All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "உயிர்த்தெழ செய்வாயா எனதாகிய உன்...???" - கதைத் திரி

Status
Not open for further replies.

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் ஆறு பாகம் ரெண்டு:-
1112311125
மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பாடு மேஜையை ஒதுக்கி கொண்டிருந்தவள்... அவள் அம்மாவிடம்,

அம்மா இப்பொழுதைக்கு எங்களால மறுவீடு வர முடியாது, எப்ப முடியுமோ அப்ப சொல்றோம் மா… என தான் நாளைக்கு புது வேலையில் சேரப்போவதை மனதில் வைத்து அவள் சொல்ல,

அவரும் அதனை புரிந்து கொண்டு… சரிம்மா ஒன்னும் அவசரமில்லை... உனக்கும் விஜய்க்கும் எப்ப டைம் கிடைக்குதோ அப்ப வாங்க… என அனைவரும் கேட்கும் படி சொன்னவர்…

அவளை தனியாக சமையலறைக்கு செய்கையால் அழைத்து… மாப்பிளைக்கு உன் வேல விஷயத்த சொல்லிட்டியா இல்லையா?? என வினவ,

ஏன்?? உங்க மாப்பிள தான் பெரிய்யய ஆளாச்சே!!! நான் வேலைல சேர போறது கூடவா தெரியாம இருப்பாரு?? அதெல்லாம் பாத்துக்கலாம் விடுமா…. என சாவதானமாக உரைத்தாள்,

நீ ஏதோ மனசில வச்சிட்டு தான் இப்டி பேசறேன்னு எனக்கு புரியுது.. இருந்தாலும் இப்ப கல்யாணம் ஆயிடுச்சி, அவர் கூட தான் வாழ போற.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒளிவு மறைவுன்னு ஒன்னு ஆரம்பத்திலே வந்துட்டா வாழ்க்கையோட அடித்தளமே ஆட்டம் காண ஆரம்பிச்சிடும் சரியா… என சிறந்த தாயாக எடுத்துரைத்தவர்,

உனக்கு நான் சொல்ல வேண்டியது எதுவும் இல்ல, நீ ஒன்னுக்கு நாலு முறை யோசிக்காம எதையும் செய்ய மாட்ட அப்டினு எனக்கு தெரியும்டா..என்று அவள் தலையை மிருதுவாக வருடியவர் “நான் உன்னை நம்புகிறேன்” என்பதை சொல்லாமல் விட்டு சென்றிருந்தார் தன் அறைக்கு…

இது தான் என வரையறுக்க முடியாத புதிர் அவர், தேவையான நேரத்தில் அவர்களுக்கு ஆசானாக விளங்குபவர், தோள் கொடுக்க வேண்டிய நேரத்தில் அவர்களின் தேடலுக்கு முன் நின்றுப்பார் அவர்களின் தோழியாக!!!

தன்னறைக்கு சென்று தயாராகி வந்தவள் ஏற்கனவவே தயாராக இருத்தவனிடம் வந்து,

கிளம்பலாம்ங்க.. என புடவை மடிப்பை சரி செய்துக் கொண்டே சொல்ல..

இவள் கூறிய மறுவீட்டுக்கு வரமாட்டேன் என்ற செய்தி அவனுக்கு புதிது… ஏன் இப்டி சொல்றா?? ஈவென்ட் எதும் இருக்குற மாதிரி யாரும் சொல்லலையே!! அப்டியே இருந்தாலும் அந்த வானரங்க பாத்துக்க போகுது…. ரொம்ம்ம்ப சின்சியர் சிகாமணி!!! நானே ப்ராஜெக்ட்லாம் விட்டுட்டு இவ கூட நேரம் செலவழிக்கலாம்னு பாத்தா குண்டம்மா பெருசா ஏதோ பிளான் பன்றா போலையே என்னவா இருக்கும்??? என யோசித்து கொண்டிருந்தவன் அவளின் குரலில் இப்பொழுதைக்கு கேட்காமல் ஒத்தி வைத்தான்..

அத்த வரமாட்டாங்களா??? என்று கண்ணில் ஒரு எதிர்ப்பார்ப்புடன் கேட்க..

அவங்கள பத்தி தெரிஞ்சும் இப்டி கேட்டீங்கன்னா என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல?? நீங்கவேண்ணா கூப்டு பாக்கறீங்களா!!! என கேட்டவள் அப்படியாவது தன் அம்மா மாப்பிள்ளை கேட்டதுக்காக வந்து விட மாட்டாரா?? என்பது போல் நின்றிருந்தாள்,

வேணாம்டி... அவங்களுக்கா எப்ப வரணும்னு தோணுதோ அப்ப வரட்டும், நமக்காக அவங்கள தொந்தரவு பண்ண வேணாம்!! என அவள் மனதில் நினைத்ததிற்கும் சேர்த்து பதில் அளிக்க..

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… நல்லா மாமியாருக்கு ஏத்த மருமகன் தான்… என அவன் காதுப்படவே முணுமுணுத்தவள்.. தன் அம்மாவை அழைத்து வர உள்ளே சென்று விட்டாள்,

இவள….. என்னை கடுப்பேத்தவே டிசைன் பண்ணி இருப்பங்களோ?? ஒருநாள் இல்லனா ஒருநாள் இத அத்தகிட்ட கேட்டே தீரணும், செமையா டார்ச்சர் பன்றா திமிர் புடுச்சவ… என்று புலம்பி கொண்டிருக்க (கடைசி வரைக்கும் இப்படித்தான் நீ புலம்பணும் ராசா)

தன் அம்மாவுடன் வெளியில் வந்தவள் கண்களாலே அவருக்கு விடை கொடுக்க, அவளின் கையை பிடித்துக் கொண்டு தன் அத்தையிடம் வந்தவன்,

எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை… என்று அவர் காலில் விழுந்திருந்தான்,
அதில் மனம் நிறைந்தவர்….

வாழ்க்கையில எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருத்தரோடு ஒருத்தர் நான் உனக்கு இருக்கேன்!! அப்படிங்கற நம்பிக்கையோடு சீரும் சிறப்பமா வாழனும்… என்று தன் அனுபவத்தை அவர்களுக்கு வாழ்த்தாக சொல்லியவர் தோள் தொட்டு எழுப்பி இருவரையும் அணைத்து கொண்டார் ஆதுரமாக..

அவர் வாழ்த்தில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு அர்த்தப்பார்வையை நொடி நேரத்துக்குள் பரிமாறிக் கொண்டிருந்தனர்..

மனதில் ஓரத்தில் எழும் வலி மறைத்தாள் போய்விடுமா என்ன?? கணங்கள் ரணமாக மாறிமாறி பிழிந்தெடுக்கும் வித்தை என்னவோ??

அவரிடம் விடை பெற்றவர்கள் காரில் அவனின் வீட்டை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்..

இவர்களை வழி அனுப்பி விட்டு வாசலில் நிற்றவர்க்கு தன் மகளை நினைத்து அத்தனை பெருமை… ஒரு வயது வரும்வரை அவர்கள் இருவருக்கும் அவர் தாய்தந்தையுமாக இருக்க..
சிறு வயதில் இருந்தே அவள் தங்கை எழிலை பத்திரமாக பார்த்து கொள்பவள்.. என்று அவளிற்கு விவரம் தெரிய ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இவர்கள் இருவருக்கும் தாயுமாக தந்தையுமாக வாழ்ந்து வருகிறாள்.. சிறிய வயதிலே அத்தனை பக்குவப்பட்டவள்,

தன்னை தனியாக விட்டு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்னெடுத்து மெரிட்டில் அரசு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என சொன்னவள்… தான் எத்தனை எடுத்து சொல்லியும் இந்த விஷயத்தில் மட்டும் கேட்காமல் ஒதுக்கியிருந்தாள்.. அது மட்டுமில்லாமல் தங்கள் ஊரிலே உள்ள கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதனை பற்றி கொண்டு படிக்க ஆரம்பித்திருந்தாள்..

இதுவரை தன்னை விட்டு எதற்கும் அகலாதவள் இரண்டாம் முறையாக செல்கிறாள், முதல் முறை நான்கு வருடத்திற்கு முன் தன் படிப்பு சம்மந்தமாக தோழியின் வீட்டில் தங்கி அதனை முடித்து விட்டு வருவதாக சொல்லி சென்றிருந்தாள் அதுவும் மொத்தம் பத்து நாட்கள்… கிளம்பும் நாளில் அவள் முகத்தில் தெரிந்த சிறிய சோர்வு அவள் திரும்பி வரும் போது இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டவர்.. அதனை பார்த்த பின்பே நிம்மதி அடைந்தார்.. ஆனால் இன்றோ தன் பிள்ளை தன்னை விட்டு வேறொரு உலகத்தில் பறக்க போகிறாள் என்பதை நினைத்த மாத்திரத்தில் அவர் இடது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்திருந்தது..

என்னதான் திடமானவராக ஒரு பெண் இருந்த போதும், தாய் என்று வரும் போது தன் பிள்ளைகள் அவர்கள் அருகிலே இருக்க வேண்டும் என்று நினைப்பது அவர்களின் முதல் ஆசை.. அதிலும் பெண்களை பெற்ற பல தாய்மார்களுக்கு அது இன்றுவரை தீராத ஆசையாகவே மாறி போகின்றது என்பது நாம் கடந்து, கசந்து போகின்ற ஒரு தெளிவில்லாத உண்மை…

கார் பயணம் நிசப்தமாக இருக்க.. அதனை களைத்தே ஆக வேண்டும் என்ற கங்கனதுடன் அருகில் இருப்பவளை வம்பிழுக்க ஆரம்பித்தான்….

என்ன மேடம் உங்க அம்மாட்ட பேசும் போது முறச்சி முறச்சி பாத்துட்டு இருந்த போல??? பொறாம!!!! என நக்கலாக அவன் வினவ,

பொறாமையா!!! ஹா ஹா அந்த அளவுக்கெல்லாம் அய்யா ஒர்த் இல்ல!!!! சரி அத விடுங்க… ஆமா காலையில ஏதோ சொன்னீங்க என்னதது?? ஹான் சைட் அடிச்சா ஒன்னு பொண்ணுங்க வெக்க படுவாங்க இல்லனா திரும்பிப்ங்களா!!!! அப்டி சார் எத்தன பொண்ணுங்கள பாத்துட்டு இருந்தீங்க அதுல எத்தன பேரு இந்த ரியாக்ஷன குடுத்தாங்க சொல்லுங்க பாக்கலாம்?? என அவனை பற்றி நன்கு அறிந்தும் மனதில் பட்டத்தை கேட்டிருந்தாள்.. (அம்மா சொன்னது நல்லா வேல செய்யுது போல இந்தரு!!!! பாத்துக்கோ அம்புட்டு தான் சொல்ல முடியும் அப்புறம் உன் தெரவசு)

அடிப்பாவி!!!! எங்க ஊர்ல இததானடி பொறாமைன்னு சொல்லுவாங்க இருந்தாலும் இவ்ளோ குசும்பு ஆகாதுடி என் பச்சைமிளகா!!!! இதோ இப்ப பாரு உன் மாமன் வாய்ஜாலத்தை என மனதில் நினைத்தவன் வெளியில் கெத்தாக தன் பல்வரிசை தெரிய சிரித்தான்… பின்னர் யோசிப்பது போல பாவனை செய்தவன்,

எத்தன பேருனு ஞாபகம்லாம் இல்ல…. சோ மனசுல பாத்தவுடனே பச்சக்குனு யார்யாரெல்லாம் பதிச்சாங்களோ அவங்களலாம் சொல்றேன், கணக்கு வச்சிக்கோ ஓகே.. கவுன்டிங் ஸ்டார்ட்ஸ் என அவன் சீரியசாக சொல்ல,

அடங்க!!! சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டா?? கவுன்டிங் பண்ணணுமாமே கவுன்டிங்கு!!!! மகனே நீ சொல்லி முடிடி உனக்கு எத்தன எலும்பு ஒடஞ்சி இருக்குனு கவுன்டிங் நான் பண்ண சொல்றேன் என்று கொடூரமாக யோசித்தவள்... வெளியில் அவள் மட்டும்தான் நல்ல பிள்ளை என்பது போல் முகத்தை வைத்திருந்தாள்,

ஓ!!!! அப்டியா சீக்கிரமா சொல்லுங்க பாக்கலாம் நான் ரெடி.. என கூலாக சொல்ல,

என்னடா இது நம்ப இந்த ரியாக்க்ஷன எதிர்பாக்கலையே என சிந்தித்தவன்…. சரி எது வந்தாலும் சமாளிச்சிக்குவோம்!! என முடிவெடுத்து சொல்ல ஆரம்பித்தான்,

எனக்கு அப்ப ஒரு ஆறு வயசு இருக்கும்னு நினைக்கிறேன் அப்ப எங்க அப்பா ஒரு குட்டி பாப்பாவ என்கிட்ட காமிச்சாரு… அதுவும் குட்டி குட்டியா கை காலு, குண்டு குண்டா கன்னம், என்னைய முழுச்சு முழுச்சு பாத்துட்டு இருந்த அந்த முட்டக்கண்ணு.. மொத்தமா அப்டியே ரோஸ் கலர்ல செம்ம கியூட்டா இருந்தா அவதான் என் மனசுல பதிஞ்ச முதல் தேவதை.. என்று சொல்லி அவன் முகம் பார்க்க… அவள் எதுவும் பேசவில்லை.. சரி முடிச்சுட்டு கருத்து கேட்டுப்போம் என விட்டவன்…

அடுத்து ஒரு பன்னெண்டு இல்லனா பதிமூணு வயசுன்னு நினைக்கிறேன்…. என் ஸ்கூல் வாசல்ல ரெட்டை ஜட போட்டுக்கிட்டு அதுல பூவச்சிட்டு.. ஸ்கூல் பில்டிங்க போய் அதிசயமா கண்ண விரிச்சி பாத்துட்டு இருந்தா பாரு சபா செம்ம துறுதுறுனு… அவதான் இன்னைய வரைக்கும் என் ஸ்கூல் நாட்கள ஞாபகப் படுத்துனா கூட கண்ணுல வந்து நிக்கிற முத குட்டிபிசாசு!!!! என்று கூறியவனின் இதழ்கள் அவள் வரிவடிவ நினைவில் விரிந்திருந்தது….

