All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புதிய கதைகளுக்கான முன்னோட்டங்கள்💖💖💖

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,

இங்கு புதிய கதைகளுக்கான முன்னோட்டங்கள் பதிய பதும் பேபீஸ்..

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்

உங்கள்

அருணா
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை: மறுஜென்மம் வேண்டுமோ..!!

முன்னோட்டம் 1:

"ம்ம் பெரிதா ஒன்றும் இல்லை.. சிம்பிள் விஷயம் தான்.. அன்று ஒரு முத்த காட்சி நடிக்க மாட்டேன் என்று கலாட்டா செய்தாய் இல்லையா.. அதை இப்போது நடிக்க வேண்டும்.. எந்த கலாட்டாவும் இல்லாமல்.. அழகாக.."

ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக தர்ஷன் கூற, மாயாவோ அதிர்ந்து விழித்தாள்..

"நோ.." என்று அவள் வாய் மெதுவாக முணுமுணுக்க ஒரு பக்க மூளையோ அவன் எண்ணத்தை நினைத்து வெகுவாய் பயந்திருந்தது..

கடைசியில் இதற்காக தான் தன் தம்பியை கடத்தினானா..???

ஐயோ இது எத்தனை அசிங்கம்.. தன்னை இந்த மாதிரி பிளாக்மைல் செய்யவா தம்பியை கடத்தினான்..

இன்னும் கூட மூளை உணர்ந்த விஷயத்தை அவள் மனம் ஏற்று கொள்ளாமல் தவித்தது..

"என்ன பேசறீங்க ராம்.. கேவலம் இதற்காகவா குழந்தையை கடத்தினீங்க.. எ.. என்னை பணிய வைக்கவா..." திக்கி திணறி மாயா ஒருவழியாக மூளை உணர்ந்த செய்தியை அவனிடம் கேட்க, அதில் ஒரு நொடி விறைத்தவன் பின் உணர்வுகள் தொலைத்த குரலில்

"ஆம்.." என்றான்

"ஆனால் ஏன் ராம்... என்னை இ... இப்படி எல்லாம் நடிக்க வைத்து உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது.. எனக்கு சத்தியமா புரியலை.."

இன்னும் கொஞ்சமும் குழப்பமும் பரிதவிப்பும் நீங்காமல் மாயா பேச,

"உனக்கு புரிவதை பற்றி எனக்கு கவலை இல்லை மாயா.. நான் சொல்வது எதுவானாலும் நீ செய்ய வேண்டும்.. இப்போதைக்கு அது மட்டும் தான் உன் வேலை.."

மீண்டும் அவனிடம் இருந்து அதே உணர்வு துடைத்த குரல்..

ஆனால் மாயாவால் தான் என்ன முயன்றும் அவன் செயலை ஜீரணிக்க முடியவில்லை..

"ஐயோ நீ புரிஞ்சு தான் பேசறயா.. இதில் என் பெயர் வெளியில் தவறாக பரவும்.. என் அப்பா மிகவும் கெளரவம் பார்ப்பவர்.. இதனால் அவர் கௌரவத்திற்கு பாதிப்பு வந்தால் என்னை மேலும் நடிக்கவே விட மாட்டார்.. பிறகு உன் திட்டம் எதுவா இருந்தாலும் நடக்காது டா முட்டாள்.."

குழப்பத்துடன் ஆரம்பித்தவள் கண் முன் தோன்றிய விளைவுகளில் கோபத்துடன் முடிக்க, அவள் பேசிய பேச்சில் தர்ஷனும் கோபத்தின் எல்லையை கடந்திருந்தான்..

"மாயா..." என்று கர்ஜனையாக அவனிடமிருந்து வந்த குரலில் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள், இப்போது தான் அவன் முகத்தை நேராக பார்த்தவள்..

அதில் இருந்த ரௌத்ரத்தில் ஒரு நொடி உள்ளுக்குள் நடுங்கி விட்டாள் மாயா..

கழுத்து நரம்புகள் எல்லாம் புடைக்க, கண்கள் முழுதாய் சிவந்திருக்க கோபத்தை கட்டுப்படுத்த கைகளை இறுக மூடி கொண்டு நின்றிருந்தவனை பார்க்கவே அவளுக்கு குலை நடுங்கியது..

"என்ன சொன்ன...? உங்க அப்பா கெளரவம் பாதிக்குமா..? பாதிக்கட்டும் டி.. நல்லா பாதிக்கட்டும்.. அந்த ஆள் சுத்தி சுத்தி உன்னால் அவமானப்பட்டு நடுத்தெருவில் நிக்கணும்.. அதே நேரத்தில் அவனால் உன்னை அடக்க முடியாது.. அதை நான் பார்த்துப்பேன்.. நீ நான் சொல்வதை மட்டும் செய்.." மாயாவின் முகத்திற்கு வெகு அருகில் சென்று கோபம் கொஞ்சமும் குறையாமல் தர்ஷன் பேச, மாயாவிற்கோ முதலில் உடல் நடுக்கத்தை குறைப்பதே பெரும் பாடாய் இருந்தது..



படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய மகளிர் தின வாழ்த்துகள் பேபீஸ்..💐💐💐💐

இன்றைய ஸ்பெஷல் டி.. இந்த கதையும் அனேகமாக நேரடி புக்கா வரும் பேபீஸ்..

************************

கதை: காற்றாகி போவாயோ காதலே!!

தன்னை நோக்கி வந்த மஞ்சரியின் முகத்தில் அவன் கண்கள் அழுத்தத்துடன் படிந்திருந்தது..

அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமலோ என்னவோ வேறு பக்கம் பார்த்து வைத்தாள் மஞ்சரி..

"உன் அம்மாவிடம் பேசிவிட்டேன் மஞ்சரி.. உன் தயக்கத்திற்கான காரணம் சொன்னாங்க.. என்னை பொறுத்தவரை நான் அவங்களை பாராட்ட தான் செய்வேன்.. ஆனால் என் வீட்டில் யாருக்கும் சொல்லப்போவதில்லை.. என்னை தாண்டி யாரும் உன்னை எதற்கும் நெருங்கவும் முடியாது.. சோ இப்போ சம்மதமா.." என கேட்டவன் குரலில் ஒரு துள்ளல் இருந்ததோ..

அது அத்தனை தெளிவாய் மஞ்சரிக்கு புரியவில்லை..

ஆனால் அவளின் எல்லா தயக்கத்தையும் சுலபமாக உடைத்து, கத்தி முனையில் மறுக்கமுடியாமல் நிற்க வைத்து கொண்டு சம்மதம் கேட்கிறான் என்றே அவளுக்கு தோன்றியது..

ஆனால் அந்த எண்ணம் தோன்றிய போதே அவள் கத்தியாக நினைத்தது பூவாக மாறி போனது தான் விந்தை..

சிறு விளையாட்டு தனம் தலை தூக்க "எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வீர்களாம்..?" என மஞ்சரி தலை சாய்த்து கேட்க

அதை உள்ளுக்குள் ரசித்தவன் "திருமணம் செய்துகொண்டு என்னை உனக்கு பிடிக்க வைக்க முயற்சிப்பேன்.." என்றான் அசால்ட்டாக

அவன் பதிலில் 'ஆ' என விழித்தவள் "திருமணத்தில் எனக்கு இஷ்டம் இருக்க வேண்டாமா.." என இப்போது சீரியஸ்ஸாகவே கேட்க

"இஷ்டம் இல்லாமல் போவானேன் மஞ்சரி..!" என எதிர்கேள்வி கேட்டான் நிரஞ்சன்

"எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.. நம் கல்யாணத்தில் உன் அம்மாவிற்க்கு சம்மதம்.. உனக்கும் வேறு காதல் ஒன்றும் இல்லை.. காதல் கல்யாணமாக ஏற்க முடியாவிட்டால் பெரியவர்கள் நிச்சியித்த கல்யாணமாக ஏற்றுக்கொள்.. என்னை உன் அம்மா உனக்காக பார்த்திருந்தால் மறுப்பாயா என்ன..?"

மறுக்க முடியாத கேள்வி.. அவள் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்..

எப்படி நிரஞ்சன் இத்தனை வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கிறான் என மஞ்சரிக்கு புரிந்தது..

மறுக்க வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என யோசித்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதற்கு மேல் அவனிடம் இருந்து கண்களையே அகற்ற முடியவில்லை..

அவள் உண்மையாகவே நிமிர்ந்து தான் பார்க்கவேண்டிய உயரம்.. மாநிறத்திற்கும் சற்று கூடுதல் நிறம்.. கம்பீரமான முகம், லேசான தாடி, அடர்த்தியான மீசை, பிடிவாதமாய் இறுகி இருக்கும் முகவாய், கிள்ளி எடுக்க கூட சதை இல்லாத தேகம் என முழு ஆண் மகனாய் நிமிர்ந்து நின்றவனை என்ன சொல்லி மறுக்க கூடும்..

இது வரை மறுத்ததற்கே அவன் தன்னை முட்டாள் என ஒதுக்காமல் விட்டது ஆச்சர்யம் தான்..

"என்ன மஞ்சரி தேறி விடுவேன் தானே..!" என்ற நிரஞ்சனின் குரல் தான் அவளை கலைத்தது

அதில் தான் இத்தனை நேரம் அவனை வெளிப்படையாகவே பார்த்திருக்கிறோம் என்பது புரிய வெட்கத்துடன் வேகமாக தலை குனிந்து கொண்டாள் மஞ்சரி.

"ச்ச என்ன நினைத்திருப்பார்..! இப்படியா பார்ப்பது.." என அவள் தன்னை தானே திட்டிக்கொண்டதில் அவள் முகம் மேலும் சிவந்து போனது..


