All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "உயிர்த்தெழ செய்வாயா எனதாகிய உன்...???" - கதைத் திரி

Status
Not open for further replies.

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் பதினான்கு:-
1155811559

தலைநகர் சென்னை மாநகரம் எல்லாருக்கும் பெருமையை வாரி வழங்கும் இடம்!!! இன்றும் நிற்காமல் வழங்கி கொண்டுதான் இருக்கிறது கடமையை எந்தவித பலனையையும் எதிர்பார்க்காது செய்து முடிக்கும் அன்னையை போல்….

ஆனால் நம்மில் பலபேர் சாதாரணமாகவே இருந்திருக்கலாமோ என வருந்தும் அளவுக்கு குப்பையின் தலைநகரமாக விளங்குகிறது நம் சென்னை!!!!! எங்கே நிறுத்தி விட்டார்களா???

பூமிமாதாயை தொந்தரவு செய்தது போனால் போகிறதுதென கொஞ்சமே கொஞ்சம் விட்ட மனிதகுலம் கடலன்ணையை எந்த பாகுபாடுமின்றி வஞ்சகம் தீர்த்துக் கொண்டிருக்கிறோம் அங்கு வாழும் உயிரினங்களையும் பொருட்படுத்தாது…

நம் தலைநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் அடையாரிலே நம் இந்தரின் இல்லம் அமைந்திருக்கிறது அங்கிருந்துதான் அவன் பயணம் தொடங்கியது அவளின் வெற்றியின் பூரிப்புடன்......

தன் வெற்றியோ மூளையின் நரம்போடு இறங்கிவிட… அவனவளின் வெற்றியோ மூளையின் நரம்புகளின் வழியே இதயத்தை அடைந்து மொத்த அணுவையும் சில்லு சில்லாக துள்ளி குதிக்க வைக்கும் மாயம் என்னவோ?? அவளாக அவனே!!!!!

அவளின் வாகனம் கிளம்பிய மறுநிமிடமே அவனுக்கு உரைத்தது இத்தனை பெரிய விஷயம் தன்னிடமிருந்து மறக்கப்பட்டிருக்கிறது என்று… ஆம் மறைக்கத்தான் பட்டிருக்கிறது ஆனால் யாரால்??

அவனுக்கு தெளிவாக புரிந்து போனது ஒரு விஷயத்தை தன்னிடம் இருந்து ஒருவனால் மட்டுமே மறைத்து வைக்க முடியும் அதுவும் சிறிதுகூட சந்தேகம் வராமல் என்பது…. அவனை கொன்று புதைத்து விடும் ஆத்திரத்தோடு தொடர்புக்கொள்ள…

எதிரிலிருந்தவனின் தொல்லை பேசியோ “தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்பதை தமிழியில் சொல்லியிருந்தால் கூட அவனுக்கு இத்தனை கடுப்பு ஏறியிருக்காது… அதுல இந்தியில செம்மையா ஒரு பொண்ணு செப்புச்சு பாருங்க அதுலதான் நம்ப விஜய்க்கு சுற்றென்று ஏறியது….

மகனே நான் கால் பண்ணுவேன்னு தெரிஞ்சுக்கிட்டே போன ஆஃப் பண்ணி வச்சிருக்கியா!!!! இருடி வரேன்… என்று கருவியவன் அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை கச்சிதமாக செய்து முடிக்க… அதற்கான எதிரொலிப்பாக விஷ்ணு அலறியடித்துக் தன் நித்திரையில் இருந்து எழுந்திருந்தான் வீட்டினுள் கேட்ட அழைப்பு மணியின் ஓசையில்….