அடுத்து என தொடர்ந்தவன்… நான் அப்ப MBA ரெண்டாவது வருஷம், இந்த மாதிரிதான் சரி அப்டியே கார் எடுத்துட்டு ஒரு சுத்து சுத்தலாம்னு போய்ட்டு இருந்தேன்… அப்ப ஒரு அழகான ராட்சசி எனக்காகவே அவங்க அம்மாவால படைக்கப்பட்ட குட்டி அணுகுண்டு… அவ தங்கச்சி பின்னாடி வண்டியில சேரி கட்டிண்டு… அந்த கலர எப்டி சொல்றது என முணுமுணுத்தவன்..
நினைவு வந்தவனாக அவள் வகிட்டை தொட்டு காண்பித்து இதோ நீ வச்சி இருக்கியே இந்த குங்கும கலர் சேரி தான்.. அப்டியே ரெண்டு தோளுலையும் தொங்கற மல்லி பூ.. கைல ரெண்டு வளையல், நெத்தியில பொட்டுக்கு மேல சின்னதா குங்குமத்தால் ஒரு கீற்று, எங்கடா வண்டில இருந்து விழுந்திடுவோமோ அப்டிங்குற சின்னதா ஒரு பயம் அவ கண்ணுல…. அப்படி இருந்தாடி அவ!!! அவளலாம் வர்ணிக்க கூட வார்த்தைய தேடணும் அந்த அளவுக்கு அழகு!!! அன்னைக்கு என் சைட் அடிக்கிற மொத்த சுதந்திரத்தையும் குத்தகைக்கு எடுத்தவதான்…. இது வரைக்கும் அத என்னால வாங்க முடியல!! அவளே குடுத்தாலும் வாங்கவும் மாட்டேன்…. என்று அவளின் பச்சைமிளகாயை வர்ணித்தவன்...

அவளை பார்த்து,
ஹான் அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் அன்னைக்கு அவளோட பிறந்தநாள்..
எப்புடி அய்யாவோட சைட்டெல்லாம்!!! கவுன்டிங் சரியா பண்ண தான?? என்று அவளை பார்த்து இரண்டு புருவதையும் ஏற்றி கேட்க….

கவுண்டிங்லாம் சரியா தான் பண்ணேன்… ஆனா இவளுக்கு இந்த பில்டப்பு ரொம்ப ஓவரு!!!! என்று தன்னைதான் அவன் சொல்கிறான் என்று நன்றாக தெரிந்தும் சொன்னவள்…. வீடு வந்துடுச்சி இறங்குங்க பாஸ்!!!! என அவனை போல் நக்கலாக சொல்லி விட்டு இறங்கியவள் அங்கிருந்தவர்களை பார்த்து அதிசயித்து நின்று விட்டாள்…. (அவன் மட்டும்தான் உனக்கு அதிசயமா தெரிய மாட்டான் மா மத்ததெல்லாம் நல்லா தெரியுமே பாவம் புள்ள😣😜😜)

ஆனால் காரின் மறுபுறம் இருந்தவனோ இவள் மேல் கோபம் படமுடியாமல் தன் ஆத்திரத்தை மூச்சை ஆழ்ந்து சுவாசித்து சமன் செய்தவன் இறங்கி அவளை பார்க்க….

அவளோ தன்னெதிரில் இருக்கும் இவர்கள் அனைவரும் தனக்கும் சொந்தம்தான்!!! ஆனால் அது பெயரளவில் மட்டுமே நின்று விட்டது… அங்கு சுற்றி உள்ளவர்களை ஒருமுறை பார்த்தவள் தனக்கு இங்கு பரிட்சியமான ஒரே ஒருவனான!!!

அத்தைக்கு அத்தை மகன்!! மாமனுக்கு மாமன் மகன் என இருவழி சொந்தமான தன் மாமனாகிய காதல் கணவனின் கையை இறுக பற்றி இருந்தாள்... விஜய்யேந்திரமித்ரனின் அத்தைக்கு அத்தை மகள் மாமனுக்கு மாமன் மகளாகிய இயற்றமிழ்சுடர்!!!

நேசம் உயிர்க்கும்....






 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரண்ட்ஸ்,
கொஞ்சமே கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... அத்தியாயம் ஆறுல அடுத்த பாகம் பதிவு செஞ்சிட்டேன்😍😍 படிச்சு பாத்து எப்டி இருக்குனு ஒரு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க பா... போன பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் மிக்க நன்றி 🙏🙏
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் ஏழு:-

இரவு”……வாழ்க்கையை புரட்டிப் போடக் காத்திருக்கும் சூறாவளி… பலருக்கு உன்னதமானதாகவும், பலருக்கு விடியவே வேண்டாம் என்ற நரகத்தையும் காட்டி விட்டு சென்று விடுகிறது நிசப்தத்தின் “நிழலாய்”..

அப்படித்தான் இங்கு ஒருத்தி தன் வாழ்க்கையை இந்த இரவு தலைகீழாக மாற்ற காத்திருப்பதை அறியாமல் இருந்தாள்.. தன்னை சுற்றிலும் கும்மிருட்டு படர்ந்திருத்த போதிலும், இதெல்லாம் என்னை என்ன செய்து விடும் என்ற தைரியத்தில்… அந்த பிரம்மாண்டமான சுவற்றில் சிறிய ஓட்டையில் பைனாகுலர் வழியே அந்த பக்கம் நடமாடிக்கொண்டிருக்கும் மிருகங்களை கண்காணித்துக் கொண்டிருந்தாள் தீவிரமாக….

தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தவள் தலையில் விழுந்தது நங்கென்று ஒரு கொட்டு… அதில் கவனம் சிதறியவள் அத்தனை வலியிலும் சத்தமிட்டு கத்தவில்லை மாறாக தன்னை கொட்டியவனை திட்டுவதற்காக வேகமாக தலையை தேய்த்து கொண்டே திரும்பியவள்… தனக்கு தானே சூனியம் வைத்தி கொள்வது போல் தன் கைப்பையை அவள் காலின் அடியில் வைத்து இருக்க…. அது அவளின் காலை இடறி விட்டிருந்தது….

கீழே விழப்பார்த்தவளை கை கொடுத்து நிறுத்தியவன் அவன் வாய்க்கு வந்தது போல்… காச்மூச்சென்று கத்த தொடங்கி இருந்தான்,

ஹே குட்டச்சி எத்தன தடவ சொல்லி இருக்கேன் பாத்து நடன்னு ஒன்னுதையும் காதுல வாங்கறது இல்ல… கொஞ்சமாவது அறிவிருக்கணும்.. இந்த லட்சணத்துல நைட்!!! அதுவும் இந்த நேரத்துல உளவு பாக்க கிளம்பிட்டாங்க கேமராவ தூக்கிட்டு.. பெரிய்ய்ய சிஐடி-னு நினைப்போ?? இடியட்… இடியட் என் உசுர வாங்கவே பொறந்து இருக்கா…. என அவன் வசவு நீண்டு கொண்டே போக,

அவளுக்கோ அவன் கூறிய எதுவும் காதில் ஏறவில்லை கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்று தான்… அவன் கூறிய குட்டச்சி என்பது மட்டும் அதிலேயே நின்றவள் அவன் நிறுத்துவது போல் அறிகுறி தெரியாததால் அவளே இடைபுகுந்தாள்

ஹே ஹே நிறுத்துடா… என்னடா என்ன??? நீயெல்லாம் பனைமரத்துல பாதி உயரத்துக்கு யூரியா போட்டு வளர்ந்துட்டு என்னைய பேசரியா… நீயெல்லாம் கிராமத்து பக்கம் இருக்க வீட்டுக்கெல்லாம் போய்ட்டாத!! அப்புறம் அந்த வாசக்கதவுளையே உன் தல இடிச்சி அப்டியே பனியாரம் சைஸ்ல உன் மண்ட வீங்கி போய் பாக்கவே கன்றாவியா இருப்ப…. அப்புறம் எந்த பொண்ணும் உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டா பாத்துக்கோ… என்று பாவம் போல் அவனிடம் சொல்லியவள் மனதில் என்னைய தவற என்பதை சேர்த்து சொல்லி இருந்தாள்,

அடங்கொக்கமக்கா!!! விட்டா இவளே மண்டைய உடைச்சுடுவா பிசாசு… குட்டச்சினு சொன்னதுக்கு மர்டர் பண்ற அளவுக்கு யோசிக்கிறா??? (ஐயோ பாவம்!!! நோ மர்டர் செல்லம் ஒன்லி பனியாரம்)

உன் மூஞ்சுக்கே ஆள் கிடைக்கும் போது என் மூஞ்சுக்கு நல்லாவே கிடைக்கும் போடி அங்குட்டு… என கெத்தாக சொல்ல

ஏன்??? செல்லத்துக்கு என்ன குறைச்சல்... என கூறி கொண்டே அவள் அணியாத பாவாடையை பிடித்து ஆடுவது போல் செய்கை செய்ய…

அதில் தன் மதியை பார்த்து மதி மயங்கியவன் ஏற்கனவே நெருக்கத்தில் நின்றிருந்தும் இன்னும் சற்று அதிகமாக நெருக்கத்தை கூட்டி அவளை அந்த சுவற்றோடு சாய்த்தவன் அவள் இடுப்பை ஒற்றை கையால் தன் ஐந்து விரல்ககளை அவளிற்கு அழுத்தத்தை உணர்த்தவே அழுத்தமாக பதிந்தவன் அவள் கண்ணோடு கண்ணை கலந்து “மதி” என அழைத்திருந்தான் அவள் காது மடல்கள் மட்டும் கேட்கும் படி,

இத்தனை நேரம் அவனிடம் சரிக்கு சமமாக வாயாடி கொண்டிருந்தவள் அவனின் மூச்சுக்காற்று படும் நெருக்கமும்… இடையை தழுவியிருக்கும் அவன் விரல்களும்… பயம் சூழ்ந்த இரவிலும் தன் மூளையை விழிப்பாக வைத்திருத்தவளை தன் வசம் இழக்க செய்திருந்தது..
அவன் தொடுகையில் கண்மூடி இருந்தவள் அவன் அழைப்பில் “வர்தா”என்று சிணுங்கினாள்,

அவளின் இந்த கிடைக்க பெறாத... தனக்கு மட்டுமே உரித்தான அமைதியில் தன் கன்னக்குழி தெரிய சிரித்தவன்..

சண்டக்கோழி சிலிர்த்துனு நிக்கும்னு பார்த்தா…. அடங்கி போய் பம்பிட்டு நிக்குது என்று அவள் முகவடிவை அளந்து கொண்டே…. கேட்டு அவளை உசுப்பிவிட!!

சண்டைக்கு நிக்குற சேவல்கிட்ட கோழி சிலிர்த்துக்கலாம்.. இப்படி மண்டியிட்டு நிக்குற சேவலை பாத்தா பாவமா இருந்ததா.. அதான் போனா போது பொழச்சு போகட்டும்னு விட்டுட்டேன்… என்று அவன் நெருக்கத்திலே நின்றுக்கொண்டு நக்கல் சிரிப்புடன் சொல்ல,

அதில் மோனநிலை கலைந்தவன் அடிங்க… குள்ளகத்திரிக்கா!!!!! யாரு நான் உன்கிட்ட மண்டியிட்டு நின்னேனா?? அதெல்லாம் உன் கனவுல மட்டும்தாண்டி நடக்கும்… ஆளப் பாத்தியா ஆள!!! என்று அவன் எண்ணெயிலிட்ட கடுகு போல குதிக்க,

ஓ!!! ரியலி… பாக்கலாம் நானா எதுவும் பண்ண மாட்டேன்.. ஆனா நீயா என் முன்னாடி மண்டியிட்டு நின்னிருப்ப வருங்காலத்துல!!! என்று சவால் விடுவது போல் சொல்ல….
(அவனை சொல்லிவிட்டு தான்தான் அவன் முன் மண்டியிட்டு நிற்க போகிறோம் அவன் உயிர்காக.. என்று தெரிந்திருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டாளோ என்னவோ??? )

பாக்கலாண்டி அது நடக்கும் போது!!! என்று சொன்னவன் நக்கீர முனிவரின் கொள்ளு பேரனுக்கு பேரன் போல் “நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று மீண்டும் முதலிருந்து ஆரம்பித்திருந்தான்,

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. அப்டியே டாபிக்க மாத்தாத!! சொல்லுடி தினமும் இங்க அப்டி என்ன தான் பண்ற?? எத்தன தடவ கேட்டாலும் சொல்றது இல்ல… சரி நானாவது பாத்து சொல்றேன்னு சொன்னாலும் பேச்ச கேட்கறது இல்ல… இதுல பர்சனல் வேற!! வேல வேறன்னு ஒன்னுத்துக்கும் பெறாத ஒரு வசனம் வேற….

என்னால நீ என்ன பன்றேன்னு கண்டுப் பிடிக்க முடியாம இல்ல… ஆனா உன் வேல விஷயத்துல தலையிட கூடாதுனு ஒதுங்கி நிக்குறேன் அவ்ளோதான்… இந்த நேரத்துல பசங்க நாங்களே இப்டி தனியா இருக்க இடத்துக்கு அதுவும் நைட் வரதுக்கு பலமுறை யோசிப்போம் இல்ல பயப்படுவோம்… நீ என்னடானா அசால்ட்டா நின்னுட்டு இருக்க??? என்று விடாக்கொண்டனாக கேட்க,

எப்பா!!!! சாமி இப்பவே இவன்கிட்ட கண்ண கட்டுதே இன்னும் வாழ்க புல்லா கஷ்டம் தான் இவனுக்கு…. என்று மனதில் அவனுக்காக பரிதாபப்பட்டவளின் காதில் பஞ்சு மட்டும் இல்லாத குறைதான்… ஏனென்றால் அவன் சொன்னதை அவள் செவி வாங்கவே இல்லையே அவ்வளவு ட்ரைனிங் மா!!! இருந்தும் வெளியில் இளித்துக் கொண்டு நிற்க,

ஏண்டி உன்ன நான் திட்டிட்டு இருக்கேன் நீ என்னடானா ஏதோ உனக்கு ஆஸ்கர் அவார்ட் குடுத்த மாதிரி பல்ல காமிச்சிட்டு இருக்க.. என்று கோபத்துடன் சொல்ல

நம்ப திறமைக்கும்…. ஆபிஸ்ல நடிக்கிற நடிப்புக்கும் நம்பளுக்கெல்லாம் தினமும் ஒரு அவார்டு தரணும்… என்று வடிவேலு பாணியில் சொன்னவள்,
எங்க இங்க தான் திறமைக்கு முக்கியத்துவமே குடுக்கறது இல்லையே!!! என்ற நிதர்சனத்தையும் சேர்த்து உரைக்க..

