All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரியாத வரம் வேண்டும் 1

AnuJey

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மார்கழி மாதம் என்பதனால் அந்தக் குளிரில் தாமதமாகவே எழுந்தாள் பிரியா என்னும் பிரியதர்ஷிணி. காலையில் எழுந்தவள் தன்னுடைய வேலைகள் எல்லாவற்றையும் ஆரம்பித்தாள் முதலில் பண்டு விற்கு பள்ளி செல்ல தேவையான உடை அப்புறம் தான் அலுவலகம் செல்வதற்கு தேவையான உடை பின் மதியம் எடுத்துச் செல்ல லஞ்ச் மற்றும் காலை சிற்றுண்டி அனைத்தையும் செய்து முடிக்க மணி 7.30 ஆனது.

தான் குளித்து விட்டு வந்தவுடன் பண்டு வையும் எழுப்பினாள். "பண்டு எழுந்திரு குட்டி பள்ளி செல்ல டைம் ஆச்சு" என்றாள். மம்மி ப்ளீஸ் எனக்கு தூக்கம் வருது நாளைக்கு போகலாம் பள்ளிக்கு" என்று கண்ணை விளிக்காமல் மறுபடியும் தூங்கினான்.அவனை எழுப்பி கிளப்புவதற்குள் பிரியா விற்கு ஆபிஸ் கிளம்பும் நேரமே வந்துவிட்டது. பண்டு என்பது ஆர்யா வின் செல்லப் பெயர்.ஆர்யாவிற்கு தற்போது ஐந்து வயது ஆகிறது. 26 வயதான பிரியா தன் தந்தை மற்றும் தாயுடன் கோயம்புத்தூரில் வசிக்கிறாள். தற்போது பிரியா வுடைய பெற்றோர் தங்கள் சொந்த ஊரில் நிலத்தை விற்பதற்காக அம்பாசமுத்திரம் போயிருந்தனர்.

ஒருவழியாக தன் இருசக்கர வாகனத்தில் ஆர்யாவை அவன் பள்ளியில் விட்டுச் சென்று அவளும் தன் பணிக்குச் சென்றாள். பிரியா ஒரு ப்ரைவேட் வங்கியில் கிளார்க் காக பணிபுரிகிறார். அவள் வேலை பார்க்கும் வங்கி இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. மாதம் கணிசமாக சம்பளம் வாங்கும் பிரியா தன் குடும்பத்தை நன்கு கவனித்தாள்.

தன்னுடைய பிண்ணணி யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காகவே குழந்தை உண்டானவுடன் தான் இருபத்தி மூன்று வருடங்களாக வாழ்ந்த சென்னையை விட்டு கோயம்புத்தூரில் குடிபெயர்ந்து தான் இதற்கு முன் பணிபுரிந்த வங்கியில் வேலையை விட்டு இங்கு வேறு வங்கியில் பணிபுரிய ஆரம்பித்தாள்.

யாராவது ஆர்யாவின் தந்தை பற்றிக் கேட்டால் வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்று கூறுவாள் ஆர்யாவிற்கே இதான் பதில். இந்த ரகசியம் அவளுக்கும் அவள் பெற்றோர்க்கும் மட்டும் தெரிந்த ஒன்றாகும்.


எப்போதும் போல் தன் வேலையை முடித்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்தாள் பிரியா தயரில் காத்து இல்லாததால் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு காத்து அடைக்க சென்றாள். அங்கு நிறைய கார்கள் பெட்ரோல் அடைப்பதற்கு நின்றதால் தன் வாகனத்தை மெதுவாக தள்ளி மறுபுறம் இருக்கும் இடத்தில் காட்டடிக்க சென்றாள்.

அங்கு ஒரு காரில் இருந்த வயதான பெண்மணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது அக்காரின் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் வெளியே இறங்கி உதவிக் கேட்டார் அதைக் கவனித்த பிரியா "அண்ணா கார் எடுங்க பக்கத்துல மருத்துவமனை இருக்கு போலாம்" என்று தன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு பெட்ரோல் பங்கின் உரிமையாளரிடம் தான் இங்கு வண்டியை நிறுத்திக் கொண்டு செல்வதாகவும் பிறகு வந்து எடுத்துச் செல்வதாகவும் கூறினாள்.

பின் காரில் ஏறிக்கொண்டு டிரைவரிடம் மருத்துவமனை செல்லும் வழி சொல்லிக்கொண்டிருந்தாள். "அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதீங்க இங்க பக்கத்துல தான் மருத்துவமனை இருக்கு உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று கூறிவிட்டு டிரைவரிடம் திரும்பினாள். அண்ணா உங்களுக்கு வலப்புறத்துல இருக்கு பாருங்க அந்த மருத்துவமனையில் நிறுத்துங்க என்றாள் கோயம்புத்தூரிலியே இருக்கும் மிகப் பெரிய மருத்துவமனையில் ஒன்றாகும். அங்கு அட்மிஷன் போட்டு அந்த வயதான பெண்மணிக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.