மணியோசையின் சத்தத்தில் கோபம் அடைந்தவன் கதைவை சென்று திறக்க, அங்கோ அவன் அடுக்குமாடி கட்டிடத்தின் காவலாளி பயந்த படியே கையில் தொலைபேசியுடன் நிற்க… அவர் நின்றிருந்த கோலத்திலே இந்த செயல் யாருடையது என்று தெளிவாக அறிந்துக் கொண்டவன் மனதில்,

அடேய் விஷ்ணு செல்ல அணைச்சி வைக்க தெரிஞ்ச உனக்கு!!!! மண்டைமேல இருக்க கொண்டைய மறந்த மாதிரி இவர மறந்துட்டுயேடா…. என்று தலையில் அடித்துக்கொண்டவன்…

அவரிடம் செல்லிற்காக கையை நீட்ட அவரோ எப்பொழுதாவது இப்படி நடப்பதுதான் என்பதுபோல் அவனிடம் செல்லை கொடுத்தவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார்… விஷ்ணுவோ ஏதோ அணுகுண்டை கையில் வைத்திருப்பதுபோல் அதனை வெறித்து பார்த்தவன்

சரி வரது வரட்டும்… என்று எண்ணி செல்லை காதில் வைத்து…

மச்சி!!!! என்று அழைக்க,

விஜய்க்கோ அவன் அழைத்ததெல்லாம் காதிலே விழவில்லை நேராக விஷயத்துக்கு வந்தவன்…

எந்த ஊர்ல போஸ்டிங்??? என்பதுடன் நிறுத்திவிட,

அவனோ எதிர்புறம் செல்லை எடுத்து பார்த்தவன் காதே கிழிய போகுதுன்னு நினச்சேன் என்று மனதில் நினைத்து…

காஞ்சிபுரம் டா…. மெதுவாகத்தான் சொன்னான்…

எதிரில் இருந்தவனுக்கோ அத்தனை பொறுமையெல்லாம் இல்லை… இருக்கும் கொஞ்ச நஞ்சமும் இப்பொழுதோ அப்பொழுதோ பறந்துவிடுவேன் என ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்க இவனின் பேச்சில் அதுவும் இதோ ஓடிவிட்டேன் என ஓடியே போய்விட்டது….

நீயெல்லாம் ஒரு நண்பனாடா??? உன்ன நம்பி ஒரு வேலை குடுத்ததுக்கு நல்லா வச்சி செஞ்சுட்ட போல??? என சூடாக வந்தது விஜயிடமிருந்து கேள்வி,

மச்சி தங்கச்சிதான்டா சொல்ல வேணாம்னு சொல்லுச்சு!!!! என இழுக்க,

ஓ தங்கச்சி!!!! இது எப்பத்தில இருந்து…. அப்ப உன் தொங்கச்சி என்ன சொன்னாலும் செய்வ அப்படித்தானா??? என வழுக்கிக் கொண்டு வார்த்தை விழ…

ஏதோ பூடகமாகத்தான் பேசுகிறான் என்று தெளிவாக தெரிந்தாலும் விட்டுக்கொடுக்க நினைக்காதவன்,

இயல் என் தங்கச்சிடா அவ எது சொன்னாலும் கண்டிப்பா செய்வேன்!!! என எஃகை போல வார்த்தை உறுதியுடன் வர,

வீட்டில் காரை எடுத்து கேட்டில் இவனிடம் கேட்டுவிட்டு செல்லலாம் என காத்துக் கொண்டிருந்தவனுக்கு அத்தனை ஆச்சரியம்… எப்படி இது சாத்தியம்!! மிஞ்சி போனால் ஒரு இரண்டு வருடம் அவளை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் அதற்காக இப்படி பாசமும் அன்பும் வைக்க முடியுமா??? ஒருவரின் மீது!!!! என நினைத்தவன்… அவனை ஆழம் நோக்கும் எண்ணத்தில் அடுத்த கேள்வியை வீசியிருந்தான்,

செம்மடா விஷ்ணு!!!! அப்ப உன் தங்கச்சி என்னைய கொல்ல சொன்னா கொன்னுடுவியா??? என்ற அர்த்தம் பொதிந்த கேள்வி விஜய்யிடமிருந்து அமைதியாக,

அந்த பக்கமோ ஒரே ஒரு நொடி அமைதி,

ஹாஹா மச்சி நல்ல கேள்வி!!! ஆனா பாரேன் இல்லன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன்… இயலுக்கு அண்ணனா உன்ன முதல கொன்னுட்டு உனக்கு நண்பனா இயல அப்பறம் கொன்னுடுவேன்…. ஏன்னு யோசிக்கிறியா?? நீயில்லாம தங்கச்சி கண்டிப்பா இந்த உலகத்துல இருக்காது பாரு…

உன்னை நான் அறிவேன் என பதில் சொல்லியிருந்தான் அந்த மித்ரனுக்கான மித்ரன்!!!

