All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பேசும் விழியே!!!! கதைத் திரி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளுக்கு வணக்கம்....

முதலில் இந்த தளத்தில் எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீ மேமிற்கு நன்றி... நீங்கள் இல்லையேல் இது சாத்தியமில்லை.


முதல் கதைக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.....


எனது புதிய கதையான "பேசும் விழியே" முதல் அத்தியாயத்தைப் பதிவிடுகிறேன்.

கல் நெஞ்சே கசிந்துருகு கதை இன்னும் முடிவடையாத நிலையில் மற்றொரு கதையா??? என நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒரு ஆர்வத்தில் பதிவு செய்து விட்டேன். முதல் கதையிலிருந்து மாறுபட்ட கதையாக தான் எழுத முயற்சிக்கிறேன். உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அன்புடன்,
பூவினி...
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பசுமையாக காட்சியளித்தது நெற்களஞ்சியமாம் தஞ்சையில் உள்ள அந்த செண்பகப்புறம் கிராமம். இருபுறமும் வயல்கள் பரந்து விரிந்திருக்க நடுவே வாகனங்கள் செல்லும் சாலை.

மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் மக்களிடையே தூய்மையான சுத்தமான காற்றினை சுவாசித்துக் கொண்டிருந்தனர். சுற்று வட்டார மக்களெல்லாம் தண்ணீருக்கு கஷ்டப்பட, தண்ணீர் பஞ்சம் என்பதை அறியாத அந்த மக்கள் தங்களது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

மூன்று வேளையும் உழைத்து அதில் வரும் வருமானத்தில் உணவருந்தி சொர்க்கம் என்றால் என்னவென்று பூமிதனிலே அனுபவித்தனர்.

உணவு மற்றும் உடையைத் தவிர வேறு எதற்குமே அவர்கள் தங்களது பணத்தினை செலவழித்தது கிடையாது. ஏனெனில் அந்த ஊரில் மருத்துவம், கல்வி என அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசமாக கிடைத்தன.

மூன்று போகம் பயிரிட்ட போதும் நல்ல விளைச்சலைக் கண்டனர் அந்த ஊர் மக்கள். வளமான ஒரு வாழ்வு வாழ்ந்தனர் அந்த மக்கள்..

இதற்கெல்லாம் காரணம் அவர்கள் குல தெய்வமாக நினைக்கும் இளம்பரிதி தான். அந்த கிராமத்தின் பெரிய குடும்பத்தின் இந்நாள் வாரிசு.

ஆறடி உயரத்தில் நல்ல வாட்ட சாட்டமான உடலுடன் , பார்வையிலே மற்றவர்களை அடக்கும் கம்பீரத்துடன் இருந்தான் அந்த இருபத்தியெட்டு வயது கிராமத்துக் காளை.

அடங்காமல் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் அவனது சிகையும், நாசிக்கு கீழே அடர்ந்த மீசையும், மிக அரியதான சிரிப்பின் போது தெரியும் சிங்கப்பல்லும் அவனை பேரழகனாகவே காட்டியது.

எப்போதும் அணிந்திருக்கும் வெள்ளை நிற வேஷ்டி சட்டையும், கையில் இருக்கும் சில்வர் நிற டைட்டன் வாட்சும், ராயல் என்பீல்டு வண்டியும் அவனது அடையாளங்கள் என்று சிறு குழந்தையும் சொல்லி விடும். சிலம்பாட்டம் , மல்யுத்தம் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான் அவன்.

அவனை எதிர்த்து பேச அந்த கிராமத்தில் ஒருவரும் இல்லை. அப்படியே பேசினாலும் அவர்கள் அதன்பிறகு பேசவே முடியாதபடி செய்திடுவான்.அவனை யாரும் எதிர்த்து பேசாததால் தான் அவனாக பார்த்து அந்த மக்களுக்கு உதவி செய்தான். இல்லையென்றால் நடப்பதே வேறு. அவனிடம் பேச அவனது தாய் தந்தையரே அச்சம் கொள்வார்கள்.


பல கன்னியர்களுக்கு அவன் கனவு நாயகனாக இருந்தாலும் யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் , தன்னை அடக்கிட யாருமின்றி இஷ்டப்படி சுத்தியது அந்த இளங்காளை.



முன்னேயும் பின்னேயும் இரண்டு இரண்டு கார்களில் காவலர்களும் அதிகாரிகளும் தொடர நடுவிலே பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தது அந்தக் கருப்பு நிற கார்.

காவலர்களும் அதிகாரிகளும் பயத்துடனே அந்த காரைக் சுற்றி சென்று கொண்டிருந்தனர். ஏனடா இந்த வேளையில் சேர்ந்தோம் என்ற மனநிலையில் இருந்தார்கள் அவர்கள்.

