All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "நடுங்க வைத்த நள்ளிரவு" - சிறுகதை திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

நடுங்க வைத்த நள்ளிரவு

இந்த கதை நான் ப்ரதிலிபியின் திகில் கதை போட்டிக்காக எழுதிய சிறுகதை.
வாசகர்கள் தேர்வில் முதல் பரிசை வென்ற சிறுகதை இது.

இப்பொழுது தங்களின் பார்வைக்காக இங்கே பதிவு செய்துள்ளேன்.
தாங்கள் படித்து தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நடுங்க வைத்த நள்ளிரவு

இரவு 10 மணி

அது ஒரு லேடிஸ் பிஜியிலுள்ள எட்டாம் தளத்திலிருக்கும் அறை...

ஐஸ்வர்யாவும் நிர்மலாவும் ஒரு படுக்கையில் அமர்ந்து ஆர்வமாய் தொலைகாட்சியில் நிகழ்ச்சியை கண்டு களித்திருக்க, லதா ஒரு ஜன்னலோரம் நின்று கைப்பேசியில் தன் வீட்டினருடன் உரையாடிக் கொண்டிருந்தாள்....

ஒரு தளத்திற்கு நான்கு அறைகள், அவற்றிற்கு பொதுவான ஒரு ஹாலென அமைந்திருக்கும் அந்த பிஜி… அந்த ஹாலில் தான், ஒரு அறைக்கு நான்கு பெண்களென நான்கு அறையிலிருக்கும் அனைத்து பெண்களுக்கும் சேர்த்து உணவும் தண்ணீரும் வைக்கப்படும்...

நந்தினி அந்த ஹாலில் தான் அமர்ந்து கைப்பேசியில் தன் தோழிகளுடன் கான்பெரன்ஸில் உரையாடிக் கொண்டிருந்தாள்....

இவ்வாறு அவரவர் வேலையை பார்த்திருந்த சமயம், பவர் கட்டாக அதே நேரம் வீல்ல்ல்ல் என்ற அலறல் சத்தம் அவர்கள் அறையிலிருந்து கேட்டது....

"என்னடி ஆச்சு??" என்று கேட்டுக் கொண்டே கைகள் நடுங்க பதட்டமாய் நந்து அவர்களின் அறைக்குள் தன் கைபேசியை ஒளிரவிட்டுச் செல்ல...

"இல்லடி பவர் கட்டானதும் என் கண் முன்னாடி இருட்டா ஒரு உருவம் போச்சுடி அதான் பயத்துல கத்திட்டேன்" என்று லதா உரைக்க...

ஐஸூவும் நிம்மியும் லதாக்கு தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாச படுத்திக் கொண்டிருந்தனர்...

"ஜன்னலை பாத்துட்டே பேசிட்டு இருந்தியா??,அதான் டக்குனு உள்ள பாக்கவும் உனக்கு அப்படி பீல் ஆயிருக்கும்டி" என நந்து உரைக்க... அந்நேரம் துண்டித்திருந்த மின்சாரமும் வந்தது....

"சரிடி நமக்கு தான் சனிக்கிழமை சீக்கிரம் தூங்கி பழக்கம் இல்லையே.. இன்னிக்கு மூவி ஆர் கேம்??" என நிம்மி வினவ

லதா, " ஹேய் இப்ப ரீசன்டா வந்த காஞ்சுரிங் மூவி பாப்போம்டி"

நிம்மி, " ஆமாம்டி , லதாக்கு பேய் நேர்ல பாத்தா தான் பயம், படத்துல பாத்தாலாம் பயம் இல்ல.. என்ன சும்மா அலறி மட்டும் வைப்பா...அவ்ளோ தான்.... மத்தபடி பயம் என்ன விலைனு தில்லா கேப்பா" எனச் சிரிக்க....

"என்ன நக்கலா, ஹி ஹி ஹி சிரிச்சிட்டேன் போதுமா???" என லதா கூற..

