All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "என்னைக் களவாடிய காவலனே" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கவிதை கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 
Last edited by a moderator:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு மக்களே,

அனைவருக்கும் வணக்கம்..

என் மேல் நம்பிக்கை வைத்து .. என்னுடைய இந்த புதிய முயற்சிக்கு திரி ஆரம்பித்து கொடுத்த ஶ்ரீ மேம்க்கு முதலில் என் நன்றி...
அதிர்ச்சி வைத்தியம் தந்து என்னை திக்குமுக்காட செய்த பவிக்கு மிகப் பெரிய நன்றி....

இது என்னுடைய புதிய முயற்சி..
முதல் முயற்சி மக்களே... கவிதை படிச்சிருப்பீங்க... கதை படிச்சிருப்பீங்க.... கதையின் இடையில் ஆங்காங்கே கவிதையும் படிச்சிருப்பீங்க.....

கதையை கவிதையா படிச்சிருக்கீங்களா???

கவிதையாய் ஒரு கதை சொல்லிருக்கேன் ...


இது முழு நீள காதல் கதை...
காதல், பிரிவு,ஊடல்,கூடல் எல்லாம் கலந்த கலவை தான் இந்த கதை...

மொத்த கதையின் லிங்க தருகிறேன் மக்களே....

உங்கள் அனைவருடைய ஆதரவும் கருத்துக்களுமே எனக்கு கண்டிப்பா இந்த புதிய முயற்சிக்கு தேவை..... நான் மென்மேலும் வளர உதவும்... ஆகையால் நிறை குறை எதுவானாலும் சொல்லுங்கள்...
தவறுகள் இருந்தால் கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன்.

அன்புடன் ,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே, என்னுடைய முழு கவிதை கதையை இந்த திரியில் நேரடியாகவே பதிவு செய்துள்ளேன்.....


இது குறுநாவல் போல தான் இருக்கும்... ஆகையால் ரொம்ப நேரம் ஆகாது படிச்சு முடிக்க...
அதனால சீக்கிரம் படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க மக்களே..

தங்களுடைய கருத்துக்களை கீழேயுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...


நர்மதா சுப்ரமணியமின் "என்னைக் களவாடிய காவலனே" - கருத்துத் திரி

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை களவாடிய காவலனே

நாள் பார்த்து
நட்சத்திரம் பார்த்து
தாய் தந்தையருடன்
சொந்தங்கள் கூடிச்சென்று
பெண் பார்த்து...
அவனுக்கு அவளென
அவளுக்கு அவனென
பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்டு
திருமண ஒப்பந்தமாகி
விவாகம் புரிந்து
திருமண பந்தத்திற்குள்
நுழைந்தவர்கள் அவர்கள்...

மணமாகி
எட்டு மாதமாகிய
கால நிலையில்...

இன்று......

மாலை 6.00 மணி

பூட்டை திறந்து
நுழைந்தான்
அவனின் வீட்டிற்குள்...

மனம் முழுவதும்
துயரமும் சஞ்சலமும்
நிறைந்திருக்க
சோர்வான முகத்துடன்
அமர்ந்தான் மெத்தையில்...

அருகில் மனைவியின்
கையேட்டை கண்டவன்
பிரித்து பார்த்தான்
முதல் பக்கத்தை....

"உன்னை கண்டநாள் முதல்
வாழும் காலம் வரையின்
இனிய தருணங்கள்
நினைவு அடுக்குகளில்
பொக்கிஷ பெட்டகமாய்
என்னுள்ளும்
என் கையேட்டிலும்"

இக்கவிதை உணர்த்தியது
அவனை கண்ட நாளிலிருந்து
இதை எழுத
துவங்கிவுள்ளாளென...

அவனின் எண்ணங்கள்
அவளை முதன்முதலாய்
கண்ட நாளிற்க்கு
பயணித்தது.....

அன்று அவன் பிறந்தநாள்...

பணிக்கு செல்லுமுன்
சென்றிருந்தானவன்
வீட்டினருகிலுள்ள
ஆலயத்துக்கு....

இவ்வாண்டாவது
தனக்கானவளை
தன்னுடன் இணைத்திடு
இறைவாவென
கண்மூடி மனமுருகி
வேண்டி நிற்க...

அங்ஙணம் கேட்டது
ஆலயமணியோசை...

கண்விழித்து பார்த்தான்...

நின்றிருந்தாள் அவனவள்
அவன் முன்னே
கண் மூடி
கை கூப்பிய நிலையில்....

அவனுக்காய்
அவன் பெற்றோர்
தேர்வு செய்த பெண்ணென
காண்பித்திருந்தனர்
இவளின் புகைப்படத்தை
இவனிடம்
இரு தினங்கள் முன்பு....

பார்த்த நொடி
அவளின் வதனம்
அவன் மனதினில்
ஆழ்ந்து பதிய...

மறக்கவில்லை
அவனின் மூளையும்...
விலக்கவில்லை
அவனின் மனமும்
அம்முகத்தை
அவனின் சிந்தையிலிருந்து....


ஆகையால்
கண்டதும்
கண்டுகொண்டான்
அவளை.....

அடுத்து வரும் வாரநாளில்
அவளை பெண் பார்க்க
செல்வதென
அவனின் பெற்றோர்
திட்டமிட்டுருந்தமையால்
அவளை பின்தொடர்ந்து
அவளின் அலுவலறிய
திட்டமிட்டானவன்...

வாழ்க்கை முழுவதும்
அவளுடன் பயணிக்க
அவளை குறித்து
அறியயெண்ணி
அவளின் பயணத்தை
தனதாக்கி
அவளின் பின்னே
பயணித்தான் இவனும்.....

நிறுத்தினாள்
அவளின் வாகனத்தை
ஓர் நிறுவனத்தின் முன்....

தொண்டு நிறுவனமது...
பார்வையற்றோருக்கு
பார்வையாயிருந்து
பயிற்றுவிக்கும்
தன்னார்வ தொண்டாளினி அவள்...

தன் ஓய்வுநேர
விருப்பார்வத் தொழிலாய்
செய்தாளவள்...

அறிந்துக்கொண்டான்
அவனும்
அவளின் பணியை
வாசலிலிருந்த
காவலாளி வாயிலாக....

இன்று
ஓர் சிறுவேலையாய்
இவ்விடம்
வந்திருந்தாளவள்...

அவளை கண்டதும்
பித்துபிடித்தவன்போல்
பின்னே வந்தவன்
மறந்திருந்தான் தன்னை
மறந்திருந்தான் தன் வேலையை
மறந்திருந்தான் தன் பிறந்தநாளை...

காவலாளியிடம்
பேசியிருந்த நேரம்
சிணுங்கியது
அவனது கைப்பேசி.....

வெட்க சிரிப்புடன்
கண்ணை சுருக்கி
தன் தலையில் தானே
தட்டிக்கொண்டானவன்
கைப்பேசியில் அழைப்பாய்
வந்த அப்பாடலில்....

"என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே.. ஹே ஹே..
என் மனதை கொள்ளையடித்தவளே.. ப ப ப..
என் வயதை கண்டுபிடித்தவளே"

அந்த மந்தகாச நிலையில்
எவரென்று பாராமேலே
கைப்பேசியை இயக்கி
காதுக்குள் வைத்தானவன்..

அனிச்சையாய்
ஹலோ என்றது அவனிதழ்கள்...

வாழ்த்துக்களென
பதில் வந்தது
மறுபக்கத்தில்..

