All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாப்புகுட்டியின் "என்னை உருக்கும் உயிரே" - கதை திரி

Status
Not open for further replies.

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் தோழமைகளே நான் தான் உங்கள் பாப்புகுட்டி😍 .
இப்போ நான் எதுக்கு வந்திருக்கேனா
(அத மொத சொல்லி தொலைங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணிட்டேன்😁)
ஒரு புது கதையுடன் கூடிய விரைவில் உங்களை எல்லாம் சந்திக்கலாம்னு இருக்கேன்😁. அதற்கான சின்ன டீ படித்து பார்த்து கருத்துக்களை கருத்து திரியில் பகிரவும்😁

FB_IMG_1589626527257.jpg

தலைப்பு : "என்னை உருக்கும் உயிரே!"

நாயகன் : டிரிபிள் RK

நாயகி : ஜோஷிகா தனபாண்டியன் .



ஏய் சூப்பர் டி ஷிகா , " எங்க கிட்ட பெட் கட்டின மாதிரியே அந்த டிரிபிள் R அவனா வந்து,அவன் லவ்வ உன் கிட்ட சொல்ல வச்சிட்டியே எப்படி டி" என்ற கேட்ட தன் தோழி மாலினியின் கேள்விக்கு சிரிப்பையே பதிலாக தந்தாள் ஷிகா .

காயத்ரி " ஹெய் என்ன பண்ணி வெச்சிருக்க தெரியுமா ஜோ , லவ்கிற பேர்ல சீனியர் கிட்ட இருந்து பத்து லட்சம் வாங்கி இருக்க எதுக்கு வாங்கினனு சரியான காரணத்தையாவது அவர் கிட்ட சொன்னியா, அதுவும் இல்ல. இவளுங்க பந்தயம் அது இதுன்னு சொல்லும்போதே நான் உன்னை நான் தடுத்திருக்கனும். அம்மாக்கு உடம்பு சரியில்லைனு போன் வந்ததும் உன்னைய விட்டுட்டு ஊருக்கு போனது தப்பா போச்சி" என்று கோபமாக கேட்க,

மாலினியோ "என்னது பத்து லட்சம் பணம் வாங்கினாளா" என்று அதிர்ச்சியில் திறந்த வாய் மூடாமல் ஷிகாவை பார்த்தாள்.

"அடங்கோக்கமக்கா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே" மைண்ட் வாய்ஸ் என சத்தமாக முனுமுனுத்த ரியாவை காயு முறைக்க,

'அவ்வளவு சத்தமா கேட்டுச்சி நம்ம மைண்ட் வாய்ஸ்' என திரும்பி மாலினியைப் பார்க்க,


அவளும் , "மைண்ட் வாய்ஸ்னு நெனச்சி சத்தமா பேசி ஆப்புல உக்காந்துட்டயே மாப்பு" என ரியாவை கலாய்த்தாள்.

காயத்ரி " இப்போ ரெண்டு பேரும் அமைதியா இருக்க போரிங்கலா இல்லையா , கொஞ்ச நேரம் வாயமூடிட்டு அமைதியா இருக்கருதுனா இருங்க இல்ல கிளம்பிடுங்க. இவ இப்படி ஒரு காரியத்தை செய்ய தூண்டின உங்க மேல தான் நான் கொல காண்டுல இருக்கேன்" என்று கத்தினாள்.

ஜோ " மச்சி பீ கூல் இப்போ என்ன ஆகிடுச்சினு இவ்வளவு டென்சன் ஆகுற" என்று சமாதானப்படுத்த முயல, "இங்க பாரு ஜோ நீ இதுவரை புடுங்கின ஆணியெல்லாம் போதும், சீனியர் விசியத்தில் என்ன முடிவு எடுத்திர்க்க", என்க

ஜோ வை தேடி வந்த அந்த சீனியரும் இவர்களின் உரையாடலை கேட்க நேர்ந்தது (மீதி எபியில் பார்ப்போம் 😁)


(பின் குறிப்பு : நீ வேறும் டீ மட்டும் தானே போடுவ, ஸ்டோரி கொடுக்க மாட்டியேனு உருட்டுக் கட்டையை தூக்குவிங்கனும் தெரியும் உங்கள் வீட்டு பிள்ளையா நெனச்சி மன்னித்து விடுங்கள் 🙏😁. இந்த முறை விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன் 😘😘)
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைகளே எல்லோரும் எப்படி இருக்காங்க 😍.
நான் இப்போ எதுக்கு வந்திருக்கேனாஆஆ😁😁

எங்களின் இம்சையரசி, இளையராணி இந்து என்கி இஷானாவின்(எழுத்தாளர்) பொறந்த டேவை முன்னிட்டு "என்னை உருக்கும் உயிரே" கதையிலிருந்து ஒரு சின்ன டீ தோழமைகளே. படித்து பார்த்து உங்கள் பொன்னான பரிசுகளை(கமெண்ட்ஸ்களை) எங்கள் இம்சையரசிக்கே சமர்ப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எபி எப்போ வரும் என்பதை எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வம் செல்வி.இஷானா அவர்கள் தேதியுடன் பின்னர் அறிவிப்பார் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்😁😁😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️


eiM0YTL87158.jpg

"என்னை உருக்கும் உயிரே"

பன்னீர் ரோஜா நிற புடவையில் எழில் ஓவியமாக நின்றிருந்தவளை நோக்கி ஒவ்வொரு அடியாக நெருங்கினான் அவன்.