அய்யோ அம்மா என நிம்மி அலறியடித்து பின்னால் நகர்ந்து

"இப்ப தான்டி எனக்கு பயமா இருக்கு, இந்த சிரிப்பை மட்டும் பேய்கிட்ட காமிச்சிருந்தீனா,அது பயந்தடிச்சு ஓடிருக்கும்... நாங்களும் பேய்க்கே ஆப்பு அடித்த லதானு உனக்கு அடைமொழி கொடுத்திருப்போம்" என லதாவை வாரிக் கொண்டிருந்தாள்....

இதைக்கேட்டு லதா நிம்மியை அடிக்க துரத்த, அவள் ஓட என இருவரும் அறையை சுற்றி ஓடிக் கொண்டிருந்தனர்....

"அடியேய், போதும்டி நீங்க சண்டை போட்டது... லேப்டாப்ல மூவி செட் பண்ணிட்டேன்… ஒழுங்கா வந்து உட்காருங்க, படம் பாக்கலாம்." என நந்து அழைத்தாள்....


இரவு 11 மணி

"மணி பதினொன்னு ஆகுதுடி, பேய் உலாவுர நேரத்துல பேய் படம் பாக்கலாம்னு உட்காத்திருக்கீங்களேடி, நான் தூங்கப்போறேன் போங்க" என ஐஸு கூற

மற்ற மூன்று பெண்களும் அவளை முறைத்தனர்...

"வாராவாரம் இப்படி தான் நீ எங்க கூட நைட் படம் பாக்காம எஸ்கேப் ஆகுற... இந்த வாரம் அந்த கதைலாம ஆகாதென கூறி"

அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் நிம்மி....

ஒரு வழியாக அனைவரும் ஒரு மெத்தையில் அமர்ந்து, எல்லோரும் காணும் வகையில் பொதுவாய் மடிகணிணியை வைத்துக் கொண்டு, மின் விளக்கையெல்லாம் அணைத்துவிட்டு, அருகில் ஸ்நேக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் படம் பார்க்க அமர்ந்தனர்....

நள்ளிரவு 12 மணி

எங்கு காணினும் இருட்டு.... நாயின் ஊலையிடும் சத்தமும்.... காற்றினால் ஜன்னலருகே ஊஊஊ என்ற ஊதல் காற்று சத்தமும்... அப்படத்தில் வந்த டீடிஎஸ் ஸின் சத்தமுமே சூழ்ந்திருந்தது அவ்வறையை....

அனைவரும் ஒருவர் கையை மற்றவர் பற்றிக் கொண்டு மனதை கவ்விக் கொண்ட பயத்தினுடனே படத்தை பார்த்துக் கொண்டிருக்க..

அந்நேரம் அப்படத்தில் கட்டிலில் போர்வை போத்தி படுத்திருந்த பெண்ணின் காலை பேய் வந்திழுக்க.... அதே நேரம் இங்கே லதாவின் காலை சடாரென யாரோ இழுக்க ஆஆஆஆஆஆ என்ற அலறலுடன் தொபகடீர் என தரையில் வந்து விழுந்தாள்....

அனைவர் முகமும் பயத்தில் வியர்த்திருக்க, மனம் படபடவென அடிக்க லதாவை போய் தூக்கினர்...

"என்னடி ஆச்சு, எப்படிடி விழுந்த" நந்து வினவ...

பெரிய பெருமூச்சாய் இழுத்து விட்டுக்கொண்டே " யா...யாரோ..என் காலை இழுத்தாங்கடி" என லதா கூறினாள்...

மின்விளக்கை ஆன் செய்து லதாவிற்க்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் ஐஸு...

யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்த நந்து... "ஆமா... நிம்மி எங்க??" என்று கேட்டாள்....

அப்பொழுது தான் அவள் அங்கில்லை என்பதை உணர்ந்த அனைவரின் மனமும் மீண்டும் பயத்தில் எகிறித் துடித்தது....