இவனின் காஞ்சிபுரம் என்ற பதிலின் முடிவிலே தன் வாகனத்தை விரைந்து செலுத்த ஆரம்பித்தவனின் இதழில் இத்தனை வேகத்திலும் சிறிதான சிரிப்பு…. இதைவிட அழுத்தமாக தங்களின் காதலை ஒருவனால் உணர்வுபூர்வமாக தனக்கே உணர்த்த முடியாது என்பதை அவன் பதிலில் உணர்ந்தவன்,

மச்சி இருந்தாலும் இப்டி அநியாயத்துக்கு அண்ணனா இருக்கக் கூடாதுடா!! என்று வாய்விட்டு விஜய் சிரிக்க….

அவன் சிரிப்பில் சீரியஸாக பேசிக்கொண்டிருந்த விஷ்ணுவோ ஆசுவாசம் அடைந்தவன் கெத்தாக,

அண்ணேண்டா!!!!! என்று சொல்ல,

போதும் போதும் உன் அண்ணன் புராணம் உன் பாசமழையதான் பாக்கப்போயிட்டு இருக்கேன்.. வந்து உன்ன நான் பாத்துக்குறேன்!!!! என்று மிரட்டி செல்லை அணைத்த இந்தரின் கையில் பறக்க ஆர்மபித்த வாகனம் நின்றதோ இயலின் வாகனத்தின் முன்….

இயலின் வாகனத்தை ஒட்டிக்கொண்டு வந்தவர் என்னத்தான் நிதானமாக வந்தாலும் இப்படி திடுதிடுப்பென்று தங்கள் வண்டியின் முன் மரித்தார் போல நிற்கும் வாகனத்தை கண்டு பிரேக்கை அழுத்தியதால் இருவரும் இருக்கைக்கு முன்பக்கம் வந்தவர்கள் பின்பக்கம் சென்று வேகமாக மோதிக்ககொண்டனர்…

துளியளவும் இது அவருடைய பிழையில்லை என்றாலும் இதுவரை அவர் பார்த்த பல அதிகாரிகள் கோபம் என்று வந்தால் அவர் மீதே அது பாய்வார்கள் என்பதால் கண்ணில் ஒருவித எதிர்பார்ப்பு ஏன்??? இத்தனை நாளைய அனுபவம் அல்லவா… என்ன வந்தாலும் இந்த காதில் வாங்கி அடுத்த காதில் விட வேண்டுயதுதான் என்ற நினைப்போடு இயலை திரும்பி பார்க்க,

அண்ணா அது யாருன்னு எனக்கு தெரியும் நீங்க கிளம்புங்க நான் வந்துடறேன்… என்று சொன்னவள் இறங்கி கதவை சாற்றிய பின் அவரை பார்த்தவள்,

மன்னுசிடுங்கண்ணா உங்கள இவ்ளோ தூரம் அலையவச்சதுக்கு!! என்று கனிவுடன் மன்னிப்பு வேண்ட…

அவரோ பேச வார்த்தைகளின்றி தலையை மட்டுமே ஆட்டிவைத்தார்… எதிர்பார்ப்பு அது கெட்டதாக இருப்பினும் நிறைவேறாத போது ஒருநிமிடம் ஏமாற்றம் அடையும் நாம்… அதற்க்கு மேல் எதிர்பாராத ஒன்று நடக்கும் போது அதிர்ச்சி அடையதான் செய்வோம் பேசமுடியாமல் என்பது இங்கு சுப்பிரமணிக்கு நேர்ந்தது….