அவள் முதல் பேசிய விதத்திலேயே மனதில் வாய்விட்டு நகைத்தவன்.. ஆஸ்கர் அவார்டலாம் எதுக்குடி தங்கம்!!! நீ மட்டும் என்கிட்ட வந்துடு உன்ன முத்த அவார்டால தினமும் குளிப்பாட்டிட்றேன் என்று மன்மதன் போல் நினைத்தவன்… வெளியில் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு….

எங்கையாவது பொண்ணு மாதிரி எந்த விதத்திலயாவது தெரியரியா?குறத்தி மாதிரி ஒரு ஜோல்னா பை எங்க போனாலும் கூட மாட்டிக்கிற..

அடப்பாவி!!! கடைக்காரன் மட்டும் நீ சொன்னத கேட்டான் அவ்ளோதான் தூக்கு போட்டு செத்துடுவாண்டா!!!

இத்து போன ஒரு ஜீன்ஸ் பேண்டு….

டேய் இதெல்லாம் ஓவரு என் பேண்டு ஆயருபாய்டா!!! என்று அழுவது போல் சொல்ல..

இதுல பசங்க மாதிரி சட்ட கைய எப்பப்பாத்தாலும் மடிச்சு விட்டுக்க வேண்டியது… நல்ல வேல அந்த முடிய உங்க அம்மா உன்கிட்ட இருந்து காப்பாத்துனாங்க.. இல்லனு வச்சுக்கோயேன் முழுசா என்னைக்கோ ஆம்பளையா மாறி போய் இருப்ப… அந்த பெண் தெய்வத்துக்குதான் நன்றி சொல்லணும் இல்லனா எங்கள மாதிரி நல்ல பசங்க நிலைமைலாம் என்ன ஆகறது?? (டேய் அவ பையன் ஆனா உனக்கென்னடா ஆகப்போகுது 🤔🤔)

இவ்வளவு நேரம் அவன் சொல்லியதற்கு எல்லாம் மனதில் கவுண்டர் அளித்தவள்… இந்த கேள்விக்கு மட்டும் நேரடியாகவே பதிலளித்திருந்தாள்

ஹோ ஓ… பாஸ் அப்டி வரீங்க…. அதான் என்னய காதலிக்கவே இல்லனு சொல்லிடீங்க… அதுலயும் நான் பொண்ணு மாதிரி வேற இல்ல… அப்புறம் என்ன வெண்ணைக்கு…. இந்த மகாராஜா!! ராத்திரியில நகர்வலம் வரீங்க?? தமிழ்ல வருமே பிள்ளைஉலா இலக்கியம், அதுல வர மாதிரி கோபியர்களெல்லாம் உங்கள பாக்கறதுக்கு இந்த நேரத்துல ஏக்கத்துல காத்துட்டு இருக்காங்களா என்ன?? இல்லனா என் பின்னாடி போக யாராவது பர்மிஷன் கொடுத்தாங்களா?? என்று புருவம் சுருங்க அவன் தாடையை பிடித்து ஆட்டி கொண்டே அவள் கேள்வி கேட்க….

அவள் இடையில் இருந்த விரலை அவளிற்கு வலி எடுக்க வேண்டும் என்றே அழுத்தியவன் அதனால் அவள் கண் கலங்குவதை பார்த்துக் கொண்டே….

உன் பின்னாடி வரதுக்கு எந்த கொம்பனும் எனக்கு பர்மிஷன் கொடுக்க வேணாம்… ஹான் என்ன சொன்ன உன் காதல நான் ஏத்துக்கலையா?? இல்லையே லவ்வ ஏத்துக்கறதுக்கு நான் ஏதோ நிபந்தனை வெச்ச மாதிரி தான எனக்கு ஞாபகம் இருக்கு!!! ஒரு வேல அந்த விஷயத்த மட்டும் மறந்துட்ட போல… நான் வேண்ணா ஒரு முறை திரும்பவும் சொல்றேன் இந்த குட்டி பத்திரிகைக்காரி மூளைல சேமிச்சு வச்சிக்கோ பத்திரமா…. ஓகே என அவன் கேட்க,

அவள் வேண்டாம் என்பது போல் இறைஞ்சலுடன் தலையாட்டுவதை பொருட்படுத்தாதவன் அவன் நிபந்தனையை சொல்லி முடித்திருந்தான்…

உன்னோட இந்த வேலைய இப்பவே விட்டுடறேனு ஒரே ஒரு வார்த்த மட்டும் சொல்லு இப்பவே இந்த நிமிஷமே உன் காதல நான் ஏத்துக்குறேன்… என எத்தனை முறை கேட்டாலும் அவளின் பதில் என்னவாக வரும் என்று தெரிந்தும் கேட்டிருந்தான் கஜினிமுகமது படையெடுப்பை போல்…

அவன் கேள்வியில் அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக விலகியவள்….

உனக்கே நல்லா தெரியும் வர்தா… நான் வேற எந்த விஷயத்துல வேணும்னா விளையாடுவேன்.. ஆனா என் வேல என்னுடைய சின்ன வயசு கனவு!! அத யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று அவள் தீவிரமாக சொல்ல….

அதில் ஆத்திரமடைந்தவன்.. அப்போ என்னைய விட… உன் காதல விட உன் வேல உனக்கு முக்கியமா போச்சு???

இதுக்கு நான் ஆமான்னு பதில் சொல்லணும்னு நினைச்சன்னா அதுக்கு பதில் ஆமா தான்.. இல்ல இல்லனு சொல்லணும்னு நினைச்சேன்னா அதுக்கு பதில் இல்ல…. எது பதிலா உனக்கு வேணுமோ அத நீயே முடிவு பண்ணிக்கோ…. என்று அழுத்தி சொன்னவள் அவள் எப்பொழுதும் தன் வண்டியை நிறுத்தும் மறைவான மரத்தின் பின் அவள் பையை மாட்டிக்கொண்டு தலைக்கவசத்துடன் சாய்ந்து நின்று விட்டிருந்தாள்….

அவள்… அவள்தான் எழில்நிலா அவளின் அவனுக்கு மட்டும் மதி, சிவகாமியின் இரண்டாவது பெண்சிங்கம்…. முதுகலை இதழியல்(journlism) பட்ட படிப்பு முடித்து அவளின் திறமையால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பெரிய அளவில் இல்லையென்றாலும் உண்மையை மட்டுமே உலகிற்கு உரைக்க வேண்டும் என்று இந்த பணம் மட்டுமே பிரதானமாக கொண்ட சமூகத்தில் போராடி கொண்டிருக்கும் பத்திரிக்கை நிறுவனத்தில் எடிட்டர் மற்றும் செய்தி சேகரிப்பாலினியாக பணி புரிந்து வருகிறாள்…

இது அவளுக்கு தனியாக கொடுக்கப்பட்ட என்று சொல்வதுடன் அவளாக ஆவலுடனும் தீவிரத்துடனும் வாங்கிய முதல் வேலை… இதில் தன் திறமையை நிரூபிப்பதை விட சமூகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் அனைவராலும் தெரியப்பட்ட, ஒன்னும் செய்ய முடியாத நிகழ்வுகளை தன் பத்திரிகையின் மூலம் வெளி கொண்டு வருவதனால் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியா விடினும்.. படிக்கும் பத்தில் ஒருவராவது அதனை விழிப்போடு உணர்ந்தால் போதும் என்பது அவளின் எண்ணம்..

இப்படியாக அவள் எண்ணம் இருக்க….. யாருடைய மனத்துணை இந்த துறையில் அவளுக்கு அதிகமாக தேவை படுமோ?? அவனே இது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருப்பது அவளுக்கு சலிப்பையே அதிகம் தந்தது… அவளுடைய நன்மைக்காக என எண்ணியே அவன் சொல்கிறான் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை… இருந்தும் தன் மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லையே!! என்ற வருத்தமும் இதற்காக தன் காதலை அவன் பகடைகாயாய் பயன்படுத்துவதை எண்ணி வலியுமே மிஞ்சி இருந்தது…..

அங்கு நின்றிருந்தவனோ அவள் காதல் சொல்லும் முன்பே அவள் மேல் பித்தாகி இருந்தவன்…. ஆனால் அவளாக வந்து சொன்னால் மட்டுமே இந்த நிபந்தனையை வைக்க முடியும் என்று முடிவெடுத்தே காத்திருந்தான் அந்த காரியவாதி…

அவளிடம் கோபமாக கத்திவிட்டானே தவிற அவனிற்கும் மனது கேட்கவில்லை… அவளால எதனா பிரச்னை வந்தா கூட எத்தனை பேர் வந்தாலும் சமாளிச்சுடுவேன்…. ஆனா இவ பண்ற காரியத்தால இவளுக்கு ஏதாவது ஆயிடுமோனு ஒவ்வொவொரு நிமிஷமும் பயந்துட்டு இருக்கறது எனக்கு மட்டும்தான தெரியும் இதுல இவ வேற… என்று நினைத்தவன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றிருந்தான்…

அவள் மரத்தில் சாய்ந்து கண்மூடி நின்றுந்த கோலம் அவன் மனதை பிசைந்தாலும் மருந்து கொடுக்காமல் நோயை குணப்படுத்த முடியாது என்று தன் மனதை திடப்படுத்தியவன் அவளிடம்,

ஏன் உங்களுக்கு தான் உங்க வண்டிய யார் ஓட்டினாலும் பிடிக்காதே!!! அப்புறம் எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க… இங்கவே தூங்கலாம்னு எதனா ப்ளான் இருக்கா என்ன???

அவனை மூக்கு சிவக்க முறைத்து பார்த்தவள் அவனிடம் தலைக்கவசத்தை நீட்ட…. அதற்காகவே காத்திருந்தவன் போல் அதை வாங்கி அவள் தலையில் மாட்டியவன்.. அவள் ராயல் என்பீல்டு வண்டியை சந்தோஷத்தில் உதைத்து ஆரம்பித்திருந்தான்…
அது சைலென்சர் வண்டி என்பதால் எந்த விதமான ஒலியும் எழுப்பாமல் ஏற்கனவே வண்டியின் விளக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவன் வண்டி எடுத்ததற்கான எந்த அறிகுறியும் இன்றி அந்த இடத்திலிருந்து கிளம்பியிருந்தது….

அவன் பின் வண்டியில் கால்களை இருபுறம் போட்டு ஏறியவளோ!! பேசிய அனைத்தையும் மறந்து அவனை ஒட்டி கொண்டு அவனின் இடுப்பை தன் இரு கைகளாலும் அணைத்து பிடித்தவள் அவன் முதுகில் சாய்ந்து கண்மூடினால்….

ஏகாந்தமான இரவு..... அவனுக்கும் அவளுக்கும் மட்டுமான தனிமை… எத்தனை கோபம் சண்டை இருவரும் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் வந்தாலும் இறுதியாக தன்னிடமே அவளின் மொத்த தேடலும் முடிவடைவதில் காதலனாக அத்தனை கர்வம் அவனுக்கு….

அவளை அவள் வீட்டின் பக்கம் வந்தவுடன் எழுப்பியவன் அவளிடம் வண்டியை கொடுத்து விட்டு கிளம்பி செல்வது போல் செல்ல…அவள் இன்னும் கிளம்பாதிருப்பதைப் பார்த்து அவளிடம் வந்தவன்,

என்ன இன்னும் போகலையா?? என்று நமட்டு சிரிப்புடன் கேட்க…

இதோ கிளம்பிட்டேன்.. என்று வண்டியை எடுப்பது போல் பாவ்லா செய்யதவளை…

ம்ஹும் இவ வேலைக்காக மாட்டா!! என்று நினைத்தவன் கீழே குனிந்திருந்த முகத்தை தன் கைக்கொண்டு நிமிர்த்தி அவனை பார்க்க வைத்தவன் அவள் தாடை இரண்டையும் பற்றி அவள் நெற்றியில் அழுத்தமாக பதித்திருந்தான் அவன் முன்னுச்சி முத்தத்தை….

கண்மூடி தன்னுள் அதனை வாங்கியவள் முகம் இத்தனை நேரம் வேலை பார்த்த களைப்பின்றி பிரகாசமானது…. அவனை கண் திறந்து பார்த்தவளின் தலையை முட்டி அவன் விடை பெற்று செல்ல… அவளும் தன் இல்லம் நோக்கி தன் வண்டியை விட்டிருந்தாள்…… (இதை விட காதலை ஒருவனால் வார்த்தையால் உணர்த்த முடியுமா?? )

இதில் இவர்கள் இருவரும் கவனிக்க மறந்தது அந்த இருகண்களை!! வருங்காலம் யார்கையிலோ???

நேசம் உயிர்க்கும்….
1115311154

 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் எட்டு:-
1117411175
“உறவுகள்”…… எண்ணவே முடியாத வாழ்க்கையின் முக்கிய அங்கங்கள்.. சிலர், பலர் என்று இங்கு பாகுபாடில்லை.. சூழ்நிலையும், நேரமுமே அவர்களின் குணாதீசியத்தை தீர்மானிப்பது.. அதில் இவர்களின் உறவுகள் எத்தனை வகைப்பட்டவர்கள் என்று இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்….

அவனின் எதிர்பார்ப்பு அவளிடம் எந்த மாற்றத்தையும் தராததால் கோபமாக காரில் இருந்து இறங்கியவன் கண்டதென்னவோ, அவள் விழி சுழற்றலை தான்… அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் அவள் பக்கத்தில் சென்று அவள் வலது கையின் விரல்களை தன் இடது கையின் விரல்களுடன் அழுத்தமாக பிடித்து கொண்டான் எதற்கும் கலங்காதே என.. அதனை உடனே வரவேற்பது போல் அவளின் உடம்பின் இதுவரை இருந்த இறுக்கம் சிறுக சிறுக தளர ஆரம்பித்திருந்தது…

இந்த இறுக்கம் பயத்தினால் வந்தது அல்ல… இத்தனை வருடங்களில் இங்கு நிற்கும் அத்தனை பேரும் தன் அம்மாவின் பேச்சிற்கு மதிப்பளித்து எங்காவது தன்னை சந்திக்க நேர்ந்தாலும் சரி… வெறும் நலவிசாரிப்புடன் மட்டும் கடந்து செல்லும் அந்த ஏக்கம் கலந்த பாசமான விழிகள் தங்கள் வாய் திறந்து ஏதாவது கேள்வி கேட்டால் எப்படி பதில் அவளால் சொல்ல முடியும்… இல்லை அதற்கு தகுந்த பதில் அவளிடம் உள்ளதா?? என்று அவளுக்கே தெரியாத குழப்பதினால் வந்த இறுக்கம்..

