All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் புத்தகங்கள் மற்றும் அமேசான் கதைகள் - அறிவிப்பு திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்கு எனது புத்தகங்கள் மற்றும் அமேசான் கதைகளுக்கான அறிவிப்புகள் பகிரப்படும் நண்பர்களே❤
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ மக்களே😍😍😍😍


மே மாதம் பிறந்தாச்சு🤎 பிள்ளைங்களுக்கு ஸ்கூல் லீவ் விட்டாச்சு.
வெயில் வேற மண்டையை பொலக்குதுனு ஃபீல் பண்ணிட்டு இருக்கிங்களா?? கவலையை விடுங்க.. சூடாகி காய்ந்து போன மண்டையை குளு குளுன்னு ஆக்கி உங்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்க நம்ம கதை நம்மளோட ஶ்ரீ கலா பதிப்பகத்தின் மூலமாக வெளி வந்துவிட்டது..




அதுவும் நம்ம தாராள பிரபு ஶ்ரீ மா, discount வேற கொடுத்திருக்காங்க.. அதுனால சட்டு புட்டுன்னு புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள் மக்கா😁😁

நம்ம புக்கை வாங்க இங்க கிளிக்குங்கள் 😁😁


புத்தக விலை - ₹370

கழிவு போக - ₹260 மட்டுமே

கதை பெயர் : கலாட்டா முதல் கல்யாணம் வரை!!

ஆசிரியர் : மித்து

நாயகர்கள் : அஸ்வத், அஜய்

நாயகிகள் : அஞ்சலி,கீதா

கதை முன்னோட்டம் :

வீட்டிற்கு வந்த பின்னும் கோபத்தில் சந்தன பாண்டியனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த ராமனை யாரும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையில் மூழ்கி இருந்தனர்.

அது அவருக்கு மேலும் கடுப்பைக் கிளப்ப, "இங்க நான் ஒருத்தன் கத்திகிட்டு இருக்கேன்.. நீங்க எல்லாம் கண்டுக்காம உங்க வேலையை பார்த்தா என்ன அர்த்தம்??" என்று அவர் கேட்க,

" அதான் நீயே சொல்லிட்டியே கத்திகிட்டு இருக்கேன்னு.. பேசுனா கேட்கலாம் கத்துனா நாங்க என்ன பண்ண" என்று அவருக்கு பதிலளித்த மதுரம் தன் முகத்திற்கு முல்தானி மட்டியைப் போட்டுக் கொண்டிருந்தார்.

"நீங்க பேசாதீங்க.. அங்க அந்தாளு உங்க சின்ன மகன் முன்னாடி என்னை அவ்ளோ அசிங்கமா அறிவிருக்கான்னு கேட்கிறார்.. நீங்க ஒரு வார்த்தை அந்த ஆளை கேட்டிங்களா??" என்று ராமன் ஆற்றாமையுடன் கேட்க,

" என் பிள்ளைக்கு அறிவில்லைன்ற உண்மையை அதுக்குள்ள எப்படிப்பா கண்டுபிடிச்சன்னு கேட்கலாம்னு தான் நினைச்சேன்.. அப்பறம் எல்லாருக்கும் முன்னாடி நீ சங்கடப்படுவியேண்ணு தான்டா கேட்கலை.. வேணும்னா போன் நம்பர் கொடு கேட்டு சொல்றேன்" என்று அவர் அலட்டிக் கொள்ளாமல் கூற,

ராமன் தான் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டி இருந்தது அவரின் பேச்சில்.

" உங்க கூடலாம் மனுஷன் பேசுவானா??" என்று கத்தியவர், அங்கு சோகமே உருவாய் அமர்ந்திருந்த தன் மகனை நோக்கி, "இதோ பாரு அஸ்வத்!! உங்க அப்பாவையே அந்த ஆள் அவ்ளோ அசிங்கப்படுத்தி இருக்கார்.. அப்படி இருந்தும் அவரோட பொண்ணு தான் உனக்கு வேண்டுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ.. அப்பா உனக்கு இதை விட அழகான பொண்ணைப் பார்த்து அடுத்த மாசமே உன் கல்யாணத்தை எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்குற மாதிரி நடத்திக் காட்டுறேன்" என்று அவர் பேசிக் கொண்டே போக,