எனக்கு முப்பது வருஷ சர்வீஸ்மா…. இத்தனை வருஷத்துல எத்தனையோ அதிகாரிகளுக்கு வண்டி ஒட்டியிருக்கேன்.. அதுல விதவிதமா எத்தனையோ பேர்.. சில பேர் என்னலாம் ஒரு மனுஷனா நினைச்சி கூட பேசமாட்டாங்க… டிரைவர் இல்லையா!!! அதனால ஒரு அலட்சியம்…. ஆனா நீங்க?? தப்பே இல்லனாலும் மன்னிப்பு கேக்கறீங்க அதும் தமிழ்ல என்று அவர் நிறுத்த,

அவளின் பார்வையிலே குழப்பத்தை புரிந்து கொண்டவர் சிரித்துக்கொண்டே,

சாரின்னு ஆங்கிலத்துலையோ வேற மொழிலையோ ஈசியா சொல்லிடலாம் ஆனா அத நம் தாய்மொழியில சொல்லும் போதுதான் அதோட அர்த்தத்தை உணர்ந்து சொல்லுவோம்.. அதனாலதான் நிறையபேர்க்கு தமிழ்ல சொல்ல வாய்வர மாட்டேங்குதுமா…. இப்ப நீங்க சொல்றதை கேக்கும்போது அதுதான் நினைப்பு வந்துச்சு என்று சொல்ல,

இயலுக்கோ அவர் பேசிய விதத்திலே அவரின் குணத்தை உணர்ந்து கொண்டவள்….

அண்ணா சூப்பர் போங்க… உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கும் போலையே!!! வெயிட்டிங்ணா நாளையிலிருந்து ஓகே!! என்று அவரை போலவே சிரித்துக்கொண்டே எந்தவித விகல்பமும் இல்லாமல் சொன்னவள் அவள் கணவனின் காரில் ஏறியிருந்தாள்….

நம் சமுதாயம் மரியாதையுடன் ஒருவனை பார்க்க வேண்டுமென்றால் அதற்கான முதல் அடிப்படைத் தேவை பெரிதாக ஒன்றுமில்லை… வேலையில் இருக்க வேண்டும் அவ்வளவே!! அதுவும் அரசாங்க வேலையென்றால் வாயை திறந்து பார்க்கும்….

அப்படிப்பட்ட கௌரவமிக்க வேலையால் ஒருவன் எத்தனை அவமானங்களை சந்திக்கிறான் என்பது அவர்களுக்கு தேவையில்லாத ஒன்றாகிவிடுகிறது….. இது எல்லா வேலைகளுக்கும் பொருந்துமென்றால் ஆகாது!!!

எல்லாயிடத்திலும் கீழ்நிலையில் இன்றும் இதிலிருந்து வெளியேற முடியாமல் அவதிப்படுகின்ற பலரின் வாழ்க்கை விதியின் கோரத்தாண்டவத்தில் அழகாக மறைக்கப்பட்டு நம்மில் பலரிடமிருந்து விலக்கப்பட்டிருக்கிறது என்பதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டே நம் மணி அவர்களின் வார்த்தைகள்!!!!!

இங்கு வண்டியில் இயல் ஏறியவுடன் தன் காரை எடுத்தவன் வாயை திறக்காமல் ஓட்ட,
அவனிடம் எதையோ எதிர்பார்த்தவள் ஒன்றும் நடக்காமல் போகவே கண்ணை மூடி காரின் இருக்கையில் சாய்ந்துவிட்டாள் இது ஒன்றும் புதிதல்லவே எனும் எண்ணத்தோடு… வாயை திறந்து அவன் ஏதாவது சொல்லிவிட்டால் தானே எட்டாவது அதிசியம்….

