All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை நம்பி இங்கு கதை எழுத திரி அமைத்து கொடுத்த ஸ்ரீ மேம் க்கு என்னுடைய நன்றி. கதைகள் நிறைய படித்ததால் எனக்கும் கதை எழுத ஆவல் தோன்றியது. இது என்னுடைய முதல் கதை இதற்கு உங்கள் எல்லருடைய ஆதரவும் எனக்கு தேவை நிறை மற்றும் குறைகள் இருந்தால் எனக்கு எடுத்து சொல்லி உதவுங்கள். என்னுடைய கதையின் பெயர்
" என் நிஜமே நீ தானடி "
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் முதல் ஆத்தியாயம் வரும் திங்கள் அன்று பதிவ்விடப்படும். இன்று கதையின் நாயகன் மற்றும் நாயகி பற்றி சொல்கிறேன்.
நாயகன் : ஆதித்ய அருள்மொழி வர்மன்.
செல்லும் யாரும் மறுமுறை பார்க்க வைக்கும் அழகன். அனைவரையும் எடை போடும் கூர்மையான கண்கள். நினைத்தத்தை நடத்தி முடிக்கும் பிடிவாதக்ககாரன். மிகவும் கோவக்காரன்.யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிரானவன்.
நாயகி : ஆருந்ய வானதி ( ஆருந்ய= சூரியனின் முதல் கதிர் ; வானதி = வான் + நதி- வானில் பாயும் நதி இறங்கி மண்ணுக்கு வருகிறது )
மாநிறம் உடையவள். பேசும் கண்கள். நீளமான கூந்தல். கன்னத்தில் விழும் குழி அவளை மேலும் அழகாக காட்டும். அனைத்து விஷயங்களயும் நிதானமாக செய்பவள். மிகவும் பொறுமைசாலி.
இந்த இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் தான் இந்த கதை.
இன்னும் எவர் எல்லாம் இருக்கிறார்கள் என்று கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பல மதங்கள், பல மொழிகள், மற்றும் பல விதமான மக்கள் வாழும் நகரம், அழகான நகரமும் கூட.

அப்படிப்பட்ட சென்னையில் (மயிலாப்பூர்) அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில் மிகவும் பழைமையான பாரம்பரியம் கொண்ட சக்தி வாய்ந்த சிவன் கோவில்.(இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் காட்டப்பட்ட கோவில். இந்து தொன்மவிதியல் படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கி தவம் இருந்ததாகவும் அதனால் இந்த கோவில் அமைந்ததுஉள்ள பகுதியும் மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது).

அதிகாலை வேலையில் அந்த கோவிலுக்கு நிறைய மக்கள் வருகின்றனர். சிலர் கோவிலின் அழகை ரசிக்க வருகின்றனர். சிலர் தங்களின் மகிழ்ச்சியை இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் தெரிவிக்க வருவார்கள். சிலர் தங்கள் மனதில் உள்ள கவலையை இறைவனிடம் கூறுவதன் மூலம் மன அமைதியை பெற வருவார்கள். அப்படி ஒரு பெண் அந்த சிவனிடம் என்ன வேண்டுகிறாள் என்று பார்ப்போம்.

அந்த பெண்ணின் பெயர் ஷர்மிளா. அவள் பார்ப்பதற்க்கு அழகனவள் ஆகவும் பெரிய இடத்து பெண்ணாகவும் தோற்றம் அளித்தாள். அவள் தன் கண்களை மூடி மனதிற்குள் " கடவுளே நான் உன்கிட்ட கேட்கறது எல்லாம் ஒன்னு தான் என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகனும். அதுக்கு அவர நீ தான் சம்மதிக்க வைக்கனும். அதுக்கு எப்படியாவது எனக்கு உதவி பண்ணுங்க ஓரு அன்பான மனைவியா என் அண்ணன் கோவத்த குறைச்சி அவர் முகத்தில் சிரிப்பை வரவைக்கற ஒரு நல்ல குணம் உள்ளவஙக தான் என் அண்ணியா வரனும். அதுக்கு நீ தான் அருள் புறியனும்” என்று மனதார வேண்டிக் கொண்டாள்.

சாமியை தரிசனம் செய்த பிறகு கோவில் பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு வயதான பெண்மணி தலை சுற்றி மயங்கி கீழே விழ இருந்ததை பார்த்தவள் வேகமாக அவர் அருகில் செல்வதற்குள் வேறு ஒரு பெண் அவரை தாங்கி பிடித்து பக்கத்தில் இருந்த மண்டபத்தில் அமர வைத்து மயக்கத்தை தெளிய வைத்துக் கொண்டிருந்தாள். அவர்களும் சற்று கண்களை திறந்து தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அவர்கள் அருகில் சென்ற ஷர்மியும் பக்கத்தில் வேகமாக சென்று தண்ணீர் வாங்கி வந்தாள்.
அதற்குள் அந்த பெண் செய்துக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.

ஷர்மிளா நீர் எடுத்து வருவதற்குள் தன் கையில் இருந்த தேங்காயயை உடைத்து கொடுத்து அவர்கள் பசியில் இருப்பதை உணர்ந்து வேண்டாம் என்று மறுக்க வாழைப்பழத்தாயும் சாப்பிட வைத்தாள். அந்த பெண்மணியும் நிதானம் அடைந்தவுடன் நன்றி தெரிவித்து ஆசிர்வாதம் செய்துவிட்டு சென்றார். அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த ஷர்மிளா அந்த பெண் புன்னகையுடன் திரும்பி கோவிலுக்கு வெளிப்புறம் செல்வதை பார்த்து, “ ஒரு நிமிஷம் நில்லுங்கள்”. என்றாள்.

தனக்கு பின்னால் கேட்ட குரலில் திரும்பியவள், “ சொல்லுங்க “ என்றாள்.

ஷர்மிளா” நீங்க இப்ப தான் சாமி கும்பிட வந்த மாதிரி இருந்து ஆன திரும்பி வெளிய போறிங்க”.

அதற்கு சிரித்த படியே, “ சாமிக்கு அர்ச்சனை செய்ய தான் வந்தேன். வந்த வேளை முடிஞ்சிடுச்சு அதான் கிலம்புரேன்” புன்னகையுடன் உறைத்தாள்.

அவள் கூறியதை கேட்டு ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஷர்மிளா வின் முக பாவனையை பர்த்தவள், “ உங்களுக்கு புறியலயா முடியாத ஒருத்தவங்களுக்கு நாம செய்ற உதவி அந்த கடவுளுக்கு தான் போய் சேரும். அதனால நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு நான் வரேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் சென்றதை பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் இந்த பெண் நம் அண்ணியாக வந்தாள் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவள் அறியமலேயே தோன்றியது. அடுத்த முறை காணும் போது நிச்சயம் அவர்கள் பெயரை கேட்க வேண்டும் என்று எண்ணியப்படி வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

நாம் சந்தித்த அந்த பெண் தான் நம் கதா நாயகி “ ஆருந்ய வானதி” – 25 வயதுடையவள். உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டவள். கண் எதிரே தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் உடையவள். ஓரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிப்ப்ரபுறிக்கிறாள். அவளுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை ஒரு தோழியை தவிர அவள் பெயர் மித்ரா. அவள் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கும் யாரும் இல்லை சிறு வயதில் ஆசிரமத்தில் வளர்ந்தவள். இப்போது இருவரும் ஒரு வீடு எடுத்து அதில் வசிக்கின்றனர். ஒருத்தர்க்கு எதாவது என்றால் இன்னாருவர் உயிரையும் குடுக்கும் அளவுக்கு ஒருத்தர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பும் பாசமமும் கொண்டவர்கள்.

கோவிலிருந்து வீட்டிற்க்கு கிளம்பிய ஷர்மிளாவின் கார் வர்மா பேலஸ் உள் நுழைந்தது. பெயருக்கு ஏற்றது போல் பிரம்மாண்டமான அரண்மனையை போல காட்சி அளித்தது. பார்ப்பவர்களுக்கு பணத்தின் செழுமையை சொல்லும். மொத்த வீடும் ரசனைகள் கொட்டி கிடக்கும் அழகிய அரண்மனை அது.

காரில் இருந்து இறங்கிய ஷர்மி வேகமாக வீட்டிற்குஉள் நுழைந்தாள். அப்போது

“ கோவில் இருந்து வர இவ்வளவு நேரமா ஷர்மி “ என்று கேட்டப்படி மேலிருந்து இறங்கி வந்தான் அவள் கணவன் ஷக்திவேல்.

அதற்கு அவள்,” வேண்டுதல் பெறுசு இல்லாயா அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு “ என்று கூறியப்படி அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

ஷ்க்தி,” அப்படி என்ன மா பெரிய வேண்டுதல் எனக்கு தெரியாம சொல்லு சொல்லு” என்றான் அவள் அருகில் வந்து அமர்ந்தபடி.

“ எல்லாம் உங்களுக்கு தெறிஞ்சது தான் அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்கனும்ன்னு சாமிக்கிட்ட வேண்டிட்டு வந்தேன்”.

அதைக் கேட்டு,” என்ன உன் அண்ணன் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லனும்னு வேண்டிக்கிட்டியா அது கொஞ்சம் கஷ்டம் தான் கடவுளே இதுக்கு பதில் தெரியாம முழிச்சிருப்பார் பாவம்” என்று கூறி சிரித்தான்.

அவன் சிரிப்பதை பார்த்து கடுப்பனவள்,” அவர் எனக்கு மட்டும் அண்ணன் இல்ல உங்களுக்கும் பெஸ்ட் ப்ர்ரெண்ட் நியாபகம் இருக்க. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு தெறிஞ்சகனும்”.

அவள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவன்,” ஏன் மா உனக்கு என் மேல உனக்கு இந்த கொலைவெறி. கல்யாணத்த பத்தி பேச்சு எடுத்தாலே எரிக்கற மாதிரி பக்குறான். போன தடவ உன் தாலிப் பாக்கியத்தால தப்பிச்சிட்டன் மறுப்படியும் என்னால முடியாது மா என்னை விட்ரு” என்று நெஞ்சில் கை வைத்தப்படி கூறினான்.

அவன் அருகில் நெருங்கி அமர்ந்து தாடையை பிடித்து கொஞ்சியப்படி,” என்னங்க நீங்களே இப்படி சொன்ன நான் என்ன பன்றது. அண்ணனுக்கு நம்மல விட்ட வேறு யார் இருக்க நாம்ம தான செய்யணும். என் செல்லம்ல எனக்காக இதக்கூட செய்ய மாட்டிங்காளா” சோகமாக முகத்தை வைத்தப்படி கூறினாள்.

அவள் கைகளை பிடித்தப்படி,” எனக்கும் அவன் ரொம்ப முக்கியம் தான். இருந்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.....உனக்காக நான் அவன் கிட்ட இன்னிக்கு பேசுரேன்” என்றான்.

“ என்ன பேசனும் என்கிட்ட” என்ற கம்பீரக் குரலில் கருப்பு நிற கோட்டு சூட்டில் இடத்து கையில் சில்வர் கலர் வாட்ச்சை சரி செய்தப்படி மாடிப்படியில் இறங்கி வந்தவனை இருவரும் திரும்பி எப்பவும் போல் இன்றும் அவனின் கம்பீரமான தோற்றத்தை ரசித்து பார்த்தனர். அவர்கள் இருவரையும் கூர்மையாக தன் பார்வையால் அளந்தப்படி அருகில் வந்து நின்றான். அப்படி வந்து நின்றது வேறு யாரும் இல்லை நம் கதா நாயகன் “ ஆதித்ய அருள்மொழி வர்மன் “.





நானாக நான் இல்லையே நீயாக

நான் ஆகிறேன்

நீராக நீரூற்றினால் வேறாக

நானாகிறேன்

கொடியாக நான் ஆகிறேன்

கிளையாய் நீ ஊன்று

செடியாக நானாகிறேன் நிலமாய்

நீ தாங்கு

வானத்து நிலவே வாசலில்

இறங்கு

வாசனை மலர்கள் உனக்கென

விரித்தேன்

கரிசல் காட்டு பூவே........



நிஜத்தை தேடும்.....




உங்களின் கருத்துக்களை மறக்காமல் “ என் நிஜமே நீ தானடி” கருத்து திரியில் பகிரிந்து கொள்ளுங்கள்......
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2


ஆதித்ய அருள்மொழி வர்மன்- 30 வயதுடைய அழகிய இலைஞன். வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ்-ன் M.D. தொழில் வட்டாரத்தில் அவனை அனைவரும் A.V என்று அழைப்பார்கள். அவர்கள் கம்பெனி கால் பாதிக்காத துறையே இல்லை அனைத்திலும் வெற்றியே. குடும்ப தொழில்கள் என இருந்தாலும் தனக்கென சொந்தமான உழைப்பில் ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்றும் தன்னுடைய தனித்துவத்தை நிருபிக்க வேண்டும் என்ற என்னத்தால் உருவானது தான் வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ். சிறிய நிறுவனமாக ஆரம்பித்து அவனுடைய கடின உழைப்பால் இப்பொது ஒரு பெரிய சாம்ராஜ்யம் ஆக நாடு முழுவதும் பரவியுள்ளது. தன் தந்தையின் இழப்பிற்கு பிறகு தன் குடும்ப தொழில்களையும் அவனின் நிறுவனத்தின் கீழ் வெற்றிகரமாக செயல்ப்பட்டு வருகிறது.தொழில் வட்டாரத்தில் A.V என்று கூறினால் தெரியாதவர் யாரும் இல்லை. அவனின் வேகம் கண்டு பிரம்மித்தவர்கள் அநேகம். அவனின் எதிரிகளுக்கு அவன் ஒரு சிம்ம சொப்பனம்.

அவனின் தங்கை ஷர்மிளா. தாய் தந்தை இருவருக்கு பிறகு அவனின் ஒரே உறவு அவள். அவளை விட முக்கியமான ஒருவன் அவன் நெருங்கிய நண்பன் ஷக்திவேல். அவனுக்கு என்று யாரும் இல்லை சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்தவன்.இருவரும் காதலிப்பதை தெரிந்தவுடன் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் திருமணம் செய்து வைத்து அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். ஓரே வீட்டில் இருந்தாலும் அவன் மனைவியின் தேவைகள் அனைத்தையும் தன் சம்ப்பாத்தியதில் தான் செய்வான். நண்பனுக்கு துணையாக அவனின் தொழில்களில் உதவியாக இருந்தாலும் அவனுகென சம்பளம் பெற்றுக்கொள்வான்.இதில் ஆதித்யாவிற்கு மகிழ்ச்சியே அவனின் சுய மரியாதையை கண்டு அவன் மிகவும் பெருமை அடைந்தான்.


இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம்……
“என்ன பேசனும் என் கிட்ட” என்றப்படி அவர்கள் அருகில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அவர்களை பார்த்தப்படி அமர்ந்தான்.அவனிடம் எப்படி விஷயத்தை சொல்வது என்று இருவரும் கைக்களை பிசைந்துக் கொண்டு இருந்தனர்.

இருவரையும் பார்த்தவன்,“ இரண்டு பேரும் அமைதியா இருந்த என்ன அர்த்தம். நீங்க இப்படி தான் இருப்பிங்கனா அதுக்கு எனக்கு பொறுமை இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று கூறியப்படி எழுந்தான்.
அவன் எழுந்த்ததை பார்த்த ஷக்தி வேகமாக அவன் அருகில் வந்து கையை பிடித்து நிறுத்தினான். பின்,” ஏன் டா அவசரப்பட்ற கொஞ்சம் நிதானமா கேட்ட தான் என்ன. நான் சொல்றத கேட்டு நீ கோவாப்பட மாட்டான்னு சொன்னாத்தான் நான் சொல்லுவன்”.

“ நீ சொல்றத பாத்தா நான் கோவப்பட்ற மாதிரி அப்படி என்ன விஷயம்” அவனை கூர்மையாக பார்த்தப்படி கேட்டான் .

“ பாத்தியா இப்போவே டென்ஷன் ஆகுற” என்று கூறி பாவமாக முகத்தை வைப்பதை பார்த்தவன்,” சரி கோவப்படமாட்டேன் சொல்லு ஆனா சீக்கிரமா சொல்லு” என்றான்.

