All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கதை திரி

Status
Not open for further replies.

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் ஹாய் பட்டூஸ்,

மீண்டும் நானே...எங்க டா அத்தை பெத்த பூங்குயிலே எழுதாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கன்னு கேக்காதீங்க..

ஒரு ஜாலி கதை எழுதலாம்னு தோணுச்சு அதான்..இதுக்கான டீஸர் எல்லாம் ஏற்கனவே மூஞ்சிபுக்ல போட்டுட்டேன்..அங்க இல்லாதவங்க இங்க படிங்க..நைட் யூடியோட ஓடி வரேன்..(ஹிஹி அத்தை பெத்த பூங்குயிலே யூடியும் வரும்).

உங்க எல்லாருக்கும் நிச்சயம் பிடிக்கும்னு நம்புறேன்..

லவ் யூ ஆல்:love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

கதை பெயர்: நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை 😍

எவ்ளோ நாள் தான் ஹீரோவே கெத்து காட்டுறது.. ஒரு சேஞ்ச்க்கு ஹீரோயின் காட்டட்டுமே..

கதை நாயகி: வசுந்தரா தேவி
கதை நாயகன் : ????? நிறைய பேர் அவனுக்கு இருக்கதுனால நீங்களே கதையில பார்த்து தெரிஞ்சுக்கோங்க..🤪🤪

கதையில இருந்து ஒரு குட்டி டீ😍

"என்னங்க வெள்ளை சொக்கா" என விமானத்தில் உள்ள கழிப்பறையின் வெளியே நின்று அவளை கத்தி அழைத்தான் அவன்.

அவன் கத்தியதில் அவளைத் தவிர அங்கிருந்த அனைவருமே அவனை திரும்பி ஒரு மாதிரியாக பார்க்க,அவனோ அவர்களை கண்டுகொள்ளாமல் அவள் கவனத்தை தன் பக்கம் திருப்புவதிலே முனைப்பாய் இருந்தான்..

"ஏங்க மோடம் இந்தாண்ட கொஞ்சம் வாங்க" என மீண்டும் கத்தினான்..

"மேடம்னு கூட சொல்ல தெரியாத ஒரு country fool அஹ் என் கூட அனுப்பி வச்சு என்னை டார்ச்சர் பண்ணுறியே தாத்தா!!!!" என அவள் நர நரவென பற்களை கடித்தாள்.

அவன் அருகே வந்த விமான பணிப்பெண்," How can i help you sir??" என நுனி நாக்கு ஆங்கிலத்தில் வினவ,

"இந்தாமா மைதா மாவு நீ பேசுறது ஒரு இழவும் விளங்கலை..ஏதோ என்னை கேனைன்னு திட்டுனது மட்டும் தான் புரியுது..கம்முன்னு உன் சீட்ல போய் குந்திக்க, எனக்கு மட்டும் கோவம் வந்துச்சு சீன் ஆய்ரும் தெரியுதா" என அவன் எகிற,

பயந்து போன அந்த பெண்,வாய்க்குள்ளே ஏதோ முனுமுனுத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அங்கே தமிழ் தெரிந்த சிலரோ இவன் பேசியதை கேட்டு நகைக்க,அவள் மட்டும் இன்னும் திரும்பி பார்க்காமலே அமர்ந்திருந்தாள்.

'இருடி வெள்ளைக்கரடி உன்னை என்னை எப்படி திரும்பி பார்க்க வைக்கிறேன் பாரு' என மனதிற்குள் கறுவிக்கொண்டவன்,

"ஹாய் பொண்டாட்டி!!!!!!" என தன் பிரம்மாஸ்திரத்தை வீச,

அந்த ஒரு வார்த்தை அவளை தூண்டிவிட போதுமானதாக இருந்தது, அவனை நோக்கி கோவமாக வந்தவள்,"இங்கொக்க சாரி நன்னே பாரியம் அன்ட்டி பிலுஸ்தே சம்பேஸ்தானு!!!!!!" (இன்னொறு முறை என்னை பொண்டாட்டின்னு சொன்ன, கொன்றுவேன்) என பெண் சிங்கம் போல் கர்ஜித்து விட்டு செல்ல,

அவளையே விழியெடுக்காமல் பார்த்தவன் ,"ப்பா என்ன சோப்பு யூஸ் பண்றாங்கன்னு முதல்ல கேட்கணும்..என்னா வாசம்...சும்மா பத்தடி தள்ளி நிக்கும் போதே இப்படி பம்பரம் போல தலை சுத்துதே...ஆமா ஏதோ கத்திட்டு போச்சே பிஸ்தா பாதாம்னு..என்னவா இருக்கும்?? ஒருவேளை அவளை விட கலர் கம்மியா இருக்கோம்னு பிஸ்தா பாதாம்லாம் சாப்பிட்டு கலரை ஏத்த சொல்லிருக்குமோ" என அவள் பேசியதை தனக்கு தகுந்தாற் போல் மொழி பெயர்த்துக் கொண்டான் அவன்..