"தன் மனம் தான் அவளுடன் முடியப்பட்டுள்ளது
மணம் இன்னும் முடியவில்லையே"

ஏனிந்த வாழ்த்துவென
சிந்தையை சீண்டினானவன்...
அவன் ஆவி தான் ஆவலாய்
அவளுடன் போய்விட்டதே...
தன்னை மறந்த நிலையில்
தன் பிறந்தநாளையும்
மறந்திருந்த நிலையில்..
தன் அலுவலகம் செல்லவும்
மறந்திருந்தானவன்...

அவள் மேல் பித்தானவனின்
சித்தம் தெளிந்தது
அப்பக்கம் கேட்ட
கர்ஜனை குரலில்...
அலுவலகம் வர
தாமதம் ஏனென கேட்ட
அக்கர்ஜனையான குரலில்...

அக்குரலில் தன்னை உணர்ந்து
தான் இருக்கும்
இடத்தை உணர்ந்து
தெளிந்து சுதாரிக்க...

அவனிதழ் தானாய்
"அய்யய்யோ"
என்றலறியது...

அழைத்தது
அவனலுவலக மேலதிகாரி
என உணர்ந்தானவன்....

அவ்வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்தென
தெளிந்து...,

வாழ்த்துக்கு நன்றி நவிழ்ந்து
உடல்நிலை சரியில்லையென
அவரை சமாளித்து
அரைநாள் விடுப்பு கேட்டு
பேசி முடித்திருந்த நேரம்,

தன் வாகனத்தை
வளாகத்தினை விட்டு
வெளியே எடுத்துக் கொண்டு
வந்தாளவள்....

மீண்டும் ஓர் பயணம்
அவள் பின்னோக்கி
அவனின் வாகனம்....

போய் நின்றாள்
ஜவுளிக்கடை வளாகத்தில்...
கூட்ட நெரிசலில் சிக்கி
அவள் முன்னேற...
அந்நெரிசலை சாதகமாக்கி
அவளை நெருங்கி
இடித்து நடந்தான்
ஓர் கயவன்....

மீண்டும்
அவளை உரசவென
நெருங்கி வந்தவன்
துள்ளிவிலகிச் சென்றான்
அவளை விட்டு...

பாதுகாப்பிற்காய்
வைத்திருந்த ஊசியால்
அவனின் முழங்கையை
குத்திக்கிழித்தாலவள்
யாருமறியாவண்ணம்..

தொலைவிலிருந்து
அவளை தொடர்ந்த
அவனின் பார்வையில்
விழுந்தது இக்காட்சி..
இதை கண்ட
நம் நாயகன் முகத்தில்
சிறுமலர்ச்சி....

இதழில் இளநகையுடன்
ஒற்றை புருவம் உயர்த்தி
பாராட்டு பத்திரம்
வாசித்தான் அவளுக்கு...

"சரியான நெருப்புக்கோழி
தான் என் தேவதை"
இளநகையுடன்
சொல்லிக்கொண்டான் தனக்குள்...


இதற்குமேல் அவளை
தொடர்ந்து சென்றால்
அவ்வுள்குத்து
தனக்குமுண்டுயென
எண்ணிக்கொண்டவன்
கிளம்பினான் அவனின்

அலுவலகத்திற்கு.....
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று 6.15....

நினைவலையிலிருந்து
நிகழ்விற்கு வந்தானவன்...


பிறரின் தவறுக்கு
தண்டனையாய்
அவர்களை
காயம் செய்பவள்...
மறந்தும் கூட
கடிந்து கொண்டதில்லையே
என்னை....
தான் மட்டும்
எவ்வாறு காயம்
செய்தோம் அவளை...



நீண்ட பெருமூச்சுடன்
அச்சிந்தையுடனே
எடுத்தான்
முதல் பக்கத்தை
அவளின் கையேட்டில்....


ஆர்வமாய் படித்தான்
அவனுடனான அவளின்
முதல் சந்திப்பை....


அன்று....

அவன் பிறந்தநாளின் மறுநாள்

அலுவலக அருகிலுள்ள
குளம்பிக்கடையில்(coffee shop)
நண்பர்களுடன்
வந்திருந்தானவன்...


அவனின் தேவதையும்
இருந்தாளங்கே....


"அட, நம்ம நெருப்பு கோழி
இங்கயென்ன செய்யுது"
அவன் யோசித்திருந்த நேரம்


அவளருகிலுள்ள மேஜையில்
தடுக்கி விழுவதுபோல்
அதில் அமர்ந்திருந்த
ஒருவன் மீது
காப்பியை கொட்டினாளவள்...


கண்டுக்கொண்டான்
நம் நாயகன்
இது அவளின்
கைங்கர்யமென....


அவளுக்கு
ஏதோ வகையில்
இடையூறு அளித்த
அந்த ஒருவனுக்கு
தன்பாணியில்
அவள் கொடுத்த
பதிலடியிதுவென
கண்டுகொண்டானவன்
தோழிகளுடன் நிகழ்ந்த
அவளின் பார்வை
பரிமாற்றத்தில்....


"காணும் போதெல்லாம்
கோபக்கனலாய்
தகிக்கும் உன் கண்கள்
மென்மையாய்
என்னை ஸ்பரசிக்கும்
நாளெதுவோ??"


ஓர் மெச்சுதல்
பார்வையோடு
அவளை பார்த்திருந்த
அவனின் மூளை
கவிதை வடித்து
பறைசாற்றியது
அவள் அவனுக்குள்
புகுந்திட்டதை...


அவன் மூளையுரைத்த
கவிதை
தொலையுணர்வாய்(telepathy)
அவளையும் தீண்டியதோ???


மென்காற்றாய்
அவள் விழிகள்
அவனை
ஸ்பரிசித்தது இப்போது...


அவனை பார்த்துக்கொண்டே
கிளம்பிச் சென்றாளவள்
அக்கடையிலிருந்து...


இன்று 6.20..

"ஓ... இது தான்
என்னுடனான
அவளின் முதல் சந்திப்போ??"


வெகுசரியாய்
ஞாபகமாய்
அனைத்தும்
எழுதியுள்ளாளே!!!!


தன் மீது அவளுக்கு
முதல் பார்வையிலே
காதலோயென எண்ணி
குதூகலித்தது
அவனின் மனம்....


தொடர்ந்து அவன்
அவள் கையேட்டினை
படிக்க...


தனக்காய் பார்த்திருக்கும்
மாப்பிள்ளை இவனென
அறிந்ததினால் வந்த
ஸ்பரிசப் பார்வையது
என்பதையறிந்து
குதூக்கலித்த மனம்
செயலற்ற புஸுவானமாய்
புஸ்ஸாகியது...


தொடர்ந்து படித்தான்
அவளின் கையேட்டினை
அவன்மீதான அவளின்
காதல் மலர்ந்த
தருணத்தை அறிய...


அன்று...

பெண் பார்க்கும் படலம்


தன் தேவதையை
பெண் பார்க்க
குடும்பத்துடன்
சென்றானவன்...


அவனின் பெற்றோர்
பூர்விக ஊரின்
இல்லத்தில் வசித்திருக்க...


பணி நிமித்தமாய்
சென்னையில்
தனி வீடெடுத்து
வசித்திருந்தானவன்...


அரை மணி நேர
பயணத்தில்
அடைந்தனர்
அவளின் இல்லத்தை....


அரை மணி நேரம்
நீண்ட நெடும் நேரமாய்
உணர்ந்தானவன்
அவளை காணும் ஆவலில்...


அனைவரும் அமர்ந்திருக்க
பெண்ணழைப்பு நடைபெற
ஆர்வமாய் காத்திருந்தான்
பாதை பார்த்திருந்தான்...
தன் நெருப்பு கோழியின்
வதனத்தை காண்பதற்காய்..