“ அது…..அது வேற எதுவும்…… இல்லடா எல்லாம்…..உன் கல்யாண …….விஷயம் தான் “ என்று கொஞ்சம் பயந்தப்படி கூறினான்.அதை கேட்டு கடுப்பாகியவன் ,” உங்களுக்கு வேற வேலையே இல்லயா எப்போவும் இதப்பத்தியே பேசிட்டு இருக்கீங்க.ஒரு தடவ சொன்னா புரியாது. எனக்கு இது எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல. இதுவே கடைசியா இருக்கட்டும் இனிமே இதப்பத்தி பேசக்கூடாது” என்று கோவாமாக அவர்கள் இருவரையும் பார்த்து கத்தினான்.அவன் கத்தியதை கேட்டவன்,’ இவன எப்படி சமாதானம் பண்ணி ஒத்துக்க வைகறதுன்னு தெறிலயே’என்று குழப்பமாக அவனை பார்த்தான் ஷக்தி.
அவன் கிளம்பி வெளியே செல்வதை பார்த்த ஷர்மிளா,” ஒரு நிமிஷம் அண்ணா “ என்றாள். அவள் குரலில் திரும்பி அசையாது அவளை பார்த்தப்படி நின்றான். அவன் அமைதியாக நிற்ப்பதை பார்த்தவள் அவன் அருகில் சென்று,” அண்ணா ஏன் இப்படி பண்றிங்க.எங்களுக்கு நீங்க எல்லத்தையும் பார்த்து பார்த்து செய்றிங்க ஆன எங்கள ஏன் எதுவும் செய்ய விட மாற்றிங்க. நீங்க தனியா இப்டி இறுக்கமா இருக்கறத பாக்க கஷ்டமா இருக்கு. நம்ம அம்மா இருந்திருந்தா உங்கள இத்தனை நாள் தனியா இருக்க விட்டு இருப்பாங்கள சொல்லுங்க அண்ணா. எனக்கும் உங்க கல்யாணத்த பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு ப்ளீஸ் அண்ணா. உன் முகத்துல நான் சந்தோஷத்த பாக்கணும். நீங்களும் குடும்பமா இருக்கறத பாக்கம எங் ரெண்டு பேரால நிம்மதியா வாழ முடியாது. உங்களுக்கு அதான் வேணும்னா உங்க விருப்பம் போல இருங்க” என்று அழுதாள். ஷக்தியும் அதை ஆமொதித்து அவளை அணைத்து சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.

ஷர்மி கூறியதையும் அவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்தவன் திருமணம் என்ற சொல் எழும் போது எல்லாம் அவன் மனதில் எப்பவும் தோன்றும் அழகிய பெண்ணின் முகம் சிரித்தப்படியே இப்பவும் தோன்றியதை கண்களை மூடி சிறிது நேரம் சிந்தித்தவன். ஓரு முடிவோடு இருவரையும் பார்த்து,” சரி நான் கல்யாணத்துக்கு ஒதுக்கறேன். ஆனா எனக்கானவள நேர்ல பாத்தவுடனே நானே சொல்றேன் அது வரைக்கும் இதப்பத்தி நீங்க பேசக்கூடாது” என்று கூறிவிட்டு நிற்க்காமல் வேகமாக டிரைவரை காரை எடுக்க சொல்லி சென்று விட்டான். ஷக்தி,’ அதான இவன் உடனே ஒத்துக்கிட்ட உலகம் அழிச்சிடாது’ என்று மனதில் நினைத்தவன். பின் இதை வெளியே சொல்லி யாரு அவனிடம் வாங்கிக் கட்டி கொள்வது என்ற பயம் தான்.
அவன் டிரைவரை காரை வேகமாக எடுத்துக் சொல்லி சென்ற வேகத்திலேயே அவனின் கோவத்தை இருவருக்கும் உணர்த்தியது. அவன் சென்றதை உறுதிப்படுதியவன், அப்பாட என்று கூறியப்படி சோபாவில் அமர்ந்து ஷர்மியையும் கையைப் பிடித்து அமர வைத்தான் ,” ஆனாலும் உன் அண்ணன் ரொம்ப அழுத்தக்காரன் தான். கொஞ்ச நேரம் பேசறத்துகே நமக்கு நாக்கு தள்ளுது. அவனுக்கு மனைவியா வர போர பொண்ணு ரொம்பப் பாவம்” என்று கூறி சிரித்தான். சிரித்தவனை அங்கிருந்த பில்லோவை வைத்து மொத்தி விட்டு” என் அண்ணன் மாதிரி ஒறுத்தர் கணவனா கிடைக்க குடுத்து வச்சிருக்கனும்” என்றாள். “ ஆனா உன் அண்ணன் மேல கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு அவன் மனசுல எதையோ வைச்சிக்கிட்டு தான் இப்படி சொல்லிருக்கான். அது என்னன்னு கண்டுபிடிக்கறேன்” என்றான். பிறகு நேரம் ஆவதை உணர்ந்து ஆபீஸ்க்கு கிளம்பி சென்றான்.


வானதியின் இல்லம்

கோவிலிருந்து வீட்டுக்கு வந்த வானதியை போனில் கத்திக் கொண்டு இருந்த மித்ராவின் குரல் தான் வரவேற்றது. அவர்கள் இருவரும் ரெண்டு அறை கொண்ட அபார்ட்மென்டில் வசிக்கின்றனர்.
“ ஏன்டி காலைலையே இப்படி கத்திட்டு இருக்க. உன் சத்தம் வெளிய வரைக்கும் கேக்குது” என்று கூறியப்படி வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் வந்தவுடன் கைப்பேசியை அனைத்து விட்டு அவள் அருகில் வந்தவள்,” ஏன் இவ்வளவு நேரம் ஆரூ நான் உனக்காக சாப்பிடாம வெயிட் பண்றேன் தெரியுமா வேலைக்கு போக வேண்டாமா. வா சாப்பிடலாம்” என்றாள். அவள் பசியையும் நேரம் ஆவதையும் உனர்ந்தவள் வேகமாக சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிவிட்டு அவளை அழைத்தாள். இருவரும் அவர்கள் வேலையை பற்றியும் வீட்டிற்கு வந்தவுடன் என்னனென்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். பிறகு இருவரும் அவர்கள் டூவீலரில் வேலைக்கு சென்றனர்.


இங்கு காரில் சென்று கொண்டிருந்த ஆதித்யா வின் மனத்தில் சற்று முன்பு நடந்த உரையாடலே ஒடிக்கொண்டிருந்தது. டிரைவர் வண்டி ஓட்ட பின்னாடி இருக்கையில் அமர்ந்திருந்தவன் மனமோ,’ உன்ன நான் சந்திச்சி மூன்று வருஷம் அயிடுச்சி ஆனா இன்னும் என்னால உன்ன மறக்க முடியல. அப்ப நான் அத ஒரு சாதாரண சம்பவம்ன்னு நினைச்சேன். அதுக்கு அப்பறம் அதப்பத்தி நினைக்க கூடாதுன்னு நினைச்சேன். இப்போ உன்ன நினைக்காத நாள் இல்ல. இப்போ கூட கல்யாணம் என்ற வார்த்தைய கேட்டாலே உன் முகம் தான் கண்ணு முன்னாடி வருது நியாயமா எனக்கு உன் மேல கோவம் தான் வரனும் ஏனா இது என் இயல்பு இல்ல. அதுக்கு பதிலா உன்ன திரும்பவும் பாக்கணும்ன்னு தோனுது. உனக்கும் என்ன மாதிரி உன் மனசுல எண்ணம் இருக்குமான்னு தெரில. எனக்கு உன் மேல இருக்க இந்த உணர்வுக்கு பேர் என்னன்னு தெரில. அதனால இன்னும் ரெண்டு நாள்ல நீ கண்ணுல பட்டுட்டா நீ எனக்கு சொந்தமானவள்ன்னு அர்த்தம். அதுக்கு அப்புறம் உன்ன நான் மிஸ் பண்ணமாட்டேன். இதுக்கு மேல என்னால இந்த விஷயத்துல குழப்பமா சுத்த முடியாது பாக்கலாம் என்ன நடக்குதுன்னு ‘ என்று கண்கள் இரண்டையும் மூடியப்படி சிந்தித்துக் கொண்டு இருந்தான்.
கார் ஒரு ட்ராஃப்பிக் சிக்கனலில் நின்றது. தன்னை பற்றி ஒருவன் தீவிரமாக நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் அவன் கார் பக்கத்திலயே தன் டூவிலரை நிறுத்தினாள் வானதி.
அவன் யாரைப்பார்க்க வேண்டும் என்று நினைத்தானோ அவள் இருந்த பக்கம் காருக்குள் கண்கள் மூடியப்படி அமர்ந்திருந்தான் ஆதித்யா.
இருவரும் சந்திப்பர்களா???

நெருங்கும் போது அகப்படாமல்

பறந்து போகிறாய்

நிழலை போல தொடரும் என்னை

மறந்து போகிறாய்

ஆஹா உனக்கு யாரும் தடையும்

இங்கு விதிப்பதில்லையே

ஆஹா எனக்கும் கூட

அடிமை கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன்

உனையே சிந்தித்தேன்

எனை நீ இணை சேரும்

திருநாள் வருமோ........

நிஜத்தை தேடும்...


இந்த கதையை பற்றிய உங்கள்

கருத்துக்களை “ என் நிஜமே நீ தானடி

“ கருத்து திரியில் பகிர்ந்து

கொள்ளுங்கள்....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3


தன் காரில் அமர்ந்திருந்த ஆதித்யாவின் மனதில் திடீரென்று ஒரு விதமான உணர்வு தனக்கு நெருக்கமான ஒன்று அருகில் இருப்பதுப் போல் தோன்ற அவன் வெளியே பார்ப்பதற்குள் ட்ராஃப்பிக் சரியாவதர்க்கும் சரியாக இருந்தது. வானதி யும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுவிட்டாள். அவனின் காரும் எதிர் திசையில் நகர்ந்தது ஆகையால் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு....

வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ்....

சென்னையில் முக்கியமான இடத்தில் மிக பிரம்மாண்டமாக அமைந்தூள்ள பல கட்டங்களை கொண்ட அலுவலகம் அது. ஆதித்யா வின் கார் அந்தக் கட்டடத்தின் முன் நின்றது. அவன் வரும் வரை பேச்சு சத்தங்காலால் நிறைந்திருந்த இடம் அவன் காலடி ஓசையை அறிந்து அமைதியான இடமாக மாறியது .

அவனின் கம்பீரமான நடையில் அனைவரும் ரசனையுடன் காலை வணக்கத்தை கூறினர். அதை சிறிய தலையசைப்புடன் ஏற்றவன் அங்கிருந்து நகர்ந்து தன் கேபின் க்கு சென்றான். காலையில் இருந்த மனநிலையை உடனே மாற்றிக் கொண்டான் காரணம் அவனை பொறுத்தவரை எந்த ஒரு விஷயமும் தன் வேலையை பாதிக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பவன் . அவன் சென்ற சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே நுழைந்தான் கதிர். அவனின் பி.ஏ. தன்னுடைய பாஸ்சின் பரம விசிறி. முதலில் அவனின் வேகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் தடுமாறினாலும் இப்போது அவனின் கண் அசைவில் அனைத்தும் புரிந்து கொள்ளும் அளவிற்கு முன்னேறியுள்ளான். ஆதித்யா வின் புத்தி கூர்மையால் இந்த சிறிய வயதில் எட்டி இருக்கும் உயரத்தை கண்டு அவனால் பிரமிக்காமல் இருக்க முடிய வில்லை. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பொறுமையாகவும் எதிலும் அதிரடியாகவும் எடுக்கும் முடிவுகள் எல்லாம் ஆச்சர்யப்படுத்தும் ஆதலால் அவன் கூறுவதை ஏன் என்று கேட்காமல் செய்ய கூடியவன். கதிரை பொறுத்தவரை ஆதித்யா ஒரு ஹீரோ மற்றும் குரு எல்லாமே அவன் தான்.

நிகழ்காலத்திற்கு வருவோம்......

கேபின் குள் நுழைந்த கதிர்,” குட் மோர்னிங் பாஸ் “ என்றான். அவனின் குரலில் நிமிர்ந்து அவனை பார்த்து தலையசைத்தவன் திரும்பவும் தன் வேலையை பார்த்து கொண்டு இருந்தான்.

கதிர்,” பாஸ் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்”.

அவனை கூறுவதை கேட்டவன் தான் செய்து கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு தன்னுடைய சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன், “ அந்த வெளிநாட்டு ப்ராஜெக்ட் நமக்கு ஒகே ஆயிடுச்சு அதான கதிர் “.

“ பாஸ் எப்படி பாஸ் எனக்கு இப்போ தான் நியூஸ் வந்தது அதுக்குள்ள உங்களுக்கு தெறிஞ்சது” என்று ஆச்சர்யம் நீங்காமல் கேட்டான்.

அதற்கு சிறிதும் அசராமல்,” நாலா பக்கமும் நமக்கு கண்ணு இருக்கணும். அது மட்டும் இல்லாம ஒரு விஷயத்துல இறங்கிட்டா நாம தான் அதுல ஜெய்க்கனும். தொழில்ன்னு வந்துட்டா இங்க வெற்றிக்கு மட்டும் தான் இடம்” என்று கூறிவிட்டு தான் வேலையை தொடர்ந்த்தான்.

கதிர்,” பாஸ் அந்த எஸ்.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நமக்கு இந்த ப்ராஜெக்ட் ல நிறைய ப்ரொப்லம் கிரியேட் பன்னாங்க” என்று தயங்கிப்படி கூறினான்.
அதைக் கேட்டு மர்மமாக புன்னகைத்தவனை பார்த்தவன்,’ அதான இவர் ஏன் இன்னும் இந்த விஷயத்துல எதுவும் பண்ணலன்னு நினைச்சன் ஏதோ செஞ்சிட்டு தான் வந்து இருக்கார் போல’ என்று நினைத்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவன்,” என்ன கதிர் நமக்கு பிராச்சனை பண்ணி இருக்காங்கன்னு தெறிஞ்சும் இவன் ஒன்னும் பண்ணலயே ன்னு யோசிக்கற போல” என்று கூறியவனை பார்த்து ஆமாம் என்பது போல் தலை அசைத்தவனை பார்த்து சிரித்தபடியே,” நான் அவ்வளவு நல்லவன் இல்லயே நம்ம டிசைன் வேற மாதிரி சோ நான் என்ன பண்ணன்னு தெறிஞ்சிக்கனும்ன்னா ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு என்ன பாக்க ஒருத்தர் இப்போ வருவார். ஏற்கனவே ரிசாப்ஷன் லா சொல்லிட்டு தான் வந்தேன். சோ வெயிட் அண்ட் வாட்ச் “ என்றான்.

அவன் கூறியது போல் ஒரு நிமிடம் முடிவதற்குள் எஸ்.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி. விஷ்வநாதன் வேகமாக அவன் அறைக்குள் நுழைந்தார். அவரை பார்த்தவன் ஆர்ப்பாட்டமாக வரவேற்றான்,” வாங்க மிஸ்டர். விஷ்வநாதன் என்ன திடீர்ன்னு என் ஆபீஸ்க்கு வந்து இருக்கீங்க உக்காருங்க” என்றான்.

இருக்கையில் அமர்ந்தவர்,” எதுக்காக இப்படி செஞ்ச வர்மா உன்னால தான் எனக்கு கிடைக்க வேண்டிய ப்ராஜெக்ட் என் கைய விட்டு போயிருக்கு ” என்று கோவமாக கேட்டார்.

அதற்கு அவன்,” நான் என்ன பண்ணநேன் ஒன்னும் பண்ணலயே சார்” என்றான்.

“ எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா வர்மா ப்ராஜெக்ட் க்கு நாங்க செஞ்ச கோட்டேஷன நீ தான் மாத்தி வெச்சிருக்க. எதுக்காக இப்டி பண்ணா சொல்லு” என்று ஆவேசமாகப் கேட்டார். இதை கேட்டு அதிர்ச்சியுடன் தன் முதலாளியை பாத்தான் கதிர்.
அதற்கு அமைதியாக அவரை பார்த்தவன்,” நீங்க எனக்கு என்ன செய்யணும்ன்னு நினைச்சிங்கலோ அத தான் நான் உங்களுக்கு திருப்பி செஞ்சேன். என்ன புரிலயா, என் கைய வெச்சே என்னுடைய கண்ணா குத்த பார்த்த நான் சும்மா இருப்பேன்ன்னு நீங்க எப்ப்டி நினைச்சிங்க” என்று கண்களில் கோவத்தையும் குரலில் அமைதியையுடனும் கேட்டான் . இதைக் கேட்டவர் பயத்துடன் அவனை பார்த்தார்.


“ இது என்னோட கோட்டை என் அனுமதி இல்லாமல் காத்து கூட உள்ள வரவும் முடியாது வெளிய போகவும் முடியாது. அப்படி இருக்கும போது நீங்க என் ஆபீஸ் ல இருக்குராவன விலைக்கு வாங்கி எனக்கு எதிரா எல்லாம் வேலையும் செய்ய வைக்கனும்ன்னு நினைச்சிங்க. ஆனா நடந்தது வேற. உங்க முயற்சி வீணா போயிட கூடாதுன்னு தான் கொஞ்சம் விட்டு புடிச்சேன். அப்புறம் ஏன் அவன் உங்களுக்கு ஹெல்ப் பண்ணானன்னு பாக்குறிங்கலா அவன் என்னோட விஸ்வாசி. நான் சொல்றத தான் செய்வான். சும்மா சொல்ல கூடாது சொன்னத விட சிறப்பா செஞ்சிட்டான்.” அவரை துளைப்பதை போல் பார்த்தப்படி கூறினான்.