நடுவில் இடையிட்ட வினோத், " ஏன் அங்கிள் கல்யாணத்தை கூவத்துல வைக்க போறீங்களா?? ஏன்னா அப்போ தான் எல்லாரும் கப்புல மூக்குல விரலை வச்சு அடைச்சுப்பாங்க" என்று தன் சந்தேகத்தை கேட்க,

ராமன் கோபத்தில் கையில் கிடைத்த டிவி ரிமோட்டை அவனை நோக்கி வீச, வினோத்தோ நூலிழையில் அதிலிருந்து தப்பினான் .

******

அதை ஆசையாய் தன் கைகளில் வாங்கிக் கொண்ட அஸ்வத் அதிலிருந்து ஒன்றை எடுத்து தன் வயிற்றுக்கு அனுப்பியவன், "வாவ்!!! மார்வலஸ்!! இப்படி ஒரு பனியாரத்தை நான் சாப்பிட்டதே இல்லை.. ஆனா என்ன ரொம்ப இனிப்பா இருக்கு" என்று அவன் ரசித்து உண்டுகொண்டே கூற,

"அச்சோ.. இனிப்பு கரெக்டா தானே போட்டேன்" என்று அஞ்சலி பதற,

" மே பீ உங்க கையால செஞ்சேன்னு சொன்னீங்க தான.. அதான் உங்களை மாதிரியே உங்க கை பட்ட பனியாரமும் இவளோ இனிப்பு போல" என்று அவன் காதல் பயிரை வளர்க்க,

அப்போது, " ச்சை இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை டா சாமி.. " என்று நக்கல் செய்து கொண்டே அங்கு வந்து சேர்ந்தனர் அஜயும் கீதாவும்.

இருவரையும் பொய்யாக முறைத்த அஸ்வத், " போடா பொறாமை பிடிச்சவனே..உனக்கும் ரெண்டு கொண்டு வந்திருந்தா கம்முன்னு இருந்திருப்ப.." என்று தன் தம்பியை வாரினான்.

அதைக்கேட்டு கீதாவின் பக்கம் திரும்பிய அஜய், " எல்லாம் உன்னால தான்.. உங்க அக்காவை பாரு அவங்க லவ்வருக்காக குழிப்பனியாரம்லாம் செஞ்சு கொண்டு வராங்க.. நீயும் தான் இருக்கியே" என்று அவளை வசைபாட,

அவனை ஒரு மார்க்கமாய் பார்த்த கீதா, " உன் மூஞ்சிக்கு குழிப்பனியாரம் வேற கேட்குதா?? வேணும்னா எங்க வீட்டுக்கு பின்னாடி ஆறடிக்கு குழி தோண்டி வைக்கிறேன் வந்து படுத்து செத்து போய்டு நானாச்சும் நிம்மதியா இருப்பேன்" என்று கடுப்புடன் மொழிய,

அதைக்கேட்டு, "கீதா என்ன பேச்சு இது.. சாரி கேளு அவர்கிட்ட" என்று தன் தங்கையை கண்டித்தாள் அஞ்சலி.

" அட விடுங்க.. என்னோட அவதார் குட்டிக்கு என் மேல எவ்வளவு பாசம் இருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க அப்பா வீட்டு நிலத்துல எனக்கு ஆறடிக்கு குழி தோண்டி தருவேண்ணு சொல்லுவா.. ஆறடி வேண்டாம் செல்லம் சின்னதா போதும் நம்ம ரெட் ரோஸ் செடி வளர்த்து நம்ம காதலின் அடையாளமா கொண்டாடலாம்" என்று அவன் அஞ்சலியிடம் ஆரம்பித்து கீதாவிடம் முடிக்க,

" உன்னைலாம் எந்த நேரத்தில பெத்தாங்களோ.. இம்சை" என்று கத்திய கீதா அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,

அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு முரடன் கீதாவை கத்தியால் தாக்க முயல, சடுதியில் அவளை தன்னை நோக்கி இழுத்து காப்பாற்றி இருந்தான் அஜய்.





