All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நறுமுகையின் "இதயத்தை திருடி சென்றவளே " கதைத் திரி

Status
Not open for further replies.

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே...!



அத்தியாயம்.. 3...


13342



சட்ரென்று முகத்தில் நீர் பட... கைகள் இரண்டும் ஏதோ இரும்புசங்கிலியில் சிறைப்பட்டதை போல் இருக்க... கண்ணை திறந்து பார்த்தாள்.... கண்ணெதிரில் ஜேக்கப்பின் முகம்...


"அய்யையோ பேய்... பேய்..." என்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள்...


"ஏய் லூசு மாமி... எதுக்கு டி தள்ளிவிட்ட..." என்று எழுந்து அவளருகே சென்றான்...


"அய்யையோ கிட்ட வராதேள்.. நான் உங்கள் மண்டையை உடைச்சது தப்பு தான்... ஆஹா மகா தப்பு தப்பு என்று இரு கன்னத்திலும் அடித்துக்கொண்டு மன்னிச்சிடுங்கோ.. ஆசையோடு செத்தவாள் எல்லாம் ஆவியா திரிவங்கோன்னு தோப்பனார் சொல்லிருக்கார்... நீங்க என் கிட்டவரச்சே தான் நான் என்ன பண்ணணும்ன்னு தெரியாம தான் உங்க மண்டையை உடைச்சேன்.. அதுக்காக என்னையை கொன்னுடாதேள் வெள்ளை பேய் சார்.. " என்று பயந்துகொண்டே கட்டிலின் ஓரத்துக்கு சென்றாள்...


அவள் சொல்வதை முதலில் புரிந்துகொள்ளாத ஜாக்கப் பின் தான் புரிந்துகொண்டான்... அவள் கனவு கண்டிருக்கிறாள்... அதில் தான் எதோ அவளிடம் தவறாக செய்யப்போய் அவள் அதற்கு தன்னை அடித்திருக்கிறாள் என்று புரிந்ததும்... அவன் தன் உதட்டில் ஏற்பட்ட சிரிப்பை அடக்கி அவளை அவள் போக்கிலே சென்று சீண்ட எண்ணினான்...



"உன் தோப்பனார் சொன்னது உண்மை தான் எனக்கு உன் மேல இருந்த ஆசை அடங்காமலே என்னை கொன்னுட்ட நீ... அப்போ என்னோட ஆத்மா எப்படி சாந்தி அடையும் என்னை கொன்ன உன்னை பழிவாங்க தான் செய்யும்..." என்றான் கண்ணகளில் எட்டி பார்க்க துடித்த சிரிப்பை அடக்கி...

"அச்ச்சோ அது அபச்சாரம் பேய் சார்... அப்புறம் நீங்க சொர்க்கரத்துக்கு போக மாட்டேள் நரகத்துக்கு தான் போவேள்... ஆல்ரெடி என்னை இங்க கடத்திட்டு வேற வந்திருக்கேள்.. இதுக்கே உங்களை அவாள் எண்ணெய் சட்டில போட்டு வரப்பாள்.. இப்படி தப்பு தப்பா பேசத்தேள்... "


அவளின் அபச்சாரத்தில் இப்பொது ஒரு கிக்கே வந்துவிட்டது ஜாக்கப்க்கு.. "அப்போ என்னை கொன்னதுக்கு உன்னை என்ன பாராட்ட செய்வாளா அவாள் " என்றான் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி...


"தவறு செய்த அரக்கனை வதம் செய்தாள் அந்த மகாகாளி... சண்ட முண்டர்களை வதம் செய்து அவர்களின் ரத்தத்தையே பருகினாள்.. அந்த சாமுண்டி.. அதனால் என்னை அவாள் தடிக்க மாட்டாள்.. என்றாள் அவன் கண்களை நேராக பார்த்து...



ஒரு நிமிடம் அசந்து போய்விட்டான்...என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்... அவன் ஜாக்கப் அல்லவா அவனை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மயக்கிவிட முடியுமா என்ன ஆனாலும் இவளிடம் மயங்கி தான் விட்டான் அந்த ஒரு நிமிடத்தில்.. அவனை வசியம் செய்யவே இவளை படைத்துவிட்டான் போல இறைவன்...



உடனே தன்னை சுதாரித்துக்கொண்டு அவளிடமானாலும் மயங்கிய தன் மடத்தனத்தை என்ன சொல்வது... அது கோவமாக உருப்பெற்று அவளிடமே சென்றது... " அப்போ என்னை அரக்கன்னு சொல்ற " என்றான் குரலில் ஏறி இருந்த காரத்தோடு...


"அச்சச்சோ இல்லை பேய் சார்.. சாமியே அப்படி பண்ணும் போதும்.. நானும் தெரியாம பண்ணா மன்னிச்சிடுவாள்ன்னு சொன்னேன்.. "என்றாள்... சிறிது வெளியே தள்ளிய நாக்கை கடித்துக்கொண்டு...


அவளின் செய்கையில் எப்போவும் போலவே இப்போதும் அவனின் கோவம் ஆவியாக பறந்து அவள் காலடியில் சென்றுவிட்டது...


ஜாக்கப்பின் மனமோ இவளிடம் என் கோவம் ஒரு நொடி கூட நிற்கமாட்டேன் என்கிறதே... கொஞ்சம் ஜாக்கரதையாகவே இருக்க வேண்டும்.. இல்லை என்றால் என் தலையிலேயே மிளகாய் அரைத்துவிடுவாள் என்றெண்ணினான் ...



சட்ரென்று அவளின் அருகே முகத்தை கொண்டு சென்று.. அவளின் நெற்றியில் விழுந்த முடியை உதி தள்ளி... மேலும் பறந்த முடிகளை காதோரம் சொருகிவிட்டான்...



அவனின் செயலில் அவளின் நெஞ்சம் நிஜமாகவே நின்று விட்டது போல் ஆகிவிட்டது...
அவளின் அசையா தன்மையை பார்த்துவிட்டு... மேலும் அவளின் முகத்தின் அருகே உதடுகள் மூச்சி விட்டாள் ஒட்டிவிடும் நினைக்கு சென்று அவளின் மான்விழியை பார்த்துக்கொண்டே அவள் இதழை நெருங்கினான்...



அவனின் நெருக்கத்தில் இதயம் வாய்வழியே குதித்துவிடும் போல் பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்... அவன் இதழ் முத்தத்தை எதிர் பார்த்த நேரத்தில் அவள் தலையில் நீர் வழிந்தது... அதில் உணர்வு பெற்று... கண்களை திறந்தவளின் கண்களிலும் தண்ணீர் சாரல் வீசியது...



ஜாக்கப் கட்டிலை வீட்டு அருகே இருந்த தண்ணீர் ஜக்கை அவளின் தலையில் கவிழ்த்திருந்தான்.. அவள் கண்விழித்ததும் மிச்சம் இருந்த நீர் சொட்டுகளை அவள் கண்களில் தெரித்தான்...


அவள் கண்ணை துடைத்து அவனை பார்க்கும் போதும்.. அவளின் நடுமண்டையிலே ஒரு கொட்டு கொட்டி.. " போய் குளிச்சிட்டு வா... கனவு கண்டது போதும்... கனவுல செஞ்சதை எல்லாம் நேர்ல செய்யலாம் என்றுவிட்டு சென்றான்...



அவனின் கொட்டில் சுயநினைவு வந்தவள்... அப்போது தான் புரிந்தது... தான் கண்டது எல்லாமே கனவு என்று... கனவு என்றாலும் மனம் அதை நினைத்து பயந்தது... அதிலும் அவன் கடைசியாக கூறிவிட்டு சென்றது மனதில் திகிலை பரப்பியது...


*******************************


அம்பை ஜாக்கப்பின் அறையில் அலங்கார சிலை போல் ஜன்னல் கம்பியில் கை பதித்து நின்று நிலவை பார்த்திருந்தாள்...


கண்களிரண்டும் வெறிக்க மனமோ அவளின் கனவையும் ஜேக்கப்பின் வார்த்தையிலேயே உழன்று கொண்டிருந்தது.


அவன் அவளை கடத்தி வந்த ஒரு வாரமும் அவள் தனியறையில் இருந்தாள்... இன்று காலையில் அவன் தாலி காட்டியதும்... மதியமே அவள் பொருட்கள் அவன் அறைக்கு மாற்றிவிட்டான்... கூடவே அவளையும்...


அம்பை எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ... கால் வலிக்க தான் சுயஉணர்வு அடைந்தாள்...
மெல்ல சுற்றிலும் அந்த அறையை பார்த்தாள் அவன் வருகை இல்லை என்றதும்.. மனம் நிம்மதிக் கொண்டதால்.. உறங்க சென்றாள்...




அவனின் மெத்தையில் படுக்க விருப்பமில்லாமல்... அவளின் புடவை ஒன்றை தரையில் விரித்து தூங்கினாள்...


காலை கண்முழித்தும் அவளின் மேலே ஒரு போர்வை ஒரு இருந்தது... அதை நீக்கிவிட்டு.. கட்டிலை பார்த்தாள் அவன் இல்லை என்றதும் இரவு இருந்த நிம்மதி உணர்வு காணாமல் போய் தவிப்பு வந்து அமர்ந்துக்கொண்டது என்னென்று தெரியாமல்....


குளித்து முடித்து.. கடவுளை வணங்கி வீட்டு... கீழே இறங்கி சமையல் கட்டிற்கு சென்றாள்... அங்கே யாரோ ஒரு வயதான பெண்மணி சமைத்துக் கொண்டிருந்தாள்... அவள் சமைத்து அசைவம் என்றதும் அவன் வருவான் என்று டின்னிங் டேபிளில் காத்திருந்தாள்... அவன் வரவில்லை என்றதும் உணவு உண்ணாமல் சென்றுவிட்டாள்..



இரண்டு நாள் இதே போல சென்றதும்.. மூன்றாவது நாள் தான் அவன் அவளை சந்தித்தான்...


" என்னாச்சி மாமி எதுக்கு ரெண்டு நாளா சாப்பிடாம இருக்க... ஒரு வேளை நீ உண்ணாவிரதம் இருந்தா உன்னை விட்டுடுவேன்னு பிளான் பண்றியா... அப்படி கனவுல கூட நினைச்சிடாத... கண்டிப்பா நடக்காது... என்னை விட்டு நீ போறதா இருந்தா பொணமா தான் போகணும்.. அதனால ஓழுங்க போய் சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ என்னை சமாளிக்க உனக்கு சத்து வேணாமா... " என்றான் கிண்டலுடன்..


அவன் பேசியதற்கு ஒன்றும் சொல்லாமலே முட்டியில் தன் தலையை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள்...


ஏய் உன் கிட்டத்தான் பேசுறேன்.. பதிலே பேசாம இருந்தா என்ன அர்த்தம்... முதல்ல என்னை நிமிர்ந்து பாரு மாமி... என்றான் ஏற துடித்த கோவத்தை அடக்கிய குரலில்...


அவன் சொன்ன ஒரு சொல்லை கூட காதில் வாங்காதவள் போல் அதே நிலையிலே இருந்தாள் அம்பை...



அடக்கி வைத்த கோவத்தை அவளின் மதிக்காத செயல் வெளியே கொண்டுவந்ததும் " ஏய் நான் சொல்லிட்டே இருக்கேன்... மதிக்காம அப்படியே இருக்க... அவ்ளோ நெஞ்சழுத்தமா உனக்கு... சொல்ல சொல்ல கேக்காம.. உன்னை... என்று அவளின் அருகே சென்று முரட்டு தனமாக கையை பிடித்து இழுத்து தூக்கினான்...



அவன் தூக்கியதும் அவன் கையோடு விழுந்தாள்... முகம் முழுவதும் அவள் முடிகள் நிரம்பி இருந்தது.. என்னவென்று பதறி அவள் முகத்திலிருந்த முடிகளை அகற்றினான்... அந்த மதிமுகத்தழகி மயங்கி விட்டிருந்தாள்...



அவள் மயங்கி இருந்ததை பார்த்ததும் ஜாக்கப்பின் மனம் ஒன்றும் துடித்து விடவில்லை... அவளின் அமைதியான அழகு முகம் ஈர்த்ததில் தான் துடித்தது ..



பிறை நெற்றி... நீள முகம்.. அதில் இரு மான்விழி... செப்பு உதடுகள்... கூர்மையான மூக்கில் ஒற்றை வைரமாய் மூக்குத்தி தான் அவனை மிகவும் ஈர்த்தது...
மென்மையாய் நிமிட்டினான்... மேலும் மேலும் அவனை ஈர்த்த மூக்குத்தியில் ஒற்றை முத்தமிட்டான் மனதை அடக்கமுடியாமல்... அதிலிருந்து மீண்டும் வர விருப்பம் இல்லாதவன் போல் அங்கேயே குடிருந்தது அவன் உதடுகள்...



இவனின் இலகுத்தன்மையில் இலகுவான கைப்பிடிப்பில் அவள் உடல் கட்டிலில் சாரிந்ததும் தான்... அவள் நிலையை உணர்ந்தான்...



தன் மடத்தனத்தை நினைத்து தலையில் தட்டிக்கொண்டே டாக்டரை கூப்பிட்டான்...



டாக்டர் அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டுவிட்டு அவனிடம் " ரெண்டு நாள் சாப்பிடாததால் மயங்கிட்டாங்க... மேலும் அவங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு நல்ல ஹெல்த்தியான உணவா குடுங்க... இப்போ எடுத்ததும் சாலிட்டான உணவு குடுக்காதிங்க...லீக்யூட் உணவா குடுங்க... "
என்று விட்டு சென்றார்...



அன்று மாலை தான் விழித்தாள்... விழித்ததும் அந்த கடன்காரனின் முகமே அவளுக்கு முதல் தரிசனம்... அவனை பார்த்ததும் அந்த மதிமுகம் சுருங்கித்தான் போய்விட்டது...



எதுவும் பேசாமல் அவள் உட்கார உதவி செய்தான்... அவள் அவன் கையை தட்டிவிட முயற்சித்தும் அதை ஒதுக்கி விட்டு ... சிறிது நேரத்தில் கையில் ஆரஞ்சு ஜூஸ் போட்டு எடுத்து வந்தான்...



