All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நினைவே நீதானே!!"-கதை திரி

Status
Not open for further replies.

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi all,


Happy new year



அத்தியாயம் ஒன்று:


"இல்ல இது எதுவும் உண்மை இல்லை.. என் மாமாவுக்கு எதுவும் ஆகி இருக்காது நான் உயிரோட இருக்கும்போது அவர் உயிர் மட்டும் எங்க போகப்போகுது..? கண்டிப்பா உங்க காதுல வந்து விழுந்த செய்தி தப்பா தான் இருக்கும் மருதன்னா.. உங்கள என் கூட பிறந்த அண்ணன் மாதிரி தான் இப்ப வரைக்கும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்களும் என்னை அப்படி நினைச்சுகிட்டு இருந்தா தயவு செய்து இன்னொரு தடவை இந்த மாதிரி சொல்லாதீங்கண்ணா.."என்று சத்தமாக கத்திய நிசாந்தினி வேக வேகமாக மூச்சு விட்டபடி தன் வயிற்றை பிடித்துக் கொண்டாள்.


அவள் இருக்கும் நிலையை கண்டு தகவலை தெரிவிக்க
அங்கு நின்று கொண்டிருந்த அவள் "மருது அண்ணா" என்ற அழைப்புக்கு உரியவரும் அவள் நிலமையை பார்க்க முடியாது தலையை குனிந்து அழுக ஆரம்பித்தார்.


வீட்டில் உள்ள அனைவரும் அவன் சொன்ன செய்தியை கேட்டு நிலை குலைந்து இருக்க நிஷாந்தினி மட்டும் தன் கணவன் இறந்து விட்டதாக நம்பவில்லை.


"என் மாமா என்னை விட்டு எங்கேயும் போகாது.. அவருக்கு நல்லாவே தெரியும் அவர் இல்லாமல் நான் இருக்க மாட்டேன்னு.. அப்புறம் எப்படி என்ன தனியா விட்டுட்டு போவார் சொல்லுங்க..?"என்று தகவல் சொன்ன மருதுவிடம் கோபமாக கேள்வி கேட்டுவிட்டு வயிற்றை பிடித்தபடி உள்ளே செல்ல, அவளை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார் மருது.


"அம்மாடி தங்கச்சி இது உன் புருஷன் சட்டை தான்ம்மா.. ஐயா காலையில யூனிஃபார்ம்ல வராம இந்த சட்டையில் தான் வந்தாரு.. அவர் போன ஜீப்பு கண்ணுகுண்டு பக்கத்துல முழுசா எரிஞ்சு போய் கிடக்கு.. அதுக்கு பக்கத்துல தான் ஐயாவோட இந்த சட்டை இருந்துச்சு.. எல்லாத்துக்கும் மேல இன்னிக்கி ஐயா தனியா தான் ஜிப்பு ஓட்டிக்கிட்டு அங்க போனாரு.. அவர் கூட வேற யாரும் போகல அந்த விபத்துல அவரோட இந்த சட்டை தவிர வேறு எதுவுமே மிஞ்சலை.. வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் இருக்குதும்மா.."என்றவர் அதற்கு மேலும் எதையும் சொல்ல முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு அழுக அவர் கையில் வைத்திருந்த சட்டையை பார்த்து ஆடி அடித்தார் போன்று அங்கே நின்று விட்டாள் பாவையவள்.


"மாமா இன்னைக்கு இந்த சட்டை போட்டு போங்க போன வாரம் கடைக்கு போயிருந்தப்ப இந்த கலர் சட்டை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.. உங்களுக்காக பார்த்து ஆசையா வாங்கிட்டு வந்தேன் போட்டுக்கோங்க மாமா.."என்று கணவனிடம் அவள் ஆசையாக வாங்கி வந்த கிரே கலர் ஷர்டை கொடுக்க, அவளையே விழிகள் அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் தீட்சண்யன்.


அவன் பார்வையில் பாவையவள் வெட்கம் கொள்ள "எப்ப பார்த்தாலும் இப்படியே பாத்துகிட்டு இருக்க வேண்டியது ஒழுங்கா வேலைக்கு கிளம்புற வழியை பாருங்க மாமா.."என்றவள் குரலில் சலிப்பு தெரிந்தாலும் பார்வை அவனை காதலால் வருடிவிட்டது.


"ஹே மை டியர் ஸ்ட்ராபெரி நீ சொல்லிட்டா அதுக்கு ஆட்சேபனை எதுவும் உண்டா..? இன்னைக்கு டியூட்டிக்கு யூனிபார்ம் போட்டு போகாம நீ கொடுத்த இந்த சட்டையை போட்டுட்டு போனா ஹாஸ்பிடல்ல உள்ள எல்லாரும் என்ன நினைப்பாங்க?"என்றவன் கைகள் அவள் இடையை சுற்றிக் கொள்ள அவள் இதழ்களோ நன்றாக புன்னகையில் விரிந்தது.


"போடி உன் பிள்ளை வரவர உன்னை கட்டி பிடிக்க கூட விட மாட்டேங்குது..!"என்று சலித்துக் கொள்ள, அவன் மீசையை திருகிவிட்டவள் மென்மையாக அவன் கன்னத்தில் முத்தம் வைக்க அவளை ஆசையாக அணைத்துக் கொள்ள முடியாதபடி வயிறு தடுத்ததை எண்ணி அவன் செல்லமாக சலித்துக் கொள்ள அவன் செயலில் எப்போதும் போல் செல்லமாக அவன் மீசையை பிடித்து இழுத்து எப்பொழுதும் அவன் எதிலும் ஏமாந்து போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் அப்பொழுதும் அவன் ஆசையை நிறைவேற்றி வைக்க தயங்கவில்லை.


அவளின் முத்தத்தில் எப்போதும் போல் கிறங்கிப் போனாலும் மருத்துவமனையில் டியூட்டி இருக்க மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு அவள் கொடுத்த உடையை அணிந்து கொண்டவன் 'எப்படி இருக்கு' என்று கண்ணாடி வழியாக அவளிடம் கேட்க,அவனது ஆண்மையை எப்போதும் போல் ரசித்துப் பார்த்த பெண் மனம் அவன் பால் முற்றிலும் கிறங்கித்தான் போனது.


சும்மாவே அவன் மீது பித்து பிடித்தார் போன்று திரிந்து கொண்டிருப்பவள் இப்பொழுது கர்ப்பமாக இருந்ததால் என்னவோ இன்னும் அந்த உணர்வுகள் சற்று அதிகமாக மிகுந்து காணப்பட்டது.


"எப்பவும் போல ரொம்ப அழகா இருக்கீங்க மாமா.."என்றவள் பார்வை காதல் சொட்ட சொட்ட வழிய, மனைவியின் பார்வையில் கிறங்கி தான் போனான் அந்த ஆறடி ஆண் மகன்.


"இப்படி பார்த்து பார்த்து என்னை எப்ப பார்த்தாலும் கவுத்து போட்டுட்டு.."என்றவன் அவளை தூக்கிக் கொண்டு வெளியில் வர, அவன் செயலில் பதட்டம் கொண்ட நிஷாந்தி "உச்.. என்ன பண்றீங்க மாமா..?வெளியில நம்ம வீட்டு ஆளுங்க எல்லாரும் இருக்காங்க..! இப்படியே தூக்கிட்டு போனா அவங்க என்ன நினைப்பாங்க..? தயவு செஞ்சு இறக்கி விடுங்க.."என்றவள் அவன் பிடியில் இருந்து விடுபட போராட,"நிஷாந்தினி.."என்று தீட்சண்யன் குரல் அழுத்தமாக அவள் பெயரை உச்சரிக்க, அதில் அவள் போராட்டம் தடைப்பட்டது.


அவன் வாயிலிருந்து அவள் பெயர் வருவது எப்போதாவது நடக்கும் ஒன்றுதான்.


அதிலும் அவன் கோபமாக இருக்கும் போது மட்டுமே வரும். இதுவரை எத்தனை முறை அவன் தன் பெயரைச் சொல்லி அழைத்து இருக்கிறான் என்பதை எளிதாக அவள் எண்ணி சொல்லி விடுவாள்.


அவளை பெரும்பாலும் அவன் அழைக்கும் விதம் ஸ்ட்ராபெரி மட்டும்தான்.


கணவன் இப்பொழுது பெயரை சொல்லி அழைக்கவும் அவன் கோபமாக இருப்பதை உணர்ந்து அமைதியாகிவிட்டாள்.



அவன் கைகளில் இருந்தபடி அவனை பாவமாக பார்க்க, அவள் பார்வையில் எப்போதும் போல் தன்னை தொலைத்துக் கொண்டவன் கோபத்தை கைவிட்டு புன்னகையை தத்தெடுத்துக் கொண்டான்.


மனைவியை தூக்கிக் கொண்டு மாடிப்படியிலிருந்து இறங்கி வர, அங்கு சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்த அவன் குடும்பத்தினர் எப்போதும் போல் மனைவியை தூக்கிக்கொண்டு அவன் வருவதைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.



அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது தெரிந்தது முதல் மாடிப்படியில் அதிகமாக ஏறி இறங்கக் கூடாது என்று ஒரு மருத்துவராக அவளை இன்று வரை அவன் இருக்கும் சமயங்களில் மாடிப்படி ஏறி இறங்கவிட்டது கிடையாது.



காலையில் அவன் வரும்பொழுது இப்படி தூக்கிக் கொண்டு வருபவன் இரவில் உறங்குவதற்கு முன்பாக அவளை தூக்கிக்கொண்டு இப்படித்தான் மாடிக்குச் செல்வான்.


இதற்கு இடையில் அவள் நிச்சயமாக மாடி படியில் ஏறி இறங்க கூடாது என்பதை கட்டாயமாக குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி விட,அவ்வீட்டின் செல்ல பிள்ளையான அவன் சொல்லை தட்ட தான் யார் இருக்கிறார்கள்??



அன்றும் அப்படி மனைவியை தூக்கிக் கொண்டு வருவதைக் கண்டு அவன் வீட்டில் இருந்தவர்கள் கண்டும் காணாது போல் அவர்கள் வந்ததும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.


"கண்ணா உனக்கு இந்த டிரஸ் பார்க்க ரொம்ப அழகா இருக்கு.. வழக்கம் போல உன் பொண்டாட்டி எடுத்து கொடுத்தது தானே..?"என்று தீட்சண்யன் தாயார் அவனை வம்பிழுக்க,"அஃப்கோர்ஸ் அம்மா நீங்க எடுத்து கொடுத்ததை எங்க டாடி போடும் போது நான் மட்டும் என் பொண்டாட்டி எடுத்து கொடுத்ததை போட கூடாதா?நானும் இந்த வீட்ல ஒரு நாளாவது மாமியார் மருமக சண்டை வரும் எதாவது ஒரு பஞ்சாயத்து பண்ணலாம் பார்த்தா ஒன்னாவது வருதா..!"என்றவன் தலையை இரு பக்கமும் ஆட்ட, அவன் தாய் கோதையும் நிஷாந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் ஒன்று சொன்னால் போல் ஆளுக்கு ஒரு பக்கம் அவன் காதை பிடித்து இழுக்க"ரெண்டு பேரும் விடுங்க ரொம்ப வலிக்குது.."என்று போலியாக அவன் அலற அவன் செயலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார்கள்.


கதை ஆரம்பிப்பதற்கு முன்பாக அவன் குடும்பத்தில் இருப்பவர்களை பார்த்து விட்டு வந்து விடலாம்.


வீட்டின் ஆணிவேரான தாத்தா ராமலிங்கம் அவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள்.


மூத்தவர் வேலுச்சாமி அவரது மனைவி கோதை. இவர்கள்தான் நம் கதாநாயகனின் தாய் தந்தை. இவர்களுக்கு இரு புதல்வர்கள். ஒருவன் நம் நாயகன். அவனுக்கு அடுத்தபடியாக அவன் தங்கை சந்தியா.