ஆனால் அங்கிருந்தவர்களோ அதற்கெல்லாம் அவளுக்கு இடமே கொடுக்கவில்லை.. ஏதோ அதிசயத்தை காணாமல் கண்டது போல் அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்குத் தான் ஒருமாதிரி ஆகி விட்டிருந்தது… அதில் அவள் கணவனை என்னை எப்படியாவது காப்பற்றேன் என்ற இறைஞ்சலுடன் பார்க்க… எங்கு அவன்தான் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லையே.. அவளின் வாய் சொல்லை விட கண்ணசைவிற்கு அவன் என்றுமே மறுப்பு சொன்னததில்லை வாழ்வில் ஒரேயொரு முறை தவிற… திரும்பினால் இங்கு என்ன நடந்தாலும் வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்ற முடிவை மாற்றிவிடுவாளோ என்ற பயம்தான் அவனுக்கு….

அவனிடம் உதவி கிட்டாது என்ற முடிவுக்கு வந்தவள் அவர்கள் பக்கமே திரும்ப…

வாடா எங்க வீட்டு செல்ல மருமகளே!!! என்ற அன்பு நிறைந்த குரல் அவள் செவி மடல்களை தீண்டி இருத்தது…

அவரின் அழைப்பில் அவரை நிமிர்ந்து அவள் பார்க்க… அவர் கையில் இருந்த ஆரத்தி தட்டை பக்கத்தில் நிற்றவரிடம் கொடுத்துவிட்டு அவள் முன் வந்து நின்றவர் அவளின் தாடையை பிடித்து தன் அண்ணனின் சாயலை….. யாரை பார்க்கவே கூடாது என்று எண்ணி நிழல்களாக இருக்கும் புகைப்படத்தை கூட எடுத்து ஸ்டோர் ரூமில் போட்டாரோ… இன்று அது முயன்றும் முடியாமல் தன் முன் அவரின் முழுபிம்பமாக நிற்க்கும் அவர் அண்ணன் மகளை ரசித்துக் கொண்டிருந்தார்,

ஏன்டாம்மா இந்த அத்தைய பாக்கறதுக்கு உனக்கு இத்தன வருஷம் ஆச்சா?? அவதான் வீம்புக்காரி சொல்லிட்டோமேன்னு வரமாட்டேன்றானா.. உனக்கு என்னடா?? எத்தன நாள் நீங்கதான் வந்து இருக்கீங்களோனு வாசல பாத்து ஏமாந்து போய் இருக்கேன் தெரியுமா.. உனக்கு கூட நாங்கல்லாம் வேண்டாதவங்களா போயிட்டோம்ல?? என்று கோபம் பாதி ஏக்கம் பாதி என கண்களில் கண்ணீர் வழிய அவளை பார்த்து கேட்க..

அத்தை… என்ற சொல்லை தவிற அவளிடம் வேறு பதில் இல்லை,
இதைத்தானே நீ முத வந்தவுடனே கூப்டு இருக்கணும்!!! இப்ப பாரு கண்ல இருந்த NASO4 உம், HO2 உம் வேஸ்ட்டா போச்சு பாரு… என்று அவர் மனதில் காயம் இருந்தாலும் மருமகள் கலங்கி விட கூடாது என்பதற்காக கண்ணில் வழியும் கண்ணீரை முந்தானையால் துடைத்து கொண்டே சிரிப்புடன் கூற… (கண்ணீர்ல இருக்க உப்பையும், தண்ணியையையும்தான் அந்தம்மா நமக்கு புரியாத பாஷைல பேசுது கண்டுக்காதீங்க 🤪🤪)

அவர் முயற்சியை புரிந்து கொண்டவள் போல்… இந்த விரிசலை இடம் பார்த்து தான் அடைக்க முடியும் என்று தெரிந்து கொண்டு தானும் அவருடன் கை குடுக்க ஆயத்தமானாள்… அவள் இடது இடுப்பில் கையை வைத்து அவரை தினுசாக ஒரு பார்வை பார்த்தவள்……

என்னதான் சிவகாமி டீச்சர்கு நண்பியா இருந்தாலும் இப்டி அநியாயத்துக்கு பேச்சில கூடவா… இருந்தாலும் எங்கம்மாவ நெருங்க முடியாது பா… சோ அவங்கள விட மதிப்பெண் பட்டியல்ல நீங்க குறைவு தான் என்பதை கணம் நீதிபதி அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.. என்று தொண்டையை செருமி சொல்ல

இத்தனை நேரம் மாமியாரும் மருமகளும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்தவர்கள் அவளது கடைசி வசனத்தில் வாய் விட்டு சிரித்திருந்தனர்…

அடி போக்கிரி…. என் பிரண்ட பத்தி ஏதாவது சொன்ன பிச்சுப்புடுவேன் பிச்சி… அவளுக்கு என்னடி அவ எங்க வீட்டு மஹாராணி.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் யார்கிட்டயும் எதுக்காகவும் வந்து நிக்க மாட்டா.. என்ன என்னையும் அந்த லிஸ்ட்ல வச்சி இருந்து இருப்பானு எனக்கு தெரியாம போச்சு..

எத்தனை திடமாக அழக்கூடாது என்று அவர் நினைத்தாலும் அவரை மீறி கண்ணீர் வழிய…… தன் சிறுவயது முதல் ஒட்டி பிறந்த ரெட்டையர்கள் போல் தன்னுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தவள்…. திருமணமும் ஒரே உறவில் அவர்கள் பிரிய வேண்டிய சந்தர்ப்பமே இல்லாமல் போக, மகிழ்ச்சியாக இருந்தவர்களின் வாழ்வில் அந்த சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அவள் வாழ்வு இத்தனை போராட்டமாக மாறி இருந்திருக்காது…
இது அத்தனைக்கும் காரணம் தன் அண்ணன் என தெரிந்தும் அவரால் எதுவும் செய்ய முடியாத.. கையை பிசைந்து கொண்டு மட்டுமே பார்க்க கூடிய சூழ்நிலை…. தீடிரென்று அவள் செல்கிறேன் என்று அந்த நேரம் சொல்லும் போது தடுமாறி நின்றவர்தான் நிலைநிறுத்த பார்த்தும் அந்த தடுமாற்றத்தை இந்நாள் வரை அவரால் தடுக்க முடியவில்லை அவர் நாத்தனாரிடம் மட்டும்…

சரி விடுங்க அத்தை…. அவங்க மேல உங்க மனச துன்பப் படுத்தனத்துக்காக மான நஷ்டஈடு வழக்கு போற்றுவோம் ஓகேவா?? என கண்ணடித்து கேட்க

அடிக்கிறதாகி… ஏண்டி ஏன்??? என அவர் வாய்விட்டு சிரித்து விட

இது எப்டி இருக்கு செம்மையா... உங்க முகத்துக்கு அழகா சிரிப்பு!!! முன்னாடியும் வச்சி இருந்தீங்களே நல்லா….

நல்லா சொல்லுடி என்ன நல்லா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்தேனா?? என்று அவர் கேட்டே விட

அத எப்டி அத்தை……

ஓ…. அத சொல்ல வரலையா!!!
என்று அவர் ஆசுவாசம் படும் சமயம்,

என் வாயால சொல்லுவேன்!!! என்ன இருந்தாலும் நீங்க என் மாமியாருருரு….. என்று அவள் மாமியாரை இழுத்து சொல்ல..

அடுத்த நிமிடம் அவள் காது அவர் கையின் வசம் இருந்தது.. அவர் என்னவோ லேசாக தான் பிடித்திருந்தார், ஆனால் அவள் தான் உயிர் போவது போல கத்த ஆரம்பித்தாள்

அச்சோ!!! அத்த வலிக்குது விடுங்க விடுங்க என்று குதிக்க…

மாமியாரா?? மாமியாரு அவங்க எப்டி இருப்பாங்கன்னு ஒரு டெமோ வேண்ணா காமிக்கவா?? என்று கெத்தாக கேட்க

ஹா ஹா அத்தை இந்த வில்லி கதாபாத்திரம் தங்களுக்கு ஒத்துப்போகவில்லை… என்று தூய தமிழில் கலாய்த்துக் கொண்டே அவரிடம் காதை விடுவிக்க போராடி கொண்டிருப்பது போல் செய்கை செய்து கொண்டிருந்தவள் அவள் அத்தையின் பின்புறம் பார்க்க…

இங்கு இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்க.. சுற்றி நிற்கும் அனைவரும் சிலர் கண்ணீரோடும் சிலர் சிரிப்போடும் பார்த்து கொண்டிருக்க இது எதிலும் தனக்கு பங்கு இல்லை என்பது போல் ஒருவர் மட்டும் முகத்தை வீரப்பாக வைத்துக் கொண்டு நின்றிருந்தார்….. அவள் கண்கள் சென்ற திசையை வைத்தே அவள் யாரை பார்க்கிறாள் என்று புரிந்து கொண்டவரின் கை தன்னிச்சையாக அவள் காதை விட்டிருந்தது…

அவர் பக்கம் செல்ல அவள் நகர பார்க்க.. அவள் கரமோ அவளோடு வர மறுத்தது ஏனென்றால் அது இருந்ததோ அவளவனிடம்.. அவளை பார்த்து கண்ணை மூடி திறத்தவன் செய்தியாய் திடத்தை சொல்லி… விட்டிருந்தான் அவள் கையை மட்டும்… அவள் கண்ணசைவில் தைரியம் பெற்றவள் அவர் பக்கத்தில் சென்று நிற்க…. அவரிடம் எந்த அசையும் இல்லை.. நிற்கிறாயா எங்கு வேண்டாலும் நின்று கொள் என்பது போல்..

மாமா என்று அழைக்க ம்ஹும் எங்கே எதுவும் மாறவில்லை… மீண்டும் அதே அழைப்பு…. இரண்டு மூன்று முறை அழைத்தும் ஒன்றும் சொல்லவில்லை… இதற்க்கு மேல் தாங்காது என்றெண்ணியவள் தன் அஸ்திரத்தை அவரை நோக்கி எய்திருந்தாள், அதுவோ சரியாக அவர் நெஞ்சை நிறைத்திருந்தது.. அவள் செல்ல அழைப்பாள்….

மம்மா…. என்று அவள் அழைத்த மறு நொடி

குட்டிம்மா!!! என்றழைத்து உயிர் பெற்ற சிலை, அவளை அருகில் அழைத்து உச்சி முகர்ந்து நெஞ்சில் சாய்த்தார் அந்த கம்பீரமான மனிதர்…..

முன்னாள் டி.ஜி.பி சிவகுருநாதன் ஐபிஎஸ்…. அவர் பேரை சொன்னாலே அவர் பொறுப்பில் இருந்த மொத்த இடமும் அதிரும் அத்தனை கடுமையானவர்…. வீட்டில் கண்டிப்பு கலந்த பாசத்தை எப்பொழுதும் தருபவர்…. வாழ்க்கையில் சறுக்கிய ஒரே இடம் தன் வீட்டு இளவரசியின் வாழ்க்கை தேர்ந்தெடுப்பில் தான்… இதுநாள் வரை அவரை கொன்று புதைத்து கொண்டிருக்கும் ரணமான வலியது….. தான் சாகும்வரை அவரால் அவரை மன்னிக்கவே முடியாத குற்றமும் அதுதான்..

எவ்வளவு படித்திருந்தாலும் அவள் தானாக ஒரு துணையையோ இல்லை மாப்பிளை எனக்கு பிடித்தால்தான் கல்யாணம் என்ற எந்த நிபந்தனையையும் அவர் தங்கை வைக்கவில்லை.. இத்தனைக்கும் அந்த காலத்திலேயே தங்கள் தந்தை இருவருக்கும் அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கும் பொறுப்பை கொடுத்திருந்தார்…

அப்படி இருக்க தான் கூறிவிட்டேன் என்ற காரணத்திற்காக அவர் படிப்பை மட்டும் விசாரித்தவள் வேறு எந்த அறிமுகமும் இன்றி அவனுக்கு கழுத்தை நீட்டி இருந்தாள் அத்தகைய நம்பிக்கை…. ஆனால் என்று தன் உற்ற நண்பன் என நினைத்து தன் தங்கைக்கு மணந்தவன் இரவோடு இரவாக ஓடிபோனானோ அவர்களை விட்டு அன்றோடு காணாமல் போய் இருந்தது…

அன்று இந்த வீட்டு வாசற்படியை மிதித்தோடு சரி இன்று வரை அவர் இளவரசியின் வருகை அவருக்கும் அவர் வீட்டிற்கும் கிட்டவேயில்லை…. அவருடன் சேர்த்து அவர் செல்ல மருமகள்களின் பாசமும் மிரட்டலும்….

இவ்வாறு தன் தங்கையின் சிந்தனையில் இருந்தவரை கலைத்தது அவர் செல்ல குட்டிமாவின் மழலை அழைப்பு.. ஆம் அவள் பேச ஆரம்பிக்கும் போது சரியாக மாமா என்பது உச்சரிக்க வராததால் அவரை மம்மா என்றே அழைப்பாள்.. அம்மாவை போல் அது எளிமையாக இருந்ததாலோ என்னவோ….. அவளுக்கு பேச்சு சரியாக வந்த பின்பும் அந்த அழைப்பு மாறவில்லை.. கடைசியாக அவர் இந்த உச்சரிப்பை கேட்டது இயலின் பதிமூன்றாவது வயதில்தான்..

இப்பொழுது அந்த அழைப்பை கேட்டவருக்கோ தன் அருகில் நிற்பவள் இருபத்தைந்து வயது நிறைந்த குமரி என்றோ, தன் மகனின் மனைவி என்பதோ எதுவும் ஞாபகத்தில் எட்டி பார்க்கவில்லை.. மாறாக அவர் முன் நிற்பவள் அவர் கையில் தான் முதல்முதலாக ஏந்திய அவர் இளவரசிக்கே ஒரு இளவரசியா!! என்று ஆச்சரியம் பட்டு வியந்த அந்த ரோஜா குவியலை மட்டுமே…

அவளை உச்சி முகர்ந்தவர்க்கோ இத்தனை நாள் தான் இழந்த ஒன்று கை சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையை விதைத்திருந்தது.. அம்மாவின் வீட்டில் அம்மாவிற்கு பிறகு நாம் உரிமையோடும் உடைமையோடும் சீராட்ட முடிந்த ஒரு உறவு “தாய் மாமன்” உறவு…. எத்தனை உரிமையையே அந்த விளிப்பு தருகிறதோ அத்தனை கடமையையும் அந்த உறவு தந்து விட்டுச் செல்கிறது…..

