All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நினைவிலும் நீதானடி என்னுயிரே..

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Nice episode... Enna aachi அவன் life la ஏன் அன்பு அவன் அவ்வளவு avala வெறுத்தாலும் avan manasa maaththa அவன் முன்னாடியே போய் நிக்கிற... Avaluku அப்பா அம்மா இல்ல ah ava ammathaa vum avvallavu kavalai padraanga... Ivanuku avan appaththaa ava kuda senthu kutu panrathu theriyuthu... Ivan avala othukanum nu nenaikiraan.... Ava எப்படியாவது அவன் kuda senthudanum nu nenaikira... Super pa.. Eagerly waiting for next episode
Super Super Super pa.. Nice episode... Enna aachi அவன் life la ஏன் அன்பு அவன் அவ்வளவு avala வெறுத்தாலும் avan manasa maaththa அவன் முன்னாடியே போய் நிக்கிற... Avaluku அப்பா அம்மா இல்ல ah ava ammathaa vum avvallavu kavalai padraanga... Ivanuku avan appaththaa ava kuda senthu kutu panrathu theriyuthu... Ivan avala othukanum nu nenaikiraan.... Ava எப்படியாவது அவன் kuda senthudanum nu nenaikira... Super pa.. Eagerly waiting for next episode
Sure ma next epi inum konjam adikama iruku mahri parthukaran ma tq
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே

அத்தியாயம் ----4

நித்தமும் நிழலாக
வருகிறேன் உனக்காக
நிழலை நீங்க வழியில்லை
வெறுத்தாலும் அன்பே..

இயற்கை கொஞ்சும் பேரழகாக நெடுநெடுவன வளர்ந்த மரங்கள் கிளைப் பரப்பி வெயிலுக்கு குடைப் பிடித்தது சாலையோரங்களில்.. சாலையை கடந்து மண்பாதையில் காரில் சென்று கொண்டிருந்தான் அனலரசு. தன் தோட்ட வீட்டின் முன் நிறுத்தினான்.

வானுயர்ந்த தென்னை மரங்கள் போர்வீரர்கள் போல வரிசையில் நிற்க, மாமரத்தில் அஞ்சகங்கள் கொஞ்சி மகிழும் சத்தமும் ,மாதுளை ,கொய்யா பல வகை பழமரங்களும் வாழைமரங்களும், வயலில் நெற்கதிர்கள் மன்னவனின் பார்வையிலே தலைசாய்ந்து இன்றோ நாளையோ அறுவடைக்கு காத்திருக்க..கரும்பு தோட்டத்தில் சரம் சரமாக கரும்பு கணைகள் வெட்டப்பட்டு டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருக்க அதைப் பார்த்ததும் காரை விட்டு இறங்கிய அனலரசைப் பார்த்த ராசு "சின்னய்யா" வாங்க கூப்பிட்டான்.


என்ன ராசு இன்றையக்கே முடிந்துவிடுமல்லவா வேலை ..டிராக்டரில் நேராக நம் ஆலைக்கு அனுப்பிவிடு கரும்பை..
நாளைக்கு நெற்கதிர்களை அறுவடை செய்ய ஆட்களை வரச் சொல்லிவிடு.. மஞ்ச காட்டிற்கு நாளைக்கு மறுநாள் ஆட்களை வரச் சொல், மடமடவென வேலையை சொல்லியவன் ,இந்த வாரம் கூலியும் சரிபார்த்து கொடுத்துவிடு காரில் ஏறி கிளிம்பினான்.