அடுத்ததாக ராமசாமி அவரது மனைவி வித்யா. இவர்களுக்கு ஒரே புதல்வன் தான் அவன் பெயர் கார்த்திகேயன்.


அடுத்தபடியாக நம் நாயகி தாய் தந்தை மனோரஞ்சிதம் சுப்பையா தம்பதிகள். இவர்களுக்கும் நிஷாந்தினி ஒரே புதல்வி.


எப்பொழுதும் நிஷாந்தினிக்கு தன்னை குழந்தை போல் பார்த்துக் கொள்ளும்
தீட்சண்யன் மீது அலாதிப் பிரியம்.


தீட்சண்யன் அவர்கள் வீட்டில் முதல் வாரிசு என்பதால் வீட்டில் செல்ல பிள்ளை அவன் தான்.


குடும்பத்தில் உள்ள அனைவரையும் பொறுப்பாக பார்த்துக் கொள்வதில் ஒரு குறையும் சொல்ல முடியாது. அண்ணனைப் போலவே அவன் தங்கை சந்தியாவும். அவனுக்கும் நிஷாந்தினி மீது எப்பொழுதுமே தனிப்பிரியம் உண்டு.


தீட்சண்யன் போலவே நிஷாந்தினி க்கும் அவள் குடும்பத்தின் மீது அலாதி பிரியம் தான்.


தீட்சண்யன் நிஷாந்தினி மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொண்டு அவன் குடும்பத்தில் உள்ள அனைவரும் முறையாக பேசி இருவருக்கும் திருமணம் செய்து முடித்தார்கள்.


குடும்பத்தில் ஒருவருக்கு ஒன்று என்றால் மற்ற அனைவரும் துடித்துப் போவார்கள்.


ஆனால், அவர்களுக்கு எதிர்மறையாக வீட்டில் பிறந்தவன்தான் கார்த்திகேயன்.குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஒதுக்கி வைத்துவிட்டு தனித்தீவாக வெளிநாட்டில் வசித்து வருகிறான்.


அவன் நடவடிக்கை அவன் பெற்றோர்களுக்கு கவலை அளித்தாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் பாசத்தில் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நிச்சயம் ஒரு நாள் அவன் மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையோடு அந்த வீட்டில் தங்கள் காலத்தை கடத்தி வருகிறார்கள்.


நிஷாந்தினி பெற்றோரும் ஒரே மகளை பிரிந்து இருக்க முடியாத காரணத்தினால் மனோரஞ்சிதம் அவர் கணவரையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டிலேயே வந்து சேர்ந்து விட்டார்.



தங்கள் கண் முன்னாலேயே வளர்ந்த குழந்தைகள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பதை பார்த்தால் யாருக்குத்தான் சந்தோஷமாக இருக்காது??


இப்படியே சிரிப்பும் சந்தோஷமாக மனைவிக்கு விடை கொடுத்தபடி தீட்சண்யன் அவனுக்கு மிகவும் பிடித்தமான ஜீப்பில் ஏறி செல்ல, அவன் வீட்டை விட்டு சென்று ஒரு மணி நேரம் கூட கடந்திருக்காது அதற்குள் அவன் இறந்து விட்டதாக ஒரு செய்தி வந்தால் குடும்பத்தில் உள்ள யாருக்குத் தான் அதிர்ச்சியாக இருக்காது?


அவன் சட்டையை பார்த்ததும் நிஷாந்தினி வேறு எதையும் நினைக்க முடியாதபடி அவள் மூளை தன் கட்டுப்பாடுகளை நிறுத்திக் கொள்ள அப்படியே மயங்கி விழுந்தாள்.



ஒரு வாரத்திற்கு பிறகு,


"நிஷாந்தினி கொஞ்சமாவது சாப்பிடுமா அப்பதான் வயித்துல வளர குழந்தைக்கு சத்து கிடைக்கும்.. இப்படியே சாப்பிடாம எத்தனை நாள் தான் இருக்க போற?? கொஞ்சமாவது சாப்பிடு.."என்று கையில் சாதத்தை வைத்தபடி அவள் ஒரு வாய்யாவது சாப்பிட்டு விடமாட்டாளா!! என்ற நப்பாசையுடன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் கோதை சொல்லிப் பார்க்க அவளோ எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் தூணில் சாய்ந்த படி அமர்ந்திருந்தாள்.


"கடவுளே உனக்கு எல்லாம் கண்ணே இல்லையா?இந்த சின்ன வயசுல என் புள்ள உசுர எடுத்துக்க உனக்கு எப்படி தான் மனசு வந்துச்சு! இவள இந்த நிலைமையில் என்னால பார்க்க முடியலையே! கண்ணா உன் பொண்டாட்டி இப்ப இருக்குற நிலைமைல நீ பார்த்தால் உன் மனசு என்ன பாடுபடும்? கடவுளே எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சோதனை..?"என்று கோதை தலையில் அடித்துக் கொண்டு அழுக, மனோரஞ்சிதம் அவரை அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தினார்.


கடந்த ஒரு வாரமாகவே இப்படித்தான் இருக்கிறாள் நிஷாந்தி.


மயக்கம் தெளிந்து எழுந்தவள் தான். எந்நேரமும் பிரம்மை பிடித்தார் போன்று இருந்தாள்.



தீட்சண்யன் மரணம் அவர்களுக்கே பேரிடியாக இருக்க அவளது உயிரே அவன் தான். அப்படி இருக்கும் பொழுது அந்த சம்பவம் அவள் உயிர் வரை பாதித்திருக்கும் என்பதால் அவளை முடிந்தவரை சமாதானப்படுத்தி பார்த்துவிட்டார்கள் பலன் தான் இல்லை.


தீட்சண்யன் இறப்பு அவர்களுக்கு தாங்க முடியாத துயரமாக இருக்க அதைவிட நிஷாந்தினி உயிர் இருந்தும் ஜடம் போல் இருப்பதைக் கண்டு இன்னும் துன்பம் இரு மடங்காக உயர்ந்து போனது.


தீட்சண்யன் இறந்து விட்டதாக மருது சொன்னதும் விரைவாக அவன் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த ஆண்கள் அவன் ஜீப் தடம் இன்றி எரிந்து கிடப்பதையும் ஆங்காங்கு சிலசில எலும்பு துண்டுகள் கிடந்ததைக் கண்டு முற்றிலும் நொறுங்கிப் போனார்கள்.


அவன் இறந்து இருக்க மாட்டான் என்ற நப்பாசையுடன் அந்த இடத்திற்கு வந்தவர்கள் சிறுவயதில் அவனுக்கு ஆசையாக நிஷாந்தினி போட்டுவிட்ட டாலர் செயின் காலங்கள் கடந்தும் அவன் கழுத்தில் அப்படியே இருந்தது அங்கிருந்த ஒரு செடியின் அருகில் கிடக்க முற்றிலும் உடைந்து போனவர்கள் அவ்விடத்திலேயே ஆண் மகன்கள் என்றும் பார்க்காமல் சத்தமாக அழுக ஆரம்பித்தார்கள்.


இறுதி நேரத்தில் அவன் முகத்தைக் கூட பார்க்க முடியாது வெறும் எலும்பு துண்டுகள் மட்டுமே அதுவும் சொற்பமாக கிடந்ததைக் கண்டு உயிரோடு துடி துடித்துப் போனவர்கள் அவனுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை நல்லபடியாக செய்து முடித்தார்கள்.


அவனுக்கு செய்த எந்த சடங்கிலும் அவள் கலந்து கொள்ளவில்லை.


இறுதியாக அவள் கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழட்ட அப்பொழுதும் எந்தவிதமான உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் இருப்பதை கண்டபோதுதான் அவள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் கவலையிலிருந்து வெளியில் வந்து அவளை நன்றாக கவனிக்க ஆரம்பித்தார்கள்.


அவன் இறந்த பொழுது மயங்கி விழுந்தவள் தான் இப்பொழுது வரை ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை என்பதை அப்பொழுதுதான் புரிந்து கொண்டார்கள்.


தீட்சண்யன் இறப்பை தாண்டி இப்பொழுது உயிரோடு இருக்கும் தங்கள் வீட்டுப் பெண்ணையும் இழந்து விடுவோமோ? என்ற பயம் அவர்களை பிடித்துக் கொண்டது.


முதலில் அவள் தாயார் மனோரஞ்சிதம் தான் அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டவர் "கவலைப்படாதம்மா உன் புருஷன் எங்கேயும் போகல! உன் வயித்துல குழந்தையா வந்து பிறப்பான் தயவு செஞ்சு இப்படி இருக்காத! வாய்விட்டு அழுதுடு அது தான் உனக்கும் உன் வயித்துல வளர குழந்தைக்கும் நல்லது!! இப்படி நீ இருக்கிறத என்னால பாக்க முடியலம்மா.."என்றவர் அவள் தலையை வருடி கொடுத்தபடி கண்ணீருடன் சொல்ல, அவளோ எதுவும் சொல்லாமல் கண்களைக்கூட சிமிட்டாமல் அப்படியே இருந்தாள்.



அவளை குளிக்க வைப்பது முதல் சாப்பிட வைப்பது என அனைத்தையும் அவள் மாமியார் கோதை தான் பார்த்துக் கொண்டார்.


அவர்கள் பேசுவது அவள் காதில் விழுகிறதா? இல்லையா? எனும் அளவிற்கு படுமோசமாக இருந்தது அவள் நிலைமை.


எப்போதாவது அபூர்வமாக வாயை திறந்து ஒரு சில கவளம் மட்டும் உணவுகளை வாங்கிக் கொள்வாள்.


அதுவும் வயிற்றில் வளரும் குழந்தை எட்டி உதைத்து நான் இங்கு தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும்போது மட்டும் தான்.


அந்த குழந்தை மட்டும் அவள் வயிற்றில் இல்லை என்றால் நிச்சயம் அவள் உயிர் அவளை விட்டு பிரிந்திருக்கும் என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தார்கள் அவள் குடும்பத்தில் உள்ள அனைவரும்.


"அம்மா என் பொண்ணை பாருமா அவ இப்படி இருக்கிற நிலைமையை என்னால பாத்துகிட்டு இருக்க முடியல.. ஏதாவது பண்ணி என் பொண்ணை எனக்கு பழையபடி மாத்தி கொடுத்துடுங்க..என் பொண்ணு ஒரு நிமிஷம் கூட ஒரு இடத்துல உட்காராம துருதுருன்னு சுத்திகிட்டே இருப்பா! இப்போ அவளை இந்த நிலைமையில பார்க்க முடியல நான் என்ன பண்ணுவேன்..?"என்று மனோரஞ்சிதம் தலையில் அடித்துக் கொண்டு அழுக, மகளை அணைத்துக் கொண்ட கண்ணம்மாள் கண்களிலும் கண்ணீர் தான்.


"கவலைப்படாத கண்டிப்பா ஏதாவது ஒரு வழி இருக்கும் என் பேத்தி பழையபடி மாறிடுவாள்.."என்று மகளுக்கு ஆறுதல் சொன்னபடியே அவரும் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார்.



அவர்கள் குடும்பம் மருத்துவரை வரவழைத்து வீட்டிலேயே அவளுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்கள்.



மருத்துவரும் எவ்வளவோ முயற்சித்தும் நாட்கள் தான் கடந்து கொண்டதே தவிர அவள் நிலைமையில் சிறிதும் மாற்றம் இல்லை.