அதை சில நொடிகள் ரசித்து விட்டு அவள் நாடியை ஒற்றை விரல் கொண்டு மெதுவாக நிமிர்த்தியவன் "மஞ்சரி எந்த பிரச்னையும் இல்லை.. என் வாழ்நாள் முழுதையும் இனி உன்னுடன் தான் கழிக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.. உன்னை எந்த கஷ்டமும் இல்லாமல் பார்த்துப்பேன்.. இப்போது உனக்கு சம்மதம் தானே.. என்னை பிடித்தும் இருக்கு தானே..!" கடைசி வரிகளை அதிக அழுத்தத்துடன் நிரஞ்சன் கேட்க, அவன் வார்த்தைகளிலேயே தன் மனதை பறிகொடுத்திருந்தவள் அதற்கு மேல் அவனை சோதிக்க விரும்பாமல் சம்மதமாக தலை ஆட்டினாள்.

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மா குட்டி டி....

கதை: மறுஜென்மம் வேண்டுமோ!!

**********************

ஒருவாறு அனைவரும் கலைந்து சென்றிருக்க "கிருஷ்ணா" என்ற அவளது அழைப்பில் அவள் புறம் திரும்பினான் புதியவன்..

புன்னகையுடன் அவன் முகத்தை பார்த்தவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சர்யத்தை தத்தெடுத்து..

சில நொடிகள் அவன் முகத்தை ஆராய்ந்தவள் பின் ஆச்சர்யம் மாறாமல், "சார் நீங்க தர்ஷன் தானே.." என்று மலர்ந்த குரலில் கேட்க

"எஸ் மாயா.." என்றான் அவன் சாதாரணமாக

"உங்களுக்கு என்னை தெரியுமா சார்.."

இன்னும் ஆச்சர்யம் மாறாமல் அவளிடம் இருந்து கேள்வி வர

"இருவரும் சேர்ந்து நடிக்க போறோம்.. உங்கள் பேர் கூடவா தெரியாமல் இருப்பேன்.. ஆனால் உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று தான் தெரியவில்லை.."

ஒரு சிறு புன்னகையுடன் தர்ஷன் பேச, அதில் தானும் சிரித்தவள்

"இந்த கேள்வி நான் தான் சார் கேட்க வேண்டும்.. நான் கொஞ்சம் தாமதித்ததால் நீங்க கேட்டுடீங்க.." என்றாள் மாயாவும் சிரிப்புடன்

"ஏனோ..." ஒற்றை புருவும் உயர்த்தி தர்ஷன் கேட்க

"உங்க கையில் இருப்பது என் தம்பி சார்.." என்றாள் மாயா இப்போது புரியுமே என்ற பார்வையுடன்

அதில் அவனுக்கும் புரிந்துவிட, "ஓ அப்போ நீங்க சொன்னது சரி தான்.. நான் தான் பதில் கூற வேண்டும் இல்லையா.." என்று உடனடியாக தர்ஷன் ஒத்துக்கொள்ள அதற்குள்

"அக்கா.." என்று மாயாவிடம் தாவ வந்தான் கிருஷ்ணா..

இத்தனை நேரம் தன் அக்கா யாருடனோ பேசுவதை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தவனுக்கு, வந்து இத்தனை நேரம் ஆகியும் அக்கா தன்னை கவனிக்கவில்லை என்று இப்போது தான் உரைத்தது போல்.. அதான் அவள் கவனத்தை தன் புறம் திருப்ப விரும்பினான் குழந்தை..

அவன் குரலில் தானும் அவன் புறம் திரும்பி விட்ட மாயா அவனை கைகளில் வாங்கி அழுந்த முத்தமிட்டுவிட்டு கீழே இறக்கி விட்டாள்..

"உங்களை நான் இதற்கு முன் இங்கு பார்த்ததில்லையே சார்.." குழந்தைக்காக வாங்கி வந்திருந்த சாக்லேட்டை அவனிடம் கொடுத்துகொண்டே மாயா தர்ஷனிடம் கேட்க

அவள் கீழே குனிந்திருந்த அந்த ஒரு நிமிடத்தில் தர்ஷன் கண்களில் ஒரு கூர்மையான பளபளப்பு தோன்றி மறைந்தது..

அதை மாயா கவனிக்க முடியாமல் போனது அவள் துரதிஷ்டமே..!

மீண்டும் மாயா நிமிர்ந்த போது அவன் முகம் முன்பு போலவே புன்னகையையை சுமந்திருந்தது..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மா குட்டி டி பேபீஸ்.. கதை எப்போ வரும் எனக்கே தெரியாது பா..🤗🤗🤗🤗

******************

கதை: உயிர் தாங்குமோ..!

ஆனால் திருமணம்! இது ஏன்? ஒன்றும் புரியாமல் பயத்துடன் சாரு அவனை நிமிர்ந்து பார்க்க, முகத்தில் உறைந்துவிட்ட கண்களை எட்டாத அதே புன்னகையுடன் அவளை திரும்பி பார்த்தவன் மெதுவாக அவள் காதருகில் குனிந்தான்..