அவனுக்கு அனைத்தும் தெரிந்ததை எண்ணி அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தவர் கைப்பேசி ஒலித்தது. அதைக் கேட்ட ஆதித்யா,” அட்டென்ட் பண்ணி பேசுங்க சார் என்னோட ஸ்பெஷல் கிப்ட் இது தான்” என்று டெபில்லில் இருந்த வெயிட்டை உருட்டியப்படி கூறினான். தன் நெற்றியில் பூத்த வியர்வையை துடைத்தப்படி போனை எடுத்து காதில் வைத்தவர் அந்தப் பக்கம் கூறிய செய்தியை கேட்டு அதிர்ச்சியுடன் போனை கட் செய்து விட்டு கோவமாக,” வர்மா. ..” என்று கத்தியப்படி எழுந்த்தார்.

அவன் ஒருப் பக்க புருவத்தை உயர்த்தியப்படி பார்த்த பார்வையில் அமைதியாக ,” நான் யாருன்னு தெரியாம என்கிட்ட மோதிட்ட வர்மா. கூடிய சிக்கிரம் நான் யாருன்னு காட்டறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

அதே நேரம் அவர் சென்ற பிறகு வேகமாக உள்ளே வந்த ஷக்தி ,” ஏன்டா இப்படி பண்ண அந்த ஆள் கட்டுன பில்டிங் சரியா கட்டாதத்தால இடுஞ்சி விழுந்துடுச்சின்னு நியூஸ்ல சொல்றங்க. ஆனா இத செஞ்சது நீ தான் எனக்கு நல்லா தெரியும். பாவம் டா இது நாலா அவருக்கு பயங்கர லாஸ் . இந்த ப்ராஜெக்ட் கிடைக்காததே அவருக்கு தண்டனை தான அப்புறம் ஏன்டா இப்படி பண்ண “ என்று அவன் கூறியதைக் கேட்டு கொண்டிருந்த கதிர்,’ இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே ‘ என்று கண்களை விரித்து ஆச்சர்யமாக ஆதியை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்கு சிறிதும் அசராமல்,” யாருக்கும் எதுவும் ஆகாத மாதிரி தான் செஞ்ச்சேன் சோ நீ பீல் பண்ணாத அப்பாவி மக்கள நான் ஒன்னும் செய்ய மாட்டேன். இந்த ஆதித்ய அருள்மொழி வர்மன் கிட்ட பகைச்சிகிட்ட என்ன நடக்கும்ன்னு தெரிய வேண்டாம். எற்கனவே அவர் செஞ்சதூக்கும் தான் இப்போ சின்ன சாம்பிள் கமிச்சென். அத விடு புது ப்ராஜெக்ட் நீ தான் பாத்துக்கனும். சோ கதிர் நாளைக்கு காலைல மீட்டிங் ஏற்பாடு பண்ணிடு” என்றவன் அத்துடன் பேச்சுவார்த்தை முடிந்தது என அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

இவன் கிட்ட பேசி எதுவும் ஆகா போறது இல்லை என்று புரிந்தவன், கதிரை அழைத்து கொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்.

விஸ்வநாதன் இல்லம்....

தன் வீட்டிற்க்கு வந்தவர் கோவமாக அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தப்படி ஹாலில் நடந்து கொண்டிருந்தவரை பார்த்த அவர் மனைவி சந்திரிகா,” இங்க வந்து கோவமா நடந்து என்ன பன்றது. அவன் அப்பா முதல பிரச்சனையா இருந்தார். இப்போ இவன் பண்றான். நான் அப்பவே சொன்னேன் அவன முதல்ல முடிங்கன்னு இப்போ அவன் நம்மள மொத்தமா முடிச்சிடுவான் போல. நமக்கு இது பெரிய லாஸ். இதை எப்படியாவது சரி பண்ணிடாலாம் ஆனா இனிமே இப்படி நடக்க கூடாதுன்னா நம்ம எதாவது செய்யணும். பேசமா அவன முடிச்சிடுங்க” என்று கோவமாக கத்தினார்.

அவர் கூறியதைக் கேட்டு “ அம்மா “ என்று கத்தியப்படி கீழ் இறங்கி வந்தவள். அவர்கள் இருவரின் மகள் சாரா.

சாரா,” அம்மா நீங்க என்ன பேசுறிங்க நினைச்ச உடனே தூக்க அவர் சாதாரண ஆள் ன்னு நினைச்சிங்கல. அவர் ஒரு காட்டு தீ மாதிரி கிட்ட போன நம்ம தான் சாம்பல் ஆயிடுவோம் . ஆனா எனக்கு அந்த கோவம் திமிர் அப்பறம் அவரோட கம்பீரம் இது.....இது எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு. எனக்கு அவரு வேணும் அம்மா . அவர நான் கல்யாணம் பண்ணி கிட்ட அவரோட சொத்து எல்லாம் நமக்கு தான் சொந்தம். அதுக்கு அப்பறம் எந்த பிரச்சனையும் நமக்கு வராது “ என்று சிரித்தப்படி கூறினாள்.

அதைக் கேட்ட விஸ்வநாதன்,” வேண்டாம் சாரா இது சரி வராது. அவன பத்தி உனக்கு தெரியாது பொண்ணுங்க விஷயத்துலயும் அவன் நெருப்பு தான். இது வரைக்கும் யாராலயும் அவன் கிட்ட கூட நெருங்க முடியல. அதனால நான் சொல்றத கேளு உனக்கு வேற எடத்துல நான் மாப்பிள்ளை பாக்கரேன்.” என்றார்.

அதைக் கேட்ட சந்திரிகா,” நீங்க என்ன பேசுறிங்க. நம்ம பொண்ணு சொல்றது தான் சரி . சாரா நீ எப்படியாவது அவன உன்ன காதலிக்க வச்சிடு அப்பறம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிட்ட அவனோட மொத்த சொத்தும் நமக்கு தான். ஓரே கல்லுல ரெண்டு மாங்காய்” என்று கூறி சிரித்தார்.

தன் அன்னையை கட்டிப்பிடித்தவள்,” அத நான் பாத்துக்கறேன் அம்மா அவர் சொத்தும் சரி அவரும் சரி எனக்கு தான் சொந்தம். முக்கியமா ,அவர் மனைவி என்ற அடையாளம் எனக்கு வேணும். அதுக்கு அப்பறம் யாராலயும் நம்மல ஒண்ணும் பண்ண முடியாது. அந்த ஷர்மிளா என் ப்ரெண்ட் தான் சோ நான் பாத்துக்கறேன் “ என்று கூறி சென்று விட்டாள்.

இவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட விஸ்வநாதன் கவலை கொண்டார். தொழிலில் முதலில் வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு. அதற்காக அவர் நிறைய விஷயங்கள் செய்வது உண்டு ஆனால் பணத்துக்கு அவர் அடிமை அல்ல. தன்னுடைய பெண்ணின் வாழ்க்கையும் இதில் இருக்கிறது என்ற எண்ணம் அவரை சிந்திக்க வைத்தது. இவர்களை எப்படி தடுப்பது என்ற சிந்தனையில் அமர்ந்து இருந்தார். அந்த நேரம் சந்திரிகாவின் கைப்பேசி ஒலித்தது.

அதை பார்த்தவர் உடனே வேகமாக அங்கிருந்து வெளியே சென்றார்.
யாருக்கும் தெரியாமல் வெளியே வந்தவர்,” என்ன ஆச்சி அந்த பொண்ண பத்தி எதாவது தெறிஞ்சிதா “ என்று கேட்டார் . அந்த பக்கம் கூறியதை கேட்டதும் கோவமாக,” எத்தனை நாள் தேடிறிங்க ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகல. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது அவ எங்க இருக்கான்னு எனக்கு தெறியனும். காசு வாங்குறிங்கல இந்த வேலையை முடிக்கனும் இல்ல நான் என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது” என்று கத்தி விட்டு போனை வைத்தவர் மனதில்,’ நீ எங்க இருக்கன்னு தெறியட்டும் அது தான் உனக்கு கடைசி நாள். நீ உயிரோடு இருந்த என் வாழ்க்கைக்கு அங்கீகாரம் இல்லாமல் போயிடும். என் வாழ்க்கையில ஒரு பிரச்சனை னா அதுக்கு யார் காரணமா இருந்தாலும் நான் அவங்கள விட மாட்டேன் ’ நினைத்தவர் அங்கிருந்து உள்ளே சென்றார்.

இரவு நேரம்...

வானதி இல்லம்
இரவு உணவு உண்டப்பின் இருவரும் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது வானதி,” மித்து நாளைக்கு சண்டே லீவு தான நம்ம ஆசிரமத்துக்கு போயிட்டு வரலாமா..” என்று கேட்டவளை பாவமாக பார்த்தவள் ,” நாளைக்கு எனக்கு ஆபீஸ் இருக்கு ஆரூ. புது ப்ராஜெக்ட் சைன் பண்ணிருக்கு அதனால நாளைக்கு காலைல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நானே அந்த கடுப்புல தான் இருக்கேன் தெரியுமா. எனக்கும் உன் கூட ஒண்ண வரனும்ன்னு ஆசையா இருக்கு ” என்று சோகமாக கூறினாள்.

அவள் முகம் சோகமாக இருப்பதை பார்த்தவள், “ இதுக்கு எல்லாம் எதுக்கு சோகமா இருக்க இப்போ என்ன காலைல தான மீட்டிங் அது முடிஞ்ச உடனே நான் உன்ன வந்து பிக்கப் பண்ணிக்குறேன். நாம அப்படியே சாப்புட்டு ஆசிரமத்துக்கு போலாம். ஓகே வா “ என்று சொன்ன உடன் மித்ரா அவளை நெருங்கி வந்து கட்டியனைத்தவள், “ ஆரூ நீ ரொம்ப ஸ்வீட். எப்படி எல்லாம் பிரச்சனைக்கும் உடனே ஒரு வழிய சொல்லிடுர “ என்று அவளை பார்த்துக் கேட்டாள்.

அவளை சிரிப்புடன் கட்டியனைத்தவள், “ அது எல்லாம் அப்படி தான். இப்போத்தான் வழி கிடைச்சிருச்சில சந்தோஷமா இரு. நீ எப்பவும் சிரிச்சிடே இருக்கணும் அது தான் எனக்கு வேணும் “ என்றவளை முகத்தில் சிரிப்புடன் பார்த்தாள்.

மித்ரா, “ உன்ன மாதிரி ஒரு ப்ரென்ட் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும். நீ எப்பவும் என் கூடவே இருக்கணும் இருப்பல “ கண்ணீரோடு அவளை பார்த்தவளின் கண்ணீரை துடைத்து விட்டு, “ எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்க. நான் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன் “ என்றாள்.

சூழ்நிலையை மாற்றுவதற்காக மித்ரா, “ எல்லாத்துக்கும் என் பாஸ் தான் காரணம் அவருக்கு தான் பிஸ்னெஸ் தவிற வேற எதுவும் தெரியாது. மத்தவங்கலையும் அப்படி நினைச்சா என்ன பன்றது. சரியான ஹிட்லர். யார் கூடயும் பேசவே மாட்டார். அவர் இப்படினா பி. எ ன்னு ஒருத்தன் இருக்கானே அவன் பேசியே கொல்லுவான்” என்று புலம்பியவளை கண்டு சிரித்தவளை பார்த்து மித்ராவும் சேர்ந்து சிரித்தாள். அவள் பேசுவதை வைத்தே தெரிந்திருக்கும் அவள் ஆதித்யாவின் கம்பெனியில் தான் வேலை செய்கிறாள். பிறகு நேரம் ஆவதை உணர்ந்தவர்கள் உறங்க சென்றனர்.

வர்மா பேலஸ்

இரவு நேரம் தன்னுடைய அறையில் உள்ள கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் எதிரில் தன் கையில் வரைந்து பெரிதாக மாட்டப்பட்டு இருந்த போட்டோவில் சிரித்தப்படி இருப்பவளை கண் இமைக்காமல் பார்த்தவன் , “ உன்ன விட அழகான பொண்ணுங்களை நான் பார்த்து இருக்கேன். யாரோட முகமும் என் மனசுல பதிஞ்சது இல்ல ஆனா உன்னோட முகத்தையும் உன்னயும் என்னால மறக்கவே முடில. என் மனசுல இருக்க உணர்வு என்னன்னு தெறிஞ்சிக்க நான் வச்ச ரெண்டு நாள் கெடுல ஒரு நாள் முடிஞ்சி போச்சி இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. நாளைக்கு நீ என் கண்ணுல படனும்ன்னு தான் நான் ஆசை பட்றேன். ஒரு வேலை உன்ன நான் பாக்கலனா கூட எப்படியாவது உன்ன கண்டுபிடிச்சி என் கூடவே வச்சிக்கனும்ன்னு தோணுது. எனக்கு என்ன பன்றதுன்னு தெரியல நாளைய விடியலுக்காக நான் காத்துட்டு இருக்கேன். என்னை ஏமாத்திடாம நாளைக்கு என் கண் முன்னாடி வந்துடு “ என்று பேசியப்படியே உறங்கிவிட்டான். தன் கண்ணில் ஆசையோடும் காதலோடும் வெகு நேரம் அவன் பேசிக் கொண்டு இருந்ததை அவனே அறியவில்லை.

நாளைய விடியலில் இருவரது வாழ்க்கையில் நடக்க போவது என்ன..... இருவரும் சந்திப்பார்களா...... என்று பொருத்திருந்து பார்ப்போம்.......

நான்கு கண்ணில் இன்று ஒரு

காட்சியானது...

வானம் காற்று பூமி இவை

சாட்சியானது.....

நான் உன்னை பார்த்தது

பூர்வஜென்ம பந்தம்...

நீண்ட நாள் நினைவிலே

வாழும் இந்த சொந்தம்....

நான் இனி நீ

நீ இனி நான்...

வாழ்வோம் வா கண்ணே....

நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது.....

இரவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது......

நிஜத்தை தேடும்.....



உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்து திரியில் பகிர்ந்து

கொள்ளுங்கள்.....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4


சூரியன் உதயமாகும் தருணம் பல வண்ணங்களை வானமெங்கும் வாரியிறைத்து வர்ணஜாலத்தை நிகழ்த்தி விட்டு செல்லும் அற்புதமான நிகழ்வு அது. நம்முடன் கண்ணாமூச்சி விளையாடுவதில் அவருக்கு நிகர் எவரும் இல்லை. அதிக்காலை வேலையில் மெல்ல மெல்ல மலைக்களுக்கு பின்னாலிருந்தும் கடல் அலைக்களில் இருந்தும் எட்டி பார்த்து சிரிக்கும் சூரியன் உலகத்தையே அழகு மிளிர செய்யும் சக்தி வாய்ந்தது. அப்படிப்பட்ட சூரியனின் கதிர்கள் ஆதித்யாவின் அறைக்குள் பிரவேசித்து தன்னுடைய வரவை அவனுக்கு உறைத்தார். தன் முகத்தில் படிந்த வெளிச்சத்தில் வேகமாக எழுந்து கடிகாரத்தை பார்த்தவன் கண்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன்னெனில் எப்போதும் அவன் எழும் நேரத்தை விட தாமதம் ஆகியது தான் காரணம் அப்படி ஒரு நிம்மதியான உறக்கம் வெகு நாட்களுக்கு பிறகு. நேரமாவதை அறிந்தவன் வேகமாக எழுந்து காலை கடன்களை முடித்து வந்தான். அவனின் வேலைகளை மற்றவர்கள் செய்வது அவனுக்கு பிடிக்காது. அவனுக்கு தேவையானதை அவனே செய்து கொள்வான். உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றான். சிறிது நேரத்திற்குப் பிறகு குளிக்க சென்றான். பின்பு குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் மீட்டிங் செல்வதற்கு எற்றவாரு எடுத்து வைத்த உடையை அணிந்து தயாரானவன் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்தான். அவனின் உள்ளம் என்றும் இல்லாத உற்சாகத்துடனும் சந்தோஷத்துடன் இருப்பதைப் போல் உணர்ந்தான். அதை அவனின் முகமும் பிரதிபலிப்பதைப் போல் இருந்தது . முகத்தில் தோன்றிய சின்ன சிரிப்போடு கீழே இறங்கி வந்தான் .

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ஷக்தி, “ வேகமா அந்த இட்லியை தட்டு ல வை மா. அவன் வந்துற போறான். ஏற்கனவே லேட் அயிடுச்சு அதனால என்ன சாப்பிட கூட விட மாட்டான் “ என்று புலம்பியபடி தன் தட்டில் வைக்க பட்ட இட்லியை கையில் எடுத்தான்.

