All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "தேடல் தொடங்கியதே" - கதைத்திரி

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேடல் ஒன்று:-
11531



மாலை நேர இளம்பழுப்பு சூரியனோ மங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அனைவருக்கும் சூட்டோடு உணர்த்த…. இந்த பத்து பேருக்கோ அப்பொழுதுதான் விடிந்ததோ என சந்தேகம் படும் அளவுக்கு அத்தனை சுறுசுறுப்பு அவர்களுக்குள்… பார்த்தால் எதையோ தேடும் தீவிரம்!!!! அனைவருக்கும் தலைமை வேறு வேறு, ஆனால் இந்த ஆடுகளம் இவர்களை பிரதானப் படுத்தியதே!!!! எதை தேடி ஓடி அலையப்போகிறார்களோ யாமறிந்த ஒன்று(🤣🤣🤣🤣)

இவர்களுக்குள் ஒரு எல்லைக்கோடு எப்பொழுதும் இடையே நிற்கும்…. வடிவேல் படத்தில் வருவது போல இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் என்ற ஒப்பந்த உடன்படிக்கை இருதரப்பினருக்கும்…. மீறும் கள்ளத்தனம் நம்மவர்களாக இதில் சிலருக்கு உண்டுதான் ஆனால் நேர்மையானவர்கள்….

ஸ்ரீ எல்லாரும் ரெடியா??? என்று தயாராகிக் கொண்டே சஞ்சீவ் கேட்க,

தயாராக இருந்த மற்ற படை வீரர்களும் அவனின் கேள்விக்கு,

கிளம்பியாச்சுடா!!! என கோரஸாக பதில் சொன்னனர்.

சர்வேஷ் இப்போ ஆரம்பிச்சா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்… என விஷ்ணு ஆர்வத்தோடு கேட்க,

டேய் அவசர குடுக்கை… எல்லாரும் இன்னும் வெளில நடமாடிட்டு இருக்காங்க அவங்களுக்கு இது தொந்தரவா இருக்கும் கொஞ்சம் நேரம் ஆகட்டும்… என அவன் கேள்விக்கு முந்திக் கொண்டு முனிதா என்ற அழகு தேவதை பொறுப்பாக பதில் அளிக்க,

இவ ஒருத்தி எப்பப்பாத்தாலும் பொறுப்பான பெரிய பருப்பு போல நேரம் காலம் பாத்துட்டு இருப்பா!!!! என்று கடுப்புடன் பதில் வந்தது கார்த்தியிடமிருந்து…

என்னடா கொழுப்பா…. இன்னொருவாட்டி பருப்பு செருப்புனு எதன்னா சொன்ன பல்ல ஒடச்சிடுவேன்டா கருவாயா!!! என முனிதா எகிறி கொண்டு வர,

அதற்குள் இன்னொருவனோ,

டேய் டேய் இப்டி பருப்பு கிருப்புன்னு சாப்பாட பத்தி ஞாபகம் படுத்துனீங்க நான் பாட்டுக்கு கிளம்பி போயிட்டே இருப்பேன் பாத்துக்கோங்க…. என்றவன் ராமன்!!!! வயிறை தடவிக் கொண்டே முகத்தை அழுது விடுவதுபோல் பதில் சொல்ல,

அடச்சீ எருமைகளா வாய மூடுங்க…. உங்களலாம் வச்சிண்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாது போலையே…. என்று மற்றொருவனான ஈஸ்வர் இடிப்பில் கைவைத்து இவர்களை முறைத்துக் கொண்டே கத்த,

அடடா எதுக்கு இப்போ இவ்ளோ கோவப்பட்ற மச்சி… “அட்டூனாமட்டாடா” என்று பல் வரிசை தெரிய சிரித்தான் ஈஸ்வரின் தோளில் கை போட்ட வசீகரன்…. வசியத்திற்கு சொந்தக்காரன் போல்!!!!

இத்தனை பேர் பேசுவதையும் தாடையில் கை வைத்து சோம்பேறித்தனமாக பார்த்துக் கொண்டிருந்த இதழியலோ பொறுத்தது போதும் என்று வீறு கொண்டு எழுந்து,

மரியாதையா எல்லாரும் கிளம்புங்க இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!!!!! என்று தன் கனீர் குரலில் சொல்ல,

மொத்த கூட்டமும் ஒரு நிமிடம் அமைதியாகி அவளை பார்த்து வாயில் கைவைத்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தது (எச்சரிக்கை பா😉😉)

அவளோ இதெல்லாம் சகஜம் தான் என்பதுபோல் முன்னே நடக்க, அவளை பற்றி நன்கு அறிந்த தீக்ஷிதாவோ அவளின் பின் வேகமாக சென்று,

இதழ் கோச்சிக்காதடி… அவனுங்க சும்மா ஏதோ விளையாட்டுக்கு… அவளை நிறுத்தியவள் இழுக்க,

ஹே உண்மைன்னு நினைச்சிட்டியா??? ஏமாந்துட்டியே தீக்ஷி அச்சோ அச்சோ!!! என்று ஆரவாரமாக சிரித்தாள் நங்கை…

இவ்வளவு விளையாட்டுத்தனமாக இருப்பவர்கள் தான் இந்த ரகசியமான மிஷனை இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் செய்ய போவது…

ஆரம்பம்!!!!