"இங்க பாருங்க இதே மாதிரி அந்த பொண்ணு இருந்தா அவங்க உயிருக்கும் அவங்க வயித்துல வளர குழந்தை உயிருக்கும் ஆபத்து.. பொதுவா இந்த சமயத்துல பொண்ணுங்க ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.. ஆனா இவங்க நிலமை எல்லாத்துக்கும் தலைகீழா இருக்கு இப்படியே போனா உயிருக்கு ரொம்ப ஆபத்தாகிடும்.."என்று மருத்துவர் சொன்னதையே கேட்டு சுப்பையா கண்ணீருடன் அவர் காலிலேயே விழுந்து விட்டார்.


"எப்படியாவது என் பெண்ணை காப்பாற்றி கொடுத்துடுங்க டாக்டர் அவ தான் என் உசுரு.. அவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா அப்புறம் நானும் உயிரோடு இருக்க மாட்டேன்.."என்று அழுக அவரது நிலைமையை கண்டு மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வர அந்த மருத்துவருக்கே அவர் செயலில் கண்ணீர் வந்துவிட்டது.


"தயவுசெய்து எந்திரிங்க சார் இப்படி என்னை பாவம் பண்ண வைக்காதீங்க! உங்க பொண்ணு குணமாக ஒரே ஒரு வழி தான் இருக்கு.. ஆனால் அது ரொம்ப கஷ்டம்..!" என்று மருத்துவர் இழுத்து நிறுத்த, கண்களை துடைத்துக் கொண்ட ராமலிங்கம் "எதுவா இருந்தாலும் சொல்லுக டாக்டர் கண்டிப்பா பண்ணலாம்.. இன்னொரு இழப்பை தாங்க இங்க யாருக்கும் சக்தி இல்லை.."என அவர் சொன்னதையே மற்ற அனைவரின் முகமும் பிரதிபலிக்க மருத்துவர் "அவங்க இந்த நிலைமையில் இருந்து வெளியில் வரணும்னா அதுக்கு முதல்ல அவங்க இது எதையும் யோசிக்க கூடாது.. அவங்களுக்கு ஏதாவது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தே ஆகணும்.. அவங்க மனசுக்கு பிடிக்காத ஏதாவது ஒரு விஷயத்தை பண்ணுங்க கண்டிப்பா அதுல அவங்க மனசு டைவட் ஆகும்.. கண்டிப்பா நம்ம நெனச்சது நடக்கும் கடவுளை வேண்டிக்கலாம் நான் வரேன் சார்.."என்றபடி மருத்துவர் சென்றுவிட, அங்கிருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.



அதேநேரம் தன் கூட பிறக்காத தமையன் இறந்த செய்தியை கேட்டு பல வருடங்களாக அந்த வீட்டு வாசல் படியை மிதிக்காத கார்த்திகேயன்
தீட்சண்யன் இறந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அவ் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.


வீட்டிற்கு வந்தவனை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.


அவன் குணம் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு உயிர் பலியாகி தாங்கள் அனைவரும் துன்பத்தை சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அதை பகிர்ந்து கொள்ள கூட தங்கள் பக்கத்தில் இல்லாதவனை கண்டு அனைவருக்கும் அவன் மீது கோபம் தான் வந்தது.


கார்த்திகேயனும் அங்கிருந்த யாரையும் பொருட்படுத்தாமல் அவ்வீட்டில் அவனுக்கு என்று இருந்த அறைக்கு சென்று விட்டான்.



மகனை வெகு நாட்களுக்குப் பிறகு பார்த்ததும் வித்யா மனம் சந்தோஷப்பட்டாலும் தீட்சண்யன் அவருக்கு பிறக்கவில்லை என்றாலும் தன் மகனைப் போலவே நினைத்து அவனை வளர்த்து வந்தவர் அவன் மரணத்தில் கலந்து கொள்ளாத மகனை நினைத்து விரக்தி கொண்டு அவனை ஒதுக்கி வைத்து விட்டார்.



கண்ணம்மாள் வீட்டில் துயரத்திற்கு மேல் துயரம் வந்து கொண்டிருப்பதை கண்டு குடும்ப ஜோசியரை அழைத்து நிஷாந்தினி ஜாதகத்தை பார்க்க அவளது ஜாதகத்தை பார்த்த அவர்களது குடும்ப ஜோசியர் "அந்தப் பொண்ணு கழுத்துல இறங்கின தாலி மறுபடியும் ஏறுனா மட்டும் தான் உயிரோட இருப்பாள்.. இல்லன்னா இந்த வீட்ல ரெண்டு உயிர் பலியாகிடும்.."என்று சொல்லிவிட, துடித்துப் போய் விட்டார்கள் அனைவரும்.


அவள் இருக்கும் நிலைமையில் எப்படி அவளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க அவர்களால் முடியும்?



அவள் கணவன் மீது அவள் வைத்துள்ள அன்பு அவர்கள் அனைவருக்கும் தெரிந்தது.



மருத்துவர் சொன்னது ஜோசியர் சொன்னது என அனைத்தும் ஒன்று மாறி ஒன்று அவர்கள் மனதை வலம் வந்து கொண்டிருக்க இறுதியாக வித்யா ஒரு முடிவெடுத்தார்.


"மாமா அத்தை நான் சொல்வதை கேட்டு கோபப்படாமல் ஒரு நல்ல முடிவு எடுங்க.. டாக்டர் சொன்னது ஜோசியர் சொன்னது எல்லாத்தையும் வச்சு என் மனசுல ஒரு யோசனை தோணுது..நிஷாந்திக்கு இந்த உலகத்திலேயே பிடிக்காத ஒருத்தர்ன்னா அது என்னோட மகன் மட்டும் தான்..
தீட்சண்யன் நம்மள விட்டுப் போய் இன்னும் முழுசா ஒரு மாசம் கூட முடியல!! ஒரு வருஷம் நம்ம வீட்ல நல்ல காரியம் எதுவும் பண்ண கூடாது தான் ஆனா நம்ம பொண்ணு உயிரோட இருக்க இதை தவிர வேற எந்த வழியும் இல்லை..என் மகனை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க மாமா அத்தை.."என்றிட அவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.


கார்த்திகேயன் குணம் அனைவருக்கும் தெரியும்.


நிஷாந்தினி குணத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாத குணம் கொண்டவன் தான் கார்த்திகேயன்.



குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இக்கட்டான நிலையில் வேறு என்ன முடிவெடுப்பது என்று தெரியாத மன நிலைமையில் நிஷாந்தினி உயிரையும் அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் உயிரையும் காப்பாற்றுவதற்காக வேறு வழி இல்லாமல் வித்யா சொன்னதற்கு ஒப்புக்கொள்ள எப்படியாவது அவளுக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணத்தை முடித்தே ஆக வேண்டும் என்று உறுதி கொண்டார்கள்.



அக்னி குண்டத்திற்கு முன்பாக மணமக்கள் இருவரும் அமர்ந்திருக்க, ஐயர் கடமையே என்று மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தார்.

என்ன ஒரு ஆச்சரியம்!திருமணம் என்று சொன்னால் அங்கு சந்தோஷத்திற்கு சிறிதும் பஞ்சம் இருக்காது அல்லவா? ஆனால், அந்தத்திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர் முகத்தில் கூட சிறிதும் மகிழ்ச்சி இல்லை.

நெருப்பிற்கு முன்பாக அமர்ந்திருந்த மணமகள் மணமோ அதைவிட பலமடங்கு தீயாய் எரிந்துகொண்டிருந்தது தன் அருகில் அமர்ந்திருந்தவனை கண்டு.

அக்னி குண்டத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த மணமகள் கைகளோ தன் மேடிட்டவயிற்றை அழுத்தமாக பிடித்துக் கொண்டிருக்க,மனமோ ஊமையாக அழுது கொண்டிருந்தது.

அவள் அருகில் அமர்ந்திருந்த மணமகன் அவள் இருக்கும் நிலையை சரியாக கணித்தவன் அவள் காதுக்கருகில் "ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா? நியாயமா இத நினைச்சு நீ சந்தோஷப்படணும்.. புருஷன் செத்து ஒரு மாசத்துல உனக்கு அடுத்த மாப்பிள்ளை ரெடியா கிடச்சிட்டேன்.. நியாயமா இப்ப நான் தாண்டி அழுது கிட்டு இருக்கணும்.. போயும் போயும் வேறொருத்தன் பொண்டாட்டி அதுவும் அவ அவனோட குழந்தையை சுமந்துகிட்டு இருக்கும்போது கல்யாணம் பண்ணிக்க ஒரு பெரிய மனசு வேணும்.. எல்லாம் என் தலையெழுத்து உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கணும்..சீ..!"என வெறுப்பாக கூறிவிட்டு தள்ளி அமர்ந்து கொள்ள அவனை அருவருப்பாக பார்த்தாள்பெண்ணவள்.

அவள் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் இறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வேறொருவனை திருமணம் செய்ய வேண்டியதை நினைத்து அவள் உள்ளம் துடிதுடித்துகொண்டிருக்க, அவள் மனநிலமையை அறியாது அவன் மேலும் மேலும்அவள் மனதை ரணப்படுத்திக்கொண்டிருந்தான்.

முகத்தில் எந்தவிதமான உணர்வுகளையும் காட்டாமல் தன்னை இந்த கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்திய தன் சொந்தங்கள் அனைத்தையும்வெறுப்புடன் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டாள்.

'எதுக்காக என்னவிட்டு போனீங்க மாமா..?என்னால உங்க இடத்துல வேற யாரையும் வச்சு பார்க்க முடியலையே!! இனி நான் என்ன பண்ண போறேன்..?'என்று ஊமையாய் அழுது கொண்டிருக்க அவள் கழுத்தில் தாலி கட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான் அவன்.


அன்பு என்றால் என்ன? என்று கேள்வி கேட்பவன் அன்பே உயிராக வாழ்பவளிடம் காட்டி அவள் நேசத்தைப் பெற்றுக் கொள்வானா? இல்லை அவளை உயிரோடு துடிக்க வைக்க போகிறானா?
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:


"தம்பி ஏதாவது சாப்பிடறியா சாப்பாடு கொண்டு வரவா..?"என்று கேட்ட தாயை ஏளனமாக பார்த்த கார்த்திகேயன் அடர்ந்த கேசத்தை கைகள் கொண்டு கலைத்து விட்டவன் இதழ்களில் நக்கல் புன்னகையுடன் அவரைப் பார்க்க அவன் பார்வை தாங்க முடியாமல் தலையை குனிந்து கொண்டார் வித்யா.


"நான் இங்க வந்து ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் உங்க கண்ணுக்கு தெரிகிறேனா மிஸ்ஸஸ் வித்யா..! அந்த அளவுக்கு உங்களுக்கு வேண்டாத பிள்ளையாகி போயிட்டேன் இல்லையா..! இது எல்லாம் எப்பவுமே இந்த வீட்டில நடக்கிற சாதாரண விஷயம் தான்.. ஜஸ்ட் அபௌட் தென் நீங்க கிளம்புங்க பசிச்சா எப்படி சாப்பிடணும்னு எனக்கு தெரியும்.."என்றவன் அவர் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் தன் கைகளில் வைத்திருந்த செல்லில் புதைந்து போக,அவனது அந்த பதில் வித்யா மனதை புண்படுத்தினாலும் அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்பதால் வெளியில் செல்லாமல் அங்கேயே நின்றார்.


ஒரு சில நொடிகள் வரை அவரைக் கண்டும் காணாமல் இருந்த கார்த்திகேயன் அவர் இருந்த இடத்தை விட்டு அசையாமல் அங்கேயே நிற்பதைக் கண்டு கோபமாக அவரை நிமிர்ந்து பார்த்தவன் "உங்களை இங்கிருந்து போக சொன்னாத எனக்கு ஞாபகம்.. எதுக்கு தேவையில்லாம வந்து உசுர வாங்கிட்டு இருக்கீங்க..! உங்க யார் முகத்தையும் பார்க்க பிடிக்காம தானே இத்தனை வருஷமா இந்த வீட்டு பக்கம் வராமல் இருந்தேன்..!இதுவரைக்கும் ஒரு தடவையாச்சு எனக்கு போன் பண்ணி எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை கேட்டிருப்பீங்களா மிஸ்ஸஸ் வித்தியா..? இப்ப மட்டும் எதுக்கு இங்க வந்து நின்னு என் உசுரை வாங்கிகிட்டு இருக்கீங்க போய் தொலைங்க..!"


"நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லி திட்டு கார்த்திக் உனக்கு அதற்கு எல்லா உரிமையும் இருக்கு.. ஆனா நீ ஒரு விஷயத்தை மறந்துடாத நான் உன்னோட அம்மாடா.. என்கிட்ட இருக்க திமிர் தான் உன்கிட்ட அப்படியே இருக்கு.. நான் சொல்ற விஷயத்தை இப்ப நீ செஞ்சு தான் ஆகணும் உனக்கு வேற ஆப்ஷன் இல்லை.."


"ஹொவ் டேர் ஆர் யூ..?"என்று கோபமாக சத்தம் போட்ட கார்த்திகேயன் அருகில் கிடந்த நாற்காலியை தூக்கி போட்டு உடைக்க அதற்கெல்லாம் சிறிதும் அசையாமல் நின்று கொண்டிருந்தார் வித்யா.


நாற்காலி உடைந்த சத்தத்தில் கீழிருந்த குடும்பத்தினர் அனைவரும் பதட்டமாக மேலே வர அங்கு அவர்கள் பார்த்த காட்சி அவர்கள் உயிரையும் உலுக்கி போட்டது.



ஆம். கார்த்திக் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டான் என்பதை நன்றாக புரிந்து வைத்திருந்த வித்தியா கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை கொண்டு தன் கையை அறுத்துக் கொண்டார்.


அவர் கைகளில் இருந்து ரத்தம் சொட்ட ஆரம்பிக்க அதை பார்த்து எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான் கார்த்திக்.


மனைவி இருந்த நிலைமையை கண்டதும் துடித்து விட்டார் ராமசாமி.


"ஏண்டி இப்படி பண்ண..? என்னை விட்டு போக உனக்கு அவ்வளவு சந்தோசமா..?ஐயோ கையில எவ்வளவு ரத்தம் வடியுது சீக்கிரம் வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க இப்பவே ஹாஸ்பிடல் போகணும்.."என்று வித்யா கைகளை பிடித்துக் கொண்டு கத்த, கணவரை கண்ணீருடன் பார்த்த வித்யா அவர் கையில் இருந்த தன் கையை விலக்கிக் கொண்டார்.


ராமசாமி அவர் செயலில் மனைவியை கேள்வியாக பார்க்க அவரைப் பார்த்து இரு பக்கமும் தலையசைத்த வித்யா "இவன் நிஷாந்தியை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிற வரை இந்த இடத்தில் இருந்து நான் வரமாட்டேன்.. ஒன்னு இவன் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லணும் இல்ல இந்த இடத்திலேயே என் உசுரு போகணும்.."என்று சொல்லிவிட, ராமலிங்கம் கண்ணம்மாள் என இருவரும் மருமகளிடம் எடுத்துச் சொல்ல எதுவும் வேலைக்காகவில்லை.



கார்த்திகேயனும் தன் நிலைமையிலிருந்து சிறிதும் இறங்காமல் பிடித்த பிடியில் அப்படியே நிற்க, பெற்ற தாய் இந்த நிலைமையில் இருக்கும் பொழுதும் அவன் மனம் கல்லாக இருந்ததை நினைத்து அவன் அந்த குடும்பத்தில் பிறந்ததை கேவலமாக எண்ணி கூசி போனார்கள் குடும்பத்தினர்.



ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு விட முடியாமல் வித்தியா மயக்கமாகும் நிலைக்கும் சென்றுவிட, அப்போதும் அசையாமல் கல்லென நின்று கொண்டிருந்தான் கார்த்திகேயன்.


அந்த நிலைமையிலும் வித்தியா அவனுக்கு சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அவரும் அவர் பிடியிலேயே உறுதியாக இருக்க, வேறு வழி இல்லாமல் மகன் காலில் விழுந்துவிட்டார் ராமசாமி.


"உன்னை கெஞ்சி கேட்கிறேன் பா.. உன்னை பெத்தத தவிர நாங்க வேற எந்த தப்பும் செய்யல..எனக்கு என் பொண்டாட்டி தான் உலகம் தயவு செஞ்சு அவளை காப்பாற்றி கொடு.. அவளுக்கு நீ தான் இப்ப உயிர்பிச்சை போடணும் தயவு செஞ்சு எங்களுக்கு உதவி பண்ணு இல்லன்னா உங்க அம்மா உயிரோட என் உயிரும் இந்த இடத்திலே போய்டும்.."என அவரை விட்டு இரண்டு அடி பின்னால் தள்ளி சென்ற கார்த்திகேயன் "எமோஷனல் பிளாக் மெயில்.. என்கிட்ட இந்த வேலை எல்லாம் செல்லுபடி ஆகாது.."என்றவன் ஒரு இகழ்ச்சி புன்னகையுடன் அமர்ந்து விட, அந்த நிமிடம் அவனை பிள்ளையாக பிறந்ததை கோலாகலமாக கொண்டாடியதை நினைத்து அருவருத்துப்போனார் ராமசாமி.


அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அசையாமல் நின்றவன் இறுதியில் வேறு வழி இல்லாமல் அவன் தாய் உயிருக்கு போராடுவதை கண்டு எரிச்சலோடு அவர் சொன்னதற்கு ஒப்புக்கொண்டான்.


"இதே மாதிரி 17 வருஷத்துக்கு முன்னாடி இந்த நிலைமையில் நான் இருந்தப்ப நீங்களும் சரி உங்க குடும்பத்துல இருந்த யாரும் என்னை நெனச்சு ஒரு துளி கூட கவலைப்படல்ல.. இன்னைக்கு அதே நிலைமை உங்களுக்கு வரும் போது ரொம்ப வலிக்குது இல்லையா..? உங்க குடும்பம் எனக்கு பண்ணியிருக்கிறது ரொம்ப பெரிய அநியாயம்.. இதுக்கெல்லாம் நிச்சயம் உங்களுக்கு தண்டனை கிடைச்சே ஆகும்..!"என்று வெறுப்புடன் சொன்னவன் அந்த அறையை விட்டு வெளியே செல்ல, அவன் சொன்னதை கேட்டு அங்கிருந்த அனைவரின் நெஞ்சமும் அவன் சொன்னதை நினைத்து துடித்து போனது.


மகன் திருமணத்திற்கு சம்மதம் சொல்வதற்காகவே காத்திருந்த வித்யா தான் நினைத்ததை சாதித்து விட்ட சந்தோஷத்தில் மயங்கி விட, அவரை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு செல்ல சரியான நேரத்தில் சிகிச்சை கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.


மனோரஞ்சிதம் முகம் கவலையாக இருந்ததை கண்ட சுப்பையா அவர் தோளில் ஆறுதலாக கை வைக்க, கணவரை பார்த்தவர் அவர் தோள்களில் சாய்ந்து கொள்ள "கவலைப்படாத புள்ள கண்டிப்பா நம்ம பொண்ணு நமக்கு கிடைச்சிடுவாள்..அவளை இந்த நிலைமையிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு கார்த்திக் ஒருத்தனால் மட்டும்தான் முடியும்.."


"அவங்க அம்மா அந்த நிலைமையில் இருக்கும்போதும் அவன் எப்படி கல்லு மாதிரி நின்னுகிட்டு இருந்தான் நீங்க தானே பார்த்தீங்க..? இவனை நம்பி எப்படி நம்ம பொண்ணை கட்டிக் கொடுக்கிறது..! ஏற்கனவே என் பொண்ணு அரை உயிரா தான் இருக்கிறா..! இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவள் மொத்த உயிரையும் காவு கொடுக்கவா..?"


"இப்ச்.. அப்படி எல்லாம் தப்பா பேசாதம்மா.. ஆயிரம் தான் இருந்தாலும் அவன் உன் அண்ணன் மகன்.. நிச்சயம் அவன் கேடு கெட்டவன் எல்லாம் கிடையாது.. கண்டிப்பா அவனை நம்பி நம்ம பொண்ணை கொடுக்கலாம்.."


"உங்களுக்குத்தான் அவனை சுத்தமா பிடிக்காதே..? இப்ப அவனுக்கு பரிந்து பேசிகிட்டு இருக்கீங்க..?"



"என்னமோ எனக்கு தெரியவில்லை மனோ நிச்சயம் நம்ம பொண்ணு நமக்கு பழையபடி கிடைப்பாள் என்ற நம்பிக்கை கார்த்திகை பார்த்ததும் தோணுது..இதுக்கு மேல கடவுள் விட்ட வழி கடவுள் மேல பாரத்தை போட்டு ஆக வேண்டிய வழியை பார்க்கலாம்.."என்றவர் மனதில் பல பல எண்ணங்கள் உதித்தன.


"இங்க பாரு நிஷாந்தி இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. இல்லன்னா நானும் உங்க அப்பாவும் இந்த இடத்திலேயே உன் கண்ணு முன்னாடி செத்துப் போவோம்.."என்று மனோரஞ்சிதம் மகளை மிரட்ட, அவ்ளோ எப்போது போல் சுய நினைவு இல்லாமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


மகளை அந்த நிலைமையில் பார்க்க முடியாத மனோரஞ்சிதம் தலையில் அடித்துக் கொண்டு அழுக, சுப்பையா மகளின் தலையை வாஞ்சையாக வருடிவிட எதற்கும் அசையாமல் அப்படியே இருந்தாள் பெண்ணவள்.


பெற்றோர் இருவருக்கும் அவள் இருந்த நிலைமையை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையுடன் தவித்துக் கொண்டிருக்க, கதவை திறந்து உள்ளே வந்தான் கார்த்திகேயன்.


"சை எங்க பார்த்தாலும் இந்த நீலி கண்ணீர் தான்..உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா எப்ப பார்த்தாலும் ஒப்பாரி வச்சுக்கிட்டே இருக்கீங்க..? முதல்ல ரெண்டு பேரும் வெளியில போங்க இவகிட்ட நான் கொஞ்சம் பேசணும்.."


"எதுக்காக இப்படி எல்லாம் பேசுற கார்த்திக்.. நீ இப்படி எல்லாம் இருந்த ஆளே இல்லையே..? எதுக்குடா இப்படி மாறிப்போன..!"என்று வேதனையுடன் மனோரஞ்சிதம் கேட்க, அவரை நக்கலாக ஒரு பார்வை பார்த்த கார்த்திகேயன் "உங்களுக்கு அப்படியே தெரியாது பாருங்க.. நான் இப்படி மாறி போனதுக்கு உங்க குடும்பமும் இவளும் தான் காரணம்.. பை த வே உங்ககிட்ட பேச எனக்கு டைம் இல்ல..உங்க பொண்ணு இப்படியே பைத்தியம் பிடிச்சது மாதிரி இருந்தா நாளைக்கு இவளை நான் கல்யாணம் பண்ணும் போது எனக்கு தான் அசிங்கம்.. முதல்ல ரெண்டு பேரும் வெளியில போங்க இவ கிட்ட நான் பேசணும்.."


"முடியாது வெளியே போக முடியாது உன்கிட்ட என் பொண்ணை தனியா விட்டுட்டு போக மாட்டேன் கார்த்திக்.."