அனைவரின் மீதும்
தன் பார்வை
செலுத்தி வணங்கியவள்,
அவனை கண்ணெடுத்தும்
காணாது...
அவனின் கண் நோக்காது
மண் நோக்கினாள் பெண்ணவள்..


ஏனிந்த பார்வை தவிர்ப்பென
சிந்தித்தவனுக்கு
புரிந்தது அக்காரணம்...
கீற்றாய் ரசனை புன்னகை
அவனிதழில்...


தனித்துவிடப்பட்டனர்
பெண்ணும் அவனும்
பேசிக்கொள்ளவென...


" Can i get your mobile number??"
அவளிடம் அவன் பேசிய
முதல் வாக்கியமிது...


அவனின் இக்கேள்வியில்
அவள் ஞே என விழித்து
"சீன் பார்ட்டியோ
பீத்தல் மன்னனோ
வெள்ளைக்கார துரை
என்ற நினைப்போ..."
சீராட்டிக் கொண்டாள் அவனை
அவளின் மனதில்....


அவளின் விழிப்பிதுங்களில்
தன் கேள்வி
தவறாய் உணரப்பட்டதை
உணர்ந்தவன்...


தன் விருப்பத்தை
ஒற்றை வரியில்
தெரிவிக்கவென வினவியது
சொதப்பலாகியதோவென
அசடு வழிந்தான்....


"என் விருப்பம்
தேவையில்லையோ"
என அவள் முறைக்க


"என் முகம் பார்க்காமல்
நாணத்தில் நாணி
நிலம் பார்க்கும்
உன் வதனம்
தெரிவித்ததே உன் விருப்பத்தை"
கவிஞனாய் கவியுரையாற்றினான்...


கண்டுக்கொண்டானேயென
மேலும் அவள் முகம்
செம்மையுற
எங்கெணம் மறைப்பேனென
திரும்பி நின்றாளவள்...


அலுவலகத்தில் அனைவரையும்
நேரெதிர் பார்வைக் கொண்டு
வேலை வாங்கி
பழக்கப்பட்டவள்...


இன்று அவன் முகம்
காணவிடாது
அணைக்கட்டும்
தன் வெட்கத்தை எண்ணி
வியந்து தான் போனாள்
பெண்ணவளும்...


அவளுக்கு அவன்
விருப்பமானவனென
அந்நாணமே உரைத்திட...


அதை அவன்
கண்டுக்கொண்டதை எண்ணி
சிலிர்த்தது பெண்ணுள்ளம்..


அவளின் செயலை ரசித்து
வாய்விட்டு சிரித்தானவன்...


அதை கேலியாய் எண்ணியவள்..

திரும்பி அவனை
நேர் எதிர்க்கொண்டாள்..
அவன் பார்வையை
நேராய் தாங்கினாள்.....


"நான் உனை
விரும்புகிறேன்
என் செல்ல
நெருப்பு கோழியே"
அவள் விழிக்குள் ஊடுருவி
உரைத்தானவன்....


பார்த்ததும் காதலா??
அதுவும் என் மேலா??
தான் சுமார் மூஞ்சி ரகம் தானே??
மாநிறத்திற்கும் சற்று
குறைந்த நிறம் தானே??
பிறகெப்படி இந்த காதல்??
ஆமா,அதென்ன நெருப்பு கோழி??
வியப்பிலும் திகைப்பிலும்
விழி விரிய
அவளிதழ் தானாய்
இவ்வார்த்தைகளை உதிர்க்க...


மெய்யழகெல்லாம்
அழகல்ல பெண்ணே!!!
உன் உள்ளத்து அழகிற்கு
ஈடிணையில்லை கண்ணே!!!
என்றானவன்


அவனின் கூற்றில்
உள்மனதிலிருந்து
வெடித்து சிதறும்
இன்ப அதிர்வலையை
அடக்க பெரும்பாடுபட்டாள்
பெண்ணவள்...


எனினும் எவ்வாறு
அறிந்தானாம்??
தன் உள்ளத்து அழகை..
தன் எண்ணங்களை...
இன்று தான் முதன்முதலாய்
தன்னை காணும் போது...


அவளின் சிந்தை சிந்திய
கேள்விக்கணைகளை
சிந்தாமல் சிதறாமல்
கேட்டாள் அவனிடம்.....


நாட்கள் பல இருக்கிறது
நாம் அளவளாவி மகிழ
இன்றே அனைத்தையும்
பேசவும் வேண்டுமோ???
பதிலுரைத்தானவன்....


அப்பதிலுரையில்
அசந்து நின்றாளவள்...


"என்னை கட்டிக்கொள்ள
சம்மதமா??"
அவள் வதனம் கண்டு
அவன் வினவ...


இந்நொடி காதலுமில்லை
ஆசையுமில்லை அவன் மேல்..
ஆனால் பிடித்தம் உண்டே
விருப்பமும் உண்டே!!!
ரசித்தாலே அவன் பேச்சை..
நாணி சிவந்தாளே
அவன் கூற்றில்...
பின் எவ்வாறு சம்மதமில்லை
என்பாளாம் அவளும்..


"9965063367" அவளுறைக்க

முதலில் புரியாது விழித்து
பின் தன் கேள்விக்கான
பதிலுரைத்து
சம்மதிக்கிறாளென
அர்த்தம் கண்டு
மனம் நிறைந்து சிரித்தானவன்..


"என் நினைவுடனே
கனா கண்டிரு கண்ணே!!!
நினைவாய் அல்லாது
நிஜமாய் உனை மணந்து
இணை சேரும் வரை"
அங்கிருந்து நகன்றான் அவனும்...


இருவரும் சம்மதித்ததில்
மகிழ்ந்த பெரியவர்கள்..
திருமணத்தின் முன் தினம்
நிச்சயம் செய்யலாமென பேசி
மணநாளின் தேதியை
குறித்துக்கொண்டு
விடைபெற்றனர்

அங்கிருந்து...
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்றிரவு...

"இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா...
பகலிலும் நான் கண்ட
கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி
நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்"


அவனின் எண்ணுடன்
இப்பாட்டினை இணைத்து
சேமித்து வைத்திருந்தாள்
அவளின் கைப்பேசியில்...

அவள் கைப்பேசிக்கு
வந்தது முதல்
குறுஞ்செய்தி
தூதுக்குறிப்பாய்
அவனிடமிருந்து...

"தன்னை காத்தல் நன்று..
காப்பதற்கான ரௌத்திரம் நன்று..
தன் பாதுகாப்பிற்காய்
உபயோகிக்கும் ரௌத்திரம்
அதனினும் நன்று...
எச்சரிக்கை உணர்வுடன்கூடிய
ரௌத்திரம் அதனினும் நன்று..
தனக்கும் இடையூறற்றதாய்
இருக்கக்கூடிய ரௌத்திரமே
இவையனைத்திலும் நன்று..
இவ்விதமான உன் ரௌத்திரம்
உன்மீதான என் ரசனையை
கூட்டுகிறது பெண்ணே"


அவனனுப்பிய
இந்த ரௌத்திர கவிதையில்
வியப்பில் விழி விரிய
கைப்பேசி திரையை
பார்த்திருந்தாளவள்...

"எவருக்கும் பாதகமற்றதாய்
எவரும் அறியாவண்ணம்
நீ கொடுக்கும் பதிலடி..
உன் செயல்பாடு
என்னை கவர்கிறது பெண்ணே.."

அக்கவிதையின்
சாராம்சத்தை விளக்கி
இவ்வாறாய் வந்தது
அவனின் அடுத்த குறுஞ்செய்தி...

இக்கணம் கூவுகிறது
பெண்ணின் மூளை
அவளை முன்னமே
எங்கேயோ அவன்
பார்த்திருக்கிறானென..