சரியாக அதே நேரம் கீழே வந்தவன் ஷக்தியின் அருகில் வந்து அவன் கையை பிடித்தான் , “ மீட்டிங் லேட் அயிடுச்சுனா வந்து கூப்பிட மாட்டியா. இங்க உக்காந்து சாப்பிட்டு இருக்க. உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்க “ என்று திட்டியவனையும் தட்டையும் பாவமாக பார்த்து கொண்டிருந்தான். அவனின் முகப்பாவத்தை பார்த்த அண்ணன் தங்கை இருவரும் சிரித்தனர். அவர்கள் இருவரும் நகைப்பதை கண்டு முறைத்தவன் ஷர்மியின் புறம் திரும்பி, “ உன் புருஷன சாப்பிட விடாம உன் அண்ணன் திட்டிட்டு இருக்கான் நீ கேள்வி கேக்காம அவன் கூட சேர்ந்து சிரிச்சிட்டு இருக்க “ என்று கேட்டவனை, “ என் அண்ணன் என்ன பண்ணாலும் சரியா தான் இருக்கும். நான் என் அண்ணன் பக்கம் தான். சீக்கிரம் அவர் கூட கிளம்புங்க “ என்று அவனை அவரை அவசரப்படுத்தியவளை பார்த்தவன் ‘ அண்ணன் தங்கை ரெண்டு பேருக்கும் அப்படி என் மேல என்ன காண்டுன்னு தெரிலயே ‘ நினைத்தவனை, “ சரி ரொம்ப வருத்தப்படாத நான் ஹால்ல வெயிட் பன்றேன் சீக்கிரம் சாப்பிட்டு வா “ என்று கூறி விட்டு அவன் வேண்டாம் என்று மறுக்க மறுக்க அமர வைத்து தான் தங்கையை கவனிக்கும் படி சொல்லிவிட்டு சென்றான்.

அவன் சென்றதை பார்த்தவன் வேகமாக உண்டு விட்டு அவனை நோக்கி வந்து, “ நீ சாப்பிடவே இல்லையே டா. நான் வேணும்னா வெயிட் பண்ணவா “ என்று கூறினான். அதற்கு ஆதி அவனை பார்த்து நக்கலாக சிரிப்பதை பார்த்தவன், “ சரிடா சாப்பாடுன்னு வந்துட்டா எனக்கு வேற எதுவும் கண்ணுக்கு தெரியாது நான் என்ன பன்றது சொல்லு “ என்று சலித்தப்படி கூறியவனின் தோளில் தட்டி விட்டு, “ எனக்கு பசிக்கல நான் அப்பறமா சாப்பிடுறேன் இப்ப டைம் ஆயிடுச்சு கிளம்பலாம்” என்று கூறி வாசல் பக்கம் திரும்பியவனை ஷர்மியின் குரல் தடுத்து நிறுத்தியது. ஷர்மி, “ அண்ணா இன்னிக்கு யாரையாவது பாக்க போரிங்கல இல்லனா ஏதாவது சந்தோஷமான விஷயமா “ என்று தயங்கியப்படி கேட்டவளை நோக்கி குழப்பத்துடன், “ அப்படி எதுவும் இல்ல டா என்ன ஆச்சு எதுக்கு இப்படி கேக்கர” என்றான்.

அதற்கு அவள் சிரித்தப்படி, “ எப்பவும் நீங்க அழகு தான் ஆனா இன்னிக்கு உங்க
முகத்துல ஏதோ வித்தியாசம் தெறிது, அழகாவும் இருக்கு. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரில அண்ணா “ என்று கூறியவளை கண்டு சிரித்தவன் அவளின் தலையை பாசத்துடன் வருடிவிட்டு சென்று விட்டான். அவன் பின்னால் ஷக்தியும் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு காருக்கு அருகில் சென்றான். இன்று ட்ரைவரை வேண்டாம் என்று கூறி வண்டியை எடுத்த ஆதியின் முகத்தை பார்த்தப்படி அமர்ந்தான் ஷக்தி.

சிறிது தூரம் சென்ற பிறகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “ எதுக்குடா என்னை வெச்ச கண்ணு வாங்காம பாக்குற “ என்று கேட்டவனிடம், “ இல்ல உன் முகத்துல எதோ வித்தியாசம் தெறிதுன்னு என் செல்லக்குட்டி சொன்னாளா அதான் என்ன இருக்குன்னு பாக்குறேன் “ என்றான்.

ஆதி, “ லூசா நீ அப்படி எதுவும் இல்ல நான் எப்பவும் போல தான் இருக்கேன் “

ஷக்தி, “ இல்லடா உண்மையா இன்னிக்கு உன் கண்ணுல ஒரு வெளிச்சம் தெறிது. இன்னிக்கு உனக்கு ஸ்பெஷால ஏதோ சம்பவம் நடக்க போது போல “ என்றவனை கண்டு சிரித்தப்படி வண்டியை செலுத்தி கொண்டிருந்தவனை, “ ஆதி உன் கிட்ட ரொம்ப நாளா கேக்கனும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன் “ என்றவனை கேள்வியுடன் பார்த்தான்.

ஷக்தி, “ அப்பா கடைசியா ஒரு வாட்ச் கிப்ட் பண்ணாரு நீ கூட சென்டிமென்டா அத உன் கையில கட்டிட்டு இருந்த ஆனா இப்ப அது உன் கையில கொஞ்ச நாளா காணும். இப்போ வேற ஒன்னு கட்டிட்டு இருக்க. எங்கடா அது “ என்றவனை பார்த்தவன் மனதில் அந்த வாட்ச் தொலைந்த அன்று நடந்தவைகள் கண் முன்னால் தோன்றியது. அதற்கு அடையாளமாக அவன் இதழில் புன்னகை மலர்ந்தது. திடீரென்று சிரிப்பவனை பார்த்தவன் குழப்பத்துடன், “ ஆதி நீ என் கிட்ட எதாவது மறைக்கிறியா “ என்று கேட்டான்.

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் அவனை பார்த்து, “ அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லடா “ என்றான்.

ஷக்தி, “ மத்தவங்க கிட்ட நீ எப்படி இருந்தாலும் இது வரைக்கும் என் கிட்ட எதுவும் மறைச்சது இல். ஆனா இப்போ எல்லாம் எனக்கு நீ எதையோ மறைக்கறன்னு தோணுது. ஒரு வேல உன் தங்கச்சி புருஷனா தான் என்ன நினைக்குரியா.... நான் இப்போ உன் நண்பன் இல்லையா “ என்று வருத்ததுடன் அவனை பார்த்து உறைத்தான்.
அவன் கூறியதை கேட்டவன் வண்டியை ஒரமாக நிறுத்தி விட்டு அவனை பார்த்தப்படி திரும்பி அமர்ந்தவன், “ ஷக்தி என்ன பேசறடா நீ எப்பவும் என் நண்பன் தான் அப்பறம் தான் மத்த உறவு எல்லாம் புறிஞ்சிதா. அது வந்து...நீ சொன்னதுல ஒரு உண்மை இருக்கு நான் உன் கிட்ட ஒரு விஷயத்த சொல்லல அதை சொல்ல கூடாதுன்னு இல்லடா....நானே அதுல தெளிவு இல்லாம இருந்தேன் அதனால தான். இன்னிக்கு அதுக்கு விடை கிடைச்சிடும். அதுக்கு அப்பறம் உன் கிட்ட சொல்லலாம்ன்னு இருந்தேன். நீயே கேட்டுட்டு... இவ்வளவு நாள் இருந்த இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நானே சொல்றேன் “ என்று கூறியவன் மீட்டிங்க்கு நேரமாவதால் வண்டியை எடுத்தான்.

அவன் கூறியதை கேட்டு சமாதானம் ஆனவன், “ உனக்கே இது நல்லா இருக்க எனக்கு சஸ்பென்சே பிடிக்காது. அப்பறம் ஏன்டா இப்படி பண்ற இப்போவே சொல்லுடா... இல்லனா என் தலையே வெடிச்சிடும் ப்ளீஸ் டா “ என்று புலம்பியவனை பார்த்து சிரித்தானே தவிர ஒன்றும் கூறாமல் வண்டியை ஒட்டியவனை பார்த்து மண்டையை பிச்சிக் கொண்டவன் இவன் வாயில் இருந்து எதுவும் வாங்க முடியாது என்று புரிந்து கொண்டான். ஆபீஸ் வந்த்து கூட தெரியாமல் அது என்ன விஷயமா இருக்கும் என்று தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தவனை பார்த்த ஆதி வண்டியை பார்கிங்இல் நிறுத்தி விட்டு அவன் பக்கம் உள்ள கதவை திறந்தவன், “ நீ எப்படி யோசிச்சாலும் நான் சொல்ற வரைக்கும் உனக்கு ஒன்னும் தெரிய போறது இல்ல அப்பறம் எதுக்கு இல்லாத மூளையை யூஸ் பண்ற ஆபீஸ் வந்துடுச்சி சீக்கிரம் உள்ள வந்து சேரு “ என்று கூறி விட்டு தன் வேகமான நடையுடன் உள்ளே சென்றவனை கண்டவன், “ அடப்பாவி நான் சிவனேன்னு தானடா இருந்தேன் ஏதோ ஒரு விஷயம் இருக்கு இன்னிக்கு சொல்றேன்ன்னு சொல்லிட்டு பாதிலயே விட்டுட்டு போயிட்டான். இவன் தான் எல்லாரையும் குழப்புவான் இவனே ஒரு விஷயத்துல குழம்பி போய் இருக்கான்னா அது என்ன... இப்படியே யோசிச்ச மண்டை வெடிச்சிடும். அடுத்து அவன் திட்ரதுக்குள்ள உள்ள போக வேண்டியது தான் “ என்று நினைத்தப்படி மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான். அனைவரும் வந்து விட்டதை உறுதிப்படுத்தி கொண்டு மீட்டிங் ஆரம்பம் ஆனது.


வானதி இல்லம்

இன்று விடுமுறை தினம் என்பதாலும் மித்ரா காலையில் ஆபீஸ் சென்றதாலும் மபெறுசாக எந்த வேலையும் இல்லாததால் நன்றாக ஒய்வு எடுத்தாள். மீட்டிங் முடிந்தவுடன் அழைப்பதாக கூறி இருந்தவளுக்காக தன் கைப்பேசியை நொடிக்கொரு முறை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சொன்ன நேரம் கடந்து சென்ற போது மெசேஜ் வந்தது. தன் போனை எடுத்து பார்த்தாள்.


அதில் மீட்டிங் மூடிய சிறிது நேரம் ஆகும் என்பதால் அவளை தன் ஆபீஸ்க்கு அருகில் உள்ள ஹோட்டலில் வந்து காத்திருக்கவும் வேலை முடிந்ததும் நேராக ஆட்டோ பிடித்து அங்கு வருவதாகவும் அதில் மித்ரா அனுப்பிருந்தாள். அதை படித்தவுடன் அவள் கூறியதும் சரியாக தான் இருக்கும் என்று தயாராகி விட்டு வீட்டை பூட்டி கொண்டு புறப்பட்டாள்.


வர்மா குரூப் ஆஃப் கம்பனிஸ்...

மீட்டிங் முடிந்த பிறகு வெளியே வந்த ஆதியை வழியிலேயே நிறுத்திய ஷக்தி, “ ஆதி நீ காலைல கூட எதுவும் சாப்பிடவே இல்ல வா போய் சாப்பிடலாம் “ என்று அவன் கூறியதை கேட்டுக் கொண்டே தன் வாட்ச்சில் நேரத்தை பார்த்தவன், “ சரி அப்படின்ன இங்க பக்கத்தில இருக்க நம்ம ஹோட்டலுக்கு போலாம் அங்க கொஞ்ச வேலை இருக்கு அதையும் முடிச்ச மாதிரி இருக்கும் “ என்று கூறியப்படி முன்னால் சென்றவனை, “ எப்ப பாரு வேலை அத தவிர வேற ஒண்ணும் தெரியாது. இவன என்ன பன்றதுன்னு தெரியலாயே “ என்று புலம்பியப்படி பின்னாடியே ஒடினான்.

இங்கு வானதியும் அதே ஹோட்டல் வாசலில் வண்டியை பக்கத்தில் ஒரமாக நிறுத்தி விட்டு மித்ராவுக்காக காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் தன் காரில் அங்கு வந்த ஆதி ஷக்தியை வாசலில் இறக்கி விட்டு வண்டியை பார்கிங்இல் விட உள்ளே சென்றான்.

அந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் காரில் அமர்ந்தப்படி போன் பேசிக் கொண்டிருந்த போது சாரா எதிரில் ஆதியின் கார் ஹோட்டல் பார்கிங்க்குள் நுழைவதை பார்த்தவள் இன்று அவனை சந்தித்து தன் மனதில் உள்ள விருப்பத்தை கூற வேண்டும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது என்று எண்ணியப்படி தன்னுடைய வண்டியை வேகமாக முன்னாடி செலுத்தினாள்.

அவள் வேகமாக காரை பார்கிங்க்குள் செல்ல திருப்பும் போது அங்கு வந்து கொண்டிருந்த ஒரு சின்ன பெண்ணை இடிப்பதை போல் வருவதை அங்கு நின்றுகொண்டு இருந்த ஷக்தி பார்த்து அங்கு செல்வதற்குள் வானதி அந்த பெண்ணை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். அதை பார்த்த ஷக்திக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. உடனே வண்டியை ப்ரேக் போட்டு நிறுத்திய6 சாரா கோவத்துடன் கீழே இறங்கினாள்.

அதற்குள் வானதியும் அந்த பெண்ணிற்கு அடி எதாவது பட்டுள்ளதா என்று ஆராய்ந்து கொண்டிருந்த போது அங்கு வந்த சாரா அந்த சின்ன பெண்ணிடம், “ உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல நான் தான் வண்டிய திருப்புறேன்ன்னு தெறிதுல அப்பறம் எதுக்கு இந்த பக்கம் வந்த “ என்று கோவமாக கத்தினாள். அதை பார்த்து கொண்டிருந்த ஷக்திக்கும் வானதிக்கும் கூட கோவமாக வந்தது. ஏன்னெனில் அவள் தான் யார் வருகிறார் என்று பார்க்க்காமல் வேகமாக வந்தாள். இப்போது அந்த சின்ன பெண்ணை திட்டியதை கண்டு எரிச்சலாக வந்தது.

அந்த சிறுமி, “ நான் பாத்து தான் அக்கா வந்தேன் நீங்க தான் வேகமா என்ன இடிக்கற மாதிரி வந்திங்க... உங்களால தான் சாப்பாடு கீழ கொட்டிடுச்சு “ என்று கீழே சிதறிய உணவை பார்த்து அழுதுகொண்டே கூறினால்.

தன் மீது பழியை சுமத்திய அந்த சிறுமியின் மேல் கோவம் கொண்டவள், “ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்த என் மேலயே பழி போடுரியா. சின்ன பொண்ணா இருந்துட்டு உனக்கு வாய் ரொம்ப நீளுது “ என்று அந்த சின்ன பெண்ணை அடிக்க கை ஒங்கினாள்

அதே நேரம் அங்கு வந்த ஆதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஷக்தி அருகில் வந்தவன், “ ஏன்டா உள்ள போகமா இங்கேயே நிக்கற. ஒரு போன் கால் பேசிட்டு இருந்தேன் அதான் லேட் ஆயிடுச்சு வா போலாம் “ என்றவன் நடக்க ஆரம்பித்தான். இவர்களுக்கு நடுவில் கார் இருந்ததால் அங்கு நடந்து கொண்டிருந்த எதுவும் ஆதிக்கு தெரிய வில்லை. ஷக்தியும் திரும்பி பார்த்துக் கொண்டே சென்ற போது அவனின் கைப்பேசி அழைத்தை கேட்டு அதை எடுத்து கொண்டு அங்கு இருந்து வேகமாக சென்றான்.

அவள் அடிக்க ஓங்கிய கையை பாதியிலேயே பிடித்து நிறுத்திய வானதி, “ நானும் பாத்துட்டு இருக்கேன் ரொம்ப திமிர பேசினதும் இல்லாம சின்ன பொண்ணுன்னு பாக்கமா அடிக்க கை ஒங்கிறிங்க “ என்று கோவமாக அந்த கையை கீழே இறக்கினாள்.


திரும்பி ஹோட்டல் பக்கம் சென்று கொண்டிருந்தவன் தன் பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து நின்றான். தான் உண்மையில் கேட்டது அவளின் குரலா இல்லை தன்னுடைய பிரேமையா என்று ஒன்றும் புரியாமல் அவனின் கால்கள் நகர மறுத்தது. திரும்பி பார்க்கலமா வேண்டாமா ஒரு வேலை திரும்பி பார்த்து அது அவள் இல்லை என்றால் என்ன செய்வது என்ற எண்ணம் அவனின் மனதை அலைக்கழித்தது. பல நாட்கள் கழித்து தன் செவியில் கேட்ட குரலில் மெய் மறந்து நின்றான்.

தன் கையை பிடித்தவளை பார்த்து முறைத்தவள், “ யார் நீ எதுக்காக இந்த பொண்ணூக்கு நீ சப்போர்ட் பண்ற... ஒரு வேலை நீங்க எல்லாம் ஒரே குரூப்பா இந்த பணம் பறிக்கிற கும்பல் தான.... பெரிய வண்டிய பாத்து நீ விழற மாதிரி போ நான் வந்து உன்ன காப்பாத்துறேன்...நம்ம சண்டை போட்டு பணம் பறிக்கலாம்ன்னு வந்து இருக்கிங்க அப்படி தான “ என்று திமிராக தன்னை பார்த்து கேட்டவளை கண்களில் கோவத்தொடு பார்த்தவள், “ தப்பையும் பன்னிட்டு மன்னிப்பு கேட்காமல் எங்க மேலயே பழிய போடுறிங்க. ஒரு வேல சாப்பாடு கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்டபடுறாங்க தெரியுமா அது கீழ கொட்டனத்துக்கு கூட வருத்தப்படாமல் எங்கள பார்த்து பணம் பறிக்கிற கும்பல்ன்னு வாய் கூசாமல் சொல்றீங்க “ என்று கூறியவள் தன்னை பயத்துடன் தன்னை கட்டிக்கொண்டவளை ஆதரவாக அனைத்துக் கொண்டாள். அதே நேரம் அங்கு வந்த மித்ரா என்ன நடக்கிறதுன்னு தெரியாமல் வானதி என்ன செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்று நடப்பதை பார்த்து கொண்டிருந்தாள்.