அதுவரை அவன் பார்வை அங்கிருந்த அழகான பழைய காலத்தில் கட்டிய வீட்டையோ முன்னாடி பெரிய வாசலும் இருபக்கமும் பெரிய தூண்களை கொண்டு திண்ணையும், உள் நுழைந்தும் அழகிய பட்டாசாலையும் ஓடிவிளையாட தோதாக பெரிய தூண்கள் தாங்கி கொண்டு நிற்க தேக்கில் செதுக்கிய ஊஞ்சல் கம்பீரமாக அழகாகவும், வளைந்த மாடிப்படி மரத்தாலே செய்து அழகுற இத்தனை அழகான வீட்டைக் கூட ஏறுயெடுத்து பார்க்காமல் எங்கோ பார்த்து சொல்லி விட்டு கிளிம்பினான். அவன் செல்வதைப் பார்த்த ராசு சின்னய்யா எப்ப நீங்கள் பழையப்படி மாறுவீங்க..வருடக்கணக்காக இந்த வீட்டில் சத்தமே இல்லாமா பாழடைந்து கிடைக்கிறதே..தனக்கு தானே புலம்பியபடி கரும்பு தோட்டத்தை நோக்கி சென்றான் ராசு.

அனலரசின் மனதில் தோட்டத்திற்கு செல்லும்போது எல்லாம் பழைய ஞாபகங்கள் அவனுள் தீயாக எரிகிறது..எத்தனை எத்தனை காலங்கள் கடந்து சென்றாலும் இந்த ஞாபகங்கள் மறையாதா... வண்டியை ஓட்டியவன் ஸ்டீரிங்கில் ஒங்கி குத்தினான்..

மனமோ பலதை யோசித்து யோசித்து
கொதிகலனா கொண்டியிருந்தது. மறக்கவும் வழியில்லாமல் குண்டூசியில் ஒவ்வொரு செல்லிலும் குத்தி குத்தி ரணமாக மாறியது மனம்.. எத்தனை எத்தனை சந்தோஷங்கள் அவ்வீட்டில்..எல்லாமே போய்விட்டதே..எதனால் யாரால்...தெரிந்து இருந்தும் அக்காலத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியாத கோழை சிறுவனாக இருந்தேனே.. இழந்தற்கும் இல்லாமல் போனதற்கும் காரண காரியங்களை எங்கின அறிய அறிந்தாலும் அந்நாளில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது . மனக்குமறலாக பலதை யோசித்து அக்கோபத்தை வண்டி ஓட்டுவதில் காட்டினான்.. காரும் காற்றைப் போல சீறிக் கொண்டு சென்றது..அத்தனை கோபமும் அவனுள் இருந்தாலும் அதை தொழிலிலும்,வேலை செய்பவர்களிடம் காட்டாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதில் திறமைசாலி தான்..

தன் கரும்பு ஆலைக்கு சென்றவன் அங்குள்ள வேலைகளை பார்வையிட்டவன் தனக்காக ஒதுக்கி அறையில் அமர்ந்தவன் எதுவும் செய்யாமல் அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தான்... எப்பவும் மனதினுள் ஒரு குரல் ஒலித்து கொண்டே இருக்க ''மாமா.. எங்கயிருக்க'' கேட்டபடி கவுன் அணிந்து கால்களில் அணிந்த கொலுசு சத்ததுடன் ஓடி வர அவனோ ''ஏய் கண்ணாம்மா விழுந்து விடாதே ''நானே வரேன் ஓடி வாரியணைத்து பஞ்சு கன்னத்தில் முத்தமிட்டான்... மாமா மாமா குழந்தையும் அவனுடைய இரு கன்னங்களில் முத்தமிட்டு கொஞ்சியது...மனதில் ஓடிய எண்ணத்தை ஒதுக்கவே முடியாதா மறக்க முடியாதா கலங்கி தான் போனான் அனலரசு...கலங்கி கண்கள் ரௌத்திரமாக மாறியது . தீயாக எரிய கண்களோ குருதியின் நிறத்தில் மாறியது...

மாலை வரை அங்கிருந்து வேலைகளை முடித்தவன் வீட்டிற்கு கிளிம்பினான்..

ஆற்றங்கரையில் தண்ணீர் சலசலவென்று ஓடும் ஒலியும், ஆற்று மீன்கள் துள்ளி துள்ளி குதித்து நீந்துவதும் இதமான மெல்லிய காற்று தேகத்தை சிலிர்க்க வைக்க அங்குள்ள பாறையில் அமர்ந்திருந்தாள் அன்பினி.. அமைதிக்கு பெயர் அன்பினியா...இல்லை எப்பவும் அந்த மீனைப் போல துள்ளி குதித்து கால்கள் தரையில் படாமல் காற்றாய் பறப்பவளே.... ஆனால் இப்ப மனமோ பல சிந்திக்க ஆற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..