போகும் இடமெல்லாம்
சர்ச்சை செய்யாது
வரமாட்டாளே அவளும்...
எவரும் அறியாவண்ணம்
போக்குகாட்டி
தான்செய்யும் செயலை
எவ்வாறு அறிந்துக்கொண்டானிவன்..
அதுவும் அவனை
கவர்கிறதாமே!!!!
கண்கள் பளபளக்க
சிந்திந்துக் கொண்டிருந்தவள்
அடிவயிற்றில்
பட்டாம்பூச்சு பறக்கும்
சிலிர்ப்பு அவள் உடலில்...

தன்னை தனக்காய்
தன் இயல்போடேயே
ஏற்கிறானவன்
ரசிக்கிறானவன்...
இச்சிந்தையே இனிக்கிறதே
பெண்ணவளுக்கு...
அவனுமே கவர்கிறானே
இவளை..

எங்ஙணம் என்
ரௌத்திரத்தை பார்த்தானாம்??
அறியும் ஆவல் மேலிட
குறுஞ்செய்தி செய்தாள் அவனுக்கு..

இவ்வாறாக
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணமுமாய்
தானொரு உலகம்
தாங்கள் மட்டுமே அவ்வுலகமுமாய்
இனிமையான அளவளாவலுடன்
வளர்த்தனர் தங்கள் காதலை
அந்த மூன்று மாத திருமண
இடைவேளையில்....

இன்று 6.45

அந்த இனிய நினைவுகளை
தூதாய் அனுப்பிய
குறுஞ்செய்தி
தருணங்களை எண்ணி
கண்மூடி அமர்த்திருந்தானவன்..

பெண் பார்த்தபின்
அவளை சந்திந்த தருணம்
அவன் கண்முன்
நிழலாடியது...

அன்று...

பெண் பார்த்து சென்றபின்
மறுநாள்...


அதே குளம்பிக் கடை
அதே இருக்கையில்
தோழியற் படைசூழ
அமர்ந்திருந்தாளவள்...
உள்நுழைகிறானவன்...

அவளை அங்கு கண்டதும்
இயந்திரத்தனமாய்
அவனுள்ளம்
அவளிருப்பிடம் செல்ல..
போய் நின்றான்
அவளின் முன்னே...

அதிர்ச்சி வைத்தியம்
அவளுக்கு...
எதிர்ப்பார்க்கவில்லை
அவனை இந்நேரம் அங்கே..

அவர்களிருவரின்
பார்வை மாற்றத்தில்
அவன் யாரென
தோழியர்கள் உணர
கேலிப்பேசி நிகழ்விற்கு
கொண்டு வந்தனர்
இருவரையும்...

உன்னவன்
இருக்கும்போது
எங்கள் நியாபகம் தான்
இனி வருமோ உனக்கு??
அருகே தானே
உன்னவரின் அலுவலகமும்
இனி சேர்ந்தே
பயணிப்பீரோ இருவரும்
காலையும் மாலையும்??
என தோழியர்கள்
பேசிச்சிரிக்க...

தன்னார்வ தொண்டாளினியவள்
என்றெண்ணியிருக்க
மென்பொருளாளினி அவளென
தோழியரின் கேலிச்பேச்சில்
அறிந்தானவன்...

வியப்பில் பிரமித்து
தொண்டு நிறுவனத்தில்
அவளை கண்ட நாளை
விவரிக்கலானான்
அவளிடம்...

இந்நேரம் தோழியர்கள்
இவர்களுக்கென
தனிமை கொடுத்து
விலகியிருக்க...

என் ரௌத்திரம் தெரியும்
என் தொண்டாசையும் தெரியும்
இதில் கவர்ந்தென்னை
விரும்பினானாமா???

இதை தான்
என் உள்ளத்தழகு
அவனுக்கு தெரியுமென
நேற்றுரைத்தானோ???

என்னவன்
எனக்கானவன்
எனக்காய் என்னை
நேசிப்பவன்..
இவ்வெண்ணமே
இன்ப ஊற்றாய்
அவனின்மீது நேசத்தை
பொங்கி வழியச்செய்ய

அனிச்சையாய்
அவளிதழ் மொழிந்தது
"உங்களை எனக்கு
ரொம்ப பிடிச்சிருக்கு"

எதிர்பாராது
அவளுரைத்த
இச்சொல்லில்
கண்கள் மின்ன
அவன் மனம்
துள்ளிக்குதித்தது...

இன்று 7.00 மணி

"மனதிற்கு பிடித்தவனான
உன் பிடியில்
ஆயுள் சிறையிருக்க
ஆசையடா எனக்கு...
சிறை வைப்பாயா என்னை??"

எழுதியிருந்தாளவள்
இக்கவிதையை...
அன்றைய அவர்களின்
சந்திப்பை பற்றிய
குறிப்பின் கீழ்..
அவளின் கையேட்டில்...

"சிறை வேண்டாம் பெண்ணே
கூண்டிக்கிளியாய் அல்லாது
காதல் கிளிகளாய்
சுற்றித் திரிவோம் நாம்
அந்த சுதந்திரம் உண்டு
உனக்கு கண்ணே"
அக்கவிதையின் கீழ்
இக்கவிதையை
எழுதி வைத்தானவன்...

அவன்மீது அவளுக்கு
காதல் மலர்ந்த
தருணத்தை அறிய
இவன் படிக்க...

இவனின் காதலை
அவள் உணர்ந்த
தருணத்தை
எழுதியிருந்தாளவள்
அடுத்த பக்கத்தில்...

அவள் மட்டுமா
உணர்ந்தாளதை..
அவள் மீதான
அவனின் காதலை
அவனுமே உணர்ந்த

தருணமது....
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று...

திருமணத்திற்கு இருவாரம்
முன்பொரு நாள்....


இரவின் நிலவின் குளுமையில்...
நீண்ட நெடும் பயணத்தில்...
முகத்தில் மோதி செல்லும்
சில்லென்ற காற்றில்...
மனதை வருடும்
இனிமையான இன்னிசையில்...
அனைத்திலும்
சாரல் மழையாய்
நெஞ்சில் அவனின் நினைவே...
தனக்காய் நிச்சயித்த
தன்னவனை நினைத்து
ஏகாந்த நிலை அவளுக்கு....

இரவு 11.15

அத்தகைய ஏகாந்த நிலை
பயணத்தில்....
சென்றுக்கொண்டிருந்தாள்
அலுவலகத்திலிருந்து
அவளின் வீட்டிற்கு
அலுவலக வண்டியில்.....

"வாழ்க்கை போகும் தூரம்
நீயும் நானும் போக வேணும்...
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை
தோன்றுது
நீ எந்தன் பாதி என்றும்...
நானும் உந்தன் மீதி என்றும்
காதல் காதுக்குள்ள வந்து ஓடுது...
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே...
ஓ ஹோ ஓ
நீ என்பதே நான் என்கிற நீயே...
யாஞ்சி யாஞ்சி"

கைப்பேசி அழைப்பாய்
இப்பாடல் ஒளிர...

நினைவில் நிறைந்திருந்தவன்
நிஜமாய் அழைத்தான் அவளை
அவளின் கைப்பேசியில்...

முகத்தில்
தன்னை மீறிய
சந்தோசத்தில்
நாணப்பூ பூக்க...
அந்நாண புன்னகையோடே
பேசிக் கொண்டிருந்தாள்
அவனிடம்....

அவளின் அலுவல் வண்டி
வேகத்தடையில்
வேகமாய் ஏறியிறங்க...

அதேபோல் அவளும்
இருக்கையில் ஏறியிறங்க...