நிலவை ரசித்துக் கொண்டிருந்த பாவை அவளிற்கு தன்னை நோக்கி வரும் தன்னவனின் ஒவ்வொரு அடி நெருக்கத்திற்கும் அவளுள் ஏதோ ஒரு சொல்ல முடியா உணர்வு தோன்ற, அந்த உணர்வும் கூட அவளுக்கு பிடித்தே இருந்தது.


சாரளத்தின் கம்பியில் சாய்ந்திருவளை நெருங்கி பின் புறமாக அனைத்தார் போல் அவளின் எலுமிச்சை நிற இடையில் கை கொண்டு அணைத்து, கழுத்து வளைவில் தன் மீசையால் குறுகுறுப்பூட்டி , காது மடலில் இதழ் உரச , "ஹே தர்பூஷ் அந்த வான்மகளை ரசித்தது போதும் இந்த வனமகனையும் கொஞ்சம் ரசிப்பது" என அந்தரங்கமாக சில வார்த்தைகளை பேச,

அவனின் வார்த்தை ஜாலத்தில் கன்னம் சிவந்ததா காது மடல் சிவந்ததா என தெரியாமல் கண் மூடி அவனின் புறம் திரும்பி, அவன் நெஞ்சில் தலை சாய்த்து அணைத்து கொண்டவளின் கன்னம் தாங்கியவன் " எல்லாத்துக்கும் சம்மதமா" என எல்லாத்துக்கும் என்பதில் சிறு அழுத்தம் கொடுத்து கேட்க, அவனின் அழுத்ததில் இமை பிரித்து அவன் கண்களை நேராக ஒரு நொடி பார்த்தவள் மறு நொடி தன் இதழ் கொண்டு அவன் இதழைணைத்தாள் .


இதழணைப்பின் தொடக்கத்திற்கு அவள் முற்றுப்புள்ளி வைக்க நினைக்க, அவளவனோ அதை தனதாக்கி ,தன்னவள் மூச்சிக்காற்றிற்கு தவிக்கும் போது தன் உயிர் மூச்சை அவளுள் நிரப்பினான்.ஆனாலும் அவளில் ஒரு சின்ன படபடப்பு இருந்ததை உணர்ந்தவன்,அவளை இயல்பாக்கும் பொருட்டு ,


அவளை அணைத்த வாக்கிலே சாரளத்தின் கதவுகளை மூடிவிட்டு தன் கைகளில் அவளை ஏந்தி கொண்டே


"கையில் மிதக்கும் கனவா நீ


கைகால் முளைத்த காற்றாய் நீ


கையில் ஏந்தியும் கனக்க வில்லையே!!!!!


நுரையால் செய்த சிலையா நீ!!!!!


"இப்படி பாட எனக்கு ஆசைதான்டி தர்பூஸ், ஆனா பாரு நீ ----- Kg. ---Kgங்கிறது கொஞ்சம் ஹெவிவெயிட்டா அதனால",


"கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா


கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா


எந்த கடையில நீ அரிசி வாங்குற


உன் அழகுல என் உசுர வாங்குற


உந்தன் எடை அளவு பாக்கனும் பாக்கனும்


உச்சந்தலைக்கு மேல தூக்கனும் தூக்கனும்"



"இந்த சாங் தான் டி உனக்கு மேட்ச் ஆகும்" என சொல்லி கட்டிலில் படுக்க வைத்து அவள் மேல் படரும்போது ........
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைகளே நானே நானே 💃💃சொன்னது போலவே கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்துட்டேன் ,படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 🙏🙏🙏🙏

This epi spl dedicated for my machi @Anupradeep
ஹேப்பி பொறந்த டே மச்சி 🎂🎂🎂

eiMKET186389.jpg

“என்னை உருக்கும் உயிரே”

உயிர் - 1


ஜனச் சந்தடி இல்லாத கடல் சார்ந்த இடத்தில், இரவின் குளுமையை அனுபவிப்பதும் தனி சுகமே…! அப்படியான ஒரு ஏகாந்த இரவில் படகு இல்லத்தின் சாரளத்தின் வழியாக வானின் முழுமதியை ரசித்துக் கொண்டிருந்தாள் அவனின் நிலவு மகள். அவள் பெண்கள் பொறாமை கொள்ளும் பேரழகியல்ல. அஞ்சனம் தீட்டாமலே அவளின் ஓரவிழிப் பார்வையால் அவனை பித்தனாக்கும் காந்த கண்ணழகி! சராசரி எடையை விட சற்று பூசினார் போன்ற உடல்வாகு, சிப்பி இதழ், கன்னக்குழி சிரிப்பு, சுருள் சுருளான குட்டை முடி, அதுவும் அவளிற்கு தனி அழகே…! மொத்தத்தில் அவனை கொள்ளை கொள்ளும் அவனின் செல்ல தர்பூஷ் இவள்…!

