All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "உயிர்த்தெழ செய்வாயா எனதாகிய உன்...???" - கதைத் திரி

Status
Not open for further replies.

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ குழந்தைகளா🤶🤶,
எல்லாருக்கும் "குழந்தையர் தின நல்வாழ்த்துக்கள்".... உங்களுக்காக அடுத்த பதிவோட வந்துட்டேன் படிச்சிட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க பாக்கலாம்😁😁.... வைட்டிங்.... உங்க விஜய பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு...😉😉😜
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போன பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் போட்ட எல்லாருக்கும் என் சார்பா நன்றி நன்றி 🙃🙃🙏🙏
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் மூன்று:-10882
10883 தன் முகத்தில் இருக்கும் இத்தனை மகிழ்ச்சியும் பூரிப்பும் எதனால் என்று அவன் மட்டுமே அறிந்த ஒன்று… இத்தனை வருட காத்திருப்பும், போராட்டமும் என அனைத்தும் முடிந்து, பெறவே முடியாத காதலை கல்யாணமாக்கிய வெற்றி களிப்பு அது…. இது அத்தனைக்கும் காரணமானவளை சந்திக்க அவளின் அறையை அதாவது முதலிரவு அறையை திறந்த போது… என்னதான் எதிர்பாக்க கூடாது என எண்ணி வந்திருந்தாலும் அதையும் மீறி மனதில் ஏமாற்றம் பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை……

என்ன திடீர் ஞானோதயம் ராசா?? என்ற மனசாட்சியின் கேள்விக்கு வழக்கம் போல் அதை அலட்சியம் செய்தவன்…

ஆமா ஏன்?? என தனக்கு தானே கேள்வி கேட்டு கொண்டவனுக்கு புரிந்தது போனது இது காலையில் அவளின் உணர்வுகளை புரிய ஆரம்பித்தலில் இருந்து வந்த மாற்றம் என்று…..

அப்படி இவனின் ஏமாற்றத்திற்கு காரணம் என்னனா?? அவனோட செல்லக்குட்டி!!! எல்லா அலங்காரத்தையும் கலைத்து இரவு உடையில் கட்டிலின் ஒரு பகுதியில் இவனுக்கு முதுகு காட்டி அப்டினு… மட்டும் நினைச்சிட கூடாது?? விட்டத்த ரசிச்சி பாத்துட்டு இருந்தா பாருங்க… இதில ‘எரியிற நெருப்பில் எண்ணெயை ஊத்துனாப்புல’ அவன இன்னும் கடுப்பை கிளப்பிய முக்கியமான விஷயம் என்னான்னா……. பாப்பா பெட்ஷிட்ட இறுக்கமா கட்டி புடிச்சிட்டு படுத்துட்டு இருந்த அழகு இருக்கே அழகே!!!!! அழகு தான்….

அவனின் மொத்த கோபமும் அந்த பெட்ஷிட்டிடம் சென்றது… இனிமேல அவனிற்கு அதுதான் முதல் எதிரி போல.. அதனை தீர்த்துக்கட்ட வழியை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் (எது செஞ்சாலும் ப்ளான் பண்ணி செய்யவோம்ல)

அதில், அவன் மனசாட்சி வேறு அவனை பார்த்து கேலி சிரிப்பு ஒன்றை உதிர்த்தது, அதில் எரிச்சலுற்றவன்..

இப்ப லூசுத்தனமா ஏன் சிரிக்கிற?? என காட்டமாக அதனிடம் கேட்க

யாரு!!! நான்….. லூசா??

பின்ன இல்லையா??

டேய் இன்னும் கொஞ்சம் நேரம் இப்டியே வாசலை திறந்து வச்சி நின்னுட்டு கனவு கண்டுனு இருந்தேனு வச்கிக்கோயேன்.. நீ இதுக்குலாம் சரிப்பட்டு வரமாட்ட..(🤯😰) அப்டினு கீழ இருக்கவங்களே வந்து உன்ன கையோடு இழுத்துட்டு போய்டுவாங்க பரவாலையா??? என கேட்க…

கடுப்ப கிளப்பாம மரியாதையா ஓடிடு..

இல்லனானானா…. என அவனின் மனசாட்சி ராகம் இழுக்க

அடிங்க!!!!! என்ற அவனின் ஒற்றை மிரட்டலில் சென்று அவனுள்ளே மறைந்து கொண்டது… ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற வசனத்துடன்….

அடகடவுளே!!! இன்னுமா நம்ப இங்கையே நின்னுட்டு இருக்கோம்?எல்லாம் இந்த பெட்ஷிட்டால இல்ல இல்ல… எல்லாம் இந்த முட்டகண்ணியால👀 வந்தது… இது கிட்டலாம் பேச்சு வாங்க வேண்டியதா இருக்கே!!! என தன்னையே நொந்தவன் கதவை தாழிட்டு அவளின் அருகில் வந்து அமர்ந்தான்..

ஆம், அவன் கூறியது போல பெரிய ஆழியை ஒத்த கண்கள் தான் அவளது…. அதில் அவள் விரும்புவோரை தன்னுள் கட்டி இழுக்கும் விழிகள், அவள் வெறுப்பவரை நோக்கி அனல் கக்கவும் தயங்காது… (பிரம்மனோட ஸ்பெஷல் ப்ராடுடக்டு மா….)

வெறும் கல்லை பெண் சிலையாய்

செதுக்குபவனுக்கே

புரிவதில்லையே!!! அந்த கண்கள்

பேசும் உணர்வுகள், எனும் போது....

பிரம்மனால் படைக்கப்பட்டு

பெண்ணின் கருவில் உருவாகி

பெற்றோரால் வளர்க்கப்பட்டு

தன் கை சேரும் தன்னவளின்

கண்கள் பேசும் உணர்வுகளை

புரிந்து கொள்வானா???


விடை அறியா கேள்விகளுடன்???
உன்னில் ‘நான்’


கட்டிலில் அவள் அருகில் அமர்ந்தவன் ‘தூங்கற மாதிரி ஆக்ட்டாவது குடுப்பேன்னு நினச்சேன்’ என்று அவன் மனையாளை கேட்க…

அவனின் கேள்வியில் எரிச்சலுற்றவள்,
அது என்ன தேவைக்குனு தெரிஞ்சிக்கலாமா?? என ஒற்றை புருவத்தை ஏற்றி கேட்டாள்..

அதில் மயங்கியவன்.. குட்டிபிசாசு தொட கூட விடமாட்டாளே… அப்டியே இவள!! என்று யோசனைகள் எங்கெங்கோ செல்ல தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன்…

இல்ல புடிக்காத புருஷன்… என இழுக்க

சரிரிரி… என்ற வார்த்தை கடிபட்ட பற்களுக்கிடையில் வந்து விழுந்தது…

சப்பா… செம்ம சூடா இருக்கா போலையே!! பேருக்கு தகுந்த மாதிரி என மனதில் நினைத்தவன்,

எப்படியும் இங்க ஒன்னு நடக்க போறது இல்ல…..

நான் அப்டி எதும் சொன்ன மாதிரி ஞாபகம் இல்லையே?

என்னடி??? சொல்ற அப்ப மாமன் கிட்ட கோச்சிக்ககிட்ட மாதிரி இருந்ததுலாம் சும்மா லுலுலாய்க்கா… மாமன சீண்டி பாத்தியாக்கும், இது தெரியாம நான் பாட்டுக்கு லூசு மாதிரி என்னென்னவோ நினைச்சிட்டேன்… என் குண்டம்மானா குண்டம்மா தான்… என்று அவளின் தாடையை பிடித்து கொஞ்சியவன் அவளின் கழுத்து நோக்கி குனிய…

தாலி கட்டிடீங்க… அதனால இந்த விஷயத்துக்கலாம் சேர்த்துதான லைசென்ஸ் வாங்கி இருக்கீங்க.. இதுல நான் பெர்மிஷன் தர என்ன இருக்கு… மனைவியா என் கடமைய கண்டிப்பா நான் செய்வேன்.. அதுல இதுவும் ஒன்னு அவ்ளோதான்… என அவள் கூற

அவளின் கழுத்து பகுதியில் அவளிற்கே உரிய பிரத்யேக மணத்தை நுகர்ந்து கொண்டிருந்தவனின் காதுகளில் அமிலமென வந்து விழுந்தன அவன் நெஞ்சிற்கினியாளின் சொற்கள்…

முனைகளில் கூறிய முனை
“வார்த்தையின் வீரியம்” என்று கூறி இருக்கு வேண்டுமோ?? ஆயுதங்கள் இன்றி நெஞ்சை குத்தீட்டாய் குத்தி கிழிக்கிறதே!!!

அடுத்த நிமிடம் அவளின் மேல் இருந்து தீச்சுட்டார் போல விலகியவன்… அவள் முகவாயயை அழுத்தமாக பிடித்து திருப்பி அவள் கண்களுக்குள் இவன் கண்களை உறவாட விட்டவன்,
‘என்னடி சொன்ன திரும்ப சொல்லு?’ என்று மிக மெதுவாக அதேசமயம் அழுத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள்…

அவளிற்கும் தெரியும் அவன் கோபம் கொள்ளும் போது மட்டுமே வார்த்தைகள் மெதுவாக மிகத்தெளிவாக வந்து விழும் என்று… அதை புறம் தள்ளியவள்,

நான் சொன்னது உங்களுக்கு தெளிவா கேட்டு இருக்கும்னு எனக்கு நல்லா தெரியும்… என அவளும் அதே அழுத்தத்தோடு கூற

சோ.. மேடம் தெரிஞ்சு தான் சொன்ன அப்டிதான?? என்று மிகவும் சாதாரணமாக வினவ…

அவனுடைய மனசாட்சியோ ‘இல்லனு சொல்லிடுடி’ என அவளிடம் மன்றாடியது, எப்பொழுதும் அதனை அசட்டை செய்பவன் இப்பொழுது அதனை எதுவும் கூறாமல் (ஒரு வேளை அதை அவனும் எதிர்பார்த்தானோ?) அவளை எந்த வித சலனமும் இன்றி பார்க்க…