ஏனெனில் அவர்கள் சென்று கொண்டிருந்தது செண்பகப்புறத்திற்கு அல்லவா???
இன்னும் சிறிது நேரத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்று அவர்கள் அச்சப்பட எதைப் பற்றியும் கவலையில்லாமல் மனதில் கோபம் தீயாய் எறிய முகத்தை இறுக்கத்துடன் வைத்துக் கொண்டிருந்தது அந்த கருப்பு நிற காரில் வந்து கொண்டிருந்த உருவம்.


ஊரை நெருங்கியதும் அந்த உருவத்தின் முகத்தில் சிறு இளக்கம் தெரிந்தது. ஆனால் ஊரின் எல்லையை தொட்டதும் மீண்டும் இறுக்கமாகியது.


சின்ன சிறு குடில்கள் அழகாகவும் , நேர்த்தியாகவும் இருந்த பகுதியை அடைந்ததும் அந்த உருவம் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தவரை அழைத்து காரை நிறுத்தச் சொல்லியது.

அடுத்த நொடி அனைத்து கார்களும் நிறுத்தப்பட அந்த இடத்தில் புழுதி பறந்தது. அந்த கருப்பு காரில் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தவர் அவசரமாக கீழே இறங்கி வந்து கதவை திறந்துவிட கம்பீரமாய் நேர் கொண்ட பார்வையாய் இறங்கினாள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கீர்த்தனா.


அழகு தேவதையென இருந்தவளை ஆவென்று பார்த்தனர். பால்நிறத்தில் இருந்தவள் தனது மீனைப் போன்ற கண்களுக்கு தீட்டியிருந்த கருமை அவளை மேலும் அழகாக காட்டியது. உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்திருந்த உதடுகள் எந்த ஒரு செயற்கை அழகு சாதனங்களும் பயன்படுத்தாமலே எழில் மிகுந்த பேரழகியாய் இருந்தாள்.

அவளது நிறத்திற்கு அவள் அணிந்திருந்த நீலவண்ண சில்க் காட்டன் சேலை அவளுக்கு பொருத்தமாய் இருந்தது. நெற்றியில் கருப்பு வண்ண பொட்டும் காதில் ஜிமிக்கியும் மட்டுமே அவள் அணிந்திருந்தவைகள்.

கீழிறங்கிய அவளை சுற்றி காவலர்களும் , அதிகாரிகளும் சூழ்ந்து கொண்டனர்.
அதுவரை அவளது அழகை வியந்து பார்த்து கொண்டிருந்த மக்கள் அவளை சுற்றியிருந்த காவலர்களை கண்டதும் பயந்தனர்.


அங்கிருந்த அனைவரையும் அவளுக்கு அடையாளம் தெரிந்தது. ஆனால் யாரிடமும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது கருவிழியை உயர்த்தி அங்கிருந்த அனைவரையும் பார்த்தாள்.
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளது பார்வையில் அங்கிருந்த அனைவருமே சொக்கிப் போய் நின்றிருந்தனர் அவளுடன் வந்த அதிகாரிகள் உட்பட.

அவளோ அனைவரையும் புறம் தள்ளி அங்கிருந்த சிறு குடிலுக்குள் நுழைந்தாள். அந்த சின்னஞ்சிறிய குடிசை தான் அந்த ஊரின் ஐந்து நட்சத்திர ஹோட்டல். வெங்காய பக்கோடா மற்றும் போண்டா இவை இரண்டும் அந்த ஹோட்டலின் சிறப்பு உணவுகள்... உள்ளே நுழைந்ததவள் அந்த குடிலின் மண்தரையைப் பார்த்தாள். மாட்டுச் சாணம் போட்டு நன்றாக மெழுகி வைத்திருந்தனர்.

அவள் உள்ளே நுழைந்த அடுத்த நொடி அவளுடன் வந்தவர்களும் விதியே என்று உள்ளே வந்தனர். அதற்குள் கலெக்டரின் பி.ஏ ( டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தவன்) வெற்றி அவளுக்கு அங்கிருந்த ஒரு மர நாற்காலியை எடுத்து வந்திருந்தான்.

அதை பார்த்த ஊர்ஜனங்கள் அதிர்ந்து போயினர். கீர்த்தனா அமர்ந்திருந்த நாற்காலி இளம்பரிதி அமருவது. இதுவரை யாரும் அதை தொட்டது கூட கிடையாது. அதனால் தான் அவர்களுக்கு பயம்.

"எனக்கு ஒரு டீ அப்புறம் பகோடா. வெற்றி உங்களுக்கும் மத்தவங்களுக்கும் வேணூம்னா வாங்கிக்கோங்க"

"சரிங்க மேடம்... " என்றவர் அதிகாரிகளைப் பார்க்க அவர்களோ அதன் சுகாதாரத் தன்மையின் மீது சந்தேகம் கொண்டு வேண்டாம் என்றனர்.


ஆனால் கீர்த்தனாவோ டீயின் ஒவ்வொரு துளியையும் ரசித்து ரசித்து அமிர்தமாய் அருந்தினாள். அதனோடு சேர்த்து சில நினைவுகளையும்....