"நான் அனுபவித்ததற்கு வட்டியும் முதலுமாக திரும்பி தர வேண்டாமா? அதான்.." என்றான் அவள் மனதை படித்தது போல்.. கோபம் என்றில்லாமல் அடிக்குரலில் ஒருவித குரோதத்துடன் ஒலித்த அவன் குரலில் சாருவிற்கு இப்போதே முதுகுத்தண்டு சில்லிட்டது..

வார்த்தைகளே வராமல் அதிர்ச்சியுடன் அவள் அமர்ந்திருக்க, ஐயர் கூறிய மந்திரத்தை ஒரு பக்கம் அட்சரம் பிசகாமல் கூறி கொண்டே தான் அவளிடம் பேசி கொண்டிருந்தான் ஜெகன்..

அவள் விழித்ததில் மேலும் அவள் புறம் குனிந்தவன், "ஆமாம் உன்னை பழிவாங்க தான் திருமணம் செய்கிறேன்.. முடிந்தால் இப்போதே நிறுத்திவிட்டு ஓடிவிடு.. ஆனால் உன் தந்தைக்கு நெஞ்சுவலி வந்தால் நான் பொறுப்பில்லை.." அசால்டாக அவன் கூறி முடிக்கவும், ஐயர் அவன் முன் தாலியை எடுத்து நீட்டவும் சரியாக இருந்தது..

அதை நிதானமாக கையில் எடுத்துக்கொண்டவன் அவள் கழுத்தருகில் கொண்டு வந்து, "என்ன கட்டவா..?" என்று நக்கலாக கேட்டுவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்..

அதாவது 'உன்னிடம் பலியாக வருகிறேன்' என அவள் வாயாலேயே ஒத்துக்கொள்ள சொல்கிறான்..

இப்போது அவளால் வேறு என்ன செய்ய முடியும்.. திருமணத்தை நிறுத்திவிட்டு எழுந்தாள் தந்தைக்கு நெஞ்சி வலி வரப்போவது உறுதி.. அவர் உயிரை பலிகொடுத்து தன் வாழ்க்கையை காப்பற்றி கொள்ள அவள் தயாராக இல்லை..

அதற்குள் ஐயர் வேறு "கட்டுங்கோ தம்பி" என்று குரல் கொடுக்க, அவனோ அழுத்தமாக அவளை தான் பார்த்தான்..

அவள் சம்மதித்து தான் ஆக வேண்டும் என அவன் நினைப்பது புரிய, மனதில் ஊறி இருந்த பயத்தில் கலங்கி விட்ட கண்களுடன் அதை மற்றவர்களுக்கு காட்டாமல் தலை குனிந்து மெதுவாக தலையாட்டினாள் சாரு..

அவள் சம்மதித்ததில் எப்போதும் போல் சிரித்துக்கொண்டவன் "நரகத்தின் வாயிலுக்கு உன்னை அன்புடன் வரவேற்கிறேன் சாரு.." என ஒரு மாதிரி அடிக்குரலில் கூறி கொண்டே அவள் கழுத்தில் தாலியை கட்ட, அந்த நொடி சாருவிற்குள் பெரும் பயம் மட்டும் தான் இருந்தது..

இப்படி ஒரு வார்த்தையை கூறி உலகில் யாருமே தாலி கட்டி இருக்க மாட்டார்கள் என்று தான் சாருவிற்கு தோன்றியது..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை அனேகமா onlineil வந்து விடும் பேபீஸ்.. எப்படி இருக்கு சொல்லுங்கோ.. யாரு ஹீரோ யாரு heroine என்று நானே குழம்பி போய் தான் இருக்கேன்..😉😉😉😉

**********************

கதை: நித்தமும் நீயே கண்மணியே..!!

"கனவு போதும் ராஜன்" திடீரென தனக்கருகில் ஒலித்த வேதாந்த்தின் குரலில் அவன் திகைத்து நிமிர

"நான் குடிசையில் இருந்தாலும் இப்படி தான் இருப்பேன்.. இது பண திமிர் இல்லை.. சுய திமிர்.. எனக்கு பிடிக்கதை எதற்காகவும் செய்ய மாட்டேன்.. காட் இட்.." என வேதாந்த் நிறுத்த

'இவன் முன்பு இனி மனதில் கூட எதுவும் நினைக்க கூடாது' என முடிவெடுத்து கொண்டா ராஜன்

"எஸ் சார்" என்று ராஜன் உடனடியாக கூற

"ரொம்ப யோசிக்காதீங்க.. ரெகார்டிங்க்கு டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன்.. ஈவினிங் நீங்களும் அவார்ட் பங்க்ஷன் வரீங்க.." என்றுவிட்டு கிளம்பி விட்டான் வேதாந்த்

**********************

"என் மார்னிங் விஷ் ஸ்பெஷல் இல்லையா வைபவ்.. தனியா தான் சொல்லுவேன்.. விஷ் பண்ணினா திரும்ப விஷ் பண்ணனும்.. விதண்டாவாதம் பண்ண கூடாது.." குறும்பு சிரிப்புடன் மித்ரா கூற, என்ன முயன்று முடியாமல் சிரித்துவிட்டான் வைபவ்

அவனும் எத்தனை நேரம் தான் இல்லாத கோபத்தை காட்டுவது போல் நடிப்பது..