பன்னீர் ரோஜா நிறப் புடவையில் எழில் ஓவியமாக நின்றிருந்தவளை நோக்கி, ஒவ்வொரு அடியாக நெருங்கினான் அவன். நிலவை ரசித்துக் கொண்டிருந்த பாவை அவளிற்கு, தன்னை நோக்கி வரும் தன்னவனின் ஒவ்வொரு அடி நெருக்கத்திற்கும் அவளில் ஏதோ ஒரு சொல்ல முடியா உணர்வு, அந்த உணர்வும் கூட அவளுக்கு பிடித்தே இருந்தது.

சாரளத்தின் கம்பியில் சாய்ந்திருவளை நெருங்கி பின் புறமாக அணைத்தார் போல் அவளின் எலுமிச்சை நிற இடையில் கை கொண்டு அணைத்து, கழுத்து வளைவில் தன் மீசையால் குறுகுறுப்பூட்டி, காது மடலில் இதழ் உரச…

"ஹே தர்பூஷ் அந்த வான்மகளை ரசித்தது போதும், இந்த வனமகனையும் கொஞ்சம் ரசிப்பது." என அந்தரங்கமாக சில வார்த்தைகளை பேச, அவனின் வார்த்தை ஜாலத்தில் கன்னம் சிவந்ததா காது மடல் சிவந்ததா என தெரியாமல் கண் மூடி அவனின் புறம் திரும்பி அவன் நெஞ்சில் தலை சாய்த்து அணைத்துக் கொண்டவளின் கன்னம் தாங்கி,

"எல்லாத்துக்கும் சம்மதமா" என எல்லாத்துக்கும் என்பதில் சிறு அழுத்தம் கொடுத்துக் கேட்க, அவனின் அழுத்தத்தில் இமை பிரித்து அவன் கண்களை நேராக ஒரு நொடி பார்த்தவள், மறு நொடி தன் இதழ் கொண்டு அவன் இதழணைத்தாள்.

இதழணைப்பின் தொடக்கத்திற்கு அவள் முற்றுப்புள்ளி வைக்க நினைக்க, அவளவனே அதை தனதாக்கி, தன்னவள் மூச்சிக்காற்றிற்கு தவிக்கும் போது தன் உயிர் மூச்சை அவளுள் நிரப்பினான். ஆனாலும் அவளில் ஒரு சின்ன படபடப்பு இருந்ததை உணர்ந்தவன், அவளை இயல்பாக்கும் பொருட்டு, அவளை அணைத்த வாக்கிலே சாரளத்தின் கதவுகளை மூடிவிட்டு தன் கைகளில் அவளை ஏந்தி கொண்டே…

"கையில் மிதக்கும் கனவா நீ

கைகால் முளைத்த காற்றாய் நீ

கையில் ஏந்தியும் கனக்க வில்லையே….!

நுரையால் செய்த சிலையா நீ…!

இப்படி பாட எனக்கு ஆசைதான்டி தர்பூஸ், ஆனா பாரு நீ ----- Kg. ---Kgங்கிறது கொஞ்சம் ஹெவிவெயிட்டா அதனால…

கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா

கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா

எந்த கடையில நீ அரிசி வாங்குற

உன் அழகுல என் உசுர வாங்குற

உந்தன் எடை அளவு பாக்கனும் பாக்கனும்

உச்சந்தலைக்கு மேல தூக்கனும் தூக்கனும்…

இந்த சாங் தான்டி உனக்கு மேட்ச் ஆகும்.” என சொல்லி கட்டிலில் படுக்க வைத்து, அவள் மேல் படரும்போது… அவனை தள்ளி விட்டு கட்டிலின் மறுபுறம் இறங்கி, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

அவள் இயல்பு நிலைக்கு வந்ததை அறிந்து "ஹே தர்பூஸ் ஏன்டி…?" என அறியாப் பிள்ளையாய் வினவ,