அரைமணிநேரத்தில் வண்டி நிற்க அதையுமே வண்டியின் ஹார்ன் சத்ததிலே உணர்ந்தவள்…

அதுக்குள்ள காஞ்சிபுரம் வந்துடுச்சா?? என்று சிந்தனையுடன் கண்ணை திறக்க வண்டியோ பூவிருந்தவல்லியில் தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்தவள் தன் கணவனை பார்க்க,

அவனோ இவளை பார்த்து புன்னகை பூத்தவன் கண்ணாலே சென்று வா என சொல்லி இருக்கையில் சாய்ந்தவன் நன்கு அறிந்த ஒன்றுதான் அவள் அம்மாவை இந்த தருணத்தில் எத்தனை மிஸ் செய்வாள் என்பது…

இயலுக்கோ தன்னுள் இறுகி இருக்கும் ஏதோ ஒன்று தளரும் உணர்வு இருந்தும் அதனை தன்னுள்ளே நிறுத்திவிட்டு, வண்டியிலிருந்து இறங்கி தன் அம்மாவை காணும் ஆவலில் இந்தரை மறந்து ஓடியவள் ஐந்தே நிமிடத்தில் முகம் முழுக்க புன்னகையுடன் வந்து சேர்ந்து,

போலாம் இந்தர் என்று சொல்ல,

சரியென்று தலையாட்டியவன் வண்டியை எடுக்க,

இப்பொழுதாவது ஏதாவது சொல்வான் என அவனை கண்டவளுக்கு எதையும் தரவில்லை நம் தலைவர்…. (செல்லமே எதிர்பாக்குது!!!! மக்கு மடசாம்ராணியா இருப்பான் போலையே?? )

இந்தருக்கோ இவளை குமரி என்று சொல்வதா குழந்தை என்று கொஞ்சுவதா என்று சந்தேகம்…. இன்று ஒரு மாவட்டத்தின் சப் கலெக்டர்!! ஆனால் தன் அம்மாவை பார்க்க போகிறோம் என்றவுடன் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி குமரியவளின் திருமதியென்னும் அந்தஸ்தையே அவள் கணவனை சந்தேகிக்க வைத்தது பாசப்பிணைப்பு தாய் சேய் பிணைப்பல்லவா!!!!!

பெங்களூரு நெடுஞ்சாலை காலை ஏழு மணிக்கும் நிற்காத பரபரப்புடன் காணப்பட இருவரின் மனதிலும் தென்றல் நழுவும் தருணம்…. மீண்டும் வண்டி சாலை ஓரத்தில் நிற்க, வண்டியின் சாளரத்தை இறக்கி.... செல்லும் வழியை முகத்தில் காற்றுபட பார்த்துக் கொண்டு வந்தவள், இப்ப என்ன என்பதுபோல் பார்க்க,

கையை கட்டிக்கொண்டு அவளின் ரசனையை ரசித்தவன் அவளின் விழி கேள்வியில் கையின் ஆட்காட்டி விரலை தங்களின் இடதுபுறம் காண்பிக்க, இவன்புறம் இருந்தவளோ அவன்காட்டிய திசையை நோக்க,

காண்பதோ உட்கார்ந்த நிலையில் தலையில் பிறைநிலாவுடன் கையில் வேலாயுதத்தை வைத்து வழியில் சென்று வருவோருக்கு எனக்காக நின்று செல்லாதே!! என்று சொல்வதுபோல் வெளிப்புறத்தில் கம்பீரத்துடன் வீற்றிருந்த சிவபெருமானைதான்!!!!

மனம்முழுக்க ஏதோ ஒரு உணர்வு இயலுக்கு... மூலையில் ஒளிந்துக் கொண்டிருக்கும் அவளின் ஏக்கம் அமிழ்ந்த இடத்திலிருந்து வெளியில் வர, சரியாக அந்த நேரத்தில்… இப்பொழுதிருக்கும் மகிழ்ச்சியான தருணத்தை கெடுத்துக் கொள்ள போகிறாயா? என அவள் மனசாட்சி கேள்வி கேட்க,

சட்டென்று இறந்தகாலத்தின் நினைவுகளுக்கு செல்ல துடித்த மனதை இழுத்து பிடித்தவள் அவள் கணவனை அழைத்திருந்தாள் கடவுளின் தரிசனத்திற்கு…