பின்னர் எழுந்து செல்ல முயன்றவளது கண்களில் பட்டது இளம்பரிதியின் புகைப்படம். கம்பீரமாய் புன்னகைத்தபடி இருந்த அவனை கண்டு அவளது கோபம் அதிகரித்தது.
தன் விழி என்னும் வாள் கொண்டு அவனைக் கூறு போட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:


பறவைகளின் இனிய குரல்களுக்கு போட்டியாய் பெண்களின் நாட்டுபுற பாட்டு ஒலித்துக் கொணாடிருந்தது. வயல்களில் களை எடுத்து கொண்டு இருந்தனர் அந்த கிராமத்துப் பெண்கள்.

அந்த ஊரின் முக்கால் பாக அளவு நிலம் இளம்பரிதிக்கு சொந்தமானதாகும்.ஆகையால் கிராமத்திலுள்ள ஒரு சிலர்களை தவிர மற்ற அனைவரும் அவனது வயல்களில் தான் வேலை செய்தனர்.

வயதானவர்களும், மத்திய வயதுடையோரும் அவர்களது வேலையில் மட்டும் கவனமாய் இருக்க இளம் வயது பெண்களே ஏக்கத்தோடு அந்த வயலை ஒட்டிய சாலையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏனெனில் அவர்களது கனவு நாயகன் இன்னும் வரவில்லையே. தினமும் சரியாக இந்நேரத்திற்கு வருபவனை கண்டு மையல் கொள்ளவே பாதி இளம்பெண்கள் அவனது வயலுக்கு வருவார்கள். அவனை கரம் பிடிக்க யாரும் ஆசைகொள்ள வில்லை. அது நடக்காது என்று அனைவருக்கும் தெரியும். ஆகையால் அவனை கண்ணார கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர் .

அவர்களது நாயகனோ சற்று தொலைவில் இருந்த களத்து வீட்டில் நின்றிருந்தான். சுற்றிலும் வாழை , கொய்யா, மாதுளை, எலுமிச்சை என அனைத்து மரங்களும் இருக்க நடுவே இருந்தது அந்த வீடு. சுற்றிலும் பசுமையாக இருக்க குளிர் சாதனப் பெட்டி இல்லாமலே அந்த வீடு குளுமையாயிருந்தது.

வீட்டு வாசலில் அழகான கோலமாடப்பட்டிருந்து. அதை கலைக்கும் வண்ணம் ஒருவன் அந்த கோலத்தில் வந்து விழுந்தான். அவனது உடம்பில் ஆங்காங்கே இரத்தம் வழிந்தோடியது. கீழே விழுந்தவனின் மீது தனது காலை வைத்து உதைத்தான் நமது நாயகன் பரிதி.

கீழே விழுந்தவன் பரிதியின் கால்களைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தான். "சின்னத்தம்பி என்ன மன்னச்சிடுங்க. தெரியாம பண்ணிட்டேன். இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்"

அவனது கதறல் பரிதியை சற்றும் இளக்கவில்லை. அங்கிருந்த வேலையாளிடம் விழியால் கட்டளையிட அவனே அதை சிரமேற்க் கொண்டு அடுத்த நொடியே நிறைவேற்றினான்.

இதுவரை அவன் அடிக்கும் போதே அடிவாங்கியவனை நினைத்து பரிதாப பட்ட வேலை நாட்கள் அடுத்து பரிதி செய்யப் போவதை கண்டு அதிர்ந்து நின்றனர். ஏனெனில் கீழே அடிபட்டு கிடப்பவன் பரிதியின் ஒன்று விட்ப சித்தப்பா மகன். அவனுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு,?? என்னதான் அதிர்ந்தாலும் அவனை எதிர்த்து கேள்வி கேட்க முடியாதல்லவா???? ஆகையால் அமைதியாக இருந்தனர்.

வேலையாள் கொண்டு வந்து கொடுத்த பூச்சி கொல்லி மருந்தை பார்த்த பரிதியின் உதடுகள் ஏளனமாய் வளைந்தன. கீழே விழுந்து கிடந்தவனோ "சின்னதம்பி இந்த ஒரு முறை மட்டும் என்ன மன்னிச்சு விட்டுங்க. ப்ளீஸ்"

"எதுக்கு இப்போ இவ்ளோ பயப்படுற அண்ணே... நீதான் இந்த பூச்சி மருந்த போட்டா பயிருக்கு நல்லது. பூச்சிலாம் வராது. மகசூல் நல்லாருக்கும்னு சொன்னியாமே!!

அதான் கொஞ்சம் நீயும் குடிச்சு பாருணே.... உன் வயித்துல ஏதாவது பூச்சி இருந்தா செத்துடும். அது உனக்கு நல்லது தான." ஒன்றும் அறியாக் குரலில் அவன் கூற அடிபட்டவனின் முகமோ வெளிறியது.