ஒவ்வொருவரும் அந்த இருள் படர்ந்த இடத்தில் வெவ்வேறு மூலையில்… தெரிந்த இடமே ஆனால் தெரியாத புதிர்களை முடுச்சவிழ்க்கும் களம்!!!

அவர்களுக்கு எதிரில் இருந்த இடமோ ஏதோ ரகசிய குகை போல் ஆள் அரவமற்று காணப்பட… ஒளிந்திருக்கும் அனைவருக்கும் தெரியும், அதன் பின்னே மொத்த பேருக்கும் உரிய முடுச்சின் பக்கங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது என….

ஒவ்வொருவரும் தங்கள் காதினை கூறாக தீட்டியும், கழுகு போல் கண் வைத்து அந்த இடத்தை நோட்டம் வீட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கான மணியத்தியாலங்கள் தொடங்கியது பத்திலிருந்து ஒன்றுவரை..

அனைவரும் மிக தீவிரமாக அந்த இடத்தை கண்காணிக்க ஆரம்பித்தனர் எப்பொழுது எது வரும் என்று தெரியாதே… பத்து ஜோடி கண்களில் எதிர்பார்ப்புடன் கூடிய சுவாரஸ்யம்.. இங்கிருக்கும் அனைவருக்கும் தேடல் பிடித்தமானது அதிலும் தெரியாத தேடல் கூடுதல் உற்சாகத்திற்குரியது….
எண்ணிக்கை முடியும் போது அந்த இடமே நிசப்தமாக காணப்பட்டது…

வரலாமா??? இவர்களின் அனுமதியோடு முகம் தெரியா ஒருவன்…

கள்ளனுக்கோ ஏக போக வரவேற்பு எதிர்திசையில் இருந்து…

இவன் முகவரி நம் கூட்டத்தில் இருந்து ஈஸ்வரால் கேட்கப்பட,
அவன் சொல்லிய பதிலோ அனைவருக்கும் முகத்தில் இளநகையை ஏற்படுத்தியது அறிந்தது அல்லவா!!!! ஆனால் வெளிப்படுத்த மாட்டார்கள்….

இவனுடைய முக்கிய காரண காரியம் கேட்கப்பட்டது முனிதாவின் அழகான சொற்களின் வழியே,

அவன் விடையோ!!! இருந்த மொத்த பேரையும் எச்சரிக்கையாக்கியது… இப்பொழுது தானே ஆரம்பம்… நம் பத்து பேர் கொண்ட குழுவோ இரண்டிரண்டாகவோ, அல்லது தனித்தோ மிக கூர்மையுடன் முகத்தில் வழியும் வேர்வையுடன் அடுத்த கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை எதிர்நோக்கி காத்திருந்தனர்…

கேள்வியோ ஒளிந்திருக்கும் புதையல்களை பற்றி,

பதிலோ தேடலின் ஒற்றை வார்த்தையாக….

கள்ளன் கூறிய மறுநிமிடம் மொத்த கூட்டமும் அனல் தெறிக்க ஓட ஆரம்பித்திருந்தது…. தங்களின் தேடலை நெருங்க… ஒவ்வொருவருக்கும் பல வழியில் தங்களின் முதல் முடிச்சிற்கான பதிலை எடுக்க…….

ஒரு திசையில் ஓடிக்கொண்டிருந்த சஞ்சீவ் மற்றும் முனிதாவின் தேடலோ சீக்கிரமே மரத்தின் வாயிலாக கிட்ட, அவர்களுக்கு பக்கத்தில் ஒளிந்திருந்த இதழ் மற்றும் தீக்ஷியின் அலைபாய்தலோ அவளின் உடமையிலே அவளுக்கே தெரியாமல் துணை நிற்பவளின் துணையோடு கண்டுபிடிக்கப் பட்டது…. கள்ளூளிமங்கன் போலவே????