ஆமா… என்று அவள் கூறிய மறுநிமிடம் அவளின் தாடையயை உதறி தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து விருட்டென்று அவன் எழ, இதை சற்றும் எதிர்பார்க்காதவள் தடுமாறி பின் தன்னை சமன்செய்து கொண்டு அவனை அண்ணார்ந்து பார்த்தாள்,

பார்க்காதடி கொலைகாரி!!! அந்த முட்டைக்கண்ண வச்சி இப்டி பாத்து பாத்துதான் என்னை மயக்கிட்ட... அதான் இப்ப மொத்தமா கொன்னுட்டியே!! இதுக்குமேல பாத்து என்ன பண்ண போற??? என கூறியவன்.. அளவுகடந்த கோபத்தில் இருந்த போதும் அவளின் இந்தராக மட்டுமே புலம்பினான்,

இன்னும் தன் வார்த்தையில் சற்று கடுமையை ஏற்றி.. கோபமேரிய கண்களுடன் அவளிற்கு மிக அருகில் அதாவது யார் அசைந்தாலும் இருவரும் உரசும் அளவிற்கு வந்து நின்று “சோ மேடம இதுக்காகத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படிதான?? செம்மடி சூப்பர் ஜட்ஜ்மெண்ட்… ஒரு தேர்ட் ரேட் பொம்பள பொறுக்கி அளவுக்கு நான் உனக்கு தெரிஞ்சி இருக்கேன் இல்ல…” என்று சொல்லும் போதே அவன் கண்களில் வழியே அவனின் வலியை உணர்ந்தவள் ஏதோ கூற வாயெடுக்க,

மூச்!!! எதனா பேசின மகளே அவ்ளோதான்??? இப்பையே உன்கிட்ட எவ்ளோ கண்ட்ரோல் பண்ணிண்டு பேசிட்டு இருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. இந்தரா இருக்கவன விஜயேந்திர மித்ரனா மாத்திடாத!! என எச்சரித்தவன், நமக்கு… சாரி உனக்கு எனக்கும் அது நல்லதுக்கு இல்ல,

எனக்கே தெரியும் நான் உன் விஷயத்துல நெறைய சொதப்பி இருக்கேனு.. அதுக்காகதான் இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கேன்… எனும்போதே அவள், அவன் விழிகளில் இருந்து தன் பார்வையை திரும்ப முயற்சிக்க…

ஏய்!!! என அதட்டியவன்… அப்டி இப்டி கண்ண திருப்புன, அப்புறம் நீ சொன்னியே கடமை கடமைனு ஒன்னு இங்க அது நடக்கும்… அதும் கடமைக்காக மட்டும் பரவாலையா?? என்று அவளை போலவே புருவத்தை உயர்த்தி கேட்டான்.

தான் கூறிய அதே
வார்த்தைகள்தான், ஆனால் அதையே அவன் வாய் மொழியாய் கேட்க அவளால் சகித்து கொள்ள முடியவில்லை.. அவனை அடிபட்ட பார்வை ஒன்றை பார்த்து வைக்க…

அதை உணர்ந்தவன் போல், நான் என்னடி பண்ணட்டும்.. பொண்டாட்டி ஆசைய நிறைவேத்தறது தான நல்ல புருஷனோட கடமைமைமை… என்று சொல்லியவன் அந்த ‘கடமை’ என்ற வார்தையையை தேவைக்கு அதிகமாக அழுத்தியே கூறினான்..

என்ன ஆரம்பிக்கலாமா நம்மோட கடமையை ஹான்…. என்று கூறி கொண்டே அவளிடம் வந்தவன், அதற்கும் அவளிடம் இருந்து எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமல் போக,

ச்ச.. ஏண்டி ஏன்?? இப்டி மனுஷன படுத்தி எடுக்குற, சபா....... போதுண்டி யம்மா போதும் இன்னைக்கு கோட்டாக்கு இதுவே ரொம்ப அதிகம்… என்று அவளை கையெடுத்து கும்பிட்டவன்,

நான் தூங்க போறேன், என்னைய கடுப்பேத்தன திருப்தியில போய் நல்லா அந்த பெட்ஷிட்ட கட்டி புடிச்சிக்கிட்டு தூங்கு அதுதான் உனக்கு சரியானது.. (இந்த ரணகளதளையும் ராசா பெட்ஷிட்ட மறக்கல… நீயெல்லாம் ஆர்டர் செஞ்ச பீசு டா)

அவளிடம் அவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை, அவளும் முயற்சிக்கவில்லை… இருவரும் ஒரே அறையில் வேறு வேறு சிந்தனையில் கண் மூடினர்…..

நேசம் உயிர்க்கும்…..


 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரண்ட்ஸ் மூன்றாவது அத்தியாயத்தை பதிவு செஞ்சிட்டேன்.... எப்டி இருக்குனு நீங்க சொன்னா தான் எனக்கு தெரியும் நான் சரியா கதைய எடுத்துட்டு போறானான்னு.... சோ ஒரு வார்த்தை படிச்சிட்டு சொல்லிட்டு போங்க தோழர்களா🙂😉😉🙃.... மற்றும் போன பதிவுக்கு லைக், கமெண்ட் குடுத்த எல்லாருக்கும் உங்க நண்பியின் நன்றி 🙏🙏🤩🤩🤩
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் நான்கு:-
1094010941அர்த்தசாமம் ஆகியும் தூக்கம் வராமல் படுத்திருந்தவள்… இதற்க்கு மேல் முடியாது என்று அவனை எழுப்ப போக, நினைவு வந்தவளாய், நமக்கு தான் தூக்கம் வரல இவரும் அப்டி இருப்பாருனு நினைக்கறது தப்பு தான?? என யோசித்து கொண்டு இருக்க…

தூங்க போகிறேன் என்று கூறி விட்டானே தவிற, தூக்கம் என்பது அவன் அருகில் கூட நெருங்கவில்லை….. மனதெல்லாம் ரணமாக வலித்தது, எத்தனையோ இன்னல்கள் வாழ்க்கையிலும் தொழிலிலும் சந்தித்த போதும் இரும்பாக நின்றவன் இவளிடம் மட்டும் ஒவ்வொரு முறையும் வார்த்தையால் அடிபடுவதை அவனால் ஏற்க முடியவில்லை….. அதுவும் இன்றைய அவள் சொற்கள் காதிற்குள் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் மனதை அறுத்துக் கொண்டே இருந்தது….. 'தவறு' என தெரிந்து தானே செய்தான், அதற்கு அவளிடம் எப்படி விளக்கம் கொடுப்பான்??? அல்லது அவள் கோவத்திற்கு தான் பதில் கூற முடியுமா அவனால்?? அப்படி பதில் கூறினாலும் அது ஏற்புடையதாக இருக்குமா??

கோவமா அவ திட்டினாலோ ஏன் அடிச்சா கூட வாங்கிக்கலாம்… ஆனா இவ வார்த்தையாலல கொல்றா…. என் தமிழ்க்கு இப்டி அடுத்தவங்க என்ன கஷ்டப்படுவாங்கனு யோசிக்காம கூட பேச தெரியும்னு இது வரைக்கும் எனக்கு தெரியாதே!!!!! ஏன் இப்டி மாறி போனானு எவ்ளோ யோசிச்சாலும் ஒன்னு புரிய மாட்டேங்குதே… என யோசித்தவன் பின் திடமான ஒரு முடிவு எடுத்தவனாக, என்ன காரணமா இருந்தாலும் சரி அவள என் பழைய குண்டம்மாவா மாத்தல என் பேரு VM இல்ல…… (சீக்கிரமா வேற பெயரை யோசிச்சிக்க தங்கம்🤣🤣 அவ்ளோ ஈஸியாலான் உன் செல்லக்குட்டிய நீ நினைக்கலாமா)

இப்படியாக தன் சிந்தனையில் உழன்று கொண்டு இருத்தவன்….. இவள் எழுந்தவுடனே இவளை கவனிக்க ஆரம்பித்துவிட்டான் மூடிய இமைகளினூடே…. என்ன ரெஸ்ட்ரூம் எதனா போகணுமா?? தனியா போக பயப்படவும் மாட்டா.. இவளலாம் விட்டா ஊரையே வித்து காரப்பொறி வாங்கி திங்கற கேசு, சோ… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, அப்புறம் எதுக்கு எழுந்து சும்மா உக்காந்துட்டு இருக்கா?? ஐயோ எதனா உடம்பு சரியில்லையோ..என பதறி எழப்பார்த்தவனை….

என்னங்க என்ற அவள் குரல் காதில் விழ, அவன் தன் நாடகத்தை தொடர்ந்தான்… (அதாங்க தூங்கறாராமா)

ம்ஹும் இதேபோல அவள் மூன்று முறை அழைத்தும் அசைந்து குடுதானில்லை அந்த வீம்புக்காரன்…. சரி இதுதான் காதுல விழல பேர் சொல்லியாவது கூப்பிடுவோம் என நினைத்தவள் விஜய்… விஜய்.. என அழைக்க,

விஜயாம்ல விஜய் ஏன் இவ கூப்பிட தான் எனக்கு பேர் வெச்சாங்களா எங்க வீட்ல… ஒரு மட்டு மருவாதை வேனா புருஷனுக்கு?? ( மரியாதை தான ராசா குடுக்க்க்க சொல்லிட்டா போச்சு…)

இவ்வளவு அழைத்தும் அவன் எழாததில் கடுப்படைந்தவள் ம்ஹும்.. இது வேலைக்காகாது, இந்தர்… இந்தர் என அவனின் தோல் தொட்டு எழுப்ப,

அப்டி வாடி என் செல்லக்குட்டி… என்று எண்ணினாலும், யப்பா!!!! எவ்ளோ நாள் ஆச்சிடி நீ இப்டி கூப்டு…. என ஒரு புறம் அகம் மகிழ்ந்து போனான்.