"ரொம்ப நன்றி அம்மா நீ நல்லாயிருப்ப" என்றார். ஒரு புன்முறுவலுடன் இவங்க வீட்ல சொல்லிட்டீங்களா என்று டிரைவரிடம் கேட்டாள். ஆமாம்மா சின்னம்மா வந்துட்டு இருக்காங்க என்று கூறினார்.

"முத்தய்யா அம்மாக்கு என்ன ஆச்சு" என்று அலறியடித்து கொண்டு வந்தாள் ஒரு பெண். "மஞ்சும்மா அம்மா நல்லா தான் இருந்தாங்க பெங்களூரில் இருந்து வரும் போது என்கிட்ட நல்லா பேசிட்டு தான் வந்தாங்க ஆனா இங்க திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது அப்போ இந்த அம்மா தான் தெய்வம் மாதிரி வந்து காப்பாற்றினாங்க" என்றார். மஞ்சளா பிரியாவை அலசினாள் பார்க்க மாநிறத்தில் இருக்கும் பிரியா விற்கு லட்சனமான முகம் கட்டுக்கோப்பான உடல் நிமிர்ந்த நேர்மையான பார்வை இருந்தது. பெண்களின் உயரத்திற்கு சற்று உயரமாகவெ இருக்கும் பிரியா மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்புவாள்.

" நீங்க யாரு. முத்தய்யா சொன்னாரு நீங்க சரியான நேரத்துல உதவி செஞ்சிருக்க நால தான் நேரத்துல மருத்துவமனை வர முடிஞ்சுதுனு ரொம்ப நன்றிங்க" என்றாள்.

அப்போது எமெர்ஜென்சி வார்டில் இருந்து டாக்டர் வெளியே வந்தார் "பேசன்ட் இப்போ நார்மல் ஆகிட்டாங்க அவங்களுக்கு பிரஷர் அதிகம் ஆகிறிச்சு இப்போ கன்ட்ரோல் ஆகிடுச்சு ஒரு இரண்டு நாள் அப்சர்வேஷன்ல பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம் என்றார்.

"சேரி ங்க ரொம்ப நிம்மதி உங்க அம்மாவ நல்லா பார்த்துக்குங்க நான் கிளம்பறேன் நைட் ஆகிடுச்சு வீட்ல தேடுவாங்க" என்றாள். உங்க பெயர் என்ன என்று மஞ்சு கேட்டாள். என்னோட பெயர் பிரியதர்ஷிணி என்றாள். பிரியா அம்மா உங்கல பார்த்தா ரொம்ப சந்தோஷம் படுவாங்க நீங்க முடிஞ்சா நாளைக்கு வாங்களேன் என்றாள். ஒரு மெல்லிய புன்னகை யோடு சேரி ங்க என்று கிளம்பினாள்.


தன்னுடைய வீட்டை அடைய பிரியா விற்கு ஒன்பது மணி ஆனது. "ஏய் பிரியா ஏன் இவ்வளவு நேரம் கால் பண்ணி லேட் ஆகும்னு சொன்ன அப்புறம் உடனே கட் பண்ணிட்ட" என்று தன் அன்னை சரஸ்வதி கேட்டாள். சாரி அம்மி நான் அப்போ மருத்துவமனைல இருந்த அதான் செரியா பேச முடியல நான் ஆபிஸ்ல இருந்து வர வழியில் ஒரு வயசான அம்மாக்கு மூச்சுத்திணறல் வந்திருச்சு மா அவங்கள மருத்துவமனைல செர்த்து அவங்க பொண்ணு வரதுக்கு டைம் ஆகிடுச்சு இப்போ நல்லா இருக்காங்க நாளைக்கு ஆபிஸ் முடிஞ்ச அப்பறம் ஒரு தடவை பாத்துட்டு வரனும். ஆர்யா தூங்கிட்டானா? அப்பா என்ன பண்றாங்க" என்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தன் தந்தை சோமசுந்தரத்தை பார்க்கச் சென்றாள் அவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்ததால் ஒரு பெருமூச்சு விட்டு தானும் படுக்கச் சென்றாள்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் கிளம்பி பண்டு வையும் கிளப்பி பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய வேலைக்குச் சென்றாள். மாலை மருத்துவமனை சென்றவள் அந்த வயதான அம்மாவைக் காண அவள் இருந்த அறைக்குச் சென்றாள். அங்கு அவள் தன் மகள் மஞ்சுவுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். "அம்மா நல்லா இருக்கீங்களா உங்க பொண்ணு தான் ரொம்ப கவலைப்பட்டாங்க" என்று கூறினாள். "வாம்மா நீ தான் என்ன காப்பாத்துனனு என் பொண்ணு சொன்னா ரொம்ப நன்றி அம்மா இங்க என் பொண்ணோட வீடு இருக்கு எனக்கு பெங்களூர் மா என் மகன் கூட இருக்கேன் என் பையன் மொபைல் கம்பெனி ஓனர்மா" என்று சொல்லிக் கொண்டிருந்தார்."ஓ சரிம்மா நீங்க உடம்ப பார்த்துக்கோங்க நல்லா சாப்பிடுங்க" என்றார்." இந்தாம்மா இதான் என்னோட முகவரி இதுல என்னோட போன் நம்பர்லாம் இருக்கு உனக்கு எதாவது உதவி வேணும்னா கேளுமா" என்றார். ரொம்ப நன்றி அம்மா நான் கிளம்புறேன் என்று அதை வாங்கிச் சென்றாள்.

