All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் " வெண்மதியே என் சகியே "...!!! - கதை திரி

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI-௨௨
அன்று எப்போதும் போல் பரபரப்பாக வீட்டில் எல்லாரும் வேலையே பார்த்து கொண்டு இருக்க..



சந்தியா அமைதியாக சூர்யாவிடம் எப்பிடி நெருங்குவது என யோசித்தபடி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாள் ,



அப்போது தான் மதி கொஞ்சம் இங்கே வா என சூர்யா அழைக்க,

மரகதம் இடம் பேசி கொண்டு இருந்தவள் அவன் அழைக்கவும் அழைக்கவும், வேகமாய் சென்று என்னங்க எதுக்கு வர சொன்னிங்க, இப்போ சீக்கிரம் சொல்லுங்க நிறையா வேலை கிடைக்கு அவள் சொல்ல



அவள் சொல்லுவதை கண்டுகொள்ளாமல் அவன் தனது லப்டோபில்.. வேலை பார்த்து கொண்டே.. டோர் லாக் பண்ணிட்டு வா மதி…………..!



அவனது வார்த்தையில் மதி அதிர்ந்து அப்பிடியே அவனை பார்த்துகொண்டு நிற்க



தனது வேளையில் கவனமா இருந்தவன் அவள் இன்னும் அங்கயே நிற்பததை பார்த்து, ஹே உன்னை தான் ம்மா சொல்லுறத முதல சொன்னத செய்துட்டு இங்க வா உன்கிட்ட ஒரு முக்கியமான விசையத்தை பற்றி கொஞ்சம் பேசணும்



” ஏங்க அங்கே எனக்கு அவ்வளோ வேலை கிடக்கு நீங்க என்னன்னா நேரம் காலம் தெரியாம விளையாடிகிட்டு இருக்கீங்க போங்க நான் போறேன் எது சொல்லுறத இருந்தாலும் அப்புறம் சொல்லுங்க… என்று சொல்லிவிட்டு அவள் நகர .



உன் கிட்ட போய் பேசிட்டு இருக்கேன் பாரு என்ன சொல்லணும் டி, நீ அன்பா சொன்னா எல்லாம் கேட்குற கேஸ் இல்லை என அவள் வெளியே செல்லும் முன் அவளை தன் கையில் அள்ளிகொண்டான்



ஐயோ சூர்யா என்ன பண்ணுறிங்க கிழே இறக்கி விடுங்க,மதி அவன் கையில் இருந்து கிழே இறங்க முயற்ச்சி பண்ண



அவனோ அவள் இறங்கிவிடாமல் இறுக்கி பிடித்த படி, ம் லவ் பண்ண போறேன் டி


மதி தான் மனதுக்குள்,புழம்பி தவித்தாள், கடவுளே என்ன பண்ணுறாரு,இந்த மாதிரி நேரத்துல கவனமா இருக்கணுமே ,இவருக்கு எப்பிடி புரியே வைப்பேன் , பாட்டி சொன்ன மாதிரி உண்மையே இவர்கிட்ட சொல்லி இருக்கனும்மோ என்று

” சூர்யா, விடுங்க என்ன “” என கெஞ்ச



அவனோ,” மதீஈஈ .. நான் தான் அப்போவே சொன்னேன் நல்ல புள்ளையா கூப்பிடும் போதே வந்து இருந்தா நான் சொல்ல வேண்டியது மட்டும் சொல்லி இருப்பேன் ஆனா நீ தான் கேட்கலையே அதுக்கு உனக்கு இந்த பனிஷ்மெண்ட் , தேவை தான் நீ அனுபவிச்சு தான் ஆகணும் அவளது கணவன் அவனது.. தண்டனை தரும் வேலையே சிவனேன்னு என்று செய்யே ..



மதி தான் திணறி போனால்.. ” போதும் விடுங்க ம்மா இப்போ எதுக்கு என்ன வர சொன்னிங்க…அத சொல்லுங்க முதல “



இரு சொல்லுறேன் என்று சிறிது நேரம் யோசித்து விட்டு உன் ஹெல்த் நல்ல தானே இருக்கு மதி.. என கேட்க



அவனது கேள்வியில் அவள் அரண்டு போய் விட்டாள் , கடவுளே ஏதும் கண்டுபிடிச்சு விட்டாரோ ,குத்து-மதிப்பா கேட்குறாரா தெரியலையே ,நாமளா ஏதும் சொல்ல கூடாது அவரே சொல்லட்டும் என தன்னை சுதாரித்து கொண்டு ,” ஏன் சூர்யா இப்பிடி கேட்குறிங்க எனக்கு ஒன்னும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன் என வாய் சொன்னாலும் அவளது கவனம் முழுவதும் அவன் அடுத்து சொல்ல போகும் வார்த்தையே தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தது



“அப்பிடியா சொல்லுற ஆனா எனக்கு என்னமோ உன் கிட்ட ஏதும் மாற்றம் தெரியுற மாதிரி இருந்தது அதான் கொஞ்சம் டல்லா வேற இருக்க அப்புறம் சரியாய் சாப்பிட கூட மாட்டேங்கிறே அன்னைக்கி ஹோச்பிடல போயிட்டு வந்ததுல இருந்து வந்ததுல இருந்து தான் இந்த மாற்றம்ன்னா உன்னக்கு என்னதான் ஆச்சு, வேற ஏதும் பிரச்சனையா என சூர்யா அவளிடம் கேட்க





”சப்பா இவ்வளோ தானா, நான் என்னமோ நினச்சு பயந்துட்டேன் அது எல்லாம் ஒன்னும் இல்லை சூர்யா சார் நீங்க நினைக்கிற மாதிரி நான் நல்லா தான் இருக்கேன் நீங்க என்ன நினைச்சு கவலை பட தேவையில்லை ,அதுனால இப்போ எந்த டென்ஷன் இல்லாமல் வேலை போய் நிம்மதியா உங்க வேலையே பாருங்க நான் பாட்டிகிட்ட பார்த்துட்டு இருந்த வேலையே முடிச்சுட்டு வரேன் சரியா.. என்று அவனை சமாளித்து விட்டு அறையே விட்டு சென்றாள்


ஆனால் சென்றவளை பார்த்த அவன் மனமோ இல்லை இவகிட்ட என்னமோ மாற்றம் தெரியுது ஆனா சொல்ல மாட்டேங்குறா ,என அவன் அடித்து சொன்னது அந்த ஒன்று என்ன என்று தெரியவரும் பொழுது அவனின் நிலை…..



தான் வந்த வேலை அனைத்தும் தோல்வியில் முடியே அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தாள், சந்தியா ,அப்போதுதான் சூர்யா நாளைக்கு மதியே வெளியே அழைத்து செல்வதாக பேசியது ஞாபகத்துக்கு வந்தது அதை நினைத்து சந்தோசமாக துள்ளி குதித்தாள்

எஸ், இது தான் சரி அங்க வச்சு மதியே ஒரு வழி செய்து விடலாம் என்று அவள் மனதில் ஒரு கோரமான திட்டம் தீட்டினாள்

ஆனால் அவளையும்.. பழி தீர்க்க.. ராஜேஷ் அங்கே வர போவது தெரிந்தால்…… ????



அன்றையே பொழுது எல்லாருக்கும் நல்லவிதமாய் முடியே

விடியல் யாருக்காகாவும் காத்துகிடக்காமல் விடிந்தது

இதோ… மதியே ஒட்டி சூர்யாவின் நிம்மதி கெட போகும் அந்த நாளும் வந்தது. இது சூர்யாவிற்க்கு தெரிந்து இருந்தால் மதியே வெளியே அழைத்து சென்று இருக்க மாட்டானோ என்னவோ



காலையில், சூர்யா தன் வேலையே எல்லாம் முடித்துவிட்டு, கொஞ்சம் நேரம் ஜோர்ஜிடம் தான் இன்னைக்கு ஆபீஸ் வர போறது கிடையாது மதியுடன் வெளியே செல்ல இருப்பாதாக சொல்லிவிட்டு தன் மனைவியே தேடி சென்றான் ” மதி மதி எங்க இருக்க.. “

அவனது குரல் கேட்டு சந்தியா கிழே உட்காந்து இருந்தவள் மனதுக்குள் அவனை வறுத்து எடுத்த படி அமர்ந்து இருந்தாள் இவனுக்கு எப்போவுமே மதி ஓட எண்ணம் தான் தோன்றுமா என்னை எல்லாம் பார்த்தா மனுசியா கூட தெரியலையா.. எப்போ பாரு மதி . ச்சே..”





கிட்செனில் இருந்த மதி அவனது குரல் கேட்டு ”ஏங்க நான் இங்கே இருக்கேன் இன்னும் ரெண்டே நிமிஷம் தான் சாப்பாட்டு ரெடி ஆகிரும் சாப்டுட்டு எங்கே நாளும் கிளம்புங்க… என்று கிட்சென் இருந்து அவள் சொல்ல..





ஓ, கிட்சென்ல தான் இருக்கியா நீ என அவளை தேடி அங்கே செல்ல சந்தியா அவனை வழி மறித்து என்ன சூர்யா என்ன வேணும் சொன்னா நான் செய்யே மாட்டேனா எல்லாத்துக்கும் மதியே கூப்பிடா அவள் பாவம் இல்லையா என்று அவள் குழைந்த படி கேட்க…



சூர்யா அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு” நீ சொல்லுறதும் சரி தான் சந்தியா ஆனா பாரு.. எனக்கே என்னகுன்னு மதி அதான் என் பொண்டாட்டி இருக்கும் போது நீ எதுக்கு , நீ எனக்கு ஹெல்ப் பண்ணினா அப்புறம் சொசைட்டில உனக்கு பெயரு மாறிடும் , விருந்தாளியா வந்துற்கே அப்பிடியே இரு,அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் அவளுக்கும் நடுவுல யாரு வந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரித்துவிட்டு போனான்



அவனை கோபத்துடன் பார்த்து.. போ சூர்யா போ இன்னைக்கு மட்டும் தானே நீ பேசுவ.. அதுக்கு அப்புறம் என் கிட்ட வந்து தானே ஆகணும் சூர்யா அப்போ பாரு நான் யாருன்னு என்கிற முடிவு உடன் அவன் செல்லுவதை பார்த்து கொண்டே அங்கே கிடந்த சோபாவில் அமர்ந்தாள்



******



” மே ஐ கம் இன் சார்.. “அங்கே ஒருவன் வந்து நின்றான்

” வா முத்து . நான் சொன்னத செய்துட்டியா” ராஜேஷ் அங்கே நின்று இருந்தவனிடம் கேட்க



” ஆமா சார் நீங்க எப்பிடி சொன்னிங்களோ “, அப்பிடியே எல்லாம் ஏற்பாடும் செஞ்சாச்சு



” ஆமா அதுல் எங்கே,அவன் கிட்ட இருந்து ஏதும் அவளை பத்தி தகவல் தெரிஞ்சதா“ என ராஜேஷ் முத்துவிடம் கேட்க



” இல்லை சார் இன்னும் அவன் மேடம் பத்தி ஏதும் சொல்லல” என பவ்வியமாக பதில் சொன்னான்



” சரி கவனமா இருங்க எனக்கு என்ன ஆனாலும் சந்தியா நம்ம இடத்துக்கு வந்து சேரனும் பார்த்து எனக்கு தகவல் சொல்லிட்டே இரு இப்போ நீ போகலாம்… என ராஜேஷ், முத்துவை அனுப்பி வைத்தான்..”





