All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "தேடல் தொடங்கியதே" - கதைத்திரி

Kalaiselvi.A

Active member
ஏன் ஏன்மா உனக்கு இப்படி ஒரு விபரீத கற்பனை. கடைசி நேரத்தில் சின்ன பசங்க விளையாட்டுனு சொன்னீர்கள் பாருங்க அப்போது எப்படி இருந்தது தெரியும? பயங்கர வெறியாக இருந்தது. அப்படி ஒரு டென்சன். அந்த நிமிடத்தை விவரிக்கவே முடியாது. ரொம்ப நல்ல பதிவு.
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் ஏன்மா உனக்கு இப்படி ஒரு விபரீத கற்பனை. கடைசி நேரத்தில் சின்ன பசங்க விளையாட்டுனு சொன்னீர்கள் பாருங்க அப்போது எப்படி இருந்தது தெரியும? பயங்கர வெறியாக இருந்தது. அப்படி ஒரு டென்சன். அந்த நிமிடத்தை விவரிக்கவே முடியாது. ரொம்ப நல்ல பதிவு.
ஹா ஹா ரொம்ப நன்றி கலை சிஸ் 😍😍😍 நீங்கலான் டென்ஷன் ஆகறத பார்த்தா எனக்கு இன்னும் கதைய த்ரில்லா எடுத்துட்டு போலாம்னு தோணுதே 🤔🤔🤔🤣🤣 என்ன பண்ணலாம் 🤣🤣🤣🤣
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ரொம்ப நன்றி கலை சிஸ் 😍😍😍 நீங்கலான் டென்ஷன் ஆகறத பார்த்தா எனக்கு இன்னும் கதைய த்ரில்லா எடுத்துட்டு போலாம்னு தோணுதே 🤔🤔🤔🤣🤣 என்ன பண்ணலாம் 🤣🤣🤣🤣
தெய்வமே.....ஏண்டாஆஆஆ.....ஏண்......😣😣ஹாப்பி மார்னிங்ங்😍😍
 

J.வாசுகி

Well-known member
Hi hii அக்கா...

கடைசில இந்த விளையாட்டுக்கு தானா இத்தனை அக்கபோறு... கடவுளே... நான் என்னெல்லாம் நினைச்சேன் தெரியுமா.... அலாவுதீன் அற்புத விளக்க தேடுற மாதிரி இந்த பத்தும் என்னத்த தேடுதுங்களோன்னு மண்டைய பிச்சிகிட்டேன்ன்ன்ன்....

சத்தியமா எதிர் பார்க்கல... இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கும்னு...

சின்ன வயசுல நானுமே விளையாடி இருக்கேன்... இப்ப உள்ள புள்ளைங்கல்லாம் எங்க...??? அதெல்லாம் அழகான் நினைவுகள் இல்லையா...??

வித்தியாசமான முயற்சி அக்கா...
இனிமே தான் உண்மையான தேடலே தொடங்க போகுது... இதழி ஹீரோயினா இருப்பான்னு நெனைக்கிறேன்... ஹீரோ யாரு... வசீயா?? சஞ்சீவ்வா?? சீக்கிரமா அடுத்த முடிச்ச அவிழ்க்க வாங்கோ அக்கா

I'm waiting ka
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi hii அக்கா...

கடைசில இந்த விளையாட்டுக்கு தானா இத்தனை அக்கபோறு... கடவுளே... நான் என்னெல்லாம் நினைச்சேன் தெரியுமா.... அலாவுதீன் அற்புத விளக்க தேடுற மாதிரி இந்த பத்தும் என்னத்த தேடுதுங்களோன்னு மண்டைய பிச்சிகிட்டேன்ன்ன்ன்....

சத்தியமா எதிர் பார்க்கல... இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கும்னு...

சின்ன வயசுல நானுமே விளையாடி இருக்கேன்... இப்ப உள்ள புள்ளைங்கல்லாம் எங்க...??? அதெல்லாம் அழகான் நினைவுகள் இல்லையா...??