'' அன்பு ஏய் அன்பு ..'' சத்தமாக கூப்பிட திரும்பாமல் அமர்ந்திருந்தவளை பார்த்த தேன் மொழி செவியின் அருகே சென்று ஊ...ஊ..ஊ சத்தமிட திடுக்கிட்ட அன்பு..விருட்டென்று எழுந்தவள் உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் பக்கத்தில் வந்து கத்தாதே ..அவளை துரத்த ஆமாம்டி நானும் வந்தலிருந்து ''அன்பு அன்பு'' கூப்பிட்டுகிட்டு இருக்கேன் திரும்பி பார்க்காமல் எந்த கோட்டை பிடிக்க யோசித்து கொண்டுயிருக்க கேட்டபடி பாறையில் மூச்சு வாங்க அமர்ந்தாள்... அவள் அருகில் அமர்ந்த அன்பினியும் மூச்சு வாங்கி படி உனக்குத் தெரியாதா ஹனி.. குரல் தழுதழுக்க சொல்ல அருகில் அமர்ந்தவளை தோளை சுற்றி கைப் போட்டு தன்னுடன் இறுக்கியவள் எல்லாம் சரியாகும் இப்படி முகத்தை வைத்துக் கொள்ளாதே...தட்டிக் கொடுத்தாள்..
இப்ப உங்க மாமா என்ன சொல்லறாங்க ..கேட்க ம்ம்...அவர் என்ன சொல்கிறார்..பார்த்தாளே பயமா இருக்கு பக்கத்தில் நெருங்க முடியல... அவர் அருகில் போனாலே நான் எரிந்து விடுவனோ பயமா இருக்குடி கண் கலங்க பேசினாள்.

அவள் பேசுவதை கேட்ட ஹனி...ஏய் அவர் மாறிவிடுவார் சரியாகி விடும்.. சொன்னவள் .. இனி வேறு யோசிக்கலாம் ..இருவரும் பேசியபடி எழுந்து வீட்டை நோக்கி நடந்தனர்..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹனி மாமாவை பழைய மாதிரி சிரித்த முகத்தை பார்க்கனும்.. எப்பவும் துள்ளலாக துடிப்பாக கேலி கிண்டல் பண்ணி சந்தோஷமா இருக்கனும்...இறுகி போய் புன்னகை மறைந்த முகத்தை பார்க்க முடியல ,எல்லாரும் சேர்ந்தால் கும்மாளமுமாக குதுக்கலமாக நக்கல் பண்ணி விளையாடிய அந்த காலம் வரவே வராதா வருந்தினாள் அன்பினி..

அவள் பேச பேச இங்க பாரு அன்பு இப்படி பேசி மனதை வருத்திக் கொண்டிருந்தா கதைக்கு ஆகாது சொல்லிட்டேன் ..பேசாமா நான் சொல்லுவதை கேளு ..

''சரிடி ''சொல்லு கேட்கிறேன் அவள் முகத்தை பார்க்க..

இரண்டுயடி தள்ளி நின்று பேசாமா உங்க மாமாகிட்ட போய் நீ சொன்னதை சொல்கிறேன் .. எப்பவும் கோல்கெட் பேஸ்ட் போட்டு விலக்கிய பல்லை ஈ..ஈ.. காட்டனுமா,அவள் கூட சின்ன பிள்ளை போல கண்ணாமூச்சி ஆடி ஒடி விளையாடுனுமா,இப்படி இப்படி சொன்னா சொல்லிட்டு வரட்டா,..