'அடிக்கறதுனாலும் நாலு நாள் கூட வச்சு அடிச்சுக்கோ... இப்படி விஷத்தலாம் குடுக்காதடா... பாவி" என அவனது மனம் அரற்றியது. அதற்குள் பரிதியோ அந்த பாட்டிலைத் திறந்து அவனருகில் வந்துவிட உயிர் பயத்தில் திக்கியபடி
"த...... தம்பி.... அத குடிச்சா செத்துடுவோம். உனக்கு தெரியாதது இல்ல. "


"இத குடிச்சா செத்துடுவோமா????" சந்தேகமாய் அவன் கேட்க "நீயே குடிச்சு பாரேன்டா " என வாய் வரை வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டான் மேலும் அவனை சீண்ட விருப்பமின்றி.

ஆமாம் எனும் விதமாக அவன் தலையை ஆட்ட "அப்பறம் என்னத்துக்கு இத பயிர்ல கலக்குற. இயற்கை உரத்த தான் பயன்படுத்தனும்னு அவ்ளோ சொல்லியும் ரசாயனம்.... ஒரே அடியா குடிச்சாலும் கொஞ்சம் கொஞ்சமா சாப்டாலும் ஒண்ணு தான். அதனால இப்பவே குடிச்சிட்டு செத்துடு. சரியா" என்றான் கேலிக்குரலில்.

"தம்பி வேணாம்.... " என அவன் கதற கதற அவனது வாயில் பூச்சி மருந்து கொல்லியை ஊற்றினான். அங்கிருந்தவர்கள் அதை கண்டு அரண்டு போய் நிற்க குடித்தவனோ உயிர் பயத்தில் கண் சொருக மெல்ல மயங்கினான்.

"டாக்டர்... வாங்க" என்ற அவனது குரலுக்கு ஓடோடி வந்த மருத்துவர் உடனடியாக தனது வேலையை தொடங்கினார்.

"வேற யாராவது செயற்கை மருந்து பயன்படுத்துனீங்க தெரிஞ்சது. டாக்டர்லாம் காட்ட மாட்டேன். நேரடியாக சொர்க்கம் தான்" என்ற படி தனது இடது கால் பெருவிரலால் வேட்டியை தூக்கி கையில் வாங்கி மடித்து கட்டிக் கொண்டு சென்று விட்டான்.

அந்த நேரம் ஓடிவந்த ஒருவன் கீர்த்தனாவை பற்றி சொல்ல பரிதியின் முகத்தில் கோபம் வந்தது. அடுத்து அவன் நேரே சென்றது அங்கிருந்த ஆலமரத்திற்கு அடியில் தான். அவனது மனமோ "எந்த பேர இனிமேல் நா கேட்கவே கூடாதுனு நினச்சனோ அந்த பேர் மறுபடியும் என்னிடமா""என்று அரற்றியது.
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளுக்கு வணக்கம்....

ரொம்ப நாள் கழித்து தோழமைகளேனு ஆரம்பிக்குறதுல ரொம்ப சந்தோஷம். எல்லாரும் என்ன மன்னச்சிடுங்க. சில பிரச்சனைகளால என்னால கதையை எழுத முடியல. அதான் இதுவரைக்கும் பதிவு போடல.

இன்றைக்கு தான் டைப் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். புதன் கிழமை கண்டிப்பாக பதிவு தந்துடுவேன்.

அன்புடன்,
பூவினி
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதழ் 3:

இயற்கை உரத்தை தான் பயன்படுத்த வேண்டும் என சொல்லியும் அதை கேட்காமல் இரசாயன உரம் பயன்படுத்தியதற்காக தனது உறவினரை எண்ணி பரிதிக்கு கோபம் வந்தது. தான் சொல்லி கேட்காமல் இருப்பது தனக்கு இழுக்கு எனவும், அவனை பார்த்து மற்றவர்கள் மனம் மாறிட கூடாது என எண்ணியவன் என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்து விட்டான்.


அதனால் தான் பூச்சிக் கொல்லி மருந்தை அவனது வாயில் ஊற்றி சற்று பயம் காட்டினான். அவனை எதிர்த்தவன் மட்டுமன்றி அங்கிருந்த ஊர் மக்களது முகமும் பயத்தில் வெளிறிட பரிதியின் முகத்தில் வெற்றிக்கான களிப்பு இருந்தது.

இனி வயலில் நடக்கும் நடவு வேலையை மேற்பார்வையிட வேண்டும் என எண்ணியவன் அங்கிருந்து கிளம்ப எச்சரித்த வேளையில் தான் ஒருவன் ஓடிவந்து கீர்த்தனாவைப் பற்றி சொல்ல அவனது முகத்தில் இதுவரை யாருமே பார்த்தறியாத கோபம் தெரிந்தது. முகமும் அவனது மன இறுக்கத்தை பிரதிபலிப்பதை போல இறுகியிருக்க அந்த கிராமத்தில் இருந்த பெரிய ஆலமரத்திற்கு அடியில் சென்று அமர்ந்தான்.