அவளியிடம் நெருங்கி அவள் முகத்தை தூக்கி அவள் உதட்டில் டம்ளரை வைத்தான்... அவனின் செய்கையில் அவள் கண்கள் விரிய... உதடோ இறுக்கமாக இருந்தது...



அவளின் பிடிவாதத்தால் நெற்றி சுருங்கி.. டம்ளரை எடுத்தான்...



"சரி சொல்லு ஏன் சாப்பிடாம இருந்த... ஒரு வேளை என்னை பார்க்கலைன்னா " என்றான் கிண்டலுடன்...



அவனின் கேள்விக்கு அவளின் பதிலில் அவன் உதடுகள் "வாட் ஆர் யூ மேட்?? " என்ற பதில் தாங்கி வந்தது...



"ஆமாம் நான் ஒன்னும் நீங்க வரலன்னு சாப்பிடாம இருக்களை.. அந்த சமையல்காரம்மா அசைவம் சமைச்ச அதே கையோட நேக்கு சைவம் சமைக்குறாள்...ச்ச்சீ அபச்சாரம் மாச்சே அதை நான் உண்பேனா... " என்றாள்..


"அடி லூசு அப்போ அவங்க ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு தானே சமைக்குறாங்க அப்பறம் என்ன.." என்றான் எரிச்சலோடு...


"அப்போகூட அதே கைதானே சமைக்குது" என்றாள் முகத்தில் அருவருப்பை காட்டி...



ஓ அப்போ அசைவம் சமைச்ச அதே கைல சாப்பிட மாட்ட தான... அசைவம் சாப்பிட உதட்டால உன்னை சாப்பிடுறேன் இரு அப்போ சரியாகிடும் என்று அவள் கனி இதழை கவ்விக் கொண்டான்...



இதயத்தை திருடி செல்வாள்...



இதோ இதயத்தை திருடி சென்றவள் அத்தியாயம் 3 பதித்து விட்டேன் தோழிகளே... 😍😍படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்டவர்களுக்கு நன்றி பிரெண்ட்ஸ் 😍😍
 
Last edited:

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே... உங்கள் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் மிகவும் நன்றி... 😍😍😘😘யூடி குடுக்க தான் முயலுகிறேன் பட் எனக்கு உடம்பு சரி இல்லை பா... இந்த லாக்டவுன் ல வெளியே போக முடியல வீட்டுல தான் இருக்கேன்...டாக்டர் கன்சல்ட் கூட போன் ல தான்... அதான் கொஞ்சம் சீக்கிரமா ரெகவரி ஆக முடியல பா... சீக்கிரமா வர பார்க்குறேன்....
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே....



அத்தியாயம்... 4



13776


அதிகாலையில் இனிமையான தேன் குரல் ஜேக்கப்பின் காதை தீண்டியது பெரும் சோகம் நிறைந்தாக...


ஆழ்ந்த உறக்கத்திலும்.. அந்த குரலுக்கு சொந்தமானவளை அடையாளம் கண்டுக்கொண்டது ஜேக்கப்பின் மனம்...


சட்ரென்று விழிப்பு தட்ட.. உடனே எழுந்துக் கொண்டான்... அவனின் விழிகளிரண்டும் தன் மனையாளை தேடியது..அருகில் அவள் இல்லாமையை உணர்ந்ததும் அவள் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான்...


அங்கே அம்பை பூஜை அறையில் பாடிக் கொண்டிருந்தாள்..

ஜனார்தனா ஜகன்னாதா நீ என் நாதன் அன்றோ
சுராசுரர் பணி பாதா அருள் தராத காரணம் ஏனோ
தாள் மலர் விடுவேனோ தாமதம் இனி தாளேனே
கண்ணனே நான் பட்ட பாடு கண்டு கல்லும் கரையும்
கடலில் குளித்தொரு முத்தெடுத்தேன் நான்கை நழுவ விடுவாயோ
கருணையே புரிவாயோ கதி யில்லேன் கிரிதாரி கருணையே புரிவாயோ கதி யில்லேன் கிரிதாரி
த்வாரகா புரிவாசா சோதனை போதாதோ தரிசனம் காண தடை செய்யும் கதவும் திறவாதோ
மீரா உன் அடிமை என்பதும் திருவுள்ளம் மறந்ததோ
அடியாள் மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான் மீளா அடிமை கொண்டான்
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும் மாறா பிரேமை தந்தான்......



மனதில் உள்ள சோகத்தை கண்ணனிடமே தீர்த்துவைக்க சொல்லி மன்றாடிக் கொண்டிருந்தாள்...



திருமணம் முடித்த கையோடு அவளுக்காக தனியாக ஒரு பூஜை அறையை ஏற்படுத்தியிருந்தான் ஜேக்கப் ...


அவளின் குரலில் ஈர்க்கப்பட்டு பூஜை அறை வாயிலில் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவளையே விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்...



கண்களில் கண்ணீர் பெருக ... தன் கண்ணனின் காலடியில் சரணாகதி அடைந்தாள்...


அவள் எழுந்துக்கொள்வாள் என்று சிறிது நிமிடம் பார்த்தும்... அவள் எழும்பாததால்... அவனே பூஜை அறைக்கு சென்று அவளின் தோலை தொட்டான்... அவன் தொட்டதும் அவள் உடல் சரிந்து கீழே விழுந்தது...


பதட்டமான ஜேக்கப் அவளை தூக்கிக் கொண்டு அவனின் அறைக்கு சென்றான்... அவளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு சிறிது தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்...



கண்ணை மெதுவாக திறந்து பார்த்தாள்.. அவனை முத்தமிட்ட அன்று பார்த்தது... அதோடு ரெண்டு நாள் கழித்து இன்று தான் பார்க்கிறாள்... அவனை பார்த்ததும் அவன் முத்தமிட்டது தான் அவளுக்கு நியாபகம் வந்து தொலைத்தது... எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்...



தண்ணீர் அவள் முகத்தில் பட்டதும் புல்வெளியில் படர்ந்திருக்கும் பனித்துளியை போல் ஆங்காங்கே அழகாக முத்து முத்தாக வீற்றிருந்தது...


அதனை தன் உதட்டால் ருசி பார்க்கும் ஆவாள் ஏற்பட அவள் முகம் நோக்கி குனிந்தான்...


அவனின் மூச்சிக் காற்று அவள் கன்னத்தை உரச... அவனின் உதடுகளோ அவளின் கன்னத்தை கவ்வியது...


அவனின் நெருக்கத்தில் பதட்டம் அடைந்தவள் அவனை தள்ளிவிட போராடிய போராட்டம் எல்லாம் வீழலுக்கு இறைத்த நீர் போலானது...


அவளின் முகத்தில் உள்ள ஒட்டுமொத்த பன்னிர் துளியையும் அவனின் உதடுகள் உண்ட பிறகே அவளை விட்டான்... அந்த மாயக் கள்வன்...


அவனின் பிடிவிலகியதும்.. அவனை ஒரே தள்ளாக கீழே தள்ளினாள்....


"ச்ச்சீ" என்று அவனின் கன்னத்திலே பளார் என்று ஒரு அறை விட்டாள்...


"நீங்க இவ்வளவு மோசமானவளா.. ஏற்கனவே அன்னைக்கு உங்களை அடிச்ச மாதிரி உங்க மண்டைய உடைச்சி இருக்கனும்..." என்று அவனின் நெற்றியில் தன்னால் ஏற்பட்ட தழும்பை பார்த்தாள்...


"ஒரு பொண்ணு உங்க பொண்டாட்டியாவே இருந்தாலும் அவளோட அனுமதியில்லாமல் தொட்டக்கூடாதுன்னு உங்க ஆத்தில சொல்லி தரலையா??... உங்க கலாச்சாரத்திலும் மத்தவாள் அனுமதி இல்லாமல் தீண்டக்கூடாது தான இருக்கு ...
என்னை என்னன்னு நினைச்சேள்... உங்க மிரட்டலுக்கு பயந்தாலும்... என்னுடைய மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்..." என்று ஆத்திரகமாக கூறிவிட்டு வெளியேறிவிட்டாள்..


அவள் தன்னை அடித்தது கோபம் வந்தாலும்... தன் தவறு புரிந்து அமைதியாக அன்று போல் இன்றும் நின்றான்... ஆனாலும் கண்களில் மையல் குறையாமல் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான்...


அன்று அவன் அவளை முத்தமிட்டதும்... அவனை தள்ளிவிட்டு... பின் தன் உதட்டை துடைத்துக் கொண்டே.. "ச்ச்சீ... அபச்சாரம்.. அபச்சாரம்... இப்படி பண்ணிட்டேளே.. "என்று ஆத்திரத்துடன் கண்கள் கலங்கி கோபத்தில் அவள் அருகில் இருந்த டம்ளரை எடுத்து அவன் நெற்றியை நோக்கி வீசினாள்...
அது குறித்தவறாமல் அவனின் நெற்றியை பதம் பார்த்தது...


அவனின் நெற்றியில் வழிந்த குருதியை பார்த்ததும் தான் தன் செயலின் வீரியம் அவளுக்கு புரிந்தது ...


உடனே அச்சச்சோ பகவானே... இப்படி பண்ணிட்டேனே மன்னிச்சிடுங்கோ... என்று அவனின் நெற்றியில் வழிந்த இரத்தத்துளிகளை துடைக்க கையை நீட்டியவளின் கையை மடக்கி அவளின் உதட்டை வன்மையாக கவ்வினான்...


அவள் மூச்சுக்கு சிரமப்பட்டதும் தான் அவளை விடுவிடுதான்... அவளின் உதட்டியில் ஓரத்தில் துளிர்த்த ஒரு சொட்டு இரத்தத்துளியை பார்த்ததும் தன் கைக்கொண்டு அதை துடைத்துவிட்டு அவளை கட்டிலில் தள்ளிவிட்டு சென்றான்...


அதன் பிறகு அவன் அவளை பார்க்கவில்லை... அவளும் அவன் அறைக்கு செல்லவில்லை... இன்று தான் அவளை பூஜை அறையில் பார்த்தான்...


அன்றைய முத்தத்தை நினைத்தால் இன்றும் அவனின் உதட்டில் அவளின் ஈரம் உள்ளதை போல் உணர்ந்தான்... உடல் சிலிர்க்க...


அவனை திட்டிவிட்டு வந்தாலும் மனதெல்லாம் அவன் அவளை முத்தமிட்டதே தோன்ற.. முகத்தை சோப்பு போட்டு தேய்த்து தேய்த்து கழுவினால்... வாய் ஓயாமல் அபச்சாரம் என்று உச்சரித்துக் கொண்டே இருந்தது... என்ன கழுவியும் அவனின் உதட்டு சூடு முகத்தை விட்டு போகாததை போல் போல் தோன்ற மீண்டும் ஒரு முறை குளித்ததாள்... பின்னரும் மனம் அமைதி அடையாமல்... பூஜை அறையில் கண்ணனின் சுலோகம் சொல்ல ஆரமித்தாள்...


அவளுக்கு தெரியும் அவன் நினைத்தால்.. தன்னை ஆளா முடியும் என்று...அவனை தான் அடித்தது அவனுக்கு அது சிறு துரும்பு போல் தான் இருக்கும் என்று... இருந்தாலும் அவன் ஏன் என்னை எதுவும் செய்யாமல் விட்டான் என்ற கேள்வி அவளின் மனதை அரித்துக்கொண்டே இருந்தது... எதற்கும் நாம் அவனின் கண்ணிலே படாமல் இருப்பது தான் நல்லது... என்று நினைத்தால்...ஆனால் அவளின் மனதிற்கு தான் தெரியுமே அவனின் முத்தத்தில் மயங்கியது அவள் ஒரு நொடியென்னும் மயங்கியது.... ஆனால் அதை ஒற்றுக்கொள்ள அவள் மூளை தான் தயாராகயில்லை...
அவள் கீழே வந்தது முதல் அவளின் பின்னே சென்றுக் கொண்டிருந்தது அவனின் பார்வை...



மீண்டும் முருங்கை மரம் ஏறின வேதாளம் போல அவள் தன் கூட்டுக்குள்ளே அடைந்துக் கொண்டாள்...


இவளை இப்படியே விட்டால்.. எப்போ நான் பிரம்மச்சரிய விரதத்தை முடிகிறது... இதுக்கு ஒரே வழி அவளை வம்பிழுத்து அவளை அவ கூட்டை விட்டு வெளியே கொண்டு வரணும் என்று முடிவெடுத்த ஜேக்கப்பின் மனம் கூடவே அவனின் உள்ளே இருந்த ரெமோவை வெளியே கொண்டு வராமல் இருக்க எச்சரிக்கை விட்டது...


மறுநாள் காலையில் தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டிருந்தவளின் பின்னேயிருந்து...


"ஹேய் பேபி... என்றான்..


அவனின் குரல் கேட்டாலும் திரும்பாமல் அமைதியாக பூக்களை பார்த்துக்கொண்டிருந்தாள்...


அவள் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருந்தது அவனுக்கு கோபத்தை விளைவிக்க..


இப்போ என்கிட்ட நீ பேசணும் பேசலைன்னா பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் அம்பை என்றான் குரலின் ஏறிய காரத்துடன்...


அவனின் குரலின் மனம் படபடவென பயத்தில் அடித்துக்கொள்ள... திரும்பி அவனை பார்த்தாள்...


அவள் திரும்பியதும் அவளின் முகத்தை பார்த்ததும் அவனின் கோபம் எங்கோ சென்று விட மனதில் உல்லாசம் குடிகொண்டது... கண்களில் பழைய மின்னலொடு அவளை பார்த்தான்...


அவனின் கண்களின் மின்னலை பார்த்ததும் இவளுக்கு வயிற்றில் அமிலம் சுரக்க... எச்சிலை முழுங்கினாள்...


அவளின் ஏறி இறங்கும் தொண்டை குழியை பார்த்துக்கொண்டே...
நாம இன்னைக்கு வெளியே போறோம்... சாப்டுட்டு சீக்கிரமா ரெடியா இரு என்றான் கண்களில் மாறாத மின்னலுடன் ...


அவன் சொன்னது தான் தாமதம்... பூக்கூடையை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்...


அவளின் கண்களை கட்டிவிட்டு காரில் ஏற சொன்னான்... அவள் முடியாது என்று மறுத்ததும்... வற்புறுத்தி அவளின் கண்ணை கட்டிவிட்டான்...