"ஆஹா அப்படியா மிஸ்சஸ் மனோ ரஞ்சிதம்..அப்ப உங்க பொண்ணை நீங்களே பத்திரமா வச்சுக்கோங்க.. இந்த மாதிரி ஒருத்தியை கல்யாணம் பண்ணி என் லைஃபை ஸ்பாயில் பண்ண நான் விரும்பல.."என்று ஏளனமாக சொல்ல, மேலே பேசப்போன மனோரஞ்சிதத்தின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய சுப்பையா கண்களால் வேறு எதுவும் பேச வேண்டாம் என்று சைகை செய்தபடி அவரை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல, மகளை கலக்கமாக திரும்பிப் பார்த்தபடி கணவருடன் வெளியில் சென்றார் மனோரஞ்சிதம்.


"எதுக்காக அவனை நம்பி உள்ளே விட்டுட்டு வந்தீங்க..!"


"நான் உனக்கு மறுபடியும் மறுபடியும் ஒரே பதிலை தான் சொல்லப் போறேன் மனோ.. கண்டிப்பா கார்த்திகேயன் அந்த அளவுக்கு கெட்டவன் கிடையாது.."என்றவர் கண்களை மூடிக்கொள்ள, கணவர் சொன்னால் நிச்சயம் அது 100% சரியாக இருக்கும் என்று மனோரஞ்சிதமும் அதற்கு மேலும் எதுவும் பேசவில்லை.



உணர்வுகள் எதுவும் இல்லாமல் தனது கட்டிலில் சாய்ந்த அமர்ந்திருந்த நிஷாந்தியை பற்கள் தெரிய புன்னகைத்தபடி பார்த்து கார்த்திகேயன் அவளுக்கு முன்பாக சென்று அமர்ந்தான்.


"ஹலோ மை டியர் ஃபியூச்சர் வைஃப்.. ஃபியூச்சர் மிஸ்ஸஸ் நிஷாந்தினி கார்த்திகேயன்.."என்று சொல்ல,இத்தனை நாட்களாக எந்தவிதமான உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் இருந்த நிஷாந்தி அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டதும் சுயநினைவு கொண்டு தன் எதிரில் இருந்தவனை முடிந்தவரை பார்வையால் சுட்டு பொசுக்கினாள்.



"அய்யய்யோ இவங்க பெரிய கண்ணகி அப்படியே பார்வையால் என்னை எரிக்க போறாங்க..! எனக்கு வேற ரொம்ப பயமா இருக்கு.."என்று கார்த்திக் பயப்படுவது போல் நடிக்க, அவனை பார்க்க பிடிக்காமல் விழிகளை மூடிக்கொண்டாள் நிஷாந்தி.


"ஏய் கண்ண தொற உன்கிட்ட பேசணும்.."


*****


"ஒழுங்கு மரியாதையா கண்ண தொறடி.."என்று கார்த்திக் கோபமாக கத்த, அவன் ஒருவன் அங்கு இல்லை என்பது போல் கண்களை மூடி அமர்ந்திருந்தாள் நிஷாந்தி.



"இப்ப மட்டும் நீ கண்ண தொறக்கல நான் லிப் டு லிப் கிஸ் கொடுத்துடுவேன்.."என்று அவள் பக்கத்தில் நெருங்கிய அமர, அவன் செயலில் நெருப்பு பட்டது போல் அந்த இடத்தை விட்டு வேகமாக எழுந்து விட்டாள் நிஷாந்தி.



"சீ நீ அசிங்கம் உன்னை பார்த்தாலே பெரிய பாவம்.. இன்னொரு தடவை நான் இருக்கிற பக்கம் கூட நீ வரக்கூடாது.. நீ சுவாசிக்கிற மூச்சுக்காற்றை நான் சுவாசித்தால் கூட தீராத நோய் எல்லாம் எனக்கு வந்து சேரும்.. எல்லாத்துக்கும் மேல என்னை தொட்டு பேசற உரிமை என் மாமா ஒருத்தரை தவிர வேறு யாருக்கும் இல்லை.. மரியாதையா வெளியில போடா நாயே..!"என அவளை வன்மமாக பார்த்த கார்த்திகேயன் "நான் கூட இப்ப வரைக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்தில இல்லை.. உன்ன இவங்க கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போகலாம்னு நினைச்சு தான் வந்தேன்.. ஆனா உன்னுடைய இந்த திமிர் தனத்தை பார்த்ததும் அத அடக்கியே ஆகணும்னு இந்த நிமிஷம் முடிவு எடுக்கிறேன்டி.. இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் தயாராயிரு செல்லம்.."என்றவன் அவள் கன்னத்தை தட்டி விட்டு செல்ல, வெறுப்புடன் அவன் தட்டிச் சென்ற கன்னத்தை சோப்பு போட்டு பலமுறை கழுவிய பிறகு தான் திருப்தி அடைந்தாள்.



அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவள் களையிழந்து போயிருந்த தன் முகத்தை கண்டதும் மனதில் வெவ்வேறு எண்ணங்கள் தோன்றி அவளை அலை கழித்தது.


'உங்களுக்கு எப்பவுமே நான் சிரிச்சு சந்தோஷமா இருக்கிறது தானே பிடிக்கும் மாமா..?நான் இப்படி இருக்கிறது கண்டிப்பா உங்களுக்கு பிடிக்காது தானே..!'என்றவள் கணவன் நினைவில் சில நிமிடங்கள் மூழ்கி போக, வயிற்றில் இருக்கும் குழந்தை எட்டி உதைத்து அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்தது.



'நீங்க எங்கேயும் போகல மாமா கண்டிப்பா நீங்க உயிரோட தான் இருப்பீங்க.. என் உயிர் இருக்கும்போது நீங்க எப்படி என்னை விட்டுப் போவீங்க..!"'என நினைத்தபடி குளித்து முடித்துவிட்டு அவள் கணவன் இருக்கும் பொழுது எப்படி இருப்பாளோ அதே போல் நன்றாக உடையணிந்து கீழே வர, அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள் அவள் குடும்பத்தினர்.



கீழே இறங்கி வந்தவள் பார்வை முழுவதும் எதிரிலிருந்த மேஜை மீது போட்டோவாக மாறி இருந்த தீட்சண்யன் புகைப்படத்தின் மீதுதான்.



போட்டோவின் நடுவில் குங்குமம் வைத்து பெரிய மாலை தொங்கிக் கொண்டிருக்க கீழே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.


அப்புகைப்படத்தின் அருகே சென்றவள் கரங்களோ தாமாக எழுந்து அதை வருடி கொடுத்தன.


போன மாதம் இதே நேரம் அவளை சீண்டி கொண்டிருந்தவன் இப்பொழுது புகைப்படமாக!!



வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது..? இன்று இருப்பவர்கள் நாளை இருப்பதில்லை..? நிலையில்லாத இந்த வாழ்க்கையில் எதை தக்க வைத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்..? வாழும் காலங்களில் பல மனிதர்கள் ஐயோ அவர்கள் போலே நமக்கு வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று கிடைக்காத ஒன்றை எண்ணி எண்ணி அதற்காக ஏங்கி ஏங்கியே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.


கணவனைப் பற்றிய நினைவுகள் அவள் ஆழ் மனதில் இருந்து வெளியில் வர, அத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் அனைத்தும் வெளியில் வர ஆரம்பித்தது.


"எதுக்காக எதுக்காக என்னை விட்டுட்டு போனீங்க மாமா.. நீங்கதானே என்னோட உலகம் உயிர் எல்லாமே எனக்கு எல்லாமே நீங்க தானே நீங்க எல்லாமே இனி நான் எப்படி வாழப் போறேன்..? நீங்க ஒரு சுயநலவாதி மாமா கொஞ்சம் கூட என்னையும் என் வயித்துல வளர உங்க குழந்தையையும் பத்தி யோசிக்காம எங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போயிட்டீங்க இல்ல..! ஏன் எதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை..? உங்களைத் தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாதே..! ஒரு நாள் நீங்க என் பக்கத்துல இல்லனாலும் துடிச்சு போயிடுவேன்னு உங்களுக்கு தெரியும் தானே..? அப்படி தெரிஞ்சும் எதுக்காக என்ன விட்டுட்டு போனீங்க..!இனிமேல் நானே உங்களை பாக்கணும்னு நினைச்சாலும் பார்க்க முடியாத தூரத்துக்கு போயிட்டீங்களே..?"என்றவள் வெடித்து அழ, அவள் கண்ணீரைக் கண்டு மொத்த குடும்பமும் அழுதது.



கண்ணம்மாள் அவளை தன் தோளில் சாய்த்து கொள்ள இருக்க இருக்க அவள் கண்ணீர் அதிகமானதை தவிர குறையவில்லை.



பல நாட்களாக அவள் மனதில் இருந்த வேதனை கண்ணீராக கரைந்து செல்லட்டும் என்று அவளை யாரும் சமாதான படுத்த முயற்சி செய்யவில்லை.



ஒரு கட்டத்தில் அழுகை நின்று தேம்பலாக மாறி போக, அதீத உடல் தலைப்பில் அழுது கொண்டு அப்படியே கண்ணம்மா மடியில் உறங்கி விட்டாள்.



அவள் தலையை மென்மையாக வருடிவிட்ட கண்ணம்மா கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்து விட்டு கணவரை நிமிர்ந்து பார்த்தவர் "எனக்கு என் பேத்தி பழையபடி நமக்கு கிடைச்சிடுவான்னு நம்பிக்கை வந்துடுச்சு.. நான் கூட வித்தியா கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க சொல்லும்போது கொஞ்சம் யோசிச்சேன் தான்.. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கார்த்திக் இவகிட்ட பேசிகிட்டு இருக்கிறதா மனோ வந்து சொன்னதுக்கப்புறம் கூட கொஞ்சம் உறுத்தல தான் இருந்துச்சு.. இத்தனை நாளா நம்ம எவ்வளவோ பேசியும் அப்படியே இருந்த பொண்ணு இன்னைக்கு அவளாவே வந்து அழுக ஆரம்பிச்சிட்டா.. கார்த்திகேயன் ஒருத்தன தவிர இவளை யாராலும் சரி பண்ண முடியாது..! அதோட எத்தனை நாளைக்கு நம்ம பேத்தி தனியா வாழ முடியும்.. முடிஞ்சது முடிஞ்சு போச்சு தீட்சண்யன் இப்ப சாமியோட சாமியா ஆயிட்டான்.. அவன் ஆத்மா எங்க இருந்தாலும் இவ சந்தோசமா இருக்கணும் தான் துடிச்சுக்கிட்டு இருக்கும்..இவ இப்படியே காலம் முழுக்க தனியா இருக்கிறத பார்த்தா அவன் ஆத்மா சாந்தி அடையாது.. ஜோசியர் சொன்னது மாதிரி இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்.."என்று சொல்ல அதை ஆமோதிப்பது போல் ராமலிங்கம் அமைதியாக இருந்தார்.


கார்த்திக் ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் அங்கே கூடியிருக்க ஏனையோரும் அவர் முடிவை ஏற்றுக்கொள்வது போல் அமைதியாக இருந்தார்கள்.





அங்கு நடந்த அனைத்தையும் மாடிப்படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் கண்கள் சொல்ல முடியாத உணர்வை பிரதிபலிக்க, வேறு யாரும் பார்ப்பதற்கு முன்பாகவே அதை மறைத்தபடி சென்று விட்டான்.



"எப்படி அம்மாச்சி உங்களால இப்படி எல்லாம் என்கிட்ட சொல்ல முடியுது..?"



"தயவு செஞ்சு நீ எங்க எல்லாரையும் மன்னிச்சுடு நிஷாந்தி.. கார்த்திகேயன் உயிருக்கு மிகப்பெரிய கண்டம் இருக்கு..இப்பதான் இந்த குடும்பத்துல ஒரு உயிர் போச்சு மறுபடியும் இன்னொரு இழப்பை தாங்குற சக்தி எங்க யாருக்கும் இல்லம்மா..வீட்ல துயரத்துக்கு மேல துயரமா வந்துகிட்டு இருக்குதுன்னு நம்ம குடும்ப ஜோசியரை வரவழைத்து ஜாதகம் பாத்ததில அவன் உயிருக்கு மிகப்பெரிய கண்டம் இருக்கும்னு சொல்லிட்டு போயிட்டார்.. கண்டிப்பா அவனுக்கு கல்யாணம் பண்ணி தீரனும் நீ தான் அவனை கல்யாணம் பண்ணிக்கணும்.."