எல்லா புக்ஸும் 30% டிஸ்கவுண்ட்ல… காம்போ ஆஃபர் மட்டும் மே 2 டூ மே 15 வரை ஷிப்பிங் ப்ரீ…

Combo offer :

IMG_20220502_133825.jpg
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே 😍

என்னுடைய முதல் கதை

" அத்தை பெத்த பூங்குயிலே💝" அமேசான்ல ஃப்ரீ கொடுத்திருக்கேன்.. விருப்பம் உள்ளவர்கள் இன்று மதியம் வரை ஃப்ரீயா பதிவிறக்கம் பண்ணி படித்துக் கொள்ளலாம்..

நன்றி❤❤

கதையில் இருந்து சின்ன முன்னோட்டம் :

"ப்ரோ swiggy or zomato??? சீக்கிரம் சொல்லு..ஆல்ரெடி பசி தாங்காம என்னோட வயிறு உள்ளிருக்க குடல் ,குந்தானி எல்லாத்தையும் குஸ்கா மாதிரி சாப்பிட ஆரம்பிச்சிருச்சு..என்னையே சாப்பிட்டு அது ஏப்பம் விடுறதுக்குள்ள சீக்கிரம் என்ன ஆர்டர் பண்ணன்னு சொல்லு" என கார்த்திக் ஹரியிடம் வினவினான்.

"கொழுந்தனாரே நான் வேணும்னா சமைக்கட்டுமா" என ஹரியை முந்திக் கொண்டு பதிலளித்த ஸ்ரீயை கண்டு கையெடுத்து கும்பிட்ட கார்த்திக்,"நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் அண்ணியாரே..காலைல நீங்க பாலை பொங்க வச்சதுல இருந்தே நீங்க சமையல்ல எவ்வளவு பெரிய புலின்னு எனக்கு தெரிஞ்சிருச்சு..உனக்கு சோதனை எலி வேண்டும்னா உன் புருஷன வச்சுக்கோ..என்னையும் என் பொண்டாட்டியையும் ஆளை விடு..நாங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கலை" என் வர்ஷூவை பார்த்து ஏக்கமாக கூறினான் கார்த்திக்.

அவனை முறைத்த வர்ஷூ,'அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வந்து நிக்கிது பக்கி' என முனுமுனுத்தவள்,"எதுக்கு வெளியில ஆர்டர் பண்ணனும் ,அதான் நான் இருக்கேன்ல நான் சமைக்கிறேன்" என்று கார்த்திக்கை பார்க்காமல் கூறியவளை கண்டு வாயை பிழந்த கார்த்திக், ஹரியை பார்த்து நக்கலாக ,"டேய் அண்ணா பார்த்தியா?? என் பொண்டாட்டிய ..அவ சமைக்கிறாளாம்..சமைக்க தெரிஞ்ச பொண்டாட்டி கிடைக்கலாம் ஒரு குடுப்பனை வேண்டும் டா.. உனக்குலாம் அது இந்த ஜென்மத்துல கிடைக்காது..

'கோபாலன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்

என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்'" என ஹரியிடம் தொடங்கி வர்ஷூவிடம் முடித்தவனை கொலைவெறியுடன் நோக்கியவள்,"உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் அப்பாவை பேர் சொல்லி கூப்பிட்டதும் இல்லாம,அவன் இவன்னு வேற சொல்லுவ??மவனே என் கிட்ட மாட்டாமையா போவ அப்போ நீ கைமா தான் டி" என அவனை எச்சரித்தவள் ,"நான் போய் சமைக்கிறேன்" என பொதுவாக அனைவரிடமும் சொல்லிவிட்டு எதிரில் இருந்த தங்கள் ஃப்ளாட்டிற்கு சென்றாள்.