வித்தியாசமான முயற்சி அக்கா...
இனிமே தான் உண்மையான தேடலே தொடங்க போகுது... இதழி ஹீரோயினா இருப்பான்னு நெனைக்கிறேன்... ஹீரோ யாரு... வசீயா?? சஞ்சீவ்வா?? சீக்கிரமா அடுத்த முடிச்ச அவிழ்க்க வாங்கோ அக்கா

I'm waiting ka
மிக்க நன்றி வசு சிஸ் 😍😍 நினைவுகள் நினைவா இருகர்த்தனாலையோ என்னவோ அது அழகாவே இருக்கோ 🤔🤔🤔 ஹா ஹா இதழ் ஹீரோயின்னா அப்படியும் இருக்குமோ??? ஆனா இருந்தாலும் ஓரவஞ்சனை சிஸ் உங்களுக்கு மீதி இருந்த நம்ப கார்த்தி ராமனாலாம் டீல்ல விட்டுடீங்களே???? என்ன பண்ணலாம் அதுக்காகவே உங்கள தேட வைக்கலாம்ன்னு தோணுதே இந்த குட்டி மூளைக்கு 🤣🤣🤣🤣🤣
 

J.வாசுகி

Well-known member
மிக்க நன்றி வசு சிஸ் 😍😍 நினைவுகள் நினைவா இருகர்த்தனாலையோ என்னவோ அது அழகாவே இருக்கோ 🤔🤔🤔 ஹா ஹா இதழ் ஹீரோயின்னா அப்படியும் இருக்குமோ??? ஆனா இருந்தாலும் ஓரவஞ்சனை சிஸ் உங்களுக்கு மீதி இருந்த நம்ப கார்த்தி ராமனாலாம் டீல்ல விட்டுடீங்களே???? என்ன பண்ணலாம் அதுக்காகவே உங்கள தேட வைக்கலாம்ன்னு தோணுதே இந்த குட்டி மூளைக்கு 🤣🤣🤣🤣🤣
அக்கா இந்த பச்சைப்பிள்ளைக்கு... அவ்ளோ பெரிய வேலல்லாம் கொடுத்திட வேணாம்... தாங்காது... எல்ல்லோரும் தான் இருக்காங்க... அதுக்காக...???😉😉😉
ஹீரோவைத்தானே ஹீரோவா போட முடியும்...😵
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேடல் நான்கு:-

11662

காலை ஒருமணி….. நடுநிசி சமயம் குலைப்பதற்க்கு நாய்களும் இல்லாத ஆள்ளரவமற்ற இடம்… கும்மிருட்டோ என்னிடம் நெருங்காதே என எச்சரிக்க விடுக்க… பூச்சிகள் சத்தம் காதை கிழிக்க… அந்த சென்னயிலிருந்து வேடந்தாங்கல் செல்லும் குறுக்கு வழி வருபவர்களை உள்வாங்கி தன்னகத்தே மறைத்து காண்பிப்பதில் சாமர்த்தியசாலி என நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபித்து கம்பீரமாக காட்சியளித்து கொண்டிருந்தது!!!!

அதன் வழியே ஆறு ஜோடி காலடி சத்தம்… ஒட்டப்பந்தயத்தை விட வேகமாக மூச்சிரைப்பு சத்தத்துடன் ஆனால் கால்கள் நேராக செல்லாமல் வளைந்து வளைந்து செல்ல…. நான்கு பேரின் முகத்திலும் உயிர் பயம் அப்பி கொண்டிருக்க உடம்பின் மொத்த பகுதியிலிருந்தும் வேர்வை ஊற்ற ஆரம்பித்தது….