கையிலிருந்த கைப்பேசி
கைநழுவி கீழே விழ....

அவள் தலை
வண்டியின் உட்கூரையில்
மேலே போய்
நச்சென்று இடிக்க...
அய்யோஓஓஓ....அம்மாஆஆஆஆ
என்றிவள் அலற

அவ்வலறல் சத்தத்தை
துள்ளியமாய்
மறுபுறம் இருந்தவனுக்கு
அனுப்பிவிட்டு,
தன் இயக்கத்தை நிறுத்தியது
கீழே விழுந்த அவளின் கைப்பேசி...


இரவு 11.20

பதட்டத்துடனும்
பதைபதைப்புடனும்
இதயத்தின் துடிப்பு
எகிறி குதிக்க...
அவன் வீட்டிலிருந்து
ஓடோடி வந்து
அவனின் குதிரைப்போன்ற
இரு சக்கர வாகனத்தில்
புயலென சீறிப்பாய்ந்தானவன்..
அவளை எவ்விதமேனும்
காத்து விட வேண்டுமென்ற
ஓர் எண்ணத்தை மட்டுமே
ஜபமாய் மனதில்
உருப்போட்டுக் கொண்டு....

இரவு 11.30

அவளின் வீட்டை
வண்டி நெருங்கப்போவதை
அவனிடம் கைப்பேசியில்
அவளுரைத்த தருணமே
அந்நிகழ்வுகள் நடைபெற...

அடைந்திருந்தான்
அவளின் வீட்டை...
இருபது நிமிடத்தில்
சேர வேண்டிய இடத்தை
பத்தே நிமிடத்தில்...

அவன் வண்டி
அவளின் வீட்டை அடைந்த
அதே நிமிடம்
வந்து சேர்ந்தது
அவளது அலுவலக வண்டியும்...

அவ்வண்டியிலிருந்து
அவளிறங்கிய நேரம்
நின்றிருந்தானவன்
அவளருகில்....

அவளின் முகத்தை
தன் கையில்
ஏந்தியிருந்தான் அவன்...

அவன் கையின் நடுக்கத்தை
உணர்ந்தாள் அவள்....

தலை முதல் கால் வரை
ஆராய்ந்தான் அவளை....

அவனின் ஆராய்ச்சி
பார்வையில் பரிதவிப்பை
உணர்ந்தவள்,
அவன் கைகளுக்குள்
முழுவதுமாய்
அடைக்கலமானாள்
தனக்கு ஏதுமாகவில்லை
என்பதை உணர்த்தும் பொருட்டு...

அவளுக்கு என்னானதோ
ஏதானதோயென
பரிதவித்திருந்த
அவனின் மனமும்
கட்டுக்குள் வந்திருந்தது,
அவள் பாதுக்காப்பாய்
இருப்பதை உணர்ந்த நிமிடம்..

அவனின் காதலை
எண்ணி கலங்கிய
அவளின் கண்கள்
அவனின் சட்டையை
ஈரமாக்க....

பதறி அவளை விலக்கி
அவன் பார்க்க...
இதழ் சிரிக்க
கண்ணில் நீர் நிறைந்திருக்க...

"உன் காதல் விளைவித்த
ஆனந்த கண்ணீரடா அது"
என பார்வையால் உணர்த்தினாள்
அவனுக்கு....

"நெருப்பு கோழி
நீர்க்கோழி ஆனதே!!!
அடேடே
ஆச்சரியக்குறி!!!!"
என்றவன்
சிரிப்பினிடையே உரைக்க...

"நெருப்பினை
குளிர வைத்த நீர் நீ"
என காதல் பார்வை
வீசினாள் அவனிடம்...

பின் நடந்தவற்றை
அவளுரைக்க...

வேகத்தடை
தன் இதய துடிப்பை
தடை செய்ய
இருந்ததேயென எண்ணி
அசடு வழிந்தான் அவனும்...

அவளின் அலறலுக்கு
அவன் செய்த அக்கப்போரை
நினைத்து வாய்விட்டு
சிரித்தாள் அவளும்....

அவளின் மீதான
அவனின் நேசத்தையும்
அக்கறையையும்
பாதுகாப்புணர்வையும் எண்ணி
மனமுருகிதான் போனாள் அவளும்...

இத்தருணத்தை
தங்கள் காதல் நினைவகமாய்
மனப்பெட்டகத்தில்
பொதிந்து கொண்டனர்
இருவரும்....

இன்று 7.30

அதை எண்ணி
இப்பொழுதும்
அசடு வழிந்தானவன்...

ஒன்றுமில்லாத
விஷயத்திற்கு
பதட்டப்பட்டு
அவளை அழவைப்பதே
வேலை உனக்கென
குட்டியது அவனின் மனசாட்சி..

ஆம் அவ்வாறான
சிறுப்பிள்ளைத்தனமான
விஷயத்திற்கு தான்
கலங்க வைத்திருந்தானவளை
இன்றும்....

இரவின் உணவிற்காய்
சமைக்கவென
அடுக்களைக்குள்
நுழைந்தானவன்....

அங்கிருந்த
சிறு துரும்பும்
அவளின் நினைவை
நினைவுபடுத்த...

பயணப்பட்டது
அவனின் மனம்
அவளின் முதல் நாள்

சமையல் நிகழ்விற்கு...
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று.....

திருமணமாகிய

இரு வார காலநிலையில்...

குடிபுகுந்தாள்
இவ்வில்லத்தில்
அவனின் மனையாளாய்...

அவனின் பெற்றோர்
பூர்வீக வீட்டில்
வசித்திருந்த நிலையில்
பணி நிமித்தமாய்
குடிபுகுந்தனர்
இவ்வில்லத்தில்
தனிக்குடும்பமாய்...


இன்று
தானே சமைப்பதாய் கூறி
அடுக்களைக்குள்
நுழைந்துக்கொண்டாளவள்...

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?
பாடிக்கொண்டே
அடுக்களைக்குள் நுழைந்தவன்
பின்னிருந்து அணைத்து
இதழ் பதித்தான்
அவள் கன்னத்தில்....

விழிகள் மின்ன சிரித்தவள்..

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?

அவன் பாட்டிற்கு
எசப்பாட்டு பாடியவள்
அவன் மார்பிற்குள்
முகம் புதைத்தாள்....

நீ மாவு என்றால்
நான் இட்லியா தோசையா??

கிண்டலாய் பாடி
சீண்டினான் அவளை...

நான் பூரிக்கட்டை என்றால்
நீ சப்பாத்தியா பூரியா??

அக்கிண்டலை கிண்டி
அவனுக்கே அவள் கொடுக்க...

வாய்விட்டு பெரிதாய் சிரித்து
சமையல் மேடையில்
அமர்ந்துக்கொண்டானவன்
அவளுக்கு
உதவுவதாயுரைத்து...

அவளை கண்ணார
கண்டு ரசித்தவன்
உரைத்தான் இக்கவிதையை..

வெண்டக்காயை காணும்போது
உன் பிஞ்சுவிரல் ஞாபகம்...
முருங்கையை காணும்போது
உன் நீண்ட கால்கள் ஞாபகம்...
கேரட் காணும்போது
உன் செவ்விதழ் ஞாபகம்...
தக்காளியை காணும் போது
உன் நாண முகம் ஞாபகம்...
முட்டையை காணும்போது
உன் முட்டைகண்கள் ஞாபகம்...

சிரிப்பாய் கவனித்தாளவள்
அவன் கவிதையை
முட்டையை கேட்கும்வரை...

அவளின் முட்டைகண்
கொண்டு அவள் முறைக்க..