கார் அரைமணி நேரம் சென்றதும் ஒரு இடத்தில் நின்றது...


"கண்ணை இப்போவாது திறக்கட்டுமா... கண்கட்டை அவிழ்த்து விடுங்கோளேன் ப்ளீஸ்... "


"கொஞ்சம் நேரம் பேசாம வந்த அமைதியா இருப்பேன்... இல்லனா பேசுற வாய்க்கு பூட்டு போடவேண்டியது வரும்..." என்றான் ஒரு மாதிரி குழைந்த குரலில்...


அவனின் குரலிலே தெரிந்துகொண்டாள்... அது எந்த மாதிரி பூட்டு என்று.. அதனால் வாயை இருக்கையில் மூடிக்கொண்டாள்.. தலையை வேண்டாம் என்பது போல் அசைத்தாள்...


ஹ்ம்ம் அது... என்றுவிட்டு
அவளை மெதுவாக கைபிடித்துக் கொண்டு நடந்தான்...


எங்க கூட்டிட்டு போறேள்... என்னோமோ புல்லு மேலே நடக்குற மாதிரி இருக்கு நேக்கு ...


ஏய் அமைதியா வரமாட்டியா... இல்லை பூட்டு போடணுமா என்றான் குறும்பு வழியும் குரலில்...


அய்யய்யோ... வேண்டாம்ன்னா...என்றாள் பயத்தோடு...


என்ன என்ன சொன்ன இப்போ... ஒரு தடவை சொல்லு சொல்லு... என்றான்... குரலில் துள்ளலுடன்...


என்ன சொன்னேன்.... அய்யோ ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா... மன்னிச்சிடுங்கோ... அதுக்காக பூட்டு போட்டுடாதேள்....


அடியே மக்கு மாமின்னு உன்னை சொல்றதுல தப்பே இல்லை... என்று தலையில் அடித்துக்கொண்டான்...


உனக்கு வாய்க்கு பூட்டு போடவான்னு கேட்டதுக்கு சொன்னியே அதை திரும்ப சொல்லு டி...


அப்படி என்ன சொன்னேன்... அய்யய்யோ... வேண்டாம்ன்னான்னு சொன் ... என்று பாதியிலேயே நிறுத்திவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் ....


ஏன்னா ன்னா உங்க பாஷையில் ஹஸ்பண்ட் தான பொண்டாட்டி... என்றான் குரலில் உல்லாசத்தோடு...


அது... அது... தெ...ரி...யா..ம வ...ந்...து...டு..ச்சி... மன்..னி..ச்சி...டுங்கோ... நா... ன் போறேன்னு முன்னாடி நடந்து செல்ல பார்த்தாள்... ஆனால் அவளின் கை தான் அவனிடம் மாட்டி இருந்ததே... அந்தோ பரிதாபம்....


அவளின் கையை விடுவிக்காமல்... மனதில் எழுந்த மகிழ்ச்சியோடு அவளின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு... கிட்டத்தட்ட ஓடினான்...


ஒரு இடத்தில் அவளை நிற்கவைத்து... அவளின் பின்னிருந்து அணைத்தான்..


அவனின் செயலிலிருந்து தன்னை விடுவிக்க முடியாமல் அவனின் கைப்பிடியில் திமிறினாள்...


அவளின் காதோரமாக... ஏய் பொண்டாட்டி... கொஞ்சம் நேரம் மட்டும் டி ப்ளீஸ் அமைதியா இரு உன்னை எதுவும் பண்ண மாட்டேன்... என்று அவளின் காதோரம் கிசுகிசுத்தான்..


அவனின் சொல்லில் என்ன மந்திரமோ.. காதோரம் அவனின் உதடுங்கள் பட்டும் படாமலும் உரசி அவளை சிலிர்க்க வைத்தது... என்றும்மில்லா மென்மை அவன் குரலில்... அது அவளை கட்டி போட்டது...


அவளின் அசைவற்ற தன்மையை உணர்ந்ததும்... கண்கட்டை மெதுவாக பிரிந்தான்...


கண்கட்டு விடுவித்ததும்... கண்களை மெதுவாக திறந்து பார்த்தவள்... சிலையாக சமைந்து போனாள் ஒருநிமிடம் ... சுற்றிலும் பசுமையாக... கண்ணெதிரில் அருவி கொட்ட... அவளின் பாதங்கள் வந்த பாதை முழுதும் மலர்கள் மலர்த்திருக்க... அவனின் கைப்பிடியில் அவள்... அவர்களை சுற்றி வண்ணத்துப்பூச்சிகளின் வரவேற்பு...


சொர்க்கபுரிக்கு வந்துவிட்டோமா என்று கண்களை மூடி மூடி திறந்தாள்... நம்ப முடியாமல் அவனின் கையை கிள்ளினாள்..


அவனின் அவுச் என்ற சொல்லில் அவனின் கை பிடியை நீக்கிவிட்டு.. குழந்தையாக குதித்து குதித்து அவளை சுற்றி வந்த வண்ணத்து பூச்சியை பிடிக்க பறந்தாள்... சிரித்துக்கொண்டே...


ஏய் நில்லுங்க... நில்லுங்க என்ற அவளின் சந்தோச கூச்சல் அவனின் மனதையும் அவளிடம் வசப்படுத்தியது...


இதயத்தை திருடி செல்வாள்...




தோழிகளே இதோ.. அத்தியாயம் 4... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.... நன்றி 😍😍கருத்தை கூறாமல் சென்றால் உங்கள் கனவில் பேய் வரும் ஜொள்ளிபுட்டேன் ஆமா 😏😏
 
Last edited:

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே..


அத்தியாயம் - 5



அந்த புள்ளி மானின் மகிழ்ச்சியை பார்த்த புலியின் கண்களோ வேட்டையாடும் பழி வெறியோடு சிறு பளபளப்பு...


"வாவ் ரொம்ப அழகா இருக்குன்னா இந்த இடம்... " என்றப்படியே திரும்பியவளின் மூச்சு ஒரு நொடி நின்றுவிட்டது அவனின் நெருக்கத்தால்.. இருவரிடமும் துளி இடைவெளியோடு காற்று புகுந்து விளையாட அதற்குக்கு கூட கோவம் கொண்ட ஜேக்கப்பின் கைகள் அவளை தன்னோடு இருக்கி அணைக்க... பெண்ணவளோ அவனின் விழி பார்த்து மௌன சிலையாகினாள்...


அவள் விழியோடு அவன் விழியை உறவாடவிட்டு அவளை வசியம் செய்தவனின் கைகளில் பூமாலையாக அவள் கிடக்க...

அவனோ பஞ்சுப்போதிப்போல் அவளை தூக்கிக்கொண்டு அங்கே அருகே இருந்த சிறு குடிலுக்குள் சென்றான்...

மென்மையாக அவளை திண்டியவன் அவளை பெண்ணாக முதல் வெட்கத்தை உணரவைத்தான்... அங்கே காதல் இருந்ததா என்றால் கேள்விக்குறியே?? ஆனாலும் அவர்களின் மனதில் ஒரு சிறு ஈர்ப்பு அது தான் அடுத்த கட்டத்தை நோக்கி செலுத்தியதோ??


அவர்களின் குடிலுக்குள் சூரியனின் செங்கதிர்கள் வெட்கதோடு எட்டி பார்க்க... அதில் கண்ணை கசக்கி எழுந்தவனின் கையருக்கே அவளவனின் பூமுகம்... அந்த அதிகாலை பொழுதில் அவனின் மனம் மயங்காவிட்டால் அதிசயம் தான்...


கலைந்து கிடந்த முடிகள் ஆங்காங்கே காற்றில் பறக்க உதடுகளில் சிக்கிதவித்தவைகள் அவனின் உதடுகளை வரவேற்க அழைப்பு விடுத்தது.. அதற்க்குமேலும் அவன் தாமதிப்பானா என்ன? அவளின் பூவிதழில் தேனருந்திகொண்டிருந்தான்...


அதில் தூக்கம் கலைந்தவளின் இமைகள் திறக்க அவள் கண்டதென்னவோ அவனின் கண்கள் தான்.. அவளை பார்த்து ஒற்றை கண் அடித்துக்கொண்டே புருவத்தை ஏற்றி இறக்கினான்..


அதில் சுயம் பெற்றவள் நடந்துகொண்டிருப்பதை அப்போது தான் புரிந்து.. பதறியடித்து அவனை தள்ள பார்த்தாள்.. பலன் என்னவோ பூஜியம்.. அந்த மென்மையான கரங்கள் அந்த கடுமையான ராட்சசனின் அவ்வளவு எளிதில் தள்ளிவிடதான் முடியுமா?? முயன்று பார்த்தவள் முடியாது என்று தெரிந்தபின் கண்ணீரை கன்னத்தில் வழியாவிட்டாள்.. அக்கண்ணீரின் சுவையில் அடங்கி இருந்த அவனின் சினம் துளிர்க்க அவளை மெத்தையில் தள்ளிவிட்டவன்.. அவளை நோக்கி கையை உயர்த்தியவன்.. அவளின் கண்களின் பய பார்வையில் கிழே இறக்கினான்...



"ஏய்ய் எதுக்கு இப்போ கண்ணுல டேம் தரந்து விடுற.. என்னமோ புதுசா நடத்த மாதிரி.. நேத்து இதைவிட அடுத்தக்கட்டதுக்கு போன உனக்கும் அதுல சம்மதம் போல தானா அமைதியா இருந்த.. இப்போ என்ன டி ரொம்ப சீன் போடுற.. " என்று பற்களுக்கு இடையே வார்த்தைகளை மென்று துப்பினான்..


அவன் சொன்னதும் தான் நேற்றைய தன் நிலை அவளுக்கு நியாபகம் வந்தது.. அதுவும் அவன் விழிகளை பார்த்தவளோ வசியத்துக்கு கட்டுப்பட்டு அவனின் சரிபாதியாக மாறிவிட்டாலே எப்படி? தன்னிலை எப்படி அவள் மறந்தாள்? இது வெறும் உடல் இச்சையோ? அய்யோ அவ்வளவு தரம் கெட்டவளா அவள்? நினைக்கவே உடல் கூசுக்கிரதே... தன்னையே அசிங்கமாக எண்ணியவளின் கண்ணீர் ஆறாய் கன்னத்தில் ஓட...முகத்தை மூடி கதறினாள்...


"அடச்சீ போதும் நிறுத்து டி இப்போதானே சொன்னேன்... என்னமோ உன்னை ரேப் பண்ணிட்டா போல் எபெக்ட் குடுக்குற.. என்றவாரே அவனின் கைகளை பிடித்து எழுத்து அவனின் முகம் பார்க்க செய்தவன் மறுகரத்தால் அவளின் தாலியை எடுத்து கட்டினான்.. இது கட்டுனவன் நான் தானே நீ தானே என்னோட பொண்டாட்டி.. அப்போ நமக்குள்ள நடத்தது சரிதானே.. அதுக்கு எதுக்கு இப்போ நீ இவ்ளோ பீல் பண்ணுற ஒரு வேளை உன்னோட கற்ப்பை யாருக்காச்சும் பாதுகாக்கிறியோ? " என்று கடுமையான வார்த்தைகளை அவளை நோக்கி வீசினான்..


அதில் அதிர்த்தவளின் விழிகளை பார்த்துக்கொண்டே.. "அப்போ நான் சொன்னது சரிதானா? உன்னோட அமைதி அது தான் சொல்லுதோ " என்றான்.


"இல்ல..இல்ல.. "என்று காதை மூடிக்கொண்டு கதறினாள்..


"அப்போ எதுக்குடி இப்படி அழுற? இனி நீ நமக்குள்ள நடத்தத்தை நினைச்சி ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலும் அப்போ நான் சொன்னது தான் நிஜம்ன்னு அர்த்தம் புரியுதா.. " என்று கர்ஜித்துவிட்டு வெளியேறினான்...


அவளோ கண்ணீரி விடக்கூட உரிமையில்லாமல் மனதிற்குள்ளே மறுகியவளாய் உடைகளை சரி செய்துகொண்டு வெளியே வந்தாள்..


அங்கே ஜீப்பில் ரெடியாக ஸ்டார்ட் செய்து காத்துகொண்டிருந்தவனின் முகமோ இருகி இருந்தது.. சுற்றிலும் உள்ள அழகிய சூழ்நிலையை கூட கவனிக்க மனதில்லாமல் மௌனமாக அவனின் அருகே அமர்ந்தாள்..


அவளை திரும்பி கூட பார்க்காமல் வண்டியை வேகமாக ஓட்டினான். சிறிது தூரம் சென்றதும் உறங்கியவளின் தலை அவனின் தோள் மேல் விழ அவளை பார்த்துக்கொண்டே அவள் தூக்கம் கலையாதவாரு தோள்களில் தாங்கி கொண்டான்..அமைதியாக அந்த சூழ்நிலை அவனின் மனநிலையை இதமாக்கியதும் மெல்லிய பாடல் ஒன்றை ஹம் செய்தப்படி வந்தவனின் சிந்தனையை கலைத்தது அவனின் அலைபேசி...


"ஹலோ,..."

......

"ஷீட் இடியட்... இன்னும் எவ்ளோ டைம் எடுப்பிங்க.. நான் வரதுக்குள்ள எல்லாமே முடிந்தது இருக்கனும்..."

.......


"எஸ் சீக்கிரமா ப்ராஜெக்ட் முடிக்க பாருங்க... இங்க இந்த லூசை வச்சிக்கிட்டு சமாளிக்க முடியல... சரியான மெண்டல் கேஸ் போல " என்று அவளை தன் கைவளையில் வைத்துக் கொண்டு டர்கீஸ்ஸில் பேசிக்கொண்டே... தன் கைவளைவில் உறங்கி கொண்டிருந்த அவளை பார்த்தான்...


அவளின் மதிமுகம் அந்த இருட்டு வேளையிலும் நிலவாக ஒளிர்ந்தது... அதுவும் அந்த ஒற்றை கல் மூக்குத்தி அவனை ஈர்க்காமல் இருந்தால் தான் அதிசயமே...


அவனை செயல்யிழக்க செய்ய அந்த ஒன்றை கல் மூக்குத்தி போதாதா... என்னோமோ வசியம் செய்ததை போல் அவன் உதடுகள் அம்மூக்குத்தியை நோக்கி படையெடுத்தது...