"அடங்கவே மாட்டியா மித்து நீ" என சிரித்துக்கொண்டே கேட்க

"அடங்கிடவா" என்றாள் அவள் தலை சாய்த்து கிண்டலாக, அதில்

"வேண்டாம் தாயே" என பதறிவிட்டான் வைபவ்..

பின்னே ஒரு முறை அவன் பட்டது பத்தாதா..

****************

நன்றாக உறங்கி கொண்டிருந்தவளை சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டே அங்கிருந்த மேசையில் கப்பை வைத்த நிதின் "குட் மார்னிங் மிஸ் சைத்ரா.. ஆபிஸ் வரும் நேரமா இது..?" என அவள் காதருகில் சத்தமாக கத்த, அதில் அடித்து பிடித்து கொண்டு எழுந்தாள் சைத்ரா..

அவள் எழுந்த வேகத்தில் அவன் சத்தமாக சிரிக்க, "அறிவுகெட்ட மாமா.. எத்தனை முறை சொல்வது இப்படி எழுப்பாதீங்கன்னு.. உங்க வீரப்பெல்லாம் ஆபிசில் வச்சுக்கோங்க.. வீட்டில் புருஷனா லட்சணமா வேலையை பாருங்க.." என்று அவனை முறைத்து கொண்டே கூற

"அதுக்கு முதலில் ஆபிஸ் போக கூடிய நேரத்திற்கு எழுந்துக்கனும் சைத்து மா.. எழுந்து ஓடு.. ப்ரெஷ் ஆகிட்டு வா.." என அவன் விரட்ட,


"கொஞ்சம் லேட்டா போனா தான் என்னவாம்.." என புலம்பிக்கொண்டே எழுந்தாள் சைத்ரா

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புது கதை teaser:

கதை: நித்தமும் நீயே கண்மனியே..!!!

**********************

"போதும்.. போதும் வைபவ்.. நான் திட்ட நினைத்தாலும் விட மாட்டீங்க போலையே.. மன்னிச்சுட்டேன் விடுங்க.. ஆமா என்னை கழட்டிவிடும் அளவு அப்படி என்ன வேலை..?" விளையாட்டாகவே மித்ரா கேட்க

இங்கு வைபவ் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் பேசினான்..

"அண்ணா ரெஜிஸ்டரேஷனுக்கு கூப்பிடறார் மித்து மா.. அவருக்கு ப்ரீ டைம் கிடைப்பதே பெரிது.. அதான் அவர் கூப்பிடும் போது போயிட்டு வந்துடலாம்னு பாக்கறேன்.." சாதரணமாக வைபவ் கூற கூற இங்கு மித்ராவின் முகம் முகம் கொஞ்சம கொஞ்சமாக இறுகியது

அதை நேரில் வைபவ் பார்க்க முடியாமல் போனது அவன் துரதிஷ்டமே!

"ஏன் உங்க அண்ணா பிஸி என்றால் நீங்க வெட்டியா இருக்கீங்களா? என்னுடன் இருக்கும் நேரத்தை தியாகம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா?" சட்டென்று மூண்ட கோபத்துடன் மித்ரா கேட்டுவிட, வைபவ்வின் முகம் ஒன்றும் புரியாமல் சுருங்கி போயிற்று

"என் அண்ணன் கூப்பிடறார் மித்து.. அதை விட எனக்கு எதுவுமே பெரிதில்லை.. அவர் கூப்பிடுவது மிக மிக முக்கியம் தான்.." அழுத்தம் திருத்தமாக வைபவ்விடம் இருந்து வந்த பதிலில் தான், தான் அவசரபட்டு உளறிவிட்டோம் என்றே மித்ராவிற்கு புரிந்தது.

என்னதான் அவசரப்பட்டு வந்துவிட்ட கோபம் என்றாலும் மித்ராவாள் உடனடியாக அதை கட்டுப்படுத்த முடியவில்லை

சில ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து அவள் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள போராட, வைபவ்வே தொடர்ந்து பேசினான்..

அவளுக்கு முன் அவன் தன்னை நிலைப்படுத்தி இருந்தான்..

"கவனி மித்ரா.. என் வீட்டில் அண்ணா தான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறார்.. என் அப்பாவிற்கு என்ன மரியாதை கொடுப்பேனோ அது அப்படியே என் அண்ணாவிற்கு கொடுப்பேன்.. இதில் எந்த மாற்றமும் இருக்காது.. இனி ஒரு முறை இது போல் பேசாதே.. ப்ளீஸ்.." சாமாதானம் பேசுவத போல் இருந்தாலும், தன் கூற்றை அவன் கொஞ்சமும் விட்டுக்கொடுக்கவில்லை..

அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் கோபத்தை பல மடங்காக அதிகரித்தது.. ஆனால் முயன்று அனைத்தையும் கட்டுபடுத்திக்கொண்டவள், "சாரி வைபவ்" என்று மட்டும் எந்த உணர்வுமில்லாமல் கூற

"உன்னை ஏமாற்றியது தப்பு தான் மித்து மா.. அதற்கு என்னை மன்னித்து விடு டா ப்ளீஸ்.."

இப்போது பழைய வைபவ் மீண்டிருந்தான்.. ஆனால் மித்ராவாள் தான் அத்தனை சுலபத்தில் அவன் பேசியதில் இருந்து வெளியே வர முடியவில்லை..

என்ன கோபம் இருந்தாலும் அதை காண்பிக்கும் நேரம் இது இல்லை என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தாள் மித்ரா..

"தட்ஸ் ஓகே வைபவ்.. பை.." என மித்ரா வைக்க போக


"ஹேய் ஒரு நிமிஷம் டி.." என்றுவிட்டு வைபவ் அழுத்தமாக கொடுத்த முத்தம் அவள் மனதை முழுதாக அமைதிப்படுத்தி வெட்கி சிவக்க வைக்க போதுமானதாக இருந்தது..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

ரொம்ப ரொம்ப சந்தோசமான ஒரு விஷயத்துடன் வந்திருக்கேன்..

என்னுடைய அடுத்த புத்தகம் வெளியாகி உள்ளது பேபீஸ்..

முதல் நன்றி நம் ஸ்ரீகலா Sri Kala அக்காவிற்கு தான்..

நீங்க இல்லாமல் எதுவுமே சாத்தியம் இல்லை கா... மிக்க நன்றி கா..😍😍😍😍

புத்தகமாக வெளியிடும் ப்ரியா நிலையதிற்க்கு பெரும் நன்றிகள்..

எப்போதும் உடன் தோள் கொடுத்து பயணிக்கும் அணைத்து எழுத்தாள தோழமைகளுக்கு, வாசக செல்லங்களுக்கும் நன்றிகள் டியர்ஸ்..

"காற்றாகி போவாயோ காதலே" இதுவரை ஆன்லைனில் வராத புத்தம் புதிய கதை பேபீஸ்.

'நிரஞ்சன்', 'மஞ்சரி' டீஸர் போட்டேன் நினைவிருக்கா டியர்ஸ்😊😊.. அவர்கள் தான் புத்தகமாக வந்திருக்கின்றனர்..

புத்தகம் கூடிய விரைவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் வரும் டியர்ஸ்..

இப்போதே வாங்க கீழே உள்ளே மொபைல் நம்பர் அழைத்து ஆர்டர் செய்துகொள்ளலாம் பேபீஸ்..


புக் வாங்க மொபைல் நம்பெர்: 994044859913690

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,

" காற்றாகி போவாயோ காதலே" கதையில் இருந்து சின்ன teaser..

*****************

வந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் எதிரில் இருந்து எந்த குரலும் வராமல் போக மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள் மஞ்சரி..

அவள் கண்டதோ அவளையே உறுத்து விழித்து கொண்டிருந்த நிரஞ்சனை தான்..

அவள் மனதிற்குலேயே ஊடுருவி அதை குத்தி கிழித்து விடும் கூர்மையுடன் அவன் விழிவீச்சு இருக்க, அதை தாங்கவும் முடியாமல் அதில் இருந்து மீளவும் முடியாமல் தவித்து போனாள் மஞ்சரி..

அவளையே பார்த்து கொண்டிருந்தவன் நிதானமாக அந்த கோப்பில் இருந்த அவள் சம்மந்தப்பட்ட பார்ம் மட்டும் எடுத்து அவள் முன் வீசினான்..

"இதில் உங்க ஹஸ்பன்ட் சம்மந்தப்பட்ட டீடெயில்ஸ் எதுவும் இல்லையே.. எத்தனை ஹஸ்பன்ட்.. அதில் எத்தனை பேர் உயிரோட இருக்காங்க.. எல்லாம் மென்ஷன் பண்ணுங்க மிசஸ்.மஞ்சரி.." உணர்ச்சிகள் எதுவும் அற்ற குரலில் நிரஞ்சன் பேசினாலும், அவன் பார்வை என்னவோ அவளையே தான் கூறு போட்டு கொண்டிருந்தது..

அவன் கேள்வியில் அவளுக்கு தான் உடல் முழுவதும் கூசி விட்டது..

'என்ன பேச்சு பேசுகிறான் பாவி..?' என மனம் கதற, எந்த பதிலும் சொல்ல தோன்றாமல் தன் உணர்வுகளையும் வெளிக்காட்ட முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மஞ்சரி..