எதனால் அவனுக்கு இவ்வளவு கோபம் என்று அவனுக்கே தெரியவில்லை. கீர்த்தனா....... அந்த பெயரின் மீது அவனுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று அவனே அறியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் அந்த பெயரை கேட்க கூடாது என்று அவன் நினைப்பது மட்டும் உறுதி.

தன்னுள்ளேயே உழன்று சிந்தித்துக் கொண்டிருந்தவன் தன்னருகே கேட்ட பேச்சுக் குரலில் தான் சுயநினைவிற்கு வந்தான்.அங்கே வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் தான் பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கே வேகமாக ஓடி வந்த இரு இளம்பெண்களில் ஒருத்தி "ராணியக்கா..... தேவியக்கா.... உங்களுக்கெல்லாம் ஒண்ணுத் தெரியுமா.... நம்ம ஊருக்கு புதுசா வந்த கலெக்டரம்மா வந்து இருக்காக. சிறு வயசா இருக்காக கா... அப்படியே கதாநாயகி கணக்கா அழகா வேற இருக்காக ... இல்லயாடி வள்ளி" என்று தன் தோழியை துணைக்கழைக்க

அவளோ "ஆமாக்கா.... கண்ணா அது.... எவ்வளவு அழகா இருந்துச்சு .... எப்பா..... அங்கன எல்லாரும் படத்த பாக்குற மாதிரி பாத்துகிட்டு இருந்தோம்....அவக யாரையும் கண்டுகிடல.. சும்மா கண்ணசவுல (கண் அசைவில்) எல்லாத்தையும் அதிகாரம் பண்றாங்க. மந்திரம் பண்ண மாதிரி இருக்கு... " என்று அவளது அழகை வர்ணிக்க

முதலாமானவள் தொடர்ந்தாள் " ஆமா..... ஆமா.... யக்கா சேதி தெரியுமா.... அவுக நம்ம சின்ன ஐயா ஒக்காருவாகள அதுல தான் ஒக்காந்தாங்க. எவ்ளோ தகரியம்"

" என்னடி சொல்ற சின்னய்யா நாக்காலியில ஒக்காந்தாங்களா."

"ஆமாக்கா"

"அடியாத்தி.... ரொம்ப தகிரியம் தான். சிங்க கொகக்குள்ள வந்துட்டு.... அதோட நாக்காலியில ஒக்காந்து இருக்காக"

அவர்களது பேச்சினை கேட்டவனுக்கு கோபம் வந்தது. இதுவரை எந்தவொரு அதிகாரியும் இவர்களது குடும்பத்திடம் முன் அனுமதி கேளாமல் இங்கு வந்தது கிடையாது.

இவள் என்னவென்றால் வந்ததும் அல்லாமல் தன்னுடைய நாற்காலியில் அமர்ந்தும் இருக்கிறாள். இதுவரை தன்னைத் தவிர வேறு யாரும் அதில் அமர்ந்தது இல்லை.


அவனை பொறுத்த வரையில் அவனுக்கு நிகராக அவன் கருதிய நாற்காலியில், மற்றவர்கள் தொட கூட அஞ்சும் நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்துவிட்டாள் என்பதே அவனுக்கு இழுக்கு என எண்ணினான். இவளை இப்படியே விடக் கூடாது.. இவளை ஒன்றும் செய்யாமல் விட்டால் அது மற்றவர்களுக்கு வாய்ப்பாகிப் போகும்...

'அவ யாரா இருந்தாலும் அவள கொஞ்சம் தட்டி வைக்கணும்" என்ற படி கோபத்தோடு அவன் கிளம்பினான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளுக்கு வணக்கம்....

ரொம்ப குட்டி பதிவு தான் ☹☹☹... சனியன்று பெரிய பதிவாக தருகிறேன்..

கல்நெஞ்சே கசிந்துருகு கதையினை நாளை பதிவிடுகிறேன் ப்ரண்ட்ஸ்...

அன்புடன்,
பூவினி
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இதழ் 4:



மனம் முழுவதும் கோபத்துடன் பரிதி அவனது வண்டியில் ஏறி அமர்ந்து அதனை உயிர்பிக்க நினைக்கையில் மென்மையான வெண்கரங்கள் அவனது கண்களை மூடின.


அந்த கரங்களின் பரிசத்திலும், தன்னை இவ்வாறு உரிமையாய் தொடுபவர் யாரென்று அறிந்ததாலும் அவனது முகம் கோபத்திலிருந்து மகிழ்ச்சியை தத்தெடுத்தது.


முகத்தில் குடி கொண்ட புன்னகையுடன் அந்த வளைக்கரங்களை பிடித்து முன்னால் இழுக்க அவன் மீது மோதி நின்றாள் நிலா..


நிலா அழகான இளம்பெண். துறு துறு கண்களும் , எந்நேரமும் சிரிக்கும் இதழ்களும் அவளது அடையாளங்கள். சிறிது பூசினாற்போல் இருக்கும் உடல்வாகும் அவளுக்கு அழகையே தந்தது.