அவனின் கைப்பிடியில் தூங்கி விட்டிருந்த அவள்... எதோ உள் உணர்வு ஊந்த சட்டெனே தன் தாமரை விழிகளை மலர்த்தினாள்...


அவளின் விழி ஈர்ப்பு விசையில் இன்னும் மயங்கி தான் போனான்... கூடவே அவளின் அடியிலும்...


தூங்கியவளின் கை முட்டில் சரியாக வைக்க முடியாமல் அவனின் உதட்டில் ஒரு அடிவிட அதுகூட அவனுக்கு முத்தமிட்டத்தை போல இருந்ததோ?? அவளின் சிறு சிறு அசைவுக்கே மயங்கி போனான்...


வீடு வந்ததும்.. அவளின் தூக்கம் கலையாமல் மென்மையாக கையில் ஏந்தி சென்று படுக்கையறையில் விட்டவன் தான் இரண்டு நாட்களுக்கு பிறகே அவ்வீட்டிற்கு விஜயம் செய்தான்...


அம்மைக்கு மாலையில் எழுந்ததும் அவனின் முகம் அருகில் இல்லாதது ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் மறுபக்கம் சிறு ஏமாற்றம் ஏற்பட்டதோ??

அமைதியாக கீழே சென்று உண்டுவிட்டு படுத்தவள்..நேற்றைய இரவு போல் அவனிடம் மயங்கி விடக்கூடாது சீக்கிரமாக உறங்க வேண்டும் என்று உறங்கிவிட்டாள்..


இரண்டு நாட்கள் இவ்வாறே நடக்க மனம் சஞ்சலம் கொண்டு தோட்டத்தில் நடைப்பயின்று கொண்டிருந்தவளின் காதில் அவனின் வருகையை அறிவிக்கும் வகையில் அவனின் காலடியோசை அருகே கேட்க படபடக்கும் இதயத்தோடு திரும்பாமல் நின்றிருந்தாள் ...


சிவப்பு நிற சேலையில் சுற்றி இருந்த பூக்களின் நிறம் கூட மட்டுப்பட்டு தெரிந்தது அவனுக்கு அவளின் அழகில்...வைத்தக்கண் வாங்காமல் அவளை பார்த்துக்கொண்டே பின்னிருந்து அவளை அணைத்து காதோரம் இன்னைக்கு எனக்கு சிக்கன் கிரேவியும் பிஷ் குழம்பும் சாப்பிடணும் போல இருக்கு உன்கையால... சமைச்சி தரியா?


"என்னது? சிக்கன்னும் மீனுமா " என்று தூக்கிவாறி போட்டு அவனை திரும்பி பார்த்தாள்..


"ஆமா.. உன்னோட கையாள அதுவும்.. ஸ்பெஷல்லா என்னை நினைச்சிட்டே சமையல் பண்ணு " என்று கண்ணாடித்தாவரே கூறினான்..


"இங்க பாருங்க, இதுலாம் அநியாயம்.. என்னைய பார்த்த எப்படி தெரியுது உங்களுக்கு..?"


"எப்படி எப்படியோ தெரியுது எனக்கு.. உன்கிட்ட அதை கண்டிப்பா சொல்லியே ஆகணுமா மாமி.. "என்றான் விசம பார்வையோடு..


" ஐயோ பகவானே.. அபச்சாரம் அபச்சாரம்.. இப்படி பண்றிங்களே.. காலங்காத்தாலயே கறியும் மீனும் சமைச்சி போடுன்னா நான் எப்படி செய்றதாம்.. அதுவும் இந்த கன்றாவி எல்லாம் நான் தொட்டது கூடயில்லை.. என்னை விட்டுடுங்கோண்ணா.. ப்ளீஸ் " என்று கண்கள் கலங்க கெஞ்சினாள்..


அவளின் அபச்சாரத்தில் கிரங்கிய மனம் அவளின் விட்டுடுங்கோண்ணா என்ற சொல்லில் சினம்கொண்டு எழுந்தது.."ஏய் உன்னை என்ன சொல்லி இருக்கேன்.. உன் வாயில இருந்து இந்த வார்த்தை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல ?? மறுபடியும் இதை சொல்ல உனக்கு தைரியம் வரக்கூடாது.. அதுக்கு கண்டிப்பா இந்த நான் வெஜ் ஐட்டம்ஸ் சமைச்சி நீயே சாப்பிட்டாகணும்.. புரியுதா... அதுவும் என் கண் முன்னாடியே" என்று கடுமையாக கூறிவிட்டு வெளியேறினான் ..


" விட்டுடுங்கோண்ணா " என்ற சொல்லின் அர்த்தத்தை அவளும் உணரவில்லை..அவனும் சரியாக புரிந்துகொள்ளவில்லை.. ( உங்களுக்கு புரிந்திருக்குமே )


கண்களில் கண்ணீர் பெருகி கன்னத்தில் ஓட.. தன் விதியை நொந்துகொண்டு வேலையாளின் உதவியோடு சமைக்க சென்றாள்..


மதியம் அவனின் உணவு உண்ண வரக்கூடாது என்று ஊரில் உள்ள அனைத்து தெய்வத்திற்கும் வேண்டுதல் வைத்தாள்." பகவானே.. இவன் கிட்ட இருந்து என்னைய காப்பாத்திடுங்கோ.. உங்களுக்கு நெய்வேய்த்தியம் " பண்றேன்.

" ஏய் என்ன பண்ற நீ ? வாழ்க்கையில் முதல் முறையாக உணவு உண்ண வர கூடாது என்று ஒரு ஜீவனை சொல்ற.. என்ன ஆச்சி உனக்கு.. எதிரியாக இருந்தாலும் அவனை உண்ணவைத்து பார்க்க வேண்டும்ன்னு தோப்பனார் சொல்லிக்குடுத்தாரே மறாந்துட்டியா??" என்றது அவளின் மனசாட்சி.


"அச்சோ நான் ஏன் இப்படி மாறிட்டேன்.. இவன் கூட சேர்ந்து நாமளும் கல்நெஞ்சுகாரியா மாறிட்டோமா? " என்று புலம்பிக்கொண்டிருந்த வேளையில் அவனின் வரவை கண்டு வாயை மூடிக்கொண்டாள்.


நேராக டைனிங் டேபிளை தான் நோக்கி வந்தவன் அவளின் கையை பிடித்துயிழுத்து நாற்காலியில் உட்கார வைத்தான். அதிலே தெரிந்து போனது அவனின் பிடிவாதம். கண்கள் கலங்க அவனை ஏறிட்டு பார்த்தாள். அதிலே அவனின் நெஞ்சம் அசைந்தாலும் மீண்டுமொருமுறை இவளின் வாயிலிருந்து அந்த வார்த்தை வரக்கூடாது என்பத்தில் உறுதியாக இருந்தான்.


வேறு வழியில்லாமல் கையில் அசைவ உணவோடு கண்ணீர் ஊற்றெடுக்க அவனை நோக்கினாள். அவளின் கைகளை வாயருகே கொண்டு சென்ற உணவு அவனின் வாயிலிருந்து. அதிர்ச்சியோடு அவனை நோக்கினாள் பாவையவள். சிறு புன்னகையை உதிர்த்தவரே அனைத்து உணவையும் அவளின் கையாலே உண்டான்.


"அப்பாடா எப்படியோ நாம தப்பிச்சோம் " என்று எண்ணி முடிக்கையில் அவளின் இடையில் அவன் கைத்தடத்தை பதித்து, அவனின் உயரத்திற்கு அவளை தூக்கினான். கூடவே அவளின் குற்றத்திற்கு அவனால் தண்டனையும் வழங்கபட்டது. அசைவம் சாப்பிட்ட அவனின் வன்மையான இதழ் கொண்டு அவளின் மென்மையான இதழை சிறையிட்டான் ஜாக்கோப்.


அதிர்ச்சியில் விழி விரித்து அவனை பார்த்தவளின் இமைகளை முத்தமிட்டு, " இனி இப்படி பேசினா இதான் தண்டனை.., போ போய் இதுக்கும் சேர்ந்து குளி " என்று குறும்பு மின்ன சிரித்தவரே சென்றான்..


இதோ அத்தியாயம் 5 பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள்.. நன்றி 🤩

ரொம்ப பிரேக் எடுத்துட்டேன் பிரண்ட்ஸ்... இனி அடிக்கடி அப்டேட் தர முயற்சிக்கிறேன்...உங்களை காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்...
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீஸர்..


"டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க இவ்ளோ நாளா.. **ரா புடுங்கிட்டு இருந்திங்க... போயும் போயும் ஒரு பொண்ணை தூக்க முடியல தூ.. ***டைங்களா.. போய் புடவையை கட்டிக்கோங்கடா... உங்கள நம்பி இந்த விஷயத்தை விட்டுட்டு போனது என்னோட தப்பு... இனி நானே களத்துல குதிக்குறேன் எப்படி அவ மாட்டாம போவான்னு பாக்குறேன்... " என்று தன் முதல் தோல்வியை ஒப்பு கொள்ள முடியாமல் கோபப்பட்டவன்.. வேட்டை நாயாக இரைக்கிடைத்தவுடன் பாய காத்திருந்தான்... மத்திய அமைச்சரான தேவராஜ்..



"வேணும் வேணும் அவ எனக்கு முழுசா .. அவ எனக்கு மட்டும் தான்.. இந்த உலகத்துல யார் தடுத்தாலும் அவளை அடையமா விடமாட்டேன்.. " என மனதில் சூழுரைத்தவரே அடுத்த திட்டத்தை நிறைவேற்ற களத்தில் இறங்கினான்..


ஆனால் அதற்கு முன்னே அவனின் ஆசையை தவிடு பொடியாக்கிய ஜாக்கப் அவளுடன் இல்லறத்தில் இரண்டர கலந்து அடியெடுத்து வைத்துவிட்டான்.. இனி தேவராஜின் ஆசை நிறை வேறுமா? அல்லது ஜாக்கப்பின் ரகசிய நோக்கம் நிறைவேறுமா?? பதில் விதியின் கையில்.....


அட்ஜெஸ்ட் கரோ மக்களே... நாளைக்குள்ள ud தரேன் 😁😁
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே..



அத்தியாயம் 6





"டேய் என்னடா இவ்ளோ தேடியும் கைல சிக்கல அந்த மாமி... எப்படிடா அண்ணாகிட்ட சொல்றது.. விஷயம் தெரிந்தா நம்ம கதி அவ்ளோ தானடா... இப்போ என்ன பண்றதுடா? "என்றான் ஒரு தடியன்...


"அதான் டா எனக்கும் பயமா இருக்கு ... வேற வழி இல்ல.. சொல்லித்தான் ஆகணும்.. " என்று பயந்தப்படியே தன் அண்ணனுக்கு போன் பண்ணினான்.. இன்னொரு தடியன்..


அண்ணா...

..........

மன்னிச்சிடுங்கண்ணா எவ்ளோ தேடியும் கிடைக்கல...

.........


அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டத்தோ.. இங்கே கேட்டவனின் முகம் பயத்தில் கலவரமானது..


*********************************


அந்த வீடு முழுக்க வெள்ளை வேட்டியும் சட்டையுமாக கூட்டம் நிரம்பி வழிய.. கூட்டமே பரபரப்பாக தங்கள் தலைவருக்காக காத்திருந்தது...


அதோ அண்ணா வந்துட்டாரு... என்ற குரலில் மொத்த கூட்டமும் கப்பசிப்பாகியது...


வெள்ளை வேட்டி, கதர் சட்டை போட்ட அவனின் நடை உடை பாவனை எல்லாமே பார்க்கவே பக்கா அரசியல்வாதி லுக்கில் இருந்தான்.. வயது முப்பத்தி இரண்டு தான் அதற்க்குள்ளவே இவ்வளவு பெரிய பதவி எப்படி என்றால் ?? எல்லாரையும் போட்டு தள்ளியது தான் இவ்வளவு சீக்கிரம் இந்த முன்னேற்றம்.. ஆம் இவனின் பதினைத்தாம் வயதில் பெற்ற தாய் தந்தையவே பணத்திற்காக கொலை செய்து விட்டு சிறை சென்றவன் மூன்றே மாதத்தில் ஜாமினில் வெளியே வந்து அடுத்த கொலையும் செய்து அவனின் கொலை தொழிலில் முன்னேற்றம் அடைந்தான் .. அப்படியே படி படியாக அரசியலில் நுழைந்து இப்பொது மதிய அமைச்சராக உள்ளான் தேவராஜ் எனும் கொடிய அரக்கன்..


நேராக உள்ளே வந்தவனின் கை எதிரே நின்றவனின் கன்னத்தை மாறி மாறி பதம் பார்த்தது... " என்னடா வெள்ளை வேட்டி கட்டிட்டு உங்க கிட்ட வேலைய சொல்லிட்டு கம்முனு வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சீங்களா... உங்களுக்கே தொழில் கத்துக்குடுத்தவன் டா நானு... யாருக்கிட்ட தொலைச்சிடுவான் ராஸ்கல்.. " என்றவனின் கோபப்பர்வை அடுத்து நின்றவனிடம் சென்றது...


"சார் என்ன புடுங்கிட்டு இருக்கீங்கன்னு தெரிந்துக்கலாமா " என்ற நக்கல் பார்வையோடன குரல் அவனின் வலதுகையான ராகவனிடம் கேட்டது...


"அது அதுண்ணா நாங்க அந்த பொண்ணை தேடிட்டு ஊருக்கு போறதுக்குள்ள யாரோ கடத்திட்டாங்களாம்ண்ணா.. அவங்க குடும்பமே அங்க இல்லன்னு சொல்றாங்க.. " என்றவனின் குரல் உள்ளே சென்றது எதிரே உள்ளவனின் சுட்டெரிக்கும் பார்வையால்..


"அப்போ நீங்க எல்லாம் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க இவ்ளோ நாளா.. யாரோ அவளை தூக்குறவரைக்கும் **ரா புடுங்கிட்டு இருந்திங்க... போயும் போயும் ஒரு பொண்ணை தூக்க முடியல தூஉஉ... ***டைங்களா.. போய் புடவையை கட்டிக்கோங்கடா... உங்கள நம்பி இந்த விஷயத்தை விட்டுட்டு போனது என்னோட தப்பு... இனி நானே களத்துல குதிக்குறேன் எப்படி அவ மாட்டாம போவான்னு பாக்குறேன்..." என்று தன் முதல் தோல்வியை ஒப்பு கொள்ள முடியாமல் கோபப்பட்டவன்..வேட்டை நாயாக இரைக்கிடைத்தவுடன் பாய காத்திருந்தான்... மத்திய அமைச்சரான தேவராஜ்..


