All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கதை திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே🙏🙏

எல்லோரும் எப்படி இருக்கீஙக... இப்பொழுது எனது ஐந்தாவது கதையை உங்கள் முன் சமர்பிக்கிறேன். முதல் நன்றி ஸ்ரீமாக்குதான் என்னை ஒரு எழுத்தாளராக அறிமுகப்படுத்தி வாய்ப்பு தந்தமைக்கு.

முந்தைய கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை மறவேன். உங்கள் ஆதரவினால்தான் அடுத்த கதையை உங்கள் ஆசிர்வாதத்துடன் தொடஙகுகிறேன்.. உங்களின் அன்பான ஆதரவை எதிர் நோக்கும்

மாலினிராஜா
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் 1

ஜன்னலோரம் அமர்ந்தவளின் பார்வை அடிக்கடி கைகடிகாரத்தை பார்த்து கொண்டிருந்தது. தன்னை அழைக்க யார் வரப்போகிறார்களோ என்ற ஆர்வத்தில் மனம் குழந்தைபோல் துள்ளி குதித்து அடங்க மறுத்தது. என்றுமில்லாத இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் உள்ளது. ஆம், எப்பொழுதும் அவள் தன் ஊருக்கு திரும்பும்போது யாரும் அழைத்து போக வரமாட்டார்கள் அது அவள் அறிந்த விஷயம் மற்றும் பழகி போனதும் கூட. ஆனால் இந்த முறை அப்படியல்லவே.. நாளை தங்கையின் திருமணம் எப்படியும் தம்பியேனும் வருவான் என்ற ஆவலுடன் பஸ் நிறுத்துவதற்காக காத்திருந்தாள்.

ஒரு வழியாக பஸ்ஸும் நின்றது… தன் பொதிகளை சுமந்து கொண்டு பஸ் இறங்கியவளை வரவேற்றது தங்கள் எதிர் வீட்டில் வசிக்கும் மணி அண்ணனின் ஆட்டோ மட்டுமே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“ஆமாமாம் அவளேதான். அது ஒன்னுமில்ல அவளுக்கு முன்னாடி என் மவளுக்கு கல்யாணம் ஆகுதில்ல… பொறாமை புடிச்ச மனசு. அதான் இந்த பிச்சைக்காரி வேஷம் போட்டுக்கிட்டு வரா… நல்ல மனசிருந்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரமா பார்த்து இப்படி வேஷம் போட்டு வருவாளா… எல்லாம் நாங்க அசிங்கப்படனுங்கிற அழுக்கு மனசுதான் வேறு என்ன!!”

சொர்ணத்தின் குரல் தெளிவாகவே விழுந்தது. எப்பொழுதும்போல் தூக்கிப்போட முடியாமல் அமில வார்த்தைகள் நெஞ்சில் புகுந்து ரணமாக்க… தவித்து போனாள். ‘என்னை இப்படி அசிங்கப்படுத்துவதிலும் அவமானப்படுத்துவதிலும் இவங்களுக்கு என்ன கிடைத்திட போகிறது. நான் காயப்படுவதில் அவங்களுக்கு என்ன பேரின்பம் கிடைச்சிட போகுது!! வஞ்சம் கொள்ளும். அளவுக்கு நான் என்ன செய்தேன்?’ ஆயிரமாவது முறையாக தன்னையே கேட்டுக்கொண்டாள். பதில் கிடைக்காது என்று தெரிந்தும் ஏனோ மனம் தொடர்ந்து தேடி கொண்டிருந்தது. கால்கள் அதன் போக்கில் அவளறைக்கு இழுத்து சென்றன.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“ஏண்டி உன் அக்காக்கு முன்னே நீ கல்யாணம் பன்னுறீயே அவ ஒன்னும் சொல்ல மாட்டாளா?”

“ச்சீ வாயை கழுவுடீ!! அவ ஒன்னும் என் அக்கா இல்லை. என் அம்மாக்கு நான் தான் மூத்த பிள்ளை. அவ என் அப்பாக்கு பிறந்தவ அவ்வளவுதான்”

“எப்படி இருந்தாலும் உன்னை மூத்தவதானடி”

“அதுக்கு அவ என் அக்கா ஆகிட முடியுமா? என் அழகு என்ன? என் கலர் என்ன? என் பக்கத்தில நிக்கிறதுக்கு கூட அருகதை இல்லாதவ எல்லாம் என் குடும்பம் என்று சொல்லாதே நான் காண்டாகிடுவேன்!!”

“சரி சரி கல்யாண பொண்ணு டென்ஷன் ஆகாதே.. அவளுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை? அதை முதல்ல சொல்லு”

“உனக்கேன் அந்த கவலை?”

“அவ குடுக்குற காசுலத்தானே உங்க குடும்பம் ஓடுது” மனசாட்சி உள்ளவள் போலும்

“அது எங்க குடும்பத்துல ஒருத்தியா இருக்கிறதுக்கு அவ தர்ர கூலி இல்ல… ம்ம்ம்… டேக்ஸ் என்று கூட சொல்லலாம்” மனசாட்சி இல்லையோ என்று அவள் தோழிகளுக்கு உருத்தியதுவோ என்னவோ, அதில் ஒருத்தி சந்தேகம் போல் கேட்டாள்

“அப்படியே அவளுக்கு கல்யாணமாகிட்டா உங்க குடும்ப கதி… இப்பகூட உன் கல்யாணத்துக்கு அவ தானே செலவை ஏத்துக்கிட்டா?”
 
Status
Not open for further replies.
Top