இவர்களை விட்டு எதிர்திசையில் ஓட்டமெடுத்தவர்களில் வசீகரனோ வசீகரிக்கும் முல்லை கொடியில் தன் ஓட்டப்பந்தய தேடலை களைத்து கண்டுபிடித்திருந்தான் ஸ்ரீ மற்றும் சர்வேஷின் கலைநயமாக கேட்ட மூச்சிரைப்பு சத்தத்துடன்…

இவர்களின் சொல்பேச்சு கேட்காமல் ஓடிய மற்ற மூவரில் ஒருவன் ராமனை வசைபாடிக் கொண்டிருந்தான் தேடல் வீணாகி வீழ்ந்து விடுவோம் என்ற ஆத்திரத்தில்….

சோத்துமூட்ட சோத்துமூட்ட… எங்கையாவது கொஞ்சமாவது கவனம் இருக்கா நல்லா திங்கறதுல கவனம் இருக்குற அளவுக்கு எல்லா விஷயத்திலையும் இருக்கனும் உன்னாலதான் இப்ப நானும் மாட்ட போறேன்!!!!! என்று கோபத்துடன் சேர்ந்து ஆற்றாமையுடன் சொல்லி முடித்தான் கார்த்திக்…

இவனின் திட்டலை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளாதவன் பாக்கட்டில் கைவிட்டு நொறுக்குவதற்காக எடுத்து வந்த தீனியை எடுக்க கைவிட, கார்த்தியின் மாட்டபோறேன் என்ற இறுதி சொல்லலில் சுயஉணர்வு பெற்று அதிர்ச்சியாகி பாக்கட்டில் இருந்த கையோடு நின்றவன்….

போடா நீ!!! ரொம்ப பண்ற நான் அவங்ககிட்ட போறேன்… என்று சொன்னவன் போயிருந்தான்….. இவனை அழைக்க நேர்ந்த சமயம், கார்த்தியின் தோளில் கள்ளனின் கரமோ ஆக்ரோஷமான சிரிப்புடன் தட்டப்பட்டது…

திகில்!!! மனம் முழுக்க பரவ அதனை உணர்வாக வெளியில் காண்பிக்காதவன் தைரியமாக இருப்பது போல் திரும்ப……

அவனின் தேடலை கண்டறிய முடியா இயலாமையை விட இந்த அதிர்ச்சி மிகப்பெரியது அவர்களுக்கு… ஏனோ????

கள்ளனெனும் முகத்திரையாக மாட்டி அவர்கள் எதிரி நின்றது ராமன் சாயத்திரையில்!!!!!

தேடல் தொடரும்…..

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

வணக்கம் பிரண்ட்ஸ்🙏🙏
தேடலுக்கான முதல் முடுச்சை போட்டுட்டேன்... முழுசா முடுச்சிட்டி போடலாம்னு நினச்சேன்... ஆனா கொஞ்சமே கொஞ்சம் நம்பள மாதிரி நம்ப பிரண்ட்ஸும் யோசிக்கட்டும் அப்படிங்கற நல்ல எண்ணம்😉😉😉 அதனால படுச்சு பாத்துட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க😁😁 நான் கதைத்திரி ஆரம்பிச்சதும் ஆதரவு குடுத்த எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி....😍😍😍
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Semma starting.. Enna புதையல்... Enna புதிர்.... யாரு அந்த கள்ளன்... Paththu per என்னத்த theduraanga..
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Semma starting.. Enna புதையல்... Enna புதிர்.... யாரு அந்த கள்ளன்... Paththu per என்னத்த theduraanga..
நன்றி சித்ரா ஜி 😍😍😍 சொல்லிட்டா கதை முடுஞ்சிடுமே 😉😉😉
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Navya ma super yaru hero heroine
நன்றி ஸ்ரீ சிஸ் 😍😍 ஹா ஹா ஹீரோ ஹீரோயினா 🤔🤔🤔 நான் எங்க போவேன் அவங்களுக்கு 😜😜😜
 
Navya sis i am umaselva eanna ivolo suspension oh my god sis eanna story thiril ah illa love ah so exsiatment pls quickly ud pls sis appadiye hero herine um solluvingalam na ungaluku kuchchi mittai kuruvi rottium eanga kadai la irunthu eaduthu tharuven ah ok va sis i am waiting eagerly navya sis
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Navya sis i am umaselva eanna ivolo suspension oh my god sis eanna story thiril ah illa love ah so exsiatment pls quickly ud pls sis appadiye hero herine um solluvingalam na ungaluku kuchchi mittai kuruvi rottium eanga kadai la irunthu eaduthu tharuven ah ok va sis i am waiting eagerly navya sis
மிக்க நன்றி உமா சிஸ் 😍😍😍 ஹா ஹா இந்த கையில குச்சி ரொட்டி இந்த கையில பதில்... எப்டி நம்ப டீல்😉😉😜😜😜
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ளீஸ் பிரண்ட்ஸ் கதையோட கருத்து திரியில் உங்களின் அன்பான கருத்துக்களை பதிவிடவும் 🙂🙂🙂
 
Last edited:
Top