ஆம் அது அவனுக்கே உரிய பிரத்யேக அழைப்பு “அவளுக்கானது” மட்டுமே… வேறு யாரும் இந்த பெயர் சொல்லி அவனை கூப்பிட்டதும் இல்லை, கூப்பிட அவன் அனுமதித்ததும் இல்லை. அத்தனை தனித்துவம் வாய்ந்தது அவள் அழைப்பு அவனுக்கு… ‘இந்தர்’ என சொல்லி அவள் அழைக்கும் ஒவ்வொரு முறையும் அவனை அவனுக்காக மட்டுமே நேசிக்கிறாள் என்பதை ஏதோ ஒரு விதத்தில் அவனுக்கு உணர்த்தி கொண்டே இருப்பாள்… வெறும் ஒரு அழைப்பு தான் அதையும் வைத்து எத்தனை மாயாஜாலத்தை தன்னுள் விதைக்கிறாள், “வித்தைக்காரி” தான் என நினைத்து தன்னுள் சிரித்து கொண்டவன்….

இதோ இப்பொழுது அழைக்கும் போது கூட, முன்பு என்னை அழைக்கும் போது அதில் இருக்கும் உயிர்ப்பு இல்லை மாறாக உணர்ச்சியற்ற உச்சரிப்பு… அதற்க்கு அவனால் பெருமூச்சொன்றை மட்டுமே விட முடிந்தது.

மீண்டும் ஒருமுறை அவள் அழைத்த பின்னே சுயஉணர்வு பெற்றவன் அப்போழுது தான் விழிப்பது போல,

ம்ச்.. என்ன சொல்லு என கண்ணின் மேல் இருந்த கையை விலக்காமல் கேட்க

இல்ல கொஞ்சம் எந்திரிங்களேன்…

எதுக்கு???

எந்திரிங்களேன் சொல்றேன்… என மீண்டும் அவள் அடமாக சொல்ல,

கண்ணின் மேல் இருந்த கையை எடுத்தவன், படாரென எழுந்து அமர்ந்து…

ஏன் மேடம்க்கு அவ்ளோ நம்பிக்கையா என்மேல பாத்ரூம் போறதுக்கு கூட என்னை தாண்டி போக முடியாதோ??? அப்டியே உன் மேல பாஞ்சுடுவேனா என்ன ஹான்?? அந்த அளவுக்கு என்னடி பண்ணேன் உன்ன?? என கோவத்தில் அவன் ஏதேதோ சொல்லி திட்டிக்கொண்டே போக…..

அவளிடம் இருந்து எந்தெந்த முறையிலோ இதற்கான எதிர்வினையை எதிர்ப்பார்த்தவன் கண்டிப்பாக அவளின் அடுத்த செயலை துளி கூட அவதானிக்கவில்லை…. அவளின் அந்த செயலில் ஒரு கணம் அதிர்ச்சியில் ஒன்றும் விளங்காமல் உறைந்தே நின்று விட்டான்…( ஒரு வேல இது தான் ஷாக் டிரீட்மென்டோ🤔)

அதாவது அவனை அவன் எதிர்பாரா வண்ணம் கட்டி அணைத்திருந்தாள் இறுக்கமாக, அதுவும் தன் ‘உயிர்ப்பற்று’ அவன் தான் என்பது போல்…. அதிர்ச்சியில் உறைந்து இருந்தவனை மீட்டெடுத்ததும் என்னவோ அந்த அவளுடைய அணைப்பு தான், நொடிக்கொரு தரம் இறுகிக்கொண்டே சென்றது… எங்கே விட்டால் மறைந்து போய் விடுவானோ என எண்ணினாளோ என்னவோ?? அத்தனை இறுக்கம் அந்த அணைப்பில்…

ஒரு நிமிடம் தான் அவனும் ஒன்றும் விளங்காமல் நின்றது, தான் தன்னவளின் அணைப்பில் இருக்கிறோம் என உணர்ந்த நொடி அவளை விட மிக இறுக்கமாக அவளின் மொத்த உடலின் அனைத்து பாகங்களும் வலி எடுக்கும் அளவிற்கு இறுக அணைத்திருந்தான் தன் சகியை…..

பல நாள் ஏக்கம், அவளின் அருகாமை தந்த ஆறுதல் என அவனும் தன் மனையாளின் திடீர் செயலுக்கான காரணத்தை ஆராயாது ஒரு வித மனநிம்மதியில், தன்னுடையது தன்னிடமே வந்து சேர்ந்த திருப்தியில் எதையும் சிந்திக்காது இசைந்திருந்தான் அவளுடன்……

பாவம் அவனிற்கு எங்கு தெரிய போகிறது இந்த சிறு நிம்மதியும் இன்னும் சிறிது நேரத்தில் துடைத்து எரிய போகிறாள் தன் மனையாட்டி என்று…..

இந்த அணைப்பில் இருவரும் மகிழ்ந்தனரா என கேட்டால் அவர்களிடம் அதற்கு பதில் இல்லை….. ஆனால் அவள் அடுத்ததடுத்து பேசிய அனைத்தும் கல்வெட்டில் பதிந்த எழுத்துக்கள் போல் அவன் நெஞ்சில் ஆறாத வடுவாய் நின்று விட்டுருந்தது என்னவோ மறைக்க முடியாத உண்மை, அப்படி அவள் பேசியது இதுவே…

இது கனவு இல்லல, நீ உண்ம தான.. நான் உன்ன தான ஹக் பண்ணிட்டு இருக்கேன்.. சொல்லுடா இது எதுவும் கனவு இல்லனு சொல்லு….. என அவளின் சொற்களில் எந்த வித பிசிறும் இல்லாமல் அவனிடம் கேட்க..

இத்தனை நாள் பிரிவு தான் அவளை இப்படி நினைக்க வைக்கிறது என சாதாரணமாக எண்ணியவன்..

ஹே என்னடி ஆச்சு உனக்கு, இங்க பாரு உன் இந்தர் உன்கூட தான் இருக்கேன் ரொம்ம்ம்ப பக்கத்துல உன்ன இறுக்கி கட்டி புடுச்சிகிட்டு, அதுவும் ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு குட்டி ஈ கூட போகாத அளவுக்கு இருக்கோம் இப்ப போய் இந்த சந்தேகம் வரலாமா என் பொண்டாட்டிக்கு?? என சிரித்து கொண்டே அவன் வினவ,

அவன் கேட்ட கேள்விக்கு சம்மந்தமாக அவள் எந்த பதிலும் அளிக்கவில்லை மாறாக, அவள் மனதில் நினைத்தது ஒன்றே ஒன்று தான், இத்தனை வருட நெருடல், யாரிடமும் கூற முடியா தவிப்பு… இவனிடம் மட்டுமே சொல்ல கூடிய புலம்பல், இது கனவா?? நினைவா?? என்பதை பற்றி அவள் கவலைப்படவில்லை… ஆனால் அவளிற்கு அவன் மட்டுமே உண்மையாக வேண்டும் அவ்வளவே!!! அதனால் கூற ஆரம்பித்தாள்…

நாலு வருஷம் ஒன்னு இல்ல ரெண்டு இல்ல முழுசா நாலு வருஷம்…. உன்ன மறக்கவும் முடியாம, வெறுக்கவும் முடியாம என்னைய நானே வெறுத்துக்கிட்டு இருந்த நாலு வருஷம்… உனக்கு ஒன்னு தெரியுமா?? என கேட்டவள் அவனிடம் இருந்து விலகிச்சென்று அவள் பெட்டியில் இருந்த அவள் பொக்கிஷத்தை (அவள் அவனாக நினைப்பதை) கொண்டு வந்து அவன் முன் நீட்டியவள், அத்தோடு அவள் கடமை முடிந்தது என்பது போல மீண்டும் அவனை அணைத்து கொண்டு அமர்ந்து விட்டாள்…

அவனிற்கு தான் ஒன்றும் விளங்கவுமில்லை, அது யாருடைய பொருள் என்று தெரியவும் இல்லை… ஆனால் அதை காட்டும் போது அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு பாவனை அவனை சிந்திக்க தூண்டியது.. கண் மூடி சில நொடிகள் யோசித்தவனுக்கு கிடைத்த விடை என்னவோ அத்தனை சந்தோஷத்தை அளித்திடவில்லை, மாறாக குழப்பமே மிஞ்சியது… அதுவும் இப்ப இந்த நேரத்துல இத பார்க்க சொல்ல வேண்டிய அவசியம் என்ன?? என்பது தான் மிகப்பெரியது…

அவன் சிந்திப்பதற்கு சிறிது நேரம் கொடுத்தவள் தொடர்ந்தாள்…. இது உன்னுடைய ஷர்ட் தான், இந்த ஷர்ட் அப்டி என்ன ஸ்பெஷல்னு தான பாக்கற…. எனக்கு தெரியாதுபா, உன்கிட்ட இத சண்டை போட்டு வாங்கும் போது, இத மட்டும் தான் கடைசியா நீ, உன் நினைவோட சேர்த்து என்கிட்ட விட்டுட்டு போவேன்னு…..

உனக்கு ஞாபகம் இருக்குமா என்னனு தெரில எனக்கு, நம்பளுடைய முதல் ஹக்.. அன்னைக்கு இந்த ஷர்ட் தான் நீ போட்டு இருந்த, உன்னோட நெருக்கமான முதல் ஸ்பரிசத்தை நான் முதன்முதலா உணர்ந்த நிமிஷம் அது, அத எனக்கு குடுத்தது உன்கூட டைட்டா இருந்த இந்த ஷர்ட் தான்…. என்று கூறியவளின் முகத்தில் அந்த நாளின் நினைவுகளில் அழகான புன்னகை ஒன்று பூத்திருந்தது..

இதோ இப்ப கூட என்னால உன்ன இதுல உணர முடியும் தெரியுமா, அப்டித்தான் ஒவ்வொரு முறையும் நீ எப்பலாம் என் பக்கத்துல வேணும்னு எனக்கு தோணுதோ, எப்பலாம் நான் சந்தோசமாவோ, இல்ல கஷ்டமாவோ இருக்கேனோ அப்பல்லாம் உன்கிட்ட தான் (என ஷர்ட்-ஐ தூக்கி காமித்தவள்) சொல்லுவேன், புலம்புவேன்…. ஏன் நெறைய தடவ அப்டியே தூங்கியும் போயிருக்கேன்…. அதனால தான் கேட்குறேன் இது எல்லாம் உண்மை தான??? என தொடந்து அவனிடம் தன் மனதில் உள்ளதை கேட்டு கொண்டு இருந்தவள், உண்மையில் துயில் கொண்டி இருந்தாள் அவள் மஞ்சமெனும் அவன் நெஞ்சத்தில்…. ஆனால் என்றும் போல் இல்லாமல் இன்றோ உண்மையான நிம்மதியுடனும், தன்னிடம் சேர்ந்த திருப்தியுடனும்….