"முடியா.."


"இரு நிஷாந்தி நான் இன்னும் பேசி முடிக்கல மொத்தமா சொல்லி முடிச்சிடறேன் அதுக்கப்புறம் உன்னோட முடிவை நீ சொல்லு..உனக்கு நான் சொல்ற விஷயம் ரொம்ப வேதனையாக தான் இருக்கும்..உன் புருஷன் இருந்து இன்னும் ஒரு மாசம் கூட முழுசா முடியல அதுக்குள்ள வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க சொன்னா உன் மனசு என்ன பாடுபடும்னு எனக்கு நல்லாவே தெரியுது ஆத்தா.. ஆனா எனக்கு வேற வழி இல்ல காலம் முழுக்க நீ இப்படி ஒண்டிக்கட்டையா இருக்கிறத பார்க்கவும் முடியாது..அதேபோல கார்த்திகேயன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தா அதையும் பாத்துகிட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்..நீ இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா சம்மதிச்சு தான் ஆகணும்னு நாங்க யாரும் உன்னை வற்புறுத்த மாட்டோம் ஆனா நீ ஒத்துக்கிட்டா ரொம்ப சந்தோஷம்.. இன்னொரு இழப்பை தாங்குகிற சக்தி இங்கே யாருக்கும் இல்லை அவனோட உயிர் இப்போ உன் கையில.. ஏற்கனவே ஒரு உயிரை பலி கொடுத்துட்டு நிற்கிறோம்..உயிரோட மதிப்பு உனக்கு நல்லாவே தெரியும் இதுக்கு மேல உன்னோட விருப்பம்.."என்றவர் இலை மறை காயாக சொல்லிவிட்டு சென்றுவிட, அவர் இப்படி சொன்ன பிறகு அவளால் எங்கனம் பதில் சொல்ல முடியும்?


ஒருவேளை அவர் இந்த திருமணத்திற்கு அவளை வற்புறுத்தி இருந்தால் எதிர்த்து பேசி இருக்க முடியும்.



பிரச்சனை அதிகமாக இருந்தால் நிச்சயம் வீட்டை விட்டு சென்று இருப்பாள்.


அவரோ ஒரு உயிரை காப்பாற்றும் பொறுப்பு உன்னுடையது என்று அல்லவா!! சொல்லிவிட்டு சென்றுவிட்டார்..



எப்படி அவளால் ஒரு உயிர் போவதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியும்??



இரண்டு நாட்கள் அப்படியே கழிந்து செல்ல கண்ணம்மாவிடம் வந்த நிஷாந்தி "நீங்க கார்த்திக் அத்தானுக்கு வேற ஒரு நல்ல பொண்ண பார்த்து கூட கல்யாணம் பண்ணி வைக்கலாம் அம்மாச்சி.. உங்களுக்கே தெரியும் என்னோட முடிவு இந்த விஷயத்துல என்னன்னு.. என்னால மாமா இடத்துல வேற ஒருத்தரை கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாது.."



"பரவாயில்லைம்மா இததான் நீ சொல்வேன்னு எனக்கு அப்பவே தெரியும்.. அவன் வேற பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவான்னு உனக்கு நம்பிக்கை இருக்குதா..?"என்ற கண்ணம்மாள் அவள் கண்களை கூர்மையாக பார்க்க, அவரைப் பார்க்காமல் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.



"நீ ரொம்ப கஷ்டபடாத இப்போ உன் வயித்துல குழந்தை வளர்ந்துக்கிட்டு இருக்கு இந்த நேரம் தான் நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.. ஏற்கனவே வேணும்கிற அளவுக்கு அந்த கடவுள் உனக்கு கொடுத்துட்டார்.. உன்னோட மனசை இதுக்கு மேலும் நம்ம குடும்பத்துல இருக்க யாரும் கஷ்டப்படுத்த மாட்டோம்.. கார்த்திக் எப்பவுமே இந்த குடும்பத்துக்கு வேண்டாத ஒரு பிள்ளை தான்.. அவன் உயிரோட இருந்தா என்ன செத்தா என்ன..?அத நெனச்சு இந்த குடும்பத்துல யாரு கவலைப்பட போறாங்க..? நீ கவலைப்படாம போ தாயி.. இருக்க இருக்க உனக்கு மாசம் நெருங்கி கிட்டு இருக்கு நல்லா தெம்பா சாப்பிட்டு முடிஞ்ச வரை எதையும் நினைக்காம சந்தோசமா இரு.. கார்த்திக் உயிரோட இருக்கும்போது மட்டும் யாரும் அவனை நெனச்சு பார்க்கல.. இன்னும் சொல்லப்போனா உன் புருஷன் செத்ததுக்கு பதில் இவன் செத்துப் போய் இருக்கலாம்னு கூட நம்ம வீட்டு ஆட்கள் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. எல்லாம் அவன் வாங்கி வந்த வரம் அவன் தலையில அந்த கடவுள் இப்படி மோசமா எழுதி வச்சிருக்கார்.."என்று கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு கண்ணம்மாள் சென்று விட, அவர் சொன்னதைக் கேட்டு பெரும் அவஸ்தைக்கு உள்ளானாள் நிஷாந்தி.


இன்று அவள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கார்த்திகேயனை வெறுத்து ஒதுக்குவதற்கு முக்கிய காரணம் அவள் மட்டும் தானே?



அந்த ஒரு சம்பவம் மட்டும் நடக்காது இருந்திருந்தால் இன்று அவனும் அந்த வீட்டில் ராஜாவாக வளர்ந்து இருப்பான்.



பல வருடங்களாக வீட்டில் உள்ள யாரையும் பார்க்க பிடிக்காமல் அவன் அந்த வீட்டை விட்டுப் போனதற்கு முக்கிய காரணமே அவள் தானே?



அவளுக்கு விவரம் தெரிந்தவரையில் அவன் சந்தோஷமாக இருந்ததாக அவளுக்கு நினைவு இல்லை.


தன்னுடைய அறைக்கு வந்தவள் கண்களை மூடி சில நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தவள் இறுதியாக வேண்டா வெறுப்பாக அவன் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த முடிவை எடுத்தாள்.



அவள் எடுத்த முடிவின்படி இதோ அவர்களுக்கு திருமணமும் முடிந்து விட்டது.



திருமணத்தில் எப்படி சந்தோஷம் இல்லாமல் இருந்தார்களோ அதே போல் திருமணத்திற்கு பிறகான எந்த விதமான சடங்குகளையும் செய்து நிஷாந்தியை கஷ்டப்படுத்த விரும்பாமல் அவள் போக்கிலேயே விட முடிவு செய்தார்கள்.


'எப்படி எப்படி..? இத்தனை நாளா என் மாமா இருந்த இடத்துல இனிமே வேற ஒருத்தர்.. எப்படி இதை நான் ஏத்துக்க போறேன்.. கடவுளே எதுக்காக இப்படி ஒரு முடிவை நான் எடுத்தேன் என் மாமாவுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செஞ்சிட்டேன்..' என்று திருமணம் முடித்து கடந்து போன நேரங்களில் கார்த்திகேயனை திருமணம் செய்தது தவறு என்று பலமுறை சிந்தித்து விட்டாள்.



ஆம். கார்த்திகேயன் திருமணம் முடித்த கையோடு இருவருக்கும் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டான்.


அவன் வீட்டில் உள்ள அனைவரும் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் "என் பொண்டாட்டியா இருக்கணும்னா அவள் என் கூட வரட்டும் இல்லை உங்க கூடவே உங்க பொண்ணா இங்க இருக்கட்டும்.. ஆனா ஒன்னு இதுதான் இந்த வீட்டுக்கு நான் வர்றது கடைசி தடவையா இருக்கும்.."என்று சொல்லிவிட, அதற்கு மேலும் அவனைத் தடுத்து நிறுத்த யாரும் முயற்சி செய்யவில்லை.



"ஏய் இங்க பாரு அடுத்த வாரம் நீயும் நானும் யுஎஸ் கிளம்புறோம்.. உனக்கு தேவையான திங்ஸ் எல்லாத்தையும் இப்பவே எடுத்து வச்சுக்கோ..உன்னோட குழந்தைக்கு ஏதாவது திங்ஸ் வச்சிருந்தாலும் உன்னோட பிரக்னன்சி ரிப்போர்ட் வேறு ஏதாவது முக்கியமான இத்யாதி ஏதாவது இருந்தால் எடுத்து வச்சுக்கோ.. இதுக்கப்புறம் நம்ம இந்த வீட்டுக்கு வர மாட்டோம்.."என்று சொன்னபடி கார்த்திகேயன் தன் பொருட்களை எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா? என்று சரி பார்த்துக் கொண்டிருக்க, கண்களை மூடி கட்டிகளை சாய்ந்த அமர்ந்திருந்த நிஷாந்தி தீட்சண்யன் நினைவுகளில் மூழ்கி இருந்தவள் கார்த்திகேயன் சொன்னதை கேட்டு விழிகளை திறந்து அவனை பார்த்தவள் கண்களில் கண்ணீர் கோடு நில்லாமல் வழிந்தது.



"முதல்ல அந்த கண்ணீர் தயவு செஞ்சு அதை ஸ்டாப் பண்ணு.. எனக்கு யாராவது இந்த மாதிரி ஒழுக்கிக்கிட்டு இருக்கிறதை பார்த்தா எரிச்சல்தான் வரும்.. போய் அந்தப்பக்கம் உட்கார்ந்து எவ்வளவு வேணும்னாலும் அழுதுக்கோ நான் கேட்க மாட்டேன்.."என்றவன் கோபமாக அறையை விட்டு வெளியே செல்ல, தலையணைக்கு கீழே வைத்திருந்த தீட்சண்யன் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவள் கரங்களோ தாமாக எழுந்து அவன் புகைப்படத்தை தன்னால் வருடிவிட்டது.


'நான் அழுதா உங்களுக்கு சுத்தமா பிடிக்காது தானே மாமா..என் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்தா அது நீங்க செத்ததுக்கு சமம்ன்னு எத்தனையோ தடவை சொல்லி இருக்கீங்க.. ஆனா என்னால என்னோட கண்ணீரை கண்ட்ரோல் பண்ண முடியல மாமா.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க மாமா.. கார்த்திக் அத்தான் உயிர் ஆபத்தில் இருக்குதுன்னு தெரிஞ்சும் அவர் உயிர் போனால் போகட்டும்னு என்னால அமைதியாக இருக்க முடியல.. ஏற்கனவே உங்களை நான் இழந்துட்டேன் என்னால கண்டிப்பா இன்னொரு உயிரை இழக்க முடியாது.. நான் கார்த்திக் தான் உயிரை காப்பாற்றுவதற்காக மட்டும்தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. மத்தபடி வேற எதுக்காகவும் நான் அவரை கல்யாணம் பண்ணிக்கவில்லை மாமா.. என் மனசு எப்பவுமே உங்களுக்கு மட்டும் தான் சொந்தம்.. உங்களை தவிர வேறு யாருக்கும் அதுல இடமில்லை.. எதுக்காக என்ன விட்டுட்டு போனீங்க மாமா..? ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ மாமா ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஆல்வேஸ் லவ் யூ சோ மச்.. நீங்க இல்லாம நான் எப்படி வாழப் போறேன்.. கார்த்திக் அத்தான கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இதே வீட்ல இருக்கலாம்னு தானே நெனச்சேன்..நீங்களும் நானும் ஒண்ணா வாழ்ந்த இந்த வீட்டை விட்டு எக்காரணத்தை கொண்டும் சத்தியமா நான் போக மாட்டேன் மாமா..'என்று வாய்விட்டு சொல்லியவள் அவன் புகைப்படத்தை மார்போடு அணைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் கண்களில் கண்ணீர் நில்லாமல் வழிய ஆரம்பித்தது.