"வேணும் வேணும் அவ எனக்கு முழுசா .. அவ எனக்கு மட்டும் தான்.. இந்த உலகத்துல யார் தடுத்தாலும் அவளை அடையமா விடமாட்டேன் " என்று மனதிற்குள் சூழுறைத்தவரே அடுத்த திட்டத்தை நிறைவேற்ற களத்தில் இறங்கினான்..


ஆனால் அதற்கு முன்னே அவனின் ஆசையை தவிடு பொடியாக்கிய ஜாக்கோப் அவளுடன் இல்லறத்தில் இரண்டர கலந்து அடியெடுத்து வந்துவிட்டான்.. இனி தேவராஜின் ஆசை நிறை வேறுமா? அல்லது ஜாக்கோப்பின் ரகசிய நோக்கம் நிறைவேறுமா??


*********************************


கண்ணனை நாடியவருக்கு
துன்பமுன்டோ..
அவனின் பாதத்தை தொட்டாலே
பாவமெல்லாம் பஞ்சாக காற்றில்
பறந்துவிடாதோ..
பேதவையவளின் கலக்கம் நீக்கி
உள்ளத்திலே உந்தன்
காதல் புகுத்திடவா
கண்ணா என் கண்ணா..
இந்த மானிட பிறப்பை துறந்து
உன் மயக்கத்திலே
வாழ்க்கையை வாழும்
வாரம் தருவாயா
கண்ணா என் கண்ணா....

(By நறுமுகை )

என்ற படலோடு அன்றைய விடியலை துவக்கினாள் அம்பை ..

என்னதான் அவள் உருகி உருகி பாடினாலும் இந்த பூலோக கண்ணனிடமிருந்து தப்பித்துவிடவாளா? அவன் தான் நித்தம் நித்தம் அவனின் கைசிறையிலே அவளை வைத்து காதல் புரிகின்றனே... இவளோ அருகே இருக்கும் கண்ணனின் காதல் புரியாமல்.. ஆல்ரெடி ஒன்றுக்கு இரண்டாக கல்யாணம் பண்ணியும் கோபியர்களிடம் காதல் பானத்தை வீசி விளையாடும் அந்த கார்மேகனிடம் காதல் கொள்கிறாளே.. எப்பொது அவனின் காதல் இவளின் கண்ணிற்கு புலப்படுமோ அதை யார் அறிவாரோ...


அவளின் குரலில் வழக்கம் போல இவனும் மயங்கி பூஜையறையின் வாயிலில் மெய்மறந்து நின்றான் சிலையாக.. ஆரத்தி எடுத்து கொண்டு திரும்பியவள் பார்வையில் பட்டான் அவளவன்.. விழிகளிரண்டு கவ்விக்கொண்டு கவிபடத்தான் ஆசை.. ஆனால் அவனவளோ அதற்கு உடன்பட்டால் தானே... ஏற்கனவே அவனிடம் தன் பெண்மையை இழந்து கலங்கப்பட்டவள் போல் துடித்துக்கொண்டிருந்தாள் இதில் இவன் வேறு அன்று அசைவ முத்தம் கொடுத்து அவளை கோவத்தின் உச்சியில் கொண்டுபோய் இதோ ஒரு மாதம் வரையாகிவிட்டது இன்னும் அவனிடம் அவள் பவள உதடுகள் இருக்க மூடிக்கொண்டு சொல் முத்துக்களை உதிர்க்கவில்லை.. என்ற ஏக்கதோடு அவனின் விழிகள் அவளை நோக்கியது...

ஆரத்தி எடுத்து அவனுக்கு கட்டியவள் அமைதியாக சென்று வைத்துவிட்டு சமயலைறைக்கு சென்று விட்டாள்..

போதும் போதும் என்று பொருத்து பார்த்தவனின் பொறுமை எல்லையை கடக்க...
விறுவிறுவென்று சமையலறைக்குள் சென்றவன்.. ஒரே இழுவையில் அவளை தன்னோடு இருக்கிக்கொண்டு ஒன்றை விரலால் அவளின் முகத்தை தன்னை நோக்கி பார்க்க செய்தவன்.. " ஏய் ஏன்டி இப்படி பண்ற... உன்னை என்ன சொல்லி இருக்கேன் நானு என்னை விட்டு விலகி போகக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? எதோ போனபோகட்டும்ன்னு கொஞ்சம் விட்டா ரொம்ப தான் பண்ற.. உன்னை இங்க பிரீயா தானா விட்டு இருக்கேன்.. இல்ல அது பண்ணக்கூடாது இது பண்ணக்கூடாதுன்னு சொல்றேனா.. உனக்கு பிடிச்ச போல பூஜைரூம், சமையல் கட்டு, தனி டபிள், பாத்திரம் கூட தனி.. இவ்ளோ உனக்கு பிரீடம் கொடுத்திருக்கேன்.. ஆனா நீ என்னமோ உன்னை நானு டார்ச்சர் பண்ற போல் பார்த்து வைக்குற.. உனக்கு எல்லாம் உன் இஷ்டப்படி விட்டது தப்பு போல இனி என் இஷ்டப்படி நடக்கட்டும் அப்போ தெரியும் உனக்கு.. ரொம்ப கொழுப்பு கூடி போச்சு அதான் அமைதியா இருக்கியோ ... ஏய் உன்னை தான் டி சொல்றேன் பேசு பேசி தொலையேன்டி ... " என்று கடினமான குரலில் கேட்டவனின் மனமோ அவள் தன்னிடம் பேசாமல் விலகி செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது..

காளையாவனின் மனம் காதலால் காசிந்துருகி நின்றது அவனையும் அறியாமல்... பாவையவளின் மனமோ வழிதெரியாத பாதையில் சிக்கிகொண்டது போல் தடுமாறியது..


மௌனமாக கண்ணீரை விழிட்டவளின் விழிகளில் மிரட்சியின் சாயல்...


"ஓ மேடம் பேசமாட்டீங்கல... அப்போ இனி உனக்கு நோ பூஜைரூம்.. அது நீ எப்போ பேசுறியோ அப்போ திறக்கும்.." என்று அவளின் பதிலைக்கூட கேட்காமல் வெளியேறினான் அவளின் கண்ணீரை காணமுடியாமல் கோவத்தோடு...


"அய்யோ வேண்டாம்ண்ணா... ப்ளீஸ் அதை மட்டும் செய்யாதீங்க... நீங்க சொல்றதை எல்லாம் கேட்குறேன்.. உங்க கிட்ட இப்போ பேசனும் அதான.. பேசுறேன், வாங்க வாங்க பேசலாம்.."என்று அவனின் கைகளை பிடித்தப்படியே கெஞ்சினாள்..


அவளோட வாங்க பேசலாம் மாடுலேஷன் சிரிப்பை வரவைத்தாலும் வெளிய சிரிக்காமல்.. " ஹ்ம்ம்ம் இது கூட நல்லாத்தான் இருக்கு...சரி வா அப்போ முதல்ல இருந்து பழகலாம்.. " என்று அவளை அப்படியே தன் கையில் தூக்கிக்கொண்டு தங்களின் அறையை அடைத்தவன்.. அவனிடம் அவள் பழகும் விதத்தை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தான்...

"அய்யோ இது இது இல்லண்ணா... இப்படி நான் சொல்லல " என்ற அவளின் குரல் எப்போதோ காற்றில் கரைந்துவிட்டது...


அடப்பாவி பயலே என்ற விதி கூட வெட்கப்பட்டு தலைத்தெறிக்க ஓடியது..


அங்கு வந்திலிருந்து அவளின் தாய் தந்தையோடு மாலையானால் போனில் உரையாட்தடுவாள்.. ஜாக்கோப் அதற்கு ஏற்பாடு செய்திருந்தான் ... இப்போதும் பேசிவிட்டு அமர்த்திருந்தவளின் முகமோ சிந்தனை ரேகை படர்ந்திருந்தது.. அவளை பார்த்தபடியே அவளுக்கும் அவனுக்கும் காபி எடுத்து வந்தவன்.. அதை அருகே வைத்துவிட்டு.. அவளை அணைத்தபடி அமர்ந்தான்


" என்ன இந்த மான் குட்டி ஓட மண்டைக்குள்ள ஓடுது " என்றான்...


"அது ஏன் என்னை இப்படி கடத்திட்டு வந்தேள்... ஒரு வேளை என் தோப்பனார் உங்களுக்கு என்னை கட்டிக்கொடுக்க மாட்டேன்டுவாருன்னா? " என்றாள்


"ஆமா அதுவும் ஒரு காரணம்..."


"அப்போ இன்னும் வேற என்ன காரணம் இருக்கு.. நீங்க என்னை காதலிச்சேள் அதுக்கு என் தோப்பனார் ஒத்துக்கொண்டு இருக்கமாட்டார்.. நானும் ஏத்துட்டு இருக்க மாட்டேன்.. இது தானா வேற என்ன இருக்கு புரியல சொல்லுங்கோ..."


" ஏன் ஏன் என்ன ஏத்துக்கிட்டு இருக்க மாட்ட... எனக்கு என்ன குறைச்சல் சொல்லுடி.. " என்றான் கோவமாக


"அது நீங்க வேற நான் வேற தானே.. இப்போகூட எனக்கு அது ஏத்துக்க கஷ்டம் தான்.. "


"ஓ.. அப்போ உன்னோட காதல் கேஸ்ட் பார்த்து வருமோ? எனக்கு இது தெரியாமபோச்சே.. வேணுண்ணா இப்போ கூட உன்னோட கேஸ்ட்ல நல்ல பையனா பார்த்து காதலிச்சிக்கோ... " என்றான் கோவம் கலந்த கேலியோடு...


தான் காதால் கேட்டது சரி தானா? என்ற அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்..உதடுகளோ அபச்சாரம் அபச்சாரம் என்று முனுமுனுத்தது...


"உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம் அதான் சொன்னேன்.. ஏன்னா நான் வேற ஜாதி அண்ட் வேற மதமும் கூட.. உனக்கு பிடிக்கலைல்ல வேற.. அண்ட் நானும் உன்னை காதலிக்கல... நல்ல்லா... கேட்டுக்கோ நான் உன்னை காதலிக்கல.. ஜஸ்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக வாழ்றேன் அதுவும் ஒரு கட்டாயத்தின் பேரில் மட்டுமே அவளோ தான் புரியுதா... " என்றவனின் கண்கள் பழைய வேட்டையாடும் பளபளப்பு..


அதில் இரண்டாடி பின்னேடுத்து வைத்தவளின் கண்களோ பயத்தை விட வலியை காட்டியது... " அவன் அவளை விரும்பவில்லையா? அப்போ இந்த நாடகம் எதற்கு ஏன் இந்த சித்ரவதை எனக்கு?? "என்ற கேள்வியோடு அவனை பார்த்தாள் ..


"ஏன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் உயிரோட காப்பாற்ற தான்.. " என்றான்


"என்னது " என்று அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்... பாவம் இன்றைக்கு எவ்வளவு அதிர்ச்சியை தான் தாங்கும் அவளின் சின்ன இதயம்...


இதயத்தை திருடி செல்வாள்...



இதோ அத்தியாயம் 6 படித்துவிட்டு உங்களின் கருத்துகளை கூறுங்கள் தோழிகளே...நன்றி 🤩
 
Last edited:

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையா உங்க அன்பை பார்த்து பிரம்பிச்சிட்டேன் 😍😍😍எல்லாரும் அவ்ளோ மெசேஜ் பண்ணி இருக்கீங்க என் ஸ்டோரிக்காக நான் எழுதணும்ன்னு ரொம்ப ரொம்ப நன்றி தோழிகளே 😘😘 கண்டிப்பா கதையை இனி தொடருறேன் உங்களுக்காகவே 😍😍லவ் யூ லோட்ஸ் 😘😘😍😍
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே..!


அத்தியாயம் : 7



"நான் யாருன்னு உனக்கு தெரியுமா? என் ஸ்டேட்டஸ் என்ன? என் லெவல் என்னன்னு தெரியுமாடி உனக்கு? போயும் போயும் உன்னை ச்ச்சீ.. உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா அது உன் உயிரையும் உன் குடுப்பத்தையும் காப்பாத்த மட்டும் தான். நீ என்ன உலக அழகின்னு மனசுல நினைச்சிட்டு இருக்கியா? என் கால் தூசிக்கு சமம் இல்ல நீ.. இதுல இந்த மேடம் என்னை ஏத்துக்கிட்டு இருக்கமாட்டாங்களாம்ல.. பாவம் போனா போகட்டும்ன்னு உனக்கு ஒரு வாழ்க்கை பிச்சை போட்டேன் நல்லா கேட்டுக்கோ வாழ்க்கை பிச்சை நான் தான் உனக்கு போட்டேன். அண்ட் அந்த நிலைமை எனக்கு வர நிலையில நானும் இல்ல நீ தான் இருக்க .. " என்று ஏளனமாக பேசினான் ஜெக்கப்.

அவனின் ஒவ்வொரு சொல்லும் அவள் இதயத்தில் ஓங்கி ஓங்கி யாரோ சம்மட்டியால் அடிப்பதை போல இருந்தது அவளுக்கு.. " நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ மட்டமா என்னை சொல்றேள்.. நான் அவ்ளோ கேவலமா போய்ட்டேனான்னா உங்களுக்கு.. நீங்க பெரிய ஆளா வேணும்ன்னா இருந்துட்டு போங்கோ நேக்கு அதை பத்தி கவலையில்லை நான் ஒன்னும் உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு உங்களை கட்டிண்டு வரல பிடிக்காம தான் என்னை நீங்க கடத்திண்டு வந்து கொடுமை படுத்துறேள். என்னோட குடும்பம் எக்கேடோ கேட்டு ஒழியட்டுமே நாங்க நிம்மதியா இருந்திருப்போம் இப்படி உங்ககிட்ட மாட்டிண்டு சிறழிஞ்சி போய் இறுக்கமாட்டோம்ன்னா .. " என்று கண்ணீரோடு குமுறியவளின் பேச்சு அவனை வெறியாக்கியது..