இப்போதான் உடல் முழுவதும் தேறி வந்து தனது வேளையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் இப்போது எல்லாம் அவன் சூர்யா வழிக்கே அன்று சொன்னது போல் செல்வது இல்லை அவனது முழுகவனமும் இப்போது தன்னை தூக்கி எரிஞ்சு சென்ற சந்தியா பக்கம் திரும்பியது , எப்பிடியாவுது தன்னுடையே அவமங்களுக்கு எல்லாம் சந்தியாவிடம் பழி தீர்க்க வேட்டையாடும் புலி போல் காத்துகிடைதான் ,அதுல் இடம் இருந்து வரும் தகவலை வைத்து தான் சந்தியாவை தன் இடம் வர வைக்க முடியும் என்று ராஜேஷ் திட்டம் தீட்டினான் அவள் சூர்யா வீட்டில் இருக்கும் வரை தன்னால் ஏதும் செய்யே முடியாது என்று தெரிந்து தான் அவள் அங்கே சென்று இருக்கிறாள் என்று அவனுக்கா தெரியாது அது நாள் அவளை மடக்க சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருந்தான் இதோ அவனின் ஆசை நிறைவேற நாள் இன்றே தானோ…???





யார் யார் ஆசைகள் நிறைவேற போகுதோ

………..

கிட்சென்னுகுள் வந்தவன் போதும் மதி சீக்கிரம் கிளம்பு.. என சூர்யா அவளை அவசர படுத்த .

” அவளோ , எங்கே ப்பா, இன்னும் நீங்க சாப்பிடவே இல்லையே என சொன்னாள்

” ஹே நேரம் ஆச்சு டி நாம வெளியே போறோம்ன்னு சொன்னேன்ல இன்னைக்கி அதான் வா கிளம்பு.. “என சூர்யா அவன் பிடியில் நிற்க



” என்னங்க இது சின்ன புள்ளை மாதிரி அடம் பண்ணிக்கிட்டு நீங்க முதல போய் உட்கார வழியே பாருங்க நான் சாப்படு எடுத்துட்டு வரேன் சாப்பாடு சாப்பிட்டா தான் நான் உங்க கூட வெளியே வருவேன்,”என்று மதியும் பிடிவாதம் பிடிக்க





இப்போது இறங்கி வருவது சூர்யாவின் முறை ஆனது ” ஹ்ம்ம் சரி ஆனா சாப்டுவிட்டு லேட் பண்ணாம கிளம்பனும்… சரியா.. “



” அவள் அதற்க்கு சரி என்று.. தலை அசைத்து சரி என்று சொன்னாள் . “



” ஹ்ம்ம் சீக்கிரம் என. அவன் மீண்டும் டைனிங் ரூமில் சென்று அமர்ந்தான். “



உணவு உண்டுவிட்டு.. மதி உடன் கிளம்பினான் அவன்..



அவர்கள் இருவரும் கிளம்பிவிட்டார்கள் என்று தெரிந்து சந்தியா அவசரமாக சூர்யாவிடம் நானும் உங்க கூட வரேன் எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருக்கு “



அதை கேட்ட சூர்யா கடுப்பு ஆகி,” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ தனியா போய் வாங்கிக்கோ என பட்டென்று சொல்லிவிட



” ப்ளீஸ் சூர்யா, நான் உங்கள டிஸ்டர்ப் எல்லாம் பண்ண மாட்டேன்..”என அவனிடம் சந்தியா



” அதை பார்த்த மதிக்கு , சந்தியாவின் கெஞ்சல் பிடிக்காமல், சூர்யாவிடம் அவளும் வரட்டும்ங்க, ப்ளீஸ் “ என சொல்ல



தன் மனைவியே முடிந்த மட்டும் முறைத்துவிட்டு சந்தியாவை பார்த்து” சரி கிளம்பு என்று சொல்லிவிட்டு தனது காரை கிளப்பினான்

அவனது கார் பாதி தூரம் சென்றபின் பக்கத்தில் இருந்த மரத்தின் பின் மறைந்து நின்றவன் வெளியே வந்து ,ராஜேஷிற்கு அழைத்து விசையத்தை சொன்னான், சந்தியா சூரயாவுடன் வருகிறாள் என்று







அதைகேட்டு ராஜேஷ் அவசரமாக அதுல் சொன்ன இடத்திற்கு முத்துவுடன் கிளம்பினான், அவன் மனதுக்குள் நடந்த அணைத்து விசையம் படமாய் ஓடியது, அதோடு இன்னும் ஒரு விசையமும் ,இன்னைக்கி சந்தியாவை விட்டாள் அடுத்து அவள் சுதாரித்து தப்பிவிடுவாள் இன்று அவளை சூர்யாவின் பார்வையில் விழாமல் தூக்கி விடவேண்டும் , சந்தியா என்ன இந்த ராஜேஷ தூக்கி எறிஞ்சுட்டு போன்ல இன்னைக்கு காட்டுறேன் டி நான் யாரென்று என்று யோசித்தான்





அவனும் அவர்கள் சென்ற மால்கு சென்றான், ஆள் அதிகம் இல்லாத இடமாய் பார்த்து சந்தியாவை நோட்டம் விட ஆரம்பித்தான், அவளுக்கே சந்தேகம் வராத மாதிரி



ஆனால் அங்கே பழி வெறியில் சந்தியா அதை எல்லாம் கவனிக்க மறந்துவிட்டாள் ராஜேஷின் ஆட்கள் சந்தியாவை கவனிக்க சந்தியா மதி எப்போது தன்னிடம் தனியாக சிக்குவாள் என்று மதியே கவனித்தாள்



கூட இருந்த சூர்யாவோ ஒரு நிமிடம் கூட மதியே தனியா விடாமல் அடைகாத்து வந்தான்

அதுவே சந்தியாவுக்கு எரிச்சலுமாய் மதிக்கு சங்கடமாய் இருந்தது



திடிரெண்டு சூர்யாவுக்கு ஏதோ அழைப்பு வர எடுத்து பேசினான், அவர்கள் நின்ற இடத்தில அவனுக்கு சரியாக சிக்னல் கிடைக்காதது நால் , மதியே பார்த்து அவன்,” நீ இங்கயே நில்லு நான் இப்போ பேசிட்டு வந்துறேன் இந்த பக்கம் சரியாய் சிக்னல் கிடைக்கல என சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளி சென்று மதி மேல்கவனம் வைத்த படி “ஹான் சொல்லுங்க சார்”என பேச ஆரம்பித்தான்.

 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI-23


திடிரெண்டு சூர்யாவுக்கு ஏதோ அழைப்பு வர எடுத்து பேசினான், அவர்கள் நின்ற இடத்தில அவனுக்கு சரியாக சிக்னல் கிடைக்காதது நால் , மதியே பார்த்து அவன்,” நீ இங்கயே நில்லு நான் இப்போ பேசிட்டு வந்துறேன் இந்த பக்கம் சரியாய் சிக்னல் கிடைக்கல என சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளி சென்று மதி மேல்கவனம் வைத்த படி “ஹான் சொல்லுங்க சார்”என பேச


இந்த வாய்ப்பை நழுவ விடாமல் சந்தியா மதி அருகே சென்றாள்


மதி, அங்கே படிகள் அருகே நின்று வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாள், அவளிடம் சென்ற

சந்தியா,” அப்புறம் மதி லைப் எல்லாம் ரொம்ப சூப்பரா போகுது போல, என நக்கலாக கேட்டாள்
சந்தியாவின் கேள்விக்கு மதி சொல்லாமல் அமைதியாக நின்றாள் அவள் மனதுக்குள் இந்த சந்தியா ஏதோ திட்டம் போட்டுதான் எங்க கூட வந்து இருக்கா என்று புரிந்து கொண்டாள் இருந்தாலும் அவளுக்கு சந்தியாவிடம் பேச பிடிக்கவில்லை


மதியின் இந்த அமைதியும் சந்தியாவை மேலும் கோப படுத்தியது ,” ஏய் பேசுடி இப்போ பேசு என கத்தினாள்

சூர்யா பேசிக்கொண்டே சற்று தூரம் போய் விட்டான் மதி பத்திரமாக இருக்கிறாள் என்கிற நண்பிக்கையில்


இங்க பாரு சந்தியா நீ தேவை இல்லாமல் பேசுற உன் முட்டாள் தனமான கேள்விக்கு எல்லாம் என்கிட்ட பதில் இல்லை” என மதியும் பொறுமையா சொல்ல


அதைகேட்டு, சந்தியா,” ஓ,நான் முட்டாளா , ஆமாண்டி ஆமா நான் முட்டாள் தான் உன்னை நண்பி ஏமாந்து போன ஒரு முட்டாள், என் சூர்யாவ எனக்கே என்னகுன்னு திருப்பி நீ தருவ நினச்ச நான் முட்டாள் தான் என வெறிகொண்டு கத்தினாள்



என் சூர்யா சொன்னுடன் அவ்வளோ நேரம் அமைதி காத்த மதி கோபத்துடன் என்ன சொன்ன உன் சூர்யாவா , அப்பிடி என்னம்மா பண்ணின உன் சூர்யாக்கு என்னத்தானே பலிகாடா ஆக்கினே , என்ன வச்சு தானே அவரோட பிசிநேஸ்ல அவர தோற்கடிக்க நினைச்ச ,இப்போ வந்து என் சூர்யா என்னோட சூர்யா வந்து நிக்கிற , என கேட்க


” ஏய் என்ன எதிர்த்து பேச உனக்கு யாரு டி தைரியம் கொடுத்தது எப்போவும் நீ எனக்கு கிழ தான் புரிஞ்சதா” இப்போ சந்தியா ஆனாவத்துடன் பேசினாள்