அதே நேரம் மறந்துவிட்டுப் போன தன் செல்போனை எடுப்பதற்காக உள்ளே வந்த கார்த்திகேயன் காதில் அவள் சொன்ன அனைத்தும் கேட்க தனக்குள்ளையே மேலும் இறுகிப் போனான்.
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் மூன்று:



"எதுக்காக அம்மாச்சி என்னை ஏமாத்துனீங்க..? இதுவரைக்கும் உங்க மனசு நோகும்படி இந்த வீட்ல நான் ஏதாவது செஞ்சு இருக்கேனா..! ஆனா இந்த வீட்ல இருக்க எல்லாரும் சேர்ந்து என்னை உயிரோடு கொன்னு புதைக்க முடிவு எடுத்துட்டீங்களா..?"என்று குரலை சிறிதும் உயர்த்தாமல் அதே நேரத்தில் வார்த்தைகளில் கடுமையை கொடுக்காமல் ஆனால் வார்த்தைகளால் அனைவரையும் சவுக்கால் அடித்தது போல் துடிக்க வைத்தாள் நிஷாந்தி.


"ஏம்மா இப்படி எல்லாம் பேசுற..?"என்று கண்ணம்மா பேத்தி பக்கத்தில் வர, ஒரு அடி பின்னால் நகர்ந்து சென்றாள் நிஷாந்தி.



அவளது விலகலில் கண்ணம்மா துடி துடித்து போய்விட்டார்.


"அம்மாடி நிஷாந்தி.."என்று அடுத்தபடியாக வித்யா அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க, ஒரு கையை உயர்த்தி அவரை பேச வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியவள் கண்களில் கண்ணீர் நில்லாமல் வழிய ஆரம்பித்தது.



"இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமான விஷயம் எது தெரியுமா..? நம்ம மனசார ஒருத்தரை நம்பும்போது அவங்க ஏமாத்துறது தான் இந்த உலகத்திலேயே ரொம்ப கொடுமையான செயல்.. நான் ஏற்கனவே என்னோட மாமாவை இழந்துட்டேன் இப்ப என்னோட குடும்பத்தையும் இழந்துட்டேன்.."என்றவள் தீர்க்கமாக அனைவரையும் பார்க்க, அவள் சொன்னதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.



"நாளைக்கு காலையில கார்த்திக் அத்தான் வந்துடுவார் அவரே என்னை இங்கிருந்து கண்டிப்பா கூட்டிட்டு போயிடுவார்.. கார்த்திக் அத்தான் கெட்டவரா இருந்தாலும் யாரையும் இப்படி நம்ப வச்சு முதுகுல குத்துற ஆள் கிடையாது.."என்று சொன்னவள் அங்கிருந்த யாரையும் பார்க்க பிடிக்காமல் அவளறைக்கு சென்று விட்டாள்.


தனதறைக்கு வந்தவள் கதவை சாத்திவிட்டு அதன் மீதே சாய்ந்து நிற்க, மனதில் தீட்சண்யன் நினைவுகள் அதிகமாக வந்து கொண்டிருந்தது.


'அதோ அந்தக் கட்டிலில் தான் படுத்துக்கொண்டு எப்பொழுதும் அவளை வம்பிழுத்துக் கொண்டிருப்பான்..அதோ அங்கிருக்கே பால்கனி அதன் அருகில் நின்று கொண்டு தான் போன் பேசுவான் அப்படி போன் பேசும் தருணங்களில் எல்லாம் இவள் மேலே வந்து விட்டால் போதும் போனை வைத்துவிட்டு மனைவியிடம் இதழ்கள் கொண்டு பேச ஆரம்பித்து விடுவான்..'என அங்கிருந்த ஒவ்வொரு இடங்களை பார்க்கும் பொழுதும் அவளுக்கு தீட்சண்யன் நினைவுகள் மட்டும் தான்.



போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க அவள் அழுகை இன்னும் அதிகமானது.



"உங்களால எப்படி மாமா இப்படி என்னை தனியா தவிக்க விட்டு போக முடிஞ்சது..? இங்கே இருக்க எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க.. அநியாயமா வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. வித்தியாத்தையும் என்னோட அம்மாவும் எப்படி எனக்கு ஏமாற்றி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்கன்னு அவங்க பேசும்போது எனக்கு கேட்டுருச்சு.. எப்படி மாமா அவங்களால இப்படி எனக்கு ஒரு பெரிய துரோகத்தை பண்ண முடிஞ்சது.. நான் மனசார நம்புன என்னோட அம்மா கூட எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க.. உங்களோட இடத்துல இனிமேல் கார்த்திக் அத்தான்.."என்று பேசிக் கொண்டிருந்தவள் வார்த்தைகள் தடைபட்டு நின்றது.



'அவர் நாளைக்கு வந்துடுவார்..'என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டவள் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தொய்ந்து அமர்ந்துவிட்டாள்.



"எல்லாம் ரெடியா இருக்கா கிளம்பலாமா?"


"எனக்கு இங்கிருந்து எடுக்குறதுக்கு எதுவும் இல்லை.."என சன்னமான குரலில் கூறிய நிஷாந்தி கைகளில்
தீட்சண்யன் புகைப்படம் மட்டுமே இருந்தது.


கார்த்திகேயன் அதை கண்டும் காணாதது போல் முன்னே நடந்து செல்ல,நிஷாந்தி அவள் குடும்பத்தில் இருக்கும் யாரையும் பார்க்க பிடிக்காமல் அவன் பின்னே குனிந்த தலை நிமிராமல் நடந்து செல்ல, அதைப் பார்த்த அனைவருக்கும் குற்ற உணர்வு மனதை குதற ஆரம்பித்தது.



அவளுக்கு உண்மை தெரிய வரும் பொழுது நிச்சயம் தங்களை மன்னிக்க மாட்டாள் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் இப்படி தங்களை யாரோ ஒரு மூன்றாவது மனிதர் போல் ஒரு நொடியில் ஒதுக்கி வைத்துவிட்டு சென்று விடுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.



எல்லாவற்றிற்கும் மேல் அனைத்து விஷயங்களுக்கும் கோபப்படும் கார்த்திகேயனோடு எப்படி தனியாக இருக்க போகிறாள் அதுவும் வயிற்றில் குழந்தையுடன் என்பதை நினைத்து நினைத்து அனைவரும் மனதளவில் வெந்து போனார்கள்.


யாரையும் திரும்பி பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே வந்த நிஷாந்தி கார்த்திகேயனின் காரில் ஏறுவதற்கு முன்பாக தான் வாழ்ந்த வீட்டை ஒரு நொடி திரும்பி பார்க்க, அங்கு அவள் கண்களுக்குத் தெரிந்தது எல்லாம்
தீட்சண்யன் ஒருவனின் பிம்பம் மட்டுமே.



அவனுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடிகளும் அவள் கண் முன் வந்து போக, காரில் ஏறாமல் அப்படியே நின்று விட்டாள்.



காரில் ஏறி அமர்ந்த கார்த்திகேயனும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, நொடிகள் கடந்து நிமிடங்கள் தாண்ட ஆரம்பிக்க அப்பொழுதும் அவள் அப்படியே நிற்பதைக் கண்டு அவன் பிறவி குணமான கோபம் தலை தூக்க ஆரம்பித்தது.


சடாரென காரில் இருந்து இறங்கியவன் கார்க கதவை அடித்து சாத்த, அவன் அடித்து சாத்திய வேகத்தில் கார் ஒரு முறை குலுங்கி நின்றது.


அதில் நினைவுக்குத் திரும்பிய நிஷாந்தி கண்களில் பயம் கலந்த கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவளை திட்டுவதற்காக வாயை திறந்தவன் அவள் பார்வையில் எதை உணர்ந்தானோ? சொல்ல வந்த வார்த்தைகளை தனக்குள்ளே புதைத்து கொண்டு மீண்டும் காரில் உள்ளே அமர, அவனைப் பற்றி தெரிந்தவள் மேலும் எதுவும் யோசிக்காமல் காரில் ஏறி அமர்ந்தாள்.


இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருக்க காரை ஓட்டிக் கொண்டிருந்த கார்த்திகேயன் தான் முதலில் பேச்சை துவங்கினான்.


சாலையில் கவனத்தை பதித்த படி வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளிடம்"இப்ப எப்படி பீல் பண்ற..?"என்று சாலையில் கவனத்தை பதித்த படி நிஷாந்தியிடம் கேள்வி கேட்க, அவன் தன்னிடம் தான் இப்படி எல்லாம் பேசுகிறானா? என்று ஆச்சரியமாக பார்த்த நிஷாந்தி "என்ன மாதிரி உணர்கிறேன் என்று எனக்கே தெரியல.."என்றவள் குரல் தாழ்ந்து ஒலிக்க, ஒரு நொடி அவளை திரும்பி பார்த்தவன் எதுவும் பேசாமல் சாலையில் கவனத்தை பதித்தான்.


அதன் பிறகு அவளை எந்த கேள்வியும் கேட்டு தொந்தரவு செய்யாமல் வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தவனை சிக்னல் தடை செய்யவும் "இப்ச்"என சலித்துக் கொண்டு காரை நிறுத்த,அவன் எதற்காக காரை நிறுத்தினான் என்பதை புரிந்து கொண்ட நிஷாந்தி வேறு எதுவும் கேட்காமல் முன் போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.



கார் சிக்னலில் தடைபட்டு நிற்க 12 வயது சிறுமி ஒருத்தி காரின் கண்ணாடியை தட்ட, அதை கீழே இறக்கியவன் அந்தப் சிறுமியை கேள்வியாக பார்க்க கையில் வைத்திருந்த பூக்கூடையை உயர்த்தி காட்டிய சிறுமி "பூ வாங்கிக்கோங்க சார் ஒரு முழம் 20 ரூபாய் தான்.. இன்னைக்கு சுத்தமா போனி ஆகலை உங்க பக்கத்துல இருக்க அந்த அக்காவுக்கு வாங்கி கொடுங்க சார்.."என்று ஒரு முழம் பூவையாவது விற்று விட மாட்டோமா? என்று அந்த சிறுமி அவர்களை பாவமாக பார்க்க, அந்த சிறுமியை பார்த்த நிஷாந்தி கைகள் தன்னால் தன் வயிற்றை தடவி கொடுத்தது.



அதை ஓர கண்ணால் கண்ட கார்த்திகேயன் "எனக்கு வேணாம்.."என்று சொல்லிவிட்டு காரின் கண்ணாடியை ஏத்தி விட, அந்த சிறுமியின் முகம் களையிழந்து போனது.



"சார் ப்ளீஸ் சார் ஒரு முழம் பூவாவது வாங்கிக்கோங்க.. இதை வித்தா தான் நாளைக்கு நான் ஸ்கூல் போகும்போது எனக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு போக முடியும்.. கொஞ்சமாவது கருணை காட்டுங்க சார் ப்ளீஸ் சார்.. அக்கா நீங்களாவது சொல்லுங்கக்கா வாங்கி வச்சுக்கோங்க அக்கா ப்ளீஸ் அக்கா.."என்று அந்த சிறுமி மன்றாட, அந்த சிறுமியை பார்த்ததும் நிஷாந்தியின் மனம் பாகாய் உருகி விட்டது.