**********************************************************************

அந்த பிரம்மாண்டமான ஹாலை அலங்கரிப்பது போல் போட்டிருந்த அந்த சோபாவில் நடுநாயகமாக மகாராணியின் தோரணையோடு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள் வசுந்தரா தேவி..

மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்த அவன் இவளின் கம்பீரத்தை ஆவென வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டே வர,படியை கவனிக்காமல் கால் இடறி கீழே விழுந்து புதையல் எடுத்தான்.

இவன் விழுந்த சப்தத்தில் தன் கைபேசியில் இருந்து கண்ணை திருப்பி அவனை பார்த்தவள் ,எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் மீண்டும் தன் கைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்.

அதைக் கண்டவன் மெல்ல தானே எழுந்து , அவளை நோக்கி இடுப்பை பிடித்துக் கொண்டே தாங்கி தாங்கி நடந்து வந்தான்.

அப்போதும் அவனை நிமிர்ந்து பாராதவளைக் கண்டு கோபம் பொங்க, ஏதோ கேட்கப்போனவன் அவள் போனை பார்த்து பேச வந்ததை மறந்துவிட்டு,"இந்தாம்மா வசுந்தரா" என ஆரம்பிக்க,

அதைக் கேட்டவள் நிமிர்ந்து அவனை முறைக்க, தன் தவறு புரிய பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ,"பின்ன எப்படிங்க உங்களை கூப்பிட அந்த கிழம் உங்க பேரு வசுந்தரான்னு சொல்லுச்சு..எல்லாரும் கூப்பிட தான பேர் வைப்பாங்க ..அது பிடிக்கலைன்னு மோடம்னு மரியாதையா கூப்பிட்டா அதுவும் பிடிக்கலைன்னுட்டீங்க..இனிமேல் அந்த சப்பை மூஞ்சி ஜப்பான்காரன் தான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி பேர் கண்டுபிடிக்கனும்" என சலித்துக் கொள்ள,

எரிச்சலடைந்த வசுந்தரா," என்ன கேட்க வந்தியோ அதை மட்டும் கேழு..இப்படி நொய் நொய்னு பேசி என் உயிரை வாங்காத" என கடுப்பாக கூறினாள்.

"சரி சரி கோச்சுக்காதீங்க ..நேத்து நைட் இந்த போனை பார்த்துக்கின்னு சிரி சிரினு கூவிகின்னே கெடந்தீங்களே ..தெரியாம தான் கேட்குறேன் போன் எப்படிங்க சிரிக்கும்?? அதுவும் நீங்க இப்படி இஞ்சி தின்ன இலியானா மாதிரி முகத்தை வச்சுகிட்டு சொன்னா சிரிக்குமா??? என்னாங்க இப்படி வெவரம் தெரியாத புள்ளையா வளர்ந்திருக்கீங்க...இதுல உங்க தாத்தா எல்லா சொத்தையும் நீங்க தான் பார்த்துக்கிறீங்கன்னு பீத்திக்கிட்டாரு... என்னாத்தை பார்த்து என்ன பண்ணீங்களோ.." என புலம்ப,

அவனையும் தன் கையில் இருந்த iPhoneஐயும் மாறி மாறி பார்த்த வசுந்தரா 'இவன் என்ன மாதிரியான ஜென்மம்னே தெரியலையே பெருமாளே' என தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லங்களா 😍😍😍

கதைக்கான கருத்துக்களை இங்கே வந்து கொட்டிட்டு போங்க

 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்😍😍

ஜெமினின்னு ஏற்கனவே ஒரு ஹீரோ இருக்கது நேத்து தான் தெரிஞ்சது.

இரண்டு ஹீரோ பேரும் ஒன்னா இருந்தா குழப்பம் வரும்.

சோ நம்ம வண்ணாரப்பேட்டை இனிமேல் ரஜினி என்று அழைக்கப்படுவார்.