அந்த இடம் முழுக்க இவர்களின் காலடி சத்தமும் மூச்சிரைப்பு சத்தமும் அந்த வண்டுகளின் சத்தத்தோடு ரீங்காரமாக ஒலிக்கிறது…. யாருக்கு???? பின்னாடி இவர்களை துரத்தி வரும் அந்த இரண்டு ஜோடி காதுகளுக்கு…

வேட்டைக்காரனுக்கு உடனே இறையை பிடித்து விட்டால் மகிழ்ச்சி ஏற்படாதாம்!!!!! கிடைத்த இறையை முதலில் தப்பிக்க விட்டு பின்னாடியே துரத்தி ஓடி…. வேறு ஓட இடமே இல்லையென இறையே மண்டியிட்டு அவனிடம் நிற்கும் போது ஒரு ஆனந்தம் ஏற்படும் கண்ணில் திமிரோடு கூடிய ஒரு வெறியோடு…. என்ன வெறி??? பழிவாங்கும் வெறி!!!! யாருக்கு யாரை??? என்ற கேள்விகளுடன் புரையோடி நிற்கிறது இந்த இருள்!!!!

அந்த ஆனந்தத்தோடு அதன் இறையைத்தான் எப்படி வேட்டையாட நினைத்தானோ அதை சிறிது கூட பிசக்கில்லாமல் செய்யும் போது ஓடி களைத்த இறையோ ம்ஹும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என தன்னை ஒப்படைத்து விடும்….
இத்தனை வெறியில் இவர்களை வேட்டையாடுபவர்கள் ஓடவிட்டு துரத்த….

ஓடிகளைத்த அந்த நான்கு பேரும் அதற்கு மேல் முடியாமல் அந்த கருப்பண்ண சாமியான சாலையிடம் மண்டியிட்டு விழுந்திருந்தனர் அந்த நல்ல குடிமகன்கள் மொடாபோதையில் தான் எங்கிருக்கிறோம் என்ற முழுவிவரம் கூட அறியாது….. இவர்கள் கீழே விழுந்தவுடன் துரத்தி வந்த இருவரின் காலடி ஓசையும் நின்று போக…..

இவர்களை நிமிர்ந்து பார்த்த அந்த பச்சைப்புள்ளைகளுக்கு மதுமயங்கிய கிரக்கத்தில் எதிரில் நிற்பவர்கள் மங்கலாக தெரிய ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்தனர்…. தெளிவாக இருந்தாலும் அவர்களின் அடையாளம் இவர்களுக்கு தெரிந்திருக்காது முகம் முழுக்க மூடிய திரையால்… ஆனால் தெரிந்த அந்த நான்கு கண்களில் மட்டும் அத்தனை க்ரோதம்…

விழுந்து கிடந்தவர்களோ போதையில் குழைய ஆரம்பித்தனர்…..

ஒருவனோ,
டேய் டேய் எதுக்குடா எங்கள துரத்துறீங்க….
எவ்ளோ பணம் வேணும்னு கேளுடா குடுத்திடறோம்!!!!!

ஒருவனோ இப்பொழுதும் அடங்கவில்லை,
எவன்டா அது??? நாயே… நாங்கல்லாம் யாருன்னு தெரியுமா… இப்டி எங்கள தொரத்தனன்னு எங்க வீட்டுக்கலாம் தெரிஞ்சா கூட நீங்கா ஒழிஞ்சீங்கடா!!! என்று அவர்களை மிரட்டுகிறேன் என்ற பெயரில் தட்டு தடுமாறி எழ பார்க்க….