"என்னை பார்த்தால் எப்படி தெரியுது உங்களுக்கு, நா குண்டு கத்திரிக்காவா? போங்க… போங்க… முருங்க்கா மாதிரியான பொண்ண பாத்து லவ் பண்ணுங்க இல்ல கல்யாணம் பண்ணி என்னவேனா பண்ணுங்க'' என படபட பட்டாசாய் பொரிந்து கொண்டே அவன் முகத்தைப் பார்க்க, அங்கு அவனின் ஆளை முழுங்கும் மோகப் பார்வையில் பேசும் வார்த்தைகள் மறந்து கன்னங்கள் சூடேற பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அவளின் கையை பற்றி தன்னருகில் சரித்து, அவள் நெற்றியில் இருந்து கீழ் நோக்கி விரலால் கோடிழுத்து, தேன் சிந்தும் இதழை வருடியவாரே காதருகில்…, "உன்னை பார்த்தால்…" என மோக மொழியில் பிதற்ற… இதற்கு மேல் தாங்காதடி என அவளுள் முழ்கி முத்துக் குளித்தான். அவனின் அதிரடியில் முதலில் பயந்தவள், அவன் கண்களில் கண்ட கரைகானா காதலில் தன் தயக்கம் துறந்து அவனில் தன்னை தொலைத்தாள். அவளின் இணக்கம் கண்டு தேன் உண்ணும் வண்டாக அவளை முழுவதுமாக கொள்ளையடித்தான். காதல் அதனால் உண்டான ஊடல், ஊடல் களைய காதலினால் கூடல் என அங்கிருந்த மூன்று நாட்களும் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்த நிறைவை அனுபவித்தனர்.

ஆனால்…, அதன் பின் நடந்தவை...,

அவர்களின் வாழ்வை புரட்டிப்போட்டு காதலை கானல் நீராக்கி விளையாடியது விதி, விளையாடியது விதியா? இல்லை சதியா?

தன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலோடு…

"இல்ல இல்ல நான் அப்படிப் பட்ட பொண்ணு இல்ல, தயவு செய்து என்ன நடந்ததுனு ஒரே ஒரு முறை நான் சொல்லவரத முழுதாக கேளுங்க ராகவ்…" ஆனால்…, அவனோ…

அவளின் வேண்டுதலோடு அவளையும் நிராகரித்தவனாக…

"அடச்சி உன் இந்த தரம்கெட்ட டிராமாவை முதலில் நிறுத்து…! என்னத்தடி கேக்கச் சொல்ற…? அதுதான் அங்க நடந்த அத்தனையும் என் கண்ணால பாத்து காதலும் கேட்டேனே…! அதெல்லாம் உண்மை இல்ல பொய்யுனு சொல்லப் போறியா…? அத அவன் தான் நம்புவான் நான் நம்பமாட்டேன்டி…! நீ துரோகி டி…! நம்பிக்க துரோகி…! இனி என் கண்முன்னே வந்திடாதே…!" என அவளை வெளியே தள்ளி கதவை அறைந்து சாற்றினான். பார்த்ததையும், கேட்டதையும் வைத்து முடிவெடுத்தவன் தீர விசாரித்து முடிவெடுக்கவில்லை என்பதை மறந்து விட்டான்.

“ப்ளீஸ் ராகவ், ப்ளீஸ்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க… நான் ஏன் அப்படி செய்தேன் என்பதை சொல்ல, உங்க மேல நான் வச்ச அன்பும் காதலும் உண்மை. நான் துரோகி இல்ல… நான் துரோகி இல்ல… இல்ல, துரோகி இல்ல…! ஆ…ஆ… ராகவ்…” என கதறிக் கொண்டு எழுந்தமர்ந்தவளின் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து இருந்தது. தலைவலி விண் விண் என தெறிக்க, அப்போதுதான் தான் கண்ட அனைத்தும் கனவெனப் புரிந்தது. புரிந்த விசயம் என்றும் போல் இன்றும் வலிக்கச் செய்ய தன் இதயத்தை மெதுவாக வருடியவாரே…,

"இதுவும் கடந்து போகும் எதற்கும் கலங்காதே" என தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், தன் அருகே அல்லி மலர் செண்டாய் உறங்கும் தன் குழந்தைகளின் கன்னம் வருடி, 'எதற்காக யாருக்காக இந்த வாழ்க்கை என நடைபிணமாக வாழ்ந்த எனக்கு எங்களுக்காக வாழு என சொல்வதை போன்று வரமாக வந்த வசந்தங்களே…' என அவர்களின் நெற்றியில் மென் முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள். சொந்த பந்தம், சொத்து சுகம் என எல்லாம் இருந்தும், கடந்த ஐந்து வருடங்களாக யாரும் அற்றவளாய் தன் குழந்தைகளே தனக்கு அனைத்தும் என வாழ்ந்து வருகிறாள் ஷிகா என்ற ஜோஷிகா தனபாண்டியன்.