திரும்ப திரும்ப தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்ததால் தன்னை அறியாமல் திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான். ஏன்னெனில் அவள் தன் முகத்தை துப்பட்டாவால் மூடி இருந்தாள். ஆனாலும் அவன் மனம் அவள் தான் என்று அடித்து கூறியது. அவனின் பிஸ்னஸ் மனம் ஆராய சொல்லி தூண்டியதால் அவன் அவளின் காலை அவசரமாக பார்த்தவன் முகம் பிரகாசமாக மாறியது. எதை எதிர்ப்பார்த்தானோ அது அவன் கண்கள் கண்டு கொண்டது. இனி
அவள் தான் தன் வாழ்க்கை என்று அறிந்த அழகான நொடிகள் அவை. இந்த நிமிடத்தை வாழ்க்கையில் என்றும் மறக்கவே முடியாது என்று தோன்றியது. பல நாட்கள் கழித்து கேட்கும் அவள் குரலை இழக்க விரும்பாமல் அவளையே மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தான். போன் பேச சென்ற ஷக்தி இன்னும் இவன் உள்ளே வராமல் என்ன செய்கிறான்6 என்று3 நினைத்தப்படி அவன் அருகில் வந்து அவணை அழைத்து பார்த்தான். ஆனால் அவனிடம் எந்த அசைவும் இல்லை என்று உணர்ந்தவன். அப்படி எதை பார்க்கிறான் என்று புரியாமல் அவன் பார்வை செல்லும் திசையை அவனும் பார்த்தான்.


சாரா, “ என்ன நான் மன்னிப்பு கேட்கனுமா... இப்ப என்ன இந்த சாப்பாடு வீணா போயிடுச்சி அதான நான் வேணா அதுக்கு பணம் குடுக்கறென். சாதாரண ஒரு சாப்பாடு கீழ கொட்டிடுச்சு அதுக்கு இவ்வளவு ரியாக்ட் பன்றிங்க எல்லாம் மிடில் கிளாஸ் மென்டலிட்டி “ என்று அலட்சியமாக கூறியதை கேட்டவள், “ ஆமா எங்களுக்கு ஒரு வேல சாப்பாடு ரொம்ப முக்கியம் தான். நீங்க தான் பணக்காரங்கல அதனால தினமும் மூன்று வேலையும் சாப்பாட்டுக்கு பதிலா பணத்தையா சாப்பிடிறிங்க. உங்க கிட்ட இனிமே பேசி எந்த பயனும் இல்ல. பணம் குடுக்கறாங்கலாம் யாருக்கு வேணும் உங்க பணம் அதை நீங்களே வச்சிகொங்க. உலகத்துல எல்லத்தையும் பணத்தால எடை போடாதீங்க. அதை தாண்டியும் நிறைய விஷயங்கள் இருக்கு அத புறிஞ்சிக்கொங்க “ என்று கூறியப்படி அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். அவள் பேசியதை கேட்டுக் கோவம் கொண்டவள் வேகமாக தன் காரை எடுத்து சென்று விட்டாள் .

ஓரமாக சென்றவள், “ நீ ஏன் பாப்பா தனியா இவ்வளவு தூரம் வந்த அதனால தான் இந்த மாதிரி ஆயிடுச்சு... இனிமே இப்படி தனியாக வரக் கூடாது சரியா....” என்று பொறுமையாக கூறினாள்.

“ சாரி அக்கா இனிமே இப்படி பண்ண மாட்டேன்... அம்மாக்கு உடம்பு சரியில்ல அவங்களுக்கு சாப்பாடு குடுக்கனும் வீட்ல சமைக்கல அக்கா...என்ன தவிர வேற வீட்ல யாரும் இல்லை அக்கா....அதான் நான் மாத்திரை வாங்கிட்டு சாப்பாடு வாங்க வந்தேன்... அதும் வீணாயிடுச்சு... அம்மா பாவம் “ என்று அழுதப்படியே கூறினாள். அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, “ வா நான் உன்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். சாப்பாடு வாங்கிட்டு போலாம் சரியா “ என்று சமாதானம் செய்தப்படி அங்கிருந்து அழைத்து சென்றாள். நிலைமையை புரிந்து கொண்ட மித்ராவும் அவளிடம் சாவியை வாங்கிக் கொண்டு பின்னாடியே சென்றாள். அவர்கள் சென்ற பிறகும் ஆதி அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.


‘ இங்க சண்டை போட்டுட்டு இருந்த எல்லாரும் போயிட்டாங்க இவன் எதை பார்த்துட்டு இருக்கான் ‘ என்று நினைத்தவன். அவனை நன்றாக போட்டு உலுக்கினான். அந்த அசைவில் தன் கனவு உலகத்தில் இருந்து நினைவுக்கு வந்தான். பிறகு தன்னவள் இருந்த இடத்தை பார்த்தவனுக்கு அவள் அங்கு இல்லாதது அதிர்ச்சியை அளித்தது. சுற்றிலும் தான் பார்வையை திருப்பி அவள் எங்கே என்று தேடினான்.

ஷக்தி, “ டேய் என்னடா ஆச்சு உனக்கு.. என்ன தேடுற “ என்று கேட்டவனிடம், “ ஷக்தி...இங்க ஒரு பொண்ணு முகத்த முடினப்படி பேசிட்டு இருந்தால அவள் எங்கடா.... மறுப்படியும் நான் அவளா மிஸ் பண்ண மாட்டேன்...அவ இங்க தான் எங்கயோ இருப்ப “ என்று பதட்டத்துடன் பேசியவாறு நாலாப்புறமும் தன் கண்களால் தேடியவன். சாலையின் எதிர்புறம் அந்த சின்ன பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்தவன் வேகமாக வண்டி வருவதை பற்றி கவலை கொள்ளாமல் சாலையை கடந்து சென்றான்.

தன்னிடம் பேசிக் கொண்டு இருந்தவன் வேகமாக சாலையை கடப்பதை பார்த்து பயந்து கொண்டு அவன் பின்னாடியே ஒடினான். ஆதி அங்கு செல்வதற்குள் வானதியும் மித்ராவும் அந்த சின்ன பெண்ணை வண்டியில் ஏற்றி கொண்டு சென்று விட்டதை பார்த்தவன் மனம் மீண்டும் அவள் தன்னிடம் இருந்து பிரிந்து சென்றதையும் இந்த முறை அவள் பெயரை கூட கேட்க முடிய வில்லையே என்று கோவம் கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவனின் அருகில் சென்ற ஷக்தி, “ ஆதி நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்கன்னு புரிதா. இது வரைக்கும் நீ இந்த மாதிரி வித்தியாசமா நடந்து நான் பாத்தது இல்ல.... யாருடா அந்த பொண்ணு... நீ ஏன்டா இப்படி நடந்துக்கற... சரி ஏதுவாக இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் வா “ என்று கண்டிப்புடன் கூறியப்படி அவனை தீர்க்கமாக பார்த்தான். இவனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தப்படி அவனுடன் வீட்டிற்கு சென்றான்.


வர்மா பேலஸ்....

வாசலில் கார் நின்றவுடன் ஆதி வேகமாக மேலே தன் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டான். தன்னை கடந்துமேலே வேகமாக செல்லும் தன் அண்ணனை பார்த்தப்படி நின்றவள் பின்னால் கேட்கும் காலடி ஓசையில் தன் கணவன் தான் என அறிந்தவள் என்ன ஆயிற்று என்று கேட்க அவன் அருகில் சென்றாள். ஆனால் அவனும் இவளிடம் எதுவும் கூறாமல் அவர்களின் அறைக்குள் சென்று விட்டான். இருவரும் அமைதியாக செல்வதை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். தன் கணவனிடம் கேட்டாள் தான் இதற்கான பதில் என்று அறிந்தவள் தங்களின் அறைக்குள் சென்றாள்.

தன்னுடைய அறைக்குள் வந்த ஆதி தன்னவளின் ஓவியத்தின் முன் வந்து நின்றான். அதை இமைக்காமல் பார்த்தவன், “ இத்தனை நாள் இருந்த குழப்பம் இப்போ தெளிவாயிடுச்சு..... என் மனசுல இப்ப தோன்ற உணர்வுகள சொல்ல என்கிட்ட வார்த்தையே இல்ல... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நினைச்ச மாதிரியே என் கண் முன்னாடி வந்து நீ எனக்கானவ தான்ன்னு சொல்லாம சொல்லிட்ட... ஆனா ஒன்னு முன்ன இருந்தத விட உன் ரெண்டு கண்ணும் கத்தி மாதிரி இருக்கு.....உன் பெயர் என்னன்னு கூட கேட்க முடியல. கூடிய சீக்கிரம் உன்னை பத்தி எல்லத்தையும் நான் தெறிஞ்சிக்கனும்.... இனி நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். .... உன்ன யாரும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது...பிரிக்கவும் விட மாட்டேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு வேகமா உன் முன்னாடி வருவேன்....உனக்கு என்ன நியாபகம் இருக்குமா இல்லை என்னை மறந்திருப்பியா அப்படின்னு என் மனசுல நிறைய கேள்விகள் இருக்கு.... இனி எப்படி இருந்தாலும் நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் வேற வேற இல்லை “ என்று கூறியவன் மனதில் அவளுடன் அவன் வாழ போகும் வாழ்க்கையை பற்றிய கனவுகள் நிறைந்திருந்தது.....

ஆ...ஆ...ஆ...ஆ உத்தரவே

இன்றி உள்ளே வா

நீ வந்த நேரத்தில் நான் இல்லை

என்னில்

அந்த நொடி அன்பே என் ஜீவன்

வேறெங்கு போனது பாரடி

உன்னில்

உன்னை கண்ட நிமிஷத்தில்

உறைந்து நின்றேன்....

மறுப்படி ஒரு முறை

பிறந்து வந்தேன்

உன்னை கண்ட நிமிஷத்தில்

உறைந்து நின்றேன்....

மறுப்படி ஒரு முறை

பிறந்து வந்தேன்

என் சுவாசக் காற்றில் எல்லாம்

உன் நியாபகம்

ம்....ம்....உன் நியாபகம்

நிஜத்தை தேடும்.....

உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்து திரியில்
பகிர்ந்து

கொள்ளுங்கள்...
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயாம் 5

அந்த சிறுமிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு அவளை வீட்டிற்கு கொண்டு போய் விட்டு விட்டு இனி இது போல் நடந்துக்க கூடாது என்று கூறிய பின் இருவரும் மதிய உணவை உண்டப்பின் ஆசிரமத்துக்கு சென்றனர். அது சிறு வயதில் இருந்து மித்ரா வளர்ந்த ஆசிரமம். ஆதலால் அது வானதிக்கும் மிகவும் பிடித்த இடமாகவும் மாறியது. வாரத்திற்கு ஒரு முறையாவது அங்கு செல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. அங்கு செல்வதன் மூலம் ஒரு நிம்மதி அங்குள்ள குழந்தைகளுடன் விலையாடுவதால் ஒரு சந்தோஷம் ஏற்படும். இருவருக்கும் உறவு என்று யாரும் இல்லாததால் அங்குள்ள அனைவரையும் தான் தங்களின் உறவாக கருதுக்கின்றனர். அதுவுமில்லாமல் அந்த ஆசிரமத்தை நடத்தி வருபவர் மீனாட்சி என்பவர் ஆவார். சேவை செய்வதையே தான் வாழ்வாக கருதுப்பவர். தன்க்கென்ற எந்த சொந்தத்தையோ சொத்தையோ சேர்த்துக் கொள்ளாதவர். இவர்கள் இருவர் மட்டுமில்லாமல் அனைவர்க்கும் அவரே அம்மா. எந்த முடிவு எடுத்தாலும் அவரிடம் கலந்தாலோசிக்காமல் எடுப்பது இல்லை. அன்று மாலை வரை இருவரும் அங்கு இருந்து விட்டு பிறகு வீடு வந்து சேர்ந்தனர்.


வானதி இல்லம்

மாலை வீடு வந்ததும் சிறிது நேரம் ஒய்வு எடுத்தப்பின் வானதி தன்னுடைய கப்போர்டை சுத்தம் செய்ய சென்றாள். அதில் உள்ள துணிகளை அடுக்கி கொண்டிருந்த போது ஒரு பொருள் கை தவறி கீழே விழுந்தது போல் இருந்தது. அது என்னவென்று குனிந்து கையில் எடுத்து பார்த்தவள் மனதில் பல சிந்தனைகள். அதற்கு காரணமான அந்த பொருள் ஒரு ஆணின் வாட்ச். அதை கண்டவளின் நியாபகம் அன்றைய நாளுக்கு சென்றது. கப்போர்டை க்ளின் பண்ண சென்றவளை இன்னும் காணவில்லையே என்று குரல் கொடுத்தப்படி அறையில் நுழைந்தாள். தான் சத்தமாக அழைத்தும் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அவள் கையில் உள்ள பொருளின் மேல் கவனமாக இருப்பதை பார்த்தப்படியே அவள் அருகில் வந்து அமர்ந்தவள். வானதியின் காதில் சென்று “ ஆரூ....” என்று கத்தினாள்.
அந்த சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்தவள் காதை தேய்த்தப்படி, “ ஏன்டி இப்படி காது கிட்ட வந்து கத்துற காது வலிக்குது “ என்று கூறிக் கொண்டே அந்த வாட்சை கீழே வைத்தாள்.

மித்ரா, “ நான் உன்ன எவ்வளவு நேரமா கூப்புட்றென்ன்னு தெரியுமா நீ கண்டுக்கவே இல்ல அதான் அப்படி கத்துனேன். சரி நான் அப்பவே உன் கிட்ட கேக்கனும்ன்னு நினைச்சேன். எதுக்கு மதியம் அந்த பொண்ணு கிட்ட அவ்வளவு கோவப்பட்ட நீ யார் கிட்டயும் இந்த அளவு ஹர்ஷா பேசி நான் பாத்தது இல்லை. என்ன ஆச்சு “ என்று அவளை பார்த்தப்படி கேட்டாள்.

துணிகளை உள்ளே அடுக்கி கொண்டே, “ தப்பு செஞ்சது அந்த பொண்ணு தான் மித்ரா. ஒரு சாரி கேட்டு இருந்த பிரச்சனை முடிஞ்சி இருக்கும் ஆனா அந்த பொண்ணூக்கு எவ்வளவு திமிர் அதுவும் பணக்கார திமிர்...... அதனால தான் பாவம் அந்த சின்ன குழந்தை கிட்ட அப்படி கத்திட்டு இருந்தாள்....அதை பாத்த உடனே எனக்கு கோவம் வந்துடுச்சி. அதுவுமில்லாமல் எனக்கு இந்த பணக்காரங்கள பாத்தாலே என்னை அறியாமலே எனக்கு கோவம் வந்துடுது.... நான் என்ன பன்றது “ என்று வானதி அவளை பார்த்த மாதிரி அமர்ந்து கொண்டு கேட்டாள்.

மித்ரா, “ ஆனா நீ நினைக்கற மாதிரி எல்லாரும் கெட்டவங்க இல்ல ஆரூ சில நல்லவங்களும் இருக்காங்க “ என்று அவளிடம் பொறுமையாக எடுத்து கூறினாள்.

அதை கேட்டவள், “ நீ சொல்றதும் சரி தான் மித்ரா...ஆனா இந்த மாதிரி எதாவது நடந்தா என்னை அறியாமல் கோவம் வந்துடுது இனி கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுரேன்... போதுமா “ என்று கேட்டாள்.

அவளை பார்த்து சிரித்தவள், “ சரி நான் வரும் போது கையில எதையோ வெச்சிட்டு எதையோ யோசிச்சிட்டு இருந்தியே அது என்ன “ என்றாள்
அவள் அது என்ன என்று கேட்டவுடன் கீழே வைத்த வாட்சை எடுத்து மித்ராவின் கையில் கொடுத்தாள். அந்த வாட்சை திருப்பி திருப்பி பார்த்த மித்ரா, “ இது ஒரு ஜென்ட்ஸ் ( gents) யூஸ் பண்ற வாட்ச் மாதிரி இருக்கு. யாரோடது ஆரூ இது “

வானதி, “ என் வாழ்க்கையில நன்றி கடன்ப்பட்ட ஒருத்தரோட வாட்ச் இது “ என்று அந்த வாட்சை பார்த்தப்படியே கூறினாள். அதை கேட்டு குழப்பத்துடன் அவளை பார்த்த மித்ரா, “ என்ன ஆரூ நன்றி கடன் அது இதுன்னு என்னமோ சொல்ற கொஞ்சம் தெளிவா சொல்லு “ என்று கேட்டாள்.