நந்து, "ஹே பயப்படாதீங்கடி... ரெஸ்ட் ரூம்ல இருப்பாளா இருக்கும்"

ஐஸு, " இல்லடி, அங்க பாத்துட்டேன்.. டோர் ஓபன்ல தான் இருக்கு.. உள்ளே யாரும் இல்லடி"

அப்பொழுது திரும்பவும் பவர்கட்டாக, தன் முன் ஓர் இருட்டு உருவம் நிற்பதைக் கண்டு வீல்லென கத்தினாள் ஐஸு...

அவள் கத்தலில் பயந்து லதாவும் உடன் சேர்ந்து அலற... ஒரே நேரத்தில் இரு பெண்களின் அலறல் அவ்வறையை நிறைத்தது.....

"அடியேய், கத்தாதீங்கடி.. கத்தாதீங்கடி... நான் தான்டி நிம்மி" என அவள் கூறவும் கரண்ட் வரவும் சரியாக இருந்தது.....

"எங்கடி போயிருந்த... இப்படியாடி பயமுறுத்துவ" அவளை வெளுத்து வாங்கினாள் ஐஸு....

"ஹி ஹி ஹி... லதாவை பயமுறுத்தலாம்னு நான் தான்டி கட்டிலுக்கு அடிலருந்து அவ கால இழுத்தேன்... நீங்க என்னை தேடினதும் வெளில வரலாம்னு பாத்தா கரண்டு போய்டுச்சு" என உரையாற்றினாள் நிம்மி....

"ஐஸூ, கூட நாலு போடுடி அவ முதுகுல" என பொறுமி தள்ளினாள் லதா.....

இரவு 2 மணி

ஒரு வழியாக படம் பார்த்து முடித்து அனைவரும் அவரவர் கட்டிலில் உறங்கி கொண்டிருந்தனர்....

"ஹே நிம்மி, என் கனவுல யாரோ கதவு தட்டுறாங்கடி" என தூக்கத்தில் உளறினாள் ஐஸு...

அவளருகில் படுத்திருந்த நிம்மி " உன் கனவுல கதவு தட்டுற சத்தம், எனக்கெப்படிடி நேர்லயே கேக்குது" எனக் கூறிக் கொண்டே கண் விழித்தாள்.....

அறை முழுதும் இருள் சூழ்ந்திருந்தது..

ஜன்னல் திரைச்சீலை காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்து.....

"தட்" "தட்" கதவை தட்டும் சத்தம்..

தட்டுவதினால் ஏற்பட்ட கதவின் அசைவு, அது கனவல்ல நிஜமென நிம்மிக்கு உரைத்தது....

"ஏடி ஐஸூ, எழுந்திரிடி... நிஜமாவே யாரோ கதவை தட்டுறாங்கடி"

நிம்மியின் சத்தமான குரலில் ஐஸை தவிர லதாவும் நந்துவும் முழித்துக் கொண்டனர்....

இப்பொழுது சத்தம் நின்றிருக்க ,

"சும்மா விளையாடாத நிம்மி, படுத்து தூங்கு" என நந்து கூறி உறக்கத்திற்கு செல்ல...

நிம்மியை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் லதா...

"ஹேய் லதா, நிஜமா கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சுடி" என அழும் பாவனையில் நிம்மி உரைத்தாள்....

அதே சமயம் , கிரீச் கிரீச் என கதவை சுரண்டும் சத்தமும், அதற்கேற்றாற் போல் கதவும் அசைய

லதா பயத்தில் விழுந்தடித்துக் கொண்டு எழுந்து நிம்மியின் கட்டிலை அடைந்து முகம் புதைத்திருந்தாள் அவளின் மடியில்....

நிம்மி, "அடியேய், நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தாதடி"

லதா, "கதவை திறந்து பாப்போம்டி"

நிம்மி, "போடி, என்னை பயமுறுத்திட்டு ,என்னாலலாம் இப்ப போய் கதவை திறக்க முடியாது"...

லதா, "சரி நந்துவ எழுப்புவோம்.. இந்த ஐஸு கொலையே விழுந்தாலும் இப்ப எந்திரிக்க மாட்டா"

நிம்மி, "ஒய் அபசகுணமா பேசாதடி"

லதா, "நைட்லருந்து அப்டி தான் நடந்துகிட்டிருக்கு... நான் பேசுறதால மட்டும் தான் நடக்குதாமா இங்க"..