”ஆம் நாட் யுவர் ஸ்லேவ்.. மீஸ் சந்தியா , ஆமா இப்போ என்ன புதுசா சூர்யா சொல்லிட்டு வந்து இருக்க ஏன் வேற எந்த பணக்காரானும் கிடைக்கலையா உன்னக்கு, நீ பேசுறதுக்கும் , செய்யுறதுக்கும் சம்பதமே இல்லாம இருக்கே என நக்கலாக கேட்க


அவ்வளோ தான் சந்தியாவின் பொறுமை எல்லை தாண்டிவிட அவள் மதியே கொலைவெறி உடன் பார்த்து.. ” உன்னை விட்டா நீ ரொம்ப பேசிட்டே இருப்பே அப்புறம் அந்த லூசு சூர்யா வந்தா, பெரியே ஸ்ரீராமன் மாதிரி பேசுவான் அதுனால நான் வந்த வேலையே முதல முடிக்கிறேன் அப்புறம் அவன் சங்கதியே பார்கிறேன் என மதி சுதாரிப்பதற்குள் அவளை சந்தியா அந்த நீண்ட படிக்கட்டில் இருந்து தள்ளிவிட்டுவிட்டாள் எல்லாம் சற்று நேரத்தில் நடந்து முடிந்து விட்டது


படிக்கட்டில் இருந்து உருண்ட மதி தன் வயிற்ரை கட்டிகொண்டாள் அடி வயிற்றில் படாதவாறு சந்தியா இவ்வாறு செய்வாள் என்று மதியால் நம்பவே முடியவில்லை கடைசி படிக்கட்டில் சேரும் போது மதி முற்றிலும் தன் சுயநினைவை இழந்துவிட்டு இருந்தாள்,



ஒருவித திருப்பதி உடன் அதை பார்த்துகொண்டு இருந்த சந்தியா ,சூர்யா வருவதை பார்த்து பயத்தில் நடுங்குவது போல் தன்னுடையே முக பாவனையே மாற்றிகொண்டாள்


அப்போது அங்கே பேசிமுடித்து விட்டு திரும்பி வந்த சூர்யா மதி இல்லாததும் சந்தியா மட்டும் நிற்பதை பார்த்து அவளிடம் கோபமாய்” ஏய் மதி எங்கே” என கேட்க
இதுதான் சாக்குன்னு சூர்யாவை கட்டிக்கொண்டு அழுதப்படியே சந்தியா, ஐயோ சூர்யா அங்கே பாருங்க மதி கிழே விழுந்துட்டா என சொல்ல




எங்கே என்று பார்த்தவன் அப்பிடியே அதிர்ந்து சந்தியாவை தன்னிடம் இருந்து பிரித்து ஒரே தல்லாக கிழே தள்ளிவிட்டு அவளை கண்டு.. கொள்ளமல் மதிஈஈ... என்று அலறியே படிஇரண்டு படிகலாக தாவி மதி அருகே ஓடினான் அதற்குள் அங்கே கூட்டமும் கூடி விட..


மதி அங்கே தலையில் அடி பட்டு.. ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தாள் .
அவள் அருகில் ஓடி சென்று அமர்ந்தவன் அவளை தன் மடியில் தாங்கி ஐயோ மதி கண்ணை திறம்மா , தப்பு பண்ணிட்டேன் டா உன்னை தனியா விட்டுட்டு போனது என் தப்புதான் அதுக்கு இப்பிடி எல்லாம் பயம் காட்டாதே மதி என்கிட்டே பேசுடி என் நால இன்னும் ஒரு இழப்ப தாங்கிக்க முடியாது டி ப்ளீஸ்கண்ணை திறந்து என்னை பாரு என கதறியே படி அவன் அவள் கணத்தில் மெல்ல தட்ட
ஆனால் மதியோ மயக்கத்தில் சென்றுவிட்டு இருந்தாள்…..




அந்த காட்சியே பார்த்து சந்தியா கோரமாய் சிரித்த படி நின்று கொண்டு இருக்க...[ இப்பிடியும் ஒரு பிறவி., அடுத்தவர்கள்வேதனையில் குளிர் காயும் ஜென்மம்]


சந்தியாவின் இந்த செய்யல பார்த்து ராஜேஷும் அரண்டு தான்போய் இருந்தான் ஆனால் எல்லாம் கொஞ்சம் நேரம் தான் பிறகு சந்தியா தான் மாட்டிக்கொள்ள கூடாது என்று கேமரா இல்லாதஇடம் பார்த்து நின்று இருந்ததாள் அதுவே ராஜேஷுக்குவசதியா போய் விட.. அவனுடன் இருந்த ஆட்களை பார்த்துமுத்து போ என கண் ஜாடை கட்ட அதை புரிந்து கொண்டஅவர்கள் மெல்ல சந்தியாவின் பின்னால் போய் நின்று.. அவள்மூக்கின் மேல் மயக்ம மருந்து.. தடவியே கர்சிப் வைக்கசந்தியா மெல்ல மெல்ல தன் உணர்வை இழந்து இருந்தாள்


சூர்யா இதை ஏதும் கவனிக்கும் நிலையில் இல்லை அவன் எண்ணம் முழுவதும் மதியே நிறைந்து இருந்தாள் அதில் அவன் சந்தியாவை கவனிக்க மறந்துவிட்டான் ,கூட்டத்தில் யாரோ இவங்கள சீக்கிரம் ஹோச்பிடளுக்கு அழைச்சுட்டு போங்க ரத்தம் ரொம்ப போகுது, என சொன்ன உடன் தான் சூர்யா அவசரமாக அன்று போல் தூக்கிக்கொண்டு ஹோச்பிடளுக்கு விரைந்தான்



அங்கே ராம் அப்போது தான் எதற்காகவோ வெளியே வரஅங்கே சூர்யா கையில் மதி ரத்த வெள்ளத்தில் இருந்ததைபார்த்து, பதறி போய்



” ஒ கோட், என்னாச்சு சூர்யா மதிக்கு.”அவர் கேட்க


” தெரியலை டாக்டர் போன் பேசிட்டு வரதுக்குள்ள அவள் படிகட்டுல இருந்து விழுந்து கிடக்கா டாக்டர் ப்ளீஸ் நீங்கசீக்கிரம் அவளுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க என் மதிக்கு ஏதும்ஆகா கூடாது ப்ளீஸ் டாக்டர் என அழுத படி சொல்ல..”


” என்னது ஸ்டெப்ஸ்ல இருந்து விளுந்துடாலா அதுவும் இந்தமாதிரி
நேரத்துல நர்ஸ் சீக்கிரம் ஸ்கேன் , ஒபரேசன்க்கு ஏற்பாடு பண்ணுங்க என அவரின் பதட்டம் மேலும் அவனை பயம் முருத்த ,அவன் பயந்துகொண்டே டாக்டர் ராமிடம் என்ன ஆச்சு மதிக்கு என்னமோ சொன்னிங்களே இந்த மாதிரி .. என சூர்யா கேட்க”
அதைக்கேட்டு டாக்டர் ராம், அவனிடம் சாரி சூர்யா மதி சொல்லி இருப்பான்னு நினைச்சேன் அவ உன்கிட்ட சொல்லேன்னு தெரியுது இப்போவும் நான் சொல்லென்னா ,அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டாரு

“என்ன டாக்டர் என்னமோ சொல்லுறிங்க, அப்பிடி என்னதான் ஆச்சு அவளுக்கு , எதை என்கிட்டே சொல்லணும் இருந்தா,கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அவன் கேட்க



“இப்போ தெளிவா பேச நேரம் இல்லை , மதி கர்பமா இருக்கா அதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
என்னாது மதி கர்பமா இருக்காளா என சந்தோசமாய் கேட்டவன் அப்படியே அடுத்த கணம் யோசனையுடன் அப்போ அவளோட மாற்றத்துக்கு காரணம் குழந்தை தானா ஏன் என்கிட்டே சொல்லாமல் மறைச்சா , அப்போ அவள் நடந்த எதையும் மறக்கவில்லையோ இல்லை என்மேல இன்னும் அவளுக்கு நம்பிக்கை வரவில்லையோ அதான் இவ்வளோ பெரியே விசையத்தை என்கிட்டே இருந்து மறைச்சுட்டா பாவி, என என்..என்னமோ யோசித்தபடி அங்கே கிடந்த இரும்பு சேரில் சரிந்து அமர்ந்துவிட்டான்
இங்கே மதி அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லபட்டால்,


….





இப்போ இந்த சந்தியா என்ன ஆனால்… என்று பார்ப்போமா..

அவளை கடத்தி தன் இடத்துக்கு அழைத்து வந்த ராஜேஷ் அவள்கண் விழிபதற்க்காக காத்துகொண்டு இருந்தான்.
எல்லாம் அவள் சுய நினைவில் இருக்கும் போது தான் நடக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில்
இதோ அவளும் அவன் விருப்பத்தை நிறைவேற்றுவது சம்பதம் போல் கண் விழிதுவிட்டாள் …
மெல்ல கண் விழித்தவள்... ஆ அம்மா என்ன ஆச்சு எனக்குதிடிர்னு இப்பிடி தலை வேற வலிக்குதே என மெல்ல எழுந்தவள்தான் எங்க இருக்கிறோம் என்று அப்போது தான் பார்த்தாள்
அவசரமாய் சுற்றி பார்த்தவள் இது என்ன இடம்.. நான் எப்பிடிஇங்கே வந்தேன் என அவள் பேசி கொண்டே போக.