இந்தர் வாங்க போய் சாமி கும்பிட்டு வரலாம்… என்று அழைக்க,

இவனோ தான் சொன்னவுடன் முகம்மலர சிவனை கண்டவளையும் அதன்பின் நொடி பொழுதுக்கு அவள் முகத்தில் தெரிந்த வலி நிறைந்த குழப்பத்தையும் கண்டவன்… அவளின் அழைப்பில் சாதாரணமாக முகத்தை வைத்து,

ஹே லூசி நான் குளிக்கவே இல்லடி… என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்து சொல்ல,

அவன் முகம்போன போக்கை பார்த்து சிரித்தவள்,

அதெல்லாம் நம்ப சிவா கோச்சிக்கமாட்டாரு வாங்க பாஸ்… என்று கடவுளுக்கும் செல்ல பெயர் வைத்தவள் இந்தரின் கையை பிடித்து இழுக்க,

அவளின் ஆசையை நிறைவேற்ற அவளுடன் சென்றவன் கடவுளின் முன் கண்மூடி நின்றிருந்தான் வேண்டுதல் ஏதுமின்றி, ஆனால் அவர் பக்தைக்கோ வேண்டி நிற்பது அதிகம் போல
ஐந்துநிமிடம் தொடர் பிராத்தனை,

அவள் அருகில் கண்ணை திறந்து பார்த்தவனோ சுற்று புறத்தை நோட்டம்விட பூசாரியில்லை.... பூஜைகளில்லை... கோவில்மணி ஓசையும் கேட்கவில்லை… கோவில் பெரிதான கட்டிடமும் இல்லை!!!ஆனால் தன்னவளுடன் அவர் முன் தனிமையில் நீண்ட காலத்திற்குபின் நிற்பது அவனுள் நான்கு வருடம் கழித்து நம்பிக்கை விதையையும், அமைதியும் சேர்ந்தே விதைத்து விட்டது போல் இருக்க…

அவள் வேண்டி முடிக்கும் மட்டும் அமைதியாக இருந்தவன் முடித்தவுடன் கை செய்கையின் மூலம் முன்னே செல் என்று சொன்னான்...

கடவுளை மனமுருக வேண்டியதால் தெளிவான மனநிலையில் இருந்தவள் இவனின் செய்கை மொழியில் கடுப்பாகி அவன் கையை அழுத்த பிடித்தவள் அவன் என்னவென்று இவளை பார்க்கும் நேரம் கையை உயர்த்தி அவள் கைப்பையில் இருந்து எடுத்த விபூதியை இந்தரின் நெற்றியிலிட்டவள் தன்னிச்சையாக மூடிய அவன் கண்ணை பார்த்துக் கொண்டே எம்பி அவன் மூக்கின் மேல் கைவைத்து ஊதிவிட்டு அவனை முறைத்துக் கொண்டே அவர்கள் வாகனத்தில் ஏறி அமர்த்துவிட்டாள் அவனை மனதினுள் வறுத்துக் கொண்டே…

இந்தருக்கோ குறும்பு தலைதூக்க இன்னும் கொஞ்சநேர விளையாடி பார்க்கத்தோன அமைதியாகவே காரை எடுத்தவன் நேர்வழியில்லாமல் குறுக்குவழியில் தனக்கு சாதகமான ஆள் அரவமற்று காணப்படும் சாலையில் வண்டியை செலுத்த அந்த வழியின் முடிவோ பூக்கடைச் சத்திரத்தின் ஆரம்பம்….