நான் சாம்பார்
நீ பருப்பு
என் கிட்ட ஆகாதடி
உன் முறைப்பு...
என்றானவன்....

பொங்கி வந்த சிரிப்பை
இதழுக்குள் அடக்கி
பெரிதாய் முறைக்க...

வடை செய்ய தேவை பருப்பு
என் மேல காட்டாதடி
வெறுப்பு....
என்றுரைக்க...

அடக்கவியலாது
சிரித்தாளவள்..

அச்சிரிப்பில்
மயங்கியவன்
மீண்டும்
நிரூப்பித்தான்
தன் கவித்திறனை...

ரசத்தின் சுவை தக்காளியில்
என் காதல் ரசத்தின் சுவை
என் நெஞ்சத்து கள்ளியான
உன் கண்களில்...

வெங்காயம் விளைவித்த
உன் கண்ணீரால்
என் மனதிலோ பெருங்காயம்...

இனிப்பை சுவைக்கும்
இனிப்பின் சுவையறிய
உன் இதழ் சுவைக்கும்
பாயாசமாய்
மாறிட ஆசையடி!!!!

இவ்வார்த்தையில்
அவளின் இதழை
அவன் நெருங்கிட...

அக்கணம்
அவளின் கைத்தவறி
சூடான எண்ணெய்
சிந்தி சிதறியது அவனின் கையில்...

சிதறிய எண்ணெய்
சிதற செய்தது
பெண்ணின் சிந்தையை
அவனின்
ஆவென்ற அலறலில்...

துள்ளி குதித்து
அவனை விட்டு
விலகினாளவள்..

அவனின் கை வலி
அவள் மனவலியை கூட்ட
உள்ளம் பதற
தன் கைகள் நடுநடுங்க
கண்ணில் நீர் வழிய
துரிதமாய் செய்தாள்
முதலுதவியை
அவன் கைகளுக்கு....

அவள் கைகளின் நடுக்கமும்
மனதின் பதற்றமும்
கண்களின் நீரும்
விடாது தொடர்ந்தது அவளை...

அங்கே சிகிச்சையில்
அவனின் வலியில்
தன் மனம் ரணமாய்
வலிக்க கண்டாளவள்...

கண்ணீரிலேயே
காயத்தை ஆற்றிவிட
எண்ணிவிட்டால் போலும்...
அடாத மழை போல்
விடாது அழுதால்
குற்றவுணர்விலும்
குன்றாத காதலிலும்...

சற்று குறைந்த
சூடாதலால்
சற்றாய் சிவக்க
செய்திருந்தது
அவனின் முன்கையை..

வீட்டை அடைந்தவன்
மருந்தின் வீரியத்தால்
தனை மறந்துறங்க..
அவனின் கை ரணம்
அவளின் மன ரணத்தின்
வீர்யத்தை கூட்டி
பெரும் பாரமாய்
இதயத்தை தாக்கி
அவனுக்காய் துடிதுடிக்க
செய்தது அவளை...

அவனின் வலி கண்டு
அவள் மன வலி பெருக
அவன் கையை
தன் கைக்குள் வைத்து
கண்ணீர் சிந்தினாளவள்...

சிந்திய எண்ணையோ
சில துளிகள்...
ஆனால் அவள் சிந்திய
கண்ணீரோ
பெரு வெள்ளம்!!!

அவனுக்கு உணவூட்டி
தேவையை கவனித்து
தாயாய் அவனை
பராமரித்தாளவள்...

அன்று முழுதும்
ஓய்வெடுத்தமையால்
நடுஇரவில் தூக்கம்
கலைந்து அவன்விழிக்க
அவனின் தலை கோதி
அருகில் தூங்காது
அமர்ந்திருந்தாளவள்...

இன்று தான்
முதன்முதலாய்
காண்கிறான் அவளின்
சோர்வான கலங்கிய முகத்தை...

எதற்கும் கலங்காது
துணிந்து நிற்கும்
தன் மனையாள்
தனக்காய்
துடிதுடித்து சிந்திய கண்ணீர்
கலங்கடித்தது
அவ்வாண்மகனின் மனதை...
அதே மனம்
பூரிக்கவும் செய்தது
அவளின் காதலை எண்ணி...

தனக்காய்
தன் நலனுக்காய்
கண்ணீர் சிந்தும்
உறவை பெற்றவனே
பெரும் பணக்காரன்...

அக்கணம் அவள்
தனக்கு வரமாய் வந்த
தேவதையாய்
உணர்ந்தானவன்...

"சின்ன சின்ன கண் அசைவில்

உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நான் உன்
தூழி தூழி"

"மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என் இதயம்
நம்முயிரில் நிறையுதே
லாலி லாலி நீ என்
தூழி தூழி"


அவளை
தன் மாரபில்தாங்கி
அன்பாய்
அவன் தாலாட்டு பாடிட
தனை மறந்து
நித்திரைக்கு சென்றாளவள்...

இன்று 7:45

எவருக்கும் அடங்காத
அவளின் வன்மை குணம்
தன்னிடத்தில்
மென்மையாய் மாறிப்போகும்
மாயமென்ன???
காதலால்
நான் அவளை களவாடினேனா??
இல்லை
என்னை அவள் களவாடினாளா??
விடை யாரறிவாறோ???

என்றும் தனக்குள்
கேட்கும் கேள்வியை
இன்றும்
கேட்டுக்கொண்டானவன்...

அவளின் நினைவே
மனதை நிறைக்க
வயிறை நிரப்பும்
எண்ணமற்று
மீண்டும் மூழ்கினான்
அவளின் கையேட்டிற்குள்....

அதில் கண்ட
கவிதையில்
அவன் கண்களில்
ஆனந்த கண்ணீர்....

நிமிர்ந்து பார்த்தான்
அட்டவணையில்
இன்றைய தேதியை...

அறைந்துக்கொண்டான்
தன் நெற்றியை..
எவ்வாறு மறந்தேனிதை
என்றெண்ணி...

நெருப்புக்கோழி
நோஞ்சான் கோழியாய்
மாறும் நாளிது...

மாதாமாதம்
விடுப்போ
வீட்டிலிருந்து வேலையோ
கட்டாயமாய்
அவளை எடுக்கச்செய்து
தானும் அவளுக்கு
துணையாய்
அருகிலிருக்கும் நாளிது...

இந்நாள் கணக்கும்
தேதியின் ஞாபகமும்
அவளை விட
இவனுக்கே அத்துப்படி...

வயிற்றுவலியுடன்
சிறப்பு விருந்தினராய்
வாந்தியும்
அதன் பலனாய்
உண்ணாது இருப்பதால்
மயக்கமும் பழக்கம்
அவளுக்கு அந்நாட்களில்....

மணமாகிய
முதல் மாதத்தில்
தூர நாளில்
அவளை கண்டவன்...
அவள் படும்துயர்
காண சகிக்காது
கைவளைக்குள்
வைத்துக்கொண்டானவளை...

மாதாமாதம்
தொடர்கதையாய்
தொடரும் இந்நிகழ்வில்
அவளை பராமரித்து
அரவணைத்து
தானும் பங்கெடுத்துக்
கொண்டான் அவளுடன்....

இன்று
எவ்வாறு மறந்தேனிதை
எண்ணி எண்ணி
தன்னையே
நொந்துக் கொண்டானவன்..

மீண்டும் படித்தான்
அக்கவிதையை..
அவனுக்காய்
அவளெழுதிய
அக்கவிதையை....

"அந்த மூன்று நாட்களை

அழகிய நாட்களாய்
மாற்றிய மாயவன் நீ...

பெண்களுக்கு இது
புதிதில்லையே என
உரைக்கவில்லை நீ....