தன் உரிமையை மட்டும் தனக்கு குடுத்த தன் உடன்பிறந்தவள் இதுவரை அவர்களுக்கான கடமையை செய்ய விட்டதில்லை என்பதில் ஆதங்கமே மிஞ்சி இருந்தது இந்நாள் வரை…. அவரின் இத்தனை நிறைவேறாத ஏக்கங்களுக்கு அருமருந்தாகவே தெரிந்தாள் இயல் அவருக்கு…. அதனால் சந்தோசம் கலந்த ஆற்றாமையால் அவரது கண்ணின் இமைத்தாண்டி உதிர்ந்திருந்தது அந்த முத்து…..

அவரது கண்ணீர் அங்கிருந்த மொத்த குடும்ப உறுப்பினரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்தது என்பது மிகை ஆகாது அவர் மனைவிக்கும் சேர்த்து…. எத்தனை பெரிய மனிதர் இந்த சிறுபிள்ளையிடம் கண்ணீர் விட்டு நிற்பதைக் கண்டு யாருக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.. அவருக்கு அவள் இயலாக தெரிந்திருந்தால் தானே அவர் தான் தன் தங்கையை பார்த்து கொண்டிருக்கிறாரே..

முக்கியமாக அதில் அதிகமாக அதிர்ந்தது இந்தர் தான்… தன் தந்தை சிறு வயது முதல் அவனுடைய ஹீரோ…. ஒரு முறை கூட அவர் கலங்கி அவன் பார்த்ததில்லை… அத்தனை விவேகமானவர் வரும் பிரச்சனைக்கான தீர்வை விரைந்து தெளிவாக எடுப்பதில்..

அப்படிப்பட்டவர் இன்று அவன் மனைவியிடம் கண்ணீர் விட்டு நிற்கிறார் என்றால் அந்த ஒற்றை மனிஷியின் இல்லாத இருப்பு எத்தனை உன்னதமிக்கது என்பதை முழுதாக அவன் உணர்ந்த நொடி.. அவன் அத்தையை எப்படியாவது அவன் குடும்பத்தோடு சேர்த்திட வேண்டும் என்பதை மனதில் இன்னும் ஆழ பதித்த தருணம் இது… இதிலும் அவனை ஆச்சரிய படுத்த அவன் மனைவியால் மட்டுமே முடியும்..

எல்லார்கிட்டையும் எப்பயும் போல நல்லாதான் பழகுறா!!!! ஆனா ‘என் முட்டைக்கண்ணி’ அவளமட்டும் எங்க மறச்சு வச்சு இருக்கானு தெரியலையே?? என்ற அவனை குடைந்து கொண்டிருக்கும் கேள்விக்கான பதிலை யோசிக்க மூளை தூண்ட இந்த நேரத்தில் தனக்கு உயிர் கொடுத்தவரும் தன் உயிரானவளும் பேசுவதை கவனிப்பதே முக்கியம் என்று தோன்றவே அவர்களின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தான்…….

அவரின் அணைப்பில் ஓரே ஒரு நிமிடம் தன் தந்தையின் அணைப்பு ஞாபகம் வந்து விட அதில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் யாரும் அறியா வண்ணம் அவரிடம் இருந்து விலகி இருந்தாள்... இதுபோன்று தன் குழந்தைகள் ஏங்கி விடக்கூடாது என்பதும் அந்த தாய் தன் உறவுகளை பிரித்ததற்கான முக்கிய காரணம்…

அவள் தலையை வருடி கொடுத்தவர் அப்பு என்று தன் மகனை அழைத்திருந்தார்…. அந்த குரலுக்கு கட்டுப்படும் சிறுகுழந்தை போல் அந்த முப்பதோரு வயது ஆண்மகன் விரைவாக அவர் அருகில் வர.. இங்கு இத்தனை நேரம் இருந்தது இவர் தானா என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவர் குரல் கம்பீரமாக மாறி இருந்தது,

நீங்க தான் குட்டிமாவ பத்திரமா பாத்துக்கணும்.. எதுக்காகவாது அவ கண்கலங்குறத பாத்தேன் உன் அப்பாவை பத்தி உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்… என்று மரியாதையுடன் கூடிய மிரட்டலுடன் சொல்ல…. அவர் தொனியிலும் அவள் கணவரின் பவ்வியத்திலும் இயலால் சிரிப்பை அடக்க முடியவில்லை…

அட வீரபாகு இப்டி கவுந்திட்டியே!! என்று அவன் கண்ணை பார்த்து அவள் மனதில் உரைக்க..

அதற்க்கு எதிர்ப்பதில் அவன் மனதிடம் இருந்து வந்திருந்தது..
உள்ள வாடி உன்ன வச்சிக்கிறேன்…..

கட்டிக்கணத்துக்கே இங்க ஒன்னும் காணோம் இதுல அது வேறையா??

அதற்க்கு அவன் பதில் அளிக்க வருவதற்கு முன் அவன் தந்தையின் குரல் அவனை தடுத்திருத்தது,

என்னப்பா நான் சொன்னதெல்லாம் கேட்ட தான?? காவல்துறை அதிகாரியாயிற்றே…. அங்கு நடக்கும் விழிப்பறிமாறலை வைத்தே கணக்கிட்டவர் மகனை கிண்டலாக கேட்க… ஆனால் அவனோ அதற்க்கு சீரியசாக…

கண்ல இருக்க கருமணி அந்த கண்ணோட இல்லனா எப்டியோ?? அது போல தான்பா எனக்கு அவ!!! என்று பேச்சு தந்தையிடம் வாக்கு மனைவியிடமும் பரிமாறப்பட்டது..

விட்டால் தன் மகன் இங்கேயே நிற்றுவிடுவான் என்றறிந்தவர் மனைவியை சாடுவது போல் மகனின் மோன நிலையை களைத்திருந்தார்…

ஹே கூறுகெட்டவளே பிள்ள எவ்ளோ நேரம் கால்கடுக்க வெளிலையே நிக்கும் வந்த வேலைய முதல பாரு….
அதில் தெளிவடைந்தவர் அவர்கள் இருவருக்கும் ஆரத்தி சுத்தி வீட்டினுள் வரவேற்றார் சிவகுருநாதனின் மனைவி பார்வதி.. ஜோடியாக இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்று மருமகளை விளக்கேற்ற சொன்னவர் தம்பதி சமேதமாக இருவரையும் மனநிறைவோடு ஆசிர்வதித்தனர்..

ஒரு பெரிய பாச படலமே வெளியில் அரங்கேறி கொண்டிருக்க இங்கு இரண்டு ஜீவன்கள் தங்கள் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு எப்படா இது முடியும்??? என்ற வெறுப்புடனும், இந்தரின் வருகைக்கான ஆவலுடனும் எதிரெதிராக அமர்ந்து காத்திருந்தனர்….

நேசம் உயிர்க்கும்…

 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன முன்னூட்டம்:-

கையிலும் தோளிலும் இரண்டு அழகு தேவதைகள்....

மிதக்கும் உன் கனத்தை மார்பில் சுமக்கவே ஆசை படுகிறேன்!!!

காதல் பிழையா??? அல்லது காட்சி பிழையா ஒன்றே மூன்றாக???

இதுதான் நான் அடுத்த எபியா குடுக்க போறது எதனா புருஞ்சுதுனா கமெண்ட்ல சொல்லுங்க பிரண்ட்ஸ்.... இது என்னோட புது முயற்சி டீஸர் கொடுக்றதுக்கு 😍😍 வைட்டிங்.....
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் ஒன்பது:-
1120511206

பூஜையறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அவன் பார்த்தது என்னவோ ‘அத்து’ என்று தன்னிடம் பாய்ந்து வந்த இரண்டு குழந்தைகளை தான்!!! அதில் ஒன்றை தூக்கி ஒரு சுழற்று சுழற்றி தூக்கிக்கொண்டவன், மற்றொரு மழலையை தன் இடது கையை அவள் தோள்களின் மேலிட்டு அருகில் நிறுத்தி இருந்தான்….

நிலாக்குட்டியும், குட்டிப்பையனும் ஏன் உங்க அத்துவ கூப்பிட வெளிய வரல… என்று இருவரையும் பார்த்து வினவ,

அதற்கு கையில் இருந்த மூன்று வயது நிரம்பிய அத்வைத்கிருஷ்ணா என்ற வாண்டு..

சச்சோ அத்து வெளில ஒதே அழுகாச்சி…. என்று தலையில் அடித்து கொண்டவன்,
சீன்ஸலாம் நல்லாவே இல்ல… என்குலாம் டிச்சும் டிச்சும் தான் பிடிக்கும்!!! என்று பெரிய மனிதன் தோரணையில் சொல்ல…

சரிங்க குட்டி அத்துவும் நீயும் பின்னாடி டிச்சும் டிச்சும் பண்ணலாம் ஓகேவா??? என்று அவனை போல் செய்கையில் சொல்லி காண்பிக்க…

ஓகே தீல் தன்!!! என்று குட்டி சொல்ல.. அத்வைதிடம் முடித்தவன் அடுத்த வாலிடம் திரும்பி,

நீங்க ஏன் வரல நிலாக்குட்டி??? என்று அந்த இருபத்துமூன்று வயது மங்கையான அவன் குழந்தையாக பார்க்கும் தன் மச்சினிச்சி எழில்நிலாவை கேட்க..

அடப்போங்க அத்து!!! நானே பத்திரிகைக்கு எதனா நியூஸ் கிடைக்குமான்னு தேடிட்டு இருந்தா… இங்க இருக்கவங்க சீரியல் எடுக்க கதையே எழுதிடுவாங்க போல… எப்பா!!! என்னா ரசம்… என்னா ரசம்… பிழிஞ்சா அப்டியே பாசமா கொட்டும்!! என்று அவர்கள் மூவருக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல,

ஹா ஹா ஹா என்று வாய்விட்டு அவள் குறும்பில் சிரித்தவன்…
குட்டிமா உன் அக்காகிட்ட நீ இப்படி சொல்றேன்னு சொல்லவா???

ஏன் அத்து ஏன்??? மீ பாவம் இல்லையா!!! எதனா தண்டன குடுக்குறேனு என் வேலைக்கே வேட்டு வெச்சுருவா அந்த மங்கம்மா… சோ நோ ப்ளீஸ!!! என்று இறைஞ்சுவது போல் கண்ணை சுருக்கிச் சொல்ல…

பரவால்ல நம்ப மட்டும்தான் அவளுக்கு பயப்படறோம்னு நினைச்சோம்…. வீட்ல இருக்க பாதி பேர் அப்டித்தான் இருகாங்க போல… என்று மனதில் நினைத்தவன் வெளியில் தன் கெத்து குறையாமல்,

ஹான் அந்த பயம் இருக்கட்டும்… என்று இன்னும் சிரிப்பை நிறுத்தாமல் சொல்ல.. அதற்குள் கையில் இருக்கும் வாலு அவனை இடைவிடாமல் சுரண்ட ஆரம்பித்திருந்தது…

என்னடா குட்டி என்ன வேணும்… என்று கேட்க,

அத்து எனக்கு ஒரு குத்தி டவுட்??? என்று கையின் விரல்களை சிறிதாக்கி மூக்கை சுருக்கி காண்பித்து கேட்க..

அவன் மழலையில் லயித்தவன்
கேளுடா செல்லக்குட்டி அத்துக்கு பதில் தெரிஞ்சா சொல்றேன்…

(என்று சொல்பவன் தான் ஒரு சாம்ராஜ்யத்தின் முதலாளி என்ற ஒரு சிறு விகல்பம் கூட அவனிடம் இல்லாமல் இருப்பவன்.. இதுதான் பெற்றவரின் வளர்ப்புக்கு கிட்டிய வெற்றி…. எத்தனை தூரம் உயர்ந்தாலும் தலைக்கனம் என்றும் தலைக்கு ஏறக் கூடாது.. எதிரில் இருப்பவர்கள் யாரோ!! அவர்களுக்கு தகுந்தது போல் எவன் ஒருவன் பதில் பேசுகிறானோ அவனே சிறந்த மனிதன்….)

நான் தொம்ப தொம்ப குத்தி பாப்பாவா இருக்கேனா??

ஆமா!!!

அதனால என்னைய குத்திபையா!!! குத்திபையானு!!! கூப்புடுறீங்க,

கரெக்டு…. என்று அவன் தலையாட்ட,

ஆனா இந்த நிலாதான் இவ்ளோ பெதுசா இருக்காளே!!! என அவன் கையை எவ்வளவு பெரிதாக காண்பிக்க முடியுமோ அத்தனை பெரிதாக காண்பித்து கேட்டவன்..

அப்புறம் ஏன் இவள நிலாக்குத்தினு கூப்புதீங்க அத்து??? என்று அவன் குட்டி சந்தேகத்தை அனைவரின் முன்னிலையிலும் சத்தமாக கேட்டு விட,

அங்கிருந்த அனைவரும் கலகலவென்று சிரித்து விட்டிருந்தனர்…. இத்தனை நேரம் ஏதோ துளியாக இருந்த இறுக்கம் கூட இந்த மழலையின் பேச்சால் இருந்த இடம் தெரியாமல் ஓடிச் சென்றிறுந்தது வாசற்படிப்பக்கம் தெறித்து…

சிரித்த மொத்த பேரையும் பார்த்து முறைத்தவள்…. அச்சோ மானம் போச்சே குட்டிபிசாசே!!!! என மனதில் நினைத்து..

டேய்!!! இத அத்து கிட்ட கேட்க கூடாதுனு சொல்லி தான உனக்கு சாக்கி வாங்கி தந்தேன் ஏன்டா இப்டி மானத்த வாங்குன…. என அவன் முன் நின்று முறைக்கிறேன் என்று அத்வத்தை பயமுறுத்தி அடிக்க வர…

அத்து அத்து பிதாசு என்ன அடிக்க வரா!! என்ன காப்பது… என்று கத்தி கூப்பாடு போட்டவன்…. ஏதோ படிக்கட்டு மேல் ஏறுவது போல் இந்தர் மேல் கால்வைத்து ஏறி கொண்டிருக்க…

டேய் எறங்குடா இறங்கு…. உனக்கெல்லாம் சாக்கி என் சொந்த காசுல வாங்கி தந்தேன் பாரு என்ன அடிச்சிக்கணும்… இதுக்குதான் குட்டி பசங்க சவகாசமே வச்சிக்க கூடாது… எல்லாம் என் தலையெழுத்து வீட்ல பெரியவங்க யாராவது என் அறிவுக்கு ஈடு குடுக்க முடியும்மா?? சரி அவங்கதான் அப்டி இருக்காங்கனு பாத்தா… இந்த குட்டிகுசுமா அதுக்கு மேல இருக்கு… என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி சொல்லி முடிக்கவும் அவள் தலையில் நங்கென்று கொட்டு விழவும் சரியாக இருந்தது….