லட்சுமி கார்மென்ட்ஸ் & எக்ஸ்போர்ட்ஸின் எம்.டி. தான் தனபாண்டியன். தனபாண்டியன் ராஜலட்சுமி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள், முதலில் அஸ்வின் மற்றும் ஆகாஷ் என்ற இரட்டையர். முதல் குழந்தை இரட்டை ஆண் குழந்தைகள் என்பதால் ரொம்பவே செல்லமாக செல்வ செழிப்பில் வளர்ந்தார்கள். இல்லை என்ற சொல்லே இல்லாமல் இருவருக்கும் ஆசைபட்ட அனைத்தும் வாங்கிக் கொடுத்தனர். இந்த செல்வ நிலையே பின் நாளில் தங்கள் செல்ல மகளின் வாழ்வை கேள்விக் குறியாக மாற்றும் என்று தெரிந்து இருந்தால், தன் மகன்களுக்கு தங்கை பாசத்தையும் சொல்லி கொடுத்தே வளர்த்து இருப்பாரோ...? அஸ்வின் ஆகாஷிற்க்கு பிறகு எட்டு வருட இடைவெளியில் பிறந்தவள் தான் ஜோஷிகா. ஷிகா பிறக்கும் போதே ராஜலட்சுமிக்கு கர்ப்பப் பையில் சில பிரச்சினைகள் இருந்து வந்தன. அதற்கும் மருத்துவம் தொடர்ந்த நிலையில், திடீரென்று ஒருநாள் அவரின் உயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்தது. தன் மகளை அனாதரவாக விட்டு சென்றவருக்கு, பின் நாளில் தன் மகளுக்கு நடக்கப் போகும் அநியாயத்தை அறியாமல் போனது விதியின் சதியோ… படைத்தவனின்றி யார் அறிவார்...?

அஸ்வின், ஆகாஷ் இருவருக்குமே தாய் தந்தை பாசம், அவர்களின் சொத்து இரண்டுமே தங்களுக்கு மட்டுமே, இதில் வேறு யாருடனும் பங்கிட்டுக் கொள்ள விருப்பம் இல்லை. அது தங்கள் தங்கையாகவே இருந்தாலுமே! ஷிகா பிறந்ததிலிருந்து இருவரும் அவளிடம் ஒதுங்கியே இருந்தனர். இதில் அவர்களின் அன்னை இறந்ததும் அஸ்வின், ஆகாஷ் வளர்ந்த பிள்ளைகள் என்பதால் பால்மனம் மாறா சின்னஞ்சிறு பூவான ஜோஷிகாவை கவனிப்பதிலே தனபாண்டியனின் முழு நேரமும் போனதில், தங்கள் தந்தையையும் தங்களிடம் இருந்து பிரித்துவிட்டாள் என்று அவளின் மீது இன்னுமே வெறுப்பை வளர்த்துக் கொண்டனர்.

ஆரம்பத்தில் அண்ணன்களையே சுற்றிச் சுற்றி வந்தவள், விவரம் தெரியும் வயதில் அண்ணன்களின் ஒதுக்கத்தையும் வெறுப்புப் பார்வையையும் உணர்ந்து அவர்களை விட்டுத் தானாக ஒதுங்கிக் கொண்டாள். பள்ளிப் பருவத்தில் பள்ளியின் விடுதியில் இருந்தே படிக்க ஆசைப் படுவதாக தந்தையிடம் அடம் பிடித்து, பள்ளி விடுதியில் தங்கிக் கொண்டாள். இதற்கு முதலில் மறுத்த தனபாண்டியனும், பின் தங்கள் தொழிலில் ஏற்பட்ட சில சிக்கல்களால் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும், வெளியூர், வெளிநாடு என அலைய வேண்டி இருக்கும் என்பதாலும் இதற்கு ஒத்துக் கொண்டார்.

அவளின் தந்தைக்கு அடுத்து அவளிற்கு இன்றியமையாத உறவு என்றால் அது அவளது தோழி காயத்ரி. பள்ளியில் தொடங்கிய நட்பானது அவளின் சுகம் துக்கம் என எந்த நிலையிலும் விட்டு விடாமல் இன்று வரையிலும் அன்னையாய் மடி தாங்கும் அன்புத் தோழமை. அவளவனின் புறக்கணிப்பிலும் சரி, அவளின் அண்ணன்களினால் பிரச்சனை வந்த போதும் சரி, எல்லாம் இழந்த நிலையிலும், அன்றும், இன்றும், என்றும் துணை இருப்பேன் என சொல்லில் அல்லாமல் செயலால் நிருபித்த ஆழமான அன்பு கொண்ட நட்பு. பழைய நிகழ்வுகளில் முழ்கி இருந்தவளின் காதுகளில், அதிகாலை 5 மணி என அலாரத்தின் ஓசை விழ அந்த நாளின் விடியலை நோக்கி அவளின் பயணம் துவங்கியது. இன்று மாலை தனது வாழ்க்கைப் பயணம் மாறப்போவதை அறியாமல்.....