" என்னடி சொன்ன சிறழிஞ்சி போறியா.. சிறழியறதுன்னா என்னன்னு தெரியுமாடி எப்படி இருக்கும்ன்னு உனக்கு காட்டவா நான் " என்று அவளின் முடியை முரட்டுத்தானமாக பிடித்திழுத்து தன் முகத்தின் நேர கொண்டு வந்தவனின் கண்களில் அனல் பறந்தது..

இன்னொரு முறை உன் வாய்ல இருந்து பிடிக்காதுன்னே வர கூடாதுன்னு சொன்னேன் அதையும் மறந்துட்டு.. இவ்ளோ தைரியமா என் முன்னாடியே பிடிக்காம தான் வந்தேன்னு சொல்ற இதுல சிறழிஞ்சி போறன்னு வேற வார்த்தைய விடுற அப்போ உனக்கு பயம் விட்டு போச்சுன்னு தானே அர்த்தம் இதுக்கெல்லாம் சரியான தண்டனை தர வேண்டாமா உனக்கு.. " என பழிவாங்க துடிக்கும் வேட்டைகாரனாய் விழிகள் பலபலக்க கேட்டான்.

"எ..ன்..ன சொ..ல்..றே..ள் " என குரல் உள்ளே செல்ல பயத்தால் படபடக்கும் இமைகளோடு துடிக்கும் உதடுகளை பற்களால் கடித்தவாறே அவனை பார்த்தாள்.

அவளின் மருளும் மான்குட்டி விழிகளும்.. தவிக்கும் உதடுகளை பார்த்ததுமே அநியாயத்திற்கு அவனின் கோபம் கொண்ட மனம் எங்கோ மூலை முடுக்கில் ஓடியோழிய.. கல்வெறி கொண்டவனாய் அவளை கொள்ளையிட நெருங்கினான்..

அவனின் பார்வை மாற்றம் கூட அவளுக்கு பயத்தை விளைவிக்க.. ஒரு ஒரு அடியாய் அவன் அவளை நோக்கி முன்னேற படபடக்கும் நெஞ்சாங்கூடு ஏறியிறங்க இவள் பின்னே சென்றாள்..

அதில் இன்னும் மோகம் குடிக்கொள்ள அதற்க்குமேல் நொடி நேரம் கூட வீண் என்பதை போல அவளை ஒரே எட்டில் பின்னே செல்லவிடாமல் பிடித்தவனின் உதடுகள் அவளின் இதழ்களை சிறையிட்டது..


அவளிடமிருந்து திமிரிவிடுபட பார்த்தவளின் கைகளும் அவனின் கைச்சிறைக்குள் மாட்டிக்கொள்ள.. தவிப்போடு அழுதவளின் கண்ணீர் அவனின் கன்னத்தில் விழ.. இதுவரை ஆட்கொண்ட மோக உணர்வுகள் பட்டென்று அருந்துவிழ.. வெறுப்போடு அவளை பிடித்து கிழே தள்ளியவன் " இப்போ என்ன பண்ணிட்டாங்கன்னு இந்த அழுகை உனக்கு? உன்னை என்ன நான் ரேப்பா பண்ணிட்டேன்.. ஜஸ்ட் ய கிஸ்.. அதை கூட உன்னால எனக்கு சேட்டிஸ்பைடா கொடுக்க முடியல? தண்டதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து நான் பாடுபடுறேன்.. ஏன் இதுக்குமுன்னா நாம கிஸ் பண்ணிக்கிட்டதே இல்லையா.. இல்ல அது உனக்கு பிடிக்காம தான் இருந்துச்சா அப்போ அப்படி தெரியலையே எனக்கு.. ஓ அதுக்குள்ள இப்போ நான் கசந்துடேன்னா உனக்கு. இல்ல இப்போதான் உனக்கு நான் வேற மதம் ஜாதின்னு தெரியுதா ? ஒரே ஜாதி, ஒரே மதமா இருந்தா தான் நீங்க அதுக்கு ஓகே சொல்லுவீங்களோ? இப்போ நான் அப்படி இல்லையே என்ன பண்ணலாம் உனக்கு வேற யாரையாச்சும் உன் மதத்துல மேரேஜ் பண்ணிக்குரியா? அப்போ அவனுக்கு ஓகே சொல்லுவியா? "என ஏற்கனவே ஏற்பட்ட சினத்தோடு தான் தீண்டியதால் அழுதவளை கண்டு இன்னும் ஆத்திரம் தலைக்கேற.. மேலும் கைக்கு கிட்டிய சொர்க்கம் நழுவி சென்று விட்ட சினத்தில் அவளை தீண்டாமுடியாமல் தவிக்கும் மனதோடு வார்த்தை வாளால் அவளை கூறு போட்டான்.

என்ன வார்த்தைகளை சொல்லிவிட்டான் என்னை பார்த்து என உள்ளம் துடிக்க வேரோடிந்தக் கொடி போல விழுந்துகிடந்தவளின் மனம் கதறியது.. இவனிடம் என்னை முழுதாக கொடுத்தேனே அப்போது ஜாதி மதமா பார்த்தேன்.. காதலோடு தானே இணைந்தேன்.. என விழியிலே கனலை கக்கி கேட்டவளின் கண்ணீரும் கோவமும் அவனை சுட்டது..

பேசிவிட்டபின் வார்த்தைகளை திரும்ப பெற முடியாதே.. சுட்டது சுட்டது தானே மனம்.. வள்ளுவனே சொல்லிருப்பான் தீயினால் சுட்டப்புண் கூட ஆறிவிடும் ஆனால் நா எனும் கொடுக்கால் சுட்ட வடு என்றும் ஆராதே.. அது என்றும் மாறா தழும்பாக மாறிடும்..

அவள் கண்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் குற்றவுணர்ச்சி கொல்ல.. வேகவேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

உடலால் அடித்து துன்பறுத்தினால் தானா வலி.. மனதால் அடிப்பது தான் அதைவிட பலமடங்கு வலி.. வார்த்தை கத்தியால் குத்தி குதறிவிட்டு குற்றுயிராக கதறிக் கொண்டிருந்தாள் அம்பை..

அவளை உயிரோடு மறித்துவிட்டு இங்கு இவன் மட்டும் என்ன நிம்மதியாக வா இருந்துவிடா போகிறான் இவனும் அவளின் புறக்கணிப்பு கொடுத்த உயிர் வலியால் மௌனமாக உள்ளுக்குள்ளே துடிக்கிறான் தான் .. அவளை முதலில் பார்ப்பதற்கு முன் எப்படியோ ஆனால் என்று அவளை முதலாக பார்த்தானோ அன்றே அவனின் மனம் அவனிடமில்லையே.. ஆனால் அதை எப்படி ஒத்துக் கொள்ளவிடும் அவனின் ஈகோ.. கோவம் போல நடித்தவனின் உள்ளே காதல் ரெமோ இருந்தான் என்பதை அவனே சில காலம் சென்று தானே புரிந்துக் கொண்டான்.. இதில் ஒன்றுமே தெரியாமல் இவனின் கையில் சிக்கிய பொம்மையாக ஆட்டிவைக்கப் பட்டவளை குற்றம் சாட்டினால் எப்படி இவனின் அன்பை புரிந்துகொள்ளவாள்..?சொல்லாத காதல் என்றும் கரைச் சேர்வதில்லை.. என என்று புரியுமோ இந்த மூடனுக்கு.


உள்ளுக்குள்ளே அவளை திட்டிவிட்டு இங்கு வேதனை பட்டவனுக்கு அவளை பார்க்க மனம் ஏங்க.. ஆனால் ஈகோவோ அவள் சொன்ன சிறழிப்பதை எடுத்துக்காட்ட சென்ற கோவம் மீண்டும் வர எங்கே அவளை பார்த்தால் சண்டை வந்துவிடுமோ என வெளியே சென்றுவிட்டு மனம் அமைதியடைந்ததும் வீட்டை வந்து சேர்த்தவனுக்கு வீடே இருளை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல இருண்டிருந்தது.

" எங்கே போனா இந்த நேரமெல்லாம் விளக்கு வச்சி கண்ணா கண்ணான்னு பாடுவாளே என்னை கூட அப்படி கூப்பிட மாட்டா அப்படி என்னதான் இருக்கோ அந்த கண்ணால.. இன்னோரு வாட்டி கூப்பிடட்டும் வச்சிக்குறேன் அவளை "என கடவுள் மீது கூட பொறாமைகொண்டு போட்டிபோட்டான்.

லைட் போட்டுவிட்டு " ஏய் எங்கடி இருக்க இன்னும் லைட்கூட போடாம அப்படி என்ன வேலை உனக்கு? " என நடந்த சம்பவத்தை மறந்தவன் போல பேசிவனின் குரலுக்கு பதில் வராமல் போக.. இறங்கிருந்த கோவம் மீண்டும் ஏற.." ஓ பதில்கூட சொல்லமாட்டீங்களா.. மேடம்க்கு அவ்ளோ ஆகிபோச்சோ இன்னைக்கு நான் தர ட்ரீட்மெண்ட்ல எப்படி நாளைல இருந்து சரியா பதில் வருதுன்னு பாருடி. " என கத்தியவனின் குரலுக்கு இன்னும் ஒரு சிறு பதில் குரல் கூட வரவில்லை என்றதும் மனம் பதர " ஒருவேள அன்னைக்கு போல இன்னைக்கும் மயங்கிட்டாளா அதான் பதில் குரல் கொடுக்கலையா "என்று இதயம் படபடக்க அவளை தள்ளிவிட்ட இடத்திற்கு சென்று பார்த்தவனுக்கு வெறுமையே காட்சியளிக்க.. ஒரு வேள இந்தவீட்ட விட்டு தப்பி போய்ட்டாளா? அவ்வளவு தான எல்லாமே? ஈஸியா போச்சா அவளுக்கு.. " என ஆத்திரமும் கூடவே தவிப்பும் வர மனம் வலிக்க " உண்மையா போட்டாளா.. அவளுக்கு நான் வேணாமா.. என்னை விட்டு போய்டுவாளா? " என உள்ளம் உடைய கண்கள் கலங்க நின்றவனின் மூளை எச்சரிக்கை செய்தது அவளுக்கு ஏற்பட போகும் ஆபத்தை.. "அய்யோ அவ உயிருக்கு ஆபத்தாச்சே.." என தன் உணர்வுகளை புறம் தள்ளிவிட்டு அவளை தேடிபார்க்க வெளியேறியவனுக்கு மாடிப் படியிலிருந்து வரும் கொலுசோலி கொடுத்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மெல்ல அடிமேல் அடிவைத்து கிழே வந்தவளை நோக்கி ஓடிவந்தவன் இறுக்கி அணைத்து தவித்த மனதை சமநிலை படுத்திவன்.. பின் தான் வித்தியாசம் உணர்த்தான். எப்போதும் அணைத்தால் நெளிவால் பிடிக்கவில்லை என்றால் தள்ளிவிடுவாள் இது என்ன ஒரு வித விரைப்பு தன்மை.. அமைதியாக நீ பண்ணுவதை பண்ணு ஏற்றுக்கொள்கிறேன். இதனால் எனக்கு ஒன்றுமில்லை என்பது போல நின்றவளை பார்க்க பார்க்க இவளை காணவில்லை என்றதும் நான் தவித்த தவிப்பு என்ன..? இவளோ கல்லாட்டம் நிக்குறா கொஞ்சம் கூட என் மேல காதல் இல்லை.. ச்ச " என அவளிடம் சண்டையிட கூட விரும்பாமல் ரூமிற்குள் சென்றுவிட்டான்.

ரூமிற்க்குள் செல்லும் அவனையே அமைதியாக பார்த்தவள்.. இரவு குடிக்க அவனுக்கு பாலை எடுத்துக்கொண்டு வந்தவள் டேபிள் மேல வைத்துவிட்டு.. தன்னுடைய பழைய அறைக்கு சென்றவளை கண்டு பல்லை தான் கடிக்க முடிந்தது அவனால்.. அவள் ரூமை விட்டு செல்லும் முன்பே கொண்டுவந்த பாலை கதவை நோக்கி விசிறி அடிக்க அது கதவு முழுக்க சிந்திவிட்டு அவளின் காலையும் பதம் பார்த்ததும்.. ஸ்ஸ் என காலின் வலியை தங்கிக்கொண்டு மீண்டும் கதவை திறந்துக்கொண்டு அவனை திரும்பியும் பாராமல் வெளியே சென்றுவிட்டாள்.. செல்லும் அவளையே வெறித்து பார்த்தவனுக்கு தெரியும் அவள் வாசனையில்லாமல் நொடிக்கூட அவனால் துயில் கொள்ள முடியாதென்று.. முன்பு எப்படியோ ஆனால் அவளோடு கூடி பின் வந்த ஒரு பிரிவே அவனுக்கு நன்கு உணர்த்தி இருக்க.. இப்பொழுது மீண்டும் என்றதும் மனம் பைத்தியம் பிடிக்காத குறைத்தான். புரண்டு புரண்டு படுத்தவனுக்கு தூக்கம் விளையாட்டு காட்ட வந்த வெறிக்கு அவளை பிடித்து இழுத்து வந்துவிட்டோமா என தோன்றிய எண்ணம் கூட அவனின் ஈகோ எனும் ராட்ச்சன் " அவ்ளோ ஈஸியா போய்ட்டியா நீ அவளுக்கு.. " என ஏற்றிவிட.. " போடி நீயா என்னை தேடிவர வரைக்கும் உன் பக்கம் வந்தேன்னா பாரு " என மீண்டும் கட்டிலில் விழுந்தவனுக்கு விடியும் வரை தூக்கம் வராததால் கப்போர்ட்டில் உள்ள அவளின் புடவை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து அணைத்து பிடித்து படுத்தவனுக்கு பின் தான் நிம்மதியே.. புடவை எங்கும் அவளின் வாசனை.. அதை நுகர்ந்துக்கொண்டே உறங்கி போனான் ஜாக்கப்.



இதயத்தை திருடி செல்வாள்...


தோழிகளே 😍😍 இதோ உங்கள் விருப்பப்படி கதையை துவங்கி விட்டேன் 😍😍 படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள் நன்றி 😍😍
 
Last edited:

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே...!