ராஜேஷ்.. ,” ஹாஹாஹா.. பரவாயில்லை நீயும் வழக்கமாஎல்லாம் பொண்ணுங்க சொல்லுற டைலொக கரெக்டாசொல்லிட..
இது என் இடம் தான்.. “ என ராஜேஷ் நிதானமாக சொல்ல
அதை கேட்டு சந்தியா
,.ராஜேஷ் என்ன காரியம் பண்ணிருக்க என அலறினாள்
அவள் கத்துவது பிடிக்காமல் ராஜேஷ் தன்னுடையே உதட்டில் ஒரு விரலை வைத்து ” ச்சூ.. சத்தம் போடா கூடாது, சந்தியா “

” என்ன எதுக்கு இங்க கடத்திட்டு வந்த.. “ஆக்ரோஷமாக கத்த

” ஹ்ம்ம் வேற எதுக்கு.. என்னக்கு சொந்தமானத எடுத்துக்கதான் என அவனும் அசராமல் சொன்னான்
சந்தியாவுக்கு ராஜேஷின் நிதானம் பயத்தை கிளப்பியது இருந்தும் சமாளித்து படி அவனை எச்சரித்தாள் சூர்யா பெயரை சொன்னால் பயந்து கேடுக்குவான் என்கிற மிதப்பில்” ராஜேஷ்நீ தப்பு பண்ணுற நீ இப்பிடி பண்ணுறது சூர்யாவுக்கு தெரிஞ்சாஎன்ன ஆகும் தெரியுமா,,”
” ஹஹாஹா இப்போ தான் சந்தியா நீ தப்பா பேசுற நான் என்ன அவன் பொண்டாட்டியேவா கடத்திகிட்டு வந்தேன் என் பொண்டடியே தானே “என நக்கலாக பதில் சொன்னான்


hai everyone sorry for the late update ennudaiye phone sethhu pochi atha servicekku koduthu irukken uyiroda vanthuranum coz ella files contact athulairukku , athaan inga late update.
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI-24
” ஹஹாஹா இப்போ தான் சந்தியா நீ தப்பா பேசுற நான் என்ன அவன் பொண்டாட்டியேவா கடத்திகிட்டு வந்தேன் என் பொண்டடியே தானே “என ராஜேஷ் நக்கலாக பதில் சொல்ல


அதை கேட்டு சந்தியா ” நான் ஒன்னும்.. உன் வைப் இல்லை அதுகனவிலும் நடக்காது..”மீண்டும் திமிராக பதில் சொன்னாள்



அவளது பேச்சு அவனை சீண்டி விட.. வேகமாய் எழுந்து அருகில் சென்று அவள் கணத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்..’ என்னடி கனவில் கூட நடக்காது சும்மா இருந்த என்ன அந்த சூர்யாகூட மோத விட்டு நீ மாட்டிக்க கூடாதுன்னு ,என்னை தூக்கி எறிஞ்சுட்டு அவன் கிட்ட ஓடி போற இதை எல்லாம் சகிச்சுகிறதுக்கு நான் என்ன அந்த சூர்யாவா உன்னை சும்மா விட நான் ஒன்னும் சூர்யா இல்லை என அவள் கழுத்தை நெரிக்க போக.பிறகு உனக்கு வேணும்னா நான் இன்னுமொரு வாய்ப்பு
தரேன் கடைசியா சூர்யா கிட்ட சொல்லி பாரு நான் உன்னை
கடத்திட்டேன்னு என அவள் முன்னால் தனது போனை தூக்கி போட்டான் அவன்..”


”அவளும் சூர்யா தன்ன காப்பாற்ற வருவான் என்கிற திமிரில் ”போன் எடுத்து வேகமாக சூர்யாவின் நம்பரை அதில் அழுத்தினாள்


ஆனால் சூர்யாவோ, மதி தான் இடம் குழந்தை வரவை பற்றிசொல்லாமல் மறைத்து விட்டாளே. என்கிற ஆதங்கத்தில்..மற்றும் அவன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு.. அவள் வந்துதான் பதில் சொல்லவேண்டும் என்று அவன் மதி உயிர்பிழைத்து வர வேண்டும் என இருக்கிற எல்லா கடவுளையும்வேண்டி கொண்டு இருந்தான்..
அப்போது பார்த்து அவன் செல் அலறியது.
அதன் குரலில் இதால தானே இன்று மதிக்கு இந்த நிலைமைஎன்று கோபத்தில் அதை தூக்கிபோட்டு உடைத்து விட்டான்…



ரெண்டு முறை அவனுக்கு அழைத்து பார்த்தவள்.. அடுத்து அழைக்கும் பொது சுவடிச் அப் என்று வர சந்தியாவுக்குஇப்போது மனதில் பயம் தொற்றி கொண்டது.. அவள்கலவரத்துடன் ராஜேஷை நிமிர்ந்து பார்த்தாள்


அவனோ., கண்ணில் கொலைவெறி உடன் அவளை பார்த்துசிரித்த படி என்ன சொன்னான் உன் சூர்யா.


ராஜேஷ் என்.. என்ன ஒன்னும் பண்ணிராதே .. ..எப்பிடியும் மதிசெத்து போய்டுவா நான் வேணும்னா உனக்கு எவ்வளோபணம்னாலும் சூர்யா கிட்ட இருந்து வாங்கி தரேன் ப்ளீஸ் என்ன விட்டுரு..”என அவனிடம் பேரம் பேசினாள் சந்தியா [ அவளின் என்னமோ எப்பிடியாவுது இவனிடம் இருந்து தப்பி சென்று விட்டால் இவனை போலீசிடம் மாட்டிவிட்டு விடலாம் என்று இருந்தது ஆனால் விதி??]

” அப்போதும் அவள் திருந்தாமல்..அவன் இடமே பேரம் பேச..அவனுக்கு, இன்னும் அவள் மேல் வெறுப்பு கூடியது நீ எல்லாம் திருந்தவே மாட்டே டி என்று அவளை நெருங்கினான் .”


” ராஜேஷ்.. வேண்டாம் நான் சொல்லுறத. கேளு “ என சந்தியா அவன் இடம் கெஞ்ச..

” முடியாது கண்ணு , இவ்வளோ நாள் நீ பேசி நான் ரொம்பவே கேட்டாச்சு இனி நான் மட்டும் தான் பேசுவேன் என்று அவன்முன்னேற
இப்போது சந்தியா என்ன செய்வது.. தெரியாமல் அவன் இடத்தில மன்றாடி கொண்டு இருந்தாள் .. தன் பெண்மையே காப்பற்றிக்கொள்ள..


”ஆனால் அவனோ.. அவளது கதறலை கண்டுகொள்ளாமல்.. அன்னைக்கு இப்பிடி தானே நான் உன் கிட்ட. கெஞ்சினேன், என்னமா ஏகதலாமா பேசி கண்டுக்காம போனியே. இப்போ மட்டும் நான் உன்ன மன்னிச்சு விட்டா அதவிட அவமானம் எனக்கு இல்லை....என சொல்லிக்கொண்டே.. தனக்குதேவையானதை களவாட ஆரம்பித்தான்.. சந்தியா அவன் இடத்தில இருந்து விடு.. பட. போராட.. அவனோ அவளை மேலும் தனக்குள் இறுகி பிடித்து தன் வேலை முடித்து கொண்டு அவளை விட்டு விலகினான் .”
” தாங்க்ஸ் சந்தியா ” என்கிற வார்த்தை உடன்



முடிந்து விட்டது எல்லாம், தன்னால் தடுக்க கூட முடியவில்லை என அழுத படி அமர்ந்து இருந்தவள் தனக்கு இந்த தண்டனைதேவை தான் , இப்பிடி தானே அவளுக்கும் இருந்து இருக்கும் என முதல் முறை வெண்மதியே பற்றி யோசித்தாள், எதையோ வெறித்த படி அமர்ந்து இருந்தாள் சந்தியா
.
ராஜேஷ் தன்னை சரி படுத்திகொண்டு அவளை பார்த்துகிளம்பு சந்தியா நான் உன்னை சூர்யா வீட்டுல விட்டுட்டுவந்துறேன், என்று ஏதும் நடக்காதது போல் பேசினான்



அப்பிடி அவன் சொன்னதும் சந்தியா அவனை அதிர்ந்து போய்பார்த்தாள் ” நீ என்ன சொல்லுற ராஜேஷ்..”



” ஹ்ம்ம் நேரம் ஆச்சு கிளம்புன்னு சொன்னேன் என்று எரிச்சல்உடன் ராஜேஷ்
பேச.”



” ராஜேஷ் வேண்டாம் விளையாடாத நாம கல்யாணம் பண்ணிக்காலாம் என்று அவள் சொல்ல…”



“அவளை விச்சிதிரமாய் பார்த்த ராஜேஷ் ,” எனக்கும் உனக்கும்கல்யாணமா உன் ஸ்டேடஸ் என்ன ஆகுறது உன்னால நான் பட்ட அவமானத்துக்கு உனக்கு இது தான் தண்டை ரொம்ப பேசிஎன் நேரத வீண் அடிக்காம கிளம்புற வழியே பாரு உன்ன எங்க இருந்து அழைச்சுட்டு வந்தேனோ அங்கயே கொண்டு போய்விடனும்.. ஹ்ம்ம் சீக்கிரம்.. நிறைய வேலை இருக்கு எனக்கு“





பணக்காரா வீட்டு பசங்கள் உடன் பழகினால் தான் தனக்கு கௌரவம்.. அப்பிடி பழக்கத்தில் யார் அதிக செல்வந்தர் என்றுபார்த்து பழகுபவள் தான் இந்த சந்தியா.. அப்பிடி பழக்கத்தில்மாட்டியது சூர்யா மற்றும் ராஜேஷ், இதில் விதிவிலக்கு வெண்மதி மட்டுமே
ஏனோ சூர்யா பெற்றோர்கள் இறந்த பொது கம்பெனி நஷ்டம் வந்துவிட்டது என்று ஜோர்ஜ் கிளப்பியே பொய்யை மனதில்வைத்து
ராஜேஷ் உடன் போய் சேர்ந்தால் அப்பிடி சென்றதாலும்சூர்யாவை விட மனம் வராதது நாள் ராஜேஷ் இடம் ஒரு திடம் தீட்டி அவள் கொடுத்தால் அவன் இடம் போட்டி போட்டான்அதை எல்லாம் முறி அடித்து சூர்யா மீண்டு வந்து விட இப்போதுராஜேஷ் அவளுக்கு கசந்து விட்டான் அதுநாள் தான் அன்றுஅவள் அவன் இடம் சண்டை போட்டு வந்தது ஆனால் எந்த காரணத்துக்கும் கொண்டு யார் இடம் எல்லை மீறியது கிடையாது என்பது உலக அதிசயம் தான் ஆனால் இன்று தனக்கு இப்பிடி நடந்ததுக்கு தானும் ஒரு காரணம் என்று தோன்றியது
சந்தியாவுக்கு அதான் அவன் இடம் இப்போ கெஞ்சி கொண்டுஇருந்தாள்


” ராஜேஷ் ப்ளீஸ் நான் உன்கிட்ட கெஞ்சி கேட்டுகிறேன் தயவு செய்து என்ன கல்யாணம் பண்ணிக்கோ இல்லை என்ன கொன்று.. விடு //



அவளது பேச்சை கேட்ட ராஜேஷிற்கு சிரிப்பு தான் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு” உன்னை கொன்று நான் உள்ள போய்கழி தின்னவா அதுக்கு வேற ஆள் பாரும்மா இப்போ கிளம்பு.. “


அவனது கேலியில் , ராஜேஷ் என சந்தியா கோபமாய் காத்த “



” ஏய் ச்சீ.. நீ சொன்ன எல்லாம் கேட்குற பிறவியே கிடையாது, கிளம்பு டி முதல என்று அவளை தர தரவேன இழுத்து வந்து.. கார்குள் தள்ளிவிட்ட அவன் அவளை எங்கே இருந்து அழைத்து வந்தானோ அங்கயே போய் விட்டுட்டு தனது வேலையே பார்க்கதிரும்பிவிட்டான்




ஆனால் சந்தியா அங்கே பித்து பிடித்த போல் நின்று அவன் போன சாலையே வெறித்த படி நின்று கொண்டு இருந்தாள் [தன் வினை தன்னை சுடும்]

இனி தான் நிலை என்ன என்கிற கேள்வி குறி உடன்..???