அவள் போவதையே ஆவென்று பார்த்திருந்த ஸ்ரீயின் வாயை மூடிய கார்த்திக்,"ரொம்ப பொறாமை படாதீங்க அண்ணியாரே!!! அப்பறம் என்னோட வைரக்கட்டிக்கு எதாச்சும் ஆய்ரப் போகுது..சரி என் ஜிங்கிலி அங்க தனியா கஷ்ட பட போறா நான் போய் ஹெல்ப் பண்ணிட்டு வரேன்..பார்க்க பாவமா வேற இருக்கீங்க சோ இன்னைக்கு மட்டும் உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என பெருந்தன்மையாக கூறிய கார்த்திக்கை ஸ்ரீ கொலை வெறியுடன் பார்க்க, அவள் கணவனோ ,'எல்லாம் உன்னால தான்..காலையில ஒரு பால் காய்ச்சுறேன்னு இப்படி இந்த பன்னாடை எல்லாம் என்ன காய்ச்சுற அளவுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட..' என அவளை பாசப் பார்வை பார்த்தவன்,

"ஓவரா ஆடாத டா..எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ என் பொண்டாட்டியும் நல்லா சமைச்சு எனக்கு போடுவா" என மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசியவனை கண்டு,"வாய்ப்பில்லை ராஜா" என கார்த்திக் கிண்டலடித்தான்.

"இதோ பார் உன் போன்ல இன்னைக்கு ரிமைண்டர் போட்டு வச்சுக்கோ இன்னும் எண்ணி ஒரே மாசத்துல உன் பொண்டாட்டிய விட நல்லா சமைச்சு,உன் வாயலையே எனக்கு சமைச்சு கொடு ஸ்ரீனு சொல்ல வைக்கிறேன்..இது என் புருஷன் மேல சத்தியம்..அது வரைக்கும் உன் பொண்டாட்டி சமைக்கிறது ஒன்னும் எங்களுக்கு வேண்டாம்" என ஹரியின் உயிருக்கே உலை வைத்தாள் அவனின் தர்மபத்தினி.

'அட சனியன் பிடிச்சவளே..நீ பணயம் வைக்க என் உயிர் தான் கிடைச்சுச்சா' என ஹரி நொந்து கொள்ள,

"நல்ல சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேன்னு ஃபீல் பண்ண போறீங்க...உங்க தலையெழுத்து அதான்னு இருக்கப்போ யார் மாத்த முடியும்..உங்களுக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்..அண்ட் ப்ரோ இப்பவே உன்ன நல்லா பார்த்துக்கிறேன் டா ..இன்னும் ஒரு மாசம் கழிச்சு இருப்பியோ இருக்க மாட்டியோ..உனக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் டா அண்ணா " என்று கூறியவன் சிட்டாக தன் வீட்டிற்கு பறந்து விட்டான்.

தன் வீட்டினுள் நுழைந்த கார்த்திக் ,சமயலறையை எட்டிப் பார்க்க அங்கு வர்ஷூ தீயாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அதைக் கண்டு மனைவியை மனதிற்குள் மெச்சியவன்,'உனக்கு சமைக்க தெரியும்னு இத்தனை நாளா தெரியாம போச்சே என் சர்க்கரைக் கட்டி!!!!' என கொஞ்சிக் கொண்டான்.

இவன் வந்துவிட்டதை உணர்ந்த வர்ஷூ,"வந்துட்டியா !!! உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..பூரி செய்யலாம்னு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்..ஒரே கச கசன்னு இருக்கு போய் குளிச்சிட்டு வந்துருறேன்..நீ என்ன பண்ற பூரியை குக்கர்ல வச்சிருக்கேன் 3 விசில் வந்ததும் ஆஃப் பண்ணிரு மறந்துராத" என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தவன் புரிந்த பின்போ,"என்னாதூஊஊ பூரிய குக்கர்ல வச்சிருக்கியாஆஆஆ!!!!!" என அதிர்ந்து போய் அங்கேயே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் கார்த்திக்....

கதை லிங்க்:

https://www.amazon.in/dp/B07WJB3496/ref=cm_sw_r_apan_GC6DGVBZGGC4N4WF2G9R

 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே 😍

நிறைய பேர் அத்தை பெத்த பூங்குயிலே கதை படிக்க டைம் கேட்டதுனால கிண்டில்ல ஃப்ரீ கொடுத்திருக்கேன்..

இன்று மதியம் ஒரு மணியில் இருந்து நாளை மதியம் ஒன்று வரை இலவச தரவிறக்கம் செய்து கொள்ளலாம்..