அவளின் இத்தனை புலம்பல்களையும் எந்தவித இடையூறுமின்றி கேட்டு கொண்டு இருந்தவனுக்கு சற்று முன் தான் எடுத்த உறுதி மொத்தமும் சுக்கு நூறாக உடைந்து சிதறுவது போல ஒரு பிரம்மை….. அன்று அவளை வேண்டாம் என சொல்லி, அவள் தன்னை விட்டு பிரிந்து செல்லும் போது எத்தனை வலியை அனுபவித்தனோ அதை விட ஆயிரம் மடங்கு வலி அவன் நெஞ்சை கசக்கி பிழிவதை அவனால் அணு அணுவாக உணர முடிந்தது, உணர்த்தவனின் கண்ணிலோ அவனையும் மீறிய கண்ணீர்த்திரை…

தன் நெஞ்சில் பதுமை என சாய்ந்து கொண்டிருந்தவளை அவள் தூக்கம் களையாமல் மெத்தையில் படுக்க வைத்தவன் அவளிடமிருந்து விலக பார்க்க, அதற்க்கு விடுவேனா என்பது போல அவன் மனையாள் அவன் சட்டை காலரை இறுக்கமாக பற்றி இருந்தாள், “என்னை விட்டு எங்கும் செல்லாதே” என்று சொல்வது போல்…..

இத்தனை நாள் அவள் பட்ட துன்பம் போதும் என நினைத்தானோ என்னவோ அவள் அருகிலே அவள் தலையை தன் நெஞ்சில் வைத்து சிந்திக்க ஆரம்பித்தான் தன் கண்ணை மூடிக்கொண்டே… அவனிற்கு நன்கு தெரியும் அவனின் மனைவி சிறு சிறு உணர்வுகளுக்கு கூட அதிக முக்கியத்துவம் கொடுத்து மதிப்பவள் என்று… ஆனால் அவன் இன்று பார்த்தது அவனின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது…

அதிலும் அவ சொன்ன எங்க பஸ்ட் ஹக்…. என்று நினைத்த மாத்திரத்தில் அவன் இதழ் கடையோராம் அவனிற்கே உரித்தான அழகான புன்னகை ஒன்று வழிந்திருந்தது அவனும் அறியாமல்…. தன் நெஞ்சில் இருக்கும் அவள் தலையை கோதியவன் அவளிடம் மனதில் பேச ஆரம்பித்தான்…

என்னடி கேட்ட நம்ப பஸ்ட் ஹக் ஞாபகம் இருக்கா இல்லையானா?? அத எப்படிடி நான் மறப்பேன்… நம்ப ரெண்டு பேரும் பாக்க முடியாம, நான் வேலையையும் நீ படிப்பிலையும் பிஸியா இருந்த சமயம்… அப்ப ஒவ்வொரு நாளும் உன்ன எப்படா பார்ப்போம்னு நான் தவிச்சிட்டு இருந்த நாட்கள்… சரிடா நமக்கே இப்டி இருக்கே நம்ப குட்டிப்பாப்பா ரொம்ப ஏங்கி போய்ட்டு இருப்பாளேனு… ரெண்டு மாசம் கழிச்சி உனக்கு ஷாக் கொடுக்கலாம்னு வந்தா, மேடம் இன்னைக்கு போல அன்னைக்கு குடுத்தியே ஒரு ஷாக் ம்ஹும்… அத நான் எதிர்பாக்கவே இல்ல, அப்டியே கார் கதவ லாக் பண்ணவுடனே மின்னல் வேகத்துல பாஞ்சி வந்து குடுத்தியே ஒரு டைட்டான ஹக்… யப்பா!! அத இப்ப நினச்சா கூட… இங்க பாரு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது, அதுவும் உன் காலேஜ் கேம்பஸ்னு கூட பாக்காம, என்னதான் நம்ப ரெண்டு பேரும் கார் உள்ள இருந்தாலும்… அப்ப நீ எனக்கு குடுத்தது ரொம்ப பெரிய பரிசுடி, அத நான் மறந்தேனா நானெல்லாம் மனுஷனே இல்ல!!! இதுல வித்யாசம் என்னன்னா அன்னைக்கு எவ்ளோ சந்தோசமா இருந்தேனோ அத விட சொல்ல முடியாத அளவு இன்னைக்கு வேதனையா இருக்கேன்…

ஜஸ்ட் ஒரு ஷர்ட் அவ்ளோதான் எனக்கு அது, நீ இப்ப அத காட்லனா அப்டி ஒரு ஷர்ட் என்கிட்ட இருந்ததே ஞாபகம் இருந்திருக்காது.. அப்படி இருக்க, நீ அந்த ஷர்ட்-ஐ நானா நினைச்சி இருக்கன்னா… எனக்கு புரில இவ்ளோ “காதல்” ஏண்டி உனக்கு என்மேல, ம்ஹும் இதுக்கு பெயர் காதல்னு கூட சொல்ல முடியாது அதுக்கும் மேல ஏதோ ஒன்னு அது என்னனு எனக்கு தெரிலடி… எதுவா இருந்தாலும் சரி இனிமே உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன், முடுஞ்ச அளவு உன்ன புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்… ஏன்னா இத்தன நாள் உன்னைய நான் மட்டும் தான் நல்லா புரிஞ்சிக்கிட்டவனு ஒரு கர்வம் இருக்கும், ஆனா இன்னைக்கு நீ நினைச்சதெல்லாம் கரெக்ட் இல்லடா மடையானு என் நடு மண்டையில நச்சுனு உரைக்கிற மாதிரி உணர்த்தி இருக்கப் பாரு!! கண்டிப்பா நம்ப காதல் மூலமா உன்ன நான் மீட்டு எடுப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு… சோ இனிமேல் உன் மாமாவோட விளையாட்டை பாக்க போறடி என் செல்ல முட்டைக்கண்ணி… பி ரெடி… ஓகே.. என்று அவளிடம் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்தவன் எப்பொழுது கண்ணயர்த்தான் என்று அவனிற்கே தெரியவில்லை….

அவளை மாற்ற சிந்தித்தானே தவிற அவள் ஏன் மாறினாள் என்றும்… இத்தனை அன்பும், காதலும், நேசமும் தன் மீது வைத்திருப்பவள் ஏன் தன்னிடம் விலகி நிற்கிறாள் என்றும் கொஞ்சம் யோசித்திருந்தால் “மாற்றம்” சாத்தியம் ஆகி இருக்குமோ என்னவோ??? வாழ்க்கையின் விதி யாரை விட்டது!!!!

"ஒன்றுமே இல்லை”
என நான் நினைக்க..
“எல்லாமும்”
அவைதான் என நீ நினைக்க
‘என்னை’ என்ன செய்து
‘உன்னை’ மீட்டெடுப்பேன்???
“என் கண்மணியே”
விடை அறியா கேள்விகளுடன்
உன்னில் நான்!!!


நேசம் உயிர்க்கும்……
10939

 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாருக்கும் வணக்கம் 🙏....
சொன்னது போல அடுத்த அத்தியாயம் கொடுத்துட்டேன்.... நேத்துல இருந்து ஒரே குழப்பம், இப்டி moody-ஆவே தொடர்ந்து ud குடுக்குரோமே😣😣..... ஒரு வேல உங்களுக்கு பிடிக்காம போய்டுமோ அப்படிங்கற ஒரு சந்தேகத்தோட தான் இதை பதிவு செஞ்சேன்🤔🤔.... சோ படிச்சு பாத்துட்டு எப்டி இருக்குனு நீங்க கொஞ்சம் சொன்ன நான் தெளிவாயிடுவேன்🙂..... அப்புறம் இதுல நான் ரெண்டாவது அத்தியாயத்துல குடுத்த ஒரு சீக்ரெட்டுக்கு பதில் சொல்லி இருக்கேன்...போன பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் சொன்ன எல்லாருக்கும் நன்றி😍😍😍... இதுக்கு மேல நீங்க தான் சொல்லணும்.... I am waiting frds😍😍
 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் ஐந்து:-1100711008

காலையில் வழக்கம் போல் ஆறு மணிக்கெல்லாம் எழுந்தவள் தன் ஆஸ்தான தெய்வமான ராதாயின் கிருஷ்ணனை வணங்கி கண் திறந்தாள்… ஆனால் என்ன அவள் ராமன் தான் அங்கு இல்லை, அதில் சிறிது மனசுணக்கம் அடைந்தவள் எப்பொழுதும் போல் தன்னை சமாளித்துக் கொண்டு.. சரி யோகா செஞ்சுட்டு வந்து பாப்போம் என தன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றவள், ஆசனத்தை முடித்து கொண்டு தன் குட்டி தேவதைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்தாள் அதாவது அவள் வளர்க்கும் அத்தனை செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் அவர்களுடன் பேசிக் கொண்டே….

தினமும் இனிமே உங்கள என்னால பாக்க முடியாது… சோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்ககிட்ட ஓடி வந்துடுவேன் ஓகே.. அதனால சமத்தா அம்மாகிட்ட இருந்துக்கோங்க குட்டிஸ்.. அந்த அருந்தவாலு கிட்ட சொல்லிட்டு போறேன் உங்கள பாத்துக்க சொல்லி… அவ எதனா பண்ணானா நான் வந்த உடனே சொல்லுங்க அவள நான் கவனிச்சுக்கிறேன் சரியா…. அதுவரைக்கும் இப்ப போல எப்பயும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்… என அந்த செடிகளில் உள்ள பூவையும் இலைகளையும் ஆசையாக தடவி கொடுத்தவள் நேரமாவதை உணர்ந்து தன் அறை நோக்கி சென்றாள்…

குளித்து விட்டு தலையில் துண்டுடன் கீழிறங்கி வந்தவள் தன் அம்மா சமையலறையில் இருப்பதை பார்த்து அவரிடம் சென்று,

என்னமா காலையில கிச்சன்ல இருக்க, எத்தன தடவ சொன்னாலும் கேட்க மாட்டீங்க உடம்ப அலட்டிக்காதீங்கன்னு, சரி டீ போடவா??? என குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்துக் கொண்டே வினவ,

போட்டுக்கோடி.. ஆமா மாப்ள எங்க காலையிலே வெளில போய்ட்டாரு??