நிலா பரிதியின் முறைப் பெண். பரிதியின் மேல் உயிரையே வைத்திருப்பவள். பரிதியும் அவள் மீது உயிரையே வைத்திருந்தான். பெற்றோருக்கு கூட கட்டுப்படாத அந்த காளையவன் இந்த கன்னியவளின் விழி அசைவிலேயே அடங்கிடுவான்.


அவன் அந்த ஊரின் இளவரசனாய் தன் ஆளுமையை செலுத்த, நிலா அந்த கிராமத்தின் முடிசூடா இளவரசியாய் இருந்தாள்.


யாரிடமும் கடிந்து கூட பேசத் தெரியாதவள். அனைவரிடமும் அன்போடு இருப்பவளை அந்த கிராம் மக்கள் அனைவருக்குமே பிடித்தது. பரிதியின் கோபத்தில் மாட்டிக் கொண்டு விழிப்பவர்களை காப்பாற்ற இவள் ஒருவளால் மட்டுமே முடியும். அதனாலேயே அந்த ஊரில் இருந்த அனைவருக்கும் குலதெய்வமாய் இருந்தாள்.


பரிதியின் பலவீனம் நிலா மட்டுமே. அவளோடு இருக்கையில் உலகையே மறந்துவிடுவான். பரிதியின் சகோதரி மகள் தான் கவிநிலா...


பிறந்த சில மணித்துளிகளில் அவளை தனது கரங்களில் ஏந்திய பரிதிக்கு வயது எட்டு. அன்றிலிருந்து இன்று வரை அவளை தனது கரத்தினுள் வைத்து பொத்தி பாதுகாக்கிறான்.


நிலா பிறந்த உடன் பரிதியின் சகோதரி வேணி இறந்து விட அவளுக்கு எல்லாமே அவன்தான். அவள் மீதான உரிமையை அவன் யாருக்கும் விட்டுக் கொடுத்தது இல்லை. நிலாவின் தந்தைக்கு மறுமணம் ஆகிவிட்டதால் அவரும் இடையிடையே வந்து மகளைப் பார்த்து செல்வார்.


எட்டு வயதில் அவளுக்காக தனது உலகத்தை மாற்றிக் கொண்டவன் பின்னர் அவளுக்கு உலகமாகிவிட்டான். கவலையென்பதையே அறியாமல் அவளை வளர்க்கிறான். தற்போது நிலா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாள்.



கல்லூரித் தேர்வுக்காக முன்தினம் இரவு மூன்று மணிவரை கண்விழித்து அவள் படிக்கையில் இவனும் அல்லவா விழித்திருந்தான் அவளுக்கு துணையாக. தேர்வு முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் தன்னை தேடி வந்தவளை எண்ணி அவனது உள்ளம் என்றும்போல் இன்றும் உருகியது.


"குட்டிமா.... இங்க என்ன செய்ற. வீட்டல ரெஸ்ட் எடுக்கலாம்ல. வெயில்ல வந்துருக்கியேடா..." கவலையோடு அவன் வினவ அவன் முன்பு நின்றவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.


அவளது முறைப்பில் தன்னை மறந்து சிரித்தவன் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான். அதில் கோபம் வரப்பெற்றவள் அவனது கையை தட்டிவிட்டு அவனது தோளில் சில அடிகளை பரிசாய் வழங்கிட இது வழக்கமான நிகழ்வென்றாலும் இவர்களை ஆவென்று பார்த்து கொண்டிருந்தனர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்கள்.



சிலர் இதனை பொறாமையாகப் பார்த்தனர். தங்களின் கனவு நாயகனுடன் இவ்வளவு நெருங்கி பழகும் வாய்ப்பு தங்களுக்கு இல்லையென்பதில் அவர்களுக்கு வருத்தமாயிருந்தது.


அதோடு மட்டுமின்றி மருந்திற்கு கூட மற்றவர்களிடம் சிரிக்காதவன் , மென்மையை வார்த்தையில் கூட காட்டாதவன் நிலாவிடம் மட்டும் இன்முகமாய் இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யமாயிருந்தது.


அவளது அடிகளை சிரிப்புடன் பெற்றுக் கொண்டவன் "குட்டிமா.... என்ன ஆச்சு.... ஏன் இவ்ளோ கோபமா இருக்கீங்க"


"ஏன் என்னக் கூப்ட காலேஜ்க்கு வரல மாமா"


"அதுக்கு தான் கோபமா.... கொஞ்சம் வேலையா இருந்தேன்டா... அதனால தான் வர முடியல. அதான் ராசய்யாவ அனுப்புனேன்டா.. அவர் எங்க ... நீ மட்டும் தனியா இருக்க. உனக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன் தனியா வரக்கூடாதுனு. ஏன்டா புரிஞ்சுக்க மாட்ற"


அவன் பேச ஆரம்பித்த சில நொடிகளிலேயே அவளும் அவனைப் போன்றே கைகளை ஆட்டி அதே வாக்கியங்களைப் பேச அவளின் செய்கையில் சிரிப்பு வந்தாலும் அதனை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தான். ஆனால் அங்கு வேலை செய்தவர்கள் அனைவரும் சிரித்துவிட அதில் திரும்பி அவர்களை பார்த்தான்.