………….

நான்கு மணி நேரம் கழித்து டாக்டர் ராம் வெளியே வர..
சூர்யா பதத்துடன் அவரை நெருங்கினான் .’ டாக்டர் மதி..எப்பிடி இருக்கா”


” நொவ் ஷி இஸ் இன் செப் ஜோன் சூர்யா அப்புறம்குழந்தைகளும் நல்லா ஆரோக்கியாமா இருக்கு நீங்க போய்பார்க்காலாம்.. “
இது போதுமே அவனுக்கு.. தேங்க்ஸ் டாக்டர் என்று சொல்லிவிட்டு.. அவளை பார்க்க சென்றான்..
அங்கே மதி இன்னும் மயக்கம் தெளியாத நிலையில் தலையில்பெரியே கட்டுடன் சுயநினைவு இன்றி படுத்து கிடந்தாள்..


அவள் இடம் சென்று அமர்ந்தவன் ஏண்டி இப்பிடி பண்ணினஎன மௌனமாக கேட்க..
ஆனால் பதில் சொல்ல வேண்டியவளோ இரண்டு நாள் கழித்து தான் கண்ணை திறந்தாள்.. திறந்து முதலில் டாக்டர் இடம் குழந்தையே பற்றி தான் கேட்டாள் ..


” அப்போ அங்கே வந்த சூர்யா மதிடம் ஏதும் பேசாமல் வெறும் அவள் படுத்து கிடந்த இடத்தை சரி செய்து விட்டு மாத்திரை மருந்து எல்லாம் சாப்பிட்டு விட்டாளா என்று பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டான்
அதை பார்த்த மதிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது மெல்ல அவள் என்னங்க.. “ என சூர்யாவை அழைக்க


” அவன் ஏதும் பேசாமல் பானுவிடம் அவளை பார்த்து கொள்ளம்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டான் மறந்தும் மதிபக்கம்
திரும்ப வில்லை..”
அவனது செய்கை பார்த்து பாணுவிடம் “ஏன் பாணும்மா அவர்என்கிட்ட பேசவே மாட்டேன்கிறாறு என்கிட்டே பேசசொல்லுங்களேன் எனக்கு என்னமோ மாதிரி இருக்கு..” என மதி கண் கலங்கி கொண்டே பேச

மதி அழகூடாது இந்த மாதிரி நேரத்துல தம்பிக்கு கொஞ்சம் கோபம் தான் அத நாம வீட்டுக்கு போய் பேசி சரிபண்ணிக்கலாம் என்ன இப்போ நீ இந்த மருந்த சாப்பிடு எனஅவளுக்கு புரியும் படி சொல்லிவிட்டு பாணும்மா அவளைசமாதனம் செய்தார் ..



ஆனால் சமாதனம் ஆகா வேண்டியவனோ. எதையே இழந்தது போல் நடமாடி கொண்டு திரிந்தான்..
பாட்டிடம் மனம் விட்டு பேசினால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று பேச சென்றவனின் மனதில் மேலும் பாரம் ஏறியதுதான் மிச்சம் பாட்டிக் கிட்ட எல்லாம் உண்மையே சொல்லிருக்கா குழந்தையே பற்றி என்கிட்டே மரைச்சுடாளே பாவி , அன்னைக்கே கேட்டேன் என்ன விசையம்ன்னு ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இன்னைக்கு இப்பிடி ஆக விட்டு இருப்பேனா என தனக்குள்லையே புழம்பி தவித்தான் மறந்தும் அவளிடம் முகம் குடுத்து பேசவில்லை



இதோ மதி உடல் நிலை தேறி வீட்டுக்கு வந்துவிட்டாள் ஆனால் அவனோ இவளை கண்கொண்டு காணமல் இருந்தான் அவள் விழித்து இருக்கும் வெளியே செல்பவன் அவள் உறங்கியே பிறகு தான் வீட்டுக்கே வருவான்

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த மதி..... பொறுக்க மாட்டாமல் ஒரு நாள் மதி என்ன நினச்சு கிட்டு இருக்காருமனசுல இன்னைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு.. ஒருமுடிவு கட்டியே ஆகணும்.. என அவள் துங்குவது போல் படுத்து இருந்தால் சூர்யா அவள் உறங்கிவிட்டாள் போல என்றுஅறைக்கு வர..




hai friends, brothers, sisters, ellarukum ennoda ayutha poojai, vijayadasami nalvaazhthukkal
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபி-25
இப்போது சந்தியா என்ன செய்வது.. தெரியாமல் அவன் இடத்தில மன்றாடி கொண்டு இருந்தாள் .. தன் பெண்மையே காப்பற்றிக்கொள்ள..

”ஆனால் அவனோ.. அவளது கதறலை கண்டுகொள்ளாமல்.. அன்னைக்கு இப்பிடி தானே நான் உன் கிட்ட. கெஞ்சினேன், என்னமா ஏகதலாமா பேசி கண்டுக்காம போனியே. இப்போ மட்டும் நான் உன்ன மன்னிச்சு விட்டா அதவிட அவமானம் எனக்கு இல்லை....என சொல்லிக்கொண்டே.. தனக்கு தேவையானதை களவாட ஆரம்பித்தான்.. சந்தியா அவன் இடத்தில இருந்து விடு.. பட. போராட.. அவனோ அவளை மேலும் தனக்குள் இறுகி பிடித்து தன் வேலை முடித்து கொண்டு அவளை விட்டு விலகினான் .”
” தாங்க்ஸ் சந்தியா ” என்கிற வார்த்தை உடன்

முடிந்து விட்டது எல்லாம், தன்னால் தடுக்க கூட முடியவில்லை என அழுத படி அமர்ந்து இருந்தவள் தனக்கு இந்த தண்டனை தேவை தான் , இப்பிடி தானே அவளுக்கும் இருந்து இருக்கும் என முதல் முறை வெண்மதியே பற்றி யோசித்தாள், எதையோ வெறித்த படி அமர்ந்து இருந்தாள் சந்தியா
.
ராஜேஷ் தன்னை சரி படுத்திகொண்டு அவளை பார்த்து கிளம்பு சந்தியா நான் உன்னை சூர்யா வீட்டுல விட்டுட்டு வந்துறேன், என்று ஏதும் நடக்காதது போல் பேசினான்

அப்பிடி அவன் சொன்னதும் சந்தியா அவனை அதிர்ந்து போய் பார்த்தாள் ” நீ என்ன சொல்லுற ராஜேஷ்..”

” ஹ்ம்ம் நேரம் ஆச்சு கிளம்புன்னு சொன்னேன் என்று எரிச்சல் உடன் ராஜேஷ்
பேச.”

” ராஜேஷ் வேண்டாம் விளையாடாத நாம கல்யாணம் பண்ணிக்காலாம் என்று அவள் சொல்ல…”

“அவளை
விச்சிதிரமாய் பார்த்த ராஜேஷ் ,” எனக்கும் உனக்கும் கல்யாணமா உன் ஸ்டேடஸ் என்ன ஆகுறது உன்னால நான் பட்ட அவமானத்துக்கு உனக்கு இது தான் தண்டை ரொம்ப பேசி என் நேரத வீண் அடிக்காம கிளம்புற வழியே பாரு உன்ன எங்க இருந்து அழைச்சுட்டு வந்தேனோ அங்கயே கொண்டு போய் விடனும்.. ஹ்ம்ம் சீக்கிரம்.. நிறைய வேலை இருக்கு எனக்கு“

பணக்காரா வீட்டு பசங்கள் உடன் பழகினால் தான் தனக்கு கௌரவம்.. அப்பிடி பழக்கத்தில் யார் அதிக செல்வந்தர் என்று பார்த்து பழகுபவள் தான் இந்த சந்தியா.. அப்பிடி பழக்கத்தில் மாட்டியது சூர்யா மற்றும் ராஜேஷ், இதில் விதிவிலக்கு வெண்மதி மட்டுமே

ஏனோ சூர்யா பெற்றோர்கள் இறந்த பொது கம்பெனி நஷ்டம் வந்துவிட்டது என்று ஜோர்ஜ் கிளப்பியே பொய்யை மனதில் வைத்து
ராஜேஷ் உடன் போய் சேர்ந்தால் அப்பிடி சென்றதாலும் சூர்யாவை விட மனம் வராதது நாள் ராஜேஷ் இடம் ஒரு திடம் தீட்டி அவள் கொடுத்தால் அவன் இடம் போட்டி போட்டான் அதை எல்லாம் முறி அடித்து சூர்யா மீண்டு வந்து விட இப்போது ராஜேஷ் அவளுக்கு கசந்து விட்டான் அதுநாள் தான் அன்று அவள் அவன் இடம் சண்டை போட்டு வந்தது ஆனால் எந்த காரணத்துக்கும் கொண்டு யார் இடம் எல்லை மீறியது கிடையாது என்பது உலக அதிசயம் தான் ஆனால் இன்று தனக்கு இப்பிடி நடந்ததுக்கு தானும் ஒரு காரணம் என்று தோன்றியது
சந்தியாவுக்கு அதான் அவன் இடம் இப்போ கெஞ்சி கொண்டு இருந்தாள்

” ராஜேஷ் ப்ளீஸ் நான் உன்கிட்ட கெஞ்சி கேட்டுகிறேன் தயவு செய்து என்ன கல்யாணம் பண்ணிக்கோ . இல்லை என்ன கொன்று.. விடு //
அவளது பேச்சை கேட்ட ராஜேஷிற்கு சிரிப்பு தான் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு” உன்னை கொன்று நான் உள்ள போய் கழி தின்னவா அதுக்கு வேற ஆள் பாரும்மா இப்போ கிளம்பு.. “

அவனது கேலியில் , ராஜேஷ் என சந்தியா கோபமாய் காத்த “

” ஏய் ச்சீ.. நீ சொன்ன எல்லாம் கேட்குற பிறவியே கிடையாது, கிளம்பு டி முதல என்று அவளை தர தரவேன இழுத்து வந்து.. கார்குள் தள்ளிவிட்ட அவன் அவளை எங்கே இருந்து அழைத்து வந்தானோ அங்கயே போய் விட்டுட்டு தனது வேலையே பார்க்க திரும்பிவிட்டான்

ஆனால் சந்தியா அங்கே பித்து பிடித்த போல் நின்று அவன் போன சாலையே வெறித்த படி நின்று கொண்டு இருந்தாள் [தன் வினை தன்னை சுடும்]

.இனி தான் நிலை என்ன என்கிற கேள்வி குறி உடன்..???
………….
நான்கு மணி நேரம் கழித்து டாக்டர் ராம் வெளியே வர..
சூர்யா பதத்துடன் அவரை நெருங்கினான் .’ டாக்டர் மதி..எப்பிடி இருக்கா”

” நொவ் ஷி இஸ் இன் செப் ஜோன் சூர்யா அப்புறம் குழந்தைகளும் நல்லா ஆரோக்கியாமா இருக்கு நீங்க போய் பார்க்காலாம்.. “
இது போதுமே அவனுக்கு.. தேங்க்ஸ் டாக்டர் என்று சொல்லிவிட்டு.. அவளை பார்க்க சென்றான்..