உங்களுக்கு ஓகே தான ப்ரெண்ட்ஸ்..

ரஜினின்னு வேற ஹீரோ இல்லைன்னு நினைக்கிறேன் இருந்தா சொல்லுங்க செல்லம்ஸ்
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் ஹாய் ,

மீண்டும் ஒரு குட்டி டீ வண்ணாரப்பேட்டையில் இருந்து


"தாத்தய்யாஆஆஆஆ!!!!!" என அந்த அரண்மனையை விட பெரிதாக இருந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்து காது கிழிந்து கட்டிடம் அதிருமாறு கத்திக் கொண்டிருந்தான் கதிர்.

இவன் இட்ட சப்தத்தில் ஏதோ முக்கியமான பத்திரத்தில் கையெழுத்து இட்டுக்கொண்டிருந்த இரகுவீரபூபதி ஜெர்க் ஆனதில் கை நடனமாடி கடைசியாக 'i'என்பது இழுத்து கொண்டு போய் 'j' ஆகி விட ,'வடை போச்சே' என்பது போல் வருந்திய தாத்தா, மெதுவாக இறங்கி கீழே வந்தார்.

அவர் தன்னிடம் வரும் வரை கூட பொறுமை காக்க முடியாத கதிர் வேக வேக எட்டுக்களை வைத்து அவர் முன் போய் நிற்க, திடீரென்று தன் முன் அர்னால்டு போல் வந்து நின்ற தன் பேரனை அண்ணாந்து பார்த்து அரண்டு போனவர் அவர் கைத்தடியாலே அவனை அடித்து "ரெண்டு அடி பின்னாடி தள்ளி நில்லு டா எருமை..நான் என்ன உன் அத்தை பொண்ணா இப்படி கிட்ட வந்து நின்னு கிட்னி திருடுறவன் மாதிரி பார்க்குற" என திட்ட,

அவர் தன்னை கிண்டல் செய்ததில் மேலும் கடுப்பான கதிர்,"யோவ் தாத்தா என்னை கொலை வெறி ஆக்காத..எந்துக்கு நுவ்வு பைத்தியம் லாகா பிகேவ் சேஸினுண்டாரு(எதுக்கு பைத்தியம் மாதிரி நடந்துக்கிறீங்க)??" என கேட்க,

மீண்டும் அவன் தோளில் கைத்தடியை வைத்து அடித்தவர்,"உனக்கு எத்தனை தடவை சொல்லுறது தமிழ்ல பேசுன்னு அதென்ன பாதி தமிழ் பாதி தெலுங்குன்னு உளறிட்டு இருக்க" என கண்டிக்க,

'அதுக்கு நீ தமிழ் பொண்ணா பார்த்து உன் பையனுக்கு கட்டி வச்சிருக்கனும்' என முனுமுனுத்தவன் ,"அதான் இப்போ முக்கியம் பாரு..ஒரு மனுஷன் மூனு வாரம் மெடிக்கல் கேம்ப் போய்ட்டு வரதுக்குள்ள என் அக்காவுக்கு மேரேஜ் பண்ணி மொரிஷியஸ்க்கு ஹனிமூன் அனுப்பி வச்சுருக்க நீ..நீயெல்லாம் ஒரு தாத்தாவா?? ஏன்யா இப்படி பண்ண??" என ஆதங்கத்தோடு வினவியவனை சிரிப்போடு பார்த்த தாத்தா

"ரொம்ப துள்ளாத டா அடங்கு..இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சுக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரலை..உன் மலையாள மாங்குயிலை போய் சைட் அடிக்கிற வேலையை மட்டும் நீ பாரு" என கூறிவிட்டு அங்கிருந்து நகர,

போகும் அவரையே கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் நாசியில் மலையாள வாசம் வந்து நிறைக்க, திரும்பி பார்க்காமலே வருவது யாரென்று கண்டுகொண்டவன் மனதில் அனிருத் அமர்ந்து அழகான லவ் சாங்க் கம்போஸ் பண்ணிக்கொண்டிருந்தார்.

தன்னைக் கடந்து செல்லப்போன அந்த யெல்லோ சுடிதாரைக் "ஏய் ஜனனி" என அழைத்தான்.