அத்தியாயம்..8


மறுநாள் காலை விடிந்ததும் இன்னும் எழாமல் தூங்கிக் கொண்டிருந்தவனிடமே சென்றது அம்பையின் மனம்..

"ஏன் இன்னும் எழும்பல.. ஒருவேள ஒடம்புக்கு நோவா.. வரட்டும் வரட்டும் என்ன பேச்சி பேசினார் நேத்து.. நல்லா படட்டும்" என கருவியவாறே அவனையே நினைத்துக்கொண்டிருந்தாள்..

மதியமாக கண் முழித்தவனுக்கு அருகில் எப்போதும் தென்படும் மதிமுகம் இன்று இல்லாமல் இருக்கவும், எழும்போதே எரிச்சல் வர.. பின் தான் நேற்று நடந்தது நியாபகம் வந்ததும்.. நேற்று தன்னை தவிக்கவிட்டவளை நினைத்து ஆத்திரமும் அறையை விட்டு சென்ற கோபமும் மீண்டும் வர.. கடுகடுத்த முகத்தோடு குளியலறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, இறுகிய முகத்தோடு கீழே டைனிங் டேபிளுக்கு வந்தான் உணவு உண்ண..

அவன் வந்ததை ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டே பார்த்தவள், அவனின் இறுகிய முகம் நேற்றைய கொடிய நினைவுகளை இன்னும் கிளறிவிட முகத்தை திருப்பிக்கொண்டு தோட்டத்தை நோக்கி சென்றவளை பார்த்ததும், இன்னும் இன்னும் அவனினுள்ளே எரிமலைக்குழம்பு கொதிக்க என்று அது வெடிக்க போகிறதோ அன்று முழு மிருகமாக மாறிவிடுவானே .. அதில் சிதிலமடைந்து போகப் போவது என்னவோ அம்பை தான்..

தான் உணவு உண்ண அமர்ந்தும் தன்னை கண்டுகொள்ளாமல் சென்றவளை நோக்கி உணவு தட்டுக்களைப் பறக்க விட்டான்.. ஏற்கவனவே நேற்று பாலை எடுத்து கொண்டு சென்ற கண்ணாடி டம்ளர், வீசி எறிந்ததில் உண்டான காயமே சரியாகாமல் லேசாக தாங்கி தாங்கி நடந்தவளின் கால்களின் மேலேயே அவன் வீசிய பீங்கான் தட்டுக்கள் சரியாக பட்ட இடத்திலே பதம் பார்க்க, வலி தாங்க முடியாமல் குனிந்து பாதத்தை பிடித்துக்கொண்டு "அம்மா" என்று சத்தமாகவே முன்ங்கினாள்..

அவள் அணிந்திருந்த சந்தன நிற புடவையின் கீழே ஆங்காங்கே ரத்தக் கறை திட்டு திட்டாகத் தெரிய கால் பாதமும் இன்னும் வீங்க ஆரம்பித்ததும் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாமல் அங்கேயே சாய்ந்து அமர்ந்தவளை பார்த்ததுமே ஓடி வந்தவன்.. புடவையை சற்று உயர்த்திவிட்டு பாதங்களை பார்க்க கையை வைத்தவனின் கைகளை படீரெண்டு தட்டி விட்டவள்.. வலியை பொறுத்துக்கொண்டு கண்ணில் வழிய தொடங்கிய நீரை துடைத்துக் கொண்டு எழ முயன்றவளுக்கு வலி உயிர் போனது..

எழ முயன்றவளை அவள் தடுக்க தடுக்க அப்படியே தூக்கிக் கொண்டு கட்டிலில் விட்டவன் பின் கால்களை ஆராய்ந்தவனுக்கு தெரிந்தது.. காயம் ஆழமாக பட்டுவிட்டதென்று கூடவே கால் நரம்பில் அடிப்பட்டதால் வீங்க தொடங்கியதென்று, உடனே தனது போனை எடுத்து மருத்துவருக்கு அழைத்தவன்.. என்ன செய்ய வேண்டும் என்றதைக் கேட்டு கொண்டு முதலுதவி செய்தவனை தடுக்க முடியாமல் வலியில் துடித்தாள் அம்பை..

ஒவ்வொரு தடவையும் சுத்தம் செய்ய காட்டனை வைப்பவனுக்கு அவள் "ஸ்ஸ் ஆஆஆஆ" என துடிப்பதைப் பார்த்து குழந்தைக்கு சொல்வதை போல "ச்சு ச்சு சரியாகிட்டுடா இதோ அவ்ளோ தான்" என்று அவள் வலியைப் போக்கிவிடத் துடித்தான்..

காதலைக் கொடுப்பவனும் அவனே.. காயத்தை கொடுப்பவனும் அவனே..


பெயின் கில்லர் டேப்லெட் ஒன்றைக் கொடுத்துவிட்டு, "தூங்குடா நான் டாக்டர கூட்டிட்டு வந்துடுறேன்" என அவளின் தலையில் வருடி விட்டவனின் கண்களை ஏக்கமாக பார்த்தாள் இந்தக் கனிவும் காதலும் பொய்யாய் போனதே உண்மையாகி விடாதா என்று..


அவளின் விழிமொழியைக் கண்டவனுக்கு குற்றவுணர்ச்சி குத்தி எடுக்க.. சட்டென்று கைகளை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.. செல்லும் அவனையே வெறுமையாக பார்த்தாள்..


தன்னை கேவலபடுத்தியவனிடமே இன்னும் கூட அவனின் காதலுக்கு ஏங்கி தவிக்கும் மனதை நொந்து போனவளாய் தன்னையே வெறுத்தாள்.. தன் காதலை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கும் அவனிடம் இனி உயிரே போனாலும் அவனிடம் காதலை யாசிக்க கூடாது என முடிவெடுத்தவளாய் கண்களை மூடியவளுக்கு உண்ட மாத்திரையின் விளைவால் உறங்கி போனாள்..


தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென காலில் வலி ஏற்பட என்னவென்று கண்முழித்து பார்த்தவளின் கால்களை பரிசோதித்துக் கொண்டிருந்தார் மருத்துவர்.. அவரின் பின்னே இறுகிய முகத்தோடு நின்றிருந்தான் ஜேக்கப்..

மருந்திட்டு கட்டு போட்டவர்..
"ஆல்ரெடி பட்ட இடத்துல பட்டதால லைட்டா ஹேர் லைன் பிராக்ச்சர்.. மத்தபடி ஒன்னுமில்ல... மே பீ ஒன் ஆர் டூ வீக்ல சரியாகிடும்.. டான் ஒரி அது வரைக்கும் ரெஸ்ட் எடுங்க காலை அதிகமா யூஸ் பண்ணாதீங்க டேக் கேர்" என்று விடைபெற்றார்.

"என்ன ரெண்டு வாராமா " என கலங்கியவளுக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு கூட அருகே வராமல் அவளுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை எடுத்து வந்தவனை பார்க்க பார்க்க மனதில் இதுவரை அழுத்தி வைத்திருந்த கோபங்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்து..
"எல்லாம் இவனால் தானே.. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறான்" என சினம் கொண்டவள்.. அவன் கொடுத்த மாத்திரையை தூக்கி வீசி எறிந்தாள்..

அதில் எரிச்சல் வர கை ஓங்கியவன் அவளின் பயந்த விழிகளைக் கண்டதும் "ச்ச" என கையைக் கீழே இறக்கியவன்..

"என்ன மாமிக்கு திமிரு கூடி போச்சோ.. இப்போதைக்கு காலை தான் ஒடச்சி இருக்கேன்.. இனி இந்த ரூம் விட்டு போறதா இருந்தா பொணமா தான் போவ"

"உங்களாண்ட இப்படி மாட்டிண்டு இருக்குறதுக்கு சாகுறதே மேல்" என்றவளை இப்பொது தடுக்கமுடியாமல் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தான்..

"ரொம்ப பேசுற மாமி நீ.. நானும் பொறுமையா போகலாம்னு பார்த்தா முடியல.. என்ன சொன்ன சாகுறதே மேலா.. நீ நிம்மதியா போய்டுவ ஆனா உன் தோப்பனாரையும் உன் அம்மாவையும் கூடவே துணைக்கு நான் அனுப்பி வைப்பேன்.. வைக்கவா.. நான் சொன்னதை செய்வேன்னு உனக்கு தெரியும்.. என்ன சாக போறியாடி சொல்லு" என்று அவளின் இரு கன்னங்களையும் அழுத்திப் பிடித்தவனின் கண்களில் உள்ள சினத்தை அவள் இது வரை கண்டதில்லை.. அப்படி ஒரு ஆத்திரம் அவனிடம்.. பயந்து கை கால்கள் வெடவெடக்க "வேண்டாம்" என்பது போல் தலையாட்டியவள்.. "சா..கா மாட்..டே.. ன்." என திக்கித் திணறி சொன்னவளிடம் தனது கைகளை நீட்டி " உன்னோட பேரெண்ட்ஸ் மேல சத்தியம் பண்ணு அப்போ தான் நம்புவேன்" என்றவனின் கைகள் மீது தனது நடுங்கும் கைகளை வைத்தாள்.. அதை இறுகப் பற்றிக் கொண்டவன்..
"என்ன இது உன்மேல் உள்ள காதலாலன்னு நினைச்சிறாத கண்டிப்பா இல்ல.. நீ ஈசியா செத்து போய்ட்டேன்னா எனக்கு யாரு பொழுதுபோக்கு உன்னை வச்சி இன்னும் விளையாட வேண்டாமா அதான்" என்றவன்,
"இப்போ இந்த மாத்திரைய போடு போட்டுட்டு சீக்கிரமா ஒடம்பு சரியாகிவா இப்படி நீ கிடந்தேன்னா அப்புறம் எனக்கு யாரு வேலை செய்வா? அண்ட் நான் இனி என்ன சொன்னாலும் அதை நீ செய்யணும் இல்ல.. நெக்ஸ்ட் டைம் சொல்லமாட்டேன் செஞ்சி காட்டிடுவேன்" என மிரட்டிவிட்டு அவளிடம் மாத்திரையைக் கொடுத்தான்.. இந்த முறை மறுப்பேதும் சொல்லாமல் மௌனமாக விழுங்கினாள்..


"குட்" என்றவன் தண்ணீரை டேபிளின் மேல் வைத்துவிட்டு அவளுக்கு பெட்ஷீட் எடுத்துப் போட்டு விட்டு "தூங்கு இப்போ" என்றவனை என்ன செய்வது என்பது போல் புரியாமல் பார்த்து முழித்தவளை பார்த்து
"ஐ சைட் ஸ்லீப்" என்றான் காட்டமாக.. உடனே தனது கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.. அவள் தூங்கும் வரை பார்த்துவிட்டு வெளியேறியவனின் நெஞ்சமெல்லாம் வலி வலி மட்டுமே..



"என்னுடன் இருப்பது அவளுக்கு சாவதற்கு சமமா என்ன.. நேற்று தான் சீரழிவு என்றாள்.. இன்று இறப்பது மேல் என்கிறாள் அப்போ இவளுக்கு என்னிடமிருக்க விருப்பமில்லையா?? அது எப்படி விருப்பமில்லாமல் போகும் இந்த ஜேக்கப்பின் வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அவள் என்னுடன் தான் இருக்க வேண்டும்.. செத்தாலும் என்னுடன் தான்.. பிடிக்கவில்லை என்று சொன்னவளை எப்படி விரும்ப வைப்பது என்பது எனக்கு தெரியும் இனி பாருடி மாமி இந்த ஜேக்கப் போட ஆட்டத்தை" என மனதிற்குள் சொல்லிகொண்டவன்.. அடுத்து நடக்க வேண்டியதை திட்டமிட ஆரம்பித்தான்..


**********************************


அங்கே தனதறையில் தேடி தேடி அலைந்தும் கிடைக்காமல் பறந்துவிட்ட தனது கிளியை நினைத்து வெறியில் இருந்தான் தேவராஜ்..


கைக்கு கிட்டிய சொர்க்கம் வாய்க்கு கிட்டாமல் பண்ணியவனை கண்டுபிடிக்க முடியாமல் பைத்தியம் போல் அலைந்து விட்டு வந்தவனுக்கு மனம் இன்னும் சமாதானமடையாமல் தனது அறையிலே நடைபயின்று கொண்டிருந்தவனுக்கு அழகம்பையாளின் நினைவே சுற்றி சுற்றி வந்தது..

நான்கு மாதத்திற்கு முன்பு..


அன்று மாலையில் சீக்கிரமே கதிரவன் தனது இருப்பிடம் நோக்கி சென்றுவிட... மேகக்காதலிகள் சோகத்தோடு கருமையை பூசி கண்ணீர் விட தயாராக இருந்தது...


"டேய் வாண்டுங்களா நில்லுங்கோடா ஏன் இப்படி ஓடுறேள்.. கைல மாட்டினேள் அடிவாங்குவேள்.. ஒழுங்கா நீங்களே வந்துடுங்கோடா" என்று குட்டி குட்டி கிருஷ்ணன்களை கோவிலுக்குள் துரத்தி ஓடிக்கொண்டிருந்தாள் அழகம்பையாள்..

அன்று கிருஷ்ணனஜெயத்தி பூஜைக்கு கோவிலில் போட்டி நடைபெற இவள் தான் அனைவருக்கும் வேடம் போட்டு விட்டாள்.. போட்டி ஆரம்பிக்கும் முன்னே பிரசாதம் கொடுக்கும் சத்தம் கேட்க அங்கு ஓடிய சிறுவர் சிறுமிகளை துரத்திக் கொண்டு தான் இப்படி ஓடினாள்..

எங்கே அவர்களுக்கு இவள் குரல் கேட்டால் தானே..( நாம எல்லாம் சோறு முக்கியம் சங்கமம் சோ நமக்கும் பிரசாதம் தான் முக்கியம் வாங்க போலாம் நாமளும் )

கையில் அகப்பட்ட சிறுவனின் காதை திருகியவள்..
"டேய்ய் ஒழுங்கா வாங்கடா இல்லை பெரிய மாமி கிட்ட சொல்லிடுவேன் எல்லாரையும்"

"பெரிய மாமி" என்றதும் "கப் சிப்" என்று அவளுக்கு முன்னே கோவிலின் உள்ளே போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள் அனைவரும் ..