அங்கே மதி இன்னும் மயக்கம் தெளியாத நிலையில் தலையில் பெரியே கட்டுடன் சுயநினைவு இன்றி படுத்து கிடந்தாள்..

அவள் இடம் சென்று அமர்ந்தவன் ஏண்டி இப்பிடி பண்ணின என மௌனமாக கேட்க..

ஆனால் பதில் சொல்ல வேண்டியவளோ இரண்டு நாள் கழித்து தான் கண்ணை திறந்தாள்.. திறந்து முதலில் டாக்டர் இடம் குழந்தையே பற்றி தான் கேட்டாள் ..

” அப்போ அங்கே வந்த சூர்யா மதிடம் ஏதும் பேசாமல் வெறும் அவள் படுத்து கிடந்த இடத்தை சரி செய்து விட்டு மாத்திரை மருந்து எல்லாம் சாப்பிட்டு விட்டாளா என்று பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டான்

அதை பார்த்த மதிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது மெல்ல அவள் என்னங்க.. “ என சூர்யாவை அழைக்க

” அவன் ஏதும் பேசாமல் பானுவிடம் அவளை பார்த்து கொள்ளம்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டான் மறந்தும் மதி பக்கம்
திரும்ப வில்லை..”

அவனது செய்கை பார்த்து பாணுவிடம் “ஏன் பாணும்மா அவர் என்கிட்ட பேசவே மாட்டேன்கிறாறு என்கிட்டே பேச சொல்லுங்களேன் எனக்கு என்னமோ மாதிரி இருக்கு..” என மதி கண் கலங்கி கொண்டே பேச

மதி அழகூடாது இந்த மாதிரி நேரத்துல தம்பிக்கு கொஞ்சம் கோபம் தான் அத நாம வீட்டுக்கு போய் பேசி சரி பண்ணிக்கலாம் என்ன இப்போ நீ இந்த மருந்த சாப்பிடு என அவளுக்கு புரியும் படி சொல்லிவிட்டு பாணும்மா அவளை சமாதனம் செய்தார் ..

ஆனால் சமாதனம் ஆகா வேண்டியவனோ. எதையே இழந்தது போல் நடமாடி கொண்டு திரிந்தான்..

பாட்டிடம் மனம் விட்டு பேசினால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று பேச சென்றவனின் மனதில் மேலும் பாரம் ஏறியதுதான் மிச்சம் பாட்டிக் கிட்ட எல்லாம் உண்மையே சொல்லிருக்கா குழந்தையே பற்றி என்கிட்டே மரைச்சுடாளே பாவி , அன்னைக்கே கேட்டேன் என்ன விசையம்ன்னு ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இன்னைக்கு இப்பிடி ஆக விட்டு இருப்பேனா என தனக்குள்லையே புழம்பி தவித்தான் மறந்தும் அவளிடம் முகம் குடுத்து பேசவில்லை

இதோ மதி உடல் நிலை தேறி வீட்டுக்கு வந்துவிட்டாள் கிட்டத்தட்ட ஒரு மாதர்திற்கு பிறகு ஆனால் அவனோ இவளை கண்கொண்டு காணமல் இருந்தான் அவள் விழித்து இருக்கும் வெளியே செல்பவன் அவள் உறங்கியே பிறகு தான் வீட்டுக்கே
இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த மதி பொறுக்க மாட்டாமல் ஒரு நாள் மதி என்ன நினச்சு கிட்டு இருக்காரு மனசுல இன்னைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு.. ஒரு முடிவு கட்டியே ஆகணும்.. என அவள் துங்குவது போல் படுத்து இருந்தால் சூர்யா அவள் உறங்கிவிட்டாள் போல என்று எப்போவும் போல் அறைக்கு வர..
மதி அவனுக்காக அங்கே காத்து கொண்டு இருந்தாள் அதை பார்த்த

சூர்யா,”ஒ இன்னும் தூங்கலையா இவ என நினைத்துவிட்டு தனது வேலையே பார்க்க சென்றான், குளித்துவிட்டு உடை மாற்றி கொண்டு அவன் வர அப்போவும் அவள் உறங்காமல் அவனையும் அவன் செய்கையும் பார்த்துபடி அமர்ந்து இருந்தாள்

தனது பைல் மட்டும் மடிகணினியே எடுத்து திரும்பியவன் அப்போவும் அவள் உறங்காமல் அவனையே பார்க்க

அதை பார்த்து யோசனையுடன் ,ஏன் இப்பிடி தூங்காம உட்காந்து இருக்கா உடம்புக்கு ஏதும் சரி இல்லையோ ,வலி ஏதும் ..என அவன் எண்ணம் தரிக்கேட்டு ஓட பின்பு நம்ம என்னன்னு கேட்டா அப்பிடியே நம்மகிட்ட சொல்லவா போறா எப்பிடியோ என்னமோ பண்ணட்டும் என்று நினைத்துவிட்டு பால்கனிக்கு சென்று விட்டான்

அவ்வளோ நேரம் நின்று யோசித்தவன் தன்னிடம் வந்து பேசுவான் அல்ல சண்டையாவுது போடுவான் என மதி எதிர் பார்க்க அவனோ அங்கே இருந்து போனதில் மதிக்கு கோபத்தை கிளப்பியது இன்று என்ன ஆனாலும் பாரவாயில்லை அவனிடம் பேசி விட வேண்டும் என்கிற உறுதி உடன் மெல்ல கட்டிலை விட்டு இறங்கி அவன் இருந்த பால்கனிக்கு சென்றாள்

அங்கே அவன் எதிர கிடந்த மூங்கில் சோபாவில் அவனை முறைத்த படி பட்டென்று அமர்

அவள் அமர்ந்த வேகத்தை பார்த்து ” ஹே மெதுவா டி என அலறினான் சூர்யா”

சூர்யாவின் பதட்டத்தை பார்த்த மதி, மனதுக்குள் வாயா வா இப்போ மட்டும் பேச தொன்றதோ, உனக்கு இவ்வளோ நாள் என்னை எப்பிடி எல்லாம் பேசாம தவிக்க விட்ட, இருக்கு இன்னைக்கு உனக்கு என

” ம் எல்லாம் எங்களுக்கு தெரியும் “என்று மதி முகத்தை திருப்பிகொண்டாள்

” அவளை முறைத்த படி ‘ ஆமா ஆமா நல்லா எல்லாம் தெரியும்ல.. “ என அவளை முறைத்து கொண்டே சூர்யா பேச

” எதுக்கு இப்போ சுத்தி வளைச்சு பேசுறிங்க முகத்துக்கு நேர -பேசுங்க..“ என அவளும் அவனுக்கு சலிக்காமல் அவனிடம் கேள்வி கேட்டாள்

” என்னனு உனக்கு தெரியாது.. , எதுக்கு டி என்கிட்ட சொல்லாமல் மறைச்ச , அன்னைக்கே என்கிட்டே விசையத்தை சொல்லி இருந்தா இவ்வளோ நடந்து இருக்குமா ,அதுமட்டும் இல்லை இப்பிடி நேரத்துல கவனமா இருக்கனும் தெரியாதா உனக்கு டாக்டர் தானே நீ.. .. என அவன் கோபத்தில் இவ்வளோ அடைக்கி வைத்தது கொட்டி தீர்த்து விட்டான்.....

” மதி அவன நிதமாய் பார்த்து” பேச வேண்டியதது எல்லாம் பேசியாச்சா, எனக்கு என்ன வேண்டுதல் பாருங்க, நான் என்ன வேணும்ன்னா போய் விழுந்தேன் அவ தான் பேசிகிட்டே இருக்கும் போதே தள்ளிவிட்டுட்டா என்று சொல்லிவிட்டு தன் நாக்கை கடித்து கொண்டாள் கடவுளே உலறிவிட்டோமே என பேந்த- பேந்த விழித்தாள்

அவன் அதிரிச்சி உடன் அவளை பார்த்தே , என்ன சொன்ன இப்போ தள்ளிவிட்டாளா என ஒரே எட்டில் மதியின் அருகே சென்று அவள் தோள்களை பிடித்து உலுக்க


அவள், ” அவனது பிடியில் வலி தாங்காமல் ” ச்ஷ்ஷ்ஷ்.. வலிக்குது ப்பா விடுங்க என்ன.. “ எழ போக.

அவளை எழ விடாமல் தடுத்த சூர்யா அவளிடம்
”ஏய், இப்போ சொல்ல போறியா இல்லையா என்ன நடந்ததுன்னு, என கோபத்தில் சூர்யா கேட்க”


அவன் உண்மை தெரியாமல் விடமாட்டான் என புரிந்துகொண்டே மதி ” ஐயோ சொல்லுறேன் முதல என் கையே விடுங்க என அவள் சொல்லவும் தனது பிடியே தளர்த்தினான் ஆனால் விடவில்லை சொல்லு என்பது அவன் பதில் காக அவள் முகத்தை
பார்க்க


மதி.மெல்ல.. ”தனக்கும் சந்தியாகும் அன்று நடந்த வாக்கு வாதத்தை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள் இப்போ புரியுதா அவ ஏன் என்ன தள்ளிவிட்டான்னு இதுல நான் குழந்தை பற்றி சொல்லி இருந்தேன் வச்சுக்கோங்க அவள் முதல நாமம் குழந்தையே தான்.. அவள் சொல்லி முடிப்பதற்குள்..

அவள் வாயே தன் கரம்கொண்டு மூடி போதும் மதி மேல ஏதும் சொல்லாத என்று சொன்னவனின் உடல் பயத்தில் நடுங்கியது , சந்தியா இவ்வலொ பெரியே காரியத்தை செய்வாள் என்று சூர்யாவினால் நினைத்துகூட பார்க்கா முடியவில்லை
கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் மூன்று உயிர் அல்லவா போய் இருக்கும் என யோசிக்க – யோசிக்க அவனின் கோபம் மற்றும் பதட்டம் எகிறியது

அவனின் பதட்டம் பார்த்து... மதி அவன் கையே பிடித்து போதும்ங்க ரிலாக்ஸ் நடந்த எல்லாம் மறந்துட்டு நடக்க போறத பார்ப்போம் என்ன” மதி சூர்யாவுக்கு ஆறுதல் சொன்னாள்


இன்னும் அவன் முகம் தெளிவு இல்லாமல் இருப்பதை பார்த்து மதி இன்னும் என்னங்க குழப்பம் உங்களுக்கு.. என அவள் மெல்ல கேட்க..