"ம்ம் பில் பண்ணுங்க.." என மீண்டும் நிரஞ்சன் அழுத்தமாக கூற, இதற்கு மேல் சும்மா இருந்தால் நன்றாக இருக்காது என புரிந்தவள் அங்கிருந்த பேனாவை எடுத்து வேகமாக கணவன் பெயர் எழுதி அவனிடம் நீட்டினாள்...

அதை வாங்கி பார்த்தவன் ஒரு கோணல் சிரிப்புடன் மீண்டும் அந்த பார்மை அவளிடம் நீட்டினான்..

"அந்த பெயர் பக்கத்தில் ஒரு பிராகெட் போடுங்க.." என நிரஞ்சன் கூற அவனை புரியாமல் பார்த்தாள் மஞ்சரி..

"போடுங்க.." என அவன் மீண்டும் கூற, அவள் கைகளை தானாக அவன் சொன்ன வேலையை செய்தது

அதை அதே சிரிப்புடன் பார்த்தவன், "அதுக்குள் லேட்ன்னு எழுதுங்க.." என்றான் நிதானமாக

அத்தனை நேரம் ஏதோ பேசுகிறான் என அவள் அமைதியாக இருக்க, இப்போது அவன் கூறிய வார்த்தையில் "ரஞ்சன்.." என தன்னை மறந்து கத்திவிட்டாள் மஞ்சரி..

ஆனால் அவனோ அவள் குரலுக்கு எந்த மதிப்பும் தந்தாக தெரியவில்லை..

நன்றாக தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன், "இது ஸ்கூல் மஞ்சரி.. இங்கு இப்படி கத்த கூடாது.. நான் ஒன்னும் இல்லாததை சொல்லவில்லையே.. உங்க கணவர் உங்க கூட இருக்காரா என்ன.?" சாவகாசமாக நிரஞ்சன் கேள்வி கேட்க, இப்போது பதில் சொல்ல தெரியாமல் திணறினாள் மஞ்சரி..

அவள் அமைதியாகவே இருப்பதை பார்த்தவன், "எனக்கு நிறைய வேலை இருக்கு.. ஒவ்வொரு கேள்வியையும் இரண்டு முறை கேட்க வைக்காமல் இருந்தால் நல்லது.."

அவளிடம் இருந்து கொஞ்சமும் பார்வையை விலக்காமல் நிரஞ்சன் பேச, "இல்லை.." என தலையாட்டினாள் மஞ்சரி

"அப்போ நான் சொன்னது சரி தானே.. லேட்ன்னு போட்டு கொடுத்துட்டு நீங்க கிளம்பலாம்.." என தன் கூற்றை நிரஞ்சன் நிரூபித்து பேச

அதற்கு மேல் தாங்க முடியாமல் "ஐயோ ப்ளீஸ்.. அவர் நல்லா தான் இருக்கார்.." சத்தமாக இல்லாட்டியும் சற்று அழுத்தமாகவே கூறினாள் மஞ்சரி

அவள் அழுதத்தை பார்த்து நக்கலாக சிரித்த நிரஞ்சன் "பேட் லாக்.." என்று விட்டு அந்த பார்மை எடுத்து அவளை செய்ய சொன்னதை அவனே செய்து அதை உள்ளே வைத்து விட்டான்..

அவன் செயலை பார்த்து மஞ்சரி தான் பதறி விட்டாள்..

"ரஞ்சன் ப்ளீஸ்.. ஏன் இப்படி பண்ணுறீங்க.. அதை கொடுங்க.." என அவள் பார்மை எடுக்க கைநீட்ட, அவள் கைகளை அழுத்தமாக பிடித்து பின்னால் நகர்த்தியவன், "உள்ளதை தான் பண்ணி இருக்கேன்.. யு மே கோ நவ்.." என்று வாசல் பக்கம் கை காட்டினான்..

மெதுவாக எழுந்த மஞ்சரி "ரஞ்சன் ப்ளீஸ்.." என கலங்கிய குரலுடன் மீண்டும் கெஞ்ச

"அவுட்.." என்ற கோபமான பதில் தான் அவளுக்கு கிடைத்தது

இதற்கு மேல் நின்றாலும் அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை என்பது புரிந்துவிட கண்களை துடைத்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் மஞ்சரி..

புத்தகம் கிடைக்கும் லின்க்:


ஆர்டெர் செய்ய உதவி வேண்டுமென்றால் messenger பண்ணுங்க டியர்ஸ்...

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,

" காற்றாகி போவாயோ காதலே" கதையில் இருந்து குட்டி டி..

*******************

"அண்ணா சாரி நா.." என மெதுவாக மலர் தொடங்க அவள் குரலில் சட்டென நின்றவன், வேகமாக அவள் அருகில் வந்தான்..