அவளுக்கோ இது கண்கொளா காட்சிதான்!!! பார்த்தவுடன் மனம் நிறையும் காட்சி சிவனது!!!! அதுவும் இந்த நாளில்... அவளை பொறுத்தவரை அவளுக்கு அவளின் இன்பதுன்பங்கள் இரண்டிலும் அதிகம் தேவைப்படுபவர்கள் இரண்டேபேர்தான்.. ஒன்று தன்னை படைத்தவள் மற்றொன்று தன் தாயின் வழிகாட்டுதலால் படைத்தவர்கள் என்று தெரிந்துகொண்டவர்கள்…

இன்றோ தன் பணியின் முதல் நாள் சீக்கிரம் சென்று பணியிடத்தை அடைய வேண்டும் என்ற பரபரப்பு… தன் அத்தையின் இல்லத்தில் இருப்பதால் அம்மாவையும் சென்று பார்க்க முடியாது செல்லும் வழியென்றாலும்…. தன் சொந்த வேலைக்காக பணியிடத்தில் உள்ளவர்களை அலைக்கழிப்பது அவளுக்கு அறவே பிடிக்காதென்பதே இதற்கான முக்கிய காரணம்….

வீட்டைவிட்டு கிளம்பும் போது இந்தர் தன்னை தேடி வருவான் என்று அறிந்துதான் இருந்தாள்… ஆனால் இத்தனை விரைவில் அவள் எதிர்பார்க்காத ஒன்று!!! அதுவும் தன்னிடம் எதுவுமே கேட்காமல் தன் அன்னையை பார்க்க அழைத்து சென்றது ஆச்சரியம் என்றால் கடவுள் தரிசனம் அவளால் விவரிக்கவே முடியவில்லை தன் இந்தருக்கு தன்னை இத்தனை புரிந்திருக்கிறதா என்பதுதான் உச்சகட்ட ஆனந்தம் அவளுக்கு அதுவும் அவன் ஸ்டைலிலே பேசாமல் செயலில் காண்பித்துவிட்டானே!!!! என்ற யோசனையில் வந்தவளுக்கு கார் நின்றதும் தெரியவில்லை அதை ஒட்டியவன் அவளை பார்ப்பதையும் அறியவில்லை…

இந்தருக்கோ இதற்குமேல் பொறுமை என்ற சொல் தன் அகராதியில் இருந்து மொத்தமாக தூக்கி எரிந்துவிடவே தோன்றவே... அதை செயல் படுத்தும் நேரம், ஏதோ போனால் போகிறது என அவள் மனையாள் அவன்புறம் திரும்பி தரிசனம் தர,

சபா திரும்பிட்டா!!! என்று மனதில் நினைத்தவன் அவளை பார்த்துக் கொண்டே,

ஆமா வீட்ல ஏதோ கேட்டியே என்ன கேட்ட என்று தன் காரின் ஸ்டேரிங் மேல் வைத்திருந்த கையில் தாடையை பதித்து கேட்க,

அவளிற்க்கோ பக்கென்றானது…
இந்தர் இது என்ன புதுசா நடுரோட்ல நின்னுட்டு… முதல வண்டிய எடுங்க போலாம் வேலைக்கு நேரம் ஆகுது!!! என்று இவன் எதை சொல்ல வருகிறான் என சரியாக தவறாக எண்ணியவள் சொல்லி முடிக்கும் போது அவனை பார்க்க முடியாமல் வெளிப்புறம் பார்க்க,

தான் பேசி முடித்தவுடன் அவளின் எண்ணம் எங்கு செல்கிறது என்று சரியாக கணித்தவன்.... மாமன்கிட்டயேவா!!!!! என்று மனதில் நினைத்தவன்,

அடியேய் பொண்டாட்டி… அது என்ன திட்டும்போதும் கோவம் வரும்போது மட்டும் மூக்க பாத்து பேசறது மத்த நேரத்துல திருபிக்கறது… இது எந்த ஊரு நியாயம்டி முட்டைக்கண்ணி!!! என்று சொன்னவனின் உயரமோ ஆறடி நான்கங்குளம் இவளோ ஐந்தடி ஆறங்குளம்… அந்த வித்தியாசத்தையே கிண்டலாக இந்த நியாயக்காரன் கேட்க,

இதற்க்கு முன் நடந்த மொத்தத்தையும் மறத்தவள் அவனை ஏதோ சொல்ல திரும்பிய மறுகணம் அவள் பின்னந்தலையில் ஒரு கை நுழைய மற்றொரு கையோ அவள் சீட் பெல்ட்டை நொடிப்பொழுதில் கழட்டி அவள் இடுப்பில் அழுத்தமாக படர்ந்து அவளை முன்னிழுத்தவன் இயல் சுதாரிக்கும்முன் அவள் அதரங்களை உள்வாங்கி தன் அதரத்தை மேல் பொருத்தியிருந்தான் அவள் சேலையை கசக்காமல்!!!!!