ஹான்.. அதுவா ஓடிப்போறதுக்காக போய் இருக்காரு… என ஒரு புளோவில் சொல்லி விட

என்னது??? ஓடிபோய்ட்டாரா… என்று அவள் பதிலில் அவர் அதிர்ந்து அலறிவிட்டார், பாவம் அவரும் என்னதான் செய்வார் கல்யாணம் ஆன இரண்டாவது நாளே மாப்பிளை ஓடிவிட்டார் என கேட்டால், அம்மாவாச்சே சோ சேட்..

அச்சோ கடவுளே!!! அப்டி என்ன சொன்னோம் அம்மா இப்டி கத்துறாங்க என யோசித்தவள், மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டாள் எல்லாம் மனசுலதாங்க, பின்ன வெளில அடிச்சி இருந்தா இந்நேரம் சிவகாமி அம்மையார் காலையில டிபன்கு அவள தக்காளி சட்டினியால ஆக்கி இருப்பாங்க.. சரி சமாளிப்போம் என நினைத்தவள்…

அது ஒண்ணுமில்ல மா… அவர் ரன்னிங் போய் இருக்காருன்ரத்த நான் தமிழ்ல சொன்னேனா… என்று இழுத்து சொன்னவள், அது உங்களுக்கு புரில.. இருந்தாலும் அநியாயத்துக்கு இங்கிலிஷ்காரங்களா இருக்க கூடாது மா.. பாரு எவ்வ்வ்ளோ கஷ்டமா இருக்கு கம்யூனிகேஷன் பண்றதுக்கு!!! சீக்கிரமா தமிழ் நல்லா கத்துக்க பாரு மா… என அவர் ஒரு கல்லூரியின் துறைத்தலைவர் என்பதை மறந்து சமாளிக்க பார்க்க….

அடிங்க… யாருகிட்ட?? படிச்சதும், சொல்லி குடுக்கறதும் வேணும்னா இங்கிலிஷா இருக்கலாம்… ஆனா பக்கா தமிழச்சிடி என அவர் உனக்கு நான் அம்மாவாக்கும் என்ற கெத்துடன் கூற..

அவர்… அவர்தான் இயலின் தாயார் சிவகாமிதேவி (M.A(ENG).., M.ED..,M.Phil.., P.HD) சோ எளிமையா சொல்லனும்னா டாக்டருங்க… அவர ஏமாத்த முடியுமா!!! ஆனால் தெரிந்தே ஏமாறுவார் தன் பிள்ளைகளிடம் மட்டும் சிறு சிறு விஷயங்களில், இதோ இப்பொழுது போல்.. அவருக்கும் தெரியும் தன் மாப்பிளை வீட்டில் பயிற்சி செய்ய எதுவும் இல்லாததினால் ரன்னிங்கிற்காக பக்கத்தில் இருக்கும் மைதானம் வரை சென்று வருவதாக சொல்லி விட்டு தானே சென்றார்.. சரி இவகிட்ட சொல்லிட்டு போனாறானு தெரிஞ்சுக்கலாம்னு பாத்தா இவ நம்பள வெள்ளைக்காரி ஆக்கி வெளிநாட்டுக்கு பார்சல் பன்னிடுவா போலையே…. என நினைத்தவர் அவளிடம் ஒன்றும் அறியாதது போல்..

சரி, சரி… டீய போட்டுடல்ல அப்ப வெளில எடுத்துட்டு போய் குடி போ.. அப்டியே மாப்பிள வந்தா அவருக்கும் கொண்டு போய் குடுத்துடு என சொல்ல,

டீ கோப்பையோடு வெளியில் வந்தவள்… ஊஃப் என இத்தனை நேரம் அவள் அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டு…

சபா இதுக்குதான் வாத்திக்குலாம் பொண்ணா பொறக்க கூடாது.. சும்மா எதனா வாய் தவறி வந்தா கூட, வீட்டுப்பாடம் செய்யாம டீச்சர் முன்னாடி நிக்கற பசங்க எபெக்ட் வருதுடா சாமி.. நம்மளும் இந்த வாய அடக்க பாக்கறோம் எங்க?? என தனக்கு தானே பேசிக்கொண்டே வாசல் புறம் திரும்பியவள்,

அங்கு கண்டதென்னவோ ஒற்றை காலை சுவற்றில் ஊன்றி தன் விரல்களினால் தலையை கோதிக்கொண்டு நின்றிருந்த தன் கணவனை தான்…

அவனை அந்த கோலத்தில் பார்த்தவளின் கையிலிருந்த கோப்பையானது வாய் அருகிலேயே நின்று விட, அவள் கண்கள் நேரடியாகவே அவனை சைட் அடிக்க ஆரம்பித்திருந்தது எந்தவித ஒளிவு மறைவுமின்றி.. அதுவும் காலையின் ஓட்டத்தில் ஆங்காங்கு என பாதி நினைந்திருந்த டீ-ஷர்ட், வியர்வையினால் தலையின் முன்னுச்சியில் படிந்திருந்த சிறு சிறு கற்றை முடிகள், இதெற்க்கெல்லாம் அழகு சேர்க்கும் அவன் அடர்த்தியான புருவங்களும் கண்ணிமைகளின் குட்டி முடிகளும், அதற்க்கு கீழே உள்ள கூர்மையான மூக்கும், தன்னிடம் மட்டுமே அதிகம் அசைந்து பேசும் அந்த சிவந்த உதடுகளும் என அவனை ரசித்து கொண்டே அவள் கலாரசிகையாக மாறிக்கொண்டிருக்கும் சமயம்.. அவனின் உதடுகள் சிறிதாக பிரிந்து அவன் சிரிக்கிறான் என்ற அறிகுறியை காட்டி விட்டது,

அதில் தன்னை சுதாகரித்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க… ‘நான் என்ன செய்தேன்’ என இத்தனை நேரம் அவளை குற்றச்சாட்டுடன் பார்த்துக் கொண்டிருந்த அவனின் கூர்மையான விழிகள் அவளின் எதிர்ப்பார்வையில் தன்னுயிர் பெற்று அந்த சிவந்த அதரத்துடன் சேர்ந்து சிரித்தது ‘உன்னை நான் அறிவேன்’ என்ற அர்த்தத்துடன்.. அவளின் இத்தனை நேர ரசனையை ரகசியமாக பார்த்தவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க…

ம்ஹும் எங்கே அவள் அதையெல்லாம் கண்டு கொண்டாள்.. “இங்க ஒன்னுமே நடக்கலையே” என்ற ரீதியில் அவனை பார்த்து சிரித்தவள்.. சோபாவில் அமர்ந்து டீயை ருசிக்க ஆரம்பித்திருந்தாள்…..

அவளின் இந்த செய்கையில் அவனின் புன்னகைத்தான் இன்னும் பெரிதாக விரிந்தது,

இத இத இதைத்தான் உன் மாமன் எதிர் பார்த்தேன் உன்கிட்ட இருந்து, டீயா குடிக்கிற இதோ வரேண்டி என மனதில் நினைத்தவன்… அவள் அருகில் சென்று, தங்களை சுற்றி யாருமில்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டவன் அவள் காதோரம் குனிந்து ஒற்றை கையை அவள் தோள் மேல் வைத்திருப்பது போல் சோபாவை ஊன்றி நின்றவன்…

அது எப்டிடி மத்த பொண்ணுங்களாம் அவங்க பாக்கறத பசங்க கண்டு புடுச்சுட்டாங்கனு தெரிஞ்சாலே.. ஒன்னு வெக்க படுவாங்க, இல்ல ஒன்னுமே தெரியாத மாதிரி திரும்பிப்பாங்க!!! ஆனா நீ இருக்கியே… ஆமாண்டா “நான் உன்ன தான் பாக்குறேன், அதுக்கு என்ன இப்ப” அப்டினு திமிரா ஒரு லுக்கு விட்ற பாரு… யப்பா சாமி!!! இதுல ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி கூடுதலா ஒரு சிரிப்பு வேற!!!

சின்னதா ஒரு வெக்கம் கூட படமா… ஹான் அது என்ன சொல்லுவாங்க… வெக்கத்தில பொண்ணுகளுக்கு அப்டியே அந்த கன்னம் ரெண்டும் சிவக்குமாமே… என அவள் கன்னங்கள் சிவப்பது போல் கற்பனை செய்தவன்…. பெருமுச்சொன்றை வெளியிட்டு,

ஆனா உனக்கு அதெல்லாம் கூட தேவையில்லடி… இதோ இந்த கோலிகுண்டு கண்ணு ரெண்டும் இருக்கு பாரு அத வச்சி கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பாத்தியே ஒரு பார்வை.. வச்ச கண்ணு வாங்காம அத மட்டும் பாத்தேன்னு வச்சுக்கோயேன் அவ்ளோதான் உன் புருஷன் காலியாயிடுவான், என்னா பவர்ஃபுல் கண்ணு…. என அவள் கண் இமைகளை வருடியவன்..

இதுல ஸ்பெஷல் என்ன தெரியுமா என இன்னும் அவள் அருகில் வந்தவன், உன்ன சைட் அடிக்க வைக்க உன் மாமன் எந்த செலவும் செய்ய தேவையில்ல என சொல்ல,

என்னது பாக்கறதுக்கு கூட செலவு பண்ணனுமா?? என்ற புரியாத பார்வை ஒன்றை அவன் மீது அவள் வீச..