ஒரு மாதம் கழிந்தது பிரியா வின் அம்மாவிற்கு மஞ்சக்காமாலை வந்தது அதனால் அவளின் அம்மா மிகவும் சோர்வடைந்தார். ஆர்யா விற்கு ஐந்து வயதில் சேட்டை அதிகம் அதனால் அவர்களால் அவனை சமாளிக்கமுடியவில்லை அவளின் தந்தைக்கு குழந்தைகளை சமாளிக்க தெரியாததால் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு நாள் பிரியா வேலையை விட்டு வரும்போது தன் தன்னை சரஸ்வதி உறங்கிக்கொண்டிருந்தாள் தந்தை சோமசுந்தரம் சமைத்துக் கொண்டிருந்தார் அப்போது பண்டு தனியாக பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் தேழ் ஒன்று ஆர்யாவின் அருகில் சென்று க் கொண்டிருந்ததைப் பார்த்த பிரியா துடிதுடித்துப் போனாள் ஓடிப்போய் ஆர்யாவை தூக்கியவள் தன் செருப்பை வைத்து தேழை வெளியே தள்ளிவிட்டாள்.
அப்போது தான் வேலையை விட வேண்டும் என்று முடிவு செய்தாள். சோமசுந்தரம் ஒரு பிரைவேட் கம்பெனியில் தான் வேலைப் பார்த்து தன்னுடைய மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அவருக்கு பென்ஷன் என்று எதுவும் இல்லை செட்டில்மென்ட் மற்றும் இடத்தை விற்று வந்த பணத்தை சேமிப்பு திட்டத்தில் போட்டு அதனுடைய வட்டியை மாதா மாதம் பெற்றுக்கொண்டு இருந்தார். பிரியா வின் வருமானம் கணிசமாக இருந்ததால் அவர்கள் சந்தோஷமாகவே இருந்தனர். இப்போது பிரியா வேலையை விட்டால் பணத்தட்டுப்பாடு ஏற்படும் இதனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று நியாபகம் வந்தது அந்த வயதான பெண்மணி சொன்ன வார்த்தை. அவர் குடுத்த கார்டை எடுத்துப் பார்த்தாள். அதில் சகுந்தலா என்று பெயர் மொபைல் எண் குறிப்பிட்டு இருந்தது மற்றும் அதில் முகவரியும் இருந்தது.

சகுந்தலா அம்மா விற்கு கால் செய்த பிரியா "அம்மா நான் பிரியா பேசறேன் கோயம்புத்தூரில் இருந்து கால் பண்றேன் அன்னிக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்ல" என்று தயக்கமாக கூறினாள்.

"ஆ.. பிரியா சொல்லுமா நல்லா இருக்கியா வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க" என்று கேட்டார். "அது வந்துமா அம்மாக்கு ரொம்ப உடம்பு முடியல மஞ்சக்காமாலை வந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க அதனால ஆர்யாவை என் பையனைப் பார்க்க என்னோட வேலையை விட்டுட்டேன். இப்போ அப்பா க்கு பென்ஷன் னு எதுவும் இல்லை மாசம் மாசம் எஃப்டி இல இருந்து பதினைந்து ஆயிரம் கிட்ட வரும் அது அவங்க வாழ்றதுக்கே சரியா இருக்கும்மா. இப்போ எனக்கு ஒரு வேலை கிடைச்சா நல்லா இருக்கும்மா அதுவும் வீட்ல இருந்தே எதாவது வேலை இருந்தா நல்லது ஆர்யாக்கு ஐந்து வயசு ஆகுது அவனை என் கண் பார்வையிலேயே வெச்சிட்டா நிம்மதியா இருக்கும் என்றாள்.
 
Top