அவள் எதாவது ஐடியா சொல்வாள் முகத்தை பார்த்தால் கிண்டல் பண்ணவும் துரத்திபடி ஒடினாள் அன்பினி, ஏய் நில்லடி ஐடியா சொல்வை பார்த்தா கிண்டலா பண்ணிற,உன்னை கையில் மாட்டின அடி வாங்க போற மூச்சு வாங்க ஓடினாள்..

கல் தடுக்கி கீழே விழந்த அன்பினி எழ முடியாமல் தடுமாற கீறிச் சத்தத்துடன் கார் அவள் அருகே சடன் பிரேக் போட்டு நின்றது..அதிலிருந்து வேகமாக இறங்கி காரின் கதவை அழுத்தி சாத்திவிட்டு அவள் எதிரே திட்டியபடி வந்து நின்றான்..என்னடி நினைச்சிகிட்டு இருக்க, ரோட்டில் உட்கார்ந்து சீன் போட்டு இருக்கியா.. யாரை மயக்க இந்த திட்டம் போன போகது விட்டால் தினமும் உன்னுடன் இதே தொந்தரவு பேச பேச தடுமாறி எழுந்தவளை கன்னத்தில் பளீர் அறைந்தான் ..அன்பினி கண்கள் கலங்கி கன்னத்தில் கைப்பதித்து அதிர்ந்து நின்றாள்..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே..

கனவிலும் நினைவில்லை
கன்னத்தில் உன் விரல்களின்
தடத்தை காண்கையில்
உந்தன் பேரன்பை...

நிலைக் கண்ணாடி முன் நின்றபடி தன் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தாள் அன்பினி. கைவிரல்கள் முத்திரையாக பதிந்து கன்றி சிவந்து போய்யிருந்தது. சாட்டை கை உங்களுக்கு இப்படி தான் அடிப்பீங்களா, பாருங்கள் எப்படி சிவந்து போச்சு .தீங்கன்றா எரிகிறது... தெரியுமா,கண் கலங்கி கண்ணீர் வடிய தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தாள் அன்பினி..

.. ''பயர்கிங்'' சரியா தான் பெயர் வைச்சிருக்காங்க..கைவிரலால அடிச்சுக்கே நெருப்பில் பட்டுப் போல எரிகிறது. நான் என்ன வேணுனா விழந்தேன்,ஹனியை துரத்து ஓடும் போது கல் தடுக்கி விழந்துவிட்டேன், நீங்கள் தான் காரில் வருவீங்க எனக்கு தெரியுமா, ஒருத்தி விழுந்துவிட்டாலே தூக்கி விடனும் அல்லாமல் அறைந்து விட்டிங்க.. மனதிற்குள் அவனை தாளித்துக் கொண்டிருந்தாள் ..
என்னை அடிச்சிட்டிங்களே நாளைக்கு இருக்கு உங்களுக்கு என்ன நடக்க போகது பாருங்கள் ,
இனி உங்களை இப்படி விடபோவதில்லை ..

நான் பயந்து கொண்டே இருந்தால் எப்பவும் அவனை நெருங்க முடியாது...அன்பு தைரியமா இருக்கனும்... பயந்தகுளியா இருக்காதே..''ஸ்டேடி ஸ்டேடி..டீ..''மனதிற்கு சொல்லிக்கொண்டாள் அன்பினி..

ஆனால் உங்களுக்கு'' ஏன்'' இவ்வளவு கோபம் மாமா.உன்னை பார்த்து வளர்ந்தவள் உன்னுடைய ஒவ்வொரு செய்கைக்கு அர்த்தம் இருக்கும் .இப்ப நீங்கள் அடித்தற்கும் எதாவது காரணம் இருக்கும். காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டிங்க. ஆனால் காரணமே இல்லாமல் என் மேலே கோபம் உங்களுக்கு. யாரோ செய்த தவறுக்கு நான் பலி காடா . எத்தனை வெறுத்தாலும் கோபபட்டாலும் வடிகாலா நான் இருப்பேன். எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வேன்.வெறுப்பு கோபம் ஒருநாள் மாறும்.அப்ப இந்த அன்பினி உங்கள் அருகில் இருப்பாள். கரை புரண்டு ஓடும் காட்டாறு வெள்ளம் போல உங்கள் பேரன்பை கண்டு மகிழ்ச்சியின் உச்சத்தை காண தான் போறேன் தனக்கு தானே மனதினுள் பேசிக் கொண்டிருந்தாள்.