அவனைக் கண்டவள் எப்போதும் போல் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கல்லையும் மண்ணையும் போல் அவனை பார்த்து வைக்க, அதற்கெல்லாம் அசராத கதிர் ," உன் கிட்ட ஒன்னு சொல்லனும்..ரொம்ப நாளா சொல்லனும் சொல்லனும்னு மனசுக்குள்ள பூட்டி வைச்சு வைச்சு எனக்கு பூகம்பம் வந்ததால இன்னைக்கு உன்கிட்ட சொல்லிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என மூச்சு விடாமல் பேச,

அதற்கும் எந்தவொரு உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் ," எந்தா பரை" என மலையாளத்தில் கேட்க,

எப்போதும் போல் அவளின் அந்த மலையாளம் அவனை கடுப்பின் உச்சிக்கு இழுத்து சென்றது ,'இவ ஒருத்தி ஆ ஊன்னா பற பறன்னு நான் என்ன ஸ்பைடர் மேன்னா கட்டிடம் விட்டு கட்டிடமா பறக்க..பைத்தியம் ' என நொந்து கொண்டவன் ,"ஒன்னுமில்லை மா தாயே போய் உன் வேலையை பாரு" என கையெடுத்துக் கும்பிட்டான்.

அவ்விடம் விட்டு அகன்று தன் அலுவலக அறைக்கு வந்த ஜனனி கதவின் இடுக்கில் தெரிந்த கதிரைக் கண்டு இரகசியமாக புன்னகைத்துக் கொண்டாள்.





வண்ண வண்ண அலங்கார விளக்குகளால் புது மணப்பெண்ணைப்போல் அலங்கரித்திருந்த அந்த தோட்டத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன்.

அவன் அருகில் இருந்த வசுந்தரா , அவனின் செய்கையை பார்த்து அவன் தொடையில் கிள்ள, "மாரியாஆஆஆஆத்தாஆஆஆ!!!!" என அலறிய அவனை அங்கு கூடியிருந்த அனைவரும் வித்தியாசமாக பார்க்க,

அனைவரையும் பார்த்து சங்கடமாக சிரித்த வசுந்தரா,"ஹேய் லூசு எதுக்கு இப்படி கத்தி என் மானத்தை வாங்குற" என அவனை பார்க்காமலே வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்பினாள்.

தன் தொடையைத் தேய்த்துக்கொண்டே ,"பின்ன என்ன மே நறுக்குன்னு கிள்ளுனா எல்லாரும் கத்த தான் செய்வாங்க..எங்க நான் வேணும்னா உங்களை கிள்ளுறேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்ப்போமா" என அவள் கிள்ளிய இடத்திலே இவனும் கிள்ள கையை கொண்டு போக,

அவன் கையை தட்டிவிட்டு அவனை நோக்கி தீப்பார்வை வீசினாள்.அவள் பார்வையில் கையை எடுத்து வாயில் வைத்து பொத்திக்கொண்ட அவனைப் பார்த்து அவளுக்கு மிகவும் லேசாக சிரிப்பு வந்தது.அதை அடக்கியவள் மீண்டும் தன் பார்வையை அங்கு அமைந்திருந்த மேடையின் மீது பதித்தாள்.

ஆனால் அவனோ அவளையே இன்ச் இன்ச்சாக இரசித்தவன் ,'ச்சே என்னா பொண்ணு டா..சின்ன வயசுல இருந்து ஆவின் பாலுலையே ஆட்டம் போட்டிருக்கும் போல , கண்ணைப் பாரு அப்படியே நம்ம கண்ணம்மா கிழவி விக்கிற கிணத்துமீனு மாதிரியே இருக்கு, அய்யோ மூக்கைப் பாரு நம்ம முனியாண்டி அண்ணன் கடை முறுக்கு மாதிரி கடிச்சு சாப்பிடனும் போல இருக்கே, அய்யோ அய்யோ வாயா இது அப்படியே நம்ம வனஜா அக்கா செய்யுற தேன் மிட்டாய் மாதிரி பார்க்கும் போதே எச்சி ஊறுதே ' என அவன் வர்ணித்துக் கொண்டிருக்க