வானதி, “ நன்றி கடன் தான் அதுவும் சாதாரணமானது இல்ல என் உயிரையும் மானத்தையும் காப்பாத்துனவர் கிட்ட எனக்கு இருக்க கடன் அது. இது வரைக்கும் நான் யார்கிட்டயும் கடன் வெச்சது இல்ல அதுக்கு நான் திருப்பி செஞ்சிடுவன் ஆனா.... இவர என் வாழ்க்கையில திரும்ப சந்திக்கற சந்தர்ப்பம் எனக்கு இன்னும் அமையவே இல்ல. அவர நான் ஒரு தடவ பாத்தா போதும் அவரோட இந்த வாட்சை குடுக்கனும். அப்பறம் நான் சொல்ற நன்றிய அவர் ஏத்துக்கனும். இல்லனா அவர் செஞ்ச்சதுக்கு ஈடா என்னால எதுவும் செய்ய முடியாது இருந்தாலும் அதுக்கு பதிலா நான் எதாவது செய்யணும். அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும். நானும் அதுக்கு தான் காத்துக்கிட்டு இருக்கேன் “ கூறியபடியே பெருமூச்சு விட்டாள்.

மித்ரா, “ நீ இந்த அளவுக்கு சொல்றதுக்கு அப்படி என்ன நடந்தது . முதல்ல அத சொல்லு... ப்ளீஸ் “ என்று அவளின் முகத்தை தன் புறம் திருப்பியப்படி கேட்டாள். வானதியும் சிரிப்புடன் அந்த நாளை பற்றி கூற தயாரானாள்.

வர்மா பேலஸ்...

அதே நேரம்

மதிய உணவுக்கு கூட அழைத்தும் இருவரும் வராமல் அறையிலேயே இருந்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் ஹாலில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தவள் மனதில் வீட்டிற்கு வந்ததில் இருந்து தன் அண்ணன் மற்றும் கணவன் இருவரின் முகமும் சரியில்லை இதை பற்றி ஷக்தியிடம் கேட்பது தான் சரியாக இருக்கும் என்று எண்ணியவள் தங்களுடைய அறைக்குள் சென்றாள். சரியாக அவள் நுழையும் போது அவன் பெட்டில் இருந்து எழுந்தவனை கண்டவள் அவன் அருகில் சென்று, “ என்னச்சிங்க உங்க ரெண்டு பேர் முகமும் சரியில்லை சாப்பிடவும் வரல....என்ன விஷயம் என் கிட்ட சொல்ல கூடாத “ என்று அவனை பார்த்து கேட்டாள்.

அவளை பெட்டில் அமர வைத்தவன் வீட்டிற்கு வருவதற்கு முன் ஹோட்டல் வாசலில் நடந்ததை முழுவதையும் கூறி முடித்து அவள் அருகில் அமர்ந்தவன், “ அங்க நடந்தத நினைக்கும் போது எனக்கு ஒன்னும் புரியல. இது வரைக்கும் ஆதி தன்னோட எந்த உணர்ச்சியையும் அதுவும் வெளிய யார் முன்னாடியும் காட்டவே மாட்டான்....ஆனா இன்னிக்கு அவன் அந்த ரோட்ல நடந்து கிட்ட விதம் ரொம்ப வித்தியாசமா இருந்தது... அந்த ஷாக்ல வீட்டுக்கு வந்தேன்...அதனால தான் உடனே உன் கிட்ட எதுவும் என்னால சொல்ல முடியல சாரிடா.... இனியும் இதப்பத்தி அவன் கிட்ட கேக்காமா இருக்க முடியாது இப்போ அதுக்கு தான் எழுந்தேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட “ என்று அவளை பார்த்து சொன்னான்
அதைக் கேட்டவள், “ நீங்க சொல்றத கேட்டா எனக்கு ரொம்ப ஷாக்கா இருக்கு.... என்ன சொல்றதுன்னு தெரியலா... நீங்க சொல்றது தான் சரி நீங்க போய் அண்ணன் கிட்ட பேசி பாருங்க நான் கூட வந்த அவர் சரியா பேச மாட்டார்... நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க ரெண்டு பேரும் ப்ரெண்ஸ் சோ போய்ட்டு வாங்க “ என்று கூறி அவனை தன் அண்ணனின் அறைக்கு அனுப்பி வைத்தாள்.

ஆதியின் அறை அவனின் ப்ளானில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அறை. முதலில் ஹால் அதற்கு இடது புறம் உடற்பயிற்சி கூடம், வலது புறம் ஆபீஸ் ரூம் ஹாலை தாண்டி அவனின் படுக்கை அறை அந்த அறைக்குள் அவனை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அனைத்து வசதிகளும் அங்கு நிறைந்து இருக்கும். அவனின் ஆபீஸ் ரூம்குள் ஒரு அறை உண்டு அதுவும் எப்பவும் பூட்டியே இருக்கும். அதற்குள் என்ன இருக்கும் என்பது அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

அவனின் அறைக்குள் நுழைந்த ஷக்தி அவன் எங்கு இருப்பான் என்று சுற்றிப் பார்த்தப்படி குரல் கொடுத்தான். அவனின் குரலை ஆபீஸ் ரூமிர்க்குள் இருந்து கேட்ட ஆதி அவனை உள்ளே வருமாறு அழைத்தான். உடனே உள்ளே சென்றவன் அவன் எதிரில் இருந்த இருக்கையில் உம்மென்ற முகத்துடன் அமர்ந்தான். வந்ததில் இருந்து ஒன்றும் பேசாமல் அமைதியாக இருப்பவனை பார்த்தவன், “ என்ன மிஸ்டர். ஷக்தி வேல் நீங்க இருந்த வேகத்துக்கு வீட்டுக்கு வந்த உடனே என்ன தேடி வருவீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க ரொம்ப லேட்” என்று தன் கைக் கடிக்காரத்தை பார்த்தப்படி கூறியவனை கடுப்புடன் முறைத்தான் ஷக்தி.

“ ஏன்டா சொல்ல மாட்ட பன்றத எல்லாம் பண்ணிட்டு எப்படிடா ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்க “ என்று கேட்டவனை பார்த்தவன் தன்னுடைய இருக்கையில் சிரித்தப்படி நன்றாக சாய்ந்து அமர்ந்த ஆதி, “ இப்போ என்ன கேக்கனுமோ அதா கேளு அதுக்கு தான வந்த “ என்றான்.

‘ இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் கேள்வி கேக்கனும் தனி தனியா கேள்வி கேட்டா சரியா பதில் சொல்ல மாட்டான் ... மொத்தமா கேட்டுட வேண்டியது தான் ‘ என்று மனதில் நினைத்தவன். ஆதியை பார்த்து, “ காலைல நீ என் கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னியே அது நீ மதியம் நடந்து கிட்ட விதத்த யோசிச்சி பார்த்தா அந்த பொண்ண பத்தி தான “ என்று கேட்டான்.

ஆர்வமாக கேட்டவனை பார்த்தவன், “ நீ புத்திசாலி தான்டா சரியா கண்டுபிடிச்சிட்ட.... நீ சொல்றது சரி தான் “ என்றான் சிரித்தப்படியே.

ஷக்தி, “ யாருடா அந்த பொண்ணு , பேரு என்ன எந்த ஊரு இப்போ எங்க இருக்க இப்போ என்னடா பண்றா....” என்று மூச்சு விடாமல் கேட்டான்.
ஆதி, “ டேய் கொஞ்சம் மூச்சு விட்டுட்டு கேளு டா.... ஆனா நீ கேட்ட எல்லா கேள்விக்கும் என்னோட பதில் தெரியாது அப்படின்றது தான் “ என்றான் கண்களில் யோசனையுடன்.

அவன் கூறியதில் குழப்பம் அடைந்தவன், “ என்ன பார்த்தா உனக்கு எப்படி இருக்கு.... நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் இல்லைனா இன்னிக்கு நீ நடந்து கிட்டதுக்கு என்ன அர்த்தம் “ என்று கேட்டான்.

ஒரு பெருமூச்சு உடன் அவனை பார்த்தவன், “ உனக்கு எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல... இதுவரைக்கும் வேணா அவ யாரு என்னன்னு தெரியாம இருக்கலாம் ஆனா இனி அவ தான் என் மனைவி.... இது எல்லாம் உனக்கு முதல்ல இருந்து சொன்னா தான் புரியும் “ என்றான்.

ஷக்தி, “ ஏன்டா உனக்கு என் மேல எத்தனை நாளா இந்த கொலைவெறி இன்னிக்கு என்னை பைத்தியக்காரன் ஆக்கனும் ன்னு முடிவோடு இருக்கியா..... உன்னை கெஞ்சி கேக்கறேன் தயவு செய்து எல்லாத்தையும் தெளிவ சொல்லுடா “ என்று அவனிடம் முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூறினான்.

ஆதி, “ சரிடா அழாத.... நான் முதல்ல இருந்து சொல்றேன் எனக்கும் இந்த விஷயத்த யார் கிட்டயாவது சொல்லனும் போல இருக்கு இனியும் என் மனசுகுள்ள இருக்கறத என்னால மறைக்க முடியாது.....” என்றவன் தன்னுடைய மனதில் இருப்பதை கூறத் தொடங்கினான்.

ஆதியும் சரி வானதியும் சரி இருவரும் சந்திந்த அந்த நிகழ்வை தங்களுடைய தோழமைகளுடன் பகிர்ந்து கொள்ள தொடங்கினார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்....

ப்ளாஷ் பேக் போறத்துக்கு முன்னாடி ஆதித்யா பத்தி கொஞ்சம் இங்க சொல்லனும் அத முடிச்சிட்டு அந்த பக்கம் போலாம்....

கருணாகரன் – சகுந்தலா தம்பதியினரின் பல வருட தவத்துக்கு ஆசையாக பிறந்தவன் தான் ஆதித்ய அருள்மொழி வர்மன். தன் தந்தையின் நினைவாக அவரின் பெயரை அவனுக்கு வைத்தார். கருணாகரனுக்கு ஒரு தங்கை இருந்தார் அவரால் சிறு வயதில் இருந்து பேச முடியாது அதனால் அவரின் மீது அளவு கடந்த அன்பை வைத்து இருந்தார். ஆனால் உடல் நிலை பாதிக்க பட்டு இறந்து விட்டார். அதனால் அவருக்கு உடல் ஊனமுற்றவர்கள் மீது ஒரு அக்கறை என்றும் உண்டு. தன் தந்தையின் பெயரை வைத்ததினால் தான் என்னவோ அவரை போலவே கோவக்காரன் ஆகவும் மற்றும் இல்லாமல் அவரின் மறுப்பதிப்பாகவே இருந்தான். தன் அன்பான மனைவி மற்றும் அழகான குழந்தையுடன் அவர் வாழ்க்கை மிகவும் நன்றாகவே சென்றது. ஆதி பிறந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தஉடன் ஏற்ப்பட்ட பிரச்சனையில் சகுந்தலா இறந்து விட்டார். தன் அன்பான மனைவி தன்னை பிரிந்து சென்று விட்டதை எண்ணி மிகவும் மனமுடைந்து விட்டார். கையில் கைக்குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.

வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமல் தன்னுடைய பிள்ளைகளுக்குகாகவே வாழ்ந்தார். அன்னையின் அன்பில் வளராமல் தந்தையின் அரவானைப்பில் வளர்ந்தான் . எவ்வளவுதான் அவன் மேல் அன்புடன் இருந்தாலும் எல்லா நேரத்தையும் அவரால் செலவழிக்க முடியவில்லை. தன்னுடைய தொழிலையும் கவனிக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் சிறு குழந்தையாக இருந்த ஷர்மியையும் பார்க்க வேண்டியுள்ளதால் அதிக நேரம் அவனுடன் இருக்க முடியாமல் போய் விட்டது. அதனால் ஆதி ஒரு வித இறுக்கத்துடனே வளர்ந்தான். அவனை சுற்றி ஒரு வட்டத்தை அவனே உருவாக்கி கொண்டான். அதனால் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் என்று யாரும் இல்லை . ஷக்திவேல் மட்டும் தான் கல்லூரி காலத்தில் இருந்து அவனுடைய நண்பனாக இருக்கிறான். ஆதி தனியாக இருந்தாலும் ஷக்தி என்றும் அவனுடனேயே இருப்பான். அவன் எவ்வளவு திட்டினாலும் கேட்க மாட்டான். எதையும் எதிர் பார்க்காமல் அவன் காட்டிய அன்பு தான் அவனிடம் ஆதியை ஈர்த்தது. ஷக்தியின் பெற்றோர் இருவருமே ஒரு கார் விபத்தில் இறந்து விட்டனர். ஆனாலும் யாரையும் எதிர் பார்க்காமல் வேலை செய்து கொண்டே அவன் படித்து கொண்டிருந்த அவன் தன்னம்பிக்கை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

படிப்புகள் அனைத்தும் முடிந்ததும் அவனுக்கு என்ற தொழிலை அவனே ஏற்படுத்தி கொண்டான். ஷக்தியையும் அதில் இணைத்துக் கொண்டான். தொழிலில் முன்னேறுவது மட்டுமே தனது நோக்கம் என்பது போல் அவன் வேறு எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்தான். ஷர்மியும் மருத்துவம் படித்து கொண்டிருந்தாள் . தன் தந்தையையும் கவனித்து கொண்டாள். கருணாகரனுக்கு ஒரே ஒரு கவலை மட்டும் தான் இருந்தது. ஷர்மியை பற்றி அவருக்கு கவலை இல்லை ஏன்னெனில் அவளை பார்த்து கொள்ள ஆதி இருக்கிறான். அவன் என்றும் அவனின் கடமைகளில் இருந்து தவறுபவன் இல்லை. அவரின் கவலை எல்லாம் ஆதியை பற்றியது தான். அவன் தான் வாழ்க்கையை பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது தான். நாளுக்கு நாள் அவனின் இறுக்கம் கூடியதே தவிர குறையவே இல்லை. அவனுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தை பண்ண வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.
ஒரு நாள்....

கருணாகரன் வீட்டு ஹாலில் சோகமாக அமர்ந்து இருந்தார். அப்போது வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த ஷக்தியும் ஆதியும் என்றும் இல்லாமல் சோகமாக அமர்ந்து இருக்கும் தந்தையின் அருகில் சென்றனர் , “ அப்பா என்ன ஆச்சி ஏன் சோகமா இருக்கீங்க எதாவது பிரச்சனையா “ என்று ஆதி அவர் அருகில் அமர்ந்தபடியே கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவர், “ இல்லப்பா ஒன்னும் இல்ல உன்னால இதெல்லாம் செய்ய முடியாது “ என்றார்.அவருக்கு அருகில் இருக்கும் ஷக்தி, ‘ இவர் ஆரம்பமே சரி இல்லையே என்னவா இருக்கும் ‘ என்று சிந்தித்தப்படியே அவர்களை பார்த்தான்.

ஆதி, “ என்ன விஷயம்ன்னு சொல்லுங்க அப்பறம் நான் செய்ய முடியுமா இல்லையான்னு நான் சொல்றேன்.” அதை கேட்டவர், “ இல்லப்பா நம்ம நீலகிரி எஸ்டேட் இருக்கு இல்ல அங்க போய் இந்த வருஷ கணக்கு வழக்கு பாக்கணும். என்னால இந்த முறை அங்க போக முடியல அதான் என்ன பன்றது ன்னு தெரில “ என்றார்.

ஆதி, “ இதுல என்ன அப்பா பன்றது. அங்க இருக்குறவங்களை மெயில் பண்ண சொல்லுங்க. இங்க இருந்தே நான் பாக்குறேன். போதுமா. இதுக்கு தான் இப்படி சோகமா இருக்கீங்க . “ என்று கூறி விட்டு மேலே செல்ல எழுந்தான்.

அவன் எழுவதை பார்த்தவர், “ ஆதி கணக்கு வழக்குகள் எல்லாத்தையும் இங்க இருந்து பாத்துக்கலாம் . ஆனா அங்க இருக்கற தொழிலாளிங்களை எல்லாம் நம்ம நேர்ல போய் பாக்கணும் இல்ல.... ஏதாவது பிரச்சனை இருக்கான்னு நம்ம நேர்ல பாக்கர மாதிரி வருமா... நீ கொஞ்சம் அங்க போய் எல்லாத்தையும் பாத்துட்டு வரியா ஆதி” என்றார் கவலையுடன்.

இதை பார்த்த ஷக்தி, ‘ இவர் ஏன் இவன நீலகிரிக்கு அனுப்ப ப்ளான் பன்றாரு என்னவா இருக்கும் ‘ என்று யோசித்து கொண்டிருந்தான்.

மேலே செல்ல இருந்தவன் அவர் கூறியதை கேட்டவன், “ என்னப்பா பேசிறிங்க எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு அப்பா.... என்னால நீலகிரிக்கு போகலாம் முடியாது... ஆமா இப்போ எல்லாம் நீங்க அந்த பக்கம் அடிக்கடி போற மாதிரி தெறிது... அங்க இருக்குற எந்த சக்தி உங்கள இழுக்குது....” என்று கேட்டான்.