உருகும்..........
( கருத்து திரி :

பாப்புகுட்டியின் "என்னை உருக்கும் உயிரே" - கருத்து திரி )
 
Last edited:

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைஸ் குடு ஈவ்னிங் 😁😁.
எபி நாளைக்கு ஈவ்னிங் தான் இப்போ நான்கு வரிகளில் ஒரு சின்ன டி படிச்சு என்ஜாய் காரே மக்காஸ் 😜😜மீ எஸ்கேப் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

20200722_190548.jpg

நீங்க என்ன எனக்கு மட்டும் மா புருஷனா இருக்கிங்க ஊருக்கே புருஷனா இருக்கிங்கனு சொல்லி சொல்லியே ஏகத்துக்கும் என் பிபி ஏத்துறா என பாவமான முகத்துடன் கூறி திரும்பி ரகுவை பார்க்க அவனோ இவனின் பாவனையில் கல கலவென சிரித்துக் கொண்டிருந்தான் .
நீண்ட காலத்திற்கு பின்பு நண்பனின் மனம்விட்டு சிரிக்கும் சிரிப்பை பார்த்து மனதில் மகிழ்ந்தாலும் வெளியே ஒன்றும் கட்டிக் கொள்ளாமல், "அடேய் நான் இங்க துக்கப்பட்ட துயரப்பட்ட என் சோக கதையைச் சொல்லிட்டு இருக்கேன், நீ என்னடானா நக்கல் பண்ணி சிரிச்சிட்டு இருக்க " ,இதுக்கெல்லாம் காரணம் அந்த கிழவி தான்டா....................
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ei7NQR499353.jpg

உயிர் - 2

முதல் நாள் காலை "JR Fashion" கோயமுத்தூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஐந்து தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான ஆடை உலகம் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து விதமான ஆடையகங்களும் கிடைக்கும் இடம். தரைத்தளம் முழுவதும் பெண்களுக்கான அனைத்து வகை சேலைகளை கொண்டது.

முதல் தளம் பட்டுகளுக்கானது, இரண்டாம் தளம் சிறுவர்களுக்கானது, மூன்றாவது தளம் பெண்களுக்கான மேற்கத்திய உடைகளும், அத்தியாவசியப் பொருட்களுக்குமானது , நான்காவது தளம் ஆடவர்களுக்கும் , ஐந்தாவது தளம் முழுவதும் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களுடன் கூடிய விளையாட்டகம் & உணவகமும் கொண்ட கடை. கடை என்று சொல்வதை விட கடல் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். "JR FASHION"னின் சிறப்பு சிறுவர்,சிறுமியர்களுக்கும், இளம்வயதினர்களுக்கும் (பெண்களுக்கு மட்டும்) பிடிக்கும் விதத்தில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உடலை உருத்தாத மென்மையான துணி வகைகளை கொண்டு தங்களே வடிவமைத்து கொடுப்பதே ஆகும்.

அதற்கென்று தனி கட்டிடமும் 1000பேர் கொண்ட ஒரு குழுவும் இயங்கி வருகிறது. ஆரம்பித்த இந்த ஐந்து ஆண்டுகளில் மேலும் நான்கு கிளைகளுடன் வெற்றிகரமாக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது.

JR ன் மெயின் பிரான்ஞ் எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாலும் அன்று காலையிலிருந்தே கூடுதல் பரபரப்பாகவும் சுறுசுறுப்புடனும் காணப்பட்டது ,அதற்கு காரணம் தங்கள் முதலாளி தொழில் சம்பந்தமாக சிங்கப்பூர் சென்று மூன்று வாரங்களுக்கு பின் இன்றுதான் இந்தியா வருகிறார்.

கோவை விமான நிலையம் , செக்கிங் முடிந்து பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர், அதில் தன்னுடைய MDயும் நண்பனுமான ரகுவின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான் ரகுவின் பி ஏ .
தூரத்தில் வரும்போதே ரகுவை பார்த்துவிட்டவன், அவன் அருகில் வந்ததும்

"ஹாய் டா மச்சான் வாழ்த்துகள் டா" என்று பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து சொல்ல,

ரகுவோ "ஹாய் டா புருஷ் எப்படி இருக்க? அன்ட் தோங்ஸ் டா" என அவனை கட்டி பிடித்து நலம் விசாரிக்க, ரகுவின் "புருஷ்" எனும் விளிப்பில் கடுப்பானவன்..

"டேய் ஏன்டா வந்ததும் அலப்பறையை கூட்ற, உனக்கு எத்தனை முறை சொல்றது புருஷ்.. புருஷ்னு கூப்பிடாத நரேன்னு கூப்பிடுன்னு சொன்னேன்.. பாரு… வரவன் போறவனெல்லாம் ஒரு மாதிரி பாத்துகிட்டே போறாங்க” ,என அழாத குறையாக கெஞ்ச..