அப்போதுதான் அவன் அந்த கேள்வி கேட்டான் என்ன உன்னக்கு பிடிக்குமா , மதி என்று

 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபி-26-final_epi


என்ன கேட்டிங்க, என மதி புரியாமல் கேக்க

என்ன உன்னக்கு பிடிக்குமான்னு கேட்டேன் ,இது சூர்யா

என்ன கேள்வி இது உளறமா இருக்க மாட்டிங்களா , இதே கேள்வியே இன்னும் பத்து வருஷம் கழிச்சு கேளுங்க நீங்க ”அவளுக்கு ஏன் திடிரெண்டு சூர்யா இப்பிடி கேட்கிறான் என்று புரியவில்லை

” அதெல்லாம் எனக்கு தெரியாது பதில் சொல்லு மதி, என்னக்கு “அவனுக்கு இன்று பதில் தெரியே வேண்டி இருந்தது

குழந்தையே பற்றி சொல்லாமல் விட்டது தான் கரணம் என்று அவளுக்கு புரிந்தது சிறிது நேரம் யோசித்துவிட்டு ” தமிழ் பாட்டு கேட்பிங்க தானே “அவள் கேட்க


” இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாமல் இந்த கேள்வி கேட்குற “ என அவன் பொருமினான்


” ம் பதில் சொல்லுங்க “

” கேட்பேன். அதுக்கு என்ன இப்போ....”

” நிலவே நிலவே பாட்டு தெரியுமா.”

” அதுக்கு ?? “

” அதுல இந்த வரிகள் கேட்டு இருக்கீங்களா

“உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்கத் தேவை இல்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
ஏதொரு மொழிகள் சொல்வதில்
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை
மொழியே போ போ …அழகே வா வா வா
மொழியே போ போ போ …அழகே வா வா வா “
என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து உள்ளே போய்விட்டாள்

” என்ன சொன்னாள் என்று புரியவில்லை அவனுக்கு பிறகு.. புரிந்த பொது சந்தோசத்துடன் அடிப்பாவி ஏய் மதி.. என்று தன் அறைக்கு திரும்பியவன் அங்கே மதி எங்கே என்று தேடினான் அங்கே டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்று தன் வயிற்றில் கை வைத்து பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள் அதை பார்த்து அவளை பின்னால் இருந்து அணைத்த படி.. என்ன டி சொன்ன திரும்ப சொல்லு.. “

” என்னது திரும்பவா.. அப்போ இன்னும் என் அறிவு மாமுக்கு பல்பு எரியவே இல்லையா தப்பு ஆச்சே.. “

” என்னையவா டி கிண்டல் பண்ணுற உன்ன என அவன் அவள் இதழ் தேடி தண்டை தர.. அவள் அவன் உடன்.. இணைந்து விருபத்துடன் அந்த தண்டனையே வாங்கி கொண்டாள்”

சூர்யா அவள் முகத்தை கையில் ஏந்தி ,தேங்க்ஸ் மதி உன்னோட பதில் கேட்டு எனக்கு எவ்வளோ சந்தோசம் தெரியுமா எங்கே உன் மனசுல எனக்கான இடம் இல்லையோ நினச்சு பயந்துட்டேன், நாம எப்பிடியோ சந்திச்சி , எப்பிடிலாமோ சண்டையும் போட்டு , ரெண்டு தடவ உன்னை இழக்குற நிலை வரைக்கும் போயிட்டு வந்துட்டேன் , உன்னை முதல் முதலா பார்த்தப்போ என்னோட மொத்த உலகம இவதாண்டா யாராவுது சொல்லி இருந்தா சிரிச்சு இருப்பேன் ஆனா இப்போ சொல்லுறேன் மதி,”ஐ லவ் யூ”என அணைத்து கொண்டான்
அதை கேட்டு அவளுக்குமே அவ்வளோ சந்தோசம், லவ் யூ டூ சூர்யா ,என அவளும் பதிலுக்கு சொன்னாள்

இருவருக்குமே ஏதும் பேச தோன்றவில்லை அமைதியாக அமர்ந்து அந்த பெரியே ஜன்னல் வழியே பௌர்ணமி நிலவின் ஒளியும் இரவு நேர பனி காற்றையும் அனுபவித்த படி இருந்தார்கள் அப்போதான் மதிக்கு ஒரு யோசனை தோன்றியது , மெல்ல சூர்யாவை நிமிர்ந்து பார்த்து

” என்னங்க எனக்கு ஒரு டவுட் “மதி கேட்க


” டவுட் கேட்க நல்ல நேரம் பார்த்த டி அது எல்லாம் அப்புறம் என முதல இந்த அழகான நேரத்த அனுபவி , செமையா இருக்குல இன்னிக்கி கிளைமேட்”

அவளோ , அது இல்லப்பா , இந்த சந்தியா என்ன ஆனால் , என்ன செஞ்சிங்க அவளை கவலையுடன் மதி கேட்க

” கட்டின பொண்டாட்டியே ஒண்ணுமே பண்ண முடியல இதுல அவள எங்கிட்டு நான் போய்

” என்ன சொன்னிங்க..”அவள் முறைக்க


” சும்மா டி.. அவள் என்ன ஆனானே எனக்கே தெரியாது..உன்னை ஹோச்பிடல சேர்த்த அப்புறம் அவளை நான் பார்க்கவே இல்லை ஜோர்ஜ் தான் அவள் ஏதோ ராஜேஷ் கிட்ட போயிட்டதா சொன்னான் அதுக்கு மேல அவன் பாடு அவள் பாடு எனக்கு என்ன வந்தது….. நம்மள இந்த பாடு படித்தினதுக்கு அவளுக்கு தேவை தான் அனுபவிக்கட்டும்.. “ முடிந்த அளவு கோபத்தை கட்டுபடுத்தியே படி பேசினான்

பாவம்ங்க அவ…என மதி தோழியாய் அவளுக்கு வருத்த பட”

” ஆமா டி ஊருல இருக்கிறவ எல்லாதுக்கு நீ பாவம் பாரு ஆனா என்ன மட்டும் டீல் விட்டுரு.. என்று பேசியே படி அவளை அணைக்க.
மதி , வெட்கத்துடன் அவன் இடம் தஞ்சம் புகுந்தாள்



[ சந்தியா ராஜேஷ் உடன் வாழ்கைக்காக பெற்றோர் உடன்.. போராட..அவனோ.. சரி தான் போடி உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ என்று அவளுக்கு அவளை போல் தண்ணி கட்டி கொண்டு இருந்தான்… ]..


ஒரு மாதம் கழித்து

மதி இடம் சூர்யா.. ” என்ன டி மாத்திரை எல்லாம் அப்பிடியே இருக்கு.. அவளோ அவன பேசுவதை ஏதும் காதில் போட்டு கொள்ளாமல். நீங்க ஏன் சாப்பிடாம போனிங்க. முறைத்து கொண்டே கேட்டாள் .. “

” வேலை இருந்தது டி.. அதான் “

” என்ன வேலை இருந்தாலும் உங்கள சாப்பிட்டு தானே போக சொல்லி இருக்கேன் “

” அவனோ தவறு செய்த குழந்தை போல்.. அவள் முன் கையே பிசைந்து படி நின்று இருந்தான்.. பிறகு மெல்ல.. அதுக்காக இப்பிடி இந்த மாதிரி நேரத்துல சாப்பிடமா இருப்பியா உடம்பு என்னத்துக்கு ஆகுறது .. கொஞ்சமாச்சும் சாப்பிடுமா “ என கெஞ்சி கொண்டு இருந்தான்

பேரன் மதி இடம் மாட்டிகொண்டு விழிப்பதை பார்த்து நல்லா வேணும் டா உனக்கு எவ்வளோ நாள் நான் சொல்லிர்பேன் இப்போ பதில்; சொல்லு அவளுக்கு… நேரம் தெரியாமல்…. பாட்டி தன்னை மாட்டிவிடுவதை பார்த்து அவனுக்கு பொறுக்கவில்லை..
பாட்டி என பல்லை அவன் கடிக்க.. மதி அவனை..
அங்க என்ன முறைப்பு வேண்டி கிடக்கு உங்களுக்கு நான் கேட்டது பதில் சொல்லுங்க முதல “

” இல்லம்மா இனிமேல் இப்பிடி நடக்காது ப்ளீஸ் டா சாரி வா சாப்பிடலாம்.. என அவள் இடத்தில அவன கெஞ்ச.. அவளோ.. முடியாது “ மறுத்துவிட்டாள்

” வேணாம் எதுல வேணும் நாளும் விளையாடு மதி உன் .. ஹெல்த் விஷயம் மட்டும் வேண்டாம்.. “ சூர்யா அவளிடம் கெஞ்ச..