.in link

அத்த பெத்த பூங்குயிலே (Tamil Edition) அத்த பெத்த பூங்குயிலே (Tamil Edition) eBook : (மித்து), ஸ்வேதா இராஜன் : Amazon.in: Kindle Store

.com link

அத்த பெத்த பூங்குயிலே (Tamil Edition) https://www.amazon.com/dp/B07WJB3496/ref=cm_sw_r_awdo_E9JQC97DYDTDK39H0Z9T
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே ❤❤

ஆன்லைனில் வெளிவராத என்னுடைய நேரடி புத்தகமான " கலாட்டா முதல் கல்யாணம் வரை" இப்போது கிண்டிலில்.. எந்தவொரு டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இல்லாத நகைச்சுவை கலந்த குடும்பக் கதை.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி❤

கதை லிங்க் :

.Com link :
Amazon.com: கலட்டா முதல் கல்யாணம் வரை - Galatta Mudhal Kalyanam Varai (Tamil Edition) eBook : (மித்து), ஸ்வேதா : Kindle Store

.in link :


கதையில் இருந்து ஒரு சின்ன முன்னோட்டம்:

அதன் பிறகு, சில பல பேச்சு வார்த்தைகளுக்கு பின் மாப்பிள்ளை பெண்ணிடம் சம்மதம் கேட்டுவிட்டு நிச்சயதார்த்த தேதியை குறிக்க போன சமயம், அவர்கள் வீட்டு வேலைக்காரன் வேகமாய் ஓடிவந்து சந்தன பாண்டியனிடம், "அய்யா நம்ம லட்சுமிக்கு காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்குங்க அய்யா.. எழுப்புனா எழுந்திருக்க மாட்டேங்குது.. டாக்டருக்கு போன் பண்ணாலும் எடுக்கலை.. எனக்கு பயம்மா இருக்குங்க அய்யா.. உங்க மாப்பிள்ளை டாக்டர் தானங்க அய்யா அவரை வந்து ஒரு எட்டு பார்க்க சொல்றீங்களா??" என்று அவன் தயக்கத்துடன் கேட்க,

உடனே வினோத்தோ, " அட என்னங்க.. இங்க ரெண்டு டாக்டரை வச்சுக்கிட்டு இப்படி நீங்க இதை கேட்க கவலைப் படலாமா?? நானும் இவனும் ஒண்ணா தான் படிச்சோம்.. நானும் டாக்டர் தான்.. லட்சுமி எங்க?? வாங்க நான் பார்க்குறேன்.. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று தன் ஹீரோயிசத்தை காட்ட,

அவனை நன்றியுணர்வுடன் பார்த்த அந்த வேலைக்காரன் கையெடுத்துக் கும்பிட்டு, " நீங்க நல்லாயிருக்கனும் சாமி.. வாங்க லட்சுமி அங்க தான் இருக்கா" என்று கூறிவிட்டு முன்னே நடக்க,

வினோத் அவரைத் தொடர்ந்து சென்றான். அவனை பின்பற்றி மற்றவர்களும் செல்ல,

அவன் வீட்டிற்கு பின்புறம் இருந்த மாட்டுக் கொட்டகைக்கு அழைத்து வந்திருந்தான்.

அதைக் கண்டு குழம்பிய வினோத், " என்னங்க சார் லட்சுமிகிட்ட கூட்டிட்டு போகாம இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?? லட்சுமி இங்கயா இருக்காங்க??" என்று கேட்க,

அங்கு ஓரமாய் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாட்டைக் கைகாட்டிய அந்த வேலைக்காரன், "அய்யா இதுதானுங்க நம்ம லட்சுமி.. வெரசா வந்து என்னன்னு பாருங்க.. பாவம் ரொம்ப முடியாம கெடக்குறா" என்று அவன் வருத்தத்துடன் கூறினான்.