தீட்டென்று தள்ளி வைத்து
எனை தீண்டாது
இருக்கவில்லை நீ......

என் கரை படிந்த போர்வையில்
கரை நீக்கிய உன் வேலையில்
உன் கரை காணா காதலை
எனக்கு உணர்த்திட்டவன் நீ....

சீரக நீரால் போகாத வலியை
உன் சீரான நேசத்தால்
போக்கியவன் நீ...

வலியின் வலியை
உணரவிடாது
கைகளுக்குள் பொத்தி வைத்து
உன் மார்பினில்
அடைக்கலம் தந்து
எனை பாதுகாத்தவன் நீ......

அந்நாட்களில் வரும்
என் கோபங்களை
எரிச்சல் மொழிகளை
உன் காதலால் குறைத்து
என்னை அமைதியுற
செய்தவன் நீ....

என் தேவை அறிந்து
எனக்கு சேவை புரிந்து
என் வேலையை
பகிர்ந்திட்டவன் நீ....

தாயாய் தந்தையாய்
எதிர்ப்பார்த்தேன் உன்னை...
இவை அனைத்தும்
தாண்டிய நேசத்தை
எனக்களித்து
உன்னை யாவுமாய்
என்னுள் உணரவைத்தவன் நீ......"


இக்கவிதையில்
இக்கவிதை உரைத்த கருத்தில்
அதில் பொதிந்துள்ள அர்த்தத்தில்
அதன் வார்த்தையிலுள்ள
அவளின் அன்பில்...

அவளுடன் சண்டையிட்டு
அவன் தெறித்த
வசனங்கள்
வண்டாய் குடைந்தது
அவனின் மூளையை...

"உன்னோட அப்பா
அளவுக்கு நான் உன்ன
பாத்துக்கலையா??"

"நான் உன் வாழ்வில்
முக்கியமானவன்
இல்லையா???"

"உன் அப்பாவின்
அடுத்த நிலை தான் எனக்கா??
அவருக்கு இணையான
நிலையில் கூட
உன் மனதில் நானில்லையா??"

"அந்நம்பிக்கையை
நான் இன்னும்
உன்னுள் விதைக்கவில்லையா??"

எவ்வளவு
காயப்படுத்திட்டோம்
அவளை...
அதை எண்ணி
துடிதுடித்துப் போனான்
இப்பொழுது...

இக்கவிதையில்..
தந்தையைவிட தன்னை
மேலாய் நேசிக்கும்
அவளின் அன்பில்..
தன் குற்றத்தை
உணர்ந்தானவன்..

அவளிடம் போட்ட
சண்டையை
மறந்தானவன்...

அவளே முதலில்
தன்னிடம் பேச
வேண்டுமென்ற
எண்ணத்தை
மறந்தானவன்...

காலையில்
உரையின்றி
அவளை கலங்கடித்த
அவனின்
கோப பார்வையை
மறந்தானவன்...

அனிச்சை செயலாய்
கைப்பேசியில்
அவன் கைகள்
அழுத்தியது
அவளின் எண்ணை....
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே...
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல"



இப்பாடல்
அவளின் கைப்பேசியில்
அழைப்பாளர் இசையாய்
ஒலித்த நேரத்தில்
பரவச நிலையில்
அவனிருக்க..


அப்பாடல்
முடிவுறும் வேளையில்
தன் இயக்கத்தை
நிறுத்தியதாய் உரைத்தது
அவளின் கைப்பேசி...


மீண்டும் மீண்டும்
முயற்ச்சிக்க
"The subscriber you are calling is
Currently not reachable or either switched off
at the moment. Please try again later"
என்றுரைக்க..


அவளின்
அலுவலக தோழிக்கு
அழைத்தானவன்...


அவள் அரைநாளில்
விடுப்புக்கேட்டு
அலுவலகத்திலிருந்து
கிளம்பிவிட்டாளென்ற
பெரும் இடியை
அவனின் தலையில்
இறக்கினாள் அவளின் தோழி...


நேற்றை போல்
அருகிலிருக்கும்
தாயின் வீட்டிற்கு
சென்றிருப்பாளோ
என்றெண்ணி
அங்கு அழைக்க...
அவளின் தாயின்
முதல் கேள்வியே
"சாப்டாச்சா??
அவள் என்ன
சமைத்தாள் இன்று??"
என்பதாய் வர
நிரூபனமாயிற்று
அவள் அங்கில்லையென...


எங்கு சென்றிருப்பாள்??
எங்கேவென தேடுவது??
வேலை நிறுத்தம்
செய்திருந்தது
அவனின் மூளை...


"எங்கு காணினும்
உன் முகமே
எங்கு சுற்றினாலும்
உன் நினைவே
வீடெங்கிலும்
உன் வாசமே
மனதை வதைக்கிறதடி
உன் நினைவு பெண்ணே..."
பொலம்பினான் தனக்குள்..


இங்கிருந்தால்
அவள் நினைவில்
மூளை வேலை செய்யாதென
உணர்ந்தவன்..


சென்றான்
பேருந்து நிறுத்தத்திற்கு
அவள் எப்போதும்
அலுவலக வண்டியில்
வந்திறங்கும்
அந்நிறுத்தத்திற்கு...


இன்று இரவு 8.15...

"என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி"
"உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே
இது நியாயமில்லை"


அந்நிறுத்தத்தின்
அருகிலிருக்கும்
டீக்கடையில்
இப்பாடல் ஒலிக்க...
அதன் நிழற்குடையில்
அமர்ந்திருந்தவனது
எண்ணம்
பின்னோக்கி சென்றது
நேற்றைய அவளுடனான
ஊடலுக்கு....


நேற்றிரவு....

நுழைவாயிலிருந்து
அவன் நுழைய..
உட்புற வாசலை
சாவியைக் கொண்டு
திறந்திட்டிருந்தாளவள்...


தற்பொழுது தான்
வந்தாயாயென
அவன் வினவ....
அலுவலகம் முடிந்து
தாய் வீடு சென்று
இங்கே வந்ததாய்
உரைத்தாளவள்....


இருவரும் ஒன்றாய்
வீட்டிற்குள் நுழைய...
வாயிலிலுள்ள
இரும்பு நிலைபாட்டில்
அவள் கால் இடர
ஆஆஆஆஆஆஆவென
வீறிட்டு அலறினாளவள்
வலி தாங்கவியலாது.....


அவன் பதறியடித்து வந்து
பதட்டமாய்
அவளை கைகளில் தாங்கி
சாய்விருக்கையில்
அவளை அமரச்செய்து
தான் கீழ் அமர்ந்து
அவளின் அடிபட்ட காலை
எடுத்துப் பார்க்க....
கால் எலும்புடன் சேர்ந்து
முட்டையளவு வீங்கியிருந்தது
அவளின் வலக்கால்
முன்பாதம்....


கண்டதும்
இவ்வடியால்
இவ்வீக்கம் ஆகவில்லை
என்பதை உணர்ந்தவன்,
"எங்ஙணம் நிகழ்ந்தது இது??
ஏன் கூறவில்லை என்னிடம்??"
அவளின் பார்வையை
ஊடுருவி கேட்டான்
அவளிடம்....


உரைத்தாள் காயத்தின்
நிகழ்வை அவனிடம்......


பேருந்து நிறுத்தத்திலிருந்து
வீடு வரும் வேளையில்
சாலையில் கால் தடுக்கி
அவள் விழ
கால் எலும்பில் அடி பட்டு
தசை வலிக்க
தாங்கி தாங்கி நடந்தவள்,
அழைத்தாள் அவளின்
தந்தையை அவ்விடத்திற்கு...