பெரிய மாமி அங்கு மிகவும் கண்டிப்பான மாமி.. குழந்தைக்கு பூச்சாண்டி வருது பாருன்னு சோறு ஊட்டுவோம்ல அது போல அங்க அடங்காத பசங்களை பெரிய மாமி பேரு சொல்லி ஆப் பண்ணிடுவாங்க..

"எங்கமா போன அம்பை பசங்க பாரு சமத்தா முன்னாடி நிக்கிறாங்க.. வா வா வந்து கச்சேரிய ஆரம்பி" என்றார் அங்கிருந்த அவள் அப்பா கணேசனையர் ..

அவர்களை முறைத்தவள் பின் கண்ணனை முகம் பார்த்து பாட ஆரம்பித்தாள் கனிவோடு..



"உன் குட்டி குட்டி பாதம் தத்தி தத்தி அடிவைத்து நடந்து வரும் அழகினில் மயங்காதவருண்டோடா மாயவனே..

வெண்ணையை திருடி விட்டு முழிக்கும் கார்முகிலனே.. கோபம் கொள்ளும் கோபியர்களையும் உன் கள்ளத்தனத்திலே கவர்ந்து விடுவாயேடா ..

நாதத்தால் நங்கையின் மனதை கொள்ளையிடும் நவநீதனே..
கட்டிஇழுக்கும் உன் குறும்பு புன்னகையில் சஞ்சலங்களையெல்லாம் பஞ்சாக பறக்கவிடுவாயேடா..

ஒரே ஒரு முறை உன் தரிசனம் தாராயோடா அது போதுமேனக்கு இப்பிறவி பலனைடைய"

(By நறுமுகை )


அவளின் குரல்வளம் கோவில் முழுவதுமே கட்டி போட்டதில் அனைவரும் மெய்மறந்திருந்தார்கள்.. அதில் இரு ஜோடி கண்களும் தன்னை மறந்து சிலையாக நின்றது..


தொடரும்..
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்..9


சந்தன நிற பாவாடையும், ஜாக்கெட்டும் அதற்கு எடுப்பாக பால் பச்சை வண்ண தாவணியும் அணிந்து.. காதில் குடை ஜிமிக்கி ஆட.. அதனோடு போட்டி போட்டு கார்கூந்தல் காதோடு உரசி கதை பேச.. நெற்றியில் சிகப்பு வண்ண நீள பொட்டும்.. அதனின் மேல் லேசாக சந்தன கீற்றும்.. மயங்காமல் இருப்போரையும் மயங்க வைக்கும் கண்ணில் மெல்லிய மை தீட்டிய கயல்விழிகள் இரண்டும் மின்ன.. அனிச்சமலரையே தோற்கடித்துவிடும் மென்மை கொண்ட சாயாம் பூசாமல் சிவந்த செப்பு உதடுகளின் வசீகர புன்னகையோடு இன்னிசையாக வெளிப்பட்ட காந்த குரலில் பாடியவளின் அழகிலும் பாட்டிலும் அங்கு மயங்காதோரே இல்லை..


முதல் முதலில் பதவி ஏற்றதால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தேவராஜ் அங்கு அழகே வடிவான இந்த சந்தன சிலையை பார்த்துமே மயங்கிவிட்டான். பெண்களிடம் தவறான பழக்கம் உடையவனுக்கு முதல் முதலில் இவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்ததும் அன்றே அவளின் வீட்டை கண்டு பிடித்து பெண் கேட்க கிளம்பிவிட்டவனை முதலமைச்சரின் போன் கால் வந்து தடுத்து விட்டதால் மறுநாள் செல்லலாம் என்று முடிவெடுத்து கிளம்பியவனுக்கு அவன் செய்த கொலை போலீசில் மாட்டிவிடும் நிலையில் நிற்க.. அத்தோடு அடுத்து அடுத்து போக முடியாத சூழ்நிலை வர.. இதுவே அவனுக்கு எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டும் என்ற வெறியை உண்டு பண்ணியது.. ஒரு வழியாக அனைத்தையும் சமாளித்து அவளை பெண் கேட்க ஒரு மாதம் கழித்து சென்றவனுக்கு அதிர்ச்சியாக பூட்டிய வீடு காட்சியளித்தது..

அவளை பார்த்ததுமே அவளை பற்றிய முழு செய்தியை சேகரித்தவன் .. அலட்சியமாக இருந்துவிட்டான். " பொண்ணுங்க படிக்குற காலேஜ்ல பைனல் இயர் படிக்குறா.. யாரும் லவர் இல்லை இது வரைக்கும்.. இனியும் இருக்காது வீடு அவ்வளவு ஆச்சாரம் பொண்ணும் குனிஞ்ச தலை நிமிராம போய்ட்டு நேரா வீட்டுக்கு வந்துடுவா.. சோ இப்போதைக்கு எந்த பயமும் இல்லை " என நாலையும் ஆராய்ந்து பார்த்தவன்.. வீடு இருக்குமிடம் மாடவீதி என்பதால் அங்கு எப்போதும் போலீஸ் இருக்கும். இவர்களை நிற்க வைக்க முடியாது என்பதால்.. அவளை கண்காணிக்க வைத்த அடியாட்கள் எல்லாம் காலேஜ் வாசலில் மட்டுமே இருப்பார்கள்.. அவன் பார்த்து பத்து நாளில் செமஸ்டர் முடிந்து லீவ் விட்டதால் அவர்களால் கணக்கணிக்க முடியாமல் போக.. இவனும் பார்த்துக்கொள்ளலாம் எங்க போய்ட போறா என்று அலட்சியமாக விட்டதால் கிளி அவனின் கையில் சிக்கமால் பறந்து விட்டது..

வெறுபிடித்தவன் போல பூட்டிய வீட்டை சுற்றி அலைந்தவன் அங்கிருந்து பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க.. அந்த மாடவீதியில் இருந்த மக்கள் கூட்டமெல்லாம் என்ன ஏதேன்று புரியாமல் வேடிக்கை பார்க்க.. அமைச்சராக அவனை தெரிந்தவர்கள் போட்டோ எடுக்க அதை கண்ட அவனின் அடிட்கள் அதை உடைத்து போட்டு தேவராஜையும் மறைத்து அழைத்து கொண்டு போனார்கள்...


வீட்டிற்கு வந்தவன் " டேய் உங்கள நம்பி தானடா இருந்தேன்.. ஒழுங்கா அவ எங்க போனா என்னனு கவனிக்க கூட துப்பு இல்லமா இருக்க நீங்க எல்லாம் எதுக்குடா நெஞ்ச நிமித்திட்டு இருக்கீங்க.. ***டை பயலுங்களா.. போயி பொடடைய கட்டிக்கோங்கடா.. எதுக்கு ஆம்பளைன்னு மீசை வச்சிட்டு இருக்கீங்க.. என்று அவர்களையும் கண்ட மேனிக்கு அடித்து திட்டி கலைத்தவனுக்கு எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டும் என்ற வெறி மட்டும் சிறிதும் குறையாமல் ஏறி கொண்டே இருக்க.. " இன்னும் ரெண்டு நாள் தான் உங்களுக்கு டைம் அதுக்குள்ள அவ எங்க அவ குடும்பம் எங்க போச்சுன்னு முழு விவரமும் என் கைக்கு வரணும்.. இல்ல நீங்க ஆள் அட்ரசே இல்லாம போயிடுவீங்க " என கடுமையாக எச்சரித்தான்.


ஆனால் அதற்குள் தான் நம்ம ஹீரோ அவனோட கிளிய கூண்டோட தூக்கிட்டு வந்துட்டான்..


*****************************


காலையில் எழுதவளின் முகம் வலியில் சுழிக்க.. இரவு முழுக்க அவளையே தூங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு.. இந்த சிறு முக சுழிப்பு கூட வலியை கொடுத்தது.. " ஏன்டி என்ன இப்படி ராட்சசனா மாத்துற.. உன்னவிட நான் தான்டி அதிகமா வலிய அனுபவிக்குறேன்.. எப்படி என்ன விட்டு போறேன்னு ஈசியா சொல்ற.. அவ்ளோ தான் உனக்கு எல்லாமே.. இந்த பொண்ணுங்களே இப்படி தான்டி.. உண்மையான அன்பை புரிஞ்சிக்க மாட்டாங்க.. அவங்களுக்கு எல்லாம் செல்லமே வெல்லமேன்னு பொய் பொய்யா சொல்லி ஏமாத்திட்டு போவானுங்க பாரு அவனுங்களை தான் நம்புவாளுங்க.. நீயும் அப்படி இல்லன்னு நினைச்சேன்டி ஆனா நீயும் அப்படி தான்னு புரிய வைக்குற போல ஒரு ஒரு முறையும் என் நெஞ்சில அடிச்சி புரிய வைக்குறடி.. " என புலம்பியனின் பேச்சு லேசாக உறக்கம் கலைந்தவளுக்கு முழுவதுமாக உறக்கம் கலைய செய்ய கண் முழித்ததுமே எதிரே இருந்தவனை நோக்கி ஒரு வசீகர சிரிப்பை சிந்தியளின் கள்ளமில்லா புன்னகையில் மயங்கியவன் மெல்லிய நெற்றி முத்தம் வைக்க.. அதில் சுயம் பெற்றவளுக்கு நேற்றைய கொடிய நினைவுகள் எல்லாம் படையெடுக்க.. சட்டென்று அவனை உதறி தள்ளியவள்.. ஒரு முறைப்போடு கீழே இறங்க பார்த்தவளை அலேக்காக தூக்கியவன் அவளின் வேண்டாம் என்ற தலையசைப்பையும் உடல் மொழியையும் கண்டு கொள்ளாமல் புறம் தள்ளியவன்.. நேரே குளியலறையில் விட்டு மெல்ல கதவை மூடிவிட்டு வெளியேறினான்..

ஒன்றும் சொல்ல முடியாமல் பல்லை கடித்தவள்.. தன்னை சுத்தம் பண்ணிகொண்டு தாங்கி தாங்கி வெளியே வந்தவளை மீண்டும் கீழே விடாமல் தூக்கி கொண்டு படுக்கையில் விட்டவன்.. அவளின் முக திருப்பலை கண்டு கொள்ளாமல் பாதத்தில் மெல்லிய முத்தமோன்றை பதித்துவிட்டு கிழே சென்றவன்.. சிறிது நேரத்தில் உணவை எடுத்துகொண்டு வந்தவனை கண்டு கண்களை மூடிக்கொண்டு தூங்குவதை போல படுத்தவளை.. படுக்க விடாமல் தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.. அவனிடமிருந்து பிரிய முற்பட்டவளை விடாமல் இறுக்கி பிடிக்க.. பல்லை கடித்து கொண்டு முறைத்தவளை நோக்கி பிளயிங் கிஸ் ஒன்றை பார்சல் அனுப்பினான்.. அதை கண்டு இன்னும் கடுக்கடுவென முத்தை வைத்துருந்தவளை சிரிப்போடு பார்த்தவன் உணவை கொடுக்க அதை வேண்டாம் என்பது போல மறுத்தவளை ஒரு பார்வை தான் பார்த்தான்.. அதிலே அடங்கி வாயை திறந்தவளுக்கு ஊட்டி முடித்ததும் அவள் உதட்டில் சிதறிய உணவு துகள்களை தனது உதடு கொண்டு உடைத்து விடுட்டவனை எரிச்சலாக பார்த்தவள் ஒன்றும் பேசாமல் இறுகி போனாள்..

இது வரைக்கும் உரைக்காத அவளின் மௌனம் இப்பொது தான் புரிய.. என்னவென்பது போல பார்த்தவனை அலட்சிய படுத்தி கண்களை மூடிகொண்டாள்.. தன் தவறுக்கு அடித்திருந்தால் கூட நிம்மதியாக இருந்திருக்கும்.. அல்லது திட்டி சண்டை போட்டிருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காதோ என்னவோ .. இது என்ன இதயத்தில் இப்படி ஒரு வலி.. புறக்கணிப்பின் வலி என்றால் இப்படி தான் இருக்குமோ.. என துடித்து போய் அவளை பார்க்க.. கண்மூடி திறக்க மாட்டேன் என வீம்பாக படுத்திருந்தவளை தவிப்போடும் ஆத்திரத்தோடும் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்..


தன்னை உதாசினம் செய்தவளின் மீது தான் எனும் அகங்காரம்.. காதல் மனதை அடக்கிவிட்டு வெளியேற.. தானாக அவளிடம் போய் கெஞ்ச ஆண் எனும் ஈகோ தடுக்க.. " போடி நீ பேசவிட்டால் என்ன.. இந்த உலகமே இருளவா போகுது.. நான் ஒன்னும் அப்படி ஏங்கி கிடைக்கல " என திமிராக பேசிய மனம் இன்னும் இரண்டு நாளில் இப்படி தான் உலகமே இருண்டு போனதை போல அவளின் பேச்சோலிக்காக ஏங்கி தவிக்க போகிறது என தெரியாமல் அலட்சியம் செய்தான்..


அவன் வெளியேறியது தெரிந்ததும் . கண்களை திறந்தவளுக்கு தவிப்பாக இருந்தது.. "காயப் படுத்தியவனை தள்ளி வைத்தாலும் வலிக்கிறது.. அருகில் இருந்தாலும் மனம் ஏற்க மறுக்கிறது.. என்ன தான் செய்வது நான்" என உள்ளுக்குள்ளே தவித்த பேதை பெண் கண்ணீரையே துணையாக்கினாள் ...


நீ நிஜம் தானா இல்லை நிழல் தானா
பதில் கேட்கிறேன் கிடைக்காதா
நம் ஞபகங்கள் அதை நினைத்திருப்பேன்
எனை தேடியே திரும்பாதா

காதல் நீ காயம் நீ
கானல் நீயே மறைந்தாயே
வேசம் நீ பொய்கள் நீயே
மாற்றம் நீ நான் உடைந்தேனே

காதல் நீ காயம் நீ
கானல் நீயே மறைந்தாயே
வேசம் நீ பொய்கள் நீயே
மாற்றம் நீ நான் உடைந்தேனே....


இதயத்தை திருடி செல்வாள்...


தோழிகளே இதோ அடுத்த அத்தியாயம்.. 9 பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள்.. அடுத்த பதிவு புதன் அன்று வரும் தோழிகளே.. நன்றி😍😍
 
Status
Not open for further replies.
Top