ஆ…. என்று அலறியவள் என்னடா இது?? இப்டி கொட்டி கொட்டியே நம்பள குள்ளமாக்கிடுவாங்க போலையே!!!! இன்னைக்கு என்ன பன்றேன்னு பாரேன் அடிச்சவங்கள!!!! என திரும்பியவள் அங்கு அவள் அக்கா நின்றுப்பதை பார்த்து தலைகுனிந்து அமைதியாகிவிட்டாள்…. சிறுநேரம் ஆகியும் இருவரும் அதேபோல் நிற்க அதை கலைத்தது என்னவோ இயல்தான்!!!

இங்க என்னைய நிமிர்ந்து பாரு நிலா… என்று அழுத்தமாக சொல்ல,

அவள் பேச்சை தட்ட விரும்பாதவள் தலையை நிமிர்த்தி பார்க்க…

எதுக்கு தல குனிஞ்சி நின்ன??? ஏதாவது தப்பு செஞ்சியா என்ன? என அவள் கேட்க,

அவள் கேள்வியில் தடுமாறியவள் அது வந்து…..

ம்ம் சொல்லு அது வந்து….

இல்ல இத்தனை பேர் இருக்கும் போது நான் இவ்ளோ சத்தமா பேசினா நீ திட்டுவியோன்னு…. என்று இழுத்து சொல்ல,

அதில் மென்னகை புரிந்தவள்… இங்க இருக்க எல்லார் முகத்தையும் பாரு… எல்லார் முகத்திலையும் சிரிப்பு இருக்குல… சோ உன்னோட மிஷன் வெற்றி அடைஞ்சிடுச்சு ஓகே… என்று தன் தங்கை எதற்காக இந்த நாடகத்தை அதுவும் வீட்டின் முற்றத்தில் செய்தால் என்பதை நன்கு புரிந்து சொல்ல….

அதில் எழில் அழகாக வெண்பற்கள் தெரிய சிரித்தவள்….
சூப்பர்டி அக்கா… உன்னையன்றி வேறு யார் அறிவார் என்னை!!! என்று அவள் பாட்டு படித்து கொண்டே இயலின் கன்னத்தில் முத்தமிட….

ஹே எரும என்னடி பண்ற!!! என்று சொன்னவள் அவள் தாடையை துடைத்துக் கொண்டிருந்தாள்…

அக்கா உனக்கு கருகுற வாசனை எதனா வருது!!! என்று யோசிப்பது போல் சொன்னவள் கண்கள் ஹாலை ஒரு சுத்து சுத்தி வந்து இந்தரிடம் நிலைத்தது….

அத்து உங்களுக்கு?? என்று கிண்டலாக கேட்க…

இல்லனுலாம் சொல்ல மாட்டேன்டா குட்டி!!! என்று அவனும் ஹாலை பார்வை பார்த்து சொல்லி.. ஹை-பை குடுத்துக் கொண்டனர்… அந்த நேரம் பார்த்து…

போதும் போதும் நீங்க விளையாடினதுலாம்…. விஜய் போ இயல உங்க ரூம்க்கு கூட்டிட்டு போய் ரெப்பிரஷ் ஆகிட்டு மதிய சாப்பாட்டுக்கு கீழ வா போதும்.. என்று பார்வதிஅம்மாள் அவர்களின் விளையாட்டை இனிதே முடித்திருந்தார்…

செல்லக்குட்டி வாடி வா மாமாவ வெளில கலாய்க்கவா செய்ற…. என்று நினைத்து அவன் அம்மாவிடம்,

சரிம்மா இதோ கூட்டிட்டு போறேன் என்று சொல்லியவன்…

வருமா இங்க வா குட்டிப்பையன பத்திரமா பாத்துக்கோ சரியா?? என்று சொல்ல,

அண்ணா இதெல்லாம் ஓவரு… அவன் என் பையன்னா… என்று சிணுங்கி கொண்டே சொன்னாள் வரு என்கிற வருணிக்கா அவன் ஒன்று விட்ட சித்தப்பா மகள்… அவன் தன் உடன்பிறவா தங்கையாக பாவிப்பவள்…. இப்பொழுதைய வாசிப்பிடமோ கணவருடன் நியூயார்க்… இப்படி விசேஷங்கள் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்க நேர்வதால் இப்படி ஏதாவது அவளை சீண்டிக்கொண்டே இருப்பான் அந்த பாசக்காரன்…

அதனால தான் சொல்றேன்… உன்ன கட்டிக்கிட்ட ஒரே குத்ததுக்காக!! அவரு சமையல் முதக்கொண்டு எல்லாத்தையும் பாத்துக்கனும்னா கஷ்டம் தான்ல!!! அங்கதான் அவர காப்பாத்த ஆளு இல்ல… இங்க இருக்க கொஞ்ச நாளாவது புழச்சி போகட்டும் விற்றுடா என்று அவன் சிரியாமல் சொல்ல…

ஹா ஹா மச்சான் இப்டி அடிக்கடி உண்மைய வெளிய சொல்லப்படாது அதுதான் கல்யாணத்தோட முதல் சங்கல்பம்.. என்று சொன்னவன் வருவின் கணவன் தீட்சண்யன்…

ஓ அப்ப சாரு அதைத்தான் இவ்ளோ நாளா பன்னிட்டு இருக்கீங்களா??? என்று பட்டென்று எதிர்க்கட்சியிடம் இருந்து எதிர்ப்பு வர…

மச்சான் நல்லா.. வேல பாத்துடீங்க? போங்க போய் உங்க வேலையாவது சரியா பண்ணுங்க… என்று கண்ணடித்து சொல்ல (எவ்ளோ பட்டாலும் மீசையில் எதுவுமே ஒட்டலன்ற கணவன்மார்களின் சங்கத்து தலையாய உறுப்பினர் பா) அடுத்து அவன் ஜோலியை பார்க்க சென்றுவிட்டான் அதாகப்பட்டது தன் சரிபாதியை கொஞ்சி மிஞ்சி சமாதனப் புறாவை பறக்கவிடுதல்…

இந்த பக்கம் இந்தரோ தன் சகியை அழைக்க…. அவளும் சரி செல்வோம் என்று தன் காலை எடுத்து அடுத்த அடி வைத்தது மட்டும் தான் தெரியும்.. அடுத்த கணம் இரண்டு கால்களும் செங்குத்தாக பறக்க, இடையோ அவன் விரல்களினூடே அகப்பட்டு இருக்க, முன்னுச்சியோ நச்சென்று அவன் நெஞ்சத்தில் மோதி நின்றது!! கல்யாணம் ஆன பொழுதில் இருந்து அவனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை தந்தவள் முதல் முறையாக அவன் செயலில் அதிர்ந்து அவள் சொக்கும் விழியை அகல விரிக்க அதில் தெரிந்தே விழுந்தவன் அவளிடம்,

இந்த கண்ண வச்சு ஏதாவது ஒரு விதத்துல என்னை கொன்னுபோட்டுற்றடி என் கண்ணழகி… என்று அவளை வர்ணிக்க,

வெகுநாட்களுக்கு பிறகு அவள் இலகுவான மனநிலையில் இருக்கும் போது இத்தனை நெருக்கத்தில் பார்க்கும் தன்னவனின் முக வரி…. நேற்று தன் வீட்டில் பார்க்கும் போதுக்கூட தொலைவில் இருக்கும் போது தன்னை மறந்து பார்த்தாலே தவிற அவன் எப்பொழுது நெருங்கினானோ அந்த நிமிடமே தெளிந்தவள் அவனை ஏதாவது கலாய்த்து விட்டு சென்று விட வேண்டும் என்றுதான் அவன் தலை முடியை கலைத்தது….

ஆனால் இதுவோ அவள் சற்றும் எதிர்பாராதது… தூக்கிய பின் அவன் கூறிய எந்த சொல்லும் அவள் காதில் விழவில்லை…. நோக்கம் ஒன்றுதான் அவன் முகத்தை ஆசையும் ஆயுளும் தீரும் மட்டும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவே!!! அதில் தானாக அவள் கை அவன் சட்டை காலரை இறுக பற்ற..

ஆனால் அதற்குள் ஹாலிலிருந்து ஆர்ப்பாட்டமான இரண்டு கைதட்டல்கள் வந்து அவளின் தவநிலை அறுபட்டது…. வேறுயார் எல்லாம் அந்த குட்டிவாண்டும் பெரிய வாண்டும் செய்ததுதான்….

ஹே!!! அத்து செம்ம செம்ம சூப்பரே…. என்று கைதட்டி குதூகலிக்க…

ஹா ஹா ஹா தேங்க்ஸ்டா குட்டிஸ் என்று அவர்களிடம் சிரித்தவன் இங்கு தன் கையில் நெளிந்து கொண்டிருந்தவளை பார்த்து,

உனக்கு என்னடி பிரச்சன இப்ப?? சும்மா ஆடிட்டு… நானே நல்ல பிள்ளையா இருக்கணும்னு கைய ஸ்டெடியா வச்சி இருக்கேன் நீ என்னடானா அப்டி இப்டி ஆடி மனுஷன் மூட ஏத்தி விட்ற!!! என்று அவன் சொல்லி முடிக்க,

இதுக்கு மேல் ஏன் அசைய போகிறாள்… சிலை கூட அத்தனை அசைவின்றி நிற்குமா என்று வியக்கும் அளவிற்கு அசைவை நிறுத்தியிருந்தாள் அந்த சுடர்க்கொடி…

அஃது அந்த பயம் இருக்கனும்… என்று அவன் திமிராக சொல்ல

இவன்கிட்ட இப்டி பேசனாலாம் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவள்…

இந்தர் கீழ இறக்கி விடுங்க நான் தான் குண்டம்மாவாச்சே உங்க கை உடைஞ்சிட போகுது?? நான் உனக்கு குண்டுதான!!! என்று அவனிடமே புகார் வாசிக்க…

ஆமாண்டி நீ எனக்கு மட்டுமேயான குண்டம்மா… அந்த மிருதுவான மெத்தைலாம் உன் அளவுக்கு சாப்ட்டா பொசுபொசுன்னு இருக்குமா… அப்டியே உன் மேல படுத்தா சொர்க்கம் கூட தேவையில்லடி என் குண்டம்மா… என்று அவன் சரசமாக அவள் புகாருக்கு அழகாக விளக்க பதில் குடுக்க…

அவளுக்குத்தான் ஐயோ என்றாகி விட்டது… இவன்கிட்ட பேசி பல்பு வாங்கறதுக்கு வாய மூடிட்டு கம்முனு வாடி இயல்… என்று மனதில் நினைத்து கொண்டிருக்க,

ஹே லூசி கண்ண மூடு!!! என்ற அவன் அச்சர சொற்கள் அவள் செவியை எட்டி இருந்தது,

என்ன இவன் லூசா அவன் கண்ண ஏன் நம்ப மூடனும்?? வேணும்னா அவனே முடிக்கலாம்ல!!! என்னைய வேல வெக்கறத்துல என்ன ஒரு சந்தோசம் இவருக்கு… என்று உண்மையிலே லூசு போல யோசித்தவள் அவள் கை கொண்டு அவன் கண்ணை மூட போக,

நினச்சேன்டி கண்ண மூடறதுக்கா இவ்ளோ யோசிக்கறானு?? அடியே கிறுக்கி என் கண்ண இல்லடி உன் கண்ண மூட சொன்னேன்.. என்று அவள் கண்ணின் மேல் விழுந்த சிறுமுடியை தன் வாயால் ஊதிக் கொண்டே சொல்ல,

அவன் வாய் வார்த்தையே தேவையில்லை என்பது போல் அவன் செயல் அவள் இமையை தானாக மூடியிருந்தது… அவளிடம் வம்பிழுத்துக் கொண்டே தன் அறை இருக்கும் இரண்டாவது மாடிக்கு வந்தவன்… அவர்களின் அறை கதவை கால் கொண்டு திறக்க,

அவன் கையில் இருத்தவளோ!! அவன் மூச்சு காற்றில் மூர்ச்சை அடைந்தவள் போல் கண்மூடி இருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் தனக்கு மிகவும் பரிச்சியமான தான் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒலி காதில் விழவும் கண்ணை திறக்க போக,

அவளை அணுவணுவாய் அவள் அசைவுகள் முதல் கொண்டு ரசித்து வந்தவன் அவள் இமைகள் திறக்க முயற்சிப்பதை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் கனித்து தடுத்து நிறுத்தி இருந்தான்… இலக்கு வேறு அல்லவா!!!

ஓரிடத்தில் வந்து நின்றவன் அவளை மெதுவாக இறக்கி அவள் தோளை இருபுறமும் பிடித்து, அவளை முன்னிறுத்தியவன்… தன் வலது கையை அவள் வலது கை மேல் வைத்து அவள் வயிற்றிற்கு நடு பகுதியில் இருக்குமாறு வைத்தவன்… மற்றொரு கையை அவள் கழுத்தை சுற்றி மறுபக்கம் தோள்ப்பட்டையின் மீது பொருத்தியவன்… அவன் தாடையை அவள் தலையில் நடு பகுதியில் வைத்து ஒருமுறை சரி பார்த்தவன்…

ஹே முட்டைக்கண்ணி இப்ப கண்ண திற… அவள் தலையின் அவன் வெப்ப மூச்சு காற்று பட மெதுவாக சொல்ல,

அவள் கேட்ட… அவளுக்கு பிடித்தமான ஓசையிலே நிதானத்திற்கு வந்தவள், என்னதான் செய்கிறான்!!! பார்க்கலாம் என்றுதான் அவன் செய்ததற்கு எல்லாம் மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாள்… அவன் கண்ணை திற என்று சொல்ல, அந்த ஓசை வந்த பொருளை பார்க்க ஆசையாக இமை திறந்தவள் இப்பொழுது இமைக்க மறைந்து தன் முன் காணும் பிம்பங்களை தெவிட்டாமல் பார்க்க ஆரம்பித்தாள்..

