All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "காத்திருக்கும் காரிகை" கவிதை தொகுப்புத் திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #20:

தலைப்பு: உணர்வாய் காதல்

தந்தையின் அன்பு தெரியும்


தாயின் நேசம் தெரியும்

அண்ணனின் பாசம் தெரியும்

காதலின் அவஸ்தை தெரியாது

அறிந்ததில்லை இது வரை

உணர்த்த வருவாயா நீ...


--நர்மதா சுப்பிரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #21:

தலைப்பு: காதலர் தினம்

திருமணத்திற்குப் பின்

காதலர் தினம்
கொண்டாடும்
ஆசையில்லை எனக்கு...

உன் காதலை
நான் உணரும்
ஒவ்வோர் தருணமும்
காதலர் தினமாய் கொண்டாட
ஆசையுண்டு எனக்கு...

என்னாசையை நிறைவேற்ற
வருவாயா என் கண்ணாளனே.....

- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #22:

தலைப்பு: கண்ணானவனே

ஏங்கும் இதயத்தின் ஓசை

உனக்கும் எனக்கும்
ஓர் ரிதமாய் ரீங்காரமிட..


நாம் ஒன்றுக்கூட
கூடிவரும் நாட்களுக்காய்
காத்திருக்கிறேன் கண்ணானவனே..


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #23:

தலைப்பு: ஆசை மனம்

உன்னைக் காண ஆசை

நீ யாரென்றிய ஆசை....

என் பிற்பாதியாகப் போகும்
உன் பேரறிய ஆசை....

நான் வாழப்போகும்
உன் ஊரறிய ஆசை....

காதலையறிய ஆசை...
காதலிக்கப்படுவதின்
இன்ப அவஸ்தையறிய ஆசை...

என்னாசையை பூர்த்தி செய்ய
விரைவில் நீ என்னை வந்தடைய
ஆசையோ ஆசையடா எனக்கு....


--- நர்மதா சுப்ரமணியம்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை 24:

தலைப்பு: முதன் முதலாய்

அனைத்திலும் முதல் என்பது
சிறப்பு வாய்ந்ததாமே!!!

நானும் காத்திருக்கிறேன்
உன்னுடனான முதல் சந்திப்பு
அது உணர வைக்கும்
என் நாணத்திற்காக...


உன்னுடனான முதல் உரையாடல்
நம் வாழ்வின் பக்கங்களில்
நினைவுகளாய்
பொதிந்து வைப்பதற்காக...


உன் முதல் ஸ்பரிசம்
அது உணர்த்தும்
இதமான சிலிர்ப்பிற்காக...


உன் முதல் முத்தம்
அது தரும் புது உணர்விற்காக..


உன்னுடனான முதல் ஊடல்
அது தரும் மனவலியை
உன் நேசத்தால் போக்குவதற்காக..


உன்னுடனான முதல் பிரிவு
அது உணர்த்தும்
என் மனயிடுக்கிலிமிருக்கும்
உன் மீதான என் காதலுக்காக...


உன்னுடனான முதல் பயணம்
அது தரும் இதமான
மனநிலையில்
உன்னருகாமையை ரசிப்பதற்காக..
என உன்னுடனான
என் அனைத்து
முதல் நிகழ்வுகளையும்
ரசித்துணர்ந்து வாழ
காத்திருக்கிறேன் கண்ணாளனே!!!!


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை 25:

தலைப்பு: காதல் தவம்

கண்ணா கார்முகில் வண்ணா!!!!

கண்ணால் காணாது இருந்தாலும் மெய் அன்பினால் காதல் கொள்வராமே கடவுளிடத்தில்???

ஆண்டாளும் மீராவும்
சாட்சியாமே அக்காணாத காதலுக்கு...


என் காதல் என்னவனுக்கேயென யாரென்றே தெரியாதவனுக்காய் காதலை சுமந்து காத்து கொண்டிருக்கிறேனே நானும்...

எனில் என்னவன் கடவுளின் அம்சமோ??
இல்லை காணாது காதலில் கசிந்துருகுவதில் நான் தான் அக்கோதையின் வம்சமோ????