"ஹா ஹா விடுடா விடுடா இதெல்லாம் நமக்கு என்ன புதுசா எப்பவும் நடக்குறது தானே புருஷ்” என நமட்டு சிரிப்புடன் கூறவும் ,அதில் இன்னும் கண்டானவன் "

“அடேய்… அது என் கல்யாணத்துக்கு முன்னனாக் கூட பரவாயில்ல என் தலையெழுத்து நீ என் பிரண்டுனு மனச தேத்திக்கிட்டேன் ஆனா எங்க கல்யாணத்தன்னைக்கு மாலினி முன்னாடியே புருஷ்… புருஷ்னு கூப்பிட்டு என்னோட மொத்த இமேஜையும் டேமேஜ் பண்ணிப்புட்ட அதுல இருந்து அவ என்னடானா… ‘நெதமும் நீங்க என்ன எனக்கு மட்டும் மா புருஷனா இருக்கிங்க ஊருக்கே புருஷனா இருக்கிங்கனு சொல்லி சொல்லியே ஏகத்துக்கும் என் பிபி ஏத்துறா..’ என பாவமான முகத்துடன் கூறி திரும்பி ரகுவை பார்க்க அவனோ இவனின் பாவனையில் கல கலவென சிரித்துக் கொண்டிருந்தான் .

நீண்ட காலத்திற்கு பின்பு நண்பன் மனம்விட்டு சிரிக்கும் சிரிப்பை பார்த்து மனதில் மகிழ்ந்தாலும் வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்,.

"அடேய் நான் இங்க துக்கப்பட்டு துயரப்பட்டு என் சோக கதையைச் சொல்லிட்டு இருக்கேன், நீ என்னடானா நக்கல் பண்ணி சிரிச்சிட்டு இருக்க…
இதுக்கெல்லாம் காரணம் அந்த கிழவி தான்டா அத போட்டு தள்ளினா சரியாக போகும்” என காண்டுடன் கூறினான்.

ஹா ஹா ஹா ஹா ஹா…

"எதே இதுக்கு இப்போ கோவப்பட்டு நீ அப்பத்தாவ போட்டுத்தள்ள போற… ஹா ஹா ஆனாலும் உனக்கு காமெடி சென்ஸ் அதிகம் தான்டா,… சும்மா காமெடி பண்ணாமா வண்டி எடுடா கிளம்பலாம் , அப்போதான் மெயின் பிரான்ஞ்க்கும் குடோனுக்கும் போயிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போகமுடியும்.
பிளைட்ல வந்தது கொஞ்சம் டையர்டா இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும் , நைட் வேற காஞ்சிபுரம் கிளம்பனும்னு அம்மா சொன்னாங்க வைஷூக்காக ஏதோ பூஜை ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம்.. அதனால தான் இரண்டு நாட்களுக்கு முன்னாடியே வேலையெல்லாம் முடிச்சிட்டு கிளம்பினேன். ஆமா… நீயும் மாலினியையும் பூக்குட்டியையும் (பூமா) கூட்டிட்டு வரதானே?! லாஸ்ட் மினிட்ல அது இதுனு ஏதாவது காரணம் சொன்ன மகனே அவ்வளவு தான்".

"டேய் டேய் போதும் போதும் நிறுத்து.., என்னை பதில் சொல்ல விடாமல் நீ பாட்டுக்கு பேசிகிட்டே போன எப்படி..?, அம்மா பூஜை பத்தி முன்னாடியே சொல்லிட்டாங்க என்று கூறியவன் மனதிற்குள்ளோ , “பூஜை இவனுக்காகதானு.. அங்க போற வரை அம்மா இவன் கிட்ட சொல்ல கூடாதுனு மிரட்டி வச்சிருக்காங்க, இவன் கிட்ட சொல்லைனா வச்சி வச்சி செய்வான், அவ்வ்வ்வ்…. ஆண்டவா என்னை எப்படியாவது இந்த குடும்பத்துக்கிட்ட இருந்து காப்பாற்றி விடுப்பா இவனுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உன் கோவில்ல என்மடியில வைத்து மொட்டை போட்டு காது குத்துறேன்..” என அவசர அவசரமாக வேண்டுதல் வைக்க..

(கடவுளோ அப்படியே ஆகட்டும் பக்தா..!, ஆனா அதுக்கு முன் நாளைக்கு அங்க வெடிக்க போகும் வெங்காய வெடில நீ மயங்காமல் இருக்க பார்' என கூறியது பாவம் அவனுக்கு கேட்காமலே போனது ஹாஹாஹா..)

“வீட்ல வேற யாரும் வரலை நாங்க மட்டும் தான் வரோம்… டைம்க்கு வந்திடுவோம் டா மச்சான்” என்க,

ரகு " அப்போ ஒகே".