ஹா ஹா என்னடி புரியலையா?? எவ்ளோ ஹேண்ட்ஸம்மா இருந்தாலும் மேடம இப்டி ரொமேன்டிக்கா லுக்கு விட வைக்க முடியும் நெவெர்…. இத நான் நேத்து நல்லா தெரிஞ்சுகிட்டேன், எவ்ளோ ஆசை ஆசையா நம்ப ஆளு பாப்பானு டைம் எடுத்து ரெடியாகி வந்தா.. அந்த ஹோமகுண்டத்த முறச்சிட்டு இருந்த பாரு.. ம்ஹும் அந்த கொடுமைய எங்க போய் சொல்ல… ஆனா பாரு இந்த கிரௌண்ட்-அ மிஞ்சி போன ஒரு ஆறு சுத்து சுத்தி இருப்பேன்.. அதுக்கே என் பொண்டாட்டி என்னை முழுக்குற மாதிரி பாக்குறா!!! சோ நான் சொன்னது சரிதானா?? என ரகசியம் கேட்பது போல் கேட்க....

அவளை தொடாமல் தொட்டு உரசும் அவனின் தொடுகையில் ஒரு நிமிடம் சிலிர்ந்தவள்.. இதற்கெல்லாம் அசந்து விட்டால் அது இயல் இல்லையே என்பது போல!!!

நானும் உங்கள பெரிரிரிய பிசினஸ்மேன்னு நினச்சேன்.. ஆனா பாருங்களேன் இவ்ளோ நாள் இது எனக்கு தெரியாம போச்சு?? என அவள் ஆச்சர்யம் படுவது போல் கேட்க..

ஏதோ வில்லங்கமாத்தான் சொல்ல போறா என உஷாரானவன்,இருந்தும்

என்னதுடி என கேட்டு வைக்க,

ஹான் டீயில உப்பு இல்ல, நல்லா கேட்கறத பாரு கேள்விய.. உங்களாலாம் வச்சிட்டு!!! இந்த பரம ரகசியத்தை கண்டு பிடிக்க சாருக்கு நாலு வருஷம் தேவப்பட்டுச்சாக்கும்?? ஆனா ஒன்னு மட்டும் கரெக்ட்டா சொல்லிடீங்க…

அச்சோ திருப்பும் இவள மலை ஏத்திட்டோமோ?? என அவள் முதலில் பேசியதை வைத்து எண்ணியவன், அவள் அடுத்து கூறியதில் யப்பாடி!! ஏதோ சரியா சொல்லி இருக்கோமாம் என்னனு கேப்போம்.. என்று நினைத்து அவளை பார்க்க,

இப்டி மட்டும் இல்ல எப்டி உங்கள பாத்தாலும் அப்டியே உங்கள கடிச்சி திங்கணும் போல தான் இருக்கும் எனக்கு…. என கூறி அவனை மறுநிமிடம் அசரடித்தாள், பின் ஒற்றை கண்ணை அடித்து இத்தனை நேரம் துடித்து கொண்டிருந்த அவள் விரல்களை அவன் முடிக்கற்றைகளில் விட்டு ஆசைதீரக் கலைத்து விட்டவள்…

இங்கேயே இருங்க டீ கொண்டு வரேன் என்ற வாக்கியதோடு சமையலறையில் சென்று மறைந்திருந்தாள்..

அவளின் கை விரல்களின் தொடுகையில் கண்சிமிட்ட மறந்து அவளை பார்த்து கொண்டிருந்தவன்,

அடிப்பாவி உன்னைய எப்டி கவுக்கலாம்னு நான் பிளான் பண்ணிட்டு இருந்தா, இப்டி போடுற எல்லா பாலுலையும் சிக்ஸர் அடிச்சிட்டு… இந்த விஜேந்திரமித்ரனையே பேச விடாம பண்ணிட்டு போறியேடி என் செல்ல ராட்சசி…. அப்டியே நீ பேச பேச உன்கூட சேர்ந்து பேசிச்சு பாரு அந்த உதடு அத அப்டியே இழுத்து வச்சு!!!!

ஐயோ!!! இப்ப தான் பேசவே ஆரம்பிச்சு இருக்கா, இதெல்லாம் நீ யோசிச்சேனு தெரிஞ்சா கூட அவ என்ன பண்ணுவான்னு தெரியாதுடா?? என மனசாட்சி நிதர்சனம் உரைக்க,

அப்டி மட்டும் கேட்க சொல்லேன் என திமிராக பதில் அளித்தவன்,

கேட்டா?? என்ற அதன் கேள்விக்கு,

ஹா ஹா ஹா இப்ப என்னெல்லாம் பண்ணனும்னு யோசிச்சேனோ அதெல்லாம் உண்மையா பண்ணிட வேண்டியது தான்.. நீ என்ன சொல்ற?? என அதனிடமே எதிர் கேள்வி கேட்ட்டான்..

அடப்பாவி!!! நீ செஞ்சாலும் செய்வ, நீ என்கிட்ட நினச்சதெல்லாம் மட்டும் செஞ்ச அந்த பொண்ணோட நிலைமை தான் பாவம்.. என அவளிற்காக பரிதாப பட..

யாரு அவளா பாவம் போக போக நீயே தெரிஞ்சிப்ப உனக்கும் எனக்கும் சேத்து எவ்ளோ அதிர்ச்சி தரானு… இவளுக்கெல்லாம் இயற்றமிழ்ச்சுடர்னு பேர் வெச்சி இருக்க கூடாது… கரண்டுன்னு வச்சி இருந்தா சரியா இருந்து இருக்கும், அடிக்கடி இப்டி ஷாக் தரா… விஜய் இவகிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.. ரொம்ப டேஞ்சரஸ் ஆளா மாறிட்டா.. என இது அத்தனையையும் யோசிக்கும் போதே அவள் குடுத்த தேநீரை அருந்தி விட்டு குளித்து முடித்து தயாராகி கீழே சாப்பிட வந்து கொண்டிருந்தான் அடுத்த டாஸ்கை நோக்கி!!!! (டைம் மேனேஜ்மென்ட் பா)

இத்தனை இவள் விஷயத்தில் யோசிப்பவன் தான் மற்ற எந்த முடிவாக இருந்தாலும் நொடிப்பொழுதில் மறு சிந்தனையின்றி முடிவு எடுப்பபான்.. தொழில் வட்டாரத்தின் முடிசூடா மன்னன்… ஆனால் இவளிடமோ தான் ஒரு ஆண்சிங்கம் என்பதை நொடிக்கொரு தரம் நிரூபித்து கொண்டிருக்கிறான் அந்த காதல் கயவன் அவளின் மனதை மறுபடி ஒருமுறை திருட!!!

உணவு மேஜையில் உணவை சரிபார்த்துக் கொடிருந்தவளின் பின்னாடி இடிப்பதை போல் வந்து நின்றவன்,

என்ன தமிழ் ரொம்ப பிஸி போல என ஹஸ்கி குரலில் கேட்க..

அவன் வருவதை காலடியோசையின் சத்தத்தின் மூலம் அறிந்திருந்தவள் திரும்பாமல்…

பாத்தா பாஸ்க்கு எப்டி தெரியுது என ஒய்யாரமாக கேட்க,

இவள வெறுப்பேத்தலாம்னு வந்தா நம்ப தான் கடுப்பாவோம் போல இருக்கே இத இப்டியே விட கூடாது என நினைத்தவன்..

ஏன் அத திரும்பி நின்னு சொல்ல முடியாதோ…. என காட்டமாக கேட்டவன் அவள் பதிலுக்கு எல்லாம் காத்திருக்காது தோளை தொட்டு அவளை அங்கிருந்து நகர்த்தி தனக்கென்று ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்து விட்டான்..

அவனிற்கு அவள் சாப்பாடு பரிமாற போக,

ஹே நிறுத்து… எங்க யாரையும் காணோம் எல்லாரும் சாப்டங்களா???

இல்ல… பாப்பா காலையிலே அவ வேல விஷயமா வெளில போய் இருக்கா, அம்மா நீங்க சாப்டதுக்கு அப்புறமா சாப்புடுறேனு சொல்லிட்டாங்க…. என அவள் சொல்லி கூட முடிக்வில்லை...
அதற்குள் அவன்

அத்தை… அத்தை என்று கத்த ஆரம்பிக்க

அவனின் அழைப்பில் என்னோவோ ஏதோ என வேகமாக அறையில் இருந்து வந்தவர்,

என்ன மாப்பிள்ளை என்னாச்சி… என்று பதட்டமாக கேட்க

பொறும அத்தை ஏன் இவ்ளோ வேகம்… ஆமா இது என்ன புதுசா மரியாதெல்லாம் ரொம்ப பலமா இருக்கு??? என ஒரு மாதிரியாக வினவ…

இல்ல…. மாப்பிளை ஆயிட்டீங்க!!! என மீண்டும் அவர் மரியாதையுடன் சொல்ல

இது ஆகாரத்துக்கு இல்ல, இவங்கெல்லாம் இப்டி சொன்னா கேட்க மாட்டாங்க என நினைத்தவன்…

சரி அதுக்கென்ன.. எனக்கு ரெண்டு கொம்பா எக்ஸ்ட்ரா முளைச்சி இருக்கு… காலையில கூட கண்ணாடியில நல்லா தான இருந்தேன்…. நீ பாரு தமிழ் ஒருவேள என் கண்ணுக்கு மட்டும் தெரில போல?? என்று தீவீரமாக சொன்னவன்.. அவளிடம் தலையை குனிந்து இரண்டு புறமும் ஆட்டி காண்பிக்க அவனின் அந்த செய்கையில் இருவரும் அடக்க முடியாது சிரித்து விட்டிருந்தனர்…

டேய் படவா!! இப்ப என்ன உன்ன நான் மரியாதையா கூப்பிட கூடாது அவ்ளோதான… சரி விடு இனிமே கூப்பிடல ஓகே… இப்ப சொல்லு விஜய் ஏன் கூப்பிட்ட??

ஹான் அப்டி வாங்க வழிக்கு!! இங்க பாருங்க அத்தை நான் இப்பையும் உங்க அந்த சின்ன பையன் விஜய் தான்… ஏதோ போனா போதுனு உங்க பொண்ணே என்னை கல்யாணம் பண்ணி இருக்கா... இப்படியெல்லாம் மரியாதை குடுத்து என்னை வெளில தொரத்திடாதீங்க அத்த, மீ பாவம்… என அப்பாவி போல கூறி சிரித்தவன், அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்திருந்தான் அவனின் பேச்சு திறமையால்….