பார்வையால் மட்டும் காதலை உணர்த்த முடியும் என்பதற்கு மாறாக தன் இதழ் முத்தத்தின் மூலம் இயலுக்கு!!!!! அவளை உள்வாங்கி இவனை வெளிபடுத்தி காதலை பரிமாறிக் கொண்டிருந்தான் அந்த காதல் கயவன்….

இதழ்முத்தம் காதலர்களுக்கு சில சமயம், நேசத்தின் எல்லையில் காமத்தின் ஆரம்பமாக பரிமாணம் அடைவது….. (காமம், நேசம் இரண்டும் ஒருவகை காதல்தானே!!!!)
சில நேரம் காயம்பட்ட ஒரு இதயத்திற்கு ஒத்தடம் கொடுத்து மற்றொரு இதயம் அந்த கனத்தை தன்னுள் பரிமாறி சுமப்பதாக மாறிவிடுகிறது!!!!

இந்த இரண்டாம் நிலையிலே நம் தம்பதிகள் இன்று இருக்கிறார்கள் நாளை என்னவோ??

அவளை விலக்க முடியாமல் பிரித்தவன் மூடியிருந்த இமை திறக்கும் சமயம்,

வாழ்த்துக்கள்டி பொண்டாட்டி!!!! என்று மனமாற சொல்லியிருந்தான் தன் வாழ்த்தை அவளுக்கு அவனை உணர்த்தி…

எனக்கு தெரிஞ்சு என் முட்டைக்கண்ணி எதிர்பாத்தது கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்!!!! என ஒற்றை கண்ணை அடித்து சொன்னவன் கிளப்பி இருந்தான் தன் ரதத்தை…. (தெய்வமே இப்பையாவது அந்த புள்ளைய அது ஆபிஸ்ல இறக்கி விட்டுடா முடியல!!!!!!!😟😟😟)

ஏற்கனவே இவன் அதிரடியில் வாயை இறுக மூடிக்கொண்டு அமர்த்திருந்த இயலோ இறக்கி விடும்போது அவன் கூறிய வார்த்தைகளில் மொத்த குழப்பத்தையும் குத்தகைக்கு எடுத்து அடியெடுத்து வைத்திருந்தாள் அவள் லட்சியப் பாதையில் இந்தரெனும் மகாபிரபுவின் புண்ணியத்தால்…. எங்கும் அவளுடன் அவனாக!!!

நேசம் உயிர்க்கும்……






 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பாஸ்🙏🙏🙏
அடுத்த அத்தியாயம் பதிவு செஞ்சிட்டேன்🙂🙂 படிச்சு பாத்து ஒரு வார்த்தை எப்டி இருக்குன்னு சொல்லிட்டு போங்க 😍😍... போன பதிவுக்கு லைக் மற்றும் கமண்ட் செஞ்ச எல்லாருக்கும் மிக்க நன்றி 😍😍😍
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி முன்னூட்டம்:-

ஒருவன் மூழ்கியிருக்கும் காதலை தேடி எடுக்க போராட!!!!

மற்றொருவனோ கிடைத்தும் கிடைக்காத காதலில் துவளும் தன்னவளை வார்த்தையால் உயிர்க் குலைக்க சாய்த்து... அது மட்டும் போதாதென்று பூவுடலையும் காயப்படுத்தி......

திருப்தியடைந்தானா இல்லவே இல்லை!!!! காதலே மாயம் என்றால் காதலர்கள்?????
யாரோடு யாரோ.....

பதிவில்......
 
Status
Not open for further replies.
Top