ஆம் அவள் பார்த்தது அவர்கள் முன்னிருந்த ஆளுயர கண்ணாடியும் அதில் தெரிந்த பிம்பங்களும்… பிம்பங்களே!!!! ஒன்று அவர்களின் இந்த நிமிட கண் பார்க்கும் உருவம்… மற்றொன்றோ இப்பொழுது எந்த நிலையில் நிற்கின்றனரோ அதே நிலையில் அவர்களுக்கு பின் கட்டிலின் பின்புற சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டுள்ள ஆளுயர புகைப்படம்…..

அவர்கள் பிரிவதற்கு முந்திய ஒரு சில ரம்யமான நினைவலைகளில் அதுவும் ஒன்று….

வெளியிலே வர மாட்டேன் என்றவளை கட்டாயப்படுத்தி அழைத்து சென்ற சுற்றுலா தளங்களில் சுற்றி திரியும் காதலர்களை புகைப்படம் எடுப்பவர்கள்… இவர்களின் இந்த நிலையை புகைப்படமாக எடுத்திருக்க, எல்லா திசைகளிலும் காதை தீட்டி வைத்திருப்பவன் அந்த சத்தத்தில் கலைந்து அவனை பார்த்த பார்வையில் அவன் அடுத்த நிமிடம் அந்த புகைப்படத்தை அவனிடம் கொடுத்து ஓட பார்க்க,

அசட்டையாகத்தான் முதலில் போட்டோவை பார்த்தான் ஆனால் அதில் தெறிந்த அவர்களின் கண்கள் பரிமாறிய காதல்!!! அவனுக்கு இந்த புகைப்படம் காலம் முழுவதும் தங்களுடன் வர வேண்டும் என எண்ணியவன்.. அந்த போஸை அவன் விலையுர்ந்த செல்லில் அவனிடம் எடுக்க சொல்லிவிட்டு அவளிடம் வர.. அவள் எத்தனை மறுத்தும் அதை எடுத்துக் கொண்டே விட்டான்…

ஆனால் இன்று அந்த நிழற்படமோ அவர்கள் வாசஸ்தலத்தின் முக்கிய பிரதி நிதியாக மாறி உருப்பெற்று நின்று கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு எப்படி இதை விவரிப்பது என்று விளக்க முடியா ஏதோ ஒரு உணர்வு தன்னை உந்துவதை அறிந்தவள்…. தன் முன் தெரியும் நிழல் உருவத்தின் வழியே அவன் கண்களை பார்க்க… இந்த நான்கு கண்களுடன் அந்த நான்கு சேர்த்து மொத்தம் நான்கு ஜோடி கண்கள் ஒரே நேர்கோட்டில் அன்று நின்ற அதே நிலை, குறையாத காதல் வழிய சிலிர்ப்பூட்டும் தருணங்கலாக மாறி கொண்டிருந்தது…..

இந்தரோ அவளிடம்,
பொண்டாட்டி இப்ப எத்தனை தடவ நம்ப ஜோடிய பாக்கற??

எதற்கோ கேட்கிறான் என்பது
அவளுக்கு நிச்சயம்….

இரண்டு என்று அவனிடம் சிறைபடாத கையால் சொல்ல…

ம்ஹும்... மூன்று!! என அவளை ஆழ்ந்து நோக்கி சொல்லி இருந்தான் அந்த கணக்கு பிழையாளன்….

அவளிற்கும் விளங்கவில்லை
எப்படி!!! என அவள் கண்களை உயர்த்தி அவனை பார்த்து கேட்க,

உன் கண்ண ஒரே ஒரு நொடி மூடு.. என்று சொல்ல

திரும்பும் முதல இருந்தா!!! என்பது
போல் அவள் பார்க்க….

அவள் கண்களின் மொழியை படிக்க கற்று கொண்டவன் அவள் எண்ணத்தை சரிவர புரிந்து…

நீ கண்ண மூடுன அடுத்த நொடி உன் கண்ணுக்குள்ள என்ன தெரியுதுனு பாரு?? என்று சொல்ல,
செய்து பார்ப்போம் என இமை மூடியவள்… கடவுளின் முன் நிற்கும் பக்தைக்கு இமையின் கண்ணக் கருவில் வந்து நிற்கும் தெய்வத்தை போல வந்து நின்ற அவர்களின் பிம்பம் அத்தனை நிறைவை தர… நீண்ட நாட்கள் அவனுக்கு கிடைக்க பெறாத அவளின் ஒற்றை கன்னக்குழி சிரிப்பு தரிசனம் தாராளமாக கிடைக்க பெற்றது…

நிஜமே நிழலாய் மாறி இன்று நிஜத்திற்கும் நிழலிற்கும் நடுவே நிற்க காதல் பிழையா??? காட்சி பிழையா??? ஒன்றே மூன்றாக!!!!! விடை அறியா கேள்விகளுடன் உன்னுடன் நான்!!!!!

நேசம் உயிர்க்கும்…..



 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரண்ட்ஸ்😁😁,
அடுத்த அத்தியாயம் பதிவு செஞ்சிட்டேன்🙃🙃.. படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க😉😉.. போன பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் குடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி மக்களே🙏🙏😍😍😍..

எல்லா நண்பர்களுக்கும் இனிய தீபக்கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💥💥💥
 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி முன்னூட்டம்:-

வார்த்தைக் கஞ்சன்...
தீட்சன்ய விழிக்காரன்!!!


யோசித்து செய்தாலும் மாற்ற முடியாதது "மாற்றம்"

விழியில் நீர்த்திரை!!!
வாயடியோ??? சேட்டைக்காரியோ??? இல்லை இல்லை இரண்டும் சேர்ந்த குறும்புக்காரியே!!!!
என்னில் அவள்.....

நேசம் உயிர்க்கும்....

எதனா கெஸ் பண்ண முடிஞ்சா சொல்லுங்க மக்களே😁😁😍😍
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அணு பத்து:-
1123811239
ஓடிவரும் கருஞ்சிறுத்தையின் வேகத்தை பார்த்தால் எதிரில் நிற்கும் மொத்த கூட்டமும் நாம் தான் இன்று அதனுடைய இறையோ!!!! என்று கண்ணில் பயத்துடன் விலகி நிற்குமாம்..

அங்கு சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கும் அந்த கருநிற ஜீப்பின் வேகமே உள்ளிருப்பவனின் கோவத்தின் அளவை எடுத்துரைக்க அவனுக்கே பாதுகாப்பு என்றாலும் அங்கு நின்றிருந்தவர்கள் அவனிடம் நெருங்க தயங்கிக்கொண்டு அவன் வண்டியின் நிறுத்தத்தை கண்ணில் ஒருவித மரியாதையுடன், உள்ளிருப்பவனின் நிலை என்ன ஆகுமோ என்ற திகிலுடன் பார்த்திருக்க…..

தன் சிறுத்தையை அந்த சுற்றுபுறத்தில் ஆள் அரவமற்று காணப்படும் தன்னுடைய சொந்த வேலைக்கு மட்டும் பயன்படுத்தும் குடோனில் முன் நிறுத்தி அதன் கதவை திறந்துக் கொண்டு இறங்கியவனோ ஆண்மையின் மொத்த திமிரும் தனக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் அத்தனை கம்பீரதுக்கு சொந்தக்காரன்!!!!

தேக்கு மரமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டுமஸ்தான தேகம் …. வெளிர் நிற டீஷர்ட் அணிந்திருத்தவனின் கைகள் அவன் திரண்ட புஜங்களை ‘எங்கே என்னை பார்’ என்று திமிராக உருண்டு காட்ட…. கால் நடையின் வேகமோ நீயெல்லாம் எனக்கு எம்மாத்திரம் என்று சூரியனை வேகத்தை கேள்வி கேட்பது போல் இருக்க… உனக்கு மட்டுமே அனுமதி, ஒருவளை தவிற!!! என்பது போல் காற்று நுழைய… தலைமுடியோ சிலிர்ப்பிக் கொண்டு அவளிடம் அலைந்து கொண்டிருந்தது….

இதெல்லாம் கூட அங்கு அவனுக்காக மட்டும் நிழல் வேலைகளை செய்பவர்களுக்கு பிரமிப்பை தந்ததே தவிற கிலியை மூட்டவில்லை…. ஆனால் அவன் அணிந்திருக்கும் குளிர் கண்ணாடியையும் மீறி தங்களை சுட்டுப் பொசுக்கி கொண்டிருக்கும் அவன் தீட்சன்ய பார்வை நின்றிருந்த மொத்த ஆட்களின் நெஞ்சத்தையும் ஒரு நொடி நடுங்க செய்து, அவர்களின் தலையையும் தானாக குனிய வைத்திருந்தது….

அவன்தான்!!!!! VM என்று தொழில் உலகத்தில் கர்வத்துடன் அழைக்கப்படும் “விஜேந்திரமித்ரன்” பேச்சென்பது அவன் அகராதியில் துளி இடமாக ஒதுக்கப்பட்ட சொல் வெளி வட்டாரத்தில்… பேச்சின்றி ஒருவனை கொல்லக் கூடிய வித்தையில் டாக்டர் பட்டம் பெற்றவன்!!!!

தன் முன் தலைகுனிந்து நிற்கும் அவன் ஆட்களை பார்த்து மெலிதான ஒரு சிரிப்பு மட்டுமே வெளியில் வந்திருந்தது அவனிடமிருந்து…. அதற்கே மொத்த பேரின் இதயமும் எங்கே சத்தம் அவனுக்கு கேட்டு விடுமோ என்ற அச்சத்தில் தாறுமாறாக துடிக்க…

திட்டிட்டா கூட வாங்கிக்கலாம் ஆனா இந்த சிரிப்பு அவர் பார்வைய விட ஆபத்தாச்சே!!!! என்று மனதில் மட்டுமே பயந்து புலம்பிக் கொண்டிருந்தனர்… அவர்கள் அறிந்த ஒன்று தங்கள் பாஸிற்கு அறவே பிடிக்காதது காலம் தாழ்த்துவது.... தொழில் வட்டாரத்தில் அவனின் இன்னொரு மறைமுக பெயரும் அதுவே “டெட்லைன்”…

அவன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்த எப்படிபட்ட வேலையாக இருந்தாலும்… முடிந்திருக்க வேண்டும் இல்லையேல்?? அப்பொழுதைய அவன் மூடை பொறுத்து தண்டனைகள் வித விதமாக தரப்படும் என்பது எழுதப்படாத சட்டம்…. இன்று என்ன வரப்போகிறதோ என அச்சத்துடன் இவர்கள் அவனை பின்தொடர்ந்து செல்ல,

உள்ளே வந்தவனுக்கோ அங்கு தரையில் நாற்காலியில் கயிற்றுடன் கட்டப்பட்டு கீழே அவனிற்கே அவனை அடையாளம் தெரியாத அளவுக்கு அடிபட்டு விழுந்திருக்கும் அந்த கயவனை கண்டு சிறு பரிதாபம் கூட எழவில்லை… விஜயை தெரியாதவர்கள் யாராவது நின்றிருந்தால்… கல்நெஞ்சக்காரன்டா நீ!!! என்று வசைப்பாடி இருப்பார்கள் அத்தனை வெறி அவனிடத்தில்...

தன் கண்களாலே அவன் கட்டை அவிழ்த்து விட சொல்லி விஜய் கட்டளையிட அது உடனடியாக
செயல் படுத்தப்பட்டது….

வலியின் பிடியில் மயங்கி இருந்தவன் தன் கட்டை யாரோ கழட்டி விடுவதை உணர்ந்து தன்னை விடுவிக்க சொன்னது யாரென்று நிமிர்ந்து பார்க்க ரத்தம் வழிந்த இமையானது மங்கலான உருவத்தை மட்டுமே காண்பித்தது….

விஜயின் உருவத்தை பார்த்து அவனை போலீஸ் என்று மனதில் தப்பு கணக்கு போட்ட அந்த முட்டாள்…

மனதில் கடவுளே என்னை இந்த சித்ரவதையில இருந்து காப்பாத்த ஏதோ ஒரு மகான அனுப்பிச்சிட்ட உனக்கு ரொம்ப நன்றிபா!!! என்று வேண்டியவன் இதுவரைக்கும் நல்லதிற்கு கூட கோவில் பக்கம் செல்லாத மகாபுருஷர்…

அவன் வேண்டுதலை கடவுள் இத்தனைப்படு பிஸியான ஷெடுளிலும் உடனடி கேஸாக எடுத்து புரட்டி பார்த்தவர்… அந்த கயவனின் தீர்ப்பை கொலைவெறியுடன் எழுதி ஒப்படைத்திருந்தார் எமனாகிய விஜயேந்திரமித்ரனிடம்!!!!!

கயிற்றை கழட்டி விட்டவுடன் ஓடிச்செல்ல பார்த்தவன் தன் உடைந்த கால்கள் அதற்க்கு ஒத்துழைக்காததால் தரையில் ஒட்டுன்னியை போல் தவழ்ந்து செல்ல… வாயின் ஒரு பக்கம் உதடு கிழிந்து மூக்குடைந்து உடம்பின் பல இடங்களிலும் ரத்தம் உறைந்து நிற்க விஜயிடம் வந்தவன் அவன் கால்களை பிடித்து…

சார்… சார் எப்படியாவது இந்த கொலைகார பாவிங்ககிட்ட இருந்து என்னை காப்பாத்திடுங்க சார் இல்லனா என்னைய கொன்னே போட்ருவாங்க!!!! என்று கதறி அழ….

அவன் உயரத்திற்கு கீழே ஒருகாலை ஊன்றி தரை படாமல் அமர்ந்தவன்… தன் காதை குடைந்து

அச்சச்சோ!!!! என்ன சார் இப்டி அடிச்சிருக்காங்க படுபாவி பசங்க?? என்று அவனிற்கு பரிதாபம் படுவது போல் பேசியவன்….

ஹா ஹா என்ன சொன்ன கொன்னே போட்ருவாங்களா??? என்று சந்தேகம் படுவது போல் கேட்டவன்,

இவ்ளோ நேரம் நீயெல்லாம் செத்து போய் இருக்கனும்டா நாயே!!!! என்று அவனை கால்களால் எட்டி உதைத்தவன் அந்த இடமே அதிரும் அளவுக்கு கர்ஜித்திருந்தான்…

அவனிடம் உதைபட்டவனோ அந்த கட்டிடத்தோடு சேர்ந்து அதிர… வந்தவன் யார்?? என்று தெரிந்து நிமிர்ந்து பார்த்தவன் கண்ணிற்கோ புலப்பட்ட உருவத்தில்... தன் மரணத்தின் நேரத்தை அறிந்தவனின் சப்த நாடியும் எப்படி அடங்கி ஒடுங்கி விடுமோ…. அந்த நிலையில் ஓய்ந்து போயிருந்தான் கண்ணுக்குள் நிற்கும் அந்த வாளில்லா கருப்பண்ண சாமியின் உருவத்துடன்….