முதல வந்து உக்காருங்க.. என நாற்காலியை இழுத்து போட்டு அவரை அமரவைத்தவன்…

அது என்ன வீட்ல எல்லாரும் இருக்கும் போது தனித்தனியா சாப்பிடற பழக்கம்… என்ன தமிழ் மத்த விஷயத்துக்கெல்லாம் காதுல ரத்தம் வர அளவுக்கு கதாகலாட்சேபம் பண்ணுவ இதெல்லாம் கவனிக்க மாட்டியா?? என வார்த்தையில் மட்டும் கண்டிப்புடன் கேட்க…

அவன் வீட்டில் அப்படித்தான்.. வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும் அது அவர்களின் வீட்டில் அவன் தந்தையின் எழுதப்படாத சட்டம்.. வேலை செல்லும் வயது வரை அதை கடை பிடித்தவர்கள் இப்பொழுது வேலை சுமையில் சாப்பாடு நேரத்தில் யாரெல்லாம் வீட்டில் இருக்கின்றனரோ அவர்கள் கண்டிப்பாங்க உணவு மேஜையில் இருப்பர்… அது வயது தொட்டு வரும் பழக்கம் என்பதால் அவனால் அதை மாற்றி கொள்ள முடிவதில்லை, மாற்ற அவன் முயற்சித்ததுமில்லை…

அவனின் கேள்விக்கு தமிழ் பதில் அளிக்க வாயை திறக்கும் முன் அவள் அம்மா முந்திக்கொண்டு..

இல்லப்பா விஜய் நான்தான் இன்னைக்கு ஒருநாள் மட்டும்… என இழுத்தவர் சரி சொல்லிடுவோம் இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமில்ல…
தனியா உக்காந்து சாப்பிட பிரிய படுவியோ என்னமோன்னு… அவகிட்ட அப்புறம் சாப்பிடுறேன்னு சொன்னேன், ஆனா அப்பையும் அவ ஒத்துக்கல.. நீங்களும் சாப்பிடுங்க அவர் அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாருனு தான் சொன்னா நான்தான் கேக்கல… என சொல்லி அவளை அன்புடன் பார்த்தவர்,

என்னைக்குமே என்னை சாப்பிட வைக்காம எவ்ளோ அவசர வேலையா இருந்தாலும் போக மாட்டாபா அவ.. அவள திட்டாத, நான் சாப்பிடணும் அவ்ளோதானா இதோ பாரு சாப்பிட ஆரம்பிச்சிட்டேன் என தனக்கு தட்டை எடுத்து வைத்தவர் சாப்பிட ஆரம்பிக்க…

தன் மகளை யாரும் ஒன்றும் சொல்லக்கூடாது என்பதில் இத்தனை கவனத்துடன் இருக்கும் அவரின் அன்பை எண்ணி சிரித்தவன்….

என் தமிழ பத்தி எனக்கு தெரியாதா, உங்க பொண்ண பத்தி சொன்னதால தான் என் மாமியார் சாப்பிட உக்காந்தீங்க இல்லனா என நிறுத்தியவன்... அவளை சீண்டி பார்க்க எண்ணி உங்கள மாதிரியே தான் அத்த உங்க பொண்ணும்… என சத்தமாக சொன்னவன், ரொம்ப பிடிவாதக்காரி என்பதை அவள் மட்டும் கேட்கும் படி சொன்னான்..

இவ்வளவு இவர்கள் பேசியும் அமைதியாக நின்றாளே தவிற “மாமியார் ஆச்சி மருமகன் ஆச்சி” என்பது போல்.. ஒருவார்த்தை கூட பேசவில்லை அவர்களுக்கு இடையில்,

அவர்களுக்கு உணவு பரிமாற அவள் நகர பார்க்க, அவளால் முடியவில்லை… அவள் சேலை முந்தானை எங்கோ மாட்டியது போல் இருக்க தன் தோள் மேல் இருந்த சேஃப்டி பின்னை பற்றியவள் எங்கு மாட்டி இருக்கிறது என திரும்பி பார்க்க, அவளின் முந்தனையானது அந்த சீமைக்காரனின் கையில் ஒரு மடிப்புடன் சுருண்டிருந்தது உணவு மேஜைக்கடியில்.. பார்த்தவளுக்குத் தான் பக்கென்றிந்தது,

அம்மாவ வச்சிண்டு இவரு பண்ற காரியத்த பாத்தியா என அவனை அவள் முறைக்க,

ஹி ஹி ஹி இதுக்குத்தானே ஐயா வைட்டிங் என்பது போல் முந்தானையை இன்னும் இறுக்கி பிடித்தவன்,

ஏன் உனக்கு எதனா ஸ்பெஷலா சொல்லனுமா என்ன? உக்காரு அதுதான் தேவையானது எல்லாம் இங்க தான இருக்கு அப்புறம் என்ன?? நமக்கு நம்மளே பரிமாறிக்கலாம்.. என அவள் கேட்க வந்த கேள்விக்கும் கேட்காத கேள்விக்கும் சேர்த்தே பதில் சொன்னான் அந்த கில்லாடி, அவள் சாப்பிட அமர்ந்ததை பார்த்தவன் அதற்கு பின் அங்கு அப்படி ஒருத்தி இருப்பதையே மறந்தது போல் தன் மாமியாரிடம் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தான் அவளின் சேலையை பிடித்துக்கொண்டே..

சரியான இம்சடா நீ… இன்னும் இந்த பழக்கத்தை விடலையா!!! எதனா ஒரு காரியம் ஆகணும்னா இப்டித்தான் என் ஷால புடிச்சுகிட்டு விடவே மாட்ட.. எப்படி குழந்த எதனா வேணும்னா அவன் அம்மா முந்தானைய புடிச்சி இழுத்து அடம் புடிக்கிதோ அந்த மாதிரி… சோ ஸ்வீட்ரா புருஷா என செல்லம் கொஞ்சியவள் வெளியில் எதுவும் காமித்து கொள்ளவில்லை…

இப்படி இவர்கள் இருவரும் அவரவர் சிந்தனையில் பிறர் அறியா வண்ணம் இருப்பதாக நினைக்க அவர்களை ஒன்றும் அறியாதது போல் கவனித்து கொண்டிருந்த அவள் அம்மாவிற்குத்தான் சந்தோசம் தாளவில்லை..

இதுநாள் வரை தனக்கு ஒரு ஆண் பிள்ளை இல்லையே!!! என அவர் வருத்தப்பட்டதில்லை, இனிமேலும் வருந்த போவதில்லை என்றாலும்.. இப்படி ஒரு நல்ல கணவன் தன் மகளுக்கு கிடைத்ததில் அத்தனை பூரிப்பு அவருக்கு… என்னத்தான் அவன் தன்னுடன் பேசி கொண்டிருந்தாலும் அவன் மனைவி சரியாக சாப்பிடுகிறாளா? இல்லையா?? என நொடிக்கொரு தரம் அவன் கண்கள் அவளிடம் அலைபாய்வதை அவரும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்…

என்னத்தான் தான் பார்க்க வளர்ந்த பிள்ளை என்றாலும், எப்போழுது அவன் ஒரு உயரத்திற்கு சென்று விட்டானோ அதிலிருந்து இயல்பாகவே வந்த இடைவெளி… அதை இவர் இன்னும் பெரிது படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.. அத்தனைக்கும் காரணம் வாழ்க்கையில் அவர் பட்ட அனுபவங்கள்…

ஆனால் இன்றோ மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒருவனின் கையில்தான் அவர் மகள் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள போகிறாள் என்பதில் அத்தனை மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு அந்த தாயுள்ளத்திற்கு…

அவரின் இத்தனை வருட வாழ்க்கை மொத்தமும் ஒரு நிமிடம் அவர் கண்முன் வந்து சென்றது நினைவலைகளாக!!!! அந்த ஒற்றை மனிதியின் வாழ்க்கையை நாமும் பார்ப்போம் அவருடன் அடுத்த பதிவில்..

நேசம் உயிர்க்கும்…

 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வந்துட்டேன் பிரண்ட்ஸ் 😁😁,
போன பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் போட்ட எல்லாருக்கும் நன்றி... அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிட்டேன்😍😍, படிச்சு பாத்துட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க... ஐ எம் வைட்டிங்😉😉
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் ஆறு பாகம் ஒன்று:-11039

“பெண்மையில் பேராண்மை” என்ற சொல்லிற்கேற்ப இவ்வுலகத்தில் வாழ்க்கை எனும் போரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகம்…. அதிலும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை மற்றும் வளர்ப்பு என்று வரும் போது அரவனைப்பிலும் ஆதுரத்திலும் தந்தையாக இருப்பவர்கள்…. தன் முழுவாழ்க்கையை அர்பணிப்பதில் ஒரு தாயாக வாழும் மொத்த ‘ஜான்சி ராணிகளுக்கும்” ஓர் உதாரணம் தான் நம் “சிவகாமிதேவி” எனும் ஒற்றை தாய்…

பன்னிரண்டு ஆண்டு கால வைராக்கிய வாழ்க்கை, அவரின் பிள்ளைகளுக்கான தவம்… அவர் கணவர் அவரை விட்டு செல்லும் போது வயது முப்பது மட்டுமே, இரண்டு பெண் பிள்ளைகள் தன் கையில்…. அவர் யோசித்தது என்னவோ ஒரே ஒரு நிமிடம் தான்,

அவரை சூழ்ந்திருந்த உறவினர்கள்.. பொட்ட பசங்கள வச்சிட்டு நீ என்ன பண்ண போற?? பேசாம பசங்கள அவங்க அப்பா வீட்டு ஆளுங்கிட்டையே விட்டுட்டு வந்துடு.. உனக்கு தான் இன்னும் வயசு இருக்கே பாத்துக்கலாம்… என சூட்சசமாக சொன்ன போதும் சரி!!!

இவளால என்ன பண்ண முடியும்?? ‘பொட்டச்சி’ தான என்று அவர் காதுபட இழிவாக பேசிய போதும் சரி…. அவர் துவண்டு விடவில்லை, மாறாக தனக்கு உதவ முன் வந்த தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் ஒரு பார்வையில் மறுத்தவர் அவர்களிடம் கேட்டது என்னவோ ஒன்றே ஒன்று தான்..