இவன் என்ன இப்படி கேக்கரான், என்று நினைத்தவர், “ ஆமா ஆதி நீ சொன்ன மாதிரி அங்க ஒரு சக்தி இருக்கு தான். அந்த எஸ்டேட் உங்க அம்மா பேர்ல நான் முதல்ல வாங்குனது அது எப்பவும் எனக்கு ஸ்பெஷல் தான். இப்போ உன்னால போக முடியுமா முடியாத. என்னால முடிஞ்சா நான் ஏன் உன்ன போக சொல்ல போறேன்.... சரிப்பா நீ போக வேண்டாம் நானே பாத்துக்கரேன்...” என்று பாவமாக கூறியவரை பார்த்தவன். சிறிது நேரம் அமைதிக்கு பின், “ சரி அப்பா நான் போறேன் போதுமா... நீங்க ரெஸ்ட் எடுக்கனும்ன்னு டாக்டர் சொல்லி இருக்கார். எனக்கும் கொஞ்சம் ரிலாக்சேஷன் வேணும்.... சோ நான் நாளைக்கு கிளம்பிறேன்” என்று கூறி விட்டு வேகமாக தனது அறைக்கு சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு தான் அவருக்கு மூச்சே வந்தது, ‘ இவன சம்மதிக்க வைக்கறதுக்குள்ள நான் ஒரு வழி ஆயிட்டேன் ‘ என்று நினைத்து கொண்டிருந்த போது அவருக்கு அருகில் வந்த ஷக்தி , “ ஏதோ பெறுசா ப்ளான் பண்ற மாதிரி தெரிதே அப்பா என்ன விஷயம்.... உங்க முழியே சரியில்லையே “ என்று கேட்டான்.

அதற்கு அவர் சிரித்தப்படியே, “ ஆமாடா ப்ளான் தான் அவன் சும்மா வேலை வேலைன்னு கொஞ்சம் கூட ஒரு ரெஸ்ட் இல்லாம இருக்கான்ன்னு தான் அவன நீலகிரிக்கு அனுப்பி வைக்கறேன்....வேற ஒன்னும் இல்ல டா. என்னை போய் சந்தேகம் பட்ற “ என்று கூற ஆரம்பித்தவரை பார்த்து கை எடுத்து கும்பிட்டவன், “ ஐயோ தெய்வமே நான் தெரியாம கேட்டுட்டேன்.... நானும் கிலம்புரேன். உங்க புள்ள கிட்ட சொல்லிடுங்க “ என்று ஓடி விட்டான்.

அவன் அலறி அடித்து ஓடியதை பார்த்தவர் சிரித்து கொண்டு, ‘ நீ சொன்னது சரி தான் நான் அவன ப்ளான் பண்ணி தான் அங்க அனுப்புறேன்... என்னை அங்க ஈர்த்த அந்த சக்தி இவனையும் ஈர்க்கனும்ன்னு தான். அவன் சந்தோஷமா இருக்கணும் அதுக்காக நான் என்ன வேணாலும் பன்னுவேன் ‘ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

அவர் நினைத்ததை போல் அவன் மேற்கொள்ளும் பயணம் அவன் வாழ்க்கையை மாற்றி அமைக்குமா பொருத்திருந்து பார்ப்போம்...

காலங்கள் ஓடும் இது

கதையாகி போகும்

என் கண்ணீர் துளியின் ஈரம்

வாழும் தாயாக

நீதான் தலை கோத வந்தாலும்

மடி மீது

மீண்டும் ஜனனம் வேண்டும்......

என் வாழ்க்கை நீ இங்கு

தந்தது அடி உன்

நாட்கள் தானே இங்கு வாழ்வது

காதல் இல்லை

இது காமம் இல்லை

இந்த உறவுக்கு

உலகத்தில் பெயரில்லை....

நிஜத்தை தேடும்....

இந்த கதையின் கருத்துக்களை

"என் நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்து திரியில் பகிர்ந்து

கொள்ளுங்கள்...




.
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6


( நீலகிரியை பற்றிய சிறிய தகவல்

நீலகிரி மலை என்று அழைக்கப்படும் நீல மலையானது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மலை தொடராகும். இம்மலைத் தொடர் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. நீலகிரி என்னும் பெயராலேயே இம்மாவட்டம் நீலகிரி என்னும் பெயர் பெற்றது. இது மலைகளின் இராணி என்றழைக்கப்படுகிறது. நீலகிரி என்றால் நீல நிறமான மலை என்று பொருள். நீலகிரி மலையில் பூத்து குலுங்கும் குறிஞ்சி செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலை பிரதேசம் நீல நிறத்தில் தோன்றவதால் தென்னிந்தியவில் இம்மலை தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் பெற்றது.



ஏறத்தாழ 3300 க்கும் மேற்ப்பட்ட பூக்கும் தாவர வகைகள் உள்ளன. அதில் 1232 தாவர வகைகள் இவ்விடத்திற்கே உரித்தானவை. பேயேலெப்சிஸ் என்ற தாவர பேரினம் உலகில் இங்கு மட்டுமே காணப்படுகிறது.



விலங்கினங்களை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலைக்கே உரித்தான 100 வகையான பாலுட்டிகள் , 350 வகையான பறவைகள் , 80 வகையான இரு வாழ்விகள் , 39 வகையான மீன்கள், 31 வகையான ஊர்வன, 316 வகையான வண்ணத்துபூச்சியினங்கள் மற்றும் எண்ணிலடங்கா முதுகெலும்பற்ற விலங்கினங்கள் இக்காப்பகத்தில் காணப்படுகிறது. இங்குள்ள அரிதாகி வரும் விலங்குகள் புலி, ஆசிய யானை, வரையாடு ஆகியன இங்கு உள்ளன ).



அடுத்த நாள் காலை விடியும் முன்னரே ஆதி நீலகிரிக்கு கிளம்பி சென்று விட்டான். ஷக்தியை இங்கு இருக்கும் வேலைகளை பார்க்க சொல்லி இங்கேயே இருக்க சொல்லி விட்டு சென்றான். மதிய வேலை நெருங்கும் நேரம் அவன் நீலகிரியை வந்தடைந்தான். அவர்கள் அங்கு வந்தால் தங்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று தயாராகி எஸ்டேட்க்கு சென்றான். அங்கு அனைவரும் அவனுக்காக காத்திருந்தனர். அங்கு முழுவதும் சுற்றி பார்த்து கொண்டே வேலை செய்பவர்களிடம் எதாவது பிரச்சனை உள்ளதா என்று கேட்டறிந்தான். பிறகு வேலைகள் எல்லாம் எவ்வாறு நடைபெறுகிறது என்று அனைத்தும் அவன் கண்களால் பரிசோதித்து விட்டு அங்குள்ள ஆபீஸ் ரூம் சென்று அமர்ந்தான். காலையில் வந்ததில் இருந்து எதுவும் உண்ணவில்லை காபி குடித்தது மட்டும் தான். எஸ்டேட் மேனேஜர் சாப்பிட சொன்னாலும் வேலை முடிந்த பிறகு சாப்பிடுவதாக கூறியவன் இந்த வருட கணக்கு வழக்குகளை கொண்டு வர சொல்லி சரிப்பார்த்து கொண்டிருந்தான்.



அவன் கேட்டதை எடுத்து வந்து கொடுத்தார் . அவன் அனைத்தையும் பார்த்த பிறகு அவரிடம், “ பெர்பெக்ட் எல்லாமே சரியா இருக்கு. வேற எதாவது லேப‍ர்ஸ்குள்ள ப்ரோப்லேம் இருந்தா சொல்லுங்க “ என்றான். அவன் கூறியதை கேட்டவர், “தம்பி நீங்க வருவீங்கன்னு காலைலேயே வானதி தான் எல்லாத்தையும் சரி பார்த்து வெச்சுது தம்பி. இந்த பாராட்டு அந்த பொண்ணூக்கு தான் போகணும். அப்பறம் தொழிலாளிங்க குள்ள எந்த பிரச்சனையும் இல்ல அப்படியே இருந்தாலும் வானதி எல்லாத்தையும் பாத்துக்கும் தம்பி. இங்க இருக்க எல்லாரும் அந்த பொண்ணு பேச்ச தான் கேப்பாங்க. எல்லாருக்கும் அந்த பொண்ணுன்னா அவ்வளவு இஷ்டம். இது வரைக்கும் பிரச்சனை எதுவும் இல்ல. இனிமே இருந்தா சொல்றேன் தம்பி “ என்று மரியாதையுடன் கூறினார்.



அவர் கூறியதை கேட்டவன், “ யார் அந்த வானதி நீங்க எனக்கு அறிமுகம் படுத்தவே இல்லை “ என்று சந்தேகத்துடன் கேட்டான்.



அதற்கு அவர், “ மன்னிச்ச்சிடுங்க தம்பி காலைல ஒரு முக்கியமான வேலையா டவுன் வரைக்கும் போயி இருக்கா. இங்க இருக்க பொண்ணு தான் தம்பி. நம்ம அய்யாவுக்கு நல்லா தெரியும். நம்ம ட்ரஸ்ட் மூலமா தான் படிச்சிது. படிப்ப முடிக்குற வரைக்கும் இங்கயே வேலை பாக்கட்டும்ன்னு அய்யா தான் சொன்னாரு. அவருக்கு வானதிய ரொம்ப பிடிக்கும். அந்த பொண்ணூம் ரொம்ப பொறுப்பானவள் தம்பி. உங்கள நேர்ல பாத்து எல்லாத்தையும் ஒப்படைக்கனும்ன்னு சொல்லுச்சி தம்பி ஆனா தவிர்க்க முடியாததால தான் இருக்க முடியல நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க தம்பி “ என்று சொன்னார்.


ஆதி, “ சரி சரி விட்டா இன்னிக்கு முழுக்க பேசுவிங்க போல. சரி நேரம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன். நீங்க பாத்துகொங்க எதாவது பிரச்சனைனா என்னை காண்டாக்ட் பண்ணுங்க “ என்று கூறியபடியே அங்கிருந்து சென்று விட்டான்.



அவன் எஸ்டேட்டில் இருந்து வீட்டிற்க்கு செல்ல வெகு தூரம் போக வேண்டும் அதுவும் காட்டு வழியாக செல்ல வேண்டும். சிறிது தூரம் காரில் சென்று கொண்டிருந்தவன் ஒரு ஒரமாக வண்டியை நிறுத்தி விட்டு கண்களை மூடி அமர்ந்து விட்டான், ‘ தன்னுடைய வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது. நிம்மதி என்ற ஒன்று தனக்கு இல்லையா. சிரிப்பு என்ற ஒன்றை மறந்து பல வருடங்களாகி விட்டது. இது என்ன வாழ்க்கை ‘ என்ற எண்ணம் சில நாட்களாக அவன் மனதில் தோன்ற ஆரம்பித்தது . அதை பற்றி அவன் சிந்தித்து கொண்டிருந்த போது அந்த ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் ஒரு பெண்ணை மூன்று பேர் தூரத்தி கொண்டு சென்றதை பார்த்தான். அதை பார்த்தவனுக்கு கோவம் வந்தது அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக காரில் இருந்து இறங்கியவன் அவர்கள் சென்ற பக்கமாக வேகமாக ஓடினான். அந்த பெண் காட்டிற்குள் ஓடியதால் அவர்களும் பின்னாடியே சென்றதை கண்டவன் அவனும் வேகமாக சென்றான்.



காட்டிற்குள் அவர்கள் வேகமாக சென்றதால் எங்கே போனார்கள் என்று தெரியாமல் சுற்றி தேடிக் கொண்டே சென்றான். சிறிது தூரம் சென்ற பிறகு சில பேச்சு குரல்கள் கேட்டு அந்த பக்கம் சென்று பார்த்தவன் அதிர்ந்தான்.



காட்டிற்குள் வேகமாக ஓடிய வானதி வழியில் இருந்த மரத்தின் வேர் தடுக்கி கீழே விழ இருந்தவள் சுதாரித்து நேராக நின்று திரும்ப ஓடுவதற்குள் பின்னாடியே ஓடி வந்த மூவரும் அவளை சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்து, “ எதுக்கு என்னை விடாம தூரத்துரிங்க...உங்களுக்கு என்ன வேணும் “ என்று மனதிற்குள் தைரியத்தை வரவைத்து கொண்டு கேட்டாள்.



அதைக் கேட்ட மூவரில் ஒருவன், “ நீ மட்டும் ஓடாம இருந்து இருந்தா நாங்க வந்த வேலை முடிஞ்சி இருக்கும்... இப்போ கூட கேட்டு போகல கொஞ்சம் நேரம் அசையாம நில்லு நாங்க உன்னை ஒரே தடவ குத்திக் கொன்னுட்டு போயிடுவோம்... அதான் எங்களுக்கு இப்ப வேணும் “ என்றான்.



“ நீங்க சொல்றது உங்களுக்கே ஒவரா இல்ல நீங்க கொல்ற வரைக்கும் நான் நிக்கனுமா “.



“ முதல்ல உன்ன கொல்லனும்ன்னு தான் வந்தோம் ஆனா நீ வேற அழகா இருக்க அதனால எங்களுக்கு இப்போ வேற ஒன்னு தோணுது. எப்படியும் சாக தான போற....“ என்று ஒரு மாதிரியாக சிரித்தப்படி மூவரில் ஒருவன் வானதியை நெருங்கி வந்தான். தன்னை நோக்கி வருபவனை கண்டவள் தைரியத்தை வர வைத்துக் கொண்டு அவனை ஓங்கி வயிற்றில் குத்தி தள்ளி விட்டு விட்டு மறுபடியும் ஒட ஆரம்பித்தாள். தன்னுடைய உயிரை விட தன் மானத்தை காப்பாத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவளை வேகமாக ஓட வைத்தது. ஆனால் அவளால் வெகு தூரம் ஓட முடியவில்லை அங்கிருந்த சேற்றில் கால் தடுக்கி கீழே விழுந்தாள்.



தன்னை தள்ளி விட்டு ஒடியவள் மீது கோவம் கொண்டு இன்னும் வெறியோடு அவளை தூரத்திக் கொண்டு வந்தவர்கள் அவள் கீழே விழுந்ததை பார்த்து வேகமாக அவளை நெருங்கி இருவர் அவள் கைகளை பிடித்துக் கொண்டனர்.



“ நானும் ரொம்ப அழகான பொண்ணா இருக்கன்னு கொஞ்சம் விட்டு பிடிச்சா ரொம்ப ஒவரா போற... இனி உன்ன விட்டு வெச்சா நாங்க யார் கிட்டயாவது மாட்டிப்போம். சீக்கிரம் வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தான் யாரோ வர மாதிரி வேற இருக்கு. அவ கையா நல்லா இறுக்கமா பிடிங்கடா “ என்று கத்தியோடு சொல்லியவன் அவளை நெருங்கினான். வானதியும் தன்னால் முடிந்தவரை அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை அதனால் என்ன நடக்கனுமோ நடக்கட்டும் என்று தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
அதே நேரம் அவர்களின் பேச்சு குரலை கேட்டு அங்கு வந்த ஆதி கண்டது அந்த மூன்று பேரில் ஒருவன் அந்த பெண்ணை கொல்ல கத்தியோடு செல்ல மற்ற இருவரும் அந்த பெண்ணின் கையை பிடித்திருந்தனர். அந்த பெண்ணும் அவர்களிடம் இருந்து தன்னை விடுவித்து கொள்ள போராடி கொண்டிருந்ததை தான். சூழ்நிலையை உடனே புரிந்து கொண்டவன் கத்தியை அந்த பெண்ணுக்கு அருகில் கொண்டு செல்லும் போது இவன் அந்த கையை பிடித்து தடுத்தான்.



தன்னை நோக்கி வந்த அந்த கத்தி இன்னும் தன்னை குத்தவில்லையே என்று நினைத்தவள் இறுக்கமாக மூடியிருந்த கண்களை திறந்து பார்த்தாள் வானதி மனதில் காலையில் டவுனில் ஒரு அவசர வேலையாக சென்றவள் வேலை முடிந்த பிறகு போகும் வழியில் ஒரு முக்கியமான நபரை சந்திக்க காட்டுப் பக்கம் செல்ல வேண்டி அந்த சாலை வழியாக நடந்து செல்லும் போது திடீரென்று மூன்று பேர் அவளிடம் தப்பான எண்ணத்துடன் நெருங்கினார்கள். அவர்களின் நோக்கத்தை உணர்ந்தவள் தப்பிப்பதற்காக ஓடினாள். அப்போது தான் ஆதி இதை பார்த்து விட்டு அவளை காப்பாற்றுவதர்க்காக வந்திருக்கிறான் என்று நினைத்தாள். அவள் மனத்தில் நடந்ததை நினைத்து பார்ப்பதற்குள் அவர்கள் மூவரும் ஆதியை தாக்கினர் . அவனும் அவர்கள் மூவரையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கி விட்டான். அவனின் அடிக்கு பயந்தவர்கள் தலை தெறிக்க ஓடி விட்டனர்.