சிறு அளவில் கார் பழுதுபார்க்கும் நிறுவனம் வைத்து நடத்திக் கொண்டிருந்தவர் முரளிகிருஷ்ணன். தாய் தந்தை இழந்தவர். இருப்பதற்கு வீடு , சிறு அளவில் வருமானம் என வாழ்ந்து வந்தவரின் மனதில் மெல்லிசையாய் நுழைந்தவர் தான் ஜெயலட்சுமி. முரளியின் ஒன்று விட்ட மாமன் ராஜதுரையின் மகள், தாய் தந்தை இழப்பிற்குப் பின் எல்லாமுமாக இருந்தவர் தனது மகள் முரளியின் மீது விருப்பமாக இருப்பதை தன் மகன் ஜெயராமன் மூலம் அறிந்து இருவருக்கும் திருமண செய்து வைத்தார்.

லட்சுமி அவரின் வாழ்வில் வந்த பின் எல்லாம் வசந்தமே,சிறு அளவில் நடத்தி வந்த கடையை தன் அயராத உழைப்பால் "லட்சுமி கார் கேரேஜ்" ஆக உயர்த்தி கோவையில் பல கிளைகளுடன் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றது .

முரளிக்கு தொழிலில் பக்க பலமாக இருந்தது லட்சுமியின் தம்பி ஜெயராமனே, லட்சுமியின் தந்தை ராஜதுரையின் மறைவுக்குப் பின் ஜெயராமனை தங்களுடனே அழைத்து வந்துவிட்டனர் லட்சுமி, முரளி தம்பதியினர். ஜெயராமனின் படிப்பு முடிந்தவுடன் முரளி தன் தொழில் இணைத்து கொண்டார். முரளியின் வளர்ச்சியில் இவரின் பங்கும் உள்ளது.
திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது லட்சுமியிடம் தான் ஒரு அனாதை பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்றிட ,முதலில் வேண்டாம் என்று மறுத்தவர், பின் தம்பியின் உறுதியில் சகுந்தலா என்ற அனாதை பெண்ணை திருமணம் முடித்திட, அவர்களுக்கு மைதிலி, இந்தர் என இரு குழந்தைகள்.

முரளி ,லட்சுமி தம்பதியருக்கு இரண்டு மக்கள், முத்தவன் ரவிராமகிருஷ்ணா ,அப்பாவின் துணையுடன் "லட்சுமி கார் ஷோரூம்" தொடங்கி அது வெற்றிகரமாக செயல்பட அதன் மற்றொரு கிளை தொடங்கும் வேலையில் பிசியாக இருப்பவன். இவனின் மனைவி மைதிலி, தன் மாமன் மகளையே விரும்பி பெரியவர்களின் ஆசியுடன் மணந்து கொண்டான். இவர்களின் மகன் ஏழு வயது கிஷோர்.

இரண்டாம் புதல்வன் தான் ரகு , ஆறடி உயரம், சிவந்த நிறம், அலையலையான கேசம், கூரான நாசி, பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் கண்கள் , கடந்த ஐந்து ஆண்டுகளாக சிரிப்பை மறந்த உதடுகள் என இருப்பவன் நம் கதையின் நாயகன்.
திருமணம் ??????.

அடுத்து கடைக்குட்டி சைந்தவி கிருஷ்ணா பேஷன் டிசைனிங் கடைசி வருடம் படித்து கொண்டிருக்கிறாள். அனைவருக்கும் செல்லம், அதனால் குறும்பும் சேட்டையும் கொஞ்சம் அதிகம் தான் . படிப்பு முடிந்தவுடன் திருமணம் என வீட்டில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்க, இவளோ படிப்பு முடித்ததும் தன் சின்ன அண்ணனின் 'JR FASHION'ல் ஒரு வருடம் வேலை செய்ததும் தான் திருமணம்செய்து கொள்வேன் என்று சொல்லிவிட, முரளியும் மகளின் ஆசைக்கு சரி என்றுவிட்டார் . இவளுக்கு வாக்கபட காத்திருக்கும் அந்த அப்பாவி ஜீவன் வேறுயாரும் இல்லை லட்சுமியின் தம்பி மகன் இந்தரே தான்.

(மை மைண்ட் வாய்ஸ் : ஹப்பா ஒரு வழியா ஹீரோ குடும்பத்த ஓரளவிற்கு அறிமுகம் படித்தியாச்சு ,அதுல என் எனர்ஜி குறைஞ்சி போச்சி அதனால யார்னா எனக்கு பிரியாணி பார்சல் பண்ணி அனுப்புங்கப்பா…! ஹிஹிஹிஹிஹிஹி)


இங்கு கடைக்கு வந்த ரகுவும் நரேனும் பன்னிரெண்டு மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மற்ற வேலைகளை மேனேஜரிடம் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு நரேனுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.


உருகும்........


கருத்து திரி 👇

 
Status
Not open for further replies.
Top