தன்னவனான ஈசனை
மணம் புரிய
தவமிருந்தாராமே பார்வதியும்
எனில் என்னவன் சிவனின் அம்சமோ???
இல்லை என்னவனுக்காய் விரமிருந்து தவமிருக்கும்
நான் தான் பார்வதியின் வம்சமோ???


இவை ஏதும் இல்லையெனில்,

ஏன் என்னை ஏங்க வைக்கிறாய்
எனக்கானவனை எண்ணி???


ஏன் என்னை தவிக்க வைக்கிறாய்
என் திருமண நாளை எண்ணி???


எனக்காய் பிறந்த என்னவனை
என்னுடன் இணைத்துவிடு கண்ணா...


இல்லையென்றாலும்
இராமருக்காய் காத்திருந்த சபரியாய்,
மனம் முழுக்க நிறைந்து வழியும்
காதலுடன் காத்திருப்பேன் அவனுக்காகவே...


என் காதல் முழுவதும் என்னவனுக்காகவே...
என்னை மணக்கும் என் மன்னவனுக்காகவே என்று....


-- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #26:

தலைப்பு: காத்திருக்கிறேன் அன்பே

உன்னைப் பார்க்காமலே
உன்னை அறியாமலே
மனதில் உன் மேல்
உயிர் காதல் உருவாகுதே..


உன்னை காணும் நாள்
வாழ்வில் என்று வரும்
எதிர்ப்பார்ப்பின் விளிம்பில்
மனம் நிற்கின்றதே....


உன்னுள் நானாகவும்
என்னுள் நீயாகவும்
வாழும் நாட்களுக்காய்
நெஞ்சம் தவிக்கின்றதே..


என் உணர்வு
காற்றில் கலந்து
சுகச்சாராலாய்
உன்னைத் தீண்ட
நாம் இணையும்
தருணத்திற்காய்
காத்திருக்கிறேன் அன்பே..


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #27:

தலைப்பு: மண நாள்

உன் வாழ்வில்
நானுமில்லை..

என் வாழ்வில்
நீயுமில்லை
நேற்று வரை...

நம் வாழ்வின்
பாதையில்
ஒன்றாய் பயணிப்போம்

இன்றுமுதல்
கணவன் மனைவியாய்....

--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #28:

தலைப்பு: பொக்கிஷம்

மிகுந்தக் காத்திருப்புக்குப் பின்

தேடலுக்குப் பின்

கிடைக்கும் அனைத்தும்

பொக்கிஷங்கள்

எனக்கு நீயும்

உனக்கு நானும்...

--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #29:

தலைப்பு: தாம்பத்தியம்

பார்த்த நொடியில்
யாரோ ஒருவனாய் தெரிந்தாலும்
பழகும் நாட்களில்
என்னவனாய் மாறிட வேண்டும்...


உன்னைக் கேளாமல்
உன்னைப் பற்றி
நான் அறிந்திட வேண்டும்..


உனக்கான என் செயலில்
என் நேசத்தை
நீ புரிந்திட வேண்டும்...


நானே அறியாமல்
என்னுள் உன் மேல்
நம்பிக்கையை
நீ விதைத்திட வேண்டும்...


அது ஆயுசுக்கும்
மரமாய் வளர்ந்து
பெரும் காதலாய்
என்னுள் பெருகிட வேண்டும்...


உன் உறவுகளை நானும்
என் உறவுகளை நீயும்
நமதாய் எண்ணி
கடமை ஆற்றிட வேண்டும்...


உன் காதலால் என்னை
கசிந்துருகச் செய்து
என் மெய் மறந்து
என்னையறியாமல்
உனக்கு என்னை தந்திட வேண்டும்..


உன் தாய்மை
நிறைந்த காதலை
நான் தாயாகும் நேரம்
எனக்கு நீ உணர்த்திட வேண்டும்...


நம் காதலின் சான்றாய்
நம் குழந்தைகள் வேண்டும்...


பேர் சொல்லும் பிள்ளையாய்
கண்ணியமாய்
நல்லொழுக்கத்தைப் புகட்டி
வளர்த்திட வேண்டும்...


தோள் சுருங்கி
நடை தளரும் நாளில்
என் சேயாய் நீயும்
உன் சேயாய் நானும்
உளமாற வாழ்ந்து களித்திட வேணடும்..


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:
Top