அவன் நெஞ்சில் அசால்டாக காலை வைத்து அழுத்திக் கொண்டே அந்த இடமே விடியும் அளவுக்கு சிரித்தவன்,

ஹா ஹா மச்சி உனக்கெல்லாம் அவ்ளோ சீனெல்லாம் இல்லவே இல்லை… ஏன் தெரியுமா நாளைக்கு காலைல உன் வாழ்க்கையில என்ன நடக்க போகுதுன்னு முடிவு பண்ண தெரிஞ்ச எங்களுக்கு நீ யாருன்னு தெரியாம இருக்குமா சொல்லு பாக்கலாம்…. என்று சிரித்துக்கொண்டே கேட்க,

அவன் சொல்வதை கேட்ட மற்றவர்களுக்கு அடிவயிறு கலங்கி எச்சில் தொண்டையை விட்டு உள்செல்ல மறுக்க திகில் சிறிது சிறிதாக அவர்களை ஆட்கொள்ள ஆரம்பிக்க…. எவ்வளவோ வாழ்க்கையில தன் பின்பலம் இருக்கும் தைரியத்தில் பயம் என்ற ஒன்று அறியாது செய்தவர்கள் இன்று முதல் முறையாக மொத்த உடம்பும் நடுங்க உயிர்பயத்துடன் எதிரில் இருந்தவர்களை பார்க்க…..

முன் பேசிய அவனுக்கோ சிரிப்பை நிறுத்த முடியவில்லை…. வெறுமனே காதில் அவர்கள் பேசுவதை கேட்பவர்களுக்கு ஏதோ காமெடியை பார்த்து சிரிப்பது போல்தான் தோன்றும்.. ஆனால் அவன் எதிரில் கீழே விழுந்து கிடந்தவர்களுக்கு அவன் சிரிப்போ அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை கேட்பது விட பயங்கரமாக இருக்க உயிர்ப்பிச்சை கேட்க ஆரம்பித்தனர் அந்த கயவர்கள்

எங்கள விட்ருங்கடா…. நீங்க என்ன கேட்டாலும் செஞ்சுதரோம்…. எதுக்கு எங்கள இப்டி தொரத்தறீங்க?? என்று அதில் ஒருவன் கதரிக்கொண்டே அழ…

அவனை பார்த்தவனுக்கோ உடனே கொன்றுபோடும் ஆத்திரம் கழுத்துவரை நின்றாலும் கொஞ்ச நேரம் விளையாடிப்பார்க்க விபரீத ஆசை அவனின் அந்த கொடூர மூளையில் உடனடியாக முளைத்துவிட அவன் பாட்னரை பார்த்தவன்….

பாட்டனர் உடனே உங்களுக்கு சம்பவம் செய்யணுமா?? எனக்கு கொஞ்சம் டைம் வேணுமே இவங்க கூட விளையாட…. என்று சிறுபிள்ளை போல் கேட்க இத்தனை நேரம் வரை எதுவும் பேசாமல் அமைதியாக அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த அவன் பாட்னரோ கண்ணாலே சம்மதம் தெரிவித்திருந்தார் அவன் விளையாட்டுக்கு..

எனக்கு உன் டீல் புடிச்சிருக்கு மை பாய்… ஆனா பாரேன் அத லாக் பண்ணதான் எனக்கு மனசேவர மாட்டேங்குது…. இருந்தாலும் நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுன்னு இந்த குட்டி மனசு விட்டு விட்டு சொல்லுதே… என்ன பண்ணலாம் என்று தலையை தட்டி யோசித்தவன்….

மொத்த பேரையும் பார்த்து நாங்க சின்ன வயசுல திருடன் இருக்க மாதிறி ஒரு விளையாட்டு விளையாடுவோம் அதுல யாரு கடைசியா பிடிப்பட்றாங்களோ அவங்கதான் திருடனா இருப்பாங்க… அப்பவே எனக்கு திருடனா இருக்கறதுனா ரொம்ப புடிக்கும்…. ஆனா இப்ப திருடனா இருக்க முடியாதுல அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்த எனக்கு வில்லன் ரோல் உனக்கு சரியா இருக்கும்டான்னு நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி சொன்னீங்க பாருங்க….. ஹேட்ஸ் ஆப்ட்ரா…. என்று அவர்களை பார்த்து சலூட் அடித்தவன்,

கண்ணில் உள்ள நரம்புகள் எல்லாம் செவ்வரியோட மொத்த ரத்தமும் கண்ணிமைக்கு வந்து நிற்க அவர்களை பார்த்தவன்…

