும் உன்னை நல்லா வச்சு பாத்துப்பேன் குட்டிம்மா. டேக் யுவர் ஓன் டைம்... நான் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்"

அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.

அதே மாலில் மேல் தளத்திலுள்ள புட் கோட்டில் அமர்ந்திருந்தனர் இளாவும் வேணியும்.

"நேத்து ஏன்டா அப்படி மெசேஜ் பண்ண??.. மூளை கீள கொழம்பி போச்சா உனக்கு.... என்னடா வாழ்க்கை இதுனு இருக்குனு சொல்ற... என் நிலைமை யாருக்குமே வரக்கூடாதுனு வேற சொல்ற... நம்மல நினைச்சு நாமலே பரிதாபப்படுறது நம்ம படைத்த கடவுளுக்கு செய்ற துரோகம்..." வேணி அவனை வறுத்தெடுக்க,

இளா அவளை வெறித்து நோக்க,

"என்ன பாக்குற?? இது நீ அடிக்கடி சொல்லுற டயலாக் தான்...எவ்ளோ ப்ரச்சனை வந்தாலும் உன்னை நினைச்சி நீயே கறஞ்சி போக மாட்ட.. இப்ப என்ன வந்துச்சு உனக்கு".

இவ்வாறாக இளாவிடம் வேணி கோபத்தில் சீறிக்கொண்டிருந்தாள்.

"என்னை நினைச்சு இல்ல... உன்னை நினைச்சு தான் கறஞ்சு போறேன் அம்ஸ்" இளா உரைக்க
அவன் கூற வருவதன் அர்த்தம் விளங்காது அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி.


"என்னடா இருக்கு என்னைய நினைச்சு கறஞ்சி போறதுக்கு" எனக் கேள்வியாய் வேணி அவனைப் பார்க்க,

"என்னை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமானு கேட்டா என்ன சொல்லுவ அம்ஸ்??" எனக் கேட்டான் இளா.

--- நெகிழ்தல் தொடரும்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

இன்றைக்கு சின்ன அத்தியாயம் தான் போட்டிருக்கிறேன் மக்களே.
இனி கதை நட்புடன் கூடிய காதல்,ஊடல்,கூடல் பாதையில் பயணிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.


அடுத்த அத்தியாயம் அடுத்த வாரம் பதிப்பிக்கப்படும்.
தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Status
Not open for further replies.
Top