அனலரசின் மனமோ கொந்தளித்துக் கொண்டிருந்தது. தினமும் காலையில் நடக்கும் அப்பத்தாவும் அன்பினின் கலாட்டாகளும் நாளாக நாளாக மிதமிஞ்சிய கோபம் தான். ஆனால் அப்பத்தாவின் அந்த சிறிய நேரம் மகிழ்ச்சி குறைக்க கூடாது எல்லா பொறுத்துப் போக வேண்டியதா இருக்கு..இன்று தோட்டம், தோட்டத்து வீடு அனைத்தும் அவனுடைய பழைய காயங்களை கிழித்து குருதி கண்ணீர் வடிக்கிறது.

கண்யெடுத்து அதைக் காணாது இருந்தாலும் மனதில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு என்ன வழி தெரியவில்லை. மனதின் கொந்தளிப்பு வடிகால் அன்பினி அறை வாங்கியதே.

அவள் அடித்த கரத்தை பார்த்தவன் இந்த இந்த கரத்தாலே தானே அடித்தேன். அடித்த எனக்கே கை எரிகிறது அவளுக்கு எப்படி வலிக்கும் சிந்தித்தவன் கை ஓங்கி ஸ்ரேரீங்கலே அடித்தான். அவன் கரம் வலிக்கவில்லை மனம் தான் வலித்தது.

அவள் மென்மையான கன்னம் அடித்த அடுத்த நொடி கன்றி சிவந்து விட்டது. கண்களில் கண்ணீரும் சிவந்த கன்னங்களை கையில் தாங்கி அவள் பார்த்த பார்வை நீ தானா என்னை அடிச்சீங்க கேள்வியைவிட நிஜாமலும் அடிச்சீங்களா நம்பிக்கையில்லாமல் அவள் திகைத்து விழிவிரித்து பார்த்தவள் இன்னும் எத்தனை அடி அடித்தாலும் வாங்கி கொள்வாள் போல அப்படியே தானே நின்றாள். நான் தானே அவளை இழுத்து ஓரத்தில் விட்டு விட்டு வண்டியை எடுத்தேன்.விழியாலே பேசிக் கொல்வதே அவளுக்கு வேலையா இருக்கு...இதுக்கெல்லாம் நாளையே ஒரு முடிவு எடுத்தாகனும். நினைத்தபடி வீட்டின் முன் காரை நிறுத்தி உள்ளே சென்றான்.

அப்பாத்தா நாளைக்கு நான் சென்னை போகிறேன் கரும்பு ஆலை விஷயமாக, நீங்கள் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள் வர இரண்டு மாதமாகும்..நல்ல சாப்பிட்டு உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். சொல்லியபடி மாடி ஏறி சென்று விட்டான் அனலரசு.

பேரன் சொன்னதைக் கேட்ட அழகம்மா ''என்ன ''இரண்டு மாதமா.''ம்கூம்' இவனை விட்டோம் பிடிக்க முடியாது. நாளை அவன் கிளம்பு முன் முடிவு செய்வது உத்தமம் நினைத்தவர் அங்குள்ள தொலைப்பேசியை எடுத்து சில பேருக்கு பேசி முடித்தவர், நீ எப்படி நாளைக்கு ஊர்க்கு போவாய் பார்க்கிறேன் பேராண்டி நினைத்தவர் ,நாளைக்கு நடக்கும் கூத்தை நினைத்து தனக்கு தானே சிரித்தார்.

(சாரி சாரி..கொஞ்சம் லேட்டாச்சு எல்லாரும் மன்னிச்சு.இந்த பகுதி எப்படி இருக்கு உங்கள் பொன்னான கருத்துக்களை கருத்து திரியில் கூறுங்கள் தோழிஸ்... .)..
 
Top