All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "காத்திருக்கும் காரிகை" கவிதை தொகுப்புத் திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #10:

தலைப்பு: காதல் கிரகணம்

கிரகணம் விலகி


முழுநிலவாய் ஒளிர

காத்திருக்கும் வெண்ணிலவாய்

காத்திருக்கிறாள் பெண்ணவள்

காலமெனும்

கிரகணத்தை விலக்கி

தன் மன்னவன் கைப்பற்றி

முழுமதியாய்

வாழ்வில் பிரகாசிக்க....


---நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #11:

தலைப்பு: நீ வேண்டும்

நீயில்லாத வானம்

நிலவில்லாத இரவு எனக்கு
என் இரவின் ஒளியாய்
நீ வேண்டும்....

நீயில்லாத பூமி
காற்றில்லாத தேசம் எனக்கு
என் சுவாசக்காற்றாய்
நீ வேண்டும்...

நீயில்லாத நாட்கள்
இனிமையில்லாத
தனிமை எனக்கு
என் வாழ்வின் சுவாரசியமாய்
நீ வேண்டும்...

நிழலாய் தொடரும்
என் கற்பனை உருவத்திற்கு
நான் எழுதும் கவிதை
நிஜமாய் மாறிட
நீ வேண்டும்...


---நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #12:

தலைப்பு: மீட்பு

என்னுள்


புதைந்துக் கிடக்கும்

நாணத்தை

மீட்டெடுக்க

தேடுகிறேன் உன்னை

விரைவில் வந்து விடு...


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #13:

தலைப்பு: தொலையுணர்வு

மனதோடு

பேசுகிறேன்
உன்னிடம்...

என் நேசம்
சுவாசமாய்
உன் நுண்ணுணர்வை
தீண்டி
என்னுடன் சேர்ப்பிக்கும்

என்கின்ற ஆவலில்...

--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #14:

தலைப்பு: காப்பாயா??

நீ யாரென்றே தெரியாமல்


உனக்காக சிறிது சிறிதாய்

சேர்த்து வைக்கிறேன்

என் காதலை....

அதை சில்லு சில்லாய்

உடைக்காமல்

உன் இதயத்தில்

வைத்துக் காப்பாயா

என் கண்ணாளனே???


---நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #15:

தலைப்பு: என் யாவுமாய் வருவாயா??

மென் காற்றாய்

என்னை சூழ்ந்தவனே
என் சுவாசச்சந்திரனே !!!

வானமாய் என்னுள்
வியாபித்திருப்பவனே
என் மதிநிலவனே !!!

பனிதுளியின் நீராய்
என்னைக் குளிர்விப்பவனே
என் கடலரசனே!!!!

நிலமாய் என் உணர்வை
தாங்குபவனே
என் நிலவேந்தனே!!!!

செந்தணலாய்
என்னுள் பரவி
குளிருக்கு இதமளிப்பவனே
தன்னொளியானே!!!!

ஐம்பெரும் பூதமாய்
என்னில் உன்னை
உணரச்செய்தவனே
என் மானசீக மன்னவனே!!!!

இந்நிழல் உணர்வை
நிஜமான நினைவாய் மாற்றி
வருவாயா என் வாழ்வில்!!!!


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #16:

தலைப்பு: காத்திருக்கும் கன்னி மயில்

வாய்விட்டு சிரித்தாலும்

மனம் சிரிக்க மறுக்கிறது...

ஒளி பொருந்திய
கண்ணாயினும்
ஏதோ தேடல் தெரிகிறது....

எந்த திருமண
நிகழ்வை கேட்டாலும்
மனதில் ஏக்கம்
குடிகொள்கிறது.....

நீ இல்லாத வாழ்வு
வெறுமையென
உன்னை பார்க்கும்
முன்பே உணர்கிறேன்...

என் வாழ்வில்
தென்றலாய் மட்டுமே
நீ வருவாய் என்கின்ற
நம்பிக்கையில்

காத்திருக்கிறது என் நெஞ்சம்...

---நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #17:

தலைப்பு: என் மாண்பாளன்

கருப்பென்றும்

குள்ளமென்றும்
பருமனென்றும்
மணவாழ்க்கைக்கு
தகுதியற்றவளாய்
பெண்ணை
திருமணச் சந்தையில்
புறந்தள்ளும் உலகில்
புற அழகை காணாது
மன அழகிற்காய்
எனை ஏற்றுக்கொள்ளும்
மாண்பாளனாய்
நீ வேண்டுமடா....


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #18:

தலைப்பு: கண்ணன் வரும் வேளை

உயிர் உருகும்

காதலுடன்
காத்திருந்த
ஆண்டாளுக்கும்
மீராவுக்கும் தெரியும்
அவர்களின் காத்திருப்பு
கண்ணனுக்காக என்று....

அவர்களின் காதல் தலைவன்
கண்ணன் தான் என்று....

யாரவன் என்றே
தெரியாமல்
மனம் நிறைந்த காதலுடன்
காத்திருக்கிறேன்
கலியுக மீராவாய்
என் கண்ணனுக்காக....


-- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #19:

தலைப்பு: உனக்கே உனக்காக

உனக்காக
அடைக்காத்து
கொண்டிருக்கிறேன்
என் அழகை
என் இளமையை
என் பெண்மையை
ஒருவனுக்கு ஒருத்தியாய்
வாழ்நாள் முழுதும்
உன்னுள் கரைந்து
உன்னுடன் வாழ்வதற்காக...


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:
Top