"இப்போ மட்டும் உன் கண்ணை என் மேல இருந்து எடுக்கலை என் கன் தான் உன்கிட்ட பேசும்" என வசுந்தராவின் வார்த்தையில் கலைந்தவன் ,'இந்த வெள்ளைக்கரடிக்கு எல்லா சைடும் கண்ணு இருக்கும் போல ,போடி நீ இல்லைனா என்ன இங்க பாரு சுத்தி வெள்ளை தக்காளியா இருக்கு ஆனா என்ன பூராம் கிழவிங்களா இருக்கும் போல இந்த வயசுலயே எல்லா முடியும் வெளுத்துப் போய் கிடக்கு..பேசாம நம்ம ஏரியாக்கு அடுத்து போறப்போ துணிக்கு சாயம் போடுற மாதிரி கருப்பு சாயத்தை எடுத்துட்டு வந்து இதுங்க மண்டையில அடிச்சு அதுங்க மனசுல இடம் பிடிச்சு இந்த வெள்ளைக்கரடி மூஞ்சில கரியை பூசனும்' என அங்கிருந்த ஆங்கிலேயர்களை பார்த்து பரிதாப்பட்டு தன் மனதில் சபதமிட்டுக்கொண்டான் அவன்.

அப்போது அங்கே வந்த வெள்ளைக்காரர் ஒருவர் வசுந்தராவைக் கண்டு புன்னகைத்து அவள் அருகில் வரவும் இவள் எழ, அவளை லேசாக கட்டிப்பிடித்து விடுவித்தார் அந்த நபர்.

அதை ஏதோ எட்டாவது அதிசயம் போல் பார்த்துக் கொண்டிருந்த அவன்,'இந்த வெள்ளைக்கரடிக்கு எவ்வளவு கொழுப்பு!!! கட்டுன புருஷனை பார்க்க கூட விட மாட்டுறா..இப்போ அந்த கிழவன் வந்து கட்டிப்பிடிக்கிறான் இதுவும் ஈன்னு இழிச்சுக்கிட்டே கட்டிப்பிடிக்குது ' என மனதுக்குள் பொருமி கொண்டிருந்தவன் தன்னையறியாமலே எழுந்து நிற்க,

அப்போது வசுந்தராவுடன் பேசிக்கொண்டிருந்த நபரின் மனைவி அங்கு நின்று கொண்டிருந்த 'அவனை' வந்து கட்டிப்பிடித்து "ஹாய் யங் மேன்" என கூற,

அவரிடம் இருந்து துள்ளி குதித்து விலகியவன், அவரைப் பார்த்து முறைத்து ,"கட்டிப்பிடிச்சு விளையாடுற வயசா கிழவி உனக்கு!!!!!" என கேட்க,

வசுந்தராவிற்கு எங்காவது போய் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது ,'இன்னும் எப்படியெல்லாம் என் மானத்தை வாங்கப் போறானோ' என அவள் நொந்துகொள்ள,

அந்த கணவன் மனைவி இருவருக்கும் அவன் பேசியது புரியவில்லை என்றாலும் அவனை மிகவும் பிடித்து விட, அந்த கணவன் அவன் புறம் கையை நீட்டி ,"Hey young man..glad to meet you..i'm john..May i know your good name please" என கேட்க,

'டேய் நரைச்ச மண்டையா எனக்கு ஒரு வார்த்தையே புரியாதுடா இதுல வாயில வெத்தலையை போட்டு மென்னு துப்புன மாதிரி இவ்வளவு நேரமா உளருறியே..இம்மா நேரமா என்ன திட்டுனானா இல்லை பாராட்டுனானான்னு வேற வெளங்கலையே..என்ன டா இது உனக்கு வந்த சோதனை' என மனதிற்குள் புலம்ப,

அவனைப் பற்றி புரிந்த வசுந்தரா ,"ஹிஸ் நேம் இஸ் சன்னி" என கூற,

"இந்தா மே நேமுன்னா பேரு தான இன்னாத்துக்கு என் பேரு சன்னின்னு சொல்ற..நான் உன்னை பிடிச்ச சனின்னு நினைச்சதும் இல்லாம அதை போய் இந்த நரைச்ச மண்டையன் கிட்ட வேற சொல்லி அசிங்க படுத்துறியா??? எங்க ஏரியாலா என் பேரை சொன்னாலே நடுங்கும் தெரியுமா...டேய் நரைச்ச மண்டை என் பேரு " என அவன் பெயரை கூறப் போக, அவன் கையைப் பற்றினாள் வசுந்தரா.

முதன்முறையாக அவளின் தீண்டலில் தான் பேச வந்தது மட்டுமல்லாமல் இந்த உலகத்தையே மறந்து போய் தன் மனைவியை பார்த்தான் 'அவன்'.

1519310476_naga-chaitanya-rakul-preet-singh.jpgCmWLBaOUcAApRiM.jpgScreen-Shot-2017-11-01-at-12.14.07-PM.jpg
 
Status
Not open for further replies.
Top