முன்பும் இதே போல் தான் ஒரு முறை
தீட்சண்யனுடன் காரில் வந்திருந்த பொழுது இதே போன்று ஒரு சிறுமி அவனிடம் பூ வாங்கிக் கொள்ள சொல்ல, அவனோ மொத்த பூக்கூடையையும் வாங்கிக் கொண்டு பணத்தை இரண்டு மடங்காக கொடுத்து அவளை நன்றாக படிக்கும்படி சொல்லிவிட்டு பூ மொத்தத்தையும் மனைவியிடம் கொடுத்தவன் "இதை உன் தலையில் வச்சிக்கிட்டாலும் சரி.. இல்ல நைட் படுக்கும் போது பெட்ல வச்சிக்கிட்டு படுத்தாலும் சரி எனக்கு டபுள் ஓகே தான்.."என்று அவளைப் பார்த்து கண்ணடிக்க,"உங்களுக்கு எப்ப பாத்தாலும் வேற வேலையே இல்லையா மாமா அதே நினைப்புதான்.."என்று செல்லமாக சலித்துக் கொண்டு அவன் தோளில் ஒரு அடி வைக்க வலித்தது போல் வேண்டுமென்றே பாவ்லா செய்து அவளின் முறைப்பை வாங்கி கட்டிக் கொள்வான்.



ஒரே நொடியில் மின்னலென அவள் மனதில் தீட்சண்யனுடன் இருந்த நினைவுகள் தோன்றி மறைய, அதற்குள் சிக்னல் விழுந்திருந்தது.



அந்த சிறுமி கெஞ்சுவதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் காரை எடுத்துக்கொண்டு சென்றவனை பார்த்த நிஷாந்தியின் மனம் அவன் செய்ததை கண்டு மனதளவில் அருவருத்துப்போனாள்.



அவனைப் பார்க்க கூட பிடிக்காமல் முன் போல் வேடிக்கை பார்த்து கொண்டு வர, பத்து நிமிடங்களில் அவன் பார்த்து வைத்திருந்த வேறொரு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.



அவன் சுவாசிக்கும் காற்றை தான் சுவாசிப்பது கூட தீங்கை விளைவிக்கும் என்று மூச்சை இழுத்து பிடித்து கொண்டிருந்தவள் கார் நின்றதும் கார் கதவை திறக்க, அவள் முகத்தை வைத்தே என்ன நினைக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட கார்த்திகேயன் முகம் இறுகி போனது.



அவன் வருகைக்கு கூட காத்திருக்காமல் வீட்டு வாசலில் சென்று நிற்க, கார்த்திகேயன் முகம் ஒரு நொடி மிருதுவாக மாறி பின் இயல்பு போல் இறுகிப் போனது.



ஜோடி புறா இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று ஒரு நொடி கூட பிரிந்து இருக்காது.



இவற்றில் ஒன்று இறந்து போனாலும் மற்றொன்று அந்த துன்பத்திலேயே தானும் மாண்டு போய்விடுமாம்.


அதேபோல் வாசலில் நின்று கொண்டிருந்த அந்த பெண் புறாவும் தன் ஆண் புறா இறந்த உடனேயே இறந்து விடலாமா என்று நினைத்தாலும் அடிக்கடி 'உன் வயிற்றில் நான் உயிரோடு தான் இருக்கிறேன்'என்பதை நினைவுபடுத்தும் விதமாக அவள் வயிற்றில் வளரும் குழந்தை எட்டி உதைத்து அவளுக்கு நினைவு படுத்த, அந்தக் குழந்தை
தீட்சண்யன் தனக்கு கொடுத்து சென்ற மிகப்பெரிய பொக்கிஷம் அதை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தன் உயிரைப் பிடித்து வைத்திருந்தவள் கார்த்திகேயனை திருமணம் செய்து கொண்ட போது துடித்து விட்டாலும் அவளை ஒரு கணவனாக தொந்தரவு செய்யாது ஒரு மாத காலம் அவளுக்கு முழுமையாய் அவகாசம் கொடுத்து விட்டு வெளிநாடு சென்று அன்று காலையில் தான் வந்திருந்தான்.



அதனால் தான் என்னவோ அவளுக்கு பெரிதாய் கார்த்திகேயன் நினைவு வரவில்லை.



காரில் ஏறும் பொழுதும் கூட அவன் தன் மாமன் மகன் என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருந்தவள் அந்த சிறுமியிடம் அவன் பாரமுகம் காட்டவும் அவனைப் பார்க்க பிடிக்காமல் தலையை குனிந்து கொண்டவள் பார்வையில் புத்தம் புதிதாய் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருக்க அந்த நிமிடம் தான் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டாள்.



இனிமேல் தான் நிஷாந்தினி தீட்சண்யன் கிடையாது.



நிஷாந்தினி கார்த்திகேயன். தன் பெயரின் பின்னே அவன் பெயரை சொல்லும் பொழுதே அவளுக்கு தாங்க முடியாத துக்கம் வந்து சேர, ஆண் புறாவை இழந்த பெண் புறா துடிப்பது போல் அந்த நிமிடம் அவள் துடிதுடித்துப் போனது என்னவோ உண்மைதான்.



தாடிக்குள் புரிந்திருந்த அவன் இதழ்கள் ஒரு வன்ம புன்னகையை சிந்த கைகள் கதவுகளை திறந்து விட, புலியிடம் அகப்பட்ட மான்குட்டி தப்பித்துச் செல்வது போல் அவன் கதவு திறந்து விட்டது தான் தாமதம் வீட்டிற்குள் வேகமாக நுழைந்தவள் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தியவன் அவள் வயிற்றில் வளரும் குழந்தையை கருத்தில் கொண்டு மிக மெதுவாக சுவரில் சாய்த்தவன் அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டான்.


அவன் செயலில் மருண்ட மான் குட்டி போல் அவள் கருவண்டு விழிகள் அங்கும் இங்கும் அசைய, இரு கைகளையும் சுவற்றில் சாய்த்து பிடித்தவன் தாடிக்குள் இருக்கும் இதழ்களை பிரித்து புன்னகை சிந்த, மேகத்தில் மறைந்திருக்கும் நிலா எட்டிப் பார்ப்பது போல் அவன் புன்னகை அவளுக்கு தோன்றியது.



"என்னங்க பொண்டாட்டி ரொம்ப அதிசயமா பாக்கறீங்க..? நான் பாக்குறதுக்கு அவ்வளவு அழகா இருக்கேனா ரொம்ப ரசித்து பார்க்கிற மாதிரி இருக்கு..?"என்றவன் கேள்வியில் நினைவுக்குத் திரும்பிய நிஷாந்தி, அவன் கைகளில் சிக்கி இருந்த தன் கைகளை விடுவிக்க போராட, அவனும் இன்னும் அழுத்தம் கூட்டினான்.



தான் முயற்சி செய்ய செய்ய அவன் இன்னும் அதிகமாக அழுத்தத்தை கூட்டவும் அவள் கைகள் வலிக்க ஆரம்பிக்க, முயற்சி செய்வதை விட்டவள் கலங்கிய கண்களோடு அவனை நிமிர்ந்து பார்க்க "தட்ஸ் குட்"என்று புன்னகையுடன் சொன்ன கார்த்திகேயன் அவள் கைகளில் இருந்த அழுத்தத்தை குறைத்து விட்டு மெதுவாக பிடித்துக் கொண்டான்.


"தயவு செஞ்சு என் கையை விடுங்க வலிக்குது.."


"முடியாது.."



"எதுக்காக என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க? இங்க பாருங்க உங்களுக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் ஒரு விபத்து மாதிரி தான்.. என்னை ஏமாத்தி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..பொய் சொல்லி நடந்த இந்த கல்யாணத்தை நான் எப்பவும் ஏத்துக்க மாட்டேன்.."என்றவளை பார்த்து நன்றாக வாய்விட்டு சிரித்த கார்த்திகேயனை புரியாமல் பார்த்தாள் நிஷாந்தி.



கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி சீதையை காட்டுக்கு தனியாக அனுப்பி வைத்த ராமனை தன் பதியாக கொண்ட சீதை அவன் தன்னை இங்கு எதற்காக அனுப்பி வைத்தான் என்பதை தெரிந்து கொண்டபோது எப்படி துடித்து போனாளோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் அவன் சொன்னதை கேட்டு துடிதுடித்து போனாள் நிஷாந்தி.



அவள் சொல்வதைக் கேட்டு நன்றாக வாய் விட்டு சிரித்த கார்த்திகேயன் முகம் நொடியில் இறுகிப் போக, சிறை செய்திருந்த அவள் கைகளை விடுவித்தவன் அவள் கழுத்தில் தொங்கிய தாலியை தூக்கி காட்டியவன் "இதுதான் பொய் கல்யாணம் ஆச்சே? அப்புறம் எதுக்கு இந்த தாலி கழட்டி தூக்கி எறி.. இப்ப என் கண் முன்னாடியே இந்த தாலியை நீ கழட்டி தூக்கி எறிஞ்சுட்டா உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன்.. உன் விருப்பப்படி நீ எங்க வேணாலும் போகலாம் இல்ல உன்னை எங்கிருந்து கூட்டிட்டு வந்தேனோ அங்கேயே கொண்டு போய் நானே விட்டுடறேன்.. பட் இந்த தாலி உன் கழுத்துல இருந்தா அதுக்கப்புறம் நடக்கிற அத்தனைக்கும் நீ மட்டும் தான் பொறுப்பு.. உனக்கு இன்னும் அஞ்சு நிமிஷம் டைம் தரேன்.. அதுக்குள்ள உன் கழுத்துல இருக்க அந்த தாலியை கழட்டி என்கிட்ட கொடுத்துட்டு உன் இஷ்டம் போல போகலாம்.. இல்லன்னா இந்த வீட்ல கூட நீ தாராளமா இருக்கலாம்.. என்னதான் இருந்தாலும் நீ என்னோட அத்தை பொண்ணு.. ஒரு பொண்ணு கர்ப்பமா இருக்கும் போது அவளை அனாதரவா விட்டுட்டு போற பழக்கம் என்னோடது கிடையாது.. எல்லாத்துக்கும் மேல அடுத்தவங்க மனசை புரிந்து கொள்ளாமல் நோகடிக்கிற பழக்கம் எனக்கு ஒரு பர்சன்டேஜ் கூட இல்லை.."என்று இறுதி வாக்கியத்தை அவள் முகத்தை பார்த்தபடி அழுத்தம் கூட்டி சொல்ல,அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த நிஷாந்தி அவன் இறுதியாக சொன்னதைக் கேட்டு குற்ற உணர்வு அவள் மனதை ஆக்கிரமிக்க தலை தன்னால் தாழ்ந்தது.



எந்த பெண்ணுக்கும் வரக்கூடாத ஒரு நிலை.



கணவனை பறிகொடுத்த ஒரு மாதத்திலேயே வேறொருவருடன் திருமணம்.


அதையே அவள் ஏற்க முடியாமல் தவித்து துடித்துக் கொண்டிருக்க, இதற்கிடையில் அவள் குடும்பத்தினர் சதி செய்து கார்த்திகேயனுடன் திருமணம் செய்து வைத்ததை எண்ணி மனதளவில் வெம்பி போயிருந்தவள் மனதை மொத்தமாக துடிக்க வைத்திருந்தது கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகள்.



அடுத்தடுத்த அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து நின்றவள் மனம் 'நிச்சயம் அவனுடன் சேர்ந்து வாழ முடியாது..'என்று உறுதியாக சொல்ல, கைகள் கழுத்தில் இருந்த தாலிக்கயிறை தன்னால் கழட்ட ஆரம்பித்திருந்தது.



அவள் செயலையே கண்களில் கூர்மையுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது அந்த அரிமா.



அவன் கேட்டது போல் தாலியை கழட்டி அவனிடம் கொடுத்து விடுவாளா?
 
Status
Not open for further replies.
Top