நிம்மி லதாவை முறைக்க...

"டக் டக் டக்" இப்பொழுது கதவின் தாழ்பாள் ஆட்டபடும் சத்தம் கேட்க..

"ஐயோ அம்மாஆஆஆஆ"

லதா அலறிக் கொண்டு நிம்மியின் மடியில் முகத்தை புதைத்திருந்தாள்....

அந்த அலறலில் விழித்த நந்துவிற்கும் அச்சத்தம் கேட்க, "கதவு தட்ற சத்தம் கேட்டா யாருனு போய் பாப்பீங்களா.. அத விட்டுட்டு பயந்து நடுங்கி என் தூக்கத்தையும் கெடுக்குறீங்க பக்கீ கேர்ள்ஸ்" என கடுகடுத்துக் கொண்டே கதவை திறக்க சென்றாள்...

"ஹே நந்து, லைட்ட போட்டுட்டு போடி", நிம்மியின் குரலுக்கு செவிமடுக்காது கதவை திறந்தாள் நந்து....

அங்கு கதவினருகே யாருமில்லா நிலையில் ஹால் வரை சென்று பார்த்தாள்...

ஹால் இருட்டாக இருக்க ,அதன் ஸ்விட்ச் ஆன் செய்ய செல்ல....


"அஆஆஆஆஆஆஆஆ"


அலறிக்கொண்டே ஓடோடி வந்து கதவை பூட்டி தன் உடல் முழுவதும் நடுங்க கட்டிலில் வந்தமர்ந்தாள் நந்து...

இவள் அலறலில் நிம்மியும் லதாவும் வியர்க்க விறுவிறுக்க கைகள் நடுங்கியபடி, ஒருவர் மற்றவரை அணைத்தபடி பேய் முழி முழித்தபடி அமர்ந்திருந்தனர்...

"நந்து, என்னடி ஆச்சு??? எதுக்குடி அலறுன??" லதா வினவ

"அ....அங்.. அங்கே..அங்கே" நந்து இன்னும் மேலும் கீழும் மூச்சு வாங்கி பயத்தில் பேச முடியாத நிலையில் இருக்க..

"ஹேய் தண்ணிய குடிடி.. தண்ணிய குடிச்சிட்டு ஒழுங்கா சொல்லுடி... எங்க பல்ஸ் இங்கே ஏறுது" நிம்மி உரைக்க..

நீர் அருந்தி தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு சொல்ல தயாரானாள் நந்து....

நம்ம வாசல்ல யாருமில்லடி, அதனால ஹால் போய் லைட் ஆன் பண்ண போனேன்.. அப்ப என் பின்னாடி ஒரு உருவம் கிராஸானது, என் முன்னாடி இருக்க ஜன்னல்ல தெரிஞ்சிச்சுடி... அத பாத்த அடுத்த செகண்ட் நான் இங்கே ஓடி வந்துட்டேன்டி.....



"தட்..தட்..தட்.."

இப்பொழுது கதவை வேகமாய் தட்டும் சத்தம்...

எவருக்கும் இப்பொழுது எழுந்து வந்து பார்க்கும் தைரியமில்லாததால், ஐஸுவை அனுப்பும் முயற்சியில் இறங்கினர்....

"அடியே ஐஸு, இங்க என்ன ரணகளம் நடந்துட்டு இருக்கு.. நீ பாட்டுக்கு தூக்குற... எந்திரிடி.. போய் கதவ திறடி.." நிம்மி அவளை எழுப்ப..

எதற்கும் அசையாமல், நான் கும்பகர்ணனுக்கு தங்கையான கும்பகர்ணியாக்கும் என்கிற ரேஞ்சில் உறங்கிக் கொண்டிருந்தாள் ஐஸு.....

கதவு தட்டும் சத்தம் நிற்க, இதற்கு மேல் இவளை எழுப்பி பிரயோசனமில்லை என்பதாலும் மற்ற மூன்று பெண்கள் பயத்தில் தங்கள் கட்டிலை விட்டிறங்க மறுத்ததாலும்.... கதவு சத்தம் கேட்டாலும் திறக்க வேண்டாம்...காலை பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானித்து உறங்க ஆயத்தமானார்கள் அப்பெண்கள்...