” சரி போன போகுதுன்னு என்று இன்னும் அவனை நாலு திட்டு திட்டியே படி அவனுக்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள்

மரகதம் தன் மகன் மருமகள் புகைபடத்தை பார்த்து.. இனி எல்லாம் நல்லதே நடக்கட்டும் என்று உன் பிள்ளையே ஆசிர்வாதம் பண்ணுப்பா .. எங்கே எனக்கு அப்புறம் அவன் தனியா இருந்துடுவானோ தாழ்ந்து போயிடுவானோ பயத்துல இருந்தேன் ஆனா மதி அவன் வாழ்கையில் வந்து அவன் குறை எல்லாம் நிறையாக மாற்றிவிட்டாள் .. என்று சந்தோசத்துடன் அவர்களை வேடிக்கை பார்த்த படி இருந்தார்…





முற்றும்


hai friends, happada, naanum oru story mudichchuten , first epi la irunthu ippo varaikkum enkooda intha storyla travel pannina ellarukum romba romba thank you neraiya perukku cmts ku reply pannirkka matten athuku sorry story mudichchachu ini ellarkum serthu cmts poturen
ippo ghost story la concentrate pannalam irukken, ok thane


 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு வருடம் கழித்து

பாட்டிம்மா – பாணும்மா கிளம்பிடிங்களா என மதி கிழே இருந்து கேட்க

நாங்க அப்போவே கிளம்பிட்டோம் , முதல உன் புருஷன் எழுந்துடானா பாரு

அதை கேட்ட வென்மதிக்கோ எதுளையாவுது முட்டிகொள்ளலாம் போல் இருந்தது, அவசரமாக சரிங்க பாட்டி இதோ என ஹாலுக்கு சென்று பார்த்த மதிக்கு கடுப்பே வருவே இல்லை சூர்யாவின் செயலை பார்த்து,

விடியே விடியே லேப்டாப் பைல் ஓட டூயட் பாட வேண்டியது விடிஞ்ச பிறகு சோபா(sofa) உடன் டூயட் பாட வேண்டியது, இதே வேலையா போச்சி இந்த மனுஷனுக்கு ஹால் மாதிரியா கிடக்கு சின்ன பசங்க தோற்றது போய்டுவாங்க இவர்கிட்ட, என புழம்பி கொண்டு அங்கே சிதறி கிடந்த காகிதங்களை எல்லாம் அடிக்கி வைத்தாள், சூர்யா எழுந்துரிங்க , என எழுப்ப அவனிடம் அசைவே இல்லை, சிறிது நேரம் பார்த்தவள் நீ இப்பிடி சொன்னால் என்றால் கேட்க மாட்ட உன்ன என்று உறங்கி கொண்டு இருந்த அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட்டாள்,

அம்மா என்று அலறி எழுந்த சூர்யா அங்கே முறைத்த படி நின்ற வெண்மதியே பார்த்து ஏண்டி முன்ன எல்லாம் என்கிட்டே பேசவே யோசிப்ப இப்போ என்ன இப்பிடி அடிக்கிற புருசன்கிற மரியாதை கொஞ்சமாச்சும் இருக்கா உனக்கு, என வலியில் முகம் சுளித்த படி சூர்யா கேட்க

“அது அப்போ நீங்க வேற யாரோ ஒருத்தர் ஓட சொத்து நினைச்சு கொஞ்சம் ப்ரீயா விட்டுட்டேன்” மதி கூலாக சொல்ல

“இப்போ” என சூர்யா கேட்க

“இப்போ நீங்க என் சொத்து அதுனால நான் என்னவேணும்னாலும் பண்ணலாம் “

“அடிங்க உன்னை நில்லுடி என எழுந்து அவளை துரத்த “

மரகதம் பாட்டி, டேய் சூர்யா சீக்கிரம் கிளம்பு நேரம் ஆச்சு கோவிலுக்கு என அவர் அதட்ட

சூர்யா சட்டுனென்று இதோ பாட்டி என கிளம்ப சென்றான்

இன்று சூர்யா-வெண்மதியின் இரட்டையரின் முதல் பிறந்தநாள் , அதுக்காக கோவில் போகவேண்டும் என்பதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்

ஒரு வழியாக சூர்யா- மதி, மரகதம் பாட்டி , பாணும்மா குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றார்கள்

அங்கே பிள்ளைகள் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு எல்லாருக்கும் இனிப்பு கொடுத்தார்கள்,பிறகு கிளம்பலாம் எண்ணனும் போது தான் மதி அங்கே ஜீவனற்று போய் அவள் தாயார் சொல்லுவதை அதாவுது அடி பிரதக்சணம் செய்து கொண்டு இருந்தாள்
அதை பார்த்த மதிக்கு அது சந்தியா தானா என்று அதிர்ச்சியாக இருந்தது, எப்பிடி இருந்தவள் இன்று இப்பிடி இருக்கிறாளே என்று வேதனையும் சேர்த்து

வெகுநேரமாக அழைத்து கொண்டு இருந்த சூர்யாவுக்கு மதியின் இந்த திடீர் மாற்றம் புரியவில்லை அவள் பார்வை சென்ற திசையில் பார்த்தவனுக்கு முகம் உணர்ச்சி துடைத்து போல் இருக்க
அவனிடம் விஷயத்தை சொல்ல திரும்பிய மதிக்கு அவனது இறுகி போன முகம் தெரியே மதிக்கு வார்த்தை வரவில்லை, அவள்-

என்னங்க என அழைக்க

போலாம் என்று ஒரு வார்த்தை உடன் அந்த இடத்தை விட்டு நகர்துவிட்டான்

மதியும் ஒரு முடிவுடன் அங்கே இருந்து கிளம்பிவிட்டாள் வீடு வந்து சேரும் வரையில் யாரும் பேசவில்லை

வீடு வந்த உடனே பாட்டிடம் குழந்தைகளை குடுத்துவிட்டு , சூர்யாவிடம், நான் அந்த ராஜேஷை பார்க்கணும் இப்போவே என சொன்னாள் மதி

அதை கேட்ட , சூர்யா கோபத்தில் உள்ள போ மதி யாரையும் எதுக்காகவும் பார்க்க தேவை இல்லை என சொல்ல

அப்போ நீங்க என் கூட ராஜேஷை பார்க்க வரமாட்டிங்க அப்படிதானே ,சரி நானே போறேன் என மதி மீண்டும் காரில் ஏற போக,

சூர்யா அவளை தடுத்து வந்து தொலை என அவளை அழைத்து கொண்டு ராஜேஷ் ஆபீசுக்கு சென்றான்

அங்கே ரிசெப்சனில் இருந்த ஆட்களோ சூர்யாவை பார்த்து, பயத்தில் அவனுக்கு ராஜேஷ் இருக்கும் அறைக்கு வழி விட்டார்கள்

ராஜேஷ் யாருடனோ தொழில் சம்பதம பேசிக்கொண்டு இருக்க சூர்யா பட்டேன்றேண்டு அறையே திறந்து உள்ளே சென்றான்

வெகுநாட்களுக்கு பிறகு சூர்யாவை பார்த்த ராஜேஷுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது, இப்போ எதுக்கு வந்து இருக்கான் இவன், நாம ஏதும் பண்ணவில்லையே, உட்கரங்க சூர்யா என்ன விஷயம் என பயத்தை மறைத்த படி கேட்க

அவன் ஏதும் பேசாமல் அங்கே கிடந்த ரோல்லிங் சேரில் கால் மேல் போட்டு உட்காந்து தனக்கு பின்னால் நின்ற மனைவியே பார்த்து உட்காரு பார்வையாலையே சொல்ல

அவளோ ராஜேஷை பார்த்து, ஹாய் அண்ணா எப்பிடி இருக்கீங்க , என கேட்க

ராஜேஷோ ஒரு நிமிடம் அதிர்ந்து, பிறகு நல்லா இருக்கேன்ம்மா என்ன விசையம என்ன பார்க்க வந்து இருக்கீங்க

அவளோ சூர்யாவை பார்க்க அவனோ மனதுக்குள், வர வர கொழுப்பு கூடி போச்சுடி உன்னக்கு என முறைத்த படி அமர்ந்து இருந்தான் அவளை பார்த்த படி

மதி, வருத்தமாக ராஜேஷ் பக்கம் திரும்பி ,சந்தியா எப்பிடி இருக்கா அண்ணா கேக்க

அவளது கேள்வியில் ஒரு நிமிடம் தடுமாறியவன் ,சுதாரித்து , தெரியலையே ம்மா அதுவும் இல்லாம அவள் எனக்கு பண்ணின துரோகத்துக்கு அனுபவிக்கட்டும் அவளால் நான் பட்டது கொஞ்சம் நஞ்சம் இல்லை என வேதனை உடன் சொல்ல

அவளால் மனது அளவில் உடல் அளவில் பாதிக்க நானே அவளை மன்னிச்சுட்டேன் அண்ணா நீங்களும் அவளை மன்னிக்க கூடாதா, அவளை கல்யாணம் பண்ணி உங்க அன்பால அவளை மாற்ற கூடாதா. தன் வாழ்கையே தொலைச்சுட்டு நட பினாம ஆகிட்டா அண்ணா ப்ளீஸ் , நீங்களும் நிம்மதியா இல்லை அவளும் சந்தோசமா இல்லை, உங்க குழந்தையே நினச்சு பார்த்திங்களா அதுக்காக தான் நான் உங்ககிட்ட பேசுறேன், அவள கல்யாணம் பண்ணிகொங்க அண்ணா, உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்து அவ சொன்னா கேட்பிங்கள என்ன அந்த தங்கச்சியா நினைச்சி அவள ஏத்துகோங்க , வள்ளுவரே சொல்லி இருக்காரே
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்று நானும் அதையே தான் அண்ணா செய்யுறேன் , அவள் என்னக்கு பண்ணினது மன்னிக்க முடியாதது தான் ஆனா சூர்யா எனக்கு கிடைச்சு இருக்க மாட்டாரே அதுக்கு தான் நான் அவளை மன்னிச்சுட்டேன் நீங்களும் யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடுங்க அப்புறம் நான் உங்ககிட்ட வந்து பேசினத நீங்க அவள் கிட்ட சொல்ல வேண்டாம் ,காதல் ஒருவர் சிபாரிசுல வரகூடாது அப்பிடி வந்தா அதுகாதல் கிடையாது, என எழுந்து அப்போ நாங்க கிளம்புறோம் என்று சூர்யாவை அழைத்து கொண்டு வெளியே செல்ல




ராஜேஷ் அவளிடம், ஒரு நிமிஷம் என தடுத்து நிறுத்தி ,முடிவு பண்ணிட்டேன்ம்மா ,அவளை மன்னிக்க இல்லேன்னா இப்பிடி ஒரு தங்கை எனக்கு கிடைச்சு இருப்பாளா, அப்பிடியே என்னையும் மன்னிசுர்ம்மா என அவர்களை சந்தோசமாக வழி அனுப்பினான்


சூர்யா என்ன பேசாம வரிங்க என மதி கேட்க,அவனோ அவளை தன் தோளில் சாய்த்து வெண்மதி நிஜமாலுமே நீ என் சகி தான் லவ் யூ பொண்டாட்டி என சொல்ல
லவ் யூ சூர்யா அவளும் அவனின் தொழில் சந்தோசமாக மற்றும் நிம்மதியாக சாய்ந்து கொண்டாள், தோழியின் வாழ்க்கை இனி சரி ஆகிவிடும் என்கிற நிம்மதி மதிக்கு.


சூர்யாவுக்கு தனக்கு தான் எதிர்பார்த்த மாதிரியே துணைவி கிடைத்துவிட்டாள் என்கிற நிம்மதி
ராஜேஷுக்கு தன்னுடையே தவறை சரி செய்துவிடலாம் என்கிற நிம்மதி,


எப்பிடி எல்லோரும் நிம்மதியாக இருக்க நாமளும் நிம்மதியாக இந்த கதைக்கு ஒரு பாய் சொல்லிடு கிளம்பலாம்.


hai friends epilogue type pannalam utkanthaa athu episodea marituchu mannichukonga finally venmathiye mudichchachu , read pannitu unga cmts sollunga makkale





 
Status
Not open for further replies.
Top