"ஏதே!!! லட்சுமினா மாடா" என்று அதிர்ந்து போன வினோத்,

அங்கே சிரித்துக் கொண்டிருந்த அஸ்வத்தைக் கண்டு, "இந்த காட்டுப் பயலுக கிட்ட நான் மாட்டு டாக்டர் இல்லை ஹார்ட்டு டாக்டர்னு எப்படி சொல்லி புரியவைக்க" என்று புலம்பி தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

****

"என்ன செல்லோ வந்துட்ட போல.. உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன்.. கால்ல ஏதும் சாணியை மிதிச்சிட்டியா என்ன ஏதோ பிடிச்சு வச்ச மாதிரி வாசல்லயே ரொம்ப நேரமா நிக்குற??" என்று கிண்டல் செய்து ஜித்தேஷின் ரத்த அழுத்தத்தை ஏகத்திற்கும் ஏற்றினான் அந்த கள்வன்.

ஜித்தேஷ் இங்கு கோபத்தில் பல்லைக் கடிப்பதை அவன் உணர்ந்தானோ என்னவோ, "சரி சரி டென்ஷனாகாத.. நல்லா கழுத்தை தூக்கி மேல பாரு.. டாப் ஃப்ளோர் அதாவது 42வது மாடியில இருக்க 42C ஃப்ளாட்ல தான் நாங்க இருக்கோம் சீக்கிரம் வந்து சேரு " என்று அவனிற்கு தகவல் கொடுத்தவன் பின் நியாபகம் வந்தவனாக, "ஆமா சொல்ல மறந்துட்டேன்.. லிஃப்ட் வேலை செய்யலை சோ குட் பாயா குடு குடுன்னு படியில ஏறி ஓடி வா பார்ப்போம்.. உனக்கு ஃபைவ் மினிட்ஸ் தான் டைம்.. நீ அதுக்குள்ள வரலை உன் ஆகாஷ்வாணி பேபியை இங்க இருந்து தள்ளி விட்டிடுவேன்.. பார்த்துக்கோ 42வது ஃப்ளோர்ல இருந்து விழுந்தா எலும்பு கூட மிஞ்சாது" என ஜித்தேஷிற்கு அடுத்த சோதனையை வழங்கியிருந்தான் அவன்.

"ஏதே ஆகாஷ்வாணியா?? அவ ஷ்ராவனி.. என் வனி பேபிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன் டா" என ஜித்தேஷ் கத்திக் கொண்டே அந்த அப்பார்ட்மென்ட்டினுள் நுழைந்தான்.

42 மாடிகளை அண்ணார்ந்து பார்க்கும் போதே மலைப்பாக இருந்தாலும் தன் ஷ்ராவனிக்காக மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு அவன் மூச்சிரைக்க ஒவ்வொரு மாடியாக விரைவாக நான்கு நான்கு படிகளாக தாவி ஏறினான்.

என்னதான் கட்டுமஸ்தான உடம்பைக் கொண்டிருந்தாலும் ஜித்தேஷால் இருபதாவது மாடிக்கு மேல் ஏற சுத்தமாக முடியவில்லை, அதிலும் நேற்று மதியம் சாப்பிட்டது அதற்கு பின் தண்ணீர் கூட அருந்தினானா இல்லையா என அவனிற்கு நினைவில் இல்லை.

அவன் உடல் சுத்தமாக தெம்பில்லாமல் போக, கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தது.

இருந்தாலும் ஷ்ராவனியின் மேல் கொண்டுள்ள காதல் அவனின் சோர்வையும் மீறி அவனை முன்னேறச் செய்ய, அவன் தத்தித் தவழ்ந்து 42வது மாடியை அடையும் போது இருபது நிமிடங்களைக் கடந்திருந்தது.

சரியாய் அவன் 42வது தளத்தில் காலடி எடுத்து வைக்கவும், அங்கிருந்த மின்தூக்கியின் கதவைத் திறந்து கொண்டு ஒரு வடநாட்டு ஜோடி வெளியே வருவதற்கும் சரியாக இருக்க,

தன்னிடம் பொய் கூறி இத்தனை மாடி ஏற வைத்த அந்த கடத்தல்காரன் மேல் கட்டுக்கடங்கா ஆத்திரம் பொங்க, அவனை ஒரு வழி செய்துவிட வேண்டும் என்ற வெறியுடன் அவன் கூறிய ப்ளாட்டின் முன் சென்று அந்த கதவை "டம் டம் டம்" என்று தட்டத் துவங்கினான்.
 
Top