"இதுக்கு மேல எங்க பயத்தில எங்க தூக்கம் வரும் ,இன்னிக்கு சிவராத்திரி தான் " என நிம்மி உறங்காமல் பொலம்பித் தள்ளினாள் ...


காலை 8 மணி

"அடியே எந்திரிங்கடி... தூங்கறத பாரு கும்பகர்ணிங்கலாட்டம்... கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது"

ஐஸு மற்ற பெண்களை எழுப்பிக் கொண்டிருந்தாள்....

நிம்மி அவளை முறைத்துக் கொண்டே எழுந்தாள்... " யாருடி கும்பகர்ணி?? நேத்து அவ்ளோ கலவரம் நடக்குது.. நீ பாட்டுக்கு தூங்கிட்டுருக்க... நாங்க விடிய வரைக்கும் தூங்காம இப்ப தான் கண் அசந்தோம்... நாங்க பொறுப்பில்லாதவங்களா??" என பொறிந்து தள்ளினாள்....

ஐஸு, அவள் கூறுவதை வியப்பாய் ஆவென வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள்....

" ம்ச்... அவ கூட சண்ட போடுறத விட்டுட்டு, வா வெளில போய் பாப்போம் யாரு கதவ தட்டினதுனு" நந்து கூற லதாவும் நிம்மியும் உடன் சென்றனர்...

கதவை திறந்ததும் அவர்கள் காலில் மரத்தூள்கள் தட்டுப்பட்டது... தாழ்பாள் அருகே இருந்த ஓட்டையிலிருந்து எலிகள் குதித்து சென்றது... அதே சமயம்,பக்கத்து அறையிலிருந்த பெண் ஒருத்தி வந்து, இரண்டு மணிக்கு மேல் அவள் அறை தோழி ஹாலுக்கு தண்ணீர் எடுக்க வந்ததாகவும்... அந்நேரம் அவள் முன் ஒரு உருவம் லைட் போட சென்றதாகவும்.. அவ்வுருவம் தீடீரென்று கத்திக் கொண்டே ஓட... அந்த அலறலில் பயந்து அவள் மயங்கி விழுந்ததாகவும்... அந்த தோழியை காப்பாற்ற இவர்கள் அறை கதவை தட்டியதாகவும் அதற்குள் மயக்கம் தெளிந்து அவளே எழுந்து விட்டதாகவும் கூறி சென்றாள்...

"அப்ப நந்து பாத்து பயந்துட்டு வந்தது பக்கத்து ரூம்ல உள்ள பொண்ண.. அவ நந்துவ பாத்து மயங்கி விழுந்திருக்கா.. அப்ப அதுக்கு முன்னாடி கேட்ட கிரீச் சத்தம் தட் தட் கதவு தட்டின சத்தம்லாம் இந்த எலியார்களின் வேலை" என தன் ஆராய்ச்சியின் விடையை அனைவருக்கும் கூறி அமைதி படுத்தினாள் லதா...

"ஹப்பா.. அது பேய் இல்ல.. இப்ப தான் என் பிபி நார்மல் ஆயிருக்கு…. இன்னிக்கு ஃபுல்லா நான் ரெஸ்ட்.. நிம்மதியா தூங்க விடுங்கடி" எனக் கூறி பதில் கண்ட நிம்மதியில் விட்ட தூக்கத்தை தொடரச் சென்றாள் நிம்மி...

images (13).jpeg

-- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi narmatha,
I read your story in the morning fearing that i may get scared in night ??..
Kewl horror story..Reminded me abt my college days..Wish you good luck.
May you write more stories like this

Thishi
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi narmatha,
I read your story in the morning fearing that i may get scared in night ??..
Kewl horror story..Reminded me abt my college days..Wish you good luck.
May you write more stories like this

Thishi
Thanks a lot Thishi?????
 
Top