அவனை உதைத்து திரும்பியவனுக்கோ ஆத்திரத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை… எங்கே இன்னும் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தால் தானே தன் கையால் அவனை கொன்று புதைத்து விடுவோமா என்ற எண்ணம் எழவே திரும்பியவன் தன் தலையை கோதிக் கொண்டே இடையில் தன் வலது கையை ஊன்றி நின்றவன்….

விஷ்ணு…. என்று கத்த

உடனே அவன் அருகில் வந்தவன்

சொல்லு மித்ரா.. என்று கேட்க

முடிச்சிடு… என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாக வந்தது,

மித்ரா!!!! என்று விஷ்ணு ஏதோ யோசனையுடன் இழுக்க…

விஷ்ணு!!!! என்று அவனை அழுத்தி அழைத்தவன் ஒரேயொரு பார்வை மட்டுமே பார்த்திருந்தான் தன் நண்பனை….

அதற்கு விஷ்ணுவிடம் இருந்து தலையாட்டல் மட்டுமே பதிலாக கிடைத்திருந்தது புரிந்து கொண்டேன் என்று,

விஜயிடம் இருந்து திரும்பியவன் அவர்கள் ஆட்களுக்கு உத்தரவு பிறப்பிக்க செல்ல….

விஷ்ணு ஒரு நிமிஷம்…. என்று அவனை நிறுத்தியவன்,

இவங்க யாரு மேலையும் எனக்கு நம்பிக்கை இல்ல!!! என்று சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்க்க… அவனை எதிர்ப்பார்வை பார்க்க யாருக்கும் துணிவு வந்து விடவில்லை… எத்தனை தூரம் தன் பணியாளர்களுக்கு நண்பனாக நன்மை செய்கிறானோ… அத்தனை அளவு வேலை விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவான்…

இவனை பிடிக்க சொல்லி அவர்களுக்கு வேலை கொடுத்து பத்து நாட்கள் ஆகி விட்டிருந்தது ஆனால் இன்று காலை விஷ்ணுவின் உதவியாலே அவன் அகப்பட்டான் என்பது எரிமலை குழம்பில் மேலும் நெருப்பு ஜ்வாலையை மூட்டி விட்டது போல் இருக்க…. நம்பிக்கை இல்லை என்ற ஒரே வார்த்தையில் அனைவரையும் வீழ்த்தியிருந்தான் அந்த 'வார்த்தைக் கஞ்சன்'...

இத்தனைக்கும் அவர்கள் ஒன்றும் எதுவும் தெரியாத படிக்காத அடி ஆட்கள் போன்றவர்கள் இல்லை… நன்கு படித்த துப்பாக்கி, கராத்தே என பல வித பயிற்சிகளை முறையாக கற்று தேர்ந்தவர்கள்… இதில் உள்ள பலர் டெக்னிகள் சம்மந்தமான அனைத்து வேலைகளும் திறம்பட ஆராய்பவர்கள் ஹேக்கிங் உட்பட…

அப்படிபட்டவர்கள் அவனை பிடிக்க முடியாததற்கு ஒரே காரணம் விஜயின் கட்டளை!!!! எந்த சூழ்நிலையிலும் நம்பத்தான் இவன கடத்துறோம்னு யாருக்கும் தெரிய கூடாது… அந்த வார்த்தையை மதித்தே அவர்கள் இத்தனை தாமதமாக பிடித்தது…

ஏனென்றால் அவன் இருந்ததோ எட்டு திக்கிலும் பாதுகாப்பு நிறைந்த இடம்… நரியின் கூட்டத்தில் இருக்கும் இறையை காத்திருந்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என்பது வேட்டையாடுவதின் தலையாய தந்திர விதி….. தந்திரத்திற்கே தந்திரம் வகுக்க!!!

தன் நண்பனிடம் சொல்லியவன் சிறிது நேரம் கூட தாமதிக்காது அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தான் வேக நடையுடன்… வெளியில் வந்து கண்மூடி நின்றவனுக்கோ உள்ளிருந்தவனின் கதறல்கள் காதில் தேன் வந்து பாய்வது போல் விழ…. கொஞ்சம் கொஞ்சமாக மனதின் வெம்மை அவன் கதறல்கள் குறைய குறைய தனிவதை உணர்த்தவனின் இமைகளில் ஒரு பெண்ணின் நிழல்உருவம் தோன்ற!!! ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு நியாயம் செய்த விட்ட நிம்மதி…

உள்ளே வேலையை முடித்து மற்றதை அவர்கள் ஆட்களிடம் ஒப்படைத்த விஷ்ணு.... வெளியில் விஜயிடம் வந்து,

என்னடா மாப்பிள எதுக்கு அவன இப்பவே கொல்ல சொன்ன??? என்று இத்தனை நேரம் குடைந்து கொண்டிருந்த சந்தேகத்தை கேட்க…

மச்சி இருக்கலாம்டா ஆனா இவ்ளோ நல்லவனா இருக்க கூடாது…. நான் எதுக்கு அவன போட சொன்னனு தெரியாமலே கொன்னுட்டு வந்து நிக்குற... எப்டிடா மச்சி!!!! என்று அவனை பற்றி தெரிந்தும் கேட்க..

ஒரு விஷயம் தப்புனு படாம என் மித்ரன் இவ்ளோ பெரிய முடிவு எடுக்க மாட்டான்னு எனக்கு நல்லாவே தெரியும்டா… அது இல்லாம நீ சொல்லி ஏது மறுபேச்சு??? என்று சொன்னவன் எப்பொழுதும் இந்தர் செய்வது போல் புருவத்தை உயர்த்தி கேட்க….

நண்பேன்டா!!! என்று சொல்லி விஷ்ணுவின் தோளை விஜய் அணைத்திருந்தான் தன்மேல் வைத்து இருக்கும் அவன் நம்பிக்கையில்…

மித்ர நம்பிக்கை!!!! ஒருவனுக்கு வாழும் போதே கிடைக்க பெரும் முக்கிய வரங்களுள் ஒன்று…. எத்தனை எல்லை சென்றாலும் நம்முடன் கை கோர்த்து நின்று தைரியம் சொல்லும்… நிலைத்து நிற்பவன் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்கிறான்… இழந்தவன் தேடிக்கொண்டு அலைகிறான் இறுதிவரை!!!!!!

இருவரும் சிந்தித்து செயல் பட்டிருந்தாலும் சில சமயம் காலம் தாழ்த்துவது நமக்கு நன்மையை ஏற்படுத்தாவிடினும், நம்மை சுற்றி இருப்பவருக்கு கெடுதலையாவது விளைவித்திருக்காது என்று தெரியும் போது தன் வாழ்வின் இரண்டு முக்கிய பெண்கள் அவர்களிடம் சிக்கியிருப்பார்கள் என வலித்தே உணர்வான் என்பது விதியின் சோதனை….

யோசித்தே செய்தாலும் மாற்ற முடியாது நாம் செய்த “மாற்றத்தை”

அவன் நண்பனிடம் எதற்காக இந்த சம்பவம் என்று சொல்லி கொண்டிருக்க, தன் அலைபேசியின் ஒலியில் அதனை திறந்து பார்த்தவன் அதில் பளிச்சென்று சிரித்த தன் மனைவியின் புகைப்படத்தில் தன் நண்பன் பக்கத்தில் தான் இருக்கிறான் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல்... அவளை பார்த்து உள்ளுக்குள் ஓடிய இன்றைய சாமரமான நிகழ்வான.. தன்னுள் அடங்கி நின்ற தன்னவளை நினைத்துக் சிரித்து கொண்டு நின்றிருந்தான்….

இவனிடம் பேசி கொண்டிருந்தவன் என்னடா இது பதிலே வரல??? என்று திரும்பி பார்க்க… பார்த்தவன் விழியோ வியப்பில் விரிந்திருந்தது, கவனச்சிதறல் என்றுமே அவன் நண்பனிடம் அவன் காணநேரா ஒன்று..

அப்டி என்னத்த பாத்து இப்டி பிரீஸ் ஆகி வாய் மட்டும் அசைர மாதிரி நிக்கிறான்?? என்று குழம்பியவன் அவன் செல்லை எட்டி பார்க்க….

அடப்பாவி!!!! என்னதான் புதுமாப்பிள்ளையா இருந்தாலும் இப்டியாடா வெளிப்படையா தங்கச்சிய பார்த்து ஜொள்ளு விடுவ… அதுவும் ஒரு கன்னி பையன் பக்கத்தில இருக்கான்ற நினைப்புக் கூட இல்லாம?? என்று வெளிப்படையாகவே புலம்ப….

அவன் புலம்பலில்… விஜய் ரசனை அறுபட்டு அவனை முறைத்து கொண்டே பார்த்தவன்,

உனக்கு எதுக்கு இந்த வயித்தெரிச்சல்… வேணும்னா நீயும் கல்யாணம் பண்ணிக்கோ!! நான் என்ன வேணாம்னா சொல்றேன்?? வந்துட்டான் நல்ல மூட கெடுக்கறதுக்கு…. என்று அவனுக்கு தூண்டில் போட்டுக் கொண்டே திட்ட…

என்னது!!! கல்யாணமா அதுக்கு வாய்ப்பே இல்லடா!!! என்ன இருந்தாலும் தங்கச்சிய மாதிரி அமைதியான பொண்ணு எங்க தேடனாலும் கிடைக்காது!!! என்று பெருமூச்சு விட்டவனின் கண்ணில் வந்து சென்ற மின்னல் ஒளியை சரியாக சிறை பிடித்திருந்தான் அவன் தோழன்….

இருந்தும் எதுவும் தெரியாது போல் அவன் சொல்வதை கேட்டு கொண்டு வந்தவன் தன் மனைவியை சாத்வீகம் என்று நண்பன் வாய் சொல்வதை கேட்டு விழுந்து விழுந்து சுற்றுபுறத்தையும் மறந்து சிரிக்க ஆரம்பித்தவன்…..

ஹா ஹா மச்சி என்ன சொன்ன உன் தங்கச்சி அமைதியானவளா!!! அய்யோ!!! அய்யோ!!! என்று கண்ணில் கண்ணீர் வரும் வரை சிரிக்க…

என்னடா இப்ப என்ன ஜோக் சொல்லிட்டேன்னு விழுந்து பல் உடையற அளவுக்கு சிரிக்கிற??? என்று கோபத்துடன் கேட்க,

உன் தங்கச்சி!!!! என்று விஜய் இழுத்து சொல்ல,

ஆமாண்டா எனக்குத்தான் தங்கச்சி ஆக முடியும்… உனக்கு தங்கச்சி இருந்திருத்தா!! நீ இல்ல நான்தான் புதுமாப்பிள்ளை ஆகி இருப்பேன்… என்று விஷ்ணு ஏக்கத்துடன் சொல்ல..

அப்டி மட்டும் எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா உன்னைய விட நல்ல மாப்பிள யாரடா நான் தேட போறேன்…. என்று விஜய் உறுதியாக சொல்லி இருந்தான்..

ஹான் பாக்கலாம் பாக்கலாம் என்று சொல்ல…

என்னது??? என்று காதில் விழாதது போலவே அவன் கேட்க

அது ஒண்ணுமில்ல… நீ சொல்லு தங்கச்சியென்ன ரொம்ப வாயாடியா???

இல்லை!!! என்று தலையை மட்டுமே ஆட்டியிருந்தான் விஜய்,

என்னடா இது அமைதி இல்லனு சொல்லிட்டு வாயாடியும் இல்லனு சொல்றான்?? என யோசித்தவன்

ரொம்ப சேட்ட பண்ணுவாளா??? என்று மீண்டும் வினவ,

அதற்கும் இல்லை என்ற தலையாட்டலை அவன் மித்ரன் கொடுக்க,

அதில் நொந்தவன்…
யப்பா சாமி எது சொன்னாலும் இல்லனு சொல்ற… இதுக்கு மேலெல்லாம் என்னால யோசிக்க முடியாது… சிறந்தது நீயே உன் பொண்டாட்டி பத்தி சொல்லிடு… என்று அவனிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டான் அந்த சோம்பேறி….

வாயாடியா??? இல்ல சேட்டைக்காரியானு?? கேட்டியே அவ இது ரெண்டும் கலந்த குறுப்புக்காரிடா மச்சான்!!!! என்று அவன் அவள் நினைவில் சிரிப்புடன் சொல்ல..

என்னடா இது நம்ப பாத்த வரைக்கும் தங்கச்சி அவ்ளோவா பேசி பாக்கவே இல்லையே!!! ஆனா இவன் என்னடானா இப்டி சொல்றான்!!! என்று குழப்ப ரேகைகளுடன் விஜயை விஷ்ணு பார்க்க…

பார்வையே சொல்லுது நான் சொல்றதுல நம்பிக்கை இல்ல என் மச்சானுக்கு… ம்ம் என்ன பண்ணலாம் என்று யோசித்ததவன் சரி ஒரு குட்டி கதையொன்னு சொல்றேன் என்று தளபதி ஸ்டைலில் சொன்னவன் இதுல வர பொண்ண பத்தி உன் கருத்து என்னண்னு கதை முடுஞ்ச பிறகு தான் சொல்லணும் ஓகே…. என்று சொன்னவன் நீங்காத நினைவலைக்கு சிறிது நேரம் பின்னோக்கி சென்றிருந்தான் அவனுள் இருக்கும் அவனவளை தேடி….

பாவம் விஷ்ணுவிற்கு யார் சொல்வது அவனிடம் கதை கேட்ட குத்ததிற்கு வலி ஏற்படும் என்று😜😜 அது என்ன வலியோ???

அடுத்த பதிவில்

நேசம் உயிர்க்கும்…..



 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரண்ட்ஸ்,
அடுத்த அத்தியாயம் பதிவு செஞ்சுட்டேன் 😁😁... எப்டி இருக்குனு படிச்சு பாத்து சொல்லுங்க... போன பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் நன்றி 🙏🙏😍😍😍😍
 
Status
Not open for further replies.
Top