கன்றி சிவந்திருந்த அவன் கண்களும், கோபத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் இறுக மூடி இருந்த அவன் கைகளும் சிறியவள் மனதில் பெரும் பயத்தை விதைத்தது..

"ரொம்ப பெரிய மனுசி ஆகிட்ட போல்.. எப்போ சொல் பேச்சு கேட்காம இருக்க பழகின மலர்..?" அழுத்தமாக நிரஞ்சன் கேட்க, பதில் சொல்ல தெரியாமல் கைகளை பிசைந்தாள் மலர்..

அவனுக்கோ கோபம் கொஞ்சமும் அடங்கவில்லை, "இந்த வயசிலேயே தனியா முடிவெடுக்க ஆரம்பிச்சுட்ட.. ம்ம்.." என கர்ஜித்தவன்

"இதை அடக்க வேண்டாமா..!" அவளை உற்று பார்த்து கொண்டே அவன் கேட்க, பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்து விட்டாள் மலர்..

"இனி ஒரு முறை உனக்கு இந்த தைரியம் வர கூடாது மலர்.." என அடிக்குரலில் சீரியவன் அவளை அடிக்க கை ஓங்க, பயந்து கண்களை மூடி கொண்டாள் மலர்

ஆனால் 'பளார்' என்ற சத்தம் கேட்ட பின்பும் தன் கன்னம் காந்தாமல் இருக்க மெதுவாக கண்விழித்து பார்த்தவளுக்கு அப்போது தான் அடி விழுந்தது தனக்கில்லை மஞ்சரிக்கு என புரிந்தது..

மலரை அவன் அடித்து விட போகிறானே என்ற பயத்தில் அவள் பக்கத்தில் இருந்த மஞ்சரி விழித்து கொண்டிருக்கும் போதே, மலரை நோக்கி ஓங்கிய கையை பின்புறமாக முழு வேகத்துடன் மஞ்சரி கன்னத்தில் இறக்கி இருந்தான் நிரஞ்சன்..

அவன் அடித்த வேகத்திலும் அதை சுத்தமாக எதிர்பார்க்காத அதிர்ச்சியிலும் மஞ்சரி கீழேயே விழுந்திருந்தாள்..

அவளை சற்றும் கோபம் குறையாமல் ஒரு முறை முறைத்தவன், மலர் புறம் அதே கனலுடன் திரும்பினான்..

"இதோ பார் மலர் இது தான் நீ என் பேச்சை மதிக்காமல் செய்த கடைசி செயலா இருக்கனும்.. மீறி இன்னும் ஏதாவது சிறு விஷயம் செய்தால் கூட என் வாழ் நாள் முழுக்க உன் முகத்தில் விழிக்க மாட்டேன்.. புரிந்ததா..?" அழுத்தமாக நிரஞ்சன் கேட்க, கண்கள் கலங்க சரி என்பது போல் தலை மட்டும் ஆட்டினாள் மலர்..

இத்தனை நேரம் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என் பெரிய மனித தனமாக யோசித்ததெல்லாம் சடுதியில் அவளுக்கு மறந்து விட்டிருந்தது..

அவள் வயதிற்கே உரிய குணம் தலை தூக்க, அதற்கு மேல் அவனை எதிர்க்கும் தைரியம் இல்லாமல் பயந்து உள்ளே சென்று விட்டாள் மலர்..

அவள் நகர்ந்ததும் தான் நிரஞ்சன் மஞ்சரி புறமே திரும்பினான்..

அவளோ இன்னும் அதிர்ந்து தான் விழித்து கொண்டிருந்தாள்..

கணவனிடம் இருந்து இப்படி பட்ட கோபத்தை அவள் நிச்சியம் எதிர்பார்க்கவில்லை..

அவன் அடித்த அடியின் வேகம் அப்படி.. கன்ன சதையே பிய்ந்து விட்டதோ என பயப்படும் அளவுக்கு அப்படி ஒரு வலி..

பேச வந்தால் பேச மறுப்பான், இல்லை அதிக பட்சம் வீட்டை விட்டு வெளியே போக சொல்லுவான், அவ்வளவு தான் மஞ்சரி எதிர்பார்த்தது..

இப்படி ஒரு மூர்க்கத்தை கணவனிடம் இருந்து எதிர்பார்க்காதவளுக்கு அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியாவில்லை..!!

நிரஞ்சனோ அவள் அதிர்ச்சியை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாது "எழுந்து உள்ளே வா.." என்றுவிட்டு அந்த ஹாலின் ஓரத்தில் இருந்த ஒரு அறைக்கு வேகமாக சென்று விட்டான்.

அவன் சென்றதும் தான் அவன் கூறியதே புரிய, காந்திய கன்னத்தை லேசாக தடவி கொண்டு கலங்கி இருந்த கண்களையும் துடைத்து கொண்டு அவன் பின்னால் சென்றாள் மஞ்சரி..

புத்தகம் கிடைக்கும் லின்க்:


 
Status
Not open for further replies.
Top