வில்லனுக்கான பாத்திரத்தை சரியா செய்யணும்னு நானும் ரொம்ப ஆசைப்பட்டேன்…. எப்டி தெரியுமா உங்கள கண்ணுல பாத்தவுடனே உங்க உடம்புல இருக்குற மொத்த எலும்பையும் ஒடச்சி ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமா வெளியேத்தி…. உடம்புல இருக்குற மொத்த சதையையும் பிச்சிபிச்சி எடுத்து அத உங்களையே பார்க்க வைக்கணும்னு ஒரு குட்டி ஆசைதான்….. என்று அவன் சொல்லி முடிக்கும் போது அங்கிருந்த நால்வருக்கும் ஏறிய போதை கொஞ்சம் இறங்கி உடல்பாகம் முழுவதும் உறைந்து செயலற்று நின்றது கேட்ட கொடூரத்தின் செயல்களில்…

தன்னை அறியாமல் நால்வரும் பின்னே தரையோடு தரையாக நகர…..

அடடா பயப்படாதீங்க செல்லம்ஸ் அதெல்லாம் செய்ய வேணாம்னு என் பாட்டனர் சொல்லிட்டாங்க… என்று சொல்ல,

அந்த வில்லன் பக்கத்தில் நின்றிருந்தவரை நன்றியோடு எட்டு ஜோடி கண்களும் ஒன்றாக நோக்க வில்லனுக்கோ தலைவரை வெறியேற ஆரம்பித்தது….

ஆனா பாருங்க அவங்க வேற ஒரு ஐடியா வச்சிருக்காங்க அத கேட்டவுடனே அப்டியே ஜிவ்வின்னு இருந்துச்சு தெரியுமா உடனே ஓகே பண்ணிட்டேன்னா பாத்துகோங்களேன்…. என்று மிக சாதாரணமாக ஏதோ விளையாடி கொண்டிருப்பதுபோல் சொல்ல மொத்த பேருக்கும் அவர்களின் இதயம் துடிக்கும் ஓசை இரண்டு காதுகளிலும் படபடவென அடிக்க, தப்பிக்க முடியாத குகையில் மாட்டிக்கொண்ட உணர்வு….

அதன் அழுத்தம் இன்னும் அதிகரித்தது வில்லனின் பாட்டனர் கையில் எடுத்த பொருளின் உபயத்தில்…. கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்த போதை முழுதாக தெளிந்து எமதர்மராஜா கண்ணுக்கு புலப்பட ஆரம்பிக்க இடைவேளை விட்டு அடுத்தடுத்து இரண்டு நிமிடத்தில் நால்வரின் அலறல் ஓலம் அந்த சாலையையே கிழித்துக் கொண்டு செல்ல பார்க்க... காற்று அதற்க்கு விடுவேனா என தன் சத்தத்துடன் உள்ளிழுத்து இரண்டு வில்லன்களுக்கும் துணையாக அவர்களை சுற்றி நின்றது!!!!!

யார் இவர்கள் எதற்காக இந்த வெறி ஏன் இத்தனை கொடூரம்?? நமக்கு மட்டும்தான் இந்த தேடலா இல்லை வேறுயாருக்கும் உள்ளதா!!!! தேடுவோம் அடுத்த பதிவில் உங்களுடன் நானும் 😉😉😉😉😉

தேடல் தொடரும்…..

இதுக்கு மேல நோ விளையாட்டு மக்கா அதனால தைரியமா படிங்கோ 😉😉😉 படிச்சு பாத்துட்டு உங்க கருத்துக்களை எனக்காக கருத்து திரியில் பதிவிடுங்கள் மக்கா முடியல மீ பாவம்யா 😟😟😟போன பதிவுக்கு கமண்ட் மற்றும் லைக் போட்ட எல்லாருக்கும் மிக்க நன்றி 😍😍😍😍



 
Top