அந்த பார்வையில் அனைவரும் வாய்மூடி வேலையை கவனிக்க அவனோ லேசாக நிலாவின் தலையில் கொட்டி "வாலு.... பண்றது எல்லாம் சேட்ட.... சரி வா வீட்டுக்குப் போகலாம்" என்றிட


அவளோ அவனை கவனியாமல் "என்ன யோசிச்சிட்டு இருந்த மாமா... ரொம்ப நேரமா உன் பின்னாடியே நின்னேன். நீ என்ன கவனிக்கவே இல்ல. அப்படி என்ன யோசன"


அவள் கேட்கவும் எதை நினைத்துக் கொண்டிருந்தோம் என சிந்தித்தவனது மனது மீண்டும் கோபமடைந்தாலும் நிலாவுக்காக அமைதி காத்தான்.


"வேல விஷயம்டா... நீ வா வீட்டுக்குப் போகலாம் "


அவன் பொய் கூறுகிறான் என்று அவள் அறியாமல் இல்லை. இருப்பினும் மேலும் கேள்விகள் கேட்டு அவனை சங்கடப்படுத்தாமல் அவனது புல்லட்டில் அமர்ந்து அவனது தோளினை பிடித்துக் கொண்டாள்.


வண்டி கிளம்பியதும் தான் அங்கிருந்தவர்கள் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. வயதான பாட்டி ஒருவர் " ஜோடிப் பொருத்தம் அருமயா இருக்கு. ராசனுக்கு ஏத்த ராணி" என்றுவிட அங்கிருந்த இளம்பெண்கள் அவரை ஒருவழி செய்துவிட்டனர். அவர்களாலும் பாட்டியின் கூற்றை மறுக்க முடியவில்லை மனதினுள்.


செல்லும் வழியில் பரிதி அமைதியாக வர நிலாவின் கண்களோ சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்து கொண்டே வந்தன. சற்று தொலைவில் சைக்கிளில் ஒருவர் ஐஸ் விற்றுக் கொண்டு வர " மாமா .... ஐஸ் வாங்கி கொடு " என்றாள் கட்டளையாக.


"குட்டிமா.... சளி பிடிச்சிடும்டி"


"எனக்கு வேணும்..." என்ற படி அவள் மௌனமாக வர வேறு வழியின்றி சைக்கிளை நிறுத்தி ஐஸ் வாங்கி தர " மாமா.... இன்னும் அஞ்சு வேணும் "


"அஞ்சா.... எதுக்குடி.... அஞ்சு...."


"வாங்கி தா... அவளோ தான் " அவளை முறைத்தபடியே அவன் வாங்கி தர அதை வாங்கியவள் அங்கே சாலையோரத்தில் இவள் சாப்பிடுவதையே ஏக்கமாக பார்த்திருந்த சிறுபிள்ளைகள் ஐவரிடம் ஓடிச் சென்று கொடுத்தாள்.


"பெரிய அன்னை தெரசா.... " என்று முணுமுணுத்தாலும் அவளது செயலில் அவனது மனம் மகிழ்ந்தது.


வண்டியில் அமர்ந்தவள் "மாமா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்"


"சொல்லு"


"இன்னைக்கு எங்க காலேஜ்க்கு நம்ம மாவட்டத்துக்கு புதுசா வந்துருக்க கலெக்டர் வந்துருந்தாங்க மாமா. செம்ம அழகு ... சும்மா ஹீரோயின் மாதிரி இருந்தாங்க. அவங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மாமா. நானும் அவங்கள மாதிரி கலெக்டராக போறேன் மாமா. " அவள் சொல்லி முடிக்கவும் வண்டியை ஒரு நிமிடம் நிறுத்தி பின்னர் ஓட்டினான்.


"நா சொல்லிட்டே இருக்கேன். நீ பேசவே மாட்ற. சொல்லு மாமா" என்ற படி அவனது தோளில் ஒரு சிறிய அடி கொடுக்க அதில் சிரித்தவன் " உனக்கு என்ன தோணுதோ அத செய் குட்டிமா.... நா எப்பவும் உன் கூட தான் இருப்பேன் . வீடு வந்துடுச்சு. நீ போ. எனக்கு வேல இருக்கு " என்றபடி வண்டியை நிறுத்த அவனது பதிலில் குழம்பியவாறே இறங்கியவள் "சாப்ட வா மாமா" என்று கூற அதை கேட்க அவன் அங்கு இல்லை.