அவர்கள் அங்கிருந்து ஓடியதை பார்த்து உறுதிப்படுத்திய பிறகு அவளை நோக்கி வந்தவன், “ கொஞ்சம் கூட அறிவில்லை ......ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்ல தனியா வரக்கூடாதுன்னு தெரியாது இப்ப என்ன நடந்ததுன்னு பாத்தியா.....உங்களுக்கு எப்படி புரியும் எல்லாம் திமிர் வேற என்ன சொல்றது “ என்று கோவமாக கத்தினான்.



அவன் கோவப்பட்டதை பார்த்தவள், “ அப்படி இல்ல சார்....நான் எதுக்கு வந்தேன் னா....” என்று கூற ஆரம்பித்தவளை தன் கையை உயர்த்தி தடுத்தவன், “ போதும் உன்னோட சாக்கு போக்க கேக்க எனக்கு இப்ப நேரம் இல்ல இருட்டாக ஆரம்பிச்சிடுச்சு.... சீக்கிரமா இந்த காட்டை விட்டு வெளிய போகணும்... உன்ன காப்பாத்த வந்து நானும் இங்க மாட்டிக்கிட்டேன்...” என்று கத்தினான். அவளின் பாதி தெரிந்த முகத்தை பார்த்தவுடன் தன்னுடைய மனதில் ஏதோ ஒரு உணர்வு தோன்றுவதை அறிந்தவன் அது பிடிக்காததால் அதை அவளிடமே கோவமாக வெளிப்படுத்தினான்.



தன்னை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியவனுக்கு நன்றி கூற வேண்டும் என்று நினைத்தவள் மற்றவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்று கேட்காமல் கத்தியவனை நிதானமாக பார்த்தவள், “ சார் இப்போ இந்த காட்ட விட்டு போறது நமக்கு நல்லது இல்லை.... பாருங்க நல்லவே இருட்டிடுச்சு “ என்றவளை முறைத்தவன், “ அதுக்காக இங்கேயே வா இருக்க முடியும் மூளையை யூஸ் பண்ண மாட்டியா.... அதான அது இருந்திருந்தா நீ ஏன் இப்படி அந்த ரவுடிங்க கிட்ட மாட்ட போற “ என்று கூறினான்.



அவனின் பேச்சில் கடுப்பான வானதி, “ சார் சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதிங்க...நீங்க என்னை காப்பத்தினிங்க அப்படின்றதுக்காக என்னை பேசவே விடாம பேசுறிங்க...இப்போ நான் சொல்றத கொஞ்சம் கேக்ரிங்கலா” என்று அவனை பார்த்து கேட்டாள்.



தானும் அதிகமாக பேசியதை உணர்ந்தவன். அவள் கேட்டதற்கு சரியென்றும் மேலே கூறுமாறும் தலையசைத்தான். அவன் சம்மத்தித்ததை கண்டவள், “ இந்த காட்டை பத்தி எனக்கு நல்லவே தெரியும்... இப்போ நம்ம நடுக்காட்டில இருக்கோம் அதுவும் வழி தெறிஞ்சாலும் இருட்டுல வழி மாறி போயிடுவோம்... சார். மிருகங்கள் எல்லாம் இப்போ அதிக நடமாட்டம் இருக்கும். அதனால காலைல விடிஞ்ச பிறகு இங்க இருந்து போறது தான் நமக்கு நல்லது. அத தவிர நமக்கு இப்போ வேற வழியும் இல்லை “ என்றாள்.
அவள் கூறியதும் சரியென்பதை உணர்ந்தவன், “ நீ சொல்றதும் உண்மை தான் ஆனா இந்த காட்டுக்குள்ள காலைல வரைக்கும் எங்க தங்கறது “ என்று கேட்டான்.



வானதி தன்னை சுற்றியுள்ள இடத்தை பார்த்தாள். இருட்டிய பிறகு அந்த முழு நிலவின் வெளிச்சத்தில் தாங்கள் இருக்கும் இடத்தை குத்து மதிப்பாக அறிந்தவள், “ சார் அது வந்து எனக்கு தெறிஞ்ச வரைக்கும்... இங்க பக்கத்துல ஒரு பாழடைந்த மண்டபம் ஒன்னு இருக்கு நாம அங்க போலாம். விடிஞ்ச உடனே நான் உங்களை காட்டுக்கு வெளியே கொண்டு போய் விட்டுட்றேன் “ என்று அங்கு செல்லும் பாதையை பார்த்தப்படியே கூறினாள்.



ஆதி, “ இப்போ எனக்கு உன் பேச்ச கேக்கரத தவிர வேற வழி இல்லை வா போலாம் “ என்று கூறி ஒரு பெருமூச்சுடன் அவளை முன்னாடி நடக்க சொன்னான். வானதியும் கீழே விழுந்த தன்னுடைய பேக்கை தோளில் மாட்டியப்படி முன்னே சுற்றி பார்த்துக் கொண்டே நடந்தாள். சிறிது தூரம் சென்ற பிறகு கீழே கிடந்த சிறு சிறு குச்சிகளை எடுத்து கொண்டு சென்றவளை புரியாமல் பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்தான் ஆதி. வாழ்க்கையில் முதல் முறையாக வேறு ஒருவரை தான் பின் தொடர்வதை அச்சர்யமாக எண்ணியவன் காலையில் இருந்து சாப்பிடாதது பிறகு சண்டையிட்டது என அனைத்தும் சேர்ந்து சோர்வுடனே நடந்தான்



வானதி, “ சார் இதோ வந்துட்டொம்... வாங்க இங்க வந்து உக்காருங்க “ என்று கூறியவள் அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததை பார்த்தவன் இன்னொரு பக்கத்தில் அம்ர்ந்தான். அவன் மனதில், ‘ காலைல இருந்து ஒன்னும் சாப்பிடல பயங்கரமா பசிக்குது இப்போ என்ன பன்றது. இருட்டுல எது எங்க இருக்குன்னு கூட தெரிலயே...என்ன பன்றது ‘ என்று யோசித்து கொண்டிருந்தவன் முன் ஒரு கரம் பழத்தை நீட்டியது. அந்த பழத்தை வாங்காமல் அவளையே புரியாமல் பார்த்தான்.



அங்கு அமர்ந்ததும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி பார்த்து கொண்டிருந்தவள் கண்ணில் சோர்வான முகத்துடன் இருந்த ஆதியே தெரிந்தான். தன்னை காப்பாற்ற வந்து இங்கு மாட்டிக் கொண்டதை எண்ணி வருத்தம் கொண்டாள் . அவன் முகத்தை வைத்தே பசியோடு இருப்பதை அறிந்தவள் தன் பேக்கில் தான் பார்க்க வந்த நபருக்காக வாங்கிய பழங்கள் கொஞ்சம் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். ஆனால் அதை வாங்காமல் தன்னையே பார்த்தவனை, “ இந்த பழம் நான் வேற ஒருத்தருக்கு வாங்கிட்டு வந்தது தான் இனிமே இதை அவங்களுக்கு கொடுக்க முடியாது. உங்கள பாத்தா காலையில இருந்து சாப்பிடாம பசில இருக்க மாதிரி தெரிது அதனால நீங்க சாப்பிடுங்க “ என்று கூறி அவனின் கை மீது வைத்தாள். ஆதியும் மிகுந்த பசியோடு இருந்ததால் மேற்க்கொண்டு எதுவும் கூறாமல் அவள் கொடுத்த எல்லா பழங்களையும் உண்டான். பசி தீர்ந்த பிறகு தான் எல்லா பழத்தையும் தானே உண்டதை உணர்ந்தவன். அவளை பார்த்து, “ அது ... வந்து. ... பசில இருந்ததால எல்லாத்தையும் நானே சாப்பிட்டுடேன்... ஏன் நீ எடுத்துக்காம எனக்கே எல்லாத்தையும் கொடுத்த ? “ என்று கேள்வியாக பார்த்தவனை பார்த்து சிரிப்புடன், “ கவலைப்படாதிங்க எனக்கு பசியில்லை அதுவுமில்லாமல் நம்ம கண்ணு முன்னாடி ஒருத்தர் பசியோடு இருந்தா அவங்க பசிய தான் முதல்ல போக்கனும் அது நம்ம கடமைன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க “ என்று வானத்தை பார்த்துக் கொண்டே கூறியவளை விசித்திரமாக பார்த்தான்.



இதுவரை அவன் பார்த்த பெண்கள் அனைவருமே சுயநலமானவர்கள் தன்னுடையதை யாருக்கும் அதுவும் இலவசமாக கொடுப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம். அப்படி இருக்கும் போது இந்த பெண் அவர்களில் இருந்து வித்தியாசமாக தெரிந்தாள்.
இப்படியே நேரங்கள் சென்றது ஆனால் ஆதியால் அமைதியாக அமர முடியவில்லை ஏனென்றால் இதுவரை அவன் இப்படி ஒரே இடத்தில் எதுவும் செய்யாமல் அவன் இருந்ததே இல்லை அதுவே அவனுக்கு எரிச்சலாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் கீழே இருக்கும் கற்க்களை எடுத்து தூக்கி வீசிக்கொண்டிருந்தான். அவனின் செயல்களை பார்த்து அவனின் மனநிலையை புரிந்து கொண்டவள், “ இப்படி காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டது உங்களுக்கு பிடிக்கலன்னு நினைக்கறேன். எனக்கு உங்க சூழ்நிலை என்னன்னு புரிது. நாம சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தாலா இங்க இருந்தாலும் நம்மள சுத்தி இருக்க அழக கொஞ்சம் ரசிச்சி பாருங்க. ஒரு அழகான காடு, சுத்தி இருட்டு அதுல முழுநிலவொளியோட வெளிச்சம், காத்துல அசையற மரங்கள், அதனோட இலைகள் ஒன்னுக்கு ஒன்னு காத்துல ஒரசும் போது ஏற்படுற சத்தம்....இப்படின்னு நிறைய விஷயங்கள் நம்மள சுத்தி இருக்கு. இனி இதுப்போல ஒரு சந்தர்ப்பம் உங்க வாழ்க்கையில வருமான்னு தெரியாது.... அதனால கோவத்த விட்டுட்டு இந்த நிமிஷத்த ரசிங்க “ என்று தன்னை மறந்து அவனிடம் பேசிக்கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு அவள் கூறியதை கேட்டவுடன் தான் தன்னை சுற்றியுள்ளவற்றை பார்க்க வேண்டும் போல் எண்ணம் தோன்றியது. இப்போது அதை பார்த்தவனுக்கு அந்த இடமே அழகாக தெரிந்தது.



அந்த நிமிடம் அவன் மனதில் , ‘ நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை யாரோடு இருக்கிறோம் என்பது தான் முக்கியம். எந்த ஒரு இக்கட்டுட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அதை ரசிக்க தெரிந்த ஒருவரோடு இருந்தால் அந்த இடமும் அந்த நொடியும் மிகவும் அழகாக தெரியும் ‘ என்பதை உணர்ந்தான். அது மட்டும் இல்லாமல் அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுள் தோன்றியது. ஆதலால் அவளிடம், “ இங்க நீயும் நானும் தான் இருக்கோம் அதனால உன்னை பத்தி நீ சொல்லு....ஆமா நீ யார பாக்க காட்டுக்கு வந்த “ என்று கேட்டான். அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தவள், “ சார்... அது வந்து...என்னடா இப்படி சொல்றலேன்னு நினைக்காதிங்க....மிஞ்சி போனா நம்ம ரெண்டு பேரும் விடியற வரைக்கும் தான் ஒன்னா இருக்கபோறோம்....அதுக்காப்புறம் நீங்க உங்க வழிய பாத்திட்டு போயிடுவீங்க நான் என் வழியில போயிடுவேன்....அதனால நான் யார் என் பெயர் என்ன...இப்ப என்ன பன்றேன் இப்படி எதுவும் நீங்க கேக்காதிங்க நானும் உங்கள பத்தி எதுவும் கேக்க மாட்டேன்....சரியா என்னை எதுவும் தப்பா நினைச்சிக்காதிங்க “ என தயங்கியப்படி கூறியவள். அவன் தன்னை எதுவும் தவறாக எண்ணி விட்டானா என்று தெரிந்து கொள்ள அவனின் முகத்தையே பார்த்தாள்.





அவள் கூறியதை கேட்டதும் அவனுக்கு சிறிது கோவமாக வந்தது. அவனை சந்திப்பதர்க்காகவும் அவனிடம் ஒரு முறையாவது பேச வேண்டும் என்பதற்காகவும் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தான் வலிய வந்து அவளிடம் பேசியும் அதற்கு அவள் பதிலாளிக்காதது அவனுக்கு கோவமாக வந்தது. அதனால் அவன் தன்னுடைய முகத்தை வேறுப்புறம் திருப்பிக் கொண்டான். அவன் தன் மீது கோவமாக இருப்பதை அவன் முகத்தில் வந்து போன பாவனைகளைக் கொண்டு அறிந்து கொண்டவள். இப்போது இங்கு இருவர் மட்டுமே இருக்கிறோம் அதுவும் தனக்கு உதவி செய்தவர் இப்படி கோவமாக இருப்பது சரியல்ல என்று நினைத்தவள். அவனை சமாதானம் படுத்துவதற்காக, “ கோவமா இருக்கீங்களா....இந்த காட்டுல நம்ம ரெண்டு பேர் தான் இருக்கோம். நீங்களும் இப்படி முகத்த திருப்பிக்கிட்டா எப்படி. நான் என்ன பத்தி வேற எதுவும் சொல்ல மாட்டேன்ன்னு தான் சொன்னேன்... இப்போ நான் யாரா பாக்க வந்தேன்ன்னு சொல்ல மாட்டேன்ன்னு சொல்லவே இல்லையே.... நீங்க கேட்ட ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு நான் பதில் கண்டிப்பா சொல்றேன் “ என்று சாமர்த்தியமாக பேசியவளை மனதில் மெச்சியவன் அவள் பேசுவதை கேட்பதற்காக திரும்பி அமர்ந்தான். இந்த இரவில் தனிமையில் எவ்வளவு நேரம் கோவத்தை பிடித்து வைக்க முடியும் அதனால் அவனும் அவள் போக்கில் , “ சரி சொல்லு “ என்றான்.



வானதி,” நான் இங்க என்னோட தம்பிய பாக்க வந்தேன் “ என்றாள்.



ஆதி, “ என்ன உன் தம்பிய பாக்க வந்தியா. அவன் இந்த காட்டுக்குள்ளயா இருக்கான் “ என்று கேட்டான். ஆனால் அவன் மனதிற்குள் ஒரு வேலை இவங்க குடும்பம் காட்டுக்குள்ள இருக்க பழங்குடியினர் போல என்று எண்ணினான்.



வானதி, “ ஆமா.... ஆனா நீங்க நினைக்கற மாதிரி அவன் என் சொந்த தம்பி இல்லை. பட் அவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவன் கூட. உண்மைய சொல்லனும்னா அவன் என் குழந்தை மாதிரின்னு கூட சொல்லலாம். அவன பாக்க தான் வந்தேன். நாளைக்கு அவன பாத்துட்டு தான் போகணும் “.



ஆதி, “ நீ சொல்றது ஒன்னும் புரியல... எதுவும் கேக்க கூடாதுன்னு வேற சொல்லிட்ட... சரி. நாளைக்கு என்னையும் உன் தம்பிய பாக்கும் போது கூட்டிட்டு போ. இங்க நடந்தத அவங்க கிட்ட சொல்லனும் “



வானதி, “ அப்படினா சரி உங்க இஷ்டம் ... நான் கூட்டிட்டு போறேன் “ என்று கூறியவள் அமைதியாக அந்த சூழலை ரசிக்க ஆரம்பித்தாள்.அவள் மனதில் இன்று நடந்தது அனைத்தும் கண் முன்னால் ஓட ஆரம்பித்தது. இவர் மட்டும் வரவில்லை என்றால் தனக்கு என்ன நேர்ந்து இருக்கும். அவரை பத்திரமாக நாளை விடிந்தவுடன் காட்டிற்கு வெளியே கொண்டு விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.அவளை பார்த்துக் கொண்டிருந்த ஆதியும் முதல் முறையாக மனதில் ஒரு வித அமைதியுடன் அந்த இரவின் அழகையும் அதை ரசிக்க கற்றுக் கொடுத்த பெண்ணையும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.



தீராத மோகம் நான்

கொண்ட நேரம்

தேனாக நீ வந்து சீராட்டதான்

காணாத வாழ்வு நீ தந்த வேலை

பூமாலை நீ சூடி பாராட்டதான்

நீ என் ராணி நாந்தான் தேனீ

நீ என் ராஜா நான் உன் ரோஜா

தெய்வீக பந்தத்திலே நான் கண்ட

சொர்க்கம் இது காதல் உறவே...


நிஜத்தை தேடும்...


இந்த கதையின் கருத்துக்களை “

என் நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்து திரியில் மறக்காமல்

பகிர்ந்து
கொள்ளுங்கள்....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ளாஷ் பேக் என்னால முடிஞ்சா வரைக்கும் நல்லா கொடுக்கனும்ன்னு நான் முயற்சி பண்ணி இருக்கேன். இன்னும் முயற்சி பன்னுவேன் என்ன குறை இருந்தாலும் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்...
 
Status
Not open for further replies.
Top