அவங்கள மாதிரி நீங்களும் என்னால ஒன்னும் செய்ய முடியாதுனு நினைசீங்கனா இப்பவே சொல்லிடுங்க…. நானும் எம் பிள்ளைகளும் எங்கையாவது கண்காணாத இடத்துக்கு போயிட்றோம்… இல்லனா என சொன்னவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து என்மேல நம்பிக்கை இருக்குனு சொன்னீங்கன்னா!!! இதோ உங்களுக்கு பக்கத்துல தான் எங்கையாவது?? உங்க கண்ணுக்கு படற மாதிரி எங்க புது வாழ்க்கையை ஆரம்பிப்போம்… ஆனா இதுல எப்பயும் உங்க தலையீடோ உதவியோ எந்தவிதத்திலும் எங்கள வந்து சேரக்கூடாது… இதுக்கெல்லாத்துக்கும் சம்மதம்னா சொல்லுங்க என சொன்னவர் இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்பது போல் தன் இரு பிள்ளைகளையும் இரண்டு புறம் பிடித்துக் கொண்டு நிமிர்வாக நின்றாரே கண்ணில் அனல் கக்கும் கண்ணகியாக!!! அந்த நிமிர்வு தான் அங்கிருந்த மொத்த கும்பலையும் ஒரு வினாடி அசைத்துப் பார்த்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, அவர்களை அதற்க்கு மேல் பேசவிடாமல் செய்ததும் அதுவே தான்..

அவரின் குடும்பத்தினருக்கு… அடுத்து அவரை எதிர்த்து பேச துணிவு வந்திடவில்லை, அவரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் ஆயிற்றே, எத்தனை மென்மையானவரோ அதை விட ஆயிரம் மடங்கு வைராக்யமானவர் எடுத்த காரியத்தை முடித்தே ஆக வேண்டும் என்பதில்.. அன்றோடு தன் சொந்த பந்தம் அனைவரிடமிருந்தும் விலகியவர்தான்… இன்று அவர்களே வாயின் மேல் கை வைத்து பேசுமளவிக்கு தன் பிள்ளைகளை உருவாக்கி இருக்கிறார்!!!

அவரின் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களையும், ஏளனங்களையும் சந்தித்திருக்கிறார் அதற்காக அவர் உடைந்து உட்கார்ந்து விடவில்லை… ஆரம்ப காலத்தில் அவர் கையில் அவர்களின் வாழ்க்கைக்கு ஆதுரமாக இருந்தது என்னவோ அவரின் இளங்கலை பட்டமும், பி.எட்டும் மட்டுமே.. அதற்காக இன்றளவும் தன் தந்தைக்கு தினமும் தன் மனதில் நன்றி உரைத்து கொண்டிருக்கிறார்..

அதனை தகுதியாக வைத்து தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சேர்ந்தவர்.. ஒற்றை அறை கொண்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்... தன் பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்கு ஏதாவது தன் சொந்த செலவில் செய்ய வேண்டும் என்று சேர்த்து வைத்திருந்த தொகையில் இருந்து… அப்பொழுது அவர் பிள்ளைகளில் பெரியவள் ஒன்பதாம் வகுப்பும், சிறியவள் ஏழாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தனர்..

அவர்கள் இருவரையும் அழைத்தவர் பேசியதென்னவோ பெரிய சொற்பொழிவெல்லாம் இல்லை!!! தன் மகள்களுக்கு நம்பிக்கை எனும் ஆயுதத்தை சொற்களின் மூலம் கொடுக்க நினைத்தார் அவ்வளவே…

இங்க பாருங்க பாப்பா இந்த உலகம் ரொம்ப பெருசு… இதுல நம்மளும் ஒரு ஆளா தெரியணும்னா அதுக்கு தைரியம் ரொம்ப முக்கியம்... அதுவும் பொண்ணுங்களுக்கு அது கொஞ்சம் அதிகமா தேவைப்படும்.. அப்படி ஒரு நம்பிக்கையை வேற யாராலும் நமக்கு தந்துட முடியாது படிப்ப தவற… சோ அத கெட்டியா புடுச்சிக்கோங்க… உன் சொந்த காலுல உன்னால நிக்க முடியும்னு நிலைமை வர வரைக்கும் யாரையும் நம்பாத..

இது எல்லாத்துக்கும் மேல…. என கூறியவர் அவர்களை கட்டியணைத்து கண்களில் வழியும் கண்ணீரோடு,
நமக்கு யாருமில்லைனு எப்பையுமே உங்களுக்கு நினைப்பு வந்துடக் கூடாது.. உங்க ரெண்டு பேருக்கும் அம்மா நான் இருக்கேன்.. எனக்கு நீங்க ரெண்டு பேருக்கும் இருக்கீங்க என்ன புரியுதா?? என அவர் தனக்கும் சேர்த்து கேட்க.. அந்த வயதில் அவர்களுக்கு என்ன புரிந்ததென்று அவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று...

ஆனால் தங்கள் அம்மா அழுகிறார் என தெரிந்தவுடன் அவர் கண்களை துடைத்தவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ஒரே நேரத்தில்..

எங்க அம்மாக்கு நாங்க இருக்கோம்… எங்களுக்கு எங்க அம்மா இருக்காங்க சரிதான மா!!! என்று கேட்க, வீட்டில் அத்தனை பேரையும் நிமிர்வாக சமாளித்தவர் இந்த மழலைகளின் முன்னிலையில் தன் பலம் மொத்தம் கரைய வெடித்து அழுதிருந்தார் அவர்களின் அணைப்பில் சில நிமிடங்கள்…

அவர் வருமானம் மிகவும் சிறிது என்பதால் தன் பெண்களை ஆங்கில வழியில் இருந்து தமிழ் வழி பள்ளிக்கு மாற்றியிருந்தவர்.. அதற்காக கிஞ்சித்தும் வருத்தப்பட்டதில்லை.. 'மொழி' என்பது வெறும் வார்த்தை தொடர்பிற்கு மட்டுமே தவிற… அறிவை வளர்ப்பதற்கு இல்லை என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்.. எனவேதான் தன் சம்பளம் உயர்ந்த போதும் சரி.. அவர்களை தமிழ்வழி பள்ளியிலே பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்… மேலும் தாய்மொழி தமிழிலே அறிவு மற்றும் மன சம்பந்தமான அனைத்தையும் கற்று கொடுத்திருந்தார்,

அன்று அவர் கூறிய வார்த்தைகள் எத்தனை தூரம் அவர்கள் மனதில் பதிந்தது என கேட்டால் அதற்க்கு அவரிடம் பதிலில்லை ஆனால் அவர் இந்நாள் வரை அறியாத ஒன்று... தன் சொற்களை விட தன் செயல்களே அவர்கள் இத்தனை சிறப்புடன் வளர காரணமென்று..

எத்தனையோ ஏச்சுகள் கேட்ட போதும் நின்று விடாத அவரது அயராத உழைப்பு அவர்களுக்கு ‘தன்னம்பிக்கையை’ விதைத்தது.. ஒவ்வொரு நாளும் இரவில் அனைத்து வேலைகளையும் முடித்து தன்னை தானே செதுக்க படிப்பை உளியாக பயன்படுத்தியதை பார்த்தவர்களுக்கு... அது எந்த சூழ்நிலையையும் எதிர்த்து போராடும் ‘துணிவை’ கொடுத்தது.. தனி ஒரு பெண்ணாக இந்த ஆண் சமுதாயத்தில் நின்று தந்தைக்கு தந்தையாக… தாய்க்கு தாயாக அவர்களை வளர்த்தது.. அவர்களிடம் ‘மனதைரியத்தை’ மிக ஆழமாக ஊன்றி இருந்தது… இப்படியாக அவர்களின் வாழ்க்கையில் ஏணியின் படிக்கட்டுகளாக நின்றாரே தவிற… எதற்கும் தடை கல்லாக இருந்ததில்லை…

இத்தனை தைரியமிக்க தாய்க்கு பிறந்தவர்கள் தான் இந்த ரெண்டு ‘பெண் புலிகளும்’...

இயற்றமிழ்சுடர்- R.K மேரேஜ் ஈவெண்ட்டின் ஒரு பங்காளர்…
அதன் மூலம் தன் கனவை நிறைவேற்றியவள்… தன் தாயின் மறைமுக கனவை நாளை நிறைவேற்ற போகிறாள்…

எழில்நிலா- இப்பொழுதைக்கு ஒரு ‘ஜர்னலிஸ்ட்’

அவர் வாழ்க்கையின் பின் பக்கங்களை வேகமாக ஒருமுறை புரட்டி பார்த்ததில், வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களால் கண்ணில் கண்ணீரும்…. தன்னுடைய மொத்த துன்பத்தையும் ஒன்றுமே இல்லாமல் மாற்றிய தன் பிள்ளைகளை நினைத்து பெருமைப்பட்டவரின் உதடுகளில் பெருமை பொங்கிய சிரிப்பும் அடங்கி இருக்க, அவர் தன் பெரிய மகளை ஏறிட்டு பார்த்தார்…

அவரின் முக மாறுதல்களை வைத்தே எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை கண்டு பிடிப்பவள்.. இப்பொழுதைய அவளின் அம்மாவின் நிலையை உணர்ந்து அழக்கூடாது என்பது போல் தலையசைத்து அவருக்கு செய்கை செய்ய, அவரும் தான் அழமாட்டேன் என்ற பதிலை தலையசைப்பாலே சொன்னார்..

அன்பு செயல்களால் மட்டுமே உணரப்படுவதில்லை…. புரிதலிலும் வளர்ந்த்து விருட்சமாகிறது என்பது மறுக்க முடியாத உண்மை…

நேசம் உயிர்க்கும்…1104011041


 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ பிரண்ட்ஸ்,
இந்த பதிவை ரெண்டா குடுக்கிறேன்.. இதை ஸ்பெஷலா எல்லா தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் 🙂🙂... படிச்சிட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க.. போன அத்தியாயத்துக்கு லைக் மற்றும் கமெண்ட் போட்ட எல்லாருக்கும் நன்றி 🙏😍😍.. அடுத்த பதிவை சீக்கிரம் கொடுக்க பாக்கறேன்...
 
Status
Not open for further replies.
Top