"இவ்ளோ வேகமா எங்க போறாங்க. அதுவும் சாப்ட கூட இல்ல. வரட்டும் இன்னைக்கு கவனிச்சுக்குறேன்." என மனதினுள் நினைத்தபடியே வீட்டுக்குள் சென்றாள்.


_____

அந்த சிறிய ஓட்டு வீட்டை விட்டு வெளியேறிய கீர்த்தனா அங்கிருந்த மக்களை தனது மயக்கும் விழி கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது விழியழகில் அங்கிருந்த அனைவருமே சொக்கிப் போய் நின்றிருந்தனர்.


அங்கிருந்த பல காளையர்களின் பார்வை அவள் மீது ரசனையுடன் பதிந்தாலும் அவளது பதவியும், உடனிருந்த அதிகாரிகளின் கூட்டமும் அவர்களது ரசனைக்கு தடை போட எரிச்சலில் நின்றிருந்தார்கள் அவர்கள்.


இந்தியாவின் மிக இளம் வயது மாவட்ட ஆட்சியர் கீர்த்தனா. அது மட்டுமின்றி மிக அழகான இளம் பெண்ணும் கூட.


மாவட்ட ஆட்சியாளருக்கான தேர்வில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்த பெண் என்று அவளது புகைப்படம் எல்லா தொலைக் காட்சியிலும் ஒளிப்பரப்பாக அத்தனை பேரும் வியந்தது அவளது அறிவை மட்டுமின்றி அவளது அழகையும் தான்.


பல படத் தயாரிப்பாளர்கள்,கதாநாயகர்கள் அவளை தங்கள் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்ய முன்வந்த போது எதனையும் ஏற்காமல் தனது இலட்சியமான மாவட்ட ஆட்சியராக பணியில் சேர்ந்தாள்.


நேர்மையாக தனது பணியை வட மாநிலம் ஒன்றில் தொடங்கியவள் தற்போது பணிமாற்றம் கேட்டு தஞ்சைக்கு வந்திருந்தாள்.


தஞ்சை ஆட்சியராகப் பொறுப்பேற்ற இரண்டாம் வாரம் அவள் செண்பகபுறத்திற்கு வந்திருக்கிறாள். சிங்கத்தின் கோட்டைக்குள் பெண் புலியாய்.


அவளுடன் இருந்த அதிகாரிகளின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது. அவளை காண வேண்டும் என இத்தனை நாள் ஏங்கியவர்கள் இன்று அவளை கண்டுவிட்டாலும் அதனை எண்ணி மகிழ முடியாமல் பரிதியின் ஊருக்கல்லவா அழைத்து வந்திருக்கிறாள்.


கடமையை செய்பவர்கள் செய்யாதவர்கள் என அத்தனை பேரும் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தனர். பின்னே முன்பே அனுமதி பெறாமல் பரிதியின் கோட்டைக்குள் நுழைந்திருக்கிறார்கள் அல்லவா.


தொன்று தொட்டு இன்று வரை பரிதியின் குடும்பத்திடம் அனுமதி பெற்ற பின்னரே அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் செல்வார்கள். ஆனால் இன்று. என்ன நடக்க போகிறதோ என அனைவரும் பயத்தில் இருக்க கீர்த்தனாவோ அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்தாள்.


அவர்களோ வாயைத் திறக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இங்கே வாயைக் கொடுத்து விட்டு பரிதியிடம் யார் மாட்டிக் கொள்வது என்று எண்ணிக் கொண்டு.


அவர்களது மௌனத்திற்கான காரணம் தெரிந்தவளும் பரிதியை எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.


அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்த கிராமம் தொடர்பான பல கேள்விகளை கேட்டவளது விழிகள் மட்டும் யாரையோ தேடியது...


நேரம் கடந்து கொண்டிருந்ததை உணர்ந்த வெற்றி அவளருகே சென்று "மேம்.... டைம் ஆச்சு. இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு கல்வி அதிகாரிங்க கூட மீட்டிங் இருக்கு." என்று நினைவு படுத்த அவனை தனது வேல்விழியால் முறைத்தவள் தனது காரில் ஏற அமர "முட்ட கன்னி.... மொறைக்குறத பாரு" என மனதினுள் அவளது முறைப்பை கேலி செய்தவாறு காரில் ஏறினான் வெற்றி...



'கண்டிப்பா நா மறுபடியும் வருவேன் பரிதி.... என் கண்ணுல பட்ட அடுத்த நொடியிலேர்ந்து உன் வாழ்க்கை என் கைல. உன்ன சும்மா விட மாட்டேன் ' என நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பினாள்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளுக்கு வணக்கம்....

பேசும் விழியே அத்தியாயம் நான்கை பதிவிடுகிறேன்.

போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி :):):):)...

கதையைப் பற்றிய தங்களது கருத்துகளை சொல்லுங்கள் ப்ரண்ட்ஸ்... ப்ளீஸ்:(:(:(:(:(...


அன்புடன்,
பூவினி
 
Status
Not open for further replies.
Top