கணவனை இந்நேரம்
அழைத்தால்
பதட்டபடுவானென்பதை
உணர்ந்ததால்
மருத்துவரிடம் காண்பித்து
ஏதும் பிரச்சனையில்லை
என்றானபின்
அவனிடம் உரைக்கலாமென
எண்ணியிருந்தாளவள்....


ஸ்கேன் மற்றும் இன்னபிற
பரிசோதனைக்கு பிறகு,
மருந்துக்களை எழுதி வழங்கி
இருதினங்களுக்கு
வீக்கம் இருக்கும்..
எலும்பில் வலி இருக்கும்
என்றுரைத்தார் மருத்துவர்...


அதனை பெற்றுக்கொண்டு
தந்தையின் துணையுடன்
அவளின் வீடு வந்து
சேர்ந்தாளவள்....


இவற்றை அவனிடம்
அவளுரைக்க
செந்தழல் தீயாய்
கோபத்தில் மின்னியது
அவனின் முகம்...


அவள் ஏன் தன்னை
அழைக்கவில்லை??
தன்னை விட
அவளுக்கு
அவளின் தந்தை தான்
முக்கியமோ???
என மனதில் குமைத்தவன்,


மௌனமாய்
அவளுக்கு
பணிவிடை செய்து
உணவளித்து
அவ்விடத்தை விட்டு
நகர்ந்தான்,
அவளின் கால் வலியில்
மன வலியையும் சேர்க்க
மனமில்லாமல்....


மெத்தையில்
படுத்திருந்தவனின்
அருகிலவள் சென்று
அவனை தொட முற்பட...


"உன்னை
காயம் செய்ய
மனமில்லாது
மௌனமாய்
ஒதுங்கி இருக்கிறேன் நான்..
என் கோபத்தை கிளறாது
ஒதுங்கி இருந்து விடு"
என்றுரைத்து
உண்ணாது
உறங்கி போனானவன்.....


"அடித்தால் தான் காயமா??
குத்தீட்டியாய் வார்த்தையால்
குத்தினாள் தான் காயமா??
உடல் காயமுமல்லாது
மனக்காயமுமல்லாது
சர்வமும் காயப்பட்டதாய்
உணர்கிறேன்
என் முகம் காணாது
என்னிடம் பேசாது
நீ நடத்தும்
இந்த மௌன யுத்தத்தில்"
கண்ணில் நீர் வழிய
தன் கையேட்டில்
மன்னவனால் ஏற்பட்ட
மன வலியை
கவிதையாய்
நிரப்பிக் கொண்டிருந்தாளவள்...


நடுஇரவில் மேஜையில்
கண்ணருகில் நீர்தடத்துடன்
அவளின் கையேட்டின் மேலேயே
உறங்கியவளை கண்டதும்
பாகாய் உருகியது
அவனின் மனம்...


அவளை
கைகளில் ஏந்தி
தன் அருகில்
படுக்க வைத்து..
அடிபட்ட காலுக்கு
தலையணை வைத்து..
அவளை அணைத்தவாறு
உறங்கி போனானவன்...


விழித்ததும்
விழிகள் கண்டது
விழி மூடி தன்னருகில்
உறங்கும் தன் கணவனை..
நொடி பொழுதில்
அவளின் மெத்தை வாசம்
எவ்விதமென
அனுமானித்தவள்
பரவசமாய்
புன்னகை புரிந்தாள்....


விடியல் பழயதை மறந்து
புதியதை நினைவுறுத்துமென
எண்ணி அவளிருக்க...
பழயதை மறக்காது
தன் கோபத்தை
பிடிவாதமாய்
பிடித்துக்கொண்டு
மௌன விரதம்
கடைப்பிடித்தானவன்.....


காலின் வலியில்
அலுவலகம் செல்லாது
இருப்பதென
எண்ணியிருந்தவள்,
அவனின் மௌனத்தை
கலைக்கும் பொருட்டு
அலுவலகம் செல்வதாய்
உரைத்தாள்
தன் காலிற்கு
வெந்நீரால் ஒற்றடம்
கொடுத்து கொண்டிருந்த
தன்னவனிடம்....


அவன் கோபத்தணலாய்
அவளை பார்த்து முறைக்க
பயத்தில் அவளுள்ளம்
நடுங்கி கைகள் சில்லிட்டது...


அவனின்
அதீத கோபத்தை
முதன் முதலாய்
காண்கிறாள் இன்று...


ஏன் இத்தகைய
கோபமென
புரியவில்லை இவளுக்கு...


தந்தையிடம் சொன்னது குற்றமா??
இவனிடம் சொல்லாதது குற்றமா??
சொல்லாததற்கு தான்
விளக்கம் அளித்தேனே!!!
ஏற்றுக்கொள்ள முடியவில்லையா
இவனால்??
எனக்கு சிறு வலி ஆயினும்
பெரிதாய் கொந்தளிப்பானே!!!
எவ்வாறு அவனை
அவ்வாறு பதட்டப்படுத்தி
என்னால் காண இயலும்??
அதற்காக தானே நான்
உரைக்கவில்லை அவனிடம்
முதலில்....
அவனுக்காய் செய்ததை
ஏன் ஏற்க மறுக்கிறானவன்???
தன் மனதோடு
வாதாடிக் கொண்டிருந்தாள்
அவனிடம்,
அவனின் கோப முகத்தை
பார்த்துக்கொண்டே.....


தன் மௌனத்தை கலைத்து
மனதின் கொந்தளிப்பை
வார்த்தையில்
கொப்பளிக்கலானான் அவன்....


"உன் அப்பா
அளவுக்கு நான் உன்னை
கவனித்துக் கொள்ளமாட்டேன்
என்று நினைத்தாயா??


உன் வாழ்வில்
முதலிடம் எனக்கு இல்லையா???


உன் அப்பாவின்
அடுத்த நிலை தான் எனக்கா??
அவருக்கு இணையான
நிலையில் கூட
உன் மனதில் நானில்லையா??


நீ நேற்று செய்த
காரியத்தின்
பொருள் இதுதானே...


அந்நம்பிக்கையை
நான் உனக்குள்
விதைக்கவில்லை
என்பது தானே....


என்னை பதட்டபடாமல்
காக்கிறேன்
என்றுரைத்து
பெரும் துயரை
தந்துவிட்டாய் நீ...."


மனதிலுள்ளதை
வார்த்தைகளாய் கொட்டிவிட்டு
அலுவலகம்
சென்றுவிட்டான்
அவளவன்......


"பிரிவின் வலியை
ஆற்றலாம் அன்பால்....
சோகத்தின் வலியை
ஆற்றலாம் அன்பால்....
ரணத்தின் வலியையும்
ஆற்றலாம் அன்பால்
பேரன்பின் வலியை
ஆற்ற இயலுமோ அன்பால்??
ஆழிபேரலை அன்பும்
சுனாமியாய் பாசமும்
வெள்ளமாய் நேசமும்
போதுமே
இப்பேரலை அன்பின்
வலியை போக்க...."


இவை புரியாத
பெண்ணவளும்
தன்னவன் தன் அன்பை
புரியாது போனானேயென
மனவலி கண்டு
அவன் மீது
கோபம் கொண்டு
தான் அலுவலகத்திற்கு
செல்வதாய்
அவனுக்கு ஓர்
குறுங்செய்தி
அனுபுவித்தாள்....


அவனின்
பல கோப ஸமைலிக்கள்
நிறைத்தன
அவளின் உள்டப்பியை...


தானும் கோபம்
கொண்டவாய்
கிளம்பிச்சென்றாள்
அலுவலகத்திற்கு....
 
Last edited:
Status
Not open for further replies.
Top